Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 46 :



ஒருவழியாக...பார்ட்டி நடக்கும் நாளும் அழகாக விடிந்தது.அன்று....'ஆதித்யன் க்ரூப் ஆப் கம்பெனீஸின்' வேலையாட்கள் அனைவருக்கும் அரைநாள் மட்டுமே அலுவலகம்.மதியத்திற்கு மேல் அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டு....மாலை நேராக பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வந்து விடுமாறு கூறப்பட்டிருந்தது.



மதியமானதும்....நித்திலாவை அவளது ஹாஸ்ட்டலின் முன் இறக்கி விட்ட ஆதித்யன்,"பேபி....!நீ ஈவ்னிங் ரெடியாகிட்டு வெயிட் பண்ணு.....!நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",அவன் கூறியதுதான் தாமதம்....இவள் அவசர அவசரமாக மறுத்தாள்.



"இல்ல....!வேண்டாம்....!யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.....!நானே வந்திடறேன்.....!",



பொறுமையற்ற பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன்,"கமான் நித்திலா.....!யாரவது பார்த்தாதான் என்ன.....?ஈவ்னிங் வர்றேன்.....!ரெடியா இரு......!",என்றவன் அதற்கு மேல் தமாதியாமல் காரைக் கிளப்பி சென்று விட்டான்.



'ஹ்ம்ம்....!எதையும் மறுக்க முடியாது....!பிடிச்சா...முரட்டு பிடிதான்....!',செல்லமாக ஆதித்யனை திட்டியபடியே உள்ளே நுழைத்தாள் நித்திலா.



அன்று மாலை.....



ஆங்காங்கு வெள்ளை நிற கற்களும்....முத்துக்களும் பதிக்கப்பட்ட மிக அழகிய வெள்ளை நிற பேன்சி புடவையில்.....தேவதையை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அந்தப் புடவைக்குத் தோதாக வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய முத்துமாலை ஒன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்தது.சிறிதாக ஒற்றை முத்து தொங்கும் காதணியை காதில் அணிந்தவள்....அதே போல் முத்துக்கள் பதித்த வளையல்களை தன் இரு கைகளிலும் அணிந்து கொண்டாள்.



இடுப்பு வரை நீண்டிருந்த கருங் கூந்தலை கர்லிங் செய்து அதன் உயரத்தைக் குறைத்தவள்....வகிடு எடுக்காமல் மேலே மட்டும் தலை வாரி.....மீதிக் கூந்தலை முன் பக்கமாக தோளில் வழியுமாறு தொங்க விட்டாள்.



இயற்கையாய் வளைந்திருந்த புருவங்களுக்கு மத்தியில்....சிறு வெள்ளைக் கல் பொட்டை ஒட்ட வைத்தவள்....திருப்தியாய் தன்னைப் பார்த்துக் கண்ணாடியில் புன்னகைத்துக் கொண்டாள்.



'ம்....நாம ரெடி.....!ஆது வந்தால் கிளம்ப வேண்டியதுதான்.....!',அவள் மனதிற்குள் கூறி முடிக்கவும்....அவளது மொபைல் அடிக்கவும் சரியாய் இருந்தது.ஆதித்யன்தான் கீழே வருமாறு அழைத்திருந்தான்.வர்ஷினியிடம் சொல்லிக் கொண்டு கீழே இறங்கியவள்....அங்கு வாசலில்....காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்த ஆதித்யனைப் பார்த்து இமைக்கவும் மறந்தாள்.



பாலாடை நிறத்திலான கோட் சூட்டில்....முன்னுச்சி முடி கலைய....வசீகரமான புன்னகையுடன்....இரு கைகளையும் கட்டிக் கொண்டு....ஒற்றைக் காலை மடித்து காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு ஆசை ஆசையாய் வந்தது.



அப்படியே ஓடிச் சென்று அவனது கலைந்த தலைமுடியை இன்னும் அதிகமாக கலைத்து விட்டு....அவன் கூர்மையான மூக்கைப் பிடித்துத் தன் உயரத்திற்கு இழுத்து....இழுத்த வேகத்தில் அவன் நெற்றியில் இதழ் பதிக்க வேண்டும் என்பது போல் தாபம் எழுந்தது.



அவனைப் பார்த்து அவள் இமைக்க மறந்தாள் என்றால்.....வெள்ளை நிற தேவதையாய் தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து....அவன்....மூச்சு விடவும் மறந்தான்.அதிலும்....அவள் பார்த்த அந்த ஆளை விழுங்கும் பார்வை....அவனை கிறங்கடிக்கச் செய்தது.



"என்ன டி.....?அப்படியே கடிச்சு திங்கற மாதிரி பார்க்கிற......?",தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்வையால் அள்ளிப் பருகியபடி அவன் கேட்க..



"ம்....!கடிச்சு திங்கணும் போலத்தான் இருக்கு.....!",அவனைப் பார்வையால் விழுங்கியபடியே கூறினாள் அவள்.இதுநாள் வரை....அவள்....அவனை இப்படியொரு பார்வை பார்த்ததில்லை.அவன்தான்....அவளை கண்டபடி மேய்வான்....!இன்று....அந்தப் பார்வையை அவள் பார்த்து வைத்ததில்....அவன்....மது அருந்திய வண்டானான்....!அதிலும்....அவள் பேசிய பேச்சு அவனை கிறங்கடிக்கச் செய்ய,



"ஏய்ய்.....!",என்றபடி அவளை நெருங்கியிருந்தான்.பிறகு....தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்தவனாய்....சிறு பெரு மூச்சுடன் காரில் ஏறி அமர்ந்தான்.



மெலிதான புன்னகையுடன் அவனுக்கு அருகில் முன்பக்கமாய் ஏறி அமர்ந்தவள்....அப்பொழுதும் அவனைப் பார்த்து....அதே பார்வையை வீசி வைக்க...அவன்....காரை கிளப்ப மறந்தவனாய்...அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்தான்.



"கொல்றேடி.....!",அவன் முணுமுணுக்க..



"நீதான் டா மயக்கற.....!வசீகரா......!அழகான ராட்சஸா.....!",,அவள் குரலில் அப்படியொரு மயக்கம்.



"ஏய்....!இப்படியெல்லாம் பேசாதே டி.....!அப்புறம்....ஐ லூஸ் மை கண்ட்ரோல்......!",வேக மூச்சுகளை எடுத்து விட்டபடி ஒரு மாதிரிக் குரலில் அவன் கூறவும்தான்....அவனை மிகவும் தூண்டி விட்டு விட்டோம் என்பதே அவளுக்கு உரைத்தது.



சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்தவள்,"ஹலோ பாஸ்.....!முதல்ல வண்டியை எடுங்க.....!நாம இன்னும் ஹாஸ்டல் வாசலிலேயேதான் நிற்கிறோம்.....!போற வர்றவங்க எல்லாம் நம்மளைத்தான் ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க....!",அவள் கேலியாய் கூறவும்....தன்னை சுதாரித்துக் கொண்டவன்.....மெலிதாக விசிலடித்தபடி காரைக் கிளப்பினான்.



கைகள் அதன் பாட்டிற்கு காரை ஓட்டினாலும்...அவன் உதடுகள் ஒரு பாடலை விசிலடித்துக் கொண்டே வந்தன....!கூடவே....அவனது விஷமக் கண்கள் அவளை ஒரு மார்க்கமாய் வேறு பார்த்து வைத்தன.....!



'என்ன பாட்டு பாடறான்.....?',நித்திலாவின் கவனம் முழுவதும்.....அவன் விசிலடிக்கும் பாடலின் மேல்தான் இருந்தது.என்னதான் யோசித்துப் பார்த்தும்....அவளால் அந்தப் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவும்,



"என்ன பாட்டு பாடறீங்க....?",என்று அவனிடமே கேட்டு விட்டாள்.



அப்பொழுதும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவன்....சிறு சிரிப்போடு....அதே பாடல் வரிகளை சீழ்க்கை ஒலியால் முணுமுணுக்க....



"ம்ப்ச்.....!என்ன பாட்டுன்னு சொல்லுங்க.....!",மெல்ல சிணுங்கினாள் அவள்.



"பாடிக் காட்டட்டுமா.....?",அவன் கண்ணடிக்க,



"ம்....!பாடுங்க.....!பாடுங்க.....!",அந்தக் கள்வனின் கள்ளத்தனத்தை அறியாதவளாய்....ஆசை ஆசையாய் தலையாட்டினாள் அந்தப் பாவை.



வசீகரப் புன்னகையுடன் அந்த வசீகரனும் பாட ஆரம்பித்தான்.



"இருளைப் பின்னிய குழலோ....?
இரு விழிகள் நிலவின் நிழலோ....?
பொன் உதடுகள் சிறு வரியில்
என் உயிரைப் புதைப்பாளோ.....?",




என்று பாடியவனின் விழிகள்....அவளது இதழ்களையே வண்டாய் மாறி மொய்த்தது.அவனது பார்வையில்....அவள் தனது கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.



அவன் மேலும் பாட ஆரம்பித்தான்.



"ரவிவர்மன் தூரிகை எழுத்தோ....?இல்லை....
சங்கில் ஊறிய கழுத்தோ.....?
அதில் ஒற்றை வியர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ....?",




காருக்குள் நிலவிய அந்த ஏ.சி குளிரையும் தாண்டி அவள் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன...!அதிலும்....அவள் நெற்றியில் உதித்த ஒற்றை வியர்வைத் துளி ஒன்று....கடகடவென்று ஓடி வந்து....அவளது கழுத்துச் சரிவில் உருண்டோடி மறைய....அவனது பார்வையும் அந்த வியர்வைத் துளியில் பின்னாலேயே பயணித்தது.அவனது பார்வையின் வேகத்தைத் தாங்காமல்...அவளது இதழ்கள்....அவளது பற்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது....!



"பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ....?
சின்ன ஓவியச் சிற்றிடையோ....
அவள் சேலை கட்டிய சிறு புயலோ....?",




இப்பொழுது....அவன் பார்வை....சிறிதும் வெட்கமில்லாமல்...அவன் பாடிய பாடல் வரிகள் உணர்த்திய இடங்களை மேய....அவள் தாள மாட்டாதவளாய்,"போ....போதும்.....!",என்று முணுமுணுத்தாள்.



"ஏன்.....?",அவன்தான் வெட்கங் கெட்டுப் போய்....அவளைப் பார்வையால் மேய்ந்தபடி....சிறிதும் கூச்சமில்லாமல் 'ஏன்....?' என்ற கேள்வியைக் கேட்டு வைக்கிறான் என்றால்....பாவையவளாலும் வெட்கங் கெட்டுப் போய் 'ஏன்....?' என்ற கேள்விக்கான காரணத்தை கூற முடியுமா.....?அவள் மௌனம் சாதித்தாள்.



"அடுத்த வரி பாடறேன்.....கேளு.....!",என்றவன்,



"என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்....அவை....
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்....!",




அவன் பாடிக் கொண்டே போக,"ஹைய்யோ.....!போதும்....!உங்க பாட்டை நிறுத்தறீங்களா....?",அவள் முகம் செம்பருத்தி பூவாய் சிவந்திருந்தது.முகம் சிவக்க....தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் இதழ்களில் ரசனையான புன்னகை ஒன்று வந்தமர்ந்தது....!



"எப்படி.....?என்னுடைய பாட்டு....?",அவன் புருவம் உயர்த்த..



"பாட்டை மட்டுமா டா நீ பாடின.....?ரௌடி.....!காதல் ரௌடி.....!அங்கே இங்கேன்னு அலைபாயற இந்தக் கண்ணை அப்படியே நோண்டனும்....!",செல்லமாக அவள்....அவனைத் திட்ட...



"ஹா...ஹா....!என் கண்ணு என்ன பேபி பண்ணுது.....?அது பாட்டுக்கு....அதுக்குப் பிடிச்சதை பார்க்குது....!"உல்லாசமாய் அவன் கூற...



"ச்சீய்....!பொறுக்கி....!வாயை மூடு டா....!",விளையாட்டாய் அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அவள்.இப்படியாக....சீண்டலுமாய்....மோகமுமாய் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்.இவர்கள் சற்று நேரமே வந்திருந்ததால்....அவ்வளவாக யாரும் வந்திருக்கவில்லை.இவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியதை...அங்கிருந்த சில நபர்கள் கவனித்தாலும்....M.D - செக்ரெட்டரி என்ற எண்ணத்தில்தான் ஆதித்யனையும் நித்திலாவையும் கவனித்தனர்.



நேரமாக ஆக....எம்ப்ளாயிஸ் அனைவரும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.அந்தப் பெரிய ஹாலை...வெள்ளையும் இள ரோஜா வண்ண பலூன்களும்....திரைச்சீலைகளும் அலங்கரித்திருக்க....ஆங்காங்கு அனைவரும் குழுவாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.



நேர்த்தியாக சீருடை அணிந்திருந்த சர்வர்கள்....கையில் பழச்சாறும்....உயர் ரக மது வகைகளும் அடங்கிய தட்டை ஏந்திக் கொண்டு....வந்திருப்பவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.மெல்லிய சிரிப்பொலிகளும்...மனதை மயக்கும் மென்மையான இசையும் அந்த ஹாலை நிறைத்திருந்தன.



நித்திலாவும் சுமித்ராவுடன் நின்றபடி....தங்களுடன் வேலை செய்யும் சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.ஆதித்யன்....அவனுக்கான நண்பர்களின் வட்டாரத்தோடு ஐக்கியமாகியிருந்தான்.



தங்க நிறத்திலான ஷிபான் சில்க்கில்....தங்கத் தாமரையாய் ஜொலித்துக் கொண்டிருந்த சுமித்ராவை....ஆதித்யன் அருகில் தங்களது நண்பர்களுடன் நின்றிருந்த கௌதமின் விழிகள் அவ்வப்போது ரசனையுடன் வருடிக் கொண்டிருந்தன....!சுமித்ராவின் விழிகளும்...தன்னவனின் பார்வைக் கணைகளை சந்தித்து...அவ்வப்போது அதை நாணத்துடன் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள்....!



"ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.....!",துறுதுறுப்பான ஒரு இளைஞனின் கலகலப்பான பேச்சில் அனைவரும் தங்களது பேச்சை நிறுத்தி ஆர்வத்துடன் அவனை நோக்கினர்.



"பார்ட்டின்னு இருந்தால் டான்ஸ்...மியூசிக் இருக்க வேண்டாமா....?அப்போத்தானே இடம் களைகட்டும்....!கமான் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்....!திஸ் ஃப்ளோர் இஸ் யுவர்ஸ்....!கமான்....!உங்க அழகான நடனத் திறமைகளை காட்டுங்க.....!",அவன் கூறி முடிக்கவும்....ஆரவாரமான கரகோஷம் ஒன்று எழுந்து அடங்கியது.



"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....!
அவள் வந்து விட்டாள்....!",




பிண்ணனியில் இரைச்சலில்லாத மென்மையான பாடல் ஒலிக்க....பெண்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னால் வந்து....அட்டகாசமாய் நடனமாட ஆரம்பித்தனர்.அந்த மெல்லிய இசைக்குத் தகுந்தவாறு....அந்தப் பெண்கள் ஆடிய நடனம் அங்கிருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.



அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் போது...நித்திலா....ஓரக் கண்ணால் ஆதித்யனைப் பார்க்க....அவளது பார்வையை விடாமல் தாங்கிப் பிடித்தவன்....ஒற்றை புருவத்தை மட்டும் 'என்ன....?' என்பது போல் உயர்த்தி....உதட்டைக் குவித்து ஒரு முத்தத்தை அவளை நோக்கி பறக்க விட....அவனது செய்கையில் விதிர்த்துப் போனவள்....'யாரேனும் பார்த்து விட்டார்களா...?',என்று அவசர அவசரமாக சுற்றும் முற்றும் பார்க்க....அனைவரும் அந்தப் பெண்களின் நடனத்தில் மூழ்கியிருந்தனர்.



"ஹப்பாடா......!",என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி...போலியான கண்டிப்புடன் அவள்....அவனைப் பார்க்க....அந்த மாயக் கண்ணனோ...தன் நண்பர்களுடன் எதையோ சிரித்துப் பேசிக் கொண்டே....இவளைப் பார்த்து வசீகரமாய் கண்ணடித்து வைத்தான்.



'ஹைய்யோ.....!',என்ற பதட்டத்துடன் மீண்டும் சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட்டாள் நித்திலா.



'யாரும் பார்க்கலை.....!',என்றபடி ஆதித்யன் அவளைப் பார்த்து உதட்டசைக்க,'ராட்சஸா....!அழகிய ராட்சஸா.....!',என்று முணுமுணுத்தவள்....தன் அருகில் நின்றிருந்த தோழி எதையோ கேட்கவும்....அவனைப் பார்த்து உதட்டை சுழித்தபடி திரும்பிக் கொண்டாள்.



அவளது உதட்டு சுழிப்பில் சிக்கி சிதறிக் கொண்டிருந்த மனதை....ஒருவழியாக மீட்டு...நடனத்தில் பார்வையை பதித்தான் ஆதித்யன்.அந்தப் பாடல் முடிந்து....அடுத்த பாடல் ஒலிபரப்பாகியது.



"லைஃப்புல ஃவைப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்.....!
வெயிட்டான பொண்ணை பார்த்தாலும்
ரைட்டாத்தான் நடக்கணும்....!",




இந்தப் பாடலுக்கு...கல்யாணமான கணவன்மார்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னே வந்து நடனமாடி....தங்களது மனைவிமார்களின் ஆசைப் பார்வையை வாங்கிக் கட்டிக் கொண்டது.



பேரர் ஒருவர்...மது வகைகள் அடங்கிய தட்டை...ஆதித்யனின் நண்பர்கள் வட்டாரத்தில் வந்து நீட்ட....ஆசையுடன் அதை எடுக்கப் போன ஆதித்யனின் விழிகள் ஒரு கணம் தயங்கி நித்திலாவை நோக்கியது.அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.



'வேண்டாம்....!',அவள் தலையசைக்க...அவன் முகம் காற்று போன பலூனாய் கூம்பிப் போனது.அவனது நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு கிளாஸை கையில் எடுத்துக் கொண்டு..."உனக்கு வேண்டாமா....?",என்றபடி ஆதித்யனைப் பார்க்க....அவனோ...."ம்....வேண்டாம்....!ஆமாம்....!",என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.அவனது பார்வை நித்திலாவிடம்தான் இருந்தது.



அவள் என்ன நினைத்தாளோ....தெரியவில்லை....!அவள் தன் கண்ணசைவிலேயே,'எடுத்துகோங்க....!பட்....லிமிட் தான்.....!',என்று கூற...அவன் முகம் மலர்ந்து ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டான்.



இவர்கள் நடத்தும் நாடகத்தை சுமித்ரா....ஒரு கள்ளச் சிரிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை....கெளதம் அவளிடம் கூறியிருந்தாள்.அன்றே...."ஏன் டி என்கிட்ட சொல்லல....?",என்று சண்டைக்கு வந்த சுமித்ராவை....பல காரணங்கள் கூறி....சில பல 'சாரி...' கேட்டு அவளை அமைதியாகியிருந்தாள் நித்திலா.



இவர்களது விளையாட்டில்....சுமித்ராவின் பார்வை தன்னிச்சையாய் உயர்ந்து தன்னவனை நோக்க....அவள் பார்வையை கண்டு கொண்டவனின் முகம் காதலால் மலர்ந்தது.



'உங்களுக்கு வேண்டாமா....?',சுமித்ரா மது வகைகளை சுட்டிக் காட்டி வினவ..



ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்தவன்...'எனக்கு இந்த மது வேண்டாம்....!வேற ஒண்ணுதான் வேணும்....!',என்றவனின் பார்வை அவளது சிவந்த இதழ்களில் நிலைத்து....பிறகு....தன் ஆள்காட்டி விரலால் தனது உதடுகளைத் தொட்டுக் காண்பிக்க..



இப்பொழுது,'அடியாத்தி....!',என்ற பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்ப்பது சுமித்ராவின் முறையாயிற்று.



'இங்கே வா....!',கெளதம் உதட்டசைவில் அவளை அழைக்க...



'ம்ஹீம்....!',தலையை ஆட்டி மறுத்தாள் அவள்.



'வா டி....!',அவன் மீண்டும் பிடிவாதமாய் அழைக்க..



'ம்ஹீம்....!',இப்பொழுது அவளது தலையாட்டலின் வேகம் குறைந்திருந்தது.



'ப்ச்...!வாடின்னா.....!' இம்முறை அவனது முகம் சற்று கோபத்தைக் காட்டியது.



'எல்லாரும் இருக்காங்க....!',அவள் சுற்றும் முற்றும் பார்க்க..



'அப்ப....வெளியில இருக்கிற கார்டனுக்கு வா.....!',அவன் கண்ணசைவிலேயே கட்டளையிட்டு விட்டு வெளியேறினான்.



'இப்போத்தான் நம்ம மேல இருக்கிற கோபம் குறைஞ்சிருக்கு....!போகலைன்னா....மறுபடியும் மூக்குக்கு மேல கோபம் வந்திடும்.....!',மனதிற்குள் எண்ணியவள்...நித்திலாவிடம் 'ரெஸ்ட் ரூம்...' என்று கூறிவிட்டு வெளியேறினாள்.



பசுமைப் புல்வெளி போர்த்தியிருந்த தோட்டத்தில் யாரும் இல்லை.சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்த சுமித்ராவின் பின்னால் பூனை போல் பதுங்கி பதுங்கி வந்தவன்....பின்னாலிருந்தபடியே தன் இரு கைகளாலும் அவள் இடையைப் பற்றி உயரத் தூக்க..



"ஹைய்யோ....!",கால் கொலுசு சப்தமிட மெலிதாக கூச்சலிட்டாள் அவள்.அவளுக்குத் தெரியும்....அவன் தான் என்று....!



"என்ன இது....?கீழே இறக்கி விடுங்க.....!யாராவது பார்த்திட போறாங்க....!",கால்களை ஆட்டியபடி மறுத்தவளை அலேக்காக தூக்கிச் சென்றவன்....இருளின் நிழல் படிந்திருந்த ஒரு மரமல்லி மரத்தின் கீழ் சென்றுதான் இறக்கி விட்டான்.



"இப்படியா பண்ணுவீங்க.....?",அவன் தன்னை தூக்கியதால் இடைப்பகுதியில் நெகிழ்ந்திருந்த புடவையை சரி செய்தபடியே அவள் சிணுங்க...



புடவையை சரி செய்ய விடாமல் அவளைத் தடுத்தவன்....அவளது வெற்று இடையில் தன் கரங்களை அழுத்தமாகப் பதித்து....அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.



அவள் கழுத்தில் முகம் புதைத்து...அவளை வாசம் பிடித்தவன்,"ம்ஹா....!எவ்வளவு நாள் ஆச்சு டி....!இந்த கொஞ்ச நாளா கோபம்...பிரச்சனை....டென்க்ஷன்னே ஓடிடுச்சு....!",கழுத்தில் முகம் புதைத்தபடியே அவன் பேச....



நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அவனுடைய நெருக்கத்தில் தன்னை மறந்தாள் அவள்.



"இந்தப் புடவையில ரொம்ப அழகா இருக்க டி ராட்சசி....!",என்றவனின் கரங்கள்...அவளது வெற்று இடையில் ஊர்ந்தன.



"ஊஹீம்.....!",என்றபடி புடவையை இழுத்து இடையை மறைக்க முயன்றாள் அவள்.



"ப்ச்....!",சலித்தபடி அவள் கையைத் தட்டி விட்டவன்,"ஹனி....!எனக்கு இப்பவே ஹனி வேணும்.....!",அவனது வார்த்தைகள் பிதற்றலுடன் வெளி வந்தன.அவனது உதடுகளோ....அவளது இதழ்களை நோக்கி ஊர்ந்தன.



"யாராவது பார்த்திட போறாங்க.....!",அவள் வாய் அப்படிக் கூறினாலும்....அவளது கைகள் அவனது கழுத்தைச் சுற்றி வளைத்தன.



"இங்கே யாரு டி வர போறாங்க.....?",என்றவனின் உதடுகள்....அவளது தேன் சுரக்கும் இதழ்களை கவ்விக் கொள்ளும் நேரம்..



"அதோ....நம்ம கெளதம் அங்கே இருக்கான் பாருங்க.....!",என்ற ஆதித்யனின் குரலில் அவன்....அடித்துப் பிடித்துக் கொண்டு சுமித்ராவிடம் இருந்து விலகினான்.'என்ன செய்வது....?',என்று தெரியாமல் சுமித்ராவும் அவசர அவசரமாக விலகி நின்று கொண்டாள்.



அங்கிருந்து பார்த்தவர்களுக்கு கௌதமின் முதுகு மட்டும்தான் தெரிந்தது.சுமித்ரா நின்றிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.அருகில் நெருங்கவும்தான் அங்கு....சுமித்ரா இருப்பது தெரிந்தது....ஆதித்யனின் நண்பர்கள் பட்டாளத்திற்கு....!



'ஆஹா....!தப்பான நேரத்துல வந்துட்டோம் போலவே.....?',ஆதித்யன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே....கெளதம் அவனைப் பார்த்து கொலைப்பார்வை ஒன்றை வீசி வைத்தான்.அதைப் பார்த்த ஆதித்யனுக்கு சிரிப்புதான் வந்தது.



அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த அந்த நண்பர்கள் பட்டாளம்,"டேய் மச்சான்.....!இங்கே என்னடா பண்ணற....?இந்தப் பொண்ணு யாரு....?",என்று கேள்வி கேட்கத் தொடங்க..



'மவனே....!உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன் டா....!',ஆதித்யனைப் பார்த்துக் கறுவியவன்....நண்பர்களைப் பார்த்து,"இவள்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு டா....!சுமித்ரா.....!",என்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன்....சுமித்ராவிடமும் அனைவரையும் அறிமுகப்படுத்தினான்.



"ஓ...ஹோ....!",ஆர்பாட்டமாய் கூச்சலிட்ட நண்பர்கள் பட்டாளம்,"சிஸ்டர் கூட ரொமான்ஸ் பண்ணும் போது கரடிகள் மாதிரி வந்து கெடுத்திட்டோமா....?",கௌதமை கலாய்த்தவர்கள்....இருவருக்கும் வாழ்த்து கூறவும் மறக்கவில்லை.ஒரு வெட்கப் புன்னகையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
"இதுக்குத்தான் மச்சான்....பெரியவங்க சொல்லி வைச்சிருக்காங்க....!தன் வினை தன்னைச் சுடும்ன்னு....",அன்று நித்திலாவுடன் இருந்த போது பூஜை வேளைக் கரடியாக வந்து தொல்லை செய்ததை நினைவு கூர்ந்தபடி ஆதித்யன்....கௌதமின் காதோரம் கிசுகிசுக்க..



"கிராதகா....!நீயெல்லாம் நல்லாயிருப்பியா டா....!",பல்லைக் கடித்தான் கெளதம்.



அதற்குள் அவன் நண்பர்கள்,"சரிப்பா....!கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்....!வாங்க....!நாம உள்ளே போகலாம்...!",என்றபடி நகர....கௌதமின் முகம் மலர்ந்தது.



அதைக் கண்ட ஆதித்யன்,"அட....!இருங்கப்பா....!இவங்க என்ன பேச போறாங்க....?அதுதான் தினமும் ஆபிஸ்ல மீட் பண்ணிக்கறாங்களே....!நாம கௌதமையும் உள்ளே கூட்டிட்டு போவோம்....!இன்னைக்குத்தான் நாம எல்லாம் ஒண்ணா இருக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு....!",வேண்டுமென்றே அவர்களைத் தடுத்து நிறுத்தியவன்,



சுமித்ராவிடம் திரும்பி,"ஸாரிம்மா....!உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே....?இன்னைக்கு ஒருநாள் உன் கௌதமை எங்ககிட்ட வாடகைக்கு விட்டு விடு....!",என்று கூற...



"அய்யோ....சார்....!எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல....!நீங்க தாராளமா கூட்டிட்டு போங்க....!",புன்னகையுடன் கூறினாள் சுமித்ரா.



கௌதமின் விழிகளோ...'இருடி....!உனக்கு இருக்கு கச்சேரி....!' என்று ரகசியமாய் மிரட்டியது.



இதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் பட்டாளமும்,"ஆதி சொல்றதும் சரிதான்....!அதுதான் சிஸ்டரே சொல்லிட்டாங்களே...?அப்புறம் என்ன....கெளதம்....!நீயும் வாடா.....!",என்றழைக்க..



கௌதமோ....'வெட்டவா...இல்லை....குத்தவா....?',என்பது போல் ஆதித்யனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.



அவனது பார்வையைக் கண்டும் காணாமல் விட்ட ஆதித்யன்...சுமித்ராவிடம்,"இன்னும் என்னம்மா 'சார்'ன்னு கூப்பிட்டுட்டு இருக்க....?'அண்ணா'ன்னு கூப்பிடு.....!உங்க கல்யாணத்துல....உனக்கு அண்ணனா இருந்து நான்தான் எல்லா கடமையையும் செய்யப் போறேன்....!",அன்று கௌதமிடம் கூறியதையே....இன்று....சுமித்ராவிடமும் கூற...அவள் முகம் பூவாய் மலர்ந்தது.



தன் பிறந்த வீட்டு உறவுகளே....தன் உணர்வுகளை மதிக்காத நிலையில்...ஆதித்யன் இவ்வாறு கூறவும்....அவளுக்கு கண்கள் கலங்கியது.



"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.....!",என்றாள் முகம் முழுக்க புன்னகையோடு.



அதன் பிறகு சிறிது நேரம் பேசி விட்டு....கையோடு கௌதமையும் அழைத்துக் கொண்டுதான் அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.



"மவனே....!உனக்கு கல்யாணமான அன்னைக்கே பர்ஸ்ட் நைட் நடக்காது டா....!இதுதான் என்னுடைய சாபம்....!",கெளதம்....ஆதித்யனின் காதைக் கடிக்க...



"பரவாயில்லை டா மச்சான்....!பர்ஸ்ட் நைட் இல்லைன்னா என்ன....?பர்ஸ்ட் பகல் கொண்டாடிக்கிறேன்....!",கண்ணைச் சிமிட்டிய ஆதித்யனைக் கண்டு,,,கௌதம்தான் பாவம்....கொலை வெறியாகிப் போனான்.



"ஒகே....லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்...!இப்போதான் பார்ட்டி களைகட்ட ஆரம்பிக்குது....!இது வரைக்கும் எல்லோரும் சிங்கிளா டான்ஸ் பண்ணியாச்சு....!இனி ஜோடி டான்ஸை பார்ப்போம்.....!கமான் கைஸ்....!விருப்பமுள்ள ஜோடிகள் வந்து டான்ஸ் பண்ணலாம்....!கமான்...கமான்...!",அந்த இளைஞன் உற்சாகத்துடன் குரல் எழுப்ப...அனைவரும் மகிழ்ச்சியாய் ஆர்ப்பரித்தனர்.



"வாவ்....!சூப்பர்....!",குழந்தையின் குதூகலத்தோடு ஆர்ப்பரித்த நித்திலாவை ஆதித்யன் விழிகள் ரசனையுடன் அளவிட்டது.அவன் விழிகள் மட்டுமா அவளை ரசித்தன....?அவள் அந்த பார்ட்டி ஹாலில் நுழைந்ததில் இருந்து....அவளுடைய ஒவ்வொரு செய்கையையும்....இன்னொரு ஜோடி விழிகள் காதலுடன் ரசித்துக் கொண்டிருந்தன.



அவளது ஒவ்வொரு அசைவையும் ரசித்தாலும்....அவள்...ஆதித்யனுடன் நடத்திய ரகசிய உரையாடலை கவனிக்காமல் விட்ட....அந்த விழிகளின் துரதிருஷ்டத்தை என்னவென்று சொல்வது....?காதலின் விளையாட்டு என்றா....?இல்லை...விதியின் சாபம் என்றா....?



அந்த விழிகளுக்கு சொந்தக்காரன் யாராய் இருக்க முடியும்....?நித்திலாவை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் பாலாவைத் தவிர....!



"கமான் பிரெண்ட்ஸ்.....!ரியல் ஜோடிகள் தான் டான்ஸ் பண்ணனும்ன்னு இல்ல....ரீல் ஜோடிகள் கூட டான்ஸ் பண்ணலாம்....!வாங்க....!",அந்த இளைஞன் அழைக்க...பல ஆண்களும்...பெண்களும் முன் வந்தனர்.



"நித்தி....!நீயும் போய் டான்ஸ் பண்ணலாம்ல....?",அவளது தோழிகள் கூற...



"டான்ஸெல்லாம் எனக்கு வராதுப்பா....!அதுவும் இல்லாம....என் ஜோடிக்கு நான் எங்கே போகட்டும்....?",விளையாட்டாய் மறுத்தாள் நித்திலா.



"உனக்கா ஜோடி கிடைக்காது....?நம்ம ஆபிஸ்ல உன்னை சைட் அடிக்கற எவனாச்சு ஒருத்தன் வந்து மாட்டுவான்...!போ....!",என்றபடி அவளைப் பிடித்து தள்ளி விட்டனர்.



நடனம் ஆடுவதற்கு ஏதுவாக அனைவரும் ஜோடியாக அணிவகுத்திருக்க....அனைத்து பக்கமிருந்த லைட்டிங்ஸ்சும் நடன ஜோடிகளின் மீது திருப்பப்பட்டது.மனதிற்குள் தோழிகளைத் திட்டியபடி....அவள்....அங்கிருந்து நகர்வதற்கு முன்பாகவே பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.



"முன் தினம் பார்த்தேனே....!
பார்த்ததும் தோற்றேனே....!
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே....!",




பாடலுக்கு ஏற்றவாறு அனைத்து ஜோடிகளும் நெருக்கமாக நடனமாட ஆரம்பிக்க....அந்தப் ஃப்ளோரில் நித்திலாவைக் கண்டதும்....அவளுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் உற்சாகமாக கூச்சலிட ஆரம்பித்தனர்.



மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முன் ஒரு கரம் நீண்டது. ஒற்றைக் காலை மடித்துத் தரையில் மண்டியிட்டபடி....அவளின் முன் தனது வலது கையை நீட்டியிருந்தான் பாலா.அவன் கண்கள்....அவளிடம் காதல் வரத்தை யாசித்துக் கொண்டிருந்தன...!என்ன யாசித்து என்ன பயன்....?அந்தப் பேதை அதைப் புரிந்து கொள்ளவில்லையே....!அந்த நிலையிலும் அவள்....அவனை ஒரு நண்பனாகத்தான் பார்த்தாள்.



"பாலா....!",என்றபடி அவனைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தவளை....சுற்றியிருப்போரின்,"கமான் நித்திலா....!",என்ற கரகோஷம் முடுக்க....'சரி...!பிரெண்ட்தானே....!',என்ற நினைவோடு....தன் முன் நீண்டிருந்த அவன் கரத்தோடு....தன் கரத்தைப் பிணைக்கும் நேரம்....எங்கிருந்துதான் வந்தானோ தெரியவில்லை.....!புயல் வேகத்தில் அங்கு வந்த ஆதித்யன்....அவள் கையைப் பற்றி லாவகமாக சுண்டியிழுக்க....ஒரு வித லயத்துடன் இரண்டு முறை சுழன்று வந்து....அவன் நெஞ்சில் விழுந்திருந்தாள் நித்திலா.



தன் நெஞ்சில் விழுந்தவளின் தோளைச் சுற்றி கைகளால் அணைத்தபடி...இசைக்குத் தகுந்தவாறு....அவன் நடனமாட ஆரம்பிக்க....சுற்றியிருந்தோரின் உற்சாக கரகோஷமும்..."ஹா...!வாவ்....!",என்ற ஆரவாரங்களும் காதைப் பிளந்தன.



ஆதித்யன்....நித்திலாவை இழுத்த வேகமும்...அவள்...அவன் மார்பில் விழுந்த வேகமும் ஒரு நடன அமைப்பை போலவே அமைந்து விட....அங்கிருக்கும் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.அதற்குள்....இதை அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த பாலாவுடன் இணைந்து....இன்னொரு பெண் நடனமாட ஆரம்பிக்க....யாருக்கும் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.அங்கிருக்கும் நால்வரைத் தவிர....!



இருவர் கெளதம்...சுமித்ரா....!மற்ற இருவர்...ஆதித்யன் மற்றும் பாலா...!ஆம்...!அவளை இழுக்கும் போது....ஆதித்யனின் கண்களில் தெரிந்த உரிமை கலந்த கோபத்தை பாலா கண்டுகொண்டான்.அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே அந்தப் பெண்ணுடன் நடனமாட ஆரம்பித்தான்....!



"துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்....
துலாபாரம் தோற்காதோ...பேரழகே....!
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே....!",




தன்னுடன் ஆடுவது ஆதித்யன் என்று தெரிந்ததும் நித்திலாவின் மனம் குதூகலமடைந்தது.அவனுக்கு ஈடு கொடுத்தவாறு நடனமாட ஆரம்பித்தாள்.அவனது ஒரு கை நித்திலாவின் இடையைப் பற்றியிருக்க....இன்னொரு கரமோ....அவளது கரத்தோடு இணைந்திருந்தது.நித்திலா....அவன் தோளைப் பற்றியபடி....அவனது கண்களைப் பார்த்தவாறே நடனமாடினாள்.



"ஓ...நிழல் போல விடாமல் உன்னைத் தொடர்வேனடி....!
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி....!
வினா நூறு....கனாவும் நூறு....!
விடை சொல்லடி....!",




தங்களது M.D நடனமாடுவது அந்தப் பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்திருந்தது.இதுநாள் வரை....'கடுகடு'வென்ற முகத்துடன் அலுவலகத்தில் வலம் வந்தவன்....இன்று புன்னகை முகமாய் நடனமாடுவது....அவர்களை ஆச்சரியப்படுத்தியது.



"கடல் நீரும் பொங்கும் நேரம்....
அலை வந்து தீண்டும் தூரம்....
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே....!
தலை சாய்க்க தோளும் தந்தாய்....!
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்....!
இதழ் மட்டும் இன்னும் ஏன் ...தூரத்திலே....?",




அவன்....விழிகளாலேயே அவளிடம் கேள்வி கேட்க....அவளோ....உதட்டைச் சுழித்து ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தாள்.அவனுடைய ஒவ்வொரு அசைவும் அவள் மீதான காதலை பிரதிபலிக்க....அதற்கு இணையான காதலை....தன் விழிகளில் தேக்கியபடி நடனமாடிக் கொண்டிருந்தாள் நித்திலா....!இதை அனைத்தையும் வேதனை நிறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.



"பகல் நேரம் கனாக்கள் கண்டேன்....உறங்காமலே....!
உயிர் இரண்டும் உராயாக் கண்டேன்....நெருங்காமலே....!
உனையன்றி எனக்கு ஏது....எதிர்காலமே....!",




மிக அழகாக தனது காதலை அவனிடம் எடுத்துரைத்தாள் நித்திலா.அவளது விழிகளில் வழிந்த காதலில்....ஒருவன் மயங்கிக் கிறங்கி மூழ்கிப் போய் உயிர்த்தெழுந்தான் என்றால்....இன்னொருவனோ....இதயம் துடிக்க துடிக்க....உயிரோடு செத்துக் கொண்டிருந்தான்.இறுதியில் பாடல் முடியும் போது....அவளது இடையை இரு கைகளாலும் பற்றித் தன் உயரத்திற்கு தூக்கியபடி....ஒரு சுழற்று சுழற்றி இறக்கி விட....அந்த ஹாலில்....கரகோஷம் அடங்க வெகு நேரமானது.



உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனும் வாயடைத்துப் போய் நின்றிருந்தான்.



"வாவ்....!நம்ம ஆதித்யன் சார்....இவ்வளவு அழகா டான்ஸ் பண்ணுவாருன்னு நாங்க யாருமே நினைச்சுப் பார்க்கலை....!அண்ட்....நித்திலா மேடம்....!யுவர் டான்சிங் ஆல்சோ அமேஸிங்....!",அந்த இளைஞன் கூற....அனைவரும் அதை ஆமோதித்தனர்.



ஆனால்....இதை அனைத்தையும் வலியோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜீவனை....அங்கிருந்த யாருமே கவனிக்கவில்லை.பாலாவின் இதயத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாள்....அவன்....எதற்காக ஏங்கினானோ....அந்தக் காதலை....அவன்....நித்திலாவின் விழிகளில் கண்டான்...!அந்தோ பரிதாபம்....!அவள் விழிகளில் தெறித்து விழுந்த காதல் அவனுக்கானதால்ல....!வேறொருவனுக்கானது.....!இந்த நினைவே....அவனைத் துடிக்கச் செய்வதற்கு போதுமானதாக இருந்தது.



கத்தியின்றி...இரத்தம் இல்லாமல் அவன் செத்துக் கொண்டிருந்தான்....!நித்திலாவின் விழிகளில் தெரிந்த காதலும்....அவள் முகத்தில் மலர்ந்திருந்த புன்னகையும் அவனைக் கொன்று போட்டுக் கொண்டிருந்தது.அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மூச்சடைக்க....அவன் வெளியேறிவிட்டான்.



பஃபே முறையில் உணவு பரிமாறப்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.மணி ஒன்பதாகவும்....நித்திலாவும் ஆதித்யனிடம் சொல்லி விட்டுக் கிளம்புவதற்காக அவனருகில் வந்தாள்.சுமித்ரா எப்பொழுதோ கிளம்பியிருந்தாள்.அவளை ட்ராப் பண்ணுவதாக கூறிவிட்டு கௌதமும் அப்பொழுதே கிளம்பியிருந்தான்.



நித்திலா போகும் போது...ஒரு கூட்டம் ஆதித்யனிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது.



"ஒகே சார்....!நான் கிளம்பறேன்....!",அனைவரும் இருப்பதால் அவள்...அவனை 'சார்' என்றழைக்க..



"ஒரு நிமிஷம் நித்திலா....!இப்போத்தான் ஒரு டென்டருக்கான மெயில் வந்துச்சு....!ஆபிஸ் வரைக்கும் போக வேண்டிய வேலையிருக்கு....!ஸோ....கொஞ்சம் வெயிட் பண்ணு....!",கட்டளை போல் உரைத்து விட்டு....தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர்களின் புறம் கவனத்தைத் திருப்பினான் ஆதித்யன்.



அனைவருக்கும் முன்பு எதிர்த்து வாதிடவும் முடியாமல்,"சார்....!இட்ஸ் கெட்டிங் லேட்....!மை பிரெண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்....!",அவள் கூறவும்....அவளுக்கருகில் நின்றிருந்த அவளது தோழிகளைப் பார்த்தவன்,



"நீங்க கிளம்புங்க....!உங்க பிரெண்டை நான் பத்திரமா ஹாஸ்டல்ல இறக்கி விட்டர்றேன்.....!",எனவும்...தோழிகள் அனைவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.



அனைவரும் வந்து போய் கொண்டிருக்கவும்....அவளாலும் ஆதித்யனிடம் எதையும் பேச முடியவில்லை.ஒருவாறாக....அரை மணி நேரத்திற்கு பிறகு....அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படி மேனேஜரிடம் கூறி விட்டு....நித்திலாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஆதித்யன்.



"ஆது....!இந்த நேரத்துல என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க.....?மணி என்னன்னு தெரியுமா....?பத்து மணிக்குள்ள நான் ஹாஸ்டல்ல இருக்கணும்....!",அவள் பாட்டுக்கு கத்திக் கொண்டிருக்க....அவன் பாட்டிற்கு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



"உங்ககிட்டேதான் பேசிக்கிட்டு இருக்கேன் ஆது....!பத்து மணிக்கு மேல ஹாஸ்டலுக்கு போனா....உள்ளே விட மாட்டாங்க....!மணி இப்போ 9.45....",அவளைத் திரும்பிப் பார்த்தவன்,



"உள்ளே விடலைன்னா ரொம்ப சந்தோஷம்....!நீ என் கூடவே...நம்ம வீட்டிலேயே தங்கிக்கலாம்....!ஆனால் பேபி...உன் ஹாஸ்டல்ல எத்தனை மணிக்கு போனாலும்....உள்ளே அனுமதிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்....!",அசால்ட்டாக கூறிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.



"உங்களுக்கு எப்படித் தெரியும்....?",



"பின்ன....உன் ஹாஸ்டலைப் பத்தி விசாரிக்காம....அதனோட சேஃப்டி எப்படின்னு தெரியாம....உன்னை இவ்வளவு நாள் அங்கே தங்க வைச்சிருப்பேன்னா நினைக்கிற.....?நெவர்....!நீ சென்னையில வந்து இறங்கின அன்னைக்கே....நீ தங்கியிருக்கிற 'தளிர் ஹாஸ்டல்' பத்தி விசாரிக்கச் சொல்லி டிடெக்ட்டிவ் ஏஜென்சிக்கு சொல்லிட்டேன்.....!",



அவனுடைய காதலில்....எப்பொழுதும் போல்....அப்பொழுதும் சுகமாய் தொலைந்து போனாள் அந்தப் பாவை....!அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.



'ஒருவேளை...பாலாவோட டான்ஸ் பண்றதுக்கு ரெடியானேனே....அதனால கோபமா இருக்காரே....?',என்று எண்ணமிட்டபடி....அவன் முகத்தைப் பார்க்க...அவன் முகத்தில் கோபம் இல்லை.



ஆனால்...அவன் அப்பொழுது பாலாவை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.நித்திலாவின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் கண்களில் அப்படியொரு காதல் தெரிந்தது.அதை அந்த காதலுக்கு உரியவள் கண்டு கொள்ளவில்லை.ஆனால்....அந்தக் காதலுக்கு உரியவளின் காதலுக்கு உரியவன் கண்டுகொண்டான்.ஆதித்யனின் முகத்தில் யோசனை வந்தமர்ந்தது.



அதற்குள் அலுவலகத்திற்குள் கார் நுழையவும்,"ஆது....!உண்மையாலுமே ஆபிஸ்ல வேலையிருக்கா....?நீங்க சும்மா சொல்றீங்கன்னு நினைச்சேன்....!என்ன வேலை....?",கேள்வி கேட்டாள் அவள்.



"ம்....சொல்றேன்.....!இறங்கு....!",அவன் முகத்தில் இப்போது குறும்புப் புன்னகையொன்று குடியேறியிருந்தது.



'இந்த நேரத்துல என்ன வேலையோ தெரியல....?இவருதான் தூங்க மாட்டாருன்னா....என் தூக்கத்தையும் கெடுக்கிறாரு....!',புலம்பியபடியே ஆதித்யனின் அலுவலக அறைக்குள் நுழைந்தவள்...ஆதித்யனிடமிருந்து எந்த சத்தமும் வராமல் போகவும் திரும்பிப் பார்த்தாள்.திரும்பி பார்த்தவளின் விழிகள் இன்னும் அகலமாக விரிய....பயத்தில் அவளது நாக்கு சென்று மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.



அவள் பயத்திற்கும் ஒரு காரணம் இருந்தது.அவள் பின்னாலேயே உள்ளே நுழைந்த ஆதித்யன்...அந்த அலுவலக அறையின் கதவைப் பூட்டியதோடல்லாமல்....தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி....அருகில் இருந்த சோபாவில் வீசிவிட்டு....அவனது சட்டையின் முதலிரண்டு பட்டன்களை வேறு கழட்ட ஆரம்பித்தான்.அவன் கண்களில் அப்படியொரு வேட்கை தெரிந்தது.



"எ...என்ன....?",பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க....அவள் மெதுவாக பின்னால் நகர்ந்தாள்.



அவன் என்னவோ....எதார்த்தமாகத்தான் சட்டையை கழட்டினான்.அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் அவனுக்குள் சுவாரசியம் வந்தது.அவளது பயமே...அவனது மோகத்தை தூண்டி விட...அவன்...அவளை நெருங்கினான்.



"நான் உன்கிட்ட என்ன சொன்னேன்....?",தனது சட்டையின் கை பட்டனை கழட்டியபடியே அவன் வினவ..



"எ...என்ன சொன்னீங்க....?",திணறினாள் அவள்.



அதற்குள் அவன் தனது முழுக்கை சட்டையை மேலேற்றியபடி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருந்தான்.



"எ....எதுக்கு ச....சட்டையை கழட்டறீங்க....?",அவள் பின்னால் நகர..



"இனி....அது தேவையில்லை பேபி....!அது இருந்தா...நமக்கு இடைஞ்சலா இருக்கும்....!சரி சொல்லு....!நான் உன்கிட்ட என்ன சொல்லியிருந்தேன்....?",இப்போது அவனது கைகள்....அவனுடைய பெல்ட் பக்கிள்ஸை விடுவிக்க....அவள்....பயத்தில் வியர்த்து விறுவிறுத்து போனாள்.



அவளது விழிகளில் தெரிந்த மிரட்சியில் அவன் கள்ளுண்ட வண்டானான்...!



"ஹைய்யோ....!அதையெல்லாம் எதுக்கு க...கழட்டறீங்க....?",பதறியபடி அவள் வேகமாக பின்னால் நகர..



தனது கையில் இருந்த பெல்ட்டை....மாலையாக்கி அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்,"சொல்லு டி....?நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.....?",மீண்டும் அவன் அதே கேள்வியைக் கேட்க...இப்போது....அவன் கைகள் அவளை அணைத்து தனக்குள் சிறை வைத்தன.



"எ...என்ன சொன்னீங்க.....?",அவள் மீண்டும் வார்த்தைகளுக்கு தந்தியடிக்க...



"இன்னொரு முறை உன்னை புடவையில் பார்த்தேனா....அப்புறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லைன்னு சொன்னேனா.....இல்லையா....?",அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் வந்து மோதியது.



எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி...அவள் மிரண்டபடியே நிற்கவும்,"சொல்லு டி....?",என்றபடி அவளை....மேலும் தன்னுடன் இறுக்கினான் அவன்.



"ஆ....ஆமா....!",திணறியபடியே வந்து விழுந்தன வார்த்தைகள்.



"ஸோ...இப்போ....இங்கே நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பில்லை.....!",என்றபடியே அவள் கழுத்து சரிவில் முகம் புதைக்க...



"ஆது....!நோ....!",பதட்டத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.



"என்ன பேபி.....?நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல....அதுக்குள்ள....உனக்கு இப்படி மூச்சு வாங்குது....?",அவன் குறும்பாய் கண்ணைச் சிமிட்ட..



அவன் அசந்த நேரம் பார்த்து....அவனைத் தள்ளி விட்டு விட்டு இவள் ஓட....இரண்டே எட்டில் அவளை அடைந்தவன்....அவளுக்குப் பின்னால் இருந்தபடியே....அவளது வயிற்றில் கரம் பதித்து தன்னை நோக்கி இழுத்தான்.



இவள் ஓடிய வேகத்திலும்....அவன்....அவளை இழுத்த அவசரத்திலும்....அவளது புடவை விலகி....அவளது குழைவான வயிற்றுப் பிரதேசத்தில் அவனது ஒற்றைக் கை பதிந்திருந்தது.இருவருமே இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை.



தனது கைகள் பதிந்த அந்தப் பகுதியின் மென்மையில் கரைந்து போய் ஆதித்யன் நிற்க....தனது வெற்று வயிற்றில் பதிந்த அவனுடைய உள்ளங்கை சூட்டில் உருகிப் போனவளாய் நின்றிருந்தாள் அவள்.



அந்த நிலையிலேயே....அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கியவனின் உதடுகள்....அவளது வெற்று முதுகில் ஊற ஆரம்பித்தன.அவள்....தனது கூந்தலை முன்புறமாக போட்டிருந்தது அவனுக்கு வசதியாய் போக....அவனது உதடுகள் அவளது முதுகில் இன்ச் இன்ச்சாக நகர்ந்தன.



முன்புறம் இருந்த கரமோ....இன்னும் தன் அழுத்தத்தைக் கூட்டியது.அவனது நெருக்கத்தில்....அவள் கொஞ்ச கொஞ்சமாய்....காணாமல் போய்க் கொண்டிருந்தாள்.முதுகில் ஊர்ந்த அவனுடைய உதடுகள்....அவளது பிடரியில் அழுத்தி ஒரு முத்தம் வைத்து விட்டு....அவளது தோள் வளைவில் இளைப்பாறின.



வயிற்றில் பதிந்திருந்த கரமோ இன்னும் கொஞ்சம் முன்னேறி....தனது ஆராய்ச்சியைத் தொடங்க....நித்திலாவின் உடல் ஒரு முறை துள்ளி அடங்கியது.அவனது உதடுகள் வழங்கிய சூடான முத்தங்களிலும்....அவனது ஒற்றைக்கரம் நிகழ்த்திய மாயாஜாலங்களிலும்....அவளது மயிர்க்கால்கள் சிலிர்த்து எழுந்தன.



இருவருக்குமே....உச்சந் தலையிலிருந்து....உள்ளங்கால் வரை வேக வேகமாக புது இரத்தம் பாய....இருவருக்குள்ளும் ஹார்மோன்கள் ஆட்டம் போடத் தொடங்கின...!



அதன் விளைவு....அவள் பின்புறமாகவே அவன் மீது சாய....அவனோ...தனக்குள் நடந்த உணர்ச்சிப் போராட்டத்தைத் தாங்க முடியாமல்....அவளது தோள் வளைவில்....தனது பற்களால் தடம் பதித்தான் சற்று முரட்டுத்தனமாகவே....!



வலிதான்....!ஆனால்...அதுவும் சுகமானதொரு வலியாக....தேவையானதொரு வலியாக மாறிப் போனது அந்த மங்கைக்கு....!



அவளது மேனியில் தனது கரங்களை மேலும் மேலும் முன்னேற விட்டவன்....தனது கரங்களின் அழுத்தத்தை கூட்டிக் கொண்டே போனான்.அவனது செயல்களுக்கு....அவள் அணிந்திருந்த புடவை மேலும் வசதி செய்து கொடுக்க....அவன் பாடு கொண்டாட்டமானது....!



மயங்கி கிறங்கிப் போய் நின்றிருந்தவளின் பெண்மை....அவளது காதோரத்தில் ஒலித்த அவனது சீறலான மூச்சுக்காற்றில்....பட்டென்று விழித்துக் கொண்டது.எச்சரிக்கை உணர்வு தலை தூக்க..



"நோ ஆது....!இது வே...வேண்டாம்.....!",என்றாள் முணகலாக.



"ஏன்....?",முரட்டுத்தனமாக கேட்டவனின் உதடுகள்....அதை விட முரட்டுத்தனமாக அவளது காது மடலை கவ்வியது.



பாவம்....அந்தப் பேதையவள்....!'ஏன்...?' என்று கேட்டால் என்னவென்று சொல்வாள் அவள்....? 'திருமணத்திற்கு முன்பு இது தவறு...!',என்று அவள் கூறினால்....'ஸோ வாட்....?' என்று அசட்டையாக கேட்டு வைப்பான் அவன்...!அதையும் மீறி...'நோ ஆது....!' என்று இவள் பிடிவாதத்தால்...'அதுதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே......?' என்று அவள் கழுத்தில்...அவன் அணிவித்த செயினை காட்டி வைப்பான் அந்தக் காதல் முரடன்.....!



அவளது பலவீனமே....அவளுடைய காதுமடல்தான்....!அங்கு....அவனுடைய மூச்சுக்காற்று பட்டாலே....அவள்...மயங்கி நின்று விடுவாள்.இன்றோ...அந்த இடத்தில் அவனது உதடுகள் நடத்திய ஊர்வலத்தில்....பெண்ணவள் தன்னையும் மறக்கத் தொடங்கினாள்.



"ஆது....!",அழைக்க முயன்றாலே தவிர....வார்த்தை வரவில்லை....!வெறும் காற்றுதான் வந்தது.



அவனது கரத்தின் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக....அவள்....அவன் கரத்தின் மீது தனது கையை வைத்தால்....அந்தக் கள்வனோ....அவளது கரத்தையும் சேர்த்து துணைக்கழைத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.



பின்புறமாகத் திரும்பி நிற்பதால்தானே....இவனது கரங்களுக்கு அணை போட முடியவில்லை....?இப்பொழுது பார்....!என்று எண்ணியபடி அவள்...முயன்று முன்புறமாகத் திரும்பி....அவன் முகம் பார்க்க....அந்த விஷமக்காரனுக்கு இன்னும் வசதியாய் போனது.முன்பு....அவனது கரங்கள் பதிந்த இடங்களில்...இப்பொழுது அவனுடைய உதடுகள் பதிந்து....தனது முத்தாரத்தைத் தொடங்கின....!



எங்கேயோ பறக்க இருந்த உடலையும்....மனதையும் முயன்று வெகு சிரமப்படுத்த தனது கட்டுக்குள் கொண்டு வந்தவள்....அவனது தலைமுடியை பிடித்து இழுத்து....தனது முகம் காணச் செய்தவள்,"நோ ஆது...!",என்றாள் சிறு கண்டிப்புடன்.



இவ்வளவு நேரம் இருந்த சுகந்த நிலை தடைபடவும்,"ப்ச்....ஏண்டி....?",என்றான் எரிச்சலாக.



அவன் முகத்திலேயே தனது பார்வையை பதித்தவள்,"நோ மீன்ஸ் நோ....!",என்றாள் அழுத்தமாக.



அந்த மென்மையான காதலியின் சொல்லுக்கு....அந்த முரட்டுத்தனமான காதலன் கட்டுப்பட்டான்.வெறுமனே அவளைக் கட்டிக் கொண்டு....அமைதியாய் நின்றான்.இதுதான் காதல்....!ஒரு மனம் வரைமுறை இன்றி...எல்லைகளைக் கடக்கத் துணியும் போது....இன்னொரு மனம்....நிதர்சனத்தை உணர்ந்து....தடுத்து இழுத்து வரும்.தீராத வேட்கையிலும்....தாபத்திலும் எரிந்து கொண்டிருக்கும் அந்த மனமும்....இன்னொரு மனதின் காதலுக்கும்....கண்டிப்பிற்கும் கட்டுப்பட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி விடும்.



இதுதான் காதல் செய்யும் மாயம்....!இதுதான் காதல் நிகழ்த்தும் அதிசயம்....!எப்பேர்ப்பட்ட நெருப்பையும்...காதல் குளிர வைத்து விடும்.



அவளை அணைத்துக் கொண்டு நின்றிருந்த ஆதித்யனின் மனதில் காதலோடு....தாபமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.ஏனோ...அவளைப் புடவையில் கண்டால் மட்டும்...அவன்...அவனாய் இருப்பதில்லை.அவளது புடவையின் மடிப்பில் அவன் தொலைந்து போவது என்னவோ உண்மைதான்....!



"பேபி....!ஐ நீட் யூ வெரி பேட்லி......!",அவன் குரலில் தெரிந்த வேட்கையில் அவள் தடுமாறிப்போனாள்.அன்று....அந்த மழைநாளில்....அவள்...அவனிடம் காதல் உரைத்த நாளில்....இதே அளவு வேட்கையைத்தான் அவன் கண்களும்....குரலும் பிரதிபலித்தன...!



அவளுக்குத் தெரியும்....!அவன் மனதில் எரிந்து கொண்டிருக்கும் மோகத் தீயை....தன்னால் மட்டுமே அணைக்க முடியும் என்பதை அவள் அறிந்து வைத்திருந்தாள்.இப்பொழுது அவனிடம் இருந்து விலகினால்....அவனது வேட்கை....வெறித்தனமாக மாறும்....அவனுடைய பிடிவாதம்....முரட்டுத்தனமாக உருவெடுக்கும்...என்பதை அறிந்தவளாய்....அவள்...அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.



இதுவும் காதல்தான்....!தன் இணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து....எல்லைகளை கடக்காமல்....எல்லைகளை ஜெயித்து வருவது....!



அவளது அணைப்பையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன்,"எனக்கு மொத்தமும் வேண்டாம் பேபி....!ஆனால்....முத்தம் மட்டுமாவது வேணும்....!",அங்கு இருவரின் உணர்ச்சிகளும் எல்லைகளைக் கடக்காமல்...காதலோடு எல்லைகளை ஜெயித்து வந்தது.



அவனது உதடுகள்....அவளது இதழ்களைத் தேடிச் சென்று சிறைப்படுத்தியது.தனது மொத்த காதலையும்...தாபத்தையும்...மோகத்தையும் அவளது இதழ்களில் பிரயோகித்துக் கொண்டிருந்தான் அவன்.



இவ்வளவு நாள் காத்திருப்பின் வேகமும்....வேட்கையும்...அவளது இதழ்களை மிக வன்மையாக ஆக்கிரமித்தன.அவனது முரட்டுத்தனத்தைத் தாங்க முடியாமல்....அவளது கைகள் பிடிமானத்திற்காக காற்றில் துளாவி....பிறகு....அவன் பின்னந்தலை முடியையே பிடிமானமாக இறுக்கப் பற்றிக் கொண்டன.



அவளது கழுத்தை வளைத்துப் பிடித்திருந்தவன்....அவளது இதழ்களுக்குள் மேலும் மேலும் மூழ்கிக் கொண்டிருந்தான்.தன் விழிகளை மூடி...அவனது முரட்டுத்தனத்தைக் காதலோடு ரசித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.



நிமிடங்கள் ஓடிக் கொண்டிருந்தன....!அவன்...அவளை விட்டபாடாக இல்லை...!ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல்....மூச்சுக்காற்றுக்காகத் தவிக்க ஆரம்பித்தவள்...அவனிடமிருந்து விலக போராட....அந்தக் காதல் தீவிரவாதியா....அவள் தேன் சிந்தும் அதரங்களை விட்டுப் பிரிய மறுத்தான்.



'பட் பட்'டென்று தனது நெஞ்சில் அவள் அடித்த அடியை....சுகமாய் ஏற்றுக் கொண்டவன்....தனது மூச்சுக்காற்றையே....அவளுக்கு சுவாசிக்க கொடுத்தான்....!இப்பொழுது....அவனுடைய வேகமும்...வேட்கையும் குறைந்து...அவனது இதழொற்றலில் ஒரு நிதானம் வந்திருந்தது.



மிக வன்மையாய் அவளது இதழ்களை சுவைத்தவன்....இப்போது....அதற்கு மருந்திடுவது போல்...மிக மென்மையாய் தனது யுத்தத்தை ஆரம்பித்தான்.



இவ்வாறாக....இந்த நீண்ட நெடிய முத்த யுத்தம் முடிவுக்கு வந்த போது....யுத்தம் செய்த இருவருமே மூச்சு வாங்கினர்.தனது உயிரைக் கொடுத்து யுத்தம் செய்தவன் குறும்பாய் புன்னகைக்க....அந்த யுத்தத்தில் எந்த பங்கும் ஆற்றாமல் அமைதியாய் நின்றிருந்தவளோ....களைத்துப் போயிருந்தாள்.



"முரடா....!சரியான ராட்சஸா....!",தன் கையை மடக்கி அவன் நெஞ்சில் குத்த..



"ஹா..ஹா....!",உரக்கச் சிரித்தான் அவன்.



"சிரிக்காதே டா....!வலிக்குது....!",சிணுங்கியவாறு அவள்...தன் இதழ்களைத் தொட்டுப் பார்க்க,



"பின்ன....இவ்வளவு நாள் காயப் போட்டா....இப்படித்தான்....முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும்....!",வெட்கமில்லாமல் அவன் கூற..



"ச்சீய்....!",அவள்தான் வெட்கப்பட்டுப் போனாள்.



"ரொம்பவும் வலிக்குதா டி....?",அவள் இதழ்களை மென்மையாக வருடியபடி அவன் கேட்க...சிவந்து கசங்கிப் போய் இருந்த அவளது இதழ்கள் பறைசாற்றின அவனது முரட்டுத்தனத்தை...!



பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள்,"ஆமா....இப்போ வந்து கேளு....!",போலியாய் சலித்துக் கொண்டாள் அவள்.



அதன் பிறகு....அவளை கெஞ்சி...கொஞ்சி சமாதானப்படுத்தி....அவளை....அவன் ஹாஸ்டலில் இறக்கிவிட்ட போது மணி பதினொன்று ஆகியிருந்தது.





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 47 :



"வாவ்....!சூப்பர் ம்மா....!என்னதான் சொல்லு....உன்னுடைய இந்த வெங்காய தோசையும்...தக்காளி சட்னியுடைய டேஸ்டே தனிதான்....!",நித்திலாவின் அம்மா தோசை சுட்டுக் கொண்டிருக்க....அவரருகில் சமையலறை மேடையில் அமர்ந்தபடி தோசையை மொக்கிக் கொண்டிருந்தாள் நித்திலா.



"ஏன் டி இப்படி குரங்கு மாதிரி சமையல் செய்யற மேடையில ஏறி உட்கார்ந்திருக்கியே....?அதுதான்...அங்க டைனிங் டேபிள் இருக்கல்ல....அங்கே போய் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே....?",மகளைத் திட்டிக் கொண்டே மொறுகலான தோசை ஒன்றை வார்த்து...அவள் தட்டில் போட்டார் மீனாட்சி.





"ஊரில் இருந்து வந்த புள்ளையை எதுக்கு டி திட்டற....?அவ எங்கேயோ உட்கார்ந்திட்டு போறா....!உனக்கென்ன வந்துச்சு.....?பேசாம தோசையை சுட்டுப் போடு....!",எப்பொழுதும் போல்...அப்பொழுதும் கிருஷ்ணன் மகளுக்காக பரிந்து பேச..



"வந்துட்டீங்களா.....?எங்கேடா இன்னும் ஐயாவைக் காணோமேன்னு பார்த்தேன்....!புள்ளையை ஒண்ணு சொல்லிடக் கூடாதே.....!",கோபமாக நொடித்துக் கொண்டாலும் அவர் முகத்தில் கோபம் இல்லை.



"உனக்குப் பொறாமை மீனாட்சி....!எங்க அப்பா மாதிரி உன் அப்பா இல்லைன்னு உனக்குப் பொறாமை....!",தன் தந்தையைப் பார்த்துக் குறும்பாக கண் சிமிட்டியபடி கூறியது...வேறு யாருமல்ல...நித்திலாதான்...!



"அடிக் கழுதை....!என்ன வாய் நீளுது.....?",மீனாட்சி தோசைக்கரண்டியை தூக்க,



"நோ...நோ மீனாட்சி....!நோ வெப்பன்ஸ்.....!",கண்ணிமைக்கும் நேரத்தில் சமையல் மேடையிலிருந்து குதித்து இறங்கியவள்....அவள் அம்மாவின் கைக்கு அகப்படாமல் பழிப்பு காட்டி விட்டு ஓடி விட்டாள்.



ஆதித்யனிடம் கூறியிருந்தது போல்...சனிக்கிழமை காலையிலேயே கிளம்பி ஊருக்கு வந்திருந்தாள் நித்திலா.



பெற்றவர்களின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம்...'காதல் விஷயத்தை அவங்களுக்குத் தெரியாமல் மறைக்கிறோமே....?' என்ற குற்ற உணர்ச்சி நித்திலாவிற்குள் எழத்தான் செய்தது.ஆனால்....அதை அனைத்தையும்....போனில் காதலுடன் உரையாடும் ஆதித்யனின் குரல் துடைத்து எறிந்து விடும்.



'அவங்க சம்மதத்தோடுதானே கல்யாணம் செய்துக்கப் போறோம்....!அதனால...இதுல எந்த தப்பும் இல்ல நித்தி....!எடுத்து சொன்னால்...அவங்களும் புரிஞ்சுக்குவாங்க....!',என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வாள்.ஆனால்...இந்த விஷயத்தை அவள்...ஆதித்யனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.தனது மனதில் நடக்கும் போராட்டத்தை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.ஒருவேளை....அவனிடம் இதை கூறியிருக்க வேண்டுமோ....?



சனிக்கிழமை மதியமே சென்று நந்தினியைப் பார்த்து விட்டு வந்திருந்தாள் நித்திலா.அவளது உடல்நிலையும் இப்பொழுது பூரண குணமடைந்திருந்தது.தோழிகள் இருவரும் வெகுநாளைக்குப் பிறகு மனம் விட்டுப் பேசினர்.



நந்தினிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர்.நித்திலாவின் காதல் விஷயம் நந்தினிக்கு தெரியும்.



"அப்புறம்....தினமும் ஒரே ரொமான்ஸ்தானா...?ஆபிஸையே காதல் சின்னமா மாத்திட்டீங்களா.....?",அவள் தோளை இடித்தபடி நந்தினி கலாய்க்க....நேற்று ஆதித்யன் அளித்த முத்தம்தான் ஞாபகத்திற்கு வந்தது நித்திலாவிற்கு.குப்பென்று முகம் சிவந்தவளை மேலும் கலாய்க்க ஆரம்பித்தாள் நந்தினி.



நந்தினியின் கேலியை நினைத்தபடி வெட்கப் புன்னகையில் முகம் விகசிக்க....மெத்தையில் படுத்திருந்தாள் நித்திலா.புரண்டு படுத்தவளின் விழிகளில்...ஜன்னலின் வழியே கண் சிமிட்டிக் கொண்டிருந்த நிலா வந்து விழுந்தது.உடனே....அவள் மனம் ஆதித்யனைத் தேடி ஓடியது.இந்த காதலர்களுக்கெல்லாம்....நிலவைப் பார்த்தால் ஏன்தான் தன் இணையின் நினைவு வருகிறதோ....தெரியவில்லை....!



அந்த நிலவில் ஆதித்யனின் முகம் தெரிந்ததோ....என்னவோ....?அதையே காதலுடன் நோக்கியபடி அவள் படுத்திருக்க....அவன் அணிவித்த செயினோ அவளது நெஞ்சுக்குழியில் புதைந்து குறுகுறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.



"டேய்...!குட்டிப்பையா....!நேர்ல இருந்தாலும் நீ சும்மா இருக்கறதில்ல....!இப்பவும் இந்த போட்டோல இருந்துக்கிட்டு...என்னை இம்சைப்படுத்திட்டு இருக்க....!",அவன் அணிவித்த செயினில் சிரித்துக் கொண்டிருந்த ஆதித்யனைப் பார்த்துதான் அவ்வாறு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் நித்திலா.



சரியாக அந்த நேரம் அவளது மொபைல் அடிக்க....அதை எடுத்துப் பார்க்காமலேயே அவளுக்குத் தெரிந்தது...அது ஆதித்யன் தான் என்று....!அவள் கோயம்புத்தூர் வந்து இறங்கி....ஒருநாள்தான் ஆகியிருந்தது.சொல்லப்போனால்....இன்னும் ஒருநாள் கூட முழுதாய் ஆகவில்லை.அதற்குள் அவன்....அவளுக்கு குறைந்தது ஐம்பது தடவையாவது போன் பண்ணியிருப்பான்.கேட்டால்....'நீ தானே பேபி...எப்போ போன் பண்ணினாலும் அட்டெண்ட் பண்றேன்ன்னு என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்ட....!',என்று கூறி வாயை அடைத்தான்.



அவள் அம்மா கூட,"எப்போ பாரு....போன்ல அப்படி என்னதான் டி பேசுவ....?",என சலித்துக்கொள்ள...."ஆபிஸ் விஷயம் ம்மா...!லீவ் போட்டுட்டு வந்தேன்ல....!அதுதான்...!",பொய் கூறி அவரை சமாதானப்படுத்தும் போது எழும் குற்ற குறுகுறுப்பை ஆதித்யனின் காதல் மொழிகள் ஒன்றுமில்லாததாய் ஆக்கி விடும்.



"ரௌடி....!காதல் ரௌடி....!",செல்லமாகத் திட்டியபடியே போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தாள் நித்திலா.



"ஏய்.....!பொண்டாட்டி....!என்ன டி பண்ணிக்கிட்டு இருக்கிற....?",ஆதித்யனின் உற்சாகமான குரல் வந்து அவள் செவிகளைத் தீண்டியது.



"ஹலோ பாஸ்....!இப்போதான் அரைமணி நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணுனீங்க...மறந்துட்டீங்களா....?",



"என் பொண்டாட்டி....!நான் கால் பண்றேன்....!உனக்கு என்னடி வந்துச்சு....?",



"கால் பண்ணலாம்....!அதுக்காக...கால் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்க கூடாது....!ஆபிஸ்ல வேலை பார்க்கறீங்களா....இல்லையா....?கிட்டத்தட்ட இது ஐம்பத்தி இரண்டாவது போன் கால்....!",



"எங்க பேபி....?நீ இல்லாத ஆபிஸ்க்கு போறதுக்கே எனக்குப் பிடிக்கலை....!உன் டேபிளையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன் தெரியுமா.....?",பாவமாக அவன் கூறவும் அவளுக்கு சிரிப்பு வந்தது.



"ஹைய்யோ ஆது....!ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க....?ஹா...ஹா....!",



"அப்புறம் என்னை என்னதான் டி பண்ண சொல்ற....?ஆபிஸ் ரூமுக்குள்ள நுழைஞ்சாலே....உன் வாசனைதான் ஞாபகத்திற்கு வருது.....!அதிலேயும் நேத்து நைட்....பார்ட்டி முடிஞ்சதுக்குப் பிறகு....நான் உன்னைக் கட்டிபிடிச்சிக்கிட்டு....",அவன் எதைப் பற்றி கூற வருகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள்...



முகம் சிவக்க,"போதும்....!போதும்....!",என்று சிணுங்கினாள்.



"பேச்சுக்கு கூடத் தடையா டி....?",ஒரு மாதிரிக் குரலில் அவன் வினவ..



'அவனைப் பேச விட்டால்....பேச்சிலேயே குடும்பம் நடத்தி பிள்ளை பெற்று விடுவான்....!',என்பதை உணர்ந்தவள்....பேச்சை மாற்றும் பொருட்டு,



"ஹலோ பாஸ்.....!ரெண்டு நாள் நான் இல்லாததுக்கே ஆபிஸ்க்கு போக பிடிக்கலைன்னு சொல்றீங்களே.....?நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்வீங்க.....?",



"என்னடி உளர்ற....?கல்யாணத்துக்குப் பிறகு நீ என்கூடவே தான இருக்கப் போற.....!காலையில நான் கிளம்பும் போது உன்னை கூடவே கூட்டிட்டு போய்ட்டு....நைட் திரும்பும் போது உன்னைக் கூடவே அழைச்சிட்டு வந்திடுவேன்....!அப்பவும் நீ தான் என் செக்ரெட்டரி....!",



"ஹ....அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க சார்....!நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்...நான் ஆபிஸ்க்கெல்லாம் வர மாட்டேன்....!நிம்மதியா வீட்டிலதான் இருக்கப் போகிறேன்....!",



"அடிப்பாவி....!விளையாடறியா....?நான் வெளிநாடு போகும் போது நீதான் நம்ம கம்பெனியை பார்த்துக்கணும்.....!அதுக்கு உன்னை தயார்படுத்தணும்ன்னு அன்னைக்கு உனக்கு ஒரு பெரிய லெக்சரே கொடுத்தேனே டி.....!இப்போ என்னடான்னா....ஆபிசுக்கே வர மாட்டேன்னு சொல்ற....?",



"நீங்க ஃபாரின் போகும் போது வேணா....கம்பெனியை பார்த்துக்கிறேன்....!ஆனால்....தினமும் உங்ககூட ஆபிஸ்க்கு வர மாட்டேன்.....!உங்களையும் சமாளிச்சு....ஆபிஸையும் சமாளிக்க என்னால முடியாது.....!",அவள் எதை நினைத்துக் கூறினாலோ...ஆனால்....அவன் அதை வேறு ஒரு மார்க்கமாக எடுத்துக் கொண்டான்.



"ஏய்....!கள்ளி.....!மாமாவை எப்படியெல்லாம் சமாளிப்ப.....?",அவன் குரலில் இருந்த வேறுபாட்டைக் கவனித்தவளுக்கு....அப்பொழுதுதான் உரைத்தது....தான் கூறியதை அவன் வேறு ஒரு விதமாக எடுத்துக் கொண்டான் என்று....!



"ஹய்ய.....!நான் ஒண்ணும் அந்த அர்த்தத்துல சொல்லல....!என்ன சொல்ல வந்தேன்னா....கல்யாணத்துக்குப் பிறகு நான் உங்க மனைவியாகவும்....குடும்பத் தலைவியாகவும்....உங்க வீட்டு மருமகளாவும் இருக்கத்தான் ஆசைப்படறேன்.....!உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து கவனிச்சு உங்களை ஆபிஸ்க்கு அனுப்பிட்டு.....தாத்தா பாட்டி கூட ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டு....அத்தையோட சேர்ந்து வீட்டுப் பொறுப்பை எல்லாம் கவனிச்சுக்கிட்டு....அப்புறம்...நீங்க ஆபிஸ்ல இருந்து திரும்பி வரும் போது உங்களுக்குத் பிடிச்சதையெல்லாம் சமைச்சுக் கொடுத்துட்டு....அப்புறம்....",அவள் குரல் இப்பொழுது பட்டென்று நின்றது.



"அப்புறம்....?",அவன் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.



"அப்புறம்....அப்புறம்....உங்களுக்குப் பிடிச்ச மாதிரி...பொண்டாட்டியா நடந்துக்கிட்டு....உங்களை கொஞ்சிக்கிட்டு....இப்படித்தான் இருக்க ஆசைப்படறேன்....!",



அவள் கூறி முடித்த போது....அவன் விண்ணில் பறந்து கொண்டு இருந்தான்.தன் மனைவி தன்னுடன்....தன் குடும்பத்தையும் நேசிக்கிறாள் என்பது எந்த ஒரு ஆண்மகனையும் கர்வம் கொள்ளச் செய்யும்....!



'இவள் நிச்சயம் தேவதை தான்....!இவளுடனான என் வாழ்வு சொர்க்கத்தை விட அழகானதாக இருக்கும்.....!',ஆதித்யன் அப்படியொரு மனநிறைவை உணர்ந்தான்.



சில நிமிடங்கள் அவன் எதுவுமே பேசவில்லை.அவள் மெதுவாக,"ஆது....!",என்றழைக்க....அவ்வளவுதான்.....அடுத்த நொடி....எண்ணற்ற கணக்கிலடங்காத முத்தங்கள் தொலைபேசி வழியாக பறந்து வந்தன.



"ஐ லவ் யூ டி....!ஐ லவ் யூ.....!",என்ற ஆதித்யனின் காதல் பிதற்றல்களுக்கு இடையே....முத்தங்களும் போட்டி போட்டன.



"தேங்க்ஸ் டி.....!என் குடும்பத்தை நீ இவ்வளவு நேசிக்கறதுக்கு.....!",அவன் குரல் சற்று நெகிழ்ந்து வந்தது.



"ம்ப்ச்....!என்ன ஆது.....?இது நம்ம குடும்பம் இல்லையா....?உங்களுடையது எல்லாம் என்னுடையது இல்லையா....?நான் காதலிக்கிறேன்....!உங்களை மட்டும் இல்ல....உங்க குடும்பத்தை....!உங்க தொழிலை....!உங்க கனவுகளை....!உங்க எண்ணங்களை.....!உங்களை சார்ந்த எல்லாரையும்....எல்லாத்தையும் நான் நேசிக்கிறேன்.....!எனக்கு....உங்க கூட வாழப் போற வாழ்க்கை பத்தி மட்டும் கனவுகள் இல்ல....!உங்க அம்மா...என் அத்தை கூட நான் எப்படி பழக போறேன்....?உங்க தாத்தா பாட்டி கூட நான் எப்படி ஊர் சுத்தப் போறேன்....?இப்படி....உங்க குடும்பத்தைப் பத்தின கனவுகளும் இருக்கு....!",



"எப்படி டி....?என் குடும்பத்தை உன்னால இந்தளவுக்கு நேசிக்க முடியுது....?",அவன் கேட்ட கேள்விக்கு....அவள் ஒற்றை வார்த்தையில் பதில் தந்தாள்...."நீ....!",என்று...!



"அவங்களை நான் நேசிக்கறதுக்கு ஒரே ஒரு காரணம் போதும்.....!அவங்க அத்தனை பேரும் உங்க குடும்பம்.....!இந்த ஒரு காரணம் போதும் எனக்கு.....!",



அவர்கள் பேசினார்கள்.....!இதுவரை....நேரில் பேசாததையெல்லாம் தொலைபேசி வழியாக பேசினார்கள்.அவர்களுக்குள் இருந்த காதல்....இன்னும் இறுகி உறுதியானது.....!ஆனால் என்ன....?அவனிடம் பேசியவள்....தன் தாய் தந்தையிடம் பேச மறந்தாள்....!அவர்களிடம் ஐக்கியமாகும் போதெல்லாம்....மிகச் சரியாக ஆதித்யனிடமிருந்து அழைப்புகள் வந்தன.அவனைத் தவிர்க்க முடியாமல்...பெற்றவர்களைத் தவிர்க்க ஆரம்பித்தாள்.



ஏனோ....அப்பொழுதே....பெற்றவர்களுக்கும் தனக்கும் இடையில் ஒரு இடைவெளி விழுந்ததைப் போல் உணர்ந்தாள் நித்திலா.ஆதித்யனின் காதல்....அவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கத் தூண்டியது.....!அவனை மட்டுமே உலகமாக சுற்றி வரச் செய்தது....!அவள் சிந்தையிலும்.....உணர்ச்சிகளிலும்....அவன்....அவன் மட்டுமே நிறைந்திருந்தான்.



அடுத்த நாள் காலை....குளித்து விட்டு புத்தம் புது மலராக வந்து நின்ற மகளை....ஆச்சரியப் பார்வை பார்த்த மீனாட்சி

,

"என்னங்க....!மழை வருதா....என்ன....?",தன் கணவரைப் பார்த்தபடி வினவ..



"ஏன் ம்மா....!உனக்கு கண்ணு போயிடுச்சா என்ன....?வெயில் இப்படி சுட்டெரிக்குது....மழை வருதான்னு கேட்கிற....?",கணவரிடம் கேட்ட கேள்விக்கு மகள் பதிலளித்தாள்.



"நீ நிற்கிற கோலத்தைப் பார்த்துத்தான் உன் அம்மா கிண்டல் பண்ணறா டா....!",தன் மகளிடம் கூறிய கிருஷ்ணன்....அவளை ஆச்சரியப் பார்வை பார்க்கவும் தவறவில்லை.



"எதுக்கு இப்படி ரெண்டு பேரும் அதிசயமா பார்க்கறீங்க....?",வினவியபடியே சோபாவில் வந்து அமர்ந்தாள் நித்திலா.



"பின்ன...நீ இப்படி வந்து நின்னா....அதிசயப்படாம என்ன பண்ணுவோம்.....?உன்னைக் 'குளி'ன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினால் கூட....குளிக்கப் போக மாட்ட.....!இன்னைக்கு என்னடான்னா.....அதுவும் ஞாயிற்றுக்கிழமை....காலையிலேயே குளிச்சிட்டு சுடிதார் போட்டுக்கிட்டு வந்து நிற்கிற.....!எப்பவும் வீட்டில இருக்கும் போது....ஒரு சாயம் போன அரைக்கால் ட்ரவுசரும்....இத்துப் போன டீ ஷர்ட்டும் தானே போட்டுட்டு சுத்துவ....!அதுதான் எங்களுக்கு 'ஷாக்'கா இருக்கு....!",



அவள் அம்மா கூறுவதற்கு....அவள் என்னவென்று பதில் சொல்வாள்....?அவளே....ஆதித்யன் அணிவித்த செயின் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக....வீட்டில் இருக்கும் போதும் காலர் வைத்த சுடிதார் போட்டுக் கொண்டு சுத்திக் கொண்டிருக்கிறாள்....!அதன் காரணமாகத்தான் அன்றும் காலையில் எழுந்ததுமே குளித்து விட்டு சுடிதார் அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.



ஆனால்....தன் தாயிடம் அதை கூற முடியுமா.....?எனவே,"அ...அது...வெளியே போக வேண்டிய வேலை இருக்கு.....!",என்று எதையோ கூறி சமாளித்தாள்.



'பொய் மேல் பொய் கூறுகிறோம்....!',என்று மனதிற்குள் மறுகியவளை ஆதித்யனின் முகம் மின்னி மறைந்து....அவளது மறுகலை விரட்டியடித்தது.



தன் தாயின் மடி மேல் படுத்தபடி நித்திலா முறுக்கை கொறித்துக் கொண்டிருக்க....அவளது காலோ....அவளது தந்தையின் மடியில் இருந்தது.இதமாக அவள் காலைப் பிடித்து விட்டபடியே....மகளிடம் கதைப் பேசிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.இவ்வளவு நாள் பிரிவை....இருவரிடமும் செல்லம் கொஞ்சியபடி தீர்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.



அப்பொழுது பார்த்து....அவளது செல்போன் ஒலிக்க....முதல் முறையாக சிறிது எரிச்சல் எட்டிப் பார்த்தது நித்திலாவிற்கு.



'ஆது ஏன் இப்படி பண்ணறாரு.....?என் பேரண்ட்ஸ் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே முடியல....!இங்க வந்தும்....எப்ப பாரு அவரு கூடத்தான் பேசிக்கிட்டு இருக்கேன்....!',மனதிற்குள் சலித்தவள்...அவனது அழைப்பைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள்.



மீண்டும் மீண்டும் போன் அலறிக் கொண்டே இருக்கவும்....அவளது தந்தை,"ஏதாவது முக்கியமான போன் காலா இருக்கப் போகுதும்மா....!போய் எடுத்துப் பேசு....!",என்று கிருஷ்ணன் கூற..



"அப்படி என்னதான் முக்கியமான விஷயமோ.....?என் பொண்ணு கூட நிம்மதியா பேசவே முடியல....!",புலம்பியபடியே எழுந்து சென்று விட்டார் மீனாட்சி.



எரிச்சலுடன் தனது அறைக்கு வந்தவள்...அலறிக் கொண்டிருந்த போனை எடுத்து காதில் வைத்தபடி,"எதுக்கு ஆது இப்படி போன் பண்ணி தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கீங்க....?என் அம்மா அப்பா கூட முழுசா கொஞ்ச நேரம் சேர்ந்த மாதிரி பேசக்கூட முடியல....!பேச ஆரம்பிச்ச உடனே....உங்க போன் கால் வந்துடுது....!",சற்று எரிச்சலுடன் அவள் கூற....அடுத்த நொடி....அவன் பட்டென்று போனை வைத்து விட்டான்.



'ங்கொய்ய்....', என்ற சத்தம்தான் நித்திலாவின் காதில் விழுந்தது.அந்த அளவிற்கு கோபமாய் அவன் போனை வைத்திருந்தான்.



'போச்சு....!கோபம் வந்துடுச்சு போல....!',எண்ணியபடியே அவள் மீண்டும் அவனுக்கு முயற்சி செய்ய....அவன் எடுக்கவில்லை.

'ஹைய்யோ.....!அவருக்குப் பொறுமையா எடுத்து சொல்லியிருக்கணும்....!இப்படி எரிந்து விழுந்திருக்க கூடாது...!இவரை எப்படி சமாதானப்படுத்தறது....?',காதல் கொண்ட மனம்....அவன் மீது சற்று முன்பு ஏற்பட்டிருந்த மனஸ்தாபத்தை ஒதுக்கி விட்டு....அவன் கோபத்தை போக்க விழைந்தது.



மீண்டும்....மீண்டும் அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாலே தவிர...அவன்...போனை எடுத்தப்பாடாக இல்லை.இவள் அனுப்பிய 'ஸாரி ஆது...!' என்ற குறுந்தகவலுக்கும் எந்த பதிலுமில்லை.



மதியம் வரை பொறுத்துப் பார்த்தவள்...அதற்கு மேல் முடியாமல்....சென்னை கிளம்புவதற்குத் தயாரானாள்.



அவள் அம்மாவிடம் கூறியதற்கு,"திங்கட்கிழமையும் லீவ் போட்டிருக்கேன்னு தானே சொன்ன....இப்போ எதுக்கு கிளம்பற....?",அவர் குரலில் மகளைப் பிரியப் போகும் வருத்தம் தெரிந்தது.



"ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு ம்மா....!",என்று இவள் முணுமுணுக்க,



"அப்படி என்னதான் வேலையோ....?லீவ் நாள்ல கூட உன்கூட நிம்மதியா உட்கார்ந்து பேச முடியலை....!போன் கால் வந்துக்கிட்டே இருக்கு....!அப்படி ஒரு வேலைக்கு நீ போகணும்ன்னு அவசியமே இல்ல....பேசாம....ரிசைன் பண்ணிட்டு வந்து சேரு....!",மகளிடம் மனம் விட்டுப் பேசக் கூட முடியாத ஆதங்கத்தில் ஒரு தாயாய் அவர் புலம்ப...கிருஷ்ணன்தான் அவரை சமாதானப்படுத்தி....மகளை அனுப்பி வைத்தார்.



சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தவளின் மனம் தவித்துக் கொண்டிருந்தது.காதலுக்கும்....பெற்றவர்களின் பாசத்திற்கும் இடையில் அல்லாட ஆரம்பித்தது.ஆனால்...இந்தப் போராட்டம் அனைத்தும் மறுநாள் ஆதித்யனைக் காணும் வரைதான் நீடித்தது.அவனைக் கண்ட அடுத்த நொடி....அவளது மனம் நாய்க்குட்டியாய் சுருண்டு....அவனது காதலுக்குள் சென்று அடைக்கலமாகிக் கொண்டது...!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 48 :



திங்கட்கிழமை காலை....அறைக்குள் நுழைந்த நித்திலாவை...ஆதித்யன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அவள் சொன்ன 'குட் மார்னிங் ஆது....!',என்றதற்கு கூட எந்தவொரு பதிலும் இல்லை.கடினமான முகத்துடன் தனது லேப்டாப்பையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.



'ஹைய்யோ....!கோபத்தோட உச்சியில போய் உட்கார்ந்திருக்காரே....!இவரை எப்படி சமாதானப்படுத்தி கீழே இறக்கி கொண்டு வர்றது....?',சிந்தனையுடன் தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தவளின் மனம்...அந்த வேலையில் லயிக்கவில்லை.



மெதுவாக அவனை ஏறிட்டவள்,"ஆது....!உங்களுக்காகத்தான் நான் லீவை கேன்சல் பண்ணிட்டு இன்னைக்கே வந்துட்டேன்....!",ஆர்வமாக அவன் முகம் பார்த்து அவள் கூற...அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை.அவன் பாட்டுக்கு லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தான்.



"உஸ்....!",மூச்சை இழுத்து விட்டவள்...சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.வேலை விஷயமாகக் கூட தன்னிடம் பேச மறுப்பவனைக் கண்டு அவளுக்கு ஆயாசமாய் இருந்தது.



ஒரு எல்லைக்கு மேல் அவனுடைய பாராமுகத்தைப் பொறுக்க முடியாமல்,"எதுக்கு ஆது இவ்வளவு கோபம்....?",என்றாள் சற்று மனத்தாங்களுடன்.



"..........."



ம்ஹீம்....அவனிடம் அப்பொழுதும் பதிலில்லை.மருந்துக்கு கூட அவன்....அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை.



பொறுக்க முடியாமல் தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனருகே சென்றவள்....கோபத்துடன் அவனது லேப்டாப்பை பிடுங்கி மூடி வைத்தாள்.



"ப்ச்....!இப்ப எதுக்கு டி இப்படி பண்ணிக்கிட்டு இருக்க....?நான் பேசறதை தொல்லைன்னு சொன்னவள் தானே நீ....?இப்போ எதுக்கு 'என்கூட பேசு...பேசு...'ன்னு நச்சரிச்சுக்கிட்டு இருக்க....?",அவன் சற்று காரமாகவே வினவ..



"நான் அப்படி பேசினது தப்பு தான்....!அதே சமயம்....நீங்க அப்படி பண்ணினதும் தப்புதானே....?",



"எது டி தப்பு....?என் பொண்டாட்டிக்கிட்ட நான் பேசறது தப்பா....?",அவன் குரலில் இப்பொழுதும் கோபம் குறையவில்லை.



"இங்கே பாருங்க ஆது....!நான் உங்களுடைய காதலி மட்டும் இல்லை....!என் அம்மா அப்பாவுக்கு பொண்ணும் கூட....!",அவனுக்குப் புரிய வைத்துவிடும் வேகம் அவள் குரலில் இருந்தது.



"நான் இல்லைன்னு சொல்லலையே.....?எனக்கு காதலியா இருந்துட்டு....உங்க அம்மா அப்பாக்கு பொண்ணா இருன்னுதான் நான் சொல்ல வர்றேன்....!உங்க அம்மா அப்பாவுக்கு பொண்ணா இருந்துட்டு....எனக்கு பொண்டாட்டியா இருக்கலாம்ன்னு நினைக்காதே.....!",அவனிடம் அப்படி ஒரு அழுத்தம்....!ரௌத்திரம்....!



அவன் பேச்சைக் கேட்டவளுக்கு....ஏனோ தனக்கும் தன்னைப் பெற்றவர்களுக்கும் இடையில் ஒரு திரை விழுவதைப் போல் உணர்ந்தாள்.அந்த திரையையும் அவன் வலுக்கட்டாயமாக ஏற்படுத்துவத்தைப் போல் அவள் மனதிற்குத் தோன்றியது.



"குட் ஜோக் ஆது....!என் அம்மா அப்பா இல்லாம நான் உங்களுக்கு கிடைச்சிட்டேனா.....?அவங்க இல்லாம...என்னால இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது....!அது மட்டும் இல்ல....இருபத்தி இரண்டு வருஷமா என்னை உயிருக்கு உயிரா வளர்த்தவங்க அவங்க....!முதல்ல...நான் அவங்களுக்கு மகள்...!அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு பொண்டாட்டி....!"



சுறுசுறுவென்று ஏறிய கோபத்தை தன் கைகளை அழுந்த மூடிக் கட்டுப்படுத்தியவன்,"இருக்கக் கூடாது....!உனக்கு முதன்மையானவனா நான் மட்டும்தான் இருக்கணும்....!அவங்க உன்னைப் பெத்து வளர்த்தவங்கதான்....!நான் இல்லைன்னு சொல்லல....!எப்போ உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சேனோ....அப்பவே நீ என்னுடையவளாய் மாறிட்ட....!என்னுடைய பொண்டாட்டி அப்படிங்கிற நிலையில இருந்துதான்....நீ உன் பெத்தவங்களைப் பார்க்கணும்....!அவங்களுக்கு மகளா இருந்துட்டு....நீ என் பொண்டாட்டியா இருக்க கூடாது....!",ஆங்காரமாய் கத்தியவனின் பேச்சைக் கேட்டவளுக்கு குழப்பம்தான் வந்தது.



"எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்கீங்க.....?பொதுவா....காதலி வேற யாராவது ஆண்கிட்ட பேசும் போதுதான்...காதலன் பொஸஸிவ்வா ஃபீல் பண்ணுவான்னு கேள்விப்பட்டிருக்கிறேன்....!நீங்க என்னடான்னா....என் அம்மா அப்பாக்கிட்ட பேசறதுக்கே இவ்வளவு தடை போடறீங்க....?",



"உளறுறேனா....?நீ எப்படி வேணா வைச்சுக்க.....!எனக்கு அதைப் பத்தி கவலையில்லை....!நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான் நித்திலா....!உனக்கு நான் மட்டும்தான் முதன்மையானவனா இருக்கணும்....!உன்னுடைய முழுமையான காதல்...பாசம்...கோபம் இப்படி எதுவா இருந்தாலும் எனக்கு....எனக்கு மட்டும்தான் கிடைக்கணும்....!உன்னுடைய பார்வையை மாத்திக்க....!எனக்குப் பிறகுதான் மத்தவங்க....அப்படின்னு பார்க்க ஆரம்பி.....!அது உன்னைப் பெத்தவங்களா இருந்தாலும் சரி....!புரிஞ்சுதா....?",



அவனுடைய காதல் அப்படித்தான் இருந்தது....!மிக மிக வன்மையாக....தீவிரவாதத்தோடு....முரட்டுத்தனமாக....அவளை அப்படியே தனக்குள் அடக்கி வைத்து விட வேண்டும் என்ற பிடிவாதம் நிறைந்ததாக அவனுடைய காதல் இருந்தது....!



அவனுடைய அந்தக் காதல்....அவளுடைய அடிவயிறை ஜில்லிடச் செய்தது.ஒரு மனம்....அவனுடைய வெறித்தனமான இந்தக் காதலில் மூச்சுத் திணறத் திணற சுகமாக மூழ்கி போனாலும்....அவளுடைய இன்னொரு மனமோ....இந்த தீவிரவாதக் காதலைக் கண்டு பயந்து நடுங்கிப் போனது...!



'இவனுடைய காதலில் இருக்கும் பிடிவாதம்....எங்கு சென்று முடியுமோ....?',என்று மனதிற்குள் ஒரு அச்சம் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.



"ஆது....!நான்தான் உங்களுடைய மனைவி அப்படிங்கறதை எப்படி மறுக்க முடியாதோ....அதே மாதிரிதான்....நான் என்னுடைய அம்மா அப்பாவுக்கு பொண்ணு அப்படிங்கறதையும் மறுக்க முடியாது....!நாளைக்கு நமக்கு கல்யாணமாகி நான்....உங்க வீட்டுக்கு வந்த பிறகு....நான் உங்களுக்கு மனைவியா மட்டும் இருக்க முடியாது.....!உங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மருமகளா....உங்க தாத்தா பாட்டிக்கு ஒரு பேத்தியா....நம்ம குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா....இப்படி பல கடமைகள் எனக்கு இருக்கு....!அதே மாதிரிதான்....என் அம்மா அப்பாவுக்கு ஒரு மகளா எனக்கும் சில கடமைகள் இருக்கு....!",அவள் பொறுமையாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்க..



"உன்னுடைய கடமை எதையுமே நான் மறுக்க மாட்டேன்....!நீ அதை செய்யக் கூடாதுன்னு தடுக்கவும் மாட்டேன்....!சொல்லப் போனால்....உன் கூடவே இருந்து...உன் கடமைகள்ல சரிபாதியை நான் ஏத்துக்குவேன்....!",என்றான் பட்டென்று.



"அப்புறம் எதுக்கு....என்னை ஊருக்கு அனுப்பி வைச்சிட்டு....பின்னாடியே போன் மேல போன் பண்ணி....என் அம்மா அப்பா கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாம தடுத்தீங்க.....?",



"நான் ஒண்ணும் நீ உன் பெத்தவங்க கூட பேசறதை தடுக்கணும் அப்படிங்கற எண்ணத்துல போன் பண்ணல....!உண்மையிலேயே நான் உன்னை மிஸ் பண்ணினேன்....!இந்த ஆபிஸ்ல ஒவ்வொரு பொருளும் உன்னை ஞாபகப்படுத்துச்சு.....!ஒவ்வொரு நிமிஷமும்....நான் உன் நினைப்பிலதான் இருந்தேன்...!உன் குரலை கேட்டாலாவது கொஞ்சம் நல்லாயிருக்குமேன்னுதான்....உனக்கு அடிக்கடி போன் பண்ணினேன்....!ஆனால்...இப்போத்தானே தெரியுது.....!நான்தான் பைத்தியக்காரன் மாதிரி உன்னை நினைச்சுக்கிட்டு இருந்திருக்கிறேன்....!நீ அங்க ஜாலியா உன் அம்மா அப்பாவைக் கொஞ்சிக்கிட்டு என் நினைப்பே இல்லாம இருந்திருக்க....!நான்தான் கேனையன் மாதிரி உனக்கு அடிக்கடி போன் பண்ணி உன்னைத் தொல்லை செய்திருக்கிறேன்....!",அவள் தன்னைத் தேடவில்லை என்ற நினைவில் அவன் கோபமாகப் பேசினான்.



அவன் சுமற்றிய குற்றத்தில் அவளுக்கு சற்று எரிச்சல் எட்டிப்பார்த்தது.



'என்ன....?நான் இவரை நினைக்கலையா....?அம்மா அப்பாக்கிட்ட பேசிட்டு இருந்தாலும்....என் நினைப்பு இவரை சுற்றித்தானே இருந்துச்சு.....!நொடிக்கு பத்து முறை போன் செய்தாலும்....ஒவ்வொரு முறையும் ஆசையோடதானே இவர்கிட்ட பேசினேன்....?ஏதோ டென்சன்ல 'தொல்லை...அது..இது'ன்னு பேசிட்டேன்.....?அதுக்காக....நான் இவரை மிஸ் பண்ணலைன்னு ஆகிடுமா.....?',மனதிற்குள் பொரிந்து தள்ளியவள்...வெளியே..



"ஆமா....!எனக்கு உங்க நினைப்பு சுத்தமா இல்ல....!உங்களைப் பத்தின நினைப்பே இல்லாம...அங்கே எங்க வீட்டில ரொம்ப ஜாலியா இருந்தேன்.....!உங்க மேல ஆசையே இல்லாமதான்....ஒரு நாளைக்கு நீங்க நூத்தி இருபது முறை கால் பண்ணினாலும்....அப்புறம் எப்போ பண்ணுவீங்கன்னு ஆசையோட காத்திருந்தேன்.....!உங்க மேல காதல் இல்லாமதான்....நீங்க கோபமா போனை கட் பண்ணின உடனே....உங்களை சமாதானப்படுத்தணும்ன்னு....என் அம்மா அப்பாக்கிட்ட பொய் சொல்லிட்டு ஓடி வந்தேன்....!",மூக்கு விடைக்க....ஊடலோடு அவனிடம் சண்டை பிடித்தவள் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.



அவளுடைய ஊடலோடு கலந்த இந்தக் கோபம் அவனை ரசிக்க வைத்தது.



'அவளும் தன்னைத் தேடியிருக்கிறாள்....!',என்ற நினைவு அவனுடைய மன சுணக்கத்தை போக்கடித்தது.



'பாவம்....!அவள் கூட ரொம்பவும் சண்டை போட்டுட்டோம்....!எனக்காக அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்திருக்கிறா....!',திரும்பி அவளைப் பார்த்தால்...அவளோ....கோபத்தில் மூக்கு நுனிவரை சிவந்து போய் அமர்ந்திருந்தாள்.



"ஏய்....!பொண்டாட்டி....!",அவன் கூப்பிட்ட மறு நொடி 'டொக்..டொக்..'கென்று கீபோர்டை தட்ட ஆரம்பித்தாள்.



"பேபி.....!உன்னைத்தான்....!",அவன் மீண்டும் அழைக்க..



"............",அவளிடம் பதிலில்லை.



கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு வாங்கியபடி....கீபோர்டை போட்டு தட்டு தட்டு என்று தட்டிக் கொண்டிருந்தாள்.



"குட்டிம்மா.....!",மென்மையாய் அவன் அழைக்க....அவ்வளவுதான்....!அடுத்த நொடி....அவள் டேபிள் மேல் இருந்த பென் ஸ்டாண்ட் ஒன்று இவனை நோக்கிப் பறந்து வந்தது.



"அய்யோ.....!அம்மா....!",அலறியபடியே அதை அழகாக கேட்ச் பிடித்தவன்...,"என் குட்டிம்மாவுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்....?மாமா ஏதோ தெரியாம பேசிட்டேன்.....!ஸாரி டி குட்டிம்மா.....!",அவள்...அவனிடம் மன்னிப்பு கேட்ட நிலை மாறி....அவன்....அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தான்.



"வாயை மூடுங்க....!குட்டிம்மா...புட்டிம்மான்னீங்க....அப்புறம் நடக்கிறதே வேற....!",வழக்கம் போல் அவனுடைய 'குட்டிம்மா....!' என்ற அழைப்பில் மயங்கிய மனதை அடக்கத் தெரியாமல்....அவனிடமே சீறினாள் அவனுடைய குட்டிம்மா....!



தான் 'குட்டிம்மா....!',என்று அழைத்தால்....அவள் மயங்கி விடுவாள் என்பதை அந்தக் கள்வனும் அறிந்துதான் வைத்திருந்தான்.வசீகரமான புன்னகையுடன் அவளை நெருங்கியவன்....நாற்காலியில் அமர்ந்திருந்தவளை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு....தனது ஓய்வு அறையை நோக்கி நடந்தான்.



"ஏய்....!என்னடா பண்ற.....?என்னை விடு....!",கால்களை உதறியபடி அவன் பிடியிலிருந்து திமிற....அவன் இன்னும் நெருக்கமாக அவளைத் தன் மார்போடு இறுக்கினான்.



"விடுடா....!பொறுக்கி....!",அவள் மேலும் திமிற....அவளுடைய அழகுகள் அவன் மீது...எசகுபிசகாக மோதி அவனை இம்சித்தன.அவளோ....அதை எதையும் உணரும் நிலையில் இல்லை....!கால்களை உதைத்தபடி அவன் பிடியிலிருந்து நழுவுவதிலேயே குறியாய் இருந்தாள்.



"ஷ்.....பேபி....!இப்படி எசகுபிசகாக ஆடி என் மூடை கிளப்பி விடாதே....!அமைதியா இருந்தீன்னா....நானே உன்னை இறக்கி விடுவேன்.....!",ஒரு மாதிரிக் குரலில் அவன் கூறவும் தான்....அவனுடைய திண்மையான மார்பில்....அப்படி...இப்படி பட்டுக் கொண்டிருந்த தன் உடலைக் கவனித்தாள்.



மூச்சை இழுத்துப் பிடித்தபடி சிலையாய் சமைந்து விட்டாள் நித்திலா.தன் விழிகளால் அவன் கண்களை சிறையிட்டவள்....அந்த சிறையை மீட்கும் எண்ணமில்லாதவளாய்....அப்படியே உறைந்திருந்தாள்.



தன் காலால் உதைத்து ஓய்வு அறையின் கதவைத் திறந்தவன்.....அவளைக் கைகளில் ஏந்தியபடியே உள்ளே சென்று....அங்கிருந்த மெத்தையில் அவளைக் கிடத்தினான்.அவன்....தன்னை படுக்கையில் கிடத்தவும்தான்....அவள் சுயநினைவுக்கே வந்தாள்.



"ஏய்ய்.....!என்ன பண்றீங்க.....?",சிறு கூச்சலுடன் எழ முயற்சித்தவளை எழ விடாமல் தடுத்து....அவளருகே சரிந்து படுத்தவன்..



"நீதானே டி வாயை மூட சொன்ன....?அதுதான்...என் வாயால உன் வாயை மூடலாம்ன்னு....!",என்றபடியே அவள் இதழ்களை நோக்கி குனிய..



"டேய்....!தள்ளிப் போடா.....!போ.....!",பதறியபடியே அவனைப் பிடித்து அவள் தள்ளி விட..



"தள்ளி விடாதே டி....!சின்னக் கட்டில் தான்...!அப்புறம்....நான் கீழே விழுந்துடுவேன்.....!",அவள் தள்ளிய வேகத்தில் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக....அவளது தோளை இறுகப் பற்றியபடி அவன் கத்தினான்...



"கையை எடுடா....!முதல்ல என்னை அங்கே....இங்கேன்னு தொட்டுப் பேசறதை நிறுத்து.....!எனக்குத்தான் உன் மேல ஆசை இல்ல...!உன்னைப் பத்தின நினைப்பு இல்ல....!அப்புறம் எதுக்கு....என்னைத் தொட்டுப் பேசற....?",தன் தோளிலிருந்த அவனது கரங்களைப் பிடித்து முரட்டுத்தனமாக தள்ளி விட்டபடி அவள் கூற..



"ஸாரி டி குட்டிம்மா....!உன் மாமா தெரியாத்தனமா பேசிட்டான்....!என் குட்டிம்மாவுக்கு இந்த மாமா மேல நிறைய ஆசை இருக்கு.....!நிறைய நிறைய காதல் இருக்கு....!போதுமா....?",அவன் ஏதோ சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல் அவளைக் கொஞ்ச..



அவனது கொஞ்சலில் உண்மையாலுமே குழந்தையாய் மாறிய அந்த வளர்ந்த குழந்தை...'போதாது....!' என்று தலையாட்டியது.



"என் குட்டிம்மாவுக்கு இன்னும் என்ன வேணுமாம்.....?இந்த மாமாவை மன்னிக்க கூடாதா.....?என் பேபி இப்போ அழகா சிரிப்பாங்க பாருங்க....!",என்றபடியே தன் மூக்கு நுனியால் அவள் கழுத்தில் குறுகுறுப்பு மூட்ட..



தன் இரு கைகளாலும் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்து தன் முகத்தைக் காணச் செய்தவள்,"நீ ஒண்ணும் என் மாமா இல்ல....!",என்றுரைக்க..



"அப்பறம் என்னவாம்.....?",அவள் கன்னங்களை வருடியபடியே அவன் வினவ..



"சொல்ல மாட்டேன் போ....!நான்தான் உன் மேல கோபமா இருக்கேன் ல....?அதனால சொல்ல மாட்டேன்....!",செல்ல ஊடல் கொண்டு சிணுங்கலாய் தலை ஆட்டியவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.



அவளது ஊடலில் தன்னைத் தொலைத்தவன்,"இல்லையே....!என் குட்டிம்மாவுக்கு இந்த மாமா மேல கோபம் இல்லையே.....!இந்த அழகான உதடு பொய் பேசுது....!",என்றவனின் விரல்கள் அவளது கீழுதடை அழுந்தப் பற்றியது.



"நீ ஒண்ணும் என் மாமா இல்ல.....!",அவன் விரல்களை அவள் விலக்க முயல...முடியாது போகவும்,"விடுடா....!",என்று அவன் நெஞ்சிலேயே இரண்டு அடி போட்டாள்.



"ராட்சசி....!",அவள் இதழை விடுவித்தவன்,"இப்படித்தான் உன் புருஷனை போடா...வாடான்னு கூப்பிடுவியா....?அழகா 'மாமா...!'ன்னு கூப்பிடலாம்ல.....?",அவன் தன் மனதில் இருந்த நீண்ட நாள் ஆசையை அவளிடம் தெரிவிக்க..



"ம்ஹீம்.....!"தலையாட்டினாள் அவனுடைய செல்ல ராட்சசி....!அவளுடைய கோபம் எப்பொழுதோ பறந்து போயிருந்தது.



"ஹே..ஹே....!ப்ளீஸ் டி....!நீ என்னை 'மாமா'ன்னு கூப்பிடணும்ன்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா.....?உன் பிரெண்ட் சுமித்ரா கூட கௌதமை 'மாமா'ன்னுதான் கூப்பிடுவா....தெரியுமா.....?",தன் கையைசைவிலே பல கட்டளைகளை நிறைவேற்றிப் பழகிய அந்த மிகப் பெரும் தொழிலதிபன்....அந்த ஒற்றை வார்த்தைக்காக...அந்த சிறு பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.



"மாமான்னு எல்லோரும்தான் கூப்பிடுவாங்க....!என் ஆதுவை நான் ஸ்பெஷலா கூப்பிட வேண்டாமா.....?",அவன் சட்டை காலர் பட்டனை பிடித்துத் திருகியபடியே அவள் வினவ...அவன் நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ....?மயங்கி கிறங்கிப் போனவனாய்..



"அப்படி என்ன ஸ்பெஷலா கூப்பிடுவ....?",அவன் விரல்கள் அவள் காதுமடலை மென்மையாக நீவிவிட ஆரம்பித்தன.



"சொல்லட்டுமா.....?",அவள் புருவம் உயர்த்த..



"சொல்லு......!",கிசுகிசுத்தான் அவன்.



"அத்தான்....!",அவள் கூறியே விட்டாள்.



முகச்சிவப்பும்....நாணமும் முகத்தில் போட்டி போட....மென்மையும்....காதலும் அவள் குரலில் தாண்டவமாடின....!ஒற்றை வார்த்தையில்....ஒற்றை அழைப்பில் காதலை உணர்த்தி விட முடியுமா....?தன் உள்ள காதல் மொத்தத்தையும்....ஒற்றை சொல்லுக்குள் அடக்கி....அந்தக் காதலனுக்கு உரியவனிடம் பிரயோகிக்க முடியுமா.....?முடியும்....என்றது அவளுடைய அந்த ஒற்றை அழைப்பு.....!



ஏற்கனவே....அவள் மீது காதல் பைத்தியமாய் இருப்பவன்....இப்பொழுது....பித்தாகிப் போனான்.அந்தப் பித்தை அதிகப்படுத்துவது போல் அவள் மேலும் பேச ஆரம்பித்தாள்.



"அத்தான்....!என் ஆது அத்தான்....!நான் 'மாமா...'ன்னு நிறைய பேரை கூப்பிட்டிருக்கிறேன்....!ஆனால்...அத்தான்ங்கிற வார்த்தையை என் கணவருக்காக மட்டுமே பொத்தி பொத்தி பாதுகாத்து வைச்சிருந்தேன்....!எப்படி என் மனசும்....என் உடலும் என் வருங்கால கணவனுக்காக மட்டும்தான்னு கட்டுப்பாடோட இருந்தேன்னோ....அதே மாதிரிதான்....'அத்தான்'ங்கிற இந்த வார்த்தையும் என் வருங்கால கணவருக்கு மட்டும்தான்னு உறுதியா இருந்தேன்....!



கல்யாணம்...புருஷன்....காதல் அப்படிங்கிற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுக்கிட்ட நாள்ல இருந்து....இந்த 'அத்தான்'ங்கிற வார்த்தையை என் வருங்கால கணவனான உங்களுக்காக சேமிச்சு வைச்சிருக்கிறேன்....!இது வெறும் வார்த்தையில்லை அத்தான்....!இது என்னுடைய காதல்...!என்னுடைய உயிரோட சத்தம்....!உங்களுக்காகத் துடிக்கிற என் இதயத்தோட துடிப்பு....!",அத்தனைக் காதலோடு கூறியவளைப் பார்த்தவன்....அவளுடைய காதலில் அப்படியே ஆடிப் போய் விட்டான்.



'அத்தான்...!' என்ற அழைப்பிற்கு பின்னால் அவளது இவ்வளவு வருடத்தினுடைய காத்திருப்பும்....காதலும் இருக்குமென்பதை அவன் அறிந்திருக்கவில்லை....!'தான் ஒருவரைக் காதலிக்கிறோம்...!' என்பதை விட....'தான் ஒருவரால் காதலிக்கப்படுகிறோம்....!' என்பது லட்சம் கோடி மகிழ்ச்சியை வாரி இறைக்கும்.அப்படிப்பட்ட மனநிலையில் இருந்தான் ஆதித்யன்....!



"தேங்க்ஸ் டி....!",அவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை.



"அதே மாதிரி....என்னைத் தவிர உங்களை வேறு யாரும் 'அத்தான்'ன்னு கூப்பிடக் கூடாது....!நான் மட்டும்தான் கூப்பிடுவேன்....!",சுட்டு விரலை நீட்டி அவள் எச்சரிக்க..



"நிச்சயமா டி....!வேற ஒருத்தர் கூப்பிடறதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்....!இந்த ஆதித்யனும்...இந்த அழைப்பும் என் குட்டிம்மாவுக்கு மட்டுமே சொந்தமானது...!",மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான் ஆதித்யன்.



"ஹலோ பாஸ்....!போதும் எழுந்துறீங்க....!இதுதான் சாக்குன்னு ஹாயா என்மேல படுத்துகிட்டீங்க.....!",அவள் கழுத்தில் வாசம் பிடித்தபடி...சுகமாய் அவள் நெஞ்சுக்குழியில் முகம் புதைத்திருந்தவனைப் பார்த்துதான் அவ்வாறு கூறினாள் நித்திலா.



"ம்ப்ச்....!இன்னும் கொஞ்ச நேரம் டி....!",அவன் இன்னும் ஆழமாய் மூச்சை இழுத்து சுவாசிக்க....குறுகுறுத்த மனதை அடக்கிக் கொண்டு..



"யாராவது வந்திடப் போறாங்க ஆது....!",எச்சரித்தபடியே அவன் முகத்தை வலுக்கட்டாயமாகத் தன் மார்பில் இருந்து நிமிர்த்தினாள்.



"ம்ப்ச்....!சரியான இம்சை டி நீ....!",புலம்பியபடியே நிமிர்ந்தவனின் பார்வை பெண்ணவளின் மென்மைகளின் மீது மொய்த்தது.



அவன்....அவளைக் கட்டிலில் கிடத்திய போதே...அவளுடைய துப்பட்டா அவளிடமிருந்து விடை பெற்று ஓரமாய் சுருண்டு ஓடி விட...துப்பட்டா இல்லாத சுடிதார் அதனுடைய வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.



அவளுடைய அங்க வளைவுகள் அவனை நோக்கி சரமாரியாக மலர்க் கணைகளைத் தொடுக்க...திக்கு முக்காடிப் போனான் அந்த ஆண்மகன்.அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்து கொண்டவள்...அவசர அவசரமாக தன் துப்பட்டாவை எடுத்து அணிந்து கொண்டாள்.



"ம்ப்ச்....!ஏன் டி....?",அவன் ஆட்சேபணைப் பார்வை பார்க்க..



"ம்....ஆசைதான்....!முதல்ல நகருங்க....!",அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டு சிட்டாய் பறந்து விட்டாள் நித்திலா.



..............................................................................



"இனிமேலும் என்னால பொறுமையா இருக்க முடியாது டா...!என்னை என்னன்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு அந்த மனுஷன்....?அவருடைய வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியா இருந்தால்....ரொம்பவும்தான் ஆடறாரு....!",உறுமிக் கொண்டிருந்த கௌதமை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்....ஆதித்யனும் நித்திலாவும் விழித்துக் கொண்டிருந்தனர்.



சுமித்ராவோ....பயத்தில் அழுது கொண்டிருந்தாள்.அவசர அவசரமாக சுமித்ராவிற்கு நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை.....எப்படியோ அறிந்து கொண்ட சுமித்ராவின் அம்மா....தன் மக்களிடம் அனைத்தையும் கூறிவிட்டார்.



"இந்த விஷயத்தை உடனே கெளதம் தம்பிக்கு தெரியப்படுத்திடு ம்மா....!உன் மனசுக்குப் பிடிச்சவனோட.....உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்.....!இவங்க எல்லாம் சேர்ந்து....உன்னைக் கொன்னு போடுவாங்களே தவிர....வேற சாதிப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க.....!ஒரு அம்மாவா எனக்கு என் மகளோட சந்தோஷம்தான் முக்கியம்....!உன்னுடைய சந்தோஷத்துக்காக....உன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து.....இந்த விஷயத்தை உன் காதில போட்டு வைச்சிட்டேன்.....!ஒரு அம்மாவா என் புள்ளையோட வாழ்க்கைக்காக நான் இதை செய்திட்டேன்.....!



இதுக்கு மேல....சுண்டு விரலைக் கூட என் புருஷனுக்கு எதிரா நான் அசைக்க மாட்டேன்....!அது ஒரு மனைவியா.....என் புருஷனுக்கு நான் செய்யற கடமை.....!உன்னுடைய வாழ்க்கை....இனி அந்த கெளதம் தம்பியோடதான்....!நல்லாயிரு.....!",தன் மகளின் வாழ்க்கையையும் காப்பாற்றி....அதே சமயம்....தன் கணவரையும் எதிர்க்காமல் உறுதியாய் பேசினார் அந்த வித்தியாசமான தாய்....!



அவர் கூறியதில் இருந்த மறைமுக அர்த்தம்....'உன் வாழ்க்கையை நீ எப்படியாவது காப்பாற்றிக் கொள்....!' என்பதே....!தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்.....தன் காதலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னவனிடம் சரணடைந்திருந்தாள்.



ஒன்றும் நடக்காததைப் போல்....அன்றும் வெகு சாதாரணமாகக் கிளம்பி அலுவலகத்திற்கு வந்தவள்....கௌதமிடம் அனைத்தையும் ஒப்பித்து விட்டாள்.அதன் விளைவு.....ஒரு முடிவு எடுப்பதற்காக அனைவரும் ஆதித்யனின் அறையில் குழுமியிருந்தனர்.இத்தனை களோபரத்திலும்....'தன்னைப் பெற்றவர்கள் முன்னிலையில்தான் தங்கள் திருமணம் நடக்க வேண்டும்....!',என்பதில் சுமித்ரா உறுதியாய் இருந்தாள்.



அழுது கொண்டிருந்தவளை உறுத்து விழித்தவன்,"இப்போ எதுக்கு டி இப்படி அழுதுக்கிட்டு இருக்க...?முதல்ல வாயை மூடு....!",என்று எரிந்து விழுந்தான் கெளதம்.அவளது தந்தையின் மீது இருந்த கோபம்....ஆத்திரம் அனைத்தும் அவள் மேல் திரும்பியது.



"இப்போ எதுக்கு டா என் தங்கச்சியை திட்டற....?சும்மா கோபத்துல 'தாம் தூம்..'ன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சால் மட்டும் ஒண்ணும் ஆகிடப் போறதில்ல....!அமைதியா அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிப்போம்....!உட்காரு.....!",சிறு அதட்டலுடன் அவனை அமர வைத்தான் ஆதித்யன்.



அவனும் தன் கோபத்தை சுமித்ராவிடம் காட்டக் கூடாது என்றுதான் நினைக்கிறான்.....!ஆனால்....என்ன செய்வது....?பாவம்....!அவள் தந்தையின் மேல் இருக்கும் கோபம் முழுவதும் அவள் மீதுதான் பாய்ந்து தொலைக்கிறது.



"இன்னும் என்னடா பொறுமையா இருக்கறது.....?நான் யாருன்னு காட்டாம...அந்த மனுஷன் அடங்க மாட்டாரு.....!",கெளதம் பொறுமிக் கொண்டிருக்க....நித்திலா இடை புகுந்தாள்.



"அண்ணா....!உங்களுடைய கோபம் எனக்குப் புரியுது....!",அவள் ஏதோ பேச வாயெடுக்கவும்..



"இல்லைம்மா.....!நான் முடிவு எடுத்துட்டேன்.....!இனியும் அவருக்கு டைம் கொடுக்கிறதா இல்லை.....!",என்றவன் சுமித்ராவிடம் திரும்பி..



"ஏய்ய்.....!இன்னைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு உன் அப்பாவை சுவை ஹோட்டலுக்கு வரச் சொல்லு.....!",என்று கட்டளையிட..



ஏற்கனவே பயந்து கொண்டிருந்தவள்....அவனுடைய இந்தக் கட்டளையில் மேலும் பயந்து போனாள்.



"அப்பாவையா.....?எ....எதுக்கு.....?",



"ம்....உட்கார்ந்து விருந்து சாப்பிடத்தான்.....!",அவன் சுள்ளென்று விழவும்....அவள் மேலும் அழ ஆரம்பித்தாள்.



"டேய்....!நீ ரொம்பவும்தான் டா அந்தப் பொண்ணை போட்டு திட்டற....?உன் கோபத்தை அவ அப்பா மேல காட்டு.....!அவ மேல காட்டாதே....!",ஆதித்யனின் கண்டிப்பில் அவன் சற்று அமைதியானான்.



"ப்ச்.....!",தன் தலையை அழுந்தக் கோதி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்..



"ஸாரி டா சுமி.....!நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன்.....!இருந்தாலும்....என் டென்க்ஷனும்...கோபமும் உன் மேலதான் திரும்புது.....!ஸாரி டா....!",உண்மையிலும் மனம் உருகி மன்னிப்பு கேட்டவன்..



"இன்னைக்கு ஆறு மணிக்கு உன் அப்பாவை அங்கே வரச் சொல்லு.....!அப்படி அவர் வரலைன்னா....6.30 மணிக்கு நான் அவரோட வீட்டில இருப்பேன்னு சொல்லு.....!கண்டிப்பா வந்திடுவாரு....!",என்றான் அமைதியாக.



"ம்....வரச் சொல்றேன்....!ஆனால்....கொஞ்சம் பொறுமையா பேசுங்க மாமா....!எனக்காக...!ப்ளீஸ்....!",கண்களில் கண்ணீருடன் அவள் கெஞ்ச...அவளுடைய 'எனக்காக..' என்ற வார்த்தை அவனை சற்று அசைத்துப் பார்த்தது.



"சரி டா...!உனக்காக கொஞ்சம் பொறுமையா நடந்துக்க முயற்சி பண்ணறேன்.....!நீ எதைப் பற்றியும் கவலைப்படாம.....ரிலாக்ஸ்டா இரு.....!முதல்ல....இப்படி எதுக்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து.....!",காதலுடன் அவன் கூற..



அவளும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள் காதலாக....!இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனும் நித்திலாவும் ஒருவரையொருவர் விழிகளால் பருகிக் கொண்டனர் காதலாக....!



"சரி டா மச்சான்.....!நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்.....!வர்றேன் ம்மா நித்தி....!",என்றபடி வெளியேறப் போன கௌதமை..



"ஒரு நிமிஷம் மாமா.....!",என்ற சுமித்ராவின் குரல் தடுத்து நிறுத்தியது.



கேள்வியாய் தன் முகம் நோக்கியவனை....கலக்கத்துடன் ஏறிட்டவள்,"மாமா....!நீங்க எனக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்தை மறக்கலையே.....?என் அம்மா அப்பா சம்மதத்தோடதான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னு நீங்க சொல்லியிருக்கீங்க....!",அவள் கூறவும்...அவனுக்குப் போன கோபம் சுர்ரென்று வந்து சேர்ந்தது.



"மறக்கலை டி.....!அந்த ஒரு சத்தியத்தை பண்ணிக் கொடுத்திட்டுத்தானே....இப்போ நாய் மாதிரி அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்.....!அது மட்டுமா....கண்டவன்கிட்டேயெல்லாம் கண்ட பேச்சையெல்லாம் வாங்கிக்கிட்டு இருக்கேன்.....!நீ சந்தோஷமா....கெட்டியா அந்த சத்தியத்தையே பிடுச்சுக்கிட்டுத் தொங்கிக்கிட்டு இரு....!அதை நிறைவேத்தி வைக்கத்தான் இந்த இளிச்சவாயன் இருக்கிறானே......!",அந்த சத்தியம் மட்டும் குறுக்கே நிற்கவில்லை என்றால்.....அவன்....அவளை இந்நேரம் தூக்கிச் சென்று தாலி கட்டியிருப்பான்.அதற்குத் தடையாக இருந்த அந்த சத்தியத்தின் மீது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.



அதை அவள் ஞாபகப்படுத்தவும்....ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்தவன் மேலும் கொதிநிலைக்குப் போய்....அவள் மீது எரிந்து விழுந்தான்.



அவள் மெளனமாக கண்ணீர் வடிப்பதைக் கண்டு...."ஆ...ஊன்னா கண்ணுல கட்டி வைச்சிருக்கிற டேமை திறந்து விட்டுடு....!",அதற்கும் அவளையே திட்டிவிட்டு வெளியேறினான் அந்தக் காதல் பைத்தியக்காரன்.....!



அதன் பிறகு....சுமித்ராவை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள்...ஆதித்யனுக்கும் நித்திலாவிற்கும் போதும்....போதுமென்றாகி விட்டது.



"உஷ்.....!ஷப்பா....!இப்பவே கண்ணைக் கட்டுதே.....!ஆமாம் ஆது....!இந்த மாதிரி சத்தியத்தை நான் உங்ககிட்ட வாங்கியிருந்தா....நீங்க என்ன பண்ணியிருப்பீங்க....?"ஆர்வத்துடன் நித்திலா கேட்க..



"எந்த ஒரு சத்தியத்தாலேயும் இந்த ஆதித்யனைக் கட்டுப்படுத்த முடியாது பேபி....!அதுவும் உன் விஷயத்துல....நெவர்....!",அசால்ட்டாகத் தோளைக் குலுக்கியவனின் காதலில் தெரிந்தே தொலைந்து போனாள் அந்த மங்கை....!



"முரடு.....!சரியான முரட்டுப் பையா....!காதலிலும் முரடு....முத்தத்திலும் முரடு....!",அவள் முணுமுணுக்க...அந்த முரட்டுக்காரனின் காதில் அது தெளிவாக விழுந்து வைத்தது.



"முத்தத்தில மட்டும் இல்ல பேபி....!மத்ததிலேயும் முரடுதான்.....!வேணும்ன்னா ஒரு ட்ரையல் பார்க்கலாமா.....?",குறும்பாக அவன் கண்ணைச் சிமிட்ட..



"உதை விழும்....!வேலையைப் பாருடா....!",போலியாக அவனை மிரட்டியபடியே தனது இருக்கைக்கு ஓடி விட்டாள் நித்திலா.





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 49 :



தனது அலுவலக அறையில்....இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்த பாலாவின் மனம் முழுவதும் வேதனை....வேதனை மட்டுமே நிறைந்திருந்தது.தன் முதல் காதலின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல்....அவன் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.அவன் இருதயமோ....ரணமாய் இரத்தக் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தது....!



'எப்படி....?எந்த இடத்துல நான் சறுக்கினேன்....?உண்மையான காதலுக்கு....அந்தக் காதலே அடிபணியும்ன்னு சொல்லுவாங்களே....?அப்படி இருக்கும் போது...என் காதல் ஏன் என்னை ஏமாத்துச்சு....?என்னுடையது உண்மையான காதல் இல்லையா.....?நித்தியை பார்த்த முதல் நாளிலிருந்து...இன்னைக்கு....இந்த நிமிஷம் வரைக்கும்....அவளை என் உயிரா நினைச்சுக்கிட்டு இருக்கேனே.....?அவளுக்காகத் துடிக்கிற என் இதயத்தோட துடிப்பை அவளால உணர முடியலையா.....?என்னுடைய காதல் பொய்யில்லையே.....?அது உண்மையானது....!ஆழமானது....!',அவன் மனம் காதலிடம் கேட்ட கேள்விகளுக்கு....அந்தக் காதலிடமே பதிலில்லை போலும்......!அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருந்தது....!



'என்னால இதைத் தாங்கிக்க முடியலையே.....!என்னுடைய உண்மையானக் காதலுக்கு கிடைச்ச பரிசுதான் என்ன....?இவ்வளவு நாட்கள்....ஒவ்வொரு நொடியும்....அவ கண்கள்ல....என் மீதான நட்பைத் தாண்டி காதல் தெரியாதான்னு....நான் ஏங்கித் தவிச்சிருக்கேன்.....!அன்னைக்கு....பார்ட்டி ஹால்ல நான்...அவ கண்கள்ல காதலைப் பார்த்தேன்....!ஆனால்....ஆனால்....அவள் கண்கள்ல வழிஞ்ச காதல் எனக்கானது இல்ல.....!அந்த காதலுக்கு சொந்தக்காரன் நான் இல்ல.....!அவ கண்கள்ல காதலை கண்ட அந்த நொடி....நான் உயிரோட செத்துட்டேன்....!ஏன்....?அவ மனசில நட்பையும் தாண்டி என்னால இடம் பிடிக்க முடியாம போச்சு.....?எந்த விதத்துல....நான் என் காதல்ல குறை வைச்சேன்.....?',பித்துப் பிடித்தவன் போல் புலம்பியவனைத் தேற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை.



அவனிடம் யார் சென்று சொல்வது....?அவனுடைய காதலில் எந்தவிதக் குறையும் இல்லைதான்...!ஆனால்....அவனுடைய காதலுக்காக வேறொருத்தி காத்துக் கொண்டிருக்கும் போது....நித்திலா எப்படி அவனுடைய காதலுக்கு உரிமைக்காரியாக முடியும்.....?அவனுடைய உண்மையான காதலுக்கும்....அன்பிற்கும்....நேசத்திற்கும் உரிமையானவள் வேறொருத்தி அல்லவா....?



அந்த வேறொருத்தியை காலம் வரும் போது....காதல் அவன் கண்களில் காட்டும்.



அவன் நித்திலாவின் மீது கொண்ட காதல் உண்மையானதுதான்....!ஆழமானதுதான்....!ஆனால்...அதை விட ஆதித்யன் அவள் மேல் கொண்ட காதல் அழுத்தமானது....!பேராழமானது....!கரை காண முடியாதது.....!காதல்....காதலர்களை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை....!அவரவர்களின் காதலுக்குத் தகுதியான காதலை....அவரவர்களுக்கு வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது....!



அதற்காக...பாலாவின் காதல்...நித்திலாவின் காதலுக்குத் தகுதியற்றது என்று கூறிவிட முடியாது.இன்னொருத்தியின் உத்தமமான காதல் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று....நித்திலாவின் காதல் அவன் கை நழுவிப் போனது என்று வேண்டுமானால் கூறலாம்....!



காதலின் ரணம் அவன் இருதயத்தைக் குத்திக் கிழித்து...அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.ஆண் மகனின் கண்ணீர் அரிதானது.....!வலிமையானது....!பெண்களின் கண்ணீரை விட வேதனையானது....!அந்த வளர்ந்த ஆண் மகன் கண்ணீர் வடித்தான்...தன்னுடைய காதலுக்காக.....!தான் உயிராய் நேசிப்பவளின் விழிகளில் தெரிந்த....இன்னொருவரின் மீதான காதலுக்காக....!



ஒரு கட்டத்தில் அந்த ஆண் மகன் சிலிர்த்து நிமிர்ந்தான்.தன் இருதயத்தைக் கடினமாக்கிக் கொண்டு....தன் உணர்வுகளை கடுமையாக்கினான்...!



'என் காதலை நான் விட்டுத்தான் ஆகணும்....!அவளுக்காக....!அவ கண்கள்ல தெரிந்த காதலுக்காக....!ஆதித்யன் சாரை...அவ பார்க்கிற பார்வையில காதல் கரைபுரண்டோடுச்சு.....!அவ முகத்துல அப்படியொரு சந்தோஷம்....பிரகாஷம்....!அவளுடைய சந்தோஷத்துக்காக...அவளுடைய காதலுக்காக....நான் என் காதலை விட்டுத்தான் ஆகணும்.....!இதுதான் என்னுடைய காதல்.....!என் காதல்ல நான் தோற்கலை....!அவளுடைய காதலுக்காக....நான் என்னுடைய காதலை விட்டுத் தர்றேன்.....!கடைசி வரைக்கும்....நான் அவளுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்.....!',மனம் வலிக்க வலிக்க....உயிர் துடிக்க துடிக்க....தன் முதல் காதலை உயிரோடு கொன்று புதைத்தான்.....!



'காதல்...' என்னும் வார்த்தைக்கு இலக்கணமாக....தன் இருதயத்தில் பதிந்திருந்த அவளது முகத்தை....வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு...'நட்பு....' என்னும் ஓவியமாகத் தீட்ட முயற்சி செய்தான்.....!



அவன் முயற்சி செய்வான்....!அவனுடைய முயற்சிக்கு உறுதுணையாய்....காதல் வலியில் அவன் துவண்டு போகும் சமயங்களில்.....அவனைத் தேற்றும் சகியாய்....'காதல்' என்னும் வரத்தைக் கொண்டு அவன் வாழ்வில் ஒரு தேவதை வருவாள்....!அந்த தேவதை....அவனுடைய அத்தனை காயத்திற்கும் மருந்தாய்....தன்னையே அவனிடம் அர்பணிப்பாள்....!தன்னுடைய காதலை....அவனது காலடியில் சமர்பிப்பாள்....!அவளுடைய காதல்....அந்த ஆண் மகனுடைய ரணத்தை ஆற்றும்.....!முழு ஆண்மகனாய் அவனை நிமிர்ந்து நிற்கச் செய்யும்....!



தான் காதலிப்பவள் தன்னைத் திருப்பிக் காதலிக்கவில்லையென்றால்....அவளைக் காயப்படுத்துவதா காதல்......?இல்லை.....!தான் காதலித்தவளுக்காக....தான் உயிராய் நேசித்தவளுக்காக....தன் காதலையே இழக்கத் துணிவதுதான் காதல்.....!நித்திலாவிற்காக விட்டுக் கொடுத்த பாலாவின் காதல் உன்னதமானது......!



...............................................................................................................................



"என்ன தம்பிகளா....?கூப்பிட்டு வைச்சு மிரட்டிக்கிட்டு இருக்கீங்களா....?நாங்க 'ம்'ன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும்....!எங்க சொந்த பந்தமெல்லாம் ஒண்ணு கூடிடும்....!",சுமித்ராவின் சித்தப்பா மிரட்டிக் கொண்டிருக்க....அவருக்கு அருகில் கோபத்துடன் அமர்ந்திருந்தார் சுமித்ராவின் தந்தை.



"அப்படியா....!அப்போ 'ம்'ன்னு சொல்லித்தான் பாருங்களேன்....!",அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த கெளதம் நக்கலுடன் வினவ....அவனுக்கு அருகில் இருந்த ஆதித்யன் கேலிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.



கெளதம் சொன்னது போல்....சுமித்ரா சென்று தன் வீட்டில் கூற....உடனே அவளது தந்தையும்....அவரது தம்பியும் பல கணக்குகளைப் போட்டுக் கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பி வந்து விட்டனர்.



'நாலு தட்டு தட்டினா....பயல் அடங்கிடுவான்....!',என்று அவர்கள் கணக்குப் போட்டிருக்க....அவர்கள் போட்டு வைத்த கணக்குகள் அனைத்தையும் ஒன்றுமில்லாததாய் அழித்துக் கொண்டிருந்தனர் கௌதமும்....ஆதித்யனும்....!



"வேண்டாம் பசங்களா.....!எங்ககிட்ட வாலாட்டாதீங்க.....!நாங்க எல்லாம் கிராமத்து ஆளுங்க....!ஏதோ பிழைப்புக்காகத்தான் இந்தப் பட்டணத்துல குடியேறியிருக்கிறோம்.....!எங்க சாதிசனம் எல்லாம் ஒண்ணு சேர்ந்ததுன்னா....அப்புறம்....அரிவாள் கத்திதான் பேசும்....!",தங்கதுரை கோபத்தில் உறுமிக் கொண்டிருக்க..



'இதற்கெல்லாம் அசருவேனா....?',என்பது போல் அசால்ட்டாக அவரைப் பார்த்த கெளதம்,"வெறும் பிழைப்புக்கு குடியேறுன உங்களுக்கே இப்படின்னா....எங்க கொள்ளு தாத்தா காலத்தில இருந்து....இங்கேயே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிற எங்களுக்கு எவ்வளவு இருக்கும்......?சும்மா சினிமாவுல வர்ற வில்லன்கள் மாதிரி....வெட்டு..குத்துன்னு விளையாட்டு காண்பிக்காம....எனக்கும்....உங்க பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணற வழியைப் பாருங்க.....!",அவன் குரலில் அப்படி ஒரு நையாண்டி.



"எங்க பொண்ணை வெட்டிப் போடுவேமோ தவிர....வேறொரு சாதிக்காரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டோம் டா.....!உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ.....!",அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த சுமித்ராவின் தந்தை ராஜவேலு ஆத்திரமாய் கத்த..



இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்த தங்கதுரையோ...."ஆமாண்ணா.....!எழுந்திருச்சு வாங்க......!இந்தச் சின்னப் பயலுககிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு.....!அப்படி என்னதான் கிழிக்கறானுகன்னு பார்த்திடலாம்.....!",தன் தமையனுக்கு ஒத்து ஊதியபடி அவர் எழுந்து நிற்க....ராஜவேலுவும் எழுந்தார்.



"இன்னும் ஏழு நாள்ல என் பொண்ணு கல்யாணம் நடக்கத்தான் போகுது.....!முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் வைப்பேன்....!கண்டிப்பா வந்திடணும்.....!",கேலியாக உரைத்தபடி நகரப் போனவர்கள்..



"ஒரு நிமிஷம் மாமனார்களே....!",என்ற கௌதமின் குரலில் அப்படியே நின்றனர்.



அது ஒரு தனி கேபின் என்பதால்....இவர்களுடைய பேச்சு சத்தம் எதுவும் வெளியே இருப்பவர்களை எட்டவில்லை.நடக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளனாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.



'இது நண்பனுடைய வாழ்க்கை....!இது அவன் பேச வேண்டிய தருணம்....!',என்று எண்ணி அமைதி காத்தான்.



"யாருக்கு யாருடா மாமனாரு....?அநாதைப் பயலே.....!",தங்கதுரை ஆங்காரமாய் வார்த்தைகளை விட..



'அநாதை' என்ற வார்த்தையில் கௌதமின் முகம் கருத்தாலும்....மறு நொடியே...தன்னியல்புக்கு வந்தவன்..



"நீங்க ரெண்டு பேரும்தான் எனக்கு மாமா....!இதிலென்ன சந்தேகம்.....!சரி....!அதை விடுங்க....!'உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ'ன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.....?கொஞ்சம் இருந்து....என்னால என்ன முடியும்ங்கிறதையும் பார்த்துட்டு போங்க.....!",அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே....நெடுநெடுவென்ற உயரத்துடன்....ஒருவன் உள்ளே நுழைந்தான்.



"ஸாரி டா மச்சான்ஸ்......!கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.....!அப்புறம்...கெளதம்...!உன் மாமனார் என்ன சொல்றாரு.....?"கேட்டபடியே அங்கிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான் விஜய்.



விஜய்....!சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்.....!இவர்களது நண்பன்....!



"என் மாமனார்தான் பொண்ணைத் தர மாட்டேன்னு அடம்பிடிச்சுக்கிட்டு இருக்காரு.....!அருவாளைத் தூக்குவேன்....கத்தியைத் தூக்குவேன்னு டயலாக் பேசிட்டு இருக்காரு....!",கெளதம் கூற..



"அது மட்டும் இல்லை டா...!அவங்க பொண்ணை கொன்னு கூட புதைப்பாங்களாம்....!ஆனால்....வேற சாதிப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களாம்....!",ஆதித்யன் மேலும் ஏற்றி விட..



"அப்படின்னா....ஒரே வழிதான் இருக்கு....!பேசாம பொண்ணைத் தூக்கிடு.....!அவங்க அரிவாள்....கத்தின்னு போனா....நாம போலீஸ்...ஜெயிலுன்னு போவோம்.....!ஒரு மேஜர் பொண்ணை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறது சட்டப்படி குற்றம்.....!அந்தக் குற்றத்தோட இவங்க கொலை குற்றத்தையும் சேர்த்தல்ல பண்ணுவேன்னு சொல்றாங்க.....!சாட்சிக்கு போலீஸ்காரன் நான் இருக்கேன்....!",நீளமாய் விஜய் பேசி முடிக்க..



கெளதம் போலியாய் அலறினான்.



"அய்யோ....!வேண்டாம் டா மச்சான்....!என் மாமனார் ரெண்டு பேரும் ரொம்ப பாவம்....!அவங்களைத் தூக்கி ஜெயில்லையெல்லாம் போட வேண்டாம்....!இப்போ அவங்களே என்னுடைய கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க பாரேன்.....!",என்றபடி....அதிர்ச்சியுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் நோக்கியவன்...

சொல்லுங்க மாமனார்களே....!இப்போ உங்க பொண்ணை எனக்குத் தருவீங்கதானே.....?",போலிப் பணிவுடன் வினவினான் கெளதம்.



போலீஸ்....ஜெயில் என்றவுடன் அவர்கள் சற்று பயப்படத்தான் செய்தனர்.



"என்ன....?போலீசை வைச்சு மிரட்டறீங்களா.....?இப்படியெல்லாம் பண்ணினா....பயந்துக்குவோமுன்னு நினைப்பா.....?",கோபமாக கேட்க முயன்றாலும் தங்கதுரையின் குரல் சற்று பயத்துடன்தான் வெளிவந்தது.



"ஹைய்யோ....!மாமா....!உங்களை பயமுறுத்த முடியுமா....?இன்னும் ஏழு நாள்ல...நீங்க குறிச்ச அதே முகூர்த்தத்துல....எனக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கலைன்னா....என்ன ஆகும்ன்னு தான் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்....!வேற ஒண்ணும் இல்ல....!",



"அது ஒரு போதும் நடக்காது டா....!",ராஜவேலு கத்த..



"அதுக்கு எதுக்கு மாமா இப்படி கத்தறீங்க....?ஒண்ணு....நீங்க முன்னாடி நின்னு நடத்தி வையுங்க....!அப்படி இல்லையா....என் கல்யாணத்தை எப்படி நடத்திக்கணும்ன்னு எனக்குத் தெரியும்.....!என்ன...?நீங்களா நடத்தி வைச்சா சுமூகமான போயிடும்....!இல்லையா....வீணா உங்க பொண்ணை வீட்டை விட்டு வரச் சொல்லி....நாலு சொந்தக்காரங்க முன்னாடி நீங்க அசிங்கப்பட்டு....இதெல்லாம் தேவையா....?",தோளைக் குலுக்கினான் கெளதம்.



"என் பொண்ணு என்னை மீறி வர மாட்டாள்....!",



"வருவாள்....!என்னுடைய காதல் அவளை வரவைக்கும்....!நீங்க என்ன....உங்க மகளைப் பாசத்துலேயா கட்டிப் போட்டு வைச்சிருக்கீங்க.....?கேவலம் சாதிவெறியைக் காரணம் காட்டி...எங்களுடைய உண்மையான காதலைப் பிரிக்க பார்க்கறீங்க.....?சரி....!அதையெல்லாம் விடுங்க.....!நான் எவ்வளவுதான் காதலைப் பத்தி உங்களுக்குப் பாடம் எடுத்தாலும்....சாதிவெறியில ஊறியிருக்கிற உங்களை மாதிரி மனித மிருகங்களைத் திருத்த முடியாது.....!



நீங்க குறிச்ச அதே முகூர்த்தத்துல உங்க பொண்ணுக்கும்....எனக்கும் கல்யாணம்.....!கல்யாண ஏற்பாடு எல்லாம் நானே பார்த்துக்கிறேன்....!உங்களை மாதிரி ஆளுங்களோட நிழல் கூட என் கல்யாணத்துல பட விரும்பல.....!நீங்க யார் யாரை அழைக்க விரும்பறீங்களோ....அழைச்சிக்கோங்க....!நாளைக்கு உங்க வீடு தேடி பத்திரிகை வரும்....!மறுபடியும்...ஏதாவது கோல்மால் பண்ணலாம்ன்னு நினைக்காதீங்க....!என்னுடைய பார்வை எப்பவும் உங்க மேலதான் இருக்கும்....!நீங்க போகலாம்....!",அழுத்தமாகக் கூறியவனுக்கு எதிராக....அவர்களால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.



அவர்களுக்கு நன்கு தெரிந்து போனது....!இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கவில்லையென்றால்.....தங்கள் சாதிக்காரர்களுக்கு முன்னால் அவமானப்பட நேரிடும் என்று....!அந்த அளவிற்கு நிலைமை கை மீறிப் போயிருந்தது.



'சம்மதம்...' என்று சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த ஒரு வழியும் இல்லை....!எந்த ஒரு வழியையும் கெளதம் விட்டு வைக்கவில்லை....!



இறுகிய முகத்துடன் வெளியேறப் போனவர்களைத் தடுத்த கெளதம்,"உங்களால என் பொண்டாட்டிக்கு எந்தவொரு ஆபத்தும் வரக் கூடாது....!நான் ஆல்ரெடி போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டுத்தான் இங்கே வந்திருக்கேன்.....!சுமித்ரா உடம்பில ஒரு சின்னக் கீறல் பட்டால் கூட....அதற்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்ன்னு....!ஸோ....என் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்க.....!",கிட்டத்தட்ட மிரட்டியவனை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாத நிலையில் அமைதியாக வெளியேறினர்....சாதியில் ஊறித் திளைத்த அந்த மனிதர்கள்....!



அவர்களிடம் அப்படி பேசிவிட்டானே தவிர....அதை எண்ணி அவன் வருந்தாமல் இல்லை.தனக்குத்தான் சொந்தம் என்று யாரும் இல்லை.....!அப்படி இருக்கும் போது....தன்னவளுக்கும் சொந்தம் என்று அனைவரும் இருந்தும் கூட....இப்படி இல்லாமல் வாழ வேண்டிய நிலைமை அவனை உறுத்தியது....!



"ரொம்ப தேங்க்ஸ் டா விஜய்....!",கெளதம் நன்றியுரைக்க..



"உதை விழும்....!நமக்குள்ள என்ன தேங்க்ஸ்.....?அப்புறம்...கல்யாணம் பண்ணி குடும்பஸ்தன் ஆகப் போற.....!",அவன் கலாய்க்க ஆரம்பிக்க...பேச்சு திசை மாறியது.நண்பர்கள் மூவரும் சிறிது நேரம் பேசி விட்டு.....கிளம்பிச் சென்றனர்.

...............................................................................................................



கெளதம்....சுமித்ராவின் திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.தந்தையின் கோபமுகம் சுமித்ராவை வதைத்தாலும்....'காலம் அனைத்தையும் ஆற்றும்....!' எனத் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.



கௌதமின் மிரட்டலுக்குப் பயந்து தந்தைமார்கள் இருவரும் அமைதியாகவே நடந்து கொண்டனர்.தங்கள் பெண் என்றும் பாராமல்....சுமித்ராவை வெட்டிப் போட வேண்டும் என்று தோன்றிய ஆத்திரத்தை....கௌதமின் எச்சரிக்கை அடக்கியது.....!



கெளதம் கூறியது போல் அவர்களை எல்லாம் திருத்த முடியாது....!அவர்கள் சாதியில் மூழ்கி....ஊறித் திளைத்தவர்கள்...!இங்கு....சுமித்ராவை காக்கும் அரணாக கெளதம் இருந்தான்....!அதனால்....அவள் காதல் பிழைத்தது....!உயிருக்கும் எந்தவொரு ஆபத்துமில்லை....!



ஆனால்....எந்த மூலையில் எத்தனை அபலைகள் சாதிவெறி என்னும் அரக்கனின் கைகளில்....தங்களது உயிருக்குயிரான காதலை இழந்து....சிக்கித் தவித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்களோ....தெரியவில்லை....!



'சாதிகள் இல்லையடி பாப்பா...!' என்று வகுப்பறைக்கு வகுப்பறை ஒலிக்கத்தான் செய்கிறது....!அவை அனைத்தும் 'ஒலி' என்ற அளவில் மட்டுமே நின்று....காற்றில் கரைந்து காணாமல் போவதுதான் வேதனை....!



********************



"பேபி....!நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்....?",காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதித்யன் தன் அருகில் அமர்ந்திருந்த நித்திலாவைப் பார்த்து கேட்டான்.கெளதம் மற்றும் சுமித்ராவின் திருமணத்திற்கு....அவர்களுக்குப் பரிசளிப்பதற்காக நகை வாங்க சென்று கொண்டிருந்தனர்.



"பண்ணிக்கலாம்....!பண்ணிக்கலாம்....!",அவள் இழுக்க..



"எப்போ....?நாற்பது வயசிலையா....?இப்பவே எனக்கு முப்பது வயசாகப் போகுது....!நீயும் வீட்டில பேச மாட்டேங்கிற....?நான் வந்து பொண்ணு கேட்கிறேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.....?",குற்றம் சாட்டினான் அவன்.



"நீங்க எல்லாம் வர வேண்டாம் ஆது.....!நானே பொறுமையா ஒருநாள் பார்த்து அவங்ககிட்ட சொல்றேன்....!என் மூலமாகத்தான் நம்ம விஷயம்....என் அம்மா அப்பாவுக்குத் தெரிய வரணும்.....!",அவள் உறுதியுடன் கூறினாள்.



"அதுதான் எப்போன்னு நான் கேட்கிறேன்....?",அவன் குரலில் பிடிவாதம் ஏறிக் கொண்டே போனது.



அவள் மட்டும் என்ன செய்வாள்....?பாவம்...!இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் பேசுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது.பயம் என்பதை விட பெரும் தயக்கம் என்று கூறலாம்....!என்னதான் ஆதித்யனின் காதலில் அவள் நனைந்து கொண்டிருந்தாலும்....பெற்றவர்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி அவள் மனதின் ஒரு மூலையில் அரித்துக் கொண்டேதான் இருந்தது....!



"என்னடி....?பதிலைக் காணோம்....?",அவன் மீண்டும் வினவவும்..



"இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை ஆது.....?கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்குவோமே.....?",அவள் சற்றுக் குரலை உயர்த்தினாள்.



"ஆமா....!அப்படியே....ஜாலியா லவ் பண்ணிட்டுத்தான் மறுவேலை....!ஒரு முத்தம் வாங்கறதுக்கே நாயா பேயா அலைய வேண்டி இருக்கு.....!",அவன் முணுமுணுக்க..



"அப்படி என்ன....நான் உங்களை அலைய விட்டேன்.....?சொல்லப் போனால்...நான்தான் உங்களுக்கு முதன் முதல்ல....முத்தம் கொடுத்தேன்.....!",சண்டைக்கு வந்தாள் அவள்.



"ஆமாண்டி....!நீ முத்தம் கொடுத்த லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே.....?அதுக்கு பேர் 'முத்தம்'ன்னு வெளியே போய் சொல்லிடாதே.....!எல்லோரும் என்னைத்தான் ஒரு மாதிரி பார்ப்பாங்க......!",



"ஏன்....?எனக்கு முத்தம் கொடுக்கத் தெரியலைன்னா...உங்களை எதுக்கு எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க.....?",அதிமுக்கியமாய் அவள் கேள்வி கேட்டு வைக்க..



"பாரு....!இது கூட உனக்குத் தெரியல.....!உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு....",அவன் தன் தலையில் அடித்துக் கொள்ளவும்....அவளுக்கு கோபம் வந்து விட்டது.



"ரொம்பவும்தான் டா என்னைக் கிண்டல் பண்ணற.....!போ....!",அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள..



"இந்தக் கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை....!என் அழகு பேபி....!உனக்கு ஒழுங்கா முத்தம் கொடுக்கத் தெரியலைன்னா....'இவன் பாரு....!இவளுக்கு இன்னும் ஒழுங்கா முத்தம் தரக் கூடச் சொல்லித் தரலை...'ன்னு என்னைத்தான் எல்லாரும் பேசுவாங்க....!அதுக்குத்தான் சொல்றேன்.....நான் சொல்லிக் கொடுக்கிறதை...ஒழுங்கா கத்துக்கோன்னு....!சரி...இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல....!இப்பவே உனக்கு க்ளாஸ் எடுக்கட்டா....?",முத்தத்தின் அறியாமைக்கு ஒரு புதுக் காரணத்தை சொல்லியபடி அந்தக் கள்வன் காரை ஓரங் கட்ட..



"டேய்....!நீ ஒண்ணும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்....!போடா....!",தன்னருகில் நெருங்கியவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் அவள்.



அவளது அத்தனை அடிகளையும் சுகமாய் தாங்கியவன்,"நான் ரொம்ப நல்லா சொல்லிக் கொடுப்பேன் பேபி.....!அன்னைக்கு பார்த்தல்ல...அத்தானோட முத்தத்தை....!",அவன் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள..



அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது."முத்தம்ங்கிற பேர்ல என் உதட்டைக் கடிச்சு வைச்சவன்தானே டா நீ.....!முரடா.....!",அவள் குரல்தான் மிரட்டியதே தவிர....முகம் காதலால் கனிந்திருந்தது.



"அன்னைக்கு ஏதோ ஆத்திர....அவசரத்துல கடிச்சு வைச்சுட்டேன்....!இப்போ ஒரு சான்ஸ் கொடு....மெதுவா....",அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தவள்....



"ச்சீய்....!இப்படியெல்லாம் பேசாதே....!முதல்ல வாயை மூடு டா....!",அவள் செல்லமாய் சிணுங்க...ஒரு பெருமூச்சுடன் காரைக் கிளப்பினான் அவன்.



"அது என்னடி.....?ஒரு சமயம்...'வாங்க ஆது....!போங்க ஆது...!'ன்னு மரியாதையா கூப்பிடற.....!இன்னொரு சமயம்....'வாடா...!போடா...!'ன்னு கண்டபடி திட்டற....?",



"அது....உன் மேல இருக்கிற காதல் அதிகமாகும் போது.....வார்த்தைகள் சுருங்கிடுது....!",அவள் கண்ணடிக்க..



"என் குட்டி பேபி....!",கொஞ்சினான் அவன்.



சிறிது நேரம் அமைதியில் கழிய....பிறகு அவளே ஆரம்பித்தாள்.



"ஏன் ஆது....?இப்பவே என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்கிறீங்க....!நாளைக்கு நம்ம கல்யாணத்துக்குப் பிறகு சுத்தம்.....ஏன் இப்படி அடம் பிடிக்கறீங்க....?",அவள் திடீரென்று கேட்கவும்..



அவளை ஒரு மாதிரியாகத் திரும்பிப் பார்த்தவன்,"கல்யாணத்துக்கு அப்புறம்....அம்மா வீட்டையே மறந்திட வேண்டியதுதான்....!",அவன் முணுமுணுக்கவும்..



அவனுடைய வலிமையான புஜத்தில் தன் பூங்கரங்களால் ஒரு அடி போட்டபடி,"அப்படியெல்லாம் நான் இருக்க மாட்டேன் பாஸ்....!ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை....நீங்க என் அம்மா வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போகணும்....!சொல்லிட்டேன்....!",சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள் அவள்.



"அய்யோ....!மிரட்டலெல்லாம் பலமா இருக்கே.....!",பயந்ததைப் போல் நடித்தவன்....சிறிது நேரம் கழித்து..



"நீ என்னைத் தேடறதே இல்லை பேபி.....!",என்று குற்றம் சாட்டினான்.



"என்ன......?",



"நான் உன்னைத் தேடற அளவுக்கு....நீ என்னைத் தேடறது இல்ல.....!எப்ப பாரு அம்மா....அப்பான்னு அவங்க பின்னாடி சுத்தறயே தவிர....என் மேல உனக்கு அக்கறையே இல்ல....!",ஏனோ அவனைப் பார்க்கும் போது அவளுக்கு குழந்தையின் ஞாபகம் தான் வந்தது.



ஒரு தாய்க்கு இரு குழந்தைகள் இருக்கும் போது....ஒரு குழந்தை மட்டும் வந்து...'நீ அவனைத்தான் கவனிக்கிறாய்...!என்னைக் கவனிக்கறதே இல்லை...!',என்று குற்றம் சாட்டுமே....அதைப் போல சிறு பிள்ளையாய் குற்றம் சாட்டியது அந்த வளர்ந்த குழந்தை....!



இன்னதென்று அர்த்தம் விளங்காத புன்னகையைத் தன் இதழ்களில் தேக்கியபடி....அவனைக் காதலாகப் பார்த்தவள்....மெல்ல 'இல்லை...!' என்பதாய் தலையசைத்தாள்.அவள் கண்களில் வழிந்த காதலில் கட்டுண்டவனாய்....அவன்...அவள் முகம் நோக்கினான்.



மயக்கும் புன்னகையுடன் அவன் விழிகளுக்குள் ஆழ்ந்த பார்வையொன்றை வீசியவள்....மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்.



"உன் தலைமுடி உதிர்வதைக் கூடத்
தாங்க முடியாது அன்பே....!

கண் இமைகளில் உன்னை நான்
தாங்குவேன்....!",




அவள் குரலில் பொங்கித் தெறித்து விழுந்த காதலில் மூழ்கியவனாய்....அவன் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டான்.



வெறிச்சோடி இருந்த சாலையில்....இரத்த நிற பூக்கள் சிதறியிருந்த மரத்தின் அடியில் கார் நின்றிருக்க....உள்ளே தேவதையைப் போல் பாடிக் கொண்டிருந்தாள் நித்திலா....!



"உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே....!

என் கனவிலும் உன் முகம்
தேடுவேன்....!",




அவன் முன்னுச்சி முடியை செல்லமாக கலைத்து விட்டபடி அவள் மேலும் பாட ஆரம்பித்தாள்.



"உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ....?

உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ....?",




அவளது இதழ்கள் பாடிக் கொண்டிருக்க....அவளது விரல்களோ அவனை சுட்டிக்காட்டியது...!தன்னை நோக்கி நீண்ட அவளது விரல்களைப் பற்றி அவளைத் தன்னருகில் இழுத்தவன்....அவளது நெற்றிப்பொட்டில் 'நச்'சென்று ஒரு முத்தம் வைக்க..



"உச்சந்தலை மீது நீ
வைக்கும் முத்தம்
என் உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்.....!

கைகள் பற்றிக் கொண்டே
பேசிக் கொள்ளும் நேரம்....இனிக்கும்...!",




அவளது கைகள் அவனது கைகளைத் தேடிச் சென்று....விரல்களோடு விரல்களாக பிணைத்துக் கொண்டது....!அவள் விழிகளுக்குள் தன்னைப் பாய்ச்சியபடியே....அவன்....தன் விரல்களோடு பிணைந்திருந்த அவளது உள்ளங்கையில் மெல்லிய முத்தம் வைத்தான்....!



"உன் கண்ணில் பட்ட பூவை....
கூந்தலுக்குள் வைப்பேன்....!

காலில் பட்ட கல்லை....
மூக்குத்தியில் வைப்பேன்....!

கையில் பட்ட என்னை....
உன் இதயப் பையில் வைப்பேன்....!

என்னைக் கொடுப்பேன்....!",




இப்பொழுது....அவளது கைகள் உயர்ந்து அவனது கழுத்தைச் சுற்றி வளைத்தன.....!அவளது இதழ்கள் செல்லமாக அவனது மீசை முடிகளைப் பிடித்து இழுத்தன...!



"நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று....
தொலைந்து போக கொஞ்சம் ஆசை....!

நான் அணைத்து தூங்கும்
மீசை வைத்த பொம்மை நீயே....!",




அவளது பாடல் வரிகள் உணர்த்திய காதலில் அவன் மொத்தமாய் கரைந்து கொண்டிருந்தான்.அவனை இழுத்து....ஒரு வேகத்துடன் தன் மார்பில் கிடத்திக் கொண்டவள்....மேலும் பாட ஆரம்பித்தாள்...!



"மேய்ச்சல் நிலமாக வீழ்ந்து கிடக்கின்றேன்....
மேய்ந்து கொள்...என்னை முழுதும்....!

தொட்டில் இன்றி தூங்கும்
என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்....!",




அவளது விழிகளில் அப்படியொரு தாபம்....!இதுநாள் வரை....அவனது விழிகள் மட்டுமே அவளிடம் தனது வேட்கையைப் பிரதிபலிக்கும்....!இன்று....முதன்முறையாக...அவளது விழிகளில் தெறித்து விழுந்த வேட்கை அவனைப் பித்தனாக்கியது...!மேலும் பாடப் போனவளின் இதழ்களை...தனது ஒற்றை விரலை வைத்து தடுத்தவன்....அவளுக்கு சற்றும் குறையாத காதலோடு பாட ஆரம்பித்தான்.



"உன்னைப் பற்றி ஏறும் காதல் கொடி நானே....!
உன் கையெழுத்தை தாங்கும் காகிதமும் நானே...!
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே....!
எந்தன் உயிரே....!",




அவன் பாடி முடித்த அடுத்த நொடி....அவன் மார்பில் புதைந்து கொண்டாள் அவள்.



"என்னுடைய காதலும்....உங்க மீதான என்னுடைய தேடலும்...இந்த ஒரு பாட்டுல அடங்கி விடக் கூடியது இல்லை ஆது....!என்னுடைய காதல் ரொம்ப ரொம்ப பெரியது.....!பரந்து விரிஞ்சது....!உங்களுடைய காதல் எப்போ ஏற்பட்டுச்சு ஆது.....?என்னைப் பார்த்த பிறகு வந்ததுதான் உங்களுடைய காதல்....!ஆனால்....என்னுடைய காதல் எப்போ வந்தது தெரியுமா.....?எனக்கு விவரம் தெரிந்த வயசிலிருந்து....என்னுடைய மொத்தக் காதலும்....என்னுடைய வருங்காலக் கணவனுக்கு மட்டும்தான் அப்படின்னு ஒரு பொக்கிஷம் மாதிரி சேர்த்து சேர்த்து வைச்சிருக்கிறேன்......!



இவ்வளவு வருஷமா என் இதயத்துக்குள்ள பூட்டிக் கிடந்த....என்னுடைய அத்தனைக் காதலுக்கும் சொந்தக்காரன்....உரிமைக்காரன் நீங்க மட்டும்தான்.....!ஏன்....?அந்தக் காதல் மேல எனக்குக் கூட உரிமையில்லை.....!அந்தக் காதலுக்கான மொத்த உரிமையையும்....நான் உங்களுக்கு கொடுத்திட்டேன்.....!",ஒரு மந்திரம் போல்....அவனது மார்பில் புதைந்தபடி....அவனது இதயத் துடிப்பின் ஒலியைக் காதில் கேட்டபடி கூறிக் கொண்டிருந்தாள் நித்திலா....!



அவள் இந்தளவிற்கு தன்னைக் காதலிப்பாள் என்று ஆதித்யன் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை.'அதிரடியாக அவளது மனதில் அமர்ந்து விட்டோம்....!' என்றுதான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான்....!தன்னுடைய அடாவடியான காதலுக்கு சற்றும் குறையாத காதலை அவள் காண்பிப்பாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை....!



இதுதான் நித்திலாவினுடைய காதல்.....!ஆதித்யனின் காதல் முரட்டுத்தனமானது என்றால்....நித்திலாவின் காதல் மென்மையானது.....!அவனுடையது பிடிவாதம் கலந்த அராஜகக் காதல் என்றால்....இவளுடையது வன்மை கலந்த மென்மையானது.....!



காதல் என்ற ஒன்றில் மட்டும்தான் வன்மையும் இருக்கும்.....!மென்மையும் இருக்கும்....!காதலால் மட்டும்தான் சுடு நிலவாய் தகிக்கவும் முடியும்....!தண் கதிரவனாய் குளிர வைக்கவும் முடியும்....!முரண்பாட்டின் மொத்த உருவமே காதல்தான்.....!ஆனால்....அதுவும் ஒரு செல்லமான....சுகமான....இம்சையான முரண்பாடுதான்.....!



"ஐ லவ் யூ டி.....!",அவளது நெற்றிப் பொட்டில் இதழ் பதித்து விழிகளை மூடிக் கொண்டான் அவன்.எவ்வளவு நேரம் சென்றதோ....தெரியவில்லை....!ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் காதலில் சுகமாய் நனைந்து கொண்டிருந்தவர்களை.....சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் ஒலி மீட்டு எடுத்து வந்தது.



சிரித்தபடியே அவளை விட்டு விலகியவன்....காரைக் கிளப்பினான்.இருவருக்குள்ளும் அழகான மௌனம் ஆட்சி செய்து கொண்டிருந்தது....!காதல் கரைபுரண்டு ஓடும் போது....அங்கு வார்த்தைகளுக்கு வேலையில்லாமல் போகும்....!காதலில் மௌனம் அழகானது....!மிக மிக அழகானது....!



அந்தப் பிரம்மாண்டமான நகைக்கடையின் முன் காரை நிறுத்தியவன்....அவளை வைர நகை இருக்கும் பிரிவிற்கு போகச் சொல்லிவிட்டு...காரை பார்க் செய்யப் போனான்.



இவன் காரை நிறுத்தி விட்டு வரும் போது....நித்திலா....ஒரு நகையை ஆர்வம் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள்.



"ட்ரை பண்ணிப் பாருங்க மேடம்.....!அப்போத்தான் செலெக்ட் பண்ண ஈஸியா இருக்கும்......!",என்றபடி அங்கு வேலை செய்யும் ஒரு பெண் நித்திலாவின் கழுத்தில் அந்த நகையை மாட்டிவிட்டாள்.



அவளது சங்கு கழுத்திற்கு அந்த நகை வெகு பொருத்தமாக இருந்தது.கழுத்தோடு ஒட்டியபடி....நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த நகை....!



இதை அனைத்தையும் ஓரமாய் நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



"நைஸ்.....!",கண்ணாடியில் தெரிந்த தனது பிம்மத்தைப் பார்த்தவள்..."போதும்.....!கழட்டி விடுங்க.....!",எனவும் அந்தப் பணிப்பெண் கழட்டி விட்டார்.



கூடவே...."உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு மேடம்.....!",என்ற பாராட்டு வேறு....!



"என்ன பேபி....பிடிச்சிருக்கா.....?",தன் காதருகில் ஒலித்த ஆதித்யனுடைய மென் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தவள்..



"ம்.....!சூப்பரா இருக்கு ஆது....!இதையே வாங்கிக்கலாம்......!",என்றாள்.



"ம்ஹீம்....!இது வேண்டாம் பேபி.....!வேற பாரு.....!",அவன் மறுக்கவும்..



"ஏன் ஆது.....?இதுவே நல்லாதானே இருக்கு....?",என்றபடியே மற்ற நகைகளை பார்வையிட ஆரம்பித்தாள்.



இருவரும் சேர்ந்து காதணி...மோதிரம்...வளையல் என அனைத்தும் செட்டாக இருக்கும் படியான ஒரு நகையை சுமித்ராவிற்காக தேர்ந்தெடுத்தனர்.



பில் போடப் போகும் போது....நித்திலா முதலில் தேர்ந்தெடுத்த நகையையும் சேர்த்து....ஆதித்யன் பில் போடச் சொல்ல..



"அந்த நகையை வேண்டாம்ன்னு சொன்னீங்களே.....?",நித்திலா கேள்வியெழுப்ப..



அவளைக் காதலோடு நோக்கியவன்,"என் குட்டிம்மா ரொம்ப ஆசைப்பட்டு அதைப் போட்டு பார்த்தாங்களா.....?அதுதான்....!இது அவங்களுக்காக.....!",எனவும் அவள் விழி விரித்தாள்.



"நோ....!நோ ஆது....!நான்...அது ஏதோ சும்மா போட்டுப் பார்த்தேன்.....!எனக்கு எதுவும் வேண்டாம்....!",என்று அவசர அவசரமாக மறுக்க....அவனது புருவங்கள் முடிச்சிட்டன.



"ஏன்.....?",



"இவ்வளவு காஸ்ட்லியா எனக்கு வேண்டாம் ஆது....!ஏற்கனவே....மோதிரம்...செயின் அப்படின்னு நீங்க வைரத்துல வாங்கிக் கொடுத்திருக்கீங்க.....!",



"ஸோ வாட்....?",தோளைக் குலுக்கியவன்....அந்த நகையை பில் போட அனுப்பி வைத்தான்.



"ஆது....!இதெல்லாம் எனக்கு வேண்டாம்....!",அவள் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பிக்க..



"ஷ்....!பேபி....!என் பொண்டாட்டிக்கு நான் வாங்கித் தர்றேன்....!நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா....?இது என்ன பேச்சுன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்க.....?",அவன் சற்றுக் கண்டிக்கும் தொனியில் பேசவும் அவள் அமைதியாகி விட்டாள்.



அப்பொழுதும் முரண்டிக் கொண்டே இருந்தவள்...காரில் ஏறியதும் ஆரம்பித்தாள்.



"ஆது.....!",என்று ஆரம்பித்தவளைத் திரும்பிப் பார்த்து அவன் ஒரு முறை முறைத்தான்.'கப்சிப்'பென்று வாயை மூடிக் கொண்டாள் அவள்.



சற்று நேர அமைதிக்குப் பிறகு அவளே இறங்கி வந்தாள்.



"சரி ஆது....!அந்த நகையை நான் போட்டுக்கிறேன்....!ஆனால்...எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போக முடியாது.....!",அவன் அப்பொழுதும் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



"நான்தான் சரின்னு சொல்லிட்டேன்ல ஆது....!இன்னும் ஏன் அமைதியா இருக்கீங்க....?",அவள் மேலும் நச்சரிக்க...அவன் அப்பொழுதும் அவளைத் திரும்பிப் பார்த்தானில்லை.



சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள்,"இப்போ என்னை என்னதான் பண்ண சொல்றீங்க....?",அவள் கத்திய மறுநொடி....சடாரென்று திரும்பிப் பார்த்தவன்..



"நான் என்ன சொல்றது....?அதுதான் உனக்குன்னு சொந்தமா மூளை இருக்கல்ல.....?யோசி....!",அவன் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.



'தான் வாங்கித் தரும் பரிசை அவள் மறுக்கிறாள்....!' என்பதில் வந்த கோபம் அது....!இன்னும் தன்னோடு உரிமையுடன் பழக மாட்டேன் என்கிறாளே....?என்ற ஆதங்கத்தில் வந்த கோபம் அது....!



அவனுடைய கோபத்தில் சிறிது நேரம் கையைப் பிசைந்து கொண்டு வந்தவள்...பிறகு அவளே ஆரம்பித்தாள்.



"எதுக்கு ஆது இவ்வளவு கோபப்படறீங்க....?நான் அந்த நகையை வேண்டாம்ன்னு சொல்லலையே....அதைப் போட்டுக்கிறேன்னு தானே சொல்றேன்....!என்ன...அதை என் வீட்டுக்கு எடுத்துட்டுப் போக முடியாது....அவ்வளவுதான்....!என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ஆது....!",மெல்லிய குரலில் அவள் பேச பேச...அவனது கோபம் மட்டுப்பட்டது.



"சரி...!சுமித்ரா கல்யாணத்துக்கு போட்டுக்கோ....!",சுருக்கமாக உரைத்தவன் பின்பு சாலையில் கவனமானான்.



"இல்ல...!நீங்க இன்னும் கோபமாகத்தான் இருக்கீங்க.....!",மெலிதாய் அவள் சிணுங்க..



"இல்லை டி....!சந்தோஷமாகத்தான் சொல்றேன்....!கெளதம்...சுமித்ரா கல்யாணத்தப்ப இந்த நகையை போட்டுட்டு....கழட்டி கொடு....!நான் கொண்டு போய் நம்ம வீட்டில வைச்சிருக்கிறேன்....!போதுமா....?",அவள் சிணுங்களில் தன் கோபத்தை மறந்தவனாய் அவன் இலகுவான குரலில் கேட்க..



"ம்ம்....!",மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டியபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்...!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 50 :



நாட்கள் அழகாகக் கடந்து செல்ல...ஒருவழியாக கெளதம்...சுமித்ராவின் திருமண நாளும் வந்தது.அனைத்து ஏற்பாடுகளையும் ஆதித்யன் மற்றும் கெளதம் ஆகிய இருவருமே கவனித்துக் கொண்டனர்.சுமித்ராவிற்குத் தேவையான நகைகள் வாங்குவதில் இருந்து...முகூர்த்த புடவை எடுப்பது வரை...என் அனைத்தையுமே கெளதமே பார்த்துக் கொண்டான்.



ஏனோ....தங்களுடைய திருமணத்திற்கான ஏற்பாட்டில் சுமித்ராவின் தந்தையின் பங்களிப்பை அவன் விரும்பவில்லை.பெற்ற மகளைக் கொல்லக் கூடத் தயங்காத அந்த மிருகங்களின் எண்ணங்கள் கூட....தங்கள் திருமணத்தின் மேல் விழக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.



இந்த இடைப்பட்ட ஏழு நாட்களில்...கௌதமும்...சுமித்ராவும் தங்களது காதலை பேசிப் பேசியே வளர்த்தனர்....!திருமணத்திற்கு சிறிது நாட்களே இருந்ததால்....சுமித்ராவின் அம்மா....அவளை அலுவலகத்திற்கு அனுப்ப மறுத்து விட்டார்....!பகல் முழுவதும் கௌதமை திருமண வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்ள....பால் நிலா சிந்தும் இரவுப் பொழுதை தங்களது காதலுக்காக பயன்படுத்திக் கொண்டான்.



ஆதித்யனும்...திருமண வேலைகள் சம்மந்தமாக வெளியே அலைய வேண்டி இருந்ததால்....ஆபிஸை நித்திலாதான் பார்த்துக் கொண்டாள்....!



இப்படியாக....திருமண நாளும் அழகாக விடிந்தது....!சில பல தடங்கல்களுக்குப் பிறகு....இதோ இப்பொழுது....தன் காதல் கண்மணியின் கரம் பிடிப்பதற்கான பொன்னான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு...மணமகனாய் கம்பீரமாய் மணமேடையில் அமர்ந்திருந்தான் கெளதம்....!



ஐயர் கூறும் மந்திரங்களுக்கு செவி சாய்த்து....அதை திருப்பி உச்சரித்துக் கொண்டிருந்தவனின் விழிகள்...தன்னவளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தது....!அவளும் வந்தாள்....!அந்த வானலோகத்து நங்கைகளையும் தோற்கடிக்கும் அழகோடு....அவன் எடுத்துக் கொடுத்த அரக்கு வண்ண பட்டுப்புடவையில்....மிதமான அலங்காரத்தில்....வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவந்திருக்க....தேவதையைப் போல் நடந்து வந்தவளிடம் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் அவன்....!



இவன் இங்கு திணறிக் கொண்டிருக்க...அவனுக்கு அருகில் மாப்பிள்ளைத் தோழனாய் அமர்ந்திருந்த ஆதித்யனும்....தன் நண்பனுக்கு சற்றும் குறையாத திணறலை சந்தித்துக் கொண்டிருந்தான்.



இளஞ்சிவப்பு வண்ண பட்டுப் புடவையில்...அழகுக்கே சவால் விடும் பேரழகோடு சுமித்ராவின் அருகில் வந்து கொண்டிருந்த நித்திலாவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன ஆதித்யனுடைய கண்கள்....!அவனுக்கு சற்றும் குறையாத காதல் பார்வைகளை....ஆதித்யனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தாள் நித்திலா....!தன்னவனை முதல் முறையாக பட்டு வேட்டி சட்டையில் பார்க்கிறாள் அல்லவா...?அந்த மயக்கம் அவள் விழிகளில் குடி கொண்டிருந்தது...!



வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் ஆண்மைக்கு இலக்கணமாய் அமர்ந்திருந்த கௌதமிற்கு அருகில்....பெண்மையின் பேரழகிற்கு இலக்கணமாய் அமர்ந்திருந்தாள் சுமித்ரா.இருவர் விழிகளும் காதலாலும்...கனவுகளாலும் நிரம்பியிருந்தன....!



"கெட்டி மேளம்....!கெட்டி மேளம்....!",



வேத மந்திரங்கள் முழங்க....தேவ தேவர்களின் ஆசிர்வாதத்தோடும்....சுற்றியிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்தொலிகளோடும்....மங்கள நாணை கையில் ஏந்தினான் கெளதம்.தன்னவன் போடும் மூன்று முடிச்சை எதிர்பார்த்து....தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அந்த மங்கை...!



அந்த பொன் தாலியை அவள் கழுத்தில் அணிவிப்பதற்காக எடுத்துச் சென்றவனின் கைகள்....அதை அணிவிக்காமல் சற்று தாமதிக்க....சரியாக அதே நேரம் அவளும் நிமிர்ந்து அவனை நோக்கினாள்....!இருவரின் விழிகளிலும் அப்படியொரு காதல்....!



'வாழ்வின் எல்லை வரை நீயும் நானும் காதலோடு பயணிப்போம்....!' என்ற உறுதிமொழியைத் தன் கண்களின் மூலமாக அவளது விழிகளுக்கு எடுத்துரைத்தவன்....அவளுடைய விழிகளைத் தன் காதலால் கட்டிப் போட்டபடி....அவளது சங்கு கழுத்தில் மஞ்சள் தாலியை அணிவித்து மூன்று முடிச்சிட்டான்....!



தன் மார்பில் தவழ்ந்த தாலியின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டவளின் விழிகள் தாமாக மூடிக் கொண்டன...!அவள் இமைகளின் ஓரத்தில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் எட்டிப் பார்த்தது....!



மென்மையாய் அதை சுண்டி விட்ட கௌதமை...தன் விழி திறந்து பார்த்தவளின் பார்வையில் காதல்....காதல் மட்டுமே நிறைந்திருந்தது....!'வேண்டாம்...!' என்பதாய் தலையசைத்தவனின் கண்கள்....'இனி நீ எதற்காகவும் அழக்கூடாது....!' என்ற செய்தியை பிரதிபலித்தன...!



ஐயர் கூறியபடி குங்குமத்தை எடுத்துச் சென்று அவள் நெற்றி வகிட்டிலும்....மாங்கல்யத்திலும் சூட்டி விட்டு....அவளை முழுமையாகத் தன் மனைவியாக....தன்னில் சரிபாதியாக அங்கீகரித்துக் கொண்டான் கெளதம்.



இதை அனைத்தையும் கண்ணீர் நிறைந்த விழிகளோடும்....தாய்மையின் கனிவோடும் பார்த்துக் கொண்டிருந்தார்....சுமித்ராவின் தாய் ருக்மணி.அவளது தந்தையும்...சித்தப்பாவும் தோற்றுப் போன அவமானத்துடன் நடப்பதை வெறித்துக் கொண்டிருந்தனர்.அதற்கு ஏற்றார் போல்...அவர்களது உறவினர்களும்...அவ்வப்போது "என்ன...பையன் நம்ம சாதி இல்லையா....?",எனக் கேட்டு கேட்டு அவர்களுடைய ஆத்திரத்தைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தனர்.



அவர்களுடைய ஆத்திரமும் கோபமும் இந்தத் தம்பதிகளை ஒன்றும் செய்யப் போவதில்லை...!ஏனென்றால்....இவர்களுக்குத்தான்...'காதல்' என்னும் மாபெரும் சக்தி துணையாக இருக்கிறது அல்லவா....?



அதன் பிறகும்....பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரம் கடந்து கொண்டிருந்தது.



"அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கிறேம்மா.....!",நித்திலாவின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவியபடி கூறினார் லட்சுமி....ஆதித்யனின் அம்மா...!



அவனது மொத்தக் குடும்பமும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தது.அவர்களிடம் நித்திலாவை அறிமுகப்படுத்தி வைத்தான் ஆதித்யன்.



"என் பேராண்டி ஏன் மந்திரிச்சு விட்டக் கோழி மாதிரி திரிஞ்சான்னு இப்போத்தானே தெரியுது....!என்னுடைய பேத்தி அவ்வளவு அழகு.....!",பாசத்துடன் நித்திலாவின் கைகளைப் பற்றிக் கொண்டார் கமலா பாட்டி.



"வாழ்க்கையிலேயே முதல் முறையா என் பேரன் அரண்டு போய் நின்னது உன் விஷயத்துல மட்டும் தான் மா....!'என் அப்பாக்கிட்ட சொல்லி வைச்சிடுவேன்...!'ன்னு அவனையே மிரள வைச்ச நீ....பெரிய ஆள்தான் மா....!",வழக்கம் போல் சுந்தரம் தாத்தா கலகலப்பாக பேசினார்.



"இப்படிப்பட்ட மருமகள்தான் எனக்கு வேணும்.....!இவனை எப்பவும் மிரட்டியே வைச்சிரு ம்மா.....!அப்பத்தான் இந்த முரட்டுப் பையனை சமாளிக்க முடியும்.....!",மாணிக்கமும் குறும்புடன் அந்தப் பேச்சில் கலந்து கொண்டார்.



நித்திலாவைச் சுற்றி நின்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க....அனைவருக்கும் ஒரு வெட்கப் புன்னகையை பதிலாகத் தந்தபடி நின்றிருந்தாள் நித்திலா.



முதன் முதலில்....புகுந்த வீட்டு உறவுகளை எதிர் கொள்ளும் போது எந்தப் பெண்மையுமே தடுமாறத்தான் செய்யும்....!அதில் நித்திலா மட்டும் விதிவிலக்கா என்ன....?அவர்களிடம் எப்படி பேசுவது....?அவர்களது கலகலப்பான பேச்சை எப்படி எதிர்கொள்வது....?என்று சிறிது தடுமாறிக் கொண்டுதான் இருந்தாள்.



அவளது மருண்ட விழிகளில் இருந்தே....அவளது பயத்தைக் கண்டு கொண்டான் ஆதித்யன்.மெல்ல அவளைப் பார்த்து 'நான் இருக்கிறேன்....!',என்பதைப் போல கண்களை மூடித் திறந்தான்....!அவ்வளவுதான்....!அந்தச் சிறிய கண்ணசைவிற்குத்தான் எத்தனை சக்தி.....!அவனுடைய அந்தச் சிறிய செய்கையில்....அவள் தன் மனதிற்குள் இருந்த அத்தனை தயக்கங்களையும்....அச்சத்தையும் விட்டொழித்தாள்...!



அதற்குள் மருமகளின் தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட லட்சுமியும்,"சரி.....!எல்லோரும் மாறி மாறி பேசி என் மருமகளைப் பயமுறுத்தாதீங்க.....!நீ வாம்மா.....!நாம போய் அங்கே உட்காரலாம்....!",அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.



"அம்மா.....!அவளை எங்கே கூட்டிட்டுப் போறீங்க.....?அவளுக்கு கொஞ்சம் வேலையிருக்கு.....!",அவசர அவசரமாகப் பேசினான் ஆதித்யன்.



அவனுக்கு அவன் கவலை....!அவளை சாதாரணமாகப் புடவையில் பார்த்தாலே....மயங்கிக் கிறங்கிப் போய்விடுவான் அவன்.....!அதுவும்...இன்று பட்டுபுடவைக் கட்டிக்கொண்டு....அவன் வாங்கிக் கொடுத்த வைர நகையை அணிந்து கொண்டு....தோளில் வழியும் மல்லிகைச் சரத்துடன் வளைய வருபவளைக் கண்ட பின்பும்....அவன் நிலைமையைப் பற்றி சொல்ல வேண்டுமா....?அவளது புடவை மடிப்பில் சிக்கி அவன் மனம் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது....!



அந்த மனதை மீட்பதற்காக....நித்திலாவின் அருகாமையை நாடினான் அந்தக் காதல்காரன்....!இதை எதையும் அறியாமல்...நித்திலாவை நடுவில் அமர வைத்து....அவளைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டு கதைப் பேசத் தயாராகியது அவனுடைய குடும்பம்.



"டேய்....!இன்னைக்குத்தான் என் மருமகளையே நீ என் கண்ணில காண்பிச்சிருக்கிற....!நான் கிளம்பற வரைக்கும் இவள் என் கூடத்தான் இருப்பாள்....!எந்த வேலையா இருந்தாலும் நீயே பார்த்துக்கோ....!எங்களைத் தொல்லை பண்ணாதே....!",விரட்டினார் லட்சுமி.



"இவ்வளவு நாள் வீட்டுக்கு வரமாட்டேன்னு உங்க மருமகள்தான் அடம் பிடுச்சுக்கிட்டு இருந்தா....!என்னன்னு அவளையே கேளுங்க....!",அவளது அருகாமை கிடைக்காத கடுப்பில் சற்று எரிச்சலுடன் கூறினான் ஆதித்யன்.



அவன் திடீரென்று தன்னை மாட்டிவிடவும் திருதிருவென விழித்த நித்திலா,"அது....வந்து...அத்தை....எங்க அம்மா அப்பா சம்மதிக்காம....அங்கே நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எனக்குக் கொஞ்சம் தயக்கமா இருக்கு.....!அதனாலதான் வீட்டுக்கு வரலை....!",தயங்கித் தயங்கி கூறி முடித்தாள்.



அந்த நொடி....அந்த மாமியாரின் உள்ளத்தில் நீக்கமற இடம் பிடித்தாள் நித்திலா.'பெற்றவர்களிடம் இவ்வளவு மரியாதை வைத்திருப்பவள்....நிச்சயம் புகுந்த வீட்டினரிடமும் மரியாதையாகத்தான் பழகுவாள்....!நல்ல குணமான பெண்....!',அவரது மனது சான்றிதழ் வழங்க....அவரது கண்கள் பாராட்டுதலாய் தன் மகனை நோக்கியது.



'ரொம்ப அருமையான பெண்ணை தேர்ந்தெடுத்திருக்கிறாய்....!', எனும் பாராட்டு அதில் தொக்கி நின்றது.



அதில் அந்த ஆண்மகன் கர்வம் கொண்டான்....!கணவனின் கர்வம்...மனைவியின் பண்புக்குள் ஒளிந்திருக்கிறது...என்பது எவ்வளவு சாத்தியமான வார்த்தை....!அவன் விழிகள் காதலோடு தன்னவளின் மேல் படிந்தது.



"அதுவும் சரிதான் ம்மா....!உன் அம்மா அப்பா சம்மதத்துக்குப் பிறகு...முழு உரிமையோடு நீ....நம்ம வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கணும்.....!",கனிவுடன் கூறினார் அந்தத் தாய்.



"சரி...சரி...!இதையெல்லாம் விடுங்க....!நித்தி கண்ணா....!உங்க ஆபிஸ்ல எவ்வளவோ நல்ல பசங்க இருந்தும்.....அவங்களை எல்லாம் கண்டுக்காம இவனுக்கு எதுக்குமா ஒகே சொன்ன....?சரியான முரட்டு பையனாச்சே இவன்.....!",ஆதித்யனைப் பார்த்து போலியாக முகத்தைச் சுளித்தபடியே சுந்தரம் தாத்தா வினவ..



"என்ன பண்றது தாத்தா.....!விதி வலியது.....!",உதட்டைப் பிதுக்கியபடி சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறியவளின் விழிகள் மட்டும் காதலாய் ஆதித்யனைப் பார்த்திருந்தது.



'என்னடி.....?சலிச்சுக்கிறே.....!',அவனது பார்வை அவளைக் கேள்வி கேட்டது.



உதட்டைச் சுளித்து அழகு காட்டினாள் அவள்....!



அதற்குள் சுந்தரம் தாத்தாவின் பேச்சுக்குரல் அவளைக் கலைக்க...அவள் தன் கவனத்தை அவர் புறம் திருப்பினாள்.



"உண்மைதான் ம்மா...!விதி வலியதுதான்....!இந்த முசுட்டுப் பையனுக்கு இப்படி ஒரு தங்கமான பொண்ணு கிடைச்சிருக்கே....!இருந்தாலும்....இவனுடைய மிரட்டலுக்கெல்லாம் நீ பயப்படாதே.....!ஓவரா மிரட்டினான்னா...இந்த தாத்தாக்கிட்ட சொல்லு....நான் பார்த்துக்கிறேன்.....!",அவர் அபயக்கரம் நீட்ட..



"கண்டிப்பா தாத்தா....!உங்ககிட்டேதான் சொல்லுவேன்....!அங்கே பாருங்க....இப்போ கூட என்னை முறைச்சுக்கிட்டே நிற்கிறாரு.....!",குழந்தைத்தனமாய் அவள் புகார் வாசித்தாள்.



உண்மையிலுமே....அவன்...அவளை முறைத்துக் கொண்டுதான் நின்றிருந்தான்.



'மனுஷனோட அவஸ்தையை புரிஞ்சுக்காம...ஜாலியா இங்கே உட்கார்ந்து அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கா பாரு.....!',என்று அவன் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.இருந்தும் மனதிற்குள்.... தன் தாத்தாவோடு சேர்ந்து அவள் பண்ணும் குறும்புகளை ரசித்துக் கொண்டுதான் இருந்தான்.



"டேய்....!என் பேத்தியை எதுக்கு டா முறைக்கிற.....?முதல்ல இடத்தைக் காலி பண்ணு....!உனக்கு இங்கே என்ன வேலை....?",அவனை விரட்டினார் சுந்தரம் தாத்தா.



அவரது அட்டகாசத்தைத் தாங்க முடியாமல்,"பாரு கமலு....!உன் புருஷன் பண்ணற அநியாயத்தை.....!",தன் பாட்டியிடம் முறையிட்டான் அந்த செல்லப் பேரன்.



"என்ன....?தாத்தாவும் பேத்தியும் சேர்ந்துக்கிட்டு என் பேரனை மிரட்டறீங்களா....?என் பேரனுக்கு சப்போர்ட்டா நான் இருக்கேன்.....!",தன் பேரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்....தன் மருமகளிடம் திரும்பி..."நீ ஏன் லட்சுமி அமைதியா உட்கார்ந்திருக்கிற....?உன் பையனை இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு விரட்ட பார்க்கறாங்க....!",தன் மருமகளையும் கூட்டு சேர்க்க..



"அய்யோ அத்தை.....!நான் இனி என் மருமகளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்.....!நீங்களாச்சு....!உங்க பேரனாச்சு....!",என்று கழண்டு கொள்ள..



"போங்க.....!எங்களுக்கென்ன வந்துச்சு.....?நானும் என் பேரனும் மட்டுமே போதும்.....!உங்க எல்லாரையும் சமாளிச்சிடுவோம்.....!",தைரியமாகப் போர்கொடியைத் தூக்கினார் கமலா பாட்டி.



அங்கு ஒரு கலகலப்பான குடும்பச் சூழல் உருவானது...!நித்திலாவும் தன் தயக்கத்தை விட்டொழித்து...அவர்களுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.ஆதித்யன்தான் இங்கு காதில் புகை வராத குறையாக அமர்ந்திருந்தான்.



அவளைத் தனியே வருமாறு அவன் சைகை செய்தும்....அதை அவள் கண்டு கொள்ளாமல்....லட்சுமியின் முந்தானையை பிடித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள்....!தன் குடும்பத்தினரிடம் வெகு பாந்தமாக பொருந்திக் கொண்ட நித்திலாவை விழிகள் நிறையக் காதலுடனும்.....மனம் முழுக்க நிறைவுடனும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்...!



இப்படியாக நேரம் விரைய....மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நேரமும் வந்தது.



சுமித்ராவின் குடும்ப வழக்கப்படி....திருமணமான தம்பதிகளை முதலில் பெண் வீட்டிற்குத்தான் அழைத்துச் செல்வர்...!என்னதான் கோபமாக இருந்தாலும்....சுமித்ராவின் தந்தை இந்த சடங்கையெல்லாம் முறையாக கடைபிடித்தார்....!



ராஜவேலுவும்....தங்க துரையும் கௌதமை அழைக்க வர....அவனோ..."என்னால உங்க வீட்டுக்கெல்லாம் வர முடியாது.....!",என்று பிடிவாதமாக மறுத்தான்.



இருவரும் அதிர்ச்சியுடன் அவனை நோக்க...சுமித்ராவின் தாய் முன்வந்து கெஞ்ச ஆரம்பித்தார்.



"மாப்பிள்ளை.....!உங்க கோபம் எனக்குப் புரியுது....!ஆனால்....இது சடங்கு மாப்பிள்ளை....!எங்க சம்பிரதாயப்படி முதல்ல பொண்ணு மாப்பிள்ளையை....பெண்ணோட வீட்டுக்குத்தான் அழைச்சிட்டுப் போவாங்க....!",



"அப்படிப்பட்ட சம்பிரதாயம் எனக்குத் தேவையில்லை அத்தை.....!நான் இப்படி பேசறது தப்புதான்...!என்னை மன்னிச்சிடுங்க.....!என்னை 'அநாதை'ன்னு சொன்னவங்களோட வீட்டு வாசல்படியை மறுபடியும் மிதிக்க நான் தயாரா இல்ல....!உங்களுக்கு எப்போவெல்லாம் தோணுதோ....அப்பவெல்லாம் வந்து உங்கப் பொண்ணை பார்த்துட்டு போகலாம்.....!அதுல...எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல....!ஆனால்....உங்க வீட்டுக்கு வருவேன்னு மட்டும் நீங்க எதிர்பார்க்க வேண்டாம்....!",அழுத்தமான குரலில் உரைத்தான் அவன்.



அவனது வார்த்தைகளில்...'இனி...நானோ இல்லை என் பொண்டாட்டியோ உங்க வீட்டு வாசல்படியை மிதிக்க மாட்டோம்....!'என்ற செய்தி ஒளிந்திருந்தது.சுமித்ராவும் அதை உணர்ந்து கொண்டாள்....!சுற்றியிருந்த அவளது பிறந்த வீடும் அதை உணர்ந்து கொண்டது.....!



அவனது பிடிவாதமான குரலில்....சுமித்ராவின் தாய் அமைதியாகி விட....சுமித்ரா மெளனமாக கண்ணீர் வடித்தாள்.என்னதான் கோபமாக இருந்தாலும்....அடித்தாலும் பிடித்தாலும் பிறந்த வீடு...பிறந்த வீடுதானே....?தாய் மடி தரும் சுகத்தை....கணவனின் தோள் தந்து விடுமா என்ன....?



'இனி...தன் பிறந்த வீட்டை விட்டுத் தான் விலகித்தான் இருக்க வேண்டும்....!',என்ற நிதர்சனம் அவள் விழிகளில் கண்ணீரைக் கொண்டு வந்தது.



அவளது கண்ணீரைக் கண்ட கெளதம்....ஆறுதலாக அவள் தோளைச் சுற்றி அணைத்துக் கொண்டான்.



"அழாதேடா....!உனக்கு விருப்பம் இருந்தால்...உங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வா....!ஆனால்...நீ தனியாகத்தான் போகணும்....!நான் வர மாட்டேன்....!",அவன் குரலில் ஒரு ஒட்டாத தன்மை இருந்தது.



தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு....அவன் கண்களை நோக்கியவள்,"என் புருஷனை விட்டுட்டு நான் மட்டும் எங்கே போகட்டும்....?நான் ஏற்கனவே சொன்னதுதான் மாமா....நீங்க காட்டற வழியில...உங்க கை பிடிச்சுக்கிட்டு நடந்து வர நான் தயாரா இருக்கேன்....!",காதலுடன் கூறியவளைப் பார்த்தவனின் மனம் அமைதியடைந்தது.



'இவள் என்னவள்....!' என்று கர்வமாய் நிமிர்ந்தான்.



உறவினர்களுக்கு முன்னால் 'என்ன செய்வது....?' என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்ற ராஜவேலுவையும்.....தங்க துரையையும் நோக்கியவன்,"நீங்க என் வீட்டுக்கு வர்றதை நான் தடுக்க மாட்டேன்.....!அத்தை....!நீங்களும் கிளம்புங்க....!நம்ம வீட்டுக்குப் போனதுக்குப் பிறகு....நீங்க செய்ய வேண்டிய சடங்கையெல்லாம் செய்யுங்க....!",என்றவன்...ஆதித்யனை அழைத்து....வீட்டிற்கு முன்னதாக சென்று அனைத்தையும் தயார் செய்யச் சொன்னான்.



மற்ற உறவினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க....மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே மண்டபத்தில் எஞ்சியிருந்தனர்.நடக்கும் கூத்தை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும்....'கல்யாணம் முடிந்து விட்டது....!இனி...மாப்பிள்ளையை பகைத்து என்ன செய்வது.....?',என்ற மனநிலையில் இருந்தனர்.



மணமக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஆதித்யனும்....நித்திலாவும் எடுத்துக் கொள்ள....லட்சுமியும்...மாணிக்கமும் முன்னே சென்று வீட்டில் ஆக வேண்டியதைக் கவனித்தனர்.அவர்களைப் பொறுத்தவரை கௌதமும் அவர்களுக்கு ஒரு மகனே.....!எனவே....விருப்பமுடன் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.



தாத்தாவும்....பாட்டியும் அலுப்பு காரணமாக ஓய்வெடுக்க வீட்டிற்குச் சென்று விட்டனர்.மண்டபத்தில் இருக்கும் உறவினர்களுக்கு வண்டியை ஏற்பாடு செய்து...அவர்களை கௌதமின் வீட்டிற்கு அனுப்பி விட்டு....ஆதித்யன்..நித்திலா...மற்றும் கெளதம்..சுமித்ரா ஜோடிகள்...ஆதித்யனின் காரில் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.



மண்டபத்தைக் காலி செய்யும் பொறுப்பை பாலா எடுத்துக் கொண்டான்....!'உன் காதலை மறந்து விடு...!நித்திலா....இன்னொருவனுக்கு சொந்தமானவள்....!' என்று மூளை கட்டளையிட்டாலும்.....காதல் கொண்ட மனம்....நாய்க்குட்டியாய் அவள் காதலை வேண்டி...அவள் காலடியில் மண்டியிடத்தான் செய்தது....!



அதிலும்....ஆதித்யனை நோக்கி அவள் வீசிய காதல் பார்வைகள்....பதிலுக்கு அவன் கண்களில் தெறித்த மின்னல்....அவனுடைய குடும்பத்தினரிடம் சகஜமாய் இவள் பழகிய விதம்....என அனைத்தையும் பார்த்தவனின் மனம் ஊமையாய் கதறித் துடித்துக் கண்ணீர் வடித்தது....!



அவளுக்கு முன்னால் இயல்பாய் நடமாட முடியாமல்...தவித்துக் கொண்டிருந்தவனிடம் வந்து..'சுமித்ரா வீட்டிற்குச் செல்லலாம்....!' என்று நித்திலா அழைத்தாள்.



இதற்கு மேல்...அவள் இருக்கும் இடத்தில் இருந்தால்....'தன்னை மீறி ஏதேனும் உளறி விடுவோம்....!' என்ற பயத்தில்...அவசர அவசரமாக மண்டப வேலையை எடுத்துக் கொண்டான்.



மண்டபத்தைக் காலி செய்யும் போது....நம் ஆட்களில் யாரேனும் ஒருவர் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்....நித்திலாவும் அவனை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.



" வலது காலை எடுத்து வைச்சு உள்ளே வாம்மா.....!",மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற லட்சுமி....சுமித்ராவிடம் கூறினார்.



இதழ்களில் தவழ்ந்த புன்னகையோடு....விழி முழுக்க கனவுகளை சுமந்து கொண்டு....நாணத்தில் அந்தி வானமாய் கன்னங்கள் சிவந்திருக்க....தன் மணாளனின் கரம் பற்றிக் கொண்டு....தாங்கள் வாழப் போகும் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள் சுமித்ரா.



"வெல்கம் டூ ஹோம் அண்ணி....!",ஆர்பாட்டமாய் அவனைக் கட்டிக் கொண்டு குதித்தாள் திவ்யா.தன் அண்ணனின் திருமணத்தில் அவள் மனம் நிறைந்திருந்தது.சுமித்ராவின் குணமும்....அவள் பழகும் விதமும் அவளைக் கவர்ந்திருந்தது....!எனவே...மகிழ்ச்சியோடு வளைய வந்து கொண்டிருந்தாள்.



அதன் பிறகு....மணமக்களுக்கு பால்...பழம் கொடுப்பது...மோதிரம் எடுப்பது என பல சடங்குகள் நடைபெற....நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.இந்த சடங்குகளையெல்லாம் முடித்து விட்டு....சுமித்ராவின் குடும்பம் கிளம்பி விட...தன் தாயின் பரிவை நினைத்து மீண்டும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் அவள்....!அவளருகில் அமர்ந்து இதமாகப் பேசியபடியே அவள் மனநிலையை மாற்றினான் கெளதம்.



இரவு நெருங்க....முதலிரவுக்கான ஏற்பாடுகளைத் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி....ஆதித்யன் தனது அம்மாவையும் அப்பாவையும் அனுப்பி வைத்தான்.ஏற்கனவே....கௌதமின் உறவினர்கள் கிளம்பியிருந்தனர்.



போகும் போது...நித்திலாவைத் தங்களுடன் அழைத்துக் கொண்டார் லட்சுமி.கௌதம் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் சமயங்களில்....அவள் ஆதித்யன் வீட்டில்தான் தங்குவாள்.கௌதமைப் போல்...ஆதித்யனும் அவளிடம் பாசமான ஒரு அண்ணனாக நடந்து கொள்வான்.....!அதிலும்...அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால்....திவ்யாவின் மேல் அவனுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு...!



கௌதமும்...சுமித்ராவும் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.பூனை நடை நடந்து...அறைக்குள் நுழைந்த ஆதித்யன்...கதவை அழுந்த மூடித் தாளிட்டான்.மெத்தையில் மல்லிகைப் பூக்களைத் தூவிக் கொண்டிருந்த நித்திலா....தன் முதுகிற்குப் பின்னால் ஒலித்த கதவைத் தாளிடும் சப்தத்தைக் கேட்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்....!



அவளுக்குத் தெரியும்....அது ஆதித்யன் என்று....!காலையில் இருந்து அவனிடம் தனியாக அகப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டு....அவனை சீண்டி விட்டு இருக்கிறோம்....!இனி அவன் அமைதியாக இருக்க மாட்டான்...என்ற நினைவில் அவள் இதழ்களில் ரகசியப் புன்னகை ஒன்று உதித்தது....!



'இதோ....!இப்பொழுது வந்து விடுவான்....!வந்த உடனே என்னை அணைத்துக் கொள்வான்....!' இதயம் தடதடக்க....இமைகள் படபடக்க....அவனைத் திரும்பியும் பார்க்காமல் அப்படியே நின்றிருந்தாள் நித்திலா....!அவளுடைய எதிர்பார்ப்பை அவன் பொய்யாக்கவில்லை....!



வேகமாக அவளை நெருங்கியவன்....அதை விட வேகமாக அவளைப் பின்னால் இருந்து கட்டியணைத்தான்.அவனுடைய உதடுகள் ஒரு வித வேகத்துடன் அவளது பின்னங்கழுத்தில் புதைந்தன....!இடையை வளைத்த அவனுடைய கரங்கள்....அழுத்தத்துடன் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டன....!



வேக வேகமாக வெளியேறிய அவனுடைய மூச்சுக்காற்றின் தாபத்தில்....அவள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தாள்....!என்ன அதிசயம்....!அவனுடைய மூச்சுக்காற்று அவளை சாம்பலாக்கியது என்றால்...அவன் பதித்த ஒவ்வொரு முத்தமும்....அவளைக் காதலுடன் உயிர்த்தெழச் செய்தது....!



"நமக்கு எப்போ டி....இந்த மாதிரி பர்ஸ்ட் நைட் நடக்கும்.....?",கேட்டவனின் உதடுகள் அவளது தோள்வளைவைப் பிடித்து செல்லமாகக் கடித்து வைத்தன.



"ம்....!நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்....!",கூறியவளின் குரல் மயக்கத்தில் தோய்ந்து வந்தது.



"ம்ஹீம்....!அது வரைக்கும்...ஐ காண்ட் வெயிட்.....!",அவனது விரல்கள் வழக்கம் போல் அவளது மேனியில் தனது ஊர்வலத்தை ஆரம்பிக்க...அவனது உதடுகளோ...அவளது வெற்று முதுகில் முத்தாரத்தை சூட்ட ஆரம்பித்தது....!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
"வே...வேண்டாம்.....!",அவளது வாய் கூறியதே தவிர....அவளுடைய கரங்கள் அவனைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.மாறாக....அவளது உடல் பாகாய் குழைந்து அவன் கையில் உருகியது.



"பேபி.....!",காதல் போதை பித்துக் கொள்ளச் செய்ய...எதற்கு என்று தெரியாமலேயே....அவளை அழைத்தான் அந்த மாயக்காரன்.



"ம்.....!",ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக 'உம்' கொட்டினாள் அந்த மங்கை.



"பேபி.....!",அவன் மீண்டும் அழைக்க..



"ம்....!",மீண்டும் 'உம்' கொட்டினாள் அவள்.



"பேபி....!",



ம்....!",



"ஐ காண்ட் வெயிட் டில் அவர் மேரேஜ்.....!நம்ம பர்ஸ்ட் நைட்டை மட்டும் இப்பவே கொண்டாடலாமா....?",அவன் கரங்கள் சும்மாவும் இருக்காமல்....அவள் மேனியில் எல்லைகளை கடக்க ஆரம்பிக்க.....பட்டென்று தன் உணர்வுக்கு வந்தவள்....அவன் கைகளுக்கு உள்ளேயே சுழன்று திரும்பி....அவன் முகத்தைப் பார்த்தாள்.



தன் கழுத்தில் பதியப் போன அவனது முகத்தைப் பிடித்து நிமிர்த்தி....வலுக்கட்டாயமாக தன்னைப் பார்க்க வைத்தவள்....அவன் கண்களுக்குள் காதல் பார்வை ஒன்றை செலுத்தினாள்.அவள் காதலில் கட்டுண்டவனாய்....அவள் விழிகளையே பார்த்திருந்தான் அவன்....!அவள் இம்மியளவும் தன் பார்வையை அவன் கண்களை விட்டு விலக்கவில்லை....!



எவ்வளவு நேரம்...அவள் விழிச் சிறைக்குள் குடியிருந்தானோ....தெரியவில்லை...!சன்னலில் வழியாக வந்த சத்தத்தில்....தன்னை சுதாரித்துக் கொண்டு...அவளை அமைதியாக அணைத்துக் கொண்டான்.



"ம்ப்ச்.....!ஏண்டி இப்போ வேண்டாம்ங்கிற.....?",அணைத்தவன் சும்மாவும் இருக்காமல்...அபத்தமாய் கேள்வியொன்றை வேறு கேட்டு வைத்தான்....!அவளுக்கு சிரிப்புதான் வந்தது....!



"ஏன்னா....நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல.....!",தன் தோளில் முகம் புதைத்திருந்தவனின் தலைமுடியை மென்மையாக கோதி விட்டவாறு கூறினாள் அவள்.



"அதுதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சே....?அப்புறம் ஏன் மறுக்கிற.....?",அவன் அந்த செயின் விஷயத்தைக் குறிப்பிட்டான்.



"நம்மை பொறுத்த வரைக்கும்....நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுதான்....!.ஆனால்...ஊரறிய நீங்க இன்னும் என் கழுத்துல தாலி கட்டலையே.....?",



"ம்ப்ச்....!இப்பவே வா.....!உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசலாம்.....!நாளைக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்....!",சிறு குழந்தையின் பிடிவாதம் அவன் குரலில்.



இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவள்,"இப்படி அவசர அவசரமா நம்ம கல்யாணம் நடந்தால் நல்லாவா இருக்கும்....?நம்மளுடைய கல்யாணம்....இந்த ஊரையே கூட்டி....ரொம்ப பிரம்மாண்டமா நடக்க வேண்டாமா....?தேவலோகமே தோற்றுப் போகிற மாதிரி அலங்காரத்துல...நமக்கு கல்யாணம் நடக்கப் போகிற மண்டபம் ஜொலிக்க வேண்டாமா.....?இது எல்லாத்துக்கும் மேல...நம்ம அத்தனை சொந்தக்காரங்களும் கூடியிருக்க...நம்ம நண்பர்களோட கிண்டல் பேச்சுக்கு .நடுவுல...மேள தாளம் முழங்க நம்ம கல்யாணம் நடக்க வேண்டாமா.....?",மிக அழகாய் அவனைத் திசை திருப்பினாள் அவள்...!



கண்களில் கனவு மின்ன பேசியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை.....!இது எதுவும் இல்லாமல்...இவ்வளவு ஏன்....அவளது விருப்பமே இல்லாமல்....அவளது கல்யாணம் நடந்தேறப் போகிறது...அதுவும் கூடிய விரைவில் என்று....!



குழந்தையிடம் மிட்டாய் ஆசை காட்டி சமாதானப்படுத்துவது போல்....அவனிடம் திருமணக் கனவுகளைக் கூறி சமாதானப்படுத்தினாள் அவள்....!



அவனா அதற்கெல்லாம் அடங்குபவன்....?அவள் கூறியதற்கெல்லாம் சமர்த்துப் பிள்ளையாய் 'உம்' கொட்டி விட்டு....அவள் முடித்ததும்..



"ஆனால்...எனக்கு இப்பவே நீ வேணும் போல இருக்கே....!",என்றான் ஏக்கமாக.



அவனுடைய அந்த ஏக்கத்திலும்...தாபத்திலும் அவளது கன்னி மனம் கரைந்தது என்னவோ உண்மைதான்.....!ஆனால்....அதற்காக அவன் கைகளில் இப்பொழுதே தன்னைத் தந்துவிட முடியாதல்லவா....?



தன்னவனிடம் சரணடையத் துடித்த உடலையும்....மனதையும் முயன்று அடக்கியபடி...அவன் முகத்தைத் தன் தோளில் இருந்து நிமிர்த்தியவள்,"எடுத்துக்கலாம்....!ஆனால்....நம்ம கல்யாணத்துக்குப் பிறகு....!",கூறியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை....தங்களது திருமணம் முடிந்தும் அவள்....அவனுக்குத் தன்னைத் தரப் போவதில்லை என்று....!



மென்மையாக உரைத்தவள்....அவன் மூக்கைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து....அவன் நெற்றியில் 'நச்'சென்று முத்தம் பதித்தாள்....காதலாக....!



அந்த ஒற்றை முத்தத்தில்....அவனுடைய தாபம் அடங்கி விடுமா...?பொங்கி எழுந்து அவனை எரித்த மோகத் தீ குளிர்ந்து விடுமா.....?குளிர்ந்தது.....!அவள்...அவன் நெற்றியில் பதித்த அந்த ஒற்றை முத்தத்திற்குள்....பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த அவனுடைய உணர்வுகள் வாலைச் சுருட்டிக் கொண்டு அடங்கின.....!மென்மையாய்....மிக மென்மையாய் அவளை அணைத்துக் கொண்ட அவனுடைய அணைப்பில்....அவளுடைய கன்னி மனதின் சலனங்கள் அணைந்தன.....!



இதுதான் காதல்.....!காதலிப்பது பெரிதல்ல.....!வரைமுறை தாண்டாமல் அந்தக் காதலை கல்யாணம் வரை நடத்திச் செல்வதில்தான்....அந்தக் காதலின் வெற்றியே அடங்கியுள்ளது....!அது....காதலுக்கு காதலர்கள் செய்யும் மரியாதை.....!இந்தக் காதலுக்கு...எல்லையைக் கடக்காமல்....எல்லையைக் கடக்கவும் தெரியும்....!உரிமைகளை மீறாமல்....உணர்வுகளை வெற்றி கொள்ளவும் தெரியும்....!



கண்ணுக்குத் தெரியாத பண்பாடு...சமூகம்....கலாச்சாரம் போன்ற உணர்வுகளால் நெய்யப்பட்டவர்கள் நாம்.....!அந்த உணர்வுகளை அழகாக கையாளுவதில்தான் நம் நாகரிகம் அடங்கியுள்ளது.....!



நித்திலாவிற்கு நன்கு தெரியும்....!ஆதித்யனுடைய பலவீனம்....தன்னைப் புடவையில் பார்ப்பது என்று.....!அவனது பலவீனத்தை தன்னுடைய காதலால் சரி செய்து....மிக அழகாக அவனுடைய உணர்வுகளை வெல்வதற்குத் துணையாய் அவனுடன் கரம் கோர்த்தாள்....அவனுடைய சகதர்மிணி....!



காதலில் இந்தப் பொறுமை மிக அவசியம்.....!காதலில் அனைத்துமே ஒரு வித அழகுதானே....!



ஒருவாறாக....கெளதம்...சுமித்ராவிற்காக அறையை அலங்கரித்து விட்டு இருவரும் வெளியே வரும் போது வெகுநேரம் ஆகியிருந்தது.



வெளியே வந்த ஆதித்யனை நோக்கி....அனல் பார்வை ஒன்றை வீசிய கெளதம்,"டேய்....!பர்ஸ்ட் நைட் எங்களுக்குத்தான்.....!உங்களுக்கு இல்ல....!ஞாபகம் இருக்கா....?நானும் நீ இப்போ வெளியே வருவ...அப்போ வெளியே வருவேன்னு பார்த்துட்டே இருக்கேன்....!நீ வந்த பாடா இல்லை....!",படபடவென்று அவன் பொரிய..



"கூல்....கூல் டா மச்சான்...!உனக்காக ரூமை ரெடி பண்றதுல கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....!",கௌதமின் தோள் மீது கை போட்டபடியே ஆதித்யன் அவனை சமாதானப்படுத்த..



"பார்த்து டா....!ரூமை ரெடி பண்றேன்னு...எனக்கு ஒரு மருமகனையோ...மருமகளையோ ரெடி பண்ணிடாதே....!அப்புறம் மச்சான்....நான் சொன்ன மாதிரி மதுரை மல்லியை வைச்சு அலங்காரம் பண்ணியிருக்கிறயா....?",கெளதம் கண்ணடிக்க..



இவர்களது பேச்சில் பெண்கள் இருவரும் வெட்கப் புன்னகையுடன் சமையலறைக்குள் ஓடி விட்டனர்.



"அதெல்லாம்....நாலு கூடையை கொட்டி வைச்சிருக்கிறேன்....!",பதிலுக்கு குறும்பாக புன்னகைத்தான் ஆதித்யன்.



நேரமாவதை உணர்ந்து ஆதித்யனும்....நித்திலாவும் மணமக்களுக்குத் தனிமையை அளித்து விட்டுக் கிளம்பினர்.



"சரி டா மச்சான்.....!நாங்க கிளம்பறோம்.....!ஹேப்பி மேரிட் லைஃப்.......!",நண்பனைக் கட்டிப்பிடித்து தன் வாழ்த்தைப் பகிர்ந்தவன்..



சுமித்ராவிடம் திரும்பி,"வாழ்த்துக்கள் ம்மா....!அப்புறம் இவன் ஏதாவது குறும்பு பண்ணினா சொல்லு....அண்ணன் நான் பார்த்துகிறேன்....!",என்று புன்னகைக்க..



"தேங்க்ஸ் அண்ணா....!",அழகாய் முறுவலித்தாள் சுமித்ரா.



"சரி...சரி....!இப்படியே பேசிக்கிட்டே நிற்காதீங்க.....!நாம கிளம்பலாம்...!பை அண்ணா....!வர்றோம் சுமி....!",தோழியைக் கட்டியணைத்து விடை பெற்றாள் நித்திலா.



சுமித்ராவிடம் அவ்வளவு நேரம் குடியிருந்த தைரியம் விடைபெற்று பறந்து விட....ஒரு வித பதட்டம் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டது....!



முதல் இரவு.....!திருமணமான தம்பதிகளுக்கான ஒரு சுப இரவு....!ஒற்றை வார்த்தையில் வர்ணிக்க கூடியதா....இந்த முதல் இரவு.....!இது அள்ளித் தெளிக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா....என்ன.....?என்னவென்று சொல்வது.....இந்த இரவை....!



ஆயிரமாயிரம் பதட்டம்....லட்சம் லட்சமாய் தோன்றும் நாணம்....கோடி கோடியான தயக்கம்....என் அனைத்தும் உணர்வுகளின் சங்கமம் தான் இந்த முதல் இரவு....!அது மட்டுமா.....!லட்சம் கோடி பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் அணிவகுத்து இதயத்திற்குள் போர் தொடுப்பது இந்த முதலிரவில் தான்.....!காமன்...தன் மலர்க்கணையை காதல் என்னும் தேனில் நனைத்து....அம்பெய்வது இந்த முதலிரவில்தான்.....!



அது மட்டுமல்ல....!காதல்...தன் மொத்த பரிவாரங்களுடன் காதலர்கள் மேல் தன் ஆட்சியை நிலைநிறுத்துவதும்.....இந்த முதல் இரவில்தான்.....!



தன் உயிரை....அவள் உயிராய் மாற்றும் இந்த முதல் இரவு....!தன் சுவாசத்தை அவன் இதயத்துடிப்பாய் மாற்றும் இந்த முதல் இரவு.....!



இருவரையும் வழியனுப்பி விட்டு....ஹால் கதவை அடைத்துத் தாளிட்டபடி திரும்பிய கௌதமின் விழிகளில்....மருண்ட விழிகளோடும்....படபடக்கும் இதழ்களோடும் நின்றிருந்த அவனது காதல் மனைவி வந்து விழுந்தாள்....!



புதிதாகப் பிறந்த வேட்கையோடு....மோகமும் போட்டி போட.....விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டு அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான் கெளதம்.இமைகள் படபடக்க பின்னால் நகர்ந்தாள் அவள்.



'எங்கே...துடிக்கும் இதயம் வெளியே வந்து விழுந்து விடுமோ....?' என்று எண்ணும் அளவிற்கு....அவளின் இதயம் வேகவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது...!கணவனின் தாபப் பார்வையில்....மென்மையான பெண்ணவளின் தேகத்தில் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது....!



இம்மியளவும் அவள் விழிகளை விட்டுத் தன் பார்வையை அகற்றாமல்....அவளை நெருங்கினான் கெளதம்....!மேனி படபடக்க...பின்னால் அடி எடுத்து வைத்தாள் சுமித்ரா....!



அவன் நெருங்க...இவள் விலக...அவன் முன்னேற....இவள் பின்னேற...என ஒரு அழகான கண்ணாம்பூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது அங்கே....!



'வாடி....!' ஒற்றை விரலை நீட்டி கண்ணசைவில் அவன்...அவளை அழைக்க..



'ம்ஹீம்....!' தலையாட்டியபடி பின்னால் நகர்ந்தாள் அவள்.



அவளை எட்டிப் பிடித்து விடும் நோக்கத்தோடு....அவன் வேகமாய் அடி எடுத்து வைக்க....அவளோ....அவன் கைக்கு சிக்காது....அவனைப் பார்த்தபடியே வேக வேகமாக பின்னால் நகர்ந்தாள்.



"ஏய்ய்....!என்கிட்டேயே விளையாடறியா டி...என் செல்ல பொண்டாட்டி....!",செல்லமாக மிரட்டியபடி அவன் நெருங்க....அவளோ....சோபாவிற்கு பின்னால் சென்று நின்று கொண்டு...'வர மாட்டேன்....!' என்று தலையாட்டினாள்.



இவன் அந்தப் பக்கம் வந்தால்....அவள் இந்த பக்கம் ஓடுவதும்...அவன் இந்தப் பக்கம் வந்தால்...இவள் அந்தப் பக்கம் தாவுவதுமாய்...கபடி விளையாடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் கிளிகள்...!



கட்டிலில் சடுகுடு ஆட வேண்டிய இருவரும்....நடு வீட்டில் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்க....இவர்கள் இருவரையும் இணைத்து வைத்த காதலோ....'இதுக ரெண்டும் சரிப்பட்டு வராதுங்க....!சின்னக் குழந்தை மாதிரி ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்குதுங்க....!' புலம்பியபடியே தலையிலடித்துக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தது.



'வரமாட்டே.....?' கண்ணசைவிலேயே அவன் மிரட்ட..



"ம்ஹீம்....!வர மாட்டேன்....!",செல்லமாய் தலையாட்டினாள் அவனுடைய குட்டி ராட்சசி....!



இமைக்காது அவளையே பார்த்தபடி....சோபாவுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தவளை அவன் நெருங்க...அவனது பார்வையில் ஒரு கணம் சிலையாய் சமைந்தவள்....பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு...பால்கனியை நோக்கி ஓடினாள்.



வேக எட்டுக்களுடன் அவள் பின்னாலேயே விரைந்தவனின் கைகளில் அவளுடைய புடவை முந்தானை வந்து சிக்கியது.



தனது முந்தானை அவன் கரங்களில் சிக்கவும்....சட்டென்று நின்று விட்டாள் சுமித்ரா.



"மாட்டினயா டி....!",அவன் குறும்பாய் புருவத்தை உயர்த்த..



அவளோ...."வி...விடுங்க...!",என்று வார்த்தைகளுக்குத் திண்டாடினாள்.



"ஏதோ போட்டியில கலந்துக்கிட்டவ மாதிரி அந்த ஓட்டம் ஓடின....?இப்போ ஓடு டி பார்க்கலாம்.....!",கேலியாய் அவன் உதட்டை மடித்து வளைக்க...அவள் இதழ்களைக் கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள்.



'எப்படி ஓடுவதாம்.....?என் முந்தானைதான் இவன் கையில் சிக்கியிருக்குதே.....!கள்ளன்....!' அவள் முகத்தில் ரகசியப் புன்னகை மலர்ந்தது.



அவன்....தன் கையில் சிக்கியிருந்த முந்தானையைப் பிடித்து இழுக்க....அவன் மேல் பூமாலையாய் வந்து விழுந்தாள் சுமித்ரா.தன் நெஞ்சில் சாய்ந்தவளை அப்படியே அலேக்காகத் தூக்கியவன்....படுக்கையறையை நோக்கி நடந்தான்....!



"என்...என்ன....?",அவள் திக்கித் திணற...அவன் எங்கே அதையெல்லாம் கண்டு கொண்டான்....!அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தவன்...'கதவை மூடு டி.....!' கண்களாலேயே அவளுக்கு உத்தரவிட....மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல்....அவன் கையில் இருந்தவாறே கதவைத் தாளிட்டாள்.



பூ மஞ்சமா......! என வியக்கும்படி வெறும் மலர்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டிருந்தது அவர்களுக்கான மஞ்சம்....!



மென்மையாய் அவளைக் கட்டிலில் கிடத்தியவன்....அப்படியே அவள் மேல் சரிய,"வே...வேண்டாம்....!",அவளிடமிருந்து தடுமாறி வந்தன வார்த்தைகள்.



"என்ன வேண்டாம்.....?",கேட்டவனின் உதடுகள் அவள் முகத்தில் படர்ந்து தன் முத்த யுத்தத்தை ஆரம்பித்தன.



"இது...இது வேண்டாம்....!",அவனது முத்த யுத்தத்திற்கு எதிர் தாக்குதலை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் அந்தப் பேதை....!



"சரி....வேண்டாம்....!",என்றவனின் உதடுகள் அவள் முகத்தை விட்டு விட்டு....கழுத்து வளைவில் புதைய ஆரம்பிக்க....அவன் கரங்களோ...அவளது வெற்று இடையை வருடி குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தன...!



தன்னவனுடைய நெருக்கத்தையும்....அவன் நடத்திய முத்த ஊர்வலத்தையும் தாங்க முடியாமல் கூசிச் சிலிர்த்தது அந்தப் பெண்மை....!



"இ...இது வே...வேண்டாம்.....!",மந்திரம் போல் அவள் இதழ்கள் மீண்டும் அதையே முணுமுணுக்க..



"சரி...வேண்டாம்....!",அவனும் கிளிப்பிள்ளையாய் மாறி மீண்டும் சொன்னதையே சொன்னான்.இம்முறை அந்தக் கள்வனின் உதடுகள் அவள் நெஞ்சுக்குழியில் புதைய முயல....அவள் அணிந்திருந்த நகைகள் அதற்கு பெரும் தடையாய் இருந்தன....!



"ப்ச்....!",என்ற சலிப்புடன்....அவன் கரங்கள் அந்த நகைகளை விலக்க ஆரம்பிக்க....அவனது முயற்சியில் சட்டென்று தன்னை மீட்டெடுத்தவள்....அவன் கரங்களைத் தடுக்க முயன்றபடி..



"இ...இது வேண்டாம்....!",என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.இம்முறை வார்த்தைகளில் அவ்வளவு பலவீனம்....!



"ம்ம்....இது வேண்டாம் ஹனி....!",முணுமுணுத்தவனின் கரங்கள் வேக வேகமாய் தன் தடையை தகர்க்க முயன்றன....!



ஒரு பெருமூச்சுடன் தன் மேல் படர்ந்திருந்தவனை விலக்கித் தள்ளியவள்....தள்ளிய வேகத்தோடு அவசர அவசரமாக எழுந்து அமர்ந்து கொண்டாள்.



அவ்வளவு நேரம் இருந்த சுகந்தம் பறிக்கப் பட்டதில்...அவன் முகத்தில் ஏமாற்றம் கவிழ்ந்தது.



"ம்ப்ச்....!ஏண்டி....?",சலிப்புடன் வினவியபடியே எழுந்து அமர்ந்தான் அவன்.



"இ...இது வேண்டாம்....!",அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி...தன் கையில் அகப்பட்ட ரோஜாப் பூவை பார்த்தவாறு அவள் கூற..



"அதையேதான் ஹனி...நானும் சொல்றேன்.....!இது வேண்டாம்....!",ஒரு மார்க்கமாக உரைத்தவனின் பார்வை....'எது வேண்டாம்....?' என்று அவள் மேனியில் படர்ந்து பரவி மேய்ந்து....தெள்ளத் தெளிவாக உரைக்க..



கண்டபடி அத்து மீறிய அவனது பார்வையில்....விலகியிருந்த தனது புடவையை...அவசர அவசரமாக சரி செய்து கொண்டாள் சுமித்ரா.



அவளது பாதுகாப்பு ஏற்பாட்டை கவனித்தவன்,"அடேயப்பா....!",என புருவத்தை உயர்த்தி...உதட்டை வளைத்து சிரிக்க....அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.



நாணம் மேலிட....தலை குனிந்திருந்தவளின் கரங்களில் மெத்தையில் கிடந்த மல்லிகைப் பூக்கள் சிக்கி சின்னாபின்னமாகின....!



"இந்தப் பூக்கள் இப்படியா கசங்கணும்....?",ஒரு மாதிரியாக உரைத்தவன்...அவளருகில் நெருங்கி அமர...அவளோ...கவனமாகத் தள்ளி அமர்ந்தாள்.



"ப்ச்...!இப்போ எதுக்கு டி தள்ளித் தள்ளிப் போற....?",எரிச்சல் பட்டுக் கத்தினான் அவன்.



அவனும்தான் என்ன செய்வான்....?அது முதலிரவு அறை....!விடிய விடிய இருவரும் விழித்துக் கிடந்து....ஒருவராய் மற்றொருவர் மாற வேண்டிய அறை.....!அவ்வளவு காலம்...காதலர்களாய் விரதம் காத்தவர்கள்....ஓருயிர் ஈருடலாய் மாறி....பிரம்மச்சரியத்திற்கு முடிவு கட்டும் அறை....!அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு....அவன் அருகில் வர மாட்டேன்...என்று முரண்டு பிடித்தால்...அவனுக்கு கோபம் வருமா....?வராதா....?



இதை எதையும் அறியாமல்,"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.....!"என்று ஆரம்பித்தாள் சுமித்ரா.



"என்னது....?பேசணுமா....?",அவன் அலறிய அலறலில் திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்தவள்,"எதுக்கு இப்படி கத்தறீங்க.....?",என்றவாறு அவனை முறைத்தாள்.



"ஏய்ய்....!இது பர்ஸ்ட் நைட் ரூம் டி....!இங்கே வந்து சட்டமா உட்கார்ந்துக்கிட்டு....'நான் உங்ககிட்ட பேசணும்...'ன்னு சொல்ற....!இங்கே நோ பேச்சு...!ஒன்லி ஆக்சன்....!",கூறியபடியே அவன்...அவள் கையைப் பற்றி இழுக்க..



அவன் இழுத்த இழுப்பிற்கு வராமல்...பிடிவாதமாய் இருந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருந்தவள்,"ப்ச்....!மாமா...!நான் உங்ககிட்ட பேசணும்.....!",சிறு கண்டிப்புடன் அவள் கூற..



"சரி....!சொல்லு....!",தன் விளையாட்டுத்தனத்தை கை விட்டவனாய்...அவன் அமைதியாய் அவள் முகம் பார்த்தான்.



"நமக்குள்ள...இப்போ எதுவும் வேண்டாம்....!இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு இதை வைச்சுக்கலாம்....!நான்...என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியுதா....?",நேரடியாக சொல்ல முடியாமல் அந்தப் பெண்மை தடுமாற..



அதை ரசித்துச் சிரித்தது அந்த ஆண்மை....!அவளது தடுமாற்றத்தை ரசித்தபடி,"புரியலையே ஹனி....!நீ என்ன சொல்ல வர்ற....?",அறியாக் குழந்தை போல் அவன் வினவ..



"அதுதான்....நாம....இப்படி...நமக்குள்ள.....",எப்படிக் கூறுவது என்று தெரியாமல் தடுமாற்றியபடியே அவன் முகத்தைப் பார்த்தவள்....அதில் இருந்த குறும்புப் புன்னகையை கண்டு கொண்டாள்.



"மாமா.....!விளையாடாதீங்க.....!",செல்லமாக சிணுங்கியபடி அவள்...அவனை முறைக்க..



"ஹா..ஹா....!ஒகே ஒகே ஹனி....!விளையாடலை.....!நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது....!ஆனால்...காரணம்.....?",அவன் புருவத்தை உயர்த்த..



"அதுவந்து....மாமா....திவ்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற வரைக்கும்....இதெல்லாம் வேண்டாமே.....?வயசுப் பொண்ணு வீட்டில இருக்கும் போது....நாம இப்படி இருக்கறது சரியில்லை....!இன்னைக்கு அவளை ஆதி அண்ணா வீட்டுக்கு அனுப்புனதே...எனக்கு ஒரு மாதிரி இருக்கு....!எல்லோருக்கும் முன்னாடி 'வேண்டாம்...'ன்னு மறுத்தால்...தேவையில்லாத கேள்விகள் வருமேன்னுதான் அமைதியா இருந்தேன்.....!",கூறியபடியே நிமிர்ந்தவள் அவனுடைய இமைக்காத பார்வையைக் கண்டு அப்படியே உறைந்தாள்.



"என்...என்ன....?",அவன் கண்களில் தெறித்து விழுந்த காதலில் ஸ்தம்பித்துப் போனவளாய் அவள் திணற..



அவள் கைகளோடு தனது கையை பிணைத்தவன்....அவள் புறங்கையில் முத்தமிட்டபடி,"தேங்க்ஸ் டி....!",என்றான் நெகிழ்ச்சியாக.



"ம்ப்ச்...!இது என்ன பழக்கம்....?'தேங்க்ஸ்' எல்லாம் சொல்லிக்கிட்டு.....?",இதமாய் அவள் கடிந்து கொள்ள..



"என் தங்கச்சியை நீ ஏத்துக்கிட்டதுக்கு....",அவன் ஏதோ கூற வரவும்...அவனைப் பேச விடாமல் தடுத்தவள்,



"அவளுக்கு நான் அண்ணிங்க....!'அண்ணி' அப்படிங்கிற உறவு அம்மாவுக்கு சமமானது....!நானும் அவளுக்கு ஒரு அம்மாவாகத்தான் இருக்க விரும்பறேன்.....!அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்ததுக்கு அப்புறம்....நாம இதைப் பத்தி யோசிக்கலாமே.....?இதுல...உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையே.....?",



'எங்கே தனது மறுப்பு அவனைக் காயப்படுத்தி விடுமோ....?' என்று தயங்கியபடியே கேட்டவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்..



"சேச்சே....!எனக்கு எந்த வருத்தமும் இல்லை டா....!நீ என் பக்கத்துல...என் கையணைவில இருக்கிறதே எனக்குப் போதும்.....!இன்னும் கொஞ்ச நாள் காதலர்களா இருப்போமே.....!",காதலுடன் அவன் கூற..



"எனக்குத் தெரியும்...என் மாமா என்னை புரிஞ்சுக்குவாருன்னு....!",என்றபடி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் அவள்.



"சரி மாமா...!தூங்கலாமா.....?காலையில இருந்து கல்யாண அலைச்சல்.... ஒரே அலுப்பா இருக்கு....!",சோம்பல் முறித்தபடியே அவள் படுத்து விட....இடையோடு அவளைக் கட்டிக் கொண்டு சுகமாய் உறங்கிப் போனான் கெளதம்.



இருவரும் காத்திருக்க முடிவு செய்தனர்.....!காத்திருத்தலின் சுகம் அலாதியானது....!அதிலும்...காதலில் காத்திருத்தல் கோடி சுகமானது....!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 51 :



"இது எல்லாம் எதுக்கு டா மச்சான்....?வேண்டாம்....!",கௌதம் மறுத்துக் கொண்டிருக்க..



"நான் ஒண்ணும் என் நண்பனுக்காக இதைப் பண்ணல.....!என்னுடைய தங்கச்சி வீட்டுக்காரனுக்காகத்தான் இதைப் பண்றேன்....!",கூறியபடியே அவன் கையில் ஒரு கத்தை காகிதத்தைத் திணித்தான் ஆதித்யன்.



இவர்கள் இருவரையும் புன்னகை முகத்துடன் பார்த்தபடியே....ஆதித்யனின் குடும்ப வக்கீல்...சோபாவில் அமர்ந்திருந்தார்.ஆதித்யனின் அருகில் நித்திலா நிற்க....கௌதமின் அருகில் புது மணப்பெண்ணாய் மெல்லிய சரிகையிட்ட புடவை கட்டி...நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து...தளரப் பின்னிய கூந்தலில் பூச்சூடி....மஞ்சள் தாலி மின்ன நின்றிருந்தாள் சுமித்ரா.



"உன் தங்கச்சி வீட்டுக்காரனுக்கு இதெல்லாம் தேவையில்லை....!உன்னுடைய நட்பு மட்டும் போதும்....!",தன் கையில் அவன் திணித்த காகிதத்தை வாங்க மறுத்தபடி அவன் கூற..



"அந்த நட்பு அவனுக்கு எப்பவும் கிடைக்கும்....!இது உன்னுடைய மேரேஜ்க்கு நாங்க தர்ற கிஃப்ட்....!அதுவும் சுமித்ராவிற்கு அண்ணனா நானும்....அண்ணியா நிலாவும் தர்ற கிஃப்ட்.....!இதை நீ மறுக்க கூடாது.....!",பிடிவாதமாய் உரைத்தான் ஆதித்யன்.



அது ஒப்பந்த பத்திரம்.....!ஆதித்யன்...தனது தொழில்கள் அனைத்திலேயும் கௌதமை பங்குதாரராக மாற்றியிருந்தான்.அதற்கான ஒப்பந்த பத்திரம்தான் அது....!அதைத்தான் கெளதம் மறுத்துக் கொண்டிருந்தான்.



"இந்த அத்தனை தொழில்களுடைய முதலீடும் உன்னுடையது ஆதி....!என்னுடைய முதலீடுன்னு இதுல ஒண்ணுமே இல்ல....!இந்த தொழில்கள் அத்தனைக்கும் உரிமைக்காரனா நீ மட்டும்தான் இருக்க முடியும்....!இருக்கணும்.....!",உறுதியுடன் கெளதம் கூற..



"இந்த முதலீடு அனைத்தும் என்னுடையதுதான்.....!நான் ஒத்துகிறேன்....!ஆனால்...இந்த தொழில்களோட வளர்ச்சியில உனக்கும் பங்கு இருக்கு....!முதலீடு வேணும்னா என்னுடையதா இருக்கலாம்....!ஆனால்...உழைப்பு நம்மளுடையது.....!நான் தொழிலைக் கையிலெடுத்த நாள்ல இருந்து....நீ எனக்குத் துணையா இருந்து...உன் உழைப்பைக் கொடுத்திருக்க....!தயவு செய்து இதை மறுக்காதே டா....!",அவனை விட உறுதியாக ஆதித்யன் கூற..



நித்திலாவும் ஆதித்யனுக்கு ஆதரவாகப் பேசினாள்.



"ஒத்துக்கோங்க அண்ணா....!உங்க ரெண்டு பேருடைய நட்பு தொழில்லையும் இணையட்டுமே....!",அவளும் அவள் பங்கிற்கு வற்புறுத்தினாள்.



நித்திலாவிடம் இந்த ஏற்பாட்டைப் பற்றி ஆதித்யன் ஏற்கனவே கூறியிருந்தான்."நம்ம சார்பா...கெளதம்..சுமித்ராவிற்கானத் திருமண பரிசு இதுதான்....!'என்று அவளிடம் கூறியிருந்தான்.



இப்பொழுது....கெளதம்..சுமித்ராவிடம் அந்தப் பத்திரத்தை ஒப்படைக்கும் போது கூட...'எங்கள் சார்பாக' என்று நித்திலாவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டானே ஒழிய....அவளைப் பிரித்து வைக்கவில்லை.



அப்பொழுதும் கெளதம் அப்படியே நிற்க....வற்புறுத்தி அவன் கையில் பத்திரத்தை வைத்தவன்,"நம்ம நட்பை நீ மதிக்கறதா இருந்தால்....இதை நீ மறுக்க கூடாது கெளதம்....!",ஆதித்யனின் இந்தப் பிடிவாதத்தில் அமைதியாக அந்தப் பத்திரத்தை வாங்கிக் கொண்டான் கெளதம்.



"சரி வாங்க....!அக்ரிமெண்ட்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணிடலாம்.....!",வக்கீல் அழைக்கவும்..



"ஒரு நிமிஷம் அங்கிள்.....!",வக்கீலிடம் உரைத்த ஆதித்யன்....நித்திலாவிடம் திரும்பி கண்ணசைக்க...அவள்...பையில் இருந்து ஒரு நகைப் பெட்டியையும்....மற்றொரு பத்திரத்தையும் எடுத்தாள்.



"இன்னும் என்னடா.....?",கெளதம் வினவ..



"இது என் தங்கச்சிக்கு....!உனக்கு இல்ல....!உன் கையாலேயே கொடு நிலா....!",ஆதித்யன் கூற..



அவள்..."வாழ்த்துக்கள்....!",என்றபடி அந்தப் பரிசை சுமித்ராவிடம் நீட்டினாள்.



அடையாறில் ஒரு பங்களாவை சுமித்ராவின் பெயரில் வாங்கியிருந்தான் ஆதித்யன்.அதோடு வைர நகையும் கூட....!எப்படியும் இரண்டின் மதிப்பே கோடியைத் தாண்டும்....!



"ஹைய்யோ....!அண்ணா....!இவ்வளவு பெரிய பரிசெல்லாம் எனக்கு வேண்டாம்....!",சுமித்ரா மறுக்க..



"நான் 'அண்ணன்'ன்னு வெறும் வாய் வார்த்தையா சொல்லலை ம்மா....!என் மனப்பூர்வமாகத்தான் சொன்னேன்....!ஒரு அண்ணனா....என் தங்கச்சிக்கு செய்ய வேண்டிய கடமை இது.....!வாங்கிக்கோ....!",அவனது குரலில் தெரிந்த பாசத்தின் ஆழத்தை அவளால் மீற முடியவில்லை.



'என்ன செய்வது....?' என்று தெரியாமல் அவள்...கௌதமை நோக்கினாள்.



அதைக் கவனித்த ஆதித்யன்,"எதுக்கும்மா அவனைப் பார்க்கிற....?அவன் எதுவும் சொல்ல மாட்டான்....!சொல்லவும் கூடாது....!என் தங்கச்சிக்கு நான் செய்யறேன்.....!அதைக் கேட்க அவனுக்கு உரிமையில்லை.....!நீ இதை வாங்கிக்கோ....!",உரிமையுடன் அவன் வற்புறுத்த...கண்கலங்க அதை வாங்கிக் கொண்டாள் சுமித்ரா.



"தேங்க்ஸ் அண்ணா....!",நெகிழ்ச்சியில் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.



சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு,"ஷப்பா....!கெளதம் அண்ணா.....!இதுக ரெண்டும் ஓவராகத்தான் ஃபிலிம் காட்டுது....!பெரிய பாசமலர் சிவாஜி கணேஷன்...சாவித்திரின்னு நினைப்பு....!",சலித்துக் கொள்வது போல் நித்திலா கூற..



அதுவரை....அனைத்தையும் புன்னகை முகமாய் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா,



"அடா அடா....!இதுக்கே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் போலவே....!சுமித்ரா அண்ணிக்கு ஒரு அண்ணன்தான்....!அவங்களுக்கே இவ்வளவு கிடைக்கதுன்னா....எனக்கு ரெண்டு அண்ணன்.....!எனக்கு எவ்வளவு கிடைக்கும்.....?",சிறு குழந்தை போல் குதூகலித்தபடி அவள் கூற..



"ம்...ரெண்டு அண்ணன் கிட்டே இருந்தும்....ரெண்டு அடி கிடைக்கும்....!",செல்லமாய் அவள் காதைப் பிடித்துத் திருகினான் ஆதித்யன்.



"ஓகே ப்பா....!அதுதான்....எல்லாமே சுபமா முடிஞ்சிடுச்சே.....!வந்து சைன் பண்ணிக் கொடுத்தீங்கன்னா....ரெஜிஸ்ட்ரேஷன் வேலைகளை ஆரம்பிச்சுடலாம்....!",வக்கீல் கூற கௌதமும்...ஆதித்யனும் சோபாவில் வந்து அமர்ந்தனர்.



பிறகு அவர்களிடம் வேண்டிய இடங்களில் கையெழுத்து வாங்கி விட்டு பத்திரங்களை எடுத்துக் கொண்டு வக்கீல் கிளம்பி விட...பெண்கள் மூவரும் சமைக்க விரைந்தனர்.



"அப்புறம் மச்சான்.....!எப்போ ஹனிமூன் கிளம்பறீங்க....?",ஆதித்யன் வினவ..



"ஹனிமூனுக்கு போகிற ஐடியா இல்லை டா....!அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்.....!",என்றான் கெளதம்.



"பிறகு பார்த்துக்கலாம்ன்னா எப்போ....?உனக்கு ரெண்டு குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா.....?கல்யாணமான புதுசுல போனாத்தான்....அது ஹனி மூன்...!இல்லைன்னா....அது ஃபேமிலி மூன் ஆகிடும்....!சுமித்ராவுக்கும் ஆசை இருக்கும்ல.....?ஒழுங்கா....என் தங்கச்சியைக் கூட்டிட்டு ஹனிமூன் கிளம்பற வழியைப் பாரு....!",ஆதித்யன் அதட்ட..



நண்பனிடம் எப்படிக் கூறுவது....?என்று தயங்கிக் கொண்டிருந்தான் கெளதம்.



"இல்லை டா....!",அவன் மென்று விழுங்கிக் கொண்டிருக்க..



ஆதித்யனோ..."எதுக்குடா இந்த முழி முழிச்சுக்கிட்டு இருக்க....?சுமித்ரா கூட ஏதாவது சண்டை போட்டியா....?நீ அமைதியாகவே இருக்க மாட்டியா.....?எதுக்கு அந்தப் பொண்ணை போட்டு இப்படி பிராண்டற.....?",சிறு அதட்டலுடன் வினவினான் ஆதித்யன்.



"ம்ப்ச்....!சண்டையெல்லாம் இல்லை டா....!நாங்கதான் திவ்யாவோட கல்யாணம் முடிஞ்ச பிறகு...எங்க வாழ்க்கையைத் தொடங்கலாம்ன்னு தள்ளிப் போட்டு இருக்கிறோம்....!",அமைதியான குரலில் உரைத்தான் கெளதம்.



அவன் கூறி முடித்த அடுத்த நொடி....ஆதித்யன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.



"ஹா...ஹா...!மச்சான்....!ஹைய்யோ....!ஹா..ஹா...!",அவன் பாட்டிற்கு சிரித்துக் கொண்டிருக்க..



"வாயை மூடு டா....!இப்போ எதுக்கு பல்லை காண்பிக்கிற....?",சற்றுக் கடுப்புடன் வந்தன கௌதமின் வார்த்தைகள்.



"ஹையோ மச்சான்....!ஹா..ஹா...!தன் வினை தன்னைச் சுடும்.....!நீதானே எனக்கு சாபம் விட்ட....'பர்ஸ்ட் நைட் அன்னைக்கு உனக்கு எதுவும் நடக்காது...ன்னு....இப்போ பார்த்தியா...உன் நிலைமையை....!ஹா..ஹா....!",ஆதித்யன் மேலும் சிரிக்க ஆரம்பிக்க..



இங்கு கௌதமிற்கு வயிறெரிந்தது."வாயை மூடுடா கிராதகா....!உன்னுடைய கொள்ளிக் கண்ணுதான் எங்க மேல பட்டுடுச்சு.....!",சோபாவில் இருந்த தலையணையை எடுத்து அவனை மொத்த ஆரம்பித்தான் கெளதம்.



அவனது அடியில் இருந்து தப்பித்தவாறே,"சரி....சரி டா மச்சான்....!ஜோக்ஸ் அபார்ட்....உன் தங்கச்சிக்காக அவள் இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கான்னா....அவள் உன்மேல எவ்வளவு காதல் வைச்சிருக்கணும்.....!யூ ஆர் லக்கி....அண்ட்....அந்தப் பொண்ணை நல்லா பார்த்துக்கிறது உன் கடமை....!",கனிவுடன் ஆதித்யன் கூற..



"ஷ்யூர் டா.....!",காதலாகக் கூறினான் கெளதம்.



இப்படியாக....அரட்டையிலும்...சிரிப்பிலும்..விளையாட்டிலும் அன்றைய தினம் கழிந்தது.



..................................................................................................................



நாட்கள் மிக அழகாகப் பறந்தன....!



திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையை ரசித்து அனுபவித்தனர் கௌதமும்...சுமித்ராவும்....!காலையில் எழுந்து சமையல் செய்து....குளித்துக் கிளம்பி....இடையிடையே கௌதமின் சீண்டல்களையும்....காதல் விளையாட்டுகளையும் சமாளித்து....அவனையும் கிளப்பி விட்டு....திவ்யாவையும் கல்லூரிக்கு அனுப்பி விட்டு....கணவனும் மனைவியும் ஒன்றாக அலுவலகத்திற்கு கிளம்புவர்.



"வேலைக்கு வருவது உன் இஷ்டம்.....!",என்று கூறிவிட்டான் கெளதம்.



அவள்தான் வீட்டில் சும்மா இருப்பதற்கு போர் அடிக்கிறது என்று வேலைக்கு கிளம்பி விட்டாள்.



மாலை எப்பொழுதும் போல் சுமித்ரா வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பி விடுவாள்.இவள் வீட்டிற்கு வரும் போது....திவ்யாவும் கல்லூரி முடிந்து வந்து விடுவாள்.



திவ்யாவிடம் அரட்டையடித்தபடியே வீட்டை ஒதுக்குவது....பாத்திரங்களைத் துலக்குவது....அடுத்த நாளிற்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைப்பது....என் ஒவ்வொரு வேலையாக முடித்து விடுவாள் சுமித்ரா.



உதவிக்கு வரும் திவ்யாவை 'வேண்டாம்....!' என்று பிடிவாதமாக மறுத்து விடுவாள்.



"இவ்வளவு நாள் நீதானே செய்த....?இனி நான் செய்கிறேன்.....!நீ உட்கார்ந்து வேடிக்கைப் பாரு.....!அதுவும் இல்லாம....நாளைக்கு கல்யாணத்துக்குப் பிறகு போற இடத்துல நீதானே எல்லாத்தையும் செய்தாகணும்.....!அதுவரைக்கும்...அம்மா வீட்டில ஜாலியா ரெஸ்ட் எடு.....!",புன்னகை முகமாய் கூறியபடி மறுத்து விடுவாள்.



திவ்யாவிற்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்து விடும்.தன்னை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ளும் சுமித்ராவின் பின்னாலேயே..."அண்ணி....!அண்ணி...!" என்று சுற்றிக் கொண்டிருப்பாள்.



கெளதம் கூட கிண்டல் செய்வான்."உங்க அண்ணி உன்னை மடியில படுக்க வைச்சு சோறு ஊட்டாதது ஒண்ணுதான் குறை.....!",கிண்டலாகக் கூறினாலும் அவன் பார்வை காதலுடன் மனைவியை வருடும்.அவனுக்கு சற்றும் குறையாத காதல் பார்வையை அவனை நோக்கி வீசி வைப்பாள் அவனுடைய காதல் கண்மணி....!



ஆதித்யன்....நித்திலாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை....!சிறு சிறு ஊடல்களும்....செல்ல செல்ல பிடிவாதங்களும்....குட்டி குட்டி மோதல்களும் அவர்களது காதலை அழகாக்கிக் கொண்டிருந்தன....!



அன்று....அமெரிக்க ப்ராஜெக்ட் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்காக....அமெரிக்க நிறுவனம் சார்பாக....மூன்று டைரக்டர்கள் சென்னை வந்திருந்தனர்.அவர்களை வரவேற்பதற்காக....ஆதித்யனும் நித்திலாவும் ஏர்போர்ட்டில் காத்திருந்தனர்.



"எங்கே ஆது....?இன்னும் அவங்களைக் காணோம்....?",தன் அருகில் அமர்ந்து மொபைலில் எதையோ முக்கியமான விஷயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பிராண்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள் நித்திலா.



"வந்திடுவாங்க பேபி....!ப்ளைட் டிலேன்னு இப்போத்தானே இன்ஃபார்ம் பண்ணினாங்க....!இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவாங்க.....!",தன் மொபைலில் இருந்து பார்வையை உயர்த்தாமலேயே கூறினான் ஆதித்யன்.



சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள்...மீண்டும் ஆரம்பித்தாள்.



"எப்போ ஆது அவங்க வருவாங்க....?எனக்குப் போரடிக்குது....!",அவன் கையை சுரண்டினாள் அவள்.



"ப்ச்....!வருவாங்க டி....!கொஞ்ச நேரம் அமைதியா உட்கார மாட்டியா.....?என்னைப் போட்டு நச்சரிச்சுக்கிட்டே இருக்க.....!",அவனே மொபைலில் தொழில் விஷயமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அவனிடம் சென்று நச்சரித்தால்...அவன் என்ன செய்வான்....?



கிட்டத்தட்ட ஏர்போர்ட்டில் நுழைந்ததில் இருந்து அவள் இப்படித்தான் அவனை முரண்டிக் கொண்டே இருந்தாள்.அவ்வளவு நேரம் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தவன்....அப்பொழுதுதான் பொறுக்க முடியாமல்...சிறு அதட்டல் போட்டான்.உடனே....அவனுடைய செல்ல பேபிக்கு மூக்கு விடைத்து விட்டது....!



"போடா....!நீ மட்டும் வந்திருக்க வேண்டியதுதானே....?என்னை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்து 'கொட்டு..கொட்டு..'ன்னு உட்கார வைச்சிருக்க....?என் மொபைலையும் ஆபிஸ்ல வைச்சிட்டு வந்துட்டேன்.....!நீயும் என்கூட பேசாம....மொபைலையே முறைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்க.....!"படபடவென பொரிய ஆரம்பித்தாள் நித்திலா.



அவள் அப்படித்தான்.....!ஆதித்யன் அவளை சிறு அதட்டல் கூட போடக் கூடாது என்பாள்...!சிறிதாக அவன் முகத்தை சுளித்து விட்டால் போதும்....உதட்டைப் பிதுக்கிக் கொண்டு....மூக்கு விடைக்க....முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள்....!



"சரி...சரி...!என் பேபிக்கு கோபம் வந்துடுச்சா.....?ஒரு முக்கியமான விஷயம் பார்த்துட்டு இருந்தேன் பேபி....!",அவளை சமாதானப்படுத்தியபடியே போனை அணைத்தான் அவன்.



அவனுக்குத் தெரியும்.....!தன்னுடைய சிறு அதட்டலைக் கூட அவள் தாங்க மாட்டாள் என்று....!எனவே....முடிந்த அளவிற்கு பொறுமையாகத்தான் இருப்பான்....!ஆனால்....அவனது செல்ல குட்டிம்மா....இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் செய்து....அவனது பொறுமைக்கு சோதனை வைத்துக் கொண்டே இருப்பாள்....!அப்படி இருந்தும் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்து அவளிடம் அமைதியாகத்தான் போவான்....!



தன் கண்ணசைவிலேயே எதிரிகளை மிரட்டி அரள வைக்கும் அந்த அராஜகக்காரன்....அந்த சிறு பெண்ணின் அழிச்சாட்டியத்திற்கு அடிபணிந்து பொறுமையை கடைபிடிப்பான்....!



"இப்பவே நீ என்னை இப்படி மிரட்டற....?என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிற....?",சிறு பிள்ளையாய் அவள் குற்றம் சுமத்த..



"இல்லை டா குட்டிம்மா.....!அத்தான் ஏதோ தெரியாம பேசிட்டேன்....!ஸாரி டா...!",வித விதமாகப் பேசி அவளை சமாதானப்படுத்தினான் அவன்.



அப்பொழுதும் அவள் 'உம்'மென்று அமர்ந்திருக்கவும்...."இந்தா....!என் மொபைல்...!உனக்குப் பிடிச்ச ஆங்க்ரி பேர்ட்ஸ் கேம் விளையாடு.....!",என்று தன் மொபைலை நீட்டினான்.



இப்படித்தான் அவன்...அவளை சமாதானப்படுத்துவான்.....!சிறு குழந்தை போல் அவள் அடம்பிடிக்கும் போதெல்லாம்....இப்படித்தான் மொபைலை நீட்டுவான்.அவளும் சமர்த்தாய் தன் கோபத்தை தூக்கியெறிந்து விட்டு மொபைலை வாங்கி விளையாட ஆரம்பித்து விடுவாள்....!


அன்றும் எப்பொழுதும் போல் தன் கோபத்தை உதறி விட்டு,"ஹை....!தேங்க் யூ ஆது....!",என்று குதூகலித்தபடி விளையாட ஆரம்பித்து விட்டாள்.



அவன் ஆதித்யன்.....!மிகப் பெரும் தொழிலதிபன்....!ஒவ்வொரு நொடியையும் பணமாக்கும் வித்தகன்....!அப்படிப்பட்டவன்....தொழில் சம்பந்தமாய் பார்த்துக் கொண்டிருந்த வேலையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு....ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்காக அவளிடம் தன் மொபைலைக் கொடுத்து விட்டு....கையைக் கட்டிக் கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்....!



அவள் ஆங்க்ரி பேர்டில் மூழ்கியிருக்க...அவன்...அவளின் குழந்தைத் தனத்தில் லயித்திருக்க....ஒரு வழியாக...அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விமானம் தரையிறங்கி விட்டதற்கான அறிவிப்பு வந்தது.



பயணிகள் ஒவ்வொருவறாக வெளியே வர ஆரம்பிக்க...அந்த மூவரையும் எதிர்பார்த்து ஆதித்யனும்...நித்திலாவும் எழுந்து நின்றனர்.



அமெரிக்க மண்ணிற்கே உரிய வெள்ளைத் தோலுடனும்....உயரத்துடனும்....நடுத்தர வயதில் இரு ஆண்களும்....ஆதித்யனின் வயதில் ஒரு வாலிபனும் இவர்களை நோக்கி வந்தனர்.



"ஹாய் யங் மேன்.....!ஐ ஆம் வின்ஸ்டன்....!",ஆர்பரிப்புடன் அந்த நடுத்தர வயதுக்காரர் ஆதித்யனுடன் கை குலுக்க..



"ஹலோ மிஸ்டர்.வின்ஸ்டன்...!ஐ ஆம் ஆதித்யன்....!",கம்பீரமாக கை குலுக்கினான் ஆதித்யன்.



"ஐ ஆம் ஜான்....!",மற்றொரு நடுத்தர வயதுக்காரர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள..



"ஹாய்...!ஐ ஆம் ராபர்ட்....!",அந்த இளைஞனும் ஆதித்யனுடன் கை குலுக்கினான்.



"வெல்கம் டூ இந்தியா கைஸ்....!அண்ட்...திஸ் இஸ் நித்திலா.....!மை பெர்சனல் செக்ரெட்டரி.....!",தன்னருகில் நின்றிருந்த நித்திலாவை....ஆதித்யன் அறிமுகப்படுத்தி வைக்க..



"வாவ்....!பியூட்டி....!நைஸ் டூ மீட் யூ.....!",ராபர்ட் சற்று ஆர்வத்துடன் அவளிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்ட....அவன் விழிகளில் தெரிந்த அதீத ஆர்வத்தில் சற்று நிதானித்த நித்திலா..



"வணக்கம்....!",என்று கரம் குவித்தாள்.



"ஹோ....!டமில் கல்ச்சர்....!",அதற்கும் புன்னகைத்தபடியே....அவளைப் போலவே கரம் குவித்தவன்..."வானகம்....!",என்று திக்கித் திணறி உச்சரிக்க முயன்றான்.



முதலில் ராபர்ட்டின் ஆர்வத்தில் சற்று எரிச்சலடைந்த ஆதித்யன்...பிறகு நித்திலாவின் செய்கையில் தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டான்.



அதன் பிறகான உரையாடல்கள் அங்கு ஆங்கிலத்தில் இருந்தாலும்...இங்கு தமிழில்....!



"ஓகே....!லெட்ஸ் கோ.....!உங்களுக்காக புக் பண்ணியிருக்க ரூம்க்கு போகலாம்....!பர்ஸ்ட்....நல்லா ரெஸ்ட் எடுங்க....!இன்னைக்கு ஈவ்னிங் பில்டிங்க்ஸை பார்க்க போகலாம்....!",என்றபடி தனது டிரைவருடன் அவர்களை ஒரு காரில் அனுப்பி வைத்தவன்...நித்திலாவுடன் தனது காரில் அவர்களைப் பின்தொடர்ந்தான்.



ஹோட்டலுக்குச் சென்று அவர்களுக்கான அறைகளைக் காட்டி விட்டுத்தான் கிளம்பினான் ஆதித்யன்.



"தி கிரேட் பிசினெஸ் மேன்....!இவ்வளவு தூரம் எங்களை வெல்கம் பண்ண வருவீங்கன்னு நினைக்கல....!",ஜான் கூற..



"எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க....!நாங்கதானே பார்த்துக்கணும்....!",சிறு முறுவலோடு கூறினான் ஆதித்யன்.



அன்று மட்டுமல்ல....!அவர்கள் அங்கு இருந்த ஐந்து நாட்களும் ஆதித்யனும் நித்திலாவும்....அவர்களுக்கு கட்டிடங்களை சுற்றிக் காண்பிப்பதில் இருந்து....உணவு உண்பது வரை அவர்களுடன்தான் செலவளித்தனர்.



ஒவ்வொரு முறை நித்திலாவைப் பார்க்கும் போதும்....ராபர்ட்,"பியூட்டி....பியூட்டி.....!",என்று அழைத்து ஆதித்யனின் வயிறை எரிய வைத்தான்.



அவளும் அவ்வப்போது அவனிடம் சிரித்துப் பேசி....ஆதித்யனின் காதில் புகை வர வைத்தாள்.



இந்த ஐந்து நாட்களில்....அனைவரும் ஒன்றாக சுத்தியதில்....ஆதித்யன் பார்த்து பார்த்து அவளைக் கவனித்துக் கொண்டதில் இருந்த காதலையும்....அக்கறையையும் அவர்கள் கண்டு கொண்டனர்.அவன் செய்த ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவள் மீதான அக்கறை புலப்பட்டது.



ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டு புறப்படும் போது..."கங்கிராட்ஸ் மேன்.....!உங்க அழகான காதலுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்...!லவ்லி கப்புள்....!",என்று பாராட்டி விட்டுத்தான் விமானம் ஏறினர்.



****************
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
ஆதித்யனின் கார் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.



"நீ இல்லாம நாலு நாள்....நான் எப்படி டி இருப்பேன்.....?",அதோடு பதினெட்டாவது முறையாக நித்திலாவைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்டு வைத்தான் ஆதித்யன்.



"நாலு நாள்தானே ஆது....!கண்ணை மூடி கண்ணைத் திறக்கறதுக்குள்ள அந்த நாலு நாள் ஓடிப் போயிடும்....!",அவளும் பத்தொன்பதாவது முறையாக அதே பதிலைக் கூறினாள்.



நந்தினிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது...!இன்னும் இரண்டு நாட்களில் கோவையில் அவளுக்குத் திருமணம்.அதில் கலந்து கொள்வதற்காக 'லீவ் வேண்டும்....!' என்று கேட்டவளிடம்....வழக்கம் போல் விடுமுறை அளிக்க மறுத்தான் ஆதித்யன்.அவனிடம் கெஞ்சி....கொஞ்சி...அதட்டி...உருட்டி ஒருவழியாக நான்கு நாட்கள் விடுமுறை வாங்கியிருந்தாள்...!



அதுவும்....'கோவை வரைக்கும் நான்தான் கொண்டு வந்து விடுவேன்....!' என்ற ஆதித்யனின் கண்டிஷனோடு.இதோ...இப்பொழுது கோவைப் பயணம் ஆரம்பமாகியிருந்தது.



"நாளை மறுநாள் தானே கல்யாணம்....!கல்யாணத்தைன்னைக்கு....காலையில போய் நின்னா ஆகாதா....?நானே உன்னைக் கொண்டு போய் விடறேன்....!ஓகே வா....?இப்போ...சென்னைக்கே காரைத் திருப்பட்டா.....?",ஆர்வமுடன் வினவினான் ஆதித்யன்.



"ஷ்.....!ஆது....!எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க....?நாலே நாள்....நீங்க என்னை நினைச்சுக்கிட்டே இருப்பீங்களாம்.....!நான்...நந்துவுடைய கல்யாணத்தை முடிச்சிட்டு ஓடி வந்திடுவேனாம்.....!சரியா....?",



"ம்ஹூம்....!நீ போக வேண்டாம்.....!",பிடிவாதமாகத் தலையாட்டியபடி சாலையோர மர நிழலில் காரை நிறுத்தி விட்டான் ஆதித்யன்.



'இதென்னடா வம்பா போச்சு....!ரெண்டு நாளா போராடி...நாக்கு வரள கத்தி...பெர்மிஷன் வாங்கி வைச்சிருக்கிறேன்....!இப்போ என்னடான்னா...வேதாளம் முருங்கை மரம் ஏறின மாதிரி....மறுபடியும் மரத்து மேல ஏறி உட்கார்ந்திருக்காரே....!' தனக்குள் புலம்பியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



அவன்....தன் உதடுகளை அழுந்த மூடியிருந்த விதமே அவனுடைய பிடிவாதத்தை பறைசாற்றியது....!தலைமுடி கலைந்து....நெற்றியில் படிந்திருக்க...புருவம் சுருங்க சாலையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.



"ஆது.....!",அவள் அழைக்க..



"...............",அப்படியே அமர்ந்திருந்தான் அவன்.



"என் செல்ல நாய்க்குட்டிக்கு என்ன பிடிவாதம்....?",அவன் முகவாயைப் பற்றி அவள் தன்னை நோக்கித் திருப்ப..



"ம்ப்ச்....!",சலித்தபடி அவள் கையைத் தட்டி விட்டவன் மீண்டும் சாலையை வெறிக்க ஆரம்பித்தான்.



அவனைப் பார்க்கும் பொழுது....அவளுக்கு ஒரு முரட்டுக் குழந்தையைப் பார்ப்பது போல்தான் இருந்தது.



'சரியான அராஜகக்காரன்....!என்னை ஊருக்கு அனுப்பறதுக்கு...எவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறான் பாரு....!' செல்லமாக மனதிற்குள் திட்டிக் கொண்டவள்..



அவனை நெருங்கி அமர்ந்து....அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.



"ஆது.....!",அவள் மெதுவாக அழைக்க..



"போடி....!",முறைத்துக் கொண்டான் அவன்.



"நான்...நந்துவுடைய கல்யாணத்துக்காக மட்டும் ஊருக்கு போகலை....!நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்காகவும்தான் போறேன்....!",



இந்த விஷயம் அவனுக்குப் புதிது....!எனவே...தனது பிடிவாதத்தை சிறிது தளர்த்தியவனாய்.."என்னடி சொல்ற....?",என்றான்.



"ம்...நம்ம விஷயத்தைப் பத்தி அம்மா...அப்பாக்கிட்ட சொல்லிடலாம்ன்னு இருக்கேன்....!இன்னும் எவ்வளவு நாள்தான் மறைக்கிறது.....?நான் வரும் போது ஒரு முடிவோடுதான் வருவேன்....!",



அவள் கூறவும்...பட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன்,"நீ மட்டும் தனியா இந்த நிலைமையை ஃபேஸ் பண்ண வேண்டாம்....!நானும் உன்கூட வர்றேன்....!உன் பேரண்ட்ஸ்கிட்ட நான் பேசறேன்....!",அவனது ஆண்மையின் தைரியத்தில் அவளது மனம் கர்வம் கொண்டது.



'இவன் என்னுடையவன்....!எந்த சூழ்நிலையிலும் என்னைத் தனியாக விட மாட்டான்....!',அவன் காதல் தந்த பெருமையோடு அவனை நோக்கியவள்,"வேண்டாம் ஆது....!" என்று மறுத்தாள்.



அவளது மறுத்தலில்...அவனுக்கு கோபம் வந்தது.



"ஏன்....?",கூர்மையான பார்வையுடன் உறுமினான்.



அந்த உரிமையான கோபத்திலும்....அவளின் கன்னி மனது தொலைந்துதான் போனது...!



அவனது மீசையைப் பிடித்துத் தன் இரு கைகளாலும் செல்லமாக இழுத்தவள்,"ஷப்பா...!உடனே துளைக்கிற பார்வையை பார்க்க ஆரம்பிச்சிடுவீங்களே....?நான் எதுக்கு சொல்றேன்னா...நான் காதலிக்கிற விஷயமே என் அம்மா அப்பாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்....!இதுல....நீங்களும் வந்து அவங்க முன்னாடி நின்னா...அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்....!நம்ம விஷயம் என் மூலமா தெரிய வர்றதுதான் சரி....!",பொறுமையாக எடுத்துக் கூறினாள் அவள்.



"அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்குமா....?இல்ல....உனக்கா.....?",மீண்டும் அதே துளைக்கும் பார்வை.



அவனது கேள்வியில் அவள் தன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.



உண்மைதானே....!என்னதான் அவனுடைய காதலில் சுகமாய் மூழ்கிப் போனாலும்....அவள் மனதின் ஒரு மூலையில் அரித்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்வை அவளால் தடுக்க முடியவில்லையே....!



"ப்ளீஸ் ஆது....!இந்த விஷயத்தை என் போக்கில் விட்டுருங்களேன்....!",அவள் பார்வையில் தெரிந்த இறைஞ்சலில்....அவன் தன் பிடிவாதத்தைக் கைவிட்டான்.



"சரி....!உன் இஷ்டம்....!ஆனால்...ஒண்ணை மட்டும் நல்லா ஞாபகம் வைச்சுக்கோ....!உன்னை....உனக்காக கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல....!அண்டர்ஸ்டாண்ட்......?",அவள் விழிகளுக்குள் ஆழப் பார்வை பார்த்தப்படி அழுத்தமான குரலில் உரைத்தவன் காரை கிளப்பினான்.



ஒருவேளை....அதுதான் அவன் செய்த தவறோ.....?அவள் இஷ்டம் என்று விட்டுக் கொடுக்காமல்....எப்பொழுதும் போல் பிடிவாதமாக இருந்திருக்க வேண்டுமோ....?காதலின் விளையாட்டை யார்தான் அறிவார்....?



அவனுடைய அந்தக் குரலில்....எப்பொழுதும் போல் அப்பொழுதும் நித்திலாவின் அடிவயிறு ஜில்லிடத்தான் செய்தது.ஆனால்....அந்த பயத்தையும் காதல் கொண்ட மனம் வரவேற்றதுதான் விந்தையிலும் விந்தை.....!



சிறிது நேர அமைதிக்குப் பிறகு...அவளே ஆரம்பித்தாள்.



"இப்போ எதுக்கு 'உம்'முன்னு முகத்தை வைச்சிருக்கீங்க....?",அவனது விலகலைத் தாங்க முடியாமல் எரிந்து விழுந்தாள் அவள்.



"என் முகம்....நான் 'உம்'முன்னு வைச்சிருக்கிறேன்....!உனக்கென்னடி வந்துச்சு.....?",வள்ளென்று கடித்தான் அவன்.



அவளைப் பிரிந்து நான்கு நாட்கள் இருக்க வேண்டுமே...என்ற கடுப்பு அவனுக்கு....!



"நான் மட்டும் உங்களைப் பிரிஞ்சு சந்தோஷமாகவா இருக்கப் போகிறேன்....?உங்களுடைய பிரிவு எனக்கும்தான் வேதனையைத் தரும்....!அதைப் புரிஞ்சுக்காம....இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு....என்மேல எரிஞ்சு விழறீங்க.....?நானும்தான் உங்களைக் காதலிக்கிறேன் ஆது....!உங்க மீதான என்னுடைய தேடலும் அதிகமானதுதான்.....!",குரல் கமற...கூறியவளின் விழிகளில் கண்ணீர் அணைகட்டி நின்றது.



அவளது கண்ணீரைப் பார்த்தவன்....தன் தவறை உணர்ந்தவனாய் மானசீகமாகத் தன் தலையில் கொட்டியபடி காரை நிறுத்தினான்.



'ச்சே....!அவளுக்கும்தானே வருத்தம் இருக்கும்....!அதைப் புரிஞ்சுக்காம....ரொம்பவும் அவளைப் படுத்தறோம்.....!',தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.



"ஸாரி டி....!உன்னைப் பிரிந்து இருக்கணும்ங்கிற ஒரு கோபத்துலதான் இப்படி நடந்துக்கிட்டேன்....!",மன்னிப்பு கேட்டபடியே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.



அவனது மார்பில் பூனைக் குட்டியாய் சுருண்டு கொண்டவள்....மேலும் அழ ஆரம்பித்தாள்.



"போடா....!நானும்தான் உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன்....!",மூக்கை உறிஞ்சினாள் அவள்.



"எனக்குத் தெரியும் டா பேபி....!என் குட்டிம்மா என்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்க....!",



"தெரியுதில்ல....?அப்புறம் எதுக்கு இப்படி கோபமா இருக்க....?",



"இல்லையே.....!உன் அத்தானுக்கு கோபம் இல்லையே.....!நீ ஜாலியா ஊருக்குப் போய் உன் பிரெண்ட் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு வா....!சரியா....?",தன் மார்பில் இருந்து அவள் முகத்தை நிமிர்த்தியவன்....சிறுகுழந்தை போல் தேம்பிக் கொண்டிருந்தவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு....நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்தான்.



அவனது தோளில் சாய்ந்து அவளும்...அவளது உச்சி வகிட்டில் தாடையைப் பதித்து அவனும்....வெகுநேரம் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.இருவருமே அந்த ஏகாந்தமான அமைதியைக் கலைக்க விரும்பவில்லை.



கோவையில் அவளது வீடு இருக்கும் தெருவில் அவளை இறக்கி விட்டவன்....சில பல அணைப்புகளுடனும்....செல்ல செல்ல கொஞ்சல்களுடனும் அவளை வழியனுப்பி வைத்தான்.



...............................................................................................................



திருமணத்திற்கு முதல் நாளே நித்திலா....நந்தினியின் வீட்டிற்கு சென்று விட்டாள்.முகம் முழுக்க புன்னகையுடனும்....கல்யாணப் பெண்ணிற்கே உரிய கனவுகளுடனும்.....கன்னம் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு வெட்கச் சிவப்பில் மிளிர்ந்து கொண்டிருக்க....வளைய வந்த தோழியைப் பார்ப்பதற்கு நித்திலாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.



வேண்டுமென்ற அளவிற்கு நந்தினியை கலாய்த்து தள்ளி விட்டாள்.அந்த திருமண வீட்டின் பரபரப்பையும்....தோழியின் வெட்கப் புன்னகையையும் பார்க்கும் போது....ஏனோ நித்திலாவிற்கு ஆதித்யனின் ஞாபகம்தான் வந்தது.



'எனக்கும்... ஆதுவுக்கும் இப்படித்தான் கல்யாணம் நடக்கும்....!',அவள் விழிகளிலும் கனவுகள் விரிந்தன.சென்ற முறை....அவள் கோவை வந்திருந்த போது....ஆதித்யன்தான் அவளுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை பண்ணிக் கொண்டிருந்தான்.ஆனால்...இம்முறை நொடிக்கு பத்து தடவை இவள்....அவனுக்கு அழைத்தாள்.



"என் குட்டிம்மாவுக்கு என்னாச்சு.....?அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க....!",அவன் கொஞ்ச..



"ம்ம்...உன் குட்டிம்மாவுக்கு என்னென்னமோ ஆச்சு.....!",சிறு குழந்தையாய் பிதற்றினாள் அவள்.



"அடடா....!இன்னும் மூணு நாள்தான் இருக்கு....!இன்னையில் இருந்து நாலாவது நாள் என் பேபி....அத்தான் முன்னாடி இருப்பாங்க....!ஒகே வா....?",



"ம்ஹீம்....!எனக்கு இப்பவே நீ வேணும்.....!",செல்லமாக சிணுங்கினாள் அவனது குட்டி ராட்சசி.



எப்பொழுதும் அவன்தான்....அவளிடம் இப்படி அடம்பிடிப்பான்.இன்றோ....அவள் அடம்பிடித்தாள்.



சன்னமாக சிரித்துக் கொண்டவன்,"என் செல்ல குட்டிமால்ல.....!இன்னும் மூணே நாள்தான்....!சமர்த்துப் பொண்ணா அங்கேயே இருப்பாங்களாம்....!அத்தான் சொன்னால் கேட்டுக்குவாங்கல்ல.....!",கெஞ்சிக் கொஞ்சி மிஞ்சி சமாதானப்படுத்தினான் அந்த அழகிய காதலன்.



ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தி போனை வைப்பதற்குள் ஆதித்யனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.போனை அணைத்தவன்...'என் குட்டி பேபி....!' என்று மனதிற்குள் கொஞ்சிக் கொண்டே....தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.



நந்தினியின் திருமணம் மிக அழகாக நடந்தேறியது.மணப்பெண் தோழியாக நித்திலாதான் இருந்தாள்.அவ்வப்போது நந்தினியைக் கிண்டலடித்துக் கொண்டும்....திருமணத்திற்க்கு வந்திருந்த தோழிகளுடன் அரட்டையடித்துக் கொண்டும்....நேரம் மிக அழகாகக் கரைந்து கொண்டிருந்தது.



திருமணம் முடிந்ததும் மணமக்களை....மாப்பிள்ளையின் சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட....நித்திலா கிளம்பி தங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள்.



நித்திலாவின் சொந்தத்தில் ஒருவருக்குத் திருமணம் என்பதால்....அவளது பெற்றோர்கள் அங்கு சென்று விட்டு அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தனர்.



"என்னம்மா நித்தி....கல்யாணமா நல்லபடியா முடிஞ்சுதா....?",கிருஷ்ணன் விசாரிக்க..



"ம்....அதெல்லாம் ஒரு குறையும் இல்லைப்பா.....!நம்ம நந்து பொதுவாகவே வாயாடி....!இன்னைக்கு என்னடான்னா....குனிஞ்ச தலை நிமிராம மணமேடையில் உட்கார்ந்திருந்தாள் ப்பா....!",ஆச்சரியத்துடன் கூறியபடியே தந்தையின் அருகில் சோபாவில் 'பொத்'தென்று அமர்ந்தாள் நித்திலா.



"கல்யாணப் பொண்ணுன்னா...அப்படித்தான் இருக்கணும்.....!பின்ன பரக்கா வெட்டியாட்ட சிரிச்சுக்கிட்டா நிற்பாங்க....!",மகளிடம் கூறியபடியே கையில் சுடச்சுட காபி டம்ளரோடு வந்தார் மீனாட்சி.



"வாவ்....!காபி....!மை ஸ்வீட் மம்மி....!நந்துவுடைய வீட்டுக்குப் போனதில் இருந்து சரியான தூக்கமே இல்ல.....!ஸ்ட்ராங்கா ஒரு காபியை குடிச்சிட்டு நல்லா படுத்து தூங்கணும்ன்னு நினைச்சுக்கிட்டு வந்தேன்.....!கொடுங்க....!கொடுங்க....!"ஆர்வமுடன் காபியை வாங்கிப் பருகினாள் நித்திலா.



"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா....?அதுதான்...நீ வந்ததை பார்த்த உடனே காபி கலக்க ஆரம்பிச்சுட்டேன்....!",ஆதுரத்துடன் மீனாட்சி கூற...வாஞ்சையுடன் மகளின் தலையைப் பிடித்து விட்டார் மீனாட்சி.



'என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களும் எனக்குள்ள இருக்குதும்மா....!' மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் நித்திலா.



யோசனையுடன் அமர்ந்து விட்டவளைப் பார்த்த கிருஷ்ணன்,"காபி குடிச்சிட்டா போய் படுத்து தூங்கு டா....!",இதமாக வினவ..



"ம்ம்....!",முணுமுணுத்தபடியே தனது அறைக்குள் வந்தவள்...முதல் வேலையாக ஆதித்யனுக்குத்தான் அழைத்தாள்.



"ஆது....!",அவள் குரலில் இருந்த அலைப்புறுதலை அவன் கண்டு கொண்டான்.



தாயின் மடி தேடும் கன்றாய்....அவனது மடி தேடி அழைத்தவளின் குரலில்....அவன்....அவனையும் அறியாமல்,"குட்டிம்மா....!" என்று விளித்திருந்தான் காதலாக.



அவன் அப்பொழுது முக்கியமான மீட்டிங்கில் இருந்தான்.தொழிலதிபர்களுக்கான மீட்டிங் அது....!அந்த மீட்டிங் ஹாலில் போடப்பட்டிருந்த நீண்ட டேபிளின் இருபுறமும்....பல தொழிலதிபர்கள் அமர்ந்திருக்க....அந்த டேபிளின் நடு நாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் ஆதித்யன்.



நித்திலாவின் அழைப்பை அவன் ஒருபோதுமே புறக்கணித்ததில்லை.எந்த ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும்...அவள் போன் காலை அட்டெண்ட் செய்து..'மீட்டிங்கில் இருக்கிறேன் பேபி....!அப்புறம் கூப்பிடறேன்....!',என்று விபரம் கூறிவிட்டுத்தான் போனை அணைப்பான்.



அன்றும் அந்த எண்ணத்துடன்தான் மொபைலைக் காதில் வைத்தவன் செவியில்,"ஆது....!",என்ற அவளின் குரல் அலைப்புறுதலோடு ஒலிக்கவும்....அவன்....அவனையும் அறியாமல்,"குட்டிம்மா....!",என்று விளித்து விட்டான்.



அமர்ந்திருந்த அத்தனை தொழிலதிபர்களும் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து ஆதித்யனைப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் அறிந்த ஆதித்யன் வேறு விதமானவன்....!அவன் கண்டிப்பானவன்....!தொழில் உலகின் சாம்ராஜ்யபதி....!அவன் மீட்டிங்கில் போனை அட்டெண்ட் செய்வது என்பதே பெரிய விஷயம்....!அதிலும்....'குட்டிம்மா.....!' என்ற அவனது காதல் விளிப்பும்....அவன் கண்களில் தெரிந்த கனிவும் அவர்களுக்குப் புதிதிலும் புதிதானது....!



ஆதித்யனுக்கு அருகில் முதலாவதாக அமர்ந்திருந்த கெளதம்....யாரும் அறியாமல் நண்பனின் கையை அழுத்திப் பிடிக்க....அதில் தன்னை சுதாரித்துக் கொண்டவன்...."எக்ஸ்க்யூஸ் மீ ஜென்டில்மென்....!",என்று மன்னிப்பு கேட்டபடி வெளியேறி விட்டான்.



"ஆது....!",போனிலேயே அவள் தேம்ப ஆரம்பிக்க..



"பேபி....!என்னாச்சு டா....?எதுக்கு அழற.....?",பதட்டத்துடன் சமாதானப்படுத்தினான் அவன்.



"ஆது.....!எனக்கு பயமா இருக்கு....!",,



"எதுக்குடா பயம்....?நம்ம விஷயத்தை உன் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டியா....?அவங்க ஏதாவது திட்டினாங்களா....?",



"இல்ல ஆது...!இன்னும் சொல்லல....!அவங்ககிட்ட சொல்றதுக்கே எனக்குப் பயமா இருக்கு...!ஒரு மாதிரி குற்றவுணர்வா இருக்கு அத்தான்....!",தன் மனதை மறைக்காமல் அவனிடம் புலம்பினாள் நித்திலா.



அவள் மனது எந்தளவிற்கு சஞ்சலமடைந்திருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.



அவள்...அவனை மிகவும் தேடும் சமயங்களில் மட்டும்தான் 'அத்தான்...' என்று அழைப்பாள்.



அவள் மனதைப் புரிந்து கொண்டவனாய்,"நான் கிளம்பி அங்கே வர்றேன் பேபி....!நாம ரெண்டு பேரும் சேர்ந்தே உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசலாம்....!",உறுதியான குரலில் கூறினான்.



"இல்லல்ல....!வேண்டாம்....!",அவசர அவசரமாக மறுத்தாள் அவள்.



"ப்ச்....!ஏண்டி....?",அவனது கோபத்தில் அவள் அமைதி காத்தாள்.



சில நொடிகள் இருவருமே பேசவில்லை.ஒரு சீறலான மூச்சுடன் ஆதித்யன்தான் ஆரம்பித்தான்.



"சரி....!நான் வரல...!நீ பயப்படாம...அமைதியா உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசு....!என்ன நடந்தாலும்...நான் உனக்குத் துணையா இருக்கேன் பேபி...!இதை நீ மறக்கக் கூடாது....!",



"ம்...!",



"பயப்படக் கூடாது.....!",



"ம்....!",



"என்ன நடந்தாலும் சரி...நான் பார்த்துக்குவேன்....!",



"ம்....!",



"நாளைக்கு காலையில கிளம்பிடுவதானே.....?உங்க ஊர் பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணு....!நான் வந்து கூட்டிட்டு வர்றேன்.....!",



"வேண்டாம்.....!உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்....!நானே வந்திடறேன்.....!",



"எனக்கு எந்த சிரமமும் இல்ல....!ஒரு வேலையா உங்க ஊருக்கு வர வேண்டி இருக்கு....!நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",அழுத்தமாகக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.



சிறிது நேரம் அவளிடம் குறும்பாக பேசி அவளது மனநிலையை மாற்றிவிட்டுத்தான் போனை வைத்தான் ஆதித்யன்.அவனிடம் பேசிய பிறகு சற்று இலகுவான மனநிலையோடு படுத்து நன்கு உறங்கினாள்.



அவள் கண் விழித்த போது....மாலை ஆகியிருந்தது.எழுந்து குளியலறைக்குச் சென்று முகம் கழுவி வந்தவள்....பத்து நிமிடம் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.ஆதித்யனின் முகத்தை தன் மனக்கண்ணில் கொண்டு வந்தவள்....அவனுடைய காதலை தனக்குள் நிரப்பிக் கொண்டாள்.



'முருகா....!என் அம்மா அப்பாக்கிட்ட என் காதலை சொல்லப் போறேன்....!நீதான் எனக்குத் துணையா இருக்கணும்.....!',மனமுருகி வேண்டியவள்....ஒரு முடிவோடு எழுந்தாள்.



சரியாக அந்த நேரம் வெளியே ஹாலில்,"என்னப்பா தம்பி....!வீட்டில எல்லோரும் இருக்கீங்களா....?",நித்திலாவின் பெரியம்மா கனகத்தின் குரல் கேட்டது.



"வாங்க அண்ணி....!வாங்க அக்கா....!",கிருஷ்ணனும்...மீனாட்சியும் அவரை வரவேற்கும் ஒலி கேட்டது.



'ஹைய்யோ.....!இந்தப் பெரியம்மா எதுக்கு இப்போ வந்திருக்கு....?நானே ஒருவழியா தைரியத்தை திரட்டி...அவங்ககிட்ட சொல்லிடலாம்ன்னு நினைச்சேன்....!இனி...இவங்க போன பிறகுதான் பேச முடியும்....!',சோர்வோடு கட்டிலில் விழுந்தவளின் காதில் வெளியே நடக்கும் உரையாடல்கள் வந்து விழுந்தன.



"வீட்டில் எல்லோரும் சௌக்கியமா அண்ணி....?அண்ணா எப்படி இருக்காங்க....?",கிருஷ்ணன் விசாரிக்க..



"ம்ம்...எல்லோரும் நல்லாயிருக்காங்க....!எங்கே உன் பொண்ணு நித்திலாவைக் காணோம்....?",வீட்டைக் கண்களால் துளாவியபடியே வினவியவருக்கு..



"அவள் பிரெண்டோட கல்யாணத்துக்கு போய்ட்டு வந்த அலுப்புல தூங்கிக்கிட்டு இருக்கா அக்கா....!நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்....!",என்றபடி சமையலறைக்குள் செல்ல முயன்ற மீனாட்சியைத் தடுத்தவர்..



"காபியெல்லாம் வேண்டாம்....!இப்படி வந்து உட்கார்....!உங்க ரெண்டு பேர்க்கிட்டேயும் கொஞ்சம் பேசணும்....!",என்றார்.



மீனாட்சிக்கு 'பக்'கென்று ஆனது.'அய்யோ....!இந்த அம்மா பேசினாலே...ஏதாவது வில்லங்கமாகத்தானே இருக்கும்....!',மனதிற்குள் பயந்தபடியே அமர்ந்தார்.



உள்ளே அமர்ந்திருந்த நித்திலாவும்,'அப்படி என்னதான் பேசப் போகுது....?பீடிகை எல்லாம் பலமா இருக்கு....!',யோசித்தபடியே காதைத் தீட்டிக் கொண்டு...அவர் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.



"நித்திலாவுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கீங்க....?மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா....?",மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.



"உங்களுக்கெல்லாம் சொல்லாம பார்க்க ஆரம்பிக்க மாட்டோம் அண்ணி.....!அவள் வேலைக்கு வேற போய்க்கிட்டு இருக்கிறாள்....!இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்....!",பிடி கொடுக்காமல் நழுவ பார்த்தார் கிருஷ்ணன்.



இன்னும் நாலைந்து மாதங்கள் கடந்த பிறகு மகளின் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.



"நீ இப்படியே தள்ளிப் போட்டுக்கிட்டே இரு....!அங்கே சென்னையில உன் பொண்ணு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாள் தெரியுமா....?",கனகம் நீட்டி முழக்க..



கேட்டுக் கொண்டிருந்த நித்திலாவிற்கு அடிவயிறு பிசைந்தது.'ஒருவேளை....இந்தப் பெரியம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோ....?கடவுளே...!',நகத்தைக் கடித்துத் துப்பியபடி அமர்ந்திருந்தாள்.



"என்ன அண்ணி....?என் பொண்ணு சென்னையில வேலை பார்த்துக்கிட்டு இருக்கா....!இதுல என்ன இருக்கு....?",கனகத்தின் பேச்சைக் கேட்டு முகம் சுளித்தவாறு கூறினார் கிருஷ்ணன்.



"ம்க்கும்....!நீதான் நினைச்சுக்கிட்டு இருக்கணும்....!உன் பொண்ணு வேலை பார்க்கிறான்னு....!அவ அங்க என்ன வேலை பார்த்துக்கிட்டு இருக்கா தெரியுமா....?",



மகளைப் பற்றி பேசவும்...கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சிக்கு கோபமாக வந்தது.



"எதுக்கு அக்கா இப்படி நீட்டி முழக்கறீங்க.....?என் பொண்ணு சென்னையில ஆபிஸ் வேலைதான் பார்க்கிறாள்....!போதுமா....?",சற்று காரமாகவே திருப்பிக் கொடுத்தார் மீனாட்சி.



"ஆமா...!ஆமா....!நீங்க ரெண்டு பேரும்தான் உங்க பொண்ணை மெச்சிக்கணும்....!ஏன் தம்பி....அவளை சென்னைக்கு அனுப்பும் போதே..'வேண்டாம்'ன்னு நான் தடுத்தேன்....!என் பேச்சை நீ கேட்டாத்தானே....?'என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...'ன்னு பெரிசா பேசி அனுப்பி வைச்ச.....!இப்போ பாரு....!நாமதான் கிடந்து தவிக்க வேண்டியதா இருக்கு....!",மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு கொட்டித் தீர்த்தார்.



நித்திலாவின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை...!இதயம் துடிக்கும் துடிப்பு அவளது காதில் விழுந்தது.எங்கே கையை எடுத்தால் இதயம் வந்து வெளியே விழுந்து விடுமோ....?என்ற அச்சத்தில் நெஞ்சை அழுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.



கிருஷ்ணனுக்கும்....மீனாட்சிக்கும் சுத்தமாக இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்பதை அவர்களது சுளித்த முகங்களே கூறியது.



"அன்னைக்கு சொன்னதையேதான் இப்பவும் சொல்றேன் அண்ணி.....!என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!என் நம்பிக்கைக்கு குறைவு வர்ற மாதிரி அவள் நடந்துக்க மாட்டாள்....!",ஆணித்தரமாக கூறியவரின் வார்த்தைகளில்...அவர்...தன் மகளின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை பளிச்சிட்டது.



தன் தந்தையின் வார்த்தைகளில் கண்களை மூடிக் கொண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தாள் நித்திலா.



'இல்லைப்பா....!உங்க நம்பிக்கையை நான் காப்பாற்றலை....!',அவள் மனம் மருகித் தவித்தது.



"ம்க்கும்....!",நொடித்தவாறே கிருஷ்ணனை ஏறிட்ட கனகம்,"உன் பொண்ணு உன் நம்பிக்கையை கொன்னுட்டா தம்பி....!அங்கே சென்னையில ஒரு பையன் கூட சுத்திக்கிட்டு இருக்கிறாளாம்....!நம்ம சதாசிவம் இருக்கிறானல்ல...அதுதான் உனக்குக் கூட கொழுந்தன் முறை ஆகுதே....!அவன் ஒரு வாரத்துக்கு முன்னாடி சென்னைப் பக்கம் போனானாம்....!அப்போ...உன் பொண்ணை ஒரு பையன் கூட பார்த்திருக்கான்....!அதுவும் நெருக்கமா....!",அவர் கூறிக் கொண்டே போக..



"போதும்...!நிறுத்துங்க அண்ணி....!இப்படி என் பொண்ணு மேல அபாண்டமா பழி போடாதீங்க....!",சற்றுக் குரலை உயர்த்திக் கத்தினார் கிருஷ்ணன்.



"உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கிறாள் அக்கா....!இன்னொரு பொண்ணை பத்தி இப்படி யோசிக்காம பேசாதீங்க....!",என்ற மீனாட்சியின் குரல் நடுங்கியது.



நித்திலாவோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் சிலையாய் சமைந்திருந்தாள்.அவள் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வற்றாத ஜீவநதியாய் பெருகிக் கொண்டிருந்தது.



'என்னுடைய பெத்தவங்களுக்கு இப்படியொரு அவமானத்தைத் தேடித் தந்துட்டேனே....?அவங்களைப் பார்த்து....இன்னொருத்தர் கேள்வி கேட்கிற மாதிரி பண்ணிட்டேனே...?',அவள் மனம் அரற்றியது.



அவர்கள் இருவரையும் பார்த்து அசால்ட்டாக கையை உதறியவர்,"நான் ஒண்ணும் அபாண்டமா பழி போடல....!அப்புறம் மீனாட்சி...நானும் ஒரு பொண்ணை வைச்சிருக்கிறேன் தான்...!ஆனால்..அவள் ஒண்ணும் கண்டவன் கூட சுத்திக்கிட்டு இல்ல...!நான் ஆதாரத்துடன்தான் பேசறேன்....!அந்த சதாசிவம் அவன் கண்ணால பார்த்திருக்கிறான்....!இப்பவே உன் பொண்ணைக் கூப்பிட்டு...என்ன நடக்குதுன்னு கேளு....!உண்மையைத் தெரிஞ்சுக்கலாம்....!",ஏற்ற இறக்கங்களோடு ஆங்காரத்துடன் கூறி முடித்தார் கனகம்.



இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....!அடுத்தவர் குடும்பத்தில் என்ன நடக்கும்...?எதைச் சொல்லி கலகத்தை ஏற்படுத்தலாம்....?என்று கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருப்பர்.அடுத்தவர்களின் மனதைக் குத்திக் கிழிப்பதில்...அப்படி என்னதான் குரூர திருப்தியோ தெரியவில்லை...!



கட்டுக் கடங்காமல் பெருகிய கோபத்தை....தன் விழிகளை அழுந்த மூடித் திறந்து கட்டுப்படுத்திய கிருஷ்ணன்,"நான் எதுக்கு அண்ணி என் பொண்ணுக்கிட்ட கேட்கணும்....?அவ சென்னையில ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலையில இருக்கிறாள்....!அவளுடைய வேலையில அவள் நாலுபேரு கூட பழக வேண்டியிருக்கும்....!வெளியில நாலு இடங்களுக்குப் போக வேண்டி இருக்கும்....!அதையெல்லாம் பார்த்துட்டு கண்டபடி பேசினால்...அது உங்க தப்புதான்....!இதுக்கெல்லாம் என் பொண்ணு பதில் சொல்ல வேண்டியதில்லை....!



அப்புறம் என் பொண்ணு கண்டவங்க கூட சுத்தினாலும்...அவளை கை நீட்டி..'ஏன்..?'ன்னு ஒரு வார்த்தை நான் கேட்க மாட்டேன்....!ஏன்னா...என் பொண்ணு மேல நான் வைச்சிருக்கிற நம்பிக்கை அப்படிப்பட்டது....!இவ்வளவு ஏன்....?நானே என் கண்ணால அவளை வேறு ஒரு ஆணோட பார்த்தாலும் சந்தேகப்பட மாட்டேன்....!அந்த ஆணோட பழகறதுக்கும் ஒரு தகுந்த காரணம் இருக்கும்ன்னு நம்புவேன்....!அவள் மேல நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைச்சிருக்கிறேன்....!",அழுத்தம் திருத்தமாகக் கூறியவரிடம் அப்படியொரு உறுதி தெரிந்தது.



கணவர் கொடுத்த தக்க பதிலடியில்...மீனாட்சியின் மனம் சற்று அமைதியடைந்தது.



"எங்க வளர்ப்பு பொய்யா போகாது அக்கா....!முதல்ல உங்க குடும்பத்தைப் பாருங்க...!போன வாரம் கோவிலுக்குப் போன போது பார்த்தேன்....!உங்க பொண்ணு ஒரு பையன் கூட உட்கார்ந்து குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்தாள்....!முதல்ல அதைப் போய் என்னன்னு பாருங்க....!",அவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில்...போன வாரத்திலிருந்து மனதில் மறைத்து வைத்திருந்த உண்மையைப் போட்டு உடைத்தார் மீனாட்சி.



தன் மகளின் விஷயம் அவருக்கும் அரசல் புரசலாக காதில் விழுந்திருந்தது.எனவே...மூக்கறுபட்டு அமர்ந்திருந்தார்.



சிலையாய் ஸ்தம்பித்திருந்த நித்திலா 'ஓ'வென்று கதறி அழ ஆரம்பித்தாள்.தன் அழுகை சத்தம் வெளியே கேட்டு விடுமோ என்ற பயத்தில் தன் வாயைப் பொத்திக் கொண்டு குமுறினாள்.



அவள் தந்தை பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் இதயத்தை சென்று பலமாகத் தாக்கியது.அதிலும் 'நம்பிக்கை' என்ற வார்த்தை அவளை உயிரோடு கொன்று போட்டது.மனதில் இருந்து எழுந்த எதுவோ ஒன்றில் அவள் சிக்கித் தவித்தாள்.



அந்த நிலையிலும்...மனைவியைக் கண்டிப்புடன் பார்த்த கிருஷ்ணன்,"இன்னொரு பொண்ணைப் பத்தி தேவையில்லாம பேசாதே மீனாட்சி....!",என்று அதட்டியவர்...கனகத்திடம் திரும்பி,



"அண்ணி....!நீங்க வயசில பெரியவங்க....!தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க....!நித்திலா உங்களுக்கும்தானே மகள் முறை....!நம்ம வீட்டுப் பொண்ணைப் பத்தி நாமளே கண்டபடி பேசலாமா....?",அவர் குரலில் சற்று வருத்தம் தெரிந்தது.



என்னதான் இருந்தாலும் அண்ணி முறை....!வயதில் பெரியவர்களின் முன் குரலை உயர்த்திப் பேச நேர்ந்ததை அவர் விரும்பவில்லை.



கிருஷ்ணன் சற்று அமைதியாகக் கூறவும்....கனகமும் சற்று நைச்சியமாகப் பேச ஆரம்பித்தார்.



"நம்ம வீட்டு பொண்ணுங்கிறதுனாலதான்....விஷயம் கேள்விப்பட்டதும் உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன் தம்பி.....!உண்மையோ...பொய்யோ....?நமக்கு எதுக்கு வம்பு....!இனியும் அவளை சென்னைக்கு அனுப்பாம...சட்டு புட்டுன்னு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் பண்ணற வழியைப் பாரு....!நான் அவ்வளவுதான் சொல்லுவேன்....!",ஏதோ நல்லவர் போல கூறிவிட்டு கிளம்பினார் கனகம்.



"ஆமாமா....!இந்த அம்மா எதுக்கு ஓடி வந்ததுன்னு நமக்குத் தெரியாது....?இவ சென்னைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து....இதே கூத்துதான்....!அப்பப்ப வந்து எதையாவது கொளுத்திப் போட்டுட்டு போறது....!",எரிச்சலுடன் மீனாட்சி முணுமுணுக்க..



"சரி..!சரி...!விடுடி....!வாழ்க்கைன்னு இருந்தால்...நாலு பிரச்சனையைப் பார்த்துத்தான் தீரணும்....!நீ இந்த விஷயத்தை எல்லாம் நம்ம பொண்ணுக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே....!அவ வருத்தப்படுவாள்....!",என்று கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிருஷ்ணன்.



அவர்கள் இருவரும் ஒரு துளி அளவு கூட நித்திலாவை சந்தேகப்படவில்லை.அவர்களால் சந்தேகப்படவும் முடியவில்லை.



அவர்களைக் குற்றம் சொல்லியும் பிரயோஜமில்லை....!காதல் விளையாடும் விளையாட்டில் யாரை குற்றவாளியாக்குவது....?



தங்கள் மகளின் மனத்தில்....காதல்...தனது கள்ளத்தனத்தைப் புகுத்தியிருக்கிறது...என்பதை அவர்கள் அறியாமல் விட்டது யாருடைய தவறும் அல்லவே....?



தரையில் அமர்ந்து மெத்தையில் தலை கவிழ்ந்திருந்த நித்திலாவின் விழிகள் சிவந்து போய் கிடந்தன.அழுது அழுது அவள் கண்களில் கண்ணீரே வற்றியிருந்தது.



தன்னுடைய பெற்றவர்கள்....தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் அவள் ஆடிப் போயிருந்தாள்.அவர்களது நம்பிக்கையை கொன்ற குற்றவுணர்வு...அவள் கழுத்தை வாள் கொண்டு அறுத்தது.



'அய்யோ....!அப்பா....!உங்க நம்பிக்கையை நான் கொன்னுட்டேன்....!பெரியம்மா சொன்ன எல்லாமே உண்மைதானே....!உங்க நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணிட்டேன்....!நான் என்ன பண்ணட்டும் அப்பா...!எனக்கு ஒரு வழியும் தெரியலையே....?ஆதுவுடைய காதலை தூக்கியெறிஞ்சுட்டு உங்ககிட்ட வரட்டுமா....?இல்ல...உங்க நம்பிக்கையை கொன்னுட்டு அவர்கிட்ட போகட்டுமா....?எனக்கு ஒண்ணும் தெரியலையே....?',காட்டில் தொலைந்த குழந்தையாய் புலம்பிக் கொண்டிருந்தாள் நித்திலா.



ஒரு பக்கம் ஆதித்யனின் காதல் விஸ்வரூபம் எடுத்து அவளை அழைக்க....இன்னொரு பக்கமோ...அவள் அப்பாவினுடைய நம்பிக்கை பெரிதாய் உருவெடுத்து...அவளை நோக்கி அமைதியான பார்வையை வீசி வைத்தது.



இவ்வளவு நாட்கள் மறைந்து கிடந்த....பெற்றவர்களின் நம்பிக்கைக்கும்...ஆதித்யனின் காதலுக்கும் இடையேயான போராட்டம்....மீண்டும் அவள் மனதில் உதயமானது.அவள் மீண்டும் இரு மனங்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தாள்.



"இல்ல....!ஆசை ஆசையா என்னை பெத்து....இவ்வளவு வருஷம் கண்ணுக்கு கண்ணா வளர்த்த என் அம்மா அப்பாவினுடைய நம்பிக்கைக்கும்....பாசத்துக்கும் துரோகம் பண்ண மாட்டேன்....!இந்த குற்றவுணர்வோட என்னால....ஆது கூட வாழ முடியாது....!வேண்டாம்....!என்ன...?ஒரு வருடக் காதல்தானே.....?"



இதை நினைக்கும் போதே...ஆதித்யனின் காதல் மனம் விழித்துக் கொண்டு..'வெறும் ஒரு வருடக் காதல்தான் என்று நீ நினைக்கிறாயா....?இந்த ஒரு வருடக் காதலிலேயே...நீ ஏழேழு ஜென்மக்களுக்குமான காதலை அவன் மேல் வைத்திருக்கிறாய்....அது தெரியும்தானே....?',என்று கேள்வி கேட்டது.



'அந்தக் காதல்....!அந்தக் காதல் மட்டும் போதும்....!இந்த ஜென்மத்துக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து விடுவேன்....!எனக்கு அந்தக் காதல் மட்டும் போதும்....!அந்தக் காதலுக்கு உரியவன் வேண்டாம்....!',மனம் கதறித் துடித்து ஓலமிட்டது.



'ஒரு முறை...உங்க அம்மா அப்பாக்கிட்ட நீ காதலிக்கிற விஷயத்தை சொல்லிப் பாரு....!அப்புறம் முடிவெடுக்கலாம்....!',காதல் மனம் எடுத்துரைக்க...அவள் எங்கே அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இருந்தாள்....?அவள்தான் பெற்றவர்களின் நம்பிக்கையில் மூழ்கி காதலை தொலைத்துக் கொண்டிருந்தாளே....!



'எந்த முகத்தை வைத்துக் கொண்டு....நான் என் அம்மா அப்பாக்கிட்ட பேசட்டும்....?நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே....அவங்க மனசை விட்டுருவாங்க....!வேண்டாம்....!இது வேண்டாம்....!என்னுடைய விதி இதுதான்னு நான் நினைச்சுகிறேன்....!',பைத்தியம் பிடித்தவள் போல் புலம்பியவள்....காதலுக்காக போராடாமல் விதியின் மேல் பழியைத் தூக்கிப் போட்டாள்.



என்ன நடந்தாலும் சரி....!காதலிப்பவர்கள் காதலுக்காக போராட வேண்டும்....!பெற்றவர்களையும் காயப்படுத்தாமல்....காதலையும் தூக்கியெறியாமல் போராடக் கற்றுக் கொள்ள வேண்டும்....!இந்தப் போராட்டத்திற்கு பயந்து...விதியின் பின்னால் ஒளிந்து கொள்பவர்கள் கோழைகள்....!இந்தப் போராட்டத்தைக் கற்றுக் கொள்ளாமல் காதலிக்கக் கூடாது....!



ஆதித்யனின் காதல் இல்லாமல்....அவளால் மட்டும் வாழ்ந்து விட முடியுமா என்ன....?இல்லை...காதல்தான் அதற்கு அனுமதித்து விடுமா....?அவளுடைய இதயத்துடிப்பே ஆதித்யன்தான்....!அவன் இல்லையென்றால்....அந்த துடிப்பும் நின்று விடும்...என்பதை உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நித்திலா உணரவில்லை.....!



தன்னவனுடைய காதலின் ஆழம் தெரியாமல்....அவள் முடிவெடுத்துவிட்டாள்...!அந்த முடிவை அவன் அறிய வரும் போது...அவன் காதல் தீவிரவாதியாக அவதாரம் எடுப்பான்...!



***********
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
பித்துப் பிடித்தவள் போல் அவர்கள் வீட்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் நித்திலா.அவள் விழிகளில் அணை கட்டியிருந்த கண்ணீர் 'எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன்...!' என்று அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தது.



"நித்தி ம்மா...!குட் மார்னிங் டா....!மணி ஏழுதான் ஆகுது....!அதுக்குள்ள எழுந்துட்டியா....?",அப்பொழுதுதான் எழுந்து வந்த கிருஷ்ணன் விசாரித்தார்.



"ம்...ஆமாம் ப்பா....!",கலங்கிச் சிவந்திருந்த விழிகளை அவருக்கு காட்டாமல் இருக்கும் பொருட்டு...தலையைத் திருப்பியபடி பதிலளித்தாள்.



"மீனு....!புள்ளை எழுந்திருச்சுட்டா பாரு....!காபி கொண்டு வா...!",சமையல் அறையை நோக்கி அவர் குரல் கொடுக்கும் போதே....கையில் பால் டம்ளரோடு அங்கு விஜயமானார் மீனாட்சி.



"நேத்து மதியம் சாப்பிட்டதுதான்....!நைட்டும் எதுவும் சாப்பிடாம படுத்திட்ட...வெறும் வயித்துல காபி குடிக்க கூடாது....!இந்தா...!பால் குடி....!",என்றபடி அவள் கையில் பால் டம்ளரை திணித்தார்.



"தேங்க்ஸ் ம்மா...!",சுரத்தே இல்லாமல் அதை வாங்கிப் பருகிய மகளை...பெற்றவர்கள் ஆராய்ச்சி விழிகளோடு நோக்கினர்.இருவரின் விழிகளிலும்,'என்னாச்சு இவளுக்கு....?' என்ற கேள்விதான் தொக்கி நின்றது.



"நித்தி கண்ணா....!ஏன் ஒருமாதிரி இருக்க....?முகமெல்லாம் வேற வீங்கிப் போய் கிடக்கு....?",மகளின் மௌனத்தைத் தாங்க முடியாமல் கிருஷ்ணன் வினவ..



"ஒ...ஒண்ணுமில்லை ப்பா...!",என்றவள் பாதி குடிக்கப்படாமல் இருந்த பால் டம்ளரை டீபாயின் மீது வைத்தாள்.



அவர்....மகளையே கவனித்துக் கொண்டிருக்க...அவள் தனக்குள் உழன்று கொண்டிருந்தாள்.



"நித்தி....!நேத்து பெரியம்மா பேசிட்டு போன விஷயத்தைக் கேட்டியா....?"அமைதியான குரலில் கிருஷ்ணன் கேட்க..



அவளோ...'ஆமாம்...!' என்று தலையாட்டினாள்.அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து....அவள் கைகளில் பட்டுத் தெறித்தது.



ஒரு பெருமூச்சை வெளியிட்டவர்...அவள் அருகில் அமர்ந்து ஆதரவாக அவள் தோளைச் சுற்றி அணைத்தபடி..



"கண்ணா...!இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா....?அவர் பேசியது எல்லாம் ஒரு பேச்சுன்னு....நீ கேட்டுட்டு அழுதுக்கிட்டு இருக்க....!இந்த அப்பா...உன்மேல முழுமையான நம்பிக்கை வைச்சிருக்கிறேன்....!யாரு என்ன பேசினால் என்ன....?உனக்கு பின்னாடி நான் இருக்கிறேன்....!பேசறவங்களுக்கு என்ன...?பேசிட்டுத்தான் இருப்பாங்க....!வாழ்க்கையில சில சமயங்கள்ல...சில பிரச்சனைகளைக் கடந்துதான் ஆகணும்....!",அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடி அமைதியான குரலில் கூறினார்.



"என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா டா....?யாரோ என்னமோ பேசிட்டு போகட்டும்....!இந்த அப்பா உன்மேல வைச்சிருக்கிற நம்பிக்கை ஒருபோதும் குறையாது....!சரியா....?",கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி விட்டபடி கூறியவரின் தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள் அந்த மகள்.



அழுகைக்கு இடையில்,"ஸா...ஸாரி ப்பா....!ஸாரி ப்பா....!",என்ற வார்த்தைகள்தான் வந்து விழுந்தன.



மகள் எதற்காக 'மன்னிப்பு' கேட்கிறாள் என்பதை அந்தப் பெரியவர்கள் யோசித்திருக்கலாம்....!யோசிக்காமல் விட்டதுதான் காதலின் விளையாட்டு....!



"நித்தி ம்மா...!",என்ற தந்தையின் குரலோ..."அழாதே டா...!",என்ற தாயின் அக்கறையோ எதுவுமே அவள் காதில் விழவில்லை.ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்....அவர் தோளில் இருந்து எழும் போது...ஒரு தீர்க்கமான முடிவோடு எழுந்தாள்.



பதினோரு மணிக்கு ஆதித்யன் வந்து அழைத்துச் செல்வான் என்ற எண்ணம் பிறக்க...இருவரிடமும் சொல்லிக் கொண்டு...கிளம்புவதற்காக அறைக்குள் நுழைந்தவளின் மனதில்...'இன்றோடு அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...!' என்ற அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது.



பாவம்....!அவளுக்குத் தெரியவில்லை....!அந்த முற்றுப்புள்ளிக்கு அருகில் இன்னொரு புள்ளியை வைத்து....ஆதித்யன் அதை தொடர்கதையாக்கப் போகிறான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை....!ஆதித்யன் வைக்கும் புள்ளிக்கு அருகில்...இன்னொரு புள்ளியை வைத்து....காதல்....அந்த தொடர்கதையை அழகிய பெரும் காவியமாக்கப் போகிறது என்பதை அவ்விருவருமே அறிந்திருக்கவில்லை......!





அகம் தொட வருவான்...!!!
 
Top Bottom