Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆழ்துளை கிணறிலிருந்து ஆழ்மனம் வரை

Messages
9
Reaction score
0
Points
1
தாயின் கருவறையில் இருந்த

பத்து மாதம் பத்தாதென

மீண்டும் பூமி தாயின்

வயிற்றில் வளர்கருவாக

-சென்றாயோ?



பூமித்தாயே நின்னை சுமக்க

ஆசைப்பட்ட காரணத்தாலோ

-என்னவோ

மணலடியில் உள்ள பாறைகளும்

மண்ணாகி உன்னை தன்

மடியில் ஏந்திடக் கண்டேனோ?



நிமிடங்களில் காப்பாற்ற

-வேண்டியவனை

தினங்கள் ஐந்து ஆகியும்

காப்பாற்ற இயலாமல் தவிக்கும்

தமிழகத்தை என் சொல்வேன்?



ஒவ்வொரு முறையும் இந்தியா,

தமிழகமென பெருமை

-கொள்ளும்

ஒவ்வொரு கணமும் இனி

தன்னிச்சையாகவே பயம்

-கொள்ளும்

இன்னும் எத்தனையை

-காணுமென!





மாற்றங்களே மாறா நிலையில்

மாறா மனிதம் இன்றும்

மறைந்தே உள்ளது

-இணையத்தில்

மறுக்கவும், மன்னிக்கவும்

-இயலாமல்!



அந்த ஆழ்துளை கிணற்றில்

சிக்கி தத்தளித்த உயிருக்கு

என் ஆழ்மனதில் இருந்து

சிக்கிய வார்த்தைகள்

-சுஜித்திற்காக!



~கலாமிரோபோட்
 

New Threads

Top Bottom