Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் காதல் அவளோடுதான்

MathiJagadeesh

New member
Messages
2
Reaction score
3
Points
1
வணக்கம்,எனக்கு இந்த வாய்பை நல்கியவர்களுக்கு நன்றியுரைத்து எனது சிந்தனைகளை வார்த்தைகளாக கோர்த்து…இந்த வண்ணங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...



என் காதல் அவளோடுதான்




அந்தப் பேரங்காடி எங்கிலும் இளைஞர் பட்டாளம்...பெரியவர்கள்,சிறுவர் எனக் குறைந்த அளவே இருக்க இளைஞர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது...அந்த வார இறுதியை தன் நண்பர்களுடன்,காதலருடன் என அவரவர் கூட்டமாகவும்,ஒருசிலர் தனியாகவும் வந்திருக்க நிவேதிதா அர்ஜுனுடன் வந்திருந்தாள்…



விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவனான அர்ஜுன் உடன் இருக்கையில் பணத்திற்குப் பஞ்சம் ஏது…?ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கிக் குவித்தாள்...அவளும் அவர்களில் ஒருவள் தானே...பணத்தின் அருமை புரியாது அதைத் தண்ணீராகச் செலவு செய்துகொண்டிருந்தாள்…



நிவேதிதாவின் கைகோர்த்துச் சென்றவனது கண்கள் ஒருநிமிடம் தன்னைத் தாண்டி சென்றவளைக் கண்டு இமைக்க மறந்து பார்த்தது…




வெள்ளை நிற சுடிதாரில் சிகப்பு நிற பூக்கள் வாரியிறைக்க...துப்பட்டாவை முறையாகப் பின் செய்து...சந்தன நிறத்திலிருந்தவள்... உடன் வந்த பெண் ஏதோ கூறிக்கொண்டிருக்க அதைக் கேட்டவாறு பதுமையென நடந்து சென்றாள்…அதன் பிறகு அர்ஜுன் அவளைத் தேடியும் அவனது கண்களுக்குப் பெண்ணவள் தரிசனமலிக்கவில்லை…



அன்று அலுவலகத்தில் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த கடைநிலை ஊழியர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது...கூட்டம் ஆரம்பித்த 5 நிமிடங்களில் பெண்ணொருத்தியின் அனுமதி குரல் அந்தக் கலந்தாய்வு அறையின் வெளியிலிருந்து வந்தது...




அங்கிருந்த அனைவரும் வாயிலைப் பார்க்க அந்த வெள்ளை நிற உடையழகி இன்று ரோஜா நிற உடையணிந்து நின்றுகொண்டிருந்தாள்…



அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் அர்ஜுனின் கடும் கோபத்திற்குப் பலியாகியிருப்பர்...ஆனால் அவளைக் கண்ட நொடி தான் தேடியது கிடைத்த சந்தோசத்திலிருந்த அர்ஜுன் அவளை உள்ளே அழைக்க… பணி நியமன கடிதத்தை அவனிடம் தந்தவளை அமரும் படி கையால் சைகை செய்தான்…



பொதுவாக மேல்மட்ட பதவினருக்கே அர்ஜுன் நேர்முகத் தேர்வில் பங்கேற்பான்...இது போன்ற அலுவலக ஊழியர்களுக்கு நிவேதிதா தான் நேர்முகத் தேர்வு நடத்துவாள்…




அதனால் இவள் இங்குப் பணிபுரியப் போவதை அர்ஜுன் அறிந்திருக்கவில்லை… கலந்தாய்வு முடிந்து அவர் அவருக்கென உரிய பணியிடத்திற்குச் சென்றனர்....



அர்ஜுன் அவளை மட்டும் தனது அறைக்கு வருமாறு கூறிவிட்டு முன்னே செல்ல… தான் தாமதமாக வந்ததிற்காக என்ன சொல்லப் போகிறாரோ என்ற பரிதவிப்புடனே அவனின் பின்னே வந்துகொண்டிருந்தாள்…



அவனது அறைக்குள் சென்றதும் …தலை குனிந்தவாறே வந்துகொண்டிருந்தவள் பதட்டத்திலும்,பயத்திலும் அவன் நின்றதை உணராது அவனில் மோதி கீழே விழ இருந்தவளை...இடையோடு கைகொடுத்துத் தாங்கியவன் அவளது கண் பார்த்துப் புன்னகைத்து...அந்த நான்கு வார்த்தைகளைக் கூறினான்…”வில் யூ மேறீ மீ… “



அர்ஜுனின் வார்த்தையில் திகைத்து விழித்தவளைக் கண்டு மேலும் நகைத்தவன்...அவளை நேராக நிற்க வைத்து...உன் பேர் என்ன…?என்க...



அந்தக் கேள்வியில் தன் கண்களைப் பெரிதாக விரித்து அதிர்ச்சியாக அவனை நோக்கினாள்…



என்ன அப்படிப் பாக்குற…?நான் உன் பேரக் கேட்டேன் என்றவனிடம்...தனது சிப்பி இதழ் பிரித்து...மீரா...என்றவளிடம்… சரி நீ போயி உன் வேலையைப் பார்...என்றவனைக் குழப்பமாகத் திரும்பி,திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்…




மீரா சென்றதும்... மீரா என உச்சரித்துப் பார்த்தவன் ஒரு இளநகையுடன் அமர்ந்து தனது வேலைகளில் மூழ்கினான்…



இவற்றையெல்லாம் இருவிழிகள் அனல் பார்க்கப் பார்த்துக்கொண்டிருந்ததை அவன் அறியவில்லை…



தனது இருக்கைக்கு வந்தவள் படபடப்பு அடங்காது...நாம கேட்டது சரி தானா…!இல்ல தப்பா புரிஞ்சுக்கிட்டமோ…!எனத் தனக்குள் குழம்பியவள்...அப்படித்தான் இருக்கும்...பதட்டத்தோடவே போனதால்...அவங்க சொன்னதை சரியா கவனிக்கல...அவங்க எவ்ளோ பெரிய ஆளுங்க...என்கிட்ட போயி ஏன் இப்படிக் கேட்க போறாங்க…?முதல்ல நாம ஒழுங்கா நம்ம வேலைய பார்ப்போம் என முடிவெடுத்தவள் தனது வேலையில் மூழ்கினாள்...



நாட்கள் அதன் போக்கில் செல்ல மீரா தனது வேலையுடன் ஒன்றிப் போனாள்… அர்ஜுனோ மீராவுக்குத் தெரியாமலேயே அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்தான்…



மீரா வீட்டில் இரண்டாவது பெண்...அவளது அக்காகாவிற்குத் திருமணம் முடிந்து 4வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது...சாதாரண நடுத்தரக் குடும்பம்...உலகம் தெரியாத அம்மா கல்யாணி குடும்பத்தைக் கவனிக்க...அவளது தந்தை ராமகிருஷ்ணன் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்...மீரா முதுகலை வணிகவியல் முடித்து வேலை தேட...முன்னனுபவம் பெரிதாகக் கேட்காததால் அவளது திறமைக்கு அர்ஜுன் நிறுவனத்திலேயே வேலை கிடைத்தது…




அர்ஜுன் அன்று மீராவிடம் திருமண விருப்பத்தைக் கூறிய பிறகு அவளிடம் அதிகம் பேசவில்லை...அவள் கவனிக்காத தருணங்களில் அவளைப் பார்த்து ரசிப்பது...இரவில் அவளுடன் கனவில் காதலிப்பது என வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தான்…



நிவேதிதா இப்பொழுதெல்லாம் அர்ஜுனிடம் அதிகம் நெருக்கம் காட்டி பழகுவதைப் போல் அர்ஜுன் உணர்ந்தான்...முன்பும் நெருக்கம் இருந்தது தான் ஆனால் இப்போதைய நெருக்கம் அவனை உறுத்தியது…



நாட்கள் அதன் போக்கில் செல்ல... மீரா அவளுடன் பணிபுரியும் செல்வத்துடன் நட்பாகப் பழகினாள்...இருவரும் நல்ல நண்பர்களாகப் பழக...செல்வத்திற்கு மீராவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது...எப்போதும் தன்னவள் மீது கவனம் வைத்திருப்பவன் இதையறிந்து தனது காதலைப் பற்றி மீராவிடம் பேசவேண்டும்...அவளது முடிவைக் கேட்க வேண்டும் எனத் தீர்மானித்தான்…



மீரா செல்வதுடன் நட்பாகத் தான் இருக்கிறாள்...ஆனால் தனது விருப்பத்தை நிராகரித்து,செல்வத்திடம் காதல் வயப்பட்டால்...தன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என எண்ணியவன் மீராவை தன்அறைக்கு அழைத்தான்…



அனுமதி கேட்டு உள்ளே வந்தவளை இமைக்க மறந்து பார்த்தவன்...அவளது அழைப்பில் தன்னை நிலைப்படுத்தி…”மீரா இன்றைக்கு மாலையில் உங்களுக்கு எதாவதுமுக்கியமான வேலை இருக்கா…?



மீரா தயக்கத்துடன்,” இல்லை சார்…”



அப்போ சரி...நீங்க*காபி ஷாப்புக்கு வந்துருங்க உன்கிட்ட கொஞ்சம் பேசவேண்டும்…



மீரா சற்று தயக்கத்துடன் அது...இல்ல...சார்...வீட்டுக்கு போகணும்...என்னன்னு…




அர்ஜுன் கோபத்துடன்,நாங்களும் வேலை முடிந்து வீட்டுக்குத் தான் மீரா போவோம்...இப்போ நீ வரமாட்ட...அதைத்தான இப்படி மறைமுகமா சொல்ற…?



மீரா கண்களில் மிரட்சியுடன்,மனதில் தோன்றிய பயத்துடன் அர்ஜுனைப் பார்க்க…



அவளது கண்களைப் பார்த்தவன்...அதில் தோன்றிய பயத்தைப் படித்தவன்...கண் மூடி தன்னை நிலை படுத்திக்கொண்டு...எழுந்து மீராவின் இருக்கைக்கு முன்னால் வர…



அர்ஜுன் எழுந்ததும் தானும் எழுந்தவளைத் தோள் பற்றி அமர வைத்தவன்...உன்கிட்ட ஒன்று சொன்னானே அதைப்பத்தி என்ன முடிவெடுத்திருக்க…?



அர்ஜுன் கேட்டது சரியாகப் புரியாமல் குழம்பியவள்...எதைப் பத்தி சார் கேக்குறீங்க…?என்கிட்ட என்ன சொன்னீங்க..!



அர்ஜுன்,உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா…!என அதிர்ச்சியாகக் கேட்டவன்,தன் கோபத்தை அடக்கி,அவள் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை ஊன்றி அவள் முகத்தருகே முகம் வைத்து,அவளது மான்விழி கண்களுடன் தன் கண்களைக் கலக்க விட்டு...என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன்…



அவனது நெருக்கத்தில் தடுமாறிய பெண்ணவள்...இதுவரை தோன்றாத வெட்கம் ஏனோ அவனது வார்த்தையிலும்,நெருக்கத்திலும் தோன்றி இம்சை செய்ய...இது கனவா...நனவா…!என அவனது விழி நோக்கினாள்…



அவளது கன்னத்துச் சிவப்பில் பெண்ணவளின் வெட்கம் அறிந்தவன்...முத்தமிடத் துடித்த இதழ்களை மடித்துத் தன்னை நிலைப்படுத்தி,அவளின் உணர்வுகளை மதித்து...அவளிடமிருந்து விலகியவன்...நான் கேட்டதற்குப் பதில் வேண்டும் என்பதைக் கண்களில் உணர்த்தி அவன் நிற்க…




மீரா,எனக்குக் கொஞ்சம் யோசிக்கவேண்டும்...என அவளுக்கே கேட்காத குரலில் கூற...சரி என ஒத்துக்கொண்டவன் புன்னகையுடன் அவளுக்கு விடை கொடுத்தான்…



வீட்டிற்கு வந்த மீரா எதுவும் தோன்றாமல் அர்ஜுனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க...எண்ணத்தின் நாயகனே அவளது எண்ணிற்கு அழைத்தான்… தொலைப்பேசி அழைத்ததும் யாரோ புது எண் என்ற எண்ணத்துடன் அழைப்பை எடுத்தவள்,மறுமுனையில் ஒலித்த அர்ஜுனின் மீரா...என்ற குரலில் வெட்கம் பூத்து நின்றாள்… தன் மனம் கவர்த்தவனின் எண்ணம் கூடப் போதும் பெண்ணவள் நாணம் கொள்ள...அப்படியிருக்கையில் தன்னவனின் குரலோசை போதாதா…!பெண்ணவள் வெட்கம் கொள்ள…



அர்ஜுனே அதிகம் பேசினான்...மீரா அளவாகப் பேசினாள் என்பதை விட அவனது பேச்சை ரசித்தாள் எனக் கூறலாம்...அவனது கண்ணம்மா என்ற அழைப்புகளும்,பேபி என்ற கொஞ்சல்களும் அவளை அவன் வசம் இழக்க வைக்கும்…



நாட்கள் உருண்டோட மீராவின் மனதில் நீங்கமர நிறைந்துவிட்டான் அர்ஜுன்…



அர்ஜுனும் மீராவின் மனம் அறிந்திருந்தாலும் அவளின் வாய் மொழியாக அவளது காதலை அறிய விரும்பினான்…



பெண்ணவளோ வெட்கம் மறந்து தன் மனம் திறக்க தயங்கினாள்… இருவரும் ஒரு தனி உலகில் சஞ்சரித்தனர்…



அன்று நிவேதிதாவின் பிறந்தநாள்...எப்போதுமே வீட்டின் செல்ல பிள்ளையவள்,இன்று கேட்கவா வேண்டும்…!திருமண நிகழ்ச்சி போலக் கோலாகலமாக அவளது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது…



சிறுவயதிலிருந்தே தான் விரும்பிய அனைத்தும் தன் கை சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்...கொண்டவள் என்பதை விட அப்படி எண்ணம் வளரும் படி வளர்க்கப் பட்டாள் என்பதே உண்மை… பார்ப்பவரின் கண்களைச் சுண்டியிழுக்கும் அழகு அவளுக்குத் தனிச் செருக்கைக் கொடுத்தது…



அர்ஜுனும்,நிவேதித்தாவுமே அவர்களது நிறுவனத்தை நடத்தி வந்தனர்… நிவேதிதா அர்ஜுனுக்கு இரண்டு வயது இளையவள்...





இந்தியாவில் விரல் விட்டு எண்ண கூடிய பணக்காரர்களில் அர்ஜுனும் ஒருவன்...தனக்கெனத் தொழில் உலகில் ஒரு சாம்ராச்சியத்தையே கட்டி ஆள்பவன்...ஆனால் பாசத்திற்கு முன்பு தோற்றுவிடும் இளகிய மனம் கொண்டவன்..



அர்ஜுனின் தந்தை கணபதி அர்ஜுனுக்கு 12 வயது இருக்கும் போதே நெஞ்சு வலியால் இறந்து விட, உலகம் தெரியாத அவனது அன்னை மலர் விழி தளர்ந்து நின்ற சமயம் அவருக்குக் கை கொடுத்துக் கரை சேர்த்தது அவரது அண்ணன் மூர்த்தி…





மூர்த்தியும், கணபதி அளவு இல்லையென்றாலும் சிறிய அளவில் தொழில் செய்து வந்தார்...மூர்த்திக் குடும்பம் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்...கணபதி பரம்பரை பரம்பரையாகச் செல்வந்தர்கள்…





கணபதி தன் நண்பனின் திருமணத்திற்காகத் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள உறையூர் என்னும் கிராமத்திற்குச் சென்றிருந்தார்...அங்கு தான் முதன் முதலில் மலர் விழியைச் சந்தித்தார்...பார்த்ததும் அவரது மனதில் புகுந்து விட்டவரை முறைப்படி இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டார்…





அவர்களது திருமணம் முடிந்ததும் மலர் விழியின் அண்ணன் மூர்த்திக்குச் சென்னையிலேயே தொழில் வைத்துக் கொடுக்க முன் வந்த கணபதியிடம் மறுத்து விட்டு வங்கியில் கடன் பெற்று சிறிய அளவில் தொழிலைத் தொடங்கினார் மூர்த்தி…



மூர்த்தியின் குணம் கண்டு கணபதி குடும்பத்தார்க்கு அவரின் பேரில் நன்மதிப்பு உருவானது...தன் மகள் காயத்திரியை மூர்த்திக்கு மணமுடித்துக் கொடுத்தனர்…



தங்களது செல்வ நிலைக்குப் பெரிய இடங்களில் சம்பந்தம் பேசாது ,தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செயல்பட்டனர் ராமநாதன்,பரிமளம் தம்பதியினர்…



காலங்கள் உருண்டோட கணபதி,மலர் விழி தம்பதியினருக்கு வாரிசாக அர்ஜுன் பிறந்தான் …



மூர்த்தி,காயத்திரிக்குப் பெண்குழந்தை பிறக்க,அதுவே அவர்களது ஒற்றை வாரிசானது...காயத்திரிக்குப் பிறவச்சத்தில் பிரச்சனை ஏற்பட நிவேதிதாவிற்குப் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்…



இதனால் நிவேதா இருவீட்டுக்கும் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தாள்...நினைத்ததைச் சாதித்து விடும் பிடிவாத குணம் அவளிடம் அதிகமாக இருந்தது...சின்ன விஷயமோ,பெரிய விஷயமோ...தான் கூறுவதும், தான் நினைப்பதும் மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றிப் போனது…அர்ஜுனும் நிவேதிதாவிடம் அலாதி பிரியம் வைத்திருந்தான்...



கணபதிக்குப் பிறகு மூர்த்தி அவரது தொழிலையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டார்...வயதின் முதிர்ச்சி காரணமாக ராமநாதனால் தொழிலைக் கவனிக்க முடியாது போக,தன் மகனின் இழப்பும் சேர்ந்து அவரை வருத்தியது…மூர்த்தி இருவரது தொழிலையும் ஒரே நேரத்தில் கவனிக்க அவரும் அதிகம் சோர்வுற்றார்...இதைக் கவனித்த ராமநாதன் இருவரது தொழிலையும் ஒன்றாக இணைக்க முடிவுசெய்தார்…



மாமா இந்த ஏற்பாடு வேண்டாம்…”என்ன இருந்தாலும் கணபதி என்னை விட இருமடங்கு அதிகமாகத் தொழிலை விரிவு படுத்தியிருந்தார்...இப்போது சேர்த்தால் சரியா இருக்காது அதற்கான முதலீடு என்கிட்ட குறைவா தான் இருக்கு…”என்க…



என்ன மாப்பிள்ளை சொல்கிறீர்கள் நீங்க...இது காயத்திரிக்கும் சேரவேண்டியதுதானே…!



இல்ல மாமா...அதெல்லாம் வேண்டாம் நான் கணபதி இடத்திலிருந்து பாத்துக்குறேன்...அர்ஜுன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவன் பொறுப்பை எடுத்துக்கட்டும்…



சரி மாப்பிள்ளை...நீங்கக் காயத்திரிக்காக இதெல்லாம் ஏத்துக்க வேண்டாம்...இப்போ நான் என் நிறுவனம் சார்பா உங்கள் நிறுவனத்தோடு கூட்டு வச்சுக்க விரும்புறேன்...என்னால் நிறுவனத்தைப் பாத்துக்க முடியாது... அதனால் நான் முதலீடு அதிகமா போட்டு நான் உறங்கும் பங்குதாரரா இருக்க விரும்புகிறேன்...நீங்க என்ன சொல்கிறீர்கள்…?



மூர்த்தி,என்னால் மறுப்பு சொல்ல முடியாதபடி பேசிட்டீங்களே மாமா..என்றவர் இரு நிறுவனத்தையும் ஒரு கிளையின் கீழ் கொண்டுவரச் சம்மதித்தார்…



கணபதி இறந்த ஒரு வருடத்திலேயே ராமநாதனும்,பரிமளமும் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டு தன் மகனைத் தேடிச் சென்றுவிட்டனர்…



குடும்பத்தின் தலைவனாகவும், நிறுவனத்தின் முதலாளியாகவும் மூர்த்தித் தன் கடமையைச் சிறப்பாகச் செய்தார்...தன் தங்கையின் வேண்டுதலின் பேரில் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இருகுடும்பங்களும் ஒன்றாகவே வசித்து வந்தனர்...



அர்ஜுன் தனது முதுகலைப் பட்ட படிப்பை வெளிநாட்டில் முடித்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தாயகம் திரும்பியிருந்தான்… அதன் பின் நிறுவன பொறுப்பை அர்ஜுனிடம் தந்தவர்,ஓய்வு எடுத்துக் கொண்டார்…





அர்ஜுன் பொறுப்பேற்றதிலிருந்து நிறுவனத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தது...அதிகமாக இளைஞர்கள் வேலையில் அமர்த்த பட்டனர்...அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்காது,திறமைக்கு முன்னுரிமை அளித்தான்...தனது வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நபர்களையே அதிகம் விரும்பினான்…



அடுத்த இருஆண்டுகளில் நிவேதிதாவும் தன் படிப்பை முடித்து அர்ஜுனின் கீழ் நிறுவன பொறுப்பில் அமர்ந்தாள்… அர்ஜுனைப் போலவே நிவேதிதாவும் திறமை மிக்கவள்...இருவரும் பொறுப்பேற்ற பின் நிறுவனத்தின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்தது...



அன்று ஞாயிற்றுகிழமை...அர்ஜுன் மீராவை வெளியில் அழைத்துச் சென்றிருந்தான்...கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை, தன் நண்பர்களுடன் அங்கு வந்திருந்த நிவேதிதா கவனித்துவிட்டாள்...மீராவின் வெட்கம் பூசிய முகமும்...அர்ஜுனின் மனம் கவரும் புன்னகை முகமும்,அவன் மீராவை காண்கையில் அவனது கண்களில் வழிந்த காதல் பார்வையும் அடித்துக் கூறியது அவர்கள் நண்பர்கள் இல்லையென…

அவர்களைக் கண்டதும் கோபமாக அங்கிருந்து கிளம்பிய நிவேதிதா அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே அந்த நாளை கடத்தியவள்...பின் ஒரு முடிவுடன் அவளது அத்தை மலர்விழியைத் தேடி சென்றாள்…



புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த மலர்விழியிடம்...அத்தை என்ன பண்ணீட்டு இருக்கீங்க…?



வாடா நிவி...சும்மா பொழுது போகல அதான் புத்தகம் வாசிச்சுட்டு இருந்தேன்...என்ன திடீர்னு இந்த அத்தைய பாக்க வந்துருக்க…?



ஏன் அத்தை நான் உங்கள பாக்க வர கூடாதா…?இல்ல நான் உங்க அறைக்கு வந்ததே இல்லையா…?எனச் செல்லமாகக் கோபித்துக் கொள்ள…



அத்தை அப்படிச் சொல்லலை டா தங்கம்...நீயும்,அர்ஜுனும் லீவுன்னா எங்க வீட்ல இருக்கீங்க...வெளில போயிருவீங்க...அதான் நீ வீட்ல இருக்கவும் உன்கிட்ட கேட்டேன்...



நிவேதிதா, புன்னகையுடன்...சரி அத்தை ...சும்மா இருந்துட்டு போர் அடிக்கிதுன்னா எப்படி…?



மலர்விழி, வேற என்ன டா பண்ண சொல்ற…!



என்ன அத்தை இதெல்லாமா நான் சொல்லணும்,சரி சொல்றேன்...உன் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க...போர் அடிக்காது…



மலர்விழி,அது எப்படி டா...நீ இருக்கும் போது அவனுக்குப் பன்றது...நீ சரின்னு சொல்லு உனக்கு முதல்ல பண்ணிட்டு அப்பறம் அவனுக்கு ஒரு பொண்ணு பாத்துக் கல்யாணம் பண்ணிடலாம்…



அய்யோ... என் மக்கு அத்தை அவனுக்கும்,எனக்கும் தனி, தனியா கல்யாணம் பண்ணவா இப்போ நான் பேசிட்டு இருக்கேன்...எனக் கோபமுற்றவள்...அத்தையின் முகம் கண்டு கோபத்தைக் கைவிட்டு,சரி நானே சொல்றேன்...எனக்கு அஜூவை ரொம்பப் புடிச்சிருக்கு அத்தை,அதனால எனக்கு வெளிய எல்லாம் மாப்பிளை பார்க்க வேண்டாம் என்றவளை…



அடியே என் தங்கம்...இந்த யோசனை எனக்குத் தோணாம போச்சு பாரேன்...நீ சொன்ன மாதிரி நான் மக்கு தான் டா…



அச்சோ...நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அத்தை..ஏன் இப்படிச் சொல்ற...நீ ரொம்ப அறிவாளி...என அவர் கைபிடித்தவளை ….



கன்னம் வழித்து நானும் சும்மா தான் டா சொன்னேன்...சரி நீ வேற யார்கிட்டயும் பேச வேண்டாம்...ஒரு நல்ல நாள் பார்த்து நானே அண்ணன்,அண்ணிகிட்ட பேசுறேன்…



தனது அறைக்கு வந்த நிவேதிதா தான் நினைத்தது நடக்க அடுத்த அடியை எடுத்து வைக்கக் காத்திருந்தாள்… அன்று அர்ஜுன் வீட்டிற்கு வந்ததும் அவனது அறைக்கு வந்த மலர்விழி,அஜூ...அஜூ கண்ணா…



என்னம்மா...சொல்லுங்க… என்க



மலர்விழி,நீ இப்படி வந்து ஒக்காரு...என மெத்தையில் அமர வைத்தவர் தானும் அவனின் அருகில் அமர்ந்து...உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும் அஜூ...பேசுனதுக்கு அப்பறம் எதுவும் மறுத்து சொல்ல கூடாது...அம்மா சொல்லிட்டேன்…



அர்ஜுன் புன்னகையுடன் சரி ம்மா சொல்லுங்க...நான் எதுவும் சொல்லல…



மலர் விழி,உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்கேன் டா...பொண்ணு சும்மா அம்சமா இருப்பா..ரொம்ப நல்ல பொண்ணு...எனச் சொல்லிக்கொண்டிருக்கையில்…



அர்ஜுன்,அம்மா நானே உங்ககிட்ட சொல்லணும்னு தான் இருந்தேன்...நான்...எனத் தொடங்கியவனைப் பேசவிடாது… எனக்குத் தெரியும் அஜூ...நீ எதுவும் சொல்ல வேண்டாம்...நீ நாளைக்குக் காலையில 10 மணிக்கு *கோபி ஷாப்புக்கு போ...அங்க பொண்ணு வரும்..எனக் கூறியவர் எழுந்து சென்றுவிட்டார்...



என்ன...இந்த அம்மா நம்மளை எதுவும் பேசவிடாம அவங்களே பேசிட்டு போய்ட்டாங்க...யாரு பொண்ணு…!ஒருவேளை நம்ம விஷயம் தெரிஞ்சு அம்மாவே மீரா வீட்ல பேசிட்டாங்களோ…!மீராட்ட கேட்கலாமா…!எனச் சிந்தித்தவன்...வேண்டாம்...இப்போ ரொம்ப லேட் ஆயிடுச்சு,நல்லா தூங்கிட்டு இருப்பா... சரி நாளைக்குப் போயி பார்ப்போம்...வேற யாராவதா இருந்தா நோ சொல்லிட்டு வந்துரலாம்...என்ற எண்ணத்துடன் உறங்கி போனான்…



அர்ஜுனின் அறையிலிருந்து வந்த மலர்விழி...நிவி நீ சொன்ன மாதிரி அஜுக்கிட்ட பேசிட்டேன்...நீ அவனைச் சரியான நேரத்துக்குப் போயி பாத்துரு...நாங்க கல்யாணத்துக்கு ஆகா வேண்டிய வேலைய பாக்குறோம்...என நிவேதிதாவிடம் கூறி சென்றுவிட்டார்…



நிவேதிதா அந்த காபி ஷாப்புக்கு வரும் போது அர்ஜுன் அவளுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தான்…



நிவேதிதா அர்ஜுன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அவனுக்கு நேர் இருக்கையில் அமர...அதுவரை வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து நிவேதிதாவை கண்டு…



ஏய் நிவி...நீ என்ன இங்க…?அம்மா உன்கிட்டயும் சொன்னாங்களா…?எனக்கு பொண்ணு பாத்துருக்காங்களாம்...என பேசிக்கொண்டிருந்தவனிடம்…



நான் தான் அஜு...அந்த பொண்ணு… என்ற நிவேதிதாவை புரியாது நோக்கியவன்…



நிவி நீ இப்போ என்ன சொன்ன…?



நிவேதிதா,நீ கேட்டது சரி தான் அஜு...எனக்கு உன்னை புடிச்சிருக்கு...நான் உன்னை காதலிக்கிறேன்...கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்...அதான் நம்ம வீட்டுல நமக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க…



அர்ஜுன் நிவேதிதா கூறியதை நம்ப முடியாது திகைத்திருக்கையில்…



நிவேதிதா,எனக்கு உன்னை சின்ன வயசிலேருந்தே புடிக்கும் அஜு,உன் கூடவே இருக்கனும்ன்னு தான் நான் நம்ம நிறுவனத்துக்கே வந்தேன்...அதற்கான படிப்பை படிச்சேன்...என பேசிக்கொண்டிருக்கையில் அர்ஜுன் கோபமாக அங்கிருந்தது சென்றான்…


 

MathiJagadeesh

New member
Messages
2
Reaction score
3
Points
1

அர்ஜுன் வீட்டிற்குள் நுழைந்ததும் கோபமாக அவனது அன்னையை அழைத்தான்...அவனது சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வரவேற்பறைக்கு வந்தனர்…



மலர் விழி,ஏன் அஜு இப்படி கத்துற…?என்ன ஆச்சு?



அர்ஜுன்,என்ன ஆச்சா…?பொண்ணு பாத்துருக்கேன்னு சொன்னீங்களே அது நம்ம நிவி தான்னு சொன்னீங்களா…?



மலர்விழி,அதுனால இப்ப என்ன அஜு…?உனக்கும் நிவிக்கும் கல்யாணம் பண்ண நினைச்சேன் அது தப்பா…?என அவரும் கோபமாகவே கேட்டார்…



அர்ஜுன்,கல்யாணம் பண்ண நினைச்சது தப்பில்லம்மா...ஆனால் என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசிருக்கணும்…



மலர் விழி,நேத்து நான் உன்கிட்ட பேசுனப்பவே சொல்லிருக்கலாம்ல அஜு...இப்ப என்ன உனக்கு பிரச்சினை…?



அர்ஜூன்,நீங்க எங்கம்மா என்னை பேசவிட்டீங்க...நீங்களா பேசிட்டு நான் சொல்ல வந்ததை காதுலையே வாங்காம போயிட்டீங்க.. சரி நீங்க பார்த்த பொண்ணை பாத்து இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை… நான் ஒரு பெண்ணை விரும்புறேன்,எங்கம்மா இந்த விசயம் தெரியாம உங்க வீட்ல பேசிட்டாங்கன்னு சொல்லி மன்னிப்பு கேக்க தான் போன்னேன்...அதுவும் கோபி ஷாப்புன்னு தான் போன்னேன், வீடுன்னு சொல்லிருந்தா நான் இங்கேயே உங்கள்ட்ட சொல்லிருப்பேன் எனக் கோபமாக,அழுத்தத்துடன் சொல்லிமுடிக்க…



அதுவரை அங்கு நடந்தவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்த மூர்த்தியும்,காயத்திரியும் கலக்கமுற்று, என்ன அர்ஜுன் சொல்ற…?உனக்கு நிவியைப் பிடிக்கலையா…?



அர்ஜுன்,நான் மீரான்னு ஒரு பொண்ணை விரும்புறேன் மாமா...நிவியைப் பத்தி நான் அப்படிலாம் யோசிச்சதே இல்லை மாமா,சாரி எனக் கூறி சென்றுவிட்டான்…



வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்...அர்ஜுன் கிளம்பியதும் அவனுக்குப் பின்னேயே அர்ஜுனை தொடர்ந்த நிவேதிதா...வீட்டின் வாயிற்படி மறைவிலிருந்து நடந்தவற்றைக் கவனித்தவள் இது இப்படித்தான் நடக்கும் என முன்னாடியே அறிந்திருந்த படியால் அமைதியாகத் தனதறைக்குச் சென்றாள்…



அர்ஜுனின் மனம் அமைதியிழந்து தவித்துகொண்டிருந்தது... அமைதியை வேண்டிய அடுத்த நொடி அவன் மனம் மீராவை தேடியது…



அர்ஜுன் மீராவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன்,மக்கள் கூட்டம் அதிகமில்லாத அந்தப் பூங்காவில் தனது வாகனத்தை நிறுத்தினான்…



மீரா,என்ன அர்ஜுன்… ஏன் என்னவோ போல இருக்கீங்க…?



அர்ஜுன் மீராவின் முகம் பார்த்து அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு தோளில் தலை சாய்த்து எதுவும் பேச தோன்றாமல் அமர்ந்திருந்தான்…



மீராவின் முகம் கலக்கத்தைச் சுமந்திருந்ததா...அல்லது சோகத்தைச் சமந்திருந்ததா எனப் பிரித்தரிய முடியாத நிலையில் அமர்திருந்தாள்…



அர்ஜுன்,மீரா...இதுவரைக்கும் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை...நானும் இவ்வளவு நாள் உன் பதிலுக்காகக் காத்திருந்தேன்...இனியும் காத்திருக்க முடியாது மீரா...உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும்,ஆனாலும் அதை உன் வாய் மொழியாகக் கேட்க ஆசைப்படுறேன்...



மீரா,நான் என்ன சொல்லனும்ன்னு நீங்க காத்திருக்கீங்க…?



அர்ஜுன்,மீரா...விளையாடாத இப்ப நான் சீரியசா கேக்குறேன்...உன் மனசுல இருக்குற காதலை வாய் வார்த்தையா சொல்ல என்ன தயக்கம்…?அதுவும் என்னிடம்….!



நீங்க என்ன சொல்றீங்க…? எனக்கு உங்க மேல காதலா…?எதாவது கனவு கண்டீங்களா…?என மீரா நக்கலான குரலில் கூற…



மீரா...என்னாச்சு உனக்கு…? ஏன் இப்படிப் பேசுற…?நேத்து வரை நல்லாதான இருந்த…!இப்ப ஏன் இப்படி…?என ஒன்றும் புரியாத மனநிலையில் வினவியனிடம்…



நான் இப்பவும் நல்லா தான் இருக்கேன்...நீங்க தான் குழப்பிக்கிறீங்க… நான் எப்பவாவது உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்லிருக்கேனா…?



மீரா...ஏன் இப்படிப் பேசுற…?நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது,காதலிக்கிறேன்னு சொன்னதெல்லாம்...என அதிர்சியாகப் பேசியவன் அவளது முகம் பார்த்து தவிப்பான பார்வையை வீச…



சும்மா நிருத்துங்க அர்ஜுன்...நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான்… ஆனால் நான் உங்களைக் காதலிக்கல...சும்மா பொழுதுபோறதுக்காகப் பேசுனேன்...என்னோட முதலாளி நீங்க…அதனால கொஞ்சம் நெறுக்கமா பேசுனா எனக்குப் பதவி உயர்வு கிடைக்கும்ன்னு தான் அப்படி நடந்துகிட்டேன்...போதுமா...அதுக்குப் பேரு காதல்ன்னு நீங்க நெனச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது… என இதுவரை இல்லாத ஆவேசமான குரலில் பேசியவள்,அர்ஜுனின் முகத்தைக் காணாது வேறுபுறம் திரும்பி கொண்டாள்…



சிறிது நேரத்திற்கு அர்ஜுனுக்கு எதுவும் புரியவில்லை… அவனது மனம் அடித்துக் கூறியது மீரா பொய்யுரைக்கிறாலென்று...ஆனால் மூளையோ பலவற்றைச் சிந்தித்தது...மனதிற்கும்,மூளைக்கும் நடந்த போராட்டத்தில் சிக்கித் தவித்தவன்...கடைசி முயற்சியாக…



மீராவை இலுத்து அணைத்து அவளிதழ் தீண்டல் மூலம் விடைகாண விளைந்தான்…



அர்ஜுனின் இதழணைப்பில் ஒருநிமிடம் இளகிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்து விறைப்பாக அமர்ந்தவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள்…



மென்மையான பெண்ணவளாள் முயற்சிக்க மட்டுமே முடிந்தது...அவளது இளக்கத்தை உணர்தவன் மனம் கும்மாளமிட… ஆனால் அது பொய்யோ என உணரும் படி அவளது விறைத்த உடலும்...கண்ணீரை உணர்ந்த அவனிதழும் அவளை விட்டு விலகி அமர செய்தது…



மீராவிடமிருந்து விலகி அமர்ந்தவன் எதுவும் பேசாது...பேச தோன்றாது வாகனத்தைப் புயல் வேகத்தில் இயக்கி அவளது வீட்டின் தெரு முனையில் நிறுத்தியவன்...அவள் இறங்கியதும் திரும்பியும் பாராது சென்றுவிட்டான்…



அர்ஜுன் அங்கிருந்து சென்றதும் பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டிற்கு வந்தவள்...அவளது அன்னையும்,தந்தையும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது நினைவில் வர...அதுவும் நன்மைக்கே எனத் தன்னிடமிருந்த மற்றொரு சாவியால் வீட்டிற்குள் சென்றவள் விம்மி,வெடித்து அழுதாள்...தன் நிலையையும்,தன் காதலையும் நினைத்து நினைத்து அன்று முழுவதும் கண்ணீரிலேயே கரைந்தாள்…



அன்று முழுவதும் தன் மனம் போன போக்கில் சுற்றி திறிந்த அர்ஜுன் வீட்டிற்கு வந்ததும்... பேரிடியாக விழுந்தது நிவேதிதாவின் தற்கொலை முயற்சி…



ஆம் முயற்சி தான்...நிவேதிதா தன்னை இரவு உணவிற்காக வேலையால் அழைக்க வரும் நேரத்தை கணக்கிட்டு உயிர் போகாத அளவு ஆனால் மயக்க நிலை வரும் அளவிற்கான எண்ணிக்கையில் தூக்க மாத்திரையை விழுங்கியவள்...அவள் கணக்கிட்டதைப் போலவே மயங்கி விழுந்தாள்…



நிவேதிதா மயக்கமடைந்த சில நிமிடங்களில் அங்கு வந்த வேலையால் அவளிருந்த நிலைகண்டு பதறி வீட்டிலுள்ளவர்களை அழைக்க…



எல்லோரும் நிவேதிதாவை மருத்துவமணையில் சேர்த்தனர்...நல்லிரவில் வீட்டிற்கு வந்த அர்ஜுனிடம் வேலையால் நடந்த விசயத்தைக் கூற...அர்ஜுன் பதறியடித்துக் கொண்டு மருத்துவமணைக்கு விரைந்தான்…



நிவேதிதா அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்க...நிவேதிதாவின் அன்னை காயத்திரி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தார்...அவரை தேற்றும் வகையறியாது மூர்த்தி மருத்துவருக்காக அந்த அறை வாயிலையே பார்த்திருக்க...மலர்விழி ஒருபக்கம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்…



அர்ஜுன் வருவதற்கும்,மருத்துவர் நிவேதிதாவை பரிசோதனை செய்து வருவதற்கும் சரியாக இருந்தது…



சரியான நேரத்திற்குக் கூட்டிட்டு வந்ததால எந்த ஆபத்தும் இல்லை… அவங்க ரெண்டு நாள் இங்கயே இருக்கட்டும்...அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்...அவங்க கொஞ்சம் நார்மல் ஆனதும் கவுன்சிலிங் கூட்டிட்டு வந்துருங்க...இந்த மாதிரி தற்கொலைக்கு முயற்சி செய்றவங்களுக்கு இங்கயே அதுகான கவுன்சிலிங் ஏற்பாடு செய்றோம்...இது இந்த ஹாஸ்ப்பிடலோட சட்டம்...என்றவர் சென்றுவிட்டார்…



இதுவரை மருத்துவர் கூறுவதைக் கவனமாகக் கேட்டு அதற்குப் பதிலளித்தவர்கள் அப்போதுதான் அங்கு நின்றிருந்த அர்ஜுனை கவனித்தனர்…



மூர்த்தியும்,காயத்திரியும் எதுவும் பேசாது கோபத்துடன் திரும்பி கொள்ள…



அம்மா... நிவிக்கு என்னாச்சும்மா...ஏன் எதுவும் பேசமாட்டேங்கிறீங்க...ஏன் அவ தற்கொலைக்கு முயற்சி பண்ணா...என அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்கவனைக் கோப பார்வை பார்த்தவர்…



எல்லாம் உன்னால் தான் டா...எப்படி இருந்த பொண்ணு… இந்த வீட்டோட ராணி டா அவ...எவளோ ஒருத்திக்காக என் செல்லத்தை இப்படி ஒரு முடிவு எடுக்க வச்சுட்டியேடா...நீ அவளுக்கு இல்லைன்னு தொரிஞ்தும் உயிரையே விட முடிவெடுத்துட்டா...இன்னும் உனக்கு என்ன வேணும்,அவளுக்கு எதாவது ஆகியிருந்தா…!குற்றவுணர்சியிலேயே என் உயிர் போயிருக்கும்...இப்ப நீ என்ன பதில் சொல்ல போற...இனியும் அவள மறுத்து அவள சாகடிக்கப் போறியா…?சொல்லு டா...சொல்லு...எனக் கோபத்தில் ஆரம்பித்தவர் அழுகையில் முடித்தார்…



அர்ஜுன் ஓய்ந்து போய் அங்குப் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்...அவனுக்கு மட்டும் இவள் இப்படி ஒரு முடிவெடுப்பாள் எனத் தெரியுமா...என்ன…?அவனுக்கும் அவளென்றால் பிரியமல்லவா…!அவளின் முடிவில் எனது வாழ்க்கை தொடங்க நினைப்பேனா…?அவனுக்கென்று நண்பர்கள் என யாருமில்லையே...அவள் தான் அவனது ஒரே தோழி… அவளைத் தாண்டி வேறுயாரிடமும் அவன் நட்பு பாராட்டவுமில்லை...அப்படி நினைத்தவளை,அன்பு வைத்தவள் மறணதிற்கு நானே காரணமாவேனா…!இல்லை..என்ன நடந்தாலும் அவள் உயிர் முக்கியமல்லவா…?இப்போதும் அவனது மனம் அடித்துக் கூறியது,மீரா தன்னைக் காதலிக்கிறாளென்று...அவளது காதலை ஒத்துக் கொள்ள வைக்க அவனால் முடியும்...அவனது மனதை வெளிக்கொண்டு வரும் வகையும் அவனறிவான்...ஆனால் அது நடந்தால் நிவியின் உயிர் போகிவிடுமே…!மனமும் உடலும், சோர்ந்து மயக்கமா…?உறக்கமா என்ற நிலையறியாது,தனது சிந்தனைமிலேயே உலன்ற படி விடிய விடிய அமர்ந்திருந்தான்…



காலையில் நிவேதிதாவை வேறு அறைக்கு மாற்றியதும் அனைவரும் சென்று நலம் விசாரித்துக் கண்ணீருடன் பேசிகொண்டிருக்க...அர்ஜுன் நிவேதிதாவிடம் அந்த வார்த்தையை உதிர்த்தான்…

நாம கல்யாணம் பண்ணிக்கலாம் நிவி…



ஆம்… அர்ஜுன் இரவு முழுவதும் சிந்தித்து எடுத்த முடிவு அதுதான்...தனது தோழிக்காகத் தன் காதலை துறக்க முடிவெடுத்தான்...மீராவை விரும்பிய மனம் நிவேதிதாவை ஏற்பது கடினம் தான்… ஆனால் காதலா…?அவளின் உயிரா என வரும்போது அவன் தன் காதலை விடத் துணிந்தான்...தன்னால் ஒரு உயிர் இறந்து அதை நினைத்து வாழ்க்கை முழுவதும் குற்றவுணர்வில் மறுகுவதைக் காட்டிலும் தன் காதலை மறக்க முடிவெடுத்தான்...அவளை மறக்க நினைப்பது மடத்தனம் தான்… ஆனால் அவனுக்கு வேறுவழியிருக்கவில்லை…



நிவேதிதாவை பற்றி அவன் நன்கு அறிவான்...நினைத்தது கிடைக்காவிட்டால் அது கிடைக்கும் வரை போராடுவாள்...அது கிடைக்காது எனும் பட்சத்தில் ஒன்று அதை அழிப்பாள் அல்லது தன்னை அழித்துக்கொள்வாள்...அப்படி பட்ட பிடிவாதக்காரியவள்...தான் அவளை மணக்காவிட்டால் நிச்சயம் மறுபடியும் அவள் இப்படி ஒரு முடிவை தான் எடுப்பாள்…எனப் பலவாறு சிந்தித்து உயிரோடு புதைபவன் போல் தன் காதலையும் தனக்குள் புதைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்தான்…



அர்ஜுனின் முடிவில் குடும்பத்திலுள்ளவர்கள் மகிழு...நிவேதிதா தான் நினைத்தது நடந்ததில் புன்னகையுடன் படுத்திருந்தாள்…



கல்யாண வேலைகள் மும்மரமாக நடந்தது… அர்ஜுனை தவிர அவனது வீட்டிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்...கல்யாணத்திற்கு இருநாட்கள் முன்பு அந்தக் கோர சம்பவம் நடந்தது…



நிவேதிதா சந்தோசத்தில் திளைத்திருக்க...அன்று இரவு நண்பர்களைச் சந்தித்து விட்டு வந்துகொண்டிருந்த நிவேதிதாவின் வாகனத்துடன் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த லாரி மோதியதில் நிவேதிதா பலத்த காயத்துடன் அருகிருந்தவர்களால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டாள்…



நிவேதிதாவின் குடும்பத்தினர் விபரமறிந்து மருத்துவமணைக்கு விரைந்தனர்…



அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிவேதிதா அர்ஜுனை பார்க்க விரும்புவதாகக் கூற அவளின் நிலையறிந்த மருத்துவர்களும் அனுமதியளித்தனர்…



நிவேதிதா,அஜு...நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்...அதான் கடவுள் எனக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துருக்கார்...நான் பிழைக்க மாட்டேன் அஜு...அர்ஜுன் அவளை மறுத்து பேச வர கஷ்டப்பட்டுக் கையைத் தூக்கி அவனது வாய் மீது கை வைத்து தடுத்தவள்...நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு மீராவை போயி பார்த்தேன்...அவ உங்களை ரொம்பக் காதலிக்கிறா...அது எனக்குத் தெரிஞ்சும் அவ உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னேன்...அவ எவ்வளவோ என்னைச் சமாதானம் செய்ய முயற்சி செஞ்சா...ஆனால் நான் கடைசியா உன்னை விசம் வைத்துக் கொள்ளக் கூடத் தயங்கமாட்டேன்னு சொன்னதுக்கப்புறம் எதுவும் பேசாமல் நான் சொல்லிதந்த படி உன்கிட்ட பேசுனா...நான் நினைச்சா மாதிரி என்னோட தற்கொலை முயற்சிக்கு பயந்து நீயும் கல்யாணத்துக்குச் சம்மதிச்ச...எல்லாம் நான் திட்டமிட்ட படி நடந்த சந்தோசத்தில் இருந்தேன்...ஆனால் கடவுள் ஒருவர் இருப்பதை இந்த விபத்து மூலமா எனக்கு உணர்திட்டாரு...அந்த தற்கொலை முயற்சி கூட நடிப்பு தான் அஜு...என்னை முடிந்தால் மன்னிச்சுடு...நீ ரொம்ப நல்லவன் அஜு...எனக்காக உன் காதலை கூட விட்டு குடுத்த...அந்த எண்ணம் எனக்கு வரலையே அஜு...நான் பெரிய பாவி அஜு...நீ மீராவை கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும்...என்னோட முடிவு எனக்குத் தெரியிது அஜு நான்...எனப் பேசியவள் மூச்சு நின்றது…



அர்ஜுன் என்ன மனநிலையில் இருந்தான் என்பதை அவனாலேயே உணர முடியவில்லை...கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது… விபரம் தெரிந்ததிலிருந்தே உடன் இருந்தவள்...பிடிவாதம் நிறைந்திருந்தாலும் மற்ற விசயத்தில் நல்லவள் தான்...நினைத்ததை அடையவே அவளது இத்தனை இழிசெயல்கள்...அதுமட்டுமில்லாமல் இருந்திருந்தால் நல்ல குணம் படைத்தவள் தான்...யாரை நோவது அவளது இந்த முடிவிற்கு…



கல்யாண வீடு ...துக்க வீடாக மாறி போனது...வீட்டிலுள்ள மற்றவர்கள் உடைந்து போகினர்...தங்க முடியாத...ஈடு செய்ய முடியாத இழப்பு...சீராட்டி,பாராட்டி வளர்த்தவள் வாழாமல் போய்விட்டாள்...அவளது அத்தனை பிடிவாதங்களும் அவளுடனேயே அடங்கிப் போனது…



இன்றோடு நிவேதிதா இறந்து ஒருவருடம் கடந்திருந்தது...ஆனால் வீடு இன்னும் துக்கத்தையே சுமந்திருந்தது...மூர்த்தி மீராவின் குடும்பத்தைத் தேடி கண்டுபிடித்திருந்தார்…



ஆம்...மீரா அன்று அர்ஜுனை மறுத்த நாட்களுக்குப் பின் அவர்களது பூர்வீக கிராமத்திற்குச் சென்றுவிட்டாள்...அன்னை ,தந்தையிடம் நடந்ததைக் கூறியவள் தன் மனநிம்மதிக்காக,தன் பெற்றோருடன் அந்த ஊரைவிட்டு சென்றுவிட்டாள்…



நிவேதிதா இறந்த மூன்று மாதத்திற்குப் பிறகு அவளது தோழி ஒருத்தி மூர்த்தியை தேடி வந்து நிவேதிதா தன்னுடைய உதவியுடன் அர்ஜுனை மணக்க திட்டமிட்ட அனைத்தையும் கூறியவள்...அவனது காதலை சேர்த்து வைக்க வேண்டி கேட்டதுடன் மன்னிப்பு கேட்டு சென்றாள்…



அதன்பிறகு தனது சோகங்களை ஒதுக்கி,மீராவை கூட்டிவர முடிவெடுத்தார்... வாழவேண்டிய அர்ஜுன் எப்போதும் சோகத்துடன் சுற்றிவருவதை அவரும் கவனித்துகொண்டு தானே இருக்கிறார்…



தன்மகள் செய்த பிழையைத் திருத்த அந்தத் தகப்பன் முடிவெடுத்தார்...அதற்குப் பின் அவரது முறச்சி இன்று தான் நிரைவேறியிருக்கிறது…



மீராவை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு வந்த மூர்த்தி...அவளை அர்ஜுனின் அறைக்கு அனுப்பிவைத்தார்..



மீரா தயக்கத்துடன் அர்ஜூன் அறைக்குள் நுழைய...அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவன் கண்ணாடி வழியே மீராவின் பிம்பத்தைக் கண்டு அவளை நோக்கினான்…



உணர்ச்சிபெருக்கில் இருவருக்கும் பேச வார்த்தைகளின்றித் தடுமாற இருவரும் காற்று கூடப் புகாதவாறு அணைத்து கொண்டனர்...சில நிமிடங்கள் கடந்து தன்னிலையடைந்த அர்ஜுன்…



நல்லாருக்கியா மீரா...எங்க டி போன…?என்னை மன்னிச்சுரு டி...உன் காதலை உணர்ந்திருந்தும் நிவேதிதாவுக்காக உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்…



மீரா கண்களில் கண்ணீருடன்...என்ன அர்ஜுன்...ஏன் இப்படிப் பேசுறீங்க…?நீங்க எந்தத் தப்பும் செய்யலை…



அர்ஜுன்,நானும் தப்புப் பண்ணிருக்கேன் மீரா… நிவேதிதாவை மணக்க சம்மதித்தது நான் தானே...அந்த வகையில் நான் தான் தப்பு செய்தவன்…



மீரா...அதை விடுங்க அர்ஜுன்...அன்றைய சூழ்நிலை அப்படி… நானும் தான் உங்களை வேண்டான்னு சொல்லீட்டு போனேன்...என்னையும் மன்னிச்சுடுங்க...என்க…



அர்ஜுன்,இல்ல மீரா...நீ அவளுக்காகவும்,என்னோட உயிருக்காகவும் தான் அப்படிச் செஞ்ச…



மீரா கண்களை விரித்து ஆச்சர்யமாக அவனைப் பார்க்க…



அர்ஜுன்,என்ன டி அப்படிப் பாக்குற...எனக்கு தெரியும்... நிவி இறக்குறதுக்கு முன்னாடி எல்லா உண்மையையும் என்கிட்ட சொல்லிட்டு தான் இறந்தா...அவளோட கடைசி ஆசை நாம கல்யாணம் பண்ணிக்கனும்கிறது தான்… அதெல்லாம் தெரிஞ்சும் நான் ஏன் உன்னைத் தேடி வரலன்னு தானே பாக்குற...நான் உன்னைத் தேடி உங்க வீட்டுக்கு வந்தேன்...நீங்க அங்க இல்லை...அப்புறம் ஆள் வச்சு தேடுனேன்...அப்போ தான் நீ உங்கள் பூர்வீக கிராமத்துக்குப் போனது தெரிஞ்சது...சரி நிவேதிதா திதி முடிஞ்சதும் உன்னைப் பார்க்க வரலான்னு இருந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட…



மீரா,இல்லை அர்ஜுன் நானா வரல...உங்க மாமா மூர்த்தித் தான் என்னைக் கூட்டிட்டு வந்தாங்க…



அர்ஜுன்,அப்படியா…!என அதிசயித்தவன்...அவங்க நல்லவங்க மீரா...என்ன குழந்தையைத் தான் ரொம்பச் செல்லமா,பிடிவாத குழந்தையா வளத்துட்டாங்க…நம்ம குழந்தையை அப்படி வளர்க்க கூடாது மீரா…



குழந்தைங்கள தோல்வியைச் சந்திக்காம,பிடிவாதமா வளர்கிறத விட...அது ஏமாற்றத்தையும்,தோல்வியையும் சந்திச்சாலும் அதிலிருந்து வெளிவர மனதைரியத்தையோட…விட்டுகுடுக்குற மனபக்குவம்…இப்படி நல்ல பழக்கங்களோட வளர்க்கனும் மீரா…



கண்டிப்பா அர்ஜுன்,நீக்களே அப்படித்தான் அர்ஜுன் இருக்கீங்க… நானும் அதைத் தான் நினைச்சேன்…



அர்ஜுன் குறும்பாக அவளது கண்ணம் பற்றி...அப்படியா...நான் இன்னொன்னும் நினைச்சேன் மீரா…



மீரா அர்ஜுனை என்னவென்று பார்க்க…



அர்ஜுன் புன்னகையுடன் இதெல்லாம் நடக்கனும்ன்னா நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நினைச்சேன் எனக் கூற



மீரா,வெட்கத்துடன் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்…

முற்றும்.


  • மதிஜெகதீஷ்​
 
Top Bottom