dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
"அப்பா! இப்போ என்ன அவசரம்? எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்றாள் செந்தனலழகி.
"அம்மாடி அப்படி சொல்லக்கூடாது டா. மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சாச்சி டா." என்றார் விநாயகம்.
"முடியாதுப்பா. என்னால உங்களை விட்டு போக முடியாது. எனக்கு நீங்க உங்களுக்கு நான் அவ்ளோ தான்." என்றாள் செந்தனலழகி.
"தனல்! அப்பாக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேணும்டா." என்றார்.
"எனக்கு யாரும் வேணாம்பா. அம்மாவை நீங்க எவ்ளோ விரும்புனிங்க? அம்மா இறந்தப்புறம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்ளோ பேர் சொன்னாங்க. எனக்கு என் பொண்ணு போதும்னு நீங்க தான சொன்னிங்க?" என்றாள் சிறுகுழந்தை போல்.
"அம்மாடி" என்றார்.
"என்னை அம்மா போனதுக்கு அப்புறம் கண்ணுக்குள்ள வச்சி தாங்குறிங்க. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடாம என்னையே உங்க வாழ்க்கையா மாத்திக்கிட்டிங்க. உங்களை போல ஒரு அப்பா யாருக்கு கிடைப்பாங்க? இல்ல உங்களை போல ஒருத்தன் எனக்கு கிடைக்கமாட்டான் பா." என்றாள்.
"டேய்! இப்பவும் என் வாழ்க்கை நீ தான்டா. நீ சந்தோஷமா வாழறதுல தான் என் சந்தோஷமே இருக்கு." என்றார்.
"நீங்க எவ்ளோ சொன்னாலும் நான் உங்கக்கூட தான் இருப்பேன்" என்றாள் தீர்மானமாக.
"அப்போ சரி. உங்க அத்தை வரா. நீயே உன் முடிவை அவகிட்ட சொல்லிடு" என்றார்.
"அத்தையா? எதுக்கு வராங்க? நான் எதுக்கு அவங்ககிட்ட சொல்லணும்?" என்றாள் ஒன்றும் புரியாமல்.
"பின்ன இந்த வரனை பார்த்ததே அவ தான?" என்று சிரித்தார்.
"அவங்களா?" என்றாள் திகைப்பாய்.
"வேற யாரு என் குட்டிமாக்கு வரன் பார்க்க முடியும்? நானே தான். எனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு" என்றாள் அவளின் அத்தை ஜானு வீட்டினுள் நுழைந்தபடி.
"அத்தை!" என்று துள்ளி குதித்து ஓடியவள் அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
"எப்படிடா இருக்க?" என்றார் ஜானகி சிரித்து கொண்டு.
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ஆமா. இது எல்லாம் உங்க வேலை தானா?" என்று இடையில் கரம் வைத்து முறைத்தாள்.
"ஆமா! பின்ன, எங்க அண்ணி உன்னை என்கிட்ட பார்த்துக்க சொல்லி கொடுத்து போய்ட்டாங்க. எங்க அண்ணனும் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். என்ன பண்றது? எனக்கு ஒரு பையன் இருந்தா உன்னை கிளியாட்டம் கொத்திட்டு போய்டுவேன். எனக்கு தான் ரெண்டும் பொண்ணாச்சே. ஆனா, இப்போ பார்த்திருக்க வரணும் என் பையன் மாதிரி தான்" என்றார்.
ஒன்றும் புரியாமல் அவரை பார்த்து முழித்தாள் செந்தனலழகி.
"என்ன அப்படி முழிக்கிற? உனக்கு வரன் பார்க்கிறோம்னு என் ஓரகத்தி கிட்ட சொன்னேன். அவங்க பையன் கார்த்திகை செல்வன் தெரியுமா உனக்கு?" என்றார் ஜானு.
"ஹ்ம்ம்! தெரியும் இப்போ அதுக்கு என்ன?" என்றாள் எதிர் கேள்வியாய்.
"அவனே அவங்க அம்மாகிட்ட உன்னை பெண் கேட்க சொல்லிருக்கான். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமாம். ரொம்ப நல்ல பையன் டா. எனக்கு அவனை நல்லா தெரியும். உனக்கும் நல்ல வாழ்க்கை அமையும். எனக்கும் அப்பாக்கும் நிம்மதியா இருக்கும். நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க" என்றார் ஜானு.
"என்ன?" என்றாள் அதிர்ச்சியாக.
"டேய் என் செல்லம்ல நீ? அவங்க வரும்போது சிம்பிளா ரெடியா இரு. பையன்கிட்ட பேசு. அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு. நான் வேணாம்னு சொல்லிடறேன். உன் குறும்புத்தனத்தை இதுல காட்ட கூடாது. சரியா?" என்றார் ஜானு.
சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவள் உள்ளுக்குள் புயல் அடித்தாலும் அன்னையில்லாத தன்னை அன்னையின் இடத்தில் இருந்து இத்தனை வருடங்கள் பார்த்து கொண்ட அத்தைக்காக சம்மதிக்க முடிவு செய்தாள்.
"சரி. வேற யாருக்காகவும் இல்லை. உனக்காக தான் அத்தை" என்றாள் அவர் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு.
"சரிடா. இதுவரைக்கும் நீ சம்மதிச்சதே போதும். என் ராஜாத்தி" என்று அவளின் நெத்தியில் முத்தமிட்டு தலைகோத அதில் உறங்கி போனாள்.
"நல்ல வேலை நீ வந்த ஜானு. என்னால சமாளிக்க முடியலை" என்று மகளை வாஞ்சையோடு பார்த்தார்.
"விடுண்ணா. பையனை இவளுக்கு கண்டிப்பா பிடிக்கும். இந்த வரன் கண்டிப்பா அமையும். நீ பாரேன்" என்று அண்ணனை சாந்தப்படுத்தினார்.
மறுநாள் லேசான அலங்காரத்துடன் ஆயிரம் திட்டுகளை திட்டி கொண்டே தயாரானாள்.
'அத்தை எல்லாம் உன்னால தான்.. இவ்ளோ வெய்ட் புடவை, நிறைய நகை எல்லாம் போட வேண்டியதா ஆகிடுச்சு. இரு இவங்க வந்து போகட்டும். அப்புறம் நான் ஓட்ட போற பேய்ல இனி எப்பவுமே எனக்கு நீ வரன் பார்க்க கூடாது." என்று புகைந்து கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது வெளியிருந்து வந்த குரல்.
"எம்மாடி ரெடி ஆகிட்டியாடா? அத்தை அவங்களை கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்களாம்" என்ற அப்பாவிற்கு, "இதோ வந்துட்டேன்ப்பா" என்று வெளியே வந்தாள்.
சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருக்கும் அப்பாவை பார்த்தவள்.
"என்னப்பா செஞ்சுட்டு இருக்கீங்க?" என்றாள்.
"ஒண்ணுமில்லைடா. அவங்களுக்கு கொடுக்கிறதுக்கு எல்லாம் கடைல வாங்கிட்டு வந்துட்டேன். காபி மட்டும் போடணும். அதான் போட்டுட்டு இருக்கேன்" என்றார் புன்னகைத்து பால் பாகிட்டில் இருந்த பாலை பாத்திரத்தில் ஊற்றியபடி.
"அப்பா. நீங்க போங்க. நான் பார்த்துக்குறேன்" என்று அவரை வெளியே அனுப்பியவள் பால் காய்ந்தவுடன் காபி போடவும் அவரகள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
"ம்மா.. அவங்க வந்துட்டாங்க." என்றார் பரபரப்பாக.
"சரிப்பா. காபி போட்டுட்டேன்" என்றாள் தனலழகி.
"சரிடா. நீ வெளிய வரவேண்டாம். இங்கயே இரு" என்று வெளியேறினார்.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை. வேகமாக காபியை கிளாசில் வரிசையாக ஊற்றினாள்.
"எல்லோருக்கும் கொடும்மா" என்று அத்தை நீட்டிய டிரேயை வாங்கியவள் அனைவருக்கும் கொடுத்தாள்.
அவளை விழிகளால் பருகிக்கொண்டே காபி டம்ப்லரை எடுத்து கொண்டவன், இருந்தும் அவளிடம் இருந்து விழிகளை பிரிக்க முடியாமல் நோக்கி கொண்டே இருந்தான்.
மெல்ல அவளின் அழகை ரசித்தபடியே காபியை உருஞ்சியவன் மறுநொடி வேகமாக இரும தொடங்கினான்.
"என்னப்பா என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டே அவனின் தாய் தலையை லேசாக தட்டி முதுகை வருடிவிட்டார்.
"இல்ல ஒண்ணுமில்லைம்மா." என்று மீண்டும் எல்லோரிடமும் விழிகளை சுழட்டிவிட்டு அவளை பார்த்தான்.
தலை கவிழ்ந்திருந்தாலும் லேசாக புன்னகை பூக்கும் அவளின் முகம் தெரிந்ததும் அவனின் முகத்திலும் குறும்பு புன்னகை பூக்க காபியை முழுவதுமாக அவளை பார்த்துக்கொண்டே குடித்து முடித்தான்.
"காபி நல்லா இருந்ததும்மா" என்று வந்திருந்தவர்களில் ஒருவர் கூற அனைவரும் ஆமோதித்தனர்.
"ஆமா ஆமா. காபி ரொம்ப நல்லா இருந்தது" என்று கார்த்திகை செல்வன் கூற மறுநொடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் குறும்பு புன்னகையில் உடனே தலைக்கவிழ்ந்தாள்.
தன் அம்மாவிடம் ஏதோ செல்வன் கூறியவுடன்.
"ஒண்ணுமில்லை பொண்ணுகிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் பேசணும்னு சொல்றான் பையன். என்ன இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் தான வாழபோறவங்க" என்றார் அவனின் சித்தி.
"ஓஹ்! பேசட்டுமே.." என்றார் அவளின் அத்தை உடனே, தனலழகி முறைப்பதை பொருட்படுத்தாமல்.
"அம்மாடி. போடா" என்ற தந்தையிடம் தயக்கமாய் விழிகளால் கெஞ்ச, ஆறுதலாய் 'ஒன்றுமில்லை போம்மா' என்று விழிமூடி கூறினார் தந்தை.
தன் அறைக்கு அழைத்து சென்றவள், கதவை திறந்தபடி விட்டு அமைதியாய் ஜன்னலின் அருகே சென்று நின்று கொண்டாள்.
இரண்டு நிமிடங்கள் அறையில் மௌனமே பேசிக்கொண்டிருக்க, மங்கையின் அறையையும் அவளின் கைவண்ணங்களையும் மிகவும் ரசித்து அவளையும் சேர்த்து விழிகளால் அளந்து கொண்டிருந்தான் காளையவன்.
"சோ! உங்களுக்கு என் மேல எந்த கோபமும் இல்ல." என்றவனை ஒன்றும் புரியாமல் புருவம் உயர்த்தி பார்த்தாள் தனல்.
"இல்ல. எல்லோருக்கும் ஏலக்காவோட சேர்த்து சர்க்கரையையும் ஒழுங்கா போட்டு பாலை கொடுத்த நீங்க. எனக்கு மட்டும் உப்பை கொட்டி கொடுத்துட்டீங்களே? நான் பாவம் இல்லையா?" என்றான் குறும்பாய்.
அவனின் கேள்வியில் ஒரு நொடி தடுமாறினாலும், "அதனாலென்ன? உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்டுங்க" என்றாள் பட்டென்று.
"ஓஹ்! உங்களுக்கு நான் பிரச்சனையில்லை. இந்த கல்யாணம் தான் பிரச்சனை. ஹ்ம் நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்குவோம். காபில உப்பை போட்டா வர்ற மாப்பிள்ளை திட்டிட்டு வேணாம்னு போய்டுவான்னு இப்படி செஞ்சிட்டீங்க. சரியா?" என்று கூறவும் நாம் மாட்டிக்கொண்டோம் என்று முழித்தாள் தனல்.
அவளின் அதிர்ச்சியை குறும்பாய் ரசித்தவன்.
"நான் போய்ட்றேன்னு வைங்க. இன்னொரு மாப்பிள்ளை அவனும் போனான்னா அடுத்து அடுத்துன்னு போய்ட்டே தானே இருக்கும் அப்போ வர எல்லோரையுமே இப்படி உப்பை போட்டு தான் துரத்துவிங்களா?" என்று சிரித்தபடி கேட்டான்.
"அதெல்லாம் உங்களுக்கு ஏன்? நான் பண்ண வேலைக்கு உங்களுக்கு என்னை பிடிக்காது. சோ, என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போங்க" என்றாள் வெடுக்கென்று.
"நான் சொல்லவே இல்லையே உங்களை பிடிக்காதுன்னு. இப்போ தான் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு." என்று அவளிடம் நெருகியவன்.
தனலழகியோ அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.
"உன்னை ரொம்ப வருஷமாவே என் மனசுல நினைச்சிட்டு இருக்கேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அப்புறம் ஏன் உன்கிட்ட வந்து சொல்லலைன்னு பார்க்கறீயா? மாமா.. அத்தை இறந்தப்புறம் உனக்காகவே வாழறார். அதை கண் முன்னாடி நான் பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். அவர் அவ்வளவு கஷ்டபட்டு படிக்க வைக்கும் போது நான் குறுக்க வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ண எனக்கு மனசு வரலை. உன் படிப்பை நல்லபடியா முடிக்கனும்னு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். இந்த விஷயம் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கும் இதுக்கப்புறம் உனக்கும் மட்டும் தான் தெரியும். யோசிச்சு சொல்லு. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் அப்பாவை யார் பார்த்துப்பாங்கன்னு பயம் இருந்தா, உங்க அப்பாவை நம்மகூட கூட்டிட்டு போயிடலாம். இல்லையா ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பார்த்துட்டு போகலாம். நீ வேணாம்னு சொன்னாலும் அதுக்கப்புறம் நிச்சயமா உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்." என்றான் கார்த்திகை செல்வன்.
அவனின் சொற்களில் சற்று ஆட்டம் கண்டாலும் மௌனமாய் நின்றாள் பெண்ணவள்.
"என்னோட பதில் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எனக்கு மனைவியா அமைஞ்சா கடவுள் கொடுத்த வரமா நினைப்பேன். இல்லன்னா என்னோட பேட் லக்ன்னு நினைச்சுக்குறேன்" என்றவனின் மேல் அவள் அறியாமலே ஒரு பந்தம் உருவாகியிருந்தது.
அடுத்து எதுவும் பேசாமல் மௌனமாய் வெளியேறினர் இருவரும்.
"என்னப்பா பேசிட்டியா?" என்று அருகில் வந்தமர்ந்த மகனிடம் கேட்டார் அவனின் தாய்.
"ஹ்ம். பேசிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மா. அவங்களுக்கு ஓகேன்னா பேசிடுங்க" என்றான் மிக மெதுவான குரலில் புன்னகையுடன்.
மகன் சம்மதித்ததில் மனம் குளிர்ந்து போனது அவருக்கு.
"எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குண்ணா. பொண்ணுக்கு சம்மதமா கேட்டு சொல்லுங்க. நல்ல நாள் பார்த்து தட்டு மாத்திகலாம். ஏற்கனவே ஜாதகம் பார்த்தாச்சு பொருத்தம் ரொம்ப அருமையா இருக்கு." என்று சிரித்தார்.
"சரிம்மா" என்றார் அழகியின் தந்தை.
"அப்போ நாங்க கிளம்புறோம்" என்று அனைவரும் விடைபெற செல்வனின் விழிகள் மட்டும் செந்தனலழகியை தேடியது.
செந்தனலோ அவனின் வெளிப்படையான பேச்சில் தன் மனதை ஏற்கனவே பறி கொடுத்திருந்தாள்.
தன்னறை சன்னல் திரைசீலையின் பின் இருந்துகொண்டு செல்வனை பார்த்துக்கொண்டிருக்க, வெளிய வந்த செல்வனின் விழிகளும் ஒன்றாய் சங்கமித்தது.
அந்த ஒரு நொடி சந்திப்பில் இருவரின் விழிகள் மூலம் இதயங்கள் பேசுவது போல் இருந்தது.
"போலாம்பா" என்ற அன்னையின் குரலில் திரும்பியவன் அன்று சென்று, பின் இருவீட்டாரின் சம்மதத்தோடு ஒரு நல்ல நாளில் நிச்சயம் முடிந்தது.
முதலில் பேசாமல் தயங்கினாலும் பின் கார்த்திகை செல்வனின் இயல்பான குணத்தை புரிந்துகொண்டு அவ்வப்பொழுது பேசிக்கொண்டனர்.
திருமணத்தின் ஒரு வாரத்திற்கு முன், "தனு! பிளீஸ் எனக்கு உன்னை பார்க்கணும் இன்னைக்கு." என்ற செல்வனின் குறுஞ்செய்தியை கண்டதும் இதழ்கள் சுழித்து சிரித்து, "இன்னும் ஏழு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு. என்னை எப்படி வெளிய விடுவாங்க?" என்று அனுப்ப.
"எனக்கு அதெல்லாம் தெரியாது உன்னை பார்க்கணும். ஈவ்னிங் நாலு மணிக்கு பக்கத்துல இருக்க கோவிலுக்கு வரனும். நான் வெய்ட் பண்ணுவேன்" என்று பதில் வந்தது.
"அயோ கார்த்தி!
" என்று அனுப்பினாள்.
"பிளீஸ்! பிளீஸ்!... " என்று பதில் வர தன் வருங்கால கணவனின் கோரிக்கையை மறுக்க முடியாமல், "சரி. ஆனா, இவங்ககிட்ட எப்படி பேசறது ன்னு தான் தெரியலை." என்று அனுப்பினாள்.
"லெட் மீ சீ ஹவ் யூ ஆர் கோயிங் டூ சீ மீ" என்று பதில் வந்தது.
"சொல்லட்டா? எப்படி உனக்கு உப்பு போட்டு காபி கொடுத்தேனோ அப்படி...
" என்று சிரித்து கொண்டே பதில் அனுப்பினாள்.
தன் தந்தையிடம் சில மணி நேரங்கள் போராடி அனுமதி வாங்கி கோவிலில் அமர்ந்திருக்கிறாள்.
"வந்து பத்து நிமிஷம் ஆகுது. இந்த கார்த்தி பாரு இன்னும் காணமே" என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தாள்.
"என் பொண்டாட்டி என்னை ரொம்ப மிஸ் பண்றா போல" என்று அவனின் குரல் கேட்க, முகம் மலர்ந்து திரும்பினாள்.
"நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது. நீங்க தான் லேட்" என்றாள் முகம் சுருக்கி பொய் கோபத்துடன்.
"யார் சொன்னா நான் லேட்டுனு? நான் நீ வரதுக்கு முன்னாடியே வந்துட்டேன். அதோ அந்த மரத்துக்கடியில உட்கார்ந்திருந்தேன்." என்று குறும்பாய் கூறியதும் இடையில் கரம் வைத்து அவனை முறைத்தவள்.
"அப்போ ஏற்கனவே வந்துட்டு என்னை காக்க வச்சிங்களா?" என்றாள் கோபமாய்.
"உடனே வரலாம்னு தான் பார்த்தேன். ஆனா, தூரத்துல இருந்து உன்னை பார்க்க ரொம்ப அழகா இருந்தியா அதான் அங்கயே இருந்து உன்னை கொஞ்ச நேரம் ரசிச்சிட்டு இருந்தேன்" என்று இதழை மெல்ல கடித்தபடி தனலழகியை ஆசையாய் பார்த்தான் கார்த்திகை செல்வன்.
அவனின் பார்வையில் பெண்மை மலர்ந்தாலும் வெளிக்காட்டாது வெட்கம் தடுத்திட, "இது கோவில். சாமிகும்பிட உள்ள போகலாமா?" என்றாள்.
"ஓஹ் போலாமே" என்று இருவரும் உள்ளே சென்று சாமியை தரிசித்து பின் கோவிலை சுற்றி வந்தனர்.
"என்னை எதுக்கு வரசொன்னீங்க?" என்றாள் தனலழகி.
"வெளிய போய் பேசலாம்" என்று அவளை அழைத்து கொண்டு காருக்கு வந்தான்.
"நான் கிளம்புறேன்" என்றாள் அழகி.
"வண்டில ஏறு" என்று காரை திறந்துவிட, "பத்தடில வீடு இருக்கு. அதுக்கு எதுக்கு காரு? நான் நடந்தே போய்கிறேன்" என்றாள்.
"உன்னை வண்டில தான ஏற சொன்னேன். ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" லேசான கோபத்தோடு.
ஒரு நொடி அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்.
"ஏறு" என்றதும் எதுவும் பேசாமல் உடனே ஏறிக்கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் வண்டியை செலுத்தினான்.
பத்து நிமிட பயணத்திற்கு பின் கார் நிற்க, அப்பொழுது தான் தாங்கள் வேறு இடத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தாள்.
"எங்க வந்திருக்கோம்?" என்றாள் இறங்காமல்.
"நான் உன் புருஷன் தைரியமா இறங்கலாம்" என்றான் முகத்தில் மெல்லிய புன்னகை காட்டி.
புன்முறுவல் பூத்தாலும் உள்ளுக்குள் உதறலெடுக்க தான் செய்தது.
"என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்துவேனே தவிர என்னால உனக்கு எதுவும் தவறா நடக்காது" என்றான் அதே சாந்தமான முகத்துடன்.
"சாரி" என்றாள் தனலழகி.
"எதுக்கு?" என்றான் மென்மையாய்.
"இல்ல .. நீங்க கூப்பிட்டும் இறங்காம.." என்று முடிக்காமல் இழுக்க.
"எனக்கு புரியுது. இந்த காலகட்டம் அப்படி இருக்கு. ரொம்ப நம்பினவங்களே நம்மளை ஏமாத்துற காலக்கட்டம். பெண்கள் உஷாரா இருக்கிறது நல்லது தான்." என்று கீழே இறங்கினான்.
"எந்த இடம் இது?" என்று கீழே இறங்கினாள்.
"வா" என்று நடக்க, அவளும் பின் தொடர்ந்தாள்.
"இந்த இடம் எனக்கு பிடிச்ச இடம். எப்போ மனசுக்கு நிம்மதி வேணும்னாலும் இங்க வந்துடுவேன்" என்றான் அழகாய் ஒரு சிறிய வீட்டினுள் நுழைந்து.