Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 12

அன்று இரவு வரை வர்ஷித் சொன்னதையே யோசித்தவள் இரவிற்கு வீட்டிலேயே இருவருக்கும் சேர்த்து சமைத்து இருந்தாள். அவள் பரிமாறும்போது அவளின் முகம் கலையிழந்து தென்பட்டது வர்ஷித்தின் கண்களுக்கு. இதற்கு ஏற்றவாறு ஆதிகாவும் வர்ஷித்தின் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து அதையே யோசித்து கொண்டிருந்தாள்.

வர்ஷித், 'என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்குற' என கேட்க 'இல்லை ஒண்ணுமில்ல' என கூறினாள். அவனும் மேல ஏதும் கேட்க விரும்பாமல் சாப்பிட்டான். அவன் எழுந்து சென்ற பிறகே டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்ண முயன்றாள். எவ்வளவு முயற்சித்தும் அவளால் கண்ணீரை தடுக்க முடியவில்லை. எண்ணப்போக்கில் எண்ணிக்கொண்டு சாப்பாட்டை கொறித்துவிட்டு சமயலறையில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் ஹாலில் உட்கார்ந்து போன் நோண்டி கொண்டிருக்கும் கணவனை கண்டு அங்கு போனாள். 'பழைய நியாபகங்கள் வந்திருக்கும் போல, யாருக்கு தான் மறக்க முடியும். அதுக்கூட சின்ன பிள்ளையிலிருந்து அம்மா அப்பா கூட இருந்தவ அதான் இங்க தனியா இருக்கறதுனால சோகமா இருக்கா' என யோசித்தே அவளின் முகவாட்டத்தின் காரணத்தை கேட்காமல் விட்டான், அவனை பற்றியே அவள் நினைப்பது அறியாமல். அவளின் தனிமையை முதலில் போக்கணும் என எண்ணியவன், ஆதிகாவிடம், 'இங்க நீ தனியா இருப்பில, நீயும் இன்டெர்வியூக்கு சென்று வேளைக்கு போனால் உனக்கொரு மாறுதல் கிடைக்கும்ல. இத பத்தி யோசி, உனக்கு சம்மதம்னா சொல்லு நான் மேற்கொண்டு ஏற்பாடு பண்றேன்' என கூற ஆதிகா, 'நான் யோசிக்கிறேன்' என அவனிடம் சொன்னாலும் அறைக்கு வந்தவள் "அட லூசு, நீ சொன்னா நான் கேட்காம இருப்பேனா, அதிகாரமா சொல்லாம பட்டும் படாமல் சொல்ற' என அவனை மனதுக்குள் திட்டினாள். அவள் அந்த அறையில் படுத்து, காதில் தலையணி கேட்பொறியை(head set) காதுகளில் அணிந்து பாடலை கேட்டு கொண்டு படுத்துறங்கினாள். அவள் உறங்குவதை உறுதி படுத்திகொண்டு அறைக்குள் நுழைந்து, அவளின் ஹெட் செட்டை கழட்டி வைத்து விட்டு போர்வையை இழுத்து போர்த்தி விட்டு அடுத்த அறைக்கு சென்று படுத்து உறங்கினான் வர்ஷித்.

அடுத்த நாள் காலை அழகாக மலர்ந்தது. காலை வேலைகளை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி மாடிபடியில் இறங்கிக்கொண்டிருந்த மாநிறத்திற்கு கொஞ்சம் வெள்ளையாக நிறம் கொண்ட வர்ஷித் மெரூன் வண்ணம் படிந்த சட்டை அணிந்து, அலைபாயும் கேசத்தை சரி செய்துகொண்டே வந்த அழகில் ஆதிகா ஆடித்தான் போனாள்.

கீழே இறங்கி வரும் பொழுதில் அவனும் ஆதிகாவின் அழகில் மதி மறந்து போனான். இருவரது கண்ணும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டு கலந்தது. ஹாலுக்கு வந்தவன், 'ஐயோ இனிய இவ கண்ணை பார்க்கவே கூடாது. நான் என்ன பன்ரேன்னு எனக்கே தெரியல அப்படி இவ கண்ணுல என்ன இருக்குனு தெரியல' என எண்ணிக்கொண்டான்.

அவன் சாப்பிட அமர்ந்தவுடன் அவனுக்கு பரிமாறிவிட்டு, அவனையே கவனித்து கொண்டிருந்தாள். சாப்பிடும்போது அவளை பார்த்து, ' நான் கேட்டதுக்கு என்ன முடிவு பண்ணிருக்க' என வர்ஷித் கேட்க ஆதிகா பேயறைந்தது போல திகைத்து நின்றுகொண்டிருந்தாள். வர்ஷித் விவகாரத்தை பற்றித்தான் கேட்கிறான் என நினைத்து பயந்தாள். அவளின் பயத்தை கலைக்கும்படி வந்து விழுந்தது வர்ஷித்தின் வார்த்தைகள். "நான் என்ன கேட்டேன்? எதுக்கு இவ இப்படி பயப்புடுறா" என நினைத்துக்கொண்டு, 'வேலைய பத்தி யோசிக்க சொன்னனே யோசிச்சியா' என கேட்டு அவளின் மனதின் பயத்தை போக்கினான். 'ஓ அதுவா' என கூறியவளை வியப்பாக பார்த்தவன் 'வேற என்ன ' என வினவினான். 'இல்ல இல்ல ஒண்ணுமில்ல'என கூறி சமாளித்தாள். "இவனே அத பத்தி கேட்கல நாமலே நியாபக படுத்த கூடாது, அப்புறம் யானை தன் கையால தனக்கே மண்ணை வாரி போட்டது போல ஆகிடும்" என எண்ணிக்கொண்டு அவள் பரிமாறினாள். சாப்பிட்டு கைகழுவ போகும் கணவனை பார்த்தவள், "வேலைக்கு போறதுக்கு எனக்காக யோசிச்சு என்னோட விருப்பத்தை கேட்டு பண்ண நினைக்கிற. ஆனால், நம்ம வாழ்க்கையை பிரிக்கப்போகும் விவகாரத்தோட பின் விளைவு பத்தி யோசிக்காம, என்னோட விருப்பத்தை கேட்காம முடிவெடுத்திருக்கியே உன்ன என்ன சொல்றதுன்னே தெரியல? என தனக்குள்ளே கவலை கொண்டாள்.

வர்ஷித் கைகழுவி வந்து அசையாது நின்ற ஆதிகாவை, "இவ என்ன அடிக்கடி பிரீஸ் ஆகியறா, என்ன ஆச்சு இவளுக்கு" என யோசித்தவாறே அவள் முன் சொடக்கிட்டு அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான். அவனை பார்த்தும் உணர்ச்சியற்று இருந்த அவளிடம் 'என்ன ஆச்சு உனக்கு, வேலைக்கு போறத பத்தி என்ன முடிவு பண்ணிருக்க, இதே கேள்வியை முன்னாடி கேட்டதுக்கு பதிலே இல்லை இப்பவாவுது சொல்லு' என கேட்க, 'நான் வேலைக்கு போறேன். ஆனால், அதுக்கு ஒரு நிபந்தனை உண்டு. நீங்கதான் அதை பண்ணனும். இதுக்கு சரின்னா எனக்கும் சரி' என்று கூறிய ஆதிகாவை புரியாமல் பார்த்தான் வர்ஷித். "இவ என்ன புரியாம பேசுறா, தனியா இருப்பாளேன்னு சொன்னா, நமக்கே டீல் பேசுறா"என எண்ணினாலும் அவள் குழந்தை தனம் மாறாத பேச்சில் மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்றே தலையை ஆட்டிவைத்தான். "இவ வேற என்ன கேட்க போறானு தெரியலையே" என பயந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், 'என்ன செய்யணும், உன்னோட டீல் என்ன?' என கேட்க அவளோ, 'இன்னைக்கு சாயங்காலம் சொல்றேன்' என சொல்ல அவனோட நிலைமைதான் பரிதாபம் ஆனது. அவனும் சென்று விட ஆதிகா வர்ஷித் சென்ற திசையையே பார்த்துக்கொண்டே, "நாம் சொல்வதை அவன் நிறைவேற்ற வேணும் இல்லனா விடக்கூடாது செய்ய வச்சே ஆகணும்" என தீர்மானித்தாள்.

அவன் அலுவலகம் சென்றுமே, "அவள் என்ன கேட்பாள்" என்பதை பற்றிய யோசித்தான். "அவள் முதல் முதலாக கேட்க போகிறாள், கண்டிப்பாக செய்தே ஆகணும்" என நினைத்து மறுபடியும் வேலைக்குள் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்.

ஆதிகா மறுபடியும் அவன் சொன்னதையே மனதில் அசைபோட்டு கொண்டிருந்தாள். அவன் ஏன் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறான் என ஆராய ஆரம்பித்தாள். "என்னைய அவனுக்கு பிடிக்கலையா?, பிடிக்காமயா எல்லாத்தையும் பாத்து பாத்து செய்றான். முதல் காதல மறச்சேன்னு இப்படி நடந்துக்குறானா? இல்லையே, அன்னைக்கு சொல்ல வந்தப்பவும் தெரியும்னு சொன்னானே, அவனுக்கும் அது தெரியுமே. வேற ஒருத்தன காதலிச்சவன்னு பாக்குறானா? இல்லையே நம்ம நிலைமையை அவனே புரிஞ்சுகிறானே, அவனே நம்ம தனிமையை போக்க வேலைக்கு போனு சொல்ரேன். எல்லா வகையிலும் யோசித்து பதில் கிடைத்தவளின் மூளைக்கு கடைசியில் ஒரு விடையில்லா கேள்வி வந்தது. நமக்கு முன்னாடி வேற யாரையாவது லவ் பண்ணி சேராமல் போயிருக்குமோ இல்லை இப்பவும் வேற பொண்ண லவ் பன்றானோ அதான் இந்தமாதிரி செய்றானோ, அந்த பொன்னையும் மறக்கமுடியாம என்னையையும் ஏதுக்கமுடியாம இருக்காணோ? இதுக்கு தான் டிவோர்ஸ் தரேன்னு சொன்னானோ. என்ன மாதிரி இவனும் சூழ்நிலையில் கைதியா மாட்டடிகிட்டுத்தான் என்ன கல்யாணம் பண்ணிகிட்டானோ? கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாவது என்கிட்டே சொல்லிருக்கலாம்ல, ஏன் என்கிட்டே சொல்லல. ஆமா, நம்ம கஷ்டம் தான் அவனுக்கு தெரியுமே மேல கஷ்டப்படுத்தவேணாம் என நினைத்திருப்பான். அதான் சொல்லல போல. அவன் சந்தோசமா இருக்கனும் அதுவே எனக்கு போதும் அதுக்காக என்னவேனாலும் பண்ணலாம்" என உறுதிகொண்டாள். இவனை எப்படி பிறருக்கு விட்டுக்கொடுப்பது என ஒரு நிமிடம் வருந்தினாள். ஐயோ நம்ம எப்போ இவனை லவ் பண்ண ஆரம்பித்தோம் என தன்னிலை அறிந்தவுடன் வெட்கம் கூட எட்டி பார்த்தது. சரி நம்ம ஆசைய சொன்ன இவன் என்ன சொல்லுவான், "இப்பதானே நமக்கு கல்யாணம் ஆச்சு அதற்குள் எப்படி என்பதை கேட்டால் என்ன சொல்வது இல்லை வேற ஏதாவுது தப்பா பேசிட்டா என்ன பண்றது" என எண்ணி, "வேணாம் சொல்ல வேணாம், அவன் ஏதாவுது சொல்லிட்டா என்னோட மனசுக்கு இனி எதையும் தாங்குற சக்தி இல்லை" என முடிவெடுத்தாள். "இருக்குற வரைக்கும் சந்தோசமா பாத்துக்கலாம், அப்புறம் அவனோட விருப்பம். நாம அத பத்தி பேசவேணாம், அவனே கேட்டால் அவனோட விருப்பத்துக்கு ஏற்றவாறு செய்யலாம்" என தனக்கே கூறி கொண்டு வீட்டு வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.

நாளைக்கு ஞாயிறு கிழமை நல்லா ஓய்வெடுக்கணும் என்ற எண்ணத்தோடு அலுவலகத்திலிருந்து வேலை பளு காரணமாக தாமதமாக வீடு திரும்பினான். வீட்டிற்குள் நுழையும்போதே அவனை வரவேற்த்தது, ஆதிகாவின் அம்மா என்ற சொல்தான். ஆதிகா தனது பெற்றோருடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள். வர்ஷித்துக்கு அவனது அம்மாவுடன் இருந்த மகிழ்ச்சியான நாட்கள் நினைவுக்கு வந்தது. கோபம் பின்னுக்கு சென்று அம்மாவின் சிரித்த முகமே முன் வந்தது. "அம்மா சிரிச்சு எத்தன நாள் ஆச்சு" என எண்ணி வருந்திக்கொண்டிருந்தான். அப்போது ஆதிகா வந்து சாப்பிட கூப்பிட்டாள். மனதை மறைத்து சிரிக்க முயன்றவனுக்கு நியாபகம் வந்தது காலையில் ஆதிகாவிடம் போட்ட ஒப்பந்தம். அவளே 'நான் சொல்றத செய்விங்களா? அப்படி செஞ்ச நானும் வேலைக்கு போறேன்' என சொல்ல, வர்ஷித்தோ, ஆதிகா முதல் முறை கேட்டதில் மறுப்பு சொல்ல மனம் வராமல், 'சரி நான் செய்றேன், என்ன செய்யணும் சொல்லு' என ஒத்துக்கொண்டான்.

ஆதிகா வர்ஷித்திடம் என்ன கேட்பாள்? வர்ஷித் அதை செய்து முடிப்பானா? ஆதிகா காதல் வர்ஷித்திற்கு தெரிய வருமா? அடுத்த பகுதியில் காண்போம்.

நன்றி!
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
அத்தியாயம்: 13

வர்ஷித்தும் ஆதிகாவும் சகஜமாக வாய்விட்டு பேசும் நிலையில் இருந்தனர். வர்ஷித்திற்கு ஆதிகா கூட இருக்கும் வரை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என எண்ணம் இருந்தது. அவளின் தனிமையை போக்குவதற்கு வேலைக்கு போக சொன்னான். ஆனால், அவளோ வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமென்றாள்.

இரவு சாப்பிடும் வேளையில் வர்ஷித், "ஆதிகா என்ன செய்யணும்னு சொல்லு, நான் செய்றேன்" என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான். ஆதிகாவிற்கு இவ்வளவு ஆர்வமா என்று அதிசயமாக பார்த்தாள். "நீங்க சாப்பிட்டு முடிங்க நான் சொல்றேன்" என ஆதிகா கூறினாள் உணவு பரிமாறிக்கொண்டே. நான் ஆசையை சொல்ல வர்ஷித் கோபம் கொண்டு சாப்பிடவில்லை என்றால் என்ன செய்வது என ஒரு பயம் இருந்தது அவளுக்கு, அதனாலே இப்படி கூறினாள்.

ஆனால் அவள் எண்ணத்திற்குரியவனோ, "இப்பவே சொல்ல வேண்டும்" என பிடிவாதம் கொண்டான். அவளும் வழியின்றி சொல்ல ஆரம்பித்தாள்.

வர்ஷித் அருகில் அமர்ந்து, "நான் சொல்றத பொறுமையாக கேளுங்க, கோபப்படக்கூடாது, எக்காரணம் கொண்டும் சாப்பாட்டிலிருந்து பாதியில் எழ கூடாது" என பல கட்டுப்பாடுகள் இட்டு அதற்கு வர்ஷித்தையும் ஒத்துக்க வைத்த பின்பே ஆரம்பித்தாள் அவனின் கோபத்தை படித்து வைத்திருக்கும் அவனவள்.

அத்தை, மாமாவை அழைச்சிட்டு வாங்க, எவளோ நாளைக்கு உங்க இல்லாத கோபத்தை பிடிச்சு வச்சிக்க போறீங்க, அவுங்களுக்கும் நம்மள தவிர யாரு இருக்காங்க? நம்மதானே பாத்துக்கணும். அங்க தனியா கஷ்டப்படுவாங்க ப்ளீஸ் ரெண்டுபேருக்கிட்டயும் பேசி அழைச்சிட்டு வாங்க" என முன்னால் நிபந்தனை போட்டு பேசியவள் இப்போது கெஞ்சிக்கொண்டு இருந்தாள். வர்ஷித்தும் இதை கேட்டு கோபப்படாமல் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தான். அவளும் அவனின் முகத்தை ஆராய்ந்தாள். அந்த ஆராய்ச்சியின் முடிவாக கோபம் இல்லை குழப்பமும் சோகமும் இருப்பதை அறிந்துகொண்டு அவன் யோசிக்க தனிமை வழங்கினாள்.

அவள் சொல்ல சொல்ல அவனுக்குள் மனதில் அறை வாங்கியதுபோல் ஓர் உணர்வு எழுந்தது. 'அவ வைக்குற அக்கறை கூட நாம வைக்கலையே' என வருத்தம் கொண்டான். 'எப்படி நாம அம்மாவை மறந்தோம். ஏற்கனவே, விஷ்ணு இறந்த கவலையில இருந்தாங்க, நான்தானே இப்போ துணையா இருக்கணும். ஆனால், நானே கஷ்டத்தை கொடுத்துட்டேனே, எவளோ வேதனை பட்டிருப்பாங்க ' என தன் தவறு உணர்ந்தவுடன் கோபத்தில் கட்டிலின் முனையில் தன் கையால் குத்தினான்.

தன் கையாலாகாத தனத்தை நினைத்து மனதுக்குள் துடித்துப்போனான். தன் துயரை நீக்கி பாசத்தை பொழிந்து தன்னை ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வளர்த்த தாய்க்கு தன்னால் ஒரு துன்பம் நேர்ந்ததை எண்ண, கண்ணீர் கூட கன்னத்தில் தடம் பதித்தது. கட்டிலில் கண் மூடி படுத்தவனுக்கு நிம்மதியான தூக்கம் கூட வர மறுத்து சதி செய்தது.

'ஆதிகா கஷ்டப்படுவானு நினைச்சி அவளை இங்க அழைச்சிட்டு வந்தோம் அது போல அம்மாவும் அங்க கஷ்டப்படுவாங்கனு நமக்கு தோணாம போச்சே' என நினைக்க நினைக்க நொந்துபோனான். 'ஒருவேள, அம்மா சொல்ற மாதிரி நானும் பொண்டாட்டி பின்னாடி சுத்துறேனோ' என நினைத்த மறு நொடி ஆதிகா அன்று காரில் பதில் சொன்னது நியாபகம் வர உதட்டில் அழகாக ஒரு புன்னகை தவழ்ந்தது. அவளின் அந்த குறும்புத்தனம் வர்ஷித்தின் மனதில் அழியா சுவடாக இடம்பெற்றது. அப்போதுதான் அவனுக்கு
தான் வழக்கமாக செய்வது நினைவில் எழ, ஆதிகாவின் அறைக்கு சென்று பார்த்தான், அவள் மன நிறைவோடு தூங்குவது போலிருந்தது அவனுக்கு. நன்றியோடு ஒரு பார்வையை செலுத்திவிட்டு, ஹெட் செட்டை கழட்டி வைத்துவிட்டு அவளுக்கு போர்வையை நன்றாக போர்த்திவிட்டு நகர மனமில்லாமல் அவளருகிலே மண்டியிட்டு அமர்ந்து அவள் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டிருக்கும்போது அவளின் தூக்கம் கலைவதை உணர்ந்தவன் இனிமேல் இருந்தால் ஆபத்து என சுதாரித்து தன்னை நினைத்து சிரித்துக்கொண்டு அவனறைக்கு சென்று கட்டிலில் படுத்தவனை பல சிந்தனைகள் சூழ்ந்துகொண்டது.

'ஏற்கனவே, எனக்காக யோசிச்சு தான் நியூ யார்க் சென்று விஷ்ணுவை இழந்துட்டேன். இப்போ, அம்மாவை பத்தி யோசிக்காம இங்க வந்துட்டோம். இனிமேல் யாரையும் இழக்கக்கூடாது. நாளைக்கே நம்ம வீட்டுக்கு சென்று அம்மா அப்பாவை கூட்டி வந்து நம்மகூட வைத்து பாத்துக்கணும்' என முடிவோடு நித்திரையை தழுவினான்.

காலையில் ஞாயிறு கிழமை என்றாலும் வேகமாக துயில் எழுந்தான். அம்மாவை பார்க்க போகும் மகிழ்ச்சியில் அவனுக்கு தூக்கம் வந்ததே பெரிய விஷயமாகி போனது. சீக்கிரமாக கிளம்பி தூங்கும் ஆதிகாவை எழுப்பாமல் வீட்டை திறந்து அம்மாவை பார்க்க சென்றான்.

வர்ஷித்திற்கு தான் அவளுக்காக செய்றோம் என ஒரு துளி கூட நினைக்கவில்லை. அவன் அவனுக்காகவே சென்றான். இதை ஆதிகா நியாபக படுத்தியதாகவே தான் அவன் நினைத்தான். ஏனெனில் அவனே இதை பற்றி முன்னாடியே யோசித்திருந்தான். அவளின் நிபந்தனைக்காக வர்ஷித் செல்லவில்லை என்பதே உண்மை.

வீட்டிற்கு முன் கார் நின்றவுடன் ஒரு வித தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். சத்தம் கேட்டு வசந்தாவும் வெளியே வந்தாள். அம்மாவை பார்த்த உடனே கட்டியணைத்து மன்னிப்பு கூறி கண்ணீர் வடித்தான். இரவிலிருந்து தவித்த தவிப்பும், தான் இப்படி செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் தாயை கண்ட நொடியே அகன்றது. மனமும் லேசாகியது.

வசந்தாவும் முதுகை நீவி விட வர்ஷித்தும் ஒரு கட்டத்தில் அழுது முடித்தான். வயது வளர்ந்து கொண்டே போனாலும் அம்மாவிற்கு பிள்ளை தானே. வசந்தா வர்ஷித்தை கூட்டி வந்து சோபாவில் அமரவைத்து தண்ணீர் கொடுத்தார். இவை நீங்களும் போதே, சுப்பிரமணியனும் அவ்விடத்தை அடைந்திருந்தார். அப்பா அம்மாவின் நடுவில் குழந்தை போல அமர்ந்திருந்தான். ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிருங்க. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். ஏதோ ஒரு கோபத்துல உங்ககூட பேசாம இருந்துட்டேன். ஆனால் இப்போ தான் எவளோ கஷ்டப்பட்டிருப்பீங்கனு புரியுது என மறுபடி மறுபடியும் மன்னிப்பு வேண்டினான் இருவரிடமும். வசந்தா,"நீ எங்க புள்ள எங்ககிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது"என கூற சுப்பிரமணியோ, " சரி இனிமேல் இத பத்தி பேச வேணாம்", அவரே பேச்சை மாற்ற நினைத்து வசந்தவிடம், "நீ என்ன சும்மா உட்காந்துருக்க, புள்ளைக்கு டீ போட்டு கொண்டு வா" என்றார்.

வசந்தா டீ கொண்டு வந்தவுடன் அதை பருகிக்கொண்டே , "என்னப்பா நீ மட்டும் வந்திருக்க மருமகள அழைச்சிட்டு வரலையா? "என கேட்க வர்ஷித், "இல்லப்பா, நான் வந்ததே உங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போகத்தான் ப்பா. நீங்களும் அம்மாவும் மறுபேச்சு பேசாமல் என்கூட கிளம்பி வாங்கப்பா ப்ளீஸ். நீங்க சொன்னா அம்மா மறுக்காம கேப்பாங்கப்பா சொல்லுங்கப்பா" என கேட்கவும் சுப்பிரமணியனோ வசந்தாவை நோக்க அவரும் சம்மதித்தார். "சரி நாங்க வரோம் சமைச்சி சாப்பிட்டு போகலாம்" என வசந்தா கூற வர்ஷித்தோ, "இல்லம்மா அங்க ஆதிகா உங்களுக்காக சிறப்பா பண்ணிக்கிட்டு இருப்பா, நீங்க கிளம்புங்க "என்ற வர்ஷித் தான் ஆதிகாவுடம் எங்க போகிறோம் என கூட சொல்லமால் வந்திருந்தான். ஆனால் இங்கு அவனையும் மறந்து வாக்களித்திருந்தான். அம்மாவ பாத்ததுல பொண்டாட்டிய மறந்துட்டான் போல...

ஆதிகா இதனை நிபந்தனையாக சொல்லாமல் இருந்திருந்தால் கூட வர்ஷித் இதை செய்திருப்பான். ஆனால், கொஞ்சம் தாமதமாக நடந்திருக்கும்.

காரில் இருவரையும் தன் வீட்டிற்கு அழைச்சிட்டு வந்தவன், வாசலில் நின்று கதவை தட்டினான். அப்போதுதான் நியாபகம் வந்தது வர்ஷித்திற்கு, ஆதிகாவிடம் சொல்லாமல் அம்மா அப்பாவை அழைக்க சென்றது. 'அவ வேற என்ன பண்றனு தெரியலையே ஒருவேள லீவுனு தூங்குறாளோ? அம்மா அப்பாக்கு நேரத்துக்கு சாப்பாடு தரணுமே என்ன செய்றது 'என சிந்தனை ஓட்ட பந்தயம் வைத்து ஓடியது. அவ்வேளையில் கதவை திறந்தாள் அவனின் சிந்தனையின் நாயகி.

ஆதிகாவும் ஏதோ ஒரு உந்துதலில் கண்விழித்து காலை கடன்களை முடித்து சமையல் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளும் வர்ஷித்தை தேடி, காணவில்லை என்றதும் எங்கயாவது வெளியில் வேலை இருக்கும்போல என யோசித்தவள் அத்தை மாமாவை அழைக்க சென்றிருக்க கூடும் என்பதை அவள் யோசித்தும் பார்க்கவில்லை.

'அப்பாடா' என இருந்தது வர்ஷித்திற்கு இவள் முழித்ததற்காக கடவுளிடம் நன்றியும் கூறினான். ஆதிகாவிற்கு சொல்ல அளவில்லாத ஆனந்தம் இருவரையும் பார்த்ததில். நாள் முழுதும் ஆதிகா வர்ஷித்தை கண்டுகொள்ளவே இல்லை அத்தை மாமாவுடன் தான் இருந்தாள். இதனால் கொஞ்சம் பொறாமையும் கொண்டான் வர்ஷித்.

இரவு அறையில் படுத்த ஆதிகா, அந்த நாள் முழுதையும் நினைத்து ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்தோசமாக உணர்ந்தாள்.இதற்கு காரணம் வர்ஷித்தா அல்ல அவனின் பெற்றோர்களா என்பது தெரியவில்லை. காரணம் தேடி அலைந்து மகிழ்ச்சியை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதற்கு அவள் மூளையில் இடமும் இல்லை. ஏனனில், எல்லா இடமும் மகிழ்ச்சியால் நிரப்பபட்டிருந்தது.

வர்ஷித் அப்போது உள்ளே நுழைய, " என்னங்க மேடம் என்ன நியாபகம் இருக்கா? "என வினாவ, அவளோ அவனிடம் பதில் சொல்லாமல் விழித்தாள். அவனே தொடர்ந்தான், "இப்படி முழிக்காதம்மா சரி இன்னைக்கு நீ சொன்னதெல்லாம் செய்தேன் அதுக்கு ஒரு நன்றி கூட இல்லையா? "என வம்பிழுக்கவேனே தலையை சாய்த்து கேட்க, அவனின் அவள் அந்த அழகில் தன்னை தொலைத்து மீட்டவள், "இங்க பாருங்க சார், முதல கேட்ட கேள்வி கூட நான் ஒத்துக்குறேன். ஆனால், உங்க ரெண்டாவது கேள்வி நியாயமானு உங்க மனசுகிட்ட கேளுங்க, நீங்க எனக்காகவா பண்ணிங்க" என சொன்னவுடன் வர்ஷித் நன்றியோடு அவளை நோக்கி, " உண்மைதான். இப்போ அம்மா அப்பா சந்தோசமா இருக்க நீதான் காரணம், இது நடந்துருக்கும் கொஞ்சம் தாமதமா நடந்துருக்கும். ஆனால், நீ சொன்னதால்தான் இப்போ நடந்துச்சு ரொம்ப தேங்க்ஸ் நானும் சந்தோசமா இருக்கேன்" என கேட்க அவளோ அவனின் மகிழ்ச்சியில் இவள் மேலும் மகிழ்ச்சி கொண்டு, " பரவாயில்லை, அத விடுங்க, என்ன விஷயமா இப்போ இங்க வந்துருக்கீங்க? "என கேள்வியோடு நோக்க, "அந்த ரூமை அம்மா அப்பா எடுத்துகிட்டாங்க அதான் இங்க வந்துட்டேன். அவுங்களுக்கு சந்தேகம் வரக்கூடத்துல அதான், இங்க சோபால படுத்துக்குறேன்" என்றான் வர்ஷித். இதுல மட்டும் கரெக்டா இரு, சரியான சாமியார் என மனதில் அவனை பலவாறு அர்சித்தவள், சரி என தலையை ஆட்டினாள். இருவரும் நிம்மதியக இரவை கடந்தனர்.

இவர்கள் உறவு இதேபோல் மகிழ்ச்சியாக அமையுமா? என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 14

ஆதிகா சொன்னதை வர்ஷித் செய்ததால், ஆதிகா வேலைக்கு செல்ல ஒப்புக்கொண்டாள். நேர்முக தேர்விற்கு ஆதிகாவை அனுப்பி வைத்தது முதல் வேலை கிடைத்து, அலுவலகத்திற்கு சென்றது வரை அவளுக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தது வர்ஷித்தான். அவள் வேலைக்கு போக சுப்பிரமணியனும் வசந்தாவும் சம்மதித்தனர். இதற்கிடையில், ஆதிகாவும் எவ்ளோவா காரணம், வேலைக்கு போகாமலிருக்க சொல்லியும் அம்மூவர்களிடம் எடுப்படவில்லை . வர்ஷித்தின் பெற்றோர் மேலும் ஊக்குவித்தனர். வசந்தா, "படிச்சா புள்ள எதுக்கு சும்மா வீட்ல இருக்கணும் " எனவும் சுப்பிரமணியன், "வெளியில் போனாதான் வெளி உலகத்தை தெரிஞ்சுக்கலாம்" என பல அறிவுரைகளை கூறினார். அதற்கு அவளோ, 'எப்படித்தான் இவனை மாதிரியே அத்தை மாமாவும் இருக்காங்களோ' என உள்ளே நினைத்துக்கொண்டு சரி என சம்மதித்தாள். வர்ஷித்தே ஸ்கூட்டி ஒன்று வாங்கி தந்து ஒட்டவும் கத்துக்குடுத்தான்.

நாட்களும் இதுபோலவே உருண்டோடின. ஆதிகாவும் வசந்தாவும் மாமியார் மருமகள் நிலையிலிருந்து அம்மா மகள் நிலைக்கு மாற்றம் பெற்றிருந்தனர். அவ்விருவரும் பெண் பிள்ளை இல்லாத குறையை ஆதிகாவிடம் அன்பை பொழிந்து போக்கி கொண்டனர். கட்டுக்கோப்பான பெற்றோருடன் வாழ்ந்த ஆதிகாவிற்கு, நட்பாய் பேசி நண்பர்கள் போல் பழகும் அத்தை மாமாவுடன் நன்றாக இணங்கி போனாள். தினசரி மூச்சுக்கு ஆயிரம் முறையாவது "அத்தை அத்தை'என கூப்பாடு போட்டுக்கொண்டே இருப்பாள். தினசரி நடப்பதை இருவரிடமும் பகிர்ந்தும் கொள்ளுவாள். இவர்களின் பிணைப்பை பார்த்து வர்ஷித் மிகவும் சந்தோசம் கொண்டான். சில நேரம் பொறாமையும் எழுந்தது அவனுக்குள்.

வர்ஷித் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஆதிகா அங்கு வந்தால், வர்ஷித் அவ்விடத்தை விட்டு விலகி விடுவான். இதை பெற்றோரும் கவனிக்க தவறவில்லை. இருந்தாலும், "இது அவர்களே பேசி தீர்க்க வேண்டியது"என கேட்காமல் விட்டனர், பின்னர் அதுவே பெரிய விஷயமாகி போக போவதை அறியாமல். ஆதிகா இருக்கும் பக்கம் வர்ஷித் வருவதை முற்றிலும் தவிர்த்தான். அவள் தூங்கிய பிறகே அறைக்குள் வருவான். அவள் தூங்கி எழுவதற்குள் அறையை விட்டு வெளியேறிடுவான். அதிகமாக அவள் கண்ணை சந்திப்பதை மறுத்தான். இந்த விலகலை ஆதிகா மனதினுள், 'வேறு ஒரு பொண்ணை மனதில் வைத்து கொண்டுதான் என்னை ஒதுக்குகிறான்' என மனதில் தீர்மானித்துக்கொண்டாள். ஆனால் அவனோ, ஆதிகாவிடம் நெருங்கினாலே தன்னை மறந்துவிடுகிறோம், ஏதாவுது தன்னை மீறி நடந்துவிட்டாள் என்ன செய்வது என்றே விலகியிருந்தான், தானே அப்படி ஒரு நாள் செய்ய போகிறோம் என்பதை அறியாமல்.

அவனையும் அறியாமல் ஒரு சோகம், தவிப்பு எல்லாமே அவன் கண்களில் தெரியும். அவன் சாதாரணமாக இருந்தாலும் அவனது முகத்தில் ஒரு கவலை குடிக்கொண்டிருக்கும். இதையெல்லாம் கவனித்த ஆதிகா அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டாலும் 'ஒண்ணுமே இல்லனு 'எதுமே சொல்ல மாட்டான். எனக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சு பண்ணுறது ஆனால் என்கிட்ட அவன பத்தி ஒண்ணுமே சொல்லமாட்டான் என மனதில் அவனை வசை பாடுவதை தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை. காதல் தோல்வி என ஆதிகாவே யூகித்து கொண்டாள். அத்தை மாமாகிட்ட கேட்போமா என யோசித்தவளுக்கு, 'அவுங்களுக்கு தெரிஞ்சாலும் சப்போர்ட் தானே பண்ணிருப்பாங்க, வர்ஷித்தோட மாமாகிட்ட பேசிருப்பாங்களே, வர்ஷித்திற்கு புடிச்ச பொன்னாத்தானே கல்யாணம் பண்ணிவச்சிருப்பாங்க. ஒரு வேளை, இவனே யார்கிட்டயும் சொல்லால போல'என பலவழியில் யோசித்து கொண்டிருந்தாள்.

வர்ஷித் சிரிக்கும்போது அவனது அழகான இதழ்கள் தாடிக்குள் சிக்கி கிடப்பதை போல் உணர்ந்தவள், அவனுக்குள் ஒளிந்திருக்கும் சோகத்தை கலைத்து, விடுதலையாக வர்ஷித் சிரிப்பதை கண்கூட பார்க்கணும் என உறுதி கொண்டாள். கண்டிப்பா அதுக்கு ஒரு வழி கிடைக்கும் என ஒரு நம்பிக்கையில் அடுத்த வேலைக்கு சென்றாள். அவளுக்கு தெரியாத ஒன்றை சொல்ல துடிக்கும் விதியை இவள் அறிவாளா?

சிறிது நாட்கள் செல்ல, வசந்தா தான் கொண்டு வந்த பை ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருக்க, அங்கு ஆதிகாவும் சென்று அமர்ந்து வழக்கம் போல வளவளத்துக்கொண்டிருந்தாள். வசந்தவுடன் சேர்ந்து ஆதிகாவும் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

அப்போது வசந்தாவின் கையில் ஒரு குட்டி பை ஒன்று பிடிப்பட்டது. அதை ஆதிகா திறந்து பார்க்க அதில் ஒரு டைரி இருந்தது. அதை வசந்தவிடம் காண்பித்து யாருடையது என கேட்க அவரோ அது வர்ஷித்தோட டைரி, "வீட்டுக்கு வந்தபொழுது அதை வச்சிட்டு வந்துட்டேன், எடுத்து வச்சிக்கோங்க இங்க வந்து வாங்கிக்கிறேனு சொன்னான், நானும் கொடுக்க மறந்துட்டேன் அவனும் மறந்துட்டான் போல, இதை வர்ஷித் கிட்ட குடுத்துருமா" என சொன்னார். அவளோ, " இது முக்கியமான டைரியா அத்தை" என கேட்க, வசந்தாவோ, ஒரு சிரிப்புடன், "இத அவன் ஸ்கூலிருந்து வச்சிருக்கான். எங்க யார்கிட்டயும் கொடுக்க மாட்டான். வீட்ல உள்ளவங்க கூட இந்த டைரியை அவனோட பொண்டாட்டினு சொல்லுவோம். எங்க போனாலும் இதை தூக்கிகிட்டுதான் திரிவான். ஏதோ இப்போ மறந்துட்டான் போல அதான் அங்கேயே வச்சிட்டு வந்துட்டான். இதுல என்ன ரகசியம் இருக்குனு எங்க யாருக்கும் தெரியாது மா"என கூறினார் வசந்தா. இதனை கேட்ட ஆதிகாவின் மனதில் ஒரு வித மின்னல் பளிச்சிட்டது. 'இதுலதான் ஏதோ இருக்கு, இத படிச்சா தெரியும், இத கொடுத்துட்டு நான் என்ன பண்றது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தியே ஆகணும். இதுல அந்த பொண்ண பத்தி இருக்க வாய்ப்பு இருக்கு'. இத படிச்சு அந்த பொண்ண கண்டுபுடிச்சு வர்ஷித்கூட சேர்த்து வைக்கணும் என நினைக்கும் போதே அவள் இதயத்தை யாரோ குத்தி கீறுவது போல வலி ஏற்பட்டது. அந்த டைரியை தொடும்போது மனதிலும் உடம்பிலும் நடுக்கம் உருவானது. ஒரு பெருமூச்செடுத்து உணர்வை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாமாதான் சந்தோசமா இல்லை, நமக்கு புடிச்சவங்களாவது சந்தோசமா இருக்கட்டும் என நினைத்து மனதை திட படுத்திகொண்டு, டைரியை வர்ஷித்திற்கு தெரியாமலிருக்க தனது துணிகளுக்கு நடுவில் மறைத்து வைத்தாள், இத சீக்கிரமா படிக்கணும் என உறுதியோடு.

அந்த வாரத்திலேயே ஒரு நாள் இரவு இருவரும் சாப்பிட்டு முடித்தனர். ஆதிகா அறைக்கு சென்று பொருட்களை ஒழுங்கி படுத்தி கொண்டிருந்தாள். வர்ஷித் உள்ளே வரும் நேரம் பார்த்து சரியாக ஆதிகாவும் கப்போர்டில் தலையை இடித்துக்கொண்டாள். அம்மாஆஆ... என கத்தும்போது வர்ஷித்தும் வேக வேக எட்டுக்கள் எடுத்து வைத்து உள்ளே வந்து ஆதிகாவை பிடித்து கைத்தாங்கலாக மெத்தையில் உட்கார வைத்தவனின் கண்ணில் பதற்றம் மட்டுமே தெரிந்தது. அதோடு ஒரு அக்கறையும் தொற்றிக்கொண்டது. அவன் கண்ணை பார்த்ததும் அவளின் வலிகள் பறந்து சென்றது. பேரின்பம் மனதில் குடிக்கொண்டது.

ஆனால், அவனோ "பாத்து செய்ய மாட்டியா" என அவள் செய்த செயலில் பதற்றம் கொண்டு அக்கறையில் திட்டினான். அந்தோ பரிதாபம், ஆதிகாவிற்கு அவன் திட்டிய வார்த்தைகள் யாவும் காதில் விழவே இல்லை. அவனையும் அவனின் பாசத்தையும் ரசித்து அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு நெற்றியில் வீக்கம் இருந்தது. அதை சரி செய்ய மருந்தை தேடி அலைந்து வேகமாக கொண்டு வந்து போட்டு விட்டான். இருவரின் முகமும் அருகே அருகே இருந்தது. ஆனால் இதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை. ஆதிகவோ வர்ஷித்தின் அன்பின் மழை சாரலில் நனைந்து கொண்டிருந்தாள். வர்ஷித்தோ அவளின் பிறை நெற்றியை நீவி விட்டு நொடிக்கொரு முறை அவனது அன்பை பறைசாற்றிக்கொண்டிருந்தான். இவ்வன்பை பார்த்ததும் ஆதிகாவிற்கு அவன் மீது எழும் காதல் கூடி போனது. இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த அன்பெல்லாம் மொத்தமாக வெளி வந்தது.

அவனின் மூச்சுக்காற்று ஆதிகாவை மெல்ல இம்சிக்க ஆரம்பித்தது. அதிலே அவள் கண் மூடி லயித்திருந்தாள். கிட்ட தட்ட இருவரின் முகமும் ஒட்டியிருந்தது. வர்ஷித் இதை இன்னும் கவனிக்கவே இல்லை. வெகு நேரம் நீவி விட்டு பதற்றம் எல்லாம் குறைந்த பிறகே உணர்ந்தான் தன்னை மீறி தன் மறைத்து வைத்திருந்த அக்கறையும் அவளோடு ஒட்டி இருப்பதையும். உணர்ந்த பிறகு, பட்டென்று எழ போனவனை சட்டென்று தடுத்தது ஆதிகாவின் செயின். ஆம், ஆதிகாவின் செயினோடு வர்ஷித்தின் செயினும் சிக்கி பிணைந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. இதை எடுக்க முயலுகையில் ஆதிகாவை பார்த்தான். அவளும் அப்போதுதான் கண்விழித்தாள். இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்திக்க, சட்டென ஆதிகா விழிகளை தாழ்த்தி கொள்ள அவளின் கன்னமும் சிவந்து வெட்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அடுத்து அடுத்து இத்தனை அரங்கேற்றங்களை பார்த்தவன், அவளின் பால் சரியும் மனதை கட்டுப்படுத்த வழி தெரியாமல், இத்தனை நாட்கள் போக்கு காட்டிக்கொண்டிருந்த புத்தியெல்லாம் தறி கெட்டு ஓட, சித்தம் கிறங்கி அசுர வேகத்தில் அவளது பால் போன்ற முகத்தை தன் கைகளால் ஏந்தி தன் இதழ்களால் அவள் இதழ்களை தவிர எல்லா இடத்திலும் பஞ்சமே இல்லாமல் முத்தத்தை வாரி வழங்கினான். இத்தனை நாட்கள் இருந்த தவிப்பு, இப்போது கிடைத்த அவளின் அருகாமை எல்லாமே மடை திறந்த வெள்ளம் போல கட்டுப்பாடின்றி முத்தத்தை இறைத்தான். அவனுக்கு அப்போது தெரிந்தது எல்லாம் ஆதிகா மட்டுமே.

இவற்றை சற்றும் எதிர்பாக்காத ஆதிகா ஸ்தம்பித்து போனாள். ஏற்கனவே, அவனின் அன்பில் திளைத்திருந்தவள் இப்போது அவனின் முதல் முத்தத்தில் திக்கு மூக்கு ஆடிப்போனாள். அவன் செய்வதை அவனவளால் தடுக்க முடியவில்லை, எப்படி முடியும் அவன்தான் அவளின் உயிரில் உறைந்தவன் ஆயிற்றே, ஆருயிர் காதலன் ஆயிற்றே. அவனின் செய்கையை ஏற்றுகொண்டிருந்தாள் அப்பெண்ணவள்.
முகத்தில் அவனது முத்தம் தொடர் கதை ஆகிக்கொண்டிருக்க, அதில் துளியும் அவள் காமத்தை கண்டிரவில்லை விலை உயர்ந்த காதலை மட்டுமே உணர்ந்தாள்.

அவனின் இதழ் ஆதிகாவின் இதழ் நோக்கி பயணிக்கும் நேரம், அவர்களது அறையில் கரண்ட் கட் ஆனது. ஒரு நிமிடம் நிதானித்தவன், தான் செய்த வேலையையும், தான் செய்ய நினைத்த வேலையையும் நினைத்து வேதனை கொண்டு வேகமாக இணைந்த செயினை பிரிக்க முடியாமல் போக அதனை கழட்டி, அவளிடமிருந்து விடுபட்டு ஆதிகாவின் முகம் பார்க்காமல் மாடிக்கு ஓடி சென்றான். தன்னை மீறி அவளின் மீதுள்ள உணர்வுகள் போட்டி போட்டு வெளி வந்ததை நினைத்து கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவன், அவள் தனது முத்தத்திற்கு உருகினாளே தவிர ஒரு வித எதிர்ப்பும் அவள் காட்டவில்லை என்பதை அவன் யோசிக்கவே இல்லை. மாறாக, 'அவ என்ன என்ன நினைச்சிருப்பா, கேவலமா இருக்கு, அவளுக்கு விருப்பம் இல்லாம இந்த மாதிரி பண்ணிட்டு இனிமேல் எப்படி அவளுக்கு முன்னாடி போய்ட்டு நிற்பேன் 'என குற்ற உணர்வு கொண்டான்.

அங்கு அவளின் நிலைமை தான் மோசம், அவனின் முதல் முத்தமும் அவனின் மீசை குறுகுறுப்பும் அவளை விடவே மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. இனிமேல் அவன் சரியா கூட பேசமாட்டான் என அவனின் குணம் அறிந்து யூகித்து கொண்டாள்.

இரவு வெகு நேரம் சென்றும் அவன் அறைக்கு வராததால், அவள் அவனின் டைரியை படிக்க ஆரம்பித்தாள். "உன்ன எப்படிடா வேற பொண்ணுக்கு விட்டுக்கொடுப்பேன் "என புலம்பி, காதலில் உருகி பக்கங்களை புரட்டினாள்.
முதல் பக்கத்திலிருந்து அடுத்த பகுதியில் பாப்போம்.
நன்றி!
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 15

அம்மூ...
என் வாழ்க்கைய அழகா மாத்துனவ, என்னையும் மாத்திட்டா . நீ வந்த பிறகு தான் என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சதுனு தோணுச்சு.

அம்மூ... இந்த பேரு அவளுக்கு நான் வச்ச பேரு. அவளுக்கும் இந்த பேரு புடிச்சிருக்கணும், கண்டிப்பா புடிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

அன்று கோடைகாலத்தில், சூரியன் ஊரையே எரித்துவிடும் நோக்கில் கொளுத்தி எடுத்தது. மதிய வேளை, அப்போதான் நான் அம்மூவ முதல் முதல பார்த்தேன் ஹாஸ்பிடலில். நான் பார்க்கும்போது அவ அழுதுட்டு இருந்தா. அன்னைக்கு அவளோட தம்பி மாடிப்படியிலிருந்து கீழ விழுந்து அடி பட்டுருச்சி. வீட்ல வேற யாருமே இல்லாத நேரத்துல இப்படி நடந்துடுச்சு. ரொம்ப பயத்துல இருந்தா. அவள இப்படித்தான் பர்ஸ்ட் டைம் பாத்தாலும், பாத்தவுடனே வெயில் காரணமா இருந்த உடம்பு சூடு எல்லாம் பறந்து ஒரு விதமான குளுமை எனக்குள்ள பரவியது. அதை என்னால நல்லாவே உணர முடிஞ்சது. தூரத்துல இருந்துதான் அவள பாத்தேன். அவ தம்பி தம்பினு அப்படி அழுதா. அவ மட்டுமே தனியா இருந்தா, அவள தனியா விட்டுட்டு போக மனசே இல்லை. அவ கைய பிடிச்சி அழுகாதனு ஆறுதல் சொல்லனும்போல இருந்துச்சு. அப்பவே, அவளோட அன்பு முழுதும் எனக்கு கிடைக்கும்னு ஆசை பட்டேன். அப்போ, என்னால அவ கூட இருக்க முடியாத சூழ்நிலை. அம்மாகூட வந்துதிருந்தேன். அம்மா சொந்தகாரங்க ஒருத்தவங்கள பாக்க போகணும்னு என்னைய துணைக்கு அழைச்சிட்டு வந்தாங்க.

அதுனால அங்க ரொம்ப நேரம் இருக்க முடியல. ரொம்ப நேரம் அவள பாக்கவும் முடியல. மனசு ரொம்ப கஷ்டமாவே இருந்துச்சு. ஏதோ, அதுவும் ஒருவகையில சுகமான வலிதான். உயிரையே வதைக்கும் வலி, உயிருக்கே வைத்தியம் பார்க்கும் வலி. பல எண்ணங்கள் ரயில் போல என் மனதில் ஓட்டம் செய்ய, நான் அதெற்க்கெல்லாம் அப்போ தடை விதிச்சி, இப்போ நாம படிக்கணும் அப்புறம் பாத்துக்கலாம்னு எனக்கு ஒரு கட்டு போட்டுகிட்டேன். அது எல்லாம் அவள அடுத்த முறை பாக்குற வரைதான். இத மறந்துகூட விஷ்ணு கிட்ட சொல்லவே இல்லை.

அவளை பார்த்த கோடை விடுமுறை அழகா என் வாழ்க்கையில பயணிச்சிட்டு இருந்தது. அவளின் முதல் வருகையின் சுவடு என் இதயத்திலிருந்து மறையாமல் அவளுக்காக துடிச்சிட்டு இருந்துச்சு. மறைய கூடிய சுவடா அது? என நானே எனக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.

மறுமுறை அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் விஷ்ணுவும் ஐஸ் கிரீம் பார்லர் போனோம். அங்கு சென்று அமர்ந்ததுதான் மட்டும்தான் தெரியும் எனக்கு. விஷ்ணு என்ன பிளவோர் வாங்கிட்டு வந்தான், எப்போ சாப்பிட்டோம், எப்போ முடித்தோம், நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என எதுவுமே நினைவில் இல்லை. எல்லாமே ஒரு மாயை போல இருந்தது. எனது பார்வை முழுதும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. அவளிடம் உள்ள குறும்புத்தனம் என்னை வெகுவாக ஈர்த்தது. அன்று பாசமிகு அக்காவாக, ஒரு குமரியாக இருந்த நிலையில் மாறி, இப்போ கண்ணில் மின்னும் சிரிப்போடு முகத்தில் குழந்தை ஜாடை கொண்டு இருந்தாள். மெல்ல மெல்ல என் இதயத்திலும் பிஞ்சு விரலால் நடையிட்டு அமர்ந்தாள். அவளது சுவை மிகுந்த இதழ்களை சுற்றி, நான் இனிப்பா? இல்லை நீ தித்திப்பா? என போட்டி போட்டு பட்டிமன்றம் நடத்திய சுவை கொண்ட ஐஸ்கிரீமை என் நாவால் சுத்தம் செய்து ஓர் இடத்தில் ஓர் சுவை மட்டும் தான் இருக்கவேண்டும் என அவளின் இதழுக்கு பாராட்டு விழா வைக்கவேண்டும் என எழுந்த ஆசையை கடினப்பட்டு அடக்கி வைத்தேன். அன்று விஷ்ணுவை நான் கண்டுகொள்ளவே இல்லை.

நாட்கள் எதற்கும் அஞ்சாமல் ஓடியது. நாள் முழுதும் அவளோட நினைப்பிலேயே இருந்தேன். எனக்கு அவளை பற்றி ஒரு அக்காவா, ஒரு சுட்டி பெண்ணாகவும் தான் தெரியும். எனக்கு அவளை பற்றி தெரிந்த அளவுக்கு கூட அவளுக்கு என்னை பற்றி தெரியாது.

அவளது பெயர், என்ன வகுப்பு, வீடு எங்க இருக்கு எதுவுமே எனக்கு தெரியவில்லை. இருந்தும் அவளையே சுற்றி இருந்தது எனது நினைவு முழுதும். எல்லாமே ஒரு கனவுலகம் போல இருந்தது. கற்பனைக்குகூட எட்டாத கற்பனையெல்லாம் நான் அந்த சிறு பெண்ணோடு கற்பனை செய்து அவளோடு வாழ்ந்து வந்தேன். அந்த பெண்ணை மறுமுறை பாப்போம் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. எல்லாவற்றையும் பகிரும் நண்பனிடம் இதை பற்றி ஒரு துளி கூட சொல்ல நான் யோசிக்கவில்லை. அந்த காதல் பயணம் முழுதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவகூட ரொம்ப வருஷம் வாழனும், அவள நல்லா பாத்துக்கணும் என ஏகப்பட்ட ஆசைகள் எனக்குள். வாழ்வில் இரண்டே முறை பார்த்துவிட்டு நமக்குள் ஏன் இத்தனை மாற்றம் என யோசிக்க விடை தெரியவில்லை. மேலும் யோசிக்க தோணவில்லை, மேலும் யோசித்தால் அந்த கற்பனை உலகம் வெறும் கற்பனையாகி போய்விடுமோ என்ற பயத்தில்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி காலமும் ஆரம்பித்தது. நானும் விஷ்ணுவும் 11ஆம் வகுப்பில் கால் எடுத்து வைத்தோம். நாட்கள் அதன் போக்கில் என்னிடம் அம்மூவை காட்டாமலே நகர்ந்து சென்றது.

காலாண்டு தேர்வும் நெருங்கியது. நான் அதில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். வருடாவருடம் பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரார்த்தனைக்கூடத்தில் பரிசு வழங்குவர்.

பரிசு அளிக்கும் அன்று எனக்குள் புதுவிதமான உணர்வு ஊற்றெடுத்தது. இது எப்போதும் நிகழ்வது தானே, இன்றைக்கு ஏனோ வித்தியாசமாக தோணுதே என எனக்கும் அதன் காரணம் தெரியவில்லை.

இதே உணர்வோடு பள்ளிக்கும் சென்றேன். அங்கு நடந்த பிரார்த்தனைக்கூடத்தில் எனது பெயர் உச்சரிக்கப்பட்டது. நானும் மேடைக்கு சென்றுகொண்டிருக்க, எனக்குள் அந்த புது உணர்வு அதிகரித்தன. அங்கு சென்று பரிசு பெற்றுக்கொண்டு, வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு பெயர் அறிவிப்பு வரும் திசையில் நான் தலையை திருப்பி பார்க்கையில் அங்கு அழகோவியமாய் அமர்ந்திருந்தது எனது இதயத்தின் அரசியே...

அந்நொடியிலிருந்து நான் என்ன செய்கிறேன், நான் எப்படி வரிசைக்கு வந்தேன், பரிசு கொடுத்தோருக்கு நன்றி தெரிவித்தேனா என எல்லாத்தையும் மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் உச்சரித்த தன் பெயரையே நினைத்து அகம் மகிழ்ந்து போனேன்.

அவளது தோற்றத்தை கவனித்தேன். அன்று மருத்துவமனையில் இருந்த குமரி தோற்றமும் முழுமை பெறாமல், ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்த குழந்தை தோற்றமும் மறையாமல், எனக்கே கண்டறிய சில மணித்துளிகள் தேவைப்பட்டன.

பள்ளி சீருடையில் நேர்த்தியான முறையில் உடையணிந்து இடைத்தாண்டும் கூந்தலை மூன்று கால் பின்னலில் அடக்கிய குழந்தையா? குமரியா? என பார்ப்பவரை யோசிக்கவைக்கும் தோரணையில் பிரம்மனின் படைப்பாக என் கண்களுக்கு தோன்றினாள். அவள் குழந்தை பருவம் முடியும் நிலையிலும், குமரி பருவம் தொடக்கத்திலும் இருந்தாள்.

இரண்டு முறை பார்த்தும் மூன்றாம் முறையே அவளது மதி முகத்தை முழுதுமாக, நெருக்கத்தில் பார்த்தேன் அவளிடத்தில் எல்லாமே மதுரம் தான், ஆனாலும் என்னை பாதித்தது அவளது கண்கள்தான்.

உருட்டி உருட்டி விழித்து, கண்ணாலே ஆயிரம் கதைகளை பேசும் அந்த கயல்விழியாளின் கண்கள், குளத்தில் துள்ளி விளையாடி திரியும் மீனை போல அவளது கருமணி இரண்டும் ஓரிடத்தில் நிற்காமல் துள்ளி குதித்து எனது மனதில் விழுந்து சிற்பமாய் எழுந்துவிட்டாய்.

பிரார்த்தனைக்கூடத்தின் இறுதியில் தான் தெரிந்துகொண்டேன் அவளது பெயரையும் அவளது வகுப்பையும். அவள் தன்னை விட ஒரு வருடம் சின்ன பெண் என மனதில் பதியவைத்துக்கொண்டேன். ஆனால், என்னால் கற்பனையில் வாழ்வதை தடுக்க முடியவில்லை. இந்த கற்பனை தானே எனது காதலுக்கு கரு உண்டாக்கி, உயிர் கொடுத்து என்னையே வாழ வைத்தது.

அன்று முழுதும் மட்டுமல்ல அடுத்து வந்த நாட்கள் எல்லாமே அந்த கண்களோடு மட்டுந்தான் உரையாடினேன், உறவாடினேன். தனக்கென யாருமே இல்லாத இந்த புவியில் அவள் மட்டுமே தனக்கானவள் என நினைத்து கொண்டேன்.

இந்த சிறிய வயதிலே அவளிடம் இதை பற்றி கூற வேண்டாம் அது அவள் தப்பாக எடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது, அது அவளது படிப்பிற்கும் பாதிப்பாகிவிடும். இந்த வயதில் எந்த முடிவும் அவளால் எடுக்க முடியாது. அதனால் பிறகு சொல்லலாம் என தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தேன். இந்த காதலாய் அவளிடம் சொல்லி, அவள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வீட்டிலும் விஷ்ணுவிடம் கூறலாம் என முடிவெடுத்தேன்.

பெரும்பாலாக பள்ளியில் பார்ப்பதை தவிர்த்தேன். பொது இடங்களில் நன்றாக பார்த்து மனதில் பதியம் போட்டு வைப்பேன். அன்று மாலை நேரம், பேருந்தில் நான் ஸ்பெஷல் கிளாஸ் முடித்து படியில் நான் பயணித்து வரும்போது, முன்னாடி அமர இடம் இல்லாத காரணத்தால் அவள் நின்றுகொண்திருந்தாள். அவளை பார்த்ததும் மனம் "அம்மூ" என கூச்சல் போட்டது. அவளது அலைபாயும் மான்விழிகளை பார்த்துக்கொண்டே நிற்கையில், பேருந்திலோ நிறைய கண்கள் மையப்படுத்தி வரும் காதல் பாட்டுகளே ஒலித்தது. அவனும் புன்னைகையோடு அந்த ஏகாந்த சூழலை ரசித்துக்கொண்டே வந்தேன். அந்த விழிகளை அளவிட்டு கொண்டே, இந்த மாய கண்ணுக்கு இந்த பாடல் வரிகள் மட்டும் போதாது என பாடல் கவிஞர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னால் முயன்ற அளவுக்கு வார்த்தைகளை கோர்த்து கற்பனை கொடுத்த அவளின் கண்களுக்கு கவிதையை படைக்க விரும்பினேன்.

கண்களுக்கு ஆபரணமேதும்
கடவுள் படைக்காததின்
காரணம் என்னவென்று
பலமுறை யோசித்தேன் பெண்ணே!
உன் கண்ணை கண்டு
அறிந்து கொண்டேன்
ஆபரணத்தை விட
உன் விழிகள் கதைக்கும்
காதல் மொழி
அழகும் தூய்மையும்
கொண்டது என்பதை...
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 16

என்னுடைய காதல் ஒருதலை காதலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை பகல் கொள்ளை அடித்த அவளது இருவிழிகளே என்னை வாழ வைத்தது. நான் சந்தோசமாக இருப்பதற்கும் அந்த கண்களே காரணம். நான் துவண்டு போகையிலும் அந்த விழிகள் எனக்கு உயிர் ஊட்டியது.

நானும் அந்த வருடம் 11வது தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றேன். எனக்கு துணையாக இருந்தது விஷ்ணு, அப்பா, அம்மா என்றாலும் எனது காதலும் எனக்கு துணையாக இருந்தது.

அவளின் உண்மையான பெயர் தெரிந்தாலும் நான் அம்மூ என்றே எனக்குள் பதிய வைத்திருந்தேன்.

அவள் செல்லும் வழியெங்கும் பின்தொடர்ந்தெல்லாம் செல்வதில்லை அது இருவருக்கும் பாதிப்பு என்பதால். அவள் வீடு, அவளது குடும்பம், அவளுக்கு எது புடிக்கும், எது புடிக்காது என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தேன். அவளோடு வாழ்வது போல ஓர் மாயை என்னிடத்தில் ஏற்பட்டது.

பன்னிரண்டாம் வகுப்பும் சென்றேன். இப்போதாவுது அவளிடம் சொல்லலாம் என முயன்றேன்.நாம சொன்னா, அவ காதலிக்கிறத தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்றதுனு யோசிச்சே, கொஞ்ச நாள் போகட்டும்னு அப்போ அந்த முடிவ கை விட்டுட்டேன்.

ஒரு நாள், விஷ்ணுவும் நண்பர்களும் ஸ்போர்ட்ஸ் விஷயமா வெளியூர் போனதுனால நான் மட்டுமே தனியா மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், எனது தனிமையை போக்கியது கூட எனது அம்மூ தான்.

கொஞ்சம் தொலைவில் அவள் அமர்ந்து ஒரு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள். அக்குழந்தையின் தாய் அன்று வராததால், அக்குழந்தை அழுதது. அந்த குழந்தையை மடியில் கிடத்தி பேச்சு கொடுத்து, விளையாடிக்கொண்டே தோழிகளோடு சிறு பிள்ளையாகவே மாறி அக்குழந்தைக்கு உணவை ஊட்டி கொண்டிருந்தாள். அக்காட்சியை பார்க்கையில், அவளது அந்த அன்பும், சிறு பிள்ளை போல் விளையாடுவதும், அனைவரிடமும் சீக்கிரம் ஓட்டி கொள்ளும் குணமும் தெரிந்தது. பார்க்க பார்க்க திகட்டாத காட்சியாக அமைந்தது எனக்கு.

அந்த மடியில் நான் படுத்துறங்கும் நாள் எப்போ வருமோ, அந்த பாசம் முழுதும் எனக்கே சொந்தமாகும் பொழுது என்று விடியுமோ என ஏங்கினேன்.

கடவுள் இதற்கு மேலும் காக்கவைக்க வேண்டாம் என முடிவு செய்து நாட்களை நகர்த்தினார்.

அவள் முழுதாக குமரியென மாறி விட்டாள், அவளுக்கு முடிவு எடுக்கும் பக்குவம் வந்திருக்கும் இனியும் தாமதம் செய்யாமல் சீக்கிரமாக காதலை சொல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்.

நாளை சொல்லலாம், பள்ளி முடிந்து அவளை வழியில் பார்த்து சொல்லிவிடலாம் என முடிவு செய்து தூங்க முயன்றேன். ஆனால், உறக்கம் எனும் அதிகாரமே கடவுள் எனக்கு படைக்கவில்லை போலும்.

நறுமணம் புகட்டும் மென்மையான பூ ஒன்று புயலென மாறி வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை மறுநாள் தான் உணர்ந்தேன்.

அன்று, நான் அவளை நோக்கி செல்லும்போது விஷ்ணு என்னை நோக்கி முகத்தில் சந்தோசம் பொங்க வேக நடையிட்டு வந்து என்னை கட்டியணைத்துக்கொண்டான்.

நான், "என்னடா ஆச்சு சந்தோசமாக இருக்க, மேட்ச் ஏதும் ஜெயிச்சிட்டியாடா? "என வினாவினேன். அவனோ அதற்கு, "இல்லை மச்சான் வாழ்க்கையில ஜெயிச்சிட்டேன்டா" அவ்வளவு சந்தோசமாக சொன்னான். நான் புரியாமல் பார்க்கவும், அவனே தொடர்ந்தான், "மச்சான் நான் லவ் பண்றேன்டா, அந்த பொண்ணுக்கிட்ட சொன்னேன்டா, அவளும் ஒத்துக்கிட்ட "என்றவுடன் எனக்கும் ஆயிரம் ஆனந்தம் ஒன்று கூடியது. எனக்கும் என் உயிர் நண்பனுக்கும் இதிலும் ஒற்றுமை என்பதை நினைத்து ஒரே சமயத்தில் காதல் அமைந்திருக்கே என.

"யாருடா அந்த அதிர்ஷ்டசாலி பொண்ணு" என ஆர்வமுடன் நான் கேட்டவுடன் விஷ்ணு கூறிய அந்த பெண்ணின் பெயரையும் வகுப்பையும் கேட்டவுடன், "சரியா தெரியலடா"
என குழப்பத்துடன் கேட்ட என்னிடம் சில அடையாளங்களை சொன்னவுடன் என் இதயம் இரண்டாக பிளந்து, உயிரை அறுப்பது போல் வலி ஏற்பட்டது. ஏனெனில், விஷ்ணு கூறியது நான் காதலிக்கும் என் அம்மூவை தான்.

நான் மேலும், "அந்த பொண்ணு ஒத்துக்கிட்டாங்களா", என ஒரு எதிர்பார்ப்பு, பயம் கலந்த உணர்வுடன் கேட்டவுடன் "ஒத்துக்கிட்டா மச்சி, அவளுமே என்ன லவ் பண்ணிருக்காடா" என்றவுடன் உயிர் இல்லாத ஜடம் போல உணர்ந்தேன். சோகத்துடனும் ஏமாற்றத்துடனும், "இதை ஏண்டா முன்னாடியே என்கிட்டே சொல்லல? "என நான் வலியுடன் கேட்க அவனோ, "சாரிடா மச்சான், சக்ஸஸ் ஆனா பிறகு சொல்லலாம்னு இருந்தேன்டா "என விஷ்ணு கூறியவுடன்,"சரிடா மச்சான், எனி வேஸ் பி ஹாப்பி மச்சான்" என்றேன் கட்டியணைத்து வலியை மறைத்துக்கொண்டு.

தனக்கே தனக்கென்று இருந்த ஒரே ஒரு சொந்தமும் தன்னை விட்டு போய்விட்டதே என மன உளச்சலில் ரொம்ப நாள் மிகவும் கஷ்டப்பட்டேன். வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்த என் வாழ்க்கை அர்த்தமற்றது என வாழ்வையே வெறுத்தேன்.

அதன் பிறகு அவளை பார்க்கும்படி சூழல் வந்தாலும் மறுத்துக்கொண்டேன். விஷ்ணு அவளிடம் பேசும்படி சொன்னாலும் காரணம் சொல்லி மறுத்துவிடுவேன். தன் கஷ்டம் தன்னோடவே போகட்டும் என யாரிடமும் சொல்லாமல் என தனக்குள் போட்டு புழுங்கி கொண்டேன்.

ஏற்கனவே, விஷ்ணுக்கு போட்டி போட்டு கொண்டு நானும் இருக்கிறேன், நான் அவர்களுக்கு பாரமாக இருக்கிறேன், என்னை விடுதியில் சேர்க்க சொல்லும் சமுதாயத்தின் மத்தியில் என்னை அவர்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து படிக்க வைக்கும் அப்பா, அம்மா இவை யாவும் பாகுபாடு பார்க்காமல் நண்பனாக பழகும் விஷ்ணுவிடம் இதை சொல்ல எனக்கு மனம் இடம் கொடுக்க வில்லை. விஷ்ணுவிடம் என் காதலை பற்றி சொன்னால், அவர்களுக்குள் பிரிவு ஏற்படலாம். அவன் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். எனக்கு வலி தந்த காதலை பற்றி அவனிடம் சொல்லி ஒரே பற்றுக்கோளாக இருக்கும் விஷ்ணுவின் பொன்னான நட்பை நான் இழக்க விரும்பவில்லை. அவளை மறக்க முற்பட்டேன். ஆனால், அதுக்கு எனக்கு கடினமாகிப்போனது.

அதன் பிறகு, கல்லூரி வாழ்க்கையும் நன்றாக சென்றது இருவருக்கும். அதிக நாள் சோகமாகவே இருந்தேன். காரணம் கேட்டாலும் ஒன்றுமில்லை என்றதோடு முடித்துக்கொள்வேன். யாரிடமும் இதை பகிர நான் நினைக்கவேயில்லை. கருவை தொலைத்த தாய் போல நானும் காதலை மலரும் முன்னே வேரோடு அழிந்து போனதால் பிறகு வாழ்கையில் பிடிப்பு தன்மை காணாமல் போனது. அதிக நேரம் தனிமையே நாடினேன்.

அவளை மறக்கமுடியாமல் தவிக்கும் நாளில், ஒரு முறை விஷ்ணு வெளியூர் சென்றதால் அவன் எனக்கு போன் செய்து அவளுக்கு உடம்பு சரியில்லை, மருத்துவமனை சென்று ரத்தம் கொடுத்து உதவுமாறு கெஞ்சினான். நான் எப்படி என தயங்கிய என்னை கட்டாயப்படுத்தி செல்ல வைத்தான்.

அங்கு சென்றேன். அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்று அவளின் அப்பா அம்மாவிடம் ஏதேதோ கூறி சமாளித்து விட்டு ரத்தம் கொடுத்தேன். அவளுக்கு என்ன ஆனது என எதையுமே நான் அறிய முற்படவில்லை. அவள் முகமோ கலையிழந்து வாடிபோய் இருந்தது. வெகு நாட்கள் கழித்து அவளை பார்த்த என் நெஞ்சில் ஓர் கணம் குடிகொண்டது. 'நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இருப்பனு நான் ஒதுங்கி போறேன். ஆனால், நீ இப்படி வந்து படுத்துருகியே' என ஆதங்கப்பட்டு தன்னை கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளால் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றேன். காதலிக்கும் போதுகூட இப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை, இப்போ மறக்க முனைகையில் அமைத்துவிட்ட விதியை எண்ணி என்னால் விரக்தியாக சிரிக்க மட்டுமே முடிந்தது.

அவளின் மாற்றங்கள், கண்கள் என எல்லாமே பழைய மாதிரி என்னை நிம்மதி இழக்க செய்தது. மூச்சு முட்டி இறந்துவிடுவேனோ என பயம் கூட ஏற்பட்டுவிட்டது. இதனை மறந்து, மாற்றம் தேடியே யார் சொல்லும் கேட்காமல் வெளி நாடு பறந்தேன். அங்கு சென்றும் என்னை மறக்கமுடியாமல் போக, தினமும் குடிக்க ஆரம்பித்தேன். குடி பழக்கம்தான் நீடித்தது தவிர அவளை மறக்க முடியவில்லை.

அவளின் இடத்தில் வேறு ஒரு பொண்ணை உருவகம் செய்துகூட பார்க்க முடியவில்லை. ரத்தத்தில் கலந்து சித்தத்தை வதைத்த காதலாயிற்றே எப்படி மறக்க முடியும்.

அவளின் சந்தோசம் வாழும் வரை எனது காதலும் வாழும் தவிர தோல்வியும் அடையாது, அழிவையும் நோக்காது. அவளின் நலனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என எண்ணத்தில் இருந்தேன். தூர இருந்தாலும் பக்கத்தில் இருந்தாலும் அவள் நிம்மதியென தெரிந்தால் மட்டுமே போதும் நானும் என் காதலும் உயிர் வாழ்வோம் என மனதை தேற்றி கொண்டேன். விஷ்ணுவிடம் பேசும்போதெல்லாம் அவளின் நிலை குறித்து விசாரிக்க தவற மாட்டேன்.

அவள் எப்பவுமே எனக்கு மாயாவி தான். மாயமே உருவாக கொண்டவள் தான் அவள். அவளின் நியாபகத்தை தனக்குள் வைப்பது விஷ்ணுவிற்கு செய்யும் துரோகம் என்பதால், அதை ஒதுக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் போக, நான் டைரியை நாடி என் காதல் நினைவுகளை அதில் புதைத்து வைக்க முயற்சி செய்து எல்லாவற்றையும் அதில் கொட்டி வைத்தேன் மனதில் உள்ள பாரம் குறையுமென்ற நம்பிக்கை கொண்டு.

இவ்வாறு முடித்திருந்தான், அது உயிர் பெற்று திரும்பவும் முளைக்கும் விதி தெரியாமல்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 17

வர்ஷித் டைரியில் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அவனின் காதலி தான் என்பதை புரிந்துகொண்டாள் வர்ஷித்தின் அம்மூ. அவள் தான் என்பதற்கு ஆதாரமாக ஆதிகாவின் சிறு வயது போட்டோ ஒன்றை டைரியின் கடைசி பக்கத்தில் இடம் பெற்று, சந்தேகத்தை தீர்த்து தெளிவான பதிலை கையில் தந்தது வர்ஷித்தின் அம்மூ ஆதிகா தான் என்று.

மேல சென்ற வர்ஷித், தன் மேல் உள்ள கோபத்திலும், அவள் முகத்தில் எப்படி முழிப்பது என்ற குற்ற உணர்விலும் கீழே வராமல் மொட்டை மாடியிலே படுத்துகொண்டான். தான் மட்டும் அவள் மீது காதல் வைத்தால் போதுமா? அதற்காக இப்படியா அவள் அனுமதி இன்றி செய்வது? அவள் என்னை காதலிக்க வில்லையே, இதை எப்படி ஏற்று இருப்பாள். அவள் மனம் புண் பட்டிருக்குமே. என்னை enna நினைத்திருப்பாள். கண்டிப்பா என் தேவைக்கே அவளை தொட்டேன் என நினைத்துவிட்டால்.... அட கடவுளே ஏன் என்னைய ரொம்ப சோதிக்கிற? இதுக்கு ஒரு சீக்கிரமா முடிவு கட்டணும். அவளோட நிம்மதிய நானே பறிச்சிட்டேனே என தன்னை தானே திட்டிக்கொண்டே கண் அயர்ந்தான்.

அவளுக்கு வர்ஷித் காதலித்ததை நினைத்து அதிர்ச்சி என்றால் தன்னையே காதலித்தது தான் பேரதிர்ச்சி.

இதனை படித்து முடித்தவளுக்கு இனிமேல் வர்ஷித் தனக்கு மட்டுந்தான். அவருடைய காதலும் தனக்கு தான் என நினைத்து ஆனந்தம் கொள்வதா? அல்ல தன்னால் இவ்வளவு வலியை வாழ்வில் சந்தித்திருக்கிறான் என்பதை நினைத்து வருத்தம் கொள்வதா? இத்தனை காதல் என்மீது வைத்துவிட்டு இவ்வளவு ஒதுக்கம் காட்டுவது எதற்கு? விஷ்ணுவை விரும்பியதால் தன்னை வெறுக்கிறாரோ? தன்னை இனிமேல் ஏற்கமாட்டாரோ? என பல கேள்விகள் அவளுள் எழும்பியது சற்று நேரம் முன்னால் அவன் செலுத்திய அன்பை மறந்து.

தன் வாழ்க்கையில் தனக்கு தெரியாமலே தன்னால் ஒருவன் கஷ்டப்பட்டிருப்பது எவ்வளவு வேதனையை தரும் என்பதை அப்போது உணர்ந்தாள் ஆதிகா.

என்ன ஒரு வகையான காதல் இவனது? நான் சந்தோசமாக உள்ள வரை அவனது காதல் வாழுமாம். இதை நினைக்கும்போதெல்லாம் அவள் பூரித்துப்போனாள். இவன் ரத்தம் கொடுத்ததை நினைக்கையில் மேலும் உடல் சிலிர்த்து போனாள்.

கடவுளின் கணக்கை எண்ணி வியந்துதான் போனாள். எவ்வளவு சரியாக இருவரையும் சேர்த்து வைத்துள்ளார். இவ்வுலகில் நடப்பது எல்லாம் ஒரு வித காரணத்தோடு என்பதை முன்னாள் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், அதுவே இன்று கண்முன் நிகழ்ந்திருப்பதை எண்ணி அதிசயித்து போனாள். என்னால் வர்ஷித் பட்ட துன்பங்களுக்கு இனி நானே மருந்தாக வேண்டும்.

தன் சந்தோஷத்திற்காக என்ன வேணாலும் செய்யும் மனிதர்கள் வாழும் இந்த மண்ணில் என்னுடைய சந்தோசத்தை எண்ணி தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த வர்ஷித் ஆதிகாவின் மனதில் காதலையும் தாண்டி ஒரு பெரிய இடத்தை பெற்றிருந்தான். கோடி காரணங்களை கொட்டினாலும் இனிமேல் வர்ஷித் தான் தன் வாழ்வென்று முடிவு செய்தாள். அவனின் மனதிலுள்ள குறைகளை களைய வேண்டும். பிறகு, வாழ்க்கையை ஆரம்பிக்கணும் என கனவு கோட்டையை கற்பனையில் கட்டி முடித்தாள். நாளை வர்ஷித் செய்ய இருக்கும் செயல் தெரியாமல்.

வர்ஷித் சொல்லியிருந்தால் கூட இவ்வளவு காதலித்திருப்பான்னு எனக்கு தெரிஞ்சிருக்காது. வெறும் மூணு வார்த்தையில முடிஞ்சிருக்கும். இத படிச்சி முழுமையாக தெரிஞ்சிக்கிட்டோம் என ஒரு மனது கூச்சல் போட்டாலும், இன்னொரு மனம் அவன்கிட்ட திட்டு வாங்க ரெடியா இரு
நம்ம ஏதோ ஒரு ஆர்வத்துல படிச்சித்துக்கு திட்டு கண்டிப்பா உண்டு என பயமுறுத்தியது.
'முதல இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு என்கிட்ட பேசுறதே சந்தேகம் தான். இதுல எங்க திட்டுறது. அப்படி திட்டுனா கூட வாங்கிக்கலாம்' என மனதை அடக்கி வைத்து வர்ஷித்தின் காதலுக்கு தானே உரிமை கொண்டவள் என்ற நிம்மதியில் தாமதமாகவே உறங்கிப்போனாள்.

பொழுதும் விடிந்தது. குற்ற உணர்வோடும், ஆதிகா முகத்தில் எப்படி முழிப்பது எனும் பயத்தோடும் அறையை நோக்கி பயணித்தான். வர்ஷித் அறைக்குள் நுழையும்போது, ஆதிகா நிம்மதியே உருவென உறங்கிக்கொண்டிருந்தாள்.

உறங்குபவளையே பார்த்து கொண்டிருந்தான். அவளின் உதடு அவனிடம், 'ஏன் நேற்று என்னை மட்டும் விட்டு சென்றாய்?' என கோபித்து கேள்வி கேட்பது போல தோன்ற, :இது என்ன மாதிரியான எண்ணம்' என தன்னையே திட்டிக்கொண்டு சட்டென்று பார்வையை மாற்றியவனின் பார்வையில் சிக்கியது கண்ணீர் தடம் பதிந்த அவளின் கன்னங்கள் தான். அவனின் காதலை படித்து வருத்தமுற்று சில கண்ணீர் துளிகள் சிந்தினாள் அவள். ஆனால், அவனோ நேற்று விருப்பமில்லாத முத்தத்தை ஏந்திய தாலே இந்த கன்னம் இன்று கண்ணீர் தடம் ஏந்திக்கொண்டிருக்கிறது. அவள் இதற்காக வருந்தி இருக்கிறாள் என அவன் எடுத்துக்கொண்டான், வர்ஷித் ஆதிகாவை நெருங்கும்போது அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவனிடம் உருகி நின்றதை மறந்து.

தன்னால் தான் அவளுக்கு கஷ்டம், வேதனை எல்லாமே. இனிமேல் அவளிருக்கும் பக்கம் கூட போகவே கூடாது என எண்ணி மனதில் பதிய வைத்துக்கொண்டான், இது நடக்காத செயல் என்பதை அறியாமல்.

'இவள் வேதனை படுவதை தன்னால் பார்க்க இயலாது, சீக்கிரமாகவே டிவோர்ஸ்க்கு ஏற்பாடு செய்யணும்' என மீண்டும் தான் காதலை தன்னுள் அடக்கிக்கொண்டு யோசித்தான்.

இவளின் டிவோர்ஸ் விஷயத்தில் காட்டும் தீவிரத்தை விஷ்ணுவின் அச்சிடேன்ட் விஷயத்திலும் காட்ட வேண்டும் என முடிவெடுத்தான்.

ஏனென்றால், விஷ்ணு விஷயத்தில் ஒரு சந்தேகம் மனதை குடைந்து கொண்டிருக்க, அவனின் நண்பன் ஒருவன் காவல் துறையில் பணிபுரிகிறான். அவனிடம் இந்த அச்சிடேன்ட் பற்றி விசாரிக்க சொல்லி இருந்தான்.

இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஆதிகாவிடம் பாராமுகம் காட்டியே வந்தான் அந்த சம்பவத்திற்கு பிறகு. அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவன், 'அறையிலே ஒரு பைலை எடுக்க மறந்துவிட்டேன்' என தாயிடம் கூறி மேல சென்றான் வர்ஷித். அங்கு குளித்து விட்டு வந்த ஆதிகா, 'வர்ஷித் இப்போ தான் கீழே சென்றான், கண்டிப்பா இப்போ வரமாட்டான்'எனும் அசட்டு தைரியத்தில் கதவை தாழிடாமலே ஆடையை மாற்றிக்கொண்டிருந்தாள்.

வர்ஷித் தீடிரென்று கதவை திறந்ததும் தான் இருக்கும் நிலை குறித்து அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள். ஆனால், அவனோ அங்கு ஆதிகா இருப்பது தெரியாமல் கதவை தட்டாமலே நுழைந்துவிட்டன். வந்தவன் அவளின் நிலை அறியாமல், அவள் விரித்த விழியில் விழுந்து கிடந்தான் வர்ஷித். அவளின் விழிகள் மந்திரம் கூறி தந்திரம் செய்து இயந்திரம் போல் ஆக்கிவிட்டது ஆறடி ஆண்பிள்ளையை ஒரு நொடியில். பிறகு சுதாரித்தவன் அவள் இருக்கும் நிலை கண்டு வேகமாக வெளியே சென்று நின்று கொண்டான்.

'அய்யோ, கதவ தட்டி பாத்துட்டு உள்ளே போயிருக்கலாம்.
அவ என்ன பத்தி என்ன
நினைச்சிருப்பா, கண்டிப்பா தப்பாத்த நினைப்பா. ஏற்கனவே,நேத்து அப்படி ஆயிடுச்சு இப்போ இது மாதிரி வேற' என நொந்துகொண்டான்.

பிறகு, அறையிலிருந்து வாங்க எனும் ஓசை வந்த பிறகே உள்ளே சென்று கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது ஒரு நிமிடம் ஆதிகாவை பார்த்து சாரி என கூறிவிட்டு நொடிகூட நிற்காமல் நகர்ந்தான். ஆனால், அவளோ நிமிர்ந்துகூட அவனை பார்க்கவில்லை வெட்கத்தில்.
அவனோ அவள் தலை குனிந்து நிற்பதை வேற மாதிரி எடுத்துக்கிட்டான்.
அன்றிரவு அறைக்குள் நுழைந்தவன் படுக்கையை சரி செய்யும் ஆதிகாவிடம், "ஆதிகா இந்த, இதுல ஒரு சைன் போட்டு கொடு"என்றான் வெகு சாதாரணமாக, விவாகரத்து பாத்திரத்தை நீட்டிவிட்டு. அவளுக்கோ அதிர்ச்சி தான். ஆனால், இதை எதிர்பார்த்தது தானே என மனதை தேற்றி கொண்டு விழ இருக்கும் கண்ணீரை முயற்சி செய்து அணை கட்டி தடை செய்தாள். "கொஞ்சம் டைம் வேணும், நல்ல நேரம் பார்த்து சைன் போட்டு தரேன்"என நக்கல் கலந்த தோரணையில் கூற அவனுக்கு சிறுபுன்னகை எழுந்தது. 'பொண்டாட்டி டிவோர்ஸ்க்கு சைன் போட்டு தரேன்னு சொல்றா, இவன் கவலைப்படாம சிரிக்கிறான்.இவனை காதல ஒத்துக்கவச்சி , லைப் ஆரம்பிக்குறதுக்குள்ள கடவுளே வயசாகிடும் போல'என மனதிலே திட்டிக்கொண்டே படுத்தாள், அவனும் வழக்கம் போல் சோபாவில் படுத்துகொண்டான்.

அந்நேரம், வசந்தா அங்கு ஆதிகாவிடம் ஏதோ கேக்க வந்தவர், இவ்விருவர் இருக்கும் நிலையை கண்டு வேதனையும் குழப்பமும் அடைந்தார். இதுங்கள இப்படியே விடக்கூடாது எனும் முடிவுக்கொண்டு, "ஆதிகா"என அழைத்தார். இருவரும் திரும்பி பார்க்க, "என்னப்பா வர்ஷித் சோபால படுத்திருக்க, கை கால் அசையாம நைட் முழுக்க ஒரே மாதிரி படுத்திருந்த கை கால் வலிக்கும்ப்பா, எழுந்து மேல படுப்பா" என சாதாரணமாக கூறினாலும் அதில் கட்டளை இருந்தது, மேல ஏறி படு என்று. பிறகு ஏதோ கேக்கவந்து அதை மறந்து போக்குக்காக எதையோ கேட்டுவிட்டு சென்றார் வசந்தா. வர்ஷித் வேற என்ன செய்வது என வழி தெரியாமல் மேல படுத்துகொண்டான்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 18

வர்ஷித் என்றுமே அம்மாவின் பேச்சை கேட்காமல் இருந்ததில்லை. அங்கே, அம்மா நின்று கொண்டு கட்டிலில் படுக்க சொன்னதும் சரியென ஒப்புக்கொண்டு அதை செய்தான்.

இதை பற்றி இருவரிடமும் பேசியே ஆகவேண்டும் என முடிவெடுத்தார் வசந்தா.

ஆதிகா உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டு வெளியில் அவனிடம் நல்ல பிள்ளை போல, "நீங்க எதுக்கு கஷ்டப்படணும், அத்தை கிட்ட சொல்லிட்டா அவுங்க ஏதும் கேக்கமாட்டாங்கள" என வேணும் என்றே கேட்டவளிடம் இவள் நக்கலாக கேட்பது தெரியாமல் பதிலளித்தான், "இல்ல இல்ல அம்மா இப்போதான் கஷ்டத்திலிருந்து வெளில வராங்க, இந்த நேரத்துல இத சொன்னா வருத்தப்படுவாங்க. அதுனால இப்போ சொல்லவேணாம்" என வர்ஷித் கூறிய பின் ஆதிகாவிற்கு இந்த கேள்வியை கேட்காமலே இருந்திருக்கலாம் என தோன்றியது.

இந்த விஷயத்தில் மத்தவங்க வருத்தப்படுவாங்கனு யோசிச்சு செய்ற நீ, நான் வருத்தப்படுவேன்னு யோசிக்க மறந்துட்டியே என மனதால் நொந்துகொண்டாள். அவனுக்கோ அவள் அருகில் படுப்பது சங்கடமாக இருந்தது. புரண்டு புரண்டு படுத்தவனுக்கு ஆதிகாவின் அருகாமை மிகவும் இம்சித்தது.

அப்போதும் அவனின் தினசரி வேலையை செய்ய முற்பட்டான். அவள் தூங்கிருப்பாள் என எண்ணிக்கொண்டு, விசாலமான மெத்தையில் தன்புறத்திலிருந்து மறுபுறத்திற்கு மெதுவாக நகர்ந்தான் ஹெட் செட்டை கழட்டி வைக்க.

அவளுக்கும் வர்ஷித்தின் அருகாமை புதிதாய் தோன்றி தொல்லை செய்து தூக்கம் வராமல் போக, கண்ணை மூடி கொண்டு படுத்திருந்தாள்.

வர்ஷித் ஹெட் செட்டை இரண்டு காதுகளிலிருந்து விடுவித்ததும், குழம்பி யாரென்று பார்த்தாள். முதலில் வர்ஷித்தை நெருக்கத்தில் பார்த்ததும் படபடவென நெஞ்சம் அடித்துக்கொள்ள, பிறகு அவனே இந்த வேலையை பார்த்திருக்கிறான் என தெரிந்தவுடன், " ஓஹ் நீங்கதான் தினமும் எனக்கு இலவசமா இந்த வேலையை பார்க்கிறதா?" என கிண்டலுடன் வாய்மொழி கேள்வியாய் உதிர அவளது கண்களோ ரொம்ப நாளுக்கு சிரித்தது.

வர்ஷித், ' ஐயோ மாட்டிகிட்டோமே' என திருட்டு முழி முழித்து பிறகு சமாளிக்கும் பொருட்டு, "ஆமா நான்தான், இப்படியே நைட் முழுக்க இதமாட்டிருந்தா காத்து என்னவாகும்" என கடைசியில் அக்கறையுடன் கேட்டான். அவனே தொடர்ந்து, "ஏன் இத யூஸ் பண்ணத்தான் தூக்கம் வருமா என்ன?" என கேள்வியாய் நோக்க ஆதிகா, தலை குனிந்தபடி, "வீட்ல தம்பி கூட தூங்குவேன். இங்க வந்து தனியா தூங்குறது ஒரு மாதிரி பயமா தெரியும், அதனால தான் பாட்டு கேட்டுட்டே தூங்கிடுவேன் எனக்கும் பயம் தெரியாது" என சிறுபிள்ளை போல பாவமாக கூறினாள். 'அய்யோ அவளுக்கு நாம தெரிஞ்சும் கஷ்டத்தை கொடுக்குறோம் இந்த மாதிரி தெரியாமவும் கொடுக்குறோமே' என கவலை கொண்டு, "சரி இனிமேல் நான் உன்கூட துணையாக இருக்கேன். இத ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத" என்ற அறிவுரையோடு ஹெட் செட்டை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் புறம் திரும்பி படுத்தான். அவளும் அவனின் வார்த்தைக்கு கட்டுண்டு தலையை ஆட்டிவிட்டு, அவன் புறம் திரும்பி படுத்தாள். ஆதிகாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு. அவளுக்கு மீண்டும் மீண்டும் காதுக்குள் இவ்வார்த்தைகளே எதிரொலித்தது. அவன் படுத்ததும் உறக்கத்தை தழுவினான். அவள் அவனை பார்த்துக்கொண்டே இருந்ததால், எப்போ தூங்கினோம் என்றே தெரியவில்லை.

நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் ஆதவன் அதன் பணியை சீரும் சிறப்புமாய் ஆரம்பிக்க ஒளியை பரவவிட்டு தான் இருப்பதை சொல்லாமல் சொல்லியது.

காலையில் ஆதிகா விழிக்கும் போது தன் மீது கணமாய் தோன்ற என்னவென்று எழும்பி பார்க்க, வர்ஷித்தின் கை கால்கள் இவள் மீது படர்ந்திருந்தது. 'ஓஹ் இதுக்கு பயந்து தான் கீழ படுத்தியா'என நினைத்துக்கொண்டு அவனை நேராக படுக்க வைத்துவிட்டு 'குழந்தை முகம்டா உனக்கு' என அவனை பார்த்து கூறிவிட்டு இதழ் ஓரத்தில் சிறிய புன்னகையை சிதறவிட்டு சென்றாள்.

கீழே வந்தவளிடம் வசந்தா, "வாம்மா டீ குடி" என வாஞ்சையுடன் குடுத்தார். வசந்தா தான் எப்போதுமே சமைப்பார். அவரின் சமையலுக்கு வீடே அடிமைதான். ஆதிகா ஏதேனும் உதவி மட்டுமே செய்வாள். சிறுபிள்ளை போல் டீயை மிடறு மிடறக சுவைத்துக்கொண்டிருந்த ஆதிகாவிடம், "இங்க பாரும்மா கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை இருக்கத்தான் செய்யும், அத பேசி தான் தீர்க்க வேண்டும் எந்த காரணம் கொண்டும் நீ அவனை விட்டு விலக கூடாது, உன்னோட உரிமைய விட்டு தர கூடாது" என கூறினார் வசந்தா அன்பாக. அவர் நேற்று பார்த்ததை வைத்துதான் பேசுகிறார் என கணித்தவள் அவரிடம் "சரி அத்தை" என்றதோடு முடித்துக்கொண்டாள்.
வசந்தா சமையலில் ஈடுபட, இவள் யோசனையில் ஆழ்ந்தாள், 'வர்ஷித் பண்றது தெரியாம அத்தை வேற இப்படி சொல்றாங்க இது எங்க போய் முடிய போகுதோ'என யோசனையோடு நகர்ந்தாள்.

நாட்களும் அதன் வேகத்தில் நகர்ந்தது. இரவு இருவரும் ஒன்றாக படுத்து பேசிக்கொண்டே உறங்கி விடுவர்.

ஒரு நாள் அதிகாலையில் வர்ஷித்தின் போன் இருமுறை அடித்து கலைத்து போனது. அதில் அழைத்தது ஊரிலிருந்து அவனது மாமாதான்.

மூன்றாம் முறை அடித்த போது எடுத்து பேசினான். அவனுக்கு மாமா மீதிருந்த கோபமெல்லாம் வடிந்திருந்தது. ஆனால், முன்பு போல் பேசுவது கிடையாது.

எடுத்து பேசியவன், "ஓஹ்ஹ் அப்படியா சரி வருகிறேன்"என கூறினான். அவனது வார்த்தையில் சோகம் இழையோடி இருந்தது. இவனின் குரல் கேட்டு ஆதிகா சிறிதாக விழி திறந்து பார்த்தாள். அவன் கல் போல அசையாமல் அமர்ந்திருந்தான். அவனின் முகத்தை வைத்து ஏதையுமே கண்டறிய முடியவில்லை ஆதிகாவால்.

ஓரிரு நிமிடத்தில் இன்னொரு அழைப்பும் வந்தது. அதை எடுத்து பேசியவனின் முகம் சற்று கோபத்தில் கொதித்தது பொங்கியது. அவனின் இந்த நடவடிக்கையை ரொம்ப நாட்களுக்கு பிறகு பார்த்தவளுக்கு உதறல் உள்ளுக்குள் தொடங்கியது.

அவளும் எழுந்து அவன் அருகில் சென்று "என்ன ஆச்சு? காலையிலே இத்தனை போன்? யார் பண்ணாங்க?" என பல கேள்விகளை அவனிடம் தொடுத்தாள். வர்ஷித் அதற்கு "ஊரிலிருந்து மாமா பண்ணாங்க" என்றான். "அதற்கு ஏன் இப்படி இறுகி போய் இருக்கீங்க, முதல போன் எடுத்தபோது கூட நீங்க இப்படி இல்லையே. ஆனால், அந்த செகண்ட் கால்ல யாரு பேசுனது? என்ன ஆச்சு?" என அவனை தணிய வைக்கும் பொருட்டு தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்து கேட்டாள்.

"ஊருல பாட்டி இறந்துட்டாங்க, அதான் மாமா போன் பண்ணி வர சொன்னாங்க. வயசானவங்க தான். ஆனால், அதுக்கு அப்பறம் வந்த போன்ல தான்" என்று சில நொடி தயங்கியவன் பிறகு பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டு நிறுத்தினான். "என்ன சொன்னாங்க" என அவள் கேட்டவுடன், " நான் வரணும்னு அவசியம் இல்லயாம், என்னை யாரும் எதிர்பாத்து நிக்கலன்னு சொன்னாங்க"என வெறுமையை தத்து எடுத்தது போல குரலுடன் கூறினான். அண்டை வீடு, சண்டைக்காரர்களாக இருப்பார்கள் என எண்ணியவளுக்கு அவனின் "அப்பா" என்ற பதிலில் ஆடிப்போனாள். அவன் அந்த வார்த்தையை உச்சரிக்கும் போது யாரவது எதிரில் நின்று அவனது கண்களை பார்த்திருந்தால், அந்த இடத்திலே நெருப்பில்லாமல் சாம்பலாகி போயிருப்பர். அவ்வளவு வெறுப்பு, கோபம், எரிச்சல், அந்த அப்பா என்ற சொல்லின்மீதே.

ஆதிகாவிற்கு அவனிற்கு அப்பா இருப்பதே அதிர்ச்சியாக இருந்தது. அதில், அவர் இவ்வாறு வர்ஷித்தின் மீது வெறுப்பை உமிழ்வது ஏன் என தெரியாமல் குழம்பினாள்.

'சரி நீங்க கோபப்படாதிங்க" என சமாதானம் செய்தாள். அவன் கண்ணீர் இரண்டு சொட்டு கீழே இறங்கிய பிறகே, மலை உச்சிற்கு சென்ற கோபமும் இறங்கியது. அவளும் சமாதானம் எவ்வளவோ கூறியும் எதுவும் அங்கு எடுபடவில்லை. அவன் அருகினிலே அமர்ந்துகொண்டாள்.

சட்டென்று அவள் கையை பிடித்தவன் "நான் இன்னைக்கு ஊருக்கு போகணும், நீயும் என் கூட வரியா? கொஞ்சம் தனிமை இல்லாத மாதிரி இருக்கும் நீ இருந்தா. அப்புறம் நீ பக்கத்துல இருந்தா உன்னோட சமாதானம் என்னை தணிய வைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என கெஞ்சுவது போல கேட்டவனிடத்தில் அவளின் மனம் சற்று துயரத்திற்கு ஆழத்திற்கு சென்று வந்தது.

"போகலாம், கிளம்புங்க" என்று கூறி வசந்தாவை பார்க்க சென்றாள். வசந்தாவிடம் கூறிவிட்டு கிளம்பினர்.

இருவரும் கிளம்பி அவனது காரினில் சென்றனர். வர்ஷித் டிரைவரை அழைத்துக்கொண்டு சென்றான் அதிலே ஆதிகா புரிந்துக்கொண்டாள் வர்ஷித் சரியான மனநிலையில் இல்லாமல் கோபத்தில் உள்ளான் என்று.

காரில் செல்லும்போது அவளது கையை பிடித்திருந்தான். சற்று கை பிடி இளகும் நேரம் சாதாரணமாக இருப்பான். ஆனால், மிகுதியான நேரம் அவளது கை நொறுங்கும் அளவிற்கு அவனது பிடிக்கும் இறுகும். விரல்கள் கழண்டுவிடுவதை போல் தோன்றும். வர்ஷித் மனதில் ஆறாத ரணம் ஒன்று இருப்பதை புரிந்துகொண்டாள் அவனின் அவள்

இந்த நிலையிலே ஊர் போய் சேர்ந்தனர் இருவரும். ஒரு வார்த்தை பேசுவதற்கே அங்கு பஞ்சமாகி போனது.

மாமாவிடம் இருவரும் வருவதாக முன்னரே சொல்லி இருந்ததால் வாசலிலே அமர்ந்திருந்தார். அந்த வீடு, வீட்டின் வாசலில் பாட்டியின் சடலம், அதனை சுற்றி ஒப்பாரி சத்தம், வீடு கொள்ளாமல் ஊர்மக்கள், உறவினர்கள் எல்லமே புடை சூழ இருந்த சூழலில் வந்திறங்கினார்கள் ஆதிகாவும் வர்ஷித்தும். இவர்களை பார்த்ததும் யார் என்பது போல்? எல்லாரின் பார்வையும் கேள்வி கேக்க, அவர்கள் அருகே குமாரசாமி சென்றதும் அனைவருமே அறிந்துகொண்டனர் அவன் குமாரசாமியின் தங்கச்சி மகன் என்று.

"ரொம்ப வருசமா கண்ணுலயே காட்டாம வளர்த்தாரு, பையன் ராஜாவாட்டம் வாட்டம் சாட்டமா இருக்கான். அவனோட பொஞ்சாதியும் அவனுக்கு ஏத்தமாதிரி இரண்டு பேரும் அவ்ளோ பொருத்தமா இருக்காங்க" என கூறினார் ஊர்மக்கள். இந்த பேச்சு வர்ஷித் ஆதிகா செவியிலும் விழுந்தது, வர்ஷித் தந்தையின் காதிலும் விழுந்துவைக்க, பார்த்தாரே தவிர பேசவும் இல்லை முறைக்கவும் தவற இல்லை.

அவனும் அதிகமாக ஊர் பக்கம் வந்ததில்லை, வந்தாலும் மாமா வீட்டிற்கு வந்துவிட்டு வந்த வேலையை முடித்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவான். அதனால், ஊர் மக்கள் அவனை காண அவன் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

மாமாவிடம் பேசிவிட்டு மறுப்பக்கம் திரும்பி நிதானமாக அழுத்தமாக ஒரு
முறை முறைத்தான் ஒருவரை. அந்த பக்கம் திரும்பி பார்த்து புரிந்து கொண்டாள் இவர் தான் வர்ஷித்தின் அப்பா என.

பிறகு, அங்கு ஒரு 17 வயது மிக்க பெண் ஒருத்தி ஓடி வந்தாள், மாமா என கூப்பிட்டுக்கொண்டே. இருவரும் திரும்பி பார்த்தனர். 'அவள் குமாரசாமியின் மகள் பெயர் பவிரேகா" என வர்ஷித் அறிமுகம் படுத்திவைத்தான். பவிம்மா என்றான் புன்னகை தவழும் முகத்தோடு. சிறிது பேசும்போது கவனித்தாள் ஆதிகா அந்த பெண்ணை மாமா மாமா என பாசத்தை பொழிந்துவிட்டாள். ஏனனில், இருவருக்கும் 10 வயது வித்தியாசம், அவளுக்கு சிறுவயதில் ஒரு அண்ணன் போலவே நடந்துகொள்வான், அலாதி பிரியம் வைத்திருந்தான். அவளும் அப்படியே.

அவனும் பவிம்மா பவிம்மா என்றே அவளை பாசமாக அழைத்தான். இதனை காதில் புகை வராத குறையாக கவனித்த ஆதிகாவை வர்ஷித் கவனிக்க தவறவில்லை. நமட்டு சிரிப்புடன் அவளை ஏறிட்டான். பவியும் ஆதிகாவிடம் அக்கா அக்கா என்றே நல்ல விதமாக பேசினாள், ஏதோ வெகு நாள் பழகியது போல. அவள் சிறுபெண், உண்மையான அன்புடன் பழகுகிறாள் அவளை இப்படியா நினைப்பது என ஒரு நொடி நினைத்த மனதை திட்டிக்கொண்டாள்.

அவளின் பொறாமையை போக்கும்வகையில் வர்ஷித் ஆதிகாவை "ஆதிமா" என செல்ல பெயரிட்டு அழைத்தான். அவள் வித்தியாசமாக ஒரு பார்வையை வீச, 'அய்யோ இப்படி பார்த்தா, நான் உறஞ்சி நின்னுருவேனே' இந்த சூழ்நிலையை மாற்றுநோக்கில், "ஆதிமா நீ பவி கூட போய் இரு, போனை கையிலே வைத்துக்கொள். பவி ஏதும் கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள். எதாவுது தேவை என்றால் அவளிடமே கேள்"என பவியுடன் அனுப்பிவைத்தான்.

பவியும் ஆதிகாவும் நன்றாக பழகினர். ஆதிகா அவனது அழைப்பால் மகிழ்ச்சியில் ஊறி கிடந்தாள். வர்ஷித்தின் கண்கள் ஆதிகாவை அடிக்கடி நோட்டமிட்டது.
பாட்டிக்கு இறுதி சடங்குகளை ஒரு பேரனாக அனைத்தையும் செய்தான். தாய் இல்லா பையன் என திட்டாமல் கூட வளர்த்தவர் ஆயிற்றே. கடைசியில் பாசமும் கண்களை மறைத்தது கண்ணீராய்.

அங்கு வந்த வேலை முடிந்ததும் இருவரும் கிளம்பினர். பின்னாலிருந்து ஒரு குரல் அழுத்தமாக வந்தது "வர்ஷித் நில்லுடா" என்று.

அந்த குரலுக்கு யார் சொந்தம் என அடுத்த பகுதியில் பாப்போம்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 19

பாட்டி இறந்ததிற்கு ஊருக்கு வந்த ஆதிகாவும் வர்ஷித்தும் கிளம்பினர். அப்போது பின்னாலிருந்து வந்த குரல் இருவரையும் தடுத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அவர்களின் பின்னாடி ஓடி வந்தது வர்ஷித்தின் அக்காவும் தம்பியும் தான். இருவரையும் பார்த்து கண்கலங்கி நின்றான். "ஏண்டா, இந்த அக்காவ மறந்துட்டதானே, அதான் ஊருக்கு வந்துகூட பாக்காம போற" என கண்ணில் கண்ணீரையும் பாசத்தையும் தேக்கி வைத்து கேட்டாள் வர்ஷித்தின் அக்கா சுதா. அவளருகில் நின்றான் வர்ஷித்தின் தம்பி அருண்.

"இல்ல அக்கா, நான் எப்படி அங்கு வருவது?, நானும் நீ இங்க வருவேன்னு பார்த்தேன். நீ வரவேயில்லை சுதாக்கா" என சுதாவின் கைகளை பிடித்து சொன்னான்."நம்ம வீட்டுக்கு வராம ஏண்டா போற, சரி அத விடு"என்றாள் இயலாமையுடன். இதையெல்லாம் வெறும் பார்வையாளராக பார்த்த ஆதிகாவிற்கு, தனது தம்பி நினைப்பு வந்தது. 'அங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க? கேள்வி பட்டேன்டா கஷ்டமா போச்சு அவுங்கள (விஷ்ணுவின் பெற்றோர் )நல்லா பாத்துக்கோ, சரியா" என அறிவுரையோடு சில பல நலம் விசாரிப்பு போனது அவர்கள் இடையில். சிறிது நேரம் கழித்து அருண் கையில் சுதாவின் குழந்தையோடு வந்தான். அதை கண்டவுடன் வர்ஷித் சிறு பிள்ளையென மாறி தனது மருமகளை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான். அவ்வளவு ஆனந்தம் அவன் முகத்தில். ஆதிகா இதை ஆசையோடு பார்க்க, ஆதிகா முகத்தை ஆராய்ந்து பார்த்தாள் சுதா. "இத்தனை நாளாய் என்கிட்ட என் மருமகள காட்டாம இருந்துட்டல சுதா "என்றான் வருத்தமும் கோபமும் போட்டி போடும் குரலில். கோபமாக இருந்தா மட்டுமே சுதா என்றழைப்பன். "என்ன பண்ணறதுடா சூழ்நிலை அமையல, நீ அப்டியே பாக்கலைனு நடிக்காத உன்னோட மாமாதான்(சுதாவின் கணவன்) எல்லாத்தையும் சொல்லிருப்பாரே, போட்டோ அனுப்பிருப்பரே" என்றாள் சுதா தான் தப்பிக்கும் பொருட்டு.

"ஆமாக்கா, மாமா இருந்ததுனால தப்பிச்ச, இல்லனா பாத்துக்கோ"என மிரட்டியவனை பார்த்து ரோஜா குவியலாய் அவனது மடியில் கிடந்த பிருந்தா தான் பற்களில்லா பொக்கை வாயை வைத்துக்கொண்டு வர்ஷித்தை பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பை பார்த்து எல்லாரும் சந்தோசம் கொண்டனர். அவன் முத்தமிட்டு கொஞ்சிக்கொண்டே இருந்தான். யாரும் அவனை தடுக்கவில்லை. சுதாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ஆதிகா அவனது சிரிப்பிலே மயங்கி நின்றாள். "மாமா அப்போ அப்போ பிருந்தா போட்டோ அனுப்பிகிட்டே இருப்பாரு. ஆசை வரும்போது கொஞ்சுவேன், உங்ககிட்ட பேசணும்னு தோணும். ஆனால், ஏதோ ஒன்னு தடுத்துருச்சு மன்னிச்சிடுக்கா. நான் வந்து பாத்துருக்கணும் விட்டுட்டேன் என் தப்பு தான்" என மன்னிப்பு கேட்டவனை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். "தம்பி நீதான்டா என்னோட முதல் புள்ள, மன்னிப்பெல்லாம் கேக்காத, நானும் உன்னோட கல்யாணத்துக்கு வர முடியல என்னையும் மன்னிச்சிருடா" என அவளும் மனிப்புகனைகளை தொடுக்க, அவளின் கண்களை துடைத்து 'நீ அழுகக்கூடத்துக்கா, என்கிட்டே போய் மன்னிப்பெல்லாம் கேக்காத, இங்க என்ன நடக்கும்னு எனக்கு தெரியாதா" என கூறிவிட்டு இந்த சூழலை மாற்ற நினைத்தவன், "ஆதிமா"என அழைத்து, இங்கு நடந்தவற்றை பார்த்து சமைந்து நின்றவளை கூப்பிட்டு உயிர்பூட்டி குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு காருக்கு ஓடி சென்றான் ஓட்டமும் நடையுமாய். குழந்தையை பார்த்த அவனது மகிழ்ச்சி, அவனது பிரேத்யேகமான ஆதிமா என்றழைப்பு என எல்லாமே அவளை மகிழ்ச்சி கடலில் ஆட்டி வைத்தது.

அவளிடம் இருந்த குழந்தைக்கு இவன் காரிலிருந்து எடுத்து வந்த பெட்டியை திறந்து அதில் உள்ளே இருந்த செயினை எடுத்து அணிவித்தான். மாட்டிவிடும்போது, "மருமகளே கோச்சிக்காதிங்க, மாமா தாமதமா வந்து பார்த்தத்திற்கு" என அவன் கூறும்போதே, சுதா, "பிருந்தா அப்படியே தம்பி இல்லனா தங்கச்சி பாப்பாவ சீக்கிரமா பெத்து கொடுக்க சொல்லுடா, நான் மட்டும் தனியா இருக்கமுடியாது கம்பெனிக்கு ஆள் வேணும்னு கேளுடா" என அவள் கூறியதை கேட்டவுடன் ஆதிகா இதனை புரிந்துக்கொண்டு வெட்கத்தில் கன்னம் சிவக்க பட்டு போனாள். வர்ஷித்தும் சிரிப்போடு பிருந்தாவிற்கு முத்தமிட்டான். சுதாவிற்கு வர்ஷித்தை ஜோடியாக பார்க்க அத்தனை மகிழ்ச்சி. ஆதிகாவிடமும் சென்று வழியக்க பேசினாள். ஆதிகாவும் நன்றாக பேசினாள். சில அறிவுரைகளோடு இருவரும் ஊருக்கு திரும்பினர்.

இருவரும் காரில் அமர்ந்தவுடன் சிரித்த முகமாய் இருந்த வர்ஷித், கார் ஒரு வீட்டை கடந்தவுடன் முகம் முன்ன போல் இறுக்கத்தை தத்து எடுத்தது. இதை கண்ட ஆதிகா மறுநொடியே வர்ஷித்தின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பதுக்கி கொண்டு, தன் அழுத்தத்தை கூட்டினாள். அதுக்கு அவனுக்கு, 'உனக்கு எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நான் இருப்பேன்'என கூறுவது போல தோன்றியது. கொஞ்சம் கொஞ்சம் இளகு தன்மைக்கு வந்தவன் சீட்டின் பின்னாடி சாய்ந்து அமர்ந்துகொண்டு, கண்களை மூடி கொண்டான். உன் சோகத்தையும் மனப்பாரத்தையும் குறைக்கவே நான் வெளியேறுகிறேன் என அவன் பட்டு கன்னத்தில் இறங்கியது கண்ணீர். அதற்கு அணை போட ஆதிகாவால் முடியவில்லை. அழுதாவது, அவனது பாரம் இறங்கட்டும் என விட்டுவிட்டாளே தவிர விரல்கள் பிணைந்திருந்த கையை விடவே இல்லை. அழுத நிலையிலே அவன் உறங்கிவிட, வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த ஆதிகாவும் உறங்கிவிட்டாள். இடையில் கண் விழித்தவன், ஆதிகா உறங்குவதையும், அவளின் விடாத கைப்பிடியும் பார்த்து சிரித்தான். அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான். இன்னொரு கையால் அவனது புஜத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டாள், கைப்பிடி மட்டும் இன்னும் கெட்டியம் கூடியது அவர்களது அன்பு போலவே. வேடிக்கை பார்த்து நேரத்தை கடத்தினான். ஆறாத ரணங்கள் வலியை கிளப்பி கோபத்திற்கு தூபம் போட, அப்போதெல்லாம் ஆதிகாவை பார்த்தும், கண்ணீராலும் தணிய வைத்துக்கொண்டான்.

இருவரும் வீட்டினை அடைந்ததும். வர்ஷித்தின் கலையிழந்த முகத்தினை பார்த்த வசந்தா அவனது கோபத்தை கண்டு, "அவனை குழந்தை போல் பார்த்துக்கொள்" என்றார் ஆதிகாவிடம். இதைவைத்தே, வசந்தாவிற்கு வர்ஷித்தின் குடும்பத்தை பற்றி அனைத்தும் தெரியும் என்பதை உணர்ந்தாள் ஆதிகா.

இருவரும் மேல சென்று குளித்துவிட்டு ஆதிகா மட்டும் கீழே வந்தாள். வந்தவளிடம், வசந்தா, " வர்ஷித் சோர்வாக இருப்பான். நீயும் மேலயே சாப்பிடு" என சாப்பாடு அடங்கிய தட்டை அவளிடம் கொடுத்து அனுப்பினார். அவளும் மேல சென்று அவனிடம் சாப்பாட்டை கொடுக்க வேணாம் என மறுத்தான். அத்தை சொன்னதை நினைவில் நிறுத்தியவள், அவனை பிடிவாதப்படுத்தி வாயை திறக்க வைத்து ஊட்டியும் விட்டாள். அவனும் குழந்தை போல வாயை திறந்து வாங்கிக்கொண்டான். இடையில் நீயும் சாப்பிடு என்றான். இதற்கு நடுவில் கண்ணீரும் வேதனையை குறைக்கும் செயலை மறக்காமல் செய்தது. பாசத்தோடு வாயையும் துடைத்துவிட்டாள். "ஆதிமா என்னோட போனை எடுத்து கொடுமா" என்றான். மந்திரத்தால் கட்டுப்பட்டவள் போல் ஆனாள் அந்த ஆதிமா என ஒற்றை சொல்லால். கீழே சென்று பாத்திரத்தை வைத்து அறைக்கு வரும் போது, உயிரில்லா உடம்போடு அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தான். வெறுமை மட்டுமே அவனிடத்தில் குடி கொண்டிருந்தது. அவனிடம் சென்று அமர்ந்தவுடன், வர்ஷித் "ஆதிமா" என்றவன் மடியை காட்டி "படுத்துக்கவா" என குழந்தை போல கேட்டான். 'உன்னை மடிதங்கவே பிறவி எடுத்தேன்' என அவனை மடிதாங்கிக்கொண்டாள். ஒரு கை அவனது உள்ளங்கைக்களுக்கில் இடையில் இருந்தது. மற்றொரு கை அவனது தலைமுடியை கோதி கொண்டிருந்தது." நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்" என கூறினான். "சொல்லுங்க வருமாமா" என்றாள் ஆசையாக. அவனிருந்த நிலையில் அதை கவனிக்க வில்லை.

"என்னுடைய அப்பா பேரு நடராஜன், அம்மா பேரு மலர்மதி. ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க. அப்பாவும் மாமாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால அம்மாவை நம்பி கட்டி கொடுத்தாங்க. நம்பிக்கை அப்பா மேல மட்டும்தான். ஏன்னா, அப்பா குடும்பத்துக்கு அம்மாவை சுத்தமா புடிக்காது. ரொம்ப சந்தோசமாதான் இருந்தாங்க. வருஷம் மட்டுமே போனுச்சு தவிர, குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்ல. அப்பா இத பத்தி ஒண்ணுமே சொல்லல. ஆனால், அம்மாவிற்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம். அப்பத்தா தான் திட்டிகிட்டே இருபங்களாம் குழந்தை இல்லனு. கடைசியில், அம்மா பாட்டிக்கு உடம்பு சரி இல்லனு ஒரு மாசம் அங்க தங்கிட்டாங்க. திரும்பி வரும்போது, அப்பத்தா அப்பாவிற்கு வேற கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்களாம். எங்க அம்மா அங்க எப்படி இருக்க முடியும், அதுவும் வேற ஒரு பொண்ணோட அப்பாவ பாக்க முடியலன்னு அம்மாச்சி வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்பாவுக்கும் அந்த கல்யாணம் விருப்பமில்லை. அப்பத்தா மிரட்டி பண்ணி வச்சிட்டு. அவுங்கதான் அப்பாவுக்கு வீட்ல பாத்த பொண்ணு, அவுங்களும் ஒரு தலையா அப்பாவ காதலிச்சாங்களாம். அதுனால இரண்டாவதா பண்ணிக்க ஒத்துக்கிட்டாங்க. அப்பாவும் வாழ ஆரம்பிச்சிட்டாங்க. அதுனால, அவுங்களுக்கு முதல பிறந்தவங்கதான் சுதா அக்கா.
அம்மா வீட்ட விட்டு வந்தாலும் அப்பா அடிக்கடி வந்து பாத்துப்பாங்க. அம்மா தான் அக்காவ வளர்த்தங்களாம்.அம்மா ரொம்ப பாசமா இருப்பாங்கன்னு அக்கா சொல்லும். அக்காவுக்கு 7, 8வயசு இருக்கும்போது தான் அம்மா மாசமா இருந்தங்களாம்.இப்போ இறந்துபோன பாட்டி தான் அம்மாவ பாத்துக்கிட்டாங்க. அம்மாnபிரசவத்துல கஷ்டபட்டங்களாம். ஒரு உயிரைத்தான் காப்பாத்த முடியும்னு சொன்னப்போ என்னோட புள்ளைய காப்பாத்துங்க, அதுக்காகத்தான் இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். நான் போன கூட ராஜன் (வர்ஷித்தின் அப்பா ) பார்த்துக்கொள்வார்னு சொன்னார்களாம். இந்த உலகத்துக்கு என்னைய அனுப்பிவச்சவங்கள நான் இந்த உலகத்தை விட்டே அனுப்பி வச்சிட்டேன்"என கதறி அழுதான். கண்ணீரை துடைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் கொட்டிவிடும் நோக்கில், "அப்பா என் அம்மாவோட நம்பிக்கையை காப்பாத்தல. என்னைய வளர்த்து பாத்துக்கிட்டது எல்லாமே பாட்டியும் அக்காவும்தான். நான் பிறந்த பிறகுதான் மாமாவுக்கு கல்யாணம் ஆனது. அத்தையும் சுதா அக்கா அம்மாவும் நெருங்கிய தோழிகள். அதுனால அத்தை கூட என்ன பாத்துக்கல. மாமாதான் என்ன பாத்துப்பாரு. எனக்கு அப்புறம் தான் அருண் பிறந்தான். நானும் அருணும் அப்பா மாதிரியே இருப்போம். சுதாக்கவும் அருணும் என்மேல ரொம்பவே பாசமா இருப்பாங்க. அப்பாவ அடக்கமுடிஞ்சவங்களுக்கு அக்காவையும் தம்பியையும் என பாக்க வராம தடுக்க முடியல. "அப்பா என்ன வெறுத்ததிற்கு காரணம் என்னானு தெரியுமா? " என கேட்டு விரக்தி சிரிப்புடன் தொடர்ந்தான் , "அம்மா இறந்ததுக்கு நான்தான் காரணமாம் அதுனால அவரும் என்னைய பாத்துக்கல இதுவரைக்கும். எனக்கு பத்து வயசு இருக்கும்போது பிறந்தவதான் பவி. அவ எனக்கு குட்டி தங்கச்சி. அவளும் எங்க கூடதான் இருப்பா. பாட்டி தனியா பக்கத்துல ஒரு வீடு பாத்து அங்க வச்சி என்ன பாத்துக்கிட்டாங்க அங்க தான் அக்காவும் தம்பியும் பவியும் இருப்பாங்க. அக்காவுக்கு கல்யாணம் ஆனபிறகு பாட்டி, அருண், பவி எல்லாரும் அக்கா வீட்ல தான் இருப்பாங்க.மாமா ரொம்ப நல்லவர். என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னைய தூக்கி வளக்காததுனால அக்கா, பவி, அருண் எல்லாருமே அப்பாவையும் அவுங்களையும் வெறுத்துட்டாங்க. அக்காதான் எனக்கு அம்மா மாதிரி. நான் வெறுக்குற ஒரே ஆளு அப்பாதான்" என கூறி முடித்து அவளின் மடியில் புதைந்து அழுதான். அவனை சமாதானம் படுத்தி உறங்கவைத்தாள். அவனும் பாரம் குறைந்த மனதுடன் அவளின் இடையை கட்டிக்கொண்டு அவளின் கையை முகத்தில் வைத்துக்கொண்டு உறங்கியவனுக்கு அந்த நாளில் விவாகரத்து நினைவிலே இல்லை. இவளே தன்னவள் என்ற எண்ணமே இருந்தது.

இந்த எண்ணம் தொடருமா அல்ல கைவிடுமா என்பதை அடுத்த பகுதியில் பாப்போம்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 20

ஆதிகா வர்ஷித்தை தன் மடியிலே போட்டு கொண்டு உட்கார்ந்த நிலையிலே உறங்கிவிட்டாள். நிலா ஓய்வெடுக்க கிளம்பியதும் தாமதம் செய்யாமல் தன் பணிக்கு வந்து அமர்ந்தான் ஆதவன்.

ஒளி கதிர்கள் ஜன்னலை தாண்டி ஊடுருவி வர்ஷித்தின் முகத்தில் பட்டது. தன்னவளின் மடியில் இருந்து அவனுக்கு கிளம்ப பிடிகொடுக்கவே இல்லை அவனது உறக்கம். திரும்பி புரண்டு புரண்டு அவன் படுக்க, அப்போதே தெரிந்துகொண்டான், தான் படுத்திருப்பது தன்னவளின் மடியில் என்று. விருட்டென எழுந்து அமர்ந்தான். அவள் உட்கார்ந்த நிலையில் தூங்குவதை கண்டதும் அவனது தூக்கமே தொலைந்து போனது.

'அய்யோ, நான் மடியில் படுத்ததால், இவள் இப்படியே அமர்ந்தே தூங்குறாளே' என தன் மீதே வருத்தப்பட்டுக்கொண்டான். அவளை சீராக படுக்கவைத்து விட்டு, பட்டு நெற்றியில் இதழொற்றிவிட்டு நகர்ந்தான். அப்போது, அவளது மென்மையே உருவான அவளது கையை பார்த்தான். விரல்கள் எல்லாம் சிவந்திருந்தது. 'நாம் நேத்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர, இவளின் கையை இறுக்கிப்பிடித்து காயப்படுத்திவிட்டோமே' என தன்னையே திட்டி நொந்து போனான், அவள் எதற்காக இதையெல்லாம் தாங்குகிறாள் எனகூட யோசிக்காமல்.

நேற்றைய நிகழ்வுகளை நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் வந்தது. அவனது அப்பாவின் ஒதுக்கம், அதற்கு அவர் சொன்ன காரணம் என எல்லாமே அவனை வதைத்தது.

காலையில் எப்போதும் போல இல்லாமல் சற்று கடுமையாகவே இருந்தான். ஆனால் ஆதிமா என அவளின் பெயரை மறக்காமல் ஒளிரவிட்டான்.

அலுவலகம் சென்றவனுக்கு அங்கு மிக பெரிய ஒரு விஷயம் காத்திருந்தது விஷ்ணுவின் இறப்பு பற்றி.

வர்ஷித்தின் போலீஸ் நண்பனும் விஷ்ணுவின் இறப்பு பற்றி கூறினான். "ராகேஷ் என்பவரால் அச்சிடேன்ட் செய்ய பட்டு, விஷ்ணுவை உயிரை விட செய்தான்" என வர்ஷித்திடம் கூறி முடித்தான். "ஆனால், என்ன காரணம் என தெரியவில்லை" என்ற நண்பனிடம் நான் பார்த்துக்கொள்கிறேன் என பதிலளித்தான் வர்ஷித்.

'ராகேஷ் விஷ்ணுவின் பெரியப்பா மகன் தானே, சொந்த சித்தப்பா மகனை கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்கும். விஷ்ணுவும் இவனை பற்றி எதுவும் நம்மிடம் கூறியதில்லையே' என யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு மிஞ்சியது தலைவலியும் கோபமும் தான்.

கோபத்தை கட்டி சுமந்தவனுக்கு மது அருந்தவேனும் என்பதுபோல் தோன்றியது வெகு நாட்களுக்கு. ஆதிகா அவன் வாழ்வில் வந்த பிறகு இந்த பழக்கத்தை கை விட்டிருந்தான். ஆனால் இப்போது கவலைகளை மறந்து தூங்கவேணும் என்றே மதுவை நாடினான்.

அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தவனை கேள்வியோடு நோக்கினாள். ஆதிகா எதிர்பாக்காத ஒன்றை செய்து வந்தான் வர்ஷித். தாமதமானதும் சுப்பிரமணியனும் வசந்தாவும் உறங்க சென்றனர். அவனுக்காக ஆதிகா மட்டுமே காத்திருந்தாள்.

"எப்போதும் வருபவன் போல தெரியவல்லையே, இவனின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது, ஏன் இப்படி தள்ளாடுகிறான்?" என குழம்பி அருகில் சென்றவளுக்கு குமட்டி கொண்டு வந்தது மதுவின் வாடை. அவனை கை தாங்களாக அறைக்கு கொண்டு சென்று சட்டை பொத்தான்களை மட்டும் கழட்டிவிட்டாள். அவன் மதுவின் பிடியில் சிக்கியிருந்ததால், படுத்தவுடன் உறங்கி விட்டான். ஆதிகாவிற்கு தான் அவனின் இந்த பழக்கத்தை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. 'நேற்றிலிருந்து கொண்ட சோகத்தை கைவிடவே இப்படி செய்திருப்பான்' என மனதை தேற்றி தூங்கினாள்.

காலையில் முழித்த ஆதிகாவால், எழும்ப இயலவில்லை. வர்ஷித்தின் கை கால்கள் எல்லாம் ஆதிகாவின் மேல் படர்ந்திருந்தது. அவளின் கையையும் பிடித்துக்கொண்டே தூங்கி கொண்டிருந்தான். இதனை கண்டவள், முறுவழித்து விட்டு கையை பிரித்து கொண்டாள்.

காலையிலே தலையை பிடித்து அமர்ந்தவனுக்கு, ஆதிகாவே லைம் ஜூஸுடன் வந்தாள். அவள் கோபமும் கொள்ளவில்லை. இவன்தான் சங்கடப்பட்டு மன்னிப்பு கேட்டான். அதற்கும், அவளிடத்தில் பதில் இல்லை. காலையில் சாப்பிட அமர்ந்தபோதுதான் கவனித்தான் அவளது "வருமாமா" என்றழைப்பை. இருந்தும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. அதை பற்றி மேலும் சிந்திக்கவும் இல்லை. ஆனால், அவளது அந்த அழைப்பு அவணுக்குள் எல்லை இல்லா மகிழ்ச்சியை உருவாக்கியது. இவர்களின் தனிப்பட்ட அழைப்பை கண்டு பெற்றோர்களும் ஊடல் முடிந்தது போலும் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டனர். வசந்தா ஆதிகா வர்ஷித் பற்றி எல்லா வற்றையும் சுப்பிரமணியனிடமும் கூறி இருந்தார்.

அலுவலகம் சென்று, வேலைகளை தொடர்ந்தாலும் அவனின் மூளை சென்ற இடம் தனது அப்பாவிடமும் விஷ்ணுவின் இறப்பிற்கும் தான்.

' இந்த உலகத்தில் எவ்வளவு அப்பா தங்களின் பிள்ளைகளை தாங்குகின்றனர்.பாசத்தை கொட்டி வளர்க்கின்றனர். ஆனால் எனக்கோ இதை கொடுத்தே வைக்கவில்லை', என கவலைகொண்டான் சுப்பிரமணியன் காட்டும் பாசத்தை மறந்து, அம்மாவின் அருகாமையை தேடினான் வசந்தாவின் தூய்மையான அன்பை மறந்து.

'விஷ்ணு என்ன செய்தான்? அவனுக்கும் ராகேஷிற்கும் என்ன பிரச்சனை? அப்பாவிடம் கேட்போமா இல்லை வருந்துவார்களா? என்ன செய்வது' என யோசித்தான். 'இல்லை இதை சொல்லாமல் விட்டால் நமக்கு பித்து பிடித்துவிடும். அதைவிட, இன்னும் யாரையாவது இழக்க நேரிட்டால் என்ன செய்வது? நினைக்கவே பயமாக இருந்தது. இது குடும்பம் சார்ந்த பிரச்சனை கண்டிப்பாக அம்மா அப்பாவிடம் சொல்லவேண்டும்' என முடிவெடுத்தான். இதை மறந்தும் ஆதிகாவிடம் சொல்ல கூடாது, தெரிந்தால் வருத்தம் கொள்ளுவாள். அப்பா அம்மாவிடமும் இதை ஆதிகாவிடம் பகிர வேணாம் என கூறிவிட வேண்டும்.

மீண்டும் மீண்டும் இதுவே சிந்தையில் உலாவ, மறுபடியும் மதுவை நாடினான். யாரும் அளிக்காத நிம்மதியை போதை தருகிறது என உணர்ந்தான். ஆதிகா தாமதமாக வர்ஷித் வருவதை வைத்தே யூகித்துக்கொண்டாள் மதுவை அருந்திருப்பான் என.

அவனின் இந்த பழக்கம் தொடர்கதை ஆகிப்போனது. இதை பொறுக்காத ஆதிகாவிற்கு கோபம் வந்தது. இதை அத்தை மாமாவிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் காரணம் அவனின் அப்பா என்றால் இருவரும் மனமுடைந்து போவார்கள் தங்கள் பாசத்தில் குறை வைத்துவிட்டோமா என்று. இதை அவர்களிடம் சொல்ல வேணாம் என முடிவெடுத்தவளுக்கு தெரியாதே வர்ஷித்தின் இன்னொரு பிரச்சனை. இரவு நேரம் கடந்து வருவதால், அவனின் இந்த நடவடிக்கையை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.

இதைப்பற்றி, காலையில் விசாரித்தால் அலுவலகத்திற்கு செல்பவனுக்கு தானே காலையில் துன்பம் தர கூடாது என இரவு பேச துடித்தாள். அதுவும் அவனிடம் நடக்காமல் போக வாரத்தின் விடுமுறை நாளை எண்ணி காத்திருந்தாள்.

விடுமுறை நாள் வரை, வர்ஷித்திடம் பாராமுகம் காட்டியே வந்தாள். இரவில் மட்டும், அவளின் கையை பிடித்து தூங்கும் போது அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவள் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது. அன்றும் அவள் பேசாமல் போகவும், ஆதிமா என்றான் பாவமாக. அவளோ, "உங்களுக்கு என்ன பிரச்சனை? , ஏன் இப்படி இருக்கீங்க? என்னதான் ஆச்சு? இந்த பழக்கதையெல்லம் எங்க கத்துக்கிட்டீங்க?" என கோபமாக கேட்டாள். அவனோ அவளின் கையை பிடித்து, "வேலையில கொஞ்சம் டென்ஷன்மா வேற ஒன்னும் இல்ல" என்றான் சமாதானம் படுத்தும் விதமாக. "அப்படினா பேசி சரி பண்ணுங்க. அத விட்டுட்டு இப்படி செய்தால் சரி ஆகிடுமா", அவனது முக சுருக்கத்தை கண்டு கோபத்தை கைவிட்டு அமைதியாக கூறினாள். "சரி நான் பாத்துக்கிறேன்மா, என்னைய மன்னிச்சிடுமா" என்றான் வர்ஷித். அதன் பிறகு அவனிடம் பாராமுகம் காட்டவில்லை ஆதிகா. வருமாமா வருமாமா என்றே சுத்தி சுத்தி வந்தாள்.

வர்ஷித்தும் அப்பா அம்மாவிடம் விஷ்ணு இறப்பை பற்றி கூறினான். "அவர்கள் இருவரும் வருத்தப்பட்டாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ எதிலும் தலையிட வேணாம், கவலைப்படாமல் இரு. அவர்கள் இருவரும் நினைத்ததை நிகழ்த்த எந்த எல்லைக்கு வேணாலும் செல்லும் ஜீவன்கள்" என கூறும்போது தந்தையின் முகத்தில் வெகு நாள் கழித்து கோபமும் மகனை இழந்த தவிப்பையும் கண்டான். அவனும் மேல ஏதும் கேக்காமல் ஆறுதலாக கைப்பற்றி அழுத்தம் கொடுத்துவிட்டு சென்றான், இதை பற்றி ஆதிகாவிடம் சொல்ல மாட்டோம் என அவர்கள் கூறிய பிறகே.

இரவில் அறைக்குள் சென்றவளின் கையை பிடித்து சுவற்றுக்குள் சிறை வைக்க, அவள் பயந்து அவனின் அருகாமைக்குள் அடங்கி போனாள். மூச்சுவிட மறந்து நின்றாள்.

"உன்னாலதான் நான் இப்போ நிம்மதியா இருக்கேன். நீ சொன்னதை செஞ்சிட்டேன் இப்போ டென்ஷன் இல்லாம இருக்கேன். இதுக்கு முழுக்க முழுக்க நீ தான் காரணம். இதுக்காக உனக்கு ஏதாவுது கண்டிப்பா தந்தே ஆகணும்"என காதலுடன் மொழிந்துகொண்டே அவளின் அருகில் நெருங்கி ஆதிகாவின் இதழ்களை தன் இதழுக்குள் பொதித்து கொண்டான்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 21

வர்ஷித் இதழுக்குள் ஆதிகாவின் இதழ்கள் சிக்கி தவித்தது. ஆதிகா இதனை இன்ப அவஸ்தையாக ஏற்றுக்கொண்டிருந்தபோது, வர்ஷித் தனது கால்களை ஆதிகாவின் மேல் நங்கென்று போட்டதால், முத்த கனவுகள் மொத்தமாய் கலைந்து விடை பெற்றன.

தூக்கத்திலிருந்து முழித்தவளுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது, இந்த கனவை நினைத்து. பிறகு, 'எங்க இவன் கன்னத்துல முத்தம் கொடுத்ததுக்கே டிவோர்ஸ் பத்திரம் கொண்டு வந்து சைன் போட சொன்னான். இதுல கனவுல வந்த மாதிரி நடந்து இருந்தா, கோர்ட்க்கே அழைச்சிட்டு போயிருப்பான். சரியான சாமியார்' என மனதில் நினைத்தவளுக்கு சிரிப்பு மட்டுமே மிஞ்சியது.

நாட்களும் நன்றாக போக இவர்களின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. வர்ஷித் குடிப்பதை முற்றிலும் தவிர்த்திருந்தான்.

ஒரு நாள் வர்ஷித் காலையில் குளிக்கும்போது அவனது போன் அலறியது. குரல்விட்டு ஆதிகாவிடம் யாரு என கேட்டான். பெயரை சொன்ன பிறகு நீயே பேசி, 'குளிக்கிறேன்னு சொல்லு' என்றான். அந்த பக்கம் பேசியது ஆகாஷ் தான். ஆதிகாவிற்கு ஆகாஷை பற்றி வர்ஷித்தின் நண்பன் என தெரியும். டைரியிலும் குறிப்பிட்டு இருந்தான் நேரிடையாகவும் சொல்லிருந்தான். அதனால், கொஞ்சம் நலம் விசாரிப்புடன் பேசினாள்.

அவளிடம் ஆகாஷ், 'நானே உங்ககிட்ட தான் பேசணும்னு இருந்தேன்மா" என கூற அவளும் சகோதரா உணர்வுடன், "சொல்லுங்க அண்ணா" என பரிவுடன் கேட்டாள். 'நான் சொல்றத பொறுமையா கேளுமா, ம்மா உனக்கு வர்ஷித்த புடிக்குமா புடிக்காதானு தெரியலமா, நான் அவன் பிரண்டா சொல்லால, அவன்கூட இருந்து பாத்துருக்கேன், உன்ன அவன் அவ்ளோ நேசிச்சான் அவனோட கதைய கேட்க கஷ்டமா இருந்துச்சு, எல்லாமே தெரியும்மா விஷ்ணு இறப்பிலிருந்து உனக்கு கொடுக்க போற டிவோர்ஸ் வரைக்கும். உள்ளுக்குள்ள அவ்ளோ காதல வச்சுக்கிட்டு அவனையே ஏமாத்திகிறான்மா. நீ இல்லனா அவனுக்கு அவனுக்கு வாழ்க்கையே இல்லாம. அது அந்த முட்டாள் புரிஞ்சுக்க மறுக்கிறான். அதுனால இந்த டிவோர்ஸ்க்கு ஒதுக்காதமா, ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும், என்னோட ஆசையும் அதுதான்மா. நான் அவன்கிட்ட தினமும் சொல்றேன்மா இத, கேட்கவேமாற்றான். நான் இத பத்தி பேசுனனு அவன்கிட்ட சொல்லிக்காதமா. அவன் ஏங்கிட்டு இருந்த வாழ்க்கை கிடைச்சிருக்கு, அவன் இத வேணான்னு சொல்றான். இப்ப நான் போன் பண்ணதே இதுக்காகத்தான். நல்ல வேளை நீ எடுத்தமா, இல்லனா நான் சொல்றத அவன் கேட்கவேமாட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப வருசத்துக்கு நல்லா வாழனும்மா. இத பத்தி கொஞ்சம் யோசிச்சு அவன்கிட்ட பேசுமா" என ஆகாஷ் போனை வைத்தவுடன் ஆதிகாவிற்கு மிஞ்சியது அழுகைதான்.

வர்ஷித் ஆகாஷ் பேசியதை பற்றி கேட்கவும் இல்லை, ஆதிகா சொல்லவும் இல்லை. ஒரு முடிவோடு இருந்தாள், டிவோர்ஸ்க்கு எக்காரணம் கொண்டும் சம்மதிக்க கூடாது என.

சில நாட்கள் தோன்றி மறைந்தது. ஒருநாள் இரவில் இருவரும் மஞ்சத்தில் படுத்திருந்த போது, வர்ஷித் தொடங்கினான். அப்போதும் அவளின் கை விரல்களை பிடித்துக்கொண்டதை மட்டும் அவன் விடவே இல்லை. "எப்போ டிவோர்ஸ்க்கு சைன் போடா போற, சீக்கிரம் போடு அப்போதான் சீக்கிரமா மேல ப்ரோஸீட் பண்ணலாம்" என அவன் கூற, ஆதிகா, 'கையை புடிச்சுகிட்டு கேக்குற கேள்வியை பாரு' என நினைத்து அவனது கையிலிருந்து தனது கையை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். "என்னால முடியாது, நான் உங்ககூடத்தான் வாழ்ந்தே ஆகணும், நீங்களும் என்கூடதான் வாழனும், எனக்கு புடிச்ச உங்கல எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. என்கிட்ட இருந்து டிவோர்ஸ்க்கு சம்மதம் எதிர்பாக்காதிங்க' என அழுகையுடன் கூறிவிட்டு தலையணையை நனைக்க தொடங்கினாள். அவனோ, 'யாருக்கு வேணும் உன் பரிதாப காதல் போடி' என அவனும் திரும்பி படுத்துக்கொண்டான்.

வர்ஷித் அலுவகம் கிளம்பும்போது சுப்பிரமணியன், "இந்த பைலை ஆபீஸ்ல கொடுத்துட்டு போப்பா"என்றார். வர்ஷித் வேளை பார்ப்பது வேறு ஆபிஸில், சுப்பிரமணியன் வைத்து நடத்திய அலுவலகத்தை விஷ்ணு இறப்புக்கு பிறகு வேறு ஒரு நபரை வைத்து நடத்தி வருகிறார். முக்கியமான எந்த ஒரு முடிவையும் இவரே எடுப்பார். வர்ஷித்திடம் எவ்வளவோ சொல்லியும் அவன் அவரது ஆபிஸ்க்கு செல்ல முன் வரவே இல்லை பொறுப்பு எடுக்கவும் இல்லை. வர்ஷித் அங்கு சென்று கொடுத்துவிட்டு போகையில், சிலர் காது படும்படி கூறினர், "நண்பன்னு உள்ள வந்து, விஷ்ணுக்கே போட்டியா வந்துட்டு, இப்போ அந்த பையன் இறந்தபிறகு முழு சொத்தையும் அபகரிக்க பாக்குறாங்க. இவங்களுக்கு எல்லாம் குற்ற உணர்வு இருக்குமா இருக்காதா. விஷ்ணு இடத்துல இந்த பிச்சை கார பயலா, இது எல்லாம் நேரமோ இல்ல திட்டமோ யாருக்கு தான் தெரியும்? "

அவனை அவளின் பரிதாப காதலும் அலுவலகத்தில் சொன்ன சொல்லும் வாட்டி எடுத்தது. ஒரு வேளை எனக்காகத்தான் விஷ்ணுவின் உயிரை கடவுள் பறித்துக்கொண்டாரா? நானே அவன் இறப்பிற்கு காரணம் ஆகிவிட்டேனா? நானே அவன் இடத்தை அபகரித்து விட்டேனா என யோசித்து யோசித்து தன்னையே குற்றவாளியாக நிற்கவைத்துக்கொண்டான். குற்ற உணர்வே அவனை கூறு போட்டது. உலகமே சூனியமாவதை போல் இருந்தது அவனுக்கு.

இந்த உணர்வை நீக்குவதற்காக மீண்டும் மதுவை நாடினான். மதுவிற்குள் தன்னை மூழ்கடித்து கொண்டு வீட்டுக்கு திரும்பினான். ஆதிகா மறுபடியும் எதற்கு என கேட்டதுக்கு, 'நிம்மதிக்கு" என்ற பதிலை மட்டுமே தந்தான்.

அதன் பிறகு வந்த நாட்களும் இது வாடிக்கையாகிப்போக இதுக்கொரு முடிவு கட்டியே ஆகணும் என முடிவுடன் ஒரு நாள் இரவில் அமர்ந்திருந்தாள். அவனும் மதுவோடு வந்த பிறகு, நேராக குளியறைக்குள் அழைத்து சென்றாள் வர்ஷித் எவ்வளவோ தடுத்தும். அவனால் நேராக நிற்க கூட முடியவில்லை. அவனை குளிக்க வைத்து அவளே தாயென மாறி அறை போதையில் இருந்தவனுக்கு ஆடையும் மாற்றிவிட்டாள்.

படுக்கையில் கைத்தாங்கலாக அழைத்துவந்து அமர வைத்து, சரியாக நிமிர்வாக அவனது முகத்தை திருப்பி பளார் என ஓசை எழுப்பும் அறையையும் கொடுக்க அவன் பேயறைந்தது போல் அமர்ந்திருந்தான். சில நிமிடம் என்ன நடந்தது என அவனாலேயே கணிக்க முடியவில்லை.

'என்ன பிரச்சனை என்ன வேணும் உனக்கு ஏற்கனவே பிரச்சனைனு சொன்ன, அப்பறம் இந்த கருமத்தை தொடாம இருந்த, இப்போ மறுபடியும் என்ன ஆச்சு உனக்கு?" என கோபமும் ஆத்திரமுமாய் கேட்டாள். அவளே தொடர்ந்து, "எதுவாக இருந்தாலும் வெளில சொல்லு அப்போதான் சரி பண்ண முடியும் மனசுலயே வச்சிருந்தா யாருக்கும் தெரியாது' என கோபமாய் ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தாள்.

அவளை தவிர்க்கவும், அவள் அடித்த கோபத்தை சரி கட்டவும், "நீ தாண்டி பிரச்சனை, உன்னோட பரிதாபம் தாண்டி பிரச்சனை, அந்த பரிதாபமே காதலா வந்துச்சு பாரு அதுக்கு மிக பெரிய பிரச்சனை. அன்னைக்கு ஏதோ பாரத்தை இறக்கி வைக்க உன் மடியில படுத்துகிட்டு எல்லாத்தையும் சொன்னேன், கோபத்தை கட்டுப்படுத்த உன் கையை புடிச்சுக்கிட்டேன், ஆகாஷும் என் மேல உள்ள அக்கறையில ஏதோ பேசிவிட்டான்" என கோபத்தில் கத்தினான் . "இது எல்லாத்துலயும் வந்த பரிதாபத்தை என் மேல காதலா காட்டணும்னு நினைக்கிற, அதுக்கு ஒரு தனி உணர்வு , அது எல்லாம் எப்படி உனக்கு புரியும்" என பொறுமையாகவும் அடிக்குரல் சீற்றத்துடனும் சொன்னவுடன் அவள் ஒரு நொடி யோசித்து நிமிடங்கள் தாழ்த்தாமல் தன் காதலை புரியவைக்கும் பொருட்டு, அவன் வாங்கிய அறைக்கு மருந்து போடும் பொருட்டு அவனின் முகத்தை பிடித்து அழுந்த முத்தம் ஒன்றை அவனது கன்னத்தில் பதித்துவிட்டு நகர்ந்தாள். வர்ஷித் அவள் செய்ததை உணரும் முன்னே அவனது உணர்வை எழுப்பி முத்தத்தை கொடுத்து மாயம் போல மறைந்து போனாள் வர்ஷித்தின் மாயாவி.

அவள் கொடுத்த அறை, முத்தம் இவற்றிலே போதை தெளிய வர்ஷித் உறங்கி போனான். ஆதிகாவிற்கு தான் உறக்கமே வராமல் இருந்தது தனது காதலை பரிதாப காதல் என சொல்லிவிட்டானே எனும் வருத்தத்தில்.

தொடரும் நாட்களிலும் இவர்களது வாழ்வில் மதுவின் நாட்டாமை தொடர்ந்தது. 'இந்த நிலமையை மாத்தனும், அதுக்கு அத்தை கிட்ட இவர சிக்க வைக்கணும், அதுக்கு நான் வீட்லயே இருக்கக்கூடாது. நான் வீட்ல இல்லாத சூழல தான் அத்தை வர்ஷித்த கவனிப்பாங்க' என முடிவோடு காத்திருந்தவளுக்கு அழைப்பு வந்தது தோழியிடம் ஒரு உதவி கேட்டு.

தோழி ஒருவள் கர்ப்பமாக உள்ளதால் அவள் வீட்டில் தனியாக இருப்பதால், மறுநாள் அப்பா அம்மா வந்துவிடுவார்கள் இன்று இரவு மட்டும் துணைக்கு இருக்கும்படி கேட்டு கொண்டாள். ஆதிகாவிற்கும் வீட்டிற்கு போகாமல் இருக்க இந்த காரணம் போதுமானதாக இருக்க, அத்தையிடம் போன் போட்டு அனுமதி கேட்டபிறகு இன்று வர்ஷித்தை பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டாள்.

இரவில் மதுவின் துணையோடு வந்திருந்தான் வர்ஷித். இந்த கோணத்தில் வர்ஷித்தை பார்த்தவுடன் வசந்தாவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இது எத்தனை நாட்கள் தொடருது என தெரியாமல் அவனிடம் கோபத்தை காட்டினார் பேசாமல் இருந்து.

அவளும் காலையில் வீடு சென்றாள். உடனே அலுவலகத்திற்கும் கிளம்பினாள். இருவரும் பேசிக்கொள்ள வில்லை. அன்று இரவு தாமதம் ஆகாமல் வந்திருந்ததை வைத்து தமது முயற்சி வீணாக வில்லை என நினைத்துக்கொண்டாள். அத்தை வர்ஷித்திடம் பேசவில்லை என்பது அவளுக்கும் வருத்தம் தான். அவனை அந்த கோலத்தில் பார்த்தது முதல் மறு நாளும் முடியப்போகுது அப்போது வரை வசந்தா வர்ஷித்திடம் முகம் காட்டவே இல்லை.

வர்ஷித்தின் முகம் கோடி சோகங்களை சுமந்திருந்தது . 'பரிதாப காதல்னு சொன்னதுக்கு அனுபவிக்கட்டும்' என விட்டு சென்றோமே இப்போ அவனை பார்த்து தாம் தானே வருத்தப்படுகிறோம் என எண்ணி அவனுக்கு ஆறுதலாக நாம் தானே இந்நேரத்தில் இருக்கனும் என நினைத்து அவனை நோக்கி கை நீட்ட அவனும் அவளுக்குள் உட்புகுந்துகொண்டான் அம்மாவின் பாரா முகத்தால் குடியை விட்ட ஆதிகாவின் வருமாமா.
 
Top Bottom