Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மெளனபெருவெளி - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
மெளனபெருவெளி
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
மெளனபெருவெளி

அத்தியாயம் 1

ஓ... என்ற அடர் இருள், அந்த இருளில் எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று கண்களுக்கு புலபடுத்த முடியாநிலை. சூழ் அமைதி மயான பயத்தை மூட்டியது. இருளில் துவாரகா அங்கும் இங்குமாய் பதற்றத்திலும், பயத்திலும் நடக்கிறாள். முகமெல்லாம் வியர்வை துளிகள். வீடு இருளில் இருக்க வாசலில் வெளிச்சம் ஏதோ இரண்டு நிழலாடுகின்றது. மெல்ல துவாரகா சாவி துவாரங்கள் வழியே பார்த்த போது தடி தடியாக இரண்டு பேர் முகம் முழுவதும் ஒருவனுக்கு முடி மற்றொருவனோ இன்னும் பயங்கரமாக இருந்தான். மூச்சை மெல்ல இழுத்து விட்ட துவாரகா தாடையில் பூத்திருந்த வியர்வைகளை கைகளால் ஒத்தி கொண்டாள். படபடவென கதவை அடித்தனர் வெளியில் இருந்த அந்த முரடர்கள். துவாரகாவிற்கு நெஞ்சு படபடத்தது. சத்தம் அதிகமானது ஒருவன் இன்னொருவனிடம் சொன்னான் "ஆள் இல்லை போல"
"எத்தனை மணி ஆனாலும் இருந்து செஞ்சிவுட்டு போயிடனும்டா பணம் வாங்கிட்டோம்"
துவாரகா விழிகள் இருட்டிலும் விரிந்து வெளிர்ந்தது. அய்யோ என்ன ஆகுமோ என்ற பீதி துவாரகாவின் சிந்தனையை முடக்கி விட்டது. சுவரோடு சுவராக சரிந்து கலக்கத்தில் அமர்ந்தாள். அந்த நொடி பொழுது அவளின் கைபேசி கனத்த சத்தத்துடன் கதறியது. பயத்தில் மொபைலை கைநழுவவிட்டாள். வெளியில் நின்ற இருவரும் துவாரகா உள்ளே இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.
" ஏய்... கதவு திறடி" மீண்டும் படப்பட சத்தம். துவாரகா முகமெல்லாம் வியர்வை நா உலர்ந்து தொண்டையை அச்சம் கவ்வ ஆரம்பித்தது.

நிக்கி மினாஜ் லில் பேபி பஸ்சின் ஆடியோ சுவரே தெரிக்கும், புளோரே இடிந்து விழும்படி ஒலித்தது.

ஏய், மை கனக்ட் ஜெஸ்ட்

நவ் செண்ட் மை விரிஸ்ட் பேக்


டெல் திஸ் பிட்ச்ஷஸ்,



"கிவ் மை டிரிப் பேக்"ஸ்டப்பெரி




ப்பேராரி, விப் தட்




லைட் டூ லுக் பேக் வேன்




ஹீ-ஹச்-ஹச்-ஹிட் தட்...





சிந்துவால உறைந்து மூடப்பட்ட விண்டுவை போல, அகதா சாலிட் உட்கட்டில் மேல் கிடந்த துணிப்போர் மெல்ல அசைந்தது, நெளிந்தது.கைகள் இரண்டு மேலெழும்பி அதில் வலதுகை கட்டிலின் மேல் கத்திகொண்டு கிடந்த மொபைலை துலாவி எடுத்து யார் என்றெல்லாம் பார்க்காமலேயே கட் செய்து சத்தத்தை அணைத்தது. மீண்டும் விடாது எழுந்த ரிங்டோன் எரிச்சலை ஏற்படுத்தியது இம்முறை அட்டன் செய்து மொபைலையும் குவிந்து கிடந்த துணிகளுக்குள் புதைய செய்தது கைகள். யார் என்று பெயரை பார்க்காமலே




"ஹலோ... " என்றாள் துவாரகா.





"ஹோய் ஊத்தவாய் இன்னும் எழும்பலயா" ஆணின் குரல் புத்துணர்ச்சியாக ஒலித்தது.





"லேட் நைட் தான் வந்தேன் அதான்" சோம்பலும், தூக்கமும் கலந்து முணுமுணுப்பாக குரல் எழுப்பினாள்.





"சரி ஓ. கே. நீ தூங்கு" கட் செய்ய இருந்த போன் கால்லை இடைமறித்து "ஹிம்.... ஆங்.. பிரித்வி நீ எப்போ வர" வார்த்தைகள் இப்போது தெளிவாகவும் பலமாகவும் எழுந்தது.





"துவாரகா என்னோட ஸூட்டுவேசன் புரிஞ்சிக்கோ. நான் வர ஒன் ஆர் டூ வீக்ஸ் ஆகும்" பிடிக்கொடுக்காமல் பேசினான் பிரித்வி.





"இதே தான் ஒன்மந்தா சொல்லிகிட்டு இருக்க" சலித்து கொண்டாள்.





பீ... பீ... பீங்..... லைன் கட்டானது தெரியாமலே "ஹலோ.. ஹலோ.." காட்டு கத்தலாககத்தி கொண்டு இருந்தாள் "ச்சீ... கட்பண்ணிட்டான்" கோபித்துக்கொண்டவளாய் துணிமூட்டையை விட்டு வெளிவராமலே கிடந்தாள்.

நேரம் ஓட மண்ணை பிளந்து வரும் வித்து போல ஆடைகளுக்குள் இருந்து எழுந்தாள் துவாரகா. கட்டிலை விட்டு கால்கள்தரையில் விழுந்தன. எழுந்து நின்றாள் முழு நிர்வாணமாக ஜன்னல்களும் வெட்கப்பட்டு அடைந்திருக்க அறையை இருள் கவ்வியிருந்தது. நீரில் மூழ்கியே இருந்து வழுவழுத்து போன அள்ளி தண்டினை ஒத்தகால்கள் இரண்டும் கண்ணாடியை தேடி பயணபட்டன.




ஆளுயர கண்ணாடியின் முன் நின்று தன் அழகை முன்னும் பின்னும்பார்ததுக்கொண்டாள்.




தண்டு கால்களும், அளவான தொடையும், யோனியும்,வயிறும், கச்சை இல்லா மார்பும், கழுத்தும், முகமும் எவ்வளவு வெளிப்படையாக, மொழியின் இலக்கணம் போல உடலின் கட்டமைப்பு பிழையில்லா விதிகளின் தொகுப்பாகியிருந்தது. திறந்த அழகை கண்டு அவள் கண்களே சற்று நாணியது. அவ்விடம் விட்டு நேராக குளியல்அறைக்குள் நுழைந்தாள் உறக்கம் களைய சோம்பல் மறைய குளியல் ஆடிமுடித்தாள். குளியலறை விட்டு ஈரம் சொட்டசொட்ட மீண்டும் படுக்கை அறைக்குள் வந்தவள் கீழே கிடந்த டவலை எடுத்து உடலை துவட்டாமல் கீழே கிடந்த படியே அதன் மேல் கால்களை மட்டும் துடைத்து டவலை உதைத்து ஓரமாக தள்ளினாள். தனது அறையில் இருந்த டிரஸிங் டேபுளை நோக்கி நடந்தாள் அதன் மேல் ஏற்கனவே கிடந்த தொளதொள மேல் சட்டையை எடுத்து மேனிக்கு திரையிட்டாள். அவசர கதியில் ஹர் டிரையரை தேடினாள். தலையின் ஈரம் சொட்டி இலேசான ஆடையும் கண்ணாடி போல வதனத்தை திறம்பட காட்டியது. அறையில் தேடி பார்த்து விட்டு ஹாலுக்கு வந்து டீவி சோட்கேசை ஆராய்ந்தாள் ஒரு மூலையில் இடம் பிடித்து இருந்த ஹர் டிரையரை எடுத்து தலைமயிரை உலர்த்தினாள். அந்நேரம் தரையில் ஓடி விளையாண்டு கொண்டிருந்த கரப்பான் ஒன்று அவள் கால்களுக்கு இடையே ஊடுருவி கொண்டிருந்தது, அவ்வளவு தான் பயந்து போனவளாய் கால்களை உதறினால். அந்த அதிர்வினால் கீழே விழுந்து குப்புற கவிழ்ந்த கரப்பான் முண்டியது எழ முடியாமல் ரவுண்ட் அடித்தது.




சிறிது நேரம் அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். சிலநாள் முன் படித்த கட்டுரை ஒன்று மூளைக்கு உந்தியது தலை துண்டிக்கப்பட்ட கரப்பானால் ஒருவாரத்துக்கு மேல் உயிர் வாழ முடியும், கரப்பானக்கு முறையான சர்குலண்டரி சிஸ்டம் கிடையாது, தலையில்லாத கரப்பான் பட்டினியால் மட்டுமே உயிர் விடும்.ஒரு கரப்பானால் 40 நிமிடங்கள் மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் ஒரு மனிதனால் 30 வினாடிகள்தாம் மூச்சை அடக்க முடியும். 8.2 மில்லிசகேண்டுக்களில், உங்கள் அசைவை உணர்ந்து விடும் கரப்பான் ஒரு நொடிக்கு 80 செ.மீ., வேகத்தில் ஓடும், இது சிறுத்தையை விட ஐந்து மடங்கு அதிக வேகம்" பெருமூளைப் புறணியில் ஓடியது துவரகாவிற்கு.

என்ன ஒரு அருவருப்பு மேலேல்லாம் ஊருகிறது இரவெல்லாம் யாரோ என்னை நோட்டம் விடுவதை போலான உணர்வு, பயம் இதனால் தானா. இந்த பயம் தீவிரமான விரும்பத்தகாத உணர்ச்சி . அது ஆக்ரோஷத்தை அதிகரிக்கும் அல்லது அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க எதிர்வினைகளை உருவாக்கும். யோசித்த விநாடியே சதக்... சதக்.... இரண்டு மூன்று முறை அதை மிதித்தாள் தரையோடு தரையாகி வெள்ளை இரத்தம் பஜக் என்று தெரித்து மடிந்தது.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
😵மெளனம் 2🤫💔

அத்தியாயம் 2
பேட்ரூமை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் ஊமையாக தொங்கி கொண்டிருந்த பிரம்பு ஊஞ்சலில் ஏறி அமர்ந்தாள். கால்களை உந்தி குறுக்கும் நெடுக்குமாக ஊஞ்சலை அசைத்து ஆடினால். வீட்டை சுற்றி சுழன்றது அவ்ஊஞ்சல். 3க்கு 5 ஹாலில் லசிடி டிவி வால் யூனிட்டில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டது. சுவர் ஓரம் மல்டிபிலக்ஸ் சோபா சேர் இரண்டு பிண்ணி பிணைந்து கிடந்தது.
8க்கு 10 ஓப்பன் மாடூலர் கிட்சன் கால மாற்றத்தின் பிரதிபலிப்பாக ஹாலை ஒட்டி இடதுபுறம் நின்றது. மீண்டும் ஊஞ்சல் வேகமாக சுழன்றது கிறுகிறுவேன.. பெட்ரூம், ஹாலுக்கு நேர் எதிரே வாசம் செய்தது. ஆடிக்கொண்டு இருந்த ஊஞ்சலில் இருந்து குதித்து இறங்கினாள். ஊஞ்சல் அலைமோதிக் நிற்கமுடியாமல் அவள் காலில் மோதி குத்தியது.
கையால் தடவினால் தலைமயிர் நன்றாக காய்ந்து இருந்தது. மீண்டும் பெட்ரூமுக்குள் சென்று மேல் சட்டையை உருவி விட்டு லாங் மோட்தி கவுனை உடுத்தினாள். மெல்லிய பாதாம் கண்களுக்கு மை பூச்சி, அகன்ற உதடுகளுக்கு சாயம், குறுகிய காதுகளுக்கு சில்வர் பிளேட்டடு ஜிமிக்கிகள் என நவநாகரீக காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னை பொருத்தி கொண்டாள்.
கிட்சனுக்கு சென்று இரண்டு நிமிட நூடுல்ஸை வேக வைத்து அரக்கபறக்க நின்றபடியே கொதிக்ககொதிக்க வாயில் எடுத்து சுவைத்தாள். சாப்பிட்ட பாத்திரங்களை சிங்கிள் போட்டுவிட்டு. ஹாலுக்கு வந்தவள் டைனிங் டேபிள் மீது இருந்த ஹாண்ட் பேக்கில் தனக்கான திங்ஸை எடுத்து கொண்டு வெளியில் வந்து காதவை லாக் செய்தாள்.
அது பத்து புளோர் அப்பார்ட்மெண்ட். எதிர் எதிரே வீடுகள், ஒரு புளோருக்கு நான்கு வீடுகள்யென அதன் வடிவ அமைப்பு இருந்தது. வீட்டு கதவுகள் அனைத்தும் எந்நேரமும் அடைத்த மேனிக்கே இருந்தன.
தன் பிளாட்டின் எதிர் பிளாட்டின் காலிங்பெல்லை அமுக்கினாள். பின் கதவை தட்டினாள்."விஷ்ணும்மா… "சத்தம் கொடுத்தாள்.


சில நாளிகை கழித்து கதவு திறந்தது. "துவாரகா.. வா" என அழைத்தாள் எதிரே தோன்றிய நடுவயது பெண்ணொருத்தி.


"வேண்டாம் இருக்கட்டும் டைம் ஆகிட்டு, உமாக்கா எப்போ வேலைக்கு வருவேன்னு சொன்னாங்க. " அவசரத்தில் விசாரித்தாள்.


"நாளைக்கு வந்திடுவா… பிரித்வி வாந்தாச்சா" எதிர் கொள்வியை வைத்தாள் அவள்.


"இல்லை.. சரி நான் கிளம்புறேன்" நேரம் இல்லை என்பதை நின்று பேசாமல் நகர்ந்து ஓடிக்கொண்டே சொன்னாள்.


"சரிமா.. "கதவை அடைத்து உள்ளே சென்றாள் அந்த பெண்.


லிப்ட்டில் ஏறி கிரவுண்ட் புளோர் பட்டனை அழுக்கி லிப்டுக்கு உயிர் கொடுத்தாள் துவாரகா. டிஜிட்டல் எழுத்துகளில் நம்பர்கள் தோன்ற அருகே இருந்த அம்புகுறி கீழ் நோக்கி மின்னி இறங்கி கொண்டு இருந்தது.


ஏய், மை கனக்ட் ஜெஸ்ட்


நவ் செண்ட் மை விரிஸ்ட் பேக்


டெல் திஸ் பிட்ச்ஷஸ்,


"கிவ் மை டிரிப் பேக்"ஸ்டப்பெரி


ப்பேராரி, விப் தட்


லைட் டூ லுக் பேக் வேன்


ஹீ-ஹச்-ஹச்-ஹிட் தட்... ரிங்டோன் எழுந்தது. கைபையை அலசி போனை எடுத்து பார்த்தாள். ஏன்ஜல் பெயர் ஸ்கிரீன் டிஸ்பிளேயில் தோன்றியது.


" இவ வேற.. "எடுப்போமா வேண்டாமா என்ற யோசனை ஓட. சிறிது தயக்கத்துடன் எடுத்து காதோடு ஒற்றினாள்.


" சொல்லு? " இழுத்து கேட்டாள்.


"எங்க இருக்க? " விசாரணை வைத்தாள் அந்த பக்கம் இருந்து பேசியவள்.


"சுடுகாட்டுல"


"நகைச்சுவையா! சரி தான் நீ இன்னும் அறைமணி நேரத்துல வரலனா நம்ம சுடுகாட்டுக்கு தான் போகனும்." பயம் கலந்த எச்சரிக்கை விடுத்தாள் ஏஞ்சல்.


பேச்சு நடுவே டிங்.. லிப்ட் கிரவுண்ட் புளோரை வந்தடைந்தது.


"புலம்பாத வந்துடுவன். நீ முதல போன வை. " கால்லை வழு கட்டாயமாக துடிந்தாள் துவாரகா.
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
அத்தியாயம் 3


அப்பார்ட்மெண்ட் கேட் வாசலில் ஸ்டூலை இறுக்கி பிடித்து கொண்டு உட்கார்ந்திருந்தான் சங்கர். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் காவலாளி. நாற்பது வயது இருக்கும், பனைமரம் போல வளர்ந்தவன், பரட்டை தலையன், குளிப்பானோ இல்லையோ நெற்றியில் சிவகடாச்சமாக திருநீற்றுப்பட்டை. "சங்கர்" அப்பார்ட்மெண்ட் பெண்கள் குரல் கொடுத்தால் போதும் சூப்பர் ஹீரோவாக பறப்பான். சொந்த ஊர் கும்பகோணம் பிழைப்புக்காக சென்னையில் தங்கி இருக்கிறான். குடும்பம் கும்பகோணத்தில் தான் இருக்கிறது வாரம் அல்லது மாதம் இரண்டு முறை என்று ஊருக்கு போய் வருவான். சிசிடிவி கேமரா கண்கள் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப்பிரித்து சொல்வான். துவாரகா இங்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் அதிகம் பழிகியது அவள் வீடு எதிரே உள்ள விஷ்ணு அம்மாவும் இந்த சங்கரும், வேலைகாரி உமாவும் மட்டும் தான் அவள் அறிந்த முகங்கள். சங்கர் நல்லவன் தான் யாரும் இவன் அப்படி இவன் இப்படி என்று குறைகூறியதே இல்லை. பெண்களிடேத்தே மிகவும் நேர்மையானவன்,கண்ணியமானவன். துவாரகா நேரகா சென்று அவனிடம் பேச்சு கொடுத்தாள்.


"என்ன சங்கர் அண்ணா வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" நலம் விசாரித்தாள். அவனும் மரியாதையாக எழுந்து "ரொம்ப நல்லாயிருக்காங்க." நெளிந்தான் அப்பறம் "என்ன மேடம் லேட்டா போறிங்க." ஆச்சரியமாக வினாவினான்.

"உம்.. கொஞ்சம் வேலை"


"கேப் வரலையா" அக்கறையாக கேட்டான். முகத்தை சுளித்து "இல்ல பஸ்ல தான் போகனும்"என்றாள்.
"ஆட்டோ புடிச்சுட்டு வரவா" ஓட தயாரானான்.

"வேண்டாம் நான் போயிடுவேன். நீங்க பாருங்க" மறைத்தாள்.


"ஆங்.. மேடம் அந்த ஏசி மெக்கானிக் வந்தானா"போனவளை தடுத்து கேட்டான். ஏதோ நியாபகம் வந்தவனாய் நிறுத்தி கேட்டான். அவன் கேள்வியால் அவள் முகம் திடீரென அசெளகரிக சூழலுக்கு மாறியது. கண்கள் எதையோ யோசிப்பது போல இடவலம் உருண்டது.



"என்ன மேடம்" அவளுக்கு விழிப்பு கொடுக்கும் படி மீண்டும் எழுந்தது அவன் குரல்.



"வரல… " சொன்ன வேகத்தில் நின்று வேறு எதுவும் பேசாமல் அப்பார்ட்மென்டை விட்டு வெளியேறி சாலையில் இறங்கி நடந்தாள்.

'


என்ன மேடம் எதுவும் சொல்லாம போறாங்க?? அர்ஜெண்ட் ஒர்க்கா இருக்கும்....' யோசித்து கொண்டே மீண்டும் இருக்கையை பிடித்து அமர்ந்தான்.



குறுக்கு சந்து அதை கடந்ததும் மெயின் ரோடு வரும். இரண்டு பக்கமும் வாகனங்கள் அலைந்து கொண்டு இருந்தன. கார், மோட்டார் பைக்குகளின் அலரல் சத்தம் காது சவ்வே கிழியும் போல ஒலித்தது. துவாரகாவோ கவனம் இன்றி சாலையின் குறுக்கே இறங்கி நடந்தாள். இனோவா கார் ஒன்று பெரும் ஹாரன் சத்தத்துடன் அவளை மோதும் படி வந்து நின்றது. "எங்கமா பார்த்து போர, கண்ண ரோட்டுல வச்சிபோ." கடுப்படித்தான் காரினுள் இருந்தவன்.



'கவனத்தை எங்கு வைத்திருக்கிறேன், எதையோ யோசித்து கொண்டு எவ்வளவு தூரம் வந்து விட்டேன். எத்தனை முட்டாள் பெண்ணடி நீ.. 'என்று தன்னை தானே உள்ளத்தால் கடிந்து கொண்டு. தன் கவனத்தை இப்போது சாலையில் செலுத்தினாள். வடபழனி பக்கம் செல்லும் பேருந்தை பிடிக்க பேருந்துநிறுத்தத்திற்கு வந்தாள். 'காலையிலேயே அவதி அகதியாக ஓடி கொண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தை சுற்றி நிரம்பி வழிகிறது பேருந்துகள் பெரும்பாலும் பாதிப்படைவது மாணவர்கள் தான். நேரம் தவறாமல் செல்ல வேண்டும் என்பதில் உயிருடன் செல்லவேண்டும் என்பதை அலட்சியம் செய்து விடுகிறார்கள். பள்ளி மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கியபடியே உயிரை பணயம் வைத்து பயணம் செய்கிறார்கள். போன வாரம் பதிமூன்று வயது பையன் படியில் கீழே விழுந்து பஸ் சக்கரம் ஏறி தலை நசுங்கி உயிர் இழந்தானே அதை எத்தனை ஊடகங்கள் திரையிட்டது எண்ணி விடலாம். நடிகை மாலாவுக்கு சுளுக்கு அதை அல்லவா மும்முரமாக டெலிகாஸ்ட் செய்து கொண்டு இருந்தார்கள்.ஹிம்...இதை கண்டித்து நான் ஒரு ஆர்டிகள் எழுதினேன், இந்த முட்டாள் சீப் எடிட்டரும், ஹச். ஆர் வீணாய் போனவனும் அதை படித்து பாராமலே கிழித்து முகத்தில் ஏறிந்து விட்டான்களே. சுயநலவாதிகள் காசு திண்ணிகள் எதாவது சாதிக்க நினைத்து இந்த துறையை தேர்வு செய்தேன் என் கருத்து தவறு சில ஊடகங்களில் சுதந்திரம் என்பது தனி ஒருவர் மீது வலுக்கட்டாயமாக திணிக்க படுகிறது. கிளுகிளுப்பான தலைப்புகள் கேட்பானே அந்த பரசு பாலாய் போனவன். உள்ளதை உள்ளபடியே சொல்ல துப்பில்லாதவன் தலைப்புக்கு பின்னால் தொங்குவான். பிஞ்சு பெண்பிள்ளைகள் செய்தியை கூட காமகசடோடு பிரசுரம் செய்ய சொல்வானே கேடு கெட்டவன். வேணுமென்றே இரட்டை அர்த்த கருத்துகளை என் எழுத்துகளில் திணிப்பானே நாசமாய் போனவன். காலையிலேயே இவன் நினைப்பு கடுப்பை உண்டு பண்ணுகிறது.' எண்ணி நொந்து கொண்டாள் மேலும் அவள் மனம்

'காலையிலேயே சாரைசாரையாய் இந்த மக்கள் கூட்டம் எதை தேடி பயனபடுகிறது. உணவு , உடை, இருப்பிடம் இதை தாண்டிய தேடல் என்ன இருக்க போகிறது காலம் மாறிவிட்டது தேவைகள் அதிகரித்து விட்டன. ஒருவரை பார்த்து ஒருவர் என தேவைகளை அதிகமாக்கி கொண்டார்கள். வாழ்க்கை என்பது சிறு புள்ளி அதை சுற்றி இவர்களே கற்பனை ஓவியங்களை உருவாக்கி கொள்கிறார்களே. நான் மட்டும் ஏன் புள்ளியை சுற்றி சிறு கோடுகூட வரையமுற்படவில்லை.' ஆழ்மனதில் நினைத்து கொண்டு இருந்தவளை


"பாப்பா... சைதாப்பேட்டை போற பஸ் இங்க வருமா?? " என்று கேட்ட கிழவியை 'தோல் சுருங்கி தள்ளாத வயதில் இந்த கிழவி கூட அப்புள்ளியை செதுக்க ஓடிக்கொண்டே இருக்கிறாள். நானோ அஞ்சி தயங்கி என்னை நானே மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தயக்கம், பயம் மனிதனை நுனி அளவும் முன் செல்ல விடுவதில்லை தான்.'சிந்தனையை அணைத்து சொன்னாள்"வரும் பாட்டிமா". அவள் பயணபடவேண்டிய பேருந்து வந்துவிட்டது. 'மூச்சு காற்று புககூட அந்த பஸ்ஸில் இடமில்லையே. பெண்கள் ஆண்கள் என எந்த இடைவெளியும் இல்லையே. பல ஆண்களுக்கு இது சாதகம் தான் உரசி ஒட்டி நினைத்தாலே அய்யோ. இந்த பயணம் தேவையா? எத்தனை பெண்களின் மனதில் ஓடுமோ.' இப்போது இந்த கேள்வி இவளுக்குள் ஓடுகிறது.
"யம்மா ஏறுறியா இல்லையா புடிச்சு வச்ச மாதிரி நிக்கிற" கண்டக்டர் அதட்டினான்.'செல்ல தான் வேண்டும்.' பின்பக்க படிகளில் தொங்கும் ஆண்கள் சற்று இறங்கி வழி தருகிறார்கள். நெரிசல்,வியர்வை பயம் சென்னையில் இது முதல் முறை தான் அவள் பேருந்தில் பயணம் செய்வது. வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது பெரும் பாலும் பிரித்வி அவளை அழைத்து சென்று விடுவான். கல்யாணம் பற்றி பேசினால் "என்ன கல்யாணம் இப்போ நம்ம ஒன்னா தானே வாழ்றோம் சண்டை இல்லை புரிதல் இருக்கு காதல் இருக்கு. இந்த பெண்கள் மஞ்சள் கயிறு ஏறிட்டால் போதும் ஆயிரம் காளி தேவி ஆகிவிடுகிறார்கள். சந்தேகம், பொறாமை எக்ஸ்ட்ரா. வேண்டாம் துவாரகா வேண்டவே வேண்டாம் இந்த கல்யாண பேச்சு" என்று அவளுக்கே தடை போடுவான்.

 
Last edited:

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
அதை நினைக்கும் போது துவாரகாவிற்கு வேதனையாக தான் இருக்கிறது. இருப்பினும் அவன் மீதான காதல் ஈர்ப்பை தான் கொடுக்கிறது. காதல் மட்டுமா 'இந்த படிப்பு இந்த வேலை எல்லாம் அவனால் அவனுக்காக நான் தேர்ந்தெடுத்தது.
பள்ளி படிப்பை முடித்த போது என் துணையாக என் உயிராக இருந்த என் அம்மா இறந்த போது. வாழ்க்கையில் இனி என்ன செய்ய போகிறோம் என்று விழி பிதுங்கி நின்ற போது. பிரித்வி அப்பா என் தாய் மாமா பாஸ்கர் பெரும் அன்பும் ஆதரவும் தந்து தன் பெண்ணை போல பார்த்து கொண்டார். அவர் குடும்பத்தில் நானும் ஒருவள் ஆனேன். நீண்ட நாளுக்கு பிறகு நான் பிரித்வியை பார்த்தேன் அவன் அறையில் மேசை விளக்கின் கிழே புஸ்தகம் வாசித்து கொண்டு இருந்தான். மாமா அழைத்து சென்று என்னை அறிமுகம் செய்த போது அவன் என்னை சரியாக பார்த்தானா என்று கூட தெரியவில்லை. என்னை விட இரண்டு வயது சிறியவன். உருவத்திலோ மனதளவிலோ என்னை விட மூத்தவன் தான். அவனின் முதிர்ச்சியான பேச்சும் கனிவான பார்வையும் என்னை சிறுபிள்ளையாய் செய்து விட்டது. அத்தைக்கு வாதம் கை, கால் வராது, பேச்சும் எப்போதாவது சில வார்த்தை. அது வாக்கியங்கள் ஆனதே இல்லை.
உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்த அத்தையை பார்த்து கொள்ளும் பெரும் பொறுப்பும் எனக்கு இருந்தது. மாமா என்னை படிக்கிறாயாயென்று கேட்கும் போது அத்தையை மனதில் வைத்து வேண்டாமென்றேன். பிரித்திவி என்னிடம் 'இங்க பாரு படிப்பு முக்கியம். உன் படிப்ப தியாகம் செஞ்சி இந்த குடும்பத்தில் இருக்கவங்கள பார்த்துக்கொள்ள வேண்டாம். அப்பா இல்லை அம்மா இல்லை நாளைக்கு உனக்கு துணைக்கு படிப்பு இருக்கும் இல்லையா' எத்தனை பெரிய மனுஷன் பேசுகிறான் வாயை பிளந்து கேட்டு கொண்டேன். அவனின் அக்கறை பேச்சு என்னை இன்னும் கவர்ந்தது. அவனே இதை படியென்று பிஎஸ்சி மாஸ் கம்யூனிகேஷனை சொன்னான். அவனுக்காவே படிக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் முகம் பார்த்து பேச எனக்கு மாதங்கள் ஆனது அவன் பேசும் போதெல்லாம் தலைகுனிந்து கொள்வேன்'அத்தான் என்று கூப்பிடுடி' என்று மிரட்டுவன். ரசித்தபடியே அழைப்பேன். ஏன் அப்படி நடந்தது தெரியவில்லை அந்த நிகழ்வு தான் எங்கள் காதலுக்கு அஸ்திவாரமாக அமைந்துபோனதோ புரியவில்லை. வயது காரணமாக அன்று தெரியாமல் நிகழ்ந்து விட்டது என்று அவனை விலகவும் முடியவில்லை இதுவே எங்கள் உறவுக்கு வேர் விட்டது. அன்றொரு இரவு சோ.. என்ற மழை மாமா வீட்டில் இல்லை அத்தையோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். மின்சாரம் இல்லை பிரித்திவி மாடியில் அமர்ந்து படித்து கொண்டு இருந்தான். என்னிடம் மெழுகுவர்த்தி கொண்டு வர சொன்னான். நான் இருளில் தேடி எடுத்து கொண்டு மேலே போனபோது எதிரில் வந்தவன் மீது எதிர்பாராமல் மோதியதில் மெழுகுவர்த்தி கீழே விழுந்து அணைந்து போனது. இருளில் அவன் என்னை முற்றிலும் நெருங்கி நின்றான். என் உடலெங்கும் வியர்வை முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் புது ஸ்பரிசம். இரவு, மழை எத்தனை சினிமாதனமாக இந்த நாள் அமைந்துள்ளது என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் அந்த ஆழமான இரவும், அமைதியும் என்ன செய்கிறது உடலை ஒருவித பரிதவிப்பு, படபடப்பு நெருங்கிய பிரித்திவியை தடுக்கவும் விரும்பவில்லை வேண்டாம் வேண்டாம் என்ற மூளையை மனது தடுக்கவில்லையே. மைஇருளில் என் இதழ் அவனுக்கு கலங்கரையோ இதழ்களை குவித்தவன் மெல்லமாய் முதுகெலும்புகள் விரைத்துபோக அவனின் முத்தம் மழைக்கு இதம். திடீரென்று தோன்றிய மின்விளக்குகள். டிஸ்க்... க்... '
"காளியாயிபோக எப்படி பிரேக் போடுறான் பாரு" திட்டிக் கொண்டே என் மேலே வந்து தள்ளாடி விழுந்த கிழவியால் நினைவுகள் சுண்ணாம்பு கட்டியை போல உடைந்து திரும்பியது. நெருங்க நிற்க எத்தனை வியர்வை வாடை. பின்னால் ஐம்பது வயது இருக்கும் அவனின் உடல் என்னை நசுக்க குடல் குமட்டி கொண்டு வருகிறது. திடீரென கண்டக்டர் அலரல் "எம்மா இறங்குங்கமா வடபழனி... யோவ் வழிய விட்டு நின்னுங்கயா இறங்கும் போதும் உரசனுமா" இத்தனை கூட்டத்தில் சாத்துக்குடி போல நசுங்கி தான் போனேன். இப்போது இறங்க வேண்டும். இந்த கிழட்டு பயல்வேறு மேலே ஏறுகிறான். முட்டி மோதி இறங்கும்போது தான் இந்த பெண்மையை வெறுக்கிறேன்.
இப்போது தான் சிறிது காற்று மெல்ல சீண்ட வியர்வை காய்ந்து முகமெல்லாம் பிசுபிசுப்பு இருந்தது அவளுக்கு. 'எவ்வளவு கூட்டம்' நினைத்தபோது 'ஆ.... ஓ.. மை காட்... ஆ...'
ஷாக் அடித்ததை போல ஒரு நிமிடம் பதறி துடித்தாள்.
"என்னம்மா... ஏன் கத்துற.. " திடீரென சத்தம் கேட்டு கூடிய கூட்டத்தை பார்த்ததும் துவாரகாவிற்கு மயக்கமே வருவது போல தலை சுற்றி வந்தது கால்கள் நடுக்கம் பெற்று சாலையில் அந்த ஓரத்தில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். "என்னமா நகைய காணுமா" கூட்டத்தில் ஒரு புண்ணியவான் பதறி கேட்க. மற்றொரு பெண்ணொருத்தி தண்ணீரை படார்படார் என்று முகத்தில் அடித்தாள். "என் பேக் என்னோட லேப்டாப் பேக்க காணுமே" 'என்ன செய்ய போகிறேன். அந்த ஹெச் ஆர் என்னை கொன்றே விடுவானே.' ஆயிரம் ஆயிரம் எண்ண ஓட்டங்கள், பயம் அக்கினி போல உள்ளுக்குள் எரிந்து துவாரகாவையும் எரித்து கொண்டு இருக்கிறது. கண்களில் பூக்கும் கண்ணீர் கன்னங்களில் கோடு கோடாக வரைப்படமாகிறது. 'பரசு பாலாய் போனவன் பாடாய் படுத்துவானே.'நினைத்து கொள்ளும் போதே கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது.
"வாம்மா..கம்பிளைண்ட் கொடுக்க" அழைப்பவர்களிடம் 'எதை சொல்ல அந்த பரசு இது ரொம்ப சீக்ரெட் என்றானே. என்ன செய்வது? ' சிந்தித்தவள்.
"நான் பார்த்துக்குறேன் சார்" என்று எழுந்தாள்.
"என்ன பொண்ணுமா! "
"போலிஸ் கிட்ட போனா பொருள் கிடைச்சிடுமாக்கும் போனது போனது தான்"ஆளுக்கு ஒன்றை பேசிய கூட்டம் சிறிது சிறிதாக களைந்தது. 'எத்தனை நேரம் இப்படி உட்கார்ந்து இருப்பது.'எழுந்து நடந்தாள் எப்படியோ தள்ளாடி நடந்து ஒருவழியாக ஆபிஸ் வந்தடைந்தடைந்தாள். எண்ட்ரன்ஸ்லயே காத்து கொண்டு இருந்தாள் உபேதா.
"துவாரகா வா.. என்ன இத்தனை லேட். சீக்கிரம் வா"அவளின் பதற்றம் மேலும் பயத்தை தூண்டியது.
" ஏய்... எங்கடி லேப்டாப் பேக்.. " அவளின் கேள்வி கணை போல நெஞ்சை துளைத்து அடைத்தது. "வா.. சொல்றேன்" வேறு எதுவும் பேச முடியாதவளாய் நடந்தாள். இருவரும் நேராக ஹெச் ஆர் அறைக்கு சென்றார்கள். பரசு ஏற்கனவே பரப்பரப்பாக இருந்தான். தடித்த உடம்பும் கருப்பெறிய முகமும், குறுந்தாடியும், ஜவ்வாது மணமும். அவன் பூச பூச அது நாற்றமாகி போனது துவாரகாவிற்கு. 'நெய்வேலியில் அள்ளி கொட்டிய நிலக்கரி போல பழுப்பேறி கொதிப்பேறி போய் உட்கார்ந்து இருக்கிறானே கரடி உடம்பன்.' அடக்கமாக திட்டிக்கோண்டாள்.
"எங்கடி போன இத்தனை நேரம். போன் மேல போன் தலைவலி எங்க தொலைஞ்சி போன"வார்த்தைகள் எல்லாம் தடித்து தவறி எழுந்தது. ' இந்த மிருகத்தை எப்படி சமாதானம் செய்வது சொன்னால் எப்படி எடுத்து கொள்வான். இவன் என்னை மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தவன் ஆயிற்றே மறுத்த காரணத்தினால் எத்தனை ஆக்ரோஷத்தை காட்டினான். காமம் கூட கட்டாயத்தில் எழும் உணர்ச்சியாக தான் பெண்களின் மீது திணிக்கபடுகிறது. இந்த செய்தி இவனுக்கு சாதகம் ஆயிற்றே நூல் பிடித்து கொண்டு என்னை என்னபாடு படுத்தபோகிறானோ. எது ஆனாலும் பரவாயில்லை தைரியத்தை வரவழைத்து கொண்டு சொல்லி தான் ஆகவேண்டும்' அவள் அப்படியே யோசித்து கொண்டு நிற்பதை பார்க்க உஷ்ணம் தலைகேறி கத்தினான்.
"சார்.. சா..... ர்.... ர்.... லேப்டாப் மிஸ் ஆகிட்டு." அந்த நிமிடங்கள் அறையில் பெரும் நிசப்தம் தலையை பிடித்து கொண்டு நாற்காலியில் சரிந்தான் பரசு.
அவனை அப்படி உடைந்து பார்க்கும் போது உள்ளுக்குள் ஆனந்தம் தான் துவாரகாவிற்கு அதே வேளையில் நடுக்கமும் கூடியது.
 
Last edited:

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
😵மெளனம் 5🤫💔





உள்ளூர மகிழ்ந்து கொண்டாலும் துவாரகா மனதில் பயத்தின் பொறி பரவி கொண்டு இருந்தது. கழுகு மூக்கை உறிஞ்சி கொண்டு கைகளை மார்புகளுக்கு நடுவே கொடுத்த படியே பலத்த யோசனையில் இருந்தவன் திடீரென விழிகளை விரித்து இரண்டு பெண்களையும் மாற்றி மாற்றி பார்த்தான். துவாரகா அவனை கண்டும் காணாமல் அறையின் ஒருபக்கம் சுவற்றுக்கு பதில் இருந்த அந்த சன்போர்ட் விண்டோஸ் கிளாஸ் வழியே பரந்து கிடக்கும் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த வாகனங்கள் மேலே கவனத்தை செலுத்தி இருந்தால். குருதி கொதிநிலைக்கு சென்றது பரசுக்கு. துவாரகா கவனம் இல்லாமல் இருப்பதை கண்டதும் இன்னும் சீற்றம் கொண்டு அருகே சென்று துவாரகா கழுத்தை நெறித்து அத்திரபிரயோகித்தான். துவாரகா மூச்சு விட சிரமப்பட்டதை கண்ட உபேதா தாமதிக்காமல் அருகே இருந்த பேப்பர் வெயிட்டால் பரசுவின் கைகளில் பலமாக தாக்கினாள். வலி தாங்காதவன் துள்ளி துடித்தான். "ஏய்.. இரண்டு நாயும் சாகபோறிங்க. இன்னும் பத்து நிமிஷத்துல அந்த மந்திரியோட பி. ஏ வந்திடுவான். ஆ... " ஆவேசமாக எச்சரிக்கை செய்து கர்ஜித்தான் சுவரில் தொங்கும் கடிகாரத்தின் நொடி முள் சத்தம் துவாரகாவின் இதய துடிப்பு போல எகிறியது. "வருவானுங்கடி உன் மாமன் மச்சான்லாம் ஆட்டு தலைய அறுக்குற மாதிரி அறுத்து ஆ... " மீண்டும் மீண்டும் பயமுறுத்தும் பேச்சு இரு பெண்களையும் சற்று ஆடிபோக செய்தது. பரசு பெரிய புள்ளிகளின் பிணாமியென்று பல நேரங்களில் துவாரகா காதுபட சகபணியாளர்கள் பேச கேட்டிருக்கிறாள். இவனின் நம்பர் ஒன் சேனல் உண்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்தது இல்லை. அந்த பணக்கார முதலைகள் இந்த பிணம்திண்ணி கழுகுக்கு போடும் மாமிச துண்டுகள். எத்தனை நல்லவர்கள் பத்திரிகை துறையில் உயிரைக் பணயம் வைத்து உண்மைக்கு உழைக்கிறார்கள் அதில் இவன் கேவலமான ரகம் துவாரகா மனம் அனுங்கியது. உபேதா பயந்த சுபாவம் வேறு "ஸார்... பிளிஸ்... சே சம்திங்" பதறினாள். புசுபுசு வென்று கனமான மூச்சு விட்டால். நொடிக்கு நொடி கடிகாரத்தை பார்த்து கொண்டாள். தயவு தாட்சண்யம் பார்ப்பவன் போலவும் நிறைந்த மனதுகாரன் போலவும்



"ஸ்டேஷன் போய் உங்க லேப்டாப் காணும்னு கம்பிளைண்ட் கொடுங்க. எந்த காரணத்தாலும் இந்த மந்திரி பெயர் இம்மி அளவுக்கும் கசிய கூடாது. காக்கி சட்டையிலயே நிறைய பேர் நேரம் கிடைக்கட்டும்னு காத்துருக்காங்க. " உபேதா விழிகள் அச்சத்தில் பெரிதாக துவாரகாவிடம் எந்த சலனமும் இல்லை.
"பொருள் தொலைந்து போவது சாதாரண நிகழ்வு. நீங்களே சென்றால் இன்னும் சீக்கிரம் கிடைக்கும் அல்லவா எங்களை எப்படியும் ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார்களே" துவாரகா நேரம் காலம் தெரியாமல் அந்த முரடனிடம் ஆகாத்தியம் செய்தாள்.

"இப்படியே பேசு உனக்கு ஒருநாள் தான் டைம். அவனுங்க என்கிட்ட கேட்டா நான் உங்க ரெண்டு பேரையும் தான் சொல்லுவேன்" மேலும் பேசி துவாரகாவையும் பயம்கொள்ள வைத்துவிட்டான். துவாரகா வேலைக்கு வந்த புதிதில் தன் அறைக்குள் அழைத்தவன் 'என்ன எடிட் செய்திருக்கே.. எத்தனை மிஸ்டேக்.. 'என கடிந்தவன் சற்று நேரத்திலேயே அவள் அருகில் நெருங்கி கன்னத்தை தடவிய படி 'என்ன சோப் குளிக்கிற வளவளன்னு இருக்கு' என்று சீண்டல் செய்த போதே பிரித்திவியிடம் அழுகாத குறையாக நடந்ததை கூறாமல் வேலைக்கு போகல என்று விடாபிடியாக நின்றவளை எதேதோ பேசி மீண்டும் போக வைத்தான். அந்த நாளில் இருந்து பரசுவிடம் அவள் நெருங்குவதே இல்லை. சில நேரங்களில் அவன் முகத்தின் மேலேயே பேசி விடுவாள்.' அந்த கோபத்தை இப்போது பழிதீர்க்க பார்க்கூறான் அயோக்கியன்' மனம் கண்டவாறு தூத்தது.


எல்லாவற்றையும் மறைத்து கொண்டு "சார்... நாங்க போய் கம்பிளைண்ட் கொடுக்குறோம்" திடமாக வந்த அவள் பதிலை கேட்டபோது 'போடி.. போ.. உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்'பரசுவின் பாலாய் போன மனது ஒரு திட்டம் போட்டது.


மதியம் இரண்டு மணி வடபழனி ஆர்2 போலிஸ் ஸ்டேஷன். 'வந்து எத்தனை நேரம் ஆகிறது. யாரும் என்ன ஏது என்று கூட கேட்கவில்லை ' துவாரகாவிற்கு நிலைபொறுக்கவில்லை. பன்னிரண்டு மணி வாக்கில் இருவரும் வந்ததும் நேராக ஹேட்கான்ஸ்டபிளிடம் நடந்ததை கூறினார்கள். அவர்' சப் இன்ஸ்பெக்டர் வரட்டும்மா. உட்காருங்க!' என்று கையமர்த்தினார். பின் அரைமணி நேரம் கழித்து சப் இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் தன் பங்கிற்கு கேள்விகளை கேட்டார். 'உட்காருமா! இன்ஸ்பெக்டர் வரட்டும்'என்றார். இப்படி ஆள் ஆளுக்கா நேரத்தை பொக்கி கொண்டு இருக்கிறார்களே தவிர இன்னும் எதுவும் நடந்த பாடில்லை. இருக்க இருக்க துவாரகா முகம் கோபத்தில் கன்னியது. ஒரு வழியாக இன்ஸ்பெக்டர் வந்தார்.
கான்ஸ்டபிள் இருவரையும் அழைத்தார். இரண்டு பெண்களும் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றனர். அங்கு சப் இன்ஸ்பெக்டரும் அமர்ந்து இருந்தார்.
"வாங்கமா வந்து சொல்லுங்க சார்கிட்ட நடந்தது ஒன்னு விடாம" நாற்காலி பக்கமாக கையை நீட்டி கனிவோடு சொன்னவரை பார்க்கும்போது 'மறுபடியும் முதலயிருந்தா'என்று தான் தோன்றியது உபேதாவிற்கு.


"சார் காலையில ஒன்பது மணி இருக்கும் கிண்டில இருந்து வடபழனி வரும் போது என்னோட லேப்டாப் மிஸ் ஆகிட்டு"


"ஏன்மா வேறும் கிண்டின்னு சொல்ற தெளிவா வரிசையா சொல்லுமா? எந்த இடம் பேக் கலர் லேப்டாப் நேம் என்ன இப்படி எல்லாம் சொல்லனும். பத்திரிக்கையில மட்டும் சின்ன புள்ளி கிடைச்சா போதும் சுத்தி சுத்தி சிக்குகோலமே போட்டுவிங்க" சொல்லி விட்டு கடாமீசை குலுங்க தொப்பை வயிறு அதிர சிரித்த போது. ஹேட் கான்ஸிடபிளும் சேர்ந்து பல்லை காட்ட அந்த நிகழ்வு துவாரகாவிற்கு எரிச்சலை மூட்டியது இருந்தாலும் அவர் உண்மையை தானே சொல்கிறார் முடிவுக்கு வந்தவள். ஒவ்வொரு டீட்டைலாக சொல்ல ஆரம்பித்தாள்.


"கிண்டி தேர்ட் கிராஸ் சிடிரிட்ல இருந்து வடபழனி வந்தேன் சார். பிளாக் கலர் லேதர் பேக் சார் அதுல ஆப்பிள் லேப்டாப் வச்சிருந்தேன். "கையை ஆட்டி உணர்வு பொங்க தொடங்கியவளை கை வீசி பேச்சை நிறுத்தி மீசை போலிஸ் ஒற்றை கேள்வியை முன்வைத்தது.


"செத்த பொறுமா நீ வெறும் எடிட்டர்னு தானே சொன்ன? ஏன்யா அப்படி தானே சொன்ன"


"ஆமாமங்கய்யா அதுவும் ஆறு மாதம் தான் ஆகுதாம் சீஎம்எம் பத்திரிகை" கையை விரித்து அலட்டல் தோணியில் சொன்னவரை பார்த்து உபேதாவிற்கு 'ஆஹா.. மண்டைமேல இருக்க கொண்டைய மறந்துட்டியே பாடிசோடா' என உள்ளூர தோன்றியது.


"ஏன்யா அவன் என்ன ஒருலட்சமா சம்பளம் கொடுக்கிறான். இது எங்கயோ இடிக்குதே" புருவங்களை உயர்த்தி துவாரகாவை வைத்த கண் வாங்காமல் கேட்டார்.


உபேதா முகம் வெளிரி போனது பயம் நெஞ்சை நெறித்தது'அய்யோ மாட்டிகிட்டோமா? ' அவள் மனம் குமுறியது.


"தொலைந்து போனது உங்க லேப்டாப் தானாமா? " ஆட்காட்டி விரலை காட்டி ஒரு விதமாக மேஜையில் சாய்ந்து கொண்டு ரகசிய தோணியில் கேட்ட சப் இன்ஸ்பெக்டரை பார்க்க திக்கென்று ஆனது இரண்டு பெண்களுக்கும்.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
😵மெளனம்6🤫💔



இத்தகைய கேள்வி தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை ' கிடுக்குபிடி கேள்விகளை இன்ஸ்பெக்டர் கேட்கிறார்? என்ன சொல்வாள்? ' உபேதாவிற்கு மண்டை குடைச்சல் கொடுத்தது ஆனால் துவாரகாவோ தெளிந்த நீரோடையை போல மனதை வைத்திருந்தாள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள் மேலோங்கி இருந்தது. இந்த நாள் போல் அவள் எந்த நாளும் இருந்ததில்லை துணிவு என்பது அவள் அகராதியிலேயே கிடையாது.


பிரித்வி கூட அடிக்கடி கிண்டல் செய்வான் 'அட! தொடை நடுங்கி உன்னை போய் பத்திரிகை துறையில் எடுத்தார்களே' அப்போதெல்லாம் அவளுக்கு அது அவனின் மேம்போக்கான காமெடி கருத்திகவே தோன்றும். ஏனோ அதே கருத்தை பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட மனிதர்களிடம் இருந்து பெறும்போது சலித்து போனது ஏனோ துவாரகா கேட்ட அவமதிப்பான வார்த்தைகள் அவளுக்கு பயம் என்பதை மரக்க செய்து தெளிவான நம்பிக்கையை பாய்ச்சியது. 'பரசு போன்ற குள்ளநரிகளை சமாளிக்க இன்னும் துணிச்சலான மங்கையாக அல்லவா மாறவேண்டும்.' என்பதையும் சில நேரங்களில் நினைத்து கொள்வாள்.
அந்த நிமிடம் அவள் பெரிதும் தாமதிக்கவில்லை அவளிடம் ராக்கெட் வேகத்தில் பதில் இருந்தது. "சார், இந்த பொருள் இவர் தான் வைத்திருக்க வேண்டும். இதோ இந்த பொருள் பணக்காரர்களுக்கு மட்டும் தான் உரித்தானது? ஏதும் நிபந்தனைகள் இருக்கிறதா சார். லேப்டாப் ஒரு கொடி ரூபாய் இல்லை சார் ஒரு லட்சம் ரூபாய் தான் குரோம்பேட்டை, சைதாப்பேட்டை பக்கம் போய் பாருங்கள் மலிவான விலையை கேட்டு அசந்து விடுவீர்கள். இது நான் சிறிது சிறிதாக சேமித்து என் உழைப்பில் வாங்கியது" துவாரகாவின் பதில் இன்ஸ்பெக்டரை உறுத்த தான் செய்தது. மீண்டும் சூழல் நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்த படி"சரியம்மா, உனக்கு தான் இது விலை பொருட்டு இல்லையே. அப்பறம் ஏன் அது அத்தனை அவசியம்? " நக்கல் பார்வையும், ஏளன சிரிப்பும் எட்டி பார்த்தது அதில் என்னையா கேள்வி கேட்கிறாய் இரு! என்பதை போல் இருந்தது.


'யாரடா இவன் இத்தனை லூசு தனமான கேள்விகளை கேட்கிறான்' உபேதா மனம் உள்ளார திட்டிக் கொண்டே இருந்தது. துவாரகா எதுக்கும் அசரவில்லை "சார், நான் அவசியத்திற்கு தை தேடவில்லை? அவசரத்தில் தேடுகிறேன், என் எதிர்காலமே அதில் தான் இருக்கிறது நான் பிஹச்டி செய்து கொண்டு இருக்கிறேன் என்னுடைய முழு திசிசூம் அதில் தான் வைத்து இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் அதை சமீட் செய்ய வேண்டும் இல்லையெனில் என் வாழவே கேள்விகுறி ஆகிவிடும். எந்த காபியும் இல்லை மொத்தமும் அதில் தான் வைத்து தொலைத்து விட்டேன்"

பச்சை பிள்ளை போல அவள் முகத்தை வைத்து தளதளத்து பேசும் போது எதிரே இருப்பவர்கள் சற்று உடைந்து தான் போவார்கள். 'இது என்ன புது கதையாக விடுக்கிறாள். சாவித்திரி போலே நடிக்கிறாளே' உபேதா எண்ணிக் கொண்டாள்.
"தணிகாச்சலம் அந்த ஏட்டு இராவணன வர சொல்லுங்க" பெண் கண்ணீருக்கு பேயும் இறங்கும் என்று சும்மாவா சொன்னார்கள். 'சாதித்து விட்டாய்டி'தன்னை தானே மெட்சி கொண்டாள் துவாரகா. சற்று நேரம் பொருத்து "சார்.. " என்ற பரப்பரப்புடன் சல்யூட் அடித்தபடி வந்து நின்றான் அந்த தூண் உயர வாலிபன். போலிஸ்கே உரித்தான உடல்வாகு அளந்த மீசை , படிந்த கேசம் 'ஹாண்ட் சம் ஆளு நீ! சூப்பர் குளு நீ! ' உபேதா மனம் ஒரு நிமிடம் பாடி முடித்தேவிட்டது.


"யப்பா..இராவணா இதோ இவங்க லேப்டாப் மிஸ்ஸிங் கூட போ. டீட்டைல் கேட்டுக்கோ? எங்க ஏறுனாங்க எங்க இறங்குனாங்க? எந்த பஸ்?அப்பறம் அந்த பஸ் டிப்போல போய் விசாரிச்சிட்டு வந்துடு. சரிதான! "நெஞ்சில் விரைப்பு குறையாமல் " யேஸ் சார்.. " நிமிர்ந்து நேராக நின்று கம்பீரமாக சல்யூடோடு சொன்னான்.


'ஆர்வகோளாரு!!' சப்இன்ஸ்பெக்டர் வாய்விட்டே உளரிவிட்டார்.


"வாங்க மேடம்" இரண்டு பெண்களும் எழுந்து இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் இருவருக்கும் சேர்ந்தார் போல் பணிவு கலந்த நன்றியை வைத்து விட்டு கிளம்பினார்கள்.

மூன்று பேரும் வெளியில் வந்தனர் "இரண்டு பேர்ல யாரு மிஸ் பண்ணுனது" அவன் கேட்டதும் போதும். அத்தனை வேகம் உபேதா துவாரகாவை கையைகாட்டி விட்டாள்.


"சரி.. நீங்க வாங்க மேடம்" எதோ சொந்தகார பெண்ணை வீட்டுக்கு அழைப்பது போல அழைத்தான். "எங்க? " துவாரகா விழித்தாள்.


"ஆங்.. சினிமாவுக்கு. மேடம் மிஸ்ஸிங் ஸ்பாட்ட வந்து காட்டுங்க, ஸ்டேட்மெண்ட் எழுதனும். "சற்று தள்ளி நின்ற பைக்கை ஸ்டார்ட் பண்ணினான் பின் அவள் அருகே வந்து உர்உர்.. என்று அதைவேற உறும செய்து கொண்டே இருந்தான். உஷ்ணம் தலைகேறியது துவாரகாவிற்கு. " சேத்த போறப்பா" கடுப்பாக தான் சொன்னாள். அவன் செய்வதையெல்லாம் ரசித்த படி நின்றாள் உபேதா.


"உபேதா நீ இதே ஸ்டிரீட்ல இருந்ததுல காபி ஷாப்ல அதுல வெயிட் பண்ணு நான் போயிட்டு உடனே வந்திடுறேன்" அவனுடன் போக அவளுக்கு ஏனோ பெரும் தயக்கமாக இருந்தது. தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தாள் "ஏம்மா.. ஏறுமா எனக்கு வேலையிருக்கு" என்று சலித்து கொண்டான். 'ஏம்மா.. ஏறுமா.. கிழவியை அழைப்பது போல அழைக்கிறானே' துவாரகா சங்கடபட்டாள்.
எப்படியோ ஒரு வழியாக இருவரும் அவ்விடத்தில் இருந்து கிளம்பினார்கள்.
சாலையில் சத்தமே இல்லாமல் போய் கொண்டிருந்த பைக்கில் துவாரகா மனம் அலைகடல் போல குமுறி கொண்டு இருந்தது. 'காலையில் இருந்து நேரம் சரியில்லை! அந்த பரசுவிடம் தப்பித்து இந்த பத்து தலைகாரனிடம் அகபட்டு கொண்டேனே. '
"மேடம்.. பஸ்ல யாராவது உங்கள நோட்பண்ற மாதிரி ஏதும்??" காற்றின் சத்தத்தில் அவன் கேட்டது இவள் காதில் ஏறவில்லை. "என்ன? " காட்டுகத்தலாக கத்தினாள். அவன் காதுக்குள் உஊ.. உஊ.. என்று சத்தம் கேட்டது. காதை ஒற்றை கையால் போத்தியபடி"ஏம்மா மெதுவா தான் சொல்லேன். "மீண்டும் ஒருமுறை அவன் அப்படி அழைத்ததை துவாரகாவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" கொஞ்சம் நிறுத்துங்க! " பைக்கை ஓரம் கட்டினான்.
"என்ன சார் சும்மா ஏம்மா ஏம்மான்னு சந்தையில கூவுற மாதிரி" மூஞ்சிக்கு நேராக பேசி விட்டாள்.


"ஓஓ..உங்க லேப்டாப் வேணுமா இல்ல பேச்சுல மரியாதை வேணுமா! "அவன் அப்படி கேட்டபோது துவாரகா மனம் நினைத்தது'திமிர் பிடித்தவன், எல்லாம் அந்த பரசு பரதேசியால் வந்தது. ' நெளிந்து கொண்டு மீண்டும் பைக்கில் ஏறி அமர்ந்தாள். சகஜமாக பேசுவோம் "சார் அந்த ஸ்டேஷன்லயே நீங்க தான் யங்கா இருக்கிங்க? ஆர்வமாவும், ஸ்பீடாவும் இருக்கிங்க அதனால தானே இந்த கேஸ உங்ககிட்ட ஒப்படைச்சிட்டாங்க" அப்படி என்னத்தை சொன்னாள் இத்தகைய சிரிப்பு சிரிக்கிறான். துவாரகாவிற்கு ஒரு நிமிடம் சந்தேகம் வந்தது 'என்ன சொன்னேன்? காக்கா பிடிப்பதை கண்டுபிடித்துவிட்டானா ஸ்டாபெர்ரி மூக்கன்' தனக்குள்ளேயே கேள்வி எழுப்பி கொண்டாள்.

"மேடம்.. மேடம்.. மேடம்.. போலிஸ் ஸ்டேஷனுக்கு ஒருநாளைக்கு இருநூற்றுக்கும் மேல கேஸ்வருது. பெரும்பாலானது காணமல் போன கேஸ் தான். அந்த கேஸ்ல இருந்து சிலத தேர்ந்தெடுத்து என்கிட்ட கொடுப்பாங்க! ஏன் தெரியுமா? "
'எனக்கு எப்படி தெரியும் லூசு போல கேட்கிறான். ' மெளனமாக பேசி கொண்டு உதட்டை மட்டும் தெரியாது என்பது போல பிதுக்கி காட்டினாள். சைடு மிரரில் பார்த்தவனுக்கு மீண்டும் சிரிப்பு போத்து கொண்டு வந்தது.


"கொஞ்சம் சிரிக்காம சீரியசா சொல்லுங்க" கோபத்தோடு கேட்டாள்.


"சீரியசா இருக்காதுங்கிறதுனால தான்"


"புரியல.. " என்றவள் சற்று அவனின் வார்த்தைகளை ரிவைன்ட் செய்திள் எத்தனை பெரிய அதிர்ச்சி 'அய்யோ!! ' தலையில் அடித்து கொண்டாள். மனம் பயத்தில் படபடத்தது அதே நேரத்தில் ஹாண்ட் பேக்கில் இருந்த மொபைல் போன் ஒலி எழுப்பியது.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18

அத்தியாயம் 7

துவாரகா முகமே மாறியது பதற்றம் வியர்வை அவளை பற்றி கொண்டது. போனை எடுக்கலாமா வேண்டாமா என்ற சிந்தனை நடுவே விடாமல் ஒலித்து கொண்டே இருந்தது மொபைல் போன்.
"என்ன மேடம் போன் அடிச்சு கிட்டே இருக்கு எடுக்கவே மாட்டைங்கிறீங்க. அட்டன் பண்ணுங்க" இராவணன் வேறு நச்சரித்தான் அதுவும் அவளுக்கு எரிச்சலை மூட்டியது. " மேடம்.. " இரண்டாம் முறையாக முழுமையாக ரிங் வந்து கட்டானது. மூன்றாம் முறை அட்டன் செய்தாள் காதில் ஒற்றினாள் எதிர் பக்கம் இருந்து " என்னாச்சு லேப்டாப் கிடைச்சதா" மிரட்டல் தோணியில் கேட்டது ஆணின் குரல்.
'இது அந்த பாலாய் போன பரசு இல்லையே' துவாரகா மனம் யோசனையில் மூழ்கிய நொடி மீண்டும் அந்த குரல் மிரட்டியது "பொண்ணுங்கல்லாம் பார்க்க மாட்டேன் கழுத்த அறுத்து போட்டுட்டு போயிகிட்டே இருப்பேன். இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் தான் டைம்" டூடூடூ.. லைன் கட்டானது.
துவாரகாவின் தற்போதைய நிலை என்ன என்பதை கூட கேட்கவில்லையே பேசியவன் அவன் விஷயத்திலேயே குறியாக இருந்தான். துவாரகா முகம் இருள் படிந்தது போல் ஆனது. இராவணன் வேறு விடாமல் கேட்டு கொண்டு இருப்பது எரிச்சலை மூட்டியது.
"என்ன மேடம் ஆச்சு, ஏதாவது சொல்லுங்க? "வந்த கோபத்தில் தன் சுயத்தை இழந்தவளாக " பேசாம போங்க சார் நீங்க எதுவும் சரி செய்து விட போறீங்களா " ஆவேசமாக பேசினாள்.
மாலை மங்கும்வேளை வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தன. வாகனங்களின் கூச்சல் ஊடே இவர்கள் மெளனம் காத்தனர் "மேடம்...இவன் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு முத்திரை குத்தி தான் ஸ்டேஷன்ல பேப்பர், நோட்டீஸ் போர்டு..டேலிபோனு..லாக்கப்பு..ன்னு பத்தோட பதினொன்னா என்னையும் வச்சிருக்காங்க. 'அதிர்ஷ்டகாரன்டா ரொம்ப ஈஸியா வேலைய வாங்கிட்டானே', 'லக்குடா அவனுக்கு', 'டேய் டெய்லி வேலைக்கு வா ஆனா உனக்கு ஒரு வேலையும் கிடையாது? என்ஜாய்.. 'கேன பு**" சொல்ல வந்த வார்த்தையை மென்று முழுங்கினான். "ஸாரி.. என்னோட வலி யாரு கண்ணுக்கு தெரியும் சதை இரத்தம்.. ஆ.. மரண ஓலமிட்ட என் மனச அன்று தேற்ற யாரும் வரவே இல்ல. என் அப்பா செத்து இந்த வேலை இதோ உடபெல்லாம் தினமும் இரத்தமா இருக்கதாவே தோணுது. பத்து வயசுல இருந்து என் அப்பா அம்மாவாவும் இருந்து எனக்கானத பார்த்து பார்த்து செஞ்சவர ஒரு நாள் பிணமா பார்த்த போது நானும் அப்படியே உலக விட்டு போகிட கூடாதான்னு நினைச்சேன் நடக்கல.. கம்னாட்டி பசங்க என் கண் முன்னாடியே வெட்டி வீசுனப்போ வீரம் வரல விசும்பல் தான் வந்தது. என் கையாலாகாததனத்துக்கு நான் நடைபிணமா தான் அழையனும் இது தண்டனை எல்லோராலும் தூற்றபடுவதும் ஆயுள் தண்டனை தான் "சிறுபிள்ளைபோல மூக்கை உறிஞ்சி கைகளை வைத்து தேய்த்து கொண்டான். துவாராகிவிற்கு முள்ளை வைத்து நெஞ்சில் அழுத்தியது போல இருந்தது. அவன் தோள்களை பற்றி அந்த காக்கி சட்டையை இந்த கவி நிலா தேற்றியது. பெறும் ஆறுதல் வருடங்களாக கிடைக்காத இந்த அன்பு தன் அப்பாவிடம் மட்டுமே கிடைத்த அந்த அழகான அன்பு இப்போது இவள் இடத்தே கிடைப்பதை போல உணர்ந்தவன் " தவறாக எண்ணாதீர்கள் அவர்கள் பார்வையில் இது ஒன்றுக்கும் ஆகாத வழக்கு அவர்கள் ஆதாயம் இல்லாத எதற்கும் ஆதரவு தரமாட்டார்கள்" அவன் சொன்ன போது துவாரகா விடம் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் நசுங்கியது."நான் உயிர் போகிற பிரச்சனையில் இருக்கிறேன் "கலக்கத்துடன் கூறினாள்.
" அதை தான் சொல்ல வருகிறேன் என் அப்பாவை இழந்தது போல உங்க.."எதையோ சொல்ல நினைத்தவன் அப்படியே நிறுத்தி விட்டான்.
"என்னது... " என்றவளிடத்தில் "என்னை நம்புங்கள்.. "என்ற நொடி அவன் விழிகளிடத்தே அந்த வார்த்தைகளில் எழுந்த அந்த நம்பிக்கை மின்னிட்டது.
" இவனை நம்பு என்று ஏன் உள் மனம் போராடுகிறது. திடீரென்று தோன்றிய இவன் இராவணன் என்ற பிரதியில் இராமனோ"​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
இளைபாரும் பறவைகளுக்கு நேரம் வந்துவிட்டது, விடாபிடியாக வானை பிடித்த சூரியன் கூட விட்டு விலக தொடங்கிவிட்டது துவரகாவின் யோசனை மட்டும் தெளிந்தபாடில்லை. இந்த இராவணன் இத்தகைய தாமதத்திற்கு ஒன்றும் கோபம் கொள்ளவில்லை நிதானமாக ’‘உங்கள் ஊரில் உயிர் போகும் பிரச்சனைக்கு கூட இத்தனை தாமதமாக தான் முடிவு எடுப்பீர்களா“ அவன் நகைச்சுவையாக கேட்கும் கேள்வி கூட அவளுக்குள் கோபத்தை தான் உண்டுபண்ணுகிறது ஆனாலும் ‘அவன் சொல்வது சரிதான் துவாரகா இத்தனை நாளிகையாய் எத்தனை சிந்தனை ஒருவனை நம்பினால் அவனிடம் எல்லாவற்றையும் கூறவேண்டும் நீயோ சிந்தனைஆடிய படியே நிற்கிறாய்‘ மனம் ஒரு பக்கம் அவளை பாடாய்படுத்துகிறது.
“இப்போது மணி ஐந்து ஆகபோகிறது நான் மூன்று மணிக்கு ஸ்டேசன் விட்டு வந்தவன். எனக்கு போன் மேல் போன் வந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியும் நான் உங்களுடம் நேரத்தை செலவிடுகிறேன் என்றாள் அதில் எனக்கே தெரியாத அக்கறை இருக்கிறது.“ அவன் சிலநேரங்களில் புதிராக பேசுவது இப்படி தான் அவளை நினைக்க வைக்கிறது ‘இவனுக்கு அப்படியென்ன நம்மேல் இத்தனை அக்கறை‘ என்று.
பைக்கின் கிக்கரை உதைத்து அவசரமாக ஸ்டார்ட் செய்தான். பைக்கை ஆன் செய்தவன் அதனில் இருந்து உர்..உர்…என்று சத்தம் எழுப்பினான்.
‘அவன் சொல்வதும் சரிதான் இப்போது நமக்கு இதை தவிர வேறு வழியில்லை, அவன் செயலுக்கு ஒத்துழைக்க தான் வேண்டும்.‘ முரண்டுபிடிக்கவில்லை அமைதியான சிந்தனையோடு பைக்கில் அமர்ந்துக்கொண்டாள்.
பைக்கின் முகப்பு கண்ணாடி வழியே துவாரகாவை பார்த்தவன் மெல்லமாய் தன் உதடுகள் சுருங்க சிரித்தான் ‘அவள் வந்ததும் அப்பாவின் பழைய ஆர் எக்ஸ் 100 புதியதாகியதே‘ அவன் உள்ளத்தினோரம் கவிதை ஒன்று குறுகுறுத்தது. காற்றில் ஆடிய நீண்ட குழலில் அவன் இதயம் தொலைந்து போவதில் தவறேதும் இல்லையே. அவனை பார்த்து அவள் முறைப்பது கூட ஏதோ காதல் அம்புகள் ஏவி விடுவது போலல்லவா சமயங்களில் ரசிக்கிறான்.
ஏன் இத்தனை பற்றுதல் அவளிடத்தே இது முதல் முறை பார்த்ததும் தோன்றும் சினிமாதனமான காதல் இல்லை ஆழமான ஒன்று அவனுக்குள்ளும் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. அது துவாரகாவின் செவிகளை செரும் போது என்ன நிகழும்.
“ஒன்று உங்களை கேட்கலாமா“ எறும்பு புற்றில் விழுந்த ஒற்றை மழை துளியாய் சிந்தனைகள் களைந்தோடியது. ‘என்ன கேட்க போகிறாள்‘ என்ற இன்னொரு கேள்வி வேறு அவனுக்குள்.
“என்..ன??“ அச்சத்தோடு இழுத்தான்.
“ஏன் இத்தகைய தளதளப்பு நான் ஒன்றும் ராணுவரகசியம் கேட்கபோவதில்லை உங்கள் பெயரின் இரகசியத்தை கேட்கிறேன். சொல்லமுடியாத காரணம் என்றாள் கூற வேண்டாம்“ அவள் அப்படி கேட்டபோது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது நின்ற மூச்சும் வந்தது.
“உங்களுக்கு இராமயணத்தில் பிடித்த காதாபாத்திரம் யார்??“ அவன் மறுகேள்வி கேட்டான்.‘நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன கேட்கிறான்.‘ துவாரகாவிற்கு சிந்தனை தழும்பியது.
“என்ன கேள்விக்கு பதில் இல்லை இராமயணம் பற்றிய ஏதேனும் சிறிய கருத்தாவது உண்டா இல்லை புஸ்தகம் பற்றிய வாசனையே கிடையாதா“ என்றபடியே இழித்தான்.
“ஏன் எங்களை பார்த்தாள் படித்தவர் போல் இல்லையோ? திஸ்இஸ் டூ மச்..“
“அய்யோ..நான் உங்களை அப்படி சொல்லவில்லை நான் வேறு அர்த்தத்தில் சொன்னேன். டீனேஜர்கள் நிறைய போருக்கு இன்றைய காலகட்டத்தில் புத்தகவாசிப்பு இல்லாமல் போகிவிட்டது.‘‘
“உங்கள் கருத்து அப்படி? நீங்கள் அறிந்தது அத்தனை தான் இன்றைய யேங்ஸ்டர்ஸ் நிறைய பேர் கதை ஆசிரியர்களாக கூட இருக்கிறார்கள். புத்தகவாசிப்பின் ஈர்ப்பாள் தானே அவர்களால் எழுதமுடிகிறது.“
“உண்மை தான்..“
“இராவணன் கேட்டவன் இராமன் தான் கதையின் நாயகன் என்பதை தெரிந்துகொள்ள இராமாயணம் முழுவதும் கரைத்து குடித்துஇருக்க வேண்டும் போலவே உங்கள் கூற்றுபடி“
திடீரென பைக் ஸ்டாப் ஆனது. அவனுடன் பேசிகொண்டு வந்ததில் வந்து சேரும் இடத்தினை கூட மறந்தே போனாள். பைக் நின்றபின் தான் தன்னை தெளிவுபடுத்திக்கொண்டாள்.
“இதோ இந்த ஸ்டாபிங்கில் தானே நீங்கள் வந்து இறங்கினீர்கள்.“ என்றவன் பைக்கை ஆப் செய்தான். துவாரகா இறங்கி சுற்றி பார்த்துவிட்டு “ஆமாம்“ என்றாள்.
“ஹிம்..உங்கள் அருகில் யாரையும் சந்தேகபடும்படி பார்த்தீர்களா??“
சற்று கண்களை மூடி சிந்தித்தவள் “இல்லை என் நியாபகத்தில் ஏதும் இல்லை“
“ஹிம்..“அவன் நான்கடி நடந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் தேடுவது எதும் பெரிய கடைகள் அந்த கடைவாசலில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தபட்டுள்ளதா என்பதை மட்டும் தான்.
ஆனால் அங்கு சொல்லும்படியான பெரிய கடைகள் இல்லை சிறிய சிறிய பெட்டிகடைகள் போன்று தான் உள்ளது. இன்னும் சற்று தள்ளி நடந்தான். துவாரகா அவன் பின்னால் போகவில்லை பைக் அருகிலேயே ஏதோ சிந்தனையோடு நின்றாள். அங்கிருந்த பெட்டிகடைக்குள் நுழைந்தவன் “ஒரு பில்டர்“ என்றான். கடைகாரனும் மரியாதையோடு கொடுத்தான் உதடுகளுக்கு நடுவே பொருத்தியவன் கடைகாரனை பார்த்தான் “அதோ நிற்கிறதே அந்த பெண்ணை பார்த்துள்ளீர்களா??“
கடைகாரனும் குனிந்து எட்டடி தூரத்தில் நின்ற துவாரகாவை பார்த்தான்.




 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
36
Points
18
அத்தியாயம் 9

கடைகாரனும் சிறிது நேரம் யோசித்தான்.


”ஆங்..சார் நியாபகம் வந்துட்டு. எப்படி மறக்கமுடியும்? இந்த பொண்ணு காலையில பஸ்ல இருந்து இறங்கி தன்னோட பைய தொலைச்சிட்டேன்னு சொல்லி அழுதுச்சி, ஏன் மயங்கி கூட விழுந்துடுச்சி நம்ப கடையில தான் தண்ணிய எடுத்து தெளிச்சி எழுப்பி விட்டு அனுப்பி வச்சோம்.“


சம்பவம் நடந்தது உண்மை தான் இவனை வேறு என்ன கேட்பது பெரிதாக இவன் என்ன அறிய போகிறான் மீண்டும் யோசனையோடு புகைத்தவன் “அப்படியா...சரி..என்ன பை ஏதும் சொன்னாங்களா, நீங்க ஏன் போலிஸ்ச கூப்பிடல? அந்த பொண்ணு எந்த பஸ்ல வந்தது எதும் தெரியுமா??“
அவன் கேள்விகளை அடுக்க கடைகாரனோ தலைக்கு மேலே ஏதோ பதில் எழுதி வைத்தவனை போல யோசித்து கொண்டே நின்றான்.


“சரியா தெரியல சார் ஆனா கம்பியூட்டர் முக்கியமானதுன்னு சொல்லி அழுதுச்சி..அந்த பொண்ணு தான் போலிஸ்ச கூப்பிட வேண்டாம்னு சொன்னுச்சி. பார்க்கவே பாவமா இருந்துச்சு..“
இப்போது அந்த சிகரேட் முழுவதுமாக கரைந்து இருந்தது.


“ஹூம்...இங்க சிசிடிவி கமிர எதுவும் உண்டா??“சிகரெட்டை காலில் போட்டு அணைத்தபடி கேட்டான்.


“சார் இது சின்ன ஏரியா குறிப்பிட்ட பஸ் மட்டும் தான் நிற்கும். மக்கள் நடமாட்டமும் கம்மி இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் போனா தான் மெயின் ரோடு பெரிய கட்டிடம் எல்லாம் இருக்கு அங்க தான் கேமரா இருக்கும்.“


இராவணன் சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்தான் ‘அதுசரி இவன் சொல்வதும் சரிதான்.‘ சில்லரைகளை கொடுத்துவிட்டு கடையை விட்டு விலகி நடக்க தொடங்கினான். சற்று தொலைவில் நின்ற துவாரகா முகத்தில் சிறிய சலனம் தென்பட்டது. நெருங்கிவந்தவன் அவளை சிறிது விரிக்க பார்த்தான்.


“சரியான இடம் பார்த்து உங்கள் பொருளை தொலைத்து இருக்கிங்களே மேடம்?“


இவன் எந்த அர்த்தத்தில் உரைக்கிறான். சலிப்பு தட்டி சொல்கிறானா இல்லை?? காரணம் புரியவில்லையே


“என்ன யோசனையில் மூழ்கிவிட்டிர்கள் திடீர் திடீரென உங்களை மறந்து யோசனை செய்ய தொடங்கிவிடுகிறீர்கள்.ஹீம்..அது சரி உங்கள் பிரச்சனை அப்படி.“திரும்பி தன் பைக் அருகில் சென்றவன் நின்று துவாரகாவை பார்த்தான். அவள் முகத்தில் தெளிவு இல்லை அதற்கு பதில் அதிகமான குழப்பம் “இராமயணத்துல எல்லாருக்கும் ராமனை பிடிக்கும் ஏன் ஒட்டு மொத்த கதையின் நாயகனும் அவர்தானே பெண்களை கவர்ந்த அழகு தன் மனைவியை தவிர வேறு பெண்ணை நினைக்காதவர், எல்லோருக்கும் பிடித்தவர் ஆனால் ஏனோ என் அப்பாவை கவரவில்லை தன் வசம் இருந்தும் சீதையை தீண்டாமல் நின்றவனை அந்த வில்லனை ஏனோ அவருக்கு பிடித்து போய் இருந்தது. அவர் எண்ணத்தில் என்ன இருந்ததோ? இந்த பெயரை வைத்து விட்டார். இது தான் என் பெயர் காரணம்“


ஏன் இதை இப்போது சொல்கிறான் இவன் உண்மையில் அறிந்து கொள்ளமுடியாதவன் தான் முன்கூட்டியே அறிந்த ஞானியை போல இவன் அப்பாவும் இந்த பெயரை வைத்து விட்டார் போல. அந்த இராவணம் சீதையை கவர்ந்து கொண்டு இராமனை தவிக்க விட்டான் இவனோ இந்த கோதையை கவர்ந்து அந்த அர்ஜீனனை தவிக்க விடுகிறான். அய்யோ.. நீண்ட நேரம் ஆகிவிட்டது இன்னும் அர்ஜீனுக்கு போன் செய்யவே இல்லையே அவன் என்ன நினைப்பான்.

“என்ன சிந்தனை இந்த பதில் ஏற்புடையதாக உள்ளதா??“
வேறு யோசனையில் இருந்தவள் பலீர் பதிலை கொடுத்தாள்.


“அது உங்கள் பெயர் உங்கள் அப்பா ரசித்து ரசிகனாக இருந்து வைத்தது இப்போது அதை நான் மாற்றவா போகிறேன். சொல்லபோனால் இன்னும் அறைமணி நேரமோ ஒரு மணிநேரமோ உங்களுக்கும் எனக்குமான பேச்சுவார்த்தைகள்.“
என்ன இவள் இத்தனை அவசரபடுகிறாள் மணிநேரத்தை துள்ளியமிடுவது பெரும் கவலையில் தள்ளியது நாயகனை.


“சரி தான் அறை மணி நேரத்தில் முடிய போகும் நட்புக்கு எதற்கு என் பெயர் விளக்கம் அது தெரிந்தால் என்ன தெரியாமல் தொலைந்தால் என்ன?? ஏறுங்கள் வண்டியில்“ உதைத்து உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து உர்..உர்..என்று சத்தம் எழுப்பினான்.


இப்போது நிதானமாக கோபத்தை அகற்றி கேட்டாள்.


“தயவுசெய்து சொல்லுங்கள் என் உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கிறது என் லேப்டாப் கிடைக்குமா கிடைக்காதா“


அவனும் தலைக்கு ஏறிய கோபத்தை மறந்து பைக்கை அணைத்தான் இறங்கினான் “ ஓ..உங்கள் உயிர் மேல் அத்தனை அக்கறை இருக்கிறதா? சரிதான் உயிர் இல்லையா அப்படியென்றால் நீங்கள் சிறிது உண்மையை என்னிடம் பேசவேண்டும்.“ அவன் அப்படி சொன்ன நொடி துவாரகா பயந்து போனால் உள்ளுக்குள் பயம் தொன்ற முகமுழுவதும் அச்சம் பாலடையை போல படிந்தது அந்த பாவையிடத்தே
 
Top Bottom