அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
நீ என்னை அழுக்கா உணரவச்ச கிருஷ்ணா என்ன புழுவா உணரவச்சான் புரிஞ்சி இனி நல்லா நடந்தா சரி
Thanks ma ❤️❤️வாவ் அழகான காதல் கதை. அய்யோ இல்ல இல்லனு சொல்லி பத்து காரணம் சொல்றானே 🤣🤣🤣🤣எனக்கு இன்னும் நிறைய காரணம் சொல்லுங்க கேக்க ஆசயா இருக்கு சீக்கிரமே முடிச்சீட்டீங்களே. கிருஷ்ணாவோட கதை கொஞ்சம் உணர்வு பூர்வமானது. ஆயிரம் முத்தம் போதுமா. உனக்கு ஏன் ரகு மூக்கு உடைஞ்சி கீழ விழுந்தது பத்தலயா அதை தூள் தூளா போற வரைக்கும் வாங்கி கெட்டனுமா. கல்யாணம் நிறுத்த சொன்ன காரணங்கள் சிரிப்பா வந்தது😂😂😂நைஸ் எபி அக்கா
Thanks dear sister ❤️❤️❤️வெரி வெரி பவர்புல் ஸ்டோரி அக்கா இது எல்லா வயதினரும் படிக்கனும் னு நான் ஆசபடுரேன். எனக்கு பிடித்த பேர் கிருஷ்ணாக்கும் பிடிச்சிருக்கு இர்வின் 😜😜எதிர்பார்த்ததை விட ரொம்ப அருமையா மாலையை தொடுத்துருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சி அக்கா.
Thanks maமுட்டை பவுடர் னு நிஜமாகவே இருக்கா. கிருஷ்ணா சொல்ற ஒவ்வொரு விஷயமும் நச்.
Yes yes 😂நீ என்னை அழுக்கா உணரவச்ச கிருஷ்ணா என்ன புழுவா உணரவச்சான் புரிஞ்சி இனி நல்லா நடந்தா சரி
Thanks for your beautiful review dearரொம்ப பிடித்த கதை சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ள கதை விறுவிறுப்பான ஆக்ஷன் காதல் அரசியல் கலந்த சமூக சிந்தனை உள்ள கதை. மசாலா டீ செம்மயா இருந்தது அக்கா.
ஒரு சாதாரண மனிதன் பாஸ்ட் டிராக் ட்ரைவ் பண்ற சாதாரண மனிதன் அவன் காதல் மனைவி அவன் தோழர் இயக்கம் அவனோட கஸ்டமர் இதனோடு தான் கதை வலம் வருது.
கிருஷ்ணாவோட ஹோம்டூர் கண்டிப்பா சுத்தி பாருங்க ரொம்ப நல்லாருக்கு அதிலும் உரம் பற்றிய விஷயம் ஆச்சரியமாக இருந்தது. கதையில் வரும் ஒவ்வொரு டயலாக்கும் ஆஸம் டயலாக்ஸ் 👏👏👏👏👏
ஒரு மனுஷன் பிறக்கும் போது ஏழையா பிறந்தா அது அவன் தப்பு இல்லை சாகும் போதும் ஏழையாவே செத்தா அது அவனோட தவறுதான்👌👌பாஸ்ட்டிராக் வண்டி ஓட்ரவன் லாரிக்கு ஆசபடலாமானு ஒரு டயலாக் வரும் உண்மையில் மேல இருக்கிறவன் முன்னேறவிடாம தடுக்கும் விடயம் நிஜத்திலும் நடக்க தான் செய்கிறது.
தோழர் இயக்கம் வியப்பு தான் நேர்மை உண்மை மட்டும் உள்ள இயக்கம். பால் பவுடர் போல முட்டை பவுடர் 😲😲😲ஆச்சர்யங்கள்.
இந்தியா வளர்ந்த நாடாக மாற்ற அவனோட திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு விஷயத்தையும் அவன் சொல்லும் விதம் (கிரேடிட் பாலா அக்கா❤️❤️❤️❤️❤️) அவனோட எண்ணங்கள் லட்சியங்கள் எல்லாம் சூப்பர். அப்ட்ரால் ஒரு டிரைவருக்கு என்ன தெரியும்னு நினைத்த இர்வினையும் வாய் பிளக்க வைத்து அவளையே பேச வைத்து ஆல் தி பெஸ்ட் சொல்ல வைத்துனு கிருஷ்ணா ஸ்கோர் பண்றான்.
கிருஷ்ணா ஷாமா பொண்ணு காதல் ❤️❤️❤️அவங்க காதல் வசனங்கள் அனைத்தும் ரசனை. ஒரே பாட்டை நாள் முழுவதும் கேக்க முடியுமானு கேட்டா நிச்சயம் முடியும் தான் நான் சொல்வேன்.
அப்புறம் இர்வின் சத்யா விஜி ரோஷன் பார்ட்ஸ் நைஸ்லி அதுவும் அர்த்தம் தெரியாம பாட்டு பாடுவது பற்றி இர்வின் சொல்வது வெரி வெரி ட்ரூ அண்ட் நைஸ்.சத்தியமா பால் அசைவம்ன்றத இன்னும் நம்ப முடிலக்கா 👌
சோம்நாத் பற்றி சொல்லியே ஆகனும் அவருக்கு சட்டர்டே பாக்கெட்ல தான் எப்போதும் இருக்கும்🤣🤣🤣🤣🤣மஹா காதல் ஒன்றை மட்டுமே யாசித்து சோம்நாத்தோடு சகலத்தையும் துறந்து வந்தவள் பாவம். மரகதம் நச்சுனு ஒரு டயலாக் சொல்வாங்க ராப்பீஷ் நாய் கடிக்க வந்தா சுட்டு கொல்லனும்னு👏👏👏
முன்னா மோட்டூ குப்பைகளுக்கு தகுந்த தண்டனை தான் ஆனால் பொட்டுனு போயிருக்க கூடாது எத்தனை உயிர் வதை செய்திருப்பார்கள்.
டிராகன் புரூக்கு(ட்) உடைஞ்ச மூக்கு ரகு அவனோட ரொம்ப நல்ல கொள்கையால ஒரு உயிர் தப்பித்தது அந்த வகையில் 👍ஆனால் அதையே சாக்கா வச்சு மூக்கு உடைச்சிக்க வந்து உடைந்து போன மூக்கை இன்னும் உடைய வச்சு அழுக்கான புழுவாய் துடித்து திருந்துவது சுபம் தான்👍👍👍He is a real man னு சொல்லும் போது ஹாப்பியா இருந்தது.
காஷ்மீர் பற்றிய விஷயங்கள் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றியதான விஷயங்களை இந்தளவுக்கு அழகா யாராலும் சொல்ல முடியாது அக்கா அந்த பார்ட் ரொம்ப பிடிக்கும் எனக்கு.
இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் சொல்ல ஆசைதான் அக்கா. ஒவ்வொரு விஷயங்களையும் அவ்வளவு அழகா தொடுத்துருக்கீங்க. கடைசி மூணு பார்ட்டும் டச்சிங் எபிஸ். அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு நிச்சயம் உங்கள் நேரம் வீணாகாது.
சகாப்தம் தள போட்டி கதை சிவப்பு நிறத்தில் எழுதி செந்நிற குருதி எங்கும் சிந்தனை பாய்த்து சிந்திக்க வைத்து புரட்சி செய்யும் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா❤️
Thanks for your beautiful review sister ❤️🙏#கதை_விமர்சனம்
பாலாசுந்தரின் பாஸ்ட் டிராக்.
தலைப்பும் புதுமை,கதையும் புதுமை.
கிருஷ்ணா கதையில் நம்மை கவர்கிறான்.என்ன ஒரு தெளிவு,புத்திசாலித்தனம்!ஷாமாவும் சளைத்தவளில்லை.அருமையான ஜோடி.
நிகழ்காலமும் கடந்த காலமும் பர பரவென கதையை நடத்தி செல்லுது.மோட்டுவின் வெறியும் ரகுவின் மோகமும் ஷாமாவை என்ன செய்யுமோ என பதைபதைக்க செய்யுது.ரகு தன் மரமண்டையை புரிந்து கொள்ளும் இடங்கள் சபாஷ் போட வைக்குது.கிரிஷ்ணாவின் எண்ணங்களும் அவன் அறிவும் வாயை பிளக்க செய்கிறது.சென்ஸிட்டிவான மதத்தை பற்றிய கருத்துகள் வாவ்!ராமஜெயம் மாதிரி அல்லாவை துணைக்கழைத்து எழுதும் ஷாமா பதற வைத்துவிட்டாள்.கிரிஷ்ணாவின் மன வலிமை பாராட்ட வைக்குது.அசத்திட்டிங்க பாலா சுந்தர்.