- Messages
- 969
- Reaction score
- 1,132
- Points
- 93
தட்டிலிருந்த மெட்ஜூல் பேரீச்சம்பழம் அதிதியின் இதழாக மின்ன, சுவைத்துப் பார்த்தான். அவளின் இதழ்சுவைக்கு அணுவளவுக் கூட ஈடில்லை அது. நொந்தான்.
தனக்குத் தேவையான ஆதாரங்கள் அனைத்தையும் ஒரு வாரத்தில் திரட்டி முடித்தவன், தன் அம்முலுவுக்கும் அம்முக்குட்டிக்கும் கை நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.
“என்கிட்ட கூட எதுவும் சொல்லாம எங்கப் போனான் இந்த விக்ரமன்?” என புலம்பிக் கொண்டிருந்த நாச்சியம்மை, அவனுடைய அலுவலகத்திற்குச் சென்று அவனின் காரியத்தரிசியிடம் அவனைப் பற்றி விசாரித்தார்.
பின், அவன் பிசினஸ் விஷயமாக ஒரு வாரம் ஃபாரின் ட்ரிப் சென்றிருப்பதாக அவள் கூறியதைக் கேட்டு அதிருப்தியடைந்தவர், அவன் வருகைக்காக காத்திருக்கலானார்.
அவன் வரும் நாளன்று அவனை எதிர்பார்த்து தோட்டத்தில் அமர்ந்திருந்தார் நாச்சியம்மை.
தன் பெட்டிகளை தூக்கிக்கொண்டு வீட்டினுள் விரைந்து கொண்டிருந்த விக்ரமனை ஆர்வமாக, "விக்ரமா!" என்றழைத்தார்.
அவன் அவரை கவனிக்கவில்லை எனவும் முகம் தொங்கிப்போனார்.
உண்மையில் அதிதியையும் அம்முலுவையும் காண வேண்டும் என்கிற பேராவலில் இருந்தவனுக்கு, அவரழைப்பு கேட்கவில்லை.
ஆனாலும் அவன் பின்னேயே வீட்டிற்குள் நுழைந்தார் நாச்சியம்மை.
பெட்டிகளை தூக்கிக்கொண்டு இரண்டு இரண்டு படிகளாக வேகமாகத் தாண்டி தன்னறையை அடைந்த விக்ரமன், கதவை வேகமாக திறக்க முயல, அது உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது.
தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அவசரத்தில் கதவை சாற்ற மறந்தான்.
அசுர வேகத்தில் உள்ளே சென்றவன் கண்டது, தரையில் விளையாட்டுப் பொருட்களை பரப்பி வைத்து, ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கும் தன் புதல்வி அம்முலுவை தான்.
தான் வாங்கி வந்த பொருட்களிலிருந்து அவளுக்கு வேண்டிய பொம்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவளருகில் சென்றவன் செல்லமாக, “அம்முலுமா” என பின்னிருந்து அழைத்தான்.
தன் தலையை மட்டும் இருபுறமும் திருப்பி திருப்பி பார்த்தவள், மீண்டும் தன் வேலையில் கவனமானாள்.
அதைப் பார்த்து சிரித்தவன் அவளின் முன்னே வந்து அமர்ந்து, "ஓய் அம்முலு" என கூப்பிட,
தன் தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் உட்கார்ந்த இடத்திலிருந்தே, "ப்பா.. ப்பா.. ஆஉ. ங்கா.. ம்ம்ம்.. ப்பா" எனக் கத்திக்கொண்டே அவனிடம் தாவினாள் அம்முலு.
ஏழு மாதக் குழந்தையிடமிருந்து அப்பா என்ற அழைப்பை எதிர்பார்த்திராதவன், சந்தோஷ மிகுதியில் அந்தக் கவிதையை தன் கைகளில் அள்ளி முத்தமிட்டான்.
பின், பதிலுக்கு அவனும் தன் கன்னத்தைக் காட்ட, தன் உமிழ்நீர் நிறைந்த வாயை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் அம்முலு.
அதையவன் உளமார ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில், குளியலறையிலிருந்து கேட்டது அந்த எடுப்புப் பிள்ளைக்காரியின் கனிவுக்குரல்.