Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL நாரிகை - Tamil Novel

Status
Not open for further replies.

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 10

கண்மணி மிரண்டு போனாள். லதா அறைக்கு வெளியே நின்று நடக்கும் கூத்தை கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். லதாவின் மனம் எதையோ அவளுக்கு சொல்லியது. என்ன நினைத்தாலோ சட்டென்று கண்மணியை வெளியே அழைத்தாள்.

“என்னம்மா?“

“நம்ப வீட்டுக்கு போவோம்?“ ஒற்றை பதில் மட்டுமே லதாவிடம் வந்தது. அவள் மிகவும் பயந்து போய் இருந்தாள். அது கண்மணிக்கு புரிந்தது. அவள் என்ன பதில் சொல்வது என்ற யோசனையில் இருந்தாள் அதற்குள் லதாவே மீண்டும் கணைகளை தொடுத்தாள்.

“என்னடி யோசிச்சிட்டு நிக்கிற? இந்த பைத்தியகார பயலோடோ இனியும் நீ வாழ போறியா? முடியாது? நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நம்ப இங்க இருந்தோம், நம்ப உயிருக்கும் ஆபத்து. பைத்தியகார பய.. பைத்தியகார பய“, அவ்வளவு தான் லதா சொற்களை அடுக்கி கொண்டே போக போக கண்மணிக்கு கோப உஷ்ணம் தலைக்கு மேல் ஏறியது.

“போதும் நிறுத்து“ என்று கண்மணி சொன்ன அந்த சொல் எக்கோவே அடித்தது. “இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது, நீ உன் வீட்டுக்கு போ“ தன் அம்மாவே தன்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்ற ரணம் வார்த்தைகளாய் வெளியேற கண்களை கண்ணீரும் சூழ்கொண்டது. லதா விழிகள் திடீரென்று அகண்டது, கண்மணி தன் அம்மாவின் விழிகளையே கூர்ந்து பார்த்தாள். கண்மணியின் முதுகின் பின்னால் சத்தியேந்திரன் நின்று இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை இது நேரம் வரை கேட்டுக்கொண்டு இருந்தான். கண்மணி திரும்பி சத்தியேந்திரனை பார்த்தாள் அவன் முகம் முழுவதும் கலவரம். இவளுக்கு என்ன சொல்லி அவனை சமாதானம் செய்வது என்றும் புரியவில்லை அவன் தலையை தொட்டு தொட்டு பார்த்தான். அவன் முகத்தை கைகளால் துடைத்து துடைத்து விட்டான். கண்மணி அவன் அருகே நெருங்க ஒரு அடி எடுக்க, அவன் தன் வலது கையை உயர்த்தி முன்னேறாதே என்று தடை போட்டான்.

“சத்யா நான்? அம்மா?“ அவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. வார்த்தைகள் திக்கி திக்கி வெளியேறின. மீண்டும் அந்த கைகளை ‘நிறுத்து‘ என்பது போல் ஆட்டினான். அறையின் பின்பக்கம் திரும்பி இடுப்பில் கைவைத்து தன் உதட்டை கடித்துக்கொண்டு நின்றான். கண்ணீர் கசிந்தோடிக்கொண்டு இருந்தது. இத்தனையும் நடந்துக்கொண்டே இருக்க லதா ஒரு பக்கம் வீட்டின் உள் சென்று தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் கணவன் இட, வலம் ஆடும் ஊஞ்சல் போல மனம் ஓயாது விசும்பி கொண்டு இருந்தது. லதா மற்றபடி எதுவும் சொல்லவில்லை கைபையுடன் வெளியேறினார். அவளை தடுக்கவும் முடியவில்லை, இவனை சமாதானம் செய்யவும் முடியவில்லை. சத்தியேந்திரன் படால் என்று அறைகதவை அடித்து சாத்தினான். கதவை தட்டு தட்டென்று தட்டினாள், அவன் உள்ளிருந்து “நீயும் போ..நீயும் போ..“ என்று கத்தினான்.

“நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்.. உங்கள விட்டுட்டு நான் போகவே மாட்டேன். விட்டுட்டு போறதுக்காக உங்க கையபிடிச்சி இந்த வீட்டுக்குள்ள வரல உங்க கூடவே கடைசிவரைக்கும் இருக்க தான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன். எந்த சமயத்துலயும் நான் உங்கள விட்டு போகவே மாட்டேன் சத்யா. கதவ திறங்க சத்யா..“ கதவில் தலைமுட்டி கண்ணீர் வடித்தாள். அவன் அந்த பக்கம் கண்கள் கலங்கி நின்று கொண்டு இருந்தான்.

மெல்ல அந்தி வானம் மஞ்சளை பூச தொடங்கியது. மெர்ஸி வேலை முடிந்து ஹாஸ்பிட்டலை விட்டு வந்தாள். ஆட்டோவுக்கு நின்று கொண்டிருக்கும் போது பைக்கொன்று அவளை நெருங்கி வந்து நின்றது. அவள் கண்டுக்கொள்ளாதது போல் நின்றாள். விடாமல் ஹாரன் எழுப்பியது. மெர்ஸி திரும்பி அந்த பைக்கில் இருந்த ஆளை பார்த்தாள்.

“சங்கடம் கொடுக்க வேண்டியது அப்பறம் சமாதானமும் படுத்த வேண்டியது.“ பைக்கில் இருந்தவன் ஹெல்மெட்டை கழட்டினான். பெர்னட் தான் வந்திருந்தது.

“என்ன உனக்கு சங்கடம் கொடுத்தாங்க? அந்த காபி டம்ளர் எடுத்து கொடுக்கலையே அதுவா“

பைக்கை திருப்பி ஸ்டார்ட் செய்து உர்..உர்..என்று சத்தம் கொடுக்க ஆக்ஸிலேட்டரை விடாமல் திருவிக்கொண்டு இருந்தான். மெர்ஸி பைக்கில் ஏறி அமர்ந்தாள் அமரும் போதே “அந்த காபி டம்ளர் மட்டும் தான் என்னோட பிரச்சனையா?“ என்றாள். பைக்கை மெல்ல அவ்விடம் விட்டு கிளப்பினான்.

“உங்க அம்மா? நான் அவங்கள எப்படி பார்த்துக்குறேன் அவங்க என்ன எப்படி பார்த்துக்குறாங்க ஹீஉம் சொல்லு. நான் காலையிலயே எல்லா வேலையும் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு வந்து திரும்ப வீட்டுல இருக்க வேலையையும் பாக்கனும் அவங்க காபி குடிச்ச டம்ளர கூட சிங்குல போட மாட்டாங்க. எங்க அம்மா வீட்டுக்கு போய் முழுசா ஒரு வருஷம் ஆக போகுது உங்களுக்குள்ளயே என் வாழ்க்கை முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு. ஞாயிற்று கிழமை ஃபிரியா இருக்கும் போது வெளிய போகலாமான்னு நினைப்பேன் நீ உன் பிரண்ட்சோட கிரிக்கேட் ஆட போயிடுவ பெரிய கபில் தேவ்.“ வரும் வழி நெடுகிலும் பேசிக்கொண்டே வந்தாள். அவன் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டிக்கொண்டே வந்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து வண்டி நின்றது. மெர்ஸி இறங்கினாள் “ஒரு இருநூறுவா குடேன்.“ என்றான்.

“எதுக்கு?“

“அம்மாவுக்கு பழம் வாங்க?“

“டேய் முந்தாநாள் தானடா வாங்கிட்டு வந்து போட்ட“

“என்னடி திங்கிறதுக்கு எல்லாம் கணக்கு பண்ற?“ இருவரின் பேச்சுக்கு குறுக்காக அப்பார்ட்மெண்ட் பிள்ளைகள் பேட்டையும் ஸ்டெம்பையும் தூக்கி கொண்டு அங்கும் இங்கும் திரிந்து ஓ என்று சத்தம் எழுப்பி கிரிக்கெட் விளையாட இடம்பிடித்துக்கொண்டு இருந்தனர். காதுகளை பொத்திக்கொண்டு கத்தலாக சொன்னாள்.“நான் திங்கிறதுக்கு சொல்லல, அவங்களுக்கு ஏற்கனவே கிட்னில பிராப்ளம் இருக்கு. டாக்டர் நீர் பொருட்கள் அதிகமா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லிருக்காரு. ஆனா உங்க அம்மாவ பாரு பிரிட்ஜ்ல எந்நேரமும் கூல்டிரிங்ஸ் இருக்கனும் பழம் இருக்கனும். வயசாயிட்டா வாய கட்டுபடுத்தனும், நம்ப இப்போ இருக்க நிலைமைக்கு பெரிய செலவ இழுத்துவிட்டாங்கன்னா எங்க போறது.“

மெர்ஸி அடுக்கி கொண்டே போக பெர்னட் நெழிந்து கொண்டு நின்றான். அப்போது சிறுவன் ஒருவன் வந்து “அங்கிள் இது எங்க பிளேஸ் நகருங்க“என்றான்.

“இருடா இவன் வேற தலைவலி“ சலித்துக்கொண்டு சொன்னான்.

“நான் நல்லத சொன்னா உனக்கு தலைவலி தான், நீ அனுபவிக்கும் போது தான் தெரியும்“ கடுகடுவென பொரிந்துக்கொண்டே கைபையில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவன் பைக் மீது வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.

“எவ்வளவு சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டா?“ என்று புலம்பிக்கொண்டே வண்டியை நகர்த்தினான். மெர்ஸி லிப்டை விட்டு இறங்கினாள். மேரியும் பக்கத்துவீட்டு பெண்ணும் ஏதோ தங்களை மறந்து கதைவைத்துக்கொண்டு இருந்தனர். மெர்ஸி சற்று நெருங்கியபோது அவர்கள் பேசுவது அறைகுறையாக காதில் ஏறியது.

“அவ தான் சரியான சோவை, நீர்கட்டி இருக்குன்னு சொன்னாங்க.“

மேரி பேசிக்கொண்டே போக, அவள் முகத்தின் முன் நின்ற பெண் கண்ணால் ஜாடைக்காட்டினாள். சற்று நேரத்தில் பிளேட்டையே மாற்றிப்போட்டால் மேரி, “என் மருமக காலையிலயே எல்லாம் செஞ்சிட்டு போயிடுவா. என் மேல பிரியம் தான்“, என்று அவள் வந்ததை அறியாதவள் போல அடுத்த கதையை விட்டுக்கொண்டு இருந்தாள். செருப்பை அவிழ்த்த போது சுவற்றில் அடித்து அங்கும் இங்கும் சிதறியது. விடுவிடுவென்று உள்ளே சென்று கிட்சனை பார்த்தாள், சிங் முழுவதும் சாமான் நிரம்பி போய் இருந்தது. திடுபுடுவென அதையும் இதையும் தூக்கி அடித்துவிட்டு அறைக்கு வந்து கதவை மூடினாள் கதே கிழியும் சத்தம் எழுப்பியது. கதவு இருக்கா இல்லை போயிட்டா என்று கூட மேரிக்கு தோன்றியது. சிறிது நேரம் கழித்து பெர்னட் வீடு வந்தான். கிட்சனில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள் மெர்ஸி அவள் அருகே வந்தான்.

“இந்த பாரு இந்த புரூட் சாப்பிட்ட கரு ஸ்டாங்காகுமா“ என்று பழத்தை எடுத்து கையில் வைத்து காட்டினான். காலையில் டீ போட்ட பாத்திரம் ஈரம் இல்லாமல் கிடந்ததால் நன்றாக காய்ந்து போய் இருந்தது. அழுத்தி பிடித்து தேய்த்துக்கொண்டு இருந்தாள்.

“என்னடி பேசமாட்டுற இந்த தடவை கன்பார்ம் ஆயிடும்ல“

பால் பாத்திரத்தை படீர் என்று கீழே ஒரே போடு தான். ஒரு நிமிடம் பெர்னட்டே பதறி போனான்.

“மெசினா, நான் மெசினா உனக்கு எப்படி இருந்தாலும் நான் புள்ள பெத்து கொடுத்துடனும். உங்க அம்மாவுக்கு ஊழியம் பண்ணனும், சம்பாதிக்கனும். ஆ…ஆ.. என்னால முடியல மெண்டல் டார்ச்சலா இருக்கு. நான் உங்களால பைத்தியம் ஆக போறேன்.“
தலையை பிடித்துக்கொண்டு காட்டு கத்தலாக கத்தினாள்.

“ஏன் இப்போ டென்சன் ஆகுற?“ பெர்னட் சமாதானம் செய்யும் நோக்கில் அமைதியாக பேசினான்.

“காலையில எழுந்தரிச்சா பீரியட் வந்துடுமாங்குற நைட் படுக்கும் போது பீரியட் வந்துடுமாங்குற. கேவலம் செக்சு கூட கால்கூலேசன் போட வேண்டியதா இருக்கு. உங்க அம்மா ஊரு பூரா எனக்கு வியாதி இருக்குன்னு கதை வேற வைக்கவேண்டியது? எனக்கா பிரச்சனை சொல்லு எனக்கா பிரச்சனை. கல்யாணம் ஆகி மூனு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள நூறு ஹாஸ்பிட்டல் படுற பாடுபூரா நான் தானே. எவ்வளோ கஷ்டம் இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன் ஏன்னா நீ ஆம்பளன்னு நிரூபிக்கனுமே அதுக்கு உனக்கு புள்ள வேணும். டிரிட்மெண்ட் பண்ணிட்டு வந்தேனே எங்கயாவது எனக்கு ரெஸ்ட் கொடுத்திங்களா?“ இடைவெளி இல்லாமல் கத்தி கத்தி தன் கோபத்தை தீர்த்துக்கொண்டு இருந்தாள்.

“எல்லாத்துக்கும் எரிஞ்சி விழு அதனால தான் நமக்கு புள்ளையே பொறக்கல போல“ என்று கடுப்படித்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான். அப்படியே சரிந்து கிட்சனில் உட்கார்ந்தாள் மெர்ஸி.

இரவு உணவை தயார் செய்து வைத்து விட்டு தன் அறையில் வந்து படுத்து விட்டாள். அம்மாவும், பையனும் சாப்பிட்டு விட்டு பெர்னட் பெட்ரூமிற்கு வந்தான். மெர்ஸி படுத்து கண்களை மூடி இருந்தாள். அவன் மெர்ஸி தோள்களில் கைகளை வைத்தான். அவள் திரும்பவில்லை. “மெர்ஸி இன்னைக்கு நம்ப ஒன்னாயிருக்கனும் டாக்டர்...“ அவன் அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள் நேராக படுத்து “ஊம்.. வா...“ என்றாள். நடுநிசி மெர்ஸி உறக்கம் இன்றி பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டு இருந்தாள். பெர்னட் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். சாப்பிட்டியா என்று கூட யாரும் கேட்டவில்லையே என்று எண்ணினாள். கண்கள் முழுவதும் நீர் நிரம்பி கன்னங்களை தொட்டு ஓடிக்கொண்டு இருந்தது.

கண்மணி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்த படியே அமர்ந்திருந்தாள் விழிகளில் நீர் வடிந்தோடியது. இரவு இருவருக்கும் இதமானதாக இல்லை முள்ளை போல உடலெங்கும் குத்திக்கொண்டு இருந்தது. இருவரும் நித்திரை இன்றி ஆளுக்கொரு இடத்தில் இருந்தனர். பெண் மனம் எப்போதுமே பிரியபட்டவர்களுக்கே புரியபடாத விடுகதை தான்.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 11

கண்மணி சோபவில் அமர்ந்தபடியே நன்கு அசந்திருந்தாள். சில சொப்பணங்கள் வந்து வந்து போய் கொண்டு இருந்தது. அவள் மாமியார் பாக்யவதி சில நொடி, அவள் அப்பா சில நொடி என்று மாறிமாறி தோன்றினார்கள். வெண்நுரையை வாரி இறைப்பது போல கதிரவன் வெளிச்சத்தை எங்கும் பாய்ச்சி கொண்டிருந்தான். கண்மணி முகத்தில் சுள்ளென்று விழுந்த வெயில் அவளை அமிலிதுமலி செய்தது. டக்கென்று எழுந்து பார்க்கும் போது வாசல் கதவு நெடுக திறந்து கிடந்தது.

தூக்க கலக்கம் வேறு என்ன என்பது புரியாதபடி பேந்த பேந்த விழித்துக்கொண்டு நின்றாள். மெல்ல அடியெடுத்து வாசற்படியை நெருங்கினாள், அவள் நெருங்கவும் சத்தியேந்திரன் வாசலில் இருந்து உள்ளே நுழையவும் நேரம் தோதாக போனது. இருவரின் நெற்றி பொட்டும் முட்டிக்கொண்டது. ஒரே நேரத்தில் ஆ.. என்ற சத்தத்துடன் நெற்றியை துடைத்துக்கொண்டனர்.
கண்மணி விலகி வழியை விட்டாள்.

“ஒன்னும் இல்ல, நான் சொல்ற மாதிரி செய்யனும் நான் சார்ப்பா டென் ஓ கிளாக் ஹாஸ்பிட்டல் வந்திடுவேன். நம்ம இந்த டீயூட்டிய முடிச்சிட்டு நம்ப கிளினிக் போகலாம் சரியா?“ யாருடனோ மிக மும்மரமாக காலை வேலைகளை ஆலோசனை செய்து கொண்டிருந்தான் கைப்பேசியில். ஒரு யூகமாக அது மெர்ஸி என்று கணித்து வைத்தாள் கண்மணி.

“நேர்ல பார்க்கலாம்“ போனை அனைத்து ஊஞ்சல் பலகையில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான். கண்மணி வாஷ் பேசனில் முகம் கழுவினாள். நம்ம ஒன்னு நினைச்சா இவரு ஒன்னு செய்யுறாரே இன்னைக்கு மட்டும் இவரு எதாவது பிரச்சனை பண்ணுனா டாக்டர் லைப்பே அம்பேல் தான். என்ன செய்யலாம் விநாடி பொழுதில் கண்மணி மனம் ஏதேதோ திட்டங்களை தீட்டி பார்த்தது. இது செய்தால் சரியாக வருமா, அப்படி செய்யலாமா? என்ற யோசனைகள் வழிந்தோட கேஸ் ஸ்டவின் மேல் வைத்திருந்த பால் பொங்கி கொண்டு ஸ்ச்.. என வந்தது. அடுப்பை அணைத்துவிட்டு காபியை கலந்து கொண்டு ஓடிவந்தாள், அதற்குள் அவன் வாசற்படியை கடந்திருந்தான். இத்தனை சீக்கிரம் போகிறவரை நிறுத்தியும் எங்கு? என்று கேட்கவும் முடியாது காபிய குடிச்சிட்டு போங்கன்னு சொன்னா அதற்கு மேல கோபம் வரும். என்ன செய்வது போன வேகத்துடன் காபி கோப்பையுடன் உள்ளே நுழைந்தாள். அவளுக்கு வேலை எதுவும் புரியவில்லை, டைனிங் டேபிளில் அமர்ந்த படியே சுவர்கடிகாரத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். டிக்..டிக்.. மணி நேரம் கழிந்துக்கொண்டே இருக்க பதற்றமாகவே இருந்தது. அவன் அந்த பக்கம் நகர்ந்ததுமே மெர்ஸிக்கு போன் செய்து “உன் கையில் தான் எல்லாம் இருக்கு நீ ஒரு மாதிரி சமாளிக்கனும், உன்ன தான் நம்பியிருக்கேன்.“ என்று ஏகபோக வசனங்களை பேசியிருந்தாள். அவளும் தானும் ஒருவழியாக சமாளிக்கிறேன் என்று வாக்கு கொடுப்பது போல வார்த்தைகளை பேசியிருந்தாள். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று கைகளை பிசைந்தபடி நெஞ்சு பதைபதைக்க அமர்ந்திருந்தாள்.

ஹாஸ்பிட்டல்
வராண்டாவில் கிடந்த ஸ்டீல் சேரில் தலையை குனிந்து அமர்ந்திருந்தான் சத்தியேந்திரன். எதிரே மெர்ஸி வந்து நின்றாள் “சார் இந்தாங்க பைல்“ என்று ஏதோ கரும் பச்சை நிற கோப்பை கொடுத்தாள்.

“எல்லாம் சரியா எழுதுனியா?“ இவன் கேட்டான்.

“சில மெடிக்கல் டெர்ம்ஸ் மட்டும் நான் சின்ன ஹிண்டா நோட் பண்ணிருக்கேன்.“

“சரி..“ எல்லாம் முடியும் போது அன்வர் உள்ளே பிரவேசித்தான். விரைப்பாக எதையோ சாதித்தவன் போல எழுந்து நின்றான் சத்தியேந்திரன்.

“இந்தாங்க சார் பைல் இவங்களுக்கு எந்த கவுன்சிலிங்கும் தேவை இல்ல. பர்பக்ட்லி ஆல்ரைட் சூசைட் பண்ணனும்னு ப்ளாக் மெயில் பண்றாங்க அவ்வளவு தான், உண்மையா சூசைட் பண்றவங்க சொல்லிட்டே இருக்க மாட்டாங்க செத்துபோயிடுவாங்க“
என்றான் அதிகார தோணியில். கோப்பை அன்வர் கையில் கொடுத்துவிட்டு மெர்ஸியும், சத்தியேந்திரனும் அந்த கிளினிக்கை விட்டு வெளியேறினார்கள். வழி நெடுகே மெர்ஸிக்கு ஆச்சரியம் இவனா இன்று இப்படி நடந்துக்கொண்டான் என்று கண்மணியிடம் சொல்லவேண்டும் என்று மனம் துடித்தது.

“சார் ஐ அம் சிக், லீவ் ஃபார் அஃப் டே“ ஏதோ பள்ளிகூட பிள்ளைகள் டீச்சரிடம் கேட்பது போல கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“ஏன் இப்போ என்ன நடந்ததுன்னு போய் யாருகிட்டயாவது சொல்லனுமா?“

“இவன் தான் ஜகஜால கில்லாடியாச்சே இவனிடமா தப்பிக்க முடியும்?“ என்று மனதுக்குள் நினைத்ததை எப்படி எக்ஸ்ரே எடுப்பது போல சொல்கிறான் பாரு என்று நினைத்துக்கொண்டு நுனி நாக்கை கடித்தாள்.

“நான் கிளினிக் போறேன்.“

“நான் சும்மா சொன்னேன் சார், அதவிட பெரிய பொறுப்பு இருக்கு“
“என்ன? என்ன காவல் செய்யுறதா?“
இவனிடம் இதுக்கு மேல் வாய கொடுக்க கூடாது, கொடுத்தால் துருவி துருவி எதையாவது நம் வாயலையே கறந்து விடுவான். வாயிக்கு பூட்டு போட்டது போல அமர்ந்துக்கொண்டாள்.

மணி பிற்பகல் 3 கடந்தது.

வெளியில் இப்போது தான் ஹாரன் சத்தம் கேட்டது. காலையில் இருந்து யோசித்தபடியே உட்கார்ந்துவிட்டு இரண்டு மணிக்கு தான் எதையோ சமைத்து சாப்பிட கையை எடுத்தாள். ஹாரான் சத்தம் கேட்டதும் சோற்றை தட்டிலேயே உதறிவிட்டு வெளியில் ஓடி பார்த்தாள். சத்தியேந்திரன் தான் மெர்ஸியும் கூடவே வந்தாள்.

சத்தியேந்திரன் கண்மணியை கண்டுகொள்ளாதது போல் சென்று ரூமின் கதவை அடைத்துக்கொண்டான். “என்ன உங்க சார் படுவேகமா போறாரு..“

“நம்பவே மாட்டிங்க?“

“எத?“

“நான் சொல்றத?“

“சொல்லு நம்புறேன்.“

“இங்கயே வா? உள்ள போகலாம் ஒரு கப் காபி “

“தாரளமா??“

நேராக கண்மணி கிட்சனுக்கு சென்று அரக்கபறக்க காபியை கலந்தாள். மெர்ஸி அருகே வந்து நின்றாள்.

“சார் இன்னைக்கு பின்னிட்டாரு. அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன கேஸ்சையும் அட்டன் பண்ணிட்டு, ஹாஸ்பிட்டல் போயி கேஸ்சும் பார்த்துட்டு. அப்பப்பா ஆச்சரியம் போங்க“

“நிஜமாவா?“

“சத்தியமா? சாருக்கு எந்த பிராப்ளமும் இல்ல ஸ்ட்ரெஸ்ல தான் இருக்காரு அதுவும் இப்ப சரியாகிட்டு“

கண்மணி நிம்மதி பெரும் மூச்சொன்று விட்டாள். மெர்ஸிக்கு தனது கஷ்டங்களை கண்மணியிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது. இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

“சரி, நீங்க எப்படி சார் மேல இவ்வளவு அப்பக்ஸன் வச்சிருக்கிங்க? இத்தனை வருஷத்துல உங்களுக்கு சலிப்பு தட்டலையா வாழ்க்கை“

“எப்படி சலிப்பு தட்டும் வாழ்க்கைய பிடிச்சி வாழ்ந்தா? கஷ்டம் யாருக்கு தான் இல்ல சொல்லு? அதனால வாழ்க்கைய வெறுத்துட்டா வாழ்ற காலம் எல்லாம் நரகம் தான். நான் இவர விடாபிடியா பிடிச்சிருக்கேன்னா அவர எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். நான் அவர ரொம்ப நேசிக்கிறேன், அவரும் தான். உங்க சார் ரொம்ப வித்தியாசமான டைப் அதிகமா என்னோட சந்தோஷத்தை பத்தி யோசிப்பாரு. கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு புருஷன் குழந்தைன்னு அடைபட்டு கிடக்க பிடிக்காதுன்னு சொன்னேன். எல்லா பெண்களுமே இளமை வேகத்துல சொல்ற வசனம்னு நான் நினைக்கிறேன். அத பிடிச்சிகிட்டாரு நான் சராசரி பெண்டாட்டியா இருக்கது அவருக்கு பிடிக்கல வீட்டுவேலை புள்ள, புருஷன், மாமியார்னு நான் ஒரு வட்டத்துக்குள்ள இருக்கத அவரு விரும்பல நான் வேலைக்கு போகனும்னு நினைச்சாரு, என்னோட வாழ்க்கைய வாழனும்னு நினைச்சாரு? எனக்கு அது இப்போ பிடிக்காம போயிட்டு அவருக்காக வாழனும்னு எனக்கு ஆசை. இப்படி சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தான் பெரும் கிளர்ச்சியா போயிடுச்சி“

“சார நீங்க டிவோர்ஸ் பண்ண போறிங்களா?“

“நீ என்ன நினைக்கிற?“

“மாட்டிங்க?“

கண்மணி சிரித்தாள் “அவரு விடாபிடியா இருந்தா விட்டுகொடுக்கலாம்னு இருக்கேன்.“
“அப்படின்னா?“

“அப்படி தான்..“ இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது காற்றில் தோய்ந்து வந்த அந்த பாடல் இருவரின் காதிலும் விழுந்தது.


“சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், ஒத்தார் போல் சிரிப்பு வந்தது. “சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னு இல்லையேல்ல அக்கா“. அவர்களின் அன்னியோன்னியத்தின் ஒருமணி நேர பேச்சிலையே மெர்ஸி, கண்மணியை மேடம் என்று அழைப்பதை விட்டாள். இந்த நான்கு வருடங்களில் மெர்ஸி சத்தியேந்திரன் வீட்டிற்கு இரண்டு மூன்று முறை தான் வந்திருப்பாள். கண்மணியுடன் அத்தனை நெருக்கம் கிடையாது. கண்மணியின் மாமியார் ஆர்த்ரைடிஸ் பிராப்ளம் வந்து படுக்கையில் விழுந்தபோது சத்தியேந்திரன் கண்மணி இடையே விரிசல் விழுந்த போது மெர்ஸி தூதுவன் ஆனாள். அப்போதிருந்து இவர்களின் நட்பு வளர்ந்தது. அப்பப்போ மேடம் என்பால் அதிகபட்ச அன்பில் அக்கா என்பாள்.

“உண்மை தான் சினிமாவுல இருக்கதெல்லாம் வாழ்க்கையில இருக்கும்னு எதிர்பார்த்தா எப்படி? ஆனா அப்படி இருக்கனும்னு நினைச்சா அதுல தப்பு என்ன? ஆண்பெண்ணோட விருப்பு வெறுப்புகள் ஒரே மாதிரி இருக்காது இல்லையா? நம்ம விருப்பத்த அவங்கமேல திணிக்க முடியாது இல்லையா?“

“முடியாது தான் ஆனா புரிஞ்சுக்கலாமே? ஒரு வேளை கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சிருந்தா?“ வாக்கியத்தை பாதியோட நிறுத்தி சலிப்பு தட்டி மூச்சி விட்டாள்.

“எத சொல்லுற நீ, ஒவ்வொரு முறையும் ஐயூஐ பண்ணும்போது மனசாலையும், உடம்பாலையும் பாதிக்கிறேன்னு சொல்ற அதே பெர்னட் பத்தி யோசிச்சியா. ஆண்களுக்கு தாம்பத்தியம்கிறது சந்தோஷம் தர வகையில இருக்கனும், ஆனா குழந்தைக்காக பெர்னட் அதையும் ஒரு கால்குலேசனா பார்க்குறாருன்னா எவ்வளவு பக்குவபட்டு போய் இருக்கனும். நான் நினைக்கிறேன் அவரு ஆம்பளன்னு நிரூபிக்க குழந்தை பெக்கனும்னு நினைக்கல நீ எங்கயும் தலைகுனிஞ்சிட கூடாதேன்னு நினைக்கிறாரு. இந்த சமுதாயம் தான் குழந்தை இல்லன்னா மலடி பட்டம் கொடுத்து பட்டமளிப்பு விழாவே செஞ்சிடுமே. ஆம்பளைக்கு தகுதியே வேலை தான் அதையும் குழந்தைக்காக, அவரு குறைய சரி செய்ய தியாகம் பண்ணலையா? அண்ட் ஒன் மோர்திங் கல்யாணத்துக்கு முன்னாடி காதல் அழகான்னு கேட்டியே அது முன்னாடியோ பின்னாடியோ காதல் எப்போதுமே நம்மள பொறுத்து தான் அழகாககுது.“

மெர்ஸி உடலில் மின்சாரம் பாய்ச்சியது போல எழுந்து நின்றாள்.

“நான் என்ன பத்தி தான் யோசிச்சேன்“ .

இப்போது கண்மணி, “நானும் என்ன பத்தி மட்டும் யோசனை செஞ்சிருந்தா சத்யாவ விட்டு போயிருப்பேன். இப்போ சொல்லு நான் சத்யாவ டிவேர்ஸ் பண்ணுவேனா?“

மெர்ஸியின் கண்ணில் ஒரு துளி கண்ணீர். தலையை இடவலமாக அசைத்தாள்.

“நான் கிளம்புறேன்“

“பெர்னட்ட பார்க்கவா?“

முல்லை பற்களை காட்டி மெர்ஸி லேசாக இழித்தாள்.

அடுத்த சில விநாடிகளில் வீடு வந்து சேர்ந்தாள் மெர்ஸி வீடே அமைதியாக கிடந்தது. கதவு திறந்தே இருந்தது உள்ளே எட்டி பார்த்தாள் மாமியார் தன் அறையில் உறங்கி கொண்டு இருந்தாள். பெர்னட் பத்து முறைக்கு மேல் கால் பண்ணி இருந்தான். அவன் மீதான கோபத்தில் அதை அட்டன் செய்யவே இல்லை. பெர்னட் நேரில் சென்றும் பார்த்திருப்பான், வாட்ச்மேன் எப்போதோ போய்விட்டதாக சொல்லியிருப்பான். மெர்ஸி அவனின் முதுகு பக்கம் போய் நின்றாள். பெர்னட் கிட்சனில் சாமான்களை விளக்கி கொண்டு இருந்தான் மெய்மறந்து.

“என்ன சார் பாத்திரம் கழுவுறிங்க?“ மெர்ஸியும் குரல் கேட்டதும் பெர்னட்டுக்கு உள்ளுர சந்தோஷம் ஆனால் அதை காட்டி கொள்ள உடனே அவன் திரும்பவில்லை. முதுகுபக்கமாக கட்டிக்கொண்டாள்.

“நீ தான் என்ன வில்லனா பார்க்குறியே?“

“எனக்கு ஹீரோவ விட வில்லன தான் பிடிக்கும்.“ இறுக்கம் இன்னும் அதிகமானது. இதழ்கள் முத்தத்தில் நனையதொடங்கியது.

விடியல் காலை கண்மணி பெட்டைவிட்டு எழுந்து நேற்றே ஒரு சந்தேகத்தின் பேரில் வாங்கி வைத்திருந்த பிரக்னஸ்சி டெஸ்ட் கிட்டை எடுத்து செக் செய்ய நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். சிலநாட்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து சத்தியேந்திரன் தள்ளி போட்டது பிரச்சனையாகி குழந்தை பிறப்பே தனக்கு கிடைக்குமா என்று நினைப்பு பற்ற ஆரம்பித்து இருந்தது. இப்படியாக போன எட்டு வருடங்களை எண்ணி கண்மணி சற்று கலங்கி தான் நின்றாள்.

கண்களை மூடி அந்த கார்டை பார்த்தாள் அச்சாக இரண்டு கோடுகள் கண்களில் பளிச்சிட்டது. சந்தோஷம் தாளவில்லை கண்மணி ஆனந்த கண்ணீர் வடித்தாள். மெர்ஸி பாத்ரூமில் கண்ணாடி முன் நின்று கண்கள் கலங்கி போய் இருந்தாள். அவள் உடையில் உதிரம் படர்ந்திருந்தது.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 12

கட்டிலின் மேல் மெர்ஸியும், பெர்னட்டும் ஆளுக்கொரு மூலையாக அமர்ந்திருந்தனர். எங்கோ காற்றில் தேய்ந்து வந்த குக்கரின் விசில் சத்தம் அரை மணி நேர மௌனத்தை களைத்தது. பெர்னட் மெல்ல தொடங்கினான் “இந்த ஒரு தடவை டிரை பண்ணுவோமா?“ மெர்ஸி கோப கண்களால் காரமாக பார்த்தாள். “இந்த தடவை எப்படியும் சக்ஸஸ் ஆகிடும்னு டாக்டர் தானே சொன்னாங்க“

“சக்ஸஸ் ஆகாது, ஆகவே ஆகாது நூறு தடவை செஞ்சாலும் குடும்பத்தோட அன்பும், அக்கறையும் இருந்தா தான் எந்த நல்லதும் நடக்கும். அது இந்த குடும்பத்துக்கு தலைகீழாச்சே, வலிக்குதுடா ஒவ்வொரு தடவையும் ஹாஸ்பிட்டல்ல அந்த ரூமுக்குள்ள எண்ட்ரி ஆகிட்டு வெளியில வரப்பேல்லாம் எனக்குள்ள நடக்குற போராட்டம், வலி, வேதனை அத எப்படி சொன்னா உனக்கு புரியும்னு தெரியல? பிரக்னன்ஸி கார்டு போட்டு போட்டு அலுத்து போயிட்டேன். சில நேரத்துல நம்பலே ரெண்டு கோட போட்டு சந்தோஷ பட்டுக்கலான்னு தோணுது“ அவளின் விசும்பல் கணமாக போனது அந்த அறைமுழுக்க. வலிகளை கண்ணீர் விட்டு தானே ஆற்ற வேண்டும்.

இப்போது அவன் “எனக்கு எந்த வலியுமே இல்லையா? வலி வலின்னு சொல்றியே பொம்பள மாதிரி வீட்டுலயே இருக்கேன். எப்போ எனக்கு தான் குறைன்னு தெரிஞ்சதோ அப்போதிலருந்து அத சரிசெய்ய, உனக்கு குழந்தை எவ்வளவு முக்கியம்னு உணர்ந்து என் வேலைய விட்டுட்டு இருக்கேன். உனக்கு உன்னோட கஷ்டம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். எனக்கு குழந்தை எவ்வளவு முக்கியம்னு உனக்கு ஏன் புரியவே இல்ல.“

“ஆமாம், எனக்கு புரியாம தான் உன் குறைய மறைச்சி எனக்கு மலடி பட்டம் கட்டிக்கிட்டு இருக்கேன்ல இப்படி தான் பேசுவ“

“ஓ.. உனக்கு இப்போ இது தான் பிரச்சனை சரி..சரி..சரி.. நீ என் குறைய பொறுத்துகிட்டு என்கூட இருக்க வேண்டாம் அப்படி நீ எந்த தியாகமும் செய்யவும் வேண்டாம்“ திடீரென்று நொடி அமைதி.

அந்த அமைதியை நிலைகுலைய செய்வது போல மெர்ஸி தலையில் இடியே விழுவது போல இருந்தது அவனின் வார்த்தை. “நம்ப பிரிஞ்சிடலாம் மெர்ஸி“ சொன்னவன் அவள் பதிலுக்காக சிறிதும் காத்திருக்கவில்லை விடுவிடுவென்று வெளியில் வந்தான். தன் அம்மாவும், பக்கத்துவீட்டு பெண்ணும் கதை பேசிக்கொண்டு இருந்தனர். காரணமே இல்லாமல் இருவரையும் மாறி மாறி சிறிது நேரம் பார்த்தான்.

“நான் தான் மலட்டு பய எனக்கு புள்ளயே பொறக்காது இனிமே பொம்பளைக்கு புள்ள பொறக்கலன்னா மலடின்னு சொல்றிங்கல்ல, இனிமே ஆம்பளையையும் மலடன்னு சொல்லுங்க", எதை எதையோ உளறினான். அந்த பக்கத்துவீட்டு பெண் மேவாயில் கைவைத்து பிராக்கு பார்த்து நின்றாள்.

மெர்ஸியின் கண்கள் அழுது அழுது சிவந்து போய் இருந்தது. தேம்பல் இன்னும் இன்னும் அதிகமாக தொண்டைக்குழிக்குள் ஒரு வித வலியை சேர்ந்தது.

என்ன இத்தனை நாழி உறங்கி கொண்டு எழவில்லையே என்று சத்தியேந்திரனை பற்றி யோசித்து கொண்டு இருந்தாள் கண்மணி. மெல்ல டர்.. என்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தாள். வாயில் ஒரு பக்கம் வெள்ளை நுரை தள்ளி இருந்தது. வாரிப்போட்டது விழி பிதுங்கி அவள் நின்றிருக்கும் நொடியே டொக்..டொக்….என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. முகம் வியர்த்தது வேக வேகமாக வாசற் கதவை திறக்க சென்றாள். டக்... கதவை திறந்த போது எதிரே அன்வர் மற்றும் இன்னும் சில காக்கி சட்டை தலைகள் தென்பட்டது.

“என்ன?“

“உள்ள சத்தியேந்திரன் இருக்காறா?"

"ஹும்..." பதற்ற ரேகைகள் படர்ந்து இருந்தது இழுத்து சொன்ன போது அவள் கண்கள் கலங்கியது "இன்னும் எழவே இல்ல, எழுப்புனா எழ மாட்டைங்கிறாரு சார், வாயில ஏதோ நுரை மாதிரி இருக்கு?“ அவள் உதடுகள் நடுங்கியது பயமும் பதற்றமும் பற்றி பதறினாள்.

“மை காட்..“ அன்வர் பதறி உள்ளே ஓடினான். பின்னால் இருந்த கான்ஸ்டபில் அதற்குள் ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்தபடியே அட்ரஸ் சொல்லி கொண்டே அறைக்கு சென்றார். சத்தியேந்திரனை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

உய்ங்..உய்ங்..உய்ங்..
ஆம்ப்லன்ஸ் சாலையில் பறந்தது.

சிறிது நேரத்திலேயே ஹாஸ்பிட்டலை வந்தடைந்தது ஆம்புலன்ஸ். அவசர சிகிச்சை பிரிவின் உள் அனுமதிக்கப்பட்டான். வராண்டாவில் மிக பதற்றத்துடனும், வியர்ந்து வடிய மார்புகூடு பயத்திலேயே வெடித்துவிடும் போல அத்தனை பீதியில் நின்று கொண்டு இருந்தாள். அன்வர் அருகே வந்தான். “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் கண்மணி.“ கண்ணீர் மல்க “சொல்லுங்க சார்“ என்றாள்.

“உங்க ஹஸ்பண்ட் டிரக் யூஸ் பண்ணிருக்காரு?“ பூகம்பமே வந்தது போல இருந்தது அவளுக்கு. தலைசுற்றி கொண்டு வரவே விழிகள் மை இருளாக இருண்டுக்கொண்டு வந்தது.

“அது வந்து..“ அவன் ஆரம்பிக்க அவசரபிரிவில் இருந்து டாக்டர் வெளியில் வந்தார். அதற்குள் இருவரின் கவனமும் அவர் மேல் திரும்பியது. அவரும் விரல்களை நெற்றி புருவங்களை உராசியபடி , “எதோ பாய்ஸ்சன் சாப்ட மாதிரி இருக்கு இப்போ பிளட் டெஸ்ட் வந்ததும் அவர் உடம்புல என்ன பாய்ஸ்சன் ஏறி இருக்குன்னு சொல்லிடலாம்.“

“அதுக்கு தேவையில்ல டாக்டர் அவரு அளவுக்கு அதிகமா கிரிஸ்டல் மேத்ங்கிற டிரக் எடுத்துருக்காரு.“ இப்போது அன்வர் சொன்னான்.

“மை காட்.. அது பேண்ட் டிரக்காச்சே…“ டாக்டர் முகம் எங்கும் ஆச்சரிய குறியும், கேள்வி குறியுமாக இருந்தது. கண்மணிக்கு இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. அவள் மனம் முழுவதும் சத்தியேந்திரன் நலமாக இருந்தால் போதுமே என்ற எண்ணமே நொடி பொழுதிலும் ஓடிக்கொண்டே இருந்தது.

“இது இல்லிகள் கூட, அவர நாங்க அரஸ்ட் பண்ணிருக்கோம்.“

“ஓ.கே. இன்ஸ்பெக்டர் அவரு இன்னும் ஒன் அவர்ல நார்மல் ஆகிடுவாரு டோன்ட் வரி.“ அவர் செதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு அவர்களை விட்டு விலகி சென்றார். நர்ஸ் ஒருவள் கண்மணி அருகே வந்து ஏதோ ரெசிப்டை கொடுத்தாள். அத்தனை கவனமாக அவள் அதை பார்க்கவில்லை. அன்வர் மேலும் என்ன சொல்ல போகிறானோ என்பது போல் அவனையே கூர்ந்து கவனித்தாள். அவன் மீண்டும் தொடர்ந்தான், “இது எல்லா நாட்டுலையுமே தடைசெய்யப்பட்ட டிரக், இதோட ஒரிஜினல் நேம் மேட்டா பீட்டா மைன். இத ஈஸியா டிரக்னு யாரலயும் சொல்லவும் முடியாது, நம்பவும் முடியாது. ஏன்னா இதுக்கு நிறமும் இருக்காது, வாசனையும் இருக்காது, பார்க்க கல்லு உப்பு மாதிரி தான் தெரியும். அமெரிக்காவுல மட்டும் தான் தயாரிக்கிறாங்க. அங்கயும் சில குரூப்ஸ் இல்லிகளா தயாரிக்கிறாங்க, அப்பறம் நார்த்கொரியல இத இல்லிகளா பார்க்கள ஆனா அங்கிருந்து மற்ற நாட்டுக்கு சப்ளே செய்யுறது பெரிய இல்லிகள். இத எடுத்துகிட்டவங்களுக்கு என்ன நடக்கும்னா பிரைன்ல இருக்க செடர் நெவர் சிஸ்டத்த அதோட கன்ட்ரோல்ல எடுத்துக்கும். இன்னும் சொல்லபோனா டோபர்மைன் ரிசப்டார் ஹார்மோன்கள தான் அப்படி சொல்றாங்க. டோபர்மைன் தான் நமக்கு சிக்னல் தரது. அதாவது அனிச்சை செயல்னு சொல்லுவாங்க. நமக்கு இத செய்யனும் இத செய்யகூடாதுன்னு எச்சரிக்கை செய்யுறது தான் அந்த ஹார்மோன் வேலை, அதையெல்லாம் இந்த கிரிஸ்டல் மேத் தடை பண்ணிடும். நம்ப ஃபுல் ஆக்டிவ்விட்டியயும் முடக்கிடும். மனுசன் வெறும் மனுசன் தான் உயிர் மட்டும் தான் இருக்கும், அவனோட செயல்பாடுகள் எதுவும் இருக்காது. இந்த டிரக் எடுத்து கிட்டவங்களுக்கு உலகமோ, நம்பளோ சில மணி நேரத்துக்கு தெரியாமலே கூட போயிடும். இத ஒரு மனுசன் தொடர்ந்து எடுத்துகிட்டா அவன் இறந்துக்கூட போகலாம். இதெல்லாம் எனக்கு தெரிஞ்ச சில தகவல் தான் இன்னும் நிறைய இருக்கு. இது எல்லாம் உங்க ஹஸ்பண்ட் மேல கம்பிளைண்ட் கொடுத்த ஹாஸ்பிட்டல் டீன் தான் சொன்னாரு. காப்பத்துற டாக்டரே இப்படியெல்லாம் செஞ்சா அவங்கள நம்பி போற மனுசங்க நிலைமை என்ன ஆகும்.“ அன்வர் கண்மணியிடம் இந்த தகவல்களை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தான். கண்மணி அப்படியே அசையாமல் நின்றாள்.

அவனே மேலும் தொடர்ந்தான்.
“அவரோட ஆக்டிவ்விட்டில எதும் சேஞ்ச் இருந்ததா. இவரு ஏன் இந்த டிரக் எடுத்துக்கிட்டாருங்கிறது எங்களுக்கு புரியல போதைக்காக எடுத்துகிட்டாரா இல்ல வேற காரணம் இருக்கா? உங்களுக்கு எதுவும் தெரியுமா? அவங்க மைண்ட் வேறமாதிரியான ஆக்டிவிட்டி பண்ண ஆரம்பிச்சிரும், அவரு வேற மாதிரி நடந்துப்பாரு. இத இவரு ரொம்ப நாள் எடுத்துக்கிட்டு இருக்காரா இல்ல இப்போ தானா எதுவுமே எங்களுக்கு புரியல? ஹாஸ்பிட்டல்ல அவரோட டிராயர்ல இருந்து இந்த டிரக்க எடுத்துருக்காங்க, அவங்க தான் எனக்கும் இன்பார்ம் பண்ணுனாங்க. நேத்து தான் ஹாஸ்பிட்டல் போயிருக்காரு மூனு மாசமா சஸ்பென்ட்ல இருக்காரு அதுக்கு முன்னாடியில இருந்தே வீட்டுல எடுத்துகிட்டு இருந்துருக்காறா? நாங்க சர்ச் பண்ணனும் சர்ச் வார்டண்ட் இருக்கு. நீங்க ஒத்துழைப்பு கொடுக்கனும். உங்க வீட்டுக்கு போகலாம்..“
கண்மணிக்கு அவன் சொல்வதுயெல்லாம் காதில் ஏறுகிறது, ஆனால் அத்தனை சுலபமாக இல்லை அதையெல்லாம் புரிந்துகொள்வது. ஒன்று மட்டும் புரிந்தது நேற்று இவன் என்றும் இல்லாதது போல் இருந்தானே அதுக்கு காரணம் இதுவாக இருக்குமோ என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது தன்னை சுற்றி என்பது கண்மணிக்கு புரியவில்லை. ஹாஸ்பிட்டலில் சத்தியேந்திரன் கண்விழிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அன்வரும் மற்றும் சில காவல் துறையினரும், கண்மணியை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று வீட்டை சோதனை இட்டு கொண்டு இருந்தனர். மூலை முடுக்கெல்லாம் அலசிக்கொண்டு இருந்தனர். மொட்டைமாடியில் தண்ணீர் டேங் பின் பக்கமாக ஏதோ ஒன்று பார்சல் போல தென்பட்டது. அதை எடுத்து ஒரு கான்ஸ்டபில் பிரித்து பார்த்தார். காலியான பாக்கெட் போல இருந்தது. அதில் சிறு சிறு துகள் ஒட்டிக்கொண்டு இருந்தது. அந்த பெட்டியையும், கவரையும் எடுத்துக்கொண்டு கீழே வந்தார் அந்த கான்ஸ்டபில். அதை அன்வர் வாங்கி பார்த்தான் “யெஸ் இது தான்..“ என்றான். கண்மணி அரண்டு போனாள். “கெட்டதுலயும், ஒரு நல்லது உங்க ஹஸ்பண்ட் அளவுக்கு அதிகமா டிரக் வாங்கவும் இல்ல யூஸ் பண்ணவும் இல்ல ஆனா ஏன் இத யூஸ் பண்ணுனாரு?இது ஆர்டர் பண்ணியிருக்காரு ஆனா இதெல்லாம் ஆன்லைன்ல கிடைக்கிதா? வெயிட்டா மினிட்ஸ்..“ கண்மணியிடம் சொல்லிவிட்டு யாருக்கோ போனை செய்தான். சிறிது நேரம் உரையாடல் போய் கொண்டு இருந்தது. கண்மணி மரணபீதியில் நின்று கொண்டு இருந்தாள். மீண்டும் அன்வர் கண்மணி அருகே வந்தான். “இது ஆன்லைன்லையும் இல்லிகளா விற்பனை செய்யுறாங்கலாம், கள்ள சந்தைன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரி. இது பெரிய யூனிட் நிறைய டிரக்ஸ் சப்ளே பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த யூனிட்ட புடிக்க பல நாட்டு போலிஸ் டிரை பண்ணிட்டு தான் இருக்காங்க. பார்க்கலாம்..“ பெருமூச்சை விட்டான். “இப்போ நம்ப சத்தியேந்திரன பத்தி பேசலாம் கண்மணி.. உங்களுக்கு என்னால முடிஞ்ச சிறு உதவி செய்யுறன். இப்போ அவரு கண்விழிச்சிட்டா நாங்க அரஸ்ட் பண்ணி தான் ஆகனும் நான் இன்னும் ஒரு மணி நேரம் டைம் தரேன் நீங்க எதாவது வக்கீல புடிச்சி சீக்கிரமா முன்ஜாமின் வாங்குங்க..“ கண்மணியிடம் ரகசியமாக சொன்னான் அன்வர். கண்மணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை அவள் கண்ணீர் மல்க கைகளை எடுத்து கும்பிட்டாள்.

“நான் இங்க வந்து சந்திச்ச முதல் மனிதர், பார்த்ததுமே நல்ல மனிதர்னு உணர்ந்தேன். நான் செய்யுற சின்ன உதவியா எடுத்துங்கங்க, ஆனா அளவுக்கு அதிகமா டிரக் இருந்து இருந்தாலும் யூஸ் பண்ணிருந்தாலோ நான் இத செஞ்சிருக்கவே மாட்டேன். அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு ஐ திங் அவரு மன ரீதியா ஏதோ பாதிக்கப்பட்டு இருக்காருன்னு நினைக்கிறேன். உங்களுக்கு அவரோட டாக்டர் கேரியர் முக்கியமா அவரு முக்கியமான்னு முடிவு பண்ணி அவர காப்பாத்துற வழிய பாருங்க.“ என்று கூறிவிட்டு மீண்டும் அன்வர் ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட்டான். போகும் போது கடைசியா “ஒன்நவர்“ என்று சொல்லிவிட்டு சென்றான்.
தரைமட்டம் ஆனா கட்டிடம் போல இடிந்து உட்கார்ந்தாள் கண்மணி. யாரிடம் உதவி கேட்பது, யாரை அழைப்பது, என்ன செய்வது எங்கே போவது ஒன்றுமே புரியாமல் திணறிபோனாள். இறுதியாக ஒரு முடிவெடுத்தாள், அந்த முடிவின் படி வக்கீல் திருமலையை சந்திக்க ஆயத்தப்பட்டாள்.

அடுத்த சில மணி நேரங்களில் கண்மணி திருமலையின் அலுவலகத்தை சென்றடைந்தாள். திருமலையும், கண்மணியும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.
“எனக்கு அவரு முக்கியம், அவரோட உயிர் முக்கியம் நான் அவர டிவெர்ஸ் பண்ணுறேன் சார்..“ கண்மணி சொல்வதை திருமலையால் நம்பவே முடியவில்லை ஆடிப்போனார் ஆடி.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 13

கண்மணி சொல்வதை திருமலையின் காதுகள் நம்ப மறுத்து மறத்து போய் இருந்தது. எதற்கும் பிடிக்கொடுக்காமல் அத்தனை காதலை பொழிந்து அவனை விட்டு கொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்தாளே, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டாளே இதுவும் அவன் மீது இருக்கும் காதல் தானோ.

தன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எல எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு வாய்விட்டு ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டார். “ஏன்?“ என்பது தான் அது.

கண்மணியிடம் சிறிது அமைதி. “சார், நாங்க இரண்டு பேரும் எட்டு வருஷம், பத்து வருஷம் காதலிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கல, பிடிச்சி இருந்தது இரண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும்னு மனசு சொன்னது. அவரு அத வாய்விட்டு சொன்னாரு நான் மனசுக்குள்ளயே நினைச்சிக்கிட்டேன். ஒரே கருத்து இரண்டு பேருக்கும் இருக்கது இந்த காலத்துல ஆச்சரியம் தானே, அப்போ ஒத்து போன கருத்துகள் இப்போ ஒத்தே போக மாட்டைங்கிது. கல்யாணத்துக்கு அப்பறமும் நாங்க நல்லா தான் இருந்தோம் ஆனா இப்போ? எல்லாமே தலைகீழா மாறிடுச்சி. அவருக்கு என்ன பிடிக்கல? நான் அதற்கான காரணத்தை அவர்கிட்ட தேட போறது இல்ல? அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் சார், என்னால அவர விட்டு போக முடியும்னு..“ நிறுத்தினாள்.

தொண்டைகுழிகள் அடைத்து கண்மணியின் கண்கள் கலங்கியது. அவளே தொடர்ந்தாள், “எனக்கு மட்டும் பிடிச்சி என்ன பண்றது. அவரோட உடல்நிலை நாளுக்கு நாள் ரொம்ப மோசமாகுது. எனக்கென்னவோ இந்த டிவோர்ச நினைச்சி தான் ஸ்ட்ரஸ்ல இருக்காரோன்னு நினைக்க தோனுது. அவரோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். ஒன்னு மட்டும் சார், அவருக்கு விடுதலை தான் கொடுக்குறேன் விட்டு போக மாட்டேன்.“ அவளின் பதில் திருமலைக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. தொட்டதற்கெல்லாம் விவாகரத்து செய்யும் இந்த காலத்தில் அவன் பொண்டாட்டி நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இவள் தான் புருஷன் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் ஆச்சரியம் தான். மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டார் திருமலை.

திருமலைக்கேட்டார் “இது உன்னோட முழு சம்மதத்தோட தானே“ பாதியில் நிறுத்தி வார்த்தைகளை விழுங்கினார்.

“எனக்கு அவர காப்பாத்தனும்..“

“இல்ல திரும்ப நீங்க மாத்தி பேசக்கூடாது.“ கையை நீட்டினாள் டேபிள் மேல் இருக்கும் பேனாவை எடுத்துக்கொண்டாள். திருமலை தன் டேபிள் டிராயரை இழுத்து அதில் இருந்த பத்திரத்தை கண்மணியிடம் கொடுத்தார். போனாவின் முனை காகிதத்தில் குத்தி நின்றது சில நினைவுகள் கண்களின் ஊடே கண்ணீர் துளிகளை சிந்த செய்தது. விரல்கள் ஆறுதல் படுத்த கண்ணீரை துடைத்து விட்டு கையெழுத்தை போட்டு தன் தலையெழுத்தை முடித்துக்கொண்டாள்.

ஆபிஸ் பாய் காபி கப்போடு உள்ளே வந்தான். திருமலை ஒரு கோப்பையை கண்மணி பக்கம் நீட்டினார்.
“இல்ல சார், நான் காபி சாப்பிடுற நிலைமையில இல்ல ஒன் நவர் தான் டைம் இருக்கு. நீங்க தான்?“

“நீங்க காபிய குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போங்க எண்ணி அறைமணி நேரத்துல நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்திடுவேன் முன்ஜாமினோட..“ திருமலை எழுந்துக்கொண்டார். கண்மணிக்கு அருகே காபி கப்பை வைத்தார். ஆவி பறக்கும் அந்த காபியை அவளால் ரசித்து ருசித்தெல்லாம் குடிக்க முடியவில்லை. அந்த ஆபிஸ் பாய் வேறு இவளை பார்த்தபடியே நின்றுக்கொண்டு இருந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை இவன் ஏன் விரிக்க விரிக்க பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

திருமலையின் ஜீனியரும் இப்போது ஆபிஸ்சை விட்டு கிளம்பிவிட்டான். சூடாக இருந்த காபி நாக்கை சுட்டாலும் பரவாயில்லை என்று வேகவேகமாக அருந்திவிட்டு எழுந்தாள். ஆபிஸ்பாய் அருகே வந்தான்.

“மேடம், நீங்க சத்தியேந்திரன் சாரு ஓய்ப்பா?“ அவன் பேச்சில் சிறிது மெட்ராஸ் வாடை அடித்தது.

“சாரு அடிக்கடி இந்த ஆபிசாண்ட வரும் மேடம், நான் தான் காபி கொடுப்பேன்.“
அவன் பேச்சிற்கு இவள் இடையூறு செய்யவில்லை. அவனை பேசவிட்டு கேட்டுக்கொண்டு இருந்தாள். மெல்ல கீச்கீச் குரலில் “மேடமு..சாருக்கு ஏதோ மூளையாண்ட பிரச்சனை போல..சாரு டாக்டராண்ட காட்ட சொல்லி கேட்கும், உன் பொண்டாட்டிகிட்ட சொல்லுன்னு சொல்லும். அது மசியனாங்கும். ஒரு தபா சாரு வர லேட்டாச்சி, நான் காபி கொண்டாந்து கொடுக்கசோல. அப்பால சாரு செவத்த பாத்து ஏதோ பெணாத்திகிட்டு இருந்தது. நான் கண்டுக்காமா காபிய டேபிள் மேல வச்சிட்டு கொஞ்சநேரம் நின்னுகிட்டு இருந்தேன். நீ போ என்ன விடு..இது மாதிரி எதையோ உலம்புனுச்சி மேடமு. நீ தப்பா நினைச்சிக்காத சாரு பைத்தியமோன்னு கூட எனக்கு நினைப்பு.“ என்ன பேசுகிறான், இவன் சொல்வதை பார்த்தால் சத்தியேந்திரனுக்கு ஏதோ பெரும் பிரச்சனை போல திருமலைக்கு தான் எல்லாம் தெரிந்து இருக்கிறது திருமலையிடமே கேட்க வேண்டும். அவர் சொன்னால் தான் எதுவும் புரியும்.

மெர்ஸி கட்டிலில் மீதே கிடந்தாள் அழுது அழுது தாமரை முகம் சிவப்பேறிப்போய் இருந்தது. வேகவேகமாக பெர்னட் உள்ளே வந்தான். அவளை கண்டும் காணாமல் எதையோ அவசர அவசரமாக தேடிக்கொண்டு இருந்தான். அதற்குள் அவன் கையில் இருந்த செல்போன் வேறு சினுங்கியது, அட்டன் செய்து காதுக்கும் தோளுக்கு முட்டுக்கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ தேடிக்கொண்டு இருந்தான். “மச்சான் அங்க தான் வரேன்..எப்படியாவது ஒர் கார் கழுவுற வேலையாவது வாங்கி கொடுத்துடுடா..“ அந்த முனையில் பேச்சு இப்போது மீண்டும் பெர்னட் “ஆமாம் யார் யாருக்காகவோ ஐம்பதாயிர ரூபாய் வேலைய விட்டேன். இப்போ சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிறேன்..“ மீண்டும் எதிர் முனை குரல்.
“சரிடா சரி இப்போ இப்போ வந்துடுவேன்.“ போனை அணைத்தான், தேடியது கிடைத்துவிட்டது. ஏதோ பைல் போன்று இருந்தது. எடுத்துக்கொண்டு அவசரமாக அறையை விட்டு வெளியேறினான். மெர்ஸி நடப்பதையெல்லாம் கவனித்தவள் மனம் எதையோ நினைத்து இன்னும் வெம்பியது. கன்னங்களின் வழியே தாரை தாரையாக கண்ணீர் வடிய நினைத்து பார்த்தாள் பெர்னட்டுடன் ஆனா தன் முதல் சந்திப்பை.

கால ஓட்டத்தில் கரைந்த நினைவுகளுக்கு கலர் பூசி பார்த்தாள்.

மேரியும், சில சொந்தகாரர்களும் தான் வந்து மெர்ஸியை பெண் பார்த்து பெர்னட்டுக்கு முடிவு செய்தனர். பெர்னட் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தான். அவன் அன்று பெண் பார்க்க வரவில்லை. மேரி தன் பிள்ளையை புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருந்தார். மெர்ஸி சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் சிறு கிராமம். மெர்ஸியும் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். மெர்ஸியையும், பெர்னட்டையும் சென்னையில் பார்த்துக்கொள்ள வைக்கலாம் என்று இரு குடும்பத்தாரும் நினைத்து இருந்தனர். அதன்படி பெர்னட் மெர்ஸியை பார்க்க கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு சென்றான்.
அவள் நர்ஸ் என்று தெரியும், ஆனால் மனநல மருத்துவமனையில் வேலைப்பார்க்கிறாள் என்று பெர்னட்டுக்கு தெரியாது. அவளுக்கு தெரியாமல் அவளை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்து சென்றான். அவன் மனம் முழுவதும் அவளை வேண்டாம் என்றே நிராகரித்து கொண்டு தான் இருந்தது. வேறு பெண்ணையும் பார்க்க சொல்லிவிட்டான் மேரியுடம். அதற்கு பிறகு மேரியும் அவனை கம்பல் செய்யவில்லை, இருப்பினும் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் தன் அம்மாவை காட்டுவதற்காக துணைக்கு அழைத்து இருந்தான் பெர்னடின் குளோஸ் பிரண்ட். அப்போது அவன் மனம் ஏனோ மெர்ஸியை நினைத்துக்கொண்டது. சரி அவளையும் பார்த்துவிட்டு தான் வருவோமே என்று தோன்றியதன் விளைவு அவன் இப்போது கீழ்பக்கம் மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டு இருக்கிறான். அவன் ப்ரண்ட் அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு டாக்டரை பார்க்க அறை உள்ளே சென்றான். பெர்னட் மெல்ல எழுந்து மருத்துவமனையை சுற்றி வர ஆரம்பித்தான்.

புறநோயளிகள் பிரிவு வார்டில் மட்டுமே எல்லோரையும் அனுமதித்தனர். மற்ற படி உள்ளே யாரையும் அனுமதிக்க மறுப்பு இருந்தது. அங்கு ஒரு கம்பவுண்டர் நின்று கொண்டு இருந்தான். புறநோயளிகள் பிரிவை சுற்றி இரும்பு ஜன்னல்கள் அதன் வழியே உள்ளே சில பகுதிகள் தென் பட்டது. அந்த கம்பவுண்டரிடம் பெர்னட் மெல்ல பேச்சு கொடுத்தான்.
“உள்ள போக கூடாதா ப்ரோ?“

“அலோ கிடையாது சார்.. ஒன்லி புறநோயளி பிரிவுல மட்டும் தான் விசிட்டர்ஸ் அனுமதி.“

“ஏன் அப்படி?“

“சார், அது அப்படி தான்.. ஒரு சில வார்ட்டுக்கெல்லாம் டாக்டரே போவ பயப்புடுவாங்க.“

“அப்படிய?“

“வார்டு நம்பர் 7 அதுக்கு டாக்டர், நர்ஸ்கூட உயிர கையில புடிச்சிகிட்டு தான் போவாங்க.“

“ஏன் அப்படி?“

“அங்க இருக்க பேசண்டையெல்லாம் இருபது பேரு புடிச்சிகூட கண்ட்ரோல் பண்ண முடியாது சார். கொஞ்சம் மூர்கதனமா நடந்துப்பாங்க.“ மெல்ல பெர்னட் காதருகே வந்து “பார்க்க கஷ்டமா இருக்கும் சார், டிரஸ் கூடா போடாம எல்லாம் திரிவாங்க. அது ஏன்னு அவங்களுக்கு எப்படி சார் புரியும் சில கம்பவுண்டர்ஸ் உள்ள போயி அவங்கள கண்ட்ரோல் பண்ணுவோம், ஒரு சிலரு திடீர்னு தாக்குவாங்க, டாக்டர் நர்ச கூட கட்டிபிடிப்பாங்க. தன் நிலையே தெரியாம இருக்கவங்களுக்கு மத்தவங்க நிலை எப்படி சார் புரியும். கிரிமினலுக்குன்னு வார்ட் இருக்கு அங்கயும் போக பயப்புடுவாங்க. கொலை, ஏதாவது மத்த கிரிமினல் ஆக்டிவிட்டில ஈடுபட்டு ஜெயிலுக்கு போயிட்டு மனநிலை பாதிக்கப்பட்டுருக்குன்னு தெரிஞ்சா அவங்கள அந்த வார்டுல வச்சிருப்பாங்க.“ இருவரின் உரையாடல் சுவாரஸ்யமாக போய்கொண்டு இருக்கும் போதே பெர்னட்டின் ப்ரண்டு அங்கே வந்தான். அவனை பார்த்ததும் பெர்னட் அம்மாவின் நலனை விசாரித்தான்.

“டேய் என்னடா சொன்னாங்க..“
“அட்மிசன் போட சொல்லிருக்காங்க..“ அவன் சொல்லும் போதே கலங்கி அழுதான். “எங்க அம்மா என்ன கஷ்டப்பட்டு வளர்த்தாங்கடா இப்போ இப்படி பைத்தியமாவ பார்க்கனும் நான்.“

“சாரு அழுவாதிங்க ஒவ்வொருத்தரோட பிராப்ளத்த பொறுத்து சீக்கிரம் குணம் ஆனாவங்களும் இருக்காங்க.“ என்று ஆறுதல் சொன்னான் கம்பவுண்டர். பெர்னட்டும் தேற்றினான் “பெண்கள் வார்டுல விட சொல்லிருக்காங்க.“

“சார், ஒரு சீட் கொடுப்பாங்க அத கொண்டு காட்டுனாதான் பேசண்ட் கூட உங்கள உள்ள விடுவாங்க. நேர போய் லேப்டு எடுங்க அங்க டூட்டி நர்ஸ், இல்ல டிரையினிங் நர்ஸ் இருப்பாங்க அங்க போங்க.“ என்று வழிகாட்டினான் கம்பவுண்டர்.

அங்கே சென்று பார்த்தாள் வெள்ளை உடையில் டியூட்டில் அமர்ந்திருப்பது மெர்ஸி. போட்டோவில் பார்த்துவிட்டு அந்த வெள்ளைஉடையில் பார்க்க அவள் தேவதை போல் இருந்தாள். பெண் நோயாளிகளிடம் அன்பாகவும், அக்கறையாகவும் பேசிக்கொண்டு இருந்தாள். ஏனோ அவனுக்கு அவளை பார்க்கும் போது பிடிக்கவில்லை பார்க்க பார்க்க பிடிக்கிறது. மெர்ஸியும் அவனை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள். சின்ன சிரிப்பு இருவருக்குள்ளம் பரஸ்பர அறிமுகம். நண்பனின் அம்மாவை அங்கு சேர்த்துவிட்டு அவனை ஆறுதல் படுத்தினான் பெர்னட். மெர்ஸி இருவரின் அருகேவும் வந்து “கவலைபடாதிங்க இங்க நல்லா பார்த்துக்குவாங்க சீக்கிரம் உங்க அம்மா நல்லாகிடுவாங்க.“ என்றாள். அவளின் பேச்சு, பணிவு, அன்பில் பெர்னட்டை மெல்ல கவர்ந்தாள். டியூட்டி டாக்டர் விசிட்டுக்கு வந்தார். மெர்ஸி “குட்மார்னிங் டாக்டர்..“ என்றவாரே டாக்டரின் பின்னால் வார்டின் உள்ளே சென்றாள். சிறிது நேரம் அப்படியே கழிந்தது. வெளியில் அவளிடம் சொல்லிவிட்டு போக பெர்னட் காத்திருந்தான்.
டாக்டருடன், மெர்ஸி வெளியே வந்தாள்.
“நான் கிளம்புறேன்..“ என்றான் பெர்னட் மெர்ஸியை பார்த்து.
மெர்ஸியிடம் டீயூட்டியில் இருந்த டாக்டர் இவர் யார் என்று கேட்க, மெர்ஸியும் தனக்கு பார்த்து இருந்த மாப்பிளை என்று சொன்னாள். டாக்டர் பெர்னட்டிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“ஐ அம் சத்தியேந்திரன்..“​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 14

சத்தியேந்திரன், பெர்னட் இருவருக்கு இடையேயும் எதிர்பாரத நல் அறிமுகம் கிடைத்தாகியது. இப்போது சத்தியேந்திரன் அறையில் அமர்ந்துக்கொண்டு பெர்னட் அந்த அகலமான ஜன்னல் வழியே மருத்துவமனையை பார்த்துக்கொண்டு இருந்தான். சத்தியேந்திரன் ஹேண்ட் வாஸ் செய்து விட்டு வந்து அமர்ந்தான். வார்ட்பாய் ஒருவன் டீயை கொண்டு வந்து ஆவி பறக்க டேபிள் மீது வைத்தான்.

“உங்க ப்ரண்டு போயிட்டாரா பெர்னட்?“

“ஹிம்..அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு கிளம்பிட்டான். எனக்கு என்னவோ இந்த இடத்த விட்டு போறது ரொம்ப கடினமா இருக்கும் போல“

“ஹ..ஹ..“ சத்தியேந்திரன் அழகாக சிரித்தான்.

“உண்மை தான் இங்க இருக்க மனுசங்களுக்கு சூது தெரியாது, வன்மம் கிடையாது, ஏன் அவங்க யாருன்னு கூட சிலருக்கு தெரியாது. மனுசன் எல்லா அழுக்கையும் மனசுல சுமந்து சுமந்து கடைசியா எந்த நிலைமைக்கும் போவாங்குறதுக்கு இவங்க உதாரணம். இப்போ எந்த அழுக்கும் இல்லாம சுத்தமா இருக்காங்க, ஆனா அவங்கள உலகம் பைத்தியம்னு சொல்லி ஒதுக்கிடுது.“

“சத்தியமான உண்மை. உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் எனக்கு என்னவோ ஆண்களவிட பெண்கள் அதிகமா இருக்க மாதிரி இருக்கே அது என்னோட எண்ணமா இல்லை??“
“உண்மை தான், ஒரு பெண் அம்மா, தங்கை, மகள், மனைவி, சின்னமா, பெரியம்மா இப்படி ஆயிரம் முகங்கள தான் ஒருத்திக்குள்ள சுமக்குறா“

“இடையூரு செய்ய விரும்பல ஆனா ஆண்களும் அப்படி தானே.“

“ஆமாம் அப்படி தான் சரி ஒரு உதாரணம், உங்களுக்கு ஒரு கஷ்டம்னு வச்சிக்கோங்க இல்ல பிரச்சனைனு வச்சிக்கோங்க முதல அத யார்கிட்ட போய் சொல்லுவிங்க அப்பாவா? அம்மாவா?“

“அம்மா?“

“இப்போ அந்த அம்மா உங்க பிரச்சனைய மைண்ட்ல வச்சிப்பாங்க, மனசு அத திரும்ப திரும்ப சொல்லி அழுத்தம் கொடுத்துகிட்டே இருக்கும். இப்போ இதையே நீங்க உங்க அப்பாகிட்ட சொல்லிருக்கிங்கன்னு வச்சிக்கலாம், வெளியில போய் அவருக்கு வரவேலையில அந்த பிரச்சனையே மறந்துடுவாரு ஆனா அம்மாவால அத மறக்கவே முடியாது. அவங்க எங்கபோனாலும் சரி என்னவேலை செஞ்சாலும் சரி. இது சயிண்டிப்பிக் உண்மை, பெண் தான் அதிகமான ரகசியங்கள சுமக்குறது. சொல்லபோனா அலிபாபா குகை போல தான் அவங்க மூலை. சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது. கல்யாணம், குடும்பம், பிள்ளை, கணவன்னு ஆனதும் எல்லாத்தையும் மறந்துடுவாங்க. பள்ளிகூட நட்பு கூட நிறையபேருக்கு இருக்குறது கிடையாது. ஆண்கள் அப்படி கிடையாதே எழுவது வயசானாலும் தன் ஸ்கூல் ப்ரண்டோட நட்பா தான் இருப்பாங்க. நம்ப மூளை ஒரு லைன் மாதிரி தான் நேரா போகும் சின்ன டேர்ன் திரும்ப லைன்ல போகும் ஆனா இங்க இருக்கவங்களுக்கு லைன் டேர்ன் ஆகுறது கிடையாது நேர போயிகிட்டே இருக்கும் அவங்க கண்ட்ரோல அவங்க இழந்துடுவாங்க.“

பெர்னட் எல்லாம் புரிந்தவன் போல தலையை ஆட்டினான்.

“நான் ரொம்ப அறுவை போடுறேன்னு நினைக்கிறேன். சரி உங்க விஷயத்துக்கு வருவோம். ஏன் மெர்ஸிய ரிஜக்ட் பண்ணுனிங்க?“

“அது? நான்?“

இருவரின் பேச்சுக்கு இடையில் “எஸ்கீயூஸ் மீ சார்..“ மெர்ஸி உள்ளே வந்தாள்.

“என்னாச்சு மெர்ஸி அந்த பேசண்ட் மாத்திரை சாப்பிட்டாரா?“

“போதும் போதும்னு ஆகிட்டு சார்..ஒரு வழியா சாப்பிட்டாரு“
மெர்ஸி கடைக்கண்ணால் பெர்னட்டை பார்த்தாள்.
அவனும் அப்படி தான்.

“நர்ஸ் ஜாப்புங்குறதால ரிஜக்ட் பண்ணிட்டிங்களா ஒரு வேலை அதனால நீங்க ரிஜக்ட் பண்ணிருந்தா ஒன்னு மைண்ட்ல நினைச்சிக்கோங்க நர்ஸ்சஸ் ஆர் ஏஞ்சல்ஸ்..“

சத்தியேந்திரன் சொன்னது இப்போதும் பெர்னட் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பைக் சக்கரங்கள் சாலையில் ஓடிக்கொண்டு இருக்க அவன் நினைவில் அந்த வார்த்தைகள் எதிரோலி செய்து கொண்டு இருந்தன.

கண்மணி அவசர அவசரமாக மருத்துவமனையை வந்தடைந்தாள். எதுவும் அறியாதவன் போல அன்வர் நின்று கொண்டு இருந்தான். அவன் செல்போன் ஒலித்தது. ஸ்கிரினில் இன்ஸ்பெக்டர். அட்டண்ட் செய்ததும் எதிர்முனையில் கோபத்தில் ஒலித்தது இன்ஸ்பெக்டர் குரல்.

“என்னையா அன்வர் அரஸ்பண்ணிட்டியா?“

“இல்ல சார் இன்னும் பேசண்ட் கண் விழிக்கல அதான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம்.“

“ஆமாம் கிழிச்ச அவன் முன்ஜாமின் எடுத்துட்டான் நீ முட்டு கொடுத்துகிட்டு நின்னு வாயா கிளம்பி“

“யெஸ் சார்..“ போன் கட்டானது. கண்மணியை பார்த்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்பதை போல மெல்லமாய் கண்களை சிமிட்டிவிட்டு கான்ஸ்டபுள்களை ஜீப்பிற்கு வரும்படி உத்தரவிட்டான்.
காக்கிச்சட்டைகள் மருத்துவமனையை விட்டு கலைந்தாகியது.
கண்மணி அங்கும் இங்குமாக தவிப்புடன் நின்று கொண்டு இருந்தாள். நர்ஸ் வெளியே வந்து “மேடம் பேசண்ட் கண்விழிச்சிட்டாரு நீங்க போய் பாருங்க“ கண்மணி தலையை அசைத்துவிட்டு உள்ளே செல்ல முற்படும் போது திருமலையும் அவ்விடம் வந்தார். இருவரும் சேர்ந்து சத்தியேந்திரனை சென்று பார்த்தனர். கம்பீரமாக டாக்டர் உடையில் வலம் வந்தவனை பேசண்ட் உடையில் பார்க்கமுடியாமல் உடைந்து அழுதாள் கண்மணி.
சத்தியேந்திரன் ஆறுதலாக கண்களை சிமிட்டினான். மூச்சிவிட செயற்கை சுவாசம் செலுத்தி இருந்ததால் அவனால் எதுவும் பேசமுடியவில்லை.

“சத்தியேந்திரன் நீங்க ஸ்டெயின் பண்ணிக்காதிங்க எல்லாம் நல்லபடியா தான் நடந்துகிட்டு இருக்கு“ திருமலையின் ஆறுதல் பேச்சுக்கு மெல்ல தலையை அசைத்தான் சத்தியேந்திரன்.
கண்மணி அருகே சென்று சத்தியேந்திரன் கைகளை பற்றினாள். அவன் மெல்ல கைகளுக்கு அழுத்தம் கொடுத்து கண்மணி கையை இறுக பற்றினான். திருமலை நாகரீகமாக இருவருக்கும் இடையே நிற்காமல் வெளியே சென்றார்.

கண்மணி மெல்லமாய் அவன் பக்கம் தலையை குனிந்து “நான் செத்து பொழைச்சிட்டேன். உங்களோடையே சேர்ந்து..“சத்தியேந்திரன் எதையோ பேச வாயெடுத்தான், தன் விரல்களால் அவன் வாயைடைத்தாள். “நான் பேசுறேன் நீங்க கேளுங்க..“ கண்மணி தொடர்ந்தாள்.

“கணவன் மனைவிக்கு நடுவுல எந்த ஈகோவும் இருக்ககூடாது..நான் அத தான் உங்ககிட்ட அடிக்கடி சொல்லுவேன். உங்களுக்கு என்கிட்ட என்ன ஈகே சத்யா, எத மறைக்கிறிங்க?? வேண்டாம் நான் எதையும் தெரிஞ்சிக்க வேண்டாம் என் மனசுல எப்போதுமே ஒன்னு தான் ஓடிக்கிட்டே இருக்கும், நீங்க சந்தோஷமா இருக்கனும்.. உங்கள நான் எவ்வளவு லவ் பண்ணுறேன்னு உங்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன். ஏன் சத்யா நான் புரியவைக்கனும், உங்களுக்கே அது தெரிஞ்சிருக்கனும் ஆனா தெரியலையே? என்ன மூனாவது மனுசியா தானே பார்க்குறிங்க. நிறைய மட்டுமே, இன்பத்தை மட்டுமே பகிர்ந்துக்க பொண்டாட்டி கிடையாது கஷ்டங்களையும் தான். சத்யா எந்த விதத்துலயோ நான் உங்களுக்கு வேண்டாதவளா போயிட்டேனா“
நர்ஸ் உள்ளே வந்தாள் “மேடம் பேசண்ட் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.“
“இல்ல சிஸ்டர் இனிமே அவருக்கு நான் இடைஞ்சலா இருக்க போறது இல்ல நான் போறேன்.“ கண்மணி அறையை விட்டு வெளியே வந்தாள்.

சத்தியேந்திரன் கண்களில் நீர் கசிந்தது.

திருமலை அறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். கண்மணி அவர் அருகே வந்தாள். “ரொம்ப நன்றி சார்..“
“இது என்னோட தொழில்மா அப்பறம் இரண்டு நாளையில கேஸ் கோர்ட்டுக்கு வந்துடும் நீ சரியா ஆஜர் ஆகிடுமா“

“பயப்படாதிங்க சார் இனிமே உங்களுக்கு வேலையே இருக்காது. அப்பறம் ஒரு காபி சாப்பிடாலமா சார்“

திருமலை சிறிது யோசித்தார் “வாமா..“ இருவரும் ஹாஸ்பிட்டல் கேண்டீனுக்கு வந்து அமர்ந்தனர். இரண்டு காபி ஆர்டர் செய்தனர். காபி வரும் வரை கண்மணி காத்திருக்கவில்லை அவளே முதலில் தொடங்கினாள்.

“சார் உங்கள நான் என்னோட அப்பாவா நினைச்சி கேட்குறேன். இப்போ நீங்க வக்கீல் இல்ல சாதாரண மனிதரா என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க. நீங்க சொல்லபோற இந்த பதில் தான் என்னோட வாழ்க்கைய முடிவு செய்ய போகுது.“

கண்மணி போடும் புதிர்கள் திருமலைக்கு பயத்தை உண்டாக்கியது. என்ன கேட்க போகிறாள், நான் என்ன சொல்வது என மூளை முதலேயே யோசனை செய்ய தொடங்கிவிட்டது. இருந்தும் அடிவயிற்றில் ஒரு வித பயம் கலந்து கொண்டு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

“நான் சுற்றி வளைக்காம நேரடியா கேட்கிறேன் உங்க மனசாட்சிக்கு விரோதம் இல்லாம சொல்லுங்க. சத்தியேந்திரனுக்கு என்ன பிரச்சனை??“

திருமலை முகம் இன்னும் வியர்த்தது.

“ஒரு மனைவிக்கு தெரியகூடாத பிரச்சனை உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அப்படினா??“

“அது..அது..“ திருமலை நா தயக்கம் கொண்டது.
“பிளீஸ் சார் நான் காரணம் தெரியாம பிரிய விரும்பல, காரணம் நானா இருப்பனோன்னு பயமா இருக்கு, அதனால நீங்க மறைச்சி வச்சிருக்க உண்மைய சொல்லுங்க.“

“சத்தியேந்திரன் இந்த மனநிலைக்கு நீயும் ஒரு காரணம்மா..“

திருமலை சொன்ன அந்த பதில் கண்மணியை இன்னும் ஆட செய்தது. நாற்காளியின் முனைக்கு வந்து அவன் அடுத்து என்ன சொல்வான் என்று எதிர்பார்த்தாள்.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 15

திருமலை கண்மணியின் இரத்தம் முழுவதும் திகிலை பரப்பும் படி பேசினார். “இத நான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன், ஆனா இந்த காரணம் தெரிஞ்சா நீ முழு மனசோட பிரிஞ்சி போவங்கிறதுனால தான் சொல்றேன். நீ எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம..... அப்பறம் சத்தியேந்திரன் ஆசையும் ஒன்னு இதுல இருக்கு, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்.“
கண்மணிக்கு கோபம் தலைக்கு ஏறியது. “போதும் நிறுத்துங்க..“ அவளை மறந்து கத்திவிட்டாள். சற்று நிதானம் ஆகிய பின் “ ஐ அம் ஸாரி, நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க“

“இதுக்கே இப்படி எமோசன் ஆனா எப்படி உன் அப்பா, உன் மாமியார் சாவுக்கு காரணமே உன் புருஷன்னு தெரிஞ்சா அதுக்கு எப்படி பிகேவ் பண்ணுவ.“ இவன் போடும் புதிர்கள் கண்மணியை கதிகலங்க செய்தது, நெஞ்சில் யாரோ கடப்பாறையால் குத்துவது போன்ற வலி தொண்டைக்குழிகள் கவ்வியது. உமிழ் இல்லாமல் நா வறண்டது.

திருமலை மீண்டும் பேசினார் “கண்மணி உன் புருஷன் கண் முன்னாடி தான் உன் அப்பா, உன் மாமியார் இறந்துருக்காங்க அது தான் உனக்கு தெரியும்“ சற்று நிறுத்தி “கொலை செஞ்சது உன் ஹஸ்பண்டு தான்.“

கண்மணிக்கு பூமியெங்கும் இருண்டது. இவன் என்ன சொல்கிறான், வேண்டும் என்றே சொல்கிறானா, சத்யா அப்படி பட்டவனா, சத்தியமாக கிடையாது. இவன் பொய் சொல்கிறான், கடவுளே இது எல்லாம் கனவாகி போகிவிடகூடாதா நான் இந்த திருமலையை சந்திக்காமலே இருந்திருக்கலாமே.
“கண்மணி அது அவனா செய்யல? அது எப்படி சொல்றது சத்யாவுக்கு அவங்கயெல்லாம் வேற மாதிரி தெரிஞ்சாங்க உங்க அப்பாவுக்கு சின்ன அட்டாக் தான் வந்திருக்கு சத்தியேந்திரன் நினைச்சிருந்தா காப்பாத்திருக்கலாம். அந்த நேரம் அவனுக்கு எப்போதும் வர இஸ்யூ வந்திருக்கு. அவன் கண்ணுக்கு உங்க அப்பா அவனுக்கு தொல்லை தர உருவமா தெரிஞ்சதும் தலகாணியால புஷ் பண்ணிருக்கான்.“

கண்மணியின் இரத்தம் உறைந்தே போனது. தலையில் யாரோ பாறாங்கல்லை தூக்கி போட்டது போல இருந்தது. திருமலையின் வார்த்தைகள், என் அப்பா எனக்காகவே எல்லாம் செஞ்ச என் அப்பா, சத்யாவ கல்யாணம் பண்ணிக்கிறது கூட என் அப்பாவுக்கு பிடிக்கல அப்படியும் என் சந்தோஷம்…. அய்யோ நல்லா இருந்தாங்களே. சத்யா கூட எனக்கு அப்பா கிடையாது நான் உங்கள அப்பான்னு தான் கூப்பிடுவேன்னு அன்ப பொழிஞ்சானே, அப்படி இருக்க அவன் இப்படி... வாய்விட்டு கதறியே விட்டாள். “அப்பா நான் பாவி.. அய்யோ“ அந்த கேண்டீனில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சில நர்ஸ்கள், பேசண்டுக்கு பார்சல் வாங்க டோக்கன் எடுத்து கொண்டிருந்த ஒரு சிலர், சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், காபி குடிக்க வந்தவர்கள் என இருந்த அத்தனை பேருக்கும் பக்கென்று ஆகியது கண்மணியின் அலறலால்.

“கண்மணி.. கண்மணி.. கண்மணி..“ அழைத்து அழைத்து சோர்ந்து போனார் திருமலை. கண்மணி அழுவதை நிறுத்தவில்லை விம்மி கொண்டே இருந்தாள்.
“இதுக்கு தான் இதுக்கு தான்.. நீ காரணம் தெரியாமையே பிரிஞ்சிடு அது தான் நல்லது உனக்கு“, என்று தன் இருக்கையை விட்டு எழுந்தார். கண்மணி கண்களை துடைத்துக்கொண்டு தன்னை நிதானித்துக்கொண்டு “சார் உட்காருங்க? சொல்லுங்க“ என்றாள்.

திருமலை யோசித்துக்கொண்டு நின்றார். “உட்காருங்க சார்.“ திருமலை அமர்ந்தார். காபி வந்தது இருவராலும் எப்படி அதை சுவைக்க முடியும். திருமலை தன் தொண்டைக்குழியை நனைத்து கொள்ள சிறு தண்ணீரை அருந்தினார். மீண்டும் திருமலையே தொடர்ந்தார்.

“கண்மணி உன் மாமியாரையும் கட்டில்ல இருந்து இழுத்து தள்ளுனது சத்யா தான், அவனால இரண்டு உயிர் போயிடுச்சி இனிமே எந்த உயிரும் போககூடாதுன்னு அவன் நினைக்கிறான். முக்கியமா உன்னோட உயிர்..“

கண்மணிக்கு என்ன சொல்வது என்ன செய்வது இப்படியே போதும் என்று நிறுத்திவிட்டு எழுந்து சென்று விடாலாமா, தன் உயிரான அப்பாவையே கொன்று இருக்கிறானே. கொலைக்காரான் அவனோடு திரும்பவும் வாழ போகிறாயா கண்மணி, எத்தனை வஞ்சத்தை வைத்து இருந்திருக்கிறான். எப்படி அவனுக்கு மனசு வந்தது இப்படி இரண்டு உயிர்களை எடுக்க. என் அம்மா கேட்டால் என்ன ஆவாள்?தூக்கிட்டு கொண்டாலும் சொல்வதற்கு இல்லை. என் தம்பி கொலையே செய்து விடுவானே அய்யோ கடவுளே என்னை இப்படி நட்டாத்தில் நிறுத்தி விட்டாயே, மனம் எதை எதையோ புலம்பி தீர்க்க கண்மணி ஒரு கேள்வியை கேட்டாள் திருமலையிடம்.
“சத்தியேந்திரன் பைத்தியமா?“

“ஹிம்..“சலித்துக் கொண்டார். திருமலை “பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்தியகார டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா அந்த பைத்தியகார டாக்டர் வைத்தியம் பார்க்க எந்த பைத்தியகார டாக்டர்கிட்ட போவாரு இத சாதாரணமா சொல்லிட்டு கடந்து போயிடுவாங்க ஆனா இதுல நிறைய வலி இருக்கு அது தான் உண்மையா உன் புருஷன் வாழ்க்கையில நடந்துருக்கு“

“சத்தியேந்திரனுக்கு சிசோஃபரினியா மனசிதைவு நோய்“

கண்மணி கலங்கிவிட்டாள். இதை பற்றி கொஞ்சம் சத்தியேந்திரன் சொல்லி கேள்வி பட்டிருக்கிறாள். ஆமாம் அவன் பேசிய போது நான் சரியாக கவனிக்கவில்லை. ஏதோ டீவியில் பார்த்துவிட்டு சொல்லி கொண்டிருந்தானே, வெளிநாட்டு வாலிபன் ஒருவன் இந்த வியாதியால் பாதிக்கபட்டு ரோட்டில் இருந்தவர்களை சுட்டு தள்ளிவிட்டான் என்று சொன்னது எல்லாம் நியாபகம் வர, ஆமாம் சரிதான் அதை பற்றி சொல்ல வாயெடுத்த போது தான் நான் சத்யா வாயடைத்தேன் எதுவும் பேசதே இது ஹாஸ்பிட்டலோ கிளினிக்கோ அல்ல என்று. கண்மணியின் மனகுமுறலை களைக்க திருமலை தொடர்ந்தார். “இந்தியாவுல ஒன்மில்லியன் பீப்பில் அப்பக்ட் ஆகுறாங்க சிசோஃபரினியாவால, ஆனா சில கேஸ்சஸ் மட்டும் ரொம்ப எக்ஸ்டீரிம் லவளுக்கு போகுது அதிகமா ஆண்கள தான் பாதிக்குது. சிசோஃபரினியா சிப்ளிட்டிங் மைண்ட்டு சொல்லலாம். உடனே சிபிலிட் பார்ஸ்னாலிட்டி டிஸ் ஆர்டர் கிடையாது, ஆனா அது மாதிரி சில சிம்டம்ஸ் இருக்கும். இதுல மூனு பேசஸ் இருக்கு புரேட்ரோமல், ஆக்டிவ் ஸ்டேஜ், ரெஸிடோல்.

போர் டைப் சிசோஃபரினியா. பேரனாய்டு இது தான் காமனா எல்லாரையும் அட்டாக் பண்ணும். கேட்டடோனியா, ஹேப்ரனிக் இது தான் சத்தியேந்திரன அப்பக்ட் பண்ணிருக்கு. சத்யாக்குள்ள மூனு சிம்டம்ஸ் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ், டிஸ்ஆர்கனைஸ்டு.

நெகட்டிவ்ல ஸ்பீச் அண்ட் பீஹேவியர், பாசிட்டிவ் ஆலுஸ்னேசன் அப்படினா என்னனு தெரியுமா அவங்களுக்கு மட்டும் வித்தியாசமான ஸ்மெல் வரும், அவங்களுக்கு மட்டும் எதாவது குரல் கேட்கும், பழையபடி இருக்கமாட்டாங்க. எல்லாமே மாறிபோயிடும் வித்தியாசமா நடந்துப்பாங்க அவங்களே கற்பனை பண்ணிப்பாங்க ஒருத்தர இன்னொருத்தரா. இது டிபிக்கல்டா போகும் போது உயிர்கூட போகும். இத சத்யா கவனிச்சி கவனிக்கமா விட்டுட்டாரு அவருக்கு இந்த வியாதி ஒரு வருஷமா இருக்கு. இது பைனல் ஸ்டேஜ்… இதுக்கு ஒரு வகை காரணம் நீ தான்.“

“நானா??“

“ஆமாம் சொல்றேன்.. உன்ன இன்னொரு ஆளா நினைக்க ஆரம்பிச்சிருக்காரு.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி காவ்யா கேஸ் அட்டன்ட் பண்ணுனாரு சத்யா…“

இரண்டு வருடங்களுக்கு முன்…

“சார்… நான் ராம்..“ சத்யாவின் தனி கிளினிக்கிற்கு வந்திருந்தான் ராம்.

“உட்காருங்க ராம். என்ன ப்ராப்ளம்“

ராம் தயங்கி தயங்கி சொன்னான். “சார் எனக்கு இல்ல வெளியில உட்காந்திருக்க என்னோட ஒய்ப்க்கு.“ சத்தியேந்திரன் கண்ணாடி டோர் வழியே எட்டி பார்த்தான் மிகவும் சிறிய பெண்ணாக இருந்தாள் பார்ப்பதற்கு. கையில் பிறந்து இரண்டு வாரமே ஆன கைக்குழந்தை வேறு. குழந்தை அழுதுக்கொண்டே இருந்தது, அவள் எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“அவங்களா?“ என்றான் சத்தியேந்திரன்.

“ஆமாம் சார்..“

“ரொம்ப சின்ன வயசா இருக்காங்க..“

ராம் சற்று யோசித்தான் “லவ் மேரஜ் வீட்டுக்கு தெரியாம ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அது கொஞ்சம் பெரிய இடத்து பொண்ணு அவங்க வீட்டுல கட்டட வேலைக்கு போயிருந்தப்போ இரண்டு பேரும் காதலிச்சோம். நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அது தான் என்கூட வந்துட்டு.“
எதார்த்தமாக பேசினான் ராம்.
“மை காட்.. எத்தனை வயசு மைனரா, மேஜரா..“

“மேஜரு தான் சார் பதினெட்டு வயசு“

பெருமூச்சுவிட்டான் சத்தியேந்திரன் “இப்போ உங்களுக்கு என்னவேணும்..“

“சார் அவ பெரிய இடம் அந்த மாதிரி என்னால வச்சிக்க முடியல, ஆனா எந்த குறையும் இல்லாம தான் வச்சிகிட்டேன். குழந்தை பொறந்தது அதுல இருந்து ஒரு மாதிரி நடந்துக்குறா, எதுக்கு எடுத்தாலும் கோபப்படுறா பிஞ்சு குழந்தைய போட்டு அடிக்கிறா கழுத்தை நெரிக்கிறா. என்னையும் அடிச்சி இதோ பாருங்க தையல் போடுற அளவுக்கு வந்துட்டு“ ராம் நெத்தியை காட்டினான்.

“சார் அவள ரொம்ப லவ் பண்றேன் சார். அவ இல்லனா நான் உயிரோடையே இருக்க மாட்டேன் சார் நீங்க தான்“ ராம் கண்கலங்கினான்.

“இது எப்போல இருந்து இருக்கு“

“இப்போ தான் குழந்தை பொறந்ததுல இருந்து.“

“வீட்டுல யாராவது இருக்காங்களா உங்க ரெண்டு பேரையும் தவிர..“

“இல்ல“

“நீங்க என்ன வேலை பார்க்குறிங்க.“

“வாட்ச்மேன் நைட்டீயூட்டி.“

“கவலைபடாதிங்க இது சின்ன மனநிலை மாற்றம் தான் சின்ன பொண்ணு சீக்கிரமே கல்யாணம், குழந்தை, பார்த்துக்க யாரும் இல்லாத சூழல், அப்பறம் நீங்க நைட் போயிடுவிங்க பகல்ல படுத்து தூங்குவிங்க. காலையில இருந்து அந்த குழந்தைய வச்சிக்கிறது பார்த்துக்குறது ஒரு மாதிரி ஸ்டரஸ்ச கிரியட் பண்ணும். குழந்தை பிறந்த பெண்களுக்கு எல்லாம் ஏற்படுற சில ஹார்மோன் சேஞ்சஸ்சால சில மனநிலை மாற்றங்களும் ஏற்படும். திடீர்னு கத்துவாங்க, திடீர்னு அழுவாங்க, குழந்தைய போட்டு அடிப்பாங்க. அந்த காலத்துலயெல்லாம் குழந்தை பொறந்தா வீடே கொள்ளத அளவுக்கு ஜனங்க நிறம்பி இருப்பாங்க அப்பாயி, அம்மாயின்னு இரண்டு கிழவி வெத்தலைய கொழைச்சி போட்டுகிட்டு புள்ளைய மாத்தி மாத்தி கொஞ்சிக்கிட்டு கிடக்குங்க. புள்ள பெத்த அம்மாவுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. அது மட்டுமா பச்ச ஒடம்புகாரின்னு சொல்லி பதினைஞ்சு பேரு சேவை பண்ணுவாங்க. இப்போ எதுவும் கிடையாது புருஷன், பொண்டாட்டி, புள்ளனு சுருங்கி போச்சு. அது தான் பெரும்பாலானா மனவியாதிக்கு காரணம்.“

சத்தியேந்திரன் காவ்யாவை அழைத்து சிறிது பேசினான். அவள் அவ்வளவாக முகம் கொடுத்துகூட பேசவில்லை எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“போஸ்ட்பேட்டம் டிப்ரசன்..“ என்றான் சத்தியேந்திரன். ராம் விழித்தான் “இதுவும் ஒருவித மனநிலை பாதிப்பு தான். நான் சொன்னேன் இல்லையா குழந்தை பிறந்த பெரும்பாலான தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனை தான். அதிகபடியான தனிமை, சோர்வு, இறுக்கம் இதெல்லாம் தான் இதுக்கு காரணம்.“

“சார் பயமா இருக்கு?“

“பயப்படாதிங்க ஒருவாரம் அவங்களுக்கு ரெஸ்ட் கொடுங்க சரியாகிடுவாங்க. நான் சில மருந்து மாத்திரைகள் எழுதி தரேன் சரியா கொடுங்க..“ ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தான் சத்தியேந்திரன்.
இவை நடந்து ஒருமாதம் கழிந்த போது வந்த அந்த செய்தி சத்தியேந்திரனை அதிர செய்தது.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 16

ஓடிக்கொண்டிருந்த முக்கிய செய்தியை உடல் நடுங்க பார்த்துக் கொண்டிருந்தான் சத்தியேந்திரன். அதே நேரம் அவனின் கைப்பேசிக்கு சிணுங்கி அழைத்தது. ரிங்டோன் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. இரண்டு, மூன்று முறைக்கு பிறகு தன் நினைவுக்கு வந்தவன் கைப்பேசியை எடுத்து காதில் ஒற்றினான் செய்தியை பார்த்தவாரே.
“சார் நான் கான்சிடபிள் காசி பேசுறேன். வடபழனி ஸ்டேசன் எஸ்.ஐ சார் உங்கள உடனே வடபழனி ஜி.ஹச். வர சொன்னாரு. ஏதோ முக்கியமான கேஸ் நான் ஜீப் அனுப்பவா சார்?“

சத்தியேந்திரன் எந்த பதிலும் சொல்லவில்லை. அவனுக்குள் பெரும் அமைதி நிலவியது. எல்லாம் ஓய்ந்து போனது போல போனை அப்படியே காதில் வைத்து அமர்ந்திருந்தான்.

கான்ஸ்டபிள் நூறு முறை சார் சார் என்று கத்திக்கொண்டு இருந்தான். சற்று நேரம் கழித்தே சத்தியேந்திரன் சுயநினைவுக்கு வந்தான்.

“சரி சார்..நான் பாக்குறேன்.“ என்றவாரே தன் கைபைசியை அணைத்தான்.

எதிர்முனையில் இருந்த கான்ஸ்டபிளுக்கு எதுவும் புரியவில்லை நம்பர் சரிதானா என்று ஒரு முறை டிஸ்பிளேயில் பார்த்து கொண்டார்.

ஜி.ஹச். வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் எஸ்.ஐ. நட்ராஜ். சத்தியேந்திரனை ஏற்கனவே அறிந்தவர் போல உடனே அடையாளம் கண்டுக்கொண்டார். “சார் வாங்க உங்களுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்.“
இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

“நீங்க தான் என் மச்சினன் பையனுக்கு கவுன்சிலிங் கொடுத்திங்க இப்போ அவன் நல்லா இருக்கான்" அவரே தானாக ஆஜர் ஆனார்.

"அப்படியா! இந்த கேஸ் என்ன?" சத்தியேந்திரன், நட்ராஜ் பேச்சை துண்டித்து விட்டான்.

"சார் கோர்ட்ல பேசண்ட் மனநலம் பாதிக்கபட்டவங்களான்னு செக் பண்ண சொல்லிருக்காங்க. அப்படி மனநலம் பாதிக்கப்பட்டவங்களா இருக்க பச்சத்துல அவங்கள உங்க காப்பகத்துல ஒப்படைக்க சொல்லிருக்காங்க.“

“ஹிம்..“ இருவரும் பேசிக்கொண்டே மூன்றாவது புளோரை வந்தடைந்தனர்.

வார்ட் வாசலில் ராம் மற்றும் இன்னும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நின்று கொண்டு இருந்தனர்.
ராம் கண்ணீர் மல்க நின்று கொண்டு இருந்தான். அவனை பார்த்து பெரும் அதிர்ச்சி சத்யாவிற்குள் வெளிகாட்டி கொள்ளவில்லை.

சத்தியேந்திரன் அருகில் சென்றதும் அவனை நெருங்கி ஏதோ சொல்ல விளைந்தான் ராம். மற்ற காக்கிசட்டைகள் தடுத்ததும் அப்படியே தள்ளி நின்று விட்டான். வார்டின் உள்ளே நுழைந்த போது படுக்கைகள் காலியாக கிடந்தது. ஒதுக்குபுறமாக கிடந்த ஒற்றை படுக்கையில் காவ்யா சுருண்டு கிடந்த மண்புழுவை போல கிடந்தாள்.

சத்தியேந்திரன் அருகே சென்றான். எஸ்.ஐ. “இவள பார்த்தா பைத்தியம் மாதிரியா சார் இருக்கு கண்டிப்பா கள்ள காதல் கேஸ் தான் சார். பெத்த புள்ளைய கொன்னு அத கொண்டு போய் குப்பை தொட்டியில போட்டுட்டு வந்துருக்கான்னா இவ எப்பேர்பட்டவளா இருந்துருப்பா. பிஞ்சு குழந்தை எப்படி தான் இவளுங்களுக்கு மனசு வருதோ. பைத்தியம் இல்லன்னு சர்ட்டிபிகேட் கொடுங்க அப்பறம் இருக்கு இவளுக்கு.“

காவ்யா எல்லாவற்றையும் காதில் வாங்கி கொண்டு படுத்து இருந்தாள்.

சத்தியேந்திரன் அழைத்தான். அவள் திரும்பி கூட பார்க்கவில்லை. எஸ்.ஐ. ஒரு சத்தம் போட்டதும் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். அதற்குள் லேடி இன்ஸ்பேக்டர் ஆப் போலிஸ் உள்ளே நுழைந்தார்.

“என்ன எஸ்.ஐ. சார் என்ன சொல்றா கல்லுனி மாதிரி உட்காந்திருக்கா.“

“எங்க மேடம் அப்படியே பைத்தியம் பிடிச்சவ மாதிரி நடிச்சிகிட்டு இருக்கா.“ ஒரு நர்ஸை அழைத்து வர சொன்னான் சத்தியேந்திரன்.

“காவ்யா நான் பேசுறது காதுல விழுதா, காவ்யா பதில் சொல்லுங்க.“

திரும்ப திரும்ப இதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருந்தான். நர்ஸ் அறைக்கு வந்தாள். “சார்..“

“இவங்க பல்ஸ் எப்படி இருக்கு“
ஒரு பேடில் இருந்த சிலப்பேப்பர்களை எடுத்து காட்டினாள் அந்த நர்ஸ்.

சத்தியேந்திரன் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வார்டை விட்டு வெளியே வந்தான்.

“என்ன சார் ஆச்சு“ என்றாள் அந்த லேடி இன்ஸ்பெக்டர்.

“மேடம் சில டெஸ்ட் எடுக்கனும் நீங்க கீழ்பாக்கம் அழைச்சிட்டு வாங்க. அந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்தா தான் நான் எதுவும் சொல்லமுடியும்.“ அந்த லேடி மெதுவாக “சார் இவள பார்த்தா பைத்தியம் மாதிரியா இருக்கு. நீங்க ஒரு கையேழுத்து மட்டும் போட்டு கொடுங்க?“

“இல்ல மேடம் அவங்க மெண்டலி டிஸ்டப்டு மாதிரி தான் தெரியுது. பார்க்கலாம்?“, சொல்லிவிட்டு சத்தியேந்திரன் அங்கிருந்து நகர்ந்தான். கீழே வந்தான் ராம் பின்னாலேயே ஓடி வந்தான்.

“சார்..சார்..“

சத்தியேந்திரன் நின்று ராமை திரும்பி பார்த்தான்.

“சார் எப்படியாவது காப்பாத்துங்க சார்.“

“மிஸ்டர்.. அவங்களுக்கு சொன்னது தான் உங்களுக்கும் பார்க்கலாம் டெஸ்ட் ரிசல்ட் எப்படி?“ அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே சத்தியேந்திரன் கருவிழிகள் சற்று பெரிதாகியது. ராம் சத்தியேந்திரன் கண்களை உற்று பார்த்தான். அதில் காவ்யா ஆகாயத்தில் இருந்து பறந்து வருவது போல தெரிந்தது. ராம் திரும்பிய கனநேரம் காவ்யா மாடியில் இருந்து கீழே விழுந்து அதிர்வில் சற்று மேல் எழும்பி மீண்டும் கீழே இறங்கினாள்.

“அய்யோ…காவ்யா…“ ராம் கத்திக்கொண்டு ஓடினான் சத்தியேந்திரன் ஆணி அடித்தது போல ஒரே இடத்தில் அசையாது நின்றான்.

ராம் அருகே ஓடிப்போய் காவ்யாவை மடியில் கிடத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதான். காவ்யா விழிகள் திறந்த படியே இருந்தது, இதழ்கள் ஏதோ முணங்கியது.

ராம் சற்று காதை அவள் இதழ்கள் ஓரம் வைத்தான்.

“நான் என் குழந்தைய அப்படி செஞ்சிருக்ககூடாது? நான் வேணும்னே செய்யல ரா…ம்…“ ஸ்டெச்சரை தள்ளிக்கொண்டு நர்ஸ், வாட்பாய் என பத்துபேர் திபுதிபுவென ஓடிவந்து காவ்யாவை தூக்கி கொண்டு ஓடினார்கள்.

ராம் அறிந்துக்கொண்டான் அவள் உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது என்னையும் விட்டு கூட தான், இனிமேல் எனக்கு யார் இருக்கா? ராம் வெடித்து அழ தொடங்கினான்.அவன் நெஞ்சு விம்மியது ஓஓ..என்ற அவன் ஓலம் அந்த பழைய பில்டிங்கே ஆட்டம் கணா செய்தது. சத்தியேந்திரன் ஆறுதல் சொல்ல அருகே வந்தான். அவன் தோள்களில் கைவைத்தவனின் கைகளை தட்டி விட்டான்.

“யாரோட ஆறுதலும் எனக்கு வேண்டாம் சார்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன் காவ்யாவ கொன்னுட்டேன். அவ அவங்க அப்பா, அம்மாகிட்ட இருந்தா நல்லா இருந்துருப்பா நான் தான் காதலிச்சேன் பிரிச்சு கூட்டி வந்தேன். அவள நல்லாவச்சிக்க தான் சார் இருபத்தி நாலுமணி நேரமும் ஓடிகிட்டே இருந்தேன். அதுல ஒரு மணி நேரம் அவளுக்கு செலவு பண்ணிருந்தா, அது தான் சார் அவளோட பெரிய சந்தோஷமா இருந்திருக்கும். அது தெரியாம இருந்திருக்கேனே சார். அவ படிக்கிறன்னு சொன்னா, இந்த குழந்தை இப்போ வேண்டான்னு சொன்னா, அவ சந்தோஷத்தையெல்லாம் பறிச்சி அவள இப்போ பொதைச்சிட்டேனே சார். ஆசையா இருப்பா சார், என்கிட்ட பேசனும் என்னோட சேர்ந்து வெளிய போகனும். அவ அதிகபட்சமா என்கிட்ட எதிர்பார்த்தது அன்பும், ஆதரவும் தானே சார் அத கொடுக்க வக்கத்தவனா ஆயிட்டேனே.“

சத்தியேந்திரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவன் விழிகள் முழுவதும் அந்த நிமிடம் அங்கு சிதறிகிடந்த இரத்த துளிகள் புழுக்கள் போல பிரிந்து நெழிந்து கொண்டு இருந்தது.

“சார் இந்த பாவிங்க என்பொண்டாட்டிக்கு கள்ளகாதல் கதைய கட்டி கேஸ்ச குளோஸ் பண்ணிடுவாயிங்க சார். நீங்க ஒரு சாட்சி சொல்லுங்க, உங்க கிளினிக் வந்தோம் அவ பைத்தியம்னு கூட சொல்லுங்க சார், ஆனா ஒழுக்கம் இல்லாதவன்னு பொய் சொல்றத என்னால தாங்க முடியாது சார். அவ என் உயிர் சார்..“ ராம் புலம்பி கொண்டே இருந்தான். சத்தியேந்திரன் மனம் எதையோ கணக்கு போட்டுக்கொண்டு இருந்தது. ராமை அங்கு நின்ற இன்ஸ்பெக்டர் அழைக்க அவன் அங்கு சென்ற போது சத்தியேந்திரன் விறுவிறுவென்று தன் கார் பக்கமாக சென்று காரில் ஏறிக்கொண்டான் மீண்டும் திரும்பி ராமை பார்த்தான்.

அவன் சத்தியேந்திரன் காரில் ஏறி போவதையே பார்த்துக்கொண்டு இருந்தான். சத்தியேந்திரன் கார் கண்ணாடிகளை குளோஸ் செய்தான்.

கண்மணி டேபிளில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். திருமலை மேலும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
“அது தான் சத்தியேந்திரன் மன அழுத்ததுக்கு காரணமா அமைஞ்சது. அவனோட மனசு அவனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சது. அவனோட சுயநலத்தால அவனோட பெயர் கெட்டு போயிடுனும் சரியா டிரிட்மெண்ட் கொடுக்கலன்னா இவனோட டாக்டர் தொழிலுக்கே அது எதிரா முடிஞ்சிடும்னு நினைச்சி ராம்க்கு உதவி செய்யாம ஓடி வந்தது அவனுக்குள்ள பெரும் குழம்பத்தையும், மன அழுத்தத்தையும் தந்தது. நாளடைவுல நீ அவன் கண்ணுக்கு காவ்யாவா தெரிய ஆரம்பிச்ச. அவன் கொஞ்ச கொஞ்சமா அவன் கட்டுபாட்ட விட்டு போனான். அதனால தான் திரும்ப தவறான டிரிட்மெண்ட் கொடுத்து இன்னொரு பேசண்ட் இறந்தாங்க, அது அவனுக்கு இன்னும் பெரிய அழுத்தத்த கொடுத்தது. அப்பறம் சஸ்பெண்சன் எல்லாம் அவனையே அவனா இல்லாம பண்ணிட்டு.“
கண்மணியின் கண்கள் கலங்கி திருமலையை பார்த்துக்கொண்டு இருந்தாள். திருமலைக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. கண்மணி சட்டென்று அவ்விடம்விட்டு எழுந்தாள். விறுவிறுவென்று எங்கோ சென்றாள். திருமலை எதுவும் கேட்கவில்லை அதே இடத்தில் அப்படயே அமர்ந்து இருந்தார்.

மெர்ஸி தன் அறையில் சர்ஜிக்கள் கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ஏதோ யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் மனம் முழுவதும் பெர்னட் நினைவுகள். அந்த முதல் சந்திப்பிற்கு பிறகு அவன் அவளை விடாமல் வந்து கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கேட்டு கொண்டே இருந்தான்.

“அப்போ பிடிக்கல இப்போ ஏன் பிடிச்சிருக்கு?“ என்றாள் மெர்ஸி.

“காரணம் தேடுறியா காதல் தான் காரணமா இருக்கலாம். உன்ன பிடிச்சிருக்கு அதிகமா ரொம்ப ரொம்ப அதிகமா“

“அதான் ஏன்?“

“தெரியலயே.. ஏன் என்ன உனக்கு பிடிக்கலயா?“

“என்ன திரும்ப உங்களுக்கு பிடிக்காம போனா?“

பெர்னட் மெர்ஸியின் கண்களை மிக அருகே வந்து கூர்ந்து பார்த்தான்.
“எப்படி பிடிக்காம போகும் உன்ன மாதிரி பொண்ண“
பெர்னட் சொல்வது திரும்ப திரும்ப அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவன் மார்ப்போடு முகம் புதைத்து கிடந்த இரவுகள் எல்லாம் இனிமையானவை. ஆனால் வருடங்கள் கழிந்து விட்டது அந்த நினைவுகள் கூட சுமையை தான் சேர்கின்றது. கல்யாணம் ஆகி ஒரு வருடம் இரண்டு வருடம் அவ்வளவு தான், வருடங்கள் ஏற ஏற மனங்களின் தூரமும் அதிகமாகி போகிறதே. நான் புலம்புகிறேன், நான் அழுகிறேன், நான் உம்முன்னு இருக்கேன், நான் சண்டை போடுகிறேன், நான் கோபப்படுகிறேன் எல்லாமே நான் தான் செய்கிறேன் என்றால் அவனின் பங்கு என்ன? இத்தனையும் அவனுக்கு எரிச்சலை சேர்க்கிறது. அவனுக்கு நான் வேண்டாதவள் ஆகிவிட்டேன்.
கத்தியை நரம்புகளின் நடுவே வைத்தாள்.அவள் விழி நீர் கன்னத்தில் நீண்ட வரிகளை போட்டு கொண்டு இருந்தது.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 17

அந்த நொடி சட்டென்று கதவு திறக்கும் சத்தம். பெர்னட் அறைக்குள் வந்தான். எதிரே மெர்ஸி கத்தியும் கையுமாக அமர்ந்திருப்பது பெர்னட்டை சற்று ஆடிப்போகவே செய்தது.

அறை வாசல் கதவில் சாய்ந்தபடி மெர்ஸியை பார்த்துக்கொண்டே நின்றான். மெர்ஸி தலையை குனிந்தபடியே அமர்ந்திருந்தாள்.

எத்தனை துணிச்சலாக இந்த முடிவை எடுத்துவிட்டாள் சற்றும் என்னை பற்றி யோசிக்காமல். சுழலும் பூமி இப்போது நின்று விட்டது போலே ஆகிவிட்டதே. என் பூமியே அவள் தானே அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் நினைத்திருப்பாளா, என்ன அத்தனை கோபம் அவளுக்கு என் மீதா, நானா அவளுக்கு பகையாளி. அவளை தொலைத்துவிட்டு நான் வாழ்ந்துவிடுவேன் என்று நினைத்தாளா, இதற்காகவா வேண்டாம் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் சென்று அவள் காதலை பெற்று கல்யாணமும் செய்துக்கொண்டேன்.
என் கோபவார்த்தைகள் அவளை இந்த அளவுக்கு போகவைத்துவிட்டதே. அவளை புரியாதவன் ஆகிவிட்டேனே எனக்காகவே இருந்தவளை என்னவளை இழக்கபார்த்தேனே எத்தனை பாவி நான். பிள்ளை வேண்டும் என்று நினைத்தேன் அவள் வேண்டாம் என்று நினைத்ததே இல்லையே. அவள் இல்லாமல் எனக்கு ஏது சந்தோஷம் அவள் எப்படி இப்படி செய்ய துணிந்தாள். பெர்னட் மனம் குமுறியது.

கதவில் சாய்ந்து நின்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்களை மூடிக்கொண்டு நின்றான்.

பூகம்பம் நேர்ந்தாலும் பூக்கள் பூக்க தவறாதது போல் மேரியும் தன் உறக்க பணியில் ஆழ்ந்து இருந்தார்.

அறையில் இருவருக்கும் இடையே பேச்சுகள் இல்லை. புயலுக்கு பின் அமைதி என்பது போல பெரும் அமைதி நிலவிக்கொண்டு இருந்தது.

பெர்னட் மெர்ஸியின் எதிரே அவள் காலடியில் முட்டி போட்டு அமர்ந்த நிலையில் உட்கார்ந்தான்.

மெர்ஸி விம்மிக்கொண்டு இருந்தாள். மெர்ஸியின் தாடையை பிடித்து தூக்கினான். அவள் கண்கள் வழியே விழிநீர் கசிந்த வண்ணம் இருந்தது. பெர்னட் மெர்ஸியிடம் கேட்டான்
“என்ன? ஏன்? இப்படி நான் என்ன தப்பு செஞ்சேன் எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க நினைச்ச பதில் சொல்லு மெர்ஸி“

மெர்ஸி தேம்பினாள்.

“அந்த கத்தியால என் கழுத்தை அறுத்து போடு அப்பறம் உன் கைய அறுத்துக்கோ.“
மெர்ஸி எதுவுமே பேசவில்லை அமைதிக்காத்தாள்.

“மெர்ஸி நான் உனக்கு நல்ல கணவனா இல்லையா? எது உன்ன இந்த அளவுக்கு போக வச்சது. நான் கோபத்துல பேசினா நீயும் கோபத்துல நாளு வார்த்தை பேச வேண்டியது தானே, அதவிட்டுட்டு இப்படி செய்ய நினைச்சா? நீ நினைக்கிறியா நான் உயிரோட இருப்பேன்னு ஒரு அம்மாவ இழந்த புள்ள மாதிரி ஆயிடுவேண்டி. ஒரு நிமிஷம் நான் தாமதமா வந்திருந்தா? ஒரு வேளை நான் வரமலே போயிருந்தா?“
தலையில் கைகளை வைத்துக்கொண்டு இடிந்து அமர்ந்தான். இப்போது மெர்ஸி கட்டிலைவிட்டு கீழிறங்கி அவன் அருகே அமர்ந்தாள்.

“நான் கைய அறுத்துக்க நினைச்சேன் தான் ஆனா செஞ்சிருக்க மாட்டேன். நீ வரலன்னாலும் நான் இப்படியே தான் உட்கார்ந்திருந்திருப்பேன். ஒன்னுமே தெரியாத ஒரு குழந்தைய தத்தெடுத்துருக்கேனே கல்யாணம்கிற பேர்ல எப்படி இந்த குழந்தைய விட்டு போவேன்“ அவன் தலையோடு தலையை முட்டினாள்.

பெர்னட் கண்கள் கசிந்தது.

அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் முகம் முழுவதும் இச்இச்சென்று முத்தங்களை வழங்கினாள்.பல கணவன் மனைவி போர்களுக்கு முத்தங்கள் சமாதான புறாவாகிறது.

“பைத்தியம்?“ பெர்னட் சொன்னான்.

“நீ தான்“

“முட்டாள்“

“நீ தான்“

“நம்ம இனிமே டிரிட்மெண்ட் போக வேண்டாம், அதுவா உருவாகட்டும் நம்ப காத்திருப்போம். எத்தனை நாள் எத்தனை வருஷம் ஆனாலும்.“ பெர்னட் சொன்னான்.

“வேண்டாம் உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். நம்ப டிரிட்மெண்ட் போகலாம்.“

பெர்னட் தன் விரலால் மெர்ஸி வாயடைத்தான்.

“உன்ன கஷ்டபடுத்தி எனக்கு கிடைக்கிற சந்தோஷம் சந்தோஷமே இல்ல“ மெர்ஸி, பெர்னட் தோள்களில் சாய்ந்தாள்.

“சில பிரச்சனைகள் பேசுனா முடியுது, சில பிரச்சனைகள் பேசாமலே முடியுது, சில பிரச்சனைகள் முடியுறதே இல்லை“

“ம்ஹீம்..“ கணவன் மனைவி ஊடல் என்பது சிறு கூடலில் தொலைந்துவிட வேண்டும்.

காதலித்து கல்யாணம் செய்தால் என்ன கல்யாணம் செய்து காதலித்தால் என்ன காதல் மாறாதது. வசனங்கள் பேசிக்கொண்டு, அடிக்கடி கட்டிபிடித்துக்கொண்டு, முத்தங்களை வழங்கினாள் தான் உன் அன்பு சத்தியமா நொடி நிமிடம் உன்னை பிரிய நினைத்த போது என் மனம் தடை போட்டு தயங்கியதே அப்போது தான் புரிய தொடங்கியது உன் பேரன்பு. உயிரை சில நிமிஷத்தில் போக்கி கொள்ளலாம் இந்த நிமிடம் போன பின் உன்னுடம் வாழ இருந்த இன்னுமான காலங்கள் தொலைந்து இருக்குமே. மெர்ஸியின் மனம் நினைத்தது. பெர்னட் தோள்களை இறுக்கி பிடித்துக்கொண்டாள் இடையில் காற்று நுழைந்து நமக்கு இடைவெளி தந்துவிடகூடாது என்பதை போல. உதிர்ந்து விழும் மழையை தாங்கி கொள்ள காத்திருக்கும் பூமி போல அவனும் அவளை இருக்க பற்றி கொண்டான். பேசி முடியாத பிரச்சனைகள் ஏதடி, பிரிவு தந்து நீ போயிருந்தாள் என் பிறவியும் முடிந்திருக்குமே. சாதரணமாக வீடுகளில் வாழும் மனிதர்களிடமெல்லாம் தானே அசாதாரண காதல் ஒழிந்து கொண்டு இருக்கிறது. நீயும் நானும் சாதாரண கணவன் மனைவி தான் வெளிஉலகிற்கு என்னில் நீ ராணியாக தானடி வாழ்கிறாய். மனதில் ஒழிந்து கொண்டிருக்கும் கவலைகளை எல்லாம் களைத்து போடுவது உன் கோப பேச்சுகளும், சிறு சண்டைகளும் தானடி. பெர்னட் நினைத்துக்கொண்டே மெர்ஸியின் தோள்களில் சாய்ந்துக்கொண்டான். உலகம் தெரியாது, உயிர்கள் தெரியாது இருளும், இதயதுடிப்பும் மட்டுமே அறிந்த கருவில் ஊர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை போல இருவரும் இப்போது காதலில் இசைந்து கொண்டு இருந்தனர்.

சத்தியேந்திரன் கண்களை விரிந்தான். புதுஉலகம் விழிகளில் படமானது போல அவனுக்கு மனிதர்கள் எல்லாம் வேற்றுகிரகவாசிகள் போல தோன்றியது. சிறு நிழல் ஆடுவது போல அந்த அறை மங்கி தெரிந்தது.

இன்னும் சற்று நிதானித்து விழிகளை விரித்தான் அவர்கள் விசித்திரம் ஆகவில்லை. தான் தான் விசித்திரம் ஆகிக்கொண்டே இருக்கிறேன் என்று அவனுக்குள் தோன்றியது.
திருமலை ஏதோ காவல்தெய்வம் போல கட்டிலில் அருகேயே நின்று கொண்டிருந்தார். யார் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன, என் இத்தனை தொல்லைகளை தாங்கி கொண்டு என்னை பற்றியே சிந்தித்துக்கொண்டு கயிறு சுழற்றிய பம்பரம் பூமியின் பெரும் பகுதியில் சிறு புள்ளியில் மட்டுமே உரிமை கொண்டாடி சுழண்டாடுவது போல என்னை சுற்றி கொண்டு இருந்த அவள் என் கண்களில் படவில்லையே. கூட்டை விட்டு பிரியும் வண்ணத்து பூச்சிகளின் விழிகளில் தெரியும் புது உலகில், இத்தனை நாள் அடைப்பட்டு கிடந்த இருளை மறந்துவிட முடியாமல் சற்று நிலை தடுமாறி போவது போல இருளை பிரிந்த நான் என் உலகை தொலைத்துவிட்டேனா எத்தனை நாட்கள் இப்படி கிடந்தேனோ? என்னை வேண்டாம் என்று போய்விட்டாளா இல்லை வேண்டும் என்றே போய்விட்டாளா. எதை எதையோ மூளைக்குள் ஓடவிட்டவனிடம், திருமலை மெல்ல நலம் விசாரிக்கும் விதமாக “ஆல் ரைட் சத்யா“ என்றார்.

“இல்ல சார் நான் ஆல்ரைட் கிடையாது. கண்மணி எங்க?“
என்னத்தை சொல்வது இவன் எண்ணத்தில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறதோ எதையோ சொல்லபோக இவன் ஆக்ரோஷமாக தெளிந்தவனை பிடித்தது போல மீண்டும் எதுவும் செய்வானோ? அப்படி திருமலை நினைத்துக்கொண்டு இருக்கும் போதே.

“எத்தனை நாள் ஆகுது, நான் இப்படியே கிடக்குறேன் பிணமா“

“ஏன் சத்யா இப்படியெல்லாம் பேசுற? நீ எடுத்துகிட்ட டிரக் அப்படி உன்ன சுயநினைவே இல்லாம பண்ணிட்டு.“

“சார் நான் போதைக்கு அடிமையாகிட்டேன்னு நினைச்சிங்களா?“

சற்று நெருங்கி திருமலை மெதுவாக “உன்ன ஆட்டிபடைக்கிற பேதைக்கு தான் அடிமை ஆகிட்டன்னு நினைக்கிறேன். உன்னோட குற்றஉணர்ச்சி உன்ன மனநிலை சரியில்லதவனா மாத்திடுச்சி சத்யா. இப்போ நீ முழுசா...“ அத்தோடு நிறுத்திக்கொண்டார்.

“ஏன் முழுங்குறிங்க பைத்தியம்மாகிட்டேன்னு சொல்றிங்களா? இந்த பைத்தியம் வேண்டாம்னு போயிட்டாளா“

“கண்மணிக்கு எல்லாமே தெரியும் நான் எல்லாத்தையும் சொல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளபட்டுட்டேன்.“

“சந்தோஷம்..இனிமே அவ வாழ்க்கைய நல்லபடியா அமைச்சிக்கட்டும். ச்சூ..ச்சூ..ச்சூ..“ திடீரென்று எதையோ சொல்ல ஆரம்பித்தான். காதுகளை இறுக்க மூடிக்கொண்டான்.

“என்ன சத்யா“

“அதோ அவ வந்துட்டா என்னையும் அவளமாதிரியே மாடியில இருந்து குதிக்க சொல்றா?“

“சத்யா காம் பிளீஸ் காம்“

“என்ன கட்டுபடுத்த நினைக்காதிங்க நான் அவளோட போயிட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்.“

திருமலைக்கு இவனை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை. இவனை எப்படியாவது ஹாஸ்பிட்டலை விட்டு முதலில் வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே திருமலையின் மூளைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு வழியாக பலநேர போராட்டங்களுக்கு பிறகு அவனை சற்று சமாதானம் செய்தார் திருமலை.

டிஸ்ஜார்ஜ் சீட்டை வந்து கொடுத்தார் நர்ஸ்.

“சார் டாக்டர் மார்னிங் சொன்னது மாதிரியே உங்கள பாலோ பண்ணிக்க சொன்னாரு. டேபிளட்ஸ் கரெக்டா பாலோ பண்ணிக்க சொன்னாரு.“ அந்த நர்ஸ் சொல்ல சொல்ல ஏதோ பலவருட பகையில் காத்திருப்பவன் போலவும், அந்த நர்ஸை ஏதோ ஏழு ஜென்ம பகையாளி போல பார்த்தான் சத்தியேந்திரன். திருமலை உள்ளம் பதறியது அய்யோ நர்ஸ்கு எதும் ஆபத்து வந்திட போகுது.

“சரிமா..சரிமா..“ என்று இவர் பதறினார். அதற்குள் வீல் சேர் தள்ளும் பையன் சத்தியேந்திரன் கைகளை பிடித்து அமரவைத்து சேரை தள்ள ஆரம்பித்தான்.

எப்படியோ ஒரு வழியாக காரின் அருகே வந்து சேர்ந்தனர். இத்தனை நாழிகை வீல்சேரில் அமர்ந்திருந்தவன் திடீரென்று எழுந்தான். ஒரே இடத்தை ஆடாமல் அசையாமல் உற்று பார்த்தான். முன்னே சென்று மீண்டும் பின்னே வந்து அதே இடத்தை விரிக்க விரிக்க பார்த்தான்.

“சார் நீங்க சொன்னது சரி தான் எனக்கு பைத்தியம் முத்திடுச்சி இத்தனை நாளா காவ்யா மட்டும் தான் தெரிஞ்சா இப்போ அந்த பய ராம் அவனும் வரான். அவன் என்கிட்ட எதோ சொல்றான்.“ சத்தியேந்திரன் பேச்சை கேட்கும் போது திருமலையின் இதயத்திற்குள் ஓடிய இரத்தம் உறைந்தது. சற்று நேரம் இதயதுடிப்பே நின்றது போல ஆகிவிட்டது.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பூவை 18

திருமலை விழித்துக்கொண்டு நின்றார். இவன் என்ன சொல்கிறான்? ஒன்றுமே புரியாமல் விழித்தார். சத்தியேந்திரன் தொடர்ந்தான்.
“சார் என்னோட நிலை இவ்வளவு மோசமாகும்னு நான் நினைக்கவே இல்ல, நான் கண்மணியோட சந்தோஷமா வாழனும்னு ஆசைப்பட்டேன்.“

“இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல நீ டீரிட்மென்ட் எடுத்துக்கோ, எல்லாம் சரியாகிடும்.“

“நான் என்ன பைத்தியமா டீரிட்மெண்ட் எடுக்க“ திடீரென்று இப்படியும் மாற்றி போசினான். திருமலையின் மனதில், சிறிது நேரம் இவனிடம் நம் பேசிக்கொண்டு இருந்தால் நம்மை பைத்தியம் ஆக்கிவிடுவான் என தோன்றியது. “சரி சத்யா கிளம்பலாம்?“

“எப்படி போறது அந்த ராம் நம்ம கார மறைச்சிட்டு நிக்கிறான். திடீர்னு ஏன் சார் அவன் உருவம் எனக்கு தெரியனும்.“

திருமலை காரின் முன்னே பார்த்தார்.

“சத்யா இல்லுஷன்னா உனக்கு மட்டும் தானே தெரியனும்? அப்படி தானே?“ திருமலை சொல்லும் போது சத்யா ஆச்சரியமாக அவரை பார்த்தான் முன்னே இரண்டடி நடந்தான். ராம் அசையாமல் நின்று கொண்டு இருந்தான்.

சத்யேந்திரன் அவனையே உற்று உற்று பார்த்தான் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல். “சார்..“ராம் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் சத்தியேந்திரனை திக்குமுக்காட செய்தது அது ஆனந்தத்திலோ, அல்லது சோகத்திலோ. அன்று உதவியென்று கேட்டவனை தயவு செய்து ஒரு பெண்ணின் மானத்தை காப்பாத்துங்கள் என்று கேட்டவனை யாரும் இல்ல நடுக்காட்டில் சில மனித மிருகங்களிடம் அனாமத்தாக்க விட்டு வந்தவனிடம், இல்லை ஓடிவந்தவனிடம் இவன் எதைபேச மீண்டும் வந்திருக்கிறான்.

அவன் பேசுவான், ஆனால் நான் எப்படி அவனிடம் பேசுவேன் எந்த முகத்துடன் பேசுவேன். நான் செய்த பாவத்திற்கு தான் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். இவனிடம் சொல்லவா உன் மனைவிக்கு நான் தீங்கு இழைத்துவிட்டேன், என் மனசாட்சி என்னை கொள்கிறது நீ மகிழ்ந்து கொள் நான் இப்போது ஒரு பைத்தியம் என்று. இப்படி நான் சொன்னால் எந்த அளவுக்கு சந்தோஷபடுவான். ஆனந்தம் அடையட்டுமே தான் காதலித்த உயிருக்கு உயிரான மனைவியை என்னால் தானே தொலைத்தான் நான் அன்றே டிரிட்மெண்ட் சரியாக கொடுத்து இருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள். நானும் சந்தோஷமாக என் கண்மணியோடு வாழ்ந்திருப்பேன். எல்லாம் மாறிவிட்டது இல்லை மாற்றி விட்டேன். மீண்டும் வந்து உதவிக்கேட்டானே அப்போதாவது செய்து இருக்கவேண்டும் அதையும் தட்டிக்கழித்தேன். இப்போது நன்றாக அனுபவி சத்தியேந்திரா நீ இன்னும் பட வேண்டும்? இப்படி சத்தியேந்திரன் மனசாட்சி அவனையே கரித்து கொட்டியது. ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று பார்த்துக்கொண்டே இருந்தான் ராம்.

சத்தியேந்திரனின் இந்த மாற்றம் ராமிற்கு ஏதோ ஒரு வித சங்கடத்தை சேர்த்தது தன்னால் தானே இவர் இப்படி ஆகிவிட்டார். நல்ல மனிதர்..இவருக்குள் என்ன குற்ற உணர்ச்சி, நான் தானே பெரும் தவறு இழைத்தேன். என் காவ்யாவை சரியாக பார்த்துக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருப்பாளே. ம்ஹிம்..பெரும் மூச்சொன்றை விட்டான் ராம்.

“எப்படி இருக்கிங்க சார்?“ ராம் அடுத்தது நலம் விசாரித்தான். திருமலை இப்போது நெருங்கி இருவரின் பக்கமும் வந்தார். சத்தியேந்திரன் ராம் கேட்ட கேள்விக்கு தலையை மட்டும் அசைத்தான்.

“ஹாய் நான் திருமலை..“திருமலை தானாகவே ஆஜர் ஆகினார்.

ராம் தன்னையும் அறிமுகம் செய்துக்கொண்டான்.

“எப்படி இருக்கிங்க ராம் என்ன பண்றிங்க?“திருமலையே கேட்டார்.

“பேசனும் நிறையா பேசனும் அதுக்கு இந்த இடம் சரிபடாதுன்னு நினைக்கிறேன்.“ ராம் சொன்னதும் தான் திருமலையின் மண்டைக்குள் ஏறியது ஹாஸ்பிட்டலில் நிற்பது.

“வாங்க ராம்..“ திருமலை அழைத்தார். ராம், திருமலை இருவரும் காரின் அருகே சென்றார். சத்தியேந்திரன் திரும்பி எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் இப்போது அவ்விடத்தில் காவ்யா இருப்பது போல் உணரவில்லை. ஏனோ தெரியவில்லை அவனுக்குள் வேறு ஒரு வித உணர்வு அங்கு கண்மணி இருப்பது போல் தோன்றியது. திருமலை அழைத்தார் சத்தியேந்திரன் காரின் அருகே சென்றான். கண்மணி இவர்கள் பேசியதை, இப்போது காரில் ஏறி போவதை எல்லாம் மறைந்து நின்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.

மெர்ஸி ஒரு வித கலக்கத்துடன் டைனிங்டேபிளில் அமர்ந்திருந்தாள். பெர்னட் “ஹோய்“ என்று முதுகில் தட்டினான்.

“என்ன பொண்டாட்டி பெரும் யோசனை?“

“நான் ஒரு வாரமா ஹாஸ்பிட்டல் போகல இல்ல? சரி நாளையில இருந்து போகலாம்னு கால் பண்ணுனேன், அப்போ ஒரு நியூஸ் என் காதுக்கு வந்தது அது தான் இப்போ பெரிய கவலைய தந்திருக்கு“

“அப்படி என்ன கவலையான செய்தி அது?“

“பெர்னட், சத்தியேந்திரன் சார் எதோ இல்லிகல் டிரக் எடுத்து ஹாஸ்பிட்டல்ல கோமால இருக்காறாம்.“

“மைகாட் அவருக்கு என்ன தான் பிரச்சனை ஏன் இப்படியெல்லாம்? எனக்கு புரியல?“

“அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு பெர்னட், கண்மணிக்கிட்ட பேசுனாதான் எதுவும் புரியும். அவங்களுக்கு தான் காலையில இருந்து கால் பண்ணிட்டே இருக்கேன் ஆனா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது. அதான் யோசனையா இருக்கு?“

“நேர்ல போய் பார்த்துட்டு வரலமா?“ஏதோ அவள் மனதை அறிந்தவன் போல பட்டென்று இவன் சொன்னான். இருவரும் சத்தியேந்திரன் வீட்டிற்கு புறப்பட்டனர்.

சத்தியேந்திரன் வீடு.
ராம், சத்யேந்திரன் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருந்தனர். திருமலை பிளாக் டீயை போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். இருவருக்கு ஆளுக்கொரு கப்பை வைத்தார். ராம் மரியாதை நிமிர்த்தமாக எடுத்துக்கொண்டான்.

சத்தியேந்திரன் எங்கோ பார்த்துக்கொண்டு எதையோ யோசித்துக்கொண்டு இருந்தான். திருமலை சத்யாவை பார்த்துவிட்டு ராமை பார்த்து சொன்னார் “இப்படி தான்? எப்படி இருந்த மனுசன் எல்லாம் நிம்மதியையும் தொலைச்சிட்டாரு, வாழ்க்கையை தொலைச்சிட்டாரு.“ கவலையாக சொன்னார்.

ராம் ஆறுதலாக சத்தியேந்திரன் கையை பற்றினான்.

“எதுக்கு? ஏன் இப்படி இருக்கிங்க, உங்களோட குற்ற உணர்ச்சிக்கு காரணம் நாங்க தானே? மனுசன்னா தப்புகள் இயல்பு, நீங்க செஞ்சது ஒரு குற்றம்னா அப்போ நான் செஞ்சது. ரத்தமும், சதையும், உயிருமா என் காவ்யாவ தூக்கி கொடுத்துட்டேனே. அப்போ என்னோட குற்ற உணர்ச்சி என்ன கொன்னுடனுமே. ஆனா நான் என் காவ்யாவுக்காக வாழனும் நினைக்கிறேன். என் காவ்யா என்னோடவே இருக்க மாதிரி தான் உணருரேன். சார் நான் மட்டும் கொஞ்சமா நேரம் ஒதுக்கிருந்தா போதும் அவ சந்தோஷமா இருந்துருப்பா, உயிரோட இருந்துருப்பா எல்லாத்துக்கும் காரணம் நான் தானே சார். அவ எந்த மனநிலையில என்னோட குழந்தைய அப்படி செஞ்சிருப்பா அவ அழுதது என் கண்ணுக்குள்ள நிக்கிது சார். ராம் ராம் சத்தியமா நான் வேணும்னு செய்யல, வாய தான் மூடுனேன் அழுதான்னு வாய தான் மூடுனேன் ராம் ராம்.. அவ அவளா இல்ல சார். அவளோட குற்ற உணர்ச்சி தான் அவள கொன்னுட்டு அவ என்னை கொஞ்ச நேரம் யோசிச்சி பார்த்துருக்கலாம்? ஒரு வேளை நான் வெறுத்துடுவேன்னு நினைச்சாலோ என்னவோ? என்னோட முடிவ கேட்காமலே அவளோட முடிவ தேடிக்கிட்டா. சார் அவளுக்கு ஒன்னும் ஆசை கிடையாது சார் குழந்தைய அப்படி செய்யனும்னு. வேலைக்கு போறோம், நாளு இடத்துக்கு போறோம் அங்கயெல்லாம் யாரு மனசும் கஷ்டபட்டுட கூடாது, அவங்களுக்கு பார்த்து செய்யனும், நல்லா கவனிக்கனும் யார் யாரையோ பத்தி கவலை பட்டு அவங்களுக்கு பிடிச்ச மாதிரியெல்லாம் நடந்துக்குறோம். வீட்டுலயே இருக்க ஒரு ஜீவன் அவ மனசு என்ன நினைக்கும், அவளுக்கு என்ன செய்யனும் அப்படின்னு யாருமே நினைக்கிறது கிடையாது. எந்த பெண் என்னோட வாழ்க்கை நிறைவா இருக்குன்னு சொல்லுவாங்க. வாய் வார்த்தைக்காக, யாருக்கு முன்னாடியும் விட்டு கொடுத்து போககூடாதுன்னு வேணும்னா சொல்லுவாங்க. அன்ப வெளிபடுத்துனா தான் உன் மேல பிரியமா இருக்கேன்னு அர்த்தமா எனக்கு அன்ப வெளிபடுத்த தெரியல? ஆம்பளைங்க நிறைய பேர் இப்படி சொல்லி தப்பிச்சிக்கிறோம். அன்ப வெளிபடுத்த தெரியலன்னா எதுக்கு சார் கல்யாணம் செய்யனும். காதல வெளிகாட்டலன்னா எதுக்கு சார் ஒரு பொண்ண நம்ம வாழ்க்கையில கொண்டு வரனும். அன்புன்னா என்ன சார் காதல்ன்னா என்ன சார்?? புலம்புவாங்க தான், பொம்பளைங்க புலம்பிக்கிட்டே இருப்பாங்க அவங்க வலிய அப்பறம் எப்படி சொல்லுவாங்க? எல்லாம் வாங்கி தரேன், உன்ன மகாராணி மாதிரி தானே வச்சிக்கிறேன். அது இல்ல சார் அவங்க எதிர்பார்க்குறது, சாதாரண மனுசியா வச்சி நடந்துங்க அது போதும். சாப்பிட்டியான்னு கேளுங்க, தலைவலிக்கு தைலம் வாங்கி கொடுங்க, நீ அழகா இருக்கனு சொல்லுங்க போதும் சார் இது தான் அவங்க எதிர்பார்க்குறது.“ திருமலை வாயை பிளந்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

“சார், உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம் அவ என்னோட மனைவி யாருக்கும் எந்த கஷ்டமும் தரவே மாட்டா? அவளால நீங்க கஷ்ட படுறிங்கன்னா? எனக்கு குற்ற உணர்ச்சிய தருது சார். ஒரு தனி ஆளோட உணர்வுகள் அவன மட்டும் சேரும் அவன மட்டும் துன்புறுத்தும்னு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். கூட இருக்கவங்களையும் பாதிக்கும். நான் உங்க மனைவிய சொன்னேன். ரொம்ப நல்லவங்க இழந்துடாதிங்க.“ ராம் எழுந்தான்.

“அவங்க யாருக்காக இவ்வளவும் செய்யுறாங்கன்னு நினைக்கிறிங்க எங்கயோ இருந்த என்ன தேடி கண்டுபிடிச்சி உங்க முன்னாடி கொண்டு வந்து சேர்த்துருக்காங்க? அது தான் பொம்பளைங்க மனசு பிடிச்சா பிடிவாதம்னு சொல்லுவோம், அப்படி கிடையாது அவங்களுக்கு பிடிச்சிட்டா விட்டு கொடுக்க மாட்டாங்க போராடுவாங்க? கண்மணி இப்போ அத தான் செய்யுறாங்க? நீங்க அவங்கள விட்டுடாதிங்க?“ ராம், திருமலையிடம் தலையை அசைத்து விட்டு விறுவிறுவென்று அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

பெர்னட்,மெர்ஸி இருவரும் வாசலில் தான் நின்று கொண்டு இருந்தனர். இத்தனை நாழிகையாக நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தனர். ராம் இருவரையும் பார்த்து சிறு புன்னகையோடு கடந்தான். பெர்னட் இறுக்கமாக மெர்ஸியின் கைகளை பற்றிக்கொண்டான். அதில் அத்தனை அன்பும், காதலும் இருந்ததை முதல் முறையாக உணர்ந்தாள். மெர்ஸியின் கண்கள் கலங்கியது. சத்தியேந்திரன் வேகமாக எழுந்தான். மெர்ஸியும், பெர்னட்டும் எதிரே சென்றனர்.
“மெர்ஸி கண்மணிய பார்த்தியா?“ சத்தியேந்திரன் அவர்கள் வந்ததுமே இந்த கேள்வியை கேட்ட போது இருவருக்குள்ளும் பதற்றம் கண்மணி எங்கு சென்றிருப்பாள் என்று.

சத்தியேந்திரன் அவனை மறந்து வீட்டை விட்டு வெளியேறினான். மெர்ஸி, பெர்னட், திருமலை மூவரும் திகில் பிடித்து நின்றனர்.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18

பூவை 19

சத்தியேந்திரனின் கார் நேராக கண்மணியின் அம்மாவான லதாவின் வீட்டு வாசலை வந்தடைந்தது. சிறு பதற்றமும், குழப்பமும் சத்தியேந்திரனுக்குள் கலந்து இருந்தது. அதே கலக்கத்துடன் காரை விட்டு இறங்கினான். கார் வந்த சத்தம் கேட்டு லதா வீட்டிற்குள் இருந்தபடியே வாசலை எட்டி பார்த்தாள், சத்தியேந்திரன் எதிரே வாசல் நிலையை இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு நேர் எதிரே நின்றான். லதாவிற்குள் பெரும் அச்சம் பற்றியது.

நடந்தவை எல்லாம் லதாவும் அறிந்து இருந்தாள். தன் பெண்ணின் வாழ்க்கை இப்படி இந்த பைத்தியகாரனின் கையில் சிக்கி சீரழிகிறதே என்று தினமும் கடவுளிடம் வேண்டி அழுது புலம்புவதே வேலையாகி விட்டது லதாவிற்கு. இப்போது எதற்கு இங்கே வந்து இருக்கிறான், ஒரு வாரமாக இந்த கண்மணியும் போனை எடுக்கவே இல்லை. இவன் வந்திருக்கிறான் என்ன காரணம்.

லதாவின் மனம் புதிர் போட்டுக்கொண்டே இருந்தது. லதா முன்னே ஒரு அடி எடுத்துவைத்தார்.

சத்தியேந்திரன் அதே போசிஸ்சனில் நின்று கொண்டு இருந்தான்.

“கண்மணிய கூப்பிடுங்க?“ சத்தியேந்திரன் லதாவிடம் கேட்டதும், லதாவிற்குள் பயம் இன்னும் அதிகமானது.

“டேய் என் பொண்ண என்னடா பண்ணுன?“

“கண்மணி.. கண்மணி…“ சத்தியேந்திரன் அழைத்தான்.

“கடவுளே என் பொண்ண என்னவோ பண்ணிட்டானே?“

“விளையாடாதிங்க நான் கண்மணிக்கிட்ட பேசனும்.“

“பைத்தியக்காரா..பைத்தியக்காரா..அவ எங்கடா இங்க இருக்கா? அவ வரவே இல்லடா“

லதாவின் பேச்சில் நிதானமும் இல்லை, மரியாதையும் இல்லை அதையெல்லாம் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் சத்தியேந்திரனும் இப்போது இல்லை.

“இங்க வரலையா?“ சற்று தயங்கினான்.

“தலைபாடா அடிச்சிகிட்டேனே, இந்த பைத்தியகாரன் வேண்டாம்னு கேட்டாளா இப்போ அனுபவிக்கிறா. டேய் கொன்னு பொதைச்சிட்டியா என் பொண்ண என்ன பண்ணுன?“

சத்தியேந்திரன் மூளைக்குள் ஏதேதோ செய்ய ஆரம்பித்தது. தலையை இரண்டு முறை கைகளால் தட்டினான். “நான் பைத்தியம் இல்ல.. நான் பைத்தியம்.,.இல்ல…“சத்தமாக கத்தினான்.

லதாவிற்கு அவன் பேச்சுக்கள் வயிற்றில் புளியை கரைத்தது. அவன் நடந்துக்கொள்வது வித்தியாசமாகபட்டது. பயம் லதாவை சட்டென்று யோசிக்கவிடாமல் தன் அனைத்து சக்தியையும் ஒன்று திரட்டி சத்தியேந்திரனை வேகமாக வெளியே தள்ளி கதவடைத்தாள்.

சத்தியேந்திரன் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தான். மீண்டும் மெல்ல எழுந்து வந்து கதவை போட்டு உடை உடையென்று உடைப்பது போல தட்டி தீர்த்தான்.

“நான் பைத்தியம் இல்ல..நான் பைத்தியம் இல்ல.. என் கண்மணிக்கு எதுவும் ஆகாது அவ எங்கயாவது பத்திரமா இருப்பா? நான் தேடி கண்டுபிடிப்பன் உங்க கிட்ட கொண்டு வந்து ஒப்படைக்கிறன். என் தேவதை அவ, அவளுக்கு எதுவும் ஆக..விட..மாட்டன்.“தேம்பியபடியே சொன்னான். மூக்கு, கண் அனைத்து வழியாகவும் ஜலம் கொட்டியது.

கடைசியாக ஓங்கி ஒரு அடி கதவை அடித்துவிட்டு காருக்கு வந்தான். கதவின் அந்த பக்கம் லதா கதவோடு கதவாக சரிந்து தலையில் அடித்துக்கொண்டு “யார் கண் பட்டதோ என் குடும்பம் இப்படி சிரிப்பா சிரிக்கிதே.. கடவுளே.. கண்மணி எங்கடி இருக்க?“ அழுதார்.

மழை திடீரென்று ஆரம்பித்தது. சில நேரங்களில் மரம், மக்கள், சூழ்நிலை எதுவும் அறியாதது மழை. வான்மகளுக்கு என்ன பிரச்சனையோ அவளுக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும் தானே கணவனாளோ பிள்ளைகளாளோ, இல்லை காதல் வைத்து விட்டு இப்போது நின்று ஒத்தையில் தவிக்கிறாளோ? இப்போதெல்லாம் நம்பியவர்கள் தரும் கண்ணீர் தானே அதிகமாக இருக்கிறது. அதுபோல் அவளும் யாரை நம்பி இப்போது அழுதுக்கொண்டு இருக்கிறாளோ. பெரிய கண்ணாடி ஜன்னல்களின் இந்த பக்கம் வானத்தை உற்று பார்த்தபடியே யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் கண்மணி.

அவள் யோசனையை கலைக்கும் வண்ணம் வந்து சேர்ந்தார் அவளின் வக்கில் சதா என்கிற சதானந்தம். பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து மூஞ்சை ஒத்தி ஒத்தி எடுத்தார்.

“நல்ல மழை காரவிட்டு இறங்கி உள்ள வரும் போது லேசா நனைஞ்சிட்டேன்.“ அவனே காரணமும் சொல்லிக்கொண்டான். கண்மணி முகம் வாடிபோய் இருந்தது. எதிரே இருந்த நாற்காளியை இழுத்து அமர்ந்தார் சதா.

அதற்குள் பேரர் இடைபுகுந்தான் “மேடம் என்ன சாப்பிடுறிங்க?“ என்றான். கண்மணி சதாவை பார்த்தாள். “காபி போதும்..“என்றார் அவளிடம்.

“இரண்டு காபி“ என்று ஆர்டர் செய்தாள். அங்கிருந்து நகர்ந்தான்.

“ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா??“

“உம்..காத்திருக்கது எல்லாம் இப்போ எனக்கு பெருசா தெரியுறது இல்ல“ சலித்துக்கொண்டு பதில் வந்தது கண்மணியிடம் இருந்து.

“என்னால நம்பவே முடியல? ஏன் இந்த முடிவு?“ சதா கேள்வி கேட்டதும் கண்மணி அமைதியானாள். சோவென்று மழையின் சத்தம் அந்த கண்ணாடி அறையை தாண்டியும் அவளுக்கு கேட்டது. படக்கு படக்கென்ற மின்னல்கள் வேறு. ஆர்டர் செய்த காபி டேபிளுக்கு வந்தது. கண்மணி ஒரு காபியை சதாவிடம் பணிவாக கொடுத்தாள்.

“காபிய முதல சாப்பிடுங்க மழைக்கு இதமா“, சதா காபியை எடுத்து ஒரு சிப் செய்து விட்டு மீண்டும் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்த குழப்பத்தை தீர்க்க “முதல மீயூட்சுவல பிரிஞ்சிடலாம்னு சொன்னப்போ முடியவே முடியாதுன்னு சொன்னிங்க இப்போ எதுக்கு இந்த முடிவெடுத்திங்க. உங்க காதல பார்த்து நானே பூரிச்சி போயிருக்கேன், இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு. ஆனா நீங்க இப்போ வந்து பிரிஞ்சிடலாம்னு சொல்றிங்க“

கண்மணிக்கு சிரிப்பு வந்தது. அது விரக்தியால் வரும் வேதனை புன்னகை.

“விதின்னு சொல்லலாம், என் மேல அவருக்கு இருந்த அந்த காதல் தான் என்ன பிடிவாதமா அவர விட்டு போகவே கூடாதுன்னு நினைக்கவச்சது. அவரோட காதல் அது, யாரலையும் அப்படி கொடுக்கமுடியாது சார். இப்போ நீங்க பார்க்குற சத்தியேந்திரன் உங்களுக்கு கோபத்த உண்டு பண்ணலாம், நான் பார்த்த சத்தியேந்திரன் எனக்குள்ள அன்பையும் பிணைப்பையும் மட்டும் தான் உண்டு பண்ணுனாரு. ஒரு பொண்ணு ஒரு ஆணுக்கு அடிப்பணிஞ்சி போறான்னா, அடிமையா இருக்கான்னா அது பயத்தாலயோ, பணத்தாலயோ கிடையாது. அந்த ஒருத்தர் தர அன்பு மட்டும் தான். நானும் அப்படி தான்.“ கண்மணி விம்மினாள் கண்கள் கலங்கி கொண்டு வந்தது. சதா டிஸ்யூவை எடுத்து நீட்டினான். “தேங்ஸ்“

“அவருக்கு அவரோட அன்பு மேலயே சந்தேகம் வந்துருக்கு. அவரோட நான் சந்தோஷமா இல்லன்னு அவரே கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சிட்டாரு அவர நான் பிரிஞ்சிட்டா எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறாரு. ஒரு ஆண் தன்னோட பிரச்சனைகள அவ்வளவு சுலபமா யார்கிட்டயும் சொல்லிட மாட்டான். சத்தியேந்திரன் அப்படி தான் செய்யுறாரு, தன்னோட கஷ்டங்கள் என்ன பாதிக்கும்னு நினைக்கிறாரு. நிறைய ஆண்களுக்கு தெரியிறதே இல்ல, அவங்கள்ல பாதிதான் பெண்கள் அவங்க கஷ்டங்கள சொல்லவே இல்லன்னாலும் அது எந்த வகையிலயாவது பெண்கள பாதிச்சிடும் அது தான் எனக்கு நடந்துருக்கு. என்னோட நிம்மதி அவருக்கு வேணும் நான் நிம்மதியா இருக்கனும். அதுக்காக தான் இந்த டிவோர்ஸ். இந்த டிவோர்ஸ் நான் அவருக்கு தர நிம்மதின்னு கூட வச்சிக்கோங்க ஆனா இது முடிவு இல்ல ஆரம்பம்.“ கண்மணியின் இந்த தைரியமான தன்னம்பிக்கையான பேச்சு சதாவை ஒரு நிமிடம் சிலையாக்கியது. மழை நின்றது.

“நாளைக்கு கோர்ட்டுல பார்க்கலாம். நான் உங்கள வீட்டுல டிராப் பண்ணவா.“ சதா கேட்டான்.

“வேண்டாம் என் ப்ரண்டு வரன்னு சொல்லிருக்கா நான் போயிடுவேன்.“

சதா விடைப்பெற்று கொண்டான்.

கண்மணி ஜன்னல் வழியாக அந்த இருண்ட வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சாலையின் ஒரு ஓரமாக சத்தியேந்திரனின் கார் நின்று கொண்டு இருந்தது. தேம்பி தேம்பி அழுது புலம்பிக்கொண்டு இருந்தான். எங்கெங்கோ தேடி தேடி அலைந்து சோர்ந்துவிட்டான்.

“கண்மணி..கண்மணி..“நூற்றியெட்டு மந்திரம் போல அதே உச்சரிப்பு. அழுது அழுது அவன் முகம் வீங்கி போய் இருந்தது.

கார் சீட்டில் கிடந்த செல்போன் ரிங்டோனை கசியசெய்தது. எடுத்து பார்த்தான் திருமலை பெயர் மின்னியது. அட்டன் செய்தான் “சார் கண்மணிய எங்க தேடியும் காணும் சார்..எனக்கு பயமா இருக்கு“ பச்ச குழந்தை போல அழுதான். திருமலைக்கு ஏனோ தவிப்பாக இருந்தது.

“சத்தியேந்திரன் நீங்க வீட்டுக்கு முதல வாங்க, நீங்க எங்க இருக்கிங்க??“

“நான் வரல இப்படியே எங்கயாவது போறேன்.“

“கோழையாட்டம் பேசாதிங்க கண்மணிக்கு எதும் ஆகாது, எங்க இருந்தாலும் கண்மணி நாளைக்கு கோர்ட்டுக்கு வந்துடுவாங்க. அவங்க பிராமிஸ் பண்ணிருக்காங்க.“

“நிஜமாவா சார்..“ அவன் சிறுபிள்ளை தான் திருமலை உணர்ந்தான்.

“சத்தியம்..“

“அப்படி வந்தான்னா அவகிட்ட இத மட்டும் சொல்லிடுங்க..“ சத்தியேந்திரன் சொன்னதை கேட்டதும் திருமலையின் உடல் சில்லுவிட செய்தது. கண்ணீர் தாரையாக கொட்டியது திருமலைக்கு.





 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom