Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Tamil Novel

Status
Not open for further replies.

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -17.1

வீட்டில் என்ன பிரச்சனை காத்திருக்கிறதோ? என்று யோசித்தவாறு வீடு வந்து சேர்ந்தார் சுமேந்திரன்.‌ காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது அவரைக் கோபமான முகத்துடன் வரவேற்றார் சுவர்ணலதா.

மனைவியின் முகத்தைப் பார்த்து மிரண்டவர், ‘ஏதோ போட்டு கொடுத்துட்டான் போலையே’ என்று நினைத்தவாறு பயத்துடன் உள்ளே நுழைந்த அவரைத் தடுத்து நிறுத்தினார் சுவர்ணலதா.‌
“உங்க மனசுல என்ன தாங்க நெனைச்சுக்கிட்டு இருக்கீங்க? அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு டிராமாயெல்லாம் போட்டு அமெரிக்காவுல இருந்து இங்க வர வச்சேன்.‌ ஆனா அவன் வந்து ரெண்டு நாள் முழுசா முடியறதுக்குள்ள மறுபடியும் அவன் அங்க போக முடிவெடுக்குற மாதிரிபண்ணி வச்சுருருக்கீங்க.‌ யாரைக் கேட்டு நீங்க அவனை அடிச்சீங்க? சொல்லுங்க யாரை கேட்டு என் மகனை நீங்க அடிச்சீங்க? உங்களுக்கே தெரியும் எந்த மாதிரி சூழ்நிலையில உதய் நமக்குக் கெடச்சான்னு. அப்படி இருக்கும் போது அவனை எதுக்கு நீங்க அடிச்சீங்க? இதே நீங்க பெத்த பையனா இருந்தா இப்படி அடிச்சுருப்பீங்களா? அநாமத்தா தண்ணியில கெடந்து எடுத்தவன் தானேன்னு நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்‍, நம்ம இஸ்டத்துக்குக் கஷ்டப்படுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்களா?” என்று காட்டுக் கத்தலாகக் கத்த.

வேகமாகத் தன் மனைவியின் வாயைத் தன் கைக்கொண்டு அடைத்தவர்,“எதுக்கு லதா இப்படி டென்ஷன் ஆகுற. நான் என்னைக்கு உதய் நம்ம பையன் இல்லன்னு சொல்லி இருக்கேன். நீ ஞாபகப் படுத்தவும் தான் எனக்கு அதுவே ஞாபகம் வருது. அவன் நம்ம பையன் இல்ல, தண்ணியில இருந்து கண்டெடுத்த பையன்னு ஏன்மா சொல்ற, அதுதான் உண்மைன்னாலும் கேட்க கஷ்டமா இருக்கு. ஏன்மா இப்படி இருக்க, இந்த விடயம் அவனுக்குத் தெரிஞ்சா அவனோட மனசு எவ்வளவு கஷ்டப்படும். கொஞ்சங்கூட இதை யோசிக்க மாட்டியா? உதய்யை வீட்டுல வச்சுக்கிட்டு இந்தப் பேச்சை உன்னை யாரு எடுக்கச் சொன்னது? ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டா நான் சொல்ல போறேன். அதை விட்டுட்டு நீயா ஒன்னு யோசிச்சு, நீயா ஒன்னை முடிவு பண்ணுவியா?” என்று கடிந்துக் கொண்டவர் அவசரமாக மாடி அறையை எட்டிப்பார்த்தார்.‌ மகனின் அறைக் கதவு சாத்தியிருந்ததை உறுதி செய்து கொண்டவர், கண்களில் கண்ணீரோடு உதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றிருக்கும் தன் மனைவியை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார்.

பின்னர், “சரி விடுமா இதுக்கு மேல இது மாதிரி பேசிடாத. தெரியாத்தனமா கூட இதுபோல இன்னொரு தடவை நீ பேசி அது உதய்கு தெரிய வந்தா ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவான். அதுக்கப்புறம் நாமளே நெனச்சாலும் அவன் இங்கிருந்து போறதை தடுக்க முடியாது..”

“இல்லங்க, எங்க நீங்க மறுபடியும் உதய்யை ஏதாவது சொல்லப் போயி, அவன் நம்மள விட்டு பிரிஞ்சு அமெரிக்கா போயிடுவானோங்குற பதட்டத்துலையும், பயத்துலையும் தான் இப்படிச் சொல்லிட்டேன். இனிமே இது மாதிரி சொல்ல மாட்டேன் மன்னிச்சிடுங்க. அதே மாதிரி நீங்களும் இனிமே அவனை அடிக்காதீங்க, திட்டாதீங்க‌. ஏன்னா நம்ம பையன் தோளுக்கு மேல வளர்ந்துட்டான், அவனுக்கும் கல்யாணம் பண்ற வயசாச்சு”

“என்ன லதா நான் என்னமோ வேணும்னே அவனை அடிச்ச மாதிரி லூசுத்தனமா பேசுறத? ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?” என்று கேட்டவர் மருத்துவமனையில் நடந்ததைச் சொன்னவர்,
“சப்போஸ் இந்தப் பிரச்சனை பெருசாகியிருந்தா என்ன பண்றது. ஹாஸ்பிடலோட ரெபிடேஷன் கெட்டுப்போறதை விட அவனுக்குக் கெட்ட பேர் வர்றதை தான் நான் விரும்பல. எனக்கப்புறம் இந்த ஹாஸ்பிடலை எடுத்து நடத்துறது, செய்யறது எல்லாம் இவன் தான் பண்ணணும் அப்படி இருக்கும் போது அவனுக்கு ஒரு கெட்ட பேரு வந்தா நல்லா இருக்குமா? அதனால தான் கொஞ்சம் கோவமா நடந்துக்கிட்டனே தவிர என் புள்ளை மேல எனக்குப் பாசம் இல்லாம இருக்குமா.?”

“உங்களுக்கு நம்ம பையன் மேல பாசம் இல்லன்னு நான் சொல்ல வரல. ஆனா கோபத்துல நாலு பேர் முன்னால அவனைக் காயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்ல வர்றேன். நமக்கு இருக்குறது ஒரே பிள்ளை, அவனும் நம்மளை விட்டுட்டு தூரதேசம போயிட்டான்னா என்ன பண்றது? நாம யாருக்காகச் சம்பாதிச்சு இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி வச்சுருக்கோம், பெரிய வீடு கட்டி வச்சுருக்கோம். பத்தாதுக்கு அவனுக்குத் தனி ஐலேண்ட் வேற வாங்கி வச்சுருக்கோம். நம்ம பையனுக்குத் தானே இதெல்லாம் பாத்து பாத்து வாங்குனோம், அப்புறம் ஏங்க அவன் மேல கோவப்பட்டு இப்படி முரட்டு தனமா நடந்துக்குறீகீங்க?”

“நான் வேணும்னே எதையும் பண்ணைமா. நீ சொல்றதெல்லாம் எனக்கும் புரியுதுமா இனிமே இந்த மாதிரி அவங்கிட்ட நடந்துக்க மாட்டேன். அந்தப் பிரச்சினையை அவனே சால்வ் பண்ணிட்டேன்னு சொல்றான், பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு” என்று சொன்னார்.

“ஏங்க அந்தப் பொண்ணு எப்படி?”

“எப்படீன்னா? புரியலமா”

“இல்லைங்க அந்தப் பொண்ணு எப்படிபட்ட குணம்? நல்லவளா? பேமிலியெல்லாம் எப்படி?”

“ஆமா இப்ப எதுக்கு அந்தப் பொண்ணைப்பத்தி விசாரிக்கிற? நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல. அந்தப் பொண்ணு ஐஸ்ட் டிரைனியா வந்துருக்கு அவ்வளவு தான். உதய்கும் இன்ட்ரஸ்ட் இருக்க மாதிரி தெரியலை. நீயா எதையாவது கற்பனை பண்ணி வைக்காத. அவனுக்கு ஒருத்தி எங்கையாவது பிறந்திருப்பா, அவ வர வேண்டிய நேரத்துல சரியாவந்து சேருவா. சரி போ நைட் டிபன் செய்யற வேலையைப் பாரு. எப்படியும் உதய் இந்த நேரத்துல வீடியோ கால் பேசிட்டு இருப்பான் கொஞ்ச நேரத்துல வந்து அம்மா பசிக்குதுன்னு கேட்பான். நீ எல்லாத்தையும் எடுத்து வை நானும் பிரஸ் ஆகிட்டு வந்துடுறேன். அப்படியே ஸ்ட்ராங்கா காஃபி ஒன்னு போட்டு வை ” என்று சொல்லிவிட்டு தங்களது அறைக்குச் சென்றவர் அடுத்த 15 நிமிடத்தில் குளித்து முடித்து இரவு உடையை அணிந்து கொண்டு கீழே வரும்போது ஹாலில் அமர்ந்து நிதானமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.

மகனின் அருகில் வந்து அமர்ந்தவர் அவன் தோள்மீது கை போட்டவாறு,“அப்பா மேல கோவமா இருக்கியா உதய்?” என்று கேட்க.

அவனோ அவருக்குப் பதில் சொல்லாமல் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் பாடல் ஒன்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.‌ அவனது கோபம் புரிந்தது சுமேந்திரனுக்கு. 'தன் மகனிடம் தானே இறங்கி போகிறோம். அதில் ஒன்றும் தான் குறைந்து விடமாட்டோம்' என்று நினைத்தவர், “சாரிடா கண்ணா. அப்பா வேணும்னே எதையும் பண்ணலடா. நீ உங்க அம்மாக்கிட்ட என்னத்தைச் சொன்னியோ? வந்ததும் வராததுமா உங்க அம்மா என்னைத் திட்டிட்டா தெரியுமா?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல.

இவனோ கழுத்தை சாய்த்து தன் தந்தையை நம்பாத பார்வை பார்த்தவன், “எது அம்மா உங்களைத் திட்டுனாங்க.‌இதை நான் நம்பணும் அப்படித்தானே?” என்றிட.

“உண்மையாலுமே உங்க அம்மா என்னைத் திட்டுனா தான். நம்பிக்கை இல்லைன்னா உங்க அம்மாவ நீயே கூப்பிட்டு கேளு” என்று சொல்லிவிட்டு தனக்கு வந்த அலைபேசி அழைப்புப் பேசுவதற்கு அவர் அங்கிருந்து நகர. இரவு உணவை சமைத்து முடித்து வைத்துவிட்டு மகனுக்கும், கணவருக்கும் சூடான குழம்பியைக் கலந்து கொண்டு வந்த சுவர்ணலதா மகனுக்குண்டானதை அவன் கையில் கொடுத்தவர், கணவனுக்கு உண்டானதை டேபிளில் வைத்தார்‌.

அதைக் கையில் வாங்கிக் கொண்ட உதய், “ம்மா அப்பாவை திட்டினீங்களா? இதுவரைக்கும் நீங்க சண்டை போட்டு நான் பார்த்ததில்லையா அதான் சட்டுன்னு நம்ப முடியல. உண்மையாலுமே உங்க புருஷனை நீங்க திட்டுனீங்களா? அவர் ஏதோ சொல்றாரு நானும் அதைக் கேனயன் மாதிரி நம்பிக்கிட்டு, ஆமா ஆமா, அம்மா நமக்காக அப்பாவை திட்டியிருப்பாங்கன்னு நெனச்சு தலை தலையை ஆட்டணும் அப்படித்தானே?” என்று அநியாயத்துக்கு நக்கலாகக் கேட்டான்.

“எம்புள்ளைய அவர் அடிச்சா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பனா என்ன? நான் உங்க அப்பாகிட்ட சண்டை போட்டேன் தான். நம்புனா நம்பு, நம்பலைன்னா போ. அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் பிள்ளைக்கும் புருஷனுக்கு இடையில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே என்ன மாதிரி பொம்பளைங்களுக்குப் பொழப்பா போச்சு.காஃபியை குடிச்சிட்டு வேலை இருந்தா போய்ப் பாரு இல்லையா சமைச்சு வெச்சதை எடுத்து போட்டு சாப்பிட்டுப் போய்த் தூங்கு, என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து டிவி ரிமோட்டை வாங்கியவர் சீரியலை வைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

தன் தாய் சொன்னதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழம்பினான் உதய்.
‘கடவுளே! நான் மட்டும் அமெரிக்காவுல இருந்திருந்திருந்தா ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட பப்புக்குப் போயிருப்பேன். ஹேப்பியா சுத்தியிருப்பேன். அதையும், இதையும் சொல்லி இங்க என்னை வர வெச்சு ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. கைதிகளை ஜெயில்ல அடைச்ச மாதிரி வீட்லையே அடைச்சு வெச்சிருக்காங்க. இங்கேயும் அந்த மாதிரி பப் எல்லாம் இருக்குமான்னு தெரியலையே. மொதல்ல அதைப்பத்தி விசாரிக்கணும்.‌ அதுக்கு முன்னாடி என்னோட பிரெண்ட் நிகிலை இங்கே வர வைக்கணும், அவன் இங்க வந்தா தான் எல்லாமே சரிப்பட்டு வரும்’ என்று நினைத்தவாறு காஃபியைக் குடித்துவிட்டு, நிகிலை இங்கு வரவைப்பதற்கு அலைபேசி வாயிலாகத் தூது அனுப்ப சென்றான் உதய்.

வெளியே வராண்டாவில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் சுமேந்திரன். முக்கியமான அறுவை சிகிச்சை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்ததும் தான், மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த பைல்கள் அனைத்தையும் உள்ளே எடுத்துச் செல்லாமல் காரிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வந்தது. கார் கதவை திறந்து பைல்களை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மறுகையால் மகனை சமாதானப்படுத்துவதற்காக வாங்கி வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டார்.

உதய்கு மிகவும் பிடித்த ஹாட் சாக்லேட் மணத்தை நுகர்ந்தவாறு உள்ளே நுழைந்தவர் தன் மனைவி மட்டும் டிவி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு,‌' ஒஒ சார் அவரோட ரூமுக்கு போயாச்சா’ என்று நினைத்தவாறே வேகவேகமாகப் படி ஏறினார். பாதித் தொலைவு சென்றிருந்தவரை தடுத்து நிறுத்தியது சுவர்ணலதாவின் குரல்.

“ஏங்க காஃபி ஆறிப்போகுதுங்க?”
என்றவருக்குப் பதிலாக.

“நீயே அதைக் குடிச்சிடும்மா. நான் என் பையனோட ஹாட் சாக்லேட் சாப்பிட போறேன்” என்று சொல்லிவிட்டு மகனின் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவர், கையில் இருந்த ஃபைல்லை அங்கு இருந்த டேபிளில் வைத்துவிட்டுச் சாக்லேட் இருந்த பாக்சை மகனிடம் நீட்டினார்.

அதை வெறித்துப் பார்த்தவன் வேணாம் என்று சொல்ல தான் நினைத்தான். ஆனால் தந்தையின் முகத்தில் இருந்த தவிப்பு அவனை என்னவோ செய்ய அதைப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன், “இதுக்கு மேல எதுவா இருந்தாலும் வாயில சொல்லுங்க அடிக்காதீங்க. ஏன்னா நானும் பெரிய பையனாகிட்டேன்” என்றான்.

“சாரிடா கண்ணா இதுக்கு மேல உன்னை அடிக்க மாட்டேன் சரியா! இந்த ஒருட தடவ என்னை மன்னிச்சுரு கண்ணா...” என்றவுடன் முழுவதுமாகச் சமாதானம் ஆனவன் சாக்லேட்டை பிரித்துத் தான் ஒரு வாய் சாப்பிட்டவன் தன் தந்தைக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டான்.

அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர், “முதல்லையே வாங்கிட்டு வந்துட்டேன் கண்ணா கொடுக்க லேட்டாயிடுச்சு. லைட்டா ஹீட் இருக்குன்னு நினைக்கிறேன் நீ சாப்பிடு நான் கீழ போறேன். ஆல்ரெடி உங்க அம்மா கொடுத்த காஃபியை குடிக்கலைன்னு என் மேல கோவமா இருக்கா, நான் போய் என்னன்னு பாக்குறேன்” என்று சொன்னவர் பைல்களை எடுக்கும் போது அவர் கையில் இருந்து ஒரு பைல் தவறி கீழே விழுந்தது.

அதைத் தான் எடுத்துக் கொடுக்கிறேன் என்று எழுந்த உதய் கீழே விழுந்த பைஃலில் இருந்து சிதறிய பேப்பர்களை எடுத்து வைத்து ஒன்றிணைத்து தன் தந்தையின் கொடுக்க, அதே நேரம் கீழே விழுந்த மேப்போ அந்த மேஜையின் அருகில் சென்று விழுந்தது. அதைக் கவனிக்காமல் பைல்களை வாங்கிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார் சுமேந்திரன்.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -17.2

எவருக்கும் நில்லாமல் நொடிப்பொழுதென ஒருவார காலம் கடந்து சென்றிருந்தது இந்த ஒரு வார காலம் முழுவதும் மருத்துவமனைக்கும் விடுப்பு எடுத்திருந்தாள் யாழினி. அதேபோல லண்டன் செல்வதற்கான அனைத்து பணிகளையும் முடித்திருந்தான் தீபன். விடிந்தால் தீபன் லண்டன் கிளம்புகிறான். வெளியூர் சென்ற தந்தை இன்னும் வீட்டுக்கும் வரவில்லை, அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளவில்லை என்று அனைவருக்கும் வருத்தம் இருந்தாலும், அவனது எதிர்காலத்திற்கு இந்தப் பயணம் நிச்சயம் ஒரு நல்ல ஒரு ஏற்றம் தரும் என்பதால் அவனைக் கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தார்கள் அருளரசி யாழினியும். தாய் மற்றும் தங்கையிடம் இருந்து விடைபெற்ற தீபன் எதிர்வரும் சவால்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காதவனாய், அறிந்து கொள்ளாதவனாய் மகிழ்ச்சியுடன் சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்தான்.

ஆழ்கடல் ராஜ்ஜியம்..
ஆழ்ந்த சிந்தனையில் துள்ளி குதித்தோடும் மீன்களைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் யாமீரன். அவனது சிந்தனை முழுவதும் யாழினியே நிறைந்திருந்தாள். ‘எப்படியோ இந்த முறை அவளது உயிரை தன் தங்கையிடம் இருந்து காப்பாற்றி விட்டோம். ஆனால் இதே போல் எத்தனை முறை தன்னால் அவளைக் காப்பாற்றிட முடியும். ஒருவேளை தன் தந்தையைக் கொன்றது போல் தனக்கும் ஏதேனும் தீங்கிழைத்து விட்டு ஜென்ம ஜென்மமாய்த் தான் நேசிப்பவளைத் தன் தங்கை கொன்று விட்டால் என்ன செய்வது? மறுபிறப்பு எடுத்தும் பிரயோஜனமின்று அவள் இறந்து விடுவாளே?’ என்று எண்ணியவன் அடுத்து தன் தங்கையை எப்படித் திசை திருப்புவது என்பது பற்றிச் சிந்திக்கலானான்.

எவருக்கும் சந்தேகம் வராதபடி சங்கெழிலி தன் தந்தையைக் கொன்றதோடு மட்டுமின்றி அவரது சக்திகளையும் திருடிக் கொண்டு விட்டாள் என்பதை இதுநாள்வரை யாமீரன் மட்டுமே அறிவான். தன் தந்தையிடமிருந்து பெற்ற சக்திகளைக் கொண்டு சங்கெழிலியால் சில பல அறிய விடயங்களை, இயற்கைக்குப் புறம்பான விடயங்களைச் செய்ய இயலும். அதிலொன்று தான், தன் ஆத்மாவை அவள் வேறு நபருடைய தேகத்தினுள் சில குறிப்பிட்ட நாழிகைகள் வரை புகுத்த இயலும். ஆனால் அவ்வாறு அவள் செய்ய முயலுகையில் அவளது ஆயுட்காலத்திலிருந்து ஒரு மணித்தியாலம் குறையும்.

பெண்ணின் தேகமென்றால் கூட அவளது தேகத்திற்கு எவ்வித காயங்களும் ஏற்படாது. ஆனால் அதுவே அவள் தன் உயிர் ஆத்மாவை ஆண்மகனின் உடலுக்குள் புகுத்திட முயன்றால் அவளுடலில் காயங்களும், கீறல்களும் ஏற்படுவதோடு அவளது ஆயுட்காலத்தின் அளவு மும்மடங்காய் குறையும்.

சாதாரண மனித தேகத்தினுள் புகுந்திடவே இந்தளவிற்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவெனில், அவள் இனத்தையே சேர்ந்த தேகத்தினுள் தன்னுயிர் ஆத்மாவை அவள் புகுத்திட முயன்றால் அவள் உயிரைக் கூட இழக்க நேரிடலாம்.

அதேபோல அதிசாந்திரனின் மறுபிறப்பான தீபனுக்கு முன்ஜென்ம நினைவுகள் இல்லாத போதும், அவனுள் புதைந்துக் கிடக்கும் அவனது ஆத்ம சக்திகளின் வீரியத்தினால் தான் தீபனின் உடலுக்குள் அவளால் நுழைய முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே அவளால் அவனை நெருங்க முடிந்தது. அதற்குமேல் அவனை நெருங்கவே முடியாத போது எப்படி அவளால் தன் உயிர் பிம்பத்தை அவன் தேகத்தினுள் நுழைந்திட இயலும்..

எந்தக் காரணத்தினால் தன்னால் அவனை நெருங்க முடியவில்லை என்பது பற்றி எவ்வளவு சிந்தித்தும் சங்கெழிலியினால் அதற்குத் தீர்வு கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவளது சிறிய தந்தையும், இப்போது அவர்கள் வாழும் ராஜ்யத்தின் அரசருமான மிருகதரனின் சக்தியையும், அவர் வசம் இருக்கும் வித்தியாசமான செங்கோலையும் பெற்றால் தான் தன்னால் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று எண்ணியவள் அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தாள்.
ஆனால் தன்னிடம் இருக்கும் திவ்ய சக்திகளின் மூலம் அவளது எண்ணத்தை அறிந்த அவளது சிறிய தந்தையோ அவளைத் தடுக்க வழியறியாது திகைத்து நின்றார்.

பொதுவாகவே அவர்கள் நீரில் இருக்கும் போது மனிதத் தலையோடு பாதி உடல் பாகங்கள் மீனை போன்றும், துடுப்பு போன்ற வாலையும் தகவமைப்புகளாகப் பெற்றிருப்பார்கள். அதேநேரம் நிலப்பகுதிக்கு செல்ல நேரிடின் அவர்களது வால் பகுதி மறைந்து நடப்பதற்கு ஏதுவாகக் கால்கள் தோன்றும். ஆதலால் இப்படியொரு இனம் ஆழ்கடல் நீரினுள் வசித்து வருவதே வெளியில் எவருக்கும் தெரியாதிருந்தது.

தற்போது அவருக்கிருந்த மிகப் பெரிய பிரச்சனையே தன் மகளை, தனது அண்ணன் மகளிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பது தான்.‌ ஏனெனில் தன் அண்ணனின் மறைவுக்குப் பிறகு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் அவருக்குத் தெரிய வந்தன. ஆதலால் இவர் பதவி ஏற்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து வைத்தார். தனது அண்ணனின் அஜாக்கிரதையால் தான் அவரது இன்னுயிர் பிரிந்து போனது. அதே போலொரு நிலை தனக்கும் வரக்கூடாது என்று எண்ணினார். தன் உயிருக்கு எந்த ஒரு சேதமும் வந்துவிடக்கூடாது என்பதால் தன் உயிர் கூட்டின் அளவைக் குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொண்டார். மீதமுள்ளவற்றைத் தன் மகளின் உடலுக்குள் புகுத்தி தன்னைவிட அதிசக்தி வாய்ந்தவளாகத் தன் மகளை மாற்றியிருந்தார்.

கிட்டத்தட்ட சங்கெழிலியை விட இரு அகவை இளம் பெண்ணான அகவழகியோ எப்போதும் சுறுசுறுப்புடனும், விளையாட்டுத் தனத்துடனும் தன் தோழிகளோடு இந்த ஆழ்கடல் ராஜ்ஜியத்தையே வலம் வருபவள்.

தனக்கு என்னென்ன சக்திகள் உள்ளது என்பது பற்றியும், அதனால் என்னென்ன விளைவுகள் வரலாம், தன்னால் என்னென்ன செய்ய முடியும் என்பது பற்றியெல்லாம் அறியாமல் எப்போதும் போல் தன் தோழிகளோடு ஆழ் கடலிலிருந்து கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தாள் அகவழகி.
பாதித் தொலைவு சென்றவுடன் என்ன நினைத்தாளோ? கரையை நோக்கி நீந்தாமல் திடீரென்று ஆழ்கடல் மையத்தை நோக்கி நீந்தினாள்.

அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் ஆழ்கடல் மையத்தை நோக்கி சென்றார்கள். நடுக்கடலின் மையத்திலிருந்து கரையைப் பார்த்தவாறு நின்றார்கள். அகவழகிக்கு வலதுபுறம் நான்கு பெண் கன்னிகளும், இடதுபுறம் நான்கு பெண் கன்னிகளும் நின்றிருந்தனர்.

அனைவரையும் கர்வமாகப் பார்த்தவள், “அனைவரும் நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்களடி. யார் முதலில் நீந்திச் சென்று மணற்பரப்பைத் தொட்டு விட்டு மீண்டும் இப்பகுதியை அடைகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவராவர். வெற்றி பெற்றவருக்கு என்ன பரிசென்று தெரியுமல்லவா! புதிதாக நான் கண்டெடுத்த சிற்பி முத்து தான் பரிசு.‌ அதிலும் அந்த முத்து பல வண்ணங்களைக் கொண்டதாக உள்ளது. இதனைப் பார்க்கவே அத்தனை அழகாக உள்ளது, இதோ பாருங்களடி இதுதான் அந்த முத்து...” என்று கூறி அபூர்வ வகையைச் சேர்ந்த அந்த முத்தை எடுத்து அவர்கள் முன்பு காட்டினாள். அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் விழிகளை அகல விரித்ததைக் கண்டு இன்னும் கர்வமாக நிமிர்ந்து நின்றாள் அகவழகி.

“நாம் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்வோம். ஆனால் நடுநிலையாக நின்று வெற்றி பெற்றவர் யார் என்று தீர்மானிப்பது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும், என் தந்தையின் தளபதி துங்கீசன் தான்” என்று கூறினாள்.

அவ்வளவு நாழிகை தள்ளி நின்று அவர்களது சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டிருந்த துங்கீசன் அதைக் கேட்டு அதிர்ந்தான். படபடவென்று பதறித் துடித்த இதயத்தைச் சமன் செய்தவாறு,
“என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள் இளவரசி? என்னால் எப்படி அதைச் செய்திட இயலும்? நான் தங்களின் காப்பாளன் மட்டுமே! அது மட்டுமின்றிப் போர் நடைபெறுகையில் மட்டுமே நான் வீர்களை வழி நடத்த பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றேன். அத்ததைய சூழலில் மட்டுமே என்னால் தக்க முடிவுகளை எடுக்க இயலும். அதை விடுத்து இப்படியான போட்டிகளுக்குத் தீர்ப்பு வழங்கும் அளவிற்கான புத்திக்கூர்மை எனக்கு இல்லை இளவரசி, தங்களை மறுத்து பேசியமைக்கு மன்னிப்பு வேண்டுகிறேன்” என்றவன் பதில் உரைத்தான்.

அவளோ அனைவரையும் பின் தள்ளிவிட்டு அவன் அருகில் நெருங்கி நின்றவள், “ஓஓஓ.. நான் கட்டளையிட்ட பின்பும் அதைச் செய்திட முடியாதென்று கூறினீர்களென்றால் நான் வேறொன்றை என் தந்தையிடம் கூற வேண்டியது வரும் பரவாயில்லையா?” என்று சற்று மிரட்டலாகக் கூறிட.

உள்ளுக்குள் தோன்றிய பதற்றத்தை முடிந்த அளவு முகத்தில் காட்டாது மறைத்தவன், “என்ன.. என்ன.. என்ன.. கூறுகிறீர்கள் இளவரசி? நான்.. நான் எந்தத் தவறும் இழைக்கவில்லையே?”

“நீங்கள் தவறிழைத்ததாய் நான் எப்பொழுது கூறினேன்?”

“பிறகு அரசரிடம் எதைக் கூறுவேனென்று உரைத்தீர்கள்? தவறிழைக்காமலேயே நான் எதற்குத் தாங்கள் சொல்வதற்கெல்லாம் அஞ்சி நடுங்க வேண்டும்?”

அவன் செவியோரம் நெருங்கி குரலைத் தழைத்து, “நீங்கள் எந்தத் தவறும் இழைக்கவில்லை தான் துங்கீசரே! ஆனால் மறைந்து நின்று என்னை ரசித்தீர்களென்று நான் என் தந்தையிடம் கூறினாள் தங்களது நிலை என்னவென்பதை தாங்களே அறிவீர்கள். என்ன தந்தையிடம் இது போலவே கூறி விடவா?”

“ஏன்...ஏன்? இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள் இளவரசி. நான் அவ்வாறெல்லாம் தங்களைக் கண்டதில்லை, ஏன் வீணாக என்மீது பழி போடுகிறீர்கள்?”

“ம்ம். வீணாய் தங்கள் மீது பழி போட கூடாதென்றால் நான் சொல்வதைக் கேளுங்கள். இல்லையேல் நிச்சயம் தந்தையிடம் இதுபோலவே கூறுவேன்,‌ அதன் பிறகு தங்களது உயிர் தேகத்தில் இருக்குமென்று நினைக்கின்றீர்களா? நிச்சயம் இருக்காது.‌ ஆகையால் எதுவாக இருந்தாலும் சிந்தித்து முடிவெடுங்கள். சிறிது நேரம்‌ என் தோழிகளுடன் அளவளாவி விட்டு வருகிறேன் அதற்குள் முடிவெடுத்து விடுங்கள்” என்று கூறிவிட்டு அகவழகி சென்றுவிட, துங்கீசனோ பேயறைந்தது போல் அதிர்ந்திருந்தான்.

அகவழகிக்கு அவனது முகம் குறுநகையையும், கூடவே ரசனையையும் தோற்றுவிக்க ஓரவிழியால் அவனைப் பார்த்தவாறே தன் தோழிகளை நெருங்கினாள்.

செல்லும் அவளை அதிர்ந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த துங்கீசன், 'எந்த விதமான பதில் கூறினாலும் நமக்குப் பிரச்சனை தான். ஆதலால் சரியென்றே ஒப்புக்கொண்டு தேவையற்ற கெட்ட பெயரிலிருந்து தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்' என்பதை உணர்ந்தவனாய்,
“தங்களது இந்த முடிவிற்கு நான் சம்மதம் தெரிவிக்கின்றேன் இளவரசி” என்று கூறியதும் மலர்ந்த முகத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்த அகவழகி,
“மிக்க நன்றி துங்கீசரே! தாங்கள் இம்முடிவைத் தான் எடுப்பீர்களென்று ஏற்கனவே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆகையால் சற்று தள்ளி நின்று எங்களைக் கண்காணியுங்கள் சரியா! நினைவில் கொள்ளுங்கள், போட்டியின் முடிவில் நடுநிலையான பதிலைத் தான் தாங்கள் தெரிவிக்க வேண்டும். எவர் புறமும் சாய்ந்து ஒரு முகமான முடிவைத் தெரிவித்து விடாதீர்கள். கவனம் முக்கியம் சரியா!” என்று தெளிவாகக் கூறி விட்டு தன் தோழிகளோடு போட்டி துவங்கும் இடத்தை முடிவு செய்து அவ்விடத்தில் வந்து நின்றாள்.

துங்கீசன் 1... 2... 3 என்ற எண்களை உச்சரித்த கணம் ஒன்பது கடல் கன்னிகளும் நீரில் பாய்ந்து துள்ளியோடும் நீரின் வேகத்தை விட அதிக வேகத்தில் பாய்ந்து நீந்தத் துவங்கினார்கள். முதலில் உள்ளே புகுந்து நீந்தத் துவங்கியவர்கள் சிறிது இடைவெளி விட்டு விட்டு மேலே வந்து உயிர்க்காற்றைச் சுவாசித்து விட்டு மீண்டும் உள்ளே மூழ்கி நீரை தங்களது வாலால் சுழற்சி அடித்துத் தள்ளி, நீத்தியவாறு முன்னேறத் தொடங்கினார்கள்.

வேகவேகமாக நீந்தியதில் கிட்டத்தட்ட அனைவரையும் முந்திக் கொண்டு முன்னால் சென்று இருந்தாள் அகவழகி. தான் தான் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்துடன் நீர்ப்பரப்பின் மீது வந்து எம்பி ஓரடி உயரம் காற்றில் தாவிக் குதித்து ஒரு சுழன்று சுழன்று மீண்டும் நீரினுள் குதித்து மூழ்கியவள் வேகமாக நீந்தி மணற்பரப்பைத் தொட்டு விட்டாள்.

தான் மணலைத் தொட்டதிற்கு அடையாளமாய்க் கைபிடி அளவு மணலை அள்ளி தன் இடைக்கச்சைக்குள் முடிந்தவள், அதே வேகத்தோடு மீண்டும் திரும்பி நீரில் குதித்து நீந்த துவங்கிய போதுதான் மற்ற எட்டு கன்னியரும் நிலப்பரப்பை தொட்டு இருந்தனர். அவர்களுக்கு முன்னே செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இன்னும் தன் வேகத்தைக் கூட்டினாள் அகவழகி. அவளை அறியாமலேயே அவளுள் இருந்த மிருகதரனின் சக்தி சற்றே வெளிப்பட, அவளின் துடிப்பு சுழன்று அடித்ததில் சிறிதாக நீர் சூழல் உருவானது.

அவளோ அதை அறியாமலேயே வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க நீர்ச்சுழலும் பெரிதாகிக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்திற்கு மேல் அச்சிறிய சுழல் பெரும் நீர் சுழலாக உருவெடுத்திட. அதற்குள் மூழ்கிய அகவழகி வெளியேற முடியாமல் தடுமாறிய அதே கணம், அச்சுழலுக்குக் கீழே அடி ஆழத்தில் வெடிக்கும் நிலையில் இருந்த எரிமலையொன்ற பொங்கியெழ ஆரம்பித்தது.

வினை விதைத்திட்டவன் வினையறுப்பான்.. !
பிறர் உயிரை
வதைத்திட்டவரோ அதை
விட இருமடங்கான
உயிர் வதையை
அனுபவித்தே தீருவர்..!

- அற்புதமது பிறக்கும்…



 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -18.1

அவர்களது போட்டி துவங்கிய இடத்தில் நின்று அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த துங்கீசனோ அகவழகி இருக்கும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன் அதிர்ந்தான். அதற்கு மேலும் அங்கேயே நின்று நடப்பவற்றைக் காண்பதற்கு அவனது உள்ளத்திற்குத் தெம்பில்லை போல, அடுத்த நிமிடம் நீரில் பாய்ந்து நீந்த ஆரம்பித்திருந்தான்.‌ அகவழகி இருக்கும் இடத்தை நெருங்குவதற்குள் நிச்சயம் சுழல் நீரானது அவளை முற்றிலும் பலமிழக்கச் செய்து விடும். அவளை அடி ஆழத்திற்கு இழுத்துச் சென்றாலும் சென்று விடும் என்பதை உணர்ந்தவன் தன்னால் எவ்வளவு விரைவில் அவளை நெருங்க முடியுமோ! அவ்வளவு விரைவில் அவளருகே செல்வதற்காகத் தன் வேகத்தைக் கூட்டினான்.‌

சுழன்று சுழன்று அடித்திடும் நீர் சுழலுக்குள் மாட்டிக்கொண்ட அகவழகி அதிலிருந்து வெளியே வருவதற்காக, நீந்த முயற்சித்தாள். ஆனால் அவளது முயற்சிகள் அனைத்தும் பூஜ்ஜிய பலனையே கொடுத்தன.

எவ்வளவு முயன்றும் அவளால் அந்த நீர் சுழலிலிருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்தாள். அவளை நெருங்கிய துங்கீசன் தன் உடல் பலத்தைப் பிரதானமாகக் கொண்டு முழு முயற்சி செய்து, நீந்தி அந்த நீர் சுழலுக்குள் தானும் அதிரடியாய் புகுந்திருந்தான்

அகவழகியின் தோழிகள் அனைவரும் இதைக்கண்டு அதிர்ந்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தவர்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து எவரையேனும் உதவிக்கு அழைக்கலாம் என்று எண்ணினார்கள். நான்கு கன்னியர் மட்டும் அங்கேயே தங்கிவிட, மீதி நால்வரும் உதவிக்கு ஆட்களை அழைத்து வர ஆழ்கடல் ராஜ்ஜியத்தை நோக்கி சென்றார்கள்.


நீர் சுழலுக்குச் சென்றவன் முயன்று, நீரின் ஆழத்திற்குச் செல்லாமல் ஓரத்திலேயே நீந்தி அது சுழலும் திசைக்கு எதிர் திசையில் நீந்தாமல், அதன் திசையிலேயே நீந்தியவாறு நீரினூடே சுழல ஆரம்பித்தான். ஏற்கனவே நீர்ச்சுழலில் சிக்கி, நீரினோடு சுழன்று கொண்டிருந்த அகவழகி இருந்த இடத்தை நெருங்கியவன் கிடைத்த நொடி நேர இடைவெளியில் சட்டென்று அவளது ககரங்களைப் பற்றிக்கொண்டவன், அதே வேகத்தில் அந்தச் சுழலின் மையப் பகுதிக்குள் குதித்திருந்தான்.

சுழலின் மையப்பகுதிக்குள் அவளையும் இழுத்தவாறு நீந்தியவன்,‌ அடி ஆழத்தை நெருங்கியதும் எதைப்பற்றியும் யோசிக்காமல், நொடியும் தாமதிக்காமல் அவளை இறுக்கி அணைத்தவாறு ஆழத்திலிருந்த மண்ணுக்குள் புரண்டு உருண்டு ஒரு வழியாக நீர் சுழலிலுக்குள் இருந்து வெளியே வந்து விழுந்திருந்தான் துங்கீசன். அதன் பிறகு நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து அவளை இழுத்துக்கொண்டு நீந்தி சிறிது தூரம் கடந்து விட்ட நிலையில் வெடித்துச் சிதறியது, ஆழ்கடலினுள் பொங்கிக் கொண்டிருந்த அந்த எரிமலை.


இதோ தன் அண்ணனை லண்டன் அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வேலைக்குக் கிளம்பினாள் யாழினி. கழுத்தில் காயம் முழுவதுமாகக் குணமாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வலி குறைந்திருக்க, தன் தாயிடம் சொல்லி விட்டு குளித்து முடித்து மருத்துவமனைக்குக் கிளம்பினாள். நான்கு நாட்களுக்கு முன்பு தன் அண்ணனை விட்டு ஸ்கூட்டியை எடுத்து வரச்செய்து இருந்ததால் தன் ஸ்கூட்டியிலேயே மருத்துவமனைக்குக் கிளம்பினாள். வெள்ளை நிறச் டாப்பிற்கு, ஆகாய நீல நிறத்தில் துப்பட்டாவும், பட்டியலா பாட்டமும் அணிந்திருந்தாள். துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணிக் கொண்டு‌, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள்‌. மறக்காமல் ஹெல்மெட் அணியும் போது கவனமாகக் காயத்தில் படாதவாறு அணிந்து கொண்டவள் எப்போதும் செல்வதை விடச் சற்று மெதுவாகவே ஸ்கூட்டியை ஓட்டினாள்.

சரியாக மருத்துவமனை இருந்த ஏரியாவில் ஸ்கூட்டியை திருப்பியவளுக்கு அன்று நடந்த நிகழ்வுகள் கண்முன் நிழலாடின. இந்த இடத்தில் தன்னைப் பார்த்ததாக உதய் சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. கடந்து சென்ற ஒரு வாரத்தில், அவனையும், அவன் சொன்ன வார்த்தைகளையும் அவள் நினைக்காத நேரம் கிடையாது. ஆனால் அதெல்லாம் சேர்த்து அவனைத் திமிரானவனாகவும், கொடூரனாகவும் சித்தரித்து, அவள் மனதில் அவனைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கி இருந்தது.

எப்போதும் போல் ஸ்கூட்டியை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சௌமிக்கு அழைத்தாள். அப்போது தான் அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த சௌமியுமே யாழினியை கண்டு விட்டு உற்சாகத்தில் வேகமாக அவளருகே நெருங்கியவள் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ஓடி சென்று யாழினியை அணைத்துக் கொண்டாள். “இந்த ஒரு வாரமா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன் டி” என்று சொன்னாள்.

“நானும் தாண்டி உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன். சரி டைம் ஆகுது உள்ள போலாம் வா மீதியை அப்புறம் பேசிக்கலாம்” என்று யாழி சொன்னதும் இருவரும் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

வரவேற்பறையில் இருந்த ரிசப்ஷன் பெண் யாழியைக் கண்டதும் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.‌
“ஒன் வீக் கழிச்சு ஹாஸ்பிடல் வந்துருக்க. எப்படி இருக்க யாழீ? இப்ப உடம்பு பரவாயில்லையா? நீ இல்லாத இந்த ஒன் வீக்கும் ரொம்ப போரா இருந்த மாதிரி இருந்துச்சுபா. எல்லாருமே உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன்னு சொன்னாங்க. எக்ஸ்பெஷலி எம்டியோட பையன் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனதா எல்லாரும் பேசிக்கிறாங்க” என்று வந்ததும் வராததுமா அவள் யாழினியை வம்பிழுத்தாள்.

கோபமாக அவளை முறைத்த யாழி, “இங்க பாரு ப்ரீத்தி தேவையில்லாம எதையாவது பேசி என்னை டென்ஷன் ஆக்காத. யாரும் என்னை மிஸ் பண்ண வேண்டிய அவசியமில்லை? யாருக்காகவும் நாங்க இங்க காத்திருக்கல சரியா. வேற எதையும் பேசி எங்கிட்ட வாங்கிக் கட்டிக்காத.‌ உனக்கு இதுக்கு, லஞ்ச்ல அடி கண்டிப்பா இருக்குது.” என்று சற்றே மிரட்டி விட்டு இருவரும் தங்களது ஓய்வு அறைக்கு வந்து சேர்ந்தனர். எப்போதும் போல் உடமைகளை அவ்வறைவில் வைத்துவிட்டு ரிஜிஸ்டரில் கையொப்பம் இட்டவர்கள் தங்கள் பணியைத் தொடங்கினார்கள். முதலில் தான் சென்று எம்டியை பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டு சுமேந்திரனின் அறை நோக்கி சென்றாள் யாழினி.

டாக்டர் டி. சுமேந்திரன் எம்.டி என்ற பெயர் பலகை பொறிக்கப்பட்டிருந்த கதவை லேசாகத் தட்டிவிட்டு அனுமதி கேட்டாள். “உள்ள வாங்க” என்று சுமேந்திரன அனுமதி கொடுத்ததும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள், நிச்சயமாக அங்கு உதய் அமர்ந்திருப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை.

யாழினி உள்ளே நுழைந்த நேரம் நிகிலிடமிருந்து உதய்கு அலைபேசி அழைப்பு வரவும் தந்தையை நிமிர்ந்து பார்த்தவன்,
“அப்பா ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்த பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றவன் அழைப்பை ஏற்றுக் குதூகலத்துடன் பேச ஆரம்பித்தான்.

உள்ளே நுழைந்த யாழினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி தன் மகனை ஒரு பார்வை பார்த்தார் சுமேந்திரன். பின்னர்,
“சொல்லுமா இப்ப காயம் பரவாயில்லையா?” என்று அக்கறையாகக் கேட்டார்.

“காயம் முழுசா சரியாகலை சார். ஆனா கொஞ்சம் பெட்டரா பீல் பண்றேன். அன்னைக்கு ரொம்பப் பெயினா இருந்துச்சு சார் அதனால தான் ஒன் வீக் வீட்லையே இருந்து ரெஸ்ட் எடுத்தேன். அதுக்குமே உங்க கிட்ட பர்மிஷன் கேட்டேன், நீங்க உடனே லீவ் கொடுத்ததும் கொஞ்சம் எனக்கு நிம்மதியா இருந்துச்சு சார். இப்ப நான் டூட்டியில ஜாயின் பண்ண போறேன் அதான் உங்கக்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு போலாம்னு வந்தேன் சார்” என்று சொன்னவளின் பார்வை மறந்தும் கூட உதய் இருந்த பக்கம் போகாததை அவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

“இது என் பையனோட மிஸ் அன்டர்ஸ்டாண்டிங்கால நடந்தது தானே. இதுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன்மா. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லன்னா கண்டினு பண்ணும்மா. முழுசா சரியாகலைன்னா இன்னும் ஒரு ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து இருக்கலாமேம்மா? இன்னும் சரியாகலைன்னு வேற சொல்ற அப்புறம் எதுக்குமா இப்பவே வேலைக்கு வந்த?”

“சார் நானும் எத்தனை நாள் தான் வீட்டுலையே அடைஞ்சு கிடக்கிறது ரொம்பப் போர் அடிக்கிறது சார். அதான் வேலையில ஜாயின் பண்ணிட்டேன், உங்க கிட்ட இதை இன்ஃபார்ம் பண்ணிட்டு போலாம்னு வந்தேன் சார் நான் கிளம்பட்டுமா?”

“ஓகே மா நீ போய் உன் டியூட்டிய பாரு” என்றதும்.

“சரிங்க சார் தேங்க்யூ”என்று சொல்லிவிட்டு அவள் அந்த அறை கதவை திறந்துகொண்டு வெளியேறிய மறுநிமிடம் பால்கனியில் இருந்து அலைபேசியைத் துண்டித்துக் கொண்டே குதூகலத்தோடு உள்ளே நுழைந்த உதய் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “நிகில் இங்க வர்றானாம்பா. கூடவே இங்கயே டாக்டரா எங்கூடவே ஜாயின் பண்ண வேற போறானாம்பா. எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்குதுப்பா. அவனை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுனேன் தெரியுமாப்பா!” என்றவன் மகிழ்வோடு சொன்னதைக் கேட்டு தானும் மகிழ்ந்தவர்,
“நிகில் இங்க வர்றதுல்ல எங்களுக்கும் சந்தோஷம் தான் உதய். அப்புறம் அவனை வேற எங்கையும் தங்க சொல்ல வேணாம், நம்ம வீட்டுலையே தங்கிக்கட்டும். ரெண்டு பேரும் ஒன்னாவே ஹாஸ்பிடல் வந்துட்டு போங்க, நான் எதுவும் சொல்ல மாட்டேன்”

“ஓகேபா.. எனக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்குப்பா. அப்பா நான் இப்பவே கிளம்பி போகட்டுமா! நிகில் அங்க பிளைட் ஏறிட்டானாம் நான் அவனைப் பிக்கப் பண்ண போகணுமே. இங்க இருக்க ஒர்க்கையெல்லாம் நீங்க பாத்துக்கிறீங்களா?”

“இப்பதானேபா பிளைட் ஏறி இருக்கான். அங்கிருந்து வர்றதுக்கு டைம் ஆகுமே! அவன் இங்க லேண்ட் ஆனதும் கால் பண்ணுவான் அப்ப இங்க இருந்து கிளம்பி போனா சரியா இருக்கும் உதய். ஏர்போர்ட் இங்கிருந்து ஒரு 15 மினிட்ஸ் தானே! இப்பவே அங்க போய் என்ன பண்ண போற? எனக்கு ஒரு சர்ஜரி இருக்கு நான் கண்டிப்பா போகணும், அதனால ட்ரைனிங் ஸ்டுடென்ட்ஸ்கு இன்னைக்குக் கொஞ்சம் கிளாஸ் எடுக்க வேண்டியது இருக்கு. மறக்காம இந்தத் தடவையாவது பாத்து கவனமா எடு. சர்ஜிக்கல் கிடையாது சும்மா ஓரல் தான் அதனால பார்த்து எல்லாரையும் கைட் பண்ணு சரியா! மிச்சத்தை நான் வந்து பாத்துக்குறேன், ஓகே எனக்கு டைம் ஆகுது நீ அப்படியே ஒரு தடவ ரவுண்ட்ஸ் போயிட்டு அதுக்கப்புறம் அவங்கள கைட் பண்ணு” என்று சொல்லிவிட்டு சுமேந்திரன் அங்கிருந்து எழுந்து சென்றார்.

‘ இப்பவே போனோம்னா கொஞ்சம் ப்ரிபேர் ஆகலாம். சில விஷயங்களை நிகில் கிட்ட பர்ஷனலா பேசலாம்னு நெனச்சேன். ஆனா அப்பா அதுக்கும் தடா போட்டுட்டாரு. இவரை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல’ என்று புலம்பியவன் அவர் சொன்னது போல் ரவுண்ட்ஸூக்குக் கிளம்பினான்.

கையெழுத்துப் போட்டுவிட்டுப் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் ஷாட் சீட்டை பரிசோதித்து, அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஒருமுறை பரிசோதித்து அதில் எழுதி விட்டு வர வேண்டும் என்று தலைமை செவிலி பெண்ணிடம் முதன்மை மருத்துவர் தெரிவித்து இருந்ததால் சரி என்று தலையசைத்து விட்டு அவரவர் தங்களுக்கு உண்டான பகுதிகளைப் பிரித்துக் கொண்டு சென்றனர். யாழினி,சௌமி இருவரும் ஒரே பகுதிக்கு சென்றனர், அவர்கள் சென்றது அவுட் பேசண்ட் வார்டு.

அடுத்தடுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளின் சாட் ஷீட்டைப் பரிசோதித்து விட்டு அவர்களது உடல்நிலையைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டே இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த வார்டில் இருக்கும் அனைவரையும் பரிசோதித்து விட்டு வார்டை விட்டு வெளியேறும் போது அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வந்திருந்த வயதான பெண்மணி ஒருவர் யாழினியை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பதில் சொல்லிய யாழினி,“உங்க பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னீங்களே அம்மா கல்யாணம் முடிஞ்சுருச்சா?” என்று அக்கறையோடு கேட்க.

“உன்னோட சேவிங்ஸ் பணத்தை நீ கொடுத்திருந்த இல்லையா அதை வச்சுதான் என் பொண்ணுக்குச் சீர்வரிசை செஞ்சேன்மா. ரொம்ப நன்றி மா, இந்த உதவியை எப்பவும் மறக்கமாட்டேன்.‌ சொல்லப் போனா இப்போ உனக்கு நான் ஒரு லட்சம் பணம் கொடுக்க வேண்டிய நிலையில இருக்கேன். நீ எப்படிமா வீட்டுக்கு தெரியாம இந்தப் பணத்தை எனக்குக் கொடுத்த உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா திட்ட மாட்டாங்களா?”
என்று அவர் கேட்டதும்.

யாழினியை முந்திக் கொண்டு சௌமி பதிலளித்தாள். “நீங்க வேறம்மா அவ கைல 20,000 தான் இருந்துச்சு வீட்டுக்கு தெரியாம தன்னோட அஞ்சு பவுன் செயினை அடகு வைத்து உங்களுக்குப் பணம் கொடுத்திருக்கா. வீட்டுக்கு தெரிஞ்சா அவ சமாளிச்சுக்குவா நீங்க கவலைப்படாதீங்கம்மா” என்று சொல்ல.

அந்தப் பெரிய மனுஷியோ கண்கலங்கியவாறே, “உனக்கு இரக்க குணம் அதிகமா இருக்குதும்மா. நீ நல்லா இருக்கணும் .சீக்கிரமே நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுறேன் சரியா. இப்ப காயம் எப்படிமா இருக்கு?”

“பணத்தை மெதுவா வாங்கிக்கிறேன் மா. எனக்கு இப்போதைக்குப் பணத்தேவை எதுவும் இல்லை. ம்ம் காயம் கொஞ்சம் ஆறிடுச்சும்மா, ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லை. சரிம்மா நீங்க வேலையைப் பாருங்க ஃப்ரீ டைம்ல பேசலாம்” என்று சொல்லி விட்டு அந்த வார்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர அவளைப் பின்தொடர்ந்து வந்த சௌமி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்,
“இந்த ஒரு வாரமா என்னென்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா யாழி?” என்று கேட்டாள்.

நடந்து செல்வதை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பிய யாழினி,
“அப்படி என்னடி பெருசா இந்த ஒரு வாரத்துல நடந்துருச்சு? எப்பவும் நடக்கிற விஷயம்தானே நடந்துருக்கும்.ஏன்உன்னோட முகம் பிரைட்டாகுது, ஒரு வேளை வேற ஏதாவது புதுசா நடந்துச்சா?” என்று குழப்பத்துடன் கேட்க.

“புதுசா நடந்துச்சோ இல்லையோ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஒரு விடயம் நடந்துச்சு அது என்னன்னு உனக்குத் தெரியுமா?” என்று பரபரப்புடன் கேட்ட சௌமியை முறைத்தாள் யாழி.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -18.2

“விடயம் என்னன்னு முதல்ல சொல்லுடி அதுக்கப்புறம் இந்தப் பில்டப்பெல்லாம் கொடுப்ப” என்று கடுகடுவென்று சொன்னாள் யாழினி.

“யாரோ ஒருத்தரைப் பத்தி ரெண்டு மூனு நர்ஸ் கிட்ட உதய் டாக்டர் கேட்டாராம் தெரியுமா?”

“யாருடி உதய் டாக்டர்? இந்த ஒன் வீக்ல ஏதாவது புது டாக்டர் இங்க வந்து ஜாயின் பண்ணுனாங்களா?” என்று குழப்பத்துடன் கேட்டவளை அதே குழப்பமான பாவனைகளோடு பார்த்த சௌமி, “உதய் டாக்டர் யாருன்னு உனக்குத் தெரியாதா?” என்று கேட்க.

“ப்ச்ச். லூசாடி நீ தெரிஞ்சிருந்தா நான் ஏண்டி இப்படி ஒரு கேள்வியை உங்கிட்ட கேட்க போறேன்? யாரு அந்த உதய் அதைச் சொல்லு மொதல்ல”

“அடியேய்.. நிஜமாவே உனக்கு அவங்க யாருன்னு தெரியலையாடி?”

“அதான் தெரியலைன்னு சொல்றேன்ல. அப்புறம் ஏன்டி அதையே திரும்பத் திரும்பக் கேட்குற? நீ சொல்றதை பார்த்தா ஓவர் பில்டபால்ல இருக்கு. என்ன அந்த டாக்டர் உன்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாரு போலையே, அப்படியா சௌமி நீ இம்ப்ரஸ் ஆகிட்டியா?” என்று அநியாயத்துக்குக் கிண்டல் குரலில் கேட்டாள் யாழினி.

இப்போது அவளை முறைப்பது சௌமியின் முறையானது.
“அடி வாங்குவ நீ. நான் ஒன்னும் அந்த டாக்டரைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகலை. ஆனா அந்த டாக்டர் தான் உன்னைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகிட்டாரு போலையே! உன்னைப் பத்தி தான் எல்லார்கிட்டயும் விசாரிச்சாரு போதுமா!”

“எது என்ன பத்தி விசாரிச்சாரா? யாருன்னே தெரியாத ஒருத்தர் என்னைப் பத்தி எதுக்குடி விசாரிக்கப் போறாரு? என்னைக்காவது ஒரு விடயம் சொன்னா நீ தெளிவா சொல்லியிருக்கியா? தலையும் புரியாமல் வாலும் புரியாம கிறுக்கி மாதிரி உளறி வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு. தெளிவா சொல்லுடி அந்த டாக்டர் யாரு? எதுக்காக என்னைப் பத்தி அவரு விசாரிக்கணும்?”

“கேப்ப கேப்ப இதுவும் கேப்பா இதுக்கு மேலயும் கேப்ப? அன்னைக்கு ஆபரேஷன் தியேட்டர்ல அத்தனை பேர் இருக்கும் போது தைரியமா உனக்கு லிப் கிஸ் குடுத்தாரு இல்லையா அந்த டாக்டர் பேர் தான் உதய்?” என்று சௌமிய சொன்னதைக் கேட்டு அதிர்ந்த யாழினி, “அவன் பேரு உதயா?”

“என்னடி இவ்ளோ நேரம் மரியாதையா பேசுனா, அவர் யாருன்னு தெரிஞ்சதும் மரியாதை குறையுது?”

“ஆமா சார் அப்படியே உலக அழகன் பாரு அவருக்கு மரியாதை கொடுக்கறதுக்கு. நீங்க என்ன வேணா நெனச்சுக்கோங்க அது ஒரு கோ-இன்சிடன்ட். அப்படித்தான் நான் அதைக் கடந்து போகப் பழகியிருக்கிறேன். ட்ரைனிங் முடியுற வரைக்கும் பல்ல கடிச்சுட்டு இங்க வருவேன், அதுக்கப்புறம் இந்த ஹாஸ்பிடலுக்கு ஒரு கும்பிடு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு போயிட்டே இருக்கப் போறேன்.”

“என்னடி இப்படிச் சொல்ற.இங்க இருக்க முக்காவாசி நர்ஸ், லேடி டாக்டர்ஸ்,ஏன் இங்க நோயாளியா வந்துருக்கவங்க வரைக்கும் உதய் சாரோட அழகுல மயங்கி அந்த டாக்டரை எப்படிச் சைட் அடிக்கிறாங்க தெரியுமா? நீ என்னடான்னா இப்படிச் சொல்ற. நீ வராத இந்த ஒன் வீக்கா நிறையப் பேர்கிட்ட நீ ஏன் வரலைன்னு கேட்டிருக்காரு. உன்னோட காயம் எப்படி இருக்குன்னு கேட்டுருக்காரு தெரியுமா?”

“ஓ.. ஆமா நான் ஏன் வரலைன்னு, என்னோட ஹெல்த் எப்படி இருக்குன்னு கேக்குறதுக்கு இவன் யாரு? இவனால தான் எனக்குக் காயம் ஆச்சு, அப்படி இருக்கும் போது என்னைப் பத்தி விசாரிக்குறதுக்கு இவனுக்கு என்ன உரிமை இருக்குது. ஆமா உன் கிட்ட ஏதாவது கேட்டானா நீ ஏதாவது உளறி வச்சியா?”

“என்கிட்ட எதுவும் கேட்கலை, நானா எதையும் உளறி வைக்கல போதுமா. திட்டுறதுன்னா அவரைத் திட்டுடி. அதுக்கு ஏண்டி என்னமோ ஹிஸ்டீரியா வந்தவ மாதிரி எங்கிட்ட இந்தக் கத்து கத்துற?”

“கத்தாம பின்ன என்னடி பண்ண சொல்ற. எனக்கு அவன் பேர கேட்டா மட்டும் இல்ல அவனைப் பார்த்தாலே பத்திகிட்டு வருது”

“அடியே முன்னபின்ன தெரியாதவங்க மேல எதுக்குடி உனக்கு இவ்வளவு கோபம்?”

“உனக்குச் சொன்னா புரியாது சௌசௌ பேசாமல் இரு.”

“அடியேய் பெங்களூர் தக்காளி! இன்னொரு தடவ என்னைச் சௌசௌன்னு சொன்ன தூக்கி போட்டு மிதிச்சுபுடுவன் மிதுச்சு பாத்துக்க”

“அப்படிதாண்டி சொல்லுவேன். நீ அவனைப் பத்தி என்கிட்ட பேசுனல்ல, அதனால நான் அப்படித் தான் சொல்லுவேன். நீ சௌசௌ தான்.. அதுவும் வழவழன்னு இருக்கச் சௌசௌ "

“உனக்கு அவரைப் பிடிக்கலைன்னா அவருக்கிட்ட போய்க் கத்த வேண்டியது தானடி. ஏண்டி எங்கிட்ட கத்திக்கிட்டு இருக்க. ஆமா ஒரு உண்மைய சொல்லு இந்த ஒன் வீக்கா ஒரு தடவைக் கூட அவரைப் பத்தி நீ நினைச்சு பாக்கலையா?”

“அடி ஏன்டி நீ வேற. ஒரு நிமிஷம் இல்ல, ஒரு செகண்ட் கூட அவனைப் பற்றி நினைக்காம என்னால இருக்க முடியல தெரியுமா? அவன் பேசுனதை நீ கேட்டிருந்தா சத்தியமா அவன் கழுத்து நெறிச்சுக் கொன்றுப்ப. அப்படிப் பேசுனான் தெரியுமா! மறுபடி எங்க அவன் மூஞ்சில முழிச்சுடுவனோன்னு எனக்குப் பயமா இருக்குடி. கோவத்துல ஒன்னு அவனைக் குத்திக் கொல்ல போறேன், இல்லன்னா இந்த ஹாஸ்பிடல் இருந்து புடிச்சு கீழே தள்ளப் போறேன்,நீ வேணா பாரேன்.”

“அடியே நீ ஒரு டாக்டர்டி. அப்படி இருக்கும் போது நீயே கொலை பண்ண போறேன் அப்படி இப்படின்னு பேசுற. இதெல்லாம் நல்லா இல்ல யாழி, அவரைப் பிடிக்கலையா ஒதுங்கிப் போகப் பழகிக்க, இன்னும் எப்படியும் கொஞ்ச நாள்ல நாம ட்ரைனிங் முடிச்சிட்டு இங்கிருந்து போயிடுவோம். அதனால போற வரைக்கும் நம்ம மேல எந்தப் பிளாக் மார்க்கும் இல்லாம போறதுதான் நம்மளோட கரியருக்கு நல்லது.”

“நானும் அதுக்காகத் தான்டி பல்லை கடிச்சுக்கிட்டுப் பொறுமையா போறேன். இப்ப கூடப் பாரு கடவுளை வேண்டிக்கிட்டே வந்தேன் அவனைப் பார்க்க கூடாதுன்னு.‌ எம்டி ரூம்ல அவனைப் பார்த்ததும் எனக்குச் சுறுசுறுன்னு கோவம் ஏறுச்சு. நல்ல வேலை அவனுக்குப் போன் வரவும் எந்திரிச்சு அந்தப் பக்கம் போயிட்டான். இல்லன்னா என்ன ஆகிருக்குமோ தெரியலடி”

“அடியேய் கிறுக்கி. இது அவங்களோட ஹாஸ்பிடல்டி. அப்படி இருக்கும்போது அவரை அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும் அப்ப என்ன பண்ணுவ? அவரா வந்து உன் கிட்ட பேசினா என்ன பண்ணுவ?”

“ஒரு டாக்டருங்குற முறையில பேசினா என்னோட ரியாக்ஷனும் ஸ்டுடென்ட்டுங்கிற நிலையில தான் இருக்கும். ஆனா வேற மாதிரி பேசுனா என்ன பண்ணுவேன் தெரியுமா?" என்றவள் அவசரமாகத் தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய அளவு டப்பா ஒன்றைத் தூக்கி காட்டியவாறே, “இதுல என்ன இருக்குன்னு தெரியுமா? பெப்பர் ஸ்பிரே. இதை அவனோட கண்ணுல அடிச்சு விட்டுட்டு வந்துடுவேன். கண்ணுத் தெரியாம கொஞ்ச நேரத்துக்கு அவன் தத்தளிச்சுக்கிட்டு இருக்கணும். அதனால என்கிட்ட யாரா இருந்தாலும் கேர்ஃபுல்லா இருக்கணும் நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது எல்லாரையும் பார்த்து பயந்து நடுங்குறதுக்கு. ஒரு தடவ நடந்த மாதிரி இன்னொரு தடவையெல்லாம் நடக்காது சரியா! தேவை இல்லாமா நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத”

“ஏய்... இரு. இரு.. ஒரு தடவை நடந்த மாதிரி இன்னொரு தடவ நடக்காதுன்னா என்ன அர்த்தம்? அப்ப இன்னொரு தடவை அந்த மாதிரி நடக்கணும்னு உன் மனசுல ஏதாவது எண்ணம் ஓடுதா என்ன?”

“என்னது? அப்படியே அடிச்சு சாவடிச்சிடுவேன் சௌசௌ. மூஞ்சி மொகரையும் பாரு. உன்னால மட்டும்தான்டி இப்படி எல்லாம் பேச முடியும். பிசாசு கழுத அவனைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. இதுல அந்தக் கருமத்தை வேற நான் மறுபடியும் மறுபடியும் நெனச்சு பாக்கணுமோ? உனக்கெல்லாம் அம்மா ஆசையா கேரட் அல்வா செஞ்சு கொடுத்தாங்கன்னு கொண்டு வந்தேன் பாரு என்ன சொல்லணும். இப்ப நீ இப்படிப் பேசுனதுக்காகவே உனக்கு அல்வா கிடையாது போடி” என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தவள் இரண்டு அடி எடுத்து வைப்பதற்குளாகவே சடன் பிரேக் போட்டு நின்றாள்.

முகம் முழுவதும் அதிர்வை தாங்கியிருக்க உள்ளமோ, ‘அய்யய்யோ இவன் எப்ப இங்க வந்து நின்னான்?’ என்று நினைத்துப் பயத்தில் நடுங்கியது.

உதயோ சுவற்றின் மீது சாய்ந்து நின்றவாறு மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி கொண்டு அவர்கள் இருவரையும் அழுத்தமாகப் பார்த்தவன், “உங்க பிரண்டை என்னோட ரூம்ல வெயிட் பண்ண சொல்லுங்க மிஸ் சௌமியா. நான் ரவுண்ட்ஸ முடிச்சிட்டு இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன் அதுவரைக்கும் அங்கையே வெயிட் பண்ண சொல்லுங்க. அதே மாதிரி அவங்கவங்க வொர்க்கையெல்லாம் முடிச்சுட்டு மத்த டிரைனீஸையும் கான்பரன்ஸ் ஹால்ல வெயிட் பண்ண சொல்லுங்க” என்று சொல்லி விட்டு நகர்ந்தவனின் பார்வை ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் முழுதாக யாழினி மேல் அழுத்தமாகப் பதிந்து விட்டுச் சென்றது.

அவனது பார்வையே சொல்லாமல் சொன்னது தான் பேசிய அனைத்தையும் அவன் கேட்டு விட்டானென்று என்பதை உணர்ந்தவளுக்கு அவளையும் அறியாமல் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ‘போச்சு இதுக்கு என்ன வச்சிருக்கான்னு தெரியலையே?’ என்று உள்ளுக்குள் புலம்பியவள் திரும்பி சௌமியை முறைத்தாள்.

“எல்லாம் உன்னால தான்டி. நம்ம ரூமுக்குப் போய்ப் பேசியிருக்கக் கூடாதா? இப்ப பாரு அவன் என்னை வர சொல்றான். அவன் மட்டும் என்னைத் திட்டட்டும் உனக்குச் சோத்துல விஷம் வச்சுடுறேன் இரு” என்று சொல்லி விட்டு தன் தலையில் தானே அடித்துக் கொண்டவள்,
“கடவுளே எனக்கு மட்டும் எங்கிருந்து தான் இந்த மாதிரி பிரச்சனை வருதுன்னு தெரியலையே” என்று புலம்பியவாறு அடுத்து இருந்த வார்டுக்குள் நுழைந்தாள்.

‘போச்சு எல்லாம் நாசமா போச்சு. அவர் ஏதாவது இவளைத் திட்டுனா, வந்து நம்மக்கிட்ட சாமி ஆடுவாளே? கடவுளே எங்க அம்மா மூஞ்சியில தான் காலையிலா முழிச்சேன். அதோட எஃபெக்ட் தெரியிதே! அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகுதோ தெரியலையே ஆண்டவா எப்படியாவது அவக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திடு' என்று புலம்பியவளாய் யாழினியைப் பின்பற்றித் தானும் அந்த வார்டுக்குள் நுழைந்தாள்.

வசைபாடி வார்த்தை
கொண்டு வஞ்சியிவளை வதைத்திடுவான் என்றெண்ணி அவள் கலக்கம் கொள்ள..
வார்த்தையின்றி வாஞ்சையாய் ரசித்துத் தழுவிடும் அவன்
விழிப்பாவைக் கண்டு சரவெடியாய் படபடத்து
வாயாடுபவள் மௌனத்தைத் துணைக்கழைத்து விக்கித்துப் போனதேனோ?

- அற்புதமது பிறக்கும்..


 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -19

அருகிலிருந்த வாட்டுக்குள் நுழைந்த யாழினியும் அங்கிருந்த நோயாளிகளைப் பரிசோதித்து சாட் ஷீட்டில் அவர்களது உடல்நிலைக் குறித்த தகவல்கள் அனைத்தையும் எழுதி முடித்தவள், அடுத்து நேராக சென்றது உதயின் அறையை நோக்கித் தான். அதிலும் செல்லும் போது தன்னிடம் பேச வந்த சௌமியை முறைத்துக் கொண்டே சென்றவள், “இருடி போயிட்டு வந்து உனக்கு இருக்கு” என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவாறு முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு தான் உதயின் அறை இருந்த பிளாக்கிற்கு வந்தாள்.‌

முதலில் தயக்கத்துடன் அவனது அறையின் முன் வந்து நின்றவள் விரல்களை மடக்கி கதவை மெல்லத் தட்டி, “சார் மே ஐ கம் இன்?” என்றாள்.

உள்ளே இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை என்றதும் தான், ‘ஒஒ அவன் இன்னும் ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு வரல போல. அதான் உள்ள இருந்து எந்தச் சத்தமும் வரல’ என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ள நுழைந்தவள் அந்த அறை இருந்த தோரணையைக் கண்டு ஒரு நிமிடம் மலைத்து நின்று விட்டாள். திரும்பும் திசையெங்கும் வண்ண வண்ண ஓவியங்களைச் சுவரெங்கும் நிறைத்திருந்தனர். விலையுயர்ந்த சிலைகளையும் அலங்காரத்திற்காக இடைவெளி விட்டு சுவற்றை ஒட்டி நிறுத்தி வைத்திருந்தனர். அவற்றின் அழகை விழியால் வருடியவாறு நகர்ந்தவள், அந்த அறையின் ஓரமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறே அந்த அறையை அணு அணுவாய் ரசித்தாள். அதிலும் கடலலைகள் ஒரு அடி உயரத்திற்கு மேலெழும்பி இருக்க அதிலிருந்து நீருக்குள் ஒரு டால்பின் குதிப்பது போலிருந்த ஓவியம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. அதிலிருந்து பார்வையை அகற்ற முடியாமல் திணறினாள் யாழினி. அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதேதோ பிம்பங்கள் தெளிவில்லாமல் கண்முன் காட்சிகளாக விரிய கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டாள். பின்னர் நிதானமாக எழுந்து சென்று அவ்வோவியத்தின் முன் நின்றவள் மெதுவாக அதை வருடியவாறே ரசித்துப் பார்த்தாள். அவள் இங்கு வந்த பதினைந்தாவது நிமிடத்தில் தனது வேகநடையுடன் தன் அறைக்குள் நுழைந்தான் உதய்.

அவன் வந்ததைக் கவனிக்காமல் அவள் பாட்டுக்கு ஓவியத்தை ரசித்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்தவனின் விழிகள் தான் வந்ததைக் கவனிக்காமல் நின்றிருந்த அவளின் மேல் படிந்தது.‌ சத்தமின்றி அறையைத் தாழிட்டு விட்டு ஓசைப்படாமல் அவளை நெருங்கி நின்றான். அவளது முதுகுக்கும் இவனது நெஞ்சு பகுதிக்கும் இடையே ஒரு நூலிழை தான் இடைவெளி இருந்தது.

அவளோ அந்த ஓவியத்தில் இருந்து கண்களை விலக்க முடியாமல் தன்னிலை மறந்த நிலையில் அதையே பார்த்துக் கொண்டிருக்க, இவனோ தன் தலையைச் சாய்த்து, அவளது வலது தோள்பட்டையின் இடைவெளி வழியாகத் தானும் அந்த ஓவியத்தைக் கண்டான்.

தான் ரசித்துப் பார்த்து வாங்கிய ஓவியம் அவளுக்கும் பிடித்திருக்கிறது என்ற உணர்வே அவனைச் சற்று சலனப்படுத்தியது. அவள் காதோரம் குனிந்தவன் சற்று மெல்லிய குரலில், “இந்த ஓவியம் உனக்கு அவ்வளவு புடிச்சிருக்கா என்ன? நான் வந்தது கூடத் தெரியாம அதையே மெய்மறந்து பார்த்துகிட்டு இருக்க” என்றான்.

அவன் குரலில் அதிர்ந்து விதிர்விதிர்த்தவளாய் சட்டென்று அவன் புறம் திரும்ப முயன்றாள். அவ்வளவு நெருக்கத்தில் உதய் நின்றிருந்ததால் திரும்பிய வேகத்தில் அவன் மீதே மோதிக் கொண்டாள். மோதிக்கொண்டதோடு நில்லாமல் கீழே விழ சென்றவளின் தோள்பட்டையில் தன் இரு கைகளையும் பதித்துக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து நிலையாக நிற்க வைத்தான். “இப்ப எதுக்குப் பேயைக் கண்ட மாதிரி பதறுற?” என்றவன் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டான்.

அவளோ மனதிற்குள், ‘பேயை பார்த்தா கூட நான் பயப்பட மாட்டேன்டா. உன்னைப் பார்த்தா தான் எரிச்சலா வருது. பிசாசு இப்படித்தான் பின்னால வந்து நிக்கிறதா? சரியான லூசா இருப்பான் போல’என்று மனதில் வறுத்தெடுத்தவள், அவன் இன்னும் தன்னை விட்டு தள்ளி விலகி நிற்காததைக் கண்டு,
“கொஞ்சம் தள்ளி நில்லுங்க சார்” என்றாள் குரலை சிறிதாக்கி, பார்வையைத் தழைத்தபடி..

அப்போதுதான் அவனுக்குமே உறைத்தது அவளுடன் நெருக்கமாகத் தான் நின்றிருப்பது. பின்பு இரண்டு அடி இடைவெளிவிட்டு தள்ளி நின்றவன் தன்னைச் சமன்படுத்திக் கொள்ளும் விதமாய்த் தன் பின்னந்தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டான். பின் தனது கை விரல்களை மடக்குவதும், விரிப்பதுமாகவே சிறிது நேரத்தைப் போக்கினான்.

பின்பு மூச்சை இழுத்து ஆழமாக வெளியிட்டவன்,“சொல்லு அந்த ஓவியம் உனக்கு ரொம்பப் புடிச்சிருக்கா என்ன?” என்று அதையே மீண்டும் கேட்டான்.

அதற்கு அவளோ, “அந்த ஓவியம் பார்க்க ரொம்ப அழகாக இருந்துச்சு அதான் பார்த்தேன் சார் வேற ஒன்னும் இல்ல. ஆமா எதுக்கு சார் என்னை வர சொன்னீங்க?” என்றாள் மெதுவாக.

அப்போது தான் அவளை எதற்கு வரச்சொன்னோம் என்பதே அவனுக்கு நினைவு வந்தது. பின்னரே அவளை மேலிருந்து கீழ் வரை அவளெடுப்பது போல் அவளைப் பார்த்தவனுக்கு ஏதோ ஒன்று அவளை நோக்கி தன்னை உந்தித் தள்ளிவது போல் உணர்ந்தான்.‌ அவன் அறிந்திருக்கவில்லை, அவன் பின்னே அரூபமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் யாமீரன் தான் இருவரையும் இணைத்து வைக்கப் பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறானென்று. தன் தங்கையிடம் இருந்து தான் ஜென்ம ஜென்மமாய் நேசிக்கும் பெண்ணவளைக் காக்க வேண்டும் என்றால், அவளுக்கு உரிமையானவனுடன் அவள் இணைய வேண்டியது அவசியம் என்பதைத் தன் திவ்ய சக்தி கொண்டு உணர்ந்தான். அதனால் தான் இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க முயல்கிறான். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாகத் தன் தங்கை ஏகப்பட்ட திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
தான் நேசித்த பெண்ணை அடைவதை விட, அவள் உயிரைக் காக்க தன்னுயிரைத் துறக்க யாமீரன் காத்திருக்கிறான்..

அவளே, தான் இங்கு அவளை எதற்கு வர சொன்னோம் என்பதை நினைவுபடுத்தியதால் வேகமாக அவளின் அருகில் நெருங்கியவன் அவள் வலது கையில் மணிக்கட்டிற்கு மேலே இருந்த சதைப்பகுதியை அழுத்தமாக, தன் இடது கையால் பிடித்து அவளைத் தன் அருகே இழுத்து நிறுத்தியவன்,
“எவ்வளவு தைரியம் இருந்தா என் முகத்தைப் பாக்கவே பிடிக்கலன்னு சொல்லுவ? ஆமா என் முகத்தைக் குறை செல்றியே? நீ மட்டும் என்ன பேரழகியோ? தெரியாம தான் கேட்குறேன் நீ என்ன கிளியோபட்ராவா! உன் அழகுல மயங்கி, உன்னைப் பத்தி நான் விசாரிக்குறதுக்கு. ஏதோ என்னால உனக்குக் காயம் ஆயிருச்சேன்னு கொஞ்சம் கில்ட்டியா ஃபீல் பண்ணுனேன். ஒரு வாரமா ஹாஸ்பிடல் வரலையே, என்ன ஆச்சோன்னு கொஞ்சம் டென்ஷனா இருந்ததால தான் உன்னைப் பத்தி விசாரிச்சனே தவிர நீ நினைக்கிற மாதிரி ஒரு மண்ணும் கிடையாது.

அப்புறம் என்னோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா உனக்கு? என் ஸ்டேட்டஸ்கு போயும் போயும் உங்கிட்ட எல்லாம் நான் விழுந்திடுவேன்னு நினைக்காத. நான் படிச்சதே அமெரிக்காவுல தான். சோ உன்னை விட அழகான பொண்ணுங்களை எல்லாம் நான் அங்கையே பாத்துட்டு வந்துட்டேன். என் ஸ்டேட்டஸ்கு நீயெல்லாம் எனக்கு கொஞ்சங்கூடத் தகுதியே இல்லாத, அதனால தேவையில்லாம இப்படிக் கற்பனைக் கோட்டை கட்டாத” என்றான்.

அவன் கைகளில் இருந்து தன் புஜங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டவள் இன்னும் நான்கடி அவனை விட்டு தள்ளி நின்றவாறு, “இதையே தான் சார் நானும் அவக்கிட்டை சொன்னேன். ஆப்ட்ர் ஆல் ஒரு டீ கடைக்காரர்கிட்ட இருக்கப் பணிவு, பாசம், அன்பு, மரியாதை, இரக்கக் குணம் எதுவும் எவ்வளவு பணம் இருந்தும் உங்க கிட்ட இல்ல. அதை விட உங்க முகத்தை ஒரு செகண்டுக்கு மேல என்னால சகிச்சுக்க முடியலை, இதுல எப்படிச் சார் காலத்துக்கும் சகிச்சுக்குறது? எனக்கு எப்பவுமே எதா இருந்தாலும் ஸ்ட்ரைட்டா பேசி தான் பழக்கம் சார்.‌ எதையும் மறைச்சு பேச வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இது உங்க ஹாஸ்பிடல்லா இருக்கலாம், நீங்க எம்டியோட பையனா இருக்கலாம் அதுக்காக எல்லாம் உங்களை அனுசரிச்சு போகணும்னு எனக்கு அவசியம் கிடையாது.

இப்பவும் நான் தைரியமா உங்க முன்னாடி சொல்லுவேன், அந்தப் பொண்ணுங்க எல்லாம் புகழுற அளவுக்கு நீங்க அழகும் கிடையாது, மன்மதனும் கிடையாது. மத்த பொண்ணுங்க மாதிரி உங்களைப் பார்த்து மயங்கி உங்க பின்னாடியே சுத்துறதுக்கு நான் ஒன்னும் சாதாரண பொண்ணு கிடையாது. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி தான் அதுக்காக உங்க பின்னாடி சுத்த வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது சார். நான் இப்ப இங்கிருந்து போலாமா சார், எனக்கு வேலை இருக்கு” என்றாள் நிமிர்வுடன்..

அவனோ, அவள் பேச பேச அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,'ஓஹோ நீ அப்படி வர்றியா?’ என்று நினைத்தவன் தன் கூர் விழிகளால் அவளைத் துளைத்தெடுத்தவாறு, “அப்ப என்னோட நெருக்கம் உனக்கு எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாதுன்னு சொல்ல வர்றியா?” என்று கேட்டான் வேண்டுமென்றே அவள் பதிலை அறிவதற்காக. தன்னை ஒருத்தி அழகில்லை என்கிறாள், ஒரு நிமிடத்திற்கு மேல் தன் முகத்தைச் சகித்துக்கொள்ள முடியாது என்கிறாள்,‌அந்த அளவிற்குத் தன் முகம் மோசமானதா? அல்லது சிறிது கூட அவளை நான் சலனப்படுத்தவில்லையா? என்று தெரிந்து கொள்ளவே அவ்வாறு கேட்டான். கூடவே அவளது வார்த்தைகள் அவனது ஆண் என்ற ஈகோவை தூண்டி விட்டிருந்தது.

அவளோ, “கண்டிப்பா எனக்கு நெருக்கமானவங்க, என் மனசுக்கு பிடிச்சவங்களால மட்டும் தான் என்னைச் சலனப்படுத்த முடியும்” என்று அப்போதும் நிமிர்ந்து நின்று சற்று திமிருடனே கூறியவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளவெடுத்தான்.

‘அந்தளவுக்கு மோசமில்லை கொஞ்சம் அழகா தான் இருக்கா' என்று நினைத்தவன் அடுத்த நிமிடம் எதைப்பற்றியும் யோசிக்காமல் நான்கடி இடைவெளியில் நின்றவளின் கையை எட்டி பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே வந்து மோதினாள் யாழினி. அவள் தன்னை மோதிய மறுகணம் அவளது எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவளை இறுக்கி அணைத்தான் உதய்.

அவளோ அவனது அணைப்பில் இருந்து விடுபடத் திமிறிக் கொண்டிருந்தாள். அவனோ அதை அலட்சியப்படுத்தியவனாய் தன் வலியக் கரங்களுக்குள் அவளைச் சிறை வைத்திருந்தான்.‌ இன்னும் அழுத்தமாக அவளை அணைத்தவன் விடுவிக்காமல் சட்டென்று தன் ஒற்றைக் கையால் அவள் முகத்தை நிமிர்த்தியவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவள் இதழை முற்றுக்கை இட்டிருந்தான்.

அவனது வலது கை அவளது தாடையை அழுத்தமாகப் பற்றியிருக்க, அவனது இடது கையோ அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துப் பிடித்திருந்தது. எத்தனை நேரம் அந்த இதழ் முற்றுகை நீடித்ததோ? முதலில் தன்னிலைப் பெற்ற உதய் அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.‌ ரத்தமெனச் சிவந்திருந்த அவள் முகத்தைக் கண்டவனுக்கு இவ்வளவு நேரம் இருந்த கோபம் காணாமல் சென்றிருந்தது. தன் ஈகோவை தூண்டி விட்டாளே, அவளுக்குத் தக்க தண்டனை தரவேண்டும் என்ற எண்ணத்தில் அவளை அணைத்து விடுவிக்கத் தான் எண்ணி இருந்தான்.
ஆனால் அவளை அணைத்ததும் ஏதோ இனம் புரியாத உணர்வு ஒன்று தன்னுள் எழவும் தன்னையுமறியாமல் அவள் இதழ்களைத் தன்னிதழ் கொண்டு முற்றுக்கையிட்டிருந்தான்.

யாழினியோ கலங்கிய கண்களோடு அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் அந்த அறையிலிருந்து செல்ல பார்த்தாள். உதய்யோ அவள் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி மீண்டும் அவளைத் தன் கையணைவுக்குள் கொண்டு வந்தவாறே, “உன்னோட பிரண்ட் கிட்ட என்ன சொன்ன? என்னைப் பார்த்தாவே பத்திக்கிட்டு வருதா? உனக்கு என்னைப் பிடிக்காதோ? அந்த அளவுக்கு நான் உன்னை என்னடி செஞ்சேன். உனக்கு என்னைப் பார்த்தா அவ்வளவு எரிச்சலா இருக்கோ? உன் பார்வைக்கு நான் எப்படித் தெரியும் பொறுக்கி மாதிரியா? இல்லை பிலர்ட் பண்ற மாதிரி தெரியிறனா? பதில் சொல்லுடி உன்னோட பார்வைக்கு நான் எப்படித் தெரியிறேன்?” என்று கேட்டவனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனித்தாள் யாழினி.

அவனோ அவளை உலுக்கி மீண்டும் அதே கேள்வியைக் கேட்க.
அதற்கு மேல் தாங்காதவளாய்,
“ஒரு பொண்ணுக்கிட்ட இந்த மாதிரி நடந்துக்குறவங்களைப் பொறுக்கின்னு சொல்லாம வேற எப்படிச் சொல்லுவாங்களாம்” என்று மெதுவாக முணுமுணுத்தவளின் கண்கள் கலங்கியது.

அவள் மெதுவாகவே முணுமுணுத்தாலும் அது அவனது காதிலும் விழுந்தது.‌ “ஓஓ‌... அப்ப என்னைப் பொறுக்கின்னே முடிவு பண்ணிட்டல்ல. உன் பாஷையில பொறுக்கின்னு பேர் சூட்டப்பட்ட நான் இப்ப உன்னைக் கிஸ் பண்ணிட்டனே? இப்ப என்ன பண்ண போற, உன்னோட லிப்ஸ்ஸ அறுத்துக்கப் போறியா? இல்ல நான் கொடுத்ததை எனக்கே ஒன்னுக்கு ரெண்டா திருப்பிக் குடுக்கப் போறியா?” என்று நக்கலாகக் கேட்டான்.

ஏனோ அவளது அந்தக் கண்ணீரும், தன் முகத்தைப் பார்க்காமல் விலகிச் சென்ற அவளது செய்கையும் அடிபட்ட தன் ஈகோவிற்கும், தன்மானத்திற்கும் சற்று இதம் சேர்ப்பதைப் போல் உணர்ந்தான் உதய்.

அவளோ அவன் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல, ஏதோ உருவம் அறியாத சக்தி ஒன்று தன்னைக் காந்தம் போல் அவள் புறம் ஈர்ப்பதை உணர்ந்த உதய் மீண்டும் தன்னை அறியாமல் அவள் மலரிதழ்களை நோக்கி குனிந்தான். அதேநேரம் அந்த அறைக் கதவு தட்டப்பட, சட்டென்று தன்னிலை பெற்று அவளை உதறித் தள்ளினான்.

அவன் உதறித் தள்ளியதில் கீழே விழுந்தவளோ கண்களில் வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்க மறந்தவளாய் எழுந்து நின்று தன் உடைகளைச் சரி செய்தாள். மனம் அனலில் இட்ட புழுவாய் துடித்து. யாருமில்லா இடத்திற்குச் சென்று கத்தி அழவேண்டும் போலிருந்தது யாழினிக்கு. இதுவரை கூடப்பிறந்த அண்ணனாகவே இருந்தாலும் தள்ளி நின்றே பேசி பழகியவளுக்கு முதல் முறை ஒரு வேற்றாளான ஆணின் தொடுகை ஏகப்பட்ட குழப்பங்களையும், எரிச்சலையும், ஒருவித அச்சத்தையும் கொடுத்தது. முதலில் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைத்தாள். மீண்டும் அறைக்கதவு தட்டப்பட்டதும் தன் கையால் முகத்தை அழுந்த துடைத்தவள் உதய்யை திரும்பியும் பார்க்காமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

எதற்காகவோ தன் மகனை பார்க்க வந்த சுமேந்திரன் அறைக் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு யோசனையோடு கதவைத் தட்டி விட்டு வெளியவே நின்றார். பொதுவாக அறை கதவை தாழிடும் பழக்கம் உதய்கு இல்லை.‌ வீட்டில் கூட அவன் அறையைத் தாழிடாமல் தான் தூங்குவான். அப்படி இருக்கும் போது மருத்துவமனையில், அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையின் கதவைத் தாழிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்றவர் யோசித்துக் கொண்டு இருக்கும் போது கதவை திறந்து கொண்டு சிவந்து போன முகத்தோடு, கண்ணில் கசியும் கண்ணீரை துடைத்தவாறே சென்ற யாழினியைக் கண்டவர் அதிர்ந்துவிட்டார்.


‘கடவுளே இந்தப் பொண்ணுகிட்ட என்ன பிரச்சனை பண்ணி வச்சான்னு தெரியலையே?’ என்று சிந்தித்தவராய் வேகமாக உள்ளே நுழைந்தார். தான் செய்த செயல் சரியா? தவறா? என்ற குழப்பத்துடனே தலைகோதிக் கொண்டு நின்றிருந்தான் உதய்.

சுவற்றில் தெரிந்த ஓவியத்தை வெறித்தவாறு நின்றிருந்த தன் மகனை கண்டவர், ‘என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே? ரொம்ப டென்ஷனா வேற இருக்கான்’ என்றெண்ணியவாறு அவன் முன்னால் சென்று நின்றார்.

மகனின் முகத்தில் இருந்த குழப்பம் அவரையும் குழப்பியது இருந்தும் என்னவானதென்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்ததால், “என்னாச்சு உதய் அந்தப் பொண்ணு ஏன் அழுதுக்கிட்டே போகுது?” என்று கேட்டார்.

என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவன் , “ஒன்னும் இல்ல டேட் சும்மா பேசிகிட்டு இருந்தோம் அவ்வளவு தான்”என்று மழுப்பினான்.

“சும்மா பேசிக்கிட்டு இருந்ததுக்கெல்லாம் யாரும் அழ மாட்டாங்க உதய்.‌ உண்மைய சொல்லு, அந்தப் பொண்ணு ஏன் அழுதுட்டு போகுது? நீ என்ன பண்ணி வச்ச?” என்று கேட்டார்.

“டாட் புரிஞ்சுக்குங்க சில விடயத்தை உங்கக்கிட்ட சொல்ல முடியாது. சும்மா சும்மா அதையே கேட்டு என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க”

“என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு உதய். அந்தப் பொண்ணு நம்ம ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ற டிரெயினிங் ஸ்டாப். சொல்லப் போனா இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் போன அவங்க கோர்ஸ் முடிச்சுரும். அதுக்கப்புறம் இங்கக்கூட அவங்க ஜாயின் பண்ணுவாங்க அப்படி இருக்கும்போது அவங்க அழுதுட்டுப் போறது நமக்கு நல்லது கிடையாதுடா. சொல்லு உதய் என்ன ஆச்சு? எதுக்கு அந்தப் பொண்ணு அழுதுட்டு போகுது? ப்ளீஸ் உண்மைய சொல்லுடா எனக்கு என்னவோ நினைக்கத் தோணுது” என்று படபடப்புடன் கேட்டார்.

“டேட், ஏன் டேட் இப்படிப் பண்றீங்க? எல்லா விடயத்தையும் உங்கக்கிட்ட சொல்ல முடியாது டேட்.” என்றவன் தந்தையின் பதற்றமான முகத்தைக் கண்டு பெருமூச்செறிந்தவனாய்,
“இப்ப என்ன அந்தப் பொண்ணு ஏன் அழுதுக்கிட்டு போச்சுன்னு தெரியணும் அவ்வளவுதானே!” என்றவன் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் தயங்கினான்.

பின்னர் மீண்டுமொருமுறை பெருமூச்செறிந்து தன் தயக்கத்தை ஒதுக்கித் தள்ளியவனாய் தன் தந்தைக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, “என்னாச்சுன்னு தெரியல டேட் நான் நானாவே இல்லை. எந்தப் பொண்ணுக்கிட்டையும் நான் இந்த மாதிரி நடந்துக்கிட்டது கிடையாது. பூர்வ ஜென்ம பந்தமோ என்னமோ தெரியல அந்தப் பொண்ண பார்த்ததுல இருந்து எனக்கு ஒரு மாதிரி நெருக்கமா பீல் ஆகுது டேட். எனக்கு என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது. அவ பக்கத்துல வந்தாவே நான் என் கண்ட்ரோலை மிஸ் பண்ணிடுறேன் டேட், அதனால தான் அன்னைக்கு அப்படி நடந்துச்சு போல. இப்பவும் என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ணிக்க முடியல டேட். இன்னும் சொல்லப்போனா அவளுக்கு என்ன பிடிக்கலன்னு எனக்கு நல்லா தெரியுது, அவ பிரெண்ட் கிட்டையும் இதைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தா அதை நான் எதேச்சையா கேட்டேன். சும்மா அவளைக் கிண்டல் பண்ணி, விளையாட்டுக்கு லைட்டா மிரட்டி வெக்கலாம், அப்படியே அவ ஹெல்த்தை பத்தி கேட்கலாம்னு தான் வரச்சொன்னேன் டேட். ஆனா என்னையே அறியாம அவளைக் கி...கி..ஸ்..கிஸ் பண்ணிட்டேன் டேட். சாரி டேட் நான் வேணும்னே எதையும் பண்ணல” என்று தயக்கத்துடன், குழப்பமாய்ச் சொன்னவனைக் குழப்பத்துடன் பார்த்தார் சுமேந்திரன்.

“அந்தப் பொண்ண லவ் பண்றியா உதய்?” என்று கேட்டார்.

“தெரியல டேட். பார்த்த ஒரே நாள்ல ஒருத்தர் மேல லவ் வருமா? என்னால எதையும் யோசிக்க முடியல டேட்”

“நீ என்ன நினைக்கிற உதய் காதலுங்குறது பழகப்பழக வர்றதுன்னா? பழகுனதுக்கு அப்புறம் நட்பைத் தாண்டி வர்றதும் ஒரு வகைக் காதல் தான். ஆனா பார்த்த ஒரு செகண்ட்ல கூடக் காதல் நமக்குள்ள வந்துடும்பா. காற்று நுழையாத இடத்துக்குள்ள கூடக் காதல் நுழைஞ்சுடும்பா. நல்லா யோசிச்சு பாரு, உன் மனசு உனக்கே புரியும். ஆனா ஒன்னு இப்படி நீ அந்தப் பொண்ணுக்கிட்ட நடந்துகிட்டது ரொம்பத் தப்பு, போ போய்ச் சாரி கேட்டுரு உதய்?”

“நானும் சாரி கேக்கணும்னு தான் நினைச்சேன் டேட் ஆனா அதுக்குள்ள நீங்க கதவைத் தட்டவும் அவ போயிட்டா. அவ அழுதது கஷ்டமா இருக்குது டேட்”

“நீ தான அழ வெச்சே நீயே போய்ச் சமாதானப்படுத்து?”

“அவளைச் சமாதானப் படுத்துறதுக்கு அவ என்ன என்னோட லவ்வரா? இல்ல பொண்டாட்டியா டேட்”

“சும்மா சும்மா அவளைக் கிஸ் பண்ணுனியே அது என்னவாம்.‌ உன் இஷ்டத்துக்கு அவளை நெருங்குறதுக்கு அவ என்ன உன் பொண்டாட்டியா? இல்ல லவ்வரா?” என்று கேட்டு அவனையே மடக்கினார்.

“என்ன டேட் நீங்களே குத்தி காட்டி பேசுறீங்க?”

“இல்ல உதய் இப்ப நீ அந்தப் பொண்ணுக்கிட்ட நடந்துக்கிட்ட முறையால அவ ரொம்பப் பயந்து போயிருப்பா! உன்னைக் கண்டிப்பா லோஃபர்னு தான் நெனச்சுருப்பா. அதனால சாரி கேளு, முடிஞ்சா உன் மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. உனக்குள்ள இருக்க உணர்வு காதலா இருந்தா பரவால்ல,‌ லஸ்ட்டா இருந்தா ரொம்பத் தப்பு, அதைப் புரிஞ்சுக்க உதய்” என்று சொல்லிவிட்டு வந்த வேலை என்ன என்பதை மறந்தவராய் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

உதய்யோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான். அவன் எவ்வளவு யோசித்தும் அவள் மீது அவனுக்குக் காதல் வந்திருக்கிறதா? அல்லது அது வெறும் இனக் கவர்ச்சியா என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதுவாக இருந்தால் என்ன? முதலில் அவளிடம் ஒரு சாரி கேட்க வேண்டும் என்று நினைத்து அவளைத் தேடி வந்தான்.


என் தேடலின் முடிவில் கண்டதென்னவோ கலைந்த ஓவியத்தின் பிம்பத்தைக்
கடனாகப் பெற்ற
காரிகையவளைத் தான்..

விழி கொண்டு உன்னை
வருடியவனால் விரல்
கொண்டு உந்தன்
மதிமுகத்தை இதமாக வருடி
ஆறுதலுரைத்து மன்னிப்பை யாசிக்க முடியவில்லையென்ற
மனத்தாங்கலிலே எந்தன் மனம் வேதனையை ஏந்துதடி..

அற்புதமது பிறக்கும்..

https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389
/
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -20

இங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறிய யாழினி யாரும் தன்னைக் கண்டு விட்டு கேள்வி கேட்கக் கூடாது என்பதால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு தாங்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு வந்தாள். அங்கு யாரும் இல்லை என்றதும் வேகமாகக் கழிவறைக்குள் நுழைந்தவள் முகத்தைத் தண்ணீர் விட்டு கழுவினாள். அதிலும் உதய் இதழ்ணைத்ததே மீண்டும் மீண்டும் அவள் நினைவில் நின்று இம்சிக்க அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. தன்னிதழ்களைத் தண்ணீரால் அழுந்த தேய்த்துக் கழுவினாள்.

ஆனால் எவ்வளவு கழுவியும் அவனது உதட்டின் வெப்பமும், அழுத்தமும் இன்னும் தன்னிதழின் மேல் இருப்பது போலவே இருக்க மீண்டும் மீண்டும் உதட்டை தேய்த்துக் கழுவி கொண்டே இருந்தாள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்ததின் விளைவு ஏற்கெனவே அழுதழுது சிவந்திருந்த முகமும், இதழும் மேலும் இரத்தச் சிவப்பெனச் சிவந்திருந்தது. அதேநேரம் அவளைத் தேடிக்கொண்டு வந்த உதய் ஒரு வேளை அவர்கள் ஓய்வு எடுப்பதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருக்கிறாளோ? என்று எண்ணியவன் அந்த அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழையவும், சரியாக வெகு நேரம் கழித்துக் குளியலறையில் இருந்து யாழினி வெளியே வரவும் சரியாக இருந்தது.

மீண்டும் அவன் தன்னைத் தேடி வருவான்னென்றோ? இங்கு நிற்பனோன்றோ? எதிர்பார்த்திடாதவள் அதிர்வுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ அழுது அழுது முகம் சிவக்க நின்றிருந்த அவளைக் குற்ற உணர்வுடன் பார்த்தவன் வேறு ஏதும் பேசாமல், “சாரி” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நகர்ந்து சென்றிருந்தான்.

செல்லும் அவனை இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் பார்த்திருந்தவளுக்கு மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தன் எப்போதிருந்து இவ்வளவு பலவீனமாக மாறினோம் என்று நினைத்தவாறு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள். சரியாக அதேநேரம் அவளைத் தேடிக்கொண்டு சௌமியும் அங்கு வந்து சேர்ந்தாள். யாழினி இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தவள், “என்ன ஆச்சுடி. ஏன் உன் முகம் இப்படிச் சிவந்துருக்கு? அழுதியா யாழி” என்று பதற்றத்தோடு கேட்ட சௌமிக்குப் பதில் சொல்லாமல் அமைதி காத்தவளுக்குப் பொங்கிக் கொண்டு வந்த அழுகையைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் போராட்டமாகவே இருந்தது..

அதன்பிறகு சௌமியிடம் எதையும் கூறாமல் தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள் யாழினி. அவளைப் பின்பற்றித் தானும் சென்ற சௌமிக்கு அவர்கள் இருவரிடையே என்ன நடந்தது என்று கூடத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக யாழினியின் மனது புண்படும்படி ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்தவள், இனிமேல் எக்காரணத்தைக் கொண்டும் தன் தோழியை விட்டு நகரக் கூடாது என்று முடிவு செய்தாள்.

சொன்னது போலவே அவர்களுக்கு எடுக்கவேண்டிய ஓரல் வகுப்பை எடுத்தான் உதய். கவனமாக அவன் எடுக்கும் பாடத்தை மட்டும் கவனித்தாளே தவிர மறந்தும் கூட யாழினி அவன் முகத்தைப் பார்க்கவில்லை. செவியில் மட்டுமே அவன் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டவள், அதைக் குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டாள். ஆனால் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்கும் போதும் அவனையும் அறியாமல் அவன் பார்வை யாழினியைத் தழுவி விட்டு தான் சென்றது. அரை மணி நேரம் நடைபெற்ற வகுப்பில் கிட்டத்தட்ட அவர்களுக்குத் தன் தந்தை சொல்லிக் கொடுக்கச் சொன்ன அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவன், வகுப்பு முடிந்ததும் அனைவரையும் கிளம்பச் சொன்னான்..

கிட்டத்தட்ட பாதிப் பேர் சென்றதற்குப் பிறகே யாழினி, சௌமி இருவரும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். வகுப்பு முடிந்ததிலிருந்து அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் உதய். அவள் அந்த அறையில் இருந்து வெளியேறியதும், அவள் உருவம் அந்த வாராண்டாவில் இருந்து மறையும் வரை அந்த திசையையே பார்த்திருந்தவனுக்கு ஏதோ உள்ளம் இடறியது. சொல்ல முடியாத ஒரு உணர்வு உள்ளத்தில் பிறக்க, அவளது அழுத முகமே மீண்டும் அவன் கண் முன் வந்து அவனை இம்சித்தது.‌ ‘கடவுளே அவ அழுதா எனக்கு ஏன் கஷ்டமா இருக்குது?’என்றவன் நினைக்கும் போதே நிகிலிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர, தன் நண்பனை வரவேற்று அழைத்து வருவதற்காக ஏர்போர்ட்டுக்கு கிளம்பிச் சென்றான் உதய்.

ஆழ்கடல் ராஜ்ஜியம்....

நீர் சுழலிலிருந்து எப்படியோ தன் சாமர்த்தியத்தால் அகவழகியைக் காப்பாற்றி இருந்தான் துங்கீசன்.‌
அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றவாறே அங்குமிங்கும் அசைந்தவளை இழுத்துக் கொண்டு நீந்திக் கொண்டிருந்தவன் அவளது முயற்சி புரிந்து நீந்துவதை விடுத்து அவளை விலக்கினான். ஏற்கனவே அவன் கரங்களில் இருந்து விடுபட முயன்றவள் அவன் விடுவித்த வேகத்தில் எதிரே இருந்த பாறையில் சென்று மோதிக் கொண்டாள். வேகமாகப் பாறையில் மோதியதால் அவள் தலையில் இருந்து ரத்தம் கசிந்தது. அதைக் கண்டு பதறியவனாய் நொடியும் தாமதிக்காமல் அவளைக் கரங்களில் அள்ளிக் கொண்டு நீரின் மேற்பரப்புக்கு விரைந்தான்.

கடல் நீரில் இருந்து அவளைக் கரங்களில் ஏந்தியவாறு மணல் பரப்பை நோக்கி நடந்தவன் மணற்பரப்பில் அவளைப் படுக்க வைத்துவிட்டு அவள் தலையிலிருந்த காயங்களைச் சுத்தம் செய்தவன், அவசர அவசரமாக மீண்டும் கடலுக்குள் புகுந்து நீந்தி சென்று கடற்பாசிகளை எடுத்துக் கொண்டு, அவன் மேற்பரப்பிற்கு வந்து சேர்கையில் மெல்ல எழுந்து அமர்ந்து இருந்தாள் அகவழகி. அவள் அருகில் விரைந்தவன்,‌ “மன்னித்து விடுங்கள் இளவரசி தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தங்களது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூட உணராதவனாய் அப்படியொரு தவறினை இழைத்து விட்டேன். அதற்குத் தாங்கள் முதலில் என்னை மன்னித்து விடுங்கள்.
கடற்பாசியைத் தங்களது காயம் பட்ட இடத்தில் வைத்தால் குருதி வெளிப்படுவது சற்று நாழிகையில் நின்று விடும். அதன் பிறகு நாம் நம் இடத்திற்குச் சென்றுவிட்டால் தங்களது காயங்களுக்கு மருந்து வைத்துக் கொள்ளலாம்” என்றவன் கூறிக் கொண்டிருக்கும் போது அவள் தலையில் ஏற்பட்ட காயம் சிறிது சிறிதாகச் சரியாகிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஈரடி பின்னே நகர்ந்து நின்றான்.

அதிர்ச்சி விலகாத குரலில், “இளவரசி தங்கள்... தங்கள் தலையிலிருந்த காயம் எவ்வாறு தானே சரியாகிக் கொண்டிருக்கிறது? ஏதேனும் மருந்து வைத்தீர்களா?” என்று அவளிடமே வினா எழுப்பினான்.

அவளோ அவன் வினவியதன் அர்த்தம் புரியாது குழம்பியவள், தன் கரம் கொண்டு காயம் ஏற்பட்டிருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தாள். சிறிதாகக் காயம் இருப்பது போல் இருக்க, காயத்தைத் தீண்டிய கரங்களை விழிகளுக்கு முன் நீட்டி பார்த்தவளுக்கு அதில் குருதி பரவியிருந்தது தென்பட்டது.

“நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பாருங்கள் என் கரத்தில் குருதி பரவியிருக்கின்றது அவ்வாறு இருக்கையில், எவ்வாறு எனது காயங்கள் சரியாகிறதென்று கூறுகிறீர்கள்?” என்றவள் குழப்பத்துடன் கேட்டதும், இவனும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தவனது விழிகள் வியப்பில் விரிய,‌ “மீண்டும் ஒரு முறை தங்களது காயத்தைச் சரிபாருங்கள் இளவரசி” என்றவனது இதழ்கள் கூறியதும். மீண்டும் தன் கரங்களை உயர்த்திக் காயம் இருந்த பகுதியை தொட்டவள் அதிர்ந்தாள். சற்று முன்பு குருதியின் ஈரப்பதத்துடன் இருந்த இடம் தற்போது வெறுமையாக இருப்பதைப் போல் உணர்ந்தவள் மீண்டும் மீண்டும் தொட்டுப்பார்த்து தன் விழிகளையே நம்ப முடியாமல் திணறியவளாய் மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து நின்று, “என்னால் இதனை நம்ப இயலவில்லை துங்கீசரே! சற்று முன்பு எனது நெற்றி பகுதியில் இருந்த காயங்கள் எவ்வாறு மாயமாகி இருக்கும்.‌ எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதுபற்றி நான் நிச்சயம் தந்தையிடம் உரையடியாக வேண்டும். என்னைத் தந்தையிடம் அழைத்துச் செல்கிறீர்களா? ஏனோ என்னால் நீந்திச் செல்ல முடியுமென்று தோன்றவில்லை, கால்கள் இரண்டும் பலமிழந்தது போல் மிகவும் சோர்வாக உள்ளது” என்று அவள் கூறினாள்.

“நிச்சயமாக இளவரசி. தங்களின் பாதுகாவலராய் அரசர் என்னை நியமித்ததோடு தங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பையும் ஒப்படைத்திருக்கின்றார். ஆதலால் வாருங்கள் நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்று கூறி விட்டு அவளது கரங்களைக் கவனமுடன், அதேநேரம் சேவகன் என்ற முறையில் மட்டுமே பற்றிக்கொண்டு கடலினுள் குதித்தான். மெல்ல நீந்தி அவளை அரசர் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றவன் அங்கு அரசர் இன்றி வெற்றுச் சிம்மாசனம் மட்டுமே வரவேற்க குழப்பத்துடன் அரசர் எங்குச் சென்றாரென்று தெரியவில்லையே? என்றெண்ணியவனுக்கு மூளையில் பொறித் தட்டியது..

‘இங்கு இல்லை என்றால் நிச்சயம் அரசர் இந்த மணித்தியாலத்தில் இல்லத்தில் இருக்கவும் சாத்தியமில்லை. அப்படி என்றால் அவர் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் தான் இருக்க வேண்டும்’ என்பதை உணர்ந்தவனாய், “என்னுடன் வாருங்கள் இளவரசி.‌ நான் இப்போது தங்களை ஒரு ரகசியமான இடத்துக்கு அழைத்துச் செல்லப்போகிறேன் தாங்கள் மறந்தும் கூட அவ்விடத்தைப் பற்றித் தங்கள் தோழிகளிடம் கூடப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சன்னமாகக் கூறிவிட்டு அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான். கவனமுடன் சுற்றிலும் எவராவது தங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு அதன் பிறகே அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

இளவரசியை அழைத்துச் செல்லும் தன்னால் தான் மீண்டும் ஒரு பிரளயமே வெடிக்கக் காத்திருக்கிறது என்பதை அறிந்திருந்தால் மறந்தும் கூடத் துங்கீசன் இச்செயலை செய்திருக்க மாட்டான்.

அவர்களது இராஜ்ய பகுதியில் இருந்து நீந்தத் துவங்கியவர்கள் மெல்ல மெல்ல இன்னும் ஆழமாக இருந்த இருள் நிறைந்த பகுதியை நோக்கி நீந்தத் துவங்கினார்கள்.‌ செல்லும் இடமெங்கும் இருள் மட்டுமே வியாபித்திருக்க, அவர்களது விழிகளுக்கு எவரும் தென்படவில்லை.‌ அதை உணர்ந்து சற்றே அச்சம் கொண்ட அகவழகி, “எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்? இவ்விடத்தில் எவரும் இருப்பது போல் தெரியவில்லையே? எனக்கென்னவோ சற்று நெருடலாக உள்ளது.‌ வேண்டுமாயின் இரவு பொழுதில் நான் தந்தையிடம் உரையாடிக் கொள்கிறேன் வாருங்கள் திரும்பி சென்று விடலாம்” என்றாள்.

சட்டென்று திரும்பி அவளைப் பார்த்து முறைத்த துங்கீசன்,
“என் மீது நம்பிக்கை இல்லை என்பதால் தான் இவ்வாறு கூறுகிறீர்களா இளவரசி?” என்று சற்றே சின மிகுதியால் கடுமையாகக் கூறியவன் அதன் பிறகே தான் இளவரசியிடம் இவ்வாறு பேசி விட்டோம் என்பதை உணர்ந்து தலைகுனிந்து நின்றவன், “என்னை மன்னித்துவிடுங்கள் இளவரசி என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் தாங்கள் அவ்வாறு கூறி விட்டீர்கள்.
என்ற கோபத்தில் அவ்வாறு கடுமையாக உரைத்து விட்டேன், மன்னித்து விடுங்கள்” என்று கூறியவன் இதுவரை அவளிடமிருந்து பதில் வார்த்தைகள் வரவில்லை என்றதும் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் அதிர்ச்சியில் ஈரடி பின்னால் விலகி நின்றான்.

அதுவரை அவனுக்கு அருகில் நின்று அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அகவழகி அவன் தன் அருகாமையை உணர்ந்து விலகிச் சென்றதும் சற்று முகம் சுருக்கியவள் மேலும் அவனை ஒட்டி நின்றவளாய், “தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நான் கூறினேனா?” என்று கேட்டாள் அவனை அளவெடுக்கும் பாவனையோடு.

அவன் தலை இல்லை என்று அசைந்தது. “ஆனால் தாங்கள் கூறியது எனக்கு அப்படித்தான் அர்த்தம் கொள்ளத் தோன்றியது” என்றுரைத்தான்.

அதைக்கேட்டு இதழில் மென்னகையைத் தவழ விட்டவள்,“தங்கள் மீது நம்பிக்கை இல்லாது இருந்திருந்தால் இவ்வளவு தூரம் தனித்துத் தங்களுடன் வந்திருப்பேன் என்று எண்ணுகிறீர்களா?” என்று வினவியவளின் வினாவிற்கான பதிலாய் இல்லை என்ற தலையசைப்பே அவனிடமிருந்து கிடைத்தது.

“பிறகு தாங்கள் ஏன் அவ்வாறு கூறினீர்கள்? நான் தங்கள் மீது நம்பிக்கையை மட்டுமல்ல மற்றொன்றையும் வைத்திருக்கிறேன்” என்று உரைத்தவளின் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்பதை நிச்சயம் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.

அவளோ அவனை நெருங்கி நின்றவாறு, “தங்கள் மீது அளவில்லா நேசத்தை வைத்திருக்கிறேன். ஆதலால் இன்னொரு முறை என்னிடம், தங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்ற வார்த்தையை உரைக்காதீர்கள் நிச்சயம் என்னால் அதைத் தாங்க இயலாது” என்றவள் உரத்த வார்த்தைகள் அவனை உச்சகட்ட அதிர்ச்சிக்கு இழுத்துச் சென்றது. கூடவே மனதின் ஒரு ஓரத்தில் புதைந்து போயிருந்த அவள் மீதான நேசமும் மெல்லத் துளிர்விட்டு மேலெழுந்திட பார்த்தது. ஆனால் அதை ராஜ விஸ்வாசம் என்ற பெயரில் தட்டி மீண்டும் மனதிற்குள்ளேயே புதைத்தவன் மறுநிமிடம் அவளை விட்டு இன்னும் தள்ளி நின்றான்.

“என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி. இப்படிப்பட்ட எண்ணம் என் மனதில் துளியும் இல்லை. இது போல் இனிமேல் எப்பொழுதும் உரையாடாதீர்கள்.‌ இக்கணமே இந்த எண்ணத்தை மனதிலிருந்து அழித்துக் கொள்ளுங்கள் அதுதான் தங்களது எதிர்காலத்திற்கு நல்லது, வாருங்கள் செல்லலாம்” என்று கடுமையான குரலில் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து முன்னேறிச் சென்றான்.

அவ்வளவு நாழிகையும் பிடித்து வைத்த சிலையென அங்கேயே நின்றிருந்தவள், “விரைவில் உங்களது வாயாலையே என்னை நேசிக்கிறேன் என்ற வார்த்தையைக் கூற வைக்க வில்லையெனில் என் பெயர் அகவழகி இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு தானும் அவனைப் பின்பற்றிச் சென்றாள்.

முற்றிலும் இருளாக இருந்த ஓரிடத்தில் நின்று சுற்றுமுற்றும் எவரும் இருக்கிறார்களா என்று ஆராய்ந்தவன் எவரும் இல்லை என்றதும் தன் கழுத்தில் போட்டிருந்த பவள மணி மாலையைப் பிடித்து அழுத்திய மறுகணம் அதிலிருந்து திறப்பான் ஒன்று வெளிவந்தது. அதைக் கையில் எடுத்து கொண்டவன் அவன் நின்ற இடத்திற்குக் கீழே இருந்த மணற் பகுதியை சற்றே விலக்கி விடத் துவாரம் ஒன்று விழிகளுக்குப் புலப்பட்டது. அந்தத் துவாரத்தினை அவன் தொட்ட மறுகணம் மூடிய நுழைவாயில் ஒன்று மேலெழுந்தது. அதை அதிர்வுடன் அகவழகி பார்த்துக் கொண்டிருக்கும் போதே திறப்பானைக் கொண்டு நுழை வாயிலைத் திறந்த துங்கீசன் அவளையும் இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்..

இலண்டன்…
இதோ பல மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாகத் தன் நெடுநாள் கனவான லண்டனை வந்தடைந்தான் தீபன்..

ஏற்கனவே அவனது வரவு முடிவு செய்யப்பட்டிருந்தது என்பதால் அவனை அழைத்துச் செல்ல அவன் பணிபுரிய போகும் கம்பெனியில் இருந்து ஒருவர் வந்திருந்தார். பறக்கும் இயந்திரப் பறவையில் இருந்து இறங்கி வெளியே வந்தவன் அனைத்து பார்மாலிட்டிஸ்களையும் முடித்துக் கொண்டு தன் உடமைகளோடு அந்த விமான நிலையத்தின் வாயிலில் வந்து நிற்க சரியாக. மிஸ்டர். விபாகரத் தீபன் என்ற பெயர் பலகையை ஏந்தியவாறு நின்றிருந்தார் ஒருவர்.‌ அவர் அருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் தீபன்.

அவரும் பதிலுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். “ஹாய் சார் என்னோட பேர் விமல். வெல்கம் டூ இலண்டன் சார். நான் தான் உங்களைப் பிக்கப் பண்ணிட்டு போக வந்தேன் போலாமா சார்” என்று கேட்க.

“ம்ம்.. தேங்க்ஸ், போலாம் சார்” என்றவாறே தன் உடமைகளோடு அவர் பின்னால் சென்றான் தீபன். ஏற்கனவே தான் வந்திருந்த வாகனத்தில் அவனது உடமைகளை வைக்க உதவிய விமல் பிறகு ஓட்டுநர் இருக்கையில் அமர, அவனுக்கு அருகில் ஏறி அமர்ந்தான் தீபன்.

ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தவாறே அந்தக் காரில் பயணித்தனர். விமல்,
“உங்களுக்குப் பிளாட்டு அலாட் பண்ணி இருக்காங்க சார். நான் இருக்க ஏரியாவுல தான் தனிப் பிளாட்டே கொடுத்துருக்காங்க சார். ஒருவேளை ஃபேமிலி மெம்பர்ஸ் கூட வந்திருந்தா யூஸ்புல்லா இருக்கும் இல்லையா அதுக்காகத்தான் தனிப் பிளாட் குடுத்துருக்காங்க. ரொம்ப அழகான பிளேஸ் தான் அது. முதல்ல நாம அங்க போலாம் உங்களோட திங்ஸ்ஸை வச்சுட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் வேணும்னா வெளிய கூட்டிட்டு போறேன் உங்களுக்கு ஏதாவது வேணும்னா வாங்கிக்கோங்க. கூடவே எல்லா இடத்தையும் சுத்திகாட்டுறேன். நாளைக்கு நம்ப ரெண்டு பேரும் ஒன்னாவே ஆபிஸ் போகலாம் சரியா!” என்றதும் சரி என்று தலையாட்டிய தீபன் மறக்காமல் தான் இங்கு வந்து சேர்ந்து விட்டதைத் தங்கைக்குக் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைத்தான்.

விமல் சொன்னது போலவே அந்தப் பெரிது பெரிதான கட்டிடங்கள் இருந்த இடம் ரொம்ப அழகாகவே இருந்தது. வரிசையாக நின்றிருந்த கட்டிடங்களின் முன்பு தன் காரை நிறுத்தி விட்டு விமல் கீழே இறங்கியதும் தீபனும் இறங்கினான்.

“வாங்க சார் உங்களோட பிளாட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி அவனது உடமைகளில் பாதியை விமல் எடுத்துக் கொள்ள மீதியை தீபன் எடுத்துக்கொண்டான். படிகளில் ஏறும் போது, “பொதுவாவே இங்க பிளாட்ஸ் அதிகம் தான் சார். அதோ அந்தப்பக்கம் இருக்க
ஃபேமிலி சொந்த வீட்ல இருக்காங்க. நாம இருக்கப் பில்டிங்ல மட்டும் அதர் ஸ்டேட் மெம்பர்ஸ் வேலைக்காக வந்து தங்கியிருக்காங்க. இங்க இருக்கவங்க எல்லாருமே தமிழ் ஃபேமிலிஸ் தான் அதனால நீங்க தைரியமா இருக்கலாம்” என்று சொன்னவாறு இரண்டாவது மாடியை அடைந்தவன், அங்கிருந்த நான்கு பிளாட்டுகள் இரண்டாவதாக இருந்த பிளாட்டின் முன்பு நின்று, “இதுதான் சார் உங்களோட பிளாட்”என்று சொன்ன விமல் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றான்.‌ அவனைப் பின்பற்றித் தானும் உள்ளே நுழைந்த தீபன் அது இருந்த நேர்த்தியைக் கண்டு அதிசயித்து நின்றான். முதலில் நீண்ட ஹாலும் அதன் ஒருபுறம் கிச்சனும் மறுபுறம் பூஜை அறையும், 2 படுக்கை அறைகளும் இருந்தது. அனைத்தும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது என்பதை அதன் தூய்மையே பறைசாற்றியது.

அப்போது தான் தீபன் ஏதோ நினைவு வந்தவனாக, “மிஸ்டர் விமல் சாப்பாட்டுக்கு என்ன பண்றது? நீங்களே தான் சமைச்சு சாப்டுறீங்களா? இல்ல வெளிய எங்காவது ஏற்பாடு பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்டான்.

“அப்பாடா இப்பவாவது விமல்னு கூப்பிட்டீங்களே! வந்ததிலிருந்து சார் சார்னு கூப்பிட்டு எனக்கே ஒரு மாதிரி இருக்கு. நான் உங்களைத் தீபன்னு கூப்பிடுறேன், நீங்களும் என்னை விமல்னே கூப்டுங்க, எப்படியும் நம்ம ரெண்டு பேத்துக்கு ஒரே வயசு தான் இருக்கும்னு நினைக்கிறேன். நானே சமைச்சா வாயில வைக்க முடியாது தீபா அந்தளவுக்கு மோசமா சமைப்பேன். இங்க பக்கத்துல ஒரு தமிழர் ஹோட்டல் வச்சுருக்காரு அங்க ஃபுட் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும், நான் அங்க தான் சாப்பிடுவேன். அவரோட வீடு கூட, இங்கிருந்து ரெண்டு வீடு தள்ளி தான் இருக்கு. ரொம்ப நல்ல மனுஷன். பேர் தமிழ் நேயன் சூப்பரா பேசுவாரு. ஈவ்னிங் போகும் போது நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். ஓகே நீங்க ரெஸ்ட் எடுங்க தீபன் ஈவினிங் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் விமல்.

அதன் பிறகு அங்கிருந்த அறைகளுள் இடதுபுறம் இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் அந்த, அறை பிடித்ததால், இதையே தன் அறையாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்து தன் உடமைகளை அங்கேயே ஒரு ஓரமாக வைத்து விட்டு அங்கிருந்த பால்கனியை திறந்து கொண்டு வெளியில் வந்து நின்றான்.

முகத்தில் வந்து மோதும் தென்றல் காற்றைக் கண்மூடி சுவாசித்துக் கொண்டிருந்தவன் தன் கரத்தின் மீது ஏதோ அமர்வது போல் இருக்க விழிகளைத் திறந்தவனுக்குத் தன் கண்கள் காண்பதை நம்பவே முடியவில்லை. அன்று தன் வீட்டில் தன் மீது மோதி கீழே விழுந்து உயிர் பிரிந்து, மீண்டும் தான் அதைக் கரங்களில் ஏந்துகையில் உயிர் பிழைத்துத் தொலைதூரம் பறந்து சென்ற அதே பறவை இப்போது அவன் கையில் அமர்ந்திருந்தது.

கூடவே அவன் கரங்களில் ஏதோ ஒரு துணியைக் கொடுத்து விட்டு விருட்டென்று அது பறக்க, அது செல்லும் திசை திரும்பி பார்த்தவனது கண்கள் கண்ட காட்சியில் அவன் மனது ரணமாகியது. பக்கத்து வீட்டிலிருந்த மொட்டை மாடியில் ஒரு பெண் குனிந்து நின்றிருக்க அவள் தோள்பட்டையைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய நீண்ட கம்பியின் முனை..

அவளைத் திட்டியதோடு மட்டுமின்றித் தன் கை சென்ற போக்கிற்கு எல்லாம் அவள் உடலில் காய்ச்சியக் கம்பியைக் கொண்டு புண்ணாக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் மீது அவனுக்கு கோபமும், அந்த முகம் தெரியாத பெண்ணின் மீது பரிதாபமும் ஏற்பட்டது. இப்போதே அங்குச் சென்று அந்தப் பெண்மணியை அடித்துத் துவைத்து விட்டு அப்பெண்ணைக் கோழிக்குஞ்சு அடை காப்பது போல் தன்னுடனே அழைத்து வந்து, தன் கூடவே வைத்துக் கொண்டு ஆயுளுக்கும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழ, தன் சிந்தையில் தோன்றிய எண்ணத்தைக் கண்டு அதிர்ந்து போனான் தீபன்..


முகமறியாத பெண்ணைக் காக்கவேண்டும் என்ற
எண்ணம் எழுவது மனித இயல்பென்றால்..
அவளை என்னுடனே
வைத்துக் கொள்ள
நினைக்கும் என் மனதின்
எண்ணம் எத்தகையது?

உருவமில்லா
உணர்வொன்று
யாரென்றே அறியா
அவளை என்னுடன்
இணைத்து வைக்க..
காதல் மொழி பேசி
கரம் பற்றிடும் முன்பே
கானலாய் மறைந்து
காற்றாகி மறைந்ததேனடி
எந்தன் மனக்கிளியே..!!


- அற்புதமது பிறக்கும்…

 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -21.1

இப்படியெல்லாம் ஏதேதோ செய்தால் புதிய நுழைவாயில் ஒன்று உருவாகும், அதற்குள் இப்படி செல்ல முடியும் என்பதை எல்லாம் கனவில் கூட அகவழகி நினைத்துப் பார்த்தது கிடையாது. அப்படி இருக்கையில் தன் கண்முன்னே நிகழும் நிகழ்வுகள் உண்மையா? அல்லது தான் தான் ஏதேனும் கனவு காண்கிறோமா? என்று பிரித்தறிய முடியாமல் குழப்பமடைந்தவளாய் துங்கீசன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றாள்.

இருவரும் சிறிது தூரம் நடந்து சென்றனர். அப்போது தான் அவள் ஒன்றை கவனித்தாள் அந்தக் கதவுக்கு அந்தப் பக்கம் தாங்கள் நீரிலிருந்ததால், தங்களுக்கு வால் பகுதி இருந்தது. அதேநேரம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கணத்திலிருந்து இருவரும் நடந்து தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தாள்.‌
இது நீர்ப்பகுதியின் அடி ஆழம் அப்படியிருக்கும் போது இங்கே எப்படி இப்படியொரு இடம் இருக்க முடியும். இது நிலப்பரப்பும் கிடையாது அவ்வாறு இருக்கையில் எப்படித் தங்களால் நீந்த முடியாமல் நடக்க முடிகிறது? அப்போது தான் வேறொன்றும் அவளுக்கு உரைத்தது, தங்களைச் சுற்றி நீர் இல்லையென்று. மறுகணம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றவள் தன்னருகில் நடந்து வரும் துங்கீசனைத் திரும்பிப் பார்த்தாள்.

துங்கீசனோ கர்ம சிரத்தையுடன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்.
“துங்கீசரே எனக்கு ஒரு சந்தேகம்? இவ்விடம் பார்ப்பதற்கு நீரின்றி வறண்ட பகுதி போல் காட்சியளிக்கிறது. இங்கே நீர் இருப்பதற்கான தடயங்களே இல்லை. ஆனாலும் நம்மால் சுவாசிக்க முடிகிறது, இங்கிருந்து சாதாரணமாக நடந்து செல்ல முடிகிறது.‌ நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைச் சற்று கூறினீர்களென்றால் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..” என்றவள் வினவிட.

“ஏன் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?” என்று அவன் எதிர் வினாவினை முன் வைத்தான்.

“ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று வினவுவது தங்களுக்கே சற்று மடமைத்தனமாகத் தெரியவில்லையா? புரிந்து கொள்ள முடியாததை, வேறு எவ்வாறு கூறுவதாம். தாங்கள் ஏன் இவ்வாறு என்னைக் குழப்புகிறீர்கள்? திடீரென்று ஏதோ செய்தீர்கள், ஒரு வாயிற்கதவு வந்தது, அதைக் கடந்து உள்ளே வந்தோம். அந்த வாயிற்கதவிற்குள் நுழைவதற்கு முன் நிறைந்திருந்த நீர்ப்பகுதி எங்கே சென்றது? இப்போது நீரின்றி வெறும் தரை பகுதியில் நின்று கொண்டிருக்கிறோம் இது எப்படிச் சாத்தியம்? இதனுள் ஏன் நீர் உட்புகவில்லை? என்னால் இதை நம்பவும் முடியவில்லை… நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இங்கு என்ன நிகழ்கிறதென்று சற்று எடுத்துரையுங்கள், எனக்கு மயக்கமே வருவது போல் இருக்கின்றது.”

“நிச்சயம் உங்களுக்கு இதைப் பற்றி நான் எடுத்தியம்பினால் புரிந்து கொள்வதற்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். இதே தங்களது தந்தை எடுத்துரைத்தாரெனில் தாங்கள் புரிந்துகொள்ள மிகவும் சுலபமாக இருக்கும்.இதோ இன்னும் சில நாழிகைகளில் நாம் அவ்விடத்தை அடைந்து விடுவோம் அதுவரை சற்றுப் பொறுமை காத்திடுங்கள் இளவரசி” என்று கூறிவிட்டு அவன் முன்னே நடந்தான்.

ஓடிச்சென்று அவனை வழிமறித்து நிற்பது போல் தன் இரு கரங்களையும் விரித்துக் கொண்டு அவன் முன்பு நின்றவள், “நான் ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினாள்.

“எதற்கு இளவரசி நான் செல்வதற்குத் தடை விதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? இப்பொழுது தாங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டான்.

அவன் அருகில் இன்னும் நெருங்கி நின்ற அகவழகி தன் ஆள்காட்டி விரலால் அவனது நெஞ்சுப்பகுதியைத் தொட்டு, இதயம் இருக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டியவள், “இவ்விடத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூறி விட்டு அதன் பிறகு என்னைத் தாண்டி செல்லுங்கள்” என்று கூறினாள்.

“ஏன் இப்படி என்னை வற்புறுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்? நான் தான் தங்களிடம் சற்று மணித்தியாலங்கள் முன்பே தெளிவாக எடுத்துரைத்து விட்டேனே, என் மனதில் அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லயென்று.‌ பின் அதையே மீண்டும் மீண்டும் கேட்பதன் அர்த்தம் என்ன இளவரசி? என் உள்ளத்தில் எந்தப் பெண்ணும் இல்லை. எனக்கு எந்தப் பெண்ணின் மீதும் அப்படி ஒரு எண்ணம் வந்ததும் கிடையாது..” என்று சினம் துளிர்க்க கூறினான்.

“அப்படியா! உங்களுக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் வரவில்லையா? ம்ம்ம்.. தாங்கள் ஆண் மகன் தானா என்கிற ஐயம் என்னுள் எழுகின்றது. சாதாரணமாக ஆண் மகனென்றால் பெண்களைப் பார்த்தால் ரசிக்கத் தோன்றும், விரும்பத் தோன்றும், மணம் புரிந்து கொண்டு அவர்களுடன் மகிழ்வானதொரு இல்லறத்தில் இணையத் தோன்றும். தங்களுக்கு அதெல்லாம் தோன்றவில்லை என்றால் தாங்கள் ஆண்மகன் இல்லையோ?” என்று வேண்டுமென்றே அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதனை அறிவதற்காக அவள் இதுபோலான வார்த்தைகளை உபயோகிக்க.. அவள் கேட்டதின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.

ஈரடி இடை வெளியில் நின்றிருந்தவளின் இடையில் தன் கரம் கொடுத்து தன்னுடன் சேர்த்து இழுத்தணைத்தவன், தன் வலக்கையால் அவளது தாடைகளை அழுந்த பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான்.
“என்னடி கூறினாய்? நான் ஆண்மகன் இல்லையா? என்னைப் பார்த்தால் உனக்கு ஆண்மகனென்று தோன்றவில்லை அப்படித்தானே.‌ நான் ஆண்மகன் தானென்று நிரூபிப்பதற்கு எனக்குச் சிறிது நாழிகையே பிடிக்கும். ஒரு சில மணித்தியாலங்களில் என்னை என்னால் நிரூபிக்க இயலும். ஆனால் அதன்பிறகு நீ என்னாவாயென்று சிந்தித்துப் பார்த்தாயா? தேவையற்ற வார்த்தைகளைக் கூறி என்னை முரடன் ஆக்காதே, பின் அதீத சினத்தில் என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது..” என்று கோபமாக மொழிந்து விட்டு அவளை உதறித் தள்ளினான்.

அவன் உதறி தள்ளியதில் தடுமாறி விழ சென்றவள் ஒருவாறு தன்னை நிலைநிறுத்தி நின்று அவனைக் கேலி கலந்த புன்னகையுடன் எதிர்கொண்டாள். “அவ்வாறு தான் கூறுவேன். தாங்கள் என்னை என்ன செய்தாலும் சரி, நீங்கள் ஆண் மகன் அல்ல என்று தான் கூறுவேன். அதனால் தான் ஒரு பெண் உங்களை விரும்புகிறேனென்று கூறியதற்குப் பிறகும் தள்ளியே நிற்கிறீர்கள். இதுவே ஒரு சாதாரண ஆண்மகனாய் இருந்திருந்தால் அந்தப்‌ பெண்ணின் நேசத்தை ஏற்றுக் கொண்டிருப்பாரோ என்னவோ! சரி அதுகூடத் தங்களது சூழ்நிலை என்றே வைத்துக் கொள்வோம்.‌ அப்பெண்ணின் நேசத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்பது உங்கள் தனிப்பட்ட விடயம் அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் ஒரு பெண் தங்களது ஆண்மைக்கு இழுக்கு வருவது போல் பேசிய பின்பும் நீங்கள் பொறுமையாக நிற்கிறீர்கள் என்றால் நிச்சயம் எனக்கு உறுதியாகிவிட்டது தங்கள் ஆண்மகனே இல்லையென்று.” என வேண்டுமென்றே அவனது சினத்தைத் தூண்டி விட்டாள்..

அவளது வார்த்தைகளைக் கேட்டு துங்கீசனுக்கு இன்னும் கட்டுக்கடங்காத சினம் ஏற்பட்டது. எத்தகைய பதவியில் இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி.. ஒரு பெண் அவனை ஆண்மகன் இல்லையென்று கூறினால், அவன் தன்னை நிரூபிக்க மட்டுமே நினைத்திடுவான்.
அதே போலவே துங்கீசனும் நினைத்ததில் தவறு இல்லை. அவள் மீதான அதீத கோபம் அவனது மூளையை மழுங்கச் செய்து இருந்ததில் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் என்பதை மறந்திருந்தான்.

தன்னை விட்டு தள்ளி நின்றிருந்தவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயலாமல் தன் அணைப்பில் கட்டுண்டு கிடப்பதை கூட உணராமல் மேலும் மேலும் அவளை இறுக அணைத்து, சற்று வன்மையாகவே தன்னிதழ் கொண்டு, அவளது மலரிதழ்களைத் தாக்கியிருந்தான். அவனது ஒவ்வொரு தாக்குதலுக்கும் இசைந்து கொடுத்தாளே தவிர அகவழகியிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை.

தன்னிலை இழந்தவன் மீண்டும் மீண்டும் அவளின் இதழில் புதைத்தான். வன்மையில் இருந்து சற்று மென்மைக்கு மாறியவன். சற்று அழுத்தமாகவே பற் தடம் பதியும் அளவிற்குக் கடித்ததில், அவளுக்கு வலி ஏற்பட்டாலும் வலியை மீறி தான் நேசித்தவனின் இந்த வன்முறையும் தனக்குப் பிடித்திருக்கிறது என்ற ரீதியில் தான் அவனுக்கு இதழ்களை ஒப்புக் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றிருந்தாள் அகவழகி.

நொடிகள் கடந்து நாழிகைகள் அதிக அளவு கடந்த பின்னும் அவளிடம் இருந்து விலக மனமில்லாமல் இருந்தவன், அவள் உரைத்த வார்த்தைகள் திரும்பத் திரும்பச் செவியில் கேட்டதன் விளைவாகத் தன் விரல் கொண்டு அவள் தேகத்தில் மெலிதாக ஊர்வலம் செல்ல ஆரம்பித்தான். அவள் இடையில் இருந்த அணிகலன்களில் ஒன்று அவன் கரங்களைப் பதம்பார்த்து விட அதில் தான் தன்னிலை பெற்றான் துங்கீசன். இருந்தும் அவள் உரைத்த வார்த்தைகள் அவனைச் சற்று கொதிப்படையச் செய்ததன் விளைவு அவள் மார்பை மறைத்திருந்த மேலாடைத் துணியை வெடுக்கென்று இழுத்து தன் கரங்களில் வைத்துக் கொண்டவன் அவளைத் தன்னை விட்டு விலகி நிறுத்தினான்.

அவன் அப்படி ஒரு காரியத்தைச் செய்வானென்று நினைத்திராத அகவழகிக்கு பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வும், நாணமும் எழ தன் இரு கரங்களையும் மார்பின் குறுக்கே வைத்து மேலாடை இல்லாத தன் தேகத்தை மறைப்பது போல் வைத்துக் கொண்டவள் அவனுக்கு முதுகு காண்பித்து நின்று கொண்டாள்.

துங்கீசனோ அவளுக்குப் பின்புறம் சென்று நெருக்கமாக நின்றவன்,
“இப்போது கூறு நான் ஆண் மகனா இல்லையா? இதற்கு மேலும் எதையேனும் நிரூபிக்க வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்று சினம் சிறிதும் குறையாத குரலில் கேட்டான்.

அவன் கூறுவதன் அர்த்தம் புரியாமல் கலங்கியவள் வெடுக்கென்று அவன் கரங்களில் இருந்த தன் உடையைப் பிடித்து இழுத்து பறித்தவள் அவசர அவசரமாக அதைத் தன் மீது அணிந்து, மேலாடைலிருந்து இடையுடன் பிணைக்கப்பட்டிருந்த உடையுடன் இணைத்துக் கொண்டவள் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

“இப்போது எதை நிரூபித்து விட்டீர்களென்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு என்னிடம் உரையாடுகிறீர்கள்?” என்று கூறினாள் அப்போதும் எள்ளல் குறையாத குரலில்.

அவள் கூறியதைக் கேட்டு திருதிருவென்று விழித்த துங்கீசன் அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறு, “தாங்கள் என்னிடமிருந்து எதைப் பெற விரும்புகிறீர்களென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை இளவரசி. ஆனால் தாங்கள் என்னைத் தவறான வழிக்குக் கொண்டு செல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. சற்று வரம்பு மீறி நடந்து கொண்டேன், மன்னித்து விடுங்கள்” என்றுரைத்தான். தான் இப்படியொரு வார்த்தையை உதிர்ப்பது அவளை வருத்தமடையச் செய்திடும் என்பது தெரிந்து தான் அவன் அவ்வாறு உரைத்திட்டான்.

ஆனால் அவளோ சினம் கொள்வதற்குப் பதிலாக மெல்லிய நகைப்பொலியை ஏற்படுத்தியவள், “என் எண்ணத்தைத் தாங்கள் புரிந்து கொள்ள, தங்களுக்கு இத்தனை அவகாசம் பிடித்ததா துங்கீசரே? உண்மைதான் தங்களது சினத்தைத் தூண்டிவிட்டுத் தங்களை என் வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்தேன். எப்படியும் என்றாவது ஒரு தினப்பொழுதில் தங்களையே மணம் புரிந்து உங்களுடன் மஞ்சத்தில் உறவாட போகின்றவள் தானே! அதுவரை காத்திருக்காமல் தாங்கள் இப்பொழுதே என்னை எடுத்துக் கொள்வதில் எனக்கொன்றும் பிரச்சனை இல்லை. மற்றவர்களுக்கு அது தவறாகத் தெரியலாம், ஆனால் எனக்கு அதில் ஒன்றும் தவறு இருப்பது போல் தெரியவில்லை” என்று கூறியவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன், அடுத்த நிமிடமே அடங்காத சினத்துடன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.

அவள் மருண்ட விழிகளோடு தன்னைப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் ஒரு முறை அவளை அடிக்கக் கையோங்கியவன் பின்பு தன் கரத்தைக் கீழே இறக்கிக் கொண்டு அவளை முறைத்தவாறே, “ஒரு பெண் உயிரே பறி போனாலும் மனத்தைப் பறி கொடுக்க முன் வர மாட்டாள். ஆனால் நீ இப்போது உரைத்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று அறிவாயா? மனம் கவர்ந்த மன்னவனாக இருந்தாலும் சரி, மாலை சூடப் போகும் வருங்கால மணவாளனாக இருந்தாலும் சரி முறையற்ற உறவு அவர்களை மட்டுமல்ல அவர்களது இனத்தையே கேவலப்படுத்தி விடும், அவமானப்படுத்தி விடும்.‌ தேவையற்ற பழிச்சொல்லுக்கு உள்ளாகி விடும். இதை ஒரு இளவரசியாக இருந்தும் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? உங்களைக் குறை சொல்லி பயனில்லை. அதீத சுதந்திரம் தான் இவ்வாறெல்லாம் பேச வைக்கின்றது. கூடவே ஆண்களின் மீதான மோகமும் உங்களுக்கு
கூடிவிட்டது அதனால் தான் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறீர்கள்.‌ ஆமாம் தெரியாமல் கேட்கிறேன் அப்படியென்ன இந்த அகவையிலேயே உங்களுக்கு ஆண் சுகம் கேட்கிறது?” என்று தன்னை மீறி வார்த்தைகளை உதிர்த்தவன் அப்போதுதான் தான் உரைத்த வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தான்.

தயக்கத்துடன் துங்கீசன் அவள் முகம் பார்க்க, அதுவரை அவன் என்ன சொல்லி தன்னைத் திட்டினாலும் பரவாயில்லை என்று அவன் முகத்தை ஓரவிழியால் ரசித்துக் கொண்டு நின்றிருந்தவள் அவன் இறுதியாகக் கூறிய வார்த்தையில் அதிர்வுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அதிலும் அவனுரைத்த அந்த வார்த்தைகளின் தாக்கம் அவள் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போன்றதொரு வலியை ஏற்படுத்த விழிகள் கலங்கி அதிகளவு கண்ணீரை செறிந்தன.

அதிலும் அவள் விழிகளில் இருந்து வழியும் கண்ணீர் யாவும் நிலத்தைத் தொடுவதற்கு முன்பு காற்றில் கரைந்து மறைந்து போனதை இருவரும் அறிந்திருக்கவில்லை.

அவனோ தான் கூறிய வார்த்தையால் அவள் படும் வேதனையைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தவன், “தயைக்கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள் இளவரசி. ஏதோ சினமிகுதியால் அவ்வாறு கூறிவிட்டேன். நான் ” என்றவன் தான் கூற வந்ததை முழுதாகக் கூறி முடிக்கும் முன்பே தன் கரங்களை நீட்டி நிறுத்து என்பது போல் சைகை செய்தாள்.

பின்னர், “ஒரு பெண் தானாகத் தன் நேசத்தைத் தெரிவித்ததற்கு இப்படித்தான் பெயர் சூட்டுவீர்களா? என்ன கூறினீர்கள் எந்த ஒரு பெண்ணும் முறைப்படிதான் தன்னைத் தன்னவனுக்கு ஒப்புக்கொடுப்பாளா? யார் கூறியது.‌ இதிகாசத்தைப் புரட்டி பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்.‌ தான் உளமார நேசித்த ஆண் மகனுக்காக உயிரையும் விடத் துணிந்த பெண்ணுக்கு மானம் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
என் மனதில் தாங்கள் எங்களது விசுவாசி. படைத்தளபதி, மெய்க்காப்பாளன் என்றெல்லாம் பதியவில்லை. என் நேசத்திற்குரியவர், என் எதிர்காலம், என் அனைத்தும் அவரே! என் உலகம் அவரே! உயிரும் அவரே! என் மணவாளனும் அவரே! என்று மட்டுமே பதிந்திருந்தது‌ அதனால் தான் தங்களது எல்லை மீறல் என்னைத் தவிப்புக்கு உள்ளாக்கவில்லை. என் கணவனுக்குக் கொடுக்க வேண்டியதை மனையாளாகிய நான் கொடுக்கிறேன் என்ற எண்ணத்தில் தான் அமைதியாக இருந்தேன். ஆனால் தாங்கள் என்னைத் தீண்டுகையில் தங்களது மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்ததென்று தெரிந்திருந்தால் தங்கள் நகத்தின் நுனியைக் கூட என் மீது படர அனுமதித்திருக்க மாட்டேன்” என்று தன் மனதில் தோன்றிய எண்ணமதைத் தெரிவித்தவள் அவன் முகத்தைக் கூடப் பாராது அங்கிருந்து விலகி செல்ல முயன்றாள்.

ஓடிச்சென்று அவள் வழி மறித்து நின்று போலவே இப்போது இவன் வழி மறித்து நின்றான். அவளோ நிமிர்ந்து அவன் முகத்தைக் கூடப் பார்க்காது, வேறுபுறம் பார்வையைப் பதித்தவள், “மன்னித்து விடுங்கள் நான் தங்களைத் தவறான பாதைக்கு இழுத்து சென்றதற்கு. எவரொருவரும் தங்கள் இணை மீது வைக்கும் நேசம் ஒருபோதும் பொய்த்து போவதில்லை. ஆனால் அந்நேசத்தை எவர் மீது வைக்கிறோம் என்பதில் தான் தவறிழைத்து விடுகிறோம். நானும் அந்தத் தவறை செய்துவிட்டேன் போல.‌ மனம் கனக்கிறது, வலி வேதனை நெஞ்சை கசக்கிப் பிழிகிறது. இப்படியே மரணத்தை எய்து விடலாமா என்று கூட எண்ணம் ஏற்படுகிறது. ஏதோ பெரிய பாவம் செய்து விட்டேன் போல ஆதலால் தான் இவ்வாறெல்லாம் நிகழ்கிறது” என்றவள் அழுகையுடனே வார்த்தைகளை முடிக்கும் முன்பே,

“துங்கீசா இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று சற்று கடுமையைத் தாங்கி ஒலித்தது மிருகதரனின் குரல்..
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் - 21.2

தன் தந்தையைக் கண்டதும் முகப் பாவனைகளை மாற்றிக் கொண்ட அகவழகி சட்டென்று தன் இடைக்கச்சையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தாள். பின்னர் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு, “தங்களைச் சந்திக்க வேண்டுமென்று நான் தான் இவரிடம் கூறியிருந்தேன் தந்தையே! அதனால் தான் என்னை அழைத்து வந்தார். அவரை எதுவும் கூறாதீர்கள். நான் தங்களிடம் ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி உரையாட வேண்டும். தாங்கள் அனுமதி தந்தால் உரையாடுகிறேன்” என்று வினவிட.

மகளின் முகத்தையும், துங்கீசனின் முகத்தையும் கூர்ந்து கவனித்தவருக்குச் சற்று முன்பு தான் செவியில் கேட்ட வார்த்தைகள் உண்மைதானா? என்றே எண்ணத் தோன்றியது. இருவரும் தொலைவில் வருவதைக் கண்டு விட்டு அவர்களை நெருங்கியவருக்கு இருவருள்ளம் வாக்கு வாதங்களும் அதன் பின்பு இருவர் இடையேயான அன்யோன்ய பிணைப்பும் சற்று அதிர்ச்சியைக் கொடுத்தாலும் துங்கீசனைப் போன்றதொரு உண்மை விசுவாசி, பாதுகாவலன், நல்ல மனிதனை எங்கும் காண இயலாது என்பதை அவரே அறிவார். அவ்வாறு இருக்கையில் அவனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதில் அவருக்குப் பரிபூரணச் சம்மதமே.

திடீரென்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை உரையாடல்களும் அவருக்குச் சற்று அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் தன்னைக் கண்டதும் இருவரும் சகஜமாகப் பேச முயற்சிப்பதை கண்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் இதழிலிருந்தே இதற்கான தீர்வு வெளிவரும் வரை தனக்கு அனைத்தும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தார். ஆதலால் தான் இடையில் புகுந்து அவர்களது கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்தார்.

“என் அன்பு மகள் என்னிடம் உரையாடுவதற்கு அனுமதி கோர வேண்டிய அவசியமே இல்லையம்மா வா அருகில் வா.‌ தந்தையிடம் என்ன கூற வேண்டுமோ? அதைத் தயங்காமல் கூறு” என்று அழைத்திட, ஓடிச்சென்று தந்தையின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவள் ஓரவிழியால் அவனைப் பார்த்தாள்.

அவனோ சற்று முன்பு நடந்த நிகழ்வுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தான். தன் பற்களை அழுந்த கடித்துத் தன் உணர்வுகளையும், கோபத்தையும் இறுதியாக அவளுரைத்த வார்த்தைகளைக் கேட்டதில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இருந்தும் வெளிவர முடியாமல் துவண்டு போய் தன்னைச் சமன்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

தந்தையின் அரவணைப்பில் பொங்கி வரும் அழுகையைச் சிரமப்பட்டு அடக்கியவள் மீண்டும் தன் இடைக்கச்சை கொண்டு முகத்தைத் துடைத்து எடுத்தாள். பின்னர்த் தன் குரலை சரிப்படுத்திக் கொண்டு. “தந்தையே! சற்று நேரத்திற்கு முன்பு நான் பெரும் சுழல் ஒன்றில் மாட்டிக்கொண்டேன். அப்போது இவர்தான் என்னைக் காப்பாற்றினார். அப்போது எதிர்பாராதவிமாகப் பாறை ஒன்றில் என் தலை மோதியதால் காயம் ஏற்பட்டுவிட்டது. பின்னர் இவர் தான் என்னைத் தூக்கிக்கொண்டு மேற்பரப்பிற்குச் சென்றார் தந்தையே! சிறிது நேரத்தில் என்னவானது என்று எனக்குப் புரியவில்லை எனது காயங்கள் மருந்தெதுவும் இடாமல் தானாகக் குணமாகின. இது மட்டுமில்லை தந்தையே! முன்னொரு தினம் நானும் என் தோழிகளும் இதுபோல்தான் விளையாடிக் கொண்டிருக்கும் போது எனக்குக் காலில் காயங்கள் ஏற்பட்டது. மன்னித்து விடுங்கள் தங்களுக்குத் தெரியாமல் அவ்வபோது நாங்கள் மேற்பகுதிக்கு செல்வோம்.‌ அங்கு இருக்கும் அந்த மணலில் விளையாடுவதில் எங்களுக்கு அலாதி இன்பம். அப்படியொரு விளையாடிக் கொண்டிருக்கையில் தான் எனக்கு அவ்வாறு அடிபட்டு விட்டது தந்தையை. ஆனால் சிறிது நேரத்திலேயே அது தானாகவே சரியாகி விட்டது. ஆனால் அப்போது சிறு பிள்ளை அல்லவா அதனால் விளையாடிக் கொண்டிருந்த ஆர்வத்தில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஆனால் இன்று மீண்டும் அவ்வாறு நிகழவும் மிகுந்த அச்சமாகி விட்டது. காயங்கள் தானாக எப்படித் தந்தையே குணமடைய முடியும்?” என்று தன் வினாவினை முன்வைத்தாள்.

துங்கீசனை கை நீட்டி தன் அருகில் அழைத்தார் மிருகதரன்.
பயத்துடனும், மரியாதையுடனும் அவர் அருகில் வந்து நின்றவனின் தோளில் தன் கரங்களை அணைவாகப் போட்டு தன்னுடன் சேர்த்து அணைத்தவர் மறுகையால் தன் மகளைத் தோளோடு அணைத்து நிற்க வைத்து கொண்டவர், “நான் கூறப்போகும் தகவல்கள் உங்கள் இருவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.” என்று கூறினார்.

நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்த துங்கீசன், “தாங்கள் இருவரும் உரையாடும் இடத்தில் மூன்றாம் மனிதரான நான் நிற்பது அனாவசியமானது அரசே! நான் வேண்டும் என்றால் வாயிற்கதவின் அருகில் நிற்கட்டுமா? தாங்கள் பேசிவிட்டு இளவரசியை அனுப்பி வைக்கிறீர்களா?” என்று தயக்கத்துடன் கேட்க.

அவரோ மிதமான புன்னகை ஒன்றை இதழில் சூடியவர்,
“என் மகளின் பாதுகாவலன் நீ. அவ்வாறு இருக்கையில் அவளைப் பற்றிய தகவல்களை நீ அறிந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லை துங்கீசா. நான் கூறுவதை இருவரும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது நமக்கெனச் சில சக்திகள் உள்ளன. அவை நன்மைக்கும் பயன்படும், தீமைக்கும் பயன்படும். அதாவது நம்மினம் தானாகத் தோன்றியது கிடையாது. மனித இனத்திற்கு மீன் இனத்திற்கும் இடைப்பட்ட ஒரு இனம் தான் நமது இனம்.‌ நம்மால் நீரிலும் இருக்க இயலும், குறிப்பிட்ட நாழிகைகள் நிலத்திலும் இருக்கவியலும்..

இந்தத் தகவல்கள் உங்களுக்கு இன்னும் அதிர்ச்சியாகத் தான் இருக்கும் ஆனால் இத்தகவல் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது என் அண்ணனின் மகளான சங்கெழிலி என் அண்ணனைக் கொன்றதோடு மட்டுமின்றி அவரது சக்திகளையும் அபகரித்துக் கொண்டாள். ஆனால் இவற்றினை முன்கூட்டியே என் அண்ணன் அறியாது போனது தான் பெரும் தவறாகிப்போனது. அவர் தன் மகளென்று சங்கெழிலி மீது அதீத பாசம் வைத்திருந்தார். அதே அளவு பாசத்தை அவளும் வைத்திருந்தாலும் ஜென்ம ஜென்மமாய்க் கொண்ட நேசத்தை அடைவதற்காக இப்படி ஒரு செயலை செய்திருக்கின்றாள்.

அதுவும் அவளது ஜென்ம நினைவுகள் திரும்பிய காரணத்தினால் தான். நீங்கள் நினைப்பது போல் அவள் ஒரு மறுபிறவி பெற்றவள் தான். கடந்த ஜென்மத்தில் தான் நேசித்த ஆண்மகனை கரம் பற்றிட முடியாத துவேசத்தில் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டிருக்கிறாள். அவளது மறுபிறப்பாய் என் அண்ணனுக்கு மகளாய் பிறந்திருக்கிறாள் இதை நாங்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. ஏன் நான் அரியணையில் அமரும் வரையிலும் எனக்குமே இது பற்றி எதுவும் தெரியாதிருந்தது. அரியணையில் அமர்ந்ததற்குப் பிறகு ஒரு நாள் என் அண்ணனது ஆத்மா என்னைச் சந்தித்தது. இதை நீங்கள் நம்புகிறீர்களோ? இல்லையோ? ஆனால் இது நிச்சயமான உண்மை. அவர் உரைத்த வார்த்தைகள் அனைத்தும் என்னை உச்சகட்ட அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கூடவே இப்படி ஒரு ரகசிய இடம் இருக்கிறதென்று எனக்கு வழிகாட்டியதும் அவர் தான்.

இப்பகுதியில் அவளால் நுழைய இயலாது என்பதை அவர் தான் எனக்குக் கூறினார். ஆனால் என்னுள் இருக்கும் சக்திகளை அவள் எடுத்துக்கொள்ள முயன்றால், நிச்சயம் ஒரு பிரளயம் வெடிக்கும் என்றும் கூறினார். ஒருவேளை அவள் முயற்சி பலன் அளித்து எனது சக்திகள் அவளால் களவாடப்பட்டு விட்டால் நம் இனமே அடியோடு அழியும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி அந்த ஜென்மத்தில் அவளது கரம் பற்ற முடியாமல் போன அவளது ஒருதலை காதலனான நம் இனத்தைச் சேர்ந்தவன் எங்கோ மறு பிறப்பெடுத்து இருக்கிறான் என்றும், தக்க சமயத்தில் அவன் நேசித்த பெண்ணோடு இங்கே வருவான் என்றும் கூறினார். ஏனெனில் அவன் வேறு ஒரு பெண்ணை அதுவும் சாதாரண மானிடப் பெண்ணை விரும்பியதாக அவர் என்னிடம் கூறினார். இதெல்லாம் எவ்வாறு அவருக்குத் தெரியுமென்று நான் கேட்டதற்கு, அசரீரி போல் ஒன்று அவருக்கு இதைத் தெரிவித்ததாகக் கூறினார்.

அவர்கள் வருவதற்கான காலம் நெருங்கி வர இருக்கிறது என்றும் அதற்கான அடையாளமாய் உன் மகள் தன் உயிரை இழக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு, அதிலிருந்து அவள் மீண்டு வருகின்ற பொழுதில் இருந்து, ஒரு திங்கள் கால அவகாசத்திற்குள் கண்டிப்பாக அவர்கள் இவ்விடத்தை அடைவார்கள் என்றும் அவர் கூறினார். இப்போது நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கையில் இன்னும் ஒரு திங்களில் இவையெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி அதுவரை நம் ராஜ்யத்தைக் காக்க வேண்டியது என் பொறுப்பு. ஏனெனில் சங்கெழிலியின் சக்திகள் இப்போது சற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளதாகக் கூறினார். அவள் தன்னிடம் இருக்கும் சக்திகளைக் கொண்டு தன் ஆத்மாவை தேகத்திலிருந்து வெளியேற்றி வேறு நபருடைய தேகத்தினுள் சில குறிப்பிட்ட நாழிகைகள் வரை புகுத்த இயலுமாம். ஆனால் அவ்வாறு அவள் செய்ய முயலுகையில் அவளது ஆயுட்காலத்திலிருந்து ஒரு மணித்தியாலம் குறையுமாம்.

அதிலும் அது பெண்ணின் தேகமென்றால் கூட அவளது தேகத்திற்கு ஒவ்வாத காயங்கள் ஏற்படாதாம். ஆனால் அதுவே அவள் தன் உயிர் ஆத்மாவை ஆண்மகன் ஒருவனின் உடலுக்குள் புகுத்திட முயன்றால் அவளுடலில் காயங்களும், கீறல்களும் ஏற்படுவதோடு அவளது ஆயுட்காலத்தின் அளவு மும்மடங்காய் குறையுமாம்.

சாதாரண மனித தேகத்தினுள் புகுந்திடவே இந்தளவிற்குப் பாதிப்புகள் ஏற்படுமாம். இதை விடுத்து நம் இனத்தையே சேர்ந்த தேகத்தினுள் தன்னுயிர் ஆத்மாவை அவள் புகுத்திட முயன்றால் அவள் உயிரைக் கூட இழக்க நேரிடுமாம். ஆனால் நிச்சயம் அவள் நேசித்தவனை அடைவதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் என்றும் கூறினார்.

உங்களுக்கு மேலும் ஒன்றை கூற விரும்புகின்றேன். என் உடம்பில் அதிக அளவு சக்திகள் இல்லை. எனது செங்கோலினது சக்திகளோடு என் சக்திகளையும் சேர்த்து,‌ அனைத்தையும் உன் தேகத்தினுள் புகுத்தி விட்டேன் அகவழகி. ஆதலால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது நீ தானே ஒழிய, நான் இல்லை. இது அவளுக்கு தெரியாதவரை நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஒருவேளை அவளுக்கு இதைப்பற்றித் தெரிந்து விட்டால் நிச்சயம் உன் உயிரைக் கூட அவள் எடுத்து விடுவாள் அந்தளவிற்கு அவளது ஆவேசம் அதிகமாக உள்ளதாம்” என்று அவர் கூறி முடிக்க..

சட்டென்று நிமிர்ந்து அவர் முகம் பார்த்த துங்கீசன், “என் தேகத்தினுள் உயிர் இருக்கும் வரை என்னவளை எவரும் தீண்டிட முடியாது அரசே!” என்று தன்னை மீறி உரைத்தவன் அப்போதுதான் தான் கூறியதன் அர்த்தம் புரிந்து கலவரத்துடன் விலகி நின்று அரசரின் முகம் பார்த்தான்.


இவ்வார்த்தைகள் அவனது இதழில் இருந்து வெளிவந்ததும் முயன்று தன் புன்னகையை அடக்கப் பெரும் பாடுபட்டவர்,
“உங்கள் நேசத்தை நான் அறிந்து வெகு காலம் ஆகின்றது துங்கீசா. இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் ரசிப்பதை நானே பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனால் இன்று அதை விழிகளால் மனங்குளிர கண்டேன். ஒருவர் மீது ஒருவர் அளவில்லா நேசத்தை வைத்திருந்த போதும் தகாத வார்த்தைகளை வாரி இறைத்து மனதை காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். இது ஒன்றே நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை. என் மகளுக்கு உன்னை விட நல்ல மணமகன் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டான் துங்கீசா. நிச்சயம் என் மகள் உன் அருகில் இருந்தால் பாதுகாப்பாக இருப்பாள் என்பதை நான் அறிவேன்.
எனக்கு எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் என் மகளை மட்டும் கைவிட்டு விடாதே”என்று கூறி அகவழகியின் கரத்தை எடுத்து துங்கீசனின் கரங்களில் வைத்து அவர்கள் இருவரையும் இணைத்து வைத்தவர், “நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்புங்கள், சற்று நேரம் கழித்து நான் வருகிறேன்” என்று கூறினார்.

இருவரும் அவரைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வாயில் கதவை நோக்கிச் சென்றனர். வந்தது போலவே தன்னிடம் இருந்த திறப்பானைக் கொண்டு துங்கீசன் கதவைத் திறக்க மீண்டும் வாயிற்கதவு திறந்தது. அவர்கள் வெளியேறிய மறுகணம் வாயில் கதவு மூடப்பட்டதோடு சர்ரென்று கீழே மண்ணில் புதைந்தும் போனது.


மண்ணுக்குள் புதைந்து போன வாயிற்கதவையே தன் விழிகளுக்குள் ஏந்திய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அகவழகி.
அவளை நெருங்கிய துங்கீசன் “போலாமா?” என்றழைத்தான் ஒற்றைச் சொல்லாய்.

நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள்,‌“என்ன துங்கீசரே இளவரசி என்றும் பாராமல் மரியாதை குறைவாக உரையாடுகிறீர்கள். இளவரசி என்ற சொல் மறந்து விட்டதா? அல்லது உச்சரிக்க வேண்டாம் என்ற எண்ணமா?” என்று எள்ளலாக வினவிட..

“நான் ஏன் இளவரசி என்று உச்சரிக்க வேண்டும். இனிமேல் வாடி போடி என்று கூட அழைப்பேன். அதனால் தங்களுக்கு என்ன வந்தது?” என்று அவளது தந்தை சம்மதம் கொடுத்து விட்ட மிதப்பில் அவன் உரைத்திட.

அவன் முகத்தையே ஓரிரு நிமிடங்கள் கூர்ந்து கவனித்தவள், “என்ன என் தந்தை சம்மதம் கொடுத்து விட்டாரென்ற தைரியத்தில் உரையாடிக் கொண்டு இருக்கிறீர்களோ? அவர் சம்மதித்தால் மட்டும் போதுமா? என் சம்மதம் தங்களுக்குத் தேவை இல்லையா? எப்பொழுது என்னை அப்படியொரு வார்த்தை கொண்டு வசைபாடினீர்களோ அக்கணமே என் நேசமும் பொய்த்துப் போய்விட்டது.‌ தங்கள் கூற்றின்படி ஆண்களின் மீதான என் மோகமும், ஆண் சுகம் வேண்டுமென்ற எண்ணமும் போய்விட்டது. மீண்டும் ஒருமுறை அப்படி ஆண்மோகம் வந்தால் தங்களிடம் வந்து கூறுகிறேன் சரியா!” என்று அழுத்தமாகக் கூறியவள் அதன் பிறகு ஒரு கணம் கூட அங்கிருக்க முடியாமல், அந்த இடத்தில் இருந்து எவ்வளவு விரைவாக நீந்த முடியுமோ அவ்வளவு விரைவாக நீந்தத் துவங்கினாள் தன் இருப்பிடம் நோக்கி கண்களில் கசிந்திடும் கண்ணீரோடு...

வார்த்தை கொண்டு
கன்னியிவளை
கலங்கடித்தவனே
அவளின் கலைந்து
போன காதல்
ஓவியத்தை உந்தன்
குருதி கொண்டு
சரிசெய்திடடா..!
விரக்தியடைந்து
விலகி செய்பவள்
விரைந்து வந்து
உன்னுள் உறைவாள்..!



ஏர்போர்ட்டில் இருந்து நிகிலை அழைத்து வருவதற்காகத் தன் காரில் பயணப்பட்டான் உதய்.
சரியாக அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து அவன் வெளியேறிய அதேநேரம் தனக்கு முன்னே ஸ்கூட்டியில் செல்லும் யாழினியைக் கண்டவனுக்குக் குழப்பமாக இருந்தது.

‘இந்த நேரத்துல இவ எங்க போறா?’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவனைக் கடந்து அதிவேகத்தில் சென்றாள். அவள் வேகமாகச் செல்வதைக் கண்டவனுக்கு ஏதோ தவறாகப்பட்டது. நார்மலாக இடதுபுறம் செல்ல வேண்டிய பகுதியில், அவள் வலது புறத்தில் செல்வதைக் கண்டவனுக்கு இன்னும் நெருடலாக இருந்தது.

‘அவ டென்ஷன்ல போற மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சினையா இருக்குமோ?’ என்று அவன் நினைக்கும் போதே, 'அவளுக்கு என்ன பிரச்சினையா இருந்தா நமக்கு என்ன? எப்படியோ போய்த் தொலையிறான்னு ஒதுக்கி தள்ளிட்டு உன் வேலைய பாரு’ என்ற மனசாட்சியின் பதிலுக்குத் தலையசைத்தவன் உடனே எதைப்பற்றியும் சிந்திக்காமல் அடுத்து வந்த வளைவில் அவள் திரும்புவதைப் பொருட்படுத்தாமல் அவளுக்கு எதிர் திசையில் தன் வாகனத்தைச் செலுத்த ஆரம்பித்தான்.

சிறிது நேரத்திற்கு முன்பு
தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த யாழினிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுப் பேசியவளின் முகம் நொடிக்கொருதரம் பலவித உணர்வுகளைக் காட்டிக் கொண்டிருக்க, அருகில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த சௌமி, “என்ன ஆச்சுடி?”என்று கேட்க.

அவளிடம் எதையும் கூறாமல்,
“அர்ஜெண்ட்டா எனக்கு வேலை இருக்கு நான் போகணும்டி. ப்ளீஸ் சார் கிட்ட சொல்லிடு, எப்படியாவது பர்மிஷன் போட்டுடுடி” என்று சொன்னவள், சௌமி என்ன? ஏது? என்று கேட்கும் முன்பே அங்கிருந்து கிளம்பி இருந்தாள். அவசர அவசரமாகத் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், தன் பின்னே வந்த உதயின் வாகனத்தைக் கவனிக்கவில்லை. ஒன்வேயில் சென்றவள் அலைபேசியில் பகிரப்பட்ட சந்தில் தன் ஸ்கூட்டியைத் திரும்பியவள் ஒரு ஓரமாக அதை நிறுத்தினாள். அதேநேரம் உயர்ந்த ரகக் கார் ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது. ஓரமாக ஸ்கூட்டியை நிறுத்தியவள் சுற்றும் முற்றும் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே அந்தக் காரில் ஏறி அமர்ந்த மறுநிமிடம் அவளது கண்கள் கட்டப்பட்டன. கைகளும் கால்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுக் கட்டப்பட்டன. அவளோ இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் மனதில் எழுந்த பயத்துடனே, எதுவும் செய்ய முடியாமல் கட்டுண்டு கிடந்தாள். அடுத்த நிமிடம் தார்ச்சாலையில் சீறிப் பாய ஆரம்பித்தது அந்த உயர்ந்த ரக வாகனம்...


இப்போது அவளை அலட்சியப்படுத்தி விட்டு செல்பவனே
அலைந்து திரிந்து
அவளுக்காக
தன் நிதானத்தையே
இழந்து நித்திரையின்றி
நிராதரவாய் வீதியில் நிற்கப்போகிறானென்று
அவனே அறிந்திருக்க வாய்ப்பில்லை.‌

- அற்புதமது பிறக்கும்..


https://www.sahaptham.com/community/threads/ஆர்கலி-ஈன்ற-அற்புதமே-comments.389/
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -22.1

இலண்டன்..


ஏனோ சிறிது நேரம் கூட
ஓய்வெடுக்க முடியாமல் அந்தச் சிறு பெண்ணின் காயங்களும், அப்பெண்ணைத் துன்புறுத்திய பெண்மணியையும் பற்றியே யோசித்தவாறு படுக்கையில் படுத்திருந்தான் தீபன். நேரம் கடந்து இருந்ததை அவன் உணரவில்லை. ஆனால் அதை உணர்ந்திருந்த விமல் 4.30 மணியைப் போல் வந்திருந்தான்‌. கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து முகம் கழுவி கொண்டு வந்த தீபன் கதவை திறந்தான். வெளியே நின்றிருந்த விமல்,“ஹாய் தீபன்.. இன்னும் நீங்க கிளம்பலையா?” என்றிட.

“ஹாய் விமல், உள்ள வாங்க. ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க விமல் இதோ கிளம்பி வந்துடுறேன்” என்று சொன்னவாறு குளியலறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து விட்டு கிரே கலர் பேன்ட், டி-சர்ட் அதற்கு மேலே ஒரு பிளேசரை அணிந்து கொண்டான்..

தலையைத் துவட்டி ஈரத்தை போக்கியவன் தலையைப் படிய வாரிக் கொண்டு வெளியே வர விமலோ சமையலறையில் நின்றிருந்தான். அதைப் பார்த்து விட்டு, “அங்க என்ன பண்ற விமல்?” என்று கேட்டவாறே தீபனும் சமையலறையின் உள்ளே நுழைந்தான்.

“ஒன்னும் இல்ல தீபன் கிச்சன் நல்லா இருக்கான்னு பார்த்தேன் அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்ல. ம்ம், கிச்சன் நல்லாதான் இருக்கு சரி நாம போலாமா?” என்ற விமல் முதலில் வெளியே செல்ல‍ அதன் பிறகு வீட்டை பூட்டி கொண்டு தானும் விமலைப் பின் தொடர்ந்து வந்தான் தீபன்.

இவனின் எண்ணத்தில் ஓடியதில் எல்லாம் அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அவள் இருப்பது தான் இப்போது இருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீடு அப்படி என்றால் கண்டிப்பாக அப்பெண்ணைப் பற்றி விமலுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தான்.‌ ஆனாலும் அவனிடம் இதை எப்படிக் கேட்பது என்று தயங்கினான்.

வந்த முதல் நாளே ஒரு பெண்ணைப் பற்றி அதுவும் முன்பின் அறிமுகம் இல்லாத நிலையில், காலையில் பார்த்த ஒருவனிடம் எப்படிக் கேட்பது என்று அவன் யோசனையில் இருக்க, இரு முறை அவனை அழைத்த விமல் அவனிடமிருந்து பதில் வராது போகவும் அவன் தோளை தொட்டு உலுக்கியவன், “என்னாச்சு தீபன் எதையோ ரொம்ப டீப்பா யோசிச்சுக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு” என்று கேட்க.

சட்டென்று தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவன்,
“ஒன்னுமில்ல விமல் வீட்டு ஞாபகம் வந்திருச்சு அவ்வளவுதான்” என்று சொன்னவாறு அவனுடன் இணைந்த நடந்தான். அவன் சொன்னதை விமலும் நம்பத்தான் செய்தான். ஏனெனில் தானும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வரும்போது இந்த நிலையில் தான் இருந்தோம் என்று சிந்தித்தவன் அங்கிருந்த இடங்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டி, அதன் முக்கியத்துவம் என்னென்ன, எதெல்லாம் இங்குப் பிரசித்தி பெற்றது என்பதையெல்லாம் விளக்கி கொண்டே கடைவீதி இருந்த பகுதிக்குள் நுழைந்தவன், தமிழ்நேயன் உணவகம் இருந்த இடத்திற்கு அருகில் வந்து நின்றான்.

“இந்த ஹோட்டல் தான் நான் சொன்னது வாங்க உள்ளே போகலாம்”என்று சொன்னதும் சரி என்று தலையசைத்தவாறு உள்ளே நுழைந்தான் தீபன். ஏதோ ஒன்று தன்னை, எதை நோக்கியோ இழுப்பதைப் போல உணர்ந்தவன் சட்டென்று திரும்பி நாலாபுறமும் விழிகளைச் சுழல விட்டான். ஆனால் எவரும் அவனைப் பார்ப்பது போல் தெரியவில்லை என்றதும் குழப்பத்துடனே உள்ளே நுழைந்தான். ஆனால் அவனைத் தன்னை நோக்கி இழுத்தது தன்னைப் பற்றிய உள்ளுணர்வு தான், தங்களது முன் ஜென்ம பந்தம் தான் என்பதை அறியாமலேயே அருகில் இருக்கும் கடையில் இருந்த ஸ்டோர் ரூமில் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் அன்பு மலர்.

அடிக்கடி முதுகில் ஏற்பட்ட சுரீரென்ற வலியைத் தாங்க முடியாமல் அமர்வதும் பின்பு எழுந்து வேலைகளைக் கவனிப்பதுமாகவே அமர்ந்திருந்தாள். இடையிடையே நேற்று நடந்தவை கண்முன் வந்து சென்றன. தமிழநேயன் தன்னை அழைத்துச் சென்று ஹோட்டலில் உணவு உண்ண கொடுத்ததும், அதன் பிறகு தான் வீட்டிற்கு வந்ததும் அதன் பின்பு எந்தப் பிரச்சினை இல்லாமல் ஒரு வாரம் கடந்து சென்றிருந்ததும் அவளுக்கு ஏதோ ஒரு நிம்மதியான மனநிலையைக் கொடுத்தது. ஆனால் நேற்று வெளியில் சென்றிருந்த ரேணுகாவிடம் யாரோ ஒரு பெண்மணி அன்று தன்னைத் தமிழ்நேயன் அவனது உணவகத்துக்கு அழைத்துச் சென்று உணவருந்த வைத்ததும், தான் சிரித்துப் பேசியவாறு 'போயிட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு வந்ததையும் கண்டவர் ஒரு வாரமாக ஊருக்கு சென்றுவிட்டதால் அதை அப்போதே ரேணுகாவிடம் சொல்லவில்லை.

ஆனால் நேற்று ஊரிலிருந்து வந்திருந்தவர் அதை ஒன்றுக்கு ரெண்டாகத் திரித்து ரேணுகாவிடம் சொல்லிவிட்டார் அதைக் கேட்டு அதிகளவு கோபத்தோடும், கட்டுக்கடங்காத எரிச்சலோடும் வீட்டிற்கு வந்தவர், அனைவரது துணியையும் துவைத்து அலசி காய வைத்துக்கொண்டிருந்த தன்னை யாருக்கும் தெரியாமல் தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்து சென்றதோடு மட்டுமின்றி மொட்டை மாடி கதவைப் பூட்டிவிட்டு, தன்னை அடித்துத் துன்புறுத்தியதையும், சூடு வைத்ததையும் நினைத்துப் பார்த்தவளுக்கு இப்போதும் கண்கலங்கியது. பாவம் அவளுக்கு எங்கே தெரிய போகிறது அவரது கணக்கு என்னவென்று! தெரியாத அந்த அன்னாடங்காட்சியுடன் சேர்ந்து பழகி அவனைத் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் அவளிடம் இருக்கும் சொத்து பறிபோய்விடுமோ? என்ற எண்ணத்தில் தான் இவ்வாறெல்லாம் தன்னிடம் நடந்து கொள்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் சூடு வைத்த காயம் வேறு அதிக அளவு எரிச்சலையும், வலியையும் கொடுத்திட கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தவாறே வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் மனது அவளையும் அறியாமல் தான் வாழ்ந்த குடும்பத்திடம் சென்று நின்றது. அப்போது எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம் ? என்பதை எல்லாம் நினைத்தவாறு அமர்ந்திருந்தவள் தன் தோள் மீது ஒரு கரம் பதிந்ததும், எங்கே ரேணுகா தான் வந்து விட்டாறோ? என்ற பயத்திலும் உச்சகட்ட அதிர்ச்சியிலும் திரும்பிப் பார்க்க. அவளை முறைத்து பார்த்தவாறு நின்றிருந்தான் தமிழ்நேயன்.

“அண்ணா..” என்று அவள் அழைக்கும் முன்பே,
“உனக்கு ஏதாவது ஒன்னுன்னா என்கிட்ட சொல்ல கூடாதுன்னு முடிவுல இருக்கியாமா? அன்னைக்கு அப்படித்தான் சாப்பாட்டுல கொஞ்சம் உப்பு கூடப் போனதால உன் அடிச்சாங்க. அதனால தான் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு போனேன். இன்னைக்குத் தேவையில்லாம சூடு வச்சிருக்காங்க இதைக் கூட நீ என்கிட்ட சொல்ல மாட்டியா? அப்ப நீ உண்மையாவே என்னை அண்ணனா நெனைக்கலையா?” என்று கோபத்தில் ஆரம்பித்து வருத்தத்துடன் முடித்தான்.

அதைக் கேட்டதும் அதிர்ந்து எழுந்து நின்றவள், “அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா. உங்கக்கிட்ட இதை யாரு சொன்னது?” என்று கேட்டாள் நிறுத்தி நிதானமாக.

“நான் தான் சொன்னேன். தினமும் நீ அங்க அனுபவிக்கிறதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியலை. அதனால தான் உங்க அண்ணா கிட்ட சொன்னேன்” என்றவாறு அவர்களது முன்னால் நின்றாள் கவினயா.‌

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “நீங்க எதுக்காக இதெல்லாம் போய் சொல்லிட்டு இருக்கீங்க அக்கா. என்னோட தலையெழுத்து இப்படித்தான்னு முடிவாகிப் போச்சு.அதை ஏன் மாத்த நெனைக்கணும் அது இப்படியே இருந்துட்டு போகட்டும். என்னோட கஷ்டம் என்னோடவே போகட்டும் அதை ஏன் அண்ணங்கிட்ட சொல்லி அவரையும் கஷ்டப்படுத்துறீங்க?”‌ என்று கேட்க.

“சும்மா வாய் வார்த்தையா நான் உன்னோட அண்ணான்னு சொன்னா மட்டும் போதுமா? தங்கச்சி கஷ்டப்படும் போது அவளோட கஷ்டத்தைப் போக்கணும்னு உங்க அண்ணனுக்குத் தெரியாதா?” என்றவள் ஜாடையாகத் தமிழைப் பற்றிப் பேசிட.

அவனோ அன்புவை கையணைவில் வைத்தவாறே நன்றாகத் திரும்பி அவள் புறம் நின்று நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தவன்,
“ஏன் அண்ணன் மட்டும்தான் தங்கச்சிக்கு ஏதாவது கஷ்டம்னா ஓடி வந்து பாக்கணுமா? வருங்கால அண்ணி நீ பார்த்தா வேணாம்னு சொல்லிடுவமா என்ன?” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட மறு நிமிடம் பெண்கள் இருவரும் முதலில் அதிர்ந்து பின்பு அவன் சொன்ன தகவலில் மகிழ்ந்தனர்.‌ “அண்ணா நீங்க சொன்னது உண்மையா? எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு அண்ணா. கவியக்கா மாதிரி ஒருத்தவங்க எனக்கு அண்ணியா வர்றதை நெனச்சா எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்குது அண்ணா” என்று சொன்னவாறு அவனைக் கட்டிக் கொண்டாள்.

கவிநயாவோ தன் நேசம் கானல் நீர்தான். அவன் ஒருபோதும் தன் நேசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று எண்ணியிருக்க.‌ இன்று அவன் உரைத்த வார்த்தைகள் அவளை மகிழ்ச்சியிலும், இன்னதென்று சொல்ல முடியாத உணர்வலையிலும் சிக்க வைத்திருக்க அவளையும் அறியாமல் அவள் கண்கள் கண்ணீரை உகுத்தது.

தங்கையைத் தன் அணைப்பில் இருந்து தள்ளி நிறுத்தியவன்,
“இதுவரைக்கும் என் மனசுல அவ மேல விருப்பம் இருந்தாலும் நான் வெளியே சொல்லிக்கிட்டது கிடையாது. ஆனா எப்ப என் தங்கச்சிக்கு ஒன்னுன்னதும் துடிச்சுப் போயி என்கிட்ட வந்து நின்னாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் என் தங்கச்சிக்கு அண்ணியா இருக்க அவளால மட்டும் தான் முடியும்னு.‌ இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் இவ தான் என் பொண்டாட்டி இதை யாராலும் மாத்த முடியாதுடா.
ஆமா நீ சாப்டியா இல்லையா? முகமெல்லாம் வாடிக்கிடக்குது”

“இல்ல அண்ணா.‌ இன்னும் சாப்டலை”

“சரி அம்மா கடையில இருக்காங்க நீ போய்ச் சாப்பிடு” என்று சொல்லி அன்புவை அனுப்பி வைத்துவிட்டு இவ்வளவு நேரம் கீழே அமர்ந்து அழுது கொண்டிருந்த கவினயாவின் அருகில் சென்று அமர்ந்தவன், “கவி...” என்று குரலில் காதலை குழைத்து அழைக்க, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“தேங்க்ஸ்..” என்றாள் ஒன்றை வார்த்தையாய்.

“நீ என்கிட்ட தேங்க்ஸ் சொல்லாதடா. நான் தான் உங்கிட்ட சாரி கேக்கணும். உன்னை எவ்வளவு நாள் ஒதுக்கியிருப்பேன். அது மட்டுமில்ல உன்னைப் பாக்குறப்ப கூட அவாய்டு பண்ணிருக்கேன். சில நேரம் உன்னை அருவறுப்பாகக் கூடப் பார்த்துருக்கேன், அதுக்கெல்லாம் ரொம்பச் சாரிமா. உங்க அம்மா மேல இருக்குற கோவத்தை உன்மேல காட்டிட்டேன்” என்று அவன் உண்மையாவே தன் மனதை திறந்து இத்தனை நாள் இந்த நிலையில் தான் நான் இருந்தேன் என்பதைப் புரிய வைத்திட்டான்.

“புரியுதுங்க. என் அம்மாவால தான் நீங்க என்னை ஒதுக்கி வெச்சீங்கன்னு எனக்கும் தெரியும்” என்று தலைகுனிந்தவாறு சொன்னாள்.

அவள் நாடியை நிமிர்த்தித் தன் முகம் பார்க்க வைத்தவன்,
“இப்பவும் சொல்றேன் இந்த நிமிஷத்துல இருந்து யார் தடுத்தாலும் சரி நீ மட்டும் தான் என் பொண்டாட்டி. ஆனா இதை நம்மளோட வீட்ல சொன்னதுக்கப்புறம், நம்ம கல்யாணத்துக்கு உன் ஃபேமிலியோ, என் ஃபேமிலியோ ஒத்துக்காம போகலாம். எங்க அம்மா என் விருப்பத்துக்கு மாறா எதுவும் சொல்லமாட்டாங்க. ஆனா உங்க வீட்டுல ஒத்துக்குவாங்கங்குற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படி அவங்க ஒத்துக்கலைன்னா நான் எங்க கூப்டாலும் என் கூட வருவியா?” என்று எதிர்பார்ப்போடு கேட்டான்.

தன் அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்தவள், “நீங்கதான் எனக்கு எல்லாமேன்னு முடிவு பண்ணுன அந்த நிமிஷமே உங்களுக்காக எதையும் செய்யனுங்குற முடிவுக்கு வந்துட்டேன். நீங்க எப்ப, எங்க கூப்பிட்டாலும் வருவேன்” என்று காதலோடு சொன்னாள்.

“ம்ம்...” என்ற சொல்லோடு அவளை விலக்கி விட்டு எழுந்து நின்றவன், “சரிம்மா உங்க அம்மா வந்தாலும் வந்திடுவாங்க, இதே முடிவோட எப்பவும் இரு சரியா! நான் வரட்டுமா?” என்று சொல்லி கிளம்பப்பார்க்க.

“இப்பதான வந்தீங்க அதுக்குள்ள போகணுமா?” என்று சலுகையாகக் கேட்டாள் அவள்..

“உங்க அம்மா வந்தாலும் வந்திடுவாங்க கவி.”

“வந்தா வரட்டும்..”

“ப்ச்ச்... வந்தா உன்னை ஏதாவது சொல்லிடுவாங்கமா”

“பரவாயில்லை..”

“ப்ச்ச்.. ஏன்டா இப்படி அடம் புடிக்கிற?”

“இன்னும் கொஞ்ச நேரம் நீங்க எங்கூட இருக்க மாட்டீங்களான்னு தோணுது.”

“இருக்குறதைப் பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லமா. ஆனா என்னால உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு தான் பயமா இருக்கு..”

“ஏன் வந்தாதான் வரட்டுமே. என்னோட வருங்காலப் புருஷங்குறீங்க என்னைக் காப்பாத்த மாட்டீங்களா என்ன?” என்று கேட்டாள். அவன் தோளில் தன் கரங்களை மாலையாக்கி தன்னை நோக்கி இழுத்தவாறே அவள் கேட்க. அவளது செயலில் தன்னை மறந்திருந்தவன் அவள் நெற்றியைத் தன் நெற்றியால் முட்டியவாறு, “இவ்வளவு நாள் உன்னை நெனச்சிட்டு இருந்தாலும் தூரத்திலிருந்தே உன்னைப் பார்த்து ரசிச்சுருக்கேன். இப்படி பக்கத்துல நின்னு ரசிப்பேன்னு கனவுல கூட நெனச்சது கிடையாது கவிம்மா. நீ எவ்ளோ அழகு தெரியுமா?” என்று மையலுடன் சொன்னான்.

“அழகா இருக்கேன்னு சொன்னா தான் தெரியும். இல்லன்னா எனக்கெப்படி தெரியும்.” என்றவள் மிக அருகில் இருந்த அவன் முகத்தை ரசித்தவாறு தன் மூக்கின் நுனிக்கொண்டு அவன் மூக்கு நுனியை நிரண்டிட.

அவள் செயலில் இன்னும் அவள் புறம் சரியத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடிப்பது தமிழ் நேயனுக்குப் பெரும்பாடாக இருந்தது. மீண்டும் ஒரு முறை அவள் நெற்றியில் தன் நெற்றிக் கொண்டு முட்டியவன் அவள் உச்சியில் இதழ் பதித்து விலகி நின்றான்.

அவள் இமைக்காமல் அவனையே பார்த்திருக்க,
“ராட்சசி.. இப்படியே பார்த்துக்கிட்டு இருந்தேன்னா நான் இங்கிருந்து போகமாட்டேன். அப்புறம் இப்பவே உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகுற மாதிரி ஆயிடும். யார் சொன்னாலும் சரி சொல்லலைன்னாலும் சரி அன்பு என்னோட தங்கச்சி தான். அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுத்துட்டு, உன் வீடு ஏறி வந்து உன்னைப் பொண்ணு கேட்பேன் சரியா! எனக்காக வெயிட் பண்ணு செல்லம். சரிடா அம்மா அங்க தனியா ஹோட்டலை பார்த்துட்டு இருக்காங்க நான் போறேன்” என்று சொல்லி விட்டு அவளிடம் சின்னத் தலையசைப்பு கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியவன் தன் ஹோட்டலுக்குள் நுழையும் போது தான் அவன் பின்னே விமல், தீபன் இருவரும் அந்த உணவகத்துக்குள் நுழைந்தனர்.

முன்பே அவர்கள் உள்ளே நுழைய சென்றனர் தான். ஆனால் அப்போது அவர்களது அலுவலகத்தின் மேலாளரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வரவும் இருவரும் வெளிய நின்றே பேசிக்கொண்டிருந்தனர். அதனால் தான் இப்போது உள்ளே நுழைந்தனர்.

தமிழ்நேயனைக் கண்டதும் வேகமாக அவனை நெருங்கிய விமல், “ஹாய் தமிழ்” என்றிட.

சட்டென்று பின்னால் திரும்பிய தமிழ்நேயன், “ஹாய் விமல், எங்க காலையில உங்களைக் காணோம்? சாப்பிட வரலையா என்ன?” என்று கேட்க.

“இல்லையே வந்தனே? உங்களைத் தான் பார்க்க முடியல. வெளியில போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் தமிழ் நான் ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்தணும்னு கூட்டிட்டு வந்துருக்கேன். இவர் பேர் விபாகரத் தீபன்.. புதுசா எங்களோட ஆஃபீஸ்ல ஜாயின் பண்ண வந்துருக்காரு. இன்னிக்கு தான் இங்க வந்தாரு, இவரும் தமிழ் தான். அதனால இனிமே என்னைப் எப்படிப் பார்த்துக்கிட்டீங்களோ அதே போல மிஸ்டர் தீபனையும் பார்த்துக்கணும். அவரும் உங்களைப் போல நைஸ் பர்ஷன்.. சப்போஸ் நான் வர முடியாத பட்சத்துல அவர் வந்தா அவரைக் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. நான் இதை உங்ககிட்ட ஒரு வேண்டுகோளா கேட்டுக்குறேன்” என்றதும் விமலைப் பார்த்து புன்னகைத்த தமிழ்நேயன், “கண்டிப்பா விமல். கஸ்டமர்ஸ்ஸ என்னைக்குமே நல்லா பாத்துக்கணும்னு நினைப்பேன். இவரையும் நல்லாவே பார்த்துக்குறேன் நீங்க ஃபீல் பண்ணாதீங்க.” என்றவன் தீபன் புறம் திரும்பி,“ஹாய் மிஸ்டர் தீபன். என்னோட பேர் தமிழ்நேயன்” என்று சொல்லி கரங்களை நீட்டட.

அவனது கரங்களைப் பற்றிக் குலுக்கிய தீபன்,‌ “ஹாய் நேயன். நான் விபாகரத் தீபன், நைஸ் டு மீட் யு” என்றான்.

அதேநேரம், “தமிழ் இங்க வாப்பா” என்று அவனது தாய் அழைத்திருந்தார்.

“இதோ வர்றேன் இருங்கம்மா” என்று தன் தாயிக்குப் பதில் அளித்து விட்டு இவர்களின் புறம் திரும்பியவன், “ஓகே அம்மா கூப்புடுறாங்க. நீங்க உட்காருங்க நான் சாப்பாடை பரிமாறச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு வேகமாகத் தன் தாயை நோக்கி நடந்தவன் அப்போது தான் கல்லாப் பெட்டியின் அருகே இருந்த ஒரு இடத்தில் அமர்ந்து, இலையிலிருந்து கேசரியை எடுத்து வாயில் வைக்கும் அன்புவைக் கண்டான்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவாறு, “நல்லா சாப்பிடு அன்புமா. இப்படிச் சாப்பிட்டா எப்படி உடம்புல தெம்பு இருக்கும்” என்று சொல்லி அவள் தலையைக் கலைத்து விட்டு தன் தாயை நோக்கி சென்றான்.‌ சரியாக அன்பு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் தான் கை கழுவும் இடம் இருந்ததால் முதலில் விமல் சென்று கழுவி விட்டு வந்தவன் இருவருக்குமான இருக்கையைத் தேடி அமர்ந்தான். ‌தன் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி ஒன்றை படித்துப் பார்த்துக் கொண்டே கை கழுவும் இடத்திற்குச் சென்ற தீபன் கையைக் கழுவிவிட்டுத் திரும்பினான். அதேநேரம் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ ஒரு உந்துதலில் சட்டென்று அன்பு இருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான்.
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அற்புதம் -22.2

அப்போது சரியாகத் தமிழின் அன்னை அவளை அழைத்திருந்ததால் சட்டென்று அவர் புறம் அவள் திரும்பியிருக்க, அவளது பின் பகுதி மட்டுமே தீபனுக்குத் தெரிந்தது.

அவளைப் பார்த்த தீபனுக்கு
நேத்து பார்த்த பெண்ணின் உருவம் போலவே இருக்க அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். அதேநேரம் அவனைத் தன்னை நோக்கி வர வைக்கும் விதமாக, “எங்க இருக்கத் தீபன், இங்க வா” என்று அழைத்திருந்தான் விமல்.

தீபனோ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் அதன் பிறகே தான் செய்ய இருந்த செயலை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டான். இது பொது இடம் என்பதால் தான் அப்பெண்ணை நோக்கி செல்வது மற்றவர் கண்களுக்கு வேறுவிதமாகத் தெரியலாம். ஒருவேளை அந்தப் பெண்ணாக இல்லாமல் இவள் வேறு யாராகவேணும் இருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரும் என்பதால் மனதில் தோன்றிய நெருடலை பொருட்படுத்தாமல் விமலை நோக்கி சென்றான்.

அடுத்தப் பத்து நிமிடத்தில் அவர்கள் உண்ணும் உணவுகள் இலையை நிறைத்தன. அதிலும் தீபனுக்கு மிகவும் பிடித்த உணவுகள் பரிமாறப்படச் சத்தமில்லாமல் அனைத்தையும் உண்டு முடித்து எழுந்தவன் அந்தப் பெண்ணைக் கண்டு விடும் ஆவலில், அவள் முகத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் விமலை முந்திக்கொண்டு கைகழுவுமிடம் சென்று கை கழுவி விட்டு அந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான்.‌ ஆனால் அவளோ எப்போதோ உணவினை உண்டு முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்று இருந்ததால் அந்த இடம் வெற்றிடமாக இருந்தது.‌ ஏதோ அந்த இடத்தைப் போன்றே தன் மனதிலும் ஒரு வெற்றிடமும், வெறுமையும் நிறைவதை உணர்ந்தவன் சத்தமில்லாமல் விமலுடன் சேர்ந்து உண்ட உனவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.


இப்போதும் தீபனுக்கு அதே எண்ணம் தான். அப்பெண்ணைப் பற்றிக் கேட்டு விடலாமா? வேண்டாமா? என்று தனக்குள் இதோடு எத்தனையாவது முறை கேட்டுக் கொண்டானென்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அப்பெண்ணின் உருவமும், அவளுக்கு ஏற்பட்டிருந்த கஷ்டங்களும், வேதனைகளும் அவனை அலைக்கழித்தன. ஏனோ அவனே அந்தக் கஷ்டத்தை அனுபவிப்பவன் போல் உணர்ந்தான். முன் ஜென்ம பந்தம் என்பது இதுதான் போல. அதனால் தான் அவளுக்கு ஒன்றென்றால் இவனது இதயம் துடிக்கிறது என்பதை அவன் அறியவில்லை. ஆனால் அறிந்து கொள்ளும் நேரம் வரும்போது என்னென்ன நிகழுமோ? விதி ஒன்றே அதை அறியும்.

தன் அறைக்கு வந்தவன் தன் தங்கைக்கு அழைக்க, அவளது அலைபேசியோ தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்றே வந்தது. இவனும் குழப்பத்துடன் மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்து விட்டு, 'ஏன் இப்படிப் பண்றா? போனை ஏன் எடுக்கமாட்டேங்குறா?' என்று யாழினியைத் திட்டிக்கொண்டே படுக்கையில் விழுந்தவனுக்கு அடுத்த நிமிடம் தங்கையின் நினைவு மறைந்து அன்புவின் நினைவு வந்தது.


இங்கே அவனது தங்கையோ யாரென்றே அறியாதவர்களால் கடத்தப்பட்டு இருந்தாள். தான் எங்கே இருக்கிறோம்? எங்குக் கொண்டு செல்லப்படுகிறோம்? யார் தன்னைக் கடத்தி செல்கிறார்கள்? என்பது பற்றியெல்லாம் யோசிக்க யாழினிக்கு சிறிது கூட நேரமில்லை. தனக்கு வந்த அலைபேசி அழைப்பைப் பின்பற்றித் தான் இங்கு வந்தது சரியா? தவறா? என்று கூட அவள் சிந்திக்கவில்லை.

மருத்துவமனையில் யாழினி தன் பணியில் இருக்கும் போது திடீரென்று புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.‌ அழைப்பை ஏற்றவளிடம்,
“பேராசிரியர் அன்புச்செல்வனோட பொண்ணு யாழினியா?” என்று ஒரு குரல் கேட்க.

“ஆமா.. நான் அவரோட பொண்ணு தான் பேசுறேன். நீங்க யாரு? என்னோட போன் நம்பர் உங்களுக்கு எப்படிக் கெடச்சுது?”

“நாங்க யாரு? எதுக்குக் கால் பண்ணுனோம்னு எல்லாம் உனக்குத் தெரியணும்னு அவசியமில்லை. உன்னோட அப்பா உயிரோடு இருக்கணும்னா நாங்க சொல்றதை நீ செய்யணும்” என்று சொல்லி அக்குரல் மிரட்டியது.
இவளோ, “சொ..சொ.. சொல்லுங்க என்ன பண்ணனும்?”
என்று கேட்டாள். தன் தந்தைக்கு ஒன்று என்றதும் அவளால் வேறு எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை.
உடனே அவர்கள் சொன்னதைச் செய்ய ஒப்புக்கொண்டாள்.

“இங்க பாரு யாருக்கும் தெரியாம நீ மட்டும் தனியா ஹாஸ்பிடலை விட்டு வெளிய வர்ற. பக்கத்து தெருவுல இருக்கச் சுபம் மெடிக்கல் ஷாப் சந்துல வெயிட் பண்ணு” என்று கூறியதோடு அக்குரலுக்குச் சொந்தக்காரர் அலைபேசி அழைப்பைத் துண்டித்திட, அடுத்த நிமிடம் அவர்கள் சொன்னதைச் செய்வதற்காகவே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருந்தாள் யாழினி. இதோ அவர்கள் சொன்ன இடத்திற்கு அவள் வந்து நின்ற மறுநிமிடம் கண்களும், கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் கடத்தப்பட்டு இருக்கிறாள்..

வெகு நேர பயணத்திற்குப் பிறகு வலுக்கட்டாயமாக அவள் எங்கேயோ இழுத்துச் செல்லப்பட்டாள். இவ்வளவு நேரம் என்ன நடந்தது? தான் எங்கு வந்திருக்குறோம்?
என்று தெரியாமல், புரியாமல் குழம்பியவள், ஒருவேளை பொய் சொல்லி தன்னை இங்கு அழைத்து வந்திருப்பார்களோ? என்று காலம் கடந்து சிந்தித்தாள். அதற்குள் ஒரு வீடு போன்ற இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதை நிலைப்படியில் தட்டிக் கொண்ட தன் காலை வைத்து புரிந்து கொண்டாள்..

அவர்களோ யாழினியை தர தரவென்று இழுத்துச் சென்று அவளைக் கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்தவள் அடுத்த நிமிடம் பிடிமானத்திற்காக எதையோ ஒன்றை பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சித்தாள். ஆனால் காலும் கட்டப்பட்டிருந்ததால் அவளால் எழ முடியவில்லை. சிறிது நேரத்தில் அவளுக்கு வேலை வைக்காமல் யாரோ ஒருவர் அவள் கண் கட்டை அவிழ்த்து விட்டு, கை கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுக்களையும் அவிழ்த்து விட்டான்.. கட்டுக்கள் அவிழ்த்து விட்டப்பட்டதும் எழுந்து நின்று கைகளைத் தேய்த்துக் கொண்டவாறு, கண்களையும் அழுந்த தேய்த்தவள் விழிகளைத் திறந்து நாலாபுறமும் பார்த்தாள். சுற்றிலும் இருள் மட்டுமே பரவி இருக்க, அவளால் எதையும் யூகிக்க முடியவில்லை. அதே நேரம் அந்த அறையின் மின் விளக்குகள் ஒளியூட்டப்பட்ட வெளிச்சத்தில் அங்கிருந்த அறையைப் பார்வையால் அளந்தவளது விழிகள் ஏதோ ஒன்றின் மீது அழுத்தமாகப் படிந்து மீள முடியாமல் தவித்தது.

ஆம்.. அவள் விழிகள் கண்டது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட அமர வைக்கப்பட்டு இருந்த அவளது தந்தையைத் தான்.‌ ஒரு நிமிடம் அவரை அந்த நிலையில் கண்டவளது ரத்தம் உறைந்து போனது. இதயம் தன் துடிப்பை நிறுத்தி பின் துடித்தது. கண்களில் கரகரவென்று கண்ணீர் வழிந்தன.‌ கால்கள் அவரிடம் செல்ல பரபரத்தன. தான் இருக்கும் நிலை மறந்து அவரை நோக்கி ஓடினாள் யாழினி.

அவள் அவரை நெருங்குவதற்குள்ளாகவே அவளைப் பிடித்து இழுத்து நிற்க வைத்த இருவர், “எங்கடி ஓடுற.‌ அவ்வளவு சீக்கிரம் உன்னை அவரைப் பார்க்க விட்டுடுவோமா? என்ன?” என்று சொல்லியவாறு அவரைக் கட்டி வைத்திருப்பது போலவே இவளையும் ஒரு நாற்காலியில் அமர வைத்துக் கை கால்களை நாற்காலியோடு சேர்த்து கட்டியவர்கள் வாயையும் துணி கொண்டு அடைத்திருந்தனர்.‌ அவர்களிடம் இருந்து எவ்வளவு தான் திமிறினாலும் அவளால் தன்னை அவர்களிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

விமான நிலையம்..
விமான நிலையத்தை அடைந்ததும் காரை ஓரம்கட்டிய உதய் குதூகலத்துடன் தன் நண்பன் நிகிலை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.‌ அதேநேரம் விமானம் தரையிறங்கியிருக்க, அந்த இயந்திரப் பறவையிலிருந்து பயணிகள் வெளிவரத் துவங்கி இருந்தார்கள். தன் நண்பனை எதிர்பார்த்துக் காத்திருந்தான் உதய். அடுத்த 15 நிமிடத்தில் செக்கிங் முதற்கொண்டு அனைத்தையும் முடித்துக் கொண்டு தன் உடைமைகள் அடங்கிய ட்ராலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்த நிகில் நண்பனைக் கண்டதும் வேகமாக அவனை நெருங்கினான். அதே நேரம் உதய்யும் நிகிலைக் கண்டு விட்ட ஆனந்தத்தில் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டான். நிகில் ஏதோ சொல்ல வருவதற்குள்ளாகவே திடீரென்று 10 பேர் அடங்கிய குழு ஒன்று உதய்யை அணைத்துக் கொண்டதோடு, “நீ இன்னைக்கு செத்தடா..” என்று சொல்ல.‌ திடீரென்று தன்னை அணைத்த கும்பலைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நின்ற உதய் அடுத்த நிமிடம் அனைவரையும் உதறி விலக்கித் தள்ளி விட்டு தன் காரை நோக்கி ஓடினான்.


அறியாமல் செய்த
பிழையினால்
பெரும் புயலொன்றில்
பேதையவள் சிக்கிக்
கொள்ள..!
கரம் கொடுத்து
காத்தவனே
காவலாகி காதல் கணவனாதேனோ?

- அற்புதமது பிறக்கும்..



 
Status
Not open for further replies.
Top Bottom