Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பெண்கள் டாட் காம்

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
எனது இந்த முதல் சுயபுனைவு முயற்சிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி ப்ரெண்ட்ஸ்.


சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக, தெளிவாக சொல்லிவிட்ட மனநிறைவு உண்டாகிறது. தலைப்பிற்கும் புனைவு நியாயம் செய்கிறது என்று நினைக்கிறேன்.


ஆங்! 'பெண்கள் டாட் காம்' தொடர்பாக கிளம்பிய புரிதலற்றப் பதிவுகள் எதற்கும் நான் விளக்கம் கொடுக்க கடமைப்பட்டிருக்கவில்லை என்பதால், அவை எதற்கும் நான் செவி சாய்க்கவில்லை. சுயபுனைவிற்கும், சுயசரிதைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு நான் ஏன் பாடமெடுக்க வேண்டும்?


மேலும், 'ஷிவானி, எங்கள் பரிதாபநிலையை உன் கதையில் கிண்டல் செய்வாயா?' என்ற கொதிப்புகள் தான் அதிகம். இவை, என் கதைக்களம் பேசும் பிரச்சினையின் உண்மைத் தன்மைக்கு சான்றுகள். வேறென்ன சொல்ல?


ஒரு கதை என்றும் ஏதோ ஒன்றைப் பற்றிய அறிதலாய் தான் இருக்க வேண்டுமேயொழிய, போதனையாய் இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுண்டு எனக்கு. என் கதை ஒரு மனிதரிடத்தில் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை உண்டாக்கினால் சந்தோசம். உண்டாக்கவில்லையெனில் நிச்சயம் அது என் ஒருவளின் பிரச்சினை கிடையாது. ஆகையால், ஒரு எழுத்தாளரிடம், "நீ சொல்லி யார் கேட்கப்போகிறார்கள்? நீ எதற்கு இதைச் சொல்கிறாய்?" எனும் வகையான கருத்துக்களை தூக்கிக்கொண்டு வராதீர்கள்.


எனக்கும், இதுவரை என் எழுத்தை வாசித்து வந்தவர்களுக்கும் மிக சவாலான மொழிநடை தான் நான் மேற்கொண்டது. சற்று பிசகினாலும் கட்டுரையாகி போரடித்துவிடும் ஆபாயமிருந்தது. இறுதிவரை உங்களை வாசிக்க வைத்திருந்தாலே அது எனது வெற்றி தான்.


மீண்டும், ஒரு சுவாரசியமான கதைக்களத்துடன் உங்களை சந்திக்கும் வரை இந்தப் புனைவு தளத்தில் தான் இருக்கும். தயங்காமல் உங்கள் எழுத்தாள, விமர்சக மற்றும் வாசக நண்பர்களுக்கு பரிந்துரைப்பீர்களாக. நன்றி
 

New Threads

Top Bottom