19
குழந்தையின் ‘திறமையை உலகறியச் செய்கிறேன் பேர்வழி’ என உந்தித் தள்ளும் பெற்றோர் ஒருபுறம், குழந்தைகளை வயதுக்கு மீறிய வசனங்களையும் உரையாடல்களையும் பேசுமாறு கூறி அவர்களைப் பிஞ்சிலேயே பழுக்கச் செய்யும் பெற்றோர் ஒரு புறம், இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக இருக்கும் இன்னொரு பெற்றோர் - அவர்கள்...
18
அர்ஜுனும் ரோஜாவும் ஜோடியாக இணைந்து பதிவிட்ட காணொளிகள் வரவேற்பைப் பெறவே, அதைத்தொடர்ந்து செய்யலாயினர். முதல் காணொளியில் மிக எளிமையான வீட்டில் நடக்கும் சிறுசிறு விஷயங்களாக ஆரம்பித்தனர்.
அதன்படி அவர்கள் பதிவிட்ட சிறுசிறு காணொளிளின் சாராம்சம் பின்வருமாறு :
• அர்ஜுன் கூடத்தில் அமர்ந்து அன்றைய...
17
அன்று வழக்கம்போலக் கப்பிள் டிப்ஸ் வழங்கிவிட்டு அமர்ந்த ரோஜாவுக்கு இரண்டு நாட்களில் வரப்போகும் தன் கணவனின் பிறந்த நாள் நினைவுக்கு வந்தது. அதற்கு என்ன வாங்கலாம் என யோசித்தவள் எதுவும் கிட்டாமல் போகவே, தனது கிங்காங் நண்பர்களிடம் அதாவது பின்தொடர்பவர்களிடம் கேட்கலாம் என முடிவு செய்தாள்.
அதன்படி...
அத்தியாயம்-10
படபடவென பாத்திரத்தை விளக்கி விட்டு காப்பியை போடத் துவங்கினார் சமுத்திரம்.. “அப்பா.. அங்க இருக்க வாளியில அம்மா தண்ணீ கலக்கி வச்சிருக்குறாங்க..” என ஜெயா கூறவும், “அவளை எவன் புண்ணாக்கை போட்டு கலக்க சொன்னான்.. புண்ணாக்கு விக்குற விலை தெரியுமா அவளுக்கு..” என திட்டி கொண்டே தண்ணீர்...
அத்தியாயம்-9
வலது கரத்தின் நரம்புகள் இணையும் கழுத்துப் பகுதியில் வலி சுர்ரென்று பிடிக்க, “எனக்கு ஒன்னும்மில்ல ப்போ.. நம்ம இன்னொரு நாளைக்கு போவோம்.. எனக்கு உறக்கமா வருது..” என மீண்டும் தலையணையில் தலை சாய்க்க சென்ற புவனேஸ்வரியை வலியோடு நோக்கினார் வேலப்பன்..
“எல்லாம் இந்த கிறுக்கியால வந்துது..”...
அத்தியாயம்-8
மறுநாள் விருப்பமே இல்லை என்றாலும் வீட்டில் கூறிய அனைத்தையும் மௌனமாய் செய்தாள் புவனேஷ்வரி.. ஒரு குடும்பமே வந்திறங்க, உபசரிப்பிற்கு பஞ்சமே இல்லாமல் முன் நின்று கவனித்துக் கொண்டார் வேலப்பன்.. தம்பிகள் இருவரும், “அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்” என்பது போல எப்பொழுது...
அத்தியாயம்-7
வழக்கம் போல பொழுது புலர, வாசலில் கோலம் போட வந்த புவனேஷ்வரி திண்ணையில் தூங்கி கொண்டிருந்த வேலப்பனை எழுப்பிவிடக் கூடாது என தள்ளி நகர, வாசலில் போட்டிருந்த சாக்கில் இடறி அருகில் இருந்த சுவற்றில் கால் இடித்து கொண்டது.. ரத்த ஓட்டமே இன்றி நரம்புகளும் எழும்புகளும் பின்னிக் கிடந்த விரலில்...
16
அதன்படி, மறுநாள் மாலை எந்த வேலையும் செய்யாமல், வீட்டை சுத்தம் செய்யாமல், பாத்திரங்களையும் துலக்காமல், வீட்டில் விளக்கு ஏற்றாமல், ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தார்.
முந்தைய நாள் நடந்த நிகழ்வுகளால் சற்று துணுக்குற்ற நாராயணன்; தன் மகளைத் தன் மனைவி எங்கே தவறான பாதையில் வழிநடத்தி விடுவாரோ என...
15
சத்யாவின் வீட்டில் குடும்பத்தைக் கவனிப்பதில் அவள் பின்தங்கியிருந்தால், இங்கே மூர்த்தி வேலைக்குச் சென்ற இடத்திலும் இதையே பிரதானமாகச் செய்து கொண்டிருந்தான்.
அன்று மதியம் சமைத்துக் கொண்டிருந்த சாரதாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் என எடுத்து பார்க்க, அவர்களின் உறவினர் ஒருவர் தான்...
14
அதைப் பார்த்த சத்யா, மயங்கிவிழாத குறைதான். மூக்கின் மேல் விரலை வைத்து விட்டாள். “நான் அவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுறேன், அங்கே 10 ஆயிரம் லைக் தாண்ட மாட்டுது.. இங்கே அப்படி என்ன இருக்குது அப்படின்னு ஒரு லட்சம் லைக் கொடுத்திருக்காங்க..” என அந்தக் காணொளியை பார்க்க, அது ஒரு இளம் பெண்ணின்...
13
இறுதியாகக் குறிப்பிட்ட நாளில் இருவரும் சேர்ந்து “நறுமுகையே... நறுமுகையே...” பாடலை பாடி பதிவேற்றுவது என உறுதிசெய்யப்பட்டது. இருவரும் அந்தப் பாடலை பலமுறை கேட்டு, தங்களுக்குள் பயிற்சி செய்து வைத்திருக்க, அந்த நாளும் வந்தது.
“நறுமுகையே... நறுமுகையே..
நீ ஒரு நாழிகை நில்லாய்...
செங்கனி ஊறிய வாய்...
12
இந்தக் கிங்காங் எனும் பதத்திற்கு நேரடிப் பொருள்தான். இது ஒரு வகை மனிதக் குரங்கு. அதாவது மனிதனைப் போன்றே தான் இருக்கும்; ஆனால் அதன் செயல்பாடுகள் தனித்துவமாக இருக்கும்; தன்னைச் சுற்றி இருக்க எவரையும் காயப்படுத்துவது, நோகடிப்பது குறித்துச் சிந்திக்காது. பகுத்தறிவும் கிடையாது. அது போன்ற ஒரு...
11
எப்போதும் பள்ளி ஆண்டு விழாக்களில் அவளது நடனம் இடம் பெற்றால் அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்னும் நோக்கில் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கி வைத்திருந்தார் சாரதா. மேலும் எந்த வேலைகள் இருந்தாலும் ஆண்டு விழாவிற்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் தவறாமல் சென்று விடுவார்.
வெண்பா பூப்பெய்திய பிற்பாடு அவளின்...
10
அவளது மௌனம் அவரது கோபத்தை மேலும் அதிகரிக்க, “நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கிறேன்... நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” என அடிப்பதற்குக் கையை ஓங்கவும், அதற்குள் குறுக்கே வந்தார் சாரதா.
“என்னங்க... தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ணை இப்படித்தான் அடிக்கிறதா?? இப்போ என்ன?? இந்த ஒரு தடவை மார்க்...
9
எப்போதும் முகத்தைக் காட்டாமல் தன் கையில் குறிப்பிட்ட பொருள்களை வைத்துக் கொண்டே “இதை இப்படிப் பின்ன வேண்டும்... இதை இவ்வாறு வரைய வேண்டும்...” எனக் குரல் மட்டும் தெரியும் வகையில் விளக்கிக் கொண்டிருப்பவள்; அன்று முகத்திற்கு ஒப்பனை செய்துகொள்வது குறித்து ஒரு காணொளியை பதிவேற்ற நினைத்தாள்...
8
ஒருகட்டத்தில் அனைத்தையும் அறிந்து தேர்ந்தவள் முதன்முதலாக முகத்தைக் காட்டாமல் குரலை மட்டும் பதிவு செய்து, பதிவேற்றம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ‘குயில்’ சேவைக்குள் நுழைந்தாள்.
தனக்கு மிகப் பிடித்த “தூதுவளை இலை அரைச்சு...” என்னும் பாடலின் இசையைத் தேர்வு செய்தவள்; தன்னால் இயன்ற அளவு...
7
அடுத்த மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாயில் போனை வாங்கிக் கொண்டு, அந்தத் துண்டை சமாளிக்க இருவரும் அதிகபட்ச வேலை செய்து கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. பிரபு தனது சம்பளத்தில் 3 ஆயிரம் ரூபாயும் அலுவலகத்தில் அட்வான்ஸ் வாங்கிய முன்பணமாக வாங்கிய 2,000 ரூபாயும் எனத் தன் பங்கிற்கு 5000 ரூபாயை...
6
அன்றைய தினம் முழுவதும் பல வகையான மரங்களை அறுத்தல், அவற்றை லாரியில் ஏற்றுதல் முதலிய பல வேலைகளை வெகு சிரத்தையுடன் நிறைவேற்றிவிட்டு மாலை நேரத்தில் தேநீருக்காகச் சற்றே இளைப்பாறுதலுடன் அமர்ந்திருந்தான் மூர்த்தி.
“யண்ணே.. இந்த மாசத்தோட நீங்க போட்டுருக்கப் பத்தாயிரம் ரூபா சீட்டு முடியப் போதுல்லா...
5
அனைவரும் அமைதியாக இருக்க அவ்விடத்தில் குச்சி விழுந்தால்கூட ஒசைகேட்டும் திறத்தைய நிசப்தம் நிலவியது. அது ‘குண்டூசி கீழே விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும்’ என்னும் உவமைதான்; ஆனாலும் இவர்கள் இருப்பது மணல் தரையிலல்லவா?! ஆகவேதான் சூழ்நிலைக்குத் தக்கதாக வளைத்துவிட்டேன்.
அந்த அமைதியைக் கண்ணுற்ற...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.