Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold மெளனபெருவெளி - Story

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
அத்தியாயம் 10

என்ன சொல்ல சொல்கிறான். இவன் என்னிடத்தில் எதை நான் மறைக்கிறேன் என்று நினைக்கிறான்.
துவாரகா உள்ளத்தில் பெரிய குழப்பம் தான். நடுவீதியில் நிறுத்தி இரண்டு பக்கமும் வாகனங்களில் பறந்து கொண்டு செல்கின்றார்கள் இத்தகைய சூழலில் நிறுத்தி எத்தகைய கேள்வி கேட்டு கொண்டு இருப்பவனிடத்தே நான் எதை சொல்ல.

"என்ன துவாரகா மீண்டும் சிந்தனையால் சிறையெடுக்கபட்டு விட்டீர்களா?"


நையாண்டி தனத்துடன் அவன் கேட்பதை அவளால் ரசிக்க முடியவில்லை எரிச்சல் கொள்ள தான் முடிகிறது.


"நான் எந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்."


"உங்களுக்கு தெரிந்ததை எனக்கு தெரியாததை"


மீண்டும் மீண்டும் கேட்கிறான் பாரு குற்றவாளியை நிறுத்தி தண்டனை கொடுக்கும் நீதிபதியை போலல்லவா அவனை அவனே நினைத்து கொண்டு வினாவுகிறான். மனம் பிதற்ற வெளிக்காட்டாமல் "உங்களுக்கு தெரிந்ததை என்னிடம் கண்டறிந்ததை முதலில் நீங்கள் சொல்லுங்கள் பிறகு நான் சொல்கிறேன்"இவளும் விடுவது போல இல்லை.


"அது சரி....கிளம்புங்கள்" அவளிடம் கூறியவாரு தனக்கு எதிராக வந்த ஆட்டோவை மறைத்து நிறுத்தி அதில் ஏற சொன்னான்.


"என்ன செய்யுறீங்க! எனக்கு பயமாக இருக்கிறது. நான் எப்படி வீட்டிற்கு செல்வேன்" தயங்கியவாறே நின்றவளை திடீரென கையைப்பிடித்து ஆட்டோவில் ஏற சொல்லி வற்புறுத்தினான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ஏறிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


" இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்து கொள்ளுங்கள்."என்றவன் ஆட்டோடிரைவரை பார்த்து "கிளம்புங்கள் அவர்கள் சொல்லும் இடத்தில் இறங்கி விடுங்கள் " ஆட்டோவை தட்டினான். ஆட்டோ டிரைவரும் காக்கி உடையை கண்டவுடன் பயபக்தியோடு தலையை தலையை நூறு முறை ஆட்டிவிட்டு வண்டியை கிளப்பினான்.மனமே இல்லாமல் வந்து கொண்டு இருந்தாள். ஆட்டோ டிராவலில் இருக்கும் போதே துவாரகாவின் மொபைல் சவுண்டை எழுப்பியது. ஸ்கீரினீல் உபேதா பெயர் பளீச்சிட்டது. அட்டன் செய்தாள் உபேதாவிடம் இருந்து ஸ்வரம் இல்லாமல் குரல் எழுந்தது.

"துவாரகா என்ன ஆகிவிட்டது நீண்ட நேரமாக டிரை செய்து கொண்டே இருக்கிறேன் நீ எடுத்தபாடில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது."
தனக்கே என்ன செய்வது என்று புரியாமல் தான் திக்கு திசை இன்றி திரியும் பறவையை போல விழித்து கொண்டு பயணம் செய்கிறாள். இவள் என்ன அவளை ஆறுதல் படுத்துவது.


"கொஞ்சம் மூச்சு விட்டு பேசடி! நானே ஆயிரம் குழப்பத்தில் இருக்கிறேன்."


"நீயே ஆயிரம் குழப்பத்தில் இருக்கிறாயா அப்பறம் நான் எம்மாத்திரம். போச்சு...சொல்லடி...என்னடி ஆனது பெரிய நம்பிக்கையோடு கிளம்பி சென்றாயே அந்த போலிஸ் என்ன தான் சொல்கிறான்"


"சொன்னான் சுரக்காய்கு உப்பு இல்லை என்று!!"


" சரி நான் சொல்வதை கேள் துவாரகா நான் இப்போது பேருந்து நிலையத்திலிருக்கிறேன் நீயும் இங்கே வந்து விடு என் அக்கா பெங்களூருவில் இருக்கிறாள். அங்கே சென்று விடலாம்"


"எலிகளுக்கு பயந்து வீட்டை கொளுத்த சொல்றியாடி"


"அவர்கள் எல்லோரும் முதலைடி...அத்தனை எளிதாக எடை போடாதே.நீ சொல்....அப்பறம் என்ன செய்ய சொல்கிறாய்"


"நான் பார்த்து கொள்கிறேன் நீ எங்கேயும் செல்ல வேண்டாம் வீட்டிற்கு போ"


"இல்லடி.." போன் கட்டானது "ஹலோ..ஹலோ.."துவாரகா இணைப்பை துண்டித்து விட்டால். அது தெரியாமல் உபேதா கத்தி கொண்டு இருக்கிறாள்.


'இவள் போனை துண்டித்து விட்டாலே என்ன செய்வது இப்போது பஸ் ஏறுவோமா இல்லை இவளை நம்பி உயிரை பணையம் வைப்போமா அல்லா நான் என்ன செய்ய..'இப்போது உபேதா மண்டையை பிய்த்து கொண்டு நின்றாள்.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
இடைவிடாது ஒலித்த காலிங் பெல்🤫💔

போகும் பாதையும் தெரியவில்லை அடுத்த கட்டம் என்ன என்பதும் தெரியவில்லையே என்பது போல ஆட்டோவை விட்டு அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து இறங்கினாள் துவாரகா. இருள் சூழ்ந்து இருந்தது ஏதோ என்றும் இல்லாத அமைதி அப்பார்ட்மெண்டில் நிலவியது.

ஆட்டோவை விட்டு இறங்கி காசை கொடுத்து விட்டு நடந்தாள். வாசலில் வாட்ச்மேனை கூட காணவில்லை துவாரகா மனதிற்குள் இனம் புரியாத பயம் உள்ளுக்குள் ஓட. நடந்து வந்து கொண்டு இருந்தவள் எதிரே திடீரென்று தோன்றிய பெண்ணால் தூக்கி வாரி போட்டது துவாரகாவிற்கு. "விஷ்ணுமா..." பயந்து அவளது உடல் நடுக்கம் கண்டது.

"ஏய் துவாரகா என்ன இப்படி பயப்புடுற" சொல்லி சிரித்தாள் அந்த பெண்.

துவாரகா வின் உடல் நடுக்கம் இன்னும் குறையவில்லை." திணறினாள் சிரித்தாள் ஏதேதோ பேசி சமாளிக்க பார்த்தாள்."ஏதோ யோசனையில் வந்தேன் விஷ்ணுமா உங்களை பார்க்கவில்லை அதான்." ஒருவழியாக தன் பயத்தையும் பதற்றத்தையும் வெளிக்காட்டாமல் மூடி மறைத்து விட்டாள்.

"சரி துவாரகா அசோசியேஷன் மீட்டிங் எதிர் அப்பார்ட்மெண்ட்ல வா..."கையோடு அழைத்து போக தயாரானாள்.

"இல்லை....இப்போ தானே வந்தேன் வீட்டிற்கு சென்று ரேப்ரஸ் ஆகிவிட்டு உடனே வருகிறேனே..."தான் டயர்டாக இருப்பதை சொல்லாமல் சொல்ல அதை புரிந்து கொண்டதை போல "சரி..சரி..நீ வா வா நான் முன்னே செல்கிறேன்"என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள். துவாரகா லிஃப்ட் அருகே வந்தாள் அவுட்டாஃப் ஆர்டர் என்ற ஃபோர்ட் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தது.

"ச்ச...இது வேற தொல்லை"திட்டிக்கொண்டே படிக்கட்டுகளில் ஏற தொடங்கினாள். எத்தனை பெரிய நிசப்தம் போருக்கு பின் அமைதியை போலல்லவா இருக்கின்றது. இந்த அமைதியே பாதி பீதியை கிளப்பும் போலவே. மனம் முழுவதும் சிந்தனை வினா எழும்ப நடைபோட்டாள். ஒவ்வொரு படியாக அவள் கடக்கும் போதும் காதருகே பெரும் மூச்சு சத்தம் சீராக ஒலித்தது. அவள் தொண்டை குழிக்குள் எச்சில் இறங்கவில்லை. நடையில் வேகம் காட்டினான். விறு விறு வென்று அவள் ஏறும் அந்த மூச்சு காற்றும் இன்னும் இன்னும் அதிகமாக ஒலித்தது. தன் பிளாட்டை வந்தடைந்தவள் வேகவேகமாக தன் கைபைக்குள் கையை விட்டு துலாவினாள். சாவியை எடுத்தாள். உள்ளே நுழைந்தாள் நூலிலை இடைவெளி தான் கதவை படாரென்று சாத்தினாள்.மூச்சுக்காற்றுக்கு சொந்தமான இரண்டு உருவங்கள் கதவை படார்படாரென்று அடித்தனர்."ஏய் கதவதிற உன்னை கொன்னுடுவோம் பார்த்துக்கோ...திறடி"
ஒருவன் மற்றொருவனிடம் "டேய் தடிமாடு கதவை உடைடா வேலாவேலைக்கு திங்குறல்ல"திட்டினான்.

"அண்ணண் நானும் அதுக்கு தான் டிரை பண்ணிட்டு இருக்கேன் இருன்னே." அவனும் மாங்கு மாங்கு என்று இடித்தான். உள்ளே துவாரகா இறந்து கொண்டு இருந்தாள்.

"டேய்...டேய்... எல்லாரும் வரத்துக்குள்ள முடிச்சிட்டு கிளம்பனும். அவ கழுத்த கரக்கரன்னு அறுத்து எறிஞ்சிட்டு அந்த லேப்டாபோட போயே ஆகணும்டா." ஆவேசத்துடன் வேலைசெய்பனை அவசரபடுத்தினான்.

பயங்கர கோபத்துடன் இடிஇடியேன இடித்தான். மதம் கொண்ட யானையை போல கத்திக்கொண்டே மோதினான்.

'இப்போது என்ன செய்வது இப்போது என்ன செய்வது அய்யோ!' அச்சத்தில் துவாரகா மனது துடித்தது. 'மொபைலை எடுத்து யாரை அழைப்பது... அர்ஜீன்..அவன் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்பானே.ஆங்...இப்போது இதை தவிர வேறு வழியில்லை அவனை அழைத்து தான் ஆக வேண்டும்.. ' அவள் இராவணன் எண்ணை அழுத்தி காதில் வைக்க காலிங் பெல் சத்தம் அதுவும் யாரோ கைவிடாமல் அடிக்க இதயத்துடிப்பு துவாரகாவிற்கு எகிறியது.
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
ஐந்தாவது அத்தியாயத்தை படித்த எனக்கு . முதலில் இருந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது உங்களுடைய கதை .. வாழ்த்துக்கள்..Jp👍🏽
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
ஐந்தாவது அத்தியாயத்தை படித்த எனக்கு . முதலில் இருந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது உங்களுடைய கதை .. வாழ்த்துக்கள்..Jp👍🏽
நன்றி சகோ ❤️
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
துவாரகாவிற்கு மேல்மூச்சு வாங்கியது அந்த மூச்சு காற்று மிகுந்த உஷ்ணத்துடன் பயத்துடனும் வெளிவந்தது. அவள் சுவசமே நின்று விடும் போல இருந்தது அந்நேரம் பார்த்து சட்டென்று மின்சாரம் வேறு அணைந்தது. இருள் ஒளி சிறிதளவும் இல்லாத அந்த அறை கல்லறையை போல தோன்றியது துவாரகாவிற்கு. அவள் சுவாசிக்கும் சத்தம் மட்டுமே ஒலித்தது கண்கள் திறந்து தான் இருக்கிறாள் பார்வை புலப்படவில்லை. வெளியில் கதவை தட்டியவர்களின் சத்தம் இப்போது இல்லை. அவள் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை ஆணி அடித்தாற்போல அசையாமல் அமர்ந்து இருந்தாள். காதை கூர்மையாக்கி வெளியில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து பார்த்தாள். நிசப்தம்... நிசப்தமே நிலவியது. அமர்ந்து இருந்த இடத்தை விட்டு மெல்ல மெல்ல எழுந்தாள் கைகளால் துலாவினாள். அடியெடுத்து முன்னேறினாள் கதவருகே சென்றவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் கதவை திறப்போமா வேண்டாமா மனதில் நெருடல். என்ன ஆனாலும் ஆகட்டும் கதவு தாழ்ப்பாள் திறக்க துணிகிறாள் அணைந்த மின்சாரம் திடீரென்று வந்து விட உயிரே உரைத்து போகும் அளவுக்கு காலிங் பெல் சத்தம் தூக்கி போட்டது துவாராகாவிற்கு. திறக்க நினைத்தவளுக்கு இப்போது அத்தனை தைரியம் இல்லை கண்கள் கலங்க கால்கள் ஆட்டம் கண்டது. ஆவேசத்துடன் ஒலித்தது அந்த குரல் 'ஏய் துவாரகா ஏன்டி இப்படி பயப்புடுற நீ தைரியமானவள் இன்று என்ன உயிர் தானே போனால் போகட்டும் பயந்து சாவதைவிட எதிர்த்து சாவது மேலல்லவா அம்மா சொல்வாளே காக்கும் பூமாதேவியும் பெண் தான் அழிக்கும் அந்த காளிதேவியும் பெண் தான்னு நீ போராடியவது தோற்று போ எத்தனை பேர் இருப்பார்கள் நூறு பேர் இல்லை ஆயிரம் பேர் இருக்கட்டும் இரண்டு பேரையாவது கொன்று சாகடி' அவள் மனசாட்சி அவளுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது. துவாரகாவிடம் அந்த நடுக்கம் இல்லை தெளிந்த வானமானால் மாசு இல்லா ஆழியானால் போராடி துவாரகா போராடு உள்ளுக்குள் தன்னையே உத்வேகித்தவள் டீப்பாய் மீது இருந்த கத்தியை எடுத்தாள் காலிங் பெல் சத்தம் நின்றபாடில்லை. கண்கள் சிவந்து கோபம் கொப்பளிக்க காளியம்மன் போல கதவை திறந்தாள் ஆள் உயரத்திற்கு கத்தியை ஓங்கினாள். ஓங்கிய கத்தி அந்தரத்தில் ஓய்வுபெற்றது ஏன் தலை துண்டாக வில்லை ஏன் அவர்கள் குடல் சரியில்லை என்ன நடக்கிறது.
கத்தி கைகளை பிரிந்து தரையில் வீழ்ந்தது. மலைமலையாய் கண்ணீர் தக்கசமயத்தில் காக்க வந்த ஆபத்துதவியோ இவன் பிள்ளையை ஈன்று மறுபிறவி கொள்வாளாமே அன்னை இந்த சேயை காக்க வந்த தாயோ இவன்.தன்னையே மறந்தவள் தன் அம்மா தான் அவன் என்னில் விழும் சிறு காயத்திற்கு கூட துடித்து ஓடோடி வருவாளே அந்த அம்மா இவன் பாசமிகுதியால் கட்டிக்கொண்டாள்.​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
அவன் மனமும் அசுத்தபடவில்லை இரை தேடி அலையும் பருந்துகளிடம் இருந்து தான் ஈன்ற குஞ்சுகளை காக்க போராடுமே தாய் கோழி தன் இறக்கைகளுக்குள் பதுக்கி கொள்ளுமே அது போல அவனும் துவாரகாவை மார்போடு இணைத்து கொண்டான்.


அந்த நிமிடம் அவனுக்குள் ஓடிய விஷயம் இவள் என்னவள் எனக்கானவள் காப்பேன் கண்ணே நரிகளிடம் இருந்து உன்னை.
துவாராகவின் நடுக்கம் இன்னும் குறைந்த பாடில்லை அவளின் அதிவேக இதயத்துடிப்பு பிணைந்து இருந்த போது அவன் இதயத்தையும் அதிர செய்தது.இணைப்பில் இன்னும் இன்னும் இறுக்கம் பெருகியது.

அதிகாலை பொழுது கன்னிநிலா கரைந்தாள் கதிரவனின் ஆயிரம் கைகள் பட்டு. இரவு கூடடைந்த பறவைகள் எல்லாம் பிழைப்பு தேடி பறக்க தொடங்கி விட்டன. தன் கட்டிலை விட்டு எழமனமில்லாமல் திரை இன்றி நின்ற ஜன்னல் வழியாக வானத்தை வெறிக்கபார்த்த படி கிடந்தாள். இந்த சோம்பல் அவள் உடலுக்கு இல்லை பயத்திலும் பதற்றத்திலும் பழுதாகி போன மனதிற்கு.


என்ன செய்து எதை செய்து இதை சரிசெய்ய போகிறோம் என்ற எண்ணம் அவள் கண்களை மூடகூட விடவில்லை போலும் கண்கள் செக்கச்சிவந்து போய் இருந்தது.
காக்கை ஒன்று விண்டோ சன்சேட் மீது அமர்ந்து விடாமல் கரைந்து கொண்டே இருந்தது. அது கரைவது கூட அழுகுரலை போல ஒலித்தது அவள் காதுகளுக்கு. கண்களில் உருண்டு நின்ற கண்ணீர் அதை அவள் துடைக்க விரும்பவில்லை கண்களை மூடி கொண்டாள்.
காலிங் பெல் சத்தம் டிங்.. டிங்... டிங்.. ஒலித்தது.லோடக்..கதவு தாழ்ப்பாள் திறக்கப்பட்டது "யார் நீங்க யார் வேணும்..."கேட்டவனிடம் மறுகேள்வி கேட்டான் எதிரே நின்றவன்.

"டேய் *த்தா அத நான் கேட்கனும்டா இது என் வீடுடா யார்டா நீ." வெளியில் இருந்து வந்தவனின் குரல் ஆவேசமாக எழுந்தது. உள்நின்று பதில் சொன்னவன் அமட்டலாக சிரித்தான்.


'மேல் சட்டை கூட இல்லாமல் விரிந்த மார்பு தெரிய வெட்கம் இல்லாமல் சிரித்து கொண்டு நிற்கிறானே யார் இவன்' வெளியில் நின்றவன் மனம் புதிர் போட்டது கைகள் பரபரத்தன உள்ளே நிற்பவனின் கன்னம் பழுக்க வைக்க வேண்டும் என்று.


"அர்ஜீன்..... உள்ள வாங்க." பலமான வரவேற்பு கொடுத்தான். அர்ஜீனை வரவேற்று விட்டு ஒய்யாரமாக முன்னே அவன் உள்ளே சென்றான். அர்ஜீன் அதே கோபத்துடன் உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்து எதையோ தேடினான்.


ஹாலில் தேடி விட்டு நேராக படுக்கை அறைக்கு சென்றான் அர்ஜீன்.


அய்யோ! அவன் கண்கள் பார்ப்பது உண்மை தானா. வெடிவைத்து தகர்க்க பட்ட பாறையை போல அவன் மனம் சுக்குசுக்கு ஆனது. கோபம், வருத்தம் எல்லாம் பீரிக்கொண்டு வந்தது. மலையளவு எழும் கோபம் அவளை கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்று தோன்றியது. வியர்வை வழிய சீற்றம் கொண்டு நின்றவனை பாராமல் ஆடைகழைந்த பால்நிலா அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தது. மாரோடும் முழங்காலோடும் மூடிக்கிடந்த போர்வைக்குள் அல்லி மலர் நெளிந்தது. கருமேக கூந்தல் கட்டிலோடு தவழ்ந்து கொண்டிருக்க. விழித்திரை நீக்கினாள் துவாரகா அலைஅலையாய் உருவம் எதிரே நிற்பது யார் தெளிவுபடவில்லை "இராவணா...எழுந்துட்டியா"உலரல் வார்த்தைகள் கேட்ட அர்ஜீன் காதுகளுக்குள் ஆசிட் ஊற்றியதை போல எரிச்சல் கொண்டது "ஏய் தேவடியா"கட்டிடமே இடிந்து விழும்படி கத்தினான்.கண்களில் கண்ணீர் பழுத்து நின்றது அர்ஜீனுக்கு. குரல் தளதளத்து பேச்சு எழவில்லை. அர்ஜீனின் கத்தல் சத்தம் கேட்டு எழுந்தாள் துவாரகா நலுவி போக இருந்த போர்வையை இழுத்து பிடித்து கொண்டு பதைபதைக்க நின்றாள். 'எத்தனை கேவலமான செயல் செய்துவிட்டு தைரியமாக நிற்கிறாள்.'தலையை திருப்பினான் அர்ஜீன் இராவணன் தெனவட்டாக டிரெஸ்ஸிங் டேபிளோடு ஒட்டி நின்றான் அவன் இன்னும் மேல் சட்டையை உடுத்தவே இல்லை சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இராவண சிரிப்பு சிரித்தான் "ஆஹா.ஹாஹா...ஹா.."​
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
பற்றி எரியும் அக்னி குண்டத்தில் மேலும் மேலும் எண்ணெய்யை ஊற்றி அல்லவா எறிய விடுகிறது அவன் சிரிப்பு. ராட்சதன் போல நறநறவென்று பல்லை கடித்தான் பிரித்வி. துளியும் அடங்கவில்லை இராவணன் ஆனவ சிரிப்பு ஒன்றை இடிக்க இடிக்க சிரித்தான்.

அர்ஜீனுக்கு பொறுமை இல்லை பொங்கேன்று ஒரு குத்து ஓயாமல் சிரித்த அந்த வாயை உடைத்தான் போலபோலவேன இரத்தம் கொட்டியது. தன் நான்கு விரல்களால் வழிந்து வந்த இரத்தத்தை தொட்டு பார்த்தான் பிசுபிசுப்பு வலி ஒரு பக்கம் புகைத்து கொண்டு இருந்த சிகரெட் கூட சிகப்பானது அரக்கனின் கருவிழிகள் மேலெறியது கையில் பிசுபிசுத்து கொண்டு இருந்த இரத்தம் காய்வதற்குள் வைத்தான் இராவணன் ஒரு குத்து அர்ஜீன் சில்லி மூக்கு உடைந்தது.

"ஆ..ஆ.." மூக்கை மூடிக்கொண்டு குதித்தான் வலியில் துடித்தான்.
மீண்டும் அதிர அதிர சிரித்து கொண்டு புகைத்தான். தான் போர்த்திய போர்வை நலுவி விடுமோ என்று பிடித்து கொண்டு நின்றவளோ வார்த்தையால் பாய்ந்தாள்.

"நிறுத்துங்கள் உங்கள் போரை.." பொங்கி வெடித்தாள் துவாரகா.

"போதும்டி பத்தினி உன் நாடகம்...ச்சை மட்டமான பெண் நீயடி என் அப்பன் தடுத்தானே உன்னை விட இரண்டு வயது பெரியவள்டா இந்த வயதில் சுகமாக தெரிவது ஒரு நேரத்தில் சுமையாக தெரியும் என்றாரே. நான் கேட்டேனா உன் மயக்கத்தில் சுற்றி சுற்றி வந்தேனே.அய்யோ..அய்யோ..." தலையில் அடித்து கொண்டான் பிரித்வி. இரத்தம் ஒரு பக்கம் நிற்காமல் கசிந்து கொண்டு தான் இருந்தது.

"ஏன்டி உனக்கு ஆம்பளை சுகம் பற்றவில்லையா... நான் உனக்கு போதாதா"காட்டு மிராண்டி போல ஜாடை செய்து அவள் மேலே மேலே மோதினான்.

"டேய் பொட்டை அங்கு என்னடா பொம்பளையிடம் மோதல் வேண்டி கிடக்கு என்னிடம் வாடா என்னிடம் வா உன் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறேன்." கைகளை குவித்து அறுவறுக்க தக்க ஜாடையை செய்தான் இராவணன்.

"வாடா..வா.."இவனும் ஆவேசத்துடன் மோத சண்டை முற்றியது.
துவாரகா தடுக்க பாய்ந்தாள் அவளுக்கு வேறு காயம் பட்டது. அழுது தீர்த்தாள் நின்றபாடில்லை" இராவணா நிறுத்து" திடீரென்று பாய்ந்து அவனை கட்டி பிடித்து சுவற்றோடு அணைத்து தடுத்தாள்.

"உனக்காக உனக்காக... நிறுத்துகிறேன் இல்லை அவன் குடலை உருவி மாலை போட்டு விடுவேன்."

தலையில் கைகளை குவித்து கொண்டு கட்டிலில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதான் பிரித்வி.
அவன் அருகே சென்றவள் தரையில் முட்டி போட்டு அமர்ந்து தன் இடக்கையால் அழுதுகொண்டு இருந்தவன் தாடையை பிடித்து தன்னை நிமிர்ந்து பார்கக வைத்தாள்‌.
பிரித்வி கண்களை இறுக்கி மூடிக்கொண்டு "கசம்... கசம்....." என்றான்.

துவாரகா சிரித்தாள் " பிரித்வி என்னை பார் என்னை பார்....நான் கசம் தான் பிரித்வி. என்னை அறியாமல் உணர்ச்சி மிகுதியால் தவறு இழைத்து விட்டேன். மன்னிக்ககூடாதா என்னை மன்னிக்ககூடாதா??" அது கெஞ்சல் இல்லை என்னவித உடல் மொழி குழப்பம் தான்.

"ஏன் பிரித்வி நீ இன்று வந்தாய் நான் அறிந்தேனா நீ வருவாய் என்று...ஓ.. விஷ்ணு அம்மா தான் உன் இன்பார்மர் ஆச்சே அவள் சொன்னாளா உன் வீட்டில் எவனோ குடித்தனம் நடத்துகிறான் என்று." மூடி கிடந்த கண்களை திறந்தான் எதிரே இருந்தவள் இப்போது இல்லை கண்கள் தேட அவளோ அவனுக்கு நிகராக அமர்ந்து இருந்தாள்.

அவளுக்குள் தோன்றும் அலைஅலையான நினைவுகள் ஆக்ரோஷமாக அலைகளை போல ஓங்கி ஓங்கி அடித்தது .

காதல் கொஞ்சும் கார்காலம்
கவிபாட வரும் நிலவு
மந்திரம் செய்கிறாள் மங்கை
மழுங்கி போகும் ஆண் மூளை
வதைக்கும் இடையில் வாழ்விழந்தேன்
வதனம் பற்றி சுயமிழந்தேன்
கரையான் போல ஏறிமொய்க்கும்
பார்வை கசியும் வெளிச்சத்தை
வெறுக்கடிக்கிறது விரலை பற்றி
பிரபஞ்சம் காணோம் புது
பிரபஞ்சம் காணோம் வா....

"அய்யோ போதும் பிரித்வி புல்லரித்து விட்டது நம் காதல் செய்ய தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது."

"அது தாண்டி சொல்றேன் ஆறு மாதம் ஆகிவிட்டது முத்தத்தோடு நிற்கிறாய்"

"வாயை மூடுடா....."

"நீ என்ன வேணும்னாலும் சொல் நான் இன்று விடப்போவதில்லை"

ஆள் அரவமற்ற வீட்டின் மேல் மாடியில் காதலில் மூழ்கி போய் கிடக்கும் இரண்டு பேரை கண்காணிப்பு செய்தது நிலவு. "பிரித்வி அத்தைக்கு மருந்து கொடுக்கவேண்டும் நீண்ட நேரம் ஆகிவிட்டது நான் மேலே வந்து மாமா வரும் நேரம் வந்து விட்டது."

"போதும் நிறுத்து எல்லோரையும் பார்க்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் செய்ய வேண்டும் எனக்கு...எப்போது நேரம் ஒதுக்க போகிறாய். சிறு முத்தம் மட்டுமாவது??"

"நீ முத்தம் கேட்பாய் என் முந்தானை பிடிப்பாய்"

"பிடிப்பேன் டி.. அப்படி தான் செய்வேன் " துளிர்த்த மீசை பிரித்விக்கு துடித்தது. அரவம் போல இறுக்கி கட்டி கொண்டான் இடைக்குள் புகுந்த ஐந்து விரல்கள் பாரப்பட்சம் பார்க்காமல் மேலே கீழே என்று ஓடி விளையாண்டது. மூச்சு முட்டும் முத்தம் கசிந்தோடும் கண்களில் கண்ணீர் அவளோ அதை துடைக்க விருப்பமில்லாமல் துவண்டு கிடந்தாள். ஆணின் ஆதிக்கம் மோலோங்கியது துவாரகாவால் விடுபடவும் முடியவில்லை தவிக்கிறாள் தரையில் விழுந்த மீனாய்.

"ஏய் துவாரகா என்ன காரியம் செய்கிறாய்டி" மற்றோரு குரல் பின்னால் இருந்து ஆக்ரோஷமாக எழுந்தது. என்றும் அவள் ரசிக்கும் நிலவு அவளை உலர்த்தும் அந்த குளிர்ச்சி இன்றோ காட்டுதீயை போல அவளை சுற்றி எறிந்தது.
 

Kiruba Jp

Member
Messages
39
Reaction score
36
Points
18
ஆவேசமாக வந்த குரல் கேட்டதும் பிரித்வியும் துவாரகாவும் ஆடிப்போனார்கள் பேச்சு மூச்சு இல்லை. மேகங்கள் களைந்து ஓட நிலவின் வெளிச்சம் இப்போது சீராக வீச ஒளியில் இப்போது தான் அந்த உருவம் தெளிவாக தென்பட்டது அய்யோ...தன் தாயுக்கு பின்னான உறவு அன்பும் அக்கறையும் தந்த உறவு தனது தாய்மாமா..கூனி குறுகி போனால் துவாரகா.அவமானாத்தால் ஏற்பட்ட பதற்றத்தால் கைகால்கள் நடுக்கம் உற்றன தலை சுற்றி வந்தது பழி பாவத்திற்கு ஆளானவளய் போல துடிதுடித்தாள். பிரித்வியிடம் இத்தனை பதற்றம் இல்லை குற்ற உணர்வும் இல்லாமல் நின்றான்.

"நாயே,உன்னை நம்பி உள்ளே விட்டேன் பாரு உன் வேலையை காட்டிட்டு இல்ல?தரித்திரியம் பிடித்தவாளே உன் ஆத்தாகாரி கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சும் ஊருபேரு தெரியாதவன் கூட படுத்து வயித்துல உன்னை வாங்கிக்கிட்டா. அவ இரத்தம் தானடி உனக்கும் உன்னோட சின்னவன்னு கூட பார்க்காம ச்சீ..கருமம்.. வெட்கக்கேடு " தலையில் அடித்து அழுதுகொண்டே சடசடவென படிகளில் இறங்கி கீழே சென்றார் துவாரகாவின் மாமா.

அந்த நிமிடம் பாவம் இந்த பெண்ணின் மனம் என்னன்ன யோசித்தது. நொடிபொழுது கூட இனி இந்த உயிர் என் உடலில் இருக்கக்கூடாது. அய்யோ!! அவள் உடலே அவளுக்கு அறுவறுக்ககூடியதை போல தோன்றியது.

அடுத்த நிமிடமே இப்படியும் யோசித்தால் 'ஏன் நான் சாகவேண்டும். ஏன்? நான் என்ன அப்படி செய்தேன். வயது ஒரு குற்றமா உலகில் இப்படி யாரும் காதலித்தது இல்லையா? இல்லை.... பெண்கள் என்றாலே இந்த ஆண்களுக்கு ஏளனம் தான். அதுசரி கொலைகுற்றவாளியை விசாரிக்கும் போது கூட அவன் பக்க நியாயத்தை கேட்பார்களே. என்னை மட்டுமே குறை சொல்லி விட்டு போகிறாரே பிரித்திவியை கேட்க வில்லையே ஓ..அவன் ஆண்பிள்ளை. பெண்பிள்ளையிடம் அப்படி தானே சொல்லி வளர்கிறார்கள். அவன் ஆம்பள ஆயிரம் தப்பு செய்யலாம் பொம்பள உனக்கு எங்க போச்சுபத்தி. என் அம்மாவையும் இதே நாக்கு தானே குறை சொல்லியது கல்யாணம் ஆன ஆம்பளைய வச்சிருக்கா தேவடியாள்? என்று தூற்றிய வாய்கள் ஏன் ஒரு சின்ன பொண்ண ஏமாத்தி மயக்கி வச்சிருக்கானே என்று அவனை தூற்றவில்லை? ஏனென்றால் அவன் ஆண் என் அம்மா கேவலம் ஒரு பெண் தானே.'விடுகதையை போல விடைதேடி கொண்டு இருந்த மனதை சமாதானம் செய்து நிதானித்து பார்க்கையில் அந்த மொட்டை மாடியில் துவாரகா மட்டும் தனித்து விடபட்டிருந்தாள்.

திடீரென்று எழுந்த அலறல் சத்தத்தை கவனித்தாள் பிரித்வி அழுகுரல் பதற்றத்துடன் அவளும் மாடியை விட்டு கீழே ஓடி வந்தாள். அங்கு நடப்பதை கண்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
'எத்தகைய தவறு இழைத்து விட்டேன் தன் தாயுக்கு ஈடானவளய் இழந்து விட்டேனே. அன்னையாய்,தோழியாய் சிரிக்க கண்டிக்க உறவேன இருந்த ஓர் உயிரை இழந்து விட்டேனே. எத்தகைய காரியம் செய்து விட்டேன் தனியே விட்டு சென்றதால் தான் உயிர் பிரிந்து இருக்குமா இருந்து இருக்க வேண்டும் உங்கள் அருகிலேயே இருந்து இருக்க வேண்டும். அந்த உயிர் கடைசியாக என்ன சொல்ல நினைத்ததோ? பாவி நான் பெரிய துரோகி நான், அத்தை என்னை மன்னித்து விடேன்...' தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

"பொதுமடி உன் நாடகம்? நாடககாரி உன் சந்ததோஷத்திர்க்காக என் பெண்டாட்டியை கொன்று விட்டாயடி. ஒரு மகளை போல இருந்து பார்த்து கொள்வாய் என்றல்லவா நினைத்தேன் நீ எமனாய் இருந்து உயிரை குடித்து விட்டாயடி."

துவாரகாவிற்கு தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. தன் அம்மாவை இழந்த போது அழுதாள் இப்போது அதைவிட பலமடங்கு வலி கூடியது அதன் காரணம் குற்ற உணர்வு. தான் தான் என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடு அவள் நெஞ்சை அடைத்தது.
சொந்த பந்தங்கள் கூடியது. எங்கும் ஒப்பாரியே கேட்டது.. துவாரகா இதையெல்லாம் கேட்டு இன்னும் துடித்தாள்.

பிரித்வியுடம் துவாரகா அடிக்கடி சொல்வாள் ,'நம் திருமணத்திற்கு வீடே சொந்தங்கள் நிறைந்து இருக்க வேண்டும், மகிழ்ச்சியும் குதுகலமும் கூடி இருக்க வேண்டும்' என்று. ஆனால் இப்படி ஒரு நிகழ்வில் எல்லோரும் கூடும் படி ஆகிவிட்டதே.

அத்தையின் சிதைக்கு எரிவூட்டி இன்றோடு பதினாறு நாட்கள் ஓடி விட்டது. வீடே ஓ.. வென்று கிடந்தது. துக்கத்திற்கு வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டார்கள். வீட்டில் உள்ளவர்களால் தான் துயரத்தில் இருந்து மீள முடியாமல் கிடைத்தார்கள்.

ரூமை விட்டு மாமா ஹாலுக்கு வந்த போது துவாரகா சுவரோடு சுவராக அத்தை படத்தை பார்த்து கொண்டே பித்து பிடித்தவள் போல உட்கார்ந்து இருந்தாள். பிரித்வி டைனிங் டேபிள் மீது தலையை சாய்த்து உட்கார்ந்து இருந்தான்.

"ஏய் எழுந்தரி இந்த சணமே என் வீட்டை விட்டு நீ வெளியே போ.. உன்னோடு எந்த நாய் வந்தாலும் அதையும் அழைத்து கொண்டு வெளியே போ. என் சொத்தில் நயா பைசா கிடையாது. " என்று துவாரகாவை பார்த்து கூச்சலிட்டார் மாமா. துவாரகா திரும்பி பிரித்வியை பார்க்கிறாள்.​
 

New Threads

Top Bottom