Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed எல்லையில் ஒரு எத்தன்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 1.

கடம்பத்தின் அரசவை நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் களை கட்டி கொண்டிருந்தது. அன்று நாட்டு மக்களின் குற்றம் குறைகளை நீக்கும் நீதி வழங்கும் நாள். தனக்கு முன் வந்த வழக்குகளை விசாரித்து அதற்கு தகுந்த தண்டனைகளையும், தீர்வுகளையும் வழங்கி கொண்டிருந்தான் கடம்பத்தின் மன்னனான நரேந்திரவர்மன். வெளிப்பார்வைக்கு உற்சாகமாக காணப்பட்ட நரேந்திரவர்மனின் மனம் வெறுமையில் குழம்பித் தவித்து கொண்டிருந்தது.



உள்ளுர நரேந்திரவர்மன் குழம்பித் தவித்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தார் மழவராயர். நரேந்திரவர்மன் இக்கட்டான நிலையில் இருக்கும் போதெல்லாம் மழவராயரின் உதவியை நாடி உள்ளம் தெளிந்து தைரியமடைவது வழக்கம். இப்போதும் தைரியமாகவும் உற்சாகமாகவும் நரேந்திரவர்மன் தன்னை காட்டிக் கொள்ள மழவராயரே காரணம்.வர்மன் நீதி வழங்கியபடியே மழவராயரை கவனித்தான்.வர்மன் தன்னை கவனிப்பதை பார்த்த மழவராயர் "பொறுமை" என்று சைகை காட்டினார்.

தலைமை காவலனிடம் மழவராயர் சைகை காட்டினார். அவரது குறிப்பை அவன் உடனே புரிந்து கொண்டான்.



அடுத்த சில நிமிடங்களில் அரசவைக்குள் நுழைந்தான் அந்த வாலிப வீரன். அவன் கண்களில் கேலியும், கிண்டலும் நர்த்தனமாடின. அரசவை என்ற பயம் சிறிதும் இல்லாமல் ஏதோ நந்த வனத்தில் பூக்களை பார்த்து ரசிக்க வந்தவனைப் போல் அவனது நடை இருந்தது. அவனுக்கு பின்புறம் வந்த இரண்டு காவலர்களில் ஓருவன் தன் கையிலிருந்த ஈட்டியால் அவனது முதுகை நெட்டி தள்ளினான். "வேகமாக நட " என்று வாலிப வீரனை தள்ளியதுடன் மெல்லிய குரலில் உறுமிடவும் செய்தான்.



"நீ பலசாலி என்பதை என்னை தள்ளி விட்டுத்தான் சபைக்கு காட்ட வேண்டுமா?" என்றான் வாலிப வீரன்.



" ஆரம்பித்து விட்டான். இனி இவனது வாயை மூடுவது கடினம்." என்றான் மற்றோருகாவலன்.



"இவனாயிற்று.இனி மன்னராயிற்று. இவனை இங்கு கொண்டு வருவதுடன் நம் வேலை முடிந்தது " என்றான் மற்றொருவன்.



நரேந்திரவர்மனுக்கு காவலர்கள் இருவரும் பவ்யமாகவணக்கம் தெரிவிப்பதை பார்த்து கொண்டிருந்த வாலிப வீரன் சற்று தாமதமாகவே தன் வணக்கத்தை மன்னருக்கு தெரிவித்தான்.



மழவராயர் நரேந்திர வர்மனை நோக்கி கண்ணை காட்டினார். தீர்வு நம்மை தேடி வந்திருக்கிறது. திட்டப் படி நடந்து கொள்ளுங்கள் என்று கண்களால் சமிக்சை செய்தார் மழவராயர்.



மழவராயரின் பார்வையின் பொருளை புரிந்து கொண்டவர்மன்" யார் நீ?" என்றான்.



வர்மனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவனின் விழிகளில் எந்த அச்சமும் தென்படவில்லை.



"கடம்பத்தை கடந்து செல்லும் பல வழிப்போக்கர்களில் நானும் ஓருவன்" என்றான் அவன்.



"அந்நியனே! உன்னை தவிர வேறு எந்த வழிப்போக்கர்களும் குற்றம் சாட்டப்பட்டு இங்கு வந்ததில்லை. நீ மட்டும் தான் இங்கே வந்திருக்கிறாய். உன் மீதான குற்றச்சாட்டுகளை நீ அறிவாயா?”



"இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நேற்று இரவு தான் நான் கடம்பத்திற்குள் நுழைந்தேன். இங்குள்ள சட்ட திட்டங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.அப்படி சட்டத்திற்கு புறம்பாக நான் எதையும் செய்ததாக நினைவில்லை." என்றான் அவன்.



"நேற்று இரவு இவன் காளி கோவிலில் உறங்கியிருக்கிறான். காலையில் உணவருந்தியவன் சூதாடிகளுடன் பகடையாடியிருக்கிறான். அதில் முறைகேடாக வென்று அனைவரின் பணத்தையும் வென்றிருக்கிறான்." என்றான் காவல் வீரர்களின் ஓருவன்.



"நம் நாட்டு சூதாடிகள் வெகு திறமைசாலிகளாயிற்றே? அவர்களை இவன் வென்றானா? என்னால் இதை நம்ப முடியவில்லை." என்றான் வர்மன்.



" ஓருவனை அல்ல. மூவரை வென்று அவர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பி விட்டேன்" என்றான் வாலிப வீரன் அலட்சியமாக .



"நீங்கள் நம்ப மறுத்தால் அந்த சல்லி களில் ஓருவனை உங்கள் முன்பு நிறுத்துகிறேன். அவனிடம் விசாரித்து பாருங்கள்" என்றான் காவலன்.



சில நிமிடங்களில் மன்னருக்கு முன் வணக்கம் சொல்லி நின்றான் சூதாடிகளில் ஒருவன்.



" என்ன நடந்ததென்று நீ சொல் " என்றான் வர்மன்.



"இந்த அந்நியன் காலையில் எங்களுக்கு அறிமுகமானான். நான்கு பேரும் இணைந்து தாயம் என்னும் பகடையாட்டத்தை துவங்கினோம்.இவன் தன்னுடைய ஓரு காயை வைத்து எங்களின் எல்லா காய்களையும் வெட்டி விடுகிறான். அவனது அருத்தடுத்த காய்கள் எங்களின் காய்களை வெட்டி விடுகின்றன. எங்களால் அவனது ஒரு காயை கூட வெட்ட முடியவில்லை. விருத்தங்களும் அவனது வேகத்திற்கு தகுந்தது போலவே விழுகின்றன. இவனது விசித்திரமான ஆட்ட முறையில் நாங்கள் எங்கள் செல்வத்தை முற்றிலுமாக இழந்து விட்டோம்" என்றான் சூதாடி.



" உன் உடலில் உள்ள ஆபரணங்கள் தப்பிவிட்டன நண்பா. அந்த பெருந்தன்மையை நீ சொல்ல மறுக்கிறாயே?" என்றான் வாலிப வீரன் புன்முறுவலுடன் .



" இப்படித்தான் இடக்காக பேசுகிறான். வாய் பேச்சில் மட்டுமல்லவாள் வீச்சிலும் இவன் கோடை போகிறவனல்ல. அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வெகு புதுமையாக இருக்கின்றன.” என்றான் காவலன்.



"ஆட்டமும் புதுமை. ஆயுதங்களும் புதுமை. இந்த அந்நியன் மிக அபாயகரமானவனாக தெரிகிறான். யார் நீ?" என்றான் வர்மன்.



"இதற்கு நான் பொய் கூறுவதா? இல்லை. உண்மையை கூறுவதா?”



" நீ இங்கே உண்மை தான் கூற வேண்டும். இங்கே நீ பொய் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டால் உனக்கான தண்டனை கூடுதலாகும்." என்றான் வர்மன்.



“அப்படியானால் உண்மையை கூறி விடுகிறேன். என் பெயர் ஆதித்தன். கள்வர்புரத்திலிருந்து வருகிறேன்" என்றான் ஆதித்தன். சபை மவுனத்தில் ஆழ்ந்தது.



" அந்த பிரசித்தி பெற்ற கள்வன் நீ தானா?" என்றான் வியப்புடன் வர்மன் .



" நான் கள்வனல்ல. இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுத்து சமநிலையை பேணுபவன்.”



"அந்த சமநிலையை உன்னுடைய உழைப்பினால் செய்திருக்க வேண்டும்" என்றான் வர்மன் இளக்காரமாக .



" என் உழைப்பிற்குத் தான் களவென்று பெயர் வைத்திருக்கிறது உலகம்.”



"இவன் தனித்து வந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இவர்கள் மூவர் கொண்ட அணியாகவே செயல்படுவார்கள். இவனது அண்ணன் அரிஞ்சயனும், நண்பன் பைராகியும் சாதாரண ஆட்கள் அல்ல." என்றார் மழவராயர்.



" அவர்களும் என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான். அவர்களுக்கு வேறு வேலை இருப்பதால் நான் மட்டும் தனியாக வந்தேன்." என்றான் ஆதித்தன்.



"தனியாக வந்து தான் என் நாட்டு சட்டத்தை மீறியிருக்கிறாய். நீ பகடையாடி ஜெயித்த செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்திருக்கிறாய். அது இங்கே குற்றம்.”



"ஏழைகளுக்கு உதவுவது குற்றமா? விசித்திரமாக இருக்கிறது உங்கள் நாட்டின் சட்டம்”



"ஏழைகளுக்கு உதவ மன்னர் இருக்கிறார். நீ உதவக்கூடாது." என்றார் மழவராயர்.



" ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும்புண்ணியம் முழுவதையும் மன்னரே மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ? இதென்ன சுயநலம்?” என்றான் ஆதித்தன் கேள்விக்குறியோடு.



" மன்னர் மக்களுக்கு தகப்பனை போன்றவர். அவர் தான் ஏழைகளை காப்பாற்றும் உரிமை பெற்றவர். மற்றவர்கள் அதில் பங்குகொள்ள முடியாது. இது இந்நாட்டின் சட்டம்” என்றார் மழவராயர்.



" இந்த சட்டத்தை மீறினால் என்ன தண்டனை? “



"மீறுபவர்களுக்கு சிறைவாசம் " என்றான் நரேந்திரவர்மன் மெல்லிய குரலில்.



"என்னை சிறையில் அடைக்க போகிறீர்களா? அதற்கு நான் மனம் வைக்க வேண்டும் மன்னரே!" என்றான் ஆதித்தன் புன்சிரிப்புடன்.



"அதிகமாக பேசுகிறாய். அது உனக்கு ஆபத்தை தரப் போகிறது " என்றான் வர்மன் எச்சரிக்கும் குரலில்.



" ஆபத்தும், ஆதித்தனும் ஓட்டிப்பிறந்த இரட்டை பிள்ளைகள்.மண்ணில் புதைந்து போன என் எதிரிகளுக்கு பேசும் திறமையிருந்தால் கதை கதையாக உங்களுக்கு சொல்லியிருப்பார்கள்.”



சபை நடுவே தன்னை எதிர்த்து வாயாடும் ஆதித்தனைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றான் நரேந்திரவர்மன்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 2



நரேந்திரவர்மனின் செய்வதறியாத நிலையை கண்டஆதித்தன் " விசித்திரமான சட்டம். வித்தியாசமான தண்டனை .என்னை சூதாடியதற்கு தண்டித்திருந்தால் கூட அதை மனதார ஏற்று கொண்டிருப்பேன். சூதாடிகளை தண்டிக்க மறுக்கும் உங்களின் சட்டம் ஏழைகளுக்கு உதவி செய்பவர்கள் மீது மட்டும் பாய்வது வேடிக்கையாக மட்டுமல்ல. வேதனையாகவும் உள்ளது" என்றான் இகழ்ச்சியான குரலில்.



"அந்நியனான நீ எங்கள் நாட்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமே தவிர அதை விமர்சனம் செய்யக் கூடாது. அதற்கான உரிமை உனக்கில்லை" என்றார் மழவராயர்.



"உம்மை போல் அரசரின் அர்த்தமற்ற கட்டளைக்கு ஒத்து ஊதும் நபர்கள் இருக்கும் வரை ஏழைகள் இந்த நாட்டில் இருக்கவே செய்வார்கள். அவர்களின் ஏழ்மை ஒரு நாளும் ஓழியப் போவதில்லை" என்றான் ஆதித்தன்.



"திமிராகப் பேசுகிறாய். மன்னரின் கட்டளையில் நீ என்ன குற்றம் கண்டாய்?" என்றார் மழவராயர்.



“உங்கள் அரசர் ஏழைகளின் பசிக்கு மீனை உணவாகத் தருகிறார். நானோ மீன் பிடிக்க கற்று கொடுங்கள். மக்களுக்கு தேவையான மீனை அவர்களே பிடித்து கொள்வார்கள் என்கிறேன். இதில் குற்றம் என்ன இருக்கிறது? நான் உதவி செய்த ஏழைகள் பிச்சைக்காரர்கள் என்ற நிலையிலிருந்து சிறுவியாபாரிகள் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். அவர்களை கெளரவமான இடத்தை நோக்கி என் உதவி நகர்த்தியிருக்கிறது. உங்கள் மன்னரோ ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து தன் தயாள குணத்தை வெளிகாட்டி புகழ் தேடி கொள்ள விரும்புகிறார். “



"மன்னரையே எதிர்த்து பேச துணிந்து விட்டாயா?”



"உங்கள் நாட்டில் நியாயத்தை எடுத்து சொல்வதற்கு எதிர்த்து பேசுவது என்று வேறு பெயர் வைத்திருக்கிறீர்களா?”



" இப்படித்தான் தன் தரப்பு நியாயத்தை வாய் ஓயாது பேசுகிறான். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கிறான்." என்றான் காவலன்.



" அவனது ஆயுதப் பையை எடுத்து வாருங்கள். அவனது கொட்டத்தை நான் அடக்குகிறேன்." என்றான் நரேந்திரவர்மன்.



ஆதித்தனின் ஆயுதப் பைகடை பரப்பப்பட்டது. அவற்றை பார்த்த வர்மனின் உதட்டில் சிரிப்பு பிறந்தது.



"இரண்டு வாள்கள், ஒரு கட்டாரி, குறுவாள் ஓன்று. இவற்றை தவிர பிற ஆயுதங்களை நான் கண்ணாலும் கண்டதில்லை. அவற்றை பிரயோகிக்கும் வழிமுறைகளையும் நான் அறிந்ததில்லை. எல்லாமே புதுமையான ஆயுதங்களாக இருக்கின்றன. இதன் பெயர் என்ன?" என்றவர்மனின் கையில் நட்சத்திர வடிவதகடு ஓன்று இருந்தது.



" அதன் பெயர் எரிகழல்.தூரத்திலுள்ள விலங்குகளை, எதிரிகளை வீழ்த்த நான் பயன்படுத்தும் கருவி அது " என்ற ஆதித்தன் அதை கையில் வாங்கி பத்தடி தூரத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கினை நோக்கி எரிந்தான். அது கனகச்சிதமாக எரியும் திரியை மட்டும் தனியாக துண்டித்தது.



"அட்டகாசம். இதையெல்லாம் உனக்கு யார் தயாரித்து கொடுப்பது?" என்றான் வர்மன் கண்களில் வியப்புடன்.



" என் நண்பன்.பைராகி அவன் பெயர். காலத்தால் முந்தி பிறந்தவன் அவன். அ.றிவின் சுரங்கம் ." என்றான் ஆதித்தன்.



"வேறு ஏதாவது வித்தைகளை செய்து காட்டு. உன் தண்டனையை குறைப்பது பற்றி நான் யோசிக்கிறேன்." என்றான் வர்மன்.



"உங்களின் தண்டணையை ஏற்பது பற்றியே நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நீங்கள் குறைப்பதை பற்றி பேசுகிறிர்கள்.”



"உ ன்னை சிறையில் அடைத்து விட்டாலே தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?”



" உங்கள் தண்டணையை அனுபவிக்க நான் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டுமல்லவா?”



"அப்படியானால் நீ என்ன சொல்ல வருகிறாய்?”



" நாளை காலை சூரியன் உதயமாகும் போது நான் சிறையில் இருக்க மாட்டேன் என்கிறேன்”



" என் சிறைச்சாலையை பற்றி அறியாமல் அதீத தன்னம்பிக்கையுடன் பேசுகிறாய். அது உனக்கு நல்லதல்ல " என்றான் வர்மன்



"உங்களுக்கு உங்கள் சிறைச்சாலையை நன்றாக தெரியும். ஆனால் ஆதித்தனை பற்றி எதுவும் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்”



" நீ எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை இங்கே நிருபித்து காட்டு. உன் தற்பெருமையை நான் நம்புகிறேன்.”



"அது தற்பெருமையல்ல மன்னரே. நான் என் மீது வைத்திருக்கும் தன்னம்பிக்கை. எனக்கு என் வில்லும் மூன்று அம்புகளும் கொடுக்கப்பட்டால் என் திறமையை உங்கள் கண் முன்பாகவே நிருபித்து காட்டுகிறேன்.”



"இதோ உன் வில். இது உன்னுடைய அம்பு கூடு. என்ன இது? இந்த கூட்டை தலைகீழாக கவிழ்த்தும் அம்புகள் கீழே விழவில்லையே?”



"நான் தலைகீழாக குதித்தாலும் என் அம்புகள் கூட்டை விட்டு வெளியே வராது. ஏனென்றால் என் கூடு காந்தத்தால் செய்யப்பட்டது. இரும்பு அம்புகளை இழுத்து பிடித்து கொள்ளும். அதிலிருந்து மூன்று அம்புகளை கொடுங்கள்" என்றான் ஆதித்தன்.



" உன் வித்தையால் அரசரின் உயிருக்கு ?" என்றார் மழவராயர்.



"எந்த ஆபத்தும் நேராது. இது என்னுடைய உத்திரவாதம்." என்ற ஆதித்தன் திரி இல்லாத அகல் விளக்கை நோக்கி முதல் அம்பை எய்தான்.



அம்பு அகல் விளக்கின் மீது பட்டு அதை தூணை நோக்கி வீசியது. தூணை ஓட்டியபடி கீழ்நோக்கி வந்த அகல் விளக்கின் அடிப்புறத்தை குறி வைத்து அடுத்தடுத்த இரண்டு அம்புகளை மின்னல் வேகத்தில் எய்தான் ஆதித்தன்.



ஆதித்தனின் அடுத்தடுத்த அம்புகள் தூணில் நெருக்கமாக பாய்ந்து நிற்க அகல் விளக்கு பதவி சாக அதன் மீது அமர்ந்தது. ஆதித்தனின் வித்தையை பார்த்த சபை கை தட்டி ஆரவாரம் செய்தது.



வியப்பால் விழிகள் விரிய" வித்தைக்காரன் தான் நீ " என்றான் நரேந்திரவர்மன். நரேந்திரவர்மனின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் சபை தலை குனிந்தது.



"ஆச்சரியத்தை மிச்சம் வைத்து கொள்ளுங்கள். நாளை காலை அது அதிகமாகவே தேவைப்படும்" என்ற ஆதித்தன்" சிறைசாலை எங்கிருக்கிறது? அங்கே கொசுக்கள் அதிகமாக இருக்குமோ?" என்றான் அருகிலிருந்த காவலனிடம்.



" அவனிடமுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்து விட்டு அவனை சிறையில் அடையுங்கள்" என்றான் வர்மன்.



ஆதித்தனும், மழவராயரும் பூடகமாக ஓருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 3



ஆதித்தன் சிறைக்குள் அடைக்கப்பட்ட அன்று இரவு நிலவு வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அள்ளி இறைத்த வெள்ளி காசுகள் போல் வானப் பரப்பில் நட்சத்திரங்கள் ஒளி வீசி கண் சிமிட்டி கொண்டிருந்தன.கடம்பத்தின் அரண்மனை உபரிகையில் உறக்கம் வராமல் நடைபயின்று கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். அவனுக்கு அருகே சிலை போல் நின்று கொண்டிருந்தார் மழவராயர்.



"ராயரே! நீர் குறிப்பிட்ட நபர் நம் திட்டப் படியே நாட்டிற்குள் நுழைந்து விட்டான். நீர் குறிப்பிட்டது போல் வீரத்தில் சிறந்தவனாகத்தான் இருக்கிறான். ஆனால் தற்பெருமையும், தலைகனமும் அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே?" என்றான் வர்மன்.



" அவன் வீரன் மட்டுமல்ல. விவேகியும் கூட. என்ன சற்று வாய் அதிகம். மற்றபடி காரியம் சாதிப்பதில் சமர்த்தன். இதுவரை அவன் இறங்கிய எந்த காரியத்திலும் அவன் தோல்வியைத் தழுவியதில்லை.”



"அப்போதெல்லாம் அவனது சகோதரனும், நண்பனும் அவனுக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களின் உதவி அவனுக்கு இல்லை. தனியாளாக இந்த காரியத்தை அவனால் சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?" என்றான் வர்மன்.



" அவன் தனியாக இங்கிருந்து போகப் போவதில்லை. நம்முடைய ஆள் ஒருவனும் அவனுடனேயே பயணப் படப் போகிறான்.”



"யார் அது?”



"இளவரசர் அபயவர்மனின் வலது கரம் அதே நேரம் சினேகிதனும் கூட.”



" எதிர்காலம்?”



"ஆம். அவனே தான். வெகு திறமைசாலி. “



“உண்மைதான். ஆனாலும் அவனாலும் காரியத்தை சாதிக்க முடியவில்லையே?”



"அதனால் தான் கள்வர்புரத்திலிருந்து ஆதித்தனை வரவழைத்தேன். இந்த காரியத்தை இவனால் தான் சாதிக்க முடியும்.”



"எனக்கு அபயவர்மன் உயிரோடு வேண்டும்.”



"அதை ஆதித்தன் நிறைவேற்றிக் காட்டுவான். கவலை வேண்டாம்”



"ஏழைகளை இல்லாதொழிக்க ஓரு உபாயத்தை ஆதித்தன் கூறினானே? அதை கவனித்தீர்களா?”



" அவனது யோசனையைத் தான் நானும் முதலிலிருந்தே கூறிக் கொண்டிருக்கிறேன். தாங்கள் தான் ஏற்க மறுத்து விட்டீர்கள்”



"அந்த கள்வன் என்னை சிந்திக்க செய்து விட்டான். அவனது திட்டத்தைப் பற்றி நான் யோசித்து கொண்டிருக்கிறேன். நம் திட்டப் படி அவன் சிறையிலிருந்து தப்பி விடுவானா?”



"மூன்றாம் சாமத்தில் அவன் சிறையிலிருந்து வெளியேறி விடுவான். அவனுக்கு உதவும் ஏற்பாடுகளை எதிர்காலம் செய்து கொண்டிருக்கிறான்.”



" நான் கேட்பது என்னவென்றால் எதிர்காலத்தின் உதவியில்லாமல் ஆதித்தனால் சிறையிலிருந்து தப்பி விட முடியுமா?”



"அதற்கான திட்டங்கள் இல்லாமல் உங்களிடம் அவன் சவால் விட்டிருக்கவே மாட்டானே ?”



"யோசிக்க வேண்டிய விசயம்தான்.”



நரேந்திரவர்மனும் மழவராயரும் பேசிக் கொண்டிருந்த அதே இரவில் ஆதித்தன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையை நோக்கி ஒரு உருவம் கையில் தீப்பந்தத்துடன் பதுங்கி பதுங்கி முன்னேறி கொண்டிருந்தது.



ஆதித்தன் இருந்த அறைக்கு முன்னால் நின்ற உருவம் தன் இடுப்பிலிருந்த சாவியை எடுத்தது.



"அதற்கு அவசியமில்லை நண்பர் ! அந்த பூட்டை நான் திறந்து வெகு நேரமாகிவிட்டது. நீ நேராக கதவை திறந்துவிட்டு உள்ளே வரலாம்" என்ற குரல் ஓலித்தது.



அவன் குரல் வந்த திசையை திடுக்கிடலோடு பார்த்தான். படுக்கையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஆதித்தன் அவனைப் பார்த்து புன்னகைத்தான்.



தலையிலிருந்த முக்காட்டை எடுத்து விட்டு உள்ளே நுழைந்தவன்" எமகாதகன் நீ! பூட்டை உடைத்து விட்டாயே?" என்றான்.



"உங்கள் ஊரில் இதற்கு பெயர் தான் பூட்டோ ? என் கொண்டை ஊசி வளை விற்கே வாயைப் பிளந்து விட்டது. ஆமாம்’ நண்பனே! நீ யார்?" என்றான் ஆதித்தன்.



" என் பெயர் எதிர் காலம். இளவரசர் அபயவர்மனின் மெய் காவல் படை தலைவன். அவருடைய ஆப் த சினேகிதனும் கூட." என்றான் எதிர்காலம்.



"ஓலையில் உன்னைப் Uற்றி மழவராயர் எழுதியிருந்தார். எனக்கு வழிகாட்டியாக என்னுடன் வரப் போவது நீ தானா?”



"ஆமாம்”



"சரி! கிளம்பலாமா நண்பா ?" என்ற ஆதித்தன் எழுந்து நின்றான்.



"வெளியே காவல் படை வீரர்கள் நிறைய இருக்கிறார்கள்." என்றான் எதிர்காலம்.



"வெளியே மொத்தமாகவே 38 பேர் தான் இருக்கிறார்கள். உன்னுடன் சேர்த்து 39 பேர் .”



"உனக்கெப்படி இந்த எண்ணிக்கை தெரியும்?”



"கைதியாக அழைத்து வரப்படும் போது என் கண்களுக்கு சற்று வேலை கொடுத்தேன். அவ்வளவுதான். கைதிகளின் எண்ணிக்கையை தான் என்னால் கணக்கெடுக்க முடியவில்லை. எப்படியும் மூன்று மடங்கு கைதிகள் இங்கே இருக்க வேண்டும் என்று சிறையின் நிலவியல் அமைப்பு சொல்கிறது “



"நீ சொல்வது அனைத்தும் உண்மை் “



"சரி! நாம் கிளம்பலாம்”



"போகலாம்" என்ற எதிர்காலம் ஆதித்தனுக்கு வழி காட்டியபடி நடக்கத் தொடங்கினான்.



நீண்ட நடைபாதையை கடந்து நடந்த எதிர்காலம் சட்டென்று நின்றான்.



"நான் உன்னை காப்பாற்றவராவிட்டால் நீ எப்படி தப்பித்து சென்றிருப்பாய்?" என்றான் எதிர்காலம்.



"நான் கைதியாக உள்ளே வரும் போதே சுவற்றில் இருக்கும்அந்த யாழி சிலையை கவனித்து விட்டேன். அரண்மனைகளிலும், சிறைசாலைகனிலும் அவசரகாலங்களில் ராஜ குடும்பங்கள் தப்பி செல்ல சுரங்கப்பாதைகள் உண்டு. அவற்றை திறக்கும் ரகசிய வழிமுறைகள் 12 விலங்குகளின் சிலை மீது அமைக்கப்படும். அப்படியான 12 விலங்குகளில் யாழியும் ஒன்று. அதன் தலையை திருகினால் சுரங்கப் பாதைக்கான ரகசிய வழி திறக்கும். நான் தப்பி செல்ல நினைத்ததும், நீ என்னை கூட்டி செல்ல நினைத்ததும் ஒரே வழிதான். போ! போய் யாழியின் தலையை திருப்பு" என்றான் ஆதித்தன்.



அயர்ந்து போய் நின்றிருந்தஎதிர்காலம்" யார் யாரைக் காப்பாற்ற வந்திருக்கிறோமென்றே தெரியவில்லை. இதெல்லாம் உனக்கெப்படி?”



"என் நண்பன் பைராகியின் வாய் வண்ணம். அவனிடம் கற்றுக்கொள்ள ஏராளமுண்டு. ஓய்வு நேரத்தில் அவனிடமிருந்து இதையெல்லாம் கற்று கொண்டேன். அவன் ஒரு கட்டிட பொறியாளன் சுரங்கங்கள் அமைப்பதில் வல்லவன். அவனிடம் கேட்டறிந்த செய்திகள் இப்போது உதவுகிறது " என்றான் ஆதித்தன்.

எதிர்காலம் யாழியின் தலையை திருப்பினான்.அருகே இருந்த கல் சுவர் இரண்டாக பிளந்து வழிவிட்டது. அதன் கீழே இருட்டில் படிக்கட்டுகள் நீண்டன.



உள்ளே காத்திருக்கும் அபாயத்தை அறியாமல் வலது காலை எடுத்து வைத்தான் ஆதித்தன்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 4



எதிர்காலம் கையிலிருந்த தீப்பந்தத்துடன் படிக்கட்டுகளில் இறங்கினான். ஆதித்தனும் அவனை பின் தொடர்ந்து படிகளில் இறங்கினான். பத்து படிகளை கடந்த எதிர்காலம் சுவற்றில் இருந்த ஒரு விசையை கீழ்நோக்கி இழுத்ததும் கல் சுவர் மீண்டும் பழையபடி மூடிக் கொண்டது.

ஆதித்தனைப் பார்த்த எதிர்காலம் "இனி நாம் நடக்கப் போகும் வழி மிகவும் குறுகலானது. கவனமாக என்னை பின் தொடர்ந்து வா! சுவற்றில் இருக்கும் புடைப்பான சிற்பங்களில் மோதிக் கொள்ளாதே" என்று எச்சரிக்கவும் செய்தான்.



அவனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆதித்தன் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் சுரங்கத்தின் மேல் பாகத்தில் வில்லும் அம்புகளும் பொருத்தப்பட்டிருப்பதை கண்ணுற்றான்.

"எதிர்காலம் சுரங்கத்தின் மேல் சுவரில் நான் சில அம்பு பொருத்தப்பட்ட வில்களைப் பார்த்தேன். அவை ஏன் அங்கே பொருத்தப் பட்டிருக்கின்றன" என்றான்.



" சொல்கிறேன்" என்ற எதிர்காலம் சுவரில் இருந்த ஓரு சிற்பத்தின் கையை வலது பக்கமாக திருப்பினான். சுரங்கத்தின் மேல் சுவரில் பொருத்தப்பட்டிருந்த வில்கள் அம்புகளை மின்னல் வேகத்தில் பாய்ச்சின. அவை ஆதித்தனுக்கு பின்னால் ஐந்தடி தொலைவில் தரையை துளைத்து நின்றன. அதிர்ந்து போய் நின்ற ஆதித்தனைப் பார்த்த எதிர்காலம்



"அரச குடும்பத்தினர் இந்த வழியாக தப்பி செல்லும் போது எதிரிகள் பின் தொடர்ந்தால் அவர்களை கொல்லவும், தடுத்து நிறுத்தவும் பல பொறிகள் இந்த சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன, அதனால் தான் எந்த சிற்பங்களின் மீதும் மோதிக் கொள்ளாமல் நடக்குமாறு நான் உன்னை அறிவுறுத்தினேன்." என்றான்.



" இப்படி ஒரு விசித்திரமான சுரங்கத்தை நான் இன்று தான் கேள்விப்படுகிறேன்” என்றான் ஆதித்தன்.



"சுரங்கத்தின் மேற்கூரையை நன்றாக கவனித்து பார். இரும்பு குண்டுகள், கட்டாரிகள், பாயத் தயாராக குறுவாள்கள் என்று பல பொறிகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. வெகு கவனமாக நாம் நடக்க வேண்டும்" என்றான் எதிர்காலம்.



சுரங்கத்தில் நடக்க நடக்க அதன் மேற்கூரையில் விதவிதமான ஆயுதங்கள் எய்ய தயாராக இருப்பதை பார்த்தான் ஆதித்தன் -



"இதற்கு முன் இந்த பாதையில் நீ வந்திருக்கிறாயா?”



" பல முறை இந்த பாதையில் நான் பயணம் செய்திருக்கிறேன். இந்த சுரங்கத்தின் ஓவ்வொரு அங்குலமும் எனக்கு அத்துபடி “



முன்னால் சென்ற எதிர்காலம் திடிரென நின்றான். சுரங்கத்தின் மேல் விமானத்தை மங்கிய வெளிச்சத்தில் பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் எதிர்காலம் நின்றதை கவனிக்காமல் அவன் மீது மோதினான்.



"மேலே பார்த்தது போதும். கீழேயும் கவனி நண்பா " என்ற எதிர்காலம் ஆதித்தனுக்கு நகர்ந்து வழி விட்டான்.



இரண்டடி தூரத்தில் சுரங்கத்தின் தரை தளம் காணாமல் போய் ஓரு பெரிய குழி ஆறடி தூரத்திற்கு காணப்பட்டது. ஆறடி தூரத்திற்கு பிறகு பாதை மீண்டும் காணப்பட்டது.



"இதென்ன பாதைக்கு நடுவே தடங்கலாக குழி? இதை எப்படி நாம் கடப்பது?" என்றான் ஆதித்தன்



" அந்த குழிக்குள் தண்ணீர் இருப்பதை கவனித்தாயா?" என்றான் எதிர்காலம்.



"ஆம். தண்ணீர் இருக்கிறது. அதற்குள் இருப்பவை ?" என்றான் ஆதித்தன்.



"முதலைகள். அரண்மணை அகழிக்கும் இந்த சுரங்கத்திற்கும் இடையே இருக்கும் சிறிய இணைப்பு இது. இவற்றில் ஏராளமான முதலைகள் வசிக்கின்றன. தப்பி செல்லும் எங்களை விரட்டி வரும் எதிரிகளின் வீரர்கள் இருட்டில் இந்த குழியில் விழுந்தால் காத்திருக்கும் முதலைகளுக்கு இரையாக வேண்டியதுதான்." என்ற எதிர்காலம் தன் தீப்பந்தத்தை குழிக்குள் நீட்டினான். உள்ளேயிருந்த ஐந்தாறு முதலைகள் வெளிச்சத்தை பார்த்து துள்ளி நகர்ந்தன.



" அடக்கடவுளே! என்ன ஒரு அபாயகரமான திட்டம். இதை உருவாக்கியவன் சாதாரண ஆளாக இருக்க முடியாது. அது சரி!உங்களை பின்தொடரும் எதிரிகள் குழிக்குள் விழுவார்கள். நீங்கள் எப்படி குழிக்குள் விழாமல் அந்த பக்கம் செல்வீர்கள்?" என்றான் ஆதித்தன்.



"சுவற்றை ஒட்டி கவனி நண்பா. எட்டு அடி நீள மரப்பலகை கிடைமட்டமாக குழியின் மேல் சுவரின் அருகே இருக்கிறதல்லவா? அதை பாலமாக பயன்படுத்தி இந்த பள்ளத்தை கடந்து செல்வோம்" என்றான் எதிர்காலம். சொன்னது மட்டுமல்லாமல் மரப்பலகையை பள்ளத்தின் மீது பாலமாக போட்டு அதை கடக்கவும் செய்தான் எதிர்காலம்.



அவனை பின்பற்றி பலகையை பாலமாக போட்டு ஆதித்தன் கடக்க முற்பட்ட போது உள்ளிருந்த முதலைகளில் ஒன்று பலகையை நோக்கி தாவியது.ஆதித்தனின் கால் இருந்த பலகை பகுதியை முதலையின் வாய் நெருங்கிய போது ஆதித்தன் மறு பகுதிக்கு ஓரே தாவாக தாவி இருந்தான்.



காற்றில் பயணித்து சுரங்கத்தின் தரை தளத்தில் மீண்டும் கால் பதித்தான் ஆதித்தன்.



"நல்ல வேளை. மயிரிழையில் தப்பி விட்டாய். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கிறது. இதுவே இறுதியான ஆபத்து. இனி வழியில் எந்த அபாயமும் நமக்காக காத்திருக்கவில்லை. " என்ற எதிர்காலம் பலகைகள் இரண்டையும் பழையபடி வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். நீண்ட பாதை குறுகலாக சென்று முடிந்தது. வழியேதும் தென்படாத முட்டுச் சந்தில் சென்று நின்ற எதிர்காலம் சுவற்றிலிருந்த விசையை அழுத்தினான். கல் சுவர் விலகி திறந்ததும் வெளியே கற்களே படிகளாக சுவற்றில் நீட்டி கொண்டிருந்தன. பின்னால் வந்த எதிர்காலம் "ஆதித்தா! இப்போது நாம் நின்று கொண்டிருப்பது ஒரு கிணற்றுக்குள் .படிகளுக்கு பதிலாக கற்களை வைத்திருக்கிறார்கள். அவற்றின் மீது கவனமாக ஏறு. நான் சுவரை மூடிவிட்டு உன் பின்னால் வருகிறேன்." என்றான் எதிர்காலம்.



"சிறைசாலையின் சுரங்கப்பாதை இப்படி ஒரு கிணற்றின் பக்கவாட்டில் வந்து முடியும் என்பதை என்னால் நம்ப வே முடியவில்லை." என்றான் ஆதித்தன்.



எதிர்காலம் பின்தங்கிவிட ஆதித்தன் படிகளில் ஏறி கிணற்றின் சுற்று சுவரை தாண்டினான். அவன் தரையில் கால் வைத்ததும் அவனது முதுகை ஓரு வாளின் முனை அழுத்தியது.



"அசையாது நில் " என்று கட்டளையிட்டது ஒரு குரல். இது என்ன எதிர்பாராத விபரீதம் என்று திகைத்து நின்றான் ஆதித்தன்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 5



தனக்கு பின்புறம் நின்ற அந்த முகம் தெரியாத எதிரி "அசையாமல் அப்படியே நில் " என்று கட்டளையிட்டதுடன் வாளையும் முதுகில் வைத்ததால் கண நேரம் திகைத்து போன ஆதித்தன் கண் இமைக்கும் நேரத்தில் சுதாரித்து கொண்டு அவனை எப்படி வீழ்த்துவது என்று யோசிக்க ஆரம்பித்தபோது அவனது யோசனையை அறுத்தது கிணற்றுக்குள் இருந்து வெளிவந்த எதிர்காலத்தின் கட்டளைகுரல்.



"பூபதி! வாளை கீழே தாழ்த்து. வந்திருப்பது நமது எதிரியல்ல. நம் நண்பர் தான் “



எதிர்காலத்தின் குரலை கேட்டதும் ஆதித்தனின் முதுகில் இருந்த வாள் அகன்றது.ஆதித்தனுக்கு முன்னே வந்து நின்றவன்



"என்னை மன்னித்து விடுங்கள். நான் எதிர்காலத்தை எதிர்பார்த்து இங்கே காத்திருந்தேன். அவருக்கு பதில் நீங்கள் திடிரென தோன்றியதால் என் பாதுகாப்பிற்காக வாளை பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது." என்றான் பூபதி.



" உன் எச்சரிக்கை உணர்வை நான் பாராட்டுகிறேன் பூபதி. இரவிலும் நீ இவ்வளவு எச்சரிக்கையாக இருப்பது பாராட்ட வேன்டிய விசயம் தான் " என்று பூபதியின் எச்சரிக்கை உணர்வை பாராட்டினான் ஆதித்தன்.



" பூபதி.!நம் திட்டப் படி எல்லாம் தயாராகத்தானே இருக்கின்றன?" என்றான் எதிர்காலம்.



"ஆம். எல்லாம் தயாராக இருக்கின்றன. வாருங்கள் போகலாம்" என்றான் பூபதி.



சற்று தூரத்தில் இருந்த மரத்தடியில் ஆதித்தனின் விருப்பத்திற்குறிய குதிரையானமோ க்னி யும் இன்னொரு குதிரையும் கட்டப்பட்டிருந்தன. மோகினியைப் பார்த்ததும் ஆதித்தனின் முகம் மலர்ந்தது.



"உன்னை எப்படி மீட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உன்னை எப்படியோ என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள் நம் நண்பர்கள் " என்ற ஆதித்தன் மோகினியை வாஞ்சையுடன் தடவி கொடுத்தான்.



" மன்னர் பறிமுதல் செய்த உன்னுடைய ஆயுதப் பை மோகினியிடம் இருக்கிறது. அனைத்தையும் திரும்ப கொடுக்க சொல்லி மழவராயர் கட்டளையிட்டார். ஆகவே நீ கடம்பத்தில் நுழைந்த போது உன்னிடமிருந்த அனைத்து பொருட்களும் ஓன்று கூட குறையாமல் திருப்பி தரப்பட்டு விட்டன. " என்றான் எதிர்காலம்.



"நன்றி நண்பா! நாம் கிளம்பலாமா?" என்றான் ஆதித்தன்.



"கிளம்பலாம். அதற்கு முன் நான் பூபதியிடம் தனியாக பேச வேண்டியதிருக்கிறது. பேசிவிட்டு வந்து விடுகிறேன்.”



"சரி. பேசிவிட்டு வா! உன் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்." என்ற ஆதித்தன் ஆயுதங்கள் இருந்த பையை சோதனையிட ஆரம்பித்தான்.



"சந்தேகம் வேண்டாம்.!அதில் ஒரு பொருள் கூட குறையாது" என்ற எதிர்காலத்தை பார்த்து புன்னகைத்த ஆதித்தன் " நான் என் தந்தையின் கையால் நாணயங்களை வாங்கினால் கூட எண்ணிப் பார்த்துத்தான் வாங்குவேன். கண்மூடித்தனமாக யாரையும் நம்ப மாட்டேன். அது என் சுபாவம். வருத்தப்படாதே" என்றான்.



தலையை அசைத்துக் கொண்டு பூபதியை தனியிடம் அழைத்துச் சென்றான் எதிர்காலம்.



"மழவராயர் அரண்மனையில் தூங்காமல் காத்திருக்கிறார். நீங்கள் சொல்லும் சேதிக்காக " என்றான் பூபதி



"நீயே நேரில் பார்த்தாயல்லவா? இவன் வெகு திறமைசாலி. போர் கலை மட்டுமல்லாமல் வேறு பல விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறான். அவனது அண்ணனையும், நண்பனையும் தவிர வேறு யாரையும் நம்ப மறுக்கிறான். தன் திறமை மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான்.இவனால் கண்டிப்பாக இறங்கிய காரியத்தில் ஜெயித்து விட முடியுமென்றே தோன்றுகிறது. எதையும் வேகமாக கற்று கொள்கிறான். அதே நேரம் என்ன நடக்கும் நடந்திருக்கும் என்பதையும் விரைவில் யூகிக்கிறான்.இவன் எதிரிகளுக்கு அபாயகரமானவன்.” என்றான் எதிர்காலம் ஆழ்ந்த சிந்தனையுடன் .



" இவனால் அபயவர் மனை? “



" கண்டுபிடித்து விட முடியுமென்று தான் நம்புகிறேன். மக்கள் அபயவர் மனை பற்றி கேட்கும் முன்பாக அவரை அரண்மனைக்கு கொண்டு வந்து விட வேண்டும். இல்லையென்றால் அரண்மனை ரகசியம் வெட்ட வெளிச்சமாகி விபரீதத்திற்கு வழிகோலி விடும்.”



"ஆமாம். மிக கவனமாக காரியமாற்ற வேண்டும்.புத்திர சோகத்தால் மன்னர் மிகவும் மனம் தளர்ந்து போயிருக்கிறார். “



" அதனால்தான் ஒரு கள்வனை வரவழைக்குமளவிற்கு இறங்கி வந்திருக்கிறார். “



"இவையெல்லாம் மழவராயரின் தூண்டுதலால் நடை பெறுகின்றவை.”



" மேலிடத்து சமாச்சாரங்கள் நமக்கெதற்கு? அவர்கள் என்ன சொல்கிறார்களே. அதை செய்வது தான் நம்முடைய வேலை.”



"இப்போது நான் மழவராயரிடம் என்ன கூறுவது?”



" எதிர்காலம் வருங்காலத்தை தேடி ஒரு கள்வனுடன் கிளம்பி விட்டான்' ஜெயத்துடன் ஊர் திரும்புவான் என்று கூறு”



" நல்லது. நீங்கள் சொன்னதை நான் அப்படியே மழவராயரிடம் கூறுகிறேன். நான் வருகிறேன்" என்ற பூபதி இருவரிடமும் விடை பெற்று கிளம்பினான்.



ஆதித்தனிடம் திரும்பி வந்த எதிர்காலம் ஆயுதங்களை சரி பார்த்து விட்டாயா நண்பா?" என்றான்.



"தேவையானவற்றை எடுத்துகொண்டும் விட்டேன்" என்றான் ஆதித்தன் இடையில் தொங்கிய வாளை சுட்டி காட்டி.



"இனி நாம் பயணத்தை துவக்கலாம்" என்றான் எதிர்காலம்.



"இப்போது நாம் முதலில் எங்கே செல்ல போகிறோம்?" என்றான் ஆதித்தன்.



"அதை நீ தான் சொல்ல வேண்டும்" என்றான் எதிர்காலம் இறுகிய முகத்துடன் .



" என்ன சொல்கிறாய் நண்பா ? போகும் இடம் தெரியாமல் தான் என்னை சிறையிலிருந்து மீட்டு வந்தாயா? என்றான் ஆதித்தன் அதிர்ச்சியுடன் .



"ஆமாம். காணாமல் போன இளவரசர் அபயவர் மரை நீ தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்றான் எதிர்காலம் உலர்ந்த குரலில்.



"இளவரசருக்கு என்னாயிற்று?”



"அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லை இறந்து விட்டாரா? என்பது கூட எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது" என்று அடுத்தடுத்த இடிகளை ஆதித்தனின் தலையில் இறக்கினான் எதிர்காலம்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 6



வானத்து நிலவு தன் மெல்லிய வெள்ளை வெளிச்சத்தை பூமியின் மீது செலுத்தி கொண்டிருந்த இரவு பொழுதில் மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே வெளிச்சப்பூக்களை சிதறவிட்டு கொண்டிருந்ததை ரசிக்க மனமில்லாமல் தன் குதிரையை மெதுவாக செலுத்தி கொண்டிருந்தான் ஆதித்தன். அவன் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.



அவனை நெருங்கி வந்து கொண்டிருந்த எதிர்காலத்தின் முகம் இருளை விடவும் கருத்திருந்தது.ஆதித்தனை வர வைத்ததும் சிறையிலிருந்து மீட்டு வந்ததும் வீண் முயற்சியாகிவிடுமோ என்று அவனது மனம் அடித்துக் கொண்டது.



"இளவரசர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தான் என்னை வரவழைத்தீர்களா?" என்றான் ஆதித்தன்.



"ஆமாம். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை இறந்து விட்டாரா? என்று கூட எனக்கு சரியாகத் தெரியாது”



" விந்தையான சூழ்நிலைதான். ஓரு மனிதன் தன் கடமைகளை மறந்து திடிரென மாயமாக வேண்டுமானால் அவனை யாராவது பயமுறுத்தியிருக்க வேண்டும். இல்லை காதல் வசப்பட்டு யாராவது பெண்ணுடன் தலைமறைவாகி இருக்க வேண்டும்”



"நான் அபயவர்மனின் நிழலாக இருந்தவன். அவரை யாரும் மிரட்டியதாகவோ, அவர் யாருக்கும் பயப்பட்டதாகவோ சரித்திரம் கிடையாது.”



"அப்படியானால் காதல் விவகாரம் ஏதாவது இதன் பிண்ணனியில் இருக்குமோ?”



" இருக்கிறது ஒரு இனிமையான காதல் கதை. அபயவர்மர் காணாமல் போனதற்கும் இதற்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது”



"நீகதையை சொல் சம்மந்தம் இருக்கிறதா இல்லையா? என்று நான் சொல்கிறேன். எனக்கும் பொழுதுபோக வேண்டாமா? செத்துப் போன என் பாட்டியிடம் கடைசியாக கதை கேட்ட ஞாபகம். அதற்குப் பிறகு எனக்கு கதை சொல்பவன் நீதான்.”



"வாழ்க்கையில் நடப்பவை தானே கதையாக வருகின்றன. சரி நாம் அபயவர்மரின் கதைக்கு போவோம். எங்கள் நாடு கடம்பம். இதற்கு அருகில் உள்ள நாடுதான் முல்லைவனம். இரண்டுமே நட்பு நாடுகள் தான். இவற்றின் நடுவே எல்லையில் இருப்பதுமலை பாங்கான பகுதி. அதனால் இரண்டு நாடுகளும் எல்லைகளை பிரித்து கொள்ள முடியாமல் பொதுவான பகுதியாக விட்டு விட்டன. அங்கே ஏராளமான மலை கிராமங்கள் உண்டு. அவற்றில் சுவை மிகுந்த தேன், பட்டை, மிளகு போன்ற விலையுயர்ந்த பொருட்கள் விளைவதுண்டு. அவை மன்னருக்கு பரிசாக அனுப்பப்படுவதுமுண்டு. எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. “



"எல்லை என்றாலே தொல்லை தானே? ஏதாவது விவகாரம் வந்து சேர்ந்திருக்க வேண்டுமே?" என்றான் ஆதித்தன்



"உன் ஊகம் சரிதான். ஒரு நாள் மலை கிராமத் தலைவனிடமிருந்து மன்னருக்கு ஓலை வந்தது. தங்கள் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதாகவும் மன்னர் வேட்டைக்கு வந்து அவற்றை கொன்று தங்களை காப்பாற்ற வேண்டுமென்றும் கிராமத் தலைவன் அதில் எழுதியிருந்தான்”



"அந்த காட்டு பன்றிகளை அவர்களே கொல்லலாமே? வேட்டையாடுவதில் திறமை பெற்றவர்களல்லவா மலை வாசிகள் ?”



" இவையெல்லாம் சம்பிரதாயங்கள். மன்னரை வரவழைப்பதன் மூலம் மற்றவர்களுக்கு தங்கள் செல்வாக்கை உயர்த்தி காட்டலாம். சாலை வழிகளை மேம்படுத்தி கொள்ளலாம். மன்னரின் வேட்டைக்கு உதவுவதுடன் அவரை சிறப்பாக உபசரித்து சில சலுகைகளை பெற்று கொள்ளலாம் என்பது கிராம தலைவனின் திட்டம். மன்னர் வேட்டையாடி தன் வீரத்தை நிருபித்தது போலவும் குடிகளின் குறைகளை தீர்த்தது போலவும் இருக்குமல்லவா? அதற்குத்தான் அந்த ஓலை அழைப்பிதழ் “



"புரிகிறது.”



" மன்னர் வேட்டைக்கு அபயவர்மரை அனுப்ப நினைத்தார்.அபயவர்மரும் இளமை துள்ளலில் அதற்கு சம்மதித்தார். நானும் அபயவர் மரும் ஒரு சிறு படையுடன் எல்லைக்கு வந்தோம். மலை வாசிகள் எங்களை தங்க வைத்து சிறப்பாகவே உபசரித்தார்கள். மறுநாள் நாங்கள் காட்டு பன்றி வேட்டையை துவக்கினோம். இளவரசர் அபயவர்மர் வெகு சிறப்பாகவே வேட்டையில் ஈடுபட்டார். மறுநாள் காட்டு பன்றி ஓன்றை துரத்தி சென்ற இளவரசர் எங்களை விட்டு பிரிந்து பாதை தவறி விட்டார்.”



"அய்யய்யோ ! பிறகு என்ன ஆயிற்று?”



"பாதை தவறிய இளவரசர் சரியான பாதையை கண்டறிய முடியாமல் தவித்திருக்கிறார். அப்போது அவர் இரண்டு மலைவாழ் பெண்களை சந்தித்திருக்கிறார். அந்த பெண்களில் ஒருத்தி அபாரமான அழகியாக இருந்திருக்கிறாள் “



"அந்த அழகிக்கு பெயரில்லையா?”



"அவள் பெயர் பத்மாவதி .அவளை பார்த்த நொடியே இளவரசர் அவள் மேல் காதல் கொண்டு விட்டார். அவளிடம் பேச்சை வளர்த்தார். அவளுக்கும் தன் மீது மையல் என்று இளவரசர் உணர்ந்து கொண்டார்.தன் பன்றி வேட்டையை முடித்து கொண்டு தினமும் மாலையில் அவளை சந்திக்க சென்று விடுவார். நான் அவருக்கு துணையாகச் செல்வேன். கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு பத்மாவதி இளவரசரை சந்திக்க வருவாள். பத்மாவதிக்கு துணையாக அவளது தோழியும் வருவாள். எங்களின் பன்றி வேட்டை முடிவதற்குள் இளவரசரின் காதல் கெட்டிப் பட்டு விட்டது. ஓருவரைப் பிரிந்து ஓருவர் வாழ முடியாத நிலைக்கு இளவரசரும் பத்மாவதியும் வந்துவிட்டிருந்தனர். “



"மலைவாழ் பெண்ணை மருமகளாக மன்னர் ஏற்பாறா?”



"அதே சந்தேகம் தான் எனக்கும் .பத்மாவதி இல்லாவிட்டால் தன்னால் வாழ வே முடியாது. அவளில்லாத வாழ்க்கையை வாழ்வதை விட தற்கொலை செய்து இறப்பதே மேல் என்று என்னிடம் உறுதியாக இளவரசர் சொல்லிவிட்டார். இந்த காதலை நான் தான் மன்னரிடம் சொல்ல வேண்டும் என்று என் தலையில் பாரத்தை ஏற்றி வைத்தார்”



"உன் உடலுக்கு அது அதிகமான பாரம் தான் “



"அந்த பாரமும் வெகு சீக்கிரமாகவே இறங்கி விட்டது”



"மன்னருக்கு இந்த காதல் விளையாட்டு தெரிந்துவிட்டதா?”



"இல்லை. இளவரசருக்கு மாலையிட நினைத்த பத்மாவதிக்கு மரணம் மாலையிட்டு விட்டது”



" என்ன சொல்கிறாய்?" என்றான் ஆதித்தன் அதிர்ச்சியுடன் .



"ஆம். இளவரசரை சந்திக்க வர வேண்டிய பத்மாவதி ஒரு நாள் வரவேயில்லை. காத்திருந்து ஏமாந்த இளவரசர் மறுநாள் என்னை அனுப்பினார். நான் அவளின் கிராமத்திற்கு சென்று விசாரித்தேன். கோவிலுக்கு போவதாக கூறி இளவரசரை காண காட்டுவழியில் வந்த பத்மாவதி பாம்பு கடித்து இறந்து விட்டாள் என்று மலைவாழ் மக்கள் கூறினார்கள். அதை கேட்ட இளவரசர் கலங்கி போனார். கண்ணீர் விட்டு அழுதார். அதற்கு பிறகு தான் விபரீத மே துவங்கியது " என்றான் எதிர்காலம்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 7



கதையை தொடர்ந்து சொல்ல தொடங்கினான் எதிர்காலம்.



"பத்மாவதியின் மரணத்தால் நிலை குலைந்து போனார் இளவரசர் அபயவர்மர் .வேட்டையில் பங்குகொள்ள மறுத்து தன் இருப்பிடத்திலேயே தங்கி விட்டார் இளவரசர். தனிமையில் உள்ள இளவரசர் விபரீதமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக நானும் அவருடனேயே தங்கி விட்டேன். பத்மாவதியையும் தன்னையும் இணைத்து இன்பகரமான பல கனவுகளை கண்டு கொண்டிருந்த இளவரசர் அவையெல்லாம் கலைந்து போனதை ஏற்று கொள்ளாமல் தவியாய் தவித்து கொண்டிருந்தார். இளவரசருக்கு உடல் நிலை சரியில்லை என்று பொய் கூறி நான் நிலைமையை சமாளித்துக் கொண்டிருந்தேன். வீரர்கள் பன்றி வேட்டையில் தீவிரமாக இறங்கி இருந்தார்கள். இனி வேட்டையாட பன்றிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. நாங்கள் மலைவாழ் மக்கள் தலைவனிடம் விடை பெற்று தலைநகரத்திற்கு திரும்பினோம்.”



"அபயவர்மர் பத்மாவதியை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டாரா?”



"அதுதான் இல்லை. நானும் உன்னை போலவே இயல்பு வாழ்க்கைக்கு இளவரசர் வந்து விடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் விதியின் விளையாட்டு வேறாக இருந்தது. பத்மாவதியை மறக்கமுடியாத இளவரசர் மதுவுக்கு அடிமையானார். நானும் அதை மன்னர் குடும்பத்திற்கு தெரியாமல் முடிந்த வரை மறைத்தேன். ஆனால் இந்த விசயம் வெகு சீக்கிரத்திலேயே மன்னரின் காதுக்கு போய் விட்டது.”



"காதல் போதையோடு – மது போதையும் இணைந்து கொண்டு விட்டதா?”



" நாளை நாட்டை ஆள வேண்டியதன் மகன் மதுவுக்கு அடிமையானதை அறிந்த மன்னர் அதிர்ந்து போனார். இதற்கு யார் அல்லது எது காரணம் என்று விசாரித்த போது இளவரசரின் காதல் விவகாரம் வெளிவந்தது.இளவரசரிடம் அதை காட்டி கொள்ளாத மன்னர் முள்ளை முள்ளால் எடுக்க தீர்மானித்தார். நட்பு நாடானமுல்லை வனத்தின் இளவரசி ரத்ன மாலாவை இளவரசருக்கு மணம் முடித்து வைக்க திட்டமிட்டார். இரு நாடுகளுக்கிடையே திருமண பேச்சு வார்த்தை துவங்கியது “



"இந்த திருமண ஏற்பாடு அபயவர்மனுக்கு உடன்பாடுதானா?”



" இல்லை. இந்த திருமணத்திற்கு இளவரசர் சம்மதிக்கவில்லை.பத்மாவதியை நினைத்த நெஞ்சில் இனி எந்த பெண்ணிற்கும் இடமில்லை என்று உறுதியாகக் கூறி விட்டார். இந்த திருமணத்தை நிறுத்த அவர் செய்த செயல் தான் விபரீதத்தை கொண்டு வந்தது. “



"அப்படி என்னதான் செய்தார் அபயவர்மர் ?"



"முல்லைவனத்தின் அரச பிரதிநிதிகளும் சோதிடர்களும் நம் அரண்மனையில் திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே குடிபோதையில் வந்த இளவரசர் முல்லைவனத்தின் இளவரசி ரத்ன மாலாவின் அழகை படுமோசமாக விமர்சித்து பேசி விட்டார். எத்து பற்கள், ஓன்றரை கண்கள், பானை வயிறு கொண்ட உங்கள் இளவரசியை யார் திருமணம் செய்வார்கள் என்று இழித்தும் பழித்தும் பேசி அவமானப்படுத்தி விட்டார். தங்கள் இளவரசியை ஒரு பெண்ணை இழித்துப் பேசியதால் அவமானப்பட்டுகொதிப்படைந்த முல்லைவனத்தின் அரசப் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையை முறித்து கொண்டு வெளியேறினர்.கடம்பத்துடனான நல்லுறவை இத்துடன் அறுத்துக் கொள்வதாகவும் அறிவித்துவிட்டனர்.ஒரு திருமணத்தின் மூலம் இணைய வேண்டிய இரண்டு நாடுகள் இளவரசரின் துடுக்கான பேச்சால் எதிரி நாடுகளாக மாறி விட்டன.கடம்பத்திலிருந்து செல்லும் வணிகர்களை முல்லைவனத்திற்குள் அனுமதிக்க மறுத்ததுடன் சிலரை உளவாளிகள் என்று குற்றம் சாட்டி கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் ஆரம்பித்தனர். தன் பக்கம் தவறு இருந்ததால் மன்னர் நரேந்திர வர்மர் மனம் குமைந்தார். முல்லைவனத்தின் மீது படையெடுக்கவும் தயங்கினார். “



"இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமான இளவரசர் அபயவர்மன் கொஞ்சம் கூட மனம் மாறவில்லையா?”



"அவர் சுய நினைவில் இருந்தால்தானே இவற்றையெல்லாம் உணர?”



"பிறகென்ன நடந்தது?”



"தன் மகனின் நிலை கண்டு கலங்கிய மன்னர் கொண்டு வந்தது தான் அந்த விசித்திர சட்டம். ஏழைகளுக்கு அரசு தான் உதவி செய்ய வேண்டும். மற்றவர்கள் உதவி செய்ய கூடாது என்று தடை விதித்ததன் மூலம் கிடைக்கும் புண்ணியத்தால் தன் மகனின் மனம் மாறாதா? என்று மன்னர் நினைத்தார். “



"இந்த பிண்ணனி தெரியாமல் தான் நான் அந்த சட்டத்தை எதிர்த்து பேசி விட்டேனா?”



"ஆமாம். முல்லைவனத்திற்குள் நீ நுழைய கடம்பத்தின் எதிரியாக நீ இருக்க வேண்டும். அதற்காக நம்மால் நடத்தப்பட்ட நாடகம் தானே இதுவெல்லாம்?”



"புரிகிறது. எதிரிக்கு எதிரி நண்பன்.கடம்பத்தால் தேடப்படும் நான் முல்லைவனத்திற்குள் பிரவேசிப்பது எளிது. மன்னரை எதிர்த்து பேசியதாலும் சிறையிலிருந்து தப்பி வந்தாலும் என் மீது யாருக்கும் எந்த ஐயமும் வராது.”



"ஆமாம். இது மழவராயரின் மூளையில் உதித்த திட்டம். அந்த திட்டம் தான் இப்போது செயல் வடிவம் பெற்றிருக்கிறது.”



" கதையை பாதியில் திசை திருப்பி விட்டாய். மீதியையும் சொல். " என்றான் ஆதித்தன்.



"மன்னருக்கும் இளவரசருக்கும் மை கசப்பை ஏற்படுத்த வந்து சேர்ந்தது மற்றொரு ஓலை. அதுவும் அதே மலை கிராமத்திலிருந்து. காட்டு பன்றிகளின் தொல்லை மீண்டும் அதிகரித்திருப்பதாக வந்த ஓலை மன்னரின் கோபத்தை கூடுதலாக்கியது. பன்றிகளை கூட முழுதாக அழிக்க முடியாமல் காதல் களியாட்டத்தில் ஈடுபட்டதாக இளவரசரை திட்டி தீர்த்தார். அதனால் கோபம் கொண்ட இளவரசர் முழுதாக பன்றிகளை அழித்து விட்டு வருவதாக கூறி தன் சிறு படையுடன் அதே மலை கிராமத்திற்கு சென்றார். அவருடன் நானும் ெசன்றேன். பத்மாவதியை இழந்த விரக்தி, மன்னர் திட்டியதால் ஏற்பட்ட கோபம் இரண்டும் இணைந்து கொள்ள முன்பை விட ஆக்ரோசத்துடன் இளவரசர் வேட்டையில் ஈடுபட்டார். பன்றி வேட்டையில் ஈடுபட்ட இரண்டாம் நாளில் தனியாக சென்ற இளவரசர் காணாமல் போய்விட்டார். காடு முழுவதையும் சலித்து விட்டோம். அவர் வழி தவறி சென்றது போல் தெரியவில்லை. அவராக காணாமல் போய் விட்டாரா? இல்லை எதிரிகள் அவரை கடத்தி சென்று விட்டார்களா?கொடிய விலங்குகள் ஏதாவது தாக்கி இளவரசர் பலியாகி விட்டாரா என்று நிச்சயமாக தெரியவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா? இறந்து விட்டாரா என்று தெரியாத நிலையில் தான் உன் உதவியை நாடி வந்தோம்.”



"உங்களின் நிலைமை புரிகிறது. இது கஷ்டமான வேலையாயிற்றே?”



"அதனால் தான் உனை வரவழைத்தோம். இப்போது தேடலை எங்கிருந்து துவங்குவது?”



"எங்கே தொலைத்தோமோ அங்கிருந்தே தேடுவோம்" என்றான் ஆதித்தன் விசமப் புன்னகையுடன் .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 8



இருளில் இரண்டு குதிரைகளும் மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்தன. ஆதித்தன் தன் அருகே குதிரையில் ஆரோகணத்திருந்த எதிர்காலத்தை பார்த்து "நாம் எல்லையோர மலை கிராமத்தை அடைய எத்தனை நாட்கள் ஆகும்?" என்று கேள்விக்கணை தொடுத்தான்.



"இரண்டு நாட்களாகும். மூன்றாம் நாள் காலையில் நாம் எல்லையை அடைந்திருப்போம்" என்றான் எதிர்காலம்.



" நாளை காலை என்னை தலைமறைவான குற்றவாளி என்று நாடு முழுவதும் அறிவித்து விடுவீர்கள். என் தலைக்கு எவ்வளவு விலை வைப்பார் உங்கள் மதியூக மந்திரி மழவராயர்?”



"உன் மூளை விலை மதிப்பில்லாதது. அதனால் அதை பாதுகாத்து வைத்திருக்கும் உ ன் தலைக்கும் விலை கூடுதலாகத்தான் இருக்கும். அப்போதுதான் எதிரிகளான முல்லைவனத்தார் உன்னை நம்புவார்கள். உள்நாட்டில் தலைமறைவாக இயங்கி வரும் உளவாளிகளை இந்த தகவல் பெரிதாக கவரும் வாய்ப்பு இருக்கிறது.”



"அப்படியானால் நாளை காலை பரபரப்பாக விடியப்போகிறது என்று சொல். “



"ஆமாம். நாளை நீ தப்பிய செய்தி நாடு முழுவதும் பரவி எல்லையை எட்டும் முன் நாம் எல்லையை அடைந்து விட வேண்டும்.”



"மலை கிராமங்களிலும் அரசின் சேதி போய் சேர்கிறதா என்ன?”



"ஆமாம். ஆனால் அதே அரசு நினைத்தால் ஓரு தகவலை மூடிமறைத்து விடவும் முடியும். அபயவர்மர் காணாமல் போனது நாட்டு மக்களுக்கு இன்னமும் தெரியாது. அதே போல் மலை கிராமத்திரைுக்கும் இந்த விசயம் தெரியாது. அவர் இங்கிருப்பதாக அவர்களும், அவர் அங்கிருப்பதாக இவர்களும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.”



"நன்றாகத்தான் நாட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள். அரசியல் என்பதே மக்களை ஏமாற்றி ஆட்டு மந்தைகளாக்கி ஆள்வதுதானே?”



" மேலிடத்து விவகாரமெல்லாம் நமக்கெதற்கு? அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதை செய்வது தானே நம் போன்றவர்களின் கடமை. “



" திருத்தி கொள் நண்பா. அது உன் போன்றவர்களின் கடமை. நான் சுதந்திர மனிதன். யாருக்கும் அடிபணிந்து பழக்கமில்லாதவன். மழவராயர் எனக்கு உதவி கேட்டு எழுதிய ஓலையில் எதையாவது திருடி பிடிபட்டு தண்டணை பெறுமாறு எழுதியிருந்தார். நான் அதை செய்யாமல் ஏழைகளுக்கு உதவி செய்து பிடிபட்டு அரசரை எதிர்த்தல்லவா பேசியிருக்கிறேன். இதிலிருந்தே என்னுடைய யாருக்கும் பயப்படாத தன்மையை நீ உணர்ந்திருப்பாய்.”



"உன் துணிச்சலும், தைரியமும் யாருக்கும் வராது. நீ எந்த சூழல் ஏற்பட்டாலும் அதை சாதகமாக பயன்படுத்தி கொள்ள தெரிந்தவன்”



"அதுதான் கள் வர் புரத்தின் சிறப்பு. எந்த சூழலிலும் தாக்கு பிடிக்கும் பயிற்சிகள் அங்கே வழங்கப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நானும் என் சகோதரனும். அதனால் தான் ஆபத்தை கண்டு அஞ்சாமல் தப்பி பிழைக்கும் மார்க்கத்தை கண்டுபிடித்து தப்பி பிழைக்கிறோம்”



"நானும் கள்வர்புரத்தை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக அந்த மதி மயக்கி வனம்.”



"எங்கள் கிராமத்தின் அசைக்க முடியாத காவல் அரண் அது. அதனுள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் சுயநினைவை இழந்து விடுவார்கள்.”



"அது எப்படி?”



"மனித மனதை மயங்க செய்யும் மூலிகை செடிகளும் போதை தாவரங்களும் நிறைந்தது தான் மதி மயக்கி வனம். தரையில் விழும் அவற்றின் இலைகள் மக்கி போதையை காற்றில் உண்டாக்கும்.அதை சுவாசிப்பவர்கள் தங்கள் சுயநினைவை இழந்து அந்த வனத்திற்குள்ளேயே அலைந்து திரிந்து மரணித்துவிடுவார்கள். நீண்ட நேரம் மூச்சை அடக்கும் சடயோகப் பயிற்சி பெற்றவர்களால் தான் அந்த வனத்திற்குள் போய் வர முடியும் " என்றான் ஆதித்தன்.



"இயற்கையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தடுப்பு அரணாக பயன்படுத்துகிறீர்கள். பலே. அற்புதமான யோசனை." என்று வியப்படைந்தான் எதிர்காலம்.



"அது இருக்கட்டும். நாம் போகும் பாதையில் நமக்கு இடையூறாக எதாவது இருக்குமா?" என்றான் ஆதித்தன்.



"முதல் நாள் நமக்கு எந்த தடங்கல்களும் கிடையாது. இரண்டாம் நாள் மாலை பொழுதில் நாம் ஒரு சோதனை சாவடியை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.”



" நான் தேடப்படும் குற்றவாளி என்ற தகவல் அந்த சோதனை சாவடியை எட்டாவிட்டால் நமக்கு துன்பமில்லை. வெகு எளிதாக உன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தப்பி சென்று விடலாம். தகவல் சோதனை சாவடியை எட்டியிருந்தால் நம் கதி அதோ கதிதான் " என்றான் ஆதித்தன் -



"முதல் நாள் மாலையே தகவல் தூதுப் புறாக்கள் மூலமாக சோதனை சாவடிக்கு வந்து சேர்ந்திருக்கும் “



" எதிரிகள் நம்மை நம்ப வேண்டுமானால் நம்முடைய அதிரடியை அந்த சோதனை சாவடியில் காட்டியாக வேண்டும். அது நம் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் " என்றான் ஆதித்தன்.



" உண்மைதான். ஆனால் நாம் இருவர் தான் இருக்கிறோம். அங்கே சோதனை சாவடியில் நிறைய வீரர்கள் இருப்பார்கள். அவர்களை எப்படி வீழ்த்தி விட்டு முன்னேறுவது?”



“அதை நான் பார்த்து கொள்கிறேன். நீ கவலைப்படாதே. உன்னிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு யோசித்து சரியான பதில் சொல்வாயா?" என்றான் ஆதித்தன்.



" கேள் நண்பா! எனக்கு தெரிந்தவற்றை ஓளிக்காமல் உண்மையை சொல்கிறேன்”



" நல்லது.! முதல் முறை மலை கிராமத்திற்கு பன்றி வேட்டைக்கு சென்ற நீங்கள் எல்லா பன்றிகளையும் வேட்டையாடி விட்டீர்களா?”



"எனக்கு தெரிந்த வரை எல்லா பன்றிகளையும் நாங்கள் வேட்டையாடி விட்டதாகவே தான் நினைக்கிறேன். ஓன்றிரண்டு குட்டிகள் தப்பி பிழைத்திருக்கலாம். அதற்கு வாய்ப்புண்டு”



" சரி. ஒரு மாதம் கழித்து நீங்கள் இரண்டாவது முறை வேட்டைக்கு வரவில்லை. வரவழைக்கப்பட்டீர்கள்”



" என்ன சொல்கிறாய் ஆதித்தா?" என்றான் அதிர்ச்சியுடன் எதிர்காலம்.



"புரியவில்லையா? முதல் முறை நீங்கள் பன்றிகளை முற்றிலுமாக வேட்டையாடி ஓழித்திருக்கிறீர்கள். பிறகு எப்படி ஒரு மாத இடைவெளியில் பன்றிகள் திரளான எண்ணிக்கையில் மீண்டும் வந்தன?”



"அப்படியானால்?”



" இரண்டாவது முறை காட்டு பன்றிகளை காரணம் காட்டி நீங்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறீர்கள். யாரோ ஒரு எத்தனின் சதிவலையில் கச்சிதமாக நீங்கள் விழுந்திருக்கிறீர்கள். இது ஒரு நயவஞ்சக வலை" என்றான் ஆதித்தன் சலனமின்றி.



அதிர்ந்து போய் முகத்தில் ஈயாடாமல் அமர்ந்திருந்தான் எதிர்காலம்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 9



ஆதித்தனின் வினோதமான கேள்வியால்வி திர் விதித்துப் போன எதிர்காலம் "ஆம் நீ கேட்கும் கேள்வி நியாயமானது. ஒரு மாத இடைவெளியில் இத்தனை பன்றிகள் பல்கி பெருக வாய்ப்பேயில்லை. மிஞ்சிய ஓன்றிரண்டு பன்றிகளையும் கிராமவாசிகளே கொன்றிருப்பார்கள். அப்படியானால் இரண்டாவது வேட்டையில் அத்தனை பன்றிகள் பிடிபட்டது எப்படி? எனக்கு குழப்பமாக இருக்கிறது. நீ சொல்லும் கோணத்தில் நான் ேயாசித்துக் கூட பார்க்கவில்லை." என்றான்.



"தவறில்லை. உன் கவனம் முழுவதும் காணாமல் போன இளவரசர் மீதே இருந்ததால் உனக்கு முன்னால் நடந்த விசயங்களை பகுத்தறிய தவறி விட்டாய். நான் சொல்வது அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானது. இப்படித்தான் நடந்திருக்கும் என்று நான் அறுதியிட்டு உறுதியாக கூற வில்லை. இப்படியும் நடந்திருக்கலாமோ? அல்லது நடந்திருக்குமோ என்ற யூகத்தின் அடிப்படையிலேயே கேள்விகளை எழுப்புகிறேன். இளவரசர் தானாகவே காணாமல் போயிருந்தாலும் மதுவுக்கு அடிமையாக இருப்பதால் மதுவின்றி அவரால் வாழ முடியாது. மது தாராளமாக கிடைக்கும் இந்த இடத்தை விட்டு அவர் வெளியேற விரும்பியிருக்க மாட்டார். ஆக அவர் தானாகவே காணாமல் போயிருக்க முடியாது. கொடிய விலங்குகள் அவரை கொன்றிருந்தால் அவரது உடலோ, உடைகளின் மிச்சமோ, ஆபரணங்களோ கிடைத்திருக்க வேண்டும். காடு முழுவதும் சல்லடையாக சலித்தும் எதுவும் கிடைக்கவில்லை என்று நீ கூறுகிறாய்.ஆக இந்த கூற்றும் பொய்யாகிறது.”



" காரண காரியங்களோடு தான் சிந்திக்கிறாய். மீதமிருப்பது எதிரிகள் இளவரசரை கடத்தி சென்றிருக்க வேண்டுமென்பது மட்டும் தான்.”



"ஆமாம். உன்னிடம் எனக்கு இன்னொரு கேள்வி இருக்கிறது.”



"மீண்டும் ஓரு கேள்வியா? முதல் கேள்வியிலேயே நான் ஆடிப் போய் விட்டேன். இரண்டாவதாக எதை கேட்கப் போகிறாயோ?”



" இளவரசி ரத்ன மாலாவை மணக்க விருப்பமில்லையென்றால் அதை நாகரீகமாகவே இளவரசர் சொல்லி இருக்கலாம். அதற்கு மாறாக அவளை உருவக் கேலி செய்திருக்கிறார் இளவரசர். முன் பின் பாராத ஒரு பெண்ணைப் பற்றி இளவரசர் அப்படி பேச வேண்டியதில்லை. இதற்கு முன் இளவரசர் ரத்ன மாலாவை பார்த்திருக்கிறாரா? இளவரசர் அவளது உருவத்தைக் கேலி செய்து பேச என்ன காரணமிருக்க முடியும்.?" என்றான் ஆதித்தன்.



"நல்ல கேள்வி. இதே கேள்வியை நான் இளவரசரிடம் கேட்டேன். இளவரசர் உயிருக்கு உயிராக நேசித்த பத்மாவதி சிறிது காலம் முல்லைவன அரண்மனையில் சேடிப் பெண்ணாக பணிபுரிந்திருக்கிறாள். அப்போது இளவரசி ரத்னமா லாவோடு பேசி பழகி இருக்கிறாள். அவள் தான் இளவரசரிடம் அவளது உருவ அமைப்பை கிண்டல் செய்து பேசியிருக்கிறாள். இதை இளவரசரே என்னிடம் கூறினார். “



“ஆக முன் பின் பாராத ஒரு பெண்ணைப் பற்றி இன்னொரு பெண் பேசியதைத் தான் இளவரசர் உண்மை என்று நினைத்து பேசியிருக்கிறார். அப்படித்தானே?”



"ஆமாம். அவள் சேடி பெண்ணாக அரண்மனையில் வேலை செய்ததால் அவன் வார்த்தைகளை இளவரசர் நம்பியிருக்கலாம்.”



"ரத்ன மாலாவை இளவரசர் அபயவர் மர் திருமணம் செய்து கொண்டால் இரண்டு நாடுகளும் நட்புறவோடு கூடுதல் பலமும் பெற்று விடும். அதை தடுக்க யாராவது சதி செய்து பத்மாவதியை கையாளாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று நான் சந்தேகிக்கிறேன்.நன்றாக விசாரித்து விட்டாயா? பத்மாவதி உண்மையாகவே மனை வாழ் பெண்தானா? இல்லை ஆசை காட்டி மோசம் செய்யும் உளவாளிகளில் ஒருவளா?”



"பத்மாவதியை நாம் சந்தேகிக்க வேண்டிய தேயில்லை. அவள் மலைவாழ் இனத்துப் பெண் தான். இன்னொரு விசயத்தை சொல்ல மறந்து விட்டேன்.ரத்ன மாலாவும் பொழுதை போக்க அடிக்கடி இந்த மலைவாழ் கிராமங்களுக்கு வருவதுண்டாம். சில நாட்கள் தங்கியிருப்பதும் உண்டாம். அப்போது மலைவாழ் பெண்களை விளையாட்டு தோழிகளாக்கி கொள்வதுண்டாம். அப்படித்தான் பத்மாவதியும் ரத்ன மாலாவுக்கு பழக்கமாகி இருக்கிறாள். அவள் அழைப்பின் பேரில் சில நாட்கள் அரண்மனையில் தங்கியும் இருந்திருக்கிறாள். “



"மொத்த விவகாரங்களிலும் ஒரு கண்ணுக்கு காரியாத முடிச்சு இருக்கிறது. அதை கண்டுபிடித்து விட்டால் பிரச்சனை முடிந்துவிடும்." என்றான் ஆதித்தன்.



"அது என்னவென்று தான் நமக்குப் புரியவில்லையே?" என்றான் எதிர்காலம்.



" விரைவில் நடந்த உண்மை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். கவலைப்படாதே.!" என்றான் ஆதித்தன்.



" என் குதிரைக்கு எல்லை புறத்திற்கான வழி அத்துபடியாகி விட்டது. அதனால் நாம் குதிரையின் மீதே சற்று நேரம் உட்கார்ந்த வாக்கில் உறங்கலாம். நாளை முழுவதும் நெடும்பயணம் நமக்காக காத்திருக்கிறது" என்றான் எதிர்காலம்.



"ஆமாம். என் மோகினி உன் குதிரைக்கு இணையாக பயணம் செய்யட்டும். நாமிருவரும் குதிரையின் மீதே சற்று நேரம் உறங்குவோம்" என்றான் ஆதித்தன்.



இருவரும் குதிரையின் மீது உட்கார்ந்தவாறே உறங்க தொடங்கினர். இருளில் இரண்டு குதிரைகளும் நடை பழகத் தொடங்கின.



ஆதவன் கிழக்கில் உதயமானபோது இருவரும் விழித்து கொண்டனர். வழியில் தென்பட்ட குளம் ஓன்றில் குளித்து முடித்து காலை கடன்களை முடித்துவிட்டு இரண்டு குதிரைகளுக்கும் நீர் தந்து ஓய்வளித்தனர். குதிரைகள் பசியாற செடி கொடிகளை வெட்டி வந்து தீவனமாக போட்ட இருவரும் பூபதி கொடுத்தனுப்பிய சோற்று மூட்டையை எடுத்து கொண்டு மரத்தடியில் அமர்ந்து பசியாறினர்.



நான்கு ஜீவன்களும் ஓய்வெடுத்து பசியாறிய பின்னர் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். மதிய உணவுக்கு பின்னர் அவர்களின் பயணம் எல்லைப் புறத்தை நோக்கி ஆரம்பித்தது.



மாலை மயங்க ஆரம்பித்தபோது தன் குதிரையை நிறுத்திய எதிர்காலம் "அதோ! நமக்காக காத்திருக்கிறது ஒரு ஆபத்து " என்று தன் கையை நீட்டினான். அவன் கை நீட்டியதிசையில் காத்திருந்தது சோதனை சாவடி!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 10



எதிர்காலம் சுட்டிக் காட்டியதிசையில் இருந்த சோதனை சாவடியை பார்த்த ஆதித்தன் தன் குதிரையை நிறுத்தினான். "இது என்ன? பிரம்மாண்டமான ஓரு மாளிகையை போல் இருக்கிறதே?" என்றான் வியப்புடன்.



"ஆமாம். சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் வணிகப் பொருள்களை பறிமுதல் செய்து வைக்க இடம் வேண்டாமா? அதற்குத்தான் இவ்வளவு பெரிய மாளிகை." என்றான் எதிர்காலம்.



"இந்த சாலையில் நம்மை தவிர வேறு யாரையும் காணவில்லையே?" என்றான் ஆதித்தன்.



" வணிகர்கள் கள்வர்களின் தாக்குதலுக்கு பயந்து இரவில் கூட்டமாக பயணம் செய்வது தானே வழக்கம். இல்லாவிட்டால் வழியில் தென்படும் சத்திரம் ஏதாவதில் தங்கி இளைப்பாறி விட்டு தங்கள் பயணத்தை தொடர்வது வழக்கம்.”



"நீ சொல்வது உண்மைதான். இனி எந்த வணிகர் குழுவும் இந்த பக்கம் வர வாய்ப்பில்லை. நாம் இருவரும் தனியாகத்தான் இந்த இடையூறை கடந்து செல்ல வேண்டும்”



" அரசின் ஓலை இன்னமும் இந்த சோதனை சாவடியை வந்தடையாவிட்டால் என் செல்வாக்கை பயன்படுத்தி இந்த தடையை கடந்து சென்று விடலாம்.”



"ஆழம் எவ்வளவு என்று சரியாக தெரியாத பள்ளத்தில் கால் வைத்து வீணாக அபாயத்தை தேடிக் கொள்ள வேண்டாம் நண்பனே! நான் அரசால் தேடப்படும் ஒரு கள்வன். நான் இந்த சோதனை சாவடியை தந்திரமாக தாண் டி செல்வது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது. ஆனால் நீ? இளவரசரின் நெருங்கிய நண்பன். நீ ஒரு கள்வனுடன் பயணிப்பது ஏராளமான கேள்விகளை ஏற்படுத்தும். அதை நீ எப்படி சமாளிப்பாய்?" என்றான் ஆதித்தன்.



"ஆமாம். நீ கேட்கும் கேள்வி நியாயமானது. முல்லைவனத்திற்குள் நாம் பிரவேசிக்கும் போது இந்த கேள்வி விஸ்வரூபமெடுத்து எனக்கெதிராக நிற்கும் “



"அந்த கேள்விக்கான பதிலை நாம் இங்கே தேடுவோம்." என்று புன்னகைத்தான் ஆதித்தன்.



" என்ன செய்ய போகிறாய் ஆதித்ததா?" என்றான் எதிர்காலம் குழப்பத்துடன் .



"பொறு" என்ற ஆதித்தன் தன் ஆயுத பையிலிருந்து ஒரு இரும்பு சிமிழை கையில் எடுத்தான்.



"அது என்ன குங்கும சிமிழ்போல் இருக்கிறதே?" என்றான் எதிர்காலம்.



அவனுக்கு பதில் சொல்லாத ஆதித்தன் அந்த சிமிழை திறந்தான். அதற்குள் தண்ணீர் நிறைந்திருந்தது. அதன் நடுவே இன்னொரு மூடப்பட்ட சிமிழ் இருந்தது. அதை திறந்தான் ஆதித்தன். அதனுள் வெள்ளை நிற பொடி ஓன்று நிரப்பபட்டிருந்தது.



"அது என்ன பொடி?" என்றான் எதிர்காலம்.



" உன் கையை நீட்டு நண்பா!. என்ற ஆதித்தன் அந்த பொடியில் கொஞ்சத்தை எடுத்து எதிர்காலத்தின் உள்ளங்கையில் வைத்தான்.



முதலில் குளுமையாக இருந்த அந்த பொடி சற்று நேரத்தில் நெருப்பாக சுட ஆரம்பித்தது. அதன் வெம்மை தாங்காமல் அதைக் கீழே கொட்டி விட்டு கைகளை தேய்த்தான் எதிர்காலம்.



" என்ன பொடி இது?நெருப்பாகச் சுடுகிறதே?" என்றான்.



" #இதன் பெயர் வெண்ணிற வெடி உப்பு.பைராகியின் புத்தம் புது கண்டுபிடிப்பு. உடல் வெப்ப நிலைக்கே நெருப்பை உண்டாக்கி விடும். அதை தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்துத்தான் பாதுகாக்க வேண்டும். தேவைப்படும் போது இந்த பொடியிலிருந்து நெருப்பை உண்டாக்கி விடலாம்" என்ற ஆதித்தன் தன் ஆடையின் சிறு பகுதியை கிழித்து அதில் தண்ணீரையும், பொடியையும் ஓன்றாக கொட்டி கவிழ்த்தான். அதை எதிர்காலத்திடம் கொடுத்தவன் “இந்த துணியில் இருக்கும் தண்ணீர் காய்ந்தவுடன் துணி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விடும்." என்றவன் அருகே காய்ந்து போய் மண்டி கிடந்த பு தருக்கு நடுவே அந்த துணியை தூக்கி எறிந்தான்.



"அடிக்கின்ற காற்று துணியில் பற்றும் நெருப்பிற்கு துணை செய்ய இந்த புதர் தீப்பிடித்து கொள்ளும். அந்த தீ காய்ந்த கோரை புற்களில் பற்றி கொள்ளும். இந்த நெருப்பு சோதனை சாவடியில் உள்ள வீரர்களை திசை திருப்பும். அவர்களில் சிலர் இந்த தீயை அணைக்க இங்கே வருவார்கள். மீதமுள்ளவர்களிடம் தான் நாம் வித்தையை காட்ட வேண்டும். புரிகிறதா?" என்றான் ஆதித்தன்.



"உன் திட்டம் நன்றாகவே புரிகிறது."என்ற எதிர்காலம் "சரி! நாம் கிளம்பலாமா?" என்றான்.



“அதற்குள் அவசரப்பட்டால் எப்படி ?என் திட்டம் இன்னமும் முழுமை பெறவில்லையே?" என்றான் ஆதித்தன்.



"இன்னமும் திட்டம் மீதம் இருக்கிறதா?” என்றான் எதிர்காலம் வியப்புடன்



"ஆம்! அரசால் தேடப்படும் குற்றவாளி நான். என்னை நீ கண்டுபிடித்து கைது செய்து விட்டாய். என்னை ஒப்படைக்க இந்த சோதனை சாவடிக்கு இப்போது வந்திருக்கிறாய்" என்று கண்ணடித்தான் ஆதித்தன்



“நன்றாகவே உன் திட்டம் புரிகிறது" என்றான் எதிர்காலம்.



"இதோ இந்த கயிற்றால் என் கைகளை கட்டு. என்னால் எளிதாக அவிழ்க்கும்படி உன் முடிச்சு இருக்க வேண்டும். ஒரே இழுப்பில் முடிச்சு அவிழ்ந்து விட வேண்டும்”



"அப்படி ஒரு முடிச்சு இருக்கிறதா என்ன?”



"முடிச்சுகளில் மூவாயிரம் வகைகள் உண்டு. அந்த எளிதான முடிச்சை நான் சொல்லி தருகிறேன்.நன்றாக பயிற்சி செய்.நான் என் ஆயுதங்களை மறைத்து வைத்து கொள்கிறேன்" என்ற ஆதித்தன் அந்த முடிச்சு போடும் விதத்தை எதிர்காலத்திற்கு சொல்லி கொடுத்து விட்டு தன் நவீன அயுதங்களை உடைகளில் Uதுக்க தொடங்கினான்.



சற்று நேரத்தில் கைகள் கட்டப்பட்ட ஆதித்தன் குதிரையின் பின்னால் கட்டி இழுத்து வரப்பட்டான். இரண்டு குதிரைகளையும் நடத்திய படி சோதனை சாவடியை நோக்கி விரைந்தான் எதிர்காலம்.



# இங்கே ஆதித்தன் பயன்படுத்துவது வெள்ளை பாஸ்பரஸ் என்ற கெமிக்கல் .
 
Top Bottom