Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெட்டபட்ட மரம்

Messages
40
Reaction score
14
Points
8
தினமும் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் பச்சை வாசம் மாறாமல் பெரிய லாரிகளில் சென்று கொண்டே உள்ளன. அவற்றைப் பார்க்கும் போது கொத்துக் கொத்தாக மடிந்த சடலங்களை அள்ளிப் போட்டுச் செல்வது போல் இருக்கும். வருத்தத்திற்குரிய செய்தி.

#இங்கும்_ஓர்_வெட்டப்பட்ட #பெரிய்ய்ய்ய_மரம்_பேசுகிறது.

800 வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருப்பேன்,

எல்லா உயிரினங்களும் என்னைப்பார்த்து பெருமைகொண்டது

வெட்டியே சரித்துவிட்டான்.... ஆறறிவுடைய மனிதன்......

எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கிறேன்...

எவ்வளவு இலைகளை சருகுகளை விருந்திற்கும் மருந்திற்கும் வயல் உரத்திற்கும் கொடுத்திருக்கிறேன்...

எவ்வளவு பறவையினங்களை கூடுகட்ட மடி கொடுத்து ஆதரித்திருக்கிறேன்...

இதன் கீழே எவ்வளவு ஜீவராசிகள் இளைப்பாறியிருக்கிறார்கள்...

எத்தனை மனிதர்கள் வெயிலுக்கு ஒதுங்கியிருக்கிறார்கள்...

நான் தொடர் சேவையில் தான் இருந்தேன்.

என்னைப் பார்த்தால் பட்டுப்போன மாதிரி தெரிகிறதா...

வெட்டாதிருந்தால் நிச்சயம் உயிருடன்/உயிர்ப்புடன் இருந்திருப்பேன்...

அழிப்பது வெகு எளிது, நட்டு வளர்ப்பது கடினம் என என்னை வெட்டுபவர்கள் உணர்வார்களா???

மனிதன் மனிதனை அழிக்கும் காலத்தில், மனிதன் மரங்களுக்கு எங்கே முக்கியத்துவம் கொடுக்கப்போகிறான்?​
 

New Threads

Top Bottom