Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-91
அவன் இருந்த அவசரத்தில் அவன் அவள் முகத்தை பார்த்தான், அவ்வளவுதான் . அதற்கு மேல் அவன் கருத்தில்ஒன்றும் பதியவில்லை. அதேதான் அவளுக்கும். இருவருமே அவரவர் விஷயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.
அவள் அதே கட்டிடத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்ற போது அவன் அந்த பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியில் மருத்துவமனை கட்டுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதாச்சையாக அவன் சந்தித்தது அவன் பள்ளி தோழி, பவித்ராவை, இருவருக்குமே அளவில்லா மகிழ்ச்சி. இருப்பினும் பேச்சு மும்மரத்தில் அவன் அந்த md இடம் கட்டிக் கொள்ளவில்லை.

அவள் அவரின் பீஏவாக இருந்தாள். மீட்டிங்கில் இறுதியில் கௌசிக் அந்த கம்பெனியுடன் நல்ல புரிதல் இருப்பதை உணர்ந்து கொண்டான். இறுதியில் அவர்கள் இவன் எதிர்பார்ப்பதுபோல சில இடங்களை தேர்வு செய்து பிறகு சொல்வதாக கூறினார். இன்னும் சில விஷயங்களை பேசி முடித்தவனுக்கு திருப்தியாகவே இருந்தது. இறுதியில், நான் என்னோட பள்ளி தோழி பவித்ராவோட கொஞ்சம் பேசலாமா? என்று பகிரங்கமாகவே அவரிடம் பெர்மிசன் கேட்டு அழைத்து சென்றான். அவரும் ஓகே சொன்னார், ஆச்சர்யபார்வையுடன்.
வெளியில் வந்ததும் குதூகளித்தாள் பவித்ரா. இருவருமே ஹிந்தியில் உரையாட ஆரம்பித்தனர். பவித்ராவின் கணவர் கப்பலில் வேலை செய்பவர். திருமணத்திற்கு பிறகு பவித்ராவுக்கு இந்த கம்பெனியில் இங்கு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம், நல்ல இடம், எந்த தொந்தரவும் கிடையாது என்று இங்கேயே தங்கிவிட்டாள் . குழந்தை பெற்று கொள்ள இருவருமே சற்று தயங்கினார்கள். அதை புரிந்து கொள்ளாத புகுந்தவீட்டாரின் பேச்க்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் இது ஒரு நல்ல இடமாக இருந்தது. அவளுக்கு ஓகேதான் என்றாலும் அவள் கணவன் இன்னும் சில வருடங்கள் வேண்டாம் என்றான். நாமளே பல நாள் கழிச்சுத்தான் மீட் பண்ணறோம். ஒவ்வொவொரு தடவையும் நான் ஹனிமூனாதான் பாக்கறேன். இப்ப ஒடனே எந்த கமிட்மெண்டும் வேண்டாம்.
பட் உங்க ப்ரேண்ட்ஸ் ?
அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க, நீயுமா? ப்ளீஸ் பவி , நானே ரொம்ப காஞ்சு பொய் வந்துருக்கேன். புருசனுக்கு என்ன தேவையோ அதை குடுக்க வேண்டியது நீதானே? ப்ளீஸ் என்று மேலே அவள் பேச இடம் தராமல், லிப் லாக் செய்தான். அவனின் உரசல், தீண்டல், முத்தங்கள், கொஞ்சல்கள், இதிலேயே அவன் வரும் சில நாட்கள் முடிந்துவிடும். அவன் நிலைமை அவளுக்கும் புரிந்தது. பல நாட்கள் அங்கே கப்பலில் வேலை பார்த்தாலும் எந்த பெண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பல தரப்பட்ட பெண்களை பார்த்தாலும், தாகம் தீர்த்துக் கொள்ளவும் சரி, பசி தீர்த்துக்கொள்ளவும் சரி மனைவி மட்டுமே. அவனோடு கப்பலில் சென்று வந்த சில நாட்களில் அவன் தன்னை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவளுக்கே ஆச்சர்யம்தான். அப்படிப்பட்ட கணவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்றே அவளுக்குத் தோன்றியது. குழந்தை பெற்று கொள்ளவில்லை என்றாலும் இருவருக்குமே காதலும் புரிதலும் இருந்தது. அதை பற்றி மற்றவர்களுக்கு தெரியாதே ? இருவரும் தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர், மாலை அவளுக்கு வேலை முடிந்தவுடன். நீதான் எல்லாரையும் ஈஸியா இம்ப்ரெஸ் பண்ணிடுவீயே ? அதெல்லாம் இங்லாஸ்கிட்ட வர்க் ஆகாதுப்பா . நீயாவது உன்னோட மனைவிய உங்க பேரான்ஸ்கிட்ட விட்டுக் கொடுத்துடாத.
ஏன் உன்னோட ஹப்பி ஒனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாரா ?
எனக்கு சப்போர்ட் பண்ணாம நான் எப்படி இங்க தனியா இருக்க முடியும்? பட்
குழந்தை பத்தி பேச்சு வந்தா என்ன மாட்டி விட்டுடுவாரு.
இப்படியே வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர்...........................................................................................................................................................................................

கயலோ கார்த்திக்கின் பேச்சைக் கேட்டு ஒவ்வொரு இடமாக வேலையை விட்டுக் கொண்டிருந்தாள். அவனின் சந்தேக பார்வையை அவள் மீது திணித்தான். இதற்கு முன் அவள் வேலை பார்த்தஇடத்திலும் அவள் கௌசிக்கின் உதவியுடன் மின் படிக்கட்டுகளில் இறங்கி வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் சந்தேகக்காரனாக இருக்கவில்லை. அதற்கு அர்த்தமாக இருந்தான். முதலில் எல்லாம் அவன் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு,தகுதி இருந்தும் ஒவ்வொரு இடத்திலும் நிராகரிக்கப்படுவதற்கு எந்த வேலையிலும் நிரந்தரமாக தான் இல்லாததுதான் என்பது புரியும்போது எரிச்சலாக வந்தது, முதல் முறையாக. இப்போதெல்லாம் அவளிடம் சில பல மாற்றங்கள் வர தொடங்கி இருந்தது. கார்த்திக்கின் எதிர்பார்ப்பு என்ன எனபதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் ஏன் தன்னால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் பாவம் அவள் அல்லவே. மிகச் சாதுர்யமாக அவன் அவளை கட்டுபடுத்தி வைத்திருந்தான். இப்போதுதான் அவளுக்கு அவன் மேல் இருந்த மாயை விலகத் தொடங்கி உள்ளதோ!...
காலம்(தான்) பதில் சொல்லும்.
அவள் பல இடங்களில் வேலைத் தேட தொடங்கி இருந்தாள் . யாருமே இவளை நம்ப தயாராக இல்லை. இவள் தோழிகளும்தான். யாரும் இவளுக்கு சிபாரிசு செய்து மேலிடத்திலிருந்து வாங்கி கட்டிக் கொள்ள தயாராக இல்லை. முதலில் அவள் உற்சாகமாக வேலை தேட தொடங்கினாலும் இப்போதெல்லாம் அவளிடம் ஏனோ அந்த உற்சாகம் இல்லை . அதே சமயம் அப்பாவின் பென்ஷன் பணமும் அந்த அளவுக்கு போதவில்லை. இவளுக்கும் வேலை இல்லாமல் போகவே,அன்னை தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க உதவிக்கு செல்ல ஆரம்பித்தாள். அதுவும் சேர்ந்து இவளுக்கு மனம் வெதும்ப ஆரம்பித்தது.
கார்த்திக்கோ இவர்களின் கஷ்டங்களை பற்றி எதுவும் கவலை படாமல், இவளை வெளியில் செல்ல அழைத்தான். அதுவும் எப்போதுமே அவள் அழகாகவே டிரஸ் செய்து கொண்டு வர வேண்டும்,சிரித்துப் பேச வேண்டும், வெட்கப்பட வேண்டும். அவனை மயக்க வேண்டும். அவளுக்குஎன்று ஒரு இதயமோ , மனசோ இருப்பதை பற்றி அவன் கவலை பட்டதே இல்ல. இவளாக ஏதாவது பேச ஆரம்பித்தாலும், மிக கவனமாக அவன் பேச்சை மாற்றி விடுவான். முன்பானால் அவன் பேச்சில் மயங்கினாள் தான். ஆனால் இப்போது அன்னை மயக்கமாக வந்து சாப்பாடு கூட உண்ண முடியாமல் சோர்வாக வந்து படுக்கும்போது இவள் மனசாட்சி இவளை எப்படி சும்மா விடும்? இப்படி வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது கௌசிக்கின் சந்திப்புகள்தான். அவன் அவளை எங்கும் அழைத்து சென்றதில்லை எதுவும் வாங்கித் தந்தது இல்லை. ஆனல் ஏனோ அவனுடன் வாயடிப்பதும், அவன் காரில் ஏறி செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது என்றே சொல்லலாம். முதலில் கார்த்திக்கின் தவறான போதனைகளால் அவள் கௌசிக்கை சந்தேகத்தோடுதான் பார்த்தாள் . அதனால் தான் அவனை தெரிந்திருந்தும் தெரியாதது போலநடந்து கொண்டாள் . அதுவும் கார்த்திக்கின் சீரிய சிந்தனையே! கார்த்திக்கின் பேச்சு போகட்டும், இவர்களுக்குள் என்னதான் நடந்தது?
ஒரு ஊர்ல, ஒருநாள் என்ன நடந்துச்சாம்? குழந்தைங்களுக்கு கத சொல்லற மாதிரி இருக்கோ?

பேருந்து நிறுத்தத்தில் அந்த உயர்ரக மகிழுந்து வந்து நின்றது, அதிலிருந்து அந்த கந்தர்வன் ச! ச! நம்ம கௌசிக் வந்து
ஹாய்! மிஸ் ... கயல்விழி, வாங்களேன் நானே உங்களை டிராப் பண்ணறேன். அவனின் பேச்சும் பந்தாவும் மற்றவர்களுக்கு இவளை குறுகுறுவென பார்க்க தோன்றியது(பேஸ் புக்)
சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தனர். இவளுக்கு கூச்சமாக இருந்தது. அவனிடம் பேச விருப்பம் இல்லாதவளாக முகத்தை திருப்பி கொண்டாள் .
அவளை நெருங்கி அவளில் காதோரமாக இப்ப எங்கூட கார்ல ஏறு, நான் உன்கிட்ட அப்புறமா விஷயத்தை சொல்லறேன் என்றான்,மிக அருகில் வந்தாலும் அவள் மேல் அவன் இடிக்கவில்லை.
இவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவன் மீது நம்பிக்கை வைத்து அவனின் ஊர்தியில் ஏறியது அவளுக்கே வியப்புதான்.
யாரோ முன் பின் தெரியாத பெண்ணிடம் இத்தனை இறங்கி பேசுபவனா இந்த கௌசிக் என்ற வியப்பு அவனுக்கும் இருந்தது(அப்படியா கௌசிக், ஒனக்கு அவளை முன்னாடி தெரியாது?)
சிறிது தூரம் சென்றதும்,
ஹலோ மிஸ்டர் கார நிறுத்துங்க. எதுக்கு என்ன கார்ல ஏற சொன்னீங்க?(எம்மா நீங்கல்லாம் இப்படித்தான் யாரவது பெரிய காருல வந்து கூப்புட்டா போயிருவீங்களா?)
வெயிட் வெயிட் காயல்(கயலதான் நம்ம ஆளு அப்படி சொல்லறான் 🤭) எதுக்கு இந்த அவசரம்?
உங்களுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்?
நீயே யோசி🤔
சரி!அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல விஷயத்தை சொல்லுங்க. என்னோட பஸ் வந்துடும்.
அதான் சொன்னேனே நானே உங்களை டிராப் பண்ணறேன்னு? அவன் தமிழ் பேசுவது ஹிந்திடப்பிங் சீரியல்பார்ப்பது போல இருந்தது😊
மற்றதை நினைக்காமல்,
சாரி! நான் உங்களை கார நிறுத்த சொன்னேன். சொல்லுங்க எதுக்கு என்ன கார்ல ஏத்துனீங்க ?
உனக்கு என்ன பார்த்தா தப்பா தெரியுதா?
நான் உங்களோட பதிலுக்கு காத்திருக்கேன்😤
நீ ஒரு பொண்ணுதானே ?
யே ! இது என்ன கேள்வி ?🤦‍♀️
ம்ம்., ஒரு எடதுல நிக்கும்போது யாரூ எப்படி பாக்ராங்கோன்னு ஒனக்கு தெரியாதா?
மௌனமே பதிலாக இருந்தது.
சரி, நான் உன்ன மறுபடியும் அங்கையே விடறேன். அந்த எல்லோ டீ ஷர்ட் உன்ன எப்படி பாக்கறானு சொல்லு.
வேண்டாம், நீங்களே என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புல விட்டுடுங்க, அவன் சொன்ன விஷயத்தில் குரல் தானே இறங்கியது.
நோ ப்ராப்ளம், நீ உன்னோட டவுட் கிளீயர் பண்ணிட்டு வா,
பரவால்ல. நான்.. என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புலையே விட்டுடுங்க.
சரி. சாரி.
சரியா? சாரியா? ஒழுங்கா சொல்லு.
சாரி உங்கள தப்பா நினச்சு திட்டினதுக்கு. முதல்ல நீங்க சொன்னதுக்கு சரி.
ஒகே! ஆனா நீ பஸ்சுல ஏறினதுக்கப்புறம்தான் நான் போவேன்.
ஒரே ஒரு சந்தேகம். அவன் என்ன எப்படி பார்த்தான்?
இவன் ஒரு மாதிரியாக பார்த்தான்.
இல்ல நான் போட்டுருக்கறது எல்லாமே சும்மா நகைத்தான்.ஐ மீன் டூப்ளிகேட் , அதான்.
இப்படி லட்டு மாதிரி நீ இருக்கும்போது எவனாவது நகைய பாப்பானாடி லூசு. மனதில் நினைத்ததை நல்ல வேளை சொல்லவில்லை .
ப்ளீஸ் சொல்லுங்க .
நீ உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாக்கறதே இல்லையா ? வீட்டுக்கு போனதும் கண்ணாடியை பாரு . அவன் எப்படி பார்த்தான்னு உனக்கு புரியும். உன்னோட பஸ் ஸ்டாப் .
வீட்டில்,
ஏண்டி! இந்த மாதிரி கலரு போடாத உன்னோட கலருக்கு திருஷ்டி படுதுன்னு எத்தனை தடவ சொல்லறது. போறவன் வரவனெல்லாம் உன்னையே பாக்காரனுங்க . போ போய் கைய கால கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கறேன் . முகம் கழுவிக் கொண்டவளுக்கு, கார் அழகனின் குரலும் காதில் வந்தது. ஓடி சென்று கண்ணாடி பார்த்தாள். அப்போது பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு ஒளி வந்ததுபோல இருந்தது.அதற்கு இந்த ஸ்டிக்கர்தான் காரணம்,என்று நினைத்தவள் சாதாரணமானது பார்த்து வைத்துக் கொண்டாள் .
அடுத்த நாள், காலை கண்ணாடி பார்க்கும்போது, இன்னிக்கு அவன் வருவானா ?(ஏம்மா கார்த்திக்கை லவ் பண்ணும்போது என்னிக்காவது இவ்ளோ எதிர்பார்த்திருக்கியா ?) மனம் குத்தியது. ம்ம் கார்த்திக், கார்த்திக் அவராவேதான் நான் என்ன டிரஸ் போடணுன்னு சொல்லிடுவாரே, நினைக்கும்போதுதான் அவளுக்கே அதில் சுதந்திரம் இல்லை என்று தெரிந்தது.
மறுபடியும், இவர்களின் சந்திப்பு, வேறு ஒரு பேருந்து நிலையத்தில் .
இருவருக்குமே ஆச்சர்யம்.
வாங்க, இப்போ எங்க போகணும் ?
ஹே நீங்க என்ன பாலோவ் பண்ணறீங்களா?
காருல ஏறுங்க பதில் சொல்லறேன்.
பதில் கேட்பதற்காக ஏறி கொண்டாள் .
எங்க போகணும்?
ம்ம் பம்பாய் போகணும், கோபம் போல பேசினாள்.
இப்போ இல்ல வேண்ணா நாளைக்கு போகலாம்.
மிஸ்டர். முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.
ஏன் நீ என்ன பாலோவ் பண்ண கூடாதா ?
நான் நான் ஏன் பண்ணனும் ? நான் எதுக்கு உங்க பின்னாடி வரணும்.
தென் வை மீ ?
நான்னா சின்ன பொண்ணு. பாக்க கொஞ்சம் அழகாவும் இருக்கேன். அதான். கழுத்தையும் முகத்தையும் ஆட்டி ஆட்டி சொன்னாள் .குரலில் பெருமிதம் தெரிந்தது.
அதோட எப்பையும் பசங்கதான பொண்ணுங்கள பாலோவ் பண்ணுவாங்க.
அவள் கண்களை குறுகுறுவென பார்த்து, நேத்து கண்ணாடிய பார்த்தியா?
பதில் வரவில்லை. அவளின் கன்ன சிகப்பையே பதிலாக எடுத்துக் கொண்டான். ஏனோ அவளிடம் வாயாட வேண்டும் என்று தோன்றியது.
உன்ன விட நிறைய காரணங்கள் எனக்கு இருக்கு . ஸ்ட்ரைட்டா? லெப்டா?
நேரா போங்க. அவனிடம் பேசிக் கொண்டே வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
நானும்தான் பணக்கார பையன், அழகா கம்பீரமா இருக்கேன்😎😎😍 எந்த பெண்ணும் என் பின்னாடியே வருவா நல்ல படிச்சிருக்கேன் நல்ல பிசினெஸ் பண்ணறேன், சம்பாதிக்கறேன். அதனால நீயும் என்ன பாலோவ் பண்ணலாமில்ல ? ம்ம் உதடு சுழித்து புருவங்களை ஏற்றி இறக்கி கூறினான்.
எங்க நீங்க அழகா இருக்கீங்க? எல்லா பொண்ணுங்களும் உங்க கூடவே வந்துடுவாங்க கொஞ்சம் ஓவரா இல்ல? நீங்களும் இன்னிக்கு உங்க மூஞ்சிய கண்ணாடில பாருங்க சார். குழந்தை போல சொன்ன அவள் பாவனையை அவன் ரசித்தான்😁
அப்போது அவள் வீடே வந்து விட்டது.
சார் சார் இங்கையே நிறுத்துங்க. உள்ள சந்துக்குள்ள உங்க கார் வராது. நான் இறங்கி நடந்து போய்க்கறேன் .
ரொம்ப தாங்க்ஸ் சார். சொல்லி விட்டு அவள் வேகமாக நடந்து சென்றாள். அவளை விட்டு செல்ல மனம் இல்லாதவனாக இவன் அவள் உருவம் மறையும் வரையில் இருந்து விட்டு சென்றான்.
இன்று கண்ணாடி பார்ப்பது இவன் முறையானது.
வீட்டிற்கு சென்றவளுக்கு ஏனோ மனம் காற்றில் பறந்தது,
இவனுக்கும்தான், பக்கத்துக்கு வீட்டு ரேடியோவில்,
எகிறி குதித்தேன் வானம் இடித்தது,
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது,
புருவங்கள் இறங்கி மீசையானது .......

பாடல் வரிகள் சரியாக அர்த்தம் புரியவில்லை என்றாலும், அந்த பாடல் அப்போது அவனுக்கான சிடுயேசன் சாங்கத்தாம்பா.

இதனால் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்..........

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை


யப்பா மீண்டும் வருவாள் தேவதையே காணோமே..............😁😁😉

 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-92
அன்னையின் இறப்புக்கு பின்னர், தேவி மிகவும் பயந்திருந்தார். திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக, மனைவியின் பயம் போக்க, தன்னருகில் படுக்க வைத்துக் கொண்டார் நல்ல சிவம். இன்றுதான் முதன்முதலாக அவர் தன் மனைவி மகனுடன் சேர்ந்து இருக்கிறார். மனதில் எத்தனையோ வலிகளுக்கு மத்தியில் மனதில் ஒரு நிம்மதியும் வந்தது.

சரவணன் சத்யா சொன்னதை மனதில் நினைத்துப் பார்த்தான். அவள் சொன்னது அனைத்துமே சரியாகத்தான் இருந்தது. அன்று பெற்றோர் வந்து விட்டு போனதிற்கு பின்னர், இன்னும் அவர்களை பார்க்க அவன் செல்லவில்லை. அதுவும் மனைவிக்குத்தான் கெட்ட பெயர் தரும் என்பதால், கையில் ஒரு இனிப்பு பொட்டலத்தை வாங்கி கொண்டு பெற்றோரை பார்க்கச் சென்றான் சரவணன்.
அவர்களிடம் எப்படி சொல்வது என்று பலமுறை யோசித்து பார்த்தும், அவன் பயிற்சி செய்தபடி சரியாக பேசிவிடுவானா ? வாருங்கள், பார்க்கலாம்.

என்னடா இப்பதான் இங்க வர்றதுக்கு வலி(ழி ) தெரிஞ்சுதா ?
ஒக்காரு, தண்ணி கொண்டுவரேன் . சொல்லிவிட்டு அன்னை உள்ளே சென்றாள் , அப்போதே வெளியில் சென்று விட்டு வந்த தந்தையும் அதையே வேறுபோல கேட்டார்.
இப்பதான் உன் பொண்டாட்டி வரவிட்டாளா ?
பொண்டாட்டி விட்டாலும் பசங்க விடணுமில்ல ?
என்னடா ஒனக்கு வெயில்ல மூளை கீள குளம்பிடுச்சா ?
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா
என் பொண்டாட்டி உண்டாகியிருக்கா, அதுவும் ரெட்டை.
அட அட அட என்னடா இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்லற. இப்போ அவ எப்படி இருக்கா ? அன்னை பரபரப்பாக கேட்டாள் .
நீ என்ன உண்மையைத்தான் சொல்லறீயா ? தாடியை தடவியபடியே தந்தை கேட்டதும் மகனுக்கு வந்ததே கோபம்.
இதுக்குதான் நான் உங்ககிட்ட சொல்ல வேண்டான்னு சொன்னேன். அவளுக்குத்தான் மூள இல்லாம , உங்ககிட்ட சொல்லணும், நீங்கல்லாம் ரொம்ப சந்தோசப்படுவீங்கன்னு ஆசைப்பட்டு அனுப்பி வச்சா . பொய் சொல்லறவன் எதுக்கு இனிப்பு வாங்கிட்டு வரணும்?
விருக்கென எழுந்துகொண்டவன், தங்கச்சிக்கு விசேஷம் வச்சிருக்கீங்க போல? நான் உங்களுக்கு வேண்ணா வேண்டாத புள்ளையா இருக்கலாம். ஆனா அவளுக்கு அண்ணன் நான்தான். விருக்கென வெளியேறிவிட்டான் .
அவனும், அவன் மனைவியும் நினைத்தது வேறு, ஆனால் நடந்து கொண்டிருப்பது வேறு. பெருமூச்சு விட்டு அங்கிருந்த பிள்ளையார் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு ஆசையாக காத்திருக்கும் மனைவியிடம் எப்படி சொல்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை. மனம் கவலையில் குழம்பியது. நான் அப்போது அங்கு செங்கேணி பாட்டி வந்தாள் .
என்னடா சரவணா இங்க உட்கார்ந்திருக்க ? அவள் ஊரில் இருக்கும் அனைவருக்குமே தேவையான நேரத்தில் உதவி செய்து, அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். அதனால் அவளிடம் அவனால் தன் மனக்கவலைகளை சுலபமாக பகிர முடிந்தது.
அடப்பாவி, இதுக்கடா இப்படி கவலை படற ?ஏதோ கோபத்துல பேசிப்புட்டாங்க. அவங்க வந்து செல்வியை பார்த்துக்கலைனா என்ன ? நான் வரேன். எத்தனை பிரசவம் பார்த்திருப்பேன் ? எத்தனை குழந்தையை சீராட்டிருப்பேன்? செல்விக்கு யாரும் இல்லனு யாரு சொன்னா? நான் இருக்கேன்டா. பணத்தால என்னால ஒன்னும் செய்ய முடியாது , ஆனா ஒடம்பால செருப்பா செய்ய முடியும். கவலைப்படாத ராசா! தாடை பிடித்து ஆறுதல் சொன்னாள் . இதே வார்த்தையை ஏன் தன் தாய் சொல்லவில்லை? கிழவியை கட்டிக் கொண்டு கதறிவிட்டான்.
அழாத ராசா . முதுகை நீவி ஆறுதல் படுத்தினாள். உன்னோட நல்ல மனசுக்கு எந்த குறையும் வராது.
ஆம்! அவனுக்கு அந்த சமயத்தில் அந்த வார்த்தைகளும், ஆறுதலும் தேவைப்பட்டது. அவன் கதறலுக்கு காரணம் பெற்றோர் வீட்டுக்கு சென்றது மட்டுமில்லை. பணக்கவலையும் தான் முக்கிய காரணம். அது பாவம் அவனுக்கே தெரியாது . ஆனால் அங்கே புன்னைகையுடன் அமர்ந்திருக்கும் கணேசனுக்குத் தெரியுமே ?
வீராப்பாக மனைவியிடம் பணத்தை பற்றி கவலை பட வேண்டாம் என்று சொல்லிவிட்டானே தவிர, அவனுக்குமே எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கவலை அவன் நித்திரையை விரட்டியடித்தது. தந்தை நல்ல வசதி படைத்தவர்தான். இருப்பினும், ஒன்றும் இல்லாத செல்வியை இவன் திருமணம் செய்ததில் அனைவருமே இவனுக்கும் அந்த குடும்பதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே நடந்து கொண்டனர். உனக்காக நான் இருக்கிறேன் என்று யாருமே அவனிடம் சொன்னதில்லை. செல்விக்கு இவன் படும் கஷ்டம் தெரியும். அதனால் தான் தனது வாழ்க்கையை பற்றி கூட கவலை படாமல் இவனை வேறு திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் வாழச் சொல்வது. அவன் வாழ்க்கையில் முதன் முதலாக நான் இருக்கிறேன் கவலை படாதே என்று ஒரு ஜீவன் சொல்லியது. அது அந்த நேரத்தில் எத்தனை பெரிய வார்த்தை? எத்தனை பெரிய ஆறுதல்? அவளுக்கு தெரியாது. அவனுக்கு தெரியும். போ ராசா செல்வி தனியா கிடந்து தவிக்கும். இந்தாயா! அவளுக்கு சில்லுனு ஏதாவது சூஸ் வாங்கிட்டு போ, பத்துரூபாய் தாளை, புடவையின் முந்தியில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் .
பரவால்ல ஆத்தா, எங்கிட்ட இருக்கு, நீபார்த்து வீடு போய் சேரு .
சரி ராசா. கண்ண தொடச்சுக்க.
அவன் கையிலும், பையிலும் பணம் இல்லை. இருந்தும் மனம் முழுதும் தைரியமும், தன்னபிக்கையும் இருந்தது. வீரநடை போட்டு போகும் தன் மகனை, அருள் பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் பிள்ளையார், புன்சிரிப்புடன். அதன் அர்த்தம் என்ன?

வெயிட் பண்ணுங்க, அவன் வீடு போய் சேரட்டும்.
முத்துவின் பாட்டி இறந்த விஷயம் கங்காவுக்கு தெரியும்தான் . ஆனால் அவளால் சத்யாவுடன் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கமும், குற்ற உணர்ச்சியும் பிடுங்கி தின்றது.
அதனால் என்ன கங்கா ? நீ என்ன வேணுன்னா வராம இருக்க? உன்னோட நிலைமை அப்படி! எல்லாம் சரியா இருந்தா நீ என்ன எனக்கு உதவிக்கு இல்லாமலா போய் இருப்ப ?
அதில்ல சத்யா அன்னிக்கு எங்கப்பா இறந்தபோது நீங்கல்லாம் இல்லன்னா இன்னிக்கு நான் இல்ல. அது மட்டுமா ? அன்னிக்கு நான் தற்கொலை பண்ணிக்க போனபோது, ஒவ்வொரு சமயத்திலேயும் நீ தான் என் கூட நின்னுருக்க. ஆனா நான்? உங்க மாமனாருக்கு உடம்புக்கு முடியாத போதும் உனக்கு துணைக்கு வரல. உனக்கு தேவையான எந்த சமயத்துலையும் நான் வரல. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சத்யா. என்ன மன்னிச்சுடு சத்யா.
ச! மன்னிப்பெல்லாம் எதுக்கு ? நீ சொன்னதே போதும். நாந்தான் உன்ன அங்க தனியா விட்டதுக்கு மன்னிப்பு கேட்கணும். என்ன நம்பித்தான் அண்ணா உன்ன மதராஸ் கூட்டிட்டு வந்ததே,ப்ச் நான்தான் என்னோட பொறுப்பை ஒழுங்கா செய்யல. என்னால உன்கிட்ட மன்னிப்புக் கூட கேட்கற தகுதி கூட எனக்கில்லை.நாங்க எல்லாரும் இவ்ளோதூரம் சொல்லியும் அம்மா இவ்ளோ பிடிவாதமா இருக்கறதுதான் எங்க எல்லாருக்குமே அதிசயமா இருக்கு. உங்களோட வயசு வித்தியாசத்தை பார்த்துதான் அவங்க ரொம்ப கவலைப்படறாங்க. எந்த சமயத்துலையும் நீ அவங்கள தப்பா நினைச்சுடாத கங்கா .
என்ன சத்யா இது. அவங்க உங்களுக்கு மட்டுமா அம்மா? எனக்கில்லையா ?
சாரி கங்கா, ஏதோ அவசரத்துல,
விடு சத்யா. இப்படியே நாம சாரி சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
ஆ சத்யா! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனுன்னு நினச்சேன்.
சொல்லு! கங்கா ,
நன் என்னோட தோழியோட சேர்ந்து வேல பாக்கலான்னு யோசிக்கிறேன். ஆனா அது எவ்ளோ தூரம் சரியாய் வருன்னு தெரியல.
யாரு அவங்க? எல்ல விவரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டாள் சத்யா.
எனக்கென்னவோ நீ இனிசியலா தொழில் கத்துக்க அங்க போகலான்னு தோணுது. அதுக்கப்புறம் எப்படி போகுதுன்னு பாக்கலாமே? அது மட்டும் இல்லாம உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா அதுவும் எப்படி, பாக்கணுமில்ல.
ம்ம்... நீஉ சொல்லறதும் சரிதான், பாக்கலாம் சத்யா.
இருந்தாலும் நீ அண்ணன் கிட்டயும் அப்பாகிட்டயும் கேட்டுக்கோ.
ஆமா சத்யா, நானும் இதையேதான் யோசிச்சேன். நான் சார் கிட்ட பேசிடுவேன். ஆனா அப்பாகிட்டத்தான் எப்படி பேசறதுன்னு தெரியல.
நீ ரொம்ப யோசிக்காத. அப்பா ரொம்ப நல்லா பேசுவார். இருந்தாலும் நீ சொல்லறதும் சரிதான். அப்புறம் நாம அம்மாவை பை பாஸ் பண்ணிட்டு போகறமாதிரி இருக்கும். நான் இல்லன்னா அண்ணா கேட்டுட்டு சொல்லறோம்.
தேங்க்ஸ் சத்யா.
சீ! இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு.
அது சரி சத்யா, உனக்கும் முத்தண்ணனுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி போகுது ?
எனக்கே தெரியல கங்கா . அவருக்கு மனசுல என்ன இருக்குன்னே புரியல. சில சமயம் எங்கிட்ட ரொம்ப ஒட்டி வராரு. சில சமயம் மூஞ்சிய கூட பாக்க மாட்டேங்கறார். அப்படியேதான் இருக்காரு. எந்த மாற்றமும் இல்ல.
விட்டு புடிச்சா சரியா வருன்னு வீட்டுல நினைச்சாங்க. ஆனா விட்டது விட்டதாத்தான் இருக்கு. இதுல அவருக்கு இந்த தடவ வந்த குத்தகை தொகை வேற ரொம்ப கம்மி. அதுல வேற கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு. ஏற்கனவே மனசுக்குள்ள ஏழை பணக்காரனு ஆயிரத்தெட்டு கன்றாவி . இதுல இப்போ இந்த பிரச்சனை வேற.
அவளிடம் பேசும்போதுதான், சத்யாவுக்கே சில விஷயங்கள் புரிய தொடங்கின.
அதுனால என்ன சத்யா, அவரு எவ்ளோ மூஞ்சி காமிச்சாலும் நீயே போய் பேச வேண்டியதுதானே? நா சொல்லறது உனக்கு புரியுதா ? என்னதான் இருந்தாலும் அவருதான் உனக்கு புருஷன், நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போயேன்.
இதே வார்த்தைகளைத்தான் சில நாட்களுக்கு முன்பு ரம்யாவும் சொன்னாள் .
அதுனால என்ன சத்யா, உன் புருஷன் தானே. நீ சொல்லறதெல்லாம் பார்த்தா அவருக்கு உன் மேல எக்கச்சக்கமா லவ் இருக்கு. ஆனா சொல்லறத்துல ஏதோ தயக்கம். இல்ல ஏதோ அவரை தடுக்குது. அவரு சொல்லாட்டி என்ன? நீ சொல்லு. போய் அவரு மேல உரசி உரசி நில்லு. இன்னும் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துக்கோ.
ஏய் சீ என்ன நீ இப்படி எல்லாம் பேசற?
ம்ம் உனக்கு ஒழுங்கா அட்வைஸ் பண்ண சொல்லி அனுப்பினதே உன்னோட பிரதர்தான். உனக்கு திட்டணுன்னா போய் அவனை திட்டு.
அவனும் நீயும் சேர்ந்து என்ன பண்ணறீங்க? அவள் கோபம் பொய்யென்று அவள் வெட்கமும் அடக்கமுடியாத புன்னகையும் சேர்ந்து சொல்லியது.
ஓ! ஓகே ஓகே! மேடம் வாய்தான் திட்டுது. கண்ணும் கன்னமும் ரசிக்குதே ? சீக்கிரமா உங்களுக்கு பர்ஸ்ட் நைட் நடக்கணும். அதுக்கு நானும் என் புருசனும் ரூமை ரெடி பண்ணனும். ஓகே வா?
சீ என்னடி நீ! இப்படி பேசற ?
எதுவா இருந்தாலும் சீக்கிரமா பண்ணு .ஆறு மாசம் ஏழு மாசம் கழிச்சு என்னால குனிஞ்சு ரொம்பல்லாம் கட்டில் அலங்காரம் பண்ண முடியாது.
புரியாமல் அவள் முகத்தை பார்த்தாள் .
ஏண்டி!
ம்ம் உங்க சித்திக்கு சீக்கிரமா ஒரு பேர புள்ள வேணுமாம்.
சித்திக்கா இல்ல சித்தி புள்ளைக்கா ?
எங்க எல்லாருக்குமே வேணும் சத்யா. எனக்கு முன்னாடி உன்கிட்டேர்ந்து. சட்டென்று அவள் தோணி மாறியது. இவள் முகமும்தான்.
நீ எனக்கு ரொம்ப பண்ணிருக்கே சத்யா. அன்னைக்கு நீ, கங்கா நீங்கல்லாம் இல்லாட்டி என்னால நினச்சு கூட பார்க்க முடியாது. இன்னிக்கு நா ஒரு உருவமா நிக்கறேன்னா நீதான் காரணம். பட் நீ இப்படி இருக்கும்போது நாங்க எப்படி ?
ஏ !இதென்ன பேச்சு. இது உன்னோட வாழ்க்கை . அதை எப்படி எனக்காக நீ ஸ்டாப் பண்ண முடியும்?
நான் ஸ்டாப் பண்ணல. அதுக்கு முன்னாடி நீயும் சந்தோசமா வாழறத பாக்கணும் சத்யா. ப்ளீஸ். ..
எனக்காக ஓகே சொல்லேன்.
ம்ம் சரி, நான் என்ன பண்ணலான்னு யோசிக்கிறேன்.
ஏதாவது தெரியலைனா யோசிக்கவே யோசிக்காத. நான் இருக்கேன். எங்கிட்ட அட்வைஸ் வாங்கிட்டு பர்ஸ்ட் நைட்க்கு போவீங்களாம் , சரியா மகளே ? யாமிருக்க பயமேன்? கையை கடவுள் ஆசிர்வதிப்பது போல வைத்துக் கொண்டாள் .
மகளேவா! அடிங் என்று அவளை இவள் துரத்தினாள் . அன்றைய நினைவில் இவளுக்கு முகமெங்கும் புன்னகை வந்தது. அதனூடே அவள் முத்துவின் நடவடிக்கைகளை யோசித்து பார்த்தாள் .அவன் தன்னை விட்டு தள்ளி இருப்பதற்கு பணம்தான் காரணமா ? கடவுளே அப்படி இருந்தால், தானே அதற்கு காரணமல்லவா? அவள் எதற்குமே காரணம் இல்லை என்றாலும் அவள் தன்னைத்தானே காரணமாக்கிக் கொண்டாள் . (ஆமா !நீங்க தான் காரணம் , அதை எப்படி அழிக்கப் போறீங்க? கையாலயா

இல்ல உதட்டாலையா) எப்படியாவது இந்த பிரச்னையை தீர்க்கவேண்டும். அதேசமயம் ருக்குவுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு ? அவள் வேண்டாம் என்றால் அன்று ஏன் அவன் அப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவன் மனதில் இருப்பது யார்?

தெரிந்து கொள்ள மீண்டும் வருவாள் தேவதை...........
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-93
சிவா முத்துவை சென்று பார்க்க வேண்டும். ஏற்கனவே நிறைய விடுமுறைகள் சத்யா எடுத்ததால் அவள் வரவில்லை என்றுவிட்டாள் .
ஓகே சத்யா. அவர்கிட்ட நான் என்ன பேசணும்? எப்படி பேசணும்? சும்மா துக்கம் விசாரிச்சுட்டு வந்த போதுமா ?
ம்ம். எனக்கும் தெரியலன்னா. நீ அப்பாகிட்ட கேட்டுகோயன்.
ஓகே!
பட்! அண்ணா ஒரே ஒரு விஷயம்.
என்ன என்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தான்.
அவருக்கு ப்ச் தெரியல.
சத்யா, நான் உன்னோட அண்ணா. என்ன பிரச்சனை?நீ சொன்னதான் எனக்கும் தெரியும். உங்களுக்குள்ள என்ன தான் நடக்குது ?
உண்மையா சொல்லணுன்னா அது எனக்கே தெரியல.
ஆனா ஒரு விஷயம். அவரோட பிஸ்னஸ் நல்லா போகல. அது ஏதோ விதத்துல எங்களோட ரிலேஷன்ஷிப்ல ரிப்லெக்ட் ஆகுது. என்னோட எண்ணம் , சரியா தப்பான்னு தெரியல.
சரி, நான் பார்த்துக்கறேன். நீ எதைப்பத்தியும் கவலை படாத.
அண்ணா இன்னொரு விஷயம். அவருக்கு பணத்துக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாருங்களேன். நான் கேட்டா அவருக்கு ஈகோ ஹர்ட் ஆகும்.
தலை குனிந்து சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
என்னண்ணா பதிலே சொல்ல மாட்டேங்கற?
இந்த வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வந்தது. அதை நான் கையில வச்சுக்கிட்டேன். சொப்பு வாய திறந்து அண்ணா அண்ணான்னு பின்னாடியே சுத்துனது போய் புருசனுக்கு சப்போர்ட் பண்ணற அளவுக்கு பெருசாகிட்ட ? அதான்ஆச்சர்யமா பாக்கறேன்.
வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள் . அவள் தலை மீது கையை வைத்து மெதுவாக ஆட்டியவன் நீ எதை பத்தியும் கவலை படாத. ஓகே !
ம்ம், மன நிம்மதியுடன் தலை ஆட்டினாள். என்னதான் பெண்கள் தைரியசாலிகளாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் ஆண்கள் அதிலும், அப்பா அண்ணா நான் பார்த்துக்கறேன். நீ கவலை படாதே என்று சொல்வதில் தான் எத்தனை ஆனந்தம்?
வீட்டில் நடந்ததை , மனக்கண்ணால் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் சிவா., இதோ
முத்துவின் வருகைக்காக அவன் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் யாரும் இல்லை. ஆனால் திறந்திருந்தது. அதனால் அருகில்தான் எங்கையாவது சென்றிருக்க வேண்டும். இருப்பினும் அவர்கள் இல்லாத போது உள்ளே செல்ல விருப்பம் இல்லாதவனாக வெளியில் நின்று கொண்டான்.
ஆச்சி தான் வந்தார் முதலில்,
வாங்க வாங்க ,
என்ன சாப்படறீங்க?
இல்லங்க ஒன்னும் வேணாம்.
விஷயம் கேள்விப்பட்டேன். மன்னிச்சுடுங்க, அப்போ என்னால வரமுடிலை . அதான் உங்களையும், மாப்பிள்ளையையும் பார்த்துட்டு போகலான்னு . மிகவும் பதவிசாக வார்த்தைககளை கோர்த்தான்.(பின்ன வர்ற வழியெல்லாம் யோசிச்சுட்டே தான வந்தோம்)
அதுக்கு என்ன பண்ண முடியும் தம்பி? நேரம் வந்தா போக வேண்டியதுதான். எனக்கு எப்போ விதி விதிச்சுருக்கோ? அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.
அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க எங்க எல்லாருக்கும் வேணும். நீங்கதானே ஆதி(அடி ) வேர் . எங்க வீட்டுலையும் உங்களை மாதிரி வயசானவங்க யாரும் இல்ல. நீங்க பெரியவங்க இருந்தாதான் நாங்கள்ளாம். சத்யா இங்கேருந்து வந்த போது உங்களபத்திதான் பேசிக்கிட்டே இருந்தா. உங்களுக்கும் அவளுக்கும் அப்படி என்ன பிடித்தம்னு எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சர்யம். உங்கள மாதிரி அன்பு காட்றவங்க எங்களுக்கு வேணும். அது மட்டுமா? இன்னும் பேரனோட குழந்தைங்களை பார்க்க வேண்டாமா ?
சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்து வந்தான்.
ஆச்சி யாரு வந்துருக்கா ? ஷூ இருக்கு? சொல்லிக் கொண்டே வந்தவன்,
அட கலக்ட்டரா , வாங்க வாங்க ,
வணக்கங்க.
அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பதால் அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் வாய் மூடி இருந்தான்.
விஷயம் கேள்விபட்டேன் முத்து . என்ன சொல்லறதுன்னே தெரியல. எப்படி துக்கம் விசாரிக்கனுன்னு கூட தெரியல. வாயில வார்த்தை இல்ல.
என்னதான் ஆச்சு? முத்து,
எல்லாமே சட்டுனு நடந்து போச்சு. எதுவுமே யாருமே எதிர் பாக்கல. எப்படியும் அவங்களுக்கும் எங்களுக்கும் பெரிசா உறவுன்னு எதுவும் இல்ல. இருந்தாலும் கொடூரமா செத்துருக்க வேணாம்.
ம்ம்.. போன உசுர நம்மால கொண்டு வர முடியாது. அதையே நினைக்க வேணாம்.ஒரெட்டு உங்க அப்பாவையும் பார்த்துட்டு நான் அப்படியே கிளம்பறேன் மாப்பிள்ளை.
வாங்க நானும் வரேன். இருவரும் அமைதியாக ஜீப்பில் சென்றனர். சிவாவை பார்த்த தேவி இழுத்து போர்த்தி கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டார்.
உங்களுக்கு உடம்புக்கு முடியாத போதே நான் வந்திருக்கணும். கடைசில இந்த மாதிரி நிலமைல....சந்திக்க வேண்டியதா போச்சு. என்னதான் இருந்தாலும் இந்த உலகத்துல அம்மாவுக்கு ஈடு யாருமில்லை. அவங்க போனது பெரிய இழப்புதான். நீங்க தைரியமா இருங்க. வேற எப்படி ஆறுதல் சொல்லறதுன்னு எனக்கு தெரியல.
அதனால என்ன தம்பி ? போனதையே நினைச்சு நினச்சு என்ன ஆக போகுது. இவ தான் ஓயாம அழுதுகிட்டே இருக்கா . நாந்தான் காரணம் நானேதான் காரணுன்னு அழுதுகிட்டே இருக்கு. வாழ்ந்த நாள் பூராவும் இவளை கொடுமைதான் பண்ணிருக்கா எங்காத்தா. என்னத்த பண்ணறது? கவலையுடன் நல்ல தம்பி சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரின் கவலை சிவாவிற்கு புரிந்தது. அவர் மனதில் இருப்பதை கொட்டி தீர்க்கட்டும் என்று அமைதியாகவே இருந்தான் சிவா.
சரிங்க தம்பி! நான் பேசிக்கிட்டே இருப்பேன். நீங்களே பாவம் ரொம்ப தூரத்துலேர்ந்து வந்துருக்கீங்க. கொஞ்சமா ஏதாவது வாய நினைச்சுட்டு போங்க. காபி கலந்து கொண்டு வந்தாள் தேவி. நிலைமையை சாதாரணமாக்க அப்புறம் வேலைலாம் எப்படி போகுது முத்து? இப்போ நிலைமை சரியில்லைன்னு சத்யா சொன்னா . உங்களுக்கு எந்த விதத்துல நான் உதவி பண்ணனும். சொல்லுங்க செய்யறேன். கலெக்டராக இருந்தும் எந்த பந்தாவும் இல்லாமல் அவன் சொன்னது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ம்ம் அது ஏதோ போகுது. நீங்க என்னங்க செய்ய முடியும்?எனக்கே என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியல. என்ன இப்படி சொல்லீட்டிங்க ? உங்களுக்கு என்ன தெரியுமே அத பண்ணுங்க. எனக்கு அட்மினிஸ்டரேஷன் தெரியும். நான் அதை பண்ணறேன். உங்களுக்கு காய்கறி தெரியுமா? அதபண்ணுங்க, பழங்கள் தெரியுமா அதை பண்ணுங்க. உங்களுக்கு எது வருமோ அதை வச்சு தொழில் பண்ணுங்க. பண தேவை இருக்கா .நாங்க உதவி பண்ணறோம். வீடு மாப்பிள்ளைக்கு இல்லாதது என்ன? வார்த்தைகளும், பேச்சும் எங்கும் மனம் நோகாதபடி மிக உரிமையாக பேசினான் சிவா. அதில் யாருக்குமே எந்த தவறும் தென்படவில்லை. ஒருவரைத் தவிர.
அப்போதுதான் நல்ல சிவத்திற்கு சட்டென்று தான் செய்த தவறு புரிந்தது. இதுநாள் வரை தன் மகனிடம் அவன் தொழில் பற்றி எதுவுமே கேட்டதில்லையே?யாரோ ஒருவர் வந்து உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்று கூறும்போது, பெட்ரா தந்தையாக இத்தனை பணம் வைத்திருந்தும் ஏன் தனக்கு தோன்றவில்லை? கேள்விகள் வண்டாக மனத்தைக் குடைந்தது. தேவியிடம் கேட்டபோது, அவன் நம்ம புள்ளைங்க. அவனுக்கு செய்யாம என்ன?
குற்ற உணர்ச்சியுடன் வாயை மூடி கிடந்தவர், மறு நாளே மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
எப்போதும் அவர் இங்கு வந்ததில்லை. முத்துவுக்கு சிறு வயதாக இருந்தபோது வந்தபோதும் மாமியார் அந்த வீட்டு படி ஏறக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார். எந்த உதவியும் தேவையில்லை என்று வீம்பாக சொன்னவர்தான். ஆனால் இப்போது, உடல் நிலை சரியில்லாமல், அன்னையையும் இழந்தவரிடம் அவரால் அதே வீம்பாகப் பேச முடியவில்லை.
வாங்க என்று மட்டும் அழைத்தார். அதுவே அவர்களுக்கு பெரிய ஆச்சர்யம்தான். முத்துவுக்கும்தான்.
அதே சமயம் இங்கே 16 நாள் தீட்டு முடியும் அன்று வீட்டிற்கு ஜோசியரை அழைத்தாள் சிவகாமி.
இந்த பொண்ணோட ஜாதகம் ரொம்ப அருமையான ஜாதகம். இவ இருக்கற இடத்துல எப்பையுமே சந்தோஷம் இருக்கும். பணத்துக்கு குறையே இருக்காது. இந்த பையனோட ஜாதகம் இந்த பொண்ணோட ஜாதகம் இவனுக்கு இவதான் . அத்தனை பொருத்தமும் சேர்ந்து இருக்கு. இந்த மாதிரி ஜாதக பொருத்தத்தோட ஒரு கல்யாணம் அமையறது ரொம்ப பெரிய விஷயம். ஏழு எட்டு மாசத்துக்கு முன்னால இந்த பையனுக்கு பெரிய கண்டம் இருந்துச்சு. இவளோட ஜாதகத்துனால தான் இன்னிக்கு அவன் உசுரோட இருக்கான். இவளோட மாங்கல்ய ஸ்தானம் அவ்ளோ சிறப்பா இருக்கு. இவங்களுக்கு ரெண்டு குழந்தை பிறக்கும் . அமோகமா இருப்பாங்க. உங்களுக்கு வேற என்ன கேட்கணுமோ கேளுங்க.
ஆனா இவங்க ரெண்டு பெரும் சந்தோஷமாவே இல்லையையே அய்யரே ? அதுவும் இல்லாமல் மாப்பிளைக்கு பயங்கர பண கஷ்டம். எங்ககிட்டேர்ந்தும் உதவி ஏத்துக்க மாட்டேங்கறாரு. தொழில் முடங்கி போச்சு. வேற ஒரு பொண்ணு வேற மனசுல இருக்கலாம்ன்னு சந்தேகமா இருக்கு. என்னோட பொண்ண பாத்தாலே முரண்டு புடிக்கறாரு. அவரை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னே தெரியலையே? ஆனா நீங்க எல்லாமே ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லறீங்க.
நீங்க சொல்லறதை பார்த்த எனக்கே ஆச்சர்யமா இருக்கு. சரி, இவங்க சாந்தி முஹூர்த்தம் என்னிக்கு வச்சீங்க? அந்த நாள் நேரம் சரியாய் இருந்துச்சா?
இல்ல சாமி, இன்னும் அவர்களுக்கு அது நடக்கவே இல்ல.
ஏம்மா கல்யாணம் நாள் குறிச்சு பண்ணல? பெரியவங்க ஆசிர்வாதம் கிடையாது, சாந்தி முஹுர்த்தமும் பண்ணல. சரி கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடி அவங்க அம்மாவுக்கு(மாமியார்) சுமங்கலி பூஜையாவது பண்ணிங்களா ?
இல்ல சாமி.
ஏம்மா எதுவுமே பண்ணாம பொண்ணு சுகமா இல்லனா எப்படிம்மா? உங்களுக்கு இதுலெல்லாம் நம்பிக்கை இருக்கா இல்லையா ?
எல்லாமே இருக்கு சாமி. ஆனா இதுநாள் இவ்ளோ சங்கடங்கள் எங்களுக்கு என்ன பண்ணனும் ஏது பண்ணணுன்னு எதுவுமே புரியல.
அந்த இன்னொரு செட் ஜாதகத்தை பார்த்துடீங்களா சாமி? தியாகுதான் கேட்டார்.
அதுவும் அமோகமா இருக்கற ஜாதகம்தான். 9 பொருத்தம் இருக்கு. வசிய பொருத்தம், மாங்கல்ய பொருத்தம், முக்கியமானது அத்தனையுமே இருக்கு.
வயசு வித்தியாசம்ரொம்ப இருக்கே சாமீ ? அத பத்தி கவலை படவேண்டாம். அந்த காலத்துல 15, 16 20 வருஷ வித்தியாசத்துல கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தவாள்ளாம் இருக்கா. பொண்ணுக்கும் பையனுக்கும் சம்மதம்மான்னு கேட்டுக்கோங்கோ. ஆன் இதுல இன்னொரு பெரிய சிக்கல் இருக்கு.
இந்த பொண்ணுக்கு இப்போ நேரம் சரியில்ல. பெரிய கண்டம் காத்திருக்கு. நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அதே மாதிரி நான் நல்ல நாள் பார்த்து சொல்லறேன். நீங்க கண்டிப்பா உங்க சமந்திக்கு ,ஓரகதித்திக்கு சுமங்கலி பூஜை பண்ணனும்.
சாமி அதே மாதிரி இன்னொரு விஷயம். இவ நாங்க பெத்த பொண்ணு இல்ல. என்னோட ஓரகத்தியோட பொண்ணு. அவங்க ரெண்டு பேருமே இப்போ உயிரோட இல்ல.அதே மாதிரி அவளோட மாமனாரோட அம்மா இறந்து போய் 16 நாள்தான் ஆகுது.
சரி,இவை அம்மாவுக்கு வருஷாவருசம் திவசம் குடுக்கறீங்களோன்னோ ?
தம்பி இருந்தவரைக்கும் அவன் குடுத்தான். இப்போ அவனும் இல்ல. அடுத்த மாசம்தான் ஒரு வருஷம் அவனுக்கு ஆகப் போகுது.
சரி. அவரோடது ஒரு வருஷம் ஆகட்டும். அப்பாவோடது முடிஞ்சதும் உங்க ஓரகத்திக்கு சுமங்கலி பூஜை பண்ணிடுங்கோ. பெரியவா குழந்தைகளை காப்பாத்துவா, பித்ருக்கள் சந்தோஷ பட்டாலே போறும். வாரிசுகள் சந்தோசமா இருப்பா . எதைப்பத்தியும் கவலை படாதீங்கோ. அவர் சொல்லிய படியே சுமங்கலி பூஜைக்கு நாள் குறிக்க பட்டது. இதை பற்றி ஆச்சியிடமும் பேசி ஒப்புதல் பெற்றுக் கொண்டாள் சிவகாமி.
நல்ல தம்பியும்,தேவியும், முத்துவை பார்த்து அவன்கையில் 5லட்சங்களை கொடுத்துவிட்டு போனார்கள்.
உன்ன படிக்க வச்சுருக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நான் என்னோட கடமைகளை செய்யல. நான் உன்கிட்ட மன்னிப்பு கூட கேட்க முடியாதவன். என்னால சரியில்லாம போன வாழ்க்கையை என்னால சரி படுத்த முடியாது.ஆனா இந்த சமயத்துல கூட நான் உனக்கு உதவி செய்யலைன்னா நான் மனுசனே இல்ல. கண்டிப்பா இது அப்பா பையனுக்கு குடுக்கற காசா நீ எடுக்க வேணாம். ஏதோ மனுசனுக்கு மனுஷன்....கண்களில் குளம் கட்டியது . இதை எடுத்துக்க. சொந்தமா தொழில் பண்ணு . இன்னும் எவ்ளோ வேணுமோ கேளு. என்னால முடிஞ்சதை தரேன்.
ஆச்சியின் முகத்தை பார்த்தான் முத்து. அவள் சம்மதம் போல தலையசைத்தாள்.

சரிங்க நான் இதை எடுத்துக்கறேன். ஆனா ஒரு கண்டிஷன். நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் இதை திருப்பி கொடுத்துடுவேன்.

ஒன்றும் சொல்லாமல் தோளை தட்டி விட்டு சென்றார். தேவியும் ஆச்சியிடம் கை கூப்பி விடை பெற்றாள் .

கங்காவும் சத்யாவிடம் சொல்லியபடியே அவள் தோழியின் கடைக்கு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் போனது. இருப்பினும் சிவாவின் அ ழைப்புகளும், பேச்சுமே அவளுக்கு தென்றல் வீசியது போல இருந்தது. வரப் போகும் விபரீதம் அறியாதவர்கள் சந்தோஷமாகவே இருந்தனர்.

கங்காவுக்கு ஏதோ பெரிய கண்டம் இருக்கிறது என்பதை சிவகாமி சத்யாவிடம் சொல்லி இருந்தாள் . அதன்படி கங்காவை பார்த்து மிக கவனமாக இருக்க சொன்னாள் சத்யா. மேலும் வெளியில் செல்லும் பெண்கள் கட்டாயம் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள் . நீ எதுக்கும் பயப்படறவ கிடையாது எனக்கு தெரியும். இருந்தாலும் சில விஷயங்கள் நம்ம மீறி போகும்போது நமக்குன்னு சில பாதுகாப்பு தேவை. அதுக்குதான். உனக்கு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிருக்கேன். வாங்கிக்கோ.
தேங்க்ஸ் சத்யா நீங்கல்லாம் இருக்கும்போது எனக்கென்ன ?
இந்த நெஞ்ச நக்கற வேலைல்லாம் வேணாம். மரியாதையா முதல் மாச சம்பளம் வாங்கினதுக்கு அப்புறம் ட்ரீட் வைக்கற .
ஓகே! ஓகே! ஓகே !

மீண்டும் வருவாள் தேவதை........
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-94
அனைவருக்கும் வாழ்க்கை மிக வேகமாக ஓடியது.
இப்போதெல்லாம் கௌசிக்கும் அந்த புது கம்பனியின் ஆட்களுடன் சேர்ந்து நிறைய இடங்கள் பார்க்க தொடங்கி இருந்தான். கயல் விழியை அவன் சந்திப்பதில்லை. இருவருக்குமே அவர்கள் இருந்த பிசியில் மற்ற விஷயங்கள் மறந்திருந்தன. ஆனால் விதி இருவரையும் விட்டு விடுமா என்ன ?
கார்த்திக்குடன் சந்திப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் இருவருக்கும் இடையே நிறைய சண்டைகள் வந்தன. அதை பார்த்த கார்த்திக், இப்படியே போய் கொண்டிருந்தால் நிலைமை சரிப்பட்டு வராது. இருவருக்கும் சீக்கிரம் நிச்சயதார்த்தமும், மறு நாளே திருமணமும் வைத்துவிடலாம் என்று நிர்பந்தபடுத்தினான். அதன் படியே அவன் வந்து கயல் வீட்டில் பேசினார்.
இல்ல ,அங்கிள் இன்னும் எனக்கும் வேல கிடைக்கல. இப்போ பேமிலி சிட்டுவேஷன் சரியா இல்ல. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே?
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு மட்டும் என்ன ஆகும்? நீங்க இப்படியேதான் இருக்க போறீங்க. நீ இப்போ எதுக்கு மாங்கு மாங்குன்னு வேல தேடணும்? எப்படியும் உன்னோட தகுதிக்கு வேல ஒன்னும் பெரிசாலாம் கிடைக்க போகறதில்ல, பத்துக்கும் பதினைஞ்சுக்கும் எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு? என்றார் தந்தை.
மகனோ, கல்யாணத்துக்கப்புறம் என்னையும் வீட்டையும் பாக்கறதுதானே உன்னோட வேல? என்றான்.
அப்போ எங்க அம்மா அப்பா ?
உங்கப்பாக்குத்தான் பென்ஷன் வருதே? அப்புறம் என்ன?
பென்ஷன் இருக்கட்டும். நாம என்ன செய்ய போறோம்? பொண்ணு மாப்பிள்ளையா ?
நாம என்ன செய்யணும்?
அத்தைக்காக வாங்கின கடனே அப்பாவுக்கு இன்னும் முடியல. இதுல என்னோட கல்யாணத்துக்கு அவரு எங்க போவாரு?
இப்போ என்ன சொல்லற? பிச்சைக்காரன் போல கல்யாணம் பண்ணனுமா? இல்ல முழு செலவையும் நாங்க ஏத்துக்கணுமா ?
அந்த மாதிரி நான் எதுவும் சொல்லல. இன்னும் ஒரு ரெண்டே வருஷம். நான் வேலைக்கு போய் கொஞ்சம் காசு சேர்த்துட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவும் இல்லாம நான் வேலைல செட்டில் ஆனாதான் கல்யாணத்துக்கப்புறம் நான் எங்க அப்பாக்கு கொஞ்சமாவது ஹெல்ப் பண்ண முடியும்ன், உங்கள தொந்தரவு பண்ணாம.
என்ன சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லற. கல்யாணத்துக்கப்புறம் நீ வேலைக்கு போக கூடாது. என்னோட அம்மா அப்பதான் உனக்கும் அப்பா அம்மா, கார்த்திக்கும் கார சாரமாகத்தான் பேசினான்.
என்ன இப்படி பேசறீங்க கார்த்திக்? அப்ப என்ன பெத்தவங்க?
அதெல்லாம் எனக்கு தெரியாது. ஊரு உலகத்துல இதான் நடக்குது.
சரி. என்னோட கல்யாணத்துக்கப்புறம் அவங்க அனாதையா ?
அதுதான் பொண்ண பெத்தவங்களோட விதி. பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு திமிராக பேசியவன் கன்னத்தில் பளீரென்று அறைய வேண்டும் போல இருந்த உணர்வை அவள் எப்படி கட்டுப்படுத்தினாள் என்பது அவளுக்கே ஆச்சர்யம்.
ஓகே! கார்த்திக். நமக்குள்ள ஒத்து வராது. நாம நிறுத்திக்கலாம்.
அவள் இப்படி ஒரு வார்த்தையை சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே தான் சொல்வதற்கெல்லாம் மாடுபோல தலையாட்டியவள் இவள் அல்லவே. இவள் இப்போது முழித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். இவளிடம் பேசி பயனில்லை, என்று கணக்கிட்டவன் தன தாயிடம் பேசி சீக்கிரம் திருமணம் செய்ய சொன்னான். அதன்படியே அவன் தந்தை இவள் வீட்டில் இப்போது.
இப்போதுதான் கௌசிக்கும் கயலும் சந்திப்பதில்லை. முன்பு அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தனர். வேண்டும் என்று இல்லை என்றாலும், சில சமயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சந்திப்புகள் நடந்து கொண்டுதான் இருந்தன. இப்போது இவள் சொல்வதையே கௌசிக் வேறு விதமாக சொன்னான்.
எப்படியும் ஆப்டர் மேரேஜ் யூ என்னோட வீட்டுல மகாராணியாதானே வாழ போறே.?எதுக்கு கஷ்டப்பட்டு வேல தேடற ?
வாட் !
எஸ் கயல். நான் உன்ன விரும்பறேன்னு சொல்ல தெரியல. பட் நீதான் என்னோட பொண்டாட்டி. அவன் தமிழையே படு ஸ்டைலாக பேசியதில், இவளுக்கு சிரிப்புதான் வந்தது. மறைத்துக் கொண்டு கோபப்பட்டாள் . பட் நான் வேற ஒருத்தர விரும்பறேனே!
எஸ்! பட் உனக்கு அவரோட மேரேஜ் ஆகாது.
சாபமா?
அப்படின்னா. அயோ உங்களுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது.
ஓகே! பீ கூல். நீ ஏதோ திட்டற ரைட் ?
ரைட் ரைட்.
ஓகே !யு திங்க் அண்ட் லேட் மீ நோ !
அது இருக்கட்டும். நீங்க யாரு என்ன, எதுவுமே எனக்கு தெரியாது. என்ன பத்தி உங்களுக்கு தெரியாது . அப்புறம் எப்படி ?
எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும்.
எப்படி?அத அப்புறம் சொல்லறேன். முதல்ல நீ ஒக்கேவான்னு சொல்லு.
இல்ல என்னால முடியாது.
ஓகே! உன்னோட இஷ்டம் தோள் குலுக்கி சென்றவனை இதுவரை பார்க்கவில்லை. அவனுக்கு தன் மீது கோபமாகத்தான் இருக்கும். இருப்பினும் கொஞ்சம் பாந்தமாக பேசி இருக்கலாம். மனம் அரித்தது.
கடந்த சில நாட்களாக அவன் பார்க்கவில்லைதான். இருந்தாலும், அவனைத் தான் மீண்டும் சந்திக்கும்போது மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் . எல்லாவற்றிற்கும் மேல் இப்போது அவளுக்கு தேவை ஒரு வேலை. எப்படியாவது ஒரு வேலையில் அமர வேண்டும், இதற்கு மேல் படிக்க வேண்டும், இதையே அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். பல பேரிடம் சொல்லி, இறுதியில் தெரிந்தவர் ஒருவர் மூலம் அவளுக்கு கேஷ் கவுண்டரில் வேலை கிடைத்தது, ருத்ரா வேலை பார்க்கும் மருத்துவமனையில். கௌசிக்கை பார்த்து தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்திருந்தபோது, அவனே ஒரு நாள் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.
யாரையுமே பார்வையால் நடுங்க வைக்கும் ருத்திரா ,
கேன் ஐ மீட் மிஸ்டர் ருத்திரா ? நமக்கு புடிச்ச குரலா ? சட்டென திரும்பி பார்த்தவள் அங்கே கௌசிக்கை கண்டு ஆச்சர்யப்பட்டாள் .
அப்பாயின்மென்ட் இருக்கா ?
நோ! பட் அவர்தான் இப்போ வர சொன்னார்.
ப்ளீஸ் வெயிட் சார், நான் அவர்கிட்ட செக் பன்னிட்டு சொல்லறேன்.
ஹாய் ஹாய் கௌசிக் ,, என்று கை குலுக்கியவர்கள் அவர்களை கடந்து சென்றார்கள். கௌசிக் தன்னை பார்த்தனா பார்க்கவில்லையா அதே நினைப்பாகவே இருந்தது. அவனை பற்றி நினைக்கும்போது மனதில் ஏற்படும் சிறு இன்ப உணர்வை அனுபவிக்கத்தான் முடிந்ததே தவிர அவளால் முயன்றும் தடுக்க முடியவில்லை.
ஆனால் அவளால் நிம்மதியாக இருக்க முடியாதபடிக்கு, கார்த்திக்கிற்கும் கயலுக்கும் அவள் தந்தை திருமண ஏற்பாடு செய்ய நினைத்தார்.அதுவும் வீட்டிற்கு தெரியாமலே. அதற்காக அவர் இங்கும் அங்கும் கடன் கேட்டு அலைந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் தெரிந்த பழைய கடன்காரர்கள் வீடு வாசலில் வந்து சத்தம் போட ஆரம்பித்தனர்.
யோவ்! நீ எல்லாம் என்னதை திங்கற? வெக்கமால்ல , ஏற்கனவே வாங்கின கடனை குடுக்க துப்பில்லை. இதுல கோவிந்தன்கிட்ட போய் 5லட்சரூவா கேட்டிருக்க. நாளைக்கு வரி(ரை)க்கும் ஒனக்கு டைம் . மரியாதையா எங்கிட்ட வாங்கின 3 லட்ச ரூவா அசல். 2 லட்ச ரூவா வட்டி சேர்த்து திருப்பி தர்ற. இல்லாட்டி நடக்கறதே வேற, என்றான் ஒருவன். மற்றொருவன் சொல்வதை காதால் கேட்ககே கூட முடியவில்லை. தங்கையின் திருமண செலவை அடைத்தவருக்கு, பின்னோடயே வந்தது மாப்பிள்ளை தொழில் செய்வதற்கும் வீடு கட்டுவதற்கும். திருப்பித் தருவதாக கூறியவர்கள், பணம் கிடைத்ததும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இவராக வாய் விட்டு கேட்டபோதும், இதோ அதோ தான். பணம் தான் வந்த பாடில்லை. ஆனால் அவர்கள் வசதியாகத்தான் வாழ்ந்து வந்தனர்.
என்னங்க இது?
எங்கிட்ட எதுவும் கேட்காத. சொல்லி விட்டு சேரில் அமர்ந்தவர்தான். அடுத்த சில மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தார். கயல் வேலை பார்க்கும் அதே மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள் .
அம்மா, அவசரத்துல இங்க கூட்டிட்டு வந்துட்டோம். ரொம்ப செலவாகுமே மா?
இரு அத்தைக்கு போன் பண்ணிருக்கேன். அவங்க வந்துடட்டும். பாக்கலாம். அத்தைக்காக காத்திருந்தார்கள். அத்தையும் மாமாவும் வந்தவர்கள் கைச் செலவுக்கென்று பத்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு போனார்கள்.
கார்த்திக், போனை எடுத்தவன், எனக்கு ஆபிசுல ஆடிட்டிங் இருக்கு. என்ன தொந்தரவு பண்ணாதே, என்று போனை வைத்து விட்டான். அவன் பெற்றோர், விஷயம் தெரிந்தவர்கள் போன் கூட அட்டென்ட் செய்யவில்லை . பணம் என்றால் பத்தும் பறந்து போகும். எங்கே இவர்கள் உதவிக்கு வந்து நின்று விடுவார்களோ என்று எந்த சொந்தமும் எட்டி கூட பார்க்கவில்லை. ஆனால் மறு நாள் காலை கடன்காரர்கள் வந்து நின்றார்கள். போனா போகுதுன்னு இன்னும் ஒரு வாரம் டைம் தரோம் . மரியாதையா பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.

அன்னையும் மருத்துவமனையில் இருந்ததால் சிறு பெண் பாவம் என்ன செய்வது என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தவள், அலுவலகம் செல்லும்போது பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து கை கால்களில் எல்லாம் ரத்தம். ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல், சிறு குழந்தை போல தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தவளை பார்த்தவள் பவித்ராதான். ஒரே ஒரு முறை அவள் இவளை கௌசிக்குடன் பார்த்திருக்கிறாள்.
அருகில் சென்று நீங்க கௌசிக் ப்ரண்டு தானே?
என்னாச்சு? அவசரமாக தனது ஹாண்ட் பாகிலிருந்து தண்ணீரை எடுத்து கொடுத்தாள் . அவசரமாக தண்ணீரை குடித்தவள் , தேங்க்ஸ் என்று முகம் பாராமல் நன்றி கூறினாள் .
என்னாச்சு, ஒண்ணுமில்ல, அப்போதுதான் அவள் கைகளை பார்த்தவள், என்னாச்சு என்ன ரத்தம். ப்ச் ஒண்ணுமில்ல, பஸுலேர்ந்து கீழே விழுந்துட்டேன். அழுது கொண்டே கண்ணீரை துடைத்தவளை பார்க்க பாவமாக இருந்தது. மேல் சாய்த்து ஆறுதல் கூற வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் , அதை விட முக்கியம், மருத்துவமனைக்கு செல்வது.
சரி! வாங்க ஆஸ்பிடல் போகலாம்.
இல்ல பரவால்ல. நான் வேல பாக்கறதே ****ஆஸ்பிடல்லதான். நீங்க போங்க உங்களுக்கு லேட்டாயிடும். கண்களை துடைத்துக் கொண்டே சொன்னாள் . இல்ல பரவால்ல. நீங்க வாங்க. உங்கள எங்க விடணுன்னு சொல்லுங்க. இந்த ஆட்டோலையே போயிடலாம்.
பரவால்ல. நீங்க போங்க.
இருக்கட்டும் நீங்க வாங்க. மெதுவாக கை பிடித்து ஆட்டோவில் அமர வைத்தாள் . அவசரமாக தனது அலுவலகத்திற்கு பர்மிசன் சொன்னவள், கௌசிக்கிற்கும் மெசேஜ் அனுப்பினாள் . அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் அவன் அங்கு வந்து விட்டான்.
ஹாய் கயல், ஹை பவித்ரா என்னாச்சு? நடந்ததை கூறிக் கொண்டிருக்கும்போது கயலின் அன்னை அங்கு வந்தார். என்ன கயல் ஏன் இவ்ளோ நேரம்?
ஒன்னும் இல்லமா.
பவித்ரா நீ கிளம்பு. ஐ வில் டேக் கேர்.
ஓகே டா, நான் பிரேக்ல கால் பண்ணறேன். கயல் பார்த்துக்கோங்க. எதுனாலும் கால் பண்ணுங்க. ஐ வில் ஹெல்ப் யூ . பை ! அவசரமாக ஆட்டோவிற்குள் புகுந்தாள் .
கயல் வாட் ஐஸ் திஸ். இல்ல ஒன்னும் இல்ல.
கோ அண்ட் ஹவ் தி பஸ்ட் எயிட். ப்ளீஸ்....தலை ஆட்டியவள் மெதுவாக அருகில் இருந்த அறைக்கு சென்றாள் .
தம்பி நீங்க...?
மீ கௌசிக். நமஸ்தே ஆன்டி. கை கூப்பி வணக்கம் சொன்னான். அவனை பார்த்த மாத்திரத்திலேயே கயலின் அன்னைக்கு பிடித்து விட்டது. ஷீ இஸ் ஒர்கிங் ஹியர். பட் நீங்க.
கேட்டுக் கொண்டிருக்கும்போதே வரவேற்பில் இருந்த பெண் இவரை அழைத்து, நீக்க இப்பவே ரெண்டு லட்ச ரூபா கடனும். கயல் எங்க? அவங்களுக்கு தெரியுமே ?
ஏதோ சரியில்லை என்பது கௌசிக்கிற்கு புரிந்தது.
ஆண்டி , என்னாச்சு பணத்துல ஏதாவது ப்ராபளமா ? அவரிடம் இருந்து பதில் வராததால் அவசரமாக இவனே பணத்தை கட்டி விட்டான், மறு நாளைக்கும் சேர்த்து.
ஆன்டி! என்னதான் ஆச்சு. நான் கயலோட பிரண்டுதான். நீங்க என்ன நம்பலாம்.
மெதுவாக நடந்த விஷயங்களை சொன்னாள் .
ஓகே! நீங்க எதைப்பதியும் கவலைப்படாதீங்க. அதற்குள் அங்கே கயல் வந்துவிட்டாள் .
மிஸ்டர் கௌசிக்! நான் உங்ககிட்ட பேசணும்.
ம்ம் யா. வா முதல்ல நாம காண்டினுக்கு போய் காபி குடிக்கலாம். அப்புறம் பேசலாம்.
அமைதியாக காபியை விழுங்கியவள்,
கௌசிக், நான் உங்ககிட்ட ஒன்னும் சொல்லணும்.
ம்ம், எஸ்.
நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கறேன். அதுக்கு பதில் எனக்கு ஒரு 5 லட்ச ரூபா கிடைக்குமா ?
சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது.
மணி கிடைக்கும். ஆனா நீ அதுக்காக என்ன மேரேஜ் பண்ணிக்க வேணாம். நான் எப்பையுமே உனக்கு குட் பிரண்டுதான். ஓகே! ஐ வில் ஹெல்ப் யூ . டோன்ட் க்ரை .
அவளை அறியாமலே அவள் சுய பரிதாபம் அவளை தாக்கியதில் கண்ணீர் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கிருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து தந்தான்.
பணம் காட்டியதால் அவசரமாக இருதய ஆபரேஷன் செய்ய அழைத்து சென்றார்கள். ஆனால் எந்த பயனும் இல்லாமல் அவர் இவர்களை அனாதையாக விட்டு சென்று விட்டார்.
சொந்தங்களின் ஏமாற்றங்களையும்,நண்பனின் வார்த்தைகளையும் , தாங்க முடியாத இதயம் நின்றே விட்டது.
இங்க பாரு மணி மாறா ! நீயும் நானும் சின்ன வயசுலேர்ந்து நண்பர்கள். அதுக்குதான் உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன். அதுக்குன்னு ஏதோ கொஞ்சம் வேணுன்னா குறைச்சுக்கலாம். உன் பொண்ணு என்னடான்னா என் பையன்கிட்ட எடுத்தெறிஞ்சு பேசிருக்கா .
சரி! ஏதோ சின்ன பொண்ணு, போனா போகட்டும். நீங்க ஒன்னும் ஆஹா ஓஹோன்னு கல்யாணம் பண்ண வேணாம். எங்க ஜனம் யாரும் என் வீட்டு மருமகளை தப்பா பேசிடக் கூடாது. என் பொண்ணுக்கு 50 போட்டேன். மாப்பிளைக்கு 10. வீட்டுக்கு வர்ற மருமக மகாலட்சுமி அதுல பாதியாவது வேணாமா ?ஏதோ ஒரு முப்பது சவரனாவது போட்டுடு . பையனுக்கு ஒரு பத்து சவரன். கல்யாண செலவு நீங்க பாதி,நாங்க பாதி. மண்டபத்தையும்,சாப்பாட்டு செலவையும் நீங்க பார்த்துக்குங்க. பையன் சீக்கிரமே கல்யாணம் பண்ணணுன்னு ஆசை படறான். அதுங்களுகம் சின்னஞ்சிறுசுங்க. அந்தந்த வயசுக்கான ஆசைகள் இருக்கத்தானே செய்யும்?
எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணத்த நடத்தற வழிய பாரு. இல்லனா என் பொண்டாட்டியோட தம்பி பொண்ணு 100 சவரனோட காத்திருக்கு . பார்த்துக்க.
நண்பர்களுக்குள் நடந்த சம்பாஷணையை பற்றி மாறன் வாயே திறக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு இடமாக கடன் கேட்டு கொண்டிருந்தார். அவரின் கவலைகளை இதயத்தில் அழுத்தியவரால் பாரம் தாங்க முடியவில்லை.
கார்த்திக்கின் வீட்டில், யாரோ போல வந்து அடுத்த 5வது நிமிடத்தில் பறந்து விட்டனர். இரு பெண்களும், இன்னும் சில உறவுகள் மட்டுமே இருந்து இறுதிக் காரியத்தை முடித்தனர். பிடிவாதமாக கயல்தான் கொல்லி வைத்தாள் . ஆண் துணையாக கௌசிக்கும், தியாகுவும்தான் நின்று கொண்டிருந்தனர்.
ஏனோ இந்த சமுதாயத்தில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பொறுப்பேற்றக் கொள்ள யாரும் வருவதில்லை.அதிலும் படிப்பு செலவு, கல்யாண செலவு என்றால் என்ன என்று கேட்கும் மாமாக்களும், சித்தப்பாக்களும் மிகக் குறைவே. அதுதான் கயலுக்கும் நடந்தது. அதுவே இள வயது பெண்கள் வீட்டில் இருந்தால், சுற்றி வரும் கழுகுகளும், ஓநாய்களும் வாய்ப்புகளை விட்டு விடுமா என்ன ?
அடுத்த நாள் , சத்யாவும், கௌசிக்கும் சென்று பார்த்து விட்டு வந்தனர். கடன் இருந்தாலும், வீட்டில் ஒரு ஆண் துணை இருந்தது. இப்போது அதுவும் இல்லாமல் போயிற்று. இவர்கள் கடன் வாங்கி இருந்த கந்துவட்டி கந்தசாமியும் அவன் மனைவியும் வந்து பார்த்து விட்டு செலவுக்கு என்று சில ஆயிரங்களை திணித்து விட்டு போனார்கள்.
நானும் மனுசந்தாம்மா. கல்யாண செலவு, கருமாதி செலவுன்னா எனக்கும் தெரியுங்க. இதை கூட பொறந்தவன் தர்றதா நின்னுச்சுக்கோங்க, என்றவர்கள் தாலி எடுக்கும் சடங்கும் செய்துவிட்டு போனார்கள். அவர்கள் கடனை பற்றி அந்த நேரத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தாலும் , அந்த கடன் சுமை பெண்கள் இருவருக்கும் இருந்ததுதான்.
அடுத்த சில தினங்களில் கயல் வழக்கம்போல வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அவள் தனியாக செல்ல வேண்டாம் என்று யோசித்த கௌசிக், தினமும் எதேச்சையாக பார்ப்பது போல வந்து கூட்டி போனான்.
அப்போது ஒரு நாள்.
கயல் எனக்கு ஒரு பிஸ்னஸ் மகசின்******* வாங்கி தர்றியா ?
ஏன் அது உங்கள பத்தி வந்துருக்கா ?
ம்ம்..எஸ்
அவன் ஏதோ கிண்டலுக்காக சொல்வதாக நினைத்தாள் . அவன் சொல்வது நிஜம்தான் என்று அடுத்த நாளே தெரிந்தது.
மறுநாள் கயலுக்கு அந்த வார விடுப்பு தினம் என்பதால் அவள் வீட்டிலேயே இருந்தாள் . அவள் உடலுக்கும் மனதிற்கும் அந்த ஒரு தினமாவது ஓய்வு தேவை பட்டது. தலைக்கு குளித்து, வாயில் கதவை லேசாக அடைத்து வீட்டை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். அன்னை அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்தாள் .
கிணற்றடியில் பாத்திரம் தேய்த்து கொண்டிருக்கும்போது கழுத்தில் சூடான மூச்சுக் காற்றும், காதில் மீசையின் குறுகுறுப்பும் கயல் என்ற கொஞ்சல் ஓசையும் ..........................
அவளுக்கு பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
மீண்டும் வருவாள் தேவதை................


 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
Nyd-95

கார்த்திக்...

ஆமா உன்னோட கார்த்திக்.. என்று மெதுவாக அவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான். எத்தனை மாதங்கள் அவன் தொடுகைகளை ரசித்திருக்கிறாள். ஏங்கி இருக்கிறாள். ஆனால் இன்று, கை கால்கள் உதற த் தொடங்கியது. அவளால் அவன் கண்களில் காதலை அல்ல காமத்தை கண்டுகொண்டதும் ஒரு காரணமோ ?

அதை மறைத்தவள் ,

கார்த்திக் அங்க ஹால்ல உட்காருங்களேன். காபி கொண்டு வரேன். மெதுவாக பின்னே நகர்ந்தவள், அங்கிருந்த கிணற்றின் மேல் இருந்த இரும்பு வாளியை பிடித்துக் கொண்டாள் .

கிணற்றில் மோதி நின்றிருந்தவள் முகத்தின் அருகே வந்தவன்,

நான் காபி குடிக்க வரல. எனக்கு உன்னோட உதடு ரசம்தான் வேணும்.,

கூறியவன் சட்டென வன்மையாக அவள் உதடுகளை கபளீகரம் செய்தான்.

இந்த செய்கையை எதிர்பாராதவள், முதலில் அதிர்ச்சியில் உறைந்தாலும் , அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டாள் . அன்னையும் வீட்டில் இல்லை. அவன் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளாமல் விட மாட்டான் என்பது அவளுக்கு புரிந்து போனது. என்னதான் காதல் கொண்ட மனம் என்றாலும், திருமணம் இல்லாமல் தவறான தொடுகையை கூட அவள் அனுமதித்ததில்லை.

வாயிலில் இவள் செருப்பு மட்டும் இருப்பதை கவனித்துக் கொண்டு வந்தவன், சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா?கயலும்தான், சந்தர்ப்பத்தை விடாமல், கையில் இருந்த இரும்பு வாளியை அவன் மண்டையில் ஓங்கி அடித்து விட்டு, வாயில் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி வந்து முட்டியது, கௌசிக்கின் மேல்.

அவளை பிடித்து நிறுத்தியவன்,

ஹே வாட்! வாட் ஹபண்ட் !

சட்டென பின்னால் திரும்பியவள் கண்களில் விழுந்தது கார்த்திக்கின் உருவம்தான்.

அவனை பார்த்தவளுக்கு பயத்தில் கை கால்கள் உதறத் தொடங்கியது.

கௌசிக்கை அங்கு எதிர்பார்காதவன்,

அவன் உருவத்தைக் கண்டதும் ,

நீ இன்னிக்கு நீ தப்பிச்சுட்ட. இன்னொரு நாள் நீ மாட்டுவடி என்றதும் தான் தாமதம்.

சீ என்று அருவருப்புடன் ஓங்கி கன்னத்தில் ஒரு குத்து விட்டான் கௌசிக்.

இந்த அடி உனக்கு மைண்டுல இருக்கற வரைக்கும் நீ இந்த பக்கம் கூட வரமாட்டா(ட)டா சொன்னவன் அவன் மூக்கிலும் ஒரு குத்து விட்டான். அதில் தலை சுற்றி நின்றவன் அடுத்த அடி வாங்குமுன், அவன் புஜங்களை பிடித்து தடுத்து விட்டாள் , கயல்.

போடா! கண்களில் வெறுப்புடன், மூக்கிலிருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே சென்றான் கார்த்திக்.

நீ உள்ள வா! கை வளைவில் அவளை அழைத்து சென்றவன்,

பேபி ஆர் யூ ஓகே !

இதுவரை உடல் நடுங்க நின்றிருந்தவளுக்கு அந்த நேரத்திலும் அவனது பேபி என்ற அழைப்பு உரைக்கத்தான் செய்தது. அதில் மனம் மகிழத்தான் செய்தது.

இத்தனை நாள் தான் காதலித்ததாக நினைத்தது வெறும் மாயை. இதுதான் உண்மை என்பது அவளுக்கு இப்போது புரிந்தது.

ஆம் ! உன்னுடைய பெற்றோர் எனக்கும் தான் என்று சொல்லும் ஆண் மகனை கணவனாக காதலிக்க யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.

முன்னொரு நாள்,

நீங்க என்ன கல்யாணம் பண்ண கேட்டீங்க! சரி!ஆனா கல்யாணத்துக்கப்புறம் என்னோட ப்ரெண்ட்ஸும் என்னோடதான் இருப்பாங்க. அது உங்களுக்கு ஒகேவா ! கார்த்திகை வைத்து எல்லாருமே இப்படித்தான் என்று நுனி நினைத்துக் கொண்டிருந்தவள், சும்மா நூல் விட்டு பார்த்தாள் . நிச்சயம் அவள் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லைதான்.

வாட்! அவங்கோ(க) வேற உ(எ)ங்க போக முடியும். ஆபிவிசிலி அவங்க யூ எங்கையோ அங்கேதான்.

எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை சுலபமாக சொல்லி விட்டான்.

ஸீ எனக்கு உன்ன மேரேஜ் பண்ண பெரிசா ரீசன் எதுவும் இல்ல. பட் , ஐ வாண்ட் டு மேரி . எப்போ நான் உன்ன கல்யாணம் பண்ணறேனோ அப்பவே உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டிஸ் எல்லாமே என்னோடது. ரைட் !

அவன் நிதானமாக பேசிய தமிழ் அவளுக்கு இப்போது மதுரம்தான். கண்களை அகல விரித்தாள், அதில் கண்ணீர் பளபளத்தது. அவன் ,வெறும் வாய் பேச்சில் மட்டும் பொறுப்பை உணர்த்தவில்லை என்பதை அவள் தந்தையின் இறப்பிலும் கண்டு கொண்டாள் . அவளுக்கு இதுவரை அவனை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் , அவனுக்காக தன்னுடைய உயிர், உடல்,உணர்ச்சி எல்லாவற்றையும் தர தயாராகிவிட்டாள் (கல்யாணத்துக்கப்புறமாதானே அப்பிடின்னு சில்லியா கேட்காதீங்க மக்களே)

அவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

தேங்க்ஸ் சார்.

நெஞ்சுல சாஞ்சு யாராவது சாருன்னு சொல்லுவாங்களா ?

வேற என்ன சொல்லறது ?

ஏதாவது ஒரு நிக் நேம் வச்சு சொல்லு. இல்ல கௌசிக்ன்னு சொல்லு.

நிக் நேம் தெரியாது. கௌசிக்ன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.

ஓகே! நமக்குள்ள ஒரு டீல்.

நம்மளோட பர்ஸ்ட் நைட்டுக்குள்ள நீ ஒரு நிக் நேம் யோசிச்சு வைக்கணும். ரைட்!

அவள் மனதை மாற்றவே அவன் இப்படி கொஞ்சினான் என்பதை அவள் தெரிந்து கொண்டாள் . மற்றபடி அவனுக்கு தப்பான எண்ணங்கள் இல்லை என்பதை அவள் அறிவாள் . அவளுக்குத்தான் கார்த்திக்கிடம் நிறைய அனுபவம் இருக்கிறதே?

ரைட் ரைட் !

அவங்க கொஞ்சிகிட்டு இருக்கட்டும்.....அவங்க அம்மா வரதுக்குள்ள நாமளும் வந்துடலாம்.................நல்ல புள்ளைங்கதாம்மா விட்டுட்டு போலான்னு நீங்க சொல்லற மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்குது.

நாம அதுக்குள்ள காஞ்சிபுரம் போயிட்டு வந்துரலாம். மீ இப்போ அப்பீட்டு .........



அப்பாவிடம் பணத்தை வாங்கி கொண்டானே தவிர அதை எப்படி தொழில் செய்வது என்று மனம் யோசித்துக் கொண்டேதான் இருந்தது. அதுவும் தவிர தன்னுடன் இருப்பவர்களுக்கு எதுவும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் அவனை பிடுங்கியது. ஏனோ இந்த நேரத்தில் அவனுக்கு மனைவியை பார்க்க வேண்டும்போல இருந்தது. அவளாக இருந்தால் சரியான நேரத்தில் சரியான யோசனை சொல்லுவாள். அவளுக்கு அழைக்கலாமா ? அன்று திருமண இரவில் பார்த்ததுதான். அதன் பிறகு பாட்டியின் இறப்பிலும் பெரியதாக ஒன்றும் பேச்சு வார்த்தையும் இல்லை . இப்போது சட்டென்று எப்படி ?

தந்தை பணம் தந்த விஷயம் இன்னும் சரவணனுக்கு சொல்லவில்லை. ஆனால் மனம் மனையாளுக்குத்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று முரண்டு பிடித்தது. இதை பற்றி யாரிடம் பேசுவது என்பது தெரியாமல் வழக்கம்போல முத்துக்காளை தான் வளர்க்கும் காளையிடம் பேசிக் கொண்டிருந்தது. அதுவும் இவன் பேசுவது எல்லாம் புரிந்தது போல மண்டையை ஆட்டியது . அதுவும்தான் முத்துவை போல சத்யாவிடம் மயங்கியவனாயிற்றே. அவளுக்கு சிபாரிசு செய்யாமலா இருப்பான்? இப்போ என்ன நான் போய் அவங்கள பார்க்கணும் அவ்வளவுதானே ?

ஆமாம் என்று மண்டையை ஆட்டியது.

இந்த காளையை அடக்க அந்த பசுவினால் தான் முடியும் என்பதை உணர்ந்த ஆச்சி, மேலும் தூபம் போட எண்ணி,

போடா போடா போக்கத்தவனே, நீ நினைக்கறதெல்லாம் அது சொல்லுமா ? போ போய் ஏதாவது பணம் பண்ணற வழிய பாரு. பொண்டாட்டிய பாக்கட்டுமா, பொட்டிய பாக்கட்டுமான்னு அதுகிட்ட கத பேசிகிட்டு!

என் பொண்டாட்டிய நான் பாக்கறேன், பேசறேன் உனக்கென்ன? உன் புருசன் உன் பின்னாடியே சுத்தினாருல்ல. என்னய மட்டும் வையர ?

தலையில் இருந்த துண்டை உருவி சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை. நான் வெளிய போகணும்.

இதுக்கு மட்டும் நான் எதுக்கு ? இந்த வீரமெல்லாம் என்கிட்டேதான் . முடிஞ்சா கூப்புடு உன் பொண்டாட்டிய , வந்து ஆக்கி போட சொல்லு.

அவங்க வந்து இந்த கரி அடுப்புல சமைக்க மாட்டாங்க.

அப்போ காஸ் வாங்கு, சமைக்க சொல்லு.

ஊரு ஒலகத்துல இருக்கரவல்லாம் பேரன் பேத்தியை கொஞ்சிகிட்டு இருக்குங்க. என்ன பாரு, இன்னும் உனக்கு ஆக்கி போட்டுக்கிட்டு.

இவளின் வார்த்தைகள் அவனுக்கு இனிய கற்பனைகளை உண்டு பண்ணியது. அதை ரசித்துக் கொண்டே குளித்து முடித்தவன்

முதலில் மாமனாருக்கு அழைத்தான். டேய் மாமனார் மூலமா பொண்டாட்டிக்கு நூல் விடறியா ? நடத்து நடத்து .............

வணக்கம் சார்,நான் முத்து பேசறேன். குரலில் மரியாதையும் சந்தோஷமும் இருந்தது.

சொல்லுங்க மாப்பிள்ளை தெரியுது. நல்லாருக்கீங்களா? ஆச்சி, அம்மா அப்பா எல்லாரும் நல்லாருக்காங்களா ?

எல்லாரும் நல்லாருக்காங்க. நீங்க எல்லாரும் நல்லாருக்கீங்களா ? டாக்டர் நல்லாருக்காங்களா ?

கடைசி வார்த்தை திக்கி திணறுவதை ரசித்தவர் , எல்லாரும் நல்லாருக்கோம் மாப்பிள்ளை . சொல்லுங்க நாங்க உங்களுக்கு என்ன பண்ணனும்?

அது வந்து சார்,,, எனக்கு உங்கள கொஞ்சம் பாக்கணும்.

வாங்களே ன மாப்பிள, இது உன்ன வீடுதானே எப்ப வேணாலும் வாங்க. இல்ல நான் வரட்டுமா ?

இல்ல பரவால சார் நானே வரேன். அப்பதான் வீட்டுல எல்லாரையும் பாக்க முடியும்.

புரிந்து கொண்டவர்,

ஆமா ஆமா , சத்யா கூட இன்னிக்கி சீக்கிரம் வந்துடுவா. நீங்க எப்போ வரீங்க .

நான் மதியம் கிளம்பி வரேங்க .

வாங்க மாப்பிள்ளை . நாங்க காத்துக்கிட்டிருப்போம். மதிய சாப்பாடு இங்கதான்.

நல்லதுங்க.போனை அணைத்தவன், தோழனை பார்க்க சென்றான்.

சரவணன் வீட்டில் செல்வி முடியாமல் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாள், நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டே வந்தவளை பார்த்த முத்து,

செல்வி என்னதிது? இரு இரு என்று ஓடிப்போய் குடத்தை வாங்கினான்.

ஏன் புள்ள நாளாகி புள்ள உண்டாக்கிருக்க. இதெல்லாம் நீ செய்ய கூடாதுன்னு தெரியாது ? அவன் எங்க?

அவங்க வேலைக்கு போயிருக்காங்க.

வேலைக்கா ?

ஆமா , இப்பதான் 2 நாளா . ரோடு கான்ட்ராக்டரு கிட்ட.

அவன் எங்கிட்ட சொல்லவே இல்ல.

இல்லண்ணே !எனக்கு மருந்து மாத்திரை வாங்க கூட பணம் இல்ல. அதுக்குதான் நம்ம முருகானந்தம் சாருகிட்ட சொல்லி, இந்த வேலைக்கு போறாரு.

அது சரிதான் ஆனா எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்ல .

அவரு உங்ககிட்ட சொல்ல பயந்துக்கிட்டுதான் சொல்லல.

ராஜா போல சொந்த நிலத்தில் வேலை செய்தவர்கள் அடுத்தவரிடத்தில் கை கட்டி வேலை பார்ப்பது சிரமம்தான். ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் என்று மனதில் நினைத்தவனுக்கு மறு நாள் சத்யா கொடுத்தது உவப்பான செய்திதான்.



மீ ரிபீட்டு...........சென்னை.

அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் அவனை விட்டு நகரவே இல்லை . ஆனால் கடைக்கு சென்று வந்த அன்னைக்கு இவர்களை பார்த்து அதிர்ச்சிதான்.

வாங்க ஆன்டி,

நான் வந்துட்டேன்பா. நீங்க கொஞ்சம் அவளை விடறீங்களா? முறைப்பாகவேதான் சொன்னார்.

ஓ! சாரி சாரி! ஆன்டி என்று சட்டென்று நகர்ந்து கொண்டவன் முகத்தில் சிறு வெட்கமும் கூச்சமும் கலந்திருந்தது.

வெள்ளை முகத்தின் கண்ண சிகப்பை விட்டு கயலால் கண்களை அகற்ற முடியவில்லை.

ஆண்களின் வெட்கமும் கூச்சமும் கூட அழகுதான் இல்லையா ?



மீண்டும் வருவாள் தேவதை...............







 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-96
வெட்கத்துடன் தன்னவளை நகர்த்தியவன்,
ஆன்டி! நான் பாம்பே போறேன். எப்போ வருவேன்னு தெரியாது. இந்த மாதிரி டைம்ல நீங்க தனியா இருக்க வேணாம். நான் உங்களுக்கு ஹோட்டல்ல ரூம் போடறேன். அட்லீஸ்ட் ஒரு ஒன் வீக்காவது அங்க இருங்க. பேசிக் கொண்டிருக்கும்போதே இவர்கள் கடன் வாங்கியவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டே வந்திருப்பார்கள் என்று இவர்களுக்கு தோன்றியது. கயலுக்கும் அவள் அன்னைக்கும்,கௌசிக் எதிரில் அவர்கள் வந்தது மிகவும் அவமானமாக இருந்தது. அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் கௌசிக் பேசினான். அதன்படி அன்றைய மாலையே அவன் அனைவருக்கும் தேவையான பணத்தை செட்டில் செய்துவிட்டான். கனவிலும் நினைக்க முடியாத பணத்தை அவன் சில மணி நேரங்களில் கொடுத்து விட்டான். இப்போது இவர்கள் ஒன்று பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது கயல் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இக்கட்டான இந்த சூழ்நிலையில் அவர்கள் தேர்ந்தெடுத்தது திருமணத்தைத்தான். கௌசிக்கும் கயலும் திருமணம் செய்துக் கொள்ள போவது காதலால் இல்லை. கார்த்திக்கிடம் காதல் கொண்ட கயலின் மனம் இவனிடம் திரும்ப நிச்சயம் சில மாதங்கள் அல்லது வருடங்களாவது ஆகும். ஆனால் காதல் இருவரிடமும் கட்டாயம் வரும் என்று நம்புவோம்.

அவன் கூறியபடி அவர்கள் ஹோட்டலுக்கு செல்ல மறுத்து விட்டனர்.
இங்க பாருங்க தம்பி, நாம் போலீசுல ஒரு புகார் கொடுத்துடலாம் . அதை மீறி ஒன்னும் நடக்காது. அவங்களும் நல்ல குடும்பம்தான். மான அவமானத்துக்கு பயப்படுவாங்க. கட்டுப்படுவாங்க.

ஓகே ஆன்டி! பட் எனக்கு இதுல பெரிசா ஓகே இல்ல. ஜஸ்ட் பார் யூ . மிக அழகாக தெளிவாக ஸ்டைலாக சொன்னான். அவன் முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கயலின் அன்னைக்கு அவனின் ஆண்மை தன் பெண்ணை நிச்சயம் காப்பற்றும் காலம் முழுவதும் என்று தோன்றியது. கார்த்திக்கிடம் அவளுக்கு நிச்சயம் இந்த மாதிரி ஒரு நல்லெண்ணம் வந்ததே இல்லை . கயலிடமும் அவள் அன்னையிடமும் நல் மதிப்பை பெற்றவன் திருமண வாழ்கை நல்ல விதமாகவே அமையட்டும்.

கங்கா வேலைக்கு சென்று இதோ அதோ என்று 15 நாட்கள் முடிந்தது. இருப்பினும். முதல் தேதியன்று சரியாக எண்ணி அவளுக்கான சம்பளத்தை கொடுத்து விட்டார்கள். சம்பள பணத்தை மிக பத்திரமாக தனது
டிபன் டப்பாவில் பத்திரப் படுத்தினாள் .
பணம் என்று பார்க்கும்போது அது ஒன்றும் பெரிய தொகை இல்லைதான். இருப்பினும் சம்பளம் என்று பார்க்கும்போது அவளுக்கு ஒரு விதமான சந்தோசத்தை தந்தது, என்றே சொல்லலாம். கிராமத்தில் இருக்கும்போது பல வேலைகளை செய்து சம்பளம் பெற்றவள்தான், இருப்பினும் அது வேறு விதம் இது வேறு விதம். இது அவள் கல்விக்கான அறிவு. இப்படி ஏதேதோ சிந்தித்து கொண்டு வந்தவள் ஏறிய பேருந்து பாதி வழியில் நின்று விட்டது. அவரவர்கள் வேறு வேறு பேருந்து பிடித்து சென்றாலும், இவளுக்கான அடுத்த பேருந்து வர வெகு நேரமாகிவிட்டது. அதனால் அங்கேயே அவள் காத்துக் கிடந்ததுதான் மிச்சம். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ,
எங்கம்மா போகணும்?
****போகணும்.
வாங்கம்மா அந்த வழியாதான் போறேன்.
இல்ல! பரவாலன்னா! நான் பஸ்லேயே போய்க்கறேன் .
அட! வாங்க மேடம்! நான் அந்த வழியாதான் போறேன்.
அவள் இருந்த களைப்பில் அவளுக்கு அவன் கட்டாயப்படுத்துவது புரியாமல் போயிற்று.
சரி என்று ஏறிக் கொண்டாள் .
சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவில் இன்னொருவன் வழியில் கை காட்டுவது போல காட்டி ஏறிக் கொண்டான்.
அண்ணா நான் ஷாரிங்ல(sharing) ஏறலையே?
அதுனால என்னம்மா என்ன எனக்கு ஒரு 50ரூபா கிடைக்கும். கொஞ்ச தூரம் தான?
அவளுக்கு அந்த புதியவனின் அருகாமை இம்சையாக இருந்தது. அதுவும் இல்லாமல் ஆட்டோ வேறு பாதையில் போவதை புரிந்து கொண்டாள் . இருவர் மட்டுமின்றி மூன்றாவதாக இன்னொருவனும் ஏறிக்
கொண்டான். ஏற்கனவே ஆட்டோ ட்ரைவரும் அருகில் அமர்ந்திருந்தவனும் பார்த்த பார்வையே சரியாக இல்லை . அதிலும் அருகிலிருந்தவன் நேரம் செல்ல செல்ல நெருக்கமாக அமர்ந்து கொண்டான். அவனின் பார்வையில், கங்காவின் துணிகளை அவிழ்த்து உள்ளுருவி பார்ப்பது அவளுக்கு நெருப்பில் இருந்தது போல இருந்தது. இருப்பினும், அமைதியாக எதையும் வெளிக் காட்டாமல் அமைதியாக சிவாவுக்கு அவள் இருந்த லொகேஷனை ஷேர் செய்தாள் ,அவர்களுக்கு தெரியாமல்தான். மெதுவாக பைக்குள் இருந்த பெப்பர் ஸ்பிரேயை திறந்து வைத்துக் கொண்டாள் . அந்த மூன்றாமவன் ஏறும்போது அனைவர் முகத்திலும் வேகமாக ஸ்பிரே செய்தவள், ஆட்டோவின் மறுபுறத்தில் காலை இறங்கியவள் கீழே விழுந்தாள் . இருப்பினும் அவர்களுக்கு முன் சமாளித்து அங்கே இருந்த சிறிய தெருவில் ஓடினாள். நேரமானதால் அனைவரின் வீடுகளும் பூட்டியே இருந்தது. பயத்தில் நாக்கில் ஒட்டிக் கொண்டது. அங்கே இருந்த ஒரு வீட்டை ஓங்கி தட்டினாள் , உதவி கேட்க. அந்தோ பாவம்! அதுவோ பூட்டிய வீடு. பின்னால் அவர்கள் துரத்தி வருவதை பார்த்தவள், வேகமாக இன்னும் வேகமாகவே ஓடினாள். எத்தனைதான் வேகமாக ஓடுவது? அங்கே இருந்த பெரிய தண்ணீர் பீப்பாய் பின்னால் ஒளிந்து கொண்டாள் .அந்த நேரத்திலா கைப்பேசி அடிக்க வேண்டும்? ஹாஸ்ட்டலில் இருந்து தான் அழைப்பு. அப்போது போனை கையில் எடுத்தவள், தைரியமாக மீண்டும் அவர்கள் அவளை நெருங்கும் முன்பு ஓட்டம் பிடித்தாள். அப்போது கையில் இருந்த போன் கீழே இறங்கி நொறுங்கியது. அதுவரையிலும் அது ஆணிலேயே இருந்தது. ஏதோ பிரச்சனை என்பதை அவர்களும் பிரிந்து கொண்டார்கள்.
அந்த நேரத்தில் அவளால் போனை எடுக்க முடியவில்லை. ஓடுவதிலேயே அவளின் முழு கவனமும் இருந்தது. அவளால் ஓரளவுக்கு மேல் ஓட முடியவில்லை. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. அப்போது கல் தடுக்கி கீழே விழ போனவள் விழுந்தது ஒரு வலுவான கையில் ?

அது யாராக இருக்கும்? சிவாவா ? காத்திருங்கள்.

சொன்னபடியே முத்து மதியத்திற்கு மேல் வந்து விட்டான்.
வாங்க வாங்க வாங்க மாப்பிள்ளை , உங்களை லஞ்சுக்கே வர சொன்னேனே?
இல்லங்க அதான் சொன்னேனே வேல இருந்துச்சு அதான்.
அது சரிதான், நான் தான் வெட்டியா இருக்கேன். நீங்கல்லாம் இள வயசு, ஓடித்தானே ஆகணும். அதற்குள் சிவகாமி கையில் நீர் சொம்புடன் வந்தார் .
வாங்க மாப்பிள்ளை, வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்களா?
எல்லாரும் சொகம் தானுங்க.
முத்துவின் பேச்சு முறை எப்போதுமே சிவகாமிக்கு பிடிக்கும். இந்த மாதிரி பேச்சுக்களை அவர் வயதிற்கு பின் அனுபவித்ததே இல்லை . முழுவதுமே சென்னை வாசம்தான்.
உங்களுக்கு மதியத்துக்கு என்ன டிபன் செய்யட்டும்?
அயோ அதெல்லாம் பழக்கமில்லங்க.
அதுக்காக? நீங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க அப்படியே விட்டுட முடியுமா?
அதனால என்னங்க ?
சரி! சத்யாவுக்கு பூரி புடிக்கும். உங்களுக்கும் அதையே செய்யவா ?
சரிங்க.
அத்தை . சிமியே சேர்த்துக் கொண்டாள் .
இப்போ உங்களுக்கு என்ன காபி டீ என்ன கலக்கட்டும் ?
இல்லங்க நீங்கள்ளாம் குடிக்கும்போது குடுங்க.
சரிங்க. முத்துவும் தியாகுவும் தொழிலை பற்றி பேச ஆரம்பித்தவுடன் சிமி நகர்ந்து கொண்டார்.
முத்து அவனுக்கு தெரியாத பல விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டான். இவை எல்லாம் பல நாட்கள் மனதில் வைத்துக் கொண்டிருந்த யோசனைகள் தான். அவருக்கு தெரிந்த வகையில் பதில் சொன்னார். நீங்க கேட்கறது பல விஷயங்கள் எனக்கு தெரியல. ஆனா கௌசிக் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான்.
கௌசிக்கின் தோற்றம் முத்துவுக்கு அவனிடம் இலகுவாக பேச அத்தனை வசதியாக இல்லை . அதை நேரேக் கூற விரும்பாதவன்,
இல்ல! இருக்கட்டுங்க. அப்புறம் பார்த்துக்கலாம் என்று விட்டான்.
அதற்குள் அவன்கை பேசி அழைப்பு வந்தது. ஒரு நிமிசங்க இதோ வந்துடறேன் என்று வாயிலுக்கு போனான்.
அதற்குள் தியாகுவுக்கு அவசர அழைப்பு ஒன்று வர சிமியிடம் சொல்லி விட்டு அழைப்பை எடுத்துக் கொண்டு போனார். இப்போதெல்லாம் யார் யாருடன் பேசுகிறார்கள்? எல்லாமே கை பேசிதானே ?

தோழியுடன் காரில் வந்திறங்கிய சத்யா, சமையல் அறையில் சென்று பார்த்தாள் .
ம்ம்ம் ம்மா! பூரி வாசன சூப்பரா இருக்கு. நான் இதோ போய் குளிச்சுட்டு வந்துடறேன்.
சத்யா உங்க வீட்டுக்காரரு வந்துருக்காரு பாத்தியா?
இல்லையே மா. இங்க யாரையும்காணுமே. வெளில போன் பேச போயிருக்காரு. சரிம்மா. அவரு வரட்டும். நான் வேகமா குளிச்சுட்டு வந்துடறேன்.
வேகமாக படி ஏறியவள் குளியறைக்குள் புகுந்து கொண்டாள் .
முத்துவும் போன் பேசிவிட்டு வந்தான். தியாகுவை அங்கே காணாதவன், சமையல் அறைக்குள் இருந்த சிமியிடம் விசாரித்தான்.
இல்ல! மாப்பிள்ளை அவருக்கு ஏதோ அவசரமா போன் கால் வந்ததுன்னு போயிருக்கார். நீங்க மேல சத்யா ரூம்ல வெயிட் பண்ணுங்க. சத்யா வந்தாச்சு. குளிக்க போயிருக்கா வந்துடுவா.
சரிங்க.
அவள் அறைக்கு சென்றவன், மெதுவாக அங்கிருந்த பொருட்களை பார்த்தான். போர் அடித்தது. போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
குளித்து விட்டு துண்டை சுற்றிக் கொண்டு மாற்றுடை எடுக்க வந்தவள், நேரே அவன் இருக்கவும், சட்டென குளியறைக்குள் புகுந்து கொண்டாள் .
என்ன முத்து இது? நீங்க இங்க, கோபத்துடன் ஆரம்பித்தவள், சட்டென குரலை தாழ்த்திக் கொண்டாள் .
இல்ல உங்க அம்மாதான் என்ன இங்க இருக்க சொன்னாங்க.
இட்ஸ் ஒகே . நீங்க ப்ளீஸ் 1 மினிட் திரும்பி நிக்கறீங்களா ? நான் டிரஸ் எடுத்துக்கிட்டு போய்டறேன்.
இல்ல பரவால்ல. நான் கீழ போகிறேன்.
அவசரமாக கதவை திறந்து கொண்டு வந்தவள்,
இல்ல! நீங்க எங்கையும் போக வேணாம். நான் இதோ வந்துடறேன்.
அவசரமாக கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடினாள்.
அவளின் தோற்றமும், சோப் வாசனையும் அவனை மயக்கியது. மயக்கத்தில் இருந்தவனுக்கு, உடை மாற்றிக் கொண்டு வந்தவளை பார்த்ததும். மனம் மயங்கியது. புதிதாக பூத்த பூ போல இருந்தாள் . நெற்றி பொட்டு இல்லை.
பொட்டு இல்லையே !
வச்சு விடுங்க. சிரித்துக் கொண்டே ஸ்டிக்கரை எடுத்துக் கொடுத்தாள் . அதை வைத்தவன், அருகில் இருந்த குங்குமத்தையும் நெற்றியில் வைத்தான்.
நமக்கு கல்யாணம் ஆகி இப்பதான் நீங்க எனக்கு பர்ஸ்ட் டைம் பொட்டு வச்சு விடறீங்க.
குற்ற உணர்வில் அவன் தலை தானாக கவிழ்ந்தது.
ப்ச் பரவால்ல. அதான் இப்ப வச்சுடீங்களே? கண் சிமிட்டி சொன்னாள் .
அவன் தயக்கம் பறந்தது. அவள் குத்தி காட்ட சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டான்.
டாக்டர்!! நீங்க புதுசா பூத்த பூ போல இருக்கீங்க! முகம் வழித்து திருஷ்டி போட்டான்.
என்ன இது கேர்ல்ஸ் மாதிரி. முத்து பல்லை காட்டினாள்.
கொல்லறீங்க டாக்டர்! மனதிற்குள் ஆசையாக திட்டினான்.
அப்புறம், முத்து , ஆச்சி எப்படி இருக்காங்க?
எல்லாரும் நல்லாருக்காங்க டாக்டர். உங்ககிட்ட ஒரு சந்தோசமான விஷயம் சொல்லணும்.
ம்ம்! என்ன என்பதை அறிய கண்களில் ஆர்வம் மின்னியது.
அது வந்து, அய்யா பொழப்புக்கு வச்சுக்கோன்னு பத்து லட்ச ரூவா கொடுத்தாங்க. நா வாங்கல . ஆனா அய்யாக்கு ரொம்ப வருத்தம். ஆச்சிகிட்ட கேட்டேன் .வாங்கிக்க சொல்லுச்சு. சரின்னு கடனா வாங்கிகிட்டேன் . அதான் உங்க கிட்ட சொல்லல்லாண்ணு.
ஓ ! எங்கிட்ட எதுக்கு சொல்லணும் ?
அவள் வம்பிழுக்கிறாள் என்பதை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது, நானும்தான் நானும்தான் என்று உதடுகளும், புருவங்களும் அவளை காட்டிக் கொடுக்கப் போட்டிப் போட்டன .
அதை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை .
ம்ம்! போடா காளையா ! பொண்டாட்டிகிட்ட சொல்லுன்னு மனசு சொல்லுச்சு, அதான்.மெதுவாக காதை திருகி கொஞ்சினான்.

அந்த நேரத்தில் நல்ல வேளையாக அன்னையிடம் இருந்து போன் வந்தது. டிபன் ரெடி ரெண்டு பேரும் சாப்டுட்டு பேசுங்க.
சரிம்மா!
வாங்க , கீழ போலாம் அம்மா சாப்பிட கூப்படறாங்க.
புன்னகையுடன் இருவரும் ஜோடியாக வருவதை பெற்றவர்களும் ஜோடியாக பார்த்தார்கள்.
(உங்க மாப்பிளையை பத்தி உங்களுக்கு தெரியாதா ?)


மீண்டும் வருவாள் தேவதை..............
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-97(1)
தன் இருவரும் பேசிக் கொண்டே உணவை உண்டு முடித்தனர். அவனுக்கு முன்பாகவே வேகமாக உண்டு முடித்தவள் , இருவருக்கும் தேநீர் கலந்து கொண்டு வந்தாள் . முதலில் ஒரு சூப்பர் மார்க்கெட் வைப்பதாக முடிவெடுத்தனர். அடுத்தடுத்து மாட்டு தீவனமும், அரிசி மில்லும் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தனர். இருவரும் அவரவர் வீட்டில் கலந்து பேசுவதாக ஏற்பாடு.
ஏங்க , நீங்க உங்க அய்யாகிட்டேர்ந்து எதுக்கு பணம் வாங்கணும்? அதான் எங்கிட்ட இருக்கே ?
தேநீர் கோப்பையை காலி செய்தவள் சாதாரணமாக மிகச் சாதாரணமாகத்தான் சொன்னாள் . அவள் அதை சொல்ல வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. தானாகவே வாயில் வந்ததுதான்.
நான் கொஞ்சம் சிரிச்சு பேச கூடாதில்ல. உங்க பணத்தை காமிச்சுடுவீங்க.
அவன் கண்களில் இருந்த கோபத்தில் இவளுக்கு பதில் பேச நா எழவில்லை. பயத்துடன் பார்த்தவளுக்கு,
பூரி ரொம்ப நல்லாருந்தது. உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிடுங்க. அவ்வளவுதான் . விறுவிறுவென அவளை கடந்து விட்டான்.
அவளுக்கு என்ன நடந்தது என்பது புரியவே சில நிமிடங்கள் ஆயிற்று.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கையில் தாங்கி பிடித்தவள் மயக்கத்தில் இருந்தாள் . அவளுக்கு தலையிலும் உடலில் அங்கும் இங்குமாக சில சிராய்ப்பு களும் இருந்தன. அவளை கையில் தங்கி இருந்தவன் தோளில் போட்டு கொண்டு ஓடினான். ஆம் !அவன் அவளின் அத்தான் . பட்டாளத்தில் வேலை பார்ப்பவன்தான்.
அவர்களுக்குதான் இவை எல்லாம் சாதாரணமாயிற்றே!
அருகில் இருந்த மருத்துவமனையில் அவளைச் சேர்த்தவன் துணைக்கு அவன் அம்மாவை இருக்கச் சொன்னான்.
நீண்ட தூரம் ஓடிய களைப்பு, மருந்தின் வீரியத்தினால் மறுநாள் தான் அவளுக்கு முழிப்பு வந்தது. மெதுவாக தன் நிலை உணர்ந்தவளுக்கு முதல் நாள் அந்த கயவர்களிடமிருந்து எப்படி தப்பினாள் என்பதுதான் தெரியவில்லை. என்ன நடந்தது என்பதை அந்த பெண்மணிதான் விலக்கினாள் . முதலில் அவள் பேசுவதை கண்டவளுக்கு போகபோக ஆச்சர்யம்தான் மிஞ்சிற்று.
உங்க பேரு செம்பருத்திதானே ?
உனக்கு எப்படி தெரியும்?
மாயாண்டி தங்கச்சியா ?
ஆமா !
நான் அவரோட பொண்ணு. உங்கள சின்ன வயசுல பார்த்திருக்கேன் .
எங்கண்ணா பொண்ண நீ ? அடி என் தங்கமே ? நீ என்ன பண்ணற ? அண்ணா எங்கருக்காரு? நல்லாருக்காரா ? அவரின் குரலில் உண்மையான அன்பு இருந்தது.
அவரின் இறுதி காலத்தை பற்றி கேட்டவருக்கு மனம் தாங்கவில்லை. கதற ஆரம்பித்துவிட்டார். அவரை கங்காதான் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அவர் மகன் அந்த நேரத்தில் வந்துவிட்டதால், மெதுவாக கங்காவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் .
ஆட்டோவில் கூட அவர் விசும்பிக் கொண்டேதான் வந்தார்.
வீட்டுக்கு வந்ததும் அழுகை நிற்கவில்லை. அத்தான் ,அதட்டித்தான் குளிக்க போனார்.
ஏம்மா! அந்த பொண்ணே அலண்டு போய் கிடக்கு. அதுக்கு வெண்ணீர் போட்டு குளிக்க வை. சாப்பிட நான் போய் ஏதாவது வாங்கிட்டு வரேன். அவங்க வீட்டுக்கு சொல்ல வேணாமா?
அப்போதுதான் நினைவு வந்தவளாக என்னோட போன் ஒடஞ்சு போச்சு. அவங்க நம்பர் தெரியாது.
புதியவள் என்பதைக் கூட மறந்து, இதுதான் ஒரு போன் நம்பரை கூட மைண்டுல வைக்கறது இல்ல. எவ்ளோ முக்கியமான விஷயமா இருந்தாலும் இந்த மெஷின் தான் நமக்கு துணை. இல்ல?
நீ எங்க இருக்க? அதாவது தெரியுமா இல்ல அதுவும் போன் கிட்டத்தான் கேட்கணுமா ? அவன் ஒருமையில் பேசியதும், நக்கல் அடித்ததும் அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது.
ஏன்டா என்ன திட்டிப்புட்டு இப்ப நீ அவளை வையற?
பதில் பேசாமல் டிபன் வாங்க சென்று விட்டான். நீ அவனை தப்பா நினைக்காத. ரொம்ப நல்ல மனசு. ஆனா ரொம்ப கோவக்காரன். அதுக்கு ஏத்தமாதிரி பட்டாளத்துல வேற இருக்கான். என்று பேசிக் கொண்டே அவளை குளியறைக்கு அழைத்து சென்றார். களைப்புத்தீர சூடு நீரில் குளித்தவள் அத்தையின் புடவை ஒன்றை வாங்கி மாற்றிக் கொண்டாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை, தெரியவில்லை. மனபதட்டத்திலேயே இருந்தாள் . இன்னும் சத்யாவுக்கு சொல்லவில்லையே? சிவா சாருக்கு எப்படி இருக்கும்? இப்பவே அவங்கள பாக்கணுமே ? சிற்றுண்டி வேண்டாம் என்றுவிட்டாள் . அவர்களுக்கும் நிலைமை புரிந்து உடனேயே கிளம்பி விட்டார்கள். நேரம் போக போக இவளுக்கு பதட்டம் அதிகமானது. நல்ல நேரம் ஹாஸ்டலில் சொல்லியாகிவிட்டது. அவர்கள் சிவா சாருக்கு சொல்லி இருப்பார்கள்தான். இருந்தாலும் இவளுக்கு தான் மனம்கொள்ளவில்லை.
குளித்துவிட்டு நீ தங்கிருக்கற ஹாஸ்டல் பேரு என்ன? கூகிளில் கண்டுபிடித்தவன், மகளிர் விடுதிக்கு அழைத்து மெதுவாக விஷயத்தைக் கூறினான். அவள் மீது எந்த தப்பும் இல்லை என்பதையும் நாசுக்காக விளக்கினான் . கூடவே கங்காவையும் பேச சொன்னான்.
என்னமா கங்கா இது? நாங்கல்லாம் ரொம்ப பதறி போய்ட்டோம். கெட்டதுலையும் நல்லதா ஏதோ யாரோ உன்ன காப்பாத்திருக்காங்க. இல்லனா நினைக்க கூட முடியலையே! கடவுளுக்கு நன்றி.
எங்களைவிட சிவா சாருதான் ரொம்ப கவலையா இருக்காரு. இப்பவே அவருக்கு நான் சொல்லிடறேன். நீ உன்னோட அட்ரஸ் குடு , நாங்க வரோம்.
இல்லங்க மேடம் நானே வந்துடுவேன்.
இருக்கட்டும். சடக்கென போனை பிடுங்கியவன் இல்லங்க நான் கொண்டு போய் அவங்க வீட்டுல இப்பவே விட்டுடறேன்.
சரிங்க. அப்போ நானும் அங்க வந்துடறேன்.


இவளைக் காணவில்லை என்று கேள்வி பட்டதில் இருந்தே சிவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடலில் உயிர் இருக்கிறதா என்பதே கூட அவனுக்கு புரியவில்லை. அவள் லொகேஷனை ஷேர் செய்திருந்தாள் . அப்போதே வீட்டிற்கு வந்தவன், தனக்கு தெரிந்தது அனைத்தையும் போலீசிடம் சொல்லி விட்டான். இருப்பினும் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் சிமிக்கும் அவன் அவள் மீது எத்தனை காதல் வைத்திருக்கிறான் என்பதே புரிந்தது. முதல் நாள் வீட்டிற்கு வந்தவன் தண்ணீர் கூட அருந்தாமல் அமர்ந்திருந்தான். மறுநாள் காலை , கங்காவிடமிருந்து போன் வந்ததென்று கேள்வி பட்டதும்தான் , பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு வந்தான். இருந்தாலும் அவள் முகம் பார்க்கும் வரை எதுவும் பல்லில் படாது என்றுவிட்டான். அவளை காணவில்லை என்றதும் அவன் சிமியை பார்த்த பார்வை. அவளுக்கு உடல் குறுகி விட்டது. அப்போதுதான் அவளுக்கு தன்னுடைய தவறே முழுவதும் புரிந்தது.
பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ சாமிகிட்ட அழுதா? எல்லாம் சரியாகிடுமா ? உனக்காகத்தானே அவளை அவன் ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டான். அவ என்னோட காதல் மட்டுமே இல்ல. என்னோட கடமை, என்னோட உசுருன்னு எவ்ளோ கெஞ்சினான். என்னென்னெவோ காரணங்கள் சொன்னியே ?
இதோ இப்போ அவள் காணும். என்ன பண்ண போறோம்.
என்ன பண்ண போறோம் தெரியாது. ஆனா அவ மட்டும் வரல்லன்னா என்னை நீங்க உயிரோடவே பாக்க முடியாது, சிவா தீர்க்கமாக சொன்னான். அவன் குரலிலேயே அவன் சொன்னதை செய்வான் என்று தெரிந்தது.
கணவனும் மகனும் அவளை எத்தனையோ சூடு சொல்லால் குத்தியபோதும், அவளுக்கு எதுவுமே மனதில் படியவில்லை. அவள் திரும்பி வந்துவிட வேண்டுமே என்று மட்டும்தான் இருந்தது. அவள் வரவில்லை என்றால், தானும்தான் உயிருடன் இருக்க மாட்டேன். ,மனதில் நினைத்தாள் . வெளியில் சொல்லவில்லை.
இந்த சூழ் நிலையில் என்ன செய்யவேண்டும் என்பது கூட சத்யாவுக்கு புரியவில்லை. இந்த சமயத்தில் கௌசிக்கும் ஊரில் இல்லை. கயலின் கடன்களை முடித்துக் கொடுத்தவன் அன்றைய இரவே பம்பாய்க்கு கிளம்பி விட்டான். ரிஷியும் அருணும் ஒரு புறம் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.

நல்ல வேளையாக மறுநாள் காலையிலேயே அவர்கள் வந்து விட்டார்கள். அவளை பார்த்த அந்த நொடி, சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் இருப்பதை மறந்து அவளை ஓடி சென்று கட்டிக் கொண்டான். கண்கள் சிவக்க சிவக்க கலைந்த சிகையும், சிறிய தாடியும், கசங்கிய சட்டையும் , அவனை பார்க்கவே அவளுக்கு சகிக்கவில்லை. அவளை கட்டிக் கொண்டவனுக்கு அறியாமலே கண்களில் கண்ணீர் கொட்டியது. யாரும் அவனை சமாதானம் செய்யவில்லை.
சிமி மட்டும் சிவாவையும் கங்காவையும் சேர்த்து இருக்கு கட்டிக் கொண்டாள் .

மீண்டும் வருவாள் தேவதை............
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-97(2)

சட்டென்று அவர்களை விட்டு விலகியவள் , வெளியில் வந்தாள் .
சிமி வெளியில் வந்ததும், தாங்க முடியாதவளாக அவன் தோளில் சாய்ந்தவள்,
சாரி சிவா சார்.
சீ ! நீ சாரி சொல்லக் கூடாது. நான்தான் சொல்லணும். என்னை மன்னித்துவிடு கங்கா. என்னால ஆம்பளையா முடிவெடுக்க முடியாம, கோழையா என்னோட இயலாமையை உன் மேல திணிச்சுட்டேன். சாரி கூட சொல்ல அருகதை இல்லாதவன். அவனின் உணர்ச்சியை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவன் வருத்தம் தாங்காதவல் சட்டென அவன் உதட்டை தன மெல்லிதழ்களால் சிறை செய்தாள். அதில் அவளின் கவலைதான் இருந்தது. அவன் கவலையை போக்கிடும் கவலை.
நீங்க பெரியவங்க , நீங்க அப்படி சொல்லக் கூடாது. அது மட்டும் இல்லாம அத்தான் உங்க போன் நம்பர் கேட்டபோது எனக்குத்தான் தெரியல. அதுக்கு அவங்க ரொம்ப திட்டினாங்க. நாந்தான் யாரு நம்பரையும் மனசுல வைக்காம எல்லாத்தையுமே போனுல வச்சுக்கிட்டேன். அது என்னோட தப்புதான். நல்ல வேளையா அந்த நேரத்துக்கு அத்தான் வந்தாங்க. இல்லன்னா! என்னால நினச்சு பாக்க கூட முடியல. மூணு பேரு , முதல்ல தைரியமாத்தான் இருந்தேன். ஆனா போகப்போக பயம் வந்துடுச்சு. அவங்க மட்டும் என்ன தொட்டிருந்தாங்கன்னா நான் அங்கையே செத்துருப்பேன்.
அப்படி பேசாதே கங்கா , ஒனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது. நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.
அவளை இறுக்கி கட்டிக் கொண்டான். அவனின் இறுக்கமும், சூடான மூச்சின் சுவாசமும், அடுத்தடுத்து கொடுத்த முத்தங்களும், அவனின் பதட்டத்தையும் அவள் கிடைத்து விட்ட நிம்மதியையும் வெட்ட வெளிச்சமாக்கியது .
இவர்களை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று அனைவரும் அமைதியாகத்தான் இருந்தனர். இருப்பினும் ஹாஸ்டல் வார்டன் வந்ததால் சத்யா இவர்களை அழைக்கச் சென்றாள் ,
கதவை தட்டிவிட்டு சென்றபோதுதான் அவர்கள் இருவரும் சட்டென்று பிரிந்து நின்றனர். அவர்களின் தோற்றமே அவர்களின் நிலையை உணர்த்தியது.
புன்னகையுடன் சத்யா, எல்லாம் முடிஞ்சுதா? வார்டன் வந்துருக்காங்க!
ம்ம்.,
பின்னோடே கங்கா வந்தாள் .
சட்டென்று திரும்பியவள்,
சற்று விலகி இருந்த புடவையை சரி பண்ண சொன்னாள் .
புடவைய சரி பண்ணிக்கிட்டு வாங்க அண்ணி, மனதில் சிரித்து கொண்டாலும் முகம் அப்பட்டமாக வெட்கத்தை காட்டியது.

என்னம்மா கங்கா , என்னாச்சு? எப்படி தப்பிச்ச ? பத பதைப்புடன் வார்டனும் இவளை இறுக்கி கட்டிக் கொண்டாள் . நேத்து நீ வரல்லனதும் அப்பா எவ்ளோ டென்ஷன்! போனும் நாட் ரீச்சபிள்! அவர் முகமே அவரது பயத்தையும் டென்ஷனையும் அப்பட்டமாக காட்டியது.
இவள் விவரிக்க அனைவருக்குமே மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத திகில் இருக்கத்தான் இருந்தது. சத்யாக்குத்தான் நான் முதல்ல நன்றி சொல்லணும். அவ மட்டும் எனக்கு அந்த பெப்பர் ஸ்பிரேய வாங்கி குடுத்துருக்கலானா அப்பவே நான் நல்லா மாட்டிருப்பேன். என்னோட நன்றியை என்னால வாய்ல சொல்ல முடியாது சத்யா, கண் கலங்க அவளை ஓடி சென்று கட்டிக்க கொண்டாள் . அவளின் செய்கை சத்யாவுக்கு அவளின் படபடப்பை காட்டியது. அவள் பேசி முடிக்கவும்,
சிமி அவளுக்கு திருஷ்டி சுற்றி போட்டாள் .
பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப கவனமா இருக்கணும். பாதுகாப்பு கலைகள், இந்த மாதிரி ஸ்பிரே எல்லாமே வச்சுக்கணும். அதை சரியான நேரத்துல உபயோகப்படுத்தனும். பயத்தை நாம ஓவர் கம் பண்ணலைன்னா ரொம்ப சிரமம்தான். ஒவ்வொரு நாளும், டிவில, பேப்பர்ல எத்தனை செய்திகள் ? பாக்கவே ரொம்ப பயமா இருக்கு. கடவுள்தான் இத்தனை பெரிய ஆபத்துலேர்ந்து உன்ன காப்பாத்தி இருக்கார். நாம மத்தவங்களுக்கு பண்ற நல்லது எந்த நேரத்துல நமக்கு உதவி செய்யுன்னு சொல்ல முடியாது. வார்டன் பேசப் பேச தியாகு உட்பட அனைவருமே தலை அசைத்து ஆமோதித்தனர்.
இவர்கள் கங்காவை நல்ல விதமாகவே பார்த்துக்கொண்டாலும் அண்ணன் இல்லாதபோது தானே காவல் என்று அன்னை மனதில் நினைத்ததை மகனும் புரிந்து கொண்டான்.
நீங்க எல்லாரும் கங்காவை இவ்ளோ நல்லா பாத்துக்கறது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, இருந்தாலும்,
கங்கா இனிமே எங்களோடவே இருக்கட்டுமே! நானும் அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பிடுவேன். அவ எங்க வீட்டுலையே இருக்கலாம்! எதுக்கு ஹாஸ்டல்ல ..... அவன் நாசுக்காகத்தான் சொன்னான்.இருந்தாலும்
தப்பா எடுக்காதீங்க. அவ வந்தா எனக்கும் ஒரு துணையா இருக்குமேன்னுதான் சொல்லறான், அன்னை சமாளித்தாள்.
பரவால்ல இருக்கட்டுங்க. அவ இந்த வீட்டுக்கும் பொண்ணு மாதிரிதான். அவளை இனிமே நான் எங்கையும் அனுப்ப மாட்டேன். எப்பையும் . பூடகமாக சிமி சொன்னதை அவள் வீட்டினர் அனைவரும் புரிந்து கொண்டனர். முக்கியமாக சிவா.
அத்தைக்கும் மனம் கோணாமல், அவளுக்கு எப்போ வரணுன்னு தோணுதோ அவ தாராளமா உங்க வீட்டுக்கு வந்து தங்கிக்கட்டுமே?
சரிங்க., அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம். இருவரும் எழுந்து கொண்டனர்.
வார்டன் அத்தை அனைவரும் கிளம்பினார்கள். அத்தைக்கும் இவளை விட்டு பிரியவே மனம் இல்லை. இதுநாள் வரை தெரியாமல் இருந்த உறவு. இப்போது தெரிந்த பின் எப்படி விட்டு விட்டு செல்ல முடியும். அதிலும் அண்ணன் உயிராக வளர்த்தவர். அவர் பெண் அனாதை போல யாருடனோ? மனம் பொறுக்க முடியவில்லை. இருந்தாலும் அவளால் கட்டுப்படுத்தவும் முடியாது, கட்டாயப்படுத்தவும் முடியாது. அவளின் தயக்கத்தை பார்த்த சிமி, ஏங்க மக்களை காப்பாத்த உங்க பையன பட்டாளத்துக்கு அனுப்பி இருக்கீங்க. உங்க பொண்ண நாங்க பார்த்துக்க மாட்டோமா ? எதுக்கும் கவலை படாதீங்க. இவ இந்த வீட்டு பொண்ணு, கையை பிடித்து ஆறுதலாக சிமி சொன்னாள், நம்பிக்கையூட்டிடும் விதமாக.
நீங்க இவ ஒருத்திய மட்டும் காப்பாத்தலை, என்னோட உயிரையும் சேர்த்துதான் காப்பாத்தி இருக்கீங்க, இத்தனை பெரிய கலெக்டர் கையை பிடித்து பேசுவது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் பேசும் பொருள் என்ன ?
கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க! நீங்க கங்காவை?
ம்ம்,
சட்டென்று சிவா கங்காவைப் பார்க்க அவள் தலை தானாகவே கவிழ்ந்து கொண்டது. அதன் அர்த்தம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
சீக்கிரமா கல்யாண சாப்பாடு உண்டு போல ?
கண்டிப்பா! நீங்க தான பொண்ணு வீடு ?
ரொம்ப சந்தோசமா இருக்கு. கங்கா டைம் வேஸ்ட் பண்ணாம எல்ல போன் நம்பரையும் மனப்பாடம் பண்ணனும்.
அனைவருக்கும் சிரிப்பு வந்தது. கண்டிப்பா அத்தான் . முதல்ல சிவா சாரோடது . அப்புறம் உங்களோடது.
பெரிய சிரிப்பலையுடன்,
முதலில் தயக்கத்துடன் கிளம்பியவர்கள், மகிழ்ச்சியுடனே வீடு திரும்பினர் .
இருந்தாலும் வாயில் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்தவளுக்கு ஏனோ சிறு குழந்தை போல அழுகை வந்தது. பல வருடங்களுக்கு பிறகு உயிர்ப்பித்த உறவு! தனக்கென்று ஏதோ ஒரு உறவு. கண்ணீரை உள்ளிழுத்தவளை சிவா ஆதரவாக அணைத்துக் கொண்டான். அவன் தோளில் சாய்ந்தவளுக்கு மனம் நிம்மதி அடைந்தது. மெதுவாக அவள் முதுகை நீவினான்.
அப்போது சத்யா, உங்களுக்குத்தான் எல்லாமாவும் அண்ணன் இருக்காரே கங்கா!(என்னை மாதிரியா என்ற வார்த்தைகளை மனதில் அடக்கிக் கொண்டாள்) நீங்க எதுக்கு கவலை படறீங்க ?
ம்ம்., மெதுவாக தலை அசைத்தாள்.
அங்க என்னாச்சு கங்கா? என்ன மருந்து மாத்திரை குடுத்துருக்காங்க ? டாக்டர் சீட்டு காட்டுங்க ?
ஒன்னும் பெரிசாலாம் அடி இல்ல சத்யா, சும்மா அங்க அங்க சிராய்ப்பு அவ்ளவுதான் .
ஓகே ! சீட்டை ஆராய்ந்தவள், ஆமா கங்கா யூ ஆர் ரைட் ! அவங்க குடுத்துருக்கறதே போதும். ஆனா இன்னிக்கு முழுக்க நீங்க ரெஸ்ட் எடுக்கணும்.
யாருக்கும் உணவருந்த மனமில்லாததால், சமைக்கவில்லை . அதனால் கங்கா வீடு திரும்பியதற்கும் சேர்த்து சிவா அனைவரையும் ஹோட்டலுக்கு அழைத்து போனான்.
சிவாவையும் கங்காவையும் பார்த்த சத்யாவுக்கு ஏனோ முத்துவின் நினைவு வண்டாய் மூளையை குடைந்தது. ஏனோ அவளுக்கு அவனின் அணைப்பும், முத்தங்களும், கொஞ்சல்களும், காதல் மொழியும் வேண்டும் போல இருந்தது. இவை எல்லாம் தனக்கு அவனிடமிருந்து கிடைக்காது என்று தெரிந்திருந்தும் மனம் ஏனோ அவனிடமே வந்து வீழ்ந்தது. என்னை ஏன் பிடிக்கவில்லை. நல்ல படிப்பு, நல்ல தோற்றம்,எல்லாமேதான் இருக்கிறதே? பல ஆயிரம் முறை மனதில் கேட்டு கண்ணீர் வடித்த அதே கேள்விதான் இப்போதும் அவளை வதைத்தது. மீண்டும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் கண்ணீர் வடிக்க முடிந்ததே தவிர, அவனுடன் அவளால் சேர்ந்து இருக்கவும் முடியவில்லை, பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்யவும் முடியவில்லை. இவளின் மனமும் உடலும் அவனுக்காகவே என்பது மட்டும் அவளுக்கு தெரிந்தது.

ஊருக்கு சென்ற கௌசிக், பேரளவு இன்பத்தையும், அதே அளவு துன்பத்தையும் அனுபவிக்க போகிறான்.
சில பிசினெஸ் விஷயங்களை பார்த்து செட்டில் செய்ய வேண்டி இருந்தது. பல கோப்புகள் இவனுக்காக காத்துக் கொண்டிருந்தன. அவன் எதிர்பார்த்தபடி சத்யாவுக்கு மருத்துவனை கட்ட முடியவில்லை. ஏனோ தொழில் விஷயத்தில் அவன் சற்று பின் தங்கி இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
அதனாலேயே கயலின் பின் சுற்றிக் கொண்டிருந்த மனதை இழுத்து பிடித்து தொழில் பக்கம் செலுத்தினான். பல விஷயங்கள் முதலாளி இல்லாமலே செய்ய முடியும். சில வேலைகள் முதலாளிகளால் மட்டுமே செய்ய முடியும். வசந்தி வேலை செய்வாள் தான். இருப்பினும் மஹாதேவன் அளவுக்கு அவளுக்கு மருத்துவமும் தெரியாது. தொழிலும் தெரியாது. கௌசிக், மருத்துவம் படிக்கவில்லை. இருப்பினும் தொழில் தெரிந்தவன். சாமர்த்தியசாலி. மாகாதேவனின் அறிவுரைகளும், தாத்தாவின் ரத்தமும் சேர்ந்ததால்தான் அவனால் இந்த சிறு வயதிலேயே இத்தனை சொத்துக்கள், மருத்துவமனை அனைத்தையுமே பார்க்க முடிகிறது.
கயலின் காதலும் வேண்டும். தொழிலும் வேண்டும். எப்படி சமாளிப்பான்?
இவன் அவளை விரும்புகிறான். அவள் கார்த்திக்கை அல்லவா விரும்புகிறாள் ? அவள் மனதை எப்படி அவன் மாற்றுவான் ? அதுவும் பெரிய சவாலே !
காலை முதல் இரவு வரை வேலை செய்பவன், இரவின் தனிமையில் சிறுது நேரமாவது கயலுடன் உற(ரையா)வாடுவான். அவளிடம் பேச அவனுக்கு நிறைய விஷயங்களும் இருந்தன. செய்திகளும் இருந்தன.
ஹாய் டார்லிங் ! என்று இவன் தொடங்கும்போதே அவள் கன்னங்கள் சூடேறி சிவப்பது அவனுக்குத் தெரியாதே ?
ஹே!ப்ளீஸ் நீ ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக்கோயேன். நான் எப்படி உன் முகத்தை பாக்கிறது ?
ம்ம்..அதெல்லாம் ஒன்னும் பாக்க வேணாம். அவள் கொஞ்சலாக சொல்வது அவனுக்கு தயக்கமாகவே தெரிந்தது. அவனுக்குத்தான் கார்த்திக்கின் காதல் தெரியுமே! அதற்க்கு மேல் அவளை அவன் வற்புறுத்தவில்லை. திருமணம் நடந்தாலும் அவன் அவள் மனதை மாற்றுவது சுலபனாதா ? யோசிக்க ஆரம்பித்து விட்டான். இப்போதெல்லாம் கார்த்திக் என்ற பெயர் கூட அவள் நினைவில் இல்லாமல், இவனே அவள் மனதை ஆக்கிரமித்த விஷயம் அவனுக்கு தெரியாதே. அதை கயல் அவனிடம் சொல்லும்போது அதை அவன் எப்படி உணர்வான்? பார்க்கலாம்.
தென் கயல், இன்னிக்கு நாள் எப்படி போச்சு ?
ம்ம்! ரொம்ப நல்லாவே போச்சு. சாப்டீங்களா? இப்படித்தான் பேச்சு இருந்தது.
பொதுவான விசாரிப்புகளுக்கு எதற்குப் பேச வேண்டும் என்ற மன நிலைக்கு வந்திருந்தான் கௌசிக். அவனையும் குறை சொல்ல முடியாது. இருபத்து ஆறு வயது வாலிபன், எந்த பெண்களிடமும் பேசிப் பழகாதவன். அலுவலகத்தின் வேலை பளுவை முடித்து காதலியிடம் பேசும்போது எவருக்குமே காதல் மொழிகளும் கொஞ்சல் பாஷைகளும் கேட்க நினைப்பது இயல்புதானே? முன்பெல்லாம் எல்லா விஷயங்களையும் அன்னையிடம் பகிர்ந்து கொள்ள பழக்கப்பட்டவனுக்கு, இப்போது புதியதாக தோன்றி இருக்கும் ஒதுக்கமும், பிரிவும் எதிரியே.
ஏனோ மனம் அவளிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள துடிக்கும் போது அவளுக்கு மட்டுமே ஏனோ விஷயங்கள் எதுவுமே இருப்பதில்லை. முதலில் அதை இயல்பாக எடுத்துக் கொண்டவனுக்கு, நாட்கள் செல்ல செல்ல எரிச்சலே மிஞ்சியது. சில நேரங்களில் நான் வேண்டாம், என்னோட பணம் மட்டும் வேணுமா என்று கூட தோன்ற ஆரம்பித்து விட்டது ? அதையே அவன் வார்த்தைகளும் வெளி காட்ட ஆரம்பித்தது.
ஹாய் டார்லிங் என்ற அழைப்புகள் இரு தினங்களாக இல்லை. அவன் குரலை கேட்காமல் இவள் தவித்துப் போனாள் . இவள் அழைத்தபோது, நான் மீண்டும் அழைக்கிறேன் என்ற பதில் வந்தது. அதனால் சற்று நிம்மதி அடைந்தாள். அவனிடம் இருந்து போன் அழைப்புகள் வரவில்லையே தவிர, ஸ்மார்ட் போன் புதியது வந்தது. அதன் விலையே அவனின் வசதியை காட்டியது. அவன் வசதியானவன் என்பது அவள் அறிந்ததுதான். ஆனால் அவன் வீட்டை பார்த்து மயக்கம் போட்டு விழுவாள் என்பது அவள் அறிந்திராதது.
மீண்டும் வருவாள் தேவதை.........

 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-98
இப்படியே போய் கொண்டிருந்தால் , இது சரி பட்டு வராது என்பது கௌசிக்கிற்கு புரிந்தது. அதை தவிரவும் அவனுக்கு அவளிடம் பேச வேண்டி இருந்தது. நேரில். தனக்கு அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். அதுவே திருமணதிற்கு பிறகு காதலாக மாறக் கூடும் என்பதை அவன் நம்பினான். ஆனால் அது நடக்குமா என்ற சந்தேகம் அவனுக்கு வரத் தொடங்கியது. முதலில் அவளை பார்க்க பார்க்க ஏற்பட்ட ஈர்ப்பு, இப்போது அவளை பார்க்காத போது வேறு சில விஷயங்களையும் யோசிக்க வைத்தது. இது அவனை பற்றிய விஷயம் மட்டும் இல்லை. அவளை பற்றியது. இந்த சமுதாயத்தில் தன்னை சேர்த்துக் கொள்ள அவளும் ஒத்துழைக்க வேண்டும் தானே? இப்போது வந்திருப்பது தெளிவா? குழப்பமா? அவனுக்கே தெரியவில்லை. மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல், மனதை இன்ப நிலைக்கு மாற்ற நினைத்தான்.
அவன் அந்த விருதை வாங்கி கொள்ளும்போது, அவன் அன்னையுடன் சத்யாவும், கயலும் இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் சத்யா இப்போது இருக்கும் மன நிலையில் வர முடியாது என்று விட்டாள் . அவளின் குடும்ப சூழ்நிலை, கணவனுடன் இருக்கும் பிரச்சனை, இவனும் புரிந்து கொண்டான். ஆனால் கயல். அவள் அவனுடன் இருக்க வேண்டும். அவன் விருதை பெற்றவுடன், அவனை அவள் கொஞ்சினால் எப்படி இருக்கும் என்பது வரை அவன் கற்பனை நீண்டது. தனக்கு தானே தலையில் தட்டிக் கொண்டவன்,
ச! என்ன குட் பாய் இப்படிலாம் நினைக்கற? தன்னை தானே திட்டிக் கொண்டான்.
அப்போது பவித்ரா கால் செய்தாள் . அவளுக்கு இவனிடம் சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது.
என்னடா எப்படி இருக்க ?
குட்!
குசல விசாரிப்புகளுக்கு பின்,
டேய்! சத்யாவுக்கு நீ சொன்ன மாதிரியே சில இடங்கள் பார்த்து வச்சிருக்கோம். அதே மாதிரி முத்துவுக்கும் சில கிளைன்ட் ஓகே சொல்லி இருக்காங்க. பட் ரேட் ஒத்து வருமான்னுதான்தெரியல. நான் வேற ஒன்னு யோசிச்சேன்.
என்ன ?
சத்யாவுக்கு நீ வேற ஹாஸ்பிடல் கட்டறதுக்கு பதில் அவளுக்கு அவ ஹஸ்பண்டோட இடத்தையே வாங்கி கிப்ட் பண்ணிடேன்?
நோ நோ! அவளுக்குன்னு ஒரு ஹாஸ்பிடல் அப்பாவோட கனவு. என்னால அதை மாத்த முடியாது. இன் அடிசன் நீ சொன்ன மாதிரி வேண்ணா பண்ணலாம். நீ சொன்னதும் நல்ல ஐடியாதான். ஆனா அவரோட இடத்தை தவிரவும் அங்க இருக்கற இன்னும் கொஞ்சபேரோட நிலமும் இருக்கு. எல்லாமே தோட்டம். ஒப்பேன் ஸ்பெஸ் னா எனக்கு பிரச்சனையே இல்ல. ஓகே! ஐ ஹவ் டு திங்க்.
ஓகே டா! இப்போ இந்த இடங்களை பாக்க யார் வருவா? நான் போகவா ?
நோ பவி , நான் சத்யா வீட்டுல பேசிட்டு உனக்கு சொல்லறேன். சித்தப்பாவுக்கு இந்த பீல்டில் நிறைய அனுபவம் இருக்கு . சோ நான் அவர்கிட்ட போய் பாக்க சொல்லறேன். அதே மாதிரி உன்ன சைடுல யாரு வருவாங்க டீடெயில்ஸ் எனக்கு அனுப்பு. சைட் பத்தின எந்த டீடெயில்ஸ் அவருக்கு வேணுனா லும் நீங்க தரணும். என்னாலையும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அங்க வரேன். அண்ட் ஒன் மோர் திங் பவி , பிஸ்னஸ் விஷயத்துல நான் யாருக்காகவும் எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்க மாட்டேன். உன்னோட ஆபிஸ்ல அதை தெளிவாக்கிடு .
யா !ஐ வில் !
பிசினஸ் பேசியபின்,
அதெல்லாம் இருக்கட்டும். இப்படியே பிஸ்னஸ் பார்த்தா எப்போ பெர்சனல் லைப்பை பாக்கறது?
ஏன் அதுக்கென்ன இப்போ ?
அதுக்கு என்னவா?
நீ லவ் பண்ணற ! உனக்கு வேண்ணா பிசினெஸ் முக்கியமா இருக்கலாம். ஆனா அவளுக்கு? யோசிச்சியா ! அடிக்கடி பாக்கனுன்னு தோணும். சும்மாவே உன் மேல இடிக்கனுன்னு தோணும். உன் தோளுல மூஞ்சி தேய்கனும் போல இருக்கும். பார்த்தும் பாக்காதது போல கிஸ் பண்ணுன்னு தோணும். இன்னும் ஏதேதோ தோணும்டா.
ஓகே மிஸ்ஸஸ் க்ராண்ட்மா! அதேபோல பசங்களுக்கும் என்னதோணும்?
டே! நான் ஒரு பொண்ணுடா! என்னால பொண்ணுங்கள பத்தி மட்டும் தான் சொல்ல முடியும். பசங்களோடது.ம்ம் என்னக்கு தெரியாது. பட் என்னோட ஹபீ சொல்லி எனக்கு தெரியும். ஆனா உன்கிட்ட சொல்ல முடியாது.
வை ?
அதெல்லாம் ஏ(A) நான் உன்கிட்ட பேச மாட்டேன்.
ஓகே! சொல்ல வேணாம். நமுட்டு சிரிப்புடன் முடித்துக் கொண்டான்.
ஒகே டா! எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் லொகேஷன் டீடெயில்ஸ் வாங்கிட்டு உனக்கு சொல்லறேன் பை .
புன்முறுவலுடன் அழைப்பை துண்டித்தவனுக்கு மனம் ஏனோ காற்றில் மிதப்பது போல தோன்றியது.
இனிய கற்பனைகளில் மூழ்கவிடாமல் வேலைகள் அவனை பாடாய் படுத்தியது. வழக்கம்போல இரவும் வந்தது. கயல் தானாகவே இன்று அழைப்பாளா ? என்று ஆதங்கத்துடன் அவன் காத்திருந்தான். அவனை அவன் நாயகி தவிக்க விடவில்லை.
அவளே அழைத்தாள் . அதுவும் வீடியோ காலில். அவளால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் முகத்தை பார்க்கவில்லை என்றாலும் குரலையாவது கேட்க வேண்டும்.
ஹலோ !
ஹை டார்லிங்! வழக்கம்போல குதூகலமாக குரல் வந்ததை இப்போது பார்க்கவும் முடிந்தது. அவள் கண்ணில் கண்ணீர்!
ஹை பேபி என்ன க்ரையிங்கா ?
பதில் இல்லை.
பேபி ப்ளீஸ் என்னன்னு நீ சொன்னாதானே புரியும்?
நானேதான் சொல்லனுமா?உங்களுக்கு தெரியாதா ?
நேரடியாகவே பேசி பழக்கப்பட்டவனுக்கு இவை எதுவும் புரியவில்லை.
சாரி சாரி பேபி நீ அழாத. என்ன ப்ராப்லம்னு சொல்லு. நான் சரி பண்ண பாக்கறேன். மனம் பதறியது.
மீண்டும் பதில் இல்லை.ஏதாவது மணி பிராஃபலமா ? வேற யாராவது கடன் திருப்பி கேட்டு வந்தார்களா ? இல்ல கார்த்திக். அம்மா பைன் தானே?
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை என்பதே அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.மனதிற்குள் சிரித்துக் கொண்டவள், வெயிட் வெய்ட் அதெல்லாம் எதுவுமே ப்ராப்லம் இல்ல. நீங்க ஏன் ரெண்டு நாளா ஏன் எங்கிட்ட பேசல ? உங்க குரலை கேட்காம நான் எவ்ளோ தவிச்சுப்போயிட்டேன் தெரியுமா ? உங்கள பாக்கதான் முடியல, சரி பேசகூடவா முடியாது ?
அவள் சிறிது நேரம் திட்டிக் கொண்டிருந்தாள். இவன் அமைதியாகவே இருந்தான்.
அவனிடம் இருந்தும் சிறிதும் பதில் (வினை) வரவில்லை . இவள் வாயை மூடிக் கொண்டாள் .
நான் இவ்ளோ சொல்லறேன்! ஏதாவது பதில் சொல்லறீங்களா ?
பதில் இல்ல. கேள்வி !உனக்கு என் மேல அவ்ளோ லவ்வா ? அவன் கண்கள் அவளை அத்தனை கூர்மையாக அளவிட்டது.
அதில் இருந்த உள்ளர்த்தம் அவளை குத்தியது. இதற்க்கு அவளால் என்ன சொல்ல முடியும்? இது அவளுக்கு தெரியாதே ?
அவன் தன்னிடம் பேசவில்லை என்பது மட்டுமே தெரிந்தவளுக்கு தான் அவனை காதலிக்கரோமா இல்லையா என்பதே தெரியவில்லையே ?
எனக்கு தெரியல. தலையை குனிந்து சொன்னாள் . அவள் முகத்தை தூக்கி அவள் கண்ணோடு கண் கொண்டு பேச வேண்டும் போல இருந்தது. எதையோ எதிர்பார்த்தவனுக்கு இன்றும் ஏமாற்றமே .
ப்ச் விடு. சாப்டியா ?
ம்ம்..
சரி போய் தூங்கு.
அவ்ளோதானா !
ஏன் ? வேற என்ன வேணும்?
எனக்கு சொல்ல தெரியல!
என்ன மிஸ் பண்ணறியா ?கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் கொட்டியது.
என்ன பாக்க வரியா? அவார்ட் பங்க்சனுக்கு ? பவித்ராவோட!
எப்போ ?
வர்ற ப்ரை டே !நான் டிக்கட் போட்டுட்டு சொல்லறேன். ஆபிஸ்ல லீவு சொல்லிடு.
ம்ம்.. எப்போ ரிட்டர்ன் ?
சன் டே , ம்ம் ஓகே ! உங்கம்மாகிட்டையும் சொல்லிடு .
ம்ம்..
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க காத்துக் கொண்டிருக்கும்போது சத்யாவும் முத்துவும் சந்தித்துக் கொண்டனர். ........................................

சத்யாவின் நிலைமை இன்னும் மோசமாகி போவதுபோல தியாகுவுக்கு தோன்றியது. அவருக்கு முத்துவிடம் பேச வேண்டும் போல இருந்தது. இருப்பினும் அன்று சிவா தந்தையிடம் சொன்ன ஒரு சில காரணகளுக்காக வாய் மூடி அமைதியாக இருந்தார். இருப்பினும் அவர்களை சேர்த்து வைக்க அடிக்கடி அவர்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
சத்யா!
அப்பா !
நாளைக்கு நான் என்னோட பிரண்ட் பாக்க ஸ்ரீ பெரும்புதூர் வரைக்கும் போக வேண்டி இருக்கு. நீயும் வரியா? இல்லப்பா நீங்க அம்மாவை கூட்டிட்டு போங்க. நான் வரல.
இல்லம்மா நீ எங்கையும் வெளில போகறதும் இல்ல. வீடு ஆஸ்பத்திரின்னு சுத்தற . உனக்கும் ஒரு சேன்ஜ் வேண்டாமா ?
ப்ச் பரவால்லப்பா . நான் என்ன மத்தவங்கள மாதிரியா ? நான் எங்கையாவது போனா எல்லாரும் என்னோட கல்யாண வாழ்க்கையைதானே பாக்கறாங்க . யாரோட பரிதாபமும் எனக்கு வேண்டாம்பா.
கண்களில் முட்டிய அழுகையை உள்ளிழுத்தாள் .
பெற்றவர்களுக்கும் மனம் வேதனையாகத்தான் இருந்தது.
பின்னோடே சிமியும் வந்தார்.
அழாத சத்யா. சீக்கிரமே உங்களுக்குள்ள இருக்கற பிரச்சனை சரியாயிடும். தோளில் சாய்ந்து அழுதவளை எபப்டி சமாதானப்படுத்துவது என்பதே அவளுக்கு தெரியவில்லை.
இவர்களால் செய்ய முடியாததை விதி செய்தது.
முத்துவாலும் இவளை பிரிந்து இருக்க முடிவதில்லை. ஏதோ மனதின் வைராகியத்திற்க்காக இவளை பார்ப்பதை தவிர்த்தாலும், அவளே மூளையை வண்டாக குடைந்தாள். என்னதான் மற்றவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு வந்து வந்து திருட்டுத்தனமாக மனையாளை அவளுக்கே தெரியாமல் பார்த்தாலும், உரிமையாய் அவளை அடைய வேண்டும், வாழ்நாள் முழுவதும் அவளுடன் இருக்க வேண்டும், குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் வரத்தான் செய்தது. அதிலும் அவளை போலவே அழகாக வெள்ளையாய் அறிவாய் கொஞ்சலாய் மயக்கும் சிறு பெண் குழந்தையும் வந்து அவன் கற்பனையில் சிரித்தது.
ம்ம். பொண்டாடியவே தூக்கி கொஞ்ச முடியல. எங்கேர்ந்து நம்ம புள்ளைய கொஞ்சறது என்று தன்னை தானே திட்டிக் கொண்டு குப்புற படுத்துவிடுவான். இல்லை பெரிய காளையும் சின்ன காளையும் பேசிக் கொள்வார்கள். தினமும் சென்று தனது காதலியை சந்தித்து விட்டு வரும், மாட்டுக் காளைக்கு தெரியாதா ? அண்ணனின் ஏக்கம்! அவனும்தானே அண்ணிக்காக ஏங்கி கொண்டிருக்கிறான்.
ஆம்! சத்யா இருக்கும்போது அவனை ஒரு வார்த்தை திட்டக் கூட விட மாட்டாள். காலையில் எழுந்து வந்ததுமே கட்டிக் கொண்டு கொஞ்சுவாள். விலங்குகளும் நம்முடைய அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்குபவை தானே🐂
டேய் காளை !
எனக்கு பொண்ணு பொறந்தா அவதான் உன்ன பார்த்துக்குவா! சின்ன புள்ள தானேன்னு அவளை ஏமாத்தக்
கூடாது. அவகிட்ட உன்னோட வீரத்தை காட்டின குச்சி பிஞ்சுரும் பார்த்துக்க! எல்லாம் புரிந்தவன் நன்றாகவே மண்டையை ஆட்டினான்.
ஆமா ! அடியேன்னு கூப்பிட பொண்டாட்டிய காணோமா ! அதுக்குள்ள எட்டாவது புள்ளைக்கு என்ன பேர் வைக்கறதுன்னு யோசிச்சான்னா ஒருத்தன்.
ஏ! கிழவி காலைல வந்து எங்கிட்ட வம்பு பண்ணாத போயிடு.
பொண்டாட்டிய கூப்பிட துப்பில்லை. என்ன திட்டறான்.
வாயில் முணுமுணுத்தாலும் அது அவனுக்கு நன்றாகவே காதில் விழுந்தது . பொண்டாட்டியை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது. சரி! நேரில் வர சொன்னால் வருவாளா ? வருவாள்தான். ஆனாலும் மனதிற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அவளுக்கு போன் போட்டு பார்ப்போமா?
போனில் அழைத்தான். மனசுக்கு சங்கடமாக இருக்க, அந்த வாரத்தின் விடுப்பை அன்றே எடுத்துக்கொண்டாள் . குளித்து விட்டு வந்து வழக்கம் போல அவள் துறைக்கு சம்பந்தமான புத்தகத்தை எடுத்துக் கொண்டாள் . அதில் குறித்துக் கொண்டு பாஷ்யம் சற்று ரிலாக்ஸாக இருக்கும்போது சந்தேகங்களை தீர்த்துக் கொள்வாள். அப்படி அவரிடம் பேசும்போது மனதிற்கு புது தெம்பாகவும் இருக்கும். நிறைய விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு கேஸ் ஹிஸ்டரியை படித்துக் கொண்டிருக்கும் போது , கை பேசி அழைத்தது . யார் என்று பார்க்காமலே போனை காதில் வைத்தவள், ஹலோ!
ஏஞ்சலு! சடக்கென நம்பரை பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.
இவன் போனே பண்ண மாட்டான். ஏஞ்சலுன்னு வேற கூப்பிடறான், சந்தேகமாக,
ம்ம் சொல்லுங்க, நான் சத்யா பேசறேன்.மனம் படபடத்தது. அது அவளுக்கு பிடித்திருந்தது.
அவனுக்கும் ஏதோ ஒரு புதுவித உணர்ச்சி. அதை அவள் அறிந்துவிடக் கூடாதே.
சட்டென தன்னை மாற்றியவன்
டாக்டரு,
ம்ம் சொல்லுங்க.
ஒண்ணுமில்ல, சும்மாதான். அன்னிக்கு உங்ககிட்ட உங்கள திட்டிட்டு வந்ததுக்கப்புறம் மனசே சரி இல்ல. அதான் உங்கள , பாக்க, இல்ல உங்ககிட்ட பேசலான்னு .
அன்று எடுத்தெறிந்து விட்டு போனவனா இவன்? இன்று குரல் இப்படி தந்தி அடிக்கிறதே ?
சரி வேறென்ன? வேண்டுமென்றே பிகு பண்ணாள் .
அவனுக்கு சுருக்கென்றது. எத்தனை ஆசையாக அவளுக்கு அழைத்தான். எத்தனை இனிய கற்பனை. ஒரே வார்த்தையால் மூஞ்சியில் அடித்து விட்டாள் .
வேற என்ன?
ஒன்னும் இல்ல. வயலுக்கு போறேன். பட்டென போனை வைத்து விட்டான்.
மனதிற்குள் சிரித்தவள், மறுமுறை அவனை அழைத்தாள் . அவன் கோபத்தில் எடுக்கவில்லை. ஏனோ சிறு குழந்தை போல முஞ்சியை தூக்கி வைத்துக் கொள்ளும் அவன் முகத்தை அவளுக்கு பார்க்க வேண்டும் போல தோன்றியது.
கீழே ஓடி சென்றவள்,
அப்பா இதோ டூ மினிட்ஸ், நானும் உங்களோட வரேன்.
அவளின் மலர்ந்த முகத்தை பார்த்த பெற்றோருக்கு மனம் பூத்தது.
அவன் வீட்டில் இல்லை வயலில் தான் இருக்கிறான் என்பதை சரவணன் மூலம் தெரிந்து கொண்டு அங்கேயே அவனை பார்க்கச் சென்றாள் . அப்போது மதிய நேரமானதால் எங்காவது கடையில் வாங்கி கொள்ளலாம் என்று மெயின் ரோட்டிற்கு வந்தான். அப்போது இவர்களின் கார் வரவும் சரியாக இருந்தது.
ஹலோ மாப்பிள! வாங்க, எங்க போகணும்?
ஆச்சி இன்னிக்கு சந்த வரைக்கும் போயிருக்கு . சாயந்தரம்தான் வரும். அதான் கடைல சாப்பிட்டுக்களானு..
வாங்க சேர்ந்தே போவோம்.
மூவரும் உண்டபின்னர்,
உங்களை வீட்டுல விடட்டுமா ?
இல்ல பரவால்ல நீங்க கிளம்புங்க நான் போய்க்கறேன் . டாக்டர் அம்மாவுக்கு வேற வேல இருக்கும். உங்களுக்கு எதுக்கு தொந்தரவு? குத்தலாகச் சொன்னான்.
முத்துவை பார்த்தும் பார்க்காதது போலவே இருந்து கொண்டாள் .
ம்ம் பொண்டாட்டிதானே வந்து பேசட்டும்.எப்ப பார்த்தாலும் நானேதான் வந்து வந்து பேசணுமாக்கும். மனதில் கருவினாள் .
புருஷன் இங்க நிக்கறானே! மூஞ்சில வியர்வையை தொடச்சு விடுவோம். அன்பா ரெண்டு வார்த்தை பேசுவோம், ஒன்னு தெரியுதா பாரு ராட்சசி! வாடி நீ என்கிட்ட மாட்டும்போது உன்ன பாத்துக்கறேன்.
அவள் இன்றே அவனிடம் தனியாக மாட்டினால் ................... தெரியாமல் மனதிற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தனர். (பண்ணுங்க பண்ணுங்க நாங்களும் பாக்கத்தானே போறோம்)
இருவரின் முகபாவங்களையும் பார்த்த தியாகு,
பரவால்ல இருக்கட்டும் மாப்பிள. சத்யா உங்கள ஆச்சியை எல்லாரையும் பாக்கத்தான் வந்தா. உங்க வீட்டுல கொஞ்ச நேரம் அவ ரெஸ்ட் எடுக்கட்டும். எனக்கு கொஞ்சம் வெளில போக வேண்டிய வேலை இருக்கு. அத முடிச்சுட்டு வந்துடறேன்.
சரிங்க மாமா.
அவளை அவன் வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி விட்டார். இன்னும் ஒரு வாரத்தில் பொங்கல் என்பதால், ஊர் களை கட்ட தொடங்கி இருந்தது. அறுவடை முடிந்து பயிர்கள் மூட்டைகளில் அடைக்க பட்டிருந்தது. அதில் இருந்து முத்துவுக்கும் ஒரு கணிசமான தொகை வந்திருந்தது. அதில் முதலில் சமையல் அறையையும், கழிவறையையும் சற்று மாற்றி இருந்தான்.
அதனால் முன் போல இல்லாமல், அவள் பயம் இன்றி கை கால் கழுவிக் கொண்டு வந்தாள். இருந்தாலும் படி ஏறும் போது கால் பிசகி சுளுக்கு பிடித்தது.
அம்மா என்று வலி பொறுக்க முடியாமல், உட்கார்ந்து விட்டாள் . காளைக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தவன், சத்தம் கேட்டு ஓடி வந்தான் .
என்னாச்சு என்னாச்சு டாக்டர் .
பதறி தூக்கினான். வலியை பொறுத்துக் கொண்டவள்,
ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல. சும்மாதான் கால்ல ஸ்ப்ரைன் ஆகிடுச்சு.
அப்படின்னா?
ம்ம் சுளுக்கு .
அவ்வளவுதானே , இருங்க நான் பார்த்துக்கறேன்.
என்கிட்டையேவா? என்னோட பஸ்ட் எய்ட் பாக்ஸுல மருந்து இருக்கும்.
சரி. எங்க இருக்கு.
அது கார்ல விட்டுட்டேனே ? நுனி நாக்கை கடித்துக் கொண்டாள் .
கை கட்டி தள்ளி நின்றிருந்தவன், முன் சற்று கூச்சமாக இருந்தது.
அதற்குள் ஏனோ முட்டியில் வலி வின்வின் என்றது.
அவளின் முக சுணக்கத்தில் அருகில் வந்து என்னாச்சு டாக்டர் ? அவள் கைகள் தானாகவே முட்டியை பிடித்துக் கொண்டது.
கையை தள்ளி புடவையை தூக்கினான்.
முத்து ப்ளீஸ் நீங்க வெளில போங்க. நானே பாத்துக்கறேன்.
அவனை தள்ளி இருக்க சொன்னது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
நான் ஒனக்கு புருஷண்டி பல்லை கடித்து வார்த்தையை அவன் துப்பியதில் அவளுக்கு வந்த பயத்தில் உதடுகளும், வார்த்தைகளும் தானாகவே மூடிக் கொண்டது. முட்டியில் அடிபட்டு ரத்தம் பிசு பிசுவென பாவாடையில் ஒட்டிக் கொண்டது.
ஓடி சென்று வேட்டியை கிழித்து டெட்டால் போட்டு அந்த இடத்தை சுத்தப் படுத்தி தேங்காய் என்னையும் மஞ்சளும் சேர்த்து போட்டான்.
அடுத்து ஏதோ ஒரு எண்ணையை எடுத்து காலில் உருவினான். அவளால் வலி பொறுக்க முடியாமல் அவன் புஜங்களையே அழுத்தி பிடித்துக் கொண்டாள் . அவள் அழுத்திதான் பிடித்தாள் என்றாலும், அந்த முரட்டு காளைக்கு வலி ஒன்றும் தெரியவில்லை.
இறுதியில் அவன் ஒரு இழு இழுத்து சுளுக்கை எடுத்ததில் வலி தாங்காமல், மூர்ச்சை ஆகி விட்டாள் .
வியர்வை பூத்திருந்த முகத்தில் லேசாக தண்ணீர் அடித்தான். அதில் கண் விழித்தவள்,
என்னால தாங்க முடியலடா, இனிமே எனக்கு வேணாம். குழந்தை போல சிணுங்கினாள் .
சரி வேணாம். எதுக்கு இனிமே அதான் சரியாகிடுச்சே ?
வாட்?
பின்ன கால நல்லா உதறி பாருங்க. காயம் பட்ட கால ஒன்னும் பண்ண வேணாம். மெதுவாக காலை உதறி பார்த்தாள் . ஆமா ! ஒண்ணுமே இல்ல. ரொம்ப தேங்க்ஸ் முத்து . அவளின் நன்றிகளை அவன் காதில் வாங்காதது போல முகம் கழுவ சென்று விட்டான். அவள் மயக்கத்தில் இருந்த போதே அவளுக்கு குடிக்க
ஜூஸ் வாங்கி வைத்திருந்தான். பார்ரா நம்ம வீட்டுக்காரனை! மனதில் மெச்சிக் கொண்டவள், மெதுவாக ஜூஸை காலி செய்தாள் . அதற்குள் முகம் கை கால் கழுவி வந்தவன்,
என்ன டாக்டர் இப்படி கைய அழுத்தி வச்சிருக்கீங்க ? பாக்கறவங்க என்ன நினைப்பாங்க. ரெண்டு நாளைக்கு நான் சட்டையோடவே சுத்தணும்.💕😜💕💕💕💕😍
ஏன் பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க ?
ஏன் உங்களுக்கு தெரியாதா ?
ம்ம் தெரியாதே !
ம்ம் என்ன முத்து ஊருலேர்ந்து பொண்டாட்டி வந்தாளான்னு கேப்பாங்க.💕💕
ஆமான்னு சொல்லுங்க.
அயோ என்று தலையில் அடித்துக் கொண்டான்.
பொறுக்க முடியாமல், ஏங்க நீங்க எப்படிங்க டாக்டர் ஆனீங்க !
அவளுக்கு அவன் மட்டம் தட்டுவதில் கண்ணீர் வந்தது.
அதில் பதறியவன், டாக்டர் இதுக்கெல்லாமா அழுவாங்க ?
எனக்கு தெரியலைன்னுதானே.............
அதற்குள், அவள் வாயில் விரலை வைத்து, புரசுனும் பொண்டாட்டியும் ரொம்ப நாள் கழிச்சு பார்த்தா ?
ம்ம்..
சட்டென அவன் மூச்சு காற்று அருகில் வரவும் அவளுக்கு புரிந்தது.
சிவந்த முகத்தை திருப்பிக் கொண்டாள் .
டாக்டர் குரல் மயக்கியது.
ம்ம்! எனக்கு தாங்ஸ் சொன்னீங்க.
ம்ம் !
எனக்கு தாங்ஸ் வார்த்தைல வேணாம். சொல்லிக் கொண்டே இருந்தவன் அவளின் முக மாற்றத்தில் அவள் உதடுகளை சிறை செய்தான். 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💋💕💕💕💕
அவள், அவன் புஜங்களை பற்றிக் கொண்டதற்கு பதிலாக அவன் அவள் மெல்லிடையை இறுக்கி பிடித்தான். அதை அவள் பொறுத்துக் கொண்டாள் . எத்தனை நேரம் அந்த மோன நிலை இருந்ததோ அவர்களுக்கு தெரியாது. பல மாதங்களாக தவித்திருந்த இருவருக்கும் அந்த நேரத்து அந்த தாபம் தேவையாகத்தான் இருந்தது. இருவருமே அடுத்த நிலைக்கு தயாரானதை அந்த நேரம் உணர்த்தியது. மனதிற்குள் ஏக்கங்கள் இருந்தாலும் முத்துவுக்கு மனதில் பல வலிகள் இருந்தன. அதை இவளால் தான் போக்க முடியும் என்பதை அவன் அறிவான். இருப்பினும் திடீர் திடீர் என்று வரும் அவனின் தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் தன் மனதை உணர்த்த முடியாமல் தடுத்தது. அவனின் கோபத்திற்கு பயந்தும், வள்ளியை நினைத்தும் பயந்திருந்தவள் அவனிடம் தன் மனதை ஏக்கத்தை சொல்லாமல் வைத்திருந்தாள் . இவர்களை இப்படியே விட்டால், தனக்கு வேலை இல்லாமல் போய் விடும் என்று காதல் தேவதை இருவருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. இயற்கையும் அதற்க்கு துணை செய்தது.

அப்படி எல்லாம் இல்லை மக்களே! சத்யாவின் அப்பா கார் சத்தம் இருவரையும் பிரித்தது . .. வெற்றிகரமாய்😜😉👌
நாம் இவ்ளோ கஷ்டப்பட்டா இந்த சின்ன சத்தம் வந்து இப்படிபன்னிடுச்சே... நொந்து போன காதல் தேவதையுடன் 🤦‍♀️

மீண்டும் வருவாள் தேவதை.............
 
Last edited:
Top Bottom