Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன்! ராட்சஷனாக! - 2

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 10
யவன் கோவிலின் வெளியில் நிற்பதை பார்த்த நிதா உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தாள். ஆயினும் யட்சன் இறந்த விசயத்தை பவ்யாவிடம் மறைத்த நிதா பவ்யாவிற்காக தன்னை தேற்றிக் கொண்டு அவனை எதிர்கொள்ள துணிந்து அருகில் சென்றாள்.
நிதா அருகில் வந்ததும் பவ்யா அவளிடம் "மனு நீ சொன்ன மாதிரியே மாப்பிள்ளை உன்னை தேடி வந்துட்டார் பார்!“
அதை கேட்ட அவன் அவளை துளைக்கும் பார்வை பார்க்க அதை புரிந்து கொண்ட நிதா.
'உங்களை சமாதானப்படுத்த சொன்னது இப்படி நிஜமாகும்னு நான் என்ன கனவா கண்டேன் அம்மா' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள். அவனிடம் தைரியத்தை வர வழைத்து கொண்டு பேசத் தொடங்கினாள்.
"வாங்க! நீங்க வரதை முன்னாடியே சொல்லியிருந்தா வீட்டிலேயே இருந்திருப்போம்" என்று நிதா சொன்னது தான் தாமதம் யவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.
"ஹாய்! மனுமா? எப்படி இருக்க? உன்னை பார்க்காம நான் நானா இல்லை. அதான் வேலை முடிஞ்சதும் உன்ன பார்க்க ஓடி வந்துட்டேன்" என்று கூறிய யவன், அவளது கரங்களுள் தன் கரங்களை பிணைக்க அதை பார்த்த பவ்யா சிரித்துக் கொண்டே முன்னே நடந்தார்.
பவ்யாவை பின்பற்றி செல்ல முனைந்த நிதாவை செல்லவிடாமல் தடுத்த யவன் "அவங்க முன்னாடி போகட்டும் பேபி! அதான் நான் இருக்கேன்ல. என் கூட வர மாட்டியா" என்று கூறி அவளது கைகளை பிடித்தபடியே அழைத்துச் சென்றான்.
நிதா பயந்தபடியே அவனுடன் சென்றாள்.
இங்கு சாம் சவிதாவிடம் கத்த ஆரம்பித்துவிட்டான். "நீ லாம் நல்லா வருவ? இப்படியா மாட்டிவிட்டு ஓடி வருவ"
"நான் எங்க உன்னை மாட்டிவிட்டேன். நீ தான் என்னை மாட்டிவிட பார்த்த.. அதான் நான் உன்னை மாட்டிவிட்டு வந்தேன். இதோ பார் இந்த சவிதா கண்ணாடி மாதிரி. நீ என்ன எனக்கு செய்றியோ! அதை தான் நான் உனக்கு பிரதிபலிப்பேன்" – சவிதா.
"ஆமா! இவ பெரிய இவ. பெருசா சினிமா டைலாக் எல்லாம் விடுறா. போடி" என்று அவளை கத்த ஆரம்பிக்க, சாம் எதிரில் நடந்து வருபவர்களை பார்த்ததும் அப்படியே வார்த்தை இன்றி நின்றுவிட்டான்.
சாம்மின் நிலையைக் கண்ட சவிதாவும் திரும்பிப் பார்க்க அங்கு யவன் பவ்யா மற்றும் நிதாவோடு வந்து கொண்டிருந்தான்.
யவனை கண்ட சவிதா சாமிடம் "ஏய்! இங்கிலீஷ் பீஸ் பவ்யாம்மா நிதா கூட வர்றது யாரு?" – சவிதா.
"ம்ம்ம் அவர் தான் நிதாவோட வீட்டுக்காரர்" – சாம்.
"ஓ! அவர் தான் நிதா புருசனா? பார்க்க நல்லா இருக்கார். ஆமா அவரை பார்த்து நீ ஏன் இப்படி சாக்கடிச்ச மாதிரி நிக்குற?" என்று கூறிய சவிதா அவர்கள் அருகில் சென்றுவிட்டாள்.
யவனை கண்ட சாம், 'அவன் பார்க்க நல்லா தான் இருப்பான். ஆனால் அவன் யார்னு உனக்கு தெரிஞ்சா. நீ இப்படி பேச மாட்ட' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் தானும் அவர்கள் அருகில் சென்றான்.
சாம்மை கண்டதும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் யவன் "ஹேய் படி! தேங்க்ஸ்... என் மனைவியை பத்திரமா லண்டனில் இருந்து கூட்டிட்டு வந்ததற்கு.." என்று சொல்லிய யவன் அனைவருடன் சகஜமாக பேசியபடியே நடந்து வர நிதாவும், சாமும் மட்டும் யோசனையோடு நடந்து வந்தனர்.
வீட்டில் நுழைந்தது தான் தாமதம் வீரபாண்டியை கண்டதும் வேகமாக அவரின் காலில் விழுந்து வணங்கினான் யவன்.
வீரபாண்டி யாரென்று புரியாமல் நிதாவை பார்க்க நிதா அவனை அறிமுகப்படுத்தினாள்.
"தாத்தா! இவர் தான் உங்க பேரன், என் கணவர். இவர் பேர்..." என்று நிதா இழுக்க யவன் வேகமாக முந்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.
"அய்யா! நான் தான் மனுவின் கணவன். அதுமட்டுமில்லை நான் வேறு யாரும் இல்லை நான் தான் யவன்" என்று அவன் சொன்னது தான் பவ்யா மற்றும் வீரபாண்டி அதிர்ச்சி அடைந்தார். அதனை அடுத்து வீரபாண்டி கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்றான் யவன்.
யவனின் அந்த நிலையை கலைத்தது வீரபாண்டியின் கதறல். யவனின் சட்டையை பிடித்துக் கொண்டு அவனை உலுக்கி திரும்பவும் அந்த கேள்வி கேட்டார் வீரபாண்டி
"தரங்கிணி எங்கடா? எங்கடா என் பொண்ணு? உயிரோட இருக்காளா? இல்லையாடா" என்று அவர் உலுக்க யவன் தொண்டையை செறுமியபடியே பேசத் தொடங்கினான்.
"அய்யா! நானும் அக்காவும் அந்த திருவிழா முடிஞ்சிவிட்டுக்கு வந்துட்டு இருந்தோம். அப்ப நாலு பேர் சேர்ந்து அக்காவை தூக்கிட்டு போனாங்க! நானும் பின்னாடியே ஓடுனேன்! கொஞ்ச நேரத்தில் கல் தடுக்கி கீழே விழுந்தது தான் தெரியும் வேற எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை" என்று யவன் சொல்ல வீரபாண்டி அவனின் தோளில் சாய்ந்து கதறி அழுதார்.
"என் பொண்ணு எங்க போனான்னு தெரியல ராசா. அவளை தேடாத இடம் இல்லை" என்று அவர் கூறி அழுக
இங்கு யவனின் கண்கள் கோபத்தில் பளபளத்தது.
'அவனை தான் யா நானும் தேடிட்டு இருக்கேன்! சீக்கிரம் அவனை கண்டுபிடிச்சிடுவேன். அவனுக்கு என் கையால் தான் சாவு. அக்காவை எப்படி கொன்னானோ அதே மாதிரி அவனையும் கொல்லனும்' என்று யவன் தனக்குள் சொல்லிக் கொள்ள,
இங்கு தன் ரூமில் சேரில் சாய்ந்த வண்ணம் புகையை இழுத்துவிட்டபடியே தரங்கிணியின் புகைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சோம்நாத். அவனது நினைவுகள் அந்த நாளிற்குச் சென்றது.
*****
அந்த கிராமத்தில் வீரபாண்டி குடும்பத்திற்கு பிறகு செல்வ நிலையில் உயர்ந்தாக இருந்தவர் வெங்கடாசலம். அவர் மனைவி லட்சுமி மற்றும் மகன்கள் வைத்தியநாதன், சோம்நாத்துடன் நன்றாக வாழ்ந்து வந்தார். வைத்தி நன்றாக வளர, சோம்நாத் லமியின் கண்டிப்பில்லாத பாசத்தில் தவறான செயல்களை வீட்டிற்கு தெரியாமல் செய்து வந்தான். முதலில் சின்ன சின்னதாக ஆரம்பித்த அவன் செயல்கள் நாளடைவில் போதை மருந்து தயாரிப்பு என்று ஆனது. வைத்திக்கு வீரபாண்டி மேல் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக நன்றாக படித்த வைத்தி அதிக பணம் சம்பாதிக்க வேண்டி லண்டனில் வேலைக்கு செல்ல ஆயத்தமானார்.
இதற்கு நடுவில் வெங்கி வைத்திக்கும் பவ்யாவிற்கும் திருமணம் செய்து வைத்தார். பவ்யாவை கண்ட லமிக்கு அவளை பார்த்ததும் பிடிக்கவில்லை. பவ்யாவை எதாவது சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். பவ்யாவும் மாமியாரின் உதாசீனங்களை பொறுத்து அமைதியாக அந்த வீட்டில் இருந்தார். என்ன தான் லமி பவ்யாவை திட்டி தீர்த்தாலும் பவ்யா கர்ப்பமானதும் அவளை நன்றாக பார்த்துக் கொண்டார்.
பவ்யா தாய்மை அடைந்த செய்தி அறிந்த வீரபாண்டி தன் வீட்டில் இருந்து எதாவது பொருளை அனுப்பிக் கொண்டே இருந்தார். முதலில் கண்ணப்பர் வந்து கொடுத்துவிட்டுச் செல்ல ஒரு கட்டத்தில் அவர்க்கு உடல்நிலை சரி இல்லை என்றானதும் அவரது மகன் மனோகர் வந்து பவ்யாவை பார்த்துவிட்டு அவர் கொடுக்க சொன்னதை கொடுத்துவிட்டுச் சென்றான். அதை பார்த்த வைத்தியநாதனுக்கு கோபம் வந்தது. அவரது முக மாறுதல்களை அளவிட்ட சோம்நாத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
வைத்தியிடம் சென்ற சோம்நாத் "அண்ணா! நாம அண்ணி வீட்டோட ரொம்ப கீழே இருக்குற மாதிரி என் பிரண்ட்ஸ் பேசிக்குறாங்க. நாமளும் அவங்களுக்கு சரி சமமா தான இருக்கோம். பின்ன ஏன் ண்ணா நமக்கு மரியாதை தர மாட்றாங்க“ – சோம்நாத்.
"நீ சொல்வது சரிதான்டா! இப்ப நாம என்ன பண்றது" – வைத்தி.
'ம்ம்ம் அப்படி வா வழிக்கு' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் "அண்ணா! நாம அதிகமா சம்பாதிச்சு! அவங்களுக்கு நாம சளைச்சவங்க இல்லைன்னு காட்டணும். அதனால் நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். அப்பாகிட்ட கேட்டா பணம் தர மாட்றார். அதனால் நீங்க கொடுத்தீங்கனா.. உங்க தலைமையில் அந்த பிசினஸை ஆரம்பிச்சிடலாம் அண்ணா" – சோம்நாத்.
"ம்ம்ம் சரிடா தம்பி! நல்ல யோசனை. என்ன பிசினஸ் பண்ணப் போற.." – வைத்தி.
"அது வந்து நான் மசாலா பொடி தயார் பண்ணுற பிசினஸ் ஆரம்பிக்க போறேன்னா. ஆனா அதுக்கு பணம்" என்று அவன் இழுக்க வேகமாக தான் பக்கத்து ஊரில் சிட்ஃபண்ட் கம்பெனி வைத்து தான் சம்பாதித்த பணத்தை சோம்நாத்திடம் குடுத்தார் வைத்தி.
வைத்திக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் குறியாக இருக்க பல தொழில்கள் செய்தார். இங்கு சம்பாதித்தது போதாது என்று லண்டனில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தார். அங்கு செல்வதற்கும் நடுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் வைத்தி.
வெங்கி எவ்வளவோ சொல்லி பார்த்தார். 'நம்ம பூர்வீக சொத்துக்களே நிறையா இருக்கு. அதை மெயின்டைன் பண்ணுடா! தேவையில்லாம பணம் பணம்ன்னு அலையாதடா' என்று வைத்தி கேட்கவே இல்லை. வைத்தியின் இந்த குணத்தை பயன்படுத்தி வைத்தியை தன் தொழில்களுக்கு முதலீட்டாளனாக ஆக்கினான் சோமநாதன். வைத்திக்கு தன் மேல் சந்தேகம் வரும் பொழுதெல்லாம் பவ்யாவை பற்றி பேசி அவர் வாயை அடைத்தான்.
பவ்யாவும் மனோகரும் சிறு வயதில் இருந்து சேர்ந்து வளர்ந்தவர்கள். இருவரும் அண்ணன் தங்கைகளாக பழக அதை வைத்தியிடம் வேறு விதமாக சொல்லி வைத்தான் சோம்நாத். அன்று சோம்நாத்திற்கு பிசினசிற்காக தான் கொடுத்த பணத்திற்கு வைத்தி கணக்கு கேட்க வைத்தி இப்படி கேட்பார் என்று நினைக்காத சோம்நாத் முழித்தான் அப்போது பவ்யா அந்த பக்கமாக செல்ல அதை பார்த்த சோம்நாத் வேகமாக "அண்ணா! உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா ண்ணா? இப்படி கணக்கு கேட்குறீங்க? இப்ப தான் பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்! அது சூடு பிடிக்க கொஞ்ச நாள் ஆகும்! அதுக்குள்ள இப்படி கேட்டா என்ன அர்த்தம்"
"உன் மேல் நம்பிக்கை இல்லைன்னு இல்லைடா! சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்குறேன்" – வைத்தி.
"ம்ம்ம் என்ன பத்தி தெரிஞ்சுக்குறது இருக்கட்டும் அண்ணா! கொஞ்சம் வீட்டில் என்ன நடக்குதுனு பாருங்க" – சோம்நாத்.
"ஏன்? என்னாச்சு! அது வந்து அண்ணா அண்ணி.." என்று இழுத்தவன்
"சொல்லுடா! அவளுக்கு என்ன?" – வைத்தி.
"அண்ணா! அண்ணி சரி இல்லைனா! தினமும் வந்து ஒருவர் பார்க்குறார்" என்று சொல்ல வைத்தி கோபத்தோடு எழுந்தார்.
"என் பொண்டாட்டி பத்தி எனக்கு தெரியும். தேவையில்லாம அவளை பத்தி பேசாத" என்று கத்திவிட்டு வைத்தி செல்ல இங்கு சோம்நாத் திகைத்து நின்றான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 11
சோம்நாத் சொன்னதற்கு அவனை திட்டிவிட்டு வந்த வைத்தி அடுத்த இரு தினங்களும் வீட்டில் இருந்து பவ்யாவை கண்காணிக்க அதைப் பார்த்த சோம்நாத்.
"ம்ம்ம் இப்ப தான் புகைய ஆரம்பிச்சிருக்கு. இனி இதை பெரிசு பண்ணிடுறேன்" என்று நினைத்த சோம்நாத் கொஞ்ச காலம் வைத்தியிடம் பவ்யா பற்றி பேசுவதை தவிர்த்தான்.
பவ்யாவை கண்காணித்த வைத்தி இருவரும் சாதாரணமாக இருப்பது தெரிந்தாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.பவ்யாவை திட்டிக் கொண்டே இருந்தார். சாதாரண நாட்களில் அவர் தன்னை திட்டுவதை சகித்துக் கொண்ட பவ்யா இப்போது அவர் தன்னை காரணமின்றி திட்டுவதைப் பார்த்து ஒதுங்கிக் கொண்டார்.
இப்படியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் நிதா பிறந்தாள். நிதாவைப் பார்த்ததும் வைத்தி கொஞ்சம் மாறினார். தனது பேச்சினை குறைத்துக் கொண்டார். லமியும் நிதாவை தூக்கி வைத்து கொண்டு திரிந்தார். பவ்யாவை திட்டி தீர்த்தவர் இப்போது நிதாவோடு நேரம் செலவழித்தார்.
இப்படியாக பட்டும் படாமல் சென்று கொண்டிருந்த பவ்யா, வைத்தி வாழ்க்கையில் புயலாக வந்தது வைத்தியின் லண்டன் வேலை. தனக்கு லண்டன் வேலை கிடைத்து விட்டது என்று ஆசையாக அவர் கிளம்பிக் கொண்டிருக்க வைத்தியைத் தேடி வந்தான் சோம்நாத்.
"அண்ணா! நீங்க கண்டிப்பா போகணுமா" – சோம்நாத்.
"ஆமாம்டா! இந்த வேலைக்கு போனா தான் கை நிறைய சம்பாதிக்க முடியும்" – வைத்தி.
"அப்ப இங்க எல்லாம் யார் பார்த்துக்குறது..." – சோம்நாத்.
"அதான் நீ இருக்கேளடா! நீ எல்லாத்தையும் பார்த்துக் கோ"– வைத்தி.
"பிசினஸ் பார்த்துக்க சொன்னா பார்த்துக்குவேன். ஆனா.." – சோம்நாத்.
"ஆனா என்னடா?" – வைத்தி.
"அண்ணி என்று சோம்நாத் இழுக்க வைத்தி முகம் இறுகியது. வேகமாக அவனிடம் திரும்பியவன்
என் மனைவி பத்தி எனக்கு தெரியும். தேவையில்லாம பேசாத" என்று அவனை கண்டித்துவிட்டு வைத்தி பவ்யாவை வீரபாண்டி வீட்டில் விட்டுவிட்டு லண்டன் நோக்கி பயணம் செய்தார்.
வைத்தி இருக்கும் போது பயந்து கொண்டு இருந்த சோம்நாத் அவர் இல்லை என்றதும் பெண்கள் சகவாசம், குடி, போதை என்று அவன் நடத்திய ஆட்டங்கள் அரங்கேறியது. ஆனால் வீட்டில் பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்தான் சோம்நாத்.
சோம்நாத்தின் செயல்களால் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான் வீரபாண்டியிடம். பஞ்சாயத்து கூட்டப்பட்டது. வீரபாண்டி அவனுக்கு வழக்கமான தண்டனை கொடுத்தார். (எபி 7 ல் இருக்கு)
வீரபாண்டியின் தண்டனையை ஏற்க மறுத்த சோம்நாத்திற்கு இரு கை, கால்களிலும் சூடு வைக்கப்பட, அவனை அந்த குடிசைக்குள் அழைத்துச் சென்ற மருது உடையை மாற்றி அவனை வெளியே இழுத்து வந்து அவன் தலையில் மொட்டை அடித்தான்.
அதன்பின் அவனை சங்கிலியால் கட்டிய மருது அவனை ஒரு மரத்தின் கீழ் வைத்து கட்ட அவன் அருகில் ஈயத்தட்டு வைக்கப்பட்டது. அதை பார்த்த சோம்நாத்தின் கண்கள் வெறி கொண்டது. தினமும் ஒரு வீட்டில் இருந்து அவனுக்கு சாப்பாடு இட வேண்டும். 24 மணி நேரமும் அவன் அந்த மரத்தடியிலேயே கட்டி வைக்கப்பட வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
அனைவரும் கலைந்த பின் மகனிடம் விரைந்தார் லமி.
"இப்படி என் பிள்ளையை கொடுமைபடுத்திட்டாங்களே...“ – லமி.
"வீரபாண்டி எதுவும் காரணமில்லாம செய்ய மாட்டார்... இவன் பண்ண தப்புக்கு இந்த தண்டனை சரிதான்" – வெங்கி.
"அப்ப என்னை தப்பானவன்னு சொல்றீங்களா ப்பா" – சோம்நாத்.
"அதான் டா எனக்கும் சந்தேகமா இருக்கு... எனக்கு ஒன்னும் புரியல.. உண்மைய சொல்லு என்ன பண்ண... யார் அந்த பொண்ணு "– வெங்கி.
"அப்பா அவர்கிட்ட யார் அந்த பொண்ணு ன்ன கேட்காம என் கிட்ட கேக்குறீங்க. அவர் சொல்றது உண்மைன்ன அந்த பொண்ண இங்க ஏன் கூட்டிட்டு வரல. அவர்க்கு நம்ம மேல ஏதோ பகை ப்பா. அதான் பொய் சொல்லி இப்படி செஞ்சிட்டார்" – சோம்நாத்.
"இருக்காது அவர் அப்படிபட்டவர் இல்ல" - வெங்கி.
"ஆமா இவர் நண்பர விட்டுக் கொடுப்பரா!" - லமி நெடித்துக் கொண்டார்.
"அப்பா என்ன நம்புங்க ப்பா" - சோம்நாத் பொய் கண்ணீர் வடித்தான்.
"மகன விட உங்களுக்கு அவர் தான் முக்கியமா போச்சா?" - லமி மூக்கை சிந்தினார், வெங்கி குழம்பினார்.
"நான் போய் அவர்கிட்ட பேசி பார்க்கறேன். அவர் சொல்றத வச்சிதான் முடிவெடுப்பேன். இவன் தப்பு பண்ணியதா தெரிஞ்சது. நானே என் கையால இவன கொன்றுவேன்" – வெங்கி.
அதை கேட்டு சோம்நாத் பயத்துடன் அமைதியாக இருக்க, லமி வெங்கி இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.
வெங்கி ஏதோ சொல்லவர அதற்குள் லமி பேசினார். "பையன நம்பாம அவரை நம்பிட்டு இருக்கீங்க. எனக்கு என் பையனை பத்தி தெரியும். அவர் தான் தப்பு பண்ணி இருக்கார். இதுக்கு அவர் பதில் சொல்லித்தான் ஆகணும். இனி எப்படி அவர் பொண்ணு இங்க வாழ்றான்னு நான் பார்க்குறேன்?" – லமி.
"ஏய் அவசரப்படாத! பிரச்சனை என்னன்னு தெரியாம நீயா எதாவது செஞ்சு ஒரு பொண்ணு வாழ்க்கையில் விளையாடாத லட்சுமி" – வெங்கி.
"ம்ம் என்ன செய்யணும் ஏது செய்யணும்ன்னு எனக்குத் தெரியும்"என்று லமி கூறியபடி வீட்டிற்கு விரைந்தார்.
வெங்கி வீரபாண்டியிடம் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி விசாரித்தபோது, அவர் சொல்ல மறுத்து விட்டார். வெங்கி அழுத்திக் கேட்டதும், 'நான் சொல்வது என் இரண்டு பெண்களின் மீது சத்தியம். அந்த பெண் யார் என்று தெரிந்தால் அவள் வாழ்க்கை சுபிக்காது. அதனால் தான் நான் சொல்ல விரும்பவில்லை. சம்பந்தி நீங்கள் என்னை இதற்கு மன்னிக்க வேண்டும். உங்கள் சின்ன பையன்க்கு சீக்கிரம் மணம் முடிக்க பாருங்கள். அவன் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு நல்ல பையன் இல்லை. கல்யாணத்திற்கு அப்பறமாவது பொறுப்பு வந்து திருந்தட்டும்' என்று விட்டார். வெங்கி ஒன்றும் பேச முடியாமல் வீடு திரும்பினார்.
இப்படியாக ஒரு மாத காலம் தண்டனையை ஏற்ற சோம்நாத் தண்டனை முடிந்து வீட்டிற்கு வர அவனை எதிர்கொண்டு அனைத்துக் கொண்டு அழுதார். சோம்நாத்தை உள்ளே அழைத்துச் செல்ல இங்கு வெங்கி வருத்தத்தோடு நின்றார்.
தன் ரூமில் படுத்துக்கிடந்த சோம்நாத் தரங்கிணியை நினைத்துக் கொண்டிருந்தான். 'உன் அப்பன் எனக்கே தண்டனை கொடுத்துட்டான்ல. அவனை நான் சும்மாவிட மாட்டேன். அவன் துடிக்கணும். அவன் துடிக்கணும்னா நீ துடிக்கணும்' என்று நினைத்த சோம்நாத் மறுநாளில் தரங்கிணியை தனியாக சந்திக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த கஷ்டத்தை அவனுக்கு கொடுக்காமல் சோம்நாத்தையே தேடி வந்தாள் தரங்கிணி. சோம்நாத் தன் குடோனில் வந்த சரக்குகளை சரி செய்து கொண்டிருக்க அவன் முன்னால் வந்து நின்றாள் தரங்கிணி. தரங்கிணியை பார்த்ததும் பழிவெறியில் மின்னியது அவனின் விழிகள் .
'ம்ம்ம் வாய்ப்பு தேடி வருது. யார் கண்ணிலும் படாமல் இவளை கூட்டிட்டு போகணும். அப்புறம் இருக்குடி உனக்கு..' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவளிடம் பேசாமல் மூஞ்சியை திருப்பிக் கொண்டான். அவனின் தந்திரங்களை அறியாத தரங்கிணி "சாரி! எங்கப்பா உங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கக்கூடாது" என்றாள்.
"நீ போ! நான் கெட்டவன். என் கூடலாம் பேசாத.." – சோம்நாத்.
"இல்லை எனக்கு தெரியும் நீங்க நல்லவர்ன்னு.." – தரங்கிணி.
"இல்லை நீ பொய் சொல்ற! நீயும் என்ன நம்பலை. அதான் இந்த ஒரு மாதமா என்னை பார்க்கக் கூட இல்லயே" – சோம்நாத்.
இல்லை நான் உங்களை நம்புறேன். நான் தினமும் கோவிலுக்கு போகும் போது உங்களை நீங்கள் இருக்கும் மரத்திற்கு பின்னால் இருந்து பார்ப்பேன்" – தரங்கிணி.
"ஓ" - சோம்நாத்.
"நேர பார்த்தா கஷ்ட படுவீங்கள் ல அதா..." - அப்பாவியாக சொன்னாள் தரங்கிணி.
"அப்ப நான் சொன்னதை செய்வீயா?" – சோம்நாத்.
"ம்ம்ம் கண்டிப்பா செய்றேன்" – தரங்கிணி.
"அப்ப நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும்.. இப்போவே உனக்கு சம்மதமா?" – சோம்நாத்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்தாள் தரங்கிணி "என்ன திடீர்னு... நீங்க வைத்தி அத்தான் வந்ததும் வீட்ல பேசுறேன்னு சொன்னீங்க... ஆனா இப்போ இப்படி சொல்றீங்க"
"பார்த்தியா நீ என்ன நம்பலை" – சோம்நாத்.
"இல்லை நான் நம்புறேன்" என்று தரங்கிணி சொன்னதும் வேகமாக அவள் கைகளை பிடித்துக் கொண்டான் சோம்நாத்.
"நன்றி தரங்கிணி... நீ இங்க உட்கார்ந்திரு. இதோ வந்துடுறேன்" என்று சொன்னவன் அருகில் இருந்த டம்ளரில் தண்ணீரை எடுத்து தரங்கிணியிடம் நீட்ட அதை வாங்கி குடித்தவள் சற்று நேரத்தில் மயக்கம் ஆனாள். அவள் மயக்கம் அடைந்ததும் சுற்றி முற்றி பார்த்தவன் யாருமில்லை என்று தெரிந்ததும் அவளை தூக்கிக் கொண்டு காரில் பயணப்பட்டான்.
இதை தூரத்தில் வந்து கொண்டிருந்த யவன் தரங்கிணியை யாரோ தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்துவிட்டு அந்த காரின் பின்னாள் ஓடினான்.
**
இங்கு வீரபாண்டி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் முன் வந்த கண்ணப்பர் "என்னாச்சுயா! ஏன் இந்த பதட்டம்?"
"என்னனு தெரியல கண்ணய்யா! ரொம்ப பதட்டமா இருக்கு. ஏதோ தப்பா நடக்குற மாதிரி இருக்கு" – வீரபாண்டி.
"நீங்க பயப்படும்படி ஒன்றும் நடக்காதுயா. தைரியமா இருங்க.." – என்று கூறி விட்டு உள்ளே சென்றார் கண்ணப்பர்.
பின் வீரபாண்டி மெதுவாக சென்று தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் கையில் நீருடன் வந்த கண்ணப்பர் அதை வீரபாண்டியிடம் கொடுத்துவிட்டு"என்னாச்சுங்கயா! வாசலையே பார்த்திட்டு இருக்கீங்க"
"இந்த சின்னப் பொண்ணை ரொம்ப நேரமாக் காணோம்.. அதான் யோசனையா இருக்கு" – வீரபாண்டி
"நம்ம சின்னம்மா எங்க போயிருக்க போகுதுங்கய்யா? வீட்டிற்குச் சீக்கிரம் வந்திடுங்கய்யா" – கண்ணப்பர்.
"இல்லை அன்னைக்கு சந்தையில் எடுத்த போட்டோவை வாங்கப் போறேன்னு போச்சு. இன்னும் காணல" – வீரபாண்டி.
"கூட நம்ம யவன் தம்பி போயிருக்குதுலயா கூட்டிட்டு வந்திடுவான்யா கவலைபடாதீங்க" – கண்ணப்பர்.
**
ஆனால் நடந்ததோ வேறு, அன்று சந்தையில் பவ்யா, தரங்கிணி, யவன் மற்றும் நிதா நால்வரும் எடுத்த போட்டோவை வாங்கச் சென்றார்கள் யவன் மற்றும் தரங்கிணி.
யவனை தன்னுடன் போட்டோ வாங்க அழைத்துச் சென்ற தரங்கிணி பாதி வழியில் யவனிடம் "யவா! அக்காக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! நான் வீட்டிற்கு போறேன்! நீ போய் போட்டோ வாங்கிட்டு வீட்டிற்கு வந்திடு" என்றாள்.
சோம்நாத்தை பார்த்து அவனை சமாதானப்படுத்த அவனை தனியாக சந்திக்க முயன்றாள். அவளால் சோம்நாத் தப்பானவன் என்று நம்ப முடியவில்லை அவளால். இப்படி அனைவரையும் தன் நடிப்பால் ஏமாற்றி இருந்தான் சோம்நாத்.
"அய்யோ அக்கா! என்னாச்சு? உடம்பு சரியில்லைனா.. நீ எதற்கு இங்க வர.. நான் போய் வாங்கிட்டு வந்திருப்பேன்ல.. நீ மொதல்ல வீட்டிற்கு போ.." என்று யவன் தரங்கிணியை அனுப்பி வைக்க அவனை ஏமாற்றிவிட்டு சோம்நாத்தை பார்க்க அவன் ஆபிசிற்குச் சென்றாள் தரங்கிணி. அங்கு அவன் குடோன் நோக்கிச் செல்ல அவன் பின்னால் சென்றாள். அவளது போதாத காலம் அன்று மதியம் அனைவரும் சாப்பிட சென்று இருக்க தரங்கிணி சோம்நாத்தை பார்க்க வந்தது யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. அவளுக்கு தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்த சோம்நாத் அவளை யாருக்கும் தெரியாமல் காரில் தூக்கிச் சென்றான்.
தரங்கிணி இப்படி யவனை ஏமாற்றிச் சென்றது வீரபாண்டிக்கு தெரியாமல் போனது அந்தோ பரிதாபம்
யவனும் அவள் வீட்டிற்கு போகிறாள் என்று நம்பி பேசாமல் விட்டுவிட்டான். ஆனால் வீட்டிற்கும் போகும் போது முகமூடி அணிந்த ஒருவன் தரங்கிணியை தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்த்து அந்த காரின் பின் ஓடினான் யவன்.
*****
இங்கு வீரபாண்டி தரங்கிணியை பற்றிய கவலையில் இருக்க அவரை தேடி வந்தார் வைத்தி.
"வாங்க மாப்பிள்ளை! வந்து உட்காருங்க" – வீரபாண்டி.
வைத்தி தன்னை தேடி வந்ததும் அவரை வரவேற்ற வீரபாண்டியின் முன் கோபத்தில் நின்றார் வைத்தி.
"நான் இங்க ஒன்றும் விருந்தாட வரல. உங்ககிட்ட நியாயம் கேட்க வந்தேன்" – வைத்தி.
அதை கேட்ட வீரபாண்டியின் முகம் மாறியது.
"ம்ம்ம் சொல்லுங்க? என்ன சொல்லணும் நான்" – வீரபாண்டி.
"என் தம்பிக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனை.." – வைத்தி.
"அவன் தப்பு பண்ணி இருக்கான் மாப்பிள்ளை. அதான் இந்த தண்டனை" – வீரபாண்டி.
"இல்லை நீங்க உங்க சுயநலத்திற்காக இப்படி பண்ணி இருக்கீங்க..." – வைத்தி.
"அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை" – வீரபாண்டி.
"இல்லை! உங்களுக்கு எங்க குடும்பம் மேல் தீரா பகை. எங்களுக்கு இருக்குற செல்வாக்க பார்த்து உங்களுக்கு பொறாமை அதை குறைக்குறதுக்கு தான் இப்படி பண்ணி இருக்கீங்க. அதுக்கு என் தம்பியை பலியாக்கிட்டீங்க" – வைத்தி.
"அப்படியெல்லாம் இல்ல மாப்பிள்ளை. அவர் தப்பு பண்ணி இருக்கார்" – வீரபாண்டி.
"இல்லை நான் நம்ப மாட்டேன். நீங்க பொய் சொல்றீங்க" – வைத்தி.
"இல்லை மாப்பிள்ளை நீங்க நினைக்கிற மாதிரி உங்க தம்பி ஒன்றும் அவ்வளவு நல்லவர் இல்லை" என்று அவர் சொன்னது தான் தாமதம் அவர் சட்டையை பிடித்து இருந்தார் வைத்தி.
"இனி ஒரு வார்த்தை என் தம்பி பத்தி சொன்னீங்க அவ்ளோ தான்..." என்று வைத்தி கூற
"என்னங்க?" என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த வைத்தி அங்கு பவ்யா கண்களில் கண்ணீர் வழிய நின்று இருப்பதைப் பார்த்து வைத்தி பவ்யா அருகில் வந்து "என் தம்பிக்கு தண்டனை கொடுக்கும் போது அவனுக்கு எப்படி வலிச்சிருக்குமோ அந்த வலி உங்க அப்பாவுக்கும் தெரியணும் இல்லையா! அதனால் இனி நீ காலா பூராவும் உங்க அப்பா வீட்டில் தான் இருக்கணும்" என்று சொல்லிவிட்டு வைத்தி செல்ல இங்கு பவ்யா கண்களில் கண்ணீரோடு நின்றார்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 12
தரங்கிணியை தூக்கிச் சென்ற சோம்நாத் அவளை ஒரு வீட்டில் கட்டிப்போட்டான். அவள் மயக்கத்தில் இருக்க அதை பார்த்த சோம்நாத். "இனி உனக்கு தண்டனை காலம் ஆரம்பமாச்சுடி." என்று பழிவெறியோடு கூற அதை அறியாத தரங்கிணி மயக்கத்தில் இருந்தாள்.
காரின் பின்னால் ஓடி வந்த யவன் காரை ஒரு இடத்தில் தவற விட வழி தெரியாமல் மெதுவாக நடந்து சென்றான். அந்த பாதையில் வந்து கொண்டிருந்த யவன் தூரத்தில் ஒரு குடிசை தெரிய அங்கு சென்றான். அந்த குடிசையை நோக்கிச் சென்றவன் அந்த குடிசையின் சன்னல் வழியாக உள்ளே பார்க்க அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்..
அங்கு தரங்கிணி பச்சை வண்ண பாவாடையும், பச்சை வண்ண சட்டையும் அணிந்து கைகள் சங்கிலியால் கட்டப்பட்டுஇருந்தாள். அவள் அருகில் கத்திரிக்கோலோடு ஒருவன் (சோம்நாத்) அருகில் சென்று கொண்டிருந்தான்.
அங்கு சன்னலில் இருந்து பார்த்த யவனுக்கு அவனின் பின்பக்கமே தெரிந்தது. மேலும் அவன் முகத்திற்கு மூடி அணிந்திருந்ததால் அவன் முகம் தெரியவில்லை. அந்த வகையில் யாருக்கும் தெரியாமல் எல்லா வேலையும் செய்தான் சோம்நாத். சோம்நாத் அருகில் செல்லச் செல்ல தரங்கிணி வேண்டாம் என்று பின்னோக்கி சென்று கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சென்ற சோம்நாத் அவளது முடிகளை தாறுமாறாக அலங்கோலமாக வெட்ட தரங்கிணி அலறினாள். அதன்பின் அவளை அருகில் இருந்த சேரில் கொண்டு கட்டியவன் அவளது வாயை துணி கொண்டு மூடினான். அழுது கொண்டிருந்த தரங்கிணியை பார்த்து இங்கு கண்ணீர் வடித்தான் யவன்.
இப்படியே அழுதபடியே இருந்த யவன் தரங்கிணியின் அருகில் இருப்பவனை பார்க்க முயல அவன் எவ்வளவு முயன்றும் அவனது முகத்தை யவனால் பார்க்க முடியவில்லை.
அப்படியே இருள் சூழ தூங்கிப் போன யவன் தரங்கிணியின் கத்தல் சத்தம் கேட்டு சன்னல் பக்கம் சென்றான்.
அங்கு தரங்கிணியின் அருகில் ஈயத்தட்டு வைக்கப்பட்டிருக்க அதில் உள்ள உணவை உண்ணச் சொல்லி அவளை பாடாய்படுத்திக் கொண்டிருந்தான் சோம்நாத். தரங்கிணி தனக்கு முன்னால் வைக்கப்பட்ட உணவை பார்த்து திகைத்தாள். அந்த உணவில் புழுக்கள் பல நெளிந்து கொண்டிருக்க அதை பார்த்த தரங்கிணிக்கு உமட்டியது.
அதை பார்த்த சோம்நாத் "இப்படி தான்டி எனக்கும் இருந்துச்சு.. உன் அப்பன் என்னை பல வீட்டு சோறு சாப்பிட வைக்கும் போது! இப்படிதான் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது" என்று கத்திய சோம்நாத் தரங்கிணியின் அருகில் வந்து அவளது முடியை பிடித்து அவளது முகத்தை அந்த உணவு தட்டில் வைத்து அமுக்கினான். சோற்று பருக்கைகள் மூக்கில் செல்ல மூச்சு வாங்க தரங்கிணி திணறிக் கொண்டிருக்க அவளை நிமிர்த்தினான் சோம்நாத்.
"ம்ம்ம் சாப்பிடுறீயா... இல்ல மூச்சு வாங்கி சாகுறீயா?" என்று அவன் இறக்கமே இல்லாமல் கேட்க தரங்கிணி பயத்தில் தன் கைகளைப் பார்க்க
அதைப் பார்த்த சோம்நாத் "ம்ம்ம்ம் சாப்பிடுவதற்கு வாய் இருந்தா போதாது!" என்று அவன் கேட்க தரங்கிணி அவனை பார்த்து முழித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் அருகில் வந்த சோம்நாத் அவளது வாயில் அப்படியே சோற்றை கொட்ட சோற்றை முழுங்க முடியாமல் தரங்கிணி திணற அதை பார்த்து ரசித்தான் சோம்நாத்.
இங்கு தரங்கிணியை கொடுமைப்படுத்துவது யார் என்று தெரியாமல் அவளது அவஸ்தையைப் பார்த்து கண்ணீர் வடித்தான் யவன். தன்னை சோம்நாத்திற்கு தெரியாமல் மறைத்து கொண்ட யவன் தரங்கிணியை காப்பாற்ற நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் விடிய தரங்கிணியை வெளியே அழைத்துச் சென்ற சோம்நாத் அவளது கால்களை சங்கிலியால் கட்டியபடியே அருகில் இருந்த கிணற்றுக்கு அழைத்துச் சென்றான். அவளை கிணற்றில் நீர் இறைக்க வைத்து அவளது கையை புண்ணாக்கினான். கால்களில் சங்கிலியால் அழுத்தம் ஏற்பட்டு தரங்கிணிக்கு ரத்தம் வரத் தொடங்கியது.
அவளை மரம் நட பள்ளம் தோண்ட செய்து அவள் படும் அவஸ்தையை ரசித்துப் பார்த்தான். மென்மையான பெண்ணவள் கைகள் மற்றும் கால்களில் ரத்தம் வழிய பாவமாக நின்றாள்.
அன்று இரவு தரங்கிணி தூங்கிக் கொண்டு இருக்க அவளது அருகில் வந்த சோம்நாத் அவளை தொட முயற்சிக்க வெளியில் யாரோ பேச்சு சத்தம் கேட்டு வேகமாக விரைந்தான் சோம்நாத். சோம்நாத் வெளியே செல்வதைப் பார்த்த யவன் பதுங்கி பதுங்கி உள்ளே வந்தான். வெளியே வந்த சோம்நாத் எதிரில் தான் சாராயம் வைத்திருக்கும் குடோனை நோக்கி வைத்தியநாதன் செல்வதைப் பார்த்து வேகமாக வைத்தியை நோக்கிச் சென்றான். அவர் உள்ளே செல்வதற்குள் அவரை தடுத்தான்.
"என்னாச்சு ண்ணா? இங்க வந்து இருக்கீங்க!" – சோம்நாத்.
"நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்குற!! நான் இந்த பக்கமா வந்தேன். உன் காரை பார்த்துட்டு இங்க வந்தேன் நீ இங்க என்ன பண்ற?" – வைத்தி.
"இது என் பிரண்ட் குடோன் ண்ணா. அவனுக்கு உடம்பு சரியில்லை அதான் இன்னைக்கு நான் பார்த்துட்டு போகலாம் ன்னு வந்து இருக்கேன்." – சோம்நாத்.
"ஓ! அப்படியா! ஆமா ஏன் முகத்துல துணி கட்டி இருக்க" – வைத்தி.
"இங்க சில கழிவுகளை எல்லாம் எரிப்பாங்க ண்ணா. ஒரே வாடை... அதனால தான் இப்படி மூடியிருக்கேன்" – சோம்நாத்.
"அப்படி எந்த வாடையும் அடிக்கலையேடா!" – வைத்தி.
"அண்ணா! உனக்கு ஜலதோசம் பிடிச்சிருக்கனால வாடை தெரியலன்னு நினைக்குறேன். இந்தா இதை வச்சு மூடிக்கோ அண்ணா"- சோம்நாத்.
"வேண்டாம்டா! எனக்கு எதுவும் தெரியல" என்று வைத்தி சொல்ல சோம்நாத் வலுக்கட்டாயமாக துணியைக் கட்டிவிட்டான்.
"இப்ப ஓகேயாடா. ரொம்ப பண்றடா நீ. ஆமா இங்க குடோன் இருக்கும் போது அங்க என்ன பண்ற?" – வைத்தி.
"அந்த குடிசையில ரெஸ்ட் எடுக்க எல்லா வசதியும் என் ஃப்ரெண்ட் பண்ணி வச்சிருக்கான். ரொம்ப டையர்டா இருந்துச்சு ண்ணா. அதான் ரெஸ்ட் எடுக்க போயிருந்தேன்" – சோம்நாத்.
"ஓ! வா! நானும் வர்றேன்! இன்னைக்கு உன் கூட இருந்த மாதிரியும் ஆச்சு. உனக்கு துணையா ஆனது மாதிரியும் ஆச்சு" என்று வைத்தி சொல்ல சோம்நாத் திகைத்தான்.
தரங்கிணியின் விலங்கினை யவன் அவிழ்த்துவிட யவனைப் பார்த்த தரங்கிணி 'யவா...' என்று கட்டிக் கொண்டாள்.
அவளை அணைத்து யவன் ஆறுதல்படுத்திக் கொண்டிருக்க வெளியே பேச்சு சத்தம் கேட்ட யவன் வேகமாக அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்றான். அங்கு சென்ற இருவரும் ஒழிந்து கொள்ள
வைத்தி அந்த குடிசை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
வைத்தியை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் முழித்த சோம்நாத் வைத்தியை பேசி திசை திருப்ப முயன்றான்.
"அண்ணா! வாங்க இங்க உட்கார்ந்து பேசுவோம்! கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு உள்ள போகலாம்" – சோம்நாத்.
"அதுவும் சரிதான்டா.. நாம இரண்டு பேரும் பேசி எத்தனை நாளாச்சுடா.." என்று கூறிய வைத்தி பேசிக் கொண்டே போனார்
ஒரு கட்டத்தில் முகமூடியை வைத்தி கழட்ட அதைப் பார்த்த யவனும், தரங்கிணியும் அதிர்ந்தனர்.
"அக்கா அது வைத்தி மாமா தான..!!!" - யவன்.
"ச்சூ..." - தரங்கிணி.
"ஏன் க்கா... அவர் இப்பிடிலாம் பண்றார்" - யவன்.
"பேசாம இருடா.. அவங்க எதோ சொல்றாங்க. என்னன்னு கேட்போம்” - "தரங்கிணி.
"உனக்கு கஷ்டம் குடுத்த அந்த வீரபாண்டி குடும்பம் நிம்மதியா இருக்கக் கூடாது. வீரபாண்டி இனி தினமும் அழுதுகிட்டே தான் இருக்கணும். தன் பொண்ணை நினைச்சு நினைச்சு அழணும். அவர் உனக்கு செஞ்ச வேலைக்கு நான் பழி தீர்த்துட்டேன்டா" – வைத்தி.
வைத்தி தான் தொடங்கிய தொழில் பற்றியும் பவ்யா பற்றியும் சொல்லிக் கொண்டிருக்க யவனும், தரங்கிணியும் தவறாக புரிந்து கொண்டனர்.
சோம்நாத்தின் உண்மையான முகத்தை பார்த்த தரங்கிணி தன்னை அவன் கொடுமைபடுத்தியது வைத்தி சொல்லி தான் என்று தவறாக கணித்தாள். யவனோ எல்லாவற்றிற்கும் வைத்தியை காரண கர்த்தாவாக்கி பழி வெறியை ஏற்றிக் கொண்டான்.
அதை எல்லாவற்றையும் கேட்ட தரங்கிணி யவனிடம் திரும்பி "மாமா பத்தி அக்காகிட்ட சொல்லணும்டா.. வா முதல இந்த இடத்தை விட்டு போகலாம்" என்று ஓட ஆரம்பித்தனர் இருவரும்.
வைத்தியை அந்த இடத்தைவிட்டு அகற்ற சோம்நாத் முயற்சி செய்து கொண்டிருக்க அப்போது வைத்திக்கு பவ்யாவிடமிருந்து போன் கால் வந்தது. அதை ஏற்க மறுத்த வைத்தி கட் செய்தார்.
பவ்யா மறுபடி மறுபடி அழைத்த வண்ணம் இருக்க ஒரு கட்டத்தில் "சோமு! நான் போய் எதற்கும் பவ்யாவை ஒரு தடவை பார்த்துட்டு வரட்டா. இத்தனை தடவை போன் பண்றா எதாவது பிரச்சனையா இருக்க போகுது." – வைத்தி.
"அண்ணா! அவங்களை நம்பாத.. மனோகர் பத்தி சொன்னதயும் நீ நம்பல. எதாவது கண்ணீர் விட்டு கதை சொல்லி உங்களோட சேர பிளான் போடுறாங்க ண்ணா" – சோம்நாத்.
'அப்படியும் இருக்குமோ!' என்று நினைத்த வைத்தி "சரி மனசுக்கு ஏதோ மாதிரி இருக்கு! நான் வீட்டுக்கு போறேன்டா.. நீ பார்த்து வா.." என்று கூறிய வைத்தி காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தரங்கிணியை நோக்கிச் சென்ற சோம்நாத் அவள் அங்கு இல்லாமல் இருப்பதை பார்த்து வேகமாக அவளை தேடி ஓடினான். தரங்கிணி எவ்வளவு தூரம் ஓடினாலும் அவளது காயப்பட்ட கால்களை வைத்து அவளால் ஓட முடியவில்லை. யவன் கைகளை பிடித்துக் கொண்டு வந்த தரங்கிணி ஒரு இடத்தில் நிற்க
"சீக்கிரம் வாக்கா! அவன் வந்துட போறான்" என்று சொல்லிய யவன் தூரத்தில் ஒருவன் ஓடி வருவதை பார்த்து
"அக்கா! யாரோ வராங்க" என்று சொன்னதுதான் தாமதம் அவனை அழைத்துக் கொண்டு வேகமாக ஓடினாள் தரங்கிணி.
ஒரு கட்டத்தில் சோம்நாத் அருகில் வருவதைப் பார்த்த தரங்கிணி "ஓடு யஸ்! இங்க நிற்காதே" என்று சொல்ல அவளது கையை பிடித்துக் கொண்டு அவளையும் அழைத்தான் யவன்.
"நீ போ! பவ்யா அக்காவை காப்பாத்து போ" என்று சொல்லி தரங்கிணி அவனை அனுப்பி வைக்க யவன் அவளை பார்த்துக் கொண்டே ஒடியவன் சோம்நாத் தரங்கிணியை பிடித்ததும் வேகமாக மரத்தில் ஏறி சென்று மறைந்து கொண்டான்.
அந்த பெளர்ணமி இரவில் நிலவு வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அந்த முகமூடி அணிந்தவனை பார்த்துக் கொண்டிருந்தான் யவன்.
தரங்கிணியை பிடித்த சோம்நாத் அவளது கழுத்தை பிடித்து நெறித்தான். மூச்சு வாங்க அவன் கைகளை தட்டிவிட முயன்ற தரங்கிணி முடையாமல் யவன் கண் முன்னால் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தாள்.
அவள் இறந்ததும் அவள் மீது பெட்ரோல் ஊற்றி அவளை எறித்தான் சோம்நாத்.
இதை பார்த்துக் கொண்டிருந்த யவனுக்கு கை, கால்கள் இழுத்து பிக்ஸ் வந்து அப்படியே மயங்கி விழ அவனை அந்தப் பக்கம் வந்த பூங்குன்றன் கைகளில் ஏந்தினார்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 13
கண்விழித்த யவன் முன் இருந்தார் ஒரு பெரியவர்.
அவரைப் பார்த்ததும் பயத்தில் யவன் எழ முயற்சிக்க "பயப்படாத தம்பி! நீ பாதுகாப்பாதான் இருக்க" என்று அவர் கூற சற்று ஆசுவாசம் அடைந்தான்.
"இப்ப பரவாயில்லையா தம்பி!" – பூங்குன்றன்.
"நான் போகணும் என் அக்காக்கு என்ன ஆச்சு? நான் போய் அவங்க காப்பாற்றனும் என்னை விடுங்க" என்று யவன் கத்த ஆரம்பித்துவிட்டான்.
"கத்தாத தம்பி! டாக்டர் டென்சன் ஆகக் கூடாது ன்னு சொல்லி இருக்கார்! அப்படி டென்சன் ஆனா மறுபடியும் பிக்ஸ் வந்துடுமாம்" – பூங்குன்றன்.
"அப்ப என் அக்காக்கு என்ன ஆச்சு?" – யவன்
"உன்ன தான் தம்பி என்னால காப்பாத்த முடிஞ்சிச்சு. உன் அக்காவை என்னால காப்பாத்த முடியல... என்னை மன்னிச்சுரு" – பூங்குன்றன்
அவர் அப்படி கூறியதும் "அக்கா! அக்கா" என்று கத்தியவன் திரும்பவும் மயங்கினான்.
அடுத்து வந்த நாளில் இருவரும் வேறு ஊருக்கு பயணிக்க யவன் அதன்பின் அமைதியாகவே இருந்தான். அவனை பேச வைக்க பூங்குன்றன் எவ்வளவோ முயன்றும் அவனை மாற்ற முடியவில்லை.
யவன் எப்பொழுதும் தனிமையில் அமர்ந்து கைகளில் எதையோ வைத்துப் பேசிக் கொண்டிருப்பான் இல்லாவிட்டால் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பான்... கீழே கிடக்கும் ஒரு சிறுதுண்டு சீட்டை கூட விடுவதில்லை.
யவனுக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை பார்த்த பூங்குன்றன் தான் பணிபுரிந்து கொண்டிருந்த கல்லூரியில் தன் துறையிலேயே சேர்த்து அவனை படிக்க வைத்தார். கல்லூரி நேரம் போக மற்ற நேரத்தில் தனக்கென்று ஒரு கூடம் அமைத்து பால் பவுடர் தயாரிப்பை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் பூங்குன்றன்.
அவர் ஆராய்ந்ததை கட்டுரையாக எழுதி நாளிதழில் வெளியிட அவர் கட்டுரையை படித்த விக்னப்ரசாத் தன் பால் பவுடர் தயாரிப்பில் அவரை சேர்த்துக் கொண்டார்.
அன்றிலிருந்து அவர்களது வாழ்க்கை லண்டனில் பயணப்பட்டது..
*****
பவ்யா நிதாவிற்கு ஜீரம் அதிகமாக அவதிப்பட்டார் . தரங்கிணியை தேடி வீரபாண்டி வெளியே சென்று இருக்க பவ்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் வைத்திக்கு பல தடவை கால் செய்ய அவர் அழைப்பை எடுக்கவே இல்லை. அதனை கண்ட பவ்யா இறுதியில் மனோகருக்கு கால் செய்தார்.
போனை எடுத்த மனோகரிடம் "அண்ணா!" என்று பவ்யா அழுகையுடன் பேச அதை கேட்ட மனோகர் பதறினார்.
"என்னம்மா என்னாச்சு?" – மனோகர்.
"அண்ணா! நிதாவுக்கு காய்ச்சம் அடிக்குது! கொஞ்சம் வந்து எங்களை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறீங்களா?" – பவ்யா.
"ஏன்மா என்னாச்சு! வைத்தி எங்க?" – மனோகர்.
அதற்கு அழுத பவ்யா அன்று வைத்திக்கும் பவ்யாவுக்கும் நடந்த சண்டையை கூறியவர் வைத்தி போன் எடுக்காததையும் சேர்த்துச் சொன்னாள். அதை கேட்ட வைத்தி சற்று நேரம் மெளனமாக இருந்தார். பின்பு "அய்யாவை கூட்டிட்டு போக வேண்டியது தானமா" என்று அவர் கூற பவ்யா அழுது கொண்டே தரங்கிணியை பற்றி சொல்லத் தொடங்கினாள்.
"தரங்கிணியை 2 நாளா காணோம். அவளுடன் போன யவனையும் காணோம். அதான் அப்பா தரங்கிணியை தேடி பார்த்துவிட்டு பக்கத்து போலீஸ் ஸ்டேசனில் போய் கம்ப்ளைன் பண்ணப் போயிருக்கார் அண்ணா! ஏன் னா இவ்வளவு கேள்வி கேட்குறீங்க! நீங்க கூட எனக்கு உதவி செய்ய மாட்டீங்களா?" – பவ்யா.
"அப்படி இல்லைமா. நான் எதாவது உதவி செஞ்சு அதை வைத்தி தப்பா புரிஞ்சிக்க போறார் ம்மா. அதான் யோசிக்குறேன்" என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே பவ்யா "நிதா நிதா" என்று கத்தும் சத்தம் கேட்டு வீரபாண்டி வீட்டுக்கு விரைந்தார் மனோகர் .
அங்கு நிதா மயங்கி இருக்க வேகமாக நிதாவை பக்கத்தில் இருக்கும் ஆஸ்பிட்டலில் சேர்த்தனர். நிதா பேச்சு மூச்சின்றி இருக்க அதை பார்த்த டாக்டர் பவ்யாவை திட்டினார்.
"காய்ச்சல் இவ்வளவு அதிகமாக இருக்கு. காய்ச்சலில் மயங்கி விழும் அளவுக்கா குழந்தையை வச்சிருப்பீங்க" என்று பவ்யாவை திட்டிவிட்டு நிதாவை கவனிக்கச் சென்றார்.
பவ்யா கண்ணீர் வடித்தபடியே இருக்க அன்று இரவு முழுவதும் நிதா கண் முழிக்கவில்லை. அவளுக்கு மருந்து ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வீட்டிற்கு வந்த வீரபாண்டி பவ்யாவை காணாமல் திகைத்தார். தன் ஒரு பெண்ணை காணாமல் தவித்தவர் வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணும் காணவில்லை என்று பதட்டதில் என்ன செய்கிறோம் என்று வாய்விட்டு கதறினார். தன் கதறல் தன் மகளின் வாழ்வை பாழாக்கும் என்று அறியாமல்.
"அய்யோ! பவ்யா எங்க இருக்க நீ! எங்க போன நீயும் என்னைவிட்டு போயிட்டியா?" என்று அழுது கரைய அவர் சத்தம் அக்கம் பக்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
விசயம் வெளியே பரவ ஆரம்பிக்க வைத்தி காதில் விழுந்தது அந்த செய்தி. பவ்யாவிடம் சந்தேகம் கொண்டிருந்த வைத்தி இப்போது இந்த செய்தியைக் கேட்டு கோபமாகி வேகமாக வீரபாண்டி வீட்டிற்கு விரைந்தார்.
ஆஸ்பிட்டலில் இருந்த மனோகருக்கு பவ்யாவை பற்றி வீட்டில் சொல்லாதது உரைக்க வேகமாக தன் தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூறி வீரபாண்டியிடம் கூறச் சொன்னார். கண்ணப்பர் வீரபாண்டியிடம் விசயத்தை சொல்ல விரைந்தார்.
அவர் வீட்டிற்கு சென்று வீரபாண்டியை தேட அங்கு வீரபாண்டி நெஞ்சை பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த கண்ணப்பர் வேகமாக மருத்துவர்க்கு அழைத்து விவரம் சொல்லி வரச் செய்தார். சற்று நேரத்தில் வந்து வீரபாண்டியை பார்த்த மருத்துவர் "நெஞ்சுவலி. பயப்படும்படி ஒன்றுமில்லை. அவர் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்" என்று சொல்லி மருத்துவர் அவர்க்கு ஊசி போட்டுவிட்டுச் சென்றார். இந்த களேபரத்தில் பவ்யா பற்றி சொல்லக்கூட முடியவில்லை.
நிதா சற்று நேரத்தில் கண்விழிக்க அவரை பரிசோதித்த மருத்துவர் "ஒன்றும் பிரச்சனை இல்லைமா. நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க" என்று சொல்ல பவ்யாவும் மனோகரும் வீட்டிற்கு விரைந்தனர்.
பவ்யா வீட்டிற்குள் நுழையவும் வைத்தி வீரபாண்டியின் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. பவ்யாவை மனோகருடன் பார்த்த வைத்தி ஆத்திரத்தில் தன் அறிவை இழந்து பவ்யாவை பார்த்து கத்த ஆரம்பித்துவிட்டார்.
"என்னடி! நான் இல்லைனாலும் உனக்கு ஆள் இருக்கு போல" – வைத்தி.
அதை கேட்ட பவ்யா, மனோகர் அதிர்ந்தனர்.
"என்னங்க! நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க! நம்ம நிதா..." என்று பவ்யா ஆரம்பிக்க வைத்தி அவரை பேசவிடவில்லை.
"என்னடி பொய் சொல்லப் போற.. உன் கள்ளக் காதல் எனக்கு தெரிஞ்சிருச்சுனு பயப்படுறீயா" – வைத்தி.
அதை கேட்ட மனோகர் வைத்தியின் சட்டையை பிடித்துவிட்டார்
"ஏய்! வார்த்தையை அளந்து போசு. நாங்க இரண்டு பேரும் ஆஸ்பிட்டலுக்கு போயிட்டு வரோம்" – மனோகர்.
"ஓ! ஆஸ்பிட்டலுக்கு போற அளவுக்கு வளர்ந்திருச்சா?" – வைத்தி.
அதை கேட்ட பவ்யா காதை மூடிக் கொள்ள மனோகர் கொதித்துவிட்டார். வேகமாக வைத்தியை அடிக்க கை ஓங்க பவ்யா இடையில் புகுந்தார்.
"வேண்டாம்! விட்ருங்க அண்ணா" – பவ்யா.
"என்னது அண்ணாவா! என்ன பிடிப்பட்டவுடன் இந்த கதையா? எல்லாரும் ஒரே மாறி இதை தான் சொல்றாங்க" – வைத்தி.
"உங்க நாக்கு என்ன தேள் கொடுக்கா! இப்படி பேசுறீங்க?" – பவ்யா.
"ம்ம்ம் உண்மை கசக்கத்தான் செய்யும். என் தம்பி சொன்னது கரெக்ட்டா தான் இருக்கு. அதான் துரை அடிக்கடி என் வீட்டுக்கு வருவாரோ" – வைத்தி.
"அய்யோ" - பவ்யா.
"இப்ப நான் லண்டன் போனது உங்களுக்கு ரொம்ப வசதியா போச்சுல்ல" - வைத்தி.
"டேய்..." - மனோகர் வைத்தியை அடிக்கப் பாய்ந்தார்.
"ஏங்க இப்பிடி பேசுறீங்க? நம்ம மனுக்குட்டிக்கு காய்ச்சல் அதுக்குதான் ஆஸ்பிட்டல் போனோம்" - பவ்யா.
"என்ன கூப்பிட்டு இருக்கலாமே" – வைத்தி
"உங்களுக்கு கூப்பிட்டேங்க. நீங்க எடுக்கல" – பவ்யா
பவ்யா அழைத்ததும் அதற்கு சோம்நாத் சொன்னதும் நினைவிற்கு வந்தாலும் அதை ஓத்துக்கொள்ளா முடியாமல் வீம்பாக "யார்கிட்டடி கதை சொல்ற. உன் கள்ளக்காதலனை பார்க்க என் பொண்ணை யூஸ் பண்ணிக்கிட்டியா" என்று வைத்தி கேட்க, அவரை கோபத்தோடு எதிர் கொண்டார் மனோகர்
"மரியாதையா பேசு. பவ்யா ஒன்னும் அப்படி பட்ட பொண்ணு இல்லை" – மனோகர்.
"என்னடா அவளை சொன்னா உனக்கு கோபம் வருது. அவ்ளோ லவ்வா?" – வைத்தி.
"ஏய்! நாங்க இரண்டு பேரும்.." என்று மனோகர் எதோ சொல்ல வர பவ்யா அவரை தடுத்தார்.
"என்னங்க நீங்க நினைக்குற மாதிரி இல்லை. நீங்க உங்க போனை நல்லா பாருங்க. நான் போன் பண்ணேன்" என்று பவ்யா அழுத்தமாகக் கூற, வைத்தி பவ்யாவை அறைந்துவிட்டார்.
மனோகர் மறுபடியும் வைத்தி சட்டையைப் பிடிக்க, இவர்கள் சத்தம் கேட்டு மக்கள் கூட ஆரம்பிக்க உள்ளே இருந்து வந்தார் கண்ணப்பர் மனோகரை அடக்கினார்.
"என்னாச்சி.. நீ மாப்பிள்ளை சட்டையில் இருந்து கையை எடு" - கண்ணப்பர்.
"இல்லப்பா" என்று வைத்தி கூறிய அனைத்தையும் சொல்ல, வைத்த்ய் இவர்களை முறைத்தவாறு நின்றார்.
"வேண்டாம்! மனோகரா! பிரச்சனையை பெரிசுபடுத்ததாதே. வா வீட்டுக்கு போலாம். அய்யாக்கு வேற நெஞ்சு வலி இதை கேட்ட இன்னும் பிரச்சனை ஆகிடும்" என்று கண்ணப்பர் சொல்ல அதை கேட்ட வைத்தி
"பாவம்! உன் அப்பாவுக்கு கூட உன் வண்டவாளம் தெரிஞ்சிடுச்சு போ. அதான் மனுசன் நெஞ்சு வலியில் படுத்துட்டார் போல. ம்ம்ம் தங்கச்சி ஓடி போயிட்டா. அக்கா வேற ஒருவனோட சுத்துறா. நல்ல குடும்பம்டா. இனி இந்த வீட்டில் என் பெண் இருந்தால் அவளும் உன்னை மாதிரி ஆகிடுவ"! என்று சொன்ன வைத்தி நிதாவை பறித்துக் கொண்டு சென்றார்.
பவ்யா வேகமாக வைத்தி காலில் விழுந்து கெஞ்சினார்.
"வேண்டாம்ங்க! நான் எந்த தப்பும் செய்யல. செய்யாத தப்புக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாங்க.. என் மகளை என்கிட்ட இருந்து பறிச்சிடாதீங்க" என்று பவ்யா அழுக அவரை தள்ளிவிட்டுச் சென்றார் வைத்தி.
வீட்டிற்குள் நிதாவுடன் வந்த வைத்தியைக் கண்ட வெங்கி பின்னால் பார்க்க பவ்யா இல்லாமல் இருப்பதை பார்த்து திகைத்தார்.
"பவ்யா எங்கேடா?" – வெங்கி.
"அவள் இனி வரமாட்டா.." – வைத்தி.
"என்னடா சொல்ற! என்னாச்சு?" – வெங்கி.
"அவ ஒழுக்கம் கெட்டவப்பா! அதான் தலைமுழுகிட்டேன்" – வைத்தி.
வைத்தியின் பேச்சை கேட்டு அங்கே வந்த சோம்நாத் மற்றும் லமி அதிர்ச்சியடைந்தனர்.
"என்னடா சொல்ற? இல்லை! பவ்யா அப்படி கிடையாது! நீ அவசரப்படுற" – வெங்கி.
"இல்லை! அவன் சரியாத்தான் செய்றான்" என்ற லமி நிதாவை வாங்கினார். நிதாவின் உடல் சூட்டை உணர்ந்து "என்ன டா பிள்ளைக்கு காய்ச்சலா... இத பார்க்காம அவ என்ன வெட்டி முறிக்குறா?" என்று சடைத்துக் கொண்டார்.
"லட்சுமி! நீயா எதாவது பேசி அவனை ஏத்திவிடாத" - லமி.
"பிள்ளையை இப்பிடி தூக்கிட்டு வர அளவுக்கு அங்க என்ன நடந்தது" - வெங்கி.
வைத்தி நிதாவிற்கு ஆஸ்பிட்டல் போனதை அவர்க்கு ஏற்ற மாதிரி திரித்துக் கூறினார்.
"பார்த்தீங்களா ண்ணா! நான் சொன்னேன்ல" - சோம்நாத்.
"நீ வாய மூடு சோமு.." - வெங்கி.
"என் பிள்ளையை ஏன் அதட்டுறீங்க" - லமி.
"அதான... அவங்க மாசமா இருக்கும் போது இந்த வீட்டுல நடந்தது மறந்து போச்சா.. தினமும் அது குடுத்து விடாங்க இது குடுத்துவிடாங்கன்னு வாறதும். பேசி சிரிக்குறதும்" - சோம்நாத்.
வாயை பிளந்தார் லமி "இது வேறயா? பார்த்தீங்கள்ள உங்க மருமக லட்சணத்தை."
"பிரச்சனைக்கு உன் மகனின் அவசரப்புத்தி கூட காரணமா இருக்கலாம். எனக்கு பவ்யாவை பத்தியும் தெரியும் , உன் மகனை பத்தியும் தெரியும் விசாரிக்கலாம்." – வெங்கி.
"இனி விசாரிக்க எதுவும் இல்லைபா" – வைத்தி.
"அப்பா! அண்ணா கரெக்டா தா எதுவும் செய்வார். அண்ணி கொஞ்சம் அப்படித்தான்" – சோம்நாத்
"அதான் ஒருத்தர்க்கு இரண்டு பேர் சொல்றாங்களே. நீங்க ஏன் இன்னும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க. நம்ம மகனுக்கு தண்டனை கொடுத்தார்ல அதான் இப்படி படுறார்" – லமி.
"நிறுத்து லமி! சும்மா! நீ பாட்டுக்க இவனுங்களுக்கு பேசாத. உன் மகன் தப்பு பண்ணினான் அவர் தண்டனை குடுத்தார். இங்கன்றதால 30 நாளில் முடிஞ்சது. போலீசில் சொன்னா 7 வருஷம் தெய்யுமா?" - வெங்கி.
"ம்க்கும்.. அவர் சொல்றத நம்புவிங்க. நம்ம பிள்ளைகள நம்ம மாட்டிங்க" - லமி
"இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை. அப்படிலாம் முடிவு எடுக்க முடியாது. நிதாவுக்காகவாவது நாம் இதை பத்தி யோசிக்கணும்" - வெங்கி
"அப்பா! நிதாக்காகத்தான் அவளை வேண்டாம்னு சொல்றேன். அவ என் பொண்ணையும் கெடுத்திடுவா. என் பொண்ணாவது நல்லா வளரட்டும். – வைத்தி.
"அவளுக்கு அம்மா வேண்டும்டா" – வெங்கி.
"அதான் நீங்க இருக்கீங்களா! அப்புறம் எதுக்கு அம்மான்னு அவ" – வைத்தி.
"அப்ப நிதாவுக்கு நீ எதும் செய்யா மாட்ட நாங்க தான் பெத்தவங்களா இருக்கனும். அப்படித்தானே" என்று வெங்கி சொல்ல
சற்று நேரம் அமைதியாக இருந்த வைத்தி "இனி பேச்சு எதற்கு? அவ கூட வாழ இஷ்டமில்லை எனக்கு. என்னை விட்டுடுங்க" என்று வைத்தி கூறிவிட்டு நிதா வாங்கிக் கொண்டு ரூமின் உள்ளே சென்றுவிட்டார்.
வெங்கியும் வைத்தியை விட்டுப்பிடிக்கலாம் என்று பார்த்திருக்க வைத்தி மறுநாளே லமி, வெங்கி, நிதாவோடு லண்டனுக்கு புறப்பட ஏற்பாடுகளை பார்க்க சென்று விட்டார்.
சோம்நாத்தை வைத்தி அழைக்க அவன் 'இங்க இருக்குற பிசினஸை நான் பார்க்கணும் ண்ணா' என்று சொல்லி பெற்றோர்களை மட்டும் அழைத்து செல்லுமாறு கூறினான்.
வெங்கி எவ்வளவு மறுத்தும் வைத்தி பிடிவாதமாக அனைவரையும் அழைத்துச் சென்றுவிட்டார். இங்கு பவ்யா நிதா இல்லாமல் அழுது கரைந்தாள்.
மறுநாள் காலையில் விழித்த வீரபாண்டி பவ்யாவைக் கண்டு அதிர்ந்தார். அழுது கண்கள் வீங்கி போய் பவ்யா இருக்க அதை பார்த்த வீரபாண்டி,
"அம்மா! பவ்யா! எங்கம்மா போயிட்ட நேற்று நீயும் என்னைவிட்டு போயிட்டேன்னு பயந்துட்டேன்டா" என்று வீரபாண்டி கூற பவ்யா அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.
"இனி நிரந்தரமாய் உங்க கூட இருக்கத்தான் வந்துட்டேன்பா" – பவ்யா.
"என்னம்மா சொல்ற" – வீரபாண்டி.
"நான் சொல்றேன்யா" என்று அங்கு வந்த கண்ணப்பர் நடந்த அனைத்தையும் கூற அதை கேட்ட வீரபாண்டி
"நாம் யார்க்கு கெடுதல் செஞ்சோம் இப்படி என் இரண்டு பொண்ணும் வாழ்க்கையும் இப்படி ஆகிடுச்சே ஆண்டவா!" என்று அவர் கண்ணீர் வடிக்க இதை தூரத்தில் இருந்து பார்த்த மனோகருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
வைத்தி மற்றும் மனோகர் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள். வைத்தியைப் போல படிப்பில் சிறந்தவரான மனோகரை பார்த்த வைத்திக்கு கோபம் வந்தது. மனோகரை தனது எதிரியாக பார்க்க ஆரம்பித்தார். அதன்பின் வேலை கிடைத்து பக்கத்து ஊருக்கு மனோகர் சென்றுவிட வைத்தி பல தொழில்களில் முதலீடு செய்து தன் வருமானத்தை பெருக்கிக் கொண்டார்.
அப்போது தான் வைத்திக்கும், மனோகருக்கும் லண்டன் செல்ல வாய்ப்பு வந்தது. வைத்தியை பற்றி தெரிந்த மனோகர் தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை தொடர, வைத்தி லண்டன் சென்றார்.
பவ்யா கர்ப்பமாக இருக்கும் சமயம் அவர்கள் வீட்டிற்கு சென்று தான் பவ்யாவிடம் பேசும் போது வெங்கி புன்னகையுடன் வரவேற்று சென்றுவிடுவார். லமியும் தன் கன்னதை தோளில் இடித்துக் கொண்டு சென்று விட்டாலும் தங்களை சோமு அளவிடுவதை பார்த்த மனோகர் அதன்பின் அங்கு செல்வதையே குறைத்துக் கொண்டார். ஆனால் அன்று பவ்யா கால் செய்யவும் அவருக்கு தன் தேவை புரிந்து அவருக்கு உதவி புரிந்தார்.
அந்த உதவியினால் பவ்யாவின் வாழ்க்கை கேள்வி கூறி ஆனதை சகிக்க முடியாத மனோகர் ஒரு முடிவோடு பவ்யாவிடம் சென்று பேசினார்.
"பவ்யா! தெரிந்தோ தெரியாமலோ உன் வாழ்க்கை என்னால் கெட்டுப் போயிருச்சு. அதனால் நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன். எனக்கு லண்டனில் கிடைத்த வேலையை இவ்வளவு நாள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு இருந்தேன். ஆனா உன்னை பார்க்கும் போது அந்த வேலையை நான் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ நிதாவை பார்க்க அவளோடு பேச இது தான் சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும். என்னோடு லண்டன் வருகிறாயா?" என்று மனோகர் கேட்க பவ்யா மறுத்தார். அதன்பின் வீரபாண்டியும் , கண்ணப்பரும் பவ்யாவை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.
லண்டன் சென்ற பவ்யா தூரத்தில் இருந்து நிதாவை பார்த்து ரசித்தார். அதன்பின் நிதாவை வேறு நாட்டிற்கு அனுப்பி வைத்தார் வைத்தி. அதனால் பவ்யாவினால் நிதாவை காண முடியவில்லை. பவ்யாவும் தன்னை வீட்டிற்குள் அடைத்துக் கொண்டார்.
லண்டன் சென்ற மனோகர் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து மணந்து கொண்டனர். அதன்பின் சாம் பிறக்க சாம் பிறந்து அவனின் 2 வயதில் சாமின் தாய் இறந்துவிட பவ்யா அவனை வளர்த்தார். பவ்யாவிற்கு நிதாவின் ஏக்கத்தை சாம் குறைத்தான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 14
இங்கு சோம்நாத்தை கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்து ஜெயிலில் தள்ளியது. அவனின் மேல் பல கேஸ்கள் ஜோடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இங்கு லமியும், வெங்கியும் சோம்நாத்திற்கு முயற்சி பண்ண அவன் எடுக்கவில்லை . அதன்பின் வெங்கி தன் நண்பனுக்கு விசாரிக்க சோம்நாத்திற்கு தண்டனை அளிக்கப்பட்ட செய்தியை அறிந்து கவலை கொண்டனர். அதை கேட்ட வைத்தியோ இதுவும் வீரபாண்டியின் சூழ்ச்சி என்று திட்டித் தீர்த்தார். வைத்தி எவ்வளவு போராடியும் சோம்நாத்தை ஜாமீனில் எடுக்க முடியாமல் போக வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் வைத்தி.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் தண்டனை முடிந்து இப்போது தான் வெளியே வந்தார் சோம்நாத். அன்றிலிருந்து இன்றுவரை அந்த இரு குடும்பமும் எதிரிகளாக மாறினர்.
தரங்கிணியின் புகைபடத்தை தடவிப் பார்த்த சோம்நாத் "பேசாமல் என் கட்டுப்பாட்டில் இருந்து இருந்தா நீ செத்து இருக்க மாட்ட! தேவையில்லாம செத்து போய் என்னை கொலைகாரனா மாத்திட்டியேடி" என்று சொன்ன சோம்நாத் அருகில் வந்தான் அவன் நண்பன்.
"ஏன்டா! வீரபாண்டி அவரது பொண்ணு இன்னும் உயிரோட இருக்கான்னு தான் நினைச்சிட்டு இருக்கார். நீ அவள என்ன தாண்டா பண்ண" என்று அவன் கேட்க அதற்கு சிரித்தபடியே சொல்லத் தொடங்கினான் சோம்நாத்.
தரங்கிணியை தான் கொன்றதை சோம்நாத் தன் நண்பனுக்கு சொல்ல அதை கேட்டவன் அதிர்ச்சியானான்.
"டேய் நீ இவ்வளவு பெரிய கொடுமைகாரனாடா. எவ்வளவு வேலை பார்த்திருக்க.." என்று அவன் நண்பன் சொல்ல
அதை கேட்ட சோம்நாத் "பழிவெறியோடு பேசினான். அவளை சாம்பலா ஆக்கிட்டேன் டா.. என்னை பகைச்சவன் எவனுக்கும் இது தான் கதியா இருக்கும்" என்று சோம்நாத் சொல்லிவிட்டுச் சிரித்தான். "அது சரி அவள் தம்பியை என்னடா பண்ண?" என்று அவன் நண்பன் கேட்க ,
"அவனை தான் மிஸ் பண்ணிட்டேன்டா. அந்நேரம் அந்த சிறுசு எங்கேயோ போயிட்டான்" – சோம்நாத்.
"ஒரு வேளை அவன் உயிரோட இருந்தா உங்களை பத்தி தெரிஞ்சிருப்பான் ல டா" என்று அவன் நண்பன் கூறினான்.
"ம்ம்ம் அவன் உயிரோட இருந்தாலும் அவன் என்னை கண்டுபிடிக்க முடியாது" – சோம்நாத்.
"ஏன்டா அப்படிச் சொல்ற?" என்று நண்பன் கேட்க
"அவளை கடத்திட்டு வந்தாலும் யாரும் என் முகத்தை பார்க்க முடியாதபடி முகமூடி போட்டுதான் இருந்தேன். ஆதனால நானா சொல்ற வரைக்கும் உண்மை யாருக்கும் தெரியாது" என்று சொல்லி சோம்நாத் சிரிக்க அவன் கூட இருந்த அவன் நண்பனும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.
*****
அந்த இரவு நேரத்தில் அறைக்குள் நுழைந்த யவன் சுற்றி முற்றிப் பார்க்க அங்கு நிதா தென்படவில்லை.
'எங்க போயிட்டா! இவ..' என்று முணங்கியவாறு நிதாவை தேடிக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு பின்பக்கம் திரும்பினான்.
அங்கு நிதா கையில் கத்தியோடு யவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளது கையில் கத்தியைப் பார்த்த யவன் சுதாரிப்பதற்குள் அவனை தாக்க முற்பட அவளை தடுக்க நினைத்தும் முடியாமல் கத்தி அவன் மீது பாய்ந்தது. நெஞ்சில் கத்தியோடு கீழே சரிந்தான் யவன்.
அப்போது நிதா தோளை தொட்டது ஒரு கரம் திரும்பிப் பார்க்க சாம் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அவள் திடுக்கிட்டாள்.
"ஏய்! நீ என்ன பண்ணி வச்சிருக்க?" – சாம்.
"ஏன்! கரெக்ட்டா தான் பண்ணி இருக்கேன். இவன் உயிரோட இருந்தா எல்லாரையும் கொன்றுவான். அதான் நான் இவனை கொன்னுட்டேன்" – நிதா.
"ஏய்! என்னாச்சு? உனக்கு.. யாரை கொன்ன?" – சாம்.
"என் புருசனை கொன்னுட்டேன்டா அங்க பாரு" என்று அவள் திரும்ப அங்கு இருந்ததை பார்த்த நிதா திகைத்தாள் அங்கு கறி துண்டுகள் வெட்டப்பட்டிருந்தது .
அவளது திகைத்த முகத்தை பார்த்த சாம் நடந்ததை தானே யூகித்தபடி "என்ன உன் புருஷனை கொலை பண்ற மாதிரி கனவு கண்டியா?" – சாம்.
"ஆமாடா! ஆனா அதை இன்னைக்கு நைட் கண்டிப்பா செய்வேன்" – நிதா.
"என்னடி சொல்ற.. உன் புருஷனை கொல்லப் போறீயா??" – சாம்.
"ஆமாடா சாம். அவர் உயிரோட இருந்தா எல்லாரையும் கொன்றுவார்டா" – நிதா.
"வாட்! வேண்டாம் பேப்ஸ்.. எதாவது ஏடாகூடமா பண்ணாத... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக் கோ... நீ ஒருவேளை நினைக்குற அளவுக்கு அவர் மேல் தப்பில்லாம கூட இருக்கலாம்" என்று அவன் சொல்ல அவனது சொல்லை ஏற்க மறுத்தாள் நிதா. இருவரும் இங்கு வாக்குவாதம் செய்து கொண்டிருக்க உள்ளே வந்தான் யவன்.
மனு அருகில் வந்த யவன் சாமிடம் திரும்பி "என் பொண்டாட்டி கூட தனியா பேசனும் நீ கொஞ்சம் வெளியே போனா நல்லா இருக்கும்"எனறான். அதற்கு சாம் ஏதோ சொல்ல வர நிதா பேசினாள்.
"அதான் சொல்றார்ல சாம். நீ போ... நான் பாத்துக்குறேன்" என்று நிதா சொல்ல சாம் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் யவன் நிதாவிடம் திரும்பி "ம்ம்ம் என்ன பேபி நான் வந்ததுல இருந்து ஆள் கண்ணுக்கு தென்படவே இல்லை. என்ன என்னைப் பார்த்து பயமா? இல்லை வெக்கமா? எதுவா இருந்தாலும் அதை தீர்த்து வைக்கிற கடமை இருக்கு பார். உன் யவன் அத்தான்க்கு..." என்று கண் சிமிட்டியபடியே யவன் அருகில் வர இவள் அவன் முன் கத்தியை நீட்டினாள்.
"இன்னும் ஒரு அடி முன்னாடி வச்சீங்க.. நான் இந்த கத்தியால குத்த கூட தயங்க மாட்டான். இங்க தான் யாருமில்லை யே அப்புறம் எதற்கு இப்படி நடிக்குறீங்க" – நிதா.
"ம்ம்ம் பழசை நீ இன்னும் மறக்கல போல பேபி! அதை மறக்க வச்சு. உன் கூட புது வாழ்க்கை வாழ புது மனிதனா மாறி உன் முன்னாடி நிக்குறேன் பேபி" – யவன்.
"நீங்க மனிசனா! இல்ல நீங்க ராட்சஸன் எல்லார் உயிரையும் உரிஞ்சி குடிக்குற சாத்தான்" – நிதா.
"நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யல" - யவன்.
"நான் நம்ப மாட்டேன்" – நிதா.
"ஓகே.. நீ நம்ப வேண்டாம். அப்படியே என்ன ஏத்துக்கிட்டு என் கூட வாழ்ந்தா போதும்" – யவன்.
"வாழ முடியாதுனா?" – நிதா.
"நீ என்னடி என் கூட வாழ்றது. நான் உன் கூட வாழ தான் போறேன். உனக்கு பிடிச்சாலும் சரி. பிடிக்கலைனாலும் சரி" என்று கூறிய யவன் நிதா அருகில் வர நிதா கத்தியை கொண்டு அவனை குத்த முயன்றாள்.
அதை இலகுவாக தடுத்த யவன் அவளின் அருகில் செல்ல நிதா பின்னால் சென்றாள். ஒரு கட்டத்தில் வழி இல்லாமல் நிதா நிற்க யவன் சிரித்துக் கொண்டே அவளை நோக்கி குனிந்தான். அவள் பயத்தில் கண்களை மூட யவன் சிரித்தபடி அவளை விலகியவன் அங்கு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்ட அலமாரி கதவை தட்ட அதிலிருந்த சாஸ் பாட்டில் அவளை அபிசேகம் செய்தபடியே கீழே விழுந்து நொறுங்கியது. அதன் கண்ணாடி துண்டு அவளது காலை பதம் பார்க்க நிதா வழியில் 'ஆ' என்று கத்தினாள்.
அதை கண்ட யவன் அவளை அழைத்துக் கொண்டு போய் டேபிளில் அமர வைத்துவிட்டு வெளியே சென்றவன். முதலுதவி பெட்டி எடுத்துக் கொண்டு வந்து அவளது காயத்திற்கு மருந்திட்டான். முதலில் அவனிடம் காலை காண்பிக்க பயந்த நிதா அவன் சாதாரணமாக காயத்திற்கு மருந்திடுவதை பார்த்து யவனை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நிதா.
காயத்திற்கு மருந்திட்டதும் அவளிடம் திரும்பிய யவன் "போய்! முகத்தை வாஷ் பண்ணிட்டு வா பேபி.. முகம் முழுவதும் ஜாமா இருக்கு பார்"
"நோ! போக மாட்டேன்! இப்படி நிற்குறது என்ன புதுசா எனக்கு?" – நிதா.
அதை கேட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த யவன் பின்பு சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்.
"நீ சொல்வதும் சரிதான். எதுக்கு வாஷ் பண்ணிட்டு.. நான் தான் இருக்கேன்ல" என்று கூறிய யவன் அவளது கைகளை பற்ற நிதா விற்கு பயம் பிடித்துக் கொண்டது.
"என்ன செய்யப் போறீங்க? பக்கத்தில் வராதீங்க? கையைவிடுங்க" என்று நிதா கத்த அவளது கைகளை பிடித்திருந்தவன் அவளை அருகில் இழுத்தான். அவளது முகத்தினை பற்றி அவளது வெற்றியில் இருந்த சாஸை தன் நெற்றியால் அவன் உரசி எடுக்க கூச்சத்தில் நெளிந்தாள் நிதா.
அதன் பின் அவளது கண்களில் ஒட்டி இருந்ததை தன் பெருவிரல் கொண்டு மென்மையாக வழித்து எடுத்தான். அதன் பின் மூக்கில் ஒட்டி இருந்ததை தன் மூக்கால் உரசி எடுத்தான். அதன்பின் அவள் கண்ணங்கள் என்று அவன் செய்ய செய்ய நிதா தன் கைகளை இருக்கமாக மூடிக் கொண்டு தன் கூச்சத்தை மறைத்தாள்.
இறுதியில் அவன் இதழ் நோக்கி குனிய வேகமாக சுதாரித்து நிதா விலக அவளை விலகவிடாமல் தன் இதழில் தன் ஆட்சியை அரங்கேற்றினான் யவன்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 15
யவன் நிதாவை அங்கு தன் வசப்படுத்திக் கொண்டிருக்க இங்கு சமோ கை விரல் நகங்களை டென்சனில் கடித்து துப்பிக் கொண்டிருந்தான்.
"யாராவது வருகீறார்களா?” என்று நடை பயின்ற வண்ணம் கிட்சனின் வெளியே சாம் காவல் காத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்தாள் சவிதா.
சவிதா கிட்சன் நோக்கி விரைய அதை பார்த்த சாம் அவளை தடுத்து நிறுத்தினான். சாம்மை கேள்வியாக பார்த்த சவிதா அவனை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றாள்.
"யோவ்! லண்டன் குரங்கு! தள்ளுயா நான் உள்ளே போகனும்" – சவிதா.
"ஏய்! இப்ப போகாத.. வேண்டாம்" – சாம்.
"அதெல்லாம் முடியாது. நான் போவேன்" – சவிதா.
"முடியாது.. நான் உன்னை போகவிட மாட்டேன். இப்ப கிட்சனுக்குள் என் பேபி இருக்கு. சோ நீ போகாத.." – சாம்
"பேபியா! அது யாரு?" – சவிதா.
"அது எதுக்கு உனக்கு? இப்ப உள்ளே நீ போகக் கூடாதுனா போகக் கூடாது" – சாம்.
"அதெல்லாம் முடியாது தாத்தாக்கு வெந்நீர் வைக்கனும். நான் உள்ளே போயே ஆகனும்" – சவிதா.
"நான் சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்க உள்ளே போகனும்னு அடம்பிடிக்கிற.. அப்புறம் பின் விளைவுகளை நீ சந்திக்க வேண்டி இருக்கும்" – சாம்.
"அப்படி என்ன விளைவு வரப் போகுது லண்டன் குரங்கு" – சவிதா.
"ஏன் அதை சொன்னா தான் அம்மையார் போகாம இருப்பீங்களோ?” – சாம்.
சாம் விமலாவை கிட்சனுக்குள் போகவிடாமல் இங்கு தடுத்துக் கொண்டிருந்தான். ஒரு வித மோன நிலையில் இருந்த நிதாவும் யவனும் சாமின் சத்தம் கேட்டு விலகினர்.
இப்படியாக சாம் சவிதாவுடன் வாக்குவாதம் செய்து கொண்டு அவளை கிட்சனுக்குள் போகவிடாமல் இங்கு தடுத்துக் கொண்டிருந்தான்.
இங்கு ஒரு வித மோன நிலையில் இருந்த நிதாவும் யவனும் சாம் மற்றும் சவிதாவின் பேச்சு சத்தம் கேட்டு சட்டென்று விலகினர்.
வெளியில் வந்த இருவர் முகத்திலும் சாஸ் ஒட்டியிருக்க அதை பார்த்த சவிதா ஆவென்று வாயை பிளந்து கொண்டு நின்றாள்.
நிதா அங்கு நின்றிருந்த சாமையும் சவிதாவையும் பார்க்க வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டே போக சாமின் அருகில் வந்த யவன் "காவல் காத்ததுக்கு நன்றி மச்சான்" என்று அவன் சொல்லிவிட்டு செல்ல
"ம்ம்ம் இன்னும் விளக்கு மட்டும் தான்டா பிடிக்கலை.. அதையும் என்னை பிடிக்க வச்சிடாதீங்கடா.. இதுகளை ஜோடி சேர்க்குறதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிடுவேன் போல" என்று சாம் முணுமுணுக்க சவிதா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். அவளது பார்வையின் பொருளை படித்தவன் 'இவ கூட என்னை கேவலமா லுக் விட்டுட்டு போறா.. தேவையா எனக்கு..' என்று சாம் தனக்குள் புலம்பிக் கொண்டான்.
யவன் சென்றதும் சாமின் அருகில் வந்த சவிதா “எப்படி இரண்டு பேர் முகத்திலும் சாஸ் இப்படி ஒட்டிட்டு இருக்கு?” – என்று சந்தேகம் கேட்டாள்.
"உனக்கு எப்படி ஆச்சுனு தெரியனுமா?" – சாம்.
"ஆமாயா" – விமலா.
"வா என் கூட.." என்று அவளை கிட்சனின் உள்ளே அழைத்துச் சென்ற சாம் இன்னோர் சாஸ் பாட்டிலை எடுத்து அவளது முகத்தில் கொட்ட அதை கண்ட சவிதா கோபமாகி மீதியிருந்ததை அவனது முகத்தில் கொட்டினாள்
இருவரும் சாஸ் அப்பிய முகத்தோடு நிற்க சாம் அவளிடம் "இப்ப தெரிஞ்சிடுச்சா? எப்படி கொட்டுச்சுன்னு" என்றான்.
"ஆனாலும் எனக்கு சந்தேகமா இருக்கு! ஆனா ஜாம் முழுசா இல்லாம அங்க இங்க ஒட்டிகிட்டு இருந்துச்சே" – சவிதா.
'இவ கொஞ்ச நேரத்துல இவ்ளோ நோட் பண்ணிருக்காலே' என்று நினைத்த சாம் "அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் எடுத்து விட்டுறுப்பாங்க"
"ஆமா எப்படி முகத்தை கழுவாம சாஸை எடுக்க முடியும்" - சவிதா.
"கண்டிப்பா உனக்கு தெரியணுமா" - சாம்.
"ஆமா" - சவிதா.
"இந்தா இப்படித்தான்" என்று சவிதா கன்னத்தை பற்றிக் கொண்டு அருகில் வர வேகமாக அவனை தடுத்தாள் சவிதா.
"யோவ்! யோவ்! புரிஞ்சிடுச்சு. இனி நான் சந்தேகம் கேட்டா நீ வாயால சொன்னா போதும்.. செய்தெல்லாம் காமிக்க வேண்டாம்" என்று சவிதா சாமிடம் பேசிக் கொண்டிருக்க, "அட பாவமே..." என்று பவ்யாவின் சத்தம் கேட்டு திரும்பினார்கள் இருவரும்.
"என்னடா நடக்குது இங்க. சாஸை சாப்பிட்டு தான் பார்த்திருக்கேன். இப்படி முகத்தில கொட்டி விளையாடுறத இப்பத்தான் பாக்குறேன். இருந்த இரண்டு பாட்டிலையும் காலி பண்ணிட்டீங்களாடா. இனி சாஸில் விளையாடப் போறேன்னு முதலிலேயே என்கிட்ட சொல்லிடுங்க. அப்படி சொல்லிட்டா இன்னும் இரண்டு பாட்டில் சேர்த்து வாங்கி வைப்பேன். நல்ல பிள்ளைங்க தான் போங்க. போய் முகத்த கழுவுங்க.. ஈ மொய்க்க போகுது" என்று பவ்யா சிரித்தபடியே கூறிவிட்டு செல்ல அதை கேட்ட சாம் சத்தமாக சிரித்தான்.
"என் அத்தை சோ ஸ்வீட்ல.." என்று சாம் சிரித்தபடியே கூறி சவிதாவை பார்க்க அவள் அவனை முறைத்துக் கொண்ட தன் வேலையை பார்க்கச் சென்றாள்.
*****
சோம்நாத் தன் வீட்டில் குடித்துக் கொண்டு போதையில் இருக்க அவனது எதிரில் வந்து நின்றனர் அவர்கள் .
அவர்களை பார்த்ததும் தன் விஸ்கி பாட்டிலை தன் பின்னால் மறைத்தபடியே சோம்நாத் எழ அவனை அறைந்திருந்தார் வைத்தியநாதன். இதை கண்டு லமி வருத்தப்பட வெங்கியோ நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
வைத்தியை அங்கு சற்றும் எதிர்பார்க்காத சோம்நாத் வைத்தி அடித்ததும் அதிர்ச்சியில் எழுந்து நின்றார்.
"அண்ணா..." என்று அவன் கண்ணத்தை பிடித்தபடியே வைத்தியைப் பார்த்தான்.
"எத்தனை நாளாடா! இந்தப் பழக்கம்?" – வைத்தி.
"இப்ப கொஞ்ச நாளா தான் அண்ணா.. என்னால அந்த நாளை மறக்க முடியலை அதான் குடிச்சேன்." – சோம்நாத்.
"அதுக்காக குடிப்பியா?" - வைத்தி.
அதற்கு அமைதியாக தலைகுனிந்தபடியே நின்றான் சோம்நாத்.
"எப்படா ஜெயிலில் இருந்து வந்த?" – வைத்தி.
"நேற்று தான் அண்ணா வந்தேன்" என்று சோமு சோகமாக கூற சற்று தணிந்தார் வைத்தி.
"அந்த நாளை மறக்க முயற்சி பண்ணுடா சோமு! தனிமைல இருக்குறதால தான் உனக்கு இப்படிலாம் புத்தி போகுது. அதான் நாங்க வந்துட்டோம்ல. இனி உன்னை நான் நல்லபடியா பார்த்துக்குறேன்" என்று வைத்தி சொல்லியபடியே அவனை கட்டிக் கொள்ள
சோம்நாத் 'ம்ம்ம் நீ என்னை பார்த்துக்குறீயா! குட் ஜோக்டா' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டார்.
"நீ இருக்குற வரை எனக்கு கவலை இல்லை அண்ணா" என்று சோமு கூற அவன் சூதுவாது அறியாத வைத்தி அவனை பாவமாக நினைத்துக் கொண்டார். .
வெங்கி மட்டும் சோம்நாத்தை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனது செயலும் வார்த்தையும் அவருக்கு முன்னுக்கு பின் முரண்பாடாக இருந்தது. ஆனால் லமிக்கு அப்படி தோன்றவில்லை போல லமி பல நாள் கழித்து பார்த்த தன் மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.
சோம்நாத்தின் செயலில் நிதாவை மறந்த வெங்கிக்கு அப்போது தான் நிதாவின் நியாபகம் வந்தது.
அதன் பின் வைத்தியிடம் திரும்பிய வெங்கி "நாங்க போய் மனுவை பார்த்துட்டு வர்றோம்பா"
"அங்கே எல்லாம் நீங்க போக வேண்டாம்பா" – வைத்தி
"இல்லை என்னால நிதாவை பார்க்காம இருக்க முடியாது" என்று லமி சொல்ல வைத்தி அவர்களை தடுத்தார்
"முடியாது அவங்க வீட்டுக்கு நீங்க போகக் கூடாது. நான் உங்களை விடமாட்டேன்" என்று கூற,
லமி அதெல்லாம் முடியாது என்று அடம்பிடித்து 2 நாள் அங்கு தங்க வைத்தியிடம் அனுமதி வாங்கிக் கொண்டார்.
லமி மற்றும் வெங்கி அங்கு வீரபாண்டி வீட்டிற்கு செல்ல இவர்களை கண்ட நிதா ஆர்வமாக வரவேற்று அணைத்துக் கொண்டாள் .
"லமி! ஐ மிஸ் யூ சோ மச்! என்னை தேடி வந்துட்டியா?" – நிதா.
"ஆமா! நிதா மா! எங்களுக்கு நீ இல்லாம அங்க இருக்க முடியலை. அதனால் நாங்களும் இங்க வந்துட்டோம்" என்று வெங்கி சொல்லிக் கொண்டிருக்க யவன் வருவதை கண்ட லமி வேகமாக அவனிடம் சென்றார்.
யவனைப் பார்த்ததும் ஆசையாக வரவேற்றார் லமி "அட தம்பி? நீங்களும் இங்க தான் இருக்கீங்களா? ஆமா இத்தனை நாள் நீங்க எங்க போயிட்டீங்க? நீங்க இல்லாம நிதா சரியாக சாப்பிடல தூங்கல?" என்று சொல்ல நிதாவை பார்வையால் துளைத்தான் யவன்.
"அப்படியா லமி! வேலை விசயமா வெளியூர் போயிருந்தேன். அதான் பார்க்க முடியல. அதான் வந்துட்டேன்ல. இனி நிதாவை விட்டு எங்கும் போக மாட்டேன்." – யவன்.
"ரொம்ப சந்தோசம் தம்பி" என்று கூறிய லமி பின்னால் வந்த பவ்யாவை பார்த்து கோபமானார்.
அதைப் பார்த்த பவ்யா வருத்தமடைய நிதா லமியிடம் வந்தாள் "லமி! என் அம்மா தப்பு பண்ணலை. ப்ளீஸ் அவங்களை இப்படி முகத்தை திருப்பி கஷ்டப்படுத்தாதீங்க"
"இல்லை நிதா! அவளை பத்தி உனக்கு தெரியல. அவ உன்னை ஏமாத்துறா" – லமி.
"இல்லை லமி! இவ்ளோ நாள் அவங்ககூட இருந்தனால சொல்றேன். என் அம்மா ஒரு தப்பும் செஞ்சிருக்க மாட்டாங்க" – நிதா.
"அப்ப நீ உன் அப்பாவை குறை சொல்றியா?" – லமி.
"அம்மா நிதா! வைத்தி கோபக்காரன் தான். ஆனால் இப்படி உடனே முடிவு எடுக்க மாட்டான்" – வெங்கி.
"அப்ப என் அம்மா தான் தப்புனு சொல்றீங்களா தாத்தா" - நிதா.
"இல்லைமா! எங்கேயோ தப்பு நடந்திருக்குனு சொல்றேன்மா. அது காலம் வரும் போது தெரியும். தேவையில்லாமல் இரண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க" - வெங்கி.
அப்போது யவன் நிதாவை சமாதானப்படுத்தினான் "நிதாமா! யாரையும் பேச வைக்க கம்பெல் பண்ணாத. அவங்களா உணர்ந்து பேசினாத்தான் உறவு நிலைக்கும். உண்மை என்னனு கூடிய சீக்கிரம் வெளிய வரும்" என்று யவன் யோசித்தபடியே கூற நிதா அமைதியானாள்.
சூழ்நிலையின் வீரியத்தை குறைக்க சாம் இடையில் பேசினான்.
"லமி ஸ்வீட்டி! ஐ மிஸ் யூ சோ மச்" என்று லமியை சாம் கட்டிக் கொள்ள லமி அவனை முறைத்தார்
"ஏய் வெங்கல சாமான்! என்னை ஸ்வீட்டினு கூப்பிடாத. என்னையவே இப்படி கூப்பிட்டு சுத்தாம வேற பொண்ணை பிடி" - லமி.
"முடியாது லமி! எனக்கு நீ தான் வேணும்" – சாம்.
“……” - - லமி.
"ஹலோ சும்மா பேச்சுக்கு சொன்னதை உண்மைனு நினைச்சுக்குவீயோ பல்லு போன வயசில் லூட்டி அடிச்சிட்டு திரியுற.. உனக்கு மனசில அழகினு நினைப்பா கிழவி!" – சாம்

"ஏய் வெங்கல சாமான். யார பார்த்து கிழவின்னு சொல்ற" - லமி.
"ஏன் உன்னதான்.. பாரு வெங்கி தாத்தா எப்பிடி இருக்காருன்னு. பல்லு போன வயசில் லூட்டி அடிச்சிட்டு திரியுற! உனக்கு மனசில அழகினு நினைப்பா கிழவி! சும்மா பேச்சுக்கு சொன்னதை உண்மைன்னு நினைச்சுக்குவீயோ" – சாம்.
அதை கேட்ட லமி அவனை துரத்த சாம் தெறித்து ஓடினான். இதைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்.
அன்று இரவு நிதா அறைக்குள் செல்ல அவளை பின்பற்றி யவனும் உள்ளே வர நிதாவிற்கு உதறல் எடுத்தது. நிதாவை பார்த்துக் கொண்டே யவன் அருகில் வர நிதா வேகமாக
"தூரம் போ! சைத்தானே! கிட்டவராதே!" என்று கூறியபடியே சாமி படத்தை அவள் காண்பிக்க யவன் சிரித்துக் கொண்டே அந்த படத்தை வாங்கி அருகில் வைத்தான்.
"நான் ராட்சஷனா வரல? யவனா தான் வந்துருக்கேன்?" – யவன்.
"இல்லை நீ பொய் சொல்லி என்னை ஏமாத்துற? நீ சாத்தான் தான்" – நிதா.
"நீ நம்புவதற்கு நான் என்ன செய்யனும் டாலிமா? உன் மேல சத்தியமா நான் உன் யுவன் அத்தான் தான்" என்று அவன் கை வைக்க அருகில் வர இவள் தள்ளிச் சென்றாள்.
"நீ தான் செத்துட்டியே அப்புறம் எப்படி?" – நிதா.
"அது... அது வந்து... சில விசயங்கள் சொல்ல முடியாது. சில விசயங்களை அதன் போக்கில் எடுத்து கொள்ள பழகிக்கணும். இப்ப இருக்குறது உன் யவன் அத்தான் தான். அதான் நிஜம். என்னை நம்பு" என்று யவன் சொல்ல நிதா அதை ஏற்றுக் கொள்ள மறுத்தாள்.
"அப்புறம் உன் இஷ்டம்" என்று கூறிவிட்டு யவன் சென்று படுக்கையில் படுத்துக் கொள்ள நிதா தன் நகத்தை கடித்தபடியே யோசனையில் அமர்ந்தாள். அப்போது அவளுக்கு அந்த ஐடியா தோன்ற அதை செயலாற்ற லமியை தேடிச் சென்றாள் மனுநிதா.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 16

காலையில் வெளியே வந்த பவ்யா அங்கு நின்றிருந்த நபரை கண்டு வேகமாக ஓடி வந்தார்.

"அண்ணா! வந்துட்டீங்களா?" – பவ்யா..

"ஆமாமா! நீ எப்படி இருக்க.." – மனோகர்.

"ம்ம்ம் நல்லா இருக்கே ண்ணா. என்ன இப்படி சொல்லாம வந்துட்டீங்க. ரொம்ப சர்ப்பரைசா இருக்கு ண்ணா"! – பவ்யா.

"இல்லையேமா சாமிற்கு தெரியுமே! அவன் சொல்லையா??" – மனோகர்.

"இல்லை ண்ணா!" என்று பவ்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் சாம்.

"டேட்... எப்படி இருக்கீங்க? வி மிஸ் யூ டேட்" என்று சாம் அவரை கட்டிக் கொள்ள சவிதா மற்றும் கண்ணப்பர் அங்கு வந்தனர்.

கண்ணப்பரை பார்த்ததும் "அப்பா!" என்று மனோகர் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க அனைவரும் மனோகரின் முன் கூடி இருந்தனர். யவன் தூரத்தில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவரும் மனோகரின் வரவை சந்தோசமாக கொண்டாட லமி மற்றும் வெங்கி மட்டும் தனித்து அமைதியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.

*****

இங்கு சோம்நாத் வைத்தியிடம் "அண்ணா! பார்த்தீங்களா? நம்ம அம்மா அப்பாவை கூட அண்ணி அவங்க பக்கம் இழுத்து வச்சிருக்காங்க. உங்களையும் அவங்க ஏமாத்த போறாங்க அண்ணா! அதுமட்டுமல்ல வீரபாண்டி விவரமானவர் ஊரில் பேரும் புகழும் வாங்கனும்ன்னு என் மேல் இல்லாத பழி எல்லாம் போட்டு என்னை ஜெயிலுக்குக் அனுப்பி வைச்சவர் உங்களையும் எதாவது பண்ணிடப் போறார்... பார்த்து கவனமா இருங்கண்ணா.

அதே மாதிரி அண்ணியையும் சாதாரணமா எடை போடாதீங்க ண்ணா? லண்டனில் அடிச்ச கூத்த இங்கேயும் தொடர மனோகரை இங்கேயும் வர வச்சிட்டாங்க ண்ணா" என்று சோம்நாத் சொல்ல வைத்தி கொதித்துவிட்டார்.

வேகமாக அவர் வீரபாண்டி வீட்டிற்கு புறப்பட இங்கு சோம்நாத் வெற்றி சிரிப்பு சிரித்தான்.

"அண்ணா! நீ எப்பவும் சுயமா யோசிக்கக் கூடாது. அப்படி நீ யோசிக்கவும் விட மாட்டேன்" என்று கூறி சிரித்தான் சோம்நாத்.

*****

"நிதா வேண்டாமா அந்த புள்ளய ஏன்மா இப்படிலாம் பண்ற விட்டுறுமா?" என்று நிதாவை கெஞ்சிக் கொண்டிருந்தார் லமி.

"உனக்கு எதுவும் தெரியாது லமி! சும்மா இரு.. நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லியபடி நிதா பாத்ரூம் வாசலில் ஏதோ செய்து விட்டு அருகில் இருந்த ரூமில் ஒளிந்து கொண்டாள்.

"ஏன் நிதா இப்படிலாம் செய்ற? உன் விளையாட்டிற்கு அந்த தம்பி தான் கிடைச்சானா" – லமி.

"நீ அவருக்கு சப்போர்ட் பண்ணாத லமி. என்னை தவிக்கவிட்டு போனார்ல அதுக்கு இது தான் பனிஷ்மெண்ட்" – நிதா.

"இருந்தாலும் நிதா.." – லமி.

"ச்சூ! பேசக்கூடாது. நடக்கறதை வேடிக்கை பாருங்க" – என்று நிதா லமியை அடக்க

சற்று நேரத்தில் 'ஆ' என்ற அலறல் சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.

அதனை அடுத்து 'எஸ்..!' என்று தன் கையை வைத்து வெற்றி குறி செய்த நிதா பாத்ரூம் நோக்கி செல்ல அங்கு கண்ட காட்சியில் திகைத்தாள்.

அங்கு சாம் கீழே இருக்க அவன் மேல் படுத்து கிடந்தார் கண்ணப்பர். அனைவரும் அந்த காட்சியை பார்த்து சிரித்தனர்.

"கிராண்பா! கெட் அப்" – சாம்.

"இருடா! என் கண்ணாடியை கானோம்னு தேடிட்டு இருக்கேன்" – கண்ணப்பர்.

"அய்யோ தாத்தா! கண்ணாடி உங்க தலை மேல் இருக்கு சீக்கிரம் போட்டுகிட்டு எழுந்திருங்க" – சாம்.

"அட ஆமாண்டா பேராண்டி! இங்க இருக்கு!" என்று அதை அணிந்தவர் சாமை பார்த்து

"அட பேராண்டி! நீங்க இங்க படுத்துட்டு என்ன பண்ற" – கண்ணப்பர்.

"ம்ம்ம் கணக்கு பார்த்துட்டு இருக்கேன்" – சாம்

"ஏன்டா! இந்த நாத்தத்தில் தான் நீ கணக்கு பார்ப்பீயா! அதுவும் படுத்துகிட்டே பார்ப்பீயா" – கண்ணப்பர்.

"அய்யோ! தாத்தா! வழுக்கி விழுந்துட்டேன். நீங்க என்மேல் விழுந்திருக்கீங்க! கொஞ்சம் எழுந்திருங்க.. அப்புறம் சாவகாசமா கேள்வி கேளுங்க" – சாம்.

"அட ஆமாடா!" என்று எழுந்த கண்ணப்பர்

"ஆமா ஏன்டா நீ என்ன சின்ன பிள்ளையா... இப்படி வழுக்கி விழுந்துகிடக்க" - கண்ணப்பர்.

"யாராவது வேணுமே விழுவாங்களா? நீங்க தான் தாத்தா என்னை தள்ளிவிட்டீங்க.." – சாம்.

"என்னது! நான் தள்ளிவிட்டேனா! என்னடா சொல்ற" – கண்ணப்பர்.

"ஆமாம் தாத்தா நீங்க காலை அந்த எண்ணெய்யில் வைக்க போனீங்க உங்களை காப்பாத்த போய் நான் இப்படி கிடக்குறேன்" – சாம்

"சாம் அப்படி சொன்னதும் தன் மூக்கு கண்ணடியை அணிந்து கீழே பார்த்த கண்ணப்பர் ஆமா? இங்க எப்படிடா எண்ணெய் வந்துச்சு" என்று அவனையே கேள்வி கேட்டார் .

"ம்ம்ம்... என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும்?” – சாம்.

இப்படி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க , அதற்குள் அங்கு அனைவரும் கூடிவிட்டனர். சாமை நோக்கி வந்தார் பவ்யா.

"என்னடா ஆச்சு" – பவ்யா.

"ஏன்டா பார்த்து வரமாட்டீயா?" – மனோகர்.

என்று ஆளாளுக்கு கேள்வி கேட்க நிதா மற்றும் லமி திருட்டுமுழி முழித்தனர். அதை கண்டு கொண்டான் யவன்

சாம் நடந்ததை விளக்க ஆரம்பித்தான்.

பாத்ரூமிற்கு வலப்பக்கம் சாம் வந்து கொண்டிருக்க இடப்பக்கமாக கண்ணப்பர் வந்து கொண்டிருந்தார். அங்கு பாத்ரூம் வாசலில் விளக்கெண்ணையை நிதா கொட்டி வைத்திருக்க அதை பார்க்காமல் கண்ணப்பர் கால் வைக்க அவர் வழுக்கியபடியே சாமையும் இழுத்துக் கொண்டு விழுந்தார். நடந்ததை சாம் சொல்லி முடிக்க சற்று நேரம் அமைதியாக இருந்தது. அதை கலைக்கவென பேசினார் கண்ணப்பர்.

"ஏன்டா! பேராண்டி! நீ பயங்கர கேடிடா! யாரையோ கரெக்ட் பண்ண நீயே கூட இதை செஞ்சிருப்படா" – கண்ணப்பர்.

அதை கேட்டு தன் முதுகை பிடித்தபடியே எழுந்த சாம் "ஆமா! இந்த ஊர் பொண்ணுங்களை கரெக்ட் பண்ணிட்டாலும் எல்லாம் சண்டிராணியா இருக்குதுங்க. கிழவி கூட ஆட்டம் போடுது" என்று லமியையும் , சவிதாவையும் பார்த்தபடியே சாம் கூற, சவிதா கொதித்துவிட்டாள்.

"யோவ்! நீ பெரிய மன்மதன்! வெள்ளைப்பன்னி மாதிரி இருந்துகிட்டு இதுலா தேவையா உனக்கு" – சவிதா.

"என்ன நீ? நான் வேணும்னே கொட்டி வச்ச மாதிரி பேசுற?” – சாம்.

"ஆமா அதில் என்ன சந்தேகம்?” – சவிதா.

"நான் இதை செய்யல" – சாம்.

"அப்ப யார் இதை கொட்டினது?" – சாம்.

சாம் அப்படி சொன்னதும் வேகமாக இடையில் புகுந்த யவன் "ஹலோ! ஏன் இவ்வளவு ஆர்க்யூமெண்ட்ஸ்! யாரோ தெரியாமல் இதை கொட்டி இருப்பாங்க. எல்லாரும் போங்கப்பா" என்று யவன் சொல்ல அனைவரும் சென்றனர்.

"ஹலோ! ஏன் இவ்வளவு ஆர்க்யூமெண்ட்ஸ். யாரோ தெரியாமல் இதை கொட்டி இருப்பாங்க. அதை ஏன் பெரிசுபடுத்துறீங்க? எல்லாரும் போய் அவங்க வேலையை பாருங்க" என்று யவன் சொல்ல சாம் தன் இடுப்பை பிடித்து கொண்டே நடக்க அதை பார்த்த சவிதாவிற்கு பாவமாக இருந்தது.

ஆகையால் அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு அவள் அருகில் சென்ற சவிதா "யோவ்.. என்னை வேணா பிடிச்சுட்டு நடய்யா" என்று அவள் சொல்ல சாம் இது தான் சாக்கு என்று அவளது தோளில் கைப் போட்டு அவளை அருகில் இழுத்துக் கொண்டான். ஆனால் சவிதாவிற்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது.

"ஏன்டா கேட்டோம்?" என்று நொந்தபடியே அவனை அழைத்து கொண்டு சென்றாள்.

அப்போது யவன் நிதாவின் கையை பிடித்து நிறுத்தினான்.

"என்ன மேடம்! நீங்க எங்க போறீங்க?" – யவன்.

"ஏன் என்னாச்சு?" – நிதா.

"ம்ம்ம் எதுக்கு நீ இந்த தேவையில்லாத வேலை பார்க்குற"- யவன்.

"நான் என்ன வேலை பார்த்தேன். அப்படி ஒன்றும் நான் செய்யலையே.." என்று கூறிய நிதா லமியை அழைக்க லமி வேகமாக "புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். நாங்க எதுக்குமா நடுவில்" என்று சொல்லிவிட்டு லமி சென்றுவிட நிதா திகைப்பாக நின்றாள்.

"ம்ம்ம் சொல்லு எதுக்கு அப்படி செஞ்ச?" – யவன்.

"அது..." என்று கூறி யவன் அருகில் வந்தவள் அவன் காதின் அருகில் வந்து "இதுக்குத்தான் செஞ்சேன்" என்று யவனை கீழே தள்ள யவன் அந்த எண்ணெயில் கால் வைத்து வழுக்கி விழுந்தான்.

"அம்மா!" என்று அவன் கத்த, திரும்பி வந்து பார்த்த பெரியவர்கள் அங்கு யவன் விழுந்து கிடப்பதை பார்த்துவிட்டு "ச்சூ இதுகளுக்கு வேறு வேலையே இல்லை" என்று நினைத்தவர்கள் யாரும் வரவில்லை. வேகமாக அவனை தூக்கிவிட்ட நிதா அவன் கால்களை பார்த்தால் லைட்டாக சுளுக்கு பிடித்ததே தவிர வேறு காயங்கள் இருப்பதாக தெரியவில்லை.

இவள் யவனை ஆராய்ந்து கொண்டிருக்க, அவன் பொறுமை இழந்து கத்தினான் "வலியில் கத்திட்டு இருக்கேன்... என்னடி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க"

யவன் கத்துவதை கேட்டு அங்கு வந்த சாம் "ஓ நீ தான் டார்கெட்டா மாம்ஸ்! நான் வலிய வந்து சிக்கிட்டேனா..." என்று கூறி,

அருகில் வந்தவனை தோளில் கை போட்டு இழுத்து கீழே தள்ளிவிட்டுச் சென்றான்.

யவன் அருகில் அமர்ந்து அவன் காலை பிடித்துக் கொண்டிருந்த நிதா, சட்டென்று வெளியே செல்ல குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

வெளியே சென்று உள்ளே வந்த நிதா கைகளில் உலக்கை இருந்தது. அதை கண்ட யவன் பயத்தில் எச்சில் விழுங்க தன் வலியை பொறுத்துக் கொண்டு பெட்டின் பின்னால் ஒதுங்கி நின்றான்.

சாம் நிதாவின் செயலை பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்தான்.

"யவன் சார்! இப்ப நிதா டைம் ஆரம்பிச்சிடுச்சு. என்ஜாய்" என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.

சாமும் இல்லை என்றதும் யவனுக்கு பயம் மேலும் அதிகரித்தது.

"எதுக்கு இது?" - யவன்.

"இதுல தேச்சா! வலி போயிடும்" என்று நிதா சொல்ல

ஹேய் தைலம் தேய்ச்சா போதாதா? - யவன்.

"இல்ல இதுல தேய்ச்சா 2ஹவர்ஸ் ல சரியகிடும். தைலம்னா 2 டேய்ஸ் ஆகும்" - நிதா.

"பரவாயில்ல.. இது வேண்டாம் தைலம் தேய்ச்சே சரி ஆகட்டும்" – யவன்.

"ஓ! ஒகே" என்று சொல்லிய நிதா மறுகையில் இருந்து கத்தியை எடுக்க அதை பார்த்த யவன் எச்சில் விழுங்கினான்.

"இது எதுக்கு???" – யவன்.

"ம்ம்ம் இதை நறுக்கத்தான்.." என்று கூறி அருகில் இருந்த அந்த சிறிய அளவிலான காகித பையை அவள் பிரிக்க அவளது செய்கையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் யவன் .

"ஏய்! இந்த பாக்கெட்டை பிரிக்க எதுக்குடி இவ்வளவு பெரிய கத்தி கையால பிரிச்சா வந்துரப்ப போகுது" என்று அவன் சொல்ல

அதற்கு நிதா "எனக்கு தெரியாத அது? பிரிக்க முடியலன்னு தான் இதை எடுத்து வந்தேன்" என்று கூறியபடி கையில் இருந்ததை பிரித்தால்.

அவள் பிரித்து உள்ளே இருப்பதை டம்ளரில் ஊற்ற யவன் அந்த பானத்தை பார்த்து அதிர்ந்தான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 17

மனோகர் வந்ததும் தன் அறையின் அருகில் உள்ள அறையை பவ்யா ரெடி செய்தார். அவர்கள் இருவரும் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களும் சேர்ந்தே இருக்க இதை பார்த்த லமி வெங்கியிடம் புலம்பினார் .

"பார்த்தீங்களா? இத்தனை பேர் இருக்கோம் எவ்வளவு தைரியமா அவன் கூட சிரிச்சு பேசிட்டு திரியுறா பாருங்க".

"வாய்க்கு வந்தபடி பேசாத லட்சுமி. தப்பு செய்றவங்க இப்படி எல்லோர் முன்னிலையிலும் இப்படி பேசிட்டு இருக்க மாட்டாங்க. நாம ஒரு தப்பு பண்ணிட்டோம் லட்சுமி பவ்யா பக்கத்து நியாயத்தை கேட்காமலேயே போயிட்டோமே" என்று வெங்கி சொல்ல லமி கொதித்துவிட்டார்

"நீங்க தான் மெச்சிக்கணும் உங்க மருமகளை.." என்று நொடித்துவிட்டுச் சென்றுவிட்டார் லமி.

ஆனால் வெங்கி மட்டும் பவ்யாவிடம் தனித்து பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு வாய்ப்பும் வந்தது.

பவ்யா தனித்து தன் ரூமிற்குள் செல்ல வெங்கி அங்கு சென்று கதவை தட்டினர். கதவை சாற்றி மட்டும் வைக்கப்பட்டிருக்க அது தானாக திறந்தது. ஆகையால் உள்ளே சென்றார் வெங்கி.

வெங்கி பவ்யா தனித்து தன் ரூமில் அமர்ந்து இருக்கும் பொழுதில் அவளது ரூமை தட்டிவிட்டு உள்ளே வந்தார் வெங்கி. வெங்கியைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்றார் பவ்யா.

"என்ன மாமா! டீ எதாவது வேணுமா? நான் வேணா போட்டு கொடுக்கவா" கூறியபடி வெளியே செல்ல விரைய வெங்கி அவரை தடுத்து நிறுத்தினார்.

"இல்லைமா! எதுவும் வேண்டாம். நான் உன்கிட்ட பேச வந்தேன்மா" – வெங்கி.

"ஓ! அப்படியா மாமா. என்கிட்ட நீங்க தாராளமா பேசலாம். ஆனால் எனக்கும் அவருக்கும் இருக்குற பிரச்சனை பத்தி பேசனும்னா வேண்டாம் மாமா" – பவ்யா வருத்ததுடன் முடித்துவிட்டார்.

"நான் என் மகனுக்கும் உனக்கும் இருக்குற பிரச்சனை பற்றி பேச வரலைமா. எனக்கு என் பிள்ளை பற்றி உன்னை விட நல்லாத் தெரியும். அவனுக்கு கொஞ்சம் முன் கோபம் அதிகமா வரும். ஆனா ரொம்ப நல்லவன்மா. கடைசி வரை அவனை புரிஞ்சிக்காம வந்துட்ட. ம்ம்ம் நடந்து முடிஞ்சதை பேசி என்ன பண்ண?" என்று பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டபடி தொடர்ந்தார்.

"எனக்கு என்னவோ உன்னை பார்த்தா ஒரு குற்ற உணர்ச்சிமா. அவனுக்கு நீ தான் ஏற்றவன் நான் தான் உன்னை அவனுக்கு கட்டி வச்சேன். ஆனால் உன் வாழ்வு இப்படி இருக்குறது எனக்கே உருத்தலா இருக்குமா. அதான் மன்னிப்பு கேட்க வந்தேன். என்னை மன்னிச்சிடுமா.." – வெங்கி.

"அய்யோ மாமா! எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு.. அவர் பண்ண தப்புக்கு நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்குறீங்க. அவர் ஒரு நாள் தன் தப்பை உணர்ந்து என்கிட்ட மன்னிப்பு கேட்பார்" – பவ்யா.

"அதுவும் சரி தான்மா. ஆனால் ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு. அதை உன்னால் தான்மா சரி செய்ய முடியும்." – வெங்கி

அதற்கு பவ்யா புரியாமல் பார்க்க வெங்கி தொடர்ந்தார். "அன்னைக்கு என்னம்மா நடந்துச்சு. வைத்தி சொன்னது உண்மையா.. உண்மையிலேயே நீங்க இரண்டு .." என்று வெங்கி ஆரம்பிக்க தன் காதுகளை மூடிக் கொண்டார் பவ்யா.

"வேண்டாம் மாமா! நீங்களும் அப்படி கேட்காதீங்க. நான் அன்னைக்கு நடந்ததை சொல்லிடுறேன்" என்று கூறிய பவ்யா தான் வைத்தியுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

***

அதே ஊரில் பிறந்து படித்து சிறந்தவனாக விளங்கிய வைத்தி ஒரு நாள் கோவிலில் சாமி கும்பிடும் போது அங்கு வந்த பவ்யாவை ஆசையாக பார்த்தார். இதை கவனித்த வெங்கி தனக்குள் சிரித்துக் கொண்டார் . ஆனால் பவ்யா பின் வீரபாண்டி வரவும் வைத்தி தன் உணர்வுகளை மறைத்து கொண்டார். இதை வெங்கி கவனித்து கொண்டிருந்தார் . பின்பு வைத்தியின் மனம் பவ்யாவிடம் இருப்பதை உணர்ந்த வெங்கி அவள் வீரபாண்டியின் மகள் என்று தெரிந்ததும் வீரபாண்டியிடம் சென்று சம்மதம் பேசினார். ஆனால் பவ்யா வீரபாண்டியின் மகள் என்ற ஒரு காரணத்திற்காக அவளை கட்டிக்க மறுத்தார் வைத்தி . வெங்கி வைத்தியை சமாதானப்படுத்தி வீரபாண்டியிடம் முறையாக பெண் கேட்டு பவ்யாவை வைத்திக்கு கட்டி வைத்தார்.

.

முதல் இரு மாதங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களின் இல்வாழ்க்கை மனோகரின் வருகையால் ஆட்டம் கண்டது . சிறு வயதில் இருந்து மனோகர் மற்றும் பவ்யா அண்ணன் தங்கையாக வளர இருவரும் அந்த முறையில் பழகுவது மற்றவர்களுக்கு அது தப்பாக தெரிந்தது. வைத்தி கருமை நிறம் படைத்து பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தார். பவ்யா அழகு பதுமையாக இருந்தார். பவ்யாவின் அழகு வைத்தியை மனசுக்குள் காழ்புணர்ச்சியை ஏற்படுத்தியது. தன் நிறத்தை கண்டு மனசுக்குள் வெதும்பியவர் முதலில் ரசித்து பார்த்த பவ்யாவின் அழகு மாதங்கள் கூட அனைவரும் அவளை சாதாரணமாக பார்ப்பது ரசிப்பது போல் தெரிந்தது . தன் மனைவியை ரசிக்கிறார்களோ என்று சந்தேகத்தை உண்டு பண்ணியது.

அது நாளடைவில் பவ்யாவிடம் கோபமாக மாறியது. வைத்தியின் கோபத்தை கண்டு பயந்த பவ்யா அவரிடம் பேசுவதற்கே பயந்தார். வைத்தியின் நிலைபாட்டை அறியாத வீரபாண்டி இருவரையும் விருந்துக்கு அழைக்க வைத்தி பவ்யாவை அழைத்துச் சென்றார். மனோகர் பவ்யாவிடம் பேசும் விதம் அவர்க்கு தீயில் ஊற்றிய எண்ணெய்யாக கொதிக்க ஆரம்பித்தது.அதிலும் வைத்தியை கண்டு பயப்படும் பவ்யா அவரிடம் நன்றாக பேசுவது அவரது மனதை கலைத்தது. அதிலிருந்து பவ்யாவை தாயின் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை வைத்தி.. வெளியில் பவ்யாவை அழைத்து செல்லாமல் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார் வைத்தி.

பவ்யாவின் சந்தேகம் நிதாவிடமும் பாய்ந்தது. அவள் அழகில் பவ்யாவை கொண்டு பிறந்ததால், பவ்யாவை போல் தன் மகளையும் தன்னைவிட்டு போக அனுமதிப்பது இல்லை வைத்தி. அவளை கழுகு போல் பார்த்துக் கொண்டு வந்தார். மனுவை யாராவது ஒரு சிறுபார்வை பார்த்தாலும் வைத்திக்கு கொதித்தது. வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.

வெங்கி மற்றும் லமியின் முயற்சியால் நிதா மட்டும் வெளியில் வந்தாள்.

***

பவ்யா அனைத்தையும் சொல்லி முடிக்க வெங்கி பேச்சிழந்து நின்றார்

"என்னம்மா சொல்ற வைத்தியா இப்படி? என்னால் நம்ப முடியல. அதுமட்டுமல்ல உங்களுக்குள் பிரச்சனை வரும் போது நாங்களும் ஊரில் இல்லையா. எங்களுக்கு எந்த விவரமும் சொல்லாம எங்களையும் உடனே கூட்டிட்டு போயிட்டான் வைத்தி. சோமுக்கு என்னாச்சுன்னு கூட அங்க போய் தான் சொன்னான். ஆனா எனக்கு ஒன்று மட்டும் தான்மா புரியல. வைத்தி ஏன் இப்படி பேசுறான், செய்றான்.. வைத்தி சுபாவம் இது கிடையாது.." – வெங்கி.

"தெரியல மாமா! ஆனால் அவர் என்னை கடைசி வரை புரிஞ்சிக்கவேயில்லை" என்று சொல்லி அழுத பவ்யா கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார்.

அங்கு நின்றிருந்த நபரை கண்டு வெங்கி மற்றும் பவ்யா இருவரும் திகைத்தனர்.

*****

மனு கையில் வைத்திருந்த திரவத்தை கண்ட யவன் திகைத்தான்.

"என்னடி இது? சிவப்பு நிறத்தில் இருக்கு?" – யவன்.

"எல்லாம் உங்களுக்கு பிடிச்ச, உங்களோட ஃபேவரைட் ஜீஸ் தான்?" – நிதா.

"என்னடி உளர்ற?" – யவன்.

"ரத்தம்! நீங்க தான் ரொம்ப ஆசைபட்டு குடிப்பீங்களே. ஒரு காலத்தில் இதை தான் உணவா சாப்பிடுவீங்க. ஆனா ஆட்டுரத்தம் தான் கிடைச்சது. மனுஷ ரத்தம் கிடைக்கல" என்று நிதா சொன்னது தான் தாமதம் யவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

"இந்தாங்க குடிங்க. ஒரு காலத்தில் இதை குடிக்கத் தான் மனிதர்களை நீங்க வேட்டை ஆடிட்டு இருந்தீங்க" – நிதா

"வேண்டாம் நிதா.. தேவையில்லாம பேசி என்னை கோபப்படுத்துற. நடந்த விசயங்களை சரியா புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க நீ " – யவன்.

"ம்ம்ம் எல்லாம் புரிஞ்சு தான் பேசுறேன். சரி இங்க வாங்க இந்தாங்க இதை குடிங்க என்று நிதா யவன் முன் ரத்தத்தை நீட்ட யவனின் கோபம் அதிகரித்தது. யவன் அதை வாங்காமல் நிற்கவும் நிதா தொடர்ந்தாள்.

“வேண்டாமா இது. ஏன் பிடிக்கலையா? ஓ! மறந்துட்டேன் பாருங்க. உங்களுக்கு நேரடியா குடிச்சா தான பிடிக்கும்" என்று கூறியபடி நிதா கத்தியை எடுத்து தன் கையை குத்த முயல வேகமாக அவளை தடுத்த யவன் ஓங்கி ஒரு அறை விட்டான்.

"ஸ்டாப் இட்! யூ இடியட்! உன் முட்டாள் தனத்தை இதோட நிறுத்திக்க.. இப்ப என்னால இதை எல்லாம் குடிக்க முடியாது! புரிஞ்சிதா?" – யவன்.

"ஏன்?" – நிதா.

"அதை உன்கிட்ட சொல்லமுடியாது?" – யவன்.

"நீங்க சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். நீங்க என்கிட்ட இருந்து எதையோ மறைக்கிறீங்க? எப்படி நீங்க இப்படி மனுசனைப் போல இருக்கீங்க. நீங்க எப்பவும் மனிதனாக முடியாது. ஆனால் உங்களால் எப்படி இப்படி நடிக்க முடியுது?" – நிதா.

"அதை சொல்ல முடியாது! போடி.." என்று சொல்லிவிட்டு யவன் சென்றுவிட நிதா யோசனையில் நின்றாள்.

மறுநாள் காலையில் யவன் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க அவன் எதிரில் அமர்ந்தாள் நிதா. அவளை பார்த்ததும் கோபமாக யவன் திரும்பிக் கொள்ள அவனை கண்டு கொள்ளாமல் நிதாவும் திரும்பிக் கொண்டாள்.

அப்போது யவன் வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க அந்த சத்தம் கேட்டு அவனிடம் திரும்பினாள் நிதா

"நீங்க இப்ப என்ன சொன்னீங்க?" – நிதா.

"ஒண்ணும் சொல்லலையே?" – யவன்.

"இல்லை எதோ சொன்னீங்க. திரும்பச் சொல்லுங்க அதை.." என்று அவள் சொன்னது தான் தாமதம் வேகமாக தனக்குள் யோசித்த யவன் அதை சொன்னான்.

"குள்ளச்சிரக்கா.. ன்னு" என்று யவன் சொன்னது தான் தாமதம் அவன் மேல் ஏறி அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள் நிதா.

"என்ன அப்படி கூப்பிடாதடா மொட்டைண்டா" – நிதா

"அப்படி தான்டி கூப்பிடுவேன். குள்ளச்சிரக்கா குள்ளச்சிரக்கா.. ஆனா என்னை மொட்டைண்டானு சொல்லாதடி "

"அப்படி தான்டா சொல்வேன் மொட்டைண்டா" – நிதா

"சரிதான் போடி குள்ளச்சிரக்கா" – யவன் சொல்ல

இருவரும் சண்டை போட ஒரு கட்டத்தில் அவளை தள்ளிவிட்டு எழுந்து கொண்டான் யவன்.

"நில்லுடா எங்கடா போற.. வாடா.. இன்னைக்கு உன்னை ஒரு வழி பண்ணாம விடப் போறதில்லை" என்று நிதா சொல்ல

"முதல்ல உன்னை சரி பண்ணுடி அப்புறம் என்னை சரி பண்ணலாம் குள்ளச்சிரக்கா.." என்று அவளை திரும்பிப் பார்க்காமல் யவன் சொல்லிவிட்டு செல்ல அவன் சொன்னததை அடுத்து தன்னை குனிந்து பார்த்த நிதா தன்னை சரி செய்து கொண்டு அவனை பார்த்து "மொட்டைண்டா" என்று கத்த யவன் நின்றான்.

"என்னடி?" – யவன்.

"என்னை அப்படி கூப்பிடாதடா" - நிதா.

"முடியாது! அப்படிதான் கூப்பிடுவேன்" என்று இருவரும் சண்டை இட சாம் அங்கு வந்தான்.

சாமைப் பார்த்த நிதா அவனை பஞ்சாயத்திற்கு அழைத்தாள் "டேய் என்னை அப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்லுடா"

"எப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்லணும் பேப்ஸ்" – சாம்.

"குள்ளச்சிரக்கா.." என்று யவன் சொல்லி காண்பிக்க, வேகமாக "அப்படி சொல்லாதடா" என்று நிதா கூற

“நீ மட்டும் மொட்டைண்டா என்று சொல்லலாமா டி” – யவன்.

"ஹலோ! மொத நீங்க இரண்டு பேரும் சண்டையை நிறுத்திட்டு இந்த இரண்டு வார்த்தைக்கு மீனிங் சொல்லுங்க ஒரு இழவும் புரியல" – சாம்

அதை கேட்ட நிதா சிரித்துக் கொண்டே அது ஒன்றுமில்லை சாம் 'குள்ளச்சிரக்கானா – குள்ளச்சி+ பேரிக்கா' மொட்டைண்டா- மொட்டை + குண்டா' என்றாள்.

அதை கேட்ட சாம் வாயில் கை வைத்தான்.

"அட பாவிங்களா! இப்படிலாமா தமிழை கொலை பண்ணுவீங்க! தமிழ் மெல்ல சாகும்னு சரியாத்தான் இருக்குடா!

நல்லா அடிச்சுக்கோங்க. நான் பஞ்சாயித்துக்கு வர மாட்டேன்" என்று திட்டிவிட்டுச் சென்றான். அதை கேட்ட யவனும், நிதாவும் சிரித்துக் கொண்டு நின்றனர்.

*****

பவ்யாவும், வெங்கியும் திரும்பிப் பார்க்க அங்கு வைத்தி நின்று இருந்தார். அவரைப் பார்த்ததும் கோபத்தில் திரும்பிக் கொண்டார் பவ்யா. பவ்யாவை பார்த்துக் கொண்டே வந்த வைத்தியநாதன் அவர் அருகில் வந்ததும் அவரின் கையை பிடித்துக் கொண்டு "என்னை மன்னிசிடுமா!" என்று சொன்னது தான் தாமதம் பவ்யா பொங்கிவிட்டார்!

"எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க? மன்னிச்சிடுன்னு என் பொண்ணு கூட நான் வாழ முடியாத என் வாழ்க்கையை திருப்பி கொடுக்க முடியுமா உங்களால? அப்ப நான் எவ்வளவு சொல்ல முயற்சி செய்திருப்பேன். என் பேச்சை காது கொடுத்து கேட்டீங்களா? இப்ப வந்து மன்னிப்பாம்" என்று அழுது கொண்டே சொல்ல வெங்கி ஏதோ சொல்ல வர பவ்யா அவரை தடுத்தார்.

"அவர்க்காக என்னிடம் எதுவும் பேசாதீங்க மாமா? என்னால் அவரை மன்னிக்க முடியாது" என்று கூறியவர் வைத்தியிடம் திரும்பினார்.

"தயவு செய்து இங்க இருந்து போங்க!" என்று பவ்யா கத்த வைத்தி அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றுவிட்டார்.

இடத்தைவிட்டு வெளியே வந்த வைத்தி தன் மேல் கோபமாக அமர்ந்து இருந்தார். சோம்நாத் சொன்னதை அடுத்து பவ்யாவை திட்ட அங்கு சென்ற வைத்தி பவ்யா வெங்கியிடம் சொல்லிய விசயத்தை கேட்டு தன் முட்டாள் தனத்தை உணர்ந்தார்.

பவ்யாவிடம் தான் நடந்து கொண்ட முறைக்கு பிராயசித்தம் தேடுவாரா வைத்தி? நிதாவின் யவனுடனான சோதனை சாதகமாக முடியுமா? பாதகமாக முடியுமா?
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 18

அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்து இருக்க யவன் அருகில் அமர்ந்த நிதா வேண்டுமென்ற தன் கைகளில் மறைத்து வைத்திருந்த பிளேடைக் கொண்டு அவன் கைகளை கிழிக்க, வலியில் "அம்மா!..". என்று கத்திவிட்டான் யவன்.

அவன் அப்படி கத்தியது அனைவரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.

"என்னாச்சு தம்பி" – லமி.

"ஒன்றுமில்லை லமி. ஜ்ஸ்ட் கைல அடிபட்டிருந்தது அதுலயே மறுபடியும் இடிச்சுக்கிட்டேன்" என்று கூறியவன் தன் கைகளை மறைக்க முயல அவன் முழுக்கை சட்டையும் மீறி ரத்தம் கொப்பளித்தது.

"அய்யோ தம்பி.. ரத்தம் வருது.. வாங்க மருந்து போடலாம்" என்று லமி யவனை அழைக்க யவன் நிதாவை பார்த்தான்.

நிதா யவனின் கைகளில் வடியும் ரத்தத்தை திருப்தியுற பார்த்துக் கொண்டிருக்க இதை கவனித்த யவன் வேகமாக தன் ரூமிற்குள் சென்றுவிட்டான்.

அவன் செல்லவும் இங்கு நிதா ஒரு முடிவோடு அவனை பின்பற்றி சென்றாள்.

ரூமிற்குள் சென்ற யவன் சுற்றி பார்க்க முழுவதும் கண்ணாடியாக இருந்தது. அதை கண்டவன் திகைத்து நிற்க அவன் எதிரில் வந்து நின்றாள் நிதா.

"என்னாச்சு யவன் அத்தான்... அப்படியே திகைச்சிப் போய் நின்னுட்டீங்க? வெளியில் ரத்தம் வந்து நீங்க ஊரை ஏமாத்தலாம். ஆனால் என்னை ஏமாற்ற முடியாது? இதுக்கு என்ன சொல்றீங்க" என்று யவனிடம் கண்ணாடியை காட்டிய நிதா "இப்ப உங்களுக்கு இதை பார்த்தா பயமா இருக்குல அத்தான்? இல்லை கோபமாக வருதா?" என்று நிதா கேட்க யவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

"எனக்கு எதற்கு கோபம் வரணும்?" – யவன்.

தன் காயம்பட்ட கைகளை தேய்த்தபடியே அவன் அசால்ட்டாக பதில் கேள்வி கேட்க நிதா விடுவதாக இல்லை. அவனை வம்பிழுத்தாள்.

"உங்களுக்கு ரத்தம் கூட வருது! ஆமா உங்க கையில் தான் மேஜிக் இருக்கே! இந்த ரத்த காயத்தை உங்களால் சரி செய்ய முடியாதா என்ன?" என்று மனு நக்கல் செய்ய அதை கேட்ட யவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கப்போர்டை திறந்து பர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்து காயத்திற்கு மருந்திட்டான்.ஆனாலும் அவனை விடாமல் தொல்லை செய்தாள் நிதா.

"நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லையே நீங்க?"- நிதா.

"என்ன பதில் சொல்லனும் நான்?" – யவன்.

"கண்ணாடி பார்த்தா உங்களுக்கு பயமா இல்லையான்னு கேட்டேன்?" – நிதா.

"நான் எதற்கு பயப்படனும்" – யவன்

"வெப்பையர்ஸ்க்கு கண்ணாடி பார்க்க பிடிக்காதாமே? பயம் வருமாமே?" – நிதா.

"இப்படின்னு எந்த முட்டாள் சொன்னது உனக்கு" – யவன்.

"ஒரு டிவி நிகழ்ச்சியில் வெம்பையர் பற்றிச் சொன்னாங்க" – நிதா.

"அப்படிலாம் எதுவும் இல்லை" – யவன்.

"இல்லை நீங்க பொய் சொல்றீங்க! உங்களுக்கு உங்க முகத்தை பார்க்க பிடிக்கல" என்று நிதா சொல்ல யவன் கண்ணாடி எதிரில் சென்று நின்றான். அவனிடம் மாற்றம் இல்லாமல் இருப்பதை பார்த்து நிதா திகைக்க யவன் பேசினான்.

"என்ன இன்னும் நம்பலலே நீ?" – யவன்.

"நான் மனுசனா மாறிட்டேன்னு என்னை நீ எப்ப நம்புறீயோ? அப்ப நீ என்கிட்ட வந்தா போதும். அதை விட்டு என்னை சோதிக்கிறேன்ற பேர்ல தினமும் என்னை கொல்லாதடி" என்று யவன் நிதாவை கத்திவிட்டுச் வெளியே சென்றுவிட இங்கு நிதா வருத்தத்தில் நின்றாள்.

அன்று இரவு யவன் ரூமிற்குள் வராததை அடுத்து நிதா அவனை தேடி சென்றாள்.

வீட்டில் அவன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லாததை கண்ட நிதா. 'எங்க போயிட்டான் இவன்' என்று நினைத்தவாறு அவனை எங்கு போய் தேடுவதென வழி தெரியாமல் கைகளை பிசைந்தாள் நிதா. அப்போது ஏதோ தோன்ற சன்னல் வழியாக வெளியில் பார்த்தாள்.

அவள் கண்களுக்கு முழு நிலா காட்சி அளித்தது. அன்று பெளர்ணமி இரவாக இருந்தது. அதை பார்த்தவள் எதோ தோன்ற வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஆள் புழக்கம் இல்லாத அறையை நோக்கி செல்ல அந்த அறை திறந்தே இருந்தது. அதை கண்ட நிதா எகிறி துடிக்கும் தன் இதய துடிப்பை தன் கைகளுக்குள் அடக்கிய வண்ணம் உள்ளே சென்ற நிதா திகைத்தாள். அங்கு யவனுக்கு காக்கா வலிப்பு வந்து கை, கால்கள் இழுத்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த நிதா அவன் அருகில் வேகமாக செல்ல முயல அவளை பார்த்த யவன் அவளை தடுத்தான்.

"இங்க வராத... போ இங்க இருந்து..." என்று யவன் கத்த தொடங்க நிதா அவனிடம் பேச முயன்றாள்.

ஆனால் யவனோ அவளை வெளியே தள்ளுவதிலேயே குறியாக இருந்தான்.

"நீ போகலயா இன்னும்?" என்று அவளிடம் கத்திய யவன் கஷ்டப்பட்டு கைகால்களை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்து எழுந்து அவளது கைகளை இழுத்துக் கொண்டு கதவருகில் சென்று அவளை வெளியே தள்ளி கதவினை வேகமாக மூடினான்.

அவன் அப்படி செய்ததும் அவமானமாக உணர்ந்த நிதா வேகமாக உள்ளே வந்தாள்.

"நான் அப்படி என்ன பண்ணிட்டேன்னு என் மேல கோபமா இருக்கார்? என் புருஷன் எந்த நிலைமையில் இருக்கார்ன்னு நான் சோதித்து பார்க்க வேண்டாமா" என்று அவனை கரித்து கொட்டியவள், இங்கு வந்ததில் இருந்து யவனின் செயல்களை நினைவுபடுத்திப் பார்த்தாள்.

யவனின் செயல்கள் அவளுக்கு ஒன்றுக் கொன்று முரண்பாடாக இருக்க அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த நிதாவின் கண்களில் விழுந்தது யவன் கொண்டு வந்த பெட்டிகள்.

அதை பார்த்த நிதா வேகமாக அதை திறந்து பார்க்க முயன்றாள். அதற்குள் தன் கேள்விக்கான விடையை தேடினாள். அந்த பெட்டியை திறந்து அதற்குள் நிதா தேடிப் பார்க்க அவள் கைகளில் கிடைத்தது அது.

நிதாவின் கைகளில் சிவப்பு நிறத்தில் மின்னியது யவனின் டைரி. அதை எடுத்த நிதா முதல் பக்கத்தை திருப்ப அதில் தங்களின் சிறு வயது போட்டோ மின்னியது. அதை எடுத்து ஆசை தீர சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த நிதா பக்கத்தை புரட்ட அவள் கேள்விக்கு விடையாக எழுதி இருந்தான் யவன்.

ஆம்! தான் யட்சனாக மாறிய விதத்தை எழுதி இருந்தான் யவன்.

அதை தொடர்ந்து நிதாவிற்காக தான் செய்ய துணிந்த செயலை எழுதியிருந்தான் யவன். லண்டனில் இருந்து ஆரம்பித்த தன் வாழ்க்கை பயணத்தை எழுதியிருந்தான் யவன்.தான் பூங்குன்றனாரால் வளர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து வைத்தியின் மேல் அவன் கொண்ட வஞ்சத்தை அப்படியே எழுதி இருந்தான் யவன். அதை கண்ட நிதா திகைத்தாள். இருந்தும் மேற்கொண்டு படித்தாள்

அதன்பின் வைத்தியை பழி வாங்க நிதாவை திருமணம் செய்தது பற்றி எழுதியிருக்க அதை படித்த நிதா கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு மேலே படித்தாள் நிதா. மேலும் அதில் ப்ரசாத் பற்றி குறிப்பிட்டிருந்தான்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் ப்ரசாத்தின் கைகளில் கிடைத்தது. அதன் பின் அவர் தன் மகன் என்று நினைத்து இறந்து போன தன்னை வெம்பையராக மாற்றிய தருணங்கள் அதன்பின் தேவ் தன் வாழ்க்கையில் நுழைந்தது.

ப்ரசாத் மற்றும் தேவ்வின் சண்டையில் வினய் உருவானது.

அதனை அடுத்து வினய் மற்றும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போலீஸ் கம்ப்ளைண்ட் என்று நிதாவிற்கும் தனக்குமான விசயங்களை விட்டு மற்றவற்றை எழுதியிருந்தான் யவன்

அதை படித்துக் கொண்டே வந்த நிதா அடுத்த பக்கத்தில் இருப்பது என்னவென்று புரிந்து மனத்தில் கணத்துடன் பக்கத்தை புரட்டினாள்.

அதில் யட்சன் யவனாக மாறிய விதத்தை எழுதியிருந்தான்.

வினய்யின் மனித வேட்டையை பொறுக்க முடியாத ப்ரசாத் மைக்கேல் மற்றும் விஜயன் உதவியுடன் அவனை மனிதனாக மாற்ற முயற்சி செய்ய முடிவு செய்தார்.

அதற்கு முதல் கட்டமாக தேவ்விற்கு தெரியாமல் வினய்யிடம் போனில் பேசி அவனை வீட்டிற்கு அழைத்தார்.

வீட்டிற்கு வந்த வினய்யை மருந்து தடவிய அம்பு கொண்டு விஜயன் வினய்யின் பின் கழுத்தில் தாக்கினார்.

தன் கழுத்தில் ஏதோ குத்தியதும் கீழே மயங்கி விழுந்தான் வினய்.

வினய் விழுந்ததும் அவன் பின்னால் நின்ற மைக்கேல் மற்றும் விஜயன்.

"சீக்கிரம் ப்ரசாத்... அவனை தூக்கி அந்த ரூமிற்கு கொண்டு வாங்க.. அந்த மருந்தின் வீரியம் குறைவதற்குள் அவனை அங்க கொண்டு போகணும்” என்று விஜயன் கூற தன் ஆட்கள் கொண்டு வினய்யை தூக்கி கொண்டு ரூமிற்குள் கொண்டு சென்றார் ப்ரசாத்.

அங்கு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்க அதன் உள்ளே ஊதா நிறபூக்கள் தாங்கிய படுக்கை வைக்கப்பட்டிருந்தது. அவனை அதில் படுக்க வைத்தவுடன் அந்த பெட்டியை சிலுவைகள் கொண்ட கதவினால் மூடிவிட்டு, அப்பெட்டியை சுற்றிலும் ஊதா நிறபூக்கள் கொண்ட செடிகள் வைத்துவிட்டு வெளியே வந்தனர் ப்ரசாத், மைக்கேல்சன் மற்றும் விஜயன்.

ப்ரசாத்திடம் திரும்பிய மைக்கேல் அவனிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தான்.

"ப்ரசாத்! இந்த புக்கில் அவன் வெளியே வராம இருக்க சில மந்திரங்கள் இருக்கு. இதை 48 நாட்கள் விடாமல் படிங்க. அதுமட்டுமல்ல அந்த மூலிகை படுக்கை அவனது உடம்பை செல்லாக அரிக்க ஆரம்பித்து அவனின் மேல் போர்த்தப்பட்ட ஓநாயின் தோல்களின் வீரியத்தை அழிக்க ஆரம்பிச்சிடும். அவன் கொஞ்சம் கொஞ்சம் சாகும் நிலைக்கு சென்று, திரும்ப அவன் தோல் புதுப்பிக்கப்பட்டு அவன் மனிதனா எழுவான். ஆனால் எக்காரணம் கொண்டும் நடுவில் வினய் அதைவிட்டு வெளியே வரக்கூடாது. அப்படிஅவன் 48 நாள் முடியும் முன்னே வெளியே வந்தா அவன் ஆக்ரோசமாக மாறிடுவான். அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அப்புறம் அவனை நீங்க இழக்க நேரிடும் ப்ரசாத்!" என்று மைக்கேல்சன் எச்சரித்துவிட்டு செல்ல , அதை கேட்ட ப்ரசாத் பயந்து விஜயனிடம் வந்தார்.

"என்ன விஜயன் ஏதேதோ சொல்றான் மைக்கேல். எனக்கு பயமா இருக்கு!" – ப்ரசாத்.

"பயப்படும்படி ஒன்றும் இல்லை ப்ரசாத்! அவன் படுத்திருக்கும் மூலிகை படுக்கையானது ஒருவகை செடியால் ஆனது. அந்த செடி ஓநாய்களுக்கு பிடிக்காத ஒன்று. அந்த செடியானது 48 நாள் அவன் உடம்பில் ரியாக்ட் செய்து ஓநாயின் தோளினால் அவனுக்குள் உண்டான பாதிப்பை நீக்கும் ப்ரசாத். அவன் உடம்பில் அது ரியாக்ட் பண்ணும் போது அவன் அந்த வலியை தாங்காமல் ஆக்ரோசமாக மாறுவான். அதனால் தான் அவனை கவனமாக பார்த்துக்க சொல்றோம் ப்ரசாத்!" என்று கூறிவிட்டு விஜயன் செல்ல இங்கு ப்ரசாத் பயத்தோடு நின்றார்.

*****

வினய் தனக்கு தெரியாமல் ப்ரசாத்தை பார்க்க சென்றதை கண்டறிந்த தேவ்.

"ம்ம்ம் என்ன ப்ரசாத். அவனை மனிதனாக மாற்ற முயற்சி செய்றீயா. நான் இருக்கும் வரை அவனை மாற்ற விடமாட்டேன்" என்று சொல்லிய தேவ் பழிவெறியோடு சிரித்தார்.

தேவ்வை தொடர்ந்து யட்சனும் வினய் பற்றிய விசயங்களை கேட்டறிந்தான். அதை தொடர்ந்து தன் கையில் இருந்த அந்த புத்தகத்தில் மனிதனாக மாற செய்யும் யுத்திகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான் யட்சன். அதை படித்து முடித்த யட்சன் அதில் போட்டிருந்ததன்படி செயலாற்ற தன்மனநிலையை தயார் செய்து கொண்டும் , 48 நாள் தான் செய்யப்போகும் யுத்திகளை வகுத்து கொண்டிருந்தான்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 19

வினித்தை மனிதனாக மாற்ற விஜயன். ப்ரசாத் முயற்சி செய்வதைப் கண்டறிந்த யவன் நிதாவின் மேல் கொண்ட அன்பினாலும், அவளிடம் தோன்றிய காதலினாலும் அவளுடன் வாழத் துடித்தான். அதை பற்றியே சற்று நேரம் யோசித்த யவன் தன் புத்தக அலமாரியில் சற்று நேரம் தேட அவன் கைகளில் கிடைத்தது அந்த புத்தகம். அதை எடுத்து படித்தவன் முகம் வருத்தமடைந்தது.

அதில் வெம்பையர்கள் இறப்பற்றவர்கள் என்று எழுதி இருக்க அதன் கீழ் அவர்களால் மனிதனாக என்றும் மாற இயலாது என்று போடப்பட்டிருந்தது.

அந்த வாசகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த யவன் தன்னை திடப்படுத்திக் கொண்டு மேலும் படித்தான்.

அப்படி சந்தர்ப்பம், சூழ்நிலைகளில் வெம்பையராக மாற முற்பட்டவர்கள் மனிதனாக வாழ முயற்சி செய்யலாம் என்றும் அது நிரந்தர தீர்வாக முழு மனிதனாக உருமாற முடியாது என்றும் போடப்பட்டிருந்தது.

மேலும் அதை யவன் படிக்க அதில் அப்படி மனிதனாக மாற முற்பட்டவர்கள் சில யுக்திகளை கையாண்டால் அவர்களின் உள்ளே இருக்கும் அந்த ராட்சஷனை கட்டுப்படுத்த வல்லமை பெற்றவனாக இருக்கலாம்.

அதுமட்டுமின்றி வெம்பையராக இருக்கும் பொழுது அவர்களின் ரத்த துளிகள் வெளியேற்றப்பட்டு அவர்கள் மனிதனின் ரத்த அணுக்களை தன் உடம்பில் ஏற்றிக் கொண்டாலும் அவர்கள் அந்த வெம்பயரின் குண இயல்புகள் மாற்ற இயலாது. கட்டுப்படுத்தலாம் அவ்வளவே. திருமணம் செய்து கொண்டால் குழந்தை பெறக் கூடாது ஏனென்றால்அந்த வெம்பயரின் குணங்கள் தன் மகவுக்கும் மாற்றப்படும் வல்லமை பெற்றது. மேலும் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று நிர்ணயிக்கும் வல்லமை ஆணின் விந்தணுக்கே உரியது என்று உணர்ந்த யட்சன் கண்கள் வருத்தத்தில் மூடியது. இருந்தும் அந்த புத்தகத்தை மேலும் படித்தான் யட்சன். ஆயினும் வெம்பையராக இருந்து மனிதனாக மாறப்பட்டவன் சக்திகள் வலுவிழந்து காணப்படுவதால் அவர்களின் மனையாளின் விந்தணுக்களை தன்னுடைய அணுக்கள் அதிகமாக ஆட்சி செய்யாமல் கட்டுப்படுத்தி தனது மகவை மனிதனாக உற்பத்தி செய்ய இயலும் . என்று அதில் போடப்பட்டிருக்க யவன் மகிழ்ந்தான். ஆயினும் அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் சொற்பம். அதற்கு 1 சதவீதமே வாய்ப்பு இருக்கும் என்று அதில் போடப்பட்டிருக்க யட்சன் மனதுக்குள் குமைந்தான். ஆயினும் எதையும் மாற்றும் வல்லமை தன்னிடம் இருக்கின்றது என்று புது தெம்போடு வெம்பையரின் இயல்புகளை அடக்கி ஆளும் யுக்திகளை படிக்கத் தொடங்கினான் அவன்.

1. வெம்பபையருக்கான அடையாளமான ரத்தம்தனில் தன் சித்தத்தினை ஒருவன் அடக்கி ஆள்வானோ!

2. ரத்தம் தனை வேட்டை ஆட விளையும் உடல்தனில் மிருகமாக மாறிடாதோ! அதை அடக்க வல்லவனாவானோ!

3. வேட்டை ஆடும் மிருகத்தின் நடுவிலே சாதுவாக நின்றிடலாமோ! அதை ஜெயிப்பவன் மனிதனாக மாறிடுவானோ!

4. சுட்டெரிக்கும் தீ தனில் உடம்பை காத்திடுவானோ! அதில் எழுந்து உயிர் தரிப்பானோ!

5. கண் முன் தெரியும் பிம்பமதில் மடியாமல் காத்திடுவானோ!

6. உயிர்க்கு உயிரான உயிரானவரால் மனிதனாக உயிர்தெழுவானோ!

என்று அதில் எழுதியிருக்க அதை படித்த யவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த புத்தகத்தை படித்து முடித்த யட்சனின் உதடுகள் "டோலுமா...!" என்று கண்ணீரோடு அந்த பெயரை அழைத்தது.

*****

ப்ரசாத் 48 நாள் கண்ணும் கருத்துமாக வினய்யின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த 48 நாள் முடிய 2 நாள் இருக்க அந்த இரவு நேரத்தில் அந்த உருவம் பதுங்கி பதுங்கி உள்ளே வந்தது. அந்த உருவம் வினித்தின் அருகில் செல்ல முயல, அந்த உருவத்தை பின்னால் இருந்து பிடித்து கீழே தள்ளினார் ப்ரசாத்.

ப்ரசாத்தும், அந்த உருவமும் சண்டையிட முயல ப்ரசாத் அந்த உருவத்தின் முகமூடியை கழட்ட முயல அந்த உருவம் தன் கை கொண்டு தடுத்தது. ஒரு கட்டத்தில் ப்ரசாத் அந்த உருவத்தின் முகமூடியை கழட்ட அங்கு நின்றிருந்தவனைப் பார்த்து திகைத்தார் ப்ரசாத்.

அங்கு தேவ் நின்றிருந்தார். தேவ்வை பார்த்த ப்ரசாத் "நீயா!!!" என்று சொன்னது தான் தாமதம் தேவ் வேகமாக ப்ரசாத்தின் தலையில் பூ ஜாடியை வைத்து அடித்தார்.

தேவ் தலையில் அடித்ததில் ப்ரசாத் மயங்கி விழ தேவ் வெற்றிச் சிரிப்போடு வினய்யின் அருகில் சென்றவர் அந்த சிலுவைகளை எடுக்க அந்த சவப்பெட்டி ஆட்டம் கண்டது. அதை பார்த்த தேவ் பயந்து பின்னால் செல்ல அந்த பெட்டியின் ஆட்டம் சட்டென்று நின்றது. தேவ் பயத்தில் மெதுவாக அந்த பெட்டியின் அருகில் சென்று அதில் கை வைக்க அந்த பெட்டி அசைவின்றி இருந்தது. தேவ் பயத்தில் சற்று நிதானித்து மீண்டும் அதன் அருகில் சென்று அந்த பெட்டியின் மூடியில் கை வைக்க, பெரிய சத்தத்துடன் பெட்டியில் தானாக சிறு சிறு விரிசல்கள் விழ ஆரம்பித்தது. அதை தொடர்ந்து அந்த பெட்டி நகர அதைப் பார்த்த தேவ் பயத்தில் பின்னால் சென்றார்.

சற்று நேரத்தில் அந்த இடம் அமைதியாக இருக்க தேவ் தனக்குள் வழிந்த வேர்வையை துடைத்துக் கொண்டே அந்தப் பெட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சட்டென்று அதில் இருந்து கை நீண்டது. கையில் தோல்கள் எல்லாம் உறிந்து அந்த கை கோரமாக இருக்க அதை பார்த்த தேவ் பயந்து கதவை நோக்கி ஓடினார் . கதவை திறக்க முயன்று கொண்டிருக்க ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த தேவ் அதிர்ந்தார். அங்கு தலையை பெட்டியில் இருந்து வெளியே நீட்டி தேவ்வை பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.

முகத்தில் தோல்கள் இன்றி ஆங்கங்கே எலும்புகள் தெரிய கண்கள் ஓவல் வடிவமாக பெரிய பற்கள் கொண்டு தெரிந்தான் வினய்.

*****

மனிதனாக மாறும் யுக்திகளை படித்த யட்சன். தன் எண்ணத்தை செயலாற்றும் விதமாக முதலில் நிதாவை லமி வெங்கியிடம் அழைத்து சென்றான். அங்கு இருக்க முடியாது என்று நிதா முரண்டு பிடிக்க அவளை மிரட்டி அடித்து அவர்களிடம் நிதாவை ஒப்படைத்துவிட்டு வந்தான் யவன் .

நிதாவை பாதுகாப்பாக வைத்தி வீட்டில் விட்ட யட்சன் தன் காரில் வேகமாக அந்த இடம் நோக்கிசென்றான்.

ஆள் அரவமற்ற அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய யட்சன் அங்கு தூரத்தில் தெரிந்த அந்த குடிசையை நோக்கிச் சென்றான்.

அங்கு வழி முழுவதும் இரும்பு கம்பிகளாக இருக்க அதை தாண்டிச் சென்றவன் அந்த குடிசையின் கதவில் கை வைத்தான். அந்த கதவில் சிலுவைகள் அறையப்படிருக்க அதை தொட்டவன் கைகள் காயங்களாக மாறின.

அதையும் மீறி உள்ளே சென்றவன் அந்த அறை முழுவதும் ரத்தங்களால் தெளிக்கப்பட்டு, அறை முழுவதும் பூண்டு மணமாக இருக்க அங்கு சென்று அமர்ந்தவன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தான் யட்சன்.

அங்கு நிதா யட்சனை நினைத்துக் கொண்டு சாப்பிடாமல், தூங்காமல் அழுது கொண்டிருந்தாள்.

லமியும் எவ்வளவு கேட்டும் யட்சனை பற்றிய உண்மைகளை சொல்ல மறுத்தாள். யட்சனின் நினைவுகளோடு நிதா நாட்களை ஓட்டினாள்.

மயக்கம் தெளிந்து எழுந்த யட்சன் தன்னை அடக்கிக் கொண்டு மீண்டும் அமர்ந்தான்.

முதல் பத்து நாட்கள் ரத்த வாடைகள் அவன் உடலில் பல மாறுதல்களை தோற்றுவித்து முழு மிருகமாக மாறி அவன் மனம் வேட்டையாட விளைந்தது. அதை யட்சன் அடக்க பெரும்பாடு பட்டான்.

அதை அடுத்து வந்த பத்து நாட்களில் அவன் எதிரே ஒரு நாய் வேட்டையாடும் வெறியோடு நின்றது. அந்த நாய் அவனை கடித்து குதற முயல அதை யவன் தடுத்துக் கொண்டிருந்தான். ஆயினும் அதை கொல்ல முயற்சிக்க வில்லை. இப்படியாக நாய், பூனை போன்ற மிருகங்களிடம் இருந்து அவன் தன்னை காத்துக் கொள்ள பாடுபட்டான்.

அடுத்த பத்து நாட்கள் வெளிச்சம் பொருந்திய மெழுகுவர்த்திகளை அந்த இடம் முழுவதும் ஏற்றினான். அந்த ஒளி அவனை சுட்டெரிக்கும் தணலாக இருக்க அந்த தணலை அவன் உடம்பை ஏற்க மறுத்தது.

இப்படியாக கடும் தவம் செய்த யட்சன் தன் தவம் முடிய 2 நாள் இருக்க வினய் எழுந்ததை கண்டு கொண்டவன் கண்விழித்தான். ஏதோ ஆபத்து என்று தோன்ற வேகமாக வினய்யை தேடிச் சென்றான்.

*****

48 நாள் முடிய இரண்டு நாள் முன் வினய் ஆக்ரோசமாக எழுந்தவன் தோல் முழுவதும் கருகிப் போய் மிருகமாக நிற்க அவனை கண்ட தேவ் பயத்தில் எச்சில் விழுங்கினார். வினய் தேவ்வை பசியோடு பார்க்க அதை கண்ட தேவ் "வினய் என்னைத் தெரியல??? நான் தான் தேவ்... நாம ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ் லீவ் மீ.. உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்" என்று தேவ் சொல்ல அதை கவனிக்கும் நிலையில் இல்லாத வினய் அவரை துரத்த முயல தேவ் ஒடினார்.

*****

யட்சனை காணாமல் தவித்த நிதா யட்சனை காண ப்ரசாத் இருப்பிடம் நோக்கிச் சென்றாள். அங்கு வினய் தேவ்வை துரத்திக் கொண்டு ஓட அதை யட்சன் என்று நினைத்து பின்னால் சென்ற நிதா அங்கு வினய்யை பார்த்த நிதா பயம் மேலிட தன் வாயை மூடியபடியே அமர தேவ்வை துரத்தி பிடித்த வினய் அவரை வேட்டையாட தேவ் துடித்து இறந்தார்.

தேவ்வை வினய் வேட்டையாடுவதை பார்த்த நிதா பயத்தில் அலர வினய்யின் கவனம் நிதாவிடம் சென்றது.

வினய் தன்னை பார்த்ததும் வேகமாக அவள் ஒட முயல வினய் அவளை துரத்தினான்.

திரும்பி திரும்பி பார்த்தவாறே ஓடிய நிதா பின்னால்அவன் வரும் சத்தம் இல்லாமல் இருக்க, மூச்சு வாங்க ஒரு மரத்தின் அடியில் இளைபாற மரத்தில் மேலிருந்து தொங்கிய படியே அவளது கழுத்தை பிடித்தான் வினய்.

வினய் நிதாவின் கழுத்தை பிடித்து நெறிக்க மூச்சு வாங்கிய படியே கீழே விழுந்த நிதா மயக்கமானாள். அப்போது வினய் நிதாவின் அருகினில் சென்று குனிய அவளை பின்னிருந்து பிடித்து இழுத்து கீழே தள்ளினான் யட்சன்.

யட்சனை பார்த்ததும் வினய் கவனம் அவன் புறம் திரும்பியது உறுமியபடி அவனை நெருங்க. யட்சன் நிதாவை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான், வினய் யட்சனை துரத்திச் சென்றான்.

யட்சன் மறுபடியும் வினய் சவப்பெட்டி இருந்த அறையினுள் நுழைந்து நிதாவை படுக்க வைத்துவிட்டு கதவை சாற்றி வெளியேறினான்.

வினய் யட்சனை ஆக்ரோசமாக தாக்கமுற்பட, யட்சன் திருப்பி தாக்கினான். 48 நாள் கடைபிடித்து வரும் விதிமுறைகளால் யட்சன் வலுவிழந்து நிற்க, வினய்யின் ஆக்ரோசத்தை சமாளிக்க முடியாமல் திணறினான் யட்சன். இருவரும் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, வினய்யின் தாக்குதல்களை தன் வலுவிழந்த சக்தி கொண்டு தடுத்துக் கொண்டிருந்தான் யட்சன்.

யட்சனை வீழ்த்த வினய் மேற்கொண்டு ஏதும் செய்வதற்குள் மயக்கத்திலிருந்து எழுந்தப்ரசாத் அவனை தடுத்தார். அவன் மீது புனிதநீரை தெளித்து அவனை விரட்டியவர் யட்சனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முயல திரும்பவும் யட்சனை பின்னிருந்து தாக்கினான் வினய். ப்ரசாத்தையும் அவன் தாக்க முயல வினய்யை தடுக்க முடியாத ப்ரசாத் அவன் முகத்திற்கு நேராக புனித நீரை தெளிக்க அவரை விட்டான்.

வினய் தன்னை விட்டதும் மைக்கேலை தேடி ஓடினார்.

யட்சன் வினய் இருவரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வலுவிழந்து கீழே விழுந்த யட்சன் வாயில் நுரை தள்ள கை, கால்கள் இழுத்துக் கொண்டிருக்க அதை பார்த்த வினய் உறுமியபடி யட்சன் அருகில் வந்து அவன் தலையை கடித்து துண்டிக்க முயல, கைகால்கள் வெட்டிக் கொள்வதால் யட்சனின் கழுத்தில் கடிக்க இயலவில்லை. அருகே இரும்பு கம்பி ஒன்று இருக்க அதை கொண்டு யட்சனின் நெஞ்சில் குத்தினான் வினய்.

வினய் நெஞ்சில் குத்தியதும் கீழே விழுந்த யட்சன் துடித்துக் கொண்டிருக்க மேலும் யட்சனை தாக்க முயன்ற வினய்யை பின்னால் இருந்து இரும்பு கம்பி கொண்டு அடித்தார் பூங்குன்றன்.

கம்பி வினய்யின் தலையில் பட தலையை பிடித்தபடியே திரும்பிய வினய் பூங்குன்றனை பார்த்ததும் சிரித்தபடியே அவர் அருகில் சென்றான். நெஞ்சில் இருந்த காயத்தை பிடித்தபடியே யட்சன் வினய்யை போகவிடாமல் தடுக்க வினய் வேகமாக அந்த கம்பி கொண்டு பூங்குன்றனை தாக்கினார். ரத்தம் தலையில் இருந்து வர சரிந்தார் பூங்குன்றன். அதை பார்த்த யட்சன் அக்ரோசம் கொண்டு வினய்யை தாக்க வினய் யட்சனை கீழே தள்ளி மீண்டும் அவன் நெஞ்சில் குத்தினான்.

வினய் குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வர யட்சன் கொஞ்சம் கொஞ்சமாக கண்களை மூடினான்.யட்சனின் உடம்பில் இருந்து ரத்தம் வெளியேற அப்போது அருகில் இருந்த பூங்குன்றனின் உடம்பில் இருந்து வழிந்த ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக யட்சனின் உடலுக்குள் சென்று கொண்டிருக்க இதை அறியாத வினய் மயங்கி இருந்த நிதாவின் அருகில் செல்ல வினய்யின் பின்னால் இருந்து தாக்கினார் ப்ரசாத்.

இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பூங்குன்றன் தன் உயிரை துறக்க கொஞ்சம் கொஞ்சமாக புது ரத்தம் அவனுள் புகுந்து தன் கண்களை திறந்தான் யட்சன்.

ஓரிரு நிமிடம் தான் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் யட்சன்.

யட்சன் இறந்ததைக் கண்டு ஆக்ரோசமாக வினய் சிரிக்க அவன் பின்னால் இருந்து அதே இரும்பு கொண்டு அவனை குத்தினார்ப்ரசாத். வினய் அவரை தடுக்க முனைய அவரை மேலும் குத்திய ப்ரசாத் கையில் இருந்த கோடாரி கொண்டு அவன் தலையை துண்டித்தார். "ரெஸ்ட் இன் பீஸ் மைசன்! நீ இருந்தா எல்லாரையும் கொன்றுவ எனக்கு வேற வழியில்லைடா!" என்று ப்ரசாத் கூற, அதை கேட்டபடியே கண் மூடினான் வினய் .

மேகம் இருண்டு மழை பொழிய இடி சத்தம் கேட்டு கண் விழித்தாள் நிதா. கண் விழித்ததும் யட்சனைத் தேடி வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.

அங்கு யட்சன் இறந்து கிடந்ததை கண்டு அவன் அருகில் வேகமாக சென்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

"நோ! டோலு! என் டோலு சாகக் கூடாது! எழுந்து வாடா டோலு! நான் உன் டாலி வந்துருக்கேன்! ப்ளீஸ் வாடா! நீ மனிசனா இல்லைனாலும் பரவாயில்லை! நீ என் கூட இருந்தா மட்டும் போதும்! திரும்பவும் என்னை விட்டுட்டு போயிட்டியே! அப்பவே தடுத்தேன் என்னை விட்டு போகாதேன்னு கேட்டியா" என்று அவனை கட்டிக் கொண்டு அழுதாள் நிதா.

அப்பொழுது அங்கு வந்த மைக்கேல்சன், விஜயன் இருவரும் இடம் இருந்த கோலத்தைப் பார்த்து நடந்ததை ஊகித்தனர்.

"நாங்க என்ன சொல்லிட்டு போனோம் ப்ரசாத்" - மைக்கேல்சன்.

"கொஞ்ச நேரம் சமாளிச்சிருந்தா யாராவது ஒருத்தரையாவது காப்பாற்றி இருக்கலாம்" - விஜயன்.

"என்னால முடியல விஜயன். மகனா? இல்ல நா கூட்டிடு வந்தவனா? ஆனா இப்போ ரெண்டு பேரும் இல்லாம போய்ட்டாங்க" - அழுதபடி கூறினார் ப்ரசாத்.

"எல்லா முயற்சியும் இப்படி உபயோகமில்லாமல் போகும்னு நினைக்கல" - மைக்கேல்சன்.

"சரிஅடுத்து நடக்க வேண்டியத பார்ப்போம்" - விஜயன்.

"ம்...ம்..." - ப்ரசாத்.

அடுத்து வந்த நிமிடங்களில் ப்ரசாத், வினய் மற்றும் யட்சனுக்கு மைக்கேல்சன், விஜயன் உதவியுடன் இறுதிசடங்குகள் நடத்தி இருவரையும் புதைத்தார். ப்ரசாத் தன் பணப்பலம் மூலம் நடந்த விசயங்கள் வெளியே தெரியாமல் யட்சன் மற்றும் வினய் பற்றி மறைத்தார்

யட்சனுக்கு இறுதி சடங்கை நடத்திக் கொண்டிருந்தனர் ப்ரசாத் மைக்கேல் மற்றும் விஜயன். அப்போது திடீரென்று யட்சன் கண்கள் திறந்ததை பார்த்த ப்ரசாத் வேகமாக அருகில் இருந்த மைக்கேல்லை அழைத்தார்.

மைக்கேல் அங்கே பார்! யட்சன் கண் திறந்து பார்க்குறான்! என்று ப்ரசாத் சொல்ல யட்சன் அருகில் சென்றனர் விஜயன் மற்றும் மைகேல்

அதன் பின் யட்சனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவனை சோதித்த மைக்கேல் ப்ரசாத்திடம் ஓடி வந்தார்

ப்ரசாத் இங்க பாருங்க. யட்சனின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துட்டு இருக்கு என்று மைக்கேல் சொல்ல ப்ரசாத் அவனை புரியாமல் பார்த்தார்

"புரியலை! ஏன் ரத்தம் வந்தா என்ன? ஏன் மைக்கேல் இவ்வளவு பதட்டம்?" – ப்ரசாத்.

" ப்ரசாத்! யட்சனுக்கு ரத்தம் வருது" – மைக்கேல்

"நீங்க என்ன சொல்ல வரீங்க மைக்கேல் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க" – ப்ரசாத்.

அதற்கு விஜயன் பதில் சொன்னார்

" ப்ரசாத்! அவனுக்கு மனிதனுக்குள்ள இயல்புகள் வர ஆரம்பிக்குது" – விஜயன்.

"வாட்! நீங்க என்ன சொல்றீங்க" – ப்ரசாத்.

"ஆமாம் ப்ரசாத்... இவன் வெம்பையரா இவ்வளவு நாள் இருந்தாலும் அவன் உடல் தனக்கு ஏற்பட்ட காயங்களை அதுவே சரி செய்து உடல் சாதாரணமாகிடும்.. ஆனால் இங்க பாருங்க.. அவன் உடலில் காயம் ஏற்பட்டு மனிதர்கள் போலவே ஆறாம அப்படியே இருக்கு" – விஜயன்.

"ஓ வாவ்! அப்ப இவன் மனிதனாகிட்டானா" – ப்ரசாத்.

"நோ! ப்ரசாத்! இவன் எப்பவும் முற்றிலும் மனிதனாக மாற முடியாது" – மைக்கேல்.

"என்ன குழப்புறீங்க? இப்ப மனிதர்கள் மாதிரி ரத்தம் வருதுனு சொன்னீங்க. இப்ப என்னடானா. மனிதன் இல்லைனு சொல்றீங்க. தெளிவா சொல்லுங்க" – ப்ரசாத்.

"இங்க பாருங்க ப்ரசாத் நீங்க சொன்னது ஒரு விதத்தில் கரெக்ட்தான் இவன் மனிதன் மாதிரி இருக்க முடியுமே தவிர மனிதனாக முடியாது" – மைக்கேல்.

அதற்கு ப்ரசாத் புரியாமல் பார்க்க விஜயன் விளக்க ஆரம்பித்தார்

"இங்க பாருங்க ப்ரசாத். வெம்பையரை மனிதனா மாற்ற முடியும் ஆனா முழுவதுமாக இல்லை. அதாவது அவன் உடம்பில் வெம்பிபையர்க்கு இருக்கும் குணங்களும் இருக்கும் மனிதனுக்கு இருக்கும் குணங்களும் இருக்கும். இவ்ளோ நாள் வெம்பையர்க்கு இருக்கும் குணங்கள் அவன் உடம்பில் அதிகமா ஆட்சி செஞ்சுட்டு இருந்துச்சு. ஆனால் இப்ப அந்த குணநலன்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மனிதனோட இயல்புகள் அதிகமாக வெளியில் வர ஆரம்பிக்குது" – விஜயன்.

"ஏன் அப்படி? மனிதனோட இயல்புகள் வெளி வரக் காரணம் என்ன?" – ப்ரசாத்.

"தெரியல ப்ரசாத்.. யட்சனின் உடம்பில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்கு.. அந்த மாற்றங்கள் பல காரணங்களால் நிகழலாம்" – மைக்கேல்.

"என்ன காரணங்களால் இந்த மாற்றம் நிகழும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க மைக்கேல்" – ப்ரசாத்.

அதற்கு விஜயன் பல காரணங்களை சொல்ல தொடங்கினார்

1. யட்சன் அவரை தனக்குள் கட்டுப்படுத்தி வெம்பையரின் குணங்கள் வெளிவராமல் தடுத்திருக்கலாம்.

2. அவர் உடம்பில் இருந்து வெம்பையரின் ரத்தங்கள் வெளியேற்றப்பட்டு மனிதனின் ரத்தம் உள்ளே போயிருக்கலாம்.

"இப்படி காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்" - விஜயன்.

"சோ! இனி பிரச்சனை இல்லை. அவன் மனிதனா மாறி அவன் நார்மலா நம்மளை போல வாழலாம்னு சொல்லுங்க விஜயன்" – ப்ரசாத்.

"நோ! ப்ரசாத்! இனி தான் கவனமா இருக்கணும். அவன் மனிதனாக உட்கொள்ளும் உணவுகள், செயல்கள், வெளிச்சம், கண்ணாடிகள் அவனுள் மாற்றம் உண்டாக்கும். அதை அவன் தொடர்ந்து 3 மாதங்களாவது தாங்க வேண்டும்" – மைக்கேல்.

"அதுமட்டுமல்ல ப்ரசாத் எக்காரணம் கொண்டும் அவனை மிருகமாக மாற்றும் செயல்கள் அவன் செய்யக்கூடாது" - விஜயன்.

"மிருகமா மாற்றும் செயல்கள்னா?" – ப்ரசாத்.

"அதீத கோபம். இரவில் வெளியே செல்லக் கூடாது . கண்ணாடியை பார்த்தால் சில மணித்துளிகளில் அவன் மிருகமா மாறலாம்" – விஜயன்.

"ஓ! அப்ப எப்படி அவனை மிருகமாக மாறாமல் தடுப்பது மைக்கேல்?" – ப்ரசாத்.

"அமாவாசை, பெளர்ணமி இரவுகளில் அவன் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவன் கோபம் படக் கூடாது என்று மைக்கேல் சொல்ல அதை கவனமாக கேட்டுக் கொண்ட ப்ரசாத் அந்த மூன்று மாதம் காலங்களும் யட்சனை கவனமாக பார்த்துக் கொண்டார்.

இப்படி தவ வாழ்க்கை புரிந்த யட்சன் யவனாக மாறினான். யவனாக மாறியவன் முதலில் ப்ரசாத்திடம் கேட்டது. கணியன் பூங்குன்றனாரை தான். ஆனால் வினய் அவரை கொன்று விட்டதாக ப்ரசாத் சொல்ல கண்கள் மூடி அன்று நடந்த காட்சிகளை தன் மனக்கண்ணில் கொண்டு வர முயன்றான் யவன்.

வினய் பூங்குன்றனை நோக்கி போவதை பார்த்த யட்சன் கண் மூடிய தருணம் நியாபகம் வர யவனுக்கு கோபங்கள் வர ஆரம்பித்தது. அதை பார்த்த ப்ரசாத் வேகமாக அவரை தடுத்தார்

"யட்சா! நீ இப்ப யவனா மாறி இருக்க நீ கோபப்பட்டால் மறுபடியும் மிருகமாக மாற ஆரம்பிச்சுடுவ. அதுமட்டுமல்ல யட்சா பெளர்ணமி, அமாவாசை இரவுகளில் நீ ரொம்ப கவனமா இருக்கணும். அது உனக்குள்ள இருக்கும் மிருகத்தை வெளியே கொண்டு வரும்" என்று ப்ரசாத் சொல்ல யவன் அமைதியாக அமர்ந்தான்.

அவனை கலைக்காமல் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றார் ப்ரசாத் .இப்படியாக அந்த டைரியில் எழுதப்பட்டிருக்க அதை படித்து முடித்த நிதா கணத்த நெஞ்சோடு அந்த டைரியை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்

"யவன் அத்தான்! எனக்காக தான் நீங்க இவ்வளவு செஞ்சு இருக்கீங்களா?" என்று கூறிய நிதா ஏதோ தோன்ற மறுபடியும் பக்கத்தை புரட்டினாள்

அவள் தேடிய ஒன்றுகிடைக்காமல் போக மறுபடியும் யவனின் பேக்கில் கைவிட்டு எதையோ தேட அவள் கையில் கிடைத்தது மற்றொரு டைரி, அதை நிதா வேகமாக புரட்ட அவளிடம் இருந்து அந்த டைரியை வெடுக்கென்று புடுங்கியது ஒரு கரம். வேகமாக நிதா திரும்பிப் பார்க்க அங்கு யவன் நின்று கொண்டிருந்தான்.
 
Top Bottom