Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன் ராட்சனாக

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 33
இரு தினங்களும் அதீத காய்ச்சலால் தன்னை மறந்த நிலையில் நிதா இருந்து இன்று காலையில் தான் சற்று தெளிந்து கண் விழித்தாள்.
அவள் கண் விழித்ததும் அவளை பார்வையால் அளவிட்ட யட்சன் "ஆர் யூ ஒகே மனுமா?" என்று கேட்டபடி நிதாவின் கைகளை பிடித்து கொண்டு அவளை அணைத்தபடியே டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு பல வித உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் அவளுக்கு பிடித்த உணவுகளாக இருந்தன. அதை பார்த்த நிதா ஆராய்ச்சியாக யட்சனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னை எதுக்கு பார்த்துட்டு இருக்க பேபி! சாப்பிடு! நீ வர வர சரியாகவே சாப்பிட மாட்ற! அதனால் தான் நீ இப்படி இளைச்சு போயிட்ட" என்று யட்சன் கூறியபடியே அவளுக்கு பிடித்த உணவான ரவா லட்டை அவள் வாயின் அருகில் கொண்டு செல்ல நிதா உணவையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
"என்ன நிதாம்மா! சாப்பிடாமல் தம்பியவே பார்த்துட்டு இருக்க! எவ்ளோ ஆசையா தம்பி ஊட்டிவிடுது!" என்று லமியின் பேச்சு அருகில் கேட்டதும் வேகமாக திரும்பிய நிதா லமியின் அருகில் விரைந்தாள்.
லமியின் பின்னால் வெங்கியும், சாமும் நின்று இருந்தனர். அவர்களை கண்டதும் கண்களில் நீர் வடிய வேகமாக அவரைப் போய் கட்டிக் கொண்டாள் நிதா.
நிதாவின் அழுகையை கண்ட சாம் அவளை மாற்றும் விதமாக “ ஏன் பேப்ஸ் உன் கல்யாணத்திற்கு என்னை கூப்பிடல?”
அதற்கு நிதா எதோ சொல்ல வர யட்சன் தங்கள் அருகில் வருவதை பார்த்ததும் வேகமாக "சாரி சாம்! திடீர்னு மேரேஜ் பண்ணிக்கிட்டனால யாரையும் கூப்பிட முடியல! ஆமா நீ எப்ப ரஷ்யா ல இருந்து வந்த சாம்" – நிதா.
"நேற்று தான் வந்தேன்! பேப்ஸ் வந்ததும் உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க வந்துட்டேன்" என்று சாம் சொல்ல
"நீ மட்டும் இருந்து இருந்தா இந்த கல்யாணத்தை நடக்கவிட்ருக்க மாட்ட சாம்!" என்று தனக்குள் நிதா சொல்லிக் கொள்ள அவளது முகத்தை படித்தவன் போல் சாம் பேசினான்.
"என்னாச்சு பேப்ஸ் ! ஏன் இந்த திடீர் கல்யாணம்? வினய் எதாவது..." என்று ஆரம்பித்தவன் நிதா யட்சனை பார்வையால் காட்டவும் வேகமாக வாயை மூடிக் கொண்டான்.
சாமும் நிதாவும் பேசிக் கொள்வதை கவனித்த யட்சன் அருகில் வரவும் வேகமாக தன் முகத்தை மாற்றிக் கொண்டாள் நிதா.
அவளது முக மாற்றத்தை அளவிட்ட சாம் வேகமாக பேச்சை மாற்றினான்.
"எங்க ஆண்டிக்கு உன்னை பார்க்கணுமாம் நிதா! எப்ப கூட்டிட்டு வரது" – சாம்.
அதை கேட்ட யட்சன், அவள் பதில் சொல்வதற்குள் யட்சன் சாமிடம் திரும்பி "எனி டைம் சாம் ! ஆனா அந்த நேரம் நான் வீட்டில் இருக்கும் நேரமாக மட்டும் இருக்குற மாதிரி பண்ணிட்டீங்கனா நல்லா இருக்கும்" – யட்சன்.
அதை கேட்ட சாம் யோசனையாக யட்சனை பார்த்தான். நிதாவின் தயக்கமும், யட்சன் நிதாவை தனித்துவிடாமல் தொடர்வதும் அவனுக்கு சூழ்நிலையை பறைசாற்ற சாம் அந்த இடத்தில் இருந்து நகன்று லமி, வெங்கியுடன் சேர்ந்து கொண்டான்.
அவன் சென்றதும் நிதாவிடம் திரும்பிய யட்சன் "என்ன என்னைப்பற்றி அவனுக்கு தெரிவிக்கலாம்னு பார்க்குறியா!" – யட்சன்.
"அப்படியெல்லாம் இல்லை" – நிதா.
"ரியலி! மனு டார்லிங் உனக்கு பொய் பேச வரலை! வீணா முயற்சி பண்ணாத! உன் முகம் உன்னை எனக்கு காட்டி கொடுத்திடும் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விரைந்த யட்சன், "வாங்க! எல்லாரும் சாப்பிடலாம்!" என்று அனைவரையும் வரவேற்றான் அவன் அப்படி அழைத்ததும் அனைவரும் டைனிங் டேபிள் நோக்கிச் சென்றனர்.
சாப்பிட்டு முடித்த சாம் கை கழுவ செல்லும் முன் நிதாவை பார்க்க அவனின் பார்வையின் பொருளை கண்டு கொண்ட நிதா யட்சனை திரும்பிப் பார்த்தாள். அவன் லமியுடன் ஏதோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் சாமின் பின்னால் கை கழுவது போல் சென்றாள். அங்கு சென்றதும் வேகமாக சாமிடம் திரும்பியவள்
"சாம் ஐ அம் இன் டிரேப்! என்னை காப்பாத்து! அவன்...." என்று அடுத்து எதோ நிதா சொல்ல வர "என்ன மனுமா! எவ்வளவு நேரம் தான் கை கழுவ! சீக்கிரம் வெளியே வா! பாரு! சாமும் கை கழுவாம உன்னை பார்த்துட்டு நிக்கிறார். நீங்க எப்ப கை கழுவி நாங்க எப்ப கை கழுவுறது டார்லிங்" என்று பின்னால் இருந்து யட்சன் சொல்ல அரண்டபடி திரும்பினாள் நிதா.
அங்கு யட்சனின் பின்னால் லமியும் , வெங்கியும் நின்று இருந்தனர். வேகமாக கை கழுவிய நிதா அங்கிருந்து வெளியேற அவளை தொடர்ந்து போக எத்தனித்த சாமை தடுத்தான் யட்சன்.
"ஹாய் சாம்! எங்க போறீங்க? உங்க பிரண்ட் நிதா கூட மட்டும் தான் பேசுவீங்களா? எங்க கூடலாம் பேச மாட்டீங்களா! உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு" – யட்சன்.
"ம்ம்ம் குட்... என்று அவன் கேட்ட கேள்விக்கு சாம் பதில் சொல்ல யட்சன் வீட்டில் இருக்கும் வரை சாமை நிதாவுடன் பேச விடாமல் செய்தான் யட்சன்.
காரில் செல்லும் போது லமியும், வெங்கியும் யட்சனின் புராணத்தை பாடிக் கொண்டே வர சாம் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். செல்லும் வழியெல்லாம் நிதா கை கழுவும் இடத்தில் சொன்ன வார்த்தைகளை கோர்த்து அர்த்தம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான்.
யட்சனின் செயல்களையும் , ஏற்கனவே நிதா யட்சனை பற்றி சொன்ன செய்திகளையும் இன்று வீட்டில் நிதாவின் நடவடிக்கைகளையும் கோர்த்து பார்த்த சாம் ஒரு முடிவோடு காலை விடியலுக்காக காத்திருந்தான்.
*******
லமியும், வெங்கியும் வீட்டிற்கு வரவும் அவர்களின் முன் வந்து நின்றார் வைத்தி.
"நான் போகாதீங்கனு சொன்னேனா இல்லயா?. என் பேச்சை கேட்காம போனீங்க? நல்லா அசிங்கப்படுத்தி அனுப்பினானா அவன்" – வைத்தி.
"அப்படிலாம் இல்லைடா அந்த தம்பி எங்களை நல்லா கவனிச்சி தான் அனுப்புச்சு!" - வெங்கி.
"நீ நினைக்கிற மாதிரி இல்லைடா அந்த தம்பி ரொம்ப நல்ல குணம்! நிதாவை நல்லா பார்த்துக்கிடுது" – லமி.
"என்னனு தெரியல டா அந்த தம்பி உன்கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துக்குது" என்று வெங்கி சொல்லிவிட்டு செல்ல வைத்தி யோசனையுடன் நின்றார்.
*******
காலையில் நடந்தேறிய சம்பவத்தை அசைபோட்ட படியே நிதா இரவு தனக்கான உணவை சமைத்துக் கொண்டிருக்க அவளது கவனம் சிதறியது. ஏதோ நினைவில் வேகமாக நிதா திரும்ப அவளின் காலின் பெருவிரல் மேஜை நுனியில் இடித்துக் கொண்டது.
காலைப் பார்த்தவள் காலில் சிறியதாக ரத்தக் கசிவு இருக்க அவற்றை துடைத்துக் கொண்டிருந்த நிதா ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள். அங்கு யட்சன் தன் கைகளை கட்டியபடி தன் ஒரு காலை சாய்வாக வைத்து கிட்சனின் வாசல் கதவில் முட்டு கொடுத்து நின்றிருந்தான். அவனை பார்த்த நிதா எச்சில் விழுங்க யட்சன் அவளை பார்த்தபடியே அருகில் வர நிதா பின்வாங்கினாள். ஆனால் யட்சன் அவளை நகரவிடாமல் பிடித்து நிறுத்தி அவள் காலை பார்த்தான்.
"ச்ச்ச்சுசுசு இவ்ளோ ரத்தம் வேஸ்ட் பண்ணிட்டியே நிதா பேபி! ரத்ததோட மதிப்பு தெரியுதா உனக்கு?" என்று கூறியபடியே யட்சன் அவள் கால்களை அவன் மூக்கின் அருகில் கொண்டு சென்று மோர்ந்து பார்க்க வேகமாக தன் கால்களை எடுத்துக் கொண்டாள் நிதா.
தன் காலை எடுத்துக் கொண்டவள் இரண்டடி பின்னால் சென்று கிட்சன் மேடையில் மோதி நிற்க,
அவள் காலைவிட்டு எழுந்த யட்சன் "சீக்கிரம் ரூமிற்கு வா!" என்று கூறிவிட்டு யட்சன் திரும்பிப் போக முனைய நிதா நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
ஆனால் சற்று தூரம் சென்ற யட்சன் திரும்பவும் அவள் அருகில் வந்து நின்று அவளை ஏற இறங்க பார்த்தான் .பின்பு நிதாவிடம் "என்னாச்சு பேபி! உன் முகத்தில் எதோ புதுசா தோணுதே! ம்ம்ம்" என்று சொல்லியபடி சற்று நேரம் யோசித்தவன்"ம்ம்ம் ஐ காட் ஐட்! இன்னைக்கு உன் முகத்தில் நிம்மதி தெரியுது! காரணம் என்ன பேபி! உன் பிரண்ட்கிட்ட பேசின சந்தோசமா? இல்லை அவன் உன்னை என்கிட்ட இருந்து உன்னை காப்பாற்றி கூட்டிட்டு போயிடுவானோன்ற அதீத நம்பிக்கையா! டெல் மீ மனுமா".
"அது... அது வந்து.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" – நிதா.
"ஓ!..." என்று கூறியவன் அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடித்து முறுக்கினான்.
"ம்ம்ம்... என்ன என்கிட்ட இருந்து தப்பிச்சு போக முயற்சி பண்றியா? முடியுமா உன்னால! நானா உன்னை விட்டால் ஒழிய நீ என்னிடம் இருந்து போக முடியாது." என்று அவளிடம் கத்தியவன்
"என் மேல இருக்கிற பயம் விட்டு போச்சு உனக்கு! அம் ஐ கரெக்ட் நிதா! அப்படி நீ இருக்கக் கூடாதே" என்று கூறியபடியே அவள் அருகில் யட்சன் வர பயத்தில் தள்ளிச் சென்ற நிதா ஒரு இடத்தில் சென்று நின்றாள்.
அவள் நின்றதும் வேகமாக தன் கைகளை நிதா முகத்திற்கு நேராக யட்சன் கொண்டு வர தன் கண்களை பயத்தில் மூடிக் கொண்டாள் நிதா.

வருவான்....
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 34
கண்களை மூடிய நிதா தன் அருகில் சத்தம் கேட்க பயத்தில் கண்களை திறந்து பார்த்தாள். அங்கு யட்சன் தன் மேல் இருக்கும் அலமாரியை தன் கை கொண்டு தட்ட அவன் அடித்த வேகத்தில் அதில் இருந்த பொருட்கள் சிதறி நிதாவின் முகத்தை அபிஷேகம் செய்தது ஊறுகாய் பாட்டில்.
ஊறுகாய் தன் மேனி முழுவதும் ஒழுகி இருக்க அதன் காரம் கண்களில் பட கண்கள் எரிந்தது நிதாவிற்கு. ஊறுகாயில் இருந்து வந்த எண்ணெய் மேனி முழுவதும் பட்டிருக்க அலங்கோலமாக நின்றாள் நிதா.
அவள் வேகமாக பாத்ரூம் செல்ல விரைய அவளை ஒரு அடி தள்ளி நின்று நிறுத்தினான் யட்சன்.
"எங்க போறீங்க நிதா மேடம்!" – யட்சன்.
"வாஷ் பண்ண! எவ்வளவு நேரம் இப்படியே நிற்கிறது" - நிதா.
"ஓஹோ! இந்த ஐடியா கூட நல்லா இருக்கே! ரொம்ப நல்லதா போச்சு! இப்படியே விடியுற வரை இரு! அது தான் நீ தப்பிக்க முயற்சி பண்ணியதற்கு உனக்கு நான் தரும் தண்டனை என்று யட்சன் கூறி விட்டு செல்ல, இங்கு நிதா விக்கித்து நின்றாள்.
*******
வினய் தேவ்வோடு கோபமாக கத்திக் கொண்டு இருந்தான்.
"அவ தப்பிச்சிட்டா தேவ்! அவனை மீறி அவளை நாம் ஒண்ணும் செய்ய முடியாது போல தேவ்" – வினய்.
"ஓ! முயற்சியை கைவிட்றாத வினய்! அவளை வச்சி தான் அவனை லாக் பண்ண முடியும்! அவ கூட பேச முயற்சி பண்ணு!" – தேவ்.
"அவளை நெருங்க விட மாட்றான் தேவ்! அவ கூட 24 மணி நேரமும் பாதுகாப்பா இருக்கான்" – வினய்.
"ஓ! அப்ப அவள் கையால அவனை முடிக்க டிரை பண்ணு" – தேவ்.
"புரியல! நீங்க என்ன சொல்றீங்க?" – வினய்.
"நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியல?" – தேவ்.
"புரியல தேவ்?" – வினய்.
"அவனுக்குள்ள இருக்குறவன் வெளியே வரனும்? அவன் ராட்சஷனா வெளிய வரணும்! அவ கையால் அவன் சாகணும்" – தேவ்.
"அது அவ்ளோ எளிதான விசயம் கிடையாது தேவ்! அவன் தன்னை கட்டுப்படுத்திட்டு இருக்கான். அவன் மனக்கட்டுப்பாட அவ்வளவு சீக்கிரம் நகர்த்த முடியாது" – வினய்.
"வினய்! வினய்! உன்னை என்ன சொல்லி திட்டுறதுனே தெரியல எனக்கு? புரியாமல் பேசிக்கிட்டு இருக்க நீ! ஒவ்வொரு மனிதனும் ஒரு விசயத்தில் தன் கட்டுப்பாட இழப்பாங்க? யட்சனுக்கும் அப்படி ஒரு விசயம் இருக்கலாம் இல்லையா?" – தேவ்.
"ஓ! அவன் யட்சனா இருக்குற வரை நாம் அவனை ஒன்னும் பண்ண முடியாது!" – வினய்.
"யட்சனா இருந்தா தான? யவனா இருந்தா?" என்று தேவ் சொல்ல வினய் அவரை கேள்வியாக பார்த்தான். அவனை பார்வையை படித்தவர் சிரிப்போடு அந்த பைலை அவனிடம் நீட்டினார். அதை படித்த வினய் அவரை ஆர்ப்பாட்டமாக கட்டிக் கொண்டான்.
"வாவ்! தேவ்! இது போதும் அவனை நாம் அழிக்க!" என்று வினய் கூறியதும் தேவ்வும் சிரித்தார்.
****
பவ்யா தனித்து அமர்ந்து நிதாவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவள் அருகே வந்த மனோகரன் பவ்யாவின் அருகில் வந்து அமர்ந்தார் .
"நீ இங்க இருந்தா அவளை பத்தி தான் நினைச்சிட்டு இருப்ப! நான் சொல்றத கேளுமா? நம்ம ஊர் திருவிழா வேற வரப்போகுது! நீ இந்தியா போய் அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வா! உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!" - மனோகரன்.
"என் பொண்ணு நல்லா! இருக்காளா ண்ணா? என் டாலிமாக்கு எதுவும் பிரச்சனையில்லையே? எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்குனா! அவளுக்கு ஏதோ ஆபத்து வரப் போற மாதிரி மனசு அடிச்சிக்குது" - பவ்யா.
அதற்கு மனோகரன் பதில் சொல்வதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த இருவரும் திகைத்தனர். அங்கு சாம் நின்று இருந்தான்.
அவர்கள் அருகில் வந்த சாம் “ சோ! நிதா உங்க பொண்ணு! அப்படிதானே அத்தை! “ – சாம்.
"ஆமாம்! சாம்!" – பவ்யா.
“அப்ப வாங்க உடனே போகலாம்! நிதா அவ அம்மாவை தேடிட்டு இருக்கா! வாங்க அவகிட்ட போய் நீங்க தான் அவ அம்மானு சொல்லலாம்!“ – சாம்.
“அது முடியாது சாம்!" – பவ்யா.
"ஏன்? உங்களுக்குனு ஒரு குடும்பம் இருந்தும் நீங்க ஏன் தனியா இங்க இருக்கீங்க? ஏன் உங்க பொண்ணை கூட ஒதுக்கி வச்சிட்டு இப்படி தனியா இருந்து கஷ்டப்படுறீங்க? அப்படி என்ன தான் பிரச்சனை உங்களுக்கு?" – சாம்.
சாம் கேட்டதை அடுத்து பவ்யா மனோகரை பார்க்க, "உண்மையை சொல் பவ்யா! இனியாவது உன் பொண்ணு கூட நீ சந்தோசமாக இருக்கணும்" என்று அவர் சொல்ல பவ்யா அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார்.
அதை கேட்ட சாம், "சோ நீங்க என் அப்பாவோட சொந்த தங்கை இல்லை? அப்படித்தானே! என் அப்பாதான் எல்லாம் பிரச்சனைக்கும் காரணமா? நீங்க ஏன் வைத்தி அங்கிள் கிட்ட உண்மைய சொல்லக்கூடாது?" – சாம்.
"வேண்டாம் சாம்! உண்மையான அன்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது! அது எனக்கு இன்னும் என் புருஷனிடம் இருந்து கிடைக்கல! அது கிடைச்சா நான் உண்மைய சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது! அவரே என்னை புரிஞ்சிக்குவார்" என்று பவ்யா சொல்ல சாம் சற்று நேரம் மெளனம் சாதித்தான்.
பின்பு "உங்களை நிதாவோட நான் சேர்த்து வைக்கிறேன் அத்தை! நாளை முதல் வேலையா உங்களை அவகிட்ட கூட்டிட்டு போறேன்" என்று சாம் சொல்ல பவ்யா கண்களில் கண்ணீரோடு அவனுக்கு நன்றி சொன்னார்.
அவரை தேற்றியவன் 'நிதாமா! அந்த ராட்சஷன்! உன்னை என் கூடத்தான் பேச விடமாட்றான்! லமி , வெங்கி கூட பாசமா தான் பேசினான். அதனால் உன் அம்மாகிட்ட பேச விடுவான்னு நினைக்கிறேன்! உன் அம்மாவை பார்க்க ரெடியா இரு பேப்ஸ்! என்ன நடக்குதுனு உண்மையை எனக்கு தெரியட்டும் அப்புறம் இருக்குடா உனக்கு! அவளை உன்கிட்ட இருந்து காப்பாற்றி நான் கூட்டிட்டு போறேன்னா இல்லையானு பார்' என்று சாம் இங்கு மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.
******
ப்ரசாத் மைக்கேல்சன் முன் அமர்ந்து இருந்தார் அருகில் விஜயனும் அமர்ந்து இருந்தார்.
"அவங்க இரண்டு பேரையும் பழைய மாதிரி மனுசனுங்களா மாத்துறது அவ்வளவு எளிதல்ல ப்ரசாத்" – மைக்கேல்.
"அப்படி சொல்லாத மைக்கேல் எதாவது முயற்சி பண்ணு! இங்க நடக்கும் பிரச்சனைகளை ஷ்டாப் பண்ணலைனா எதாவது விபரீதமா முடிஞ்சிடும்" – ப்ரசாத்.
அதற்கு சற்று நேரம் யோசித்த மைக்கேல்சன் "அதற்கு பல தடைகள் தாண்டனும் ப்ரசாத்! அதுமட்டுமல்ல ப்ரசாத் அதுக்கு முதல் மனகட்டுப்பாடு ரொம்ப அவசியம்."
"ஆமா ப்ரசாத்... அவங்க அதுக்கு ரொம்ப கஷ்ட படணும்" – விஜயன்.
"அப்ப வழி இருக்கு! அவங்க மனுசனா வாழ! அது என்ன வழி விஜயன் சீக்கிரம் சொல்லுங்க" - ப்ரசாத்.
அதற்கு சற்று நேரம் யோசித்த விஜயன் மைக்கேல்சனிடம் திரும்ப மைக்கேல்சன் பேச ஆரம்பித்தார்
48 நாள் கழித்து கொண்டாடப் படுற ஈஷ்டர் திருநாளை தவிர வேறு ஆப்ஷன் நம்மகிட்ட இல்லை. 48 நாள் தொடர்ந்து சில நடைமுறைகளை விடாமல் கடைபிடிச்சா! அதற்கு வாய்ப்புகள் இருக்கு ப்ரசாத்! ஆனால் அந்த நடைமுறைகள் அவ்வளவு எளிதல்ல. அதற்கு பல தடைகள் கூட வரலாம். ஏன் அவங்க இறந்த அதே இடத்தில் அவங்க திரும்பவும் மரணிக்க கூட வாய்ப்பு இருக்கு! அதெல்லாத்தையும் போராடி எவன் ஒருவன் நிற்கிறானோ! அவன் நினைத்த காரியம் நடைபேறும்!" - மைக்கேல்சன்
"ஓ! அப்படி 48 நாள் என்ன செய்யணும் மைக்கேல்?" என்று ப்ரசாத் கேட்க
அதற்கு மைக்கேல் சொன்ன பதிலில் அதிர்ச்சியாக நின்றார் ப்ரசாத்.
அதே நேரம் மைக்கேல் கூறியவற்றை தன் கைகளில் இருந்த புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்தான் யட்சன்.

வருவான்....
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 35
நிதாவை ஆபிசிற்கு அழைத்துச் சென்ற யட்சன் அவளை சில வேலைகள் செய்ய பணித்துவிட்டு, அடுத்த ரூமில் நடந்து கொண்டிருந்த கலந்தாய்வில் சென்று கலந்து கொண்டான். .
யட்சன் வெளியே சென்றதும் கைகளில் தேநீர் ஏந்திக் கொண்டு உள்ளே ஒருவன் வந்தான். அவனை பார்த்த நிதா தேநீர் கப்பினை கைகளில் எடுக்க முயல ஆனால் அவனோ அவளுக்கு கண்களால் ஜாடை காட்டினான்.
அதை கவனித்த நிதா அவன் ஜாடை காட்டிய திசை பக்கம் பார்த்தாள். அவன் தேநீர் ஏந்தி வந்த டீரேயில் ஏதோ கவர் இருப்பதை கவனித்த நிதா எக்கி யட்சனை கண்ணாடி கதவின் வழியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் தன்னை கவனிக்கவில்லை என்று தெரிந்ததும் வேகமாக அந்த கவரை எடுத்து பத்திரப்படுத்தினாள்.
அவள் கவரை எடுத்ததும் வேகமாக தேநீர் கொண்டு வந்தவன் வெளியில் சென்றுவிட்டான். வெளியில் வந்தவன் யாருக்கோ போன் செய்ய , எதிர்முனையில் போனை அந்த நபர் எடுத்ததும் "நீங்க கொடுத்ததை கொடுத்துட்டேன் சார்!" என்று அவன் கூற
"ஹம்ம்ம் நீ செஞ்ச வேலைக்கு தகுந்த சன்மானம் உன் வீடு தேடி வரும்" என்று அவனிடம் கூறி போனை வைத்தார் தேவ்.
தேவ் போனை வைத்துவிட்டு அருகில் இருந்த வினய்யிடம் திரும்பி
"வேலை முடிஞ்சிருச்சு வினய்! யட்சனை எமோஸ்னலா டிராப் பண்ண ஐடியா செட் பண்ணியாச்சு! இனி அவன் கவனம் அவளிடம் போகும்! அதனால் அவனை ஈசியா நீ வீழ்த்திடலாம்" என்று தேவ் கூற வினய் வெற்றி சிரிப்பு சிரித்தான்.
**********
தேநீர் கொண்டு வந்தவன் சென்றதும் அடுத்த நொடி நிதா அந்த கவரை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் சென்றாள். உள்ளே சென்றவள் அதில் இருந்ததைப் பிரித்துப் பார்த்தாள். அதில் தேவ் அனுப்பிய கடிதம் மற்றும் புகைபடம் இருந்தது. கடிதத்தை பிரித்து படித்தவள் தீவிர யோசனைக்குச் சென்றாள். கடிதத்தை படித்து முடித்தவள் புகைபடத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாத்ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது அதனை தொடர்ந்து யட்சன் "நிதா! வெளியே வா!" என்று கூப்பிடும் சத்தம் கேட்கவும் வேகமாக அந்த கவரையும், கடிதத்தையும் டிஸ்போஸ் செய்த நிதா அந்த புகைபடத்தை தன் சேலை மடிப்பில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சாதாரணமாக வந்தாள்.
அவள் வெளியே வந்ததும் அவளை துளைக்கும் பார்வை பார்த்தான் யட்சன். அவனின் பார்வையை பார்த்த நிதா அவனுக்கு தன்னிடம் சந்தேகம் வராதபடி மிகவும் கஷ்டப்பட்டு இயல்பாக நின்றாள்.
அவளை அளவிட்ட யட்சன் "ஏன் இவ்வளவு நேரம் மனு டார்லிங்?".
"அது... அது வந்து.." – நிதா.
"ம்..." - யட்சன்.
"அது... ஆங் ... அஜீர்ண கோளாறு! அதான்" – நிதா.
"ஒ! இஸ் இட்! உனக்கு அஜீர்ண கோளாறா நம்ப முடியலையே?" – யட்சன்.
"ஏன் நம்ப முடியலை! உங்களுக்கெல்லாம் அஜீர்ண கோளாறு வரும்போது! எனக்கெல்லாம் வரக்கூடாதா?" – நிதா.
நிதா அப்படி கூறியதும் யட்சனுக்கு லமி தன்னை அன்று படுத்தியபாடு ஞாபகத்தில் வர அவன் முகம் கோபத்துக்கு மாறியது.
அதை கண்ட நிதா 'அய்யோ நிதா தேவையில்லாம சிங்கத்தை சீண்டிவிட்டுட்டுயே! அவனே மறந்த விசயத்தை நீ ஞாபகப்படுத்திட்ட நிதா! இப்ப பாரு அவன் கத்தப் போறான்' என்று நிதா மனசுக்குள் அலர, அவள் நினைத்தபடியே யட்சன் கோபமாக நிதாவை பார்த்து கத்த ஆரம்பித்துவிட்டான்.
"உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? ம்ம்ம்! அன்னைக்கு அந்த ஓல்டு லேடி என்னை போட்டு அவ்ளோ டார்சர் பண்ணுச்சு! நீயும் அன்னைக்கு அது கூட சேர்ந்து என்னை ஒவரா பண்ணிட்டு இருந்தயில்லையா! உன்னை! போனா போகுதேன்னு கொஞ்சம் பாவம் பார்த்து உன்னை விட்டு வச்சா! உனக்கு என்மேல பயம் விட்டுப் போச்சு போலருக்கே? அப்படி உன்னை நான் ப்ஃரியா இருக்க விடமாட்டேன் மனுமா!" - யட்சன்.
"அதெல்லாம் இல்லை! அன்னைக்கு நான் ஒன்றும் பண்ணலை! நான் லமியை தடுக்கத்தான் முயற்சி செய்தேன்! ஆனால் நான் எவ்வளவு தடுத்தும் அவங்க தான் என் பேச்சை கேட்கவே இல்லை! அதுக்கு நான் என்ன பண்ண முடியும்! நான் எப்பவும் போல தான் இருக்கேன். நீங்க தான் மாறிடிங்க.." – நிதா.
நிதா அப்படி சொன்னதும் அவளை பார்வையால் சுட்டெரித்தவன் சற்று நிதானித்து "இல்லையே! உன் பேச்சு, உன் ரியாக்ஷன், உன் கண் எல்லாம் கொஞ்சம் கூட ஒத்துப் போற மாதிரி தெரியலயே! ஆர் யூ டிரையிங் டூ டைவர்ட் மீ?" – யட்சன்.
"அய்யய்யோ கண்டுபிடிச்சுட்டானே!" என்று ஏதோ மனசுக்குள் நினைக்க ஆரம்பித்த நிதா யட்சன் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் வேகமாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு
"அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்! நான் எதுக்கு உங்களை டைவர்ட் பண்ணப் போறேன்" – நிதா.
"ம்ம்ம் ரியலி!" என்று கூறியவன் அவள் அருகில் வந்து "சார்னு கூப்பிட்டு என்னை அந்நியமாக்காத செல்லம்!" என்று யட்சன் கூறியபடியே அவள் அருகினில் வந்து நிற்க, நிதா அவனிடம் இருந்து விலகி ஒரு அடி தள்ளி நின்றாள்.
"அப்புறம் எப்படி சார் கூப்பிடணும்" என்று வார்த்தைகள் தந்தியடித்தபடியே அவனின் அருகாமை பயத்தை தர எச்சில் விழுங்கியபடியே நிதா கேட்க
"ம்..ம்..ம்.." என்று சற்று நேரம் யோசித்தவன் "அன்பே!, ஆருயிரே!, ராட்சஸா!, டார்லிங்,... எப்படி வேண்டும்னாலும் கூப்பிடு மனுமா!" என்று அவன் சொல்ல வேண்டா வெறுப்பாக முகத்தை திருப்பினாள் நிதா.
அதை கண்ட யட்சன் அவளது முகத்தை நேராக திருப்பி அவனது முகம் பார்க்க வைத்தவன் "ஏன் அத்தான் கூட கூப்பிடலாம் மனுமா!" என்று அவன் கூற நிதா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது கண்முன் "அத்தான்னு கூப்பிடு மனு!.. ப்ளீஸ்....." என்று ஒருவன் கெஞ்சுவது போலவும் அவனை தான் 'அத்தான் என்று கூப்பிடமாட்டேன்' என்று கூறி ஓடுவது போலவும் ஞாபகங்கள் ஊர்வலம் போக
அவளையே பார்த்துக் கொண்டிருந்த யட்சன் அவள் அருகில் வந்து "என்னை எப்படி கூப்பிட போற செல்லம்? டார்லிங்னா? டியர்னா? இல்லை அத்தான் என்றா?" என்று கூறியபடியே தன் ஒவ்வோரு வார்த்தைக்கும் தன் கை விரல்களால் அவளது கண், முகம், உதடு, கழுத்து என்று அளந்தவன், அவள் கைகளில் ஊர்வலம் போய் இறுதியில் சேலை மடிப்புக்கு அவன் கைகளை கொண்டு வர அவனது கைகள் செய்த ஜாலங்களில் லயித்தபடியே கண் மூடி நின்ற நிதா வேகமாக தன் கண்களை திறந்தவள், அவன் கைகளை பிடித்து அவனை மேற்கொண்டு செல்லமுடியாதபடி தடுத்தாள்.
'எங்கே! அவனை விட்டால் அந்த சேலை மறைப்பில் இருந்த புகைபடத்தை அவன் எடுத்துவிடுவானோ' என்று அவள் பயந்து அவனை தடுக்க
அவளது முகத்தை வேகமாக நிமிர்ந்து பார்த்த யட்சன் "ஏன் டார்லிங்! முகம் முழுவதும் இப்படி வேர்த்துக் கொட்டுது! என்கிட்ட இருந்து எதுவும் மறைக்கிறீயா என்ன?".
"அப்படியெல்லாம் இல்லை சா..." என்று ஆரம்பித்தவள் "அத்தான்" என்று முடித்தாள்.
அவள் அத்தான் என்றதும் அவளை அளவிட்டவன் "அத்தான்! ம்ம்ம் ஐ அம் இம்ரஸ்ட்! ஆனால் உன்கிட்ட இப்படி ஒரு சேன்ஜ் ஓவரை நான் எதிர்பார்க்கலை மனுமா! சம்திங் ஹேப்பண்ட்! சொல்லு யாரையாவது நீ பார்த்தியா? இல்லை யாராவது வந்து உன்னை பார்த்தாங்களா?" – என்று யட்சன் அவளை கூர்மையாக அளவிட்டபடியே கேட்க,
நிதா திருதிருவென முழித்தபடி இருந்தாள்.
"ம்ம்ம்... சொல்லு... பேபி.." - யட்சன்.
அதற்கு இல்லை என்று தலையசைத்தாள் நிதா.
அவள் அப்படி சொன்னதும் அவளையே சற்று நேரம் பார்த்து கொண்டு நின்ற யட்சனுக்கு போன் வர அந்த போனை எடுத்த யட்சன் மறுமுனையின் அவன் செக்ரட்ரி அபேய் பேசவும் "எஸ் அபேய்!" – என்று யட்சன் கூற
அவன் ஏதோ சொல்லவும் "இதோ வந்துடுறேன்" என்று கூறிவிட்டு திரும்பவும் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு விரைந்தான் யட்சன் .
அவன் சென்றதும் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்ட நிதா தன் சேலை மறைப்பில் இருந்த அந்த புகைபடத்தை எடுத்தாள். அதில் 7 வயது யவன் 4 வயது மனுவை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.. அதை பார்த்தவள் ஒரு முடிவோடு யட்சனிடம் தனியாக பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று யட்சனுக்கு வேலை இருக்க அவளை முதலில் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டான்.
யட்சனிடம் தனியாக பேச காத்துக் கொண்டிருந்த நிதா அவன் வீட்டிற்கு அனுப்பியதும் என்ன செய்வதென்று தெரியாமல் அவனிடம் தனியாக பேச வீட்டில் காத்துக் கொண்டு இருந்தாள்.
அன்று யட்சன் வெகு நேரம் ஆனபின் பின்னிரவில் வீட்டுக்கு வந்தான். அவன் வந்தவுடன் அவனிடம் நிதா பேச முயல அவளை கண்டுகொள்ளாமல் அவன் ரூம் நோக்கி சென்றுவிட்டான்.
நிதாவிற்கு அவன் செயல்கள் வருத்தத்தை தர, அறைகுள் சென்று பார்க்க யட்சன் அங்கு இல்லை. பாத்ரூமில் நீர் விழும் சத்தம் கேட்க, அவன் வெளியே வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
குளித்து முடித்து வெளிவந்த யட்சன் இடுப்பில் கட்டிய துண்டோடு தன் இரவு உடையை எடுத்துக் கொண்டிருக்க அவனை அந்த கோலத்தில் பார்க்க முடியாத நிதா தலையை குனிந்து கொண்டாள். அப்போது ஏதோ தோன்ற சட்டென்று நிமிர்ந்து அவன் முதுகை பார்த்தாள். அவன் முதுகை பார்த்த நிதாவிற்குள் பூகம்பம் உண்டானது.

வருவான்...
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 36
யட்சன் முதுகை பார்த்து திகைத்து நின்றாள் நிதா. பின் வேகமாக அவன் அருகில் சென்று அவன் முதுகில் இருக்கும் தழும்பை நிதா தடவிப் பார்க்க , வேகமாக திரும்பி அவள் கைகளை பிடித்தான் யட்சன். .
"என்ன தைரியம் இருந்தா என்னை நீ தொடுவா? உன்னை!" என்று யட்சன் கோபமாக கத்தியபடியே அவள் கையை வேகமாக தட்டிவிட, யட்சன் அருகில் நின்ற நிதா அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்போதும் தன்னை பார்த்து பயம் பூசிக் கொள்ளும் அவளது விழிகளில் இன்று காணப்பட்ட பாவனையை பார்த்தவன், "என்னாச்சு? உனக்கு? ம்ம்ம் என்ன பயப்படாம தைரியமா என் முன்னாடி நின்னுட்டு இருக்க?".
"ஆமா! தைரியமாத்தான் நின்னுட்டு இருக்கேன்?" – நிதா.
"என்ன? என்னை எதிர்த்து எல்லாம் பேசுற?" – யட்சன்.
"இல்லை நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்" – நிதா.
"என்ன பேச்சு எல்லாம் வித்தியாசமா இருக்கு?" – யட்சன்.
"ஆமா! வித்தியாசமா தான் இருக்கு!" – நிதா.
அதற்கு யட்சன் புரியாமல் பார்க்க அவன் அருகில் வந்து அவன் நாடியை பிடித்த நிதா அவன் முகத்தை வலப்பக்கமும் , இடப்பக்கமும் திருப்பிப் பார்த்தாள்.
அவள் அப்படி செய்ததும் வேகமாக அவள் கைகளை தட்டிவிட்டவன் வேகமாக சற்று தள்ளி நின்றான்.
"டோண்ட் டச் மீ! எதுவா இருந்தாலும் தள்ளி நின்று பேசு! என்னாச்சு உனக்கு? உன் செய்கை எல்லாம் இன்றைக்கு வித்தியாசமா இருக்கு! என் முகத்தை என்னவோ புதுசா பார்க்குற மாதிரி பாக்குற?" – யட்சன்.
"ஹம்ம்ம் புதுசா தான் தெரியுது!" – நிதா.
"என்ன புதுசா தெரியுது?" – யட்சன்.
"என் டோலு எனக்கு தெரியுறான். அதுவும் புதுசா தெரியுறான்?" – நிதா.
"நீ என்ன சொல்ற! டோலுவா என்ன பெட்டர் ஹாஃப் என்னவெல்லாமோ பேசுற? ஆமா யார் அந்த டோலு?" – யட்சன்.
அவன் அப்படி சொன்னதும் யட்சனை அழைத்துச் சென்றவள் அருகில் இருந்த கண்ணாடி முன் நிறுத்தி "இவர்க்குள்ள தான் என் டோலு ஒளிஞ்சு இருக்கார்!" என்றாள் நிதா.
நிதா கண்ணாடி முன் நிறுத்தியதும் கண்ணாடியை பார்த்த யட்சனின் முகம் பதட்டத்துக்குச் செல்ல, வேகமாக கண்ணாடியை விட்டு தள்ளி நின்றான். நிதா தன்னை டோலு என்றதும் திகைத்த யட்சன் தன் பாவனைகளை மறைத்துக் கொண்டு "எனக்கு வேலை இருக்கு! உன் வெட்டி பேச்சை எல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை" என்று சொல்லிவிட்டு செல்ல முனைய நிதா அவனை தடுத்து நிறுத்தினாள்.
அவனது முக பாவங்களை அருகில் இருந்து பார்த்த நிதா ஒரு முடிவோடு அவன் அருகில் சென்று, அவன் கைகளை முன்னும் பின்னும் திருப்பி ஏதோ பார்க்க முயல அவள் கைகளை தட்டிவிட்டான் யட்சன்.
"ஸ்டே அவே ப்ஃரம் மீ!" - யட்சன்.
யட்சன் கத்தியதை கண்டுகொள்ளாமல் அவனின் அருகில் வந்த நிதா "என் டோலு ரொம்ப நல்லவன் தெரியுமா.. அவனுக்கு நான் என்றா ரொம்ப இஷ்டம். அவனுக்கு இப்படி எல்லாம் என்னை வதைக்க தெரியுமா?" – என்ற நிதா யட்சனை பார்த்து வருத்தத்தோடு கேட்க அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான் யட்சன். அவனின் அமைதியை கண்ட நிதா மேலும் தொடர்ந்தாள்.
"கடவுளே! என்ன ஆச்சு உனக்கு.. உன் முகம் ஏன் இப்பிடி இருக்கு... நீ என் டோலு தான!" – நிதா
அதற்கு யட்சன் மறுப்பாக தலையசைக்க
"இல்லை நீ என் டோலு தான்! எனக்கு தெரியும்! நீ என் டோலுயில்லைன்னு மறுத்தாலும் எனக்கு உன்னை அடையாளம் காண முடியுது. சீக்கிரம் என் டோலுவை நான் உனக்குள்ள இருந்து வெளியே வர வைப்பேன்" என்று கூறிவிட்டு நிதா செல்ல அதை கேட்ட யட்சன் அசையாமல் சிலை போல் நின்றான்.
நிதா சென்றதும் தன் கைகளின் மணிகட்டிற்கு மேல் ஒட்டி வச்சிருந்த தோல் போன்ற ஒரு ஸ்டிக்கரை உருவினான் யட்சன். அப்போது அவன் கைகளில் எழுதி வைத்திருந்த 'டாலி' என்ற டாட்டூ அவனை பார்த்து சிரித்தது.
அதை தடவியபடியே "உன் டோலு செத்துப் போய் பல நாள் ஆகுது டாலிமா! இப்ப இருக்கிறது யட்சன் மட்டும் தான்" என்று தனக்குள் பேசியவன் திரும்ப அருகில் இருந்த கண்ணாடியில் அவன் உருவம் தெரிந்தது. அதை கண்டவன் முகம் வேதனை அடைந்தது.
**********
மறுநாள் ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்த யட்சன் நிதாவை அழைக்க அவள் ஆபிசிற்கு வர மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.
"இல்லை வரமுடியாது! நீங்க என்கிட்ட நடந்த உண்மையை சொல்லாத வரை உங்க பேச்சை நான் கேட்க மாட்டேன்!" – நிதா.
"என்ன உண்மை?" – யட்சன்.
"நீங்க தான் டோலுன்ற உண்மை" – நிதா.
அதை கேட்ட யட்சன் தன் கண்களை மூடித் திறந்தான். பின்பு கண் திறந்தவன் விழிகள் கோபம் பூசிக் கொண்டது.
அவளிடம் திரும்பிய யட்சன் "இப்ப நீ வரப் போறீயா? இல்லையா? நிதா" என்று கத்த "முடியாது!" என்று மறுத்தாள் நிதா .
"நீ இப்ப என்னை ரொம்ப கோபப்படுத்துற! அப்புறம் விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும் நிதா" – யட்சன்.
"பரவாயில்லை! நீங்க உண்மையை சொல்லுங்க... நான் வர்றேன்..." – நிதா
அவள் அப்படி அடம் செய்ததும் கோபம் தலைகேறியது யட்சனுக்கு. கோபத்தில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கண்கள் வடிவம் மாற ஆரம்பிக்க அதை பார்த்த நிதா மனதுக்குள் பயம் ஏற்பட்டாலும் வெளியே சாதாரணமாக நின்றாள்.
அவள் அருகில் வந்த யட்சன் கோபத்தில் அவள் கைகளை பற்ற அவனது கைகளின் நீண்ட நகங்கள் அவள் கைகளை குத்தி லேசாக ரத்தம் கசிய ஆரம்பித்தது. ரத்தத்தை பார்த்த யட்சனின் பற்கள் வெளியே வர ஆரம்பிக்க தன்னை கட்டுப்படுத்த முயன்றவன் முடியாமல் யட்சன் இங்கு திணறிக் கொண்டிருக்க , யட்சனின் மாற்றங்களை அருகில் இருந்து பார்த்த நிதாவிற்கு பயம் அதிகரித்தது.
அவள் பயத்தில் "நோ! ஸ்டே அவே யூ டெவில்!" என்று அலற, அதை பார்த்தவன் தான் இங்கு இருந்தால் அவளை எதாவது செய்துவிடுவோம் என்று பயந்து வேகமாக அருகில் உள்ள தன் ரூமில் சென்று மறைந்தான்.
சற்று நேரம் தன் ரூமில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றவன் அப்போது தான் ஒன்றை உணர்ந்தான்.
தான் தன் மனகட்டுப்பாட்டை நிதாவிடம் இழக்கிறோம் என்று உணர்ந்தான். சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தவன் நிதாவின் செயல்களை நேற்றில் இருந்து மாறுபடுகிறது என்பதை உணர்ந்தான். அவள் நேற்று ஆபிசில் இருந்து வந்ததில் இருந்து தான் தன்னிடம் அவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்று உணர்ந்தவன் ஒரு முடிவோடு நேராக ப்ரசாத்தின் ரூமிற்கு சென்றான்.
அங்கு யட்சனை பார்த்தவர் வேகமாக எழுந்து நிற்க, "என்னாச்சு யட்சா! எதாவது பிரச்சனையா?" – ப்ரசாத்.
அதற்கு யட்சன் அவரிடம் "நீங்க உங்க சன் வினய்யை இழக்க தயாரா இருங்க ப்ரசாத்!"
"வாட்? கொஞ்சம் நிதானமா பிராப்ளம் என்னனு சொல்லு யட்சா! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்." – ப்ரசாத்
"இனி பேசுறதுக்கு எதுவும் இல்லை ப்ரசாத்! நிதா விசயத்தில் அவன் ரொம்ப தலையிடுறான்! அவள் விசயத்தில் வினய் தலையிடுறது எனக்கு பிடிக்கலை. அவனுக்கு எச்சரிக்கை கொடுத்தும் திருந்தலை." – யட்சன்.
"ஓ! என்ன செய்தான் யட்சா" – ப்ரசாத்
"நிதாகிட்ட அவன் எதோ சொல்லி இருக்கான்! அதனால் அவள்..." என்று இழுத்தவன், நிறுத்திவிட்டு அவனுக்கு வார்னிங் டைம் முடிஞ்சிருச்சு ப்ரசாத்! "இனிமேல் அவனை நான் பார்த்தா யுவர் சன் இஸ் நாட் பஃர் யூ! ஐ மீன் இட்" – யட்சன்.
"ஓ! நோ! யட்சா! நான் அவன்கிட்ட பேசுறேன்! அவனை எதுவும் பண்ணிடாத!" – ப்ரசாத்.
"ம்ம்ம் உங்களுக்காக அவனுக்கு கடைசி சான்ஸ் தரேன்! அவனை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க! இல்லை..." என்று சொல்லி நிறுத்தியவன் "என்னை பற்றி உங்களுக்கே தெரியும்!" என்று கூறிவிட்டு அவன் செல்ல யோசனையில் ஆழ்ந்த ப்ரசாத் மைக்கேலுக்கு போன் செய்து அரைமணி நேரம் அவனுடன் பேசினார்.
அதன்பின் "ஒகே மைக்கேல்! நான் அவனை அழைத்துவர ஏற்பாடு செய்றேன்! உங்களுக்கான பணம் உங்களை தேடி வரும்! ஐ அம் சுயர்!" என்று கூறிவிட்டு போனை வைத்த ப்ரசாத் வினய்க்கு கால் செய்தார். வினய் போனை எடுத்ததும் ப்ரசாத் வினய்யிடம் "மை சன்! உன்னை பார்க்க ஆசையா இருக்கு! ஒரே ஒரு தடவை என்னை வந்து பார்க்க மாட்டியா!" என்று வினய்யிடம் ப்ரசாத் கெஞ்ச ஆரம்பிக்க சற்று நேரம் மௌனம் காத்த வினய் ப்ரசாத்தை பார்க்க சம்மதம் தெரிவித்தான்.
வினய்யை தன் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு ப்ரசாத் போனை வைத்த ப்ரசாத் மறுபடியும் மைக்கேல்சன்க்கு கால் செய்தார்.
"மைக்கேல் அவன் வரதுக்கு சம்மதம் தெரிவிச்சுட்டான்! நீங்க உங்க வேலையை ஆரம்பிங்க" என்று ப்ரசாத் கூற
மைக்கேல்சன் சம்மதமாக தலையசைத்துவிட்டு போனை வைத்தான்.
நிதா தன்னை 'டோலு' என்று கூறி தொல்லை செய்வதும், உண்மை கேட்டு அடம்பிடித்ததும், தான் அவளை தாக்க முற்பட்டதும் யட்சனின் நினைவில் ஆட அவளிடம் இருந்து தப்பிக்க அன்று வேலை முடிந்தும் அலுவலகத்திலேயே இருந்தான் யட்சன். ஆயினும் அவன் அவள் என்ன செய்கிறாள் என்று கண்காணிப்பு கேமிரா மூலம் வீட்டில் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க அப்போது தன் வீட்டில் நுழைந்த இரு உருவங்களை கண்டு கடுப்பானான் யட்சன்.
அதில் ஒருவன் சாம்மாக இருந்தான், சாம்மை கண்டதும் கடுப்பான யட்சன் 'இவனை...' என்று கூறி பல்லை கடித்தவன் அருகில் இருந்த உருவத்தை கண்டதும் திகைத்தான்.
அந்த உருவத்தை ஜீம் செய்து பார்த்தவன் அந்த உருவத்தை கைகளால் தடவினான். அவனது உதடுகள் எதோ உச்சரித்தது. அவரை கண்டு அவனது கண்கள் கலங்கியது.
யட்சனை உணர்ச்சி பிழம்பாக மாற்றிக் கொண்டிருந்த அந்த உருவம் பவ்யா உருவில் நின்றது.

வருவான்...
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 37
பவ்யாவை பார்த்த யட்சன் உணர்ச்சி வசத்தோடு இருக்க இங்கு நிதாவோ யட்சன் தன்னை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதை தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.
அப்போது தான் அவளை தேடி சாம் பவ்யாவை கூட்டிக் கொண்டு வந்தான். பவ்யாவை பார்த்ததும் வேகமாக அவரை போய் கட்டிக் கொண்டாள் நிதா. பவ்யா அவளை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, சாம் ஆரம்பித்தான்.
"நிதா! அம்... இல்ல அத்தை உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க! அதான் கூட்டிட்டு வந்தேன்" – சாம்.
"நல்ல வேலை செஞ்ச சாம்! தேங்க் யூ! எனக்கு இப்ப இவங்க வந்தது எவ்வளவு ஆறுதலா இருக்குனு தெரியுமா சாம்?" - நிதா.
"ஆறுதலா இருக்கா! ஏன் நிதா! நீ ஏதும் பிராப்ளம்ல இருக்கியா என்ன? ஆறுதல் அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு இருக்க?" – சாம்.
"அப்படியெல்லாம் இல்லை சாம்! இவங்கள பார்த்தா எனக்கு ஒரு மதர்லி ஃபீல் சாம். டோன்ட் வொரி! ஐ அம் ஆல்ரைட்!" – நிதா.
"நோ! நிதா! யூ ஆர் லையிங்! உனக்கு ஏதோ பிராப்ளம்! சொல்லு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்." – சாம்.
"ஆமாம் நிதா! எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுமா! எனக்கு என்னவோ நீ சரி இல்லைனு தோணுது" – பவ்யா.
"எஸ் நிதா! டெல் மீ! நீ என்கிட்ட தான் எதுவும் சொல்ல மாட்ற! உன் அம்மாகிட்டயாவது சொல்லலாம் இல்லையா!" என்று சாம் கூற,
நிதா அதிர்ச்சியாக சாமை பார்த்தாள்.
"நீ என்ன சொல்ற சாம்! ஆர் யூ சீரியஸ்?" – நிதா.
"எஸ் நிதா! பவ்யா தான் உன் மாம் நிதா! நீ தேடிட்டு இருக்குற உன் அம்மா இவங்க தான்" – சாம்.
"ஓ ரியலி சாம்! என்று கூறிய நிதா மா.. என்று கூறியபடியே பவ்யாவை கட்டிக் கொண்டாள். பவ்யாவும் தன் நீண்ட தவம் நிறைவேறியது போல தன் மகளை கட்டிக் கொண்டார்.
நிதாவும், பவ்யாவும் பாச பிணைப்பில் இருக்க அப்போது காலடி ஓசை கேட்க இருவரும் பிரிந்தனர். சாம் கோபத்தோடு திரும்பிப் பார்க்க அங்கு யட்சன் நின்று கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் நிதா அவன் அருகில் வேகமாக விரைந்தாள்.
"என்னங்க இவங்க..." என்று பவ்யாவை அறிமுகப்படுத்த நிதா முயல.
"தெரியும்...!" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் யட்சன்.
"யாருனு தெரியுமா?" – நிதா.
"எஸ்... இவங்க தான் மிஸஸ் வைத்தினு தெரியும்" என்று யட்சன் கூற அதை கேட்ட பவ்யாவின் முகம் வருத்தத்திற்குச் சென்றது.
நிதா மேற்கொண்டு ஏதோ சொல்வதற்குள் யட்சன் அவளிடம் "பேசுறத! பேசிவிட்டு மேலே வா!" என்று கூறிவிட்டு அவன் மேலே சென்றுவிட. நிதா செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் அருகில் வந்த பவ்யா, "நிதாமா! இவர் தான் உன் மாப்பிளையா! நல்லா இருக்கார் மா! ஆனால் இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு" என்று பவ்யா சொல்ல நிதா மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது போல் ஆனது.
சாம் அவளின் அருகில் வந்து, "நிதா பேபி.... உன் ஹஸ்பண்ட் கிட்ட ஏதோ நார்மல் இல்லைனு தோ...." என்று ஏதோ சொல்ல வர அவனை தடுத்தாள் நிதா.
சாம் "ஐ அம் ஆல்ரைட்! டோண்ட் வொரி" என்று நிதா யட்சன் பற்றி சாம் சொல்ல வருவதை ஸ்டாப் செய்ய சாம் அதன்பின் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான். பவ்யா எவ்வளவோ கேட்டும் யட்சன் பற்றிய உண்மைகளை சொல்ல மறுத்துவிட்டாள் நிதா.
தான் நன்றாக இருப்பதாக சொல்லி சாம் மற்றும் பவ்யாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிதா மேலே யட்சனை பார்க்கச் சென்றாள். அங்கு யட்சன் கண்கள் மூடியபடியே எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை கவனித்த நிதா அவன் அருகில் சென்று அமர்ந்தவள்.
"அம்மாவை உங்களுக்கு தெரிஞ்சிருக்குறது ஆச்சரியமா இருக்குங்க! எனக்கே அவங்க என் அம்மா தான்னு இப்பத்தான் தெரியும்! வீட்டில் எங்கயுமே அவங்க ஃபோட்டோ இல்லாதனால அவங்க ஃபேஸ் எனக்கு அவ்வளவா நியாபகம் இல்ல... நாலு வயசுல கடைசியா பார்த்தது... ஆனா அன்னைக்கு அவங்கல பார்ட்டில பார்த்ததும் எனக்குள்ள ஒரு ஆவ்சம் ஃபீல்... அம்மா ஃபோட்டோ எல்லாத்தையும் ஒன்னு கூட விடாம அப்பா டிஸ்போஸ் பண்ணிட்டாறாம். லமி கிட்ட சின்ன வயசுல கேட்டு அழுவேனாம். விவரம் தெரிய ஆரம்பிச்சதும் தாத்தா சொன்னார்." - - நிதா
"வாய மூடுரியா" - யட்சன்.
"ஆனால் உங்களுக்கு அம்மாவை தெரிஞ்சிருக்கு! எப்படி?" - நிதா.
"உன்ன வாய மூடுன்னு சொன்னேன்" என்றான் யட்சன் கோபமாக
நிதா அதை கண்டு கொள்ளாமல் "சோ நீங்க ஏன் யவன் அத்தானா இருக்க கூடாது... அம் ஐ ரைட்.." - நிதா.
யட்சன் அவளை நக்கலாக பார்த்து "நாலு வயசுல பார்த்த அத்தான் மட்டும் நியாபகம் இருக்கோ"
"என்னோட சின்ன வயசு ஃபோட்டோ எல்லாத்துலயும் அத்தான் இருப்பாங்க அத பார்க்கும் போது எல்லாம் அவங்க கிட்ட பேசுனது. அவங்க கூட சண்டை போட்டதுன்னு... எல்லா மொமெண்ட்ஸூம் நியாபகம் வரும்... சோ மறக்கல" - நிதா.
"ஓகோ" என்றான் எரிச்சலாய்
"என்னோட செயின்ல கூட அவங்க ஃபோட்டோ இருக்கும். நீங்க பார்த்திருக்கீங்க தானே. இப்ப கூட கன்ஃபார்மா இல்ல டௌப்ட் தான்" - யட்சன்.
"ரப்பிஷ்" - யட்சன்.
"இல்ல எல்லா சிம்ப்டம்ஸூம் அப்பிடி தான் சொல்லுது... அதோட அந்தத் தழும்பு...." என்று எதோ அவள் சொல்ல வருவதற்குள் யட்சன் பேசினான்.
"என்கிட்ட இருந்து உன்னை விடுதலை பண்றேன் நிதா! இன்னும் ஒரு வாரத்தில் நீ உன் வீட்டுற்கு போக ஏற்பாடு செய்றேன்! அதற்கு உன்னை தயார் படுத்திக்கோ!" – யட்சன்
"ஏன்? என்னாச்சு! இவ்வளவு நாள் என்னை காவல் காத்துட்டு என் கூடவே தான இருந்தீங்க! இப்ப என்னடானா திடீர்னு என் வீட்டுக்கு போகச் சொன்னா என்ன அர்த்தம்! என்னாச்சு உங்களுக்கு" – நிதா.
"இனி உனக்கு இந்த இடம் சேப் கிடையாதுனு அர்த்தம்! அதுவுமில்லாம நீ என்னைப்பற்றி யார்கிட்டையும் சொல்ல மாட்டேனு தெரியுது" – யட்சன்.
"ஓகோ! சார்க்கு! இப்ப என் மேல ரொம்ப நம்பிக்கை வந்திருச்சு போல! ஆனால் இது நம்பிக்கையா இல்லை பயமா?" – நிதா.
"ம்ம்ம் பயம்.... எனக்கா... ரியலி! நாட் அட் ஆல்! யூ ஆர் கிரேஸி! உன்னை பார்த்து நான் எதுக்கு பயப்படணும்" – யட்சன்.
"உங்களை பற்றிய உண்மையை நான் தெரிஞ்சுக்குவேன்னு பயம்?" – நிதா.
"உனக்கு கற்பனை வளம் ஜாஸ்தி நிதா!". - யட்சன்
"இல்லை! நான் சொல்றது, செய்றது, நினைக்கிறது எல்லாம் சரிதான்! நான் உங்களை பற்றிய உண்மையை தெரிஞ்சுக்காம இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்" என்று நிதா கூறிவிட்டு செல்ல யட்சன் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"நீ இங்க இருந்தா! நானே உன்னை எதாவது செஞ்சாலும் செஞ்சிடுவேன் நிதா!" என்று கூறி கண்களை மூடிய யட்சன் 'உன் கூட என்னால வாழவும் முடியல! உன்னை என் கையால சாக்கடிக்கவும் முடியல' என்று வருத்ததோடு நினைத்தான்.
'இந்த வாழ்க்கைக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்றேன்!' என்று தனக்குள் கூறியபடியே யட்சன் மேஜையில் இருந்த புத்தகத்தை கண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
**********
பிரசாத்தை பார்க்க வினய் வந்ததும் அவனை ஆசையாக வரவேற்றார் ப்ரசாத்.
"வினய்! மை சன்! வந்துட்டியா நீ! ஐ ரியலி மிஸ் யூ டா!" – பிரசாத்.
"ரொம்ப ஃபர்ஃபாமன்ஸ் குடுக்குறீங்க.. எதுக்கு என்னை வரச் சொன்னீங்க." – வினய்.
"உன்கிட்ட நான் உண்மையை சொல்லணும் டா வினய்! என்னை நம்பு வினய்! நான் எதுவும் தப்பு பண்ணலை மை சன்!" – ப்ரசாத்.
"எதுக்கு இப்ப இந்த தன்னிலை விளக்கம்! எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்!" – வினய்.
"இல்லை சன்! உண்மையை நீ தெரிஞ்சிகிட்டுதான் ஆகணும்! அப்ப தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்! நீயே என்னை புரிஞ்சிக்கலைனா எப்படி மை சன்!" என்று ஆரம்பித்த ப்ரசாத், தேவ் செய்த சூழ்ச்சியினை முழுவதும் சொன்னார். அதை கேட்ட வினய் சற்று நேரம் யோசிக்க தொடர்ந்தார் பிரசாத்.
"வினய்! மை சன்! தேவ் தான் உன் நிலைமைக்கு காரணம்! உனக்கு இந்த நிலைமை வேண்டாம் வினய் நான் சொல்வதை கேள்! திரும்பவும் உன்னை மனிதனா மாற்ற முயற்சி செய் வினய்! 48 நாள் நான் சொல்றபடி நீ நடந்தா! நீ மனிதனா மாறலாம்! டிரஸ்ட் யுவர் டேட் ப்ளீஸ் சன். கொஞ்சம் கன்சிடர் பண்ணு.!" – பிரசாத்.
"நோ! எனக்கு இப்படி இருக்கிறது தான் பிடிச்சிருக்கு! ஐ டோண்ட் வாண்ட் டூ சேஞ்ச்" – வினய்.
"ஓ! லீவ் இட்! நீ ஏன் வினய் யட்சனை டிஸ்டர்ப் பண்ற! லெட் ஹிம் என்ஜாய் ஹிஸ் லைஃப் வித் ஹிஸ் வைஃப்" – பிரசாத்.
"நோ! என் இடத்தை பறித்தவன். அவன் கிட்ட இருக்குறது எல்லாம் என்னோடது. நீங்க உட்பட. அவனை நான் வாழ விட மாட்டேன்! என் விரோதி அவன்! ஐ வோண்ட் லெட் ஹிம் ஹேப்பி!" – வினய் .
"நான் சொல்வதை கொஞ்சம் கேள் வினய்" - ப்ரசாத்.
"நோ! நோ! நெவெர்!" என்று வினய் சொல்ல
"ஓகே மை சன்! தென் யுவர் சாய்ஸ்" என்று கூறிய ப்ரசாத்இதற்கு மேல் அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து ஒரு கோப்பையை அவனிடம் நீட்டினார்.
அதை வாங்கிய வினய் "என்ன உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு! ஆர் யூ பிளானிங் எனிதிங்" – வினய்.
"நோ! மை சன்! ஜஸ்ட் என்ஜாயிங் மை டைம் வித் மை சன்!” என்று ப்ரசாத் கூறிக் கொண்டு இருக்கும் போதே வினய்யின் உள்ளூர்ணவு விழித்துக் கொள்ள வேகமாக வினய் சுதாரித்து எழுவதற்குள் அவன் பின் கழுத்தில் ஏதோ ஒன்று குத்தியது.

வருவான்...
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 38

தன் கழுத்தில் ஏதோ குத்தியதும் கீழே மயங்கி விழுந்தான் வினய்.

வினய் விழுந்ததும் அவன் பின்னால் நின்ற மைக்கேல் மற்றும் விஜயன்.

“சீக்கிரம் பிரசாத்! அவனை தூக்கி அந்த ரூமிற்கு கொண்டு வாங்க! அந்த மருந்தின் வீரியம் குறைவதற்குள் அவனை அங்க கொண்டு போகணும்” என்று விஜயன் கூற தன் ஆட்கள் கொண்டு வினய்யை தூக்கி கொண்டு ரூமிற்குள் கொண்டு சென்றார் பிரசாத்.

அங்கு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்க அதன் உள்ளே ஊதா நிற பூக்கள் தாங்கிய படுக்கை வைக்கப்பட்டிருந்தது. அவனை அதில் படுக்க வைத்தவுடன் அந்த பெட்டியை சிலுவைகள் கொண்ட கதவினால் மூடிவிட்டு, அப்பெட்டியை சுற்றிலும் ஊதா நிற பூக்கள் கொண்ட செடிகள் வைத்துவிட்டு வெளியே வந்தனர் ப்ரசாத், மைக்கேல்சன் மற்றும் , விஜயன்.

ப்ரசாத்திடம் திரும்பிய மைக்கேல் அவனிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தான்.

"ப்ரசாத்! இந்த புக்கில் அவன் வெளியே வராம இருக்க சில மந்திரங்கள் இருக்கு! இதை 48 நாட்கள் விடாமல் படிங்க! அதுமட்டுமல்ல அந்த மூலிகை படுக்கை அவனது உடம்பை செல்லாக அரிக்க ஆரம்பித்து அவனின் மேல் போர்த்தப்பட்ட ஓநாய்யின் தோல்களின் வீரியத்தை அழிக்க ஆரம்பிச்சிடும்! அவன் கொஞ்சம் கொஞ்சம் சாகும் நிலைக்கு சென்று, திரும்ப அவன் தோல் புதுப்பிக்கப்பட்டு அவன் மனிதனா எழுவான். ஆனால் எக்காரணம் கொண்டும் நடுவில் வினய் அதைவிட்டு வெளியே வரக்கூடாது. அப்படி அவன் 48 நாள் முடியும் முன்னே வெளியே வந்தா அவன் ஆக்ரோசமாக மாறிடுவான்! அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது! அப்புறம் அவனை நீங்க இழக்க நேரிடும் ப்ரசாத்!" என்று மைக்கேல்சன் எச்சரித்துவிட்டு செல்ல , அதை கேட்ட ப்ரசாத் பயந்து விஜயனிடம் வந்தார்.

"என்ன விஜயன் ஏதேதோ சொல்றான் மைக்கேல்! எனக்கு பயமா இருக்கு!" – ப்ரசாத்.

"பயப்படும்படி ஒன்றும் இல்லை ப்ரசாத்! அவன் படுத்திருக்கும் மூலிகை படுக்கையானது ஒரு வகை செடியால் ஆனது. அந்த செடி ஓநாய்களுக்கு பிடிக்காத ஒன்று. அந்த செடியானது 48 நாள் அவன் உடம்பில் ரியாக்ட் செய்து ஓநாயின் தோளினால் அவனுக்குள் உண்டான பாதிப்பை நீக்கும் ப்ரசாத்! அவன் உடம்பில் அது ரியாக்ட் பண்ணும் போது அவன் அந்த வலியை தாங்காமல் ஆக்ரோசமாக மாறுவான். அதனால் தான் அவனை கவனமாக பார்த்துக்க சொல்றோம் ப்ரசாத்!" என்று கூறிவிட்டு விஜயன் செல்ல இங்கு ப்ரசாத் பயத்தோடு நின்றார்.

******

அன்று ஒரு மாலை வேளையில் நிதா அமர்ந்து இருக்க எதிரில் யட்சன் அமர்ந்து புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு எதோ யோசனையில் இருந்தான்.

வினய் பற்றிய விசயங்களை கேட்டறிந்த யட்சன் அந்த புத்தகத்தில் மனிதனாக மாற செய்யும் யுத்திகளை ஒவ்வொன்றாக படித்தவன் அதை செயலாற்ற தன் மனநிலையை தயார் செய்து கொண்டும் , அதில் போட்டிருந்ததன் படி 48 நாள் தான் செய்யப் போகும் யுத்திகளை வகுத்து கொண்டிருந்தான்.

அப்போது அவனையே சற்று நேரம் பார்த்தவள் யோசனை தோன்ற,

"டண்டணக்கா குண்டணக்கா

குண்டனுக்கு இருக்கு தண்டணக்கா

டண்டணக்கா மண்டணக்கா

குண்டன் மண்டை இப்ப மொட்டணக்கா"


என்று நிதா பாடியது தான் தாமதம் எதிரில் இருந்த பூ ஜாடி தரையில் விழுந்து நொறுங்கியது.

இதை கண்ட நிதா மனதிற்குள் சிரித்தபடியே 'அப்படி வா டா என் குண்டா! என்கிட்டயே வா நீ நடிக்கிற' என்று மனதில் சிரித்தவள் வெளியில் அப்பாவியாக மூஞ்சியை வைத்துக் கொண்டு "என்னாச்சு சார்!? உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே!"

"நத்திங்.." – யட்சன்.

"அப்புறம் ஏன் சார் ஜாடிய உடைச்சீங்க?" – நிதா .

"ம்ம்ம்ம் வேண்டுதல்! சீக்கிரம் கிளின் பண்ணு" என்று கூறியவன் வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

அவன் செல்வதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நிதா.

நிதா சிரிப்புடன் இருப்பதை கண்ட யட்சன், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேகமாக அவள் சிரிப்பை அடக்க யட்சன் அதை கூறினான்.

"வாடி என் குள்ளக்கா

நீ ஆயிட்ட பூசணிக்கா

கீழே விழுந்த சிண்டுக்கா

உடைஞ்சு போச்சு உன் மண்டைக்கா

இனி என்கிட்ட வச்சுக்காத வம்பக்கா

அப்புறம் ஆயிடுவ பேரிக்கா"


என்று யட்சன் கூறியது தான் தாமதம் அவன் மேல் பாய்ந்துவிட்டாள் நிதா. அவன் மேல் அமர்ந்து அவன் முடியை பிடித்து ஆட்டியவள்.

"நான் பூசணிக்காயா? நான் பேரிக்கா யாடா? எனக்கு பிடிக்காத பழம் பேர் சொல்லாதடா குண்டா?" – நிதா.

இப்போது நிதாவை தள்ளிவிட்டு அவன் மேல் ஏறினான் யட்சன். "நான் குண்டாடி? உன்னை..." என்று இருவரும் சண்டை போட முதலில் சுதாரித்தாள் நிதா.

அவனை மீண்டும் கீழே தள்ளிவிட்டு அவன் மேல் ஏறி அமர்ந்தவள் அவனையே பார்த்தபடியே "ஸோ! நீ என் டோலு தான் ரைட்! இப்ப இருக்கிற யட்சன் யார்? என்னாச்சுடா? உனக்கு? ஏன் இப்படி மாறி இருக்க.." என்று நிதா வருத்ததோடு கேட்க நிதாவை தள்ளிவிட்டு எழுந்து கொண்ட யட்சன்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல முயல யட்சன் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டாள் நிதா.

"யவன் அத்தான்! இத்தனை நாள் எங்கடா போன என்னைவிட்டு? உன்னை பார்க்கணும்னு இத்தனை வருசஷமா துடிச்சிட்டு இருந்தேன்டா! இவ்வளவு நாள் கழிச்சு உன்னை இந்த கோலத்திலயா பார்க்கணும்?" என்று நிதா அவன் மேல் சாய்ந்து கதறியழ யட்சனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அதை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை விளக்கியவன் "நான் யவனும் இல்லை! டோலுவும் இல்லை! இப்ப இருக்கிறது யட்சன் மட்டும் தான்! இது தான் உண்மை" என்று அவளிடம் கூறியவன் நிதா பதில் சொல்வதற்குள் அவளை விட்டுச் சென்றுவிட்டான்.

செல்லும் அவனை பார்த்த நிதா "ஏன்டா! இப்படி இருக்க! உன்னை பழைய என் டோலுவா மாற்றாமல் நான் விட மாட்டேன்" என்று நிதா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

***

நடு இரவில் நிதாவின் ரூமிற்குச் சென்ற யட்சன் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்க வெகு சிரமப்பட்டு தூங்கிக் கொண்டிருந்த நிதாவின் அருகில் சென்றவன் அவள் தூங்குவதையே சற்று நேரம் பார்த்தவன், அவளது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை கழட்டினான். அவளின் அருகில் செல்ல முயன்றவன் அவளிடம் தோன்றிய பூண்டின் நறுமணத்தை அடுத்து சற்று தள்ளி அமர்ந்தவன் அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு சற்று திடப்படுத்திக் கொண்டு அவளது அருகில் சென்றவன் , அந்த நறுமணத்தையும் மீறி அவளை தொட்டான்.

அவளது முகத்தை தன் கைகளால் அளந்தவன் "யாருக்கோ தண்டனை கொடுக்குறேன் நினைச்சு உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் மனுமா! ஐ அம் ஸாரி! எனக்கு உன்னை பார்த்ததும் பழைய விசயங்கள் ஞாபகம் வந்து உன்னை ரொம்ப டார்ச்சர் பண்றேன்! இனி அப்படி நடக்காம இருக்கனும்னா நீ என்னைவிட்டு போகணும்! இப்ப உன் கை, கால் விலங்க மட்டும் கழட்டல பேபி! உனக்கும் விடுதலை தரேன் பேபி!" என்று கூறியவன் அவளை நோக்கி குனிந்து "லவ் யூ பேபி!" என்று அவளது காதுகளில் கூற வேகமாக கண் விழித்தாள் நிதா.

வேகமாக எழுந்தவள் அருகில் பார்க்க அந்த இடம் வெற்றிடமாக இருந்தது.

"நிதா! ஜஸ்ட் காம் டவுன்! இது வெறும் கனவுதான்!" என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

அவள் படுத்ததும் நிதாவின் பின்னால் இருந்த சன்னலில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த யட்சன் குதித்து தன் ரூமை நோக்கி தவ்விச் சென்றான்.

அவன் தன் ரூமில் வந்தததும் தன் கைகளை பார்க்க அது எரிந்திருந்தது. அந்த பூண்டின் மணம் தன் கைகளில் அங்காங்கே பல மாறுதல்களை உண்டு பண்ணி இருக்க அதை தன் மற்றொரு கை கொண்டு நார்மலாக்கினான் யட்சன்.

மறுநாள் காலையில் நிதா எழுந்ததும் தன்னை பார்க்க தான் கை, கால் விலங்குகள் இன்றி இருப்பதை பார்த்தவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

"இவனுக்கு இதே வேலையா போச்சு! தண்டனை குடுக்குறேன்ற பெயரில் எதாவது செஞ்சுட்டு அப்புறம் வந்து அதை அவிழ்த்துவிட்டு போக வேண்டியது.

உன்னை புரிஞ்சிக்கவே முடியலடா! இன்னைக்கு உன்னை ஒரு வழி பண்றேன்டா" என்று கூறி நிதா தன்னை ரெஃப்ரஸ் செய்ய அவள் எதிரில் வந்து நின்றான் யட்சன்.

அவள் அவனை கேள்வியாக பார்க்க யட்சன் பேச ஆரம்பித்தான் "ஒகே நிதா! ஒரு வாரம் ஆகிடுச்சு! நீ வீட்டுக்கு போக வேண்டிய டைம் ஆகிருச்சு! சீக்கிரம் கிளம்பு நிதா உன்னை உன் வீட்டில் விட்டுட்டு போறேன்! எனக்கு நிறைய வேலைகள் இருக்கு!" – யட்சன்.

"நோ! நான் போக மாட்டேன்" – நிதா.

"இஸ் இட்! ஓகே நீ போக வேண்டாம்! லமியை இங்க வரச் சொல்றேன்! இன்னைக்கு முழுவதும் லமி என் கூடவே இருக்கட்டும்! மறுநாள் அவங்க இருந்தா.... அப்புறம் நாம நீ வீட்டுக்கு போறதை பத்தி யோசிக்கலாம். ஓகே வா!" என்று யட்சன் சொல்ல நிதா பயத்துடன் அவனை பார்த்தாள்.

அவன் முகம் தான் சொன்னதை செய்துவிடுவேன் என்று அவளுக்கு தோன்ற மறுவார்த்தை பேசாமல் கிளம்பினாள் நிதா.

அவள் கிளம்பி நின்றதும் அவள் அருகில் வந்த யட்சன், "குட் பேபி!" என்று சொல்லி அவள் அருகில் வந்தவன் அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான். அடுத்த நிமிடம் அவளை விடுத்து அவன் காரில் சென்று அமர நிதா திகைப்போடு அவன் பின்னால் சென்றாள்.

அவளை அழைத்துச் சென்ற நிதாவின் வீட்டிற்கு முன் காரை நிறுத்த காரின் சத்தம் கேட்டு லமியும், வெங்கியும் கீழே வர வைத்தி அதை கண்டு கொள்ளாமல் நடப்பதை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நிதா காரில் இருந்து இறங்காமல் அடம்பிடிக்க அவளை பிடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்ற யட்சன் லமி, வெங்கியின் முன் நிறுத்தினான்.

"என்னாச்சு உங்களுக்கு? திரும்பவும் என்னைவிட்டு எங்க போறீங்க? இந்த தடவை நான் உங்களை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன்" – நிதா

"உங்களுக்கும் நிதாவிற்கும் எதாவது பிரச்சனையா தம்பி" – லமி.

நிதாவின் முகத்தை பார்த்த வெங்கி ஏதோ சொல்ல வர யட்சன் அவரை தடுத்தான்.

"லமி! தாத்தா! நான் வேலை விசயமா கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருக்கு! கொஞ்ச நாள் நிதா இங்க இருக்கட்டும்! நானா வந்து கூட்டிட்டு போற வரைக்கும் அவளை யாரும் வெளியேவிடாதீங்க! எனக்கு எதாவது ஆச்சு நான் இறந்து போயிட்டேனு சொன்னா கூட அவளை வெளியே விடாதீங்க! தாத்தா!" என்று கூறிவிட்டு யட்சன் போக முனைய நிதா அவனை தடுத்தாள்.

யட்சனின் பேச்சை கேட்ட லமியும் , வெங்கியும் கூட திகைத்தனர்.

"ஏன் தம்பி! இப்படி பேசுறீங்க" – வெங்கி, லமி .

"இல்ல லமி! என் பிஸ்னஸ் எதிரிங்க அன்னைக்கு அவள ட்ரேப் பண்ண பார்த்தாங்க" - யட்சன்.

"அதுக்காக இவ்ளோ பெரிய வார்த்தை" - லமி.

"ஆதானே" - வெங்கி.

"நானும் உங்க கூட தா வருவேன்" - நிதா.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல அனைவர் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிதாவின் கண்ணங்களில் அறைந்தான் யட்சன்.

அவள் கண்ணங்களில் கை வைத்தபடி திகைப்பாய் அவனை பார்க்க "நான் சொன்னதை மட்டும் செய்! தேவையில்லாமல் என்னை கேள்வி கேட்காதே! நீ இந்த வீட்டைவிட்டு வெளியே வந்த...!" என்று கூறிய அவள் முன் கைக்காட்டி அவளை எச்சரித்தவன் திரும்பி பார்க்காமல் காரின் அருகில் சென்றவன் திரும்பி வந்து வெங்கியின் முன் நின்றான்.

"தாத்தா! எனக்கு முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கு! அந்த கடமைகள் எல்லாம் முடிஞ்ச பிறகு நானே வந்து அவளை கூட்டிட்டு போறேன்! அதுவரை நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்று கூறிய யட்சன் திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

யட்சன் செல்வதை கண் கலங்கியடி பார்த்துக் கொண்டு நின்றாள் நிதா.

******

வினய் தனக்கு தெரியாமல் ப்ரசாத்தை பார்க்க சென்றதை கண்டறிந்த தேவ்.

"ம்ம்ம் என்ன ப்ரசாத்! அவனை மனிதனாக மாற்ற முயற்சி செய்றீயா! நான் இருக்கும் வரை அவனை மாற்ற விட மாட்டேன்" என்று சொல்லிய தேவ் பழிவெறியோடு சிரித்தார்.



வருவான்..
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 39
நிதாவை வைத்தி வீட்டில் விட்ட யட்சன் தன் காரில் வேகமாக அந்த இடம் நோக்கி சென்றான்.
ஆள் அரவமற்ற அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய யட்சன் அங்கு தூரத்தில் தெரிந்த அந்த குடிசை நோக்கிச் சென்றான்.
அங்கு வழி முழுவதும் இரும்பு கம்பிகளாக இருக்க அதை தாண்டிச் சென்றவன் அந்த குடிசையின் கதவில் கை வைத்தான். அந்த கதவில் சிலுவைகள் அறையப்படிருக்க அதை தொட்டவன் கைகள் காயங்களாக மாறின.
அதை மீறி உள்ளே சென்றவன் அந்த அறை முழுவதும் ரத்தங்களால் தெளிக்கப்பட்டு, அறை முழுவதும் பூண்டு மணமாக இருக்க அங்கு சென்று அமர்ந்தவன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தான் யட்சன்.
*******
வைத்தி நிதாவை யட்சன் அடித்ததை கண்டு கோபமாக கீழே இறங்கி வர அவரை தடுத்தனர் லமி மற்றும் வெங்கி.
“அப்பா! எங்க அவன்! என் முன்னாடியே என் பொண்ணை அடிக்கிறான்! நீங்க பார்த்துட்டு இருக்கீங்க! அவனை இன்னைக்கு நான் விடுறதா இல்லை” – வைத்தி.
“விடுப்பா! கணவன் மனைவிக்குள்ள ஆயிரம் இருக்கும்! அதை பெரிசு படுத்தாத” – வெங்கி.
“இல்லை அவன் என் கண் முன்னாடி என் பொண்ணையே அடிச்சிட்டான்! அவனை நான் சும்மாவிட மாட்டேன்” – வைத்தி.
“இல்லைப்பா! அவர் அமைதியா தான் சொன்னார் நம்ம நிதாதான் அடம்பிடிச்சா! அதான் அவளை நிறுத்த இப்படி பண்ணிருச்சு அந்த தம்பி! விடு வைத்தி” – லமி.
லமியை முறைத்தார் வைத்தி.
இப்படி லமியும், வெங்கியும் அவரை சமாதானப்படுத்த நிதா அழுது கொண்டே தன் ரூமிற்குள் சென்றாள்.
****
பவ்யா அன்று இரவு தூங்கி கொண்டிருந்த கனவில் நிதாவை யாரோ துரத்துவதும், நிதா பயந்து ஓடுவதுமாக கனவு வர, திடுக்கிட்டு விழித்தவர் மறுநாள் காலையில் சாம்மை நச்சரித்து நிதாவைப் பார்க்க அழைத்துச் சென்றார்.
வைத்தி பவ்யாவை பார்த்ததும் கத்த ஆரம்பித்தார்.
“நீ எதுக்கு இங்க வந்த? முதலில் போ இங்கேயிருந்து!” – வைத்தி.
“நான் போயிடுறேன்! ஆனா நிதாவை மட்டும் ஒரு தடவை பார்த்துட்டு போயிடுறேன்! அவளுக்கு எதோ நடக்கப் போற மாதிரி…” என்று பவ்யா சொல்லவதற்குள் வைத்தி மீண்டும் கத்த ஆரம்பித்துவிட்டார்.
“என்ன அடுத்த நாடகமா!” – வைத்தி.
“இல்லைங்க! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க! நிதாவிற்கு ஏதோ ஆபத்து நடக்கப் போற மாதிரி இருக்கு! நான் அவ கூட இரண்டு நிமிசம் பேசிட்டு மட்டும் போயிடுறேன்! ப்ளீஸ்” – பவ்யா.
“என்ன நிதாவை வச்சு வீட்டுக்குள்ள வரப் பார்க்குறீயா!” – வைத்தி.
“இல்லைங்க! நான் சொல்றதை நம்புங்க…” என்று பவ்யா சொல்ல வர வைத்தி அதை புரிந்து கொள்ளாமல் திட்டுவதை பார்த்த சாம் அவரிடம் கோபமாக கத்தினான்.
“ஹலோ! அதான் அவங்க இவ்வளவு தூரம் கெஞ்சுறாங்கள்ள! அவங்க பார்க்கவிடுங்க சார்” – சாம்.
“ம்ம்ம் சப்போர்ட்க்கு ஆள் கூப்பிட்டு வந்திருக்க போல! என்ன உன் ஆள் பையனா? இல்லை உன் பையனா?” என்று வைத்தி கேட்டது தான் தாமதம் சாம் அவர் சட்டையை பிடித்துவிட்டான்.
“நிதாவோட அப்பானு ரொம்ப மரியாதை குடுத்தா நீ பாடுக்க பேசிட்டு இருக்க! உன்னை…” என்று அவன் வைத்தியிடம் கத்த
“டேய்! என்ன உன் அப்பன் சொல்லிக்குடுத்து அனுப்பினானா! இப்படியெல்லாம் அவளுக்கு சப்போர்ட் பண்ணுனு” – வைத்தி.
அதுக்கு சாம் ஏதோ சொல்லவர பவ்யா இடையிட்டுப் பேசினார்.
“போதும் நிறுத்துங்க! எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க! நீங்க இன்னும் மாறவே இல்ல... இப்பவும் அதே மாறி பேசிட்டு இருக்கீங்க” – பவ்யா.
“ம்ம்ம் அவனை சொன்னா உனக்கு கோபம் வருது” – வைத்தி.
அதற்கு சாம் அவரை அடிக்க சட்டையை பிடித்துவிட்டான். பவ்யா அவனை தடுக்க முனைய சத்தம் கேட்டு நிதா , லமி மற்றும் வெங்கி வந்துவிட்டனர்.
“விடு சாம் அவரை!” என்று பவ்யா சாமை பார்த்து கெஞ்சவும் தான் அவரை விட்டான்.
சாம் அவரை விட்டதும் வைத்திக்கு கோபம் வந்தது. உடனே வைத்தி சாமை நோக்கி கையை ஓங்கிக் கொண்டு சென்றார்.
வெங்கி வைத்தியை தடுக்க, லமி கையை பிசைந்து கொண்டு நின்றார்.
"டேட் என்ன நடக்குது இங்க.. மாம் நீங்க எப்போ வந்தீங்க.." - நிதா.
"அத்தை, உனக்கு ஏதோ நடக்குற மாறி கனவு கண்டு பயந்து அழுதாங்க.. உன்ன பார்க்கனும் னு சொன்னதால கூட்டிட்டு வந்தேன்." - சாம்.
"ஆமா டா" என்றார் பவ்யா நிதா கையைப் பிடித்த படி.
"அதுக்கு இந்த பெரிய மனுஷன் கண்டபடி பேசுறார்" என்றான் சாம் வைத்தியைக் காட்டி.
"எல்லாம் டிராமா..." - வைத்தி.
"ஏங்க ப்ளீஸ்" - பவ்யா.
"....." - நிதா.
"அம்மாடி உனக்கு ஒன்னும் இல்லயே... அம்மா பயந்துட்டேன் டா" - பவ்யா.
"அங்க உன் வீட்டுக்குப் போனோம். நீ இங்க வந்துருக்கறதா சொன்னாங்க" - சாம்.
"ஆமா டா... என்னச்சு மா... மாப்பிள்ளை எங்க? நீ ஏன் இங்க இருக்க. உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையா?" - பவ்யா.
"ம்க்கும், அக்கறை..." - மாமியாராய் நொடித்தார் லமி.
"அப்பிடியா பேப்... என்னனு சொல்லு... அவன உண்டு இல்லனு ஆக்கிறேன்" - சாம்.
"அட அட அட என்னா நடிப்பு" - வைத்தி.
"ஏங்க..." - பவ்யா.
"டேய் வைத்தி கொஞ்சம் சும்மா இருக்கியா?" - வெங்கி.
"ஏன் ப்பா? இவள சும்மா விட சொல்றீங்களா?" - வைத்தி.
"டேட் ப்ளீஸ் ஸ்டாப்" - நிதா.
"மாம் எனக்கும் அவருக்கும் ஒன்னும் இல்ல. அவர் வேலை விஷயமா வெளியூர் போய்ருக்கார். அங்க தனியா இருக்கறதுக்கு இங்க இருன்னு விட்டுட்டு போய்ருக்கார். வந்ததும் கூட்டிட்டு போவார்.. வேற ஒன்னும் இல்ல. நீங்க டென்சன் ஆகாதீங்க" - நிதா.
"ஓகே பேப்... உனக்கு எப்ப என்ன வேண்டும்ன்னாலும் என்னை கூப்பிடு" என்றான் சாம் வைத்தியை முறைத்தவாறே.
“என்னடா! ஆளாளுக்கு என் வீட்டில் வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கீங்க! வெளியே போங்க எல்லாம்” என்று கூறிய வைத்தி கோபத்தில் அருகில் இருந்த பவ்யாவை தள்ள, பவ்யா கால் தடுக்கி கீழே விழந்தார்.
விழுந்தவர் பேச்சு மூச்சின்றி மயக்கமாக அதை கண்ட அனைவரும் பதறியபடி அருகில் செல்ல, சாம் வேகமாக அவரை தூக்கிச் சென்று காரை கிளப்பிக் கொண்டு அருகில் இருந்த ஆஸ்பிட்டலுக்கு விரைந்தான்.
அவனை பின்பற்றி செல்ல முயன்ற நிதா. வைத்தி அருகில் வந்து , நீ”ங்க இவ்வளவு கல் நெஞ்சக் காரனா இருக்கக் கூடாது டேட்! யூ வில் பே ஃபார் எவிரிதிங்” என்று அவரை கத்திவிட்டு சாமை தொடர்ந்து நிதா சென்றுவிட வெங்கியும் , லமியும் நடப்பதை தடுக்க முடியாதபடி பார்த்துக் கொண்டி நின்றனர்.
வைத்தி க்கு தன் செயல் உறுத்தலாக இருக்க அமைதியாக நின்றார்
****
பவ்யாவை ஆஸ்பிட்டலுக்குக் சாம் கூட்டிச் செல்ல அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர். சாதாரண அதிர்ச்சி என்று கூறி அவர்க்கு சில மருந்துகள் கொடுத்து தூங்க வைக்க , சற்று நேரத்தில் கண் விழித்தார் பவ்யா.
பவ்யா கண்விழித்ததும் அவர் அருகில் சென்ற நிதா.
“இப்ப எப்படிமா இருக்கு” – நிதா.
“ம்ம்ம் நல்லா இருக்கேன்டா ! உனக்கு ஒன்றும் இல்லையே” – பவ்யா
“இல்லைமாம் ! நான் நல்லாத்தான் இருக்கேன்! நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க மாம்” – என்று கூறிய நிதா அவரை பேசவிடாமல் அவரை தடுத்து தூங்க வைத்துவிட்டு வெளியே வந்தாள்.
அவளை பின்பற்றி வந்த சாமிடம் திரும்பிய நிதா “சாம்! அம்மா! என்னோடயே இருக்கட்டும்”
“நோ! முடியாது! உன் டேடை நம்பி! நான் விட மாட்டேன்” – சாம்.
“நோ! சாம்! இனிமேல் அப்படி நடக்காது! நான் பார்த்துக்குறேன்” – நிதா.
“ஓ ! வேண்டாம் பேப்ஸ்! எதுக்கு ரிஸ்க் எடுக்குற!” – சாம்.
“நோ! ஐ கேன் மேனேஜ்” – நிதா.
“சொன்னா கேட்க மாட்ட! தென் யுவர் சாய்ஸ்! ஆமாம் நீ ஏன் இங்க இருக்க! அவங்க கிட்ட சொன்ன பொய் எனக்கு வேண்டாம்! என்கிட்ட கூட இங்க வந்ததை சொல்லலை? என்னாச்சு பேப்ஸ்! எதுக்கு நீ இங்க வந்த? என்ன பிரச்சனை உனக்கு? எனக்கு உண்மையை சொல்லு" - சாம்.
அதற்கு சற்று நேரம் யோசித்த நிதா "உண்மயை தான் சொல்றேன் சாம். வேலை விசயமா அவர் வெளியே போயிருக்கார்! அதான் நான் இங்க இருக்கேன் சாம்" – நிதா.
“ரியலி பேப்ஸ்! நான் நம்பிட்டேன் ! நீ என்கிட்ட இருந்து எதையோ மறைக்கிற! நீயா சொல்ற வரை நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! தேவையில்லாம எதுலயும் மாட்டிக்காத பேப்ஸ்!” என்று நிதாவை எச்சரித்துவிட்டு பவ்யா முழித்ததும் நிதா மற்றும் பவ்யாவை வைத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சாம் .
பவ்யாவை பார்த்து முதலில் கத்த ஆரம்பித்த வைத்தியை வெங்கி தடுத்தார்.
“போதும் நிறுத்து வைத்தி! இவ்வளவு நாள் அவள் கஷ்டப்பட்டது போதும்! நிதாவிற்காகவாவது பவ்யா இங்க இருந்து தான் ஆகணும்” என்று அவர் கூற அவரின் பேச்சை தட்ட முடியாத வைத்தி கோபத்தில் தன் ரூமிற்குச் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தன் ரூமிற்கு அழைத்துச் சென்ற நிதா
“மாம்! இனி நீங்க இங்க தான் இருக்கணும்! என்னைவிட்டு எங்கேயும் போகக் கூடாது” என்று கூறிவிட்டு நிதா அவர் மடியில் படுக்க பவ்யா நிம்மதியாக அவளது தலையை கோதி கொடுத்தார்.
*******
யாருக்கும் தெரியாமல் பதுங்கி பதுங்கி உள்ளே வந்த கருப்பு உருவம் வினய்யின் சவப்பெட்டியின் அருகே செல்ல முயல அந்த உருவத்தை பிடித்து தடுத்தார் பிரசாத்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஷன் 40
அந்த உருவத்தின் முகமூடியை கழட்ட அவர் முயற்சி செய்ய அந்த உருவம் அவரை தள்ளி விட்டுச் சென்றது.
வேகமாக அந்த உருவத்தை பின்னால் இருந்து பிடித்த ப்ரசாத் முகமூடியை கழட்ட அங்கு தேவ் நின்று கொண்டிருந்தார். தேவ்வை கண்ட ப்ரசாத்
"தேவ் நீயா!!!!" – ப்ரசாத்.
"ஆமாம்!" - தேவ்.
"நீ இப்படி எதாவது செய்வேன்னு தெரியும் தேவ்! அதான் நான் கவனமா இருந்தேன்! நீ திருந்தவே மாட்டியா!!" - ப்ரசாத்.
"ஆமாம் நான் திருந்தமாட்டேன்" – தேவ்.
"எதும் பண்ணாத அவன் இப்போ வெளிய வந்தா எல்லாருக்கும் ஆபத்து" - ப்ரசாத்.
"எனக்கு அது தான் வேணும்" - தேவ்.
"கொஞ்சம் யோசி... நம்ம சண்டைக்கு அடுத்தவங்க ஏன் கஷ்டப் படனும்." - ப்ரசாத்.
"ஐ டோன்ட் கேர்" - தேவ்.
"நா இருக்குற வரை விடமாட்டேன்" - ப்ரசாத்.
"நீ இருந்தா தான..." - தேவ்.
பேசிக் கொண்டு இருந்தவர்கள் சண்டை இட ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் தேவ் ப்ரசாத்தின் தலையில் அடித்தார்.
தலையில் அடித்ததும் மயங்கி விழுந்த ப்ரசாத், கடைசி நொடி வரை "வேண்டாம் தேவ்.. " என்று கூறியபடி கண்கள் மூட
தேவ் வினய்யின் சவப்பெட்டி அருகில் சென்றார்.
48 நாள் முடியும் தருவாயில் இருக்க இரண்டு நாள் முன் வினய் சவப்பெட்டி திறக்கப் பட, அவன் ஆக்ரோசமாக எழுந்தான். எழுந்தவன் தோல் முழுவதும் கருகிப் போய், பார்க்க பயங்கரமாய், முழு மிருகமாக நிற்க அவனை கண்ட தேவ் பயத்தில் எச்சில் விழுங்கினார்.
ஒரு நொடி தான் தவறு செய்துவிட்டோமோ என்று யோசித்தார். உறுமல் சத்தம் கேட்டு வினய் பக்கம் திரும்பினார். அவன் உறுமல் அறை எங்கும் எதிரொலிக்க தேவ் பயத்தில் எச்சில் விழுங்கினார். அவனை பயப் பார்வை பார்த்தபடி மெதுவாக வாசல் கதவை நோக்கி நகர்ந்தார். பின்னல் நகர்ந்தவர் கீழே மயக்கமாக கிடந்த ப்ரசாத் மீது கால் தடுக்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு உறுமலுடன் அவர் புறம் திரும்பினான் வினய். தேவ்வை பார்த்த வினய் அவரை நோக்கி மெல்ல நடந்து வந்தான்.
தேவ் பயத்தில் கண்களை மூடிக் கொண்டார். அவனை அவர் தான் ஓநாய் மனிதனாக மாற்றி இருந்தாலும் இரவுகளிலும், பௌர்ணமி அன்றும் அவனை பார்த்ததில்லை. முதல் முறை அவனை ஓநாயாக பார்த்ததும் தன் தவறு புரிந்தது. தம்பி மற்றும் தம்பி மகனுக்காக ஒரு நொடி வருந்தினார். ஆனால் இப்பொழுது அதற்கு நேரமில்லை தான் உயிரோடு இருக்க இங்கிருந்து வெளியேருவதின் அவசியத்தை உணர்ந்து மெல்ல நகர்ந்தார்.
வினய் தேவ் ஐ நோக்கி முன்னேறினான். அவன் பார்வை தேவ் ஐ பசியோடு பார்க்க, உறுமலோடு அருகில் சென்றான்.
அதை கண்ட தேவ். "வினய் மை பாய்! நான் தான் தேவ்! என்னைத் தெரியலயா? நம்ம பார்ட்னர்ஸ்! இஃப் யூ லீவ் மீ... நான் உனக்கு எவ்வளவு பணம்னாலும் தர்றேன்" என்று தேவ் சொல்ல அதை கவனிக்கும் நிலையில் இல்லாத வினய் அவரை துரத்த முயல தேவ் ஒடினார்.
*******
தூக்கத்திலிருந்து அலறிய படி எழுந்தாள் நிதா. முகமெல்லாம் வியர்த்து வழிய ஃபோனைத் தேடி யட்சன் நம்பருக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள தவித்த நிதா வீட்டின் லேன்ட் லைனுக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்க படாமல் இருக்க யாரிடமும் சொல்லாமல் யட்சனை காண வண்டியை எடுத்துக் கொண்டு ப்ரசாத் இருப்பிடம் நோக்கிச் சென்றாள். போகும் வழியில் இடையில் யாரோ குறுக்கிட்டு ஓட சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்.
அங்கு வினய் தேவ்வை துரத்திக் கொண்டு ஓட அதை யட்சன் என்று நினைத்து பின்னால் சென்றாள் நிதா. அங்கு வினய் தேவ் மீது உறுமியபடி பாய, அவனை அந்த கோலத்தில் பார்த்த நிதா பயம் மேலிட அலறினாள். தேவ்வை துரத்தி பிடித்த வினய் அவரை வேட்டையாட தேவ் துடி துடித்து இறந்தார்.
தேவ்வை வினய் வேட்டையாடுவதை பார்த்த நிதா பயத்தில் அலற வினய்யின் கவனம் நிதாவிடம் சென்றது. வினய் தன்னை பார்த்ததும் வேகமாக அவள் ஓட, வினய் இப்பொழுது நிதாவைத் துரத்தினான்.
திரும்பி திரும்பி பார்த்தவாறே ஓடிய நிதா பின்னால் அவன் வரும் சத்தம் இல்லாமல் இருக்க, மூச்சு வாங்க ஒரு மரத்தின் அடியில் இளைபாற மரத்தில் மேலிருந்து தொங்கியபடியே அவளது கழுத்தை பிடித்தான் வினய்.
வினய் நிதாவின் கழுத்தை பிடித்து நெறிக்க மூச்சு வாங்கிய படியே கீழே விழுந்த நிதா மயக்கமானாள். அப்போது வினய் நிதாவின் அருகினில் சென்று குனிய அவளை பின்னிருந்து பிடித்து இழுத்து கீழே தள்ளினான் யட்சன்.
யட்சனை பார்த்ததும் வினய் கவனம் அவன் புறம் திரும்பியது உறுமிய படி அவனை நெருங்க. யட்சன் நிதாவை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான், வினய் யட்சனை துரத்திச் சென்றான்.
யட்சன் மறுபடியும் வினய் சவப்பெட்டி இருந்த அறையினுள் நுழைந்து நிதாவை படுக்க வைத்துவிட்டு கதவை சாற்றி வெளியேறினான்.
வினய் யட்சனை ஆக்ரோசமாக தாக்க முற்பட, யட்சன் திருப்பி தாக்கினான். 48 நாள் கடைபிடித்து வரும் விதிமுறைகளால் யட்சன் வலுவிழந்து நிற்க, வினய்யின் ஆக்ரோசத்தை சமாளிக்க முடியாமல் திணறினான் யட்சன். இருவரும் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, வினய்யின் தாக்குதல்களை தன் வலுவிழந்த சக்தி கொண்டு யட்சன் தடுத்துக் கொண்டிருந்தான்.
யட்சனை வீழ்த்த வினய் மேற்கொண்டு எதும் செய்வதற்குள் மயக்கத்திலிருந்து எழுந்த ப்ரசாத் அவனை தடுத்தார். அவன் மீது புனித நீரை தெளித்து அவனை விரட்டியவர் யட்சனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முயல திரும்பவும் யட்சனை பின்னிருந்து தாக்கினான் வினய். ப்ரசாத்தையும் அவன் தாக்க முயல வினய்யை தடுக்க முடியாத ப்ரசாத் அவன் முகத்திற்கு நேராக புனிதநீரை தெளிக்க அவரை விட்டான்.
வினய் தன்னை விட்டதும் மைக்கேலை தேடி ஓடினார்.
யட்சன் வினய் இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வலுவிழந்து கீழே விழுந்த யட்சன் கை, கால்களில் நுரை தள்ள இழுத்துக் கொண்டிருக்க அதை பார்த்த வினய் உறுமியபடி யட்சன் அருகில் வந்து அவன் தலையை கடித்து துண்டிக்க முயல, கை கால்கள் வெட்டிக்கொள்வதால் யட்சனின் கழுத்தில் கடிக்க இயலவில்லை. அருகே இரும்பு கம்பி ஒன்று இருக்க அதை கொண்டு யட்சனின் நெஞ்சில் குத்தினான் வினய். அந்த கம்பி யட்சனின் நெஞ்சில் பாய்ந்ததும் தான் புதைக்கப்பட்ட இடத்திலேயே விழுந்து தன் இறுதி மூச்சுக்கு யட்சன் போராட மேலும் அந்த இரும்பு கொண்டு அவனை குத்தினான் வினய். ரத்தம் எல்லாம் கீழே வடிய கொஞ்சம் கொஞ்சமாக தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டான் யட்சன்.
அவன் இறந்ததைக் கண்டு ஆக்ரோசமாக வினய் சிரிக்க அவன் பின்னால் இருந்து அதே இரும்பு கொண்டு அவனை குத்தினார் ப்ரசாத். வினய் அவரை தடுக்க முனைய அவரை மேலும் குத்திய ப்ரசாத் கையில் இருந்த கோடாரி கொண்டுஅவன் தலையை துண்டித்தார். "ரெஸ்ட் இன் பீஸ் மை சன்! நீ இருந்தா எல்லாரையும் கொன்றுவ எனக்கு வேற வழியில்லை டா!" என்று ப்ரசாத் கூற, அதை கேட்டபடியே கண்மூடினான் வினய் .
மேகம் இருண்டு மழை பொழிய இடி சத்தம் கேட்டு கண்விழித்தாள் நிதா. கண் விழித்ததும் யட்சனைத் தேடி வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.
அங்கு யட்சன் இறந்து கிடந்ததை கண்டு அவன் அருகில் வேகமாக சென்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.
"நோ! டோலு! என் டோலு சாகக் கூடாது ! எழுந்து வாடா டோலு! நான் உன் டாலி வந்துருக்கேன்! ப்ளீஸ் வாடா! நீ மனிசனா இல்லைனாலும் பரவாயில்லை! நீ என்கூட இருந்தா மட்டும் போதும்! திரும்பவும் என்னை விட்டுட்டு போயிட்டியே! அப்பவே தடுத்தேன் என்னை விட்டு போகாதேன்னு கேட்டியா" என்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள் நிதா.
அப்பொழுது அங்கு வந்த மைக்கேல்சன், விஜயன் இருவரும் இடம் இருந்த கோலத்தைப் பார்த்து நடந்ததை ஊகித்தனர்.
"நாங்க என்ன சொல்லிட்டு போனோம் ப்ரசாத்" - மைக்கேல்சன்.
"கொஞ்ச நேரம் சமாளிச்சிருந்தா யாராவது ஒருத்தரையாவது காப்பாற்றி இருக்கலாம்" - விஜயன்.
"என்னால முடியல விஜயன். மகனா? இல்ல நா கூட்டிடு வந்தவனா? ஆனா இப்போ ரெண்டு பேரும் இல்லாம போய்ட்டாங்க" - அழுதபடி கூறினார் ப்ரசாத்.
"எல்லா முயற்சியும் இப்படி உபயோகமில்லாமல் போகும்னு நினைக்கல" - மைக்கேல்சன்.
"சரி அடுத்து நடக்க வேண்டியத பார்ப்போம்" - விஜயன்.
"ம்...ம்..." - ப்ரசாத்.
அடுத்து வந்த நிமிடங்களில் ப்ரசாத், வினய் மற்றும் யட்சனுக்கு மைக்கேல்சன், விஜயன் உதவியுடன் இறுதி சடங்குகள் நடத்தி இருவரையும் புதைத்தார். ப்ரசாத் தன் பணப்பலம் மூலம் நடந்த விசயங்கள் வெளியே தெரியாமல் யட்சன் மற்றும் வினய் பற்றி மறைத்தார்.
*******
யட்சன் இறந்ததை ஜீரணிக்க முடியாத நிதா தினமும் அழுது கொண்டே இருக்க அவளை ஒரு கரம் தொட்டது . நிதா முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வேகமாக திரும்பிப் பார்க்க அங்கு பவ்யா நின்றிருந்தார்
"என்னாச்சு நிதா! ஏன் அழுதுட்டே இருக்க!" - பவ்யா.
"....." - நிதா.
"அன்னைக்கு நைட் எங்கடா போன... அதுக்கப்பறம் ரொம்ப அழுதுகிட்டு இருக்க" - பவ்யா.
"....." - நிதா.
"சொன்னாதான மா தெரியும். அம்மா கிட்ட சொல்லுடா. நான் இருக்கேன்" - நிதா.
" எனக்கு அத்தான பார்க்கனும்" - நிதா.
"மாப்பிள்ளை உன்னை பார்க்க சீக்கிரம் வந்துடுவார்! அழாத மா!" – பவ்யா.
"......" - நிதா.
"மாப்பிள்ளை எந்த ஊருக்கு போயிருக்காருன்னு சொல்லு. சாம் கிட்ட சொல்லி அம்மா அவர் கிட்ட கூட்டிட்டு போக சொல்றேன்" - பவ்யா.
அதற்கு வேகமாக தன் கண்ணீரை துடைத்தவள் ஒரு முடிவோடு பவ்யா விடம் பேசத் தொடங்கினாள்.
"மாம்! எனக்கு இங்க இருந்தா அவர் நினைப்பா இருக்கு! நாம ஏன் அவர் திரும்பி வர வரைக்கும் இந்தியா போகக் கூடாது" – நிதா.
"ஓ! நீ சொல்வதும் சரிதான்! ஆனா மாப்பிள்ளை வந்து கேட்டா" - பவ்யா.
என்ன சொல்வதென்று தெரியாமல், உண்மையையும் சொல்ல முடியாமல் "நான் அவர் கிட்ட சொல்லிக்கிறேன்." என்றாள் நிதா.
" அது சரியில்லை! நீ மாப்பிள்ளைக்கு கால் போட்டுக் குடு. நான் கேட்கிறேன்" - பவ்யா.
"இல்லமா நாம கூப்பிட முடியாது. அவரா கூப்பிட்டதும் தான் பேச முடியும்" - நிதா.
"அவர்கிட்ட சொல்லாம எப்பிடி" - பவ்யா.
"அவர் என் பாதுகாப்புக்காக தானே இங்க இருக்க சொன்னார். இங்க விட இந்தியா சேஃப். சோ ஒன்னும் சொல்ல மாட்டார்" - நிதா சமாளித்தாள்.
"சரி! நமக்கு கொஞ்சம் இடமாற்றம் வேண்டும் நீயும் அவரை பத்தியே நினைச்சுட்டு இருக்க" – பவ்யா.
"எஸ் மாம்! இனி நாம இங்க இருக்க வேண்டாம்! வாங்க நாம இந்தியா போகலாம்! என்னால் அவரை மறக்க முடியலை" என்று நிதா கூற
"என்ன அவரை மறக்கப் போறியா?.. " - பவ்யா.
"இல்லமா. இங்க இருந்தா அவர பார்க்கப் போறேன்னு அன்னைக்கி மாறி போயிட்டு, இல்லனதும் அழுதுட்டு இருப்பேன். இதுவே இந்தியானா அப்பிடி எல்லாம் வர முடியாதுன்னு தெரியும்ல அததான் அப்பிடி சொல்லிட்டேன்" - நிதா.
பவ்யா அதற்கு ஏதோ சொல்வதற்குள் வைத்தி அவளை தடுத்தார் .
"இது தான் உன் வீடு நிதா? எங்கப் போகப் போற நீ?" – வைத்தி.
"அவ கரெக்டா தான் சொல்றா! கொஞ்ச நாள் அவ வேற இடம் போகணும்னு சொல்றா அவளை தடுக்காதீங்க! அவளை இப்பவாவது பீரியாவிடுங்க!" – பவ்யா .
"நீ தேவையில்லாம எங்களுக்குள் வராத" – வைத்தி.
அந்த கணம் பவ்யா முடிவெடுத்தார் நிதாவை இந்தியா அழைத்துச் செல்ல, "அவ என் பொண்ணு கூடத்தான் வைத்தி! வாமா! நாம போகலாம்! சாம்கிட்ட சொல்லி டிக்கட் ரெடி பண்ணச் சொல்றேன்!".
"என்னடி வாய் நீளுது? அவளையும் உன்னை மாதிரி ஆக்கப் பார்க்குறீயா? நிதா அவ பேச்சை கேட்காத? நீ இந்தியா போக வேண்டாம் ? என் முடிவை மாத்திகிட்டு, பவ்யாவை உனக்காக இங்க இருக்க அனுமதி கொடுத்தேன்! அதே மாதிரி நீயும் உன் முடிவ மாத்திக்கமா?" – வைத்தி.
"நோ டேட்! ஐ நோ வாட் அம் டூயிங் டேட்! நான் உங்க பேச்சு கேட்டு இதுவரை நடந்தது போதும்! இப்பவாவது என்னை என் இஷ்டப்படி வாழவிடுங்க ப்ளீஸ் டேட்! ஐ நீட் சேன்ஜ்" என்று நிதா கெஞ்ச வைத்தி வாயடைத்து நின்றார்.
பவ்யா நிதாவின் இந்தியா பயணம் பற்றி சாமிடம் சொன்னதும் அவன் நிதாவை பார்க்க வந்தான்.
"என்னாச்சு நிதா! ஏன் உன் கணவர் இன்னும் உன்னை கூட்டிட்டு போக வரலை! வினய் சார் ஆபிசிற்கும் வரல! இங்க என்ன தான் நடக்குது! நீ இப்ப எதுக்கு இந்தியா போகணும்னு சொல்ற" – சாம்.
"என்ன இப்ப எதுவும் கேட்காத சாம்! காலம் வரும் போது உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்! ஜஸ்ட் டேக் மீ அவுட் சாம்! ப்ளீஸ்" என்று நிதா கெஞ்ச சாம் அதற்கு மேல் பேசவில்லை .
நிதா யட்சன் இறந்ததை யாருக்கும் சொல்லாமல் தன்னுள்ளே போட்டு புதைத்துக் கொண்டாள்.
அவள் உள்ளூணர்வு திரும்பவும் அவன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் யட்சனின் நினைவுகளோடு இந்தியா செல்ல புறப்பட்டாள்.
இதோ டிக்கட் கிடைத்து இந்தியா நோக்கி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தனர் பவ்யா , சாம் மற்றும் நிதா.
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் பவ்யா நிதாவிடம் "நிதாமா! மாப்பிளைகிட்ட நீ இந்தியா போறதை சொல்லிட்டியா! அவர் உன்னை வேலை முடிஞ்சதும் பார்க்க வரணும் இல்லையா அதான் சொன்னேன்மா" – பவ்யா
"எஸ் மாம்!" என்று நிதா கூறி அழுகையை அடக்கியபடி திரும்பிக் கொள்ள, சாம் நிதா பொய் சொல்வது தெரிந்தும் அவள் நேரம் வரும் போது தன்னிடம் அனைத்தும் சொல்வாள் என்று நம்பிக்கையோடு அமைதியாக இருந்தான்.
யட்சனின் நினைவுகளோடு நிதா கண்கள் கலங்க பவ்யாவிற்கு தெரியாமல் அந்த டாலரை தன் பையில் இருந்த எடுத்து பார்த்துக் கொண்டே இந்தியா நோக்கிய தன் பயணத்தை தொடர்ந்தாள் நிதா.
கடமையை முடிக்க வேண்டும் என்று உயித்தெழுந்து ராட்சஸனாக மாறி, தன் கடமையை முடிக்காமல் வினய்யுடன் போராடி தன் காதலியை காப்பாற்றி மடிந்த யட்சகன் அவன்.

முற்றும்
 

Jayakee

New member
Messages
11
Reaction score
7
Points
3
யட்சகன் ராட்சஸனாக
ராட்சஸன் : 1
திரவங்கள் பல சூழ்ந்து இருக்க , குடுவைகள் பல அடுக்கிவைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான். வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தேறியது .இறுதியில் அவன் சொன்னதற்கு அவர் அரைமனத்துடன் சம்மதித்து ,ஒரு அறைக்குள் சென்று மறைந்தார்.
****************************************************
எங்கும் தூய்மையாக எதிலும் நேர்த்தியாக அந்த நகரமே விழா கோலம் பூண்டிருந்தது . கிருஸ்துமஸ் நாளை முன்னிட்டு வீதிகள் மற்றும் வீடுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு லண்டன் நகரமே கோலாகலமாக இருக்க அந்த ஒரு வீடு மட்டும் இருள் சூழ்ந்திருந்தது.அந்த வீட்டின் உள்ளே ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்தபடி கைகளில் இருந்த கோப்பையில் உள்ள திரவத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார் .
யட்சா போதும் இன்னைக்கு குடிக்க வேண்டிய அளவு தாண்டிருச்சு .இன்னும் அதிகமா குடிச்சா விபரிதமாகிடும் .
போ ! போய் படு ! என்று அவர் கூற கோபத்தோடு கைகளில் இருந்த கோப்பையை தரையில் எறிந்தான் யட்சா என்று அவரால் அழைக்கப்படும் வினய்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதே நேரம் லண்டனில் மற்றுமொரு வீட்டில் காதில் ஹேட் போனை மாட்டியபடி முட்டிவரை தொல தொலவென கால்சட்டையும் , மேலே ஒரு லூசான சட்டையும் அணிந்து கொண்டு ஹேட் போனில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டியபடியே ட்ரெயை கைகளில் ஏந்திக் கொண்டு ஒரு ரூமை நோக்கிச் சென்றார் லமி என அழைக்கப்படும் லஷ்மி வெங்கடாசலம். அது என்ன லமி ? அவங்களே சொல்வாங்க கேளுங்கமா .
அவர் ரூமில் நுழைய அங்கே படுக்கையில் குறுக்கும் நெடுக்குமாக படுத்துக் கிடந்தாள் ஒரு யுவதி . அவள் படுக்கையில் துயில் கொள்ளும் அழகு இருக்கே அப்பப்பா பூவில் வண்டு நுழைய பூ தன் இதழ்களை திறந்து வைத்து காத்திருப்பது போல் இருந்தது.
பொறுங்க ! நீங்க பாட்டுக்கு ஏதாவது கற்பனைக்கு போயிராதீங்க ! பக்கி வாய பிளந்துகிட்டு வாயில ஜொல்லுவிட்டுட்டு பேனு தூங்குதுங்க அத தான் நான் அப்டி சொன்னேன். கையில் துப்பரியும் புத்தகம் வேற .அநேகமா அம்மணி பெரிய துப்பரியும் நிபுணியா இருப்பாளோ ? வாங்க அவகிட்டயே கேட்போம் .
கையில் ட்ரெயுடன் வந்த லமி ட்ரெயை டேபிளில் வைத்துவிட்டு அதில் இருந்த செல்லை எடுத்து பாப் பாடலை ஒலிக்க விட்டு அவள் காதருகில் வைக்க அலறிக் கொண்டு எழுந்தாள் மனுநிதா.
எழுந்தவள் லமியை முறைத்தாள் .
” ஒப்வோ லமி இப்டி எழுப்பாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பாரு என் இதய துடிப்பு துடிக்கிறது எனக்கே கேட்குது “ என்று கண்களை மூடியபடியே பேசியவள் தன் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டேபிளில் இருந்த ஒரு டாலரை எடுத்து அதை திறக்க உள்ளே ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டிருந்தான். அதை தன் அருகில் வைத்து கண்களை திறந்த நிதா அவனை கண்டதும்
“குட் மார்னிங் டோலு '' என்று கூறிச் சிரிக்க ,
**********************************************************************
அதே நேரம் இங்கு கைகளில் ஒரு பொம்மை கைக்கடிகாரத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன் . அவன் கண்களில் வேட்டையாடத் துடிக்கும் வெறியிருந்தது. அந்த கடிகாரத்தை பார்த்ததும் அவன் உதடுகள் வார்த்தையை உதிர்த்தது .
“ உன்னை பார்த்த அடுத்த நொடி உன் வாழ்வு என் கைகளில் தான்டி டாலி “ என்று கூறியவன் கைகள் அந்த கடிகாரத்தை தன் கைக்களுக்குள் அடக்கியது .
கடிகாரம் அந்த கைகளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தது .கடிகாரத்திற்கே இந்த கதினா அப்ப டாலி என்ன கதியாவாளோ ???
யட்சகனாக மாறுவான்
Super
 
Top Bottom