Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed வேல்விழியின் குளிர் நிலவோ - கதைப்பகுதி

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
1.

"எனி ட்ரிங்க்ஸ் பார் யு சார்?" என்று கேட்ட விமான பணிபெண்ணின் முகத்தை கூட பார்க்காது தன் இடக்கையால் அலட்சியமாக வேண்டாம் போ என்று சைகை காட்டியபடி வலக்கையில் உள்ள மொபைலை பார்த்து கொண்டிருந்தான் வேல்விழிமணியன்.



"குட் ஈவனிங் சார்! திஸ் இஸ் கேப்டன் ஸ்பீகிங். புட் யுவர் பெல்ட்ஸ் ஆன். வீ ஆர் கோயிங் டு லேன்ட்." என்று குரல் கேட்டவுடன் தன் மொபைலை பாக்கெட்டில் போட்டுகொண்டு சீட் பெல்ட்டை சரி செய்தவனின் கேசம் காற்றிற்கு அங்கும் இங்கும் உருண்டோட ஒற்றை விரலால் அதை ஒரு பொருட்டாய் மதியாமல் தன் விரலால் ஒதுக்கியவன் விழி மூடி சிறிது நேரம் அமர்ந்தான்.



பிளைட் தரை இறங்கியதும் "இட்ஸ் ஹாப்பி டு ஹவ் எ ட்ரிப் வித் யு சர்!" என்றார் கேப்டன்.



சிநேகமாய் ஒரு சின்ன தலையசைப்பின் சிரிப்போடு விருட்டென்று இறங்கினான் படிகளில்.



"ஹலோ! யா ஜான்! இஸ் தேர் ஆல் கோயங் குட்" என்ற கேள்வியோடு தன் பி.ஏ ஹரியை பார்க்க, கிழே இருந்து ஓடி வந்தவனின் கரங்களில் தன் லேப்டாப்பை லாவகமாக வீசியபடி வேக எட்டுகளில் தன் காரினை நெருங்கி இருந்தான்.



"எஸ்! ஐ வான்ட் யுவர் அட்டென்ஷன் தேர் ஒன்லி ஹண்டில் ஐ அம் பேக்" என்று மொபைலை துண்டித்து பாக்கெட்டில் போட்டபடி பின் சீட்டில் ஏறிக்கொள்ள ஹரி முன் சீட்டில் டிரைவரின் அருகில் அமர்ந்து கொண்டான்.



வளர்ந்து கெட்டவன் என்று சொல்லுமளவிற்கு ஆறடிக்கு மேல் உயரம், பெண்களெல்லாம் விரும்பும் பால் வெண்ணை நிறம் அல்லாமல் கோதுமையின் நிறம், அடர்ந்து அடங்காமல் அலட்சியாமாய் விரிந்திருக்கும் இரு புருவங்களுக்கு கீழ் பார்ப்பவர்களை தைரியமாய் எதிர்கொள்ளும் தீர்க்கமான பார்வை, சற்று நீண்ட மூக்கு, அளவாய் வெட்டப்பட்ட மீசைகளுக்குள் மறைந்து கிடக்கும் மேலுதடு என பார்க்கும் பெண்களை பார்க்காமலே வசீகரிக்கும் ஆண் வேல்விழிமணியன்.



சீறி பாயும் புயலென பாய்ந்து சென்னை நகரத்தினில் நுழைந்த வாகனம் மக்களின் நெரிசலால் நிறைந்திருக்க ட்ராப்பிக்கில் நின்றது.



"வாட் தி ஹெல் மேன்? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் போய் சேர?" என்று பாவமாய் பார்த்த டிரைவரை கோப வார்த்தைகளால் கடித்து துப்பினான்.



அவனை நன்கு அறிந்தவர் என்பதால், "இன்னும் பத்து நிமிஷத்துல போய்ரலாம் தம்பி டென்ஷன் ஆகாதிங்க" என்று பொறுமையாய் பதிலளிக்க சற்று சமாதானமானவன் "சாரிண்ணா" என்றான் ஒற்றை வார்த்தையில்.



"பரவால்ல தம்பி. உங்களை சின்ன வயசுலர்ந்து பார்க்கறேன் உங்களை பத்தி எனக்கு தெரியாதா?" என்று முடிவில் "இதோ வீடு வந்தாச்சி" என்று வீட்டின் பெரிய கேட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்தினார்.



"ஹரி கெட் மை லக்கேஜஸ் இன்" என்று உள்ளே நாலைந்து எட்டுகளில் சென்றவன் அங்கே இருந்தவர்களை கண்டு எரிமலையென வெடித்து கத்தினான்.



"ஹொவ் டேர் ஆல் யு இன் மை ஹோம்." என்று வாசலை நோக்கி குரல் கொடுத்தான்.



"முத்து அண்ணா, சசி அம்மா " என்றான்



வீடு வேலைகளை பார்த்துகொள்ளும் சசி அம்மாவும் டிரைவர் முத்துவும் அவனின் முன் வந்து நின்றனர்.



"யார் இவங்கலெல்லாம் உள்ள விட்டது? நான் போய் அம்மாவ பார்த்துட்டு வரதுக்குள்ள இந்த இடம் காலியா இருக்கனும். என் கண்ணுல இவங்க யாரும் மறுபடியும் படக்கூடாது. காட் இட். கம ஆன் குயிக் கிளியர்" என்று மேலேறி மறைந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
வேல்விழியின் குளிர் நிலவோ??
அத்தியாயம் 2:
2.

இறுகிய முகத்தோடு தன் அன்னையின் அறையின் முன் சிறிது தயங்கி நின்றவன், கவலையோடு கதவை திறந்து உள்ளே சென்றான்.

கட்டிலின் அருகே இருந்த சேரில் மெதுவாக அமர்ந்து தலையில் கட்டுடன் காலில் கட்டுடனும் உறங்கும் தாயை விழிநீர் கசிய இமை மூடாமல் பார்த்துகொண்டிருந்தான்.

அவர் தலையை மெதுவாக கோதியபடி “அம்மா!” என்றழைத்தான்.

மெல்ல கண் திறந்தவரின் விழிகள் ஐந்து வருண்டங்களுக்கு பிறகு பிள்ளையை பார்ப்பதால் ஆனந்த கண்ணீரில் நிறைந்தது.

“வேலா!” என்றவரை அன்போடு “அம்மா! ஸ்ட்ரேயின் பண்ணாதிங்க! உங்க உடம்பு இன்னும் சரி ஆகலை” என்றான்.

“சாப்பிட்டியா?” தன் உயிர் போகும் நிலையில் இருந்து தப்பி வந்தாலும் மகனின் நிலையை பற்றி கவலை படும் தாயின் சொற்களை எண்ணி பூரிப்படைந்தான்.

“நான் சாபிட்றேன்மா! நீங்க சாப்டிங்களா? இருங்க உங்களுக்கு எதாவது எடுத்துட்டு வர சொல்றேன்” என்று எழுந்தவனின் கரம் பற்றி நிறுத்தினார்.

“நான் சாப்பிட்டு டேப்லெட் போட்டுடேன் வேலா” நீ போய் சாப்பிடு” என்றார்.

“சரிம்மா! நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் போயிட்டு பிரெஷ் ஆகிட்டு வரேன்” என்று எழுந்து திரும்பவும், எதிரில் வந்தவளின் மேல் இடிக்கவும் அவள் கையில் இருந்த வெந்நீர் சில துளிகள் கொட்டவும் சரியாக இருந்தது.

கோபத்தின் உச்சியில் “யு! டாம்மிட். அறிவு இல்ல உனக்கு? ஸ்டுபிட். ஹாட் வாட்டர் எடுத்துட்டு வந்து என் மேல ஊதிட்ட? உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணும்னு பெசிக் மேனர்ஸ் தெரியாது. கெட் அவுட்.” என்று கத்தினான்.

அவனை கண்டவனின் கண்களில் ஆனந்தத்தின் எல்லை தெரிந்தாலும் அதையும் தாண்டி மிரட்ச்சி குடி கொண்டிருந்தது.

கண்ணீர் வழிந்தபடி வெளியே செல்ல எத்தனிதவளை “நில்லுமா” என்றார் அவனின் தாய் கஸ்தூரி.

“அம்மா வீட்ல வேலை செய்றவங்க கிட்ட கூட ஏன் இப்டி கொஞ்சரிங்க? உங்களாலதான் இவங்களுக்குலாம் கொஞ்சமும் பயம் இல்ல.” என்றான் வேல்விழிமனியன்.

“வாய மூடு வேலா!” அவ நம்ம வீட்ல வேலை செய்றவ இல்ல. என் அன்ன பொண்ணு நிலாதென்றல்” என்றார்.

ஒரு நிமிடம் அதிர்சியானவன் பின் எதுவும் நடவாதது போல், “ஓஹ! அவாவ எதுக்கு இங்க இருக்கா? எனக்கு தெரியாம யாரு உங்க அன்ன?” என்றான் சந்தேகமாய்.

“எல்லாம் உனக்கு தெரிஞ்சவர் தான் திருசெந்துர்ல என் ஒன்னு விட்ட அண்ணன் கணேஷ் இருக்கார்னு எதனை தடவை சொல்லிருக்கேன். நீ தான் ஒரு தடவை கூட ஊருக்கு வந்ததில்ல?” என்று கோபத்தோடு பேசினார்.

“ஹ்ம்ம்” என்றான்.

நிலாதென்றல் எதுவும் பேசாமல் தலையை இரு புறமும் ஆட்டி எதுவும் சொல்ல வேண்டாம் என்றாள்.

“ஹே! நீ யாரா வேணா இருட்டு போ. இது எனக்கும் எங்க அம்மாக்கும் நடுவால் நடக்கறது. சோ யு ஜஸ்ட் கெட் அவுட்” எட்ன்றான் குரலில் கடினம்காட்டி.

எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினாள் நிலாதென்றல்.

அவள் சென்றவுடன் “அம்மா! உங்களுக்கு எஹ்டாவது வேணுமா?” என்றான் குரலில் கனிவுடன்.

“இன்னைக்கு வந்து கேக்குற? ஏன் இந்த அஞ்சு வருஷம் அம்மான்னு ஒருத்தி இருகரதையே மறந்துட்டியா?” என்றார் கஸ்தூரி.

“அம்மா!” என்றான் பெருத்த அதிர்ச்சியோடு.

“என்னடா அம்மா? என்கிட்டே சொல்லிட்டு தான் போன! திளையும் போன்ல பேசின தான் . அதுக்காக நீ என்கூட இருந்து கவனிசிகிட்ட மாதிரி ஆகிடுமா? இல்ல இந்த அஞ்சு வருஷம் என் பையன் என்கூட இல்லைன்னு உடம்பு சரி இல்லாம போனதே இல்லையா? என்ன தான் சொல்ல வர?” என்றார் கோபம் குறையாமல்.

“என்னம்மா இப்டிலாம் பேசறிங்க?” என்றான் வருத்தமாய் வேல்விழிமனியன்.

“பின்ன எப்டி பேசணும்?” என்றார் விடாபிடியாய்.

எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து போனவன் அமைதியாய் இருந்தான்.

“இங்க பாரு போதும் நீ எடுத்த முடிவு எல்லாம். இனி நான் சொல்றத மட்டும் நீ கேளு” என்றவரை எதுவும் புரியாமல் பார்த்தான்.

“இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் தென்றலுக்கும் கல்யாணம்” என்றார்.

“என்ன?’ என்றான் ஒன்றும் புரியாமல்.

“ஏன் நான் சொன்னது உன் காதுல விழலையா? உனக்கும் தென்றலுக்கும் கல்யாணம்னு சொன்னேன்” என்றார் மீண்டும்.

கோவமாக சுவற்றில் ஓங்கி அறைந்தவன். “இல்ல! அம்மா என்னால இதுக்குஒத்துக்கு முடியாது நிச்சயாமா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றான்.

“அப்பா சரி” இனி உன் வாழ்க்கைல அம்மான்னு ஒருத்தி இல்லன்னு நினைச்சிக்க” என்றார்.

“அம்மா!” என்றான் திகைப்பாய்.




.
 
Last edited:

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
வேல்விழியின் குளிர் நிலவோ??
அத்தியாயம் 3:
3

“ஆமாடா! எனக்கு மதிப்பில்லாத இந்த வீட்ல இனி நான் இருக்க மாட்டேன். தென்றல்! தென்றல்! எங்க இருக்க? இங்க வா” என்றார் சத்தமாய்.

கஸ்தூரியின் குரலில் பதட்டமடைந்த நிலதேன்றல் வேகமாக உள்ளே ஓடி வந்தவள், வேல்விழிமனியன் இருகிறான் என்பதை மறந்து அவரிடம் ஓடினாள்.

“என்ன வேண்டும்?” என்று ந்சைகையில் கேட்டாள்.

“இன்னும் ஒரு மணி நேரத்துல ஊறல் இருக்க எங்க அண்ணன் வீட்டுக்கு அதாவது உன் வீட்டுக்கு போறோம். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது.” என்றார் சிறு குழந்தை கோபித்து கொண்டது போல்.

சைகையில் சிறிது நேரம் சமாதானம் செய்ய முயன்று முடியாமல் போகவே ‘சரி’ என்று அமைதியாக வெளியேறினாள்.

பார்வையாளானாய் அங்கிருந்து அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தவன்,

“அம்மா! நீங்க எங்கேயும் போக வேண்டாம். நீங்க யாரை சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றான் முகத்தில் இறுக்கத்தோடு.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவரை வருத்தமாய் பார்த்துவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறியதை கவனித்தவர், “ஏற்கனவே ஒரு தடவை பண்ண தப்ப நான் திரும்பி பண்ண மாட்டேன். இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும். நிலாவ தவிர வேற எந்த போனாளையும் உன்ன நல்லா பார்த்துக்க முடியாது. உனக்காக தன் வாழ்கையே தவமா மாத்திகிட்டு இருகின்றாள். அவளுக்கு இந்த சிறையில் இருந்து உன்னால மட்டும் தான் விடுதலை கொடுக்க முடியும் வேலா!” என்று தனக்குள்ளே பேசிகொண்டார் கண்களில் வழிந்த கண்ணீரோடு.

தாயின் அறையை விட்டு சொல்ல முடியாத உணர்வுகளோடு வெளியேறியவன் நேராக நிலாதேன்றல் அறையினுள் புயலாய் நுழைந்தான்.

இவனை கண்டதும் எழுந்து வந்தவளின் கையை பிடித்து அழுத்த கண்ணாடி வளையல்கள் உடைந்து அவளின் கரங்களை பதம் பார்க்க ரதம் கொட்ட தொடங்கியது. வலியால் அவளின் கண்கள் கலங்க சிறிதும் அசராமல் பிடியை இன்னும் இறுக்கினான்.

“ஏய்! யாருடி நீ? இங்க பாரி! நீ எங்க அம்மாவ வேணா உன் கண்ணீரை காட்டி மயக்கலாம் என்னை அவ்வளவு ஈசியா மயக்க முடியாது. நீ அவங்களுக்கு அண்ணன் பொண்ணா மட்டும் இரு. எனக்கு மனைவியா ஆகணும்னு நினைக்காத. எனக்கு உன்னை பிடிக்கலை. உன்னை இல்ல, எந்த பொண்ணையுமே பிடிக்காது எங்க அம்மாவை தவிர.

எனக்கு உலகமே எங்கம்மா தான். உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எங்க அம்மாகிட்டயும் சொல்ல முடியாது. அதனால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு எங்கம்மாகிட்ட நீயே சொல்லிடு. இல்லன்னா உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது.” என்று அவளின் கையை உதறினான்.

உதறிய வேகத்தில் அவளின் கைகளில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தம் அவனின் சட்டையில் தெரித்தது.

எதுவும் பேசாமல் ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி அவனிடம் நீட்டினாள்.

‘வாய் திறந்து பேச முடிந்த உங்களாலையே உங்க அம்மாவை எதிர்த்து பேச முடியலை, அப்புறம் நான் எப்படி? எங்க அப்பாவுக்கு அப்புறம் எனக்கு கடவுள்ன்னா அது எங்க அத்தை தான். அவங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன். இந்த விஷயத்துல என்கிட்டே எதுவும் எதிர்பார்காதிங்க. உங்களால முடிஞ்சா கல்யாணத்தை நிறுத்திகோங்க.’ என்று எழுதி இருந்தாள். அதை படித்து விட்டு அவளை முறைத்தபடி “என்னை கல்யாணம் மட்டும் பண்ணிகிட்டேன்னா உனக்கு வாழக்கையையே நரகமா பரிசா தருவேன் நல்லா நினைவுல வச்சிக்க” என்று வெளியேறினான்.

தன் அத்தையிடம் வந்தவள் கையோடு எடுத்து வந்த பேபரை நீட்ட அதை படித்தவர். ‘அத்தை! நீங்க ஆசை பட்டா மட்டும் போதுமா? அவருக்கு விருப்பம் இல்லன்னா விட்ருங்க எதுக்கு கட்டாயபடுத்துறிங்க?’ என்று இருந்தது.

“ஏன் உன் மாமன் காலம் முழுக்க யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா தான் உனக்கு சந்தோஷமா? இல்ல உன் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கலாம்னு நினைச்சிட்டியா?” என்றார்.

‘இல்லை’ என்று இருபுறமும் தலையை ஆட்டி மறுப்பு தெரிவித்தாள்.

“நீ இங்க படுகின்ற கஷ்டத்தை கண்ணால பார்த்துட்டு இனியும் சும்மாவே இருக்க சொல்றியா? முடியாது. உன்னோட விடுதலைக்காக அவன் உன்னை கல்யாணம் பண்ணியே ஆகணும். இது தான் என் முடிவு. கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யணும் மோகனை வரசொல்லு.” என்றார் முடிவாக.

“சரி” என்று தலை ஆட்டிவிட்டு சென்றாள்.

அவளின் மனதிலும் அவர் கூறிய முடிவு தான் இருந்தது.

‘எந்த காரணத்துகாகவும் உன்னை என்னால இழக்க முடியாது மாமா. உன் நிழலா இருந்தே ஆகணும்.’ என்று தன் ரைக்குள் யோசித்தபடியே நுழைந்து கொண்டாள்.

மானேஜர் மோகன் உதவியுடன் கல்யாணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தார்.

அவன் பார்வையில் படாமலே அவனுக்கு தேவையானதை செய்துகொண்டிருந்தாள் நிலாதென்றல்.

அன்னையின் உடல்நலத்தில் மிகவும் அக்கறையோடு கவனித்து கொள்ளும் நிலாவை வேல்விழிமணினும் கவனித்து கொண்டு தானிருந்தான்.

ஒரு மதிய வேளையில் அன்னையின் அறையினுள் நுழநிதவன் “அம்மா!” என்றான்.

“சொல்லு வேலா” என்றார்.

“நான் யு.எஸ் போகணும் “

“எப்போ?”

“கல்யாணம் முடிஞ்ச மறுநாள்” என்றான் மெதுவாய்.

“சரி நிலாவையும் கையோடு கூட்டிட்டு போ” என்றார் அவனை பார்க்காமல்.

“இல்ல! எனக்கு முக்கியமான வேலை இருக்கு முடிச்சிட்டு கூட்டிட்டு போறேன்” என்றான் வேல்விழி மணியன்.

“அப்போ யு.எஸ் போகாம இங்க இருந்து எல்லா வேலையும் பார்த்துக்க”

“அது எப்டி முடியும்?”

“ஏன் முடியாது?” கஸ்தூரி.

“உங்க அப்பா கடைசியா இந்தியால எட்டு கம்பனிய ரன் பண்ணிட்டு இருந்தார். அவரோட மறந்துக்கபுரம் உன் மனசுக்கு அமைதி வேணும்னு என்னை இங்க விட்டுட்டு நீ வெளிநாடு போய்ட்ட நான் என அப்டியே இருந்துட்டேனா? நம்ம கம்பனி பொறுப்ப நான் ஏத்துகிட்டேன். அஞ்சு வருஷ கடின உழைப்பு இப்போ பதினெட்டு கம்பனியா வளர்ந்துருக்கு. நான் இந்தியாயல இருக்க எல்லா ஸ்டேட்க்கும் போய்ட்ட இருக்கேன் இல்லையே? என்னால முடியும் போது உன்னால முடியாதா?” என்றார் உள்ளே வரும் நிலாவை பார்த்தபடி.

“சரி இங்க இருந்து கவனிச்சிக்கிறேன். ஆனா அதுக்கு தேவையான ஏற்பாடுகளையெல்லாம் செய்துட்டு வரேன். எனக்கு ஆறு மாசம் டைம் வேணும்” என்றான்.

“உன் பொண்டாட்டிய கூட கூட்டயு எங்க வேணா போ” என்றார் அவரும் விடாமல்.

“சரி கூட்டிட்டு போறேன்” என்றான் நிலாவை முறைத்தபடி.

காகிதத்தில் ஏதோ எழுதி கொடுக்க தை படித்தவர் “சரி நீ போயிடு வா அவ இங்கயே இருக்கட்டும்” என்று அவனிடம் அந்த காகிதத்தை நீட்டினார்.

‘அத்தை! அவர் கேக்கறதுக்கு சரின்னு சொல்லுங்க. ஆறு மாசம் தானே அதுக்குள்ள அவர் மனம் மாறும். நிச்சயமா வரும்போது என்னோட கணவரா தான் வருவார்.’ என்று எழுதி இருந்தது.

அதை படித்தவன் அவளை கேள்வியாய் பார்க்க எதுவும் நடவாதது போல் வெளியேறினாள் நிலாதென்றல்.
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
நிலா தென்றல் பேசமாட்டாளா.....வேல்விழிமணியனால தான் அவ இருக்கற சிறையிலிருந்து விடுதலை கிடைக்குமா :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: ...அடுத்த எபி எப்போ சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
வாவ் நிலா கலக்குறா..இந்த வேலன் என்ன இப்படி ஒரு agreement போட்ருக்கான்...மேரேஜ் ஓவர்..நைஸ் சிஸ்
 

New Threads

Top Bottom