Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 10 ❤️

இன்று பத்திரிகை வாங்குவதற்காக ரஹீம் கடைக்கு சென்றார். கடைக்கு சென்றவுடன் பத்திரிகைகள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டு அதை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தார். ரஸியாவும் சுரையாவும் வீடு வந்து சேர சரியாக இருந்தது. அவரவர் தேவைக்கான பத்திரிகைகள் எடுத்து கொண்டனர்.

அதே போல் நிஜாம் கடைக்கு சென்று பத்திரிகைகள் வாங்கி கொண்டு வந்தார். அவர்களும் பத்திரிக்கைகள் கொடுக்க துவங்கி விட்டனர்.

இன்று சுரையா பத்திரிகைகள் எடுத்து கொண்டு அலுவலகத்திற்கு சென்றாள். அதன் பிறகு அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து தன் கல்யாணத்திக்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு மேல் அதிகாரியிடம் சென்று பத்திரிகை கொடுத்துவிட்டு அழைப்பு விடுத்தாள். பிறகு அவர் நாளையில் இருந்து லீவ் எடுத்து கொள் என்று கூறினார் பிறகு இவளும் சரியென்று விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு ஜரினா வீட்டிற்கு வந்தாள். ஏன் விடுப்பு எடுத்தோம் என்ற நிலை வரும் என்று தெரியாமல் விடுப்பு எடுத்து கொண்டாள் சுரையா.

சுரையா வருவதை பார்த்த ஜரினா ஏய் கல்யாண பொண்ணே வாவா உள்ள வா என்று இன்முகத்துடன் வரவேற்று தன் குடும்பத்தினர்க்கு அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு பையில் இருந்து பத்திரிகை எடுத்து அவள் மாமியாரிடம் கொடுத்து குடும்பத்துடன் என் கல்யாணத்திற்கு வந்துடுங்க ஜரினாவை ரெண்டு நாள் முன்னாடியே அனுப்பிடுங்க என்றாள் சுரையா. இப்பவே கூட்டிட்டு போமா நான் ஏதும் சொல்லல என்றார் அவள் மாமியார் . இவள் சிரித்து விட்டு சரி மா நான் கிளம்புறேன். சாப்பிட்டு போமா. இல்ல இன்னும் ஒரு நாள் வந்து சாப்பிடுறேன். சரி மா. போய்ட்டு வரேன் என்று விட்டு ஜரினா அம்மா வீட்டுக்கு சென்றாள்.

அவள் வாசலில் அழைப்பு மணியை அடித்தாள். ஜரினாவின் அம்மா வந்து திறந்தார். அடே கல்யாண பொண்ணு உள்ளே வா என்று புன்னகைத்தவாறு அழைத்தார் அம்மா கதீஜா. எப்படி இருக்கிங்க ஆண்ட்டி. அல்ஹம்துலில்லாஹ் நான் நல்லா இருக்கேன். நீ எப்படி மா இருக்கேன். பாத்தா எப்படி தெரியுது ஆண்ட்டி என்று புன்னகை பட . இன்னும் வாய் குறையல போல . அது கூடவே பொறந்தது. சரிசரி. ஆண்ட்டி நீங்களும் அங்கிளும் என் கல்யாணத்திக்கு வந்திடனும் சரியா என்றாள் செல்ல கண்டிப்புடன். ம்ம்ம் சரி . நான் கிளம்புற. ம்ம்ம் சரிமா. பார்த்து போ. ம்ம்ம் சரிமா. வேலை முடித்து விட்டு வீடு வந்து சேர மணி இரண்டானது.

ரஸியா மூன்று மணிக்கு வந்தாள். ஏய் ஏன் இவ்வளவு சீக்கிரம்? இல்லக்கா காலேஜ் சீக்கிரம் விட்டுட்டாங்க. ஒ அப்படியா. சரி சரி ரெண்டு பேரும் கிளம்புக கல்யாணத்திக்கு தேவையான நகை டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம் சொன்னவுடன். இதோ கிளம்பிட்டா போய்டிச்சி என்றாள் ரஸியா. பிறகு காரில் ஏறி நகை கடைக்கு சென்றனர்.

அங்கு சென்றவுடன் ரஸியா தன் அக்கா சுரையாவிற்கு நகை ஒத்திகை வைத்து வைத்து பார்த்து பிறகு ஒரு கம்மலை செலக்ட் செய்தாள். பிறகு சுரையாவே தனக்கு மோதிரம் செலக்ட் செய்தாள். பிறகு வெள்ளி பொருட்கள் பார்த்தவுடன் அவள் மட்டும் சென்று சாகித் ஒரு மோதிரம் வாங்க வேண்டும் என்று நினைத்தாள். அதை தேடி தேடி அழகான ஒரு மோதிரம் எடுத்தாள். அதை பேக் செய்து தனியாக என்னிடம் எடுத்து வந்து கொடுங்கள் என்று பணத்தையும் கொடுத்தாள். பிறகு அது வந்தவுடன் தன் பேக்கில் வைத்து கொண்டாள். யாருக்கும் தெரியாது போல். அந்த நகைக்கான பணத்தை கட்டி விட்டு துணிக்ளும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

அம்மா, சாகித் நாளைக்கு லீவு எடுத்துக்க முடியுமா பா. ம்ம்ம் ஒகே எதுக்கு. நாளைக்கு துணி எல்லாம் வாங்கனும் அதுக்கு தான். ஒகே. சரி வா வந்து சாப்பிடு.

அனைவரும் துணி கடைக்கு சென்று துணிகளை வாங்கி கொண்டு . நகை கடைக்கு சென்று அவரவர் தங்கள் தேவைக்கு நகை வாங்கி கொண்டு இருந்தனர். சாகித் தன்னவளுக்காக மோதிரம் வாங்க முடிவு செய்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து இரண்டு மோதிரம் வாங்கினான். பிறகு எல்லாம் வாங்கி கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தனர். மணி இரண்டு . அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். அம்மா நான் என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்துட்டு வரேன் என்று சென்றான்.

முதலில் ரமேஷ் வீட்டிற்கு சென்றான். அங்கு ஆண்ட்டி எப்படி இருக்கிங்க? நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன். ஆண்ட்டி எனக்கு மேரேஜ் எல்லாரும் வந்துடனும் ரெண்டு நாள் முன்னாடியே. புரியுதா. ம்ம்ம் கண்டிப்பாக வரோம். பிறகு ராம் வீட்டிற்கு சென்று பத்திரிகை கொடுத்தான். வினோத் வீட்டிற்கும் சென்று கொடுத்து விட்டு. தன் ஆபிஸ் சென்றான். அங்கும் எல்லாருக்கும் கொடுத்து தன் கல்யாணத்திக்கு வந்திடனும் என்று அழைப்பு விடுத்து விட்டு வீட்டுக்கு வந்தான்.

இந்தாங்க உங்களுக்கும் தான் பத்திரிகை எங்க கல்யாணத்திக்கு மறக்காமல் வந்துடுங்க. மிஸ் பண்ணாம வந்துடுங்க. ஓகேவா....

விடுப்பு எடுத்து ஒரு வாரம் சென்ற நிலையில் ரஸியா கல்லூரிக்கு சென்று விட்டாள். சுரையா வீட்டில் தன் வேலைகள் செய்து கொண்டு இருந்தாள். அவள் அம்மா, ஏய் சுரையா வீட்டுல தண்டசோறு திங்குறியே உனக்கு வெட்காமா இல்லையா? எனக் கேட்டார் சுரையாவை பார்த்து. இவள் கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாக வேலை செய்து கொண்டு இருந்தாள்.

ஆனால் மேலும் மேலும் அவளை தண்டசோறு தண்டசோறு என்று திட்டிக்கொண்டே இருந்தார் அவள் அப்பா. இவளுக்கு கோபத்தோடு யாரு தண்டசோறு சாப்பிடுறா? நீதான் மேலும் இது வரைக்கும் சம்மாதிச்ச பணம் என்னாச்சு இது வரைக்கும் எங்ககிட்ட கொடுத்து இருக்கியா? நான் ஏன் கொடுக்கனும் எதுக்கு கொடுக்கனும் என் கனவை அழிச்சவங்களுக்கு.

ம்ஹூம் இந்த காசை வச்சி என்ன பண்ணியோ யாருக்கு தெரியும்? ச்சி என்றவுடன் அவள் கண்கள் கலங்கி விட்டன. இதற்காக ஒரு நாள் வருத்தப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. அவள் ச்சி நீங்களா மனிஷங்கலே இல்லை என்று விட்டு தன் அறைக்கு சென்று அழுது கொண்டு இருந்தாள்.

அவள் சாப்பிட வந்தாள். அதற்கு ஏன்டி உன் கல்யாணம் தானே வேலை செய்யாமல் தூங்கிட்டு இருக்க என்றவுடன் ஹலோ கல்யாண வேலை எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் பார்த்துட்டு இருக்காங்க சமையல் இருந்து மண்டபம் வரைக்கும். நம்ம வேறும் பணம் மட்டும் தான் கொடுத்தோம். அதுவும் நான் என்று கூறியவளை கோபத்தோடு பார்த்தார்கள் இருவரும். பிறகு ரஸியா கல்லூரி முடித்து விட்டு வந்தாள். அவள் சிறிது நேரம் சுரையா மடியில் படுத்து கொண்டாள். பிறகு இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். இருவருக்கும் பரிமாறினார். இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

ரஸியா, அக்கா உன் மடியில படுத்துக்கவா. ம்ம்ம் படுத்துக்கோ டா. ரஸியா படுத்தவுடன் அவள் அழத்தொடங்கினாள். சுரையா, ரஸியா ஏன் டா அழுகுற. அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டு இன்னும் ஒரு வாரம் தான் அக்கா நானும் நீயும் ஒன்னா இருப்போம் என்றவளை கட்டி பிடித்து கொண்டாள். இருவரும் கண்களில் கண்ணீர் விட்டனர். பிறகு விலகி இங்க பாரு அழாத நீ அழாமல் இருந்தா தான் நான் நிம்மதியாக இருக்க முடியும் புரியுதா ரஸியா என்றாள் சுரையா. பிறகு அவள் தூங்கி விட்டாள்.

சுரையா காலையில் நடந்ததை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். அவளுக்கு சாகித்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவன் குரல் கேட்க வேண்டும் போல் இருந்தது. அவன் தோல் சாய்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதையெல்லாம் நினைத்து கொண்டு உறங்கிவிட்டாள்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 11 ❤️

புரண்டு புரண்டு படுத்தாலும் சுரையாவிற்கு காலையில் நடந்தவை மட்டும் அவள் கண்களில் வந்து கொண்டு இருந்தது. சாகித்க்கும் அதே நிலை தான் ஏனோ அவன் மனம் மட்டும் சுரையா ஏதோ பிரச்சினையில் இருக்கிறாள் என்று சொன்னது. அவளிடம் பேச வேண்டும் என்று மணம் அடித்தது. சாகித் சிறிதுநேரம் கழித்து தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளுக்கு கால் செய்தான். ரிங் அடித்தது......

சுரையா போன் வைப்ரேட் மோடில் வைத்தாள். பிறகு வைப்ரேட் சத்தம் கேட்டவுடன் போனை எடுத்து பார்த்தாள். அதில் அவன் தான் எடுக்கலாமா வேண்டாமா என்று பெரிய போராட்டத்திற்கு பிறகு போனை எடுக்க செல்லும் போது கட் ஆனது. மறுபடியும் கால் செய்தான். பிறகு இவள் மாடிக்கு சென்றாள். அங்கு அமர்ந்து போனை அட்டன் செய்தாள்.

சிறிது நேரம் இரண்டு பேரும் அமைதியாகவே இருந்தனர். சுரையா பேச தொடங்கினாள். என்ன விஷயம் என்று கேட்டாள். இவன் எதாவது பிராப்ளமா? என்று கேட்டது தான் தாமதம் இவள் அழுக தொடங்கினாள் குழந்தை போல். அவன் சற்று பதற்றத்தோடு என்னமா ஆச்சு?

அவள் தன் கனவு லட்சியம் நிறைவேறவில்லை அதற்கு தான் அழுதேன் என்று பொய் சொன்னாள். அழட்டும் என்று விட்டான். சிறிது நேரம் கழித்து அவள் அழுகையை நிறுத்தினாள். அவ்வளவு தானே வேற எதுவும் இல்லை தானே. இவள் ம்ஹூம் இல்ல பா என்றாள். அப்ப சரி போய் தூங்கு நாம மேரேஜ்ல மீட் பண்ணுவோம் என்று கூறி விட்டு பதிலை எதிர்பாராமல் கட் செய்தான். இவளும் சரியென்று அவள் திரும்பிய போது ரஸியா நின்று கொண்டு இருந்தாள்.

சுரையா அதிர்ந்தாள். அக்கா உன்கிட்ட ஒன்னு கேக்கட்டா? நானும் வந்தது இருந்து பாக்குற உன் கண்ணு சிவந்து இருக்கு அத வச்சி புரிஞ்சிகிட்டே. உனக்கு என்ன தான் பிராப்ளம்? அவள் கேட்டவுடன் காலையில் நடந்ததை சொன்னாள். அவள் அக்கா உண்மை தான் சொல்றியா?

ம்ம்ம் ஆமாம். ஏன்கா இப்படி இருக்காங்க பணத்தை வச்சி என்ன பண்ண போறாங்க. உனக்கு தெரியாது பணத்துக்காக அவங்க கொலை பண்ண கூட தயங்க மாட்டங்க என்றவுடன் அதிர்ந்து அப்படியே நின்றாள். ஏய் என்னாச்சு? என்ன கா சொல்ற? ஆமாம் நம்ம தாதி தாதா சாச்சா சாச்சி புப்பூ புப்பா நம்ம தம்பிகள் தங்கச்சிங்கள சொத்துக்காக கொன்றது நம்ம அப்பா தான். அதை ஆக்சிடட் சொல்லி கேஸை மாத்துனதும் நம்ம அப்பா தான். அக்கா அப்ப நமக்கு தங்கச்சி தம்பிங்க எல்லாம் இருக்காங்கலா? நமக்கு இவ்வளவு பெரிய சொந்தம் இருக்கா? ம்ம்ம் ஆமாம் ரஸியா. அது நான் நாளைக்கு சொல்ற இப்ப வா நாம தூங்குவோம் என்று இருவரும் சேர்ந்து தூங்க சென்றனர்.

சாகித், உன் கனவை நான் நிறைவேற்றுவேன். நீ அழுறது எனக்கு கஷ்டமா இருக்குடா. உன்னை இனி நான் அழ விடமாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டு உறங்கி விட்டான்.

காலை.....

ரஸியா, அம்மா நான் இன்னிலருந்து சுரையா மேரேஜ் வரைக்கும் லீவு போட்டு இருக்கேன். ஏன்டி ஒரு வாரம் மூனு நாள் லீவு போட்டா பத்தாதா? பத்தாது என்று அழுத்தமாக கூறினாள். சுரையா, இன்னிக்கி நம்ம பார்க்கு போகலாம். ம்ம்ம் ஒகே நான் ரெடி. சரிசரி சீக்கிரம் சாப்பிடும். பிறகு இருவரும் கிளம்பினர்.

பூங்காவில்.....

சுரையா, ரஸியா நான் ஊஞ்சல் ஆடிட்டு வரேன். இந்த பழக்கத்தை எப்ப தான் நீ விடுவ. அதல்லாம் விய முடியாது. பிறகு இருவரும் ஊஞ்சல் அருகே சென்று ஊஞ்சல் ஆடினாள். அனைத்தையும் மறந்து சின்ன பிள்ளை போல் மகிழ்ச்சியாக இருந்தாள் சுரையா. இதை பார்த்து நிம்மதியாக இருந்தாள் ரஸியா. சிறிது நேரம் கழித்து அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தனர் இருவரும்.

ரஸியா, சுரையா இந்த உலகில் உனக்கு கிடைச்ச மிகப்பெரிய கிப்ட் எது? நீ ஜரினா அப்புறம்....... அவர். அவர்னா தெரியாத மாதிரி கேட்டாள். இவள் வெட்கத்தோடு சாகித் என்றாள். ஒஒஒஒ ஓஹோ. ஏய் என்ன? ஒன்னுமில்லையே. நிஜமா தான் ரஸியா சொல்ற. அவர மாதிரி ஒருத்தர் எனக்கு கணவனா கிடைப்பதற்கு குடுத்து வச்சிருக்கனும். அக்கா நீ மாமாவை எந்தளவுக்கு லவ் பண்ற.

எந்தளவுக்கு சொல்ல தெரியல. கடல் ஆழத்த விட அதிகமாவே என் மனசுல இருக்காரு. அவரை விட வேறு யாராலும் என்னை பாத்துக்க முடியாது ரஸியா. தினம் தினம் அவர பாக்கனும் தோன்னும். அவர்கிட்ட பேசனும் தோனும் பட் ஏதோ ஒன்னு என்ன தடுக்குது என்னன்னு தெரியல.

பட் அவரை நான் எந்தளவுக்கு நான் லவ் பண்றன்னு சொல்ல முடியல ரஸி. அக்கா நீ வேணா பாரு மாமா உன்னை ராணி மாதிரி பாத்துப்பாரு. நீ சொல்லி தான் தெரியனுமா. மத்தவங்களுக்கு தான் நான் சுரையா அவருக்கு நான் எப்பவுமே அவரோட செல்ல ராட்சஷி தான் என்றவளை பார்த்து ம்ம்ம் கலக்கு சுரையா என்றாள்.ச்சி பே எருமை என்று விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

அங்கு வந்த சாகித்தும் அவன் நண்பர்களும் இதையெல்லாம் கேட்டு மலைத்து நின்றானர். டேய் ! அந்த பொண்ணு உன்னை ரொம்ப லவ் பண்ணுது டா என்றான் ராம். ம்ம்ம் ஆமாம் டா மச்சி என்றான் சாகித். மேலும், அவளுக்கு எப்படி டா தெரிஞ்சுது நான் மனசுல அவள் என் ராட்சஷி ன்னு தான் சொல்லுவேன். எப்படி டா தெரியல. அவ என்னை இந்தளவுக்கு என்னை லவ் பண்ணுவான்னு நினைச்சி கூட பாக்கல. சரி டைம் ஆயிடுச்சி நாம கிளம்புவோமா? ம்ம்ம் சரி என அவரவர் வீட்டிற்கு சென்றனர். சாகித், மேரேஜ் அன்னிக்கி நாம இதை கேட்கனும் என்று முடிவு செய்து கொண்டு வீட்டிற்கு சென்றான்....



தொடரும்

 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 12❤️

இரவு......

ரஸியாவின் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மூலம் அவளுக்கு ஒரு தகவலை அனுப்பினாள், சுரையா. அப்ப நாம ரெண்டு பேரும் சின்ன புள்ளைங்க. நம்ம குடும்பம் மவுத் (இறந்து) ஆகி தான் வந்தது. நான் டேன்த் படிச்சிட்டு இருக்கும் போது தான் அப்பா அவர் வாயால உண்மை அம்மா கிட்ட சொன்னாரு.

இந்த சொத்துகாக நான் தான் என் அம்மா அப்பா தம்பி தங்கச்சி எல்லாரையும் கொன்ற. அந்த கேஸை மாத்துனதும் நான் தான் என்று பெருமையாக சொன்னாரு. அதை நா கேட்டுட்டேன் என்று அனுப்பினாள். மேலும் நாம பேசுறது அப்பாக்கு கேட்கும் அதனால தான் நான் மெசேஜ் பண்றேன் என்று அனுப்பினாள். அதை படித்த ரஸியா, மிகவும் நொந்தாள்.

அவளால் ஏதும் பேச முடியவில்லை. அக்காவின் மடியில் படுத்து அழுதாள். சுரையாவும் தான். இருவரும் அப்படியே உறங்கினர்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சாகித், சுரையாவின் போட்டோவை பார்த்து ஏய் ராட்சஷி உனக்கு எப்படி டி தெரியும்? நீ என்னை எந்தளவுக்கு லவ் பண்றன்னு தெரிஞ்சிகிட்ட மா. உன்னை விட வேறு யாராலும் என்னை பாத்துக்க முடியாது. ஐ லவ் யூ ராட்சஷி இன்னும் ஒரு வாரம் தான். பிறகு அவன் குளித்து விட்டு படுக்க சென்றான்.

மஸ்கட்....

ஏய் ரிஜ்ஜு எழுந்துரு டைமாகுது பாரு. இப்ப கிளம்புனா தான் நாம பிளைட் பிடிக்க முடியும். நாளைக்கு இந்நேரம் நாம மாமூ (தாய்மாமா) வீட்டுல இருப்போம். நாளைக்கு நல்லா தூங்கலாம் எழுந்துரு. அம்மி ப்ளீஸ் டூ மினிட். நோ ஜஸ்ட் கேட் அப். அம்....மி . அடி நாயே எழுந்துரு என்றவுடன் எழுந்தாள் ரிஸ்வானா. ரிஸ்வானா, கதீஜா - ஜாபர் தம்பதியர் ஒரே மகள். கதீஜா, நிஜாமின் ஒரே தங்கை. மூவரும் சாகித் திருமணத்திற்கு செல்ல தான் ரிஸ்வானாவை எழுப்பி கொண்டு இருக்கிறார் அம்மா கதீஜா. சாகித் நிக்காஹ் இன்னும் நால் நாள்ல. இன்னிக்கி கிளம்புனா தான். சரிசரி கிளம்புற மா என்று குளிக்க சென்றாள்.

ரிஸ்வானா குளித்து விட்டு சிலிவு லஸ் டாப் அண்ட் ஜீன்ஸ் பேண்ட் போட்டு கொண்டு வெளியே வந்தாள். ஏய் சுடி போட்டு வா . அம்மி ப்ளீஸ் எனக்கு இதுலாம் பிடிக்காது. இந்தமாதிரி வந்த உன் முமானி(அத்தை) திட்டுவாங்க என்னைத்தான். அம்மி முடியாது போ என்று பிடிவாதமாக கூறிவிட்டாள். பிறகு மூவரும் கிளம்பி விமான நிலையம் சென்றனர். பிளைட் ஏறினர்.

ரிஸ்வானா, மார்டன் கேர்ள் தான் மட்டுமே அழகு என்ற எண்ணம் அவளுக்கு. மற்றவர்கள் அவளுக்கு கீழ் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.

இரண்டு மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து அவர்கள் செல்லும் ஊர்க்கு டாக்ஸி பிடித்து சென்றார்கள். அங்கிருந்து 5 மணிநேரம் பயணம். அதில் பயணம் செய்தார்கள். ஐந்து மணிநேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

அங்கு அவர்களை வரவேற்றனர் சாகித் குடும்பதினர். ஆனால், ரிஸ்வானாவை பார்த்து முகம் சுளித்தார்கள். அதை வெளிக்காட்டாமல் பேசினார்கள். பிறகு பிரெஷ் ஆகிவிட்டு வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள் ரிஸ்வானா.

அப்போது அங்கு வீடு கழுவி சுத்தம் செய்து இருந்ததால் இவள் வீழ பார்த்தாள். அவள் வீழாமால் பிடித்தது சாகித்தின் கைகள். அவள் கண்கள் திறந்த போது சாகிதை பார்த்தாள். அவன் அழகில் மயங்கி விட்டாள். பிறகு அவளை விட்ட பிறகு ஏய் பார்த்து வர மாட்டியா? என்றான். அது... அவள் பார்வையின் அர்த்தம் புரியந்து கொண்டான் சாகித். ஹலோ என்று அவள் முகத்தின் முன் சுடக்கு போட்டு என்ன லுக்கு என்று முகத்தை சுளித்து கேட்டான். அவள் ஒன்னும் இல்ல என்று விட்டு சென்று விட்டாள். இவன், ச்சி பொண்ணா இவ ச்சி இப்படி பாத்துட்டு போறா என்று கூறி விட்டு இடத்தை காலி செய்தான்.

ரிஸ்வானாவை சிறு வயதில் இருந்தே மக்மூதாவிற்கு பிடிக்காது ஏன் என்று அவளுக்கே தெரியாது.

ரிஸ்வானா அறையில் நடந்ததை எண்ணி பார்க்க அவளுக்கு என்னவோ செய்தது. பிறகு அவளை பார்க்க பிர்தவுஸ், மக்மூதா வர என்ன பண்ணிட்டு இருக்க ரிஸ்வானா? என்று கேட்டு கொண்டே கட்டிலில் அமர்ந்தார்கள் இருவரும். சும்மா தான் இருக்கேன் என்றாள். பிறகு, பிர்தவுஸ், இவள் தான் சுரையா நம்ம வீட்டுக்கு வர போற புது பொண்ணு. ரொம்ப அழகா இருக்கால என்றவுடன் என்னை விடவா என்றாள் திமிரோடு ரிஸ்வானா. மக்மூதா, உன்னை விட ஆயிரம் மடங்கு அழகு என் அண்ணி போடி என்றாள். ஆனால், ரிஸ்வானா பேசியதில் திமிரு பொறாமை தான்தான் என்ற அகம்பாவம் இருக்கு என்பதை உணர்ந்தாள் மக்மூதா.

ஏய் உன்ன விட என் ஆயிரம் ஆயிரம் மடங்கு அழகு டி என் அண்ணி போடி சைத்தான் என்று அறையை விட்டு வெளியே சென்றாள். பிறகு பிர்தவுஸ் விடுமா என்று கூறி விட்டு சென்று விட்டார்.

ரிஸ்வானா, மக்மூதா கூறியது அவள் காதில் கேட்டு கொண்டு இருந்தது. அவளுக்கு சுரையா மேல் வெறுப்பும் அதிகமானது. இந்த திருமணத்தை நிறுத்தி சாகித்தை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

சைத்தான் அவள் மனதில் குடி கொண்டு என்னன்ன செய்ய போகிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.......

பிறகு அவள் வந்த டையர்டில் தூங்கினாள். ஏய் மக்மூதா எதுக்கு ரிஸ்வானா கிட்ட அப்படி பேசின. பின்ன என்ன அண்ணி ஒன்னு பதில் சொல்லனும் இல்ல அமைதியாக இருக்கனும். அவள் அப்படி சொன்னது கூட பெருசு இல்ல அவள் சொன்ன விதம் தான் தப்பு. இங்க பாரு மக்மூதா எனக்கும் புரியுது அவள் என்ன அர்த்ததில் சொன்னாள் என்பதை. அப்பறம் என்ன அண்ணி ?

அவள் இன்னும் நாள் நாள்ல போக போறா அவகிட்ட போய் எதுக்கு பிரச்சினை பண்ற. இப்ப அவள் கோபப்பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா என்ன பண்ணுவ? இது உன் அண்ணன் ஆசை பட்ட வாழ்க்கை. இது வரைக்கும் எந்த பொண்ணையும் வேண்டான்னு சொன்னவன் இப்ப தான் கல்யாணம் பண்ணி கொள்ள சம்மதம் சொல்லிருக்கா தெரியும்ல. தெரியும் அண்..ணி. அப்பறம் என்ன ? சரிவிடு அவள் மேல் ஒரு கண்ணு வச்சிட்டு இருக்கனும் என்று விட்டு இருவரும் அவரவர் வேலையில் ஈடுபட்டனர்.

அண்ணி வாங்க தொழுகைக்கு நேரமாகுது. அம்மா நீங்கள் தொழுகலையா? நான் தொழுதுட்டே அப்படியே ரிஸ்வானாவை தொழுகை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ரிஸ்வானாவை அழைத்தார் அம்மா. என்ன முமானி? இவங்க கூட போய் தொழு மா என்றார். எனக்கு தொழுகை பண்றது பிடிக்காது என்றாள். அவர்கள் இருவரும் விடுங்க என்றுவிட்டு தொழுக சென்றனர்.

அப்போது சாகித் தொழுகை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்து அம்மா நான் இன்னிலிருந்து லீவு போட்டு இருக்கேன். ஆஹான் சரிப்பா. என்ன எப்படி இருக்கிங்க என்று கேட்டாள் ரிஸ்வானா. ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கேன். ஐ அம் வேரி குட். ம்ம்ம் ஒகே என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.

அங்கு சுரையாவின் போட்டோ எடுத்து ஏய் ராட்சஷி இன்னும் நான்கு நாள் இருக்கு. சத்யமா முடியலடி. ஆனா நீ என்னை இப்படி லவ் பண்ணுவன்னு தெரிஞ்சி இருந்தா நமக்கு மக்னா போட்ட ஒரு வாரத்தில் மேரேஜை பிக்ஸ் பண்ண சொல்லியிருப்ப. ஆனால், வெய்ட் பண்றதுலயும் சுகமிருக்கு டி என்றான் ..

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ரஸியா, சுரையா என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க. டிரஸ் பேக் பண்றடி இன்னும் கல்யாணத்திக்கு இரண்டு நாள் தான் இருக்கு என்றாள். அக்கா என்றாள் வருத்துடன். சுரையா என்னாச்சு மேடம்க்கு. ஒன்னும் இல்ல என்று விட்டு வெளியே சென்று விட்டாள்....

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 13 ❣️

ரஸியா இங்க பாரு டி. போ சுரையா. ஏய் இப்ப என்ன தான்டி உனக்கு பிரச்சினை என்றாள் கோபத்தோடு. ம்ம்ம் ஒன்னும் இல்ல சுரையா. சரிவிடு உனக்கு பிடிச்ச சிக்கன் பிரியாணி செய்திருக்க அத சொல்ல தான் வந்த . உனக்கு வேண்டானா போ நான் மட்டும் சாப்பிடுற என்றாள். ஐ ஐ சிக்கன் பிரியாணியா?

இதையல்லவா முதலில் சொல்லிருக்க வேண்டும் என் சகோதரி அவர்களே! இதை சொல்லதான் வந்த எங்க மேடம் சொல்ல விட்டிங்க. சரிசரி வா போய் சாப்பிடுவோம் என்று இருவரும் சேர்ந்து சாப்பிட்டு எழுந்தனர்.

சுரையா சூப்பரா இருந்துச்சி பிரியாணி. ம்ம்ம் ஒகே டி பக்கி வா நாம அஞ்சு கா விளையாடலாம். ம்ம் ஆமா நாம விளையாடி ரொம்ப நாள் ஆகுது என்று இருவரும் விளையாடி கொண்டிருந்த நேரம் ஜரினா ஒய் கல்யாண பொண்ணு நான் ஜாயின் பண்ணிக்கலாமா. அட வாமா ஜரினா தாராளமாக ஜாயின் பண்ணிகலாம் என்றாள் ரஸியா. மூவரும் விளையாடி முடித்தனர்.

வரவிருக்கும் விபரீதம் தெரியாமல் மகிழ்ச்சியாக இருந்தாள் சுரையா..

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்து கொண்டு இருந்தாள் ரிஸ்வானா. அந்நேரம், ருக்கையா ச்சே எப்பபாரு அந்த சுரையா சுரையா என்று என் அக்கா அவள் புராணத்தை மட்டும் தான் பாடுறா எனக்கு பிடிக்கவில்லை என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

இதை கேட்ட ரிஸ்வானா இது தான் சரியான நேரம். இவளை கரேட் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தி நாம இந்த வீட்டுக்கு அது என்னவோ சொல்லுவாங்கலே..... என்ன அது முதல்ல போய் பேசிடுவோம் என்று தனக்குள் கூறிவிட்டு அவள் இருந்த இடத்திற்கு சென்று ருக்கையா எப்படி இருக்க ?

ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே. ம்ம்ம் குட். ஆமாம் நீ என்ன ரொம்ப சோகமா இருக்க ? என்னாச்சு? அவள் மனதில் உள்ளதை கூற. இவள் எனக்கும் அந்த சுரையாவை பிடிக்கல. சரியான அரை லூசு மாதிரி இருக்கா. அவளை போய் எப்படி சாகித் பிடிச்சது? என்றாள். அவள் எல்லாம் விவராமக கூற.

ஓஹோ இது லவ் மேரேஜ் ஆ என்று கூறி விட்டு. இந்த கல்யாணத்தை நிறுத்துனா தான் நல்லது. அவளை மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வேண்டாம். ஏய் லூசா நீ எப்படி நிறுத்த முடியும். அதல்லாம் முடியும். எப்படி ?? நான் சொல்ற மாதிரி பண்ணா இந்த மேரேஜை நிறுத்தலாம். ம்ம்ம் சரி சொல்லு என்றவுடன். அவள் கூறி முடித்தவுடன் ஹே இந்த ஐடியா வொர்க் ஆகும் என்று இருவரும் வஞ்சக சிரிப்பு சிரித்தார்கள்.

சைத்தான் இன்னும் என்னன்ன செய்ய போகுதோ தெரியல.

டேய் இன்னிக்காது போய் குளி நைட் ஹல்தி(நலங்கு) நியாபகம் இருக்குல டா என்றாள் மக்மூதா. அம்மா பாரு மா இவள் என்னை எப்படி பேசுறா. ஏன் டி அவன் கிட்ட வம்பிழுக்கலனா. விடுடா இன்னிக்கி ஒரு நாள் தான் அப்றம் அவளால் பண்ண முடியாது விடு என்றான் ரியாஸ். ம்ம்ம் சரி.

டேய்! மங்குஸ் தலையா. உன்ன நான் எப்படி வேண்டாலும் கலாய்ச்சிகலான்னு அண்ணி உத்தரவு குடுத்துட்டாங்க. நீ எப்ப பேச ஆரம்பிச்ச? என்று சாகித் கேட்க . உனக்கு மக்னா போட்ட அன்னிலருந்து. அடிபாவி என்று அவள் தலையில் கொட்டி விட்டு சென்றான். அவள் ஆஆஆ சைத்தான் எருமை என்றாள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஏய் போய் குளிச்சிட்டு வா என்றார் அம்மா சுரையாவிடம். போறேன் சொல்லு ரஸியா. அவள் போய் தலைகுளித்து விட்டு வந்தாள். பிறகு அவள் தலை துவட்டி முடித்த உடன் அவள் அம்மா போட்டு இருக்க நகையெல்லாம் கழட்டி வை இதோட நிக்காஹ் அன்னிக்கி தான் போடனும் என்றவுடன் அவள் எல்லாவற்றையும் கழற்றி தன் தங்கையிடம் கொடுத்து பத்திரமா வைடி என்றாள். அவளும் வாங்கி அதை பத்திரமாக பிரோ லாக்கரில் வைத்தாள்.

பிறகு அழகான மஞ்சள் நிற புடவையை உடுத்தி கொண்டு வெளியே வந்தாள். பிறகு ஹல்தி இடுவதற்காக மாடிக்கு அழைத்து சென்றார்கள் ரஸியாவும் ஜரினாவும். அங்கு இருந்தவர்களுக்கு ஸலாம் சொல்லி அவள் இடத்தில் அமர்ந்தாள். நல்ல படியாக முடிந்தது. அவள் அம்மா இனி எங்கேயும் வெளியே போக கூடாது. பிறகு ஜரினாவும் ரஸியாவும் சேர்ந்து மருதாணி இலையை அரைத்து வந்தனர்.

ஜரினா காலிலும் ரஸியா கையிலும் வைத்து விட்டார்கள். வைத்து முடிப்பதற்கு மணி 8 ஆகியது. பிறகு , ரஸியா ஜரினா இருவரும் டிபனை எடுத்து வந்தார்கள். அக்கா உனக்கு நான் ஊட்டி விடுறேன் என்று அவளுக்கு ஊட்டி விட்டாள். இவள் கண்களில் கண்ணீர். அக்கா ஏன் கண்கலங்குது.

இன்னிக்கி ஒரு நாள் தான் ரஸியா நாம இப்படி இருப்போம் நாளைக்கு ஒரு நாள் மண்டபம் அடுத்த நாள் நிக்காஹ் என்றாள் கண்ணீரோடு. ரஸியா அவளை அணைத்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் கழித்து விலகினர். ஏய் சாப்பிடுங்க முதல்ல என்றாள் ஜரினா. அவள் மனதில் ஆனந்தம் மட்டும் தான் இருந்தது. தன் தோழி நன்றாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விடம் துஆ செய்தாள். பிறகு மூவரும் தூங்க சென்றனர்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சாகித் அழகான உடையில் ஹல்தி வைக்கும் இடத்திற்கு வந்தான். அவனை பார்த்தவுடன் ரிஸ்வானா ஒரு நொடி அப்படியே நின்றாள். எதேச்சையாக பார்த்த சாகித். அவளை அருவருப்பான பார்வை பார்த்து விட்டு அவன் இடத்தில் அமர்ந்தான். பிறகு ஹல்தி அழகாய் முடிந்தது. ஆனால் ரிஸ்வானாவும் ருக்கையாவும் சேர்ந்து போட்ட பிளான் சொதப்பல் ஆகிவிட்டது. ச்சே எப்படி சொதப்பல் ஆச்சு. விடு அடுத்த கல்யாணத்தில் பார்த்துக்கலாம் என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர் அனைவரும்.....

சுரையாவின் நினைப்பில் சாகித்தும்; சாகித்தின் நினைப்பில் சுரையாவும் ஆழ்ந்த தூக்கத்திலும் கனவு கண்டு கொண்டு இருந்தார்கள். இவர்களின் கனவு பலிக்குமா?......
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 14 ❣️

காலை......

ஏய் ரிஸ்வானா இந்த பிளான் கண்டிப்பா வொர்க் ஆகும் தானே என்ற ருக்கையாவை பார்த்து ரிஸ்வானா, ம்ம்ம் கண்டிப்பா வொர்க் ஆகும். அப்ப ஒகே. நீ முதலில் சுரையா வீட்டுக்கு கூட்டிட்டு போ என்னை என்றால் ரிஸ்வானா. ம்ம்ம் சரி வா போகலாம். இருவரும் சேர்ந்து சுரையா வீட்டிற்கு சென்றனர்.

சுரையா ஏன் ஏதோ மாதிரி இருக்க? என ஜரினா கேட்க. இல்ல ஜரினா ஏதோ தப்பு நடக்க போதுன்னு மனசு சொல்லுது. ஏய் என்ன டி சொல்லுற. ம்ம்ம் ஆமாம் என்று கண்களில் வந்த கண்ணீரை துடைத்து விட்டு அவர் கிட்ட பேசனும் போல இருக்குடி. ஏன்டி இவ்வளவு நாள் தோனல இப்ப தோனுதா?

இல்ல ரஸி என்னன்னு தெரியல எனக்கு அவர்கிட்ட பேசனும் என்று சிறு குழந்தை போல சிணுங்கினாள். ஏய் என்ன தான் ஆச்சு உனக்கு என ரஸியா கேட்க அவள் ஏதும் பேசாமல் ரஸியாவின் மடியில் படுத்து கொண்டாள். அவளின் செயல் இருவருக்கும் புதிதாக இருந்தது.

ருக்கையாவும் ரிஸ்வானாவும் சுரையா வீட்டிற்கு வந்து இறங்கினர். பின்னர் உள்ளே வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். ரஸியா, யாரோ வந்திருக்காக போல என்றவுடன் சுரையா எழுந்தாள் அவள் மடியில் இருந்து.

பிறகு ஹாலிற்கு சென்று பார்த்து அவர்களை ரூம்க்கு வாங்க என்று அழைத்து சென்றாள். பிறகு ரிஸ்வானா அவளை அறிமுகம் செய்து கொண்டு உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும். ம்ம் பேசுங்க. இல்ல தனி..யா என்றவுடன் வெளியே போங்க என்று அனைவரையும் அனுப்பி விட்டாள். ம்ம்ம் இப்ப சொல்லுங்கள்...

நீ தப்பா எடுத்துக்க மாட்டேன் என்றால் நான் சொல்லுவேன். தப்பா எடுத்துக்க மாட்டேன் தாராளமாக சொல்லலாம். நீங்க நிக்காஹ் பண்ணிக்க போற சாகித் நல்லவன் கிடையாது என்றவுடன் இவள் அதிர்ந்தாள். உன்னை அவனுக்கு சுத்தமா பிடிக்கல. அவனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கு. அதனால் இந்த நிக்காஹ் நிறுத்திடு நீயே என்றவளை கோப பார்வை அவள் மேல் வீசி அவள் கன்னங்கள் சிவக்கும் அளவிற்கு ஓங்கி ஒரு அறை விட்டாள். அதில் அவள் காது கொய் என்று சத்தம் கேட்க கன்னத்தில் கைவைத்தாள்.

பிறகு, இந்த அடி போதும் நினைக்கிறேன். இதுலையே புரிஞ்சி இருப்ப நினைக்கிற கிளம்பும் என்று நிதானமாக சொன்னாள். ரிஸ்வானா அவளை முறைத்து விட்டு ருக்கையா வா போலாம் என்று கூறி விட்டு விறுவிறுவென நடந்தாள்.

ஏய் சுரையா என்னாச்சு? இப்படி போறா? விடு அது தேவையில்லாத விஷயம். வா நாம தாயம் விளையாடலாம் என்று மூவரும் தாயம் விளையாட தொடங்கினர். ஆனாலும் அவள் மனதில் கவலை இருந்தது அதை வெளிக்காட்டாமல் இருந்தால் சுரையா.

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். இவள் சாகித்தை பார்க்க சென்றாள். அவன் தன் நண்பர்கள் உடன் மாடியில் பேசி கொண்டு இருந்தான். அவள் சாகித் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும். என்ன பேசனும் என்று வெறுப்பாக கேட்டான். தனியா . பேசு நான் போறேன் என்றான். உன்கிட்ட தான் பேசனும். ம்ம்ம் சொல்லு. இந்த பொண்ணு உனக்கு வேண்டாம் என்றவளை பார்த்து முறைத்தான்.

அவளை நான் இன்னிக்கி பார்க்க போனேன். அவள் உன்னை இந்த சொத்துக்காக மட்டும் தான் மேரேஜ் பண்ணிக்க போறாளா. அப்பறம் உன்ன தனியாக கூப்பிட்டு போய்டுவாலா நான் அவளை திட்டுனதுக்கு என்னை அறைந்து விட்டாள் என்று அவள் தன் கன்னத்தை காட்ட அவன் மனதிற்குள் இன்னும் ரெண்டு அறைவிட்டு இருந்தா நல்லா இருந்து இருக்கும். பிறகு கல்யாணத்தை தானே நிறுத்தனும் நிறுத்திட்டா போது என்றவனை பார்த்து ரொம்ப தேங்க்ஸ் என்று விட்டு சென்றாள்.

இவன் சொன்னதை கேட்ட இவன் நண்பன் டேய் ! உனக்கு அறிவில்ல என்றவனை தன் வாயில் வைத்து உஷ் கண்களால் சைகை காண்பித்து அவள் போய்ட்டாளா இல்லையா பார் என்றான். போய்ட்டா என்றான் ராம் .

டேய்! அவள் என் அத்தை பொண்ணு அவ என்னை லவ் பண்றான்னு நினைக்கிற இந்த கல்யாணத்தை நிறுத்த பிளான் போட்டு இருக்கா. சுரையா கிட்ட ஏதோ சொல்லி இருக்கா அதான் ப்ளார் ஒன்னு உட்டு இருக்கா. இப்ப எதுக்கு நான் அப்படி சொன்னேன்னு தானே யோசிக்கிற எல்லாம் காரணமா தான் என்று முடித்தான். ம்ம்ம் சரி டி மச்சி என்றார்கள் நண்பர்கள்.

ரிஸ்வானா தன் அறைக்கு வந்தமர்ந்தாள். கல்யாணம் நின்று விடும் என்ற நம்பிக்கையில். ஆனால் சுரையாவின் மேல் வெறுப்பு அதிகமானது. ஏய் சுரையா என்னையே அடிச்சல உன் லைப் இனி காலிடி என்று வஞ்சகத்தோடு சிரித்தாள். விதி அவளை பார்த்து சிரித்தது.

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

மணி 6...

ஏய் டைம் ஆயிடுச்சு எல்லாரும் கிளம்புக மண்டபத்திக்கு என்று சொன்னவுடன் அனைவரும் கிளம்பினர். சுரையா கவலையுடன் தன் பிறந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு புர்கா அணிந்து கொண்டு மறுபடியும் சுற்றி பார்த்தாள். அந்த வீட்டில் சிறு வயதில் தன் தம்பி தங்கை உடன் விளையாடினது அவள் கண்முன் வந்தது. பிறகு ஒரு அறைக்கு சென்றாள் அங்கு தான் தன் தாதா தாதி புகைப்படம் இருந்தது.

அதை பார்த்து, தாதி தாதா நான் போய்ட்டு வரேன் உங்கள் மகன் கடைசி வரை திருந்த மாட்டாரு. என்னால் முடிந்த அளவு எல்லாம் பண்ணி பாத்துட்ட இனி அல்லாஹ் தான் இனி அவரை மாத்தனும் சரி தாதி தாதா நான் போய்ட்டு வரேன் என்று கலங்கிய தன் தாதா தாதி போட்டோவிற்கு ஒரு முத்தம் தந்து விட்டு கண்ணீரோடு அறையை விட்டு வெளியே வந்தாள்.

சிறிது நேரத்தில் காரும் வந்து விட்டது அதில் ஏறி மண்டபத்திற்கு சென்றனர் அனைவரும். மண்டபம் வந்தவுடன் அவளை மணமகள் அறைக்கு அழைத்து சென்றார்கள். அவள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.

அவளுள் ஏதோ ஒரு உணர்வு. நேரம் நெருங்க நெருங்க அவளுக்கு சந்தோஷமும் கவலையும் ஒன்று சேர்ந்து வாட்டியது.

மண்டபத்தை அழகாய் அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர் வேலை ஆட்கள். மண்டபத்தின் வாசலில், அனைவரையும் கவரும் வகையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சுரையா ஏன்டி உம்ன்னு இருக்க என்று கவலையோடு கேட்டாள் ஜரினா. சாகித் பாக்கனும் டி என்றாள். ஏய் ஏன்டி காலையில் இருந்தே இதே தான் சொல்ற என்னாச்சு உனக்கு? தெரியலை டி என்று கண்ணை துடைத்தாள்.

பிறகு , ஜரினா வெளியே வந்து சாகித்திற்கு போன் செய்தாள். அவன் எடுத்தான். ஹலோ யாரு? என்று கேட்க நான் ஜரினா சுரையா தோழி என்றாள். ம்ம்ம் சொல்லுங்கள்.

சுரையா காலையில் இருந்து உங்ககிட்ட பேசனும் உங்களை பாக்கனும் சொல்லி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறா. ஏன் தெரியலை. நேத்திலேருந்தே அவள் சரியில்லை. தப்பா ஏதாது நடந்துடுமோன்னு பயப்படுறா. அதுவும் உங்க அத்தை பொண்ணு எங்கள் வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்னும் அவள் முகத்தில் கவலை அதிகமாயிடுச்சு ப்ளீஸ் அவளை பழைய நிலைமைக்கு கொண்டு வரதுக்கு உங்களால் மட்டுமே முடியும்.

அவ்வளவு தானே நான் பாத்துக்கிற விடுங்கள் என்றான். இவளும் நிம்மதியுடன் போனை கட் செய்து கொண்டு உள்ளே சென்றாள்.

டேய் இப்ப யாருடா போன்ல என்ற வினோத்தை பார்த்து சுரையாவோட பிரண்ட்ஸ் ஜரினா தான் டா என்றான் கவலையுடன். என்ன மச்சி ஏன் கவலையா இருக்க என்று ராம் கேட்க சுரையா என்னை பாக்கனும் பேசனும் சின்ன புள்ளை மாதிரி அடம் பிடிச்சிட்டு இருக்காலாம் டா ஏதோ தப்பு நடக்க போதுன்னு பயம்படுறா.

அதுவும் ரிஸ்வானா போய் வந்ததிலிருந்து இன்னும் கவலைப்பட ஆரம்பிச்சு இருக்கா போல என்று கவலையுடன் சொன்ன தன் நண்பனை பாத்து முதல்ல நீ போய் சிஸ்டர் கிட்ட பேசிட்டு வாடா என்றான் ரமேஷ். ம்ம்ம் பேசிட்டு வரேன் இருங்கள் என்று விட்டு தன் போனை எடுத்து கொண்டு பால்கனியில் நின்று சுரையாவிற்கு போன் செய்தான்.

ரிங் அடித்தது. அவள் யாரென்று பார்த்தாள் சாகித் தான் . உடனே எடுத்து பேசினாள். என்ன பண்றிங்க என்றவுடன் மண்டபத்துக்கு கிளம்பிட்டு இருக்கோம் என்றான். இவள் ம்ம்ம் சரி . நான் உன்கிட்ட ஒன்னு கேட்கடா. ம்ம்ம். என் அத்தை பொண்ணு என்ன சொன்னா சொல்லு உண்மைய மட்டும் சொல்லனும் என்றான்.

இப்ப எதுக்கு அது விடுங்கள் என்றாள். சொல்லுமா என்றான். அவள் முடியாது என்று விட்டாள். ரொம்ப கெஞ்சினான். அவள் சொன்ன பாடில்லை அவன் ஏய் சொல்ல போறியா இல்லையா ராட்சஷி என்றான் செல்ல கோபத்தோடு. சரி சொல்றேன் என்று அந்த எருமை என்கிட்ட வந்து நீங்க நல்லவன் கிடையாதா உங்களுக்கு பல பொண்ணுங்களோட தொடர்பு இருக்குனா அதான் ஒரு அறை விட்ட . அவ யாரு உங்களை பற்றி தப்பா பேசுறதுக்கு. அவளுக்கு என்ன உரிமை இருக்கு என்று பொரிந்து தள்ளினாள்.

இவனுக்கு பேச்சு வரவில்லை பிறகு தன்னை சமன்படுத்தி கொண்டு ஏய் இதுக்கு தான் நீ பீல் பண்ணிட்டு இருக்கியா. இங்க பாருமா தப்பா ஏதும் நடக்காது புரியுதா. நீ தான்மா என் லைப். உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் மா மீதி நாம நாளைக்கு பேசலாம் என்று முடித்தவன். பிறகு கொஞ்சம் சிரிமா என்றான். அவள் சிரிச்சிட்டு தான் இருக்கேன் என்றாள். இல்லையே நீ கவலை படுற மாதிரி இருக்கே என்றான். சிரிச்சிட்டு தான் இருக்கே லூசு. என்னது லூசா. ம்ம்ம் ஆமாம் லூசு தான். சரி விடுங்கள் என்றாள். என்ன விடுங்கள் என்றவனை போடா பக்கி என்று போனை வைத்தாள்.

அவள் அப்படி சொன்னவுடன் பக்கின்னா சொல்ற நாளேக்கு இதெல்லாம் சேர்த்து வச்சிக்கிற இரு என்று மனதில் நினைத்து கொண்டு போனை பார்த்து புன்னகை சிந்திவிட்டு மண்டப்த்திற்கு கிளம்ப ஆயுத்தம்மானான்....​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 15 ❣️

போனை தன் பேக்கட்டில் வைத்து கொண்டு மண்டபத்திற்கு கிளம்ப அழகாய் ரெடியாகி இருந்தான். அவன் அம்மா வினோத் ரமேஷ் ராம் நீங்கள் மூன்னு சாகிதோட ஒரே காருல வந்துடுங்க சரியா என்றவுடன் சரிங்க ஆண்டி நாங்க வந்து விடுகிறோம் என்று அனுப்பி வைத்தான் ராம். பிறகு அவர்கள் அனைவரும் காரில் ஏறி சென்றனர். இவர்கள் நான்கு பேரும் ஒரு காரில் ஏறி சென்றனர்.

என்றும் கலகலப்பாக பேசும் சாகித் இன்று அமைதியாக இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. டேய் என்னடா இது எப்பயும் நீதான் பேச ஆரம்பிப்ப இப்ப ரொம்ப அமைதியா இருக்க என்னாச்சு என்று கேட்டான் வினோத்.

ஒன்னும் இல்ல டா என்றான் கவலையுடன். டேய் இப்ப ஏன் ஏதோ கவலையா இருக்கே என்று ராம் கேட்க ஒன்னுமில்ல சொல்றேன் அப்பறம் என்ன என்றான். டேய் நீ சிஸ்டர் கிட்ட பேசினதிலிருந்து இப்படி தான் கவலையா இருக்க நாங்க அப்பத்திலிருந்து கவனித்து கொண்டு தான் இருக்கின்றோம் என்றவுடன்.

நான் என்னடா பண்ண அவளுக்கு என் மேலே அவ்வளவு நம்பிக்கை வச்சி இருக்கா டா சுரையா. என்னடா சொல்ற புரியல என்றான் ரமேஷ். அந்த பண்ணாட என்றவுன் யாருடா பண்ணாட என்று ராம் கேட்க அதான் அந்த ரிஸ்வானா கழுதை என்றான்.

அவளுக்கு என்ன இப்ப என்றான் வினோத். அந்த பண்ணாட சுரையா வீட்டுக்கு போய் சுரையா கிட்ட "நான் நல்லவன் இல்லையா நான் ஒரு பொம்பிளை பொறுக்கி சொல்லி இருக்கா டா " என்றான் மனதில் வலியோடு. டேய் அவளா பொண்ணா ச்சி அதுவும் உன்னை போய் ச்சே என்றான் ராம்.

சிஸ்டர் என்ன சொன்னாங்க அதுக்கு என்று கேட்டவுடன் சாகித் கண்கள் கலங்கி விட்டன. பிறகு ப்ளார் அறஞ்சிட்டா சுரையா அதான் அந்த பண்ணாட அன்னிக்கி சுரையா அடிச்சிட்டா சொன்னா என்றான் மறுமுறையும் வலியோடு. டேய் சிஸ்டர் ஒரு அடியோட விட்டது தப்பு டா இன்னும் ஒரு நாலு அடி அடிச்சிருக்கனும் என்றான் வினோத்.

இன்னு ஒரு அடி அடிச்சி இருந்தா அவள் காது செவிடு ஆகியிருக்கும். அவள் அடிச்ச கைரேகை இன்னும் அந்த பண்ணாட முகத்தில் பதிஞ்சி இருக்கு என்றான் சாகித். இதுவே வேற பொண்ணா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பானே தெரியலை ஆனால் இவள் என்னை அந்த அளவுக்கு நம்புறா .

நான் அவள் இடத்தில் இருந்து இருந்தா என்ன பண்ணுவன்னு தெரியலை. ஆனால் அவள் ஒரே அடியிலே புரிய வச்சிட்டா. .இத்தனையும் பண்ண அவளுக்கு நான் என்ன பண்ண போறேன் தெரியலை டா என்றான் சாகித் கண்ணீரோடு. அவனை ஆறுதலாக அணைத்தான் ரமேஷ். நீ சிஸ்டர்க்கு பண்ண வேண்டியது ஒன்னு தான் யாருக்காகவும் நீ அவங்கள விட்டுக்கொடுக்க கூடாது. சிஸ்டர் ஏதாது தப்பு பண்ணா அவங்கள தனியா கண்டி புரியுதா.

ம்ம்ம் புரியுது. அவளை மிஸ் பண்ணிடுவோமோ பயமா இருக்கு டா. இங்க பாரு சிஸ்டர் உனக்கு தான். அந்த மாதிரி எதுவும் நடக்காது பீல் பண்ணாத என்றான் வினோத். அவள் இன்னும் கவலையா தான் இருக்கா. அவள்க்கு தைரியமாக ஆறுதல் சொல்லிட்ட ஆனால் இப்ப முடியலடா என்றான் சோகத்தோடு. மச்சி விடு எல்லாம் சொல்வ் ஆகும் இன்னு ரெண்டு நிமிஷத்தில் மண்டபம் வந்துடும்.

மண்டபம் வந்தவுடன் அனைவரும் இறங்கினர். அவனை அழைத்து கொண்டு மணமகன் அறைக்கு சென்றனர். இங்கு சுரையா சாகித்தோடு பேசிய பின் கொஞ்சம் சிரித்த முகத்தோடு இருந்தாள். ஆனாலும் அவள் சற்று கவலையுடனே இருந்தாள்.

அவள் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஜரினா. ஏய் உன் ஆள்ட்ட பேசிட்டே பிறகு மூஞ்சி பிரைடா இருக்கு. போடி பக்கி என்றாள். சுரையா மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க என்றவுடன் ம்ம்ம் சரி டி என்றாள்.

அங்கு மக்மூதாவும் பிர்தவுஸ் இருவரும் வந்தனர். என்ன கல்யாண பொண்ணே எங்க வீட்டுக்கு வர ரெடியா? என பிர்தவுஸ் கேட்க. ம்ம்ம் போலாமே நான் ரெடி. நிக்காஹ் இப்பவே வச்சிடுங்க போலாம் என்றாள் சுரையா. அடிபாவி பக்கி விட்டா இப்பவே கிளம்பிடுவ போல என்றாள் ரஸியா.

எல்லாரும் மகிழ்ச்சியுடன் பேசி கொண்டு இருந்தனர். இதை பார்த்து எரிந்து கொண்டு இருந்தது ஆறு கண்கள். அது வேறு யாரும் இல்லை ரிஸ்வானாவும் அவள் அப்பாவும் அம்மாவும் தான். ரிஸ்வானா அப்பாவிற்கு தன் மகள் என்ன ஆசை படுகிறாளோ அதை நிறைவேற்றுவது அவர் வழக்கம். ரிஸ்வானா அப்பாவின் செல்லம். அதனால் அவள் என்ன கேட்டாலும் மறுப்பு ஏதும் சொல்லாமல் செய்து கொடுப்பார். அவள் அம்மாவும் அப்படி தான்.

இரவு சாப்பிட சென்றார்கள். அவள் அறைக்கே அவளுக்கான உணவு வந்தது. அவளும் சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் பேச்சை தொடர்ந்தார்கள்.

சாகித் சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்தான். ரிஸ்வானா அவன் அருகில் வந்தமர்ந்தாள். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. சாகித் எழுந்து செல்ல முயற்ச்சிக்க ரிஸ்வானா அவன் கையை பிடித்து உட்கார் என்றாள். அவனும் உட்கார்ந்தான். நீ எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த போற என்றாள்.

அவன் உன்கிட்ட ஒன்னு சொல்லவா. சுரையா சொத்துக்கு ஆசை படும் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை நான் அவளை நிக்காஹ் பண்ணறதுல எந்த மாற்றமும் இல்லை. அவள் தான் என் லைப். என்னை மறந்துட்டு வேற நல்ல பையனா பாத்து மேரேஜ் பண்ணிக்கோ என்று எழுந்து செல்ல அவன் கையை பிடித்தாள் அவன் கோபப்பட்டு கன்னத்தில் அறைவிட்டான்.

ரிஸ்வானா, கண்கள் சிவக்க இந்த கல்யாணம் நடக்காது நான் தான் உன்னை மேரேஜ் பண்ணிக்குவேன் . நீதான் என் ஹஸ்பண்டு நான் எப்பவோ முடிவு பண்ணிட்ட என்றாள் . உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ என்று கோபத்தோடு கூறிவிட்டு சென்றான்.

விதி இவர்களின் பேச்சை கேட்டு சிரித்து கொண்டு இருந்தது.....

இரவில் ஒரு சில சடங்குகள் நடந்தன. ரிஸ்வானா இந்த திருமணம் எப்படியாது நிறுத்திடனும் ருக்கையா. ஐடியா சொல்லு என்ற போது அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவளிடம் அதை சொல்லி . ம்ம்ம் வொர்க் அவுட் ஆகும் என்றாள் ருக்கையா.

காலை....

ஒவ்வொரு சொந்தமும் திருமணத்திற்கு வர சாகித்தின் அம்மாவும் அப்பாவும் சுரையாவின் அம்மாவும் அப்பாவும் வரவேற்று கொண்டு இருந்தனர். சாகித்தின் மாமா பிலால் சமையல் ஆட்களை கவனித்து கொண்டு இருந்தார். இப்படி அவரவர் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

ரிஸ்வானா, இன்னும் ரெண்டு மணி நேரத்தில் நிக்காஹ் எப்படியாவது நிறுத்திடனும். அச்சோ எப்படி யோசித்தாலும் ஐடியா கிடைக்க மாட்டேன் என்கிறது ச்சே என்று அங்கிருந்த மேசையில் தன் கைகளால் அடித்தாள்.

ஹே ரிஸ்வானா ரிலாக்ஸ் கண்டிப்பா இந்த நிக்காஹ் நிக்கும் இந்தா இந்த பாலை குடி . குடிச்சிட்டு தெம்பா யோசிக்கலாம் என்று அவளிடம் நீட்டினாள். அவள் நீ சொல்றதும் கரெக்ட் தான் கொடு என்று பாலை குடித்தாள்.

பால் குடித்த இரண்டு நிமிடங்களில் ரிஸ்வானாவிற்கு தலைசுற்ற ஆரம்பித்தது. ஏய் என்னடி கலந்த என்று ருக்கையாவை பார்த்து கோபத்தோடு கேட்டாள். ம்ம்ம்ம் மயக்க மருந்து தான் கலந்த இன்னும் ரெண்டு மணிநேரம் மயக்கத்தில தான் இருப்பே என்றவுடன் அவள் சரிந்து விழுந்தாள்.

அப்போது பிர்தவுஸ் மக்மூதா இருவரும் வந்தார்கள். அக்கா பிளான் சக்ஸஸ் என்று கை தூக்கி காட்டினாள் ருக்கையா. பிறகு ருக்கையா ரொம்ப தேங்க்ஸ் இந்த ஹெல்ப் நான் என்னிக்குமே இதை மறக்கு மாட்டேன் என்றாள் கண்ணீர் மல்க. ஹேய் இது நம்ம சாகித் ஆசை பட்டது மக்மூ. நம்ம வீட்டு செல்ல புள்ளை சாகித் தானே.

அவன் ஆசைபட்ட வாழ்க்கை டி. ம்ம்ம் ஆமா இப்ப கேட்டா என்ன சொல்றது என மக்மூதா கேட்க தூங்கறா சொல்லிக்கலாம் என்றாள் பிர்தவுஸ். ம்ம்ம் சரி என்று அவளை சரியாக படுக்கு வைத்து விட்டு அவர்கள் வெளியேறினர்.

பிறகு மூவரும் சுரையாவின் அறைக்கு சென்று அவளை அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர். அவளை அழகான தேவதையாக மாற்றினர். அவர்கள் தங்களுக்கு காலை உணவு சாப்பிட எடுத்து வரு சென்றார்கள். சுரையா ரஸியாவிடம் தன் போனை நீட்டி ரஸியா இதை போய் அவர் கிட்ட கொடுத்துட்டு வரியா. என்கிட்ட வைக்க இடமில்லை அதான் என்றாள்.

ம்ம்ம் கொடுக்கா என்று வாங்கி கொண்டு சாகித் அறையை நோக்கி சென்றாள். உள்ள வரலாமா என்று கேட்டாள் ம்ம்ம் வரலாம் என்றான் சாகித். அவள் உள்ளே சென்று மாமா அக்கா அவள் போன் உங்க கிட்ட கொடுத்து வச்சி இருக்க சொன்னா வீட்டுக்கு வந்து வாங்கிக்கிறாலா என்று அனிடம் நீட்டினாள். அவன் சிரித்து கொண்டு அதைவாங்கி தன் பெக்கட்டில் வைத்தான்.

மாமா உங்கள் கிட்ட கொஞ்சம் பேசனும். ம்ம்ம் சொல்லு. இது வரைக்கு அக்கா சின்ன வயசில் இருந்து எதுக்கும் ஆசை பட்டது கிடையாது. அவள் ஆசைபட்டது அவளுக்கு கிடைச்சது கிடையாது. அவள் இதுவரை படகூடாத கஷ்டம் எல்லாம் பட்டு விட்டாள். இனி அவள் எதுக்காகவும் அழக்கூடாது. அவளை நல்லா பார்த்து கொள்வீர்கள் தானே என்று கேட்டாள்.

இங்க பாரு ரஸியா அவளை நல்லா பார்த்துக்குவேன். புரியுதா ம்ம்ம் இப்ப நீ ஜாலியாக இரு என்றான் சாகித். சரி மாமா நான் கிளம்புற என்று தன் அறைக்கு சென்றாள்.

ஹே ரஸி நீயாது சொல்லு உ1ன் அக்கா கிட்ட சாப்பிடுன்னு. அக்கா கொஞ்சம் சாப்பிடுக்கா எனக்கு வேண்டா ஒரு நிமிஷம் இரு என்று போனை எடுத்து ஒரு அவள் போனை எடுத்து சுரையாவிற்கு கால் செய்தாள். சுரையாவின் போன் அட்டன் செய்தான்.

ரஸியா அவளிடம் நீட்டினாள். யாரு என் கேட்க சுரையா காதில் வை என்று கூறியவுடன் அவள் வாங்கி காதில் வைக்க சாகித் ஹலோ என்றவுடன் இவள் சாகித் என்று புரிந்து கொண்டாள். இவள் முகத்தில் அத்தனை புன்னகை விரிந்தது. அவள் ஹலோ நான் அப்பறம் பேசுற என்று வைத்து விட்டாள். அவன் மேடம் உனக்கு நைட் வச்சிக்கிற கச்சேரிய என்று புன்னகைத்து விட்டு தன் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தான்.

அக்கா இப்ப சாப்பிடு ம்ம்ம் கொடு என்றாள். அடிப்பாவி அக்கா பாத்திங்கலா மாமா கிட்ட பேசுன உடனே மேடம் சாப்பிடுறாங்க. ஏய் அப்ப சாகித் கிட்ட பேசனும் சொல்லி இருந்தா நாங்களே கால் பண்ணி கொடுத்து இருப்போம். அக்..கா என்றாள் . சுரையா வழியுது தொடச்சிக்கோ என்றாள் ஜரினா. ஏய் போடி என்றாள் வெட்கத்தோடு. ஓஹோ மேடத்திக்கு வெட்கத்த பாருங்கள் என்று கோரஸாக கலாய்த்தார்கள்.​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 16 ❣️

ஏய் என்ன இங்கே அரட்டை டைம் ஆகுது சுரையாவை அழைச்சிட்டு வாங்க என்றார் மும்தாஜ். பிறகு அவளை அழைத்து கொண்டு சென்றார்கள். அங்கு அவளிடம் கொடுத்த நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டு சம்மதம் தெரிவித்தாள்.

அதே போல் சாகித்தை மசூதிக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவனும் கையெழுத்திட்டு சம்மதம் தெரிவித்தான். பிறகு அவனை மண்டபத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அவனை சுரையா முன் அமர வைத்து சில சடங்குகள் செய்து முடித்தனர். அப்போது தான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ரிஸ்வானா மயக்கம் தெளிந்து வெளியே வந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி. அங்கிருந்த ஒரு பொருளை கீழே போட்டு உடைத்தாள் கோபத்தில். உங்களை நான் பிரிக்க தான் போறேன் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டு அதற்கான வேலையில் ஈடுபட தொடங்கினாள்.

இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்ல வெளியே வந்தவுடன் . ரஸியா சுரையாவின் கையை பிடித்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெளியே வந்தது இருவருக்கும். இருவரும் அணைத்து கொண்டு அழுதார்கள்.

அவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை யாராலும். பிறகு சாகித் சுரையாவின் தோலில் கைவைத்து அழைத்தான். அவள் விலகவில்லை. சிறிது நேரம் கழித்து ரஸியாவே விலகினாள். சாகித் சுரையாவின் கைபிடித்து வாம்மா போகலாம் என்றான். அக்கா என்னை விட்டு போகாத ப்ளீஸ் என்று கெஞ்சினாள். சுரையாவிடம் வார்த்தைகள் இல்லை.

சாகித், ரஸியா உன் அக்கா எங்கயும் போகல. நீ எப்ப நினைக்கிறியோ அப்ப வந்து பாத்துட்டு போகலாம். ஒரு போன் போட்டா அக்காவும் நானும் வரோம் உன்ன பாக்குறதுக்கு ஒகேவா. கண்ண தொட . நீ சிரிச்சா தான் உன் அக்கா முகத்திலயும் சந்தோஷம் தெரியும்.

பிறகு அவள் சிரித்தாள். அப்பாடா ஒரு வழியா சிரிச்சிட்டே என்றான். பிறகு சுரையாவை அழைத்து கொண்டு அவர்களுக்கு மட்டும் தனியாக காரில் ஏறினர் இருவரும்.

அவன் தோலில் சாய்ந்து அழுது கொண்டு இருந்தாள். இவன் ஏன் இன்னும் அழுகிறாய்? என்று கேட்க அவள் ஏதும் சொல்லவில்லை. ரஸியாவை வீட்டுக்கு வர சொல்லட்டா.

"அவள் வேண்டாம்"

"அப்பறம் எதுக்கு அழுகுற "

" இல்லை சாப்பிடும் போது ஐஸ்கிரீம் வச்சாங்களா நான் வர அவசரத்தில் சாப்பாட மட்டும் சாப்பிட்டு அதை விட்டுவிட்டு வந்துட்டேன். எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடனும் தோனுது. அதுவும் எனக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி பிளேவர்" , என்றாள்.

"அடிப்பாவி அப்ப உன் வீட்டை விட்டு வரோம் நினைத்து அழுகவில்லையா?"

" இல்லை"

" என்னது இல்லையா?"

"ம்ஹூம் இல்லை என தலையசைத்தாள்"

"ஏன்?"

" எல்லா பெண்களும் ஒரு காலகட்டத்தில் தன் பிறந்த வீட்டை விட்டு பிரிந்து போய் தான் ஆகனும். இது தான் எதார்த்தம். அதை ஏத்துக்க தான் மாட்டேன் என்கிறோம் நாம். அவளும் அழக்கூடாது என்று தான் நினைத்தாள் ஆனால் முடியவில்லை...."

இவளின் பேச்சை கேட்டு சற்று பிரம்மித்து அவளை பார்த்து கொண்டே இருந்தான்.

" என்னப்பா அப்படி பாக்குற?" என்றவுடன்

"ம்ம்ம் ஒன்னுமில்லை" என்றான்.

" டேய் இது காரு உன் ரோமான்ஸை வீட்டுல போய் வச்சிக்கோடா. முடியலடா சாமி" என்றான் வினோத்.

" ஈஈஈ என்று சாரி மச்சி" என்றான்.

" எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்" என்றாள்.

"நாளைக்கு வாங்கி தரேன்"

"இல்லை இப்பவே வேண்டும்".

" ப்ளீஸ் மா நாளைக்கு வாங்கி தரேன் "

"ஹீம் சரி" என்று அவன் தோலில் சாய்ந்து கொண்டாள். அவள் மனதில் ஏதோ ஒரு கவலை இருந்ததை அவன் புரிந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் வீடு வந்தது. இருவரும் இறங்கினர். இருவரையும் உள்ளே அழைத்து சென்று ஒரு சில சடங்குகள் நடந்தன.

பிறகு அவளை சாகித்தின் அறையில் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் "என் நகையை காணோம்" என்று சத்தமிட்டாள் ரிஸ்வானா.

அனைவரும் அதிர்ந்து எங்கம்மா போட்ட என்று கேட்டார் மும்தாஜ். தெரியலை முமானி. எல்லா இடங்களிலும் தேடினியா. ம்ம்ம் எல்லாருடைய பேக்லயும் செக் பண்ணிட்ட இன்னும் சுரையா பேக்க தான் செக் பண்ணணும் என்றவுடன் அவள் ம்ம்ம் போய் செக் பண்ணுங்க ரிஸ்வானா என்றாள்.

அவளும் அவள் பையை செக் செய்து விட்டு , அதிலிருந்து தன் நகையை எடுத்தாள் ரிஸ்வானா. அனைவரும் அதிர்ந்தனர்.

சுரையாவிற்கு பேரதிர்ச்சி யா அல்லாஹ்! உன் மேல் ஆணையாக நான் இதை எடுக்கவில்லை. அதை நீயும் அறிவாய் இதிலிருந்து என்னை காப்பாற்ற உன்னால் மட்டுமே முடியும் என்று மனதில் இறைவனிடம் வேண்டி கொண்டாள்.

ரிஸ்வானா அவள் அருகில் வந்து அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். அவளுக்கு சாதகமாக பேச யாருமில்லை. எல்லாரும் ரிஸ்வானா அடித்தது தான் சரியென்று நினைத்தனர்.

எதுக்கு என் நகையை எடுத்த ? என் அண்ணி ஒன்னும் இந்த நகையை எடுக்கவில்லை என்றார்கள் மக்மூதா ருக்கையா பிர்தவுஸ். ஏய் சும்மா இரு என்றார் மும்தாஜ். மூவராலும் ஏதும் பேச முடியவில்லை. அவள் அமைதியாக நான் எடுக்கவில்லை என்றாள். அப்பறம் எப்படி உன் பேக்கில் வந்தது? எனக்கு தெரியாது என்றவுடன் மும்தாஜ் அவளை அறைந்தாள்.

கடைக்கு சென்று இருந்த சாகித் மும்தாஜ் அடித்ததை பார்த்தவுடன் அம்மா என்று கத்தினான். எதுக்காக இப்ப சுரையாவை அடிச்சிங்க? என்றான் கோபத்தோடு. ரிஸ்வானா உடைய நகையை எடுத்திருக்கா என்றார். இல்லை இந்த நகையை சுரையா எடுக்கவில்லை.

சுரையா பொய் சொல்றா நம்பாதே என்றார் நிஜாம். என் மனைவி பற்றி எனக்கு தெரியும் . மற்றவர்கள் சொல்லிதான் தெரிய வேண்டும் என்று இல்லை எனக்கு என்றான் சிவந்த கண்களோடு.

ரிஸ்வானா , நல்ல குடும்பத்திலிருந்து வந்திருந்தா எல்லா தெரிஞ்சி இருக்கும் என்றவுடன் ப்ளார் என்று ஒரு அறை விட்டாள் சுரையா. தப்பு பண்ணது நீ அடிக்கறது அவளையா என்றார் மும்தாஜ்.

சுரையா கண்கள் சிவக்க ஏய் என்று விரல் காட்டிவிட்டு உனக்கு என் மேலே கோபமிருந்தா என் மேல காட்டு அதை விட்டுவிட்டு என் குடும்பத்தை பத்தி ஏதாது சொன்ன நடக்கிறதே வேற என்றாள் கண்களில் ஆவேசத்தோடு. இதுக்கு மேலே நான் பேச விரும்பவில்லை என்று தன்னறைக்கு சென்றாள்.சாகித் வெளியே சென்றான்.

பிறகு சுரையா தன் துணிகளை எடுத்து பீரோவில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள். அப்போது மக்மூதா பிர்தவுஸ் ருக்கையா மூவரும் அவள் அருகில் வந்தார்கள்.

அட வாங்க என்ன பண்ணிறிங்க என்றாள் சுரையா சிரித்த முகத்தோடு. ஏய் உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா? என கேட்டாள் பிர்தவுஸ்.

தப்பு பண்ண அவளே சந்தோஷமா இருக்கும் போது நான் மட்டும் அழனுமா என்ன? என்று கேட்டாள். இவளின் பேச்சை கேட்டு நீங்க சொல்றதும் கரெக்ட் தான் அண்ணி என்றாள் மக்மூதா. அண்ணி வாங்க சாப்பிட்டு ரெடி ஆகனும் என்றாள் ருக்கையா. பிறகு நான்கு பேரும் சேர்ந்து சாப்பிட்டு எழுந்தனர்.

பிறகு மூவரும் சேர்ந்து அவளை அழகாய் அலங்காரம் செய்து தேவதையாக மாற்றினர். அவளை அவன் அறையில் விட்டு சென்றனர்.

பிறகு சாகித் அங்கு வந்தவுடன் மக்மூதா அவனுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டாள். பிறகு சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று கதவை பூட்டினான். அங்கு சுரையா கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.

அவள் தோலில் கைவைத்து சுரையா என்று அழைத்தான். திரும்பி எழுந்து நின்று அவன் நெஞ்சில் புதைந்து அழ தொடங்கினாள். அவனும் அவளுக்கு தெரியாமல் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டான்....
.

 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 17 ❣️

தன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட தன்னவளை ஆதரவாக அணைத்து கொண்டு அவளுக்கு தெரியாமல் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டான்.

பிறகு அவள் இந்த நகையை நான் எடுக்கவில்லை. ஏய் அம்மு எனக்கு தெரியும் மா. உன்னை பற்றி மற்றவர்கள் சொல்லி தான் தெரியனும் அவசியம் இல்லை. நீ தான் என் லைப் என் உலகம் எனக்கு எல்லாமே நீதான் டி இனி என்று அவளை இறுக்கமாக அணைத்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான். சிறிது நேரம் அமைதியாக சென்றது. பிறகு இருவரும் விலகினர்.

சாகித், " உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லவா??..."

சுரையா, "ம்ம்ம் சொல்லுங்க..."

"உன்னை பர்ஸ்ட் டைம் ரெஜிஸ்டர் ஆபீஸில் பார்த்தவுடனே நான் பீல் ஆயிட்ட. எந்த பொண்ணு கிட்டயும் உணராத ஒரு உணர்வை உன் கிட்ட உணர்ந்த. நீ என்னை என்னவோ பண்ணிட்ட டி அன்னிக்கி இருந்து இன்னிக்கி வரைக்கும் உன் நினைப்புல தான்டி இருக்க. இப்பன்னு இல்ல எப்பவுமே நீதான் இருப்ப. ஹராமா இருக்க இந்த உறவை ஹலாலாக்கனும் நினைச்ச... வீட்டுல சொன்ன ஆறுமாசம் வெய்ட் பண்ண சொன்னாங்க வெய்ட் பண்ண. ஆறுமாசம் கழிச்சு உங்கள் வீட்டுக்கு வந்து பேசுனாங்க அப்றம் நடந்தது தான் தெரியுமே உனக்கு" என்று முடித்தான்.

அவளிடம் வார்த்தைகள் இல்லாமல் அவள் நெஞ்சில் மறுபடியும் புதைந்து கொண்டாள்.

" ஏதாது பேசு மா..." என்றான்.

"....."

" ஏன் அமைதியாக இருக்க?...."

"ம்ஹூம் ஒன்னுமில்ல..."

"ராட்சஷி ஏதாது பேசுடி..."

"என்னா பேசுறது?......"

"என்னா பேசுறதா???....."

"ப்ளீஸ்...." என சொல்லும் போது அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

"என்னமா ஆச்சு ஏன் அழுற.."

" ஆனந்த கண்ணீர்...." என்று மறுபடியும் அவனை அணைத்து கொண்டாள்.

இவ மனசுக்குள்ள ஏதோ சொல்ல முடியாத அளவுக்கு துன்பம் இருக்குன்னு மட்டும் புரியுது... ஆனா என்னவா இருக்கும்???? சரி இன்னும் ஒரு நாள் கேட்போம் என்று மனதில் நினைத்து கொண்டு, அவளுக்கு ஆதரவாக அணைத்து கொண்டான்.

எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு மேலே கை வச்சியிருப்பா அந்த சுரையா. அவ சொத்துக்காக தான் இந்த கல்யாணத்திக்கே சம்மந்தித்தாலாமே. அதை தட்டி கேட்ட எம்மகளை அடித்து இருக்கா என்று பொங்கி எழுந்தாள் கதீஜா.

அப்பன் புத்தி தட்டாமல் புள்ளைக்கும் இருக்கு என்றார் ஜாபர்.

என்ன சொல்றீங்க எனக்கு ஒன்றும் புரியவில்லை?? என்றார் கதீஜா.

ம்ம்ம் ஆமாம். சொத்துக்காக அவள் அப்பா , அவங்க அம்மா அப்பா தம்பி தங்கை என எல்லாரையும் கொன்றவன் தானே. அந்த கேடுகெட்ட புத்தி இந்த பொண்ணுக்கும் இருக்கும்ல.

கதீஜா அதிர்ச்சியுடன், என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியவில்லை? என்றார்.

என் நண்பன் அமீர் அதான் சுரையாவுடைய சிச்சா(சித்தப்பா) அவங்க அப்பா அம்மா அவன் தங்கச்சி எல்லாரும் நாகூர் போய்ட்டு இருக்கும் போது ஆக்ஸிடென்ட் பண்ணிட்டா அந்த பரதேசி(ரஹீம்). இது தெரிஞ்சி நான் போலீஸ் கிட்ட complain பண்ண. அவங்களுக்கு காசு கொடுத்து கேஸை திசை திருப்பிட்டான். அவனை பழி வாங்க தான் இத்தனை வருஷமா காத்திட்டு இருக்கேன். என் நண்பன் செத்ததுக்கு காரணமான அந்த நாயை என் கையால் சாகடிக்கனும். அவன் பொண்ணை வாழா வெட்டியா இந்த வீட்டை விட்டு அனுப்பனும். என் பொண்ணு மேலே கை வச்சதுக்கு என் நண்பனை சாகடிச்சதுக்கு இது தான் அவனுக்கு உரிய பதிலடி என்றார் ஜாபர்.

கதீஜா, அப்ப நம்ம சாகித்தோட வாழ்க்கை?????

நம்ம பொண்ணு ரிஸ்வானாவை கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்றார் ஜாபர்.

தன் மகள் மேல் தான் தவறு என்றும் சுரையாவின் குணம் தெரிந்தால் என்ன நடக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்தது.

இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த ரிஸ்வானா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்போ சாகித் நமக்கு தான். இதுக்கான வேலையை நாமே செய்வோம் என்று முடிவெடுத்தாள். அவங்களை நாம் பிரிக்கனும்... அதற்கான திட்டங்களையும் தீட்டினாள்.

தன் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்த தன்னவள் சுரையாவை ரசித்த படியே உறங்கி போனான் சாகித்.

விடிந்தது......

சுரையாவை எழுப்ப மனமில்லாமல் சாகித் மட்டும் குளித்து விட்டு வெளியே வந்தான். அவன் வருவதை பார்த்த அவன் அம்மா மும்தாஜ் அவனிடம் டேய் உன் மனைவி எழுந்துட்டாளா? என கேட்டார்.

இன்னும் இல்லை நல்லா தூங்கிட்டு இருக்காள் என்றான். அவன் அம்மா பொம்பள புள்ளை இவ்வளவு நேரம் தூங்குவதா மணி 6 ஆகுது.

அம்மா டையர்டில் தூங்கி இருப்பாங்க பாபி. இதுக்கு எதுக்கு டென்சன் ஆகுற என்றாள் மக்மூதா. ஏய் என்ன எதிர்த்து பேசுற? என்று மிரட்டினார் மும்தாஜ். ஆமா உண்மை என்று மக்மூதா கூறிவதற்குள் ரஸியா அங்கு வந்தாள்.

சுரையா என்று அழைத்தாள் ரஸியா. அவளின் குரலை கேட்டு ஏய் ரஸியா வா என்று அழைத்தான் சாகித். அக்காவை பாக்கனும் என்றாள்.

ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ளவா என்றாள் மக்மூதா. இல்லை அக்காகிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள். ஒ அப்படியா உன் அக்கா தூங்கிட்டு இருக்காள் என்றான் சாகித்.

என்னது தூங்குறாளா?

ஆமா... என்றான்.

இருங்கள் நான் போய் எழுப்புற என்று உள்ளே சென்றாள். போனவள் சிறிது நேரத்தில் வந்தாள்.

என்ன உன் அக்காவை எழுப்பலையா?? என கேட்டான் சாகித். ரொம்ப தேங்க்ஸ் மாமா என்று கூறினாள். எதுக்கு தேங்க்ஸ்?? என கேட்க . அவள் , என் அக்கா இப்படி நிம்மதியாக தூங்கி நான் பார்த்ததில்லை. எனக்கு விவரம் தெரிஞ்சி அப்போது இருந்து நேத்து வரை தொழுகை விட்டது இல்லை. இது தான் முதல் முறை அவள் தொழுகை விட்டது. வீட்டுல4 மணிக்கெல்லாம் எழுந்துடுவா.

மாமா உங்கிட்ட ஒரு விஷயம் பேசனும் இங்க வேண்டாம் கொஞ்சம் வெளியே போய் பேசலாமா என்றாள். சரி இரு நான் வரேன் என்று உள்ளே சென்று கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தான். வீட்டில் சொல்லி விட்டு இருவரும் சென்றனர். மக்மூதாவும் தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றாள்.

அவன் சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகு எழுந்தாள் சுரையா. பிறகு தன் வேலைகளை முடித்து விட்டு பிங்க் நிற சுடி ஒன்றை அணிந்து கொண்டு சாகித்தை அறையில் காணவில்லை எங்கே போய் விட்டான் என்று யோசித்தாள். அவன் போனிற்கு அழைத்தாள்.

அவன் எடுத்தான். சொல்லுமா???

"எங்கே இருக்கிங்க?.."

"இங்க தான் பக்கத்தில்..."

"ம்ம்ம் சரி வரும் போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாங்க..."

"ஐஸ்...கிரீம் ம்ம் வாங்கிட்டு வரேன்..."

"அய்யோ ரொம்ப தேங்க்ஸ்....."

"சரி நான் வச்சிடவா...."

"..... சரி ...."

" ம்ம்ம் ஒகே..."

போனை வைத்து விட்டு சமையலறை நோக்கி சென்றாள் சுரையா. அங்கே மும்தாஜ் சமைத்து கொண்டு இருந்தார். அத்தை எதாது வேலை இருக்கா சொல்லுங்க நான் செய்ற என்றவுடன்.

அதுசரி செய்றேன் சொல்லி எதாவது திருடிக்கிட்டு போய்டேனா என்ன பண்ணுவன் நான் என்றவுடன் அவள் அதிர்ந்தாள்.

பிறகு இல்லை அத்தை நீங்களே செய்க அதுவும் உண்மைதான் என்று கூறிவிட்டு வெளியே வந்தாள். அங்கு ரிஸ்வானா அவளை பார்த்து திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடினாள். இவள் எதையும் கண்டுக்காமல் தன்னறை நோக்கி நடந்தாள்.

அப்போது ரிஸ்வானா அவளை வழிமறித்து உன் கிட்ட கொஞ்சம் பேசனும் தனியாக வா என்றாள். சரி வரேன் என்றாள். மாடிக்கு வா என்று விட்டு சென்றாள்.

இருவரும் மாடிக்கு சென்றனர். ரிஸ்வானா பேச தொடங்கினாள். எப்படி வந்த நாள் அன்னிக்கி கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்ட பாத்தியா. உன்னையும் உன் புருஷனையும் பிரிப்ப. என்னை பகைத்து கொண்டதுக்கு நீ இன்னும் அனுபவிப்ப. நான் சொன்ன மாதிரி அன்னிக்கி நீ கல்யாணம் நிறுத்தி இருந்தேனா உன் மேல் இந்த மாதிரி பழி வந்திருக்குமா?? என்றாள்.

எனக்கு தான் தெரியுமே அந்த நகையை எடுத்தது நீதான் என்று. அப்றம் ஏன் சொல்ல வில்லை என்று தானே யோசிக்கிற??? சொல்லியிருப்ப பட் நம்பியிருக்க மாட்டாங்க யாரும். அதனால் தான். ஒரு நிமிஷம் என்ன சொன்ன என்னையும் என் புருசனையும் பிரிப்ப க்அ. என்னை மீறி அவரை உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. இது நானோ அவரோ இல்லை பெரியவங்கலோ போட்ட முடிச்சு இல்லை அவுக்க இது இறைவன் போட்டது. அவனை தவிர வேறு யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றவுடன் ரிஸ்வானா அதிர்ந்தாள்.

ஏய் நான் பொறந்ததிலிருந்து கிரிமினல் என்றவுடன். சுரையா, ஹாஹாஹாஹா என சிரித்தாள். ஏய் நீ பொறந்ததிலிருந்து தான் கிரிமினல்... நான் பொறந்ததே ஒரு கிரிமினலுக்கு தான் . உன்னை விட எனக்கு அதிகமாக யோசிக்க தோன்றும். இப்பவே சொல்லிட்ட என்கிட்ட கொஞ்சம் பாத்து நடந்துகொள். எப்பவுமே பொறுமையா போவேன் என்று மட்டும் நினைக்காதே. ஒரு நாள் என் முழு முகத்தை பார்த்த அன்னிக்கே நீ செத்த சொல்லிட்டேன் என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்து விட்டாள்.

சுரையா பேசியதை கேட்ட அவள் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருந்தாள் ரிஸ்வானா
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 18 ❣️

சுரையாவின் பேச்சை கேட்டு ரிஸ்வானாவிற்கு கோபம் அதிகமானது. கோபத்தை அடக்கி கொண்டு தன்னறைக்கு சென்றாள்.

தன்னறைக்கு வந்த சுரையா தன்னுடைய துணிகளையும் சாகித்தின் துணிகளையும் துவைப்பதற்காக ஊறவைத்து விட்டு தன்னறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

வெளியே சென்ற மக்மூதா வீட்டிற்கு வந்தாள். அம்மா பசிக்கிறது டிபன் எடுத்து வையுங்கள் என்று கூறிக்கொண்டு சுரையாவின் அறைக்கு சென்றாள்.

அண்ணி வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தாள். இல்லை மக்மூதா நீ போய் சாப்பிடும் . எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, அதை முடித்து விட்டு நான் சாப்பிட்டு கொள்கிறேன். இன்னும் உன் அண்ணன் சாப்பிடவில்லை. அவர் வந்த பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் இப்போது நீ போய் சாப்பிடும் என்றாள்.

சரி நான் போய் சாப்பிடுகிறேன் என்று மக்மூதா சாப்பிட சென்றாள். பிறகு சுரையா துணிகளை துவைத்து விட்டு காயப்போட்டு வந்து கட்டிலில் அமர்ந்து டிவியை ஆன் செய்து சன் மியூசிக் சேனலை வைத்தாள்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி

நா நின்னா நடந்தா
கண்ணு உன்
முகமே கேட்குதடி
அடி தொலைவில
இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா

அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா

தூரமே தூரமாய்
போகும் நேரம்
ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும்
நடுவுல நிறுத்துறியே

வேறு என்ன வேணும்
மேகம் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி

அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா

முடிந்த பிறகு தான் உணர்ந்தாள் தான் சாகித்தின் மீது சாய்ந்து கொண்டு ரசித்து கொண்டு இருப்பதை. என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்தாள்.

எழுந்தவளை பிடித்து இழுத்தான் சாகித். இழுத்ததால் அவன் மேல் சரிந்தாள் சுரையா. இருவரும் கண்ணோடு கண் பேசிக்கொண்டு இருந்தனர்.

கண்ணோடு கண்
சேரும் பொது
வார்த்தைகள் எங்கே போகும்

கண்ணே உன்
முன்னே வந்தால்
என் நெஞ்சம்
குழந்தை ஆகும்

இருவரும் தன்னிலை திரும்பினர். சுரையா விலகினாள்.

சுரையா , " வாங்க சாப்பிடலாம்..." என்று அழைத்தாள். இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்ட தட்டை கழுவலாம் என்று சென்ற போது மும்தாஜ் , " ஏய் நீ கழுவுகிறேன் என்று கூறி விட்டு ஏதாலது எடுத்து சென்று விட்டாய் என்றால்..." என்று சொல்லும் போதே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அதை அடக்கி கொண்டு அறைக்கு சென்றாள்.

அங்கு சாகித்தை பார்த்தவுடன் அடக்கி வைத்த அழுகை வெளியே வந்தது. ஜன்னல் அருகே நின்றுகொண்டு இருந்தவன் அருகில் சென்று அவனை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள். அவனுக்கு ஏதுவும் புரியவில்லை.

சாகித், " என் அம்மா ஏதாவது சொன்னார்களா?.."

"இல்லை..."

" பொய் சொல்லாதே..."

"நிஜமா இல்லை..."

"என் அம்மா உன்னை தவறாக எதுவும் சொல்லவில்லை அதை தானே சொல்ல வருகிறாய்?...."

"....."

அவனுக்கு கோபம் வந்து விட்டதால் அவளை விலக்கி விட்டு , " ஏன் அமைதியாக இருக்கிறாய் ஏதாவது சொல்... எனக்கு எல்லாம் தெரியும்" என்றான் கோபத்தோடு.

" சொன்னால் பிரச்சினை வரும் அதற்கு தான் நான் எதுவும் உன்னிடம் சொல்லவில்லை "

" இங்கே பாரு உனக்கே எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவில்லை. என் அம்மா அப்பா விட நீதான் முக்கியம். நான் வாழ்க்கையில் ஆசைபட்ட ஒரே விஷயம் நீ நீமட்டும் தான் . உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீ என் உயிர்...." என்று கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டான்.

" சாரிப்பா இனி உன்னிடம் எதுவும் மறைக்க மாட்டேன் என்னை மன்னித்துவிடு..." என்று அவன் அருகில் அமர்ந்து அவன் கண்களை துடைத்து விட்டு அவனை தன் மடியில் படுக்கவைத்து தலையை கோதி விட்டாள். அந்த சுகத்தில் சிறிது தூக்கம் போட்டான் சாகித். சுரையாவும் அப்படியே உறங்கினாள்....
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❣️ கோபம் 19 ❣️

இருவரும் கண்விழித்தனர். சுரையாவின் மடியில் படுத்த படியே அவளிடம் பேச தொடங்கினான்.

" உனக்கு பிடித்த நிறம் என்ன?..."

"எனக்கு மஞ்சள் நிறம் தான் பிடிக்கும்... உனக்கு.....?"

" எனக்கு ரெட் கலர் பிடிக்கும்....."

" பசங்களுக்கு எப்போதும் புளு கலர் தானே பிடிக்கும்?.... "

" ஆமாம் பட் ரெட் கலர் எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும்...."

" ஓஹோ அப்படியா....."

" உனக்கு பிடித்த ஹீரோ?...."

" யாரும் இல்லை..." என்றவுடன் அவன் ஆச்சிரியத்துடன் அவளை பார்த்தான்.

" யாரையும் பிடிக்காதா?..."

" ஆமாம்..."

" ஏன் அப்படி ?...."

"பிடிக்காது என்றால் விடு...." என்றாள் கடுப்புடன்.

அவன் புரிந்து கொண்டு அதற்கு மேல் அவன் பேசவில்லை. அவள் பேச தொடங்கினாள்..

" போர் அடிக்கிறது..."

" ஏதாவது விளையாடலாமா???...."

" என்ன விளையாடுவது?..." என்று அவனை பார்த்து கேட்டாள்.

" 🤔🤔🤔..."

" என்ன யோசிக்கிறாய்??.... "

" சரி நாம் கேரம் விளையாடலாமா??....."

" ஹய் கேரம் விளையாடலாமே!!!!!....."

"சரி இரு நான் எடுத்து கொண்டு வரேன்..." என்று எழுந்து சென்று கேரம் பலகையை எடுத்து வர சென்றான்.

கேரமை எடுக்கும் போது அவன் அப்பா நிஜாம் யார் கூட விளையாட போகிறாய்?... என்று கேட்க சுரையாவுடன் தான் விளையாட போகிறேன் என்றான்.

அவன் வைத்து விட்டு செல் என்றார். இவன் புரியாமல் ஏன்? என்று கேட்டான். சொல்றேன் அல்லவா போ என்றார். அவன் கோபத்தோடு ஏன் என்று கேட்க. அவர் உன் மனைவி மேல் எனக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் என்று வெளிப்படையாக கூற. அவன் பல்லை கடித்து கொண்டு அங்கு இருந்த பிளவர் வாஷை உடைத்தான்.

உடையும் சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்த்தாள். அங்கு நடந்ததை அவள் கணித்து விட்டாள். அவள் சாகித்தை பார்த்து நமக்கு விளையாட நிறைய விளையாட்டு இருக்கு இது வேண்டாம் வாங்க நாம உள்ளே போகலாம் என்று எல்லோரையும் எரிக்கும் பார்வையில் சொல்லிவிட்டு அவனை அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.

சுரையா, சரி தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது நீ கிளம்பும் என்று அவன் பைக் சாவியை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு தன் கண்ணீரை துடைத்து கொண்டு சென்றான்.

இவளும் உள்ளேயே இருப்பது பிடிக்கவில்லை எனவே தன் பொழுதுபோக்காக விளையாடும் சுடோகு புத்தகத்தை எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்து அதை சிந்தித்து அதனை முடித்து கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு வந்த ரிஸ்வானா அவள் அருகில் சென்று சொடக்கு போட்டு ஓய் என்று அழைத்தாள். சுரையா அவளை ஒரு முறை முறைத்து விட்டு மேலும் தன் செயலில் ஈடுபட்டாள்.

இதில் எரிச்சல் அடைந்த ரிஸ்வானா, ஏய் என்னடி கூப்பிட்டு கொண்டு இருக்கிறேன்? கண்டுகொள்ளாமல் உன் வேலை செய்து கொண்டு இருக்க? என்ன கொழுப்பு அதிகமாகிவிட்டதா? என்று அவள் முன் உட்கார்ந்து கேட்டாள்.

சுரையா ஏதும் பேசாமல் எழுந்து உள்ளே செல்ல முயன்ற போது அவளை கீழே தள்ளி விட்டாள். சுரையா விழ போக மக்மூதா பிடித்து கொண்டாள்.

பாபி(அண்ணி) உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை தானே என்று பதற்றத்தோடு கேட்டாள். சுரையா அதையெல்லாம் இல்லை விடு.

ஏய் ச்சி நீயெல்லாம் ஒரு ஜென்மம்மா என்று அவளை கேவலமான பார்வை பார்த்தாள். அப்போது "அல்லாஹீ அக்பர்...." என்று பாங்கு கேட்டவுடன் மக்மூதா வா போய் தொழுகலாம் இவளை அல்லாஹ் பார்த்து கொள்வான் என்று அவளை அழைத்து சென்றாள்.

போய் வுழு செய்து கொண்டு வா சேர்ந்து தொழுகலாம் என்று இருவரும் வுழு செய்துவிட்டு தொழுக சென்றனர்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கல்லூரி....

என்ன ரஸியா இவ்வளவு நாள் லீவு? என்று வகுப்பு ஆசிரியர் கேட்டவுடன். என் அக்கா கல்யாணம் சார் அதான் என்றாள். சரிசரி இனி லீவு போடுவதை தவிர்த்து கொள் என்றார். ம்ம்ம் ஒகே சார் என்று அமர்ந்தாள்.

Ok students. Last month from our class 10 students attend their interview in a tcs company. From out of 10 only 5 students are selected from that interview. Now i will read their names they should come infront and talk for few minutes.

The 5 students are....

5. Vinoth
4. Suresh
3. Meena
2. Sumithra
1. Rasiya

எல்லாரும் பேசி முடித்து விட்டார்கள் கடைசியாக ரஸியா பேச தொடங்கினாள். எங்கள் வீட்டில் அம்மா அப்பா அக்கா நான்கு பேர் மட்டுமே. நாங்கள் ரிச் பேமிலி. நான் இன்னிக்கு இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அக்கா தான். அவள் தான் எனக்கு எல்லாம் கற்று கொடுத்தது.

அவள் எனக்கு அக்கா மட்டும் இல்லை இன்னொரு அம்மாவும். அவள் என்னிக்குமே அவளுக்கென்று எதுவும் வாங்கி கொள்ள மாட்டாள். எளிமையை மட்டுமே விரும்புகிறவள். எப்பவுமே லைபில் ஒரு லட்சியத்தோடு வாழனும். எந்த பிரச்சினை வந்தாலும் தைரியமாக எதிர்க்கனும். தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்று அடிக்கடி சொல்வாள்.

எனக்கு இன்டர்வியூவை எதிர்கொள்வது எப்படி என்று கற்று கொடுத்தது அவள் தான். அவளின் அறிவுரை மட்டுமே என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என்று நம்புகிறேன். கடைசியாக அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கு) என்று தன் பேச்சை முடித்து கொண்டாள்.

மாணவர்கள் அனைவரும் அவளுக்கு கைதட்டினர். அவள் வகுப்பு ஆசிரியர் உன் அக்கா என்ன படித்து உள்ளார்கள்? என கேட்க . அவள் பிஎஸ்சி பி.எட் மேக்ஸ் என்றாள். ஒ மேக்ஸ் குட் செலக்ஷன். யூவர சிஸ்டர் நேம்? சுரையா என்றாள். ம்ம்ம் ஒகே என்றவுடன் வகுப்பு மணி அடித்தது வகுப்பு ஆசிரியர் சென்றனர். பிறகு எல்லாரும் இன்டர்வியூவில் செலக்ட் ஆனவர்களை வாழ்த்து தெரிவித்து கொண்டு இருந்தனர் மற்ற மாணவர்கள்.....

எப்போதும் கலகல என பேசி ஆசிரியரிடம் திட்டு வாங்கும் ரஸியா இன்று மிகவும் அமைதியாக இருந்தது ஆசிரியர்க்கே ஆச்சரியம். என்ன ரஸியா அமைதியாக இருக்கிறாய்? என்றவுடன் அதையெல்லாம் இல்லை மேம் என்றாள்.

அவளின் தோழி சுமித்ரா புரிந்து கொண்டாள் ரஸிமாவிற்கு அவளின் அக்கா நினைவு வந்து விட்டது. ஏய் ரஸியா உண்மை சொல் உனக்கு உன் அக்கா நியாபகம் வந்துவிட்டது தானே என்று கேட்க. இல்லை அக்கா என்கிட்ட ஏதோ ஒன்று மறைக்கிறாள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. ஆனால் என்ன என்பது தான் தெரியவில்லை என்றாள். சரிவிடு எல்லாம் சரியாகும் என கூற வீட்டிற்கு செல்வதற்கான மணி அடித்த உடன் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

ரஸியா நேராக தன் அக்கா வீட்டிற்கு சென்றாள். சுரையா ஹாலில் அமர்ந்து மக்மூதா உடன் பேசி கொண்டு இருந்தாள். சுரையா என்று அழைத்து கொண்டு உள்ளே சென்றாள். அவளை பார்த்தவுடன் ஏய் ரஸியா என்று கட்டிக்கொண்டாள்.

அக்கா ஒரு ஹேப்பி நியூஸ் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றவுடன். அல்ஹம்துலில்லாஹ் வீட்டுக்கு போய் தொழுது அல்லாஹ்க்கு நன்றி சொல் புரியுதா? என்றாள். ம்ம்ம் சரி சுரையா அப்ப நான் கிளம்புகிறேன் என்றவுடன் ஏய் சாப்பிட்டு போ என்றாள் மக்மூதா. இல்லை இன்னும் ஒரு நாள் வரேன் என்று விட்டு விடைபெற்றாள்.

ரஸியா வீட்டிற்கு சென்று முதலில் தொழுது விட்டு பிறகு அம்மா அப்பா இரண்டு பேரும் இங்கே வாங்க என்று அழைத்தாள். என்ன சொல்லு என்றார் அம்மா. அவள் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றவுடன் இருவரின் முகத்திலும் நூறு வாட்ஸ் பல்ப் போல் மலர்ந்தது.

எவ்வளவு சம்பளம் என கேட்டார் அப்பா. இவள் பிறகு சொல்வார்கள் என்று சொல்லி விட்டு தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்....
 
Top Bottom