dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
10.நினைவுகள்:
"சரி வருண்! நீங்க பார்த்துக்கோங்க! நாங்க காலைல வரோம்! உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா? " என்றான்.
"என்னங்க! என்ன பேசறிங்க? அவர் நம்ம வீட்டுக்கு வர போற மாப்ள" என்றாள் மோஹனா.
"இப்ப என்ன பண்ண சொல்ற? நீங்க இங்க இருக்க கூடாதுனு சொல்ல சொல்றியா?" என்றான் எரிச்சலாக.
எல்லோரும் கிளம்பி விட்டார்கள்.
மதுவின் அருகில் அமர்ந்து அவள் தூங்கும் அழகையே பார்த்து கொண்டிருந்தான்.
"மதுநிலா! எவ்வளவு அழகான பெயர். பெயரை போல நீயும் எவ்வளவு அழகாக இருக்கிறாய்."
"மது ஐ லவ் யூ!"
"மது உன்ன பொறு்தவரைக்கும் தான் எனக்கு உன்ன 15 நாளா தெரியும், ஆனா எனக்கு ..." மனதிற்குள்ளேயே மென்று முழுங்கினான்.
"நீ என் அஞ்சு வருஷ தவம்! என் கனவு நீ! உனக்கு தெரியாமலே உன் கூட அஞ்சு வருஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்! என் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையை தருகின்ற தேவதை நீ!"
ஐந்து வருடம் பின்னோக்கி நினைவுகள் சென்றது.
"அ.,...ம்.......மா...." என்று அலறியபடி ஒரு பெண் தன் காரில் அடிபட்டு கிழே விழுந்ததை அதிர்ச்சியோடு பார்த்தான்.
சுற்றும் முற்றும் யாருமே இல்லை.
கீழே மின்னல் வேகத்தில் இறங்கியவன், அந்த பெண்ணை தூக்கி காரில் போட்டுகொண்டு, நேராக தன நண்பன் பிரபு டாக்டராக பணிபுரியும் ஹாஸ்பிடலுக்கு ஒட்டி சென்றான்.
ஹாஸ்பிடலில் இறங்கி அந்த பெண்ணை கையில் ஏந்தி கொண்டு "ந ர் ஸ் ! ஸ்ட்ரக்சர் ப்ளீஸ்" என்று கத்தினான்.
பிரபுவிற்கு போனில் ஏற்கனவே சொல்லிவிட்டான். பிரபுவின் மனைவி கீதா தான் ஷிப்டில் இருப்பதால் அவளே அந்த பெண்ணுக்கு எல்லா முதலுதவியும் செய்தாள்.
"அண்ணா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." கீதா.
"சொல்லுங்க! அந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கா? நல்லா இருக்காளா?" என்றான் பதற்றமாக.,.
"அண்ணா ஷி இஸ் ஆல்ரைட்! பட் ஒரே ஒரு ப்ரோப்ளம் " கீதா.
என்ன என்பது போல் பார்த்தான்.
"அவங்க மேரேஜ் அப்புறம் அவங்க நார்மலா குடும்ப வாழ்க்கைல ஈடுபடலாம். ஆனா, வயித்துல பலமா ஆடிபட்டதால கர்பப்பை டேமேஜ் ஆகியிருக்கு." என்று அவனை பார்த்தவள் சிறிது நேர அமைதிக்கு பின்,
"அவங்களுக்கு குழந்தை பொறக்கறதுக்கு 30% தான் சான்ஸ் இருக்கு" என்றாள்.
"என்ன ..?" என்றான் அதிர்ச்சியாக.
"அவங்க போன்ல இருந்த நம்பர்க்கு கால் பண்ணி சொல்லி இருக்கோம். நீங்க கிளம்புங்கண்ணா" என்றாள் கீதா.
"இந்த விஷயத்த பத்தி எதுவும் அவங்க வீட்ல சொல்ல வேணாம்" என்று மட்டும் கேட்டு கொண்டான்.
அந்த பெண் இருந்த அறைக்கு சென்று அவளை பார்த்தான்.
'குழந்தையின் முகம் கொண்டு குழந்தை போலவே தூங்கும் இவளுக்கா இந்த நிலைமை அதுவும் தன்னால்?' மிகவும் வருத்தப்பட்டான்.
"இல்ல.. இவள் யாராக இருந்தாலும், இனி இவள் என்னோட பாதி..." என்று உறுதியோடு வீட்டிற்கு சென்றான்.
மறுநாள் ஹாஸ்பிடல் வந்தபொழுது அவளை காணவில்லை அவள் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக சொன்னார்கள்.
அவள் பெயரை மட்டும் கூறிவிட்டு போய் இருந்தாள்.
"மதுநிலா. அவங்க எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படிக்கிறாங்க அண்ணா அவங்கள பத்தி இந்த டீடெயில்ஸ் தான் எனக்கு தெரியும்" என்று கூறினாள் கீதா.
"எது எப்படி ஆனாலும் நீ தான் என் வாழ்க்கை.... ம....து..." என்று மனதில் நினைத்துக்கொண்டு கிளம்பினான்.
அன்றில் இருந்து ஐந்து வருடமாக மனதில் மனைவியாக நினைத்து வாழ்ந்து கொண்டு நிஜத்தில் தேடி கொண்டு இருந்தான்.
எத்தனையோ தடவை வீட்டில் திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம் தடுத்திருக்கிறான்.
அன்று அவளை எதிர்பாராமல் இடித்தபின்பு அவனுக்கு இன்பஅதிர்த்தியாக இருந்தது.
தான்தேடி கொண்டிருந்த தேவதை தன் கண் முன்னே நிற்பதையும், அதுவும் தன் கை வளையத்தில் இருப்பதை எண்ணி மெய் மறந்தான்.
தான் மனைவியாக நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தவளை அருகில் பார்த்தவுடன் அவனை கட்டுப்புடுத்த முடியாமல் அவளை முத்தமிட்டான்.
"வருண்! வருண்!" குரல் கேட்கவே கண் திறந்து பார்த்தான், அங்கே மது கூப்பிட்டு கொண்டிருந்தாள்.