Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 20

குழலும் , லிங்கேஷும் பேசியபடியே தோப்புக்குள் வர லிங் குழலிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை ரூபாவையே தேடியது. இதை கவனித்த குழல்

“என்ன அண்ணா ? யாராவது வராங்களா என்ன ? யாரை எதிர்பார்த்து தேடிட்டு இருக்கீங்க ? “– குழல்

ஆங் ! அதெல்லாம் ஒண்ணுமில்லைமா ? – லிங்

ரூபாவை தேடுறீங்களா என்ன? – குழல்

அதெல்லாம் இல்லம்மா ! சும்மா பார்த்தேன் என்று லிங் மழுப்ப

ஓ ! என் அண்ணாவும் நீங்களும் பேசுக்கிட்டதைப் பார்த்து நீங்க அவள விரும்புறீங்கனு நினைச்சேன் அண்ணா! நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல என்று குழல் கூற

லிங் வேகமாக பேசினான்.

இல்லைமா ! அவள பார்த்தவுடனே பிடிச்சிருச்சு ! ஆனா அதை உன்கிட்ட சொல்ல ஒருமாதிரி இருந்துச்சு என்று லிங் தயங்கியபடியே கூற

வாவ் ! அண்ணா ! நிஜமாவா சொல்றீங்க ? – குழல்

ஆமாம் குழல் ! அவ அதற்கு ஒத்துக்கணுமே ! அவளுக்கும் என்னை பிடிக்கணுமே ! – லிங்

கவலைய விடுங்க அண்ணா ! அவள சம்மதிக்க வச்சுடுவோம் என்று குழல் கூற அதை கேட்ட லிங் சந்தோசமாக முறுவல் செய்தான்

இருவரும் பேசிக் கொண்டே வர தூரத்தில் இனியன் வண்டியை நிறுத்தி ஏதோ செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் குழல் வேகமாக அவன் அருகில் சென்றாள்.

அவன் அருகில் சென்றவள் என்னாச்சு ? ஏன் இங்க நிக்கிறீங்க ? – குழல்

அவள் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த இனியன் மறுபடியும் குனிந்து கொண்டு வண்டியை ஆராய்ச்சி செய்தபடியே பேசினான்.

“ பார்த்தா தெரியல வண்டி ரிப்பேர் சரி செஞ்சுட்டு இருக்கேன்” – இனியன்

அதை கொஞ்சம் தன்மையா சொன்னா என்னவாம் எப்ப பாரு திமிராவே பதில் சொல்றது . ஜடம் ! ஜடம் ! என்று குழல் வாய்க்குள் முணங்க

அதை இனியன் கவனித்துவிட்டான். வேகமாக அவளிடம் திரும்பியவன்

இப்ப என்ன சொன்ன நீ ? திரும்பச் சொல்லு – இனியன்

ஒண்ணும் சொல்லலையே ? – குழல்

இல்லை ஏதோ சொன்ன- இனியன்

அய்யோ பாவம் ! வண்டி இப்படி ஆகிருச்சேனு சொன்னேன்- குழல்

இல்லை என்னை எதோ சொல்லி திட்டுன ? மறுபடியும் சொல்லு அதை என்று இனியன் கேட்க

‘அய்யோ குழல் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா ! பாரு இப்ப நல்லா மாட்டிக்கிட்ட ! சொல்லாம இவர் விடமாட்டார் போலயே ! சொல்லிடு குழல் என்று மனசாட்சி கூற

ஹ்ம்ம் ஜடம்னு சொன்னேன் ! போதுமா! என்று அவள் சொன்னதுதான் தாமதம் அதை கேட்ட இனியன் குழலையே பார்த்தபடியே இருக்க

குழல் தான் சொன்னதும் அவன் தன்னை திட்டுவான் என்று எதிர்பார்த்திருக்க ஆனால் இது எதுவும் செய்யாமல் அவன் தன்னை பார்த்ததும் அதுவும் அவனின் பார்வையில் தோன்றிய வித்தியாசத்தை குழப்பமாக குழல் பார்த்துக் கொண்டிருந்தாள்

இவர்களின் சம்பாஷணையை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் லிங் .

சார் ! தள்ளுங்க நான் பார்க்குறேன் என்று லிங் கூற

இனியன் லிங்கை கேள்வியாகப் பார்த்தான்.

அதை கவனித்த குழல் லிங்கை இனியனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்

இவர் லிங்கேஷ் என் அண்ணா பிரண்ட் என்று குழல் கூற

ஓ ! அப்படியா ! நான் தேவஇனியன் ! இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற போலிஸ் ஆபிசர் ! என்று லிங்கிடம் கை குலுக்கினான் இனியன்.

ஓ! அப்படியா என்று கை குலுக்கிய லிங்

என்ன சார் பிரச்சனை ? என்று கேட்க

என்னை இனியன்னு கூப்பிடுங்க லிங்கேஷ் .. என்னனு தெரியல வண்டி start ஆக மாட்டுங்கிது – இனியன்

ஓ ! ஒகே இனியன் என்று லிங் கூறியபடியே வண்டியைப் பார்க்க

நண்பா ! ஒண்ணும் பிரச்சனை இல்லையே என்று இனியன் கூறியபடியே அருகில் நிற்க

இனியன் நண்பா என்று கூப்பிட்டதும் லிங்கிற்குள் ஏதோ ஞாபக ஊர்வலம் நடந்தது. இனியனை பார்த்தபடியே நின்றான் லிங்

என்னாச்சு நண்பா ? – என்று இனியனும்

அண்ணா என்று குழலும் உலுக்கவும் ஏதோ கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான் லிங்

ஒன்றுமில்லை இனியா ! ஏதோ ஞாபகம் ! என்று கூறியவன் வண்டியை ஏதோ செய்ய சற்று நேரத்தில் வண்டி சரியாகி ஓட ஆரம்பித்தது.

இனியன் வியப்பாக லிங்கைப் பார்க்க குழல் லிங்கிடம்

எப்படி அண்ணா வண்டியை ரிப்பேர் பண்ணிங்க? இது கூட உங்களுக்கு தெரியுமா ? – குழல்

படிக்குற காலத்தில் இந்த மாதிரி வண்டி சர்விஸ் பண்ணுற ஷாப்பில் பார்ட் டைம் வேலை செஞ்சு இருக்கேன்மா என்று லிங் கூற

இனியன் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே

இங்க பக்கத்தில் தான் எங்க வீடு வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டுப் போகலாம் நண்பா ! என்று இனியன் கூற

குழலிடம் தோன்றிய ஆர்வமிகுதியை பார்த்த லிங் அதற்கு சம்மதமாக தலையசைத்தான்

இனியனின் பக்கத்தில் லிங் அமர , பின்னால் அமர்ந்து கொண்டாள் குழல்

இனியனும் லிங்கும் பேசிக் கொண்டே வர, குழல் இனியனை பார்த்துக் கொண்டே வந்தாள்.

பேசிக் கொண்டே வந்த இனியன் சட்டென்று திரும்பி குழலைப் பார்க்க அதை எதிர்பார்க்காத குழல் திருதிருவென்று முழித்தாள்

அவள் பார்வைவையை சந்தித்தவன் புருவங்களை ஏற்றி என்ன என்று கேட்க வேகமாக ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியபடியே கீழே குனிந்து கொண்டாள் குழல்.

தனக்குள் சிரித்துக் கொண்டே வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் இனியன்.

கனிகா இனியனின் தாய் வண்டியின் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

யார்டா ! இவங்க இனியா – கனிகா

அம்மா! இது லிங்கேஷ் என்று இனியன் கூற

லிங்கைப் பார்த்த கனிகா கண்களால் ஏதோ கேட்க இனியன் அதற்கு ஆம் என்று தலையாட்டினான்.

கனிகா அருகில் சென்று குழல் நிற்க கனிகா குழலிடம்

உன் பெயர் என்னம்மா ? – கனிகா

குழல் என்று இனியன் அதற்கு பதில் சொல்ல கனிகா ஆச்சரியமாக அவனைப் பார்த்தார்

என்னம்மா படிக்கிற ? – கனிகா

காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாமா – இனியன்

இனியா ! நான் அவகிட்ட கேட்டேன் ? – கனிகா

யார் சொன்னா என்னம்மா ! பதில் கிடைச்சிருச்சுல்ல – இனியன்

இவன்விட்டா வெளியில் நின்னு பேசியே அனுப்பிடுவான். வாம்மா !உள்ள நீயும் வாப்பா ! என்று இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் சோபாவில் அமர வைத்துவிட்டு

இருங்க ! நான் காபி போட்டு கொண்டு வரேன் என்று கூறியவர் கிட்சனுக்குள் செல்ல

இதோ வந்துடறேன் என்று இனியனும் அவர் பின்னால் சென்றான்.

உள்ளே வந்த இனியனை பார்த்த கனிகா ஏதோ கேட்க முயல உள்ளே நுழைந்தாள் குழல்

அவள் வரவை கண்ட கனிகா தான் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு அவளிடம் திரும்பினார்

என்னம்மா ! என்ன வேணும் ? – கனிகா

இல்லை சும்மா உட்கார்ந்து இருக்க ஒருமாதிரி இருந்தது அதான் வந்தேன் ஆண்ட்டி – குழல்

ஓ ! அப்படியாம்மா ! வா !இங்க வந்து நில் ! அப்புறம் சொல் மா படிப்பு எப்படிப் போகுது ? அடுத்து வேலைக்குப் போகப் போறியா ? இல்லை கல்யாணமா ? என்று இனியனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கனிகா கேட்க

தெரியல ஆண்ட்டி ? என்று கூறியபடியே குழல் இனியனைப் பார்த்துக் கொண்டே அவர் அருகில் நிற்க

ஓ ! நீ சொல்லுமா ! எப்படி இருக்கணும் ? உனக்கு வரப் போறவன் ? என்று கனிகா கேட்க

குழல் இனியனைப் பார்த்துக் கொண்டே

ஹ்ம்ம் ஒரு ஜடம் மாதிரி இல்லாம ஆசையா என்னைப் பார்த்துக்கனும் ஆண்ட்டி - குழல்

அதைக் கேட்டு அருகில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த இனியனுக்கு புரை ஏறியது

வேகமாக அவன் அருகில் வந்த கனிகா அவன் தலையை தட்டியபடியே பார்த்துடா ? என்று கூற

அவளை முறைத்துப் பார்த்தபடியே

அம்மா ! நான் வெளியே வெயிட் பண்றேன் . சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்கம்மா என்று கூறியவன் வெளியேற

அவன் செல்வதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குழல்

அவளையும் இனியனையும் கவனித்துக் கொண்டிருந்த கனிகா

“ பையன் நல்லா மாட்டிக்கிட்டான் என்று தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார் ‘

அவரிடம் நெருங்கிய குழல்

ஆண்ட்டி ! நான் வேணா காபி போடவா என்று அவள் கூற

கனிகாவும் சந்தோஷமாக அதற்குச் சம்மதம் தெரிவித்தார்

இருவரும் பேசியபடியே கிட்சனுக்குள் இருக்க

வெளியே வந்த இனியன் முன் வந்து நின்றாள் ஒரு பெண்.அவளை அழைத்துக் கொண்டு இனியன் ரூமிற்குள் செல்லவும் கனிகாவும் , குழலும் வெளியே வரவும் சரியாக இருந்தது..

குழல் லிங்கிடம் காபிக் கப்பை நீட்டியபடியே இனியனை கண்களால் தேடினாள் . அதை கவனித்த லிங் மேலே உள்ள ரூமைக் காட்டி அங்கு போயிருக்கிறார்மா என்று அவன் கூறியதும் குழல் மேலே சென்றாள் .

அவள் சென்றதும் கனிகா லிங்கிடம் திரும்பினார்.

தம்பி என்ன பண்றிங்க ? எங்க இருக்கீங்க? என்று அவர் கேட்க லிங் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

இங்கு குழல் இனியனை தேடி அவன் ரூமிற்குள் செல்ல அங்கு ஒரு பெண் இனியன் கையைப் பிடித்துக் கொண்டு

“ சார் ! உங்களைத்தான் நான் நம்பி இருக்கேன் ! என்னை ஏமாத்திடாதீங்க சார் ! ‘’என்று அந்த பெண் கண்ணீர் மல்க கூற இதைப் பார்த்த குழலுக்கு கோபம் தலைகேறியது.

ம்க்கும் என்று தன் தொண்டையை செருமி தன் இருப்பை குழல் காண்பிக்க

குழலை வரவை பார்த்த இனியன்

ஓ கே மகி ! கவலைப்படாம வீட்டுக்குப் போங்க ! உங்க பிரச்சனையை இன்னைக்கு கண்டிப்பா முடிச்சிடுறேன் என்று இனியன் கூற

அந்தப் பெண்ணும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு சென்றாள்.

அந்தப் பெண் சென்றதும் இனியனிடம் காபி கப்பை குழல் நீட்ட

அதை வாங்கியவன் குடித்துக் கொண்டே ஒரு பைலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் சென்ற குழல் மெதுவாக

ரொம்ப பழக்கமா ? – குழல்

யாரைச் சொல்ற? என்று பைலில் மூழ்கியபடியே இனியன் கேட்க

இப்ப வந்துட்டு போனாங்கள அவங்க தான் ! – குழல்

அவள் அப்படிக் கூறியதும் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் இனியன் . பின்பு மறுபடியும் தான் விட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடியே

அது எதற்கு உனக்கு ? தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டா எனக்கு பிடிக்காது – இனியன்

ஓ ! அப்படியா ? அப்ப தேவையான கேள்வி ? தேவையில்லாத கேள்வில்லாம் ஒரு லிஸ்ட் எடுத்துக் கொடுங்க நான் கேட்குறேன் ?

உரிமையா கையெல்லாம் பிடிக்குற அளவுக்கு பழக்கமா ? – குழல்

ஹேய் லிசன் ! இப்ப எதற்கு குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்குற நீ ! எல்லாத்துக்கும் உன்கிட்ட என்னால ரீசன் சொல்லிட்டு இருக்க முடியாது . யூ காட் இட் என்று இனியன் கத்த

குழல் வேகமாக அவன் அருகில் சென்று வேகமாக பேசினாள் குழல் .

உங்க அருகில் வந்து உங்க கையை பிடிச்சுட்டு பேசுற , அதுக்கு காரணம் கேட்டா ஏன் இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு. ? – குழல்

அவள் அப்படி கேட்டதும் அவளை ஆழமாக பார்த்தவன் மெதுவாக பைலை அருகில் உள்ள பெட்டில் தூக்கிப் போட்டுவிட்டு அவள் அருகில்

வந்தான்.

அவ கூட பேசினா உனக்கு ஏன் கோபம் வருது என்று அவள் கண்களை கூர்மையாக பார்த்தபடியே கேட்டான் இனியன்.

அது வந்து என்று அவள் தயங்க

ம்ம்ம் சொல்லு . அப்படி பேசினா என்னடி பண்ணுவ ? சொல்லு ? என்று இனியன் கேட்க

அப்போது தான் குழல் உணர்ந்தாள் அவன் தன் அருகில் நின்று இருப்பதை.

வேகமாக அவனை விட்டு அவள் விலக முற்பட

அவன் கைகள் அவளை பிடித்துக் கொண்டது

அவனை அருகில் பார்க்கவும் அவளுக்கு பதட்டம் அதிகரிக்க

என்னை விடுங்க ! நான் போகனும் – குழல்

முதல என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு போ என்று இனியன் தன் பிடியை தளர்த்தாமல் உறுதியோடு இருக்க

அது வந்து என்று குழல் இழுக்க

என்னம்மா ! இவ்வளவு நேரம் அந்த கத்து கத்தின பதில் கேட்டா மட்டும் சொல்ல மாட்ற என்று இனியன் கூற

குழல் வேகமாக

கண்டிப்பா ஒரு கொலை விழும் அவளை இல்லை உங்கள என்று குழல் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு பேச

ஓ ! ஏன்மா ! யார்கூடயும் நான் பேசக் கூடாது ? அப்ப உன் கூட மட்டும் தான் பேசனுமா என்ன ? என் பொண்டாட்டி மாதிரில அதிகாரம் பண்ற நீ . ஏன் இப்படி நடந்துக்குற ? காரணம் தெரிஞ்சுக்கலாமா ? – இனியன்

அதெல்லாம் தெரியாது ? பேசக்கூடாதுனா ? அவ்வளவு தான் – குழல்

ஓ என்று கூறியவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

அவ என்னைவிட அழகா இருக்காளா ? – குழல்

ஏன் இந்த கேள்வி ? – இனியன்

சொல்லுங்க ? – குழல்

ஆமா ! என்று இனியன் அவளை ஆராய்ந்தபடியே கூற

குழல் முகம் கருத்துவிட்டது அதை கவனித்தவன் சுவாரசியம் பொங்க

அவள் அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்தபடியே

கண்கள் செந்தேனோ

நான் மயக்கம் கொள்ள

இதழ்கள் பூவிதழோ

நான் பித்தம் கொள்ள

கண்ணக்குழி ஆழ்கிணறோ

நான் வீழ்ந்து போக

என்று அவன் ஒவ்வொன்றையும் அவளைப் பார்த்தபடியே வர்ணிக்க

அவன் அடுத்து கழுத்து என்று கூறி அவள் கழுத்தை பார்க்க ஆரம்பிக்க

வேகமாக அவனைத் தடுத்தாள் குழல்

போதும் அவளை பத்தி ஏன்கிட்டயே வர்ணிக்கிறீங்க என்று கண்ணில் நீர் தேக்கி வைத்தபடியே அவள் வருத்ததோடு கூற

அவளை பார்த்தபடியே அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்தபடியே

இதுவரைக்கும் எந்த பெண்ணையும் நான் நேசித்ததில்லை அவளைத் தவிர . அதே மாதிரி இவ்வளவு நேரம் நான் வருணித்ததும் அவளை இல்லை என்று கூறி இடைவெளிவிட்டவன்

இவ்வளவு நேரம் நான் வர்ணித்தது உன்னைத்தான் என்று இனியன் கூற

குழல் முகம் மலர்ந்து பின் வாடியது

அப்ப நான் அழகா இல்லைனு அன்னைக்குச் சொன்னது – குழல்

அதை இன்னமுமா ஞாபகம் வச்சுருக்க ? அது நீ திமிரா பேசினதுக்காக அப்படிச் சொன்னேன் - இனியன்

குழல் சந்தோஷமாக தலையசைத்தபடியே

அவனைப் பார்க்க அவன் பார்வை மாற்றம் அவளை ஏதோ செய்தது.

வேகமாக கதவினை நோக்கி குழல் செல்ல முயல்ல கதவினை நோக்கி நடந்தவள் அதன்பின் நகரமுடியாதபடி அவள் தாவணி பின்னால் இருந்து இழுக்கப்பட்டது

குழல் தாவணியை பிடித்தபடி

விடுங்க என்னை என்று சிணுங்கிக் கொண்டே திரும்ப

அங்கு தன் கைகளைக் கட்டிக் கொண்டே அவள் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்

அவள் குழப்பமாகப் பார்க்க

தன் தாவணி அருகில் இருந்த கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டிருந்தது.

அதைக் கவனித்தவள் அதில் இருந்து தன் துப்பட்டாவை பிரித்தவிட்டுத் திரும்ப

மறுபடியும் தன் தாவணி மாட்டிக் கொண்டது

முன்னாடி திரும்பியபடியே இது வேற எதிலயாவது மாட்டிக்குது என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்ப

அங்கு அவள் தாவணியை பிடித்து நின்று கொண்டிருந்தான் இனியன்

அவன் கைகளில் தாவணியைப் பார்த்தவள்

விடுங்க என்று கூற

அதைப் பிடித்து அவன் இழுக்க அவன் மேலே போய் விழுந்தாள் குழல்

நான் ஜடமா ? என்று கூறியபடியே அவளை அருகில் இழுத்தவன் அவள் முகம் நோக்கி குனிய அவனை தள்ளிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள் குழல்.

அதை கண்டு சிரித்தபடியே கீழே இறங்கி வந்தான் இனியன்.

இனியனின் சிரிப்பை கண்டும் காணாமல் பார்த்தார் கனிகா.

லிங்கும் கனிகாவிடம் பேசியபடி குழலை கவனிக்கத் தவறவில்லை

லிங் அருகில் வந்த இனியன் டீ பாயில் வைத்திருந்த பைலை எடுத்தபடியே

“ அம்மா ! கொஞ்சம் வேலை இருக்கு ! இவங்களையும் அப்படியே போற வழியில் விட்டுட்டு போயிடுறேன் ‘’ என்று கூறியபடியே நகர முற்பட

அவன் கைகளில் இருந்த பைலில் இருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.

அதை கீழே குனிந்து எடுத்த லிங் அந்த புகைப்படத்தில் இருந்த நபரைக் கண்டதும் அதிர்ச்சியானான்.

அதில் ரூத்ரன் சிரித்துக் கொண்டிருந்தார் .



***************

புகை மண்டலம் சூழ்ந்து ஒருவரின் முன் போய் நின்றது

என்ன அடியாரே ! என்னிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற முயல்கிறாயா? – என்று கடோத்கஜன் ஆங்காரமாக கேட்க

எல்லாம் என் அப்பன் செயல் ! அவனின்றி ஒரு அணுவும் அசையாது ! புரிந்து நடந்து கொள் மூடா ! – அடியார்

உன் அப்பனையும் கட்டி வைக்கும் வித்தை தெரிந்தவன் நானடா – கடோத்கஜன்

என்ன கடோத்கஜா ! உன் உருவம் இழந்தும் உன் திமிர் இன்னும் அடங்கவில்லையாடா ! உன் அழிவு காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது – அடியார்

மூடா ! என் உருவம் போனால் என்ன ? காற்றாக மாறி என் இலக்கை அடைவேன் . பொளர்ணமி இரவிற்குள் மந்திர வியூகத்தை கைப்பற்றி உன் ஈசனையும் அடக்கி ஆளும் வல்லமை அடைவேன்டா நான் – கடோத்கஜன்

தீரேந்தரிடம் மந்திரவியூகத்தை கைப்பற்றப் போய் தோற்று போனது நினைவில்லையாடா ? மறுபடியும் உன்னை அழித்து உன்னை மண்ணோடு மண்ணாக்க மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாரடா அவர் !நீ அழிந்து போகப் போகிறாய் ! – அடியார்

அதையும் பார்க்கலாம்மடா ! என்று கூறிச் சிரித்தபடியே மறைந்து போனான் கடோத்கஜன்

அவன் மறைந்ததும்

ஈசனே ! உன்னை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான் இவன். இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் ?

இருள் உலகத்தை ஆட்டிப் படைக்க துடித்துக் கொண்டிருக்கும் இவனை அழித்து அவனுக்கு மோட்சம் கொடுங்கள் பிரபு ! என்று அவர் கூற

மண்ணில் புழுதி பறந்து பூமியின் அடியில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதைப் பார்த்தவர்

ஓம் நமச்சிவாய என்று கூறி வணங்கினார்.

வியூகம் தொடரும்...........
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 21

லிங்கின் அதிர்ச்சியைக் கண்ட இனியன்

என்னாச்சு லிங்கேஷ் ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுறீங்க ? என்று இனியன் கேட்க

லிங் கையில் உள்ள புகைபடத்தை காட்டி இவர் இவர் என்று இழுக்க

இவரை பார்த்தததும் ஏன் இவ்வளவு ஷாக் ஆகுறீங்க லிங்கேஷ் ? இவரை உங்களுக்கு தெரியுமா ? என்று இனியன் லிங்கைப் பார்த்து கூர்மையாக கேட்க

லிங் இனியனிடம் புகைபடத்தை காட்டி இவர் உயிரோடு இருக்கிறாரா ? என்று பதட்டத்தோடு கேட்க இனியன் அவனை ஆராய்ந்து கொண்டே

இல்லை என்று தலையசைத்தான்.

அப்ப நான் கண்டது கனவில்லையா? நிஜமா? என்று பதட்டத்தோடு கூறினான் லிங்.

அங்கிருந்த அனைவரும் குழம்பினர்.

இனியன் அவன் பேச்சில் இடையிட்டான்.

என்னாச்சு லிங்கேஷ் என்ன கனவு? கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா? – இனியன்

இவர் ஏதோ சுழலில் சிக்கிக் கொண்டு என்னை பிடித்து வெளியே தள்ளுவதும், மூழ்கியபடியே என்னைக் காப்பாத்துடா என்று கத்துற மாதிரியும் சின்ன வயசுல இருந்து எனக்கு கனவு வந்துட்டு இருக்கு. ஆனா இப்பத்தான் தெரியுது அது கனவுயில்லை நிஜம்னு. ஆனா அவர் ஏன் என்னைக் காப்பாத்தனும் சொல்றாரு. அவர்க்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? – லிங்

இதை கேட்ட இனியன் சற்று நேரம் மவுனமாக இருந்தான். பின் லிங்கைப் பார்த்து அவர் பெயர் ரூத்ரமூர்த்தி . அவர் தான் உன் தந்தை லிங்கேஷ் என்று இனியன் கூற, அதிர்ச்சியாகினர் குழலும், லிங்கும்.

என்ன சொல்றீங்க இனியன் ? – லிங்

ஆமா லிங்கேஷ் ! அது மட்டுமில்லை உன் அம்மாவும் இப்ப உயிரோடு இல்லை என்று இனியன் கூற

கனிகா பேசினார் . என்னடா சொல்ற ? அப்ப லட்சுமி உயிரோடு இல்லையா ? என்னாச்சுடா அவளுக்கு ?

அம்மா ! கொஞ்சம் பொறுமையா இருங்க . எல்லாத்தையும் விவரமா சொல்றேன் . சில கேள்விகளுக்கு எனக்கே இன்னும் விடை தெரியல. இதற்கு விடை தெரியணும்னா ஒருத்தர் வாய் திறக்கணும் - இனியன்

யாரைச் சொல்றீங்க நீங்க? கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க இனியன் - லிங்

இங்கு நடப்பதை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த குழலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, இங்கு நடப்பது அனைத்திற்கும் காரணம் காந்தர்வன் சார் னு நான் சந்தேகப்படுறேன் - இனியன் கூற

அதைக் கேட்டு குழல் கொதித்துவிட்டாள்.

தேவையில்லாம எங்கப்பாவை எதற்கு இதில் இழுக்குறீங்க? அவர் யார்க்கும் ஒரு தீங்கும் செய்ய மாட்டார் . – குழல்

நான் இன்னும் பேசி முடிக்கல அதுக்குள்ள என்ன அவசரம் குழல் ? என்று அவளை திட்டிவிட்டு மேலே தொடர்ந்தான் - இனியன்.

காந்தர்வன் சார் இதில் தலையிட்டு இருந்தாலும் அவர் சுயநினைவின்றி சில விசயம் நடந்து இருக்குது என்று அவன் கூற

என்ன சொல்றீங்க நீங்க ? அவர் தான் செஞ்சார்னு சொல்றீங்க? ஆனா அவர் சுயநினைவில் செய்யலனு சொல்றீங்க . ரொம்ப குழப்புறீங்க இனியன் – லீங்

யாரோ அவரை வசியம் பண்ணி இது எல்லாம் செய்றாங்க – இனியன்

யார் அப்படி எங்கப்பாவை செய்ய வைக்கிறாங்க. இப்படி செய்றதுனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? – குழல்

அதற்கு உண்டான பதிலைத்தான் நான் தேடிட்டு இருக்கேன். அத கண்டுபிடிக்கிற வரைக்கும் கொஞ்சம் எல்லாரும் கவனமா இருங்க . தேவையில்லாம யாரும் வெளியில் வர வேண்டாம் என்று லிங்கையும், குழலையும் பார்த்துக் கூறியவன்

டைம் ஆச்சு வாங்க உங்களை வீட்டில் விட்டுட்டு போறேன் என்று கூறியபடியே இனியன் ஜீப்பை நோக்கி விரைய லிங்கும், குழலும் அவனை பின்பற்றிச் சென்றனர்.

*********

கனி 24 மணி நேரம் கழித்து கண் விழிப்பாள் என்று பெரியவர் சொல்லிச் சென்றதைத் தொடர்ந்து அருகில் அவளை விட்டு அகலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.

வீட்டின் வாயிலில் சத்தம் கேட்டு பதட்டத்தோடு வெளியே எட்டிப் பார்த்தார் மீனாட்சி

அங்கு ஜீப்பில் இருந்து லிங்கும், குழலும் இறங்குவதைப் பார்த்து

எங்கே போயிட்டீங்க இரண்டு பேரும்? ஆமா என்ன ஜீப்பில் இருந்து வரிங்க ? என்னாச்சு? ஏன் இவ்வளவு நேரம் என்று அடுக்கடுக்காய் கேள்விகள் அவர் கேட்க

இல்லைமா அது வந்து? என்று குழல் தயங்கி சொல்வதற்குள் இனியன் பேசினான்.

என் ஜீப் ரிப்பேர் ஆகிருச்சு அத இவர் தான் சரி செஞ்சார், அதான் அதற்கு நன்றியா வீட்டில் வந்து இறக்கிவிட்டேன் என்று இனியன் லிங்கை காண்பித்துக் கூற

மீனாட்சி அவனை யார் என்பது போல் பார்த்தார்.

அம்மா ! நான் இந்த ஊருக்கு புதுசா வந்து இருக்குற போலிஸ் ஆபிசர் – இனியன்.

ஓ ! அப்படியா தம்பி ! என்று கூறியவர் குழலிடம் திரும்பினார்.

அம்மா குழல்! கனியை பாம்பு தீண்டிருச்சு என்று கூறியதும் பதறியபடியே வேகமாக உள்ளே சென்றனர் இருவரும்.

மீனாட்சியும் அவர்கள் பின்னால் செல்ல முயல,

அம்மா! இப்ப எப்படி இருக்காங்க? என்று இனியன் கேட்க

ஏதோ கடவுள் புண்ணியத்தில் தப்பிச்சுட்டாப்பா . உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை என்று அவர் கூறிக் கொண்டே உள்ளே செல்ல, இனியனும் அவர் பின்னால் சென்றான்.

கனிகாவிற்கு பாம்பு தீண்டியதையும் ஒரு பெரியவர் வந்து குணப்படுத்தியதையும் மீனாட்சி குழலிடமும், லிங்கிடமும் விவரித்துக் கொண்டிருக்க காந்தர்வனும் , குணசேகரனும் உள்ளே நுழைந்தனர்.

அவர்களைக் கண்டதும் கனிகா அவரிடம் செல்ல விசயத்தை கேள்விப்பட்ட குணசேகரன் பதற்றத்தோடு தன் மகளை நோக்கி விரைந்தார். அவரை பின்பற்றி இனியனும் உள்ளே சென்றான்.

அங்கு கனி அப்போது தான் கண் விழித்தாள் . கண் விழித்ததும் தன்னை சுற்றி இருப்பவரை பார்க்க,

குணசேகரன் அவளின் அருகில் சென்று அவளை வருடியபடியே, “ உடம்பு எப்படிமா இருக்கு “ – என்று கேட்க

“ஹ்ம்ம் நல்லா இருக்கேன்பா” – கனி

அங்கு இருக்கும் அனைவரும் அவளின் அருகில் சென்று உடல் நலத்தை விசாரித்துக் கொண்டிருக்க , தீரன் மட்டும் அவள் அருகில் செல்லாமல் அவளை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.. கனியும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க இதை கவனித்த இனியன்

அவங்க ரொம்ப டயர்டா இருக்குற மாதிரி தெரியுது. எல்லாரும் வாங்க நாம வெளியில் போகலாம். அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் .என்று அவன் கூற அதை கேட்ட அனைவரும் சரியென்று வெளியே சென்றனர்.

தீரன் மட்டும் அசையாமல் நின்றான். கடைசியாக வெளியேறிய இனியன் தீரனை திரும்பிப் பார்த்து

“ நண்பா இன்னும் கண்களால் பேசுவதை நீ இன்னும் விடவில்லையாடா ‘’ என்று கூறியபடியே கனி அருகில் சென்றவன்

அவள் அருகில் சென்று அவள் தலையை வருடிவிட்டு

உடம்ப பார்த்துக்கோ தேவிமா! என்று சொல்லிவிட்டு இனியன் வெளியேற

இனியனின் சொல்லிலும் செயலிலும் இருவருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்த, சிலையாக நின்றனர் இருவரும். முதலில் சுதாரித்தது தீரன் தான்.

அவள் அருகில் வந்தவன் அவள் சுதாரிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்திருந்தான்.

“ உன்னை மறுபடியும் என்னால இழக்க முடியாதுடி . உன் கூட சேர்ந்து வாழணும் ஆசையா இருக்குது. தயவு செய்து எனக்காக எதாவது செய்யப் போய் என்னை விட்டுட்டு போயிராதடி“ என்று கூறியவன் அவளை வேகமாக விடுவித்துவிட்டு அந்த அறையில் இருந்து அவளை திரும்பிப் பார்க்காமல் வெளியேறினான்.

இங்கு கனி அவன் சொல்லிச் சென்றதை நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

அவள் கண்முன் பல காட்சிகள் ஓடியது.

வெளியில் வந்த தீரன் அங்கு இனியனை பார்த்துவிட்டு அவன் அருகில் சென்று அமர இனியன் அவனுக்கு ஆதரவாக அவன் கையை பிடித்தான். தீரனும் அதில் நிம்மதியடைந்தான்.

இவர்களைப் பார்த்திவிட்டு அருகில் வந்த லிங்,

என்ன இனியன் முக்கியமான வேலை இருப்பதா சொன்னீங்க. அப்படி என்ன வேலை? எதுவும் முக்கியமான கேஸா? – லிங்

ஆமாம் லிங்கேஷ் – இனியன்

அப்பா சொன்னார் நீங்க இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற போலிஸ் ஆபிசர்னு. என்ன கேஸ் இனியன்? சொன்னா நாங்க கொஞ்சம் உதவி செய்யலாம்ல என்று தீரன் கூற

ஹ்ம்ம் கண்டிப்பா உங்க உதவி தேவைப்படும் தீரன், கேஸ் கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிட்டு இருக்கு. ஒரே குழப்பமா போயிட்டு இருக்கு. சிலர் வாய திறந்தா கேஸ் முடிஞ்சிடும் ஆனா வாய் திறக்க மாட்டிங்குறாங்க என்று காந்தர்வனை குறிப்பாக பார்த்துக் கொண்டே இனியன் கூற

இதை கவனித்த தீரன் யோசனையானான்.

இனியன் விடைபெற்றுச் சென்றதும் காந்தர்வன் குணசேகரன் அருகில் சென்று

குணசேகரா! கவலைபடாதேடா! எல்லா சரியாகிடும்! என்று காந்தர்வன் கூற

இல்லைடா! குலதெய்வ கோவிலுக்கு போய் பரிகாரம் செய்யாம இந்த பிரச்சனை தீராது – குணசேகரன்

நீ சொல்வதும் சரிதான்டா! மீனாட்சி ஒரு நல்ல நாள் பாரு பரிகாரம் எல்லாம் செஞ்சு முடிச்சிடலாம் – காந்தர்வன்

இதோங்க! என்று காலெண்டரை பார்த்த மீனாட்சி நாளை நல்ல நாளாத் தான் இருக்குனா பரமேஸ்வரி அம்மனுக்கு உகந்த நாள் வேற, நாளைக்கே எல்லாம் செஞ்சுடலாம, செஞ்சா அவ கண்டம் நிவர்த்திஆகிடும் என்று அவர் கூற

காந்தர்வனும், குணசேகரனும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அன்று இரவு குழல் தூங்கிக் கொண்டிருக்க ஏதோ சத்தம் கேட்டு அவள் எழ அவள் முகத்தில் காற்று வந்து மோதியது. காற்று முகத்தில் பட்டதும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் எழுந்த குழல் வாயிலை நோக்கி விரைய அவளை தடுக்க ஒரு உருவம் முன்நோக்கி வந்தது.

அப்போது அருகில் இருந்த மரத்தில் இருந்து வேர்கள் வந்து அந்த உருவத்தை கட்டிக் கொண்டது.. அந்த உருவம் அதனோடு போராடிக் கொண்டிருக்க

குழல் கிணற்றின் அருகில் சென்று நின்றாள். இதைப் பார்த்த கிளி வேகமாக இனியன் அறைக்குச் சென்று அங்கிருந்த சன்னலில் அமர்ந்து சத்தமாக கத்தியது.

“ இனியரே! வாரும்! ஆபத்து! காப்பாத்தும் இளவரசியை ‘’ என்று அது கத்த

இனியன் திடுக்கிட்டு விழித்தான். அவன் விழித்ததும் கிளி

ஆபத்து! ஆபத்து! என்று கத்திக் கொண்டே பறந்து செல்ல இனியன் அதை தொடர்ந்து சென்றான்.

கிளி சென்ற இடம் நோக்கி விரைந்த இனியன் பார்வையில், தூரத்தில் ஒரு புகைமண்டலம் உருவாகி குழலை நோக்கி செல்ல

வேகமாக அவள் அருகில் சென்றான் இனியன். புகை மண்டலம் குழலைப் பிடிக்க முயல குழலைப் பற்றி இனியன் இழுக்கவும் இனியன் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலை ஒளி வீசியது. ஒளி பட்டதும் புகை மறைந்தது.

புகை மறைந்ததும் குழலின் அருகில் சென்ற இனியன் அவளை உலுக்க ஏதோ கனவில் இருந்து விழிப்பவள் போல் விழித்தாள் குழல்.



வியூகம் தொடரும்.
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 22

குழல் சுற்றிமுற்றிப் பார்க்க அவள் பார்வை வட்டத்தில் விழுந்தான் இனியன்.

இனியனைப் பார்த்ததும் குழல், "என்னை எதற்காக இந்நேரத்தில் இங்க கூட்டிட்டு வந்தீங்க ? யாராவது பார்த்தால் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.?" என்று கேள்விகளை அடுக்க

"கொஞ்சம் உன் பேச்ச நிறுத்துறியா ? தனியா போறீயேனு உன் பின்னாடி வந்து உன்னை ஆபத்தில் இருந்து காப்பாத்தினதுக்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் . கொஞ்சம் முன்னாடி பாரு" என்று இனியன் கூற திரும்பிப் பார்த்தவள் தான் கிணற்றின் முன் நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள் .

"நான் வர கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட நீ கிணற்றில் விழுந்திருப்பாய். நேரமாச்சு வா ! உன்னை யாராவது இங்கு பார்த்தால் பிரச்சனையாகிடும் . அதற்குள் உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்" என்று பேசிக் கொண்டே அவளை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றான் இனியன்.

குழல் அதற்கு தலையை ஆட்டியபடி நடந்து வர இவர்களை கண்டு பதறிக் கொண்டு அருகில் வந்தான் தீரன்.

"குழல் உனக்கு ஒன்றும் இல்லையே" – தீரன்

"எனக்கு ஒன்றும் இல்லை ணா ? ஆமா உனக்கு எப்படி நான் இங்கு இருப்பது தெரியும் ?" – குழல்

"தெரியலமா ? ஏதோ உள்ளுணர்வு தோணுச்சு உனக்கு ஏதோ ஆபத்துனு . எப்படி நான் இங்க வந்தேன்னு எனக்கே தெரியலமா ?" என்று தீரன் கூறிவிட்டு திரும்ப அப்போது தான் கவனித்தான் இனியனை.

அவனைப் பார்த்து, "நீங்க எப்படி இங்க ?" என்று தீரன் கேட்க

இனியன் இங்கு தீரனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்

குழலின் பார்வை மரத்தில் நிலைத்தது. அங்கு கிளி ஒன்று அமர்ந்து இருக்க அதனைப் பார்த்த குழல் வேகமாக அதன் அருகில் சென்றாள்.

குழல் மரத்தின் அருகில் சென்றதும் சற்று நேரத்தில் மரத்தில் பிளவு ஏற்பட மரம் சற்று நகர்ந்தது.

சத்தம் கேட்டு தீரனும் , இனியனும் குழல் அருகில் வந்து மரத்தின் அடியில் பார்த்தனர். அங்கு ஏதோ இருப்பது போல் இருக்க

தீரன் மரத்தை தொட அது சற்று நகர்ந்தது. வேகமாக கைகளை அதனுள் விட அவன் கைகளில் சிக்கியது ஒரு பெட்டி . அந்த பெட்டியை திறக்க அதனுள் ஒரு ஓலைச்சுவடி இருந்தது. ஓலைச்சுவடியில் எழுதிய எழுத்துக்கள் புரியாமல் இருக்க அதை திருப்பி பார்த்தான் தீரன். அதில் ஏதோ வரைந்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த மூவரும் புரியாமல் குழம்பி நின்றனர்

*****************

அதிகாலையில் எழுந்து குளித்து சேலை அணிந்து கொண்டு வெளியே வந்த கனிஷ்காவைப் பார்த்த மொத்த குடும்பமும் சிலையாக நிற்க தீரன் அவளை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

கனி மீனாட்சி அருகில் வந்து, " என்ன அத்தை இப்ப நான் பொண்ணு மாதிரி இருக்கேனா ? “என்று கேள்வி மீனாட்சியிடம் கேட்டாலும் பார்வை தீரனிடம் இருந்தது.

"நல்லாத்தாண்டி மா இருக்க ? பொண்ணு மாதிரி அடக்க ஒடக்கமா தெரியுற . ஆனா வாய் மட்டும் கொஞ்சம் கூட குறையல உனக்கு" என்று கூறிவிட்டு அவர் கிட்சனுக்குள் சென்று விட,

கனி அவர் பேச்சை கண்டு கொள்ளாமல் சோபாவில் சென்று அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் அவளை ரசித்தபடியே அவள் எதிரில் சென்று அமர்ந்த தீரன்.

“ ஓ ! வந்தது பெண்ணா வானவில் தானா ! பூமியிலே பூப்பறிக்கும் தேவதை தானா “

என்று தன் கைப்பேசியில் பாடலை இவன் போட

அதைக் கேட்ட கனி “ கருவா பையா ! கருவா பையா ! " என்று தொடங்கும் பாடலை ஒலிக்க விட அதைக் கேட்ட தீரனின் முகம் கடுத்தது.

அதைப் பார்த்து ரசித்த கனி, “ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு “ என்ற பாடலை போட

இப்படி இருவரும் மாற்றி மாற்றி எசப்பாட்டு போட்டுக் கொண்டிருப்பதை தூரத்தில் நின்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர் குழலும், லிங்கும்.

சட்டென்று போன் வர அதை எடுத்து பேசிய கனி அங்கு என்ன சொல்லப்பட்டதோ தீரனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்துவிட்டு

"ஓ ! அப்படியா சீத்தல் ! அந்த வேலையை ரோசியை பார்க்கச் சொல்லுங்க !" என்று கூறியவள் லிங்கையும் கவனித்துவிட்டு

"லிங் வேலையையும் வேற யாரையாவது செய்யச் சொல்லுங்க . அப்புறம் முக்கியமான விசயம் சாலரில பாதி எடுத்து மீதிய மட்டும் டிரான்ஸ்பார்ம் பண்ணுங்க" என்று கூறிவிட்டு போனை வைத்தவள் தீரன் அருகில் வந்தாள்.

"லீவ் சொல்லிட்டு வரணும்னுற அறிவு கூடயா இல்லை உனக்கு . உன் வேலை பெண்டிங் அத யார் செய்றது . இடியட்" என்று தீரனை கத்திவிட்டு கனி வெளியே சென்றாள். கத்திவிட்டு சென்றவளை பார்த்து தீரன் சிரித்தபடியே நின்றான்.

"என்னடா ! இவ்வளவு கத்திட்டு போறா ! சிரிச்சிட்டு இருக்க" – லிங்

"ம்ம்ம்ம்... நம்ம கனிதான திட்டிட்டு போறா ! போகட்டும் மச்சான்" – தீரன்

என்னடா ! இப்படிச் சொல்ற ? எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டீயே – லிங்

"மச்சான் அவ மூக்குக்கு கீழே மச்சம் இருக்கு அத கவனிச்சியா ? அவளுக்கு அழகா இருக்குல" – தீரன்

"இவ்வளவு நேரம் மச்சத்தையா பார்த்துட்டு இருந்த . அப்ப அவ திட்டுனது உனக்கு காதில் விழலையா டா" – லிங்

"எனது திட்டுனாலா? நான் கவனிக்கல மச்சான்" - தீரன்

"சரியா போச்சு போ" – லிங்

"மச்சான் அதவிடு . சிவப்பு நிற சேலையில் அவ அழகா இருந்தாளடா" – தீரன்

"ம்ம்ம்ம்.... சுத்தம் ! ஏன்டா ? இந்த காதல் வந்தா வெக்கம் , மானம் , சூடு, சுரணை எல்லாம் போயிருமாடா ?" – லிங்

"என்னடா எதாவது சொன்னியா என்ன!!!" என்று அவளைப் பார்த்துக் கொண்டே தீரன் கேட்க

"மச்சி ! நல்ல பார்ம்ல இருக்க இத அப்படியே மெயின்டைன் பண்ணிக்க" – லிங்

அதற்கும் தீரன் தலையசைக்க,

"வாம்மா ! குழல் ! நாமலாம் இப்ப அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம் . வா நாமளும் கோவிலுக்கு போகலாம்" என்று குழலை அழைத்துக் கொண்டு லிங் செல்ல

குழலும் , லிங்கும் ரூபாவை அழைத்துக் கொண்டு வருவதாகக் கூறி முன்னால் சென்றனர். தீரன் கனியுடன் சேர்ந்து பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு காரில் பயணப்பட்டனர்.

**************

கலிங்கா வேகமாக ஓடி வந்தான் . வந்தவன் கடோத்கஜனிடம் " குருவே ! அவர்கள் கையில் வரைபடம் சிக்கியுள்ளது... "கூற

"அருமை ! அதை எப்படியாவது கைப்பற்றி வா ! கலிங்கா "– கடோத்கஜன்

"அப்படியே குருவே !" - கலிங்கா

"அதை வைத்துத்தான் நாம் மந்திர வியூகத்தை கைப்பற்ற முடியும்" – கடோத்கஜன் கலிங்காவிடம் சொல்லிக் கொண்டிருக்க , இதைக் கேட்டுக் கொண்டிருந்த இதயம் பேசியது.

"கடோத்கஜா ! உன் அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீரனை வெல்வது அவ்வளவு எளிதல்ல . இனியனும் , லிங்காவும் அவன் பலம் . அவர்கள் இருக்கும் வரை உன்னால் அவனை நெருங்கக் கூட முடியாது" என்று அது சொல்ல

மந்திரம் ஓதி அதை கட்டுப் படுத்தினான் கடோத்கஜன்.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 23

கோவிலில் நுழைந்தனர் கனியும் , தீரனும். மீனாட்சி பூஜைக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு இருக்க குணசேகரனும் , காந்தர்வனும் பேசியபடி தூணின் அருகில் சென்றிருந்தனர். மீனாட்சி சொல்லபடி கனி மரத்தின் அருகில் சென்று அதன் அடியில் இருந்த அம்மன் சிலைக்கு குங்குமம், மஞ்சள் போன்றவற்றினால் சிலைக்கு அபிஷேகம் செய்து அதன்பின் தெப்பக்குளத்தின் அருகில் சென்று கனி நிற்க அவளை மூன்று முறை குளத்தில் மூழ்கி எழும்பச் சொன்னார் மீனாட்சி.

அவர் சொல்படி இரண்டு முறை மூழ்கி எழுந்தவள் மூன்றாவது முறையாக மூழ்க முற்படும் போது ஒரு கருப்பு உருவம் அவளை பிடித்து நீருக்குள் இழுத்தது. மூச்சு விட திணறியபடியே கனி தவித்துக் கொண்டிருக்க தீரன் வேகமாக நீருக்குள் மூழ்கி அவளை காப்பாற்றினான்.

சுதாரித்து எழுந்த கனி பயத்தில் தீரனை கட்டிக் கொண்டாள். தீரனும் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான். இதனை பார்த்துக் கொண்டிருந்த காந்தர்வனும் , குணசேகரனும் பார்வை பரிமாறிக் கொள்ள மீனாட்சி மட்டும் கோபத்தில் நின்றார். இன்னும் 2 பரிகாரங்கள் மீதம் இருக்க அதை செய்து முடித்துவிட்டு அனைவரும் கிளம்ப முற்பட காந்தர்வன் முகத்தில் ஒரு ஒளி பட .

அதனை அடுத்து காந்தர்வன்

“ தீரா ! நீ இவர்களை வீட்டிற்கு அழைத்து செல் ! நான் இதோ வருகிறேன்! என்று கூறிவிட்டு காந்தர்வன் விரைய

தீரன் அவர் செல்வதைப் பார்த்து

“ அப்பாவுக்கு தீடீர்னு என்னாச்சு ? ஏன் இப்படி வேகமாக போறார் “ ? என்று தனக்குள் பல கேள்விகளை கேட்டுக் கொண்டான் தீரன்.

காந்தர்வன் சென்று கொண்டிருக்க அவர் முன் ஓர் உருவம் பேசியது .

“ அண்ணா லிங்காவை காப்பாற்றுங்கள் ! அவன் லிங்காவை சுற்றிவிட்டான் விரைந்து கிணறு நோக்கிச் செல்லுங்கள் என்று அது கூறி மறைய

அந்த உருவம் சொன்னதும் வேகமாக அந்த இடம் நோக்கி விரைந்தார் காந்தர்வன் .

அங்கே சென்று காந்தர்வன் பார்க்க அவர் முன் நீர் துளிகள் லிங்கையும் , குழலையும் அக்ரோஷத்துடன் வளைத்துக் கொண்டு நின்றது.

அதை பார்த்ததும் காந்தர்வன் ” நில்! காந்தாயினி! உன் பலிகள் முடிந்துவிட்டது. உன் உருவம் உனக்கு கிடைக்க வேண்டும் என்றால் லிங்காவை விட்டுவிடு. ருத்ரனையும், செல்வியையும் வளைத்தது போல் அவர்களை உனக்குள் இழுத்து பலியிடாதே!" – காந்தர்வன்

"முடியாது ! அடியாரே ! என்னால் கிணற்றுக்குள்ளே அடைந்து கிடக்க முடியாது ! எனக்கு முக்தி வேண்டும் !" – காந்தாயினி

"அப்படியே ! ஆகட்டும் ! உன் இழிநிலை மாறி விட்டது. இதோ உன் முக்தி நிலை" என்று கூறி லிங்கின் கைகளை நீர்துளிகள் மேல் கை வைக்க

நீர் துளிகள் பெண் உருவம் எடுத்தது.

“ நன்றி பிரபு ! உங்களுக்கு நான் தீங்கு செய்தாலும் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி பல புரிந்தாலும் எனக்கு மோட்சம் அளித்ததற்கு நன்றி ! என்று கூறிவிட்டு அந்த உருவம் காற்றோடு காற்றாக கரைந்து மறைந்தது.

அது மறைந்ததும் கண் மூடிய படியே பேசினார் காந்தர்வன் ரூபத்தில் இருந்த அடியார் .

"லிங்கா ! சீக்கிரமாக தீரன் மந்திரவியூகத்தை கைப்பற்ற வேண்டும் ! இனியரின் துணைக்கொண்டு விரைந்து அதை செய்து முடி !" என்று அவர் கூறியவர் லிங்கா, குழல் முகத்தில் தீருநீற்றை அடித்தார். அதன்பின் ஒரு ஒளி அவர் முகத்தில் பட சற்று நேரத்தில் கண் விழித்தார் காந்தர்வன்.

"என்னப்பா ! லிங்கேஷா ! என்ன இங்க நின்னுட்டு இருக்க ? கோவிலில் உங்களை காணாம தேடிட்டு இருந்தா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ? வாங்க வீட்டிற்கு போகலாம்" என்று கூறிக் கொண்டே அவர் முன்னால் செல்ல நடப்பதை நம்ப முடியாமல் இருவரும் பின்னால் சென்றனர்.

இவர்களை தேடிக் கொண்டே தீரன் வர அவன் முன் ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளியை பார்த்த தீரன் அதன் பின்னால் செல்ல, அந்த ஒளி ஓர் இடத்தில் சென்று நின்றது.

அந்த இடத்தை தீரன் சுற்றி முற்றி பார்க்க அது ஒரு பழைய கால அரண்மனையை ஒத்து இருந்தது. அவன் புரியாமல் நடந்து கொண்டே வர ஒரு இடத்தில் மோதி நின்றான்.

அங்கு ஒரு சிலை நிற்க அந்த சிலையை பார்த்தவன் அதன் அருகில் சென்று தொட அந்த சிலை உருவம் பெற்று தீரனைப் போல் காட்சியளித்தது. அதை பார்த்த தீரன் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்கும் போதே புயல் காற்று வீச அந்தசிலை அப்படியே உருகி கரைய அந்த சிலையோடு சேர்ந்து அனைத்தும் பின்னோக்கிச் சென்றது. யூகங்கள் கடந்து, நாட்கள் கடந்து இடங்கள் மாற தீரனும் அதனோடு பயணித்தான்.

காலம் 15 ம் நூற்றாண்டில் வந்து நின்றது. தீரன் ராஜ தோரணையில் கம்பீரமாக நின்றான்.



வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 24

வான் நோக்கி உயர்ந்து வரும் கட்டிடங்கள் , மக்கள் நெரிசலால் திணறும் தெருக்கள் , வாகனங்களின் பெருக்கத்தால் பரபரப்பாக காணப்படும் சாலைகளையும் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரம் ஆதியில் வனங்கள் சூழ்ந்த கடம்பவனமாக இருந்தது. வைகை ஆற்றில் நீர் வரப்பு அதிகரித்து ஆறுகள், கிணறுகள் நிரம்பி வழிய, பசுமையாகவும் செழிப்பாகவும் இருந்தது மதுரை நகரம்.

நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் , இடைகாலச் சோழர்கள், பல்லவர்கள் என்று மதுரையை ஆட்சி புரிந்த காலம் அது.

மதுரையையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் ஆட்சி செய்த விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு 1530 இல் நாயக்கர்கள் ஆட்சியை கைப்பற்றினர். அவர்கள் 1530- 1736 வரை மதுரையை ஆண்டனர்.

மதுரையை ஆண்ட நாயக்கர் கட்டிய திருமலை நாயக்கர் மஹால் மிகப் பிரபலம் . மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜ கோபுரம் , புது மண்டபம் போன்ற பல சிறப்பம்சங்களை கட்டிய நாயக்கர் காலத்தில் பல குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்த 15 ஆம் நூற்றாண்டில்

(இனி வரும் அரசர் பெயர்களும் , அதனை பின்பற்றி நான் சொல்லும் அனைத்தும் முற்றிலும் என் கற்பனையே .அதனால் சரித்திரம் படிச்சவங்க யாரும் என் கிட்ட சண்டைக்கு வராதீங்க பா . கதைய கதையா படிங்க கண்மணிஸ்)

மதுரையையும் அதை சுற்றியுள்ள நாடுகளையும் பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்க , தனக்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் என்ற பகுதியில் தன் ராஜ்ஜியத்தை செய்து கொண்டு இருந்தார் மன்னர் மகேந்திரபதியார்.

மகேந்திரர் தன் நாட்டை பாதுகாக்க ,தனக்கு கீழ் இருக்கும் ராஜ்ஜியத்தில் உள்ள மக்களை பாதுகாக்க , தன் நாட்டில் உள்ள எழுச்சிமிக்க இளைஞர்களை ஒன்று திரட்டி வால் போர் , குதிரையேற்றம் என்று பல பயிற்சிகளை கொடுத்து அவர்களை எதிரி நாட்டிற்கு எதிராக படைதிரட்டிக் கொண்டிருந்தார் .

அவர் காவிரிநாடன் தலைமையில் தற்காப்பு பயிற்சிகளை மாணாக்கருக்கு பயிற்சி அளிக்கும்படி ஆணையிட்டிருந்தார்.. காவிரிநாடனும் அதை ஏற்று தன் பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.

அன்று அந்த மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி மாணாக்கர் அமர்ந்து இருக்க, புழுதி பறக்க எதிரும் புதிருமாக இரு சிங்கங்கள் மைதானத்தின் நடுவில் நின்று, வீறு கொண்டு வாள் போர் புரிந்து கொண்டு இருந்தது.

அனைவரும் வெல்லப் போவது யார் ? என்று ஆவலின் உருவாக பார்த்துக் கொண்டிருக்க தீரேந்திரபதியும், இனியவேந்தனும் எதிர் துருவமாக நின்று கொண்டு இருந்தனர்.

வாள்கள் இரண்டும் முத்தமிட்டு கொண்டு பிரிய , வாள்கள் சத்தம் மட்டும் அந்த மைதானம் முழுவதும் எதிரொலிக்க ,அவ்விடம் அமைதியாக காட்சியளித்தது.

இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்தான் தீரேந்திரனின் ஆருயிர் நண்பனான, அண்டை நாட்டு மன்னன் மகனான சீதகாதியின் தவபுதல்வனுமான “லவலிங்கேஷ்வரன் “

“ தீரரே! போதும் நிறுத்துங்கள் ! நீங்கள் போர் புரியும் தன்மையை யாம் அறிவோம் ! வாள்கள் உரசாமல் உரச, ஒருவருக்கு ஒருவர் தீண்டாமல் , மற்றவர்க்கு தீங்கு விளைவிக்காமல் உங்களால் எப்படி போர் புரிய முடிகிறது? அந்த வித்தையை எமக்கும் கொஞ்சம் சொல்லி தரும் ?" – லிங்கா

"என்ன நண்பா? லிங்கா ஆசைபடுகிறான் அந்த வித்தையை கற்று கொடுத்துவிடுவோமா ?" என்று இனியன் தீரனைப் பார்த்து கண் ஜாடை செய்தபடியே கூற

"அப்படியே ஆகட்டும் நண்பா! வித்தையை காட்டிவிடலாம்?" – தீரன்

"அய்யோ! வேண்டாம் இளவரசே! நீங்கள் இருவரும் ஏதோ சூழ்ச்சி செய்கிறீர்கள் ? என்னை விடுங்கள்" என்று கூறியபடியே லிங்கா ஓட முயற்சிக்க

இருவரும் அவனை ஓடாமல் பிடித்து நிறுத்தி இருவரும் ஒன்று சேர்ந்து வாளை அவன் கழுத்தில் வைத்தனர். கழுத்தில் கத்தியை வைத்ததும் பதறினான் லிங்கா

"தீரரே! என்னை விடும்! யாம் என் தந்தையின் ஒரே தவப்புதல்வன் . என்னை நம்பி என் நாட்டு மக்கள் இருக்கின்றனர்" – லிங்கா

"நண்பா! விடு அவனை! பயத்தில் அவனுக்கு எதாவது ஆகிவிடப் போகிறது" என்று இனியன் சிரித்துக் கொண்டே தன் வாளை அவன் கழுத்தில் இருந்து எடுக்க

"நீ சொல்லி நான் கேட்காமல் இருக்க முடியுமா நண்பா? இதோ விடுகிறேன்" என்று தீரனும் சிரித்துக் கொண்டே தன் வாளை எடுத்தான்

"நல்ல நண்பர்கள்டா! நீங்கள்! கொஞ்சம் விட்டால் என்னை முடித்திருப்பீர்கள்" – லிங்கா

"வாள் சூழற்றும் யுத்தியை நீ தானே கேட்டாய் நண்பா!?. உனக்கு கற்றுக் கொடுக்கவே யாம் இருவரும் அவ்வாறு செய்தோம். என்னடா இனியா?" – தீரன்

"ஆம்! நண்பா" – இனியன்

"நல்லா கற்று கொடுத்தீர்கள்டா! ஆளை விடுங்கள்" என்று லிங்கா ஓட இருவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றனர்.

லிங்கா சென்றதும் தீரனையும் , இனியனையும் சூழ்ந்து கொண்டனர் மாணாக்கர்கள். அவர்கள் சண்டையிட்ட அழகை வருணித்து அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்க காவிரிநாடன் தன் முதுமை காரணமாக மெதுவாக நடந்து இவர்கள் அருகில் வந்தார்.

“ சபாஷ் தீரா! இனியா! யாம் பெருமை கொண்டோம் உங்களுக்கு பயிற்சி அளித்ததில் . இனி எவராலும் உங்களை வீழ்த்த முடியாது “என்று கூறி அவர் பாராட்ட இருவரும் அவர் காலில் விழுந்து வணங்கினர்.

“ குருவே! நாங்கள் உங்களிடம் பயிற்சி பெற்றதில் பெருமை அடைகிறோம்” – தீரா

அதற்கு இனியனும் ஆமோதிப்பதாக தலையசைத்தான்.

“ என்னிடம் பயிற்சி பெற்ற அனைவரும் நான் கற்றுக் கொடுத்த வித்தையை சரியான முறையில் மக்களின் நன்மைக்காக செய்கின்றனர் ஒருவனை தவிர” – காவிரிநாடன்

"யார் குரு அந்த நபர்?" – இனியன்

அவன் மாயவன். அவன் தந்திரங்கள் , சூழ்ச்சிகள் பல செய்து மற்றவர்க்கும் இடையூறு செய்கிறான் என்று செய்தி கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவன் உங்கள் இருவரையும் எதிரியாக கருதுகிறான்.ஆகையால் அவன் உங்கள் இருவரையும் எதிராக எதாவது சூழ்ச்சி செய்யலாம். சற்று விழிப்போடு இருங்கள் இருவரும் என்று கூறியபடியே தன் குடிலுக்குள் சென்று மறைந்தார் காவிரிநாடன்.

தீரேந்திரனும் இனியனும் அவர் சொல்லிச் சென்றதை யோசித்தபடியே நடந்து வந்தனர் .

"இளவரசே ! அவர் சொல்வதும் சரிதான் நீங்கள் சற்று கவனமாக இருங்கள்" – இனியன்

"அவன் ஒரு பொடியன் அவனை போய் பெரியதாக நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். அவனை விடு ! என்னை அரசன் என்று கூப்பிடாதே என்று உன்னிடம் நான் எத்தனை முறை கூறி இருக்கிறேனடா. நான் என்றும் உன் நண்பன் தான்" – தீரேந்திரன்

"இல்லை இளவரசே ! படைதளபதியான என்னை சமமாக கருதுவது உங்களின் பெருந்தன்மையாக இருக்கலாம் . ஆனால் நான் என் நிலையை அறிந்து நடந்து கொள்வது தான் முறை . நான் வருகிறேன் இளவரசே!" – இனியன்

"உன்னை மாற்ற முடியுமா நண்பா! உன் இஷ்டம்! ஆனால் என்றும் நான் உன்னை நண்பனாகத் தான் கருதுகிறேன்" – தீரேந்திரன்

அதை கேட்டு சிரித்தபடியே தன் இல்லம் நோக்கிச் சென்றான் இனியன்

இனியன் சென்றதும் தீரேந்திரன் தன் உதட்டை குவித்து சத்தம் எழுப்ப இரண்டு கால் பாய்ச்சலில் சீறி வந்தது வெள்ளை குதிரை ஒன்று.

அது அருகில் வந்ததும் தாவி ஏறினான் தீரன். ஏறியவன் "அரண்மணைக்குச் செல்லடா ராணா" என்று கூற சீறிப் பாய்ந்தது குதிரை .

தீரன் சென்றதும் மரத்தில் அமர்ந்து இருந்த பருந்து மனித உருவமாக மாறி கர்ஜித்தான் அவன், எதிரி நாட்டின் மன்னன் மகனான மாயவன்.

"தீரரே! தற்காப்பு பயிற்சியில் முதன்மையாக , நாட்டின் வளர்ச்சியில் முன்னோடியாக இப்படி எல்லா விசயங்களுக்கும் எனக்கு எதிராக நிற்கும் உன்னை விடமாட்டேன் ! எப்படியாவது நான் முதன்மையாக வருவேன்" என்று கூறியபடியே தன் தந்தை செழியேந்திரபூபதியிடம் விரைந்தான். மாயவன்

பழி தீர்க்க காத்திருக்கும் மாயவேந்திரன் . அவன் சூழ்ச்சியில் இருந்து வெல்வார்களா ? மூவர் சேர்ந்த படை ?



வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 25

அரண்மனைக்குள் தீரேந்திரன் நுழைந்ததும் தன் தந்தையை காண விரைய, அவனை எதிர்கொண்டாள் இளவரசியுமான, தீரேந்திரரின் தங்கையுமான தேன்குழலாள்.

முழுமதி போன்று முகப்பொலிவோடும் , கண்கள் காந்தமாக பார்ப்போரை கட்டுப்படுத்தும் அஸ்திரமாகவும், இளமை செழிப்போடும், பெண்மையின் அழகு சுரங்கமாகவும், திமிர், கோபத்தின் மொத்த உருவமாக நின்றிருந்தாள் இளவரசி தேன்குழலாள்.

தீரேந்திரன் அருகில் வந்த குழலாள், “ என்ன இளவரசே ! தனியாக வருகிறீர்கள் ? எங்கே உங்கள் படையை காணவில்லை ? “

"அரண்மனைக்குள் எதற்கம்மா படை ?" – தீரன்

"நான் போர்படை பற்றி சொல்லவில்லை தமையரே. உங்களின் முப்படை பற்றிச் கேட்கின்றேன்?" – குழலாள்

"முப்படையா ?? அது என்னம்மா முப்படை?" என்று தீரேந்திரன் யோசித்தபடியே கேட்க

"ம்ம்ம்.... உங்கள் நண்பர்கள் பற்றி கேட்கின்றேன், அரசே!" – குழலாள்

"ஓ! இளவரசியாருக்கு என் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் ஏன்?" - தீரேந்திரன்

"ஆர்வமில்லை இளவரசே ! என் தமையனை காக்கும் இமை போன்றவர்களை மேல் நல்லெண்ணம் விரவிக் கிடக்கின்றது. அவர்கள் பற்றி நான் கேட்பதில் தவறொன்றுமில்லையே ?" – குழலாள்

"அப்படியா?" என்று சற்று நேரம் தாடையை தடவியபடியே யோசித்த தீரேந்திரன்.

"நீ எதற்காக? யாருக்காக கேட்கின்றாய் என்று எனக்கு தெரியும் இளவரசி? நீ நினைப்பது ஒருகாலும் நடக்காது? நம் தந்தை அதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டார் ? இனியனும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டான். அவன் மேல் வைத்திருக்கும் ஆசையை அழித்திவிடு" என்று கூறிவிட்டு தீரன் செல்ல குழலாள் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தாள் .

"இல்லை இளவரசே ! அவரை என்னால் மறக்க முடியாது." என்று குழல் மனதிற்குள் சொல்லியபடியே தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்.

தீரன் தன் தந்தை மகேந்திரபதியார் முன் சென்று நின்றான்.

( மகேந்திரபதியார் தன் முதுமை காரணமாக தன் நாட்டை காக்கும் பொறுப்பை தீரர் வசம் ஒப்படைத்திருந்தார் )

அவனை பார்த்த மகேந்திரர், "தீரா ! நாடும் நாட்டு மக்களும் எப்படி இருக்கின்றனர் ? எதும் பிரச்சனையில்லையே ?" – மகேந்திரர்

"அப்படி சொல்லிவிட முடியாது அரசே ! நம் நாட்டிலும் , அண்டை நாடுகளிலும் சில பெண்கள் காணாமல் போய் கொண்டிருக்கின்றனர் ? அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை அதை கண்டுபிடிக்க வேண்டும் ?" – தீரேந்திரன்

"ஓ ! அப்படியா? எதாவது செய்தாக வேண்டும்? இந்த பிரச்சனைக்கு விரைவாக நீ தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்டா ?" – மகேந்திரபதியார்

"அப்படியே ஆகட்டும் தந்தையே! நான் திட்டம் ஒன்றை வரையறுத்திருக்கிறேன்" என்று அவன் கூற மகேந்திரர் யோசனையாக பார்த்தார். அதனை அடுத்து அவன் தன் திட்டத்தை விவரிக்க

"ஆகா ! அருமையடா ! அப்படியே செய் ! பெண்ணிற்கு துரோகம் இழைத்தவர்கள் இந்த பூமியில் இருக்கக் கூடாது? அவர்களுக்கு நாம் தரும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்." என்று அவர் கோபத்தோடு கூற,

தீரேந்திரன் "ஆகட்டும் அரசே !" என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.

******************

இனியன் தன் இல்லத்தில் தன் தந்தை விக்கிராந்தனுக்கு கால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான்

இனியனின் தந்தை விக்கிராந்தன் அரசர் மகேந்திரபதியாரின் படைதளபதியாக இருந்து போரிட்டு பல சாதனைகளை புரிந்தவர். போரில் தன் ஒரு காலை இழந்தவர் அதன்பின் போருக்கு செல்ல முடியாமல் போக வீட்டிலேயே முடங்கிவிட்டார். வீட்டில் வறுமை ஏற்பட தன் மகன் மற்றும் மகள் கனிகாம்பிகையை வளர்க்க அவர் பாடுபடுவதை அறிந்த மகேந்திரர் ஓவியக் கலையில் சிறந்தவரான விக்கிராந்தனை தன் அவையின் ஓவியராக நியமித்து அதற்கு ஊதியமும் வழங்கினார்.

அவருக்குப் பின் ஓவியத்தில் இனியனும் சிறந்து விளங்க இனியன் அவரிடத்தில் நியமிக்கப்பட்டான். ஓவியம் மட்டுமில்லை கட்டிடக் கலையில் வல்லவனான இனியனை மகேந்திரபதியார் தான் கட்டிக் கொண்டிருக்கும் கோவில்களையும் , மாடங்களையும் வடிவமைக்கும் பணியிலும் நியமித்தார். அதன்படி கோவில் கட்டும் பணி நடந்தேறிக் கொண்டிருந்தது.

தன் தந்தையின் காலை பிடித்துவிட்டபடியே இனியன் பேச ஆரம்பித்தான்.

"தந்தையே ! நான் நாளை முதல் காலை வேளையில் அரண்மனைக்குச் சென்று இளவரசிக்கு ஓவியப் பயிற்சியும் , மாலையில் கட்டிடத்தை மேற்பார்வை இடுவதற்கும் செல்ல வேண்டும் ! ஆகையால் கனிகாம்பிகையை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் . நான் வீட்டில் இல்லாத போது அவளை கவனமாக பார்க்க வேண்டும் . அவள் எதாவது வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வரப் போகிறாள்" – இனியன்.

"தமையனாரே ! தங்களுக்கு எந்தன் மீது ரொம்ப உயர்ந்த எண்ணம் ?" என்று குரல் கேட்க திரும்பிப் பார்த்தான் இனியன். அங்கு பெண்மையின் ஆளுமையாக, அழகின் இலக்கணமாக நின்று இருந்தாள் கனிகாம்பிகை.

கனிகா இனியன் அருகில் வந்து, “ நான் பிரச்சனையை விலை கொடுத்து வாங்க மாட்டேன் ? அதற்காக வந்த பிரச்சனையை விடவும் மாட்டேன் தமையரே !?" – கனிகாம்பிகை

"அம்மா கனிகா! எதற்கு இவ்வளவு கோபம்! அவன் உன் நல்லதற்காகத் தானே இதை சொல்கிறான்? எதற்காக இந்த விதாண்டாவாதம் ? சற்று பொறுமையை வளர்த்துக் கொள் . பெண்ணிற்கு பொறுமை மிகவும் அவசியம். உன் தாய் அருகில் இருந்தால் இதை கற்றுக் கொடுத்திருப்பாள். அவள் நீ பிறந்ததும் இறந்துவிட்டாள். தாயின் பிரிவு தெரியாமல் இருக்க உனக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டேன். இப்போது உன்னை பற்றிய பயம் தான் என்னை அதிகமாக வாட்டுகிறது மகளே!" – விக்கிராந்தன்.

"தந்தையே ! என்னை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்னை தற்காத்துக் கொள்ள யாம் அறிவோம்" – கனிகா

"உனக்கு வாய் சற்று நீளம் தான் கனிகா. உனக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுத்து பெரும் பிழை செய்துவிட்டேன் போல ? யாரை பார்த்தாலும் அடித்துக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் திரிகிறாய்" என்று இனியன் சிரித்துக் கொண்டே கூற

"தமையனாரே ! கேலி வேண்டாம்" என்று தன் முட்டைக் கண்களை உருட்டியபடியே அவள் கூற

இனியன் சிரித்துக் கொண்டே "கவனமாக இரு ! இப்போது நாட்டில் பல அயல் நாட்டு மனிதர்கள் முளைத்திருக்கிறார்கள் .சில பெண்கள் காணாமல் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஏதும் ஆபத்து நேர்ந்துவிடாமல் உன்னை பாதுகாத்துக் கொள்" என்று இனியன் கூற

"அவர்கள் என் கையில் சிக்காமல் இருக்க ஆண்டவரை நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் தமையனாரே !" – கனிகா

"அப்படியே ஆகட்டும் கனிகாம்பிகையாரே ! உன்னிடம் எவன் மாட்டப் போகிறானோ?" என்று இனியன் கூற

அதற்கு கனிகா இடுப்பில் கை வைத்தபடியே அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்

****************

இரவு நேரம் மதுராந்தகமே அமைதியாக இருக்க வெள்ளை குதிரை ஒன்று புழுதி பறக்க வந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அது நிற்க அதில் இருந்து இறங்கினர் இருவர்.

முகத்தில் கண்களைத் தவிர மற்ற இடங்கள் துணியால் மூடப் பட்டிருக்க ஒற்றன் வேடத்தில் நின்றனர் இருவரும் . அவர்களின் கண்கள் அந்த நகரத்தையே சல்லடையாக துளைத்துக் கொண்டிருக்க எதிர் திசையில் ஒரு ஒலி கேட்க இருவரும் அங்கு விரைந்தனர். சற்று நேரத்தில் அந்த இடம் போர்க்களமாக மயங்கி விழுந்தான் அவன். அவனை தூக்கிக் கொண்டு இருவரும் குதிரையில் விரைந்தனர் .

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 26

அதிகாலை வேளையில் தன் தந்தை செழியபூபதியின் முன் நின்றான் மாயவன். மாயவனைப் பார்த்தவர்

“ மாயனே ! உன் நேரம் தற்போது சரியில்லை . ஆகையால் தேவையில்லாத வேலை செய்து மாட்டிக் கொள்ளாதே ! நாம் அடங்கி இருக்கும் சமயம் இது ! நாம் புலிகளடா ! சரியான நேரம் பார்த்து பாய வேண்டும் “ - செழியன்

“ தந்தையே ! இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள் . நானும் எவ்வளவு காலம் தான் அடங்கி இருப்பது , இனி முடியாது நான் அவர்களை வீழ்த்தும் சூழ்ச்சிவலைதனை புனைந்தே தீர்வேன்" என்று அவரிடம் சூளுரைத்துவிட்டு சென்ற மாயவன் கடோத்கஜன் முன்னால் சென்று நின்றான்.

******************

காலையில் அரண்மனைக்குள் ஒரே நேரத்தில் நுழைந்தனர் இனியனும், லிங்காவும் .

இனியனை அங்கு எதிர்பார்க்காத லிங்கா வியப்பாக பார்த்துக் கொண்டே

“ என்ன இனியரே அரண்மனை விஜயம் ? அதுவும் இந்த காலை வேளையில். நாங்கள் விரும்பி அழைத்தாலே வர மாட்டேன் என்று சொல்வீர்கள் . இப்போது தாங்களாகவே வந்து இருக்கிறீர்கள்? தாங்கள் வந்த நோக்கம் என்னவோ ?” – லிங்கா

"மகேந்திரபதியார் இளவரசிக்கு ஓவியப் பயிற்சி அளிக்கச் சொன்னார். அதனால் வந்தேன். இளவரசே !" - இனியன்

"நினைத்தேன் தாங்கள் காரியம் இல்லாமல் அரண்மனைக்கு விஜயம் செய்ய மாட்டீர்களே !" என்று லிங்கா கூற

தீரேந்திரன் இவர்கள் அருகில் வந்தான்.

"லிங்கா பார்த்தாயா ? இன்று இனியன் நாம் அழைக்காமல் வந்து இருக்கிறார் ?" – தீரேந்திரன்

"இளவரசே !இளவரசிக்கு பயிற்சி அளிக்க வந்திருக்கிறார் நம் படைதளபதி" – லிங்கா

லிங்கா அப்படி கூறியதும் தீரேந்திரன் யோசனை ஆனான்.

( குழலாள் எல்லாம் உன் வேலையா இது . நீ நினைப்பது ஒரு காலும் நடந்தேறாது ) என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான் தீரேந்திரன்

தீரேந்திரன் யோசித்துக் கொண்டிருக்க லிங்கா அவனை உலுக்கினான்.

"தீரரே! என்னவாயிற்று ?" – லிங்கா

"ஒன்றுமில்லையடா !" என்று தீரேந்திரன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே

ஒற்றன் ஒருவன் வந்து செய்தி சொல்ல தீரேந்திரன் லிங்காவையும் அழைத்துக் கொண்டு . சென்றான்.

**********************

இனியன் நடந்து சென்று கொண்டிருக்க ஒரு வலைகரம் அவன் முன் நீண்டது.

நிமிர்ந்து பார்க்காமல் அது யார் என்று அறிந்த இனியன் நில்லாமல் நடந்து கொண்டே செல்ல

"என்ன தளபதியாரே ! இளவரசி நிற்பது தெரியாமல் நீங்கள் கடந்து செல்கிறீர்கள் ?" – குழலாள்.

"மகேந்திரரை பார்க்கச் செல்கின்றேன் தடுக்காதீர்கள் இளவரசி" - இனியன்

"இளவரசிக்கு பதில் சொல்லிவிட்டு அங்கு செல்லும் தளபதியாரே ?" – இனியன்

"தங்களிடம் பேசி நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை இளவரசியே" – இனியன்

"என்ன ஒரு ஆணவம் தளபதியாரே ! இந்த திமிர்க்காத்தான் தங்களை யாம் இங்கு வரவழைத்தோம்" – குழலாள்

"இனியன் அன்புக்குத் தான் கட்டுப்படுவான் . ஆணவத்திற்கு அல்ல . நீங்கள் நினைப்பது ஒரு காலும் நடந்தேறாது . இனியன் எப்போதும் உங்களுக்கு அடிமையாக மாட்டான்." - இனியர்

"அதையும் பார்க்கலாம் தளபதியாரே !" என்று குழல் கூற இனியன் சிரித்துவிட்டு சென்றான்.

அவன் சென்றதும் குழலாள்

"இந்த திமிர் தான் உங்களிடம் என்னை சரணடையச் செய்கின்றது இனியரே ! நானும் உங்களை விடப் போவதில்லை " என்று குழல் கூறிவிட்டு சென்றாள்

( இனியனை சிறு வயதில் இருந்து பார்த்து ரசித்த குழலாள் அவனிடம் காதல் வயப்பட்டாள். தன் மனதை மறைமுகமாக இனியனிடம் தெரிவிக்க அதை புரிந்து கொண்ட இனியன் அரண்மனைக்கு வருவதை கூட தவிர்த்தான்.)

மன்னரிடம் பேசிவிட்டு வந்த இனியன் குழலாளிடம் சென்றான். அங்கு வண்ணங்கள் பல பரப்பி வைக்கப் பட்டிருக்க நடுநாயகமாக அமர்ந்து இருந்தாள் அவள்.

இனியன் சென்று அமர்ந்து ஓவியம் கற்று கொடுப்பதில் முனைய குழலாள் அவனை படிப்பதில் தீவிரமாக இருந்தாள் . குழலாள் அவனையே பார்க்க இனியன் தன் வேலையில் முனைப்போடு இருந்தான். இதனை கண்டவள் வாய்க்குள் முணகினாள்.

“ ஜடம் ! ஜடம் ! இளவரசி நான் அருகில் இருக்க என்னை ரசிக்காமல் எப்படித் தான் இப்படி கற்பிப்பதில் கவனமாய் இருக்கிறாயடா ? – “ என்று அவள் வாய்க்குள் முணங்க

"இளவரசி ! ஏதாவது சொன்னீர்களா ?" – இனியன்

“ தெரிந்தும் தெரியாத மாதிரி நடிப்பது. என்று முணங்கியவள் ஒன்றுமில்லை தளபதியாரே ! நீங்கள் ஆற்றும் உங்கள் ஓவியம் கற்று கொடுக்கும் பணியை ” என்று சொல்லிவிட்டு மறுபடியும் முணங்கினாள்.

'ம்ம்ம்.... நீ ஏதாவது செய்தால் ஒழிய இவனை உன் வழிக்கு கொண்டு வர முடியாது போல் இருக்கே' என்று தனக்குள் முணங்கியவள் அவனுக்கு தெரியாமல் அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து தன் காலை கிழித்துக் கொண்டு கத்தினாள்..

"அய்யோ ! வலிக்குதே ! வலிக்குதே !" என்று அவள் கத்த

பதறினான் இனியன். "என்னாச்சு ! இளவரசி !" என்று அவள் காலை பார்க்க ஒரு இடத்தில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது , வேகமாக அதை அவன் சுத்தம் செய்து கொண்டே

எப்படி ! திடீரென்று காயம் படும் என்று சொல்லிக் கொண்டே யோசித்தவன் சற்று நிதானித்து வேகமாக நிமிர்ந்து குழலைப் பார்த்தான். அவன் இப்படி சட்டென்று தன்னைப் பார்ப்பான் என்று அறியாத குழலாள் முழித்தாள் . அவளையே சற்று நேரம் துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் இனியர்.

அதை கவனித்த குழலாள். "என்ன தளபதியாரே ! அப்படிப் பார்க்கிறீர்கள் ! என்னமோ நானே என்னை கிழித்துக் கொண்டதாக குறை கூறுகின்றது தங்கள் பார்வை ?" – குழலாள்

"அப்படி செய்திருப்பீர்கள் என்று சந்தேகமாக இருந்தது . ஆனால் இப்போது உறுதியாகிவிட்டது . எதற்காக இப்படி செய்கிறீர்கள் இளவரசி ?" – இனியன்

"ஏன் எதற்காக செய்கின்றேன் என்று உமக்குத் தெரியாது ?" – குழலாள்

"இருட்டு உலகில் வெளிச்சம் தேடி அலைகிறீர்கள் நீங்கள், வீண் வேலை அது ?" – இனியன்

"நடக்காததை நடத்திக் காட்டுவது தான் எனக்கு பிடிக்கும் . என் குறி என்றும் தப்பாது . மாறாது . மாறவும் விட மாட்டேன் " என்று அவள் கூற

இனியன் திகைத்து நின்றான்.

**************

சிறைக்குள் சென்றனர் தீரேந்திரன் மற்றும் லிங்காவும். வாயில் காவலர்கள் வணங்க அதை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றவர்கள் ஒரு அறைக்குள் சென்று நின்றனர். அங்கு ஒருவன் கை கால்களில் ரத்தம் வழிய அமர்த்தப்பட்டிருந்தான்.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 27
தீரேந்திரன் மற்றும் லிங்காவை பார்த்த அவனுக்கு பயத்தில் முகம் வேர்த்தது.
அவன் அருகில் சென்ற தீரேந்திரன்.
"யார் நீ ? யார் உன்னை இப்படி செய்ய அனுப்பியது? – தீரேந்திரன்
"எனக்குத் தெரியாது ? – அவன்
"லிங்கா அவனுக்கு தெரியாதாம் . இப்போது நீ என்ன செய்கிறாய் . நாம் யார் என்று இவனுக்கு காட்டிவிட வேண்டும் லிங்கா" - தீரேந்திரன்
"காட்டிவிட்டால் போகின்றது இளவரசே !" என்று லிங்கா தன் கைகளை முறுக்க
அதில் பயந்தவன் என்னை எதுவும் செய்துவிடாதீர்கள் நான் சொல்லிவிடுகிறேன் என்று பயத்தில் அவன் அண்டை நாட்டு மன்னன் பெயர் கூற
"மன்னரை இன்று ஒரு வழி பண்ண வேண்டும் இளவரசே ! . வாருங்கள் போகலாம்" – லிங்கா
ஆனால் தீரேந்திரன் யோசித்துக் கொண்டிருந்தான் .
"என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் இளவரசே! ?" – லிங்கா
"மன்னர் அப்படிப் பட்டவர் இல்லை ! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது எதற்காக இதை செய்கின்றார் அவர் ? யார்க்காக இதை செய்கின்றார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" - தீரேந்திரன்
லிங்கா புரியாமல் பார்க்க "பின்னர் சொல்கின்றேன் முதலில் இவனை நன்கு கவனிக்க வேண்டும். இவனது மரணம் கொடூரமாக இருக்க வேண்டும் அதன்பின் எம் நாட்டு பெண்டீரை கவர ஒருவனும் நினைக்க கூடாது" என்று தீரேந்திரன் கோபத்தோடு கூற
லிங்காவும் அதற்கு சம்மதித்தான்.
அதன்படி அவனை சிறைக்குள் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டான். உள்ளே சென்றவன் திரும்பிப் பார்க்க அதிர்ந்தான்.
அங்கு சிங்கம் ஒன்று நின்று இருந்தது. அது அவனை பார்த்ததும் பாய்ந்து அவனை கிழித்துக் கொன்றது..
பெண்களை போற்றாதவர் மிருகமாக இருக்க வேண்டும் .
மிருகத்தனமானவர்களின் சாவு மிருகத்தால் தான் இருக்க வேண்டும் என்று அவன் சாவதை அதை வெளியில் இருந்து பார்த்து ரசித்தனர் தீரேந்திரனும் லிங்காவும்.
சதை பிண்டமான உடல் பிண பிண்டமானது
****************
கடோத்கஜன் முன்னால் சென்று நின்ற மாயவனை தன் தியானம் முடிந்து கண் திறந்து பார்த்தான் கடோத்கஜன்.
கடோத்கஜன் மந்திர தந்திரங்கள் பல புரிபவன். சாகா வரம் பெற தேவனின் ஆணைப்படி பல கன்னிகளை பலியிட்டு கொண்டிருக்கிறான். அதற்கு மாயவன் உதவி செய்கின்றான்.
மாயவன் தீரனிடம் பொறாமை கொண்டு அவனை அழிக்க நினைத்தான்.. அவனுக்கு தெரியும் தீரேந்திரனை நேருக்கு நேராக எதிர்ப்பது கடினம் என்று . ஆகையால் சூழ்ச்சி புரிந்து அவனை வீழ்த்த கடோத்கஜன் உதவியை நாடினான்.
“ கடோத்கஜா ! எனக்கு உன் உதவி தேவைப்படுகின்றது” ? – மாயவன்
என்ன உதவி மாயவா ? என்று அவன் கேட்டுக் கொண்டே தன் அருகில் நின்றிருந்த தேவனின் சிலை முன் நின்று மந்திரங்களை ஓத ஆரம்பித்தான் கடோத்கஜன் .
எனக்கு தீரேந்திரரை வெல்ல வேண்டும் .அவனை அழிக்க வேண்டும் நீ அதற்கு உதவி புரிய வேண்டும் – மாயவன்
அப்படி நான் உதவி புரிந்தால் நான் சொல்வதை நீ செய்வாயா ? – கடோத்கஜன்.
மாயவன் அதற்கு சிறிதும் யோசிக்காமல் சரி என்று ஒப்புக் கொண்டான்.
"நான் சாகா வரம் பெற கன்னியவளை நீ கவர்ந்து வர வேண்டும்" – கடோத்கஜன்
அதை கேட்ட மாயவன் கோபமானான்.
"என்ன கன்னியா ? ஏற்கனவே நீ சொல்லி நான் இழுத்து வந்த பெண்கள் ஏராளம். அண்டை நாட்டிலும் உனக்காக பல பெண்களை நீ பலியிட நான் வழி செய்து கொடுத்துள்ளேன்.
நான் செய்து வருவது வெளியே தெரியாமல் இருக்க அண்டை நாட்டு மன்னர்களின் தளபதிகளின் உதவி கொண்டு மன்னர்களுக்கு தெரியாமல் இதை செய்து வருகின்றேன்.. இனியும் நான் எதாவது செய்தால் நான் மாட்டிக் கொள்வேன். என்னால் முடியாது ?" – மாயவன்
"மாயவா ! யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று தெரிந்து தான் பேசுகிறாயா ? உன் எதிரிகளை அழிக்க உனக்கு நான் உதவி புரிந்துள்ளேன். இது மகேந்திரருக்கு தெரிந்தால் உன் நிலை என்னவாகும் சற்று சிந்தித்துப் பார்" – கடோத்கஜன்
கடோத்கஜன் அப்படி சொன்னதும் மாயவன் சிந்தித்தான்.
(தன் எதிரிகள் பலரை கடோத்கஜன் உதவி கொண்டு அவர்கள் உயிரை பறித்தான் மாயவன். தன் தந்தை அரசாண்டு கொண்டிருக்க தான் ஆட்சி புரிய கடோத்கஜன் கொடுத்த திரவத்தை அதில் கலந்து கொடுத்து அவரின் கை கால்களை முடக்கினான். பல பெண்களை வசியம் செய்து தன் இச்சையை தீர்த்துள்ளான். )
(மாயவா ! அவசரம் கொள்ளாதே ! அவன் சொல்படி கேட்டு நடந்து கொள். தீரேந்திரனை இவனை வைத்துத் தான் அழிக்க முடியும் . பொறுமை கொள் ! உன் வேலை முடிந்ததும் இவனை அழித்துவிடு என்று மனதுக்குள் நினைத்தவன் )
"நான் உன்னிடம் தீரரை அழிக்க வழி கேட்டால் நீ உன் ஆசையை நிறைவேற்ற வழி சொல்கிறாய் ? இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?" - மாயவன்
"உன் குறிக்கோளும் என் ஆசையும் பின்னிப் பிணைந்துள்ளது மாயவா" - கடோத்கஜன்
"என்ன சொல்கிறாய் நீ ?" – மாயவன்
"துருவநட்சத்திரமும் பௌர்ணமி பொழுதும் ஒன்றாய் தோன்றிய பொழுதில் பிறந்த கன்னியவள் எனக்கு வேண்டும் . அவளை நீ அழைத்து வா ! பிறகு சொல்கின்றேன் அனைத்தையும்" – கடோத்கஜன்
"அந்த பெண் எங்கே இருக்கிறாளோ ? நான் எங்கு போய் தேடிப் பிடித்து அவளை அழைத்து வர" – மாயவன்
"நீ எங்கும் செல்ல வேண்டாம் . அவள் வேறு யாரும் இல்லை தீரனின் தங்கையவள். அவளை அழைத்து வா ! தீரனின் முடிவு உன் கைகளில்" – கடோத்கஜன்
"ஆகா கடோத்கஜா ! அருமையான யோசனை. இதோ ! உடனே செல்கின்றேன்" என்று கூறி மாயவன் விரைய
அவன் சென்றதும் கரும்புகை ஒன்று தோன்றியது.
“கடோத்கஜா ! சிவனின் வழித்தோன்றல்களை நேருக்கு நேர் எதிர்ப்பது இயலாத காரியம் . தேவையில்லாமல் அழிந்து போகாதே ! கவனமாக செயல்படு
மாயவனை கொண்டு “மந்திரவியூகத்தை“ விரைவாக கைப்பற்றும் வழியைப் பார் . பொளர்ணமி இரவு வேறு நெருங்கிக் கொண்டிருக்கின்றது" என்று அது கூறி மறைய
அதை கேட்ட கடோத்கஜன் சிந்தனைவயப்பட்டான்.
***********************
அதிகாலை நேரம் சாதாரண மனிதன் போல் வேடமணிந்து முகம் மூடப்பட்டிருக்க கண்கள் மட்டும் தெரிந்த நிலையில் தீரேந்திரன் மற்றும் லிங்கா அந்த இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.
பல பெண்கள் காணாமல் போனதை அடுத்து அதை கண்டுபிடிக்க அவர்கள் இவ்வாறு வேடம் புனைந்து இருந்தனர். நேற்று ஒருவன் ஒரு பெண்ணை கவர முற்பட அந்த பெண்ணை காப்பாற்றி அவனை தண்டித்து விட்டனர்.
இப்படியான காரியங்களை செய்வது யார் என்று தெரிந்து கொள்ள அவர்கள் சாதாரண மனிதர்களாக நாட்டின் உள்ளே உலா வந்தனர்.
அன்றும் அவ்வாறு அவர்கள் நின்று கொண்டிருக்க
லிங்கா தீரேந்திரனிடம்
“ என்ன இளவரசே! யாரையும் காணவில்லை . இன்று நம்மிடம் மாட்டிக் கொள்பவனிடம் இருந்து செய்பவர் யார் என்ற செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் ?” – லிங்கா
அதற்கு தீரேந்திரனும் ஆமோதிப்பதாக தலையசைக்க
“இளவரசே! பார்த்தீர்களா ! நமது நிலையை காக்கை நரி கூட்டங்கள் கூட தூங்கும் இந்நேரத்தில் நாம் முழித்திருக்கிறோம் .” ஹ்ம்ம்ம் தூங்குவதற்குக் கூட பாக்கியம் செய்திருக்க வேண்டும் “ என்று லிங்கா கூற
தீரேந்திரன் அவனை முறைத்தான்.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க சத்தம் அருகில் கேட்டது. அதை கவனித்த தீரேந்திரன் லிங்காவிடம்
"ச்சூ! சத்தம் போடாதே! எவனோ வருகிறான்" என்று அவர்கள் அந்த சத்தம் வந்த இடத்தை நோக்கிச் செல்ல முனைய ஒரு கை தீரனை தடுத்தது. தீரேந்திரன் திரும்பிப் பார்க்க காளி ரூபத்தில் நின்று இருந்தாள் கனிகாம்பிகை .

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 28
தீரேந்திரன் அவனை பிடிக்க திரும்ப கனிகா அவனை வாள் கொண்டு தடுத்து நிறுத்தினாள்.
"யார் நீங்கள் ? எம் நாட்டிற்குள் வந்து எம் மக்களை கவர்ந்து செல்லும் கயவர்களா? இன்று விடமாட்டேன் உங்களை" என்று கோபத்தோடு அவள் கூற
இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு அவன் ஓட முயற்சிக்க தீரேந்திரன் அவனை பிடிக்க முனைந்தான். ஆனால் கனிகா அவனை விடுவதாக இல்லை . இதை கண்ட தீரேந்திரன் எரிச்சலையடைந்தான்.
லிங்கா அவனை பிடிக்க ஓட
தீரேந்திரன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான்.
"இதோ பார் மைவிழியாள் ! நாங்கள் ஒருவனை கைப்பற்ற வேடம் பூண்டுள்ளோம் .நீ எங்களை பற்றி எண்ணிக் கொண்டிருப்பது தவறு . பெண்ணை போற்றும் குடியை சேர்ந்தவன் நான். என்னை கோபப்படுத்தாதே ! அப்புறம் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல. வழியை விடு ! " - தீரேந்திரன்
"ஓ ! மாட்டிக் கொண்டதினால் இப்படி தப்பிக்க பொய் புனையாதீர்கள் . இன்று உங்களை நான் விடப் போவதில்லை" என்று கனிகா கூற
வேகமாக லிங்காவை திரும்பிப் பார்த்தான். அங்கு அவன் அவனுடன் சண்டை இட்டுக் கொண்டிருக்க அதைப் பார்த்த தீரேந்திரன் அங்கு செல்ல முற்பட
அவன் முன் தன் வாளை நீட்டினாள் கனிகா
"என் வாளுக்கு பதில் சொல்லிவிட்டு செல்லும் ஒற்றரே !" – கனிகா
அவள் அப்படிச் சொல்ல தீரேந்திரன் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு
“ நான் பெண்ணிடம் சண்டை இடுவதில்லை தேவியாரே! ” - தீரேந்திரன்
“ ஓஹோ! எதற்கும் தொடக்கம் என்று வேண்டுமல்லவா ? சண்டையிட்டுத்தான் பாருங்களேன் !" – கனிகா
அவள் அப்படிக் கூற அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே சண்டையிட தயாரானான் தீரேந்திரன்
"தேவியார் சொல்லிவிட்டீர்கள் ! மறுக்க முடியுமா ? சண்டையிட்டால் போயிற்று ?" – என்று அவன் வாளை எடுத்து அவள் கழுத்தில் வைக்க முயல
அதை தடுத்த கனிகா !
"என்ன திண்ணக்கம் ? தேவியாமே! . என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள் ?" – கனிகா
"வேறு எப்படி தங்களை கூப்பிட வேண்டும் . நீங்களே சொல்லுங்கள் தேவியாரே!" – தீரேந்திரன்
அதில் எரிச்சல் அடைந்தவள்
"அந்நியவர்களிடம் பெயர் சொல்வது தவறு என்று போதிக்கப்பட்டவள் நான்" – கனிகா
"ஓ ! அப்படியா? நல்ல போதனை . அப்படி போதிக்கப்பட்டவள் அடுத்தவர் பிரச்சனைகளிலும் தேவையின்றி தலையிடக் கூடாது என்று போதிக்கப்படவில்லையா ? அல்லது போதனையை மறந்துவிட்டாயா ?" – தீரேந்திரன்
"என்ன ஒற்றரே! வாய் நீளுகிறது ? யம் நாட்டு மக்களை உங்களை மாதிரியானவர்களிடமிருந்து காக்கும் கடமையை நான் செய்கின்றேன்" -கனிகா
"என்ன என் நாட்டு பெண்களை கவரப் பார்க்கிறீர்களா ? அல்லது நாட்டு உடைமையை கவர வந்துள்ளீர்களா . அது இந்த கனிகாம்பிகை இருக்கும் வரை நடக்கா"து – கனிகா
"கனிகாம்பிகை நல்ல அழகான பெயர் . பெயரின் அழகு வனப்பில் தெரியவில்லை." என்று தீரேந்திரன் சொல்ல
"என்ன ஒரு திமிரான பேச்சு ?" – கனிகா
இப்படி இருவரும் பேசியபடியே சண்டையிட்டுக் கொண்டிருக்க கனிகாவின் வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தான் தீரேந்திரன்.
மேகங்கள் இரண்டும் சேர்ந்து இடியென முழங்குவது போல் வாள்கள் இரண்டும் உரசிக் கொண்டது,
ஒரு கட்டத்தில் தீரேந்திரன் அவளை சூழற்றி அருகில் இழுக்க அவள் வாள் கீழே விழுந்தது. அவளின் இடையை பிடித்து இழுத்தவன்
"என்ன தேவியாரே ! வாளை தவறவிட்டுவிட்டீர்களே ? இப்போது நீங்கள் என்னிடம் தோற்றுவிட்டீர்கள் ?" – தீரேந்திரன்
அவன் அப்படிச் சொன்னதும் வேகமாக தன் தலைமுடியின் முடிச்சை கனிகா அவிழ்த்துவிட அது அவன் முகத்தின் முன் விழுந்து அவனை திசை திருப்பியது. அதை பயன்படுத்தி அவன் வாளை இப்போது அவள் பறித்தாள்
"என்ன வீராதி வீரரே! இப்போது உமது வாள் என் கையில் . தேவைபட்டால் பெண்ணின் கூந்தல் கூட அவளுக்கு உதவி புரியும் "என்று அவள் திமிராக கூற
தீரேந்திரன் அவளை ரசித்துக் கொண்டே
"தேவியாரின் வீரத்தை கண்டு யாம் மெச்சினோம் . ஆனால் பாருங்கள் தேவியாரே ! வந்த வேலை முடிந்துவிட்டது இன்னொரு நாள் உங்களுடன் உரையாட நான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியவன் தன் இதழை குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு சத்தம் செய்ய
ராணா சீறி வந்தது. அதில் பாய்ந்து அவன் செல்ல முற்பட அவன் முகத்தில் இருக்கும் துணியை நீக்க கனிகா முயல, அவன் அவளை தடுத்து சற்று தூரம் சென்று கட்டை விரலை கீழே காட்டிவிட்டுச் சென்றான். அவனுடன் லிங்காவும் சேர்ந்து கொண்டான் .
**************************
மகேந்திரபதியார் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு படத்தின் அருகில் சென்றார் . அதன் அருகில் சென்றவர் அதை தொட அது ஒரு சுற்று சுற்றி அவர் முன் கதவு வந்து நின்றது. அதை அவர் ஏதோ செய்து உள்ளே செல்ல அவர் செல்வதை கவனித்தது இரு விழிகள் .

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 29

லிங்கா அன்று அரண்மனைக்குள் வந்து கொண்டிருக்க எதிரில் வந்து கொண்டிருந்தாள் ரூபவதனி. அரண்மனையின் பணிப்பெண்ணாக வேலை செய்பவள். ரூபவதனி லிங்கா அருகில் வந்ததும் ஓர விழிகளால் அவனை பார்த்துக் கொண்டே அவனை கடக்க லிங்கா அவளை சற்றும் கண்டுகொள்ளவில்லை. லிங்கா ரூபவதனியை கடந்து உள்ளே செல்ல அவன் சென்று மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வதனி.
சிறுவயதில் இருந்து உங்களை பார்த்து மனதில் வடித்துள்ளேன் பிரபு ! ஆனால் நான் நீங்கள் பார்க்கும் நிலையில் கூட இல்லை. பணிப்பெண்ணை அரசர் பார்ப்பது எந்த யூகத்திலும் நடக்காத ஒன்று. என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டே சென்றாள் வதனி.
உள்ளே நுழைந்த லிங்கா தீரேந்திரனின் அறைக்கு விரைந்தான்.
“ என்னடா தீரா ! எங்கே கிளம்பிவிட்டாய் ? “– லிங்கா
இனியனை பார்க்க சென்று கொண்டிருக்கிறேன். .- தீரேந்திரன்
நானும் வருகிறேன் அரசே! .- லிங்கா
வேண்டாம் என்றால் விடவா போகிறாய்! வா என்று கூறிவிட்டு தீரேந்திரனும் , லிங்காவும் கிளம்பி வெளியே வர இவர்களை எதிர்கொண்டாள் குழலாள்
தமையரே ! என்னையும் அழைத்துச் செல்லுங்கள் ! – குழலாள்
பாதுகாப்பாக அரண்மனைக்குள் இருப்பது நான் நல்லது. அது உனக்கு நன்மை பயக்கும் குழலாள்!.- தீரேந்திரன்
அதான் நீங்கள் அருகில் இருக்குறீர்களே ! பாதுகாப்பிற்கு குறையில்லை – குழலாள்
இளவரசி! தீரேந்திரன் சொல்வதை கேளுங்கள் ! என்று லிங்காவும் கூற
அவள் அதை கண்டு கொள்வதாக இல்லை
இல்லை நான் வருவேன் என்று குழலாள் கூற
தீரேந்திரன் அவளை கோபமாக ஒரு பார்வை பார்த்தான்.
அதில் பயந்து பின்னடைந்தாள் குழலாள்
அவர்கள் சென்றதும்
“ என்ன தமிழ் தமையர் என்னை அழைத்து செல்ல மறுத்துவிட்டார் நான் எப்படி அவரை பார்ப்பது? “ என்று தன் தோழி கிளியிடம் குழலாள் கேட்க கிளி தன் கிள்ளை மொழியில் பேசியது
இளவரசி தீரேந்திரர் சொல்வதும் சரி தானே ! நீங்கள் இந்நாட்டு மன்னரின் தமையாள் எதிரிகளால் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்று வேந்தர் தடுக்கிறார் ! சற்று சிந்தியுங்கள் ! – கிளி
அடி போடி ! நீயோ ஐந்து அறிவு படைத்த ஜீவன் அல்லவா ! அதனால் பேதை மனம் படும்பாடு உனக்கு புரியவில்லை ! – குழலாள்
நான் ஐந்து அறிவு படைத்த ஜீவனாக பிறந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன் தோழியே ! உங்களை போன்ற மனிதர்கள் போல் மனதிற்கும் அறிவுக்கும் இடையே தினமும் சண்டையிட தேவையில்லை பாருங்கள் – கிளி
உனக்கு பேச கற்றுக் கொடுத்தது தப்பாக போயிற்றதடி வதனி. அப்ப்ப்பா என்ன பேச்சு பேசுகிறாய் ! இன்று உனக்கு இடும் போஜனத்தை குறைத்தால் தான் நீ சரி வருவாய் – குழலாள்
ஹ்ம்ம்ம் ! ஆகட்டும் இளவரசி ! தங்கள் சித்தப்படி செய்யுங்கள் என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க ஒரு நெடி நாசியில் துழைத்து மயங்கி விழுந்தால் குழலாள்.
அவள் மயங்கி விழுந்ததும் ஒருவன் அவளை தூக்கிச் சென்றான்.
ஆபத்து ! ஆபத்து ! என்று கிளி கத்தியபடியே பறந்து சென்றது.
***********************
வீட்டின் முற்றத்தில் இருந்த மல்லிகை பூக்களை தன் மலர்கரங்களால் எக்கி எக்கி பறித்துக் கொண்டிருந்தாள் கனிகாம்பிகை . அவளுடன் அவள் ஒத்த வயதுடைய அவளின் மாமன் மகள் காந்தாயினியும் அருகில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தால்.
கனிகா கோபத்தோடு பறித்துக் கொண்டிருக்க இதை கவனித்த காந்தாயினி
என்ன கனிகாம்பிகை அம்மையாரே! இன்று உங்கள் பார்வையில் அணல் தெரிக்கிறது . அப்பப்பா ! நான் வெந்துவிடுவேன் போலிருக்கே என்று காந்தாயினி சிரித்துக் கொண்டே கூற
என்னை பரிகாசம் செய்யாதடி காந்தா ? – கனிகா
சரி தான்டி ! என்ன ஆயிற்று ? ஏன் கோபமாக இருக்கிறாய் என்று சொன்னால் தானே தெரியுமடி ? – காந்தா
ஒருவனிடம் தோற்றுவிட்டேனடி ? அவனை மறுபடியும் சந்தித்தால் அவனை வீழ்த்த வேண்டும் – கனிகா
என்ன? நீ ஒருவனிடம் தோற்றுவிட்டாயா ? அப்படியென்றால் அவன் கண்டிப்பாக ஓர் சிறந்த ஆண்மகனாகத்தான் இருக்க வேண்டும் – காந்தா
ஏய் ! அவனை புகழாதே ! – கனிகா
சரி புகழவில்லை என்ன நடந்தது ? எப்படி அவரை சந்தித்தாய் ? இன்றும் வருவாரா ! அவரை நான் பார்க்க வேண்டுமே ! – காந்தா
ஹ்ம்ம் நீ என்ன அவரை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய் ? என்று கோபமாக கனிகா கேட்க
காந்தா சிரித்துக் கொண்டே சரி அவரை பற்றி கேட்கவில்லை நடந்ததை கூறுங்கள் என்று அவள் ஆர்வத்தோடு கேட்க நடந்ததை கூறினாள் கனிகா.
கூறி முடித்தவள் இந்த விசயம் எக்காரணம் கொண்டும் இனியருக்கும் தந்தைக்கும் தெரிய வேண்டாம் என்று அவள் கூற காந்தா அதற்கு சம்மதித்தாள்
காந்தாயினியிடம் பேசிவிட்டு திரும்பிய கனிகா
எங்கடா இருக்கிறாய் நீ ! நான் யாரிடமும் தோற்றதில்லை மறுமுறை உன்னை சந்தித்தால் நிச்சயம் நான் உன்னை வீழ்த்த வேண்டும் என்று
மனதில் சொல்லிக் கொண்டாள் .
இங்கு தீரேந்திரனும் மைவிழியாளே ! உன் தீப்பார்வையின் வீச்சில் நனைய காத்துக் கொண்டிருக்கிறேன் நான். அதற்கு அருள் புரிவாயா தேவி என்று மனதில் சொல்லிக் கொள்ள
இருவரும் சற்று நேரத்தில் சந்தித்து முட்டிக் கொள்ளப் போவது தெரியாமல் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டிருந்தனர்.

வியூகம் தொடரும்
 

New Threads

Top Bottom