Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான்கு பாதை!ஒரு வழி!

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11



மதிவாணரின் “கருணாகரனை கொன்றால் அவர்கள் இருவரும் மரணமடைவதை தவிர வேறு வழியில்லை! “என்ற வார்த்தைகளை கேட்ட கந்தமாறனும், பூபதியும் அதிர்ச்சியடைந்தனர்.”மந்திரியாரே! என்ன சொல்கிறீர்கள்? “என்றான் கந்தமாறன் பதட்டத்துடன்.



“நான் சொல்வது உண்மை கந்தமாறா! அவர்கள் இருவரின் உயிர் கருணாகரனிடம் இருக்கிறது.நான் யூகிப்பது சரியாக இருந்தால் மூன்றாவதாக இன்னொரு நபரின் உயிரும் கருணாகரனின் கையில்தான் இருக்கிறது.!”



“யார் அந்த மூன்றாவது ஆசாமி! “



“நம் இளவரசன்தான் அந்த மூன்றாவது நபர்! “



“நீங்கள் சொல்வது விளங்கவில்லை.உங்களின் யூகத்தை கூறுங்கள்! “



“என் யூகத்தை சொல்கிறேன் கந்தமாறா! கவனமாக கேள்.இன்று மகேந்திரபுரியின் மன்னனாக இருக்கும் மகேந்திரனுக்கு முன் அரசனாக இருந்தவர் வீர சேனன்.வீர சேனனின் மனைவியின் தம்பிதான் மகேந்திரன்.வீர சேனனின் மகன்தான் நம் இளவரசர் மாறவர்மன்.மாற வர்மன் சிறு பிள்ளையாக இருந்த போதே வஞ்சகமாக தன் தங்கையையும், மாமா வீரசேனனையும் கொன்று அதை விபத்தாக மாற்றி அரியணை ஏறியவன் மகேந்திரன்.சிறு பிள்ளையாக இருந்த மாற வர்மனை கொல்ல பலமுறை முயன்றான் மகேந்திரன்.ராஜவிசுவாசிகளான என் போன்றவர்கள் அவன் திட்டத்தை குலைத்து இளவரசரை காப்பாற்றினோம்.எப்படியோ இளவரசர் வளர்ந்து வாலிப வயதையடைந்தார்.அந்த நேரத்தில் மகேந்திரனுக்கு எதிரி ஒருவன் உள் நாட்டில் உருவானான்.அவன் தன்னை கரிகாலன் என்று அழைத்து கொண்டான்.சிவப்பு நிற துணியால் முகத்தை மறைத்தபடி காணப்படும் அவன் நாட்டின் பல பாகங்களில் திடீர் திடீரென தோன்றி காவலர்களிடமிருந்து ஆயுதத்தை கைப்பற்றுவான்.இருப்பவர்களிடமிருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுத்து வந்ததால் நாட்டு மக்களிடம் அவனுக்கு ஆதரவு பெருகியது.அவனது புரட்சி படையில் நிறைய பேர் இருந்தனர்.அவனை பயன்படுத்தி இளவரசருக்கு ஆதரவாக அவனை திருப்பி மகேந்திரனை ஒழிக்க நினைத்தேன்.நான் பெரு வணிகனாக வேடமிட்டு வலிய சென்று கரிகாலனிடம் அகப்பட்டேன்.ஆனால் கரிகாலன் புத்திசாலி.நான் அமைச்சர் என்பதை கண்டு கொண்டு விட்டான்.இருவருக்குமான உரையாடலில் என் திட்டத்திற்கு ஒப்பு கொண்டுவிட்டான்.மகேந்திரனுக்கு எதிராக இளவரசனுக்கு ஆதரவாக செயல்பட ஒப்பு கொண்டவனால் ஆட்சி மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று நம்பினேன்.நள்ளிரவு நேரத்தில் அரண்மனையிலிருந்து தனித்து வெளியேறும் இளவரசர் கரிகாலனை சந்திப்பதும் ஆலோசனைகள் செய்வதும் வழக்கமானது.அப்படி கடைசியாக கரிகாலனை சந்திக்க சென்ற இளவரசரை காணவில்லை.கரிகாலன் கொல்லப்பட்டு விட்டான்.கரிகாலனை கொன்றது கருணாகரன் என்பது இன்று அரசவையில் தெரிந்து விட்டது.!”



“இது தெரிந்த கதைதானே அமைச்சரே? “



“கரிகாலனை சந்திக்க சென்ற இளவரசரின் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்தாயா கந்தமாறா? “



“துறவியாக போய் விட்டதாக மகேந்திரன் சொல்கிறான்.!”



“அதற்கான தேடல் இளவரசருக்கு இல்லை! “



“இளவரசர் கொல்லப்பட்டிருப்பாரோ?”



“இல்லை என்கிறார்கள் ஒற்றர்கள்.கடைசியாக இளவரசரை கைது செய்து கருணாகரன்தான் அழைத்து சென்றிருக்கிறான்.!”



“அப்படியானால்? “



“பொய்மான் கரடின் புதிர் வழியை முழுதாக அறிந்தவன் கருணாகரன்.இளவரசரை அதன் வழியே அழைத்து சென்று கொல்ல முயற்சி செய்திருக்கிறான்.கொன்று விட்டதாக நினைத்து கருணாகரன் புதிர் பாதையிலிருந்து வெளியேறி விட்டான்.குற்றுயிராக இருந்த இளவரசரை மலைவாழ் பளியர்கள் காப்பாற்றி ஆதரித்துள்ளனர்.அவர்களின் உதவியோடு வெளியேற முயன்ற இளவரசர் அதில் தோற்று போய் அவர்களின் தலைவனாக மாறி வாழ ஆரம்பித்து விட்டார்.நான் அனுப்பிய தூது புறா ஒன்று வல்லூரால் தாக்கப்பட்டு பொய்மான் கரட்டு வனத்தில் விழுந்து விட்டது.அதை கண்டெடுத்த இளவரசர் தான் உயிரோடு இருப்பதை எனக்கு தெரியப்படுத்தி விட்டார்.ஆனால் அவராலும் வெளியேறி வர முடியாது.நானும் காப்பாற்ற இயலாது.சரியான நேரத்திற்காக நான் காத்திருந்தேன்.இது சரியான நேரம்! “



“இளவரசர் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.ஆனால் அவரை எப்படி மீட்பது? “



“அவரை மீட்க கருணாகரன் உயிரோடு வெளி வர வேண்டும்.அந்த கள்வர்கள் அவனை கொன்றாலும் அவர்களும் புதிர் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் இறக்க நேரிடும்.ஆக மூவரின் உயிரும் கருணாகரனின் கையில் இருக்கிறது.”



நிலைமையின் விபரீதம் மூவருக்கும் தெள்ள தெளிவாக புரிந்தது.அதே நேரம் பொய் மான் கரட்டின் புதிர் பாதையில்?
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12



கருணாகரன் உயிரோடு இருப்பது எவ்வளவு அவசியம் என்று மதிவாணரும் மற்ற இருவரும் உணர்ந்து கொண்டிருந்த நிலையில் பொய் மான் கரடின் புதிர் வழியில் ஆதித்தன் கருணாகரனின் ஆட்களில் ஒருவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தான்.

“வீரனே! உண்மையை சொல்லா விட்டால் உன் உயிர்பறவை உடலை விட்டு பறந்து விடும்! “



“சத்தியமாக உண்மையைத்தான் சொல்கிறேன்.நாங்கள் நுழையும் வழியிலேயே காத்திருந்தோம்.தளபதி சென்ற வழியை நாங்கள் அறிய மாட்டோம்.தளபதி கடந்து சென்ற பின்பே நாங்கள் உள்ளே வந்தோம்! “



ஆதித்தன் கருணாகரனின் திட்டத்தை மெச்சி கொண்ட அதே நேரம் சரியான வழியை யாரும் அறிந்து கொள்ள கூடாது என்பதில் கருணாகரன் காட்டிய கவனத்தையும் மனதிற்குள் பாராட்டினான்.



எஞ்சிய வீரனையும் கட்டி போட்டு அருகிலிருந்த பள்ளத்தில் உருட்டி விட்ட ஆதித்தன் “உங்களை விடுவித்து கொண்டு ஊர் போய் சேருங்கள்.எங்களை பின் தொடர்ந்து வந்து மரணத்தை சந்திக்காதீர்கள்.இதில் பயணிக்கும் எங்களுக்கு குடும்பம் என்பது இல்லை.ஆனால் உங்களுக்கு குடும்பம் இருக்கிறது! “என்று எச்சரித்தவன் தன் எதிரே மனித விரலை போல் பிரிந்து சென்ற நான்கு பாதைகளை நோட்டமிட்டான்.இதில் எது சரியான பாதை? அதை எப்படி கண்டு பிடிப்பது? ஆழ்ந்த யோசனைக்கு போனவன் முகம் பிரகாசமானது.



“அண்ணா முதல் இரண்டு வழிகளில் தனித்தனியாக பயணிப்போம்.குதிரையை கருணாகரன் மெதுவாக நடத்தி சென்றிருந்தால் ஓரத்தில் உள்ள செடிகளின் இலைகளை குதிரை மேய்ந்திருக்க கூடும்.கடிபட்ட இலைகளை வைத்து கருணாகரன் இதில் பயணம் செய்திருக்ககூடுமென அறியலாம்.அப்படியே நிலத்தை கூர்ந்து கவனி.குதிரையின் காலடி தடங்கள் தென்படக்கூடும்.இறுதியாக குதிரையின் கனைப்பொலியை எழுப்பு! கருணாகரனின் குதிரை பதில் குரல் எழுப்பும்.அப்படி குரல் வந்தால் அந்த வழியே சரியான வழி.இந்த அறிகுறிகளில் எது தென்பட்டாலும் குயிலின் குரலை எழுப்பு.நான் வந்து உன்னுடன் இணைந்து கொள்வேன்.இதே அடையாளங்களை நான் கண்டால் குயிலோசையை எழுப்புகிறேன்.நீ உன் பாதையை விட்டு வெளியேறி என்னுடன் வந்து இணைந்து கொள்! “



அடுத்த நொடி இருவரின் குதிரைகளும் ஆளுக்கொரு வழியில் நுழைந்தன.இருவருமே அறிகுறி எதாவது தென்படுகிறதா என்று பார்த்தபடி விரைந்து கொண்டிருந்தனர்.அடையாளம் எதையும் காணாமல் சலித்து போன அரிஞ்சயன் தன் குதிரையின் முதுகில் தட்டி கனைப்பொலியை ஏற்படுத்தினான்.அரிஞ்சயன் சென்ற வழியில் விரைந்து கொண்டிருந்த கருணாகரனின் குதிரை ஒரு நிமிடம் காதுகளை விரைத்து அந்த ஒலியை கேட்டது.இன்னொரு குதிரை அருகில் இருப்பதை அறிந்த மகிழ்ச்சியில் பலமாக கனைத்தது.குதிரை கனைப்பதை பார்த்த கருணாகரன் “சண்டாளர்கள்! சரியான வழியை கண்டு பிடித்து விட்டார்கள்! “என்றான் எரிச்சலுடன்.



அடுத்த கணம் அரிஞ்சயனிடமிருந்து ஒரு குயிலோசை கிளம்பியது.அதை கேட்ட மறுகணம் ஆதித்தன் மோகினியை திருப்பி கொண்டு தன் வந்த வழியிலிருந்து மின்னலென வெளியேறினான்.அரிஞ்சயன் சென்ற வழியில் மோகினியை செலுத்திய ஆதித்தன் விரைவில் அரிஞ்சயனை நெருங்கி விட்டான்.அது சரியான வழிதான் என்பதை கருணாகரனின் குதிரை போட்டிருந்த லத்தி காட்டி கொடுத்தது.பாதை உறுதியான மகிழ்ச்சியில் சகோதரர்கள் உற்சாகமாக பயணித்தனர்.



அதே நேரம் மதிவாணரிடம் கேள்விகளை தொடுத்து கொண்டிருந்தான் கந்தமாறன்.



“கருணாகரனை கள்வர்கள் கொன்று விட்டால்? “



“கொல்ல மாட்டார்கள்.புதிர் வழியை விட்டு வெளியேறும் மார்க்கத்தை முழுதாக அறிந்தவன் அவன்தான் என்பதால் கொல்ல மாட்டார்கள்.!”



“கருணாகரன் அவர்களை கொன்று விட்டால்? “



“பாதகமில்லை! இன்னொரு போலி கரிகாலனை நாம் உருவாக்குவோம்! “



“அப்படியானால் கருணாகரன் போட்டியில் வென்ற பின்பு அவனை நாம் கடத்தி புதிர் வழியை அடைந்து இளவரசரை மீட்க போகிறோமா?”



“கருணாகரன் போட்டியில் வெல்ல போவதில்லை! “



“அப்படியானால்? “



“இதுவரை அவனுக்கு உதவிய புதிர் வழியே அவனுக்கு விரிக்கும் வலையாகப் போகிறது! “



“அது எப்படி? “



“பொறுத்திருந்து பார்! அந்த வலையை பின்னியவனே நான்தான்! நீ உடனே சென்று கரிகாலனின் ஆட்களையும், ராஜவிசுவாசிகளையும் ஒன்று திரட்டு! நமக்கு அதிக நேரமில்லை! “



“ராஜ விசுவாசிகளை உடனே திரட்டிவிடலாம்.நாடு முழுவதும் சிதறி கிடக்கும் கரிகாலனின் ஆட்களை எப்படி திரட்டுவது? “



“கரிகாலன் பயன்படுத்திய அதே வழிதான் உனக்கு உதவ போகிறது.வாகை மரத்து புறாக்கள்! “



“ஆம்! அதை நான் மறந்து விட்டேன்.உடனே சென்று தகவல் அனுப்புகிறேன்.!”கந்தமாறனும், பூபதியும் அங்கிருந்து விரைந்தனர்.மதிவாணர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 13



ஆதித்தனும், அரிஞ்சயனும் பொய்மான் கரடின் புதிர் வழியில் சரியான பாதையை கண்டு பிடித்து கருணாகரனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது நீலமலைக்கான நேர் வழியில் பயணித்தவர்களை அபாயம் சூழ தொடங்கியிருந்தது.ரதங்களிலும், குதிரைகளிலும் பயணித்தவர்கள் சற்றுதூர சமவெளி பகுதியில் சில அம்புகளும், வேல்களும் தரையில் புதைந்திருப்பதை பார்த்தனர்.”அவை என்னவாக இருக்கும்? “என்றான் போட்டியாளர்களில் ஒருவன்.”நமக்கு முன்பாக பயணித்த கருணாகரனை கொல்ல முயற்சி செய்ததாக நம்மை நம்ப வைக்க முயல்கிறார்கள்! “என்றான் ஒருவன்.”இதை எப்படி நாம் நம்புவது? கருணாகரன் இந்த இடத்தை கடந்த பிறகுகூட இந்த அம்புகளும், வேல்களும் ஏவப்பட்டிருக்கலாம்.மேலும் தனியாக பயணிப்பவனை குறி வைப்பது மிகவும் எளிது.!”



“சரியான கேள்விதான்! சில இடங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அடையாளம் தெரிகிறது.கருணாகரனும், மகேந்திரனும் சேர்ந்து நம்மை முட்டாளாக்க பார்க்கிறார்கள் போலிருக்கிறது.!”



போட்டியாளர்கள் தங்களுக்குள் முணுமுணுத்தபடி முன்னேறி கொண்டிருந்த போது மகேந்திரன் ஒரு சிறு குன்றின் மீதேறி தாக்குதலை தொடங்க உத்தரவிட்டான்.அவன் கட்டளைக்கிணங்க அம்புகள் ஆகாயம் நோக்கி எய்யப்பட்டன.அம்பின் நுனியில் சற்று கனம் சேர்க்கப்பட்டிருந்ததால் ஆகாயம் நோக்கி பாய்ந்த அம்புகள் வலுவிழந்து புவிஈர்ப்பு விசையால் தரையை நோக்கி தலைகுப்புற விழ ஆரம்பித்தன.மழையென அம்புமழை ஆகாயத்திலிருந்து பெய்ய ஆரம்பித்தது.புயல் வேகத்தில் புரவியில் வந்தவர்கள் தங்களை காத்து கொள்ள இயலவில்லை.கூரிய அம்புகள் குதிரைகளையும், மனிதர்களையும் துளைத்து இரத்த ஆறை அந்த பள்ளத்தாக்கில் ஓட விட்டன.உஷாரான மற்ற வீரர்கள் தேரையும், ரதத்தையும் நிறுத்திவிட்டு அவற்றின் அடியில் பதுங்கினர்.சிலர் குதிரையிலிருந்து குதித்து கேடயத்தால் தங்களை காத்து கொள்ள முற்பட்டனர்.அவர்களின் முயற்சி அடுத்து ஆரம்பித்த வேல் மழையால் நிர்மூலமானது.படுகாயமடைந்தவர்களின் அலறலால் அந்த பூமி நிரம்ப ஆரம்பித்தது.அவர்களின் அலறலை குன்றின் மீதிருந்து ரசித்து கொண்டிருந்தான் மகேந்திரன்.



அதே நேரம் பூபதியும், கந்தமாறனும் செய்தி அனுப்ப தேவையான சில விசயங்களை செய்து விட்டு கரிகாலன் செய்தி அனுப்பும் வாகை மரத்தை தேடி வந்தனர்.மரம் முழுவதும் ஏராளமான புறாக்கள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தன.சிறிது தானியங்களை தரையில் வீசி எரிந்த கந்த மாறன் “பூபதி! தானியங்களை உண்ண வரும் புறாக்களின் காலில் நம் செய்தியடங்கிய ஓலையை கட்டு! நமக்கு அதிக நேரமில்லை! இன்று மாலைக்குள் இந்த தூது புறாக்கள் கரிகாலனின் ஆதரவாளர்களிடம் கிடைத்தாக வேண்டும்.அவர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை வந்தடைய மறுநாள் அவகாசம் இருக்கிறது.வேட்டை விழாவின் நிறைவு நாள் ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்ப நாளாக இருக்க வேண்டும்.கரிகாலனின் கனவு நினைவாக வேண்டும்! “



“இந்த புறாக்கள் கரிகாலனின் ஆதரவாளர்களிடம் சரியாக சென்று சேருமா? “



“சந்தேகமே வேண்டாம்.அவற்றை செய்தி கொண்டு செல்ல கரிகாலன்தான் பழக்கினான்.இந்த புறாக்களால்தான் கரிகாலன் நாட்டின் பல இடங்களில் தோன்றினான்.!”



“அது எப்படி ஒரு நபர் நாட்டின் பல பாகங்களில் தோன்ற முடியும்? “



“அவனது ஆதரவாளர்களில் சிலர் சிவப்பு நிற துணியை முகத்தில் கட்டி கொண்டு கரிகாலனாக தோன்றுவார்கள்.அதனால் நாடு முழுவதுமே கரிகாலன் தோன்றுவது சாத்தியமானது.அவனை மாயாவி என்று கூட மக்கள் நம்பினார்கள்! “



“உண்மையான கரிகாலன் தலைநகரில் மட்டுமே அரசுபடைகளை எதிர்த்து போராடுவான்.!”



“ஆம்! கரிகாலனின் முகத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை என்பதால் அது சாத்தியமானது.!”



“அப்படியானால் கரிகாலன் எங்குதான் தங்குவான்?



“அதுதான் பரம ரகசியம்.அவன் எங்கிருந்து வருகிறான்.போகிறான்.பதுங்கி கொள்கிறான் என்பது மதிவாணர் மட்டுமே அறிந்த ரகசியம்! “



“இவ்வளவு கெட்டிகாரனை கருணாகரனை எப்படி கொன்றிருக்க முடியும்? “



“வீரத்தை எப்போதும் துரோகம்தான் வென்றிருக்கிறது நண்பா! நாம் வந்த வேலையை கவனிப்போம்! “

அவர்கள் புறாக்களின் கால்களில் செய்தியை கட்ட தொடங்கினர்.மகேந்திரனுக்கு எதிரான ஆபத்து ஆகாயத்தில் ஆரம்பமானது!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



மகேந்திரனுக்கு எதிரான செய்தியடங்கிய ஓலைகளை தாங்கி புறாக்கள் விண்ணில் பறக்க ஆரம்பித்த அதே நேரம் ஆதித்தனும், அரிஞ்சயனும் கருணாகரனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.சகோதரர்கள் இருவரும் தங்களின் கண்ணில் பட்ட தடயங்களை ஊன்றி கவனித்து அது சரியான பாதைதானா என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.இரண்டு காத தூரத்தை கடந்த போது ஆதித்தன் கடிவாளத்தை இறுக்கி பிடித்து மோகினியின் வேகத்தை குறைத்தான்.ஆதித்தன் வேகத்தை குறைப்பதை கண்ட அரிஞ்சயனும் புரவியின் வேகத்தை குறைத்தான்.”ஏன் ஆதித்தா? குதிரையின் வேகத்தை குறைக்கிறாய்? என்றான்.



“நம் நண்பர் திடிரென குதிரையின் வேகத்தை குறைத்திருக்கிறார்.குதிரையின் குளம்பொலிகளுக்கு நடுவே இடைவெளி அதிகரிக்கவில்லை கவனித்தாயா ?அப்படியானால் அவர் எதையோ தேடியிருக்க வேண்டும்! “



“இந்த இடத்தில் கருணாகரன் எதை தேடியிருப்பான்.?”



“நமக்கு ஆபத்து விளைவிக்ககூடிய ஏதோ ஒன்றை அவன் மனதிற்குள் திட்டமிட்டிருக்க வேண்டும்.அந்த யோசனையில்தான் குதிரையின் வேகத்தை குறைத்திருக்கிறான்.!”



“அது என்னவாக இருக்ககூடும் ஆதித்தா? “



“தெரியவில்லை! எதற்கும் குதிரையை விட்டு இறங்கி நடப்பதே நமக்கு பாதுகாப்பு! “



இருவரும் குதிரையை நடத்தி கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.



“இவ்வளவு சிக்கலான பாதை இயற்கையாகவே உருவாக வாய்ப்பில்லை அண்ணா! இது முற்றிலும் செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்பட்டபாதை! “



“அப்படித்தான் தோன்றுகிறது.இந்த பாதையை உருவாக்கியவர்கள் எங்கே போனார்கள்? அவர்களால் இந்த வழியை எளிதாக அடையாளம் காண முடியுமே? “



“கண்களை கட்டி அழைத்து வந்திருக்கலாம்.இல்லை வெவ்வேறு ஆட்களை வைத்து பாதையை நிர்மாணித்திருக்கலாம்.இல்லையேல் மரண தண்டனை கைதிகளை இந்த பாதையமைப்பில் ஈடுபடுத்தி விட்டு பணி முடிந்ததும் கொன்றிருக்கலாம்.!”



“நீ சொல்வது சரியாக கூட இருக்கலாம்! “



செடி கொடிகள் மரத்தின் மீது படர்ந்து பசுமையாக காணப்பட்ட அந்த பாதையை கூர்ந்து கவனித்த ஆதித்தன் குனிந்து எதையோ தேட ஆரம்பித்தான்.



“என்ன தேடுகிறாய் ஆதித்தா? “



“தரையில் நடப்பட்ட ஒரு சிறு குச்சியை தேடுகிறேன்.நீயும் தேடு அண்ணா! “



“அந்த குச்சி எதற்கு ஆதித்தா? “



“அதில்தான் நம் இருவரின் உயிர் இருக்கிறது அண்ணா? “



“குச்சியில் உயிரா? “என்று குழப்பத்துடன் தேடிய ஆதித்தன் சற்று நேரத்திலேயே அப்படி தரையில் புதைக்கப்பட்ட ஒரு குச்சியை கண்டு பிடித்தான்.



“இதோ நீ சொன்னது போல் ஒரு குச்சி தரையில் இருக்கிறது.!”



“அதன் நுனியில் ஒரு கொடி கட்டப்பட்டுள்ளதா? “



“ஆம்! “



“அதன் மறுமுனை அந்த முள் மரத்தை வளைத்து கட்டப்பட்டுள்ளதை பார்.!”



அரிஞ்சயன் அப்போதுதான் சாலையோரத்திலிருந்த அந்த சாய்ந்த முள் மரத்தை கவனித்தான்.குதிரை வேகமாக ஓடினால் அதன் கால்கள் பட்டு கொடி கட்டப்பட்டுள்ள குச்சி பிடுங்கி கொள்ளும்.குதிரையில் வருபவர்களை முள் மரம் அடித்து வீழ்த்தி விடும்.ஆதித்தன் குச்சியை பிடுங்கி அதன் செயல்முறையை காட்டிய போது அரிஞ்சயன் அதிர்ந்து போனான்.அந்த வலையை கவனிக்காமல் இருவரும் அந்த இடத்தை கடக்க முற்பட்டிருந்தால் படுகாயமடைந்திருப்பார்கள்.அரிஞ்சயன் நிம்மதி பெருமூச்சு விட்ட போது பின்னால் குதிரைகள் வரும் குளம்படி சத்தம் கேட்கலாயிற்று.இருவரும் வாளை உருவி கொண்டு வரும் எதிரியை எதிர் கொள்ள தயாராகினர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 15



ஆதித்தனின் புத்திகூர்மையால் கருணாகரன் விரித்து வைத்திருந்த வலையிலிருந்து தப்பிய சகோதரர்கள் தங்களுக்கு பின்னால் குதிரையின் குளம்படி ஒசையை கேட்டு குழப்பமடைந்தனர்.அபாயத்தை உணர்ந்த ஆதித்தனும் அரிஞ்சயனும் வாளை உருவிக் கொண்டு பாதையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த புதர்களினிடையே பதுங்கினர்.வழியின் திருப்பத்தில் இருவரும் பதுங்கியிருந்தாலும் வருபவர்கள் ஆதித்தனின் கண்ணுக்கே முதலில் தட்டுப்படுவார்கள் என்பதால் அரிஞ்சயன் புதர்களினுடாக தெரிந்த ஆதித்தனின் முகத்தை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான்.எச்சரிக்கையால் பளபளத்து கொண்டிருந்த ஆதித்தனின் விழிகளில் மெல்ல சிரிப்பு படர ஆரம்பித்தது.வாளை உரையில் போட்டு கொண்டு புதரிலிருந்து வெளிப்பட்ட ஆதித்தனின் முகத்திலும் அந்த சிரிப்பு வெளிப்பட்டது.தம்பி எதற்காக சிரிக்கிறான் என்று புரியாமல் வெளிப்பட்ட அரிஞ்சயன் வந்தவர்களை பார்த்து தங்களின் பயத்தை நினைத்து நொந்து கொண்டான்.வந்தவை இரண்டு வெறும் புரவிகள்.அவற்றின் மீது யாரும் ஆரோகணித்திருக்கவில்லை.



“இவை நம்மை தடுத்த காவலர்களுக்கு சொந்தமான புரவிகளாக இருக்ககூடும்.காவலர்களை நாம் கட்டி போட்டு விட்டதால் போக்கிடம் இன்றி திரிந்திருக்க கூடும்.நம் குதிரையின் கனைப்பொலியை கேட்டு பின் தொடர்ந்து வந்திருக்க கூடும்! “



“அப்படித்தான் இருக்க வேண்டும்.இவற்றை நாம் விரட்டி விட்டு விடலாம்.இவற்றை உடன் அழைத்து செல்வது வீண் சுமை! “



“அப்படி சொல்ல வேண்டாம் அண்ணா! நமக்கு கிடைப்பவற்றை கொண்டு நமக்கு சாதகமாக என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யலாம்.இவற்றையும் உடன் அழைத்து செல்லலாம்! “



“இந்த இடத்தில் இப்படி ஒரு அபாயம் இருப்பதை எப்படி கண்டு பிடித்தாய் ஆதித்தா? கருணாகரன் தன் குதிரையின் வேகத்தை குறைத்ததை வைத்தா? “



“அதுவும் ஒரு காரணம்.மிக முக்கிய காரணம் பத்தடி தூரத்தில் நான் பார்த்த ஒரு மண்டையோடு.கருணாகரனை பின் தொடர்ந்து இதே வழியில் சிலர் பயணம் செய்திருக்க வேண்டும்.தனக்கு போட்டியாக பயணித்தவர்களை கருணாகரன் இந்த முள் மர தந்திரத்தை பயன்படுத்தி மரண தேவனிடம் அனுப்பியிருக்க வேண்டும்.அப்படி பலியான யாரோ ஒரு வீரனின் கபாலம்தான் என்னை முன் எச்சரிக்கை செய்தது.அதற்கு தோதாக கருணாகரனும் தன் புரவியின் வேகத்தை குறைத்ததால் என் சந்தேகம் ஊர்ஜிதமானது.அந்த முள் மரம் வழக்கத்தை விட அதிகமாக சாய்ந்திருந்ததும், கொடிகள் அதிகம் இருந்ததாலும் இங்கே அபாயம் இருக்க கூடும் என்று கணித்தேன்! “



“நல்லவேளை! உன் கணிப்பால் நாம் உயிர் பிழைத்தோம்! “

இரண்டு புரவிகளையும் தங்கள் குதிரையோடு இணைத்து கொண்டு சகோதரர்கள் பாதையில் கவனம் வைத்து கடக்க ஆரம்பித்தனர்.



அதே பாதையில் இரண்டு காத தூரம் முன்னால் சென்று கொண்டிருந்த கருணாகரன் குழப்பத்தில் இருந்தான்.தன்னை தொடர்ந்து வரும் இருவரும் முள் மரத்திற்கு பலியாகி இருப்பார்களா என்ற சந்தேகம் அவனை பிடித்து ஆட்ட தொடங்கியது.குதிரைக்கு பின்னால் செடியை கட்டி தொங்கவிட்டு குதிரையின் குளம்பொலி தடத்தை மறைக்க திட்டமிட்ட கருணாகரனை பழி வாங்கும் வெறி தடுத்தது.அதனால் தடயத்தை மறைக்காமல் பயணமானான்.அப்போதுதானபின் தொடரும் எதிரிகள்் தான் வெட்டி வைக்கும் குழியில் விழுவார்கள் என்பது அவன் எண்ணம்.எதிரிகள் பிழைத்து விட்டார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க அவன் விரும்பினான்.அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது போல வந்து வாய்த்தது சமவெளி பிரதேசம்.அதன் மேட்டுபகுதியில் குதிரையை நிறுத்திய கருணாகரன் தன் வில் அம்புகளை எடுத்து கொண்டு ஒரு பாறையின் பின்னால் பதுங்கினான்.சமவெளி பகுதியிலிருந்து பார்த்தால் கருணாகரன் பதுங்கியிருப்பது யாருக்கும் தெரியாது.ஆனால் கருணாகரனால் சமவெளியில் பிரவேசிப்பவர்களை பார்க்கவும் முடியும், குறி பார்த்து தாக்கவும் முடியும்! தன் குதிரை கனைத்து காட்டி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அதன் வாயை முன்னேற்பாடாக கட்டி வைத்திருந்தான் கருணாகரன்.வழி மேல் விழி வைத்து காத்திருந்த கருணாகரன் புற்களின் சலசலப்பால் கூர்மையானான்.முதலில் புரவியில் அமர்ந்தபடி சமவெளியில் பிரவேசித்தான் அரிஞ்சயன்.கருணாகரன் தன் வில்லின் நாணை ஏற்றினான்.மனதிற்குள் புத்திசாலிகள்!எப்படியோ முள் மரத்திடமிருந்து தப்பி விட்டார்கள்.ஆனால் இந்த முறை தப்ப இயலாது என்று நினைத்தவன் அம்பை எய்ய தயாரானான்.அரிஞ்சயனை அடுத்து நுழைந்த ஆதித்தனின் சிகப்பு நிற முகமூடியை பார்த்ததும் கருணாகரனின் மூச்சு ஒரு நிமிடம் நின்றது.”கரிகாலன்! “என்றான் கருணாகரன் நடுக்கமான குரலில்!

“நான் திரும்பவும் வருவேன் கருணாகரா! விதையாக வீழ்கிறேன்.விருட்சமாக வருவேன்! “கரிகாலனின் குரல் கருணாகரனின் காதில் ஒலித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்16



தன்னால் கொல்லப்பட்ட கரிகாலன் திரும்ப வருவது சாத்தியமல்லவென்று கருணாகரனின் மூளை சொன்னாலும் மனம் நம்ப மறுத்தது.சிவப்பு முகமூடி அணிந்த இந்த மனிதன் கரிகாலனாக இல்லாவிட்டாலும் அவனது ஆப்த நண்பர்களில் ஒருவனாகவோ அல்லது புரட்சி படை வீரர்களில் யாராவது ஒருவராகவும் இருக்க கூடும் என்று கருணாகரன் மனசாந்தி அடைந்தான்.குதிரையின் மீது உட்கார்ந்திருந்த ஆதித்தனின் தோரணையும், உடல்மொழியும் கனகச்சிதமாக கரிகாலனை நினைவுபடுத்தியதுதான் கருணாகரனை குழப்பியது.ஒருவாறு தெளிவடைந்தவன் வில்லில் அம்பை பொருத்தி இருவரில் ஒருவரை குறி பார்க்க தொடங்கினான்.



அதே நேரம் சமவெளிக்குள் பிரவேசித்த ஆதித்தன் கையை அசைத்து தன் அண்ணனை நிறுத்தினான்.”என்ன ஆதித்தா? ஏன் பயணத்தை தடை செய்கிறாய்? “

காரணமாகத்தான்! இதுவோ சமவெளி பகுதி.எதிர் நிற்கும் மேட்டு பிரதேசத்திலிருந்து நம்மை தாக்குவது எளிது.நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! “



“ஆம்! அந்த மேட்டு பகுதி எதிரிக்கு சாதகமான அம்சம்! நாம் முள் மரத்திற்கு பலியாகி இருப்போம் என்று நண்பர் நினைத்திருந்தால் எந்த தடையுமின்றி தன் பயணத்தை தொடர்ந்திருப்பார்.!”



“நம் எதிரி விரியனை விட விசம் மிகுந்தவன்.தன் குதிரையின் தடத்தை அழிக்காமல் அவன் பயணிக்கும்போதே நாம் தொடர்ந்து வர வேண்டும் என்று விரும்புகிறானென்றும் அந்த விருப்பத்தின் மையமாக நம் மரணத்தை எதிர் நோக்குகிறானென்றும் பொருள்! “



“அப்படியானால் வழியில் இன்னும் சில அபாயங்களை உருவாக்கி வைப்பான் இல்லையா? “



“கண்டிப்பாக! அப்படி உருவாக்கி வைக்கும் அபாயத்தில் இதுவும் ஒன்று.நாம் தொடர்ந்து பயணித்தால் மறைந்திருக்கும் எதிரி கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை வீழ்த்தி விடுவான்.பிறகு நம் தொந்தரவின்றி பயணித்து இலக்கை அடைந்து விடுவான்.!”



“இக்கட்டான நிலைமை! இதை எப்படி சமாளிப்பது? “



“யோசித்த பின் அடுத்த அடியை எடுத்து வைப்போம்! “



சமவெளிப் பகுதியில் சகோதரர்கள் இருவரும் தங்களின் குதிரைகளை நிறுத்தி விட்டு சம்பாஷணையில் ஈடுபட்டதை பார்த்த கருணாகரன் குழப்பமடைந்தான்.ஏன் முன்னேறி வராமல் தேங்கி நிற்கின்றனர்? தான் பதுங்கி இருப்பதை அவர்கள் கண்டு கொண்டிருப்பார்களோ என்று பயந்தான்.இருவரில் ஒருவனை வீழ்த்தினாலும் போதும்.தனித்திருப்பவன் பயத்தில் வழி தவறி விடுவான் என்பது கருணாகரனின் கணக்கு! அந்த கணக்கு சில நாழிகைகளில் தூள் தூளானது.



அதே நேரம் ஆதித்தன் அரிஞ்சயனிடம் உரையாடி கொண்டிருந்தான்.



“எதிரி மேட்டு பகுதியில் நம்மை எதிர்பார்த்து காத்து கிடப்பது நிச்சயம்.அம்பெய்யும் தொலைவுக்குள் நாம் வரவில்லை என்பதால் காத்திருக்கிறான்! “



“நாம் அவனுக்கு பயந்து தாமதிக்கவும் முடியாது.முன்னால் சென்று பலியாகவும் முடியாது.எதாவது கண் கட்டி வித்தை நடந்தால்தான் உண்டு!”



ஆழ்ந்த யோசனையில் இருந்த ஆதித்தன் “அப்படி ஒரு வித்தையை இப்போது நடத்தி காட்டுவோமா? “என்றான்.



“கருணாகரனின் கழுகு கண்களை கட்டுவது சாத்தியமா? “



“கருணாகரனை குருடனாக கூட மாற்ற இயலும்! “



“அது எப்படி இயலும்? “



“வானத்தில் சுட்டெரிக்கும் சூரியன் நமக்கு உதவுவான்! “



அரிஞ்சயனுக்கு ஆதித்தனின் திட்டம் தெள்ள தெளிவாக புரிந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஆதித்தனும் அரிஞ்சயனும் செய்து காட்டிய அந்த கண் கட்டி வித்தை மறைவிடத்திலிருந்து கருணாகரனை வெளி கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அவனை குதிரையில் ஏறி ஓடவும் வைத்தது!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 17



எதிரியை ஏமாற்ற ஆதித்தன் வகுத்த திட்டத்தை ஒருவாறு யூகம் செய்திருந்தான் அரிஞ்சயன்.அதற்கு சூரியனும் உதவி செய்வான் என்று ஆதித்தன் கூறியதும் திட்டம் வெட்ட வெளிச்சமானது.அரிஞ்சயனுக்கு இருந்தது ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே!



“ஆதித்தா !நம் வித்தையின் போது குதிரையை வேகமாக செலுத்துவதா? இல்லை மெதுவாகவா? “



“குதிரைகளை உச்ச வேகத்தில் செலுத்துங்கள்.அப்போதுதான் அவனால் நம்மை குறி வைக்க இயலாது.நம்மிடம் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் விலகி ஓடவே முயற்சிப்பான்.அப்படி குதிரையில் வேகமாக பயணிப்பவனை நாம் தொடர்ந்து விரட்டுவோம்! “



“அவனை தப்பி போக விட்டு விடலாமே? “



“அப்படித்தான் விட போகிறோம்.அவனுக்கு போதிய கால அவகாசம் கிடைத்தால் நம்மை அழிக்கும் அபாயங்களை திட்டுமிடுவான்.செயல்படுத்தி நம்மை ஒழிக்க முயற்சிப்பான்.அதற்கு இடம் தராமல் நாம் நெருக்கத்தில் அவனை விரட்டி செல்வோம்.நம்மிடமிருந்து தப்பி ஓடுவதிலேயே அவனது முழு கவனமும் இருக்க வேண்டும்! “



“இது நல்ல யோசனை.அவனுக்கு ஓய்வு கொடுக்காமல் விரட்டுவோம்.வித்தைக்கு தயாரா? “



சகோதரர்கள் இருவரும் வாளை உருவிக் கொண்டனர்.



“கவனம் அண்ணா! திட்டம் இதுதான்.பளிச்சிடும் பகலவனின் வெளிச்சத்தை நமக்கு சாதகமாக்கி கொள்ள போகிறோம்.சூரிய வெளிச்சத்தை இந்த வாள்களில் வாங்கி மேட்டு பகுதியை நோக்கி பிரதிபலிப்போம்.வாள் ஒரு கண்ணாடியை போல் செயல்படும்.பதுங்கியிருக்கும் எதிரியின் கண்களை பளிச்சிடும் எதிரொளி கூச செய்யும்.அவனால் சரியாக நம்மை குறி வைக்க இயலாது.அவன் குறி தவறி அம்புகளை எய்யவே வாய்ப்பு அதிகம்.அவை நம்மீது படாமல் நாம் கவனமாக இருப்போம்.நாம் வேகமாக வருவதால் தாக்குதலை நிறுத்தி விட்டு தப்பியோடவே முயற்சிப்பான்.!”



அதே நேரம் மேட்டு பகுதியில் தயாராக இருந்த கருணாகரன் அவர்கள் வாளை உருவுவதை பார்த்து குழப்பமடைந்தான்.அடுத்த நொடியில் குதிரைகள் நாற்காற் பாய்ச்சலில் கிளம்பின.குறி பார்க்க முற்பட்ட கருணாகரன் எதிரொளித்த சூர்ய மிர்சைகளால் கண்கள் கூசியதால் முயற்சியை கை விட்டான்.விரைவில் இங்கிருந்து தப்பியோடாவிட்டால் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்து கொண்ட கருணாகரன் மின்னல் வேகத்தில் ஓடி சென்று குதிரையில் ஏறி அதை கிளப்பினான்.அப்படி தப்பியோடும் அவசரத்தில் அவன் சகோதரர்களுக்கு பின்புறமாக ஓடி வந்த இரு குதிரைகளை கவனிக்க மறந்தான்.அந்த இரு குதிரைகளும் ஒரு சக்ர வியூகத்தில் தன்னை சிக்க வைக்கும் என்பதை அப்போது கரிகாலன் உணரவில்லை.



புயல்வேகத்தில் கிளம்பிய கருணாகரனை தொடர ஆரம்பித்தன இரு புரவிகள்.



“அவனை மடக்கி பிடித்தால்தான் என்ன? “



“அப்படி நம்மிடம் அகப்பட்டாலும் தவறான வழியில் அழைத்து சென்று அபாயத்தில் சிக்க வைக்கவே முயற்சிப்பான்.மேலும் பேசவே மறுத்து விட்டாலும் நமக்கு ஆபத்துதான்! “



“நமக்கென்ன ஆபத்து வரப் போகிறது? “



“இந்த புதிர்பாதையிலிருந்து வெளியேறும் வழியை கருணாகரன் மட்டுமே அறிவான்.அவனை பின் தொடர்வதே நமக்கு நல்லது.”



“முதலில் பயணிக்கும் அவன்தான் போட்டியில் ஜெயிப்பான்.நாம் தோற்று விடுவோம்.அவனை உயிரோடு பிடிப்போம்.உயிரோடு வெளியேற வேண்டுமானால் அவன் நமக்கு உதவித்தானாக வேண்டும்.உயிர்பயம் யாருக்கு இல்லை? “



“அப்படியானால் வேட்டை விழாவை பயன்படுத்தி அவனை கொல்லும் நம் முயற்சி? “



“தற்காலிகமாக தோல்விதான்.!இந்த புதிர் பாதையிலிருந்து வெளியேற அவன் உயிரோடு இருந்தாக வேண்டும்.அவனை கொல்லும் முயற்சியில் நாம் தோற்று அவனை காப்பாற்றும் எதிர்நிலைக்கு வந்து விட்டோம்! விதியின் விளையாட்டு! “



ஆதித்தன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்18



கருணாகரனை தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் குதிரையை விரட்டி கொண்டு வந்தனர்.கண்ணுக்கு முன்பாக செல்லும் எதிரியை வளைத்து பிடிக்க எந்த முயற்சியும் செய்யாமல் ஆதித்தன் அமைதியாக இருப்பது அரிஞ்சயனுக்கு குழப்பத்தை கொடுத்தது.அந்த குழப்பத்தை அதிகரிப்பது போல் ஆதித்தன் தன் குதிரையின் வேகத்தை குறைக்க ஆரம்பித்தான்.வழியில் எதாவது ஆபத்து இருந்திருந்தால் கருணாகரன் தன் குதிரையின் வேகத்தை குறைத்திருக்க வேண்டும்.அவனோ புயல் வேகத்தில் விரைந்து கொண்டிருக்கும் சூழலில் ஆதித்தன் தன் புரவியின் வேகத்தை குறைந்தது அவனது குழப்பத்தை அதிகரித்தது.தன் சந்தேகத்தை அடக்கி கொள்ள இயலாமல் வாய் விட்டு கேட்கவும் துணிந்தான் அரிஞ்சயன்.அண்ணனின் கேள்விக்கு ஒரு புன்னகையை பதிலாக தந்த ஆதித்தன் “அண்ணா! மாலை நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.நமக்கு முன்பாக செல்லும் எதிரி தொடர்ந்து பயணிக்க மாட்டான்.ஏனென்றால் இரவின் இருளில் வழி தவறும் அபாயம் இருப்பதால் தொடர்ந்து பயணிக்க விரும்ப மாட்டான்.பத்தாண்டுகளாக இந்த பாதையை பயன்படுத்தி வரும் அவன் தனக்கு தோதான வாழ்விடத்தையோ, மறைவிடத்தையோ இந்த பாதையில் உருவாக்கி வைத்திருப்பான்.அங்கே தங்கி விட்டு காலையில் பயணத்தை தொடர்வான்.விரட்டி செல்லும் நாம் அவன் மறைவிடத்தை கண்டு பிடிக்க முடியாமல் பாதையை தவற விடலாம்.அல்லது விலங்குகளுக்கு பலியாகலாம்.அதை தவிர்க்க விரும்புகிறேன்.!”



“அப்படியானால் நீல மலை வழியில் விரைபவர்களுக்கு இரவு ஓய்வாகுமா? அல்லது போட்டி தொடருமா? “



“இரவில் போர் புரிவது மரபல்ல.இதே ஓய்வு அங்கும் அறிவிக்கப்படலாம்! இப்போது தங்கும் இடத்தை கவனிப்போம்.நல்ல சமவெளி பகுதி ஒன்றை தேர்ந்தெடுப்போம்.”



“குறிப்பாக சமவெளி பகுதியை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? “



“எதிரி நம்மை நெருங்கினால் எளிதில் தெரிந்து கொள்ளலாம்! “



சிறிது தூர பயணத்தில் அப்படியான சமவெளி ஒன்று பார்வைக்கு கிடைத்தது.முளைக்குச்சி ஒன்றில் நான்கு குதிரைகளை கட்டி போட்ட ஆதித்தன் அங்கே கிடந்த சுள்ளிகளை பொறுக்கி தீ மூட்ட தொடங்கினான்.



இருள் மெல்ல கவிய தொடங்கியிருந்தது.கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து உண்டவர்கள் படுக்க ஆயத்தமானார்கள்.



படுக்கை விரிப்பை விரித்த அரிஞ்சயனை பார்த்த ஆதித்தன் “நாம் இங்கே தூங்க போவதில்லை! “என்றான்.



“அப்படியானால் உன் யோசனைதான் என்ன? “



“இங்கே இருக்கும் பாறைகளையும், மணலையும், செடிகளையும் கொண்டு நாம் இருவரும் இங்கே படுத்திருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துகிறேன்.நாம் சற்று தூரத்தில் சயனிப்போம்.எதிரி நம்மை கொல்ல நெருங்கினால் தீ யின் வெளிச்சம் காட்டி கொடுத்து விடும்.முதல் இரண்டு சாமங்கள் நீ காவல் இரு.நான் உறங்குகிறேன்.பிறகு நீ உறங்கு.நான் காவலிருக்கிறேன்.!”



“விடியற்காலையில் எதிரி புயலென விரைந்து விடுவானே? “



“வாய்ப்பில்லை.இருந்த இடத்தை விட்டு நகரவே பலமுறை யோசிப்பான்.!”



“அது எப்படி? “



“கருணாகரன் நமக்காக வகுத்த சக்ரவியூகத்தை நான் திரும்ப அவனுக்கே வகுக்க போகிறேன்.அந்த வியூகம் அவன் பாய்ச்சலை தடுத்து நிறுத்த போகிறது! சரி நான் உறங்க போகிறேன்.!”



அவர்கள் தீயிலிருந்து விலகி சற்று தொலைவில் படுக்க ஆயத்தம் ஆனார்கள்.



அதே நேரம் கருணாகரன் தான் வழக்கமாக இரவு தங்கும் குகை பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான்.கொடிய விலங்குகள் உள்ளே வராதிருக்க முட் செடிகளை வெட்டி குறுக்கே போட்டிருந்த தடையை விலக்கி குதிரையோடு உள்ளே முடங்கினான்.அங்கிருந்து பார்த்தால் பாதை தெளிவாக தெரியும்.இருவரும் இரவில் பயணிக்க மாட்டார்கள் என்பதால் நிம்மதியாக உறங்க தொடங்கினான்.அந்த உறக்கம் நான்காம் சாமத்தில் முடிவுக்கு வர போவதையும் விநோத சம்பவங்கள் தன்னை அங்கேயே முடக்கி போட போவதையும் கருணாகரன் அறிய மாட்டான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்19



காட்டிற்குள் கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற ஆரம்பித்த அதே நேரத்தில் வாகை மரத்து புறாக்கள் மகேந்திரபுரியின் பல இடங்களில் தங்களுக்கான இலக்குகளில் அமர தொடங்கி இருந்தன.கரிகாலனின் மறைவுக்கு பிறகு புறா மூலம் தகவல்கள் வருவது நின்றே போய் விட்டது.இறுதியாக வந்த ஓலையும் “காலம் வரும்! காத்திருங்கள்! திரும்ப வருவேன்! “என்ற கரிகாலனின் வேண்டுதலோடு நின்று போனதுதான்.முதலில் தனித்து நின்ற புறாவை ஏதேச்சையாக கவனித்த கரிகாலனின் ஆதரவாளர்களில் ஒருவன் அதன் காலில் கட்டப்பட்டிருந்த ஓலையை பிரித்தெடுத்தான்.”திரும்ப வந்து விட்டேன்.மதிவாணரை சந்தியுங்கள்! “என்ற வாசகம் அதில் இருந்தது.



“அப்படியானால் கரிகாலன் உயிரோடுதான் இருக்கிறான்! “



“ஆமாம்! இல்லையென்றால் ஓலை வர வாய்ப்பில்லை! “



“அவனை கொன்றதாக தகவல் இருக்கிறதே? “



“வதந்தியாக இருக்கலாம்.முன்பே ஒரு முறை காணாமல் போன வரலாறு அநாபாயனுக்கு உண்டே? “



“ஆம்! அதை நான் மறந்து விட்டேன்.இந்த ஓலையில் மதிவாணரை சந்திக்க சொல்லியிருக்கிறதே? “



“மகேந்திரனை எதிர்க்க மதிவாணரே வெளிப்படையாக துணிந்து விட்டார் என்பதால் நாம் வெல்வது நிச்சயம்.நாம் ஆயுதங்களுடன் சென்று கரிகாலனுக்கு தோள் கொடுக்க வேண்டும்! “



“சரிதான்.இதுவே இறுதி வாய்ப்பு.சாமான்யர்களாய் மறைந்து வாழும் நம் ஆதரவாளர்களை திரட்டுவோம்.இன்று இரவு நாம் மகேந்திரபுரியை நோக்கி பயணமாவோம்! “



நாட்டின் வெவ்வேறு திசைகளில் நடைபெற்ற சம்பாசணைகள் இறுதி முடிவுக்கு வந்தன.இரவின் இருளில் மகேந்திரபுரிக்கு செல்லும் நாட்டின் அத்தனை சாலைகளும் கரிகாலனின் ஆதரவாளர்களால் நிரம்ப ஆரம்பித்தன.



அதே நேரம் மதிவாணர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.”கந்தமாறா! நாளை கரிகாலனின் ஆதரவாளர்களும், ராஜ்ஜிய விசுவாசிகளும் படை திரட்டி வந்து விடுவார்கள்.!”



“ஆம்! இப்போது தகவல் போய் சேர்ந்திருக்கும்! “



“அவர்கள் தாக்கும் இலக்குகளை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும்.!”



“உண்மை! முதல் இலக்கு எதுவென நீங்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்! “



கோட்டை, கொத்தளங்கள், படைவீடுகள் என்று எதையாவது மதிவாணர் குறிப்பிடுவார் என்று நினைத்த கந்தமாறனுக்கு அவர் குறிப்பிட்ட முதல் இலக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றியது.ஆனால் மதிவாணரின் முதல் இலக்கை வசப்படுத்தி விட்டால் இந்த உலகத்தில் எதையும் விலைக்கு வாங்கி விடலாம் என்பதை கந்தமாறன் அறிந்திருக்கவில்லை.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 20



கருணாகரன் கண்ணயர்ந்த சற்று நேரத்திற்கு அப்பால் முதல் சாமம் தொடங்கியது.அதே நேரம் ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களை போன்ற இரண்டு உருவங்கள் தூங்குவது போன்ற ஏற்பாட்டை செய்து விட்டு சற்று தொலைவில் வந்து பதுங்கினர்.சமவெளி பகுதியில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.அருகே நான்கு குதிரைகள் கட்டப்பட்டு இரண்டு பேர் படுத்திருப்பதான தோற்றம் இங்கிருந்தே காண கிடைத்தது.வேறு யாராவது நெருங்கினால் இங்கிருந்தே பார்க்கவும், தாக்குதல் நடத்தவும் தோதான இடத்தை தேர்ந்தெடுத்தவர்கள் படுக்கையை விரித்தனர்.”அண்ணா! முதலில் நான் தூங்க போகிறேன்.இரண்டு சாமங்களுக்கு பிறகு என்னை எழுப்பு! “என்ற ஆதித்தன் கண்ணயர்ந்தான்.ஆதித்தனின் ஆயுதங்களை பார்வையிட்ட அரிஞ்சயனுக்கு ஒரே ஒரு வாள் மட்டும் தன் கூர்மையை சற்று இழந்திருப்பது குழப்பத்தை தந்தது.அப்படி அந்த வாளில் ஆதித்தன் எதை செய்திருப்பான் என்று யோசித்தவன் தன் தம்பி எதை செய்தாலும் காரணமின்றி செய்ய மாட்டான் என்று மனதை சமாதானம் செய்து கொண்டான்.வில் அம்பை கையில் ஏந்தி வெகு கவனமாக தன் காவல் வேலையை செய்ய ஆரம்பித்தான் அரிஞ்சயன்.சில்வண்டுகளின் ரீங்காரமும், மிருகங்களின் ஓலமும் இருளும் சேர்ந்து சூழ்நிலையை பயங்கரமாக்கி கொண்டிருந்தன.இருள் நடுவே பிரகாசித்த கண்களை அடையாளம் கொண்டு செந்நாய்களையும், நரிகளையும் அரிஞ்சயன் அம்பின் உதவியால் வீழ்த்த தொடங்கினான்.



அதே நேரம் விலங்குகளின் ஓலத்தால் தூக்கம் கலைந்த கருணாகரன் சகோதரர்கள் இந்த பாதையில் தொடர்ந்து பயணித்திருப்பார்களோ என்று ஐயப்படலானான்.அரிஞ்சயன் நரிகளையும், செந்நாய்களையும் அம்பினால் வீழ்த்திய போது அவை எழுப்பிய கர்ணகொடூர ஓலத்தால் கருணாகரன் குழப்பமடைந்தான்.எச்சரிக்கையாக வாளை எடுத்து கொண்டவன் முட் செடிகளை விலக்கி விட்டு பாதைக்கு வந்து கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தான்.ஒரு காத தூரத்தில் நெருப்பு எரிவது விட்டு விட்டு தெரிந்தது.அப்பாடா! எதிரிகள் ஒயௌவெடுக்கிறார்கள் என்று ஆசுவாச பெருமூச்சு விட்ட கருணாகரன் மீண்டும் குகைக்கே திரும்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டான்.தன்னை முந்தி கொண்டு சென்றாலும் இலக்கை அவர்களால் அடைய முடியாது என்பதும் மற்ற மூன்று பாதைகள் இந்த பாதையுடன் குறுக்கும் நெடுக்குமாக பிணைக்கப்பட்டிருப்பதால் தொலைந்து போகவே வாய்ப்பு அதிகம் என்பதையும், தவறான பாதைகளில் உள்ள அபாயங்கள் அவர்களை கொன்று விடும் என்பதையும் கருணாகரன் மட்டுமே அறிவான்.



விபரீதத்தை விளைவிக்கும் மூன்றாம் சாமம் தொடங்கியது.அங்கே ஆதித்தன் காவலுக்கு வந்து அரிஞ்சயன் உறங்க தொடங்கினான்.உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த கருணாகரனின் காதுகளில் விழுந்தது அந்த சத்தம்.இரண்டு குதிரைகள் ஒன்றாக ஓடி வரும் குளம்பு சத்தம்.கருணாகரன் கண்களை கசக்கி கொண்டு பார்த்த போது இரண்டு குதிரைகள் பெரும் கனைப்பொலியோடு பாதையை கடந்து ஓடுவதை பார்த்தான்.அதன் மீது இருவரும் இருந்தார்களா இல்லையா என்பதை இருளினால் சரியாக பார்க்க முடியாமல் போய் விட்டது.கடந்து போகிறவர்கள் சரியான பாதையை கண்டறிய முடியாமல் தனக்காக காத்திருக்கலாம் என்பதை கருணாகரன் உணர்ந்தான்.அதே நேரம் அவன் மூளை வேறு மாதிரி சிந்தித்தது.சகோதரர்களில் ஒருவன் ஒரு குதிரையில் பயணித்து முன்னால் போய் காத்து கொண்டிருக்கலாம்.இன்னொருவன் பின்னாலிருந்து தன்னை வளைக்கலாம்.ஆனால் அப்படியான திட்டத்திற்கு வாய்ப்பில்லை.அவர்களிடமிருந்தது இரண்டு குதிரைகள்தானே? அதை வைத்து கொண்டு அப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று நினைத்தான்.காலையில் நேரான வழியில் அவர்களின் கண்களில் படாமல் பயணிக்க வேண்டும் என்று நினைத்த படி கருணாகரன் உறங்க தொடங்கினான்.



மறுநாள் சூரிய உதயத்தின் போது எழுந்த அரிஞ்சயனை அதிர்ச்சி தாக்கியது.அவர்கள் கட்டி வைத்திருந்த நான்கு குதிரைகளில் இரு குதிரைகளை காணவில்லை.படுத்திருப்பதாக நம்ப வைக்க செய்த போலி படுக்கைகளையும் காணவில்லை.



“நம்மை விட பெரிய கள்வர்கள் காட்டில் இருப்பார்கள் போலிருக்கிறதே? “என்றான்.



“இல்லை அண்ணா! நான் அந்த புரவிகளின் மூலம் ஒரு சக்ர வியூகத்தை போட்டிருக்கிறேன்.அதில் கருணாகரன் அகப்படுவான்! “



“எனக்கு புரியவில்லை ஆதித்தா? “



“போலி படுக்கைகளை குதிரைகளில் ஏற்றி அனுப்பியிருக்கிறேன்.அவை கருணாகரனை தாண்டி சென்றிருக்கும்.நாம் முன்னால் இருப்பதாக நினைத்து மெதுவாக செல்வான்.நாம் அவனை பின்னாலிருந்து மடக்குவோம்! “



“போலி படுக்கைகளை ஏன் குதிரைகளில் ஏற்றினாய்? “



“நம் நண்பர் சாதாரணமான ஆளா? காலையில் கடந்து போன குதிரைகளின் குளம்படிகளை ஆராய்வார்.அவை ஆழமாக புதையுண்டிருக்காவிட்டால் ஆட்கள் பயணம் செய்யவில்லை என்பதை அறிந்து கொண்டு எச்சரிக்கையாகி விடுவார்.குதிரைகளின் கனத்தை கூட்டவே போலி படுக்கையை கட்டினேன்.!”



“நல்ல காரியம் செய்தாய்! “என்ற அரிஞ்சயன் கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்ய துவங்கினான்.ஆதித்தன் குறிப்பிட்டது போலவே கருணாகரன் குதிரைகளின் குளம்படியை சோதித்து திருப்தியடைந்தவனாக பயணத்தை தொடங்கினான்.அப்போது கருணாகரன் சக்ரவியூகத்தினுள் சிக்க போவதை அறிந்திருக்கவில்லை!
 
Top Bottom