Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன் ராட்சனாக

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 23
தேவ்வின் எதிரில் அமர்ந்து இருந்தான் மைக்கேல்சன். அவன் முன் பணக்கட்டுகளை அள்ளி வீசினார் தேவ்ஆனந்த் .
அதை எடுத்து ஒவ்வொன்றாக தன் கைகளில் எடுத்து அடுக்கியபடியே மைக்கேல்சன் தேவ்வை பார்த்து பேச ஆரம்பித்தான்.
"ஓ.. வாவ்! தேவ் சார்! வேலை முடிஞ்சும் பாதி பணம் தான் கொடுத்தார் மிஸ்டர் ப்ரசாத்! ஆனா நீங்க வேலை என்னனு சொல்லாமலேயே பணத்தை வாரி இறைக்கிறீங்க? ம்ம்ம் ... வேலை பெரிசா இருக்கும் போலயே சார்! அப்படி நீங்க என்ன வேலை என்கிட்ட எதிர்பார்க்குறீங்க?" – மைக்கேல்சன்
"வேலை எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை மைக்கேல்! எனக்கு உன் மூளை தான் தேவை!" – தேவ்
"என் மூளையா? " என்று சற்று நேரம் யோசித்த மைக்கேல்சன்
"என் மூளை அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு சொந்தமாகாது தேவ் சார்! அதுக்கு இன்னும் பல ரூபாய் கட்டுகளை நீங்கள் அள்ளி வீசனும்!" – மைக்கேல்சன்
"பணம் நோட்டுகளை நான் அள்ளி வீசுறேன்! அதுக்கு பதிலா நீ எனக்கு ஒன்று செஞ்சாகணுமே!" – தேவ்
"புரியலையே சார்! சொல்ல வர விசயத்தை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க! நமக்கு இந்த சுற்றி வளைச்சு பேசுறது லா புரியாது?" – மைக்கேல்சன்
அதை கேட்டு சிரித்த தேவ் நேரடியாக விசயத்திற்கு வந்தார்
"நீ ப்ரசாத்க்கு செஞ்ச வேலை தான் எனக்கும் செய்யணும்! ஆனா கொஞ்சம் வித்தியாசமா?" – தேவ்
"நீங்க என்ன சொல்றீங்க தேவ் சார்! ப்ரசாத் சார்க்கு நான் அப்படி எதுவும் செய்யலையே!" – மைக்கேல்சன்
"ம்ம்ம் உன் நடிப்பு பிரமாதம் மைக்கேல்! ஆனால் பாரு உன்னை பற்றி எனக்கு எல்லாம் தெரியும்! ப்ரசாத்திற்கு நீ எவ்வளவு பெரிய வேலை செஞ்சு கொடுத்துட்டு வந்துருக்கேன்னும் தெரியும்! அதே தான் எனக்கும் செய்யணும்" என்று அவர் கூற மைக்கேல்சன் அவரை திகைப்பாக பார்த்தான்.
"உன் வேலை என்னனு நான் இன்னும் சொல்லலையே மைக்கேல்! வா.. என் கூட" என்று கூறிய தேவ் மைக்கேல்சன்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வினய் சடலம் வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்த மைக்கேல் தேவ்வை குழப்பமாக பார்த்தபடி "சார்! இது..." - என்று மைக்கேல்சன் இழுக்க
"நீ நினைக்குறது சரிதான் மைக்கேல்! இது தான் வினய்யின் உண்மையான சடலம்" – தேவ்.
"ஓ! நோ! அப்ப அங்க இருக்குறது யாருடைய சடலம்?" – மைக்கேல்சன்.
"அது வினய் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்ட ஒருவனுடைய சடலம்!" – தேவ்.
"ஓ! காட்! இது எப்படி சாத்தியம்? பாடி எப்படி மாறிடுச்சு? இந்த விசயத்தை ப்ரசாத்திற்கு உடனடியா சொல்லியே ஆகணும்" என்று கூறியபடியே மைக்கேல்சன் ப்ரசாத்திற்கு வினய்யை பற்றிய விசயத்தை சொல்ல போனை எடுக்க தேவ் அவனை தடுத்தார்.
"அவசரப்படாதீங்க மைக்கேல்! ப்ரசாத்திற்கு சடலம் மாறுனது தெரியத்தான் போகுது!ஆனால் அது இப்ப இல்லை! நான் சொல்ற நேரத்தில்!" – தேவ்.
"ஏன் தேவ்? ஏன் அப்படி சொல்றீங்க?" - மைக்கேல்சன்.
அதற்கு பதிலாக சிறிது நேரம் சிரித்த தேவ் "சடலத்தை மாற்றச் சொன்னதே நான் தான் மைக்கேல்" என்று சொல்ல
மைக்கேல்சன் "சார்!..." என்று கூறியபடியே தன் உச்சக்கட்ட அதிர்ச்சியை வெளிபடுத்தினான்.
"நீங்க ஏன் இப்படி செய்யணும்? எப்படி இதை செய்தீங்க தேவ் சார்? - மைக்கேல்சன்
மைக்கேல்சன் அப்படி கேள்வி கேட்டதும் சடலத்தை மாற்றிய கதையை விளக்க ஆரம்பித்தார் தேவ்.
வினய் இறந்ததை அறிந்து கொண்ட தேவ் ப்ரசாத்தின் அழுகையை , ப்ரசாத் மகனை பிரிந்த வலியை தான் கண் குளிர காண வேண்டும் என்பதற்காக தன் செக்ரட்ரி அஜய்க்கு தொடர்பு கொண்டு கேட்க
அவன் அவரிடம் வினய்யை உயிரோட மாற்ற ப்ரசாத் மைக்கேல் உதவியால் முயன்று கொன்று இருப்பதாக தகவல் தெரிவித்தான். அதை கேள்விப்பட்ட தேவ் சற்று நேரம் யோசித்துவிட்டு அஜய்யிடம் பேசினார்
"அஜய் நான் சொல்றத கவனி.. எக்காரணம் கொண்டும் ப்ரசாத்திற்கு வினய்யின் சடலம் கிடைக்க கூடாது! நீ என்ன செய்ற வினய் பாடியை ப்ரசாத்திற்கு தெரியாமல் இங்க கொண்டு வர முயற்சி செய்ற. அதுக்கு பதிலா அவனை மாதிரியே ரிசம்பிள் ஆகுற மாதிரி எதாவது சடலம் கிடைக்குதா பாரு, சடலம் கிடைச்ச உடனே எனக்கு தெரிவிக்கணும்! கிடைச்சதும் ஜஸ்ட் வினய் பாடியை இடம் மாற்றி வச்சிடு" என்று தேவ் அஜய்யிடம் சொல்லிவிட்டு போனை வைக்க சற்று நேரத்தில் மறுபடியும் கால் செய்தான் அஜய்
"சார்! நம்ம வேலை ஈஸியா முடிஞ்சிரும் போல இருக்கு சார்! வினய் கார் ஏற்றி கொன்றவனும் வினய்யும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்காங்க! இரண்டு பேர் முகமும் சிதைஞ்சு போயிருக்கு! உற்று பார்த்தால் ஒழிய அவங்க இரண்டு பேரும் வேறு வேறுன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவன் பேர் யவன் ன்னு சொன்னாங்க" என்று அவன் சொல்ல தேவ் அவனை பாராட்டினார்.
"வெல்டன் மைபாய்! அப்ப வேலை சுலபமாகிடுச்சு! வேகமாக யவன் சடலத்தையும் வினய் சடலத்தையும் மாற்றி வச்சுட்டு வினய் சடலத்தை இங்க கொண்டு வா! குயிக்!" என்று தேவ் சொல்ல அஜய் அவர் சொன்னதை செய்யச் சென்றான்.
பூங்குன்றன் யவன் பாடியை வாங்க போலீஸிடம் பார்மாலிட்டிஸ் பேசிக் கொண்டிருக்க அவருக்கு தெரியாமல் இங்கு பாடி மாற்றப்பட்டது.
இதை அறியாத பூங்குன்றன் யவனுக்கு பதில் வினய்யின் சடலத்தை மாற்றி வாங்கிக் கொண்டு சென்று வினய்க்கு இறுதி காரியங்களை செய்து அவனை புதைத்துவிட்டு வந்தார்.
அவர் சென்றதும் வினய்யை புதைத்த இடத்தை தோண்டி வினய்யின் சடலத்தை வெளியே எடுத்து தேவ்வின் இடத்திற்கு அதை கொண்டு வந்தனர் தேவ்வின் ஆட்கள்.
இதை தேவ் சொல்லி முடிக்க மைக்கேல்சன் அதை கேட்டு எச்சில் விழுங்கினான்.
அதை பார்த்த தேவ் சிரித்தபடி மேலே தொடர்ந்தார்.
"எதற்காக இது எல்லாம் செய்றேன்னு கேட்டலே!" - தேவ்.
அதற்கு மைக்கேல்சன் 'ஆம்' என்று தலையசைக்க தேவ் பழிவெறியோடு பேசினார் "எனக்கு ப்ரசாத் உயிரோட தினம் தினம் சாகணும்! தன் மகனை நினைச்சு அவன் தினமும் நரக வேதனை அனுபவிக்கணும்!" தேவ் மேலும் தொடர்ந்து பேசினார் "ப்ரசாத்தின் மகன் சாத்தானா மாறணும்! மனிதர்களை கொல்லும் அரக்கனா மாறணும்! அதை பார்த்து ப்ரசாத் தினமும் கண்ணீர் வடிக்கணும்".
அதற்கு மைக்கேல்சன் புரியாமல் அவரை பார்க்க "ஓ! அதற்கு நான் என்ன செய்ய முடியும் தேவ் சார்!" – மைக்கேல்சன்.
"நீ தான் எனக்கு வினய்யை அரக்கனா மாற்ற உதவி செய்யப் போற.." என்று கூறிய தேவ் வெளியே சென்று விட்டு உள்ளே வர அவரது கைகளில் ஒரு கவர் இருந்தது. அதை மைக்கேலிடம் கொடுத்தவர்.
"பிரிச்சு பார்! நீ என்ன செய்யணும்னு உனக்கே புரியும்!" என்று தேவ் சொல்ல அந்த கவரை பிரித்த மைக்கேல் அதில் இருந்ததை பார்த்து அதிர்ந்தான்.
"ஓ! நோ தேவ்! பகைக்காக இது எல்லாம் செய்றது பாவம்! வேண்டாம் தேவ் சார்!" – மைக்கேல்சன்.
"பணத்துக்காக எதுவா இருந்தாலும் செய்ய ரெடியாக இருக்கும் உன் வாயில் இருந்து பாவம்! புண்ணியம் ன்ற வார்த்தை எல்லாம் வருது மைக்கேல்! ஆச்சரியமா இருக்கு!" – தேவ்.
"நான் பணத்துக்காக எதுவேனா செய்றவன் தான் சார்! ஆனா ஒருவனை ஓநாய் மனிதனா மாற்றுவது பெரிய பாவம்! அவன் மனிதர்களை வேட்டை ஆடுறவன்! அவன் எழுந்தா உலகம் தாங்காது!" – மைக்கேல்சன்.
"உன் கிட்ட உலகத்தை பற்றிய லெட்சர் கேட்க வரவில்லை நான்! நீ இப்ப நான் சொல்றத செய்ற! இல்லை உன்னையும் வினய்க்கு ஜோடியா மாற்ற வேறு ஒரு ஆளை நான் பிடிக்க வேண்டி இருக்கும் மைக்கேல்!" என்று தேவ் கத்த மைக்கேல்சன் பயத்தில் அவர் சொல்வதை செய்ய துணிந்தான்.
"ம்ம்ம்... சீக்கிரம் வேலையை ஆரம்பி மைக்கேல்! ப்ரசாத்திற்கு சடலம் மாறிய விசயம் தெரியுறதுக்கு முன்னாடி வினய்யின் உடல் ஓநாய் மனிதனா மாறுவதற்கு வழி செய்யணும்! ப்ரசாத் வினய் பாடியை தேடி வரதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சிருக்கணும்! பூங்குன்றன் கிட்ட ப்ரசாத் போய் பேசி அவன் வினய்யை பாக்குறதுக்குள்ள நம்ம வேலை பக்காவா முடிஞ்சிருக்கணும்" என்று தேவ் கூற மைக்கேல் அதன் படி செய்ய தன் கைகளில் உரையை மாற்றிவிட்டு அந்த கவரை பிரித்து அதில் இருந்த ஓநாயின் தோலை வெளியே எடுத்தான்.
அதை வினய்யின் மேல் போர்த்தப்பட அதை அடுத்து தேவ்வும் மைக்கேலும் ரூமை விட்டு வெளியே வந்தனர்.
"மைக்கேல்! வினய் மேல் போர்த்தப்பட்ட அந்த ஓநாய்யின் தோல் அவன் உடம்பில் ரியாக்ட் பண்ணி அவன் ஓநாய் மனிதனா மாற எவ்வளவு நாள் ஆகும்!" – தேவ்.
"எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் சார்! உறுதியா சொல்ல முடியாது! வெம்பையர் பற்றி தான் ஆராய்ச்சி பண்ணி இருக்கேன்! ஓநாய் மனிதன் பற்றி தெரியாது! வெம்பையருக்கு பிடிக்காத எதிரி தான் ஓநாய் மனிதன்! ஓநாய்யின் தோள் போர்த்தபட்ட ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமா ஓநாய்யாக மாறுவான்னு தெரியும்! ஆனால் இப்ப தான் நேரடியாக பார்க்கப் போறேன்! ஆனா சார்! இது ரொம்ப பாவம் சார்!" – மைக்கேல்சன்.
"அப்படியா! இருந்துட்டு போகட்டும்! என் பையனை கொன்னவன் நிம்மதியா வாழக் கூடாது! இந்த தேவ்வை பகைச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு அந்த ப்ரசாத்திற்கு புரியட்டும்!" – தேவ்.
அதற்கு மைக்கேல்சன் ஏதோ சொல்ல வர தேவ் அவனை இடைமறித்தார்.
"மைக்கேல் தேவை இல்லாத பேச்சு எதற்கு விசயத்திற்கு வா! அவன் ஓநாய் மனிதனா மாறிட்டான்னு நாம் எப்படி தெரிஞ்சுக்குறது! – தேவ்
"சார்! அவன் ஓநாய் மனிதனா மாறிட்டா அவன் உடம்பு முழுவதும் முடிகள் முளைக்கும். அந்த முடிகள் அவன் புதைத்த இடத்தில் பரவலா கிடைக்கும் . அவன் காலடி தடம் ஒரு ஓநாய்யை ஒத்து இருக்கும்! அதுமட்டுமல்ல அவன் சாதாரண மனிதர்களோட சாதாரண மனிதனா இருந்தாலும் ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும் அவன் ஓநாய் மனிதனா உருமாறுவான். அப்படி உருமாறிட்டா அவன் அந்த இரவுகளில் அவன் கண்களில் படுற ஜந்துகளில் இருந்து மனிதர்களை வரை வேட்டையாடுவான்." – மைக்கேல்சன்.
ம்ம்ம் குட் இன்டிரஸ்டிங் மைக்கேல்! வினய் வேட்டை ஆடப்போறத பார்க்க நான் ஆவலா இருக்கேன் மைக்கேல் – தேவ்.
சார்! உங்களுக்கு விசயத்தோட சீரியஸ்னஸ் புரியல! அவன் உங்களை கூட வேட்டை யாட தயங்க மாட்டான்! – மைக்கேல்சன்.
"அதை நான் பார்த்துக்குறேன் மைக்கேல்! பணம் தேவையானதை எடுத்துக்கோங்க! இந்த விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்! யாருக்காவது தெரிஞ்சது நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று தேவ் மைக்கேல்சன்னை மிரட்டி அனுப்பி வைத்தார்.
*******
இங்கு விஜயனிடம் ப்ரசாத் பேசிக் கொண்டிருந்தார்
"விஜயன் இது என் பையன் கிடையாது!"– ப்ரசாத்.
"என்ன சொல்றீங்க ப்ரசாத்!" – விஜயன்.
"ஆமா விஜயன்! எங்கேயோ தப்பு நடந்து இருக்கு!" என்று கூறியபடி வெளியே வந்த ப்ரசாத் தன் ஆட்களை அழைத்தார்.
அவர்கள் வந்தவுடன் கோபமாக அவர்களிடம் பேச ஆரம்பித்தார் ப்ரசாத் "வினய் சடலத்தை கொண்டு வரச் சொன்னா? என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க? இது வினய் இல்லைடா! வேறு ஒருவனுடைய சடலம்? இவன் எப்படி இங்கே வந்தான்.?" – ப்ரசாத்.
"நாங்க வினய் சடலம் கேட்ட போது இத தான் சார் கொடுத்தாங்க? எங்களுக்கு எப்படி இவன் இங்க வந்தான்னு தெரியாது சார்!" – அடியாள்.
அதை கேட்டு கோபம் கொண்ட ப்ரசாத் "யூ ராஸ்கல்!" என்று அவனை அறைந்தார்.
"என்னடா பேசிட்டு இருக்க! என் மகன் சடலத்தை உடனே தேடி கோண்டு வாங்கடா!" என்று கூறி அவர்களை அனுப்பி வைத்த ப்ரசாத் தன் தலையில் கை வைத்தபடியே அமர்ந்துவிட்டார்.
அந்த அடியாள் மேலும் எதோ சொல்ல வர அவர்கள் நிற்பதை பார்த்த ப்ரசாத் "நீங்கள் இன்னும் போகலயாடா!" என்று அந்த அடியாட்களை பார்த்து கத்த , அவர்கள் பயத்தில் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் "வினய்! மை சன்!" என்று தரையில் அமர்ந்து அழுதார் ப்ரசாத்.
அவர் அழுவதை பார்த்த விஜயன் அவர் அருகில் வந்தார்.
"மிஸ்டர். ப்ரசாத்! நடப்பதெல்லாம் நன்மைக்கே! ஜஸ்ட் லெட் யூவர் சன் இன் பீஸ்! அவனுக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம் ப்ரசாத்" – விஜயன்.
"அப்ப இவனை என்ன பண்றது விஜயன்! வெம்பையர் ரத்தம் அவனோட உடம்பில் இந்நேரம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கும்! அவன் கொஞ்சம் கொஞ்சமா வெம்பையராக ஆக மாறிட்டு இருப்பான்" – ப்ரசாத்.
"ம்ம்ம்... எனக்கு உங்க நிலைமை புரியுது ப்ரசாத்! ஆனால் நடந்து முடிந்த விசயங்களை பேசி என்ன ஆகப் போகுது! நடந்து முடிந்த விசயத்தை நம்மால் மாற்ற முடியாது! இனி நடக்கப் போறதை பற்றி யோசிங்க ப்ரசாத்! சில விசயங்களை ஏற்க நம்மளை நாம் தயார் படுத்தி தான் ஆகணும்! இப்ப நம்மகிட்ட ஒரே வழி உங்க சன்னை புதைச்சிட்டு அவன் சாவை நீங்க ஏத்துக்குறதுதான்! இவனையும் மனிதனா மாற்ற வழி பாருங்க ப்ரசாத்! உலக நியதியை மாற்ற முயற்சி செய்தால் நாம் தான் அதன் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்!" – விஜயன்
"இவனை மனிதனாக மாற்ற என்ன பண்ணனும்! இவன் எழுந்தா இவன் என்கிட்ட கேட்குற கேள்விக்கு இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது விஜயன்!" - ப்ரசாத்!
"இந்த பிரச்சனைக்கு நான் ஒரு நல்ல தீர்வோட வர்றேன் ப்ரசாத்! இவனை மனிதனா மாற்ற நான் எதாவது வழி கிடைக்குமான்னு முயற்சி செய்றேன்! எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ரசாத்!" என்று விஜயன் கூறி அவரை சமாதானப்படுத்திவிட்டுச் செல்ல
இங்கு ப்ரசாத்தும் தன்னை தேற்றிக் கொண்டு யவன் விழிப்பதற்காக காத்திருந்தார். இடையில் வினய்யின் சடலத்தை தேட முயற்சியும் செய்து கொண்டிருந்தார்.
*******
அந்த ரூமின் உள்ளே இருட்டாக இருக்க தன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடியே உள்ளே சென்ற மைக்கேல்சன் வினய்யின் சடலத்தின் மேல் அவன் உடம்பு கெடாமல் இருக்க சில திரவங்களை தெளித்தான். பின் உடலின் மேல் இரத்த துளிகளை தெளித்தான்.
அதன் பின் அவன் சடலத்தை ஓநாய்யின் தோல் கொண்டு போர்த்திவிட்டு, அதை தொடர்ந்து அவன் சடலத்தின் மேல் சில செடிகளை வைத்து அவன் முகத்தை மூடினான் மைக்கேல்சன்.
சற்று முன்னர் வினய்யின் சடலத்தின் அருகில் மைக்கேல்சன் செய்த விசயங்கள் ஒவ்வொன்றையும் தன் ரூமில் உள்ள கேமிரா மூலம் ரெக்காட் செய்து அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் தேவ்!
'ப்ரசாத் என் வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டேன்' என்று தனக்குள் கூறியவர் தன் செக்ரட்ரி அஜய்யை போனில் அழைத்தார்.
"என்ன அஜய்! ப்ரசாத்திற்கு பாடி மாறிய விசயம் தெரிய ஆரம்பிச்சிருச்சா!" – தேவ்
"ஆமா! சார்! அவங்க அடியாட்கள் வினய் சடலத்தை தேடிட்டு இருக்காங்க" – அஜய்
"குட்! நீ இப்ப என்ன பண்ற வினய்யின் சடலத்தை பூங்குன்றன் புதைத்த இடத்திலேயே சவப்பெட்டியோட புதைச்சிடுற! அதுமட்டுமில்ல அங்க என்ன நடக்குதுனு எனக்கு தகவல் சொல்லிட்டே இருக்க" என்று தேவ் சொல்ல அஜய் தேவ் சொல்லியபடியே வினய்யின் சடலத்தை புதைத்துவிட்டு வந்தான்.
அங்கு ப்ரசாத்தின் ஆட்கள் மருத்துவமனையில் விசாரித்து பின் அங்கங்கே விசாரித்து வினய்யின் சடலம் பூங்குன்றனிடம் இருக்கலாம் என ப்ரசாத்திற்கு தகவல் கொடுக்க ப்ரசாத் அங்கு விரைந்தார்.
திடீரென்று ப்ரசாத்தை தன் வீட்டில் பார்த்த பூங்குன்றன் திகைத்தார் .
ஆனால் ப்ரசாத் அதை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடியே பூங்குன்றனிடம் பேச ஆரம்பித்தார்.
"என்ன பூங்குன்றன்! வீட்டிற்கு வந்தவங்களை வாங்கனு கேட்காம திகைச்சு போய் நிக்குறீங்க?" – ப்ரசாத்
ப்ரசாத் அப்படி கேட்டதும் திகைத்த பூங்குன்றன் "வா...ங்க சார்!" என்று தடுமாற்றத்தோடு சொல்ல அதை கவனித்த ப்ரசாத் மேலே தொடர்ந்தார்.
"ஓகே பூங்குன்றன்! சுற்றி வளைக்காம நேரா விசயத்திற்கு வரேன்!" என்று ஆரம்பித்த ப்ரசாத் வினய் மற்றும் யவனின் சடலம் மாறியது அதனை அடுத்து தான் யவனை வெம்பையராக மாற்றியது. அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல அதை கேட்ட பூங்குன்றனுக்கு மூச்சு வாங்கியது.
"சார்! என் பையனுக்கு நீங்க பெரிய துரோகம் பண்ணிட்டீங்க" – பூங்குன்றன்
"யா! ஐ நோ! ஆனால் எதுவும் நான் தெரிஞ்சு செய்யல! என்னை அறியாம நடந்தது" என்று மேற்கொண்டு பேச முயன்ற ப்ரசாத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு தன்னை சமன் செய்து கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்
"பழசை பற்றி பேசி என்ன ஆகப் போகுது பூங்குன்றன். நான் வந்த விசயத்தை உங்களுக்கு சொல்லாம வேற விசயங்களை பேசிட்டு இருக்கேன் பாருங்க
நான் இங்க வந்ததே உங்களை உங்க மகன் கிட்ட கூட்டிட்டு போகத்தான்! அதுமட்டுமில்லை நான் என் பையனின் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்தனும்" என்று ப்ரசாத் கூற
பூங்குன்றன் அவரை வினய் புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு யாருமற்ற இடத்தில் தன் மகன் சாதாரணமாக புதைக்கப்பட்டிருக்க அதை பார்த்த ப்ரசாத் கண்ணீர் வடித்தபடியே பேசினார் "உன் சடலத்தை கூட நான் என் கையால் புதைக்க முடியாத பாவி ஆகிட்டேன்டா நான்!" என்று கூறி தன் கையில் இருந்த பூச்சண்டை அவன் கல்லறையில் வைத்துவிட்டு சென்றார்.
அப்போது பூங்குன்றன் அருகில் வர அவரை பார்த்த ப்ரசாத் "யவன் சடலத்தையும் அடக்கம் செய்ய நான் ஏற்பாடு செய்றேன் பூங்குன்றன்" என்று கூறிய ப்ரசாத் இங்கு பேசிக் கொண்டிருக்க விஜயன் போன் செய்தார். அதை எடுத்து பேசிய ப்ரசாத் சந்தோசத்தில் மிதந்தார்
"ஓ! குட் விஜயன்! நான் அதற்கு ஏற்பாடு பண்றேன்!" என்று அவரிடம் கூறிய ப்ரசாத் பூங்குன்றனிடம் திரும்பினார் .
"ஓகே பூங்குன்றன்! என் சன் புதைச்சது புதைச்சதாகவே இருக்கட்டும்! நான் யவன் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு பண்றேன்! வெளியில் இருந்து பாக்குறவங்களுக்கு அவன் வினய்யாகவே இருக்கட்டும்" என்று கூறிய ப்ரசாத் அபேய்யை அழைத்தார்
"அபேய்! வினய் இறந்து போனதை தெரிவிக்க ஏற்பாடு பண்ணு! அவன் இறுதி சடங்குகள் முடிஞ்சதும் எல்லார்க்கும் நாம தெரியப்படுத்தலாம்" என்று ப்ரசாத் கூற அதற்கு அபேய் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
விஜயன் சொன்னதை அடுத்து யவனின் ரூமின் உள்ளே ஒரு சில்வர்சிலுவையை ஏந்திச் சென்ற ப்ரசாத் அவன் சவப்பெட்டியின் மேல் சிலுவையை வைத்துவிட்டு தன் ஆட்கள் கொண்டு அந்த பெட்டியை தூக்கிச் சென்றார்.
அந்த சவப்பெட்டியை ஒரு இடத்தில் புதைத்து, அவன் கல்லரையின் மேல் வினய் ப்ரசாத் என்ற பெயர் பொறிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தில் புனித நீர் தெளிக்கப்பட இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் பூங்குன்றன்.
யவனை புதைத்துவிட்டு வந்த ப்ரசாத் தன்னை தேற்றிக் கொண்டு பூங்குன்றனிடம் திரும்பினார்.
"ஓகே பூங்குன்றன்! என்னால் உங்க பையனுக்கு இது மட்டும் தான் செய்ய முடிந்தது! இந்த ஏற்பாடுகளுக்கு மேல் அவன் வெம்பையரா மாறி வெளி வர முடியாது!" – ப்ரசாத்
அதை கேட்ட பூங்குன்றன் அதை ஏற்று தன் வீட்டிற்குச் சென்றார்.
இங்கு அபேய்க்கு போன் செய்தார் ப்ரசாத் "அபேய்! நான் சொன்ன மாதிரி பிரஸ் மீட்டிங்கு நாளை ஏற்பாடு செய்! நம்ம வினய் இறந்த விசயங்களை சொல்லியாகணும்" என்று அவனிடம் பேசிவிட்டு திரும்பிய ப்ரசாத் நாட்காட்டியை பார்க்க அதிர்ந்தார்.
மைக்கேல்சன் கூறிய ஒரு மாத காலம் முடிந்திருந்தது. அதை கண்ட ப்ரசாத்திற்கு பயத்தில் முகம் வேர்த்தது.
வினய்யின் இறப்பு! அதை தொடர்ந்து சடலம் மாற்றப்பட்டது! வினய்யின் சடலம் தேடியது என்று சுமார் ஒரு மாத காலம் நிறைவு பெற்று இருப்பதை அப்போது தான் உணர்ந்தார் ப்ரசாத் வினய்யின் சடலத்தை தேடி அலைஞ்சதில் யவனை பற்றி மறந்து போயிட்டேன்! விஜயன் சொன்ன மாதிரி செஞ்சதால் அவன் அந்த சிலுவையையும், நீரையும் தாண்டி வர முடியாது என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு படுக்கைக்கு சென்ற ப்ரசாத் தூங்க முயற்சிக்க மணி 12 ஆனதை பறைசாற்றும் விதமாக கடிகாரத்தில் மணியடிக்க திடீரென்று எழுந்த ப்ரசாத் தண்ணீர் குடிக்க அருகில் கை வைக்க அவர் எதிரில் இருட்டில் ஒரு உருவம் மங்கலாக தெரிந்தது.
அதனை அடுத்து தன் அருகில் இருந்த லைட்டை ப்ரசாத் போட அவர் எதிரில் நின்றது அது. அதை பார்த்த ப்ரசாத் "நோ!" என்று கத்தினார்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 24
முகம் சிதைந்த நிலையில் கண்கள் மற்றும் பற்கள் மட்டும் வெளியே தெரிய, பற்கள் நீண்டு கண்கள் சிவப்பாக தன் உடலை ஒரு பெரிய துணி கொண்டு போர்த்திய நிலையில் ப்ரசாத்தின் எதிரில் நின்று இருந்தான் அவன். அவன் போர்த்திய துணி முழுவதும் சிவப்பு நிறமாக ரத்தக் கறையாக மாறி இருக்க , மனிதனின் உருவில் இருக்கும் ஒரு வெம்பையராக அவர் எதிரில் நின்று இருந்தது சாட்சாத் யவன் தான்.
அவனை கண்டு பயம் மேலிட "நோ!..." என்று கத்திய ப்ரசாத்தை எதிர்கொண்டான் யவன்.
"என்ன ப்ரசாத் சார்? இங்க என்னை நீங்க கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல போல! என்னை நல்லா பாருங்க ப்ரசாத் சார்! நீங்க செய்த தவறின் உச்சமாக உங்க முன் நான் இப்போது நின்னுட்டு இருக்கேன்! எதை எதிர்பார்த்து இதை நீங்க செய்தீங்க?" – யவன்.
யவன் பேசியதை கேட்டு ப்ரசாத் அதிர, அதை கவனித்த யவன் "எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு ஆச்சரியமா இருக்கா ப்ரசாத் சார்!"
என்று யவன் கேட்க அதற்கு அவர் 'ஆம்' என்று தலையசைக்க
யவன் மேலே தொடர்ந்தான்!
"எப்ப நீங்க உங்க மகன உயிரோட கொண்டு வரதா சொல்லி என்னுள்ளே ரத்தத்தை செலுத்தினீங்களோ! அப்பவே என் உள்ளூணர்வு விழிக்க ஆரம்பிச்சிருச்சு! என்னை சுற்றி நடக்கும் விசயங்கள் எனக்கு கேட்கவும், தெரியவும் ஆரம்பிச்சிருச்சு!" – யவன்.
"சொல்லுங்க ப்ரசாத் சார்! எனக்கு ஏன் இந்த நரக வாழ்க்கையை கொடுத்தீங்க?" என்று கூறியபடியே யவன் அங்கு பக்கத்தில் இருக்கும் கண்ணாடி அருகே சென்று தன் முகத்தை பார்க்க அதில் தெரிந்த தன் பிம்பத்தை கோபம் கொண்டு தன் கை கொண்டு கண்ணாடியை ஓங்கி அடித்தான்.
அவன் அடித்ததும் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடைந்த கண்ணாடி துண்டுகள் அந்த அறை முழுவதும் விரவி கிடந்தது அதை கண்ட ப்ரசாத் தன் பயத்தை விடுத்து அவனிடம் பேச ஆரம்பித்தார்.
"என் மகனை உயிரோடு கொண்டு வர நான் செய்த தவறு இப்படி உன் தலை மேல் வந்து விழும்னு நான் எதிர்பார்க்கல மேன். உன்னுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்! சாரி! யவன்! ஆனால் கண்டிப்பா உன்னுடைய இந்த நிலைமையை நான் கண்டிப்பா சரி செஞ்சுடுறேன்! எனக்கு கொஞ்சம் டைம் கொடு!" – ப்ரசாத்.
"டைம் கொடுனு ஈஸியா கேட்டுட்டீங்க ப்ரசாத் சார்! உங்களால என்ன பண்ண முடியும்! உங்களால என் உடம்பை பழைய மாதிரி திருப்பி கொடுக்க முடியுமா? இல்லை என் சிதைந்த முகத்தை தான் பழைய மாதிரியே திருப்பி தர முடியுமா? என் பழைய வாழ்க்கையை தான் உங்களால திருப்பி தர முடியுமா? உங்களால் என்ன செய்ய முடியும் ! என்னுடைய இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்ககிட்ட பதில் இருக்கா ப்ரசாத் சார்!" – யவன்.
அதை கேட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ப்ரசாத் "உன் நிலைமை எனக்கு புரியுது யவன்! நீ கேட்டது அனைத்தும் சரி தான்! ஆனால் உன் கேள்விகளுக்கான பதில் இப்ப என்னால் உடனடியாக சொல்ல முடியாது! ஆனால் இப்ப ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும்!" - ப்ரசாத்.
"என்ன ப்ரசாத் சார்? இன்னும் என்ன பண்ணப் போறீங்க?" - யவன்.
சிறிது நேரம் மௌனமாக யோசனையில் இருந்த ப்ரசாத் யவனிடம் பேச ஆரம்பித்தார்.
"கவலைப்பட வேண்டாம் யவா! உன் சிதைந்த முகத்திற்கு என்னால் வடிவம் தர முடியும் யவன் ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலமா! ஆனால் உன் பழைய முகம் இல்ல... என் மகன் வினய்யின் முகம்" – ப்ரசாத்.
அதை கேட்டு கோபம் கொண்ட யவன் அவரை பார்த்து கத்தினான். "மறுபடியும் தப்பு பண்றீங்க ப்ரசாத் சார்! உங்க மகனால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து நிக்குறேன்! திரும்பவும் அவன் முகம் எனக்கு கொடுத்து தப்புக்கு மேல் தப்பு பண்றீங்க ப்ரசாத்!" – யவன்.
"இல்லை! தப்பை சரி செய்ய முயற்சிக்குறேன்! டிரஸ்ட் மீ! எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடு யவன் என் தவறை நான் சரி செஞ்சிடுறேன்" – ப்ரசாத்.
"உங்க முன்னாடி என் அடையாளத்தையே இழந்து நின்னுட்டு இருக்கேன் ப்ரசாத் சார்! நீங்க என் முகத்தை பற்றி பேசிட்டு இருக்கீங்க" என்று யவன் கத்த ஆரம்பிக்க.
"யவன் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு" என்று ப்ரசாத் அவனை சமாதானப்படுத்த ஏதோ சொல்ல வர அருகில் இருந்த விஸ்கி பாட்டிலை அவரை நோக்கி வீசினான் யவன். கடைசி நொடியில் ப்ரசாத் சுதாரித்து விலக அந்த பாட்டில் சுவரில் பட்டு தெறித்தது.
ப்ரசாத் அவனை மிரட்சியோடு பார்க்க யவன் அவரைப் பார்த்து கத்தினான்.
"யவன்..., யவன்... என்னை அப்படி கூப்பிடாதீங்க! அவன் தான் செத்துட்டானே! யவன்னு கூப்பிட்டு என் இழப்பை ஏன் எனக்கு பெரியதாக ஆக்கி காண்பிக்குறீங்க ப்ரசாத் சார்! நான் தான் ராட்சஸனா மாறிட்டு இருக்கேனே! இனி நான் ராட்சஸன்! யவன் கிடையாது!" – யவன்
"இல்லை! நீ என் மகன்... நீ ராட்சஸன் இல்லை டா! உன்னால் யாரையும் காயப்படுத்த முடியாது டா! என் மகனாக என்னை ரட்சிக்க வந்தவன்டா நீ! என் மகன் ஏக்கத்தை போக்க வந்தவன்டா! உன்னால தான் என் தனிமை துயரை போக்க முடியும்! என் மகனை தேவ் எப்ப கொன்றுவானோன்ற பயத்திலேயே அவனை அருகில் இருந்து பார்த்துக்க முடியாம ஒதுக்கி வச்சேன்! அவனை பக்கத்தில் சேர்க்காம ஓடி ஒளிஞ்சேன்! ஆனா இப்ப உன்னை பார்த்த பிறகு என் மகன் கூட வாழணும்னு எனக்கு தோணுது! உன் முகத்தை என் மகன் முகமாக மாற்றி என் மகனுடன் நான் வாழ முடியாத அந்த வாழ்க்கையை வாழணும்னு ஆசைப்படுறேன் டா யட்சா!" - ப்ரசாத்.
அவர் பேசுவதை கோபத்தோடு கேட்டுக் கொண்டிருந்த யவன் ப்ரசாத் தன்னை யட்சன் என்று அழைத்ததும் அவரை கேள்வியாக பார்த்தான்.
அதை கவனித்த ப்ரசாத், "என்ன யட்சனு கூப்பிடுறேன்னு பாக்குறீயா?" – ப்ரசாத்
அதற்கு யவன் அமைதியாக இருக்க மேலே தொடர்ந்தார் ப்ரசாத், "தமிழில் யட்சகன்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க! யட்சகன் – இருளுக்கு தலைவன், காப்பாளன்னு சொல்வாங்க! என்னை என் தனிமையில் இருந்து காப்பாற்ற வந்தவன்டா நீ! இனி நான் உன்னை அப்படி தான் கூப்பிடப்போறேன். நாளை ப்ரஸ்மீட் அரேஞ் பண்ண சொன்னேன். அதுல என் மகன் படிப்பு முடிஞ்சி வந்துவிட்டதா சொல்ல போறேன்.. உன் முகம் சரி ஆனதும் எல்லருக்கும் அறிமுகபடுதவும் போறேன்" - ப்ரசாத்
ப்ரசாத் அவரது மகனை பற்றி பேசியதை கேட்ட யவனுக்கு ப்ரசாத் தன் மகன் மீது வைத்திருக்கும் ஏக்கமோ! பாசமோ! ஏதோ ஒன்று அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடை செய்ய யவன் பேசாமல் நின்றான். யவனின் மெளனத்தை கவனித்த ப்ரசாத் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலே தொடர்ந்து பேசினார்.
"ப்ளீஸ் யட்சா! என் மகன் ஏக்கத்தை போக்க எனக்கு உதவி செய்! பூங்குன்றன் சாரை வரச் சொல்றேன்! நீங்க இரண்டு பேரும் பேசி நல்ல முடிவா சொல்லுங்க! அதுமட்டுமல்ல யட்சா! உன்னை மனிதனாக மாற்ற நான் விஜயன் மூலமா முயற்சியும் பண்ணிட்டு இருக்கேன்! கொஞ்ச நாள் பொறுத்துக் கோ யட்சா! நீ கேட்ட எல்லா விசயங்களையும் நான் சரி செஞ்சிடுறேன்" என்று கூறிய ப்ரசாத் அவனை யோசிக்க தனிமை கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.
அவர் சென்றதும் ப்ரசாத் கூறிய விசயங்களை அசைபோட்டபடியே நடந்து கொண்டிருந்தான் யவன்.
வெளியே வந்த ப்ரசாத் பூங்குன்றன் அருகில் வந்தார்.
நீங்க போய் உங்க யவனை பாருங்க பூங்குன்றன் என்று கூறிவிட்டு ப்ரசாத் செல்ல பூங்குன்றன் யவனிடம் விரைந்தார்.
பூங்குன்றன் தன் வளர்ப்பு மகனான யவனை பார்க்கும் சந்தோசத்தில் ப்ரசாத் யவனை பற்றி கூறிய உண்மைகள் அனைத்தும் மறந்து போனார்.
ஆவலுடன் உள்ளே சென்ற பூங்குன்றன் அங்கு நின்றிருப்பவனை கண்டு அதிர்ந்தார்.
"யவன்" என்று அவர் அழைக்க, அவர் அழைத்ததை அடுத்து ஆசையாக அவர் அருகில் யவன் செல்ல அவர் பயத்தில் பின்னால் சென்றார்.
அவரின் பயத்தை பார்த்ததும் தான் யவனுக்கு தன் நிலை புரிய, அவனின் கோபத்தில் கண்கள் சிவந்து பற்கள் வெளியே நீட்ட தொடங்கியது.
"யவன்! நீயா இது! என்னால் நம்ப முடியலயேடா! அப்ப ப்ரசாத் என்கிட்ட சொன்ன விசயங்கள் எல்லாம் உண்மையா! நான் வளர்த்த யவனா இது?" என்று பூங்குன்றன் அழுக அவரை ஆறுதல் படுத்த அவர் அருகில் சென்ற யவன் "அய்யா!" என்று அழைத்தது தான் தாமதம் பூங்குன்றன் வேகமாக "நீ என் யவனா இருக்க முடியாது! நீ ராட்சஸன்! என் பக்கத்தில் வராதடா! போ!" என்று பயத்தில் கத்தியபடியே பூங்குன்றன் அந்த ரூமைவிட்டு வெளியே செல்ல யவன் இங்கு வருத்தத்தில் நின்றான்.
தன் மீது பூங்குன்றன் கொண்ட பயத்தை யோசித்துப் பார்த்த யவன் தன் முகத்தை வினய் முகமாக மாற்ற முடிவு செய்தான்.
யவன் தன் சொல்லிற்கு சம்மதித்ததை தொடர்ந்து வேகமாக அவன் முகத்தை மாற்ற வழி வகை செய்தார் ப்ரசாத். அடுத்து வந்த இரு தினங்களில் அவன் முகத்தை மாற்ற ஆயத்த வேலைகள் செய்து இதோ சிகிச்சையும் முடிந்திருந்தது.
சிகிச்சை முடிந்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த யவன் தன் முகத்தை தொட்டுப் பார்த்தான். அதில் வினய் முகமாக தன் பிம்பம் இருப்பதை பார்த்தவனுக்கு கோபமாக வந்தது.
கோபத்தில் அவன் கண்கள் சிவக்க , கருவிழிகள் ஓவல் வடிவம் பெற்று பற்கள் வெளியே நீண்டு ஒரு ராட்சஸனாக தன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதைப் பார்த்தவன் கோபத்தில் பொருட்களை அடித்து நொறுக்கினான்.
"நோ! இப்படி வாழ்றதுக்கு நான் சாகலாம். எனக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம்" – யவன்.
பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு உள்ளே வந்த ப்ரசாத் யவனின் நிலையை கண்டு அவனை சமாதானப்படுத்த அவன் அருகில் சென்றார்.
"ஏன் யட்சா! இவ்வளவு கோபம்! உன்னை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்க! நீ மறுபடி பிறவி எடுத்ததற்கு எதாவது காரணம் இருக்கும்! நீ சாகும் போது கூட நான் வாழணும்! வாழனும்னு! சொல்லிகிட்டே இருந்த! கடைசி வரை சாவோடு போராடிய அந்த யவன் எங்கே?" என்று ப்ரசாத் கேட்க யவனுக்கு விபத்துக்கு முன் நடந்த காட்சிகள் படமாக ஓடியது!
தான் வேலை முடிந்து நடந்து வந்து கொண்டிருக்கும் போது எதிரில் வைத்தியை தான் பார்த்ததும் , அதனை தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து தான் செல்ல முயல்கையில் தனக்கு விபத்து நடந்ததையும் நினைத்துப் பார்த்தவன் ஒரு முடிவோடு பேசத் தொடங்கினான்.
"ஆமாம்! ப்ரசாத் சாடர்! நான் வாழணும்! எனக்கு முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு! இனி நான் கவலைபட மாட்டேன்" என்று அவன் பழிவெறியோடு கூற ப்ரசாத் அவனிடம் ஏற்பட்ட இந்த தீடீர் மாற்றத்தை புரியாமல் பார்த்தார்.
அதன்பின் யவன் தன் நிலை கண்டு கத்தவில்லை , கதறவில்லை. அமைதியாக இருந்தான்.
"யட்சா! அப்பறம் இனி நீ என்ன சார்னு கூப்பிடாதே.. அப்பான்னு கூப்பிடு.. இல்ல இல்ல வினய் என்ன டேட் னு தான் கூப்பிடுவான்... நீயும் அப்படியே கூப்பிடு.. ஓகே" - ப்ரசாத்.
ப்ரசாத் யவனை கூட்டிச் சென்று தன் ஆபிசில் உள்ள அனைவருக்கும் தன் மகனாக அறிமுகப்படுத்தினார்.
யவனுக்கு துணையாக அபேய்யை நியமித்தார். அவன் யவனுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாடுகள் மற்றும் ஆடுகள் ரத்தத்தை குடுத்து அவனை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்..
யவனை வெளியே செல்லாமல் கண்காணித்து யவனின் செயல்களை ப்ரசாத்திற்கு சொல்லிக் கொண்டிருந்தான் அபேய்.
இடையில் யவன் பூங்குன்றனை நேரில் சென்று பார்த்தான்.
யவனைப் பார்த்தவுடன் அவர் அடையாளாம் தெரியாமல் விழிக்க யவன் அப்படியே நின்றான். பின்பு பெருமூச்செடுத்து தன்னை சமன் செய்து கொண்டு பேசத் தொடங்கினான்.
"அய்யா! நான் தான் உங்க யவன்! நீங்க எடுத்து வளர்த்த உங்க பையன் யவன்! நீங்க மட்டும் இல்லைனா நான் எப்பவோ என் அக்காவோடு சேர்ந்து அந்த அரக்கன் கையால் நானும் செத்துப் போயிருப்பேன். என் விதியைப் பார்த்தீங்களா அய்யா! இரண்டு தடவை செத்து பிழைச்சு வந்திருக்கேன்! கடவுளுக்கு என் மேல் ரொம்ப பாசம் போல! அதான் என் கூட இப்படி செத்து பிழைக்க வைச்சு கேம் விளையாடுறார்! அப்பா ஸ்தானத்தில் இருந்து நீங்க தான் எனக்கு எல்லாம் செஞ்சிங்க! இப்ப நீங்களும் என்னைப் பார்த்து பயந்து ஒடினா நான் எங்க போவேன் அய்யா!" என்று கூறி யவன் தரையில் முட்டி போட்டு அழுக அதை கண்ட பூங்குன்றனுக்கு வருத்தமாக இருந்தது. மெல்ல அவன் அருகில் சென்று அவன் தலையை அவர் தொட யவன் அவர் கைகளை பற்றி அழுதபடியே பேச ஆரம்பித்தான்.
"என்னை நீங்களும் விட்டுப் போயிடாதீங்க அய்யா! எனக்கு பிடிச்சவங்க எல்லாம் என்னைவிட்டு போயிடுறாங்க! இப்ப நீங்களும் என்னைவிட்டு போனா எனக்கு யாரும் இல்லை" என்று அவன் அழுக பூங்குன்றனின் மனம் கனிந்தது.
"சாரிடா! உன் நிலைமை புரியாமல் நானும் உன்னை காயப்படுத்திட்டேன்" என்று அவர் கூற யவன் எழுந்து அவரை அணைத்துக் கொண்டான்.
இயல்பிலேயே பயந்த சுபாவம் உடைய பூங்குன்றனை யவனின் அந்த உருவத்தை நினைத்து பார்த்து ஒதுங்கினார். ஆனால் யவன் பேச பேச அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் பயத்தை விட்டு வெளியே வந்தார்.
அன்றில் இருந்து யவன் முடிவு செய்தான் தன் கொடூரமான முகத்தை அவரிடம் காண்பிக்க கூடாது என்று! அவன் வெம்பையராக மாறும் இரவு வேளையில் தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டான்.
இடை இடையே யவனின் தேடல் மட்டும் அடங்கவில்லை. தன் வெறியை தீர்த்துக் கொள்ள வைத்தியை தேடி அலைந்தான் யவன். ஆயினும் அவர் யவன் கண்களுக்கு தென்படவில்லை. அவர் தான் அவன் ஆபீஸில் அல்லவா இருந்தார். அப்போது தான் தன் ஆபிசில் நிதாவை சந்தித்தான்.
அவன் நிதாவை பார்த்ததும் அவனுக்கு அவளது முகம் மற்றும் அவளது செயல்கள் அவனுக்கு தன் டாலியை ஞாபகப் படுத்த அவளையே தொடர்ந்தது யவனின் விழிகள். அவளையே கண்காணித்துக் கொண்டிருந்தவன் கைகளில் சிக்கியது அந்த டாலர். அதை வைத்து அவளை அடையாளம் கண்டு கொண்டான் யவன்.
நிதாவை வைத்து வைத்தியை பழி வாங்க யவன் இங்கு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.
இங்கு பூங்குன்றனிடம் யவனை கொல்லப் போவதாக மிரட்டியே தன் வேலையை முடித்துக் கொண்டிருந்தார் ப்ரசாத்.யவன் ப்ரசாத்திடம் பூங்குன்றன் விசயங்களில் அமைதியாக இருந்தாலும் அவர் வினய்யாக செய்யச் சொல்லும் விசயங்களை செய்யாமல் அவர்க்கு கோபத்தை வர வைத்தான்
கோபம் கொண்டு யவனிடம் பேசி காரியம் சாதிக்க முடியாத ப்ரசாத் அவனிடம் பேச முடியாத விசயங்களை பூங்குன்றனை மிரட்டியே தன் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டார்..
பூங்குன்றன் செய்யச் சொல்லும் விசயங்களை அவரை எதிர்த்து பேசாமல் செய்ய துணிந்தான் யவன். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி யட்சனை தன் மகனாக வெளிஆட்களை நம்ப வைத்தார் ப்ரசாத்.
*******
ப்ரசாத் யவனை வினய்யாக அறிமுகப்படுத்துவதை அறிந்து கொண்ட ப்ரசாத் யவனை வெளியே கொண்டு வர தான் செய்த சூழ்ச்சிகளை யோசித்துப் பார்த்தார்.
யவனை வெம்பயராக வெளியே வர முடியாதபடி சிலுவை மற்றும் புனிதநீர் கொண்டு ப்ரசாத் செய்து வைத்திருக்கும் தடுப்பு நடவடிக்கைகளை தன் ஆட்கள் மூலம் கேட்டறிந்த தேவ்.
'ம்ம்ம் குட் மூவ் ப்ரசாத்! ஆனால் அவன் வெளியே வரலைனா நான் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் வீணாய் போயிடுமே! நான் இருக்கும் வரை நீ நினைத்ததை நடக்கவிட மாட்டேன்!' என்று தனக்குத் தானே பேசிய தேவ் யவனின் கல்லரையில் அவன் வெம்பையராக வெளியே வர தடையாக இருக்கும் அனைத்தையும் அகற்றி யவனை வெளியே வர வழைத்தார்.
அவர் எண்ணத்தின் படி வெளியே வந்தான் யவன்.
*******
அன்று பெளர்ணமி இரவு,
தேவ் சொல்லின்படி ஒருவன் வினய்யின் கல்லறையை கண்காணித்து கொண்டிருக்க, இரவு நெருங்க நெருங்க வினய்யின் கல்லரையில் இருந்து ஒரு கை நீண்டது.
அதை கண்ட தேவ்வின் அடியாள் தேவ்விற்கு போன் செய்ய, தேவ் போன் எடுத்தது தான் தாமதம் அடியாள் பயத்துடன் பேசத் தொடங்கினான்.
"சார்! கல்லரையில் இருந்து ஒரு கை வெளியே தெரியுது சார்!" – அடியாள்
"ஓ! குட்! நீ என்ன பண்ற அங்க நடக்கும் விசயங்களை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புற" என்று தேவ் சொல்ல
அந்த அடியாள் பயத்தில் "சார்! பயமா இருக்கு சார்!" என்று அவன் கூற அவனை சமாதானப்படுத்தினார் தேவ்.
"உனக்கு சம்பளம் இரண்டு மடங்கா தறேன்! நான் சொன்னதை செய்" என்று அவர் கூற பணம் என்றதும் அறை மனதாக அவர் சொன்னதை செய்ய சம்மதித்தான்அந்த அடியாள்.
அவன் தன் போன் மூலம் அங்கு நடப்பதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான். அவன் ரெக்கார்ட் செய்து கொண்டிருக்க கல்லரையில் இருந்து கை வெளியே வந்ததை தொடர்ந்து கல்லறை இரண்டாக பிளந்தது.
அதில் இருந்து ஒரு உருவம் எழுந்தது. உடம்பு முழுவதும் முடிகளாக இருக்க முகம் ஓநாய் முகத்தை ஒத்து இருக்க பற்கள் நீண்டு காதுகள் பெரியதாக கைகள் மற்றும் கால்களில் நகங்கள் பெரியதாக நீண்டு அந்த நிலவின் வெளிச்சத்தில் மனிதனை வேட்டையாடும் மிருகமாக ஓநாய் மனிதனாக எழுந்து நின்றான் வினய்.
வருவான்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 25
கல்லறையில் இருந்து எழுந்த வினய் மெதுவாக திரும்ப, அவனது உருவத்தை பார்த்த அந்த அடியாள் பயத்தில் ஓட முயற்சித்தான். அவன் ஓடும் சத்தம் கேட்டு அவன் ஓடிய திசை பக்கம் திரும்பிய வினய் அங்கு மனிதனை கண்டதும் இரண்டு, மூன்று தடவைகள் தன் மூக்கை உறிஞ்சியபடியே மனித வாடையை மோப்பம் பிடித்தான்.
மோப்பம் பிடித்ததை தொடர்ந்து அவன் தன் பற்களை நர நரவென்று கடித்து தன் முழு உடம்பையும் நிமிர்த்தி பெளர்ணமி நிலவினை நோக்கி ஊளையிட அந்த சத்தம் பசியோடு இருக்கும் மிருகத்தின் கர்ஜனையை ஒத்து இருந்தது. அதனை தொடர்ந்து மெதுவாக அந்த அடியாளை நோக்கி அவன் நடக்க ஆரம்பிக்க , அவனது காலடி தடங்கள் ஓநாயின் காலடி தடத்தை பிரதிபலித்தது.
வினய் அவனை நோக்கி வர ஆரம்பித்ததும் இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தான் அந்த அடியாள்.
அதனை தன் ஓவல் வடிவ கண்களால் கண்ணுற்ற வினய் அவனை துரத்த ஆரம்பித்தான்.
மனிதனின் ஓட்டத்தோடு வேகமாக இருந்தது அவன் ஓட்டம். அந்த அடியாள் எவ்வளவு வேகமாக ஓட முயற்சித்தும் வினய்யின் வேகத்துக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனை சுற்றி வளைத்து அவன் முன் வந்து நின்றான் வினய். மூச்சு வாங்க நின்ற அந்த அடியாள் சூதாரித்து ஓடுவதற்குள் அவனை நோக்கி அடுத்த நிமிடம் பாய்ந்திருந்தான் வினய்.
அவன் கழுத்தின் மேல் தன் காலை வினய் வைக்க மூச்சுக்கு திணறியபடியே வினய்யின் காலை எடுக்க போராடினான் அவன். ஆனால் அவனால் வினய்யை கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை. இறுதியில் மூச்சுக்கு போராடியபடியே அவன் இறந்துவிட , தன் வாயை பிளந்தபடி அவனை நோக்கி குனிந்தான் வினய் . தன் கூரிய நகங்கள் கொண்டு அவனது கழுத்தை கிழித்தான். அதனை அடுத்து அவன் உடம்பில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்க அதை கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்க ஆரம்பித்தான் வினய். தன் பசி தீர்ந்ததும் அவன் உடம்பின் மேல் தன் ஒற்றை காலை வைத்து வானத்தை நோக்கி வினய் ஊளையிட, வினய்யின் இந்த கோரதாண்டவத்தை தன் போன் மூலம் பார்த்துக் கொண்டிருந்தார் தேவ் ஆனந்த்.
"அற்புதம்! உனக்கும் எனக்குமான கேம் ஆரம்பிச்சிடுச்சு ப்ரசாத்! வினய்க்கும் யவனுக்குமான யுத்தத்தில் யார் ஜெயிக்கப் போறாங்க? யார் தோற்கப் போறாங்க? யார் யாரை கொல்லப் போறாங்க? யார் யாரை வெல்லப் போறாங்க? விடை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கேன்! ப்ரசாத்! இந்த கேம்மை ஆரம்பிச்சுவச்சது என்னமோ நீ தான்! ஆனால் அதை நான் தான் இப்ப ஆடிட்டு இருக்கேன். இந்த கேம்மும் நல்லா தான் இருக்கு ப்ரசாத்! என்று தனக்குள் சொல்லியபடியே சிரித்தார் தேவ்.
*******
இங்கு வினய்யின் ஊளையிடும் சத்தம் கேட்டு படுத்து இருந்த யட்சன் சட்டென்று விழித்தான்.
அவன் முகத்தில் பல மாறுதல்கள் வந்து போக வேகமாக எழுந்தவன் தன்னை வேகமாக ஆராய்ந்து பார்த்தான். அவன் தன் கைகளை நீட்டிப் பார்க்க அதில் கூர் நகங்கள் வெளியே வர ஆரம்பித்தது. அதே போல் அவன் தன் கால்களை பார்க்க அங்கும் நகங்கள் முளைத்தன. அதை தொடர்ந்து தன் வாயை திறக்க முன் பற்கள் நீண்டது. தான் கொஞ்சம் கொஞ்சமாக வெம்பையராக மாறிக் கொண்டிருப்பதை பார்த்தவன்,
"என்ன நடக்குது எனக்குள்ளே! மனசு ஏதோ அடிச்சுக்குது! ஏதோ விபரிதம் நடக்க போகுற மாதிரி தோணுது! ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோணனும்" என்று தனக்குள் கேட்டபடியே யட்சன் சன்னல் திறந்து பார்க்க அங்கு நிலவு கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறம் சூழ்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்த யட்சனின் உள்ளே ஏதோ தோன்ற, தன் காதுகளில் கேட்ட சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.
ஓடியவன் ஒரு இடத்தில் நிற்க அங்கு ஆள் அரவமற்ற இடத்தில் உடம்பு சுருங்கிய நிலையில் கொடூரமாக ஒருவன் இறந்து கிடந்தான். அவன் அருகில் சென்ற யட்சன் அவனை நுகர்ந்து பார்க்க அந்த வாடை அவனை வினய்யின் கல்லறைக்கு இழுத்துச் சென்றது. அங்கு முடிகள் மற்றும் காலடி தடங்கள் பல இருக்க அதை கண்ட யட்சன் யோசனை ஆனான் .
'என்ன காலடி தடங்கள் வித்தியாசமா இருக்கு!' என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவன் திரும்பிச் செல்ல யட்சனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.
அதன்பின் வந்த நாளில் யட்சனின் உள்ளே உள் உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நடக்கப் போகும் விசயங்கள் முன்கூட்டியே அவன் மனக்கண்ணில் உலா வர தொடங்கியது.
***
இங்கு ப்ரசாத் தேவ்வை பார்ட்டியில் சந்தித்த மறு நாளை அடுத்து நடந்தேறிய விசயங்களை நினைத்துக் கொண்டிருந்தார்.
பார்ட்டி நடந்து முடிந்த மறுநாள் பார்ம் ஹவுஸில் நடந்தேறிய சம்பவத்தை அடுத்து யட்சனை திட்டிவிட்டு வந்த ப்ரசாத் கோபத்தில் தன் ரூமில் அமர்ந்து இருக்க தேவ் ப்ரசாத்திற்கு போன் செய்தார்.
தேவ்வின் போனை எடுத்த ப்ரசாத் "ஹலோ" என்று சொன்னது தான் தாமதம் எதிர்முனையில் சிரித்தார் தேவ்.
"என்ன ப்ரசாத்! நேற்று உங்க மகனுக்கு அறிமுக விழாலாம் வெகு விமர்ச்சையா நடத்துனீங்க போல! ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ப்ரசாத்! அந்த விழாவில் உங்க வினய்ப்ரசாத் கலந்துகிட்டிருந்தா இன்னும் சிறப்பாக அந்த விழா நடந்தேறி இருக்கும்! நான் சொல்றது கரெக்ட் தானா ப்ரசாத்!" – தேவ்.
"என்ன உளர்ற தேவ்! பார்ட்டியில் என் மகனை தான் உனக்கு நான் அறிமுகப்படுத்தியதா ஞாபகம்! நீ மறந்துட்டு பேசிட்டு இருக்கேன்னு நினைக்குறேன் தேவ்!" – ப்ரசாத்.
"ஓ! அப்படியா! இதை நம்பு முடியலை ப்ரசாத்! மற்றவங்க வேணா உன் பொய்யை நம்பலாம்! பட் தேவ்! இம்பாசிபிள்! ஐ நோ எவிரிதிங் ப்ரசாத்" – தேவ்.
தேவ் சொன்னதை கேட்டு திகைத்த ப்ரசாத் தன்னை சமாளித்து கொண்டு மேலே பேசினார்.
"என்ன சொல்ல வர்ற நீ ? கம் டூ தி பாய்ண்ட்" – ப்ரசாத்.
"உன் மகன் அவன் இல்லைனு சொல்றேன்" – தேவ்.
"ம்ம்ம் ரியலி! என் மகனை பத்தி உனக்கு அதிகமா தெரியுது தேவ்! நாட் பேட்" – ப்ரசாத்.
"எஸ் ப்ரசாத்! உன்னைவிட அதிகமாகவே தெரியும்! உன்னைவிட எவ்வளவு அதிகமா தெரியும்னு நான் சாம்பிள் காட்டுறேன் பார்க்குறீயா ப்ரசாத்! ஹியர் யூ கோ! என்ஜாய்!" என்று கூறிய தேவ் போனை கட் செய்துவிட்டு ப்ரசாத்திற்கு ஒரு வீடியோவை அனுப்பினார்.
அதில் வினய் கல்லறையில் இருந்து எழுந்து மனிதனை வேட்டையாடும் காட்சிகளும், பார்ம் ஹவுஸில் மாடுகளை கொன்று தன் பசியை தீர்த்துக் கொள்ளும் காட்சிகள் வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்த ப்ரசாத் வேகமாக வினய்யின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை நோக்கி விரைந்தார். அங்கு சென்ற ப்ரசாத் வினய் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி சவப்பெட்டியை திறந்து பார்க்க அந்த சவப்பெட்டி வெறுமையாக காட்சியளித்தது.
அதை பார்த்த ப்ரசாத் அதிர தேவ் மறுபடியும் போன் செய்தார்.
"என்ன ப்ரசாத் நீங்க ? உங்க அண்ணன் சொன்னதை நம்பாம கல்லறை வரை வந்து பார்க்குறீங்க!" என்று கூறிய தேவ் உச்சுக் கொட்டியபடியே மேலே பேசினார்.
"உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ப்ரசாத்! உங்க சன் இப்ப வேட்டையாடும் மிருகமா மாறிட்டான். இப்ப என்ன செய்யப் போறீங்க ப்ரசாத்! அவனை கொல்லப் போறீங்களா? இல்லை அவன் மனிதர்களை கொலை செய்வதை பார்த்து ரசிக்கப் போறீங்களா? உங்க அடுத்த மூவ் என்ன ப்ரசாத்! உங்க அடுத்த மூவ்க்காக ஐ அம் வெயிட்டிங்!" என்று கூறிச் சிரித்தபடியே போனை வைத்தார் தேவ்.
தேவ் போனை வைத்ததும் தன் மகனின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தார் ப்ரசாத்.
இப்படி ஒவ்வொருவரும் நடந்து முடிந்த விசயங்களை நினைத்து பார்த்தபடியே அதன் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தனர்.
****
அன்று பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருக்க நிதா விழப் போவதை முன்னமே அறிந்து கொண்ட யட்சன் நிதாவை விழாமல் தாங்கிப்பிடித்தான். அவளை பிடித்தவன் அவள் சூதாரித்து எழுவதற்குள் அங்கிருந்து ஓடினான்.
அதன்பின் ஏதோ தோன்ற ஓடியவன் பார்ம் ஹவுஸ்சின் முன் சென்று நின்றான். அங்கு அவன் வருவதற்குள் பல மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்து கிடந்தன. அதனை பார்த்த யட்சன் அங்கு நடந்த விசயங்கள் புரியாமல் யோசனையாக பார்ட்டி நடக்கும் இடத்திற்கு திரும்பி செல்ல முயல அவனை அறியாமல் அவன் கையில் இருந்த பிரேஸ்லட் கீழே விழுந்தது. அதை யட்சன் கவனிக்காமல் சென்றுவிட அதை ஒரு கரம் எடுத்தது.
தேவ்வின் முன்னால் அந்த பிரேஸ்லட்டை ஆட்டிக் கொண்டிருந்தான் வினய்.
அதை பார்த்த தேவ் "ஓ! வாவ்! வினய்! நல்ல வேலை பண்ணிருக்க! இதை வச்சு நாம யவனை மாட்டிவிட எதாவது பிளான் பண்ணலாம்!" – தேவ்
"குட் தேவ்! இந்த ஐடியா கூட நல்லா இருக்கு" – வினய்
"எஸ்! மை சன்! உன் இரவு வேட்டைக்கு பல பேர் பலியாகுறாங்க! கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் கொஞ்சம் கொஞ்சமா ஸ்மெல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க! இது தான் சரியான நேரம் யவனை நாம மாட்டிவிட முயற்சி பண்ணலாம்! அதுமில்லாம உன்னை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்க வினய்! உனக்கு தேவையானதை நான் தான் வீட்டிற்கே வர வைக்கிறேனே பின்பு ஏன் நீ வெளியே போற வினய்! இனி நீ வெளியே போகக் கூடாது! நீ வெளியே போனா தேவை இல்லாம உன்னோடு சேர்ந்து நானும் மாட்டிக்குவேன்!" என்று தேவ் சொல்ல அதை கேட்ட வினய் கோபமானான்.
"என்ன என்னை கண்ட்ரோல் பண்ணிக்கணுமா! என்னால என் பசியை கன்ட்ரோல் பண்ணிக்க முடியாது! எனக்கு தேவையானதை வீட்டிலேயே கொடுக்கிறீங்களா? ஏது அந்த காஞ்சு போன இறைச்சியா! நோ... வே தேவ்! எனக்கு பிரஸ்ஸா தான் வேணும் தேவ்! அதுமட்டுமல்ல எனக்கு வேட்டையாடி சாப்பிடுறது தான் பிடிச்சிருக்கு! அப்புறம் என்ன சொன்னீங்க நீங்க மாட்டிக்குவீங்களா! குட் ஜோக்! இப்ப யோசிச்சு ஒண்ணும் பண்ண முடியாது தேவ்! இந்த விசயங்கள் எல்லாம் என்னை ஓநாய் மனிதனா மாத்துறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் தேவ்!" என்று கூறிவிட்டு வினய் சென்றுவிட இங்கு தேவ் கோபத்தில் அமர்ந்து இருந்தார்.
"என்னையவே எதுத்து பேசுறியா! உனக்கு இருக்குடா ஒரு நாள்! உன் அப்பன் கையாலயே உன்னை நான் சாகடிக்க வைக்கிறேன்டா" என்று கோபத்தில் கத்திய தேவ் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தன் கெஸ்ட் ஹவுஸை நோக்கிச் சென்றார்.
அங்கு சென்று கதவை திறந்தவர் கதவை அடைக்கும் முன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு கதவை அடைத்தார். அதன்பின் அங்குள்ள சுவர் முழுவதும் ஸ்பேரே ஒன்றை அடித்தார். அதன் வாடை பூண்டின் மணத்தை ஒத்து இருக்க , அதனை அடுத்து தன் படுக்கை அறைக்கு சென்றவர் தன் படுக்கையை சுற்றி ஏதோ நீரை தெளித்தார்.
அதை தொடர்ந்து தன் தலையணை அடியில் இருந்து ஒரு கன்யை எடுத்தார். அதன் உள்ளே திரவங்கள் தடவிய தோட்டாவை அதனுள் லோட் செய்தார்.
'இந்த தடைகளை மீறி நீ வந்தால் இதை வைத்து உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன் வினய்! இந்த திரவங்கள் உன்னை எரித்து பஸ்சமாக்கும்' என்று தனக்குள் சொல்லியபடியே படுத்துக் கொண்டார் தேவ்.
வினய்யிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள தேவ் செய்த நடவடிக்கைகளை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வினய்
'என்ன தேவ்! என்கிட்ட இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்யும் நடவடிக்கைகள் எல்லாம் பிரமாதம்!! ம்ம்ம் நாட் பேட்! பூண்டு மணம் எனக்கு அலர்ஜீனு சுவர் முழுவதும் அதை தெளித்து வைச்சிருக்கீங்க! புனிதநீர்! உடம்பு எரியக்கூடிய திரவங்கள் ... ம்ம்ம் என்னை உள்ளே வர விடாம பல விசயங்களை பண்ணி வச்சிருக்கீங்க தேவ்! ஆனால் ஒரு நாள் கண்டிப்பா என்கிட்ட மாட்டுவீங்க! அன்னைக்கு உங்களை நான் வேட்டையாடி சாப்பிடனும்' என்று வெறியோடு தனக்குள் கூறிக் கொண்டான் வினய்.
****
காரில் சென்று கொண்டிருந்த யட்சன் சற்று முன்னர் தனக்கு அனுப்பப்பட்ட வீடியோவில் பூங்குன்றனை ப்ரசாத் அடைத்து வைத்திருப்பதை பார்த்ததும் கோபம் கொண்டு ப்ரசாத்தின் செக்ரட்ரி அபேய்யிடம் பேசி அவர் இருக்கும் இடம் அறிந்து அங்கு காரை செலுத்தினான். போனில் அபேய் சொல்லிய அந்த இடத்தை அடைந்த யட்சன் காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே விரைந்தான்.
உள்ளே சென்ற யட்சன் ஒரு ரூமின் உள்ளே சத்தம் கேட்க அந்த ரூமை நோக்கி சென்றான். யட்சன் கதவு திறந்தது தான் தாமதம் "நோ!.." என்று கத்தியபடி பூங்குன்றன் அருகில் சென்ற யட்சன், அங்கு வினய் பூங்குன்றனின் அருகில் ஏதோ செய்து கொண்டிருக்க அவனை பிடித்து கீழே தள்ளினான்
தரையில் விழுந்த வினய் தன் கைகளில் வடிந்த ரத்தத்தை துடைத்தபடியே எழுந்தான். எழுந்தவன் ஆக்ரோசமாக யட்சன் மேல் பாய இங்கு யட்சனும் அவன் மேல் பாய்ந்தான். இருவரும் சண்டையிட ஆரம்பிக்க அதை பார்த்த பூங்குன்றன் வினய் தன் கழுத்தில் நகம் கொண்டு கிழித்ததன் பலனாய் ரத்தம் வழிந்தபடி இருக்க அவரால் பேச முடியவில்லை. ஆகையால் தன் செய்கையால் யட்சனிடம் வினய்யிடம் மோத வேண்டாம் என்று அவர் தடுத்துக் கொண்டிருக்க அதன் விளைவாய் அவர் கழுத்தில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியே வர ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் அவர் மயங்கினார். அதை கண்ட யட்சன் வேகமாக அவரிடம் விரைந்தான்.
யட்சனின் கவனம் பூங்குன்றனிடம் செல்வதை பயன்படுத்தி வினய் தன் நகங்களால் அவன் முகத்தை தாக்க யட்சன் அதை தடுத்தபடி அவரிடம் செல்வதற்குள் கதவு திறந்தது.
அங்கு ப்ரசாத் நின்று இருந்தார்.
பூங்குன்றனின் நிலையை கண்டு வேகமாக அவரின் அருகில் விரைந்த ப்ரசாத் "நோ! ரத்தம் அதிகமாக போயிருக்கு! வேகமாக ஆஸ்பிட்டலுக்கு போகணும்!" என்று கூறியபடி ப்ரசாத் அவரை காரில் ஏற்றி செல்ல பூங்குன்றனின் நிலையைக் கண்ட யட்சனுக்கு கோபம் அதிகமாகியது.
தன் முகத்தில் வழிந்த ரத்தத்தை தன் கை கொண்டு துடைத்த யட்சன் வினய்யின் எதிரில் உக்கிரமாக நின்றான்.
அவன் கோபம் ஏற ஏற அவன் முகம் மாறத் தொடங்கியது. கண்கள் சிவப்பாக மாற அவன் கைகள் மற்றும் கால்களில் நகங்கள் நீளமாக முளைத்தது. அவன் தன் வாயை திறக்க இரண்டு பற்கள் நீண்டு வெளியே வர வெம்பையராக மாற தொடங்கினான் யட்சன்.
கோபம் கொண்டு யட்சன் வினய்யை தாக்க ஆரம்பித்தான். யட்சனின் தாக்குதலை சமாளிக்க முடியாத வினய் அருகில் இருந்த சன்னல் வழியாக தப்பி ஓட யட்சனும் அவன் பின் ஓடினான்.
****
பெளர்ணமி இரவில் யட்சன் இலக்கற்று ஒடிக் கொண்டிருந்தான். அவன் வெறி அப்போதும் அடங்கவில்லை. நேரம் இரவை நெருங்கிக் கொண்டிருக்க சுற்றுப்புறம் இருளில் சூழ்ந்தது. அதனை அடுத்து யட்சன் தன் முன்னால் சென்ற அந்த உருவத்தை பிடித்தான்.
பற்கள் நீண்டு கைகளில், கால்களில் நகங்கள் நீண்டு உடம்பு முழுவதும் முடிகள் சூழ கண்ணின் கருவிழிகள் வடிவத்தில் மாற காதுகள் நீண்டு ஓநாய்யின் உருவம் பாதி மனித உடம்பு பாதி என்று அவன் எதிரில் ஓநாய் மனிதனாக நின்றிருந்தான் வினய் ப்ரசாத்
அவன் எதிரில் வெம்பையராக எதிரில் நின்று இருந்தான் யட்சன்.
இருவரும் முட்டி மோத இவர்களின் தாண்டவத்தை காண முடியாத வானம் மழை பொழிந்தது.
அந்த மழை துளிகளின் மத்தியில் யட்சன் மேல் வினய் பாய அவனை தன் கைகள் கொண்டு கீழே தள்ளினான் யட்சன்.
கீழே விழுந்த வினய் உருமியபடியே தன் கைகள் கொண்டு அவன் முகத்தை கீற முயல அதை தடுத்த யட்சன் அவன் முகத்தில் ஓங்கி குத்தினான்.
முகத்தில் அடிவாங்கிய வினய் மரத்தில் ஏறி யட்சன் முதுகில் தாவி அவனை கடிக்க முயல யட்சன் தன் கைகள் கொண்டு அவன் வாயை பிடித்து கடிக்க முடியாதபடி தடுத்தான்.
வினய் அவன் கழுத்தில் தன் கை கொண்டு கீற முயல, வினய்யின் தாக்குதலை சமாளிக்க முடியாத யட்சன் அவனை கீழே தள்ள, வினய் அவன் கால்களை பிடித்து கீழே இழுத்தான்.
வினய் இழுக்கவும் கீழே விழுந்த யட்சன் சூதாரித்து எழுவதற்குள் அவன் மேல் வினய் ஏறி அமர்ந்தான்.
இருவரில் எவரும் சலைத்தவர் இல்லை என்று இருவரும் உருண்டு மோதி இருவரும் சண்டை போட்டிக் கொண்டிருக்க, சட்டென்று யட்சன் கை கால்கள் இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ள தரையில் விழுந்தான்.
அதை கண்ட வினய் "ஓ வாவ்! யட்சா! இது போதுமே உன்னை நான் அழிக்க" என்று அவன் மேல் பாய அப்போது வினய்யை கீழே தள்ளியது ஒரு கரம் . வினய் திரும்பிப் பார்க்க அங்கு ப்ரசாத் நின்று இருந்தார். அவர்க்கு பின் விஜயன் நின்று இருக்க அவர் கைகளில் இருந்த நீரை ப்ரசாத் இருவர் மேலும் தெளிக்க, யட்சன் மயங்கினான். வினய் தன் கைகள் மற்றும் கால்களை தேய்த்து விட்டபடியே மனிதனாக உருமாறினான்.
வினய் கோபம் தணியாமல் யட்சனை தாக்க முயற்சிக்க ப்ரசாத் அவன் மேல் நீரை மேலும் தெளித்தார். அதனை அடுத்து வினய் ப்ரசாத்தை கோபமாக முறைத்து பார்த்துவிட்டு வேறு திசை நோக்கி மரத்தில் தாவி மறைந்தான்.
அவன் சென்றதும் விஜயன் ப்ரசாத்திடம் திரும்பினார்.
"என்னாச்சு இவனுக்கு?" – விஜயன்.
"பெளர்ணமி இரவு அவனுக்கு இப்படி தான் வலிப்பு வரும்" – ப்ரசாத்.
"ஏன்? அப்படி?" – விஜயன்.
"காரணம் தெரியல விஜயன்! நானும் அவனிடம் இதை பத்தி கேட்டதில்லை! அவனும் இதை பத்தி சொன்னதில்லை? ஆனா கேட்டாலும் சொல்வானானு தெரியல விஜயன்?" – ப்ரசாத்.
"ஓ! இதை பத்தி நீங்க எதற்கும் தெரிஞ்சுக்குறது நல்லது ப்ரசாத்! பின்னாளில் வினய் இதை சாதகமா பயன்படுத்திக்க கூடாது இல்லையா..." என்று விஜயன் சொல்ல ப்ரசாத் யோசனை ஆனார்.
சற்று நேரம் யோசித்த ப்ரசாத் வாங்க விஜயன் "நாம் போய் யட்சனை பார்க்கலாம்! அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போக கொஞ்சம் உதவி செய்ங்க" என்று அவர் கூற விஜயன் யட்சனிடம் விரைந்தார்.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக சுயநிலைக்கு திரும்பிய யட்சன் ப்ரசாத் மற்றும் விஜயன் தன்னை தூக்க முயல அவர்களை மறுத்துவிட்டு தானே சமாளித்து எழுந்து சோர்வாக வீடு நோக்கி சென்றான்.
அதை பார்த்த விஜயன் ப்ரசாத்திடம் "இவங்க இரண்டு பேரும் உயிரோட இருந்தா ஒருத்தரை ஒருத்தர் நிச்சயம் அழிச்சுக்குவாங்க ப்ரசாத்!" – விஜயன்
"நோ! விஜயன் எனக்கு இரண்டு பேரும் முக்கியம்" என்று ப்ரசாத் கூற
அதற்கு ஒரு வழிதான் இருக்கு ப்ரசாத் என்று விஜயன் கூற, அவரை கேள்வியாக பார்த்தார் ப்ரசாத்.
அவர் சொன்னதைக் கேட்டு ப்ரசாத் திகைத்து நின்றார்.
*******
யட்சன் பற்றி இரவு முழுவதும் யோசித்து கொண்டே இருந்த நிதா ஒரு முடிவோடு காலை விடியலுக்காக காத்துக் கொண்டிருந்தாள்
காலையில் எழுந்த நிதா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு லமி அருகில் சென்றவள் லமியை கட்டிபிடித்துக் கொண்டே "லமி! வெங்கி கூட சண்டை போடாத! நீதான் வைத்தியையும் , வெங்கியையும் நல்லா பார்த்துக்கணும் புரியுதா?" – நிதா.
"ஏன் நான் இதுநாள் வரை அவங்களை நல்லா பார்த்துக்கலையா? அவங்களை நான் பார்த்துக்குறதுல திடீரென்று உனக்கு என்ன சந்தேகம்? ஆமா நான் பார்த்துக்குறது இருக்கட்டும்! ஏன் என்னவோ மாதிரி பேசுற?" – லமி.
"நத்திங் லமி" – நிதா.
"நத்திங்கா? இல்லை என்னவோ இருக்கு? என்னாச்சு உனக்கு என்னவோ எங்களை விட்டு போகப் போற மாதிரி பேசிட்டு இருக்க?" – லமி.
'ஆமா! போகத்தான் போறேன்' என்று தனக்குள் சொல்லியவள் வெளியில் வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு,
"என்னவோ சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்! இதுல என்ன தப்பு இருக்கு? நான் இன்னைக்கு சீக்கிரம் ஆபிஸ் போகணும்! நான் கிளம்பறேன் லமி" என்று நிதா கூறியபடியே செல்ல முயல லமி அவளை தடுத்தார்.
"அப்படி சொல்லாத நிதா! போயிட்டு வரேன் னு சொல்லு" என்று லமி கூற, அவர் அப்படி சொன்னதும் வேகமாக அவரை கட்டிக் கொண்டாள் நிதா.
நிதாவின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்த வெங்கி, "என்னாச்சு நிதா ? இன்னைக்கு நீ சரியில்லையே? எதையோ பார்த்து பயந்து போன மாதிரி இருக்க? என்னனு இந்த தாத்தாகிட்ட சொல்லக் கூடாதமா?" என்று வெங்கி கேட்க
"நத்திங் தாத்தா! கெட்ட கனவு... வேற ஒன்னும் இல்ல தாத்தா... லேட்டாச்சி போய்ட்டு வரேன்" என்று கூறியவள் வேகமாக வாசல் பக்கம் விரைந்தாள். அவள் தன் ஸ்கூட்டியை உயிர்பித்தபடியே லமியையும், வெங்கியையும் கண்கள் நிறைக்கும் வரை பார்த்துவிட்டு கிளம்பினாள் நிதா.
நிதா செல்வதை பார்த்தபடியே லமி அருகில் வந்த வெங்கி,
"நிதா இன்னைக்கு வித்தியாசமா தெரியுறா எனக்கு" – வெங்கி
"ஆமா! எனக்கும் அப்படிதான் தோணுது! என்னாச்சுங்க ? இவளுக்கு!" – லமி கவலையாக வெங்கியிடம் கேட்க
"தெரியலயே! வரட்டும் வந்தவுடனே பேசிக்கலாம்" என்று வெங்கி லமியை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்
வண்டியில் சென்ற நிதா அந்த போலீஸ் கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தினாள். அவள் வண்டியை நிறுத்தியதுதான் தாமதம் அவள் எதிரில் வந்து நின்றது ஒரு கார்.
காரைப் பார்த்ததும் மிரண்டவள் “எல்லாத்துக்கும் தயார்படுத்திட்டுதான வந்த நிதா! அப்புறம் என்ன? தைரியமா இரு! உயிர் போனாலும் இதை நீ செஞ்சு தான் ஆகணும் ” என்று தன்னைதிடப்படுத்திக் கொண்டவள் இறங்கி அந்த கட்டிடத்தை நோக்கி விரைய அவளை ஒரு கரம் பிடித்து இழுத்து காரின் உள்ளே தள்ளி கதவடைத்தது. கத்துவதற்கு நிதா வாய் திறக்க முயல அவள் முன் அடிக்கப்பட்ட மருந்தின் நெடியில் மயங்கினாள் நிதா.
மயக்கத்தில் இருந்து தெளிந்த நிதா முன் அமர்ந்து இருந்தான் யட்சன்.
அவனை பார்த்து திடுக்கிட்டாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நேராக பார்த்தாள் நிதா.
அவளிடம் தோன்றிய பாவனைகளை அளவிட்டவன் "நான் அவ்வளவு சொல்லியும் என்னை போலீஸ்கிட்ட சொல்ல கிளம்பிட்ட அப்படிதானே?" – யட்சன்.
"ஆமா! நீ வெளியில் இருந்தா எல்லாத்தையும் கொன்னுடுவ? என் உயிரை கொடுத்தாவது உன்னை பற்றிய உண்மையை எல்லாருக்கும் சொல்லாம விட மாட்டேன்டா! யூ டெவில்!" - நிதா.
"அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு! உன் உயிரை நீயே கொடுக்கிறேனு சொல்லிட்ட! உன்னை விட்டு வைக்க நான் என்ன மடையனா?" என்று கூறிய யட்சன் அவள் அருகில் வர வேகமாக யட்சனை தடுத்தாள் நிதா.
"என்னை சாகடிக்க நீ முடிவு பண்ணிட்டே! ஆனால் சாகுறதுக்குள்ளே ஒண்ணே ஒண்ணு நான் செய்ய மட்டும் எனக்கு அனுமதி கொடு டெவில்!" – நிதா
'ம்..ம்..ம்..' என்று சற்று நேரம் யோசித்த யட்சன் "ஓகே கேரி ஆன்! இப்ப என்ன பண்ணப் போற நீ?" – யட்சன்.
"நான் என் டோலுவிடம் கடைசியாக பேசிக்கட்டுமா" என்று கூறிய நிதா தன் பையில் எதையோ தேட அவள் தேடுவதை உணர்ந்த யட்சன் அவள் முன் அந்த டாலரை தன் கைகளில் ஆட்டிக் காண்பித்தபடியே,
"இதை தான தேடுற நீ?" – யட்சன்.
"ஆமா! உனக்கு எப்படி கிடைச்சது!" – நிதா.
"அன்றைக்கு ஆபிசில் விட்டு போயிட்ட! ஞாபகம் இருக்கா?" – யட்சன்.
அதை ஞாபகப்படுத்தி பார்த்தவள் வேகமாக அந்த டாலரை அவனிடம் இருந்து பறித்தவள்
"இது என் டோலுவோடது... டெவில் உன்கிட்ட இது இருக்க கூடாது" என்று அவனை திட்டிவிட்டு கண்களில் நீரோடு அந்த டாலரை பார்த்து பேச ஆரம்பித்தாள் நிதா.
"நான் போறேன் டோலு! நீ பார்க்க முடியாத இடம் தேடி! நீ கண்டுபிடிச்சு என்னை தேடி வர முடியாத இடம் தேடி போறேன்! நான் உனக்காக எவ்வளவு நாள் காத்துட்டு இருந்தேன் தெரியுமா? ஆனால் கடைசி வரை நீ என்னை பார்க்க வரவே இல்லை" என்று நிதா கூறியபடியே கண்ணீர்வடிக்க அதை பார்த்த யட்சன் அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் .
பின்பு சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே தன் கால்களை ஆட்டியபடியே பேசினான்.
"ஓகே நிதா! உன்னை சாகடிக்கலாம் னு தான் முடிவு பண்ணேன். ஆனால் உன்னை கொன்னுட்டா ஈஸியா நீயும் போய் சேர்ந்துடுவே. ஆனா! எனக்கு அது வேண்டாம் நீ என் அருகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா துடிக்கணும்! அதை நான் பார்த்து ரசிக்கணும்"- யட்சன் கொலைவெறியோடு பேச
இதை கண்ட நிதா யட்சனின் கண்களில் வந்து போன பாவனையை மிரட்சியோடு பார்த்துக் கொண்டே
"ஆமா என் மேல் உனக்கு ஏன் இந்த கொலைவெறி! உனக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்"- நிதா.
"ம்..ம்..ம்.. அவசரப்படாத மனு டார்லிங்! நேரம் வரும் போது உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்! அதுக்கு முன்னாடி" என்று யட்சன் இழுக்க,
"என்னை என்ன செய்யப் போற நீ?" என்று அவன் குரலின் வேற்றுமையை புரிந்து கொண்ட நிதா பயத்தோடு அவனை பார்த்து கேள்வி கேட்டாள்.
அதற்கு யட்சன் "ம்..ம்..ம்.. பழங்கணக்கை தீர்க்கப் போறேன் பேபி!" என்று யட்சன் சிரித்தபடி கூற , இங்கு நிதா புரியாமல் அவனை பார்த்தபடியே நின்றாள்.

ராட்சஷனாக வருவான்...
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 26
காரை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் யட்சன் அவனின் வேகத்தை பார்த்து பயத்தில் கண்கள் மூடியபடியே அருகில் அமர்ந்து இருந்தாள் நிதா.
வேகமெடுத்து சென்ற கார் சட்டென்று வட்டமடித்து ஒரு இடத்தில் நின்றது. கார் நின்றதும் கண்ணை திறந்து பார்த்த நிதா கார் தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்ததும் வேகமாக காரை திறந்து கொண்டு ஓட முயற்சிக்க அவளது முயற்சியை முன் கூட்டியே தெரிந்து கொண்ட யட்சன் கணநேரத்தில் காரை சுற்றி வந்து நிதாவின் கைகளை பிடித்தான்.
"என்ன மனு டார்லிங்! எதுக்கு இந்த அவசரம்! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்குள்ள போகலாம்! இனி உன்னை தனியா விடக்கூடாதுனு நான் முடிவு பண்ணி பல மணி நேரங்கள் ஆகிடுச்சு பேபி..." என்று கூறியபடியே யட்சன் அவளை அருகில் இழுக்க
அதற்குள் கார் நிற்கும் சத்தம் கேட்டு லமியும், வெங்கியும் வேகமாக வெளியே வந்தனர். அங்கே யட்சன் நிதாவின் கைகளை பற்றிக் கொண்டு இருப்பதை புதிராக பார்க்க, அவர்களின் பார்வையின் பொருளை உணர்ந்த நிதா வேகமாக அவனின் கையை உதறி தள்ளி நின்றபடியே
"லமி, தாத்தா... இவர் தான் என் பாஸ் வினய். இவர் ஒரு டெவி...." என்று நிதா ஆரம்பித்தது தான் தாமதம் யட்சன் நிதாவை முந்திக் கொண்டு அவளின் அருகில் வந்து அவள் கைகளை பற்றியபடி
"நாங்க இரண்டு பேரும் லவ் பண்றோம் பாட்டிமா! கூடிய சீக்கிரம் கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்! அதான் உங்ககிட்ட என்னை அறிமுகப்படுத்த இங்க கூட்டிட்டு வந்தா! என் மனு டார்லிங்! என்ன நான் சொல்வது சரிதான பேபி!" என்று யட்சன் கூறியது தான் தாமதம் நிதா அவனை திகைப்பாக பார்த்தாள் என்றால் லமியும், வெங்கியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நிதாவின் முகத்தை அளவிட்ட வெங்கி லமியின் காதுகளில் முணுமுணுத்தார்.
"ஏன் லட்சுமி உண்மையிலேயே இவங்க லவ் பண்றாங்களா?" – வெங்கி.
"தெரியலயே! ஆமா ஏன் அவங்க லவ் பண்ணக் கூடாதா? அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?" – லமி.
"இல்லை! நிதா காலையில் பேசுனதை வச்சு பார்த்தா! அவ ஏதயோ நினைத்து பயந்த மாதிரி இருந்தது! அங்க பாரு அவ முகத்தை! இப்பவும் அவ சரியில்லை! அவ முகத்தில் சந்தோசம் துளி கூட தெரியல! அதான் ... " என்று வெங்கி இழுக்க,
"ம்க்கும் உங்க நொள்ள கண்ணுக்கு எல்லாம் தப்பா தான் தெரியும்! அங்க பாருங்க! அவங்க ஜோடி பொருத்தம் எவ்வளவு அருமையா இருக்கு! சும்மா எதாச்சும் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க" – லமி
"ம்ம்ம் எனக்கு நொள்ள கண்ணா? உனக்கு ரொம்ப நல்ல கண்ணோ! சரிதான் போடி! உனக்கு தான்டி கண்ணு சரியில்லை. இன்னைக்கு உன் நொள்ள கண்ணை வச்சு காபில நீ சக்கரைக்கு பதில் உப்பை அள்ளி போட்டுட்ட! காபியை குடிக்க முடியலை! நீயெல்லாம் கண்ணை பத்தி பேசுற" – வெங்கி
அதற்கு லமி அவரை முறைக்க
மேற்கொண்டு பேசினார் வெங்கி, "லட்சுமி அவங்க ஜோடி பொருத்தம் பார்க்க அழகாக இருந்தாலும் திருமணத்துக்கு மனப்பொருத்தம் தான்டி முக்கியம் ! அதுலாம் உனக்கு எங்க தெரியப் போகுது!".
"ஓஹோ! உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு!" – லமி
"கொஞ்சம் நிறுத்திறியா? இங்க நம்ம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தா அந்த தம்பி வெளியவே நிக்க வேண்டியதுதான் இன்னைக்கு முழுசும்! போய் அவரை உள்ளே கூப்பிடு" என்று வெங்கி கூறியதும் தான் லமிக்கும் அவரது தவறு தோன்ற அவர் வேகமாக யட்சன் பக்கம் திரும்பினார் . அங்கு அவன் நிதாவோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் நிதாவிடம் அந்நோனியமாக இருப்பதாக தெரிய நிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பயத்தை வரவழைத்தது.
நிதாவின் அதிர்ச்சியை பல் வரிசை தெரிய சிரித்தபடியே பார்த்த யட்சன் "என்ன மனுமா! ஏன் இவ்வளவு சாக் ஆகுற நீ! நம்ம லவ் பண்ற விசயம் எப்படினாலும் எல்லாருக்கும் தெரியத்தான் போகுது! அதுக்குள்ள நாமளே விசயத்தை சொல்லிட்டா பெட்டர் இல்லையா! பெட்டர் ஹாஃப்!" என்று யட்சன் கூற நிதா அவன் முதன்முதலில் தன்னை பார்த்து சிரித்த முகமாக பேசுவதை தன்னை மறந்து பார்த்தபடியே நின்றாள். அவன் தன்னிடம் பேசும் பாஷை புரியாதவள் போல் அவன் சொல்லும் அனைத்திற்கும் 'ஆம்' என்று தலையசைத்தாள்.
அவள் 'ஆம்' என்று தலையசைத்ததும் லமியியம் திரும்பிய யட்சன், "பார்த்தீங்களா லமி! அவளே! ஆமானு சொல்லிட்டா! இப்ப உங்களுக்கு என் மேல் சந்தேகம் இல்லைதானே! எங்களை வீட்டுக்குள்ளே லமி!" – யட்சன்
"அய்யோ!! என்ன தம்பி நீங்க சந்தேகம் அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு இருக்கீங்க! தீடீர்னு உங்களை பார்க்கவும் எங்களுக்கு ஒன்றும் புரியல அதான் சாக் ஆகி நின்னுட்டோம் ! வேறு ஒன்றுமில்லை! எங்க நிதா செல்க்ட் பண்ற விசயம் எப்பவும் பெஸ்ட்டா தான் இருக்கும்! இப்ப உங்களை செலக்ட் பண்ணி இருக்கா! நீங்களும் பெஸ்ட்டா தான் இருப்பீங்க தம்பி.. " என்று லமி கூற வெங்கி 'கிழவி கரெக்டாதான்ப்பா பர்ஃபார்மன்ஸ் குடுக்குறா' என்று நினைத்தவாறு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
நிதா தனக்குள் மறுகிக் கொண்டிருந்தாள் 'அய்யோ! லமி அவன் பொய் சொல்றான்! அவனை நம்பாத! என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டிங்களா! யாராவது என்ன இவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க' என்று நிதா தனக்குள் பேச வெங்கி நிதாவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்த வெங்கிக்கு குழப்பம் அதிகமாகியது.
லமி யட்சனை உள்ளே அழைக்க யட்சனும் உள்ளே சென்றான்.
உள்ளே சென்ற படியே வெங்கி யட்சனிடம் "நீங்களும் லமினு கூப்பிடுறீங்க தம்பி! உங்களுக்கு எப்படி தெரியும் நாங்க அவளை லமினு கூப்பிடுற"
வெங்கி கூறியதை அடுத்து நிதாவும் யோசனையுடன் அவனை பார்க்க
"ம்ம்ம் நிதாதான் காரணம் தாத்தா! அடிக்கடி லமி இப்படி செய்வா! அப்படி செய்வானு அடிக்கடி என்கிட்ட லமி புராணம் தான் பாடிட்டே இருப்பா" என்று யட்சன் சொல்லியபடியே செல்ல நிதா அவனை யோசனையாக பார்த்தபடியே அருகில் நடந்து வந்தாள்.
இருவரையும் நேராக டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்ற லமி "வாங்க தம்பி! எங்க வீட்டுக்கு முதன்முறையா வந்து இருக்கீங்க! அதுவுமில்லாம எங்க வீட்டு பொண்ணை கல்யாணம் வேற பண்ணிக்க போறீங்க! அதனால் எங்களுக்கு நீங்க ரொம்ப ஸ்பெசல்! கண்டிப்பா சாப்பிட்டுத்தான் போகணும்!" என்று கூறியபடியே லமி அவனை சேரில் அமர வைக்க, நிதா அவனைவிட்டு தள்ளி இருந்த சேரில் அமர வேண்டி அவனை தாண்டிச் செல்ல முயல அவள் கையை பிடித்து இழுத்த யட்சன் அவன் அருகில் உள்ள சேரில் நிதாவை அமர வைத்தான்.
"என்னைவிட்டு போகவிட மாட்டேன் மனுமா!" – என்ற யட்சன் லமியைப் பார்க்க அவர் தங்களை பார்ப்பதை உணர்ந்தவன் "ஐ மீன் என்னைவிட்டு தனியா போகவிட மாட்டேன்மா அது சாப்பிடுவதற்காகனாலும் சரி! வேறு எதுக்காக இருந்தாலும் சரி! ஆக்கமும் நீயே என் அழிவும் நீயே தான் மனுமா" என்று யட்சன் சொல்ல அதை கேட்ட நிதா திகைத்தாள்.
இந்த வரிகள்.... என்று யோசித்த நிதாவிற்கு கண்முன்னே ஒரு உருவம் நிழலாட யட்சனை ஆராய்ச்சியாக பார்த்தாள். அதை கண்டு கொண்ட யட்சன் வேகமாக அவளை மாற்றும்விதமாக "என்னாச்சு உனக்கு? சாப்பிடாம என்னை பார்த்துட்டு இருக்க! இப்ப நீயா சாப்பிடுறீயா இல்லை! நான் ஊட்டி விடவா" என்று யட்சன் மிரட்டியதும் நிதா வேகமாக சாப்பிடத் தொடங்கினாள்.
அவர்கள் அந்நோனியத்தை பார்த்த லமி வெங்கியின் காதை கடித்தார் "ம்ம்ம் நிதாவை எப்படி பார்த்துக்குறார்! பாருங்க! தேவையில்லாம நீங்க தான் ரொம்ப கற்பனை பண்ணி என்னையும் பயமுடுத்திட்டீங்க".
"ம்ம்ம் நல்லாத்தான் பார்த்துக்குறார்! இருந்தாலும் எதோ ஒன்று குறையுது! நிதாகிட்ட அது என்னனுதான் தெரியல" – வெங்கி.
"ம்ம்ம் எல்லாத்துக்கும் சந்தேகம்! உங்களை திருத்த முடியாது" என்று என்று வெங்கியை திட்டிவிட்டு யட்சனின் அருகில் சென்றார் லமி.
அவன் அருகில் சென்ற லமி சந்தோசமாக யட்சன் முன் சாப்பாடு தட்டை வைத்தபடியே "நீயும் சாப்பிடு தம்பி!" என்று யட்சனை லமி சாப்பிட அழைக்க நிதா மனதிற்குள் "ம்க்கும் லமி அவனை போய் சாப்பிட சொல்ற பார் உனக்கு அறிவே இல்லை ! அவன் மனுசனே இல்லை! அவனை போய் சாப்பிட கூப்பிடுற ! உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! அவனுக்கு சாப்பிட இட்லி தோசை குடுக்குறதுக்கு பதில் இரண்டு பாட்டில் ரத்தத்தை குடு! அவன் பாட்டுக்க ஓரத்தில் உட்கார்ந்து உறிஞ்சிகிட்டு இருப்பான்" என்று நிதா தன் இவ்வளவு நேர அதிர்ச்சியில் இருந்து வெளி வந்து தன் பழைய ஃபார்ம்க்கு வந்து மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்க யட்சன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை கவனித்த நிதா "அய்யோ!ராட்சஸன் பாக்குறானே! நம்ம மைண்ட் வாய்ஸ் அ கண்டுபிடிச்சிருப்பானோ!" என்று நிதா தனக்குள் பேசிக் கொண்டிருக்க
யட்சன் அவள் பக்கம் குனிந்தபடி யாருக்கும் தெரியாமல் முணுமுணுத்தான். "நீ மனசுக்குள் என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு! பேசாம மூடிட்டு சாப்பிடுடி" – யட்சன்.
"அய்யோ! வாயை மூடச்சொன்னா மூடலாம்! மனசுல நினைக்கிறத மூடச் சொன்னா நான் எப்படிடா அதை மூடுறது! மனசுல ஓடுறதை நிப்பாட்ட இதுவரைக்கும் எவனும் எந்த கருவியும் கண்டுபிடிக்கலடா யூ டெவில்!" என்று நிதா மனசுக்குள் நினைக்க
அதற்கு நிதாவை யட்சன் ஒரு கோபமாக ஒரு பார்வை பார்க்க நிதா பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
நிதா சாப்பிட ஆரம்பித்ததும் யட்சனை பார்த்த லமி "சாப்பிடு தம்பி! என்ன வைக்க இட்லியா? தோசையா?" - லமி.
"எனக்கு எதுவும் வேண்டாம் லமி! எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! என் பங்கை சேர்த்து நிதாவுக்கே கொடுத்திடுங்க! அவதான் பசி தாங்க மாட்டாளே! " – யட்சன்
அதை கேட்ட நிதாவிற்கு புறை ஏற வேகமாக அவளது தலையை தட்டிய யட்சன் "உனக்கு எத்தனை தடவை சொல்றது மெதுவா சாப்பிடுனு! பாரு எப்படி புறை ஏறுதுனு! மெதுவா சாப்பிடு டா..." என்று யட்சன் ஆரம்பித்ததும் நிதா அவனை சட்டென்று திரும்பிப் பார்க்க அதை கண்டு கொண்ட யட்சன் "டா.....ர்லிங்" என்று சொல்ல நிதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
தான் அவனிடம்.... எதையோ எதிர்பார்த்து ஏமாந்த மாதிரியான உணர்வை உணர்ந்தாள்
'நிதா! நீ தேவையில்லாத நினைச்சு உன்னை வருத்திக்குற! இவன் கண்டிப்பா அவனா இருக்க முடியாது வீணா கற்பனை பண்ணிக்காத' என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
"ஏன்? என்னாச்சு தம்பி ?ஆமா வந்ததில் இருந்து கேட்கணும்னு இருந்தேன்! உங்க பெயர் என்னனு நீங்க இன்னும் சொல்லலையே தம்பி!" – லமி
"என் பெயர் யவ... என்று இழுத்த யட்சன் நிதாவை பார்க்க அவள் அவனை பார்ப்பதை உணர்ந்து என் பெயர் வினய் பிரசாத்! எல்லாரும் என்னை யட்சன்னு கூப்பிடுவாங்க" – யட்சன்
"யட்சனா? இப்படி ஒரு பெயரா! வித்தியாசமா இருக்கு! ஆமா உடம்புக்கு என்ன தம்பி?" – லமி
"ஏதோ சாப்பிட்டது சேரல லமி! அஜீர்ண கோளார் மாதிரி இருக்கு" – யட்சன்
'ம்க்கும் ஆட்டு ரத்தம், மாட்டு ரத்தம், மனித ரத்தம்னு எல்லாத்தையும் கலந்து அடிச்சா அப்படித்தான்டா இருக்கும்! ஒழுங்கா ஒரு ரத்தத்தை குடிக்கணும்! கையில கிடைக்குற எல்லாத்தையும் ஆட்டைய போட்டு குடிச்சா! இப்படி தான்டா இருக்கும் ராட்சஸா! ஆமா இது என்னடா ஆச்சரியமா இருக்கு வெம்பயர்க்கு கூட அஜீர்ண கோளார் லா வருமா! நமக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்! அவன் சாப்பிடுறான்! இல்லை பேதி வந்து சாகுறான்! நோ! நோ! சாகுறான்னு சொல்லக்கூடாது அது தான் வெம்பயர் ஆச்சே! அவ்வளவு சீக்கிரம் லா அவன் சாகமாட்டான்! எதற்கு வம்பு! நம்ம சாப்பிடுற வேலையை பார்க்க வேண்டியது தான்! ஓ வாவ்! நிதா இன்னைக்கு உன் மூளை பயங்கரமா யோசிக்குது போ! கவுண்டர் பிண்ற' என்று நிதா தனக்குள் சொல்லியபடியே யட்சனை பார்க்க அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
'அய்யோ! இவன் வேற முறைக்குறானே! என்னை என்னடா பண்ணச் சொல்ற நாட்டுல என்னை மாதிரி புருஷனுக்கு பயப்படுற பொண்டாட்டிகள் எல்லாம் இப்படி தான்டா மனசுக்குள் பேசி எங்கள் கோபத்தை தணிச்சுகிறோம்! ஆனா என் விசயத்தில் மனசுக்குள்ள கூட நினைக்க விட மாட்றடா ராட்சஸா' – என்று நிதா தனக்குள் பேசிக் கொண்டே யட்சனை பார்க்காமல் சாப்பிடுவதில் முனைந்தாள்
லமி யட்சன் உடம்பு சரி இல்லை என்று சொன்னது தான் தாமதம் வேகமாக உள்ளே சென்று மருந்து பாட்டில்கள் சகிதத்தோடு வந்து அவன் முன் வைக்க யட்சன் அந்த மருந்து பாட்டில்களை கண்டு திகைத்துவிட்டான்.
"என்ன லமி! இது எல்லாம்!" – யட்சன்.
"மருந்து பாட்டில்கள் தம்பி! உடம்பு சரியில்லைனு சொன்னீங்கள! அதான்... எப்பவும் நான் வீட்டில் சில அவசர தேவைக்கு வச்சிருப்பேன்" – லமி.
"அதற்காக இத்தனை மருந்தா!" – யட்சன்.
"ஆமாம்! தம்பி ! அப்புறம் உடம்பு சரியாக வேண்டாமா!" என்று கூறிய லமி ஒவ்வோரு பாட்டிலாக டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தபடியே யட்சனிடம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.
"இது சாப்பிட்ட உணவு செமிக்க!" – லமி.
"ம்க்கும் சாப்பாடு சாப்பிட்டா தான செமிக்க ரத்தம் குடிச்சாலுமா???" – நிதா.
"இது பசியை தூண்டிவிடும்!" – லமி.
"ம்க்கும் பசியை தூண்டிவிட மருந்து கொடு.. இன்னும் அவன் பல பேர கொலை செய்ய வசதியா இருக்கும்!!" - நிதா.
"இது ஆண்டிபயாடிக்" – லமி
"ம்க்கும் இவன் ஆன்டிய கொன்னு அவங்கள பாடி ஆக்காம இருந்தா சரி" – நிதா
இது என்று ஒவ்வோரு மருந்து பாட்டிலுக்கும் லமி இங்கு விளக்கம் சொல்ல நிதா இங்கு மனதிற்குள் கவுண்டர் அடித்துக் கொண்டிருந்தாள்.
லமியையும், நிதாவையும் மாறி மாறி பார்த்த யட்சன் நிதாவை திட்ட வாய் எடுப்பதற்குள் மருந்து பாட்டிலோடு அவன் அருகில் வந்துவிட்டார் லமி . யட்சன் லமியை திகைப்பாக பார்த்தபடியே "லமி! போதும்! போதும் நிறுத்துங்க! இதை எல்லாம் சாப்பிட்டா! நான் என்ன ஆவேன்னு எனக்கே தெரியல! இதை பார்த்தவுடனே எனக்கு உடம்பு பிரச்சனை பாதி சரியாகிடுச்சு! ஐ அம் ஆல்ரைட் நவ் !" – யட்சன்.
"அப்படிலாம் சொல்லக்கூடாது தம்பி! நீங்க என் மனசு கஷ்டப்படும்னு என்கிட்ட உங்க வலியை மறைக்கிறீங்க! இந்த குணத்துக்காகவே உங்க வலியை நான் போக்கணும் தம்பி!" – லமி.
"கிழவி ஒவரா ஃபர்பார்மன்ஸ் பண்ணறாளே" - வெங்கி மைன்ட் வாய்ஸ்.
"ஓ! நோ! நான் சொல்றதை கேளுங்க பாட்டி! மனுமா! ஐ அம் ஆல்ரைட் நவ்! லமியை ஸ்டாப் பண்ணு" - யட்சன்.
'ஓ வாவ்! லமி! வெம்பயருக்கு மருந்து ஊத்தப் போற முதல் ஆள் நீயாத்தான் இருப்ப! வெம்பையரையே கதறி ஓட விடும் லமி வாழ்க! பின்னுற லமி! நல்லா படுடா ராட்சஸா!' என்று மனதுக்குள் நினைத்த நிதா வெளியில் லமியிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "ஸ்டாப்பிட் லமி! அவர் தான் வேண்டாம்னு சொல்றார்ல விடு!".
"உனக்கு ஒன்றும் தெரியாது நிதாமா... நீ சின்னபிள்ளை... உனக்கு விவரம் பத்தாது... நீ பேசாம இரு!" என்று லமி நிதாவை பேசவிடாமல் அவள் வாயை அடைக்க அவர் அப்படி சொன்னதை தொடர்ந்து நிதா பாவமாக அவனை பார்த்தாள்.
அதை கண்ட யட்சன் நிதாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் "பாவமா மூஞ்சவச்சிகிட்டு நடிக்காதடி ! என்னை இன்னைக்கு ஓவரா மைன்ட் வாய்ஸில் கவுண்டர் அடிச்சிட்டு இருக்கே! இரு உன்னை வச்சுக்குறேன்டி!" – யட்சன்.
"ம்ம்ம் போடா லூசு பயலே! என் லமிய பத்தி உனக்கு சரியா தெரியல! இப்ப பாரு என் லமி ஃபர்பார்மன்ஸை" என நிதா முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட அதை கேட்ட யட்சன் வேகமாக எழ முயன்றான்.
ஆனால் லமி அவனை எழ விடாமல் அமர வைத்து "தம்பி! உங்களுக்கு ஒன்றும் தெரியாது! இருங்க நான் உங்களுக்கு இந்த மருந்தை ஊத்திவிடுறேன்! அப்புறம் பாருங்க! எல்லாம் சரியாகிடும்" என்று லமி மருந்துகளை வாயில் ஊற்ற அருகில் வர "நோ!.. லமி" என்று யட்சன் பின்னால் சென்றான்.
அதை பார்த்த நிதா சட்டென்று எண்ணம் உதிக்க "ஸ்டாப் இட்! லமி! இப்படியெல்லாம் குடுத்தா அவர் எப்படி குடிப்பார்! குடுக்க வேண்டிய முறையில் குடுக்கணும்! இரு நான் வர்றேன்" என்று கூறிய நிதா "தாத்தா நீங்க அவர் கையை பிடிங்க... லமி நீ அவர் தலையை பிடி நான் அவர்க்கு வாயில் மருந்து ஊத்துறேன்" என்று நிதா சொல்ல
யட்சன் அவளை முறைத்தபடியே "நோ நிதா! ஸ்டாப் இட்!" என்று சொல்லியபடியே பின்னால் செல்ல
மூன்று பேரும் அவனை பிடித்து அமுக்கி லமி கையில் இருக்கும் அனைத்து மருந்தையும் அவன் வாயில் ஊத்தினாள் நிதா.
யட்சன் ஒரு கையாலகாதனத்துடன் அனைத்தையும் விழுங்கி, இருமி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க
"இங்க என்ன நடக்குது" என்று குரல் கேட்க அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கு வைத்தி நின்று இருந்தார்.

வருவான்.....
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 27
வைத்தியை பார்த்ததும் யட்சனுக்கு கோபம் தலைகேறியது. கோபம் ஏற ஏற அவனுக்குள் மாற்றம் ஏற்பட கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி நிதா பக்கம் திரும்பிய யட்சன் "ஒகே மனு டார்லிங்! நீ சாப்பிட்டது வரை போதும்! வா! என் கூட நம்ம வீட்டுக்கு போகலாம்! நம்ம லவ் விசயத்தை உன் லமிக்கும், வெங்கிக்கும் சொல்லத்தான் உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்தேன்! வந்த வேளை முடிஞ்சிருச்சு! இனி இங்க இருக்க வேண்டிய அவசியமில்லை! வா நாம போகலாம்!" என்று யட்சன் மனுவை அழைத்துச் செல்ல முயல வைத்தி அவன் முன் வழி மறித்து நின்றார்.
"என் பொண்ணை எங்க கூட்டிட்டு போறீங்க மிஸ்டர் வினய் ப்ரசாத்! நீங்க யார் அவளுக்கு..." – வைத்தி.
"இனி உங்க பொண்ணு இல்லை மிஸ்டர் வைத்தி! என் வைப்! என் மனைவி என் கூடத்தான் இருக்கணும்!" – யட்சன்.
"வைப்பா! என்ன வினய் சார்! என் பொண்ணுக்கு நான் இன்னும் கல்யாணம் பண்ணலயே!" - வைத்தி.
"அவங்க லவ் பண்ணறாங்களாம்.. அத சொல்லி கல்யாணத்துக்கு பர்மிசன் கேட்கதா வந்துருக்காங்க வைத்தி" - வெங்கி.
"அப்பா... அது..." - நிதா.
"ஓ! அப்படியா" - வைத்தி.
"ஆமாப்பா" - லமி.
"பொண்ணுக்கு அப்பனா நான் இன்னும் மேரேஜ்க்கு சம்மதம் தெரிவிக்கல! கல்யாணம் ஒன்று ஆகுறதுக்குள்ள உரிமை பாராட்டல் எல்லாம் பலமா இருக்கு! " - வைத்தி.
"பையன் நல்லதான இருக்கான்" - லமி.
"வா... மனுமா நம்ம போகலாம்" - யட்சன்.
"இல்ல.... அப்பா..." - நிதா.
"வான்னு சொன்னேன்" - யட்சன் நிதா கையை பற்றி இழுக்க.
"வேண்டாம் வினய் சார்! அவ இன்னும் என் பொண்ணா தான் இருக்கா" – வைத்தி.
"உங்க கிட்ட நான் சம்மதம் கேட்கல வைத்தி! ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணதான் வந்தேன். எனக்கு தேவையானதை நான் நானா எடுத்துக்குவேன்! யார்கிட்டயும் நான் பெர்மிஷன் கேட்டதில்லை! கேட்டு பழக்கமும் இல்லை பழகிக்க போறதும் இல்லை! நீங்க வழிவிட்டா நல்லா இருக்கும்" – யட்சன்.
"வழிவிட முடியாதுன்னா" – வைத்தி.
"வழியை உருவாக்கி போகத்தெரியும்" – யட்சன்.
"சார்! கையை விடுங்க... அப்பா... ப்ளீஸ்... அப்பா..." - நிதா.
"சரி வினய் சார்! நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். ஆனா என் பொண்ண கல்யாணம் செய்யாம இங்க இருந்து நீங்க கூட்டிட்டு போக முடியாது வினய்! எல்லாம் முறைப்படி தான் நடக்கணும்" – வைத்தி.
அதற்கு யட்சன் எதோ சொல்ல வர வெங்கி இருவர் பேச்சின் இடையில் புகுந்து யட்சனிடம் பேசினார்.
"வைத்தி சொல்வது தான் சரி தம்பி! எல்லாம் முறைப்படி தான நடக்கணும்! நிதாவை இங்க விட்டுட்டு போங்க! மேரேஜ் ஆனபின் உரிமையோட கூட்டிட்டு போங்க தம்பி! நாங்க யாரும் தடுக்க மாட்டோம்" – வெங்கி.
"நோ! தாத்தா! என்னால் யாரையும் நம்பி! என் வைப்பை விட்டு போக முடியாது" என்று வைத்தியை பார்த்து குறிப்பால் சொன்னவன் நிதாவை இழுத்துக் கொண்டு செல்ல வைத்தி அவனை தடுக்க முயன்றார். அதற்கு யட்சன் அவரை பார்த்த பார்வையில் வைத்தி தானாக வழியைவிட யட்சன் அவளை இழுத்துச் சென்றான்.
நிதா "லமி..." என்று கூறி ஏதோ சொல்ல வர யட்சன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "நீ இப்ப என் கூட வரியா! இல்லை லமிக்கு இந்த இரவை கடைசி இரவாக மாற்றவா?" என்று யட்சன் மிரட்ட நிதா பேசாமல் அவனோடு சென்றாள்.
வைத்தி நடக்கும் விசயங்களை தடுக்க முடியாமல் கோபத்தில் விக்ன ப்ரசாத்திற்கு போன் செய்தார்.
ப்ரசாத் போனை எடுத்தது தான் தாமதம் வைத்தி கோபமாக கத்தினார்.
"மிஸ்டர் ப்ரசாத்! என் வீட்டிற்கு வந்து உங்க சன் என் பொண்ணை எங்க பெர்மிசன் இல்லாம கூட்டிட்டு போறார்! என்ன இதெல்லாம்! நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? எனக்கு தெரியாது எனக்கு என் பொண்ணு என் கிட்ட என் வீட்டுக்கு திரும்பி வரனும்!" – வைத்தி
வைத்தி பேசியதை கேட்டு ஒன்றும் புரியாமல் விழித்த ப்ரசாத் "மிஸ்டர் வைத்தி! கொஞ்சம் நிதானமா பொறுமையா என்ன நடந்ததுனு சொல்லுங்க! எனக்கு ஒன்றும் புரியவில்லை !" – ப்ரசாத்.
அதற்கு வைத்தி யட்சன் தன் வீட்டிற்கு வந்ததும் அதனை அடுத்து நடந்த நிகழ்ச்சிகளையும் கூற அதை கேட்ட ப்ரசாத் சற்று நேரம் யோசித்துவிட்டு வைத்தியிடம் "நான் வினய் கிட்ட பேசுறேன் வைத்தி சார்! டிரஸ்ட் மீ! உங்க பொண்ணை பத்திரமா வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு!" என்று கூறி போனை வைத்த ப்ரசாத் மாடியில் நடந்தபடியே வைத்தி கூறியதை யோசித்துப் பார்க்க அப்போது சத்தம் கேட்டு கீழே பார்க்க அங்கு யட்சன் நிதாவை இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.
அதை கண்ட ப்ரசாத் வேகமாக யட்சனிடம் விரைந்தார்.
"என்னாச்சு யட்சா! இந்த பொண்ணை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க! அவளை அவ வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வா! லெட் ஹர் கோ!" – ப்ரசாத்.
"ஐ நோ! வாட் ஐ அம் டூயிங்! தேவையில்லாம என் விசயத்தில் மூக்கை நுழைக்காதீங்க டேட்!" என்று கூறிய யட்சன் நிதாவை ப்ரசாத்தின் முன் நிறுத்தி “நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம்! நீங்க தான் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதுவும் இரண்டு நாளில்! ஒரு நாள் என் டார்லிங் கூட நான் லவ் லைப்பை நல்லா என்ஜாய் பண்ணணும் டேட் "என்று நிதாவை பார்த்தபடியே கூறியவன், தான் வந்த வேலை முடிந்தது போல் திரும்பிச் செல்ல முனைய ப்ரசாத் அவனை தடுத்தார்.
"நீ செய்றது சரியில்லை யட்சா! நீ யார்னு உனக்கே தெரியும் தேவையில்லாம நிதாவோட வாழ்க்கையை கெடுக்காத! நான் சொல்வதை கொஞ்சம் கேள்! யட்சா!" என்று ப்ரசாத் கூற அவரை தடுத்தான் யட்சன்.
"நான் என்ன செய்யுறேன்னு எனக்கு தெரியும் டேட்! நான் சொன்னதை மட்டும் நீங்க செஞ்சா போதும் டேட்!" என்று கூறியவன் நிதாவை இழுத்துக் கொண்டு சற்று தூரம் சென்றவன் ப்ரசாத்திடம் திரும்பி வந்தான்.
"அப்புறம் டேட்! இன்னோரு முக்கியமான விசயம்! என் மேரேஜ்க்கு வைத்தி சம்மதிக்கல. அதனால் நீங்க தான் உங்க சம்பந்தி மிஸ்டர் வைத்தியநாதன் கிட்ட பேசி நாங்க கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கப்போறிங்க? அவர் சம்மதிக்கலைனாலும் இந்த மேரேஜ் நடக்கும்னு அவர்கிட்ட தெளிவா சொல்லிருங்க டேட்! நான் சொல்வது சரிதான! நான் சொன்னதை செய்யலேனா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்?" என்று அவரிடம் குரலை தாழ்த்திச் சொன்னவன் நிதாவிடம் திரும்பினான்.
"ஓகே நம்ம விசயத்தை டேட் பார்த்துக்குவார்! நாம போய் நம்ம லவ்வர்ஸ் லைஃப்பை என்ஜாய் பண்ணலாம்! கம் பேபி!" என்று யட்சன் கூறியபடியே நிதாவை மேலே அழைத்துச் செல்ல, நிதா ப்ரசாத்தையே திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.
அவள் பார்வையின் பொருளை படித்த ப்ரசாத் 'சாரிமா! இப்ப உன்னை காப்பாற்ற முடியாத நிலையில் நான் இருக்கிறேன். இப்ப அவன் சொல்படி செய்யலேனா அப்புறம் நான் நினைச்ச காரியம் நிறைவேறாது!' என்று ப்ரசாத் ஏதையோ யோசத்தபடியே தனக்குள் கூறிக் கொண்டார்.
அதன் பின் ப்ரசாத் வைத்தியை சம்மதிக்க வைக்க நிதாவின் இருப்பிடம் நோக்கி சென்றார்.
**********
நிதாவை அறையினுள் இழுத்துச் சென்ற யட்சன் அவளை படுக்கையில் தள்ளி "ஜஸ்ட் ஸ்லீப்! ஸ்வீட் ஹார்ட்!" என்று சொல்லியவன் அவள் அருகில் அமர்ந்தபடியே "தூங்குறதுக்கு முன்னாடி ஒன்னு செய்யணும்மே நீ" என்று கூறிய யட்சன் ஒரு கவரை அவளிடம் தர அதை திறந்து பார்த்தவள் மயங்கி விழுந்தாள்.
அவள் மயங்கியதும் அவளை வாகாக படுக்கையில் படுக்க வைத்து போர்வையை அவள் மேல் போர்த்திவிட்டு வெளியில் வந்த யட்சன்
"இந்த மயக்கம் காலையிலதான் தெளியும்னு நினைக்கிறேன்! ஜஸ்ட் ஸ்லீப் பேபி" என்று கூறியபடி யட்சன் அருகில் உள்ள ரூமிற்கு சென்றவன்அந்த கவரை பிரித்து அதில் இருந்த ஆட்டு ரத்தத்தை கோப்பையில் ஊற்றிக் குடித்தான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 28

காலையில் கண்விழித்த நிதா சுற்றும் முற்றும் பார்க்க அவன் முழிப்பதற்காகவே தயாராக இருந்தவன் போல் அவள் முன் வந்து நின்றான் யட்சன்.

அவனை பார்த்ததும் அடித்து பிடித்து நிதா எழுந்திருக்க யட்சன் அவளிடம் "ரிலாக்ஸ் பேபி! என்று கூறியபடியே அமர்ந்து அவளை தன் அருகில் அமர வைத்தவன் "என்ன நிதா நேற்று நைட் நல்லா தூங்கினியா டார்லிங்! மயங்கி விழுந்துட்ட இப்ப உன் ஸ்டேட் என்ன? ஆர் யூ ஆல்ரைட் நவ்!".

அதை கேட்டு அவனை கோபமாக பார்த்த நிதா "பயமுறுத்தி படுக்க போட்டுட்டு ஆல்ரைட் னா கேட்குற ராட்சஸா!" – என்று கோபத்தோடு வாய்க்குள் முணுமுணுக்க

அதை கேட்ட யட்சன் "ம்ம்ம் என்ன எனக்கு செல்லப்பெயர் வச்சிட்ட போல! ராட்சஸன் நல்லாத்தான் இருக்கு! எனக்கு ஆப்ட்டா இருக்கு! ஐ லவ் இட். சரி செல்லப்பெயர் வக்கிறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும்! கமான் கெட்டப் மை டார்லிங்! உன்னோட சந்தோசமான நாள் இன்றோடு முடியப் போகுது! அதை நாம கொண்டாட வேண்டாமா?".

யட்சன் கூறியதை கேட்டு அவனை நிதா புரியாமல் பார்க்க

அதை புரிந்து கொண்ட யட்சன் "என்ன நான் சொல்றது புரியலையா நிதா பேபி!"

அதற்கு 'ஆம்' என்று அவள் தலையசைக்க,

"நாளையில் இருந்து நீ என் மனைவியாகப் போற! அந்த வாழ்க்கை நீ கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாதபடி இருக்க போகுது! அதனால் இன்னைக்கு உன்னை சந்தோசமா வச்சுக்கலாம்னு நினைக்கிறேன்! நீ முரண்டு பிடிக்காம, என் பேச்சை ஒழுங்கா கேட்டா நீ இன்னைக்கு உன்னோட நாளை சந்தோசமா என்ஜாய் பண்ணலாம்! இல்லை... முரண்டு பிடிச்சனு வை! இன்னைக்கே உன்னுடைய நரக வாழ்க்கை ஆரம்பிச்சிடும்! என்ன நான் சொல்றது புரியுதா ஸ்வீட்டி!" என்று யட்சன் தீவிரமான முகப் பாவத்தோடு கூற அதை கேட்ட நிதாவிற்கு பயத்தில் முகம் வேர்த்தது.

அதை கண்ட யட்சன் "கமான் மனுமா! நீ என் பேச்சை கேட்டு நடக்கலைனா தான் அப்படிலாம் நடக்கும்! இல்லைனா ஐ அம் குட் யூ நோ! அதுமட்டுமில்லாம நாளைக்கு நடக்கப் போற விசயங்களை நினைச்சு இன்னைக்கு என்ஜாய்மண்டை யாராவது மிஸ் பண்ணுவாங்களா பேபி" – என்று கூறியபடியே எழுந்து சென்று அருகில் உள்ள மேஜையில் உள்ள அட்டை பெட்டியை எடுத்து வந்து அவள் அருகில் வைத்தான்.

அதனை அடுத்து "பிரிச்சு பார்!" என்று யட்சன் கூற கைகள் நடுங்க அதை பிரித்துப் பார்த்தாள் நிதா. அதில் விலையுயர்ந்த புடவை ஒன்று இருக்க அதை அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே "சீக்கிரம் ரெடியாகி இதை மாற்றிக் கொண்டு கீழே வா! நான் வெயிட் பண்றேன்! என்கிட்ட இருந்து தப்பிக்க எதுவும் முயற்சி பண்ணாத யூ ஆர் இன் மை கன்ட்ரோல்!" என்று நிதாவை மிரட்டிவிட்டு யட்சன் வெளியே சென்றுவிட நிதா சோகமாக பெட்டில் அமர்ந்தாள்.

அந்த புடவையை தடவியபடியே "எனக்கு புடவை கட்ட தெரியாதுடா! ஆனால் அதை எப்படி நான் உனக்கு சொல்றது?" என்று நிதா அந்த புடவையை என்ன செய்வதென்று புரியாமல் விழித்துக் கொண்டே அமர்ந்தவள் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள பாத்ரூம் நோக்கிச் சென்றாள்.

பாத்ரூமில் இருந்து நிதா வெளியே வர அவளை எதிர்கொண்டார் ஒரு பெண்மணி .

அவரை நிதா யோசனையாக பார்க்க "அய்யா! அனுப்பினார்மா! உங்களுக்கு புடவை கட்டத் தெரியாதுனு என்னை கட்டிவிடச் சொன்னார்மா!" என்று அந்த பெண்மணி சொல்ல,

அதை கேட்ட நிதா கோபமாக அந்த பெண்ணிடம் "வேறு என்ன சொல்லிவிட்டார்! உங்க அய்யா.." என்று நிதா கேட்டுக் கொண்டே நடந்து வந்தவள் அடுத்து அவர் சொன்ன வார்த்தையில் அப்படியே நின்றாள்.

"வாட்! மறுபடியும் சொல்லுங்க" – நிதா.

"அது... வந்து மா...." என்று அவர் இழுக்க,

"ம்ம்ம்... மறுபடியும் சொல்லுங்க.. அவர் சொன்னதை – நிதா

"பாவாடையே உங்க அம்மாவுக்கு சரியா கட்டத் தெரியாது! அதனால் அவளுக்கு கண்டிப்பா புடவையும் கட்டத் தெரியாது! நீ போய் அவளுக்கு கட்டிவிடுனு சொன்னார்மா..." என்று அவர் கூற

இங்கு நிதாவிற்கு "ஒரு பாவாடை சரியா கட்டத் தெரியுது உனக்கு?" என்று கூறியபடியே ஒருவன் தனக்கு பாவாடை கட்டிவிடுவது போல் காட்சிகள் தோன்றியது. அதை யோசித்துப் பார்த்தவள் 'நான் மனசுக்குள் நினைப்பது வேணா உனக்கு சொல்லாம தெரியலாம். ஆனா என் சிறு வயது விசயங்கள் உனக்கு எப்படி தெரிஞ்சிருக்கு! என்னைப்பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிற நீ யார்டா! நீ யார்னு உன்னை நான் கண்டுபிடிக்காம விடமாட்டேன் டா... ராட்சஸா' என்று நிதா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

இங்கு நிதா ரூமில் இருந்து வெளியே வந்த யட்சன் நேராக தன் அறையை நோக்கி சென்றான். அங்கு தன் கப்போர்டை திறந்தவன் வேகமாக அதில் இருந்து ஒரு ஆல்பத்தை எடுத்தான். அந்த ஆல்பத்தில் 5 வயது சிறுமி நின்று கொண்டிருந்தாள் . அதை பார்த்தவன் அதை தடவியபடியே பேசத் தொடங்கினான்.

"டாலிமா! டாலிமா! நான் உன்னை பார்த்துட்டேன்டா! உன் பக்கத்தில் தான் நான் இருக்கேன்! ஆனால் உனக்கு தான் என்னை அடையாளம் தெரியலை" என்று அந்த போட்டோவை பார்த்து அன்பாக பேசியவனின் பார்வை அந்த சிறுமியின் அருகில் இருந்த பெண்ணின் முகத்தை பார்த்ததும் அவனது முகம் கோபமாக மாறியது.

"டாலிமா" என்று ஆசையாக அழைத்தவன் அடுத்த நிமிடம் அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுமியின் முகத்தை தன் கை கொண்டு குத்தினான். அவன் குத்த குத்த அந்த ஆல்பத்தில் இருந்த அந்த முகத்தில் சுருக்கம் விழுந்தது. கோபம் தணியும் வரை அந்த புகைபடத்தை குத்தியவன் தன் கையை எடுக்க அதில் சிறுவயது நிதா சிரித்துக் கொண்டிருந்தாள்.

தன் வீட்டிற்கு வந்த ப்ரசாத்தை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தார் வைத்தி.

"என்ன தெரிஞ்சுதான் பேசுறீங்களா ப்ரசாத்? என்னால் முடியாது" – வைத்தி.

"விரும்புறவங்களை சேர்த்து வைக்கணும் மிஸ்டர் வைத்தி" – ப்ரசாத்

"என் பொண்ணுக்கு என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் ப்ரசாத்! நீங்க சொல்ல தேவையில்லை! உங்க பையன் அடாவடியா வந்து என் பொண்ணை கூட்டிட்டு போயிருக்கான்! அவனுக்கு எப்படி என் பொண்ணை குடுக்க முடியும்" – வைத்தி

அதை கேட்டு எழுந்த ப்ரசாத் "இனி உங்ககிட்ட பேசி பிரோஜனமில்லை வைத்தி சார்! நீங்க உங்க பொண்ணு மேரேஜை பார்க்க விருப்பலைனா நான் என்ன பண்ண முடியும்?" – ப்ரசாத்.

"என்ன சொல்றீங்க நீங்க" – வைத்தி

"நீங்க சம்மதித்தாலும் சம்மதிக்கலேனாலும் இந்த திருமணம் நடக்கும் வைத்தி! தேவையில்லாம நீங்க உங்க இமேஜை டேமேஜ் பண்ணிக்காதீங்க! இந்த மேரேஜ் பிடிக்கலைனாலும் உங்க மகள் கல்யாணத்தை நீங்க நடந்தி தான் ஆகணும் வைத்தி! அது தான் எல்லாருக்கும் நல்லது" என்று கூறிய ப்ரசாத் வைத்தியின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றிவிட இங்கு வைத்தி யோசனையுடன் நின்றார்.

*******

முகம் சிதைந்த நிலையில் ஒருவன் இறந்துகிடப்பதாக சொல்லப்பட்ட செய்தியை பார்த்த ப்ரசாத் தேவிற்கு கால் செய்தார்.

ப்ரசாத்தின் அழைப்பை எடுத்த தேவ் "என்ன ஆச்சரியம்! ப்ரசாத் நீயா கால் பண்ணி இருக்க?".

"உன்கிட்ட தனியா பேசணும்" – ப்ரசாத்.

"அப்படி என்ன முக்கியமான விசயம் ப்ரசாத்?" – தேவ்.

"என் மகன் பத்தி பேசணும்" என்று ப்ரசாத் சொல்ல சற்று நேரம் யோசித்த தேவ் ப்ரசாத்தை ஒரு இடத்திற்கு வர வழைத்தார் .

அந்த இடத்திற்கு ப்ரசாத் வந்ததும் தேவ் அவரிடம் "சொல்லு ப்ரசாத் எதற்கு என்னை தனியா பார்க்கணும்னு சொன்ன?".

"நியூஸ் ல காண்பித்த இறந்து போனவனுக்கும் என் மகனுக்கு எதாவது தொடர்பு இருக்கா?" – ப்ரசாத்.

"எஸ்! நூறு சதவீகிதம் தொடர்பு இருக்கு" – தேவ்.

"வாட் டூ யூ மீன்" – ப்ரசாத்.

"ஐ மீன் அவனை கொன்னதே உன் மகன் தான? அப்ப தொடர்பு இருக்கத்தான செய்யும் ப்ரசாத்" – தேவ்.

"வாட்! என் மகன் எப்படி இப்படி எல்லாரையும் கொல்லும் அரக்கணா மாறினான்? சொல்லு தேவ்?" – ப்ரசாத்.

"ம்ம்ம் எனக்கு தெரியாது" – தேவ்.

"யூ நோ எவிரிதிங்" – ப்ரசாத்.

அதை கேட்ட தேவ் சத்தமாக சிரித்த தேவ் "அவனை அந்த நிலைக்கு மாத்தினதே நான் தான்டா" என்று கூறிய தேவ் வினய் மற்றும் யட்சன் மாறியதில் அவரின் பங்கை சொல்ல அனைத்தையும் கேட்ட ப்ரசாத் தேவ்வின் சட்டையை பிடித்து இருந்தார்.

"ஏன் இப்படி செஞ்ச தேவ்" – ப்ரசாத்.

"காரணம் உனக்கே தெரியும்" – தேவ்.

"உன் மகன் சாவுக்கு பழி தீர்த்துக்குறியா தேவ்! ஆனால் உன் மகன் இறந்ததுக்கு நான் காரணம் இல்லைனு தெரிஞ்சா எல்லாத்தையும் மாற்றி அமைச்சிடுவியா தேவ்?" – ப்ரசாத்.

"தேவையில்லாம விசயங்களை பேசாத ப்ரசாத்! நீ தான் என் மகன் சாவிற்கு காரணம்" – தேவ்.

"நோ! தேவ்! அவ இறந்தது தற்செயலா ஆனால் அதுக்கு என்னை குற்றவாளியா நிறுத்தி நீ எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கக் கூடாது தேவ்" என்று கூறிய ப்ரசாத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே தொடர்ந்தார்.

"என்னை பழி தீர்க்க நீ செய்யும் தவறுகள் அனைத்தும் ஒரு நாள் உன்னையே அழிக்கும் தேவ்!" என்று ப்ரசாத் கண்ணீர் விட்டபடியே கூறிச் சென்றுவிட தேவ் ப்ரசாத்தை கண்டு கொள்ளாமல் தோளை குலுக்கிவிட்டுச் சென்றார்.

****

மறுநாள் நாளிதழில் வெளியான யட்சன் மற்றும் நிதாவின் திருமணச் செய்தியைக் கண்ட வினய் கோபம் கொண்டு தேவ்விடம் சென்றான். .

"இங்க என்ன நடக்குது தேவ்? அவனுக்கு திருமணம்னு போட்டு இருக்கு? இது எப்படி சாத்தியம்?" – வினய்.

அதற்கு தேவ் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருக்க வினய் அவரிடம் "நான் இங்க கோபமாக பேசிட்டு இருக்கேன்! நீங்க என்ன யோசிட்டு இருக்கீங்க தேவ்" – வினய்.

"ம்ம்ம் ஒன்றுமில்லை! இதை எப்படி நமக்கு சாதகமா பயன்படுத்திகலாம்னு யோசிக்குறேன் வினய்" – தேவ்.

"யூ மீன்...." – வினய்.

"எஸ் ஐ மீன்! அந்த பொண்ணை அவனுக்கு பிடிச்சி கல்யாணம் பண்றானோ! இல்லை வேறு எதாவது காரணம் இருக்குமா? இந்த திருமணத்தின் பிண்ணணி என்னவாக இருக்கும்னு யோசிக்குறேன்" – தேவ்.

"இல்லை! அவன் விரும்பி மேரேஜ் பண்ணல. அதுக்கு சான்சே இல்லை! அந்த புகைபடத்தை பார்த்தீங்களா! அவ பயத்தில் இருக்கா! அவன் முகத்திலும் அவ்வளவு சந்தோசம் இல்லை" – வினய்.

"ஓ! தென்! வி வெயிட் அண்ட் வாட்ச் வினய்! அவன் அடுத்த மூவ்வை பார்த்து நம்ம மூவ் பற்று யோசிக்கலாம்! அதுக்குள்ள அந்த திருமணத்தின் பிண்ணனியை நாம் தெரிஞ்சுக்கலாம்" – தேவ்.

அதற்கு வினய் சம்மதமாக தலையசைத்தான்.

******

சேலையை கட்டிவிட்டு அந்த பெண் சென்றுவிட நிதா தன் கைகளில் வளையல்களை அணிவிக்க முயன்று கொண்டிருக்க ஒரு கரம் அவளது கையை பிடித்தது.

நிதா பயத்தில் திரும்பி பார்க்க அங்கு யட்சன் நின்று கொண்டிருந்தான்.

அவளது பயத்தை அளவிட்டவன் "கூல் பேபி! எதுக்கு இவ்வளவு பயம்! கமான் சில்" என்று கூறியவன் அவளது கைகளை பற்றியபடியே வளையல்களை அணிவிக்க நிதா அமைதியாக நின்றாள்.

வளையல்களை அவள் கைகளில் அடுக்கியவன் அவளது இரு கைகளையும் சேர்த்து அவள் முகத்துக்கு நேராக ஆட்டி காண்பித்தவன் "நல்லா இருக்குல பேபி!" என்று சொல்லி அவளது கைகளை ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன் முன் நிதாவின் முகத்திற்கு பதில் வேறு ஒரு பெண் முகம் நிழலாட அதை பார்த்தவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினான்.

அவளது கைகளை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தவன் அந்த கைகளை பிடித்து நெறிக்க ஆரம்பித்தான். அவன் நெறிக்க நெறிக்க வளையல்கள் அனைத்தும் நொறுங்கி கீழே விழ கையில் காயத்தோடும் கண்களில் கண்ணீரோடும் நின்றாள் நிதா.
வருவான்....
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 29
ரம்மியமான அந்த காலை பொழுதினிலே வீதிகள், மரங்கள் அனைத்திலும் பனித்துளிகள் படிந்த வண்ணம் இருக்க பனிகள் நிரம்பி நடைபாதையை மறைத்து இருக்க அந்த லண்டன் மாநகரமே பனிகளால் நிரம்பி அழகோவியமாக காட்சி அளித்தது.. அந்த பனியை பொருட்படுத்தாமல் மக்கள் சிலர் அந்த லண்டன் மாநகரத்தின் மத்தியில் இருந்த அந்த சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த சர்ச் முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த சர்ச்சை சுற்றி இருக்கும் பாதைகள் அனைத்தும் கார்களால் சூழப்பட்டு இருக்க ஆண்கள் கருமை நிற பேண்ட் , வெள்ளை நிற சட்டை மற்றும் கோட் அணிந்து வந்து கொண்டிருக்க, பெண்கள் நீளமான கவுன் போன்ற உடையணிந்தும் , தமிழர்கள் சிலர் தங்களின் பாரம்பரிய உடை அணிந்த வண்ணமுமாக அந்த சர்ச்சிற்குள் சென்ற வண்ணம் இருக்க உட்கார்ந்து இருந்த மக்கள் அனைவரும் ஆவலோடு சற்று நேரத்தில் கணவன் – மனைவியாகப் போகும் யட்சன் மற்றும் மனுநிதாவின் வருகையையும் அதை தொடர்ந்து நடக்க இருக்கும் திருமணத்தையும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர் என்றால் அன்றைய நாளின் நாயகன் மற்றும் நாயகியாகிய யட்சனும் , மனுநிதாவும் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தனர் .
யட்சன் நேற்று வினய் தன்னிடம் போனில் கூறிய விசயத்திலேயே உழன்று கொண்டிருந்தான்.
நேற்று நிதாவிடம் பேசிக் கொண்டிருந்தவன் வினய்யிடம் இருந்து போன் கால் வரவும் நிதாவை தனியாக விட்டுவிட்டு அருகில் இருந்த ரூமிற்குச் சென்று போனை எடுக்க எதிர்முனையில் சிரித்தான் வினய்.
"என்ன யட்சா! உனக்கு திருமணமாமே! வாழ்த்துக்கள்! ஆனால் உன் திருமண அறிவிப்பை நாளிதழில் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டிய நிலையில் என்னை வச்சிட்ட பார்த்தீயா? அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!" – வினய்.
"எதுக்கு தேவையில்லாத விசயங்களை பேசிகிட்டு என் டைம்மை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நீ? எந்த காரணமும் இல்லாம போன் பண்ண மாட்டியே நீ? சீக்கிரம் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போனை வை! உன் பேச்சை கேட்க எனக்கு நேரமில்லை! எனக்கு நிறைய வேலை இருக்கு" – யட்சன்.
"ம்ம்ம் குட்! நான் போன் பண்ணினா அது முக்கியமான விசயமாதான் இருக்கும்னு கண்டுபிடிச்சிட்ட பாரு! ஐ லைக் இட்! இதுதான்டா உன்கிட்ட எனக்கு பிடிச்ச விசயமே! என்னைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கியே நீ! நானும் உன் பொறுமையை சோதிக்க விரும்பல நேரா விசயத்திற்கு வரேன்! எனக்கும் தேவ்வுக்கும் உன்னை வச்சி பெரிய ஆர்க்யூமெண்ட்டே இங்க போயிட்டு இருக்கு! நீ தான் எங்க டவுட்டா தீர்த்து வைக்கணும்!" – வினய்.
வினய் சொன்னதை அடுத்து தேவ் சிரிக்கும் சத்தம் போனில் கேட்க அதை கேட்ட யட்சன் கடுப்பாகி வினய்யிடம் பேசினான்.
"என்ன டவுட்" – யட்சன்.
"இல்லை நீ அந்த பொண்ணு மேல ஆசைப்பட்டு மேரேஜ் பண்ணிக்க போறேன்னு நான் சொன்னேன்! ஆனால் தேவ் அந்த பெண்ணை நீ ப்ளாக்மெயில் பண்ணி தான் திருமணம் செய்ய போறேன்னு சொல்றார்! யார் இன்ஸ்டிக்ண்ட் கரெக்ட்னு நீ தான் சொல்லணும் யட்சா" – வினய்.
அதற்கு யட்சன் சற்று நேரம் மெளனம் காக்க வினய் சிரித்தான். சிரித்து முடித்தவன் "ஒ கே யட்சா என் டவுட் கிளியர் ஆகிடுச்சு! நான் போனை வச்சிடட்டுமா யட்சா"
"உன் கேள்விக்கு நான் இன்னும் எந்த பதிலும் சொல்லலையே" – யட்சன்.
"நீ எதுக்காக திருமணம் செய்யப் போறேன்றதை உன் மெளனம் எனக்கு காட்டி கொடுத்திருச்சு யட்சா!" – வினய்.
"ஹேய்!" என்று யட்சன் எதோ சொல்ல வர வினய் அவனை முந்திக் கொண்டு பேசினான்.
"ம்ம்ம் மனுநிதா! நைஸ் நேம்! பேரை போல அவளும்..." என்று வினய் இழுக்க
"டோண்ட் ஈவன் டேர் டூ டாக் அபவுட் ஹர்! ஸீ இஸ் மைன்! டோன்ட் இவன் டேர் டூ டச் ஹர் வினய்" - யட்சன்.
"ம்ம்ம் மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு! பயந்துட்டேன்டா! உனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் போல குட்! பேரை சொன்னதுக்கே இவ்வளவு ரியாக்சன்! ம்ம்ம் நாட் பேட்! பேருக்கே அப்படினா? மற்ற விசயங்கள்.." என்று வினய் ஏதோ சொல்ல வர
யட்சன் "வினய் ஐ டேம் ஸூயர் ஐ கில் யூ" என்று கத்தியதும் வினய் அதை கண்டுகொள்ளாமல் பேசினான்.
"இனிமேல் உனக்கு பிடிச்சது எல்லாம் எனக்கும் பிடிக்கும் யட்சன்! இப்ப அவளையும் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுடா! அதனால் இனிமேல் அவளை பத்திரமா பாத்துக்கோ!" என்று வினய் போனை வைக்க தேவ் அவனை பார்த்து வெற்றி கூறி காட்ட வினய் அதற்கு பதிலாக சிரிப்பொன்றை உதிர்த்தான்.
"உங்க உளவுத்துறை கரெக்ட்டா தான் சொல்லி இருக்கு தேவ்! அவன் அவளை லவ் பண்றான்! நம்ம அடுத்த மூவ் என்ன?" – வினய்.
"லெட் ஹிம் என்ஜாய் ஹிஸ் டே வித் ஹெர்" – தேவ்.
அதற்கு அவன் புரியாமல் பார்க்க "இப்ப அதிகமா நெருக்கமாக இருந்தா தான் பிரிவு ஏற்படும் போது அதிகமா வலிக்கும்" – தேவ்.
அதை கேட்ட வினய் "யூ ஆர் இம்பாசிபிள் தேவ்"! என்று கூறியபடியே வினய் தேவ்வின் கைகளை அடித்துக் கொண்டான்.
வினய்யிடம் பேசிவிட்டு போனை வைத்த யட்சன் கோபத்தின் உச்சிக்குச் சென்றான்.
அதை நினைத்துப் பார்த்தவன் "நான் இருக்கும் வரை உன்னை அவள் அருகில் கூட நெருங்கவிட மாட்டேன்டா! அவளுக்கு எதுவா இருந்தாலும் அது என் கைகளால் தான் நடக்கணும் என்று யட்சன் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
இரு கைகளிலும் வெள்ளை நிறத்தில் உள்ள கை உரையை ஒருவர் அணிவிக்க , கழுத்திலும் , காதுகளிலும் பிளாட்டினத்தால் ஆன நகைகள் மின்ன வெள்ளை நிறமான அந்த கவுன் போன்ற நீளமான அந்த திருமண உடை அணிந்து தேவதை போன்று காட்சியளித்தாள் மனுநிதா . அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அவள் முகத்தில் மேக்கப் செய்து கொண்டிருந்தார் லமி.
லமி அவளை அழகுபடுத்திக் கொண்டிருக்க இங்கு நிதாவின் எண்ணம் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
வளையல்களை அணிவித்தவன் தன் கைகளை பிடித்து முறுக்க வலி பொறுக்க முடியாத நிதா "ஆ வலிக்குதுடா ராட்சஸா!" என்று அவள் கத்தியதும் வேகமாக அவளது கையை விட்டான் யட்சன்.
அவள் கையைவிட்டவன் அவளது கைகளை பார்த்தபடியே "ஒ! நோ! மனுமா! கையில் காயம்பட்டு இருக்கு பார்! வா நான் அந்த காயத்திற்கு மருந்து போடுறேன்" என்று கூறியபடியே அவளை அருகில் இருந்த சேரில் அமர வைத்த வேகமாக சென்று முதலுதவி பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான் யட்சன்.
அந்த காயத்திற்கு மருந்து போட்டவன் வெளியே செல்ல, நிதா அந்த காயத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். சற்று நேரம் கழித்து அறைக்குள் வந்தவன் கைகளில் சாப்பாடு தட்டு இருந்தது.
நிதாவின் அருகில் வந்தவன், "கையில் காயம் பட்டிருக்கு அதனால் உன்னால் சாப்பிட முடியாது பேபி! அதனால நானே உனக்கு ஊட்டி விடுறேன்!" என்று கூறியபடியே யட்சன் சாப்பாட்டை பிசைந்து நிதாவின் வாயின் அருகில் கொண்டு வர நிதா அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வையை கவனித்தவன் "என்னாச்சு மனுமா? என் மூஞ்சயே பார்த்துட்டு இருக்க?? சாப்பிடு!" – யட்சன்.
ஆனால் நிதா நிமிடத்திற்கு ஒரு தரம் அவன் தன்னிடம் காட்டும் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் வாய் திறக்காமல் இருப்பதை பார்த்த யட்சன் "எல்லாம்! உனக்கு பிடிச்ச டிஷ் தான் இருக்கு! சாப்பிடு பேபி!" என்று யட்சன் கூற
நிதா வேகமாக "இல்லை வேண்டாம் நானே சாப்பிட்டுக்குறேன்!".
"உன் கையில் தான் அடிபட்டு இருக்கே! நீ எப்படி சாப்பிடுவ! இரு நானே ஊட்டிவிடுறேன்! நீ சாப்பிட்டா உன் கை மொத்தையும் வாயில் விட்டு சின்ன பிள்ளை மாதிரி சாப்பிடுவ" என்று யட்சன் சொல்ல நிதாவிற்குள் பூகம்பம்!
அவள் திகைப்பாக யட்சனை பார்த்துக் கொண்டிருக்க
"இல்லை நானா சாப்பிடுறதுல பிரச்சனை இல்லை! லேசான காயம் தான்!" என்று நிதா மறுத்துக் கொண்டிருக்க
"இப்ப சாப்பிடப் போறீயா? இல்லையாடி" என்று யட்சன் ஒரு கத்து கத்தவும் வேகமாக வாயை திறந்து அவன் கொடுக்கும் உணவை வாங்கினாள் நிதா.
அதை பார்த்த யட்சன் "ம்ம்ம் ஒழுங்கா சொன்னால் எல்லாம் நீ கேட்க மாட்டடி! சொல்ற விதத்தில் சொன்னா தான் நீ என் பேச்சை கேட்குற" என அவளை மிரட்டிவிட்டு சென்றுவிட இங்கு நிதா திகைப்பாக அமர்ந்து இருந்தாள்.
அதன்பின் அவளை வெளியே அழைத்து சென்றதாகட்டும், திருமண உடையை அவளுக்கு தேர்வு செயவதாகட்டும், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான் யட்சன்.
நடுவில் நிதா அவனது கோரமுகத்தையும் பார்க்க நேர்ந்தது.

வருவான்....
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 30
யட்சன் லமி நிதாவோடு கடையில் அமர்ந்து இருக்கும் பொழுது வினய்யிடம் இருந்து போன் கால் வரவும் அதை எடுத்துக் கொண்டு யட்சன் அருகில் இருந்த ரூம் நோக்கிச் செல்ல அவன் சென்றதும் நிதா வேகமாக அருகில் இருந்த லமி போனை எடுத்து சாமின் நம்பர்க்கு கால் செய்தாள்.
"யாருக்கு இவ்வளோ அவசரமா கால் பண்ணுற" - லமி.
"சாம் க்கு.." - நிதா.
"ஓ! அந்த வெங்கல சாமானுக்கா... சரி நீ பேசு நான் அந்த பக்கம் இருக்குறத பார்த்துட்டு வர்றேன்" - லமி.
ஆனால் சாம் போனை எடுக்கவில்லை. அதை கண்ட நிதாவிற்கு எரிச்சல் மேலிட 'போனை எடு! சாம்! ப்ளீஸ் என்னை காப்பாத்து' என்று மனசுக்குள் சொல்லியபடியே யட்சன் வருகிறானா என்று திரும்பிப் திரும்பி பார்த்தபடியே மறுபடியும் போன் செய்ய மூன்றாவது தடவையாக போனை எடுத்தான் சாம்.
"ஹலோ" என்று நிதா சொன்னதும் அவளின் குரலை கண்டு கொண்ட சாம்.
"ஓ! வாவ்! நிதா! நீ யா? உன்னை பத்தி தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்! நான் உனக்கு போன் பண்ணேன் நீ ஏன் போனை எடுக்கல!" – சாம்.
"அது வந்து சாம்! என் போனை" என்று அவள் எதோ சொல்ல ஆரம்பிக்க அவளை முந்திக் கொண்டு சாம் பேசினான்.
"சாரி பேப்ஸ்! எனக்கு பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு! வேலை விசயமா நான் ரஷ்யா போறேன்! ஐ ல் கால் யூ லேட்டர். டேக் கேர்... பை..." என்று நிதாவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்தான் சாம்.
நிதா அதன்பின் பல தடவை முயற்சி செய்ய அவன் எடுக்கவே இல்லை. போனை சாம் எடுக்கவில்லை என்றதும் சோகமாக நிதா போனை வைக்க அருகில் கண்ணாடி டம்ளர் உடையும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அங்கு யட்சன் நின்று கொண்டு இருந்தான். அவனை பார்த்ததும் எச்சில் விழுங்கியபடியே நிதா எழுந்து நிற்க
"யார்கிட்ட பேசிட்டு இருந்த நீ" – யட்சன்.
"அது வந்து...." - நிதா.
அவள் அருகில் கோபமாக வந்த யட்சன் சற்று நிதானித்து லமியிடம் "போகலாமா?" என்றான்.
"இதோ முடிஞ்சிரிச்சி தம்பி. பில் பண்ணி வாங்கிட்டு போகலாம்" - லமி.
"சரி... நீங்க வாங்க. நானும் நிதாவும் கார் எடுத்துட்டு வந்து வெளிய வெயிட் பண்றோம்" என்று லமியிடம் கூறிவிட்டு நிதா கையைப் பற்றி இழுத்துச் சென்றான்.
செல்லும்போதே நிதாவிடம் "வீட்டுக்கு வா... உனக்கு இருக்கு.." என்றான்.
பின் லமியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு நிதாவுடன் தங்கள் வீட்டிற்கு காரைத் திருப்பினான்.
வீட்டிற்குள் நிதாவை தரதரவென இழுத்து வந்தவன், அவளை சோஃபாவில் தள்ளி அருகில் இருந்த கண்ணாடி டேபிளை ஆக்ரோசமாக அடிக்க அது உடைந்து சிதறியது.
"இந்த அடி உனக்கு பட வேண்டியது! இனி என்னை மீறி எதாவது நீ செய்தால் இந்த அடி உனக்கு விழும்!" என்று அவன் சொல்ல அவனையும் உடைந்த டேபிளையும் மாறி மாறி பார்த்தாள் நிதா.
யட்சனின் கோபமுகத்தை நினைத்துப் பார்த்தபடி நிதா அமர்ந்து இருக்க டெலிஃபோனின் சத்ததில் கலைந்தாள்.
"ஹெலோ" - நிதா.
"நிதாமா! நகை எல்லாம் திரும்ப ஒருமுறை இப்போ பார்த்தேன். எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? மாப்பிள்ளை பார்த்து பார்த்து உனக்கு செட் ஆகுற மாதிரி தான் எல்லாம் எடுத்து இருக்கார்! உங்க தாத்தாவுக்கும் ரொம்ப புடிச்சிருக்கு" என்று லமி கூற
நிதா உதட்டில் மட்டும் சிரிப்பை வைத்து எதிரே வெறித்த படி ஃபோனுடன் அமர்ந்து இருந்தாள்.
*******
சர்ச் முழுவதும் வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நடைபாதையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு , வெள்ளை நிறத்தில் கவுன் போன்ற தன் நீளமான உடையை அணிந்து தேவதை போல் வைத்தியநாதனின் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்து வந்தாள் நிதா. அவளது ஒவ்வொரு அடிக்கும் அந்த துணியின் பின்பக்கம் அந்த சிவப்பு நிற கம்பளத்தை தொட்டு கொண்டு வந்தது.
முகம் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருக்க தலை குனிந்தபடியே நடந்து வந்த நிதா ஏதோ தோன்ற நிமிர்ந்து பார்த்தாள் . அந்த வெள்ளை துணி வழியாக தூரத்தில் தெரிந்தான் அவன் யட்சன் . கருமையான பேண்ட் , கோட் மற்றும் உள்ளே வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு மணமகனுக்கான கம்பீரத்தோடு நிதாவையே பார்த்துக் கொண்டு நின்றான் யட்சன்.
கல்யாண கோலத்தில் தன் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு யட்சன் அருகில் வர வர நிதாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
யட்சன் அருகில் நிதாவை நிற்க வைத்துவிட்டு வைத்தி சென்று லமி, வெங்கி அருகில் நின்று கொண்டார்.
வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் வைத்தி. அதனால் மகளின் அருகில் நிற்க பிரியப்படாமல், ஏற்கனவே சற்று தள்ளி நின்று இருந்த லமி மற்றும் வெங்கி அருகில் சென்று நின்று கொண்டார்.
உள்ளுக்குள் பயத்தில் தடதடக்கும் தன் இதயத்தை தன் கைகளை மூடியபடி சமாளித்து நின்ற நிதாவின் கைகளை பிடித்துக் கொண்டான் யட்சன்.
யட்சனின் செயல்களையும், நிதாவின் உதறல்களையும் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ப்ரசாத்திற்கு நேற்றைய நினைவுகள் உலா வந்தன.
****
அன்று வைத்தியை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் முன் ப்ரசாத் பூங்குன்றனை சந்திக்க சென்றார். அங்கு சென்ற ப்ரசாத் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு மெதுவாக யட்சனை பற்றிப் பேச ஆரம்பித்தார்.
"மிஸ்டர் பூங்குன்றன்! யட்சன் ஒரு பொண்ணை திருமணம் செய்யப் போறதா வந்து நிக்குறான்! ஏன் இந்த தீடீர் திருமணம்? அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் எதாவது தொடர்பு இருக்கா? னு பல கேள்விகள் எனக்குள்ள. அதனால் தான் உங்களை தேடி வந்தேன்! அதுமட்டுமில்லை பூங்குன்றன் பெளர்ணமி இரவு வேளையில் ஏன் அவனுக்கு பிக்ஸ் வருது? இந்த கேள்விக்கெல்லாம் உங்ககிட்ட தான் விடை இருக்கு! நீங்க பதில் சொன்னா பின்னாளில் நடக்கப் போகும் ஆபத்தில் இருந்து யட்சனை நாம காப்பாற்றலாம்" – ப்ரசாத்.
அது வந்து “எனக்கும் அவனை பற்றி எதுவும் தெரியாது ப்ரசாத்?" – பூங்குன்றன்.
“என்ன சொல்றீங்க பூங்குன்றன் அவன் உங்க பையன்! தெரியலைனு அசால்ட்டா சொல்றீங்க” – ப்ரசாத்.
“இல்லை சார்! அவன் என் பையன் இல்லை? வளர்ப்பு பையன். அவனுக்கு 10 வயசு இருக்கும் போது தான் அவன் என்கிட்ட வந்து சேர்ந்தான்” - பூங்குன்றன்.
“வாட்….” – ப்ரசாத்.
“ஆமாம் ப்ரசாத்…” என்று பூங்குன்றன் தன் கழுத்தில் அடிபட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் மெதுவாக யட்சனை சந்தித்த நாளை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
அன்று யவனை ஒருவன் துரத்தியதும்! தான் அவனை காப்பாற்றி லண்டனுக்கு அழைத்து வந்ததும் என்று அனைத்தையும் அவர் சொல்ல அதை கேட்ட ப்ரசாத் யோசனையானார்.
“ஓகே பூங்குன்றன் அவனை பத்தி நான் கண்டுபிடிச்சிக்குறேன்! ஆனால் அவன்கிட்ட ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்க வேண்டாம்னு மட்டும் சொல்லுங்க பூங்குன்றன்” – ப்ரசாத்.
“அதை நான் எப்படி சார்? சொல்றது? அவன் என் பேச்சை கேட்பானான்னு தெரியல? இது அவன் சொந்த விசயம்” – பூங்குன்றன் .
“இல்லை பூங்குன்றன்! நீங்க சொன்னா அவன் நிச்சயம் கேட்பான்! ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்னு அவனுக்கு எடுத்துச் சொல்லுங்க பூங்குன்றன்” – ப்ரசாத் .
அதற்கு ‘சரி’ என்று தலையசைத்த பூங்குன்றன் அன்று இரவு தன்னை பார்க்க வந்த யட்சனிடம் மெதுவாக ஆரம்பித்தார்.
“யவா! நான் ஒரு விசயம் சொல்வேன்! நீ கேட்கணும்” – பூங்குன்றன்.
“சொல்லுங்க அய்யா! நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்” – யட்சன்.
“நீ திருமணம் செய்யப் போறீயா?” – பூங்குன்றன்.
அதை கேட்டு அவரை கேள்வியாக பார்த்தவன்
“ஓ! உங்களுக்கும் விசயம் தெரிஞ்சிடுச்சா? அவர் பேச்ச கேட்கலைனு உங்ககிட்ட வந்து சொல்லிட்டாரா அவர்?” – யட்சன்.
“யார் சொன்னா? என்னடா? வேண்டாம் யவா? அந்த பொண்ணை விட்டுட்டு டா! பாவம்டா அந்த பொண்ணு…” – பூங்குன்றன்.
“இல்லை அய்யா! இந்த ஒரு விசயத்தில் மட்டும் உங்க பேச்சை நான் கேட்க மாட்டேன்! இதை நான் செஞ்சே ஆகணும்! அப்ப தான் நான் திரும்பி உயிரோட வந்ததுக்கான அர்த்தம் இருக்கும்” – யட்சன்.
அதற்கு அவர் யட்சனை புரியாமல் பார்க்க
“சில விசயம் உங்களுக்கு சொன்னா புரியாது? தயவு செய்து என்னை இந்த விசயத்தில் கன்ட்ரோல் பண்ணாதீங்க அய்யா!” என்று யட்சன் கூறிவிட்டு செல்ல இங்கு பூங்குன்றன் பெருமூச்சொன்றை விட்டு விட்டு படுத்துக் கொண்டார்
****
லண்டன் மாநகரமே வியக்கும் படி நடந்தேறியது யட்சன் – மனுநிதாவின் திருமணம். இருவரும் லண்டன் முறைப்படி மோதிரம் மாற்றிக் கொள்ள யட்சனின் துணைவியானாள் நிதா.
திருமணம் நடந்தேறியதும் அவளை கையோடு அழைத்துச் சென்ற யட்சன் ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். நிதா இறங்கியதும் அவளது கைகளை பிடித்து அழைத்துச் சென்று பூங்குன்றன் முன் நின்றான்.
பூங்குன்றனை புதிராக பார்த்த நிதா அவரை யோசனையோடு பார்க்க அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியவனோ எதுவும் சொல்லாமல்
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அய்யா” என்று கூறியபடி அவர் காலை தொட்டு வணங்க , வேறு வழியின்றி நிதாவும் அவனை பின்பற்றி பூங்குன்றனிடம் ஆசிர்வாதம் வாங்கினாள் ..
இருவரையும் ஆசிர்வதித்த பூங்குன்றன் பேசுவதற்கு முயல
“அய்யா! உங்க தொண்டையில் அடிபட்டு இருக்க நீங்க பேச முயற்சிக்காதீங்க! ரெஸ்ட் எடுங்க நாங்க வர்றோம்” என்று கூறியவன் நிதாவை அழைத்துக் கொண்டு சென்றான் .
*******
நிதாவின் திருமண சேதியை நாளிதழில் பார்த்து அறிந்து கொண்ட பவ்யா
‘உன் திருமணத்தை நாளிதழில் பார்த்து தெரிஞ்சிக்க வேண்டிய நிலையை எனக்கு தந்துட்டாரே உன் அப்பா!’ என்று நிதாவின் போட்டோவை பார்த்து அவர் அழுக
“நீ தப்பு பண்ணிட்ட பவ்யா! நீ கடைசி வரையிலும் வைத்திக்கு உன்னை புரிய வச்சிருக்கணும்!” என்று அருகில் குரல் கேட்க திரும்பி பார்த்த பவ்யா அங்கு மனோகர் நின்றிருப்பதை பார்த்ததும் கவலையாக பேச ஆரம்பித்தார்.
“இல்லை அண்ணா! உறவை புரிய வச்சிதான் அதை தொடரணும்னா அந்த உறவு எப்பவும் நிரந்தரமா இருக்காது! பாசம் போலிதனமா ஆகிடும்” – பவ்யா.
“நீ சொல்வது சரிதான்மா! ஆனா நிதாவிற்கு உன் அருகாமை இப்ப தேவை! அவ முகத்தை பார்த்தியா மலர்ச்சியே இல்லை! அவளை நேரில் பார்த்து அவள் நல்லா இருக்காளானு எதுக்கும் நீ போய் அவளைப் பார்த்து பேசினால் பரவாயில்லை! நிதாவிற்காகவாவது உன்னை நீ மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று மனோகர் சொல்ல
பவ்யா நெடு நேரம் யோசித்துவிட்டு நிதாவை சந்திக்க முடிவு செய்து போனை எடுத்தார்.
போனை எடுத்தவர் எதிர்முனை “ஹலோ” என்றதும்
“எங்கடா இருக்க? எப்ப லண்டன் வருவ!” – அங்கு என்ன சொல்லப்பட்டதோ
“உடனே இங்க வா! நாம நிதாவை பார்க்க போகணும்! அவளுக்கு மேரேஜ் ஆகிடுச்சு! அவளை பார்க்க நாம நேரடியா அவ வீட்டுக்கு போகணும்” என்று அவர் சொல்ல
“வாட்???” என்று அதிர்ச்சியில் இங்கு போனை வைத்தான் சாம்.

வருவான்...
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 31
இரவு வேளை நெருங்க நிதாவிற்கு பயத்தில் வேர்வை முத்துக்கள் உதிர்த்தது.
அவளை கண்ணாடி முன் அமர வைத்து அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார் லமி. .
அவளுக்கு முன் வைக்கப்பட்ட புடவையை பார்த்த நிதாவிற்கு நேற்று யட்சன் தன்னிடம் "இனி நீ புடவை தான் கட்டணும் பேபி!" என்று சொல்லி வளையல்களை அவன் தன் கைகளில் அணிவித்தது அதன் பின் தன்னிடம் அவன் நடந்து கொண்ட முறை எல்லாம் ஞாபகத்தில் வர அவளுக்கு பயம் அதிகரித்தது.
நிதாவின் முகத்தை கவனித்த லமி " நிதா மா! பயப்படாதடா மா! எல்லாம் பொண்ணுகளுக்கும் திருமணத்திற்கு பின் வரவிருக்கும் இரவு பயத்தை தான் தரும்! கதவுக்கு பின் இருப்பது புலியா, பூனையானு போய் பார்த்தா தானே தெரியும்! வீணாக டென்சன் ஆகாதடா மா!" என்று லமி அறிவுரைகள் பல சொல்ல
'கதவுக்குப் பின் இருக்கிறது ஒரு ராட்சஸன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் லமி' என்று தனக்குள் கூறியபடியே நிதா தன்னை தானே தேற்றிக் கொண்டு யட்சனை தனியாக சந்திக்க தயாரானாள் நிதா.
யட்சனின் அறை வாசலில் அவளை நிறுத்திவிட்டு லமி சென்றுவிட நிதா மெதுவாக யட்சனின் அறைக்குள் சென்றாள். அவள் உள்ளே சென்றதும் நிமிர்ந்து பார்க்க அங்கு அவள் எதிரில் யட்சன் அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாலும் , அவன் கண்களில் வந்து போன பாவத்தை கணிக்க முடியாமல் நிதா பயந்தபடியே அவன் அருகில் சென்று நின்றாள். அவள் அருகில் வந்ததும் அவள் கைகளில் பார்சல் ஒன்றை நீட்டினான் யட்சன்.
அந்த பார்சலை பார்த்ததும் அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
'இதில் என்ன வச்சிருக்கான்னு தெரியலையே' என்று கைகள் நடுங்கியபடியே அந்த பார்சலை வாங்கினாள்.
"பிரித்துப் பார்" என்று அவன் கண்களால் சொல்ல அதை பிரித்த நிதா உள்ளே இருந்து உடையை கண்டு திகைத்தாள். அவளது திகைப்பை பொருட்படுத்தாமல் யட்சன் அவளிடம் "போய் கட்டிக் கொண்டு வா" என்று சொல்ல , அதை ஏற்று நிதாவும் அருகில் இருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்றாள்.
அந்த உடையை கண்ட நிதாவிற்கு சற்று நேரம் ஒன்றும் ஓடவில்லை. பச்சை நிற பாவாடையும், பச்சை நிற சட்டையும் அதில் இருக்க அதை வேறு வழியில்லாமல் உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள் .
அவன் சொல்படி அந்த உடையை உடுத்திக் கொண்டு வெளியே வந்த நிதாவை பார்த்தவன் "குட்" என்று சொல்லியபடியே அவள் அருகில் வந்த யட்சன் அவளை முன்னே பின்னே திருப்பிப் பார்த்தபடி தன் நாடியில் கை வைத்து யோசித்தவன் "ஏதோ ஒன்று குறையுதே! ம்ம்ம் கண்டுபிடிச்சுட்டேன்!" என்று கூறியபடியே அவள் அருகில் வந்தவன் நிதாவின் அழகை மெருகேற்ற லமி அலங்கரித்த அலங்காரம் அனைத்தையும் கலைத்து "ம்ம்ம் இப்ப தான் கரெக்ட்டா இருக்கு!" என்று கூறியபடி அவளை அழைத்துச் சென்று கண்ணாடி முன் நிற்க வைதான்.
பின் "இனி வீட்டில் நீ இப்படிதான் இருக்க வேண்டும்.. ரைட்.." என்று யட்சன் கூற, தன் தோற்றத்தை பார்த்த நிதா அதிர்ந்தாள்.
பச்சை வண்ண பாவாடையும் , பச்சை நிற சட்டையும் அணிந்து அலங்காரம் கலைக்கப்பட்டு தான் நின்றிருந்த தோற்றம் அவளுக்கு தான் ஒரு கைதி போல.. மனநலம் குன்றியவள் போல.. பல மாதிரியாக தன் தோற்றம் அளிக்க. அதை நினைத்தபடியே நின்று கொண்டிருந்த நிதாவை யட்சனுடைய பேச்சு தடை செய்தது.
"என்ன பேச்சை காணோம்...." – யட்சன்
அவன் அப்படி கேட்டதும் தன் பார்வையை திருப்பி யட்சனை பார்த்த நிதா 'இல்லை!' என்று தலையசைக்க அவள் கைகளை பற்றி அழைத்துச் சென்றான் யட்சன். அவன் கைகளில் இருந்த தன் கைகளை பார்த்து மெல்லிய பெருமூச்சை வெளியிட்டபடி, அவனின் கைப்பாவையாக அவன் பின் சென்றாள் நிதா.
நிதாவை அழைத்துச் சென்ற யட்சன் ஒரு சேரில் அமர வைத்து அவள் கைகளை இரும்பு சங்கலி கொண்டு கட்டினான்.
கட்டியவன் அவள் எதிரில் அமர்ந்து "இனி இரவு எப்போதும் உனக்கு இங்கு தான். நான் சொல்வது புரிகிறதா?" என்று யட்சன் கேட்க அதை கேட்டு உணர்ச்சியற்று தலையசைத்தாள் நிதா. அவள் தலையசைத்ததும் யட்சன் வெளியே சென்றுவிட இங்கு நிதாவின் பார்வை அந்த அறையை வட்டமடித்தது.
அந்த அறை வித்தியாசமான முறையில் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. கட்டில், அவள் அமர்ந்திருந்த நாற்காலி அனைத்திலும் ஒருவித ஊதா நிற மலர்கள் இடம் பெற்றிருந்தன.
"என்ன கண்ராவி பூ இது! அழகான ரோஸ்க்கு நடுவுல கொஞ்சம் கூட சம்பந்தமில்லாம ஊதா கலர்ல... நம்ம இது வரை இப்பிடி ஒரு பூவை பார்த்தது இல்லயே!.... வித்தியாசமான ஆர்கிட் ஆ இருக்குமோ... யார் கிட்ட கேட்க... இந்த ராட்சஷனுக்கு தெரியுமோ? இல்லயோ?" நிதா தன் போக்கில் எண்ணிக் கொண்டிருந்தாள்.
இரவுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த அறை முழுவதும் அவளை பார்த்து சிரிக்க, அதை பார்க்க பார்க்க அந்த ரம்மியமான இரவு நேரம் மிக பயங்கரமாக அவளை பயமுறுத்தியது. தன் விதியை நொந்தபடி நிதா அமர்ந்து இருக்க ,
வெளியே சென்று திரும்பி வந்த யட்சன் கைகளில் ஒரு ஈயத் தட்டு நெளிந்து போய் காணப்பட்டது. அதை அவள் அருகில் வைத்தவன்.
"நீ இன்னும் சாப்பிடல அதனால் உனக்காக சாப்பாடு கொண்டு வந்தேன் நிதா! சாப்பிடு!" என்று அவன் கூற, அவள் முன் வைக்கப்பட்டு இருந்த உணவை கண்டு விழித்தாள் நிதா.
அந்த உணவினை பார்த்ததும் நிதாவிற்கு வாந்தி வரும் போல இருந்தது. அதைவிட உணவின் மணத்திற்கு மேல் அதில் பூண்டின் மணம் தான் அதிகமாக இருந்தது அதன் வாடை அவளுக்கு அருவருப்பை தர நிதா அவஸ்தையாக நெளிந்தாள். அவள் உணர்வை அவள் கண்கள் பிரதிபலிக்க அதை படித்த யட்சன் அவள் அருகில் வந்தான்.
"என்ன சாப்பிட மாட்டாயா?" – யட்சன்.
அதற்கு நிதா மறுப்பாக தலையசைத்தாள்.
அதை கண்ட யட்சன் மிருகமாக மாறினான். வேகமாக அவள் நாடியை பிடித்து அவளை வாயை திறக்க வைத்து , தட்டில் இருந்த உணவு பாதியை அவள் வாயில் தட்டினான். அதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நிதா திணறிக் கொண்டிருக்க அவள் திணறுவதை பார்த்து ரசித்தான் யட்சன்.
அவளுக்கு உணவினை திணித்துவிட்டு யட்சன் நிமிர அப்போது தான் தன் கைகளை கவனித்தான் யட்சன்.
அவனது கைகள் முழுவதும் தீயால் சுட்டது போல் எரிய ஆரம்பித்தது. அவனது கைகளில் இருந்து நகங்கள் முளைக்க ஆரம்பித்தன.
தன்னிடம் ஏற்படும் தீடீர் மாற்றத்தை அளவிட்டவனுக்கு நாசியில் பூண்டு நெடி வீச அவனது முகமும் எரிய ஆரம்பித்தது. பூண்டின் மணம் தனக்குள் உண்டாக்கும் மாற்றங்களை கண்டவன் வேகமாக தன் ரூமிற்குள் சென்று கதவடைத்தான்.
அவன் இயல்பு நிலைக்கு வரும் வரை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் வெளியே வந்து நிதாவை பார்க்கச் சென்றான் .
அங்கு கண்களில் கண்ணீர் வடிய தனக்குள் உழன்றபடியே அமர்ந்தபடியே நிதா உறங்கிக் கொண்டிருக்க, அவள் தவிப்பதை தன் உணர்ச்சியற்ற விழிகளால் பார்த்துக் கொண்டிருந்த யட்சன் கண்களில் வேறு ஒரு பெண்ணின் முகம் வந்து போக அவன் கண்கள் கோபத்தில் சிவப்பாக மாறியது. தன் கண்களை அழுந்த முடித்திறந்தவன் விழிகள் அதன்பின் உணர்ச்சியற்று இருந்தது.
அவளை பார்த்துவிட்டு வெளியே யட்சன் செல்ல அவன் செல்வதற்காகவே காத்திருந்தவன் போல நிதாவின் எதிரில் நின்று கொண்டிருந்தான் வினய்.
**********
மறுநாள் காலையில் நிதா கண்விழிக்க எதோ தோன்ற தன் கைகளை பார்த்தாள் , அவள் கைகளில் சங்கிலி அவிழ்க்கப்பட்டு தான் பெட்டில் படுத்து இருப்பது தெரிந்ததும் அடித்துபிடித்துக் கொண்டு எழுந்தாள் நிதா. சுற்றி முற்றி நிதா யட்சனை தேட அந்த இடம் வேற்றிடமாக இருந்தது. .
ஊப் என்று நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்ட நிதா எழுந்து குளித்துவிட்டு கீழே வர அவள் வருகைக்காக காத்திருந்தவன் போல அவள் எதிரில் வந்து நின்றான் யட்சன்.
"என்ன மனு டார்லிங்! நேற்று நல்லா தூங்கினியா" – யட்சன்.
‘ம்ம்ம்’ என்று தலையசைத்தவன் அவன் முகத்தை யே பார்த்துக் கொண்டிருந்தாள்
இப்போது அவள் முன் நேற்று முன்தினம் தன்னை அன்பாக கவனித்துக் கொண்டவனாக தோன்றினான். நேற்று பார்த்த ராட்சஷனாக நிதாவிற்கு தெரியவில்லை! அவன் இன்று ராட்சஷனாக இருக்கிறானா? இல்லை ரட்சகனாக இருக்கிறானா? என்று அவனை ஆராய்ந்து கொண்டு நிதா நிற்க
யட்சன் நிதா கையில் அந்த பொருளைக் திணித்து, தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

வருவான்...
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 32
யட்சன், நிதா கையில் மம்பட்டி ஒன்றை கொடுத்து வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.
அங்கு நிதாவை கூட்டிச் சென்றவன், “ நீ இப்ப என்ன பண்ற இந்த செடிகளை எல்லாம் மண் தோண்டி நீ தான் நடப் போற! அதுவும் அரைமணி நேரத்தில்! இந்த வேலை எல்லாம் செய்தால் தான் உனக்கு சாப்பாடு“ என்று சொல்லிவிட்டு எதிரில் இருந்த சேரில் அவன் அமர, அங்கு இருந்த செடிகளை பார்த்த நிதாவிற்கு மயக்கமே வந்தது.
அங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட செடிகள் அணிவகுத்து நின்றது. அனைத்தும் இரவில் அவர்கள் அறையில் பார்த்த ஊதா நிற பூ கொண்டவை.
அதைப் பார்த்தவள் "திரும்பவும் அதே பூவா? டேய்! ராட்சஷா! எனக்கு முன்ன பின்ன இந்த வேலையெல்லாம் செய்து பழக்கமில்லைடா" – என்று நிதா முணுமுணுக்க.
"ம்ம்ம் பழகிக்கோ பேபிமா! எத்தனை நாள் தான் உட்கார்ந்து சாப்பிடுவ! நீ வேலை செஞ்சு சாப்பிட பழகிக்கோ" என்று யட்சன் கூற, அதை கேட்ட நிதா தன் விதியை நொந்தபடியே அதை நட ஆரம்பித்தாள். வேர்வை வடிய வடிய அவள் செய்யும் செயல்களை உணர்ச்சியற்று பார்த்துக் கொண்டிருந்தான் யட்சன்.
இதுவரை செய்யாத வேலை செய்ததால் உடம்பில் இருந்த சக்தியெல்லாம் வடிந்து போய் ஓய்ந்த தோற்றத்தோடு உள்ளே வந்த நிதாவின் முன் வந்து நின்றான் யட்சன்.
அவனை நிமிர்ந்து பார்த்த நிதா 'இப்ப என்னடா என்னைய செய்ய காத்து இருக்க!' என்று மனசுக்குள் அவள் அலற அதை கண்டவன் தனக்குள் சிரித்தபடியே அவள் கைகளில் ஒரு பார்சலை திணித்தான்.
அதை வாங்கிய நிதா 'மறுபடியும் பார்சலாடா! எப்ப பாரு! பார்சலா கொடுத்து சாவடிக்கிறடா! ராட்சஷா! இதில் என்ன வச்சிருக்கான்னு தெரியலையே' என்று கைகள் நடுங்கியபடியே அதை பிரித்தவள் அதை பார்த்துவிட்டு யட்சனை பார்க்க அவன். கண்களால் அவளுக்கு பிறபித்த கட்டளையை கண்ணுற்றவள் 'முடியாது' என்று தலையசைத்தாள்.
அவள் மறுப்பாக தலையசைத்ததும் அவள் அருகில் அவன் வர வேகமாக "செய்கிறேன் டெவில்! இல்ல... சாரி... சாரி... சார்." என்று கூறிய நிதா, கைகள் நடுங்க அந்த பார்சலை பிரித்தாள். அதில் ஆட்டின் ரத்தம் இருப்பதை பார்த்தவளுக்கு கண்கள் சொறுக ஆரம்பித்தது. சற்று நேரத்தில் நிதா மயங்கி விழ அவளது முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பினான் யட்சன்..
கண்விழித்த நிதா எழுந்ததும் அவள் முன் மீண்டும் யட்சன் அந்த பார்சலை நீட்ட கண்கள் மூடியபடியே அரை மயக்கத்தில் பேசினாள் நிதா.
"பிளீஸ்! டோலு! என்னை விட்டுறு என்னால் இதை செய்ய முடியாது! எனக்கு ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும்" என்று நிதா கண்ணீர் மல்க கூறியபடியே மயங்கி விழ சற்று நேரம் அமைதியாக இருந்த யட்சன் வேகமாக ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டு வந்து அவள் மூஞ்சியில் ஊற்ற
அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள் நிதா.
"ம்ம்ம்ம் குட் எழுப்புற விதத்தில் எழுப்பினா தான்டி நீ எழுந்திருக்கிற" என்று கூறியவன் அவள் அருகில் வந்தபடியே
"நீ எதுவும் செய்ய வேண்டாம்! எதுக்கு தேவையில்லாம அத பிரிச்சு ஊத்திக்கிட்டு! எனக்கு வேண்டியதை நேரடியா நானே எடுத்துக்கிட்டா போச்சு" என்று கூறியபடியே யட்சன் அவள் அருகில் வந்து கைகளைப் பற்ற,
"நோ! நானே செய்றேன் சார்!" என்று கத்திய நிதா, கைகள் நடுங்க கண்ணின் இமையை சிமிட்டிபடியே அந்த திரவத்தை கோப்பையில் ஊற்றினாள்.
அவள் படும் வேதனையை சற்று நேரம் பார்த்தவன் "போதும்" என்று கூறி அந்த பார்சலை அவளிடமிருந்து பறித்து தானே அதை ஊற்றி குடித்தான்.
குடித்து முடித்தவன் சீக்கிரம் கிளம்பு ஆபிஸிற்கு போகணும் என்று யட்சன் கூற நிதா குழப்பமாக நின்றாள்.
அதை கவனித்தவன் "உன் கப்போர்டில் உனக்கான டிரஸ் இருக்கும் போய் போட்டுட்டு வா!" என்று அவன் சொல்ல அதனை ஏற்று ஆபிஸிற்கு கிளம்ப தன் அறை நோக்கி சென்றாள் நிதா. அங்கு கப்போர்டில் பல புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்க அதில் ஒன்றை எடுத்தவள் அன்று அந்த பெண்மணி கட்டிவிட்டது போல் கட்ட முயற்சிக்க கதவை திறந்து கொண்டு வந்தான் யட்சன். வந்தவன் அவள் அருகில் வர தன்னை வேகமாக மறைத்து கொண்டாள் நிதா.
ஆனால் யட்சன் அதை கண்டு கொள்ளாமல் அவள் அருகில் வந்தவன் அவளது கைகளில் இருந்த புடவையை வாங்கி தானே கட்டிவிட இங்கு நிதா நெளிந்தாள்.
அவன் வெகு கவனமாக புடவை மட்டும் கட்டி கொண்டிருக்க நிதாவிற்கு தான் அவன் முன் நிற்கும் கோலம் கண்டு அவஸ்தையாக இருந்தது.
சேலையை கட்டிமுடித்தவன் அவளை கைபிடித்து அழைக்க நிதா வர மறுத்தாள்.
"ஏன்? என்னாச்சு?" - யட்சன்.
"ரெஸ்ட் ரூம் போகணும்" – நிதா.
"ஒகே போயிட்டு சீக்கிரம் வா! வெயிட் பண்றேன் கீழ" என்று அவன் சொல்லிவிட்டு செல்ல இங்கு நிதாவிற்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
அவனது அருகாமை அவளை பாடாய்படுத்த தன்னை நிதானித்து கொள்ள அவளுக்கு பல நிமிடங்கள் ஆனது. தன்னை சாதாரணமாக்கிக் கொண்டு கீழ வந்த நிதாவை எதிர் கொண்டான் யட்சன்.
அவள் அருகில் வந்த யட்சன் "போகலாமா மனுமா! யூ ஆர் லுக்கிங் செக்ஸி பேபி!" என்று கூறியபடி அவள் இடுப்பில் கைவைத்தபடி நிதாவை காரின் அருகில் வரை அழைத்து சென்றவன் அவள் காரில் அமர்ந்ததும் அவள் முகத்தில் அறைவது போல் அவள் பக்க கதவை சாற்றினான்.
காரில் ஏறிய யட்சன் வேகமாக வண்டியை எடுக்க அவனது இந்த வேகத்தை எதிர்ப்பார்க்காத நிதா அருகில் இருந்த கண்ணாடியில் முட்டிக் கொண்டாள். தலையை தேய்த்தபடி அவள் யட்சனை திரும்பிப் பார்க்க காரின் உள்ளே அமர்ந்து இருந்த நிதாவிற்கும் தனக்குமான தூரத்தை கைகளால் காண்பித்தவன் “இந்த இடைவெளி ஆபிஸ் வரை இருக்கணும் ரைட் நிதா “ என்று அவன் கூற அவனது நொடிக்கு ஒரு முறை மாறும் முகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே வந்தாள் நிதா.
காரில் இருந்து இறங்கியவன் ஆபிஸின் உள்ளே நுழைய , நிதா கீழே இறங்கியதும் வேகமாக அவளை தன் கையின் அணைப்பில் கொண்டு வந்தவன்
“போலாமா! மனுமா!“ என்று கூறி அவளை அழைத்துச் செல்ல அங்கு இருப்பவர்கள் அவர்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.
உள்ளே அழைத்துச் சென்று யட்சன் தன் கேபினுக்குள் நுழைந்தது தான் தாமதம் நிதா அவளாகவே தன்னை விளக்கிக் கொண்டு நின்றாள் .
அவளை யோசனையோடு யட்சன் பார்க்க "இங்க யாரும் பக்கத்தில் இல்லையே சார்! அப்புறம் எதற்கு நீங்க என்னை நல்ல வச்சிக்கிறதா நாடகம் ஆடணும்" என்று நிதா கூற
அவளது பேச்சை கேட்ட யட்சன் "இன்ட்ரெஸ்ட்டிங்! இப்படி நீயாக எல்லாத்தையும் புரிந்து நடந்தா எனக்கு ரொம்ப வசதியாக இருக்கும்" என்று சொன்னவன் ஃபோன் சத்தம் கேட்க அதை எடுத்துக் கொண்டு பக்கத்து கேபினுக்குள் சென்றான்.
யட்சன் "ஹலோ" என்று வரவழைத்த நிதானத்தோடு கேட்க அங்கு எதிர்முனையில் ஆர்ப்பாட்டமாக பேசினான் வினய்.
"என்னடா யட்சா! நேற்று நைட் அவளிடம் நான் நெருங்கவிடாம பண்ணி அவளை காப்பாத்திட்ட போல! ஆனாலும் எவ்வளவு நாள் தான் நீ உன் பேபியை என்கிட்ட இருந்து காப்பாத்துவனு நானும் பார்க்குறேன்டா" – வினய்.
"நேற்று என்கிட்ட இருந்து உன் பேபியை காப்பாத்திட்ட! ஆனால் இன்னைக்கு...." என்று இழுத்த வினய் ஃபோனை வைக்க
இங்கு "ஹலோ... ஹலோ..." என்று பல தடவை அழைத்துவிட்டான் யட்சன்.
ஃபோனை வைத்தவன் நேற்று இரவு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தான்.
நேற்று இரவு வினய் நிதாவின் அருகில் செல்ல முனைய வெளியே சென்ற யட்சனுக்கு ஏதோ உள்ளூர்வு தோன்ற வேகமாக நிதாவின் அருகில் செல்ல
அங்கு வினய் நிதாவின் அருகில் பூவின் மணத்தையும் மீறி அருகில் செல்ல முனைய அவனை பின்னால் இருந்து பிடித்தான் யட்சன் .
யட்சன் வரவை கண்டதும் வேகமாக சன்னலில் குதித்து வெளியே சென்றான் வினய்.
வினய்யை விரட்டியவன் நிதாவின் அருகில் சென்று அவளது கை விலங்குகளை அவிழ்த்துவிட்டு அவளை பெட்டில் படுக்க வைத்துவிட்டு தன் ரூமை நோக்கி சென்றான்.
அதை யோசித்தபடியே வினய்யின் பேச்சையும் அசைப்போட்டபடியே நிதாவை நோக்கிச் சென்ற யட்சன் அவள் சன்னலின் அருகில் நின்று கீழே பார்த்துக் கொண்டிருப்பதை கூர்ந்து பார்த்துவிட்டு அவள் அருகில் சென்றான்.
நிதா இங்கு சன்னல் ஓரம் நின்று கீழே உள்ள குடோனில் பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ தோன்ற நிதா திரும்பிப் பார்த்தாள். அங்கு யட்சன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனின் பார்வையின் பொருளை புரியாமல் நிதா பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தவன் நிதா சுதாரிப்பதற்குள் அவளை பிடித்து கீழே தள்ளினான் யட்சன்.
சுமார் இரண்டு மாடி கட்டிடத்திற்கு மேலிருந்து கீழே விழுந்தவளை தாங்கிக் கொண்டு நின்றது கீழே இருந்த அந்த அட்டை பெட்டிகள்.
கீழே விழுந்த நிதா தன் கைகளை தேய்த்துக் கொண்டே எழ முயன்று கொண்டிருக்க அவளது நிலையை பார்த்து அங்கிருந்த தொழிலாளர்கள் அவளுக்கு உதவ முன் வர எதிரில் யட்சன் வருவதை பார்த்து அங்கேயே நின்றனர்.
“ என்னாச்சு மனுமா? பார்த்து நிற்க மாட்டியா? பார் எப்படி சிலிப் ஆகிட்டேனு. நல்ல வேளை அட்டை பெட்டி இருந்தனால் தப்பிச்ச!” என்று கூறியபடியே நிதாவை கை கொடுத்து யட்சன் தூக்க, நிதா கைகள் நடுங்க அவன் அருகில் நின்றாள். சட்டென்று யட்சன் திரும்பி ஒரு பார்வை பார்க்க தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து போயினர்.
யட்சன் நிதாவை தன் கைகளில் தூக்கியவன் தன் இடத்திற்குச் சென்று தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் நுழைந்து அவளை படுக்கை அறையில் தூக்கிப் போட்டுவிட்டு திரும்பி பாராமல் சென்றான்.
இங்கு நிதா கண்ணீர் கண்களோடு அமர்ந்து இருந்தாள்.
வெளியே வந்த யட்சன் நிதா நின்று இருந்த இடத்திற்கு வந்தான். அவள் நின்ற இடத்திற்கு எதிராக இருந்த கட்டிடத்தை குறி பார்த்து யட்சன் சுட எதிரில் இருந்தவன் துப்பாக்கியோடு தரையில் வீழ்ந்தான்.

வருவான்...
 
Top Bottom