Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed அவன் பெயர் ஆதித்தன்

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 1


இரவுச் சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி பயணப்பட ெதாடங்கியிருந்தான். பகல் முழுவதும் இரை தேடி பறந்து களைப்படைந்த பறவையினங்கள் தங்கள் கூடுகளில் உறங்க தொடங்கியிருந்தன. ஊரும் நாடும் உறங்கி கொண்டிருந்த அர்த்தஜாம வேளையில் சில வண்டுகளின் ரிங்காரம் பிண்ணனி இசையாக ஓ லித்து கொண்டிருந்த இரவு பொழுதில் மதுராபுரியின் அரண்மனையில் இரண்டு பேர் உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் மதுராபுரியின் ராஜகுருவும் தலைமை அமைச்சருமான பிரம்மராயர். இன்னொருவன் அவரது அந்தரங்க உதவியாள். அறையில் தீபத்தின் ஓளி மங்கலாக விழுந்து பரவிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில்ராயரின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திருப்பது அரைகுறையாக தெரிந்தது.
ராயர் தன் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தார். "என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை" என்றார் ராயர்.

"இளவரசர் மன்னனாக பதவியேற்று ஒரு வாரம் கடந்து விட்டது.மன்னரை வேட்டைக்கு அழைத்து சென்று பிணமாக அழைத்து வந்திருக்கிறார் தளபதி நஞ்சுண்டன்.கானகத்தில் வழி தவறிய மன்னரை புலி தாக்கி கொன்றதாக தளபதி கூறுவதை நாடும் நம்பவில்லை.நாமும் நம்பவில்லை.அது அப்பட்டமான ஒரு கொலையென்றே மக்கள் கருதுகிறார்கள்.அதனால்தான் அவசர அவசரமாக இளவரசரை மன்னனாக்கினீர்கள்.முதல் வழக்காக மறைந்த மன்னரின் மரணத்தை எடுத்திருக்க வேண்டும். நஞ்சுண்டனை தண்டித்திருக்க வேண்டும்.மதியுக மந்திரியான நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.உங்கள் அமைதியின் பொருள் எனக்கு புரியவில்லை! "என்றான் ராயரின் உதவியாள் புகழேந்தி.!

பிரம்மராயரின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.

"புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்.மன்னரை வஞ்சகமாக கொன்றுவிட்டு இளவரசரை கைப்பாவையாக்கி மறைமுகமாக தன்னுடைய ஆட்சியை செலுத்த நினைக்கிறான் நஞ்சுண்டன்.அதனால்தான் இளவரசரை மன்னனாக்கி யாக வேள்வி என்ற பெயரில் நஞ்சுண்டன் அவரை நெருங்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அரசருக்கு உலகம் புரியாத பால்ய வயது. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வயது .அவரைதீய பழக்கங்களுக்கு அடிமையாக்குவது எளிது.மது, மாது என்று ஏராளமான விசயங்கள் அவர் மதியை கெடுக்க இருக்கின்றன.அரசரோடு இயற்கை காட்சிகளை ஓவியமாக தீட்ட நம் அரண்மனை ஓவியரும் உடன் சென்றிருக்கிறார்.மன்னரின் மரணத்தின் போது அருகே இருந்தவர் அவர்தான்.அது மனித தாக்குதலா இல்லை நிஜமான புலியின் தாக்குதலா என்பதை அவர் வரைந்த ஓவியம் உறுதி செய்யும்! "

"அவர் பிறவி ஊமையாயிற்றே? "

"ஆனால் அவரின் ஓவியம் உண்மையை பேசுமே? அவர் என் கண்களை நேருக்கு நேராக பார்க்க மறுக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு உண்மை தெரிந்திருக்கிறது. அதை சொல்லவிடாமல் அவரது பிறவிக் குறையையும் தாண்டி வேறு ஏதோ ஓன்று தடுக்கிறது."

"நஞ்சுண்டன் அவரை விலைக்கு வாங்கியிருந்தால் அல்லது அச்சுறுத்தியிருந்தால் அவர் பொய்யான விசயத்தைதானே வரைந்திருப்பார்? "

"அதற்கும் வாய்ப்பு இருக்கிறதுதான்.ஆனால் அதை கண்டு பிடிக்கவல்லவன் ஒருவன் இருக்கிறான். அவனால் மன்னரின் மர்ம மரணத்தை கண்டறிய இயலும்."

"யார் அந்த மதியூகி? உங்களை விடவும் வல்லவனா? "

"ஆம்.என்னை விடவும் வல்லவன்தான்.நீரில் மீன் சென்ற தடத்தையும் துல்லியமாக அறியும் ஆற்றல் பெற்றவன். நான் அவரது ஓவியங்களை பார்வையிட்டு விட்டேன். என் அறிவுக்கு எட்டியவரை அந்த சித்திரங்கள் மன்னரின் இறுதி நேரத்தை பிரதிபலிப்பதாகவே தோன்றுகின்றன. அவற்றுள் புதைந்திருக்கும் மர்மத்தை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் ஒருவனால் அது முடியும். அவன் பல்துறை வல்லுநன் ."

"யார் அவன்? "

"அவனொரு கள்வன்! "

"என்ன கள்வனா? "

"பிறப்பால் கள்வன்.உள்ளத்தால்உயர்ந்த மனம் கொண்டவன்.அவனை தவிர வேறு யாராலும் இந்த முடிச்சை அவிழ்க்க முடியாது."

"ஒரு கள்வனை நீங்கள் புகழ்ந்து பேசுவது எனக்கு வியப்பை தருகிறது! "

"நான் அவனது திறமையை நேரிலேயே கண்டிருக்கிறேன்.நாளை அரசவையில் ஓவியர் வரைந்த மன்னரின் இறுதி காட்சிகள் அடங்கிய ஓவியம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அந்த ஓவியங்களை பார்வையிடும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து கொள்ளட்டும்.அதை பார்வையிடும் மக்களே நஞ்சுண்டனின் மீதான தீர்ப்பை எழுதட்டும்.நஞ்சுண்டன் மீது எந்த சந்தேகமும் மக்களுக்கு வரவில்லையென்றால் அவனே தளபதியாக தொடரட்டும்.அவனை அப்புறப்படுத்தும் வழியை பிறகு யோசிப்போம்.நஞ்சுண்டன் மீது குற்றமிருப்பதாக மக்கள் கருதினால் அவன் கதை முடிந்தது. மக்களோடு மக்களாக நம் கள்வர்புரத்து கள்வனும் இருப்பான்.அவனது பார்வையில் யாரும் தப்ப முடியாது.நஞ்சுண்டனை தகுந்த ஆதாரங்களோடு அவனே மடக்குவான்! "

"நஞ்சுண்டன் சாமார்த்தியமாக ஆதாரங்களை மறைத்திருந்தால்? "

"நம் கள்வன் நஞ்சுண்டனின் வாயிலிருந்தே ஆதாரங்களை கக்க வைத்து விடுவான்.குற்றவாளிகள் ஏதேனும் ஒரு தடயத்தை தாங்களே அறியாமல் விட்டு செல்வதுதானே வழக்கம்? அந்த தடயத்தை நம் கள்வன் எளிதில் கண்டு பிடித்து விடுவான்.! "

"பேச்சினூடே கள்வன் என்றே குறிப்பிடுகிறீர்களே? அவன் பெயர்தான் என்ன? "

"நான் கள்வன் என்று குறிப்பிடுவது பொருள்களை கொள்ளை கொண்டதால் அல்ல.மனங்களை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று அழைக்கிறேன். அவன் பெயர் ஆதித்தன்! "என்றார் ராயர்.

அதே நேரம் அறையின் கதவுக்கு வெளியே தொங்கிய திரைச்சீலையின் வெளிச்சம் ஒரு நிமிடம் தடைபட்டு தொடர்ந்தது.

ராயர் தன் உதட்டில் கையை வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தார்.

கதவுக்கு பின்னால் நின்று உரையாடலை கேட்டு கொண்டிருந்த ஒற்றனொருவன் நஞ்சுண்டனின் மாளிகையை நோக்கி நகர்ந்தான்.

"நம் சம்பாசணையை கேட்டு கொண்டிருந்த ஓற்றன் கிளம்பி விட்டான்.இனி நஞ்சுண்டன் உசாராகி விடுவான்! "

"கவலை வேண்டாம்.இனி நம் கையில் எதுவுமில்லை.இனி நடக்க போவது ஆதித்தனுக்கும் நஞ்சுண்டனுக்குமான யுத்தம்.நாம் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்கள் மட்டுமே! "

"உங்கள் இல்லத்திற்குள்ளேயே ஒற்றனா?"

" அதிகாரம் தனக்கு கீழே உள்ளவர்களையும் தனக்கு சமமாக உள்ளவர்களையும் சந்தேகிக்கும் சக்தி படைத்தது.நாம் அடுத்தவர்களை கண்காணிக்கும் போது நம்மையும் யாராவது கண்காணிக்கத்தானே செய்வார்கள்?"

"நீங்கள் ஆண்டவனை சொல்லவில்லையே?"

"ஆண்டவர்கள் தான் சந்தேகிக்கிறார்கள். நாம் நம்மை நம் பதவியை காப்பாற்றி கொள்ள அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டியதிருக்கிறது."

"பூடகமாக பேசுகிறீர்கள்"

"பு ரியாத வரை நல்லது. ஆதித்தன் நாளை வரப்போவதை அறிந்தவுடன் நஞ்சுண்டனின் தூக்கம் தொலைவது உறுதி " என்ற பிரம்மராயர் புன்னகைத்தார்.

நஞ்சுண்டனை தேடி இரு ஆபத்துகள் வெவ்வேறு வழிகளில் விரைந்து கொண்டிருந்தன.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 2


அரண்மனையில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஓட்டு கேட்டு கொண்டிருந்த ஓற்றன் நஞ்சுண்டனின் மாளிகைக்குள் வெகு வேகமாக நுழைந்தான். தன்னை தடுத்த காவலர்களிடம் தான் மிக முக்கியமான செய்தி ஓன்றை கொண்டு வந்திருப்பதாகவும் தளபதியை உடனடியாக சந்தித்தாக வேண்டுமென்றும் அவசரப்படுத்தினான்.

சற்று நேரத்தில் நஞ்சுண்டனின் அனுமதியின் பெயரில் அந்த ஓற்றன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். மாளிகையின் உள்ளே அப்போதுதான் மதுக் குவளையில் மதுவை ஊற்றி நிரப்பத் தொடங்கியிருந்த நஞ்சுண்டன் தனக்கு முன்னால் வணக்கம் தெரிவித்து விட்டு நின்றவனை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.

" வா !கைத்தடி! எனக்காக தலை போகிற விசயம் எதையாவது கொண்டு வந்திருக்கிறாயா? உடல் வேர்த்து காணப்படுகிறாயே?" என்றான் நஞ்சுண்டன் .

ஏற்கனவே இருவருக்கும் பலத்த அறிமுகம் உண்டு. தனக்கு தன் அதிகாரத்திற்கு போட்டியாக பிரம்மராயரை நஞ்சுண்டன் கருதி வந்தான். தனக்கு எதிராகராயர் ஏதேனும் திட்டம் தீட்டினால் அதை முன்கூட்டியே அறிந்து கொள்ள தனது கையாளான கைத்தடியை அங்கே வேலைக்காரனாக பணியில் சேர்த்து விட்டிருந்தான்.கைத்தடியும் சாதாரணமான ஆள் அல்ல. விசுவாசத்தை நஞ்சுண்டனுக்கு காட்டி கொண்டு இருவரிடமும் சம்பளத்தை பெற்று கொண்டிருந்தான். அவன் காதில் விழும் செய்திகளை அவ்வப்போது நஞ்சுண்டனுக்கு சொல்லி அவனை உஷார்படுத்தி விடுவான். தன்னுடைய ஒரு சில ரகசியங்கள் எப்படி வெளியே கசிகின்றன என்ற சந்தேகம் ராயரை குடைந்து கொண்டிருந்தது. ஆள் இன்னார் என்று தெரியாவிட்டாலும் தன் மாளிகை பணியாட்களில் ஒருவன் நஞ்சுண்டனின் விசுவாசி என்பதை அவர் அறிந்தே இருந்தார். சொல்லிவிட்டு திருடுபவனே சிறந்த திருடன் என்பதால் ஆதித்தன் என்னும் விலாங்கு மீன் வருவதை நஞ்சுண்டன் அறிந்து கொள்ள வேண்டும் என்று ராயர் விரும்பினார். நஞ்சுண்டன் விரிக்கும் வலையை ஆதித்தன் எப்படி எதிர்கொள்வான் என்ற ஆவல் அவரிடம் மிகுந்து காணப்பட்டது.

ஓடி வந்ததால் ஏற்பட்ட மூச்சிறைப்பை குறைத்து கொண்ட கைத்தடி " நான் கொண்டு வந்திருக்கும் செய்தியை கேட்டால் உங்கள் உடலும் வேர்க்கும் " என்றான்.

"அப்படி என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?" என்றான் நஞ்சுண்டன் மது கோப்பையை உதடுகளில் வைத்தபடி.

"நாளை ராயர் யாரோ ஒரு கள்வனை இங்கே வர சொல்லியிருக்கிறார். அவன் பெயர் ஆதித்தனாம்"

ஆதித்தனின் பெயரை கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்தான் நஞ்சுண்டன் அவனது முகத்தில் சவக்களை தாண்டவமாடத் தொடங்கியது.
மதுக் கோப்பையை கீழே வைத்தவன்

"இனி எவ்வளவு குடித்தாலும் போதை ஏறாது. அவன் வெகு வில்லங்கமான ஆளாயிற்றே.? அவன் இங்கே வருகை தருவது அவ்வளவு நல்லதில்லையே? கண்டிப்பாக அந்த கிழட்டு கோட்டான் ராயரின் வேலை தான் இது.அரசரை நான் தான் கொன்றேன் என்று அந்த கிழவன் நினைக்கிறான். அதை உறுதி செய்து கொள்ளவே இந்த திருடனை அழைத்திருக்கிறான்."

" உண்மை அதுதானே பிரபு"

"கைத்தடி. இரவுக்கு ஆயிரம் காதுகள். இரவில் கவனமாக பேச வேண்டும்.நீ கொண்டு வந்த தகவலுக்கு இந்த பொன்முடிப்பை பரிசாகத் தருகிறேன். பெற்று கொண்டு கிளம்பு" மேஜையில் இருந்த பொன்முடிப்பை கைத்தடியை நோக்கி எறிந்தான் நஞ்சுண்டன் அவன் நன்றி சொல்லி போன பிறகு வெகு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

அதே நேரம் நஞ்சுண்டனின் மாளிகை வாசலில் நின்றிருந்த காவலர்கள் முன்பாக விசித்திர உடையணிந்த ஒருவன் தோன்றினான்.
கருப்பு நிற தலைப்பாகையணிந்து கண்களில் மையிட்டு நெற்றியில் பச்சை வண்ண பொட்டு வைத்திருந்த அந்த வினோதன் கறுப்பு நிற ஆடையால் தன் உடலைமுடியிருந்தான்.

தன்னை மறித்த வேல் வீரர்களை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான் அவன்.

"யார் நீ?" என்றான் காவலர்களில் ஒருவன்.

" சொல்கிறேன். ! அதற்கு முன் சிறு வேடிக்கை" என்றவன் தன் உடையிலிருந்து மூங்கில் குழாய் ஓன்றை எடுத்தான். அதை தன் வாயில் வைத்தவன்

" இதைப் பார் நண்பா !" என்றான் அவன்.

" எதை?" என்றவனின் கழுத்தில் பாய்ந்தது இறகு பொருத்தப்பட்ட சிறு ஊசி.அடுத்தவன் தன் வாளை உருவுவதற்குள் அவன் மீதும் பாய்ந்தது சிற்றூ சி. இருவரும் பேச்சு மூச்சற்று சரிந்தனர்.

அட்டகாசமான சிரிப்போடு லேசான ஆட்டத்தோடும் மாளிகைக்குள் பிரவேசித்தான் அவன். அங்கிருந்த அலங்காரப் பொருட்களை தொட்டு தடவி பார்த்தவன்" பிரமாதம்" என்றான்.

ஒவ்வொரு அறையாக எட்டி பார்த்தவன் நஞ்சுண்டன் இருந்த அறைக்கு வந்தான். கண்களை மூடியபடி நாற்காலியில் சாய்ந்திருந்த நஞ்சுண்டன் அவனது வருகையை கவனிக்கவில்லை.

" என்ன நஞ்சுண்டா? இரவு வருவதற்கு முன்பே உறக்கமா?" என்றான்.

அவனது குரலை கேட்டதும் பதறியடித்து கொண்டு எழுந்த நஞ்சுண்டன் "நீலா? நீயா ? நீ எப்படி இங்கே வந்தாய்?" என்றான் பரபரப்புடன்.

"கிருஷ்ணனின் குழலோசைக்கு ராதை மயங்கலாம். இந்த மூங்கில் குழாய்க்கு மயங்காதவர்கள் யார்?" என்றான் நீலன்விசமச் சிரிப்புடன்.

"அவர்களின் உயிருக்கு ?"

"எந்த ஆபத்துமில்லை. சிறிது நேர மயக்கம். நம் உடன்படிக்கை நினைவிருக்கிறதா?" என்றான் நீலன்.

" மறக்க முடியுமா?"

"நம் உடன்படிக்கையில் என் பங்கு பணியான அரசரை கொல்வதை நான் நிறைவேற்றி விட்டேன். புலியின் தாக்குதலால் மன்னர் இறந்தார் என்பதை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்"

"அது எப்படி சாத்தியம்? புலியின் தாக்குதலைசெயற்கையாக எப்படி உருவாக்கினாய்? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

"என்னிடம் புலி நகம் என்ற ஆயுதம் உண்டு. அதை வைத்து தாக்கினால் புலி தாக்கியது போன்றே இருக்கும். யாரும் சந்தேகிக்க முடியாது. அரசரின் கூடவே இருந்த அந்த வாய் பேச முடியாத ஓவியன் தான் பிரச்சனை. அவனையும் கொன்றிருக்க வேண்டும். உமக்காக அவனை கொல்லாமல் விட்டு விட்டேன்."

"அவனை கொல்லாமல் விட்டதும் நல்லதுதான். மன்னரின் இறுதி காட்சிகளை மன்னரை புலி தாக்கியதை அவன் ஓவியத் தொடராக வரைந்து வைத்திருக்கிறான். அதை பார்க்கும் மக்கள் நான் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிப்பார்களாம். எல்லாம் அந்த கிழவனின் வேலை. நான் முன்னெச்சரிக்கையாக ஓவியனின் மனைவியையும் மகளையும் பணய கைதியாக பிடித்து வைத்திருக்கிறேன். ராஜ விசுவாசத்தை விட சொந்த ரத்தம் பெரிதல்லவா? பயல் அரண்டு போய் கிடக்கிறான். நமக்கு விரோதமாக எதையும் செய்யும் துணிவு அவனுக்கு இல்லை."

"அது உன்னுடைய பிரச்சனை நஞ்சுண்டா.! உனக்கு கொடுத்த வாக்கை நான் நிறைவேற்றி விட்டேன். நீ கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறுக்கிறாய்?"

" அதிகாரம் என் கைக்கு வரவில்லை நீலா. நாளை என் மீதான சந்தேகம் தீர்ந்தபின் அரசரை அந்த உலகம் தெரியாத பாலகளை என் கைப்பாவையாக்குவேன். பிறகு உன் அதிகாரங்கள் உனக்கு திரும்ப கிடைக்கும் "

"நான் ஒரு ராஜ விசுவாசி நஞ்சுண்டா. இதே மன்னரின் அரண்மனையில் அவருக்கு மெய் காவல் படை வீரர் தலைவனாக இருந்தவன் நான்.அரசருக்காக பல அரசியல் கொலைகளை விபத்தாக மாற்றி காட்டியவன் நான். கடைசியில் அரசருக்கே என் வித்தையை நான் காட்ட வேண்டியதாகிவிட்டது. என் மனம் இன்னும் வேதனையில் துடிக்கிறது."

"நீ செய்த சிறு தவறால் உன்னையும் உன் வீரர்களையும் மன்னர் நாடு கடத்தி விட்டார். அரண்மனையில் சகல அதிகாரங்களையும் பெற்று கவுரவமாக வாழ்ந்த நீ இப்போது காட்டில் விலங்கினும் கீழாக வேட்டையாடி பிழைத்து கொண்டிருக்கிறாய். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால் தான் மன்னரை தீர்க்க உன்னை நாடினேன். மன்னர் உயிரோடு இருக்கும் வரை உன்னுடைய அதிகாரம் உனக்கு கிடைக்காது. அதனால் நீயும் எனக்கு உதவினாய்!"

நீலன் பழையவற்றை நினைத்து பார்த்தான். மன்னரின் படுக்கையறை வரை செல்லும் அதிகாரம் படைத்த மெய் காவல் படை தலைவன் நீலன்.அவனது படைக்கென்று நீல நிற . சீருடை தனியாக உண்டு. அந்த சீருடையில் அவனுக்கும் அவனது படைக்கும் கிடைக்கும் மரியாதையே தனிதான்.விசப் ப்ரயோகத்திலும் விசப் பிராணிகளை வளர்ப்பதிலும் அவற்றை கட்டுப்படுத்துவதிலும் அவற்றை கொண்டு மன்னரின் எதிரிகளை தீர்த்து கட்டி விட்டு அவற்றை விபத்தாக மாற்றுவதிலும் நீலனும் அவனது படைப்பிரிவினரும் கைதேர்ந்தவர்கள். பாம்பின் விசத்தை சிறிது சிறிதாக தனது உடலில் ஏற்றி தனது உடலையே விசமாக மாற்றி வைத்திருந்தான் .அவன் கடித்தாலே போதும் ஒரு மனிதன் மேலோகம் சென்று விடுவான்.நீலன் அரண்மனையில் சுகபோகமாக வாழ்ந்த நீலனின் வாழ்க்கைக்கு எமனாக வந்தது ஒரு நிகழ்வு. மன்னரின் அரசியல் எதிரியை கொல்வதற்கு பதிலாக இருட்டில் நீலன் மன்னரின் ஆப் த நண்பரின் மீது விசப்ரயோகம் செய்து விட்டான். ஆள் மாறியது காலையில் தான் தெரிந்தது. மன்னர் மரணம் நேர்ந்த விதத்தை கேட்டதுமே அது நீலனின் வேலை என்பதை கண்டுபிடித்து விட்டார்.தன் ஆப் த நண்பரின் மறைவை ஏற்க முடியாத மன்னர் நீலனையும் அவனது பரிவாரத்தையும் நாடு கடத்தி விட்டார். அரண்மனை சுகவாசியான நீலனும் அவனது பரிவாரங்களும் காடுகளில் வேட்டையாடி உயிர் பிழைத்து கொண்டிருந்தனர். எப்படியாவது தனது பழைய வாழ்க்கையை அடைய நினைத்த நீலனை பேசி பேசி கரைத்து தன் திட்டத்திற்கு உடன் பட வைத்தான் நஞ்சுண்டன். இருவரிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி தனது பங்கு பணியை நிறைவேற்றி வைத்துவிட்டான் நீலன்.

"நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது நஞ்சுண்டா.! எனக்கு என் நீலச் சீருடை வேண்டும்" என்றான் நீலன் கடுகடுத்த குரலில்.

"சும்மா மிரட்டாதே நீலா. நாடு கடத்தப்பட்ட நீ இங்கே வந்ததே அத்துமீறல் . இது வெளியே தெரிந்தாலே போதும். நீ கைது செய்யப்படுவாய்" என்றான் நஞ்சுண்டன் .

" நான் யாரென்று உனக்கு தெரியவில்லை. என் அனுமதி இல்லாமல் என்னை யாரும் தொடக்கூட முடியாது" என்ற நீலன் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தான்.

அவனது உடையிலிருந்து சிறிதும் பெரிதுமான பாம்புகள் கீழிறங்க ஆரம்பித்தன.அதுவரை அவன் தலையில் கட்டியிருந்தது தலைப்பாகை யென்று நினைத்திருந்தான் நஞ்சுண்டன். அது ஒரு கருநாகப் பாம்பு என்பது நீலனின் தோள் வழியாக அது கீழே இறங்கிய போது தெரிந்தது. பயத்தின் ரேகைகள் நஞ்சுண்டனின் முகத்தில் மலர்ந்தன. நீலனின் கைகள் நஞ்சுண்டனை நோக்கி நீண்டன.மறுநொடி அத்தனை பாம்புகளும் படம் எடுத்த படி அவனை நோக்கி நகர்ந்தன.

"நான் விளையாட்டுக்கு பேசியதை நீ உண்மை என்று நினைத்து விட்டாய் போலிருக்கிறதே? எனக்கு உதவி செய்த உனக்கு நானும் உதவி செய்வது தானே முறை .இவற்றை விலகி போகச் சொல் "

நீலன் கையை அசைத்தான். அடுத்த விநாடியில் அனைத்து பாம்புகளும் அவனது ஆடைக்குள் ஏறி மறைந்தன. அவனது காணாமல் போன தலைப்பாகை திரும்ப வந்திருந்தது.

"நீ உறங்கும் அறையில் என் செல்ல பிராணிகளில் ஓருவனை விட அதிக நேரமாகாது" என்றான் நீலன்.

"புரிகிறது. நீ சொல்வதை நான் செய்யத்தான் நினைக்கிறேன். அதற்கு இடையூராக ஒருவன் வந்திருக்கிறான்"

"யார் அவன்?"

" அவன் பெயர் ஆதித்தன்"

" கள்வர் பு ரத்து கள்வன்?"

"அவனே தான் "

நீலனின்புருவங்கள் - உயர்ந்தன.

" என் எண்ணம் அவ்வளவு எளிதில் ஈடேறாது போலிருக்கிறதே?" என்றான் நீலன்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 3


" என் எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறாது போலிருக்கிறதே?" என்றான் கவலையுடன் நீலன். ஆழ்ந்த கவலையின் அறிகுறியாக தனது தாடையை தேய்த்துக் கொள்ளவும் அவன் தவறவில்லை. நீலன் யோசிப்பதை பார்த்த நஞ்சுண்டன் நாக்கால் தனது நயவஞ்சக வலையை விரிக்க ஆரம்பித்தான்.

" உன் எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறாது. உன் ஆசையை நிராசையாக்க ஓருவன் நாளை இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கப் போகிறான். அவனை மண்ணோடு மண்ணாக்கினால் தான் நம் இருவருக்கும் வாழ்வு. வருபவன் இதுவரை பலரின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றி எழுதியிருக்கிறான். நம் தலையெழுத்தை மாற்றி எழுத அவனுக்கு வெகு நேரமாகாது."

"நானும் அந்த கள்வனைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவர்களை போல் அல்ல இவன் அசாதாரணமான பேர்வழி.என் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும் சக்தி படைத்தவன் இவன் என்பதை நான் அறிவேன்"

"பிறகென்ன தயக்கம்? அவன் ஒருவன். நாம் இருவர் .நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் இருவருக்குமே நன்மை உண்டு. அவனால் மக்களைத் தவிர வேறு யாருக்கும் பயனில்லை."

" நஞ்சுண்டா! என்னை பிறவிக் கொலைகாரன் என்று நினைத்து விட்டாயா? நான் இதுவரை செய்த அத்தனை கொலைகளும் நாட்டிற்காக செய்தவை. இந்த நாட்டில் அமைதியும் சுபிட்சமும் நிலவ தடையாக இருப்பவர்களை கோடாரி காம்புகளை அரசர்கை காட்டியதன் பேரில் கொன்றிருக்கிறேன். அதற்காக நான் இதுவரை வருந்தியதில்லை. மாறாக அதை தேச சேவையென்றே கருதி வந்திருக்கிறேன். நான் செய்த ஓரே தவறு அரசருக்கு அனுக்கமாக இருந்தவரை ஆள் மாற்றி கொன்றது மட்டும் தான். அதற்கு கிடைத்த தண்டனை நாடுகடத்தல் .அரண்மனையில் சுக போகத்தில் திளைத்த என் இனத்தவர்கள் அவற்றைதுறந்து காட்டில் இருள் குகையில் விலங்குகளைப் போல பதுங்கி வாழ்கிறோம். விலங்குகளை வேட்டையாடியும் பூமிக்கடியில் இருக்கும் கிழங்குகளை தோண்டி எடுத்தும் உணவாக உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் செய்த தவறால் என் இனம் முழுவதும் தண்டிக்கப்பட்டு உணவுக்காக போராடிக் கொண்டிருப்பதை பார்த்து என் மனம் வெதும்புகிறது. அப்போதுதான் நீ என்னை சந்தித்தாய்."

"பழைய கதை இப்போது எதற்கு?"

"பேச வேண்டிய தேவையிருக்கிறது.அரசரைக்கொல்ல என் உதவியை நாடினாய். இந்த காட்டில் தான் என் இனம் பதுங்கி வாழ்கிறது.இங்கு மன்னரை சர்ப்பம் தற்செயலாக தீண்டினாலும் அவரை கொன்ற பழி என் மீது விழுந்து விடும் என்பதால் தான் புலிநகம் என்ற புதிய ஆயுதத்தை கண்டுபிடித்தேன்."

மடையா. ! நீ மட்டும் உன் செல்ல பிராணிகளை மன்னரை கொல்ல பயன்படுத்தியிருந்தால் நானே உன் மீது பழிபோட்டு உன் இனத்தை பூண்டோடு அழித்திருப்பேன். நீ இப்படி புலிநகம் என்ற புதிய ஆயுதத்தை பயன்படுத்துவாய் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று மனதில் நினைத்து கொண்டான்நஞ்சுண்டன் .

"அந்த புதிய ஆயுதத்தை என் மரியாதைக்குரிய மன்னரி டமே முதல் முறையாக பிரயோகிக்க வேண்டியதிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை." என்றான் நீலன் சோகத்துடன் .

" நாளை வருபவன் மன்னர் புலி தாக்கி இறக்கவில்லை என்பதை கண்டுபிடிக்க போகிறான். அப்போது மன்னரை வேட்டைக்கு அழைத்து சென்ற நான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்படுவேன். உன்னுடைய நீல நிற சீருடை வெறும் கனவாகவே போகப்போகிறது " என்று உச்கொட்டினான் நஞ்சுண்டன் .

"நஞ்சுண்டா! என்ன சொல்கிறாய்?" என்றான் நீலன் பதட்டத்துடன்.

"புரிய வில்லையா? இதுவரை எத்தனையோ கொலைகளை நாட்டுக்காக செய்து விட்டு அவற்றை விபத்தாக சோடிக்க தெரிந்த நீ மன்னர் விசயத்தில் தோற்று விட்டாய் என்கிறேன். உன் வேலையை நீ ஓழுங்காக செய்து முடிக்கவில்லை என்று உன் மீது குற்றம் சாட்டுகிறேன்."

"உன் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். வருபவன் இது கொலையல்ல. புலியின் நிஜமான தாக்குதலால்தான் மன்னர் இறந்தார் என்று கூறிவிட்டால்?"

"நம் இருவரின் கனவும் நனவாகி விடும். ஆனால் அதற்கு நூற்றில்ஓரு பங்கு தான் வாய்ப்பு ."

"இப்போது என்னை என்ன தான் செய்ய சொல்கிறாய்?" என்றான் நீலன் வாதாட இயலாத ஆயாசத்துடன்.!

சுற்றி வளைத்து நஞ்சுண்டன் எல்லா பழியையும் தூக்கி தன் மீது போட்டுவிட்டதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் வளர்ப்பு பிராணிகளை விட நஞ்சுண்டன் ஆபத்தானவன் என்பதையும் நாகங்களின் பல்லில் இருக்கும் விசத்தை விட நஞ்சுண்டனின் நாக்கின் விசம் வீரியமிக்கது என்பதையும் நீலன் அறிந்து கொண்டான்.

" நாளை இந்த நாட்டின் மண்ணில் காலடி எடுத்து வைப்பவன் கோட்டைக்குள் நுழைய கூடாது. அதற்குள் அவன் கதையை நீ முடித்துவிட வேண்டும்."

"நான் அவனை முன் பின் பார்த்ததில்லை. மேலும் என்னை மக்கள் பார்த்து அடையாளம் கண்டு விட்டால் நாடு கடத்தப்பட்டவனுக்கு இங்கே என்ன வேலை என்ற கேள்வி வரும். மன்னரின் மரணத்தோடு என்னை இணைத்து மற்றவர்கள் சந்தேகிக்கவும் இடமுண்டு. அதனால் ஆதித்தனை நீயே பார்த்து கொள். தனி மனிதனாக என்னால் என்ன செய்து விட முடியும்?" என்றான் கொடக்கண் டனான நீலன். நஞ்சுண்டன் நம்பத்தகுந்தவன் அல்ல என்பதாலும் அடுத்தடுத்து அவன் சொல்லும் செயல்களை செய்து கொண்டிருந்தால் பிடிபடும் போது மொத்த குற்றத்தையும் தன் மீது சுமத்தி விடுவான் என்பதாலும் நீலன் ஆதித்தனின் விவகாரத்திலிருந்து பின் வாங்கினான்.

தன் முயற்சியில் சற்றும் தளராத நஞ்சுண்டன் "நீ சொல்வதும் சரிதான். தனி மனிதனாக உன்னால் என்ன செய்ய முடியும்? அப்பாவிகளை பாம்பை ஏவி கொல்வது தவிர "

"நஞ்சுண்டா!" என்றான் நீலன் கோபத்துடன் .

"நீ அந்த ஆதித்தனை பார்த்து பயந்து விட்டாய் போலிருக்கிறது. சரி விடு. அவனை நானே பார்த்து கொள்கிறேன்."

தன்னை எப்படியாவது பேசி உணர்வுகளை தூண்டி விட்டு ஆதித்தனின் விவகாரத்தில் தன்னை ஈடுபட செய்ய நஞ்சுண்டன் முயல்வதை உணர்ந்து கொண்ட நீலன்

"நான் வருகிறேன். ஆனால் ஓன்று சொல்கிறேன். கொடிய பாம்புகளைக் கண்டே அஞ்சாதவன் நான் . ஓரு சாதாரண மனிதனுக்கு நான் அஞ்க வதாக நீ சொல்வது வேடிக்கை." என்ற நீலன் திரும்பி பாராமல் வெளியேறினான்.

" ஆதித்தன் என்ற பாம்பை பிடிப்பதற்கான மகுடி உன்னிடம் இல்லை என்று சொல்" என்று முனகிய நஞ்சுண்டன் புயல் வேகத்தில் காரியத்தில் இறங்கினான்.

தன் உப தளபதியை வரவழைத்த நஞ்சுண்டன் கோட்டையிருந்து 20 காத தொலைவில் இருக்கும் அத்தனை சத்திரங்களையும் தங்கும் விடுதிகளையும் சோதனையிட உத்தரவிட்டான். வெண்ணிற புரவியில் யார் வந்து தங்கினாலும் அவர்களை கைது செய்யவும் புதிய நபர்களை சோதனையிடவும் உத்தரவு கொடுத்தான்.

அவனது உத்தரவு மின்னல் வேகத்தில் செயல்படுத்தப்பட்டது.மது கோப்பையை உற்று பார்த்த நஞ்சுண்டன் "என் இன்ப கனவுகளை கலைத்து விட்டான்" என்று முணுமுணுத்தான் -

அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நஞ்சுண்டனுக்கு அதிகாலையில் தேனாக ஓருசெய்தி செவியில் பாய்ந்தது.

கோட்டைக்கு அருகே இருந்த தங்கும் விடுதி வாசலில் கட்டப்பட்ட நிலையில் ஒருவெண்ணிற புரவி இருப்பதாக கிடைத்த சேதிதான் நஞ்சுண்டனின் மகிழ்ச்சிக்கு காரணமானது.

"ஆதித்தன் நகருக்குள் நுழைந்து விட்டான். முதலில் அவனது குதிரை பிடிபட்டுவிட்டது. அந்த குதிரையை பிரிந்து அவனால் இருக்க முடியாது. கண்டிப்பாக தன் குதிரை தேடி அவன் வருவான்.அடுத்தது பிடிபடப் போவது அவன் தான் "

நஞ்சுண்டனின் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது.

அதே நேரம் கோட்டைக்கு அருகே இருந்தவீட்டின் திண்ணையில் படுத்திருந்தவன் எழுந்து கொண்டான். வீட்டு உரிமையாளரிடம் இரவு தங்குவதற்கு இடம் கொடுத்ததற்காக நன்றி கூறியவன் தன் வலதுகாலை இழுத்து கொண்டு நொண்டி நொண்டி நடந்தான். அதைப் பார்த்த வீட்டு உரிமையாளன் நள்ளிரவில் இவன் உறங்க இடம் கேட்டு வரும் போது நன்றாகத்தானே நடந்து வந்தான்? ஒரு வேளை கனவு எதையாவது கண்டிருப்போமோ என்று திகைத்தபடி வீட்டினுள் திரும்பி நடந்தான்.

அவன் காலை இழுத்து கொண்டு சாலையில் நடந்த போது அவனுக்கு பின்புறமாக வந்த எருமை பூட்டிய வாகனத்தை ஓட்டியபடி வந்த வன்

"ஏய்! அன்ன நடை போடாமல் வண்டிக்கு வழிவிடு" என்றான்.

அவன் மீண்டும் முன்பை விட மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

" என் எருமையை விட இந்த எருமை மிகவும் மெதுவாக செல்கிறதே? என்று எரிச்சலோடு முணுமுணுத்த வண்டியோட்டி தன் கையில் இருந்த தடியால் முடவனை நெட்டி தள்ளினான்.

அவன் கால் தடுமாறி சாலையோர ஓடையில் விழுந்தான்.

"நிறுத்து வாகனத்தை " என்ற து ஒரு கம்பீர குரல்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 4


" வாகனத்தை நிறுத்து" என்ற கம்பீர குரல்கட்டளையிட்டதும் வண்டியின் சாரதி உடனடியாக கடிவாளத்தை இழுத்துப் பிடித்து வாகனத்தை நிறுத்தினான். வண்டியிலிருந்து ஓரு அஜான பாகுவான உருவம் குதித்து இறங்கியது. வண்டியிலிருந்து இறங்கிய வன் புலித்தோலால் ஆன ஆடையை அணிந்திருந்தான். அவன் கழுத்திலும் கைகளிலும் பாசிமணிகள் அணிந்து பறவைகளின் இறகுகளாலான ஒரு வினோத தலைப்பாகையை அணிந்திருந்தான். அவன் முகத்தில் ஒரு மென் சிரிப்பும் அப்பாவித்தனமும் கலந்தே இருந்தன. முதல் பார்வையிலேயே அவன் நகரவாசி அல்லவென்பதையும் மலைப்பிரதேசத்தை சார்ந்த மலைவாசி என்பதை யாரும் கண்டுபிடித்து விட முடியும். வண்டி சாரதியை முறைத்தவன் " வாகனத்தை பார்த்து ஓட்டு. இந்த பாதையில் வண்டி வாகனங்கள் செல்ல மட்டுமல்ல பாதசாரிகள் நடந்து செல்லவும்உரிமை உள்ளது." என்று உறுமினான்.

"என்னை மன்னித்து விடுங்கள். அவன் நான்குரல் கொடுத்தும் பாதையிலிருந்து விலகி வழிவிட மறுத்து விட்டான். அதனால் ஏற்பட்ட கோபத்தில் சற்று வரம்பு மீறிவிட்டேன்." என்றான் வண்டி சாரதி சற்று பயத்துடன் .

"நீ மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடமல்ல. நீ நெட்டித் தள்ளிய அந்த மனிதனிடம் " என்றவன் ஓடையில் விழந்து கிடந்தவனை கைலாகு கொடுத்து தூக்கி விட்டான். அவனது வலுவான கைகளைப் பற்றி கொண்டு தண்ணீரில் இருந்து எழுந்தவனை கரிசனத்தோடு பார்த்தவன்" உனக்கு அடி ஏதாவது பட்டு விட்டதா நண்பா ?" என்று அக்கரையோடு வினவவும் செய்தான்.

அவனது தோளைப் பற்றிய படி சாலைக்கு வந்தவன் வண்டிக்கு பின்னால் நிறைய வண்டிகள் நிற்பதை பார்த்தான்.

"போக்குவரத்திற்கு இடையூறு ஏதுவுமில்லை நண்பா. எல்லாம் என்னுடைய வாகனங்கள் தான். நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னமும் பதில் கூற வில்லையே? என்றான் அந்த மலைவாசி.

தன் தலையை துவட்டி கொண்டிருந்தவன் ஒரு பக்கமாக தலையை சாய்த்து காதில் புகுந்த நீரை வெளியேற்றினான். பிறகு மலைவாசியை பார்த்து "என் காதில் நீர் புகுந்து விட்டதால் நீங்கள் பேசியது என் காதில் சரியாக விழவில்லை. மீண்டும் ஒருமுறை நீங்கள் கேட்டதை திரும்ப கேளுங்கள்" என்றான் அவன்.

" என் சாரதியின் செயலால் உனக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு விட்டதா என்று கேட்டேன்"

"அடி எதுவும் எனக்கு படவில்லை. என் வேலைகளில் ஒன்றை குறைத்ததற்காக நான் தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்."

மலைவாசியின் முகத்தில் குழப்பம் கூத்தாடியது.

" என்ன சொல்கிறாய் நீ? உன் வேலைகளில் ஓன்றை அவன் குறைத்து விட்டானா? நீ சொல்வது எனக்கு கொஞ்சமும் புரியவில்லை."

"புரியும்படியாகவே சொல்கிறேன். இப்போது தான் வேப்பங் குச்சியில் பல் துலக்கி கொண்டு குளிக்க நல்ல இடம் தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் சாரதி எனக்கு ஜலக் கிரிடையே செய்து வைத்து விட்டான். எப்படியோ என் குளிக்கும் வேலை மீதமாகி விட்டது. அதற்காக நான் உங்கள் சாரதிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்."

"நன்றாகத்தான் நகைச்சுவையாகப் பேசுகிறாய். உன்னைப் பார்த்தால் உள்ளூர்காரனைப் போல் தோன்றுகிறது. இது அரண்மனைக்கு செல்லும் பாதை தானே?"

"ஆமாம். இது அரண்மனைக்கு செல்லும் பாதை தான். நானும் அங்கு தான் செல்கிறேன்."

" நல்லதாகப் போயிற்று. நீயே எங்களுக்கு வழி காட்டினால் என்ன?"

"தாராளமாக உதவுகிறேன். இந்த கால்களை வைத்து கொண்டு நான் அரண்மனையை அடைவதற்குள் கதிரவன் அஸ்தமனமாகி விடுவான்."

" உன் கால்களுக்கு என்னாயிற்று நண்பா ?"

"கு திரை ஓட்டும்போது தவறி கீழே விழுந்து விட்டேன். அதனால் என் மூட்டு பகுதி சேதமடைந்து விட்டதாகவும் ஆயுள் முழுவதும் இந்த அழகான நடையுடன் தான் இருக்க வேண்டுமென்றும் வைத்தியர் சொல்லிவிட்டார்."

"கவலைப் படாதே! எங்களின் நாட்டுப்புற வைத்தியத்தில் இதை சரி செய்து விடலாம்"

"ஆமாம். நீங்கள் யார்?"

வ்ண்டியில் ஏறு! நாம் பேசிக் கொண்டே செல்லலாம்." என்றவன் அவன் வாகனத்தில் ஏற உதவி செய்தான். பிறகு தானும் ஏறிக் கொண்டவன் வண்டியை கிளப்ப ஆணையிட்டான்.

வண்டியில் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டவன் "சரி இப்போதாவது சொல்லுங்கள். "நீங்கள் யார்? இந்த வண்டிகளில் அரண்மனைக்கு எதை கொண்டு போகிறீர்கள்? என்றான்.

" என் பெயர் சாத்தன். மலைவாழ் பளியர் இனத்தலைவரின் மகன். என் தந்தை முதுமை காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் நான் இங்கே வந்திருக்கிறேன்."

"இந்த வண்டிகளில் வருபவை?"

"புதிய அரசருக்கு எங்கள் மரியாதையையும் விசுவாசத்தையும் காட்ட பரிசு பொருட்கள் தருவது வழக்கமான விசயம்தானே? நானும் எங்கள் காட்டில் கிடைக்கும் அகில், சந்தனம், புனுகு, தேன், யானை தந்தம், மான் கொம்பு, புலித்தோல் போன்றவற்றையும் நறுமண பொருட்களையும் பரிசாக கொண்டு வந்திருக்கிறேன். நான் சிறுவயதில் பழைய மன்னரின் பட்ட மேற்பு விழாவிற்கு என் தந்தையுடன் வந்திருக்கிறேன். அப்போது நான் பார்த்த நகரம் இப்போது இல்லை. அதன் தோற்றம் வெகுவாக மாறிவிட்டது. அதனால் தான் பாதை தெரியாமல் தடுமாறி விட்டேன். இனி அந்த கவலை எனக்கில்லை. எனக்கு வழிகாட்டத் தான் நீ இருக்கிறாயே?"

"கவலைப்படாதீர்கள். அரண்மனைக்கு நான் அழைத்து செல்கிறேன்."

" நல்லது நண்பா. உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் சாத்தன்.

" என் பெயர் பகலவன். ஓரு முன்னாள் படை வீரன். உடல் ஊனமுற்றதால் படை விலக்கம் செய்யப்பட்டு பாட்டியோடு வசிப்பவன். இவ்வளவுதான் என்னைப் பற்றி சொல்ல முடியும்."

"வெகு சுருக்கமாகவே உன்னை அறிமுகப்படுத்தி கொண்டு விட்டாய். நாட்டில் வேறு ஏதாவது விசேசம் நடந்திருக்கிறதா?"

பகலவன் எல்லாவற்றையும் விளக்கி சொல்ல தொடங்கினான். அரண்மனை ஓவியர் வரைந்த ஓவியத்தை வைத்து தளபதி நஞ்சுண்டன் மீதான குற்றசாட்டு நிருபிக்கப்பட்டால் தண்டனையும், குற்றச்சாட்டு நிருபிக்கப்படா விட்டால் அவரே தளபதியாக தொடர்வார் என்பதையும் பகலவன் எடுத்து கூறினான்.

"நீங்கள் கூட அந்த ஓவியங்களை பார்ப்பதற்காக வந்திருப்பதாகவே நான் கருதினேன்."

"நாங்கள் அதற்காக வரவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சனை இங்கே நடந்து கொண்டிருக்கும் போது நான் பரிசுப் பொருளோடு மன்னரை காண்பது உசிதமல்ல. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது தான் அவரை சந்திக்க வேண்டும்"

" ஏன்? காட்டில் ஏதாவது பிரச்சனையா?"

"ஆமாம். யானைகள் எல்லை மீறி உணவு தேடி எங்கள் குடியிருப்புக்குள் நுழைந்து விடுகின்றன. அவற்றின் தொல்லை தாங்க முடியவில்லை."

"இதற்கேன் மன்னரை தொல்லை செய்கிறீர்கள்? குடியிருப்பை சுற்றி தேனீக்களை வளருங்கள். தேனீக்களுக்கு பயந்து யானைகள் உங்கள் குடியிருப்பு பக்கம் வராது."

"இது என்ன புது விதமான ஆலோசனை ? தேனீக்கள் வளர்த்தால் யானைகள் வராது என்று உனக்கு யார் சொன்னது?"

"என் நண்பன் ஒருவன் இருக்கிறான். எல்லாவித பிரச்சனைகளுக்கும் நுட்பமான தீர்வை கண்டுபிடித்து சொல்வான். அவனுக்கு தெரியாத விசயங்களே கிடையாது. அவனுடன் நீண்ட நாட்கள் பழகியதால் அவனது திறமையில் கொஞ்சம் எனக்கும் வந்து விட்டது."

" உன்னால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை கண்டு விட முடியுமா?

"ஓரளவிற்கு .பிரச்சனை என்பது மனதை பொறுத்த விசயம் அல்லவா?"

"உண்மை தான்! மனமே மந்திரம் . சமீப காலமாக என் மனதில் ஓரு உறுத்தல் இருக்கிறது. கானகவாசியான என் தந்தையாலும் அந்த உறுத்தலை தீர்க்க முடியவில்லை."

"அப்படி என்ன உறுத்தலான விசயம்?"

" என்னுடைய கானக வாழ்வில் புலித் தலையை கேட்டவர்களை பார்த்திருக்கிறேன். புலிபல்லை கேட்டவர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் ஓரே ஒருவன் ரொம்பவும் வினோதமாக புலி நகம் வேண்டுமென்று கேட்டான். அவன் எதற்காக புலி நகத்தை கேட்டி ருப்பான் என்ற கேள்வி என்னை குடைகிறது. நீ சொல். அந்த மனிதன் எதற்காக புலி நகத்தை கேட்டிருப்பான்.?" என்றான் சாத்தன் குழப்பத்துடன் .

"புலித் தலையை பாடம் செய்து வீட்டு சுவற்றில் அலங்காரமாக பதிப்பார்கள்.புலிபல்லை ஆபரணத் தில் பதிப்பதை பார்த்திருக்கிறேன். புலி நகத்தை வாங்கி அவன் என்ன செய்திருக்க முடியும்.?ஒரு வேளை வைத்தியத்திற்காக வாங்கி சென்றிருப்பானோ?"

"எனக்கு தெரியவில்லை. உனக்கும் தெரியவில்லை. என் உறுத்தலை உனக்கும் கடத்தி விட்டேன் போலிருக்கிறதே?"

"அப்படியல்ல நண்பா. என்னை சிந்திக்க தூண்டும் கேள்வியை கேட்டிருக்கிறாய். விரைவில் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்."

"என்னிடம் புலிநகத்தை வாங்கியவனை என்னால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு கொடுரமான முகம் அவனுடையது." என்றான் சாத்தன்.

இருவரும் வெவ்வேறு விசயங்களை பேசி கொண்டிருந்தனர். "அதோ அரண்மனை வந்து விட்டது" என்றான் பகலவன்.

அரண்மனை வாசலில் ஆதித்தனின் வெண்ணிற குதிரையானமோகினியை கட்டி வைத்திருந்த நஞ்சுண்டன் " அவனது குதிரை நம்மிடம் சிக்கி விட்டது. ஆதித்தன் சிக்கவில்லை. அவன் கண்டிப்பாக இங்கு வந்துதான் தீர வேண்டும். அவனை பார்க்கும் இந்த குதிரை தன் எஜமான விசுவாசத்தை கனைத்தோவாலை ஆட்டியோ உடலை சிலிர்த்தோவெளி காட்டும். அப்படி யாரைப் பார்த்தால் இந்த குதிரையின் செயலில் மாற்றம் ஏற்படுகிறதோ அவன் கதையை முடித்து விடுங்கள். மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் " என்றான் .

பளியர்களின் வாகனம் அரண்மனை வாசலை நெருங்கி கொண்டிருந்தது.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 5


"அதோ ! அரண்மனை வந்து விட்டது. ஓவியரின் ஓவியத்தை காண மக்கள் பெரும் திரளாக வரத்தொடங்கி விட்டனர்." என்றான் பகலவன்

"ஆமாம். அரசியல் விவகாரங்களில் மக்களுக்கு அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது." என்றான் சாத்தன்.

"நான் உங்களிடமிருந்து விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது. உங்களுக்கு பதகனாக (வழிகாட்டி ) இருந்ததுடன் உங்கள் உதவியால் நான் வர வேண்டிய இடத்திற்கு சீக்கிரமாகவே வந்து சேர்ந்து விட்டேன். என் பயணத்தை இலகுவாக்கிய உங்களுக்கு என் நன்றி" என்றான் பகலவன்.

"நாம் சிறிது நேரமே பழகியிருந்தாலும் உனது குணமும் பண்பும் எனக்கு மிகவும் பிடித்து விட்டன. உன்னை பிரிவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. காலையில் என்னால் ஜலக் கிரிடையை முடித்த நீ காலை உணவையும் எங்களுடன் உண்டு விட்டு செல்லலாமே?"

"எனக்கும் பசி வயிற்றை கிள்ளுகிறதுதான். ஆனால்?"

"நீ என்ன காரணம் கூறினாலும் நான் ஏற்க மாட்டேன். காலை உணவு இன்று எங்களுடன் தான் உண்கிறாய். இல்லையென்றால் என் மனம் சங்கடப்படும் " என்றான் சாத்தன்.

"உங்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக உங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன்." என்றான் பகலவன்.

"கவலைப்படாதே! போதுமான உணவு, கையிருப்பில் இருக்கிறது. நீ கூச்சப்படாமல் உன் வீட்டில் சாப்பிடுவது போல் சாப்பிடலாம்." என்ற சாத்தன் வாகனங்களை மர நிழலில் நிறுத்த உத்தரவிட்டான்.

சில நிமிடங்களில் அந்த மர நிழலில் விருந்து உபச்சாரம் தடபுடலாக ஆரம்பித்தது. தாங்கள் கொண்டு வந்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்டனர்.சாத்தனின் கூட்டத்தினர் பகலவனை விருந்து உபசரிப்பில் திணறடித்தனர்.

சில நாழிகைக்கு பிறகு பகலவன் "அரண்மனையில் மீண்டும் சந்திப்போம். உங்கள் விருந்து உபச்சாரத்தை என்னால் மறக்கவே முடியாது" என்றபடி சாத்தனை கட்டியணைத்து பிரியாவிடைபெற்றான்.

பகலவன் விடைபெற்று சென்ற பிறகு " நல்ல மனிதன்" என்று பெருமூச்சு விட்ட சாத்தன் தன் வாகனங்கள் கிளம்ப உத்தரவிட்டான்.

சற்று நேரத்தில் அரண்மனை வாசலில் அந்த வினோத அணிவகுப்பு நிறைவு பெற்றது.

முதன்முதலாக அரண்மனைக்கு பரிசு பொருட்களை கொண்டு வந்த சாத்தன் அவற்றை உள்ளே கொண்டு செல்லவும் அரசரை காணவும் யாரை சந்திப்பது என்று தெரியாமல் திணறியவன் தன் ஆட்களில் ஒருவனை அழைத்து அரண்மனை பிரமுகர்கள் யாரையாவது சந்திக்க உத்தரவிட்டான். அவன் சந்திக்க வேண்டிய ஒரு ஆள் வேறு இடத்தில் இருந்தார்.

காவல் வீரர்கள் ஆதித்தனை பிடிப்பதில் முனைப்புடன் இருந்ததால் சாத்தனின் ஆளிடம் யாரும் நின்று கூட பேசவில்லை. எப்படியோ ஒருவனை நிறுத்தி தாங்கள் வந்த விசயத்தை விளக்கி கூறினான். அவனோ அலுப்புடன் ஒரு கள்வனைப் பிடிப்பதில் தாங்கள் மும்முரமாக இருப்பதால் இவர்களின் விவகாரத்தை இப்போது கவனிக்க இயலாது என்று பதில் கொடுத்ததுடன் நஞ்சுண்டன் ஆதித்தனின் குதிரையை வைத்து அவனை பிடிக்க முனைந்தது வரை அனைத்தையும் விளக்கமாக கூறி முடித்துவிட்டு தன் பணியில் மூழ்கினான்.

தன் உதவியாளன் தனக்கு கூறிய அத்தனை விவரங்களையும் கேட்டு கொண்ட சாத்தன் தான் அரண்மனைக்கு தவறான நேரத்தில் வந்து விட்டோமே என்று வருந்தினான். முதன்முதலாக தன் தந்தை தன்னிடம் ஓப்படைத்த வேலையை முழுதாக செய்து முடிக்க முடியாது போலிருக்கிறதே என்று மருகி யவனுக்கு அந்த அரண்மனையின் முக்கிய பிரமுகர் நினைவுக் கு வந்தார். அந்த பிரமுகர் பிரம்மராயர்.

தன் ஆட்களை வாகனங்களை பத்திரமாக பார்த்து கொள்ள சொல்லி உத்தரவிட்ட சாத்தன் வண்டியிலிருந்த ஓரு குடுவையை மட்டும் தன்னுடன் எடுத்து கொண்டு தன் உதவியாளனுடன் கிளம்பினான்.

"அரண்மனை நம்மை அவமதிப்பது போல் தோன்றுகிறது" என்றான் உதவியாள்.

"முட்டாள்.! வந்தவுடன் வரவேற்க இது நம்மாமியார் வீடல்ல. இங்கே ஆயிரம் பிரச்சனைகள் தினமும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. ஆயிரத்து ஓன்றாவதாக நாம் வந்திருக்கிறோம். நம்முறை வரும் வரை நாம் காத்திருக்கத் தான் வேண்டும். அவசரப்பட்டால் காரியம் சிதறி விடும். அப்பா என்னிடம் ஒப்படைத்த காரியத்தை நான் வெற்றிகரமாக முடித்தாக வேண்டும். பளியர்களின் அடுத்த தலைவன் நான்.என் இனத்திற்காக என் கோபதாபங்களை கட்டுப்படுத்தி கொள்வது தான் முறை."

"என்னை மன்னித்து விடுசாத்தன். நான் சாதாரண பிரஜையாக யோசித்து பேசி விட்டேன். நீயோ மிகப் பெரிய பொறுப்பிலிருந்து பேசுகிறாய். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிவிட முடியாதுதான். ஆமாம் இப்போது நாம் யாரைப் பார்க்க செல்கிறோம்? அந்த குடுவையில் என்ன உள்ளது?

"நாம் இப்போது ராஜகுருவான பிரம்மராயரைப் பார்க்கப் போகிறோம். அவருக்கு நீண்ட காலமாக மூட்டு வலி இருக்கிறது. அதற்காக மயில் எண்ணையை என் தந்தை இங்கு வருபவர்களிடம் கொடுத்து அனுப்புவார். இந்த முறை அந்த மயில் எண்ணையை கொடுக்க நானே வந்திருக்கிறேன். அதை சாக்கிட்டு நாம் வந்த வேலையைப் பற்றி பேசி விடுவேன். சாமியைப் பார்க்கும் முன்பு பூசாரியை சரிகட்டி விட வேண்டும்" என்றான் சாத்தன்.

"நல்ல யோசனைதான். இந்த மயில் எண்ணைக்காகவாவது ராயர் நமக்கு உதவி செய்வார். ஆனால் நமக்குராயரின் மளிகை எங்கிருக்கிறது என்று தெரியாதே?"

"மதுரைக்கு வழி வாயிலே! அரண்மனையை வந்தடைய ஒரு நண்பன் உதவியது போல் இங்கேயும் யாராவது வழி சொல்லி உதவ மாட்டார்களா என்ன?" என்றான் சாத்தன்.

"அதுவும் சரிதான் "

இருவரும் வழியில் தென்பட்ட சிலரிடம் பிரம்மராயரின் மாளிகைக்கு வழி கேட்டறிந்தபடி நடந்தனர்.

ஓங்கு தாங்காக வினோத அலங்காரத்துடன் மாளிகை முன் வந்து நின்ற இருவரையும் காவலர்கள் வியப்புடன் பார்த்தனர்.

"யார் நீங்கள் ?"

"மலைவாழ் பளியர்கள் .பிரம்மராயரை சந்திக்க வந்திருக்கிறோம்."

" என்ன காரணமோ?"

"அவருக்காக அவரது மூட்டு வலிக்காக மயில் எண்ணை கொடுத்து அனுப்பியிருக்கிறார் பளியர் குல தலைவர் .இதோ இந்த குடுவையை அவரிடம் கொடுங்கள்"

சில நாழிகை நேரத்திற்கு பின்பு சாத்தன் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டான்.

ராயர் முன்பாக முகமன் கூறி நின்ற சாத்தன் " வணக்கம் ராயரே " என்றான்.

"யாரப் பா நீ? பளியர் குல தலைவனை உனக்கு எப்படி தெரியும்?" என்றார் ராயர் அவனது வணக்கத்தை கண்டுகொள்ளாமல் .

"நான் பளியர் குல தலைவரின் மகன். என் பெயர் சாத்தன்"

"ஓ! நீ பளியர் குலத் தலைவனின் மகனா ? உன் தந்தை எப்படியிருக்கிறார்?" என்று நலன் விசாரிக்க தொடங்கினார் ராயர்.

"அவரை படுக்கையில் சாய்த்துவிட்டது ராயரே! அதனால் புதிய மன்னருக்கான எங்கள் அன்பளிப்பை கொடுக்க நானே நேரில் வந்தேன். அரண்மனையில் நிலமை சரியில்லை. எங்களை வரவேற்க யாரும் தயாராக இருக்கவில்லை. எங்கள் கேள்விக்கு எந்த பதிலும் அங்கு கிடைக்கவில்லை."

"ஆமாம். அரண்மனை நிலமைசரியில்லைதான். உனக்கான மரியாதை குறைவுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்."

"அதை நான் மனதில் வைத்து கொள்ளவில்லை."

"பெரிய மனது உனக்கு. நிலவரம் சரியாக சில நாட்களாகலாம்.அதுவரை நீ விருந்தினர் மாளிகையில் உன் பரிவாரங்களுடன் தங்கி கொள்ளலாம்.இதோ என் முத்திரை மோதிரம். இதை விருந்தினர் மாளிகையின் பொறுப்பதிகாரியிடம் காட்டினால் போதும். உனக்கு கிட்ட வேண்டிய மரியாதைகள் குறைவின்றி கிடைக்கும். இயல்பு நிலை திரும்பியதும் நீபுதிய மன்னரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன்."ராயர் தன் மோதிரத்தை கழற்றி அவனிடம் கொடுத்தார்.அது சில நாழிகைக்கு பிறகு விருந்தினர் மாளிகையின் பொறுப்பதிகாரி சாத்தன் மீதான பரிந்துரையை உறுதி செய்த பின் அவரிடமே திரும்ப வந்து சேர்ந்து விடும் என்பதைராயர் அறிவார்.

" நல்லது ஐயா"

"நான் கேட்பதை தவறாக எடுத்து கொள்ளாதே.! இந்த எண்ணையில் உயிரபாயமான விசயம் ஏதாவது இருக்கிறதா?" என்றராயரின் குரல் நடுங்கியது.

"என்னை சந்தேகிக்கிறீர்களா ராயரே?" என்றான் அதிர்ச்சியுடன் சாத்தன்.

"நிலைமையும் சூழ்நிலையும் அப்படி இருக்கிறது தம்பி .நான் சொல்வதை முழுதாக கேள் .அப்போது தான் என் கேள்வியில் உள்ள நியாயம் புரியும் " என்றராயர் மன்னரின் மரணத்திலிருந்து கதையை ஆரம்பித்தார். அவர் சொன்னதை முழுதாக கேட்ட சாத்தன்" உங்கள் சூழ்நிலை எனக்கு புரிகிறது. அந்த எண்ணையில் நீங்கள் நினைப்பதுபோல் ஏதுவுமில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் அந்த குடுவையை திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றான் சாத்தன்.

"கோபித்து கொள்ளாதே தம்பி.இந்த எண்ணையால் தான் நான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். நான் சொன்னதை மறந்து விடு. இந்த கிழவனை மன்னித்து விடு"

"பெரிய வார்த்தைகள் கூறி என்னை வருத்தப்பட வைக்காதீர்கள்"

"நல்லவன் நீ.அதனால் தான் சட்டென்று கோபம் வருகிறது உனக்கு. போகும் வழியில் அந்த ஓவியங்களை பார்த்துவிட்டுப் போ. உன்னுடைய கருத்தை நீ தயங்காமல் கூறலாம்."

"நிச்சயமாக பார்க்கிறேன் ஐயா. இப்போது உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்" என்று கிளம்பிய சாத்தனுக்கு தெரியாது அந்த ஓவியத்தில் இருக்கும் ரகசியத்தை தானே சபையில் உடைக்கப் போவது.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 6


சாத்தன் ராஜகுருவான பிரம்மராயரிடம் விடை பெற்றுப் போன பின்புராயர் மாளிகையின் உட்புறம் நோக்கி நடந்தார். உள்ளே இருந்த ஏராளமான அறைகளை கடந்து நடந்தவர் ஓரு அறைக்கு முன்பு நின்றதும் நிதானித்தார். சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து கொண்டவர் கதவை மூன்று முறை தட்டினார். பிறகு மீண்டும் இரண்டு முறை தட்டினார். வினோதமான அந்த சங்கேத பரிமாற்றத்திற்கு பிறகு அறையின் உள்ளே சிறு சலசலப்பு எழுந்து அடங்கியது. பிறகு கதவின் தாழ்ப்பாள் திறக்கப்படும் ஓசை கேட்டது.வாளை உருவியபடி கதவை திறந்த இரண்டு வீரர்கள் பிரம்மராயரை பார்த்ததும் தலை தாழ்த்தி நின்றனர்.
அருகே இருந்த மேசையில் ஆடு புலி ஆட்டம் வரையப்பட்ட ஒரு தோல் சுருண்டு கிடந்தது.
அதைப் பார்த்து புன்னகைத்து கொண்ட ராயர் "பரவாயில்லை. என் சங்கேத பரிமாற்றத்தை சரியாக புரிந்து கொண்டு கதவை திறந்து விட்டீர்கள்.இந்த சங்கேத பரிமாற்றத்தை நாம் மூவர் மட்டுமே அறிவோம். வேறு எந்த சத்தம் கேட்டாலும் நீங்கள் கதவை திறந்து விடக் கூடாது."

"உங்கள் உத்தரவு இங்கே கடுமையாக பின்பற்றப்படுகிறது. வெளியே வேறு எந்த சத்தம் கேட்டாலும் கதவை திறக்க மாட்டோம்"

" நல்லது. என்னுடைய தீவிர விசுவாசிகளும் மிகச் சிறந்த வீரர்களுமான உங்கள் இருவரையும் இங்கே அபராஜித வர்மனுக்கு பாதுகாவலர்களாக வைத்திருக்கிறேன். அவனுடைய உயிருக்கு நீங்கள் இருவரும் தான் பொறுப்பு."

" எங்கள் உயிரைக் கொடுத்தாவது மன்னரின் உயிரைக் காப்பாற்றுவோம் ராயரே!"

"நீலனுக்கு அடுத்தது நான் உங்களைத்தான் நம்புகிறேன். நீலன் மட்டும் நாடு கடத்தப்படாமல் இருந்திருந்தால் இந்தப் பணிக்கு நான் அவனைத் தான் நியமித்திருப்பேன். மறைந்த மன்னரிடம் அவனை மன்னிக்கும் படி நான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வந்திருக்கிறேன். அபராஜிதனுக்கான இடையூறுகளை நீக்கிய பின்பு நீலனை மீண்டும் மெய்காப்பாளனாக நியமிக்க இருக்கிறேன். அபராஜித வர்மன் எங்கே?" என்றார் ராயர்.

"நீங்கள் வருவதற்கு முன்பு வரை எங்களுடன் ஆடு புலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது தான் பக்கத்து அறைக்குள் நுழைந்தார். "

"சரி. விழிப்பாக இருங்கள். நான் அவனைப் பார்த்து விட்டு வருகிறேன்." என்றராயர் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தார். அறையில் இருந்த சன்னல் வழியாக ஒருவன் வெளியுலகை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.ராயரின் வருகையை உணர்ந்தவன் மெல்ல திரும்பிராயரை பார்த்தான். அபராஜித வர்மனுக்கு பதிநான்கு அல்லது பதினைந்து வயதிருக்கலாம். அவன் உதட்டின் மேல் பூனை முடி போல் அரும்புமீசை முளைக்க தொடங்கியிருந்தது.மகரக்கட்டின் காரணமாக அவனது குரல் உடைபட்டு ஒரு வாலிபனின் குரலைப் போல் மாறத் தொடங்கியிருந்தது. அவனது முகத்தில் வெளி உலகம் அறியாத கபடமின்மையும் குறும்புத்தனமும் நிரம்பியிருந்தன.

ராயரை பார்த்து வணங்கியவன் "இன்னும் எத்தனை நாள் எனக்கு இந்த சிறைவாசம் ? ஒரு அரசனையே சிறை வைத்திருப்பது முறைதானா ராயரே?" என்றான்.

"இது தற்காலிகம் தான் வர்மா. இது. நிரந்தர சிறைவாசமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன்."

" என்ன சொல்கிறீர்கள்?"

"உன் தந்தையை கொன்றவன் உன்னையும் சிறை பிடித்து விடுவானோ என்று நான் அஞ்சுகிறேன். அவனது சிறை வித்தியாசமானது. கம்பிகளற்ற திறந்த வெளிசிறை .அவற்றில் கம்பிகளுக்கு பதிலாக மதுவும், மாதுவும் இருக்கலாம்"

"என் தந்தையை கொன்றது நஞ்சுண்டன் என்று நினைக்கிறீர்களா? அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? அப்படி இருந்தால் என்னிடம் காட்டுங்கள். அவனை சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறேன்."

"இளம் ரத்தம் சூடேறி கொதிக்கிறது. பொறுமையாக இரு வர்மா. என் உருணர்வு நஞ்சுண்டன் சதிகாரன் என்று சொல்கிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை."

"சந்தேகத்தையும் உள்ளுணர்வையும் வைத்து ஓருவனை தண்டிக்க முடியாது."

"ஆமாம். ஆதாரத்தை இன்று மாலைக்குள் நாம் சேகரித்து விடலாம். அதற்காக ஒருவனை இங்கே வரவழைத்திருக்கிறேன். அவன் வந்து விட்டால் காட்சிகள் தலைகீழாக மாறிவிடும்" என்ற ராயர் ஆதித்தனையும் ஒவியத்தை பற்றியும் விளக்கமாக கூறி முடித்தார்.

"நீங்கள் ஒரு கள்வனை நம்புவதும் அவனை புகழ்ந்து பேசுவதும் எனக்கு வியப்பாக இருக்கிறது."

"சேற்றிலும் செந்தாமரை மலரும் வர்மா.!நீயே அவன் திறமையை நேரில் காணும் போது நம்புவாய் ."

"நல்ல விசயம் நடந்தால் சரி. இப்போதைக்கு நஞ்சுண்டனின் உயிர் ஆதித்தனின் கையில் இருக்கிறது."

"ஆமாம். ஒற்றர் படையிலிருந்து எனக்கொரு தகவல் வந்திருக்கிறது. ஆதித்தனை நஞ்சுண்டன் தீவிரமாக தேடிக் கொண்டிருப்பதாக. அவனது குதிரைஅகப்பட்டு விட்டதால் அதை வைத்து ஆதித்தனை பிடிக்க நஞ்சுண்டன் திட்டமிட்டிருக்கிறான்."

"நஞ்சுண்டனின் திட்டத்தை மீறி?"

"ஆதித்தன் உள்ளே வந்து விடுவான். அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம்"

" என் கவலையெல்லாம் என் அன்னையை பற்றி . இப்போது அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது?"

"அரசரின் எதிர்பாராத இறப்பு அரசியாரின் உடல் மனநிலையை கடுமையாக பாதித்து விட்டது. முன்பை விட இப்போது அவரின் நிலைமை நலமாகவே இருக்கிறது."

" என் அன்னையின் அருகிலிருந்து பார்த்து கொள்ள முடியாத பாவியாகிவிட்டேன். எல்லாம் இந்த பாழாய் போன அரச பதவி செய்த மாயம்."

"கவலைப்படாதே வர்மா! இன்றோடு உன் சிறைவாசத்திற்கு ஒரு முடிவுரை எழுதுவான் ஆதித்தன்.அதுவரை பொறுமையாக இரு. உன் பாதுகாப்பிற்கு "

"வீரர்கள் இருக்கிறார்கள்."

"அவர்கள் இருக்கிறார்கள். உன் பாதுகாப்பிற்கு உன்னிடம் ஆயுதம் இருக்கிறதா என்று கேட்டேன்"

அபராஜித வர்மன் தன் இடுப்பிலிருந்த வாளையும் குறு வாளையும் தொட்டு காட்டினான்.

"கவனம் " என்றராயர் அந்த அறையிலிருந்து வெளியேறினார். வெளியே இருந்த காவல் வீரர்களுக்கு சில ஆலோசனைகளை கூறியவர் மாளிகை வாசலுக்கு வந்தார். வாசலில் இருந்த இரண்டு வீரர்கள் கீழே விழுந்து கிடப்பதையும் அவர்களின் கழுத்தில் சிறு ஊசிகள் பாய்ந்திருப்பதையும் பார்த்தவர் " மறைந்திருந்து பார்த்தது போதும் நீலா.வெளியே வா" என்றார்.

நீலன் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ஒரு விரியன் பாம்பு சீறிக் கொண்டிருந்தது.

அதே நேரம் அரண்மனை வாசலில் நின்றிருந்த பகலவன் சாத்தன் தன் ஆட்களோடு ஓவிய கூடத்திற்குள் நுழைவதை பார்த்து கொண்டிருந்தான்.

அரண்மனை வாசலில் கட்டப்பட்டிருந்த குதிரையை பலரும் பார்வையிட்டு சென்று கொண்டிருந்தனர். யாரைப் பார்த்தும் குதிரை தனது உடலை சிலிர்க்கவில்லை.

பிரம்மராயர் உள்ளே வரும் போது ஆதித்தனின் குதிரையை பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது கேள்விகள் கேட்பார் என்பதால் ராயர் வரும் போது குதிரையை லாயத்தில் கட்ட நஞ்சுண்டன் உத்தரவிட்டிருந்தான்.

நஞ்சுண்டனின் உத்தரவை காவலர்களிடம் பேச்சு கொடுத்து மோப்பம் பிடித்திருந்த பகலவன் என்ற பெயரில் இருந்த ஆதித்தன் ராயர் வரும்போது குதிரை அங்கே இருக்காது என்பதால் ராயரின் வருகைக்காக காத்திருந்தான்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 7


நிலைமை முற்றாக தனக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த பகலவன் ஏதேனும் அதிசய சம்பவம் நிகழ்ந்தால் மட்டுமே தான் உள்ளே பிரவேசிக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தான். தான் மிகவும் அன்பு செலுத்தியதன்னுடைய குதிரையானமோகினியை எதிரி தன்னை பிடிப்பதற்கான பொறியாக பயன்படுத்துவான் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உள்ளே பிரவேசிக்க வேறு ஏதாவது உபாயங்களை தேட வேண்டியதுதான் என்று அவன் நினைத்து கொண்டிருந்த போது தான் அரண்மனைக்கான சாலையில் அந்த சிறு கூட்டத்தை அவன் கண்டான். அதுராயரின் பரிவாரம். நடுநாயகமாகராயரின் பல்லக்கு பயணிக்க அதை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுக்க அந்த சிறு கூட்டம் அரண்மனையை நெருங்கி கொண்டிருந்தது. ராஜகுருவானராயர் வருகிறார் என்றதும் அரண்மனை வட்டாரத்தில் சிறு சலசலப்பு எழுந்து அடங்கியது. அரண்மனை வீரன் ஒருவன் ராயர் வரும் சேதியை நஞ்சுண்டனின் காதுக்கு எடுத்துச் சென்றான்.

"அந்த கிழட்டு நரி தனது மாளிகையை விட்டு கிளம்பி விட்டதா? அதன் கழுகு கண்களில் ஆதித்தனின் வெண்குதிரை பட்டு விடக் கூடாது. உடனே அதை அரண்மனை வாயிலிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.ஆதித்தனுக்கும் ராயருக்கு மான தொடர்பு எனக்கு தெரியும் என்று நான் காட்டி கொள்ளவே கூடாது" என்றான் செய்தியறிந்த நஞ்சுண்டன்
அவனது உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்பட்டு ஆதித்தனின் குதிரையானமோகினி அரண்மனை வாயிலிலிருந்து அகற்றப்பட்டு லாயத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.

சற்று நேரத்தில் திரைச் சீலைகளால் மூடப்பட்டராயரின் பல்லக்கு அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தது. அதனை உப்பரிகையிலிருந்து நஞ்சுண்டன் பார்த்து கொண்டிருந்தான். "இந்த வழக்கு எனக்கு சாதகமாக முடியட்டும். கிழவனைத் தொலைத்து விடுகிறேன்" என்று மனதிற்குள் கருவிக் கொண்டவன் தன் கையை தட்டி" யார் அங்கே ?" என்றான். " பிரபு" என்றபடி வந்தவனை "கைத்தடியை உடனே அழைத்து வா" என்றான்.ராயர் பரிவாரத்தில் இருந்த கைத்தடி சற்று நேரத்தில் நஞ்சுண்டன் முன்பு நின்றான்.

"என்னை அழைத்தீர்களா ? " என்றான் கைத்தடி.

"ராயர் வந்து விட்டாரா?"

"ராயரின் பல்லக்கு வந்திருக்கிறது. நான் இன்னும் ராயரைப் பார்க்கவில்லை."

"நீ நன்றாக கவனித்திருக்க மாட்டாய் .ராயர் உள்ளே தான் இருப்பார். அது இருக்கட்டும். உன்னால் எனக்கு ஒரு உதவியாக வேண்டும்"

"சொல்லுங்கள். தலையால் செய்து முடிக்கிறேன்."

"அரண்மனையில் பொதுமக்கள் ஓவியங்களை பார்வையிட்டு கொண்டிருக்கிறார்கள். அது முடிந்ததும் மைதானத்தில் மக்களின் கருத்து கேட்கும் வைபவம் தொடங்கும். மக்கள் முதலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அதையே இறுதி முடிவாக மக்கள் ஆட்டு மந்தை போல் தொடர்வார்கள். நமக்கு ஆதரவான முதல் குரலை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு?"

"நான் என்ன செய்ய வேண்டும்?"

"நம் ஆதரவாளர்களை ஒன்று திரட்டு. அவர்களுக்கான சலுகைகளை அள்ளி தருவதாக வாக்குறுதி கொடு.பொன் கேட்பவர்களுக்கு பொன்னை கொடு. பெண் கேட்பவர்களுக்கு பெண்ணை கொடு. மதுவை கேட்பவர்களுக்கு மதுவை கொடு. விலையில்லாத மனிதனை கடவுள் இன்னும் படைக்க வில்லை" என்ற நஞ்சுண்டன் சில பொற்காசு பொதிகளை கைத்தடியை நோக்கி விட்டெரிந்தான். அவற்றை லாவகமாக பிடித்து கொண்டான் கைத்தடி.

"ஊரில் ஒரு நாய் குலைத்தால் எல்லா நாய்களும் குலைக்க ஆரம்பித்து விடும். முதலில் குலைக்கும் நாய் நம் நாயாக இருக்க வேண்டும். அதுதான் அரசியலின் பாலபாடம் " என்றான் நஞ்சுண்டன் .

" இதை செய்து முடித்தால் என் நிலைமை?" என்றான் கைத்தடி.

"என் பதவி ஸ்திரமானதும் நீதான் ராயரின் இறுதி கட்டத்தை முடிவு செய்யப் போகிறாய். அதன் பிறகு உனக்கு ஏறுமுகம் தான் " என்றான் நஞ்சுண்டன்

வெளியேறிய கைத்தடி தன் வேலையை துவக்கினான்.

ராயரின் பரிவாரங்களோடு இணைந்து கொண்டு பகலவனும் அரண்மனைக்குள் பிரவேசித்தான். சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தவனை அனுகினான் ஒருவன்.

"நீ அரண்மனைக்கு புதிய வனா?"

"ஆமாம் ஐயா. நீர் எப்படி அதைக் கண்டு பிடித்தீர்?"

" உனது திகைப்பான பார்வை சொல்லி விட்டது. நீ அரண்மனைக்கு புதியவன் என்று. நான் சொல்வதை செய்தால் நான் உனக்கு இரண்டு பொற்காசுகள் தருவேன்." என்றான் கைத்தடி.

"யாரும் பொற்காசுகளை பலன் இன்றி தரமாட்டார்கள். பதிலுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

" புத்திசாலி நீ. காசின் அருமையை புரிந்து கொண்டு விட்டாய். நான் சொல்வதை கவனமாக கேள். தளபதி நஞ்சுண்டனுக்கு ஆதாவாக நீ முதல் குரலை எழுப்ப வேண்டும். அவர் நிரபராதி குற்றமற்றவர் என்பதை உன் முதல் குரல் எதிரொலிக்க வேண்டும். "

"முதல் குரல் கொடுக்க என்னை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறாய். நீ ஒரு முடவன். உன் மீது எல்லோருக்குமேலேசான பரிதாபம் இருக்கும். நீ சொன்னால் மக்கள் சட்டென்று நம்புவார்கள். இதே வேலைக்கு மற்றவர்களுக்கு ஒரு பொற்காசுதான் கொடுக்கப் போகிறேன். முதல் குரல் மற்றும் முடவன் என்பதால் பரிதாபப்பட்டு இரண்டு நாணயங்களை தருகிறேன்."

"தயாளமன தய்யா உமக்கு." என்ற பகலவன் கைத்தடி கொடுத்த பொற்காசுகளை வாங்கி இடுப்பில் முடிந்து கொண்டான்.

"மறந்து விடாதே! நான் சொன்னதை நீ அப்படியே ெசய்ய வேண்டும்.கூட்டத்தில் நானும் இருப்பேன்."

" மறக்கமாட்டேன். நீங்கள் சொன்னதை அப்படியே இம்மி பிசகாமல் செய்து முடிக்கிறேன்." என்றான் பகலவன்.

கைத்தடி மற்ற ஆட்களை ஏற்பாடு செய்யக் கிளம்பினான்.

பகலவன் அரண்மனை படிக்கட்டுகளில் ஏற முயன்ற போது அவன் தோள்களில் ஒரு கை விழுந்தது.

பகலவன் திரும்பி பார்த்த போது பின்னால் நின்ற சாத்தன் சிரித்தான்.

"நாம் மீண்டும் சந்திக்கிறோம் நண்பா! ஆமாம் நீ எங்கே போயிருந்தாய் இவ்வளவு ேநரம்?"

" என் உறவுக்கார கிழவன் ஒருவன் மரணப்படுக்கையில் படுத்தபடி கடவுளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு முறை அவர் முகத்தை பார்த்து வரலாம் என்று போயிருந்தேன். முதியவர் இப்போதைக்கு பிராணனை விடுவதாக இல்லை. ஆமாம் நீங்கள் ஒவியங்களை பார்த்து விட்டீர்களா?"

"இன்னும் இல்லை. வா நாம் இருவரும் இணைந்தே அவற்றை பார்க்கலாம்"

"அப்படி என்ன ஓவியத்தை வரைந்து வைத்திருக்க போகிறார் அரண்மனை ஓவியர்?"

"அது ஓவியம் அல்ல நண்பா. ஓவியத் தொடர். மன்னரின் அருகிலிருந்த ஓவியர் மன்னரை புலி தாக்கி கொன்றதை வரிசைக் கிரமமாக வரைந்திருக்கிறார். அவற்றை பார்வையிட்டு விட்டு மக்கள் தங்கள் கருத்துகளை கூறலாம்"

"முதலில் ஓவியத்தொடர் களைப் பார்ப்போம். பிறகு கருத்துகளை பகிர்வோம்."

ஒவ்வொரு ஓவியமாக பார்வையிடத் தொடங்கிய பகலவனின் முகமும் சாத்தனின் முகமும் இருளடைய தொடங்கியது!

"நண்பா. இது நிச்சயமாக புலித் தாக்குதல் கிடையாது. இந்த படங்கள் இயற்கைக்கு முரணாக வரையப்பட்டிருக்கின்றன."

"நானும் அவற்றை கவனித்தேன். இது கொலையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?"

"இந்த படங்களே எனக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றன உன் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்றே எனக்கு தெரியவில்லை"

"எனக்கு ஒரு விசயத்தை நீ உறுதிப்படுத்தினால் என் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்."

" என்ன கேட்க போகிறாய்?"

"கடைசி படத்தை நன்றாக கவனி. "

" மன்னர் இறந்து கிடக்கிறார். பரிவாரங்கள் வருவதைப் பார்த்து புலி ஓடி விடுகிறது."

"அது சரிதான் நண்பா.மேலே உள்ள நீல நிற வானத்தை கவனி. அதில் மேகங்கள் நடுவே பறவைகள் பறப்பது போல் இருப்பது ஓரு மனிதனின் உ ருவத்தை காட்டவில்லையா?"

சாத்தன் வானத்தை உற்று கவனித்தான். நீல நிற வானத்தின் நடுவே மேகங்களுக்கு இடையே ஒரு மனிதனின் முகம் வரையப்பட்டிருந்தது.சாத்தனின் முகத்தில் அதிர்ச்சி பரவியது.

"இவன் தான்! இந்த மனிதன் தான் என்னிடம் புலி நகத்தை கேட்டு வாங்கியவன்" என்றான் சாத்தன் பதட்டத்துடன் .

அரண்மனை வாசலில் காவலர்களின் உடை அணிந்து நுழைந்து கொண்டிருந்தான் நீலன்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 8


அரண்மனை தர்பார் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை சற்று மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டனின் விழிகள் கூட்டத்தின் நடுவே இருந்த தனது விசுவாசியான கைத்தடியை அடையாளம் கண்டுகொண்டன. எல்லா ஏற்பாடுகளும் தயார் தானே என்று தனது கண்ணசைவினாலேயே கேட்டான் நஞ்சுண்டன். தனது தலையை அசைத்து எல்லா ஏற்பாடுகளையும் கனகச்சிதமாக செய்து முடித்து விட்டதாக பதில்கூறினான் கைத்தடி.

"எங்கே அந்த கிழவனை இன்னும் காணோம்?" என்று முணுமுணுத்துக் கொண்டான் நஞ்சுண்டன். அதே நேரம் அரசவைக்குள் நுழைந்தது ஒரு பல்லக்கு.ராயரின் ஆட்கள் தூக்கி வந்த அந்த பல்லக்கு திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தது. அந்த திரைச்சீலையை விலக்கி கொண்டு ஒரு கால்தரையில் பதிந்தது. அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த சாத்தன் நாம் பார்க்கும் போது ராயர் நடமாடும் நிலையில் தானே இருந்தார்? இங்கே ஏன் பல்லக்கில் வந்திருக்கிறார் என்று குழம்பினான். பெண்களும் நடமாட முடியாத முதியவர்களும் மட்டுமே பல்லக்கை பயன்படுத்துவார்கள் என்பதால் நடமாடும் நிலையில் இருக்கும் ராயர் பல்லக்கை பயன்படுத்தியது அவனுக்கு விசித்திரமாக தோன்றியது.

திரைச்சீலையை விலக்கி கொண்டு எழுந்து நின்றார் பிரம்மராயர். சம்பிரதாயமான ஒரு போலி வணக்கத்தை வழங்கினான் நஞ்சுண்டன்

தன் தொண்டையை செருமிக் கொண்ட ராயர் "நாட்டு மக்களுக்கு வணக்கம். இப்போது இங்கே ஒரு குற்ற விசாரணை நடைபெறப்போகிறது. மன்னரை வேட்டைக்கு அழைத்து சென்ற தளபதி நஞ்சுண்டன் பிணமாக திரும்ப கொண்டு வந்ததையும் அது ஒரு திட்டமிட்ட கொலை என்று நீங்கள் நஞ்சுண்டன் மீது சந்தேகப்படுவதையும் நான் அறிவேன். தன் மீதான சந்தேகத்தை போக்க மறைந்த மன்னருடன் கடைசி வரை இருந்த அரண்மனை ஓவியரை புலி தாக்கும் காட்சியை வரையச் சொல்லியிருந்தார் தளபதி. அந்த ஓவியத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப நாட்டு மக்களின் பிரதிநிதியான நீங்கள் உங்கள் கருத்தை கூறலாம்"

"ஒரு சந்தேகத்தை கேட்கலாமா ராயரே?" என்ற து ஒரு குரல்.

"தைரியமாக எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு உங்களுக்கு பூரண உரிமை உண்டு."

" நல்லது ராயரே! எல்லா வழக்குகளும் மன்னரால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவது தானே நம் வழக்கம்.? இந்த வழக்கில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டிய மன்னர் இன்னமும் வரவில்லையே?"

"நல்ல கேள்வி. இது மறைந்த மன்னரைப் பற்றிய வழக்கு .இதில் என்ன விதமாக தீர்ப்பளித்தாலும் மன்னரின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்டதாகவே நாட்டு மக்களால் கூறப்படும். அந்த குற்றச்சாட்டிற்கு ஆளாக விரும்பாத மன்னர் இந்த வழக்கில் தலையிடாமல் ஓதுங்கி கொண்டு விட்டார். வழக்கின் விசாரணையை ஓவியம் சுட்டிக்காட்டியாகி விட்டதென்று நம்புகிறேன். இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப் போவது மக்களாகிய நீங்கள் தான் மக்கள் திர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மன்னரும் நானும் நம்புகிறோம்."

ராயர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது பகலவன் தன் அருகில் நின்று கொண்டிருந்த சாத்தனிடம்" நண்பா! ஓவியத்தில் நீ கண்ட முரண்பாடுகளை இப்போது விளக்கி சொல்லலாமே?" என்றான்.

"நமக்கெதற்கு அரண்மனையின் வம்பு தும்பு விவகாரங்கள்.? மேலும் மலை வாசியான என் பேச்சு இங்கே பகடியாக பார்க்கப்படும். அதனால் இங்கே நான் மெளனமாக இருப்பதே உசிதமான காரியம் " என்றான் சாத்தன்.

"அப்படியானால் நீ உண்மையை மறைக்க துணை போகிறாய் என்று அர்த்தம் "

"சரி. அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். நீ தான் முன்னாள் படை வீரனாயிற்றே? எங்கே நான் சொல்ல மறுக்கும் உண்மையை நீ சொல்லலாமே?"

" சொல்லத்தான் போகிறேன்" என்றான் பகலவன்.

பேசி முடித்த ராயர் " இப்போது தீர்ப்பு வழங்கும் நேரம். மக்கள் தங்கள் குரல் மூலமாக தீர்ப்பை கூறலாம்.இரண்டே கேள்விகள் தான் நான் கேட்பேன். நஞ்சுண்டன் நிரபராதியா? குற்றவாளியா? மக்களின் ஆதரவு எந்த பதிலுக்கு அதிகம் என்பதை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும். மக்களின் தீர்ப்பை நானே முன்மொழிவேன்."

கூடியிருந்த மக்களை அமைதியாக ஒரு முறை பார்த்த ராயர் "நஞ்சுண்டன் குற்றவாளியா?" என்ற முதல் கேள்வியை வீசினார்.

கூட்டத்திலிருந்த கைத்தடி பகலவனை பார்த்து "ஆரம்பி" என்பதாக சைகை செய்தான்.

தன் உதடுகளை திறந்த பகலவன் "ஆம்" என்றான். பகலவன் தன் முதல் குரலை மாற்றி எழுப்பியதால் கைத்தடியின் கையூட்டு வாங்கிய ஆதரவாளர்கள் குழம்பி போனார்கள். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தாரிடையே நஞ்சுண்டன் குற்றவாளி என்ற நினைப்பு இருந்தாலும் அவன் மீதான குற்றத்தை எப்படி மெய்ப்பிப்பது என்ற குழப்பம் இருந்ததால் யாருமே வாய் திறக்கவில்லை. நஞ்சுண்டனுக்கு எதிராக எழுந்த முதல் குரலும் கடைசி குரலும் பகலவனுடையது தான் என்பதால் அனைவரின் கவனமும் அவன் மீது குவிந்தது. தனித்து நின்றாலும் தைரியமாக நின்ற அந்த வாலிப வீரனை பார்த்த ராயர்

"யாரப் பா நீ?" என்றார்.

"நானொரு அந்நியன், வழிபோக்கன், யாத்ரீகன். இதில் எது பொருத்தமோ அதையே வைத்து கொள்ளுங்கள்."

" உன் பெயர்?"

"ஆதித்தன். பகலவன் என்ற இன்னொரு பெயரும் உண்டு"

ராயர் ஆதித்தனை அடையாளம் கண்டு கொண்டு விட்டார். அவர் முகத்தில் மகிழ்ச்சி குடி கொண்டது.

" உனது ஊர்?"

"யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற முது மொழியை பின்தொடர் பவன் நான் .எல்லா நாடுகளும் எனது நாடுகளே "

"நல்லது தம்பி.! நீ எதை வைத்து நஞ்சுண்டனை குற்றவாளி என்கிறாய்?"

"அதற்கான ஆதாரங்கள் அந்த ஓவியங்களில் இருப்பதால் அவற்றை நான் மட்டுமே கண்டு கொண்டதால் "

"இங்கே இருக்கும் யார் கண்ணுக்கும் தெரியாத விசயம் உன் ஒருவனுக்கு மட்டும் தெரிந்துவிட்டது என்கிறாயா?"

"ஆமாம். மற்றவர்கள் பார்க்க தவறியவற்றை நான் பார்த்திருக்கிறேன் என்கிறேன்"

சபையில் சலசலப்பு நிலவியது. நஞ்சுண்டன் ஆதித்தனின் பெயரைக் கேட்டதுமே ஆச்சரியமடைந்தான். தன்னுடைய தீவிர கண்காணிப்பை மீறி இந்த கள்வன் எப்படிய உள்ளே நுழைந்து விட்டானே என்று வியந்தவன்

"ராயரே ஏன் இவன் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இவனொரு கள்வன்" என்றான் நஞ்சுண்டன்

"யார் கள்வன்? தங்கும் விடுதியில் இருந்த என் குதிரையை களவாடி வந்த நீதான் கள்வன். நான் இங்கு வரப்போவதை நீ எப்படியோ மோப்பம் பிடித்து விட்டாய். என்னை பிடிக்க என் குதிரை மூலம் வலை விரித்தாய். நான் முடவனாக நடித்து வந்ததால் என்னை உன் வீரர்களால் அடையாளம் காண முடியவில்லை."

பகலவன் என்ற பெயரில் தன்னுடன் நட்பு கொண்டவனின் பெயர் ஆதித்தன் என்பதையும் அவன் முடவனல்ல என்பதையும் அறிந்த சாத்தன் திகைத்து நின்றான். அதே நேரம் ஆதித்தனின் கேள்விகளால் திக்குமுக்காடிய நஞ்சுண்டன் தன்னை சமாளித்து கொண்டு பேசத் தொடங்கினான். "நீ என்னை தப்பாக புரிந்து கொண்டு விட்டாய். இரட்டைசுழி கொண்ட அபூர்வ குதிரையை வேறு யாரும் களவாடிவிடக் கூடாது என்பதாலேயே அதை பிடித்து வந்தேன். களவாடிய குதிரையை உரியவரிடம் ஒப்படைக்க வே அரண்மனை வாசலில் குதிரையை கட்டி வைத்தேன்"

"நன்றாகவே கதை சொல்கிறாய். என்னால் நம்பத் தான் முடியவில்லை"

"பொறு ஆதித்தா. அந்த விவகாரத்தை பிறகு பார்ப்போம். நீ ஓவியத்தில் பார்த்த விசயங்களை கூறு" என்றார் ராயர்.

நஞ்சுண்டன் குறுக்கிட்டு "மன்னிக்கவும் ராயரே! ஒரு அந்நியன் ஊர் பேர் தெரியாத ஒருவன் நம் நாட்டு நீதிபரி பாலனத்தில் தலையிடுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது."

"நீதிஉலகத்திற்கே பொதுவானது." என்றான் ஆதித்தன்.

"எங்கள் நாட்டு சட்டம் அந்நியர்களை நீதி வழங்க அனுமதிப்பதில்லை. அப்படி அந்நியர்கள் நீதி வழங்க வேண்டுமென்றால் தங்கள் மதியுகத்தை நிருபிக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமல்ல."

" என் திறமையை நிருபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?"

"புதிர் பாதையில் நுழைந்து வெளியே வரவேண்டும். அந்த பாதையிலிருந்து வெளியே வந்து விட்டால் நீ இங்கே நீதி வழங்கவும் சாட்சி சொல்லவும் தடையேதுமில்லை.இது எங்கள் நாட்டு வழக்கம் "என்றான் நஞ்சுண்டன் .

ராயருக்கு நெஞ்சு துடிப்பு அதிகமானது. "புதிர் பாதையா? அதிலிருந்து இதுவரை யாரும் உயிரோடு திரும்ப வந்ததில்லையே?" என்றார் அதிர்ச்சியுடன் .

ஆதித்தன் சிரித்தபடி "சாவி இல்லாத பூட்டுக்கள் தயாரிக்கப்படுவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சனைகள் உலகிலேயே இல்லை. அந்த பாதையில் பயணிக்க நான் தயார் " என்றான்.

நஞ்சுண்டன் தனக்குள் சிரித்தபடி " திரும்ப வந்தால் தானே நீ நீதி வழங்குவாய்?" என்று நினைத்து கொண்டான்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 9


அந்நியனான தான் இங்கே நீதி வழங்கவோ சாட்சியம் கூறவோ வேண்டுமெனில் நஞ்சுண்டன் சொல்லும் புதிர் பாதையில் பயணித்து வெளியே வர வேண்டும் என்பதை ஆதித்தன் தெரிந்து கொண்டான். அந்த நாட்டு வழக்கத்தை பின்பற்றி தன்னை புதிர்பாதையிலேயே வைத்து கதையை முடித்துவிட நஞ்சுண்டன் திட்டமிட்டு இருப்பதை தெரிந்து கொண்டான் ஆதித்தன். தனக்கு உதவி செய்ய வந்த ஆதித்தன் இப்படி ஓரு இக்கட்டில் சிக்கித் தவிப்பான் என்பதை பிரம்மராயர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த இடத்தில் நஞ்சுண்டன் ஆதித்தனை முந்திக் கொண்டு விட்டதாகராயருக்கு தோன்றியது.இந்த இக்கட்டினை ஆதித்தன் எப்படி கடந்து வருவான் என்ற கவலையும் ஆயாசமும் அவரது முதிய மனதில் குடிகொண்டது.

ஆதித்தனுக்கும் தனக்கும் மட்டுமே புரிந்த ஓவிய ரகசியத்தை நாட்டின் குடிமகனான தான் தலையிட்டு தீர்த்திருந்தால் ஆதித்தன் புதிர் பாதை என்ற அபாயத்தில் வீணாக சிக்கியிருக்க மாட்டானோ என்ற சுய பரிதாபத்தில் குமைந்து கொண்டிருந்தான் சாத்தன். தந்தையின் கட்டளையை ஏற்று முதல் முதலாக அரண்மனைக்கு வருகை தந்த அவன் வீண் விவகாரங்களில் தலையிட்டு தந்தையின் கோபத்தை சம்பாதித்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவனால் மௌனமாகவே இருந்து விட்டான்.

புதிர் பாதையை பற்றி சிறிதும் தெரியாத ஆதித்தனிடம் அதைப் பற்றி விளக்கி கூற ஆரம்பித்தார் ராயர். மறைந்த மன்னர் உருவாக்கிய வழிதான் புதிர் பாதை .இருபதடி நீளம் கொண்ட ஐந்து வழிகள் திறந்திருக்கும். அதில் ஒரே ஒரு வழிக்குத் தான் மறுவாசல் உண்டு. அதில் நுழைபவர்கள் மட்டுமே உயிருடன் மறுவாசல் வழியே வெளிேய வர முடியும். மற்ற நான்கு வாசல்களில் நுழைபவர்கள் உள்ளே இருக்கும் அபாயகரமான பொறிகளில் மாட்டி உயிரை இழக்க வேண்டியதுதான். இந்த ஐந்து வழிகளில் சரியான வழி எதுவென்று இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த சரியான வழியில் யாரும் இதுவரை உயிருடன் திரும்ப வந்ததில்லை. மறைந்த மன்னர் தன்னால் தீர்ப்பு வழங்க முடியாத வழக்குகளில் குற்றவாளிகளை புதிர் பாதைக்குள் அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இறைவன் விரும்பினால் அவன் சரியான வழியில் வெளியே வந்து தன்னை நிரபராதி என்று நிருபிக்கட்டுமே என்பது மன்னரின் எண்ணம். சிலரின் அறிவை அறியும் அளவு கோலாகவும் அந்த புதிர் பாதை விளங்கியது.

புதிர் பாதையின் பூர்வாசிரமத்தை கேட்ட ஆதித்தன் சிந்தனையில் ஆழ்ந்தான். அவனது நெருங்கிய நண்பனும் காலமுன்னோடியுமான பைராகி கட்டிடக்கலை பற்றியும் குகைகளின் அமைப்பை பற்றியும் புதிர் பாதைகளை அமைப்பது பற்றியுமான பல விசயங்களை ஆதித்தனுடன் உரையாடியிருக்கிறான். அவற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்த ஆதித்தன்" ராயரே ! உங்கள் நாட்டு வழக்கத்தை நான் மீற விரும்பவில்லை. அந்த பாதையிலிருந்து நான் உயிரோடு திரும்ப வருவேனா இல்லையா என்று தெரியாது. அதனால் அந்த பாதையில் பிரவேசிக்கும் முன்பாக நான் இந்த ஓவியத்தொடரை வரைந்த ஓவியரை பாராட்ட விரும்புகிறேன்." என்றான்.

"அவர் வாய் பேச முடியாதவராயிற்றே?"

"அதனால் தான் வரையும் திறமையை கடவுள் அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஒரு கலைஞனிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருவது அவனது படைப்பை மற்றவர்கள் பாராட்டுவது தானே? அந்த ஓவியரை இங்கே வரவழையுங்கள்" என்றான் ஆதித்தன்.

சில நிமிடங்களில் ஓவியர் அங்கே வருகை தந்தார்.

அவரை கட்டியணைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தான் ஆதித்தன் .தான் படத்தில் வரைந்த விசயங்களை ஆதித்தன் புரிந்து கொண்டு விட்டான் என்பதை அறிந்த ஒவியரின் முகம் மலர்ந்தது. தான் ஒரு பரிசு தர விரும்புவதாக ஓவியர் சைகையில் கூற ஆதித்தன் அதைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தான். தனது மனைவியும் மகளும் நஞ்சுண்டனின் பிடியில் இருப்பதை சூசகமாக பசுவும் கன்றும் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது போன்ற ஒ வியத்தை ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஓவியர் அதை ஆதித்தனுக்கு பரிசாகக் கொடுத்தார்.அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு விட்ட ஆதித்தன் அதை வாங்கி தன் நண்பனான சாத்தனிடம் கொடுத்தான்.

"நண்பா. புதிர் பாதையில் பிரவேசிக்கும் நான் உயிருடன் திரும்ப வராவிட்டால் என் நினைவாக இந்த ஓவியத்தை வைத்து கொள். நான் தரும் அன்பு பரிசு இது " என்றான் ஆதித்தன்

சாத்தனின் இரும்பு மனமும் இளகத் தொடங்கியது.

"நன்றி நண்பா. உனக்கு பரிசாக கொடுக்க என்னிடம் எதுவும் இல்லையே?" என்றான் சாத்தன் ஆற்றமையுடன்

"ஏன் இல்லை. ? உன் இடுப்பில் இருக்கும் சிறு பொதி மூட்டையை பரிசாக எனக்கு கொடுக்கலாமே?"

"அது வெறும் திணைமாவு நண்பா. அதை வைத்து என்ன செய்ய போகிறாய்?"

" மரணிக்கும் போது உன் நினைவாக மரணிக்கலாம் அல்லவா?"

"அபசகுணமாக பேசாதே நண்பா. நீ வெற்றியுடன் திரும்ப வருவாய்"

சாத்தணிடம் விடை பெற்று வந்த ஆதித்தன் ராயரிடம் "ராயரே! எனக்கு கடைசியாக ஒரு ஆசை உள்ளது. அதை மட்டும் நிறைவேற்றுங்கள் போதும் " என்றான்.

" என்ன விசயம் ஆதித்தா?" என்றராயரின் காதில் கிசுகிசுத்தான் ஆதித்தன்.

ராயரின் முகம் மாறியது. "கண்டிப்பாக நீ சொன்ன விசயத்தை நான் கவனிக்கிறேன்'' என்றார் ராயர்.

"அப்படியானால் புதிர் பாதையில் பிரவேசிக்க நானும் தயார் " என்றான் ஆதித்தன். கணிசமான கூட்டம் பின் தொடர அரண்மனை வளாகத்திற்குள் இருந்த புதிர் பாதை அரங்கிற்கு வந்து சேர்ந்தான் ஆதித்தன்

கல் பாவியதாழ்வாரத்தில் நடந்தவர்கள் ஓரிடத்தில் நின்றார்கள். அங்கே ஐந்து வாசல்கள் உள்ளடங்கி காணப்பட்டன. அங்கே ஆதித்தனை நிறுத்தி வைத்த ராயர்" நாங்கள் அனைவரும் மறு வாசலில் காத்திருப்போம். சரியான வாசலை கண்டுபிடித்து வெளியே வருவது இனி உன் பொறுப்பு." என்றார். மக்கள் அனைவரும் கிளம்பிய பின் ராயர் ஆதித்தனின் தோளில் தட்டினார்.

" எனக் கே தெரியாத ஒரு ரகசியம் நாட்டில் உள்ள தென்றால் அது இந்த புதிர் பாதை ரகசியம் தான்.இதில் சரியான வழி எதுவென்று எனக்கே தெரியாது. உனக்கு உதவி செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்" என்றார் ராயர்.

" என் திறமையை சிறுமைப்படுத்தாதீரும் ராயரே! எனக்கு உதவி செய்ய வேறு மார்க்கம் உண்டு" என்ற ஆதித்தன் சாத்தன் தன்னிடம் கொடுத்த திணை மாவு பொதியை தலைக்கு மேல் அந்தரத்தில் பிரித்து வீசினான்.

"ஆதித்தா. இதென்ன பைத்தியக்காரத்தனம்?'' என்றார் ராயர் அவனது செயலின் காரணம் புரியாமல் .

"இல்லை. புத்திசாலித்தனம்." என்ற ஆதித்தன் தரையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் வெளிச்சம் பரவியது.

"ராயரே! இன்னும் சற்று நேரத்தில் நாம் இருவரும் மறு வாசலில் சந்திப்போம்" என்ற ஆதித்தன் குகை பாதை ஓன்றில் பிரவேசித்தான்.

குழப்பத்துடன் ராயர் மறுவாசலுக்கு நகர்ந்தார். அவருடன் இருந்த காவல் வீரர்களில் ஒருவனாக நீலனும் வந்து கொண்டிருந்தான்.ராயருக்கு மட்டுமே கேட்கும் குரலில் "ராயரே " என்றான் நீலன்.

நீலனை அந்த உடையில் எதிர்பாராத ராயர் திடுக்கிட்டார்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அவன் பெயர் ஆதித்தன்

அத்தியாயம் 10


இருபதடி நீளமுள்ள குகை பாதையில் நடந்து கொண்டிருந்தான் ஆதித்தன். அவனது மனம் எப்போதோ நடந்த ஓரு நிகழ்ச்சியை எண்ணி பார்த்தது. தனது நண்பனான பைராகியோடு காட்டிற்கு வேட்டையாட சென்ற ஆதித்தன் ஒரு முரட்டு கரடி துரத்தியதால் குகை ஓன்றில் தஞ்சமடைந்தான். இயற்கையாக அமைந்த அந்த குகை இந்த புதிர் பாதையை போன்ற அமைப்பை கொண்டது. இதிலிருந்து எப்படி சரியான வழியை கண்டுபிடித்து மீள்வது என்று அவன் திகைத்து கொண்டிருந்த போது கூட இருந்த பைராகி எந்த மன கிலேசமும் பயமும் இல்லாமல் அமைதியாக இருந்தான். அவனது பொறுமையும் அமைதியும் ஆதித்தனுக்கு வியப்பை தந்தது. வெளியே கரடியின் உறுமல் சத்தம் கேட்டு வரும் நிலையில் ஏதேனும் ஒரு குகை வழியில் நுழையாமல் பைராகி அமைதியாக இருந்ததை பார்த்த ஆதித்தன் "நண்பா. விரைந்து ஓடிவா. ஏதேனும் ஒரு குகை பாதையில் நுழைவோம்" என்றான்.

ஆதித்தனின் அவசரத்தை கண்டுகொள்ளாத பைராகி" பொறு" என்றபடி கீழே கிடந்த மணலை அள்ளி நின்ற வாக்கில் செங்குத்தாக கீழே விட்டான். அது கீழே விழந்ததும் அதை பார்த்து ஒரு பாதையை உறுதியாக தேர்ந்தெடுத்தவன் "நாம் இதில் தான் பயணிக்க வேண்டும்" என்றவனாக அந்த பாதையில் விரைந்தான். அவனது செய்கையின் அர்த்தம் புரியாத ஆதித்தனும் அவனைப் பின் தொடர்ந்தான். கரடியின் அபாயத்ருதிலிருந்து தப்பி பிழைத்த பின்பு தனது செயலுக் கான காரணத்தை விளக்கினான் பைராகி .

"குகையின் எல்லா பாதைகளிலும் காற்று நிரம்பியிருக்கிறது. வெளியிலிருந்து உள்ளே வரும் புதிய காற்று வாசல் உள்ள குகை பாதையின் வழியே தான் வெளியேறும். அதற்கு வெளியேற வேறு வழியில்லை. என் கையிலிருந்து விழுந்த மண் காற்று செல்லும் குகை பாதையில் விழுந்ததால் அதன் வழியே வெளியேற வழி உண்டு என்று தெரிந்து கொண்டேன். இயற்கை பொய் சொல்லவில்லை. நான் நினைத்தது போல் கணித்தது போல் நாம் மறு வாசல் வழியாக வெளியேறிவிட்டோம்" என்ற பைராகியின் அறிவுக்கூர்மையை எண்ணி வியந்தான் ஆதித்தன் இப்போது அந்த நிகழ்வு அவனுக்கு வந்து விட்டது. பைராகி மணலை பயன்படுத்தினான் என்றால் தான் தினை மாவினை பயன்படுத்தி அது காட்டிய வழியில் பயணிப்பதை எண்ணி தனக்குள் சிரித்து கொண்டான் ஆதித்தன். இப்படி ஒரு குயுக்தியான வழிமுறையை தனக்கு சொல்லிக் கொடுத்த பைராகிக்கு மனதிற்குள் நன்றி கூறிகொண்டான் ஆதித்தன்.

இருட்டு வழியில் எந்த தாக்குதலும் இல்லாமல் முழுதாக மறு வாசலை அடைந்த ஆதித்தனை பார்த்து விக்கித்து நின்றது மக்கள் கூட்டம் "அதிர்ஷ்டமும் கடவுளும் ஆதித்தனின் பக்கத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது" என்று முணுமுணுத்தார் ராயர்.

ஆதித்தன் உயிருடன் புதிர் பாதையிலிருந்து வெளியேறிய விஷயம் மக்களிடையே தீயாக பரவியது. மீண்டும் அவை கூடியது.

" என்ன நஞ்சுண்டரே? உமது நாட்டு வழக்கப்படி நடந்த போட்டியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். இப்போது மன்னர் மரணத்தில் நீதி வழங்க எனக்கு தகுதி கிடைத்துவிட்டதா?" என்றான் ஆதித்தன் கேலியாக ..

நஞ்சுண்டனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. ஆதித்தன் புதிர் பாதையிலிருந்து உயிரோடு திரும்ப வந்ததை அவனால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை.

"இது என்னுடைய விருப்பமல்ல. மறைந்த மன்னரின் விருப்பம். அதை நிறைவேற்றுவது என்னுடைய கடமை. நீ போட்டியில் வென்று வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி தான் " என்றான் வேண்டா வெறுப்பாக நஞ்சுண்டன் .

"பிறகென்ன? நீ ஒவியங்களில் கண்ட உண்மைகளை இங்கே எடுத்து கூறலாம்" என்றார் ராயர். அவர் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

"அவசரப்படாதீர்கள். அவற்றை விளக்கி சொல்ல என்னை விட தகுதியான இன்னொருவர் இங்கே உண்டு "

"யார் அந்த இன்னொரு ஆசாமி.? அப்படியானால் உன்னைத் தவிர இன்னொருவருக்கும் ஓவியத்தின் உண்மை தெரியும் என்று சொல்"

"ஆமாம் ஐயா.! என்னை விட அதிக விசயம் தெரிந்தவர். அவர் என்னுடைய நண்பர் சாத்தன் .பளியர் குல தலைவரின் மகன்"

ஆதித்தன் தன் பெயரை உச்சரித்ததும் தர்மசங்கடத்துடன் வெளியே வந்தான் சாத்தன். அவனை பார்த்து திகைத்த ராயர் "இவன் எனக்கு மயில் எண்ணை கொடுத்தவனாயிற்றே? உனக்கு தெரிந்த உண்மையை நீ என்னிடம் கூறியிருக்கலாமே?" என்று சாத்தனை கடிந்து கொண்டார்.

" மன்னித்து விடுங்கள் ராய ரே! உங்கள் மாளிகைக்கு நான் வருகை தரும் போது நான் இந்த ஓவியங்களை பார்க்கவில்லை. இப்போது தான் இவற்றை பார்வையிட்டேன்." என்றான் சாத்தன்

" ஓரு மலைவாசி மன்னரின் மரணத்தை பற்றி விளக்கம் கூறுவதா? வேடிக்கை. இவனுக்கு வன விலங்குகள், காடு, மரங்களை தவிர வேறேன்ன தெரியும்?" என்று இகழ்ச்சி புன்னகை புரிந்தான் நஞ்சுண்டன் .

"திறமை பல வகையானது நண்பரே! விலங்குகளை பற்றி அவற்றின் குணவியல்புகளை பற்றி என் நண்பனுக்கு தெரிந்தது போல் நகரவாசிகளான உங்களுக்கு அதிகம் தெரியாது." என்றான் ஆதித்தன்

"எங்களுக்கு தெரியாத விசயங்கள் அவனுக்கு தெரியுமா? அப்படியென்ன விசயத்தை உன் நண்பன் சொல்லி விடப் போகிறான்.?" என்றான் நஞ்சுண்டன் .

"வரும் வழியில் என் நண்பர் என்னுடன் பல விசயங்களை பேசிக் கொண்டு வந்தார். அதில் அவர் சொன்ன ஒரு விசயம் நான் இதுவரை கேள்விப்படாதது. நீங்களும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அந்த ஒரு விசயம் போதும் என் நண்பனின் திறமையை நீங்கள் புரிந்து கொள்ள.!

"அப்படி என்ன அரிதான விசயத்தை உன் நண்பன் கூறப் போகிறான்?" என்றான் நஞ்சுண்டன் .

"நண்பரே! அந்தமான் வேட்டையை பற்றி நீங்கள் என்னிடம் சொன்னதை இந்த அவையின் முன்பும் சொல்லலாம். பிறகு நாம் ஓவியத்திற்கு போகலாம்" ஆதித்தனின் வேண்டுகோளை ஏற்ற சாத்தன் அவைக்கு முன்பாக வந்து வணங்கி நின்றான்.

எல்லோரையும் ஏற இறங்க ஒரு முறை பார்த்த சாத்தன்." அவையோர் அனைவருக்கும் வணக்கம். இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்பவர்கள் நாங்கள். விலங்குகளின் பழக்க வழக்கங்கள், வேட்டையாடும் இயல்புகளை நன்றாக அறிந்தவர்கள் நாங்கள். நகரவாசிகளான உங்களுக்கு தெரியாத பல புதிய விசயங்களை நாங்கள் சாதாரணமாக தெரிந்து வைத்திருப்போம். ஒரு புலி ஒரு மானை வேட்டையாட தீர்மானித்து விட்டால் அந்தமான் அறியாமல் அதை கண்காணித்து கொண்டேயிருக்கும். மான் அலட்சியமாக இருக்கும் ஒரு கணத்திற்காக நாள் முழுக்க ஒரு புலி காத்திருக்கும். இரவு தான் குறி வைத்திருக்கும் மான் தூங்கும் வரை புலி பதுங்கி காத்திருக்கும். விடியற்காலை வேளையில் சிறுநீர்மானின் வயிற்றில் மிகுதியாக சேர்ந்திருக்கும்.விடியற்காலையில் துயில் எழும் மான் சிறுநீர் கழிக்கும் தருணம் தான் புலி தாக்குவதற்கு ஏற்ற தருணம்.சிறுநீரால் வயிறு வீங்கியிருப்பதால் மானால் அதிக வேகத்துடன் ஓட முடியாது.அப்படி ஓடும் போதே சிறுநீர் கழித்தால் அதன் கால் நரம்பு தானாகவே பிடித்துக் கொள்ளும்.புத்தியுள்ள மான்கள் நள்ளிரவிலேயே எழுந்து சிறுநீர் கழித்து விடும். அதற்காக ேசாம்பேறித்தனப்படும் மான்கள் அதிகாலையில் புலியால் தாக்கப்பட்டு மரணமடைய வேண்டியதுதான்.ஒரு வேட்டை காரனாகிய நான் இதை விடியற்காலை வேட்டையில் இறந்து கிடந்த மான்களின் உடலை ஆராய்ந்து இதை கண்டுபிடித்தேன். வயிறு கிழிக்கப்பட்டமானின்.வயிற்று பகுதி மாமிசம் முழுவதும் சிறுநீரால் நனைந்து கிடந்ததை வைத்து இதை சொல்கிறேன். இந்த விசயத்தை நீங்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்றான் சாத்தன்.

"இல்லை" என்றது அவை.

"இப்போது என் நண்பன் விலங்குகளின் இயல்பை கணிப்பதில் நிபுணன் என்பதை அனைவரும் ஏற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன்." என்றான் ஆதித்தன்

"நிச்சயமாக "

"அப்படியானால் ஓவியத்தின் முதல்முரணை என் நண்பர் இப்போது வெளிப்படுத்துவார்" என்றான் ஆதித்தன்.

"புலிகளின் இயல்பு தன் இரையை கழுத்தில் கடித்து கொல்வது. இங்கே இருக்கும் ஓவியத்தில் மன்னரின் குரல்வளை கடிக்கப்படவேயில்லை. மன்னரை புலி தாக்கவில்லை என்பதற்கு இதுவே உறுதியான சான்று " என்றான் சாத்தன்

அவை சலசலத்தது.

நஞ்சுண்டனின் முகம் சவமாக வெளுத்தது.​
 

Latest posts

New Threads

Top Bottom