Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம்,
இங்கே ஒரு ரிலே ஸ்டோரி பதிவிடப்பட உள்ளது. வாசக தோழமைகள் கதையை வாசித்து எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரவேண்டும். மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி குழுவிற்கு வாழ்த்துக்கள்...
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கூறிக் கொண்டு😍😍

மிருதனின் அசுரம்

வணக்கம் நட்பூக்களே ஒரு ரிலே கதையோடு வந்து இருக்கிறோம்.
ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .

இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது

மிருதனின் அசுரம்..
ரிலே கதையின் பத்து
எழுத்தாளர்கள்


1. திக்ஷிதா லட்சுமி
2. அர்பிதா
3. Nancy mary
4. மகாராஜ்
5. செங்கிஸ்கான்
6. ப்ரியமுடன் விஜய்
7. அருள் மொழி காதலி
8. ச. சக்திஸ்ரீ
9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி"
10. மீராஜோ.

பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது.

ஒவ்வொரு பதிவிலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க..
கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

முற்றிலும் புதிதான கதை..
ஒவ்வொரு அத்தியாயமும் புது எழுத்தாளர் அவரின் கற்பனை ஆற்றை ஓட விட்டு புதுப்புது எதிர்பார்க்காத விதமாக அமானுஷ்யம் திகில் நிறைந்த திருப்பமாக பயத்தில் உச்சியில் இருக்கும்படியாக கொடுத்து இருக்கிறார்கள்.

கதையை வாசித்துவிட்டு வழக்கம் போல் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

நன்றி
என்றும் ப்ரியமுடன்
திக்ஷிதா லட்சுமி.


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/

கதை அடுத்த பதிவில்👉👉
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
1. திக்ஷிதா லட்சுமி



அடர்ந்த காட்டுப் பகுதி அதற்கென்று முழுவதும் காட்டுப் பகுதி என்றும் சொல்லிட முடியாது. ஆங்காங்கே வீடுகளும் இருந்தன. அந்த ராத்திரியின் நடுஜாமத்தில் ஐம்பத்தெட்டு வயதான ஒரு பாட்டி அந்த இரவு ஜாமத்தில் கையில் இரண்டு தூக்குவாளியுடன் வேகநடைப் போட்டு நடந்து கொண்டு சென்றாள்.

வழக்கமாகப் போகும் வழி தான் என்றாலும் இன்று ஏனோ அவள் மனதில் அப்படி ஒரு பயம்.

பயத்தில் பதற்றம் அதிகரிக்க, அந்த பதற்றத்தில் ஏனோ தானோ என்று நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

திடீரென்று தூரத்தில் ஓநாய்கள் கத்தும் சத்தம் கேட்டவளுக்கு மேலும் பயம் ஏற்பட, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்தாள்.

இம்புட்டு பயத்தோடு நடந்து கொண்டு இருக்கும் பாட்டியின் பெயர் அன்னம்மாள். அன்னம்மாள் பெயருக்கு ஏற்றோர் போல் அவளின் கைத்தொழிலும்.
மாலை சிற்றுண்டியாக அதிரசம், முறுக்கு, எள்ளடை என்று பல வகை பலகாரங்களைச் சுட்டு எடுத்துக் கொண்டு பல இடங்களில் சென்று விற்பவர்.

இன்றும் அதே போல் விற்று விட்டு வீடு திரும்புகையில் அவருக்குத் தன்னை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்யம் நடப்பது போல் தோன்றியது. எவ்வளவு வேகநடை போட முடியுமோ அந்த அளவிற்கு வேகமாக விரைந்தாள்.

மனதிற்குள் வேண்டாத தெய்வங்களே இல்லை. "கடவுளே என்னை எப்படியாவது இந்த இரவிலிருந்து காப்பாற்றி விடு. உனக்குக் கோடி புண்ணியமாகும் "என்று வேண்டிக் கொண்டே நடந்தவள் வேகமாக நடந்ததில் கால் இடுக்கில் தடுமாறி தொப்பென்று கீழே விழுந்தாள்.

கையில் வைத்து இருந்த பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறிப் போக. கையில் சிறிய சிராய்ப்புடன் முந்தானையை எடுத்து இரத்தம் கசிந்த இடத்தில் வைத்து அழுத்திக் கொண்டு மெல்ல எழுந்து நின்றவள் முன் தோன்றியது ஒரு கருப்பு உருவம்.

அவ்வளவு தான் அதைப் பார்த்த அன்னம்மாளின் உயிர் பயம் ஏற்பட. சட்டெனக் கண்களை இறுக்கி மூடியவள் "இது நெசம் இல்லை. என் கற்பனை" என்று முழு மனதோடு நம்ப முயற்சி செய்தாள்.

பயத்தின் உச்சியிலிருந்தவள் மெல்லக் கண்களைத் திறந்து பார்க்க, அந்த கருப்பு உருவம் மறைந்து போனது. அவளுக்கோ அப்பாடா என்று பெரும் மூச்சு ஒன்றை உதிக்க. தூரத்தில் நாய் அழுவும் சத்தம் கேட்டது.

"ஏனோ இன்று நடக்கும் அனைத்தும் விசித்திரமாக இருக்கே. தினமும் வந்து போகும் பாதை தான் என்றாலும் இன்று ஏதோ சரியில்லாத மாறி இருக்கு. முதல இங்கே இருந்து கிளம்பிடவேண்டும். ஆத்தா கண்ணியமா நீ தான்த்தா எனக்கு துணையா இருக்கணும். வீட்ல புள்ளை குட்டிங்களாம் இருக்குதுங்க. அதுங்கள காப்பாற்ற நான் இருந்தே ஆகணும். உலகம் தெரியாத புள்ளைங்க. நீ கொஞ்சம் பெரிய மனசு வச்சி என்னை வீடுவரைக்கும் கூட்டிட்டு போய்விடு ஆத்தா". என்று அன்னம்மாள் மனதிற்குள் வேண்டியவாறு சிதறிக் கிடந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு இருந்தாள்.

பாத்திரங்களை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோதோ தீஞ்ச வாசம் வர மூக்கை பொற்றிக் கொண்டு நடந்தாள். அச்சமயம் அவளின் கூந்தலை யாரோ வருடுவது போல் உணர்வு ஏற்பட தன் சிகையை வாரி குண்டைப் போட்டபடி மீண்டும் நடந்தாள்.

ஆனால் அவளின் பின்னாலே அந்த கருப்பு உருவம் அன்னம்மாளை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்க. இந்த கும்மிருட்டில் எப்படியோ தட்டுத்தடுமாறி தன் இல்லம் வரை வந்தவள் நான்காவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு மாடிப்படி ஏற எத்தனித்த நேரம் அவளை ஏற விடாமல் பிடித்துக் கொண்டு நிற்க. அவளோ தன் முயற்சியைக் கைவிடாமல் அது கிட்ட இருந்து தப்பித்து மேல் ஏறினாள்.

மூச்சி வாங்க ஏறி வந்தவள் கடைசி படிகளில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு கணம் நின்று விட. இது தான் சந்தர்ப்பம் என்று அந்த உருவம் அவளின் காலை பிடித்து தரதரவென கீழே இழுத்துச் சென்றது.

மூன்றாம் தளத்திலிருந்து படிக்கட்டுகளில் இழுத்துக் கொண்டு போக, அவளுக்கோ முகமும் கைகால்களும் வயிறும் மிகவும் அடிப்பட. ஆங்காங்கே இரத்தம் வழியத் தொடங்கியது.

அவள் மேனியிலிருந்து வழிந்த இரத்தத்தை அந்த கருப்பு உருவம் நக்கிக் குடிக்க அதில் பதறியவள் அருகில் அவளின் காம்பவுண்ட் ஒட்டி இருந்த கண்ணியம்மன் கோவிலுக்குப் போகத் தரையிலே தவழ்ந்தபடி முன்னேறினாள்.

ஆனால் அவளைக் கோவிலுக்குள் போக விடாமல் அவள் காலை பிடித்துக் கொண்டு வழியும் இரத்தத்தை உறியத் தொடங்கிய நேரம்.

யாரோ ஒரு பெண்ணின் குரல் "ஏய் அனு! அனு! ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஒன்னும் இல்லை. பதற்றம் ஆகாத. இந்தா முதல இந்த தண்ணீரைக் குடி. "என்று தன் அருகிலிருந்த தண்ணீரைப் பருக கொடுத்தாள் புதியவள்.

பின் அனுவின் முகத்தில் படர்ந்த வியர்வைகளை தன் கையிலிருந்த துண்டால் துடைத்து விட்டபடி. "இதுக்கு தான் சொன்னேன் அனு. நான் கதையெல்லாம் சொல்ல மாட்டேன். நீ கேட்டா ரொம்ப பயப்புடுவனு. சொன்னா எங்க கேட்கிற. ஒரே அடம்பிடிக்கிற. இருபது வயசு பொண்ணு மாதிரியா இருக்க. ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையைக் கேட்டு இப்படிப் பதற. என்னவோ நடந்ததை நேரில் பார்த்தா மாதிரி.
நேரில் பார்த்த நானே இம்புட்டு பயப்புடல நீ என்னடான கண்ணு முழியெல்லாம் பிதுங்கி வர அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்தே போய்ட்ட" என்று கேட்டுக் கொண்டே அவள் முகத்தைத் துடைத்து முடிக்கும் சமயம் அனு பயத்தின் உச்சிற்கே சென்று மயங்கிப் போனாள்.

அனுவின் பயத்தைப் பார்த்த அந்த புதியவள் சற்று பதறித் தான் போனாள். பயத்தில் மயங்கியவளை அருகிலிருந்தவனிடம் கண்சாடை காட்டி தூக்கிக் கொண்டு போகச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று ஊசி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து அனுவிற்கு போட்டு விட்டாள்.

"என்னம்மா நீ ஏன் முடிந்து போன கதையெல்லாம் சொல்லி அனுவை பயப்பட வைக்கிற. நீ சொல்லிவிட்டு இருந்தப்ப எனக்கே பயம் தலைக்கேறியது".

"டேய் நானா கதை சொல்றனு சொன்னேன். அவளே வந்து ஆண்டி ஆண்டி தூக்கமே வர மாட்டிக்கிது ஒரு கதை சொல்லுங்க சொன்னா. எனக்கு தெரிஞ்ச கதையை நான் சொன்னேன். அதை கேட்டுட்டு இப்படி பயப்புடுவானு எனக்கு எப்படித் தெரியும்" என்று அவள் கூறிவிட்டுச் சென்று விட. அவனோ அனுவின் அருகில் அமர்ந்து.,
"இன்னும் சின்ன பிள்ளை கணக்கா இருக்க அனு. அம்மா சொன்னது உண்மையா நடந்துச்சோ இல்லையோ ஆனா அதைக் கேட்டு நீ பயந்ததைப் பார்த்தா எனக்கே பயம் வந்துடுச்சி. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு அனு" என்று அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தான்.

ஏனோ அனுவின் கூந்தலை வருடும் போது அவனுக்குள் ஒரு வித பரவசம் உணர்வு தோன்றச் சட்டென தன் கையை விலக்கியவன் அங்கே ஒரு நிமிடம் கூட நிற்காமல் தனது அறைக்குள் நுழைந்தவன் வாஷ் ரூம் சென்று முகத்தை அலும்பிக் கொண்டு கண்ணாடி முன்னாடி நின்று தன் முகத்தைத் துண்டால் துடைத்தவன் கண்ணாடியில் தன் திரையைக் காண அருகிலிருந்த பூச்சாடியை தூக்கி எறிந்தான்.

"என்ன மகேஷ் ரொம்ப அக்கறை உள்ளவன் மாதிரி அந்த அனுகிட்ட நடிக்கிற" என்று கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து அவனே கேட்டுக் கொள்ள.

நிஜ உருவமோ "நான் நடிக்கலாம் இல்ல. எனக்கு உண்மையாவே அனு மேல அக்கறை இருக்கு. இப்போ எதுக்கு நீ இங்க வந்த" என்றான் கோபத்துடன்.

"ஓ உண்மையா அக்கறை உள்ளவர் தான் அவளை என்னிடம் பலி கொடுக்க. யாரென்றே தெரியாத அனு கிட்ட ஆறுமாசமா நடித்து என்னிடம் அழைத்து வந்தாயா?" என்று அந்த பிம்பம் வினவ,

மகேஷ்க்கோ கோபம் தலைக்கேறியது "என்னை இப்படியெல்லாம் செய்ய வைத்ததே நீ தானே. நீ சொன்னதை நம்பி பாவம் ஒரு பொண்ணை ஏமாத்திட்டோமேனு குற்றவுணர்வா இருக்கு. இங்கே பாரு இப்போவும் நேரம் இருக்கு. பாவம் அனு அவளுக்கு ஒன்னுமே தெரியாது. நீ பெரிய மனசு வச்சி அவளை மன்னிச்சி விட்டுவிடு. நீயும் என்னை விட்டு போய்விடு" என்று தன் பிம்பத்தைப் பார்த்து இருகரம் கூப்பி மகி வேண்ட,

அந்த பிம்பமோ,
"என்னது அவளை விடனுமா. அவளை விடுகிறதுக்காகவா ஐம்பது வருசமா தவம் கிடக்கிறேன். அன்னிக்கு அவளோட மூதாட்டி செய்த காரியத்தால் என்னால என் உலகத்திற்குப் போக முடியாமல் ஐம்பது வருஷமா தவித்துக்கொண்டு இருக்கேன். நான் என் உலகத்துக்கு போகணும்னா அதுக்கு அந்த குடும்பத்தோடா வாரிசு அனுவால மட்டும் தான் முடியும். அது மட்டும் இல்ல எனக்கு உதவி செய்ய உன்னுடைய உதவியும் இந்த அனுவோட உதவியும் மட்டும் இல்ல. இன்னும் நான் சொல்ற அந்த இரண்டு பேரை இதே மாதிரி ஏமாற்றி என் கிட்ட அழைச்சிட்டு வா. உங்க நான்கு பேரால தான் நான் என் உலகத்துக்குப் போக முடியும். நான் சொல்கிறதை நீ கேட்கல வெட்சிக்கோ அடுத்து நான் என்ன செய்வேன் தெரியும்ல" என்று அந்த கண்ணாடியில் அவனின் தாயின் கழுத்தை மகியின் உருவமே கடிச்சி கொதறி தின்பது போல் காட்சிகள் தோன்ற...

மகியோ,
"நோ,நோ, நோ எங்க அம்மாவை ஒன்னும் செய்யாத. நீ சொல்கிறபடியே நான் நடந்துக்கிறேன்" என்று பிம்பத்திடம் கதறி அழுதான்.

நிஜமான உருவமோ கதறி அழுக. பிம்பமோ ஆக்ரோஷமாகச் சிரித்துக் கொண்டு இருந்தது.

"இந்த பயம் எப்போவும் உன் மனசில் இருக்கவேண்டும் மகேஷ்" என்று கூறிவிட்டு இல்லை இல்லை மகியை எச்சரிக்கை அளித்து விட்டு மறைந்து போனது அந்த பிம்பம்.

பாவம் மகிக்குத் தான் அடுத்து என்ன செய்வது எப்படி நடக்கப் போகும் விபரீதத்தைத் தடுப்பது. யார் தனக்கு உதவி செய்வார்கள் என்று பெரும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டான்.

யார் இந்த உருவத்தின் பிம்பம்?
அனு யாராக இருக்கும்?
எதற்காக மகியைத் தேர்ந்தெடுத்தது அந்த உருவம்?
மீதி இருக்கும் அந்த இரண்டு பேர் யார்?
யார், யார் மகிக்கு உதவி செய்யப் போவது?
மகியின் அம்மாவிற்கு எப்படி ஐம்பது வருடத்திற்கு முன் நடந்தது தெரியும்?
அன்று அன்னம்மாவிற்கு நடந்தது என்ன?
இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில்களை இனி வரும்

அத்தியாத்தில் காணலாம்.


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
2. அர்பிதா



அந்த காலை நேரம், விடிந்தும் விடியாமலும், சூரியன் பொறுமையாய் துயில் கலைத்து கொண்டு இருந்த விடியற்காலை நேரமது.
தரையில் முளைத்த புல் பூண்டுகள் மட்டுமே கண்ணிற்கு புலப்படும் அளவிற்கான பனி, விடியலின் மௌனத்தை குலைக்கும் வகையில் இசை பாடியபடியே ஒலித்து கொண்டு இருந்தன பல கொலுசின் சத்தங்கள்.
உறங்கும் நண்டும், தேளும் தன் வீடுகளை விட்டு வெளியே வந்து, "உறக்கம் கலைக்கும் சத்தம் யாருடையதோ!!" என்று பார்த்த நேரம், அவ்வழி கையில் வாளியுடன், விடியலின் அமைதியில் தங்களுக்குள் பேசி சிரித்த படி வந்து கொண்டு இருந்தனர் சில பெண்கள்.
"ஏன்டி ராசாத்தி.. என்ன நேத்து உன் மாமியார் கூட ஒரே சண்டை போல.. சத்தமா கிடந்தது.. என்னவாம் கிழவிக்கு".
"அட அத ஏன்க்கா கேக்குறே.. வர வர கிழவி தொல்ல தாங்கல... என் புள்ளைக்கு பிடிக்குமேன்னு தக்காளி போட்டு பருப்பு கடஞ்சி குழம்பு வெச்சா, என்னடி பருப்பையே காணோம்.. பருப்பு கழுவுன தண்ணிய எனக்கு ஊத்திட்டாயான்னு ஒரே ரகளை.. அதான் வேற ஒன்னும் இல்ல"
"அப்படியா.. அப்புறம் என்ன தான் ஆச்சு.. சும்மாவா விட்ட கிழவிய?"
"என்னத்த ஆகணும்.. காலையில எனக்கு முன்னாடியே வாளியை தூக்கிட்டு கிளம்பிட்டா, வரப்போரத்தை தேடிகிட்டு.. இந்நேரம் மத்த கிழவிங்க கூட சேர்ந்து எங்கயாச்சும் ஒதுங்கி இருக்கும்" என்றவர்கள் வந்தது என்னவோ, காலை கடனை வரப்போரத்தில் கழிக்க தான்.
மறுபுறம், "இந்தாடி பொன்னுதாயி.. நேத்து எதோ உன் பக்கத்து வீட்டு சிநேகிதி வெளியூர்ல இருந்து வர்ரதா சொன்னியே.. இன்னைக்கா வாரா?
"ஆமா ருக்கு.. இன்னைக்கு காலையில நம்ப ஊருக்கு வர மொத வண்டியில வரேன்னு சொன்னா..எங்க இருக்காளோ என்னவோ" யோசித்தார் பொன்னுத்தாயி.
"அட வந்த வேலைய மொத முடி.. வெளிச்சம் வந்துட்டா ஆம்பளைங்க வர ஆரம்பிச்சிடுவாக.. அப்புறம் இன்னைக்கு நாள் பூரா எதையும் திங்காம, குடிக்காம தான் அலையனும்" எச்சரித்தாள் ருக்கு.
விடியலில் இருந்த சிறு இருளும் விலகி, வெளிச்சம் பரவ செய்த நேரம்.. வந்த அனைத்து பெண்களின் அவசர வேலைகளும் முடிந்து, சிலர் வீடு திரும்பிய வண்ணம் இருந்தனர்.
"சீக்கிரம் நடங்கடி.. இப்டி பொறுமையா நடந்தா, பால்காரன் போய்ட போறான்.. அப்புறம் காலைல காபி தண்ணி இல்லாட்டி அந்த மனுஷன் கத்துவான்" அவசர படுத்தினாள் கூட்டத்தில் ஒருத்தி.
"அட உனக்கு அவசரம்னா நீ மொத போடி.. இந்த இருட்டுல கண்ட இடத்துல காலை வெச்சி அந்த பத்மா மாதிரி நானும் பாம்பு கடிச்சி சாகுறதுக்கா" என்றாள் இன்னொருத்தி.
"அவ பொழச்சாளா இல்லையா.. எதோ மருத்துவச்சி கிட்ட கூட்டிகிட்டு போறதா சொன்னாங்க" என்றாள் மற்றொருத்தி.
"அது என்னவோ.. இன்னைக்கு நாளைக்குன்னு இழுத்துகிட்டு இருக்குறதா பேச்சு".
"சரி தான்.. அவ வாங்கிட்டு வந்த ஆயுசு அவ்ளோதான் போல" ஏதோ உயிர் போவது படு சாதாரணம் போல பேசி கொண்டு தங்கள் அன்றாட கடமைக்கு திரும்பினர் அனைவரும்.
இது இவர்களுக்குள் என்றும் வாடிக்கை தான்.. கழிவறை வசதி இல்லாத காலத்து பிறந்த பெண்ணினத்தின் சாபம் இது.. பாம்போ, தேளோ எது கடித்தாலும், நான்கு ஊருக்கு பொதுவாய் இருக்கும் மருத்துவச்சியிடம் போகும் போதே பிரிந்த உயிர்கள் பல..
இறந்தவளின் சுவடும் கூட அழியா நிலையில், அதே வீட்டிற்கு புதிதாய் ஒருத்தியை மருமகளாய் கொண்டு வரும் வழக்கமும் இந்த பாழாய் போன சமூகத்தின் அங்கமாக தான் இருந்தது.
இதுவரை கடந்து வந்த தன் வாழ்க்கையை மனதில் அசைபோட்ட படி, அவ்விடம் இருக்கும் மர நிழலில் அமர்ந்து இருந்த பொன்னுத்தாயி, மனம் மட்டும் உற்சாகத்தில் மிதந்தது.
அதற்கு காரணம், பிடிப்பற்று கிடக்கும் தன் வாழ்வில், தனக்கென இருக்கும் ஒரே ஆறுதல் அன்னம்மாள் தான்.. சிறுவயது தோழி, திருமணம் ஆகி வேறு ஊரிற்கு சென்ற போதும் வருடத்திற்கு ஒருமுறையாவது சொந்த ஊர் வந்து பொன்னுத்தாயை சந்தித்து, ஒருவருட கதையை பேசி அன்றைய தினம் உடன் இருந்து செல்வது தோழிகளின் வழக்கம்.
இப்பொது அதே போல் தான், அவள் வருகைக்காக காத்திருந்த பொன்னுத்தாயின் மனதில் எதோ ஒரு இனம் புரியா பயமும், பதட்டமும் பரவவே செய்தது..
"என்ன இவ்வளவு நேரம் ஆகியும் அன்னத்தை காணோம்.. இந்நேரத்துக்கு எல்லாம் வந்து இருக்கணுமே.. என்ன அச்சோ இன்னைக்கு...!!" யோசித்து கொண்டு இருந்தவரை சுற்றி இருந்த சூழலும் கூட மாறவே செய்தது.
அடுத்த சில நொடிகளில் வந்து இறங்கிய அன்னம்மாளை கண்டதும், படு ஆனந்தம் பொன்னுத்தாயிக்கு..
ஆனால் எப்போதும் உற்சாகமும் சந்தோஷமும் தென்படும் அன்னம்மாள் முகத்திலோ குழப்பமும், பதட்டமுமே அதிகம் காண கிடைத்தது.. முக மாற்றத்தினை உடனே கண்டு கொண்ட பொன்னுத்தாயி,
"என்ன அன்னோ, முகமே வாடி இருக்கு.. ஏதும் பிரச்னையா? என்ன ஆச்சு இவளுக்கு?" யோசித்து கொண்டு இருக்கும் போதே பொன்னுத்தாயை நெருங்கியவர்,
"நான் அன்னைக்கு.... " என்று எதையோ கூற ஆரம்பிக்க, அதற்குள் வெளிச்சம் பரவி தெளிவாக துவங்கி இருந்த வானம் மொத்தமும், கருநிறம் பூசி கொண்டு, வெளிச்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு, அவ்விடம் பரவும் காற்றும் கூட அதிக வேகம் எடுத்து, தரையில் கிடைக்கும் அனைத்தையும் மிதக்க செய்த படி அவ்விடத்தின் சூழலே சில நொடிகளில் எதிர் மாறாக மாற்றி வைத்தது.
"தாயி .. அது இங்கயும் வந்துடுச்சிடி .. இனி நம்மளால தப்பிக்கவே முடியாது.. ஹையோ கடவுளே... " என்றவரின் ஓலம் காற்றில் ஒலிக்க, அடுத்த நொடி அவர்களின் கண் முன் காற்றில் கரைந்த படி தென்பட்டது அது.
நிழலோ, நிஜமோ, ப்ரமையோ என்பதும் கூட சரியே புரியாத நிலையில் திகைத்து போய் அவர்கள் அவ்விடம் சிலையாக, அதை கண்ட அதற்கோ எத்துணை ஆனந்தம்.
மனதின் சிரிப்பு, இதழிலும் தவழ, நிழலாய் நிற்கும் அதனின் சிரிப்பு மட்டும் கண்ணுக்கு புலப்படாமல் இல்லை இருவருக்கும்.
அவ்விடம் நடப்பது எதுவும் சரியாய் புரியாத போதும், அன்னம்மாளின் முகத்தின் பயமும், மனதின் பதட்டமுமே எதோ சரி இல்லை, ஆபத்தில் மாட்டி கொண்டோம் என்பதை உணர்த்தியது பொன்னுத்தாயிற்கு.
அப்போது தான் நினைவு கூர்ந்தவராய், தாங்கள் நின்று கொண்டு இருப்பது வெட்ட வெளி சாலை என்றும், அருகில் இருக்கும் மக்களின் நடமாட்டத்தை உணர்த்த பொன்னுத்தாயி,
"யாராவது எங்களை காப்பாத்துங்க.. எங்களை எதோ ஒன்னு கட்டி போட்ட படி அசையவே விடாம பண்ணுது.. அண்ணே டீ கடகார அண்ணே, இங்க பாருங்க... " தன்னால் இயன்ற வரை உரக்க கத்திய பொன்னுத்தாயிற்கு, தன் குரல் ஏதோ மாயை போல தனக்கே திரும்ப ஒலிப்பதும், தன்னை சுற்றி நடமாடும் மக்கள் யாருமே தங்களை கவனிக்காததும் தாமதமாகவே புரிந்தது.
அதற்குள் கோவம் கொண்ட அந்த நிழல் உருவம், மரக்கிளை ஒன்றை வேர் வரை உரித்தெடுத்து, அதை பொன்னுத்தாயின் கழுத்தை குறி வைத்து, தன் கோவம் மொத்தத்தையும் ஒன்று சேர்த்து தாக்க வந்த நேரம், பொன்னுத்தாயி என்று அலறிய அன்னம்மாளின் அலறல் காற்றில் ஒலித்திருக்க, அலறி அடித்து கண் விழித்து எழுந்தமர்ந்தாள் அமிர்தா.
கண் விழித்தவளுக்கு, இது எப்போதும் போல பாட்டி கூறிய கதையின் கனவு பிம்பம் தான் என்பது புரிந்ததும் தான் ஏதோ ஒரு அமைதி கிடைத்தது.
அவள் அமைதி மூச்சை விடவும் இல்லை, அதற்குள் அலறிய அவளின் கைபேசியை எடுத்தவளின் முகம் மலர,
"சொல்லு அனு"
.....
"இதோ வந்துகிட்டு தான் இருக்கேன்"
....
"நீ ஏற்பாடுகளை எல்லாம் செஞ்சி வெச்சிடு.. நான் நேரா குளத்தங்கரைக்கே வந்துடுறேன்"
.....
"பாய் அனு.."
கைபேசியை வைத்தவளுக்கு, பாட்டி கூறிய தங்கள் கிராம வாழ்க்கையை அசை போட்ட படி இருந்தவளுக்கு, இறுதியாய் பாட்டி கூறிய அந்த கோர சம்பவமும் நினைவிற்கு வரவே செய்தது.
ஒரு நாள் பயணம் என்று கிளம்பிய போது, இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வது என்று யோசித்த போது தான், எந்த வசதியும் இல்லாமல் அக்காலத்தில் தன் பாட்டிமார்கள் பட்ட துயரங்கள் அலையாய் நினைவிற்கு வர, அதன் தொடர்ச்சியாய், அந்த நினைவைமறக்கவும் நிகழ்வும் நினைவை தட்டவே செய்தது.
ஒரு வண்டி சாமானை ட்ராலியில் தள்ளிய படி, கையில் ஒரு லிஸ்ட் ஒன்றை வைத்து கொண்டு, வேறு எதையும் விட்டுவிட்டோமா என்று கவனமாக அனைத்தையும் சரி பார்த்து கொண்டு இருந்தான் மகேஷ்.
"என்னடா மகேஷ், உன் டூட்டி ஓவர் டைமால போய்ட்டு இருக்கு.. கொஞ்சம் கூட உன் மேல இரக்கம் காட்ட ஆள் இல்லாம போய்டுச்சே.. ஒரு பக்கம் அந்த பைத்தியக்கார பேய்.. இன்னோரு பக்கம் அழகான அனு.. இன்னொரு பக்கம் அம்மா.. எந்த பக்கம் போகுறதுனே தெரியாத கன்பூசன்ல, இது வேற ஒரு தேவை இல்லாத வேலை.
எள்ளு தான் எண்ணைக்கு காயுதுனா, எலி புழுக்கை நான் ஏன்டா நடுவுல காயணும்.. பேய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா" புலம்பியது அவனின் சொந்த மனசாட்சி.
"தேவை இல்லாம புலம்பி, சும்மா இருக்க பேய்யை கிளப்பி விட்டுடாத.. அப்புறம் அது வந்து இவன் வேணும்.. அவன் வேணும்ன்னு லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்ட போகுது" எச்சரிக்கையை கேட்டதும்,
"அதுவும் சரி தான்.. நாம நம்ப வேலையை பாப்போம்" நினைத்தும் கூட முடிக்கும் முன்பே, அலறிய கைபேசியை எடுத்தவன்.
"சொல்லு அனு.. சூப்பர் மார்க்கெட்ல தான் இருக்கேன்.. பூஜைக்கு வேண்டியதை வாங்கிட்டு குளத்துக்கரை வந்துடுறேன்.. நீ ஐயர் கிட்ட ஒரு முறை பேசிடு"
.....
"அப்போ ஓகே.. நானும் டைம்க்கு வந்துடுறேன்" என்றவன் கைபேசியை வைத்து விட்டு, தனக்கு கொடுக்க பட்ட வேலையை பார்க்க துவங்கினான் அவன்.
"இவ பாட்டிக்கு திவசம்னா, இவ கஷ்ட படனும்.. அத விட்டுட்டு யார் வீட்டு திதிக்கோ நான் கஷ்டபடுறேன்.. எல்லாம் என் நேரம்" தலையில் அடித்து கொண்டவன்.
"மீதி இருக்க ரெண்டு லூசுகளும் எப்போ வருதுங்கனு தெரியலையே, இந்த நாலு பேரையும் ஒன்னு சேர்த்துட்டாலே, நம்மளோட பாதி வேலை முடிஞ்சிடும்" நினைத்தவனுக்கு,
சம்மந்தமே இல்லாம இந்த அப்பாவிகளை நம்ப கையாள பலி கொடுக்க போறோமே என்ற குற்ற உணர்வு அதிகம் இருக்கவே செய்தது.. அதிலும்,
"அனுவை போல ஒரு நல்ல பொண்ணை இப்டி ஆபத்துல மாட்டி விடுறோமே" என்று எண்ணியவனுக்கு நன்கு தெரியும்.
இதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று.
வர வேண்டிய அந்த இருவர் யார்?
அமிர்தா யார். அவளுக்கும் அனுவிற்க்கும் என்ன தொடர்பு?
மகேஷ் மனம் மாறுவானா?
இனி அடுத்த அத்தியாயத்தில் ..


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அத்தியாயம் - 3

Nancy mary



மகேஷ் அனுவையும் அவனின் தாயாரையும் அழைத்துகொண்டு கோயிலுக்கு வர, அங்கே அவன் திதி செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த பிராமணரோ திதிக்கான முறைகளை செய்து கொண்டிருந்தார்.

அனு கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்த மறுவினாடியே மகேஷின் தாயார் கூறிய கதையின் மூலம் எழுந்த பயமும் மனசஞ்சலமும் முழுதாய் நீங்கிவிட அகத்தோடு முகமும் பொழிவுற்று கோயிலுக்குள்ளே அடியெடுத்து வைத்தாள்.

அனுவிற்கு அந்த சுற்றுபுறமே பேரமைதியை ஏற்படுத்த தனது மனதை அதில் லயித்தவாறே நடந்து கொண்டிருந்தவளோ,

உடனே மகேஷின் தாயாரை நோக்கி, "ரொம்ப தேங்க்ஸ் ஆண்டி எனக்கு துணையா இருக்கிறதுக்காக நீங்க இவ்ளோதூரம் வந்திருக்கீங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என அகம் மகிழ்ந்து கூறிட,

அதற்கு அவரோ, "அட என்னமா நீ, இதுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு நான் சொன்ன கதையை கேட்டதுல இருந்து நீ எவ்ளோ பயந்து போயிருந்தனு எனக்கு நல்லாவே தெரியும் அதான் உன்னைய தனியா விட மனசில்லாம கூடவே துணையா வந்துட்டேன் இதையெல்லாம் பெரிய விஷயமா சொல்லிட்டு விட்டு தள்ளுமா; அதுசரி இப்போ பயமெல்லாம் போச்சா இல்ல இன்னும் பயப்படுறீயா?" என கேட்டவரிடம்,

"இல்ல ஆண்டி இப்போ பயமே இல்ல கோயிலுக்கு வந்ததும் ஏதோ ஒரு அமைதி மனசுல வந்திருச்சு இனி பயப்பட மாட்டேன்" என கூறி சிரிக்க,

உடனே மகேஷோ, "சரி சரி பாசமழையை பொழிஞ்சதெல்லாம் போதும் முதல்ல உன்னோட பிரண்ட்டுக்கு போன் பண்ணி வராளானு கேளு"

"இல்ல மகேஷ் அவ குளக்கரைக்கு வந்திடுறேன் தான் சொன்னா இந்நேரம் வந்திருப்பானு நினைக்கிறேன் அங்க போய் பார்ப்போம் இல்லனா போன் பண்ணலாம்" என கூறிட, அதுவும் சரிதான் என எண்ணிக்கொண்டு குளக்கரையை அடைந்தபோது அமிர்தாவும் அங்கே நின்றிருந்ததில் அவளோட இணைந்துகொண்டனர்.

அமிர்தாவை பார்த்த மகேஷோ, "நல்லவேளை நீங்க வந்துட்டீங்க எங்க ஏற்பாடெல்லாம் எங்களை பண்ண சொன்ன மாதிரி திதியையும் எங்க தலையிலயே கட்டிடுவீங்களோனு நினைச்சேன் இப்போதான் நிம்மதியா இருக்கு" என கேலிச் செய்த மகேஷிற்கு பதிலடி தரும் விதமாக,

"சாரி ப்ரோ, நான் என்னோட உரிமையை யாருக்கும் விட்டு தர மாட்டேன் இது என்னோட பாட்டிக்கான திதி நான்தானே செய்யணும் உங்களை எல்லாம் கஷ்டபடுத்த மாட்டேன்".

"நீங்க சொன்னாலும் நாங்களும் செஞ்சிருக்க மாட்டோம்" என மகேஷ் பதிலடி தர அதனை கேட்ட அனுவோ,

"ஹேய் இப்போ நாம பாட்டிக்கு திதி குடுக்க வந்திருக்கோம் இந்த இடத்துல சண்டை போடாம ஒழுங்கா திதி குடுங்க" என கூறிட அதை வழிமொழியும் விதமாக பிராமணரும் திதி குடுக்க அமிர்தாவை அழைத்தார்.

அப்பொழுது திடீரென வானம் கறுத்து விட ஒளி தரும் சூரியனை இருளான கருப்பு மேகங்கள் தங்களுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்து குளிரினை பரப்ப,

அந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தை கண்டு குழம்பியவர்களோ மழை வரும் அறிகுறியென நினைத்து அமைதியடைந்தனர்.

அப்பொழுது மகேஷின் தாயாருக்கு அலைபேசியில் அழைப்பு வர அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

திதிக்காக சடங்குகள் முழுந்து எள்ளு நீரும் கலந்த பிண்டத்தை அமிர்தாவிடம் தந்து தண்ணீரில் கரைத்துவிட்டு வர குடுக்க அதை எடுத்துகொண்டு அமிர்தாவும் குளக்கரைக்கு சென்றாள்.

அப்பொழுது மகேஷின் உள்ளுணர்வின் ஏதோ தோன்ற உடனே கோயிலுக்கு வெளியில் அடர்ந்து வளர்ந்திருந்த மரத்தை பார்க்க அங்கே அவனை மிரட்டிகொண்டிருக்கும் அமானுஷ்யம் மரக்கிளையில் அமர்ந்தபடி கோப பார்வை வீசிக்கொண்டிருக்க மகேஷ் தன்னை கவனித்ததும் அப்பார்வை கேலி பார்வையாய் மாறி சிரித்தது.

அச்சிரிப்பிற்கான அர்த்தம் புரியாதவனோ முதலில் குழம்பி பின்பே தாயார் இங்கில்லை என்பதை உணர்ந்து அனுவை பத்திரமாய் இருக்க சொல்லிவிட்டு வாயிற்புறம் ஓடினான்.

அங்கே கோயில் வாசலில் மகேஷின் தாயார் யாரிடமோ போனில் உரையாடி கொண்டிருந்த அவருக்கு மிக அருகில் அமாஷ்ய உருவம் நின்று மகேஷை பார்த்து சிரித்தது.

உடனே தாயிடம் வந்த மகேஷோ, "அம்மா போன் பேச இவ்ளோ நேரமா அனு உங்களை அங்க தேடிட்டு இருக்கா நீங்க சீக்கிரம் உள்ள போங்க" என அனுப்பி வைக்க அமானுஷ்யமோ அவரை தடுக்க பார்க்க அதற்குள் வேகவேகமாய் தாயை உள்ளே அனுப்பியவனோ அமானுஷ்யத்தை நெருங்கி,

"இப்போ எதுக்கு தேவையில்லாம என் அம்மாவை கஷ்டபடுத்த நினைக்கிற அதான் நான் நீ சொல்ற மாதிரியே எல்லாம் பண்றேனே அப்புறம் என்ன உன் பிரச்சனை" என கோபமாய் கத்த.,

அமானுஷ்யமும் தன்னுடைய கோபத்தை காற்றை வேகமாய் வீசவைத்து வெளிகாட்டிட பேய் காற்று அடித்து மகேஷையே சில அடிகள் நகர்த்தியது.

"கோயிலுக்கு இருக்கிற உன்னைய வெளியில வரவைக்க தான் உங்கம்மாவை வைச்சு மிரட்டுனேன் மத்தபடி கொல்லணும்னு நினைச்சிருந்தா அவளை அழிக்க எனக்கு ஒருநொடி போதும்" என கோபமாய் கத்தியது.

"ப்ளிஸ் அப்படி எல்லாம் பண்ணிராத நான்தான் நீ சொல்றதெல்லாம் பண்றேனே இன்னும் இரண்டு பேரு எப்போ எப்படி வருவாங்கனு நீ சொல்லவே இல்ல அதான் நானும் அமைதியா இருக்கேன் இது புரியாம என்னை மிரட்டுனா என்ன அர்த்தம்" என கெஞ்சினான்.

அவனின் கெஞ்சலை கேட்ட அமானுஷ்யமோ, "அதை சொல்ல தான் நானும் வந்தேன் இப்போ உள்ள ஒருத்தி திதி தராளே அவதான் நான் தேடுற மூணாவது ஆள். இன்னும் ஒருத்தன் கூடிய சீக்கிரமே உன்கிட்ட வந்து சேருவான் இப்போ நீ உள்ள இருக்கிறவளை எப்படியாவது உன்னோட வழிக்கு கொண்டு வரணும் நீ சொல்றதை எல்லாம் நம்புற மாதிரி பண்ணனும்" என கூறி கோரமாய் சிரித்துகொண்டே அங்கிருந்து மறைந்துவிட்டதும்,

அச்சூழ்நிலையும் தன்னாலே மாறி இயல்பு நிலைக்கு திரும்பியது.

அப்பொழுது அனுவோடு சேர்ந்து கோயிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை கண்ட மகேஷின் மனமோ குற்ற உணர்ச்சியால் நிரம்பியது.

***************************

அடர்ந்த காட்டுபகுதியில் ஒரு கார் சீறிபாய்ந்து கொண்டு வேகமாய் செல்ல அதனுள் இருந்த நான்கு வாலிபர்களும் சத்தமாக பாடல்களை கேட்டபடி உற்சாகமாய் பயணித்து கொண்டிருந்தனர்.

"மச்சி, நாம நம்ம பிரண்ட்டோட கல்யாணத்துக்கு போறோமா இல்ல கருமாதி பண்ண சுடுகாட்டுக்கு போறோமா எதுக்குடா இப்படி காட்டுக்குள்ள எல்லாம் வண்டியை விடுறீங்க" என ஒருவன் நக்கல் செய்தான்.

"அட நீ வேற கொஞ்சம் சும்மா இருடா, நானே லொகேஷன் சரியா தெரியாம இது காட்டுற லொகேஷன்ல எங்க எங்கயோ சுத்துறேன் இதுல நீங்களும் இப்படி கத்துனா என்னடா அர்த்தம்" என கூறி நண்பர்களுக்கு அதிர்ச்சியை வழங்கினான் விக்ரம்.

"டேய் விக்ரம், உனக்கு பாதை தெரியும்னு நினைச்சு தானடா உன்கிட்ட வண்டியை குடுத்தோம் ஆனா நீ என்னனா இப்படி சொல்ற அப்போ நாம போறது சரியான ரூட்டு இல்லையா" என நண்பர்களுள் ஒருவன் பீதியாக,

"ஹேய் ரீலாக்ஸ் டா, இப்போ ஏன் டென்சன் ஆகுறீங்க நாம இங்க எங்க சுத்துனாலும் கடைசியா சரியான லொகேஷனுக்கு ரீச் ஆகிடலாம் நாம இப்போ சுத்துறதை ஊர் சுத்தி பார்க்குற மாதிரி நினைச்சிக்கோ" என கூறிட நண்பர்கள் அனைவரும் அவனை அடிக்க ஆரம்பிக்க இந்த நட்பின் ஆரவாரத்தால் அவ்விடமே சிரிப்பொலியால் நிறைந்தது.

"சரிடா அவனை விடுங்க நாம நம்ம பிரண்ட்டுக்கே போன் பண்ணி சரியான வழியை விசாரிப்போம்" என நினைத்து போன் செய்ய போனில் சிக்னலே கிடைக்காமல் போனது.

"இப்படிபட்ட தண்ணீயில்லாத காட்டுல எங்களை மாட்டிவீட்டீயே டா ஆண்டவா" என நண்பர்களுள் ஒருவன் கத்த காரின் டயரும் பஞ்சராகி புஸ்ஸென்ற ஓசையை எழுப்பியது.

"மச்சி சத்தியமா இது நான் கத்தினால நடக்கல டா பீலிவ் மீ" என கத்தியவன் கெஞ்ச,

"போடா லூசு" என கூறிக்கொண்டு விக்ரம் காரிலிருந்து இறங்கி ஸ்டெப்னியை எடுத்து சரிபடுத்த முயற்சித்தான்.

அப்பொழுது அவனின் நண்பனோ அவசரத்திற்காக மரத்தை நோக்கி விரைய இன்னொருவனும் அவனுடனே சென்றிட,

விக்ரம் கஷ்டபட்டு சரிசெய்ய முயற்சிப்பதை காரில் அமர்ந்தபடி நண்பர்களுள் ஒருவன் பார்த்துகொண்டிருக்க அப்பொழுது எங்கிருந்தோ கேட்ட நண்பர்களின் அலறல் சத்தம் கிலியை ஏற்படுத்தியது.

"ஆஆஆஆஆஆஆஆஆ" என கேட்ட அவ்விருவரில் அலறல் சத்தத்தில் அனைத்தையும் போட்டுவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர்.

அப்பொழுது விக்ரம் வேகமாய் செல்ல அவனின் பின்னே ஒடியவனுக்கோ தன் பின்னால் யாரோ ஓடி வருவது போல ஓசை கேட்க அரண்டு போய் திரும்பி பார்க்க அங்கே யாருமே இல்லை.

உடனே முன்னால் திரும்பி நண்பர்களை காப்பாற்ற ஓடிட அவனின் பின்னால் யாரோ தலைமூடியை கொத்தாய் பற்றி இழுக்க அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவனை மண்ணிற்குள்ளிருந்து பல கைகளை மேலெம்பி வந்து ஒன்றாய் அவனை மண்ணிற்குள் இழுக்க,

"ஆஆஆஆ விக்ரம்..... விக்ரம்" என அலறியவனின் வாயை ஒரு கை அடைக்க தனது கையை வைத்து அக்கையை விலக்கியவனோ,

"விக்ரம்........" என அக்காடே அதிரும் அளவிற்கு அலறினான்.

விக்ரமிற்கு இந்த அலறல் சத்தம் கேட்க சட்டென்று நின்று திரும்பி பார்த்தவனோ, தனது நண்பர்கள் அனைவருமே காணாமல் போனதை நினைத்து பயம் ஏற்பட,

தன் கால்களை மெதுமெதுவாய் அடியெடுத்து வைத்து சுற்றும்முற்றும் யாரும் வருகிறார்களா என பார்த்து கொண்டே செல்ல அப்பொழுது அங்கிருந்த ஒரு பாறை தடுக்கி கீழ விழுந்தான்.

"ச்சே பயத்துல இதை கவனிக்காம வந்துட்டோமே" என யோசித்தவனுக்கு ஏதோ தோன்ற சட்டென புரண்டு மேல்நோக்கி பார்த்தவனின் மேல் ஏதோ ஒரு கோரமான கருப்பு உருவம் வந்து விழுக அதில் அலறி துடித்தான்.

"ஆஆஆஆஆஆஆ" என்ற பெரும் அலறோடு எழுந்தவனோ கட்டிலிருந்து கீழே விழ,

அவனின் சத்தத்தில் கண்விழித்த நண்பர்களும் "ச்சே இவனோட இதே பொழப்பா போச்சுடா இன்னைக்கும் அதே கனவா" என கேட்டு தலையில் அடித்துகொள்ள,

அப்பொழுது கண்விழித்த விக்ரமோ சுற்றம் உணர்ந்தபடியே எழுந்து கட்டிலிருந்த நண்பர்களை பார்க்க அவர்கள் இவனை கொலைவெறியாகி முறைத்து பார்த்தனர்.

"ஹிஹி சாரி மச்சிஸ் மறுபடியும் அதே கனவு வந்திருச்சு" என அசடுவழிய கூறியதை கேட்ட நண்பர்களின் ஒருவன்,

"டேய் விக்ரம் நம்ம பிரண்ட்டோட கல்யாணத்துக்கு வர விருப்பமில்லனா இப்பவே சொல்லிருடா அதைவிட்டுட்டு அவன் நம்மல கூப்பிட்ட நாள்ல இருந்து கனவு கண்டு எங்க தூக்கத்தை கெடுத்து கனவை சொல்லி எங்களை பயமுறுத்திட்டு இருக்க இதெல்லாம் நியாயமா" என கேள்வியெழுப்ப,

அதை கேட்ட விக்ரமின் புருவமோ யோசனையாய் சுறுங்கியது.

"இல்ல மச்சி எனக்கென்னமோ இது சாதாரண கனவு மாதிரியே தெரியல ஏதோ உண்மையாவே நடந்த மாதிரி தோணுச்சு டா. அதான் ஒவ்வொரு தடவையும் பயப்படுறேன் ஒருவேளை இதெல்லாம் உண்மையா நாம கல்யாணத்துக்கு போறப்போ நடக்குமோ" என கேட்க,

அதில் கோபமான நண்பர்கள் தலையணை தூக்கி வீச அதை லாவகமாய் பிடித்து அவர்களை நோக்கி எறிந்துவிட்டு பால்கனியை நோக்கி சென்றான்.

இது இரவா இல்லை பகலா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றியுள்ள பல்வேறு கட்டிடங்கள் வண்ணவிளக்குகளால் ஒளிர மக்கள் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்பட்டிருந்த நீயூயார்க் நகரின் பேரழகை தனது அப்பாட்மெண்டில் பால்கனி வழியே நின்று வெறித்து கொண்டிருந்த விக்ரமின் எண்ணங்கள் யாவும் கனவை சுற்றியே வட்டமடித்து கொண்டிருந்தது.

தனது சொந்தங்கள் யாருமின்றி சிறுவயதிலேயே அனாதையாக அனாதை இல்லத்தில் சேர்க்கபட்டவனோ அங்கிருந்த நண்பர்களை தனது சொந்தமாய் நினைத்து பாசத்திற்கு ஏங்கி பல ஆசைகளை தன்னுள்ளே புதைத்து வளர்ந்தவனுக்கு படிப்பு ஒன்றே மாபெரும் இலக்காய் இருந்தது.

அதே குறிக்கோளோடு படித்தவனுக்கு ஸபான்ஸர் செய்திட பலர் முன்வர அவர்களின் மூலம் இன்னும் சில நண்பர்களுக்கும் ஸ்பான்ஸர் செய்ய நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு படிக்க சென்றான்.

அங்கேயே சில வருடங்கள் படிப்பிற்காகவே தன்னை அர்பணித்தவனோ மனோதத்துவ மருத்துவருக்கான படிப்பை படித்து முடித்த தருவாயில் இனி தன் பணியை தன் நாட்டிலேயே துவங்கிட திட்டமிட்டான்.

அப்பொழுதே அவனுடன் ஆசிரமத்தில் வளர்ந்து விக்ரமுடன் செல்ல வாய்ப்பு கிடைக்காத நண்பனும் தனது திருமணத்திற்காக அழைப்பு விடுக்க இந்தியா திரும்ப நினைத்தவனோ தனது பணியையும் அங்கே துவங்கிட எண்ணம் கொண்டு பயணபட தயாராகிறான். பாவம் இது அவனை அழைக்கும் அமானுஷ்யத்தின் அழைப்பு என்ற எண்ணம் வந்திருந்தால் இந்த பயணத்தை நிறுத்தியிருப்பானோ என்னவோ..???

மகேஷ் அமானுஷ்யத்தின் பேச்சை கேட்டு அமிர்தாவின் நம்பிக்கைகுரியவனாக மாறுவானா..???

கனவின் உண்மையின் பிம்பத்தை கண்டும் உணராது கிளம்பிடும் விக்ரமின் பயணத்தால் நேரவிருக்கும் அசம்பாவிதங்களும் சம்பவங்களும் என்னவாக இருக்கும்..???


அடுத்த அத்தியாயத்தில் காணலாம்..


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அத்தியாயம்-4


மகாராஜ்






இளம் தென்றல் இனிதாய் வீச
இரவின் கருமையில் ஒளிரும் விண்மீன்கள் வசந்த காற்றையும்
வருடிச்செல்லும் வாடைக்காற்றையும்
வீசியபடியே மரங்களும் செடிகளும்
நடனமாட உச்சி மலைமுகட்டில் ஊரையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது அந்த உருவம்.

மனிதனா மிருகமா என்றறிய முடியா உருவமது. உதடுகள் இரண்டும் ஏதோதோ சபித்து கொண்டிருக்க உணர்வற்று இருந்தது அந்த உருவம்.
பலத்த காற்று நில்லாமல் வீச
மரங்கள் யாவும் சோர்வில்லாமல் அங்குமிங்குமாய் அலைய எதுவுமறியவில்லை கல்லறையை
அரியணையாய் கொண்டு அதன்மேல் வீற்றிருந்த அந்த உருவம்.

மலையுச்சியில் இடம் கொண்டிருந்த பாழடைந்த கட்டிடமதிலே பல இடிபாடுகள் கொண்ட கல்லறை.
சுற்றிலும் எங்கும் பச்சை பசேலென்று பசுமை நிறைந்திருக்க அந்த கட்டிடம் மட்டும் கருமை கொண்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னே கருகி இருந்திருக்கும் போலும். அந்த கட்டிடத்தின் தரையில் தான் கல்லறை. அதுவும் மூலைமுடுக்கெல்லாம் இடிந்திருந்தது.

ஒலியெழுப்பும் பூச்சிகளும் ஊர்ந்து செல்லும் அட்டைகளும் அருவருப்பு உண்டாக்கும் வேறுசில பூச்சிகளும் உலா வர எதுவும், முணுமுணுத்து கொண்டிருந்த அந்த உருவத்தை கருத்தில் கொள்ளவில்லை. இதுவரை கேட்கா குரலில் சபித்துகொண்டிருந்த அந்த உருவம், முணுமுணுப்பையும் தாண்டி சற்று உயர்ந்த குரலில் ஏதேதோ கூற தொடங்கியது.

முற்றும்துறந்த உனை
மூன்று ஜென்மங்களாய்
சிறை கொண்டிருக்க
முன்னூறு வருடங்கள் தாண்டி
உருவெடுத்து வருகிறேன்..
வேரோடு உறைந்து
அழியாது நிற்கும்
என் பகை தீர்க்க
வெட்டிவீழ்த்திய பின்னும்
விதி வென்று வருகிறேன்.
இம்முறை வீழ்ச்சி எனக்கல்ல..
உன்னவர்களை கொண்டே
உன்னை அழிக்கிறேன்.
முதலில் உன் சிறையை பற்றியிருக்கும் கொடிகளை அவிழ்க்கிறேன் பார்..
உன் இரத்தம் கொண்டே
உனை இறக்கசெய்கிறேன் பார்..
என்று சூளுரைத்து கொண்டது அந்த கோரமான உருவம். அகோரம் எனும் வார்த்தையே அதற்கு குறைவு தான்...


கருவளையம் சூழ்ந்த கண்பகுதி... கண் இருக்கிறதா இல்லையா என்று கூற அறிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் உள்ளிருந்து தெரிந்த இள இரத்த நிறம் கண் இருக்கிறதென்று உறுதிபடுத்தியது.
வெட்டப்படாத முடியும் சடைபிடித்திருக்க கட்டுகடங்காத நிலையில் நீண்டிருந்தது. முணுமுணுக்கையில் வெளிப்பட்ட பற்கள். பற்களா என்று சந்தேகம் கொள்ளலாம். வெண்மை நிறம் தான் இல்லை. முழு மஞ்சள் நிறம் கொண்டிருக்க பற்களின் இடையில் இரத்தகறைகள். அதுவும் சிலது சிவப்பு நிறம். வேறு சிலது காய்ந்திருந்த கறுப்பு நிறமாயிருந்தது. உயிர்மூச்சு நிற்காதிருக்க இரத்தம் குடித்தே உயிர்வாழ்ந்திருக்கும் போலும்...
ஒட்டிபோயிருந்த கன்னம் அதிலும் பல கீறல்கள்.. அங்கும் காய்ந்திருந்தது இரத்தத்தின் தடம். உடம்பு மொத்தமும் ஒட்டியிருக்க எலும்புகள் அப்பட்டமாக காட்சியளித்தது. தடமாயிருந்த உடம்பில் ஒட்டு துணியில்லை. தோல்மூடிய உடம்பே அது. நிர்வாணகோலம் பூண்டிருந்தது.
இடுப்பின் கீழிருந்த பாகம் அதனை பெண்ணென உணர்த்த கால்களோ தடித்திருந்தது. கை கால் நகங்கள் நீண்டிருக்க அதிலும் இரத்த கறைகள் கருத்திருந்தது.. முணுமுணுத்து கொண்டிருந்த அகோர உருவத்தை தொல்லை செய்தது தீடீரென வந்த அந்த இரத்தத்தின் வாடை... ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே எழுந்த உருவம் நீண்டு சடையாகியிருந்த முடியை இழுத்து கொண்டே கத்தியது. ஏதோ வாய்க்குள் நுழையா வார்த்தைகளும் அறியா மொழிகளும் உதிர்த்தது. கல்லறையின் மேலே நின்றிருக்க கட்டிடத்தின் வெளியே ஓடியது ஏதோ ஒரு விலங்கு. இரத்தசிவப்பு கொண்ட கண்களில் பளபளப்பு. அழுந்த கால்களை ஊன்றியவாறே நடந்த உருவம் கட்டிட வாசலில் நின்று ஏதோ ஜெபிக்க ஆடிக்கொண்டிருந்த மரத்தில் ஆவலுடன் ஏற முற்பட்ட மலைமுயல் ஒன்று தடுமாறி விழுந்தது. விழுந்த இடம் பிசுபிசுப்பாயிருக்க நகரமுடியாமல் தவித்தது. வெள்ளைமுடி கொண்டிருக்கும் முயலின் மேல் இப்போது வெண்மை என்ற நிறத்திற்கு அடையாளமே இல்லை.
விழுந்த முயலை நோக்கி வந்த அகோர உருவம் ஒற்றை கையில் அதனை தூக்கி தன் நகம் கொண்டு அதன் தோல் கிழித்து அதன் இரத்தத்தை புசிக்க தொடங்கியது.

இருகைகளிலும் நிறைந்த இரத்தம் கொண்டு உடம்பிலும் அடித்து கொண்டது.. கிழிந்து நார்நாராகியிருந்த முயலை எடுத்து கட்டிடத்தின் சுவரில் அடித்து கொண்டே தன் கோபத்தை காட்டிக்கொண்டிருக்க,

மகேஷூம் அனு அமிர்தா இருந்த கோவிலின் வெளியே நின்ற கோர உருவத்திற்கும் இரத்தம் வேண்டுமென்ற பேராசை வந்தது. கண்கள் கவனம் தவறினால் தன் பழிவெறி தன்னையே கொன்றுவிடும் என நினைத்த கோர உருவத்தின் கண்முன்னே அமிர்தா விழ அமிர்தாவின் இரத்தம் புசிக்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. மகேஷை கொண்டே அவ்வாசை நிறைவேற்ற துடித்தது.

இங்கு தன் முன்னோருக்கு திதி கொடுத்து முடியும் நேரம் அங்கே ஓர் இடத்தில் வாடிபோன செடிகளும் சலசலக்கும் சருகுகளுக்குமிடையே ஓர் இடைவெளி தென்பட்டது. அந்த இடைவெளி பாறைகளுக்கு இடையேயான இடைவெளியாக இருக்க கண்ணால் காண முடியாத அந்த வழியினுள்ளே.....
துருபிடித்த ஓர் இரும்பு பெட்டி.. சுற்றிலும் பல தாயத்துகளும் மந்திர நூல்களுமாய் அடுக்கடுக்காய் கட்டப்பட்டிருந்தது அந்த பெட்டியில்..
புதைக்கப்பட்டிருந்த அந்த பெட்டியை சுற்றியிருந்த நூல்கட்டுகளில் முதல்கட்டுநூலும் ஒரு சூலமும் சிதறியது.
பெட்டியும் ஒரு‌முறை ஆட்டம் கண்டு அடங்கியது.

அங்கே மலை உச்சியில் இருந்த கோர உருவம் நிலமே அதிரும் வகையில் கத்தி தன் முதல் வெற்றியை கொண்டாட மரத்திலிருந்த கோர உருவமும் தன் மகிழ்ச்சியை கொக்கலித்து சிரித்து காட்டியது...

இங்கு நடக்கும் கோர உருவங்களின் மர்மம் ஏதுமறியாது அவர்கள் சிக்கிய வலையில் மாட்டியிருப்பதையும் உணராது குளக்கரையில் தன் பாட்டிக்கு திதி கொடுத்து விட்டு அனு, அமிர்தா, மகேஷின் தாய் அமர்ந்திருக்க அனு, அமிர்தா இருவரும் கருவறையில் கற்பூர ஒளியில் ஜொலித்து கொண்டிருந்த தாயவளையே நோக்கியிருந்தது. இருவரின் எண்ணமும் அலைகழிக்கும் எண்ணங்களில் இருந்து விடுதலை தாவென்றது. இவர்களின் எண்ணமோ இப்படி இருக்க கருவறையினுள் குடி கொண்டிருந்த தாயவளின் எண்ணமோ வேறு மாதிரி இருந்தது போலும்.. எதுவுமறிய இயலா புன்னகை ஒன்றையே உதிர்த்துகொண்டாள் அந்த தாய்‌.

குற்ற உணர்வில் குறுகி கொண்டிருந்த மகேஷ் குளக்கரையிலே அமர்ந்துவிட
அவன் யோசனையில் மொத்தமும் நிறைந்திருந்தது இந்த இரண்டு பெண்களும் புதிதாய் வரபோகும் நபரும்.. எனக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு.. அவர்களுக்கு விரிக்கபட்ட வலையில் நான் முதலில் மாட்டியது ஏன்? எனும் சிந்தனைகள் சிதற எதற்கும் பதில் கிடைக்காததால் சோர்ந்து போயிருந்தான். குளக்கரையில் கீழ்படியில் இவன் அமர்ந்திருக்க முதல்படியில் ஒரு சித்தர் சிந்தனையில் சுழன்ற அவனையே பார்த்து கொண்டிருந்தார்.

அவனும் திரும்பி இருந்தபடியால் பின்னால் நின்று கொண்டிருந்தவரை காணவில்லை.
உள்மனது ஏதோ உணர்த்த திரும்பி பார்த்தவன் கண்முன்னே யாருமில்லை.. யாரோ நம்மை பார்ப்பது போல் இருக்கிறதே என நினைத்தவன் பிரம்மையாக இருக்குமென நினைத்து விட்டான்..

மீண்டும் மனது உணர்த்த திரும்பியவன் பார்வையில் விழுந்தது ஏதோ யோசனையோடு தன்னையே உற்றுநோக்கும் அமிர்தா தான்.

"இந்த லூசு எதற்கு தன்னை பார்க்கிறது" என நினைத்தவன்
அவள் எதேச்சையாக பார்ப்பது எனக்கு என்னையே பார்ப்பது போல் தோன்றுகிறது என தன்னை சமாதானபடுத்தி கொண்டு
மீண்டும் நீரில் மிதந்து கொண்டிருந்த பொரிகளை கவ்வி எடுக்கும் மீன்களை வேடிக்கை பார்க்க துவங்க மீண்டு அதே சித்தர் சாதாரண மனித வடிவில் இன்னும் இரண்டு படிகள் கீழிறங்கியிருந்தார். சிறிது நேரம் மகேஷை பார்த்தவர் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்க அரவம் கேட்டு திரும்பியவன் கண்முன்னால் நின்றார் அவர்.

வெள்ளை வேட்டி சட்டை அணிந்து நெற்றியில் விபூதியும் கையில் ஒரு துண்டுமாக நின்றிருந்தார். முகமே தெய்வீகமாக இருக்க உள்ளுணர்வு உந்த அவரை கண்டதும் எழுந்து நின்றுவிட்டான். அவரும் என்ன நினைத்தாரோ மகேஷை பார்த்து புன்னகை ஒன்றை உதிர்த்து குளத்தில் கைகால்களை நனைத்து வந்தார். அவர் வரும்வரையிலும் அவரையே பார்த்து கொண்டிருந்தவன் அருகே வந்தவர் உன் மனசஞ்சலங்கள் அனைத்தையும் தாயிடம் கொட்டிவிடு.. தாய் விடை தருவாள் என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றார். எந்த தாய் என்று கூறாததால் கோவிலில் இருந்த கருவறை தாய்க்கு சிறப்புபூஜை ஒன்றை வைத்து அவரிடம் தன் மனம் திறந்து பேசினான்.

தாயே... நான் ஏதோவொரு இக்கட்டில மாட்டியிருக்கேன்.. புரியுது.. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று என்னை நல்லா அலைகழிக்குது.. இதில நான் மட்டுமில்ல என்னை மாதிரி எதுவுமறியா மூன்றுபேர் மாட்டியிருக்காங்க. எங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்து வழிநடத்து என்றவன் அங்கிருந்த திருநீறு எடுத்து வைத்து விட்டு தன் தாயின் அருகே அமர்ந்தான்.
அவன் பார்வை தாயின் அருகே இருந்த இளம் காரிகைகள் இருவரையும் தீண்டி செல்ல இருவரையும் ஆராய துவங்கினான்.

அனு, அமிர்தா இருவருக்குமே புன்னகை உதிர்த்தாலே போதும் பொலிவு பெறும் முகம். பால் வெள்ளையே, பளிங்கு வெண்மையோ கிடையாது.. கோதுமை நிறம் தான்.. ஆனாலும் முக லட்சணம் அவர்கள் அழகினை மெருகூட்டியது. அழகு இருவருக்கும் ஒத்துபோக குணங்களில் சில வித்தியாசங்கள். அனு அமைதி , பயந்த சுபாவம் என்றால் அமிர்தா அமைதி என்றால் என்ன என கேட்பவள் போலும்.. அவளிடம் பேசிய சில வார்த்தைகளில் முடிவு செய்து விட்டான். அமைதி அடக்கம் கொண்ட அனுவை காட்டிலும் அமிர்தா அவன் மனதில் ஒரு படி உயர்ந்தே இருந்தாள்.
வார்த்தைகளை எண்ணி உதிர்க்கும் அனுவை காட்டிலும் படபடபேச்சில் நொடியில் வெல்லும் அமிர்தா ஆணியாய் பதிந்திருந்தாள் அவன் மனதில்.. எங்கனம் என்றால்..
இதுபோல் ஒரு பெண் வந்தால் வீட்டில் கொஞ்சம் மகிழ்ச்சியும் மௌனமாளிகை அவன் வீட்டில் சலசலக்கும் சலங்கைகாரிராக இருப்பாள் என நினைத்தான்.

தன் எண்ணம் போகும் போக்கை நினைத்தவன் இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா என்று தன் மனதை அடக்கி கொண்டான். இதுவரை அடங்கியிருந்த குற்றவுணர்ச்சி மீண்டும் தலைதூக்கியது. அவனும் என்ன செய்வான் கத்திமுனையில் நிற்பது அவனின் தாயல்லோ!!

இது எதையும் அறியாது தன்னை சுற்றி நடப்பவை அனைத்தும் கடவுளின் சித்தமே என்று அவனின் மேல் பாரத்தை போட்டு தங்கள் வாழ்க்கையினை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரும் தங்கள் தினசரி வாழ்க்கை குறித்து கூறிவிட்டு தன் பாட்டி கூறிய கதையின் எதிர்பலன் தன் கனவில் வந்ததனை அமிர்தா கூற வரும் நேரம்
அவர்கள் அமர்ந்திருந்ததற்கு எதிர்புறம் நின்றிருந்த மரத்தின் அடியில் இருந்து லேசாக ஒரு கரம் எழுந்தது. பேசிக்கொண்டிருந்தது மறந்து இருவரும் அம்மரத்தின் அடியில் செல்ல மகேஷூம் அவன் தாயும் அவ்விடத்திலே அமர்ந்திருந்தனர்.

தோழிகள் இருவரும் அருகே சென்று பார்க்க வயதான மூதாட்டி ஒருவர் படுத்து இருந்தார். ஒருகளித்து படுத்திருந்ததால் அவரது முகம் இருவருக்கும் தெரியவில்லை. அவர் கையசைத்து தண்ணீர் கேட்க அமிர்தா தன் தோள்பையிலிருந்து தண்ணீர் எடுத்து அவருக்கு புகட்ட அனு அவரை தோளோடு அணைத்து தூக்கி பிடித்திருந்தாள்.

தண்ணீர் பாட்டில் அந்த மூதாட்டியின் வாயருகே செல்ல அமிர்தாவிற்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்தியது. என்னதென்று யோசிக்கவும் அவள் துணியவில்லை. தண்ணீர் புகட்டிகொண்டே அந்த மூதாட்டியின் முகத்தை உற்று நோக்க அமிர்தாவிற்கு சொற்கள் வரவில்லை.. நாக்கும் ஒட்டிக்கொள்ள உதடுகளும் பின்னியிருந்தன.. பிரித்து ஒரு வார்த்தை சொல்ல இயலவில்லை.. முயன்ற பொழுது நடவாதது தானாகவே நடந்தது. அவள் வாய் சொன்னதெல்லாம் ஒன்று தான் அன்னம்மாள்... இவள் ஏன் தண்ணீர் கொடுக்காமல் உறைந்து போயிருக்கிறாள் என பார்க்கையில் அவள் உதிர்த்த சொல் இவளுக்கும் கேட்டுவிட இவளும் உறைந்து போனாள்.

அமிர்தாவிற்கு தான் கண்ட கனவு நினைவிற்கு வர அனுவிற்கோ மகேஷின் தான் சொன்ன கதையின் அன்னம்மா நினைவிற்கு வந்தார்.
ஆனாலும் அவள் வேறு யாரையாவது சொல்கிறாள் என நினைத்தவள் அமிர்தாவை வற்புறுத்தி அவருக்கு தண்ணீர் புகட்ட செய்தாள்.

அமிர்தாவும் கனவில் தாக்கத்தில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்று தன்னைதானே சமன்படுத்தி கொண்டாள். அவரை அதிலேயே படுக்க வைத்தவர்கள் அவர்கள் இருந்த இடம் நோக்கி நகர மகேஷ் அங்கு வந்து சேர்ந்தான்.

அமிர்தா, " உங்க அம்மா எங்க மகேஷ் ?" என்று கேட்க
அதோ.. அங்கே தான் இருக்காங்க என கை நீட்டியவாறே அவரை காட்ட திரும்பியவன் ஆட்காட்டி விரல் காட்டிய இடத்தில் யாருமில்லை.

அனுவும் அமிர்தாவும் அன்னம்மாவை பார்கக வந்திருக்க இவர்கள் வர தாமதமாகியதால் மகேஷ் இவர்களை தேடி வந்துவிட்டான். இருவரில் ஒருவர் தொலைந்தாலும் ஆபத்து தன் தாய்க்கு தான் என நினைத்து தான் வந்தான்.

ஆனால் இப்போது? கோவில் தான் எங்கேயாவது போயிருப்பார் எனும் நம்பிக்கையில் கோயில் முழுவதும் சுற்றி வந்து தேட அவரை காணவில்லை. பதறியவன் பெண்கள் இருவரையும் "கோவிலினுள்ளே இருங்க.. வெளியே வந்திடாதீங்க.. ப்ளீஸ்" என்று வற்புறுத்தி கேட்க அவர்களும் சரி என்றிட அவனோ கோவில் படி தாண்டி வெளியே வந்துவிட்டான்.

அங்கும் சுற்றி பார்த்திட அவன் தாயை தான் காணவில்லை.. இது கோர உருவத்தின் வேலை என்றுணர்ந்த அவன் காதுகளில் திரும்ப திரும்ப கேட்ட வாக்கியம்..
"உன் அம்மாவை கொல்லணும்னு நினைச்சிருந்தா ஒரு நொடி போதும் எனக்கு" என்ற அந்த கோர உருவத்தின் வார்த்தையே...
பதறி போனவன் கண்களில் கண்ணீருடன் சோர்ந்திருக்க
அங்கே மரத்தின் மேலே இருந்த கோர உருவம் மந்தகாசபுன்னகையை வீசியது..

மனபாரம் இறக்கிவைக்கவே கோவிலுக்கு வந்திருக்க மனம் அம்புதைத்தது போல் வலியும் பன்மடங்கு பாரமுமேற
தளர்ந்த நடையுடன் இருபெண்களையும் காண வந்தான்.

அவர்களுக்காக தான் தனதன்னையை பயன்படுத்தியிருக்குமோ அந்த கோர உருவம் என்று தோன்ற, அம்மாவை காப்பாற்ற அவர்களை பத்திரபடுத்த முயற்சி மேற்கொண்டான். அம்மா ஆட்டோல வீட்டுக்கு போயிட்டாங்க எனும் பொய்கூறி அவர்கள் இருவரையும் அழைத்து தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இங்கே வந்தும் அவர் வராததால் பெண்கள் இருவரும் கேள்வி கேட்டு குடைய அவனோ அவர்களிடம் வெறுப்பாய் கத்திவிட்டு தனதறை சென்றான்... மகேஷ் மட்டும் இருப்பதனால் அனுவை தனியே விடமனமின்றி அமிர்தாவும் அவளுடன் மகேஷின் வீட்டிலே இருந்தாள்.


மாலை ஐந்து மணி...

மகேஷ் என்ன செய்வது ஏது செய்வதென்று அறியா நிலையில் அறையினுள்ளே அங்குமிங்கும் அடி அளந்து கொண்டிருக்க வீடடின் முன்னே சடன்ப்ரேக் போட்டு நின்றது மகிழுந்து ஒன்று. அதிலிருந்து மகேஷின் தாய் இறங்க கூடவே இறங்கினான் விக்ரம்..

வீட்டின் வெளியே வாகனம் நிற்கும் சத்தம் கேட்டு மகேஷ் வெளியே வர அவன்பின் அனுவும் அமிர்தாவும் வந்தனர். தாயையை கண்டதும்
சேய் அவன் அன்னையை அணைத்துகொள்ள விக்ரம் முகம் கண்ட அனுவும் அனுவை கண்டுகொண்ட விக்ரமும் விழியகலா அதிர்ச்சியில் நிலைத்திருந்தனர்..

மலைமேலும் மரத்தின்மேலும்
குடிகொண்டிருக்கும் இரு வேறு கோர உருவங்களின் குறிக்கோள் என்ன?

பழிவெறியை தீர்த்து கொள்வதென்றால் பகை எதற்கு?

பாறைகளின் இடுக்கில் தாயத்து, மந்திரகட்டுகளில் மாட்டிக்கொண்ட பெட்டியின் ரகசியம் என்ன?

கனவிலே வலம்வந்த அன்னம்மா கண்முன்னே எப்படி? இதுவும் காலத்தின் சூழ்ச்சியோ?
கோவிலில் இருந்த மகேஷின் தாய்க்கும் வெளிநாட்டில் இருந்த விக்ரமும் சந்தித்தது எங்கனம்?

அதிர்ச்சியில் கண்கள் விரிய நிற்கும் விக்ரம் அனு இருவருக்கும் முன்னமே பழக்கம் இருந்திருக்குமோ?

கேள்விகளுக்கு விடை அடுத்த பதிவில்.....
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அத்தியாயம் 5

செங்கிஸ்கான்



அந்தி வானம் மங்கி சிவந்து பொன்னிரமாய் பூமியைப் பொலிர செய்த நேரமதில், மஞ்சள் மேகங்களோடு பறவைகள் போட்டியிட்டு, கூடு திரும்பி கொண்டு இருந்தன. வயல்வெளிகளை வருடியதொரு தென்றல், அலை அலைகளாக கதிர்களை ஆட செய்தன.
பசுமையும் குளுமையும் நிறைந்த அந்நேரத்தில் வயல் வேலைகளை முடித்த ஜனங்கள் பம்ப் செட்டில் குளித்து ஆட்டமிட்டனர். நாரைகளும் மைனாக்களும் குருவிகளும் குஞ்சுகளோடு குலாவி கொண்டு இருந்தன.

அத்தனை அழகான அந்த மாலைப் பொழுதை பாதி உலகமே ரசிக்கையில், பொன்னுத்தாயி மட்டும், இருட்டும் கிழக்கை வெறித்த வண்ணம் பித்துப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். சமீப காலமாக அவள் வாழ்வில் நடக்கும் அமானுஷ்யங்களால் பெரிதும் அதிர்ந்து போய்தான் இருந்தாள். அதை விட அவளை பெரிதாக பாதித்தது, அவள் குடும்பம் கூட அவள் கூறியதை நம்பவில்லை. ஏன் அன்னம்மாள் கூட அப்படி ஏதும் இல்லை என்று சாதித்தே விட்டாள். அன்றிலிருந்து தினமும் இரவு அந்த கருப்பு உருவத்தின் ஆட்டம் அவள் வாழ்வில் அரங்கேறியது. உதவி செய்ய கூட ஆளில்லாமல், போவதற்கு வழியும் இல்லாமல், பிள்ளையை பாதுகாக்க வேண்டி செய்வதறியாது தவித்தாள் பொன்னுத்தாயி. இருட்டத் தொடங்கியதும் தான் தாமதம் தன் நிழலையும் கண்டு பயந்தவள் முழங்காலில் முகம் புதைத்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாலும் இரவு வர தானே செய்யும். வழக்கமான வேலைகளை முடிப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது. எப்பொழுதும் போல, இன்றைக்கும் தூக்கமின்மையால் புரண்டு கொண்டு இருந்தாள். நள்ளிரவு நேரம் வாசலில் எரிந்து கொண்டு இருந்த விளக்கு விட்டு விட்டு எரிந்து பின்பு தானாக அணைந்தது. திடீரென்று கட்டி இருந்த மாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பொன்னுத்தாயை அழைப்பது போல பயத்தில் கத்தியது. சத்தத்தில் எழுந்த அமராவதி, "ம்மா மாடுங்கலாம் ஏன்மா கத்துது" என்றாள். "பேசாம படுடி, ஏதும் கேக்காத" என்று தன் பிள்ளையை அதட்டி அமைதியாக்க்கினாள் பொன்னுத்தாயி. "அப்பா எப்போமா வருவாரு", என்றாள் அமராவதி மீண்டும். தன் மகள் அமராவதி பயத்தில் இருப்பதை உணர்ந்தாள் அவள்.

எனெனில், ராணுவத்தில் இருக்கும் அப்பா இப்போ வரமாட்டார் என்பது அவளுக்கே தெரிந்ததுதான்.

"அப்பாக்கு லீவு கிடைச்சா வந்திருவாரு மா, நீ தூங்கு இப்போ. அம்மா உன் கூடவேதா இருக்கே" என்றாள் பொன்னுதாயி.

அம்மாவின் வார்த்தை கொடுத்த தைரியமோ அல்லது வேறு ஏதோ உடனே உறங்கி போனாள் அமராவதி. பொன்னுத்தாயி மட்டும் இன்னமும் விழித்து இருந்தாள். அவள் உதடுகள் அமைதியாய் இருந்தாலும், காதுகள் மட்டும் கவனமாக கவனிக்க தொடங்கி இருந்தன.

முதலில் மெதுவாக செருமல் சத்தம் வாசல் புறம் இருந்து கேட்டது. நமக்கு பழக்கப்பட்ட குரல் என்று அவள் யோசிப்பதற்குள், அந்த குரல் அவளை அழைத்தது. "பொன்னு, தங்கம், மகளே நான் அப்பா வந்திருக்கேன்டா. பேத்திய பார்க்க வந்து இருக்கே தாயி" என்றது அந்த குரல்.

பொன்னுத்தாயின் இருதயம் ஒரு நொடி நின்றே விட்டது. ஆறு மாதத்திற்கு முன்னாள் இறந்து போன அவள் அப்பாவின் அதே குரல். பயத்தில் பேச்சு வராமல் போனது அவளுக்கு.

இப்போது அந்த குரல், "பேத்தியை கண்ணுல காட்ட மாட்டியாடி ராசாத்தி. உன்ன பெத்தவன் கேக்குறேன்த்தா" என்று அழ தொடங்கியது.

இறுக்கமாக காதுகளை பொத்தி கொண்டதோடு கண்களையும் மூடிக்கொண்டாள் பொன்னுத்தாயி. அந்த நொடிகளுக்காகவே அந்த கருப்பு உருவம் காத்திருந்ததோ என்னவோ, அமராவதியை பார்த்து கோரமாய் சிரித்தது.

அப்போதே அமராவதியின் முடி மெல்ல காற்றில் உயர்ந்தது. அதை யாரோ பற்றி இழுத்தது போல இழுத்து, வீட்டிற்கு வெளியே மெல்ல கொண்டு வந்தது. காற்றில் மிதப்பது போல அமராவதி எந்த சலனமும் இல்லாமல் வெளியேறி கொண்டு இருந்தாள்.

நிகழப்போகும் கொடூரம் அறியாமல் பொன்னுத்தாயி அவள் அப்பாவை எண்ணி கண் மூடி அழுது கொண்டு இருந்தாள். "நீ என்ன விட்டு போய்டுபா, நாங்க உங்கிட்ட வரமாட்டோம். இங்க இருந்து போயிரு" என்று பொன்னுத்தாயி அழுது கொண்டிருந்த அதே நேரம்.

வாயிலை தாண்டி வந்த அமராவதியின் உடலை நோக்கி குரூர சிரிப்புடன் நெருங்கியது அந்த கருப்பு உருவம். திடீரென்று எங்கிருந்தோ வந்த அன்னம்மாள், அமராவதிக்கு பூண்டு மாலையை அணிவித்து அவளை கையில் தூக்கி கொண்டு வீட்டிற்குள் புகுந்தாள்.

சுயநினைவிற்கு திரும்பிய பொன்னுதாயிற்க்கு ஈரக்குலை அருந்தது போல இருந்தது. கதவை தாழிட்டு உள்ளே வந்த அன்னம்மாள் பொன்னுதாயின் வாயிலும் வெள்ளபூண்டை ஊட்டி விட்டாள்.

"பதராத பொன்னு, நான் வந்துட்டே இனி நான் பார்த்துகிறேன். இந்த இரவு நாம அந்த கருப்பு உருவத்துக்கு பலியாக மாட்டோம் என்னை நம்புடி" என்றாள்.

அந்த கணம் முதல் அந்த இடமே நிசப்தம் ஆனது. உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவுக்கு நிர்மூலமான ஒரு நிசப்தம் நிலவியது. பொன்னுத்தாயின் உடல் இன்னமும் நடுங்கி கொண்டுதான் இருந்தது. அந்த நிசப்தம் அவள் நிம்மதியை குலைத்தது. அன்னம்மாள் அவளை ஆசுவாச படுத்தினாள்.

காலைல எல்லாம் சொல்றேன் பொன்னு, இப்போ கொஞ்ச நேரம் தூங்கு என்றாள் அன்னம்மாள். தூக்கம் வராமல் போனாலும் வெளிச்சம் பிறக்காமலா போகும். பொழுது புலர்ந்தது. அமானுஷயங்கள் நிறைந்த அதே கிராமம் மின்னும் மஞ்சள் வெய்யிலில் ஜொலித்தது. பசுமையான சூழல்கள், இனிமையான பறவை ஒலிகள். இந்த கிராமத்திலா இத்தனை கொடூரம் என்று நம்மை எண்ண வைத்தது.

மண்ணை விட்டு இருள் போனாலும் பொன்னுத்தாயின் மனதை விட்டு போகவில்லை. அவள் மனம் முழுவதும் இரவு நிகழவிருந்த சம்பவம் மட்டுமே நிழலாடியாது.

பொன்னுத்தாயி, "உன்ன எவ்ளோ நம்புனேடி கடைசில என்னையும் என் மவளேயும் கொல்ல தான் வந்தியா இங்க. ஊருக்கறாங்க முன்னால இப்டி ஒரு கருப்பு உருவம் இல்லவே இல்லனு சொல்லி எனக்கு பைத்தியக்கார பட்டம் வாங்கி குடுத்திட்டியேடி. இப்போ மட்டும் எதுக்கு இங்க வந்த. தயவு செஞ்சு இந்த ஊரை விட்டு போயிருடி. என் வீட்ட விட்டு போ முதல்ல. நானும் என் மவலும் நிம்மதியா இருக்கணும். நீ வந்தனால தான் எங்களுக்கு இந்த நிலம. போயிரு இங்க இருந்து" என்றாள்.

அன்னம்மாள், "பொன்னு! இந்த ஊருக்கு நான் திரும்பி வந்ததே உன்னையும் உன் மவளேயும் காப்பாத்த தான்டி. அன்னைக்கு நான் வரலைனா, இந்நேரம் நீயும் உன் மவலும் அந்த கருப்பு உருவத்துக் கூட போய் இருப்பிங்க" என்றாள்.

பொன்னுதாயி, "என்னடி சொல்ற நீ? நெசம் தானா? சரி, செத்துப் போன எங்க அப்பா எதுக்குடி நேத்து நைட் வந்தாரு".

அன்னம்மாள், "நா சொல்ல போறத பொறுமையா கேளு மக்கா. வந்தது உங்க அப்பா இல்லடி. அந்த கருப்பு உருவம் தான். அந்த கருப்பு உருவம் நமக்காக வரல, நம்ம பிள்ளைங்களுக்காக வந்திருக்குடி. நம்ம புள்ளைங்கள அந்த கருப்பு பிசாசு கிட்ட இருந்து காப்பாத்தணும்டி.

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி, நா விழுந்து வாரிக்கிட்டேன்னு கிண்டல் பண்ண தானே. அன்னைக்கே இந்த பிரச்னை எனக்கு ஆரம்பிச்சுருச்சுடி. அன்னைக்கு நானா கீழ விழலடி. என் புள்ளைங்கள வீட்ல இருந்து தூக்குறதுக்கு, என்னை தடுத்து நிறுத்த இந்த கருப்பு செஞ்ச வேலை தான் அது. ஒரே நேரத்துல அந்த கருப்பு இரண்டு இடத்துலயும் இருக்குடி. என் கால பிடிச்சு இழுத்த அதே நேரம், இன்னொரு கருப்பு என் புள்ளைங்கள தூக்க போயிருச்சு. நல்ல வேலையா அன்னைக்கு புள்ளைங்கள விட்டுட்டு முறுக்கு, அதிரசம் விக்க போகும் போது அதுக கைல மஞ்ச கிழங்கு வைச்ச மாரியாத்தா காப்புக் கட்டி இருந்தனால எம் புள்ளைக பொழச்சுதுக. அன்னைல இருந்து தினம் தினம் இந்த கருப்பு ஆட்டம் ஆரம்பிச்சுதுடி. அதுனால தான் என் புள்ளைங்கள கூப்பிட்டுட்டு மெட்ராஸ்க்கு போயிட்டே. அங்க ஒரு கிருத்துவ பாதிரிமாறு தான் எங்கள பார்த்துகிட்டாரு. ஆனா அங்கையும் இதே பிரச்சனை வந்திருச்சுடி. நேத்து அமராவதிக்கு நடந்த மாதிரி ஒருநாள் என் மக மாதவியையும் தூக்கிருச்சு அந்த கருப்பு. அந்த பாதிரிமாறு தான் மீட்டுக் குடுத்தாரு. ஆனா, அப்போ இருந்து மாதவிக்கு என்னை அடையாளம் தெரிலடி. பித்து பிடிச்சவ மாதிரி ஆகிட்டா. அது கூட பரவால்ல. அவ அண்ணே ஸ்ரீதர் பார்த்து கூட பயந்து கத்த ஆரம்பிச்சுட்டா. அவனுமே மனசு ஓடைஞ்சு போய்ட்டான். அப்பறம் அந்த பதிரிமாறு எங்கள ஆசாத் கபிர் பாய் கிட்ட அனுப்பி வைச்சாரு. அவரும் கருப்ப அடக்க முயற்சி பண்ணாரு. அப்பறம் தான் தெரிஞ்சது இது ஆத்மாவோ, பேயோ இல்லையாம். உயிரோட இருக்குற ஏதோ ஒன்னாம். அதுவும் ஒரு பொண்ணாம். ரொம்ப சக்தி வாயிஞ்சதுனும், தன்னால அத நெருங்க முடிலனும் சொன்னாரு. அப்பறம் அவரு பதிரிமாறு கிட்ட ஏதோ சொல்ல, அவரு உடனே ஸ்ரீதர் இப்போ இங்க இருக்க வேணாம்னு சொல்லி அவன அமெரிக்காக்கு படிக்க அனுப்பிட்டாரு, அவங்க திருச்சபை மூலமா. மாதவிய மதுரை வக்போர்ட் காலேஜ் ஹாஸ்டல்க்கு பாதுகாப்பா வார்டன் கூட அனுப்பிட்டாரு பாய். ஆசாத் கபிர் பாய் சொல்லித்தான் எனக்கே தெரியும் அமராவதி உயிரும் ஆபத்துல இருக்குனு. அது தான்டி உன்ன பார்க்க வந்தேன். நல்ல வேலையா கருப்பு உங்ககிட்ட வரதுக்குள்ள நா வந்துன்டே. இத இப்போ ஊருக்குள்ள சொல்லி புரிய வைக்க முடியாதுடி. நாம உடனே போய் பாய பாக்கணும்டி. இப்போவே மெட்ராஸ்க்கு கிளம்பு பொன்னு. அமராவதி அப்பாக்கு அப்பறமா தகவல் சொல்லிக்கலாம்" என்று முடித்தாள் அன்னம்மாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எல்லாத்தையும் மாற்றிவிடும் சக்தி காலத்திற்கு மட்டுமே உண்டு. சில சமயம் மாற்றத்தை கூட மாற்றி அமைத்து எதுவும் மாறாமல் செய்து விடுகிறது காலம். காலபோக்கில் கிராமங்கள் குறைந்தன. நகரங்கள் பெறுகின. வயல்கள் வர்த்தகம் பெற்று மாளிகைகள் ஆனது. வீடுகள் பெறுகின. தூரங்கள் குறைந்தன. மக்கள் கூட்டமும் வாகன கூட்டமும் பெறுகின. நகர மய்யங்கள் விளக்குகளால் நிறைந்தன. கிட்டத்தட்ட இருள் என்ற நிலை இல்லாமலே போனது. மக்கள் மனதிலும் பேய் கதைகள், மந்திர மாயங்கள் குறைந்து போயின. ஆனாலும் ஆங்காங்கே இன்னமும் அமானுஷ்யங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. விடை தெரியா பல கேள்விகள் நீண்டு கொண்டே தான் இருக்கிறது.

நம் நகரங்களே இப்படி என்றால், மன்ஹாட்டன் போன்ற அமெரிக்காவின் பெரு நகரம் ஒன்றில் எவ்வளவு வளர்ச்சி இருக்கும். அந்த நாகரிகமும் வாழ்வியல் முறையும் விக்ரமின் மனதில் இருந்த கருப்பின் பயத்தை நிக்கியது. அது கருப்பின் ஞாபகத்தை கூட நிக்கியது எனலாம். தான் உள்ளுணர்வை கொஞ்சம் கேட்டிருந்தால் கூட இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருக்காது அவனுக்கு. இவனும் இந்தியா வந்தே இருக்க மாட்டான். விதி யாரைதான் விட்டது. அவனை நேராக மகேஷ் அம்மாவிடம் கொண்டு சேர்த்து இருந்தது.

*) அந்த கருப்பு உருவத்தின் மர்மம் என்ன? அதன் நோக்கமும் பூட்டி இறுக்கும் பெட்டிக்குள் இறுக்கும் பொருளும் என்ன?

*) பொன்னுதாய், அன்னம்மாளின் நிலை என்ன?
அமராவதி, மாதவி, ஸ்ரீதர் இவர்களின் கதை என்ன?

*) மகேஷ் எப்படி கருப்பிடம் மாட்டினான்? மகேஷ் அம்மாவிடம் விக்ரம் எப்படி சேர்ந்தான்?

*) சென்னை சென்றார்களா அன்னம்மாளும் பொன்னுத்தாயும் ?



இனி அடுத்த அத்தியாயத்தில் ...
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அத்தியாயம் - 6

ப்ரியமுடன் விஜய்



அன்னம்மாள் கூறியதுப் போல, பொன்னுத்தாயும் அவளும் சேர்ந்து மெட்ராஸிலிருக்கும் கபீர் பாயைப் சந்திக்கச் சென்றனர்.

தன் மகள் அமராவதியை, மெட்ராஸில் இருக்கும் தன் சொந்தத்தின் வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் கபீர் பாயின் இருப்பிடத்திற்குச் சென்றனர். அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு கபீர் பாயின் அறைக்குச் சென்றனர் அன்னம்மாளும், பொன்னுத்தாயும்.


"வணக்கம் பாய்..." என்று பாயிடம் நமஸ்கரித்த அன்னம்மாள், அவரிடம்... "பாய், இது என் தோழி... பேரு பொன்னுத்தாயி..." என்று தட்டுத் தடுமாறி கூறவும் பொன்னுத்தாயும் பாயைப் பார்த்து நமஸ்கரிக்க...

"இவங்கள எனக்கு தெரியும் அன்னம்மா." என்று கபீர் பாய் ஒரு மெல்லிய புன்னகையோடு கூறியவர், "ரெண்டுப் பேரும் உக்காருங்க. என்ன விசயமா வந்திருக்கீங்க?" என்று அவர் வினவவும் அந்த இரு பெண்மார்களும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, பின் அன்னம்மாளே அவர்கள் அங்கு வந்ததற்கான காரணத்தைக் கூறினாள்.


"பாய், நேத்து பொன்னு வீட்டுல அந்த கருப்பு உருவம் அவளோட அப்பா உருவத்துல வந்து அவள் மகள் அமராவதிய கொண்டுப் போக பார்த்துச்சு. நீங்க சொன்னதுப்போல வெள்ளப்பூண்டு மாலைய அவள் கழுத்துல போட்டு இப்போதைக்கு தப்பிக்க வச்சுட்டேன். ஆனால், இது தீர்வு இல்லைனு எனக்கும் பொன்னுக்கும் தோணுது. முதல்ல இந்த மாதிரி எங்களுக்கு நடக்க காரணம் என்ன? எதனால எங்களுக்கு இப்படிலாம் நடக்குது? இன்னும் எத்தன நாளுக்கு தான் நாங்க அந்த கருப்பு உருவத்த கண்டு ஓடுவோம்? இதுக்கு நிரந்தர தீர்வே இல்லையா? இப்போவாச்சும் எங்களுக்கு என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கணும் பாய்." என்று தங்கள் பிள்ளைகள் மூவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பயத்தில் அன்னம்மாள் பேசிமுடிக்கவும், ஒரு நிமிடம் அவரை ஆழமாகப் பார்த்த கபீர் பாய் பொன்னம்மாளையும் ஒரு முறை பார்க்க, அவளது முகத்திலும் பயம் குடிக்கொண்டிருப்பதைக் கவனித்தவர்,


"இப்போ என்ன அவசரம் அன்னம்? அதுக்குனு காலம் நேரம்லாம் வர வேணாமா? அந்த பெண் மிருதன, கருப்பு உருவம்னு சொல்லாதீங்க முதல்ல. அது பேய்யா இருந்தா, நீங்க அத கருப்பு உருவம்னு கூப்பிடலாம். ஆனால், அது இன்னும் உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஒரு மிருதன். மிருதன்னா என்னனு தெரியுமா? மிருகமும் மனுசனும் சேர்ந்த கலவை தான் மிருதன். அந்த பெண் மிருதன் ஏன் உங்கள துறத்துனுங்கற காரணம், உங்களுக்கு தெரியணும்... அவ்வளவு தானே? அதுக்கான காலம் வரட்டும். பொறுமையா இருங்க." என்று கபீர் பாய் கூறிய அடுத்த நொடியில், பதறிய பொன்னுத்தாய்..


"அந்த காலம் இன்னைக்கு வந்ததா நினச்சுக்கோங்க பாயி... என்னால இதுக்குமேல தாங்க முடியாது. நேத்து, அந்த பெண் மிருதன், ஆறு மாசம் முன்னாடி செத்துப்போன என்னோட அப்பா உருவத்துல வந்து, என் பிள்ளைய இழுத்துட்டுப்போக வந்துருச்சு. அப்போ மட்டும் அன்னம்மா வரலைனா, என்ன ஆகிருக்கும்னே தெரில பாயி. தயவு கூர்ந்து இதுக்கு மூலக்காரணம் என்ன? எதனால இந்த பெண் மிருதன் எங்கள இப்படி பாடாப்படுத்துது? நாங்க அதுக்கு என்ன செஞ்சோம்? ஏன் எங்கள துரத்திட்டே இருக்கு? இதுக்கு ஒரு முடிவே இல்லையா? உங்க்கிட்ட கெஞ்சி கேக்குறேன் பாயி. என்னைய காப்பாத்த முடியலனாலும் பரவாயில்ல. என் மகள் அமரவாதியவாச்சும் காப்பாத்தியாகணும்..." என்று பேசிய பொன்னம்மாளின் குரலிலும் முகத்திலும் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்த கபீர் பாய்,

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி தனக்கு பின்னாளிருந்த ஒரு துணி போன்ற ஒன்றை எடுத்து அதனை அவருக்கு முன் விரித்தார். அதனில் ஏதோ அரேபி வார்த்தைகள் இருந்தன. அதன் முன்பு ஆறு சோவிகளை உருட்டினார். அதனைக் கண்டு விரல்விட்டு எண்ணியவர், ஒரு வினாடி கண்களை இறுக்க மூடியவர்... விறுவிறுவென்று உள்ளே ஒரு அறைக்குள் விரைந்தார்.


அவ்வறையிலிருந்து வெளிவந்தவர், கையில் இரண்டு ஓலைச்சுவடிகள் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு, அன்னம்மாள் பொன்னுத்தாய் முன்னே அமர்ந்தவர் அந்த இரு ஓலைச்சுவடிகளையும் படித்து முடித்தார்.


பின் தன் மடியில் இடக்கையை ஊன்றி, முகத்தில் கலக்கத்துடன் அமர்ந்தவரை கவலையுடன் பார்த்த அந்த இரு பெண்களும்...
"என்ன ஆச்சு பாயி...? ஏன் கலக்கமா இருக்கீங்க?" என்று ஒருசேர கேட்க...


"உங்க ரெண்டு பேரோட கணவன்மாருங்க ராணுவத்துல இருக்காங்கல?" என்று கபீர் பாய் கேட்டதற்கு, ஆமாம் என்பதுப் போல் இருவரும் தலையசைக்க... கபீர் பாய் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

"நான் சொல்லப் போற விசயத்த, மனச திடப்படுத்திக்கிட்டு கேளுங்க. இல்ல, நீங்க பதறுவீங்கனா, நான் சொல்ல மாட்டேன். பரிகாரம் மட்டும் சொல்லிட்டு விட்டுருவேன்." என்று அவர் கூறவும், அன்னம்மாள்...

"என்னனாலும் சொல்லுங்க பாய். நாங்க கேட்டுப்போம். பதறமாட்டோம்." என்று கூறவும், ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டவர்...

"உங்க கணவர்மாருங்க... அதான் அன்னமோட புருசன் நாகப்பன்னும். அப்பறம் பொன்னுத்தாயி, உங்க புருசன் சாமிவேலும் கல்யாணத்துக்கு முன்னாடி, விடுமுறை நாட்கள்ல கொண்டாட உங்க கிராமத்துக்கு வந்திருக்காங்க..." என்று கபீர் பாய் அவ்விருவரின் கணவன்மார்களின் கடந்த காலத்தைப் பற்றி கூறியதாவது...

அன்னம்மாளின் கணவனாகிய நாகப்பனும், பொன்னுத்தாயின் கணவனான சாமிவேலும் காஷ்மீரில் இராணுவ பணியை முடித்துவிட்டு, விடுமுறை நாட்களைக் கழிக்க அவர்களின் கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

********************************

பைம்பொழில்... நிறைய வளங்கள் கொண்ட ஒரு அழகிய கிராமம். அக்கிராமத்தில் தான் நாகப்பன்னும், சாமிவேலும் பிறந்து வளர்ந்தனர். இருவருக்குமே ஒரே நேரத்தில் இராணுவத்தில் சேர்ந்து பணிப்புரிந்தனர். இருவரும் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க பைம்பொழிலுக்கு வருவர்.

அவ்வாறு ஒருமுறை அவர்களது விடுமுறையை கழிக்க அக்கிராமத்திற்கு வந்தனர். இருவரும் ஒன்றாக அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபொழுது, கண்ணுக்கெட்டிய தொலைவில் அழகிய இளம்பெண் ஆற்றங்கரையில், தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்தாள். முதலில் அவளைக் கண்டது என்னவோ சாமிவேல் தான்.


"டேய் நாகு..!! அந்த பொண்ண பார்த்தியா? என்ன அழகா இருக்கா!! வர்றீயா? அவள்கிட்ட போய் பேச்சு கொடுப்போ" என்று சாமிவேல் ஜொள்ள...

"நீ வேணும்னா அவகிட்ட பேசி விளக்கமாத்து பூச வாங்கிட்டு வா. நான் அதுக்குலாம் தயாரா இல்ல." என்று கூறிவிட்டு தன் பிறந்தவீட்டை நோக்கி விரைந்தான்.

ஆனால் சாமிவேலோ, அந்த வாலிபஸ்திரியிடம் பேச்சு கொடுக்க மெல்ல மெல்ல நடந்தான். அவளை நெருங்கியவுடன்,

"ம்ம்... வணக்கம்..." என்றவனின் வார்த்தைகள் டைப் அடித்தது. அந்த பெண்ணும் பதிலுக்கு ஒரு மிரண்ட பார்வை ஒன்றை பார்த்துவிட்டு, கையில் தண்ணீர் குடத்துடன் தன் அடிகளில் வேகம் கொடுத்து நடக்கலானாள்.

அதனைக் கண்டவனோ,
"என்னங்க...! ஒரு நிமிசம் நில்லுங்க ப்ளீஸ்..." என்று கூறவும் நடையை நிறுத்தி, அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள். அவளுக்கு முன் இரண்டே அடி முன்னர், ஒரு மரம் வெட்டி சாய்க்கப்பட்டது.

அது சாயப்போவதைக் கண்டு தான் அவன் தன்னை நிற்க கூறியிருக்கிறான் என்று எண்ணிய அப்பேதை மனமோ சாமிவேலை கண்களில் ஈர்ப்புடன் பார்த்தது.

இராணுவத்தில் பணிபுரிந்ததால் கட்டுகோப்பாக பராமரிக்கப்பட்ட தேகம்... அடிக்கும் காற்றில் கலையும் கேஷம்... ஆறடி உயரமென ஆண்மை ததும்பி தன் முன் நின்ற சாமிவேலை ரசித்துப்பார்த்தாள் அப்பெண்.

அவள் தன்னை ரசிப்பதை உணர்ந்த சாமிவேலின் உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது. வார்த்தை எதுவும் பேசாமல் மெல்ல அவளருகில் சென்றவன்,

"ஏய் பெண்ணே! உன் மயில்விழிக் கண்ணால் என்னைக் கண்டு என் மனதை ஏன் சுண்டியிழுக்கிறாய்? வாலிப வயதில் இருக்கும் ஓர் அர்ப மானிடன் நான் பாவமில்லையா? இப்படி பார்வையால் என்னை உருக்கும் தருவாயில், உன் செவ்விதழ் மலர்ந்து, உன் அழகிய நாமத்தை கூறி எனக்கு மோக்ஷம் தரமாட்டாயா?" என்று சாமிவேல் செந்தமிழில் அவளிடம் அவன் கேட்ட விதத்தில், அந்த பெண் சொக்கித் தான் போனாள்.

அதைவிட அவனின் நெருக்கம் அவளது பெண்மையை பாடாய் படுத்தியது. கன்னம் சிவக்க, அவனிடமிருந்து விலகியவள்,
"பேருலாம் சொல்லமாட்டேனே!" என்று கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாய் நடந்தாள்.


"ஹேய்..! உன் பேரு மட்டும் சொல்லேன்... ப்ளீஸ்" என்று அவன் கெஞ்ச...

"கெஞ்ச வேணா... ஒரு குறிப்பு தர்றேன். அத வச்சு என் பேர கண்டுபிடிங்க." என்று அவள் கூறவும்,


"சரி... கொடு" என்று சிரித்தபடி சாமிவேல் கூறினான்.


"என்னோட கண்ணப் பார்த்து நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க இப்போ. அதான் என் பேரு. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோங்க." என்றுக்கூறி விட்டு அவள் சென்றுவிட்டாள்.

'அவள் கண்ணப்பார்த்து அப்படி நான் என்ன சொன்னேன்?' என்று அவன் யோசிக்க... சட்டென அவன் தலைக்கு மேல் மின் பல்பு எரிந்தது.
"மயில்விழி..." என்று அவன் உதடு மெதுவாய் உச்சரிக்க, கண்களில் காதல் மின்னியது.


அன்று தொடங்கிய இருவரது பழக்கம், அவனது விடுமுறை நாள் முடியும்வரைத் தொடர்ந்தது. அடிக்கடி இருவரும், அதே ஆற்றங்கரை ஓரத்தில் சந்தித்து பேசினர். மெல்ல அது காதலாக மாறியது.

மயில்விழியோ, சாமிவேலை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினாள். அதோடு, சாமிவேல் - நாகப்பன்னின் விடுமுறையும் முடிவிற்கு வந்தது. அவர்கள் மீண்டும் ஊருக்குச் செல்ல இரண்டே நாட்கள் இருந்த நிலையில் சாமிவேல் மயில்விழியிடம் தனியே சந்தித்துப் பேசினான்.

மறுநாள் தனியே காட்டுப் பகுதிக்கு வந்து சந்திக்குமாறு சாமிவேல் கூறவும், இதற்கு அடுத்து அவனை என்று சந்திப்போமோ என்ற ஏக்கம் அவளை வாட்டியதால் அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
சாமிவேல் கூறிய நேரத்திற்கு மயில்விழி அன்று அந்த காட்டுப் பகுதியில் நிற்க... சாமிவேல் அங்கு வந்தான். அவனைக் கண்டதும் அவன் பிரிவை எண்ணி கண்ணீர் துளி அவள் கண்ணில் மெல்ல எட்டிப்பார்த்தது. அவளை சமாதனம் படுத்தியவன், அவளைக் கட்டியணைத்தான்.

அவளும் அவன் கட்டுக்குள் புகுந்தவள், சாமிவேலின் மார்பில் முகம் புதைத்தாள். அவளது பூமுகத்தை பூக்குவியலை அள்ளுவது போல் மெல்ல ஏந்தியவன், அவளது செவ்விதழை நோக்கி குனிய... அவனிடமிருந்து விலகியவள்,

"இதெல்லாம் இப்போ வேணாங்க..." என்று தலைக்குனிந்து மயில்விழி கூற, அவளது கையை பிடித்தவன் கெஞ்சும் தொணியில்...


"ப்ளீஸ்... ப்ளீஸ்... இன்னைக்கு மட்டும். ப்ளீஸ்.... நாளைக்கு நான் ஊருக்கு போயிருவேன். அப்பறம் எப்போ வருவேன்னே தெரியாது." என்று சாமிவேல் கெஞ்சினான்.

அவன் கெஞ்சுவதைக் கேட்டும் மயில்விழி முடியாது என்றபடி இடவலமாக தன் தலையை ஆட்டியவாறு, அவனிடமிருந்து தள்ளி, பின்னோக்கி நடந்துக்கொண்டிருக்க... யார் மீதோ மோதி நின்றாள் அவள். திடுக்கிட்டவள், பின் திரும்பி யார் மீது மோதினோம் என்ற யோசனையில் பார்க்க... அங்கே நாகப்பன் சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான்.


"என்ன மயிலு நீ? என் நண்பன இப்படி கெஞ்ச விடுறியே! என்ன அவன் பெருசா கேட்டுட்டான்? ஒரு முத்தம் தானே? கொடுத்துட்டு போயேன்." என்றவன் மயில்விழியை தலை முதல் கால் வரை தன் நாடியை தடவியப்படி, கீழுதட்டைக் கட்டித்தவாறு, ஒரு மார்க்கமாக பார்த்தான் நாகப்பன்.

அவனது பார்வையின் கொடூரத்தை கண்டுக்கொண்ட மயிவிழியோ, தன் தாவணி முந்தானைக் கொண்டு, தன் தோள்பட்டையை மூடிக்கொண்டு சாமிவேலிடம் ஒண்டியவள்,

"யாருங்க இது? ஆளும் சரியில்ல... அவர் பார்வையும் சரியில்ல... பேச்சும் ஒரு மார்க்கமா இருக்கு?" என்றபடி சாமிவேலின் முகத்தை அவள் நோக்க... அவன் பார்வை அதைவிட கொடூரமாக இருந்தது.

அதனைக் கண்டவள் சற்று மிரட்சியோடு பின்னோக்கி நடந்தவள் வேகமாக அவர்களிருவரிடமிருந்து தப்பித்து ஓடத் தொடங்கினாள். அவளை துறத்திக்கொண்டு வந்த சாமிவேல், குறுக்கு பாதை வழியாகப் போய் அவளது வழியை மறித்தான்.

அதிர்ந்து நின்ற மயில்விழி, பின்னாடி ஓட எத்தனிக்க... அங்கே நாகப்பன் காமப்பார்வையோடு நின்றுக்கொண்டிருந்தான்.
இருவரும் அவளை நெருங்க, சாமிவேலைப் பார்த்தவள்...

"உங்கள எவ்வளவு நம்பினேன்? இப்படி.... ச்சி...!" என்று கண்களில் ஏமாற்றக் கண்ணீர் வழிய கேட்டாள்.

அதற்கு அவனோ,
"என்ன செய்ய..? வருசம் முழுக்க காடு மலைனு இந்த நாட்டுக்காக நாங்க பெண்கள் வாசம் கூடப் படாம வாழுறோம். அப்படி காஞ்சு ஏங்கிப் போயிருந்த எங்க கண்ணுக்கு, அறுசுவை விருந்து மாதிரி இந்த ஊருக்கு வந்த முதல் நாளே நீ பட்ட. அப்பவே உன்னைய ஆசைத்தீர அனுபவிக்கணும்னு தோணுச்சு. ஆனால், நீ தமிழ் பொண்ணாச்சே! தொடக்கூடாது பண்ணக்கூடாதுனு சொல்லுவ. அதுமட்டுமில்லாம கிராமத்து பொண்ணு வேற... வந்த அன்னைக்கே நாங்க இப்படி பண்ணிருந்தா, நீ ஊர கூட்டிருப்ப. அதான் காதலிக்குற மாதிரி நான் நடிச்சு, உன்னையவும் என்னோட காதல் வலையில விழவச்சு, உன் நம்பிக்கைய சம்பாதிச்சேன். ஆனாலும் இன்னைக்கு நீ ஒத்துழைக்க மாட்டேங்குறீயே...!" என்றவன், தன் கை முஷ்டியை இன்னொரு கையில் குத்தினான்.


"ச்சீ... கருமம். இப்படி பேச உனக்கு வெக்கமா இல்ல? பார்க்குற பொண்ணுட்டலாம் இப்படி தான் நடந்துப்பியா? உனக்கு அம்மா, அக்கா தங்கச்சி இல்ல?" என்று கோபத்தின் உச்சிக்கு சென்ற மயில்விழி பொறிந்துத்தள்ள...


"ச்சு ச்சு ச்சு... அப்படிலாம் பேசக்கூடாது. அக்கா தங்கச்சி அம்மாலாம் வேற மா. நீ........ வேற மா........" என்ற சாமிவேலின் குரல் ஒரு மார்க்கமாக ஒலிக்க, தன் முகத்தை சுளித்தாள்.


"இங்க பாரு மயிலு. ஒழுங்கா எங்க ரெண்டுப் பேருக்கும் ஒத்துழச்சனா, சேதாரம் கம்மியா இருக்கும். இல்லைனா, கீரல் காயம்னு ரொம்ப கஷ்டப்படுவ..." என்ற நாகப்பன், அவள் தோற்பட்டையில் கைவைக்க... அதனை தட்டிவிட்டவள்,

"என்னைய அசிங்கமான நோக்கத்தோட தொட நினைக்காதீங்க டா. நான் பெண் டா. நெருப்பு...!! சுட்டு பஸ்மாக்கிடுவேன் டா எச்சநாய்களா." என்று கண்கள் சிவக்க அவள் கூறியதைக் கேட்டு இருவரும் சிரித்தனர்.

"சரி... அதையும் பார்த்துடுறோம்..." என்ற சாமிவேல், அவளது தாவணியை உருவ... அவனது கன்னத்தை அறைந்தாள் மயில்விழி.

"என்னடி...! தாவணிய உருவியும் வெக்கமே இல்லாம நின்னு எங்கள அடிக்குற?" என்று பற்கள் நறநறக்க பேசிய நாகப்பன், அவளது தலைமுடியை பிடித்து இழுக்க, சாமிவேலோ தன் சட்டையை கழட்டிவிட்டு அவளது கைகள் இரண்டையும் கட்டி கீழே தள்ளினான்.

காடே அலறும்படி அப்பேதைப் பெண்ணின் குரல் கேட்டது. இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், சாமிவேலும் நாகப்பன்னும் அவரவர் உடையை உடுத்திகொண்டு கீழே படுத்திருந்த மயில்விழியை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்.

"ஹ... என்னமோ சொன்னீயே! பெண்ணாம்....!!! நெருப்பாம்...!! தொட்டா பஸ்ப்பம் ஆகிருவோமாம்...!! எங்க? ஒன்னும்மாகல எங்களுக்கு? நல்லா தானே இருக்கோம்..? வந்துட்டா பைத்தியம் மாதிரி பேசிட்டு. பெரிய கண்ணகி இவ. இவள தொட்டா நாங்க பஸ்பமாக..." என்று சாமிவேல் ஏளனமாகக் கூறினான்.

அதைக் கேட்டு, நாகப்பன்னும் நக்கலாக சிரிக்க... ஆவேசமாக எழுந்தாள் மயில்விழி.

"அடேய் மிருதன்களா..!! ஒரு பொண்ண தன்னந்தனியே மோதக் கூட துப்பில்லாம ரெண்டு பேரா வந்த கீழ்தரமான ஜென்மகள் டா நீங்கள்லாம். மிருகம் கூட அதோட இரைய ஒத்தையா வந்து தான் டா வேட்டையாடும். நீங்கள்லாம் மனுச ஜாதியே இல்லாதவனுங்க. என்னையவா டா கிண்டலா பேசுறீங்க? என்னைய இன்னைக்கு நீங்க இப்படி பண்ணதுக்கு உங்கள் பரம்பரையவே அளர விடுறேன் டா...ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தியும் இன்னைக்கு செத்துருவோமோ, நாளைக்கு செத்துருவோமோ னு ஒவ்வொரு நொடியும் கலங்கடிக்க விடப்போறேன். உன் பரம்பரையே ஒன்னுமில்லாம ஆக்கிக்காட்டுவேன். அப்போ ஒரு நாள் அதுலாம் செஞ்சது நான்னு தெரிய வரும் டா உங்களுக்கு. என்னோட கால்ல நாய் மாதிரி விழுவீங்க, உங்க உயிர எடுத்தாச்சும் உங்க குடும்பத்த விட்டுற சொல்லி. அப்போவும் நான் அடங்க மாட்டேன் டா. உங்க ரெண்டு பேர போல ஒரு பொண்ண சீரழிக்குற எல்லா மிருதன்களுக்கும் உங்க நிலைமை ஒரு பாடமா அமையும் டா...!!!" என்று அவள் ஆங்காரமாக கூற..
அதனைப் பொருட்படுத்தாமல் சாமிவேலும், நாகப்பன்னும் கிண்டலாக சிரித்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

****************************

இந்நிகழ்வை ஒருவரி விடாமல் கபீர் பாய், அன்னம்மாளிடமும் பொன்னுத்தாயிடமும் கூறிமுடித்தார்.

"அன்னைக்கு உங்க கணவன்மாருங்க அந்த பொண்ணு மயில்விழி பேச்ச பெருசா எடுத்துக்கல. ஆனால், அவள் அடுத்த நாளே ஊரு ஒதுக்குப்புறத்துல வாழ்ந்துட்டு இருக்குற அகோரிகள்ல போய் சந்திச்சா. அகோரிகள் கிட்ட அவளுக்கு நடந்த அநீதிய ஒன்னுவிடாம சொல்லவும், அவங்க அவள சிஷ்யையா ஏத்துகிட்டாங்க. அவங்க பல அதர்வன மாய மந்திரங்கள், மாய தந்திரங்கள்னு அகோரிக்களுக்கு மட்டும் தெரிந்த பல வித்தைகள்ல கத்துகிட்டாள்.

அழகே உருவா இருந்த மயில்விழி, அகோரிகள் கூட வாழ்ந்த்துனால, தோற்றத்திலும், மந்திர தந்திர வித்தைகளிலும் முழுதா அகோரியா மாறினாள். அவள் கத்துகிட்ட அதர்வன மாய வித்தைகள்ல உபயோகிச்சு, சாவே இல்லாத வரமும் பெற்றாள். அவளுக்கு துஷ்ட சக்திகளும் துணை இருக்கு. அதை வச்சு தான் பில்லி சூனியம், பேய், கருப்பு உருவம்னு எல்லாத்தையும் ஏவிவிட்டு உங்கள் குடும்பத்த கஷ்ட்டபடுத்துறாள். இது இதோட நிக்காது. உங்கள் பொண்ணு, அவள் மகன், அந்த மகனோட பேரன்னு யாரையும் விட மாட்டாள். உங்கள் குடும்பத்த அழிக்கவும் மாட்டாள். வாழவும் விடமாட்டாள். வாழவிட்டு நோகடிப்பாள்." என்று கபீர் பாய் கூறிமுடிக்க,

அன்னம்மாளும் பொன்னுத்தாயும் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருந்தனர்.
சில வினாடிகளுக்கு அங்கு காற்றின் சப்தத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

அந்த நிசப்தமான சூழ்நிலையை முதலில் கலைத்தது என்னவோ அன்னம்மாள் தான்.

"பாய்..! இந்த விசயத்த கேட்டு என் மனசு ரொம்ப வலிக்குது. எந்த ஒரு பொண்ணுக்கும் அந்த மயில்விழிக்கு ஏற்பட்ட மாதிரி நிலைமை ஏற்படக்கூடாது. அவளோட அந்த துயரமான நிலைக்கு காரணமா, எங்களோட கணவன்மாருங்களே இருப்பாங்கனு நாங்க ரெண்டு பேருமே நினச்சுப் பார்க்கல." என்று கூறியவளின் குரல் அழுகையில் நடுங்கியது.

அன்னம்மாளோ, ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவளாய்... "பாயி! நான் ஒன்னு கேட்கலாமா?" என்றவளின் குரலில் ஓர் வெறுமைத் தெரிந்தது.

"ம்ம்... கேளுங்க ம்மா." என்ற கபீர் பாயின் வார்த்தைக்கு பதிலளிக்கும் விதமாக அன்னம்மாள் பேச ஆரம்பித்தார்.

"அந்த மயில்விழி பொண்ணுக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம்...." என்றவள், ஒரு நெடிய பெருமூச்சுவிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள். "ம்ம்ம்ம்ம்.... அந்த பொண்ணுக்கு நடந்த அக்கிரமத்துக்கு என்ன பரிகாரம் பண்ணாலும் ஈடாகாது. எங்கள் பிள்ளைகள்ல மட்டுமாச்சும் காப்பாத்த முடியுமா? எங்கள் புருசன்மாருங்கள்ல சேர்த்து, எங்கள் நாலு பேரோட உசுர கூட அந்த பொண்ணு என்னனாலும் பண்ணட்டும். ஆனால் எங்க குழந்தைகள்ல மட்டுமாச்சும் அந்த பொண்ணு கஷ்டபடுத்தாம இருக்கணும்னு ஒரு தாயா என் மனம் கேக்குது பாயி. இதுக்கு ஏதாவது வழியிருக்கா பாயி?" என்ற அன்னமாளின் வார்த்தையில் கபீர் பாய் பொன்னுதாயி முதற்கொண்டு திடுக்கிட்டு அவளை நோக்கினர்.


இனி அடுத்த அத்தியாயத்தில் ...


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அத்தியாயம் 7



அருள்மொழி காதலி.​



அன்னம்மாள் கூறியதை கேட்டதும்



அதிர்ச்சி அடைந்தனர் பொன்னுத்தாயும் அந்த பாயும்.



"என்னம்மா பேசுறீங்க. புரிஞ்சு தான் பேசுறீங்களா. வேற எதாச்சும் வழி இருக்கானு யோசிக்க மாட்டீங்களா. "



"எனக்கு எங்க புள்ளைங்க ரொம்ப முக்கியம். அதுவுமில்லாம ஒரு பெண்ணோட சாபத்தை வாங்கிட்டு எங்கபோய் ஒளிஞ்சாலும் அந்த சாபம் விடாம துரத்தும் அதுதான் இப்பவும் நடந்திருக்கு. அவனுங்களால எங்க புள்ளைங்களையும் பழிவாங்க துடிக்குது அந்த மிருதன். "



"என்னம்மா பேசுற நீ.. எங்களை கொன்னிடு எங்க புள்ளைங்க விட்டுடு சொன்னா கேட்குறதுக்கு அது என்ன மனுசனா.. மிருதன்மா.... நினைக்கவே முடியாத வாழ்க்கை வாழுறவங்க.. அவங்ககிட்ட மனுஷங்களுக்கான எந்த குணத்தையும் எதிர்பார்க்க முடியாது.. "



"பாய்... நீங்க என்ன பண்ணுவீங்கனு எனக்கு தெரியல... ஆனா எங்க புள்ளைங்களாவது நல்லாயிருக்கணும் சாமி.. அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க" என்றவள் கையெடுத்து கேட்டிட



"என்னமா பண்ணுற... சாமிக்கோ பிசாசுக்கோ ஏதாவது பண்ணனும்னா நான்‌ பண்ணுவேன். ஆனா நீ உருவமா இருக்க மிருதனை அடக்க கேட்குறியே.. ஒரே ஒரு வழி தான் இருக்கு.. உம்புள்ளைங்கள நாட்டைவிட்டு கடல்தாண்டி அனுப்புங்க... அவங்க இனி இந்தநாட்டுக்கே வராத மாதிரி பண்ணுங்க..." என்றிட,



பொன்னுத்தாயோ "அப்படி பண்ணிட்டா எங்க புள்ளைங்கள அந்த மிருதன் எதுவும் பண்ணாத" என வினவினார்.



"கட்டாயம் உங்க வழிமுறைகளை(வாரிசு) பழிவாங்கும்... அவங்க இந்த ஊருக்கு வரும்போது.. ஒரு கட்டத்துக்கு மேல அவங்களே வரக்கூடாது நினைத்தாலும் அந்த மிருதன் வரவைக்கும் ‌இந்த சாபம்நிறைந்த நிலத்தில். "என்றிட தாய்மார்களுக்கோ கிலி கூடியது.



இருவரும் அப்போதைக்கு நினைத்தது தற்போது பிள்ளைகள் காப்பாற்றபட்டால் போதுமென்பதே... கடல்தாண்டி சென்றுவிட்டால் காலனும் காணாமல் போய்விடுவான் என நினைத்தனர். ஆனால் காலன் அவர்களையே தொடர்வான் என்பதை அவர்கள் அறியவில்லை.



"பாய்... எங்க புள்ளைங்க கூட நாங்களும் வேற நாட்டுக்கு போயிட்டா எதாச்சும் பிரச்சனையாகுமா "என அன்னம்மாள் பிள்ளைகள் தாயின்றி தனியே தவிக்குமே எனும் எண்ணத்தில் கேட்க பாயோ,



" என்ன பொண்ணு பேசுற நீ... சித்தம் கலங்கிவிட்டதா... உன் பரம்பரையே வேரறுக்க காத்திருக்கிறது அந்த மிருதன். மிருதனின் பழிவெறியை மேலும் ஏற்ற போகிறாயா நீ." என்றிட



அதற்கு பதில் கூறும் தைரியம் பெண்ணவளுக்கு இல்லை.



பெண்கள் அமைதியாகிட அவரே தொடர்ந்தார்.



"நீ ஈன்றெடுத்த மகவுகளை



நீலங்கள் தாண்டி



நீண்ட தூரம் அனுப்பிவிடு.



நிறைவான மனதுடன் திரும்பிடு



நின் குலம் காக்க வழியமைக்கிறேன்



திழைத்திடும் உன் குலம்



உன்‌வழியே" என்று வாக்குரைக்க தான்‌ உயிர்விட்டாலும் தன் மக்கள் உயிரோடு இருந்திடுவர் எனும் நம்பிக்கையில் தோழிகள் இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.



ஸ்ரீதர் முன்னமே அமெரிக்கா சென்றிருக்க அமராவதி மாதவி இருவரையும் கிறிஸ்தவ பாதிரியாரின்‌ உதவியுடன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டி நின்றனர்.‌ இவர்களின் நிலை அறிந்த பாதிரியாரும் பிள்ளைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இருவரும் தங்கள் கணவர்களிடம் எதுவும் கூறவில்லை.



கணவன்மார்களுக்கு அனுப்பும் கடிதத்தில் யாவரும் நலம் என கூறி அவர்களை நம்பவைத்தனர்.



அமராவதி, மாதவி இருவரும் இத்தாலி சென்றனர்.



சிதறிப்போனது சின்னகுடும்பம் அது.



பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்ற மறுநாளே தோழிகள் இருவரும்



ஆசாத் கபிர்‌பாயிடம் வந்தனர்.‌ அவரும் ஏதேதோ கூறி இருவரையும்



ஒரு காட்டுபகுதியினுள் அழைத்து வந்தார்.‌



அங்கு பூஜைக்கு



தேவையான‌ அனைத்தும் இருக்க



அன்னம்மாள் பொன்னுத்தாயி இருவருக்கும் புரிந்தது தங்களுக்கான‌ இறுதிசடங்குக்கான‌ வேலைகளே இதுவென்று. மனதை கல்லாக்கிகொண்டு பிள்ளைகளின் வாழ்வுசிறக்க வேண்டி வந்தவர்கள் நிறைவாகவே உயிர்விட துணிந்தனர். ஆனால் இங்கு தான் நேர்ந்தது அந்த தவறு. காலத்துக்கும் தொடர்ந்த தவறு.



பொன்னுத்தாயின் கழுத்தை அறுத்து கொன்றவர் அவளின் ரத்தத்தை எடுத்து ஒரு சிறு குடுவையில் அடைத்தார். இதை கண்டதுமே



அன்னம்மாளின் சகலமும் நிலைகுலைந்து போனது. இருந்தும் தைரியமாய் உயிர்தியாகம் செய்யவந்தவளை திகைத்து தான்‌ பார்த்தார்‌ அந்த பாய்.‌



ஒரு பெண்ணுக்குள் இத்தகைய தைரியமா என்று. அன்னம்மாளின் கரத்தினில் கீறலை ஏற்படுத்தி அவளின் இரத்தத்தை அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் சொட்டு சொட்டாக ஊற்றினார்.



இரண்டு மூன்று சொட்டாக ஊற்றும் போதே அந்த மிருதன் அங்கு பெருங்குரலெடுத்து ஊளையிட்டு கொண்டே வந்தது.



அதன் வருகையை உணர்ந்தவர் பொன்னுத்தாயின் இரத்தத்துடன் அன்னம்மாளின் இரத்தத்தையும் கலந்து குடுவையை இரும்பு பெட்டியினுள் அடைத்து எவ்வித தீயசக்தியாலும் திறக்கமுடியாத படி மந்திரங்கள் ஓதி அடைத்தார்.



அப்பெட்டியை பாறையின் இடுக்கினில் மறைத்தவர்



அன்னம்மாளையும் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தி குற்றுயிராய் விட்டுவிட்டு வந்தார்.



குற்றுயிராய் கிடந்த அன்னம்மாளின்‌ கண்களோ பீதியில் நிறைய வந்த மிருதனின் விழிகளில் இரத்தம் வழிய கிடந்த இரு உடல்களையும் பார்த்து நிறைவானது போல் ஒரு‌மகிழ்ச்சி. அன்னம்மாளின் அருகே சென்று அவளின் கண்களை பார்க்க அக்கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய அதை கண்டு காடே எதிரொலிக்கும் வண்ணம் சிரித்தது.



குற்றுயிராய் கிடந்தவளும் கைகளை கூப்ப



உன் எண்ணம் நான் அறிவேன்.‌



நீ உயிர்விட்டால் உன்‌மகவுகள் பிழைக்குமோ என கேட்டிட அன்னம்மாளின் கண்களோ கண்ணீர் சிந்தியது. உன் மகவுகளுக்காக தானே இந்த தியாக மரணம். உன்‌மகவுகள் பிழைத்து கொள்ளும். ஆனால் உன்‌மகவுகளின் மகவிற்கும் எனக்கும் பெரும்போராட்டம் நடக்கும்.



என்னவென்றும் அறியாது ஏதும் புரியாது என்னிடம் அவர்கள் தவிப்பர்.



தவிக்க செய்வேன். அதை உன்‌கண்கொண்டு காணச்செய்வேன். அதுவரை உங்கள் குருதி இருந்திடும் இரும்பினூடே. என‌ சபதமிட்டு மிருதன் சொல்ல பெருமூச்செடுத்து பிரிந்தது அன்னம்மாளின் இறுதிமூச்சு.



மறுநாளைய செய்தியில் மலைப்பிரதேசங்களில் கடும்பனி.



குளிர் தாங்கா நிலையில் தமிழக வீரர்கள் இருவர் உயிரிழப்பு எனும் செய்தி வந்தது. காட்டில் இருவர் உடலும் சிதைந்திட மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட நண்பர்கள் இருவரின் உடல்களும் தீக்கிரையாக்கப்பட்டது மலையினிலே... மிருதனின் கோட்டையான மலையினில்.



மிருதனின் வாக்குபடி ஸ்ரீதர் மாதவி அமராவதி நீண்டாயுசுடன் வாழ்ந்து தங்கள் வாழ்வை முடித்தனர்.



ஆனால் மூவருக்கும் கிடைக்காத பாக்கியம் தங்கள் பிள்ளைகளின் உடனிருப்பு. மூவரும் ஏதேதோ முறையில் தங்கள் பிள்ளைகளை உயிருடன் பறிகொடுத்திருந்தனர்.



அமெரிக்காவில் இருந்த இருபத்தி எட்டு வயதான ஸ்ரீதர் தங்கையை தேடி சென்னை வர பாதிரியார் அமராவதி மாதவி இருவரின்‌ இத்தாலி முகவரியை கொடுத்து அனுப்பினார்.



அவனும் சந்தோஷமாக இருவரையும் தேடி வர அங்கோ அமராவதி மட்டுமே குடும்பத்துடன் இருந்தார்‌. மாதவி ஒரு இந்தியரையே காதலித்து அவரையே திருமணம் செய்ததாகவும் அவருடன்‌ இந்தியா சென்றதாகவும் கூற ஸ்ரீதரும் அமராவதியையும் குடும்பத்துடன் அழைத்து கொண்டு தங்கையை காணவந்தான்.



ஸ்ரீதர் அமெரிக்கா பெண்மணியை மணந்து அழகான ஆண்குழந்தையுடன் தன் வாழ்வை வாழ்ந்து வந்தான்.



அமராவதிக்கு ஒரு‌ மகனும் மகளும்.



மாதவிக்கு ஒரு‌மகள்.‌



டெல்லி வந்த ஸ்ரீதர் அமராவதி குடும்பத்தினர் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர். அங்கு நடந்த மதகலவரத்தில் தப்பிக்க நினைத்து வெளியே வந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளையும் தவறவிட்டவர்கள் வாழ்க்கை துணைகளையும் இழந்தார்கள். அனைவரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கபட அமராவதியும் ஸ்ரீதரும் அங்கனமே பிரிந்தனர்.



இந்தியா வந்தவடனேயே ஏன் இப்படி நடந்தது என்று யோசிக்கவுமில்லை இருவரும். அதன்பிறகு அமராவதி ஸ்ரீதர் இருவரும் என்னவாகினர் என்பதை இருவரும் அறியவில்லை.



அவர்கள் எங்கோ வாழ்கிறார்கள் எனும் நம்பிக்கையில் காலத்தை நகர்த்தினர்.



மாதவி தன்‌ கணவரின்‌ வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு கணவன் பலியாகிட இவளது காலும் இழந்து மனபாரம் கூடி பித்துபிடித்தவளாகிட அவளது குழந்தை அனாதை இல்லத்தில் ஒப்படைக்கபட்டது.



ஆகமொத்தம் மிருதனின் வாக்குபடி



அன்னம்மாள் பொன்னுத்தாயின் மகவுகள் மூவரின் உயிரும் இயற்கையாய் பிரந்ததே அன்றி மிருதனால் எவ்வித பாதிப்பும்‌ஏற்படவில்லை. அவர்களின் உடனிருந்தவர்களே பாதிக்கபட்டு உயிரையும் விட்டிருந்தனர். இவையாவும் காலத்தின்‌சூழ்ச்சியா மிருதனின் சூழ்ச்சியா என்பது தான்‌அறியப்படவில்லை.



மதகலவரத்தில் காணாமல் போன குழந்தைகள் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கபட நால்வரும் இணைந்தனர் அனாதைகளாய் அனாதை இல்லத்தில் மகேஷ்,விக்ரம், அமிர்தா, அனு என்னும் பெயரில். அங்கும் பிரிக்க பட்டனர். அனுவும் விக்ரமும் அனாதைகளாகவே இருந்திட மகேஷூம் அமிர்தாவும் தத்தெடுக்கபட்டனர் இரு குடும்பங்களால்.



வருடங்கள் கடந்திட



காலங்கள் நகர்ந்திட



படிப்பும் பதவிகளும் பெற்றிட



இதோ மீண்டும் எமனின் முன்னால்



அன்னம்மாள் பொன்னுதாயின் வாரிசுகள்.



காப்பாற்றுவார்களா தோழிகள் தங்கள்‌வாரிசுகளை???



😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁



அமிர்தாவின் இரத்தம் புசிக்க ஆசைகொண்ட அந்த கோர உருவம் தான் விக்ரம் மகேஷின் தாயின் சந்திப்பினையும் ஏற்படுத்தியது. கடைசி விதிவிளையாட்டின் ஆரம்பமும் இங்கே துவங்கியது.



நண்பர்களுடன் இணைந்தே சென்னை வரலாம் என நினைத்திருந்த விக்ரம் திடீரென‌ஏதோ தோன்ற பணம் அதிகமாக செலுத்தி டிக்கெட் பெற்று அன்றுமாலையே இந்தியா நோக்கி புறப்பட்டான்.‌



காலையில் வந்து சேர்ந்தவனுக்கு கூகுள் மேப் தவறானவழிகாட்ட வந்து சேர்ந்தான் மகேஷ் அனு அமிர்தா சென்ற கோவிலுக்கு. அங்கே கோவிலின் பின்புறத்தில் மயங்கிய நிலையில் இருந்த மகேஷின் தாயை கண்டவன்‌ முதலுதவி செய்து அவரை அவரின் வழிகாட்டுதல் படி வீட்டிற்கு அழைத்துவந்தான்.



கார் டிரைவருக்கு காசு கொடுத்து அனுப்பியவன் மகேஷின் வீட்டிற்குள் நுழைந்தான்.‌ ஹாலில் முறைத்து கொண்டு நின்றிருந்தாள் அனு.



மகேஷிடம் தன்னை அறிமுகபடுத்தியவனை கண்ட மகேஷின் மனமோ அப்போ அந்த கடைசியானவன் நீதானாடா



ஏன்டா நீங்களா வந்து வந்து வலைல சிக்குறீங்க என கேட்டிட அதனை அப்போதைக்கு தள்ளி வைத்தவன்



அவர்களுடன் ஒன்றிபோனான்.‌



அதிலும் விக்ரமின் பார்வை அனுவிடம் படிவதையும்



அனு விக்ரமை முறைப்பதையும் கண்டவன் என்னமோ இருக்கு. இவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குமோ எனும் யோசனையடனே இருந்தான்.



அந்நேரம் கிச்சனில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்க அங்குசென்று பார்க்க



அமிர்தா விரல்களில் கீறலுடன் கண்ணாடிதுகள்களை எடுத்து கொண்டிருந்தாள்.



அதை கண்டு பதறிய மகேஷ் அவளின் கரம் பிடித்திட அவளோ கையை உதற இரத்தமோ சொட்டு சொட்டாய் அங்குமிங்கும் சிதறியது. சிதறிய இரத்தத்தை கண்டு சிரித்தது அந்த கோர உருவம்.



சிதறிய இரத்தத்தை கண்டதும்



பயங்கொண்ட மகேஷின் தாய்



" கண்ணா மகேஷ்... அமிர்தா இரத்தம் இருக்கும் இடத்தில் எல்லாம் தண்ணீர்‌தெளி.‌ அவ இரத்தம் தனிஇரத்தமா எங்கேயும் இருக்ககூடாது என்றிட,



அவனுக்கு மர்மங்கள் நடப்பது தெரிந்து இருந்ததால் தாயின் கூற்றை மறுக்காமல் உடனே பக்கெட்டில் தண்ணீர்‌ கிச்சன் முழுவதையும் தண்ணீரால் நிறைத்தான். அமிர்தாவின் இரத்தம் நீருடன் கலந்தது.



அதை கண்டதும் வெகுண்டெழுந்த கோர உருவம் தன் சத்தத்தை உரக்க எழுப்பியது.



வௌவால் கூட்டமாய் சத்தமெழுப்புவதை போன்று வீட்டிலிருந்தவர்களுக்கு கேட்க



மகேஷின் தாய் தான் பதறினார். ஒரு கணம் கவனம் தவறினால் மரணம் நிச்சயம்.



"எல்லாரும் நான் சொல்றதை கேளுங்க... நாலு பேரும் ஒரு காரணத்துக்காக இங்கே சேர்க்கபட்டிருக்கீங்க... இப்போ யாருக்கும் நான் எந்த விளக்கமும் சொல்ல போறதில்லை. நீங்க நாலுபேருமே ஆபத்தில இருக்கீங்க‌. உங்க நாலு பேரையும் சேர்க்கிறதுக்காக தான் உங்களை சுற்றி உங்களை அறியாமலே பல அமானுஷ்யங்கள் நிறைவேறியது."



"இப்போ நீங்க நாலு பேரும் சேர்ந்துட்டீங்க. என்ன ஏதுனு யோசிக்காம போய் படுங்க. பயப்படாம இருங்க. இந்த வீட்டுக்குள்ள இருக்கிற‌ வரைக்கும் உங்களுக்கு எதுவும் நடக்காது.



ஆனா நாளை காலையிலே வீட்டை விட்டு வெளியே போகணும்.‌ நீங்க செய்ய வேண்டிய‌மிகப்பெரிய காரியம் இனி தான் இருக்கு" என்றிட,



யாருக்கும் எதுவும் புரியவில்லை. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஏதேதோ அவர்‌கூறிட



மகேஷை தவிர‌ மற்ற‌ மூவருக்கும் பயமானது. மகேஷிற்கோ சந்தேகமே வந்தது.



அதுவுமில்லாமல் தாயையும் இதில் உபயோகபடுத்துதா அந்த கோர உருவம் என‌யோசித்திட



அவன் அறியவில்லை கோவில் கருவறையில் இருந்த தாயே அவனின்‌ தாய் வடிவில் வசந்தம் வீச காத்திருக்கிறாள் என்பதனை.... வசந்தத்திற்கு முன் வரும் வாடை கொண்ட காற்றை (துன்பம்) தாங்கும் சக்தி தருபவளும் அவளே...



மகேஷ் தன் தாயிடம்" அம்மா என்னம்மா சொல்லுறீங்க.. நாங்க நாலு பேரு எதுக்கு சேரணும்.‌எங்களை சுற்றி என்ன நடக்குது? அது எப்படி உங்களுக்கு தெரியுது என கேட்க மௌனமே சாதித்தார்‌ அத்தாய்.



ஆனால் நினைவுகளோ கோவிவில் தான்‌ மயங்கிவிழும் முன் நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது.



மகேஷ் தோழிகள் இருவரையும் தேடிச்செல்ல



அங்கிருந்த கருவறையில் ஒருவித ஒளி தோன்றியது. ஏதோவொரு உந்துதலில் அந்தபுறம் திரும்பிய



தாயின் கண்களில் ஒளிபட



ஒளியை நோக்கி தன்நடையை துவங்கினார் அவர்.‌



ஒளியோ நீண்டு கொண்டேயிருக்க இவருக்கோ இவ்வுலகம் மறந்துபோனது.‌ ஏதோவொரு உலகத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.



பல பல நிகழ்வுகள் நொடிபொழுதில் நினைவுகளில் கடந்துசெல்ல



சாபமும் பகையும் பழிவெறியும்



தெரிந்திட தோழிகளின் தியாகமும் தோன்றிட அது நிலைத்து போனது அவரின்‌ நினைவுகளில்.



அந்த தியாகத்திற்காகவே அவர்களின் வாரிசுகளை காப்பாற்ற தன்னாலான வழிகளை செய்ய வேண்டுமென்று நினைத்தவர் தீடீரென விழிப்பு தட்ட யாரோ முகத்தில் நீர் தெளிப்பது உணர்ந்ததும் கண்களை திறக்க கோவிலின் பின்புற வாசலில் விக்ரம் தான் அவரை எழுப்பி கொண்டிருந்தான்.



இனி அடுத்த அத்தியாயத்தில் ...




Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
😘 அம்புலி மாமாவின் காதலி 😘 "ஜெரி"​



அத்தியாயம் - 8



தென்றலின் வருடலோடு செங்கதிரவன் விஜயம் செய்தான் பூவுலகில்.. அவ்வேளையை கொண்டாடும் விதமாக குருவிகளின் கீச் கீச் சத்தம் இன்னிசையாக பொழிந்தது...



சீக்கிரம் எழுந்த அனு மகேஷின் அம்மாவிற்கும் சமைப்பதற்கு உதவி செய்தாள்.. அனு "ஆண்டி என்ன ஹெல்ப் பண்ணும் சொல்லுங்க"



மகேஷின் அம்மா " இந்த காஃபியை எல்லாரும் கொண்டு கூடுடா... அப்பறம் ஆண்டின்னு கூப்படாதே அம்மா என்று கூப்பிட்டு சரியா" என்று தலையை தடவி விட....



அனு "எதுக்கு அப்படி கூப்பிட சொல்லுறீங்க" என்று தயக்கமாக கேட்டாள்... "எனக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி தா இருந்திருக்கும் அதா" என்று கூறினாள் மகேஷின் அம்மா..



அனு அவர்களை கட்டி அனைத்து "நா இத்தனை வருஷம் யாரையும் அம்மா என்று அழைத்தது இல்ல, ஏன்னா! அப்படி சொல்ல எனக்கு யாருமே இல்ல... ஆன இப்போ நீங்க இருக்கிங்க" என்று கூறி அவர் கொடுத்த காஃபியை அனைவருக்கும் கொண்டு கொடுக்க சென்றாள்...



மகேஷ் அறைக்குள் சென்ற அனு கட்டிலில் முகத்தை முழுவதுமாக மூடியபடி தூங்கும் இருவர்களில் யார் மகேஷ் என்று தெரியாமல் முதலில் படுத்து இருந்தவன் மகேஷ் என்று நினைத்து எழுப்பினாள்..



"மகேஷ் எந்திரிங்க" என்று அழைக்க எழும்பவில்லை அவன்.... கையில் இருந்த காப்பி ட்ரேயை‌ அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, மகேஷின் உடலை தொட்டு எழுப்ப, போர்வைக்குள் இருந்த கை அவள் கையை பிடித்து இழுத்து தன்மேல் சாய்த்து கொண்டது அவள் கத்தாமல் இருக்க மற்றோரு கையால் வாயை மூடினான்...



"இங்க பாரு அனு செல்லம் உன் கிட்ட சொல்லாம அமெரிக்கா போனது தப்பு தா.. அதுக்கு என்ன வேண்ணா தண்டனை தா ஆனா பேசம மட்டும் இருக்காதே.. பிளிஸ், இத்தனை வருஷம் உன்ன பார்க்காம பேசம எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு மட்டும் தா தெரியும்.. இப்போ உன் வாய்ல இருந்து கை எடுக்குறே தயவு செஞ்சு கத்தாதே" என்று விக்ரம் கூறினான்..



அனு ஓங்கி அறைந்தாள் விக்ரம் கன்னத்தில் "எவ்வளவு தைரியம் இருந்தா என் கைய பிடிப்ப... யாரு டா நீ... உனக்கு எனக்குமான உறவு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு... இப்போ நீ யாரோ நா யாரோ" என்று கூறி அறையை விட்டு வெளியில் செல்ல போக...



விக்ரம் அனுவின் கையை பிடித்து "சாரி" என்று ஏதோ சொல்வதற்கு முன் மகேஷ் விக்ரமின் கையை பிடித்து கொண்டு "ஒழுங்கு மரியாதையா அவ கைய விடு" என்று கோவத்துடன் கூறினான்..



விக்கிரமும் கையை விட்டு விட்டான்.. அனு வெளியில் சென்றது மகேஷ் விக்ரம் சட்டையை பிடித்து "எவ்வளவு தைரியம் இருந்தா அனு கைய பிடிப்ப" என்று அடிக்க கை ஓங்கினான்...



"அவ கையா பிடிக்குற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு" என்று விக்ரம் கூற.. மகேஷ் "அப்படின்னா"..



விக்ரம்"அவளும் நானும் லவ் பண்ணோம்..‌ ஆன, இப்போ சின்ன பிரச்சனை அதுனால சண்டை போட்டுட்டு போறா" மகேஷ் "என்ன! அதா அவ, நீ வீட்டுக்கு வந்த முதல் பல உணர்வுகளை முகத்துல காட்டுனாளா..



விக்ரம் "ஆமா ப்ரோ " மகேஷ் "எப்பத்துல இருந்து நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிங்க"



விக்ரம் "அதுவா ப்ரோ! நானும் அவளும் ஒரே ஹோம்ல தா இருந்தோம் சின்ன வயசுல இருந்து.. அவன்னா, ரொம்ப பிடிக்கும் எனக்கு.. அது நாளடைவில காதலா மலர்ந்து அப்படி இருக்கும் போது தா எனக்கு அமெரிக்கா போற ஆஃபர் வந்தது... அங்க போனா எங்க வாழ்க்கை நல்லதுன்னு நினைச்சே, அத அவ கிட்டையும் சொன்னே ஆனா அவா போக வேண்டான்னு சொல்லிட்டா... அதான் அவ கிட்ட சொல்லாம அமெரிக்கா போய்ட்டேன்" என்று மெதுவாக கூறினான்..



அப்போது அமிர்தா கத்தும் சத்தம் கேட்டு அந்த அறைக்கு ஓடினார்கள்..



அனைவரும் அமிர்தா அறைக்குள் சென்று அவளை எழுப்பி தண்ணீர் கொடுத்து என்னவென்று விசாரிக்க "ஒரு பயங்கரமான கெட்ட கனவு கண்டேன் அதான் பயத்துல கத்திட்டே" என்று மேல் மூச்சு வாங்க கூறினாள்..



"சரி..சரி எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும் " என்று அனைவரையும் கிளம்புங்க என்று மகேஷின் அம்மா கூறினார்..



அமிர்தா தனக்கு வந்த கனவை நினைத்து பார்த்தாள் .



"அமிர்தா"



"யாருடா கூப்பிடறது வாய்ஸ் இவ்ளோ கொடுமையா இருக்கே" என தனக்குள் முனுமுனுத்துக் கொண்டே திரும்புகிறாள்....



"அமிர்தா இங்கே வா" அக்குரல் வந்த திசையைத் தேடி நடக்கிறாள்.மலை போன்ற இரு பாறைகளுக்கு நடுவில் இருந்து கேட்கிறது.



"யாரு?" எனக் கேட்கிறாள்.



"எனைப் பார் அமிர்தா" அந்தக் குரல்



"வாவ்! வாட் அ பியூட்டி இவ்ளோ அழகா இருக்க, உன்வாய்ஸ் மட்டும் ஏன் இவ்ளோ கொடூரமா இருக்கு? இவன் யார் உன் பாதுகாவலனா?" அமிர்தா.



"என்னடி கூறினாய் நான் அழகா என் உருவத்தைப் பார்க்கிறாயா?"எனக் கேட்கும் போதே காற்று வேகமாக அடிக்கிறது, மரங்கள் அசைந்து அதன் சருகைகளைந்து சத்தம் எழுப்புகிறது. முழு நிலவு கொஞ்சம் கொஞ்சமாக தேய்கிறது. பெயர் அறியா பறவைகளும் ஒலி எழுப்புகிறது. அவளின் மீன்விழிகள் உருளுகிறது மெதுவாக அந்த உருவங்களைப் பார்க்கிறாள்.அவளின் பயத்தைக் கண்டவுடன் அப்பெண் வானம் இடியும் வண்ணம் பெருங்குரலெடுத்து சிரிக்கிறாள். அலைப் பாய்ந்த காற்றில், அவள் ஆறடி பின்னியக் கூந்தல் விரிந்து சடைப்பிடித்து பறக்கிறது. அவனின் பால்வண்ண நிறம் கரி கருமையை குத்தகைக்கு எடுக்கிறது. மான்விழிகள் சிவந்து குரோதம், ரத்தம் வழிந்தோட மினுமினுக்கறது. அவளின் பால் பற்கள் சிவப்பு நிற குறுதி வழிந்தோட மாறுகிறது. கோவை இதழ்கள் சிதைவுற்று.. இதழ்களா? எனக் கேட்கும் வகையில் கீறல் உள்ளது. அவளின் வெண்மை நிற தாவணி பறந்து அக்கொடிய வனப்பை பறைசாற்றுகிறது அங்கங்கே இரத்தக் கீறல்களுடன் காய்ந்தும் காயாமலும் பார்ப்பவரை பயமுறுத்தும் வண்ணம் உள்ளது. பக்கத்தில் உள்ள ஆடவனோ கரிய நிறத்துடன் கூரிய பற்களுடன் குறுதி மின்ன ஜொலிக்கிறான். அமிர்தா சற்று பின்னே நடக்கிறாள். அதை உணாந்த மிருதன் அவள் கழுத்தை அங்குள்ள மரக்கிளையின் உதவியால் பிடித்து அருகில் இழுக்கிறாள். உச்சகட்ட பயம், பதற்றத்தில் அமிர்தாவிற்கு வாய் உலர்ந்து போனது. "என்னைவிட்டுவிடு" அமிர்தா கேட்கிறாள்.



"எனக்கு உன் குறுதி வேண்டுமடி" எனக் கூறி தனது பாதி வெந்துபோன கையால் அவள் கழுத்தைப் பிடித்து தன் கூரிய பற்களால் கடிக்கிறாள் அவளை தரையில் தள்ளி துடிக்கும் கைகால்களை சிறை பிடித்து அவளின் செங்குறுதியால் தனது பசியை தீர்க்கிறாள் மிருதன்.



அதை நினைத்து பார்க்க.....பார்க்க அமிர்தா உடல் நடுங்கி கொண்டே இருந்தது...



..................................................................................................................................................................................................................................................................................................................



அனைவரும் கிளம்பி மகேஷின் அம்மா கூறிய இடத்திற்கு புறப்பட்டனர்..



மகேஷ் "அம்மா நாம எங்கே போறோம்" என்று கேட்டான்.. "இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க போய்டுவோம் அப்பறம் நீயே தெரிஞ்சுப்பே" என்றார் மகேஷின்அம்மா கூறினார்...



ஓர் சிறிய வீட்டிற்குள் அழைத்து சென்றார் அனைவரையும் மகேஷின் தாய்... அங்கு வயது முதிர்ந்த பெரியவர் தன் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டு இருந்தார்.. அவர் இவர்கள் நால்வரையும் காண்பதற்கு தான் இத்தனை ஆண்டு தன்னுயிர்ரை கையில் பிடித்து கொண்டுயிருந்தார்...



மகேஷின் அம்மா அவரிடம் ஏதோ சொல்ல போக.. அவர் கைகளால் வேண்டாம் என்று நிறுத்திவிட்டு "எல்லாம் நான் அறிவேன்" என்று பார்வையில் கூறினார்... அவர்கள் நால்வரையும் தன் அருகில் அழைத்தார்.. அவர்களும் அவர் படுத்திருந்த படுக்கையின் அருகில் சென்றனர்...



"பெற்றவ.....ர்களின் பெற்றோர்கள் செய்த பாவத்.....தையும் பெற்ற சாபத்தையும் பெற்ற....வர்களின் பிள்ளை.....கள் பெறுகின்றனர் 'இதுதான் காலத்தின் கொடுமை என்று கூறவா?' அல்லது 'விதியின் விளையாட்டு என்று கூறாவா?' என்று தெரியவில்லை" என்று கபீர் கூறினார் திக்கிதிணறி....



மகேஷ், விக்ரம், அமிர்தா,அனு இவர்கள் நால்வருக்கும் கபீர் கூறுவது புரியாமல் அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர்... மகேஷ் "நீங்க என்ன சொல்லுறீங்க எங்களுக்கு எதுவுமே புரியல..., என் அம்மா என்ன பண்ண பாவம் பண்ணாங்க? அவங்க சின்ன எறும்புக்கூட பாவம் செய்ததில்லையே" என்று மகேஷ் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து கொண்டான்...



கபீர் உயிர் போகும் தருவாயிலும் சிறிது சிரித்து கொண்டே "ஆம்! உன் அம்மாவும் எந்த தவறும் செய்யவில்லை... உன்னை ஈன்றவளும் எந்த தவறும் செய்யவில்லை.. உன்னை ஈன்றவளின் தந்தையே தவறு செய்தார்" என்று பேசமுடியாமல் கூறினார்...



மகேஷ் அதிர்ச்சியாய் தன் தாயே பார்க்க, அவர் தலை குனிந்து கொண்டார்.... "ம்மா நீங்க என்னோட அம்மா இல்லையா என்று ஏக்கத்தோடு கேட்டான்" அதற்கு அவள் "நா உன் அம்மா தாண்டா ஆனா உன்ன பெத்தது நா இல்ல" என்று கூற மகேஷ் அப்படியே உடைந்து விட்டான்...



கபீர் தன் மகன் காதில் ஏதோ கூற அவன் உள் அறைக்குள் சென்று ஒரு சிறய பெட்டியை எடுத்து கொண்டு வந்தான்... அந்த பெட்டியை திறந்து அதற்குள் இருந்த நாலு தாயத்தை எடுத்து அவர்கள் கையில் கட்டிக்கொள்ள கூறினார்... அவர்கள் இதையேன் நாங்க கட்ட வேண்டும் என்ற தோரணையில் பார்த்தனர்..



கபீரின்மகன் " இந்த நாலு தாயத்தும் பல வருசமா பல தர்க்காவில் வைத்து ஓதி தவம் செய்து பல சக்திகளை உள்ளடக்கிய சக்திவாய்ந்த தாயத்து, இத எக்காரணம் கொண்டும் இந்த தாயத்தை நீங்க நால்வரும் கழட்ட கூடாதுன்னு அப்பா சொல்ல சொன்னாரு" என்று கூறீனார்...



"எதுக்காக இத நாங்க கட்டன்னும்? எங்கள சுத்தி என்ன தா நடக்குத்து? எதுவுமே புரியல..... தயவு செய்து என்ன நடக்குதுன்னு சொல்லுங்க" என்று கத்தினாள் காலையில் கண்ட கனவின் வெளிப்பாட்டால் அமிர்தா..



கபீர் "அதற்கான நேரம் இன்னும் வரவில்லை... மகளே இன்னும் சில காலம் காத்து கொண்டு இரு... இப்பிரச்சினைக்கு காரணமானவனே உன்னிடம் கூறவருவான்" என்று கூற...



அந்த வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் தானாக கீழே விழுந்து உடைய ஆரம்பித்து.. வீட்டில் உள்ள விளக்கு எல்லாம் தானாய் அனைந்து.... அனைந்து பற்றியது...



கபீரின்மகன் ஏதோ விபரிதம் நடக்கபோகுது என்று நினைத்து கொண்டு அவர்கள் கைகளில் தயத்தை கட்டிவிட்டான்...



"என் உயிர் போக போகிறது.. என் அருகில் வாருங்கள் நால்வரும்" என்று கடைசி நிமிடத்தை எண்ணிக் கொண்டிருந்த கபீர் அழைக்க, அவர்களுக்கும் சென்றனர்...



அவ்வேளையில் மிருதன் அந்த இடத்தில் வந்து கபீர் கழுத்தை நெரிக்க கபீர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சில குறிப்புகள் கொடுத்தான் " அமானுஷ்ய காடு, மிருதன், பாறை, பெட்டி, ரத்தத்துளி என்று கூறி முடிக்கவும் கபீர் உயிரும் பிரிந்து அவ்வேளையில்..



"உங்க நால்வரையும் கொல்லாமல் விடமாட்டேன், உங்கள் உயிர் என் கையில் தான் போகும்... உங்களை யாரும் என்னிடமிருந்து காப்பற்ற முடியாது" என்று கர்ஜித்துக் கொண்டே அவர்களை தாக்க முற்ப்பட்டான் மிருதன்.. ஆனால், அவர்களின் அருகில் செல்லுமுன்னே மிருதனை தூக்கி எரிந்து விட்டது அவர்கள் கையில் இருக்கும் தாயத்து.. மிருதனுக்கு ஏதோ சக்தி குறைந்தது போல் உணர்ந்தான்... "எப்படியும் நீங்கள் நால்வரும் என் கோட்டைக்கு ( அமானுஷ்ய காடு) தானே வருவீர்கள் அங்க உங்களை பார்த்து கொள்கிறேன்" என்று கண்களில் வெறியோடு கூறிகொண்டு பெரும் கூக்குரலோடு மறைந்து கொண்டாள்...



அவர்கள் அனைவரும் என்ன நடந்தது புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது கொண்டது... கபீரின்மகன் "நால்வரும் சீக்கிரம் அந்த பெட்டிய தேடி போங்க... அது தா உங்க உயிர பாதுக்காக்கும் " என்று கூற....



விக்ரம் "அந்த காடு எங்க இருக்கு எங்களுக்கு தெரியாதே" என்று மூன்று பேருக்கும் சேர்த்து அவனே பதில் கூறினான்.... கபீரின்மகன் "எனக்கு அது தெரியாது, ஆனா ஓன்னு மட்டும் சொல்லுறே 'எவ்வளவு சீக்கிரம் அந்த பெட்டிய கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிங்க'.... உங்க உயிர பாதுக்காக்குற சக்தி அந்த பெட்டிக்குள்ள தா இருக்கு.... கவனமா இருக்க, உங்க கையல இருக்க தாயத்துக்கு எப்போ வேண்ணா அதோட சக்கி குறையலாம்... இது தற்போதைய பாதுக்காப்பு கவசம் மட்டுமே" என்று அழுத்தமாக கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்...



ஐவரும் எங்கு செல்ல என்று தெரியாமல் காரில் ஏறி அமர்ந்தனர்.. மகேஷின்அம்மா " கோவிலுக்கு போகலாம் அது தா நமக்கு பாதுகாப்பு" என்று கூறினார்...



கார் கோவிலில் முன் நின்றது... அவர்கள் அனைவரும் இறங்கி கோவில் உள்ளே சென்றனர்... மகேஷ் மட்டும் கோவமா அல்லது இயலாமையா என்று சொல்ல முடியாத ஒரு உணர்வுடன் கோவிலின் குளக்கரை நோக்கி சென்று விட்டான்... மற்றவர்கள் கோவிலின் பிரகாரத்தில் வீற்றிருக்கும் அம்பாளிடம் சென்றனர்... அவர்கள் அனைவரும் ஒரே மனநிலையில் இருந்தனர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது...



இங்கு மிருதன் கோவத்தின் உச்சியில் இருந்தான்... காட்டில் இருக்கும் கல்லறையின் மேல் ஏறி நின்று கூக்குரலிட்டு கத்தி கொண்டு இருந்தான்... அவன் சத்தத்தில் காட்டில் இருக்கும் மிருகங்கள் மிரண்டு ஓடியது... வானமும் அவன் குரலுக்கு ஏற்றது போல் பல இடிகள் ஒன்னு நினைத்து ஒரே இடியாய் வந்து காட்டில் இருக்கும் மரங்களும் எரித்தது.... இன்னும் அவன் கோவம் அடங்காமல் அவன் இருந்த கல்லறைகள் தாண்டி சென்ற சிங்கத்தை தன் அருகில் இழுத்தான்.. அந்த சிங்கம் இவன் உருவத்தை கண்டு நடுங்கி இவனிடம் தப்பி ஓட நினைக்க, மிருதன் அதன் தலையை ஒரு கையால் பிடித்து தன் அருகில் இழுத்தான்.... சிங்கம் பயத்தில் அவனிடம் மிருந்து தப்பிக்க தன் கூரிய நகங்களால் அவன் முகத்தை காயமாக்கியது.... அதில் மேலும் கோவம் ஏறியது மிருதனுக்கு...



அதன் தலையை தன் முகத்திற்கும் அருகில் கொண்டு வந்து சிங்கத்தின் வாயை கடித்து தின்றான் மிருதன்... அதோடு விடாமல் தன் கையின் கூரிய நகங்களால் சிங்கத்தின் தலையை நெரித்து தனியாய் எடுத்து கால்களின் போட்டு கோவம் தீரும் வரை மிதித்து....மிதித்த நசிக்கினான்... அதன் பிறகு தலை பிய்த்து எடுத்த இடத்தில் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்ச எடுக்க ஆரம்பித்தான்.. அதன் வெறு தோலை மட்டும் தூக்கி எரிந்தாள்.‌‌.. இதுபோல் தான் அந்த நால்வரையும் கொல்லவேன் என்று மனதில் நினைத்து எக்காளித்து கொண்டான் மிருதன்..



மகேஷ் குளத்தின் படியில் தலையில் கைக் கொடுத்து அமர்ந்து இருக்க, அவன் அருகில் நிழல்ஆட யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.... இதற்கு முன் இங்கு வரும் போது பார்த்த அதே தெய்வீகமான முகம் கொண்ட மனிதரை பார்த்தான் (4 அத்தியாயத்தை சொல்லி இருந்த அதே சித்தர் தா)...



மகேஷ் அவரைப்பார்த்ததும் எழுந்து நின்றான்.. அவர் அவனை பார்த்து சிரித்து கொண்டே "கர்ணனை குந்தி பெற்றெடுத்தாலும் கர்ணனை வளர்த்தது ராதையே...... உலகம் கர்ணன் குந்தியின் மகன் என்று கூறுமே தவிர.... தாய் எப்போழுதும் ராதை என்று தான் கூறும்.... கர்ணனுக்கும் என்றுமே முதல் தாய் ராதையே அதன் பிறகு தான் குந்தி..... அதுபோல் தான் ராதைக்கும் தன் மகன் என்றால் அது கர்ணன் தான் முதலானவன் அதன்பிறகே யாரும்" என்று கூறினார்...



அதை கேட்ட மகேஷ்க்கு இதுவரை இருந்த குழப்பம் அனைத்தும் வடிந்து போனது... அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் சந்தோஷமாக... ஆனால் இப்போழுது இருக்கும் பிரச்சனை நினைத்து பார்த்தும் மறுபடிம் முகம் கவலையை தத்தெடுத்து கொண்டது....



தெய்விகமான முகம் கொண்ட மனிதன் "எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கேயே விடையும் இருக்கிறது.... பிரச்சனையின் பிறப்பிடத்திலே விடையின் ஆணிவேரும் அடங்கியிருக்கிறது தேடி செல் அவ்விடத்தை" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்...



மகேஷ்ற்க்கு இப்போது மனம் தெளிவு பெற்றது.. தன் அம்மாவை தேடி சென்றான் அவருக்கு தெரியும் பிரச்சனையின் பிறப்பிடம் எதுவென்று.. அவர் ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தார்.. அவர் அருகில் அமர்ந்து ஏதோ சொல்ல போனான் மகேஷ்.. ஆனால், அதற்கு முன் அவரே பேச ஆரம்பித்தார்...



" மகேஷ் நீ எப்பவுமே என்னோட மகன் தா... இப்போ இத பத்தி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பமில்ல... நாம இத பத்தி எப்போ வேண்ணா பேசிக்கலா.... இப்போ உன்னோட உயிரும் அந்த பிள்ளைங்க உயிரும் ஆபத்துல இருக்கு அந்த பிரச்சனைய முடிப்போம்" என்று கூறினார் மகேஷ் அம்மா...



" எனக்கு இந்த பிரச்சினை எங்க இருந்து ஆரம்பிச்சது அத மட்டும் சொல்லுங்க ம்மா... அந்த பிரச்சனை பத்தி நா எதுவும் கேட்க மாட்டேன்" என்று கூறினான் மகேஷ்.. அனுவும் அமிர்தாவும் "ஆமா! அத மட்டும் சொல்லுங்க... அப்போ, தா எங்களால அந்த அமானுஷ்ய காட்டை கண்டு பிடிக்க முடியும்" என்று கூறினார்கள்..



மகேஷின் அம்மாவும் அது சரி என்றுபட்டாத்தால் அந்த ஊரின் பெயரை மட்டும் கூறினார் "



" 'பூம்பொழில்' இந்த ஊர் தா உங்க பிரச்சினையின் ஆணிவேர் இங்க போனா உங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கலாம்... நீங்க நாலு பேரும் அங்க கிளம்புங்க" என்று கூறினார்



அவ்வூரின் பெயரை கேட்டத்தும் அமிர்தாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது அவள் பல உணர்வுகளை காட்டியது.... அதை யாரும் கவனிக்கவில்லை ஆனால், மகேஷ் மட்டும் கவனித்தான்...



"சரி நீங்க மூனு பேரும் இங்க இருக்கிங்க விக்ரம் எங்க" என்று கேட்டான் மகேஷ்...



"அவனுக்கு ஏதோ கால் வந்தது அதான் பேச போய் இருக்கான்" என்று கூறினாள் அமிர்தா... "ஆமா ஆமா அவன் கேர்ள் பிரண்ட் யாராவது கால் பண்ணி இருப்பாங்க பேச போய் இருப்பான் " என்று எரிச்சலாக கூறினாள் அனு.... அதைகேட்ட, மகேஷ் சிரித்து விட்டான்... அனு அவனை முறைக்க வாய்யில் கை வைத்து அமைதியாக இருந்தான் மகேஷ்...



அமிர்தா "நா போய் அவன கூட்டிட்டு வரேன்" என்று எழுந்து சொன்றாள்...



விக்ரம் தன் நண்பர்களிடம் பேசிவிட்டு திரும்ப... மகேஷ்டம் பேசிய அதே மனிதன் அவன் அருகில் வந்து "உன் கனவின் விதை பயிரிட்டு அறுவடைக்கு காத்து கொண்டு இருக்கிறது கவனமாக இரு" என்று தோளில் தட்டி கொடுத்து என்றார்...



விக்ரம் மனம் பயம் கொண்டாலும், தன் நண்பர் இங்கு யாருமில்லையே... அப்படி இருக்கும் போது அது யாருக்கு நடக்கும் இளக்காரமாக நினைத்தான்... மகேஷ் அமர்ந்து இருந்த இடத்திற்கு சென்றான் விக்ரம்...



" உன்ன தேடி தானே அமிர்தா வந்தா இப்போ அவ எங்க" என்று கேட்டான் மகேஷ்... "என்ன தேடியா... அவ வரலையே" என்று விக்ரம் கூறினான்..



"உன்னை தேடி அவள அனுப்புனா இப்போ அவள தேடி இன்னோருத்தர அனுப்ப வேண்டியிருக்கு" என்று நெத்தியில் தட்டி கொண்டு "நா போய் அவள கூட்டிட்டு வரே நீங்க எல்லாரும் இங்க இருங்க" என்று கூறி அவளை தேடி சென்றான்....



மகேஷ் கோவில் முழுவதும் தேடினான் அமிர்தாவை ஆனால், அவளை காணவில்லை.... எங்க சென்றாள் என்று பதட்டத்தோடு தேடினான் மறுபடியும்... அப்போதும் அவள் கிடைக்கவில்லை... ஒருவேளை அவள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று இருப்பாளோ என்று நினைத்து அங்கே சென்று போய் பார்த்தான்... அங்கு அவர்கள் நால்வரும் மட்டுமே இருந்தனர்....



அனு "மகேஷ்! அமிர்தா எங்க"..... "அவள காணும் அனு".... "என்ன சொல்ற, கோவில் முழுக்க தேடிப்பார்த்தியா... "என்று அனு பயத்துடன் கேட்டாள்.... "ஆமா நா எல்லா இடத்துலையும் பார்த்தே அவள காணும்" என்று வருத்தத்துடன் கூறினான்....



மற்ற இருவரும் சற்று பயந்தனர்.. "ஒருவேள அந்த மிருதன் அவள எதுவும் பண்ணி இருப்பானா" என்று பயத்துடன் கேட்டாள் அனு...



மகேஷ் அப்படியே தரையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு இருந்தான்... அனு பயத்தில் ஏதோ உளரிக் கொண்டு இருந்தாள்... "அவன் தா.... அவள தூக்கிட்டு போய் இருக்குன்னு" என்று அழுத்தமாக கூறினாள் அனு....



மகேஷ் "நிச்சயமா மிருதன் அவள எதுவும் பண்ணல... அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்" என்று அழுத்தமாக கூறினான்..



"எங்க போனா அவ" என்று கேட்டான் விக்ரம்... "பூம்பொழில்" கிராமத்திற்கு".. அனு "நாமளும் அங்க தானே போக போறோம் அப்படி இருக்கும் போது அவ மட்டும் ஏன் தனியா போனா"... "அத அவ கிட்டே போய் தெரிஞ்சுக்கலாம்" சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க" என்று கூறினான்....



தன் தாயிடம் விடைபெற்று அம்பாளின் அருளோடு பூம்பொழி கிரமத்தை நோக்கி பயணம் தொடங்கினர் அந்த நால்வரும்... அமிர்தா மட்டும் தன் விதியின் சாபத்தை தனியாக நின்று நீக்க நினைக்குறாள்... ஆனால் இவர்கள் நால்வரின் விதி ஒன்றென்னு அறியாமல் பேதை பெண் தனியாக கையாள நினைக்குறாள்... அவளின் எண்ணம் தவறு என்று சொல்லி புரியவைப்பானா மகேஷ்?....



1. அமிர்தாவிற்கு எப்படி தெரியும் ?



2. அமானுஷ்ய காட்டை கண்டு பிடித்து பெட்டியை எடுப்பார்களா ?



3. மிருதனின் அடுத்த செயல் என்ன?



4. மற்றோரு அகோரி யார் ? மிருதனா...??? மனிதனா....???



இனி அடுத்த அத்தியாயத்தில்...


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom