அத்தியாயம் - 6
சந்தியாவும் திவ்யாவும் சரணை பார்த்து தயங்கியபடி நிற்க சரணை நோக்கி சென்ற கிருஷ்ணன் எப்படி இருக்க சரண் என்று கேட்டுக்கொண்டே சற்று பார்வையை திருப்ப அருகில் இருந்த ஆதியை பார்த்து ஆச்சர்யத்துடன் நீ இங்கு எப்படி பா?..சரணை உனக்கு தெரியுமா என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே சரண், அங்கிள் இது என் பிரண்ட் ஆதி நான் கூட சொல்லி இருக்கேன்ல பட் இவனை நீங்க பார்த்தது இல்லையே அப்பறம் எப்படி தெரியும்? என்றான்.
நீ சொல்லுவையே அந்த பையன் தானா இது? – கிருஷ்ணன். ஆமா அங்கிள்…பட் இவனை உங்களுக்கு எப்போதிலிருந்து தெரியும் என சரண் கேட்க நேற்றிலிருந்து தான் என்று பதிலுரைத்தார் .கிருஷ்ணன். நேற்றிலிருந்தா??...-சரண்.ஆமா..நேற்று பேங்க்ல இருந்து அம்மௌண்ட் என் ஆபிஸ் ஸ்டாப் எடுத்துட்டு வரும் போது மிஸ் பண்ணிட்டாங்க..அதை இவர் தான் பார்த்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்…..-கிருஷ்ணன்
சரண் ஆதியிடம் திரும்பி நீ கார்லதான போன நேற்று? அப்புறம் எப்படி என கேட்க நேத்து ஒரு கிளைண்டை மீட் பண்ண போகும் போது கார் ரிப்பேர் ஆயிடுச்சு, பக்கத்துல இருந்த ஒரு மெக்கானிக் சாப்ல விட்டுட்டு ஆட்டோக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் பட் கிடைக்கல..அப்போ கரக்டா பஸ்ஸும் வந்துச்சு அதுல ஏறிட்டேன்…சீட்ல உட்கார்ந்த பிறகுதான் கவனித்தேன் என் காலுக்கு கீழே ஒரு லெதர் பேக் இருந்துச்சு…. எடுத்து பார்த்தா பணம் இருந்துச்சு கூடவே பேங்க் ரெசிப்டும், பாஸ் புக்கும் இருந்துச்சு….அப்போதான் தெரிந்தது இவுங்க கம்பெனி அம்மொண்ட்னு….பஸ்லயே அவுங்க இருக்காங்களானு கேட்டு கொடுக்கலாம்னு நினைச்சேன் அப்புறம் அவுங்க உண்மைய சொல்லுவங்கனு என்ன கெரண்டி அதான் கிளைட்ட மீட் பண்ணிட்டு பாஸ் புக்குல இருக்க அட்ரஸ் வச்சு சார்கிட்ட போய் கொடுத்துட்டேன் என்றான். ஆதி.
ரொம்ப தேங்க்ஸ் பா என கிருஷ்ண்ன் கூற எத்தனை தடவை சொல்லுவிங்க சார் பாரவால்லை நமக்கு சொந்தம் இல்லாத பொருள் மீது நம்ப எப்பவும் ஆசை படக்கூடாது. அதான் பொருளுக்கு சொந்தமானவுங்க கிட்டயே ஒப்படைச்சுட்டேன்…-ஆதி
சந்தியாவை கவனித்தவாறே ஹோ அப்போ அங்கிள் கம்பெனில தன் வொர்க் பண்றிங்களோ மேடம்…இதை எப்படி கவனிக்காம போனேன்,,,கம்ப்ளேண்ட்ல கம்பெனி நேம் கொடுத்து இருப்பாளே(சார் தான் அவுங்கள பார்த்ததும் பிளாட் ஆகிடிங்களே பின்ன எப்படி மத்ததை கவனிப்பீங்க என்று கேளி செய்த மனதை ஒரு மீதி மீதித்து அடக்கினான்) அப்போ அம்மௌண்ட் கிடைச்சுருச்சா இந்த ஆதி பக்கி ஒரு வார்த்தையும் இத பற்றி எங்கிட்ட சொல்லல இருக்கு அவனுக்கு இன்னைக்கு என்று மனதில் கருவிக்கொண்டான்(அப்படியே அவன் சொல்லி இருந்தாலும் நீங்க கேட்டு இருப்பிங்க, கனவு உலகத்துலயே இருந்துட்டு இப்போ அந்த அப்பாவி ஜீவனை குறை சொல்றது)
அப்போதுதான் கவனித்தனர் கிருஷ்ணனும் சரணும், திவ்யா மற்றும் சந்தியாவும் சற்று தள்ளி தயங்கிய படியே நிற்பதை….அவர்களை பார்த்து கிருஷ்ணன் என்னம்மா அங்கயே நிற்கிறிங்க? வாங்க என்று அழைக்க சரணின் கண்களோ இமை மூடாமல் சந்தியாவையே பார்ப்பதை கண்ட ஆதி மெதுவாக சரணின் காதருகில் சென்று இதுதான் அந்த பொண்ணா? என்றான் ஆதி சரணிடமிருந்து பதில் இல்லாமல் போகவே சற்று தொண்டையை செரும அதில் சுய நினைவு வந்தவனை நோக்கி, மச்சி பப்ளிக் நீ ஒரு DSP அந்த கெத்தை விற்றாத…..அப்புறம் வழியுது துடைச்சுக்கோ என்றவாறு ஒரு கர்ச்சிப்பை நீட்டினான் ஆதி. அவனை முறைப்பதை பார்த்து தோளை குலிக்கியவாறு நல்லதுக்கே காலம் இல்ல உன் நல்லதுக்கு தான்பா சொன்னேன் அதுக்கு ஏன் முறைக்கிறாய்? ஆதி
கிருஷ்ணன் அழைத்ததை தொடர்ந்து அவர்களும் வேறு வழியின்றி அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.அதன் பிறகே இவ்வளவு நேரமும் தாங்கள் நிற்பதை உணர்ந்து அவர்கள் புக் செய்த டேபிள்க்கு சென்று அமர்ந்தனர்…
சந்தியாவிற்க்கு எதிரில் சரணும் திவ்யாவிற்க்கு எதிரில் ஆதியும் அமர கிருஷ்ண்னோ ஆதிக்கு வலப்புறமாக அமர்ந்தார். சரண் தன்னை பார்ப்பதை உண்ர்ந்த சந்தியா அவனை முறைக்க அவளை கண்டுக்கொள்ளாமல் கிருஷ்ண்னிடம் திரும்பி அங்கிள் இவுங்க யாருனே சொல்லையே என்றான்.(பாவம் சாருக்கு யாருனே தெரியாது பாரு)
இவுங்க சந்தியா அண்ட் திவ்யா என்றதும் மரியாதைக்காக ஹலோ என்றனர் இருவரும்(இவுங்களும் தெரியாத மாதிரியே காட்டிக்கிறாங்களாமா..)இவனும் பதிலுக்கு ஹலோ என கூற ஆதியோ சரணிடம் ஆமா நீங்க ரெண்டு பேரும் முதல் தடவை சந்தித்து கொள்கிறிங்க பாருங்க….சப்பா என்னா நடிப்புடா!! நீதான் நடிக்கிறாய் என்று பார்த்தால் அவுங்க உன்னையே தூக்கி சாப்பிட்டுவிடுவாங்க போலயே நடிப்பில் என்ற ஆதியை கையை மடக்கி முட்டியால் யாரும் கவனிக்காமல் அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டான் சரண். வலியோடு அவனை பார்க்க இனி வாய தொறப்ப என அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூற அவனோ அச்சோ வேணாம்டா நான் வாயே தொறக்கவில்லை நீங்க கண்டினியூ பண்ணுங்க என்றான் ஆதி.(பாவம்டா நீ)
இவுங்க ரெண்டு பேரும் நம்ம ஆபிஸ்ல தான் ஒர்க் பண்றாங்க,ஆனா இவுங்க வெறும் ஸ்டாப்ஸ் மட்டும் இல்ல அதுக்கும் மேல்..சந்தியானா உங்க ஆன்டிக்கு உயிர். சுருக்கமா சொல்லனும்னா எங்க பொண்ணு மாதிரி என்று கூற சந்தியாவோ எல்லையில்லா சந்தோசம் கொண்டாள், அவர்கள் தன்னை அவர்களின் பெண் போல் கவனித்துக்கொண்டாலும் அடுத்தவர்களின் முன்னும் தன்னை அவரிகளின் பெண்ணை போன்று என கூற அவளின் மனம் அதை கேட்டு பூரித்தது…அதை வெளிக்காட்டாமல் சிறு கர்வத்தோடு சரணை நோக்கினாள்.அவனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்…இருவரின் விழிகளும் நொடிக்கும் குறைவான நேரத்தில் சந்தித்துக் கொண்டன.
திவ்யாவிற்க்கு ஆதி தான் அந்த பணத்தை கொண்டு வந்து கொடுத்தான் என்று அறிந்ததும் அவனின் மீது இனம் புரியாத மரியாதை கலந்த அன்பு பிறந்தது.முதலில் கிருஷ்ணன் ஒருவர் பணத்தை கொண்டு வந்து ஒப்படைத்தார் என கூறிய உடனே அந்த முகமறியா நபர் மீது மரியாதைக்கொண்டாள். இப்போது நேரில் பார்த்ததும் மரியாதையுடன் அன்பும் கலந்து விட்டது.ஆதியும் சரணின் அளவிற்க்கு இல்லாது இருந்தாலும் அவனை கடக்கும் பெண்கள் ஒரு நிமிடம் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஆண்களுக்கே உரித்தான கம்பீரத்தோடு இருப்பான். (என்ன இருந்தாலும் நீ செக்கண்ட் ஹீரோ தான்பா அதான் உன்ன சரணை விட கொஞ்சம் கம்மியா சொன்னேன்.. ஹீரோவை விட்டு கொடுக்க கூடாதுல அதான்….இந்த அன்பு காதலில் முடியுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்)
திவ்யா ஆதியிடம் தேங்க்ஸ் சார் என்றாள்…எதுக்கு?…-ஆதி..நீங்க நேற்று பணத்தை கொண்டு வந்து கொடுத்ததுக்கு….-திவ்யா.. அதுக்கு தான் உங்க சார் நிறைய முறை நேற்றே நன்றி சொல்லிட்டறே…-ஆதி., இல்ல சார் அந்த பேக்கை மிஸ் பண்ணது நான் தான்….-திவ்யா. ஆதியோ இட்ஸ் ஒகே இனி கேர்ப்புள்ளா இருங்க. அண்ட் சார்லாம் கூப்பிடதிங்க ஜெஸ்ட் கால் மீ ஆதி என்றான்.
பின் தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து காத்திருந்தனர்… இதற்க்கு இடையில் இரு ஜோடி கண்கள் அடிக்கடி சந்தித்து மீண்டுக் கொள்ள அதை சந்தியா கவனித்தாலோ இல்லையோ போலிஸ் கண்கள் கவனித்து விட்டன.
அவனிடம் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணிய சரண் கிருஷ்ணனிடம் பார்வையை திருப்பி அங்கிள் இந்த சண்டே விட்டுக்கு வரேன் ஆண்டிக்கிட்ட சொல்லிடாதிங்க ஒரு சப்ரைசா இருக்கட்டும் என்றான்
சரிங்க சார் உங்கள் உத்தரவு என சற்று தலைக்குனிந்த படியும் கையை மேல் வயிற்றிக்கு செங்குத்தாக வைத்தபடி கிருஷ்ண்ன் கூற அவறை பொய்யாக முறைத்த சரணிடம் பின்ன சார் பெரிய ஆள் ஆயிட்டிங்க மரியாதை தராம இருக்க முடியுமா??... IPS வேற அதான் வீட்டிற்க்கு வரதுக்கு கூட டைம் எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு தான் வருவிங்க என்றார்.
அதைக் கேட்டதும் சரணின் முகம் வாட அப்படி எல்லாம் இல்ல அங்கிள் டிரைனிங்க் முடிந்ததும் ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க.. முதல் நாள் இவினிங்க் தான் ஹைதராபாத்ல இருந்து வந்தேன், வீடு ஆதி முன்னாடியே ரெடி பண்ணி வச்சுட்டான் அதுனால அரேன்ஞ் பண்ற பிரச்சனை இல்ல மறுநாளே ஜாயின் பண்ண வேண்டி இருந்தனால உங்கள வந்து பார்க்க முடியல சாரி அங்கிள் டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே வீட்டிற்க்கு வந்து உங்களையும் ஆண்டியையும் பார்க்கனும்னு நினைச்சிருந்தேன், நான் இன்னைக்கு இப்படி ஒரு போஸ்ட்ல கவுரமாக இருக்கேனா அது உங்களால் தான் அப்படி இருக்க அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன் ஒரு நாளும் என்று உணர்வு பூர்வாமாக கூறியவனின் கைகளை பற்றி சமாதானம் படுத்தும் விதமாக சற்று தட்டிக் கொடுத்தார்.
டேய் படவா நான் சும்மா விளையாடினேன்டா…இதுக்கு போய் இவ்வளவு எமோசன் ஆகுற…. கூல்டவுன்..சரி சாப்பிட ஆரம்பிக்கலாம் பாவம் ரொம்ப நேரமா இந்த சிக்கன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு என்று பேச்சை மாற்றினார்.
பின் சரணிடம் நீ இப்போ ஒரு ஆபிசர் சோ இந்த மாதிரி எமோசன்லாம் ஆகாத என்றார், நீங்க சொன்னதும் எனக்கு நான் மறக்க நினைச்சது நியாபகம் வந்துருச்சு அதான் அங்கிள்…-சரண். அச்சோ சாரிப்பா எல்லாத்தையும் மறந்திரு எப்பவும் நானே சொல்லிட்டு இன்னைக்கு நானே நியாப படுத்திட்டேன் என கிருஷ்ணண் கூற நிலைமை மறுபடியும் சிரியசாக மாறுவதை உணர்ந்த ஆதி, சார் உங்களுக்காக வெயிட் பண்ணி டையடாகி சிக்கன் எங்கிட்ட வந்திருச்சு என்றவாறு சிக்கனை எடுத்து உண்ண தொடங்கினான்…
அவனின் செயலை கண்டு அனைவரும் சிரிக்க அந்த சூழ்நிலை இருக்கம் தளர்ந்து லேசானது.
சந்தியாவிற்க்கு சரணின் பேச்சு சொல்ல முடியா உணர்வை தந்தது…நேற்று அவ்வளவு திமிராக தன்னிடம் பேசிய சரணா இன்று இவ்வளவு உணர்வு பூர்வமாய் பேசியது?...இதில் எது உண்மை? இதில் எது உண்மையான முகமாக இருந்தாலும் சரணிற்க்கு வெளியில் கூறாத வேதனையும் காயங்களும் நிறைந்த மறுபக்கம் இருப்பது உறுதியானது.எனினும் முரண்பாடாக அந்த காயங்களுக்கு தானே மருந்தாக வேண்டும் என்று தோன்றவே….ச்சே…என்னது இது? எப்படி போகுது பாரு புத்தி..! நானே அவன் மேல கோபமாக இருக்கேன் அப்புறம் எதுக்கு அவன பத்தி யோசனை பண்ணிட்டு இருக்கேன் என்றவாறு தனக்குள்ளே பேசிக்கொண்டு சாப்பிடாமல் இருந்தவள் திவ்யாவின் என்னடி யோசனை? என்ற கேள்வியில் நினைவு திரும்பியவளாக ஒண்ணுமில்லை என்றவாறு சாப்பிட தொடங்கினாள்.ஆனால் சந்தியா ஒன்றை உணரவில்லை கோபம் உரிமை இருக்கும் இடத்தில் தான் வரும் என்பதை அவ்வாறு அவள் உணர்ந்திருந்தால் பின்விளைவுகளை தடுத்திருந்திருக்கலாமோ என்னவோ விதி யாரை விட்டது…?
சந்தியாவிற்க்கு சரணின் மறுபக்கம் தெரியவருமா? அவ்வாறு தெரியும் போது அவள் அதற்க்கு மருந்தாக மாறுவாளா….? இல்லை காயத்தை அதிகரிப்பாளா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.