Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
980
Reaction score
1,132
Points
93
"மனசளவுல நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்கனு இப்போ தான் எனக்கு புரியுது மாமூ. உங்க மனசுல இருக்கறதை என்கிட்ட சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம, பாவம் மாமூ நீங்க. இவ்வளவு நாள் எப்படி தான் உங்களை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தீங்களோ? எனக்கெல்லாம் உடனே எல்லாத்தையும் வெளிய கொட்டிடனும்" என அவன் நெஞ்சிலிருந்து நிமிர்ந்து பார்த்தே பேசியவளுக்கு, சற்று கழுத்து வலிப்பது போல் இருக்க, அதனை அவனிடம் கூறினாள்.


தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன் அவள் கழுத்தை சுற்றி முத்தமிட்டு, தன் முத்தத்தால் கழுத்தாரம் ஒன்றை உருவாக்கினான்.


பின், நிமிர்ந்து அவள் உதட்டின் மேல் முத்தம் பதித்தவன், பிரம்மனின் படைப்பு சரியா என கண்களால் ஆராய்ந்தபடியே கைகளாலும் ஆராயத் துவங்க அழகிய சங்கமம் நிகழ்ந்தது அங்கே.


சங்கமத்தின் முடிவில் தன் புகலிடம் சேர்ந்த பறவையாய் அவள் அவன் மார்புக்கூட்டில் தஞ்சமடைந்தாள்.


மறுநாள் விடியல் வந்தது. அனைவருக்கும் தான்.


நாச்சியம்மை குடும்பத்துடன் எவ்வித சங்கடமுமின்றி சங்கரப்பாண்டியனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.


வாசலில் நின்ற அனைவரையும், "வாங்க! வாங்க!" என கைகளைக்கூப்பி வரவேற்றார் சங்கரப்பாண்டியன்.


அவரின் தமிழர் பண்பாடு மட்டும் அவரை விட்டு போகவில்லை.


எடுத்த எடுப்பிலேயே, "என்னை மன்னிச்சிடுங்கய்யா" என்று அவரை கையெடுத்துக் கும்பிட்டார் நாச்சியம்மை.


முதலில் திடீரென அனைவரும் வந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போயிருந்த சங்கரப்பாண்டியனுக்கு, இப்போது நாச்சியம்மை மன்னிப்பு கேட்பதையும் பார்த்து குழப்பமாயிருந்தது.


"அதெல்லாம் எதுக்குமா? உன்னைத் தப்பா பேசினதுக்கு நீ தான்மா என்னை மன்னிக்கனும்" என்று உளமார மன்னிப்புக் கேட்டார்.


"சரி, சரி, நீங்க ரெண்டுபேரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டது போதும். நகருங்க" என கையில் ஆரத்தி தட்டுடன் முன் வந்த அங்காளப் பரமேஸ்வரி, "எல்லாரும் உள்ள வாங்க" என இன்முகத்துடன் வரவேற்றார்.


அனைவரும் உட்புகப்போகும் சமயத்தில் அதிதியை மட்டும் தடுத்து நிறுத்தியவர், "பேராண்டி கூட சேர்ந்து நில்லு" எனச் சொல்லி விக்ரமன், அதிதி, அம்முலு ஆகிய மூவருக்கும் ஒரு சேர ஆரத்தி சுற்றி உள்ளே வரவேற்றார்.


விக்ரமனும் முதன்முதலாக மருமகனாக தன் காலடியை அவ்வீட்டிற்குள் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.


நடந்த அனைத்தையும் சங்கரப்பாண்டியனிடம் நாச்சியம்மை ஒன்றுவிடாமல் கூற, அங்கிருந்த அனைவருக்கும் ஒருபுறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் தற்போது ஹரி உயிருடன் இல்லையென்று நிம்மதியாகவும் இருந்தது.


முதல்முறை அவர்கள் அவ்வீட்டிற்கு வந்திருப்பதால், விக்ரமன்-அதிதியின் மறுவீட்டு விருந்தையும் நினைவு கூர்ந்து, அதிரடியாக அறுசுவை உணவு செய்து பரிமாறினர்.


அங்கே விருந்து சாப்பிட்டவர்களின் வயிறும் மனமும் ஒரு சேர நிறைந்திருந்தது.


அவ்வருகைக்குப் பின், வாரம் ஒருமுறை தன் கணவனுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் அதிதி.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
980
Reaction score
1,132
Points
93
விக்ரமன் தன் வங்கிக் கணக்கிலிருந்த, ஹரிகிருஷ்ணன் அனுப்பிய பணத்தையெல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கினான். அவனுக்கு அந்தப் பணத்தைத் தொட மனமில்லை.


அதன் பின்னான நாட்களில் ராதாவும் அமெரிக்காவிலிருக்கும் தன் மகள் மாயாவிடம் சென்று செட்டிலாகி விட்டார். தன் பேரன் பேத்தியைப் பார்த்து உவகை கொண்டவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து தான் போனது.


அனைத்து ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்ட இரண்டே மாதத்தில், உதயச்சந்திரன் தன் ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.


வெளியே வந்தவரை அதிதியும் மனமுவந்து அப்பா என்றழைத்து காலில் விழ, உதயச்சந்திரனுக்கு இதுவரை தான்பட்ட வேதனையனைத்தும் தூசு போல் மறைந்து போனது.


கைகளை நீட்டியவுடன் தன்னிரண்டு எலிப்பற்களையும் காட்டிக்கொண்டு, உடனே தன்னிடம் தாவிய தன் பேத்தி அம்முலுவை கண்டு பூரித்துப் போனார் உதயச்சந்திரன்.


உதயச்சந்திரன் தன்னை நிகாரித்து கீதாவை திருமணம் செய்து கொண்டதாலும், தன் அண்ணன் பிரபு அவரைப் பார்த்துவிட்டு திரும்பும்போதே விபத்துக்குள்ளாகி இறந்ததாலும், உதயச்சந்திரன் மீது தீரா வன்மம் வளர்த்திருந்த மானசா, சிறுபெண்ணான அதிதியையும் துன்புறுத்தி ஒரு காலத்தில் வீட்டிலிருந்து விடுதிக்கு செல்ல வைத்தாள்.


உதயச்சந்திரன் துன்பப்பட வேண்டுமென அதிதியின் நிலையையும் கடிதம் மூலம் அவருக்கு எழுதி தெரியப் படுத்தினாள். ஆனால், இப்போது அனைவரும் சந்தோசமாய் இருப்பதைக் கண்டு, அவளால் வயிறெரிய மட்டுமே முடிந்தது.


விக்ரமனின் முன்னெடுப்பால் வெளிநாட்டினரிடமிருந்து முத்துப்பாண்டியனின் ஆராய்ச்சிக் குறிப்பைக் கைப்பற்றிய இந்திய அதிகாரிகள், அது இந்திய நாட்டின் கண்டுபிடிப்பு எனக்கூறி அவர்களின் காப்பி உரிமத்தை ரத்து செய்தனர்.


அதன்பின் விக்ரமனின் விடாமுயற்சியால் முத்துப்பாண்டியனின் கனவு நனவாகியது. அவரின் கண்டுபிடிப்பு இந்திய விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாய் அமைந்ததில் எந்தவொரு சந்தேகமுமில்லை.


அதிதி, நாச்சியம்மை ஆகிய இரண்டு பேரும் இணைந்து ஷிப்ட் கணக்கில் அம்முலுவை பார்த்துக் கொண்டனர்.


கௌதமனின் காதல் விவகாரத்தை அதிதியும் விக்ரமனும் இணைந்து வீட்டில் சொல்ல, அனைவரின் ஒப்புதலுடனும் அவர்களின் திருமணமும் நிச்சயமாகியது.


கௌதமனுக்கும் தேஜஸ்விக்கும் திருமணமான இரவன்று, மணமக்களை முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டு தங்கள் அறைக்குள் தாமதமாக நுழைந்தாள் அதிதி.


அவளை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமன், "இவ்வளவு நேரமாடி?" என கடிந்துகொள்ள,


"இப்போ தான் நல்ல நேரமாம் மாமூ. ம், பழைய மாப்பிள்ளை உங்களுக்கே பொறுமை சுத்தமாயில்ல. பாவம் தேஜு புதுமாப்பிள்ளைக்கிட்ட இந்நேரம்
என்னபாடு படுறாளோ?" எனத் தன் மகளை தொட்டிலில் கிடத்திக்கொண்டே வாய்விட்டு புலம்பினாள்.


"அதெல்லாம் நம்ம பய நல்லா பார்த்துக்குவான். நீ மொத இங்க வா!" என அவளை அருகில் அழைத்தவன், பார்சல் ஒன்றை அவள் கையில் கொடுத்து, "இந்த ட்ரெஸை போட்டுக்கிட்டு வா" என்றான்.


"எதுக்கு?" என்று கேட்டவளிடம்,


"சொன்னதைச் செய்!" என கட்டளையிட்டவன் அவள் வரவிற்காய் காத்திருக்கலானான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
980
Reaction score
1,132
Points
93
அவளும் அவன் கொடுத்த கையில்லாத முட்டிவரையுள்ள, அந்த கருப்பு நிற கவுனை அணிந்து, தலைமுடியை மயில் தோகையாய் விரித்து விட்டு, தாலி மட்டும் வெளியே தொங்க, மாடல் அழகிகளை போல் ஒயிலாக நடந்து வந்தாள்.


அவள் அழகில் உருகி நின்றவன் அவள் காலடியில் சேவகனாகிவிடத் துடித்தான்.


திடீரென அவளருகில் வந்தவன், "ஹாப்பி பெர்த்டே அம்முக்குட்டி" என கத்திக்கொண்டே அவளைத் தூக்கி சுற்ற, சந்தோஷ அதிர்ச்சியில் அவனைப் பார்த்திருந்தவள், மென்மையாய் தன் உதடுகளை அவன் நெற்றியில் ஒற்றியெடுத்தாள்.


அவர்களைக் கண்டு பொறாமை கொண்ட கடிகாரம் சின்னமுள்ளும் பெரியமுள்ளும் இணைந்துவிட்டதை தம்பட்டமடித்து அவர்களை பிரிக்க நினைத்தது.


அவ்வொலியில் கலைந்து அவளை கீழிறக்கிவிட்டவன், அலமாரியிலிருந்த கேக் பாக்ஸை வெளியே எடுத்து வந்து, அவளை வெட்டச் சொன்னான்.


அவளும் மகிழ்ச்சியுடன் கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டிவிட்டாள்.


பாதி கேக்கை சாப்பிட்டவன் மீதியை அவளுக்கு ஊட்டிவிட, ஆக்காட்டி வாங்கிக் கொண்டாள் அதிதி.


கேக்கிலிருந்த கிரீமை தன் ஆட்காட்டி விரலில் எடுத்துக்கொண்டு, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் அம்முலுவின் அருகில் சென்றவன், அதனை லேசாய் அவளின் இதழில் தடவ, தன் நாவால் அதை வழித்து சுவைத்தாள் அவனின் குட்டி இம்சை அரசி.


மேலும் அது வேண்டுமென்று தூக்கத்திலேயே அம்முலு வாயை ஆவென காட்டிக் கொண்டிருக்க, அதனைக் கண்டு சிரித்துக்கொண்டே மறுபடியும் கிரீமை தடவப் போனவனை, "தூங்கற குழந்தைக்கிட்ட என்ன விளையாட்டு?" எனத் தடுத்த அதிதி, பிறந்தநாள் பரிசளித்தவனுக்கு தன்னையே பரிசாக வழங்கினாள்.


ஆறு மாதங்களுக்குப் பிறகு…


ஒன்றரை வயதாகும் அம்முலுவிற்கு பிறந்ததிலிருந்தே முடி இறக்காததால் கண்ணை மறைக்குமளவிற்கு முடி அடர்ந்து வளர்ந்திருந்தது.


நாச்சியம்மையின் அறிவுறுத்தலால் முடி இறக்கும் விழாவுடன் காதுகுத்தும் விழாவையும் சேர்த்து வைத்திருந்தான் விக்ரமன்.


அவ்விழாவிற்காக செங்குளத்தில் உள்ள தங்கள் குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டான் விக்ரமன்.


தன் மகளுக்கு காது குத்தும் போது, அவளின் அழுகையை காண சகியாத விக்ரமன், அங்கிருந்த விநாயகர் சிலையின் அருகே சென்று நின்று கொண்டான்.


அப்போது கடவுளிடம், 'அப்பா விநாயகா! இப்போ சந்தோசமா இருக்கற மாதிரி என் குடும்பம் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். ஒருவேளை கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கற மனவலிமையை நீதான்பா எங்களுக்கு கொடுக்கணும்' என மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.


தொப்பைப் பிள்ளையார் எப்போதும் போல் தன் ரிப்ளையை கொடுத்தார்.


“ம், சூப்பர் விக்ரமா! உன் அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கடவுளே எனக்கு கஷ்டத்தையே கொடுக்காதனு சொல்லாம, கஷ்டத்தை எதிர்க்கற மனவலிமையை கொடுனு கேட்டப்பாரு? நீ எங்கயோ போய்ட்ட. உன் வேண்டுதல் நிறைவேறட்டுமாக!" என ஆசிர்வதித்து, அவனை நோக்கி தன் வசீகரப் புன்னகையை சிந்தினார்.


கடவுளை வணங்கியவன் தன் கண்களை திறந்துப் பார்க்க, சற்று தூரத்தில் ஆறு மாதக்கருவை வயிற்றில் ஏந்தி, காதுகுத்தி அழுகை ஓய்ந்த அம்முலுவை இடுப்பில் ஏந்தி அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் அதிதி.


அவர்களைக் கண்ட விக்ரமன், "அம்மு!" என கைகளை நீட்டி அழைக்க, வேகமாய் ஓடி வந்து அவனிடம் ஒட்டிக் கொண்டனர் அவனின் மூன்று தேவதைகளும்.


நிஜமான நேசம் கொண்ட நெஞ்சத்திற்கு என்றும் தோல்வியில்லை. அவர்கள் இருவர் கொண்ட நேசமும் இங்கு நிஜமாகியது.


அதேப் போல் இப்புவியில் உள்ள காதல் நெஞ்சங்கள் கொண்ட அனைத்து நேசமும் நிஜமாகி காவியம் படைக்க வாழ்த்தி விடைபெறுவோமாக!


சுபம்
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
980
Reaction score
1,132
Points
93
நாளையிலிருந்து எனது 'காதலா காதலா' நாவல் ரீரன் செய்யப்படும் செல்லம்ஸ். இந்நாவலின் நாயகன் அக்னிமித்ரன் ஒரு ஆன்டிஹீரோ என்று கூட சொல்லலாம்😉

அதன் கதைத்திரி,
காதலா! காதலா!- கதைத்திரி
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom