மெல்லிசை-1
நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநகரமாகும். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட குளுகுளு வானிலையுடன் இருப்பதே இதன் சிறப்பம்சம்.
ஆங்கிலேயர்களால் ‘குட்டி லண்டன்’ என வர்ணிக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரத்தின் இயற்கை வளங்கள் அனைவரையும் கவர்வதோடு பல வீடுகளின் தோற்றம் ஆங்கிலேய பாணியில் அமைந்திருப்பதும் இந்தப் பெயர் வருவதற்கு காரணமாய் அமைந்தது.
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தாணியர் காலம் முதல் இன்று வரை பெருமைக்குரிய சுற்றுலாத் தளமாக திகழ்கின்றது.
பொருளாதார அடிப்படையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகளவான பரப்புக்களை கொண்டுள்ளதோடு மரக்கறி, உருளைக்கிழங்கு பயிரிடல், மலர்ச்செய்கை இந்த மாவட்டத்தில் பிரபலமானது.
சித்திரை மற்றும் மார்கழி மாதங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அந்நகரமே நிறைந்து காணப்படும். கண்கவர் இயற்கை எழிலுடன் கூடிய பல இடங்கள் காணப்படும் ஓர் அழகிய நகரம் அது.
 
உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தினர் வசிக்கும் ‘ரோஸ் கார்டன்ஸ்’ குடியிருப்பு பகுதியில் மொத்தமே பதினைந்து வீடுகள் தான். அனைத்து வீடுகளின் தோற்றமும் ஆங்கிலேயர் பாணியில் அமைந்திருப்பதோடு ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வீடுகளின் சுற்றுப் புறத் தோற்றமும் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்திலேயே அமைந்திருந்தது.
அந்த குடியிருப்பின் நடுவில் அமைந்துள்ள ஓர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த இரு ஊஞ்சல்களில் ஒன்றில் மடியில் கைகளை கோர்த்துக் கொண்டு தலை குனிந்தபடி கலங்கிய விழிகளுடன் உதடுகள் பிதுங்க அமர்ந்திருந்தாள் ஓர் எட்டு வயது பெண் குழந்தை.
தூரத்திலிருந்தே அவள் அமர்ந்திருந்த கோலத்தை கண்ட தந்தைக்கு மனம் பதறினாலும் அதற்கான காரணமும் அவர் அறிந்த ஒன்றே. ஓசையெழுப்பாமல் சென்று குழந்தைக்கு பக்கத்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார் விஸ்வநாதன்.
“சமி குட்டி..” என மெதுவாக அழைக்க, அவளிடமிருந்து பதிலில்லை. அவளது தலையை தடவிக் கொண்டே ,
“என் சமி குட்டிக்கு என்னாச்சு?” என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்திருந்தாலும் மகளிடம் வினவினார்.
“அப்பா ஜெய் கூட நா டூ விட்டுட்டேன் பா..”என்றாள் கவலை ததும்பும் குரலில்.
அவருக்குத் தெரியும் இது தான் நடந்திருக்கும் என்று. இல்லையெனில் தன் செல்ல மகள் சோர்ந்து போய் விடுவாளா என்ன? இருந்தாலும் முழு விவரமும் தெரிந்து கொள்ளும் நோக்கில் மகளிடம் வினவினார்.
“ஓ... ஜெய் கூட ஏன் டூ விட்டீங்க? அவன் உன்கூட சண்டை போட்டானா? இல்லை உன் தலையில் கொட்டினானா?”
“இல்லைப்பா... என்னோட ரெட் ரோஸ் பூந்தொட்டியை உடைச்சிட்டான்பா.. அதான் எனக்கு கோலம் வந்துச்சு.. உன்கூட பேசவே மாட்டேன்னு வந்துட்டேன்..” என்றவள் தந்தையை நிமிர்ந்து பார்த்து, தன் பத்து விரல்களையும் உயர்த்தி விரித்துக் காட்டி ,
“இன்னும் பத்து வருஷத்துக்கு அவன் கூட பேசவே மாட்டேன் பாருங்க..” என்று தீர்மானமாக கூற அவளை பார்த்து புன்னகைக்க, புரியாமல் விழித்தாள் அவள்.
“உன்னால உன் ஜெய் கூட அவ்வளவு நாள் பேசாம இருக்க முடியுமா?” என்று கேட்க அவள் தலை கவிழ்ந்தது.
அவளால் பத்து நிமிடத்திற்கு கூட அவன் மீது கோபத்தை நீட்டிக்க முடியாது. இதில் பத்து வருடம் அவனோடு பேச மாட்டாளாமே..
“இங்கே பாரு சமி குட்டி.. அது உனக்கு பிடிச்ச ரெட் ரோஸ் செடினு எனக்கு தெரியும் மா.. வேணும்னா உனக்கு ஒரு ரோஜாத் தோட்டமே வச்சி கொடுக்கட்டுமா?” என்று தன் மகளின் மனதை மாற்ற எண்ணி கேட்டார்.
சிறுவயது முதல் இயற்கையின் மீதும் தோட்டக்கலையின் மீதும் அதிக ஆர்வம் காட்டும் தன் மகளை நன்கறிவார். அதனாலேயே அப்படிக் கேட்டார்.
தனது முட்டை கண்கள் மேலும் விரிய தந்தையை நோக்கி,
“நிஜமாவாப்பா?? அப்போ கலர் கலரா ரோஜா செடி நம்ம தோட்டத்தில் வளர்க்கலாம். அப்படியே ஜெய் வீட்டுக்கும் சேர்த்தே வாங்கி கொடுங்கப்பா.. அப்போ தான் நானும் ஜெய்யும் சேர்ந்து தினமும் செடிக்கு தண்ணீர் ஊத்தி நல்லா பாத்துக்க முடியும்.. அவனும் கூட இருந்தா ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்பா” கண்களில் ஆர்வம் மின்ன கூறிக் கொண்டே போன மகளை பார்த்து சிரித்தவர்,
“அப்போ ஜெய் கூட பத்து வருஷம் பேச மாட்டேன்னு சொன்ன.. பின்ன எப்படி அவன் கூட சேர்ந்து செடி வளர்ப்ப..?” என்று கேட்க அவளது பேச்சு அப்படியே நின்று மீண்டும் தலை கவிழ்ந்தாள்.
அவளது முகத்தை நிமிரத்தியவர், “பாரும்மா சமி குட்டி இந்த உலகத்தில் யாரும் யாரோட உதவியும் இல்லாம வாழ முடியாது. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருத்தர் உதவி தேவை படும். அதனால் நாம கோபத்தோடும் வெறுப்போடும் இருந்து யார் மனதையும் நோகடிக்க கூடாது.
யாராவது உன்கூட சண்டை போட்டு கோபமா இருந்தாலும் அவங்க கூட நீயும் கோபப்பட்டு பேசாம இருக்க கூடாது. கோபம் ஒரு மனிதனை நிதானமிழக்க செய்திடும்மா..
அன்னைக்கு ஒரு நாள் ஜெய் உன்கூட பேச மாட்டேன்னு டூ விட்டுட்டு போனானே அப்போ நீ அந்த நாள் பூரா சாப்பிடாம அழுதிட்டு இருந்தல்ல.. இப்போ நீ அவன் கூட கோபப்பட்டு டூ விட்டுட்டு வந்துட்டல்ல இப்போ அவனும் ரொம்ப கவலையா அழுதிட்டு தானே இருப்பான்..” என்று அவர் எடுத்துக் கூற அப்போது அந்த பிஞ்சு மூளைக்கு உறைத்தது.
“ஆமாப்பா.. என்னை மாதிரியே அவனும் இப்போ அழுவான்ல?” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.
“ஹூம்.. உறவுகள் ரொம்ப முக்கியம் சமி குட்டி.. சின்ன சின்ன சண்டைகளுக்காக கோபப்பட்டு அந்த உறவுகளை பிரிஞ்சிட்டோம்னா அது வாழ் நாள் முழுக்க கவலையை தான் கொடுக்கும்.” அவர் மேலும் ஊஞ்சலில் இருந்து குதித்து கீழே இறங்கி,
“சாரிப்பா இனி நான் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன். ஜெய் கூட நானே போய் பேசிட்றேன்பா..” தன் தந்தையை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு திரும்ப, அங்கே ஜெய்யும் அவனது தந்தை வேலமுருகனும் அவர்களை நோக்கி வருவது தெரிய அப்படியே நின்று விட்டாள்.
அதே அறிவுறைகள் அவனுக்கும் நடந்தே இருந்தது. அவளது அருகில் வந்து தான் கொண்டு வந்திருந்த புது ரோஜா செடியை அவள் முன் நீட்டி,
“சாரி சமி.. நான் தெரியாம அப்படி பண்னிட்டேன். இனி உன் ரோஜா தொட்டியை எதுவும் செய்ய மாட்டேன்.. டாடி கூட சொன்னாரு நிறைய ரோஜா செடி வாங்கி கொடுக்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து செடியெல்லாம் பத்திரமா பாத்து வளர்க்கனும்னு சொன்னாரு சமி.. என்னை ஃபிரெண்டா ஏத்துக்குவியா?” என்று கேட்டு அவளை பாவமாக பார்த்த மறு நொடி, அந்தச் செடியை வாங்கி,
“நீ எப்பவும் என் பெஸ்ட் ஃபிரெண்டு தான். நான் கூட அப்பா கிட்ட அதை தான் ஜெய் சொன்னேன்.. வேலு டாடி தேங்க்ஸ்..” என்றாள்.
“அவன் செய்தது தப்பு தானேம்மா. அது தான் அவனை நான் திட்டிட்டேன்..” என்று ஜெய்யின் தந்தை கூறியது தான் தலை கவிழ்ந்து நின்ற ஜெய்யை பார்த்து விட்டு,
“வேலு டாடி.. ஜெய்யை ஏன் திட்டினீங்க? சொல்லி இருக்கேன்ல என்னை தவிர அவனை யாரும் திட்ட கூடாதுனு.. போங்க டாடி பாவம் ஜெய் நீ வா..” என்று அவனை அழைத்துச் செல்ல, ஒரு ஊஞ்சலில் அவளும் மறு ஊஞ்சலில் அவனுமாக அமர்ந்து கதை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
தந்தை மார் இருவரும் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறி , அந்த இடத்தை விட்டும் நகர்ந்தார்கள்.
இது தான் அவர்கள் இருவரது உறவு. சப்தமி, அஜய் சிறுவயது தொடக்கம் இன்று வரை மாறா நட்போடு வாழும் இரு ஜீவன்கள். அன்பு, பாதுகாப்பு, விட்டுக்கொடுப்பு மூன்றினதும் கலவை. எத்தனை பெரிய சண்டையாயினும் பத்து நிமிடங்களுக்குள் சமாதானமாகி விடும் இவர்களது நட்பின் ஆழம்.
விஸ்வநாதன் ரேணுகா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் அமுதன் தந்தையோடு சேர்ந்து அவர்களது கடையை நடத்தி வருகிறான். நுவரெலியாவில் பெரியளவிலான மளிகை கடைகளில் இவர்களது கடையும் ஒன்று.
இரண்டாவது ஸ்வேதா திருமணம் முடித்து கணவன் மற்றும் மூன்று வயது மகள் அக்ஷயாவுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றாள்.
மூன்றாவது கடைக்குட்டி சிங்கம் சப்தமி. பெயருக்கேற்றாற் போல பேச்சும் அப்படித் தான் இருக்கும். உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் அக்ரிகல்சர் பாடத்தையும் தேர்ந்தெடுத்து படித்து முடித்து விட்டு தந்தையின் கடைக்கு பக்கத்தில் சிறு கூடாரம் போன்ற அமைப்பில் அவளும் ஜெய்யும் சேர்ந்து மலர்ச்செடி விற்பனை செய்து வருகிறாள்.
இயற்கைச் சூழலை ரசிப்பது மட்டுமன்றி அதை பாதுகாப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவள். அவளது வீடும் வீட்டுத் தோட்டத்தையும் பார்த்தாலே அது புரிந்து விடும். இயற்கையை மாசு படுத்தும் எந்தவொரு பொருளையும் அவள் அனுமதிப்பதில்லை.
அவளது தாய் படித்த படிப்பிற்கு ஏதாவது செய்யுமாறு கூறி பல முறை திட்டிப் பார்த்து விட்டார். அவள் கேட்டால் தானே. தந்தையும் அவளுக்கு பிடித்ததை செய்யட்டுமே.. நமக்கென்ன காசுக்கா பஞ்சம்? என்று கூறி விட இதுவே அவளது முழு நேர தொழிலாய் ஆனது.
வேல்முருகன் வைஷ்ணவி தம்பதியின் தவப்புதல்வன் தான் அஜய். அவனது தந்தை ஓர் வக்கீல். சப்தமியின் எதிர் வீடு தான் இவர்கள் வீடு. இரு வீடும் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாம் இந்த நண்பர்களின் வேலை தான். படித்து முடித்து வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான்.
இவனுக்கு இசையின் மேல் ஆர்வம் அதிகம். அழகான குரல் வளமுடையவன். அவனது இசையார்வத்தை அறிந்து கொண்ட சப்தமி சென்ற வருட பிறந்த நாளன்று ஒரு கிட்டாரை பரிசளித்தாள். அதுவே அவனது வாழ்வில் விலைமதிக்க முடியாத பரிசானது.
சப்தமி என்றால் அவனுக்கு உயிர்.
துரோகி.."
"நீ இப்படி பண்ணுவனு என் கனவில் கூட நினைக்கலையே.. ஏன் இப்படி செஞ்ச? வாயை திறந்து பேசுடா பேசு.." என அதட்டிக் கொண்டிருந்தாள் சமி.
"........"
"நான் அவ்வளவு சொல்லியும் நீ கேட்கலைல? இத்தனை வருஷமா பாசத்தையும் சாப்பாட்டையும் ஊட்டி ஊட்டி வளர்த்தேனே என்னைச் சொல்லனும்.." என்று நெற்றியில் அறைந்து கொண்டு தோட்டத்தின் ஓரத்தில் அந்த பெரிய ஊஞ்சலில் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டாள்.
அவள் கண்களில் அனல் பறந்தது. எதிரில் தரையில் அமர்ந்திருந்தவனை ஆழமான பார்வை கொண்டு ஆராய்ந்தாள். அந்த கண்களில் கொஞ்சமும் கூட பயமில்லை. 'நீ என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது' என்பது போல் ஸ்டைலாக அமர்ந்து கொண்டிருந்தான் அவள் கள்வன்.
"......."
"என்ன லுக்கு? இப்படி பண்ணிட்டோமேன்னு கொஞ்சம் கூட வருத்தப்பட்றியா நீ..? ம்ம் அவ்வளவு திமிர்.. உன்னை போய் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடினேன் பாரு.." ஓயாமல் அவனை திட்டிக் கொண்டே இருந்தாள்.
அவளுக்குத் தான் வாய் வலித்திருக்க வேண்டும். அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாது அது பாட்டிற்கு தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகளின மேல் தீவிரமான பார்வையை செலுத்திக் கொண்டிருக்க, அவனது பார்வை போன திசையை பார்த்து கடுப்பானவள் அவன் தலையிலேயே ஒரு போடு போட சிறு உறுமலுடன் அவள் புறம் திரும்பியது.
"நான் இங்கே பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்.. நீ அங்க ரசிச்சிக்கிட்டு இருக்கியா? ராஸ்கல்..
அம்மா எனக்கு வச்சிருந்த மீன் குழம்பை திருடி சாப்பிட்டதுமில்லாம.. எகத்தாளமா வேற பதில் சொல்ற? உனக்கு சாப்பாட்டுல நான் என்னடா குறை வச்சேன் வேளா வேளைக்கு கரெக்ட்டா சாப்பாடு போட்டேனா இல்லையா? அப்புறம் ஏன் என்னோட மீன் குழம்பை திருடி சாப்பிட்ட?" அவனை விடவில்லை அவள். கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டேயிருந்தாள்.
அவன் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான்..
"......"
"ஓகோ.. சாருக்கு இப்போ அவ்வளவு திமிரு கூடிப் போச்சா? உன்னை..." என்று அவனை அடிக்க கையை ஓங்க,
அந்நேரம் வெளியே காய வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுத்துச் செல்ல வந்த அவள் தாய் ரேணுகா இந்த காட்சியை கண்டு தலையில் அடித்துக் கொண்டவர் அவர்கள் இருவருக்குமிடையில் வந்து நின்று அவளது கையை பற்றி நிறுத்தினார்.
"ஏய் சமி.. உனக்கு லூசாடி? வாயில்லா ஜீவனை இந்த பாடு படுத்துற? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி திருடி சாப்பிட்டுருக்கானா சொல்லு? அவன் இன்னைக்கு ஒரு நாள் ஏதோ பசியில இப்படி பண்ணிட்டான். அதுவும் உன்னோட பங்கு அதான் இந்த குதி குதிக்கிற இல்லைனா நீயே உங்க அண்ணன் அப்பா பங்கையெல்லாம் திருடி கொடுத்துருவ எங்களுக்கு தெரியாதா..? நீ வா ஸ்மோக்கி.." என்று அந்த வீட்டுச் செல்லப் பிராணியான பூனையை அழைத்துச் சென்றார்.
அது இவளை பார்த்து கேலியாய் வாலை ஆட்டிக் கொண்டே செல்ல, தனக்கு மீன் குழம்பு இல்லையே என்ற கோபத்தில் இருந்தவளுக்கு ஸ்மோக்கியின் கேலிச் செயல் மேலும் வெறுப்பேற்ற, "போடா போ அப்புறம் எங்கிட்ட தானே வருவ? அப்போ இருக்கு உனக்கு.." என்று மனதால் அர்ச்சித்துக் கொண்டே இருக்க பசி வயிற்றைக் கிள்ளியது.
"வைஷூ மம்மி இன்னைக்கு ஸ்பெஷலா சமச்சிருப்பாங்க.. ஆனா ஜெய் இருப்பானே..அதுக்கென்ன நாம அங்கே போய் கொட்டிக்கலாம்.." முகம் ஆயிரம் வால்ட் பல்பு போட்டது பிரகாசத்துடன் எரிய, அவள் கால்கள் எதிர் வீட்டை நோக்கி படையெடுத்தன.
அப்போது தான் அங்கே மூவருமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவளை கண்டதும்
“வா..வா சமி.. வந்து சாப்பிடுமா..” என்று வைஷ்னவி அழைக்க அதற்காகவே காத்திருந்தது போல் ஓடிச் சென்று ஜெய்யின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள,
“நீ மட்டும் எப்படி நாங்க சாப்பிடற நேரம் பார்த்து மோப்பம் பிடிச்சு வந்து கரெக்ட்டா ஆஜராகுற?” என்று கேட்டுக் கொண்டே அவன் சாப்பிட, அவன் பேச்சை சட்டை செய்யாதவள்,
“வைஷூ மம்மி.. சிக்கன் கிரேவி சூப்பர்.. செம டேஸ்ட்டா இருக்கு.. இன்னும் கொஞ்சம் வைங்க..” என்று சாப்பிடுவதிலேயே கண்ணாயிருக்க, சாப்பிட்டு முடிந்து எழுந்தவன்,
“சரியான சாப்பாட்டு ராமி .. நல்லா மொக்கிட்டு சீக்கிரம் கிளம்பு நான் வேலை விஷயமா ராஜேஷை பார்க்க போகனும்.. நீ இப்படியே சாப்பிட்டுக்கிட்டு நேரத்தை ஓட்டிடாதே...ஹரி அப் சமி..” நங்கென தலையில் கொட்டி விட்டு போக உச்சந்தலையை தடவிக் கொண்டே மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.
பத்து நிமிடங்களாகியும் அவள் வெளியே வந்தபாடில்லை. அவன் பொறுமை காற்றில் பறக்க உள்ளே வந்து பார்க்க அப்போதும் அவள் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. அதை கண்டதும் அவள் மேல் கோபம் முளைக்க,
“ சமி... சொன்னேன்ல எனக்கு லேட்டாகுதுனு.. இன்னும் வயிறு வெடிக்க சாப்பிட்டுட்டு இருக்க? கொஞ்சம் கூட சிரியஸ்னஸ் புரியாதா? போ நீ எப்படியோ கடைக்கு போ.. “ கத்தி விட்டுச் செல்ல அடுத்த வாய் உள்ளே இறங்க மறுத்தது.
நண்பன் தன்னை திட்டியதில் கண்கள் கலங்க, தொண்டை அடைக்க எழுந்தவள் கையை கழுவி விட்டு வீட்டுக்குச் சென்றாள். தனது பையையும் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டவள் வெளியே வந்து கடையை நோக்கி நடக்கவாரம்பிக்க சிறிது தூரம் சென்றதும் ஒரு பைக் வழுக்கிக் கொண்டு வந்து அவளை ஒரு சுற்றி சுற்றி விட்டு நின்றது.
அவளுக்கு தெரியும் அது அவன் தான் என்று. அவளை ஏறுமாறு சைகை செய்ய ஏறாமல் அவள் பாட்டிற்கு நடந்தாள்.
அவள் தன் மீது கோபம் கொண்டுள்ளதை அறிந்தவன் இதழ்கள் தானாக மலர பைக்கை நிறுத்தி விட்டு பின்னாலேயே சென்றான்.
“ஓய் சமி.. நில்லு..”
“சாருக்கு லேட்டாச்சுல கிளம்புங்க.. என்னால தனியா போக முடியும்.. நீங்க போங்க சார்..” என்று பல்லைக்கடித்துக் கொண்டு திரும்பாமலேயே பதில் சொன்ன விதம் அவனுக்கு மேலும் சிரிப்பை வர வழைத்தது.
சட்டென அவள் முன்னே வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், அவளை அண்ணாந்து நோக்கி,
“சாரி சமி குட்டி.. வேணும்னா இன்னைக்கு பூரா நுவரெலியாவை சுத்திக் காட்டுறேன்.. என்னை உன் ஃபிரெண்டா ஏத்துக்குவியா?” இதழ்களில் தவழ விட்ட புன்னகையுடன் அதே எட்டு வயது ஜெய்யாக வினவ அந்த செய்கையில் அவன் மீதான கோபம் எங்கோ பறந்து போனது.
“நீ எப்பவுமே என் பெஸ்ட் ஃபிரெண்ட் தான்டா..” என அதே எட்டு வயது சமியாக தனது வலது கையை மடித்து அவன் கையோடு கோர்க்க , எழுந்தவன் “குள்ள வாத்து..” என கேலியாய் கூறி அவள் தலையில் கொட்டு விட்டு ஓட அவனை துரத்திக் கொண்டி ஓடினாள் சப்தமி.
 
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே..
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள்
உயிர் கலந்தது..
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில்
முதல்வரி..
இந்த உலகில் மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்..