Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அவன் திமிர் கொண்டு...

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
வண்ணத்துப்பூச்சியின் துள்ளளோடு

ஓடிக்கொண்டிருந்த சிறுமொட்டு

மலர்ந்து பூப்பெய்திட,

அன்றும் இருந்தது அங்கே நிற்காதே!

வெளியே செல்லாதே! உள்ளே செல்!

அன்னார்ந்து பார்க்காதே! தலை தாழ்த்தி நட...

இன்னும் இன்னும்... ஏராளம்...

பூட்டிவைத்த அன்றும் வந்தார்கள்

ஒன்றிரண்டு ராவணர்கள்

பார்வையில் கள்ளம் கொண்டு

சீதையின் துகிலுரிக்க...

தன்னையெரித்து தூய்மை நிரூபித்தாள்

பத்தினி ஒருத்தி...

பல யுகங்கள் கடந்து....

பருவமென்ன? ஒரு காரணமா எங்களுக்கு

மென்மையின் வடிவம்கொண்டு

பால்மனம் கூட மறவா

பச்சிளம் சிசுக்களும் மிச்சமில்லை,

பருவமங்கைகளும் சொச்சமில்லை,

நாடிதளர்ந்து துணையின்றி அமரமுடியாத வயதில்

பிறப்பிலே பெண் என்று தெரிந்தால்

உள்ளுக்குள் வக்கிரமனம் கொண்டு

ஆறுதலாய் வருடுவதுபோல்

பொய் தீண்டல்கள் கொண்டு

புனிதமான தாம்பத்யத்தை கொச்சை படுத்தும்

பல ராவணர்கள் வாழும் இதே பூமியில் தான்

இன்று நான்கில் ஒரு பங்கு நல்ல ஆண்மகன்

இருப்பினும்

புதுமை பெண்னாய் மாற எம்மை

அழைத்திட்ட முண்டாசுகட்டிய பாரதியே

எம் பெண்கள் நிலை கண்டு ரத்தகண்ணீர்

வரவில்லையோ உமக்கு...?

தலைநிமிர்த்தி நெஞ்சுரம் கொண்டு

நடந்திடுதல் மட்டும் ஆணுக்கு அழகல்ல...

சொந்தமில்லையென்றாலும் மங்கையவளை

பாதுகாப்பதிலே நிற்குமடா

ஆண்மகனின் தலைசிறந்த கர்வம்...

என்று ஏட்டில் எழுதிவைக்க மறந்ததை எண்ணி

வெட்கி தலைகுனிக்கின்றீரோ?

என் செய்வேன் இப்புவியில் இந்நிலை மாறிட...

என்று தெரியாமல் தவிக்கின்றீரோ?...

ஆயிரம் ராவணர்கள் உருவான நேரம்

ஒரு பாரதி கூட முலைக்கவில்லையோ

அவன் திமிர் கொண்டு..."
 

New Threads

Top Bottom