Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed குளிரே! குளிரே! கொல்லாதே!

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 21



லிக்யூட் ரிபிள் காலியாக இருப்பதை பார்த்து விட்டு வெளியே வந்த விக்னேஷ் தன் செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜை அழைத்தான்.



இரவு ரோந்து பணியில் பிசியாக இருந்த பொன்ராஜ் போனை எடுத்து " என்ன இந்த நேரத்துல கூப்பிடறீங்க?" என்றார் குழப்பத்துடன் .



"ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" என்றான் விக்னேஷ்.



"சொல்லுங்கள். அவசரமான விசயம்னு தானே அர்த்த ராத்திரில கூப்பிட்டு இருக்கீங்க?”



" செத்துப் போன ராஜே சோட வீட்டுல கொசு ரீபிள் காலியா இருக்கான்னு பாத்து சொல்ல முடியுமா?”



" பிரச்சனையில்லை. பக்கத்து தெரு தான். பாத்துட்டு உடனே கூப்பிடுறேன்.”



"தாங்க்ஸ் " என்று போனை அணைத்து விட்டு விக்னேஷ் வெளியே வந்த போது அருண் கையில் ஒரு செல் போனுடன் நின்று கொண்டிருந்தான்.



" உங்கிட்ட ஏது டா போனு!” என்றான் விக்னேஷ்



" என்னுது இல்ல பாஸ்.தலைவரோடது. நீங்க உள்ளே போனதும் இவரு கிட்ட பேசினேன். மெசேஜ் வருகிற சத்தம் கேட்டுச்சு. டவுட்டோ ட பாக்கெட்ட செக் பண்ணா உள்ளே செல்போன் .”



"பைத்தியக்காரன் பாக்கெட்டுல செல்போன் . ரொம்ப வித்தியாசமா இருக்கு." என்ற விக்னேஸ் அந்த செல்போனை வாங்கி கால் லிஸ்டை செக் செய்தான்.



ஒரு குறிப்பிட்ட நம்பரில் அதிக முறை பேசப்பட்டிருப்பதை கவனித்த வனுக்கு அந்த எண் பரிச்சயமானது போல் தோன்றியது.



" இந்த நெம்பரை தெரியுதா அருண்.? எங்கியோ பார்த்த மாதிரி தோணுது”



"பாஸ்’ இது தமிழ்செல்வனோட நம்பர். பசுமை உலகத்தோட தொடர்பு எண் “



அதே நேரம் விக்னேசின் போன் அடித்தது. எடுத்து பேசிவிட்டு போனை வைத்த விக்னேஷ் "இன்ஸ்பெக்டர் பொன்ராஜ். நான்கிராஸ் செக் பண்ணியது உண்மைதான்னு சொல்றார்.ராஜே சோட வீட்டுல கொசுரீபிள் காலியாத்தான் இருக்கு.”



"ஓகே.மிஸ்டர் பைத்தியக்காரன் இப்பவாவது வாய்த் திறக்கலாமே!" என்றான் அருண்.



"ஓரு போன் பண்ணிக்கிறேன்." என்று போனை வாங்கியவன் தம்ழ்செல்வனின் எண்ணிற்கு அழைத்தான். மறுமுனையில் தூக்க கலக்கத்தில் எழுந்த தமிழ் செல்வன் "ஹலோ" என்றான்.



"தமிழ்’ நான் அர்த்தநாரி பேசறேன். உடனே புறப்பட்டு வெளியூர் விருந்தாளிகளோட வீட்டுக்கு வா’ அவங்க பாதிய கண்டுபிடிச்சுட்டாங்க" என்றான்.



" நீ அர்த்தநாரி? மாயாவோட அண்ணன். நீ சாகலயா?" என்றான் விக்னேஷ்.



"இல்லை" என்று புன்னகைத்தான் அர்த்தநாரி.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 22



" என்ன பாஸ்? கதை டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்டா போகுது?" என்றான் அருண்.



" எதிர்பார்க்காத விசயமெல்லாம் நடக்குது. ஆனா ஓன்னு உறுதி. நமக்கு தெரியாத சில விசயங்கள் இவங்க ரெண்டு பேருக்கும் தெரியும்னு நம்புறேன்." என்றான் விக்னேஷ்



"அப்ப அர்த்தநாரியும் தமிழ்செல்வனும் கூட்டு களவாணி களா ?அர்த்தநாரினால பேச முடியாதுன்னு தானே கோபால் சொன்னான்? இவரு பேசறாரே? என்றான் அருண்.



"பதில் சொல்லுங்க மிஸ்டர்?" என்றான் விக்னேஷ்.



"நீங்க நினைக்கிற மாதிரி நான் பிறவி ஊமை கிடையாது. இதே மாதிரி ஒரு விபத்தால தான் என்னோட பேசும் சக்தி பறிபோனது. அதே மாதிரி நடந்த இன்னொரு விபத்தாலே போன பேச்சு திரும்ப வந்துருச்சு. ஆனா எனக்கு பேச்சு வந்தது யாருக்கும் தெரியாது.”



"நீ உயிரோட இருப்பதே யாருக்கும் தெரியாது. அப்புறம் பேச்சு வந்தா என்ன? வராட்டி என்ன?”



"சரி. இந்த பனி ல ஏன் வெளில நிற்கணும்? உள்ளே போய் பேசலாம். பனியும் குளிரும் அதிகமாக இருக்கிறது." என்றான் விக்னேஷ்



மூவரும் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டனர். அருண் ஜன்னலோரதிரை சீலைகளை இழுத்துவிட்டு சில்அவுட் நிழல்களை மறைத்தான்.



சற்று நேரத்தில் ஒரு பைக் வந்து நிற்கும் ஓசை கேட்டது. வெளியே தமிழ் செல்வன் கதவை தட்டினான்.



கதவை திறந்து அவனை உள்ளே அனுமதித்த அருண் முழுதாக சோதித்து அவன் நிராயுதபாணியாக இருப்பதை உறுதி செய்தான்.



"இங்கே என்ன நடக்குதுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா தமிழ்செல்வன் ? " என்றான் விக்னேஷ்.



"அர்த்தநாரி" நீ எதுவும் சொல்லலையா?" என்று தமிழ்செல்வன் அர்த்தநாரியை பார்த்தான்.



"நீ வந்த பின்னாடி தான் வாயத் திறப்பதுன்னு உறுதியா இருக்கேன்" என்றான் அர்த்தநாரி.



"அதுக்கு முன்னாடி உங்களுக்கு என்ன தெரியும்னு சொல்லுங்க?." என்றான் தமிழ்செல்வன்.



"நோ வே தமிழ்செல்வன். நீங்க தான் முதல்ல வாய திறக்கனும். என்னோட முழு டவுட்டும் இப்ப உங்க மேல தான் இருக்கு. போதாததற்கு செத்து போன ஒரு ஆள் உயி ரோட திரும்ப வந்து உங்களுக்கு கம்பெனி கொடுத்திருக்கான்.எதுக்காக உயிரோட இருப்பவன் செத்ததா நடிக்கனும்? பெர்லைட்டை மூடும் போராட்டத்தின் உண்மையான பிண்ணணி என்ன?”



"இரண்டுக்கும் ஒரே பதில் தான். மாயா”



" வழக்கம் போல செத்துப் போன மாயாவை சொல்லி தப்பிக்க நினைக்கிறீங்க?”



"இல்லை"அர்த்தநாரி மாயாவோட அண்ணன். நான் ஏன் அர்த்தநாரி கூட ஒரே டீம்ல இருக்கேன்னு தெரியுமா?”



" சுற்றுச்சூழல் பாதுகாப்பு ?”



"அது இல்லாம இன்னொரு காரணம் இருக்கு?"



" என்ன அது?"



"காதல்" மாயா மேல் நான் வைத்திருந்த அப்பழுக்கற்ற காதல்" என்றான் தமிழ்செல்வன்.



"இது என்ன புதுகதை?" என்றான் அருண்.



" இல்லை. ரொம்ப பழைய கதை. பெர்லைட்டுக்கு முன்னாடி பூலோகசொர்க்கமா இந்தவனம் இருந்த போது நடந்த பழைய கதை “



இருவரும் சோபாவிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தன்ர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 23



தமிழ்செல்வன் கதை சொல்ல துவங்கினான்.



மேகமலை ஒரு ரிசர்வ் பாரஸ்ட். இப்போது இருக்கும் கழுகுமலை என்கிற நகரம்பெர்லைட் இங்கே வந்த பிறகு உருவானது. அப்போது இருந்த மேகமலை இயற்கை அழகு குழ்ந்த ஒரு வனம். இங்கே இயற்கையோடு இணைந்து அதற்கு எந்த இடையூறும் தராமல் வாழ்ந்தவர்கள் இங்கிருந்த மலைவாழ் மக்கள். காட்டில் கிடைக்கும் தேன். புளி. பட்டை, மூலிகை பொருட்களை விற்று நிம்மதியான ஓரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். இங்கே என்னுடைய அப்பா காட்டிலா கா அதிகாரியாக ரேஞ்சராக வேலை செய்து கொண்டிருந்தார்.



என்னுடைய முழு பரீட்சை லீவு விடும் இரண்டு மாத விடுமுறையில் என் பொழுதை விடுமுறையை கழிக்க மேகமலைக்கு வருவது வழக்கம். அப்போது எனக்கு விளையாட்டு தோழர்களாக அறிமுகமானவர்கள் தான் மாயாவும் அர்த்தநாரியும்.



தேன் எடுக்கும் போது தவறி விழுந்ததால் அர்த்தநாரிக்கு பேசும் சக்தி பறிபோய்விட்டது. வாய் பேச முடியாத தன் அண்ணனின் மீது மாயாவிற்கு அதிகமான பாசம். இந்த மேகமலையில் நாங்கள் மூவரும் சுற்றித் திரியாத இடங்களே கிடையாது.



அந்த வயதிலிருந்தே எனக்கு மாயாவை பிடிக்கும். அறியாத பருவத்தில் வரும் முதல் காதல் அது என்பது எனக்கு அப்போது தெரியாது. மாயாவிற்கும் என்னை பிடிக்கும். அந்த மலைவாழ் இனத்தவர்களிலேயே பள்ளிக்கு சென்று படித்த முதல் ஆள்மா யா தான்.



நான் காலேஜ் முடித்துவிட்டு இங்கே வந்த போது மாயாவை பார்த்தேன். வளர்ந்து ஆளாகி அடையாளம் தெரியாமல் இருந்த என் மாயாவை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் மாயாவால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. கூடவே எங்கள் இருவரிடையேயான காதலையும் கண்டுகொள்ள முடிந்தது.



இந்தவனம் நாங்கள் சுற்றித் திரியும் சோலைவனமானது. மாயாவை திருமணம் செய்து கொள்ள நான் நினைத்த போது தான் இடியாக வந்தது பெர்லைட் .அந்த ஆலைக்காக மாயாவின் இனத்தவர்களை வெளியேற சொன்னது அரசு. அந்த ஆலையை அமைக்க விடாமல் தங்கள் வாழிடத்தை காப்பாற்றி கொள்ள எவ்வளவோ போராட்டங்களை நடத்தி தோற்றனர். வன்முறையாக அனைவரும் தொலைதூரத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.



பெர்லைட் வந்த பின்பும் கூட மாயா மனம் தளரவில்லை. தன் இடத்தை பறிகொடுத்தாலும் வேறோரு இடத்தில் குடிசையை போட்டு கொண்டு தன் எதிர்ப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு துணையாக அர்த்தநாரி இருந்தான். இந்த இருவரால் எதுவும் செய்ய முடியாது என்று பெர்லைட் அலட்சியமாக இயங்க தொடங்கியது.



பெர்லைட் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் மாயா என்னுடைய மாயா" என்ற தமிழ்செல்வன் தொண்டைகமற பேசுவதை நிறுத்தினான்.



"மேலே சொல்லுங்க" என்றான் அருண்.



"நான் சொல்கிறேன்." என்றான் அர்த்தநாரி



"ம். யாராவது முழு சா சொன்னா சரி" என்றான் விக்னேஷ்.



" பெர்லைட் இயங்க தொடங்கிய பிறகு அதிலிருந்து வெளியான ரசாயன கழிவுகளை இரும்பு பேரல்களில் வைத்து காட்டு பகுதி மண்ணில் புதைக்க தொடங்கினர். அதை நானே பல முறை பார்த்திருக்கிறேன். அதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறேன். அதனுடைய ஆபத்து குளிர்காலத்தில் தெரிய துவங்கியது. நானும் மாயாவும் தங்கியிருந்த காட்டு பகுதியில் மரங்களில் இலைகளின் நிறம் சிவப்பாக மாற தொடங்கியது.



"கெமிக்கல் ரியாக்சன்" என்றான் அருண்.



மேலும் இரவு நேரங்களில் நான் தன்னிலை மறந்து மாயாவை கொல்ல முயற்சி செய்தேன். எனக்கு நடப்பவற்றை என்னால் மாயாவிடம் சொல்ல முடியவில்லை. பயந்து போன மாயா இரவில் என்னை சங்கிலியால் கட்டி வைத்துவிட்டு உறங்க தொடங்கினாள்.



அப்படி ஒரு நாள் இரவில் நான் தூங்கும் போது பெர்லைட் டின் ஆட்கள் ரசாயன கழிவுகளை புதைக்க நாங்கள் இருந்த பகுதிக்கு வந்தனர். அதை புதைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த மாயாவை அவர்கள் நால்வரும் சேர்ந்து ... “



"ஓ | காட்." என்றான் விக்னேஷ்.



"அதை என்னால் தடுக்க முடியவில்லை. மாயா கட்டி போட்ட சங்கிலி அவளுக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. என் கண் எதிரிலேயே என் தங்கையை சீரழித்து கொன்றார்கள், " என்றான் அர்த்தநாரி



" மாயாவோட கொலைக்கு பழிவாங்கவும் கடைசி ஆசையை நிறைவேத்தவும் நான் பசுமை உலகத்தை ஆரம்பிச்சேன். மலைவாழ் இனத்தவர்களோடு வாழ்ந்த அர்த்தநாரி மாயாவை சீரழ்த்த அந்த நாலு பேரையும் திட்டம் போட்டு விபத்து மாதிரி கொன்றான். ஊருக்குள் மாயா தான் பழி வாங்குவதா பேச்சு கிளம்ப ஆரம்பிச்சுது. அதை நாங்கயூஸ் பண்ணிக்கிட்டோம்.”



"அப்போ ஓ குருப்காரர்கள் தான் கொலை பண்ராங்கன்னு உங்க ரெண்டு பேத்துக்கும் தெரியாதா?அர்த்தநாரியும் அதே குரூப்தான்னு தெரியுது.அதான் கொசுவர்த்தியோடவே இருந்திருக்கிறான்! "



" தெரியாது. ஆனா கரண்ட் போகும் போது ரீபிள் தீந்திருந்தா கொலை நடக்கும்னு தெரியும் “



" எப்படி?”



" கொலை நடந்த வீட்டை காலி பண்ண பார்ட்டை மா எர்த் மூவர் வேலைக்கு போகும் போது பார்த்து அனுமானிச்சேன்"



வெளியே பொழுது விடிந்து கொண்டிருந்தது.



"இப்ப நாம மாயா கடைசியா இருந்த அந்த ரெட் ஏரியாவுக்கு போறோம்" என்றான் விக்னேஷ்.



"என்னால வர முடியாதே? அங்கே வந்தா நானே உங்க மூணு பேரையும் கொன்ருவேன். கிரடிட் மாயாவுக்கு போயிரும் " என்றான் அருண்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 24



வெளியே காலை சூரியன் எழுந்து கொண்டிருந்தான். "சரி நாம் மாயா வாழ்ந்த இடத்துக்கு போகலாம்" என்ற விக்னேஷ்" போகிற வழியில ஆல் அவுட்ரீபிள் ஓன்றை வாங்கி உன் சட்டை காலரில் தெளித்து கொள்ளலாம்" என்றான்.



நால்வரும் காரில் ஏறிக் கொண்டனர். "பாஸ்.’ கோபால்?" என்றான் அருண்.



"அப்புறமா பாத்துக்கலாம்" என்றான் விக்னேஷ்.



கார் மாயா வாழ்ந்த சிவப்பு நிற காட்டுப் பகுதியை நோக்கி விரைந்தது. கரடு முரடான மலை பகுதியில் மெல்ல ஊர்ந்தது கார் .தமிழ்செல்வன் காட்டிய இடத்தில் காரை நிறுத்திய விக்னேஷ் "அருண் , இங்கே நமக்கு முன்னாடியே யாரோ வந்திருக்காங்க " என்று மண்ணில் பதிந்திருந்த டயர் தடத்தை காட்டினான்.



" இருங்க பாஸ் நான் போய் பார்க்கிறேன் " என்ற அருண் அந்த கார் டயர் தடத்தை பின்பற்றி பூனையை போல் நடக்கத் துவங்கினான். அவன் கையில் துப்பாக்கி இருந்தது. சற்று நேரத்தில் அந்த காரை பார்த்தான்.முதல் அத்தியாயத்தில் அவர்களை கடந்து போன அதே கார். "ஸ்மித் " என்று முணுமுணுத்தான் அருண்.



சற்று தூரத்தில் முகத்தில் மாஸ்க் அணிந்து மண்ணில் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த ஸ்மித் அருணின் கண்களில் பட்டான்.



" அப்படியே கைகளை தூக்கிட்டு என்னுடன் வா ராஜா. இல்லைன்னா சுட்ருவேன்" என்றான் அருண்.



ஸ்மித் துப்பாக்கியை பார்த்து விட்டு மவுனமாக நடக்க தொடங்கினான்.



துப்பாக்கி முனையில் நடந்து வந்த ஸ்மித்தை நிறுத்திய விக்னேஷ் " ஸ்மித்' இங்கே என்ன செய்கிறாய்?" என்றான்.



"வாய திறக்கலைன்னா துப்பாக்கி பேசும்" என்றான் அருண் ஆங்கிலத்தில் .



"ஓகே’ சொல்றேன்." என்ற ஸ்மித் பெருமூச்சு விட்டான்.



" இங்கே பெர்லைட்டை மூடச் சொல்லி நடந்த போராட்டத்துல 13 பேர் செத்து போனதை டைம் பத்திரிக்கை கவர் ஸ்டோரியா போட்ருந்தாங்க. அதை பத்திய டாக்குமென்டரியை பார்க்கும் போது இந்த இடத்தை பத்திய வீடியோவை பார்த்தேன்.மண்ணியல் நிபுணரான எனக்கு இங்கே மட்டும் சிவப்பு நிற மரங்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.



என்னோட யூனிவர்சிட்டியோட புராஜெக்டா இதை ஆராய்ச்சி பண்ண தீர்மானம் செய்தேன். பெர்லைட்டோ ட கழிவுகள் மண்ணில் இயல்பாக இருக்கக் கூடிய சோடியம் குளோரைட், நைட்ரேட் டோட வினை புரிந்து புதுவிதமான செலியம்ங்கிற கெமிகலா மாறிருச்சு. இதோட இயல்பு என்னன்னா குளிர் காலத்துல வாயுவா மாறிரும். அப்பo குரூப்காரர்களை மட்டும் கொலைகாரர்களா மாத்தி விடும்.அதுக்கு மாற்று மருந்து கொசுவர்த்தில யூஸ் பண்ற அல்லெத்ரின்ங்கிற கெமிக்கல்தான்.!"



"அது ஏன் ஓ குருப் மட்டும்?”



"அவங்க ரத்தத்துல ஆண்டிஜென்ங்கிற பொருள் இல்லை. மற்ற ரத்த வகை காரர்களுக்கு ஆண் டி ஜென் இருப்பதால் செலியத்தால் பாதிப்பு வராது.”



" பெர்லைட்டோ ட மற்ற தொழிற்சாலைகளில் இந்த பிரச்சனை ஏன் வரலை?”



" மற்ற இடத்துல கழிவுகளை கடலுக்குள் சமாதி பண்ணுவதால் இந்த பிரச்சனை வரலை. இதையெல்லாம் நான் ஆதாரபூர்வமாக ஆய்வு பண்ணி வைச்சிருக்கேன்.”



அருண் தன் போனை எடுத்து கொண்டு ஒதுங்கினான்.



" பெர்லைட் பண்ணிய ஓரு சின்ன தப்பு இத்தனை பேர் சாவுக்கு காரணமாக இருந்திருக்கிறது." என்றான் விக்னேஷ்



"ஸ்மித் கிட்ட இருக்கிற ஆதாரங்கள் கிடைச்சா பெர்லைட்டை நிரந்தரமாக மூடிவிடலாம்" என்றான் தமிழ்செல்வன்.



அதே நேரம் வந்து நின்ற ஜீப்பில் இருந்து இறங்கிய பொன்ராஜ் " ஸ்மித்' நான் உன்னை கைது செய்கிறேன். இந்தியாவின் உள்விவகாரங்களில் அத்துமீறி ஆர்வம் காட்டியதற்காக உன்னை கைது செய்ய மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது" என்று ஸ்மித் தின் கைகளில் விலங்கு மாட்டினார்.



" அடுத்தது நீ தான் தமிழ்செல்வன்" என்றார் பொன்ராஜ்



"முன் ஜாமீன் இருக்கு சார். என்னை ஒன்றும் பண்ண முடியாது" என்றான்.



ஸ்மித் தின் அருகே சென்ற அருண் " டோண்ட் ஓர்ரி.ஸ்மித் .உன்னோட தூதரகம் உன்னை மீட்கும் வழியை பார்த்து கொள்ளும் " என்றவன் அவன் காதில் எதையோ கூறினான்.



"ஷ்யூர் " என்று புன்னகைத்தான் ஸ்மித்,



பொன்ராஜ் ஸ்மித்தை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார்.



"ஸ்மித்து கிட்ட இருக்கிற டாக்குமெண்டெல்லாம் நமக்கு கிடைச்சா பெர்லைட்டை மூட உதவியா இருக்கும் " என்றான் தமிழ்செல்வன்.



"கவலைப் பட வேண்டாம் தமிழ்செல்வன். கோபாலுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லிட்டேன். அவன் இந்நேரம் ஸ்மித் தோட வீட்டுலருந்து டாக்குமெண்டுகளை எடுத்துட்டு வந்திருப்பான். அதை வாங்கி உனக்கு தருகிறேன்" என்றான் அருண்.



"குட் மூவ்" என்றான் விக்னேஷ்.



" எப்படியோ மாயாவோட கனவு பலிச்சா சரி" என்றான் தமிழ்செல்வன்.



நால்வரும் காரில் ஏறிக் கொள்ள கார் கிளம்பியது.விக்னேஸ் ரிவர் யூ மிரரில் பார்த்த போது காலை பனி ஓரு பெண் உருவமாக மாறி டாடா காட்டி கலைந்தது.



"மாயா" என்று அனிச்சையாக உச்சரித்தது விக்னேசின் உதடுகள்.



முற்றும்.
 
Top Bottom