Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 1



வைப்பர் துடைத்து காட்டிய வழியை பார்த்தபடி காரை ஓட்டி கொண்டிருந்த அருண் பக்கத்தில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த விக்னேஷை பார்த்து “என்ன பாஸ் யோசனை? பேசாம இந்த கேஸை எடுக்காமயே விட்ருக்கலாமோனு நினைக்கிறீங்களா ? “என்றான்.



“இதுவரை குற்றம் செய்தவர்களையும், அதற்கான காரணத்தையும் கண்டு பிடிச்சோம்.ஆனா இதுல அதெல்லாம் நடக்க போவதில்லைனு மனசுகுள் ஒரு பட்சி சொல்லுது.அதனாலேயே கமிசனர் துரை பாண்டியன் கேட்டதும் இதை ஒத்துகிட்டேன்! “என்றான் சன்னல் வழியாக ஓடிய மரங்களை வேடிக்கை பார்த்தபடி விக்னேஷ்.வெளியே பனி இறங்கி சன்னல் கண்ணாடிகளில் நீர் கோலங்களை இட்டு காற்றின் வேகத்தில் கரைந்தன!



“அப்படி என்னத்தை இந்த கேஸ்ல பாத்தீங்க? “என்றான் ஹேட்லைட் வெளிச்சத்தில் சாலையில் கவனமாக இருந்த அருண்.



“பாரு அருண்! வருசமானா போலீஸ் டிபார்மெண்ட் குற்ற சதவீதங்களை பற்றி ஒருஆய்வு செய்வாங்க.க்ரைம் சர்வேன்னு அதுக்கு பேரு.அப்படி கடந்த அஞ்சு வருசமா பார்த்ததுல நாம போயிட்டிருக்கிற கழுகுமலைலதான் இருபது சதவீதம் நடந்திருக்கு.அத்தனையும் மர்டர்.காரணம் என்னன்னு தெரியலை.இது போதாதுன்னு இங்கே பெர்லைட்டுன்னு ஒரு காப்பர் கம்பெனி ரன்னாகுது.இந்த பகுதியோட வளர்ச்சிக்கு காரணமே அதுதான்.சுற்றுசூழல் பாதிக்குதுன்னு வழக்கம் போல ஆண்டி இந்தியன்ஸ் போராட்டம் பண்ணி கலவரமாகி துப்பாக்கி சூடெல்லாம் நடந்து கம்பெனி லாக்காயிருக்கு! “



“இந்த 20சதவீத குற்றங்களுக்கும் அந்த கம்பெனிக்கும் எதாவதுலிங்க் இருக்கும்னு நினைக்கிறீங்களா? “



“இன்னொன்னுக்கும் மர்டருக்கும் சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்.!”



“என்ன பாஸ் அது? “என்ற அருணுக்கு பதில் சொல்ல விக்னேஷ் வாயை திறந்த போது பின்னாலிருந்து ஹார்ன் ஓசை பலமாக ஒலித்தது.தொடர்ந்து ஹார்ன் ஓசை தாறுமாறாக ஒலிக்க துவங்க



“அருண்! அவனுக்கு வழி விடு.அவன் பொண்டாட்டிய யாரோ ரேப் பண்ணுவாங்க போல தெரியுது.இவன் போய்த்தான் காப்பாத்துவான் போல! “



அருண் சாலையின் இடது புறம் ஏறி வழி கொடுத்த போது அந்த கார் கன்னா பின்னாவென்று முன்னேறியது.



டிரைவர் சீட்டிலிருந்தவனை பார்த்த இருவரும் அதிர்ந்தனர்.ஒரு வெள்ளையன் டிரைவர் சீட்டிலிருந்தபடி “தேங்க்ஸ் “என்ற வார்த்தைகளை காற்றில் உதிர்த்து விட்டு சாலையில் முன்னேறி மறைந்தான்.



“மேக மலைன்ற ரிசர்வ் பாரஸ்டுல ஒரு வெள்ளைகாரனுக்கு என்ன வேலை இருக்க முடியும் பாஸ்? “



“அவன் அமெரிக்கன் ! “



“எப்படி சொல்றீங்க? “



“இங்கிலாந்துக்கு அடிமையா இருந்த நாடுகளோட கார்களோட ஸ்டியரிங் லெப்ட்ல இருக்கும்.அதை எதிர்த்து அமெரிக்கா எல்லாத்தையும் தலைகீழா மாத்திகிச்சு.அவங்க ரைட் சைடு டிரைவிங்.அதனாலதான் வண்டியை ஸ்மூத்தா ஓட்ட முடியாம இந்த அமெரிக்கன் தடுமாறுரான்.”



“சரி! பழைய கேள்விக்கு பதில் சொல்லுங்க! அந்த இன்னொன்னு எது? “



“சொன்னா நம்ப மாட்ட? “



“பரவாயில்லை சொல்லுங்க! “



“மாயான்னு ஒரு பேய்! “



“நீங்க இதை நம்புறீங்களா? “



“எனக்கு சொல்ல தெரியலை! “



அதே நேரம் சாலையின் ஓரத்திலிருந்து அந்த பெண் திடீரென வெளிப்பட்டு சாலையை கடக்க முற்பட்டாள்.பேசிக் கொண்டிருந்த அருண் கடைசி நிமிடத்தில் அதை கவனித்து பிரேக்கை மிதித்த போது கார் எதன் மீதோ டொம் என்று மோதி நின்றது.



“அடக்கடவுளே! “என்றபடி இறங்கிய அருணும் விக்னேசும் அடிபட்ட பெண்ணை தேட துவங்கினர்.கார் நின்ற இடத்திலிருந்து ஐம்பது அடி தூரம்வரை யாரையும் காணாமல் இருவரும் ஏமாந்தனர்.”எங்கடா அந்த பொண்ணு? “என்றான் விக்னேஷ்.



“நான் அந்த பொண்ணு மேல மோதுனது உண்மை பாஸ்.பானேட்டுல லைட்டா ஒடுங்கியிருக்கு பாருங்க! “



“ஆமா! அப்ப அந்த பொண்ணு எங்கே? “



“அதுதான் தெரியலை பாஸ்! சரி வாங்க போலாம்! “என்ற அருண் காரின் முன் சீட்டில் ஏறிய போது விக்னேஷ் வைத்திருந்த பைல் காற்றில் படபடத்து ஒரு பக்கத்தில் நிலை கொண்டது.அதிலிருந்த போட்டோவை பார்த்த அருண் “பாஸ்! இந்த பொண்ணு மேலதான் நான் காரை மோதுனேன்.இது யாரு? “என்றான்.



பைலை பார்த்த விக்னேஷ் “இவதாண்டா மாயா! செத்துபோய் இந்த ஊர் மக்களை பழி வாங்குற பேய்! “என்றான்.இருவரின் உடலிலும் அட்ரீனல் நதி உற்பத்தியானது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்.2



" நல்லா பாத்தியா? நீ பார்த்தது போட்டோவில் உள்ள இந்த பொண்ணைதானா?" என்றான் விக்னேஷ்.



"செத்துப் போன எங்க தாத்தா மேல சத்தியமா பாஸ்" என்ற அருணின் முகத்தில் வேர்வை துளிகள் மலர துவங்கியிருந்தன.



" செத்துப் போன மாயா பேயா வந்தா வெள்ளை சேவையில் அல்லவா வரணும்? இதென்ன வழக்கத்துக்கு மாறாசிகப்பு சேலை?”



"வெள்ளை காஸ்ட்யூம் பிடிக்கலையோ என்னமோ? எந்த கலர் சேலையில் வந்தா என்ன? பேய் பேய் தானே?”



"சரி" வண்டிய எடு. கிளம்பலாம். சூரியன் உதிக்க ஆரம்பிச்சு பனிவிழகுது. ஹேட்லைட்டை ஆப் பண்ணு." அருண் வண்டியில் ஏறி ஹேட்லைட்டை அணைத்து விட்டு வண்டியை கிளப்பினான். சற்று தூரம் வந்ததும் முன் கண்ணாடியில் பார்த்த போது பின்புற பனி ஒரு பெண் உருவம் கொண்டு இடுப்பில் கைவைத்தபடி நின்றது.



"மிஸ்ட்" என்றான் விக்னேஷ்.



"இது தற்செயல்னு சொன்னா செத்துப் போன எங்காத்தா கூட நம்பாது " என்றான் அருண்.



பலமாக வீசிய காற்றில் அந்த பெண் உருவம் கலைந்து காற்றில் மறைந்தது.



"இதை என்னன்னு சொல்ல போறீங்க?" என்றான் அருண்.



"நான் எதுவுமே சொல்ல போறதில்லை" என்ற விக்னேஷ் அமைதியானான்.



" இப்படி குளிரும்னு தெரிஞ்சிருந்தா ஸ்வெட்ட ரோ ரெய்ன்கோட்டோ கொண்டு வந்திருப்பேன்.”



"கழுகுமலையில் நடக்கிற அத்தனை மர்டரும் குளிர் காலத்துலதான். நடக்குது. அதனால தான் நம்ம இந்த டைம்ல அனுப்பியிருக்காரு கமிசனர். ஊருக்குள்ள போனதும் நீ சொன்ன எல்லாத்தையும் வாங்கிடுவோம். டோண்ட் ஓர்ரி.”



"அவ ருமட்டும் குளிருக்கு இதமா பொண்டாட்டிய கட்டி பிடிச்சு படுத்துக்கு வாரு .மொட்டப் பசங்க நாம மட்டும் கைல பிடிச்சுட்டு சுத்தனுமா? நான் கேஸ் கட்டை சொன்னேன்.”



வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் அந்த மாற்றத்தை கவனித்தான். அதுவரை சாலையோர மரங்களும் புதர்களும் பச்சை நிறமாக காட்சியளித்தது மாறி மெல்லிய சிவப்பு வண்ணத்தில் காண கிடைத்தன. அந்த மெல்லிய வண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக அடர் சிகப்பு வண்ணத்திற்கு மாறுவதை கவனித்தான்.

விக்னேஷிற்கு முன்பாகவே அதை கவனிக்க துவங்கியிருந்த அருண் "கவனீச்சீங்களா பாஸ்?" என்றான்.

" பாத்துட்டுத்தான் இருக்கேன்" என்றான் விக்னேஷ்.



"இதுக்கு எதாவது விளக்கம் இருக்கா?”



“அது கதை முடியும் போது தான் தெரியும். இப்பவே கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்."



கார் சற்று தூரம் சென்றதும் பழையபடி பச்சை நிறத்தை மரங்கள் அணிந்து கொள்ள துவங்கியிருந்தன.



கழுகுமலை 5 கிலோ மீட்டர் என்ற போர்டு கண்ணில் பட்டதும் அருண் உற்சாகமானான்.



"அப்பாடா. ஊர் நெருங்கிருச்சு”



சாலையின் வளைவில் கார் திரும்பிய போது அந்த மூவர் காரை நெருங்கி மறித்தனர். சாலையின் நடுவே திடீரென முளைத்த அந்த மூவரை பார்த்து காரை நிறுத்தினான் அருண்.



" தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழர். நம் தோழர் ஒருத்தரை கழுகுமலையில் டிராப் பண்ணனும். கொஞ்சம் உதவுங்கள் தோழர் " என்றான் மூவரில் ஒருவன்.



" வரச் சொல்லுங்க தோழர் " என்றான் அருண்.



"வாங்க தோழர் " என்றதும் அவர்களில் ஒருவன் முன்னால் வந்தான்.



"நான் தமிழ்செல்வன். பசுமை உலகம் என்ற இயக்கத்தின் தலைவர் . ஸ்பெர்லைட்டை மூடுவது தான் எங்கள் இயக்கத்தின் லட்சியம் " என்றபடி அருணின் கைகளை குலுக்கினான்.



" பின்னால ஏறுங்க" என்றான் அருண்.



" நான் ஏறுவதில் உங்க நண்பருக்கு விருப்பமில்லை போல் தெரிகிறதே?” என்றான் தமிழ்செல்வன்.

"அப்படில்லாம் எதுவுமில்லை. ஏறுங்க." என்றான் விக்னேஷ்.

பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தவன் தன் தோழர்களிடம் விடை பெற்று கொண்டான்.



கார் நகர தொடங்கியது.



"மேகமலை வழியாகவா வந்தீங்க ?”



"ஆமாம்”



"அப்ப மாயாவ பார்த்திருப்பீங்களே?" தமிழ்செல்வனின் திடிர் கேள்வியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 3



" ஆமா’ மாயாவை பார்த்தோம் " என்று அருண் சொல்லிவிடுவானோ என்று நினைத்த விக்னேஷ் சட்டென்று முந்தி கொண்டு " மாயாவா? அது யாரு?" என்றான் அப்பாவி முகபாவத்துடன் . விக்னேஷின் எண்ணத்தை புரிந்து கொண்ட அருண் திறந்த வாயை மூடிக் கொண்டு அமைதியானான்.



தமிழ்செல்வனின் முகத்தில் ஆச்சரியம் பரவியது.



"மேகமலை வழியா வருகிற அத்தனை பேரும் மாயாவை பார்த்திருக்கிறார்கள். நீங்க பாக்கலைன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு" என்றான் தமிழ்செல்வன்.



"மாயா யாரு ஐஸ்வர்யா ராயா ? " என்றான் அருண்.



"மாயாவை Uத்தி தெரியாமலா கழுகுமலைக்கு போறீங்க?’



"சரி. நீங்க தான் மாயாவை பத்தி சொல்லுங்களேன். தெரிஞ்சுகிறோம்.”



" சொல்றேன். இது 20 வருசத்துக்கு முந்தைய கதை. அப்ப இது ரிசர்வ் பாரஸ்ட் இங்கே பழங்குடியின மக்கள் மட்டும் தான் நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தாங்க. அவங்களில் கொஞ்சம் படிச்சு விவரம் தெரிஞ்ச ஒரே பொண்ணு மாயா மட்டும் தான். அவளுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லாத ஒரு ஊமை அண்ணன் இருந்தாரு. அவர் பேர் அர்த்தநாரி. காட்டுல நிம்மதியா போயிட்டிருந்த அவங்க வாழ்க்கையில இடியா இறங்கியதுஸ் பெர்லைட் கம்பெனி.

அந்த கம்பெனி ஆரம்பிக்க மாயா வாழ்ந்த இடத்தை செலக்ட் பண்ணினாங்க. மாயா யார் யாருக்கோ பெட்டிசன் போட்டு பார்த்தா. எதுவும் நடக்கலை. கடைசியா ஒரு நாள் துப்பாக்கி முனையில் போலீஸ் போர்ஸ் எல்லோரையும் வேற இடத்துக்கு அனுப்பி வைச்சாங்க. ஆனா மாயா மட்டும் தன் இனத்தோட போகாம கொஞ்சம் தள்ளி ஒரு இடத்துல குடிசைய போட்டு காட்டுல கிடைக்கிற பொருட்களை வைச்சு வித்து வாழ்க்கை நடத்த ஆரம்பிச்சா. அவளால பெருசா எதுவும் பண்ண முடியாதுன்னு கம்பெனி அவளை கண்டுக்கலை. அவ குடிசை போட்டு தங்கியிருந்த இடத்தைத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க பார்த்திருப்பீங்க. அந்த இடமே வித்தியாசமா இருந்திருக்கும்.”



"அந்த சிவப்பு நிற மரங்கள் ?”



"ஆமா"அதே இடம் தான் “



"சரி. மேல சொல்லுங்க.”



" பெர்லைட் கம்பெனி இயங்க தொடங்கிய கொஞ்ச நாளில் மாயாவோட அண்ணன் அர்த்தநாரி பைத்தியமாயிட்டான். நைட் மாயா அவனை சங்கிலியில் கட்டி வைச்சிருப்பதாக அவளை அவ்வப்போது பாக்க வரும் பழங்குடி மக்கள் சொல்வாங்க. கடைசியா ஒரு நாள் மாயா கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை அவங்க தான் பார்த்தாங்க. அப்புறம் அர்த்தநாரியை அவங்க கூட்டிட்டு போயிட்டாங்க. கொஞ்ச நாளில் பெர்லைட் கம்பெனில நாலு லேபர் மர்மமா இறந்தாங்க. அதுல ஒருத்தன் சாகும் போது மாயாவை கற்பழிச்சு கொன்னது நாங்க நாலு பேர்தான்னு உண்மையை சொன்னான். மாயா சாகும் போது இந்த ஊர்ல இருக்கிற இந்த கம்பெனிய இழுத்து மூடுற வரை நான் பழி வாங்குவேன்னு வேற சொல்லியிருக்கா.. அப்புறம் இந்த கம்பெனில வேலை செய்ய நிறைய வட மாநில தொழிலாளர்கள் நம் ஆட்கள்னு இங்கே குடிவந்தாங்க. இங்கிருக்கிற இடத்தோட மதிப்பு அதிகமாச்சு.மெல்ல மெல்ல நவீன வசதிகளோட ஓரு சிட்டியா உருவாச்சு. அப்பத்தான் மாயாவோட சாபம் பலிக்க ஆரம்பிச்சுது. மாயா செத்துப் போன டிசம்பர் மாசத்துல இங்க நிறைய பேர் கொலை பண்ண ஆரம்பிச்சாங்க. புருசன் பொண்டாட்டி குழந்தைகளோட நைட்டு தூங்க போறவன் காலையில் பொண்டாட்டி புள்ளைய கொடுரமா கொன்னு போட்ருப்பான்.விசாரிச்சா மாயா கொல்ல சொன்னதா சொல்வான். ஜெயில்ல அவனும் குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிக்குவான். நிறைய பேர் மாயாவுக்கு பயந்து டிசம்பர் குளிர் காலம் ஆரம்பித்தவுடன் வீட்டை பூட்டி சாவியை போலீஸ் ஸ்டேசனில் கொடுத்துட்டு வெளியூர் போயிருவாங்க, நடுவுல ஸ்பெர்லைட்டால நிலத்தடி நீர் மாசு.தோல் நோய்னு ஏகப்பட்ட பிரச்சனை. ஸ்பெர்லைட்டை மூடுனாத்தான் மாயாவும் ஓய்வாள். நாங்களும் வாழ முடியும்.”



"அப்ப உங்களோட நோக்கமும் மாயாவோட நோக்கமும் ஒன்னு தான்.”



" பெர்லைட்டை மூடுற விசயத்துல மாயாவும் பசுமை உலகமும் ஓரே அணிதான். ஆமாம். நீங்க யாரு? எதுக்காக கழுகுமலைக்கு போறீங்க?”



"பதில் சொல்லுங்க பாஸ்!" என்றான் அருண்.



" நாங்க டூரிஸ்ட் அட்வென்ஞ்சர்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதான் இந்த இடத்தை கேள்விப்பட்டு வந்திருக்கிறோம்”



"அதுக்கெல்லாம் இங்கே குறைச்சலே கிடையாது. நான் சொல்ல வந்ததுக்கு அர்த்தம் உங்களுக்கு சீக்கிரமாகவே புரியும்.”



" மாயாவை பத்தி சொன்னதுக்கு நன்றி தமிழ்செல்வன். நான் ஒரு கேள்வி கேட்பேன். கோபப்படமாட்டீங்களே?”



"கோபம் வராத மாதிரி கேளுங்க" என்று புன்னகைத்தான் தமிழ்செல்வன்.



" கேட்கிறேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பசுமை உலகமும் மாயாவும் ஒரே அணி. இருவருடைய நோக்கமும் ஒன்னு தான். அது பெர்லைட்டை காலி பண்றதுன்னு சொன்னீங்க."



"ஆமாம். அதுக்கு என்ன?”



"நீங்க சொன்ன பேய் கதையில் வருகிற மாயா பசுமை உலகத்தோட ஐ மீன் உங்களுடைய செட்டப்பாக கூட இருக்கலாம் இல்லையா?" என்றான் விக்னேஷ்



தமிழ்செல்வனின் முகம் லேசாக இருளடைய ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 4



" மாயா எங்களோட செட்டப்னு நீங்க நினைக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றான் தமிழ்செல்வன்.



"நீங்க மாயாவை பார்க்கலையான்னு ரொம்ப ஆர்வமா விசாரிச்சீங்களா? அதான் டவுட் வந்துருச்சு.”



"எனக்கு உண்மையாவே நீங்க இரண்டு பேரும் டூரிஸ்டு தானான்னு டவுட் வருது. நீங்க கேள்வி கேட்கிற தோரணைய பார்த்தா மப்டில இருக்கிற போலீஸ் மாதிரியே இருக்கு”



"எங்க ரெண்டு பேத்துக்கும் தொப்பை இல்லாததால் அந்த சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். நீங்க இன்னும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை." என்றான் விக்னேஷ்.



" நாங்க பேயை ஐ மீன் மாயாவை நம்பலை. மக்களை நம்புறோம். மக்களை ஒன்று படுத்துவதன் மூலம் நாங்க ஐ மீன் மக்கள் நினைப்பதை நடத்தி காட்ட முடியும் “



" தமிழ்செல்வன் நீங்க கம்யூனிஸ்டா,?”



" நான் கம்யூனிஸ்டா இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா?”



"அது குற்றமில்லை. காலாவதியாகி போன ஒரு சித்தாந்தத்தை இன்னுமா நம்புறீங்க? சீனாவில் கூட கம்யூனிசம் தோத்துருச்சு”



"அதனால அதோட தேவை இல்லாம போயிராது. வேற பேரோட தன் குறைகளை களைந்து கொண்டு கம்யூனிசம் திரும்ப வரும்.”



" உலகம் எங்கியோ போயிட்டிருக்கு தம்ழ் செல்வன். நானோ டெக்னாலாஜி,பிளாஸ்மாடெக்னாலாஜின்னு உலகம் நாற்காற் பாய்ச்சலில் ஓடிட்டு இருக்கு.”



| " இந்த டெக்னாலாஜி எங்க போய் முடியும்னு நினைக்கிறீங்க, .? எங்கியோ எவனோ ஒரு பட்டனை தட்டி இந்த உலகத்தை அழிக்க போறான். உலகம் அழிந்த அடுத்த கணம் தப்பிபிழைத்த மனிதர்களை டெக்னாலாஜி காப்பாற்றாது. ஒரு மெழகு வர்த்தி கூட சொந்தமா செய்ய தெரியாம கற்காலத்துல மனிதர்கள் வாழ போறாங்க.”



"வீண் கற்பனை “



" எது கற்பனை? இப்படி யோசிங்க. முன்னாடி டிவிய கண்டுபிடிச்சு அதை மாய கண்ணாடின்னு சொல்லியிருக்கலாம். அ சரீரிய மைக் சவுண்டா மாத்தி நினைச்சு பாருங்க. விதுரன் பாரத போர் காட்சியை இருந்த இடத்திலிருந்தே வர்ணித்தது சிடி டிவியநினைவுபடுத்தலையா,?”



" இதை வைச்சு என்ன சொல்ல போறீங்க?”



"நமக்கு முன்னாடியே இப்ப இருக்கிற தொழில் நுட்பத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்கலாம். அந்த தொழில் நுட்பத்தால் உலகம் அழிந்து போயிருக்கலாம். அந்த டெக்னாலாஜி யெல்லாம் கர்ண பரம்பரை கதையாக நம்மிடையே உலாவிக் கொண்டிருக்கலாம்.”

.

" நல்லா லாஜிக் காத்தான் பேசறீங்க தமிழ்செல்வன். உங்க பேச்சை கேட்டா இது உண்மையா இருக்குமோன்னு கூட தோணுது.”



" வரலாறு என்பதே கற்பனைகளாலும் யூகங்களாலும் நிரப்பப்படுபவை தானே?" என்றான் தமிழ்செல்வன்.



" உண்மைதான்.”



"சரி தோழர். நான் இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு.வண்டிய நிறுத்துங்க. ஆமா. உங்க பேரை சொல்ல வே இல்லையே?" என்றான் தமிழ்செல்வன்.



" என் பெயர் விக்னேஷ். இவன் அருண். கழுகுமலையில தான் இன்னும் கொஞ்ச நாள் இருப்போம்.”



"எங்க ஊரைப் பத்தி நானே தப்பா சொல்ல கூடாது. ஆனா வேற வழியில்லை. இந்த ஊர்ல இருக்கிற வரை எச்சரிக்கையா இருங்க”



“அப்படி என்ன ஆபத்து வந்துட போகுது?”



" மாயாவ நீங்க சாதாரணமா நினைச்சுட்டீங்க?”



" மதம் மனிதர்களை மயக்கும் அபின்னு மார்க்ஸ் சொல்லியிருக்காரு. ஒரு கம்யூனிஸ்டான நீங்க ஒரு பேயை பாத்து பயப்படுறது வியப்பா இருக்கு”



"சீக்கிரமா வே என் பயத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்வீர்கள்”



நின்ற காரிலிருந்து இறங்கிய தமிழ் செல்வன் கீழே இறங்கி கொண்டான்.



பானேட்டுக்கு முன்பாக வந்து நின்று "பாத்து போங்க தோழர். டிராப் பண்ணியதற்கு நன்றி" என்றான் தமிழ்செல்வன். கார் கிளம்பிய பின் "பானேட் லைட்டா ஒடுங்கியிருக்கு. இது மாயாவோட வேலைதான். ஆனா மாயாவை பார்க்கவே இல்லைன்னு ஏன் பொய் சொன்னாங்க?" என்று குழம்ப ஆரம்பித்தான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 5



தமிழ் செல்வனை இறக்கிவிட்டு விட்டு காரை கிளப்பிய அருண் "அடுத்தது நாம எங்கே போகிறோம் பாஸ்?" என்றான்.



"இந்த ஊரோட போலீஸ் ஸ்டேசனுக்குத்தான். இங்க ஓட்டல் நிறைய இருக்கு. ஆனா வெளியூர் ஆளுக தங்குறதுக்கு லாட்ஜ் வசதி எதுவும் இல்லை." என்றான் விக்னேஷ்.



"அப்ப எங்க தங்குறது?" என்றான் அருண்.



" போலீஸ் ஸ்டேசன்லயே தங்கிக்கலாம். சம்மன் கொடுக்க போற போலீஸ்காரங்க அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேசன்ல தங்குற வழக்கம் உண்டு. நாமளும் அதைத்தான் பாலோ பண்ண போறோம்.”



"இன்ஸ்பெக்டர் நல்ல ஆளா இருந்தா பிரச்சனையில்லை. முசுடா இருந்தா நமக்கு பிரச்சனை தான்.”



"நல்லதையே நினைக்க மாட்டியா?”



" எதிர்மறையாவும் நினைப்போம் பாஸ்., ஏரோப்ளைனை கண்டு பிடிச்சு அது புழக்கத்தில் வந்த போது என்னை மாதிரி ஒருத்தன் நடு வானத்துல எதாவது ரிப்பேராயிட்டா மக்கள் எப்படி தப்பிப்பார்கள்?னு எதிர்மறையா கேள்வி கேட்டதால் தான் பாராசூட்டை கண்டுபிடிச்சாங்க. எதிர்மறை சிந்தனையும் நல்லதுதான்.”



" இதை எங்க படிச்ச?”



" அது எதுக்கு உங்களுக்கு? கருத்தை மட்டும் பாருங்க.”



"சரிங்க துரை’ போலீஸ் ஸ்டேசன் எங்கேன்னு வழி விசாரிங்க பார்ப்போம்."



பாதையோரம் நின்றிருந்த ஒரு பெரியவரிடம் காரை நிறுத்திய அருண் "பெரியவரே. போலீஸ் ஸ்டேசனுக்கு எப்படி போகணும்?” என்றான்.



" தெக்க போய் தம்பி அப்படியே வடக்க திரும்பி போனீங்கன்னா மேற்கே ஒரு கோவில் இருக்கும். அதுக்கு கிழபுறம் போலீஸ் ஸ்டேசன்”



அருண் திசைவழிகாட்டலில் குழம்பி தலையை பிய்த்து கொண்டான்.

"பாஸ் ஏதாவது புரியுது!" என்றான்.



"வண்டிய நேரா விடு. சூரியன் உதிக்கிற திசை கிழக்கு .அதிலிருந்து கணக்கு போட்டு நான் வழி சொல்றேன்." என்றான் விக்னேஷ்



" நன்றிங்க பெரியவரே!”



" ஏதாவது பிரச்சனைங்களா?”



"அதெல்லாம் ஒன்னுமில்லை" என்ற அருண் வண்டியை கிளப்பினான். விக்னேஷ் " ரைட், லெப்ட் " என்று வழி சொல்ல அருண் "இது எவ்வளவு ஈஸியா இருக்கு" என்றான்.



கோயிலை தாண்டியதும் அந்த பழைய போலீஸ் ஸ்டேசன் பார்வைக்கு கிடைத்தது. வெளியேயிருந்த டீக்கடையில் கணிசமான கூட்டம் உட்கார்ந்திருந்தது.

போலீஸ் ஸ்டேசனின் ஒரு மூலையில் டூவீலர்கள் இத்துப் போய் நின்று கொண்டிருந்தன.

இருவரும் காரை நிறுத்தி இறங்கிய போது நெருங்கி வந்த ஏட்டு " வணக்கம் சார்’ நீங்க ஆபிசர்களா?" என்றார்.



"ஆமா" கமிசனர் அனுப்பியது எங்களைத் தான் ‘"



சட்டென்று சல்யூட் அடித்தவர் " என் பெயர் கோபால்சார் , இந்த கேஸ்ல எந்த உதவி வேணும்னாலும் என்னை கேளுங்க சார். உதவி பண்றேன். பிரதியுபகாரமாகமிசனர் கிட்ட என்னோட பிரமோ சனை பத்தி கொஞ்சம் பேசுங்க சார்" என்றார்.



" அவரை பாக்கும் போது கண்டிப்பா உங்களை பத்தி பேசறேன். உங்களோட வெளிப்படையான டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.இன்ஸ்பெக்டர் இருக்காரா?”



" இருக்கார். உள்ளே வாங்க சார்" அந்த கோபால் உள்ளே அழைத்து சென்றார்.



போன் பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் போனை அணைத்து விட்டு " யார்யா இவங்க ?" என்றார்.



"கமிசனர் அனுப்பிய அதிகாரிகள் சார்”



" இவங்கதானா?" என்ற பொன்ராஜிடம் கைகளை நீட்டிய விக்னேஷ் " நான் விக்னேஷ். இவன் அருண் " என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டான்.



கை குலுக்காமல் முறைத்த பொன்ராஜ் " நீங்க யாரா வேணா இருங்க. இந்த கேஸ்ல என்னோட ஒத்துழைப்பு எதுவும் கிடைக்காது" என்றார்.



அருண் விக்னேஷை நான் அப்பவே சொல்லலை என்பது போல் பார்த்தான்.



" என்ன காரணம்னு சொல்ல முடியுமா?" என்றான் விக்னேஷ் சற்றும் அயராமல்.



" பாருங்கவிக்னேஷ். என்னோட நிலை ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு. என்ன காரணம் னே தெரியாம நிறைய கொலை நடக்குது.காரணம் மாயா ன்னு கண்ணுக்கு தெரியாத ஒரு விசயத்தை காட்டுறாங்க .இன்னோரு பக்கம் பெர்லைட்டை மூடனும்னு மக்கள் ஆர்ப்பாட்டம் பண்றாங்க.13 பேரை சுட்டு கொன்னு பிரச்சனை பெருசாயிருச்சு. இப்ப நீங்க வேற உள்ள வந்து நுழைய றீங்க. நான் யாரைன்னு பாக்குறது.? பேசாம டிரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிடலாமான்னு இருக்கு.”



" ஓகே. உங்க நிலைமை புரியுது. இப்ப நாம் ஒரு டீலிங் போட்டுக்குவோம். பெர்லைட்டை நீங்க பாருங்க. மாயாவை நாங்க பாக்கிறோம்.”



"அப்பாடா.தப்பிச்சேன். இப்ப நான் என்ன பண்ணனும்.?”



" நாங்க தங்குறதுக்கு ஓரு இடம் வேணும்.”



" என் ப்ரண்ட் முத்துசாமி மாயாவுக்கு பயந்து வீட்டை பூட்டி சாவியை என் கிட்ட கொடுத்துட்டு போயிட்டான். கோபால் அந்த வீட்டு சாவிய எடுத்துக்குங்க. இவங்களுக்கு உதவியா இருங்க." என்றார் பொன்ராஜ்



மூவரும் ஸ்டேசனுக்கு வெளியே நின்ற காருக்கு வந்த போது எதிரே கசங்கிய உடையும், தாடி நிறைந்த முகமுமாக எதிர்பட்டவன் விக்னேஷின் தோளை தொட்டான். திரும்பிய விக்னேஷை பார்த்து " மாயா உம் மேல ரொம்ப கோவமா இருக்கா, பாத்து பத்திரமா இரு" என்றான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 6



" இவரு யாரு மாயாவோட பாய் ப்ரண்டா? மாயா கோவமா இருப்பது இவருக்கு எப்படி தெரியும்?" என்றான் அருண் கிண்டலாக .



அந்த பைத்தியக்காரன் அருணின் கிண்டலுக்கு பதில் சொல்லாமல் முறைத்து பார்த்தான். பிறகு மெல்லிய குரலில் " மாயாவை நீ பார்ப்பாய்’ அப்புறம் இந்த மாதிரி பேச மாட்டாய்" என்றவன் மெல்ல நடக்க தொடங்கினான்.



"யார் இந்த ஆள் கோபால் ?" என்றான் விக்னேஷ்.



"இவன் ஓரு மெண்டலுங்க. பகல்ல கடை கடையா பிச்சை எடுப்பான். கொடுக்கிறதை சாப்பிடுவான். நைட் எங்கியாவது படுத்திருப்பான்." என்றான் கோபால்.



"சரி" கார்ல ஏறுங்க. நாங்க தங்க போகிற வீட்டை காட்டுங்க" என்றான் விக்னேஷ்.



" அந்த வீடு பக்கத்துல தான் இருக்கு. டிசம்பர் மாசம் வந்தாவே இங்க நிறைய பேர் வீட்டை காலி பண்ணிட்டு சாவியை போலீஸ் ஸ்டேசன்ல கொடுத்துட்டு போயிருவாங்க. இந்த வீட்டுக்காரர் இன்ஸ்பெக்டர்க்கு நெருங்கிய சினேகம்." என்ற ஹேட் கான்ஸ்டபிள் கோபால் வழி சொல்ல ஆரம்பிக்க அரை மணி நேரத்தில் தனியாக இருந்த அந்த வீட்டின் முன் கார் நின்றது. சாவியுடன் இறங்கிய கோபால் போர்டிகோ கேட்டை திறந்து விட்டான். காரை போர்டிகோவில் நிறுத்திய அருணும் விக்னேசும் காரை விட்டு இறங்கினர்.



" ஏதாவது சாப்பிடுறீங்களா சார்? போய் வாங்கிட்டு வரவா? என்றான் கோபால்.



"இல்லை. வேணாம். பிரட் பிஸ்கட் இருக்கு. ரொம்ப டயர்டா இருக்கு. அதை சாப்பிட்டுட்டு தூங்கறோம். மதியம் வாங்க. ஏதாவது ஒட்டலுக்கு போகலாம். ஆமாம். நீங்க எப்படி ஸ்டேசனுக்கு போவீங்க? காரை வேணா எடுத்துட்டு போறீங்களா?”



"வேணாம் சார்’ வீட்டு ஓன ரோட பைக் சும்மாதான நிக்குது. அதோட சாவிய கையோட எடுத்துட்டு வந்துட்டேன். அதுலயே நான் ஸ்டேசனுக்கு போயிடுவேன்". என்றான் கோபால்



" நல்லது கோபால்.’ நாம கொஞ்ச நேரம் பேசலாம்."



"அதை ஏன் சார் போர்டிகோவுல பண்ணனும்? வீட்டுக்குள்ள போயே பேசலாமே?”



விக்னேஷ் கதவை திறந்தான். மூவரும் உள்ளே நுழைந்தனர். சகல வசதிகளுடன் இரண்டு பெட்ரூம் வசதிகளுடன் விஸ்தாரமாக இருந்தது வீடு.



"சூப்பர் வீடு பாஸ்" என்றான் அருண்.



சோபாவில் உட்கார்ந்த விக்னேஷ் " உட்காருங்க கோபால் , இந்த கேஸை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றான்.



" எனக்கே இங்க நடப்பதெல்லாம் கொஞ்சம் குழப்பம் தான் சார். மாயாங்கிறதே ஒரு கெட்டப்புன்னு எல்லாம் சொல்ல முடியாது சார்”



" எதை வைச்சு சொல்றீங்க?”



"கொலை செய்தவர்கள் அத்தனை பேரும் மாயாவால் தான் கொலை பண்ணியதா சொல்றாங்க.”



"இதுக்கு என்ன மீனிங் ?”



"உங்க கேள்வி புரியலை?”



"மாயாவாலன்னா எப்படி? மாயா நேர்ல வந்தாளா? யாராவது பாத்தாங்களா?”



" சிலர் பார்த்ததா சொல்றாங்க. சில பேரு குரலை கேட்டதா சொல்றாங்க.”



"இது ஏன் மாஸ் ஹிஸ்டீரியாவா இருக்க கூடாது?”



" புரியலை சார்”



" பிள்ளையார் பால் குடிச்சது எப்படி இந்தியா முழுக்க பரவுச் சோ அதே மாதிரி இந்த கழுகுமலை ல இண்டு இடுக்கெல்லாம் மாயா பரவியிருக்கா இது தான் மொத்த பிரச்சனைக்கும்பேஸ் னு நினைக்கிறேன்.”



"உங்க ஆங்கிள் சரியா கூட இருக்கலாம் சார்”



" அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற மாதிரி இங்க நடக்கிற எல்லா அசம்பாவிதங்கருக்கும் மாயாவை கை காட்டுவீங்க போல தெரியுது.”



" ஆமா பாஸ்.’ இந்தியாவுல முக்கா வாசிப் பேருக்கு ஒழுங்கா கக்கா வரலைன்னா கூட மோடி தான் காரணம்னு சொல்றானுக பாஸ்” என்றான் அருண்.



"கோபால் எனக்கு ஒரு டவுட் இருக்கு ! சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?”



" சொல்லுங்க சார்”



" வேற எதுக்கோ நடக்குற கொலையையெல்லாம் கண்ணுக்கு தெரியாத மாயா மேல போடறீங்களோன்னு எனக்கு ஒரு டவுட்" என்றான் விக்னேஷ்



கோபாலின் முகம் மெல்ல இருட்டுக்கு போனது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 7



"உங்களோட டவுட்டை நான் மறுக்க மாட்டேன். ஏதோ ஓன்னு ரெண்டு கேஸ்ல அக்யூஸ்ட் சிக்கலைன்னா கையில சிக்குற ஆளுக மேல அதை எழுதுவது இங்கே வழக்கமா நடப்பதுதானே? ஆனா எல்லாத்தையும் மாயா என்கிற ஓரே ஆள் மேல சுமத்துவது சாத்தியம் இல்லை.”



"ஒகே" உங்களுக்கு வேற யார் மேலயாவது டவுட் இருக்கா?”



"பெர்லைட்டை மூடியே தீருவேன்னு போராட்டம் பண்ணுவதையே பிழைப்பா வச்சிருக்கான் ஒருத்தன். எனக்கு அவன் மேல தான் டவுட்டு “



"யூ மீன் தமிழ் செல்வனையா சொல்றீங்க?”



" அவனை தெரியுமா உங்களுக்கு?"



" வருகிற வழியில லிப்ட் கொடுத்ததே நாங்கதானே?”



"தப்பு பண்ணீட்டிங்க சார். இன்னைக்கு ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கான் அவன். முன் எச்சரிக்கையா கைது பண்ண அவனை நேத்து இன்ஸ்பெக்டர் தேடி சலிச்சு போயிட்டாரு. நீங்க என்னடான்னா அந்த ஏழறைய வண்டில ஏத்தி கொண்டு வந்துருக்கீங்க “



" அவன் கார்ல ஏறும் போது இதெல்லாம் சொல்லலை. நாங்களும் கேட்கலை.”



"உங்க சொந்த வண்டில முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை ஏற்றுவது சட்டப்படி குற்றம் " என்றான் கோபால்.



"அப்படி பார்த்தா எங்க கார்ல ஜம்முன்னு உக்காந்து வந்த உங்களை தமிழ் செல்வனோட சேர்த்து ஜெயில்ல போடனும். போடலாமா?" என்றான் அருண்.



" என்ன சார் . கடைசில என்ன உள்ளே தள்ள பாக்குறீங்க?" என்றான் கோபால்.



“நடைமுறையை பேசுங்கள் கோபால் அதை விடுங்கள். தமிழ்செல்வன்கிற ஒரு ஆளையா உங்களால பிடிக்க முடியலை.?”



" பக்கத்துல பத்துமலை வாழ் கிராமங்கள் இருக்கு. நாங்க தேடும் போது கிராமத்துக்குள்ள போய் பதுங்கி விடுகிறான் சார்”



“ அவனுக்கு கிராம புறத்துல நல்ல செல்வாக்கு இருக்கும் போல?”



"ஆமா சார். இந்த பெர்லைட் ஆலையாலநிலத்தடி நீர் மாசடையுது. புற்றுநோய் வருதுன்னு ஜனங்க நம்புறாங்க. இந்த தமிழ் செல்வன் அப்படி பேசி நம்ப வைச்சுட்டான்.

அதனால இங்க அவனை ராபின் வுட்டா நினைக்கிறாங்க”



" உண்மையா வே பர்லைட்டால தான் இதெல்லாம் நடக்குதா?”



" அந்த கம்பெனி ஓனர் கோர்ட்டுல் கொடுத்த அபிடவிட்டுல அப்படி எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருக்கானே? மேலும் இந்தியாவுல மூணு இடத்துல பெர்லைட் மாதிரி கம்பெனி இருக்கு. அங்கெல்லாம் இந்த மாதிரி பிரச்னை வரலையே?”



"இந்த தமிழ் செல்வனுடைய பேக்கிரவுண்ட் என்ன?”



"பசுமை உலகம்னு ஒரு அமைப்பை வைச்சு நடத்திட்டு இருக்கான் சார். இவனுக்கு வெளிநாட்டுலருந்து பணம் வருவதாக ஐபி ரிப்போர்ட் சொல்லுது. தூக்கி உள்ள போட்டு நாலு மிதி மிதிச்சா அடங்கிடுவான்.”



"வேற யார் மேலயும் உங்களுக்கு டவுட் வரலையா?”



"இல்லை சார்”



" இங்கே வேலை செய்கிற வட மாநில தொழிலாளர்கள் ?”



"அவனுக புள்ளை பூச்சி சார் .பஞ்சம் பிழைக்க வந்திருக்கானுக.என்ன வெள்ளையடிச்ச சுவரை சிவப்பு கலருக்கு எச்சையை துப்பியே மாத்திருவானுக.காவி பயலுக “



" விடியற்காலையில் மேகமலை வழியா வரும் போது ஒரு கார் எங்களை இடிப்பது போல் வந்தது. அதை வெள்ளைகாரன் ஒருத்தன் ஓட்டிட்டு போனான். அவனைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”



"ஓ! அவனா! அவன் பேர் ஸ்மித் சார். அமெரிக்கா காரன்.மண்ணியல் நிபுணர்னு சொன்னான். ஒரு ஆறு மாசமா இங்கே சுத்திகிட்டு இருக்கான். ஏதோ என்ஜிஓ சார்பா வந்திருப்பான் போல தெரியுது. பழங்குடி மக்கள் கிட்ட எல்லாம் போய் பேட்டி எடுப்பதை நானே பார்த்திருக்கிறேன்.”



"ஓரு வெளிநாட்டுகாரனுக்கு நம் ஊர்ல அதுவும் விடியற்காலையில் என்ன வேலைன்னு யோசிச்சீங்களா?”



விக்னேஷின் கேள்வியின் தீவிரம் உணர்ந்த கோபால் "சார் " என்றான்.



" யோக்கியனுக்கு இருட்டு ல என்ன வேலைன்னு பாஸ் கேட்கிறார்" என்றான் அருண்.



" அவனை சந்தேகப்படறீங்களா சார்" என்றான் கோபால்.



"லைட்டா " என்று புன்னகைத்த விக்னேஷ் "அவனை என்கொயரி பண்ண வேணாம். லூசுல விடுங்க" என்றான்.



"பாஸ் அவரை போரடிச்சது போதும். வயித்துக்கு எதையாவது போட்டுட்டு படுப்போம்." என்றான் அருண்.



" அப்ப நான் கிளம்பறேன்," என்ற கோபால் பைக்கை எடுத்து கொண்டு போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தான்.



" முட்டு சந்துல நிக்குறோம்" என்றான் அருண்.



"இனி தான் கதையே ஆரம்பம்" என்று புன்னகைத்தான் விக்னேஷ்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்8



ஒரு நல்ல உறக்கத்திற்கு பின் இருவரும் எழுந்து குளித்து முடித்து உடை மாற்றி கோபாலின் வருகைக்காக காத்திருந்தனர். பைக்கில் வந்து சேர்ந்த கோபால் அதை வீட்டில் நிறுத்திவிட்டு காரில் ஏறிக் கொண்டான். மூவரும் கழுகுமலையை நோக்கி விரைந்தனர்.அதுவரை கழுகுமலையை கிராமம் என்று நினைத்திருந்த இருவரின் நினைப்பிலும் மண் விழுந்தது. ஒரு கார்பரேட் சிட்டிக்கு சற்றும் குறைந்ததாக கழுகுமலை இல்லை. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களும் மல்டி ப்ளக்ஸ்களும் காபி ஷாப்பு களும் நிறைந்திருந்த அதன் மையப்பகுதி இருவரையுமே அயர வைத்தது.



"இந்த வளர்ச்சி எல்லாமே ஸ்பெர் லைட்டால தான் " என்றான் கோபால்.



" இவ்வளவு வளர்ச்சியை நான் எதிர்பார்க்கலை." என்றான் விக்னேஷ்



" எல்லாமே ஸ்டெர்லைட்டை மையமா வைச்சு வந்த வளர்ச்சி “



"ஆமாம். நம்மை கடந்து போகிற லாரிகள் எல்லாமே செந்தில் முருகன்னு எழுதியிருக்கே?”



"கழுகு கண்ணு சார் உங்களுக்கு . அதெல்லாம் லோக்கல் அரசியல்வாதிகளுடையது. ஸ்பெர் லைட்டால அதிக லாபம் அவங்களுக்குத்தான். லாரி காண்ட்ராக்ட், லேபர் காண்ட்ராக்ட்டுன்னு பணம் கொட்டுது.ஆளும் கட்சி எதிர்கட்சின்னு ரெண்டுக்கும் இதுல பங்கு இருக்கு. அதனால பெர்லைட்டை மூடுறதுல பெருசா ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் கம்பெனி காரன் தேர்தல் டைம்ல ஏகப்பட்ட கோடிகளை நன்கொடை ங்கிற பேர்ல எல்லா கட்சிக்கும் அழுது தொலையறான்.”



" பெரிய கட்சிகளே கண்டுக்காத ஒரு விசயத்தை தமிழ் செல்வன் கையில் எடுத்து போராடுவது தான் வினோதமா இருக்கு" என்றான் விக்னேஷ்.



" அவனை விலைக்கு வாங்கி ஆப் பண்ணாம பெர்லைட் அமைதியா இருப்பது அதைவிட வினோதமா இருக்கு" என்றான் அருண்.



" நான் இந்த கோணத்துல யோசிச்சதே இல்லை" என்றான் கோபால்.



"மாச சம்பளம் டான்னு வந்தா மூளை அதிகமா வேலை செய்யாது. ஜஸ்ட் பார் ஜோக். இங்கே எந்த கனடல சாப்பாடு நல்லா இருக்கும்."



"வெஜ்ஜா ? நான் வெஜ்ஜா?”



" நான் சைவம். முட்டை கூட சாப்பிடுவதில்லை" என்றான் விக்னேஷ்.



"எனக்கு பொறுமை அதிகம். முட்டை யிலிருந்து வெளிவருகிற கோழி வளர்ரவரைக்கும் வெயிட் பண்ணி சாப்பிடுவேன்’ என்றான் அருண்.



"நல்ல ஜோடி பொருத்தம்" என்றான் கோபால்.



முருக விலாஸில் சாப்பிடும் போது பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த யுவதியையும் அவள் குழந்தையையும் பார்த்த அருண் "பாப்பா அழகா இருக்குல்ல பாஸ்" என்றான்.



"நிஜமா குழந்தையைத் தான் சொல்றியா?" என்றான் விக்னேஷ்.



" நல்லவனை இந்த உலகம் நம்புவதேயில்லை" என்ற அருண் அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்து " பாப்பாவெரி கியூட் .பேர் என்ன?" என்றான்.



" கீர்த்தனா, " என்று குயில் கூவியது.



டீ சர்ட்டில் கடோத்கஜனாக ஐஸ்கிரீமுடன் நுழைந்தவனை பார்த்து சம்பாசணையை தொடர வாயை திறந்த அருண் கப்பென்று வாயை மூடி கொண்டான்.



" சாப்பிட மட்டும் வாயை திறந்தா போதும் " என்றான் விக்னேஷ்.



அந்த சின்ன குடும்பம் கிளம்பி போனபின்



"போட்டா இவளை போடனும். இல்லைன்னா இவளை போட்ட வன் முன்னாடி மண்டி போட்டு “



" ஆபாச களஞ்சியமே ,வாயை மூடு”



"கால்ல விழணும்னு சொல்ல வந்தேன்." என்றான் அருண்.



"என்னங்க இப்படி பேசறாரு?" என்றான் கோபால்.



"அழகா எதை பாத்தாலும் அப்படித்தான் பேசுவான். சீக்கிரம் பழகிரும் " என்றான் விக்னேஷ்.மூவரும் சாப்பிட்டு முடித்த போது அந்த சத்தம் பலமாக கேட்டது.



வெளியே அரவம் கேட்டு கண்ணாடி வழியே பார்த்த போது அந்த கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தது. அதன் முன்னால் மைக்கில் பேசி கொண்டிருந்தான் தமிழ்செல்வன்.



இவர்கள் மூவரை பார்த்ததும் தமிழ்செல்வனின் முகம் மாறியது. பின்னால் இருந்தவனிடம் மைக்கை கொடுத்து விட்டு இவர்களை நோக்கி வந்தவன்.



" நலமாதோழர்"! என்றான்.



" நேத்து தானே பாத்தோம். அதுக்குள்ள என்ன நடந்துரப்போவுது?" என்றான் அருண்.



"நீங்க எங்கிட்ட ரெண்டு பொய் சொல்லியிருக்கீங்க. ஒன்னு டூரிஸ்டுன்னு சொன்னது. டூரிஸ்டுக்கு போலீசோட டிபன் சாப்பிடற அவசியம் இல்லை.”



"ரைட்டு.' இன்னொரு பொய்?" என்றான் விக்னேஷ்.



"மாயாவை பாக்கலைன்னு சொன்னது " என்றான் தமிழ்செல்வன்.



மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 9



" நாங்க மாயாவை பார்க்கலைன்னு சொன்னது பொய்யின்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் அருண்.



"நான் அந்த கேள்வியை கேட்டபோது இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டதிலிருந்து நீங்க பொய் சொல்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்." என்றான் தமிழ்செல்வன்.



"நீங்க ஜேம்ஸ் பாண்ட் வேலைக்கு போகலாம் தமிழ்செல்வன்" என்றான் விக்னேஷ்



"எங்க கைல மாட்டா மயா போயிருவ? அன்னைக்கு இருக்கு கச்சேரி " என்றான் கோபால்.



"என்னை ஒன்னும் பண்ண முடியாது சார். எச்சரிக்கையா முன்ஜாமீன் வாங்கி வைச்சிருக்கேன்." என்று புன்னகைத்த தமிழ் செல்வன் மீண்டும்" பெர்லைட் ஓழிக" என்ற முழக்கத்துடன் இணைந்து கொண்டான்.



"லத்திய பின்னாடி சொருகி தட்டினாத்தான் அடங்குவான்" என்றான் கோபால்.



"அதை விடுங்க கோபால். இங்க பக்கத்துல டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எங்கிருக்கு?" என்றான் விக்னேஷ்.



" என்ன சார் வாங்கணும்?" என்றான் கோபால்.



"கொசுரீபிள் ஓன்னு வாங்கனும். நைட் குளிருக்கு ஸ்வெட்டர் வாங்கனும். அப்புறம் நைட் சாப்பாட்டுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணனும்.”



"நைட் சாப்பாடு கடைல சொல்லிடலாம் சார். அவங்களே வீட்டுல டெலிவரி பண்ணிடுவாங்க" என்ற கோபால் அருகிலிருந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு அழைத்து சென்றான். அங்கே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு கிளம்பினர்.விக்னேசையும் அருணையும் வீட்டில் விட்டு விட்டு கோபால் கிளம்பி போனபின் வீட்டிலிருந்த கம்யூட்டரை ஆன் செய்தான் அருண்.



"என்னடா பண்ண போற?" என்றான் விக்னேஷ்



" ஒரு கேள்வி மனசுக்குள்ள இருக்கு பாஸ். அதுக்கு விடை தேட போறேன்.கம்யூட்டர் பாஸ்வோர்டு எதையும் போடாம இருக்கனும்னு கடவுளை வேண்டிக்குங்க பாஸ்”



" முப்பத்து முக்கோடிதெய்வத்துல யாரை நான் வேண்டணும்?" என்ற விக்னேசின் கேள்விக்கு உங்களுக்கு பிடிச்ச சாமியை வேண்டிக்குங்க" என்ற அருண் "வேண்டுதல் கேன்சல்.கம்யூட்டருக்கு பாஸ்வோர்டு எதுவும் இல்லை" என்றான் நிம்மதி பெருமூச்சுடன் .



"அப்படி என்ன டவுட் உனக்கு?”



"தமிழ் செல்வனை பெர்லைட் ஏன் விலைக்கு வாங்காம இருக்குன்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடையை தேட போறேன்" என்று கம்யூட்டரில் மூழ்கினான். விக்னேஸ்டிவி நியூசில் மூழ்கி கொண்டிருந்தான்.



திடிரென அருண் "யுரேகா " என்று குதித்தான்.



"என்னாச்சுடா” என்றான் விக்னேஷ் திடுக்கிடலுடன் .



" பாருங்க பாஸ் பெர்னலைட்டோட பேலன்ஸ் ஷீட்டை . லாபம் முன்பை விட டபுள் மடங்கு ஆகியிருக்கு “



" எப்படி ?”



" இதே மாதிரி மொத்தம் மூணு கம்பெனி இந்தியாவுல பெர்லைட்டுக்கு இருக்கு. ஒன்னு உபி.இன்னொன்னு பீகார் .மூணாவது தமிழ்நாட்டுல. இந்தியாவோட காப்பர் உற்பத்தியில70 சதவீதம் பெர்லைட்டோடது. இப்ப என்னாச்சுன்னா தமிழ்நாட்டு பெர்லைட்டை மூடி காப்பருக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏத்திட்டானுக. பீகார் உயில இருக்கிற பெர்லைட் கம்பெனிகள் அபரிமிதமான லாபத்தோடு இயங்குகின்றன. தமிழ்நாட்டு பெர்லைட் மூடப்பட்டதால கம்பெனிக்கு நட்டமில்லை. அதிகப்படியான லாபம்தான் இப்ப கிடைக்குது.”



" பக்கா கிரிமினல் வேலை டா" ஆனா சீனாவுல காப்பர் விலை கம்மி தானே? அங்கிருந்து இறக்குமதி பண்ணலாமே?”



"குட்கொஸ்டின்.இருங்கதேடி பாக்குறேன்" என்ற அருண் கால் மணி நேர தேடலுக்கு பின் "பாஸ் நீங்க கில்லி பாஸ்' .நீங்க நினைச்சது சரிதான். சீனாவிலிருந்து நந்தா எண்டர்பிரைசஸ்தான் காப்பரை மொத்தமா கொள்முதல் பண்ணி இந்தியாவுலவிக்குது.

வேற கம்பெனி எதுவும் இறக்குமதி பண்ணலை. நந்தா எண்டர்பிரைசஸ்பெர்லைட் விக்கிற அதே விலைக்குத் தான் இந்தியாவுல காப்பரை விற்கிறது. அதிலும் கொள்ளை லாபம். இந்த நந்தா எண்டர்பிரைசஸ் யார்னா பெர்லைட்டோட சிஸ்டர் கன்சர்ன் “



" வேற கார்பரேட் கம்பெனி எதுவுமே காப்பரை இறக்குமதி பண்ணலையா?”



" எல்லாமே கூட்டு களவாணிக பாஸ்! டாட்டாவும் பிர்லாவும் பண்ற தொழிலை ரிலையன்ஸ் பண்ண மாட்டான். ரிலையன்ஸ் இருக்கிற தொழில்ல வேற யாரும் இருக்க மாட்டாங்க. நல்லா கவனிச்சு பாருங்க. பர்கர்விற்கிறவன் பீட்ஸாவிற்க மாட்டான். பீட்ஸா விற்கிறவன் பர்கர் விற்க மாட்டான். பணக்காரனுக ஒத்துமையா இருப்பானுக.மக்கள் தான் பாவம்.”



" அப்ப பெர்லைட் திறக்காம இருக்கிற வரைதான் கம்பெனிக்கு லாபம். அதை திறந்தா கம்பெனிக்கு நட்டம் தான்.”



"அப்ப கம்பெனியமூடச் சொல்லி போராட்டம் பண்ற தமிழ்செல்வன்?”



"பெர்லைட்டோட ஆள்னு கண்ண மூடிட்டு சொல்லிடலாம்" என்றான் அருண்.



ஒரு முடிச்சு அவிழ்ந்து திரை விலகியதை இருவருமே உணர்ந்தனர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்10

"தமிழ்செல்வன் பெர்லைட்டோட ஆளுன்னு சொல்றீங்களா பாஸ்?" என்றான் அருண்.



"இல்லாமலும் இருக்கலாம்" என்றான் விக்னேஷ்



"குழப்பாதீங்க பாஸ். கரெக்ட்டா சொல்லுங்கள்" என்றான் அருண்.



" இப்படி யோசியேன் அருண்.பெர்லைட்டோ ட ஆளா தமிழ்செல்வன் இருக்கலாம். இல்லை உண்மையா வே சுற்றுசூழல் ஆர்வலராக கூட தமிழ்செல்வன் இருக்கலாம்.காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக தமிழ் செல்வனோட போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக நினைத்து பெர்லைட் அமைதியாக கூட இருக்கலாம். என்னோட டவுட் என்னன்னா தமிழ்செல்வனோட போராட்டத்துக்கு பெர்லைட் மறைமுகமாக ஆதரவு தருமோன்னு தோணுது.”



" இப்படியும் பேசறீங்க. அப்படியும் பேசறீங்க.”



" இரண்டுக்கும் நடுவுல உண்மை எங்கேயோ ஒளிஞ்சிருக்கு.”



" இதுக்கு முன்னாடி வருசத்துல டிசம்பர் மாசம் நடந்த கொலைகளை பற்றி நமக்கு தெரியனுமே?”



"அந்த பைலை கோபாலிடம் கேட்டிருக்கிறேன். நாளைக்கு கொண்டு வந்து தருவதாக சொல்லி இருக்கிறார். “



"சரி. இப்ப பொழுதை கழிக்க என்ன பண்ணலாம்?”



"டீவி பாக்கலாமா?”



"சேனலை மாத்துங்க'. வேற எதையாவது பார்ப்போம்.’"



விக்னேஷ் சேனலை மாற்றிய போது " இதை வைங்க ‘" என்றான் அருண்.



" இதுல என்னடா இருக்கு. இது பேய் சீரியல் டா”



" அதுல பேயா வர்ர பிகரு செமயா இருக்குல்ல பாஸ்?”



"திருந்தவே மாட்டியாடா" என்று விக்னேஷ் சொல்ல போது டிவியில் அந்த பெண் வெள்ளை சேலை அணிந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நடந்தாள்.



"இந்த காஸ்ட்யூமை மாத்த சொல்லனும்" என்றான் அருண்.



" நீ காஸ்ட்யூமே வேணாம்னு தானே சொல்லுவ?" என்ற விக்னேஸை முறைத்தான் அருண்.



விளம்பரத்திற்கு பிறகு மாயா நெடுந்தொடர் தொடர்கிறது என்றது விளம்பர குரல்.

"இதுலயும் மாயாவா?" என்றான் விக்னேஷ் அயர்ச்சியுடன் .



"விடாது மாயா" என்றான் அருண்.



இரவு ஓட்டலிலிருந்து வந்த உணவை சாப்பிட்டு விட்டு இருவரும் படுக்கையை விரித்தனர். இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர்.அந்த கார இருள் வீட்டை சுற்றி சூழ ஆரம்பித்தது. திடிரென உறக்கம் கலைந்து விக்னேஷ் எழுந்த போது பேன் ஓடவில்லை என்பதால் கரண்ட் போய் விட்டதை உணர்ந்து கொண்டான். தலைமாட்டில் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்து அதன் பட்டனை தட்டினான். ஒரு வெளிச்சவட்டம் வீட்டிற்குள் தத்திதாவ ஆரம்பித்தது. சன்னல் அருகே டார்ச் வெளிச்சம் பாய்ந்த போது சன்னலுக்கு வெளியே யாரோ நிற்பது சில்அவுட்டில் தெரிய ஆரம்பித்தது.விக்னேசின் முதுகு தண்டு சில்லிட ஆரம்பித்தது. அருணை உலுக்கி எழுப்பி விட்டு டார்ச் வெளிச்சத்தை மீண்டும் சன்னல் பக்கம் அடித்த போது அங்கே அந்த சில்அவுட் உருவம் காணாமல் போயிருந்தது.



" எங்க பாஸ்! ஓன்னையும் காணோம்?" என்று கண்களை கசக்கிய அருண் " வாங்க பாஸ் வெளிய போய் பாக்கலாம்" என்றான்.



இருவரும் வீட்டை தாழ் போட்டுவிட்டு கேட்டை திறந்தனர். க்ரீச் என்ற சத்தம் அபஸ்வரமாக ஒலித்தது. ஐம்பதடி தூரத்தில் தெருவின் ஓரத்தில் ஓரு தீப்பிழம்பு தெரிந்தது.



"யாரோ குளிர் காயறாங்க" என்ற அருண் தன் துப்பாக்கியை உருவிக்கொண்டான். இருவரும் அந்த தீப்பிழம்பை நோக்கி அடி எடுத்து வைத்தனர்.
 
Top Bottom