Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
819
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:
Messages
15
Reaction score
18
Points
3
டீசர் 1

"ஏலே எடுப்பட்ட பயலே!! உனக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா .. எப்ப பார்த்தாலும் பொட்டச்சியோட ஓரண்ட இழுத்துட்டு!! போய் வயல்ல களையெடுக்கிற சனத்துக்கு காபி பொட்டலம் வாங்கியாருவியா .. இங்கன நின்னுட்ட கத பேசிட்டு இருக்கான்!!கிருக்குபய" வெத்தலை பாக்கை இடித்தப்படியே வசைப்பாட்டை பாடிய சங்கிலியாத்தாவை எரிச்சலாய் பார்த்தவன்

" இங்கரு அப்பத்தா.. என்ன மட்டும் திட்டு.. உன் தகரடப்பா பேத்திய நல்லா மெச்சிக்கோ.. அவ ஊருக்குள்ள பண்ற அட்டூழியத்தை எவரும் கேக்கமாட்ரிய... என் சேக்காளி பயலுவ இவளால என் மானமே போது" என வீரவசனமாய் மூச்சு வாங்கி பேசி முடித்த இசையமுதனின் பேச்சை அப்பத்தா கண்டுக்கொள்ளாமல் தன் ஆசை பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தாள் சங்கிலியாத்தா

இதை கண்டவன் மனதில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய தன் தமக்கை என்ன சொன்னாள் கடுப்பாவாள் என்று அறிந்தவன் "என்ன பண்றது இந்த வூட்டுல தவுட்டுக்கு வாங்குன புள்ளைக்கு தான் மவுசு ஜாஸ்தி போல !! " என்ற இசையமுதன் கூற்றை கேட்டதும் காளியாக ஆவதாரமெடுத்தாள் நம் இளமதி ..

டேய் என்று விரட்ட ஆரம்பிக்க அவனும் ஓட என்று ஆரம்பித்து கடைசியில் கைகலப்பில் முடிய அவர்கள் அம்மா கரண்டியோடு அடிக்க வர என அவர்களின் வழமையான சம்பவம் அரங்கேறியது

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

"ஹே மிஸ்டர் வேந்தன் .. நான் உங்களிடம் பேசுனுமே!! கம் டூ மை ரூம் மேன்" என்று கட்டளையிட்டவன் விறுவிறுவென உள்ளே செல்ல அவன் கிடக்குறான் என்ற தோரணையில் காத்து வாங்கி கொண்டிருந்தான் கவிவேந்தன்

"டேய் வேந்தா .. தல கூப்பிட்டு போகாம என்னடா பண்ணிட்டு இருக்க!! காலையிலே வாங்கி கட்டிக்காத" என்ற நண்பனின் கூற்றை கேட்டதும்

" இவன் ஒருத்தன். ..இதெல்லாம் ஊராடா .. செய்.. வேர்க்க விருவிருக்க வந்து உட்கார்ந்தா அதுக்குள்ள இந்த மங்கூஸ் மண்டையன் உசுர வாங்குறான். கொஞ்ச நேரம் உட்கார விடமாட்டாங்க " என்று அழுத்துக்கொண்டே அடுத்த நிமிடம் மங்கூஸ் மண்டையன் இல்ல இல்ல அவனின் மகத்தான பாஸ் முன்னாடி நின்றான்

" மிஸ்டர் வேந்தன் உங்களிடம் ஒரு விசயம் பேசனும்" என்றதும்

"சொல்லுங்க சார்" என்க

"மார்னிங் சாப்பிட்டிங்களா"

தான் கேட்டது சரியா என்று யோசித்தவன் " சார் என்ன
கேட்டிங்க "

மார்னிங் சாப்பிட்டிங்களானு கேட்டேன் என்றதும் அடப்பாவி இதுக்காடா உடனே வரசொன்ன என்று யோசித்தவண்ணம் தலையை ஆட்டினான்

அவன் பாஸோ " நீங்க சாப்பிட்டாலும்‌ நான் சாப்பிடல .. சோ வாங்க எனக்கு கம்பனி கொடுங்க அப்பறம் பேசுவோம்" என்றவன் அவனையும் இழுத்துக்கொண்டு கேபிடேரியா சென்றான்

💚💚💚💚💚💚💚💚💚💚💚

"ஏலே சண்முகம் .. நம்ம பண்ணைக்கார வூட்டு வயலில மட்டும் நல்ல வெள்ளாமையாம் .. ஒரு பூச்சி அடிக்கலயாம் அம்புட்டு ராசி வந்துச்சாம்.. அதும் நெல்லு நல்ல பவுனாட்டம் இருக்குனு அப்படியே சர்கார்ல இருக்கவன் வந்து எடுத்துக்கிட்டானாம் தெரியுமா " என்று டீக்கடை பெஞ்சில் ஓசி பேப்பரை படித்துக்கொண்டே ஆறுமுகம் சத்தமாக உரைக்க அங்கிருந்தவர் பார்வை எல்லாம் இவர் புறம் திரும்பியது

"அவருக்கென்ன.. காச தூக்கி பரண் மேல வச்சுகுர அளவுக்கு கொண்டி மிஞ்சி கெடுக்கு !! அத வச்சு என்ன வேணும்னாலும் பண்ணுவாரு.. பணத்தை தண்ணியா செலவழிச்சு‌ பட்டணத்துல இருந்து எதோ உரமருந்து கொண்டு வந்து தெளிச்சாராம் .. அதான் இம்புட்டு விளைச்சலாம்" என்று இன்னொருவர் நீட்டி முழக்க அங்கிருந்த பெரியவர்

"டேய் மடையன்களா .. மருந்து போட்டு விளைச்சலெடுக்குறதுல என்னடா பெரும இருக்கு.. அம்புட்டும் நம்ம உடம்புக்கு விசம் டா.. வெசனக்கெட்டவன்களா" என்று உண்மையை உரைக்க அதை யாரும் கேட்கும் நிலையில் இல்லை

ஹாய் மக்களே!! இது என்னோட புது முயற்சி .. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. குறைகளும் வரவேற்க படுகிறது.. நன்றி
 
Messages
15
Reaction score
18
Points
3
அத்தியாயம் 1

அந்திவானம் புலர ஆதவனின் திருவிளையாடல் அரங்கேற அழகாய் விடிந்த அக்காலை வேலையில் குப்புறப்படுத்து கொரட்டைவிட்டு பஞ்சுமெத்தையில் பாந்தமாய் உறங்கிக்கொண்டிருந்த நம் பாருலகம் போற்றும் மன்மதன் பாவைகளின் காப்பியதலைவன் காப்பிக் கொட்டை கலரில் கண்டவரை கவரும் நம் நாயகன் கவிவேந்தன் அவர்களின் மொபைல் விடாமல்‌ அடித்துக் கொண்டிருந்தது..

அது அவனின் பட்டிக்காடு பைங்கிளியோடு பாடிக்கொண்டிருந்த டூயட்டை கலைத்ததால் கடுப்பாகி பக்கத்தில் இருந்தவனை காலால்‌ உதைக்க அது சரியாக அவன் நண்பனை கட்டிலில் இருந்து உருள வைத்திருந்தது

மீண்டும் அவன் மொபைல் ஒலி எழுப்ப அதை எடுத்தவன்
" எம்மோவ் .. ஏன் இப்படி காலையிலே கால் பண்ணி தூக்கத்தை கெடுத்துட்டு இருக்கிங்க. " என்று கத்த

" டேய் எரும .. மணி ஏழாவது .. ஆபிஸ் போனும்னு பொறுப்பில்லாமல் தூங்கிட்டு பேச்ச பாரு .. வேலை வெட்டிலாம் விட்டுவிட்டு அந்த பாழாப்போன பாஸ்ஸிடம் பையன் திட்டு வாங்ககூடாது என்று பாசமா போன் பண்ண எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று மூச்சு வாங்க பையனுக்கு சளைத்தவளில்லை என்று பேசி முடித்தாள் பாரிஜாதம் .

கவிவேந்தனின் பாசமிகு தாய்.. அரசு பள்ளி ஆசிரியை . பிள்ளைகளின் மீது அளவுகடந்த அன்பும் நட்பான கண்டிப்பும் காட்டுபவர். தன் இணைக்கு இணையான வேந்தனின் தந்தை பத்மநாதன் . கல்லூரி பேராசிரியர். குழந்தைகளை அவர் அவர் போக்கில் வளர வேண்டும் என்ற எண்ணமுடையவர். விவசாயத்தின் மேல் ஆர்வம் உடையவர். எப்பாடுபட்டாவது விவசாயத்தை பாதுகாத்தே ஆவேன் என்று போராடி கொண்டிருப்பவர். விவசாயத்தில் முனைவர் பட்டம் பெற்ற தந்தையினால் தான் வேந்தனுக்கும் விவசாயத்தில் ஈடுபாடு வரக் காரணம்

"அம்மா .. நீங்க பேசுறதெல்லாம் நம்பறதுக்கு நான் ஒன்னும் மிஸ்டர் நாதன் இல்லையே " என்று சிரிக்க

"பிச்சுடுவேன் படவா .. என் வூட்டுகாரின் பெயர் சொல்லி கூப்பிடுவியா .. வந்தேன் "

உரக்க சிரித்தவன் "ஏன்மா நீ மட்டும் தான்‌ கூப்பிடனுமா .. சரி .. என்ன விசயம் சொல்லுங்க .. நீங்க இப்படி‌ காலங்காத்தால என்னை அழைத்திருக்கீர்கள் என்றால் ஏதோ விடயம் இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.. சொல்லுங்கள் ராசாமாதா " என்று கிண்டல் தொணியில் சொல்வதை கேட்டு தைரியம் வர பெற்றவராய்

"அது வந்து .. நம்ம அம்மு இருக்காளே அவ நீ சொன்னா கேட்பாளாமே" என்க

"அப்படியா" என்றவனின் பிடிக்கொடுக்கா பேச்சில் கோபம் வந்தாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல்

" அப்படிதான்.. ஒழுங்கா உங்கக்காட்ட சொல்லி அவளை கல்யாணம் பண்ண"
என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரி கால் செய்ய அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவன்‌

"அம்மா .. ஒரு நிமிசம் சாரி மா ..பாஸ் கால் பண்றாரு .. இருமா கூப்பிடுறேன்" என்று வைத்தவனுக்கு அவனின் அலுவலகத்துக்கு இன்றைக்கு சீக்கிரமாக வர வேண்டும் என்ற கட்டளை வர அவனும் துரிதமாக கிளம்ப ஆயத்தமானவன் அவன் அப்பாவிற்கு மாலையில் போன் செய்வதாய் குறுந்தகவல் அனுப்ப தவறவில்லை.

அவன் அம்மாவின்‌ பேச்சு எதை பற்றி செல்லும் அறிந்தவன் மாலை வந்து பேசிக் கொள்ளலாம் என்றே இந்த முடிவை எடுத்திருந்தான். ஆனால் இப்போதே பேசி இருந்தால் சில பல சங்கடங்களை தவிர்த்திருக்கலாம்

அங்கு பாரிஜாதமோ போனை வெறித்தவாரே " இவனும் வச்சுட்டான்.. நம்ம பெத்த புள்ளைங்களுக்கு ஏன்பா நம்ம கஷ்டம் தெரியமாட்டுது" என்று கண்கலங்கி புலம்ப தன்னவளை அணைத்த நாதன்

" பாரி.. நீ கவலைப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்கல.. அவர்களோட வாழ்க்கையை முடிவெடுக்குற உரிமை அவங்களுக்கு தான் இருக்கு .. நம்ம பசங்க ஒன்றும் சின்ன பிள்ளைகள்‌ இல்லை.. இரண்டு பேரும் படிச்சு ஒரு நல்ல நிலைமையில் இருக்காங்க.. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்" என்றவரின் கூற்றை கேட்டு சிறிது தெளிவுற்றாலும் அவளின் கலக்கம் உணர்ந்தவன்

"பாரிமா... வேந்தா உன் போனை வச்சதுக்கு வேகாத அவன் பாஸ் தான் காரணமா இருப்பான்.. பேசாம அவன் நம்பருக்கு கால் பண்ணி நம்ம வீட்டுக்கு காரகொழம்பு சாப்பிட வர சொல்லு " என்றவரை புரியாது பார்த்தவளை

" ஹி ஹி .‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌. இல்லை.. அவன் மட்டும் நீ செய்யும் காரகொழம்பு சாப்பிட்டா கண்டிப்பா காலி ஆகிடுவான்.. நீயும் உன் பையனோடு பேசுவதற்கு இடைஞ்சல் இருக்காது பாரு" என்று‌ சொன்னவர் அவ்விடத்தில் இருந்து சற்று தள்ளி நிற்க

அதன் அர்த்தம் உணர்ந்த பாரியோ கோபத்தில் காரமாகி கணவரை கரண்டியோடு விரட்ட ஆரம்பித்தார்.. ( எத்தனை வருஷம் ஆனாலும் இந்த கரண்டி மாற மாட்டுது பா)

(ஆமா உருண்டு போன அவன் நண்பன் என்ன ஆனான் ?? அடப்பாவி ... உருண்டது கூட தெரியாம நல்லா தூங்குரான்.. சரி நம்மளை போலவே இருக்கிறான் )

கட்டிலில் இருந்து எழுந்த வேந்தனின் காலில் தட்டுப்பட்ட நண்பன் ரகுவை பார்த்தவன் அவனை எழுப்பி

" டேய் மச்சான் .. ஏன்டா தரையில படுத்து கிடக்குற.. " என்று அக்கரையாய் விசாரிக்க அதில் ஆக்ரோசமானவன்

" டேய்.. நாயே.. தினமும் உனக்கு இதே வேலையா போச்சு.. நீயும் என்னை எட்டி உதைக்க நானும் கீழே விழ .. இப்போல்லாம் இதுவே பழகிடுச்சு.. அதுனால தூங்க விடுடா " என்று மீண்டும் உறங்க ஆரம்பித்தவனை

"பாஸ் வர சொல்லிருக்காரு .. ஒன்பது மணிக்கெல்லாம் மீட்டிங் இருக்கா.. வாடா கிளம்பலாம்" என்றான்

"உங்க டீம் லீடர்.. உன்னை தானே வரச்சொல்லிருப்பாரு.. அதுக்கு நான் ஏன் வரனும்" என்ற ரகுவை

அடித்து உதைத்து வதைத்து அவனையும் அலுலகத்துக்கு கிளப்பிக்கொண்டு வந்தான். அப்பறம் அவன்‌ மட்டும் நிம்மதியா‌ தூங்கிட்டா என்ன பண்றது. அந்த நல்ல எண்ணம் தான் இதற்கு காரணம். இருவரும் உள்ளே நுழையவும் அவனின் பாஸ் என்ற பாஸ்கரன் வரவும் சரியாக இருந்தது ..

பாஸ்கரன் முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் இளைஞர்.. எப்போதும் முகத்தில் ஒரு கடுமை குடிக்கொண்டிருக்கும் கடுவன்பூனை Mr.perfect என்ற அடைமொழியின் சொந்தகாரர். பல பதுமைகளின் கனவுகண்ணனாக இருக்க பல தகுதிகள் இருந்த போதும் இன்றும் "நான் முரட்டு சிங்கள்டா " என்று எவரையும் நெருங்கவிடாமல் எட்டி நிறுத்தும் முரட்டுக்காளை..இப்படி பார்த்தாலே நடுங்க வைக்கும் டெரர் பாஸ் நம்ம வேந்தனிடம் மட்டும் சிறிது விதிவிலக்கு காட்டும் காரணம் யாருக்கும் இது வரை தெரியவில்லை..

"ஹாய் மிஸ்டர் வேந்தா.. பரவாயில்லையே சரியான நேரத்துக்கு வந்துட்டிங்களே .. வாங்க மீட்டிங் போகலாம்" என்றவன்

பக்கத்தில் இருக்கும் ரகுவை பார்த்து " நீங்க வேற டீம் தானே .. உங்களுக்கும் மீட்டிங் இருக்கா" என்று கேட்டான்.

பத்து மணிக்கு ஆபிஸ்னா எல்லாம் பத்தரைக்கு தான் வருவாங்க இவன் மட்டும் ஒன்பதுக்கே வந்தானா.. இப்படி தானே கேட்பார்கள்

அவர்‌ கேட்டதும் " வேந்தனை முறைத்தவன் " இல்லை சார் .. அது .. இவன் தான்" என்று சொல்ல ஆரம்பிக்க

"ஓகே மேன் .. யு கேரி ஆன்" என்ற பாஸ் வேந்தனோடு கிளம்ப

"இவருக்கு இதே வேலை .. கேட்டாரு நம்ம சொல்றதுக்குள்ள கிளம்பிட்டாரு .. ச்செய் .. ஊரு உலகத்துல பத்து பதினெஞ்சு ரூம் மேட் வச்சுருக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்.. நான் மட்டும் இந்த வேந்தன வச்சுட்டு அனுபவிக்கிற வேதனை இருக்கே.. அய்யய்யோ" என்றவன் கேட்டீனில் பொங்கலை ஒரு பிடி பிடித்து வர அதற்குள் பலர் வந்திருந்தனர்

இவன் இருக்கையில் அமர்ந்ததும்
" டேய் மச்சான் என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட .. அதும் வேந்தன் இல்லாம வந்துருக்கு" என்று கேட்டுக்கொண்டே சிவா வந்து அமர இவனின் சோக கதையை கூறி முடித்தான் .. (அதாங்க தூக்கம் போச்சாம் அதும் நம்ம வேந்தன் தான் காரணமா)

அதை கேட்டு சிவா " பாவம் டா நீ.. இருந்தாலும் உனக்கு இது தேவையான ஒன்னு தான் " என்று சிரித்தவன்

"மச்சான்.. இருந்தாலும் கஞ்சி போட்ட கதர் சட்டை மாதிரி வெரப்பா திரியும் நம்ம பாஸ்க்கு வேந்தா மேல ஏதோ லவ்வுடா .. அதான் மனுசன் அவனை மட்டும் விடவே மாட்டிங்குறாரு" என்ற சிவா சொல்ல ரகுவும் அவனுடன் இணைந்து சிரித்துக்கொண்டிருந்தனர்
 
Messages
15
Reaction score
18
Points
3
ஹாய் மக்களே .. தாமதமா வந்தததற்கு மன்னிக்கவும் . அடுத்த எபி இன்னைக்கு வந்துடும் . இப்போ ஒரு குட்டி டீஸர்

"ஏலே.. எவன்டா இந்த மாதிரி யோசன சொன்னது .. கூறுகெட்டவன்களா .. எதடா அழிக்க பார்க்கிறிங்க .. நம்ம அடையாளத்த டா . நமக்கு கஞ்சி ஊத்துர சாமியா நம்ம காடுகரையலாம் ..இதெல்லாம் கட்டடம் ஆக்கிபுட்டு சோத்துக்கு எங்க போவீக... செங்கல் மண்ண சாப்பிடுவிகளா.. பொசங்கெட்டவன்களா.. போகாத ஊருக்கு வழி சொல்றானுவ அதுக்காக எல்லா வந்து வேல வெட்டிய வுட்டுபுட்டு வந்து உட்காந்திருக்கிக"

"எவனாது இது மாதிரி சேதியை இனி கொண்டு வந்தீக என் சனத்துக்கு நல்லதுன்னு சொல்லி .. அவன் இடப்ப ஒடச்சி அடுப்புல வச்சுட்டுவேன் ..என்ன இன்னும் வேடிக்க பார்த்துட்டு இருக்கிக.. கிளம்புக ..எல்லாம் போயி வெள்ளாமைய பார்க்குற வழிய பாருங்க" என்ற

சங்கிலாயாத்தாவின் குரலில் சிலர் கதி கலங்கி நிற்க ஊர் மக்களும் தெளிவுற்ற மனநிலையோடு அவ்விடம் விட்டு நகர விசிலடித்து வரவேற்றனர் அவ்வூர் இளவட்டம்

இது இத்துடன் முடியப் போவதில்லை.. இது மிக பெரிய ஆபத்தில் முடிய போகிறது என்று அங்கு எவருக்கும் தெரியவில்லை

💚💚💚💚💚💚💚💚

"டேய் கரிசட்டி. எடுடா அந்த கட்டய .. அத்த மவ பாவமாச்சேனு பார்த்தா .. ஓவரா ரவுசு பண்றா. இவள இனி விட முடியாது" என்றவன் அவள் கையை பற்ற

உண்மையாவே அடிச்சுருவானோ என்று பயந்தாலும் தன் கெத்தை விடாதவளாய் தன் குறும்பு தனம் தலைதூக்க " டேய் கரிசட்டி .. அவரு தான் கேட்குறாருனா .. நீயும் இங்கன நோட்டம் வுட்டுட்டே தேட்டிட்டு இருக்க.. சூது வாது தெரியாதவன்" என்று நமட்டு சிரிப்பு சிரிக்க

கரிசட்டி என்ற கதிரேசனோ " இவள் நம்ம பட்டணத்து ராசாக்கு கட்டம் கட்டிட்டா போல பேச்சு ஒரு தினுசா இருக்கு "என்று யோசித்தவாறே நடப்பதை பார்க்க ஆரம்பித்தான்

"ஏய் ஏண்டி .. பேச்சா பேசுற .. அந்த கட்டையால நாலு போடு போட்டா தான் நீ சரி வருவ.. நீ எடு கரிசட்டி கட்டய " என்றவன் அவளை பிடிக்க தோதாக இன்னும் நெருங்க

"டேய் கரிசட்டி இப்போ புரியுதா .. என்ற அத்தான் கட்ட தேட காரணத்த" என்றவள்

"மாமா .. உனக்கு என் மேல எம்புட்டு ஆசை இருந்தாலும் கண்ணாலத்துக்கு முன்னாடி இப்படி நிக்கிறது தப்பு அத்தான் .‌.. சாதிசனம் தப்பா பேசாது .. " என்று கண்ணடித்து கண்டித்தவளின் கூற்றை கேட்டதும் தான் இருக்கும் நிலை உணர்ந்தவன் விலக சிட்டாக
பிறந்திருந்தால் அவனின் பட்டிக்காட்டு பைங்கிளி

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

ஹலோ மிஸ்டர் .. உங்க பெயர் சொல்ல கூட நான் விரும்பல .. பட் நீங்க செய்யும் இந்த கேவலமான வேலையை விடமாட்டிங்களா" என்றவளின் பேச்சை கேட்டு தன்னவள் பேசிவிட்டாள் என்று சந்தோசப் படுவதா இல்லை அவள் கேட்கும் விதம் கேட்டு கோபப்படுவதா என்றும் புரியாமல் பாஸ்கரன் முழித்துக் கொண்டிருந்தான்

ஆனால் அதற்கும் கொடுப்பார்கள் "என்ன எனக்கு எப்படி தெரியும் என்று தானே யோசிக்கிறிங்க.. செய் .. நீங்க மனுசனே இல்லை.. இப்படி உயிர் கொடுத்த ஊருக்கே துரோகம் பண்ண பாரக்கிறீர்களே..பணம் முக்கியம் தான் ஆனா அத விட உயிர் முக்கியம் ஆரோக்கியம் முக்கியம் நிம்மதி முக்கியம் இதெல்லாம் உங்களுக்கு முக்கியமா இல்லைனா பரவாயில்லை ...ஆனா நிம்மதி தான் முக்கியம் என்று வாழ்ந்துட்டு இருக்க மக்களோட வாழ்கையை அழிக்க பார்க்காதிங்க.. உங்கள ஒரு காலத்துல விரும்பிட்டு இருந்தேனு நினைக்கும் போதே எனக்கு கேவலமா இருக்கு" என்று கோபமாக பேசியவள் அடுத்த பக்கம் அவன் பேச போவதையும் கேட்டிருக்கலாம்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Messages
15
Reaction score
18
Points
3

அத்தியாயம் 2


பார்ப்பவரை பரவசப்படுத்தும் பச்சைபசேல் வயல் வெளிகள் .. வயலிடையில் வெள்ளிக்கீற்றாய் பளப்பளத்து சலசலத்து ஓடம் வாய்க்கால் ஓடைகள் ... ஓங்கி உயர்ந்த தென்னை மா வாழை‌ என்ற வகை வகையான மரங்கள்...

பட்டணத்தில் காணக்கிடைக்கா மனதுக்கு இதமான அரசமரத்து சிலு சிலு காத்து... கிராமத்தின் அத்தனை அம்சங்களை கொண்டு கரைபுரண்டு ஓடும் காவிரி கரையின் கம்பீரமாக அமைந்திருக்கும் தன்‌ கதைக்களத்தின் காவியம் தான் காட்டுமரசன்பட்டி.‌

முப்போகம் வெள்ளாமை‌ நடக்கும் பொன் விளையும் பூமி. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் வெள்ளந்தியான மக்கள்.. இன்னும் பட்டணத்து காற்று‌ நுழையாமல் நவீனத்தில் இருந்து தப்பித்திருக்கும் சிங்கார சிற்றூர்..

அன்றும் வழமை போல் ஊராரால் மதிக்கப்படும் பெரிய வீட்டு குடும்பத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது

"ஏலே எடுப்பட்ட பயலே!! உனக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா .. எப்ப பார்த்தாலும் பொட்டச்சியோட ஓரண்ட இழுத்துட்டு. போய் வயல்ல களையெடுக்கிற சனத்துக்கு காபி பொட்டலம் வாங்கியாருவியா .. இங்கன நின்னுட்ட கத பேசிட்டு இருக்கான்.. கிருக்குபய" வெத்தலை பாக்கை இடித்தப்படியே வசைப்பாட்டை பாடிய சங்கிலியாத்தாக்கு வயது எண்பது என்றால் யாரும் நம்பமாட்டார்கள்..

நெற்றியில் ஒரு திருநீறு கீற்று பால் நிற முடியை இழுத்து கொண்டையிட்டுக்கொண்டு ரவிக்கையில்லா சுங்குடி சேலையில் காதில் தண்டட்டி கழுத்தில் இரட்டவட‌சங்கிலி என கம்பீரமான பாங்கோடு தைரியத்தின் உருவமான பழங்கால பெண்மணி.. பெரிய வீட்டின் குடும்பத் தலைவி ...

சங்கிலியாத்தாவின் கணவர் கருப்பைய்யா. அவர் இறந்து 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரு‌ பிள்ளைகள் . ஆண் பிள்ளை தண்டாயுதம்.‌ பெரிய குடும்பத்தின் மதிப்பை தந்தைக்கு பிறகு சிறிதும் சுணக்கம் இல்லாமல் காப்பாற்றி வருபவர் . அவரின் மனைவி தாமரை. பாந்தமான குடும்பதலைவி அவர்களுக்கு மூன்று‌ பிள்ளைகள் பெரியவன் இளஞ்செழியன்‌ . அடுத்து நம் இளமதி . கடைக்குட்டி இசையமுதன்.

சங்கிலாயாத்தாவின் மகள் தான் நம் கவிவேந்தனின் தாய் பாரிஜாதம்.

எப்பவும் போல அப்பத்தாவின் பேச்சில் வெகுண்டெழுந்தவன்
" இங்கரு அப்பத்தா.. என்ன மட்டும் திட்டு.. உன் தகரடப்பா பேத்திய நல்லா மெச்சிக்கோ.. அவ ஊருக்குள்ள பண்ற அட்டூழியத்தை எவரும் கேக்கமாட்ரிய... என் சேக்காளி பயலுவகளுட்ட இவளால என் மானமே போது" என வீரவசனமாய் மூச்சு வாங்கி பேசி முடித்த இசையமுதனின் பேச்சை அப்பத்தா கண்டுக்கொள்ளாமல் தன் ஆசை பேத்தியை கொஞ்சிக்கொண்டிருந்தாள் .

இது எப்போதும் நடப்பது தான் . கடைக்குட்டி இசையமுதனாய் இருந்தாலும் இந்த வீட்டில் உள்ளவர்களின் செல்லபிள்ளை இளமதி தான்.‌ ஏன் என்று கேட்டால் அடுத்தவர் வீட்டில் வாழ போகும் பிள்ளை என்று பேச்சு வரும். ஆனால் உண்மையோ அவள் பாசத்தை அளிப்பதிலும் விவசாயத்தை காப்பத்திலும் கெட்டிக்காரி . அவளிடம் பேசுபவர் எவரையும் கவர்ந்திழுக்கும் காந்தமவள். அவளை ஊருக்கே செல்லப்பிள்ளை எனும் போது வீட்டிற்கு கேட்கவா வேண்டும் . அவள் அடங்கும் ஒரே ஜீவன் தாமரை மட்டுமே .


"அப்பத்தா நான் இங்கன கடந்து கத்திட்டு இருக்கேன் .. நீ அந்த புள்ளைட்ட கொஞ்சிட்டு கிடக்க"

"ஏலேய்.. அதுக்கு தான் சொல்லுதேன் .. எதுக்கு இங்க வம்படித்துட்டு கிடக்குற.. போய் சோலிய பாரு .. " என்ற அப்பத்தாள் பதில் கொடுக்க

"சரி சரி நான் போறேன்.. ஆனா இவள வயலுக்கு வரசொல்லாத .. இந்த புள்ள எதாவது ஏழரை கூட்டி என்ன எல்லாருட்டையும் ஏசு வாங்க வைக்குது" என்ற ரத்தக்கண்ணீர் வராத குறையாக புலம்பியவனை பார்க்க பாவமாக இருந்தது

ஆனால் நம் இளமதிக்கு இல்லை போல " இங்கரு டா .. நானா எந்த வம்புதும்புக்கும் போறது இல்லை .. என்னை தேடி வரத ஒதுக்க முடியாது.. அதுனால இதுக்கு உடன்பட்டா வயலுக்கு வந்து சோலிய பாரு .. இல்ல இங்கயே பொம்ம படம் பார்த்துட்டு கெட.. நான் வெள்ளாமய பார்த்துக்கிடேன்" என்ற பேச்சில் அவனின் தன்மானம் சீண்டப்பட அதில் கடுப்பின் உச்சத்திற்கே சென்றவன் என்ன பேசினால் தன் அக்கா கோபமாவாள் என்று அறிந்தவன்

"என்ன பண்றது .. இந்த வூட்டுல தவுட்டுக்கு வாங்குன புள்ளைக்கு தான் மவுசு ஜாஸ்தி போல .அதான் இந்த புள்ள நாட்டாம நடக்குது " என்ற இசையமுதன் கூற்றை கேட்டதும் காளியாக ஆவதாரமெடுத்தாள் நம் இளமதி ..

டேய் என்று விரட்ட ஆரம்பிக்க அவனும் ஓட கைக்கலப்பில் முடிய இருந்த சமயத்தில் தாமரை தலையெடுத்து அவர்களை அமைதிப்படுத்தினார்

"ம்மா .. நான் தானே உன்ற மவ.. இவன தானே தவுட்டுக்கு வாங்குன"
என்று சோக கீதம் வாசித்த இளமதியை முறைத்தவள்

"ரெண்டு பேரும் செத்த நேரம் சும்மா கிடக்குறீகளா .. எப்ப பாரு ஓரண்ட இழுத்திட்டு.. ரெண்டுத்தையும் ஏன் பெத்தோனு தான் நான் கவலப்படனும்" என்று திட்டியவள் தன் மாமியாரை பார்க்க அவரோ தன் வெத்தலை பாக்கை காரியமே கண்ணாய் இடித்துக் கொண்டிருந்தார்

பின்பு யார் தாமரையிடம் திட்டுவாங்குவது .. அதுக்காக அப்பத்தாவை அம்மாஞ்சி மாமியார் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்..

தாமரை மாமியாரை விட்டுக்கொடுக்காத மருமகள் . மாமியார் சொல்லும் முன்னே அவர் நினைத்ததை நிறைவேற்றி விடுவார் . அதனால் தாமரையை குறை சொல்வதற்கு எதுவும் இருக்காது . தன்னை போலவே சுற்றத்தை அனுசரிப்பதிலும் ஊருக்கு செய்வதிலும் குடும்பத்தை காப்பதிலும் வல்லமை படைத்தவள் அதனால் தற்போது மருமகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் . இவர்களின் மாமியார் மருமகள் உறவை கண்டு ஊரே மெச்சும்.

சரியாக அந்த நேரத்தில் தண்டாயுதம் வீட்டிற்குள் வந்தவர்
" தாமரை.. கொஞ்ச தண்ணீ கொண்டாரீயா" என்றவர் ஆசுவாசமாய் நாற்காலியில் அமர்ந்தவருக்கு

" இதோ மோர் கலக்கிடேனுங்க மச்சான் .. இந்த கொண்டாரேன்" என்று மனைவியிடமிருந்து பதில் கிடைத்தது

"அய்யா போன காரியம் என்ன ஆச்சுய்யா" என்ற தன் சங்கிலியாத்தாவின் கேள்விக்கு

" கலெக்டருக்கு கடுதாசி கொடுத்துருக்கோம்.. அவுகளும் சர்காருட்ட பேசுரேனு சொல்லிருக்காக .. பார்ப்போம்" என்றவர் மனதில் அங்கு பேசிய விடயம் உறுத்திக் கொண்டே இருந்தது .

" உழைச்சு வெள்ளாமை பார்த்து அதுல லாபம் பார்க்குறத்துக்குள்ள நாம அம்புட்டு சிரமப்பட வேண்டி கிடக்கு. இதுல சிலரு அத அழிக்க வேற பார்க்குறானுங்க .. " என்று மெதுவாக புலம்பியவர் தன் குடும்பத்தில் உள்ளவர் கண்ணில் படாதவாறு தன் கோபத்தை மறைத்துக்கொண்டார்

ஆனால் இதை காதில் வாங்கிய இளாவும் அமுதனும் தந்தையின் முகத்தை ஆராய ஆரம்பிக்க

நம் அப்பத்தாவோ " என்னய்யா சொல்ற .. விவசாயத்தை அழிக்க நினைச்சவ வூட்டுலலாம் என்னத்த தின்பானுங்கயா .. கூறுக்கெட்டவனுங்க .. புத்தி கெட்டு கிடக்குறானுங்களா

அய்யா எனக்கு ஒரு விசயம் மட்டும் பண்ணுய்யா .. நான் உசிரோடு இல்லாட்டியும் விவசாயத்த வுட்டுப்புடாதீகயா .‌ அது நம்ம வம்சத்துக்கே செய்ற துரோகம்யா"

"ஆத்தா .. நீ எதுக்கு வெசனப்படுற .. அது மாதிரி நான் நடக்க விடமாட்டேன் .. கவலப்படாத ஆத்தா எனக்கு அப்பறம் இத காப்பத்த என் புள்ளைங்க இருக்குங்க.. அதுக என்னை விட சூதனமாவே பாரத்துக்குங்க" என்று சற்று கர்வமாகவே உறுதி அளித்தார்

இதை கேட்ட இளாவும் அவள் தமையனும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள

இளாவின் மூளையோ எதோ பெரிய விசயமா இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பிக்க

"எதே .. இளா .. வரீயா வயலுக்கு போவோம் ..ஆளுவோ என்னை எதிர்பார்த்து காத்து கிடக்கும்.. " என்ற அமுதனின் பேச்சில் சுயத்துக்கு வந்தவள்

"அப்பா .. நீங்க கவலப்படாதீக .. நாங்க பாத்துக்குவோம் .. நாங்க வயலுக்கு ஒரு எட்டு போயிட்டு வரோம் .. அண்ணாரு வந்தாகனா வேப்ப உரம் கேட்டுருந்தேன் அத மட்டும் நம்ம ட்ராக்டருல ஒரு லோடு அடிக்க சொல்லுங்க.. வரோம் பா" என்று டிவிஸ் 50 ல் தன் தம்பியோடு பறந்தவளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார் அவரின் தந்தை.
 
Messages
15
Reaction score
18
Points
3
அத்தியாயம் 3

வயலுக்கு வந்தவள் " பேச்சி !! கண்ணப்பா !! எல்லாரும் கைகால் கழுவிட்டு வரீகளா.. டீயை குடிச்சுப்புட்டு போயீ வேலய பார்க்குரீகளா " என்று சத்தமிட்ட குரலில் களை எடுத்துக்கொண்டிருந்தவர்கள் திரும்பி பார்க்க

"இல்ல இளா‌ மா .. இன்னும் ஒரு வரிச தான் இருக்கு முடிச்சுட்டே வரப்பு ஏறிடுவோம் புள்ள" என்று பேச்சியின் பேச்சு இளாவிடம் இருந்தாலும் கை என்னமோ வேலையில் இருந்தது.

" இங்கரு.. வந்து சோலிய பார்த்துக்கலாம்.. எல்லாம் மேல ஏறுக .. ஒரு வா டீய குடிச்சுபுட்டு வேலைய பார்ப்பியலா .. எம்புட்டு நேரமா பசியோட கெடப்பிய .." என்ற பாசமான கட்டளையில் அனைவரும் டீ அருந்த ஆரம்பித்தனர்.

"ஏன் புள்ள..‌ இந்த சனத்துட்ட எம்புட்டு வேலைய வாங்க முடியுமோ வாங்கிக்கோனும்னு தான் யோசிக்கீறாவோ .. நீ தான் புள்ள எங்க பசியையும் பார்க்குற"

"பேச்சி நம்ம வூட்டுல வேல பார்க்குற சனம் நல்லா இருந்தா தான் நாம நல்லா இருப்போம்.. அதும் இங்க இருக்குற பாதி பேரு வயசு கூடி இருக்குறவக .. பாவம் தானே .. எல்லா வயுத்துக்காக இந்த வேகாத வெயில்ல வெள்ளாமை பார்க்குறாவோ .. இதுல நானும் கஷ்டப்படுத்துனா அந்த கடவுளுக்குதேன் அடுக்குமா!! "என்ற தன் தோழியை எப்போதும் போல் பெருமையாக பார்த்தாள் பேச்சி.

ஆம் பேச்சி நம் இளமதியின் சின்ன வயதில் இருந்து கூடவே சுற்றி திரியும் சிநேகிதி . குடும்பத்தின் வறுமையால் பதினேழு வயதிலே உள்ளூர் தாய் மாமானான கண்ணப்பாக்கு வாக்கப்பட்டு இரு பிள்ளைகளையும் பெற்றுவிட்டாள்

தன் பசிக்கு உணவிட்டவர்கள் தங்கள் வேலையை தொடர

" இளா ..நான் அந்த கிழக்கால இருக்க மடைய திறந்துட்டு வரேன் புள்ள.. .. நீ இங்கனே இரு" என்ற அமுதனை நக்கலாக பார்த்தவள்

"என்னலே .. எதோ உன்ற பேச்சிலே குறுகுறுப்பு இருக்குதே.. நான் யேன் இங்கனே இருக்கனும் "என்றவளின் கேள்வியில்

"சும்மா இருந்தவளை நானே சொறிஞ்சு விட்டேன் போலயே"
இவ மட்டும் அங்குட்டு வந்தா அந்த பரங்கிபய கூட மல்லுக்கு நிப்பா.. எப்படி‌யாது இங்கனே இருக்க சொல்லிடனும் என்று மனதுக்குள் நினைத்தவன்

" ஏன் புள்ள.. இங்கன வேல செஞ்சிட்டு இருக்காவோ .. அதான் மேப்பார்வ பார்க்கரதுக்கு ஒசரம் இங்கன இருக்க சொன்னேன் புள்ள.. அதுக்குன்னு என்ன போயீ அய்யப்படுறியே" என்பவனை நம்பாமல் பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவன் அடுத்த சமாளிப்பிற்கு வழி தேட அதற்குள் என்ன நினைத்தாளோ

"சரி சரி போயீ சோலிய பாரு " என்றது தான் தாமதம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்.

வரப்பில் உட்கார்ந்திருந்தவள் பொழுது போகாமல் போக
"அய்யோ சும்மா உட்கார முடியல.. போயீ சேத்துல இறங்கி வேல பார்க்கலானாலும் இந்த பேச்சி புள்ள பேச்சா பேசும் ... என்ன பண்றது என்று யோசித்தவள் வாழைக்கொல்லைக்கு செல்லும் கிழக்கு திசை நோக்கி சென்றாள்

"எள்ளு வயப்பூக்கலயே .. என்ற மாமன் இன்னும் ஏறெடுத்து பாக்கலேயே " என்று பாடிக்கொண்டே வரப்பில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவளுக்கு தன்னை யாரோ பார்ப்பது போன்று தோன்ற நிமிர்ந்து பார்த்தவளுக்கு

அங்க ஒருவன் இவளை கண்ணெடிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது

" அய்யோ...பரங்கிக்கா ... அரகிறுக்கு பயலாச்சே இவன் .. பேசியே உசுர வாங்குவானே.. சரி சமாளிப்போம்" என்று மனதில் நினைத்தவள் வரப்பில் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்

அவனை கண்டுக்கொள்ளாதது போல் சென்றவளை கண்டவன் வரப்பில் வந்து வழிமறித்து நிற்க

"இவன் ஒருத்தன் " என்று நினைத்தவள் பல்லை இழித்துக்கொண்டு நிற்பவனை பார்க்க இன்னும் கடுப்பானாள்

"கொஞ்சம் அங்குட்டு நகருரிகளா.. எனக்கு சோலி கிடக்குது .. நான் போகனும்" முடிந்தவரை தன் பொறுமையை கடைபிடித்தப்படி சொன்னவளை பார்த்து சிரித்தவன்

"என்ன புள்ள.. மச்சான பார்த்து நாளு வார்த்த பேசிட்டு போவீயா .. ஓட பார்க்குறீயா " என்றவனை முறைத்தவள்

"உங்கட்ட பேசுறத்துக்கு என்ன இருக்கு.. வழிவிட்டீகனா நான் என்ற வழில போயீடுவேன் .. இல்லாகாட்டி"

"இல்லாட்டி.. என்ன புள்ள பண்ணுவ பிராது கொடுப்பியா.. கொடுத்தாலும் செல்லாது புள்ள.. கட்டிக்க போற புள்ளய வம்படிச்சேனு சொல்லி பஞ்சாயத்த கூட்டுனா ஊரு சனம் உன்ன பாத்து தான் சிரிக்கும்" என்று நக்கலாக சிரித்தவனை பார்த்து எரிதனலாய் கொதிதெழுந்தாள்.

"என்னவே. கொழுப்பா .. நானும் போயிட்டு போது பேசக்கூடாதுனு பார்த்தா வாயி நீளுது.. கட்டிக்க போறவராமே.. இந்த ஆசை கண்டுட்டு இருந்தீர்னா மண்ணோட பொதச்சிருக .. வந்துட்டாக வரிஞ்சுக்கட்டிட்டு.. வெவஸ்த கெட்டவக.. வெங்காயத்துக்கு கட்டிக்க வேட்டி கேக்குதாம் " என்று நொடித்துக்கொண்டவள் அவ்விடம் விட்டு நகர எத்தினித்தாள்.

"நில்லுடி ..இங்கரு .. நான் தான் டி உன்ற புருசன் ஆக போறேன்..சீமையில இருந்து எவனாவது கட்டிக்க வருவானு பகக்கனா கண்டுக்கிட்டு கிடக்காத ... உன்னய நான் தான் கட்டிக்க போரேன்.. கட்டிக்கிட்டு எகத்தாள பேசுற உன்ன பொட்டிபாம்பா என்ற பின்னாடி சுத்த வைக்கிறேன் பாரு .. பொட்ட புள்ளையா லட்சணமா வளத்துருக்கனும்" என்றது தான் தாமதம்

"என்னலே .. நானும் போயிட்டு போகுதுனு விட்டா பேசிட்டே போறீக .. வளப்ப பத்தி நீங்க பேசீறிகளா.. உங்க வூட்டு வளப்ப பத்தி தான் ஊரே நகைக்குதே.. இதுல எங்க அப்பார பத்தி பேச உமக்கு என்ன அருகத இருக்கு" என்றவள் வரிஞ்சிக்கட்டிக் கொண்டு சண்டையிட ஆரம்பிக்க அதற்குள் அமுதன் அவ்விடம் வந்தவன்

" வா புள்ள .. இவுகளுட்ட எதுக்கு கிடந்து கத்திட்டு கிடக்க .. மடபயலுங்க" என்றவனை

"டேய் என்னலே உங்க வூட்டு மாப்பிள்ளைய மடப்பயலுங்குற... மச்சானுக்கு குசும்பு சாஸ்திலே " என்று கத்தியவனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல்

தன் அக்காவை இழுத்துக் கொண்டு சென்றான்.

பரங்கிக்கா என்று இவர்களால் அழைக்கப்படுபவனின் பெயர் பார்த்தசாரதி . அவ்வூர் பண்ணையாரின் மகன். செல்வத்தில் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ எவரையும் மதிக்கமாட்டான். எல்லா கேடு கெட்ட குணங்களையும் ஒருங்கே பெற்றவன்.

"அமுதா .. ஏம்லே .. என்ன கூட்டியாந்த .. அவுக என்ன பேச்சு பேசுறாக .. நல்லா வஞ்சிட்டு வந்துருப்பேன்.. பரங்கிப்பய .. அவனுக்கு அவ்வளவு அதுப்பு .. அவுகளெல்லாம் பாழும் கிணத்துல தள்ளி விடனும்" என்று ஓயாமல் வசைப்பாடியவளை

"சரி .. விடு .. அதான் அவுகள திட்டிட்டியே ..அவகள பத்தி தெரிஞ்சும் நீ எதுக்கு போயீ வழக்காட்டிட்டு கிடக்குற"

"ஏலே‌‌.. அவுக தான் வந்து வம்படிச்சது.. பெரிய சண்டியராட்டம்.. அவுக மூஞ்சியும் மொகரையும்.. பார்த்தாலே எரியுது... இந்த பரங்கிபயலாம் துளிர் விட்டு கிடக்கானுகனா அதுக்கு காரணம் என் ராசுக்குட்டி இங்கன இல்லாம இருக்குறதால தான் .. பெரிய இவுகளாட்டம் அறிவு கெட்டத்தனமா ஊர விட்டு போயிட்டாக.. எங்க போனாகனும்னு தெரியல.. மாமாருட்ட கேட்டாலும் சொல்ல மாட்டிங்கிறாக .. ஒரு நாள் இல்ல ஒரு நாளு வருவாக அப்போ இருக்கு அவுகளுக்கு" என்ற பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்

இங்கு மீட்டிங்கை ஆரம்பித்த பாஸ்கரனுக்கு புரையேறியது . தொடர்ந்து இருமிக்கொண்டிருக்க நம் வேந்தன் தண்ணீர் அருந்தக் கொடுத்தவன் ஒரு கட்டத்தில் அவர் தலையில் தட்டினான் ( டேய் அவரு உன் பாஸுடா). ஒரு வழியாக திக்குமுக்காடி சரியானவனிடமிருந்து கையை எடுத்தவன்

"சாரி சார்.. எங்க அம்மா இப்படி தான் பண்ணுவாங்க .. அதான் .. நானும் .. தலையில.. தட்டிட்டேன்" அவன் எதும் நினைத்துக் கொள்வானோ என்று தயங்கியப்படி வேந்தன் சொல்ல ஒரு நிமிடம் தன் கண்ணில் தோன்றிய வேதனையை மறைத்துக்கொண்ட பாஸ்

"பராவாயில்லை வேந்தன்" என்றவர் எதோ யோசித்துக் கொண்டு இருந்தவரிடம்

" பாஸ் .. உங்கள யாரோ பலமா திட்டிட்டு இருக்காங்க போல "

" இருக்கலாம் .. அது நீங்களா கூட இருக்கலாம்.. இவ்வளவு சீக்கிரம் மீட்டிங் வர வச்சுட்டேனு நீங்க கூட திட்டிருக்கலாம்" என்று நக்கலாக சிரித்த பாஸ்கரன்
மனதில் " குட்டிமாக்கு எதும் பிரச்சினையா இருக்குமோ .. அவளை தவிர வேறு யாரு‌ம் நம்மளை நினைக்க மாட்டார்கள்... மாலை விசாரிக்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டான்

"பாஸ் நான் போயீ உங்கள அப்படி நினைப்பேனா " என்று அலறியவனுக்கு பதிலுக்கு சிரித்தவன்

"சரி சரி.. சும்மா தான் சொன்னேன் மேன்.. கூல்.. ஓகே .. பேப்பர் ரெடி பண்ணிடிங்களா.. "

"பண்ணிட்டே இருக்கேன் பாஸ் இன்னும் கொஞ்சம் விவரம் தேவைப்படுது . ஆனால் இதுல நம்ம நினைச்சு பார்க்க முடியாத பல உண்மைகளும் ஆபத்துகளும் புதைந்திருக்கு.. இந்த மாசத்துக்குள்ள முடிக்க ட்ரை பண்றேன் பாஸ்" என்று முடித்தான்

"ஓகே வேந்தா .. சீக்கிரமா முடிங்க .. உங்க பி.ஹச்.டி முடிக்க ஃபைனல் பேப்பர் இது .. சோ கொஞ்சம் கவனமாகவும் பண்ணுங்க.. என்ன ஹெல்ப்னாலும் நான் பண்ணி தர ரெடியா இருக்கேன்"

"ஓகே சார் .." என்றவன் மனதில்

" இப்படிதான் சொல்வாரு .ஆனால் எதாவது உதவி கேட்டா நீங்களா பண்ணா தான் கத்துக்க முடியும் என்று வசனம் பேசுவாரு.. இதுல பேச்ச பாரு" என்று மனதில் நினைத்தவன்

"மிஸ்டர் வேந்தன் " என்ற பாஸ்கரனின் குரலில் திரும்பியவனை " இந்தாங்க" என்று அவனுக்கு பிடித்த இரண்டு 5 ஸ்டார் சாக்லெட்டை கொடுக்க

அதில் வாயெல்லாம் பல்லாக
" தேங்க்ஸ் பாஸ்.. பட் என்ன ஸ்பெசல்" என்றதும்

"நத்திங் .. சும்மா தான்" என்ற பாஸ்ஸின் குரலை கேட்டதும் தோலைக் குலுக்கியப்படி சென்றுவிட்டான்

பாஸ்கரனோ இவனை வைத்து அடுத்த காரியத்தை முன்னெடுக்க திட்டம் தீட்ட ஆரம்பித்தான். பாஸ்கரன் இவனை பகடைக்காயாய் வைத்து ஆடும் விளையாட்டு பற்றி தெரிய வரும் போது வேந்தன் என்ன செய்ய போகிறான் என்ற பதிலுக்கு விரைவில் விடை தெரியும்
 
Messages
15
Reaction score
18
Points
3


அத்தியாயம் 4

மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்தவன் தன் நாற்காலியில் அமர‌
" மச்சான் அப்பாடா வந்துட்டியா !! உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.. வாடா மச்சான் போவோம்" என்ற ரகுவிடம்

"எங்கடா "

"நீ இன்னும் சாப்பிடவில்லையே அதான் மச்சான் .. நம்ம கேண்டீனில் இன்னைக்கு பொங்கல் செம டா .. அதும் அப்படியே வாயிலே வைக்கிறதே தெரியாம வழுக்கிட்டு உள்ள போதுடா அதுக்கு வெங்காய சாம்பார் .. தேங்கா சட்னி அல்டிமேடு " என்று பொங்கலை பற்றிய வர்ணணனையை தொடங்கியவனிடம்

"டேய் .. போதும் . சோத்துக்குனா வந்துடுவியே ..நான் சாப்பிடல சரி .. நீ எதுக்கு வர .. எனக்காக வரியா .. இல்ல பொங்கலுக்காக வரியா" என்றான் வேந்தான்

அதற்கு "என்னடா மச்சான் என்னையே சந்தேகப்படுறியா.. நீ சாப்பிடலனா எனக்கு பசிக்குமே மச்சான்" என்றவனை சந்தேக பார்வை பார்க்க

"சரி சரி .. ஓவரா லுக்கு விடாத இரண்டுக்காகவும் தான் " என்று பேசியப்படியே கேலி கிண்டலோடு இருவரும் சுட சுட பொங்கலை ருசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது "ஹாய் வேந்த்ஸ் .. " என்றவாறே நாகரீக யுவதி ஒருத்தி அவர்களின் எதிரில் அமர

மரியாதை நிமித்தமாய் " ஹாய் சுப்ரியா" என்றவன் சாப்பிடுவதை தொடர்ந்தான்.

ரகுவோ கண்டுக்கொண்டதாய் கூட காட்டிக்கொள்ளவில்லை

அதில் கடுப்பானவள் வர வர இந்த ரகுவும் ஓவரா பண்றான் .. வேந்த்ஸ்ஸ கரெக்ட் பண்ணிட்டு அவனை வச்சு உன்னை காலி பண்றேன் பாரு என்று மனதிற்குள் பொறுமியவள் வெளியில் சிரிப்போடு

" வேந்தஸ் .. அத்தேட்ட பேசுவியா நம்ம மேரேஜ் பத்தி.. என் சொன்னுச்சு" என்க அவள் தமிழை கண்டு இருவருக்கும் எங்கயாவது முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது..

அவள் வடமாநிலத்தை சேர்ந்தவள்.. தமிழை இப்போது தான் தட்டுத்தடுமாறி கற்றுக்கொண்டிருக்கிறாள்.. அவள் இவர்களின் அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்து ஓராண்டு தான் ஆகிறது. தொடக்கத்தில் வேந்தனை கண்டுக்கொள்ளாதவள் தீடிரென ஒருநாள் வந்து தன் காதலை சொல்ல நாசுக்காக தவிர்த்து விட்டான்

ஆனால் அன்றிலிருந்து அவளும் இவனை விரட்டிக்கொண்டு இருக்கிறாள். எத்தனையோ முறை பொறுமையாகவும் சொல்லி பார்த்துவிட்டான் திட்டியும் பார்த்துவிட்டான் ஆனால் தினமும் காதலை சொல்வதும் அதற்கு இவன் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது.


"ஹே... லுக் ஹியர்.. எத்தனை தடவை சொல்றது ..எனக்கு இதுல விருப்பம் இல்லைனு.. புரியாத உனக்கு .. ஓகே .. நீ எத்தனை டைம் வந்து பேசினாலும் என்னோட ஆன்சர் நோ தான்... ‌‌ சோ சும்மா வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்காதே" என்று வேந்தனும் எரிச்சலோடு பதில் கூற அதை சற்றும் கண்டுக்கொள்ளாமல்

"வேந்த்ஸ் என்க்கே தெர்யும் .. நீ லவ் பண்ணதுனு .. எதோ அக்செப்ட் தான் பண்ண மாட்டேது" என்று மீண்டும் தமிழை கொலை செய்ய ஆரம்பித்தவளை கண்டு பொங்கி எழுந்தான் ரகு

"ஹே .. தயவு செஞ்சு என்ன வேணாலும் பேசு.. ஆனால் தமிழில் மட்டும் பேசாத .. கண்றாவியா இருக்கு" என்றவனை முறைத்தவள் வேந்தனை பார்க்க அவனின் முகமும் எரிச்சலை பறைச்சாற்ற தனக்கு தெரிந்த ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தாள்

( ஆங்கில உரையாடல் தமிழில்)

"வேந்த்ஸ்.. உனக்கும் என்னை பிடிச்சுருக்குனு‌ தெரியும்.. பட் நீ வீட்டுக்காக பயப்படுறனு நினைக்கிறேன் .. .‌ நம்ம வேணா மேரேஜ் பண்ணிடுவோம் .. அப்பறம் வீட்டில் சொன்னா ஓகே சொல்லிடுவாங்க" என்று தன்னின் முடிவை சாதுரியமாக திணிக்க பார்ப்பதை கண்டு கோபம் கிளர்ந்தெழ..

"ஸ்டாப் இட் .. நான்சென்ஸ் மாதிரி உளரிட்டே இருக்க . சொன்னா புரியாத உனக்கு உனக்கு... ஐ டோண்ட் லைக் யு .. நீ எனக்கு செட்டே ஆக மாட்டா.. லூசு மாதிரி இனியும் சுத்திட்டு இல்லாம போய் வேலைய பாரு .. வந்துட்டா .." என்று பொறிந்து தள்ளியவனை கண்டும் சிறிதும் சட்டை செய்யவில்லை

"நீ இப்போ கோவமா இருக்க போல வேந்தஸ்.. அதான் இப்படி என்னை அவாய்ட் பண்ற மாதிரி பேசுற .. " என்று சிரித்தவளை கண்டவன் எரிச்சலாகி

"ச்செய் உன்னலாம்" என்று திட்டிக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான்

ரகுவோ அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் "படுபாவி பொங்கலை சாப்பிடவிடாம பண்ணிட்டாளே .. இப்போ பாரு உன்னை" என்றவாறு மனதில் நினைத்தவன்

"பாதகத்தி .. நன்றாக இருப்பாயா உன்னையெல்லாம் கரப்பான்பூச்சி இருக்கும் இருட்டு அறையில் வைத்து வதைக்க வேண்டும். நிம்மதியாக உணவை உண்ணவிடாமல் பேசியே அவனை துரத்திவிட்டாயே .. இப்போது நான் போகவில்லை என்றால் அதற்கும் அவனிடம் வசைவாங்க வேண்டும் " என்று அவளுக்கு புரியாத தமிழில் புன்சிரிப்போடு பேச ஸ்வேதாவோ

வேந்தன் வேறு உதாசீனப்படுத்திய கடுப்பில் இருந்தவளுக்கு கொஞ்சம் தெரிந்த தமிழும் மறந்துவிட இவன் என்ன பேசுகிறான் என்ற ரீதியில் முழித்துக் கொண்டிருந்தாள்

அங்கு வேந்தனோ " காலையிலே கடுப்பேத்திட்டா .இவளுக்கு இதே பொழப்பா போச்சு பைத்தியகாரி " என்று புலம்பியப்படி‌ திட்டிக்கொண்டிருக்க

"மச்சான் .. ஏன்டா அவதான் உன்னை லவ் பண்றேனு சொல்றாளே .. உனக்கே தெரியும் அவளை பார்த்து நம்ம இன்ஸ்டியூட்டே ஜொள்ளு விடுவது .. ஆனால் நீ என்னனா " என்றவாறு ரகு இழுக்க

"டேய் ..முதலில் அவ கண்ணுலே லவ்வே இல்லைடா .. எதோ ஒரு காரணத்துக்காக அவள் லவ் பண்றதா சொல்றா .. அவ உண்மையா லவ் பண்ணலை அடுத்து அவள் அழகா இருக்கான்னு சொல்லுற எவனுக்கும் ரசனை இல்லைடா... அவளுக்கு ஹைப் கொடுத்து அவள ஏத்தி விடுவதே நீங்கலாம் தான் டா. அவ கிடக்குறா முத்துன மூஞ்சி .. வந்துட்டா .. என்னை டார்ச்சர் பண்ணனே" என்று அவனின் கோபத்தை வார்த்தைகளால் வர்ணித்துக்கொண்டிருக்க அங்கு சுப்ரியாவோ யாரிடமோ போனில் உரையாடிக் கொண்டிருந்தாள்

சுப்ரியாவின் மறுமுனையில் இருப்பவரோ " உன்னால இதை கூட பண்ண முடியல .. நீயெல்லாம் எதுக்கு இருக்க .. ஒருத்தன லவ் கூட பண்ண தெரியலை.. நான் சென்ஸ்"

" சார் .. அவன் ரொம்ப பிடிவாதமா இருக்கான்... என்ன பேசுனாலும் மசிய மாட்டிங்கிறான்.. நான் என்ன பண்ண" என்று பாவமாக கேட்டவளை

"உன்னால ஒன்னுத்தையும் கிழிக்க முடியாதுனு எனக்கும் தெரிஞ்சு போச்சு.. சோ .. நீ ஒன்னும் பண்ண வேணாம் .. போயி உன் மூஞ்சில பெயிண்ட் அடிக்குற வேலைய பாரு .. அதுக்கு தான் நீ லாயக்கு" என்றவாறு தன்னின் வசவுகளை வாரித்தெளிக்க அதை வழி இல்லாமல் கண்கலங்கி வாங்கி கொண்டு வைத்தவளின் மனம் வெம்பியது

அங்கு போனின் உரையாடியவனோ "வேந்தன் .. உனக்கு ஏன்டா இந்த வேலை எதோ மாத்துரேனு என் பொழப்பை கெடுக்க பார்க்குறியா.. எவ்வளவு பயம் காட்டியும் நீ வழிக்கு வர முடியாது சொல்றல .. இருக்குடா .. உனக்கு" என்று அடுத்த திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்க

இங்கு அந்த திட்டத்தை தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டும் என்று யோசனையில் இருந்தார் நம் வேந்தனின் பாசமிகு தந்தை

அப்போது சரியாக தன் மைத்துனனின் அழைப்பு வர சிரித்துக்கொண்டே எடுத்தவர்
" வணக்கம் மச்சான் இப்போ தான் உங்களுக்கு அழைக்கலாம் என்று நினைச்சேன்.. நீங்களே பண்ணிட்டிக"

"அப்படிங்களா மாப்பிள்ளை.. எல்லாம் சவுகரியமா இருக்கிகளா .. ஏதும் சமாச்சாரமா"

"நான் ஊருக்குள்ள வரதுக்கான நேரம் வந்துட்டுச்சு மச்சான்.. அடுத்த அவனுங்க யோசிக்கிறக்குள்ள நம்ம நிலத்தை காப்பாத்தி ஆகனும் .. அது நம்ம வேந்தனால தான் முடியும் .. ஆனால் அவனை எப்படி வரவைக்க போறேன்னு தான் யோசனையில இருக்கேன் " என்றவரின் கூற்றில் உள்ள தீவிரத்தை உணர்ந்தவர்

"மாப்பிள்ளை .. கவலைப்படாதீக நான் வேணா பேசவா வேந்தன் மாப்பிள்ளைட்ட .. அவுக புரிஞ்சுகுவாக .. ஒன்னும் வெசனப்படவேணா" என்றார் தண்டாயுதம்

"நீங்கல்லாம் இருக்கும் போது நான் எதுக்கு கவலைப்பட போறேன்.. நீங்க வேந்தாட்ட பேசுனா தோதுப்படாது .. நானே பேசிறேன் அவனை இந்த வேலைல ஈடுபடுத்த வேணாணு நினைச்சாலும் இனி முடியாது.. ஏன்னா அவன் நம்ம கூட இருக்குறது தான் இப்போதைக்கு பாதுக்காப்பு " என்றவர் தொடர்ந்து சில பல பிரச்சனையும் அதை கையாளும் விதத்தையும் யோசித்து திட்டம் தீட்டினர்

போனை வைத்துவிட்டு நிமிர்ந்தவரின் எதிரில் பாரிஜாதம் குறுகுறு பார்வையோடு நின்றுக்கொண்டிருக்க
"மாட்டிக்கிட்டியே நாதா" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவர் வெளியில் சமாளிக்க முயற்சி செய்ய அதற்குள் " ஒழுங்கா சமாளிக்காம என்ன விசயம் என்று சொல்லுங்க" என்றவரிடம் மறைக்க இயலாமல் உண்மையை கூறலானார்.

அதை கேட்டவள் " இது கண்டிப்பா நடக்காது .. என் பையனை நானே பிரச்சினைக்குள்ள போக அனுமதிக்க மாட்டேன் உங்களால முடிஞ்சா பண்ணுங்க இல்லாட்டி பேசாம இருங்க" என்று கத்தியவளை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தவர்

"இங்கபாரு பாரி.. நான் சொல்றத கேளு .. இதுல நம்ம பையனுக்கு ஒன்னும் ஆகாது.. இந்த நேரத்துல நாம இதை பண்ணலா பலர் நோய்வாய் படுவார்கள்.. நம்மளோட வருங்கால சந்ததியும் பாதிக்கப்படுவார்கள்.‌ அதும் இல்லாமல் இப்போதைக்கு வேந்தன் ஊருக்குள்ள இருக்குறது தான் பாதுகாப்பு " என்று பொறுமையாக விளக்க தற்போதும் அவளின் முகம் கலக்கத்தை பறைச்சாற்றியது .

தன் மனைவியை சம்மதிக்க வைக்கும் பொருட்டு " இதுல இன்னொரு விசயமும் நடக்கலாம் . நீ நினைச்ச மாதிரி பையனுக்கு கல்யாணம் நடக்கலாம் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கலாம்" என்று எதையோ பேசி ஒருவாறு சம்மதிக்க வைத்தவர் அடுத்து தன் மகனை வரவழைக்கும் விதமாக ராசுக்குட்டியை தொடர்புக்கொண்டார் .

யார் அந்த ராசுக்குட்டி ..?? அடுத்த அத்தியாயத்தில் காண்போம்





































 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom