Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


துள்ளி எழுந்த கனவே

ChitraDevi

New member
Messages
2
Reaction score
2
Points
1
தோழிகளே இது என்னுடைய முதல் முயற்சி.நீண்ட நாள் கனவு , அதை நிறைவேற வாய்ப்பளித்த நித்யா சகோதரிக்கு நன்றி. படிச்சிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க .



துள்ளி எழுந்த கனவே.

அத்தியாயம்-1

அம்மா என அழைத்தபடியே சமையலறையில் நுழைந்தாள் கவிலயா.அங்கு தன் அம்மாவை காணாமல் எங்கு சென்றிருப்பார் என யோசித்தவளை பின்னிருந்து அடித்தாள் அனன்யா.அடியே அனி என்று கூறியவளை முறைத்தாள் அந்த வீட்டின் மருமகள். கவி மெதுவாக பேசுடி அத்தை பூஜையறையில் இருக்காங்க கோவிலுக்கு போனவங்க வந்ததிலிருந்து அங்கே இருக்காங்க எனக்கு பயமாருக்குடி நீ வேற சத்தம் போடுற அத்தை திட்ட போறாங்க.



பத்மா அந்த வீட்டின் ஆணிவேர்.அன்பான கணவர் பிரபு சென்னையில் பல கிளைகள் கொண்ட சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.மகன் ஆதி, மகள் கவிலயா. மகளின் தோழியே அந்த வீட்டின் மருமகள்.மகனின் மனம் அறிந்து திருமணம் செய்து வைத்தார்.மாமியாரின் மனம் அறிந்து நடக்கும் மருமகள்.எந்த குறையும் இல்லை இருந்தாலும் எந்நேரமும் கவலையுடன் இருக்கும் பத்மா. இது தான் பத்மா இல்லத்தின் நிலைமை. நம் கதாநாயகி கவி இந்நிலைமையை மாற்றுவாளா பொறுத்திருந்து பார்ப்போம்.




கவி இந்தா காஃபி என நீட்டியபடி அனி வந்தாள்.வேலை கிடைத்து விட்டதா கவி ?

ம் வேலை கிடைத்து விட்டது அனி.அம்மாவிடம் சொல்லாம்னு தேடினேன் . அம்மா பூஜையிலிருந்து வந்துட்டாங்களா? இன்னும் இல்லை‌‌ , நான் அத்தைக்கு டீ எடுத்துட்டு வரேன் நீ போய் பாரு என்றாள் அனி.



கவிக்கு சிறுவயதில் இருந்தே ஆசிரியர் வேலையில் ஆர்வம்.அதற்காக பிரபல பள்ளியில் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டாள்.



அம்மா என கத்தி கொண்டே பூஜையறையில் நுழைந்தாள் கவி.தன் கண்ணீரை துடைத்து கொண்டு பத்மா அவளைப் பார்த்து மெதுவாக புன்னகைத்தாள். வாடா அம்மு வேலை கிடைத்து விட்டதா என கேட்ட படியே வெளியே அழைத்து வந்தாள்.



நான் தேர்வாகி விட்டேன் மா . பள்ளி திறந்தவுடன் ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க.

கவி பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் வந்தாள். எல்லோரும் மெடிக்கலையும் இன்ஜினியரிங்கையும் தேர்ந்தெடுத்த போது, இவள் ஆசிரியர் பணி தான் என் கனவு என்று கூறி பிஏ பிஎட் படித்தாள்.

அம்மு உன்அண்ணா அண்ணி அப்பா இவர்களோடு சேர்ந்து நம்ம பிஸினஸ் பார்க்கலாமே மா,எதுக்கு கஷ்டப்படுற.


ஐயோ அம்மா மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. அப்பாவையும் அண்ணனையும் சமாளிக்க நான் பட்டபாடு இருக்கே.திரும்பவுமா விட்டுடுங்க.



ஆமா நீ ஏன் மா அழுத. நான் வேண்டும் என்றால் திருச்சி போய் தாத்தாவை சமாதனம்

செய்யவா.

அதெல்லாம் ஒன்னும் இல்லை டா.ஏனோ மனது சஞ்சலமா இருக்கு.நீ போய் ஓய்வு எடு. பட்டம்மா இன்று லீவு, டின்னர் ரெடி பண்ண அனுவுக்கு நான் போய் உதவுறேன்.



இரவு உணவு அனைவரும் சேர்ந்து உண்பார்கள்.ஆதியும் , கவியும் ஒருவரை ஒருவர் வம்பு இழுத்து கொண்டு இருந்தனர், இடையில் அனுவையும் கலாய்த்து அந்நேரத்தை மகிழ்ச்சியாக்கினர். பத்மாவும் , பிரபுவும் புன்னகையுடன் உணவருந்தினர்.



அத்தியாயம்-2.



திருச்சியில் உள்ள அழகான பழமை மாறாத வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தது.அந்த வீட்டின் மூத்த தலைமுறை ஆதித்தியவர்மன் மயங்கி விழுந்து விட்டார்.மாமா மாமா என்ன ஆச்சு, என பதறிய ஜானகி உதய், மதி, இங்க வாங்க என கத்தினாள்.

அவர்கள் இருவரும் ஜானகி ஜெயவர்மனின் மகனும் மகளும் ஆவர்.


மாடியில் இருந்த இருவரும் அம்மாவின் சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்தனர் . என்னம்மா ஆச்சு தாத்தா கீழே விழுந்துவிட்டார் பாருடா கண்ணா.

அம்மா நகருங்க என கூறி தாத்தாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான் உதய்.

மதி தண்ணீர் கொண்டு வா , அம்மா முதலில் எல்லா ஜன்னல்களையும் திறந்து வைங்க

அண்ணா இந்தாங்க என தண்ணீர் சொம்பை நீட்டினாள் மதி. மென்மையாக தாத்தாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

தண்ணீர் தெளித்தும் கண் விழிக்காததைப் பார்த்து அம்மா அப்பாக்கு போன் பண்ணுங்க.

மதி இந்தா கார் கீ கதவை திறந்து வை.நான் தாத்தாவை தூக்கிட்டு வரேன்.

அம்மா சீக்கிரம் வாங்க என கூறி கொண்டே

தாத்தாவை காரின் பின் சீட்டில் மதியின் மடியில் படுக்க வைத்தான் உதய்.ஜானகி ஏறியவுடன் உதியின் கையில் கார் பறந்தது.



சுகம் மருத்துவமனை ICU முன்னே உள்ள நாற்காலியில் மதியும் ஜானகியும் அழுதுகொண்டே உட்கார்ந்து இருந்தனர்.உதயோ டாக்டர் எப்பொழுது வெளியே வருவார் என ICU கதவையே பார்த்து கொண்டு நின்றிருந்தான். வேகமாக உள்ளே நுழைந்த ஜெயவர்மன் மகனை நோக்கி சென்று டாக்டர் என்ன சொன்னார் உதய்.

இன்னும் டாக்டர் வெளியே வரவில்லை பா, என கூறும் போதே உள்ளே இருந்து வந்தார் அவர்களின் குடும்ப மருத்துவர் ராகவ்.

ஜெயவர்மன் அவருக்கு மைல்ட் அட்டாக்

இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண் முழுச்சிடுவார். டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கோங்க.நாளைக்கு ரூமிற்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்க, இப்ப தொந்தரவு பண்ணாமல் பாருங்க.



அம்மா, அப்பா, மதியை கூட்டிட்டு வீட்டுக்குப்போங்க. தாத்தாவை நான் பார்த்துக்கொள்கிறேன்.

இரு உதி தாத்தா கண் விழிக்கவும் பார்த்துட்டு போறோம்.




சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நர்ஸ் பேஷண்ட் கண் விழித்துவிட்டார், சத்தம் போடாமல் போய் பாருங்க.



உள்ளே நழைந்தவர்களைப் பார்த்து ஜெயவர்மனை அருகில் அழைத்தார்.



அப்பா உங்களுக்கு ஒன்றும் இல்லை, என அவரின் கையைப் பற்றினார். ஜெய் எனக்கு பத்மாவை பார்க்கணும் போல இருக்கு, வர சொல்லுகிறாயாப்பாஎன்று தன் முகத்தையே பார்த்த தந்தைக்கு மெல்ல தலையசைத்தார்.



திரும்பி தன் மனைவியை பார்க்க, மகனும், மகளும் அவருக்கு ஆறுதலாக இருபுறமும் நின்றிருந்தனர்.

ஜானகியோ ஜெயவர்மனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.



அத்தியாயம் -3



சென்னையில் பத்மா இல்லத்தில், கவியும், அனுவும் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.எப்பொழுதும் இரவு உணவு முடித்தவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு உறங்க செல்வர்.இன்றோ வீட்டு வேலை செய்யும் பட்டம்மா விடுமுறை, அதனால் இவர்கள் இருவரும் இங்கு இருக்க, மற்றவர்களோ வரவேற்பரையில் அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.

அமைதியான இரவு நேரத்தில் , மெல்லிய பேச்சு சத்தமும்,நகைப்பொலியும் கேட்டு கொண்டு இருந்தது,அதை தடை செய்வது போல். பிரபுவின் செல்போன் சத்தம் எழுப்பியது.

யாருப்பா இந்த நேரத்தில் போன் பண்ணுவது, என ஆதி கேட்க , தெரியவில்லை இரு யாருன்னு கேட்போம் , என்ற பிரபு போனில் தன் கவனத்தைச் செலுத்தினார்.

ஹலோ பிரபு ஹியர், நீங்க என அந்தப் பக்கமோ நான் திருச்சியிலிருந்து ஜெயவர்மன் பேசுறேன் .அப்பாக்கு முடியலை ஹாஸ்பிடல்ல இருக்கார்.

ஏன் என்னாச்சு மாமாக்கு என பிரபு பதற , அந்த சத்தத்தில் உள்ளே இருந்த கவியும்,அனுவும்

ஓடி வந்தனர்.



பத்மாவோ தன் மகனின் தோளில் சாய்ந்து கலக்கத்தோடு கணவரையே பார்த்து கொண்டிருந்தாள்.

போனிலோ அப்பாக்கு மைல்ட் அட்டாக், இப்போ பரவாயில்லை.அப்பா கண் முழித்தவுடன் பத்மாவை பார்க்கணும் என்று சொன்னாங்க, அழைச்சிட்டுவரிங்களா, மாப்பிள்ளை என தயக்கத்துடன் கூறினார்.




பிரபுவோ டேய் மாப்பிள்ளை நாங்க உடனே கிளம்புறோம், நீ மாமாவை பார்த்துக்க, அப்புறம் எந்த ஹாஸ்பிடல் லொக்கேஷன் அனுப்பு.

ஜெய்யோ நீ இல்ல நீங்கள் எனறு உளரிகொட்டினார்.

பிரபுவோ ,ஜெய் நான் உன் நண்பன்டா என்னை மன்னிக்கமாட்டாயா..நீ என்றே சொல்லுடா மரியாதையேல்லாம் வேண்டாம் கஷ்டமா இருக்கு.

அதெல்லாம் ஒன்னும் இல்லைடா விட்டு விடு.அப்பா ICUல தான் இருக்காங்க, காலையில் தான் ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணுவாங்க, நீங்க நேராக நம்மவீட்டுக்கு வந்துடுங்க , வைச்சுடுறேன் என போனை வைத்தார்.



பத்மா, மாமாவுக்கு மைல்ட் அட்டாக், இப்போ நல்லா இருக்கிறார். உன்னை பார்க்கனும் சொன்னார், சீக்கிரம் கிளம்புங்க.

அனு ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை எடுத்து வை மா. அப்படியே உங்க அத்தைக்கும் உதவி செய் மா.

கவி சீக்கிரம் கிளம்பு. ஆதி டிரைவரை வர சொல்லுப்பா, என எல்லோரையும் தயாராக சொல்லி விட்டு, அதிர்ச்சியில் இருந்த மனைவியை ஆதரவாக கைப்பிடித்து சமாதானம் படுத்தினார்.

போன் வந்த அரைமணி நேரத்தில் அனைவரும் காரில் திருச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

பத்மாவின் மனமோ தன் கடந்த காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.



அத்தியாயம்-4

இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு, திருச்சியில் ஆதி இல்லம் வீட்டில் ,பத்மா வைப்பது தான் சட்டம்.தாய் இல்லாத பெண் என ஆதித்யவர்மன் பயங்கர செல்லம். பத்மாவின் ஐந்தாம் வயதில் அவரது மனைவி மரகதம் இறைவனடி சேர்ந்தார். அன்றிலிருந்து ஆதி தாயுமானவராக இருந்து தன் மகளை வளர்த்தார்.



ஜெயவர்மனோ தங்கை தான் உலகம் என்று இருந்தார்.

ஜெய்யோ தன் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போதே, ஜானகியிடம் என் தங்கை தான் நம் முதல் குழந்தை என்று கூறியே திருமணம் செய்து கொண்டான்.

ஜானகியும், பத்மாவும் நல்ல தோழியாக பழகினர். ஜானகி கருவுற்ற போது, பத்மா உள்ளங்கையில் வைத்து தாங்கினாள். ஜானகிக்கு தாய், தந்தை கிடையாது,ஒரே சகோதரன் ஈஸ்வர் மட்டுமே! அதனால் பிரசவத்திற்கு அண்ணன் வீட்டிற்கு செல்லவில்லை.

அண்ணி கொஞ்சம் நேரம் உட்காருங்க, இன்று உங்களுக்கு வளைகாப்பு நியாபகம் இருக்கா,விருந்தாளிகள் வரும் போது சோர்வா தெரிவீங்க மீதி வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற பத்மா, அண்ணனைப்பார்த்து இன்னும் கொஞ்சம் பூ வேணும்ணா, இதோ நான் என் நண்பனை அனுப்புறேன் என்றார் ஜெயவர்மன்.

பத்மா பொறுப்பாக தன் அண்ணியை கவனிப்பதை இரு ஜோடிகண்கள் உற்று பார்த்தன, அதனால் அவள் வாழ்க்கை பாதையே மாறியது.

அதில் ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர்

ஜானகியிடம் உன் நாத்தனாரையே உன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தால், நாளபின்ன உன் அண்ணன் வீட்டிற்கு செல்ல தயக்கம் இருக்காது, என்று ஜானகியின் மனதை கலைத்து விட்டு சென்றார்.

இன்னொரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் ஜெய்யின் உயிர் நண்பன் பிரபு , பத்மாவை பார்த்தவுடனே விருப்ப ஆரம்பித்து விட்டார்.

ஜானகியின் மனதில் வளைகாப்பு அன்று விதைத்த விதை, குழந்தையின் தொட்டியிலிடும் விழா அன்று விருட்ஷமானது.

ஜானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பத்மா அண்ணியிடம் நான் தான் பெயர் வைப்பேன் என்று கூறி உதயவர்மன் பெயரை தேர்வு செய்திருந்தாள்.

விழா நல்லபடியாக முடிந்தது.ஜானு ஈஸ்வரிடம் அண்ணா எனக்கு ஒரு ஆசை நிறைவேற்றுவியா !

சொல்லுடா குட்டி நீ என்ன சொன்னாலும் அண்ணன் கேட்பன் டா.

அண்ணா நீ பத்மாவை கல்யாணம் பண்ணிக்கணும். ஜானு! இப்ப கல்யாணம் எனக்கு வேண்டாம், நீ பத்மாவுக்கு வேற மாப்பிள்ளை பாரு.

அண்ணா நீ வாக்கு கொடுத்திருக்க கட்டாயம் திருமணம் செய்து கொள்ளணும்.நான் திருமணத்திற்கு நாள் பார்க்க போறேன் என்று ஜானு அவசரப்பட, ஈஸ்வரால் ஒன்றும் செய்ய இயலாது, பத்மாவை பார்க்க, பத்மாவோ கலவரத்தோடு பிரபுவை பார்த்தாள். பத்மாவும் பிரபுவும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்து இருந்தனர்.



அண்ணா நானும் அவரும் ஐயரைப்பார்த்து நாள் குறித்து விட்டு வரோம்.பத்மாவுக்கு இந்த மாதத்திற்குள் திருமணம் செய்யணும் என்று ஜாதகத்தில் சொல்லிருக்காங்கணா, அதான் அவசரப்படுத்துறேன், நீங்களும் பத்மாவும் பேசிப்பாருங்க, பிரபுண்ணா பார்த்துகோங்க நாங்க போயிட்டு வரோம். மாமா நீங்களும் வரீங்களா இல்ல ஓய்வு எடுக்கணுமா.

நான் வரவில்லை மா நீங்கள் இருவரும் போயிட்டு வாங்க. நான் சற்று நேரம் ஓய்வு எடுக்கிறேன் என்று கூறி தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

மௌனம் மட்டும் ஆட்சி செய்த இடத்தில் ஈஸ்வர் அதை களைத்தார்.

பிரபு ,பத்மா நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என வினவ இருவரும் தலையசைத்தனர். ஆமா அத்தான் அண்ணி இந்த திருமணத்தில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறாங்க ,நீங்கள் தான் எப்படியாவது எங்களைசேர்த்து வைக்கணும்.

சரி பத்மா நான் சொல்லுற மாதிரி கேளு.திருமணத்திற்கு இப்ப ஓத்துக்கோ, திருமணத்திற்கு முதல் நாள் நீங்கள் கிளம்ப ஏற்பாடு செய்யுறேன்.

அது தப்பில்லையா அத்தான் அப்பாவையும் அண்ணனையும் என்னால் ஏமாற்ற முடியாது.

ஆமாம் என்னாலும் என் நண்பனுக்கு துரோகம் செய்ய முடியாது என்றான் பிரபு.

பிரபு, பத்மா என் தங்கையை சமாதானம் செய்ய முடியாது.மற்றும் என் கனவு நிறைவேற உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை , கனவு, லட்சியம் எல்லாமே .



ஜானு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

அதற்கு நீங்கள் தான் உதவணும் ப்ளீஸ்.

நீங்கள் இருவரும் சென்றவுடன் மன ஆறுதலுக்காக ராணுவத்தில் பணியாற்றுகிறேன் என்று புறப்பட்டு விடுவேன்,அடுத்த விடுமுறைக்கு வரும் போது உண்மையைக் கூறி உங்களை சேர்த்து வைக்கிறேன் என்றார் ஈஸ்வர்.

சரி அத்தான் உங்களுக்காகத்தான் இதற்கு ஒத்துக் கொள்கிறேன். அப்பா,அண்ணன்,அண்ணியை நீங்கள் தான் சமாதானம் செய்ய வேண்டும்.

கண்டிப்பா நான் அடுத்த முறை உண்மையைக் கூறி விடுவேன். நீங்கள் செய்யும் இந்த உதவியை என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன் என்றான் ஈஸ்வர்.அவனுக்குத் தெரியவில்லை அடுத்தமுறை தான் உயிருடன் இருக்க மாட்டோம் என்றும் , மற்றும் இன்னொரு பெண்ணின் கனவை சிதைக்க போகிறோம் என்றும் தெரியாது.



அம்மா ஊர் வந்து விட்டது என கவி கூற பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டார் பத்மா.



அத்தியாயம் -5

ஜெய் வெளியே வந்து எல்லோரையும் வரவேற்றார். பத்மாவோ அண்ணா 'அப்பா 'எப்படி இருக்கார் என வினவ, இப்ப பரவாயில்லை நீ மாப்பிள்ளையை கூப்பிட்டு உனது அறைக்குப்போய் ஓய்வு எடு மா. பசங்க எல்லாம் நல்லா வளர்த்துட்டாங்க ,ஜானு குழந்தைகளுக்கு படுப்பதற்கு ஏற்பாடு பண்ணு.

நல்லா ஓய்வு எடுங்க, காலையில் தாத்தா வீட்டுக்கு வந்துடுவாங்க,அப்போ பார்க்கலாம்.



காலை எட்டு மணி ஆதியும், அனுவும் தயாராகி கீழே வந்தனர். சமையலறையில் சத்தம் கேட்டு அங்கு சென்றனர்.

பத்மா சமையலறையில் பிஸியாக சமைத்துக் கொண்டிருக்க, மதியோ அங்கு இருந்த மேஜையில் காய் வெட்டி கொண்டிருந்தாள்.

எங்கம்மா மாமா,அத்தை காணும்,என்ற குரலில் திரும்பிய ஜானு , தாத்தாவை கூப்பிட போயிருக்காங்க. இரு காஃபி போடுறேன் குடிங்க இரண்டு பேரும், இன்னும் கவி எழுந்திருக்கவில்லை, போய் எழுப்பி விடு அனும்மா.சரி அத்தை என்ற அனு மதியிடம் சென்று ஹாய் நான் எதுவும் உதவி செய்யவா மதி .

இல்லை வேலை முடிஞ்சுருச்சு நான் குளிக்கப்போறேன். வெளியே சென்ற மதியை பார்த்துக்கொண்டிருந்த அனுவின் முதுகை தட்டினான் ஆதி. ஹேய் என்ன என் மாமா மகளை முறைச்சு பார்த்துட்டிருக்க. நானா முறைச்சுப்பார்க்குறேன், அவதான் நான் பேசின உடனே எழுந்து போயிட்டா.

செல்லம் அவளுக்கு உன் மேல கோபமா இருக்கும்.அவளோட அழகு அத்தானைகல்யாணம் பண்ணிக்கிட்ட இல்ல அதான்.

உங்களை அடிக்க வர ,மீ எஸ்கேப் என ஓடிவிட்டான்.

அவர்கள் அடித்த கலாட்டாவை ரசித்து கொண்டிருந்த பத்மா விடம் அத்தை பாருங்க என முறையிட, விடுடா திரும்ப நம்ம கிட்ட வந்து தான ஆகணும் அப்ப பார்த்துக்கலாம். இப்போ உன் தோழியை எழுப்பு போ.



கவி எழுந்துருடி எல்லாரும் வந்துடுவாங்க, சீக்கிரம் ரெடியாகு அத்தை கூப்பிட்டாங்க. மணி என்னடி பத்தாச்சா, அதுக்குள்ள எழுப்புற என கண்ணை திறக்காமல் கூற,

அடியே இப்ப நாம சென்னையில் இல்ல திருச்சியில் இருக்கோம்.மணி இப்போ ஒன்பது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் தாத்தா வந்துடுவாங்க.

அய்யோ அனி முன்னாடியே எழுப்பினா என்ன

அப்பா வேற திட்டப்போறார்.

மாமாவும் ஹாஸ்பிடல் போயிருக்கார்,நீ சீக்கிரம் ரெடியாகு.

வேகமாக குளித்து விட்டு ஊதா நிற சல்வாரில் அழகாக தயாராகி கீழே வந்தாள்.

கீழே வரவேற்பறையில் தாத்தாவை சுற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். தாத்தாவின் ஒருபுறம் பத்மாவும் பிரபுவும் அமர்ந்திருந்தனர். மறுபுறமோ , ஆதியும் அனுவும் அமர்ந்திருந்தனர். சற்றுத் தள்ளி ஜானகி நின்றிருந்தார், அவரின் அருகில் உதயும், மதியும் நின்றிருந்தனர்.

தாத்தா பத்மாவிடம் எங்கே என் பேத்தி

இதோ வந்துடுவாப்பா என சொல்லும்போதே அங்கு வந்த கவி தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினாள்.

என் செல்லம் அப்படியே உங்க பாட்டி மாதிரியே இருக்கிறாய் என கவியோ உங்க உடம்பு பரவாயில்லையா தாத்தா டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸா இருங்க. உடம்பைபார்த்துக்கோங்க தாத்தா.சரிடா தங்கம் இனி எனக்கு எந்த கவலையும் இல்லை உனக்கும் உதய்கும் திருமணம் செய்து விட்டால் நான் நிம்மதியாக உங்க பாட்டியிடம் சென்று விடுவேன்.

அவ்விடமே அமைதியாக இருந்தது உதய் இங்க வா என்றார் தாத்தா. அருகில் வந்த உதயின் கையைப்பிடித்து கவியின் கையோடு சேர்த்து இருவரும் தாத்தாவுக்காக திருமணத்திற்கு ஒத்துக்கோங்க.

இருவரும் மெல்ல தலையசைத்தனர்.



அத்தியாயம்-6

ஜானூவோ ஜெயவர்மனிடம் இதற்கு நான் ஒத்துக்கமாட்டேன்.என் அண்ணன் சாவுக்கு காரணமானவங்களோட பொண்ண என் பையனுக்கு கட்ட மாட்டேன்.உங்களுக்கு உங்க தங்கை முக்கியம் என்றால் இங்கு குடும்பத்தோடு வரட்டும்,சீராடட்டும்.ஆனால் என் பையனுக்கு பெண் எடுக்க மாட்டேன் என்றார் உறுதியாக!

உதய்யும் மதியும் என்னச் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.

ஜானு உன் மனதை வருத்தப்படுத்த கூடாது என்று அமைதியாக இருக்கிறேன்.நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் உன் அண்ணன் தான், இதோ பாரு என்று பீரோவிலிருந்து ஒரு பழுப்பேறிய கடிதத்தை நீட்டினார்.இது உன் அண்ணன் ராணுவத்தில் சேர்வதற்கு முன் எழுதி வைத்து விட்டு சென்ற கடிதம். இதை படித்து விட்டு தான் அப்பாக்கு முடியாமல் போனது.உன் அண்ணனுக்கு தான் திருமணத்தில் விருப்பமில்லை ராணுவத்தில் சேர்வதே லட்சியம் என்றும் , பத்மாவையும் பிரபுவையும் கட்டாயப்படுத்தி தானேஅனுப்பி வைத்ததாகவும் எழுதியிருக்கிறார் நீயே படி .அதை படித்த ஜானு அதிர்ந்து உட்கார்ந்து விட்டார்.

ஏங்க என்னை மன்னிச்சிடுங்க. மாமா மன்னிப்பாரா. 'அதெல்லாம் அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார்.' அவர்தான் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்றார்.நீ திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் நான் சொல்லும்படி ஆகிவிட்டது. இதை நீ மறந்து விடு.

திருமணத்திற்கு சந்தோஷமாக ஏற்பாடுகள் செய்.

மதியோ தன் அண்ணனிடம், அண்ணி ரொம்ப அழகாக இருக்காங்க. அண்ணி , அத்தான்,அக்கா

எல்லோரும் ஜாலியாக பேசுகின்றனர்.

நான் தான் கோபமாக பேசவில்லை. இனி நானும் அவங்களோடு சேர்ந்து கொள்வேன்.

அண்ணா திருமணத்திற்கு எனக்கு ஐந்து பட்டுப்புடவைகள் வேண்டும் .

உனக்கு இல்லாததா எத்தனை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்.

அம்மா வாங்க எல்லோருக்கும் டிபன் வைங்க. மதி நீ தாத்தாவுக்கு சாப்பாட்டை அறைக்கு எடுத்துட்டு போ. அப்பா நீங்களும் வாங்க. நான் போய் அத்தை மாமா எல்லோரையும் கூப்பிட்டு வரேன்.

அண்ணா நீ அண்ணியை பார்க்கப் போறேன் என்றுநேரடியாகவே சொல்லு‍,நாங்க யாரும் தடுக்க மாட்டோம் என கேலி செய்ய உதய் அழகாக வெட்கப்பட்டான்...

மேலே உள்ள விருந்தினர் அறை ஒன்றை கவி

பயன்படுத்தினாள். கவியை கூப்பிட்டுவதற்காக சென்ற உதய் கதவை தட்டுவதற்காக கை தூக்கும் போது, உள்ளிருந்து ஆதியின் குரல் கேட்டது நான் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்.

என் தங்கையின் கனவு , லட்சியம் தான் எனக்கு முக்கியம்.

வெளியே நின்ற உதயோஐயோ! மறுபடியும் முதலில் இருந்தா என்று அதிர்ந்து நின்றான்.ஆம் அவன் கவியை விரும்ப ஆரம்பித்து இருந்தான்.



அத்தியாயம்-7

உதய் வெளியே நிற்கும் போது, உள்ளிருந்து பிரபு வெளியே வந்தார்.வாங்க மாப்பிள்ளை ஏன் வெளியே நிக்கிறீங்க உள்ளே வாங்க.

இல்லை நீங்க பேசிக்கொண்டு இருந்தீங்க அதான் வரவில்லை மாமா.சாப்பிட வாங்க எல்லோரும், நான் கீழே செல்லுகிறேன்.

கீழே டைனிங் ஹாலில் மேசையில் அமர்ந்திருந்தனர்.பத்மாவும்,ஜானுவும் சந்தோஷமாக அனைவருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தனர். ஜெயவர்மன் உதய்,கவி இருவரையும் பார்த்து வர வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்கு அன்றைக்கு குலதெய்வ கோவிலில் திருமணம் செய்யலாம் என்று தாத்தா பிரியப்படுகிறார் உங்களுக்கு சம்மதமா, அப்புறமா வரவேற்பு திருச்சியிலும், சென்னையிலும், எல்லோரையும் கூப்பிட்டு பெரியதாக செய்யலாம் என, கவி தன் முகத்தின் கலவரத்தை மறைத்து மெல்லிய புன்னகை தவழவிட்டு எனக்கு சம்மதம் மாமா.உதயோ ஒன்றும் சொல்லாமல் தன் கூரிய விழிகளால் அவளை பார்வையிட்டான். டேய் உதி நீ ஒன்னும் சொல்லாம இருக்கிற என வினவ, எனக்கும் ஓகே டேட்.

ஜானு உடனே பூசாரிக்கு போன் போடுங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ண சொல்லுங்க

டிரைவர் வர சொல்லுங்க ஷாப்பிங் போகணும், நாள் வேற குறைவாக இருக்கு. பத்மாவும் ஜானுவும் திருமணத்திற்காக திட்டமிட ஆரம்பிக்க,

அருகில் அனுவும், மதியும் தங்களுக்குள்ளே எவ்வாறு திருமணத்திற்கு உடுத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார்கள்.

கவி மெல்ல நழுவி தோட்டத்திற்கு சென்றாள்.

பின் சென்ற ஆதி கவிமா, உனக்கு விருப்பம் இல்லேன்னா சொல்லிடுமா, அம்மா அப்பாவுக்காக பார்க்க வேண்டாம்.

இல்லைணா எனக்கு என் கனவை விட குடும்பத்தோட மகிழ்ச்சி முக்கியம்.

திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாம் என்று நினைக்கிறாயா கவி.இந்த வீட்டில் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள்.குடும்ப பாரம்பரியம் தான் முக்கியம் என்று சொல்லுவாங்கடா.

பரவாயில்லைணா எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடாது. நான் உள்ள போய் தாத்தாவை பார்க்க போறேன், என்று சென்றுவிட்டாள்.

ஆதி கவலையாடு நிற்க அங்கு வந்த அனு

கவியை யாராலும் கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாது.அவளுக்கு பிடித்து தான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள். நீங்கள் கவலைப்படாதீங்க,என அதுவும் உண்மை தான் சரி வா நாமும் கல்யாண வேலைகளை பார்க்கலாம்.



அத்தியாயம்-8

திருமணம் கோலாகலமாக நடந்தது. கோவிலில் உணவை முடித்துக் கொண்டு எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினர்.தாத்தா தன் கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டு சந்தோஷமாக வலம் வந்தார்.காரில் வரும் போது கவியும், உதியும் ஒன்றும் பேசவில்லை. வீட்டிற்கு வந்தவர்களை வெளியே நிற்க வைத்து ஆரத்தி சுற்றினர். அனுவும், மதியும் உள்ளே விடாமல் வம்பு வளர்த்தனர். அண்ணா ஒத்தையா தரக்கூடாது,கத்தையா தரணும் என்று தன் பர்ஸிலிருந்து பணம் எடுத்துக்கொண்டிருந்த உதியிடம் இருந்து பர்ஸை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.

நீங்க உள்ளே வாங்க. கவி சாமியறையில் விளக்கேற்றுமா. கவி விளக்கேற்றிவிட்டு வந்தாள்.

இருவருக்கும் பால் பழம் கொடுத்து ஓய்வு எடுக்க அனுப்பினர்.மதி அண்ணியை உன்னோட அறைக்கு கூட்டிட்டு போ.

உதி நீ உன்னுடைய அறைக்குச் சென்று

ஓய்வு எடு.

இரவு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இரவு உணவு முடித்தவுடன் கவியை அலங்காரம் செய்து, எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு உதியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

மெல்ல கதவை தட்டி விட்டு கையில் பால்சொம்புடன் உள் நுழைந்தாள்.

மெல்ல காலை உள்ளே நகர்த்த அவள் பட்டப்பாட்டை பார்த்து உதியே சென்று அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தான்.

இங்கு வா கவி இப்படி உட்காரு என கட்டிலில் அமர வைத்து அவள் கையில் இருந்த பாலை தானும் பருகி அவளையும் பருக வைத்தான்.

கவி உனக்கு என்ன பிரச்சனை சொல்லு. ஏன் இப்படி பயப்படுற.

அதெல்லாம் ஒன்றுமில்லை என, இங்க பாரு கவி உன் மனசுல உள்ளதைஎன்னிடம் சொல்லு. உன் கனவு என்ன என்று என்னிடம் சொல். நான் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். சொன்னால்தானேதெரியும்

அது வந்து என தயங்கிக்கொண்டே எனக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியராவது லட்சியம்

எனக்கு இப்போ சென்னையில் வேலை கிடைத்து இருக்கிறது. ஆனால் இப்போ போகவேண்டாம் என்று அம்மா கூறிவிட்டார்.தாத்தாவுக்கு பிடிக்காது என்று சொன்னார்கள்.

உதி கலகலவென நகைத்துக்கொண்டு கவியின் கையைப் பிடித்துக் கொண்டு இதுதான் உன் பிரச்சனையா,அப்ப என்னை உனக்கு பிடிக்குமா?

ம் என வெட்கப்பட்டுக்கொண்டே தலையாட்டினாள். மெல்ல கவியை நெருங்கி கவி இங்கு பார் உன் காரியம் யாவிலும் கை கொடுக்கும் கண்ணாளனாக நான் இருப்பேன், புரிகிறதா.இங்கு உனக்கு முதலில் ஒரு பள்ளியில் வேலைக்கு ஏற்பாடு செய்யுறேன்.அப்புறம் நாம் பள்ளிக்கூடம் கட்டுவொம் ,நீ தான் பார்த்துக்கனும்.அப்படியே இப்ப இந்த அத்தானை கவனி என்று லைட்டை அணைத்தான்.

மறுநாள் காலையில" முடிந்து விட்டதாக எண்ணிய கனவு மீண்டும் துள்ளி எழுந்ததில் " கவி துள்ளி திரிந்த கவிதையாக சுற்றினாள்.

அவளின் மகிழ்ச்சியை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.



" அப்துல்கலாம் கூறுவது போல் அனைவரும் கனவு காணுங்கள்" நிச்சயம் நிறைவேறும்.சிலருக்கு உடனே நிறைவேறும்.சிலருக்கு சற்று காலதாமதம் ஆகலாம். ஆனாலும் கட்டாயம் நிறைவேறும் காத்திருங்கள் தோழிகளே!
 

New Threads

Top Bottom