Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD-99
தந்தை உள்ளே வருவதற்குள் அவசரமாக தன்னை சரி செய்து கொண்டாள் .

உள்ளே வந்தவர்,என்னம்மா என்னாச்சு என்று கேட்டார்.

அது ஒண்ணுமில்லங்க கால் வழுக்கி விழுந்துட்டாங்க. கால்ல சுளுக்கு இருந்துச்சு. அத எடுத்தாச்சு. முட்டிலதான் கொஞ்சம் சின்னதா அடி . பர்ஸ்ட் எய்ட் பெட்டியை உங்க வண்டில விட்டுட்டாங்களாம். அதான் மஞ்சளும் தேங்கா எண்ணையும் வச்சுருக்கேன்.

என்னம்மா இது! குழந்தை மாதிரி? விட்டுட்டு கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வரதுக்குள்ள அப்பா அப்பா கீழ விழுந்துட்டேன்னு ? பார்த்து நடந்துக்க வேணாம்?

இரு, நான் போய் மருந்து கொண்டு வரேன்.

இல்லப்பா நான் வீட்டுல போய் பார்த்துக்கறேன்.

சரி!உனக்கு வேணுன்னா ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்.

இல்ல பரவல்லப்பா.

அதற்குள் அவர் போன் அடித்தது பேசிக் கொண்டே வெளியில் சென்றார் , இதோ பேசிட்டு வந்துடறேன் அஞ்சு நிமிஷம் என்ற கோரிக்கையுடன்.

அந்த ஐந்து நிமிடங்களை அவர்கள் வீணாக்க விரும்பவில்லை.

டாக்டர் என்ன அப்பா வந்துட்டாங்க. இனிமே நானெல்லாம் கண்ணுலையே தெரிய மாட்டேன். குத்தலாக இல்லாமல், வேடிக்கையாக சொன்னான்.

ம்ம்., ஆமா ! வர்ற 20ம் தேதி என்னோட பிறந்தநாள் வருது. அதுக்கு பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரி கிப்ட் வாங்கிட்டு வா. உன்ன நினைவு வச்சுக்கறேன். இது என்ன ஆர்டரா ? இல்ல அழைப்பா ?

நீ எப்படி வேண்ணாலும் வச்சுக்கோ .இப்போ நான் கிளம்பனும்.

மெதுவாக காலை ஊன்றி வலியுடன் நடந்தவளை பட்டென்று கைகளில் ஏந்திக் கொண்டான் மீண்டும் அதே போல தன்னுடைய அழுத்தத்தினால் அவள் இடுப்பில் அடையாளத்தை வைத்தான். ,அவன் இதை செய்ய வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அது நடந்தது.

அவன் கழுத்தில் போட்டிருந்த துண்டை இறுக்கிப் பிடித்து கொண்டவள் சட்டென எம்பி கன்னத்தில் முத்தம் ஒன்றை பரிசளித்தாள் .

இது எதுக்கு ?

ம்ம். பொண்டாட்டி முத்தம் குடுத்தா அனுபவிக்கனும். ஆராய கூடாது.

ஏற்கனவே இதழில் கள் குடித்தவனுக்கு இன்னும் மயக்கம் தீரவில்லை போலும்.

உங்களை நான்தான் ஆராயனும் டாக்டர்! அதுவும் முழுசா !

இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா ?ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் அவன் கைகளில் ஏந்தி சொன்ன விதம், அவளை என்னவோ செய்தது.

மகளின் முக மாறுதலையும், மாறாத புன்னகையையும் பார்த்த தியாகு அவளை எதுவும் கேட்கவில்லை.

மகளும் தந்தை எங்கு சென்றார்? என்னவாயிற்று? எதை பற்றியும் கேட்க நினைவில்லாமல் இருந்தாள் . வீட்டிற்கு சென்று மருந்திட்டுக் கொண்டவள் முத்துவுக்கு அழைக்க போனை கையில் எடுத்தாள் . இவளை முந்தியவன், என்ன டாக்டர் வீட்டுக்கு போய்ட்டிங்களா ?

ம்ம், வந்தாச்சு.

மருந்து போடீங்களா?

ம்ம்.,

அவனிடம் பேசவே கூச்சமாக இருந்தது.

என்ன டாக்டர்? பேசவே மாட்டேங்கறீங்க ?

ம்ம் ஒன்னும் இல்ல. குரல் கொஞ்சியது.

மாமாகிட்ட என்ன வெட்கம் டாக்டர்?

அவளிடம் இப்படி வழிவது அவனுக்கே ஆச்சர்யம்!

இதுக்கு மேல புருஷன் பொண்டாட்டி பேசறது ஒட்டு கேட்கக் கூடாது., அதனால நான் பாம்பேக்கு போகிறேன்.....நீங்களும் வாங்க ...........

-----------------------------------------------------------------------------------------

இங்கு பம்பாய்க்கு போது வசந்தியிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான் கௌசிக் . முதலில் சாதாரணமாக வந்திருந்த இருமல் கடந்த இரு நாட்களாக அதிகமாக வரத் தொடங்கியது.

ஒன்றும் இல்லை, என்று அவ்வபோது தண்ணீர் குடித்துக் கொள்வாள். ஆனால் அதுவே அதிகரிக்கத் தொடங்கவும்,

ச! நான் எவ்ளோ பெரிய முட்டாள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டவன், உடனே தனது மருத்துவனையில் இருந்து பல்மனோலோஜிஸ்ட் எனப்படும் நுரையீரல் நிபுணரை வரவழைத்தான்.

சாரி கௌசிக். இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது. சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு. என்னோட சந்தேகங்கள் தீர்ந்தாதான் .....வார்த்தைகளை அவன் முடிக்காதது இவனுக்கு பயத்தை தந்தது.

மதன் இஸ் இட் சீரியஸ் ?



எஸ்! கண்ணை பார்த்து அவன் சொன்ன பதிலில் இவன் ஆடித்தான் போனான்.

கயல் வர போவதை அவனால் சந்தோசமாக அன்னையிடம் சொல்லக் கூட முடியவில்லை. மறுநாள் விருது விழா என்பதால் அவசரஅவசரமாக அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டிருக்கும்போதுதான் இது நடந்தது.

வசந்திக்கு ஏதேதோ சிகிச்சைகள், டெஸ்டுகள் என்று போய்க் கொண்டிருந்தது. தவறான நேரங்களில் தவறான சிந்தனைகளை கொடுப்பதுதானே மனம். குறிப்பாக நம்முடைய இறந்த காலம். எந்த விந்தையும் இல்லாமல் அதுவே வசந்திக்கும் நடந்தது. விதி அவள் உயிரை எடுப்பதற்கு முன், அவளின் மனசாட்சி அவளை துளித்துளியாக கொல்ல ஆரம்பித்தது. மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்ப அவள் ஒத்துழைப்புகக் கொடுத்தாள் . உடல் அவர்கள் சொன்னதை கேட்டாலும் மனம் சொன்னதை கேட்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அதுதானே பிரச்சனை.

அவர்கள் இவள் முகத்தை திருப்பி, கழுத்தை தொட்டு தொண்டையில் கை வைத்து பார்க்கும்போதும் , ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டிருக்கும் போதும் .எத்தனை பெரு பாய் பிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க, தெரியாதவங்க ஏன் மேல கை வச்சுருப்பாங்க? எத்தனை விதமான கெட்ட பழக்கங்கள்!, குடி போதைல எத்தனை பேரோட இருந்திருக்கேன்? கழுத்துல மட்டுமா கை வச்சுருக்காங்க ? அதுக்கு கீழே , அதுக்கு கீழே, அதுக்கு, சீ நான் ஆடின ஆட்டம் கொஞ்சமா? தன்னை தானே அருவருப்பாக என்ன தொடங்கினாள். அது மட்டுமா ? ஏழை, ஏழை என்று தாலி கட்டியவரை எத்தனை முறை அவமான படுத்தி இருப்பேன். தன் குழந்தையே இல்லை என்றாலும் அவர் தன்னையும் தன் குழந்தையையும் எதற்காக ஏற்றுக் கொண்டார்? தந்தைக்காக இருக்கலாம் . நிச்சயம் தனக்காக இல்லை. ஒரு நொடி கூட அவருக்கு நான் கணவன் என்ற மரியாதையையும் மதிப்பையும் ஸ்தானத்தையும் கொடுத்தது இல்லையே ? நான் பண்ண தப்ப சரி படுத்தனும். எப்படியாவது! கௌசிக் இவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். நாளை விருது வாங்க போகும் தன் மகன், பாவம் சந்தோசத்தை கூட அனுபவிக்கடவன் தந்தையை போலே .

அவள் தந்தை நல்லவர்தான். ஏதோ அவரின் ரத்தம் இவளுக்கு இப்போது வேலை செய்கிறது போலும்.பார்க்கலாம் ...........

மாம்! ஆர் யூ ஆல் ரைட் ?

எஸ் கௌசிக். மெதுவாக அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார்கள். வரும்போது சோர்ந்த தன் உருவத்தையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். கௌசிகால் அவ மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மாம், ஜூஸ் குடிங்க.

மெதுவாக ஊட்டினான்.

சிறிது குடித்தவள் மிகவும் அயற்சியாக இருந்தாள் .

மாம், நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. சும்மா இதெல்லாம் நார்மல் டெஸ்டுதான் . நீங்களே பெரிய ஆளு. உங்களுக்கு சொல்லனுமா?

ம்ம், நிச்சயம் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.

கௌசிக் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

எஸ் மாம். அவள் அவனிடம் சில முக்கியமான விஷயங்களை அறிவுறுத்தினாள் . அதன்படியே கயலுக்கும் அவனுக்கும் அடுத்த சில நாட்களில்.



மீண்டும் வருவாள் தேவதை............

 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
தேவதை வருகை-99-பார்ட்-2


கயலும் பவியும் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். பலத் திரைப்படங்களில் விமான நிலயத்தை பார்த்திருந்தாலும் நேரில் காண்பது பிரமிப்பாகவே இருந்தது. பவித்ராவுக்கு சிங்கப்பூருக்கு சென்ற கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை பார்ப்பது போல் இருந்தது. இருப்பினும் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு தான் அடக்கினாள். அதுவே விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளுக்கு வேறு விதமான பயத்தை உண்டாக்கியது. நினைக்கவே கூடாது என்று நாம் நினைக்கும் பல விஷயங்களை காலம் கட்டாயம் நம்மை நினைக்க வைக்கும். அதே பாதையில் நம்மை பயணிக்கவும் வைக்கும். பார்க்கவே விரும்பாத மனிதர்களை சந்திக்க வைக்கும். அதுவே காலத்தின் கட்டாயம். அதுதான் இப்போது பவித்ராவிற்கும். அவள் வளர்ந்தது, இருந்தது எல்லாமே மும்பையில்தான். இத்தனைநாட்கள் வேண்டாம் என்று உதறிய எண்ணங்கள் இன்று அவளை அலைக்கழிக்கின்றன. அதற்க்கு காரணம் அவள் வெகு காலம் கழித்து கௌசிக்கின் வீட்டிற்கு செல்வதா? இல்லை வசந்தியை பார்க்கப் போவதா? தெரியவில்லை. அவள் சென்னையில் மீண்டும் கௌசிக்கை சந்தித்தபோது கூட அவள் அவனை தவிர்க்கவே விரும்பினாள் . ஆனால் இம்முறை கௌசிக் யாருக்காகவும் பவியை மீண்டும் இழக்க விரும்பவில்லை. எதையும் அவன் வெளிப்படையாக காட்டவில்லை என்றாலும், தன் செயல்களில் அவளுக்கு அதை உணர்த்தினான்.
பணம் படைத்தவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். இவள் வீட்டில் ஓரளவு வசதி படைத்தவர்கள் தான். இருப்பினும் அதை விட வசதி படைத்தவர்களுடன் தான் அவள் படித்தது. அதிலும் அவள் பள்ளியில் கௌசிக்கை போல அதிக பணம் கொண்டவர்கள் தான் அதிகம். பெரும் பணக்காரர்கள் அனைவருமே சாதாரணமாக பழகுவார்கள் என்று கூற முடியாது. அத்தகைய மக்களை பார்க்கும் போது கயலுக்கு அவர்களின் கேலி கிண்டல் புரியுமா என்பதுகூட தெரியவில்லை. கௌசிக் இதைப் பற்றி யோசித்திருப்பானா? அதிலும் வசந்தி ஆன்டி? வசதியாக சாரில் சாய்ந்தவளுக்கு கண்கள் மூடி பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
சிறு வயதில் இருந்தே கௌசிக்கும் பவியும் நல்ல நண்பர்கள். மிக நெருங்கிய நண்பர்கள். பருவ வயதை அடைந்த பின்னும் அவளுக்கு அவன் தொடுகை எந்த மாற்றத்தையும் தரவில்லை. அவனுடன் இருக்கும் போது அவளுக்கு நேரம் போவது தெரியாது. பாதுகாப்பாக இருக்கும். அதே போலதான் கௌசிகிர்க்கும். அவனுக்கு தெரியாததை அவள் சொல்லிக் கொடுப்பாள். பல சமயங்களில் மூத்த சகோதரி போல இருப்பாள். சில சமயங்களில் இளையவள் போல் இருப்பாள். அதிலும் மதிப்பெண் குறைந்தால் கேட்கவே வேண்டாம். அவளை சமாதானம் செய்து அவளுக்கு பிடித்த ஐஸ் க்ரீமை வாங்கி கொடுத்து சமாதானம் செய்வதற்குள் இவனுக்கு போதும் போதும் என்று ஆகி விடும். கௌசிக் இவளை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை பவியின் பெற்றோருக்கு இருந்தது. இவர்களுக்குள் இருந்தது காமம் இல்லை (நிச்சயம்) அது புரிதல். அந்த புரிதல் பவியின் பெற்றோருக்கு(ம்) இருந்தது. ஆனால் வசந்திக்கு இல்லை.
அன்று நடந்த சம்பவம்! இவளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எத்தனை மோசமான கொடூரமான வார்த்தைகள்?
மாகாதேவனின் இனிமையான வரவேற்பை ஏற்றுக் கொண்டவளை முகத்தில் அறைந்தது போல வார்த்தைகள் தடுத்து நிறுத்தியது.
ஏய்! நீ எதுக்கு இங்க வந்த?
ஆன்டி கௌசிக் !
சீ ! வாய மூடு. உன்னோட தகுதிக்கு அவன் பெயர் கூட நீ சொல்லக் கூடாது.
ஆப்ற்றால் ஒரு மாச சம்பளக்காரன் பொன்னு நீ ஒனக்கு *** என் பையன் வேணுமா?
வசந்தி என்று மகாதேவன் ஓங்கி குரல் கொடுத்தும் அவர் அடங்கவில்லை.
பிச்சகாரங்களுக்கு வாய திறக்க உரிமை யார் கொடுத்தது?
அவளை துச்சமாக பார்த்தவர் இவள் அங்கிருக்கக் கூடாது என்று தர தரவென இழுத்து சென்ற காட்சியை மட்டும்தான் கௌசிக் பார்த்தான். அவர் மீது ஏற்கனவே வெறுப்பில் இருந்தான் கௌசிக், அவன் அன்னையின் தவறான போதனைகளால். அதிலும் இந்த செயல் அவன் தந்தையை அவன் என்றுமே மன்னிக்க முடியாததாக மாற்றி விட்டாள் வசந்தி. அவள் தான் சாதுர்யமாக மகாதேவன் மீது பழி போட்டு திரித்து விஷம் ஏற்றிவிட்டாளே ?
பாவம் இது எதையுமே அறியாத மகாதேவன், வெறும் பன்னிரண்டாம் வகுப்பே முடித்திருந்த மகளிடம் மன்னிப்பு கேட்டார்.
பரவால்ல அங்கிள், நீங்க என்ன செய்வீங்க?
இல்ல கண்ணா, நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான். வீட்டு பெண்கள் கண்ணீர் தரைல விழக் கூடாது.
அன்றைய நினைவில் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். தலை கோதி தந்தையாக அன்று அவர் சொன்னது. இன்றும் அவள் அழுவதில்லை. தைரியம் என்றெல்லாம் சொல்ல முடியாது. தன் கணவனுக்காக. அவன் எங்கோ ஒரு மூலையில் கப்பலில் வாழ்ந்து வருகிறான். தன்னுடைய துன்பம் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எந்த விதத்திலும் அவனைத் தாக்கக் கூடாது என்பதற்காகவே.
மகாதேவன் அன்றைய நிகழ்வை தனது டைரியில் எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தார். இருப்பினும் தன் மன வேதனைகளை யாரிடமும் பகிர முடியாமல் டைரியில் எழுதி விட்டார்.
தந்தை யார் என்றும் தெரியவில்லை. தோள் சாய்ந்து அழத் தோழியும் இல்லை. தனக்கென்று யாரும் இல்லை என்ற நிலையில் தான் கௌசிக் சத்யாவை காணச் சென்றது. அவன் தந்தையின் டைரியை பார்த்த பிறகுதான் அவனுக்கு பவித்ரா எதற்காக தன்னை விட்டு காணாமல் போனாள் என்பது தெரிந்தது. தனக்கென்று இவ்வுலகில் யாரும் இல்லாமல் செய்த அன்னையை அவனால் என்றுமே மன்னிக்க முடியவில்லை. அப்போதுதான் அவன் பழைய தோழியை சந்தித்தான்.
தான் தன் வாழ்விலும், மஹாதேவன் வாழ்விலும், கௌசிக்கின் வாழ்விலும் பண்ணிய தவறுகள் ரொம்ப பெரியது. முழுவதும் சரி செய்ய முடியாதது. இருப்பினும் அதை எல்லாம் சிறிதளவாவது சரி செய்து விட வேண்டும் என்று நினைத்தாள் வசந்தி.
இப்போதெல்லாம் அவளுக்கு மனதில் இனம் புரியாத பயம் வந்து விட்டது. மரண பயம். அதற்க்கு முன் மகனுக்கு செய்ய வேண்டியவைகளை செய்து விட வேண்டும் என்றே நினைத்தாள் . அதன் ஒரு பகுதி தான் பவியை விருது வழங்கும் விழாவிற்கு கௌசிக் அழைத்தது .

கௌசிக் !
எஸ் மாம் ,
நான் ஒன்னு சொல்லவா ?
அவளின் பீடிகை அவனுக்கு ஏதோ சொல்லியது.
அமைதியாகவே நின்றான்.
கௌசிக் எனக்கு பவித்ராவை பாக்கணும்.
எந்த பவித்ரா ?
அவன் தெரியாதது போல காட்டினாலும் இவள் கண்டு பிடித்து விட்டாள் . நீ, உன்னோட ஸ்கூல் பிரண்டு.
இல்ல மாம். நீங்க அசிங்கமா பேசி வெளில அனுப்பின இன்னோசென்ட் கேர்ள்.
தலையை கவிழ்த்துக் கொண்டாள் . என்றுமே திமிராக அலட்சியம் கலந்த கண்களுடன் இருக்கும் வஸந்தியைத்தான் அவன் பார்த்திருக்கிறான். இப்படி தவறுக்கு வருந்தும் வசந்தியை அல்ல.
என்னதான் வசந்தி அழைத்தாலும் இன்னொரு முறை வசந்தியை பவித்ரா பார்க்கவே கூடாது என்று தான் நினைத்தான் கௌசிக். இருப்பினும் அவனின் பிடிவாதங்கள், ஆத்திரங்கள்,கோபம் அனைத்துமே வசந்திக்கு வந்த வியாதியில் மறக்கப்பட்டு விட்டது.
விருது வழங்கும் நாளிற்கு, முதல் நாள் மதியம் வரை அன்னையுடனேயே இருந்தான். இருந்தாலும் வேலைப்பளு அவனை அழுத்தியது. எத்தனை நாட்கள்தான் அனைத்தையும் செய்யாமல் இருப்பது? ரிசல்ட் வந்தது. இருப்பினும் மறு முறை மறுமுறை என்று எடுத்தனர். வேறு வேறு விதமாக. இவை அனைத்தும் வசந்திக்கு புரிந்தது. அவர்கள் வந்து அவள் உடலில் ஊசி குத்தும்போதும், வயிற்றில் ஸ்கேன் செய்யும்போதும் வசந்தியின் நினைவுகள் எங்கோ பறந்தன பழைய நினைவுகளை நோக்கி.
இதற்க்கு முன்பும் அவளுக்கு ஸ்கேன் செய்தர்கள்தான். ஒரு முறை அல்ல பல முறை.அப்போது கௌசிக் வயிற்றில் இருந்தான். அவனை அழிக்கத்தான் நினைத்தாள் . உயிருக்கு ஆபத்து என்ற நிலைக்கு வந்ததால் வேறு வழி இல்லாமல் அவனை பெற்றுக் கொண்டாள் . அப்போதும் அவளுக்கே தெரியாதது அவனின் தந்தை யார் என்பது.
ஆம்! அவளை எத்தனையோ ஆண்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். மகாதேவனை பழி வாங்க என்று அவள் நினைத்தது இன்று இதோ இத்தனை பெரிய உடல் உபாதையில் அவளை தள்ளி இருக்கிறது.
எத்தனையோ நாட்கள் பாலை பிழிந்து கீழே கொட்டி இருக்கிறாள். குழந்தையின் பசி அவளுக்கு மார்பில் பால் என்னும் அமுதமாக சுரந்து வழிந்தது. அப்போதெல்லாம் அவளுக்கு பப்பிற்கு கட்டாயமாக செல்ல வேண்டி இருந்தது. இவள் மேல் வீசும் பால் வாசனையில் ஆண்கள் இவள் அருகில் வர அருவறுப்புக் கொண்டனர். அதனால் மாத்திரையின் மூலம் பாலையே நிறுத்தியவள் .
இருந்தும் இப்போது, கௌசிக் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்குகிறாள். இருப்பினும் வேலை பளு அவனை அழுத்தியது. இதுதான் தமிழில் இட்டார்க்கு இட்ட பலன் என்று சொல்வார்களோ? மருத்துவர்கள் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவள் மனம் வேதனையில் புழுங்கியது. ஏனோ கௌசிக்கிடம் பேச வேண்டியது எல்லாவற்றையும் பேசி விட வேண்டும் என்று தோன்றியது. இன்றுதான் தனக்கு இறுதி நாளோ என்பது போல இதயம் படபடவென்று இருந்தது. ரிசல்ட் என்னவரும் என்பதை விட கடவுளின் தீர்ப்பு என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அதிசயமாக அவளுக்கு கடவுள் மீதும் விதி மீதும் நம்பிக்கை வந்தது. மகாதேவன் கட்டிய தாலியை கையில் வைத்து வெறித்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய பழைய வாழ்க்கையின் துயரங்களில் இருந்து தன்னை மீது எடுக்க வசந்திக்கு வெகு நேரம் தேவைப் பட்டது. அதுவும் தவிர மகாதேவன் தனக்கு கட்டிய தாலியை கையில் வைத்து வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு மகாதேவனின் ஒவ்வொரு செயலும் நினைவிற்கு வந்தது. முதலில் குழந்தையை வெறுத்தவள் குழந்தையை விரும்ப வைத்தது மஹாதேவன்தான். இவள் வேண்டாம் என்று ஒதுக்கிய இவள் பிள்ளையை எடுத்து தினமும் தாலாட்டி சீராட்டி பாலும் ஊட்டி வளர்த்தவர்தான் மஹாதேவன். அவளுக்குத் தெரியும். எல்லாமே தெரியும். அவருக்கும் மல்லிகாவுக்குமான உறவு,கூடல், தேடல் அனைத்தும். இவளின், அழகும், பணமும், திமிரும் இளமையும் ஆரோக்கியமும் இவளை எதையுமே கண்ணை திறந்து பார்க்க விடவில்லை. கூட இருந்த கூடா நட்புக்களும் அதற்க்கு முக்கிய காரணம் என்று சொல்லலாமா? சொல்லலாம்.
ஒருவேளை இவள் அவரை மதித்திருந்தால் இவளுக்கான காதலையும் அவர் கொடுத்தே இருப்பார் கட்டிய தாலிக்காக. நல்லவேளை அவருக்கு எந்த விதமான மனச் சங்கடத்தையும் அந்த விஷயத்தில் இவள் தரவில்லை. ஒரு நாள் கூட மனைவியாக மல்லி இருந்த இடத்தில் வசந்தி வர(விரும்ப)வில்லை. தன் பெண் குழந்தையின் நினைவாகவே அவர் கவுசிக்கை வளர்த்தார் தந்தையாக தாயுமாக . அவருக்கு எந்த விதமான ஈகோவும் இருந்ததில்லை. தனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் கூட அவர் முகம் சுளித்ததில்லை. எத்தனை எத்தனை கருக்கலைப்பு? கர்ப்ப பையும் எடுத்தாகிவிட்டது, இள வயதிலேயே. அதைப்பற்றி எதுவும் கௌசிக்கிற்கு தெரியாமல், தன்னை பார்த்துக் கொண்டதும் மஹாதேவன்தான். ஒருவேளை பள்ளி படிப்பிலேயே தன்னை பற்றிய விஷயங்கள் கௌசிக்கிற்கு தெரிந்திருந்தால்? இவளால் யோசிக்க கூட முடியவில்லை. இதோ இன்று இந்த நிமிடம், மரண தருவாயில் தான் நிற்கிறோம் அதனால் ஏதேதோ நினைவுகள். இதனை நாள் தான் ஆடிய ஆட்டம் என்ன? இதற்கெல்லாம் ஏதாவது பரிகாரம் செய்ய வேணும். முடிவெடுத்தாள். அன்னையை இந்த நிலையில் பார்க்க கௌசிகால் முடியவில்லை. அதனாலும்தான் அவன் வேலைகளை ஒதுக்க முடியாமல் அலுவலகம் சென்றான். அவனுக்கு அன்னையின் மீது இப்போது துளியும் வெறுப்பு இல்லை. பரிதாபம் மட்டுமே . மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம். அவன் நிலை புரிந்தவள் தான் கயலை ஊருக்கு வரச் சொன்னது.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி பவியையும் வர வழைத்துவிட்டான். ஆனால் அவளை எப்படி மருத்துவமனைக்கு வரச் சொல்வது? வசந்தியை பார்க்க என்றால் பவி நிச்சயம் வர மாட்டாள் என்று தான் அவன் பயந்தது. இருப்பினும் வசந்தியின் உடல் நிலை சரி இல்லை என்பதை அறிந்ததும் பவி தானாகவே அவளை பார்க்க விரும்பினாள் . அதற்க்கு கௌசிக் நிச்சயம் ஏதாவது கைமாறு செய்யவேண்டும். செய்வான்.
இதோ பவியும் கயலும் ஏர்போர்ட்டில் இருந்து இவர்களின் பாலசிற்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை பாருங்களேன், அயோ அந்த பில்டிங்க பாருங்களேன் எவ்ளோ பெருசு? நம்ம ஊருல இருக்கற மாதிரியே இருக்கு என்று வாய் மூடாமல் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள் வெகு நேரம் கழித்து ஒரு பெரிய மாளிகையை ஜன்னல் வழியாக எட்டி எட்டி கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருந்தவளை
பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிக்கப் போகுது.
கழுத்துக்கடியில் லேசாக சொரிந்து அசடு வழிந்தாள் ஒரு அசட்டு புன்னகையுடன் கயல்.
நீதானே இந்த பாலசோட முதலாளி !
சொல்லிக் கொண்டிருக்கும்போதே நீண்ட பெரிய நுழை வாயிலை கடந்து பச்சை பசேல் என்ற தோட்டதை கடந்து கார் உள்ளே சென்று கொண்டிருந்தது.
மத்திய பகுதிக்கு செல்லாமல் மகிழுந்து அதற்க்கு அருகில் இருக்கும் வேறு ஒரு வாயிலை அடைந்தது. அது விருந்தினர் மாளிகை போலும். வண்டி நின்றதும், இருவர் ஓடி வந்து கதவை திறந்தனர். ப்ளீஸ் வெல்கம் என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பவ்யமாக வணக்கம் செலுத்தி அழைத்தனர். கௌசிக் தன்னை வரவேற்க வருவான் என்று எதிர் பார்த்தவளுக்கு, ஒரு ரோபோ வந்து தமிழில் வணக்கம் செலுத்தியது. ஏற்கனவே அடுத்தடுத்து வந்த இன்ப அதிர்ச்சிகளால் மயக்கம் போட்டு விழாத குறையாக இருந்தவள் ரோபோவைப் பார்த்ததும் கயல் மயக்கம் போட்டே விழுந்து விட்டாள் . அதை பார்த்த பவி சட்டெனெ தண்ணீருக்காக கை பையை திறப்பதற்குள், அம்புலன்சிற்கு அழைத்து விட்டான் ரோபோ...............


உடனே தண்ணீரை முகத்தில் தெளித்தும் கண்ணை விழித்து பார்த்தாள் .
அக்கா இது எந்த இடம்?
ம்ம் !! நாம வர வேண்டிய இடத்திற்கு தான் வந்திருக்கோம். முதல்ல எழுந்திரு. அப்பதான் ரோபோ ஆம்புலன்சை கான்செல் பண்ணும்.
என்ன ஆம்புலன்ஸா உடனே விருக்கென எழுந்துவிட்டாள் ( ரோபோ என்ன செய்யும்? ரோபோ ஆம்புலன்ஸை கான்செல் செய்யும்).

இனி இவர்களுக்கு தேவையானதை செய்யப்போவது ரோபோதான் என்பதை அறியாமல், கடவுளை பார்ப்பது போல பய பக்தியுடன் கயல் நடந்துக் கொண்டதை பார்த்த பவிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவள் இப்படி சிரிப்பாள் என்று அதுவும் கௌசிக்கின் வீட்டில் பத்து நிமிடங்களுக்கு முன்னால் நம்பி இருந்திருக்க மாட்டாள் பவி . அதுவும் ஒரு நிமிடம்தான். அடுத்து அவள் திரும்பிய இடத்தில் மகாதேவனின் பெரிய புகைப்படம் அவளின் சிரிப்பை துடைத்தது . பழைய நினைவுகளை கொடுத்தது. மெதுவாக கண்ணை துடைத்துக் கொண்டாள் ,கயலின் சில பல அழைப்புகளுக்கு பின். அக்கா இவரு யாரு?
ஏன் கௌசிக் சொல்லல ?
ம்ம்..
இவருதான் கௌசிக்கோட அப்பா. சின்னதா இருந்த இந்த ஒளஷதம் மருத்துவமனையை இத்தனை பெரிசா மாத்தினவரு.( அதுக்காக அவர் குடுத்துருக்கற விலை ரொம்ப பெரிசு)
என்ன சொன்னீங்க?
ம் இல்ல .,அதுக்காக அவரு தன்னோட வாழ்க்கையையே அர்பணிச்சுட்டாருன்னு சொன்னேன்.
பவிக்கு வசந்தியை பற்றி எதுவும் தெரியாதுதான். இருப்பினும் அவளுக்கு மகாதேவனை பற்றி நன்றாகவே தெரியும். மூச்சை இழுத்து விட்டாள் . இவர்கள் தங்குமிடம் வசதிகளை பற்றி தெளிவாக சொல்லியது ரோபோ அதுவும் தமிழிலில். கயலுக்காகவே கௌசிக் இந்த ஏற்பாட்டை செய்திருந்தான். ஏனோ கௌசிக் வருங்கால மனைவிக்காக இப்படி பார்த்து பார்த்து செய்வதை பார்த்த பவிக்கு தன் கணவனை காண வேண்டும் போல் இருந்தது. பாவம் பெண்கள் இருவராலுமே தன் காத(ர்களை)லை, காண முடியவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் இருவரும் குளித்து உடை மாற்றி உணவு உண்டு சிறிது ரெஸ்ட் எடுத்திருக்க வேணும் என்பது ரோபோவின் கட்டளை.
அதன்படியே இருவரும் தயாராவதற்குள் ரோபோ வந்து இருமுறை ரீமைண்டர் கொடுத்துவிட்டது. அனைத்து விஷயங்களையும் பவியிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தான் கௌசிக். ஆனால் கயலிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருப்பினும் அவன் எத்தனை பிசியாக இருந்தாலும் அவள் காலை அட்டென்ட் செய்ய காத்திருந்தான். பாவம் வழக்கம்போல அவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே. கௌசிக்கால் கயலை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவன் இருக்கு நிலையில் அதற்க்கெல்லாம் நேரமும் இல்லை. மனமும் இல்லை. தன்னை போனில் கூட அழைக்க முடியாதவளை எப்படி அன்னையிடம் சென்று காட்டுவது? அதுவும் இப்படிப்பட்ட நிலையில் ? யோசனைகளை ஓரம் கட்டிவிட்டு விழாவிற்கு தயாரானான் கௌசிக்.
கௌசிக் பணக்காரன்தான் என்று கயலுக்குத் தெரியும் ஆனால் இத்தனை பெரிய பணக்காரனாக இருப்பான் என்பது அவளுக்கு தெரியாது. அவள் நினைத்து வந்தது ஏதோ. இவள் வந்ததும் தலை குனிந்து வரவேற்ப்பான் . அவன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைப்பான். பின்னர் ஒரு பெரிய டைனிங் டேபிளில் விருந்து. பின்னர் தனி அறையில் சில கொஞ்சல்கள்.விருது வழங்கும் விழாவிற்கு கௌசிக் அணியும் ஆடையை இவள் தேர்ந்தெடுப்பது என்று ஏதேதோ கற்பனைகளை வைத்திருந்தவளுக்கு அனைத்துமே வேறு விதமாக இருந்தது. அவள் காதலன் இன்னும் அவளை காணக் கூட ஏன் ஒரு போன் அழைப்புக்கு கூட கிடைக்கவில்லை. உடனேயே அவனுக்கு அழைக்க வேண்டும் போல இருந்தது . போனை எடுப்பாள். தயங்குவாள், வைத்துவிடுவாள். மீண்டும் போனை எடுப்பாள், கோபப்படுவாள் வைத்துவிடுவாள். மீண்டும் போனை எடுப்பாள், ரோபோ அழைக்கும் . இப்படியேதான் நடந்தது. இவள் கதவை தட்டும் ஓசை கேட்டது. ரோபோதான் என்று நினைத்தால் அங்கே இரு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். பார்ட்டிக்கு போக மேக் அப் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் சொன்னார்கள். நல்ல வேலையாக அங்கு பவி வந்து விட்டாள் . மற்றதை அவள் பாத்துக்க கொண்டாள் . அவர்கள் பவிக்கு தலை அலங்காரமும் முக அலங்காரமும் செய்து தார்கள். ஆனால் உடை அவளுடையது. கயலுக்கு உடை உட்பட அனைத்தும் அவர்களே தந்திருந்தார்கள். ரோஜா பூ வர்ணத்தில் பெரிய ப்ராக் போன்ற உடையில் ஒரு ரோஜா தோட்டமே நடந்து வருவது போல அவளை அவர்கள் மாற்றி இருந்தார்கள். கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு நிச்சயம் இது தான் இல்லை என்றே தோன்றியது.
ரொம்ப அழகா இருக்க என்ற ஒரே ஒரு வார்த்தையில் அவள் கன்னங்களும் ரோஜா பூவாகி இருக்குமோ? சொல்வதற்குதத்தான் அவன் அங்கு இல்லையே. ஏக்கங்கள் பெரு மூச்சுகளாய் வெளி வந்தது.
இங்கு சென்னையில் என்ன நடந்தது?
தெரிந்து கொள்வோம் ....................
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD-100(1)


நாளை காலை கௌசிக் கயலை எப்படி எதிர் கொள்வான்?ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் தலையை தடவி நெற்றியில் இதழ் ஒற்றப் போனவன்,

ம்ம் அவள் சம்மதமில்லாமல் கூடாது என்று நகர்ந்து விட்டான், இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போவது தெரியாமல்.

என்னதான் நடக்கும் ?

அவங்களுக்குள்ள எது நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை.............

மீ எஸ்கேப் டு சென்னை.........

இங்கே வழக்கம்போல முத்துவைப்பற்றி எதுவும் தெரியவில்லை. சத்யா கண்ட இடத்தில் எல்லாம் கரும்பும் மஞ்ச கொத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. முத்துவுக்கு பண்டிகை கிடையாது. இருந்தாலும் காஞ்சிபுரம் சென்று விட்டு வந்ததில் இருந்து அவனுடன் சேர்ந்து தலை பொங்கலை கொண்டாட ஆசையாக காத்திருந்தாள். இந்தமுறையும் அவளுக்கு ஏமாற்றம்தான். வழக்கம்போல தலை விதியை நொந்து கொண்டவள் மருத்துவமனைக்குச் சென்றாள் . அவள் நிலைமை வீட்டினருக்கு புரியத் தான் செய்தது. அவர்களும் ஏதோ பெயருக்கு பொங்கலை கொண்டாடினர்.

பலமுறை முத்துவுக்கு இவள் அழைத்துப் பார்த்துவிட்டாள் . ம்ம் அவன் போனை எடுத்தால்தானே ? ஏனோ இவளை கவனித்துக் கொண்டிருந்த சிவாவுக்கு சிரிப்புதான் வந்தது. மனதிற்குள் அவனும் அவன் காதலியும் சிரித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியுமோ ? மனதில் யோசனையாக இருந்தது. இருப்பினும் அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு வேலையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டாள் .

வீட்டில் எதுவுமே நடக்காதது போல அந்த வெள்ளி கிழமையே, சுமங்கலி பூஜை க்கு தயார் செய்துக் கொண்டிருந்தாள் தாயார். அதுவும் இவளுக்கு ஆச்சர்யமே. வீட்டில் தனக்கு தெரியாமல் ஏதோ ஒன்று நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இவள் அறிவாள் . பலமுறை வீட்டில் கேட்டுப் பார்த்தும் யாரும் எதுவும் சொல்வதாக இல்லை.

தாய் சொன்ன படியே வெள்ளிக் கிழமை அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தாள் . சொன்னபடியே ரிஷி, ரம்யா, ஆரா , அருண், கௌசிக், கயல் அனைவரும் வந்துவிட்டனர். யார் வந்தாலும் சத்யாவின் கண்கள் வாயிலையே எதிர் நோக்கின தன் கணவனை எதிர்பார்த்து.

சத்யா இந்த வெள்ளிக்கிழமை ஹால்ப் எடுத்துக்க. வீட்டுல சுமங்கலி பூஜை இருக்கு.

சரிம்மா . அம்மா !

இவள் எதை கேட்கப் போகிறாள் என்பது சிமிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் சில விஷயங்களை சொல்லுவதை விட சொல்லாமல் இருப்பதே இன்னும் நன்றாக இருக்கும்.

சொல்லு சத்யா!

அம்மா !
சொல்லும்மா!

இவளின் தயக்கம் அவளுக்கு புரிந்தது. மகளின் முகவாயை தூக்கி என்னடா கண்ணு அம்மாகிட்ட என்ன தயக்கம்?

இல்லம்மா. சுமங்கலி பூஜைன்னா அவரு வரவேண்டாமா ?

வரனும்தான். நான் உங்க மாமியார்கிட்ட பேசிட்டேன். முடிஞ்ச வரைக்கும் அவருகிட்ட பேசி அனுப்பி விடறேன்னு சொன்னாங்க. அவரு வந்தா வரட்டும். இல்லன்னா நாம வரைக்கும் செஞ்சுக்குவோம். நீ கவலை படாத.

அம்மா அப்புறம் இன்னொரு விஷயம்!

நான் கௌசிக்கை கூப்புட்டமா ?

கூப்புடேன். இதெல்லாம் எங்கிட்ட கேட்கணுமா ? சிவா மாதிரிதானே அவனும்.

ம்ம் சரி. மண்டையை ஆட்டிவிட்டு செல்லும் மகளை பார்க்கவே சிமிக்கு மனம் கேட்கவில்லை.

என்னங்க,. நாம விஷயத்தை அவகிட்ட சொல்லிடலாமா?

அவளைவிட நீதான் ரொம்ப பாவம் சிமி. அத்துடன் முடித்துக் கொண்டார் தியாகு. அடுத்த இரண்டு நாட்கள் வீடே கல்யாண வீடுபோல் இருந்தது.

ஆம் ! சத்யாவுக்கு திருமணம் தான் நாம் பார்த்து நடக்கவில்லை. ஆனால் சுமங்கலி பூஜையும் தாலி மாற்றும் சடங்கும் விமரிசையாக செய்ய வேண்டும் என்று சிமி விருப்பப்பட்டாள் . தியாகு, சிவாவுக்கும் அந்த ஆசை இருந்தது. தங்கைக்கு பரிசளிக்க ஒரு வைர செட் வாங்கினான் சிவா. தங்க செட்டும் , மாப்பிள்ளைக்கு நகைகளும் வாங்கினார் பெற்றோர். பாவம் இதை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தாள் சத்யா.

அங்கே விருது வழங்கும் விழாவில்.....

சிறந்த இளம் தொழில் அதிபருக்கான விருது கௌசிக் என்று அழைத்ததும், கைதட்டல்கள் பெண்களிடமிருந்து சத்தமாகவே வந்தது. அதை பார்த்த கயலுக்குத்தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. மேடையில்,

இந்த விருது என்னோட அப்பா மகாதேவனுக்கு சமர்பிக்கறேன் என்று அவன் சொன்னதும் இங்கே டிவியில் பார்த்த சத்யாவுக்கு கண்களில் குளம் கட்டியது . சிரிப்புடன் சந்தோசமாக தலை ஆட்டி ரசித்தாள். அவளுக்கு இது ஒரு ஆனந்தமான தருணம். தியாகுவுக்கும்தான். மகாதேவனின் த்யாகங்களுக்கான விருது அல்லவா இது. அவன் உயிருடன் இருக்கும்வரை அவனை முகம் கொடுத்து பார்க்காத மகன்., இதோ அவனின் விருதை தன் சகோதரனுக்கு சமர்ப்பிக்கும்போது இதுவரை சொல்ல முடியாமல் மனதில் அடக்கி வைத்திருந்த துக்கங்களை எல்லாம் களைந்துவிட்டது. இது மகாதேவனுக்கான அங்கீகாரம் அல்லவா! அவன் விருதை வாங்கியதும் ஏனோ சத்யாவால் அடக்க முடியவில்லை. அது சந்தோசமா? இன்பமா? ஆனந்தமா? தெரியாது. ஆனால் தந்தைக்கும் மகளுக்கும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக தோள் சாய்ந்துக் கொண்டனர். என்னை கூட வேண்டான்னுதானேப்பா அவனை மகனா வளர்த்தீங்க என்ற கேள்வி அவள் மனதில் இல்லாமல் இல்லை. ஏன் ? ஏன் ? என்று பலமுறை கேட்டிருக்கிறாள். அதற்கான விளக்கம் யாராலும் தர முடியவில்லை. அதற்கான பதில் மகாதேவனுக்குத் தெரியும். அவர் மகளுக்கு ஒரு அன்னை தேவை. அன்பு தேவை. பாதுகாப்பும் தேவை. அதை என்றுமே வஸந்தியால் தர முடியாது. கௌசிக்கின் பிறப்பு அவர் எதிர்பாராதது. என்னதான் காரணங்கள் இருந்தாலும், சொன்னாலும் கௌஸிக்தான் அவருக்கு முக்கியம் என்றே அவள் நினைத்திருந்தாள் . கௌசிக்கின்ச் சென்னை வருகைக்கு முன்பு வரை . ஆனால் எப்போது அவன் தந்தை யார் என்பதே தெரியவில்லை என்று அழுதானோ அப்போதுதான் மகாதேவனின் முடிவு சரியானது என்பதை இவள் மனதளவில் ஒத்துக் கொண்டாள் .

உயிருடன் இருக்கும் வரை எதையும் செய்ய முடியாமல் இருந்தவர் இறப்பிற்கு பின் சத்யாவுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பெற்றுத் தந்தார் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

வசந்தி ஒரு உயில் எழுதினாள் . அதில் பூர்விக குடும்ப சொத்துக்களை கௌசிக் பெயரிலும் மற்றபடி மஹாதேவனால் சம்பாதிக்க பட்ட சொத்துக்களை சத்யா பெயரிலும் எழுதினாள் . வளர்ப்பு மகள் சத்யா என்று எழுதினாள் , தியாகுவின் ஒப்புதலுடன். அதன் மூலம் அவளுக்கு மகாதேவனின் மகள் என்ற அந்தஸ்து கிடைத்து விட்டது. அவரின் உழைப்பின் பிரதிபலனும்தான். மல்லியும், மகாதேவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்களின் ஆத்மா சீக்கிரம் சாந்தி அடையட்டும்.

வசந்தியின் உடல் நிலை பற்றிய ரிப்போர்ட்டுகளை மதன் கௌசிக்கிடம் மிகத் தெளிவாக விளக்கினார். அதன்படி வசந்தி அடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்கள் அல்லது கடைசி மூச்சு வரை இருமிக் கொண்டேதான் இருப்பாள். அதை தடுக்க முடியாது. சில மருந்து மாத்திரைகள், முக்கியமாக பேசாமல் இருப்பது மூலம் குறைக்க முடியும் அவ்வளவே.

இப்போதும் தோன்றியது "இட்டார்க்ற்கு இட்ட பலன்". விரக்தியாய் சிரித்துக் கொண்டாள் . ஆனால் மறுநாள் கயலை மருமகளாக பார்க்கும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கை பிறக்கத்தான் போகிறது. இது அவளின் மன மாற்றத்திற்கு கடவுள் தரப் போகும் பரிசு.

இது என்னுடைய தந்தைக்கு என்றுக் கூறி பரிசை வாங்கிய கௌசிக்கை விருது விழா முடிந்ததும் பெண்களின் படலம் சூழ்ந்துக் கொண்டது. விழா முடிந்ததும், ஆசை ஆசையாக கயலை நோக்கி ஒரு அடி அவன் எடுத்து வைப்பதற்குள் பேட்டி எடுப்பதற்கும், வாழ்த்து தெரிவிக்க, கை குலுக்க என்ற பலர் அவனை சூழ்ந்துக் கொண்டனர். அதில் பெண்கள் தான் பல பேர். கயல் இது எல்லாவற்றையும் பழகிக் கொள்ளத்தான் வேண்டும் .

ம்ம்., நம்ம வீட்டு பையன நாம எப்ப தான் பார்ப்போமோ ? வா சாப்பிட போகலாம். அங்கே பபே முறையில் சாப்பாடு வைக்க பட்டிருந்தது. கயலுக்கு அனைத்து சாப்பாட்டையும் விளக்கியபடியே சிறிது சிறிதாக அவள் தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள் பவி . அப்போது ஒரு வயதான பெண்மணி அவர்கள் அருகில் வந்து

நீங்க தமிழா ?

ம்ம்! இருவரும் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர். ஏனெனில் அவர் வாழ் நாள் சாதனை விருது வாங்கியவர்.

இவ்ளோ நல்ல தமிழ கேட்டு எத்தனை நாள் ஆச்சு?

வாழ்த்துக்கள் மேம்! வாழ்த்துக்கள்! உங்கள பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு பொண்ணா இருந்து இவ்ளோ பெரிய விருது வாங்கறது ரொம்ப அபூர்வம்.

ம்ம் ! தேங்க் யூ !

நீங்க?

கௌசிக் கூட வந்துருக்கோம்.

யங் பிசினெஸ் மேன் அவார்டு?

ம்ம்! எஸ் மேம். நான் அவனோட க்ளோஸ் பிரண்ட் . அண்ட் இவங்க அவனை கல்யாணம் பண்ணிக்க போறவங்க. உளறிவிட்டதும் சட்டென நாக்கை கடித்துக் கொண்டாள் பவித்ரா.

பரவால்ல. நான் யார் கிட்டையும் சொல்ல மாட்டேன்.

இல்ல மேம்! அவனாவே சொல்லற வரைக்கும் ப்ளீஸ்.

இட்ஸ் ஓகே ! பின்னர் உணவை உண்டபடியே மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். நடு நடுவே சிலர் அந்த பெண்மணியிடம் வாழ்த்து தெரிவித்தனர். சில அலுவல்களை பகிர்ந்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மிக நாசுக்காக ஹாண்டில் செய்தார் அவர். அதை பார்த்த இருவருக்குமே ஆச்சர்யம்.

என்னம்மா படிச்சுருக்க ?

வெறும் டிகிரி? ஏனோ அவர் முகத்தில் கவலை ரேகை.

ஏன் என்னாச்சு ?

உன்கிட்ட நான் கொஞ்சம் பேசலாமா ? தப்பா எடுத்துக்காத.

எனக்கு கல்யாணம் ஆகி இருந்தா உன் வயசுல ஒரு பொண்ணோ பிள்ளையோ இருந்திருப்பா . ஒரே ஊரு. அதான் சொல்லாம இருக்க முடியல. நீயும் கௌசிக்கும் எந்த சமயத்துல உங்க மேரேஜ் பத்தி டிசைட் பண்ணீங்க எனக்கு தெரியாது. பட் இந்த சொசைட்டிக்காக நீ உன்னோட தகுதிகளை நீ வளர்த்துக்கணும். மேற்கொண்டு படி. நிறைய இங்கிலீஸ், ஹிந்தி பேசு. நிறைய பேர்கிட்ட பேசு. ஆனா அறிவு பூர்வமா மட்டும் பேசு. ஏதோ சொல்லணும்ன்னு தோணிச்சு. பார்த்துக்கோ.

இத்தனை நாட்களாக தான் பேச யோசித்த விஷயங்களை சில வரிகளிலேயே மிகவும் எளிமையாக அவர் விளக்கி விட்டார். ஆனால் அதை கயல் எப்படி எடுத்துக் கொண்டாள் ?

என்ன யோசனை கயல் ?

ம்ம்! நானும் இதையேதான் யோசிச்சேன். இந்த பணக்காரங்க ? என்னால இதுல சமாளிக்க முடியுமா ? கௌசிக்கோட அம்மா எப்படி? அவங்களபத்தி அவர் எதுவுமே சொன்னதில்லை. அவங்க என்ன ஏத்துப்பாங்களா ? அவங்களுக்கு என்ன புடிக்கலன்னா ?

நீ எதுக்கும் கவலைப்படாத. எல்லாத்தையும் கௌசிக் பார்த்துப்பான். ஆனால் உனக்கு அந்த நம்பிக்கை வேணும்.

வா போகலாம்.

பெருமூச்சு அவளிடமிருந்து வந்தது. கௌசிக்கை அங்கே காணவில்லை.

பவி கௌசிக்கை காணுமே ?

ம்ம்., அவன் வீட்டுக்கு வந்துடுவான் . வா நாம போகலாம். அவனுக்கு மெசேஜ் பண்ணிடலாம். வீட்டிற்கு வந்தவர்கள் அவரவர் அறையில் உடல் கழுவி உறங்க சென்றனர். உறக்கம் தான் அவர்களுக்கு அருகில் வரக் கூட மறுத்தது.


அந்த புது உடையை மாற்றி தன்னுடைய சாதாரண நைட்டிக்கு மாறி இருந்தாள் கயல். அவளுக்கு அந்த வீட்டில் மூச்சு முட்டுவது போல இருந்தது. தான் வசிக்கும் வீட்டில் தானும் அம்மாவும்தான். அங்கு பெரிய வசதிகள் கிடையாது. ஏன் பல நேரங்களில் மின்சாரம் இருக்காது. ஆனால் அங்கு அவளால் நிம்மதியாய் இருக்க முடிந்தது. ஆனால் இந்த ac அறை, பளிங்கு கற்கள் பதித்த கட்டில், படுத்தாலே கட்டி அணைத்துக் கொள்ளும் மெத்தை அவளுக்கு உறக்கத்தை தரவில்லை. மாறாக கௌசிக்கின் பண பலத்தைத்தான் சொல்லாமல் சொல்லியது. ஏனோ கௌசிக்கின் பாரா முகம் அவளுக்கு அவமானமாக இருந்தது. முதன்முதலாக தன்னைத்தானே பிச்சைக்காரியாக உணர்ந்தாள் . அவனிடம் வாங்கிய கடனுக்காகத்தான் தான் இங்கிருக்கிறோம் என்று மூளை சொல்லியது. மனமும் மூளையும் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியது. இதற்க்கு நடுவில் அவள் எப்போது கண்ணயர்ந்தாள் என்பது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கௌசிக்கின் வரவும் அவளுக்கு தெரியாதுதான். அவன் அறைக்கு அடுத்த அறையைதான் கௌசிக் அவளுக்கு கொடுத்திருந்தான். அந்த அறை மூலமாகவே இங்கும் வர முடியும். வீட்டை புதுப்பிக்கும் போது இந்த மாற்றமும் அவனால் செய்யப்பட்டதுதான்.

வீட்டிற்கு வந்த கௌசிக்கிற்கு ஏனோ குளித்தாவது தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அத்தனை பெண்களை அவன் ஒரே நேரத்தில் இப்படி சமாளித்ததில்லை. எந்த பெண்ணும் அவன் அருகில் கூட நெருங்க முடியாது. இருப்பினும் இன்று வாழ்த்து சொல்ல வருவது போல பலர் இவனை சுற்றியது இவனுக்கு அவஸ்த்தையாக இருந்தது. அதுவும் கயலின் முன்னிலையில். அவன் நாளை காலை கயலை எப்படி எதிர் கொள்வான்?ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் தலையை தடவி நெற்றியில் இதழ் ஒற்றப் போனவன்,

ம்ம் அவள் சம்மதமில்லாமல் கூடாது என்று நகர்ந்து விட்டான், இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போவது தெரியாமல்.

என்னதான் நடக்கும்?


மறுநாள் வசந்தியை சந்தித்துவிட்டு சென்னைக்கு கிளம்பினாள் கயல். பவியை சந்தித்த வசந்தி மன்னிப்பு மட்டும்தான் கேட்டாள் . அதற்குள்ளேயே அவளுக்கு சில முறை இருமல் வந்துவிட்டது.

நீங்க பெரியவங்க. நீங்க இப்படி சொல்லக் கூடாது. கூப்பி இருந்த வசந்தியின் கைகளை கீழே இறக்கி விட்டு அவளின் பாதங்களை தொட்டு வணங்கினாள் . தன் கணவனுடன் பவித்ரா.

நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருப்பீங்க. பவித்ரா ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பார்த்துக்கோங்க காலம்பூரா.

கயல் வசந்தியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். வசந்தி அவள் கைகளை விடவே இல்லை. கயலின் அமைதியான அழகு வசந்திக்கு பிடித்திருந்தது. கயலுக்குத்தான் வசந்தியை துணி கடையில் பார்த்த அனுபவம் இருக்கிறதே. பெரியதாக இல்லை என்றாலும் அவர்களுக்குள் ஏற்கனவே சிறு அறிமுகம் இருக்கிறதே. அதுமட்டுமில்லாமல் கயலை பார்த்ததும்தான் கௌசிக்கிற்கு சீக்கிரமாக இவளை போன்ற ஒரு நல்ல பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வசந்திக்கு வந்தது. அவள் இத்தனை சீக்கிரம் கயலை ஏற்றுக் கொண்டது கௌசிக்கிற்கும் பவிக்கும் ஆச்சர்யமே!

எத்தனையோ முறை சொல்லியும் கேட்காமல் இதோ ரயிலில் வைத்துக் கொண்டிருக்கிறாள் கயல் தன்னுடைய இனிப்பான நினைவுகளுடன்.

முந்தைய நாள் இரவு பல வித மனக்குழப்பங்களுடன் அவள் எப்போது உறங்கினாள் என்பது அவளுக்கு நினைவில்லை. ஏசி யினால் அவளுக்கு குளிரெடுக்க தொடங்கியது.

அதை அனைக்க எழுந்தபோது அங்கே அவள் அருகில் கௌசிக் படுத்திருந்தான். பதறி எழுந்தவள்,தன் உடை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்தாள் . அவளுக்கு நினைவிருந்தவரை எதுவும் நடக்கவில்லை. குளிரில் பல்லை கிட்டியவளுக்கு இப்போது பதட்டத்தில் நாக்கு உலர்ந்து போனது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்தவள், கௌசிக்கின் முகத்தை பார்த்தாள் .

ஏன் கௌசிக் வந்ததுலேர்ந்து எங்கிட்ட பேசவே இல்ல? மனதில் ஆயிரம் சிந்தனைகள். நான் உங்களுக்கு எந்த வித்ததுலேயும் சரியானவ இல்ல. எப்படியாவது உங்களோட பணத்தை நான் திருப்பி கொடுத்துடுவேன்.

அவன் தலையில் இருந்து நீர் சொட்டி முகத்தில் விழுந்தது.

அடக்கடவுளே ? இது என்ன இப்படி தண்ணீரை துடைக்காம ஏசி ரூமுல படுத்துருக்காங்க.

மெதுவாக தன்னுடைய டவலாலேயே அவனுக்கு உறுத்தாதபடி மெதுவாக தலையை துவட்டினாள் . அவனுக்கு துவட்டுவதிலேயே மும்முரமாக இருந்தவள் அவளின் அங்கங்கள் அவன் மீது படர்வதை கவனிக்க தவறினாள். அரைகுக்குறை தூக்கத்தில் இருந்தவனுக்கு அவளின் பெண்மையும், மென்மையும் இளமையை தட்டி எழுப்பியது.

மெதுவாக கண்ணை திறந்தவனின் பார்வை வீச்சை அவளால் தாங்க முடியவில்லை. சட்டென அவனிடமிருந்து விலகினாள் . அவளின் கையை பிடித்தவன், கயல் நீ இன்னிக்கு எனக்கு வேணும் ப்ளீஸ்...

அவனிடம் அவளால் சட்டென முடியாது என்று சொல்ல முடியவில்லை. இத்தனை நாட்களாக தன்னிடம் பழகியும் அவன் தப்பாக ஒரு பார்வை பார்த்ததில்லை. பவியிடமும்தான். அதுமட்டுமில்லாமல் இன்று அத்தனை பெண்கள் அவனை சுற்றியபோதும் அவன் பார்வை கயல் மீதே இருந்தது. அவன் அன்னைக்கும் உடல் நலமில்லை. பலவித மன சஞ்சலங்களுக்கு இப்போது, தானே மருந்து. திரும்பி அவன் முகத்தை பார்த்தாள் . இவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சட்டென கையை விடுவித்தவன், சாரி சாரி கயல். நான் ஏதோ தப்பா ப்ளீஸ் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. படுக்கையை விட்டு எழுந்தவன் தன்னுடைய அறைக்கு செல்ல முற்பட்டான். அவன் கையை பிடித்து நிறுத்தியவள் , அவன் உதடுகளை சிறை செய்தாள் .

அதற்க்கு பிறகு அவளை அவன் முழுமையாக ஆக்ரமித்திருந்தான். என்ன நடந்தது என்பது கூட இருவருக்கும் தெரியாது. கார்த்திக்கின் பேச்சும், தொடுகையும் செய்யாத மாயாஜாலங்களை இவன் செய்துக் கொண்டிருந்தான். அன்று கார்த்திக்கின் உதடுகளை வெறுத்தவள், இன்று தானாகவே அவனிடம் சரணடைந்தது. கார்த்திக்கின் தொடுகையை சீ! என்று அருவருத்தவள் இன்று இவனிடம் நெகிழ்ந்து கிடக்கிறாள், அதுவும் திருமணத்திற்கு முன்பே!

இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவன் அவளிடம் உனக்காக நான் இருக்கிறேன் என்று செய்கையினால் காட்டியதுதான். அவன் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது. சற்று நேரத்திற்கு முன் இருந்த அத்தனை கவலைகளையும் அவன் துடைத்தெறிந்தான் தன் உதடுகளினால், தொடுகையினால். அவன் அவளை அர்ச்சித்து கொண்டிருந்தான். அவளின் இளமை அவனுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தது.



அனைத்தும் முடிந்ததும் கௌசிக் பேசினான். நிறைய பேசினான். எனக்கு ரொம்ப சந்தோசமா நிம்மதியா இருக்கு கயல். தேங்க்ஸ் பொண்டாட்டி. ஏற்கனவே குங்குமம் போல சிவந்திருந்த அவள் முகம் அவன் முகத்தை கூட பார்க்க முடியாமல் அவன் தோள் வளைவில் முகம் புதைத்தாள். மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டான். ரொம்ப கஷ்டப்பட்டு உனக்காகவே சேவ் பண்ண கற்பை உனக்கே கொடுத்துட்டேன். புன்னகையுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள். நான் பண்ணத என்னால நியாயப்படுத்த முடியாது . பட் இந்த சமயத்துல எனக்கு இது ரொம்ப தேவையாக இருந்தது. நான் டிரிங்க்ஸ் எடுக்க மாட்டேன். ஏனோ என்னால இந்த சந்தர்ப்பத்தை ஹாண்டில் செய்ய முடியல. நீ! நீ! பண்ணிருக்கறது ரொம்ப பெரிய விஷயம். ப்ளீஸ் ப்ளீஸ் என்னை தப்பா மட்டும் நினைக்காத, கண்ணை சுருக்கி கெஞ்சுபவனை என்ன சொல்வது?

அதுக்கு ஒரு கண்டிஷன்.

ம்ம் ... வருங்கால காதல் மனைவியின் காதல் மொழிகளில் அவன் சொக்கித்தான் போனான்.

உனக்காக நான் இருக்கிறேன் எங்கும் எப்போதும் என்ற நம்பிக்கையை அஸ்திவாரமாக கொண்டு ஆரம்பிக்கப்போகும் இவர்களின் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

அச்சுச்சோ பவி அக்கா நம்மள இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க ?

அவளே அவ புருசனோட மஜா பண்ணிட்டு இருப்பா. நம்மள பத்தி அவ என்ன நினைப்பா ?

அவங்க வீட்டுக்காரர் இங்கதான் இருக்காரா ?

அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் இப்பவாது என்ன தூங்க விடுடீ ....

நானா என்று ஆரம்பித்தவளை கட்டி அணைத்து தூங்க பண்ணின்னான் ஒரே போர்வைக்குள். அவளின் இளமைக்கு தீனி போட்டவன் , அவளின் அறிவுக்கும் திறமைக்கும் சேர்த்தே தீனி போடுவான்.

பவியும் அவள் கணவனும் ட்ரைவர் அழைத்து சென்ற ஹோட்டலின் அறைக்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு காத்திருந்தது பெரிய ஆச்சர்யம். அது புது மண தம்பதிகளுக்கான பிரத்யேக அறை . கதவை திறந்தவர்களுக்கு ஆச்சர்யம்தான். ஆனால் கட்டிலில் வந்து விழுந்தவர்கள் அப்படியே கண்ணயர்ந்து விட்டனர். அதுவும் சில மணி நேரங்களுக்குத்தான். அடுத்த சில மணிகளில் பவியின் முதுகில் கணவனின் உதடுகள் ஊர்வலம் நடத்தியது. எப்போதுமே மனைவியை அந்த விஷயத்தில் நன்றாகவே பார்த்துக் கொள்வாந்தான் . இருப்பினும் பவிக்கு இம்முறை ஏதோ மாற்றம் தெரிந்தது. அறையின் வாசமா ? பெண்ணவளின் வாசமா ? அவனுக்கும் தெரியவில்லை. இருப்பினும் அவனின் காமம் கரை கடக்கிறது என்பதை அவனும் அறிந்தான். இருவருமே தன்னை மீறி இன்பம் அனுபவித்தனர். கணவன் எந்த சாதனமும் பயன்படுத்தாமல் இருந்ததும் பவியின் ஆசைக்கு காரணம். மறு நாள் காலையில் இருவரும் எழுந்தபோது அது புத்தம்புது காலையாகவே இருந்தது. கணவனின் கையணைப்பில் காபிக்கு குடித்துக் கொண்டிருந்தாள் பாவி.

என்ன சாருக்கு நேத்து அவ்ளோ மூடு ?

ஏன் உனக்கில்லையா ?

ம்ம் எனக்கும்தான்.

பவி எனக்கு ஒரு பாப்பா வேணும். தருவியா ?

சட்டென கணவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள் . ஜுரமெல்லாம் ஒன்னும் இல்லையே ? அப்புறம் ஏன் உளறீங்க ?

ப்ளீஸ் பவி . என்ன குத்தாத . இத்தனை நாளா நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப ? நேத்து கௌசிக் என்ன மீட் பண்ணாரு. அவரு சொல்லித்தான் நீ ஒனக்கு எவ்ளோ பெரிய அநியாயம் பண்ணி இருக்கேன்னு எனக்கு புரிஞ்சது.

உங்களுக்கு கௌசிக் இந்த விஷயத்தை பத்தி பேசினதுல ஒன்னும் தப்பவே தோணலையா ?

இல்லையே ? இந் பாக்ட் அவரு சொல்லி இருக்கலன்னா என்னோட தப்பு எனக்கு புரியாமலே போயிருக்கும். ஒரு நல்ல நட்பு கிடைக்கறது அவ்ளோ ஈஸி இல்ல. சொந்தகாரங்க என்னோட பேரன்ட்ஸ், எல்லாரையும் நீ எப்படி சமாளிச்சுருப்ப ? எத்தனை பேரோட கேவலமான பார்வை, பேச்சு...ப்ச் நான் எவ்ளோ சாரி சொன்னாலும் பத்தாது ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுவியா பேபி ? அவன் கண்களில் கலக்கத்தை கண்டவள் அவனை கட்டிக் கொண்டாள் .

பவியும் விரைவில் அம்மவாகத்தான் போகிறாள். இன்னொரு குட்டி தேவதையை வரவேற்க கையில் ஆரத் தியுடன் நாமும் காத்திருப்போம்.

 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD-100(2)


தை வெள்ளி....


அய்யரின் சொல்படி சிமியும் மற்றவர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வேட்டி சட்டையில் நிற்கும் கணவன்களை அவரவர் மனைவிகள் சைட் அடித்துக் கொண்டிருந்தனர். அதில் திருமணம் ஆகாத கங்காவும் கூட அடக்கம்தான். சத்யாதான் கணவன் வருவானா மாட்டானா என்றுக் கூட தெரியாமல் காத்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களின் கணவர்கள் வந்து மனைவியின் தாலிக்கு குங்குமம் வைத்து நெற்றியிலும் வைத்து விடும்போது அங்கே ஒரு சிகப்பு வர்ண கார் வந்து நின்றது.

ஆவலுடன் கணவனை எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே. அதில் இருந்து ஆச்சியும் தேவியின் குடும்பமும் தான் இறங்கினர். அவர்களை பார்த்தது சந்தோஷம் தான் என்றாலும் முத்துவைக் காணாமல் கண்களில் நீர் குளம் கட்டியது . அந்த கண்ணீரை வெளி விடாமல், மனைவிக்கு அணைத்து குங்குமம் வைத்தான் முத்து . குலுங்கி குலுங்கி அழ வேண்டிய அழுகை அப்படியே சிரிப்பாக மாறியது சத்யாவுக்கு.



இன்னும் கொஞ்ச நேரத்துல அய்யர் போய்டுவாரு. அப்புறம் நீ உன் ரூமுல போய் ரொமான்ஸ் பண்ணிக்கலாம், இது சிவா .

அண்ணா அப்ப எல்லாமே நீ பண்ணதுதானா?

ஆமா!

அதற்குள் அய்யர் அழைத்தார் . நீங்க போய் உங்க மாமியார் ஆத்துல வாங்கிண்டு வந்துருக்கற புடவைய மாத்திக்க போறேளா ?

ம்ம். சரி இந்தாங்கோ அதற்கான மந்திரங்களை சொல்லி புடவையை அளித்தார்.

அந்த தாமரை வர்ண பட்டு அவளுக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. அதன் ரோஸ் நிறம் அவள் கன்னங்களையும் நிறம் மாற்றியது. பூஜை முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணிற்கு யார் யார் ஆசீர்வாதம் செய்ய வேண்டுமோ அவரவர் தரலாம் என்றதும் சிவா வைரத்தையும், தியாகு தங்கத்தையும் கொடுத்தார்கள்.

தேவியும் நல்ல சிவமும் மருமகளுக்கு கொடுக்க வேண்டிய புது தாலியை கொடுத்தார்கள். ஆச்சி இவர்களுக்கு துணி வாங்கி வந்திருந்தார். இவள் பரிசை வாங்கி கொண்டதும் ஆச்சியை கட்டிக் கொண்டாள் .

நீங்க வந்ததுதான் ரொம்ப சந்தோஷம். நீங்க என் மேல கோபமா இருக்கீங்கன்னு நினைச்சேன். தாங்ஸ், தாங்ஸ், ஐ லவ் யூ .

அடி போடி இவளே அப்புறம் உம் புருஷன் என்ன கட்டையாலே அடிப்பான். இதெல்லாம் ராத்திரி அவனுக்கு குடு.

ப்ச் என்ன ஆச்சி இப்படி பப்ளிக்கா பேசறீங்க. அவளின் வெட்கத்தை பார்த்து அனைவரும் கொல்லென்று சிரித்தனர். மற்றவர்களின் பரிசுகளையும் இவர்கள் பெற்றுக் கொண்டனர். இறுதியாக கௌசிக்,

சில பத்திரங்களைக் கொடுத்தான். அதில் வளர்ப்பு மக்ளுக்காக என்று சில சொத்துக்களை வசந்தி எழுதி இருந்தாள் . புதியதாக மருத்துவமனை வாங்க முடியாததால் ஒளஷதம் குரூப் வேறு ஒரு பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து 70 சதவீத பங்குகளை வாங்கி இருந்தது. அதற்கான தலைமை இனி சத்யாவிடம். அதே போல முத்துவின் கிராமத்து பழங்கள் காய்கறிகள் அனைத்தும் நேரடியாக கொள்முதல் செய்ய சில நிறுவங்களின் மூலம் அடுத்த 3 வருடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கௌசிக் என்னடா இது? எனக்கு இது மட்டும் போதும். மத்தது வேண்டாம். ப்ளீஸ் புரிஞ்சுக்க.

நோ சத்யா இது உன்னோட உரிமை. இதை நீ வேண்டான்னு எப்பையுமே சொல்ல முடியாது. அம்மாவோட நிலைமை இப்போ ரொம்ப மோசமா இருக்கு. நீ வேண்டான்னு சொல்லிட்டா அவங்களால அதை ஏத்துக்கவே முடியாது. அது மட்டும் இல்லாம அங்கிள் கிட்ட கேட்டுத்தான் அவங்க உன்ன வளர்ப்பு மகள்னு போட்டிருக்காங்க. என்னோடது, அப்பாவோடது, அம்மாவோடது இது எல்லாம் உனக்குதான். நீ வேண்டான்னு சொல்லவே கூடாது. மறுத்து பேச வாய் எடுத்தவளை கௌசிக்கின் கைகள் மூடியது.

நீ என்ன உண்மையாகவே தம்பியா ஏத்துக்கிட்டனா வேற எதுவும் சொல்லாத. அந்த நேரம் கயல் வந்து நின்றாள்.

அனைவருமே புதியவர்களாக இருக்க, கௌசிக் அவளை வரவேற்றான்.

இவதான் என்னோட வருங்கால மனைவி. கயல்.

அடப்பாவி ஒன்னுமே சொல்லல கண்ணை விரித்து கேட்டாள் சத்யா. ரொம்ப அழகா இருக்காடா இது சிமி. புன்னகை முகமாக அவளை அனைவரும் வரவேற்றது கயலுக்கு மனதிற்கு இதமாக இருந்தது.

அவள் பயந்திருந்தது போல வசந்தியும் சரி மற்றவர்களும் சரி இவளை தரக் குறைவாக நடத்த வில்லை என்பது கௌசிக் கயல் இருவருக்குமே மனதிற்கு இதமாகத்தான் இருந்தது.



உள்ள என்ன இருக்குன்னு படிச்சு பாரு சத்யா. அவனின் பார்வை இவளுக்கு உள் மனதை துளையிட்டது போல இருந்தது.



ஒவ்வொன்றாக படித்தாள் . முதலில் இவளுக்கென தனியாக ஒரு மருத்துவமனை கட்டுவதாகத்தான் இருந்தான். அவனால் அந்த வேலையை முடிக்க முடியவில்லை. அதனால் இப்படி பங்குளை வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டான்.

எப்படிடா ?

உண்மையா சொல்லணுன்னா இது எதுவும் என்னோட வேலை இல்ல.

அப்போ ?

டாக்டர் ருத்ரன்.

ருத்ரனா ?

ம்ம்!! நம்ம அப்பதான் அவங்க அப்பாவும் நம்ம அப்பாவும் பிரண்ட்ஸ். காலேஜு பீஸ் கட்டினாராம். படிப்புக்கு நிறைய உதவிகள் பண்ணிருக்காரு. இல்லாட்டி பாஷ்யம் சார் ஒரு ஒரு மனுஷனாக் கூட இருந்திருக்க மாட்டாரு. அதனால நான் உங்களுக்கும் சத்யாவுக்கும் என்ன வேண்ணாலும் செய்வேன்னு சொல்லி அவன்தான் இந்த ஏற்பாடு செய்து குடுத்தான். அவன் உன்கிட்ட நிறைய பேசணுன்னு சொன்னான். நீ ப்ரீயா இருக்கும்போது பேசு.



கண்டிப்பா. மெதுவாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் .



ரொம்ப நன்றிங்க! கை எடுத்து கும்பிட்டான் முத்து .

ப்ச் நீங்க நன்றில்லாம் சொல்ல வேணாம். அது சரியா இருக்காது. என்னோட அக்காவுக்கு நான் செய்யறேன். அவ்வளவுதான் .

நீங்க சும்மா சாதாரணமா சொல்லீட்டீங்க. ஆனா இது 50 குடும்பத்தோட வாழ்க்கை.



அனைவருக்கும் மனம் நெகிழ்ந்து வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. சில நொடிகள் அமைதியாக நகர்ந்தது. நிலைமையை சமாளிக்கும் விதமாக

என்னடா நான் ஒன்னும் கிப்ட் குடுக்கலையேன்னு என்ன முறைக்காதீங்க மாமா. இவங்க எல்லாரும் குடுக்கறத விட என்னோடது தான் ரொம்ப பெரிய கிப்ட். பார்த்தா நீங்க அசந்துடுவீங்க.

என்னடா அவருக்கு மட்டும்தானா? எனக்கு இல்லையா ?

ரெண்டு பேருக்கும் சேர்த்துதான். சரி குடு.

இப்ப இல்ல. அப்புறமா. முதல்ல கொட்டிக்கணும். அப்பதான் மத்ததெல்லாம்.

மாப்பிள்ளை சத்யா ரெண்டு பேரும் முதல்ல ஆச்சி, உங்க மாமியார் மாமனாருக்கு எல்லார்கிட்டையும் ஆசீர்வாதம் வாங்குங்க.

சிரித்தபடியே அனைவரும் உணவு உண்ணச் சென்றனர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் இடித்தபடி செல்வது அனைவருக்கும் மனதிற்கு இதமாக இருந்தது.

உணவை வேகமாக உண்டு முடித்த, தேவியும் சிமியும் மாறுதலை போடுவதற்கு ஏற்பாடுகளை செய்துக்க கொண்டிருந்தார்கள். அப்போது,

அத்தை , இது டாக்டருக்காக நானும் காளையும் ஜல்லிக்கட்டுல வாங்கினது. அந்த காரும் எனக்கு அதுல கிடைச்சதுதான். தலை நிமிர்ந்து சொல்ல வேண்டியதை தலையை குனிந்து தயங்கியபடி சொன்னான்.

இதுனாலதான் நான் அதனை தடவை போன் பண்ணியும் எடுக்கலையா ?

வாயால் கேள்வியை கேட்கவில்லை சத்யா. ஆனால் அவளின் பார்வை அதை உணர்த்தியது.

அவளின் முறைப்படி கண்டுகொண்ட மற்றவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். ரிஷியோ நிலைமையை சமாளிக்க,

என்ன மாமா நீங்க இப்படி பண்ணீட்டிங்க? இனிமே ரம்யா என்ன வருஷாவருசம் ஜல்லிக்கட்டு விரட்டி விட்டுடுவாளே ?

பார்ரா காளையை அடக்கினாத்தான் பொண்ணு குடுப்பேன்னு எல்லா மாமனாரும் சொல்லுவாங்க. இங்க மாப்பிளையே பெண்ணுக்காக காளைய அடக்கிட்டு வந்து நிக்கறாரு ? சொல்லிக் கொண்டே சிவா வந்து டக்கென சத்யாவின் கையை அழுத்தினான். அதன் அர்த்தம் சட்டென புரிந்துக் கொண்டாள் சத்யா. இதோ வந்துடறேன். தலையை குனிந்து கண்ணில் வந்த கண்ணீரை துடைக்க அருகில் இருந்த அறைக்குச் சென்றாள் .

என்ன மாமா நீங்க பின்னாடியே போய் சமாதானப்படுத்திடுங்க. இல்ல அப்புறம் காலம் பூரா சமாதானப்படுத்தவே முடியாது. ஒடுங்க சீக்கிரம்.

அவளின் பின்னால் சென்றான் காளை . அவன் வரவை எதிர்பார்க்கவில்லை அவள், ஏனோ அவனின் அன்பை அவளால் தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு. அது என்னவென்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் மனதில் ஒரு விதபயம் இருந்தது. அவளையும் அறியாமல் கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது. முகம் கழுவியபோதும் அது நிற்கவில்லை. குனிந்து கொண்டு அழுதவளை,

திருப்பி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அப்போது அவளுக்குத் தேவை அவன்தான். அவனைக் கட்டிக் கொண்டாள் . அடுத்த இரண்டாவது நிமிடம் அவள் கண்ணீர் தானாகவே நின்றது.

அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்.

எதுக்குங்க ?

இல்ல உங்களுக்குன்னு செய்ய என்னோட காசுன்னு நான் எதையுமே வச்சுக்கல . அதான் ! அதோட இது எனக்கு ஒன்னும் புதுசு இல்லையே ?

அது சரிதான். அதுவரைக்கும் நீங்க கல்யாணம் பண்ணாதவர். இப்போ ? அதுவும் இல்லாம ஏற்கனவே உங்களுக்கு முதுகுல அடிப்பட்டதே இப்போதான் சரி ஆகி இருக்கு. அதுக்குள்ள, உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால. மீண்டும் கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.

இனிமே உங்ககிட்ட கேட்காம நான் போக மாட்டேன், மீண்டும் கட்டிக் கொண்டான். அப்போதும் அவளின் கேவல் நிற்கவில்லை.

முகத்தை தன் கையால் துடைத்தான். துடைத்த முகத்தில் தன் இதழ்களை பதித்தான்.

இந்த பூவுக்கு வலிக்காது. கண்களை மூடி ரசித்தவள் சொன்னாள் .

அதற்குள் கதவை தட்டினார் தேவி.

சீக்கிரம் வாம்மா சத்யா நல்ல நேரம் முடிஞ்சுடும்.

ஆ ! இதோ வரேன் அத்தை . ஓடி சென்று மீண்டும் முகத்தை கழுவிக் கொண்டு அவர்கள் தந்த புதுப் புடவையை மாற்றிக் கொண்டு வந்தாள் . யாரும் இல்லாமல் திருமணம் நடந்திருந்தாலும், சொந்தங்கள் சூழ அனைவரின் சம்மதத்துடனே அவன் அவள் கழுத்தில் இன்னொரு முறை தாலி கட்டினான் . சத்யாவின் அன்னையும் மாமியாரும் கூட சேர்ந்து நின்று வாழ்த்தினார்கள், வானத்தில் இருந்து. அவர்களின் ஆசைப்படி இவர்கள் இனிமேல் என்றும் நன்றாகவே இருக்க வாழ்த்துக்கள்.



அனைவரின் காலிலும் விழுந்து வணங்கிய பின்னர்,



ஆச்சி, சத்யாவுக்கு ஒரு ஜோடி கொலுசும், மெட்டியையும் பரிசாக அளித்தார். தேங்க்ஸ் ஆச்சி, ஆசையாக கட்டிக் கொண்டாள் .

ஆ ! அதெல்லாம் சொல்லக் கூடாது. இது என்னோட செல்ல பேத்தி மருமகளுக்கு. அவரும் ஆசையாக கட்டிக் கொண்டார்.

பாரு,அவங்க மருமகளை அவங்க எல்லார் முன்னாடியும் ஒத்துக்கிட்டாங்க. நீ எப்போ உன்னோட மருமகளை பத்தி சொல்லப் போற ? சிமியின் காதில் கிசுகிசுத்தார் தியாகு.


அதை சத்யாவும்தான் கேட்டாள் . அமைதியாக நின்றுருந்தவளின் பூ பாதங்களில் மெல்ல கொலுசையும், மெட்டியையும் அணிவித்தான் அவளின் காளை .அவளின் மேனி எங்கும் சிலிர்த்தது. (கால தொட்டதுக்கே இப்படியா, இன்னும் ராத்திரிக்கு மஜால)

அவளுக்கு மட்டுமா வெட்கம் வந்தது ? நமக்கும் சேர்த்துதான்.

மெட்டி அணிவித்ததும் அவர்களுக்கு பாலும் பழமும் தந்தார்கள். சடங்கெல்லாம் முடிந்ததும், ஒரு தட்டில் பூ பழங்கள் வெற்றிலை பாக்குடன் அனைத்தையும் அடுக்கினாள் சத்யா. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அவள் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே என்று கை கட்டி நின்றிருந்தான் காளை . அவனை அவள் ஏறெடுத்து பார்த்ததும், அருகில் நின்று கொண்டான்.

அம்மா ! என்னோட நாத்தனார் கங்காவை சிவா அண்ணனுக்கு பையன் கேட்டு வந்துருக்கோம். உங்களுக்கு சம்மதமா ?

உடனே, தேவி நாத்தனார்ன்னு சொன்ன நாங்கதானே பேசணும்! நல்ல சிவமும் தேவியும் அருகில் நின்று கொண்டனர்.


பையன் பெரிய வேலைல இருக்கறாரு. உங்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருந்தாலும். எங்களுக்கு முடிஞ்சதை செய்யறோம் என்றான் காளை .


சிமிக்கு என்ன சொல்வது என்றேத் தெரியவில்லை. வாயடைத்து நின்றிருந்தாள் . கங்காவின் நிலையோ சொல்லவே வேண்டாம்.

அதென்ன அப்படி சொல்லிட்டீங்க ? இங்க இன்னொரு அண்ணனும் அண்ணியும் இருக்கோமில்ல?இது ரிஷி.

இவற்றை எல்லாம் கயல் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


எப்படிப்பட்ட பெண் இவள் ? சிமிக்கே ஆச்சர்யமாக இருந்தது. கண்களில் சிறு கண்ணீர் துளி வந்தது. அவளை தோளோடு அணைத்துக் கொண்டார் தியாகு. எங்களுக்கு முழு சம்மதம்., சட்டென தட்டையும் வாங்கி கொண்டார்.

ஓடி வந்து கங்க சத்யாவை கட்டிக் கொண்டாள் . இனிமே நான் எதுக்கு அண்ணி. அதான் இருக்காரே ? வாய் கிண்டல் அடித்தாலும், கைகள் அவளைக் கட்டிக் கொண்டது.

ஓகே கைஸ்! நா கிளம்பனும். அம்மா அங்க தனியா இருப்பாங்க. தப்பா எடுத்துக்காதீங்க, சொல்லி விட்டு கிளம்பினான் கௌசிக். அனைவருக்கும் சென்று வருகிறேன் என்று விடை பெற்றுக் கொண்டு கயலும் . கிளம்பினாள்.

வாசல் வரை சென்ற சத்யாவும் காளையும் ,

எனக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலைங்க. நான் மட்டும் இல்லாம இன்னொரு 50 குடும்பத்தையும் நீக்க வாழ வச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி. கையெடுத்துக் கும்பிட்டான்.

என்ன இப்படி எம்பரஸ் பண்ணாதீங்க ப்ளீஸ். நீங்கன்னா அது சத்யாதானே . அவளுக்கு எவ்ளோ வேண்ணா செய்யலாம். நான் என்னென்னெவோ நினைச்சேன் . கடைசில என்னால எதுவுமே செய்ய முடியல. ஏதோ என்னால முடிஞ்ச சின்ன விஷயம்.



ரொம்ப பெரிய்ய மனுஷன் ஆகிட்ட ,லேசாக தலை கோதினாள் .

சத்யா சீக்கிரமா நீ ஒரு நியூரோவாகி பாம்பே பிராஞ்சுக்கு வரணும். போர்டு மெம்பரா நான் உன்ன வெல்கம் பண்ணனும்.

1ஸ்ட் ஓகே 2ND நோ.

ப்ளீஸ் ப்ளீஸ் ..........

அதான் சொல்லறாரு இல்ல சரின்னுதான் சொல்லேன்.

ப்ச் நீங்க வேற புரியாம....

இட்ஸ் ஓகே! இதுவே ரிஷின்னா ஓகே இல்ல சிவாண்ணா ஓகே சொல்லி இருப்ப. நான் வேறுதானே ? மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான்.

கம்பீரமாக இருக்கும் கௌசிக் எங்கே? சொந்தங்களிடம் நாய் குட்டி போல சுற்றி வரும் கௌசிக் எங்கே ? கயலுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அதெல்லாம் அப்புறம் பாக்கலாம் மூஞ்சிய தூக்கி வச்சுக்காத . நாங்க அப்புறமா வந்து சித்திய பாக்கறோம்.

இரவு உணவை சீக்கிரமே முடித்துக் கொண்டார்கள். ரிஷியும் ரம்யாவும் சத்யாவின் அறையை முதல் இரவுக்கு தயார் செய்துக் கொண்டிருந்தனர். சிமியும் தேவியும் சத்யாவை தயார் படுத்தினார்கள். மெல்லிய வைர நெக்லசும், தங்க செயின். காதில் வைர கம்மலும், வர மூக்குத்தியும் புது தாலியும், கன்னங்களின் வெட்கச் சிவப்பும் தேவதையாகவே இருந்தாள் . என்னோட கண்ணே பட்டுடும் . கைகளால் திருஷ்டி கழித்தாள் அன்னை. எங்களுக்கே இப்படி அல்வா துண்டு மாதிரி இருக்கியே உன் புருஷன்! இது தேவி.

அவளை மீறி அவளின் நாணம் அவள் தலையை கவிழ்த்தது. தன்அறைக்குச் சென்றவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

ப்ச் சத்யா! அதுக்குள்ள இங்க எதுக்கு வந்த ? இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ரம்யா.

கிளம்பினாள்.

ஒரு ரிசர்ச் டாகுமெண்ட் முடிக்கணும் அதான் லேப் எடுக்கலான்னு.......

கடவுளே இந்த மாதிரி புதுவித ஜந்துக்களை எப்படிப்பா படைச்ச ? ரிஷி தலையை தூக்கி மேலே பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

நீ இப்போ ஆராய்ச்சி பண்ண வேண்டியது மாமாவதான். இது படிக்கறேன் அத படிக்கறேன்னு ஏதாவது அமக்களம் பண்ண ?

பண்ணா ?

கொஞ்ச நேரத்துல வந்து கதவை தட்டிடுவேன் பார்த்துக்க .

நீ என்னை விட சின்ன பொண்ணு. பேச்சை பாரு !

ஏய்!இதுல நான் உன்ன விட அனுபவசாலி.

அதெல்லாம் இருக்கட்டும் எங்களோட கல்யாண பரிசு எப்படி ? புருவத்தை தூக்கி கேள்வி கேட்டாள் .

ம்ம் நல்லா இருக்கு. தலை குனிந்து வெட்கப்பட்டாள் .

இப்படியே இரு மாமாவை அனுப்பறோம்..

ஏய் சீ போ !

ரொம்ப கஷ்டப்பட்டு அலங்காரம் பண்ணி இருக்கோம் மரியாதையா என்ன சீக்கிரம் மாமாவாக்கணும்.

வாடி பொண்டாட்டி , பை சத்யா எங்களுக்கு அப்பா அம்மா விளையாட்டுக்கு லேட் ஆகிடுச்சு. சிரித்து கொண்டே கணவனின் பின்னால் ஓடினாள் ரம்யா.



இனிய கற்பனைகள் விரிய பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அதே சமயம் கணவனை எப்படி கையாள்வது என்பதையும் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது மெதுவாக தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் முத்து .



அறைக்குள் அவளை தேடிக் கொண்டிருந்தவன் அவள் பால்கனியில் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தான். ஏனோ இன்று அவனால் தன் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. காலை வந்து இறங்கியதில் இருந்தே அவன் ஒரு மாதிரி பித்து பிடித்தன் போல் தான் இருந்தான். இருப்பினும் வெகுவாக பாடு பட்டு தன்னை வெளிக் காட்டாமல் இருந்தான். அதிலும் அவன் வாங்கி தந்த அந்த மெல்லிய சரிகையிட்ட அரக்கு நீலம் கலந்த இரட்டை நிற புடவையில் அவளை பார்த்தவன் பின்னிருந்து அவளை அணைத்தான் .

டாக்டர் இனிமே என்னை கட்டுப்படுத்த முடியாது. மெதுவாக அவள் பூவையும் கழுத்தையும் நுகர்ந்தான் . ப்ளீஸ் டாக்டர் வாசம் நுகர்ந்தவன் உளறினான். அதை ரசித்தவள்

மெதுவாக அவன் கைகளில் இருந்து விடுபட்டு உள்ளே வந்து,

ஆனா யாரும் டாக்டர்கிட்ட இப்படியெல்லாம் பேச மாட்டாங்களே ?

அவளுக்கு இதில் விருப்பம் இல்லையோ ? மீண்டும் அவன் தாழ்வு உணர்ச்சி தலை தூக்கியது. அவன் முக மாறுதலை புரிந்துக் கொண்டவள் அவன் காலரை பிடித்து தன்னிடம் இழுத்துக் கொண்டாள் . அவளின் மூச்சு அவனுடன் கலந்தது.

நீ காளைகிட்ட என்னை பத்தி பேசறப்போ என்னடா பேர் சொல்லி சொல்லுவ ? கெத்தாக கேட்டாள்.

அது வந்து... மெதுவாக தலை சொரிந்து ஏஞ்சல்..

மறு நிமிடம் அவநை எம்பி அவன் உதடுகளில் ஆழ்ந்த முத்தத்தை கொடுத்தாள் . அதில் அவனின் கூச்சம், தாழ்வு உணர்ச்சி அனைத்தும் பறந்து போயிற்று. அவள் ஒரு முத்தம் கொடுத்ததற்கு இவன் அவள் உடல் முழுவதும் முத்தங்களை வாரி வணங்கினான். அவள் அவனை அவனின் உடலை முத்தத்தை எல்லாவற்றையும் ரசித்தாள். அவன் ஒன்று கொடுத்தால் அவள் இரண்டு கொடுத்தாள் . கணக்கில்லாமல் முத்தங்கள் படையெடுத்தன. அவள் பூ வைத்துக் கொண்டு வரும்போது எத்தனை முறை தன்னை தானே ஏதேதோ காரணங்களை சொல்லிக் கொண்டு கட்டுப்படுத்தினான் என்பது அவனுக்குத்தான் தெரியும். பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவனை பொறுப்பாக மாற்றி, அன்பானவனாக மாற்றியது இந்த ஏஞ்சல் . அவளை ஆராதிதான் . ரசித்தான். அனுபவித்தான். ஏஞ்சல் ஏஞ்சல் என்று கொஞ்சித் தள்ளினான். முரட்டுக் காளை பசுவிடம் மண்டியிட்டது. அடங்கியது. அதுவும் ஒரு முறை அல்ல. பல முறை .இருப்பினும் அவளை கஷ்டப்படுத்த மனமில்லாதவன் ஓரளவு உணர்ச்சி அடங்கியதும் தான் விடுவித்தான். அவளும் அவனை ரசித்தாள். மிகவும் ரசித்தாள். அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள் . அவளை கட்டிக் கொண்டவன், நான் ரொம்ப வெறியா நடந்துக்கிட்டேனா ?

ம்ம் ஆமா !

என்ன மன்னிச்சுடுங்க. இனிமே இப்படி நடக்காது.

அது சரிதான். ஆனா பேருக்கு ஏத்த மாதிரிதானே நடந்துக்கணும்.

அப்படின்னா ?

எனக்கு இது புடிச்சுருக்குன்னு சொன்னேன்.

ஏன் பொண்டாட்டி நான் உன்ன எவ்வளவோ கஷ்ட படுத்தி இருக்கேன். நம்ம ரெண்டு பேருக்கும் சுத்தமா பொருத்தமே இல்ல. அப்புறம் எப்படி என்ன ஏத்துக்கிட்டிங்க?

முதல்ல உங்க ஊருக்கு வந்தபோதே எனக்கு உங்க மேல ஒரு மாதிரி எண்ணம் இருந்தது.அதுவும் அன்னிக்கு பாம்பை பார்த்து பயந்தப்போ நீங்கதானே என்ன தாங்கி புடிச்சீங்க ? என்ன யாரும் க்ளோஸா தொட்டதே இல்ல. அதுக்கு காதல்னு நான் பேர் வைக்க விரும்பல. ஆனா ஏதோ ஒன்னு இருந்தது. நீங்க எங்கிட்ட விருப்பத்தை சொல்லி இருந்தீங்கன்னா நானே அப்பா கிட்ட பேசி இருந்திருப்பேன். ஆனா நீங்க சட்டுனு தாலி கட்டின போது முதல்ல கோபம் வந்தது. ஆனா என்னோட கையால் ஆகாததனத்துல ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தற்கொலை பண்ணிக்க கூடாதுங்கறது என்னோட நம்பிக்கை. இல்ல நான் அப்பவே ஏதாவது செஞ்சுகிட்டு இருந்திருப்பேன்.

ஆனா உங்களுக்கு அரிவாள் வெட்டுன்னு கேள்வி பட்ட உடனே ஏன்னு தெரியல கண்ணுல நிக்காம அழுகை வந்துகிட்டே இருந்தது. உங்கள அந்த நிலைமைல பார்த்த உடனே அப்பதான் நீங்கதான் எனக்கு காலம் பூறான்னு புரிஞ்சது. அது காதலா புரிதலா விருப்பமா இல்ல மஞ்ச கயிறு மாஜிக்கா தெரியல.


அன்னிக்கு நான் குளிக்கும்போது பார்த்தீங்களே ?அன்னிக்கு நீங்க என்ன விரும்பறீங்களோன்னு எனக்கு சந்தேகமா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நீங்க ருக்குகிட்ட தலை தோட்டிக்கிட்டு என்ன விரட்டி விட்டப்போ அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அதை உதடுகளால் துடைத்தவன், நான் அதுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். ஏன்னா அப்போ நான் இருந்த மன நிலமைல உங்கள விட்டு எப்படியாவது பிரிஞ்சு போகணும், அப்பதான் உங்களுக்கு வேற ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குன்னு.... ஏதேதோ நினைச்சுக்கிட்டேன். நான் ஏதோ ஒரு வேகத்துல உங்கள இழந்துடுவேனோ அப்படிங்கற பயத்துல தாலி கட்டிட்டேன் . ஆச்சிக் கூட முதல்ல உங்களைத்தான் தப்பா நினச்சுது. அதுக்கப்புறம் வள்ளியும் சரவணனும் சொன்னாங்க. அப்படியும் அவங்க நம்பலை . ஆனா எப்போ உங்கள முதன் முதல்ல பாத்துச்சோ அப்பதான் உங்கள நம்பினாங்க. அதுக்கப்புறம் எனக்குதான் பயங்கர திட்டு. அது வேற சேர்ந்து என்னென்னவோ நினைச்சுகிட்டு உங்கள ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஆனா உங்க முன்னாடிதான் நான் அப்படி இருந்தேனே தவிர நான் என்னிக்கும் யாரையும் பார்த்ததே இல்ல ருக்குவும் சேர்த்து.

ஏன் ?

ஊருல நிறைய பொண்ணுங்க சுத்தி சுத்தி வந்தாங்க . ஆனா நான் எனக்குன்னு ஒரு ஏஞ்சல் வருவான்னு காத்துகிட்டு இருந்தேன். என்னோட மனசு, உடம்பு உயிர் எல்லாமே அவளுக்குத் தான்னு வச்சிருந்தேன் . ஏஞ்சல் கிடைச்சாளா ?

ம்ம் நீங்கதான் என்னோட ஏஞ்சல். இந்த காளையை களவாடிய பசு. தலையை முட்டினான்.

அன்று மட்டுமில்லாமல் அந்த பசுவிடம் காளை அடங்கித்தான் போயிற்று. (இந்த காளை மட்டும்மில்லை, அவன் வீட்டு காளையும் அப்படித்தான்.)
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD FINAL

சரவணனும் வள்ளியும் அவன் பெற்றோருடன் வாழ ஆரம்பித்தனர். சரவணனால் அவன் பெற்றோரை மன்னிக்க முடியவில்லை. இருப்பினும் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் மறக்க முயற்சி செய்ய ஆரம்பித்தான். எப்போது தன் மனைவியை அவர்கள் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தாலும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிடுவேன் என்கிற நிபந்தனையின் அடிப்படையில். அதே போல லீசில் கிடைத்த வருமானத்தில் தங்கைக்கு அண்ணனாகவும் இருந்து சீர் செய்தான். வள்ளிக்கு தன் கணவனை நினைத்து பெருமையாகத்தான் இருந்தது . மனைவியை தங்க தட்டில் தாங்குவதற்கு பணம் தேவை இல்லை. மனம்தான் தேவை என்பதை சரவணன் நன்கு உணர்திருந்தான்.



சத்யாவும் கஷ்டப்பட்டு நன்றாக படித்தாள் . மகாதேவனின் கனவுப்படியே ஒரு நியூரோ சர்ஜனாகவும் மாறினாள் . கௌசிக்கின் ஆசைக்கிணங்க ஒளஷதம் போர்டில் சேர்ந்து கொண்டாள் . தன் மருத்துவமனையையும் பார்த்துக் கொண்டாள் . ஏழைகளுக்கு தன் மருத்துவமனையின் மூலம் அவ்வப்போது கேம்ப் நடத்தினாள் . மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு இலவச மருத்துவமும் செய்தாள் . முத்து அரிசி மண்டி, பழச்சோலை என்கிற சூப்பர் மார்க்கெட் என்று தொழிலை விரிவுபடுத்தினான் . குடும்பத்தையும் விரிவு படுத்தினான்.

காதல் இல்லாமல் நம்பிக்கையையே அடிப்படையாக கொண்டு ஆரம்பித்த கௌசிக் கயலின் வாழ்க்கையும், ரிஷி, ரம்யாவின் வாழ்க்கையும் சிறப்பாகவே போய்க் கொண்டிருந்தது. கயலும் தன்னுடைய திறமைகளை கஷ்டப்பட்டு போராடி வளர்த்துக் கொண்டாள் . மேற்படிப்பும் படித்தாள் . முதலில் அவள் பார்த்து பயந்த ரோபோ இப்போது அவளுக்கே பெட்டாகி விட்டது. வசந்தியும் மருமகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் ஓரளவு ஏற்றுக் கொண்டாள் . அவளுக்கு படிப்பிலும் தொழிலிலும் உதவி செய்தாள் .

காதல், நம்பிக்கை என்ற எந்த அடிப்படையும் இல்லாமல் வெறும் பரிவினால் உருவான சிவா கங்கா உறவு காதலை முழுவதுமாக அனுபவிக்க கற்றுக் கொடுத்தது. அவர்களின் முதல் இரவில் சின்ன பெண் என்று மிகப் பாந்தமாக அவளை கையாலதான் சிவா எண்ணினான். ஆனால் அவனின் வேகத்தை அவனாலேயே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இருப்பினும். அவள் அவனை தாங்கினாள் . அவனின் உறவுகளையும் தாங்குவாள் காலம் முழுவதும்.

அனைத்து ஆண்களும் அவரவர் மனைவியை நீ(யே) என் தேவதை என்று கொண்டாடி வாழ்க்கையை(யில் ) இன்பம் அனுபவித்தார்கள் .

நம்பிக்கையும், காதலும், உறவுகளிட
ம் சகிப்புத் தன்மையும்
இருந்தால், ஆண்களும் தேவதைதான் பெண்களும் தேவதைதான்....................
 

New Threads

Top Bottom