Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Girija priya

Member
Messages
44
Reaction score
38
Points
18
Migan mind voice....Late ah vantha thigal samaathanam aagiduva nu theriyama poche....ivvalavu naal waste aagiduchu😜😜😜 nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
388
Reaction score
114
Points
93
Migan mind voice....Late ah vantha thigal samaathanam aagiduva nu theriyama poche....ivvalavu naal waste aagiduchu😜😜😜 nice intresting ud sis ❤️
Thank you dear ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
388
Reaction score
114
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 38


திகழொளிக்கு கணவனைக் கண்டதும் தான்! போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது! தன்னை மறந்து !சுற்றம் மறந்து! கணவனை அணைத்திருந்தாள்..



மிகனுக்கு மனைவியின் செய்கை சுத்தமாக புரியவில்லை..தன்னை கண்டாலே தீயாக காந்துபவள் இன்று பெரியவர்கள் முன் அணைச்சு இருக்கிறாளே ! என்று குழம்பினான்.



மிகனைக் ‌கண்ட நிம்மதியுடன், பெரியவர்கள் கணவன், மனைவிக்கு தனிமை கொடுத்து விலகி சென்றார்கள். இனியாவது எல்லாம் நல்லதாக நடக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்தனர்.



"திகழி என்னாச்சு டா .."என்று அவளை தன்னிடமிருந்து பிரித்த படியே மிகன் கேட்டான். ஆனால், திகழொளி பதில் சொல்லாமல் கணவனை விட்டு அசையாமல் அதே நிலையில் நின்றாள்.



மனைவியிடம் பதில் வரமால் போகவே !

என்னாச்சு இவளுக்கு! ஏதோ பயந்து இருக்கிறாள் போல் என்று எண்ணியவனுக்கு தன்னவளின் அணைப்பிலிருந்து விலகவே மனமில்லாமல்

"திகழி இதெல்லாம் வாசலில் வேண்டாம்..நம் அறைக்கு போய் எத்தனை நேரம் வேண்டுமானாலும் இதே நிலையில் நில்லு! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.." என்று சற்று கேலியாக சொன்னதும் சுற்றுப்புறம் உணர்ந்து சட்டென்று கணவனிடமிருந்து விலகினாள்.



திகழொளி மனதிற்குள் தன் செயலை நினைத்து வெட்கியவள் கணவனை நிமிர்ந்து பார்க்கவே கூச்சப்பட்டாள்.



அவனும் அதற்கு மேல் அவளைச் சீண்டாமல் தங்கள் அறைக்குச் சென்றான்.



திகழொளியும் குட்டி போட்ட பூனையாக கணவன் பின் சென்றாள்.



அறைக்குள் வந்தவளை நொடி கூட தாமதிக்காமல் இழுத்து அணைத்த மிகன் "திகழி என்னை மன்னித்து விட்டாயா..?" என்றான் மனம் நெகிழ்ந்து..



கணவனின் கேள்விக்கு பதில் கூறாமல் சிறிது நேரம் கணவனின் அணைப்பில் கட்டுண்டு திகழொளி அமைதியாக நின்றாள்..அந்த அணைப்பு அவளுக்கும் அப்போது தேவைப்பட்டது.




இருவரும் எத்தனை நேரம் தங்களை மறந்து அதே நிலையில் நின்றார்களோ! அந்த மோன நிலையை திகழொளி தான் முதலில் கலைத்தாள்.



கணவனின் அணைப்பில் இருந்து மெல்ல விலகியவள், கணவன் எதிர்பாராத நேரத்தில் அவனின் சட்டையை பிடித்து " உங்களுக்கு நான் ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க கூடாதா..?ஏன் என்னை இந்த பாடு படுத்தறீங்க.." என்று கோவமாக கேட்டாள்.



மனைவியின் செய்கை சுத்தமாக மிகனுக்கு புரியவில்லை !இத்தனை நேரம் ஆசையாக அணைத்துக் கொண்டவள்,. இப்போது எதற்கு கோவப் படுகிறாள் என்றே அவனுக்கு புரியவில்லை..



"திகழி! என்னாச்சு ?நீ சொல்வது எதுவுமே எனக்கு புரியலை டீ.."



"ஆமாம் !உங்களுக்கு எப்பவுமே ஒண்ணும் புரியாது ! இத்தனை நேரம் எங்கே போனீங்க? உங்க போனுக்கு என்னாச்சு? மணி எத்தனை தெரியுமா ? வீட்லே இருப்பவங்க பற்றி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா?" என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டவளிடம் அப்பாவியாக..



" போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிடுச்சு! மீட்டீங் லேட்டாத் தான் முடிஞ்சுச்சு.மனசும் என்னமோ போல் இருந்துச்சு ! அது தான் கொஞ்ச நேரம் வெளியில் சுத்திட்டு வந்தேன்.ஆனால் அது கூட நல்லது தான்..!"



"என்ன நல்லது..?"



"ம்.. நான் லேட்டா வந்ததால் தானே! நீ என்னைச் சுற்றுப்புறம் மறந்து கட்டிபிடிச்சுட்டு நின்னே..!" என்றவனை வெட்டவா ?குத்தவா? என்று பார்த்து வைத்தாள் அவனின் ஆரூயிர் மனைவி..



மனைவியின் பார்வையை தாங்கிய படியே "சாரி மா.." என்றான்.



"எப்ப பாரு எல்லா தப்பையும் செய்துட்டு ஈஸியாக சாரி கேட்பதே உங்க வேலை..நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? உங்களுக்கு எப்போதும் உங்க நிம்மதி மட்டும் தான் முக்கியம். மத்தவங்களைப் பற்றி எப்போதும் கவலையே இல்லை.."

.என்றவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியாமல் விழிகளில் கண்ணீர் வடிந்தது.



மனைவியின் கண்ணீரைக் கண்டதும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீர் துளிகளை மென்மையாக துடைத்து விட்டான்.



கணவனின் செய்கைக்கு எதிர்வினை ஆற்றாமல் அசையாமல் நின்றவளிடம் "திகழி ரியலி சாரி டா மா..எல்லாமே என் தப்பு தான்! எனக்காக வீட்டில் ஒருத்தி காத்திருப்பாள்ன்னு அறிவே எனக்கு இல்லை..எல்லா முடிவும் தப்புத் தப்பாவே எடுக்கிறேன்..இனி மாத்திப்பேன் என்னை நம்பு டா..நீ என்ன சொல்றீயோ! அதை அப்படியே இனி கேட்பேன் .."என்று

கூறியவனை முறைத்தாள்.



தன்னை முறைத்து பார்த்த மனைவியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவளின் விழிகளின் மென்மையாக இதழ் பதித்தவன் "இந்த விழிகள் எப்போதும் என்னை காதலோடு தான் பார்க்கனும்..!அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.." என்றான்.



அப்போதும் திகழொளி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்..



"ஏதாவது பேசு டீ ! மனசுக்குள்ளே என் மீது அளவு கடந்த காதலே வச்சுட்டு! எதுக்கு டீ தள்ளி தள்ளி போறே..அதானால் யாருக்கு என்ன லாபம்..நாம் சந்தோஷமா வாழனும் ! அது தான் எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்கும்..இன்னும் எத்தனை நாள் தான் இப்படி கோவத்தை இழுத்து பிடிச்சுட்டே இருப்பே..என்றவனிடம் பதில் சொல்லாமலேயே நின்றாள்.



"நான் செத்தால் தான் என் மீது உனக்கு கோவம் தீருமா..?" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனின் இதழில் கை வைத்து "ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பேசறீங்க.."என்று கோவமாக கேட்டவளிடம்..




"அப்புறம் எப்படி பேசறது..!லேட்டா வந்தா மட்டும் கட்டிபிடிப்பே! இல்லைன்னா தீயா காயறே! நான் என்ன தான் செய்யறது. நானும் மனுசன் தான் டீ!"



"இப்ப நான் அதுக்கு என்ன தான் செய்யனும்ங்கிறீங்க..!" என்று சலிப்புடன் கேட்டதும்.



" ம் ..பழசை எல்லாம் மறந்து எங்கூட சண்டை போடாம சந்தோஷமா வாழனும்! என்னை கொஞ்சிட்டே இருக்கனும்! நான் தாய் இல்லா பிள்ளை! நீ தானே நல்லா பார்த்துக்கணும்..!"



"இது என்ன புதுசா டயலாக் எல்லாம் விடறீங்க.."



"ஏன் டீ ! நான் பீல் பண்ணி பேசுனா அது உனக்கு டயலாக்கா..?


"ஓ..!"


"என்ன ஓ..! இங்க பாரு! இனி மயிலே மயிலே இறகு போடுன்னு நான் வெய்ட் எல்லாம் பண்ண மாட்டேன்.."


"அப்புறம்.."


"ஒழுங்கா நீயே என்னை ஏத்துட்டா உனக்கு பிரச்சினை இல்லை.."



"இல்லைன்னா..?"



"இல்லைன்னா சேதாரம் உனக்கு தான்.."



"என்ன செய்வீங்க..?"


"வேண்டாம் அதை என் வாயால் சொல்ல வைக்காதே..!"



"சொல்லித் தான் பாருங்களே! அப்படி என்ன பண்ணுவீங்க..?"



"என்ன பண்ணுவேனா..?" என்றவன் அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளை அப்படியே தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்து! அவளின் இருபுறம் தன் கைகளை அரணாக ஊன்றி !"இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது.." என்று சொல்லியபடி அவளின் முகத்தருகே குனிந்தான்.



கணவனின் அதிரடியில் திகழொளி ஒரு நொடி அரண்டு போனவள், அடுத்த நொடி தன் சக்தியை எல்லாம் திரட்டி அவனை தன்னிடமிருந்து விலக்கி விட்டு "இங்க பாருங்க !என் சம்மதம் இல்லாமால் ஏதாவது செய்தீங்க அப்புறம் மாமா கிட்ட சொல்லிடுவேன்.."



"ஓ..! அப்படியா? என்ன மேடம் சொல்லுவீங்க!"



"ம்..உங்க மகன் எங்கிட்ட தப்பா நடக்கிறார்ன்னு .."



"அப்படியா ! சரி வா இப்பவே சொல்லு! அவர் எப்படியும் தூங்கி இருக்க மாட்டார்..போலாமா..?" என்று நக்கலாக கேட்டான்.



"என்னது !"

என்று திகைத்தவளிடம்..



மனைவியின் திகைப்பை ரசித்தபடியே "என்னங்க மேடம்! உங்க மாமனாரை இழுத்தா? நான் அமைதியாய்டுவேன்னு நினைச்சீயா ..இனி உங்கிட்ட அமைதி எல்லாம் வேலைக்கு ஆகாது. அதிரடி தான் !"என்றவன் மீண்டும் அவள் முகம் நோக்கி குனிந்தான்.



அவனின் செயல்களை பொறுக்க முடியாமல் "ப்ளீஸ் மிகன் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். நாம் முதலில் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலாம்.." என்றாள் கணவனின் எண்ணம் புரிந்ததால் தன் இதழ்களை கை வைத்து மறைத்தபடியே..



"புரிந்த வரை போதும் ஒளி அழகி!" என்றவனுக்கு மனைவியின் செயல் கோபத்திற்கு பதில் புன்னகையை தான் கொடுத்தது.



'என்ன சொன்னாலும்! இன்று கணவனிடமிருந்து தப்பிக்க முடியாது போல்! என்று நினைத்தவள், அவன் வந்ததும் தன்னை மறந்து ஓடிச் சென்று அவனை அணைத்து தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுகிட்டோம்' என்று தன்னையே நொந்து கொண்டாள்.



அவனோ ,மனைவியை அதிகம் யோசிக்க விடமால், அவளின் இதழ் மீது இருந்து அவளின் கைகைளைப் பற்றி அகற்றியவன், அவளின் கண்களில் தெரிந்த அச்சத்தை கண்டு கொள்ளாமல், குனிந்து அவளின் இதழில் தன் முதல் முத்திரையைப் பதித்தான்.



இருவரும் தங்களை மறந்து சில நொடிகள் அதே நிலையில் மெய் மறந்து இருந்தனர்.



கணவனின் செய்கை திகழிக்கு புது உணர்வை கொடுத்தது..நெஞ்சமெல்லாம் படபடப்பாக விவரிக்க முடியாத நிலையில் இருந்தாள். அவளை விட்டு கணவன் விலகிய பிறகும் சிலையாக அமர்ந்திருந்தாள்.



மிகன் அதற்கு மேல் அவளை சோதிக்காமல் அவள் காதருகில் குனிந்து "இது வெறும் ட்ரெயல் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!" என்றவன் அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தை ரசித்தபடியே குளியலறை நோக்கிச் சென்றான்.



திகழொளிக்கு கணவன் கூறியதைக் கேட்டதும் அவளின் நெஞ்சுக்கூடு எல்லாம் குளிர்ந்தது.அவன் திரும்பி வரும் வரை பனிக்கட்டியாக உறைந்து போய் அமர்ந்திருந்தாள்..



தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, இரவு உடை அணிந்து வந்தவன் "திகழி பசிக்குது சாப்பாடு எடுத்து வை !"என்றான் அதிகாரமாக! அவள் சிலையாக அமர்ந்திருந்ததைக் கண்டு அவளை மாற்றும் பொருட்டு சொன்னான்.



கணவனின் குரலில் சாவி கொடுத்த பொம்மையாக திகழொளி உணவு எடுத்து வைத்து பரிமாறினாள்.



அவனோ, "நீயும் சாப்பிட்டு இருக்க மாட்டே உட்கார்ந்து நீயும் சாப்பிடு! என்று அவளையும் உணவு உண்ணச் செய்தான்.



உலக மாறனுக்கு தூக்கமே வரவில்லை..மகனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்ல வேண்டும்! என்று எண்ணியவருக்கு, சமையலறையில் மகனின் பேச்சு சத்தம் கேட்கவும் எழுந்து வந்துவிட்டார்.



தந்தையை கண்டதும் "அப்பா நீங்க இன்னும் தூங்கலையா ? சாப்ட்டீங்களா ?என்று அக்கறையாக கேட்ட மகனிடம்..



" நீ எங்க என்னை தூங்க விடறே..வெளியில் போனால் நேரம் காலமாக வீட்டிற்கு வரத் தெரியாதா ? இன்னும் நீ என்ன சின்ன பையனா ? உன்னை நம்பி ஒருத்தி இருக்கான்னு எப்பத் தான் உன் மர மண்டைக்கு புரியும்.." என்று சற்று கோவமாகவே மகனை கடிந்து கொண்டார்.



தந்தையின் கோவத்தை கண்டு வருந்தியவன், "சாரிப்பா இனிமேல் இது போல் நடக்காது.." என்றான் தலை குனிந்த படி..



"எங்கிட்ட சாரி கேட்காதே ..!உன்ன கட்டிட்டு படாத பாடு படறாளே! அவகிட்ட கேளு ! கிடைச்ச வாழ்க்கையை வாழத்தெரியாமல் கெடுத்துக்காதே !என்று கடிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.



திகழொளி மாமனார் பேசும்‌பொழுது அமைதியாகவே இருந்தாள்.



தந்தையின் வார்த்தைகள் மிகனை வெட்கி தலை குனியச் செய்தது..நிஜமாளுமே தனக்கு சூழ்நிலையை கையாளத் தெரியவில்லையே என்று வருந்தினான்.



கணவனின் முகவாட்டம் திகழியை என்னமோ செய்தது.."மிகன் மாமா சொன்னதை நினைத்து கவலைபடாதீங்க! நீங்க லேட்டா வந்ததால் அவருக்கு டென்ஷன் !அது தான் அப்படி பேசிட்டார்.."



"ம்..!"என்றவன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகவே உண்டு முடித்து விட்டு தங்கள் அறைக்குச் சென்றான்.



திகழொளியும் உண்டு முடித்ததும் ,பாத்திரங்களை ஒதுக்கி சமையலறையை சுத்தம் செய்து விட்டு தூங்கச் சென்றாள்.



அறைக்குள் சென்றவளின் விழிகளில் பட்டது கணவன் சாளாரத்தின் வழியே யோசனையுடன் வெளியில் பார்த்தபடி நின்றிருந்த தோற்றம் தான்.



கணவன் வருந்துகிறான் போல என்று நினைத்து அவன் அருகில் சென்று "தூங்கலையா,இன்னும் அதையே நினைத்துக் கொண்டு இருக்கீங்களா..?" என்றவளிடம்..



"இல்லை .அப்பா பேசியதை அப்பவே மறந்துட்டேன்..உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்..என்றான்‌‌ இதழ் ஓரங்களில் தவழும் புன்னகையுடன்..



"என்னது !"


ம்..எதுக்கு மேடம் இத்தனை அதிர்ச்சி ..எனக்கு சீக்கிரம் உன்னைப் போல் ஒரு பாப்பா வேணும்..!மகிழினி வேறு கூட விளையாட தங்கச்சி பாப்பா கேட்கிறா! அதைப் பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.."



"மாமா பேசியதை நினைத்து கவலைபடறீங்கன்னு வந்தேன் பாரு! என்னைச் சொல்லனும்..எப்ப பாரு எடக்கு மடக்காகவே பேசறது..திகழி ஒழுங்கா போய் தூங்கு இல்லைன்னா தேவை இல்லாத பிரச்சனை.." என்று தனக்கே புத்தி சொல்லிக் கொண்டு நகர்ந்தவளை ஒரே எட்டில் தடுத்து நிறுத்தி தூக்கியவன்..



"கரெக்ட்டா சொன்னே வா! நாம் தூங்கலாம்.." என்று அவளை தூக்கிச் சென்று‌ படுக்கையில் கிடத்தினான்.



"இங்க பாருங்க !பேசாம தள்ளி படுத்து தூங்குங்க! ஏடா, கூடமா ஏதாவது செய்தீங்க! அப்புறம் அவ்வளவு தான் .."



" என்ன மேடம் செய்வீங்க..? உன் மிரட்டலுக்கு எல்லாம் வேறு ஆளைப்பாருங்க? உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நீ செய் என் ஒளி அழகி ! என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்யறேன்.." என்றவன் கண்கள் மின்ன அவளை நெருங்கினான்!


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 38 பதிந்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இறுதி அத்தியாயம் முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் போடுகிறேன்.. உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி ப்ரெண்ட்ஸ்..

அன்புடன்
இனிதா மோகன்..


 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
388
Reaction score
114
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 39
Pre final epi

திகழொளிக்கு அன்றைய விடியல் மிக அழகாகவே விடிந்தது! இரவின் இனிமை வாரித் தந்த இன்பங்கள் அவளுள் புது உணர்வைக் கொடுத்தது.



நேற்றைய இரவில் கணவன் நெருங்கி வந்தவுடன் திகழொளி நெஞ்சமெல்லாம் படபடக்க "மிகன் இதெல்லாம் இப்ப வேண்டாமே..!" என்று எழும்பாத குரலில் உரைத்தாள்.



ஆனால், அவளின் கணவன் மனைவி சொன்னதைக் கண்டு கொள்ளாமல் "எனக்கு வேண்டுமே!" என்றவன் அவளின் மதி முகம் நோக்கி குனிந்தான் .



கணவனின் கண்களில் தெரிந்த காதலும் ,மோகமும் அவளையும் கட்டிப் போட்டது. அதன் பிறகு நடந்ததற்கு இருவருமே முழு பொறுப்பு!



மனதளவில் இணைந்து இருந்தவர்கள் அன்று இல்லற வாழ்க்கையில் இணைந்தார்கள்! இருவரும் இரூடல்! ஓரூயிராக கலந்தனர்!



இருவரின் நேசமும் அவர்களுள் அரும்பாகி !மொட்டாகி! மலர்ந்தது! அவர்களின் நெருக்கத்தைக் கண்டு வெண்ணிலவும் வெட்கப்பட்டு மேகத்தினுள் மறைந்து கொண்டது.



இரவின் மடியில் தன்னை மறந்து உறங்கியவளை பகலவனின் செங்கதிர்கள் மதி முகத்தில் பட்டுத் தெரித்த பின் தான் திகழொளிக்கு விழிப்பு வந்தது.



மெல்ல இமையை பிரிக்க முடியாமல் பிரித்தவளுக்கு இரவின் இனிமை தந்த உணர்வில் வெட்கம் அழையா விருந்தாளியாக வந்து ஓட்டிக் கொண்டது.



கணவனின் கைவளைவில் இருந்தவள் அவனின் உறக்கம் கலையாமல் எழுந்து சென்று குளியலறையில் தஞ்சம் புகுந்தாள்.



அவள் குளித்து தயாராகி வரும் வரை மிகன் கண் விழிக்கவே இல்லை..



குளித்து வந்தவள் கணவனை காணக் கூசி சத்தம் எழுப்பாமல், மணியரசியைத் தேடிச் சென்று அவருக்கு சமையலில் உதவினாள்.



மிகன் விழித்ததும் முதலில் மனைவியைத் தான் தேடினான்.அவளை அறையில் காணாமல் முகம் சுருங்கியவன் குளித்து முடித்து தயாராகி மனைவியைத் தேடிச் சென்றான்.



அவனின் அருமை மனைவி சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்ததைக் கண்டு முகத்தில் மகிழ்ச்சிப் பொங்க! மணியரசி அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டு, சமையலைறைக்குள் சத்தம் எழுப்பாமல் சென்றான்.



கணவன் அருகில் வருவதை அறியாமல் திகழொளி மும்மரமாக பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு இருந்தாள்.



பூனை போல் மெதுவாக மனைவியின் பின் சென்று நின்ற மிகன்! அவளைப் பின்னிருந்து அணைத்தான்.




கணவனின் அணைப்பில் திகழொளி திகைத்து "அச்சோ மிகன்! என்ன செய்யறீங்க? மணியம்மா வந்திடப் போறாங்க விடுங்க!" என்றாள் பதட்டமாக..



"அதெல்லாம் இப்போதைக்கு வரமாட்டாங்க அத்தை வெளியில் காய்கறி வாங்கிட்டு இருக்காங்க.." என்றவன் அவளின் தோள்களில் முகத்தை புதைத்த படியே "திகழி ஒரு நிமிஷம் நம் அறைக்கு வாயேன்.." என்றான் மயக்கும் குரலில்..



"ம்ஹூம் நான் வரலே எனக்கு வேலை இருக்கு..!"



"ப்ளீஸ் டீ இரண்டே நிமிஷம் வா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.."



"இங்கேயே பேசுங்க..!"



"இங்கெல்லாம் பேச முடியாது..இப்ப வரையா? இல்லையா..?வருலேன்னா அப்படியே தூக்கிட்டு போய்டுவேன்..!"



"அச்சோ காலையில் ஏன் தான் இப்படி அக்கப்போர் பண்றீங்களோ..?"



"நானா அக்கப்போர் பண்றேன்! நீ தான் டீ புருசன் கூப்பிட்டா வரமாட்டேன்னு அலுச்சாட்டியம் பண்றே.."



"உங்களே .."என்று சலித்துக் கொண்டவள், "சரி நீங்க போங்க..நான் மீதி பாத்திரத்தை கழுவிட்டு வரேன்.."



"அதெல்லாம் அப்புறம் கழுவிக்கலாம் இப்ப வா..!"



"விடமாட்டீங்களே !சரி வரேன்! நீங்க போங்க..!" என்றவள் கைகளை கழுவிக் கொண்டு கணவன் பின் சென்றாள்.



அறைக்குள் நுழைந்ததும் அவளை இழுத்து அணைத்தவன் "திகழி நான் நேத்து உன்னை கஷ்டப்படுத்திட்டேனா ?"



"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை ஏன் கேட்கிறீங்க..?"



"காலையில் கண் விழிக்கும் போது உன்னை தேடுனுனேன்! உன்னைக் காணோம்! அது தான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன் போல் அதனால், என்னைப் பார்க்கப் பிடிக்காமல் சீக்கிரம் எழுந்து போய்ட்டீயோன்னு நினைச்சேன்.."




"என்ன ஒரு கற்பனை! நான் எழுந்ததே லேட்..மணியம்மாவுக்கு உதவலாம்ன்னு போனேன்.."



"ஓ..அது தானே! என் மேல் வெறுப்பு இல்லை தானே!"




"ஏங்க அடிக்கடி லூசு மாதிரியே பேசறீங்க..?"



"ஏய் கொழுப்பா! சந்தடி சாக்கில் லூசுங்கிறே.."



"பின்னே இப்படி எல்லாம் தேவை இல்லாத கேள்வி கேட்டா அப்படித் தான் சொல்லுவேன்.."



"உன்னை.." என்று பற்களை கடித்தபடி கத்தியவன் குரலுக்கும், செயலுக்கும் சம்மந்தம் இல்லாமல் மனைவியின் மதி முகம் நோக்கி குனிந்தான்.



சரியாக அப்போது பூஜை வேளை கரடியாக அமுதன் அலைபேசியில் அழைத்தான்.



அலைபேசியின் அழைப்பு சத்தத்தைக் கேட்டு "நிம்மதியா ஒரு நிமிஷம் இருக்க முடியுதா?" என்று வாய்க்குள் முனங்கியபடியே அழைத்தது யார் என்று பார்த்தவன் மனைவியிடம் "எல்லாம் உன் அரூயிர் தம்பி தான்! அவனுக்கு நான் உங்கூட சந்தோஷமா இருந்திடவே கூடாது! எப்படி தான் மூக்கில் வேர்குதோ?" என்று மனைவியிடம் சலித்த படி அலைபேசியை உயிர் பித்தான்.



அந்த பக்கம் அமுதனோ "மாமா அக்கா எங்கே? ஏன் போன் எடுக்க மாட்டீறா..?"


"என் பக்கத்தில் தான் இருக்கா! போன் சைலண்ட்லே இருந்து இருக்கும். என்ன விஷயம்?"


"கமலிக்காவுக்கு கல்யாணம் உறுதி ஆகி இருக்காம்! அதை சொல்ல அக்காவுக்கு கூப்பிட்டு இருக்காங்க, அக்கா போனை எடுக்கவே இல்லையாம். அது தான் பயந்து போய் என்னை கூப்பிட்டாங்க .."



"ஓ..அப்படியா..இரு உங்க அக்கா கிட்ட தரேன்.."என்றவன் மனைவியிடம் அலைபேசியைக் கொடுத்தான்.



அலைபேசியை வாங்கியவள், கணவனிடமிருந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்று தம்பியிடம் பேசினாள்.



மனைவி நகர்ந்ததும், மிகனும் பின்னாடியே சென்று, அவள் அருகில் நெருங்கி நின்று !மனைவி என்ன பேசுகிறாள் என்று‌ அவளை பின்னிருந்து அணைத்தபடி அவளின் தோள்களில் முகத்தை வைத்துக் கொண்டு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.




கணவனின் செயல் திகழொளிக்கு சங்கடத்தை கொடுத்தது. தம்பியிடம் பேசிக்கொண்டே தன்னோடு பசைபோல் ஓட்டிக்கொண்டு இருந்தவனை நகர்த்தினாள்.



ஆனால், அவளின் கணவனோ! அவளை விட்டு நகர்ந்தால் தானே!



ஒருவழியாக தம்பியிடம் பேசிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு முகம் சிவக்க கணவனிடம்.."உங்க மனசுலே என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க.ஒரு போன் கூட நிம்மதியா தம்பி கூட பேச விடமாட்டீங்களா..?"என்று கோபமாக கேட்டாள்.



"நான் என்ன செய்தேன்.."



"ம்..ஒண்ணும் செய்யலே! பேசும் போது தான் இப்படி வந்து உரசிட்டு நிற்பீங்களா.. நிம்மதியா பேச விடறீங்களா.."



"நீ எதுக்கு என்னை விட்டு நகர்ந்து போய் பேசறே? என் பக்கத்துலே நின்னு பேச வேண்டியதுதானே..!"



"இப்ப தள்ளிப் போய் நின்னு பேசுனா என்னவாம்..?"



"என்னை விட்டு தள்ளிப்போன நான் அப்படித் தான் செய்வேன்.உனக்கு எப்பவும் நான் தான் ஃபர்ஸ்ட் டா இருக்கனும்..உன் தம்பி எல்லாம் அப்புறம் தான் புரிஞ்சு நடந்துக்கோ..!" என்றவனைக் கண்டு திகழொளி திகைப்புடன் கணவனை விழி எடுக்காமல் பார்த்தபடி நின்றாள்.



மனைவி நின்ற தோரனை மிகனுக்கு புன்னகையை கொடுத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் இது தான் சமயம் என்று அவளின் கன்னங்களில் அழுத்தமாக இதழ் பதித்தவன் அவள் அதை உணரும் முன்பே அவளை விட்டு நகர்ந்தான்.



கணவனின் செய்கையால் திகழொளியின் முகம் வெட்கத்தால் செந்நிறமாக மாறியது.அவன் இதழ் பதித்த இடத்தை விரல்களால் தடவியவலுக்கு இதழோரம் அழையா விருந்தாளியாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.மனதிற்குள் இனம்புரியா மகிழ்ச்சியும் உணர்வும்‌ அவளை ஆட்கொண்டது..




நாள்கள் மிக அழகாக நகர்ந்தது.பாலைவனத்துப் பூஞ்சோலையாக! காயம் பட்ட மனதிற்கு மருந்தாக ! மிகன் அவளை அன்பால் கொண்டாடீத் தீர்த்தான்.



இத்தனை அழகாக வாழ்க்கை போகுமென்று அவளிடம் முன்பு யாராவது சொல்லி இருந்தால் அவள் நிச்சயமாக நம்பியிருக்க மாட்டாள்.



அவள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் மருந்தாக வாழ்க்கை நந்தவனமாக பூத்துக் குலுங்கியது.




நேசத்தாலும், பாசத்தாலும் அவளை திக்குமுக்காட வைத்தான் அவளின் ஆரூயிர் நாயகன்.



முன்பு அவளை காயப்படுத்தியதிற்கு எல்லாம் சேர்த்து அவளை தாங்கினான். அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சியே நிரம்பி வழிந்தது.



முத்தாய்ப்பாக அவளின் அன்புத் தோழி கமலி! தன் பெற்றோருடன் தன் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தாள்!



நீண்ட நாள்களுக்கு பின் கண்ட தோழியை ஆசையாக அணைத்துக் கொண்டாள் கமலி..!




திகழொளியின் முகத்தில் மின்னிய பூரிப்பு கமலிக்கும் நிம்மதியை கொடுத்தது.



"திகழி எனக்கு இது போதும் டீ ! உன் முகத்தில் தெரியும் இந்த சந்தோஷம் எப்போதும் உன் வாழ்க்கையில் நிலைத்து இருக்கனும் . அதுவே எனக்கு பெரும் சந்தோஷம்..! எனக்கு இங்கு வரும் போது உன் மீது கோவமிருந்தது என்ற கமலியிடம்..



"ஏன் ..?"என்று புரியாமல் கேட்டால் திகழொளி.



"ம்..உன் கல்யாணத்துக்கு பின் நீ எங்கிட்ட சரியாகவே பேசலை.. என்னை மறந்திட்டியோன்னு நினைச்சேன். ஆனால் ,இப்ப உன்னைப் பார்த்த பிறகு அந்த கோவம் எல்லாம் பஞ்சாப் பறந்திடுச்சு..எனக்கு இது போதும் டீ .."என்ற தோழியை கண்களில் நீர் தேங்க ஆசையாக அணைத்துக் கொண்டாள் திகழொளி.



"கமலி உங்கூட பேசக்கூடாதுன்னு இல்லை! ஏதாவது ஒரு பிரச்சினை வந்துடுது. அதனால் தான் சரியா பேச முடியலை. சாரி டீ.. நான் கஷ்டப்பட்ட போது என் கூடவே இருந்தவ உன்னை என்னால் எப்படி டீ மறக்க முடியும்.என் உயிர் உள்ளவரை என் மனசுலே எப்பவும் நீ என் கமலியா இருப்ப டீ .."என்று உணர்ச்சி பெருக்குடன் கூறிய திகழொளியிடம்..



"அதெல்லாம் சரி! இங்க பாரு! என் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே நீ வந்துடனும் ஞாபகம் வச்சுக்கோ..!என்ன புரியுதா..?"



"அதெல்லாம் உங்க ஃப்ரெண்ட் கரெக்ட்டா வந்துடுவா! அதுக்கு நான் கேரண்டி.." என்று மிகனின் குரலில் இருவரும் தூக்கிவாரிப் போட திரும்பினார்கள்.




அங்கே மிகன் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அவர்களை பார்த்தவாறு நின்று இருந்தான்.



"தேங்க்ஸ் அண்ணா !திகழியை நல்லாப் பார்த்துக்கோங்க ..அவளே தப்பு செய்தாலும் அவளை எந்த காரணத்திற்கும் விட்டுடாதீங்க ..அவளுக்கு நீங்கன்னா உயிர்..!"என்று தோழிக்காக பேசினாள்.



கமலி பேசியதைக் கேட்டு திகழொளி ஆச்சரியமாக தன் தோழியை பார்த்தாள்!எப்போதும் மிகனை கரித்துக் கொட்டுபவள்! இன்று முதல் முறையாக அண்ணா !என்று அழைத்து பேசி இருக்காளே ?என்று வியந்து பார்த்தாள்!



"கண்டிப்பா உங்க ஃப்ரெண்டை என் கண்ணுக்குள் வச்சு பார்த்துப்பேன் .."என்ற கூறியபடி திகழொளியின் அருகில் வந்து அவளின் தோள்களில் கைபோட்டுக் கொண்டான்.



திகழொளிக்கு தோழி முன் கணவனின் செய்கை கூச்சத்தைக் கொடுக்க மெல்ல அவனிடமிருந்து நகர்ந்தாள்.



"எனக்கு இது போதும் மிகன் அண்ணா !நீங்க இரண்டு பேரும் ஜோடியா என் கல்யாணத்துக்கு வந்தா அதை விட எனக்கு வேறு சந்தோஷம் இல்லை.." என்றவளிடம் கண்டிப்பாக வருகிறோம் என்று உறுதியளித்து, விருந்து உபச்சாரம் செய்து அனுப்பி வைத்தனர்.



கமலியிடம் கூறியபடி திகழொளி தன் தோழியின் திருமணத்திற்கு சென்றவள், நல்லபடியாக திருமணம் முடியும் வரை கூடவே இருந்தாள்.மிகனும் மனைவியுடன் புன்னகை முகமாக கலந்து கொண்டான்.



அமுதனும், கமலிக்கு உடன் பிறவாத சகோதரனாக அனைத்து வேலையும் இழுத்துப் போட்டுச் செய்தான்.



எல்லாம் முடிந்து வீடு வந்த பின் இரவின் தனிமையில் மனைவியிடம் "ஏன் ஒளி இன்னைக்கு உன் ப்ரெண்ட்டுக்கு பர்ஸ்ட் நைட் தானே..?"என்றான் கள்ளச் சிரிப்புடன்..



"ஆமாம்! அதுக்கு என்ன இப்போ..? என்றாள் அவளின் மனையாள் அருகில் படுத்திருந்த மகிழினியைத் தட்டிக் கொடுத்த படியே.



"ம்.. இல்லே சும்மா தான் கேட்டேன்..!எல்லாரும் என்ன நம்மளே மாதிரியா இருப்பாங்க..?"



"நம்மளே மாதிரின்னா.. ?


"ம்..கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் கழிச்சு தான் நமக்கு பர்ஸ்ட் நைட் ! அதை சொன்னேன்.."



"இப்ப இந்த பேச்சு ரொம்ப அவசியமா..?"


"ஆமாம் உனக்கு எது தான் அவசியம்! எப்ப பாரு என்னை டீல்லே விடுவாதே உனக்கு வேலையாச்சு..?"


"இப்ப என்ன டீல்லே விட்டுட்டேன்..?"


"உன்னை யாரு இன்னைக்கு பாப்பாவே இங்கே தூக்கிட்டு வரச் சொன்னா?"


"அவ தான் எங்கூட தூங்கிறேன்னு சொன்னா! அது தான் தூக்கிட்டு வந்தேன்..!"



"ஆமாம் குழந்தை அப்படி தான் சொல்லும் ! நீ தான் சமாதானப்படுத்தி விட்டுட்டு வந்து இருக்கனும்!


கொஞ்சமாவது இங்கீதம் தெரியுதா..லூசு பொண்டாட்டி..!"



"ஆமாம் நான் லூசு தான்..நீங்க இப்ப பேசாம திரும்பி படுத்து ஒழுங்கா தூங்குங்க!பாப்பா அரை தூக்கத்தில் இருக்கா எழுப்பி விட்டீங்க?அப்புறம் அழுது அடம் பிடிப்பா..எனக்கும் செம டையேடா இருக்கு..நானும் சீக்கிரம் தூங்கனும்..!"



"ம்ஹூம்! இப்படி தனியா திரும்பி படுத்து தூங்கத் தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன் ! எல்லாம் என் தலை எழுத்து!" என்று புலம்பிய கணவனைக் கண்டு சத்தம் வராமல் சிரித்தாள் அவளின் அன்பு மனையாள்..



தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் அத்தியாயம் 39(pre final) பதிந்துவிட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி!
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
388
Reaction score
114
Points
93
உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 40


நாள்கள் அழகாக தெளிந்த நீரோடையாக நகர்ந்தது.


திகழொளி பட்ட கஷ்டத்துக்குயெல்லாம் மிகன் அவளை இப்போது கண்ணுக்குள் வைத்து தாங்கினான்.


உலகநாதன் கூட மருமகளை மகன் தாங்குவதைக் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.'இந்தப் பையன் அடிச்சா மொட்டை இல்லைன்னா குடுமி மாதிரி சுத்தறானே..' என்று நினைத்தார்.


மணியரசி கூட மிகனின் செயல்களைக் கண்டு சிரித்துக் கொண்டார்.எப்படியோ இரண்டு பேரும் நல்லா இருந்தா சரிதான் என்று எண்ணினார்.தன் மகனும் உயிரோடு இருந்திருந்து இப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணாமல் அவரால் இருக்க முடியவில்லை.பெற்ற மனம் தவித்தது.



அமுதன் கூட மிகனை "மாமா அநியாத்துக்கு இப்படி பொண்டாட்டி தாசன் ஆகக் கூடாது என்று கேலி செய்யதான்.."


மிகனோ "போடா நீ‌யும் கல்யாணம் பண்ணிப் பாரு அப்புறம் சொல்லுவே.. பேச்சுலரா இருக்கிற வரை என்ன வேணா வீராப்பா பேசலாம். ஆனால், கல்யாணம் பண்ணுன பின்னாடி சந்தோஷமா! நிம்மதியா! வாழனும்ன்னா பொண்டாட்டியே உலகம்ன்னு இருந்துக்கனும். அனுபவப் பட்டவன் சொல்றேன் ஒழுங்கா கேட்டுக்கோ! அப்ப தான் பின்னாடி பிரிச்சனை வராது மாப்பிளே.." என்று சிரித்தபடி மிகன் பதில் சொல்லுவான்.



காலநிலைகள் போல் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது தானே மனித வாழ்க்கையின் இயல்பு!



திகழொளி மிகன் வாழ்க்கையில் இப்போது இன்பமான காலம்..!

மிகன் ஆசைப்பட்டது போல் திகழொளி கருவுற்றாள்.

சும்மாவே அவளை கையில் வைத்து தாங்குபவன் இப்போது சொல்லவா வேண்டும்.



உயிராக பார்த்துக் கொண்டான்.

திகழொளியின் பெற்றவர்களே மருமகன் மகளை தாங்குவதைக் கண்டு பூரித்துப் போனார்கள்.



மகள் இந்த அன்புக்காகத் தான் அத்தனை கஷ்டங்களையும் தாங்கி ஆசைப்பட்டவனையே கரம் பிடித்தாளோ? என்று நினைத்தனர்.



ஏழாம் மாதம் திகழொளிக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு செய்து தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.



மிகனோ, மனைவியை விட்டு இருக்க முடியாது என்று திகழொளியை பிடிவாதமாக தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான்‌.



திகழொளி பிரசவம் வரை வேலைக்கு செல்வேன் என்று மிகன் என்ன சொல்லியும் கேட்காமல் அவனுடனேயே வேலைக்குச் சென்றாள்.


மிகனும் வேறு வழி இல்லாமல் தினமும் காரில் பத்திரமாக அழைத்து சென்று வந்தான்.


பிரசவ நேரம்‌ நெருங்க நெருங்க எல்லோரையும் விட‌ மிகன் தான் மனதிற்குள் பயந்தான்.

திகழொளி கூட தைரியமாக தான் இருந்தாள்.


தலைபிரசவம் பெண்ணுக்கு மறுபிறப்பு என்பதற்கு ஏற்ப பிரசவ வலியில் போராடி தன் மகனை பெற்று எடுத்தாள் திகழொளி.



திகழொளி வலியில் துடித்ததை விட மிகன் திகழொளியைக் கண்டு துடித்தது தான் அதிகம்.!



அமுதன் கூட தன் தமக்கையிடம் "அக்கா நீ பிரசவலியிலே துடித்ததை விட மாமா துடித்தது தான் அதிகம்.மனுசன் அரை ஊசாராகிட்டார்.." என்றான்.

திகழொளியோ தம்பி சொன்னதைக் கேட்டு மென்புன்னகை சிந்தினாள்.




பிரசவத்திற்கு பின்பு மனைவியை கண்டவன் எதுவும் பேசாமல் அவளை தோள் சேர்த்து அணைத்துக் கொண்டவனின் கண்களில் நீர் தேங்கியது.



அந்த அணைப்பில் அவன் வலி தெரிந்தது. அவனின் அந்த மெளனமான செயலே அவளுக்கு அவனின் நிலையை உணர்த்தியது.



கணவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் முகத்தில் தோன்றிய உணர்வுகள் அவன் வார்த்தையால் சொல்லாதைக் கூட உணர்த்தியது.


"மிகன்.." என்று அழைத்தவளை இன்னும் இறுக அணைத்தவன் "ஒளி இப்ப எப்படி இருக்கே..?இப்ப உடம்பு ஓகே தானே.." என்ற கணவனிடம்


"ம்ம்‌ ..!"என்றவள்.. "நீங்க ரொம்ப டென்சன் ஆயிட்டீங்களா..?

குழந்தையை பார்த்தீங்கள..?"என்றவளிடம்


"ம்..ரொம்ப பயந்துட்டேன்..ஒளி! இனி நமக்கு இன்னொரு குழந்தையே வேண்டாம்.மகிழினியும் இவனுமே போதும் !




"ம்ம்..! ‌"என்று‌ ஒற்றை சொல்லை உதிர்த்தவளிடம்

"திகழி! உனக்கு ..வந்து.."என்று தயங்கியபடியே 'மகிழினியையும் நம் பிள்ளையாய் நீ ஏற்றுக் கொண்டாய் தானே..உனக்கு அவள் நம் குழந்தை இல்லை என்ற வருத்தம் எதுவும் இல்லை தானே.."



"என்ன மிகன் ஏன் இப்படி லூசாட்ட பேசறீங்க? நான் எப்பவுமே மகிழினியை வேறாக நினைத்தது இல்லை.யாரோ செய்த தப்புக்கு குழந்தை என்ன செய்யும்..இனி இதுபோல் முட்டாள் தனமாக எப்போதும் பேசாதீங்க.."



"சாரிடா உன் விருப்பமும் எனக்கு முக்கியம். அது தான் அப்படி கேட்டேன்.." என்றவன் அதன் பிறகு வந்த நாள்களில் மனைவியையும் குழந்தையையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.


மகிழினியோ குழந்தையை கண்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.."என் தம்பி !என் தம்பி!" என்று குழந்தையை பார்க்க வந்த அத்தனை பேரிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.

குழந்தைக்கு 'நன்னன்' என்று அழகான தமிழ் பெயர் சூட்டினார்கள்.



திகழொளி பிரசவவிடுப்பில் இருந்தாள்.

நன்னன் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான்.


திழொளிக்கு குழந்தைகளை கூட சமாளிக்க முடிந்தது.ஆனால் வீட்டில் இருக்கும் போது எல்லாம் தன் பின்னால் சுற்றும் கணவனைத் தான் சமாளிக்க முடியாமல் திணறினாள்.


மிகன் எவ்வளவுக்கு எவ்வளவு திருமணத்திற்கு முன் திகழொளியை கஷ்டப்படுத்தினானோ! அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது திகழொளியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தான்.


அன்றும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த உடன் தன் தந்தையிடம் இருந்த நன்னனுடனும் ,மகிழினியிடமும் சிறிது நேரம் விளையாடிவிட்டு தன் மனைவியை தேடி தங்கள் அறைக்கு வந்தான்.


திகழொளி துவைத்த துணிகளை மடித்து அலமாரியில் வைத்துக் கொண்டிருந்தாள்.


அவளின் பின் சென்று அவளை அணைத்தவன் "ஒளி..!" என்று அவளின் தோளில் தன் முகவாயை அழுத்திய படி "மேடம் எப்பபாரு பயங்கர பிஸியாக வே இருக்கீங்க..இப்ப எல்லாம் என்னை கண்டுக்கிறதே இல்லை.."என்றவனிடம்


"ம்ம்..! என்ன செய்ய உங்க பசங்களே என் நேரத்தை முழுதும் ஆக்கிரமித்துக்கிறாங்க! நான் என்ன செய்யட்டும் மிகன் சாரே.." என்றவளிடம்


"ஓ..! "என்றவன்

"குழந்தைகளை மட்டும் கவனித்தால் எப்படி புருசனையும் கொஞ்சம் கவனிங்க மேடம்.." என்றவன் அவளின் கன்னங்களில் தன் இதழ்களை பதித்தபடியே கூறினான்.


நாள்கள் மாதங்களாக உருண்டோட நன்னனுக்கு

அமுதன் மடியில் வைத்து முதல் முடி எடுத்தனர்.அன்றே மகிழினிக்கும் அமுதன் மடியில் வைத்தே காதும் குத்தினார்கள்.



பட்டுச்சேலை சரசரக்க வளைய வந்த மனைவியை விட்டு மிகனால் பார்வையை அகற்ற முடியவில்லை.


இந்த நிகழ்வு பெரியவர்களுக்கு நிம்மதியையும் ,மகிழ்ச்சியையும் வாரி வழங்கியது.


தம் பெற்ற குழந்தைகளின் மகிழ்ச்சி தானே பெற்றவர்களின் மிதமிஞ்சிய ஆனந்தம். அதை திகழொளியும் மிகனும் அவர்களுக்கு கொடுத்தார்கள்.


அன்றைய இரவின் தனிமையில் மனைவியை ஒருபுறமும்.. தன் குழந்தைகளை மறுபுறமும் தன் நெஞ்சில் படுக்க வைத்திருந்த மிகனுக்கு மனம் முழுவதும் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொண்டிருந்தது.



வாழ்க்கை இனி அவர்களுக்கு வசந்தத்தை‌ மட்டும் வாரி வழங்கட்டும்.


சுபம்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
388
Reaction score
114
Points
93
அன்பு தோழமைகளே,
வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்💐💐
# ஜனவரி மாதம் என்றாலே எழுத்தாளர்களுக்கும் , வாசகர்களுக்கும் நினைவுக்கு வருவதும்,மகிழ்ச்சி அளிப்பதும் சென்னை புத்தக கண்காட்சி தான்.
அதே போல் இந்த வருடம் ஜனவரி எட்டாம் நாள் தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சியில் நமது #சகாப்தம்_பதிப்பகத்தின் வெளியீடாக
#இனிதாமோகனின்(நேரடி புத்தகம்)

#அன்பின்அழகியல்!

#மேகலா_பழனியப்பனின்

#பூஞ்சிட்டு! (நேரடி புத்தகம்)

இரண்டு நாவல்களும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தக கண்காட்சியில் #பிரியா_நிலையம்
94444 62284 ல் புத்தகங்கள் கிடைக்கும் தோழமைகளே. ஸ்டால் எண் பின்னர் அறிவிக்கப்படும்.

சென்னை புத்தக கண்காட்சி வர இயலாத வாசகர்கள் எங்களது சகாப்தம் பதிப்பகத்தில் தபால் மூலமாக புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.


புத்தகம் வேண்டுவோர். கமெண்டில் பதிவிடுங்கள் . வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
088838 72909

அன்பும், நன்றியும்
தோழமைகளே 💐 💐 💐
அன்புடன்

இனிதா மோகன்
 

Latest posts

New Threads

Top Bottom