Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மெல்லிசை நீயடி - கதை

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-1

நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநகரமாகும். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட குளுகுளு வானிலையுடன் இருப்பதே இதன் சிறப்பம்சம்.

ஆங்கிலேயர்களால் ‘குட்டி லண்டன்’ என வர்ணிக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரத்தின் இயற்கை வளங்கள் அனைவரையும் கவர்வதோடு பல வீடுகளின் தோற்றம் ஆங்கிலேய பாணியில் அமைந்திருப்பதும் இந்தப் பெயர் வருவதற்கு காரணமாய் அமைந்தது.

பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தாணியர் காலம் முதல் இன்று வரை பெருமைக்குரிய சுற்றுலாத் தளமாக திகழ்கின்றது.

பொருளாதார அடிப்படையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகளவான பரப்புக்களை கொண்டுள்ளதோடு மரக்கறி, உருளைக்கிழங்கு பயிரிடல், மலர்ச்செய்கை இந்த மாவட்டத்தில் பிரபலமானது.

சித்திரை மற்றும் மார்கழி மாதங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அந்நகரமே நிறைந்து காணப்படும். கண்கவர் இயற்கை எழிலுடன் கூடிய பல இடங்கள் காணப்படும் ஓர் அழகிய நகரம் அது.



உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தினர் வசிக்கும் ‘ரோஸ் கார்டன்ஸ்’ குடியிருப்பு பகுதியில் மொத்தமே பதினைந்து வீடுகள் தான். அனைத்து வீடுகளின் தோற்றமும் ஆங்கிலேயர் பாணியில் அமைந்திருப்பதோடு ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வீடுகளின் சுற்றுப் புறத் தோற்றமும் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்திலேயே அமைந்திருந்தது.

அந்த குடியிருப்பின் நடுவில் அமைந்துள்ள ஓர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த இரு ஊஞ்சல்களில் ஒன்றில் மடியில் கைகளை கோர்த்துக் கொண்டு தலை குனிந்தபடி கலங்கிய விழிகளுடன் உதடுகள் பிதுங்க அமர்ந்திருந்தாள் ஓர் எட்டு வயது பெண் குழந்தை.

தூரத்திலிருந்தே அவள் அமர்ந்திருந்த கோலத்தை கண்ட தந்தைக்கு மனம் பதறினாலும் அதற்கான காரணமும் அவர் அறிந்த ஒன்றே. ஓசையெழுப்பாமல் சென்று குழந்தைக்கு பக்கத்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார் விஸ்வநாதன்.

“சமி குட்டி..” என மெதுவாக அழைக்க, அவளிடமிருந்து பதிலில்லை. அவளது தலையை தடவிக் கொண்டே ,

“என் சமி குட்டிக்கு என்னாச்சு?” என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்திருந்தாலும் மகளிடம் வினவினார்.

“அப்பா ஜெய் கூட நா டூ விட்டுட்டேன் பா..”என்றாள் கவலை ததும்பும் குரலில்.

அவருக்குத் தெரியும் இது தான் நடந்திருக்கும் என்று. இல்லையெனில் தன் செல்ல மகள் சோர்ந்து போய் விடுவாளா என்ன? இருந்தாலும் முழு விவரமும் தெரிந்து கொள்ளும் நோக்கில் மகளிடம் வினவினார்.

“ஓ... ஜெய் கூட ஏன் டூ விட்டீங்க? அவன் உன்கூட சண்டை போட்டானா? இல்லை உன் தலையில் கொட்டினானா?”

“இல்லைப்பா... என்னோட ரெட் ரோஸ் பூந்தொட்டியை உடைச்சிட்டான்பா.. அதான் எனக்கு கோலம் வந்துச்சு.. உன்கூட பேசவே மாட்டேன்னு வந்துட்டேன்..” என்றவள் தந்தையை நிமிர்ந்து பார்த்து, தன் பத்து விரல்களையும் உயர்த்தி விரித்துக் காட்டி ,

“இன்னும் பத்து வருஷத்துக்கு அவன் கூட பேசவே மாட்டேன் பாருங்க..” என்று தீர்மானமாக கூற அவளை பார்த்து புன்னகைக்க, புரியாமல் விழித்தாள் அவள்.

“உன்னால உன் ஜெய் கூட அவ்வளவு நாள் பேசாம இருக்க முடியுமா?” என்று கேட்க அவள் தலை கவிழ்ந்தது.

அவளால் பத்து நிமிடத்திற்கு கூட அவன் மீது கோபத்தை நீட்டிக்க முடியாது. இதில் பத்து வருடம் அவனோடு பேச மாட்டாளாமே..

“இங்கே பாரு சமி குட்டி.. அது உனக்கு பிடிச்ச ரெட் ரோஸ் செடினு எனக்கு தெரியும் மா.. வேணும்னா உனக்கு ஒரு ரோஜாத் தோட்டமே வச்சி கொடுக்கட்டுமா?” என்று தன் மகளின் மனதை மாற்ற எண்ணி கேட்டார்.

சிறுவயது முதல் இயற்கையின் மீதும் தோட்டக்கலையின் மீதும் அதிக ஆர்வம் காட்டும் தன் மகளை நன்கறிவார். அதனாலேயே அப்படிக் கேட்டார்.

தனது முட்டை கண்கள் மேலும் விரிய தந்தையை நோக்கி,

“நிஜமாவாப்பா?? அப்போ கலர் கலரா ரோஜா செடி நம்ம தோட்டத்தில் வளர்க்கலாம். அப்படியே ஜெய் வீட்டுக்கும் சேர்த்தே வாங்கி கொடுங்கப்பா.. அப்போ தான் நானும் ஜெய்யும் சேர்ந்து தினமும் செடிக்கு தண்ணீர் ஊத்தி நல்லா பாத்துக்க முடியும்.. அவனும் கூட இருந்தா ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்பா” கண்களில் ஆர்வம் மின்ன கூறிக் கொண்டே போன மகளை பார்த்து சிரித்தவர்,

“அப்போ ஜெய் கூட பத்து வருஷம் பேச மாட்டேன்னு சொன்ன.. பின்ன எப்படி அவன் கூட சேர்ந்து செடி வளர்ப்ப..?” என்று கேட்க அவளது பேச்சு அப்படியே நின்று மீண்டும் தலை கவிழ்ந்தாள்.

அவளது முகத்தை நிமிரத்தியவர், “பாரும்மா சமி குட்டி இந்த உலகத்தில் யாரும் யாரோட உதவியும் இல்லாம வாழ முடியாது. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருத்தர் உதவி தேவை படும். அதனால் நாம கோபத்தோடும் வெறுப்போடும் இருந்து யார் மனதையும் நோகடிக்க கூடாது.

யாராவது உன்கூட சண்டை போட்டு கோபமா இருந்தாலும் அவங்க கூட நீயும் கோபப்பட்டு பேசாம இருக்க கூடாது. கோபம் ஒரு மனிதனை நிதானமிழக்க செய்திடும்மா..

அன்னைக்கு ஒரு நாள் ஜெய் உன்கூட பேச மாட்டேன்னு டூ விட்டுட்டு போனானே அப்போ நீ அந்த நாள் பூரா சாப்பிடாம அழுதிட்டு இருந்தல்ல.. இப்போ நீ அவன் கூட கோபப்பட்டு டூ விட்டுட்டு வந்துட்டல்ல இப்போ அவனும் ரொம்ப கவலையா அழுதிட்டு தானே இருப்பான்..” என்று அவர் எடுத்துக் கூற அப்போது அந்த பிஞ்சு மூளைக்கு உறைத்தது.

“ஆமாப்பா.. என்னை மாதிரியே அவனும் இப்போ அழுவான்ல?” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

“ஹூம்.. உறவுகள் ரொம்ப முக்கியம் சமி குட்டி.. சின்ன சின்ன சண்டைகளுக்காக கோபப்பட்டு அந்த உறவுகளை பிரிஞ்சிட்டோம்னா அது வாழ் நாள் முழுக்க கவலையை தான் கொடுக்கும்.” அவர் மேலும் ஊஞ்சலில் இருந்து குதித்து கீழே இறங்கி,

“சாரிப்பா இனி நான் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன். ஜெய் கூட நானே போய் பேசிட்றேன்பா..” தன் தந்தையை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு திரும்ப, அங்கே ஜெய்யும் அவனது தந்தை வேலமுருகனும் அவர்களை நோக்கி வருவது தெரிய அப்படியே நின்று விட்டாள்.

அதே அறிவுறைகள் அவனுக்கும் நடந்தே இருந்தது. அவளது அருகில் வந்து தான் கொண்டு வந்திருந்த புது ரோஜா செடியை அவள் முன் நீட்டி,

“சாரி சமி.. நான் தெரியாம அப்படி பண்னிட்டேன். இனி உன் ரோஜா தொட்டியை எதுவும் செய்ய மாட்டேன்.. டாடி கூட சொன்னாரு நிறைய ரோஜா செடி வாங்கி கொடுக்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து செடியெல்லாம் பத்திரமா பாத்து வளர்க்கனும்னு சொன்னாரு சமி.. என்னை ஃபிரெண்டா ஏத்துக்குவியா?” என்று கேட்டு அவளை பாவமாக பார்த்த மறு நொடி, அந்தச் செடியை வாங்கி,

“நீ எப்பவும் என் பெஸ்ட் ஃபிரெண்டு தான். நான் கூட அப்பா கிட்ட அதை தான் ஜெய் சொன்னேன்.. வேலு டாடி தேங்க்ஸ்..” என்றாள்.

“அவன் செய்தது தப்பு தானேம்மா. அது தான் அவனை நான் திட்டிட்டேன்..” என்று ஜெய்யின் தந்தை கூறியது தான் தலை கவிழ்ந்து நின்ற ஜெய்யை பார்த்து விட்டு,

“வேலு டாடி.. ஜெய்யை ஏன் திட்டினீங்க? சொல்லி இருக்கேன்ல என்னை தவிர அவனை யாரும் திட்ட கூடாதுனு.. போங்க டாடி பாவம் ஜெய் நீ வா..” என்று அவனை அழைத்துச் செல்ல, ஒரு ஊஞ்சலில் அவளும் மறு ஊஞ்சலில் அவனுமாக அமர்ந்து கதை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

தந்தை மார் இருவரும் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறி , அந்த இடத்தை விட்டும் நகர்ந்தார்கள்.

இது தான் அவர்கள் இருவரது உறவு. சப்தமி, அஜய் சிறுவயது தொடக்கம் இன்று வரை மாறா நட்போடு வாழும் இரு ஜீவன்கள். அன்பு, பாதுகாப்பு, விட்டுக்கொடுப்பு மூன்றினதும் கலவை. எத்தனை பெரிய சண்டையாயினும் பத்து நிமிடங்களுக்குள் சமாதானமாகி விடும் இவர்களது நட்பின் ஆழம்.



விஸ்வநாதன் ரேணுகா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் அமுதன் தந்தையோடு சேர்ந்து அவர்களது கடையை நடத்தி வருகிறான். நுவரெலியாவில் பெரியளவிலான மளிகை கடைகளில் இவர்களது கடையும் ஒன்று.

இரண்டாவது ஸ்வேதா திருமணம் முடித்து கணவன் மற்றும் மூன்று வயது மகள் அக்ஷயாவுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றாள்.

மூன்றாவது கடைக்குட்டி சிங்கம் சப்தமி. பெயருக்கேற்றாற் போல பேச்சும் அப்படித் தான் இருக்கும். உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் அக்ரிகல்சர் பாடத்தையும் தேர்ந்தெடுத்து படித்து முடித்து விட்டு தந்தையின் கடைக்கு பக்கத்தில் சிறு கூடாரம் போன்ற அமைப்பில் அவளும் ஜெய்யும் சேர்ந்து மலர்ச்செடி விற்பனை செய்து வருகிறாள்.

இயற்கைச் சூழலை ரசிப்பது மட்டுமன்றி அதை பாதுகாப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவள். அவளது வீடும் வீட்டுத் தோட்டத்தையும் பார்த்தாலே அது புரிந்து விடும். இயற்கையை மாசு படுத்தும் எந்தவொரு பொருளையும் அவள் அனுமதிப்பதில்லை.

அவளது தாய் படித்த படிப்பிற்கு ஏதாவது செய்யுமாறு கூறி பல முறை திட்டிப் பார்த்து விட்டார். அவள் கேட்டால் தானே. தந்தையும் அவளுக்கு பிடித்ததை செய்யட்டுமே.. நமக்கென்ன காசுக்கா பஞ்சம்? என்று கூறி விட இதுவே அவளது முழு நேர தொழிலாய் ஆனது.

வேல்முருகன் வைஷ்ணவி தம்பதியின் தவப்புதல்வன் தான் அஜய். அவனது தந்தை ஓர் வக்கீல். சப்தமியின் எதிர் வீடு தான் இவர்கள் வீடு. இரு வீடும் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாம் இந்த நண்பர்களின் வேலை தான். படித்து முடித்து வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான்.

இவனுக்கு இசையின் மேல் ஆர்வம் அதிகம். அழகான குரல் வளமுடையவன். அவனது இசையார்வத்தை அறிந்து கொண்ட சப்தமி சென்ற வருட பிறந்த நாளன்று ஒரு கிட்டாரை பரிசளித்தாள். அதுவே அவனது வாழ்வில் விலைமதிக்க முடியாத பரிசானது.

சப்தமி என்றால் அவனுக்கு உயிர்.



துரோகி.."

"நீ இப்படி பண்ணுவனு என் கனவில் கூட நினைக்கலையே.. ஏன் இப்படி செஞ்ச? வாயை திறந்து பேசுடா பேசு.." என அதட்டிக் கொண்டிருந்தாள் சமி.

"........"

"நான் அவ்வளவு சொல்லியும் நீ கேட்கலைல? இத்தனை வருஷமா பாசத்தையும் சாப்பாட்டையும் ஊட்டி ஊட்டி வளர்த்தேனே என்னைச் சொல்லனும்.." என்று நெற்றியில் அறைந்து கொண்டு தோட்டத்தின் ஓரத்தில் அந்த பெரிய ஊஞ்சலில் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டாள்.

அவள் கண்களில் அனல் பறந்தது. எதிரில் தரையில் அமர்ந்திருந்தவனை ஆழமான பார்வை கொண்டு ஆராய்ந்தாள். அந்த கண்களில் கொஞ்சமும் கூட பயமில்லை. 'நீ என்ன சொல்றது.. நான் என்ன கேட்கிறது' என்பது போல் ஸ்டைலாக அமர்ந்து கொண்டிருந்தான் அவள் கள்வன்.

"......."

"என்ன லுக்கு? இப்படி பண்ணிட்டோமேன்னு கொஞ்சம் கூட வருத்தப்பட்றியா நீ..? ம்ம் அவ்வளவு திமிர்.. உன்னை போய் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடினேன் பாரு.." ஓயாமல் அவனை திட்டிக் கொண்டே இருந்தாள்.

அவளுக்குத் தான் வாய் வலித்திருக்க வேண்டும். அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாது அது பாட்டிற்கு தோட்டத்தில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகளின மேல் தீவிரமான பார்வையை செலுத்திக் கொண்டிருக்க, அவனது பார்வை போன திசையை பார்த்து கடுப்பானவள் அவன் தலையிலேயே ஒரு போடு போட சிறு உறுமலுடன் அவள் புறம் திரும்பியது.

"நான் இங்கே பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்.. நீ அங்க ரசிச்சிக்கிட்டு இருக்கியா? ராஸ்கல்..

அம்மா எனக்கு வச்சிருந்த மீன் குழம்பை திருடி சாப்பிட்டதுமில்லாம.. எகத்தாளமா வேற பதில் சொல்ற? உனக்கு சாப்பாட்டுல நான் என்னடா குறை வச்சேன் வேளா வேளைக்கு கரெக்ட்டா சாப்பாடு போட்டேனா இல்லையா? அப்புறம் ஏன் என்னோட மீன் குழம்பை திருடி சாப்பிட்ட?" அவனை விடவில்லை அவள். கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டேயிருந்தாள்.

அவன் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான்..

"......"

"ஓகோ.. சாருக்கு இப்போ அவ்வளவு திமிரு கூடிப் போச்சா? உன்னை..." என்று அவனை அடிக்க கையை ஓங்க,

அந்நேரம் வெளியே காய வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுத்துச் செல்ல வந்த அவள் தாய் ரேணுகா இந்த காட்சியை கண்டு தலையில் அடித்துக் கொண்டவர் அவர்கள் இருவருக்குமிடையில் வந்து நின்று அவளது கையை பற்றி நிறுத்தினார்.

"ஏய் சமி.. உனக்கு லூசாடி? வாயில்லா ஜீவனை இந்த பாடு படுத்துற? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி திருடி சாப்பிட்டுருக்கானா சொல்லு? அவன் இன்னைக்கு ஒரு நாள் ஏதோ பசியில இப்படி பண்ணிட்டான். அதுவும் உன்னோட பங்கு அதான் இந்த குதி குதிக்கிற இல்லைனா நீயே உங்க அண்ணன் அப்பா பங்கையெல்லாம் திருடி கொடுத்துருவ எங்களுக்கு தெரியாதா..? நீ வா ஸ்மோக்கி.." என்று அந்த வீட்டுச் செல்லப் பிராணியான பூனையை அழைத்துச் சென்றார்.

அது இவளை பார்த்து கேலியாய் வாலை ஆட்டிக் கொண்டே செல்ல, தனக்கு மீன் குழம்பு இல்லையே என்ற கோபத்தில் இருந்தவளுக்கு ஸ்மோக்கியின் கேலிச் செயல் மேலும் வெறுப்பேற்ற, "போடா போ அப்புறம் எங்கிட்ட தானே வருவ? அப்போ இருக்கு உனக்கு.." என்று மனதால் அர்ச்சித்துக் கொண்டே இருக்க பசி வயிற்றைக் கிள்ளியது.

"வைஷூ மம்மி இன்னைக்கு ஸ்பெஷலா சமச்சிருப்பாங்க.. ஆனா ஜெய் இருப்பானே..அதுக்கென்ன நாம அங்கே போய் கொட்டிக்கலாம்.." முகம் ஆயிரம் வால்ட் பல்பு போட்டது பிரகாசத்துடன் எரிய, அவள் கால்கள் எதிர் வீட்டை நோக்கி படையெடுத்தன.

அப்போது தான் அங்கே மூவருமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவளை கண்டதும்
“வா..வா சமி.. வந்து சாப்பிடுமா..” என்று வைஷ்னவி அழைக்க அதற்காகவே காத்திருந்தது போல் ஓடிச் சென்று ஜெய்யின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள,

“நீ மட்டும் எப்படி நாங்க சாப்பிடற நேரம் பார்த்து மோப்பம் பிடிச்சு வந்து கரெக்ட்டா ஆஜராகுற?” என்று கேட்டுக் கொண்டே அவன் சாப்பிட, அவன் பேச்சை சட்டை செய்யாதவள்,

“வைஷூ மம்மி.. சிக்கன் கிரேவி சூப்பர்.. செம டேஸ்ட்டா இருக்கு.. இன்னும் கொஞ்சம் வைங்க..” என்று சாப்பிடுவதிலேயே கண்ணாயிருக்க, சாப்பிட்டு முடிந்து எழுந்தவன்,

“சரியான சாப்பாட்டு ராமி .. நல்லா மொக்கிட்டு சீக்கிரம் கிளம்பு நான் வேலை விஷயமா ராஜேஷை பார்க்க போகனும்.. நீ இப்படியே சாப்பிட்டுக்கிட்டு நேரத்தை ஓட்டிடாதே...ஹரி அப் சமி..” நங்கென தலையில் கொட்டி விட்டு போக உச்சந்தலையை தடவிக் கொண்டே மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

பத்து நிமிடங்களாகியும் அவள் வெளியே வந்தபாடில்லை. அவன் பொறுமை காற்றில் பறக்க உள்ளே வந்து பார்க்க அப்போதும் அவள் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. அதை கண்டதும் அவள் மேல் கோபம் முளைக்க,

“ சமி... சொன்னேன்ல எனக்கு லேட்டாகுதுனு.. இன்னும் வயிறு வெடிக்க சாப்பிட்டுட்டு இருக்க? கொஞ்சம் கூட சிரியஸ்னஸ் புரியாதா? போ நீ எப்படியோ கடைக்கு போ.. “ கத்தி விட்டுச் செல்ல அடுத்த வாய் உள்ளே இறங்க மறுத்தது.

நண்பன் தன்னை திட்டியதில் கண்கள் கலங்க, தொண்டை அடைக்க எழுந்தவள் கையை கழுவி விட்டு வீட்டுக்குச் சென்றாள். தனது பையையும் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டவள் வெளியே வந்து கடையை நோக்கி நடக்கவாரம்பிக்க சிறிது தூரம் சென்றதும் ஒரு பைக் வழுக்கிக் கொண்டு வந்து அவளை ஒரு சுற்றி சுற்றி விட்டு நின்றது.

அவளுக்கு தெரியும் அது அவன் தான் என்று. அவளை ஏறுமாறு சைகை செய்ய ஏறாமல் அவள் பாட்டிற்கு நடந்தாள்.

அவள் தன் மீது கோபம் கொண்டுள்ளதை அறிந்தவன் இதழ்கள் தானாக மலர பைக்கை நிறுத்தி விட்டு பின்னாலேயே சென்றான்.

“ஓய் சமி.. நில்லு..”

“சாருக்கு லேட்டாச்சுல கிளம்புங்க.. என்னால தனியா போக முடியும்.. நீங்க போங்க சார்..” என்று பல்லைக்கடித்துக் கொண்டு திரும்பாமலேயே பதில் சொன்ன விதம் அவனுக்கு மேலும் சிரிப்பை வர வழைத்தது.

சட்டென அவள் முன்னே வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், அவளை அண்ணாந்து நோக்கி,

“சாரி சமி குட்டி.. வேணும்னா இன்னைக்கு பூரா நுவரெலியாவை சுத்திக் காட்டுறேன்.. என்னை உன் ஃபிரெண்டா ஏத்துக்குவியா?” இதழ்களில் தவழ விட்ட புன்னகையுடன் அதே எட்டு வயது ஜெய்யாக வினவ அந்த செய்கையில் அவன் மீதான கோபம் எங்கோ பறந்து போனது.

“நீ எப்பவுமே என் பெஸ்ட் ஃபிரெண்ட் தான்டா..” என அதே எட்டு வயது சமியாக தனது வலது கையை மடித்து அவன் கையோடு கோர்க்க , எழுந்தவன் “குள்ள வாத்து..” என கேலியாய் கூறி அவள் தலையில் கொட்டு விட்டு ஓட அவனை துரத்திக் கொண்டி ஓடினாள் சப்தமி.







தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே..
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள்
உயிர் கலந்தது..
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில்
முதல்வரி..
இந்த உலகில் மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்..
 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-2

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சிளில் ஒரே செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அனைத்து சேனல்களிலுமே ராக்ஸ்டார் ஜெய் (rockstar Jay) பற்றிய பேட்டி அல்லது நிகழ்ச்சிள் ஏதோவொன்று மீண்டும் மீண்டும் ஒலிபரப்பாகிக் கொண்டே இருந்தது.



பிரபல தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த விருது வழங்கும் விழா. அந்தக் காட்சியை மட்டும் மீள் ஒலிபரப்பு செய்தது.



"அவார்ட் கோஸ் டூ தி ராக்ஸ்டார் ஜெய்.." ( Award goes to the rockstar jay).



பளிச் பளிச்சென்று கேமராக்கள் மின்ன, ஸ்டேஜில் அவன் காலை எடுத்து வைத்த நேரம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் கரகோசம் வின்னைப் பிளக்க, மேடையை சுற்றி விளக்குகள் மாறி மாறி பிரகாசமாக எரிய, ஸ்டைலான துள்ளலான நடையுடன் வந்தவன், இதழ்களில் புன்னகை தவழ, லேசான தலை சாய்ப்புடன் இரு கை கூப்பி விட்டு, அனைவருக்கும் ஒரு ஹாய் சொன்ன விதம் எப்போதும் போல அவன் ரசிகர் பட்டாளத்தை கவர மீண்டும் கரகோஷம்.



இது தான் அவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, பாப் இசைத்துறையில் எத்தனை உயர்த்தை அடைந்திருந்தாலும் அவன் கலந்து கொள்ளும் எந்தவொரு பேட்டி நிகழ்ச்சி அல்லது விழாக்களாக இருக்கட்டும் தான் தமிழனென்ற அடையாளத்தை காட்டும் விதத்தில் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னதன் பின்பு தான் ஒரு கையசைத்து ஹாய் சொல்வான். இந்தச் செயலே அவனுக்கு உலகெங்கிலும் ரசிகர்களை உருவாக்கித் தந்துள்ளது.



புன்னகை நிறைந்த முகத்துடன் விருதை பெற்றுக் கொண்டவனிடம் மைக்கை வழங்க, அவன் பேச ஆரம்பிக்க மீண்டும் கரகோஷம் எழ, பற்கள் மின்ன ரசிகர்களை நோக்கி கையசைத்தவன் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்.



(கீழ்வரும் உரையாடல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே நடைபெறும்..)

"இந்த விருதை என்னோட பேரண்ட்ஸ், என்னோட ஃபிரெண்ட்ஸான தி ராக்கர்ஸ் டீம் மெம்பர்ஸ், என்னோட இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுக்கும் அன்ட் எனக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருக்கும் என்னோட ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.." என்று ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தமொன்றை வீச ரசிகர்களின் சந்தோஷ கூச்சலில் அந்த அரங்கமே அதிர்ந்தது.



அந்த நிகழ்ச்சியை ஹாஸ்ட் செய்து கொண்டிருந்த ஜோர்ஜ்,



"மிஸ்டர் ஜெய்.. நீங்க எப்படி மியூசிக் அன்ட் மாடலிங் இரண்டையும் கவர் செய்றீங்க.? அன்ட் இப்போ நீங்க பல பெண்களோட கனவு நாயகனா இருக்கீங்க? உங்களோட இந்த தோற்றமே பல பெண்கள் தூக்கத்தை தொலைக்க காரணம்னும் சொல்றாங்களே..இன்னொறு மேட்டர் உங்க கனவு நாயகியையும் நீங்க கண்டு பிடிச்சிட்டதா நியூஸ் வந்து இருக்கே.." என்று சிரித்துக் கொண்ட நாசூக்காக பல கேள்விகளை கேட்டு வைக்க,



பதிலையும் கூறாது ரசிகர்களின் பக்கம் திரும்ப, அதே உற்சாகம் அதே கரகோஷம். உதட்டில் இளநகை பூக்க கேள்விகளுக்கு பதில் கூறவாரம்பித்தான்..



"மியூசிக் என்னோட உயிர். அதனால் அது எப்பவுமே எனக்கு கஷ்டமா தெரியலை. மாடலிங் என்னோட ரசிகர்களுக்காக நான் விரும்பி பண்றேன். சோ எந்த விஷயத்திலேயும் உண்மையாவும், விருப்பத்தோடும் ஈடுபட்டால் அதில் எந்த சிரமமும் இருக்காது.. எந்த வேலையாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் செய்ங்க வெற்றி நிச்சயம்" என்று கூற அவனது பேச்சை இன்றும் வியந்தவர்கள், கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.



அடுத்த கேள்விக்கான பதில்,

"என்னை என்னோட பெண் ரசிகைகளுக்கு பிடிச்சிருக்கு அதனால் அப்படி சொல்றாங்க மத்தபடி கனவு நாயகன்னு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லை.." ஜோர்ஜை பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன்,



"ஹூம் யெஸ் என் கனவு நாயகியை கண்டு பிடிச்சிட்டேன்..." என்று சொன்னதுமே கூட்டத்தில் "ஹோ.."என்று ஒரே கூச்சல்,



"அன்ட் சூன் என்னோட கனவு நாயகி யாருன்னு உங்க எல்லாருக்கும் அஃபீசியலா அறிவிக்கிறேன். அது வரைக்கும் எந்த ரூமர்ஸ்க்கும் ஏமாறாதீங்க.." என்று கேள்விகளுக்கான பதில்களை இலகுவாக கூறி முடித்து விட, ஒரு தமிழ்ப் பாடல் பாடுமாறு ரசிகர் மத்தியில் ஒரே சலசலப்பு.



"ஏ பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம்
செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான்
போனேனே..
போதையாக தான் ஆனேனே
தள்ளாட்டம் ஜீவனே.."
பாடலை பாடி முடிக்க அவனது மேக்னட் குரலில் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து "ஜெய் வீ லவ் யூ.." என்று ஆரவாரக் கூச்சலிட அவன் புன்னகையுடன் அவர்களை நோக்கி கையைக்க அவனது முகத்தை ஸூம் செய்து காட்டியது அந்த சேனல்.



அனைத்து முன்னனி சேனல்களிலும் அவன் முகமே.அவனது முகத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவனது முகம் கோரமாய் மாறி, கரத்தை நரம்புகள் புடைக்க, அருகில் இருந்த அலங்காரத்திற்கென வைக்கப்பட்டிருந்த பூச்செண்டை எடுத்து நவீன மாடல் டீவியை நோக்கி எறிய, அந்தச் சத்தத்தில் அவன் அறைக்கு ஓடி வந்தார் அவன் தாய் வித்யா.



வெறி வந்தவன் போல் தொலைக்காட்சியை நோக்கி ஒவ்வொரு பொருளாக தூக்கி எறிந்தவனது மூர்க்கத்தனத்தை கண்டு பதறிப் போனார்.



"வாட் ரோங் வித் யூ.. ப்ளீஸ் ஸ்டாப் இட் பேபி.." என தடுக்க முனைய அவன் பக்கவாட்டில் இருந்த ஆளுயர கண்ணாடியில் அவன் முகத்தின் விம்பம் தெரிய, அது அவனை மேலும் வெறியனாக்க கையில் கிடைத்த பொருள் கொண்டு வீஅந்த கண்ணாடி நொருங்கி சில்லு சில்லாய் உடைத்து போனது.



அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவராய் அவனை தடுக்க முயன்று கொண்டிருந்தார். அவனது கோபத்திற்கான காரணத்தை அறிந்தவராயிற்றே. கடந்த சில தினங்களாக மூர்க்கத் தனமாக நடந்து கொள்ளும் தன் மகனை எண்ணி கவலை அடைந்தார்.



“ஏன்டா இப்படி பண்ணுற? இன்னைக்கு உன்னோட பர்த்டே.. ப்ளீஸ் காம்டவுன்..” எனத் தடவிக் கொடுக்க, சற்று அமைதியானவன் தாயை நோக்கி,
“பர்த்டே..” அவன் இதழ்கள் சற்று இகழ்ச்சியாகவே வளைந்தன.



“அதனால் தானே மா இப்படி மறுபடியும் இந்த ப்ரோக்ராம்ஸ்லாம் போட்டு காட்டிட்டே இருக்காங்க. எதை மறக்கனும்னு நினைக்கிறேனோ அதையே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துது.. ஏன்மா இப்படி எல்லாம் நடந்தது? என்னால் ரொம்ப கஷ்டமா இருக்குமா?” என்று தன் முகத்தை தடவிப் பார்த்தவன்,



“அந்த முகத்தை பார்க்கும் போதெல்லாம் .. என் முகம் எனக்கே பிடிக்காம போயிடுதுமா. எப்படி இந்த முகத்தோடு யாரையும் பார்க்கவே முடியலை. இப்படி அருவருப்பா இருக்குமா..” தன் இழப்பின் வேதனையோடு புலம்பும் மகனின் நிலையை எண்ணி ஒரு தாயாய் அவர் அவர் உள்ளம் உருகிற்று.



“ஏன் இப்படி எல்லாம் பேசுற? உன்னோட தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் எங்கே போச்சு? எந்த நிலையிலும் உன்னோட சுயத்தை இழந்துட கூடாதுப்பா..” என்ற அறிவுரைகளை எல்லாம் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை.



அவன் மனம் எங்கும் ரணமாய் வலித்தது. அவனது சொத்து, சுகம் யாவும் எதுவும் அவனுக்கு மன அமைதியை தரவில்லை. மாறாக அவை அனைத்தும் அவனுக்கு மேலும் மேலும் வலியையே கொடுத்தது.



“அவன் எப்போதோ செத்து போயிட்டான்..” விரக்தியுடன்.



“நீ இப்படியே இருக்க போறதில்ல. உன்னோட இந்த சர்ஜரி முடிந்து உன் ஹெல்த் கண்டிஷன் பார்த்துட்டு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணலாம்னு டாக்டர் சொல்லிருக்காருப்பா.. அதுக்கப்புறம் நீ பழைய மாதிரி ஆயிடுவ..” அவனை தேற்ற முயன்றார்.



“பழைய மாதிரி ஆகிடுவேன் ஐ நோ தட் .. ஆனால் என் காதல்?” என்றஅவனது கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.



தாயின் மௌனத்தை புரிந்து கொண்டவன்,
“முடியாதுல்ல .. பின்னே எதுக்குமா? இப்படி என்னை பார்க்குறது உங்களுக்கு கஷ்டமாயிருந்தா சொல்லுங்க எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடறேன்..” அவனது பதிலில் துடித்துப் போனார் அவர்.



தவமாய் தவமிருந்து பெற்ற புதல்வனாயிற்றே. அந்த பாழாய் போன காதல் தானே அவனை மனதளவில் துவண்டு போக வைத்தது.



அந்த ஒரு நாள் அவனது வாழ்வை இப்படி புரட்டிப் போடும் என அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்றும் அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறானே. இன்னும் எத்தனை நாட்கள் தன்னை தானே வெறுத்து வாழ முடியும்?



“என்ன தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரம் வேறு அவங்க கலாச்சாரம் வேறுப்பா.. அவங்களுக்கு இதெல்லாம் சாதாரணமான விஷயம். பணம், பேர், புகழ் பின்னாடியே ஓடுறவங்களுக்கு இந்த காதலெல்லாம் தேவையே இல்லை.



சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி காதலை மாத்திக்கிட்டே இருப்பாங்க. உண்மையை சொல்லனும்னா அது காதலே இல்லை. உண்மையான காதல் அழகு,அந்தஸ்த்து பார்த்து வராது.



சந்தோஷத்தில் மட்டுமே பங்கெடுத்துக்குறது காதல் இல்லை. எந்த கஷ்டம் வந்தாலும் உனக்காக நான் இருப்பேன்னு சொல்லும் உண்மை காதல். நீ புரிஞ்சுப்பனு நினைக்கிறேன்பா..” சற்று அழுத்தமாக விளக்க அப்போது தான் அவனுக்கு எல்லாம் புரியவாரம்பித்தது.



உண்மை தானே இந்த நேரத்தில் அவள் எனக்கு ஆறுதலாக தானே இருந்திருக்க வேண்டும் ஆனால் அவள்? அதுவரை காதலென்று நினைத்துக் கொண்டிருந்தவன் தாயின் பேச்சிலிருந்த நிதர்சனம் உரைக்க அது காதலே இல்லையென்று தோன்றவாரம்பித்தது.



அவள் நினைவுகளை பிடிவாதமாக ஒதுக்கியவன், ஆறுதல் தேடும் குழந்தையாக தன் தாயின் மடியில் தஞ்சமடைந்தது அந்த வளர்ந்த குழந்தை.



அவனது செயலில் தாயவள் உள்ளம் உருகிப் போனது. மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டிருந்த தன் மகனின் தலை கோத கண்கள் மூடியபடியே,



“ஆனால் மாம் நான் உண்மையா தானே அவளை காதலிச்சேன்?” கேட்டவனது அந்தக் குரலில் வலி நிறைந்திருந்தது.



தொடர்ந்து, “உண்மையான காதலுக்கு வேல்யூவே இல்லாம போச்சுல? ஐ ஹேட் லவ்..ஐ ஹேட் லவ்மா..” என்று புலம்பிய மகனிடம்,



“இல்லைப்பா.. உனக்காகவே உன்னை மட்டும் விரும்பும் காதல் கண்டிப்பா ஒரு நாள் கிடைக்கும்.. அப்படி ஒரு காதலை நீ உணரும் போது நீ தான் இந்த உலகத்திலேயே சந்தோஷமான மனிதனா உணர்வாய்.” என்று அவன் கரத்தினை பற்றிக் கொள்ள, கண்களை திறந்து தாயின் முகத்தை நோக்கியவன், எதுவும் பேசாமல் மீண்டும் கண்டளை மூடி உறங்கிப் போனான்.



******



கிரிகரி வாவி (Gregory lake) கி.பி 1873 ஆம் ஆண்டு ஆளுநர் வில்லியம்ஸ் கிரிகரி (Governor William Gregory ) அவர்களால் அமைக்கப்பட்டது. இது நுவரெலியாவில் காணப்படும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஓர் முக்கிய சுற்றுலாத் தளமாகும்.



முக்கியமாக இங்கே படகுப் போட்டிகள் நடைபெறும். மற்றும் வருகைத் தருபவரகளுக்கு படகுச் சவாரி வசதியும் உண்டு. மாலை நேரங்களில் அதன் அழகு பார்ப்போர் மனதை கவர்ந்து விடும்.



பொன்மலை பொழுது அது. மஞ்சள் வண்ண சுடிதாருக்கு மேலே ஸ்வெட்டர் அணிந்து, துப்பட்டாவை கழுத்தில் சுற்றியிருக்க, தன் கைகளிரண்டையும் ஸ்வெட்டரின் இரு பக்க பாக்கெட்டினுள் இட்டவாறு குளிரை போக்க முயன்ற வண்ணம், அந்த வாவியோரம் நின்றிருந்தாள் சப்தமி.



‘கண்மணி அன்போடு
காதலன் நான் எழுதும்
கடிதமே..
பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா ..
நான் இங்கு சௌக்கியமே..”



அழகிய கிட்டார் வாசிப்பின் பின்னணியில் மனதை மயக்கும் குரல் கொண்ட அவன் பாடிக் கொண்டிருக்க, அந்த குளிருக்கு இதமாக அவளது குரலும் இணைய,



“உன்னை எண்ணிப் பார்க்கையில்
கவிதை கொட்டுது..
அதை எழுத நினைக்கையில் வாரத்தை முட்டுது.. ஓ ஹோ.. (கண்மணி..)
இருவரது குரலிலும் வெளிவந்த அந்தப் பாடல் சுற்றிலும் இருந்தவர்களின் மனதை வருடியது. அந்த இனிமையான மாலை வேளையில் அவர்களது பாடலும் சே சேர்ந்து மேலும் இனிமையாக்கியது.



அதில் லயித்துப் போனவர்கள் அந்தப் பாடல் முடிவில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய ஜெய்யும் சமியும் பூரித்து நின்றார்கள்.



“ஹேய் ஜெய்.. யூ ராக்கிங் மேன்..” அவன் கையை பிடித்து குலுக்க,
“நீயும் தான் சமி சூப்பரா பாடுற..” அவள் கையை பற்றிக் கொண்டான்.



இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி ஒருவர் பார்த்து புன்னகைக்க, அங்கிருந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்த ஒருவனது பார்வை மட்டும் அவர்கள் இருவரிலேயே நிலைத்திருந்தது.



இதை உணர்ந்ததாலோ என்னவோ சட்டென்று அந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்க்க, அந்தப் பேசியவனது தோற்றம் அவளை கொஞ்சம் அதிரச் செய்தது என்றால் அவன் பார்வை அதிரச்சியை கூட்டவே செய்தது.

 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-3

யாரென்று தெரியாத அம்மனிதனின் தோற்றம் பார்ப்போரை ஒரு நிமிடம் பயமுறுத்தவே செய்யும். அவனது இடது பக்க புருவத்தின் முடிவிலிருந்து கன்னம் வழியே செல்கிறது ஓர் நீண்ட தழும்பு.

இடது கையில் ஓர் ஊன்றுகோல் வேறு. இதற்கு முன் எங்கும் கண்டறியாத முகம். ஏன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்று ஒரு நிமிடத்திற்கும் மேலாக அவனை பார்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தவளது தோளை பற்றி,

“சமி என்னாச்சு? ஏன் அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்க?” என்ற அவனது கேள்வியை உணர்ந்து அந்த இடத்தில் பார்வையை திருப்ப அங்கு நின்றிருந்தவனை காணவில்லை.

“ஒன்னும் இல்லைடா. அந்த மரத்துக்கு கீழே இருந்த ஒருத்தன் ஒரு மாதிரி பார்த்துட்டே இருந்தான். அது தான் நானும் பார்த்தேன் யாருனு பட் அதுக்குள்ள போயிட்டான் ..”

ஒரு கையால் தன் நாடியை அழித்த வண்ணம் அவளை மேலும் கீழும் பார்த்தபடி, “உன்னையா ஒருத்தன் இவ்வளவு நேரம் பார்த்தான்? நம்ப முடியலையே.. எவ்வளவு மட்டமான டேஸ்ட் அவனுக்கு.” என்று சீரியஸாக பேசுவது போல் அவளை கலாய்க்க, அவனை முறைத்தவள் அவன் முதுகில் படாரென்று அடி வைக்க குதித்து நின்றான் ஜெய் .

“ஏன்டா நான் என்ன அவ்வளவு கேவலமாகவா இருக்கேன்?” இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க,

“சப்தமி.. உனக்கு என்னம்மா நீ ரொம்ப அழகா இருக்க..” என்றவன் இரண்டடி பின்னே நகர்ந்து, “ஆனால் பார்க்க பயங்கரமா இருக்க..எஸ்கேப்..” என்று கத்திக் கொண்டே ஓடி விட்டான்.

இரவு எட்டு மணியை தாண்டி விட்டது. இருவரும் வரும் வழியில் ஜெய்யின் பைக் பெற்றோல் இல்லாமல் நின்று விட பைக்கை தள்ளிக் கொண்டே கதையளந்த வண்ணம் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

“அங்கே பாரு ஜெய்.. உளவுத்துறை உஷாராணி நம்மையே லுக்கு விட்டுக்கிட்டு இருக்கு..” ஜெய்யின் காதோரம் சப்தமி கூற,

“ஆமா பார்க்குற பார்வையை பாரு.. இந்த தெருவில் முதல் வீடு. அவங்க வீட்டை தாண்டி தானே போகனும். கேள்வி கேட்டே சாகடிக்கும்.. அந்த அஸிஸ்டன்ட் உளவுத்துறை இன்னைக்கு இல்லை போல.. அதுவும் கூட சேர்ந்தா அவ்வளவு தான். ஒரு மனுஷன் இந்த வழியா போயிட கூடாதே எங்கே போற எதுக்கு போறேன்னு கேட்டு இம்சை பண்ணும்...” என்றான் எரிச்சல் மீதூறும் குரலில்.

“ஹாஹா.. அஸிஸ்டன்ட் உளவுத்துறை செல்விக்கு நூராயிசுடா பாரு வந்து ஜாயின்ட் பண்ணிக்கிட்டாங்க..” என்று கூறியவாறே அவர்களது வீட்டை கடந்து செல்ல தடுத்தது உஷாராணியின் குரல்.

“என்னம்மா சமி.. எங்கே போய் வர்றீங்க ரெண்டு பேரும் இந்த நேர்த்துல?” முகமெல்லாம் பல்லாக வினவ,

‘ஆரம்பிச்சுட்டாடா.. இனி விட மாட்டா..’

“லேக் பக்கம் போனோம் அது தான் லேட்டாகிருச்சு..”

“என்னம்மா காலம் கெட்டு கிடக்கு.. ஒரு ஆணும் பொண்ணுமா நேரங்கெட்ட நேர்த்துல வெளியே சுத்தலாமா.?” -அஸிஸ்டன்ட் உளவுத்துறை.

‘இப்போ பாரு உன்னை எப்படி ஆஃப் பண்றேன்னு..’

“வழியில பைக்ல பெற்றோல் தீர்ந்து போச்சு உஷா ஆன்ட்டி.. இல்லைனா நேர காலத்தோடு வீடு வந்து சேர்ந்திருப்போம் செல்வி ஆன்ட்டி..” காதுவரை இழுத்து வைத்த புன்னகையுடன் அவள் கூற அவ்வளவு தான்

“ஏன் சமி எங்களை பார்த்தா ஆன்ட்டி மாதிரியா இருக்கு? இன்னும் எங்க பிள்ளைகளை கூட கட்டிக் கொடுக்கல அதுக்குள்ள ஆன்ட்டி மாதிரி இருக்கோமா..?” என்றவர் செல்வியின் பக்கம் திரும்பி,

“ஏன்டி செல்வி உன்னை ஆன்ட்டினு சொன்னா பரவாயில்லை நீ பார்க்க குண்டா இருக்க.. நான் ஒல்லியா தானே இருக்கேன்?”

“இது நல்லா இருக்கே..உங்க கண்ணுக்கு நான் ஆன்ட்டி மாதிரி இருக்கேனா.. நீங்க தான்கா என்னை விட வயசுல பெரியவங்க..” என்று செல்வி கூற அவர்களது வாக்குவாதம் துவங்க, ஒரு சிரிப்போடு இருவரும் நைசாக நழுவிக் கொண்டனர்.

“இது மாதிரி ஊருக்கு ரெண்டு இருந்தா போதும்.. ஊரு உருப்பட்டுடும்..” அலத்துக் கொண்டான் ஜெய்.

அதற்குள் அவர்களது வீடும் வர இருவரும் தத்தமது வீடுஙளுக்குச் சென்றனர்.

இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு திடீரென அந்தப் புதியவனின் பார்வை நினைவில் வந்தது.

‘என்னை ஒரு பயங்கரமான பார்வை? அவனை முகத்தை பார்க்கவே பயமா இருந்துச்சு. ஒரு வேளை அவன் வேறு யாரையாவது பார்த்து இருப்பானோ? அப்படி தான் இருக்கும் நாம ஏன் வீணா நம்ம தூக்கத்தை கெடுத்துக்கனும்…” என்றெண்ணியவள் அப்படியே உறங்கியும் போனாள்.

##
மறுநாள் காலையில் எழுந்தவள் வழக்கமான உடற் பயிற்சிகளை முடித்துக் கொண்டு, தோட்டத்திலுள்ள அவளது செடிகளுக்கு நீரூற்றினாள்.

அதன் பின் காலையுணவை முடித்துக் கொண்டு, சிவப்பு நிறத்தில் நீண்ட பாவாடையும் , இளஞ்சிவப்பு நிறத்தில் டாப்புஸும்,அதற்கு மேலே ஸ்வெட்டரும் அணிந்து, கழுத்தை சுற்றி ஒரு துப்பட்டாவையும் சுற்றிக் கொண்டாள்.

“அம்மா…அம்மா..”

“ஏன்டி கத்துற? என்ன சொல்லு?” என்று கேட்டுக் கொண்டே அவளது அறைக்கு வந்தார்.

“இன்னைக்கு கடைக்கு கொண்டு போக வேண்டிய செடிகளை எடுத்து வச்சிருக்கேன். மாரி அண்ணா வந்தா வண்ணடியில அனுப்பிடுங்க.. நான் ஜெய் கூட போறேன்மா” என்று கூறி விட்டு கிளம்ம எத்தனிக்க, அவள் கைபிடித்து தடுத்தவர்,

“ஸ்வேதா கால் பண்ணினா.. மாப்பிள்ளையோட ஃபிரெண்ட் தம்பி ஒருத்தன் இருக்கானாம்..நல்ல உத்தியோகத்தில் வேற இருக்கானாம்..” என்று அவர் கூறிக் கொண்ட போக மார்புக்கு குறுக்கே தன் இரு கைகளை கட்டிய வண்ணம் அன்னையை கூர்ந்து நோக்கினாள்.

“இப்போ என்ன அவனை நான் கல்யாணம் பண்ணிக்கனுமா?” ஒரு மாதிரி குரலில் வினவ,

“அப்படி இல்லைடா.. உனக்கு பிடிச்சிருந்தா பேசலாம்னு சொல்றா. நல்ல சம்மந்தம் வேற அது தான் …” என்று இழுக்க,.

“இங்கே பாருங்கமா.. உங்களுக்கு ஆயிரம் தடவைக்கு மேலே சொல்லிட்டேன்.. எனக்கு இந்த ஃபாரின் மாப்பிள்ளை பார்க்குற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது இந்த நுவரெலியாக்குள்ள தான் நடக்கனும்.. ஓகே..”என்று கடுகடுத்து விட்டு கிளம்பினாள்.

நேரே ஜெய்யின் வீட்டிற்கு சென்றவள் “ஜெய்…” என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைய அவனது குரல் சமையலறையில் கேட்டது.

“திண்ண திண்ண ஆசை மேகி திண்ண ஆசை..” பாடிக் கொண்டே மேகி நூடுல்ஸ் செய்து கொண்டிருக்க, அவனது தலையிலேயே நங்கென்று கொட்டினாள்.

தலையை தடவிக் கொண்டே, “பிசாசு ஏன்டி இப்போ அடிச்ச?” என்று கத்த,

அந்த மேகி நூடுல்ஸை சுட்டிக்காட்டி, “உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. இந்த மாதிரி ஜங்க் ஃபூட் சாப்பிடாதே.. உடம்புக்கு நல்லதில்லைனு.. மரியாதையா அத தூக்கி குப்பையில் போடு..” அவனிடம் மல்லுக்கட்ட, அவளை பாவமாக ஏறிட்டவன்,

“இன்னைக்கு ஒரு நாள்..” என்று கெஞ்ச கண்களை உருட்டி மேலும் முறைத்தாள்.

“போ சமி.. மம்மி எங்கூட கோவமா இருக்காங்க சாப்பாடு கூட சமைச்சி தர மாட்டேங்குறாங்க.. எனக்கு தெரிஞ்சதை சமைச்சி சாப்பிடலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டியே..” பரிதாபப் பார்வை பார்க்க, அவளோ மேலும் முறைக்க,

“என் மம்மி கோவமா இருக்க நீ என்ன சேட்டை பண்ணி வச்சிருக்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை.. எனக்கு மேல் படிப்புக்காக லண்டன் யுனிவர்சிட்டியில படிக்க ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு.. என்னால போக முடியாதுனு சொல்லிட்டேன் அதனால் மம்மி ரெண்டு பேரும் என்கூட டூ விட்டுட்டாங்க.. நீயே சொல்லு சமி உங்களை எல்லாம் விட்டுட்டு என்னால போக முடியுமா?” என்றான் கவலை குரலில்.

அந்நேரம் சரியாக அவனது அன்னை வைஷ்னவியும் சமயலறைக்குள் வர, அவரது சிவந்த கண்களே நீண்ட நேரம் அழுதிருப்பதை காட்டிக் கொடுத்தது.

“பார்த்தியாமா… டாடி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்திருக்காரு தெரியுமா? இவன் என்னடான்னா உன்னையும் எங்களையும் விட்டு இருக்க முடியாதுன்னு சொல்றான். இவன் எதிர்காலம் நல்லா இருக்கனும்னு நினைக்கிறது தப்பா..?”

“ஆமா.. ஜெய் இது உன்னோட ஃபியூச்சர் அன்ட் மம்மி டாடியோட கனவுடா..” அவள் அப்படிக் கூறினாலும் அவளுக்கும் உள்ளே கவலை இருக்கத் தான் செய்தது.

சிறு வயது முதல் இணை பிரியா நண்பர்களாயிற்றே. அவளாலும் அவனை பிரிந்து இருக்க முடியாது தான் ஆனால் இது அவனது பெற்றோரின் நீண்ட நாள் கனவு.

இருவரையும் மாறி மாறி முறைத்தவன், “இந்த முடிவை நான் யாருக்காகவும் மாத்திக்க போறதில்லை.. கிளம்பு சமி..” கோபமா வெளியேற, வைஷ்னவியை பார்த்து,

“எல்லாம் நான் சரி பண்ணிட்றேன் மம்மி.. நீங்க கவலை படாதீங்க ஓகே..” என்று அவரது கன்னத்தில் முத்தமொன்றையும் வைத்து விட்டு ஜெய்யுடன் கிளம்பினாள்.

##

விக்டோரியா பூங்கா 1897 ஆம் ஆண்டில் மகாராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூறும் விதமாக பெயரிடப்பட்டது. அந்தப் பூங்காவின் முதல் மராமான ஓக் மரம் பார்வையிடும் ஓர் ஜேர்மனிய அரசி மூலம் நடப்பட்டது. நானு ஒயாவானது அந்தப் பூங்கா வழியே செல்கிறது.

விக்டோரியா பூங்கா அங்கு செல்வோரின் கண்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் பயணிகள் நிரம்பி காணப்ப்டுவர் .

அந்தப் பூங்காவின் எதிர் திசையிலேயே சப்தமியின் தந்தையுடைய கடைய இவளது மலர்ச் செடி கடையும் அமைந்துள்ளன.

வழக்கம் போல் ஜெய்யுடன் வந்த கடையை திறந்தவள் மலர் தொட்டிகளை வரிசையாக அடுக்கத் துவங்கினாள்.

பாதையோரமாக கிளைகள் பரப்பி நின்றிருந்த பெரிய மரத்தடி பெஞ்சுகளில் சிலர் அமர்ந்திருந்ததை பார்த்தவளுக்கு புன்னகை குடி கொள்ள தன் பையிலிருந்த உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடினாள்.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் வழங்க புன்னகை முகமாகவே பெற்றுக் கொண்டனர்.

பக்கத்து பெஞ்சில் ஒருவன் அமர்ந்திருப்பதை கண்டவள், அவன் கையிலும் ஒன்றை வைக்க, அந்த உணவுப் பொட்டலம் பறந்து சிதறி விழுந்தது.

கண்கள் செந்நிறம் கொள்ள எழுந்து நின்றவனது முகத்தை பார்த்ததும் அவள் சுவாசம் தடைபட்டு நின்றது. ஆம் அன்று லேக்கில் இருந்தவனே தான்.

“என்னை பார்த்தா உனக்கு பிச்சைக் காரன் மாதிரி இருக்கா.. ப்ளடி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவன், அவள் எதிர்பாரா நேரம் ‘பளார்’ என்று அறைந்து விட்டான்.

கன்னம் எரிந்தது.திட்டும் அவனையே பார்த்து பயத்தில் மருண்டு விழித்தாள். அவன் அறைந்த அறையில் அவளுக்கு வார்த்தை வரவில்லை.

விழித்திரை இரண்டும் கலங்க நின்றவளது தோற்றம் அவனை ஏதோ செய்ய அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.சற்று அமைதியாகி,
“சாரி.. நீ அப்படி செஞ்சதும் எனக்கு..” என்று கூறிக்கொண்டிருக்க, மலங்க மலங்க விழித்த வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சப்தமி.

இருவருமே எதிர்பாராத தருணம் அது. ஓர் வலிய கரம் அவன் கன்னத்தை பதம் பார்த்தது.
 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-3

யாரென்று தெரியாத அம்மனிதனின் தோற்றம் பார்ப்போரை ஒரு நிமிடம் பயமுறுத்தவே செய்யும். அவனது இடது பக்க புருவத்தின் முடிவிலிருந்து கன்னம் வழியே செல்கிறது ஓர் நீண்ட தழும்பு.

இடது கையில் ஓர் ஊன்றுகோல் வேறு. இதற்கு முன் எங்கும் கண்டறியாத முகம். ஏன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்று ஒரு நிமிடத்திற்கும் மேலாக அவனை பார்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தவளது தோளை பற்றி,

“சமி என்னாச்சு? ஏன் அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்க?” என்ற அவனது கேள்வியை உணர்ந்து அந்த இடத்தில் பார்வையை திருப்ப அங்கு நின்றிருந்தவனை காணவில்லை.

“ஒன்னும் இல்லைடா. அந்த மரத்துக்கு கீழே இருந்த ஒருத்தன் ஒரு மாதிரி பார்த்துட்டே இருந்தான். அது தான் நானும் பார்த்தேன் யாருனு பட் அதுக்குள்ள போயிட்டான் ..”

ஒரு கையால் தன் நாடியை அழித்த வண்ணம் அவளை மேலும் கீழும் பார்த்தபடி, “உன்னையா ஒருத்தன் இவ்வளவு நேரம் பார்த்தான்? நம்ப முடியலையே.. எவ்வளவு மட்டமான டேஸ்ட் அவனுக்கு.” என்று சீரியஸாக பேசுவது போல் அவளை கலாய்க்க, அவனை முறைத்தவள் அவன் முதுகில் படாரென்று அடி வைக்க குதித்து நின்றான் ஜெய் .

“ஏன்டா நான் என்ன அவ்வளவு கேவலமாகவா இருக்கேன்?” இடுப்பில் கைவைத்து அவனை முறைக்க,

“சப்தமி.. உனக்கு என்னம்மா நீ ரொம்ப அழகா இருக்க..” என்றவன் இரண்டடி பின்னே நகர்ந்து, “ஆனால் பார்க்க பயங்கரமா இருக்க..எஸ்கேப்..” என்று கத்திக் கொண்டே ஓடி விட்டான்.

இரவு எட்டு மணியை தாண்டி விட்டது. இருவரும் வரும் வழியில் ஜெய்யின் பைக் பெற்றோல் இல்லாமல் நின்று விட பைக்கை தள்ளிக் கொண்டே கதையளந்த வண்ணம் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

“அங்கே பாரு ஜெய்.. உளவுத்துறை உஷாராணி நம்மையே லுக்கு விட்டுக்கிட்டு இருக்கு..” ஜெய்யின் காதோரம் சப்தமி கூற,

“ஆமா பார்க்குற பார்வையை பாரு.. இந்த தெருவில் முதல் வீடு. அவங்க வீட்டை தாண்டி தானே போகனும். கேள்வி கேட்டே சாகடிக்கும்.. அந்த அஸிஸ்டன்ட் உளவுத்துறை இன்னைக்கு இல்லை போல.. அதுவும் கூட சேர்ந்தா அவ்வளவு தான். ஒரு மனுஷன் இந்த வழியா போயிட கூடாதே எங்கே போற எதுக்கு போறேன்னு கேட்டு இம்சை பண்ணும்...” என்றான் எரிச்சல் மீதூறும் குரலில்.

“ஹாஹா.. அஸிஸ்டன்ட் உளவுத்துறை செல்விக்கு நூராயிசுடா பாரு வந்து ஜாயின்ட் பண்ணிக்கிட்டாங்க..” என்று கூறியவாறே அவர்களது வீட்டை கடந்து செல்ல தடுத்தது உஷாராணியின் குரல்.

“என்னம்மா சமி.. எங்கே போய் வர்றீங்க ரெண்டு பேரும் இந்த நேர்த்துல?” முகமெல்லாம் பல்லாக வினவ,

‘ஆரம்பிச்சுட்டாடா.. இனி விட மாட்டா..’

“லேக் பக்கம் போனோம் அது தான் லேட்டாகிருச்சு..”

“என்னம்மா காலம் கெட்டு கிடக்கு.. ஒரு ஆணும் பொண்ணுமா நேரங்கெட்ட நேர்த்துல வெளியே சுத்தலாமா.?” -அஸிஸ்டன்ட் உளவுத்துறை.

‘இப்போ பாரு உன்னை எப்படி ஆஃப் பண்றேன்னு..’

“வழியில பைக்ல பெற்றோல் தீர்ந்து போச்சு உஷா ஆன்ட்டி.. இல்லைனா நேர காலத்தோடு வீடு வந்து சேர்ந்திருப்போம் செல்வி ஆன்ட்டி..” காதுவரை இழுத்து வைத்த புன்னகையுடன் அவள் கூற அவ்வளவு தான்

“ஏன் சமி எங்களை பார்த்தா ஆன்ட்டி மாதிரியா இருக்கு? இன்னும் எங்க பிள்ளைகளை கூட கட்டிக் கொடுக்கல அதுக்குள்ள ஆன்ட்டி மாதிரி இருக்கோமா..?” என்றவர் செல்வியின் பக்கம் திரும்பி,

“ஏன்டி செல்வி உன்னை ஆன்ட்டினு சொன்னா பரவாயில்லை நீ பார்க்க குண்டா இருக்க.. நான் ஒல்லியா தானே இருக்கேன்?”

“இது நல்லா இருக்கே..உங்க கண்ணுக்கு நான் ஆன்ட்டி மாதிரி இருக்கேனா.. நீங்க தான்கா என்னை விட வயசுல பெரியவங்க..” என்று செல்வி கூற அவர்களது வாக்குவாதம் துவங்க, ஒரு சிரிப்போடு இருவரும் நைசாக நழுவிக் கொண்டனர்.

“இது மாதிரி ஊருக்கு ரெண்டு இருந்தா போதும்.. ஊரு உருப்பட்டுடும்..” அலத்துக் கொண்டான் ஜெய்.

அதற்குள் அவர்களது வீடும் வர இருவரும் தத்தமது வீடுஙளுக்குச் சென்றனர்.

இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு திடீரென அந்தப் புதியவனின் பார்வை நினைவில் வந்தது.

‘என்னை ஒரு பயங்கரமான பார்வை? அவனை முகத்தை பார்க்கவே பயமா இருந்துச்சு. ஒரு வேளை அவன் வேறு யாரையாவது பார்த்து இருப்பானோ? அப்படி தான் இருக்கும் நாம ஏன் வீணா நம்ம தூக்கத்தை கெடுத்துக்கனும்…” என்றெண்ணியவள் அப்படியே உறங்கியும் போனாள்.

##
மறுநாள் காலையில் எழுந்தவள் வழக்கமான உடற் பயிற்சிகளை முடித்துக் கொண்டு, தோட்டத்திலுள்ள அவளது செடிகளுக்கு நீரூற்றினாள்.

அதன் பின் காலையுணவை முடித்துக் கொண்டு, சிவப்பு நிறத்தில் நீண்ட பாவாடையும் , இளஞ்சிவப்பு நிறத்தில் டாப்புஸும்,அதற்கு மேலே ஸ்வெட்டரும் அணிந்து, கழுத்தை சுற்றி ஒரு துப்பட்டாவையும் சுற்றிக் கொண்டாள்.

“அம்மா…அம்மா..”

“ஏன்டி கத்துற? என்ன சொல்லு?” என்று கேட்டுக் கொண்டே அவளது அறைக்கு வந்தார்.

“இன்னைக்கு கடைக்கு கொண்டு போக வேண்டிய செடிகளை எடுத்து வச்சிருக்கேன். மாரி அண்ணா வந்தா வண்ணடியில அனுப்பிடுங்க.. நான் ஜெய் கூட போறேன்மா” என்று கூறி விட்டு கிளம்ம எத்தனிக்க, அவள் கைபிடித்து தடுத்தவர்,

“ஸ்வேதா கால் பண்ணினா.. மாப்பிள்ளையோட ஃபிரெண்ட் தம்பி ஒருத்தன் இருக்கானாம்..நல்ல உத்தியோகத்தில் வேற இருக்கானாம்..” என்று அவர் கூறிக் கொண்ட போக மார்புக்கு குறுக்கே தன் இரு கைகளை கட்டிய வண்ணம் அன்னையை கூர்ந்து நோக்கினாள்.

“இப்போ என்ன அவனை நான் கல்யாணம் பண்ணிக்கனுமா?” ஒரு மாதிரி குரலில் வினவ,

“அப்படி இல்லைடா.. உனக்கு பிடிச்சிருந்தா பேசலாம்னு சொல்றா. நல்ல சம்மந்தம் வேற அது தான் …” என்று இழுக்க,.

“இங்கே பாருங்கமா.. உங்களுக்கு ஆயிரம் தடவைக்கு மேலே சொல்லிட்டேன்.. எனக்கு இந்த ஃபாரின் மாப்பிள்ளை பார்க்குற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது இந்த நுவரெலியாக்குள்ள தான் நடக்கனும்.. ஓகே..”என்று கடுகடுத்து விட்டு கிளம்பினாள்.

நேரே ஜெய்யின் வீட்டிற்கு சென்றவள் “ஜெய்…” என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைய அவனது குரல் சமையலறையில் கேட்டது.

“திண்ண திண்ண ஆசை மேகி திண்ண ஆசை..” பாடிக் கொண்டே மேகி நூடுல்ஸ் செய்து கொண்டிருக்க, அவனது தலையிலேயே நங்கென்று கொட்டினாள்.

தலையை தடவிக் கொண்டே, “பிசாசு ஏன்டி இப்போ அடிச்ச?” என்று கத்த,

அந்த மேகி நூடுல்ஸை சுட்டிக்காட்டி, “உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. இந்த மாதிரி ஜங்க் ஃபூட் சாப்பிடாதே.. உடம்புக்கு நல்லதில்லைனு.. மரியாதையா அத தூக்கி குப்பையில் போடு..” அவனிடம் மல்லுக்கட்ட, அவளை பாவமாக ஏறிட்டவன்,

“இன்னைக்கு ஒரு நாள்..” என்று கெஞ்ச கண்களை உருட்டி மேலும் முறைத்தாள்.

“போ சமி.. மம்மி எங்கூட கோவமா இருக்காங்க சாப்பாடு கூட சமைச்சி தர மாட்டேங்குறாங்க.. எனக்கு தெரிஞ்சதை சமைச்சி சாப்பிடலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டியே..” பரிதாபப் பார்வை பார்க்க, அவளோ மேலும் முறைக்க,

“என் மம்மி கோவமா இருக்க நீ என்ன சேட்டை பண்ணி வச்சிருக்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை.. எனக்கு மேல் படிப்புக்காக லண்டன் யுனிவர்சிட்டியில படிக்க ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு.. என்னால போக முடியாதுனு சொல்லிட்டேன் அதனால் மம்மி ரெண்டு பேரும் என்கூட டூ விட்டுட்டாங்க.. நீயே சொல்லு சமி உங்களை எல்லாம் விட்டுட்டு என்னால போக முடியுமா?” என்றான் கவலை குரலில்.

அந்நேரம் சரியாக அவனது அன்னை வைஷ்னவியும் சமயலறைக்குள் வர, அவரது சிவந்த கண்களே நீண்ட நேரம் அழுதிருப்பதை காட்டிக் கொடுத்தது.

“பார்த்தியாமா… டாடி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்திருக்காரு தெரியுமா? இவன் என்னடான்னா உன்னையும் எங்களையும் விட்டு இருக்க முடியாதுன்னு சொல்றான். இவன் எதிர்காலம் நல்லா இருக்கனும்னு நினைக்கிறது தப்பா..?”

“ஆமா.. ஜெய் இது உன்னோட ஃபியூச்சர் அன்ட் மம்மி டாடியோட கனவுடா..” அவள் அப்படிக் கூறினாலும் அவளுக்கும் உள்ளே கவலை இருக்கத் தான் செய்தது.

சிறு வயது முதல் இணை பிரியா நண்பர்களாயிற்றே. அவளாலும் அவனை பிரிந்து இருக்க முடியாது தான் ஆனால் இது அவனது பெற்றோரின் நீண்ட நாள் கனவு.

இருவரையும் மாறி மாறி முறைத்தவன், “இந்த முடிவை நான் யாருக்காகவும் மாத்திக்க போறதில்லை.. கிளம்பு சமி..” கோபமா வெளியேற, வைஷ்னவியை பார்த்து,

“எல்லாம் நான் சரி பண்ணிட்றேன் மம்மி.. நீங்க கவலை படாதீங்க ஓகே..” என்று அவரது கன்னத்தில் முத்தமொன்றையும் வைத்து விட்டு ஜெய்யுடன் கிளம்பினாள்.

##

விக்டோரியா பூங்கா 1897 ஆம் ஆண்டில் மகாராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூறும் விதமாக பெயரிடப்பட்டது. அந்தப் பூங்காவின் முதல் மராமான ஓக் மரம் பார்வையிடும் ஓர் ஜேர்மனிய அரசி மூலம் நடப்பட்டது. நானு ஒயாவானது அந்தப் பூங்கா வழியே செல்கிறது.

விக்டோரியா பூங்கா அங்கு செல்வோரின் கண்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் பயணிகள் நிரம்பி காணப்ப்டுவர் .

அந்தப் பூங்காவின் எதிர் திசையிலேயே சப்தமியின் தந்தையுடைய கடைய இவளது மலர்ச் செடி கடையும் அமைந்துள்ளன.

வழக்கம் போல் ஜெய்யுடன் வந்த கடையை திறந்தவள் மலர் தொட்டிகளை வரிசையாக அடுக்கத் துவங்கினாள்.

பாதையோரமாக கிளைகள் பரப்பி நின்றிருந்த பெரிய மரத்தடி பெஞ்சுகளில் சிலர் அமர்ந்திருந்ததை பார்த்தவளுக்கு புன்னகை குடி கொள்ள தன் பையிலிருந்த உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடினாள்.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் வழங்க புன்னகை முகமாகவே பெற்றுக் கொண்டனர்.

பக்கத்து பெஞ்சில் ஒருவன் அமர்ந்திருப்பதை கண்டவள், அவன் கையிலும் ஒன்றை வைக்க, அந்த உணவுப் பொட்டலம் பறந்து சிதறி விழுந்தது.

கண்கள் செந்நிறம் கொள்ள எழுந்து நின்றவனது முகத்தை பார்த்ததும் அவள் சுவாசம் தடைபட்டு நின்றது. ஆம் அன்று லேக்கில் இருந்தவனே தான்.

“என்னை பார்த்தா உனக்கு பிச்சைக் காரன் மாதிரி இருக்கா.. ப்ளடி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவன், அவள் எதிர்பாரா நேரம் ‘பளார்’ என்று அறைந்து விட்டான்.

கன்னம் எரிந்தது.திட்டும் அவனையே பார்த்து பயத்தில் மருண்டு விழித்தாள். அவன் அறைந்த அறையில் அவளுக்கு வார்த்தை வரவில்லை.

விழித்திரை இரண்டும் கலங்க நின்றவளது தோற்றம் அவனை ஏதோ செய்ய அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.சற்று அமைதியாகி,
“சாரி.. நீ அப்படி செஞ்சதும் எனக்கு..” என்று கூறிக்கொண்டிருக்க, மலங்க மலங்க விழித்த வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சப்தமி.

இருவருமே எதிர்பாராத தருணம் அது. ஓர் வலிய கரம் அவன் கன்னத்தை பதம் பார்த்தது.
 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-5

காய்ச்சல் தந்த உடல் அசதியினாலும் மருந்தின் மயக்கத்தினாலும் உறங்கிக் கொண்டிருந்தாள் சப்தமி. அந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களாகி விட்டன.

அன்று ராஜேஷை தாக்கி விட்டு அவளையும் அவள் வீட்டுத் தெருமுனை வரை அழைத்துச் சென்றதுடன் அவள் வீட்டினுள் நுழையும் வரை இருந்து விட்டுத் தான் சென்றான்.

இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என அந்தப் புதியவன் கூறியதுமல்லாமல் “உன் ஃபிரெண்ட் கிட்ட கூட சொல்லக் கூடாது..” என அழுத்தமாக சொன்ன விதத்தில் அவளது அருமைத் தோழன் ஜெய்யிடம் கூட கூறவில்லை.

குளிரில் நீண்ட நேரம் வெளியே இருந்ததால் மறுநாள் காலை படுக்கையை விட்டும் எழ முடியாத அளவுக் காய்ச்சல் அடித்தது. மூன்று நாட்களாக கடைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.

ஒரு நாளைக்கு ஐந்து தடவைகளாவது அவளை பார்க்க வந்து விடுவான். அவனால் வர முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் பத்து தடவைக்கு மேல் அழைப்பெடுத்து விசாரிப்பான். தன் மீதான நண்பனின் கரிசனையில் அவள் உள்ளம் நெகிழ்ந்து தான் போனது.

அன்று காலை வெகு நேரம் கழித்து எழுந்தவளுக்கு உடல் அசதி குறைந்தது போல் தோன்ற, காலைக்கடன்களை முடித்து விட்டு காபியுடன் ஹாலில் சோபாவில் ஏறி அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்க,

“சமி..” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தான் ஜெய்.

“குட் மோர்னிங்டா வா வா..” என்று அவள் அழைக்க, அவளது பழைய உற்சாகக் குரலில் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள அவனும் சென்று அவள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, அவள் குடித்துக் கொண்டிருந்த காபிக் கப்பை பறித்து எடுத்து ஒரு மிடர் பருக அவன் காதை பிடித்து திருகினாள் அவள்.

“ஏன்டா இந்த பழக்கத்தை இன்னும் விடவே இல்லையா நீ?”

“அது எப்படி விட முடியும்.. ஃப்ரெண்ஸ்னா ஷேர் பண்ணி சாப்பிடனும். நீ என்னடான்னா தனியாகவே சாப்பிட்டா விட முடியுமா..?” என்று சிரிக்க, அவளும் மலர்ந்தாள்.

“சாரி சமி.. நான் அன்னைக்கு உன்னை வந்து பிக் அப் பண்ணியிருந்தேன்னா உனக்கு காய்ச்சல் வந்து இருக்காதுல்ல..?”திடீரென அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து வருத்தம் குடி கொண்டது.

“டேய் லூசு.. அது ஜஸ்ட் ஃபீவர்டா இப்போ ஓகே...நான் நல்லா இருக்கேன் பாரு..” எழுந்து நின்று இரு கைகளையும் அகற்றி ஒரு சுற்றி சுற்றிக் காட்ட, அவன் சிரித்தான்.

இன்னும் இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துச் செல்லுமாறு ரேணுகா எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் ஜெய்யுடன் கடைக்குக் கிளம்பினாள்.

ஜெய்யின் உதவியுடன் செடிகளை ஒழுங்கு முறை படி அடுக்கி விட்டு, ஜெய்யும் அங்கிருந்த நாற்காலியில் அமர அவளும் அமர்ந்து கொண்டாள்.

அவளையும் அறியாமல் அந்தப் பெயர் தெரியாதவன் நினைவில் வர, அவனுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லையே என வருந்தியதுடன், அன்று அவள் இருந்த மனநிலையில் யாரென்றே தெரியாத ஒருவனது அணைப்பில் கிடந்ததை எண்ணி வெட்கினாலும் அந்த அணைப்பில் பாதுகாப்பையும் உணர்ந்தே இருந்தாள்.

அன்றொரு நாள் அவன் அமர்ந்திருந்த மரபெஞ்சை நோக்கி அவள் கண்கள் தாமாகவே திரும்ப, அன்று போல் அவன் அங்கு இருக்கவில்லை. சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு ஏனோ சிறிது ஏமாற்றமாகவும் இருந்தது.

ஜெய் அவளை விட்டு நகரவே இல்லை. எந்த வேலையையும் செய்ய விடவுமில்லை. இருவருமாக பகலுணவை முடித்துக் கொண்டதும் அவளது செல் சிணுங்க, அதை எடுத்துப் பார்த்தவள், நெற்றியில் அடித்துக் கொண்டு,

“ஐயோ இதை மறந்துட்டேனே..” என்றபடி அழைப்பை ஏற்க, அந்தப் பக்கம் அவளை கலர் கலராக அர்ச்சித்துக் கொண்டிருந்தனர் அவளது தோழிகள் கூட்டம்.

இப்போதே வருவதாக கூறி ஒருவாறாக தோழிகளை சமாதானம் செய்து அழைப்பை துண்டிக்க, ஜெய் அவளையே பார்த்த வண்ணம் சைகையால் என்ன என வினவ,

“குண்டு மதுடா.. நம்ம சிந்துவுக்கு அடுத்த வாரம் கல்யாணம் உனக்கு தான் தெரியும்ல.. சர்ப்ரைஸ் கிஃப்ட் அன்ட் நாங்களும் ஒரு பேச்சுலர் பார்ட்டி பண்ணும்னு இருந்தோம்.. அன்னைக்கு அந்த மீட்டிங்கு நான் போகலைடா.. இன்னைக்கு நைட் சிந்து வீட்ல நம்ம கேங்க்கு பார்ட்டி போகலைனா.. கடிச்சு குதறிடுவா.. ப்ளீஸ் வா ஜெய் இப்போ வீட்டுக்கு போகலாம் அப்போ தான் நைட் அங்கே போக முடியும்..” என அவனிடம் கெஞ்சி கடையையும் மூடி விட்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.
**

சிவப்பு நிற சுடிதார் அணிந்து, துப்பட்டாவை கழுத்தோடு சுற்றி, காதுகளுக்கு மாத்திரம் குட்டி ஜிமிக்கியுடன், விரித்து விடப்பட்ட கூந்தல் அளவான ஒப்பனையுடன் தயாரானவள், கெஞ்சிக் கூத்தாடி காரைப் பெற்றுக் கொண்டவள் தானே ஓட்டினாள்.

பாதி வழியில் இவளது நண்பர் பட்டாளத்தையும் அழைத்துக் கொண்டு போக வேண்டி இரைந்ததால் ஜெய்யால் கூட செல்ல முடியாமல் போனது.

சிந்துவின் வீட்டில் இவர்களது பட்டாளத்தின் பார்ட்டி களை கட்டியது. ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளுடன் கலகலத்தது இளசுகள் கூட்டம்.

இரவு ஒன்பது மணியை கடந்து விட்ட நிலையில் பார்ட்டியையும் முடித்து விட்டு தோழிகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தோழிகளை அவரவர் வீகளில் இறக்கி விட்டு வரும் போது நேரம் ஒன்பது முப்பதை காட்ட அவளது வீட்டுக்குச் செல்லும் வழமையான பாதையில் வண்டியை விட அந்த நேரம் பார்த்து அந்த வீதி மூடப்பட்டுள்ளது என்ற செய்தியே கிடைத்தது.

இருப்பதோ இரண்டு வழிகள். ஒன்று மூடப்பட்டு விட்டது. மற்றைய வழி அன்று அவள் சென்று அந்தக்கயவனிடம் மாட்டிக் கொண்ட வழி.

அந்த நிகழ்வுக்குப் பின் அந்த வழியில் செல்ல தயக்கமாகவும் இருந்தது. ஜெய்யை அழைக்கலாமா என்று எண்ணியவளுக்கு இந்த நேரத்தில் அவனை தொல்லை செய்ய வேண்டாமெனக் கருதி, தனக்குத் தானே தைரியம் கூறிக் கொண்டு புறப்பட்டாள்.

அன்று போலவே இன்றும் மிக மிக அமைதியாக ஆங்காங்கே சில விலக்குகளின் மங்கலான ஒளியுடன் அந்தப் பேய் வீதி.

சுற்றிலும் இருந்த ராட்சத மரங்களின் தோற்றம் அதே பயத்தை வருவிக்க, யாரும் இல்லாத சாலையில் தூரத்தில் ஒரு உருவம் நடப்பது போலவே தெரிய, கார் ஏசியிலும் முத்து முத்தாய் வியர்த்து வழிந்தது.

பக்கத்து வீட்டு கோமளா பாட்டி வேறு ஒரு நாள் இவளிடம், “நீ ரெண்டாம் நம்பர் காரி உன் கண்ணுக்கு பேய், பிசாசு, பூதம் எல்லாம் தெளிவா தெரியும்..” என்று கூறியது நேரங் கெட்ட நேரத்தில் நினைவில் வந்து அவள் பயத்தை மேலும் எகிறச் செய்தது.

அப்போதே ஜெய்யை அழைத்திருக்க வேண்டுமோ?

இது கார் தானே பேயால் காருக்குள் வர முடியாது என்ற தைரியத்தில் காரை ஓட்டியவளுக்கு , சமீபத்தில் பார்த்த ஓர் பேய் படத்தில் வெளியே துரத்தி வரும் பேய் லாக் செய்யபபட்டு வேகமாக சென்று கொண்டிருந்த காரினுள் கண்ணிமைக்கும் நொடியில் நாயகனது பக்கத்து சீட்டில் அமர்ந்து விடும்.

அந்தக் காட்சி நினைவில் வர அவளது காரினுள்ளும் அவள் பக்கத்தில் பேயொன்று அமர்ந்திருப்பது போன்ற பிரம்மையை தோற்றுவிக்க, காரில் ஸ்டீரிங்கை அழுந்தப் பற்றியடி, ஒரு நொடி கண்களை இறுக மூடிக் கொண்டு, “முருகா.. முருகா..!” என்று முனு முனுத்தபடி கண்களை திறந்தவளுக்கு, காரின் முன்னே காருக்கு மிக மிக அருகாமையில் ஓர் மனித உருவத்தை கண்டதும் ஒரு கணம் திகைத்து, மறு கணமே காரை நிறுத்துமாறு மூளை உத்தரவு பிறப்பிக்க, பிரேக்கை அழுத்திய மறு நொடி ‘கிரீச்..’ பேரிரைச்சலுடன் வண்டி குலுங்கி நின்ற வேகத்தில் முன்னே நடந்து சென்ற அம்மனிதன் உருண்டு விழுந்தான்.

அங்கு நடந்ததை உணரவே அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட்டது. காரின் ஜன்னலை இறக்கி லேசாக தலையை நீட்டி எட்டிப் பார்க்க, கீழே விழுந்த உருவம் தெளிவாக தெரியவில்லையாயினும் அம்மனிதனின் முனகல் சத்தம் நன்றாகவே கேட்டது.

இறங்கிச் சென்று பார்க்க உள்ளுக்குள் பயம் தலை தூக்கினாலும் அந் நிலையில் அந்த மனிதனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை அவளுக்கு. முழு முழுக்க இது அவளது தவறே.

அந்த முனகல் சத்தம் வேறு நொடிக்கு நொடி அதிகமாக, பயம் எல்லாம் பறந்து போனது. வேகமாக கதவை திறந்து இறங்கி ஓடினாள்.

குப்புற வீழ்ந்த வண்ணம் முனகிக் கொண்டிருந்த அவன் யாரென்று தெரியவில்லை.

“சார்.. சார்..” என மெதுவாக அழைத்துப் பார்த்தாள் சப்தமி.

முனகல் ஒலியே பதிலாய் கிடைக்க, அந்த மனிதன் அருகில் அமர்ந்து தொட்டுத் திருப்ப முனைய, குப்பென்று மது வாடை அவள் நாசியை நிறைக்க, முகச் சுழிப்புடன் எழுந்து நின்ற விலக முற்பட அவள் கால்களில் ஏதோவொன்று தட்டுப்பட்டது.

மெதுவாக திரும்பி, குனிந்து அதை எடுத்துப் பார்க்க, அது ஓர் ஊன்று கோல்.

சட்டென அவளது உள்ளுணர்வு உந்த, கீழே கிடந்த அம்மனிதனின் கைச்சந்தினை பற்றி திருப்ப முனைந்தாள்.

‘மலையை விட மோசமா இருப்பான் போல.. என்ன வெயிட்டு.. ஹ..ப்..பா..’

ஆம் அது அவனே தான். அந்த பெயர் தெரியாத, அன்று இதே வழியில் அவளை காப்பாற்றியவன்.

நெற்றியில் லேசாக இரத்தம் வழிந்து கொண்டிருக்க, அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூடி முனகினான் அவன். கண்களில் நீர் கோர்க்க அவள் இதயம் தாறுமாறாக துடிக்கவாரம்பித்தது.

 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-6

ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. இந்த நிலையில் அவனை விட்டுச் செல்லவும் முடியாது. அழைத்துச் செல்வதும் முடியாது.

அவனை அழைத்துப் போவதானாலும் எங்கே அழைத்துப் போவாள் அவள்? சில தடவைகளே கண்ட ஒருவன் இதுவரை பெயர் கூட தெரியாத ஒருவன்.

குடி போதையில் தான் வண்டியின் மீது வந்து விழுந்திருக்கிறான் இது அவனது தவறும் கூட என்றாலும் அன்று தன் மானம் காத்தவனை இந் நிலையில் அம்போவென்று விட்டுச் செல்ல அவளது மென்மையான மனம் இடம் தரவில்லை.

ஒரு முடிவுக்கு வந்தவளாக அவனருகில் அமர்ந்து, அவனது சட்டை பாக்கெட், பேன்ட் பாக்கெட்டில் கை விட்டுத் தேட கைப்பேசி கூட இருக்கவில்லை.

இந்த காலத்திலும் கைப்பேசிக் கூட இல்லாமல் இருக்கும் அவன் கொலை வெறியே ஏற்பட்டது. பின்னே அவள் எப்படித் தான் அவனுக்கு உதவ முடியும்?

‘ச்சே இவரை இப்படி விட்டுட்டு போகவும் முடியலை. அட்லீஸ்ட் இவன் ஃபோனை எடுத்து அவனை தெரிஞ்ச யாருக்காவது கோல் பண்ணி சொல்லாம்னு பார்த்தா இந்த காலத்திலேயும் ஒரு ஃபோன் கூட இல்லாம சுத்திக்கிட்டு இருக்கான் சரியான காட்டுவாசி..’ எரிச்சலுடன் மனதால் அவனை வறுத்து எடுத்தாள்.

சட்டென ஏதோ நினைவு வந்தவளாக அவனது பேன்ட்டின் பின்பக்க பாக்கெட்டில் தேட ஒரு பர்ஸ் கிடைக்கவே உடனே பர்ஸை திறந்து பார்த்தாள்.

திறந்ததுமே பர்ஸின் முன்பக்கத்தில் பற்கள் மின்ன சிரித்தபடி அழகான ஓர் பெண்மனியும்,அவர் பக்கத்திலேயே கம்பீர முகத்துடன் ஓர் ஆணும் இருக்கும் குட்டிப் புகைப்படம் இருப்பதை கண்டவளுக்கு நிச்சயமாக இது அவனது பெற்றோராகத் தான் இருக்க வேண்டும் என்றே தோன்றியது.

அடையாள அட்டையாவது இருக்கக் கூடும் அதிலாவது அவன் பெயர் முகவரியை தெரிந்து கொள்ளலாம் என்று தேட அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. சில நோட்டுக்களும் சில கிரடிட் கார்டுகளும் மாத்திரமே இருந்தது.

இவனுக்கு எப்படித் தான் உதவுவது? என்று தலையை பிடித்த படி அவன் பக்கத்திலேயே அமர்ந்தவளுக்கு அவனை அடித்து துவைக்கும் வெறியே வந்தது.

“காட்டுவாசி.. எங்கிருந்துடா வந்து இருக்க உன்னை பத்தி எதுவும் தெரியலையே.. இத்தனை கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட் வச்சிருக்கல்ல.. ஒரு ஐடி கார்ட் வச்சிக்க முடியாதா இடியட்?

ஒரு போனிடெயில் போடுற அளவுக்கு தலை முடி, உனக்கு வாய் இருக்கா இல்லையானு தெரியாத அளவுக்கு காடு போல வளர்த்து வச்சிருக்க தாடி.. கன்ஃபார்ம் நீ மஹியங்கை காட்டுல இருந்து தான் வந்து இருப்ப.. காட்டுவாசி..” அவன் முகத்துக்கு நேரே கை நீட்டி, சத்தமாகவே அவனை திட்டித் தீர்த்தாள்.

எவ்வளவு நேரம் தான் அவளால் இப்படியே இருக்க முடியும்? இந்த விடயத்தை ஜெய்யிடம் கூறி ஏதாவது உதவி கேட்கலாமா? இவனை தான் ஜெய்க்கு பிடிக்காதே. அதனால் அந்த எண்ணத்தையும் கை விட்டாள் அவள்.

பர்ஸிலிருந்து கீழே கொட்டித் தேடிய கிரடிட் கார்ட் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க, அதில் ஓர் குட்டிக் கார்ட் இருக்க அதை எடுத்துப் பார்த்தாள்.

அதில் மை ப்ளேஸ் என்று மேலே எழுதப்பட்டிருக்க, கீழே ஓர் காட்டேஜின் முகவரியும் இருந்தது.

“ஐ காட்டுவாசி இந்த காட்டேஜ்ல தான் தங்கி இருக்கானா அப்போ இவன் டூரிஸ்ட்டா தான் இருக்கனும்.. மை ப்ளேஸ்னு எழுதி வச்சிருக்கானே ஒரு வேளை சஞ்செய் ராமசாமி மாதிரி பதினைந்து நிமிடத்துக்கு ஒரு தடவை மறக்குற கேஸா இருக்குமோ என்னவோ..?”

அந்த இடத்திலிருந்து இரண்டறை கிலோ மீற்றர் தூரத்தில் தான் அந்த காட்டேஜ் அமைந்திருக்கிறது. எனவே அவனை அந்த இடத்தில் விட்டு விட்டு சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம் என்றெண்ணி அவனை அழைத்துச் செல்ல முடிவு செய்தாள்.

அவன் பின்புறமாக சென்று இருபக்க கைகளுக்கடியில் கையை விட்டு தூக்க முயல அவனோ போதை மயக்கத்தில் முனகிக் கொண்டிருந்தானே தவிர கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.

மீண்டும் தூக்க முயல ம்ஹூம் முடியவில்லை.

“காட்டுவாசி என்னத்த திண்ணு இப்படி உடம்பை வளர்த்து வச்சிருக்கான்னு தெரியலையே இப்படி வெயிட்டா இருக்கானே.. அசைக்க கூட முடியலையே..” என்று புலம்பிக் கொண்டே, அவனை தூக்க முடியாததால் பின்பக்கமாக இழுத்துச் செல்ல முயன்றாள்.

அப்போது கொஞ்சம் அதைந்தான். அப்படியே மூச்சை எழுத்துப் படித்துக் கொண்டு வெகு பிரயத்தனம் செய்து ஒருழியாக அவனை காரின் அருகே இழுத்து வந்து கதவை திறந்து உள்ளே ஏற்ற அவள் பட்ட பாடு. எப்படியோ அவனை உள்ளே ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள்.

‘குவீன்ஸ் வூட் காட்டேஜ்’ (Queen's wood cottage) என்ற பெயர் தாங்கியிருந்த காட்டேஜின் முன்னே அவளது கார் நின்றது.

அந்த காட்டேஜின் முகப்புத் தோற்றம் அவளை கவராமல் இருந்திருக்காது. அதிலும் அந்த இரவு நேரத்தில் அதன் தோற்றம் பார்த்து சற்று மலைத்தே போனாள்.

பகல் நேரங்களில் பல தடவை இந்த காட்டேஜை வெளியிலிருந்து பார்த்திருக்கிறாள் தான் இதுவரை உள்ளே சென்றதில்லை.

முற்றிலும் மரப்பலகையினால் ஆன அழகான வீடு அது. பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே இதில் தங்கிச் செல்வர்.

உள்ளே சென்று பார்க்க ஆர்வம் தலைதூக்கினாலும் யாரென்றே தெரியாத ஒருவனுடன் எதை பற்றியும் சிந்திக்காது இப்படி வந்ததிருக்கக் கூடாது என்றே தோன்றியது.

கார் அந்த கேட்டின் நுழைவாயில் அருகே வர எங்கிருந்தோ ஒருவன் ஓடி வந்து கண்ணாடியை கீழிறக்குமாறு சைகை காட்ட, கார் கண்ணாடியை கீழிறக்கினாள். அவன் தான் வாட்ச்மேனாக இருக்க வேண்டும்.

“யார் நீங்க..?” என்று சிங்களத்தில் கேட்க, பின்னால் இருந்தவனை கை காட்டி இவர் இங்கே தங்கியிருப்பவரா என்று கேட்டாள்.

சற்று எட்டி உள்ளே பார்த்து, அவன் இருந்த தோற்றத்தை கண்டு பதறியவனாக,

“சார்.. சார் உங்களுக்கு என்னாச்சு?” என்று தடுமாற, அவனை பதற்றமடைய வேண்டாம் என்று கூறியவள்,
தான் வரும் போது வழியில் குடித்து விட்டு நெற்றியில் விழுந்து கிடந்ததாகவும் அதனால் தான் அவரது பர்ஸில் கிடந்த இந்த காட்டேஜின் அட்ரஸை பார்த்து விட்டு அவனை இங்கே அழைத்து வந்ததாகவும் கூறினாள். மறந்தும் கூட அவள் இடித்ததை கூறி விடவில்லை.

“ஐயோ அப்படியா ரொம்ப நன்றிமா..” என்றவர் அவளை பற்றி விசாரித்தார்.

தன்னை பற்றி சொல்லாமா வேண்டாமா என்று முதலில் பயந்தவள் பின், அவளது பெயரையும், இது தான் தனது சொந்த ஊரென்றும் கூற , “ஓ நோநா நம்ம ஊரா?”என்று தமிழில் கேட்க இவளும் லேசான புன்னகையுடன் தலையாட்ட, அவனை உள்ளே அழைத்துச் செல்லுமாறு கூற அவரும் அவனை கீழே இறக்கி அழைத்துச் செல்ல முயல ஏற்கனவே குடி மயக்கத்தில் இருந்தவனை அவரால் தனியாக அழைத்துச் செல்ல முடியவில்லை.

அவர் படும் பாட்டை கண்டு, “இந்த காட்டுவாசியை தனியா அவ்வளவு தூரம் இவரால் தனியாக கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரியான இம்சை சை.. இவன் குடிச்சது மட்டுமில்லாமல் மத்தவங்களையும் எவ்வளவு கஷ்டப்படுத்துறான்..” என்று வாய் விட்டு புலம்பியது அந்த அவனுக்கே கேட்டிருக்கும்.

அவர் தனியாக அழைத்துச் செல்ல முடியாமல் தடுமாறுவதை பார்த்து அவருக்கு உதவும் நோக்குடன் தானும் அவன் தோளோடு தாங்கி பிடித்தவாறு நடந்தாள்.

அந்த காட்டேஜினுள் நுழைந்தவளது விழிகள் விரிய ஒவ்வொரு இடமாக அலசியது. அவனது அறைக்குள் அந்த அறையின் நேர்த்தி கண்டு அவளே பிரமித்து போனாள்.

‘தங்கியிருக்க ரூமா இருந்தாலும் கூட ரூமை இவ்வளவு நீட்டா வச்சிருக்கானே..? ஆனால் என்ன இவன் தான் இன்னும் அப்படியே காட்டுவாசி லுக்ல இருக்கான்..’

இருவருமாக சேர்ந்து அவனை படுக்கையில் கிடத்தி விட்டு அவனுக்கு முதலுதவி செய்வதாக முதலுதவி பெட்டியொன்றை எடுத்து வந்து நெற்றியில் கசிந்திருந்த இரத்தத்தை துடைக்க “ஆ..” என்று முனகினான் அவன்.

அவளுக்கு ஏனோ அவர் அவனுக்கு வலிக்கும்படியாக மருந்திடுவது போல் தோன்ற அவர் கையிலிருந்த பஞ்சை எடுத்தவள் தான் மருந்திடுவதாக கூறி மிக மெதுவாக மருந்திட்டாள்.

அவனுக்கு மருந்திட்டு முடிந்ததும் கிளம்ப எண்ணி எழுந்தவள் அவரிடம்,
“ஏன் அண்ணா இவர் கூட யாரும் இல்லையா? இங்க அவர் சுத்திப் பார்த்து என்ஜோய் பண்ண வந்து இருக்கலாம்.. ஆனா இப்படி கண் மூக்கு தெரியாம குடிச்சிட்டு ரோட்ல விழுறது எவ்வளவு ஆபத்து தெரியுமா?” என்று தான் நினைத்ததை அவரிடம் கேட்டு விட்டாள்.

ஒரு நீண்ட பெரு மூச்செறிந்தவர்,
“இப்போ ஒரு ஆறு மாசமா இங்க தான் தனியா இருக்காரு..” என்று அவர் கூற
‘வாட் ஆறு மாசமா தனியா அதுவும் இந்த காட்டேஜ்ல தங்கி இருக்கானா?’ என்று திகைத்தாலும் அதை வெளிக்காட்டாது அவர் சொல்லதை கேட்டுக் கொண்டு நின்றாள்.

“எனக்கு என்னமோ இவர் சுத்திப் பார்க்க வந்த மாதிரி தெரியலை நோநா.. தினமும் ராத்திரி இப்படி குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பாரு ரொம்ப நேரமாச்சுனா நானே தேடி போய் கூட்டிட்டு வருவேன்.. இல்லைனா இப்படி தான்மா யாராவது உங்களை மாதிரி நல்லவங்க கொண்டு வந்து விடுவாங்க..

அவர் ஒரு கால் வேற ஏதோ ஆகியோருக்கு . அந்த முகத்தில் இருக்க பெரிய தழும்பை பார்த்தீங்களா ? ஜயாவுக்கு அவ்வளவு பெரிய வயசுலாம் இருக்காதுங்க இளம் வயசு தான்.. காலையில வெளியே போனாருன்னா அவர் இந்த கோலத்துல தான் திரும்பி வருவாரு.. ஏன் தினமும் இப்படி குடிச்சி உடம்பை கெடுத்துக்குறாருன்னு தெரியலை..” என்று முழுவதுமாக கூறி முடித்தவர், அவளுக்கு நன்றியும் தெரிவித்தவர் அவருக்கு ஏதோ வேலை வந்து விட அங்கிருந்து நகர்ந்தார்.

அவனை பற்றி தெரிந்து கொண்டதும் இயல்பிலேயே மென்மை உள்ளம் கொண்ட அந்தப் பெண் நிஜமாகவே அவனுக்காக வருந்தினாள்.

அன்று அவன் தன்னை காப்பாற்றிய போதும் சரி அவள் அவனை அணைத்துக் கொண்ட போதிலும் சரி அந்த அணைப்பில் பாதுகாப்பை உணர்ந்தாலே தவிர அவனை ஏனோ கெட்டவனாக எண்ண முடியவில்லை.

இது வரை அவனை பற்றி முழுதாக எதுவும் தெரியாது. ஏன் அவன் பெயர் கூட தெரியாது தான். இப்படிக் குடித்து சீரழியும் அளவுக்கு அவன் வாழ்வில் என்ன நேர்ந்திருக்கும் என்பது அவளுக்கு தெரியாது. ஆனால் அவனது நிலை எண்ணி அவளால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

உறங்கும் அவனையே உற்றுப் பார்த்தாள். கழுத்தை தாண்டி வளர்ந்திருந்த அடர்ந்த கேசம், அவன் முகத்துக்கும் சற்றும் பொருந்தாத விதத்தில் குட்டி புதர் போன்ற தாடி, அவனது முகத்தின் இடது கன்னத்தில் பெரிய நீண்ட தழும்பு , அதை கண்டதும் அவள் கைகள் தானாகவே அந்த தழும்பை தடவியது.

அந்த தழும்பும் அளவுக்கதிகமான தாடியும் இல்லாவிட்டால் இந்த காட்டுவாசி நிச்சயம் அழகனாகத் தான் இருப்பான். ஏன் இப்போதும் கூட அழகாகத் தானே இருக்கிறான் என்று அவள் மனம் அவளிடமே வாதிட ‘ச்சே என்ன இது’ என தன் மனம் செல்லும் போக்கை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவள் எழுந்து கொள்ள முயல அவளது ஒரு கை மாத்திரம் அவளுடன் வரவில்லை.

மாறாக அவனது கைகளில் இவளது கை சிறைபட்டிருக்க அவளுக்கு பகீரென்றது. அவன் தூக்கம் கலையா வண்ணம் கைகளை விட்டும் தன் கையை உருவிக் கொள்ள முயல அவள் கையோ அவன் கைகளோ விடாமல் இறுக்கிப் பிடித்திருக்க, தன் கையை விடுவித்துக் கொள்ள செய்த முயற்சிகள் தோல்வியே.

“என்ன இவன் கையை விடாம இப்படி பிடிச்சிருக்கான்.. பாவம் பார்த்தா இப்படி பண்றானே..” என்று எரிச்சல் மீதூற , அவன் தூக்கம் கலைந்தாலும் பரவாயில்லை என்று கையை இழுத்துக் கொள்ள முயன்றபோது தான், அவளுக்கு அதனை கேட்க நேர்ந்தது.

அவன் அவளது கையை விடாமல் அழுத்தமாக பற்றிக் கொண்டு, உறக்கத்தின் பிடியிலேயே உளறத் துவங்கினான்.

“மா..ம்.. ஏ..ன்மா எனக்கு இப்படி எல்லாம் நடந்தது? அ..அவ ஏன் என்னை வி..வி..ட்டுட்டு போனா? நான் என்ன த..த..ப்பு செஞ்சேன்? எ..ன் உ..உயிரே அவ தான்னு இருந்தேன்.. இப்போ அவளே போ..போனதுக்..கப்புறம் இ..ந்த உயிர் எதுக்குமா? என்னால நிம்..மதியாக சா..க கூ..கூட முடி..யலையே எ..எத்தனை தடவை முயற்சி ப..பண்ணாலும் சாக மாட்டேங்குறேனேமா.. இந்த உலகத்தில வா..ழவே… பிடி..க்..கலைமா.. நீங்க எ..எனக்காக க..கவலை படாதீங்க.... ஐ.. லவ் யூமா…” என்று உளறலாக வெளிவந்த அவனது வலி நிறைந்த வார்த்தைகளை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு.

காயம்பட்ட அவன் வார்த்தைகளை கேட்டதன் பின் அவள் கைகளை விடுவித்துக் கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை. அள்ளி அணைத்து ஆறுதல் கூறி விட துடித்த அவள் அவனது கைகளை லேசாக தட்டிக்கொடுத்தாள்.

அந்நேரம் பார்த்து அவள் செல்போன் சிணுங்க, உணர்வு பெற்றவள் நேரம் பத்து மணியை தாண்டிய பின்னரும் வீட்டிற்கு அழைப்பெடுத்து கூறாமல் போன தன் முட்டாள் தனத்தை நொந்தபடி, அழைப்பை ஏற்றாள்.

“……”

“சாரிடா ஜெய்.. பார்ட்டி முடிய ரொம்ப லேட்டாச்சு..நான் இன்னைக்கு சிந்து வீட்டிலேயே தங்கிக்குறேன்டா.. நாளைக்கு காலையிலேயே வந்துடுவேன். நீ டென்ஷன் ஆகாதேடா..” என்று அவனை பெரும் பாடு பட்டு சமாதானம் செய்து விட்டு, அவளது வீட்டிற்கும் அழைப்பெடுத்து இதே பொய்யை சொல்லி விட்டாள்.

இதுவரை எதையும் மறைத்துப் பழகியிராத தன் உயிர் நண்பன் ஜெய்யிடமே பொய்யுரைக்க நேர்ந்ததை எண்ணி வருந்தினாலும் இந் நிலையில் இவனை விட்டுப் போக மனம் வரவில்லை.

ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் ஆபத்து நேரலாம். இப்படி ஓர் ஆணை நம்பி தனித்திருப்பது தவறு தான் என்றாலும் இவனால் தனக்கு எந்த ஆபத்தும் நேராது என்பதை ஆணித்தரமாக நம்பினாள் சப்தமி.

திடீரென்று மீண்டும் , “ஏ..ன்டீ… எ.. என்னை விட்டு போன? என் ம..னைசை உயி..ரோடு கொல்றதுக்கு பதிலா எ.. என்னை உன் கையால் சா..கடிச்சிட்டு போ..யிருக்கலாமே.. இப்..படி நடை பி..ணமாக வா..ழ விட்டு..ட்..டியே..” வலி நிறைந்த அவன் வார்த்தைகள் வெளிவர அவனது மன வேதனை அவளையுமே உயிர் வரை தாக்க வலித்தது அவளுக்கு.

காதல் இன்றி ஈரம் இன்றி
போனாய் அன்பே..!
உன் மனதோடு நான் நுழைப்பேனா?
செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே..!
துகளாய் துகளாய் நினைவோ சிதற..
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே..!’

 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
மெல்லிசை-7

பொழுது புலர்ந்ததும் எழுந்தவன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு முதல் வேலையாக சப்தமி வந்து விட்டாளா என்று பார்ப்பதற்காக அவளது வீட்டுக்கு ஓடினான் ஜெய்.

அவளது வீட்டுக்கு வெளியே ஷெட்டில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டு, ‘ஹப்பாடா வீட்டுக்கு வந்துட்டா..’ பெரிய பெரு மூச்சுடன் உள்ளே நுழைய, ஹாலில் காபி அருந்தியபடி விஸ்வநாதனும், அமுதனும் அமர்ந்திருக்க, இவனை கண்டதும் அமுதன் லேசான தலையசைப்புடன் புன்னகைக்க, விஸ்வநாதன் அவனை உள்ளே வரவேற்றார்.

“வாடா ஜெய்.. நேற்று தூங்க முன்னாடி அவளை பார்க்க முடியைலைனு. உன் ஃபிரெண்ட்டை பார்க்க காலையிலேயே வந்துட்டியா?..” என்று சிரிப்புடனே வினவ, மேலும் கீழுமாக ஆம் என்பது போல் தலையாட்டியவனது பார்வை மாடிப்பபடிகளையே அலசியது.

“அப்பா.. எங்கே சமி..? எப்போ வந்தா?” என்று கேட்க,

“ஐந்தரை மணிக்கெல்லாம் வந்துட்டாப்பா.. இப்போ கார்டனுக்கு போயிருக்கா.. என்று கூறிக் கொண்டே ஹாலிற்கு வந்த ரேணுகா “இந்தா காபியை குடிச்சிட்டு அவளை போய் பாரு..” என அவனிடம் நீட்ட பேசாமல் வாங்கி குடித்து விட்டு தோட்டத்துக்குச் சென்றான்.

வீட்டுக்கு வந்தும் கூட தன்னிடம் தெரிவிக்காத தன் தோழியின் செயல் சிறிது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஒருங்கே ஓர் உரிமை கோபத்தையும் ஏற்படுத்தியது.

தோட்டத்தின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த அந்த பெரிய ஊஞ்சலில் ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்திருந்தாள் சப்தமி.

நீண்ட ஃப்ளோரல் பாவடை மற்றும் டாப்ஸ் அணிந்து வழமை போல் ஓர் துப்பட்டாவை கழுத்தோடு சுற்றியிருக்க, அவளது கூந்தல் காற்றில் அசைந்தாட கொண்டிருந்தது. அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பாள் போலும்.

அவள் பின்னே வந்து சிறிது நேரம் நின்றவன் , அவன் வந்திருப்பதை அறியாதவளாய் வழமைக்கு மாறான அவளது அமைதியான தோற்றம் அவனை யோசிக்க வைத்தது.

“நேற்று என்ன நடந்தது?” என்று கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் அமர, அவன் கேட்ட கேள்வியில் தூக்கிவாராப் போட அவனை திரும்பிப் பார்த்தாள் சப்தமி.

நேற்று அந்த அவனுடன் தங்கியிருந்தது தெரிந்திருக்குமோ? நடந்தவற்றை விளக்கினால் தன் மேல் கோபம் கொள்வானா?
இதுவரை அவனிடம் எதையும் மறைத்துப் பழகியிராதவள் யாரென்றே தெரியாத ஒருவனுக்காக தான் பொய் கூறியது அவள் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அதனால் தான் வீடு வந்தும் கூட அவனிடம் தெரிவிக்கவில்லை.

நேற்று நடந்தவற்றை எப்படியோ தெரிந்து கொண்டான் போலும் என்ற பயத்தில் அந்தக் காலை நேர குளிரிலும் வியர்த்து விறுவிறுத்தது. அவன் பார்வையை சந்திக்க திராணியற்றவளாய் தலை கவிழந்தபடி,

“அது வந்து.. ஜெய்.. நேற்று..பார்ட்டி” என்று தட்டுத்தடுமாறி கூறத் துவங்க,

“நேற்று பார்ட்டியில் உன் சாப்பாட்டையெல்லாம் அந்த குண்டு மது சாப்பிட்டால்ல..அதனால் தானே இப்படி சோகமாக இருக்க?” என்று இடையில் புகுந்து கண் சிமிட்டி குறும்பாக நகைக்க ,தலையுயர்த்தி பார்த்தவளுக்கும் அவனது சிரிப்புத் தொற்றிக் கொள்ள, தான் கூற வந்ததையும் மறந்து அவனுடன் வழமை போல் கலகலப்பாக பேசவாரம்பித்தாள்.

அந்த சம்பவத்தை அப்போதே அவனிடம் கூறியிருக்க வேண்டுமோ..?

#

காலையில் வெகு நேரம் கழித்து கண் விழித்தவனுக்கு, தலை பாரமாக இருக்கவே தலையை தாங்கிப் பிடித்தவாறு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

முன்தின இரவு கொடிய பல நினைவுகள் அவனை வெகுவாக தாக்கவே மதுவை நாடினான். அதுவும் அளவுக்கதிகமாக.

குடித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த போது ஏதோவொன்றில் அவன் மோதியது வீழ்ந்தது, அதன் பின் யாரோ ஒருவன்.. இல்லையில்லை அது ஒரு பெண் அவனை தாங்கிப் பிடித்து அழைத்து வந்தது. அதன் பின் தன்னருகிலேயே வெகு நேரம் இருந்தது என்று அனைத்தும் சிறிது சிறிதாக நினைவில் சுற்றிலும் பார்த்தான்.

அவனை தவிர அறையில் யாரும் இருக்கவில்லை. நேற்று அப்படி என்ன தான் நடந்தது? யார் அவனை தன் அறை வரை அழைத்து வந்தது? தன் முகத்தை பார்த்தாலே மிரண்டு ஓடும் பெண்கள் மத்தியில் யார் அவன் கைகளை ஆதரவாக அணைத்து தடவியது?

அது ஒரு பெண் என்பது மாத்திரம் நினைவில் இருந்தது. அந்தப் பெண்ணின் முகம் மாத்திரம் நினைவில் வரவில்லை. மருந்திடப்பட்டிருந்த நெற்றியை லேசாக தடவிப் பார்த்துக் கொண்டான்.

குளியலை முடித்துக் கொண்டு உடை மாற்றி தன் ஊன்றுகோலுடன் அறையை விட்டும் வெளியேறினான். நேரே சமையலறை சென்று தனக்கான க்ரீன் டீயை தயாரித்து எடுத்து அந்த காட்டேஜின் முன்பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து கொள்ள சுந்தரம் வந்தான்.

“சார்.. இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு? உடம்புக்கு ஒன்னுமில்லையே..?”என்று அக்கறையாக அதே சமயம் பவ்வியமாக வினவினான்.

க்ரீன் டீ கப்பை கீழே வைத்து விட்டு, “ம்.. இப்போ எனக்கு ஒன்னுமில்லை சுந்தரம்..ஐ அம் ஆல்ரைட்..” என்று சாதாரணமாக கூற அவனும் தலையசைப்புடன் கிளம்ப எத்தனித்தவனை மீண்டும் அழைக்க அவனும் அருகில் வந்தான்.

“சுந்தரம்.. நேற்று இரவு யாரு என்னை கூட்டிட்டு வந்தது?” என்று கேட்டான் அவன்.

“சார் அது ஒரு பொம்பளை பிள்ளை..அந்த நோநா பேரு கூட ச.. மி..,” தலையை சொறிந்த வண்ணம் அவள் பெயரை யோசித்தான்.

“சார் .. ச..த்தம் அப்படி ஏதோ ஒரு பேரு தான் என் வாயிலேயே நுழையலை. ச..மி.. ச..த்..தம் அப்படி தான் ஒரு பேரு..” என்று மீண்டும் உளற அவன் புரிந்து கொண்டான். அவளது பெயரை இவனுக்கு சொல்லத் தெரியவில்லை என்று.

“சப்தமி..” என்றான் இவன்.

“ஆங்..ஆமா.. சார் அதே பேரு தான். ரொம்ப நல்ல பொண்ணு சார். உங்களை வீட்ல கொண்டு வந்து விட்டதுமில்லாமல் மருந்து கூட அவங்க தான் போட்டு விட்டாங்க.. ராத்திரி பூரா உங்க பக்கத்திலேயே தான் சார் இருந்துச்சு.. நான் கூட சொன்னேன் உங்க வீட்ல உங்களை தேட போறாங்க கிளம்புங்க நோநான்னு.. ஆனா நீங்க அவங்க விடாம ஏதேதோ பேசிக்கிட்டே இருந்தீங்க..

விடிய காலை அஞ்சு மணிக்கெல்லாம் உங்களை நல்லா பாத்துக்க சொல்லிச்சு அப்படியே கிளம்பி போயிடுச்சு .. இந்த காலத்தில் யாரு சார் இப்படியெல்லாம் உதவி பண்ணுவாங்க…” என்று அவளை பற்றி கதை கூறிக் கொண்டிருந்தவன் நிறுத்தி அவனை பார்த்து,

“சார்..” என்றழைத்தான்

இவ்வளவு நேரம் அவன் கூறிக் கொண்டிருந்தவற்றை கேட்டபடி யோசனையில் உழன்று கொண்டிருந்தவன், அவன் திடீரென அழைத்ததும் உணர்வு பெற்று அவனை பார்த்து,

“என்ன சுந்தரம்?” எனக் கேட்டான்.

“அந்த நோநா சொன்னிச்சு, இப்படி தினமும் குடிச்சு உங்க உடம்பை கெடுத்துக்க வேணாம்னு சொல்ல சொன்னிச்சுங்க..” என்று அமைதியான குரலில் கூற,

“ம்..” என்ற ஒற்றை வார்த்தையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

##

அவனை பற்றி சிந்தனையிலேயே மூழ்கிப் போயிருந்தாள் அவள். முன்தின இரவின் பின் அவன் மீது பச்சாதாபம் தோன்றி அவளை இளக வைத்தது. அவன் மதுவின் மயக்கத்தில் கூறிய யாவும் உளறலாக இருந்தாலும் கூட அந்த வார்த்தைகள் அவனது மன வலியை உணர்த்தியது அவளுக்கு.

அவனை பற்றி எதுவும் தெரியாது தான். ஏன் இதுவரைக்கும் அவனது பெயர் கூட தெரியாதே. அவன் மனதிலிருந்த வலியே அவனது இந்த நிலைக்கு காரணம் என்பதை தெளிவாக உணர்ந்தாள்.

அவன் பேரழகனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்தப் பெண் மேல் அவன் வைத்திருந்த எல்லையற்ற காதல் உண்மை தானே? எத்தனை அன்பு வைத்திருந்தால் பிரிந்த பின்னரும் கூட அவளை எண்ணியெண்ணி வருந்துகிறான்? காதல் பிரிவின் வலி அவ்வளவு கொடூரமானதாகவா இருக்கும்? பேரரிஞனை கூட பித்தனாக்கி விடுமோ? அதில் அப்படி என்ன தான் இருக்கிறது?

ஒரு வேளை அந்த பெண் தான் இவனை வேண்டாமென்று பிரிந்து சென்றிருப்பாளோ? இல்லை இவன் வேண்டாமென்றானா ? இல்லையில்லை அவள் விட்டுப் போனதாக தானே ஏதோ உளறினான். அப்படி என்ன தான் நடந்திருக்கக் கூடும்?

இவளாகவே கேள்வியையும் கேட்டு விடையை கண்டு பிடித்து, குழம்பி மீண்டும் அதே கேள்விகளை கேட்டுக் கேட்டு அவளது மூளையையே குடைந்து கொண்டிருந்தாள் சப்தமி.

தனக்கு எந்த வகையிலும் தேவையே இல்லாத, சம்பந்தமே இல்லாத விஷயத்தை எதற்காக இப்படி யோசிக்க வேண்டும்? அது அவளுக்கே தெரியவில்லை. அவனுக்காக இரக்கப்பட்ட அந்தப் பெண் மனம் அவனது கடந்த கால வாழ்க்கையை அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டியது.

அவனுக்கு இப்போது போதை தெளிந்து நேற்று இரவு நடந்த அனைத்தும் ஞாபகத்தில் இருக்குமா? இல்லை மறந்து இருப்பானா?

“ச்சு.. என்ன இது கேள்விக்கு பிறந்தவ மாதிரி இவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.. அதுவும் என்கிட்டயே..என்னாச்சு எனக்கு அந்த காட்டுவாசியை நினைச்சு இப்படி ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்? அவனுக்கு உதவி செஞ்சோம் அவ்வளவு தான். அதை விட்டுட்டு அவன் சொந்த கதை சோக கதையெல்லாம் உளறினான்னா நாம ஏன் சீரியஸா எடுத்துக்கனும்? நம்ம வேலையை மட்டும் பார்ப்போம்..” என தனக்குத் தானே முனுமுனுத்தபடி அவன் பற்றிய நினைவுகளை புறந்தள்ளி விட்டு கடையில் செடிகளை அடுக்கத் துவங்கினாள்.

நீண்ட நேரமாக அவள் முதுகை யாரோ துளைப்பது போல் உணர்வு தோன்ற சட்டென திரும்பிப் பார்த்தாள். ஆம் அது அவனே தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்வெட்டர் பாக்கெட்டினுள் ஒரு கையை விட்டிருக்க, மறு கையால் ஊன்றுகோலை பிடித்தவாறு அதே மரத்தில் சாய்ந்து நின்று அவளையே பார்த்த வண்ணமிருக்க, இவளுக்கோ அடி வயிற்றில் ரயில் ஓட ஆரம்பித்தது.

“ஏன் என்னையே இப்படிப் பார்த்துட்டு இருக்கான்? ஓ.. நாம தான நேத்து ராத்திரி அவனை இடிச்சிட்டோம்னு தெரிஞ்சிருக்குமோ?” அதை எண்ணிப் பார்க்கையில் உள்ளுக்குள் பயம் தோன்றவாரம்பித்தது.

மீண்டும் அவனை பார்த்தாள். தற்போது அவன் அவளை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்வையை செலுத்தியிருக்க அவனை மெதுவாக ஆராய ஆரம்பித்தாள்.

அவன் இடப் பக்கம் திரும்பியிருக்க, தாடிக்குள் ஒளிந்திருந்த தழும்புகளற்ற அவனது வலது கன்னம் லேசாக தெரிந்தது. ஊன்றுகோலற்ற வலப் பக்கத் தோற்றம் திடகாத்திரமான ஆண் மகனாகவே காட்டியது.

அவனது வெளித் தோற்றத்தில் பெரிதாக எந்தக் குறையும் இருப்பதாக தெரியவில்லை.அந்தப் பெரிய தழும்பும், இந்த ஊன்றுகோலும் இல்லாமல், தலை முடியை அழகாக வெட்டி, தாடியை அளவாக ட்ரிம் செய்தால் போதும் அவனது சிவந்த நிறம் வேறு அவனுக்கு பாலிவுட் ஹீரோவாகவே காட்டும்.

‘ஐயோ சமி காட்டுவாசியை இப்படி பார்த்துட்டு இருக்கீயே… சும்மாவே ஒரு மாதிரி முறைச்சு பார்ப்பான். நமக்கெதுக்கு வம்பு..’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு தனது வேலையில் ஈடுபட முனைய, அவன் நகர்வது தெரிய தலையை உயர்த்திப் பார்த்தாள்.

‘ஹப்பாடா போறான்.. ‘ நெஞ்சின் மத்தியில் கைவைத்து பெரு மூச்செறிந்த வண்ணம் திரும்ப, சாலையை கடந்து அவளது கடையை நோக்கி வருவது போல் தெரிய, முகத்தில் விழுந்த முடிக் கற்றைகளை கைகளால் விலக்குவது போல் கடை கண்ணால் அவனை நோட்டம் விட்டாள்.

அவன் அவளது கடையை நோக்கித் தான் வருவது உறுதியாக தெரிய, இதயம் வேக வேகமாக துடித்தது.

அவள் இருக்கும் இடத்தை நெருங்குகிறான். இதோ நெருங்கி விட்டான். அவன் அருகே வந்து அவள் முன்னே நிற்கிறான். பயத்தை வெளிக்காட்டாது மும்முரமாக வேலையில் ஈடுபடுவது போல் காட்டிக் கொள்ள, அவள் முன்னே வந்து,
“ஹலோ..” என்றான்.

‘ஹப்பா… என்ன ஒரு குரல்’ செடியை குடைவதை நிறுத்தி விட்டு அவனை ஏறிட்டாள்.

“சொல்லுங்க.. உங்களுக்கு என்ன செடி வேணும்..?” இலகுவாக கேட்டாள் அவள்.

அவள் விழிகளை ஒரு நிமிடம் ஆராய்ந்தவன், “சாரி அன்ட் தேங்க்ஸ்.” என்றான் அமைதியாக.

வந்ததும் இந்த திடீர் மன்னிப்பு கோரல் திடீர் நன்றி நவிழலை எதிர்ப்பார்க்காதவள், விழி விரித்து அவனை நோக்கி,

“எதற்கு இந்த சாரி அன்ட் தேங்க்ஸ் “ புரியாமல் அவனிடம் வினவினாள்.

“அன்னைக்கு உன்னை அடிச்சதுக்காக மன்னிப்பு கேட்டேன்.. அப்புறம் அதையெல்லாம் மனசுல வைச்சிக்காம நேற்று எனக்கு உதவி செய்ததற்காக நன்றி..” என்றான்.

‘அதைக் கொஞ்சம் சிரிச்சிட்டு சொன்னா தான் என்னவாம்.. அவன் தமிழ் ஏதோ மியூசிக் மாதிரி கேட்க நல்லா இருக்கே..’ மனதில் நினைத்ததை வெளிக் காட்டாமல்,

“பரவாயில்லை.. விடுங்க ” என்றாள் முகம் மலர். இலகுவான அவனது பேச்சு அவளுள் இதம் பரப்பியது.

“ஓகே அப்போ இன்னைக்கு ஈவ்னிங் நீ ஃப்ரீயா?”

“ஏன்?” புரியாமல் வினவ,

“எனக்கு உதவி செய்ததற்காக உனக்கு ஒரு சின்ன ட்ரீட் கொடுக்கலாம்னு தான் கேட்டேன். ஈவ்னிங் ஃப்ரீனா லேக் வர முடியுமா?” அவன் என்னமோ சாதாரணமாக தான் கேட்டான்.

‘என்ன இவன் ஒரு பொண்ணை இவ்வளவு ஈஸியா கூப்பிட்றான். இவனை நம்பி போகனுமா?’ அவள் மனம் கேள்வி கேட்க,
‘ஓர் நாள் இரவு முழுவதும் அவன் அறையில் தனித்து இருந்தாயே அப்போது இல்லாத பயம் இப்போது தேவையில்லையே..’என்றது அவள் ஆழ் மனம்.

“ஹலோ..” என்று முகத்திற்கு நேரே சுடக்கிட, அதில் சுயம் பெற்றவள்,

“எ..என்னால் வர முடியாது.. எனக்கு வேறு வேலையிருக்கு..” என்று வேறேதும் காரணம் கூறி மறுக்கத் தோன்றாமல அப்படிக் கூறி தப்பித்துக் கொள்ள முயன்றாள்.

அவள் முகத்தை கூர்ந்து நோக்கி,
“ஏன் என்னை பார்த்து, என் முகத்தை பார்த்து பயபப்டுறியா?” நிதானமாக கேட்டான்.

“இ..இல்லை அப்படியெல்லாம் இல்லையே..”

“பின்னே என்னை பார்த்தா பேய் ஹாலிவுட் பேய் மாதிரி இருக்கா? வேணும்னா அன்னைக்கு பேயை திட்டிய மாதிரி, ‘பேயே பேயே லூசு பேயே.. குரங்கு பேயே..’ திட்டு ..” அன்று அவள் வீரமாக பேயை திட்டிய வார்த்தைகளெல்லாம் அவள் போலவே செய்து காட்ட அவளை கிண்டல் செய்கிறான் என்பது புரிந்து போனது.

அன்று பேயை திட்டுவதாக நினைத்து திட்டியதையெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்து இருக்கிறான்.

அவன் அப்படி செய்து காட்டியதும் அவன் மேல் இன்ஸ்டன்ட் கோபம் முளைக்க,
“ஏய் காட்டுவாசி… உனக்கு தெரியுமா அங்கே நான் பேயை பார்த்தேன். கெட்ட வார்த்தையில் திட்டினா பேய் பயந்து ஓடிடுமாம்.. உனக்கு தெரியாது.. நீ தான் லூசு மாதிரி பேசுற.. ஹூம்..” என்று வெடுக்கென கூறி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் பேசுவதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், தன் நெற்றியை நீவியபடி “அப்போ நீ தான் என்னை காட்டுவாசினு சொன்னியா? மஹியங்கனை காட்டுவாசினு கூட சொன்னல்ல” அவளை பார்த்தான்.

“அ..அது வந்து உங்க பேர் கூட தெரியலை. அப்புறம் இந்த முடி, தாடி எல்லாமே அப்படி தான் இ..ரு..க்..கு.. சா..ரி..” இழுவையாக கூறி முடிக்க அவனது இதழ்கள் லேசாக மலர்ந்தன.

அவளது கண்கள் அவனது குட்டிச் சிரிப்பை கூட கண்டு கொண்டன.

“இன்னும் கொஞ்சம் சிரிச்சா தான் என்ன?” என்று பட்டென கேட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

இதழ் கடைச்சிரிப்பை சிந்திய வண்ணம் இரண்டடி பின்னோக்கி நடந்தவன் அவளை நோக்கி,

“ஓகே.. அப்போ நாளைக்கு ஈவ்னிங் லேக் வந்துடு ..” என்று கூறி நடக்க,

“நாளைக்கு நான் வரலைன்னா?” என்று கத்திக் கேட்டாள்.

“எனக்கு தெரியும் நீ நாளைக்கு வருவ..” உறுதியாக கூறி சிரித்தான் அவன்.

“உங்களுக்கு என்னோட பெயர் கூட தெரியாதே..?”

“சப்தமி..”அவள் பெயரை அவன் கூறக் கேட்டதும் அவளுக்கு கொஞ்சம் அதிரச்சியும் கூட.

“அப்போ உன் பெயர் என்ன?” அவன் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், தான் இருக்கும் இடத்தை கூட மறந்து பாதையை கடந்து கொண்டிருக்கும் அவனிடம், அவன் காதுகளுக்கு கேட்கும் வண்ணம் சத்தமாக கத்தி கேட்டாள்.

அவன் உதடுகள் மேலும் விரிந்தது.

“சித்தார்த்..” என்று கூறி விட்டு வேகமாக நடந்து சென்றான்.

“சி-த்-தா-ர்-த்” என்ற அவன் பெயரை உச்சரித்து பார்த்தவள் இதழ்களில் புன்னகை அரும்பியது.





'உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன..?
என் நெஞ்சின் தீயே..
உள் எங்கும் நீயே..
கண்மூடும் போது கண் முன் நின்றாயே..!'​
 

நிஷால்

Saha Writer
Messages
10
Reaction score
0
Points
1
Hi friends.

I am extremely sorry for the delay.

Due to some personal needs i couldn't able to continue the story.

Stay tuned.

Ill be back ASAP.

Thankyou!
 

New Threads

Top Bottom