Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 30

கற்களை உளி கொண்டு செதுக்கி சிலையாக்கிக் கொண்டும், அந்த மஹாலின் மேற்பரப்பை வடிவமைத்து கொண்டும், மஹாலின் தூணின் அளவை சரி செய்து கொண்டும் இப்படி பலர் சேர்ந்து அந்த மஹால் போன்ற அமைப்பு பெற்ற கட்டிடத்திற்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்க இனியன் தன் ஓவியம் மூலம் அந்த கட்டிடத்தை அழகுற வடிவமைத்து கொண்டிருந்தனர்.
இனியன் தன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க கிளி அவன் தோளில் வந்து அமர்ந்தது.

"ஆபத்து ! ஆபத்து! குழலாளுக்கு ஆபத்து !" என்று அது கூற

இனியன் பதறினான். "இளவரசிக்கு என்னாச்சு தமிழ்?" என்று இனியன் கேட்டுக் கொண்டிருக்க கிளி பறந்து சென்றது.

அதை பின்பற்றி இனியனும் சென்றான்.

"அடடா ! என்ன அழகாக மாறி இருக்கின்றது இந்த இடம் ?" என்று கட்டிக் கொண்டிருக்கும் மஹாலின் அழகை பார்த்து லிங்கா வியந்து கூற,

"நீ சொல்வதும் சரிதான் நண்பா ! இந்த மஹாலின் ஒவ்வொரு தூணும் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை கட்டி முடித்த வல்லவர்களுக்கு இணாம் கொடுத்து சிறப்பிக்க வேண்டும்." – தீரேந்திரன்

"நிச்சயமாக நண்பா ! கலை போற்றப்பட வேண்டும் ! கலைஞன் அதை விட மதிக்கப்பட வேண்டும்" என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க,

சிரிக்கும் சத்தம் அருகில் கேட்க திரும்பிப் பார்த்தனர் இருவரும்.

அங்கு கனிகா காந்தாயினியுடன் வந்து கொண்டிருந்தாள்.

கனிகாவை பார்த்ததும் தீரேந்திரன் முகத்தில் இளநகை வந்தது. அதை கவனித்த லிங்கா "இப்போது இந்த இடம் முழுவதும் இருட்டாக இருக்குமே ! அவளை தவிர ! உனக்கும் பசலை நோய் பிடிக்கப் போகின்றது என்று நினைக்கிறேன் நண்பா ! " என்று லிங்கா கூற

தீரேந்திரன் லிங்காவை புரியாமல் பார்த்தான். "என்ன சொல்கிறாய் நீ ! பசலை நோயா ?" – தீரன்

"உன் பார்வை அவளை விட்டு அகலவில்லை ! இதனை அடுத்து அவள் மட்டும் தனித்து காணப்படுவாள் . பின்பு அவள் அருகில் இருக்க மனம் விளையும் . அவளை பார்க்கவில்லையென்றால் மனம் ஏங்கும் ! போஜனம் செல்லாது ! "இப்படியே அடுக்கிக் கொண்டே லிங்கா போக

"அடேய் நண்பா ! நிறுத்து உன் உளறலை ! அடேயப்பா ! ஒரு பெண்ணை சற்று நேரம் பார்த்தது குற்றமா ?" – தீரேந்திரன்

" ஆம் தீரேந்திரரே! குற்றம் தான்! இது அவளுக்கு தெரிந்தால் உங்கள் சிறம் , புறம் அனைத்தும் வாளிற்கு இரையாகிடும் ! அதுவும் நீங்கள் பார்த்த பார்வைக்கு உங்களை படுத்தி எடுத்துவிடுவாள் பெண்ணவள் !" – லிங்கா

"ஆஹான் ! ரசனைக்கு உரியது" என்று தீரேந்திரன் அவளை பார்த்துக் கொண்டே சொல்ல

"யார் அவளா நண்பா !" – லிங்கா

"இல்லை உன் பேச்சு ?" – தீரேந்திரன்

"நம்பிவிட்டேன் இளவரசே! உங்கள் விழி பாஷை வேறு சொல்கின்றது அரசே! அனேகமாக இங்கு ஒரு யுத்தம் தொடங்கப் போகின்றது என்று நினைக்கின்றேன்" – லிங்கா

"ஆஹான் ! என்ன வாள் யுத்தமா ?" – தீரேந்திரன்

"இல்லை இளவரசே! விழி யுத்தம்" – லிங்கா

" உன் பரிகாசத்தை நிறுத்திவிட்டு இனியனை தேடும்!" என்று தீரேந்திரன் கோபத்தோடு கூற லிங்கா அதன்பின் வாய் திறக்கவில்லை .

இவர்கள் இருவர் அருகில் வந்த கனிகா கடந்து செல்ல முற்பட

"நண்பா ! பெண்டீர் ! கைகள் இப்போது போஜனம் தயார் செய்வதில் மட்டுமல்ல . வாள்கள் பிடிக்கவும் பழகிக் கொண்டது" – தீரேந்திரன்

அதை கேட்டு அந்த குரலை அடையாளம் கொண்ட கனிகா வேகமாக திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். பார்த்தவள் "ஓ ! நீர் தான் நேற்று என்னுடன் சண்டையிட்டு பாதியில் விட்டு சென்ற சூரரோ ? ஆமாம் தங்களுக்கு இங்கு என்ன வேலை ?" – கனிகா

"ஆஹான்! டேய் நண்பா ! என் குரலை வைத்தே சரியாக கணித்துவிட்டார் தேவியார் ! இதில் இருந்து உனக்கு என்ன தெரிகிறது ?" - தீரேந்திரன்.

"உங்கள் நேரம் சரியில்லையென்று தெரிகிறது இளவரசே!" என்று லிங்கா முணுமுணுக்க தீரேந்திரன் அவனை ஒரு பார்வை பார்த்தான்.

அதில் சுதாரித்தவன் , "தெரியவில்லை இளவரசே! நீங்களே ! சொல்லுங்கள் !" – லிங்கா

"அம்மையார் இரவு முழுவதும் என்னை மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தார்கள் போல தெரிகின்றதடா" – தீரேந்திரன்

அதற்கு தீப்பார்வை பார்த்தாள் கனிகா

அதை கண்ட தீரேந்திரன், "என்னடா நண்பா ! சூரியனின் உக்கிரம் பெண்டீர் கண்களில் கூட தெறிக்கின்றது ! அப்பப்பா என்ன ஒரு அனல்?" – தீரேந்திரன்

அதை கேட்டு கனிகா எரிச்சலாக, தீரேந்திரன் அதை ரசிக்க , லிங்கா பயத்தில் நடுநடுங்க இப்படி அனைவரும் ஒவ்வொரு உணர்ச்சியில் இருக்க காந்தாயினி லிங்காவை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

*************************

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. யார் நீங்கள் ?" – கனிகா

"நான் யாராக இருக்கக் கூடும் என்று நினைக்கிறீர்கள் தேவியாரே !" – தீரேந்திரன்

"தேவையற்றதை சிந்தித்து எனக்கு பழக்கமில்லை நீரே... கூறும்" என்று அலட்சியமாக கனிகா கூற லிங்கா வேகமாக ஏதோ கூற வர அவனைத் தடுத்தான் தீரேந்திரன்.

"நான் இனியனின் தோழன் !" – தீரேந்திரன்

"என் தமையருக்கு இப்படிப்பட்ட தோழரா ! ஆச்சரியமாக இருக்கின்றது " என்று போலி ஆச்சரியம் விரவி வர கனிகா கேட்க

"எனக்கும் தான் ஆச்சரியமாக இருக்கின்றது அம்மையாரே ! என் நண்பனுக்கு இப்படி ஒரு தங்கை என்று !" – தீரேந்திரன்

இப்படி இருவரும் வாயாடல் செய்து கொண்டிருக்க லிங்காவும் , காந்தாயினியும் இவர்கள் இருவரிடம் மாட்டிக் கொண்டு விழித்தனர்.

(ஒரு கட்டத்தில் இருவரும் பேச்சு நின்று பார்த்துக் கொண்டிருக்க ஒரு குரல்
டேய் ஹீரோ ! உன் தொங்கச்சிய எவனோ தூக்கிட்டு போயிட்டான்டா போய் காப்பாத்து ! போ ! போ !" - நான்
என்னைய டிஸ்டர்ப் பண்ணாதீங்க ரைட்டர் மேம். அய்யா ரொமான்ஸ் மூட்ல இருக்கேன். - தீரன்
"ஆ! என்னடா இப்படி மாறிட்ட!" - நான்
"என்ன எப்படி மாறிட்டேன். நீ எப்ப பாரு என் செல்லம் கூட சண்டை போடுற காட்சியா வைக்கிற இப்பத்தான் ஏதோ அவ பேசாம இருக்கா ! இந்த சைஃட் கேப் ல
பண்ணலாம்னு பார்த்தா டிஸ்டரப் பண்ண வந்துட்ட நீ ! நாங்களும் எவ்வளவு காலம் தான் அடிச்சிட்டு பிடிச்சிட்டே இருக்கிறது ! போ அந்த பக்கம் ! என் தங்கச்சி அவள அவளே காப்பாத்திக்குவா !" - தீரன்
"என்னடா இப்படி சொல்லிட்ட ! கொஞ்சமாவது பாசம் இருக்கா உனக்கு . ஆமா நீ என்ன தமிழ் ல பேசுற . டேய் ! இப்ப நீ 15 ஆம் நூற்றாண்டுல இருக்கடா சங்கத்தமிழ்ல பேசுடா ! முட்டா பயலே !" - நான்
"ஓ ! ஆமால ! பேசிட்டா போச்சு ! வருங்கால அரசர் ! அரசியின் மனம் கவரும் வேளையில் இருப்பதால் எழுத்தாளர் வேறு இடம் பார்க்கவும் " - தீரன்
"ம்ம்ம் நீ இதுவும் சொல்வ இதுக்கு மேலயும் சொல்வ " - நான்
"என்ன ரைட்டர் ஜீ உங்களையும் கழட்டிவிட்டுட்டானா ! அம்மையார் அருகில் இருந்தா அவனுக்கு நாமளாம் தெரிய மாட்டோம்... இப்ப புரியுதா ! நான் படுற கஷ்டம்! என்னை எத்தனை தடவ இவன்கிட்ட கோர்த்துவிட்ருப்ப" - லிங்
"அடேய் லிங்கா ! பழயதை பேசி என்ன ஆகப் போகுதுடா ! நீயாவது போய் காப்பாத்துடா ! இளவரசிய" - நான்
"ஹ்ம்ம்ம் அதெல்லாம் முடியாது ! என்னோட வேளை தீரன்கிட்ட வசவு வாங்குறது. கனிகிட்ட மாட்டிட்டு முழிக்கிறது. இது தவிர எனக்கு வேற சீன் கொடுத்து இருக்கியா நீ ? ஒரு பெண்ணை கூட கண்ணுல காட்டல !" - லிங்
"டேய்! லிங்கா ! ஒண்ணுக்கு இரண்டா பொண்ண கண்ணுல காட்றேன்டா ! போய் காப்பாத்துடா ! "- நான்
"ஓ ! நல்லது ! பொண்ணை காட்டினா மட்டும் பத்தாது. அவங்களோட சேர்ந்து டூயட் பாடனும் ! ஆடனும்"- லிங்
"டேய் ! அறிவு கெட்டவனே ! நாம் இருக்கிறது 15 நூற்றாண்டுல இங்க எங்கடா டூயட் பாட மூடியும் . வைகை ஓடுது பார் ! அதுல நீயே விழுந்து செத்தா தான் உண்டு. சரித்திரம் இடிக்குதுடா ! அப்படிலாம் செய்ய முடியாது." - நான்
"அப்ப காப்பாத்தவும் முடியாது !"- லிங்
"என் மூணாவது ஹூரோ டா நீ !"- நான்
"என்ன! முதல் ஹீரோ ! செகண்டு ஹீரோ தான் கேள்வி பட்டிருக்கேன். அது என்ன மூணாவது ஹீரோ ! முடியாது ! முடியாது !"- லிங்
நான் இங்கு கெஞ்சிக் கொண்டிருக்க ஒரு குரல்
"அம்மா ! ரைட்டரு ! என் ஆள் இனியன எப்பதா என்னைய காப்பாத்த அனுப்ப போற! நானும் எவ்வளவு நேரம் தான் மரம் விட்டு மரம் ஓட !" - குழல்
"இந்த ஐடியா கூட நல்லா இருக்கே ! இதோ அனுப்புறேன்மா! அது வரை மரம் விட்டு மரம் தாவிகிட்டு இரு ! சாரி ஓடிட்டு இரு ! "- நான்
இந்த ரணகளத்திலும் குழல் அம்மையாருக்கு கிளுகிளுப்பு கேட்குது !
இந்த மாயவன் பையன் வேற என்ன செய்றானு தெரியலயே ! வாங்க மக்காஸ் நாம் போய் பார்க்கலாம் அவனுங்கள.)

***********************************

கடோத்கஜன் கட்டளைபடி குழலை மயக்கம் அடையச் செய்து அவளை தூக்கிக் கொண்டு வந்திருந்தான் மாயவன். அவளை பார்த்ததும் கடோத்கஜன் கோபமானான்.

“அறிவு கெட்ட மூடனே ! நான் செய்யச் சொன்னது என்ன ? நீ செய்து வைத்த காரியம் என்ன ? எதற்காக இவளை கவர்ந்து கொண்டு வந்திருக்கிறாய் ? “ – கடோத்கஜன்

"ஏன் ? சரியாகத தானே செய்திருக்கிறேன். தீரேந்திரனின் தங்கைதானே நீர் அழைத்து வரச் சொன்னீர் நான் அவ்வாறாகத் தான் செய்துள்ளேன்." – மாயவன்

"மூடா ! நான் சொன்னது ரூபவதனியை !" – கடோத்கஜன்

"என்ன ரூபவதனியா ? அவள் ஒரு அரண்மனைப் பணிப்பெண் . அவளால் நமக்கு என்னவாகப் போகிறது ! நீங்கள் பிதற்றுகிறீர்கள்" – மாயவன்

"மாயவா ! நீதான் பிதற்றுகிறாய் அவள் ரத்னபதியார் மகளாவாள். அவள் பிறந்த லக்கணத்தின்படி அவள் பணிப்பெண்ணாக வளர வேண்டும் . இல்லையேல் ராஜ்ஜியம் பறிப்போக கூடும் என்ற குறிப்பின்படி ரத்னபதியார் செய்த சூழ்ச்சி இது !" – கடோத்கஜன்

"என்ன கூறுகிறாய் ?" – மாயவன்

"மாயவா ! மகேந்திரபதியாரின் தமையன் , ரத்னபதியார் .மகேந்திரர் தீரேந்திரனை ஈன்ரெடுக்க ரத்னபதியார் மகவு வேண்டி , ஈசனை தொழுது அவர் அருளால் பிறப்பெடுக்கப்பட்டவள் அவள் . அவளை பலியிட்டால் என் சக்தி பல மடங்காகும். அவளை தற்போது பாதுகாத்து வருகிறார் மகேந்திரர் . நீ சென்று அவளை கவர்ந்து வா !" என்று கூறி கடோத்கஜன் தியானத்தில் அமர முனைய

மயக்கம் தெளிந்து எழுந்தாள் குழல். சுற்றி முற்றி பார்க்க குழலைப் பார்த்த மாயவன் “ கடோத்கஜா ! இவள் உனக்கு தேவையன்றி இருக்கலாம் ! ஆனால் எனக்கு இவளை வைத்து சில பல வேலைகள் இருக்கின்றது . இதோ வருகிறேன் “ என்று அவளை பார்த்து கோணல் சிரிப்பு சிரித்துக் கொண்டே மாயவான் கூற

குழலாள் ஓட ஆரம்பித்தாள். மாயவனும் அவளை துரத்த ஆரம்பித்தான்.

இதை கண்ட கடோத்கஜன்,"மாயவா ! நீ வம்பை விலைக்கு வாங்குகிறாய் !" என்று கூறிவிட்டு கலிங்காவை அழைத்து பேசிக் கொண்டிருக்க

இங்கு குழல் குகையைவிட்டு வெளியே ஓடி வந்து மரம் நிறைந்த அந்த காட்டில் ஓடத் தொடங்கினாள். ஓடியவள் எதன் மீதோ முட்டி மோதி நின்றாள் . நிமிர்ந்து பார்த்தாள் அங்கு இனியன் நின்று கொண்டிருந்தான்.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 31

மகேந்திரர் தன் மாளிகையின் உள்ளே ஒரு படத்தின் முன் சென்று நின்று அந்த படத்தை தொட அது ஒரு சுற்று சுற்றி அவர் முன் ஒரு கதவு வந்தது. அந்த கதவில் அவர் தன் கைகளை வைக்க கதவு திறந்தது.

கதவு திறந்து அவர் உள்ளே சென்றவுடன் வெளியே கதவு மறைந்து படம் தோன்றியது, உள்ளே சென்றவர் முன் ஆருடம் தோன்றியது.

“ மகேந்திரா ! பொளர்ணமி பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொளர்ணமி இரவுக்குள் ‘’ மந்திர வியூகம் “ ஈசனிடம் சேர்ப்பிக்க வேண்டும்’’ என்று அது கூற

"அப்படியே செய்கிறேன் தமையரே ! , அதுமட்டுமில்லை நீங்கள் சொல்லிச் சென்றதன்படி உங்கள் மகளை நான் பாதுகாத்து வருகிறேன் . ஆனால் பணிப்பெண்ணாக வைத்திருப்பது தான் சற்று நெருடலாக இருக்கிறத . அவளுக்கு மாலை சூட்டும் வேளை வந்துவிட்டது. அதற்கான வேலையில் நான் ஈடுபட தாங்கள் ஒப்புதல் தாருங்கள் தமையரே!" – மகேந்திரர்

"மகேந்திரா ! நன்றாக செய் ! ஆனால் என் மகள் திருமணத்தில் சற்று கவனமாக இரு. அவள் மணம் முடிந்ததும் அவளவன் அவளை பார்த்துக் கொள்வான். அதன்பின் நீ கவலை கொள்ளத் தேவையில்லை ஆனால் அவள் மணம் புரியும் வரை அவளை நீ சரியாக பாதுகாக்க வேண்டும்" – ரத்னபதியார்

"உன்னால் மந்திரவியூகம் பொளர்ணமி இரவுக்குள் ஈசனிடம் சமர்பித்து பூஜிக்கபட இயலாது. காரிருள் உன்னை சூழ காத்துக் கொண்டு இருக்கிறது. ஆகையால் நான் சொல்கின்றபடி செய்" என்று கூறிய ரத்னபதியார் சற்று நேரம் ஏதோ கூற அதை கேட்ட மகேந்திரர் அவர் சொல்படி செய்ய விரைந்தார்.

அந்த அறையில் இருந்து வெளியே வந்த மகேந்திரர் முகத்தில் காற்று மோத கண்மூடி கண்திறந்தார் அவர்.

***************

என்னை காப்பாற்றுங்கள் ! என்று கூறியபடி குழலாள் இனியனுக்கு பின்னால் சென்று நின்று கொண்டாள்.

குழலாளை துரத்திக் கொண்டு வந்த மாயவன் இனியனை கண்டதும் சிரித்தான்.

"ஆகா ! தளபதியாரே தங்களை தான் நான் தனிமையில் சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன் ! நீங்களே வாய்ப்பை கொடுத்துவிட்டீர்களே !" – மாயவன்

"ஓஹோ ! அந்த காத்திருப்பிற்கு பதில் சொல்லிவிட்டால் போகின்றதடா?" என்று இனியன் கூறியவுடன்

மாயவன் வேகமாக அவன் மேல் பாய இருவரும் சண்டையிட தொடங்கினர். ஒரு கட்டத்தில் தன் வாளை எடுத்து இனியன் மேல் வீசத் தொடங்கினான் மாயவன். மாயவன் வாளின் வீச்சுகளை தனியாக சமாளித்துக் கொண்டிருந்த இனியனின் கைகளை பதம் பார்த்தது வாள். வேகமாக வாளை தன் கை கொண்டு பறித்த இனியன் அந்த வாளை கொண்டு மாயவனின் ஒரு காலை சிதம் செய்தான்.

கால் வெட்டப்பட்ட நிலையில் மாயவன் . துடித்துக் கொண்டே கால்களை இழுத்துக் கொண்டு ஓட , கைகளில் ரத்தம் வழிய குழலாளை அழைத்துச் சென்றான் இனியன்.

தீரேந்திரனும் , லிங்காவும் பேசிக் கொண்டிருக்க ஒற்றன் ஒருவன் ஓடி வந்தான்.

"இளவரசே! இளவரசியை யாரோ தூக்கிச் சென்று விட்டனர்." என்று அவன் கூற அதிர்ச்சியில் நின்றனர் தீரேந்திரனும் , லிங்காவும்.

வேகமாக அவளை தேட அவர்கள் கிளம்ப முற்பட எதிரில் வந்து கொண்டிருந்தான் இனியன் குழலாளுடன். அவர்களை நோக்கி அருகில் சென்றனர் தீரேந்திரனும்,லிங்காவும்.

“ இளவரசி ! தங்களுக்கு ஒன்றுமில்லையே !” – லிங்கா

"எனக்கு ஒன்றுமில்லை ஆனால்...! தளபதிக்கு தான் கையில்" என்று குழலாள் இழுக்க கனிகா பதட்டம் அடைந்தாள்.

"தமையரே! என்னாயிற்று ?" என்று பதறியபடியே இனியன் அருகில் சென்றாள் கனிகா

"ஒன்றுமில்லையம்மா ! இலகுவான காயம் தான் சரி ஆகிடும்" என்று கூறியவன் " இளவரசே ! உங்கள் தங்கையை பத்திரமாக சேர்த்துவிட்டேன். எல்லாம் மாயவன் செய்த சூழ்ச்சி தான் இது" – இனியன்

"என்ன சொல்கிறாய் நண்பா ?" –தீரேந்திரன்

"ஆம் இளவரசே ! அவன் தான் பெண்களை எல்லாம் கவர்ந்து செல்கிறான். அவனுக்கு பின்னால் ஒருவன் இருக்கின்றான் என்று நினைக்கின்றேன் இளவரசே!" – இனியன்

இனியன் கூறுயதை அடுத்து சற்று நேரம் யோசித்த தீரேந்திரன் குழலிடம் திரும்பினான்.

"எதற்காக அவன் உன்னை அழைத்து சென்றான் ? எங்கு கூட்டிச் சென்றான் என்று உனக்கு எதாவது தெரியுமா குழலாள் ?" – தீரேந்திரன்

"இல்லை தமையரே ! நான் மயக்கத்தில் இருந்தேன். கண்விழித்து பார்க்க அந்த இடம் ஒரு குகை போன்று இருந்தது" – குழலாள்

"அவன் யாரோடு பேசிக் கொண்டிருந்தான்? என்ன பேசிக் கொண்டிருந்தான் ? அவன் எப்படி இருந்தான் ? என்று சற்று சிந்தித்து பாருங்கள் இளவரசி ! அவனை நாங்கள் பிடிக்க வசதியாக இருக்கும்" – இனியன்

இனியன் சொன்னதை அடுத்து சற்று நேரம் சிந்தித்த குழலாள்

"ஞாபகம் வந்துவிட்டது ! அவன் வேறு பெண்ணை அழைத்து செல்வதற்கு பதில் என்னை கவர்ந்து சென்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன் ! தளபதியாரே!" – குழலாள்

"அவன் பார்ப்பதற்கு மந்திரம் தந்திரம் கற்றவன் போல் இருந்தான். அவர்கள் பேச்சில் கூட ஒரு பெண்ணின் பெயர் அடிபட்டது . அவள் பெயர் (என்று சற்று நேரம் சிந்தித்த குழலாள் )ரூபவதனி என்று நினைக்கிறேன் தமையரே!" – குழலாள்

அந்த பெயரை கேட்டதும் லிங்கா, "ரூபவதனியா ? அவள் யாராக இருக்குமடா நண்பா ?"

"அவள் யாராக இருந்தாலும் அவளை காக்க கடமைப்பட்டிருக்கிறோம் நாம்" என்று தீரேந்திரன் கூற

அதற்கு அனைவரும் ஆமோதித்தனர்.

"இனியா ! நன்றாக ஓய்வு பெற்று கைகள் சரியான பின் உன் பணியை தொடங்குவாயாக" என்று தீரேந்திரன் கூற

இனியன் அதற்கு மறுத்து சொல்ல வாயெடுக்க, தீரேந்திரன் பார்த்த பார்வையில் சரி என்று தலையசைத்துவிட்டு இனியன் சென்று விட்டான்.

அவர்களை தொடர்ந்து தீரேந்திரனும் , லிங்காவும் செல்ல முற்பட கனிகா அவர்களை தடுத்தாள்

"நான் யாரிடமும் இந்த சொல்லை கேட்டது இல்லை . உங்களிடம் சொல்லும் துர்பாக்கிய நிலையை எனக்கு ஆண்டவன் அளித்துவிட்டார் என்று நினைத்து அவரை சபிக்கிறேன்" என்று கூறியபடியே கனிகா ஏதோ சொல்ல முனைய

"என்ன முகஸ்துதியெல்லாம் பலமா இருக்கிறது தேவியாரே ! விசயத்திற்கு வரவும் . நாடு ஆளும் மன்னரின் மகன்

பாருங்கள் ! நேரம் மிக அவசியம்" என்று மன்னரின் மகன் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அவன் சொல்ல

அவன் சொன்னதை கேட்டு வெகுண்டவள் ,"இளவரசர் என்று கூட பாராமல் அதிகமாக பேசிவிட்டேனோ என்ற கழிவிரக்கம் உந்தித் தள்ள மன்னிப்பு வேண்ட வந்தேன். ஆனால் தங்களிடம் மன்னிப்பு கோரும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய தவறொன்றும் செய்யவில்லையே. அந்த நேரத்தில் யாரைப் பார்த்தாலும் எல்லோரும் அவ்வாறாகத் தான் நினைப்பார்கள் . ஆகையால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" – கனிகா

"ஆஹான் சிறப்பு ! ரசிக்கும்படியாக உள்ளது என்று அவளை பார்த்தபடியே" – தீரேந்திரன் முணுமுணுக்க

"ம்ம்ம்... இப்போது என்ன சொன்னீர்கள் ?" – கனிகா

"வருகிறேன் என்று சொன்னேன்மா" என்று கூறியவன் யாரும் அறியா வண்ணம் அவளைப் பார்த்து கண்ணை சுருக்கி உதட்டை குவித்து விட்டுச் சென்றான். அதை கண்டவள் தகிக்கும் சூரியனாய் நின்றாள்.

******************

அன்று மகேந்திரர் துயில் கொண்டு இருக்க ஒரு குரல் காற்றில் மிதந்து வந்து அவர் செவியை தீண்டியது.

“மகேந்திரா என் சொல்படி இருவருக்கும் திருமணம் முடித்துவை” என்று அந்த குரல் சொல்ல அதை கேட்டு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல் நின்றார் மகேந்திரர்

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 32

இரவில் ஒற்றன் வேடத்தில் தீரேந்திரனும், லிங்காவும் உலாவிக் கொண்டிருந்தனர்.

“ஏன் தீரா ? இந்த மாயவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறான். உனக்கு எதாவது தோன்றுகிறாதா ?” – லிங்கா

“ஒன்றும் தோன்றவில்லை ஆனால் மாயவன் பின்னால் ஒருவன் இருக்கிறான், அவனை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தீரேந்திரன் லிங்காவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

ஒருவன் பதுங்கி வந்து ஓலைசுவடியை தீரேந்திரனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அதை படித்த தீரேந்திரன்

“என் எண்ணம் சரிதான் நண்பா ! மன்னர்கள் யாவரும் இதில் ஈடுபடவில்லை ! இவையனைத்தும் மாயவன் வேலை தான்.”- தீரேந்திரன்

“ஓ ! அப்படியா ! அப்படியென்றால் வா நண்பா ! அவனை நன்கு கவனிக்க வேண்டும்” – லிங்கா

“அவசரம் கொள்ளாதே ! அவனை வைத்து தான் அவன் பின்னால் இருந்து இதை செய்பவனை கண்டுபிடிக்க வேண்டும்” – தீரேந்திரன்

“சரிதானடா நண்பா” என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க

அருகில் பேச்சு குரல் கேட்க அங்கு விரைந்தனர் இருவரும் .

அங்கே கனிகாம்பிகை காந்தாயினியோடு பேசிக் கொண்டிருந்தாள்.

“என்னாயிற்று கனிகாம்பிகையாருக்கு முற்றத்தில் அமர்ந்து நிலவை வெறித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?” – காந்தாயினி

“தூக்கம் வரவில்லையடி ? குற்ற உணர்ச்சியில் நெஞ்சு குமைகிறது ?” – கனிகா

“அப்படி என்ன குற்றம் புரிந்தீர்கள் தேவியாரே ?” – காந்தாயினி

“என்னடி தேவியார் என்று கூறி அவரைப் போல் என்னை பரிகாசம் செய்கிறாயா ?” - கனிகா

“பரிகாசமா ? நான் எங்கணம் அவ்வாறு செய்தேன். ஆமாம் எவரை சொல்கிறாயடி நீ ?” – காந்தாயினி

“அவர் தானடி ! என்னை தினமும் கொதிக்க வைத்துக் கொண்டிருப்பவர்” – கனிகா

காந்தாயினிக்கு அவள் யாரை குறிப்பிடுகிறாள் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்டாள்

“அவர் என்றால் எவரடி ?” – காந்தாயினி

“ம்ம்ம் இந்நாட்டு மன்னரின் புதல்வர் மகாகணம் பொருந்திய தீரேந்திர பூபதி. மகாகணம் என்று சொல்லக் கூடாது மண்டக்கர்வம் பொருந்தியவர் என்று சொன்னால் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” - கனிகா



“ஓ ! அவரை பற்றி கூறுகிறாயா ! ஆமாம் ஏதோ குற்ற உணர்வு என்றாயே அதற்கும் அவர் தான் காரணமோ?” – காந்தாயினி

“ஆமாம்! மன்னரின் புதல்வரிடம் நான் அப்படி பேசி இருக்க கூடாது ?” – கனிகா

“ஓஹோ !” – காந்தாயினி

“அவருடைய காக்கும் பணியில் அன்று நான் தலையிட்டிருக்கக் கூடாது . மாபெரும் பிழை செய்துவிட்டேன்டி காந்தா” - கனிகா

“ஓஹோ ! – காந்தாயினி

“நாட்டை கட்டிக் காக்கும் சூரரை ! ஆண்மையின் இலக்கணமாக திகழும் இளவரசருக்கு உதவி செய்வதற்கு பதில் உபத்திரம் செய்துவிட்டேன் “ - கனிகா

“ஓஹோ !” – காந்தாயினி

“என்னடி நான் சொல்வதற்கு எல்லாம் ஓஹோ போடுகிறாய் ? என்ன பரிகாசம் செய்கிறாயா ?” – காந்தாயினி

“இல்லை அம்மையாரே ! என்றும் அவரை திட்டிக் கொண்டே இருப்பீர்கள் ! இன்று அவரை பாராட்டுகிறீர்கள் ! அதான் அதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” - காந்தாயினி

“அப்படி ஒன்றும் இல்லை நான் அவரை பாராட்டவில்லை !” – கனிகா

“ஓஹோ ! அப்படியென்றால் ! இதன் பேர் என்ன அம்மையாரே ! “ – தீரேந்திரன்

தீடீரென்று ஆணின் குரல் கேட்க திரும்பிப் பார்த்தனர் இருவரும் அங்கு லிங்காவும் தீரேந்திரனும் நின்று கொண்டிருந்தனர்.

தீரேந்திரனைப் பார்த்ததும் கனிகா சற்று திடுக்கிட்டாள். அதன்பின் தன் திடுக்கிடலை சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்

“பெண்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் தங்களுக்கு என்ன வேலை ? தாங்கள் வந்த நோக்கம் ?” – கனிகா

“தங்களிடம் எனக்கு என்ன வேலை இருக்கப் போகிறது ? எங்கள் தளபதியாரிடம் பேச வந்துள்ளேன் ?” – தீரேந்திரன்

“மகாகணம் பொருந்திய மாமன்னரின் புதல்வர், இந்நாட்டின் இளவரசர் இங்கு எல்லாம் வரலாமா ? அதுவும் இந்த இரவு வேளையில் ?” – கனிகா

“வந்ததால் தானே பல விசயங்கள் புரிகின்றன” – தீரேந்திரன்

“என்ன சொல்கிறீர்கள் ? !” – கனிகா

“நாடும், நாட்டு மக்களின் உண்மை நிலையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றன அல்லவா அதை சொன்னேன்” – தீரேந்திரன்

இவர்கள் இங்கு பேச ஆரம்பித்ததும் லிங்கா

“போச்சுடா ! இவர்கள் வாயாட ஆரம்பித்துவிட்டனர். இது தற்போது முடியப் போவது இல்லை” என்று கூறியபடியே வெளியே அவன் செல்ல

அவனை பின் தொடர்ந்தாள் காந்தாயினி

லிங்கா அங்கு தீரேந்திரனின் குதிரை ராணாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“என்னடா ராணா ! நாடு ஆள வேண்டியவனை இப்படி நிற்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். இப்போது நான் நிலவின் வெளிச்சத்தின் அடியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்.” - லிங்கா

“ம்க்கும்…” என்று பெண்ணின் தொண்டை கமரல் கேட்டு திரும்பிப் பார்த்தான் லிங்கா. அங்கு காந்தாயினி நிற்பதைப் பார்த்து லிங்கா யோசனையாக பார்க்க

“பிரபு ! “ என்று கூறியபடியே தன் முந்தானை துணியின் நுனியை திருகிக் கொண்டே பேச ஆரம்பித்தாள் காந்தாயினி

அவள் பிரபு என்று அழைத்ததும் லிங்காவின் நெற்றியில் யோசனை முடிச்சுகள் முளைத்தன. அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்

உங்களிடம் நான் ஒன்று கூற வேண்டும் என்று காந்தாயினி ஏதோ கூற முற்பட

இனியன் தன்னை அழைக்கும் குரல் கேட்டதும் “இதோ வருகிறேனடா !” என்று கூறியபடி இனியனிடம் விரைந்தான் லிங்கா

செல்லும் அவனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு நின்றாள் காந்தாயினி

“பிரபு ! உங்களை பார்த்த நாளில் இருந்து உங்களை மனதில் வடித்துவிட்டேன். நான் உங்களை பார்த்த வேளையில் நீங்கள் சராசரி மனிதனாகத் தான் இருந்தீர்கள். தற்போது நீங்கள் இளவரசர் என்று தெரிந்தும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறது. உங்களை எப்படியாவது என்னவராக்க வேண்டும் என்று இதயம் துடிக்கிறது. என்னவராக நீங்கள் ஆகவில்லையெனில் உங்களை மற்றவர்களுக்கு சொந்தமாக்க விடமாட்டேன் பிரபு” என்று காந்தாயினி தனியாக பேசிக் கொண்டிருக்க

அதை மரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தது பருந்து ஒன்று

கனிகா , தீரேந்திரனின் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தான் இனியன்.

“இளவரசே ! தாங்கள் எப்படி இங்கே ?” – இனியன்

“எல்லாம் காரணமாகத்தான் தளபதியாரே !” என்று கூறியபடியே தன் முககவசத்தை நீக்கிய தீரேந்திரன்

“மாயவன் என்ன ஆனான்?” – தீரேந்திரன்

“அவனின் ஒரு காலை நான் கொய்துவிட்டு வந்தேன். தற்போது அவன் ஒரு அடிபட்ட வேங்கை ! பாய நேரம் பார்த்துக் கொண்டிருப்பான். கவனமாக இருங்கள் அரசே!” என்று இனியன் கூற

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க பருந்து ஒன்று லிங்காவின் கண்ணில் பட அதை கவனித்து கொண்டிருந்த லிங்காவின் நினைவு எங்கோ செல்லத் தொடங்க தீரேந்திரன் அவனை உலுக்கினான்.

“லிங்கா என்னடா ஆயிற்று வா ! போகலாம்” என்று கூறியபடியே தீரேந்திரன் முன்னால் நடக்க

லிங்கா ஏதோ மந்திரத்தில் இருந்து விட்டவன் போல் தீரேந்திரன் பின் சென்றான்.

இங்கு குழலாள் இனியனை பார்க்க துடித்துக் கொண்டிருந்தாள்

“அடியே ! தோழி ! என்னவரை பார்க்க வேண்டுமடி” என்று குழலாள் கிளியிடம் பேச

“வேண்டாம் இளவரசி ! இப்போது தான் ஒரு கண்டத்தில் இருந்து தப்பித்து வந்து இருக்கிறீர் ! திரும்பவும் மாட்டிக் கொள்ளாதீர்கள் . அரண்மணையைவிட்டு வெளியே செல்லாதீர்கள்” – கிளி

“முடியாது நான் போயாக வேண்டும் என்னவரை கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது அது எப்படியிருக்கின்றது நான் பார்த்தே ஆக வேண்டும்” என்று கூறியபடியே வெளியே செல்ல முனைந்த குழலாளை ஒரு கரம் பிடித்து இழுத்தது.

திரும்பிப் பார்க்க அங்கு தீரேந்திரன் கோபத்தோடு நின்றான்.

“எங்கு செல்கிறாய் ?” – தீரேந்திரன்

“என் இனியவரை பார்க்க ?” – குழலாள்

“தங்கையே இப்போது நீ உன்னை பற்றி மட்டும் சிந்திப்பது தவறு ! உன் முடிவு நாட்டின் மக்களோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு இனியனை மறந்துவிடு ! உன் மனதை மாற்றிக் கொள்ளம்மா!” – தீரேந்திரன்.

“முடியாது… என் மனதை மாற்றிக் கொள்ள முடியாது தமையனாரே! அந்த ஈசனவன் மேல் ஆணை! என் துணை அவர் தான் ! அவர் எனக்கானவர் ! என்று முடிவு செய்துவிட்டேன்! அவர் இல்லையேல் நான் இல்லை ! என்னிடம் அவரை அழைத்து வருவார் ஈசன்” என்று சூளுரைத்துவிட்டு குழலாள் உள்ளே செல்ல

இவர்கள் பேச்சை அருகில் உள்ள தூணின் பின் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார் மகேந்திரபதியார்.

*******************

லிங்காவின் தந்தை சீதக்காதி தூங்கிக் கொண்டிருக்க அவரின் கனவில் ஈசனவன் வந்து ஒன்றை சொல்லிவிட்டுச் செல்ல , அவர் சொல்லிச் சென்றதன்படி மறுநாள் காலையில் மகேந்திரர் முன் நின்றார் மன்னர் சீதக்காதி.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 33
மகேந்திரபதியார் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்ற வண்ணம் யோசித்துக் கொண்டிருந்தார். அவர் யோசனை நேற்று தீரனும் , குழலாளும் பேசிய பேச்சிலேயே நிலைத்தது.
சற்று நேரம் இதே யோசனையில் இருந்தவர் முன் வந்து நின்றார் சீதக்காதி. சீதக்காதியை சற்றும் எதிர்பார்க்காத மகேந்திரர் அவரை கேள்வியாக பார்க்க
மன்னர் சீதக்காதி பேசத் தொடங்கினார்
“ மகேந்திரரே ! என் கனவில் நேற்று ஈசனவன் தோன்றி லிங்காவிற்கு இந்நாட்டின் இளவரசியை மணம் புரிந்து வைக்க வேண்டும் என்று ஆணையிட்டு சென்றுள்ளார். அதன்படி இங்கு நான் வந்துள்ளேன். “ – சீதக்காதி
சற்று நேரம் யோசித்த மகேந்திரர் “ அப்படியே ஆகட்டும் அரசே! சுயம்வரத்தை சிறப்பாக நடத்திட வழிவகை செய்கிறேன்” என்று மகேந்திரர் கூற அதை ஏற்று மன்னர் சீதக்காதி சென்றார்.
அவர் சென்றதும் மகேந்திரர் முன் ஒரு ஒலி தோன்ற அது அவரிடம் பேசியது
“ மகேந்திரா ! மந்திர வியூகத்தை எடுத்துக் கொண்டு வா “ என்று அது கூற அந்த ஒலி சொன்னதை அடுத்து மகேந்திரர் வேகமாக அதை எடுக்கச் சென்றார்.
சீதக்காதி வந்து சென்றதை ஒற்றன் மூலம் அறிந்த தீரேந்திரன் மகேந்திரபதியாரிடம் இது பற்றி கேட்க அவரிடம் விரைய அவர் எங்கோ செல்வதை பார்த்து அவர் பின் சென்றான் தீரேந்திரன்.
மகேந்திரர் அரண்மனைக்குள் ஓர் இடத்தில் ஒரு படத்தின் முன் சென்று நின்று கதவை திறந்து கொண்டு அவர் உள்ளே தீரேந்திரன் பின் தொடர்ந்தான். அவர்கள் உள்ளே சென்றவுடன் வெளியே கதவு மறைந்து படம் தோன்றியது.
உள்ளே மெதுவாக மகேந்திரர் நடந்து செல்ல செல்ல அருகில் உள்ள விளக்குகள் எரியத் தொடங்கியது. தீரேந்திரன் வியப்பு மேலிட பின் தொடர்ந்தான். நடந்து சென்றவர் முன் பாம்புகள் தோன்ற அது அவரை பார்த்ததும் தானாக வழிவிட்டது.
அதை கடந்து சென்றவர்கள் முன் சிலை ஒன்று தன் வாளை நீட்ட அதனிடம் தன் கைகளை நீட்டினார் மகேந்திரர். அது தன் வாள் கொண்டு அவரை தீண்ட ரத்தம் கசியத் தொடங்கியது.
மகேந்திரரின் ரத்தம் கீழே விழ ரத்தத் துளிகள் பட்ட இடம் பிளந்து அவர்களை கீழ் நோக்கிச் அழைத்துச் சென்றது படிகள்.
கீழ் நோக்கி சென்ற மகேந்திரபதியார் முன் நின்றது ஒரு ஆளுயரப் படம், அதில் ரத்னபதியார் கையில் வாளுடன் கம்பீரமாக நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.
அவர் கையை மகேந்திரர் தொட அவர் கையில் இருந்த வாள் காற்றில் மிதந்து ஒரு சுவரின் முன் நின்று லிங்கத்தை வரைய அந்த சுவர் இடிந்து அவர் முன் தோன்றியது அது.
சக்கரம் போன்ற அமைப்பில் , ஈசனின் நாமம் எழுதப் பெற்று காற்றில் சுற்றிக் கொண்டிருந்தது மந்திர வியூகம்.
மந்திரவியூகத்தை கையில் தாங்கிய மகேந்திரர் கண்மூடியபடியே பேசினார்.
“ தீரா பௌர்ணமி இரவுக்குள் சிவ ஆலயத்தில் மந்திர வியூகம் வைக்கப்பட்டு மறுபடியும் அது தன் இடத்தை அடைய வேண்டும். அதை வைத்து பூஜித்து திரும்பவும் மந்திரவியூகத்தை பத்திரபடுத்தும் பொறுப்பை உன்னிடம் நான் தருகிறேன்” என்று கூறி மந்திரவியூகத்தை தீரேந்திரனின் கையில் வைத்தவுடன் மகேந்திரர் மயங்கிச் சரிந்தார்.
தன் ஒரு காலை இழந்த மாயவன் கடோத்கஜன் முன் சென்று நின்றான். அவன் துண்டிக்கப்பட்ட கால்களை அதனிடத்தில் வைத்து தன் கை கொண்டு கடோத்கஜன் தடவ மாயவன் கால்கள் சேர்ந்து பழையபடியானது.
கால்கள் நன்றான மாயவன் கோபமாக கடோத்கஜனிடம் திரும்பினான்.
“கடோத்கஜா ! இனியவனையும் தீரேந்திரனையும் விடக் கூடாது . அவர்களுக்கும் என்னைப் போல வலிக்க வேண்டும். எதாவது செய்யடா” என்று மாயவன் கூற
அதற்கு கடோத்கஜன் சொல்லிய யோசனையை கேட்ட மாயவன் சந்தோசத்தில் மிதந்தான்.
மகேந்திரபதியார் மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்க்க அதை கவனித்த தீரேந்திரன் அவர் அருகில் வேகமாக விரைந்தான்.
“ தந்தையே ! இப்போது உங்களுக்கு பரவாயில்லையா ? என்ன ஆயிற்று உங்களுக்கு ? எங்கேயோ செல்கிறீர்கள் ! எதேதோ செய்கிறீர்கள் ?” – தீரேந்திரன்.
“ தீரேந்திரா ! என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை? அதனால் உன்னிடம் நான் சொல்லிய விசயத்தை விரைவாக செய்யடா ! அதுமட்டுமில்லை நான் ஒரு முடிவு எடுத்திருக்கின்றேன். நீ தான் அதை செயல்படுத்த வேண்டும் “ – மகேந்திரர்
“என்ன சொல்கிறீர்கள் தந்தையே ? எனக்கு ஒன்றும் புரியவில்லை ? ஆனால் தங்கள் சொல்லை நிறைவேற்ற நான் கடமைபட்டிருக்கிறேன் தந்தையே கூறுங்கள்” – தீரேந்திரன்
“இப்போது நமக்கு நேரம் மிகக் குறைவாக உள்ளது . மந்திரவியூகத்தை பற்றி சொல்ல இது தருணமல்ல ! விரைவாக நான் சொன்னதை செய்து முடி ! அதுமட்டுமில்லை இன்னும் இரு தினங்களில் உன் தங்கைக்கு மணமுடிக்க நான் நினைத்துள்ளேன்” - மகேந்திரர்
“என்ன மணமா ? தெரிந்து தான் பேசுகிறீர்களா தந்தையே ? சுயம்வரம் நடத்தி மணவாளனை தேர்ந்து எடுக்கும் உரிமையை நீங்கள் இளவரசிக்கு கொடுக்காமல் இருப்பது சரியல்ல” – தீரேந்திரன்
“அப்படி நாம் சுயம்வரம் நடத்தினால் குழலாள் இனியனுக்கு மாலையிடுவாள் நீ அதற்கு சம்மதிப்பாயா ?” – மகேந்திரர்
அதை கேட்டு அதிர்ச்சியான தீரேந்திரன் “தந்தையே ! தங்களுக்கு எப்படி தெரியும்?” – தீரேந்திரன்
“எல்லாம் எனக்கு தெரியும் ! ஆகையால் தான் இந்த திருமணம் உடனடியாக நடக்க வேண்டும் என்று மனம் விழைகின்றது” – மகேந்திரர்
“தந்தையே…..” என்று தீரேந்திரன் ஏதோ சொல்ல வர
மகேந்திரர் முகத்தில் காற்று வந்து மோதியது. அதன்பின் கண் திறந்தவர்
“அண்டை நாட்டு மன்னன் கிள்ளிவளவனுக்கும் உன் தங்கைக்கும் திருமணம்! அதுமட்டுமில்லை இன்னோரு முக்கியமான விசயம் மந்திரவியூகத்தை உடனே எடுத்துக் கொண்டு வா !“ என்று அவர் கூற
அவர் அப்படி கூறியதும் தீரேந்திரனுக்கு குழப்பம் அதிகமாகியது.
“என்னாயிற்று தந்தையே ! சற்று நேரம் முன்பு தான் மந்திரவியூகத்தை பற்றி கூறினீர்கள் ? சிவஆலயத்தில் வைக்க வேண்டும் என்று கூறினீர். இப்போது உடனே எடுத்துக் கொண்டு வா என்கிறீர்கள்!” என்று தீரேந்திரன் குழப்பத்தோடு கேட்க
“ நான் சொல்வதை செய்ய தயாராகு தீரா. திருமணம் நடக்க ஏற்பாடு செய்துவிட்டு வா ! அதுமட்டுமில்லை உன் தங்கையின் மணத்தோடு உன் மற்றோரு தங்கை வதனிக்கும் மணமுடிக்க முடிவு செய்துள்ளேன். வதனிக்கு மங்கள நாண் சூட்டப் போவது வேறு யாருமில்லை உன் நண்பனும் அண்டை நாட்டு மன்னனுமான லிங்கேஷ்வரன்” என்று மகேந்திரர் கூறிவிட்டு கண்மூடிக் கொள்ள குழப்பத்தில் நின்றான் தீரேந்திரன்
மகேந்திரர் கண்மூடியதும் அவர் காதில் ஒலி பேசியது .
“ சபாஷ் ! மகேந்திரா ! நல்ல காரியம் செய்துவிட்டாய் ! சீக்கிரம் எனக்கு தேவையானதை எடுத்து கொண்டு என்னிடம் வா ! “ என்று அது கூற
மகேந்திரர் விழித்தார்.
அவர் விழித்ததும் அவர் முன் கண்ணாடி தோன்ற அதில் எழுத்துக்கள் தோன்றியது . அதை பார்த்தவர் முடிவோடு எழுந்து சென்றார்
குழப்பத்துடன் விரைந்த தீரன் எதிரில் ஆருடம் தோன்றியது.
“ தீரா ! உன் தந்தை சொல்படி நடக்காதே ! உன் தந்தை இப்போது காரிருள் கைகளில் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்ற வேண்டுமானால் மந்திரவியூகத்தை நாளை சிவஆலயத்தில் வைக்க வேண்டும் . உன் தங்கைகளையும் காப்பாற்ற வேண்டும் ! அவர்களுக்கு உடனே மணமுடிக்க முடிவு செய் ! “ இது எல்லாம் ஒரு வாரத்தில் வர இருக்கும் பௌர்ணமி இரவுக்குள் நடைபெற வேண்டும் என்று அது சொல்லி மறைய
தீரேந்திரன் யோசனையோடு நின்று கொண்டிருக்க கிளி ஒன்று பறந்து வந்து ஓலைசுவடியை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றது.
தீரேந்திரன் பிரித்துப்பார்க்க அதை மகேந்திரர் அனுப்பி வைத்திருந்தார். அதை படித்தவன் ஒரு தெளிவோடு மறுநாள் விடியலுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 34:

ஓலைச்சுவடியை படித்த தீரேந்திரன் அவர் சொல்படி அதிகாலை வேளையில் மந்திரவியூகத்தை எடுத்துக் கொண்டு வர,

அவன் எதிரே வந்து நின்றார் மகேந்திரர்.

"தீரேந்திரா! அதை என்னிடம் கொடு !" – மகேந்திரர்

"முடியாது தந்தையே ! நேரம் வேறு சென்று கொண்டிருக்கிறது ! ஞாயிறு தோன்றுவதுக்குள் இதை நான் ஆலயத்தில் வைத்தாக வேண்டும். வாருங்கள் செல்வோம்!" – தீரேந்திரன்

"என் பேச்சை கேட்டு கொடுத்துவிட்டு செல் தீரேந்திரா! இல்லையேல்..." என்று கூறிய மகேந்திரர் வாள் கொண்டு தாக்க முயல அவரை எதிர்கொள்ள தீரேந்திரன் முனைவதற்குள் இனியன் வந்தான்.

"இளவரசே! நான் பார்த்துக் கொள்கிறேன் ! நீங்கள் சென்று வாருங்கள் !" என்று இனியன் மகேந்திரருடன் வாள் கொண்டு போரிட்டு கொண்டிருக்க தீரேந்திரன் சிவஆலயத்திற்கு விரைந்தான்.

தீரேந்திரன் விரைவாக ஆலயம் நோக்கி சென்று கொண்டிருக்க, வழியில் கரும்புகை ஒன்று உருவாகி அவனை பிடிக்க முயல வானம் இருண்டு மேகம் மழை பொழிய ஆரம்பித்தது. மழைதுளிகள் கரும்புகையில் பட அது உருகி கரைந்தது.

சிவஆலயத்திற்கு சென்று மந்திரவியூகத்தை சிவன் பாதத்தில் வைத்துவிட்டு திரும்பியவன் முன் அடியார் தோன்றினார்.

“ தீரா ! உன் தங்கைகளை காக்கும் நேரம் நெருங்கிவிட்டது. கடோத்கஜன் மந்திரவியூகத்தை கைப்பற்றி உன் தங்கைகளை கையகப்படுத்தும் முன் அவர்களுக்கு மணமுடித்து வைத்து அவனை நீ அழிக்க வேண்டும். அதுமட்டுமில்லை லிங்காவிற்கும் வதனிக்கும் மணம் நடந்தேற வேண்டும் . அது தான் அனைவரையும் காக்கும், நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும்’’ என்று அவர் கூற

தீரன் அவரை குழப்பமாக பார்த்தவாறு “ என்ன சுவாமி நீங்கள் சொல்கிறீர்கள் ? யார் வதனி? அவள் எப்படி என் தங்கையாவாள் ?" – தீரேந்திரன்.

"தீரா ! அரசர் ரத்னபதியாரின் ஒரே செல்வமகள் ரூபவதனிமதியாள். அவள் உன் தங்கையாவாள்" – அடியார்

"என்ன ?" – தீரேந்திரன்

"ஆம் தீரா ! உன் பெரிய தந்தை ரத்னபதியார் பிள்ளை வரம் வேண்டி ஈசனை வணங்கி அவர் அருளால் பிறந்தவள் மங்கையவள். அவள் பிறந்த லக்கணம் கணிப்புப்படி ரத்னபதியார் ராஜ்ஜியம் பறி போய் நிற்கும் நிலையும், நாட்டு வளம் செழிப்பின்றி , நாடு அண்டை நாட்டு மன்னர்களால் சூரை ஆடப்படும் என்று கணிக்கப்பட மக்கள் நலன் கருதியும், வதனியை கடோத்கஜனிடமிருந்து காக்கும் பொருட்டும் ரத்னபதியார் அவளை பணிப்பெண்ணாக நியமித்து காத்து வந்தார். அவர் போரில் மாண்டுவிட அவளை காக்கும் கடமை மகேந்திரரிடம் வந்தது. அவரும் சரியாக தன் பணியை செய்து வந்தார். தற்போது மகேந்திரர் தீய சக்தியின்பிடியில். அவளை காப்பாற்ற உன் நண்பன் லிங்கா அவளை மணந்தாக வேண்டும் . விரைந்து அரண்மனைக்குச் செல்" என்று அவர் கூற

அவர் சொல்லியதன்படி அரண்மனைக்கு விரைந்தான் தீரேந்திரன்.

தீரேந்திரன் சென்றதும் அடியார் முன் ஆக்ரோசமாக நின்றது கரும்புகை.

"என்ன அடியாரே ! என்னை வீழ்த்த சூழ்ச்சி செய்கிறாயா ? உன்னை மட்டுமல்லடா உன் ஈசனையும் வீழ்த்தி எல்லாரையும் அடிமையாக்கி காட்டுகிறேனடா" என்று சொல்லிவிட்டு அது மறைந்தது.

'ஓம் நமச்சிவாய' என்று அடியார் தன் தாடியை தடவியபடியே கூறினார்

அரண்மனைக்கு விரைந்த தீரேந்திரன் தன் தந்தையை காண செல்ல அவர் கிள்ளிவளவனோடு பேசிக் கொண்டிருந்தார்.

தீரேந்திரனை பார்த்த மகேந்திரர் "தீரேந்திரா ! இவர் தான் கிள்ளிவளவன். இவர் தான் குழலாளை மணமுடிக்க போகிறவர். அதுமட்டும் அல்ல நாளை ரூபவதனிக்கும் , குழலாளுக்கும் மணமுடித்து வைக்க ஏற்பாடு செய்வதாக முடிவு செய்துள்ளேன். அதற்கு ஏற்பாடு செய்" என்று மகேந்திரர் கூற

அதிர்ச்சியில் நின்று விட்டான் தீரேந்திரன்.

"நான் சென்று வருகிறேன் மன்னா !" என்று கிள்ளிவளவன் அவரிடம் ஆசி பெற்று தீரேந்திரனை கடந்து செல்ல முனைந்தவன்,

தீரனுக்கு மட்டும் கேட்கும்படி "என்ன தீரேந்திரா ! எப்படி இருக்கிறாய் ! இனி நன்றாக இருக்க மாட்டாய் . குழலாளை மணம் செய்து அவளை சித்ரவதை செய்து, உனக்கான பரிசாக அவளது கண்ணீரை தரலாம் என்று நினைத்திருக்கிறேன் என்று கிள்ளிவளவன் முணுமுணுத்துவிட்டுச் சென்றான்.

தீரேந்திரன் அவனையே திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அரண்மனைவிட்டுச் சென்ற கிள்ளிவளவன் நேராகச் சென்றது கடோத்கஜனிடம் . அவனைப் பார்த்ததும் கடோத்கஜன் சிரித்துக் கொண்டே “ வா ! மாயவா ! வெற்றி நமது தானே ! இனி காரிருள் இவ்வுலகத்தை ஆட்சி புரிவதை யாராலும் தடுக்க முடியாது" என்று கடோத்கஜன் கூற

கிள்ளிவளவன் ரூபத்தில் இருந்த மாயவன் சிரித்துக் கொண்டே தன் சுய உருவம் அடைந்தான்.

“சரியாக சொன்னாய் கடோத்கஜா ! இனி தீரனின் அழிவு காலம் ஆரம்பம் “ என்று மாயவன் சிரித்தான்.



வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 35:

திருமணம் நடப்பதற்காக அரண்மனையே திருவிழா கோலம் பூண்டிருந்தது. மதுராந்தகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது. இருக்காத பின்ன திருமண வைபவத்தை ஒட்டி மக்களுக்கு பல பரிசுகளும் சலுகைகளும் மன்னர் மகேந்திரபதியார் அறிவித்திருக்க மக்கள் சந்தோசத்தில் மிதந்தன.

அரண்மனையின் நடப்பாதை , மதில்கள் , மற்றும் மாடங்கள் எல்லாம் பல வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

திருமணம் நடைபெறும் மேடை மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க எங்கும் எதிலும் கலைவண்ணமும் கவிஞர்களின் அழகோவியமாக திருமண மேடை இருந்தது.

மேகங்களின் கூட்டத்தின் நடுவே மின்னும் ஒற்றை நட்சத்திரத்தின் ஜொலிப்புமாகவும், அழகோவியமாகவும் வந்து நின்றாள் குழலாள்.

ஆழ் கடலின் நிறத்தில் அமைதியின் உருவாக மனதிற்குள் அந்த கடல் அலைகளைப் போன்ற ஆர்ப்பரிப்புமாக நின்று இருந்தாள் ரூபவதனி.

ரூபவதனி நேற்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

மகேந்திரர் தன்னை அழைத்ததும் அதை ஏற்று சென்ற வதனியிடம் “ ரூபவதனி உனக்கு நாளை திருமணம் . அதற்கான உடை இது தான். இதை உடுத்தி கொண்டு நாளை நீ உன் திருமணத்திற்கு தயாராகு “என்று அவர் கூற

மகேந்திரர் சொன்ன விசயத்தை கேட்டு குழப்பமாக நின்ற ரூபவதனியை அழைத்து சென்றனர் பணிப் பெண்கள் இருவர். அவளுடைய உடை , இருப்பிடம் அனைத்தும் ஒரே நாளில் மாற்றப் பட்டது. நடப்பதை கனவா ? நினைவா ? என்று புரியாமல் குழம்பி நின்றாள் வதனி .

இங்கு குழலாள் இனியனை மணமுடிக்க முடியாத தன் நிலையை எண்ணி வருத்ததோடு நின்றாள். தனக்கு திருமணம் என்ற செய்தி அறிந்த பின்னர் தன் தந்தையிடம் பேச அவள் முனைய அவள் எண்ணம் அறிந்த மகேந்திரர் அவளை பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை . குழலாளுக்கு பாதுகாப்பையும் பலப்படுத்தினார்.

இப்படி மணப்பெண்கள் இருவரும் தன் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருக்க

அங்கு மாயவன் ! தன் முன் நிற்கும் ஒற்றனிடம் ஒரு குடுவையை கொடுத்து "நான் சொன்ன மாதிரி செய்து முடித்துவிட்டு வா !" என்று மாயவன் கூற

அதை ஏற்று ஒற்றனும் லிங்காவின் அறையை நோக்கி சென்றான். அவன் சென்றதும் தன் கையில் இருக்கும் தாமரை மலரில் தடவப் பட்ட திரவத்தை முகர்ந்து பார்க்க சற்று நேரத்தில் கிள்ளிவளவன் உருவம் எடுத்தான் மாயவன்.

உருவம் மாறிய மாயவன் "தீரா ! இனி உன் வீழ்ச்சி ஆரம்பம்" என்று கூறிக் கொண்டே லிங்காவை நோக்கிச் சென்றான். காற்று பலமாக வீச அவன் கையில் இருந்த தாமரை இதழ் ஒன்று பறந்து சென்றது.

இனியன் அரண்மனையை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக இருந்தான். அவன் மனமோ குழலாளை நினைத்துக் கொண்டு இருந்தது . தன்னை தேற்றிக் கொண்டு அவன் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்க அவனை நோக்கி தாமரை இதழ் ஒன்று வந்து முகத்தில் மோதியது .

லிங்கேஷ்வரன் கிளம்பியபடி தீரேந்திரன் நேற்றிரவு சொல்லிச் சென்ற விசயத்தை அசை போட்டான்.

‘’ லிங்கா ரூபவதனி என் தங்கையாவாள் அவளை மணமுடித்து அவளை இக்கட்டில் இருந்து காப்பாயா நண்பா“ – தீரேந்திரன்

"என்ன சொல்கிறாய் நண்பா ? இது எப்படி சாத்தியம் ? என் தந்தை இந்நாட்டு இளவரசியை அல்லவா நான் மணமுடிக்கப் போவதாக கூறினார். ஆனால் இங்கு நடப்பதோ வேறு ஒன்று ? ரூபவதனியை நான் மணமுடிக்கப் போவதாக நீ சொல்கிறாய் ? அவள் எப்படி இந்நாட்டு இளவரசியாவாள் ? நடப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை ?" – லிங்கா

லிங்கா அப்படி கேட்டதும் ரூபவதனியை பற்றிய உண்மையையும் அடியார் தன்னிடம் சொல்லிச் சென்ற விசயத்தையும் தீரேந்திரன் விளக்கிக் கூற அதை கேட்ட லிங்கா

“ நம் நட்புக்காக எதுவும் செய்வேனடா . இனி வதனி என் பொறுப்பு” என்று கூறிய லிங்காவை தீரேந்திரன் ஆரத் தழுவிக் கொண்டான்.

“ உன்னை காக்கவும் என் தங்கை வாழ்வு சிறக்கவும் இது தான் வழி”. அதுமட்டுமில்லை எனக்கு ஒரு வேளை இருக்கின்றது இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு தீரேந்திரன் சென்று விட

அவன் சென்றதும் லிங்கா தனித்து இருந்தான். அப்போது அவன் மூக்கில் நெடி வீச மயங்கினான் லிங்கா. மயங்கிய லிங்கா முகத்தில் வந்து விழுந்தது தாமரை இதழ்.

இங்கு கிள்ளிவளவன் ரூபத்தில் இருந்த மாயவன் முன் தோன்றினான் தீரேந்திரன்.

சற்று நேரத்தில் கிள்ளிவளவன் மயங்கி விழ தீரேந்திரன் வெற்றி களிப்பில் திருமணம் நடைபெறும் இடம் நோக்கிச் சென்றான்.

“ மலர்களால் கட்டியமைத்த மேடை

சந்திர நிலவொளி ஒத்த விளக்குகள் சூழ மாடங்கள்

வானவில்லை வளைத்து வடிவமைக்கப்பட்ட வண்ண தூண்கள் “

என்று அலங்கரிக்கப்பட்ட அரங்கில் தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தியபடி

“ அழகுச் சிலையோ இது ரவிவர்மன் ஓவியமோ

மேனியின் வனப்பு பெரிதோ அதை எடுத்து காட்டும் புடவை அழகோ

கண்கள் மைவிழியோ அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஆழ்கடலோ “

என்று அசர அடிக்கும் அழகு பதுமையாக தம் தம் துணைவரோடு வந்து அமர்ந்தனர் குழலாளும், ரூபவதனியும்.

திருமணம் நடந்தேற மகேந்திரரும் தீரேந்திரனும் உட்பட அனைவரும் நடந்தேறிய மணத்தை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு குழலாளை சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் லவலிங்கேஷ்வரன்.

ரூபவதனியை மணமுடித்து தன்னவளாக்கிக் கொண்டான் இனியன்.

இதை கண்டு அனைவரும் திகைக்க மயக்கம் தெளிந்து எழுந்து வந்த கிள்ளிவளவன் ரூபத்தில் இருந்த மாயவன் கோபத்தில் மகேந்திரர் அருகில் சென்றான்.

“ என்ன மகேந்திரரே ! உங்கள் படைதளபதிக்கு மணமுடித்தி வைத்து என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள் . இது தான் உங்கள் தர்மமா ? தீரேந்திரர் உதவி கொண்டு பெரிய வேலை எல்லாம் செய்துவிட்டீர்கள் “ - கிள்ளிவளவன்

"அப்படியல்ல அரசே! இது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது . தீரா ! என்ன இதெல்லாம் ?" – மகேந்திரர்

"தந்தையே கிள்ளிவளவன் குழலாளுக்கு சிறந்தவன் இல்லை ! அதனால் அப்படி செய்தேன்." – தீரேந்திரன்

"மகேந்திரரே ! சூழ்ச்சி செய்து என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள் நான் வருகிறேன்" என்று கிள்ளிவளவன் கோபத்தோடு சென்றுவிட மகேந்திரர் கோபம் தீரேந்திரனிடம் சென்றது.

“ தீரா ! நீ செய்த காரியத்தினால் மாபெரும் பிழை நடந்தேறியுள்ளது. உன் சூழ்ச்சியினால் அனைவர் முன் எனக்கு தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது. உன்னை ! ‘’என்று மகேந்திரர் திட்டிக் கொண்டிருக்க

தீரேந்திரன் இருவர் ஜோடிகள் மாற்றம் எப்படி நடந்தேறியது ? இனியன் எப்படி இங்கு வந்தான். திருமணம் நடப்பதற்கு முன் சில நிமிடங்கள் அனைவரும் ஏதோ மோன நிலையில் இருந்தது என்று அனைத்தையும் யோசித்துப் பார்த்தவன் குழப்பம் ஆட்கொள்ள விழித்துக் கொண்டு நின்றான்.

****************

கிள்ளிவளவன் ரூபத்தில் இருந்த மாயவன் சற்று நேரம் கழித்து மாயவன் உருவம் பெற்று கடோத்கஜன் முன் சென்று நின்றான்.

மாயவன் உருவம் பெற்றதும் கடோத்கஜன் அவனிடம் ‘’ என்ன வேலை முடிந்ததா ? லிங்காவும் ரூபவதனியும் எங்கே ? “– கடோத்கஜன்

"கடோத்கஜா நாம் நினைத்தது நடக்கவில்லை.. நாம் தோற்றுவிட்டோம்.." என்றபடியே அரண்மனையில் நடந்தேறிய விசயங்களை மாயவன் கூற

"என்ன சொல்கிறாய் நீ ? இது எப்படி சாத்தியம் ? நம் திட்டப்படி நீ கிள்ளிவளவன் ரூபம் எடுத்து அரண்மனை சென்று லிங்காவையும் , வதனியையும் மயக்கம் அடையச் செய்து திருமணம் நடந்தேறாமல் கவர்ந்து வருவதாகச் தானே சொல்லிச் சென்றாய் . பின்பு இது எப்படி ?" – கடோத்கஜன்

"நாம் திட்டமிட்டபடி லிங்காவை மயக்கம் அடையச் செய்துவிட்டேன். அவர்களை கவர்ந்து வர யாரும் தடைகள் செய்யக் கூடாது என்று அனைவரையும் சற்று நேரம் மோன நிலையில் வைக்க ஒற்றன் மூலம் திரவதையும் தெளிக்கச் செய்தேன். இடையில் தீரேந்திரன் புகுந்து என்னை அடித்து அவர்களை நம்மிடம் இருந்து காத்துவிட்டான்."- மாயவன்

“மாயவா ! உன்னால் என் நீண்ட கால தவம் கிட்டாமல் போயிற்று . இனி உன்னை நம்பி பிரஜோனமில்லை ! உனக்கான தண்டனை இதோ ‘’என்று கூறி கடோத்கஜன் மந்திரங்கள் ஜெபிக்க மாயவன் தரையில் விழுந்தான. அவனது இதயம் தனித்து எடுக்கப்பட்டு ஜாடியில் அடைக்கப்பட்டது.

"மாயவா ! நீ செய்த வேலைக்கு நீ சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் இருக்க வேண்டும்" என்று கூறிய க்டோத்கஜன் ! மாயவன் ரூபத்தை எடுத்தான்.

"உன் உருவம் கொண்டு அவர்களை அழிக்கப் போகிறேன். அவர்கள் எதாவது செய்தால் நீதான் வீழ்வாய் ! நான் அல்ல !" என்று கடோத்கஜன் சிரிக்க

"கடோத்கஜா ! வேண்டாம் ! என்னை விட்டுவிடு" என்று இதயம் துடித்து கதறியது .

இங்கு தீரேந்திரன் குழப்பத்தோடு நின்று இருக்க அவன் முன் தாமரை இதழ் பறந்து சென்று ஓர் இடத்தில் நின்று “ ஓம் நமச்சிவாய “என்று எழுதி மறைய சற்று நேரத்தில் இனியனிற்குள்ளும் லிங்காவிற்குள்ளும் மாற்றம் ஏற்பட அதை கண்ட அனைவரும் மேலும் அதிர்ந்தனர்.
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 36:

இருவருக்குள்ளும் மாற்றம் ஏற்பட லிங்கா இனியனாகவும் , இனியன் லிங்காவாகவும் உருவம் மாறத் தொடங்கினர். இதை கண்ட குழலாள் அதிர்ச்சியில் மயங்கி விழ , ரூபவதனி குழப்பத்தில் நின்றாள்.

தீரேந்திரன் நடப்பதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அடியார் சிவ ஆலயத்தில் சொல்லிய விசயங்கள் தீரேந்திரன் காதில் ஒலித்தது.

“ தீரா! ஈசனவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிரு அவன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும் முற்றும் துறந்தவன் முக்காலமும் அறிந்தவன் காக்கும் கடவுளாகிய எம்பெருமான் அனைவரையும் காப்பான் “ என்று அவர் கூறிய வார்த்தைகள் இன்று நடைமுறையில் நடந்து கொண்டு வருவதை கண்டு தீரேந்திரன் மனசுக்குள் இறைவனிற்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்க

“ என்ன நடக்கிறது இங்கே ? நான் எப்படி இங்கு வந்தேன் ?” என்று தன்னை ஆராய்ந்தவன் மணகோலத்தில் இருக்கும் தன் நிலையைக் கண்டு அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க தன் அருகில் குழலாள் மயங்கி கிடப்பதை கண்டு பதறினான் இனியன்.

************

"குழல் ! குழல்" என்று அவளை அழைத்த இனியன் அவள் தெளியாமல் இருப்பதை கண்டு வேகமாக குழலாளை தூக்கிக் கொண்டு அறைக்குள் செல்ல அவனை பின்பற்றி அனைவரும் சென்றனர்.

யோசனையோடு நின்று இருந்த லிங்கா தீரேந்திரனைப் பார்க்க அங்கு மகேந்திரர் கோபத்தோடு தீரனிடம் கத்திக் கொண்டிருந்தார்.

"தீரா ! நீ நினைத்தை சாதித்துவிட்டாயடா ? இதற்கான தண்டனை நிச்சயம் நீ பெறுவாய் ?" என்று கத்திவிட்டு மகேந்திரர் சென்றுவிட அவர் சொன்னதை நினைத்து வெதும்பினான் தீரேந்திரன்.

இதை கண்ட லிங்கா தீரேந்திரன் அருகில் சென்று " என்னடா நடக்கிறது இங்கே ?" என்று கேட்டான்.

“ சொல்கிறேன் நண்பா ! குழப்பம் அனைத்திற்கும் தெளிவு பிறக்கும் ! கவலை கொள்ளாதே ! முதலில் வா குழல் நிலையை காணலாம் ! ‘’ என்று கூறியபடியே குழலை காண இருவரும் விரைய வதனி தனித்து கேட்பாரின்றி நின்றாள்.

குழலைப் பார்த்த வைத்தியர் மயக்கம் சற்று நேரத்தில் தெளிந்துவிடும் என்று கூறிவிட்டு சென்று விட இனியனை பார்த்த தீரேந்திரன் "பார்த்துக் கொள் நண்பா !" என்று கூறிவிட்டு தன் தந்தையை சமாதானம் செய்ய விரைந்தான்.

தீரேந்திரன் மகேந்திரரை சமாதானம் செய்ய அவரை நோக்கிச் செல்ல அவனை கண்ட மகேந்திரர் “ தீரா ! இந்நாட்டு இளவரசி ஒரு படைதளபதியை மணமுடித்தது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது . அதனால் என்னிடம் அது பற்றி பேச வேண்டாம் “ – என்றார் மகேந்திரர்

“ இனியன் தளபதியாக இருப்பது தான் உங்கள் பிரச்சனை என்றால் அவனை அரசனாக முடிசூட்டி நம் ராஜ்ஜியத்தின் கீழ் இருக்கும் பகுதியை அவனுக்கு கொடுத்து விடுகின்றேன். அதன் பின் அவனை ஏற்பதில் தங்களுக்கு பிரச்சனையில்லையே தந்தையே !’’ – தீரேந்திரன்

அதை கேட்டு சிரித்த மகேந்திரர் “ நல்ல நகைச்சுவையடா தீரா ! யார்க்கு யார் முடிசூட்டுவது ! நீ இளவரசனாகத்தான் இருக்கின்றாய். என் உடல்நலம் கருத்தில் கொண்டு உனக்கு உரிமைகள் சில கொடுக்கப்பட்டது. அதற்கு மன்னர் என்று நினைத்து கொள்வாயா ? நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் ‘’– மகேந்திரர்

இப்போது அதை கேட்டு தீரன் சிரித்தான். “ நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள் தந்தையே ! மந்திரவியூகத்தை கைகளில் ஆள வேண்டும் என்றால் வழி வழியாக நம் வழித்தோன்றல்களின் வாரிசுகள் முடி சூட்டி மன்னனாக இருக்க வேண்டும் . அதன்படி நீங்கள் எனக்கு முடி சூட்டி மன்னனாக ஆக்கி அதை என்னிடம் ஒப்படைத்துவிட்டீர்கள் ! நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் யாரை அரசாள வைக்க வேண்டும் முடி சூட்ட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் எனக்கு இருக்கிறது. ஆகையால் நாளை இனியவேந்தனுக்கு அரசனாக முடிசூட்டப் போகின்றேன். தங்களுக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தாங்கள் ஓய்வு எடுக்கும் காலம் இது. இனி ராஜ்ஜியத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம் ! நான் பார்த்துக் கொள்கிறேன். சரி தானா தந்தையே !" என்று கூறிவிட்டு தீரன் சென்று விட மகேந்திரர் பேச்சற்று நின்றார்.

மகேந்திரர் தீரேந்திரன் செல்வதை பார்த்துக் கொண்டிருக்க அவர்முன் நேற்றைய நினைவுகள் வலம் வந்தன.

அதிகாலை பொழுதில் மகேந்திரர் அழைத்தாக கூறி ஒற்றன் ஒருவன் வந்து சொல்ல தீரேந்திரன் யோசனையில் ஆழ்ந்தான்.

கிள்ளிவளவன் சொல்லிச் சென்ற விசயத்தில் குழப்பம் மேலிட திரிந்தவன் மகேந்திரர் அழைத்ததும் அங்கு சென்றான்.

“ அங்கு தீரேந்திரன் உள்ளே நுழைந்தது தான் தாமதம் அங்கு அமைச்சர்கள் படை சூழ அமர்ந்து இருந்தார் மகேந்திரர். தீரேந்திரன் மகேந்திரரை கேள்வியாக பார்த்தபடியே அருகில் செல்ல மகேந்திரர் வாய் திறந்தார்.

“ தீரேந்திரா ! இங்கு நடப்பது உனக்கு சற்று குழப்பமாக இருக்கலாம். நான் சொல்வதை கேள் தீரா! நடப்பது எல்லாம் நன்மைக்கே ! நாளை என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை ஆகையால் அதற்குள் சில வேலைகளை நான் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

“ மந்திரவியூகத்தை” பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகி அதை காக்கும் பொறுப்பை உன்னிடம் தரப் போகிறேன். அதற்கு முதலாவதாக உனக்கு மூடிசூட்ட போகிறேன் என்று கூறியவர் அமைச்சர்கள் முன்னிலையில் முடிசூட்டினார். அதன்பின் ஒரு ஓலைச்சுவடியை கொடுத்து இதில் அனைத்தும் எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி செய்யடா ‘’என்று மகேந்திரர் கூறியவுடன் அவரை இடைமறித்து பேசினான் தீரேந்திரன்.

“ தந்தையே எனக்கு ஒன்றும் புரியவில்லை ? மந்திரவியூகம் என்றால் என்ன? அது ஏன் நம் கையில் இருக்கின்றது . அதை நாம் ஏன் பத்திரப்படுத்த வேண்டும் ? அதனால் என்ன தீமை விளைவிக்கும் ? யார் அதை கவர முயல்கிறார்கள் ?” என்று தீரேந்திரன் கேள்விகள் அடுக்க

மகேந்திரர் அதற்கு விளக்கம் தர ஆரம்பித்தார்.

“ தீரா ! வழிவழியாக நம் சைவ சமயத்தினரின் ஆதிகடவுளான ஈசனை போற்றி பூஜிக்கிறோம். அதற்கு நேர் மாறாக இருளை தன் உறைவிடமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் அரக்கர்கள். அவர்கள் தேவர்களை தினமும் துன்புறித்தி மக்கள் பலரையும் கொன்று குவித்து பல கொடுமைகள் செய்ய . தேவர்கள் அவனின் கொடுமைகளிலிருந்து விடுபட ஈசனிடம் சென்று முறையிட்டனர். அதை கேட்ட ஈசன் ஆக்ரோசம் கொண்டு ரூத்ரதாண்டவம் ஆட அவர் காலில் இருந்து கழண்டு விழுந்தது கால் சிலம்பு. . அது சக்கர வடிவம் பெற்று சுழன்று ஒளி வீசியபடியே நேராக சென்று அரக்கர்களின் தலைவன் தலையை கொய்தது. அதன்பின் அதில் பிரகாசித்த ஒளி மற்றவர்களை அடக்கி இருளை அழித்து பிரகாசத்தை உண்டு பண்ணி அனைவரையும் காத்தது. அரக்கர்களை அழிக்க , தேவர்களை காக்க என்று ஈசன் அவனால் படைக்கப்பட்ட அந்த சக்கர அமைப்பிற்கு மந்திரவியூகம் எனப் பெயரிட்டு அதனை இருள் அழிக்காமல் இருக்க அரக்கர்களின் கைகளில் கிடைக்காமல் இருக்க அதை மந்திரங்கள் அமைத்து வியூகங்கள் பல அமைத்து காப்பாற்றி வருகின்றனர் நம் வழித்தோன்றல்கள். அதன்படி தற்போது உன் கைகளில் அது தரப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை தீரா ! பல வருடங்கள் கழித்து மரணயோகமும் துருவநட்சத்திரமும் சஞ்சரிக்கும் இந்த பௌர்ணமி பொழுது இருளுக்கு மிகுந்த உகந்த நாள். அதில் ஈசனவன் அருளால் பிறக்கப்பட்ட கன்னியவளையும் அவரின் சிருஷ்டி பெற்ற மன்னவனையும் பலியிட்டு மந்திரவியூகத்தை கைப்பற்றினால் அரக்கனவன் மூவ்வுலகத்தையும் ஆட்சி செய்யும் சக்தி பெற்றிடுவான். ஆகையால் வேகமாக அதை அசுரன் கையில் கிடைக்காமல் அது ஈசனவன் பாதங்களில் வைக்கப்பட்டு அது அடுத்து சேர்க்கப் பட வேண்டிய இடத்தில் சேர்க்கப்பட வேண்டும் . இதை விரைவாக செய்து முடி" என்று மகேந்திரர் கூற அதற்கு சம்மதித்தான் தீரேந்திரன்.

ஓலைச்சுவடியை தீரனிடம் பிரித்து காண்பித்தவர் “ இதில் மந்திரவியூகம் அடுத்து சேர்க்கப்பட வேண்டிய இடமும் அதை பாதுகாப்பாக வைக்கும் வியூகமும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதை சரியாக செய்து முடி தீரா “ என்று தீரேந்திரனிடம் கூறிவிட்டு தன் அறை நோக்கி சென்ற மகேந்திரர் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்து பேசத் தொடங்கினார்.

“ என்னை வைத்து ஒருகாலும் நீ மந்திரவியூகத்தை நான் கைப்பற்ற விடமாட்டேன் கடோத்கஜா ! அதை பத்திரமாக சேர்த்துவிட்டேன் “ என்று அவர் தனக்குத் தானே கூறியதை நினைத்தபடி நின்ற மகேந்திரா முன் கரும்புகை ஒன்று தோன்றி

"என்ன நடக்கிறது இங்கே ? எதாவது செய் மகேந்திரா" என்று அது கூற மகேந்திரர் கட்டுண்டு நின்றார்

லிங்காவிற்கும் ரூபவதனிக்கும் திருமணம் நடந்தேறியதை அறிந்த காந்தாயினி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

“ என் பிரபு எனக்கு மட்டும் தான் சொந்தம் ! வேறு ஒருவள் உங்களை நான் அடையவிடமாட்டேன் பிரபு ! பணிப்பெண் அவளை மணம் புரிய தங்களுக்கு எப்படி மனம் வந்தது. உங்களை விடமாட்டேன் நான் !’’ என்று சூளுரைத்தாள் காந்தாயினி
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 37:

தீரன், லிங்கா மற்றும் இனியன் நடந்தேறிய திருமணத்தை பற்றிய குழப்பத்தில் அமர்ந்து இருக்க அவர்முன் வந்து நின்றார் அடியார்.

அவரை பார்த்ததும் மூவரும் எழுந்து நிற்க மூவரையும் ஆசிர்வதித்தவர்அவர்களை பார்த்து பேசத் தொடங்கினார்.

"என்ன ஆயிற்று தாங்கள் மூவர்க்கும் ?" - அடியார்

"குழப்பமாக இருக்கிறது சுவாமிஜீ" – தீரேந்திரன்

"என்ன குழப்பம் தீரேந்திரா ?" – அடியார்

"திருமணம் பற்றிய குழப்பம் தான் சுவாமி" – தீரேந்திரன்

"நான் அரண்மனை வாயிலில் காவல் காத்து கொண்டிருந்தேன் ? நான் எப்படி இங்கே வந்தேன் ? எப்படி திருமணம் நடந்தேறியது? ஒன்றும் புரியவில்லை சுவாமிஜீ ? – இனியன்

"நான் எப்படி இனியன் ரூபத்தில் இருந்தேன் சுவாமி" – லிங்கா

மூவரும் கேட்ட கேள்வியை கேட்ட அடியார் சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

“மாயவன் தன் ரூபத்தை மாற்றி கிள்ளிவளவனாக உருவம் எடுக்க வேண்டி திரவம் தடவப்பெற்ற தாமரை இதழை நுகர்ந்து பார்க்க முயன்ற போது அதில் இருந்து ஒரு இதழ் கீழே விழுந்தது . அது காற்றில் பறந்து வந்து லிங்கா மற்றும் இனியன் முகத்தில் மோத இருவரும் உருவம் மாற்றம் பெற்று , லிங்கா இனியனாகவும், இனியன் லிங்காவாகவும் மாறினர். அதன்பின் நடந்தேறியது தான் மூவர்க்கும் தெரியுமே. இதை அறியாத மாயவன் கடோத்கஜன் கோபத்திற்கு ஆளாகி தன் வினைப்பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்" என்று அவர் கூறி முடிக்க மூவரும் சற்று தெளிந்தனர்.

“ என் அப்பன் அருளால் நடந்தேறிய திருமணம் இது. ஆகையால் நடப்பதை அதன்படி ஏற்று வாழ கற்றுக் கொள்ளுங்கள் “ என்று இனியனிடமும் , லிங்காவிடமும் சொன்னவர்

தீரேந்திரனிடம் திரும்பி “ மந்திரவியூகத்தை அடுத்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையதாயிற்று தீரேந்திரா ! கவனம் மிக அவசியம் ! கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலை வந்துவிட்டது. பெண்ணவள் மனம் பேதலித்து விட்டது. . அனைவரும் சற்று விழிப்போடு இருங்கள். லிங்கா ரூபவதனி கன்னியாக இருப்பது வரை ஆபத்து. அவளை காக்கும் கடமை உன்னிடம் தான் இருக்கிறது! இனியா பாதுகாப்போடு இரு" என்று அனைவரையும் எச்சரித்துவிட்டுச் சென்றார் அடியார்.

**************

கடோத்கஜன் கலிங்காவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“ கலிங்கா நம் சூழ்ச்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது ! இப்போது நான் எப்படி சிரஞ்சீவியாக வாழ்ந்து இவ்வுலகத்தை ஆள்வது “ – கடோத்கஜன்

“ குருவே ! நமக்கு இப்போது ஒரு வழி தான் இருக்கிறது . அந்த வழியால் நம் இலக்கை நாம் அடைய முடியும் “ – கலிங்கா

"என்ன வழி அது ? சீக்கிரம் சொல்லடா ! நமக்கு நேரம் வேறு மிகக் குறைவாக உள்ளது" – கடோத்கஜன்

கலிங்கா வேகமாக தன் திட்டத்தை விவரிக்க அதை கேட்ட கடோத்கஜன் கலிங்காவை பாராட்டினான்.

"ஆகா ! அருமையான யோசனையடா ! விரைந்து அதை செயலாற்று" என்று கடோத்கஜன் கூற அதை செயலாற்ற கலிங்கா விரைந்தான்.

பௌர்ணமி பொழுது நெருங்கிக் கொண்டிருக்க நிலவு சற்று பிரசாசமாக காட்சி அளித்து , குளிர்காற்று இதமாக வீசி அந்த இரவுப் பொழுதை ரம்மியமாக ஆக்கிக் கொண்டிருந்தது.

லிங்கா தன் படுக்கையில் அமர்ந்து கொண்டு யோசனையில் இருக்க , உள்ளே நுழைந்தாள் ரூபவதனி. அரசனுக்கு ஏற்ற அரசியாக , அழகின் இலக்கணமாக உள்ளே அவள் வந்து கொண்டிருக்க லிங்கா அவளை அப்போது தான் முழுமையாக கவனித்தான். லிங்கா அருகில் வந்த வதனி சற்று தயங்கி நின்றாள்.

அவள் தயக்கத்தை பார்த்தவன், “ வா ! வதனி ! ஏன் அங்கேயே நின்று விட்டாய் ! வா வந்து அமர் ! “என்று தன் அருகில் அவன் கை காண்பிக்க ,

வதனி தயங்கிக் கொண்டே அவன் அருகில் வந்து நின்று தன் முந்தானை முடிச்சை திருகியபடியே பேசத் தொடங்கினாள்.

“ அரசே! என்றும் என் நிலையை நான் மறக்க மாட்டேன் ! எனக்கு தெரியும் நான் என்றும் உங்களுக்கு சரிசமமானவள் கிடையாது என! மேலும் வேறு ஒருவளுடனான உங்களின் வளமான வாழ்விற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்..”– ரூபவதனி வருத்தத்தோடு பேசி முடிக்க

இதை கேட்ட லிங்கா ஒரு முடிவோடு பேசத் தொடங்கினான்.

“ உன் நிலை குறித்து நீயே உன்னை வருத்திக் கொள்ள தேவையில்லை வதனி ! உனக்கு இங்கு நடந்தேறியது , நடந்து கொண்டிருப்பது அனைத்தும் குழப்பமாக இருக்கலாம். ஆனால் என்றும் ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள் வதனி ! நீ இப்போது ஓர் அரசனின் ராணியாவாய் ! என் ராஜ்ஜியத்திற்கு உரிமை பெற்றவளாவாய்! இது எக்காலமும் மாறாது! முந்தய உன் நிலையை மறந்து , இப்போது நீ இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ள மனதை பக்குவப்படுத்திக் கொள். . நீ மனசளவில் பக்குவப்படும்வரை உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று வதனியிடம் கூறிவிட்டு லிங்கா மாடத்தில் சென்று நின்று நிலவொளியை ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.

அவன் சொன்னதை நினைத்தபடியே சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வதனி சோர்வு ஆட்கொள்ள படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.

சற்று நேரம் வெளியே நின்றுவிட்டு உள்ளே வந்த லிங்கா தூங்கிக் கொண்டிருக்கும் வதனியின் முகத்தை சற்று நேரம் பார்த்தான் . பின்பு

“ நீயும் அழகிதான். எனக்கு ஏற்றவள் நீதானடி . அதை நீ விரைவிலேயே புரிந்து கொள்ளத்தான் போகிறாய் ! ‘’ என்று லிங்கா தனக்குள் கூறியபடி உறங்கச் சென்றான்.

***************

இங்கு இனியனோ மயக்கத்தில் இருந்து எழுந்த குழலாள் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

மயக்கம் தெளிந்து எழுந்த குழலாள் தன் முன் நிற்கும் தீரேந்திரனையும் , இனியனையும் மாறி மாறி பார்த்தாள். பின்பு குழலாளின் பார்வை இனியனின் வசம் செல்வதை பார்த்த தீரேந்திரன் குழலாள் அருகில் சென்று

“ நன்றாக ஓய்வு எடுத்துக் கொள் தமக்கையே! நீ நினைத்தபடியே உன்னவரை அடைந்துவிட்டாய் வாழ்த்துகள் !’’ என்று சிரித்தபடியே கூறி அவளது தலையை தடவிவிட்டு, இனியன் அருகில் வந்தான்.

அவனை பார்த்து “ இன்று முதல் அவளிடம் வசமாக மாட்டிக் கொண்டாயடா நண்பா" என்று இனியனை கேலி செய்துவிட்டு தீரேந்திரன் சென்றுவிட்டான்.

தீரேந்திரன் சென்றதும் குழலாள் இனியனை பார்த்து முறைத்துவிட்டு எழுந்து கொள்ள முயற்சிக்க இனியன் வேகமாக அவளை தடுத்தான்.

“ இளவரசி ! எழுந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் ! உங்களுக்கு ஓய்வு தேவை “ – இனியன்

இளவரசி என்று கூறுவதை நீங்கள் இன்னும் விடவில்லையா ? என்னை சற்று நேரம் தனித்துவிடுங்கள் ! உங்களை பார்ப்பதற்கே எனக்கு பிடிக்கவில்லை!" – குழலாள்

"இளவ..." என்று ஆரம்பித்தவன் அவளது பார்வையை பார்த்துவிட்டு "இளவரசி பழக்கத்தை சட்டென்று மாத்தமுடியாது. புரிந்து கொள்ளுங்கள்!" – இனியன்

"ஓஹோ ! அப்படியென்றால் தங்கள் பேச்சையும் கேட்கமுடியாது! விலகிச் செல்லுங்கள் !" - குழலாள்

"இளவரசி ! நான் சொல்ல வரும் விசயத்தை கொஞ்சம் கேளுங்கள். அதைவிட்டு தேவையில்லாத விசயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? " – இனியன்

"இந்த இரவில் பேசுவதே தப்பு ! இதில் தேவையானது ? தேவையற்றது ? என்று ஆராய்ச்சி வேறு" என்று குழலாள் தனக்குள் முணங்க

"என்ன சொன்னீர்கள்?" – இனியன்

"ஒன்றுமில்லை அரசே ! துக்கம் தொண்டையை அடைக்கின்றது. தூக்கம் கண்களை அடைக்கின்றது. நீங்கள் சற்று கிளம்புகிறீர்களா? "– குழலாள்

"நான் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லிவிட்டு தான் செல்வேன்" என்று கூறியபடியே இனியன் பேச ஆரம்பிக்க அதற்குள் குழலாள் அவனை முந்திக் கொண்டு பேசினாள்.

"என்ன பெரிதாக பேசப் போகிறீர்கள்? என் நிலைமை அப்படி ! இப்படி ! இருந்தாலும் நான் உன்னை மனதில் காதல் புரிந்தேன் என்று கூறப் போகிறீர்கள் ? அதானே ! உங்களை பற்றி உங்களை விட எனக்கு நன்றாக தெரியும் ! இனியரே !" என்று குழல் கூற இனியன் அவளை வியப்பாக பார்த்தான்.

"இருந்தாலும் வேறொருவனுடனான திருமணம் என்று மணமேடை வரை என்னை இழுத்துச் சென்ற விதியையும் , உங்களையும் மனதார வெறுக்கிறேன்" என்று கூறிவிட்டு கோபத்தோடு குழல் வெளியே செல்ல முனைய இனியன் அவளது கைகளை பிடித்து தடுத்தான்.

"கோபத்தோடு இருங்கள் இளவரசி ! அதை வெளியில் சென்று தான் காட்ட வேண்டும் என்று இல்லை . உள்ளிருந்தும் காட்டலாம்" என்று இனியன் சிரித்துக் கொண்டே கூறியபடி அவள் கைகளை விட்டான்.

அதை கண்ட குழலாள் “ ஜடம் ! ஜடம் ! ‘’ என்று வாய்க்குள் முணுமுணுக்க , அதை கேட்ட

இனியன் திரும்பிப் பார்க்காமலேயே "நான் ஜடமாக இருக்கும் வரை தான் தங்களுக்கு பாதுகாப்பு அரசி ! நான் மாறிவிட்டால் உங்களை சுழட்டி அடித்துவிடுவேன் ! என்னிடம் ஜாக்கிரதையாக இருங்கள்" என்று இனியன் கண்ணடித்து கூறிய படியே செல்ல

இங்கு குழல் வாயை பிளந்து கொண்டு நின்றாள்.

****************

மறுநாள் அமைச்சர்கள் பலர் முன்னிலையில் இனியவேந்தனுக்கு மன்னனாக முடிசூட்டி தன் ராஜ்ஜியத்தின் கீழ் இருக்கும் ஒரு பகுதியை அரசாளும் அரசனாக்கினான் தீரேந்திரன். இனியன் சந்தோசத்தில் தீரேந்திரனை கட்டிக் கொண்டான்.

"என்னை தாங்கள் அரசனாக முடிசூட்டினாலும் என்றும் நான் தங்கள் படை தளபதியாக நாட்டை காக்கும் பொறுப்பை சரியாக செய்வேன்!" - இனியன்

"இனி தாங்கள் தளபதியில்லை! நீங்கள் தற்போது மன்னராகிவிட்டீர்கள் ! மன்னராகவே நாட்டை காக்கவும், சரி தானே !" என்று தீரேந்திரன் இனியனிடம் பேசியபடியே திரும்பிப் பார்க்க அங்கு கனிகா இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த தீரேந்திரன் கனிகாவை யாரும் அறியா வண்ணம் தன் உதட்டை குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை வைத்தான்

அதை கண்ட கனிகா தீரேந்திரனை முறைக்க இனியன் அவன் காதுகளில்

“ அரசே ! நம்மை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் என்னை விட்டால் நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நண்பா ! கனிகாம்பிகையாரிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள் . பின்பு தங்கள் நிலை என் நிலையைவிட கொடுமையானதாக இருக்கக் கூடும். நீங்கள் என்னை அரசனாக்கியது அவளுக்காக என்று எனக்கு தெரியும் அரசே! ஆகையால் தான் இந்த பட்டத்தை நானும் ஏற்றுக் கொண்டேன்" - இனியன் முணுமுணுக்க

"சரியாக கணித்துவிட்டாயடா ! நண்பா ! "என்று இனியனும் , தீரேந்திரனும் பேசிக் கொண்டே விலக லிங்கா அருகில் வந்தான்.

"அரசே ! ராஜ்ஜியத்தை காப்பாற்றும் யுக்திகளை நாம் வகுத்தால் நலம் ! அமைச்சர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் !" என்று லிங்கா கூற

அதன்பின் அதை பற்றிய பேச்சுக்கள் நடந்தேறியது.

******************

அரண்மனை தோட்டத்தில் நின்று ரூபவதனி பூக்களை பறித்துக் கொண்டிருக்க எதிரில் காந்தாயினி வேகமாக சென்று கொண்டிருந்தாள். அவள் நேராக லிங்காவை நோக்கிச் செல்லவும் அவளை பின்பற்றி வதனியும் சென்றாள்.

காந்தாயினி லிங்கா எதிரில் சென்று நின்றாள். தன் முன் நிற்பவளை யார் என்று தெரியாமல் லிங்கா பார்த்துக் கொண்டிருக்க காந்தாயினி பேசத் தொடங்கினாள்.

“ பிரபு ! தங்களால் எப்படி அவளை திருமணம் செய்ய முடிந்தது? தினம் தினம் தங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பேதையை நீங்கள் மறந்துவிட்டீர்கள் . “ - காந்தாயினி

“ யாரம்மா ! நீ ! உன்னை நான் சரியாக பார்த்தது கூட இல்லை ! இதில் நான் எங்கணம் தங்களை மறப்பேன்? “ – லிங்கா

“ நான் கனிகாவின் மாமன் மகள் காந்தாயினி ! உங்களிடம் காதலை சொல்ல முனைந்து தோற்றவள் நான். இருந்தாலும் என் பிரபுவை என்னால் விடமுடியாது. பணிப்பெண்ணிற்கு நான் ஒன்றும் குறைந்தவளில்லை" என்று காந்தாயினி கூற கொதித்துவிட்டான் லிங்கா.

"போதும் நிறுத்து ! என்னவளை பற்றி கூற யாருக்கும் உரிமையில்லை. அவள் என் ராஜ்ஜியத்தின் ராணியாவாள். அவளை தரைகுறைவாக பேசினாள் தலையை கொய்துவிடுவேன் ! ஜாக்கிரதை! " என்று லிங்கா கத்த ஆரம்பித்துவிட்டான்.

"அவளுக்காக என்னிடமே பரிந்து பேசுகிறீர்களா பிரபு ! நீங்கள் என்னவர் உங்களை எவருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன்." என்று கத்திவிட்டு காந்தாயினி சென்றுவிட ,

அவள் பேச்சை கேட்டு வருத்தத்தோடு திரும்பிய லிங்கா எதிரில் பார்க்க அங்கு கண்களில் நீரோடு நின்று இருந்தாள் ரூபவதனி.
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 38:

கண்களில் நீரோடு ரூபவதனி நின்றிருப்பதை பார்த்த லிங்கா “ வதனி “ என்று அழைக்க அதை காதில் வாங்காமல் சென்றாள் வதனி.

அவளை பின்தொடர்ந்த லிங்கா அவள் அறைக்குள் சென்றதும் அவளிடம் பேச முனைய, வதனி முந்திக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டாள்.

“ என்னை மன்னியுங்கள் அரசே ! உங்கள் மனதில் வேறு ஒரு பெண் இருப்பது தெரியாமல் தங்களை மணமுடித்து பெரும்பிழை செய்துவிட்டேன். நீங்கள் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் வாழ்வை சிறப்பிக்க வேண்டும் “ – வதனி

“ போதும் நிறுத்து உன் உளரலை ! விட்டால் பேசிக் கொண்டே போகிறாய் ! கழிவிரக்கத்தில் உன்னை நீயே வதைத்துக் கொண்டது போதும் ! அவளை நான் சரியாக பார்த்தது கூட இல்லை ! பின்பு எங்கணம் மணமுடிக்க அவளுக்கு நான் வாக்களிக்கப் போகிறேன். அதுமட்டுமின்றி இதுவரை என் மனது வெற்றிடமாகத் தான் உள்ளது. அதில் குடி கொள்ள என் மனையாளைத் தவிர வேறு எவர்க்கும் நான் அனுமதி கொடுத்ததில்லை. நான் பார்த்த முதலானவளும் நீ தான்.! முடிவானவளும் நீதான் “ – லிங்கா

இதை கேட்ட வதனி லிங்கா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன என் உமையாளுக்கு இன்னும் என் மீது நம்பிக்கை வரவில்லையா ?" – லிங்கா

அதை கேட்ட வதனி பதற்றம் அடைந்து "அய்யோ ! அரசே ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ! தங்களை சந்தேகிப்பது என்னை நானே சந்தேகிப்பதற்கு சமம்!"- வதனி

"அப்புறம் எது உன்னை வதைக்கின்றது வதனி ?" – லிங்கா

"அது வந்து அரசே!" என்று வதனி இழுக்க

"வேறு என்ன தங்களை ஆட்டிவிக்கிறது . கேட்டுவிடுங்கள் அரசியாரே!" – லிங்கா

"நானோ ஓர் பணிப்பெண் ! தாங்கள் என்னை மணமுடித்ததை எங்கணம் பிறர் ஏற்று கொள்வார்கள்" – வதனி

"நீ பணிப்பெண் அல்ல ! நீயும் அரச குடும்பத்தில் பிறந்தவள் தான் வதனி" – லிங்கா

"என்ன சொல்கிறீர்கள் அரசே! "என்று குழப்பத்தோடு வதனி கேட்க

"நீ ரத்னபதியாரின் தவப்புதல்வியாவாய்" என்று கூறிய லிங்கா அன்று தீரேந்திரன் வதனி பற்றி கூறிய உண்மைகளை லிங்கா எடுத்துரைக்க , வதனி திகைப்பில் நின்றாள்.

"இனியாவது உன் நிலைமை புரிந்து என் ராஜ்ஜியத்தின் ராணியாக இருப்பாய் என்று நினைக்கிறேன்" என்று லிங்கா கூறிவிட்டு செல்ல வதனி செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப்புரத்தில் நீராடிவிட்டு வந்து கொண்டிருந்த குழலாளை ஒரு கரம் சுற்றி வளைத்தது. பயத்தில் கத்துவதற்கு குழலாள் வாய் திறக்க வேகமாக அவள் வாயை அந்த கரம் அடைத்தது. அந்த கையை விடுவிக்க போராடிபடியே நிமிர்ந்து பார்த்த குழலாள் ஆச்சரியம் அடைந்தாள்.

அவள் தன்னை கண்டு கொண்டதும் தன் கரத்தை எடுத்து கொண்டான் இனியன்.

குழலாள் அவனை கண்டு கோபம் கொண்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதை கண்ட இனியன் “ என் மேல் கொண்ட கோபம் இன்னும் தீரவில்லையா அரசிக்கு ? “ – என்று கூறியபடி இனியன் அவள் அருகில் வந்து அவள் காதில் குழைந்து கொண்டே கேட்க

“ தங்கள் மேல் கோபம் மலையளவு இருக்கின்றது . அந்த கோபம் தீரவும் இல்லை தீரப்போவதுமில்லை ! அரசர்க்கு அந்தப்புரத்தில் என்ன வேலையோ ! சென்று நாட்டை காக்கும் பணியில் ஈடுபடும் ! “ – குழலாள்

“ ம்ம்ம் காக்கும் பணியை தான் செய்கிறேன் ! அரசியே ! தங்களை காக்கும் பணியை சிறப்புடன் செய்கிறேன் “ என்று கூறியபடியே இனியன் கண்ணடிக்க

"அரசர் இப்படி அரசியையே காப்பாற்றிக் கொண்டிருந்தால் நாட்டின் கதி என்னாகுமோ ?" – குழலாள்

"தாங்கள் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை ! அரசியே! அந்த பணியை சிறப்புடன் இனியர் ஆற்றுவார் ! என்ன இனியரை ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும் தான் எவருமில்லை! அதான் தங்களை நாடி வந்தேன்" – இனியன்

“ இந்த வார்த்தை ஜாலத்தை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள் இனியரே! நான் மயங்கவும் மாட்டேன். கோபத்தைவிடவும் மாட்டேன் “ – குழலாள்

“ அப்படியா குழல் ! என்னிடம் மயங்க மாட்டீர்களா ? கோபத்தை விட மாட்டீர்களா ? “ என்று கேட்டுக் கொண்டே இனியன் முன்னேறி வர

அவன் பார்வை மாற்றத்தை கண்ட குழலாள் “அங்கேயே நில்லுங்கள் ! அருகில் வராதீர்கள் ! அப்புறம் என் வாளிற்கு இரையாவீர்கள் !" – குழலாள்

“ அப்படியா அரசி ! தங்கள் கைகளினால் சிரம் கொய்யப்படும் பாக்கியத்தை அடைவதில் மகிழ்ச்சியடைகிறேன் நான்! ஆனால் பாருங்கள் அரசி! உங்கள் வாய் மொழியும் கண் மொழியும் வேறு வேறாக இருக்கின்றது “ என்று கூறியபடியே குழலாளை பிடித்து அருகில் இனியன் இழுக்க அவன் மேல் கொடியாக படர்ந்து நின்றாள் குழலாள் .

அவன் கண்கள் படித்த செய்தியை கண்ட குழலாளின் முகம் செந்நிறம் பூண்டது. அதை ரசித்தபடியே இனியன் அவளை சிறைபிடித்தான்.

“ என்னாயிற்று உங்களுக்கு! விலகுங்கள் ! நான் போக வேண்டும் “ என்று குழலாள் சிணுங்கியபடியே கூறினாள்.

“ அன்று ஏதோ முணங்கினாயே ! அது ? "என்று சற்று நேரம் யோசித்தவன் “ ம்ம்ம் ஞாபகம் வந்துவிட்டது . ஜடம் என்று சொன்னாயல்லவா ! நான் அப்படியில்லை என்று நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது” என்று இனியன் கூறியபடியே அவளை காதல் பார்வை பார்த்தான்.

“ வேண்டாம் அரசே ! இப்போது மட்டும் புதுசாக என்ன காதல் ரசம் கரைபுரண்டு ஓடுகிறது தங்களுக்கு ! என்னை பிடிக்காமல் ஒதுங்கிப் போனவர் தானே நீங்கள் அப்படியே இருங்கள் ! “– குழலாள்,

“தங்களை பிடிக்காமல் ஓர் ஆண்மகன் இருக்க முடியுமா அரசி!

கண்கள் செந்தேனோ அதில் நான் பித்தம் கொள்ள

இதழ்கள் பூவிதழோ அதில் நான் சித்தம் சொள்ள

கண்ணக்குழி ஆழ்கிணறோ அதில் நான் முழ்கிக் கொள்ள "

என்று கலைநயத்தில் அவளை ரசித்துக் கொண்டே கூறியவன் சற்று நிறுத்தி கண்சிமிட்டியபடியே

"இத்தனை சிறப்பம்சம் பெற்ற நடமாடும் ஒரு பூந்தோட்டத்தை பிடிக்காமல் இருக்க நான் என்ன மூடனா! அதுமட்டுமில்லை ! இன்னும் வருணித்துக் கூற தங்களிடம் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன ! சொல்லட்டுமா குழல் ? “ என்று அவள் காதோரம் இனியன் ரசசியம் பேச வேகமாக அவன் வாயை தன் கரம் கொண்டு மூடினாள் குழலாள்.

“ போதும் நிறுத்துங்கள் ! நீங்கள் வருணித்தது போதும் ! நான் செல்கிறேன்” என்று குழலாள் விலகிச் செல்ல ,

அவளை தடுத்து பின்னோடு அணைத்தான் இனியன்.

“ கற்பனையில் உன்னோடு வாழ்ந்து , கானல் நீராக நீ சென்றுவிடுவாய் என்று மனம் வெதும்பி, நான் தவித்த தவிப்பு ! எனக்குத்தான் தெரியும் அரசியே ! இப்போது அனைத்தும் நிஜமாகி என் கண்ணெதிரில் ! என் பொக்கிஷமான தங்களை கையகப்படுத்தும் நிலையில் நான் ! விட்டுவிடமுடியுமா ? கூறுங்கள் அரசியே! " என்று கண்மூடியபடியே பேசிய இனியன் தன் கண்களை திறந்து குழலை நேருக்கு நேராக பார்த்து மேலும் தொடர்ந்தான்.

“ கனவில் தங்களுடன் நடத்தியதை நேரில் நடத்த விளைகின்றது மனம் ! ஒத்துழைப்பு தாருங்கள் அம்மணி “ என்று கூறியபடியே அவளை அருகில் இழுத்த இனியன் நெற்றியில் இதழ் பதிக்க குழலாள் கண்களை மூடிக் கொண்டாள்.

வேகமாக அவள் கண்களுக்கு முத்தமிட்டவன்

“ இன்னும் கோபம் தீரவில்லையா குழல் ! “ – இனியன்

அதற்கு இல்லை என்று அவள் மறுப்பாக தலையசைக்க அவள் ஒரு கண்ணத்தில் இதழ் பதித்தான் இனியன்

குழல் தன் மறுகண்ணத்தை காட்ட

"கள்ளியடி நீ !" என்று சிரித்துக் கொண்டே அவள் மறுகண்ணத்தில் இதழ் பதித்தான் இனியன்.

"இப்போது கோபம் தீர்ந்ததா?" என்று இனியன் கேட்க அதற்கும் மறுப்பாக குழல் தலையசைத்தாள் .

அதை அடுத்து இனியன் அவள் செவ்விதழ் நோக்கி குனிந்தான்.

அப்போது “ குழல் “ என்று கிளி அழைக்க , அதன் சத்தம் கேட்டு வேகமாக விலகினாள் குழலாள்.

“ என்னடா இன்னும் தடை வரவில்லையே என்று நினைத்தேன். இதோ வந்துவிட்டது." என்று இனியன் நொடித்துக் கொள்ள

அவனை தள்ளிவிட்டு “ இன்னும் எனக்கு தங்கள் மீதுள்ள கோபம் தீரவில்லையரசே! நீங்கள் ஜடம் அல்ல என்பதை நிரூபிக்க நான் இரவில் காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியபடியே ஓடினாள் குழல்.

இங்கு இனியன் முகத்தில் சிரிப்போடு நின்றான்.

கலிங்கா காந்தாயினியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

"காந்தாயினி உன்னை அனைவரும் ஏமாற்றிவிட்டார்கள் ! லிங்காவை மணம் கொள்ள தகுதியானவள் நீ மட்டும் தான் ! அதைவிட்டு வதனியை மணமுடித்து வைத்து அனைவரும் பெரும்பிழை செய்துவிட்டனர். உன்னவர் மந்திரத்திற்கு கட்டுண்டவர் போல் வதனி பின்னால் செல்கிறார்.. அவரை காக்கும் கடமை உன்னிடம் தான் இருக்கின்றது. ஆகையால் நான் சொல்லியபடியே செய்தால் உன்னவர் உன் வசம்" என்று கூறியபடியே கலிங்கா ஒன்றினை கொடுக்க

அதை வாங்கிய காந்தாயினி "என்னவரை அடைய நான் எதுவும் செய்வேன்" என்று கூறிக் கொண்டாள்.

அதை பார்த்த கலிங்கா “ குருவே! நம் எண்ணம் ஈடேறப்போகின்றது” என்று மனத்தில் மகிழ்ச்சியோடு கூறிக் கொண்டான்.

வியூகம் தொடரும் .
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 39:

அதிகாலை வேளையில் சூரியோதத்தை பார்த்தபடியே நின்றாள் கனிகா. சூரியனை வெறித்தபடி லிங்காவிற்கும், இனியனுக்கும் மணம் நடந்தேறிய நாளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அன்று காந்தாயினி கனிகாவிடம் வந்து லிங்காவிற்காக அழுததும் கரைந்ததும் மனக்கண்முன் வந்து போக அதை பற்றிய யோசனையில் நின்றவள் எதிரில் வந்து நின்றான் தீரேந்திரன்.

தீரேந்திரனையே சற்று நேரம் இமைக்காமல் கனிகா பார்த்துக் கொண்டிருக்க தீரேந்திரன் பேச ஆரம்பித்தான்.

"என்ன அம்மையாரே ! யோசனை எல்லாம் பலமாக இருக்கின்றது! தகிக்கும் பார்வையில் இன்று ஏனோ குளிர்நிலவு தெரிகின்றதே ! உங்கள் பார்வை குளிரில் மடியப் போகும் அவன் எவனோ ?" – தீரேந்திரன்.

"அப்படியேல்லாம் ஒன்றுமில்லை அரசே!" – கனிகா

"அப்படியா !" என்று அதிகமாக வியந்தவன்.

"என் பிணியை போக்க பதில் சொல்லுங்கள் அம்மையாரே!" – தீரேந்திரன்

அவன் பிணி என்று சொன்னதும் வேகமாக அவன் அருகில் வந்த கனிகா. அவனை தொட்டுப் பார்த்தபடியே பதறினாள்.

"என்னாயிற்று அரசே !" என்று கனிகா கேட்டபடி பதற

அவள் கைகளை தன் கைகளுக்குள் பிணைத்தவன் "காதல் நோய் கண்டுவிட்டது தேவியாரே ! தாங்கள் தான் அதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்" - தீரேந்திரன்.

"என்ன பிதற்றுகிறீர்கள் ?" – கனிகா

"ஆம் ! தேவி

'கண்ணோடு கண்கலக்காமல்

உதட்டோடு உதடு ஒற்றி எடுக்காமல்

கையோடு கை கோர்க்காமல்

காதலோடு காதல் போர் புரிய

விளைகின்றது மனம்'

என்னை நோயில் இருந்து காப்பாற்றும் மருந்து தங்களுக்கு தான் தெரியும். சற்று என் கோரிக்கைக்கு செவி சாயுங்கள் தேவியாரே !" - தீரேந்திரன்

"ம்ம்ம் நோய் அதிகமாகிவிட்டது என்று நினைக்கின்றேன் அரசே! ! அதனால் தான் தாங்கள் காதல் பித்தன் போல் உளர ஆரம்பித்து விட்டீர்கள் ! நான் இன்னும் சற்று நேரம் இங்கு நின்று கொண்டு இருந்தாள் உங்கள் பித்தம் அதிகமாகிவிடும் ! ஆகையால் நான் செல்கிறேன்" என்று கனிகா செல்ல முற்பட அவளை செல்லவிடாமல் தடுத்தான் தீரேந்திரன்.

அவளை அருகில் இழுத்து கண்ணோடு கண் நோக்கி “ உண்மையை சொல்லிவிட்டு செல் தேவி ! பிடிக்கவில்லையா என்னை ? என் கண்ணை பார்த்து சொல் ! ‘’ என்று அவன் கேட்க

சற்று நேரம் அமைதியாக நின்ற கனிகா திரும்பி நின்றபடி பிடிக்கவில்லை என்று கூற அவளை பின்னாளில் இருந்து அணைத்து அவள் தோள்வளைவில்

தன் நாடியை வைத்த படி மேலும் தொடர்ந்தான் தீரேந்திரன்.

"உன் கண்கள் என்னை அணலாக சுட்டெரித்தே உன் மனம் என்னிடம் காதல் வயப்பட்டது என்று எனக்கு தெரியும் தேவி ! உமது வாய் தான் பொய் சொல்கின்றது. ஆனால் உன் உடல் மொழிகள் என் அருகாமையை நீ ரசிப்பதை எனக்கு பறைசாற்றுகின்றது. நான் இல்லாத நேரத்தில் தோழியிடம் என்னை பற்றி பேசி இன்புறுவதும், நான் இருந்தால் வேறு விதமாக நீ பேசி ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தினை யாம் கண்டு கொண்டோம் ! இன்று உன் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ளாமல் நான் விடப்போவதில்லை தேவி " என்று சொல்லிய படியே "உன் காதலை ஒத்துக் கொள்ளமாட்டாயா தேவி?" என்றான் தீரேந்திரன்

"ஆமாம்" - கனிகா

அவள் அப்படி கூறியவுடன் அவளை திருப்பி நேர் கொண்டு பார்த்தவன் "உண்மையை சொல்லமாட்டாயா தேவி ?” - தீரேந்திரன்

அதை கவனித்த கனிகாவின் உள்ளே சற்று சலனம் வர முயன்று வரவழைத்த தைரியத்தில் கனிகா பேசினாள்.

“ நான் உங்களுக்கு சற்றும் பொருத்தமற்றவள் அரசே!” – கனிகா

“ எனக்கு பொருத்தமற்றவளா நீ ? வாள் கொண்டு மட்டுமல்ல விழி கொண்டும் என்னை விழ்த்தும் சூத்திரகாரி நீ ! எனக்கு பொருத்தமற்றவளா?

இளவரசன் என்று அறிந்தும் திமிராக என்னை எதிர்த்து பேசிய ஜாலக்காரி நீ எனக்கு பொருத்தமற்றவளா ? எப்போதும் உன் கண்களால் என்னை வீழ்த்தும் சக்தி பெற்ற நீ பொருத்தமற்றவளா ?" என்று சொல்லிக் கொண்டே சென்றவன் ஒரு கட்டத்தில் நிறுத்தி

"மனப்பொருத்தம் போதும் தேவி ! அதில் உன்னைவிட எனக்கு வேறு ஒருவரும் கை கோர்க்க முடியாது ! எனக்காக உருகும் , என் ஆயுட்காலம் முழுவதும் என்னோடு போர் புனைய நீ மட்டும் போதுமடி ! உன்னோடு நான் வாழும் அந்த ஒரு நாள் போதும் ! அந்த நினைவை ருசித்தபடி நான் வீழ்ந்து போவேன்" என்று தீரேந்திரன் கூற

வேகமாக அவன் உதடுகளை தன் கை கொண்டு மூடினாள் கனிகா.

அவள் விழிகளில் நீர் படலம் . அதை கண்ட தீரேந்திரன் அவளை அணைத்து ஆறுதல்படுத்த முயல அவனை வேகமாக தள்ளிவிட்டு

"நான் உங்களை என்றும் நினைக்கவும் இல்லை! எனக்கு உங்களை பிடிக்கவும் இல்லை!"என்று கனிகா கூறிவிட்டு ஓட,

இங்கு தீரேந்திரன் சிலையாக நின்றான்.

அவன் மனம் வெதும்பியபடியே “ இந்த பெண்டீரை புரிந்துகொள்ள முடியவில்லை ஈசனே ! மனத்தில் உள்ளதை மறைத்து பொய்மை உரைப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே ! அவளை புரிந்து கொள்ளும் வல்லமையை எனக்கு கொடுக்கும்மய்யா” என்று கூறியபடியே தீரேந்திரன் அரண்மனைக்குச் சென்றான்.

தீரேந்திரன் காதலை மறுத்துவிட்டு வந்த கனிகா தனியாக நின்று நிலவை பார்த்து கலங்கியபடி நின்றாள்.

“ நிலமகளே ! என் மன்னவனை நான் நிராகரித்து வந்துவிட்டேன் ! அவரை வருத்தி நானும் வருந்தும் இந்த காலநிலையை சீக்கிரம் மாற்றுவாயாக ‘’என்று கனிகா கூறியபடியே கண்ணீர் வடித்தாள்.

“ தலைவன் ஏக்கத்தில் தலைவியும்

தலைவி ஏக்கத்தில் தலைவனும்

தன் நிலையை வெதும்பி அவளும்

அவளை நினைத்து அவனும்

என்று இருவர் மனதையும் அறிந்த நிலமகள் உலா கண்டதோ !

உலா போகும் சந்திரமதியே நில்லாயோ !

இருவரின் ஏக்கங்களை களைப்பாயோ !

அவர்களின் சோகங்களை தீர்ப்பாயோ !

அவர்களுக்குள் மகிழ்ச்சியை பரப்புவாயோ!

பிணைப்பினை உண்டாக்குவாயோ

சந்தோசத்தில் ஆர்ப்பரிப்பாயோ !

சொல்வாயே என் வெண்ணிலவே !"

*********************

"குருவே ! நான் காந்தாயினியை வைத்து அனைத்தும் தயார் செய்துவிட்டேன். அரசர் ! நாளை மந்திரவியூகத்தை சிவஆலயத்தில் இருந்து எடுத்துக் கொண்டு வருவார். வழியில் அதை நாம் கையகப்படுத்த அனைத்தையும் செய்துவிட்டேன்" என்று கலிங்கா கடோத்கஜனிடம் கூற

“சபாஷ் கலிங்கா !!! இனி வெற்றி நம் கையில்" என்று கடோத்கஜன் சிரித்தான்

"கடோத்கஜா ! தீரனை தவறாக கணிக்காதே ! அவனை வெல்வது கடினம் !" என்று இதயம் இடையில் பேச மந்திரம் மூலம் அதை அடக்கினான் கடோத்கஜன்.

லிங்கா தன் அறையில் தயாராகிக் கொண்டிருக்க வதனி தயங்கியபடியே உள்ளே வந்தாள் . அவள் வருகையை கண்ணாடி மூலம் கண்டறிந்த லிங்கா

“ என்ன வதனி என்ன தயக்கம் ? எதாவது வேண்டுமா ? “– லிங்கா

"போஜனம் தயார் நிலையில் உள்ளது ! தங்களை அழைக்க வந்தேன் அரசே!" – வதனி

“ மகாராணி அழைத்தால் வராமல் இருக்க இயலுமா ? இதோ தங்களின் அடிமை தயார் நிலையில் “ – லிங்கா

“ அரசரே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ! நான் என்றும் தங்களின் அடிமை ! நீங்கள் இல்லை பிரபு !" – வதனி

“ அப்படியே ஆகட்டும் அரசியே ! ‘’ என்று தலைகுனிந்து வணங்கி லிங்கா கூற அதை கண்டு சிரித்தபடியே முன்னால் நடந்தாள் வதனி.

அவள் பின்னால் வந்த லிங்கா கவனிக்காமல் அருகில் இருந்த தூணின் மேல் மோத அதை கண்ட வதனி பதற்றம் கொண்டாள்.

“ பிரபு ! பிரபு ! என்னவாயிற்று ! பார்த்து வர மாட்டீர்களா ? பாருங்கள் முட்டிக் கொண்டீர்கள் “ என்று கூறியபடி வதனி லிங்கா கைகளை பார்க்க முயல , லிங்கா வதனியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை கவனித்த வதனி "என்ன பிரபு ? அப்படி பார்க்கிறீர்கள் ?" – வதனி

அவள் கேட்டதை அடுத்து அவள் அருகில் லிங்கா வர வதனிக்குள் அவன் பார்வை மாற்றம் ஏதோ செய்தது . தலைகுனிந்தபடி வதனி நின்று இருக்க

அவள் அருகில் வந்தவன் “ என்னை எப்படி அழைத்தாய் ?” என்று லிங்கா கேட்டதும் தான் வதனிக்கு தான் அவனை பிரபு என்று அழைத்தது ஞாபகம் வந்தது. சட்டென்று அவனை விட்டு வதனி நகர முற்பட அவளை கைகளினால் சிறை செய்தான் லிங்கா.

“ சொல்லிவிட்டு செல்லடி !வதனி’’ என்று அதிலேயே அவன் விடாபிடியாக நிற்க , வதனி வெட்கப்பட்டுக் கொண்டே அவன் அணைப்பில் நின்றாள்.

இருவரும் ஒரு மோனநிலையில் நிற்க

"அரசே !" என்ற சத்தம் கேட்டு இருவரும் பிரிந்தனர் .

அங்கு காந்தாயினி நின்று இருந்தாள். அவள் பார்வை லிங்கா வதனி கைகளை பற்றிக் கொண்டிருப்பதில் பட , அவளது பார்வையின் பொருளை கண்ட வதனி சட்டென்று விலக முற்பட்டாள். ஆனால் லிங்கா அவளது விலகலை அனுமதிக்காமல் அவளை அருகில் நிறுத்தியபடியே

"சொல்லுங்கள் ! காந்தாயினி ! எதற்காக தாங்கள் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள் ? தாம் வந்த தன் நோக்கத்தை சற்று விரைவாக கூறிவிட்டு சென்றால் நலம் ?" – லிங்கா

"அரசே ! மன்னிப்பு வேண்ட வந்தேன்! அன்று தங்களை தவறாக நினைத்து பேசிவிட்டேன் என்னை மன்னியுங்கள் !" – காந்தாயினி

"நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய தவறொன்றும் செய்யவில்லை ! ஆகையால் அதை பற்றி பேசி தங்களையே வதைத்து கொள்ள வேண்டாம்" – லிங்கா

அவன் அப்படி கூறியதும் 'இன்னும் ஒரு நாள் தான் பிரபு ! பின்பு நீர் என்னவர் ஆகிவிடுவீர்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட காந்தாயினி

வெளியில் "நன்றி அரசே !" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் லிங்கா திரும்பிப் பார்க்க அங்கு யாருமில்லை 'ம்ம்ம்' என்று பெருமூச்சுவிட்டபடி லிங்கா தீரேந்திரனை நாடிச் சென்றான்.

தீரேந்திரன், லிங்கா மற்றும் இனியன் மூவரும் மறுநாள் விடியலில் சிவ ஆலயத்திற்குச் செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

அன்று இரவு கனிகா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தீரேந்திரனை வாள் கொண்டு ஒரு உருவம் தாக்க முற்படுவது போல் காட்சிகள் கனவில் தோன்ற திடுக்கிட்டு விழித்தாள்.

“ பிரபு ! வேண்டாம் !" என்று அலறியபடியே எழுந்தவள் வேகமாக தீரேந்திரனை காண அரண்மனை நோக்கி பயணப்பட்டாள்.

அன்று இரவு தூக்கம் வராமல் நடை பயின்ற தீரேந்திரன் கனிகா வருகையை கண்டு குழப்பம் மேலிட அவளை எதிர்கொண்டான்.

"அரசே! தங்களுக்கு ஒன்றுமில்லையே !" என்று தன் கைகள் கொண்டு அவனை கனிகா வருட

"நான் நன்றாகத்தான் உள்ளேன் ? என்னாயிற்று உனக்கு ? எதற்காக இவ்வளவு பதட்டம் ? இந்த இரவு நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ?" – தீரேந்திரன்

"தங்களை யாரோ வாள் கொண்டு..." - என்று ஆரம்பித்தவள் சட்டென்று அமைதியாகிவிட்டாள் .

"ஒன்றுமில்லை அரசே ! "என்று கூறிவிட்டு கனிகா செல்ல முயல

தீரேந்திரன் அவளை தடுத்தான்.

"என்ன விசயம் தேவி ! சொல்லிவிட்டுச் செல் !" – தீரேந்திரன்

“ஏதோ மனதில் குடைகின்றது அரசே ! ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனம் கிடந்து அடிக்கின்றது ! தங்களுக்கு எதாவது என்றால் நான் ‘’ என்று கனிகா அழுது கொண்டே ஏதோ சொல்ல முற்பட்டு நிறுத்திக் கொண்டாள்.

"ம்ம்ம் சொல் தேவி ! ஏன் பாதியில் நிறுத்திவிட்டாய் ?" –தீரேந்திரன்

"தாங்கள் நாளை எங்கும் செல்ல வேண்டாம் அரசே !" – கனிகா

"இல்லை தேவியாரே ! மந்திரவியூகத்தை பத்திரபடுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த வேலையை முடித்துக் கொண்டு விரைவாக வந்து விடுவேன் ! அதனை எடுத்து தேவியாரின் கைகளில் நான் தஞ்சம் பெறப் போகிறேன்! சரிதானே தேவி" – தீரேந்திரன்

அதை கேட்ட கனிகா ஏதோ மறுப்பாக கூற வர அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு சிறை செய்தான் தீரேந்திரன்.

அப்போது காற்று பலமாக வீசி இருவரையும் வட்டமடித்துவிட்டுச் சென்றது.

நாளை நடப்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தால் கனிகா தீரேந்திரனை விட்டு இருக்கமாட்டாளோ ?

“ நடப்பது விதியின் வழி அதை மாற்றி அமைத்திட எவராலும் இயலாது “

மந்திரம் 40:

இதயம் கலிங்கா அமர்ந்து இருப்பதை பார்த்து சுற்றி முற்றி பார்த்தது. அங்கு கடோத்கஜன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு பேச ஆரம்பித்தது.

“ கலிங்கா எப்படியாவது என்னை காப்பாற்று ! நான் என் உருவத்தை திரும்ப பெற வேண்டும் ! தீரேந்திரனை அழிக்க வேண்டும் ! உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன் ! என்னை காப்பாற்றுடா ! ‘’ என்று அது கூற

“ என்ன மாயவா ! உன் நிலை அறிந்தும் நீ இதை என்னிடம் கேட்கிறாயா? உனக்கு உதவி செய்து உன் நிலையை அடைய நான் என்ன முட்டாளா ?” – கலிங்கா

“ பின்பு எதற்கடா எனக்கு உதவி எல்லாம் புரிந்தீர்கள் ?” – மாயவன்

“ உனக்கு உதவி புரிவதில் எங்களுக்கும் நலனும் , பயனும் இருந்தது. உன்னை வைத்து மந்திரவியூகத்தை நாங்கள் கைப்பற்ற நினைத்தால் நீ அனைத்தையும் நாசம் செய்துவிட்டாய் ! ‘’- கலிங்கா

"அப்படி நான் என்ன செய்தேன் ?" – மாயவன்

"லிங்கா மற்றும் வதனியை கவர்ந்து வந்து அவர்கள் மூலம் தீரேந்திரனிடமிருந்து மந்திரவியூகத்தை நாங்கள் கைப்பற்ற நினைத்தால் லிங்கா , வதனி இடையில் புகுந்து இருவருக்கும் மணமுடித்து வைத்து வதனியை எங்கள் கைகளில் கிட்டாமல் செய்துவிட்டாய். அதற்கு பரதிபலனாய் நீ இந்நிலையில் தான் இருக்க வேண்டும்" -கலிங்கா

“ ஈசா ! இவர்களின் பழி பாவங்களுக்கு நான் துணையாக இருந்த பலனை தற்போது அனுபவிக்கிறேன். தயவு கூர்ந்து எந்தன் இழிநிலையில் இருந்து என்னை காப்பாயாக !’’ என்று இதயம் அழுதது.

****************

மாலை நேரம்,

“ என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அரசியாரே ?” என்று லிங்கா தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்த வதனியின் செவியின் அருகில் கேட்க , சட்டென்று பதறியபடியே திரும்பினாள் வதனி

“நீங்களா அரசே ! பயம் ஆட்கொண்டுவிட்டது ! இனி இப்படி செய்யாதீர்கள்?” – வதனி

"சரி செய்யவில்லை ! ஆனால் நேற்று என்னை வேறு மாதிரி அழைத்ததாக ஞாபகம் ?" – லிங்கா

"அது வந்து ... அரசே !" என்று வதனி தயங்க

அவளின் கண்களை நேராக பார்த்த லிங்கா “ என்னை மறுபடியும் அப்படி கூப்பிடமாட்டாயா வதனி ! என் மனதிற்கினியவளாக உன்னை நான் நெஞ்சில் நினைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. என்னை காதல் பேய் பிடித்து ஆட்டுகிறது ராணியாரே ! அதை தடுக்கும் வழி தங்களிடம் தான் உள்ளது” – லிங்கா

அதை கேட்ட வதனி "உங்களை ஆட்கொண்ட காதல் பேய் என்னை சிறுவயதில் இருந்தே பிடித்துவிட்டது பிரபு!" என்று வதனி கூற ,

அதை கேட்ட லிங்கா வேகமாக அவள் கைகளை பிடித்து அருகில் இழுத்துக் கொண்டான்.

"இது முன்பே தெரிந்திருந்தால் ! என் ஆசையை அப்போதே நிவர்த்தி செய்திருப்பேனடி" என்று கூறியவன் சற்றும் தாமதிக்காமல் இறுக அணைத்து

அவள் இதழில் கவி பாட, தங்களின் இல்லறத்தை இனிதாக தொடங்கினார்கள்.

மறுநாள், "சீக்கிரம் வருகிறேன் ராணியாரே காத்திருங்கள்!" என்று வதனி இதழில் இதழ் பதித்து அவளிடம் விடை பெற்று லிங்கா செல்ல

வதனி நாணத்தோடு வழி அனுப்பினாள்.

**************

இங்கு இனியன் குழலாளிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“ என்னடி குழல் ! பேசாத மடந்தை ஆகிவிட்டாய் ! நான் ஜடம் அல்ல என்று நிரூபித்ததின் பயனாய் உன் வாய் மொழி கூட மறந்துவிட்டாய் போல் !" - இனியன்

“ அப்படியெல்லாம் இல்லை ! ஆனாலும் நீங்கள் மோசம் பிரபு ! அமைதியின் திருவுருவமாக இருந்துவிட்டு உங்களுக்குள் தான் ... ‘’ என்று கூறிய குழல் பாதியில் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

“ என்ன குழல் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திவிட்டாய் ! ம்ம்ம் சொல்லடி என் சண்டிராணி !" – இனியன்

“ ம்ம்ம் உங்களுக்குள் இருக்கும் வேறொருவனை கண்டேன் ! போதுமா !’’ – குழல்

“ போதாது ! நீ வேண்டும்! என்றும்... உன்னைவிட்டு ஒரு நொடி கூட பிரியக் கூடாது என்றும் மனம் சொல்கிறது. ஆனால் என் கடமையை செய்ய வேண்டுமே ! ம்ம்ம்..." என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டவன்.

"விரைவில் வருகிறேன் !’’ என்று அவளிடம் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் இனியன்

*****************

தீரன் அரண்மனையைவிட்டு வெளியில் வர , எதிரில் வந்தனர் லிங்காவும் , இனியனும். மூவரும் கிளம்ப ஆயத்தமாக ஒற்றன் ஒருவன் வேகமாக வந்தான்.

"அரசே ! மூவரும் இதனை அணிந்து கொள்ள வேண்டும் என்று அடியார் ஒருவர் கொடுத்துவிட்டுச் சென்றார் என்று அவன் அந்த காப்பை கொடுக்க மூவரும் அதை அணிந்து கொண்டனர்.

காப்பை அணிந்தவர்கள் தம் தம் குதிரையை நோக்கிச் செல்ல , தீரேந்திரன் தன் குதிரையில் ஏறி அமர முயல கனிகா அவன் அருகில் வந்தாள் .

தீரேந்திரன் கனிகாவை அங்கு எதிர்பார்க்கவில்லை ! அவன் கேள்வியாக பார்க்க கனிகா பேசத் தொடங்கினாள்.

“ நானும் உங்களோடு வருகிறேன் அரசே!” – கனிகா

“ பயம் கொள்ளத் தேவையில்லை தேவி ! விரைவாக வந்துவிடுவேன் ! லிங்காவும் , இனியனும் என்னுடன் இருக்க நீ பயம் கொள்ள தேவையில்லை தேவி ! “ என்று கூறிவிட்டு அவள் கண்ணத்தை தட்டிவிட்டுச் சென்றான் தீரேந்திரன்.

போகும் அவனையே விழிஎடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கனிகா. மூவர் செல்வதையும் தூரத்துல் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காந்தாயினி .

“ இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் என்னவராகிவிடுவீர்கள் பிரபு ! அதன்பின் உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் “ என்று காந்தாயினி தனக்குள் கூறிக் கொண்டாள். .

தீரன் சிவ ஆலயத்தின் உள்ளே சென்று சிவனை தொழுது எழ அவர் காலடியில் இருந்த மந்திரவியூகம் ஒளி வீசியது. அதை தன் கைகளில் ஏந்தியவன் அதை பத்திரமாக ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டினான். மந்திர வியூகத்தை பெட்டிக்குள் வைத்தவன் ஓலைச்சுவடியை தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர கரும்புகை ஒன்று அவனை ஆட்கொண்டது. காற்று பலமாக வீசி சூறாவளி காற்றாக மாறத் தொடங்க

நடக்க இருக்கும் விபரிதத்தை அறிந்த தீரேந்திரன் வேகமாக ஓலைசுவடியை பிரித்துப் பார்க்க அது அருகில் இருக்கும் இடத்தை காண்பித்தது.

தீரேந்திரன் வேகமாக அந்த இடத்தை நோக்கிச் செல்ல முனைய , கரும்புகை அவனை சூழ முற்பட்டது. அப்போது அடியார் அதன் முன் வந்து அதை கட்டுப்படுத்தியபடியே

"தீரா ! விரைவாக செல் ! மந்திரவியூகத்தை பத்திரப்படுத்து !" என்று அவர் கூற தீரேந்திரன் மந்திரவியூகத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

தீரேந்திரன் செல்வதை கண்ட கலிங்கா அவனை பின் தொடர முயல, இனியனும் , லிங்காவும் அவனை பிடித்துக் கொண்டனர்.

கலிங்கா மந்திரங்களை உச்சரிக்க முயல இனியன் அவன் கழுத்தை பிடித்துக் கொண்டான். அதனை அடுத்து கலிங்கா தன் கையில் இருந்து ஏதோ எடுக்க முயல லிங்கா அவன் கையை பிடித்துக் கொண்டான்.

இருவரும் இங்கு போராடிக் கொண்டிருக்க அடியார் புகையோடு போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் கரும்புகை அவரை சூழ்ந்து கொள்ள அதில் மூழ்கி மூச்சையானார் அடியார்.

அந்த இடம் நோக்கி விரைந்த தீரேந்திரன் மந்திரவியூகத்தை பத்திரபடுத்திவிட்டு திரும்ப கரும்புகை மறுபடியும் தீரேந்திரனை ஆட்கொண்டது .

இங்கு கலிங்கா இவர்களிடமிருந்து தப்பித்து ஓட , இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

கலிங்காவை துரத்திய லிங்காவும் , இனியனும் தீரேந்திரன் புகையிடம் சிக்கிக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் செல்ல, லிங்கா அணிவித்து இருந்த ரூத்ராட்சை மாலை ஒளி வீசியது. அது கரும்புகையின் மேல்பட புகை மறைந்து மாயவன் ரூபத்தில் நின்றான் கடோத்கஜன்.

கடோத்கஜன் தன் கைகளை நீட்ட அவன் கைகளில் வாள் முளைத்தது. வாளை கொண்டு தீரேந்திரனை நோக்கி கடோத்கஜன் வீச, அதிலிருந்து விலகி அந்த வாளை கொண்டு கடோத்கஜனை தாக்கினான் தீரேந்திரன். தீரேந்திரனும் , கடோத்கஜனும் போரிட , இங்கு கலிங்கா பதுங்கி வந்து இனியனை பின்னால் இருந்து தாக்க முற்பட்டான். அப்போது லிங்கா அவனை பிடித்து நிறுத்தி சண்டை போட இனியனும் சுதாரித்து கலிங்காவை தாக்கினான். கடோத்கஜனை தீரேந்திரன் போரிட்டு வீழ்த்த முயற்சி செய்து கொண்டிருக்க , இனியனும் , லிங்காவும் கலிங்காவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அனைவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மூவருக்குள்ளும் மாற்றம் ஏற்பட லிங்காவிற்கும், இனியனிற்கும் கண்கள் சுழன்றது.

எதிரில் இருக்கும் அனைத்தும் சுழல ஆரம்பிக்க, இருவரும் திணறுவதை கண்ட கலிங்கா இனியன் அருகில் சென்று வாளால் குத்த முயற்சி செய்ய , மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த தீரேந்திரன் தன்னை கட்டுப்படுத்தியபடி எழுந்து வாளை கலிங்காவை நோக்கி வீசினான். அது சரியாக அவன் கையை துண்டித்தது.

லிங்கா வை குறி பார்த்து கடோத்கஜன் செல்ல அவனின் தலையைக் கொய்தான் தீரேந்திரன்.

துண்டிக்கப்பட்ட கையை பிடித்தபடி கலிங்கா பயந்து ஓட , கடோத்கஜன் தலை தனியாக உடம்பு தனியாக கிடந்தான்.

தன் நண்பர்களை காப்பாற்றி திரும்பிய தீரேந்திரனிற்கும் கண்கள் சொறுக அவன் முன் வந்து நின்றார் மகேந்திரர்.

அவரை பார்த்ததும் தீரேந்திரன், “ தாங்கள் ஈட்ட பணியை நிறைவேற்றிவிட்டேன் தந்தையே ! மந்திரவியூகத்தை பத்திரப்படுத்திவிட்டேன் “என்று தீரேந்திரன் சொன்னது தான் தாமதம் அவன் நெஞ்சில் வாளை இறக்கினார் மகேந்திரர்.

"தந்தையே !" என்று அவரை அதிர்ச்சியாக பார்த்தபடி தரையில் வீழ்ந்தான் தீரேந்திரன்.

மகேந்திரர் வாளை இறக்கியதும் அரைமயக்கத்தில் இருந்த லிங்காவும் , இனியனும் "தீரா !" என்று கத்த தரையில் துடித்துக் கொண்டிருந்தான் தீரேந்திரன்..

"சபாஷ் மகேந்திரா ! நல்ல காரியம் செய்துவிட்டாய் ! "என்று கூறியபடியே தரையில் கிடந்த தலை மறுபடியும் உடம்போடு ஓட்டிக் கொண்டது.

"இனி நீ எனக்கு தேவையில்லை ! மடிந்து போ !" என்று கடோத்கஜன் கூற மகேந்திரர் தன்னை தானே வெட்டிக் கொண்டு இறந்தார்.

அறை மயக்கத்தில் நடக்கும் விசயங்களை கண்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்றனர் இனியனும் , லிங்காவும்.

சாவின் விளிம்பில் இருந்த தீரேந்திரன்.

“ என் ராஜ்ஜியத்தையும் என் மக்களையும் காப்பாற்று இனியா ! என் தங்கைகள் இனி உங்கள் பொறுப்பு ! “ என்று இருவரிடமிடமும் கூறிவிட்டு மடிந்தான் தீரேந்திரன்.

கயவனின் சூழ்ச்சியால், தந்தையின் கரங்களால் நெஞ்சில் வாள் பட்டு வீரத்திருமகனாக மண்ணின் மைந்தனாக கிடந்தான் தீரேந்திரன்.



வியூகம் தொடரும் .
 

New Threads

Top Bottom