Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விரைவாக வெற்றி பெற

Messages
40
Reaction score
14
Points
8
1. தினமும் அரை நாளாவது கடுமையாய் மகிழ்வோடு உழையுங்கள்.

2. வாய்ப்புகளைத் திறக்கும் சாவி விடாமுயற்சி & உழைப்பு.

3. வெற்றி ஒன்றையே மனம் ஆழ்ந்து நினைக்க வேண்டும்.

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது. இரண்டாவதே சிறப்பு.

6. பணி அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது. தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

7. பிடித்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்குத் தேவை பாதி அனுபவம், பாதி அறிவு.

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.

13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.

14. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது

16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.

17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.

19. சந்தோசத்தை கொடுப்பது பணம் அல்ல வெற்றிகரமான நல்ல நினைவுகள்.

20. வெற்றி பெற்று விட்டதாக எண்ணி அந்த அனுபவத்தை உண்மையாக்க உழைப்பது சுய ஊக்கம் சுய உத்வேகம் கொடுக்கும்.

21. வெற்றிக்கான தகுதிகளை உயர்த்திக் கொண்டே இருங்கள். உங்களை நம்புங்கள்.​
 

New Threads

Top Bottom