Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
ஹாய் பிரண்ட்ஸ். நான் மீ.ரா . சகாப்தம் தளத்தில் வண்ணங்கள் போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன். எனக்கு பிடித்த வண்ணம் சிவப்பு. அதே மாதிரி எனக்கு ஒரு சமூக நாவலை எழுத வேண்டும் என்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு ஏதுவாய் தளத்தில் சிவப்பு வண்ணத்தில் சமூக வகை அமைந்திருந்தது. பிறகென்ன பெயரைப் பதிவு செய்துவிட்டேன். சகாப்தம் தளத்தில் எழுதுவது இதுதான் முதல்முறை. உங்கள் ஆதரவு கிடைக்குமென்று நம்புகிறேன்.

நாவலின் பெயர்
“ முகவரியற்றவை









முகவரியற்றவை

முன்னோட்டம்;

யாழரசி , அறிவழகன் , மீனினி , வெற்றிவேள் நால்வரும் நண்பர்கள். யாழரசியும் , மீனினியும் கொங்கு வட்டாரத்தைச் சார்ந்தவர்கள். அறிவும் , வெற்றியும் ஒரே நெல்லை வட்டாரம் என்றாலும் சந்தித்துக் கொண்டதில்லை. கோவையிலும் , திருப்பூரிலும் வாழும் மீனினியும் , யாழரசியும் இவர்களைப் போலத்தான்.

இவர்கள் நால்வருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் இவர்களை ஒன்றிணைத்தது இவர்களின் வாழ்க்கை இலட்சியமா ? அல்லது விதியா? என்பது தெரியாது. எங்கிருந்த வாங்கப்பட்ட நூலிழை தைக்கப்பட்டு ஒன்றானது போல் இவர்களும் நட்பினால் பிணைந்தார்கள்.

நான்கு நண்பர்கள் ;இருவர் ஆண்கள் ; இருவர் பெண்கள் ; பிறந்து வளர்ந்தது , பண்புகள் , வயது , நம்பிக்கைகள் , வாழ்க்கை தந்த பாடங்கள் எல்லாம் வேறு வேறு. தனிப்பட்ட ரகசியங்களும் உண்டு. வேறுபாடுகள் நிறைந்த நால்வரில் யாழரசிதான் மற்ற மூவருக்கும் பொதுவானவள். யாழுக்கு மற்ற மூவரைப் பற்றி அதிகமாகத் தெரியும். அதை அவள் ஒரு நாள்குறிப்பில் எழுதியும் வைக்கிறாள். அந்த டைரி ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டு வேறொருவரின் கையில் விதி வசத்தால் சேர்கிறது. ஆற்றில் டைரி கிடைத்தது என்றால் யாழரசி உயிருடன் இருக்கிறாளா? அப்படி இருந்தால் அந்த டைரியினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -1

வருடம் – 2023

தேசிய சம்பல் சரணாலயம். இந்தியாவின் மையமான மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது. மூன்று மாநிலங்களில் வழியே சம்பல் நதி பாய்ந்து வளமூட்டுகிறது. இந்தியாவிலே மிகக் குறைந்த மாசுபாடு கொண்ட நதி என்பது இதன் சிறப்பம்சமாகும். நதி எதனைப் பற்றியும் கவலைப் படாமல் தன்வழியில் அமைதியாக பாய்ந்து கொண்டிருந்தது. நதி பார்ப்பதற்கு அமைதியாகத் தெரிந்தாலும் அதன் வேகம் இறங்கிய பிறகுதான் புலப்படும்.

இது எதனைப் பற்றியும் கவலைப் படாமல் ஒரு விசைப்படகின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் அவன். ஆறடியில் நின்றவனின் உயரம் அப்படகைத் சற்று சிறியதாகக் காட்டியது. அவன் கைகளில் அளவில் பெரிய வனவிலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் கருவி வீற்றிருந்தது. ஒரு கண்ணை மூடியபடி மறுகண்ணை கேமராவில் போகஸ் செய்து கொண்டிருந்தான். இயற்கைய ஒத்த அவனது உடை நதியின் நிறத்தோடு ஒன்றிப் போகச் செய்து கொண்டிருந்தது. சுற்றி அடர்ந்திருந்த மரங்கள் வேர்த்ததால் காற்றை தங்கள் கிளைகளைக் கொண்டு விசிறிக் கொண்டிருந்தன. சுற்றிலும் கேட்ட பறவைகள் , பூச்சிகளின் ஒலிகள் எதுவும் இவன் கவனத்தைச் கவரவில்லை
. அவன் கண்கள் முழுவதும் முதலை சற்றுத் தொலைவில் இரைய பிடிக்க முயல்வதில் பதிந்திருந்தது. தக்க சமயத்தில் படத்தை எடுக்க அவன் கைகளும் ஆயத்த நிலையில் இருந்தன.

இவன் இப்படி இருக்க படகோட்டி நிலையாக நின்றிருந்த படகின் அருகில் ஏதாவது முதலை வருகிறதா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலை தனது இரையை கவ்வி பிடிக்கும் சமயம் அந்த நெடியவன் அதை நிழலாக சிறைபிடிக்க முயற்சி செய்ய படகில் ஏதோ மரக்கிளை மோதி அதற்கு தடையிட்டது. இவ்வளவு நேரம் நீர்யானைகள் நீரில் விளையாடுவதைப் படம் பிடித்தவன் முதலைக்காக ஆவலாக காத்திருந்தவனுக்குக் குறுக்கீடு ஏற்பட்டதால் எரிச்சலுடன் தனது குறிக்கோளை தடுத்ததைப் பற்றித் தெரிந்துகொள்ள படகோட்டியின் புறம் திரும்பினான்.

படகோட்டி படகில் மோதிய பொருளைக் காட்டினான்.

புகைப்படக்காரனும் படகில் மோதிய மரக்கிளையைப் பார்த்தான். அதைத் தள்ளிவிட படகோட்டி கம்பி ஒன்றை எடுத்தான். அதனை தள்ளிவிட அருகில் சென்ற போது புகைப்படமெடுப்பவன் படகோட்டியை தடுத்து நிறுத்தினான்.

“கியா பய்யா?”

அவனை சிறிது நேரம் பொறுமையாக இருக்கும்படிக் கூறியவன் தானே சென்று மரக்கிளையில் மாட்டியிருந்த கருப்புநிற பாலீத்தீன் பையை எடுத்தான். அது ஒரு சிறிய அளவிலான சாக்குப் பை வடிவத்தை ஒத்திருந்தது.

பையைப் பிரிக்கப்போனவனை தடுத்தான் படகோட்டி.

(ஹிந்தியில் நடைபெற்ற உரையாடல்கள் தமிழில் இடம்பெற்றுள்ளன.)

“வேணாம் அண்ணா. ஏதாவது பிணத்தோட பகுதியா இருக்க போகுது. இதுனால தேவையில்லாத பிரச்சினை ஆகப்போகுது.”

இதனைக் கேட்டவுடன் அழகாக புன்னகைத்தவன்

அந்தப் பையைத் தொட்டுப் பார்த்தவன் ஏதோ நோட் அட்டை மாதிரி உணர்ந்தான்.

“பிரச்சினைய நான் பார்த்துகிறேன். நீங்க பயப்பட வேண்டாம்.” என்று உறுதியளித்தவன் பையைப் பிரித்தான்.

கண்களில் பட்டது ஒரு பெரிய டைரி. சிவப்பு வண்ண லெதரில் தங்க வண்ணம் கொண்ட பட்டாம் பூச்சிகள் பறந்து போய் பூ வடிவ லாக்கைத் தொடுவதுபோல் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்க்க சாதாரண வருட டைரி போன்று தோன்றவில்லை.

அதை எடுத்து தனது சோல்டர் பேக்கில் வைத்தான். அதுவே அவனை தனது வாழ்வில் மிக முக்கியமான தேடலுக்கு இட்டுச் செல்லும் வழிகாட்டி என்று அப்போது அவனுக்குத் தெரியாது.


....மனம் தேடும்.

Thread 'முகவரியற்றவை - Comments' https://www.sahaptham.com/community/threads/முகவரியற்றவை-comments.546/
For comments.
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -2

மத்தியபிரதேசத்தின் பல்வேறு இடங்களைச் சுற்றி புகைப்படமெடுத்தவன் அந்த டைரியை தனது பேக்கில் வைத்ததை மறந்துவிட்டிருந்தான். இப்படியே ஒருவாரம் கழிந்தது.

தன் வேலைகளை எல்லாம் மத்தியபிரதேசத்தில் முடித்தவன் ஹோட்டல் ரூமில் இருந்த தனது உடமைகளைப் பேக் செய்யும் போது சோல்டர் பேக்கில் இருந்த டைரியை வெளியே எடுத்தான்.

‘அட இந்த டைரியை எப்படி மறந்தேன்? ஊருக்கு போனதும் முதல்ல இதப்படிக்கனும். ‘ என்று யோசித்தவன் தன் கைப்பேசியில் உள்ள கால அட்டவணைச் செயலியில் குறித்துக் கொண்டான்.

விமானநிலையத்தை அடைந்தவன் தன் செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி சொகுசாக அமர்ந்தான். விமானம் பறக்கத்துவங்கிய பின் தான் இதுவரை எடுத்துள்ள புகைப்படங்களை மடிக்கணினியில் சேமித்தபின் அதில் தனக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்யத் துவங்கினான். நேரம் பறந்து செல்ல அவன் தான் இறங்குமிடத்தை அடைந்தான்.

தெய்வத்தின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவிற்கு வந்திருந்தான் அவன். இடதுகையில் நடுத்தரமான அளவில் சிவப்புநிற டிராலி, அந்த டிராலியின் பிராண்டிலேயே ஆண்கள் உபயோகப்படுத்தும் சோல்டர் பேக் , வலதுகையில் தனது புகைப்படம் எடுக்கும் கருவிகள் அடங்கிய பையுடன் ரெட் டீசர்ட், கருப்பு பேண்ட் அணிந்து காலத்தை நிழல்படமாக பிடித்து வைக்க நினைக்கும் கருமைநிற கண்மணிகளை உடையவன் வெளியே வந்தான். அவன் தோற்றம் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.



விமான நிலையத்தைவிட்டு வெளியே கால்வைத்ததும் சேரநாட்டு சாரல் அவன் தேகத்தைத் தழுவியது. சிறிது பின்வாங்கியவன் டாக்ஸி வரும் வரை காத்திருந்தான். டாக்ஸி வந்ததும் மேலும் பல இடங்கள் பயணம் செய்து தான் வாயநாடு வனவிலங்கு பாதுகாப்பகத்தை அடைந்தான். வாயநாடு தமிழ்நாடு , கர்நாடகா மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. நீலகிரி உயிர்கோளப் பகுதியின் அங்கமாகும்.

வழியெங்கும் வேடிக்கைப் பார்த்தபடி பயணம் செய்தவனை கேரளாவின் கொள்ளை அழகு கட்டிப்போட்டிருந்தது. வாயநாட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சுல்தான் பதரி , முத்தங்கா , குறிச்சியத் , தோல்பெட்டி என்ற நான்கு பர்வதங்களும் வாயநாட்டை பல்வேறு உயிர்களின் வாழிடமாக மாற்றுகிறது.

இன்பமான மனநிலையில் சுல்தான் பெதரியில் காட்டில் அமைந்துள்ள மரவீட்டிற்கு சென்றான். இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டதால் சுலபமாகச் சென்றான்.

மரவீட்டின் மாடியில் அமைந்துள்ள கண்ணாடி சாளரத்தின் வழியே வானாந்திரத்தை ரசித்தான். சுற்றிலும் பசுமை . மனம் இயற்கையில் ஒன்றிப் போயிருந்தது. ஜன்னல்களைத் திறந்துவிட்டவன் வெளிக்காற்றை நன்றாக சுவாசித்தான். மரங்களின் வாசனையும் , மூலிகைகளின் வாசனையும் உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளித்தது. காடு என்பதால் பூச்சிகளின் ரிங்காரம் சங்கீதமாக மாறி இசைத்துக் கொண்டிருந்தது.

வாயநாட்டை அவன் அடையவே மாலை நேரமாகிவிட்டிருந்தது. மலைக்காடு என்பதால் குளிரும் இருட்டும் இரட்டைப்பிறவி போல் சீக்கிரம் மாலை நேரத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. பயணக் களைப்பில் இருந்தவன் இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஸ்டிரச் செய்தான். இரவு உணவு முன்பே வாங்கி வந்துவிட்டதால் தன் அலைப்பேசியில் திரைப்படம் ஒன்றை ஓடவிட்டுக் கொண்டே உண்டான்.

வீடு முழுக்க அவன் ஒருவனே புக் செய்திருந்தான். தனிமையில் உண்டவன் அமைதியை மிகவும் இரசித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு உறக்கம் வர அலாரம் போனில் செட் செய்துவிட்டு உறக்கத்தில் தொலைந்தான்.

மறுநாள் காலை

ஜீப் சாபாரியில் காட்டைச் சுற்றிப் பார்க்க விரும்பினான். தனது புகைப்பட கருவிகளுடன் ஜீப்பில் பயணம் செய்யத் தொடங்கினான். ஜீப் டிரைவரிடமும் அதிகம் எதுவும் பேசவில்லை. பெயர் கேட்டதற்கு தேவன் என்றும் , தமிழ்நாட்டிலிருந்து வருவதாகத் தெரிவித்துவிட்டான்.

சுற்றிலும் வளர்ந்திருந்த தேக்கு மரங்கள், சால் மரங்கள், சந்தன மரங்கள் மற்றும் பல செடி கொடிகள் பசுமையை எங்கும் பறைசாற்றின. வழியில் மூங்கில் காடுகளைப் பார்த்தும் சாமுராய் படத்தில் இடம்பெறும் “மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே ..” என்ற பாடல்வரிகளைத் தானாக அவன் வாய் முனுமுனுத்தது.

சாபாரி செல்லும் பாதையின் குறுக்கில் யானைக்கூட்டம் ஒன்று நடந்து சென்றது. தாய்யானையின் வயிற்றுக் அருகிலேயே குட்டி யானை வாலை ஆட்டியபடியே சிறு பிளிரலோடு நடந்து சென்றது. இவற்றை எல்லாம் புகைப்படமெடுத்தவன் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.

வழியில் மான்கள் துள்ளியோடுவதையும் ,பைசன்களையும் , வேறு எங்கும் இல்லாத ஒரு சில பறவைகள் கண்ணில் பட காமிராவும் சிறைப்பிடித்தது. இப்படி காட்டில் நெடுந்தூரம் அலைந்து திரிந்தவன் மதியம் இரண்டு மணிக்கு மேல் மரவீட்டிற்கு திரும்பிவிட்டான்.

அலுப்பு தீர குளியல் போட்டவன் , இலகுவான உடைக்கு மாறி தேநீர் தயாரித்தான். தேநீரை நன்றாக முகர்ந்தவன் பின்பு குடிக்கத் தொடங்கினான்.

குடித்துக்கொண்டே சிலருக்கு கைப்பேசியில் அழைத்துப் பேசினான். இப்படியே மாலை நாலு மணிக்கு மேலாகிவிட்டது. அச்சமயம் போனில் ரிமைண்டர் ஒலி எழுந்தது.

கைப்பேசியின் திரையில் பச்சைநிற பின்னணியில் வெள்ளை எழுத்துகள் “சம்பல் டைரி” என்று ஒளிர்ந்தது. ஒலியைத் துண்டித்தவன் . நெற்றியில் வலதுகையின் பெருவிரலையும் , ஆள்காட்டி விரலையும் வைத்து தேய்த்தவன் ‘டைரியை ஓப்பன் செய்து அட்ரஸ் கண்டுபிடிச்சு போஸ்ட் பன்னிடலாம். ‘ யோசித்து முடிவெடுத்தான்.

டைரி அவனது டிராலியில் ஒரு மூலையை ஆக்கிரமித்திருந்தது. அந்த டைரியில் இடம்பெறும் நபர்கள் அவனது மனதையும் ஆக்கிரமிக்க போவதை அவனறியான்.

டைரியை எடுத்தவன் அப்போது தான் நன்றாக கவனித்தான். டைரியில் நம்பர்லாக் இருந்தது. அது சிறிய தடுப்பின் மூலம் லாக் இருப்பது தெரியமால் மறைக்கப்பட்டிருந்தது. அதை ஒரு விரலால் நகர்த்தி தள்ளியவன் , ‘டைரிக்கெல்லாம் எந்த லூசு லாக் போட்டு வைக்கும்? அப்படி என்ன அதில் எழுதியிருக்கும்?’ எரிச்சலுடன் ஆர்வமும் எழுந்தது.

வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பூட்டைப் போல் மூன்று எண்கள் கொண்டிருந்தது டைரியின் லாக்.

‘ஒகே..த்ரீ டிஜிட் லாக். 999 காமினேஷன் இருக்கும். முயற்சி செய்து பார்க்கலாம். ‘ முடிவெடுத்தவன் ஒரு நோட்டையும் , பேனாவையும் எடுத்தான்.

001, 002, 003 ,004, 005, 006………….400 இப்படியே நானூறு வரை சென்றவனின் விரல்கள் வலித்தது. ‘டே டைரி ஓனர் , நான் உன்னை நேர்ல பார்க்க மாட்டேன். அதுனால நீ தப்பிச்ச. ‘ என்று வாணொலி இல்லாமல் வறுத்தெடுத்தவன் ‘தேவா..கமான் ஆன். யூ கேன் டூ இட்.’ என்று தன்னை தேற்றியவாறே மீண்டும் பூட்டைத் திறக்கும் பணியில் ஈடுபட்டான்.

995,996,997,998,999 . பூட்டு அசைந்து கொடுக்கவில்லை.

“கடவுளே ஏன் இப்படி என்னை சோதிக்கற? “ என்று சத்தமாக புலம்பியேவிட்டான். கைகள் வலித்தன. ஒரு தடவை நோட்டில் செக் செய்தான்.

“எல்லாம் டிரை பன்னியாச்சு. இனி 000 மட்டும் தான் இருக்கு.” சலித்துக் கொண்டவன் பூச்சியங்களை அதில் வருமாறு செட் செய்தான். லாக் சிறு ஒலியுடன் திறந்தது. “அடப்பாவி இப்படி கன்பூயுஸ் செய்யதான்

001 ல செட் பன்னி வச்சுருந்தியா.?” இதற்குமேலும் பொறுக்காது டைரியைத் திறந்தான்.

முதல் பக்கத்தில் நல்ல தரமான இளஞ்சந்தன நிறத்தாளில் வலதுபுறத்தின் மேல்புறத்தில் ஒரு பட்டாம் பூச்சி சிவப்பு நிறத்தில் இருந்தது.

பெயர் , கைப்பேசி எண், மெயில் , அட்ரஸ் என எதுவும் அதில் எழுதப்படவில்லை. குழம்பியவன் டைரியைப் பிடித்து அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டத் தொடங்கினான். மூன்றாவது பக்கத்தில் தொடங்கி டைரியின் முக்கால்வாசி பக்கங்கள் எழுதப்பட்டிருந்தன.

‘சரி முழுசாவே படிச்சு ஏதாவது டிடெய்ல் கிடைக்குதானு பார்க்கலாம்.’

மூன்றாவது பக்கத்தைத் திறந்தான்.


......அலையும்.

For comments Thread 'முகவரியற்றவை - Comments' https://www.sahaptham.com/community/threads/முகவரியற்றவை-comments.546/
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் 3

ராட்சசி பிறந்தாச்சு.!

ஹாய் பெக்கி ,

ராட்சசி பிறந்தாச்சு. ஆமாம் ராட்சசிதான். அதுநான் தான். முதல்ல நான் ஏன் இந்த மாதிரி டைரி எழுதக் காரணம் ஆனி பிராங்க் . ஹிட்லர் காலத்துல வாழ்ந்த பொண்ணு அவங்க. அவங்க தன் வாழ்க்கைய டைரில எழுதிருப்பாங்க. அது ஒரு இளஞ்சிட்டின் கண்ணீரால் எழுதப்பட்ட ஓவியம். ஆனி பிராங்க் எனக்கு அறிமுகமானது நாலாம் வகுப்பு ஆங்கில புத்தகம். அதிலிருந்து பிடித்ததுதான் டைரி பைத்தியம். வருடத்திற்கு ஒரு டைரி எழுதுனாலும் இந்த டைரி என்னோட லைஃப் பத்தி சுருக்கி எழுதப்போறேன்.

ராட்சசியான நான் பிறந்தது 1996 ம் வருடம். கொங்கு நாட்டில் ஒரு புகழ்பெற்ற இரண்டு இடங்கள் எனக்கு அம்மா வழியிலும் , அப்பா வழியிலும் சொந்தம். ஒன்றரை மணிநேரம் பயணம் செய்தால் போதும். என்னோட அம்மா , அப்பா இரு குடும்பத்தினரும் ரொம்ப கன்சர்வேட்டிவ். அதான் கொஞ்சம் பழமைவாதிகள். ஆணாதிக்கம் சிறப்பாக நடைபெறும். என் அப்புச்சிக்கு (அம்மாவின் அப்பா ) மூன்று பெண்கள் பிறந்தார்கள். அதில் மூத்தபெண்ணின் முதல் வாரிசா பிறந்தது நான். என் அப்புச்சியின் அம்மா ஊருல யாருக்காவது ஒன்னுனா ஓடிப்போய் உதவி செய்வாங்க. அதனால ஊருல இருக்கறவங்களுக்கு பாட்டி மேல பிரியம் உண்டு. ஊர்க்கார பாட்டி ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தாங்க. என்னை பார்த்துட்டு “இதுவும் பிள்ளையா போயிருச்சே “ அப்படினு புலம்பிட்டாங்க.

மாடுகளில் கிடாரி (பெண் ) கன்று பிறந்தால் வரம். மானுடர்களில் பெண் பிறந்தால் சாபம். மாட்டை விட அதிகம் உழைத்தாலும் பெண்களின் தரம் குறைவுதான். ஏனென்றால் நாங்கள் ஆண்களின் உடைமைகள்.

என் அப்பாவுடைய பெற்றோர்கள் உயிருடன் இல்லை. தங்கைகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அண்ணன் பேராசை பிடித்தவர். அதனால் கிட்டதட்ட ஆதரவு இல்லாதவர் மாதிரிதான். அவரின் இரண்டாவது உறவுநான். என்னை கையில் தூக்கினால் கீழே இறக்கிவிடமாட்டார் அப்பா. அவ்வளவு பாசம்.

இப்படி ஒன்றரை வயதுவரை ஜம்முனு வாழந்த நான் என் அம்மா கர்ப்பமாக இருந்ததால் அவர்களால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. பிறகென்ன அம்மாய் வீட்டில் ஜாகைதான் . தாத்தா ,பாட்டி, அம்மாய், அப்புச்சி மற்றும் இரண்டு சித்திகளை ஆட்டிப்படைக்க நான் கிளம்பிட்டேன்.

என்னோட சின்ன சித்தி எனக்கு கொடுத்த செல்லப்பெயர் ராட்சசி. படங்கள் மற்றும் நாடகங்களில் மாமியாரும் , சித்தியும் மோசமாக ஜீவன்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்கள் அப்படி இருப்பதால் படத்தில் காட்டுகிறார்களா ? அல்லது நாடகங்கள் பார்த்து இவர்கள் அப்படி மாறிவிடுகிறார்களா ? என்பது எனக்கு புரியவில்லை . சித்திகளை இம்சை செய்தது என்னமோ நாந்தான். என் சித்திகள் சொன்ன வரைக்கும் எனக்கு பயங்கர பிடிவாதம் , கோபம், திமிறு எல்லாம் சரிவிகிதத்துல கலந்த குழந்தை. இரத்ததில் கலந்தவை இவை எல்லாம். மாற்றுவது கடினம்தான்.

மூன்று வயதில் நடந்தவை எதுவும் ஞாபகத்தில் இல்லை. நாலு வயதிற்கு மேல் நடந்த சில நினைவுகள் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அதற்கு முன்பென்றால் பிறர் சொல்லிக் கேட்டதுதான்.

என் முதல் சித்தி தேவகி சொல்லியிருக்கிறார். அவ்வளவு பிரியம் என்மேல் வைத்திருக்கும் என் அப்பா என்னை பார்க்காம இருப்பாரா? அடிக்கடி வருவார். அப்படி வரும்போது எனக்கு ஒரு பச்சை சட்டையும் , டிரவுசரும் எடுத்து கொடுத்துருக்கார். தினமும் குளித்தபின் அந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று தேவகி சித்தியிடம் அடம்பிடித்து அடிவாங்கி, தாத்தா சமாதானப்படுத்தி சத்துமாவு சாப்பிட்டு வயற்காட்டுக்கு அழைத்துச் செல்வார். அப்போது எல்லாம் தினமும் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு ஒரு பெரிய சத்துமாவு உருண்டை அங்கன்வாடி டீச்சர் அவர்களே வந்து கொடுத்துவிட்டு செல்வார். வீட்டில் மாடு , எருமை , ஆடு இருந்ததால் பால் , தயிருக்கு பஞ்சமில்லை. என் அப்புச்சி ஊர் வெண்ணைக்கு பெயர் பெற்ற ஊருக்கு அருகில்தான் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நேரமும் ஒருத்தர் கையில் நான் இருப்பேன். ஆனால் நான் எடுப்பார் கைப்பிள்ளை எப்போதும் கிடையாது. என்னோட முடிவுகளை தெளிவாக எடுப்பேன்.



தொலைந்த கணங்கள் ரணமாய் :

ஒரு நாளைக்கு எத்தனையோ குழந்தைகள் உலகம் முழுவதும் தொலைந்துபோகிறார்கள். கவனக்குறைவால் மாண்டும் போகிறார்கள். எனக்கும் மூன்று சம்பவங்கள் அப்படி நடந்தது. “பேபீஸ் டே அவுட்” ஒரு ஆங்கிலப்படம். அதில் ஒரு சின்ன குழந்தையை கடத்தபோய் வில்லன்கள் கஷ்டப்படுவாங்க. ரொம்ப காமடியான படம். குழந்தை புத்தகத்தில் பார்த்த இடங்களை ஞாபகம் வைத்து போய்க்கொண்டே இருக்கும். படத்தில் சரி. ஆனால் நிஜ வாழ்க்கையில்?

எனக்கு மூன்று வயதில் இப்படி ஒரு சாகசத்தில் இறங்கி தொலைந்து போய் ஊரே தேடி கண்டுபிடித்தது ஒரு கதை. பொதுவாக வீட்டில் எல்லோரும் ஓரே நேரத்தில் இருக்கமாட்டார்கள். வயக்காடு , துண்டுக்காடு, ஆலை இப்படி மாறி மாறி வேலை செய்வார்கள். நானும் ஏற்கனவே சொன்னது போல் யார்கிட்ட வேணாலும் இருப்பேன். இப்படித்தான் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் நான் மற்றவர்களிடம் இருப்பேன் என்று நினைத்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் அனைவரும் சந்திக்க நான் மட்டும் மிஸ்ஸிங்க். அப்புறமென்ன மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டு தேடியிருக்கிறார்கள். அப்போது ஒருவர் வயக்காடு பக்கத்தில் இருக்கிற வாய்க்கால் பக்கம் என்று சொல்ல அங்கு சென்ற தேடியிருக்கிறார்கள்,

அந்தப்பகுதியில் புதைகுழி உண்டு. நான் அதில் சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு கிணற்றுமுன் அ தாண்டிச் செல்ல வழி தெரியாமல் அழுது கொண்டிருந்தேனாம். அந்தப்பாதை அப்புச்சி என்னை வயக்காட்டுக்கு அழைத்துச் செல்லும் வழி. ஆனால் அந்தமாதிரி அதிர்ஷ்டம் அனைத்துக் குழந்தைகளுக்கும் அமைவதில்லை. பேபிஸ் டே அவுட் டிசாஸ்டாரா கூட மாறிவிடும்.

இன்னொரு சம்பவம். இது ஒன்றரை வயதுக்கு முன்பு நடந்தது. நாங்கள் பூட்டுக்கு பெயர்போன பகுதியில் அப்போது குடியிருந்தோம். பக்கத்தில் ஒரு அத்தையின் வீடு இருந்தது. அவர் பையன் தான் என்னுடைய முதல் தோழன். எனக்கும் அவனுக்கும் இப்போது வரைக்கும் ஒரு நல்ல ஒரு புரிதலுடன் கூடிய பந்தம் இருக்கிறது. அந்த அத்தை தென்னை மரத்தின் மட்டையில் தொட்டில் காட்டி ஆட்டிவிட்டு என்னை தூங்க வைக்க முயன்றிருக்கிறார்கள். தூங்குவதற்கு பதிலாக நான் தொட்டலோடு பறந்துவிட்டேன். தொட்டல் அறுந்துவிட்டது. பதறிப்போய் தரையில் கிடந்த என்னைத் தூக்கி அடிபட்டுள்ளதா சோதனை செய்ய எனக்கு எந்த சேதாரமும் இல்லை. கொஞ்சம் திக் ஸ்கின், ஹார்டு ஹெட்டடு பர்சன் யூ நோ.

அடுத்தது நான் குடித்து தடுமாறிய கதை. உடனே ஆல்கஹால்னு நினைக்க வேண்டாம். இது அதுக்கும்மேல்…. மண்ணெண்னெய். இது நாலு வயதில் நடந்தது. அம்மாய் ஊரில் எனக்கு ஒரு விளையாட்டுத் தோழன் உண்டு. அவன் பெயர் சுஜித். அவனுடன் ஓடிப்பிடித்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தேன். வெளியில் பாட்டில் இருந்தது. மூச்சு வாங்கியபடியே எடுத்து வாயில் ஊற்றிவிட்டேன். குடித்த பின்புதான் தெரிந்தது அது வாயில் ஊத்தறது இல்ல . வாகனங்களுக்கு ஊத்தறது. புரையேறி விட்டது. தாத்தா வேறு சின்ன அப்புச்சியுடன் வீட்டின் மறுபுறம் இருந்தார்.

மாட்டிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. பாட்டிலை மூடிவைத்துவிட்டு சமையலறையின் கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன். மீன் கறி செய்தால் ஊருக்கே தெரிந்து விடுவது போல் எனக்கு இருமல் நிற்கவில்லை. சத்தம் கேட்டு தாத்தா என்னை கண்டுபிடிச்சுட்டாரு. அப்புறமென்ன மருத்துவமனைதான்.

சுஜித் கூட விளையாடி என் காதில் இருந்த கால்பவுன் தங்க தோட்டை தொலைச்சுருக்கேன். என் கையில் இருக்கும் கைக்குட்டையை கூட லேசுல தவற விடமாட்டேன். உடும்புப்பிடி மாதிரி நான் எதையும் அவ்வளவு சீக்கிரம் தொலைக்கவும் மாட்டேன். மறக்கவும் மாட்டேன். ஆனால் மூன்று தடவை தங்கத் தோட்டே தொலைச்சுருக்கேன். எனக்கு மெட்டல் அலர்ஜி இருக்கு. வெயில் காலத்துல தங்கம் , வெள்ளி எதுவும் என் கழுத்தில் போட முடியாது. சொல்லப்போனால் நான் தொடர்ந்து கொலுசு போட்டிருந்தது முதுகலை படிக்கப் போகும் போதுதான். பூ வைக்கிறது, நகை போடறது இதெல்லாம் எனக்கு அவ்வளவா ஒத்து வராது. “ பூ வாங்கிற காசு புத்தகம் வாங்கலாம் “ அப்படிங்கறது என்னோட கொள்கை.

தங்கம் ஒருகாலத்துல பெண்கள் திருமணத்துக்கு சேர்த்து வைக்கனும். அப்பதான் வரதட்சணை கொடுக்க முடியும். இப்ப அதன் பயன்பாடு விரிவடைந்துவிட்டது. வரதட்சணையுடன் முதலீடாகவும் மாறி விலை ஏறிக்கொண்டிருக்கிறது. கிலோ கணக்குல தங்கம் இருந்தாலும் , மில்லி லிட்டர் தண்ணீர்க்கு நாம் அலைவோம் என்பது உறுதி.

பாரு பெக்கி , நான் மறுபடியும் டாபிக் டைவர்ட் ஆகி போயிட்டேன். சுஜித் பத்தி எழுத வந்தேன். ஐந்து வயது வரைக்கும் எனக்கு அவன் தான் விளையாட்டுத் தோழன். இப்பொழுது வரைக்கும் எனக்கு உண்மையான ஆண் நண்பர்கள் உண்டு. சிலர் பெஸ்டி என்பதை மிகவும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. நட்பு ஆத்ம சம்பந்தம். உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சிலர் அப்படி நினைக்கலாம். அது அவர்களின் விருப்பம். அவர்களைப் பேசுவதைக் கூட நான் விரும்பவில்லை.

“ஆணென்ன பெண்னென்ன எல்லாம் ஓரினம் தான் “ இந்த பாடல் வரிகள் நட்புக்கும் பொருந்தும். எவ்வளவு நபர்களிடம் பழகினாலும் அனைவரும் நண்பர்களாகிவிட முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை.

இப்படி ரன்னிங்க் ,சர்ச்சிங்க் ,சேசிங்க் , பாலிங்க்னு ஜம்முனு வாழ்க்கை வேற லெவல்ல அது பாட்டுக்குச் சென்றது. ஆப்கோர்ஸ் எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்க வாய்ப்பே இல்லை. அட என் பெயர் சொல்லவே இல்லை. நான் யாழரசி. பாய் பெக்கி , எனக்கு தூக்கம் வருது. குட் நைட் .

படித்து முடித்தவன் மனதில் ஏதோ ஏதோ எண்ணங்கள் எழுந்தன. ‘ஓ இது ஒரு பொண்னோட டைரி. அதிலும் ஊர் தெளிவாக இல்லை. ‘ அதனால் அவள் குறிப்பிட்டிருந்த வெண்ணெய்க்குப் பெயர் பெற்ற ஊர் , கொங்கு நாட்டின் புகழ் பெற்ற இடங்கள் போன்றவற்றைக் நோட்டில் குறித்து வைத்தான்.

அவள் பெயரை இருமுறை எழுதிப்பார்த்தான். ‘எனக்கென்னவோ இந்த பொண்ணோட டைரில இன்னும் சுவாரசியமான விஷயங்கள் இருக்கும்னு நினைக்கிறேன். முழுசா படிச்சா அவ அட்ரஸப் பத்தி ஏதாவது க்குளு கிடைக்கும். ‘

அவள் எழுதியிருந்த தொலைந்த கணங்கள் அவன் மனதில் தொலைக்க நினைத்த நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்திருந்தது. அதன் அப்பகுதியைப் படிக்கும் போது அவன் கண்களில் கண்ணீரும் பெருகியிருந்தது.

அலைவான்...

For Comments


இது டைரியில் இருப்பதை எழுதுவதால் இலக்கிய நடை ஒத்துவராது. இயல்பான நடையில் தான் கதை செல்லும்.
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -4

வருடம் 1998

தூங்கா நகரம். மீனாட்சி அம்மாள் தன் மலர்க்கண்களால் காக்கும் மதுரை. கோவிலின் நாற்புரமும் மக்கள் போவதும் வருவதுமென்று சுறுசுறுப்பாக நாள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ஒரு பெற்றோர் இரு ஆண் குழந்தைகளுடன் வெளியில் வந்தனர்.

அம்மா ஐந்து வயது நிரம்பிய பெரியவனை கைகளில் பிடித்திருந்தார். அப்பா மூன்று வயது நிரம்பிய சிறியவனை தன் தோள்களில் பிடித்திருந்தார். நால்வரும் காரில் ஏறினர். திருமலை நாயக்கர் மஹாலுக்கு செல்லும் வழியில் வண்டியை தந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். பெரிய பையன் முன்புறம் தந்தைக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனது அம்மா தம்பியை கையில் பிடித்தவாறு காரின் பின்சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தார்.

அம்மாவுடன் பேசியபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கடையில் ஒரு மரப்பாச்சி பொம்மையைப் பார்த்துவிட்டு அது வேண்டுமென கைக்காட்டியது. உடனே தாயனாவள் ,” என்னங்க வண்டிய நிறுத்துங்க. குழந்தைக்கு பொம்மை வாங்கனும்.”

“இங்க காரை நிறுத்த முடியாது நித்யா , நீ வேணா செல்லக்குட்டியோட இங்க இறங்கி வாங்கிட்டு இரு. நான் காரை நிறுத்திட்டு வரேன்.” தனது செல்ல சின்னமகனின் மழலை மொழி மற்றும் மனைவியின் வார்த்தை இரண்டுக்கும் உருகிவிடுவார் அவர்.

பெரியவன் “அப்பா நானும் அம்மாகூட போறேன்.” என்று கூறி இறங்கிகொண்டான். ஐந்து வயது எனினும் அவனுக்கு தனது வயதைவிட பொறுப்புணர்ச்சி அதிகம். இவர்களை இறக்கிவிட்டு காரைப் பார்க் செய்ய அவர் கிளம்பிவிட்டார்.

வண்ணங்கள் குழந்தைகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிடும் வல்லமை வாய்ந்தவை. கடைகளில் இருந்த விதவிதமான பொருட்கள் அண்ணன் தம்பி இருவரையும் ஈர்த்துவிட்டன.

மூவரும் பொருட்களைப் பார்க்கத் தொடங்கினர். பிளாஸ்டிக் பொம்மைகள் விதவிதமாக இருந்தன. பெரியவன் கடையின் மேலடுக்கில் அடுக்கி வைக்கிப்பட்டிருந்த கார் பொம்மையக் கண்டவுடன் அதை நோக்கி நகர்ந்தான். அம்மாவும் சின்ன பையனுக்கு மரப்பாச்சி பொம்மையை கையில் கொடுத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார். கடையில் ஒரு நாலைந்து பேர் பொருள் வாங்கிக் கொண்டிருந்தனர்.

பெரியவன் கார் பொம்மையை எடுக்க முயற்ச்சிக்க கைதவறி வேறு சில பொருட்களின் மீது பட்டுவிட பொம்மைகள் அவன் தலைமீதும் கால்மீதும் விழுந்துவிட்டது.

பெரிய அடி எதுவும் இல்லைதான். ஆனால் “அம்மா “ என்று கத்திவிட்டான். பொருட்கள் கீழே விழுந்ததால் சிறிய பையனை பதட்டத்தில் இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு பெரிய பையனைப் பார்க்கக் குனிந்தார்.

“ஓன்னு இல்லைடா தேவ். எழுந்துரு.”

தேவ்க்கு கண்களில் கண்ணீர் தளும்பியது. தேம்பியவன் “அம்மா..அம்மா.. “ என்று கூறினான். அதற்குள் கடையில் இருந்தவர்களும் கூடிவிட்டனர். கடைக்காரரும் வந்தார்.

“தேவ் கண்ணா…ஒன்னும் இல்லைடா. அம்மா பாத்துக்கரேன்.” கடைக்காரரை நோக்கியவர் “அண்ணே இந்த பொருளுக்கும் சேர்த்தி எவ்ளோ ஆச்சுனு சொல்லுங்க.”

“ஆறுநூறு ஆச்சும்மா.”

“இந்தாங்க அண்ணா. எல்லாத்தையும் பேக் பன்னி கூடுங்க.” அவரிடம் கூறிவிட்டு தேவ்விடம் திரும்பி “அங்கிள்டா சாரி கேளு தேவ்.” என்று கூறினார். தேவ்வும் கண்களைத் துடைத்தபடியே அன்னை கூறியபடியே செய்தான்.

இப்போதுதான் அன்னைக்கு இளையமகன் அருகில் காணவில்லை எனத் தேடினார்.

“அரசா… யாழரசா எங்க இருக்க?” குழந்தையை கூப்பிட்டபடியே கடையில் சுற்றி முற்றித் தேடினார். பையனைக் காணவில்லை. தேவ்வும் தம்பியைத் தேடினான்.

இருவரும் வெளியே வந்தனர். பாலகனைக் காணாத பதட்டத்தில் வியர்த்து வழிய ஆரம்பித்தது. உடம்பில் நடுக்கம் உண்டானது. அதே நேரத்தில் தந்தையும் வந்து சேர்ந்தார். தன் கணவனைக் கண்டதும் “என்னங்க அரசக் காணோங்க..என்னங்க பன்னறது?...”

இப்படி தன் மனைவி கண்களின் நீருடன் புலம்பவும் , இது செயலில் இறங்க வேண்டிய சமயம் என்பதை உணர்ந்தவர், “நீங்க இரண்டு பேரும் இங்கயே இருங்க. நான் தேடிட்டு வரேன். பெரியவன பார்த்துக்கோ.”

அவர் உயிர்ப்புதல்வனைத் தேட ஆயத்தமாக தாய்க்கு தாங்க இயலவில்லை.

“நானும் தேடறேன். “ தாயும் மகனும் அவரைத் தொடர்ந்தனர். இவர்களின் கதறலுக்கு காரணமாவன் வேகமாக ஒரு பஞ்சுமிட்டாய் வண்டியின் பின் கைகளை நீட்டியவாறே ஓடிக்கொண்டிருந்தான்.

பெற்றவர்களும் “இந்த வழியில் ஒரு குழந்தை பச்சை சட்டை போட்டுட்டு போனதப் பார்த்தீங்களா?” வழியெங்கும் மக்களை விசாரித்தபடியே சென்றனர்.

ஒருவர் மட்டும் குழந்தை சென்ற திசையைக் காண்பித்தார். உடனே தன் புதல்வனைக் கண்டுபிடித்து விடலாம். தன் புதல்வனை எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை ஒளியுடன் ஓடினர்.

அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. குழந்தையைக் கண்டுபிடித்தனர். ஆனால் உயிர் மட்டும் இல்லை. குழந்தையை அவர்கள் பார்க்கும் போது ஒரு காரின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் கண்முன்னே இரத்தவெள்ளத்தில் உயிரையும் விட்டிருந்தது. சில நேரங்களில் ஒருவரின் கவனக்குறைவு பலருக்கு பேரிடராய் மாறிவிடும். தேவ்வின் தம்பி விஷயத்தில் யாரையும் பழி சுமத்த முடியாது.

தேவனின் மனதில் இந்நிகழ்வு இன்றும் பசுமையாக பதிந்திருந்தது. அந்த டைரியில் யாழரசி இவன் உள்ளத்திலிருந்த ஆழமான காயத்தைக் கீறி கண்ணீர் வரவைத்திருந்தாள். உடல் காயத்தால் ரத்தம் வரும். உள்ளத்தின் காயத்தின் வெளிப்பாடு கண்ணீர்தானே.

‘ எப்படியோ இந்த பொண்ணு தப்பிச்சாளே …சரி டைரிய படிப்போம்.’ தன்னைத் தேற்றிக் கொண்டு டைரியின் மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

நானும் பள்ளிக்கூடம் போறேன்:

என்ற தலைப்பில் ஆரம்பித்திருந்தது.

ஹே பெக்கி , உனக்குத் தெரியுமா? நான் சின்ன வயசிலே படிக்கட்டுல தவறி விழுந்து தாடையில் காயமாகிடும். இப்ப வரைக்கும் நான் எங்காவது அடிக்கடி விழுவேன். அப்புறம் டிசைன் டிசைனா இரண்டு நாளுக்கு திட்டு வாங்குவேன். ஹா..ஹா இது எல்லாம் யாழு வாழ்க்கையில் சாதாரணம். நல்லா விளையாடுவேன். இப்ப வரைக்கும் எனக்கு மொபைல்ல இருக்க கேம்ஸ் விளையாட வாராது. எனக்கு ரியல் கேம்ஸ்தான் பிடிக்கும். வியர்வைத் துளி சிந்த , கருக்கும் வெயில், புழுதி பறக்க மண்ணுல விளையாடற மாதிரி இருக்குமா? அந்த சுகம் கிடைக்குமா?

இப்படி விளையாட்டு , பொதிகை டிவி , ஐஸ்கீரிம் ஜோரா போயிட்டு இருந்த வாழ்க்கையில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் வந்துச்சு. ஐந்து வயதுக்கும் மேலாகிவிட்டதால் என்னை அங்கான்வாடிக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கே சென்று நாள் ஹை டெசிபலில் நான் பாடிய பாட்டில் என் அப்புச்சி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

அதற்குப் பிறகு நடந்தது அதை விட சிறப்பான சம்பவம். அம்மாய் அவுனி நாரில் அடி வெளுத்து விட்டார். ( அதை இன்னும் ஞாபகம் வைத்து இன்னும் நான் பேசுவது வேற விஷயம்.) இப்படியே இருந்தால் நான் படிக்க மாட்டேன் என்று அம்மா அப்பா வீட்டிற்கு பெட்டி படுக்கையை கட்டி அனுப்பிவிட்டனர். அம்மாவுக்கு கொஞ்சம் அப்போது பயப்படுவேன். அதெல்லாம் ஒரு எட்டு வயசு வரைக்கும்தான். நான் கொங்குப் பகுதி என்பதால் பேச்சில் மரியாதை எப்பவும் இருக்கும். எங்கள் பகுதியில் சில உயர்சாதிகள் உண்டு. அவர்கள் வீட்டில் சில பழக்க வழக்கங்கள் உண்டு. பேச்சில் மரியாதை இருப்பது அவசியம். பெற்றவர்களிடம் மிக மரியாதையாக பேச வேண்டும்.

ஆனால் நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு என் குடும்ப ஆட்களிடம் செல்லமாக பேசுவதுதான் வழக்கம். நம்ம ஆளுங்ககிட்ட பார்மலா பேசிட்டு இருக்கறது. இன்பார்மலா பேசுனாதான் உரிமையா இருக்கற மாதிரி இருக்கு. அதே சமயம் நான் என் வயசில் இருந்த சிலர் வீட்டில் காவிரி ஆறு மாதிரி சுவைக்க சுவைக்க பேசிவிட்டு , வெளியில் நொய்யலுக்கு நாந்தான் போட்டி என்று பேசுவர்களையும் பார்த்திருக்கேன்.

சரி கதைக்கு மறுபடியும் வருவோம். என் பெற்றோர் அப்போது உடுமலை பேட்டைக்கு அருகில் இருந்தனர். அங்கே உள்ள கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்க என்னோட சொந்தக்காரக் குழந்தைகளும் படித்தனர். பால்வாடிக்கு போகாமல் அடம்பிடித்த நானேதான் பிற்காலத்தில் விடுமுறை கூட எடுக்காமல் பள்ளிக்கு சென்றேன்.

“எழுத்தறிவிப்பவன் இறைவன்” அப்படினு சொல்வாங்க. ஆனால் எனக்கெல்லாம் தேன்மொழி டீச்சரும் , சங்கீதா அக்காவும்தான். அ..ஆ ..ஏபிசிடி சொல்லிக் கொடுத்து எழுத பயிற்சி கொடுத்தவர்கள் அவர்கள். பள்ளி படிப்பு , கல்லூரி படிப்பு, யூபிஸ்சி கோச்சிங்க் இப்படி நிறைய இடங்களில் ஆசிரியர்களை பார்த்திருக்கேன். எனக்கு யூ.ஜி முடிக்கற வரைக்கும் யாரையும் குறை பேச வராது. அதே மாதிரிதான் ஆசிரியர்கள் பற்றி என்னுடன் இருப்பவர்கள் எவ்வாறு தவறாகப் பேசினாலும் நான் பேச மாட்டேன். ஒரு ஆசிரியர் குணங்கெட்டவராக இருந்தால் தவிர ஆசிரியர் பற்றிப் பேச நமக்கு உரிமை இல்லை.

அப்புறம் எனக்கு இருக்கும் இன்னொரு குணம் எந்த தவறாக நிகழ்வு நடந்தாலும் , அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதுதான் பொதுவாக என்னை ஆசிரியர்கள் பற்றித் தவறாக பேசத் தூண்டியதில்லை.

இந்த வரிகளைப் படித்தவுடன் ‘வாவ்..’ என்று மனதில் நினைத்த தேவின் இரு புருவங்களும் உயர்ந்தது. மேலும் படிப்பதைத் தொடர்ந்தான்.

நான் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தேன். வீட்டில் பொழுது போகாமல் என் தம்பியும் வருவான். எனக்கு ஜீலியஸ் சீசர் மாதத்தில் பிறந்தநாள் வரும். என் தம்பி நான் பிறந்தநாளுக்கு புதுத்துணி அணிந்து பள்ளி வந்தால் அவனும் வருவான். ஆசிரியர் “எதுக்கு புதுடிரஸ் போட்டிருக்கனு? “ கேட்டதுக்கு என் தொம்பி “எங்க அக்காவுக்கு பிறந்தநாள்” பதில் கூறினான். டீச்சர் சிரிச்சுட்டே போயிட்டாங்க.

என் தம்பி என்னை ஒரே ஒரு முறைதான் அக்கா என்று அழைத்திருக்கான். எப்பவும் என் பெயரைச் சுருக்கிதான் அழைப்பான். நானும் கண்டுகொள்ள மாட்டேன்.

எனக்கு தோழிகளும் உண்டு. பெக்கி எனக்கு இப்ப வரைக்கும் சரியா பொய் சொல்ல வராது. ஸ்கூலுக்கு ஒரு டைம் உடம்பு சரியில்லைனு குளிக்காமல் போயிட்டேன். அந்த நாளுதான் பார்த்து சார் எல்லோர்கிட்டேயும் குளிச்சுட்டு வந்தீங்களா? , நகம் வெட்டிட்டு வரது இப்படி எல்லாத்தையும் செக் பன்னாரு. நான் வசமா சிக்கிட்டேன். அப்பவும் ஒரு பக்கம் மனசு “பொய் சொல்லு யாழ்னு” சொல்லுச்சு. ஆனா வாய்ல பொய் வரவே இல்லை. குளிக்காமல் வந்த விஷயத்தைக் கூறிவிட்டேன். ஆறு வயதில் என்னால் பொய் கூட சொல்ல முடியவில்லை.

இவ்வாறு டைரியில் இருப்பவள் புலம்பிக் கொண்டிருக்க தேவ்வினால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வாட் இந்த பொண்ணுனால பொய் கூட சொல்ல முடியலனா எப்படி வாழ்க்கையில் பிரச்சினைகளில் இருந்து தப்பிச்சுருப்பா? இந்த உலகத்தில் நமக்கு ஒரு முகமூடி கண்டீப்பா வேணும். அது நம்மள கெட்ட நோக்கத்தோட நெருங்க நினைக்கிற ஆட்களிடமிருந்து தப்பிக்க வைக்கும். அதிலும் குறிப்பா பெண்கள் பல இடங்களில் நடிக்க வேண்டியிருக்கும். ‘ இப்படி சிரிப்பில் தொடங்கி அவளுக்காக அக்கரையில் அவன் எண்ணம் சென்றது.

இப்படி நினைத்தவன் சில மணி நேரங்களுக்குப் பிறகு அவள் எழுதியிருக்கும் விஷயத்தால் அதிரப் போகிறான்.


தேடி அலைவான்....

For Comments
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் 5

பொய்தான் என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு கோபம் அதிகமாக வரும். அனைத்து மனிதர்களுக்கும் பலம் , பலவீனம் இரண்டும் இருக்கும். பலவீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் நாம் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பலவீனத்தின் அளவைக் குறைத்தால் நாம் வெற்றியாளர் .

நான் ஏன் இப்படி எழுதிட்டு இருக்கேன் தெரியுமா? கோபத்துடன் செய்த ஒரு விஷயம் காலம் முழுக்க என்னுடன் ஒட்டிவருமென்று என்று எனக்கு தெரியாது. அதுவும் ஐந்து வயதில் நான் செய்த காரியம். என்னோட சித்தப்பா பையனுக்கு காதணித்திருவிழா. பெரியவர்கள் எல்லாம் விருந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். குட்டீஸ் விளையாடிட்டு இருந்தார்கள். அதில் நானும் ஒருத்தி. என் அத்தை பையன் என்னை போடினு சொன்னதா நினைவு இருக்கு. அப்புறம் என்ன ? அத்தைபையனுக்கு மொத்துதான். புரட்டி புரட்டி அடிச்சுட்டேன். பெரியவர்கள் வந்துதான் அவனை என்னிடமிருந்து காப்பாற்றினார்கள். இத்தனைக்கும் அவன் என்னைவிட நான்கு வயது பெரியவன். இந்த நிகழ்வை இப்ப வரைக்கும் உறவினர்கள் நினைவு வைத்திருக்கின்றனர். நம் சமூகத்தில் பெற்றவர்கள் குழந்தைகளை அடிப்பது, ஆண்கள் பெண்களை அடிப்பது என்பது சாதாரணம். ஏன் தன்னை ஒரு ஆண் கிண்டல் செய்தால் செருப்பால் பெண்கள் அடிப்பது போல் நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். அடித்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்ன? வாய்ப்பே கிடையாது. வன்முறை பதில் வன்முறையா? எனக்கு இப்பவும் வாடி போடி ஆண்கள் அழைத்தால் பிடிக்காது. ஏன் என் அம்மாவைக் கூட அழைக்க கூடாது என்று கூறிவிடுவேன். போடி என்பது இரு வார்த்தைதான். அடிவாங்கிய என் அத்தை மகன் பல வருடங்கள் என்னுடன் பேசவில்லை என்பது ஒரு விஷயம். ஆனால் நாம் செய்த தவறுகளை நம் உடனிருப்பவர்கள் கட்டாயம் நினைவு வைத்திருப்பர்.

இவ்வளவு எழுதற எனக்கு கோபத்தைக் கட்டுபடுத்த பழகியிருப்பனு நீ நினைக்கலாம் பெக்கி. வெளிச் சூழ்நிலைகளில் நான் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலும். முன்பிருந்ததை விட இப்பொழுது பரவாயில்லை என பாட்டி அடிக்கடி சொல்வார் “ நீ அல்லா விஷயத்திலும் சரி, ஆனா கோபம் மட்டும் படாம இரு” . நான் என்ன செய்ய முடியும். என் குடும்பத்து ஆட்கள் இயல்பாகவே கோபக்கார்கள். கோபம் எனக்கு தானாகவே வரும்.

நான் முன்னாடி சொல்லிருந்தேன் ராட்சசி பிறந்தாச்சுனு. அந்த பேர் எனக்கு என் சித்தி வைத்தார்கள். ஏன் தெரியுமா?

இது எனக்கு ரொம்ப தெளிவாக நினைவில் இருக்கும் சம்பவம். நாலு வயதில்தான் நடந்தது. எங்க தாத்தா வீட்டில் ஒரு வழக்கம். ஞாயிற்றுக் கிழமை வந்தால் அரப்பு அல்லது சீகைக்காயை ஆட்டி அனைவரும் தலைக்கு தேய்த்து குளிப்பர். நான் சின்னப் பெண் என்பதால் என் முதல் சித்தி தேவகி எனக்கு சனிக்கிழமையே தலைக்கு குளித்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை வீட்டினர் அனைவரும் அரப்பைத் தலைக்குத் தேய்ப்பதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்ததது. சித்தியிடம் சென்று எனக்கும் தேய்த்துக் குளித்துவிடும்படி கேட்டேன். சித்தி முந்தையநாள் குளித்துவிட்டதால் மறுத்துவிட்டார்.

எனக்கு கோபம் வந்துவிட்டது. கூட ஒரு யோசனையும் வந்தது. வீட்டை விட்டு வெளியில் சென்றேன். அட வீட்டை விட்டு ஓடி எல்லாம் போகல. நான் என்ன ஹோம் அலேன் சைல்டா? வீட்டு வாசலில் இருக்கும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுகொண்டேன். இப்ப என்ன செய்ய முடியும்?

“ஆ….வாட்?...ஓ மை காட். இஸ் ஷீ கிரேசி? சின்ன வயசிலேயே எவ்ளோ தெளிவா வேலை பார்த்திருக்கா. என்ன ஆட்டியூட் சாமி?”

தேவன் சத்தமாக பேசியவாறே டைரியை வைத்துவிட்டு வாட்டர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் பருகினான்.

‘இப்படி இருக்கற குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறம் எப்படி இருந்திருப்பா?’ யோசித்தபடியே டைரியை மீண்டும் வாசிக்கத் தொடங்கினான்.

நான் இப்படிப்பட்ட ஒரு பெண்தான். அந்தக்குணம் இருக்கிறது. ஆனால் சீக்கிரம் வெளிப்படாது. ஆனால் இதே குணத்தை ஒரு ஆண் குழந்தை பெற்றிருந்தால்

“ஆம்பிளைப் புள்ளை அப்படித்தான் இருப்பான்.” என்று எளிதில் முடித்திருப்பர். பெண் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமும் சொல்லி கொடுத்திருப்பார்கள்.

“அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு “ இந்த நான்கு குணங்கள் இருந்தால்தான் பெண். இதற்கு நான் எப்படி விளக்கம் நான் சொல்றேன் பாரு பெக்கி. சுயமாக கருத்துகளைப் பேச , தன் முடிவுகளை எடுக்க அச்சப்பட வேண்டும். ஏனென்றால் குடும்பத்தின் மானமே பெண்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு மணிக்கு மேல் வெளியில் செல்ல அச்சப்பட வேண்டும். ஏனென்றால் பட்டபகலில் கூட பாதுகாப்பு கிடையாது.

அடுத்தது மடம் , தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டும் காணாதவாறு இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் வாழ முடியும். முட்டாளாய் இருந்தால் கடைசிவரை பிழைத்துக் கொள்ளலாம்.

அடுத்த இரண்டைப் பற்றி நான் எழுத மாட்டேன் பெக்கி. “தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ “ என்ற வசனத்தில் முடித்துக் கொள்ளலாம்.

எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயம் புரியல பெக்கி. ஆண்களுக்கு நவ நாகரீக உடை, லேட்டஸ்ட் மொபைல் , கம்யூட்டர், பீட்சா , பர்கர் இப்படி எல்லா வகையான மாற்றமும் உடனே வேண்டும். ஆனால் பெண்கள் உடை மிகவும் சாரி, சுடிதாரைத் தாண்டி வேறு எதுவும் உடுத்தக்கூடாது. கேட்டால் காலாவதியான கலாச்சாரத்தின் சாயம் பூசுவார்கள். புடவைக்கு ஜாக்கெட் கொண்டு வந்ததே வெள்ளையர்கள். இதில் இவர்கள் கலாச்சாரம் பற்றிப் பேசுகிறார்கள்.

உண்மையைச் சொன்னால் இப்பொழுது நாம் கூறும் கலாச்சாரத்தில் பாதி உண்மையற்றவை. ஆண்கள் மட்டும் அப்படியே மாறிக் கொள்ளலாம். பெண்கள் நவ நாகரீக உடை அணிந்தால் வெறித்துப் பார்ப்பவர்களின் கண்களை ஊசியால் குத்திவிட வேண்டும். இதில் ஹைலைட் என்னவென்றால் புடவை , சுடிதார் அணிந்தாலும் வெறித்துப் பார்க்கிறார்கள்.

இவை அனைத்தையும் விட இருபத்தியோராம் நூற்றாண்டு நல்ல பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும் , அப்புறம் வீட்டு வேலைகள் அனைத்தும் அத்துபடியாக இருக்க வேண்டும் . இவை அனைத்தையும் செய்தாக வேண்டும். இதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது. அந்தக்கால பெண்கள் வீட்டிற்குள் கிடந்து வேலை செய்தார்கள். இக்கால பெண்கள் வீட்டுவேலை , வெளி வேலை என கயிற்றின் மேல் நடந்து காட்ட வேண்டும். இவ்வளவு ஏன் பெண்கள் நாளிதழ்களில் என்ன இருக்கிறது? இன்னும் சமையல் குறிப்பை தாண்டவில்லை. ஒரு பக்கத்தில் சாதித்த பெண்கள் பற்றியும் , மறுபக்கத்தில் சமையல் ரெசிபிகள்தான் உள்ளது. இவ்வளவு ஏன் அரசின் திட்டத்தில் பெண் கல்வி அவசியம் என்று சிலதும் , திருமண உதவித் தொகைத்திட்டங்களும் இருக்கும். இத்திட்டங்களும் வரதட்சிணையை ஊக்குவிக்கின்றன. கேட்டால் மக்களை மாற்றுவது கடினம் என்பர். நான் முன்னாடியே சொன்னபடி வீட்டில் அனைத்து வகையான நவீன தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும்.

இதற்கெல்லாம் கேட்டால் இது அத்தியாவசியம் என்பர். காலத்திற்கேற்ப மாற்றம் என்று அழகாக பதில் வரும். இவைகளும் சமூக மாற்றம்தான். நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்தான். ஆனால் பெண்களின் நிலை மாற மட்டும் பல்லாண்டு காத்திருக்க வேண்டும். இது என்ன லாஜிக் அப்படினு எனக்குத் தெரியல.

நம்ம நாட்டில் இருவிதமாக பெண்கள் வளர்க்கப்படுகின்றனர். முதலாவது ஃபேரிடேல் வகை. “சின்ட்ரல்லா டைப் ” இவர்கள் கல்யாணக் கனவுகளில் வளருபவர்கள். நம்ம நாட்டு வழக்கப்படி சொன்னால் பிரித்விராஜன் மாதிரி ஒருவன் தன்னைத் தூக்கிச் செல்ல காத்திருப்பவர்கள்.

இரண்டாவது ஸ்கேரி டேல் வகை. “நீ இந்தமாதிரி எல்லாம் பேசினால் உன்னை புருசன் அடிச்சுருவான். நீ இப்படித்தான் பேசனும் . இப்படி தான் நடக்கனும். இப்ப நீ வேலை செய்யலனா புருஷன் வீட்டுல கஷ்டப்படுவ. நீ என்ன படிச்சாலும் குழம்பு கூட வைக்க தெரியலனா நீ வேஸ்ட். இவ்வளவு திமிறு இருந்தா நீ எப்படி மாமியார் வீட்டுல வாழுவ….” இவ்வாறு கல்யாணத்தை காட்டேரி போலவும் புருஷனை பூதம் பூச்சாண்டியாக பயம் காட்டி வளர்க்கப்படும் பெண்கள் ஒருவகையினர்.

தனக்கு தேவையான முடிவுகளை தாமே சிந்தித்து முடிவெடுக்கும் திறனுள்ள பெண்களாக வளர்க்கும் பெற்றோர்கள் குறைவு.

ஒரு பெண் தன் வீட்டில் எதிர்கருத்து கூறினால் நல்ல மகள் கிடையாது. என் தோழி ஒருத்தி கூறுவாள். கொஞ்சம் கீரீனா இருந்தாலும் மன்னிச்சுக்கோ பெக்கி.

“நான் பல்லு விளக்கற பிரஷ்ல இருந்து நான் யாரு கூட படுக்கனும் அப்படிங்கறத கூட என் பெத்தவங்க முடிவு செய்வாங்க.” இதை எல்லாம் எங்க போய் சொல்லறது.

பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று கூறுவார் சிலர். ஆம் உண்மைதான். ஆனால் தத்தைகளின் முன்னேற்றம் நத்தை மாதிரி இருக்கிறது. நத்தைக்காவது ஓடு காப்பாற்றும். ஆனால் பெண்களுக்கு அவர்களது உடல்தான் பலவீனமே.

எப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு தரப்படுவதில்லை. அப்படியே வாய்ப்புத் தரப்பட்டாலும் இடையில் பறிக்கப்பட்டுவிடும்.

இன்னும் சில விஷயங்கள் இருக்கு பெக்கி. ஆனால் அதை நான் பின்னாடி சொல்றேன். நான் இப்படி பேசினால் எனக்கு பெண்ணியவாதி என்று முத்திரை வேறு குத்தப்பட்டுவிடும். நான் கேட்பது யாதெனில் பெண்களாக கூட பார்க்க வேண்டாம். சக மனிதர்களாகப் பார்க்கலாம். ஆப்டர் ஆல் பெண்களிலிருந்து ஆண்கள் உருவானர்கள். யாருடைய விலா எலும்பிலிருந்தும் உருவாக்கப்படவில்லை. இதை நான் சொல்லவில்லை. மரபணுவியல் சொல்கிறது. மதங்களை நம்பிவில்லை மாறாக அறிவியலை நம்புகிறேன்.

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால்தான் அதன் வலி புரியும். சில ஆண்கள் பெண்களுக்கு சமூக ஊடகங்களில் பயங்கரமாக சப்போர்ட் செய்வர். ஆனால் அவர்களின் எண்ணங்கள் அப்படியே ரியாலிட்டியில் இன்வெர்ஸாக இருக்கும். இவங்களுக்கு பழமைவாத கும்பலே பரவாயில்லை. அவர்களாவது தாங்கள் இப்படித்தான் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவர்.

இதையும் சொல்லிறேன். சமையல் வீட்டுவேலை செய்வது குற்றம் இல்லை. அனைவருக்கும் தெரிந்திருத்தல் அவசியமாகும். அதாவது சமையல் செய்து வீட்டுக்கு உழைத்து வாழ்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அப்படி வாழட்டும். இல்லை எனக்கு இப்படி வாழ விருப்பமில்லை என்றால் இப்படியும் வாழட்டும். இரண்டும் வேண்டும் என்றாலும் அதுவும் தவறில்லை.

நான் கொஞ்சம் எமோசனஷல் ஆகிட்டேன் பெக்கி. நான் இந்த விஷயத்தில் ரொம்ப சென்சிட்டிவ். நான் ஏதோ சொல்லவந்து வேறே ஏதோ எழுதிட்டேன். அடுத்தது என் வாழ்க்கை மறுபடியும் யூ டர்ன் போட்டது எப்படினு சொல்றேன். பாய் பெக்ஸ்.

இதைப் படித்து முடித்த பின்பு தேவ் ஒரு பெருமூச்சு விட்டுகொண்டான். மீண்டும் தண்ணீரை எடுத்துக் குடித்தான். “ஸ்பிட்பயர் “ என்று முனுமுனுத்தான்.


அலைவான்.
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் 6

இரவு தேவதை தன் ஆதிக்கத்தை மலையரசன் மீது செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் அன்பால் அவனை விழுங்கத் தொடங்கியிருக்க தேவன் டைரியில் மூழ்கியிருந்தாள்.

அடுத்த பக்கத்தைத் திருப்பிப் முதல் வரியை படிக்கும் முன் அவனது அலைபேசி மூங்கில் காடுகளே என்று காட்டின் நடுவில் உள்ள வீட்டில் அலறியது. அதன் சத்தத்தில் தேவன் கவனம் சிதறியது. சிறிது எரிச்சலோடு கைப்பேசியை எடுத்தவன் தனது அம்மாவின் பெயரைப் பார்த்ததும் மகிழ்ந்தான்.

“அம்மா சொல்லுமா?”

“டேய் தேவ்.. என்னடா செஞ்சுட்டு இருக்கற? சாப்பிட்டியா?” அவன் தாயின் குரல் கனிவுடன் தேவனின் மனதை வருடிச் சென்றது.

“இனிமேல்தாமா சாப்பிடனும். நீங்க?” என்று கேட்டுவிட்டு தனக்கு டைரி ஒன்று கிடைத்திருப்பதையும் அதனைப் படித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தான்.

பிறகு தந்தையைப் பற்றி விசாரித்தான். சில நிமிடங்கள் பேசிய பின் மீண்டும் டைரியைக் கையில் எடுத்தான்.

“யூடர்ண் “ தலைப்பிடப்பட்ட பக்கத்தைப் புரட்டத் தொடங்கினான்.

“I FIT HERE DOESNOT MEAN I AM BELONG HERE” ஆங்கிலத்தில் இப்படி ஒரு அழகான தத்துவம் உண்டு. இந்த தத்துவத்தை “ I BELONG HERE BUT I DONOT FIT HERE.” இப்படி மாற்றியும் கூறலாம். இந்த இரண்டு தத்துவங்களும் எனக்கு ரொம்ப சிறப்பாக பொருந்தும். எப்படினு கேக்கிறியா பெக்கி? முதல்ல சொன்னது என்னோட பள்ளிக்கூட , கல்லூரி வாழ்க்கை இரண்டுக்கும், இரண்டாவது என் குடும்பவாழ்க்கைக்குப் பொருந்தும்.

பொதுவாகவே மனிதர்களுக்கு பிறரின் அங்கீகாரமும், ஏற்றுக்கொள்ளப்படுதலும் மிகப் பிடித்தமான விஷயங்கள். பூமியில் பிறந்த எந்த மனிதனும் ஒரு நிமிடமாவது தன்னைப் பிறர் அங்கீகாரம் செய்ய மாட்டார்களா? என்று ஏங்கியிருப்பர். அப்படி அங்கீகாரம் கிடைத்தும் நம் மனதும் ஒன்றவில்லை என்றாலும் பத்துபேர் இருந்தாலும் தனிமைநிலைதான்.

நான் இரண்டாவது படித்துமுடித்தேன். மூன்றாம் வகுப்பிற்கு என்னை அப்புச்சி ஊருக்கு அருகில் உள்ள ஊரில் சேர்த்தார்கள். காரணம் என்னவென்றால் சொத்துப்பிரச்சினை. அதை விரிவாகச் சொல்ல விருப்பம்மில்லை. அப்பாவுக்கும் பெரியப்பாவிற்கும் இருந்த சொத்துப் பிரச்சினைதான் அனைத்திற்கும் காரணம். அதெல்லாம் சொன்னால் இந்த டைரி பத்தாது. ஆனால் ஒன்னு சொல்றேன் பெக்கி..பந்தம் பாசம் எல்லாம் முக்கியம் இல்லை. பணம்தான் முக்கியம். என் பெற்றோரும் தம்பியும் நான் மூன்றாம் படிக்கும் போது இடையில் சொந்த வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊரில் குடியேறினர்.

இது நடக்கும் என்று பெரியவர்கள் அனுமானித்ததின் காரணமாக நான் பாட்டி வீட்டுக்கு வந்தேன். புதிய பள்ளி, புது ஆட்கள் எந்த பிரச்சினையும் இல்லை. வகுப்பில் நான் தான் உயரம் குறைவு. அதனால் அண்ணா , அக்கா என்று உடன் படிப்பவர்களை சில காலம் அழைத்தேன். பள்ளி நன்றாக இருந்தது. உனக்கு ஒரு சின்ன விஷயம் சொல்லட்டுமா பெக்கி… எப்போதிருந்து நான் யோசிக்க ஆரம்பிச்சேன். எங்கு நான் பெண்ணியவாதி ஆகத் தொடங்கினேன் என்று ?

எட்டு வயதில்தான். நான்காம் தலைமுறை பெண் என்பதால் என் அம்மா செய்த வேலைகள் எல்லாம் நான் செய்தது கிடையாது. வீட்டில் சிறிய சிறிய வேலைகள் மட்டும் செய்வேன். பள்ளிக்கூட விடுமுறை அன்று. என் அம்மாய் என்னை வீடு பெருக்க சொன்னார்கள். எனக்கு செய்த விருப்பமில்லை. அதனால் செய்ய மாட்டேன் பதில் கூறிவிட்டேன்.

அதற்கு அம்மாய் கொடுத்த பதில் “பொட்டபுள்ளதான் இதெல்லாம் செய்யனும்.” இதுதான். இந்த வசனம்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஆண்களின் மீதான வெறுப்பும் அங்கிருந்து ஆரம்பித்து இருக்கலாம். அதற்குப் பிறகாவது அதனைக் குறைக்கும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். எரியற நெருப்பில் எண்ணை ஊற்றும்படி சம்பவங்கள் நடந்து வெறுப்பை வளர்த்தது.

இப்படிதான் எட்டு வயதில் யோசிக்க ஆரம்பித்த விஷயம் இன்னும் முடிவடையவில்லை.

எட்டுவயதில் இன்னொரு விஷயம் நடந்தது. பள்ளிக்கூடம் படிக்கும் போதே குழந்தைகளை அவர்களின் வாழ்க்கை லட்சியம் என்னவென்று கேட்பார்கள். என்னையும் என் ஊர்க்காரர் ஒருவர் கேட்டார். நான் ஏன் எட்டு வயதில் அப்படி பதில் சொன்னேன் என்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்தால் அந்த வேலையைப் பற்றி அதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதில்லை. பிற்காலத்தில் அந்த எட்டு வயதில் சொன்ன விஷயத்தை நோக்கித்தான் என் பயணம் அமைந்தது. சொல்லப் போனால் என் பிறப்பின் நோக்கம் என்னவென்று வெகுநாள் யோசித்திருக்கிறேன்.

நான் என் குடும்பத்து உறுப்பினர்கள் , உடன் படிப்பவர்கள் என அனைவரிடமும் மாறுபட்ட கருத்துக் கொண்டவளாக உணரத் தொடங்கினேன். அதற்காக எனக்கு நட்பு பட்டாளம் இல்லை என்று நினைத்துவிடாதே பெக்கி.

எவ்வளவு பேர் என்னைச் சுற்றி இருந்தாலும் எனக்கு மனம் ஒன்றவில்லை. பல தோழியர் குழுவைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு ஒரே விஷயங்களைப் பிடிக்கும். ஆனால் எனக்கு அப்படி இல்லை. என் நண்பர்களிடமிருந்து நான் மிகவும் வேறுபட்டிருந்தேன்.

இப்படிப்பட்ட மனநிலையில் சிலகாலம் சென்றாலும் அதற்குப்பிறகு நான் எதிர்பார்ப்பைக் கைவிட்டேன். அன்பு என்பது வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் பிறரை ஏற்றுக் கொள்வதில் அடங்கியிருக்கிறது.

தேவ் இந்த வரியைத் திரும்பவும் வாசித்தான்.

‘எஸ் அன் கண்டிஷனல் லவ். ஆமா இந்த பொண்ணோட லட்சியம் என்னவாயிருக்கும்? ‘ என்ற கேள்வியும் அவன் மனதில் எழும்பாமல் இல்லை. ‘ சரி எப்படியும் பின்னாடி படிக்கும் போது தெரியும்.’ என நினைத்துவிட்டு படிப்பதைத் தொடர்ந்தான்.

எனக்கு எப்பவும் நைட் மேர்ஸ் இரவில் வரும். என் அம்மாய் பழக்கி விட்ட பழக்கங்களில் ஒன்று அதிகாலை நாலு மணிக்கு எழுவது. இரவு எட்டுமணிக்கு உறங்கி விடுவேன். மாலை விளையாடுவது , வீட்டுப்பாடம் செய்வதில் போய்விடும். காலை எழுந்து படிப்பேன். இதுதான் என் வழக்கம்.

உனக்குத் தெரியுமா? என்னால படுத்தவுடன் பதிமூன்று வயது வரை உறங்க முடியாது. மூளையில் ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கும். என்னால் அதைக் கட்டுபடுத்த இயலாது. தற்போதும் இது நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக நான் யாருக்கும் அவ்வளவாக பயப்பட மாட்டேன். முன்பு படித்த பள்ளியில் ஆசிரியர் நன்றாக மாணவர்களை நடத்துவார்.

இப்பொழுது நான் சேர்ந்திருக்கும் பள்ளியிலும் ஆசிரியர்கள் நல்லவர்கள். ஆனால் ஒரு ஆசிரியை அவர்களின் குணம் மட்டும் எனக்குப் பிடிக்காது.

அந்த ஆசிரியை சிலேட்டில் எழுதிப் போகும் வீட்டுப்பாடத்தில் ஒரு பிழை இருந்தாலும் அடி வெளுத்துவிடுவார். ஆனால் ஒருத்திக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. எங்கள் வகுப்பிலே அழகிய பெண் அவள்தான். என்னுடைய பெஸ்ட் பிரண்ட்டில் ஒருவள். ஆனால் எனக்கு அவளை விட இன்னொருத்திதான் அழகென்று தோன்றும்.

அழகாக இருப்பதால் அவளை மட்டும் அந்த டீச்சர் அடிக்க மாட்டார்கள். மற்ற மாணவர்களை அடி பிய்த்து எடுத்துவிடுவார்.

அவரிடம் நான் சில முறை அடிவாங்கி இருக்கிறேன். ஆனால் இப்படி பேவரிட்டிசம் மற்ற மாணவர்களிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

ஒரு ஆசிரியர் அனைவரிடமும் சமமாக நடத்தல் என்பது அவசியம். புற அழகைக் காரணமாக வைத்து மட்டும் நடத்துதல் மிகத் தவறான அணுகுமுறைகளில் ஒன்றாகிவிடும்.

அழகு என்பதும் தகுதிதான் என்பதை உணரச் செய்த தருணங்களில் ஒன்று.

அப்படி இப்படி என மூன்றாம் வகுப்பு முடிந்து நான்காம் வகுப்புக்கும் வந்தாச்சு. எனக்கு இரு தோழிகள். முதலாமவள் மனோ , இரண்டாமவள் அஜி. மனோ ஒன்றாம் வகுப்பிலிருந்து அதே பள்ளியில் பயிலுகின்றாள். இரண்டாமவள் இரண்டாம் வகுப்பிலிருந்து படிக்கிறாள். நான் மூன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறேன். நாங்கள் பிறந்த மாதம் வரிசையாக ஜனவரி, மார்ச், ஜீலை என்று வரும். நான் தான் சிறியவள். உயரமும் அப்படித்தான்.

எங்கள் மூவரின் நட்பு பள்ளியில் வெகு பிரசித்தம். எங்களை பிரிக்க நினைத்தவர்கள் பலர். பவர்பஃப் கேர்ளஸ் , மூதேவிகள் இப்படி எது மூன்றாக இருந்தாலும் எங்களுக்கு அது அடைமொழியாக வைத்துவிடுவர். மனோ முதல் ரேங்க். நான் இரண்டாவது ரேங்க் எடுப்பேன். அஜி ஓரளவுக்கு படிப்பாள். நாங்கள் சொல்ற பேச்சைக் கேட்கும் சமத்து பிள்ளைகள் அதனால் நாங்கள் ரொம்ப ஃபேமஸ். அழகும் அறிவும் கலந்த தோழியர் குழு. மூவரும் உண்மையாக இருப்போம். எங்களுக்குள் இருந்தது மிகவும் உறுதியான பந்தம். வாழ்க்கையில் எங்கு எப்படி இருந்தாலும் அது அழியாத ஒன்று.

நாங்கள் மூவரும் வித்தியாசமானவர்கள். இருந்தாலும் நட்பு பிணைத்தது.

இன்னொன்று தெரியுமா நான் நாலாம் வகுப்பில் மிகத் தைரியமான காரியம் ஒன்றைச் செய்துள்ளேன். அப்போதெல்லாம் குழந்தைகள் கை, கால்களில் நகம் சரியாக வெட்டி உள்ளார்களா என்று சோதனை செய்வர். அதெல்லாம் நான் சரியாக வெட்டி சென்றுவிடுவேன். பிரச்சினை என்ன வென்றால் எங்களை சோதித்த ஆசிரியர் இடதுகையில் சுண்டுவிரலில் நகம் வைத்திருந்தார். நான் இந்த ஆசிரியரை கேள்வி கேட்டபின் எழுந்து பிளேடை எடுத்து நகத்தை வெட்டிவிட்டேன்.

பின்னே அவரே சொல்லிவிட்டு செய்யவில்லை என்றால் மாணவர்கள் எப்படி செய்வர்? நான் செய்த மாதிரி எல்லாம் மற்ற ஆசிரியர்களிடம் செய்ய முடியாது.

‘ரொம்ப தைரியம்தான்’ தேவ் மனதுக்குள் கூறிக்கொண்டான்.

கொஞ்ச நாளா சில விஷயம் நான் கவனித்து வருகிறேன். இப்பொழுதெல்லாம் ஆசிரியர்களிடம் நடுநிலைத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது. ஆம் சில பள்ளிகளில் ஆசிரியர்களின் குழந்தைகளும் படிப்பர். அதனால் அவர்களுக்கு அந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்துகின்றனர். எதுவென்றாலும் முதலில் இவர்களுக்குத்தான். பிறகுதான் மற்ற குழந்தைகள். அனைத்து ஆசிரியர்களும் இவ்வாறு நடந்து கொள்வதில்லை. ஆனால் ஒரு பள்ளிக்கு இப்படி ஒரு ஆசிரியர் இருப்பது வாடிக்கையாகிவிட்டது.

நம் பெற்றோர்களும் சும்மாவா என்ன? கௌரவத்திற்காக மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்க வைத்த காலம் போய் பப்ளிக் ஸ்கூலில் படிக்க வைப்பது அதிகரித்துவிட்டது. இதில் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் படிக்கும் திறன் மாறுபடும். படிப்பது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மிஸரியாக மாறிவிடக்கூடாது.

திரும்பவும் என் கதைக்கே வர்ரேன். நாலாம் வகுப்பில் என் வாழ்வைத் திருப்பிப் போடும் ஒரு சம்பவம் நடந்தது. வேறென்ன காதல்தான். நாளைக்கு பேசலாம் பெக்கி குட் நைட்.

“வாட் லவ்? “ சத்தமாகப் பேசினான் தேவ். இல்லை கத்திவிட்டான் என்றே சொல்லலாம். அறையில் அவன் குரல் எதிரொலித்தது. காட்டிலும் ஏதோ விலங்கு ஒன்று ஓசையெழுப்பி பதில் கொடுத்தது.

‘தேவ் இப்ப நீ ஏண்டா இவ்ளோ எமோஷனல் ஆகிற.’ அவனது மனம் கேள்வி எழுப்பியது. ‘ஒன்னுமில்லை சின்ன புள்ள அதான் ‘ என்று அதற்குப் பதிலும் கொடுத்து கொண்டது.




அலைவான்....
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் 7

ஹே பெக்கி,

இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சரி காதல் கதைய தொடரலாம். எனக்கு எப்பவும் இசை , திரைப்படங்கள் இரண்டுமே மிகப்பிடித்தவை. இதையும் தாண்டி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று உள்ளது. இது வாழ்க்கையில் வந்தது லேட்தான். ஆனால் இது இல்லாமல் நான் இல்லை. எப்படி பசி, தாகம் , உணவு , தூக்கம் இவற்றிற்கும் உடலும் , மனமும் ஏங்குகிறதோ அதுபோலதான் எனக்கு இந்தக் காதல்.

ஆர்வ மிகுதியில் தேவ்வின் வலது கைபெருவிரலின் நகத்தைக் கடிக்கத் தொடங்கியிருந்தான். ‘ஏன் பக்கி இப்படி இழுக்கிற. சீக்கிரம் அது யாருனு சொல்லு?’ மனதில் திட்டிக்கொண்டே தொடர்ந்து வாசித்தான்.

பேரன்பே காதல்….எனக்கு புத்தகத்தின் மீது அளவிலாத காதல் ஏற்பட்டுவிட்டது. நாலாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி நூலகத்திலிருந்து புத்தகம் எடுக்கவிட்டார்கள். அதுதான் ஆரம்பபுள்ளி. அதிலிருந்து எந்தப்புத்தகம் கிடைத்தாலும் வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். இதற்கு என் அம்மாவும் ஒரு காரணம். நீ யோசிக்கலாம் பெக்கி நான் தான் அம்மா கூட இல்லையேனு? அது சரிதான். அம்மாகூட நான் இல்லாமல் இருக்கலாம். அவங்க ஜீன் என் உடம்புல இருக்கு. அவங்களுக்கும் பாட்டு, படம், புத்தகம் என்றால் உயிர். எனக்கும் அதே குணம். இதனால்தான் எனக்கு இது பசி தூக்கம் மாதிரிதான்.

தேவ் ஆசுவாசுமாக மூச்சைவிட்டான். சத்தமாகவே “ச்சே நான் கூட பயந்திட்டேன். படிப்ஸ் அப்படிங்கறதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா. பிபி எகிற வைக்கிறா இந்த பொண்ணு.” என்று பேசினான்.

தேவ் பொதுவாக எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன். நிதானம் மற்றும் வேகம் இரண்டும் கலந்தவன். இந்த டைரி இவனை பல்வேறுவித உணர்ச்சிக்கு ஆட்படுத்திக் கொண்டிருந்தது.

புத்தகம் படிக்க பிடிக்கும் என்பதற்காக நான் அதிலே மூழ்கிகிடப்பேன் என்று நினைக்காதே பெக்கி. நான் அதே நாலாம் வகுப்பில்தான் கிரிக்கெட் விளையாடப் பழகினேன். கிரிக்கெட்டுக்கும் எனக்கும் லவ் ஹேட் ஸ்டோரி. ஆனால் விளையாடப் பழகுனதுக்கு அப்புறம் அதுதான் நான் அதிகமாக விளையாடினது. என் மாமாக்கள் இருவர் , மூன்று பெண் குழந்தைகள் இப்படி ஒரு பட்டாளம் நாங்கள். மாலை நேரத்தில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவோம். நான் முதல்ல பிடிச்சது ஒரு கேட்ச். அப்புறம் பேட்டிங்க் கத்துகிட்டு பில்டிங்க் செய்வோம். கிராமம் என்பதால் வீட்டின் முன்புறம் இடம் நிறைய இருந்தது. காம்பவுண்ட் சுவரும் இருந்தது. நான் நன்றாக உயரத்தில் தூக்கி அடிப்பேன். விளையாட ஆரம்பிச்ச சில நிமிடங்களில் அவுட் ஆகிவிடுவேன். காம்பவுண்ட்க்கு வெளியில் பந்தை அடித்தால் அவுட் என்று வெளியில் அனுப்பிவிடுவார்.

ஒரு பிற்போக்கான கிராமத்தில் நாங்கள் வளர்ந்தோம். வயது வந்துவிட்டால் பெண்கள் வீட்டில் முடங்கி விடுவர். ஆனால் அதுவரை யாரும் எதுவும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.

என் குடும்பத்தில் ஆடைக் கட்டுப்பாடு அதிகம். பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு கையில்லாத கவுன் அணிவதற்குகூட அனுமதி கிடையாது. திருப்பூர் பக்கத்தில் இருந்தாலும் ஜீன்ஸ் டீசர்ட் இதெல்லாம் எனக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

எனக்கும் ஆடை பற்றிய கான்சியல் சிறு வயதிலிருந்தே அதிகம். ஒரு வித இன்செக்யூரிட்டி எனக்கு எப்பவும் இருந்தது. பெண்களின் குணமே ஆடை அணிவதில்தான் அடங்கியிருக்கிறது என்று முரசுகொட்டும் சமுதாயத்தைச் சேர்ந்த பல கோடி பெண்களில் நானும் ஒருவள்.
பெண்களின் உடை ஆண்களின் காமத்தை தூண்டி அவர்களைத் தவறாக நடத்திவிடும் என்று வாதத்தை முன் வைப்பார்கள். ஆமாம் ஆமாம் அதனால் தான் டையப்பர் போட்ட பச்சைக் குழந்தைகளும் , பல் முளைக்கும் குழந்தைகளும் கசக்கி எறியப்படுகின்றனர்.

சாக்குப் பையை தைத்துப் போட்டுச் சென்றாலும் கண்களால் துகிலுரிப்பவர் ஏராளம். ஆடை சரியாக அணிந்தால் மட்டும் எதுவும் நடக்காது என்று பேசும் ஆட்களைக் கண்டால் எரிச்சல் வரும்.

ஆடை என்பது அணிபவருக்கு சவுகரியமாக இருக்க வேண்டும். பலவந்தப் படுத்தும் போதும் சேலையும் சுடிதாரும் நம்மைக் காப்பாற்றுமா என்று தெரியாது. ஆனால் ஜீன்ஸ் காப்பாற்றும். சரி இதைவிடு.. நானும் பார்த்துவிட்டேன். பெண்கள் அணியும் உடைகளில் ஒன்றாவது அத்தியாவசிய பொருட்கள் ஏதாவது எடுத்துச் செல்லும் படி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அந்தகாலத்தில்தான் அப்படி என்றால் ஆபிஸ் அவுட்பிட் என்று பெண்கள் அணியும் பென்சில் ஸ்கர்ட், ஹை ஹீல்ஸ் ஒரு வகையில் அசௌகரியம்தான். பென்சில் ஸ்கர்ட்டைப் போட்டுக்கொண்டு கையில் தவறவிட்ட பொருட்களை கூட எடுக்க முடியாது. உடைகள் பெண்களின் சவுகரியத்திற்காக வடிவமைக்கப்படுகிறதா இல்லை…………………………………நான் எழுதலப்பா. எழுதுனா அப்புறம் அது வேற மாதிரி போயிரும்.

சாண்டல் வகை செருப்புகளும் , காற்றோட்டமுள்ள உடைகளும் ஆரோக்கியமானவை. இதுல முரண் என்ன தெரியுமா? என்னால் பிளாட் செப்பலில் நடப்பதைவிட இரண்டு இஞ்ச் ஹீல்ஸ்ல் வேகமாக நடக்க முடியும். அதே மாதிரி புடவையிலும் நல்லா சமாளிப்பேன்.

நான் மற்ற பொண்ணுங்க மாதிரி மெதுவாக நடக்க மாட்டேன். மெதுவாக இருக்கறதும் பிடிக்காது. பையன் மாதிரி நடக்காதேனு நிறைய பேர் அட்வைஸ் செஞ்சுருக்காங்க. தலையைக் குனிஞ்சுட்டு மெதுவாக நடந்து போனா எங்காவது கரண்ட் கம்பத்துல மோதிகிட்டு தலையை வீங்க வைக்க வேண்டியதுதான்.

பெண்கள் எப்பவும் நேராக நிமிர்ந்து நடக்கனும். தவறு செய்தால் தலைக்குனியலாம். பெண்கள் நிமிர்ந்து நடந்தால் குடும்ப கௌரவத்திற்கு களங்கம் வந்துவிடும் என்பதெல்லாம் இது ஒரு உளவியல் அடக்குமுறை. பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கும் போது சுற்றுப்புறத்தைக் கவனிப்பாள். யோசிப்பாள். தனக்குத் துணையாக ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்துவிட்டால் என்ன செய்வது? அதனால் தான் இடைக்காலத்தில் உயர்குடிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். வீட்டிற்கு விருந்தினர் வந்தால் சமைக்கும் போது பொருட்கள் தீர்ந்துவிட்டால் சமையலறையில் ஒரு சாரளம் போன்ற ஒன்றின் வழியாக பக்கத்து வீட்டில் தன்னைப் போல் இருக்கும் பெண்களிடம் பொருட்களை வாங்கிக் கொள்வர்.

இதைக் கேட்டபிறகு நல்லவேளை நான் அந்த மாதிரி ஜெயில் சிஸ்டம் இருக்கற காலத்துல வாழலனு தோணுது. இப்பவும் வீட்டில் கூறாமல் நான் எங்கேயும் செல்ல முடியாது.

மறுபடியும் டாபிக் டைவர்ட் பன்னிட்டேன். திரும்பவும் ஸ்கூலுக்கே வருவோம். இப்ப நான் ஐந்தாம் வகுப்பு வந்துட்டேன். என் பள்ளிக்கு அருகில் ஒரு நூலகம் உள்ளது. எறும்பு சர்க்கரையைத் தேடிப் போகற கதைதான். அம்மாய்கிட்ட நூலகத்தில் சேர்த்துவிடச் சொல்லி அடம்பிடிச்சேன். எங்கம்மாய் ரொம்ப நாள் பார்த்துட்டு எனக்கு வகுப்பு எடுக்கும் கணபதி ஆசிரியரிடம் வந்து கேட்டார். “புள்ள நல்லா படிக்குதா? நூலகத்துல சேர்த்து விடலாங்களா ? “ அப்படினு கேட்டார். அவரும் ஒன்னும் பிரச்சினை இல்லை . சேர்த்து விடுங்கனு சொல்லிவிட்டார். அப்படித்தான் நான் நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். என்னோட அறிவு பயங்கரமா வளர்ந்ததுக்கு அந்த நூலகம் காரணம். அதில் சேர காரணமாக இருந்த ஆசிரியர்தான் முதற்காரணம். அவர் முகத்துல் நான் டஸ்டர் அடிச்சு விளையாடி இருக்கேன். அவரு கிளாசில் நான் சேட்டை செய்வேன். இன்னொரு சார் இருக்காரு. அவரு பேர் கண்ணன். ரொம்ப ஸ்டிரிக்ட். ஆனால் அவரு எந்தப்பாடம் எடுத்தாலும் ரொம்ப நல்லா புரியும். அவர் கிளாசில் நான் கம்முனு இருப்பேன். கண்ணன் சாருக்கு மொத்த ஸ்கூலே பயப்படும். விளையாட்டு ஹவர் பர்மிஷன் கேட்க பலியாடு மாதிரி என்னதான் மொத்த கிளாசே அனுப்பி வைப்பாங்க. அந்த வேதனை இருக்கே! நான் தான் வாயாடியாச்சே. அப்ப மத்தவங்களுக்காக பேச ஆரம்பிச்சது . இன்னும் நிறுத்தமுடியலை.

ஸ்கூல்னா ஒரு பேரண்ட்ஸ்-டீச்சர் மீட்டிங்காவது இருக்கும். எங்களுக்கும் நடந்தது. எங்க அப்புச்சி நான் செய்யற இம்சை எல்லாம் வந்து ஹெட்மாஸ்டர்ட்ட போட்டு கொடுத்தாரு. என்ன நடந்துச்சு தெரியுமா?

ஹெ.எம் எங்க அப்புச்சியை “புள்ள எவ்ளோ நல்ல புள்ள தெரியுமா? அந்த புள்ளைய பத்தி இப்படி பேசாதீங்கனு “ லைட்டா திட்டி அனுப்பிட்டாரு. அதிலிருந்து எந்த பேரன்ட்ஸ் மீட்டிங்கிலும் எங்க வீட்டிலிருந்து என்னை பத்தி கம்ப்ளெயிண்ட் செய்ய மாட்டாங்க. அரசி பவரு அப்படி!!!!!

இதைப் படித்த பின்பு தேவ் வாயில் ஒரு கையை வைத்து மூடிக் கொண்டான். ‘அடக் கடவுளே இப்படி எல்லாம் பேரண்ட்ஸ் மீட்டிங்க் நடக்குமா என்ன? வாவ்..சீ இஸ் சம்திங்க் எல்ஸ். எல்லா சேட்டையும் பன்னிட்டு நல்ல பேரு எடுக்கறது. எனக்கு டோட்டல் ஆப்போசிட்.’ அந்த பெண்ணின் குணத்தையும், தன் குணத்தையும் ஒப்பிட்டவன் படிப்பதைத் தொடர்ந்தான்.

இப்படி பவர்புல்லான நான் என்னை சுத்தி நடக்கறத கவனிக்க ஆரம்பிச்சேன். செய்தித்தாள் வாசிப்பு , சிறுவர் இதழ்கள் வாசிப்பு வழக்கம் போல் தொடர்ந்தது. மற்ற பெண்களுக்கு பிடித்த பூ , அலங்காரப் பொருட்கள் இவை எனக்குப் பிடிக்கவில்லை. புத்தகங்கள் என்னை ஈர்த்த அளவுக்கு வேறு எதுவும் ஈர்ப்பதில்லை. என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வேறுபட்டிருந்ததை உணர்ந்தேன். மற்ற பெண் குழந்தைகள் போல் திருமணக் கனவுகள் இல்லை. ஆனால் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மனதில் மூலையில் ஏதோ ஒரு ஏக்கம். யாரோ எனக்காக காத்திருப்பது போன்ற ஒரு உணர்வு. அப்படி எண்ணியதைக் கூட நான் மறந்துவிட்டேன்.

நூலகம் சேர்ந்த பின் தினமும் ஒரு புத்தகம் எடுத்து படிப்பேன். புத்தகம் படிக்கும் போது எனக்கு யாரவது அழைத்தால் கூட காது கேட்காது. வீட்டில் அம்மாய் திட்டிக் கொண்டே இருப்பார். புத்தகம் படிக்கும் போது அதில் ஒன்றிப் போய்விடுவதின் விளைவு. ஒரு தடவை என்ன நடந்தது தெரியுமா பெக்கி? இது நான் பெரிய கிளாஸ் படிக்கும் போது நடந்தது. நான் அம்மா ஊரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரதுக்கு பேருந்தில் பயணித்தேன். அதிகாலை ஐந்து மணி இருக்கும் . நான் தனியாகச் சென்றதால் புத்தகம் படித்துக் கொண்டே சென்றேன். பேருந்து பழுதாகி ஒரு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பயணிகளை அனைவரையும் வேறு பேருந்தில் செல்ல சொல்லிவிட்டனர். எனக்கு இது தெரியாமல் பேருந்தில் அமர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். அரை மணி நேரம் கழித்து ஒட்டுநர் பேருந்தில் ஏறும் போது கவனித்து அப்போதுதான் அவரை விசாரித்தேன். உண்மைத் தெரிந்த பின் அரக்க பரக்க இறங்கி வீடு போய் சேர்ந்தேன். இந்த விஷயத்தை இது வரைக்கும் வீட்டில் சொல்லவில்லை.

பதிமூன்று வயதிலேயே தனியாக எனக்கு பேருந்து பயணம் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. இதைச் சொல்லி அதை எப்படி கெடுத்துக் கொள்வேன்.

தேவ்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான். சிறிது நேரம் சிரித்துவிட்டு தண்ணீர் குடித்தான். பசிப்பது போலத் தோன்றியது. டைரியை தலைகீழாக மேசையில் கவிழ்த்து வைத்தவன் உணவை உண்ணத் தொடங்கினான்.

உணவு உண்ணும் போதும் மனதில் அவளை இருந்திருந்தாள் . ‘ அவ நினைச்ச மாதிரி அவளுக்காக காத்திருப்பவனை கண்டுபிடிச்சுருப்பாளா ? ‘ என்ற கேள்வி எழுந்தது.

‘சரி பார்ப்போம். படிச்சு தெரிஞ்சுக்குவோம்.’ உணவை உண்டுவிட்டு கைகளைக் கழுவினான்.







அலைவான்.........
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -8

கை கழுவும் முடிப்பதற்குள் அழைப்பேசி மீண்டும் அடித்தது. கைகளில் டவலை எடுத்து துடைத்தவாறே வேகமாக கைப்பேசியினை எடுத்தான். அழைக்கும் நபரைப் பார்த்தவன் அழைத்து ஓயும் வரை விட்டுவிட்டு பின் ஸ்விட்ச் ஆஃப் செய்தான். மனதிற்குள் ஒரு நிம்மதி ஓடியது. ‘இப்ப நிம்மதியா டைரியைப் படிச்சு முடிக்கலாம்.’ டைரியை எடுத்து வைத்தவன் மீண்டும் படிக்க ஆரம்ப்பித்தான்.

ஓ பெக்கி மறுபடியும் பீயூட்ச்சருக்கு போயிட்டேன். முதன் முதலில் நூலகத்தில் எடுத்தது நீதிக்கதைகள் புத்தகம் . அதற்குப் பிறகு கிட்டதட்ட அந்த வருடம் முழுவதும் அறக் கதைகள்தான். நல்ல புத்தகங்கள் சிறுவயதில் படித்தால் அது ஒரு நல்ல மனமாற்றத்தை உருவாக்கும். மாரல் வேல்யூஸ் வளரும். அதற்கு அடுத்த வருடங்கள் எல்லாம் பொது அறிவு தொடர்பான புத்தகங்கள் இப்படி ஏதாவது ஜெனர் படிப்பேன். புத்தகம் பற்றி எழுதி இப்ப எனக்கு ஒரு புத்தகம் படிக்கத் தோணுது. பாலோ வோட புது புத்தகம் ஒன்னு வந்திருக்கு பெக்கி, நான் போய் அதைப் படிக்கிறேன். அப்புறம் நாளைக்கு இன்னொரு காதல் பற்றி சொல்றேன்.

குட் நைட் பெக்கி.

“மறுபடியும் காதலா? இந்த பொண்ணு மனசில என்னென்ன ரகசியம் இருக்குனு தெரியல. இன்னிக்கு நைட் பிபி எனக்கு பயங்கரமா எகிறப் போகுதுனு தெரியல.” சத்தமாக முனகிவிட்டு அடுத்த பக்கத்தைத் திருப்பினான்.

பருவப் புயல்:

என்ன பெக்கி பருவப் புயல்னு தலைப்பு கொடுத்திருக்கன்னு பார்க்கிறாயா? புருவப் புயல், யாஸ் புயல் இப்படி பல புயல் இருக்கும் போது பருவப் புயல் இருக்கக் கூடாதா? எஸ் இது காதல் கதைகளின் நேரம். 90’ஸ் கிட்ஸ் இருந்தால் என்ன? டீனேஜ் வந்தால் காதல் வரும். இந்தக் காதல் இருக்கே …இருக்கே????? சில உறவுகளை உடைக்கும் . சில உறவுகளை உருவாக்கும். எனக்கு என்ன நடந்தது தெரியுமா? சொல்றேன்.

இப்ப நாம கொசுவர்த்தி சுருள சுத்த விட்டு பார்க்கப் போகிறோம். இல்லை இல்லை. நாம ஆல்ரெடி கொசுவர்த்தி சுருளுக்குள் தான் இருக்கோம்.

2006 வது வருஷம். இடைநிலை படிப்பின் முதல் வகுப்பான ஆறாம் வகுப்பில் நாங்கள் கெத்தா காலடி எடுத்து வைத்தோம். ஆறாம் வகுப்புக்கு புது மாணவ மாணவிகள் நிறைய சேர்ந்தனர்,

எத்தனை பேர் சேர்ந்தால் என்ன? எனக்கு முதல் பெஞ்சுதான். லாஸ்ட் பெஞ்சர்ஸ்னு நிறைய பேரு சுத்தும் போது , நானும் பர்ஸ்ட் பெஞ்சர்ஸோட அவஸ்தைகள அப்புறமா சொல்றேன்.

எங்களோட மூணு பேரு நட்பில் எந்த மாற்றமும் இல்லை. இவங்க அளவுக்கு இன்னும் ஒரு ஆள் என்னோட பெஸ்ட் பிரண்ட் விஸ்வா. எனக்கும் அவனுக்கு ஒரே ராசி , நட்சத்திரம் . புத்தகம் படிக்கறதுனா இரண்டு பேருக்குமே உயிர். ஒன்றாய் நூலகம் மதியம் உணவு இடைவேளையின் போது சென்று படிப்போம். இவனும் எனக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தோழன். எங்க கேங்க் மாதிரி இவன் கூட ரொம்ப ஆழமான நட்பு இருந்துச்சு.

இப்போது வகுப்பில் புதுப்புது நபர்கள் வந்தார்கள். மூன்று வருஷம் நான் மதிய உணவு தனியாக தான் உண்பேன். என் உடன் பயின்றவர் அனைவரும் சத்துணவு உண்பவர்கள். நானும் அவ்வப்போது சென்று சத்துணவு சாப்பாடு சாப்பிடுவேன். அந்த குழம்பு நல்லாயிருக்கும். சத்துணவு சாப்பிடாத காரணத்தால் எனக்கு இலவச சீருடை போன்ற எந்த பொருட்களும் பெற்றதில்லை. ஆறாம் வகுப்பு சென்ற பிறகு என்னுடன் அமர்ந்து மதிய உணவு உண்ண ஆட்கள் கிடைத்தார்கள். எனக்கு தனிமை பழக்கமான ஒன்று. ஆனால் ரசிக்கும் ஒரு விஷயம். சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் பகல் நேரத்தில் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நானே வானொலி கேட்டுக் கொண்டு எனது வேலைகளைப் முடித்துவிடுவேன்.

பொறுமையாக , எந்த வித இடையூறுமில்லாமல் வேலைகளைச் செய்து முடிக்க உதவுவதால் தனிமை என்றால் கொள்ளைப் பிரியம்.

பள்ளியில் படிக்கும் போது எங்கு சென்றாலும் கும்பலாக செல்வார்கள். நான் தனியாக சுத்திய நாட்கள் அதிகம். தனிமைக்கும் , யாரையும் பிரிந்ததற்கும் நான் அழுவதில்லை.

ஒற்றுமை எப்படி பலமோ , தனியாக இருப்பதும் பலம்தான். அதைவிடு. பள்ளியில் எங்கள் நட்பு பலமாக இருந்தது. வகுப்பின் வெளியில் வெயில் காய்ந்து கொண்டே படிப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நான்கு வருடமாக கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்த நட்பில் வேகத் தடையும் வந்தது. புதிதாக வந்த மாணவர்கள் என்று நீ நினைக்கலாம். புதிதாக வந்த ஆசிரியர் ஒருவர் எங்கள் மூவரையும் பிரிக்க தீவிரமாக முனைந்தார்.

எங்களை சேர்ந்து அமர விடமாட்டார். பேசக் கூடாது என்றும் கூறிவிட அது பிரச்சினையாகிவிட்டது. இதற்கெல்லாம் நாங்கள் அசைந்து கொடுக்கவும் இல்லை.

உடலுக்குத்தான் எப்போதும் தடை. மனதிற்கு யாரால் தடை விதிக்க முடியும்.

‘கரக்ட்தான் விட்டு கொடுத்திராத. ‘ தேவ் இவர்களின் மூவரின் நட்புக்கு காலம் கடந்து சியரஃப் தன்னை அறியாமல் செய்து கொண்டிருந்தான்.

இப்போது நாங்கள் பருவ வாசலில் முதல் படியில் இருக்கிறோம். ஆமாம்…இதுவே பல பிரச்சினைகளுக்கு தொடக்கமாக அமைந்தது.

அஜியின் மீது பள்ளியில் பலருக்கு காதல் அரும்பத தொடங்கியது. அவளைப் பாதுகாக்க நானும் மனோவும் முயன்றோம்.

ஒன்றா இரண்டா பாவம் அவளும் எவ்வளவு பேரைச் சாமாளிப்பாள். அவளுக்காக பல ஸ்பை வேலைகளும் செய்தோம். இப்ப எல்லாம் நினைச்சா சிரிப்பா வரும்.

அந்த வயதில் வரும் உணர்வு ஒரு மாயை. ஹார்மோன் செய்யும் குளறுபடிகளில் ஒன்று என்று தெரிவதில்லை. அதிலும் கட்டுப்பாடான சமூகத்தில் காதல் என்ற வார்த்தையை உச்சரித்தல் என்பது தவறான ஒன்றாகும். பெற்றோர்களும் எதுவும் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். பத்து வயது வரை நன்றாக இருக்கும் குழந்தைகள் பதினொரு வயதுக்கு மேல் குழம்ப ஆரம்பிக்கிறார்கள். குழந்தையிலிருந்து பெரியவர்களாவதற்கு இடைப்பட்ட நிலை. இந்நிலையில் தடம் மாறிப் போய்விட்டால் மீட்பது கடினம். பெண்களும் , ஆண்களும் ஒருவிதமான சமூக அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

பெண்கள் ஒடுக்கப்படும் முறைகளைப் பற்றி நான் கண்டிப்பாக எழுத மாட்டேன். அப்புறம் இன்னும் நான் பொங்க வேண்டியதாக இருக்கும்.

இப்படி வாழ்க்கை போய்கிட்டு இருக்கும் போது எனக்கு ஒரு பிரச்சினை வந்தது. உடனே கற்பனை குதிரையை அவிழ்த்து விட வேண்டாம்.

எனக்கு மிதிவண்டி ஓட்ட வரவில்லை. காரணம் பயம். அப்பொழுது நான் ஐந்து விஷயங்களுக்கு பயப்படுவேன். மரவட்டை , கம்பளிப் பூச்சி, பாம்பு, சைக்கிள் ஓட்டுவது, தண்ணீர். முதல் நான்கு போஃபியாக்களையும் நான் ஆறாவது படிக்கும் போது போக்கிவிட்டேன்.

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிளில் கால்விட்டு நிறைய இரத்தம் சிந்திவிட்டது. அதனால் பயம் உண்டாகிவிட்டது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஊரில் என்னைவிட சிறியவர்கள் எல்லாம் சைக்கிள் ஓட்டிப் பழகிவிட்டனர்.

நான் ஓட்டிப் பழகவில்லை. அம்மாய் என்னை அடித்தேவிட்டார்கள். அதற்குப் பிறகும் பழகவில்லை. இதற்கெல்லாம் நான் அசைந்து கொடுக்கவில்லை.

கடைசியில் என்னை இன்சல்ட் செய்து சித்தி திட்ட பொங்கி எழுந்த நான் முப்பது நாளுக்குள் சைக்கிள் ஓட்டுவேன் என்று சாவல் விட்டு காலண்டரில் நாள் குறித்து வைத்தேன்.

சித்திக்கு திருமணம் வேறு வைத்திருந்தார்கள். நான் ஒட்டிப் பழகிவிட்டால் சித்தி நான் கேட்பதை வாங்கித் தர வேண்டும். இதுதான் பெட்.

நானும் ஒரு தென்றல் புயலாகி அளவுக்கு பள்ளிவிட்டு வந்ததும் மாலை சைக்கிள் ஓட்டிப் பழக முயன்றேன். இருபத்தி ஒன்பது நாட்கள் வேகமாக ஓடியது. ஆனால் நான் ஓட்டிப் பழகவில்லை.

முப்பவதாவது நாள் இன்று ஓட்டவில்லை என்றால் சவாலில் தோற்று விடுவேன். மாலை ஆறுமணியாகி விட்டது. இதுவரை குரங்குப்பெடல் தான் . ஏறி ஓட்ட முடியவில்லை. மனதில் ஒரு வெறி. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று. இருள் சூழும் நேரத்தில் ஒரு வழியாக ஓட்டி விட்டேன்.

அவ்வளவு ஒரு சந்தோஷம். பெட்டில் ஜெயித்துவிட்டேன். தன்மானத்தை காப்பாற்றிவிட்டேன்.

அதிலிருந்து மிதி வண்டி ஓட்டுதல் எனக்கு மிகவும் பிரியமான விஷயம். சவாலைச் சமாளித்ததால் சித்தி எனக்கு புதிதாக சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். நான் பயிற்சி செய்ய பயன்படுத்தியது அப்புச்சி சைக்கிள். நான் ஓட்டிப் பழகிய பின் அதன் பாகங்கள் அரைவாசியை முழுதாக மாற்ற வேண்டியதாகிப் போகிவிட்டது. என்னால அந்த சைக்கிள் வாங்கிய அடி அப்படி.

தேவ்க்கு மறுபடியும் சிரிப்பு வந்துவிட்டது. ‘சைக்கிள் காலி. இவ எல்லாம் கார் ஓட்டிப் பழகினா பத்து எண்ணறதுக்குள்ள சமந்தா மாதிரி எங்காவது மரத்துல கூட பார்க் செய்ய வாய்ப்பிருக்கு, ஆனா எப்படியோ பெட்ல வின் பன்னிட்டா. ‘ இப்படி யோசித்துக் கொண்டிருந்தவன் மனதில் இன்னொரு விசயம் தோன்றியது. ‘ தண்ணீனா பயம்னு சொல்லியிருந்தா. எனக்கு இந்த டைரி கிடைச்சது ஒரு ரிவர்ல. ஒரு வேளை இவளுக்கு ஏதாவது ஆகிருந்தா?’

இந்த யோசனையே அவன் மனதை ஏதோ பிசைவது போலிருந்தது. பிறகு அவனே ‘ இல்ல இல்ல நெகட்டிவா யோசிக்க கூடாது. அப்படி எதுவும் நடந்திருக்காது. பாசிட்டிவா திங்க் பன்னு தேவ்.’

தன்னைத்தானே சமாதானப் படுத்தி நேர்மறையாகச் சிந்தித்தவன் டைரியை மீண்டும் படிக்கத் தொடங்கினான்.

இப்படி ஒரு சவாலை சமாளிச்ச எனக்கு அதற்குப் பிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்தது பெக்கி. அது எனக்கும் மட்டுமில்ல . தமிழ்நாட்டில் பல பேருக்கு அந்த பிரச்சினை ஏற்பட்டது. இதுக்கு யார் காரணம் தெரியுமா?

லிட்டில் வேம்ஃபையர். அதான் கொசு. புரியலையா ?

சிக்கன் குனியா காய்ச்சல் தாக்கியது. என் சித்தியை பொண்ணு பார்க்க வந்துட்டுப் போறாங்க. அன்று மாலையே சிக்கன் குனியா என்னை தாக்கியது. எனக்குப் பிறகு தாத்தாவுக்கும் வந்தது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தில் அனைவருக்கும் அது பிடித்துவிட்டது. ஒருவாரம் பள்ளிக்கு கட் அடிச்சேன். மருத்துவமனையில் சலைன் பாட்டிலின் உபயத்துடன் நானும் தாத்தாவும் ஒன்றாக அட்மிட் ஆகிவிட்டோம். ஒரு நாளில் வீட்டுக்கு வந்து விட்டோம். காய்ச்சல் சரியாகிவிட்டது என்ற ஆனந்தத்தில் நன்றாக ஆட்டம் போட திரும்பவும் சரியாக ஒரு வாரம் எடுத்தது.

பள்ளிக்கூடத்திற்கு திரும்பவும் சென்றது நேரடியாக காலாண்டுத் தேர்வு எழுதத்தான். அதோடுதான் முடிந்ததா? வீட்டில் அம்மாய், அப்புச்சி, எங்களைப் பார்த்துக்கொள்ள வந்த என் அம்மாவுக்கு சிக்கன் குனியாவில் சிக்கல் ஏற்பட்டது. என் அம்மாவை நான் தான் மருத்துவமனை அழைத்துச் சென்றேன்.

காலம் இப்படியே உருண்டோடியது. அடுத்தது வேற ஒரு பிரச்சினை வேறு முளைத்தது. அதை நாளைக்குச் சொல்றேன் பெக்கி. குட் நைட்.

யாழரசிக்குத்தான் அடுத்தநாள். ஆனால் தேவ்க்கு இல்லை. அவன் படிப்பதைத் தொடர்ந்தான்.



அலைவான்.
 
Status
Not open for further replies.
Top Bottom