Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சது(ரங்கம் )

Status
Not open for further replies.
Messages
124
Reaction score
33
Points
63
இன்னுமொரு புது கதையை உங்களுக்கு பகரபோகிறேன். இந்த கதை தொடங்கும் இடம்
ஸ்ரீ ரங்கம்.

சதுரங்க ஆட்டத்தில் ராணியை இழத்தல் ராஜ்ஜியத்தின் முடிவு. இங்கோ, ராணி தன்னை இழந்துவிட்டால் எதிரிப் படையிடம் சிக்கியவள் தன்னை எவ்வாறு மீட்பாள்?
கடும் பாதையில் பயணம் செய்து, முட்பாதையில் கால்கள் பதித்து , குருதியை, பயிர் செய்யும் நீராக்கி, பயம் என்ற எதிரியை வீழ்த்தி,
ஜெயம்!ஜெயம்! என்று பூமித்தாய் பறையறிவிக்க, மகுடம் சூட்டிக்கொள்ள களம் இறங்கும் சாதுர்யா... ஆடும் சது(ரங்கம்)... இது சாதுர்யா ஆடும் களமா? இல்லை அவளை வைத்து சூழ இருப்போர் ஆடும் களமா? இரண்டுமின்றி விதி சமைக்கும் புது நாடகமா?
அவளால் தனித்து போரிட முடியுமா? அபலைக்கு உதவி செய்வார் யார்?
சாதுர்யா வாழ்வில் நடக்கும் விஷயங்களை உங்களுக்கு என் பார்வையில் சொல்கிறேன்...சஞ்சயன் பாரதப் போரை திருதராஷ்டிரனுக்கு சொன்னது போல!

"போர்க்களம் மாறலாம்!
போர்கள்தான் மாறுமா?"

சரி இந்த கதையை சொல்லும் நான் யாரென்று உங்களுக்கு தெரிய வேண்டாமா?

நான் சர்வ வல்லமை பெற்ற காலம். யுக யுகமாய் எத்தனையோ போர்களை நான் பார்த்துவிட்டேன். இத்தனை போர்களிலும் எத்தனையோ முறை தர்மம் வென்றிருக்கிறது. அதே அளவில் அதர்மமும் நின்றிருக்கிறது. இவ்வாறு நடக்கும் போது காலம் ஆகிய நான் சந்தோஷம் அடைவது இல்லை. நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.என்னால் எதையும் மாற்ற முடியாது.அதே போல் என்னை யாராலும் வெல்ல வும் முடியாது!

ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கத்துக்குள் ப்ரயாணம் செய்யும் என்னை விட ஒருவர் வாழ்வில் நடப்பது பற்றி பாரபட்சமின்றி தெளிவாக யாராலும் சொல்ல இயலும்?

வாருங்கள், சாதுர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோம்!


ஸ்ரீரங்கத்தில் சித்திரை வீதியில் இருக்கும் அந்த பெரிய வீட்டில் வாசல் நிறையும் பெரிய மாக்கோலமிட்டு செம்மண்ணும் பூசப்பட்ட தேர் கோலம் வருபவர்களை வா... வா என்று அழைப்பது போல் இருந்தது. வீட்டு வாசலை இரண்டு பக்கமும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, நடுவில் மாவிலைத் தோரணங்களும் அலங்கரிக்க,வீட்டு மனிதர்கள் எல்லோரும் சந்தோஷத்தை அணிந்துகொண்டு இங்குமங்குமாய் நடைபயின்று கொண்டிருந்தார்கள். வாசல் வராந்தாவில் தெரியும் பெரிய அகலமான ஊஞ்சல், அதில் அமர்ந்து ஆடுவதற்கு முண்டியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் சிறுவர் சிறுமியர். அவர்களது கீச்... கீச் சப்தம் வீட்டுக்கு புதியதோர் பரிமாணத்தை கொடுத்தது.

புதிதாய் மொட்டு விட்ட மலர் ஒன்றுக்கு ஒரு வருடம் பூர்த்தியான கொண்டாட்ட நாள் அது. குழந்தையின் தாய் தந்தை இருவர் வீட்டு உறவுகளும் புடைசூழ குழந்தைக்கு அன்று காலை தான் முடி இறக்கி காது குத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே பால் நிறத்தில் இருக்கும் குழந்தை வலியிலும் பயத்திலும் அழுவது கூட ஒரு விதத்தில் அழகுதான்.அதில் ரோஜா நிறத்தையும் கூட சேர்த்தால்... சொல்லவா வேண்டும்?

குழந்தையின் அழுகை ஒலி அங்கு ஒலித்துக் கொண்டிருந்த நாக ஸ்வரத்தை மிஞ்சி இருந்தது. குழந்தை அழுவதை பார்த்து சிலருக்கு சிரிப்பும் சிலருக்கு வருத்தமுமாக கலவையான உணர்வு . வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் குழந்தையின் பெற்றோர், நான்கு வயது ரங்கராஜன்.
இங்கு விசேஷத்திற்கு வந்த நிமிடத்திலிருந்து ரங்கராஜன் குழந்தையை விட்டு அங்கிருந்து நகரவில்லை. குழந்தையின் ஒவ்வொரு அசைவும் அவனுள் தேன் சொட்டாய் இனித்தது. குழந்தை பிறந்த பொழுது குட்டி குட்டி கைகால்களுடன், பொக்கை வாயில் எச்சில் வழிய பார்த்தது. இன்று கொஞ்சம் வளர்ந்து தளிர் நடையிட்டு, விளையாட கற்றுக்கொண்டுள்ள இந்த குழந்தை அவனுக்கு புதியது.குழந்தை சாதுர்யா ரங்கராஜனின் மாமன் வெங்கடேசனின் மகள். சாதுர்யா தொடர்ந்து அழும் நேரங்களில் ரங்கனை கண்ட நொடியில் அழுகையை நிறுத்தி விடுகிறாள். பால் பற்கள் சாதுர்யாவுக்கு முளைத்திருக்கிறது. அதைவைத்து எல்லோரையும் கடிக்கவும் தொடங்கிவிட்டாள். இதற்கு ரங்கனும் விதிவிலக்கல்ல. சாதுர்யா கடித்ததில் ரங்கானுக்கு கையில் லேசாக ரத்தம் வந்தபோதும் குழந்தை கடித்ததற்காக புகார் சொல்லாமல் குழந்தையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம் இருக்கிறான் ரங்கன்.குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு விளையாடுவேன் என்று வேறு அடம். ஒரு சிறு குழந்தையை எப்படி இன்னோர் சிறு குழந்தை கையில் கையில் கொடுக்க முடியும்? அவனை சமாளிப்பதே ஒரு பெரிய சாதனையாக இருக்கிறது கடந்த இரு நாட்களாக. சாதுர்யாவுக்கு காது குத்தும் சமயம் அங்கு இரு அழுகை குரல்கள். ஒன்று சாதுர்யா... இன்னொரு குரல் ரங்கனுடையது. குழந்தை அழுவதை காண இயலாது பயத்தில் அவனுக்கும் அழுகை வருது. மற்ற குழந்தைகளுடன் விளையாட செல்லாமல் அவன் படுத்தும் பாடு... சொல்லி மாளாது.

சாதுர்யா - ரங்கராஜன் இருவரின் குடும்ப பின்னணி பற்றி நான் இன்னும் சொல்லவில்லையே?

இருவரின் தாத்தா திரு.தாமோதரன் அவர்கள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்று பணி செய்தவர். அவர்களது பூர்வீகம் திருச்சி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கம். பூர்வீக வீடு நிலபுலன்கள் எல்லாம் திருச்சியை சுற்றித்தான். அவரது புர்வீகர்கள் நில சுவன்தாரர்கள்.
திரு. தாமோதரன்
பணி நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றி ஆயிற்று. விருப்ப ஓய்வு பெற்று திருச்சிக்கே வந்துவிட்டார்.அவர் இந்தியா முழுவதும் சுற்றினாலும் அவருடன் அவர் மனைவி மட்டும் தான் பிரயாண படுவார். குழந்தைகள் மூவரும் வளர்ந்தது தாமோதரனின் பெற்றோரிடம்தான். விடுப்பு சமயங்களில் குழந்தைகள் பெற்றோரிடமும், தாய்வழி பாட்டி தாத்தா விடமும் சென்று வருவார்கள்.
தாமோதரனின் மனைவி லக்ஷ்மிஅம்மாள். அவர்களுக்கு மொத்தம் மூன்று மக்கள். மூத்தவர் வெங்கடேசன். அடுத்தவர் சுரேஷ். கடைசியாக ரேணுகா. வெங்கடேசன் தந்தை வழியில் தானும் ஐஏஎஸ் அதிகாரி ஆகிவிட்டார். அடுத்தவர் சுரேஷ் மத்திய அரசு வேலை. ரேணுகாவின் கணவர் வயலூரை சேர்ந்தவர். அவர் குடும்பத்திற்கு சொந்தமாக அங்கு நில புலன்கள் உண்டு. அதைத் தவிர தஞ்சை சுற்றி உள்ள கிராமங்களிலும் அவர்களுக்கு சொத்துக்கள் உண்டு.விவசாயம் அதை சார்ந்த தொழில்களை அவர்கள் கவனித்து வருகிறார்கள்.அதைத் தவிர இந்தியாவில் இயங்கும் பல்வேறு முன்னணி தொழிற்சாலைகளிலும் அவர்களின் முதலீடு உண்டுதான். வளர்ந்து வரும் ஆர்கானிக் சந்தையில் இவர்களின் பங்களிப்பு இந்தியாவில் முழுவதும் இருக்கிறது.
வெங்கடேசனின் மகள் சாதுர்யா.திருமணம் முடிந்து ஐந்து வருஷம் கழித்து பிறந்தவள்.அவளுக்கு இன்று முதல் பிறந்தநாள். சுரேஷுக்கு திருமணம் ஆகி மூன்று வருஷங்கள் ஆகிறது. குழந்தைபேறு இன்னும் இல்லை.
ரேணுகாவின் மகன் ரங்கராஜன்.
நான் ரங்கராஜனை முக்கிய படுத்தி சொல்வதால் அவன் தான் கதையின் நாயகன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. ஏனெனில் இந்த கதை முழுக்க முழுக்க 'சாதுர்யா' எனும் ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை. ஆனால் அவள் வாழ்க்கையில் ரங்கராஜனின் பங்கு அதிகம். அவன் இந்த கதையின் நாயகனா என்பதை சாதுர்யாதான் தீர்மானிக்க வேண்டும். நான் அல்ல.
சரி மீண்டும் நாம் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நுழைவோம்!

எப்படியோ ரங்கராஜன் எல்லோரிடமும் கெஞ்சி அழுது, சாதுர்யாவை தன் மடியில் அமரச் செய்து விட்டான். அவன் பாட்டி லட்சுமி அம்மாள் அங்கு இங்கு நகராமல் பேரனையும், பேத்தியை யும் கண்காணித்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். அவர் முகத்தில் அவ்வளவு பெருமை. பாட்டி ஆகி விட்டோம் என்ற கர்வம் அதில். தாத்தா தாமோதரன் லட்சுமி அம்மாள் அருகில் தானும் மனைவியை விட்டு நகராது அவர் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு லட்சுமி அம்மாளை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். நிச்சயமா பாட்டியம்மா ஆகுறது எனக்கு சந்தோஷம்தான், என்று பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறார் லட்சுமி அம்மாள். காலத்திற்கு ஏற்றவாறு தலைக்கு கருப்புச் சாயம் பூசுவது அவருக்கு பிடிக்கவில்லை. வயசாகுதுன்னு சொல்ல தலை முடி வெள்ளையா இருந்தா தான் அழகு என்பார் லக்ஷ்மி அம்மாள். லட்சுமிக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டது. கணவர் கேலி செய்தாலும் அதை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டார் லட்சுமி. மனைவியை நினைத்து தாமோதரனுக்கு என்றுமே பெருமை தான். குழந்தைகளை வேறு ஒரு இடத்தில் மாமியார் மாமனாரிடம் வளர்க்க சம்மதித்து, கணவனுக்காக கூடவே வந்து இருக்கும் மனைவியை நினைத்து தாமோதரன் சந்தோஷமும் பெருமையும் கொள்ளாத நாளே இல்லை. எத்தனை பேருக்கு குழந்தைகளைப் பிரிந்து இருக்க மனது வரும்? கணவன் வகிக்கும் பதவி அது கொடுக்கும் அதிக அழுத்தமும் ஊர்ஊராக மாற வேண்டியது வரும் என்ற நிலையையும் இத்தனை வருஷங்களாக முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொண்டவர் லட்சுமி அம்மாள். தன் கணவர் வகிக்கும் பதவியின் கணம் தெரிந்தவர்.தன் குழந்தைகளை வளர்க்கும் ஏக்கம் ஒரு தாயாக அவருக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் தாமோதரனின் பெற்றோர் 'நாங்கள் வளர்க்கிறோம்' நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்ற பிறகு தனது ஏக்கத்தை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டுவிட்டார். அவர் கண்முன் கணவனும் குழந்தைகளும் அவர்கள் நலமும் மட்டும்தான். என்றுமே தன்னை பற்றிய கவலை லட்சுமிக்கு கிடையாது.தாமோதரன் லக்ஷ்மி அம்மாள் இருவருக்கும் சிறுவயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. லக்ஷ்மி அம்மாள் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். ஆனால் உலகம் தெரியாதவர் இல்லை. தினமும் ஆங்கில நாளிதழ்களை ஒரு வார்த்தை விடாமல் படித்துவிடுவார். லட்சுமியின் ஞாயங்கள் புரட்சியானவை. அவரின் ஆளுமை மகாராணிக்கு ஓத்தது.மனைவியை படிக்க அனுப்பி இருக்கலாம் எனும் எண்ணம் தாமுவிக்கு இன்று வரை உண்டு.
தாமோதரன் பட்டம் பெற்று,மேலே எம் .எஸ்.ஸி முடித்து பிறகு ஐஏஎஸ் தேர்வும் எழுதி வேலைக்கு செல்லும்போது ரேணுகா விற்கு ஒரு வயது. லஷ்மி அம்மாள் இருபத்து ஆறு வயதான பெண். லட்சுமிக்கும் தாமோதரனுக்கும் எட்டு வருஷ வித்யாசம். இப்போதெல்லாம் யாரும் இவ்வளவு வயது வித்யாசத்தை ஒப்புக் கொள்வதில்லை.ஆனால், தாம்பத்தியத்தில் வயது வித்யாசம் மட்டும் பேசுவதில்லை. மனம் ஒன்றோடு ஒன்று இறுக்கிக் கொள்ள வேணும்.

லட்சுமிஅம்மாளை பற்றி இவ்வளவு தூரம் நான் சொல்ல நிச்சயம் காரணம் உண்டு.

பெண்கள் சிறந்தவர்களாக இருந்து வம்சம் அவர்கள் வழியில் வளரும் எனில் அது மானிட குலத்துக்கு பெரும் பேறு. பெண் தனக்குள் இருக்கும் நம்பிக்கை, மனோதிடம், ஆளுமை, தியாகம் என்று எல்லா பண்புநலன்களையும் கருவிலேயே அடுத்த தலைமுறைக்கு பாய்ச்சுகிறாள்.இந்த கதையின் போக்கு உங்களுக்கு பெண்ணின் மனோதைரியம், சாதுர்யம் பற்றி சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். கதையின் போக்கு அழுத்தமாக கருத்தை பதிவு செய்ய வேணும்!

குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து மதிய உணவிற்கு பிறகு வந்திருந்த உறவினர் கிளம்பிவிட மிக நெருங்கிய உறவினர் மட்டும் வீட்டில்.

மாலை கிளம்பலாம் என்று ரேணுகாவின் மாமனார் சொல்ல,பாப்பாவை விட்டு வரமாட்டேன் என்று திரும்ப வும் ரங்கனின் சுருதி எழும்பலாயிற்று.

ஒருவழியாக வீட்டின் விழா விழா முடிந்தது. இரண்டு நாட்களில் ரேணுகா
ரங்கனை கூட்டிக்கொண்டு வயலூர் சென்றுவிட்டாள். விடுப்பு முடிந்தது என்று வெங்கடேசனும் சுரேஷும் கூட தங்கள் குடும்பத்தினருடன் கிளம்பி விட்டார்கள். வீடு பழையபடி நிசப்தம் ஆகிவிட்டது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களை தங்கள் உடனே இருத்திக்கொள்ள வேண்டும் என்பது நடக்காத காரியம்.

காலங்கள் உருண்டோட ரங்கனுக்கு ஏழு வயது ஆகிறது. வருடத்திற்கு ஒருமுறை ரேணுகா குழந்தையை கூட்டிக்கொண்டு அப்பா அம்மா வீட்டுக்கு வருவதுடன் சரி. அதற்குமேல் அவளது மாமனார் மாமியார் அவள் அடிக்கடி பிறந்த வீட்டிற்கு சென்று வருவதை விரும்பவில்லை. அத்துடன் முன்பெல்லாம் வந்தால் பிள்ளையுடன் சேர்ந்து ரேணுகாவும் இரண்டு மாதங்கள் பெற்றோருடன் தங்கி விடுவாள். இப்போதெல்லாம் பிள்ளையை விட்டு இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு வயலூருக்குச் சென்று விடுகிறாள். தொழிலில் மேலும் மேலும் விருத்தி செய்து கொண்டிருந்ததால் அதிகமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ரேணுகாவின் கணவருக்கு . அதனால் ரேணுகாவுக்கு மாமியார் மாமனாருடன் இருக்கவேண்டியுள்ளது.
ரேணுகா கணவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் உண்டு. ஒரு மூத்த அண்ணனும் அக்காவும். அக்கா ஸ்பெயினுக்கு திருமணம் முடிந்து சென்றவள் தான். திருமணம் முடிந்து எட்டு வருடங்களில் இரண்டு முறை மட்டுமே வந்திருக்கிறாள். அண்ணனோ குடும்பத்துடன் சண்டையிட்டுக் கொண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். வடக்கே எங்கோ இருப்பதாக வெறும் தகவல் தான். ஆகக்கூடி,முழு பொறுப்பும் ரேணுகாவும் ரேணுகாவின் கணவரையும் சார்ந்தது. ரேணுகாவின் பெற்றோர் நல்ல ஆரோக்கியமாக இருப்பதால் பார்க்க வேண்டும் போல் இருந்தால் மகன்கள் வீட்டுக்கோ மகளை காணவோ சென்றுவிட்டு வருவார்கள். மற்றபடி வளர்ந்த பிள்ளைகளை தொந்தரவு செய்வதற்கு அவர்கள் இருவருக்குமே விருப்பமில்லை. பூர்வீக சொத்துடன் சேர்ந்து தாமோதரன் அவர்களுக்கு மாதாமாதம் ஓய்வூதியமும் வருகிறது. பொருளாதாரத்திலும் சரி, உடல் அளவிலும் சரி தாமோதரனும் லக்ஷ்மி அம்மாவும் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. லக்ஷ்மி அம்மாவுக்கு ஐம்பதுகளில் தான் வயது. நிர்வாகத்திறமை, தைரியம் இரண்டுமே அதிகம். தாமோதரனின் வேலைக்கு ஏற்றவாறு, மாமனார் மாமியார் இறந்த பிறகு முழு நிர்வாகத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார் லட்சுமி அம்மாள்.
சாதுர்யாவுக்கு இப்போது மூன்று வயதாகிறது. அதனால் வெங்கடேசன் குழந்தைக்கு ஸ்ரீரங்கம் மற்றும் தங்கள் பெற்றோருடன் நல்ல பரிச்சயம் வேண்டும் என்று எண்ணியதால் மனைவி மகளுடன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வருவதும் மனைவி மகளை பத்து நாட்கள் அங்கு தங்க செய்வதையும் வழக்கம் ஆக்கிகொண்டார். நாடு முழுவதும் சுற்றினாலும் தான் பிறந்து வளர்ந்த ஸ்ரீ ரங்கம் தனிதான் அந்த மனிதருக்கு.

சாதுர்யாவுடன் விளையாட ஆசை பட்டு அவள் வரும் நேரங்களில் ரங்கன் பள்ளி விடுமுறை நேரம் ஸ்ரீரங்கம் வந்து விடுகிறான். அவன் பள்ளி திருச்சியில். வீட்டில் உள்ள மகிழுந்தில் டிரைவருடன் பள்ளி சென்று வருகிறான். ஸ்ரீரங்கம் வருவதும் அப்படியே.

மாலை நேரங்களில் ரங்கநாதர் கோவில் பிரகாரத்தில் இன்னும் சில சிறுவர் புடை சூழ ரங்கனும் சாதுர்யாவும் விளையாடிக் கொண்டிருக்க தாமோதரன் துணைக்கு வருவதும் வழக்கம் ஆயிற்று.

சாதுர்யா வளர வளர அவள் வரும் சமயங்களும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் ஆயிற்று. ஆனாலும், ரங்கன் சாதுர்யா நடுவில் இருக்கும் நட்பில் எந்த இடைவெளியும் இல்லை.

மீண்டும் அடுத்த பதிவுடன் வருகிறேன்.

சுகீ
 
Messages
124
Reaction score
33
Points
63
சாதுர்யம் 2

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோட தொடங்கிவிட்டது. காலம் யாருக்காகவும் எங்குமே தடைபட்டு நிற்பதில்லை. சக்கரம் போன்ற அது வேகமாக சுழல ஆரம்பித்து விடுகிறது. கால சூழற்சி வெறும் நேரத்தை மட்டும் கடத்தவில்லை. அது ஒவ்வொரு நொடியும் மனிதனையும், அவனது குணாதிசயங்களையும் சேர்த்து செதுக்குகிறது.

சாதுர்யாவும் ரங்கனும் கால சக்கரத்தின் சுழற்சியில் வேகமாக வளர்கிறார்கள்.
ரங்கன் திருச்சியில் இப்போது ஆறாம் வகுப்பு, சாதுர்யா தில்லியில் இரண்டாம் வகுப்பு. ரங்கன் அவன் வளரும் திருச்சி மாநகருக்கு ஏற்றபடி கொஞ்சம் சாதுவாகவும் அமைதியான மனப்போக்கு உடையவனாகவும் வளர்கிறான். காவிரியின் செழுமை அவனிடம் கூட பிரதிபலிக்கிறது. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்பா என்று கேட்கக்கூடிய உயரம்.ஆனால் அவன் மனமோ சிறு குழந்தை தனத்துடன் தான் இருக்கிறது.
கூடவே கொஞ்சம் பக்குவமும் வந்தி ருக்கிறது.
எப்பேர்பட்ட கடுமையான விஷயங்களையும் எளிதாக ஏற்கும் பாங்கு, அவனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டிருக்கிறது . ஒருவேளை காலம் அவனுக்கு நிறைய ஏமாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் பரிசாய் அளிக்க ரங்கனை தயார் செய்கிறதா என்பதைப்பற்றி கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள் . எப்போதும் அமைதி மட்டும் ஆயுதமாக இருக்க முடியாது. சாம- தான -பேத- தண்டம் என்ற நான்கு முறைகள் இருக்கிறது வெல்வதற்கு.
காலம் வைக்கும் தேர்வுகள் அவற்றின் தேர்ச்சி, வாழ்க்கைக்காக கற்கும் பாடங்கள் இவை தான் மனித சமூகத்தை செதுக்க முடியும்.
ரங்கன் மிக அமைதியான பையன் என்று பள்ளியிலும், சுற்றியிருக்கும் மனிதர்கள் நடுவிலும் பெயர் வாங்கியாயிற்று. அவன் இருக்கும் இடம் தெரியாது. அவனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவன் மதிப்பெண்கள் அவன் வகுப்பில் பேசும். எப்பொழுதுமே முதல் பெஞ்ச் தான். பெரும்பாலும் இது போன்ற சிறுவர்களுக்கு பள்ளியிலும் வெளியுலகிலும் வரவேற்பு அதிகம்.இத்துடன் நன்றாகவும் படித்தால் கேட்கவே வேண்டாம். இதுதான் நம் ரங்கராஜன்.

"சாதுர்யா''அவள் ரகமே தனிதான்.அம்மம்மா... வாரம் இரண்டு முறை அவளது அம்மா இவளுக்காக தலையை தொங்க போட்டு கொண்டு வகுப்பு ஆசிரியர் முன் நின்றாக வேண்டும் இவள் செய்யும் சுட்டித்தனங்களின் பட்டியலை கேட்டுக்கொண்டு நின்றாக வேண்டும்.எவ்வளவோ நன்றாக படித்தும் கூட அவளது குறும்புத்தனங்களும், முன்கோபமும் அவளை எப்போதுமே கடைசி பென்சில் தான் அமர வைத்தது.
அப்பாவின் துறை மாறுதல், இடம் மாறுதல் என்று ஆயிரம் இருந்தாலும், ஏனோ தில்லியில் அவள் வளர வேணும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது போலும். தில்லியை சுற்றியே அவள் அப்பாவின் பணி. ஒரு வேளை தில்லி அவள் வாழ்வில் சதுரங்க ஆட்டத்தில் அவளை ராணி ஆக்க பயிற்சிக் களம் ஆகலாம். இயல்பிலேயே போராளி அவள். வெற்றி -தோல்வி பற்றி கவலை இல்லை. தன் உச்ச பட்ச நிலை வரை போராடும் குணம் அவளுக்கு உண்டு. அவள் சந்திக்கப் போகும் நிகழ்வுகள் அவளை உங்களுக்கு புரிய வைக்கும்.
புது தில்லியில் அந்த பள்ளியில் பயிலும் அநேகரின் பெற்றோர் மத்திய அல்லது மாநில அரசின் முக்கிய பெரும் பதவிகளில் வகிப்பவர்களின் பிள்ளைகள், அரசியல் களத்தில் கரை கண்டவர்களின் வீட்டு பிள்ளைகள் என்று அந்த வட்டம் பெரியது. சாதாரண வீட்டு சிறுவர் சிறுமியர் படிக்கும் பள்ளி அல்ல அது. அப்பேர்ப்பட்ட பள்ளியில் குட்டி ரவுடி போல வலம் வந்தாள் நம் சண்டிராணி.
சாதுர்யா பொதுவாக தானாக வம்புக்கு செல்லும் ரகம் இல்லை. ஆனால், அழுத்தமும், பிடிவாதமுமாக இருக்கும் அவளுக்கு யாராவது வம்புக்கு இழுத்தாலோ, ஏதேனும் தவறு செய்தாலோ தாங்க முடியாமல் கோவம் வந்துவிடும். ஏழு வயதில் எங்கிருந்து இந்த கோவம் என்று வீட்டினருக்கு புரியவில்லை.பிறகு அவளின் அம்மா பள்ளியில் அட்டெண்டென்ஸ் போட வேண்டியதுதான்.
அவளுக்கென்று ஒரு தோழமை கூட்டம் இல்லை...இல்லை ரசிகர் கூட்டம் என்று கூட சொல்லலாம், அவள் வகுப்பில் உண்டு. அவள் துணிவும், ஆளுமையும் அவளுக்கு இவ்வாறான கூட்டத்தை இரண்டாம் வகுப்பிலேயே கொடுத்திருந்தது. இது அவளுக்குத்'தான்' என்ற கர்வத்தை சிறிது கொடுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.நான்கு வயதிலேயே மழலை மாறிவிட்டது. பேசுவதும் பெரிய பெண் போல் இருக்கும்.

அவள் படிக்கும் பள்ளி அவளது சுற்றுவட்டாரம், அவள் வாழும் இடம், அவள் அப்பா வகிக்கும் உயர் பதவி எல்லாம் அவளது வளர்ப்பின் பாணியை நிறையவே மாற்றியிருக்கிறது. எப்பொழுதுமே அவளது நடையில் ஒருநிமிர்வுடன் கூடிய கம்பீரம்,துள்ளலும் பார்ப்போரை அவள்புறம் பார்க்காமல் செல்ல அனுமதிப்பதில்லை.( ஒரு வேளை பாட்டி லட்சுமி அம்மாளை கொண்டு இவள் பிறந்திருப்பாளோ எனும் எண்ணம் எனக்கு.)இதை கவனித்துக் கொண்டதாலோ என்னவோ, அவளால் மனதில் தான் செய்யும் விஷயங்கள் தான் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் சரிதான் என்ற எண்ணப் போக்கையும் விதைத்திருக்கிறது.
நினைத்ததை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் வளர்ந்து இருக்கிறது. ஆனால், இந்த பிடிவாதம் அவளை எங்கெல்லாம் கொண்டு செல்லப் போகிறது இந்த முன்கோபம் அவளை எங்கே நிறுத்தப் போகிறது, இதனால் அவள் படப்போகும் வேதனை என்ன, அவள் கொடுக்கும் விலை என்ன என்ற பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. ஆனால் பிடிவாதம் என்பது சில சமயங்களில் நம்மை முன்னோக்கி கொண்டு செல்லும். அவளும் கூட முன்னே ஏதோ ஒரு இடத்தில் கால்பதிக்க தான் வேண்டும்!

அவளின் பெற்றோரின் இருப்பக்க உறவுகளின் பிள்ளைகளில் சாதுர்யா
அதிகம் தேடுவதும் ஒட்டுவதும் ரங்கனை மட்டும் தான். தன்னை விட நான்கு வருஷங்கள் சிறு வயதினாளான அவளை விடுமுறைக்கு வரும் சமயங்களில் தன்னுடனே வைத்துக்கொண்டு, அவளுக்கு சமமான விளையாட்டுகளை தானும் விளையாடுவதும், தான் செல்லும் இடங்களுக்கு அவளை கூட்டி செல்வதும்,தன் நண்பர் குழுவில் அவளை பிடிவாதமாக சேர்த்து விளையாட வைப்பதும் அவன் மட்டுமே. அவனுக்கு மாமன் மகளின் வயது அல்ல, அவள் மட்டுமே முக்கியம். பிறந்த பொழுது என்ன பாசம் வைத்து அவள் அருகில் அமர்ந்தானோ, அதே பாசம் இந்த நொடி வரை. அவள் குணம் வேறு, அவன் குணம் அதற்கு நேரேதிர். ஒருவேளை எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்கும் என்ற விதிப்படி, இருவரும் ஒன்றாக சுற்றுகிறார்களோ என்னவோ? ஆனால் சாதுரியாவின் எல்லா குணநலன்களிலும் ஈடு கொடுப்பவன் ரங்கன் மட்டுமே.

****----****

அருணாச்சலம் தனது காலை கடமைகளை முடித்து, உணவு அருந்த உட்கார்ந்திருக்க, அவர் மனைவி அன்னபுரணி மெத்தென்ற
இடியாப்பங்களை அவரது வெள்ளித் தட்டில் எடுத்து வைத்து, அதற்கு துணையாக தேங்காய் பாலும், குருமாவும் தனித் தனி வெள்ளி கிண்ணங்களில் எடுத்து வைத்தாள் . சூடாக பரிமாறப் பட்ட காலை உணவில் நிச்சயம் அருணாச்சலத்தின் கவனம் இல்லை. நாற்பதுகளில் பயணிக்கும் அவருக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் அவர் கவனத்தை சிதற செய்கிறது.

முதலில் அவர் கவுன்சிலர் தேர்தலில் நிற்பது. பூங்குவளை வட்டாரத்தில் பெரும் பணம் பெற்றவர் அவர். பரம்பரை பணக்காரர்.தனியாக போட்டியிடுவதா... இல்லை ஏதேனும் முக்கிய கட்சியில் சேருவதா என்று குழப்பம்.அவரிடம் உள்ள பணம் பாதாளம் வரை பாயலாம். சமீபத்தில் அருணாச்சலத்துடன் பள்ளியில் படித்த ராமேஸ்வரம் தனது சொந்த ஊரை பார்க்க வந்த பொழுது, அருணாச்சலத்தை சந்தித்த சமயம் அவரையும் அரசியலுக்கு வருமாறு அழைக்க அங்கு வந்த யோசனைதான் இது. ராமேஸ்வரத்தின் குடும்பம் பணம் கொண்ட குடும்பம் எல்லாம் இல்லை. ஆனால் அரசியலில் சேர்ந்த பிறகு, எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று ஒரு முக்கிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கிறார். எம்எல்ஏவும் ஆகிவிட்டார். செல்வாக்கும் வந்து விட்டது. என்னதான் பணமும், பவிசும் இருந்தாலும் பதவி தரும் போதை வேறுதான். இதனால்தான் அவர் கவுன்சிலர் தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைப்பது. முதலில் அரசியலில் நுழைந்துவிட்டால் பதவி எல்லாம் தானாக வந்து சேரும் என்றும் நம்புகிறார்.

மற்றொன்று, அவரது பத்தொன்பது வயது மகன் குருபரன். நன்றாக படித்து கொண்டிருந்தவன் திடீரென பாதை மாறிப் போனான். பண்ணிரண்டாம் வகுப்பில்கூட வெற்றி பெறவில்லை. கூடா நட்பு வேறு.தனக்கு பிறகு இந்த மொத்த சொத்துக்கும் சொந்தகாரன், கணக்கு வழக்குகளையாவது பார்க்க தொடங்கலாம். சொத்துக்களை பற்றி எந்த ஈடுபாடும் இன்றி செலவு செய்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு சுற்றி வருகிறான். திருச்சி தஞ்சாவூர் சுற்றி இவர்களின் பொன் விளையும் நிலங்கள் ஏராளம். தங்கத்தட்டில் சாப்பிடவே வசதி உண்டு. குருபரன் சமீப காலமாய் சேர்க்கைவேறு சரியில்லை. அடிக்கடி தோப்பு வீட்டுக்குள் யாரவது ஒரு பெண் துணையோடு ஒதுங்குவதாய் கணக்கு பிள்ளை சிவன் சொல்லியி ருந்தார். தோப்பின் காவலுக்கு இருக்கும் வீரனிடம் விசாரித்ததில் விவகாரம் நிசம் என்று தெரிகிறது. இன்னும் விஷயம் அன்னத்தின் காதுகளுக்கு போகவில்லை. சென்றால் அவள் உயிரே நின்று விடும்.தவமிருந்து பெற்ற ஒற்றைபிள்ளை.எப்படியோ
மனைவியின் காதுக்கு விஷயம் செல்லாமல் காபந்து செய்கிறார். மகனை கண்டித்தாக வேணும். கை மீறி போனால்... அவருக்கு நினைக்கவே நடுங்குகிறது. மகன் ஏற்கனவே கைமீறிவிட்டாயிற்று என்று இன்னும் அருணாச்சலத்துக்கு புரியவில்லை.இந்த வயதில் பெண் துணை தேடுவது, தனியே ஒதுங்கு வது என்பது அசாதாரணம்.திருத்தி விடலாம் என ஒரு தகப்பனாய் நம்புகிறார். திருமணம் செய்து வைக்கலாம் என்றால் இன்னும் அவனுக்கு அதற்கான வயது வரவில்லை. திருமணவாழ்வுக்குரிய பக்குவம் கிடையாது.

அவனது அடாத செய்கைகள் வரம்பு மீறிய நியாயங்கள் வெளியில் தெரிந்தால் நிச்சயம் அருணாச்சலம் அவர்களின் பொது வாழ்வும், அரசியல் ஆசைகளும் சூனியம் தான். அவருக்கு உள்ளுர மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது.

மேற்படிப்பும் படிக்காத நிலையில் இருந்த சொத்துக்களை ஆள தெரியாத, அக்கறை இல்லாத ஒரு மகனை வைத்துக் கொண்டு என்ன இருந்து என்ன என்று அவருக்குள் ஒரு ஆயாசம். எப்படி மேற்கொண்டு அவனது வாழ்க்கையை சீர் செய்வது என்பது அருணாசலத்திற்கு பெரிய சவாலாகவே இருக்கிறது. ஊரில் எல்லோருக்கும் நடுவில் நல்ல மரியாதையாக இவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் மகனின் நடத்தைகள் அவரது மரியாதையை சாய்க்க போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மனதிற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக தன் மனைவியிடம் திரும்பி,

அன்னம்... நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேக்குறியா?

ம்ம்ம்... சொல்லுங்க மாமா.

கொஞ்ச நாளா அரசியல் சமாச்சாரங்களில் தலையை கொடுத்துட்டேன் இல்ல...நேரமில்லாதால நம்ம தோப்புகளை
என்னால போய் பாத்துட்டு வர முடியல. உனக்கு நேரம் கிடைக்குமுன்னா அடிக்கடி போய் தோப்புல இருந்துட்டு வாயேன்... அப்படியே கணக்கு சிவத்துகிட்ட கிட்ட சொல்லி கணக்கு வழக்கையும் நீயே பாத்தீயுன்னா தோது.எவ்ளோ சொத்து இருந்தாலும் உடையவன் பார்க்கலைன்னா சொத்தெல்லாம் நிமிஷமா கரைஞ்சு போயிடுமில்லை?

சரிங்க மாமா, இனிமே தோப்பு விவகாரம் எல்லாம் நானே பாத்துக்கிறேன்... நீங்க கவலைப்படாதீங்க.

கணவனின் யோசனை படிந்த முகத்தை வைத்து அவரது தீவிர சிந்தனை எதற்கு என்று புரியாவிட்டாலும் அவருடன் சேர்ந்து பயணம் செய்ய முடிவு எடுத்தவள் இனி கணக்கு விஷயங்களை தானே பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டாள்.
அவளது இந்த முடிவே அவளுக்கு முடிவை கொண்டு வரப் போவது நல்லவேளை அவளுக்கு தெரியாது.

நிம்மதி பெருமூச்சு விட்டு மனைவி வைத்த இடியாப்ப ருசி நாக்கில் உறைக்க மன சஞ்சலம் குறைந்தவராய் ஒரு பிடி பிடித்தார்.

அருணாச்சலம் ஒரு வாரத்திற்கு சென்னை செல்ல, வீட்டுக்கு வராது குரு என்ன செய்கிறான் என்ற குழப்பம் மேலிட தவித்து நின்றார் அன்னம். அவரது முகத்தில் ஒரு தெளிவு இல்லை முகம் கசங்கலாக இருந்தது.

என்னதான் கணவர் மறைத்தாலும் சமீப காலமாக குரு அவனது நடத்தை இரண்டுமே, பெற்ற தாயாக அன்னத்தின் மனதில் சஞ்சலத்தை தான் உண்டு பண்ணுகிறது. அன்னமும் கவனித்துக்கொண்டே தானே இருக்கிறாள்?

கணக்கு பிள்ளை சிவன், அன்னத்தின் மனதை திருப்ப சொத்துக்களின் சமீப கால கணக்குகள், ஆடிட்டர் கேட்டுள்ள விவரங்கள் என்று முக்கிய விஷயங்களில் அன்னத்தை ஈடுபடச் செய்தார்.

சரி, வீட்டிக்காரரும் ஊருக்கு சென்றுள்ள சமயம், வீட்டிலும் பெரிதாக வேலை இல்லை. மாந்தோப்புக்கு சென்றுவிட்டு மதியம் அங்கேயே வீட்டில் இருந்து கணக்கு வழக்குகளையும் பார்க்கலாம் என்ற முடிவில் அன்னபூரணி சிவத்தையும் கூட்டிக்கொண்டு காரில் மாந்தோப்பில் நோக்கி சென்றாள். செல்லும்போது அருணாசலத்திற்கு அழைத்து விபரத்தையும் சொல்லி விட்டு சென்றார்கள்.
அங்கே மாந்தோப்பில் காவலுக்கு நின்ற வீரனிடம் காணப்பட்ட தவிப்பும், கலவரம் நிறைந்த முகமும் பாரதூரமாக ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்று அன்னத்தை யோசிக்க செய்ய, சிறிது நேரம் வீரனுடன் பேசிவிட்டு உள்ளே சென்றாள்.

மீண்டும் அடுத்த அத்யாயத்தில் சது(ரங்கம்)ஆட்டம் தொடரும்.

சுகீ
































 
Messages
124
Reaction score
33
Points
63
அத்யாயம் 3
இரண்டு நாட்களாய் மாந்தோப்பில், குருபரன் தங்கி இருக்கிறான். அவனுக்கு தனியே தங்குவதற்கு பயம் போலும். துணைக்காக மேலூரிலிருந்து ராக்காயியை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறான். உணவு வகையறா எல்லாம்,இருக்கும் மளிகை பொருட்களை கொண்டு ராக்காயியே சமைத்து விடுவதால் இரண்டு வித பசிக்கும் சரியான உணவு.ஒழுங்கான பெற்றோரால் வளர்க்கப்பட்டும் கூட ஏனோ அவனது வளர்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ராக்காயி குருபரனை விட பன்னிரண்டு வயது மூத்தவள். அவளது தொழில் இதுதான். அவளைப் பொறுத்தவரை இளம் குமரனும், வாலிபத்தை தேடி மீட்டெடுக்க அலையும் வயோதிகனும் ஒன்றுதான். சேர வேண்டியது சேர்ந்துவிட்டால் போதும். இன்று வரை அவளது குடும்பம் அவளது இந்த தொழிலை வைத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டிலிருக்கும் மற்றவர்களின் வயிறு வாடாமல் இருப்பதற்கு அவள் இந்த சமூக சேவையை செய்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.நிறைய பெண்மணிகளின் நிலை குடும்பத்திற்காக என்று தியாகம் செய்வதிலேயே பாதை மாறி விடுகிறது. பலருக்கு சரியான குடும்ப வாழ்வு அமைவதில்லை. இன்னும் சிலருக்கு குடும்ப வாழ்வே அமைவதில்லை... அவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை. ராக்காயி வீட்டில் கூட சுற்றியிருக்கும் விவசாய நிலங்களில் வேலைசெய்து நேர்மையான வழியில் வாழ ஒத்துழைப்பார்களேயானால், அவளுக்கு ஏன் இந்த விதி? வீட்டில் தடிமாடு போல ஆண்களும் உண்டு. அவர்களுக்கு உடம்பு நோகாமல் செய்யும் வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டின் பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். அவர்களுக்கு இதில் கூச்சமும் வருத்தமும் எதுவுமில்லை. முதலில் ராக்காயியை சினிமா தொழிலில் இறக்கி, பணம் பண்ணுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தான் பார்த்தார்கள். ஆனால், ராக்காயியின் சதைக்கு இருந்த மவுசு, அவளுக்கு இல்லை. பெயர், நடை உடை பாவனை மாற்றி இரண்டொரு சினிமாக்களில் துணை நடிகையாக வலம் வந்தவள், தொடர்ந்து வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையாததால், சொந்த ஊருக்கே வந்து விட்டாள். அதற்குப் பிறகுதான், வீட்டின் ஆண்கள் ஒரு முறை சதையை விற்றால் என்ன,ஓராயிரம் முறை சதையை விற்றால் என்ன என்று முடிவெடுத்து அவளை இந்த தொழிலிலேயே இறக்கி விட்டார்கள். ராக்காயி இந்த தொழிலில் இறங்கும் பொழுது அவளுக்கு வயது பதினேழு. நிறைய விதமான ஆண்களைப் பார்த்து விட்டாள் அவள். அவள் சினிமாவில் வாய்ப்பு தேடும் போதே அவளது தாயார் அழுது புரண்டு பார்த்துவிட்டார். அவரது குரல் அம்பலம் ஏறவில்லை.
அண்ணன்களின் முடிவுக்கு கீழ்ப்படிந்து ஆக வேண்டிய அவலநிலை ராக்காயிக்கு. இவள் சினிமாவில் சேரும் பொழுதே அவள் அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டிருந்தது. ஒன்றுக்கும் உதவாத அவளது இரண்டு அண்ணன்களின் குடும்பத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் ராக்காயி. அவரவருக்கு திருமணமாகி குடும்பம் கூட இருக்கிறது. அவர்கள் தத்தம் மனையாளை இவ்வாறு அனுப்புவார்களா என்றால் அதெல்லாம் முடியாது. அவரவர் மனைவி கற்பு நெறி பிறழாது இருத்தல் வேண்டும். ஒற்றைத் தங்கை என்னவானாலும் சரி தான். அம்மா இறந்த பிறகு வாழ்க்கை பட்ட மரம் தான்.அவள் சீரழிந்த கதை மட்டுமல்ல... இன்னும் இவ்வுலகில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு ஏமாந்து நிற்கும் பெண்டிர் ஆயிரம் உண்டு. ஒரு பக்கம் பெண் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும், இன்னொருபுறம் சூழ்நிலை கைதிகளாய் ஆயுள் தண்டனை பெற்று வெறும் வெற்று உரிமை வார்த்தைகளாய் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரமாயிரம் கதைகளும் உண்டு.அவர்களுக்கு ஒன்று தப்பிப்பதற்கு வாய்ப்பு அமைவதில்லை. இல்லையென்றால் விதியின் முன் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்து கொள்கிறார்கள். இங்கு குருவுக்கும் கூட ராக்காயியின்
வதனம்தான் பெரிதே தவிர அவள் வயது அல்ல.

இரண்டு நாட்கள் கொட்டமடித்தும் தீராத மோகமும் வேகமும் குருபரனுடையது. அவளை சக்கை போன்று உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனது இளமை வேகம் அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் தவறு தம்பி 'என்று சொல்ல வேண்டிய நாக்கு அதை சொல்ல வழி இன்றி மனதிற்குள்ளேயே அந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டு ஊமையாகிப் போனது. முப்பதுகளில் இருக்கும் ராக்காயியை பொறுத்தவரை பத்தொன்பது வயது குரு சிறுவனே. அவள் மனமும் ஊமையாய் அழுதது. அவளால் வேறொன்றும் செய்ய முடியாது. ராக்காயி கிடைக்கவில்லை என்றால் இன்னொரு பெண். அவளுக்கு தேவை பணம். அது இவனிடம் தாராளமாகவே கிடைக்கிறது. இரண்டு நாட்களும், தன்னால் முடிந்தவரை அவனை வாடாமல் பார்த்துக்கொண்டாள் ராக்காயி.

பற்றாக்குறைக்கு, குரு சரக்கு பாட்டில்களை வேறு ஒரு வாரத்திற்காக வாங்கி வைத்திருக்கிறான். அவன் ஒரு முடிவோடு தான் இங்கு வந்து குடியிருக்கிறான். யாராலும் தடுக்க முடியாது.

ராகாயி பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன் என்று கதை போக்கில் புரிந்து கொள்வீர்கள்.

தோப்பிற்குள் நடக்கும் இந்த அலங்கோலம் வீரனுக்கும் தெரியும். முதல் விஷயம் வீரன் கண்டிப்பாக பெரிய இடத்து சமாச்சாரங்களில் தலையிட முடியாது. இன்னொன்று அருணாச்சலம் மிகக் கண்டிப்பாக சொல்லி வைத்திருக்கிறார், குருபரனின் திருவிளையாடல்கள் எந்த நிலையிலும் அன்னபூரணிக்கு தெரியக்கூடாது என்று. இந்நிலையில் வீரன் எவ்வாறு அன்னபூரணியை எதிர் கொள்வான்?
அவன் சங்கடத்துடன் நெளிவதை அன்னபூரணி வேறு விதமாக எடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் நேராகவே யோசித்துக் கொண்டிருக்கும் அவள் மனம் வீரனுக்கு வேறு ஏதேனும் வீட்டில் பிரச்சினையா என்று யோசித்தது. உங்கள் வீட்டு பிரச்சனையை உங்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வேன் என்று தவித்தது வீரனின் மனம் . அன்னபூரணி தோண்டி கேட்க கேட்க வீரனால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாமல், 'இளநீர் வெட்டிக்கொண்டாறேன் அம்மா'என்று சென்று விட்டான்.
அவன் பின்னாடியே சென்ற சிவன்,
'என்ன விஷயம் வீரா, உன் முகமே சரியில்லையே, ஏதாச்சும் பிரச்சனையா...' என்று விசாரிக்க, இப்பொழுது உள்ள தோப்பின் நிலவரம் பற்றியும் குருபரனுடன் தங்கி இருக்கும் பெண் பற்றியும் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் வீரன். குரு ஓரிரு நாட்களாக,வீட்டிற்கு வரவில்லை என்றதுமே சிவனுக்கு சந்தேகம்தான். இங்குதான் தங்கி இருக்கிறான் என்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக அன்னபூரணியை கூட்டிக்கொண்டு வந்திருக்க மாட்டார். ஆனால், அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்றது 'எல்லா தோப்புகளையுமே ஒரு பார்வை பார்த்து விட்டு வா 'என்று. கணவர் சொல்வதை என்றுமே மீறி நடக்காத அன்னபூரணி இந்த இடத்திற்கு தான் சென்றாக வேண்டும் என்றால் அன்னபூரணியி டம் வேலை செய்யும் சிவனால் இதை மறுக்க முடியாது.
ஒருவழியாக வீரனிடம் எல்லா தகவல்களையும் கேட்டறிந்த சிவன்,
இப்பொழுது அன்னபூரணியை எவ்வாறு வீட்டிற்கு திரும்ப கூட்டி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அருணாசலத்திற்கு
அழைத்தவர், உள்ளதை உள்ளவாறு சொல்ல, சென்னையில் முக்கிய நபரை சந்திப்பதற்காக சென்றிருந்த அருணாசலத்திற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. 'உடனே குருவுக்கு அழைத்து அன்னபூரணி வந்திருக்கும் தகவலை சொல்லிடு சிவா... மேற்கொண்டு அவனுக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று 'என பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். சிவன் நிலைமைதான் மோசமாகிவிட்டது. குருவுக்கு போன் அடித்தால் குருவோ பேசும் நிலையிலேயே இல்லை. ராக்காயி தான் அழைப்பை எடுத்தாள். சிவனிடமிருந்து விஷயத்தை கேட்டு அறிந்து கொண்டவள், தனது சாமான்களை எல்லாம் மூட்டை கட்டி மாடியில் இருக்கும் பழைய சாமான்கள் போடும் டஞ்சன் அறையில் போட்டுவிட்டு, வீட்டு வாயிலில் வந்து அமர்ந்து கொண்டு விட்டாள். தன்னால் முடிந்தது இவ்வளவுதான். தோப்பில் இருந்து வெளியேற கண்டிப்பாய் வழி இல்லை. அப்படி முயன்றால் அன்னபூரணியிடம் சிக்கிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியது வரும். அதில் திருட்டுத்தனம் நிச்சயமாக வெளிப்படும். அதைவிட இங்கேயே வாசலில் அமர்ந்து கொண்டிருந்தால் சமையல் வேலை செய்ய வந்ததாகவாவது சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தவளாக வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு, அன்னபூரணியையும் சிவனையும், எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அவளுக்குள் முழுதாக மது அருந்திவிட்டு மட்டையாகி சாய்ந்து இருக்கும் குருவை கண்டால் அன்னபூரணி என்ன நினைப்பாளோ என்ற பயம் வேறு. இதிலெல்லாம் அவள் என்ன செய்ய முடியும்? நல்லவேளை, மேலூர் காரியான ராக்காயியை அன்னபூரணிக்கு தெரியாது.

ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறு. அன்னபூரணி தோப்பு வீட்டிற்குள் வரும் முன்னரே, ஆடிட்டர் அழைத்து தனது அலுவலகம் வந்து சேருமாறு அழைப்பு விடுக்க, சிவன் 'அன்னபூரணியை நீங்களும் வாங்கம்மா'என்று கூட்டி சென்று விட்டார்.

சிறிதுநேரம் ராக்காயி அன்னபூரணிக்காக காத்திருந்து பார்த்துவிட்டு, அவர்கள் வரவில்லை என்றானதும் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றவளுக்கு அங்கே முட்ட குடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் குருவை நினைத்து கோவம் ஒரு புறமும், வருத்தம் ஒருபுறமுமாக. பணம் ஒரு மனிதனை இவ்வளவு சீராழிக்க முடியுமா என்று அவளுக்கு ஆற்றமை. பெருமூச்சு விட்டு நகர்ந்து சென்றாள்.
இன்று எப்படியோ தப்பித்தாகி விட்டது. ஒருவழியாக போதை குருபரனும் அவன் கண்கள் கோவைப் பழம் போல சிவந்து கிடந்தன. இன்னும் ரெண்டு நாள் இங்கேயே தங்கிடு ராக்காயி என்று இளித்து கொண்டு நின்றான் குரு.

உள்ளுக்குள்ளே பயப்பந்து உருள , நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள் ராகாயி.
தாடையை சொறிந்து கொண்டவாரே' சரி அப்ப நீ கிளம்பு ' என்றுவிட்டு தனது பாக்கெட்டிலிருந்து ஒரு கட்டு நோட்டை எடுத்து அவள் கையில் அழுத்திவிட்டு தனது சகாக்களுடன் போனில் பேசிக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டான். ராக்காயி தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். வழியில் வீரனை பார்த்தவுடன் ராகாயியின் கண்கள் கலங்கின. இதே வீரனை ஒரு காலத்தில் தன் கணவனாகவே நினைத்து இருந்தாள் ராக்காயி. அப்பொழுதெல்லாம் வீரனும் ராக்காயியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவருக்கும் மனது ஒன்று பட்டாலும் ராக்காயி சினிமாத்துறைக்கு சென்றபிறகு இருவருக்குமான தொடர்பு நிரந்தரமாகவே விட்டுப் போயிற்று. சில காதல் கதைகள் கண்ணீர் கதைகள் தான். வீரன் தேடியது காதல் மனைவியை... நடிகையை இல்லையே... வீரனுக்கு குடும்பம்?

**************

தில்லியில் இருந்து ஐந்தாம் வகுப்பு விடுமுறைக்காக நமது சாதுர்யா தன் அம்மா அப்பாவுடன் ஸ்ரீரங்கம் வந்திருக்கிறாள். முழு இரண்டு மாதங்களுக்கான விடுப்பும், அவளுக்கு இங்கு தான் கழிய போகிறது. அவளது பெற்றோர் அவளை மட்டும் ஸ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிளம்பிவிடுவார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்கள் விடுப்பு முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் தான் இருந்தாக வேண்டும். அது அவளுக்கு பிடித்த விஷயமும் கூட. திருச்சி,ஸ்ரீரங்கத்தில் இருக்கும் எந்த விஷயமும் நிச்சயம் தில்லியில் இல்லை என்பது அவள் எண்ணம். ஆர்ப்பாட்டங்கள் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எல்லாவற்றையும்விட எப்போதும் உடனிருக்கும் ரங்கன் அங்கு இல்லை.


ரங்கன் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு. நெடுநெடுவென்று ஐந்தரை அடிக்கும் கூடுதலாகவே வளர்ந்து விட்டான். வசீகரப் புன்னகை ஏந்திய உதடுகளுக்கு மேலே மெல்லியதான இளம் மீசை அரும்பு விட்டு இருந்தது அவனுக்கு. அந்த ரோஜா நிற உதடுகள் எப்பொழுதும் கூட இருப்போரையும் சேர்ந்து சிரிக்க அழைக்கும்.
வயலூரில் இருந்து ரேணுகாவும் ரங்கனும் காரை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வர, ரங்கனை பார்த்த வெங்கடேசன் மலைத்து தான் போனார். இந்த வயதில் இவ்வளவு அற்புதமாபிள்ளையா, இன்று அவருக்கு ஆச்சரியம். அவனிடம் பேசிக் கொண்டிருந்த இரண்டு நாட்களில் ரங்கனை பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம். அவனது பொறுமை, நிதானம்,அறிவு கூர்மை,அவரை அவன் பால் ஈர்த்தது.
தங்கையிடம் " ரேணு உன்னோட புள்ள தங்கம், அம்மா கிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லு " என்றார். ரங்கனை நினைத்து அவர் மனம் பெருமையில் பூரித்தது.

இரண்டு நாட்களில் வெங்கடேசனும் அவர் மனைவியும் தில்லி சென்றுவிட சாதுர்யா ரங்கனை பிடித்துக் கொண்டு சுற்றளானாள்.

வாழ்நாள் முழுவதும் ரங்கனுடன் அவள் பயணம் தொடர என் பிரார்த்தனைகள்.

மீண்டும் சந்திப்போம்

சுகீ



 
Messages
124
Reaction score
33
Points
63
பகுதி 4

“ரங்கன் தன்னுடன்
சாதுர்யாவை விளையாட கூட்டிக்கொண்டு அலைவதும், பாட்டியோ தாத்தாவோ துணைக்கு ஒருவர் வர, ரங்கனிடம் ஏதேனும்
வளவளத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் கல்லணைக்கும் சுற்றி விட்டு வருவதும், நண்பர்கள் புடை சூழ அம்மா மண்டபத்தில் விளையாடுவதும், காவிரியுடன் போட்டி போட்டுக்கொண்டு தானும் ஓடி விளையாடுவதும், லக்ஷ்மி அம்மாள் வீட்டில் பின்பக்கம் வளர்க்கும் பசு மாடுகளுடன் கொட்டிலில் அமர்ந்து கொஞ்சி கொண்டிருப்பதும், தாத்தாவை கூட்டிக்கொண்டு அவர்களுக்கு சொந்தமான கிராமங்களில் இருக்கும் நிலங்களுக்கு சென்று நானும் நாற்று நடுகிறேன்,களை எடுக்கிறேன், என்று அங்கு வேலை செய்யும் பெண்களுடன்
வம்படித்துக்கொண்டு அவர்களுடைய குழந்தைகளை தூக்கிக்கொண்டு கொஞ்சி தெரிவதும் திருச்சி மலைக்கோட்டை, உச்சி பிள்ளையார் கோவில் செல்வதும்,சுற்றியிருக்கும் கிராமங்களில், அருகில் இருக்கும் ஊர்களில் பஸ்ஸில் தாத்தாவுடன் பயணம் செய்வதும் என்று அவளது நேரம் அவளிடம் இல்லாமல் பறந்து கொண்டே தான் இருக்கிறது. நடுவில் இருபது நாட்கள் வயலூரில் அத்தை ரேணுகாவின் வீட்டில்
சாதுர்யாவின் இருப்பு, ரேணுகாவிற்கு தன் அண்ணன் மகள் தங்கள் வீட்டில் வந்து தங்குவதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. சாதுர்யாவுக்கு எப்போதுமே கால் ஒரு இடத்தில் தங்காது. நிற்காமல் எப்பொழுதுமே ஓடிக்கொண்டே இருப்பாள். அவள் ஒரு இடத்தில் உட்கார வேண்டும் என்றால் ஒன்று படிக்க உட்காரும் நேரம், இல்லையென்றால் யாராவது அவளுடன் கதை பேசிக் கொண்டிருக்க வேண்டும். அது என்னமோ கதை கேட்பதில் அதிலும் சரித்திர கதை கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.
அவளுக்கு விடுமுறையில் ரங்கன் சதுரங்கம் சொல்லிக் கொடுப்பதிலும் பரமபத விளையாட்டு சொல்லி தருவதிலும் நேரத்தை கடத்தினான். சாதுர்யாவுக்கு கணக்கு பாடம் ரொம்பவுமே தகராறு. ரங்கனுக்கு கணக்கு என்றால் இனிப்பு அளவுக்கு பிரியம். கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று அவளை ஒரு வழி ஆக்கி விட்டான். கதற கதற கணக்கு கொடுத்து கற்றுக் கொண்டாள் சாதுரியா. ரங்கன் வீட்டில் ரேழியில் இருக்கும் பெரிய மர ஊஞ்சலின் மீது
சாதுர்யாவுக்கு ஏதோ ஒரு மோகம். வருடாவருடம் வருவதுதான்.
ஆனால், இந்த வருடம் கொஞ்சம் விபரம் புரியும் அளவில் பெரிய பெண்ணாக வளர்ந்திருந்தாள் சாதுர்யா. வளர்ந்திருந்தாள் என்றால் ஆமாம் நிச்சயம் அவள் இப்போதே நல்ல உயரம் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரங்கனின் காது அளவிற்கு வந்திருக்கிறாள். அழகிதான். மாநிறத்திற்கு சற்றே கூடுதல் நிறம்,துருதுருவென்று பேசும் கண்கள். எப்பொழுதும் குறும்பு. அதீத கோபம், கோபத்தின் சமயம் ஜொலிக்கும் முகம், வாய் ஓயாத பேச்சு, என்று பேசுவதற்கு அவளுக்கு ஆள் தேவையில்லை கேட்பதற்கு தான் ஆள் தேவை. மற்றவர்கள்
யாரும்' அறுக்காதே 'என்று சொன்னால் கூட அது என்னமோ அவள் பாட்டி லட்சுமியும், அவளது ரங்கனும் எப்போதுமே அவள் பேசுவதை கேட்க தயார்தான்.

ஒருவழியாக விடுப்பு முடிந்து,பெண்ணும் அப்பா அம்மாவுடன் ரங்கனை விட்டு பிரியும் துன்பம் தாங்க முடியாமல், எப்பொழுதும் போல, சிறு சிறுமியாக பாட்டி வீட்டை விட்டு வரமாட்டேன் என்று ஒரே அழுகை. அவளுக்கு என்னமோ போலி முகங்கள், ரொம்ப சாமர்த்தியம் மிகுந்த நட்பு சூழல் பிடிக்கவில்லை. அவளுடன் பயிலும் எல்லா மாணவர்களுமே சாமர்த்தியம் தான். குழந்தைப் பருவத்தை மீறிக்கொண்டு வெளிப்படும் அந்த குணம் அவளுக்கு பிடிப்பதில்லை.இதோ ஊருக்கு சென்றவுடன் ஆறாம் வகுப்பு,கல்வி சாலைக்குச் சென்று புத்தகங்களுடன் மல்லுக் கட்ட வேண்டும். நினைக்கும் போதே தலை பாரமாக உணர்ந்தாள் சாதுர்யா. ஒருவழியாக வெங்கடேசனும், சாதுவின் அம்மா மாலாவும் மகளை சமாதானப்படுத்தி தில்லிக்கு கூட்டிச் சென்றார்கள். திரும்பவும் அடுத்த விடுமுறைக்கு வர வேண்டும் என்று பேரம் பேசி தான் சென்றாள்.

ஆனால் மாலாவுக்கு, தன் மகளை விடுமுறை வகுப்புகளில் சேர்த்து விட வேண்டும். சம்மர் கேம்ப் வகுப்புகளுக்கு மற்ற குழந்தைகள் செல்வது போல இவளும் செல்லவேண்டும், அப்பொழுது தான் மற்ற குழந்தைகளுடன் ஈடுகட்ட முடியும் தன் மகளால் என்ற எண்ணம் உள்ளூர இருந்து கொண்டிருக்கிறது. சாதுர்யா அடங்கும் ரகம் அல்ல.

சாதுர்யா கிளம்பிய மறுநாள், ரங்கனுக்கு பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டது. காலை எது மாலை எது என்று தெரியாத அளவிற்கு ரங்கன் ஓடிக்கொண்டிருந்தான். அவனின் அப்பா தீர்மானமாகச் சொல்லிவிட்டார்

'எனக்கும் வயசு ஆகுது ரங்கா... நீ படிப்பை முடித்து என்னோடு கூட வந்து, தொழில் கத்துக்கணும். நம்ம தொழில இப்ப இருக்கிற மாதிரி இன்னும் ஒரு மடங்கு பெருக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு தொழில் கத்து கொடுக்கணும்,உலகம் முழுக்க நம்ம தொழில பரப்பணும்.அதுதான் என்னுடைய ஆசை... இப்ப ஸ்பெயின்ல உங்க அத்தை, நம்ம தொழில பார்த்துக்கறாங்க. அவங்களால, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்தை விட்டுட்டு போய் வர முடியல. அங்க எல்லாம் நம்ம தொழில் பரவணும். அதுக்கு உன்னை நீயே தயார் படுத்திக்கோ'.
தந்தையின் சொற்கள், ஒவ்வொரு நொடியும்
அவனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பொறுப்பானவன்தான். இப்பொழுது இன்னும் தன்னை செதுக்கி கொள்ள முனைந்தான் அந்த சிறுவன். எப்படியும் குடும்ப தொழில் தான் அவன் வேலை என்றாகிவிட்டது. அது சம்பந்தமாக தெரிந்து கொள்வதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தையுடன் சென்று, அவர்களது தொழிலை புரிந்து கொள்ள முயற்சி செய்யலானான்.நிலங்களுக்கு சென்று விவசாயம் பற்றிய அறிவை வளர்த்து கொள்ள முனைந்தான்.
சிறுவனுக்கு இவ்வளவு பெரிய பாரத்தை சுமத்தி இருப்பது தாமோதரன் -லட்சுமி தம்பதிக்கு மிகவும் சுத்தமாக ஏன் என்று புரியவில்லை. ஆனால் மருமகனிடம் இதை நேரடியாக கேட்டுவிட முடியாது.
ஆனால், ரங்கனின் அப்பா மனது முழுவதும் 'தனது தம்பி குடும்பத்தை,குடும்ப தொழிலை விட்டுவிட்டு கேவலம் காதலித்து பின்னால் சென்று விட்டானே, தன் மகனும் அதுபோல தவறுகள் செய்து விடக்கூடாது'. இந்த வயதிலேயே ரங்கனின் புத்தி புல் மேய போகாமல், சீராக அவனது பொறுப்புகளை ஏற்க பழக வேண்டும்' என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள், நிகழ்வுகள் தான் அவனுடைய தீர்மானங்களை செயல்வடிவமாக மாற்றுகிறது.கற்று தருவதுடன் பிறருக்கு பாடம் சொல்லவும்
பயிற்றுவிக்கிறது.
ரங்கன் தலையில் படிக்கும் வயதில் இப்பொழுது வேண்டுமானால், இது பெரிய பாரமாக தெரியலாம். ஆனால் இன்னும் பல பெரிய குடும்பங்களில், குடும்பத் தொழிலில் சிறுவயதிலேயே பழக்குவது வழக்கத்தில் இருப்பதுதான். இது சரியா தவறா என்பதை விட, அதன் போக்கில் அந்த விஷயங்களை விட்டு விடுவது தான் சரி. ரங்கனும் நன்றாக படிப்பதும் மதிப்பெண்கள் வாங்குவதும் எவ்வளவு முக்கியமோ தொழிலை கற்றுக் கொள்வதும் அவ்வளவு முக்கியம் என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். பருவ வயதிற்கு உரிய எந்த ஆசைகளும் இதுவரையும் அவனது மனதில் பதியவில்லை. அவன் அப்பா விரும்புவது இதைத்தான்.
காலையும் மாலையும் பத்தாம்வகுப்புக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வதும், விடி காலையிலேயே எழுந்து படிக்க அமர்வதுமாக, ஒரு பக்கம் அவன் நேரம் அவனை விழுங்க, இன்னொரு பக்கம் அப்பாவுடன் கற்றுக்கொள்வது, அம்மாவிற்கு வீட்டு நிர்வாகத்தில் உதவி செய்வது என்ற மெனக்கெடல் அதிகமாக இருந்தது. ஒருவேளை அவனிடம் பொறுமை குறைவு மட்டும் இருந்தால் நிச்சயம் வெடித்திருப்பான்.
ரேணுகாவுக்கு உள்ளூர வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் ரேணுகாவின் மாமனார் மாமியாருக்கு தன் மகன், பேரனை பயிற்றுவிப்பது சரியே என்ற எண்ணம்.

நடுவில் பத்து நாள் விடுப்புகாக தில்லியில் தன் வீட்டில் ரகளை செய்து ஸ்ரீரங்கம் செய்வேன் என்று வந்து சேர்ந்தாள் சாதுர்யா. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் தன்னை பார்ப்பதற்காக, முதல் நாள் சிறப்பு வகுப்புகள் முடிந்து இவளுடன் நேரம் செலவிட்டு விட்டு, அடுத்தநாள் விடி காலையிலேயே கிளம்பி விட்டான் தன் வகுப்புகளுக்கு. அவனது நிலையை புரிந்து கொள்ளும் நிலையில் சிறுமி இல்லை. அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவன் சென்று விட்டதால், காலையில் தூங்கி விழித்து கொண்டவள் ஒரே ஆர்ப்பாட்டம் தான். தாமோதரன் லக்ஷ்மியால் கண்டிப்பாய் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.
ரங்கனுடன் விளையாடலாம், வெளியே சுற்றலாம் என்று ஆயிரம் கனவுகளுடன் வந்தவளுக்கு ரங்கன் பெரிய வகுப்பில் படிக்கிறான் என்பது சுத்தமாகப் புரிபடவில்லை.
மதியம் ரேணுவுக்கு அழைத்து, லட்சுமி அம்மாள் ' ரங்கனை வரச் சொல்லு ரேணு, என்று சாது செய்யும் அனைத்து
ரகளைகளையும் மூச்சு விடாமல் சொல்லிவிட்டார்.'சரி, வர சொல்றேன் மா... இன்னும் அவன் க்ளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரல என்று சொல்லி வைத்து விட்டாள். ரங்கனும் இரவு வகுப்பு முடிந்து வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. ரங்கன் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சாதுர்யாவுக்கோ, அழுது அழுது ஜுரமே வந்துவிட்டது. மறுநாள் காலை வகுப்புகளை முடித்துவிட்டு மதியதிற்கு மேல்தான் ரங்கன் வந்தான். சிறுமியை பார்த்தவனுக்கு மனது தாங்கவில்லை. அவள் முகத்தை பார்த்து அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

ஒரு வழியாக அவளுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி 'எனக்கு இந்த வருஷம் பெரிய கிளாஸ் சாது, ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் போகாம இருக்க முடியாது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா ' என்று அவளிடம் கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி விட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலை நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு அன்றைய மாலைநேர வகுப்புகளுக்கு விரைந்தான் ரங்கன்.

சிறுமிக்கு எதுவும் புரியாவிடினும், ரங்கன் கண்கள் உதித்த நீர் தனக்காக தான் என்பதை மனதில் வைத்து சமாதானம் அடைந்தாள் சிறுமி.

விடுமுறை முடிந்து
சாதுர்யாவை தானே தில்லியில் கொண்டுபோய் விட்டுவிட்டார் தாமோதரன்.
அவரும் டில்லி சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது.
ரங்கன் -சாதுர்யா பள்ளி நாட்கள் அதன் போக்கில் விரைந்தன.

நிமிடம் போல் ஆறு மாதங்கள் ஓடி விட, முழு ஆண்டு பரீட்சை முடிந்து ரங்கனுக்கும் பதினோரம் வகுப்பு சேர்க்கை ஆரம்பிக்க அவன் தொழிற்கணிதம் எடுத்துக் கொண்டான். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவன் அப்பாவின் ஆசைக்கு இணங்க குடும்பத் தொழிலிலேயே நுழைவது எனும் எண்ணம் அவன் மனதில் ஆழமாக.

இங்கு தில்லியில் சாதுர்யாவின் அம்மாவோ, விடுமுறை காலத்தில் நடன வகுப்பு செல், வரைய கற்றுக்கொள், கணினி வகுப்பில் சேர் என்று வரிசையாய் பட்டியல் நீட்ட நொந்து போனாள் மகள். அவளை தேற்றும் வகையில் லட்சுமியும் தமோதரனும் பத்து பத்து நாட்கள் வந்து செல்ல, அவள் மனமோ ரங்கனை நாட அலைபேசியில் அவனை அழைத்து பேசினாள்.அவனோ 'அம்மா -அப்பா சொல்றது நாம நல்லதுக்குத்தான் சது... அவங்க பேச்சு கேளு' என முடித்துவிட்டான்.

மனம் ஏக்கம் இருந்தாலும் பிடிவாதம் மிக தான் அம்மா சொல்படி நடக்க ஆரம்பித்தாள் மகள்.அவனுக்கு உள்ளுர வருத்தம் மிகுந்தாலும் வளரும் பருவத்தில் சில விஷயங்கள் கற்க வேண்டும் என தன்னை தேற்றிகொண்டான்
அவள் தனக்காக உருகி அழுதது அவன் கண் முன்னே வந்து செல்ல கண்களை இறுக மூடிக்கொண்டான். அதிலிருந்து ஓரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தை முத்தமிட்டு சென்றது.
அவர்கள் மீண்டும் சந்திக்கும் தருணம்...

@@@@@@@@@@@@@@@

அருணாச்சலம் சென்னை சென்று வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. விஷயம் பழம்தான். முக்கிய கட்சியின் ஒன்றிணைப்பாளர் எனும் பதவி. கவுன்சிலர் பதவிக்கான ஆதரவு என்று மனிதர் மிகுந்த சந்தோஷத்தில். அவரது நட்பு ராமேஸ்வரம் 'இப்போ இந்த பதவி, சீக்கிரம்
எம் எல் ஏ ஆகணும். அதுக்கு வழிய பாரு'என்று வாழ்த்துடன் அருணாச்சலம் செய்ய வேண்டியவற்றை கோடிட்டு காட்டி அனுப்ப ஊருக்கு வந்த பிறகும் அவர் மனம் அதை சுற்றியே. மகன் குரு பற்றிய எண்ணம் அவரை அணுகவில்லை.
மனைவியிடம் ஆடிட்டர் சொன்னவற்றை கேட்டு கொண்டவர்,'இனி நீதான் எல்லாத்தையும் பாக்க பழகணும் அன்னம் 'என்று சென்னை விஷயங்களை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ராகாயியை அனுப்பி விட்டு இரவு தனிமை தாளாது குருபரன் தோப்பு வீட்டிலேயே முழு போதையில் முழுகி விட்டான். தனது தோழர்களுக்கு கூட தான் தங்கியிருப்பது பற்றி சொல்லவில்லை.
வீட்டுக்கு மகன் வரல என்பது அந்த தாயின் மனது தவிக்க, தந்தையோ எதிர்கால அரசியல் எண்ணி கோட்டைகள் கட்ட, எதிர் காலம் பற்றிய எண்ணமே இன்றி குரு குப்புற படுத்து கிடைக்கிறான்.
அருணாச்சலத்துக்கு அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கு. ஆனால், அவர் குடும்பம்?

ராகாயி மனதில் குரு சீராழிகிறானே, என்று வருத்தம். அவள் வாழ்க்கை பிரண்ட பதினேழு வயதை வெறுத்தவாறே எண்ணி பார்த்தாள்.

சதுரங்க கட்டத்தில் முதல் காயை நகர்த்திவிட்டேன்.போர் நிச்சயம் ஆகிவிட்டது. வேகமாக உருளும் காலமான என்னோடு நீங்களும் வாருங்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

சுகீ.






.
 
Messages
124
Reaction score
33
Points
63
"சில சமயங்களில் நாம் தேடிப் போகும் விஷயங்கள் நல்லவைகளாக இராது. ஆனால் காலப்போக்கில் சமூகரீதியில் அதை சரியானதாக விஷயங்களாக பார்க்கப் பழகிக் கொள்கிறோம்."

இப்பொழுது, அருணாச்சலம் அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்துள்ளது நல்லவைக்கா இல்லை கெட்டவைக்கா என்பது குறித்து எனக்கு மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது.

மனைவியிடம் பொறுப்புகளை கொடுத்து சொத்து விவகாரங்களில் கவனிக்க சொல்வதும் சரிதான். ஆனால் வயது வந்த மகனை கண்டுகொள்ளாமல் தன் அரசியல் பாதையில் செப்பனிடும் வேலை செய்வது எந்த விதத்தில் சரியாகும்?
அருணாச்சலம் செய்து கொண்டிருப்பது அதைத்தான். அன்று காலையில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் அருணாச்சலம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதற்காக சில கட்சிக்காரர்கள் வீடு ஏறி வந்திருக்க, அவர்களுடன் உரையாடிக்கொண்டே அவர்களுக்கும் காலை நேர உணவை பரிமாறும்படிக்கு மனைவியிடம் சொன்னவர், சாப்பிடும் பொழுது, வெகு நாட்களாய் வீடு வந்து சேராத மகன் வந்து நிற்க, அதை சிறிது கூட கண்டுகொள்ளாத பாவனையில் தனது பேச்சை தொடர்ந்தார் அருணாச்சலம்.மகன்
இத்தனை நாள் எங்கு தங்கி இருந்தான், என்ன செய்து கொண்டிருந்தான் என்பது பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனிடம் கேட்கவும் இல்லை.

சிவனிடம் சொல்லி குருபரனை கண்காணிப்பதற்கு வைத்திருக்கிறார் அருணாச்சலம். ஆனால் இதுபற்றியெல்லாம் குருவுக்கு ஒன்றும் தெரியாது.

குருவுக்கு மனதில் அப்பா தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆத்திரம் ஒரு புறமும், வேதனை மறுபுறமுமாக அலைக்கழிக்க அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
மகனுக்கோ தன் அப்பாவிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். முன்பெல்லாம் அப்பாவும் மகனும் காலை வேளையில், அன்னபூரணி உணவு பரிமாற சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவார்கள். அவர் வேலையை கவனிப்பதற்கு செல்வதற்குமுன் மகனிடம் நேரம் செலவழிப்பதை ஒரு கட்டாயமாக்கி கொண்டிருந்தார். மகனும் பள்ளி கிளம்புவதற்கு முன் முதல் நாள் பள்ளியில் நடந்தது முதல் இன்று அவன் செய்யவிருப்பது வரை சொல்லிக் கொண்டிருப்பான். இருவருக்கும் தட்டில் உள்ள உணவு காலியாவதே தெரியாமல் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க அன்னபூரணியும் சளைக்காமல் தட்டில் உணவு போட்டுக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் குருபரன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். அம்மாவின் கைப்பக்குவம் அவனை நல்ல வளர்த்தியாக்கி விட்டிருந்தது. (இப்போ எப்படி இருக்கானு கேக்கப் படாது)சிறுவனின் மனம். பால் மனம் மாறவில்லை. அம்மாவின் தலைப்பில் ஒளிந்து கொள்ளும், அப்பாவின் சலுகைகளை எதிர்பார்க்கும் சராசரி ஒற்றை பிள்ளை அவன்.
பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், அவனின் உலகம் அவனின் அப்பா அம்மாவை சுற்றி மட்டுமே இருந்தது. ஆனால் என்று ராமேஸ்வரம் அரசியல் என்ற கூர்மை மிக்க ஆயுதத்தை ஏந்தி அருணாச்சலத்துடன்
பேசிக்கொண்டிருந்தாரோ, அன்று மையம் கொள்ள ஆரம்பித்தது இவர்கள் வீட்டில் புயல். அன்னபூரணிக்கு தனது கணவன் அடுத்த நிலையை நோக்கி முன்னேறுவது பெருத்த மகிழ்ச்சி. கணவனுக்கு என்றும் துணை நிற்க அவர் தயார்.ஆனால் விடலை பருவத்தில் இருக்கும் தனையனுக்கு அப்பாவின் அருகாமை தான் மகிழ்ச்சி. அப்பாவின் பணம் பதவி தராத மகிழ்ச்சியை அவரின் உடனிருப்பு கொடுத்துக் கொண்டிருந்தது. அன்று வரை பெரிதாக நட்பு வட்டம் என்று சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றி அறியாதவன், தான் பணக்கார வீட்டுப் பிள்ளை எவ்வளவு செலவு செய்தாலும் தாங்கும் என்று யோசித்திராதவன், புதியதாக இம்முறை நட்புகள் என்று சேர்த்து கொண்டவர்கள் அனைவரும் தீய பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பவர்களாகவும் குருபரனின் பணத்தை வைத்து சொந்த கொண்டாட்டங்களை வைத்துக் கொண்டிருப்பாவராயும் அமைந்தது முழுக்க முழுக்க சாபக்கேடு. கரந்த பாலின் தூய்மையில் ஒரு சொட்டு நாக விஷம் சேரும்போது?
விஷ முறிவு சிகிச்சை செய்து அவனை திருத்த வேண்டிய,மகனை கண்டிக்க வேண்டிய தகப்பனும் தனது சுய முன்னேற்றத்தில் குறியாக இருக்கிறார். நாற்பதுகளில் இருக்கும் அருணாசலத்திற்கு திடீரென்று அரசியல் மோகம் அணை கடந்துவிட்டது.அதேபோல் மகனது விஷயங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தன் மனைவியின் காதுகளை எட்டவே கூடாது என்று வேறு போற்றிப் பாதுகாத்து வருகிறார் சிவனுடைய துணையுடன்.ஆனால் விஷயங்களின் அளவு கை மீறிப் போகும் போது எந்த ஒரு நபரும் இதை தடுக்க இயலாது.

நேரே உள்ளே வந்த குருபரன், சாப்பாட்டு மேசையின் மீது அமர்ந்து கொண்டு இருந்த மற்றவர்கள் முன்னால் பேசத் தயங்கியவாறே 'அப்பா'என்று அழைத்தான்.
'வா தம்பி இப்பதான் வீடு தெரிஞ்சதா' என்று குரலில் சிறிதாக நக்கலை கலந்து கோவத்தை மறைத்து கேட்க, அது புரியாத அளவுக்கு மட்டியல்ல குருபரன்.

'வாங்க தம்பி,வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க பிறகு பேசிக்கலாம்.' என்று பிறர் முன் மகனைக் கடிய இயலாது அப்புறம் பேசிக்கலாம் என்பதைப்பற்றி நாசுக்காக சொன்ன தந்தையை வெறித்த பார்வை பார்த்துவிட்டு, வெளில போயிட்டு வந்தது கசகசன்னு இருக்கு பா... இந்தா போய் குளிச்சிட்டு வரேன், நீங்க சாப்பிடுங்க'என்று விட்டு தன் அறையை நோக்கி சென்றான். குருபரன் மனதிற்குள் அப்படி ஒரு பேராழி அடித்துக் கொண்டிருந்தது. முன்புபோல் தன் தந்தை தன்னுடன் பேசிக் கொண்டிருப்பதில்லை. அதிகமாய் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த அம்மாவோ இப்போதெல்லாம் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் நேரம் குறைந்து அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. என்னதான் பெண் சிநேகிதங்களும் நண்பர்களும் மாற்றி மாற்றி அவனை சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டிருந்தாலும் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் அப்பா -அம்மா என்ற உணர்வு அவ்வபோது தலைதூக்க தான் செய்கிறது. ஏக்கம் அவன் உள்ளே ஆழமாய் ரணமாய்.அவன் தேடி செல்லும் சமயம் அப்பா அம்மா இருவருமே கையில் அகப்படுவதில்லை. 'சை, என்ன வாழ்க்கை இது என்று மனதிற்குள் பொங்கினான் குருபரன். அவன் மன உணர்வுகளுக்கு வடிகால் இல்லை.ஆனால் பிறகும் தந்தை தன்னை கூப்பிட்டு பேசுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதில் தொடங்கி, கவுன்சிலர் தேர்தலும் முடிந்து, அந்த பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு அருணாச்சலம் அவரது போக்கே மாறிவிட்டது. வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனாலும் அவரால் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்க முடிவதில்லை. பொது வாழ்க்கை அவரை சுருட்டிக் கொண்டது என்பதே நிஜம்.
கணக்கு பிள்ளைகளின் துணையுடன் அன்னபூரணியே எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டு விடுகிறாள்.அவருக்கு முழு நேரமும் அரசியல்... அரசியல்... அரசியல்! அதுவே தொழில் என்றாகிவிட்டது. எப்படியாவது, மாவட்ட செயலாளர் ஆகிவிடவேண்டும் கட்சி அளவில், அதே போல் எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிடும் வேகம் அவருக்குள்.குருபரனோ அந்த நேரம் பேச முடியாமல் தவித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
வெளியில் அவன் சீட்டாட்டம் சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி இருந்த கடன் தொகை பெரிது. தோற்றும் விட்டான்.அதை ஈடுகட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்பாவிடம் சொல்வது, இதற்குப்பிறகு சீட்டாட்டத்தில் நுழைவதில்லை என்று முடிவு செய்திருந்தவனுக்கு தனது அப்பாவின் பாராமுகம் ஆழமாய் கத்தி போன்று கீறியது. அம்மாவிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு அவன் வயது இடம் தரவில்லை. பெத்த மகனுக்கே என்னென்னன்னு கேட்டு செய்ய தெரியலையாம், துப்பு இல்லையாம்.இந்த அழகுல இவரு சமூக சேவை செய்கிறாராம் சமூக சேவை.
இந்தாளுளேல்லாம் என்னத்த கிழிச்சு...****என்று மனதிற்குள் அப்பாவை திட்டிக்கொண்டே, ஜாடிக்கேத்த மூடி என்று கச்சிதமாய் தன் கணவருடன் பொருந்தியிருக்கும்,தன் மகனை பற்றி அதிகம் யோசிக்காமல் இருக்கும் அம்மா மீதும் அவனது மதிப்பு குறையலாயிற்று.' அவர்கள் செய்த பெரிய தவறு மகன் வளர்ந்து விட்டால் நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். இனி அவனே தன் வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப் படுத்திக் கொள்வான் என்று யோசித்து தான். அவன் பன்னிரண்டாம் வகுப்பு சறுக்கியது அருணாசலத்திற்கு ஒருவிதத்தில் அவமானமாக இருந்தாலும், அவனை மேற்கொண்டு படிப்பதற்கு ஓரிருமுறை வற்புறுத்தி பார்த்தவர் பிறகு விட்டுவிட்டார். அவனுக்கு பூர்வீக சொத்துக்களை கையாள்வதில் பரிச்சயம் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரின் யோசனை. அதைப்போல் சிவன் மூலம் அவன் கடன் வாங்கி இருந்தது பற்றியும் சீட்டு ஆட்டத்தில் தோற்றது பற்றியும் தெரிந்து கொண்டவர், மகன் இதை பற்றி தன்னிடம் நேரில் பேச வேண்டும். ஆனால் மெனக்கெட வேண்டும். அவனுக்கு நிலைமையின் விபரீதம் தெரிய வேணும்.பிறகு தான் அவனிடம் பேசுதல் என்று யோசனை பண்ணி வைத்திருந்தார். இருவருக்குள்ளும் மனதிற்குள் ஓடும் விஷயங்கள் மனதளவில் அவர்களிடையே ஒரு பிரிவை உண்டாக்கி விட்டது. இந்தப் பிரிவு பெரும் மதில்சுவர் ஆகும் நாள் அதிக தொலைவில் இல்லை.

தன்னிடம் இருந்த நகைகளை விற்று, சீட்டாட்டக் கடன் தொகைகளை அடைத்தவன், பிறகு எதற்காகவும் அப்பா அம்மாவிடம் போய் நிற்க வில்லை. சிவனிடம் சொல்லி, அருணாச்சலம் தன் மகனிடம் ஒரு சில பொறுப்புகளை கொடுக்க, அவற்றை செவ்வனே செய்தவன், வருமானத்திலிருந்து ஒரு தொகையை தனக்கென்று ஒதுக்கி எடுத்து வைத்துக்கொள்ள தொடங்கினான். இதுபற்றி அருணாச்சலம் அறிந்திருந்தும், அவனுக்கும் பணத்தேவை இருக்குமென்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பும் வரும். பணம் கையாளும் பொழுது அவற்றின் மதிப்பு என்ன என்று புரியும் என நம்பினார்.
ஆனால் நடந்தது வேற. வரும் பணத்தில், அவனது தீய பழக்கங்களும் பெருகிக் கொண்டுதான் வந்தது. யாரையும் எதிர்பார்க்காமல் அதிகமாய் சேரும் பணம் அவனது கெட்ட சகவாசம் மற்றும் கெட்ட பழக்கங்களையும் கூட சேர்த்து விட்டது. இளம் வயதில் சேரும் அதிக பணம் அதிக ஆபத்து... மது, மாது, சீட்டாட்டம்.இப்பொழுது போதை மருந்தும் கூட சேர்ந்து விட்டது அவனது லிஸ்டில்.
அருணாச்சலம் நினைத்தபடியே வேகமான முன்னேற்றம் அவர் அரசியல் வாழ்வில்.அடுத்தடுத்த பதவிகள் எல்லாம் அவரை தேடி வர அவர் யோசித்தபடி மாவட்ட செயலாளரும் ஆகிவிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் நிற்பதற்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். வருடங்கள் நான்கு கடக்க அவரது வாழ்வில் ஏற்றம்... அவர் மகனது வாழ்வில் இறக்கம்.
அரசல்புரசலாக மகனின் நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்திருந்தது அன்னபூரணிக்கு.

திரும்பவும், தோப்பு வீட்டில் பெண்களுடன் அவன் கூத்து அடிக்கும் சமயம், எதிர்பாராதவிதமாக அன்னபூரணி குத்தகை விடுவதற்க்கு ஆளை வரச் சொல்லி தோப்புக்கு செல்ல,தனது செல்ல மகனின் எந்த கோலத்தை பார்க்கக்கூடாதோ அதை முழுதாக பார்த்து தன்னுள் நொருங்கினார் அன்னபூரணி. அவர் செல்லும் சமயம் வீரனும் அங்கு இல்லை. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தான்.

தான் கண்டது நிஜமல்ல பிரமைதான் என்று அவர் மனம் மீண்டும் மீண்டும் வாதிட்டது. தனது தாய் கண்டவற்றை மகனும் பார்த்துவிட அவனுக்குள் முதலில் சின்னதாக ஒரு குற்ற உணர்ச்சி. பிறகு அதையும் துடைத்துவிட்டான். அவனுக்கும் பார்த்த பார்க்கட்டுமே, என்றாகிலும் தெரியத்தானே போகிறது. இன்றே எனில் நல்லதே,என்ற அலட்சியம் தலை தூக்கியிருந்தது.

அதிர்ச்சியில் உறைந்த அன்னபூரணி, டிரைவரிடம் சொல்லி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.அருவருப்பில் உடல் குறுக தன்னிலை மறந்து விட்டத்தை வெறித்தவாறே கூடத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அந்த தாய்.ஆடிட்டர் அலுவலகம் சென்றுவிட்டு வந்த சிவம், அன்னபூரணியின் நிலைகண்டு தடுமாறிப் போனார். அன்னபூரணி 'தான் எதை பார்த்தோம்' என்று சிவனிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் தோப்புக்கு சென்று வந்ததை சிவம் அறிவார். அங்கு என்ன நடந்தது என்று தெரியாவிடினும், அங்கு நடந்தவை ஏதோ சரியாக இல்லை எனும்
ஊகம் அவருக்குள் உண்டு.
இப்போதெல்லாம் அருணாச்சலம் பெரும்பாலும் சென்னையில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு, அன்னபூரணி எவ்வாறு இருக்கிறாள் என்று சொல்லி விட்டார் சிவன். மெல்ல தனது தாடையை நீவி கொண்டவாரே 'நான் வந்து எல்லாத்தையும் பார்த்துக்குறேன் சிவம். என்ன நடந்ததுன்னு தெரியல,நீங்க நிலைமையைக் கட்டுக்குள் வைக்க பாருங்க'என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டார் அருணாச்சலம்.

பண்பாடு பற்றி மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்து அன்னபூரணி பிள்ளைக்காக யோசித்து கொண்டிருந்தவளுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்க, சிவன் மற்றும் இன்னும் இரண்டு வேலைக்காரர்கள் துணையுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
குருபரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் வரும் நிலையில் இல்லை.முழு போதையில் முழ்கி இருந்தான் . அவனை சுற்றியும் பெண்கள் கூட்டம். தாய் எனும் பெண் படும் துன்பத்தை விட, அவனுக்கு காம இன்பத்தை கொடுக்கும் பெண்கள் பெரியதாக பட்டதால் அவன் வரவில்லை. அதிர்ந்துபோன அருணாசலம் அன்று இரவே கிளம்பி மறுநாள் விடிகாலையில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
ஒருவழியாக, உடல் தேறி அன்னபூரணி வீடு வந்து சேர, அவள் மனதிற்குள், மகனுக்கு எப்படியேனும் திருமணம் செய்து விட்டால் அவன் சரியாகி விடுவான் என்ற எண்ணம் உதிக்க, அவனுக்கு பெண் பார்ப்பது என்று முடிவு செய்து விட்டார். ஆனால் அவனது நடவடிக்கைகள் தெரிந்த யார் அவனுக்கு பெண் கொடுக்க முன்வருவார்?
பெண்ணைப் பெற்றவர்கள் பையனுக்கு சொத்து எவ்வளவு,படிப்பு இருக்கிறதா,என்பதுடன் சேர்த்து ஒழுக்கத்தையும் தானே பார்ப்பார்கள்?
அன்னபூரணிக்கு கண்ணை கட்டி விட்டது போலிருந்தது. அருணாச்சலம் இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது என்று எவ்வளவு சொல்லியும் ஏற்றுக்கொள்ள தாய் மனது தயாராக இல்லை. பக்கத்து ஊர்களில் இருக்கும் பெண்களையெல்லாம் பணம் அந்தஸ்து இவற்றை ஒதுக்கி பார்த்தாயிற்று. இவனது வரன் என்றாலே பெண்ணைப் பெற்றவர்கள் தலைதெறிக்க ஓட, கடைசியில் 'அன்னபூரணி சிவனிடம் அண்ணே, உங்க மூத்த பொண்ணை என்னுடைய பையனுக்கு கட்டி வைக்கிறீங்களா அண்ணே ' என்று கேட்க, உடைந்து போனார் சிவன். பணம் அந்தஸ்து இவற்றை மீறி, குருவை போன்ற ஒருவனுக்கு தனது செல்ல மகளை எவ்வாறு திருமணம் செய்து வைக்க முடியும் என்ற பதட்டம் மிக,அன்னபூரணி- அருணாச்சலம் முகத்தை பார்த்தவருக்கு எவ்வாறு மறுப்பது என்ற குழப்பம் மேலோங்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அருணாசலம், இவ்வளவு வருஷமா என்கிட்ட விசுவாசமா இருந்திருக்க சிவம். என் பையனுக்கு சேரவேண்டிய சொத்துல பாதி சொத்தை உன் பொண்ணு மேல எழுதி வைக்கறோம். எங்க பொண்ணாவே பாத்துக்குறோம். நீ நம்பி உன்னோட பொண்ண எம்பையனுக்கு கட்டி கொடு சிவம் 'என்க, மீதி வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுக்கும் கூட நல்ல இடங்களில் சீர்செய்து திருமணம் செய்து வைப்பதாய் அருணாச்சலம் வாக்கு கொடுத்ததை நம்பி, தனது மூத்த மகளை திருமணம் குருவுக்கு செய்து வைக்க ஒப்புக்கொண்டார் சிவன். சிவனுக்கு இப்போது உள்ளூர உதறல் தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று. வீட்டில் மனைவி மகளை சம்மதிக்க செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு வேறு உள்ளதே!

எனக்கும் கூட அதே குழப்பம் தான். சில சமயங்களில் திருமணம் செய்து வைத்தால் எப்பேர்பட்டவர்களும் திருந்தி விடுவது வழக்கம் தான். அது போன்ற ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடக்கபோகும் விஷயங்கள்தான் சரி தவறு பற்றி முடிவெடுக்க முடியும்.
*****************************

தில்லியில் இரண்டு வருடங்களாக விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் வராமல் மனதிற்குள்
புழுங்கினால் சாதுர்யா.
அவளது நடன பயிற்சி அரங்கேற்றம் வரை வந்துவிட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தமிழ்நாட்டில் ஆரம்பம் ஆகி விட்ட நிலையில் ரங்கன் தில்லி வருவது சாத்தியமில்லை என்ற விட்டான். ரேணுகா மட்டும் வந்து சென்றாள். இப்போதெல்லாம் ரங்கன் தன்னைவிட்டு தொலைதூரம் சென்று விட்டது போல ஒரு எண்ணம் சாதுர்யா மனதில்.

'நீ கொஞ்சம் அவளோட நட்பை குறைச்சாதான் அவ ஸ்ரீரங்கத்தை தவிர வேறு விஷயங்களில் ஈடுபடுவா ரங்கா' என்று சாதுர்யாவின் அம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரங்கன் இவ்வாறு விலகி நிற்கிறான். அவன் தோழியோ, இவனிடம் வெளிப்படும் ஒதுக்கத்தை எண்ணி தவிக்கிறாள்.

விடை தெரியாத பல கேள்விகளுடன் நானும் கூட காத்திருக்கிறேன்.


சுகீ.







 
Messages
124
Reaction score
33
Points
63
²தோழமை என்பது மிகப்பெரிய வரம். எல்லோருக்கும் சரியான நண்பர் குழாம் அமைவதில்லை."

அந்த விதத்தில் ரங்கனும் சாதுர்யாவும் குடுத்து வைத்தவர்கள்.
இன்னொரு புறம், குரு. ஒற்றை பிள்ளையாய் பெற்றவர்களின் கூட்டுக்குள் வளர்ந்தவனுக்கு, சந்தர்ப்ப சூழ்நிலை, மற்றும் அவனது வயது,அவன் பெற்றோரின் 'அவனுக்கு சுயமாய் உலகம் பழக வேணும் எனும் எண்ணம்,' அவனது பக்குவ குறைவு எல்லாமும் சேர்ந்து தேடிக்கொடுத்து இருக்கும் நண்பர் குழு, வெறும் 'பணம்' திண்ணிக் கழுகுகள்.அந்த கழுகு கூட்டத்தில் தன்னை இழந்து, நிஜம் இதுவென கானல் நீரை நம்பி சிக்கி கொண்டிருக்கிறான் குரு.

நல்லவற்றுக்கு தோள் கொடுப்பவன் தான் நல்ல நண்பனாக இருக்க முடியும். நல்லவனை தீயவன் ஆக்கும் நட்பு எத்தகையது?
குருவுக்கு இவையெல்லாம் புரியாததுதான் அவன் வாழ்வில் செய்ய போகும் மொத்த தவறுகளுக்கும் காரணம். இந்த கூடா நட்புகள் அவனை எங்கு கொண்டு போய் நிறுத்த போகிறதோ?
யாரெல்லாம் இவன் தவறுகளுக்கு பலியாக போகிறார்களோ?


*********************
சாதுர்யாவுக்கோ ரங்கனின் ஒதுக்கம் ஒப்புக்கொள்ள முடியாததாய் திணறுகிறாள். அவளுக்கு புரியவில்லை, 'எதற்காக தன்னிடம் அவன் அதிகம் பேசுவதுகூட இல்லை?'
நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்கும் பொழுது, ரங்கனால் வர முடியவில்லை சரி, அதற்கு பிறகும் அவன் ஏன் அலைபேசி வழியே தன்னை அழைக்கவில்லை? ஒரு வாழ்த்து சொல்வதில் அவன் என்ன குறைக்கிறான்?

அரங்கேற்றம் முடிந்து ஒரு மாதத்தில் சதுவுக்கும் கூட பரீட்சைகள் ஆரம்பிக்க, அப்பொழுதும் அவளால் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுக்கென்று இருக்கும் ஒரே நண்பன் அவன். அவனை பார்த்து ஏறத் தாழ இரண்டு வருஷங்கள் ஆகிறது. இந்த விடுமுறைக்காவது
ஸ்ரீ ரங்கம் செல்ல அம்மா அனுமதி கொடுப்பார்களா எனும் கேள்வி மட்டுமே அவளின் கவனம் குறைய போதுமானதாக இருந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை அவள். விடுமுறைக்காக தாத்தா வீடு செல்லுதலும், இஷ்டம் போல ஊர் சுற்றுவதும், படிக்க எழுத என்று எந்த தொல்லைகளும் இன்றி விடுமுறையை முழு விடுமுறையாக கழிக்க தான் அவளது விருப்பம் இருக்கும். ஆனால் இந்த காலத்தில் விடுமுறையும் சரி பள்ளி நாட்களும் சரி ஒரே மாதிரி தான் போகிறது. இடைவிடாத பள்ளி வகுப்புகளும், அதைத் தாண்டி பல்வேறு வகுப்புகளுமாக சிறார்களின் குழந்தை தன்மை எங்கோ காணாமல் போய் விடுகிறது. அதற்கு சாதுர்யாவும்
விதிவிலக்கல்ல.

தாத்தா தாமோதரன் வழக்கம் போல் இவள் பரீட்சை சமயம் தில்லி வந்து விட, இவளின் நச்சரிப்பு அதிகம் ஆகிவிட்டது.

"தாத்தா ப்ளீஸ், அப்பா அம்மா கிட்ட சொல்லி என்னை உங்க கூட கூட்டி போங்க...இங்க ஒரே போர் அடிக்குது. குளத்துல குளிக்கணும் போல இருக்கு. காவிரியில் நீச்சல் அடிக்கணும் போல இருக்கு. எனக்கு இங்க இருக்க வேணாம் தாத்தா என்னய ரெண்டு மாசத்துக்கு ஸ்ரீரங்கம் கூட்டிட்டு போங்க... என்று கண்களில் ஆரம்பித்தது அழுகையில் முடித்தாள்.

அவரோ... ம்ம்ம் சரி சது, நீ ஒழுங்கா எக்ஸாம் எழுதி முடி. அப்புறம் அப்பா கிட்ட பேசலாம் என்றுவிட்டு மௌனியானார்.

சாதுர்யாவின் அம்மா மனதில் என்ன இருக்கிறது என்று அவருக்கு புரியவில்லை.
சாதுர்யாவை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
ஆனால் சாதுர்யாவின் அம்மாவோ, குழந்தையை தன் பெற்றோரிடம் கூட அனுப்புவதில்லை. கோழி தன் முட்டையை அடை காக்குமா போலே தன் கண் பார்வையில் வைத்திருக்க
விழைகிறாள்.மகனே அமைதியாய் இருக்கும் பொழுது தான் எப்படி பேச முடியும்? பெற்றவளுக்கு இல்லாத உரிமை என்ன? தான் இதில் எல்லாம் தலையிட முடியாது. அவரும் லக்ஷ்மியும் வேண்டுமானால் இங்கு வந்து தங்கலாம். உறவினர் வருகையை ஆவலுடன் வரவேற்கும் மனம் மருமகளுடையது. இதுவரை எந்த உறவினரிடமோ, மைத்துனன்- மைத்துனன் மனைவி, நாத்தனார் என்று யாரிடமும் முகம் திருப்புதல் அவளிடம் இல்லை. அப்படிப்பட்டவளை தவறாக நினைக்கவும், மாமனார் என்ற உறவை வைத்து கேள்விகள் கேட்கவும் அவருக்கு உடன்பாடு இல்லை.மருமகளிடம் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவள் இவ்வாறு நடந்து கொள்ள ஏதாவது காரணம் இருக்கலாம். அவள் மாறாக நடக்காத வரை வரை சரிதான் என்று தன்னுள்ளே யோசித்துக் கொண்டிருந்தார் தாமு.
ஆனால், இவற்றை பற்றி சிறுமிக்கு எவ்வாறு புரிய வைப்பது?
இப்போதைக்கு பிரச்சனையை தள்ளி வைப்பது என்று முடிவு செய்து அமைதியாய் இருந்தார்.

சாதூர்யாவோ பள்ளி வகுப்புகளை விட விடுமுறை வகுப்புகளை எண்ணி உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த வகுப்புகளின் மேல் உள்ளூர கோபம். விடுமுறை விடுமுறையாக இல்லாமல் கொடுமையாக இருக்கிறது என்று புலம்பினாள் தாத்தாவிடம்.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடியே, இந்த வருட விடுமுறைக்கும் அவள் அம்மா, அவளை ஸ்ரீரங்கம் அனுப்ப வில்லை. மாறாக லக்ஷ்மி தான் வழக்கம் போல் ஒரு மாதம் போல் வந்து தங்கிவிட்டு சென்றார். பிறகு சாதுர்யாவின் தாய்வழிப் பாட்டி தாத்தா ஒரு மாதம் வந்து தங்கி விட்டுச் சென்றார்கள். அவர்களுக்கும் ஏன் கடந்த சில வருடங்களாக மகள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பது குழப்பம்தான்.

உண்மையில், வெங்கடேசன் கையெழுத்திட்டு இருந்து ஒரு கோப்பின் மூலம், ஒரு தொழிலதிபரின் பகையை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர்களிடமிருந்து பலவிதமான அச்சுறுத்தல்கள் வர, தன் பெண்ணை வெளியூருக்கு தனியாக தங்கள் துணையின்றி அனுப்புவதற்கும், நீண்ட நாட்கள் தங்க வைப்பதற்கும்
சாதுர்யாவின் அப்பா அம்மா இருவருக்குமே தயக்கம். நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், வெளியில் சொல்ல வேண்டாம் என்று வெங்கடேசன் கேட்டுக் கொண்டதால் அவரது மனைவி இவ்வாறு வாயை திறக்காமல் நடந்து கொள்கிறாள்.

மூன்று வருஷங்களாக போராட்டம். ஆளும் கட்சி துணையுடன் இப்போது தான் சரியாகி வருகிறது.

இங்கோ, திருச்சியில் ரங்கன் நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி ஆண்டு தேறி விட்டதால் அவனை சென்னையில் உள்ள கல்லூரி எதற்காவது அனுப்பலாமா, இல்லை திருச்சியிலேயே படிக்க வைக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தார் ரங்கனின் அப்பா.
ரங்கன் முடிவாக சொல்லிவிட்டான்... சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பி காம் மாலை நேர கல்லூரியில் சேர்ந்து கொண்டு, பகலில் பட்டய கணக்காளர் வகுப்புகளுக்கும் செல்லப் போவதாக. ஓரளவாவது கணக்கு வழக்கு தெரிந்தால்தான் மேற்கொண்டு தொழிலை நன்றாக நடத்த முடியும் என்பது அவன் யோசனை. கொஞ்சம் தயங்கினாலும் அவன் யோசனையை வீட்டில் ஏற்றுக்கொள்ள, எந்தவித காரணத்தையும் சொல்லிக்கொண்டு காதல் வலையில் சிக்கக் கூடாது என்று ரேணு அவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்ள,' சித்தப்பா விவகாரம் தெரிஞ்ச பிறகும் நான் காதலிப்பேன்னு நினைச்சிங்களா மா ' என்றவன் மனக்கண்ணில் அவனையும் அறியாமல் ஒரு பெண் வந்து நின்றாள். அவள்...

மின்னல் என இரண்டு வருடங்கள் ஓடி விட, சாதுர்யா விடுமுறைகளை டெல்லியிலேயே பழகிக்கொண்டாள். ஸ்ரீரங்கமும் காவிரியும் அவளிடம் இருந்து எவ்வளவோ தூரத்தில். நடுவில் ஒரு முறை அவள் அப்பா மாற்றலாகி உத்தரப் பிரதேசம் என்று விட பத்தாம் வகுப்பு எட்டிக் கொண்டிருக்கும் மகளை அலைக்கழிக்க விருப்பமின்றி தாயும் மகளும் அங்கேயே தங்குவது என முடிவாகியது. அச்சுறுத்தல்களும் மறைய இப்பொழுது சாதுர்யாவின் அம்மா அடுத்த வருஷம் பத்தாம் வகுப்பு என்பதால் ஒன்பதாம் வகுப்பு விடுமுறைக்கும் அவளை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது சாதுர்யா இன்னும் பூபெய்த வில்லை. அந்நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அந்த சமயங்களில் தான் அவளுடன் இருக்க வேண்டும். அதேசமயம் இந்த நிகழ்வு தன் வீட்டில் நிகழவேண்டும். இது போன்ற எண்ணங்கள் தான் சாதுர்யாவை தன்னுடனேயே இருக்க வைக்க சொன்னது.விடுமுறை நேரங்களில் பள்ளி சிறப்பு வகுப்புகள் நடத்த புத்தகப் பையை தூக்கிக்கொண்டு அவள் பயணம் தொடர்ந்தது. இந்த இரண்டு வருடங்களும் அவளைக் கேட்டால் நரகம் என்று தான் சொல்லுவாள். ஆனால் இந்த இரு வருடங்களிலும் அவள் அம்மா எதிர்பார்க்கும் அந்த நிகழ்வு நிகழவே இல்லை.

பெண்ணை இதற்கான பெண் மருத்துவரிடம் கூட்டிச் சென்று, தேவையான டெஸ்ட் எடுத்தபொழுது சாதுர்யாவுக்கு உடல் பிரச்சனை ஏதுமில்லை. என்று ஒரு சில சத்து மருந்துகளை மட்டும் எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.சில பெண்கள் பூக்க தாமதம் ஆவது இயற்கை என்று முடித்து விட்டார் மருத்துவர்.

ஒருவழியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது அவள் சோர்ந்து போக, ஜுரம் வேறு படுத்த, சாதுர்யாவின் அம்மா, தன் நாத்தனார் ரேணுவுக்கு அழைத்து, ரங்கனை விடுப்பெடுத்துக் கொண்டு வரமுடியுமா என்று கேட்கச் சொல்ல, அடுத்த மூன்றாவது நாள் ரங்கன் தில்லியில். அவனுக்கு இரண்டாம் வருட தேர்வுகள் இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பமாக இருக்கிறது. அதனால் பத்து நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு இங்கு வந்து படிக்கலாம் என்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

ரங்கனை பார்த்த அதிர்ச்சியில் முதலில் வாய் பிளந்த சாதுர்யா, அவனிடம் பேசுவதற்கு வெகுவாக யோசித்தாள். பாட்டி வீட்டில் அவர்களுடன் சேர்ந்துகொண்டு விளையாடிய ரங்கன் அல்ல இவன். ஆறடிக்கும் கூடுதலான உயரத்துடன், ஆளை அசரடிக்கும் கம்பீரத்துடன்,
சாதுர்யாவுக்கு உள்ளூர அவனைப் பார்த்தால் நடுக்கம்தான்.போதாத குறைக்கு அவளுக்கு தேர்வு நேரத்து ரிவிஷனுக்கு அவன் அவளது பாட புத்தகங்களுடன் அருகில் அமர 'இவன் இன்னும் திருந்தலையா 'என்று மனதில் திட்டிக்கொண்டே பெண் அமர, அவளை புரிந்து கொண்டவன் விடாகண்டன் ஆகிப் போனான்.

சாதுர்யாவின் அம்மாவுக்கு நிம்மதியாக இருந்தது. இந்த விடுப்புக்கு அவளை ஸ்ரீ ரங்கம் அனுப்பிவிட்டு தான் இரண்டு மாதம் கணவருடன் இருக்க முடிவு செய்து கொண்டாள். மகளின் ஏக்கம் புரிகிறது. நிலைமை பற்றி எவ்வாறு மகளுக்கு புரிய வைக்க முடியும்?

ரங்கனின் பத்து நாட்கள் விடுமுறை இருபது நாட்கள் ஆயின.

தன் உடன் இருந்த ரங்கனை அவன் தங்கியிருந்த இருபது நாட்களில், நன்றாக உணர்ந்து கொண்டாள் சாதுர்யா. இவன் தனது தோழன் தான்... எதுவுமே மாறவில்லை என்று புரிந்துகொண்டவளுக்கோ, ரங்கன் மீது கோவமும் ஆத்திரமும் மிக அது அழுகையை வெளிப்பட்டது. அவனிடம் சண்டையிட்டாள் தன்னுடன் ஏன் தொடர்ந்து அலைபேசியில் பேசுவது இல்லை என்று. எனக்கு உடம்பு சரியில்லைன்னு வர தெரியுது. நீயாவது லீவுக்கு இங்கே வந்து இருக்கலாம் இல்ல... என்று அவனை உலுக்கினாள். அவன் எதற்கும் அசரவில்லை.
நீ சின்ன குழந்தை மாதிரி இல்லாம கொஞ்சமாவது வளரணும் சாது. அதுக்கு நம்ம எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். என்ன பார்த்தா நீ என்னுடையே இருக்கணும்னு அடம்பிடிப்ப. என்கூட வரேன்னு அழுவே என்று பூசி மெழுகினான். ஆண் காரணங்கள் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நிஜத்தில் அவனுக்கும் காரணங்கள் எதுவும் தெரியாது. அவனை வா என்று இதுவரை மாமா வீட்டில் அழைக்கவில்லை. அதனால் அவன் வரவில்லை. இதையெல்லாம்
சாதுர்யாவிடம் சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை.
அவனது தேர்வுகள் ஆரம்பிக்க இன்னும் பத்து நாட்கள் இருக்க அவன் சென்னை கிளம்பி விட்டான். அவன் கிளம்பும் முன் அழுது அமர்க்களம் செய்து,தான் இன்னும் குழந்தைதான் என்று நிரூபித்தாள் பெண்.
அவனுக்கும் வருத்தம் நெஞ்சை அடைக்க, நான் பரீட்சை முடிஞ்ச உடனே வயலூர் போயிடுவேன் சாது. உன்னால முடியும்னா நீ கெளம்பி வா என்று சொல்லிவிட்டு விமானம் ஏறினான் ரங்கன்.
முன்பு போல் அவனுடன் விளையாட முடியாது. அவன் பெரியவன் ஆகிவிட்டான். நான்தான் இன்னும் சின்ன பொண்ணாகவே இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள். ஒரு மனதிற்கு ஒரு சம்மந்த சம்மந்தம் இல்லாமல் அவள் தன் அம்மாவுடன் மருத்துவரைக் காணச் சென்றதும், அவள் அம்மாவின் வருத்தமுமாக நினைவுகள் வந்து போயின. இது எவ்வளவு பெரிய பிரச்சனையா என்று மனதளவில் சோர்ந்து போனாள் சாதுர்யா.

எல்லாம் நிஜத்தில் பிரச்சினைகளே அல்ல, அவளுக்கு நிறைய வரிசைகட்டி காத்திருக்கிறது. அத்தனையையும் அவள் வென்றாக வேண்டும்.
இன்னும் ஒரு வாரத்தில் சாதுர்யா ஸ்ரீ ரங்கம் செல்கிறாள்.
நானும் அவளுடன் வந்து உங்களை சந்திக்கிறேன்.

சுகீ.
 
Messages
124
Reaction score
33
Points
63
சதுரங்கம் 7
ஒருவழியாக சாதுர்யா தனது பத்தாம் வகுப்பு பரீட்சைகளை எழுதி முடித்துவிட்டாள். அவளுக்கு தேர்வுகள் முடிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு செல்லலாம் என்று அவள் அம்மா முன்பே சொல்லியிருந்ததால் உள்ளூர ஊறும் ஆர்வத்தை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து பதினோராம் வகுப்பு பள்ளி திறப்பதற்கு எப்படியும் மூன்று மாதங்கள் ஆகிவிடும். மூன்று வருடங்களுக்கும் சேர்த்து இந்த மூன்று மாதங்களில் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் பெண். முதலில் பதிநைந்து நாட்கள் திருநெல்வேலியில் இருக்கும் தன் பெற்றோரிடம் தன் மகளை விட வேண்டும். பிறகு இரண்டரை மாதங்கள் அவள் ஸ்ரீரங்கத்தில் இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தாள்
சாதுர்யாவின் அம்மா. ஒரு மாதம் மகளை திருநெல்வேலியில் தன் அம்மா வீட்டில் விட ஆசை தான் மாலாவுக்கு. வெங்கடேசனோ, மாமியார் மாமனாரோ நிச்சயம் மறுக்க போவதில்லை.ஆனால் சதா சர்வ காலமும் மகளுக்கு ஸ்ரீரங்கம் தான் எல்லாமும்.
தானும் பெற்றோருடன் திருநெல்வேலிக்கு வீட்டிலிருந்து வெகு காலமாயிற்று. அங்கிருந்து சீராடவும் ,ஒரு மகளாய் ம பிறந்த வீட்டு பாசம் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும் என்று மாலாவுக்கும் ஆசை உண்டு.முதல் பதிநைந்து நாட்கள் திருநெல்வேலியிலும் அடுத்த பதினைந்து நாட்கள் ஸ்ரீரங்கத்திலும் இருந்துவிட்டு அங்கிருந்து கணவரை பார்க்க உத்திரபிரதேசம் செல்வதாக ஏற்பாடு ஏற்பாடு செய்து கொண்டாள். அவருடன் இரண்டு மாதங்களாவது அங்கே தங்கி விட வேண்டும் என்று மனைவியாய் தவிப்பு மாலாவுக்குள்.

இது போன்ற தவிப்புகள் மாலாவுக்கு மட்டுமல்ல, குடும்ப கடமையை சுமந்து கொண்டிருக்கும் அகில உலக பெண்களுக்கும் பொது.
பெற்றோருக்கு மகளாய், கணவனுக்கு மனைவியாய், கணவர் வீட்டில் மருமகளாய், தன் மக்களுக்கு தாயாய் ஒவ்வொரு உறவிற்கும் தகுந்தவாறு பெண்களின் மனம் அடையும் மாற்றங்கள் அதற்காக அவர்கள் செய்துகொள்ளும் தியாகங்கள் எத்தனை எத்தனை?
பெற்றோர் வீட்டில் இருக்கும் போது கணவர் ஞாபகம்... கணவனுடன் இருக்கும் போது பெற்றோர் ஞாபகம்.பெற்ற
மக்களை பிரிந்து கணவனுடன் இருந்தால் குழந்தைகள் நினைவு... கணவனை விட்டு குழந்தைகளுடன் தங்கும் நிலையில் இருப்பத்து நான்கு மணி நேரமும் கணவன் ஞாபகம். பெரும்பாலும் பெண்கள் தங்களை பற்றி அதிகம் சிந்திப்பது இல்லையோ என்று எனக்கு வெகுவாக தோன்றும். இதனால்தான் பெண்களை உயர்வாக சொல்கிறோமோ?

திட்டமிட்டபடியே பெற்றோருடன், முதல் பதினைந்து நாட்கள் கழித்த மாலா பிறகு ஸ்ரீரங்கம் நோக்கி சென்றாள். அங்கிருந்து நாத்தனார் வீட்டில் இரண்டு நாட்கள் கழித்து விட்டு, மாமனார் மாமியாருக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துவிட்டு, கணவரை காணப்போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறமும், மகளைப் பிரிந்து இரண்டு மாதங்களா என்ற ஏக்கம் ஒரு புறமுமாக திருச்சியில் விமானம் ஏறினாள் மாலா. அவள் ஏங்கிக்கொண்டிருக்கும் நிரம்ப எதிர்பார்க்கும் மகளுக்கான 'அந்த' விஷயம் இது வரை நிகழவில்லை. அந்த கவலை வேறு அவளை அரித்துக் கொண்டிருந்தது. எல்லாம் விதி விட்ட வழி என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டாள். கிளம்பும் முன் மாமியார் மாமனாரிடம் இது பற்றி பேசியவளுக்கு, மாமியார் வழியில் இந்தத் தாமதம் சகஜம்தான் என்ற தகவல் மனதை கொஞ்சம் திடப் படுத்தியது. என்னவானாலும் தான் பார்த்துக் கொள்வதாக மாமியார் கொடுத்த தைரியம் அவளை சற்றே ஆசுவாசம் கொள்ள செய்தது.

சொன்னபடியே தனது தேர்வுகள் முடிந்த பிறகு, தனது பிரிய சாதுர்யாவைக் காண விரைந்து கிளம்பி வந்தான் ரங்கன். அவன் முகம் முழுவதும் சந்தோஷம் வெளிப்படையாகவே தெரிந்தது. டெல்லியில் அவள் வீட்டில் கண்ட விழிநீர் அவனை கடந்த ஒருமாதமாக தூங்க விடவில்லை. மாமன் மகள் அவ்வளவு தவித்திருக்கிறாளா என்ற எண்ணம் அவனுக்குள் அவனது மன ஏக்கத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை. ஆனால், தன் வாழ்க்கையில் சாதுர்யாவுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு என்று நினைத்துக்கொண்டான்.

சாதுர்யா ஸ்ரீரங்கத்தில் பாட்டி தாத்தாவுடன் இருக்கும் பொழுது, ரங்கன் நேராக வயலூர் சென்றுவிட்டான். அவன் அம்மா ரேணு அவனுக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியும். ரேணுகாவை விட்டு அதிகம் அவன் வெளி தங்கியதில்லை. சிறுவயதில் ரேணுகா கூட்டி செல்ல பாட்டி வீட்டிற்கு சென்று தங்கி வந்தவன் பிறகு கொஞ்சம் விவரம் வந்ததும் எங்கு சென்றாலும் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான். ரேணுகாவால் வீட்டை விட்டு விட்டு எங்கும் அதிக நாட்களுக்கு தங்க முடியாது என்பது அவனுக்கு நிச்சயமாய் தெரியும். தன்னால் இயன்ற ஒரு விஷயம் அம்மாவை தனித்து இருக்க விடாமல் கூடவே இருப்பது என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு இருந்தான். ஆனால் கல்விக்கான இந்த பிரிவு அவனால் நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த கல்வி தான் அவனுக்கு வெளி உலகை தெரியப்படுத்தும். அவன் மேன்மேலும் குடும்பத் தொழிலில் விஸ்தீரணம் செய்யவும் இந்தப் பிரிவும் வைராக்கியமும் தேவை. எவ்வளவு நாள் ஆண்பிள்ளை பெற்றவளின் அரவணைப்பில் இருக்க முடியும்?
தொழிலிலும், குடும்பத்திலும் தன் கணவனுடன் சேர்ந்து தோள் கொடுக்கும் ரேணுகாவே கூட இதை விரும்பப் போவதில்லை.
வெகு மாதங்களுக்குப் பின் தன் மகனுடன் நேரம் செலவழிப்பது எண்ணி ரேணுகாவின் மனம் நிறைந்திருந்தது. பார்த்து பார்த்து அவனுக்கு பிடித்தமானவகளை சமைத்தாள். மகனின் பிரிவும் ஏக்கமும் அவளிடம் அதிகம் தெரிந்தது. அவள் மாமியார் மாமனாரும் அவளை புரிந்துகொண்டு மகனுடன் அவளுக்கான நேரத்திற்கு தொல்லை செய்யாமல் நகர்ந்து கொண்டார்கள். மூன்று மக்களை பெற்று, அதில் ஒருத்தி வெளிநாட்டில், ஒரு மகனோ இருக்கும் இடமே தெரியாது. அவர்களின் ஏக்கம் எத்தனை வயதானாலும் தீரப் போவதில்லை.
ரேணுகாவின் கணவரோ தொழில் விஷயமாக மூன்று மாதங்களுக்கு ஸ்பெயின் சென்றிருக்கிறார். எனவே மாமியார் மாமனார் இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ரேணுகாவினது. அவளால் வீட்டை விட்டு விட்டு எங்கும் செல்ல இயலாது.பத்து நாட்கள் அம்மாவுடனும் வயதான பாட்டி தாத்தாவுடன் அதிக நேரம் செலவழித்த ரங்கனிடம் அவன் தாத்தா 'என்னடா போயி ஸ்ரீரங்கத்துல போய் சம்பந்தியையும் பாத்துட்டு வரதானடா... அவங்க ரெண்டு பேருக்கும் கூட வயசு ஆயிடுச்சு. நாம தான் போய் பார்த்துட்டு வரணும்' என்று பெரியவராய் அவனுக்கு புத்தி சொல்ல, ரங்கனுக்கும் தாமு தாத்தா லக்ஷ்மி பாட்டியை பார்க்க வேண்டும் போலிருந்தது. தாத்தாவையாவது இரண்டு மாதங்களுக்கு முன் டில்லியில் பார்த்தான். ஆனால் பாட்டி, அவளைப் பார்த்தே வெகுகாலம் ஆகிவிட்டது. அனேகமாக ஆறேழு மாதங்கள் இருக்கும். சாதுர்யாவும் என்னை பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணியவாறே, தன் அம்மாவிடம் பாட்டி தாத்தா கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேம்மா " என்று கிளம்பினான் ரங்கன்.
'வரும்பொழுது சதுவையும் கூட்டிட்டு வாடா' என்று வழி அனுப்பினாள் ரேணுகா.

ஸ்ரீரங்கத்தில் சாதுர்யா பயங்கர கோபத்தில் இருந்தாள். காரணம் வேறு ஒன்றும் இல்லை. ரங்கன் ஊரிலிருந்து வந்துவிட்டது தெரிந்ததும், இந்த கணமே வயலூர் செல்ல வேண்டுமென்று சது அடம்பிடிக்க, தாமுவும் லக்ஷ்மியும் அவன் இப்பதான் ஊரிலிருந்து வந்து இருக்கான். நாம இப்போ போக வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும் என்று நிறுத்தி வைத்து விட்டார்கள். ரங்கனும் வந்ததிலிருந்து இவளுக்கு ஒரு போன் கூட செய்து பேசவில்லை. திரும்பவும் ரங்கன் மாறி விட்டான் என்று சாதுர்யாவின் மனதிற்குள் ஒரே போராட்ட மழை.

வெகு நாட்கள் கழித்து தன் ஊருக்கு வந்து இருப்பவளுக்கு, தன்னுடன் விளையாடிக்
கொண்டிருந்த அனைத்து தோழர்களும் வளர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு தோழிகள் அதிகம் இருந்ததில்லை. பெரும்பாலும் ரங்கன் உடனேயே சுற்றுவதால் அவனது தோழர்கள் எல்லாம் இவளையும் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். ஆனால் இப்போது எல்லோருமே கல்லூரியில் படிப்பவர்கள். இவள் பத்தாம் வகுப்பு முடிந்து விடுப்புக்கு வந்திருக்கிறாள். வெகுநாட்களாக இவளைப் பார்க்காமல் இருந்ததால் தோன்றிய இடைவெளி.
ரங்கனும் கூட இல்லாததால், அவளுக்கு எதிலுமே ஒன்றவில்லை. எத்தனை நேரம் மாட்டுக் கொட்டிலிலும் வயல்வெளிகளிலும் தனியாக நேரத்தை கடத்த முடியும்?
முன்புபோல் தாமுவுக்கும் அவளுக்கு இணையாக சுற்ற முடியவில்லை. இந்தப் வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று பேத்தியுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. தாமு வயலுக்குச் செல்லும் போதெல்லாம் பேத்தியை கூட கூட்டி சென்றார் தான். ஆனாலும் அவள் வயதிற்கு உரிய வேகம் அதற்கு அந்த தாத்தாவால் கூட ஓட முடியவில்லை.
ஒரு வழியாக ரங்கன் வந்து சேர்ந்தவுடன் அவன் கைகளை கோர்த்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தவளுக்கு உலகம் பிடிப்படவில்லை. அவன் வந்தவுடன் சண்டை போட வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கோ தான் நினைப்பு கூட மறந்து விட்டிருந்தது.
ரங்கனிடம் எப்போதுமே நிதானம் உண்டு. எந்தவித உணர்வுகளையும் ஒரு அளவில்தான் காண்பிப்பான். அவன் செய்கைகளில் பொறுப்பு இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதுவரை எந்த முடிவும் எடுத்திராதவன்.
அப்படிப்பட்டவன்
அவனவள் மீது வைத்திருக்கும் பேரன்பால் நிதானம் இழந்து தன்னை மறந்து செய்யவிருக்கும் காரியம் நிச்சயம் இந்த கதையின் போக்கை மாற்றக் கூடிய ஒன்றுதான்.

சொன்னவாறே தாத்தா பாட்டியுடன் சரியாக இரண்டு நாட்கள்
கழித்தவன் முயலுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குத்தகை பணம் வசூல் செய்து கொடுத்து, வீட்டில் தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு தாத்தா-பாட்டி அனுமதியுடன் சாதுர்யாவையும் கூட்டிக்கொண்டு வயலூர் நோக்கி பயணமானான்.சாதுர்யா இன்னும் குறைந்தது பத்து நாட்களுக்காவது வயலூரில் தான் இருக்கப் போகிறாள். அவள் மனம் துள்ளாட்டம் போட, காரில் வரும் வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தாள். தனக்கு தெரிந்தவை தான் கற்றுக்கொண்டவை எதையும் விடாமல் எல்லாவற்றையும் பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு தன்னுடன் வருபவனின் பதிலே தேவைப்படவில்லை. மௌனமாய் சாதுர்யா சொல்லும் விஷயங்களை கேட்டுக்கொண்டே வந்தவனுக்கோ ரகசியச் சிரிப்பில் அழுத்தமான மீசைக்கு கீழ் சிவந்த உதடுகள் நளினமாய் வளைந்தது. அவளின் குழந்தைத்தனம், அவனை கட்டிப் போட்டது.

*****************************

சிவம் ஒருவழியாக தன் மனதை தேற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தவருக்கு தன் மனைவியிடமும்,
மகள்களிடமும், எப்படி குருவுக்கு தன் மூத்த மகளை திருமணம் செய்வது குறித்து பேசுவது என்று உள்ளூர உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
தான் செய்யப்போவது பெரிய தவறு, மூத்த மகளுக்கு குருவுடனான திருமணம் பெரிய தண்டனையாக அமையக்கூடும் என்று மனதில் ஒரு புறம் எச்சரித்தாலும், இன்னொருபுறம் அவள் ராஜ வாழ்க்கை வாழ பிறந்தவள், இல்லாவிட்டால் இப்பேர்பட்ட பழமையான வளமான குடும்பத்தின் வரன் அமைவதெல்லாம் வெறும் கனவில்தான் நிகழக்கூடும். இந்தத் திருமணத்தை எப்பாடுபட்டாவது முடித்தாக வேண்டும் கை நழுவ விட்டு விடக்கூடாது. இந்த திருமணம் மாற்றம் நிகழ்ந்து விட்டால் தனக்கு மற்ற இரு மகள்களுக்கும் கூட நல்ல இடங்களில் சம்பந்தம் வாய்க்கும். இவற்றையெல்லாம் எப்படியாவது மனைவிக்கு புரியவைக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு வீட்டிற்கு வந்தவருக்கு, தான் தனது இருபத்தொரு வயது குழந்தையை இந்த திருமண பந்தத்தின் மூலம் கள பலி கொடுக்கப் போகிறோம் என்பது மனதிற்கு உறைக்கவே இல்லை. இந்த திருமணத்தின் மூலம் அவள் மனது மட்டும் நோக போகிறதா என்பதெல்லாம்திருமணம் முடிந்தால் தான் தெரியும்.
ஒருவேளை குருவின் பெற்றோர் நினைப்பது போல் இந்த திருமணம் அவன் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.
திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதுமே நேர்மறையாக கருதுவது தான் நல்லது.

சிவனின் மூன்று பெண்களும் அழகிகள் தான். சிவனின் பூர்வீகம் கேரளம். கேரளத்தின் அந்த செழுமையும், அழகும், தந்த நிறமும், நீள முடியும் மூவருக்கும் உண்டு. எனினும் மூத்தவளின் கூர்நாசியும் கிரேக்க சிற்பம் போன்ற அழகும், பெண்களில் பொதுவாக காணப்பாடாத ஆறடியை தொடும் உயரமும் அவளை சுற்றி இருக்கும் பெண்களில் அவளை மட்டும் தனித்து காட்டும்.'அவள் பெயர் உமா'. கல்லூரி இரண்டாவது ஆண்டு.
சரி...இந்த சிறப்புகள் இருபத்தைந்து வயது குருவை அவளிடம் கட்டிப் போடுமா?
அவனது அனுபவ வயது அதிகம் ஆயிற்றே?
முதலில் இந்த திருமணம் கைக்கூடுமா?

ம்ம்ம்... சொல்ல மறந்து விட்டேன். மற்ற இரு அழகிகள் பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும்.அவர்களை முன்னிட்டும் தானே சிவன் இந்த திருமண உறவுக்கு ஒப்பியது.
இரண்டாவது பெண் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் ரத்னா. மூன்றாவது பெண் சாந்தா. பத்தாம் வகுப்பு.
ஹ்ம்ம்... இத்தனை விவரங்கள் எதற்கா?
யோசியுங்கள்.
 
Messages
124
Reaction score
33
Points
63
சதுரங்கம் 8

வீட்டுக்கு வந்த சிவனின் மனம் முழுவதும் எப்படி ஆரம்பித்து, எதை
மனைவியிடம் பேசுவது என்றே ஓடிக் கொண்டிருந்தது.

சாப்பிடும் பொழுது வாய்ப்பு தானாகவே அமைந்து வந்தது. மூன்று பெண்களையும் தனது கணவரையும் அமரவைத்து உணவு பரிமாறிய சிவனின் மனைவி பாறுக்குட்டி உணவு பாத்திரத்தில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் கணவனுக்கு மக்களுக்கும் இட்டுவிட்டு தனக்கு வெறும் சோற்றில் மோர் ஊற்றி உப்பிட்டு கரைத்துக் குடித்து விட்டாள். மூன்று மகள்களும் தனது தாயின் இவ்வாறான உணவு பழக்கத்தை இன்றுவரை அறிந்து கொண்டதில்லை.
அவ்வளவு திறமையாக கையாண்டு கொண்டிருக்கிறாள்
பாறுக்குட்டி .
சில சமயங்களில் சிவனின் கண்களிலும் இது படுவதுதான். ஆனால் கணவனையும் சமாளிக்கும் சாமர்த்தியசாலி பார்வதி.
இன்று சிவன் இதையே ஒரு சாக்காக வைத்து இரவு தனிமையில் தன் மனைவியிடம் மூத்த மகளின் திருமணம் பற்றி பேச்சை எடுத்துவிட்டார். சிவன் வீட்டில் மூன்று வேளையும் தவறாது உணவு உண்டு. ஆனால் சிவனின் மனைவி தனது மூன்று மகள்களுக்கும் படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பதற்காக வெகுவாக சிக்கனம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பெரும்பாலான நடுத்தர வர்க்க பெண்மணிகளிடம் காணப்படும் பொதுவான குணங்கள் என்று சில உண்டு. கணவனுக்காக, பெற்ற மக்களுக்காக அதிலும் மகளாக பிறந்து விட்டால் அந்த மக்களுக்கு திருமணத்திற்காக சேர்க்க வேண்டும் என்று வேறு நம் இந்தியப் பெண்களின் சிக்கனத்திற்கு காரணங்கள் ஏராளம். சொந்த குடும்பத்தை பொருத்தவரை அந்தப் பெண்களின் மனம் தாராளம். பாறுக்குட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல.

சிவன் மெதுவாக, ஆரம்பித்தார். அவர் மனம் முழுக்க நாம் எடுக்கும் இந்த முடிவு சரியா தவறா என்ற பட்டிமன்றம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. அவராலேயே நிர்ணயம் செய்ய முடியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு முடிக்க வேறு பார்க்கிறார்.

' பாறு... உன்கிட்ட ஒன்னு பேசணும்.

ம்ம்ம்...சொல்லுங்க...

நம்ம உமாவுக்கு ஒரு நல்ல
வரன் ஒன்னு அமையும் போல இருக்குடி. பையன் நல்ல பெரிய இடம். சல்லிக்காசு வரதட்சணை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரியா சொல்லனும்னா நாம கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய இடம். இது அமைந்தால் நம்ம குடும்பத்துக்கு அதிர்ஷ்டம்.
சட்டென்று விஷயத்தை போட்டு உடைத்துவிட்டு மௌனத்தை கையில் ஏந்திக் கொண்டார் சிவம்.

அதுவரை படுத்துக் கொண்டே இருந்தவள் கணவனின் பேச்சைக் கேட்டவுடன் சடக்கென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.
அது யாருங்க அவ்வளவு பெரிய இடம்? இந்த காலத்துல ஏழை வீட்டு பொண்ணுன்னு வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செஞ்சிருக்காங்க?

அவள் கேள்வியில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை மீறி பயம் தொனித்தது.
மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் இது போன்று யாரையும் நம்பி நம் பெண் கொடுத்தால்... என்ற மறைமுக செய்தி சொன்னாள் தன் கணவருக்கு.
மனைவி சொல்வது சிவனுக்கு புரியாமல் இல்லை. அதே நடுக்கம் தானே அவரும் கொண்டிருப்பது.

இல்ல பாறு...நமக்கு ரொம்ப தெரிஞ்ச பெரிய இடம் தான். பெரிய
இடம்னா பைசாவில் மட்டும் இல்லடி, மனசால யும் பெரியவங்க தான். நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க... இன்னைக்கு வரைக்கும் நம்ம குடும்பத்துக்கு படி
அளக்குறாங்க. கேரளாவில் இங்க தமிழ் நாட்டுக்கு, கையில காசு பணம் ஒன்னும் இல்லாம நாம மூன்று பெண் குழந்தைகளை கூட்டிட்டு வந்த போது நம்ம குடும்பத்திற்கான ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்தவங்க அவங்க.
அதுக்கு நன்றியாத்தான்... என்று நிறுத்தி விட்டார் சிவன்.

அவர் மனைவி சட்டென்று திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்துவிட்டாள்.

யாருக்காக தன் பெண்ணை கேட்கிறார்கள் என்பது அவளுக்கு இப்பொழுது தெள்ளத் தெளிவாக புரிகிறது. நன்றிக்காக எவ்வளவோ செய்யலாம். தவறில்லை. உயிரை கூட கொடுக்கலாம். ஆனால் தெரிந்தே பெற்ற மகளை பாழும் கிணற்றில் தள்ளுவது என்பது எந்த விதத்தில் சரியாகும்?
அந்த குரு சிறுவயதிலிருந்தே
பாறுவுக்கு நன்கு
தெரிந்தவன்தான். முன்பெல்லாம் நாள் கிழமைகளில் அன்னபூரணி,
பாருவையும் சிவனின் மூன்று மகள்களையும் வீட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்து, தாம்பூலம் வைத்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், சமீபகாலங்களில் ஒரு நான்கைந்து வருடங்களாக குருவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கேள்வியுற்ற பார்வதி அன்னபூரணி அழைக்கும் சமயங்களில், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கொண்டு பெண்களை வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் சென்று தாம்பூலம் வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். பூங்குவளையில் மட்டுமல்லாது சுற்றியுள்ள வட்டாரங்களிலும் குருவின் பழக்க வழக்கங்கள் பிரசித்தமாகி விட்டிருந்தது. குருவுக்கு பெண்ணை கொடுத்தால் யாரும் நம்மை பார்த்து பொறாமைப்பட போடுவதில்லை. எல்லோரும் நம் மீது பரிதாபம் தான் படப் போகிறார்கள், என்பதெல்லாம் பாறுவின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

''அப்ப நீங்க முடிவு பண்ணிட்டீங்களா நம்ம பொண்ண பலி கொடுக்கிறதா?"பாருவை மீறிக்கொண்டு அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து வெளியில் விழுந்துவிட்டது.
மனைவியின் சொற்கள் சரியாக குறி பார்த்து தாக்க,தன்னை சுதாரித்துக் கொள்ள சிவனுக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. மனைவி கேட்கும் கேள்வி நிச்சயம் சாட்டையடி.

எப்படியும் மனைவியையும் மகளையும் சம்மதிக்க வைத்து விடுவது என்பதேயே குறிக்கோளாக வைத்திருந்து அருணாச்சலத்தின் வீட்டு கணக்குப் பிள்ளையாக பேசிக் கொண்டிருந்தார் சிவன். நன்றி உணர்ச்சி அவரை குருவுக்காக பேச வைத்தது.

இப்படி எல்லாம் பேசாத பாறு... பெத்த மகளை பலி கொடுக்குற அளவுக்கு நான் ஒன்னும் மோசமான அப்பன் இல்ல. நம்ம பொண்ணுங்களோட வளமான வருங்கால வாழ்க்கைக்காக நான் இவ்வளவு தூரம் யோசிக்கிறேன். என்ன இவ்வளவு சுயநலமாக உருவகப்படுத்தி பேசுறியே பாறு ... சிவனின் வார்த்தைகளில் உண்மையான வலி இருந்தது. தன் மகள் மகாராணியாக வாழவேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?
உண்மையான விசுவாசி யாகவும், பொறுப்புள்ள தகப்பனாகவும் சிவன் பாடு திண்டாட்டம் தான். ஆனால் அவர் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொள்ளும் மனநிலையில் பாரும் கண்டிப்பாக இல்லை.
'இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேங்க... என் பொண்ணு அரை வயத்துக்கு சாப்பிட்டா கூட பரவாயில்லை... ஆனா சந்தோசமா நிம்மதியா இறங்கணும் சோறு. பணக்கார வீட்டில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது இல்லைங்க வாழ்க்கை. கட்டின புருஷன் சரியா இல்ல நான் வெளியில இருக்குற சோறு வீணுங்க. இனிய வரைக்கும் நீங்க எனக்கு நல்ல புருஷனா நடந்துகிட்டு இருக்கீங்க. நம்ம பொண்ணுக்கு மட்டும் போக்கிய கல்யாணம் பண்ணி வைக்கணுமா?
அவளின் கேள்வி சிவனை அசைத்து பார்த்தது. அதே சமயம் மற்ற இரு பெண்களுக்கும் கூட திருமணம் நல்ல இடங்களில் செய்து வைப்பதாக அன்னபூரணியின் வார்த்தைகள் அவரைப் பின் வாங்க சம்மதிக்கவில்லை.
' இதைப் பற்றி நாம் முடிவெடுக்க வேண்டாம் பாறு. நான் அம்மா கிட்ட சொல்றேன். பேசுவேன் அவ என்ன சொல்றாளோ அதுதான் முடிவு என்று முடிக்க பார்த்தார் சிவம்.

' அவ அனுபவமில்லாத சின்ன பொண்ணுங்க அவ கிட்ட கேட்டா அவ என்ன சொல்ல முடியும்? ஒன்னு நீங்க சொல்ற ஆசை வார்த்தையில் மயங்கி ஒத்துக்கணும்... இல்லாட்டி குடும்ப சூழ்நிலையை நினைத்து ஒத்துக்கணும். எப்படியும் சம்மதிக்கணும் அவ. இதுதானே உங்களுடைய தீர்மானம்?எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுத்தள்ள இது ஒன்னும் கடை சரக்கு வாங்கும் சமாச்சாரம் இல்லீங்க. என் பொண்ணோட வாழ்க்கை. அவள் வார்த்தைகள் விம்மலுடன் வெளிப்பட்டது. அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மறுக்கமுடியாத உண்மை. ஆனாலும் ஏதோ ஒன்று அவரை உந்தித் தள்ள மேற்கொண்டு விவாதிக்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டார். அவர் உறங்கவில்லை என்பது அவர் மனைவிக்கும் தெரியும். அவள் இரவு முழுவதும் கண்ணீரில்
கழிய,சிவன் அவராலும் உறங்க முடியவில்லை.
பாறுவுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. கணவர் இந்த விஷயத்தை அருணாச்சலத்தின் மகனுக்கு சாதகமாகத்தான் முடிக்க போகிறார். தடுக்கும் வழி புலப்படாமல் அந்த தாய் சோர்ந்து போனாள்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது மூத்த மகளை மட்டும் காலையில் எழுந்தவுடன், ' அம்மாடி உன் கூட கொஞ்சம் பேசணும். இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு வீட்ல இரு'. என்ற அப்பாவின் வார்த்தைகள் அவளுக்குள் பயப்பந்தை அவள் வயிற்றில் உருளச் செய்தது.
'சரிங்கப்பா ' என்றுவிட்டு வீட்டு வேலைகளில் உன் அம்மாவுக்கு உதவி செய்ய அடுக்களைக்குள் சென்று விட்டாள். மற்ற இரு பெண்களும் பள்ளிக்கு கிளம்பும் வரை சிவனிடமிருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. அம்மாவின் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. விஷயம் ஏதோ பெரியதுதான் என்பதுவரை உமாவுக்கு. புரிந்துவிட்டது.

பத்து மணி அளவில் சிவன் அன்னபூரணிக்கு தொலைபேசியில் அழைத்து இன்று குரு உடனான திருமணம் பற்றி தன் மனைவி மகளிடம் பேச போவதாகவும் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்து விட்டார். அருணாசலத்திற்கு இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்த உடன்பாடு இப்போது இல்லை. நடத்தையை முழுக்க முழுக்க அறிந்தவர் அவர். எந்தப் பெண்ணாக இருந்தாலும் தன் மகனுக்கு திருமணம் ஆனால் சரி என்று யோசிக்க இப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. தனக்கு ஒரு பெண் இருந்தால், எப்படிப்பட்ட நிலையிலும் இதுபோன்ற வரனுக்கு திருமணம் செய்து வைப்போமா என்ற கேள்வி அவரை குடைந்தது.மனைவியின் பிடிவாதத்திற்கு முன் அவரால் ஒன்றும் சொல்வதற்கும் செய்வதற்கும் முடியவில்லை.

உமாவை அழைத்துக் கொண்டு தனியாக மலைக்கோட்டை கோவிலுக்கு வந்தவர் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, யாரும் அதிகம் வராத இடமாய் பார்த்து அமர்ந்து கொண்டார்கள் தகப்பனும் மகளும்.

மனைவியிடம் காட்டிய தயக்கம் மகளிடம் அவர் காட்டவில்லை. சட்டென விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த உமாவுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பேருந்து நிலையத்தில் நடந்தது அவர் கண்முன்னே படமாய் விரிந்தது.

உமா கல்லூரி விடுமுறை நாளொன்றில் தனது தோழிகளுடன், இரண்டு தங்கைகளையும் கூட கூட்டிக்கொண்டு சினிமாவிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள். தான் எங்கு சென்றாலும், இரண்டு தங்கைகளையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கும் அக்காவுடன் அக்காவின் தோழிகளுடன் செல்வது பிடித்தமான ஒன்று. வீட்டிலும் பாறுவுக்கும் சிவனுக்கும் மூன்று மகள்களும் ஒருவருடன் ஒருவர் துணை என்பது வரை நிம்மதிதான்.

பேருந்து நிலையத்தில்
கா த்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பில் குரு ஆன் தோழர்களுடன் இருந்தான். போதை நிறைந்த அவன் மற்றும் அவனது தோழர்களின் விழிகள் அங்கிருந்து ஒவ்வொரு பெண்ணும் கூசும் பார்வை பார்த்தன. அவர்கள் சிறு பெண்ணான சாந்தாவை கூட விட்டுவைக்கவில்லை என்பது தான் கொடுமை.
அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுதே உமாவின் முகம் அப்பட்டமாய் அருவருப்பை காட்ட மகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தெளிவாக சிவனுக்கு புரிந்துவிட்டது.

'உனக்கு இஷ்டம் இல்லைன்னா
விட்டுடுமா... மூணு பொண்ணுங்களோட அப்பன் மா நானு. உங்க மூணு பேரையும் நல்லபடியா நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்கருது தான் என்னுடைய பெரிய கடமை. அருணாச்சலம் ஐயாவும் அன்னபூரணி அம்மாவும் உன்னோட கல்யாணம் குருபரனோட நல்லவிதமாக முடிஞ்சா மத்த ரெண்டு பேருக்கும் கூட நல்ல இடத்துல நல்லவிதமாக கல்யாணம் முடிச்சு வைக்கிறதா சொல்லி இருக்காங்க. இந்த கல்யாணம் மட்டும் முடிந்தால் நீயும் பணக்கார வீட்டுல ராணி ஆயிடுவ. எங்கள மாதிரி அன்னக்காவடியா நீ கஷ்டப்பட வேண்டாம். என் பொண்ணு ஒசந்தா இடத்துல வாக்கப்பட்டு வாழணும்னு எனக்கும் ஆசை உண்டு மா. இந்த குடும்பத்தோட வருங்காலம் உன் கையில தான் இருக்கு தாயி' என்று நீண்ட சினிமா
டயலாக்கை மூச்சுவிடாமல் பேசி முடித்தார் சிவம்.

தங்கைகளுக்கும் நல்ல வாழ்க்கை என்பது உமாவின் மனதில் நன்றாக வேலை செய்தது.
'ஏம்பா நீங்க அவங்க வீட்டுல உண்மையா
இத்தனை வருஷம் வேலை செஞ்சதுக்கு அவங்க உங்க பொண்ணுங்க கல்யாணத்துக்கு உதவி பண்ணலாம்ப்பா. அதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி இல்லையா?ஒரு வித மிரட்டல் இல்லை... பேரம்?
இது என்னோட வாழ்க்கைப்பா. உங்களை மாதிரியே ஒழுக்கமான ஒருத்தன் தான் என்னோட வாழ்க்கை துணையா வருவானுன்னு நெனச்சேன். நீ வழிய மூடுறீங்கப்பா. வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது. ஆனால் சிவன் தன் முடிவில் உறுதியாய் இருக்க மகளும் சம்மதித்து விட்டாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். சிவனின் முகமே, விஷயம் வெற்றி தான் என்பதை தெரிவிக்க அவர் மனைவி இன்முகம் களை இழந்து விட்டது. எப்படியும் மகள் சம்மதிக்க மாட்டாள் என்று பாறு தீர்மானமாய் நம்பி இருந்தாள்.

விஷயம் அருணாசலத்திற்கு தெரிவிக்கப்பட, தன் மனைவியிடம் இன்னொருமுறை யோசிச்சு பாரு அன்னம். இந்த கல்யாண ஏற்பாடு தேவையா? இது இன்னொரு பொண்ணோட வாழ்க்கை இல்லையா? என்று கேட்க அன்னமோ, 'என் பையனுக்கு கல்யாணம் ஆனா திருந்திடுவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க நடுவுல நின்னு நந்தி போல தடுக்காதீங்க... என்று கண்ணீர் சிந்தினாள். இத்தனை வருஷங்களில் அருணாச்சலம் மிகவும் வருந்துவதும், அஞ்சுவதும் மனைவியின் கண்ணீருக்கு தான். மனைவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட பூமியில் விழக்கூடாது என்ற உறுதி கொண்டவர் அவர்.

அன்றே நல்ல நாள் என்று,அன்னம் அருணாச்சலத்திடம் தெரிவிக்க, அன்று மாலை பெண் பார்க்கும் படலம் அரங்கேறியது.
சிவனது வீட்டுக்கு பெரிய பெரிய தட்டுகளில் பழங்களும் பூக்களும் இனிப்புகளும் ஒப்பு தாம்பூலம் செய்து விடுவதற்காக அழகான ஒரு பட்டு புடவையும், அதற்கு பொருத்தமாக கழுத்துக்கு சிவப்பு வெள்ளை கற்கள் பதித்து நெக்லெசும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் அருணாச்சலம் -அன்னம் தம்பதியர்.அவர்களுடன் நெருங்கிய சொந்தங்கள் பத்து பேர் சாட்சிக்கு.
இன்னும் இந்த விஷயம் குருபரனுக்கு தெரிவிக்கப்படவில்லை. தெரிந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளவெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டான்.

நல்ல பெண்ணாய் அமையும்போது மகனுக்கு திருமணத்தை முடித்துவிட வேண்டும். மேலும் மேலும் திருமணத்தை தள்ளிப்போட்டு கிடைத்திருக்கும்
பெண்ணையும் கை நழுவ விட அன்னம் தயாராய் இல்லை.

இவர்கள் கொண்டு வந்த சீர் வரிசைகள் உமா -பாறு இருவருக்கும் வெறுப்பை தர, உமாவின் மற்ற இரு தங்கைகளும் சந்தோஷத்திலும் ஆச்சர்யத்திலும் வாயை பிளந்தனர்.
சிவனுக்கு அளவில்லா சந்தோஷம். வாசலில் நின்று கொண்டிருந்த இன்னோவாவும், ஹோண்டா காரும் இவர்களது பண செழுமையை முரசு கொட்ட 'பார்த்தாயா 'என்று தன் மனைவியை கண்களால் கேட்டார் சிவன். அவர் மனைவி சிரிப்பை தொலைத்து, வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்க சாம்பிராதாயங்கள் ஆரம்பிக்கும் முன் அருணாச்சலம் அன்னம் இருவரிடமும் தனித்து பேச விரும்பினாள் பெண்.

முதலில் மறுத்த சிவன் பின், வந்தவர்களிடம் மகளின் ஆசையை சொல்ல வந்த அவர்கள் தரப்பு உறவினர் ஒருவருடன் ஒருவர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னம் அருணாச்சலம் இருவரும் பெண்ணின் அறைக்குள் நுழைய சட்டென்று கதிரையில் இருந்து எழுந்து அவர்கள் இருவருக்கும் வணக்கம்தெரிவித்த உமாவை இருவருக்கும் பிடித்து விட்டது.

உமா அவர்களிடம் நேரடியாக விஷயத்தை சொல்லி விட்டாள். நீங்க என் குடும்பத்துல இருக்குற மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கூட வாழ்க்கைக்கு வழி பண்ணி கொடுக்கிறதாக சொல்லி இருக்கீங்களாம். இது என்னோட வேண்டுகோளுனு வச்சுக்கோங்க... என்னோட தங்கச்சி ரத்னா இப்போ பண்ணண்டாவது படிக்கிறா. இன்னும் ரெண்டு மாசத்துல தேர்வு அவளுக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சு. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அவளுக்கும் கல்யாணத்துக்கு பார்த்து முடிச்சிடலாம். அதுக்கு உங்களுடைய தயவு வேணும். எங்க அப்பாகிட்ட நீங்கதான் இதை பத்தி பேசணும். என்றவளை வினோதமாக பார்த்தார்கள் இருவரும்.
' அப்ப எங்க மேல நம்பிக்கை இல்லையாம்மா உனக்கு என்று கேட்டார் அருணாச்சலம்.
உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லீங்க. சீக்கிரமா என்னோட தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என்ற உமாவை விளக்கம் போறாது என்று பார்த்தார்கள் அருணாச்சலம் அன்னம் தம்பதியர். விஷயத்தை உடைத்து சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்த உமாவும், எனக்கு உங்க பையனுடைய நடத்தை தெளிவா தெரியும். தேவையில்லாம கல்யாணமாகாத தங்கச்சியை வைச்சுட்டு ரிஸ்க் எடுக்க எனக்கு இஷ்டம் இல்லை. அதனால முதல்ல ரத்னாவுக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம். அவ கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல நான் உங்க பையனுக்கு மனைவியாகி உங்க வீட்டுக்கு வந்துடறேன். இதுக்கு மட்டும் ஒத்துக்கோங்க...
தயவுசெய்து என்று அழுதவளை தேற்றும் வகை தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவள் சொல்வதில் இருக்கும் உண்மை சுட்டது அவர்களை. சரி என்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஒப்பு தாம்புலம் மாற்ற பட்டது. திருமண தேதி பின்பு ஜோசியரை கேட்டு முடிவு செய்து கொள்வதை உறுதி செய்யப்பட்டது.

அடுத்த நாள் வேலைக்கு வந்த சிவனிடம்,அருணாச்சலம் முதலில் ரத்னாவுக்கு நல்ல வரன் பார்க்கும் படி அறிவுறுத்தினார். இது உமாவின் வேலைதான் என்பது சிவனுக்கும் புரிந்தது. அவரின் கண்கள் கலங்கின.
என்னதான் மனிதர்கள் ஆயிரம் முடிவு எடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் எப்போதுமே
கைமீறியவைதான்.
ரத்னாவின் திருமண வரனை தேட தொடங்கினார் சிவன்.

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திப்போம்.
 
Messages
124
Reaction score
33
Points
63
சிவனின் நிர்பந்தத்தின் பெயரில் அவரது மொத்த குடும்பமும் குருபரனை ஏற்க தயாராகிவிட்டது. மணப்பெண் உமா முகத்தில் பெயரளவுக்கு கூட சிரிப்பில்லை . திருமணத்திற்காக அந்த வயதில் ஏற்படும் ஆயிரம் கனவுகள் வெறும் கானல் நீர்தான் என்பது எவ்வளவு பெரிய துக்கம். அவளால் அவளது ஏக்கங்கள் கடைசி வரை வெறும்
ஏக்கங்களாகவே இருக்க போகிறது என்பதில் ஜீரணிக்க இயலாத துன்ப சுழலில் சிக்கி தவித்தது அந்த சின்னபறவை.
மாமியார் அவளுக்காக கொண்டு வந்து கொடுத்த அந்த கற்கள் பதித்த ஆரமோ பட்டுப்புடவையோ அவளுக்கு சந்தோஷத்தை தர போதுமானதாக இல்லை. ஒழுக்கமும் உயர்ந்த குணமும் கொண்டவனைதான் கணவனாக ஏற்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு குரு வரம் அல்ல... நிச்சயம் சாபம்தான்.

தனது மூத்த மகள் வைத்த நிர்பந்தத்தின் பேரில் தனது இரண்டாவது மகள் ரத்னாவுக்கு மணமகனை தேடத் தொடங்கினார் சிவம்.
பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு தன்
அக்கா போல தானும் கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ரத்னாவுக்கு தந்தை திருமணத்திற்கு பார்ப்பதும், அதுவும் அக்கா வைத்திருக்கும் நிர்பந்தத்தின் பெயரில் என்பதும் மனதளவில் பெரிய அடியைக் கொடுத்தது. அது ஆசை நிராசையாக போகும்போது ஏற்படும் வலி அவளிடம். அதுவும் தன்னை நன்றாக அறிந்து கொண்டிருந்த அக்காவே தனது விருப்பத்தை மண்ணள்ளிப் போடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?
கல்வி என்பதும் பெண்ணின் உரிமை அல்லவா?

"உண்ணும் உணவு, பருகும் நீர்,சுவாசிக்கும் காற்று, மனிதன் நடமாடும் பூமி,வசிக்கும் கூரை இது போல் அல்லவா கல்வி". அந்தக் கல்வியைப் பயில தடுப்பது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கல்வி என்பதை சமீப காலங்களில் தான் முன்னெடுத்து மிக முக்கிய ஒன்றாக யோசிக்க பட்டு வருகிறது. இந்த காலத்தில் பெரும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மரியாதை இல்லை. அப்படி இருக்கும் பொழுது வெறும் பனிரெண்டாம் வகுப்பு தனது வருங்கால வாழ்க்கைக்கு எவ்வாறு போதும்?
பெண் வேலைக்கு செல்கிறாளா இல்லையா என்பது வேறு. ஒரு பெண் கற்கும் கல்வி அவளை மட்டுமல்ல, அவளுக்கு பிறக்கும் குழந்தைகள், அவர்களது வருங்காலவாழ்க்கை, அவர்களுக்கு பிறக்கும் சந்திதி என்று தலைமுறை தலைமுறையாய் முன்னேற்றும் அற்புத மருந்து. அப்பேர்ப்பட்ட கல்வியை கற்க விடாமல் தடுத்தது அவள் மனதில் பெரும் புயலை கிளப்பி விட்டிருந்தது. நேரே தன்
அக்காவிடம் போய், அதான் உனக்கு பெரிய இடத்து சம்பந்தம் அமஞ்சு வந்திருக்குல்ல?
நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே ? என் வாழ்க்கையை எதுக்கு கெடுக்குற? உனக்கு மட்டும் டிகிரி வேணும்... பெரிய பணம் வேணும். நாங்க எல்லாம் அன்னக்காவடியாவே இருக்கணுமா என்று சண்டை பிடித்தாள். மிகவும் பொறுமையாக, தான் ஏன் இவ்வாறு யோசித்தோம், இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று தன் தங்கைக்கு எடுத்துச் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் உமா. சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை ரத்னா. தன் வாழ்க்கை தனது இஷ்டப்படி செல்லாமல் இன்னொருவர் ஆட்டி வைக்கும் கைபொம்மை ஆகிப் போனோமே என்று அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த உமா,' எனக்கு பாத்திருக்குறவன் பச்சப் பொறுக்கி. என்னய கல்யாணம் பண்ணி உன் மேல கைய
வெச்சுருவானோன்னு
தான் இந்த மாதிரி முடிவு செஞ்சேன். உன்னை காப்பாத்த வேற என்ன வழின்னு எனக்கு புரியலடி என்று அழ தொடங்கிவிட்டாள் உமா.
அக்கா சொல்வது மனதிற்குள் சாட்டை போல் வேகமாக அடிக்க, தன்னுணர்வு மரத்த நிலையில் சிலையாகிப் போனாள் ரத்னா. சின்னப் பெண்ணுக்கு இதற்கு மேல் எப்படி புரிய வைப்பது என்பது உமாவுக்கு தெரியவில்லை. அவள் கண்கள் உள்ளுக்குள் இருக்கும் ரணத்தை கண்ணீர் மூலம் காட்டியது.வேறு வழி இன்றி சூழ்நிலை கைதியாகி தானும் சிக்கி தன் தங்கையையும் இவ்வளவு விரைவாக புது வாழ்க்கை முறைக்கு தயார் செய்வது அவளுக்கு வருத்தம் உண்டு.
படிக்கும்போது ரத்னாவுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுவது உமாவுக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால் பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதை விட கற்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
'ஏழை வர்க்கத்தின் பெண்களுக்கு இருக்கும் ஒரே பெரிய சொத்தும் இது ஒன்றுதான். இங்க பெண்களுக்கு ஏதாவது ஒரு குற்றம் நடந்து விட்டால் குற்றம் புரிந்த ஆணை யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. பெரும்பாலும் அந்த ஆணை மயக்கியவள் பெண் என்ற பாவத்தில் தான் இந்த சமூகம் பார்க்கிறது. அதிலும் ஆண் பணக்காரனாக இருந்து, பெண் பணஅளவில் பெரிதாக இல்லை என்றால் பணத்திற்காக தான் இவ்வளவு தூரம் நடந்து கொண்டது இந்த பெண் என்ற முத்திரையை குத்தி விடுவார்கள். ஏழையின் சொல் அம்பலம் ஏறாது. யுக யுகமாய் நடந்து கொண்டிருப்பவை இவைதான். ஆணின் தவறுகளுக்கு சிலுவை சுமப்பவள் பெண். நாளையே குருவினால் ரத்னாவிற்கு ஏதேனும் ஆகிவிட்டால் அந்த பாவ சுமை கண்டிப்பாக ரத்னாவின் மீது ஏறும். இதற்கு தான் என்றும் அனுமதிக்கப்போவதில்லை,என்றெல்லாம் தன் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தாள் உமா.

ஒருவாறு அக்கா சொன்னதை உள்ளுக்குள் கிரகித்து அவள் சொல்லில் இருக்கும் நியாயம் புரிந்து, தன்னுணர்வு பெற்றவாளாய்,' சரிக்கா நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். அப்பாவை மேற்கொண்டு மாப்பிள்ளை சொல்லு ' அடுப்படியில் வேலையை செய்ய சென்றுவிட்டாள். திருமணம் என்ற ஒன்று நிச்சயம் ஆகிவிட்டால் திடீரென்று வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து பழக முடியாது. அக்காவின் அது போல் தனக்கும் பெரிய இடத்தில் அமையும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அக்கா சொல்வதை பார்த்தால், பணம் இருக்கும் அளவிற்கு அக்கா திருமணம் செய்துகொள்ள போகும் அந்த நபருக்கு குணம் இருக்காது.
தன்னை கல்யாணம் செய்து கொள்ள வரும் மனிதனாவது நல்ல குணத்துடன் இருக்கவேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். குணம் இல்லாமல், பெரும் வருமானம் மட்டும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தன் மனதை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் ரத்னா.

சிவன் இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு உள்ளூர தான் செய்வது மிகப்பெரிய தவறு என்ற எண்ணம் முதன்முறையாக காலம் கடந்து உதித்தது. ஆனால் அவ்வளவு பெரிய இடத்தில் இருந்து வந்து ஒப்பு தாம்பூலம் வரை சென்று விட்ட பிறகு பின்வாங்க முடியாது என்பது நிதர்சனம். ஏற்கனவே பெண்ணை பெற்றவராகவும், இன்னொருபுறம் உண்மை விசுவாசியாகவும் தவித்துக்கொண்டிருந்த மனம் இப்பொழுது நொந்து போய்க் கிடந்தது. அவர் ஏதோ ஒன்றை நினைத்து இந்த முடிவு எடுத்து விட்டார். இனி நடக்கப் போவதையாராலும் தடுக்க முடியாது. இதுபோன்ற ஒரு அவசர முடிவுக்கு, பின்னாளில் அவர் எவற்றையெல்லாம் விலையாக கொடுக்கப் போகிறார் என்பதுபடைத்தவனுக்கே வெளிச்சம்.

திருச்சூரில் இருக்கும் தன் தங்கையின் மகன் சங்கரன் பத்தாம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு இப்போது லாரி ஓட்டி கொண்டிருப்பதாகவும், சொந்தமாக மூன்று
லாரிகள் வைத்திருப்பதாகவும் போன முறை அவரது தங்கை திலகம் பேசும்போது கூறியிருந்தாள். கூடவே கொசுறாக அவனுக்கு வரன் பார்ப்பதாகவும் கூறியிருந்தாள். இருபத்தி மூன்று வயது ஆகும் தனது தங்கை மகன் சங்கரனுக்கு ரத்னாவை கொடுப்பதற்கு பேசலாம் என்று யோசித்து வைத்திருந்தார் சிவம். சங்கரனுக்கும் உமாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இல்லை. இந்த வயது பிரச்சனை மட்டும் இல்லை என்றால் முதலிலேயே உமாவிற்கு சங்கரனை மணமுடிப்பது பற்றி பேசி இருந்திருக்கக்கூடும். உமாவின் தலையெழுத்து அவளை விடவில்லை என்று தான் கூற வேண்டும்.


ரத்னாவை தன் திருமணத்திற்கு முன்னதாகவே திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடும் அவசரத்தில் இருக்கிறாள் உமா. எப்படியும் மற்ற இரு பெண்களுக்கும் ஆகும் கல்யாண செலவை கூட அருணாச்சலம் வீட்டில் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதால் திருமண செலவு பற்றிய பிரச்சனை ஒன்றுமில்லை. திருமண ஏற்பாடுகளை விரைவாகவே செய்யலாம். மாப்பிள்ளை அமைவது மட்டும் தான் இங்கு பிரதானம். சங்கரன் தவிரவும் நிறைய வரன்களை சிவன் சுற்றுவட்டாரத்தில் பார்த்து வைத்திருக்கிறார். ஒன்று இல்லை என்றால் வேறொன்று அமைய வேண்டும். ரத்னாவின் பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து, விடுமுறையில் திருமணத்தை வைத்துக் கொண்டால், உமா விற்கும் அதேசமயம் திருமணத்தை முடித்து அனுப்பி விடலாம். சாந்தாவிற்கும் பள்ளிவிடுமுறை சமயம் ஆதலால் இரண்டு திருமணங்களில் மகிழ்ச்சியாக கலந்து கொள்ளவும் முடியும். அதிக விடுப்பு எடுக்கும் தேவை இராது.திருமணத்திற்கு தேவையான சமயம் உதவி புரியவும் முடியும், என்றெல்லாம் கணக்கிட்டு வைத்திருக்கிறார் சிவன்.

திலகாவும் அவரது கணவரும் நாலைந்து நாட்கள் திருச்சூரில் இருந்து பூங்குவளை வந்து தங்கியிருந்துவிட்டு ரத்னாவை பற்றி அறிந்துகொண்டு சென்றார்கள். ரத்னாவின் நடத்தை அவர்கள் இருவருக்கும் பரம திருப்தி. நிச்சயம் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தன் மகன் நிம்மதியாக வாழ்வான் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து இருந்தாள் ரத்னா.

பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து திருச்சிக்கு லாரியில் லோடு எடுத்துக்கொண்டு வந்த சங்கரன் அப்படியே பூங்குவளையில் உள்ள தனது மாமன்- அத்தை வீட்டுக்கும் சென்று ரத்னா வையும் பெண் பார்த்துவிட்டு வந்தான். அவன் தோள் வளைவு அளவிற்கு வளர்ந்திருக்கும் அந்த சிறு பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவளுடன் தனியே பேசும்போது ' இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா? படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கல்யாணம் செஞ்சுக்க வருத்தமாக இல்லையா?' என்று தன் மனதில் தோன்றியவற்றை
எல்லாம் கேட்டான்.
அவன் அக்கறையாக கேட்டவை ரத்னாவின் மனதிற்கு இதமாக தான் இருந்தது. அவனின் கண்கள் பார்த்து அவனை மணக்க சம்மதம் என்று விட்டாள்.

சங்கரன் வந்து சென்ற பிறகு, உமாவின் மனதிலும் தன்னை திருமணம் செய்து கொள்ள போகும் மனிதன் ஏன் இன்னும் இங்கு வந்து என்னைக் பார்க்கவில்லை? அவனுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா? இல்லை மறுத்துவிட்டானா?
என் வாழ்க்கை அவனிடமிருந்து தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? தெய்வம் எனக்கு உதவி செய்யுமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், நாம் எதை நினைக்கிறோமோ அதற்கு எதிராகத் தானே நடப்பவையெல்லாம் அமைகிறது!
ஒப்பு தாம்பூலம் முடிந்தபிறகு, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்த அருணாச்சலம் தம்பதியர், மிகவும் பயந்து கொண்டே பதினைந்து நாட்கள் கழித்து ஒருவாராக தன் மகனிடம் உமாவின் புகைப்படத்தை காட்ட உமாவின் அழகில் வாயில் பேசுவதற்கு வார்த்தை இன்றி உறைந்து நின்றான் குருபரன். இதே பெண்ணை பேருந்து நிறுத்தத்தில் பார்க்கும்போது இவள் ஒரு நாளாவது தனது படுக்கையை அலங்கரித்தால் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது நிஜம்தான்.இவ்வளவு சீக்கிரம் அவன் எண்ணம் நிறைவேறும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைவதற்கு அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை தான். ஆனால் சிவனின் மகளை அனுபவிப்பதற்கு திருமணம் என்ற ஒரு சம்பிரதாயம் அவசியம். முதலில் கல்யாணம் வேண்டாம் என்று ஒப்புக்கு சொல்லிப் பார்த்தவன், பிறகு திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டான். தன் அம்மாவிடம் கேட்டு உமாவின் புகைப்படத்தை தன்னுடன் எடுத்துச் சென்று விட்டான். இரண்டு நாட்கள் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், இரவும் பகலும் உமா ஆக்கிரமித்து இருந்தாள்.
மூன்றாம் நாள் காலை உமாவின் வீட்டிற்கு சென்று, வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சிவனிடம் நான் உங்க மகளோட தனியா பேசணும் அவள வெளில கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று அதிகாரத் தோரணையில் சொல்லிவிட்டு உமாவிடம் திரும்பி நான் வெளியில் நிக்கிறேன். சீக்கிரம் ரெடியாயிட்டு வா என்று விட்டு யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் வாயிலில் சென்று நின்று கொண்டு விட்டான். அவன் நடத்தையில் சுத்தமாக மரியாதை இல்லை. சிவனிடம் பேசும்போது, வருங்கால மாமனார் என்ற மரியாதை கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. இத்தனை வருடங்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்து வரும் ஒரு வயதான மனிதருக்கு கொடுக்கக்கூடிய சாதாரண மரியாதையை கூட அவன் கொடுக்கவில்லை. அவனின் நடத்தையைப் பார்த்து உமாவிற்கு தாங்கொணா வேதனை. இந்த வேதனையை தான் காலம் முழுக்கவும் சுமக்க வேண்டுமே என்பது அவள் மனதைக் குத்திக் கிழித்தது. நினைவு தெரிந்த நாட்கள் முதலாக இந்த நொடி வரை சிவன் அவளைப் பொருத்தவரை ஹீரோதான். அவர் தன் மனைவியிடம் நடந்து கொள்வதைப் பார்த்து தனக்கும் அமையும் கணவன் தன் அப்பாவை போல இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்படித் தன் அப்பாவை கொஞ்சம் கூட மரியாதையாக நடத்தாத ஒரு நபர் கணவனாக அமையக்கூடும் என்பது அவள் கனவில் கூட இல்லை. மனம் நொந்து கொண்டே, அப்பாவின் முகத்தைப் பார்த்தவள் அவர் சம்மதத்தை அவர் பார்வையில் புரிந்து கொண்டவளாக அவனுடன் வெளியே செல்ல கிளம்பினாள். இத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த சிவனின் மனைவி பாறுவுக்கு மூன்றாமவர் தன் கணவனை மதிக்காமல் நடந்து கொண்டிருப்பது, அதிலும் அவன் வருங்கால மாப்பிள்ளையாக வர இருக்கிறவன் எனும்போது வெகுவாக பிடிக்காமல் போயிற்று. இதெல்லாம் தேவையா...என்று தன் கணவனை நோக்கி குற்ற பார்வை செலுத்தினாள் பாறு.

பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ரத்னா மற்றம் சாந்தா இருவரும் புத்தக பையுடன் வேகமாக வெளியே வர, வாயிலில் நின்று கொண்டிருந்த குருவின் கண்களில் தப்பாமல் விழுந்தார்கள். இருவரையும் கண்ணை நகர்த்தாமல் பார்த்துக் கொண்டிருந்தான் குரு. நின்று கொண்டிருப்பது யாரென்று தெரியாத ரத்னா எப்படி முழுங்குற மாதிரி பாக்குறான் பாரு பொறுக்கிபய என்ற தன் தங்கையிடம் முணுமுணுத்துக் கொண்டே செல்ல அந்த வார்த்தைகள் தப்பாமல் குருவின் காதில் விழுந்தது.
ரத்னாவின் உருவம் மட்டும் அல்ல அவள் சொன்ன வார்த்தைகளும் கூட ஒருவேளை அவளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும், குரு இந்த சம்பவத்தை மறக்கப் போவதில்லை என்பதை அந்த நேரம் அறிந்து கொள்ளவில்லை அந்த பேதை.

வழக்கம்போல, சிறு பெண் சாந்தாவிற்கு அக்கா கூறுவது ஒன்றும் புரியாமல் திரும்பித் திரும்பி குருவை பார்த்துக்கொண்டே சென்றாள்.

ரத்னா விற்கு இறுதி தேர்வுகள் முடிவு பெற, அதற்குள் சங்கரன் இரண்டு முறை வந்து அவளைப் பார்த்து சென்று விட்டான். அவரது தேர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த அவளுக்கு பார்க்கர் பென் பரிசளித்து விட்டு ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு சென்றவனின் முகத்தை மனதில் இருத்திக் கொண்டே தேர்வுகளை எழுதி முடித்தாள் ரத்னா.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom