Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பேபி கார்ன் மசாலா

Rilesh

New member
Messages
4
Reaction score
5
Points
3
தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 1 பாக்கெட்

பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பால் - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

சீரகம் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


வதக்கி அரைப்பதற்கு...

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பூண்டு - 4 பற்கள்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

முதலில் பேபி கார்னை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிரேவி போன்று வந்ததும், தீயைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பேபி கார்னை நீருடன் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், பேபி கார்ன் மசாலா ரெடி!!!
 

New Threads

Top Bottom