Parvathi Pazhani
Member
- Messages
- 40
- Reaction score
- 14
- Points
- 8
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)
#சுவாமி_விவேகானந்தர்
நம் மனம்தான் நம்மை உயர்த்தக் கூடிய ஆயுதம்!
அது தெளிவாக இருக்கும் வரை யாரும் நம்மை வீழ்த்த முடியாது.
நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்!!
ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.
ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்
நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்.
மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.
நம் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.
நம் மனதை வலிமையானதாக மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.
நம் மனம் சில நோய்களுக்கு நம்மைத் தயாராக வைத்திருக்கிறது.
சில நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
நம் மனம்தான் நம் உலகம்.
நம் மனம்தான் நம் ஆரோக்கியம்.
நம் மனம்தான் தைரியம் தரும் தோழன்.
மனதை விசாலமாக்கி விரிவுபடுத்துவோம்.
மனம் பிரபஞ்சம் அளவிற்கு விரியட்டும்.
நம் சொந்த மனம் நம்மிடம் இல்லாத போது நம் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.
எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.
உடலும் மனமும் இரண்டல்ல.
உடலின் உள்பகுதி தான் மனம்.
உடல் மனத்தின் வெளிப்பகுதி.
உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.
அது மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.
மனது சொல்வதைச் செய்வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு.
#சுவாமி_விவேகானந்தர்