Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 52 :



ஆதித்யனின் காரில் அமர்ந்திருந்த நித்திலாவின் மனம் முழுக்க...ரணம்..ரணம்..ரணம் மட்டுமே....!பெற்றவர்களின் பாசத்தில் மூழ்கி முடிவெடுத்து விட்டாளே தவிர...தன்னவனின் முகம் பார்த்து...'நீ வேண்டாம்....!உன் காதல் வேண்டாம்....!',என்று அவளால் மட்டும் எப்படி சொல்ல முடியும்.....?



அவள் உயிரில் கலந்தவன் அல்லவா அவன்....?அவள் இதயத்துடிப்பில் உறைந்திருப்பவன் அல்லவா அவன்....?



மனதிற்குள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் காதலை....கசக்கி எறிவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே....?



காரில் ஏறியதிலிருந்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதித்யன்.அவள் மனதிற்குள் ஏதோ போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாலும்....அவன் வாயைத் திறந்து எதையும் கேட்கவில்லை.'அவளே கூறட்டும்....!' என்று அமைதி காத்தான்.



பிரம்மை பிடித்தவள் போல் சாலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்திலா.விழிகளில் இருந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கினாள்.பயணம் நீண்டு கொண்டிருந்ததே தவிர...அவள் வாயைத் திறந்த பாடாக இல்லை.



போக்குவரத்து நெரிசல்கள் அடங்கி....கார் ஆரறவமற்ற நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது.ஒரு பெருமூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள்....ஒரு முடிவோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.



"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஆ....!", 'ஆது...!' என்று அவனை அழைக்க வந்தவள்....முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மொட்டையாக கூறினாள்.



ஒன்றும் பேசாமல் சாலையோரமாக இருந்த மரத்தடியில் காரை நிறுத்தியவன்....அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தபடி,"ம்....சொல்லு....!",என்று வினவினான்.



"அ...அது வந்து...",தன் கையில் அகப்பட்ட துப்பட்டாவின் நுனியைப் பிடித்துத் திருகியபடி மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.



அவளது வலது கையைப் பற்றி தனது இரு கைகளுக்கும் இடையில் வைத்து பொத்திக் கொண்டவன்,"என்ன தயக்கம் பேபி....?எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்....!சொல்லு....!",காதலுடன் வினவியவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல்....தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள்...அவன் பிடியிலிருந்த தனது கரத்தை மெதுவாக விலக்கிக் கொண்டாள்.



அவன் முகத்தை சந்திக்காமல்...வேறு எங்கோ தன் பார்வையை செலுத்தியவள்,"எல்லாத்தையும் இன்றோடு மு...முடிச்சுக்கலாம்....!",அவ்வளவுதான்....!அவள் கூறி முடித்த அடுத்த நொடி....அவன் கரம் இடியாய் அவள் கன்னத்தில் இறங்கியது.



அவன் அடித்த அடியில்....அவள் விழிகளில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது.கன்னம் தீயாய் எரிய....அவளது வலது கை அவளையும் அறியாமல் உயர்ந்து சென்று அவள் கன்னத்தைப் பற்றிக் கொண்டது.



ஆக்ரோஷத்தின் மொத்த உருவமாய் ரௌத்திரத்துடன் அவளை முறைத்துக் கொன்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.



அவன் கழுத்து நரம்புகள் புடைத்த விதத்திலிருந்தும்.....கை முஷ்டி இறுகியதிலிருந்தும் அவனது கோபத்தை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.



"என்னடி சொன்ன....?",அவனுடைய உறுமலில் மேனி நடுங்க அவள் கார்க்கதவோடு சென்று ஒன்றிக் கொண்டாள்.விழிகளில் கண்ணீரோடு....கன்னத்தை ஒரு கையால் தாங்கியபடி அதிர்ச்சியுடன் தன்னை நோக்கியவளைக் கண்டு அவன் சிறிதும் இளகவில்லை.



"என்ன சொன்னேன்னு கேட்டேன்.....?",அவன் கத்திய கத்தலில் உடல் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தவள்..



ஒருவாறாகத் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு,"இ...இத்தோட எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வை....வைச்சிடலாம்....!",திக்கித் திணறி கூறி முடித்தவள்....அவனிடம் இருந்து மீண்டும் ஒரு அறையை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.



அவனுடைய இரும்புக்கரம் அவளுடைய மென்மையான கன்னங்களை முரட்டுத்தனமாக பதம் பார்த்ததில்....அவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது.கண்களில் பூச்சி பறக்க....எதிரில் அமர்ந்திருந்தவனின் உருவம் மங்கலாகத் தெரிய ஆரம்பிக்க....தாள முடியாமல் கார் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.



அவளது நிலையை உணர்ந்தவனாய்...காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் மடியில் விட்டெறிந்தவன்,"குடி....!",என்றான் உறுமலாக.



அவனுடைய அரட்டலில்....அவசர அவசரமாக பாட்டிலை எடுத்து தன் வாயில் சரித்துக் கொண்டாள்.அதன் பிறகுதான் கொஞ்சம் தெளிவே வந்தது.



'கோபப்படத்தான் செய்வார்....!ஆத்திரப்பட்டு அடிக்கத்தான் செய்வார்....!இன்னைக்கு என்ன ஆனாலும் சரி....!என் முடிவை தெளிவா இவர்கிட்ட சொல்லாம விடப்போவதில்லை....!',மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டவள்....ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.



அவளுடைய நிமிர்வில் அவன் புருவம் சுருங்கியது.கண்கள் இடுங்க அவளை வெறித்தவன்,"ஸோ....ஒரு முடிவோடுதான் வந்திருக்க....!அப்படித்தானே....?",அவன் பார்வை அவளைக் குத்திக் கிழித்தது.



அவனது பார்வையில் வெலவெலத்த மனதை வெகு சிரமப்பட்டு தைரியப்படுத்தியவள்,"ஆமாம்....!",என்றாள் அழுத்தமாக.



"என்ன முடிவு....?",அவன் பார்வை அவள் கண்களை விட்டு இம்மியளவும் அகலவில்லை.



"நாம....நாம...பிரிஞ்சுடலாம்....!",இதைக் கூறும் போதே....கூர்மையான கத்தியை வைத்து தன் இதயத்தை யாரோ குத்திக் கிழித்து ரணமாக்கும் வலியை அனுபவித்தாள் நித்திலா.



வந்த ஆத்திரத்தில் அவளை அறைவதற்காக கையை ஓங்கியவன்....அவளது கன்னத்தில் செக்கச் செவேலென்று பதிந்திருந்த தனது விரல் தடத்தைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.



'இன்னும் ஒரு அடி அடிச்சாலும் தாங்க மாட்டாள்....!',அவ்வளவு கோபத்திலும் காதல் மனம் அவளுக்காய் பரிதாபப்பட....இயலாமையில்,"ச்சே.....!",என்று கத்தியபடி ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான்.



இருகைகளாலும் ஸ்டியரிங்கை இறுகப் பற்றியபடி அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்க....அவளோ மேலும் பேச ஆரம்பித்தாள்.



"போதும்....!நம்மளுடைய காதல்...உறவு எல்லாமே போதும்....!எல்லாத்துக்கும் இன்றோடு முற்றுப்புள்ளி வைச்சிடலாம்....!",மேலும் என்ன கூறியிருப்பாளோ....அதற்குள் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தவனின் பார்வையில் அவளது மொபைல் வந்து விழ...ஆங்காரமாய் அதை எடுத்து சாலையில் தூக்கியெறிந்தான் ஆதித்யன்.



அவள் மீது காட்ட முடியாத கோபத்தை.....அவளது மொபைலின் மீது அவன் காட்டியிருக்க...அதைத் தாங்க முடியாமல் அந்த மொபைல் சுக்கு நூறாய் உடைந்து போனது.



"எப்படி டி....?எப்படி உன்னால இந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சுது....?உன் மனசு உறுத்தலையா....?உன் மனசுல இருக்கிற என் மீதான காதல் உன்னைக் கேள்வி கேட்கலையா....?",வலியுடன் வினவினான் அவன்.



"ச்சே....!நீ இப்படி இருப்பேன்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லை டி....!இவ்வளவு நாள்...என்னைக் காதலிச்சியே....?அந்தக் காதல் பொய்யா....?எப்படி...ஒரு நிமிஷத்துல நான் வேண்டாம்...என்னுடைய காதல் வேண்டாம்ன்னு உன்னால முடிவெடுக்க முடிஞ்சுது....?",கோபம் இருந்த இடத்தை காதலின் ரணம் ஆக்ரமித்துக் கொள்ள....அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் வலியில் தோய்ந்து வந்தது.



அவன் குரலில் இருந்த வலி....அவன் கண்களில் தெரிந்த ரணம்...நித்திலாவின் காதல் இதயத்தை சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது.தன்னவனைப் பார்க்க முடியாமல்...விழிகளை அழுந்த மூடிக் கொண்டவளின் கண்ணோரங்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.



'என்னை மன்னிச்சிடுங்க ஆது....!எனக்கு வேற வழி தெரியல...!என் அம்மா அப்பாவை என்னால உயிரோட சாகடிக்க முடியாது....!',மனதிற்குள் மருகியவள்...தன்னவனை உயிரோடு கொல்ல விழைந்தாள்.



ஒரு பெருமூச்சோடு விழிகளைத் திறந்தவள்,"என் அப்பாவுடைய நம்பிக்கையை என்னால கொல்ல முடியாது.....!வேண்டாம்....!ப்ளீஸ்....!என்னைப் புரிஞ்சுக்கோங்க....!அவங்க...அவங்க ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்காங்க தெரியுமா....?என் பெரியம்மா வந்து என்னைப் பத்தி தப்பு தப்பாய் சொல்லியும் கூட....என் அம்மா அப்பா...அவங்களை நம்பலை....!",அன்று வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியவள்..

"என் பொண்ணு மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குன்னு ஆணித்தரமா சொன்னாரு....!அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு என்னால துரோகம் பண்ண முடியாது....!அதுக்குத்தான் சொல்றேன்...!நாம விலகிக்கலாம்....!",மனம் வலிக்க வலிக்க அந்த வார்த்தைகளைக் கூறினாள் நித்திலா.



அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன்,"என் அப்பாவுடைய நம்பிக்கை...என் அப்பாவுடைய நம்பிக்கை அப்படின்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றியே டி....?அப்போ...என்னுடைய காதல்....?என்னுடைய காதலை எங்கே...குப்பையில தூக்கிப் போடப் போறியா....?நம்மளுடைய காதல் டி...!நம்மளுடைய காதல்....!அதை எப்படி அநாதை மாதிரி தூக்கிப் போட உனக்கு மனசு வந்தது.....?



என்னால முடியலையே டி....!நான் உன்னைக் காதலிக்கிறேன் டி....!காதல்...!காதல்ங்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா டி உனக்கு....?உனக்கு எங்கே தெரியப் போகுது....?தெரிஞ்சிருந்தா...இப்படி என் காதலை அவமதிச்சிருக்க மாட்ட....!",அவன் முகத்தில் இதுவரை அவள் பார்த்திராத உணர்ச்சிகள் வந்து போயின.



இதழ்களை அழுந்தக் கடித்து...தன் மனதின் ரணத்தை மறைத்தவள்...'இளகிடாதே நித்தி....!இந்த யுத்தத்துல நீ...உன் பெத்தவங்க பக்கம் நிற்கிற....!அவங்களுக்காக நீ போராடித்தான் ஆகணும்....!',மனதிற்குள் உரு போட்டுக் கொண்டவள் ஒன்றை மறந்து விட்டாள்....!பெற்றவர்களுக்காக....அவர்களது நம்பிக்கைக்காக....தன்னுடைய உயிர்க்காதலை துடிக்கத் துடிக்க கொல்லப் போகிறாள் என்பதை மறந்து விட்டாள்....!



வாழ்க்கையில்....இரண்டையும் சரிசமமாக ஏற்று நடந்து பழக வேண்டும் என்பதை அந்த பேதைக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது....?



"இருபத்தியிரண்டு வருஷ சொந்தத்துக்காக....ஒரு வருட பந்தத்தை விடறது தப்பு இல்லை...!என் அப்பா கண்கள்ல தெரிஞ்ச நம்பிக்கையை என்னால சிதைக்க முடியாது....!",இதழ்கள்தான் கூறியதே தவிர..



அவளது விழிகள் அருவியாய் மாறி கண்ணீரைப் பொழிந்தன.அவளுடைய உயிர்க் காதல்....அவளுடைய இருதயத்தில் அமர்ந்து கதறி ஓலமிட்டுக் கொண்டிருந்தது.



"ஒரு வருடக் காதலா....?",கோபத்துடன் உதடுகளை மடித்து...இகழ்ச்சியாக ஒரு சிரிப்பை உதிர்த்தவன்..



"வெறும் ஒரு வருடக் காதல்....!என்னுடைய காதல்....உனக்கு வெறும் ஒரு வருடக் காதலா....?இருந்துட்டுப் போகட்டும்...!என்னுடைய இந்த வெறும் ஒரு வருடக் காதலுடைய ஆழத்தையும்...தீவிரத்தையும் நான் உனக்கு காட்டறேன்....!".அழுத்தமாக உரைத்தவன்...வேகமாகக் காரை கிளப்பினான்.



அவனுடைய அழுத்தமான வார்த்தைகளும்....அவனுடைய தீவிரமான பார்வையும்....அவளது முதுகுத் தண்டை ஜில்லிட வைத்தன.



'காதலுடைய ஆழத்தை எனக்கு காட்டறாரா....?இதுக்கு என்ன அர்த்தம்....?',யோசித்தவளுக்கு சத்தியமாய் விடை பிடிபடவில்லை.



அமைதியாய் விழிகளை அழுந்த மூடி சீட்டில் சாய்ந்தவளின் மனம் முழுவதும்....காதல் தன் ரணத்தை அழுத்தமாய் பதித்திருந்தது.அவளுடைய தந்தையின் நம்பிக்கை....அதை விட அழுத்தமாய் அவளது மூளையில் பதிந்திருந்தது.



'இல்லை....!அப்பாவுடைய நம்பிக்கைக்குத் துரோகம் பண்ண மாட்டேன்....!',திரும்பத் திரும்ப மந்திரம் போல் தனக்குள் சொல்லிக் கொண்டவள்....மெதுவாக கண்களைத் திறந்தாள்.கார் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.



"நான் வேலையை ரிசைன் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்....!",அமைதியாய் அவள் கூற...அதை விட அமைதியாய் அவளைத் திரும்பிப் பார்த்தவன்..



"உன் இஷ்டம்....!",என்றான்.



அவனது பதிலில் அவள் ஆராய்ச்சியாய் அவன் முகம் பார்த்தாள்.அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் அறிய முடியவில்லை.



'இவ்வளவு ஈஸியா...இந்த விஷயத்தை விடற ஆள் இல்லையே இவன்...?',அவள் மனதிற்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.



"ரிசைன் பண்ணிட்டு....ஹாஸ்டலையும் காலி பண்ணிட்டு...நான் எங்க ஊருக்குக் கிளம்பறேன்....!",தட்டுத் தடுமாறி அவள் கூற..



அவனோ,"ம்....!",என்றான் அமைதியாக.



"என்னை மன்னிச்சிடுங்க ஆ.....",ஆது என்று கூற வந்தவள்...நாக்கை கடித்து அந்தப் பெயரை கூறாமல் தவிர்த்தாள்.அதை அவன் கண்டுகொண்டான்.அவன் இதழ்களில் மீண்டும் ஒரு இகழ்ச்சிப் புன்னகை இளக்காரமாய் வந்தமர்ந்தது....!



"அமைதியா யோசிச்சுப் பாருங்க....!என் நிலைமை புரியும்....!",என்றவள் சிறிது நேரம் அமைதியாகி விட்டாள்.



காதலுக்காக ஒரு மனம் போராட...பாசத்துக்காக ஒரு மனம் வாதாட...அந்தப் பாவை மிகவும் ஓய்ந்துதான் போனாள்.



"உங்களுக்கு என் மேல கோ..கோபம் இல்லையே....?",சொல்லக் கூடாததையெல்லாம் சொல்லி விட்டு....அபத்தமாய் வினவி வைத்தாள் அவள்.



இன்னதென்று விளங்காத ஒரு பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"உன் முடிவு...!நீ எடுத்திருக்கிற....!",அசால்ட்டாகத் தோளைக் குலுக்கியபடி கூறியவன்....சாலையில் தனது கவனத்தைத் திருப்பினான்.



மேற்கொண்டு இருவருக்கும் இடையில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இல்லை.



ஆதித்யனின் மஹாபலிபுர பீச் கெஸ்ட் ஹவுஸின் முன் சென்று நின்றது கார்.



"இங்கே எதுக்கு வந்திருக்கிறோம்....?",மாலை கவிழ்ந்து இருட்ட ஆரம்பித்த நேரத்தில் அந்த பங்களாவின் முன் கார் நின்றது அவளுக்குப் பயத்தைக் கிளப்ப...சற்று பதட்டத்துடன் கேட்டாள் நித்திலா.



காவலாளி இல்லாமல்....ரிமோட் இயக்கத்தின் மூலம் திறக்கப்பட்ட அந்த மாளிகையின் பெரிய கதவுகளின் வழி ஓடிய நடைபாதையில் காரை செலுத்திய ஆதித்யன்,"அஜய் க்ரூப்ஸ் ஃபைல் வேணும்....!எடுத்துட்டுப் போகலாம்....!",என்றபடி அந்த போர்ட்டிக்கோவின் முன் காரை நிறுத்தினான்.



மிக முக்கியமான பைல்கள் அந்த வீட்டில்தான் இருக்கும்.அத்தோடு மிக முக்கியமான வேலைகளையும் அவன் அந்த வீட்டின் அலுவலக அறையில் அமர்ந்துதான் பார்ப்பான்.வேலை விஷயமாக அவளையும் பலமுறை அவன் அந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.



எனவே...தைரியமாகவே இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.



ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவள் முதுகை வெறித்தவனின் கண்கள்...வேட்டையைக் குறி வைத்த சிங்கத்தின் விழிகளைப் போல் ஜொலித்தன.



காரின் டாஷ்போர்டில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தவன்...கதவைத் திறந்து விட்டான்.உள்ளே நுழைந்தவள்...."அஜய் க்ரூப்ஸ் ஃபைல்தானே...?நான் போய் எடுத்துட்டு வர்றேன்....!",அவனிடம் உரைத்தபடி அலுவலக அறையை நோக்கி நடந்தாள்..



ஃபைலை எடுத்துக் கொண்டு அவள் வரும் போது....அவன்....இரு கைகளையும் விரித்து வைத்தபடி..தலையைப் பின்னால் சாய்த்து சோபாவில் அமர்ந்திருந்தான்.



அவன் அருகில் வந்தவள்,"கிளம்பலாமா....?",என வினா எழுப்ப..



மெதுவாக தலையை உயர்த்தி அவளைப் பார்த்தவன்...பார்த்துக் கொண்டே இருந்தான்.



இமைக்காத அவனுடைய வேட்டைப் பார்வையில்....அவளுக்குள் குளிரெடுத்தது.



"எ...என்ன....?கிள....ம்க்கும்...கிளம்பலாமா....!",தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்ட வார்த்தைகளை வெகு சிரமப்பட்டு....வெளியில் கொண்டு வந்தாள்.



அப்பொழுதும் அசராமல் அவளை நோக்கி அதே பார்வையை செலுத்தியவன்....மெல்ல அந்த வார்த்தைகளை உச்சரித்தான்.



"ம்....போகலாம்....!நீ என் பொண்டாட்டியானதுக்குப் பிறகு....!",அழுத்தந் திருத்தமாய் வெறியோடு வந்து விழுந்த வார்த்தைகள் அவளை உலுக்கியது.அதைவிட அவனுடைய பார்வை....சிறு புள்ளிமானைக் குறி வைத்த புலியின் பார்வை....அவளுடைய தளிர் மேனியை நடுங்கச் செய்தது.



அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள்....அவசர அவசரமாகத் திரும்பி கதவைப் பார்த்தாள்.அது மூடப்பட்டிருந்தது....!வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல வேகமாக கதவை நோக்கி ஓடியவள்....அதை திறக்க முயற்சிக்க...ம்ஹீம்....இம்மியளவு கூட அவளால் அதை அசைக்க முடியவில்லை.



"உன்னால அதை திறக்க முடியாது பேபி....!சாவி...இங்கே இருக்கு....!",தனக்குப் பின்னால் ஒலித்த குரலில் சடக்கென்று திரும்பிப் பார்த்தாள்.உதட்டை வளைத்து சிரித்தபடி சாவியை எடுத்து ஆட்டியவன்...அதை தனக்கு முன்னால் இருந்த டீபாயின் மீது வீசியெறிந்தான்.



புயல் போல் டீபாயை நோக்கி ஓடியவள்....அந்த சாவியை எடுக்க முயல,"அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா பேபி...?",சிரிப்புடன் கூறியபடி அந்த சாவியை கைப்பற்றிக் கொண்டான்.



"அய்யோ....!எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க....?உங்களுக்கு என்னதான் வேணும்....?",பயத்தில் அழுதபடி அவள் கேட்க..



அவள் விழிகளுக்குள் தீர்க்கமாகப் பார்த்தவன்,"பதில்....!என்னுடைய காதலுக்கான பதில்....!",ஆங்காரமாய் கத்தினான் அவன்.



அரண்டு போய் நின்றிருந்தாள் நித்திலா.வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன்,"என்னுடைய காதலுக்கான பதில் வேணும் டி....!கொஞ்சம் கூட யோசிக்காம....குப்பை மாதிரி என் காதலை தூக்கி எறிஞ்சியே....?அந்த காதலுக்கான பதில் வேணும்....!உன் அப்பாவுடைய நம்பிக்கைக்காக நம்மளுடைய காதலை அநாதையாக்கினாயே....?அதுக்கான பதில் வேணும்....!ஆனால் ஒண்ணு டி.....!நான் உயிரோட இருக்கிற வரைக்கும்....நம்மளுடைய காதலை சாக விட மாட்டேன்.....!",ஆத்திரமாய் கர்ஜித்தவன்...



"ச்சே....!",என்றபடி வெறுப்புடன் அவளைப் பிடித்துத் தள்ளிவிட....பக்கத்தில் கிடந்த சோபாவில் சென்று விழுந்தாள் அவள்.



அவனது கோபத்தைக் கண்டு நடுங்கிப் போனவள்....அந்த சோபாவிலேயே இரு கால்களையும் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.'உண்மைதானே....!எங்க காதலை நான் அநாதையாக்கிட்டேன்....!',அவள் மனம் கதறித் துடித்தது.



சிறிது நேரம்....கூண்டுப் புலி போல் உலாவியவன்....பிறகு ஒரு முடிவு எடுத்தவனாய்....அவளுக்கு எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.



அநாதரவாய் காலை கட்டிக் கொண்டு...சோபாவோடு ஒன்றியிருந்தவளைப் பார்த்தவனின் காதல் மனம் ஊமையாய் அழுதது.அச்சத்தில் மலங்க மலங்க....மருண்டு விழித்தவளின் பார்வையில் அவனது இறுக்கம் சற்றுக் குறைந்தது.அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களைப் பார்த்தவனிடம் மீண்டும் கடினத்தன்மை வந்து குடியேறியது.



"இங்கே பாரு டி....!நாளைக்கு மறுநாள் நமக்கு கல்யாணம்....!",அவன் கூறி முடிப்பதற்குள்ளேயே அதிர்ச்சியுடன் எழுந்தவள்..



"நோ....!இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்....!",என்று கத்தினாள்.



"ஒகே....!நோ ப்ராப்ளம்....!வீணா ரெண்டு நாளை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை....!",அசால்ட்டாய் தோளைக் குலுக்கினான் அவன்.



"என்...என்ன....?என்ன ரெண்டு நாள்...?",



"அதுதான் பேபி....!உனக்கு முன்னாடி நான் ரெண்டு ஆப்ஷனை வைக்கிறேன்....!ஒண்ணு...என் கையால தாலி வாங்கிட்டு என்னோட குடும்பம் நடத்து....!இல்ல...இப்பவே...இந்த நிமிஷமே என்கூட வாழ ஆரம்பி....!",எளிதாகக் கூறினான் அவன்.



அவள்தான்...அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள்.அவளது விழிகள் இரண்டும் அவன் மீதுதான் நிலைகுத்தி நின்றன.



"எதுக்கு பேபி இப்படி அதிர்ச்சியாகற....?நீ சொன்ன வார்த்தையைக் கேட்டும்...கோபப்பட்டு உன்னைத் தூக்கிட்டுப் போய் அப்பொழுதே தாலி கட்டாம....பொறுமையா யோசிச்சு...எவ்வளவு தாராள மனசோட உனக்கு ரெண்டு ஆப்ஷனை கொடுத்திருக்கிறேன்....?இந்த இரண்டு ஆப்ஷன்ல....நீ எதை வேணும்னாலும் சூஸ் பண்ணிக்கலாம் பேபி....!நோ ப்ராப்ளம்....!",அவன் தோளைக் குலுக்க..



அவளையும் அறியாமல்,"நோ....!",என்று கத்தியிருந்தாள் நித்திலா.



தலையை ஒரு புறமாக சரித்து அவளை ஏறிட்டவன்,"நோ சொல்றதுக்கான உரிமையை நீ எப்பவோ இழந்துட்ட பேபி....!வேணும்ன்னா உனக்காக ஒண்ணு பண்ணலாம்....!நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் எடுத்துக்கோ....!நல்லா யோசி....!ஆனால்...நாளைக்கு நைட் எட்டு மணிக்கு...உன்னுடைய முடிவை நீ என்கிட்ட சொல்லியாகணும்....!



கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நீ சொன்னா...ஒகே...!நோ ப்ராப்ளம்....!நாளைக்கு மறுநாள் காலையில கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்....!இல்லை...அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீ முரண்டு பிடிச்சா...நாளைய இரவு நமக்கான முதல் இரவா இருக்கும்....!",அவன் குரலில் அப்படியொரு உறுதி.



நித்திலா வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.'ஆதித்யனின் வலையில் வசமாக மாட்டியிருக்கிறோம்....!அவனிடம் இருந்து தப்பிக்க முடியாது....!',என்பது மட்டும் நன்கு புரிந்தது.ஆதித்யனின் பிடிவாதத்தைப் பற்றி அறிந்தவள் அல்லவா அவள்....?



"இல்ல....!ஆது....!இது தப்பு....!நீங்க தப்பான வழியில போறீங்க....!",



"'ஆது....!' என் பெயரை சொல்றதுக்கு உனக்கு இப்போதான் மனசு வந்துச்சா....?இவ்வளவு நேரம்...என் பெயரை உச்சரிச்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்தவள்தானே நீ....?",



அவனது கேள்வியில் அவள் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள்.



"நீங்க பண்றது சரியில்லை ஆது....!என் அப்பாவுடைய நம்பிக்கைக்கு விரோதமா நான் எதையும் பண்ண மாட்டேன்....!தயவு செய்து இங்கே இருந்து கிளம்பிடலாம்...!வாங்க....!",கண்ணீர் வழியக் கெஞ்சியவளின் கெஞ்சலை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.



"ஒகே பேபி....!அதோ...அந்த ரூமை நீ யூஸ் பண்ணிக்கோ....!அங்கே போய்...ஆசை தீர அழுது புலம்பி....நாளைக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு....!லாங் ட்ரைவ் பண்ணினதுல உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு....!நான் போய் ஒரு குளியலைப் போட்டுட்டு வந்திடறேன்....!",அங்கிருந்த ஒரு அறையை அவளுக்குச் சுட்டிக்காட்டியவன்....அந்த அறைக்கு எதிரில் இருந்த அறைக்குள் நுழையப் போனான்.



ஒரு நிமிடம் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"அப்புறம் பேபி....!உன்னுடைய ரூம் கதவுல லாக் இல்ல....!ஸோ...லாக் பண்ணிக்கிட்டு உள்ளேயே இருந்துக்கலாம்ன்னு முட்டாள்தனமா எதையும் யோசிக்காதே....!ஒகே....?",கேலிச் சிரிப்புடன் கூறியபடியே அறைக்குள் சென்று விட்டான்.





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 53 :



சோக சித்திரமாய் கட்டிலில் சாய்ந்திருந்த நித்திலாவின் விழிகள் இரண்டும் அழுதழுது சிவந்து போயிருந்தன.பால் போன்ற வெண்மையான அவளின் கன்னங்களில்....ஆதித்யனின் விரல் தடங்கள் பதிந்து கன்றி சிவந்திருந்தன.



இளங்காலைப் பொழுது மெல்ல மெல்ல புலர்ந்து கொண்டிருக்க....சூரியனின் கதிர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.அவள் அழுது கொண்டிருந்ததை...அவன் அறிந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான்.இரவு இருவருமே சாப்பிடவில்லை.தங்களது அறைகளுக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.



கையில்....ப்ரெட் டோஸ்ட்...ஆப்பிள் ஜூஸ் அடங்கிய தட்டுடன் நித்திலாவின் அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.



"கமான் பேபி....!வேக் அப்....!எழுந்து போய் ப்ரெஷ் ஆகிட்டு வா...!ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்....!",கையிலிருந்த தட்டை டீபாயின் மேல் வைத்தபடி அவன் அவசரப்படுத்த..



"ம்ப்ச்....!",சலிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்...ஒன்றும் பேசாமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.



அவளருகில் வந்து அவள் கையைப் பற்றி எழுப்பியவன்,"நீ இப்படியே அழுதுக்கிட்டே உட்கார்ந்திருந்தால் மட்டும் ஒண்ணும் ஆகடப் போறதில்லை....!நீ என் பொண்டாட்டியாகப் போறது உறுதி....!ஸோ...நிதர்சனத்தைப் புரிஞ்சு நடந்துக்கப் பாரு....!",அழுத்தமான குரலில் உரைத்தவன்....அவளை குளியலறையை நோக்கித் தள்ளினான்.



"முடியாது....!நீங்க சொல்றது நடக்காது....!நான் நடக்க விட மாட்டேன்....!",ஆத்திரத்துடன் கத்தியவள்...அவள் கையை உதறிக் கொண்டு...மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.



"நீ எல்லாம்...சொன்னால் கேட்க மாட்ட....!",பல்லைக் கடித்தவன் அவளை அப்படியே அள்ளிக் கொண்டு போய் குளியலறையில் இறக்கி விட்டான்.



"உன்கிட்ட பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்க கூடாது டி....!முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாதான்...நீ எல்லாம் சொன்ன பேச்சு கேட்ப....!",என்று கத்தியவன் அவளது கழுத்தில் கிடந்த துப்பட்டாவை உருவி எறிந்தான்.



"ஏய்...ஏய்....!என்ன பண்றீங்க....?விடுங்க....!",பதறியபடி திமிறியவளின் கையைப் பிடித்து விடாப்பிடியாய் இழுத்துச் சென்றவன்....அங்கிருந்த பாத்டப்பில் நீரை நிரப்பி...அவளை அதில் தள்ளி விட்டான்.



'தொப்'பென்று தண்ணீரில் விழுந்தவள்,"அய்யோ...!என்ன பண்றீங்க....?",தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தபடி கத்தினாள்.



"ம்...உன்னைக் குளிக்க வைக்கிறேன்....!",கூறியபடியே அவன்...அவளை நெருங்க..



"ஐயோ....!ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்....!நீங்க முதல்ல வெளியே போங்க....!",எரிச்சலுடன் கத்தினாள் அவள்.



"ஏன் பேபி....?நீதான்...நான் சொன்னால் கேட்க மாட்டியே....?அதுதான்...டைரக்ட்டா ஆக்சன்ல இறங்கிட்டேன்....!",ஒன்றும் அறியாதவனைப் போல் அவன் கூற..



"அப்பா....சாமி....!தெரியாம சொல்லிட்டேன்....!நீங்க வெளியே போய் தொலைங்க....!நான் குளிச்சிட்டு வர்றேன்.....!",தன் பிடிவாதம் அவன் முன் செல்லுபடியாகாத கடுப்பில் முணுமுணுத்தார்.



"ஹ்ம்ம்....!குட் கேர்ள்....!",என்றபடி வெளியேறி விட்டான் அவன்.



குளித்து முடித்த பிறகுதான் அவளுக்கு உரைத்தது...மாற்றுடை எதுவும் இல்லையென்று....!அங்கிருந்த பூந்துவாலையை உடலில் சுற்றிக் கொண்டவள்..



'இப்போ என்ன பண்றதாம்....?சும்மா குளி..குளின்னு இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணி...என்னைப் படுத்தி எடுத்தானே....!சரியான இம்சை....!',அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே....வெளியே இருந்து ஆதித்யனின் குரல் கேட்டது.



"என்னைத் திட்டினது போதும்....!வெளியே வா பேபி....!",



"ப்ச்....!எப்படி வர்றதாம்....?மாத்திக்கறதுக்கு வேற ட்ரெஸ் இல்ல....!",இதைக் கூறும் போதே வெட்கத்தில் அவள் குரல் உள்ளே போய்விட்டது.



"வாவ்....!சூப்பர் பேபி....!ப்ளீஸ்...ப்ளீஸ்....!கதவைத் திற டி...!",ஜொள்ளினான் அவன்.



"ம்ப்ச்....!விளையாடாதீங்க ஆது.....!",அவள் சிணுங்க..



"சரி...சரி....!சிணுங்கி சிணுங்கியே என்னைக் கொல்லாதே....!உனக்குத் தேவையான ட்ரெஸ் எல்லாம் வெளியே கட்டில் மேல வைச்சிருக்கிறேன்....!வந்து எடுத்துக்கோ....!",



"எப்படி எல்லாம் ரெடி பண்ணுனீங்க....?",



"காலையில எழுந்ததுமே கடைக்குப் போய் உனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்....!",



'இதுல எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை....!',அவள் வாய்க்குள் முணுமுணுக்க..



"வேற எதிலேயும் நான் குறைச்சல் இல்லைதான்....!பார்க்கிறயா....?",உல்லாசமாய் வினவினான் அவன்.



"ஆமா....!எனக்கு வேற வேலை இல்லை பாருங்க....!சரி...!வெளியே போங்க....!",அவனது பேச்சில் அவளையும் அறியாமல் அவள் முகம் நாணத்தில் சிவந்து போனது.



"நான் எதுக்குடி வெளியே போகணும்....?நான் உன் புருஷன் தானே....!நான் வெளியே போக மாட்டேன்....!",அவன் சட்டம் பேச....அவளிடம் பதில் இல்லை.



சிறிது நேரம் அமைதி காத்தவள்...பிறகு,"ப்ளீஸ்.....!",என்றாள் கெஞ்சும் குரலில்.



அவளது குரலில் எதைக் கண்டானோ,"சரி...சரி...!வெளியே போகிறேன்....!நீ கிளம்பி வா....!",ஒரு பெருமூச்சுடன் வெளியேறிவிட்டான் அவன்.



மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தவள்....அவன் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டுதான் வெளியே வந்தாள்.



மூன்று பைகளில் அவளுக்குத் தேவையான உடைகள் அனைத்தும் இருந்தன.சுடிதார்...நைட்டி மற்றும் அவளுக்குத் தேவையான உள்ளாடைகள் என அனைத்தும் இருந்தன.



'ச்சீய்....!எதையெல்லாம் வாங்கியிருக்கிறான் பாரு...!',லஜ்ஜையுடன் முகம் சிவந்தாள் அவள்.அவன் வாங்கியிருந்த ரெடிமேட் சுடிதார் வெகு கச்சிதமாக அவளது உடலைத் தழுவியிருந்தது.



'பொறுக்கி.....!அளவெல்லாம் பார்த்து ரொம்ப கரெக்ட்டா வாங்கியிருக்கிறான்....!ரௌடி....!',அவள் முகம் குங்குமத்தைப் பூசிக்கொண்டது போல் சிவந்து போனது.



அவள் கிளம்பி முடிக்கவும்...அவன் ப்ரெட் டோஸ்ட்....ஆப்பிள் ஜூஸ் அடங்கிய தட்டுடன் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.



'ஹைய்யோ...!இந்த ரூம்ல லாக் இல்லைல்ல....!நல்லவேளை...நான் ட்ரெஸ் மாற்றிய பிறகு வந்தான்....!',படபடப்புடன் நினைத்துக் கொண்டாள் அவள்.



"முதல்ல கொண்டு வந்தது ஆறிப் போச்சு...!அதுதான் வேற டோஸ்ட் போட்டு எடுத்துட்டு வந்தேன்....!",என்றவனின் பார்வை அவளது சுடிதாரில் நிலைத்தது.



அவனது உதடுகளில் ஒரு ரகசியப் புன்னகை வந்தமர...அதைக் கண்டு கொண்டவள் இமைகள் படபடக்க இதழ்களை மடித்து அழுந்தக் கடித்துக் கொண்டாள்.



தன் சிகையை அழுந்தக் கோதி தன் உணர்வுகளை சமன்படுத்தியவன்,"சரி....!வா...!சாப்பிடலாம்....!",என்று அழைத்தான்.



அதுவரை சுற்றியிருந்த கண்ணுக்குத் தெரியாத மாயவலை பட்டென்று அறுந்து விழ....தற்போதைய நிலை அவளுக்கு உரைத்தது.



'தன்னை அவன் அங்கு வலுக்கட்டாயமாகத் தங்க வைத்தது....!அவன் இட்ட கட்டளைகள்....!',என அனைத்தும் அவள் நெற்றியில் அறைய....மீண்டும் தன் கூட்டிற்குள் ஒடுங்கினாள்.



"எனக்கு வேண்டாம்....!",அவள் கூறிய விதத்தில் அவன் புருவம் சுருங்கியது.



"ஓ...!வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா....?",அவன் உதட்டோரங்கள் கேலியாய் வளைந்தன.



"ஆமாம்...!நீங்க எப்படியோ வைச்சுக்கோங்க....!எனக்கு இதெல்லாம் வேண்டாம்....!முதல்ல இதை தூக்கிட்டு வெளியே போங்க....!",வள்ளென்று அவள் எரிந்து விழுந்ததில்...அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.



முயன்று தன் கோபத்தை அடக்கியவன்,"நிலா...!எனக்குப் பொறுமை ரொம்ப குறைவுன்னு உனக்கு நல்லாவே தெரியும்....!என்னைக் கோபப்படுத்தி பார்க்காம....அமைதியா வந்து சாப்பிடு....!",அமைதியாக...அழுத்தமாகக் கூறினான்.



அவள் பாட்டிற்கு அவனை கண்டுகொள்ளாமல் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.



ஜிவு ஜிவு என்று கோபம் ஏற,"நி.த்.தி.லா...",ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தி உச்சரிக்க....பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கர்ஜித்த விதத்தில்....அவளது கரம் தானாய் உயர்ந்து அவனது கையிலிருந்த ஆப்பிள் ஜுஸை வாங்கிப் பருக ஆரம்பித்தன.



அவளுக்குத் தெரியும்....!அவன் மிக மிக கோபமாக இருக்கும் சமயங்களில் மட்டும்தான்....அவளை 'நித்திலா' என்று அழைப்பான்....!மற்ற சமயங்களில் எல்லாம் 'பேபி...!'...'குட்டிம்மா..!' என்ற அழைப்புதான்....!'இதோ கோபம் வரப் போகிறது...!' எனும் சமயங்களில் அவன் அழைப்பு 'நிலா...!' என்று மாறும்....!அதிகமாகக் கோபம் வந்துவிட்டால்....அந்த அழைப்பு 'நித்திலா...!'வாக மாறிவிடும்...!



அது போன்ற சமயங்களில்...அவனது கோபத்தைக் கண்டு கொண்டு அவள் அமைதியாகப் போய் விடுவாள்...இப்பொழுதும்...சமர்த்தாய் ஆப்பிள் ஜுஸை காலி செய்து விட்டு டீபாயின் மேல் வைத்தாள்.



"ஹ்ம்ம்....!குட் கேர்ள்....!அப்படியே ப்ரெட் டோஸ்ட்டையும் காலி பண்ணிடு....!",அவள் முன் தட்டை நீட்ட....ஒன்றும் பேசாமல் அமைதியாய் அதை எடுத்து சாப்பிட்டாள்.சாப்பிட சாப்பிடத்தான் பசியின் வேகமே தெரிந்தது.நேற்று மதியத்திலிருந்து ஒன்றும் சாப்பிடாததினால் ஏற்பட்ட பசியில்....தட்டிலிருந்த அனைத்தையும் காலி செய்திருந்தாள்.



"தட்ஸ் மை குட் பேபி....!இப்போ நீ உன் அழுகையை கண்ட்னியூ பண்ணு....!அத்தான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்....!சரியா....?",குறும்பாக உரைத்தபடி தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினான் ஆதித்யன்.



"ச்சே....!",ஆத்திரத்துடன் தலையணையை எடுத்து அவன் சென்ற வழியை நோக்கி வீசியவளுக்கு...கோபத்திலும்...இயலாமையிலும்....மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.அவள் மீண்டும் தன் அழுகையில் கரைய....அவன் தன் அலுவலில் மூழ்கினான்.இடையில் நான்கு...ஐந்து முறை கௌதமிடம் வந்த அழைப்புகளை அவன் ஏற்கவில்லை.



'இப்பொழுதே சொன்னால்...அவன் கோபப்படுவான்....!மாலை வரைக்கும் பொறுத்திருந்து விட்டு அவனிடம் சொல்லலாம்....!',என்பது ஆதித்யனின் எண்ணமாக இருந்தது.



மதியம் நூடுல்ஸ் செய்து நித்திலாவிற்காக எடுத்துச் சென்றான்.அப்பொழுதும் 'சாப்பிட மாட்டேன்....!' என்று முரண்டு பிடித்தவளை...அதட்டி உருட்டி சாப்பிட வைத்தான்.அந்த அறையே கதியென்று கிடந்தாள் நித்திலா.



தன் கைகளை மடித்து தலைக்கு மேல் கண்களை மறைத்தவாறு...அந்த ஹால் சோபாவில் படுத்திருந்த ஆதித்யனின் அருகில் தயங்கித் தயங்கி வந்த நித்திலா....அவன் கையைப் பற்றியபடி கீழே தரையில் அமர்ந்தாள்.



"ஆது....!",மெதுவாக அவள் அழைக்க..



"ம்...!",கண்களைத் திறக்காமலேயே 'உம்' கொட்டினான் அவன்.



"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்....!",



"பேசு....!",அவன் அப்பொழுதும் கண்களைத் திறக்கவில்லை.



"இப்படியே படுத்திருந்தால் எப்படி பேசறது....?கொஞ்சம் எழுந்து உட்காருங்க....!",



"எப்படி இருந்தாலும்...நீ பேச வர்ற விஷயத்தை நான் கேட்கப் போறதில்லை....!ஸோ...நான் படுத்திட்டே இருக்கேன்....!நீ சொல்லு....!",அலட்சியமாகக் கூறினான் அவன்.



'சரி...!நாம பேச வர்ற விஷயத்தைக் காதிலேயாவது வாங்குவாரல்ல...!',தன் மனதைத் தேற்றியபடி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.



"நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிற காரியம் சரியா....?கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க ஆது...!நம்ம பெத்தவங்களுடைய ஆசிர்வாதம் இல்லாம...நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது தப்பு இல்லையா....?அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....!அவங்களுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்...நம்ம பிள்ளைகளோட கல்யாணத்தைப் பார்க்கணும்....!எப்படியெல்லாம் கல்யாணத்தை நடத்தணும்...அப்படின்னு நிறைய கனவுகள் வைச்சிருப்பாங்க....!",அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கே புகுந்தவன்..



"அவங்க கனவுகள் எல்லாம் கனவாகவே போனதுக்கு காரணம் நீதான் டி....!அவங்களுடைய ஆசைகளை...நீதான் குழி தோண்டி புதைச்சிட்டே....!உன்னாலதான்...இவ்வளவு அவசரமா...நம்ம சொந்த பந்தங்கள் கூட இல்லாம நம்ம கல்யாணம் நடக்கறதுக்கான மொத்தக் காரணமும் நீதான்....!உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு...இதை எனக்கானத் தண்டனையா எடுத்துக்கிறேன்....!",படபடவென்று பொரிந்தான் அவன்.



"மனசாட்சி இல்லாம பேசாதீங்க....!யாருமே இல்லாம அநாதை மாதிரி நம்ம கல்யாணம் நடக்கறதுக்கு நீங்கதான் காரணம்....!நீங்க நினைச்சால்...இப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்....!என்னை ஏமாத்தி கடத்திட்டு வந்து...இப்படி அடைச்சு வைச்சு....கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறது நீங்கதான்....!",கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.



"நானா....?நல்லா யோசிச்சுப் பாரு பேபி....!நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தறேனா...?நான் எவ்வளவு தாராள மனப்பான்மையோட உனக்கு ரெண்டு வழியை காண்பிச்சிருக்கிறேன்....!அந்த ரெண்டுல வழியில...நீ எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும்...எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு நான் சொல்லிட்டேன்....!



உன் அம்மா அப்பா சம்மதம் இல்லாம...உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னா...நோ ப்ராப்ளம்....!நான் உன்னைக் கட்டாயப்படுத்தவே மாட்டேன்....!அதுதான் உனக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கே....!",அவன் விஷமமாய் கண்சிமிட்ட..



"ச்சே....!",பல்லைக் கடித்தாள் அவள்.



"நீங்க ஏன் இப்படி மாறுனீங்க....?ரொம்ப கெட்டவன் நீ....!",அழுகையினூடே அவள் கூற..



"நான் ஏற்கனவே சொன்னதுதான் பேபி....!உன்னை...உனக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல....!இப்படி...என் முன்னாடி அழுது...என் மூடை ஸ்பாயில் பண்ணாம...உள்ளே போய் உட்கார்ந்து அழு...போ....!அதுக்குத்தான் உனக்குத் தனியா ஒரு ரூம் கொடுத்திருக்கிறேனே.....போ...போ....!",அசால்ட்டாகக் கூறியபடி மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் ஆதித்யன்.



சில கணம் அவனையே வெறித்தவள்,"இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு அனுபவிக்கப் போறீங்க....!",சாபம் கொடுப்பவள் போல் அவள் கூற..



"ஐ ஆம் வெயிட்டிங் பேபி....!",கண்களைத் திறக்காமல் குறுஞ்சிரிப்புடன் கூறியவனை முறைத்தபடியே அறைக்குள் சென்று விட்டாள் நித்திலா.



அவள் சென்றதும் கண்களைத் திறந்த ஆதித்யனின் முகத்தில் வலி...வலி...வலி மட்டுமே விரவியிருந்தது.



'எனக்கு மட்டும் ஆசையா பேபி....உன்னைக் கஷ்டப்படுத்தணும்ன்னு....!உன்னைக் காயப்படுத்தற ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள்ள நான் கதறித் துடிச்சுக்கிட்டு இருக்கேன்...!உன் கண்கள்ல இருந்து விழற ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்...பெரும்பாறையா மாறி என் இதயத்து மேல விழுது....!நான் உன்னைக் கட்டாயப்படுத்தித்தான் ஆகணும் டி....!நம்ம காதலுக்காக நான் போராடித்தான் ஆகணும்.....!',அவன் மனம் முழுவதும் வேதனை மட்டுமே.



இரு மனங்கள் இணைந்து போராட வேண்டிய போராட்டத்தில்...ஒரு மனம் மட்டும் தன்னந்தனியாய் நின்று தங்களது காதலுக்கான போராட்டத்தை தொடங்கியது.அந்தப் போராட்டத்தில் சரிபங்கு எடுக்க வேண்டிய இன்னொரு மனமோ....அந்த யுத்த களத்தில் தனியாய் நின்று....காதல் மனதுக்கு எதிராய் போர் கொடியைத் தூக்கியது....!



இரு மனங்களின் பக்கமும் நியாயம் இருந்தது...!தர்மம் இருந்தது...!காதல் என்னும் யுத்த களத்தைப் பொறுத்தவரை நியாயங்களும்....தர்மங்களும் வேறுவிதமானவை....!



ஆதித்யனின் போராட்டத்தில் இருந்த நியாயம்...காதலின் தர்மம்...!நித்திலாவின் பாசப் போராட்டத்தில் இருந்த தவிப்பு...தொப்புள்குடி உறவின் சத்தியம்...!



பதட்டத்தில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி அமர்ந்திருந்த நித்திலாவின் கவனம் முழுவதும் கடிகாரத்தின் மேலேயே இருந்தது.



'மணி 7.55 ஆச்சு...!இன்னும் கொஞ்ச நேரம் தான்...!முடிவு முடிவு என்னன்னு கேட்கறதுக்கு உள்ளே வந்திடுவான்...!',பதட்டத்துடன் அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மணி எட்டாகியது.சரியாக இரண்டு நிமிடத்தில் ஆதித்யன் உள்ளே நுழைந்தான்.



"ஸோ...உன் முடிவு என்ன....?நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாமா....?இல்ல...இன்னைக்கே நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா....?",அவன் முகம் கடினத்தைத் தத்தெடுத்திருந்தது.



'இது காதலை காட்ட வேண்டிய தருணம் அல்ல...!கடினத்தைக் காட்ட வேண்டிய தருணம்...!அவளுடைய அழுகையை பார்த்தால்...என்னுடைய காதல் மனம் உருகி விடும்...!எந்தவொரு இளக்கத்துக்கும் இடம் கொடுக்க கூடாது....!இது நான்..எங்களுடைய காதலுக்காகப் போராட வேண்டிய தருணம்...!',உறுதியுடன் மனதிற்குள் சொல்லிக் கொண்டவனின் உடல் நாணேற்றிய வில்லாய் விறைத்தது.



"என்ன நடந்தாலும் சரி...!என் பெத்தவங்க சம்மதம் இல்லாம என் கல்யாணம் நடக்காது...!நான் நடக்க விட மாட்டேன்....!",அழுத்தமாய் கூறினாள் அவள்.



'உன்னுடைய தந்தையின் நம்பிக்கைக்காக...நீ போராட வேண்டிய தருணம் இது...!அவன் முன்னால் இளகி விடாதே நித்தி...!',அழுத்தமாகத் தனக்குள் உரைத்துக் கொண்டவள்....உறுதியாய் நிமிர்ந்தாள்.



"இதுதான் உன் முடிவா....?",கேட்டபடியே அவன்...அவளை நெருங்க..



"ஆமாம்...!",உரைத்தபடியே பின்னால் நகர்ந்தாள் அவள்.



"நிச்சயமா....?",எதையும் கண்டு கொள்ளாமல் அவன் முன்னேற..



"ஆமாம்....!ஆமாம்...!ஆமாம்....!",கத்தியவளின் கால்கள் தன்னிச்சையாய் பின்னால் நகர்ந்தன.



ஒரு நிமிடம் நின்று அவள் விழிகளை சந்தித்தவன்....பிறகு....அசட்டையாய் தோளைக் குலுக்கிக் கொண்டு அவளை நோக்கி முன்னேறினான்.



"எ...எதுக்கு கிட்ட வர்றீங்க....?",திக்கித் திணறியபடி அவள் பின்னால் நகர..



"ம்....குடும்பம் நடத்தறதுக்குத்தான்....!",அவளுக்குப் பதில் கூறியபடியே அவளை நெருங்கினான்.



"வே...வேண்டாம்....!",இதயம் தடதடக்க பின்னால் நகர்ந்தவள்...கட்டில் தடுக்கி மெத்தையில் விழுந்தாள்.



"எது வேண்டாம்....?",அவளை அணைத்தபடியே பக்கவாட்டில் சரிந்தான் அவன்.



"நான்...நான் கத்துவேன்....!",மிரட்டியவளின் குரல் வெளியே வரவில்லை...வெறும் காற்றுதான் வந்தது.



"அப்படியா....!எங்கே கத்து பார்ப்போம்....!",அவனது விரல்கள் அவளது நெற்றிப்பரப்பில் கோலம் போட்டபடி....கன்னத்தை நோக்கி நகர..



கத்த முயற்சித்தவளின் நாக்கு சென்று மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.



"என்ன பேபி....?கத்துவேன்னு மிரட்டின...?இப்போ வெறும் காற்றுதான் வருதா....?",காதோரமாய் கிசுகிசுத்தவனின் உதடுகள் பட்டும் படாமல்...தொட்டும் தொடாமல் அவளது காதுமடலை உரசிச் செல்ல..



அவளது மேனி நடுங்க ஆரம்பித்தது.'அவனிடம் மயங்காதே...!',என மூளை கூக்குரலிட்டாலும்...அவளது மனம் என்னவோ...அவனிடம் மயங்கிக் கிறங்கித்தான் போனது.தன் உயிரானவனின் தீண்டலுக்கு முன்னால் தன்னுடைய கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சுருட்டிக் கொள்வதை உணர்ந்தாள்.



அவன் தொட்டால்...தன் உடலும் மனமும் அனலில் இட்ட மெழுகாய் கரைந்து உருகி விடும் என்று புரிந்து கொண்டவளுக்கு இயலாமையில் கண்ணீர் வந்தது.



"தாலி கட்டாம என்னோட வாழத் துணிஞ்சிட்டீங்கல்ல...?இது தப்புன்னு உங்க மனசாட்சி உறுத்தலையா....?",



"எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயமும் இந்த ஆதித்யனைக் கட்டுப்படுத்தாது டி...!உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்ச நொடியே...நீ எனக்கு பொண்டாட்டி ஆகிட்ட...!உன்னுடைய திருப்திக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தலாம்ன்னு சொன்னேன்...நீதான் கேட்கலை...!அப்போ அனுபவிக்க வேண்டியதுதான்....!",கடுமையுடன் கூறியவன் சற்று முரட்டுத்தனமாக அவளை அணைத்தான்.



அவள் தன்னை மறுத்தது...தன் காதலை தூக்கியெறிந்தது....என அனைத்தும் அவனுள் கோபத்தை கிளறி விட்டிருக்க...அத்தனை கோபத்தையும் மூர்க்கத்தனத்தோடு கூடிய அணைப்பின் மூலம் அவள் மேல் பிரயோகித்தான்.



எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவன் அணைத்த வேகத்தில்...அவள் சற்று மிரண்டுதான் போனாள்.அவன் பிடியிலிருந்து விடுபட போராடியவளின் திமிறலை...மிக எளிதாக அடக்கி மேலும் மேலும்....தனது அணைப்பை இறுக்கினான் அந்த காதல் தீவிரவாதி...!



"ஐய்யோ...!வ..வலிக்குது...வி...விடுங்க....!",அவனது அணைப்பைத் தாங்க முடியாமல் கத்தினாள் அவள்.



"வலிக்கட்டும்....!இதை விட ஆயிரம் மடங்கு அதிகமா என் மனசு வலிக்குது டி....!",



"ப்ளீஸ்...!",கண்ணீருடன் கூடிய அவளது கெஞ்சலில் தனது அணைப்பை சற்று தளர்த்தியவன்...அவளது சங்கு கழுத்தில் முகம் புதைத்தான்.



"வே...வேண்டாம் ஆது...!",



"முடியாது...!",கோபமாய் உறுமியவன்..



"நாளைய விடியலில் நீ என் பொண்டாட்டி ஆகியிருக்கணும்...!அது எந்த வழியிலேயா இருந்தாலும் சரி...!இனியும்...பொறுமையா கைக்கட்டிக்கிட்டு உன் இஷ்டத்துக்கு விடறதுக்கு நான் ஒண்ணும் கேனையன் இல்ல...!புரிஞ்சுதா....?",அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்துக் கர்ஜித்தவனின் கண்கள் வேட்டைக்காரன் கண்களைப் போல் ஜொலித்தன.



அவளை வேட்டையாடும் நோக்கத்தோடு முரட்டுத்தனமாக அவள் மேல் படர்ந்தான் அந்த வேட்டைக்காரன்.மீள முடியாத ஒரு சுழலில் சிக்கி அமிழ்ந்து கொண்டிருந்தவளின் முன்...கையில் அகப்பட்டத் துரும்பாய் அவள் தந்தையின் முகம் தோன்றியது.



தன்னவனின் நெருக்கத்தில் கரைந்து மறைந்து உருகிக் கொண்டிருந்தவள்...பட்டென்று சுய நினைவுக்கு வந்தவளாய்...அவனை உதறித் தள்ள முயன்றாள்.அவளால் இம்மியளவு கூட அவனை விலக்க முடியவில்லை.இவள் திமிறத் திமிற அவன் முரட்டுத்தனம் அதிகமானதே தவிர குறையவில்லை.



"அய்யோ....!வேண்டாம்...!நாம கல்யாணம் பண்ணிக்கலாம்...!நம்ம...நம்ம கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிறேன்...!",கூறி முடிப்பதற்குள்ளேயே அழுகை முட்டிக் கொண்டு வந்தது.



அவள் கூறிய அடுத்த நொடி அவன்...அவளை விட்டு விலகியிருந்தான்.கைகளால் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன ஆதித்யனின் கண்கள்.



"என்னை கல்யாணம் பண்ணிக்கறது...உனக்கு அவ்வளவு கஷ்டமாகவா இருக்கு பேபி....?",வலியுடன் ஒலித்த ஆதித்யனின் குரலில் விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள் நித்திலா.



"சொல்லு டி....!இவ்வளவு அழுகையும் எதுக்காக....?என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னுதானே...?அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறயா டி...?என்னை வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சிட்டு...உங்க அம்மா அப்பாக்கிட்ட போறேன்னு சொன்னியே....அதுக்கு அப்புறம் என்னடி நடக்கும்....?சொல்லு...!உன்னைப் பெத்தவங்க பார்த்து வைக்கிறவனைக் கல்யாணம் பண்ணிட்டு...அவன் கூட குடும்பம் நடத்துவியா....?



இப்போ நான் உன்னைத் தொட்ட இடங்களையெல்லாம்...இன்னொருத்தன் தொடுவான்...!என் கையில உருகிக் குழைஞ்சு நின்ன மாதிரிதான்...அவனுடைய கைகளிலும் மயங்கி நிற்பியா....?நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை உன் மனசாட்சிக்கிட்ட சொல்லு....!",சாட்டையடியாய் அவளைப் பார்த்து கேள்விக் கணைகளை வீசியவன்...விவிடுவென்று வெளியேறி விட்டான்.



அடிபட்ட பார்வையுடன் வெளியேறியவன் சென்ற வழியையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்திலா.



'அய்யோ...!என்ன வார்த்தை பேசிட்டு போறாரு....!இவர்கிட்ட இருந்த மாதிரி...இன்னொருத்தன்கிட்ட நான் இருப்பேனா....?இன்னொருத்தனுடைய தவறான பார்வையைக் கூட என்னால தாங்கிக்க முடியாது....!இவர் இல்லாம இன்னொரு ஆணுக்கு நான் கழுத்தை நீட்டிருவேனா....?என்னுடைய காதலை இவரு புரிஞ்சுக்கவே இல்லையா....?',அவனுடைய கேள்வியை எதிர்த்து எதிர் கேள்வி கேட்டது....அவளுடைய பெண்மை...!



'நீதான் அவனுடைய காதலை புரிஞ்சுக்கலை....!அவன் கேட்ட கேள்விகள் எல்லாம் உண்மைதானே...?உன் அம்மா அப்பா காலம் முழுக்க உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காம...வீட்டிலேயே வைச்சுக்குவாங்களா....?அவன் கேட்டதுல நியாயம் இருக்குதுதானே....?உன் வாழ்க்கையில அடுத்த கட்டம் என்ன....?கல்யாணம்தானே....?',ஆதித்யனின் மீதான காதல் மனம் ஆக்ரோஷமாய் உயிர்த்தெழுந்து அவளை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுத்தது.



"நோ....!",தன்னையும் அறியாமல் அலறியவள்...மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.



'நோ...!காலம் முழுக்க கன்னியாகவே வீட்டில இருந்திருப்பேனே தவிர....இன்னொருத்தன் கையால தாலி வாங்கியிருக்க மாட்டேன்....!என் ஆதுவுடைய காதலை மட்டுமே துணையாகக் கொண்டு...காலம் முழுக்க வாழ்ந்திருப்பேன்....!',அவளது காதல் மனம் அரற்றியது.



ஆக...அவனது காதலைத் துணையாகக் கொண்டு வாழத் துணிந்தவள்...அவனை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள மட்டும் தயங்கினாள்....!அதற்கு காரணம்...அவள் மீது அவளது பெற்றவர்கள் வைத்த நம்பிக்கை என்றால் மிகையாகாது....!அந்தக் கணமே...அவர்கள் ஜெயித்து விட்டார்கள்...பெற்றவர்களாக....!



காதலுக்காக...பெற்றவர்களை இழக்கத் தயாராகும் பல காதலர்களுக்கு மத்தியில்....வித்தியாசமாய் திகழ்ந்தாள் அந்த மங்கை....!அதற்காக...உயிர்க் காதலை துச்சமாய் ஒதுக்கித் தள்ளுவதும் முறையல்லவே....!



அங்குதான் போராட்டம் ஆரம்பமாகிறது....!காதலையும் விலக்காமல்...பாசத்தையும் எதிர்க்காமல் நடுநிலைமையுடன் நடக்கும் போராட்டம் அது....!அந்தப் போராட்டத்தைப் போராடத் துணியாதவர்கள் காதலிக்க கூடாது....!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 54 :



ஒரு வழியாக...அழுகைகளுக்கும் வலிகளுக்கும்...காதலுக்கும் மத்தியில் திருமண நாள் அழகாக விடிந்தது. வெகு நேரம் தனக்குள் நடந்த போராட்டங்களில் சோர்வுற்றவளாய்...நள்ளிரவிற்கு மேல்தான் உறங்க ஆரம்பித்தாள் நித்திலா.



ஆதவனின் கதிர்கள் எட்டிப் பார்த்திராத அதிகாலை வேளையில்...நித்திலாவின் அறைக்குள் நுழைந்த ஆதித்யன்...அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன்னவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.



நேரமாவதை உணர்ந்து அவளை மெதுவாக எழுப்பினான்.நேற்று இரவில் மனதில் இருந்த கோபம்...வலி என அனைத்தும் மறந்து...'இன்று தங்களுக்குத் திருமணம்...!',என்ற உற்சாகம் மட்டுமே நிறைந்திருந்தது.



"பேபி....!",அவன் மெதுவாய் அழைக்க..



அவனது பேபியோ,"ம்...!",என்று சிணுங்கியபடி அருகில் இருந்த தலையணையைக் கட்டிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்.



அவளது செய்கையில் தனக்குள் புன்னகைத்தபடியே....மீண்டும்,"பேபி....!",என்று அழைக்க..



இம்முறையும்,"ம்ம்....!",என்று சிணுங்கினாளே ஒழிய கண்களைத் திறக்கவில்லை.



அந்தச் செல்ல சிணுங்களில்...மெல்ல தொலைந்து போனவன்...அவள் முகத்தருகே குனிந்து....அவளது காது மடலில் உதட்டைக் குவித்து "உஃப்",என்று ஊத..



அவள் முகத்தில் மந்தகாசப் புன்னகை விரிந்தது.ஆனால்...விழிக்கவில்லை.



"என் செல்ல பேபி...!",என்று கொஞ்சியவன் மேலும் குனிந்து...அவளது காது மடலில் தனது மீசையால் குறுகுறுப்பு மூட்ட...ஏதோ வித்தியாசத்தில் கூசி சிலிர்த்து தன் கண்களைத் திறந்தாள் அவள்.



விழித்தவளுக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை.தனக்கு வெகு அருகில் தெரிந்த ஆதித்யனின் முகத்தைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.



'என்ன...?',என்பதாய் அவன் புருவத்தை உயர்த்த..



'ஒண்ணுமில்லை...!',என்பதாய் தலையசைத்தாள் அவள்.



'ஒண்ணுமே இல்லையா....?',அவன் தலையை ஆட்டி அவளை கேள்வியாய் நோக்க..



"ப்ச்...!",என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நித்திலா.



அவள் இருபுறமும் கையூன்றி அவள் முகத்தருகே குனிந்திருந்தவன்,"ஏண்டி முகத்தைத் திருப்பிக்கற....?",என்று வினவினான்.



அவன் கேட்டதில் அவள்...அவனை நோக்கி இமைக்காத பார்வையை வீசி வைத்தாள்.'காரணம் உனக்குத் தெரியாதா...?',என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது.



அதைக் கவனித்தும் கண்டு கொள்ளாமல் விட்டவன்,"ஒகே பேபி....!எழுந்து போய் குளிச்சு தயாராகு....!இன்னும் ஒரு மணி நேரத்துல நாம கோவில்ல இருக்கணும்...!",அவளிடம் இருந்து விலகியபடி கூறியவனின் குரலில் அழுத்தம் இருந்தது.



மெல்ல எழுந்து அமர்ந்தவள்....கடைசி முயற்சியாக அவனிடம் சொல்லிப் பார்ப்போம் என்ற எண்ணத்துடன்,"ஆது....!",என்றழைக்க..



அவள் குரலில் இருந்தே அவள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவன்,"உனக்கான முகூர்த்தப் புடவை...நகைகள் எல்லாம் தயாரா இருக்கு...!நீயே கிளம்பிடுவியா....?இல்ல...பார்லர்ல இருந்து வர சொல்லட்டுமா.....?",அவளது கலக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாய் வினவினான்.



"ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்....!",அவள் வெடிக்க..



"அப்போ நீயே கிளம்பிடறியா....?ஒகே....?!நோ ப்ராப்ளம்...!",தோளைக் குலுக்கியபடி அவன் வெளியேறப் போக...அவசர அவசரமாக அவனைத் தடுத்தாள் அவள்.



"ப்ளீஸ்....!இ...இந்தக் கல்யாணம் வேண்டாமே....!",கண்ணீர் வழிய மீண்டும் அவள் பழைய பல்லவியையே ஆரம்பிக்க..



மனதில் சுள்ளென்று ஏற்பட்ட வலியையும்...சுறுசுறுவென்று ஏறிய கோபத்தையும் தன் விழிகளை அழுந்த மூடி கட்டுக்குள் கொண்டு வந்தவன்,"நீயே கிளம்பறியா....?இல்ல...நான் கிளம்ப வைக்கட்டுமா....?",பல்லைக் கடித்துக் கொண்டு வினவ..



அவனது கோபத்தில் அவள் பூந்துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தாள்.அவளை மிரட்டி அடிபணிய வைக்க வேண்டிய நிலையை அவன் அறவே வெறுத்தான்.



'வேறு வழி இல்லை....!',என அவனது காதல் மனம் அவனைத் தேற்ற...பழைய நிமிர்வோடு தான் கிளம்புவதற்காக தனது அறையை நோக்கி நடந்தான்.



'தன்னுடைய காதல் தோற்கவில்லை...!தான் உயிராய் விரும்பியவனையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளப் போகிறோம்....!',என்ற நிம்மதி உணர்வு நித்திலாவின் மனதில் ஒரு மூலையில் எழுந்தது என்னவோ உண்மைதான்....!ஆனால்...அந்த உணர்வையும் மீறி...பெற்றவர்களின் முகம் அவள் மனதில் தோன்றி...அவளது குற்ற உணர்வை அதிகப்படுத்தியது.



தனது கண்ணீரை நீரோடு சேர்த்து வெளியேற்றியவள்...ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்தாள்.



அரைமணி நேரம் கழித்து ஆதித்யன் வந்து பார்க்கும் போது...சொட்ட சொட்ட நனைந்த கூந்தலுடன்...நைட்டியோடு அமர்ந்திருந்தாள் நித்திலா.



"நினைச்சேன் டி....!இப்படித்தான் பித்துப் பிடிச்சவ மாதிரி உட்கார்ந்திருப்பேன்னு நினைச்சேன்...!அதே மாதிரியே உட்கார்ந்திருக்க....!",கோபமாக கத்தியபடி அவளருகே வந்து முரட்டுத்தனமாக அவளை எழுப்பியவன்..



"என்னைப் பார்த்தால் உனக்கு கேனையன் மாதிரி இருக்குதா டி....?நானும் நேத்திலிருந்து பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கிறேன்....!கேட்க மாட்டேன்னு அடம் பிடிச்சுக்கிட்டே இருக்க...?இங்கே பாரு...!சந்தோஷமா முகத்தை சிரிச்ச மாதிரி வைச்சுக்கிட்டு...என் கையால தாலி வாங்கறதுன்னா...என் கூட வா...!இல்லைன்னா...நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டி இருக்கும் நித்திலா...!",பல்லைக் கடித்துக் கொண்டு கர்ஜித்தான்.



அவனுடைய கர்ஜனையில் உடல் தடதடவென நடுங்க....மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் மருண்டு விழித்தாள் அவள்.



அவளது மருண்ட பார்வையில் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்,"என்னைக் கோபப்படுத்தி பார்க்காதே நிலா...!உன் சம்மதத்தோடதானே இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்....!உன்னை ஏதாவது விதத்துல நான் கட்டாயப்படுத்தினேனா....?ரெண்டு ஆப்ஷனை கொடுத்து ஏதாவது ஒண்ணை செலெக்ட் பண்ணுன்னுதானே சொன்னேன்....?ம்...?",நல்ல பிள்ளையாய் நியாயம் கேட்டான் அந்தக் காதல்காரன்.



அவள் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருக்கவும்,"அடம் பிடிக்காமல் சமர்த்தா கிளம்பி வா பேபி....!ஒகே...?",அவள் கன்னத்தை தட்டியபடி வெளியேறி விட்டான்.



அடுத்த சில மணி நேரங்களில் இயந்திரத்தனமாய் கிளம்பி தேவதையாய் தயாராகியிருந்தாள் நித்திலா.



மாதுளை முத்துக்கள் நிறத்திலான கனமான பட்டுப்புடைவையில்...உடல் முழுவதும் தங்க சரிகைகள் நெய்யப்பட்டிருந்தன.பார்டரில் திராட்சைக் கொடிகள் போல் சரிகைகள் பின்னப்பட்டிருக்க...முந்தானையில் தோகை விரித்தாடும் மயிலொன்று அழகிய சரிகைகளால் நெருக்கமாக நெய்யப்பட்டு...அட்டகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.



அவளுடைய வெண்மையான நிறத்திற்கு...சிவப்பு நிற புடவை மிகக் கச்சிதமாய் பொருந்தியிருந்தது.நகைப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.அத்தனையும் வைரமாக ஜொலித்துக் கொண்டிருந்தது...!மனதில் ஏறிய கனத்துடன் அனைத்தையும் மூடி வைத்து விட்டு...சோர்வாய் அமர்ந்து கொண்டாள்.



சிறிது நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டும்...அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.'ஆதித்யன்தான் வந்திருப்பான்...!' என்று அசட்டையாய் அமர்ந்திருந்தவளின் தோளில் ஒரு மென் கரம் படிந்தது.பட்டென்று திரும்பிப் பார்த்தாள் நித்திலா.சுமித்ராதான் நின்றிருந்தாள்...!அதிகாலையிலேயே கௌதமிற்கு போன் செய்து அனைத்து விபரங்களையும் கூறி...சுமித்ராவை அழைத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தான் ஆதித்யன்.



அவளைக் கண்டதும்...ஆதரவைத் தேடும் கொடியாய்...தோழியின் தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள் நித்திலா.



"சுமி...!என் அம்மா அப்பாவுக்குத் தெரியாம என் கல்யாணம் நடக்கப் போகுது டி...!ஆது ஏன் இப்படி பண்றாரு....?",தன் முகம் பார்த்துக் கேள்வி கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள்.



மென்மையாகத் தோழியின் தலையை தடவிக் கொடுத்தபடி அமைதியாக நின்றிருந்தாள் சுமித்ரா.அவளது தோளில் சாய்ந்து தன் மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தாள் நித்திலா.சிறிது நேரம் அவளை அழ விட்டவள்...பிறகு..



"அழாதே நித்தி....!முதல்ல அமைதியா இரு...!",சிறு கண்டிப்புடன் தன் தோளில் இருந்து அவள் தலையை நிமிர்த்தி...விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள்.



"உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா நித்தி....?",அவளது விழிகளுக்குள் ஆழமாய் பார்த்தபடி சுமித்ரா வினவ...நித்திலா அவளைக் கேள்வியாய் நோக்கினாள்.



"உன் அப்பாவுடைய நம்பிக்கைக்குத் துரோகம் பண்ண மாட்டேன்னு இப்படித் துடிக்கறையே...அப்போ....ஆதி அண்ணாவுடைய காதலுக்கு நீ பண்ணிக்கிட்டு இருக்கறதுக்கு பேர் என்ன....?",சாட்டையடியாய் வந்து விழுந்த தோழியின் முதல் கேள்வியிலேயே ஆடிப் போனாள் நித்திலா.



"யோசிச்சுப் பாரு நித்தி....!உன் காதல் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா....?இந்தக் கேள்வியை உன் மனசைப் பார்த்து நீயே கேட்டுக்கோ....!",



"அதுக்காக....என் அப்பா...அவருடைய நம்பிக்கையை என்னால கொல்ல முடியாது....!",கண்ணீருடன் தலையாட்டி மறுத்தாள் நித்திலா.



"உன் அப்பாவுடைய நம்பிக்கையை கொல்ல சொல்லி யாருடி சொன்னா...?சொல்லு...!யாரு சொன்னா....!",தோழியின் எதிர்க் கேள்வியில் மலங்க மலங்க விழித்தாள் நித்திலா.



"நீ போராடியிருக்கணும் நித்தி...!உன் காதலுக்காக நீ போராடியிருக்கணும்....!அதே சமயம்...உன் பெத்தவங்க உன் மேல வைச்சிருக்கிற நம்பிக்கைக்காகவும் போராடியிருக்கணும்....!காதலுக்காக உன்னைப் பெத்தவங்களையோ...இல்ல...உன் அம்மா அப்பாவுக்காக உன் காதலையோ நீ விட்டுக் கொடுக்க கூடாது நித்தி....!இதை கத்துக்காம...காதலை கத்துக்க ஆரம்பிச்சது தப்பு...!",சுமித்ராவின் உறுதியான பேச்சு....அந்தப் பாவையை ஸ்தம்பிக்க வைத்தது.



தன் மனப் போராட்டத்தைத் தாங்க முடியாதவளாய்,"இப்போ என்னை என்னதான் டி பண்ண சொல்ற....?",என்று கத்தினாள் அந்தப் பாவை.



"அது உனக்குத்தான் தெரியணும்....!",என்றபடி தோழியை உற்றுப் பார்த்தவள்..



"சரி...!அதை விடு...!ஆதி அண்ணா உன்னை ரெடி பண்ணிக் கூட்டிட்டு வரச் சொன்னாரு....!",கூறியபடியே அவளுக்கு நகைகளை அணிவிக்க ஆரம்பிக்க...ஒரு பதுமை போல் அமைதியாகத் தோழியை தடுக்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.



சுமித்ராவின் கை வண்ணத்தில்...தேவலோகத்து தாரகையாய் மிளிர்ந்தாள் நித்திலா.நெற்றிச் சுட்டியில் ஆரம்பித்து...இடையைத் தழுவியிருந்த ஒட்டியாணம் வரை அனைத்துமே வைரம்தான்....!வெண் பஞ்சு பாதங்களை மட்டும் இரட்டை அடுக்கு தங்கக் கொலுசு அலங்கரித்திருந்தது.



இடை வரை நீண்டிருந்த கூந்தலை தளரப் பின்னி...தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடியவள்...கரிய நிற புருவங்களுக்கு மத்தியில்...சிவப்பு நிற பொட்டை ஒட்ட வைத்தாள்.



"அழகா இருக்கே டி...!",தோழியை நெட்டி முறித்தவள் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.



இவர்கள் வெளியே வரும் போது...அங்கே ஆதித்யன் தனது அறையில் கௌதமோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தான்.



"நீ பண்றது சரியில்லை ஆதி....!இப்படி யாருக்கும் சொல்லாம திருட்டுத்தனமா உன் கல்யாணம் நடக்கறதுல....எனக்கு விருப்பம் இல்லை....!",சற்று முறைப்புடன் வினவினான் கெளதம்.



"இது திருட்டுக் கல்யாணம் இல்லை....!",பட்டென்று ஆதித்யனிடம் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.



"சரி...!திருட்டுக் கல்யாணம் இல்ல....!ஆனால்...கட்டாயக் கல்யாணம் தானே...?நித்திலாவை வற்புறுத்திதானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கிற...?",



"நான் ஒண்ணும் அவளை வற்புறுத்தல...!அவளுக்கு ரெண்டு ஆப்ஷனை கொடுத்து...அதுல ஏதாவது ஒன்றைத்தான் சூஸ் பண்ணச் சொன்னேன்....!",வேகமாய் கூறினான் ஆதித்யன்.



"நீ எந்த லட்சணத்துல ஆப்ஷன் கொடுத்து கிழிச்சிருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்....!ஆப்ஷன் கொடுத்தானாம்....!ரெண்டு ஆப்ஷன்...!",நண்பனைப் பற்றி நன்கு அறிந்த நல்ல நண்பனாய் பல்லைக் கடித்தான் கெளதம்.



"இப்போ எதுக்குடா என்மேல கோபப்பட்டு கத்திக்கிட்டு இருக்க....?இந்த நிலைமைக்கு காரணம் அவள்தான்....!அவளாலதான்...இப்படி யாருமே இல்லாம அநாதை மாதிரி என் கல்யாணம் நடக்கப் போகுது....!",



"நீ நினைச்சிருந்தால் நித்திலாவுடைய நிலைமையை சரி பண்ணியிருக்கலாம்....!அவள் உன்னை வேண்டாம்ன்னு சொன்ன அடுத்த நொடி...உன் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டு போய் அவளைப் பொண்ணு கேட்டு இருக்கலாம்....!ஒரு வகையில...நித்திலாவுடைய குடும்பம் உன் குடும்பத்துக்கு உறவு முறைதானே....?அவங்க உன்னை 'வேண்டாம்'ன்னு மறுக்கறதுக்கு எந்த ஒரு காரணமும் இல்ல....!நீ ஏன் அவளைப் பொண்ணு கேட்கலை.....?",



"நான் எதுக்கு டா பொண்ணு கேட்கணும்....?சொல்லு....!நான் எதுக்கு பொண்ணு கேட்கணும்...?",விழிகள் சிவக்க கத்தியவனை ஒரு நிமிடம் வித்தியாசமாய் பார்த்து வைத்தான் கெளதம்.



"லூசாடா நீ....?உன் காதலியை நீ போய் பொண்ணு கேட்காம...உன் பக்கத்து வீட்டுக்காரனா போய் பொண்ணு கேட்பான்....?",புரியாத குரலில் கெளதம் வினவ...அவன் அதுக்கும் கோபப்பட்டான்.



"போயிடுவானா....?அப்படி எவனாவது அவளைப் பொண்ணுக் கேட்டுப் போனான்னு தெரிஞ்சுதுன்னா....அவனுடைய காலை வெட்டிப் போட்டுட்டு...நித்திலாவைத் தூக்கிட்டு வந்திருப்பேன்....!",



"ஆமா....!இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல....!",எரிச்சலுடன் கெளதம் முணுமுணுக்க..



"என்னடா....?வாய்க்குள்ள என்ன முணுமுணுக்கற....?",அவனது முணுமுணுப்பைக் கண்டு கொண்டு வினவினான் ஆதித்யன்.



"இப்போ மட்டும் என்ன வாழுதாம்..?அவளைத் தூக்கிட்டு வந்துதானே இங்கே அடைத்து வைச்சிருக்கிற....?",வேண்டுமென்றே உச்சஸ்தாயியில் கெளதம் கத்தினான்.



"இந்த நிலைமைக்கு அவள்தான் காரணம்ன்னு...நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்....!",



"அப்படி என்னடா நிலைமை...?அவள் வீட்டுக்கு பொண்ணு கேட்டு போய் அவள் நிலைமையை சரி பண்ணியிருக்கலாமே....?நீ ஏன் அதை பண்ணல....?",விடாமல் வாதாடினான் கெளதம்.



"என்னால அந்த காரியத்தைப் பண்ண முடியாது டா...!அவள் என் காதலை மறுத்ததுக்குப் பிறகும்...அவள் வீட்டுக்கு போய் நான் பொண்ணு கேட்டேனா...அது என் காதலை நான் அவமதிச்சதுக்கு சமம்....!",உடல் விறைக்க நிமிர்ந்தான் ஆதித்யன்.



புரியாத பார்வையுடன் நண்பனை நோக்கினான் கெளதம்.



"அவகிட்ட நான் எத்தனை முறை 'உங்க வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வர்றேன்னு' கேட்டிருக்கிறேன் தெரியுமா டா....?ஒருமுறை...ஒருமுறை அவள் 'சரி'ன்னு தலை ஆட்டியிருந்தான்னா போதும்....!எல்லாத்தையும் நானே பார்த்திருந்திருப்பேன்....!இந்நேரம் என் குடும்பத்தைக் கூட்டிட்டு போய் பொண்ணு கேட்டு....எங்க கல்யாணத்தையே முடிச்சிருந்திருப்பேன்....!ஆனால்....அப்போ எல்லாம் 'வேண்டாம்...!எங்க அப்பா அம்மாகிட்ட நானே பேசிக்கிறேன்....!' அப்படின்னு வக்கணையா மறுத்துட்டு....இப்போ வந்து 'நீ வேண்டாம்....!உன் காதல் வேண்டாம்...!'ன்னு மறுத்தால்...விட்டுத் தர்றதுக்கு நான் என்ன முட்டாளா....?",ஆக்ரோஷமாய் தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட நண்பனுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.



"காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து....இன்னைக்கு வரைக்கும்....எங்க காதலுக்காக நான் மட்டும்தான் டா போராடியிருக்கிறேன்....!அவள் ஒரு துரும்பைக் கூட எங்க காதலுக்காக கிள்ளிப் போட்டது இல்லை....!அவள் மனசில என் காதலுக்கான இடம்தான் என்ன....?கொஞ்சம் கூட யோசிக்காம....என் காதலை தூக்கியெறிய அவளுக்கு எப்படி டா மனசு வந்துச்சு....?எங்க காதலுக்காக அவள் போராடி இருக்க வேண்டாமா....?போராட பயந்துக்கிட்டு அப்பாவுடைய நம்பிக்கைக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்ட கோழை டா அவள்....!",



அவரவர் பக்கம் அவரவரின் நியாயங்கள் உண்டு என்பது இதுதான்....!ஆதித்யனின் இரும்பு மனதிலும் காயம் இருந்தது.நித்திலாவின் காதல் ஏற்படுத்திய காயம் அது....!பெற்றவர்களின் நம்பிக்கைக்காக....அவனின் உண்மையான காதலை தூக்கி எறிந்ததின் விளைவாய் அவனுடைய மனதில் காதல் ஏற்படுத்திய காயம் அது....!இதில் என்ன ஒரு விந்தையென்றால்....அந்தக் காயத்திற்கான மருந்தும் அவளுடைய காதல் தான்.....!காயப்படுத்தியவளே காதலுக்கான மருந்தாய் மாறிப் போகும் அதிசயம் காதலில் மட்டுமே சாத்தியம்....!



"என் காதலுக்கான நியாயத்தை அவள் கொடுக்கலை டா....!என் மனசில இருக்கிற காயம் ஆறணும்ன்னா...அவள் என் காதலுக்கான பதிலை சொல்லியாகணும்....!இனி...எங்க காதலுக்காக நான் போராட மாட்டேன்....!ஆனால் ஒண்ணு...அவளுடைய போராட்டத்துக்குப் பின்னாடி அவளுக்குத் துணையா நான் இருப்பேன்....!என்னுடைய காதல் இருக்கும்....!



இந்த முடிவில் இருந்து நான் மாறப் போறது இல்ல....!இன்னைக்கு எங்க கல்யாணம் நடக்கப் போறது உறுதி....!அதை யாராலேயும் தடுக்க முடியாது....!எங்களுடைய காதலுக்கான நியாயத்தை அவள் கொடுத்துத்தான் ஆகணும்....!",சிம்மமாய் கர்ஜித்தவன்...தன் சிகையை அழுந்தக் கோதி தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.



ஆதித்யனின் தோளில் ஆதரவாய் கை வைத்த கெளதம்,"உன் உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது டா மச்சான்....!எனிவே...வாழ்த்துக்கள்....!ஆனால்....ஒண்ணை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ....!உன்னுடைய முழு கோபத்தை நித்திலா தாங்க மாட்டாள்....!",நண்பனாய் அறிவுரை கூற..



"ஐ நோ...!அவளுக்காகத்தான்...அவளுக்காக மட்டும்தான்...முதல் முறையா என்னுடைய முழு கோபத்தையும் வெளிப்படுத்தாமல்....பொறுமையா போய்க்கிட்டு இருக்கிறேன்....!இந்த ஆதித்யனையே பொறுமையா இருக்க வைச்ச பெருமை உன் தங்கச்சிக்குத்தான் டா கிடைக்கும்....!",ஆதித்யனும் இயல்பாய் மாறி புன்னகைத்தான்.



நண்பர்கள் இருவரும் வெளியே வரும் போது...தோழிகள் இருவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.வழக்கம் போல்....நித்திலா சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்க....சுமித்ரா அவளைத் தேற்ற முயன்று கொண்டிருந்தாள்.



பட்டு வேட்டி...பட்டு சட்டையில் மிகக் கம்பீரமாக இருந்தான் ஆதித்யன்.காற்றில் அலைபாய்ந்த முன்னுச்சி முடி கலைந்து...அவன் நெற்றியில் படிந்திருந்தது...!நெற்றியில் மெலிதாக தீட்டியிருந்த சந்தனக் கீற்று...அவன் முகத்திற்கு இணையில்லாத ஆண்மையழகை அளித்திருந்தது.



நித்திலா அணிவித்திருந்த செயின்...அவனுடைய கம்பீரத்தை மெருகேற்றியிருந்தது.



கம்பீரத்திற்கு கம்பீரம் சேர்ப்பது போல்...அவனுடைய முழுக்கை பட்டு சட்டையை பாதி கை வரைக்கும் ஏற்றி விட்டிருந்தவன்....ஒரு கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருந்தான்.சுருள் சுருளாக முடிகள் அடர்ந்திருந்த அவனுடைய வலிமையான கரம் நித்திலாவை நோக்கி நீண்டது.



அவனுடைய வலிமையான கரங்களைப் பார்த்த நித்திலாவின் மனம் எங்கெங்கோ பறந்தது...!அவள் மனதில் பல இனிமையான தருணங்கள் எழுந்தன.எத்தனை எத்தனையோ இன்பமான தருணங்களில் அவள்...அந்தக் கைகளுக்குள் சிக்கியிருந்திருக்கிறாள்....!அந்த வலிமையான கரங்கள் அவளது மலர் உடலை இறுக்கி பல சுகமான இம்சைகளைத் தோற்றுவித்து இருந்துக்கின்றன.....!அது மட்டுமா....?அந்தக் கரங்கள் அவளுடைய இடையில் நடத்தும் ஊர்வலத்தில்....பல நிமிடங்கள் அவள் தன்னை மறந்து அந்த வான வெளியில் பறந்திருக்கிறாள்....!



அவள் சோர்வுடன் தலை சாயும் போதெல்லாம்....அந்தக் கரங்கள் அவளை ஒரு தந்தையாய் தாங்கி தாலாட்டியிருந்திருக்கின்றன....!இவ்வளவு ஏன்...?இரண்டு நாட்களுக்கு முன்னால்...அவனுடைய கோபத்திற்கு இலக்காகி...அந்த வலிமையான கரங்களால் இரண்டு அறைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள்....!



இந்த அத்தனை நினைவுகளும் அவள் மனதில் எழுந்தன...!



தன் முன் நீண்டிருந்த அவனுடைய கரத்தைப் பற்றாமல்...அவனுடைய வலிமையான கரங்களைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் நித்திலா.அவள் மனதில் நிச்சயமாய் கோபம் இல்லை....வெறுப்பு இல்லை....!மாறாக வேறு ஒரு உணர்வு இருந்தது....!



ஒரு ஆண்மகனின் கரங்கள் கூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா.....?'முடியும்...!' என்று நிரூபித்துக் கொண்டிருந்தன...ஆதித்யனுடைய ஆண்மை மிகுந்த வலிமையான கரங்கள்....!



'பொதுவாக...பெண்களின் விரல்களுக்கு வெண்டைப்பிஞ்சை உவமையாகக் கூறுவார்கள்....!இவனுடைய விரல்களுக்கு எதை இணை கூட்டுவது...?',என்னும் கேள்வி நித்திலாவிற்குள் எழுந்தது.சீராக வெட்டப்பட்ட நகத்துடன் நீண்டிருந்த அவனுடைய விரல்களை இறுகப் பற்றிக் கொள்ளும் வேகம் நித்திலாவிற்கு வந்தது...!



எதைப் பற்றியும் நினைக்காமல்...யாரைப் பற்றியும் யோசிக்காமல் இப்படியே அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு அவன் காண்பிக்கும் வழியில் கண்ணை மூடிக் கொண்டு நடக்க வேண்டும் என்பது போன்ற வேட்கை உணர்வோடு...நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தாள் நித்திலா.



கண்கள் முழுக்க காதலைத் தேக்கியபடி அவள் விழிகளுக்குள் ஒரு ஆழ்ந்த பார்வையை செலுத்தியவன்...தன் வலது கையை அவளை நோக்கி நீட்டியபடி நின்றிருந்தான்.அவன் கண்கள் என்ன சேதி சொல்லியதோ...?இல்லை...அவனுடைய காதல் என்ன மாயம் செய்ததோ...?தெரியவில்லை....!அவனுக்கு சற்றும் குறையாத காதலுடன்....அவன் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்தாள் நித்திலா.



மென்மையான புன்னகையுடன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான் ஆதித்யன்.கெளதம் காரை ஓட்ட...அவனுக்கு அருகில் சுமித்ரா அமர்ந்திருந்தாள்.மணமக்களுக்கான சர்வ அலங்காரங்களுடன் ஆதித்யனும்...நித்திலாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.



கார்...கோவிலை நோக்கி விரைந்தது அந்த அதிகாலை வேளையில்....!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 55 :



கிழக்கு வானில்...ஆதவன் மெல்ல மெல்ல உதயாமாகிக் கொண்டிருந்தான்.மிகக் கம்பீரமாக நிமிர்ந்திருந்த அந்தக் கோவிலின் உள்ளே மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன.



"ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே....!!"




அக்னி ஹோமத்தின் முன் அமர்ந்திருந்த ஐயர் தன் கணீரென்ற குரலில்...வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க...அவருக்குப் பக்கவாட்டில் வாழ்க்கையில் இணையப் போகும் இரு மணமக்களும் அமர்ந்திருந்தனர்.



ஆதித்யனின் அருகில் கௌதமும்...நித்திலாவின் அருகில் சுமித்ராவும் அமர்ந்திருக்க....மணமக்கள் இருவரும் ஐயர் கூறும் மந்திரங்களைக் காதில் வாங்கித் திருப்பி உச்சரித்துக் கொண்டிருந்தனர்.



இருவரின் உள்ளங்களிலும் காதல் நிரம்பியிருந்தது.அதே சமயம்....பெற்றவர்களின் நினைவும் மேலோங்கிருந்தது.



செண்பகப் பூ மாலை அணிந்த மன்மதன் போல் வசீகரத் தோற்றத்துடன் அமர்ந்திருந்த ஆதித்யனின் அருகில்...முகிலில் மறைந்து எட்டிப் பார்க்கும் முழு நிலவைப் போல்...மாலைக்கு மத்தியில் தன் முகத்தை மறைத்தபடி ஒளிர்நிலவாய் மிளிர்ந்து கொண்டிருந்தாள் நித்திலா.



அவள் கனவில் கூட எண்ணிப் பார்த்திராத தருணம் இது....!தன்னுடைய பெற்றவர்கள் இல்லாத அவளது திருமணம்...!



"மாங்கல்யம் தந்துனானே...
மம ஜீவன ஹேதுனா....
கண்டே பத்னாமி சுபாகே...
சஞ்சீவ சரத சதம்....!"




மங்கள முழக்கங்களோடு...ஐயரின் "கெட்டிமேளம்...!கெட்டிமேளம்....!",என்ற குரலும் சேர்ந்து கொள்ள...கையில் ஏந்தியிருந்த மங்கல நாணை...நித்திலாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கி கொள்வதற்காக....அவளின் கழுத்தருகே எடுத்துச் சென்றான் ஆதித்யன்.



கழுத்தை தடவிய அவனது கரங்கள் ஒரு நொடி தாமதித்து நிற்க....அவனது பார்வையோ குனிந்திருந்த அவள் முகத்தை வருடியது.சட்டென்று நிமிர்ந்த அவளது விழிகள்....ஆதித்யனின் பார்வையோடு பிண்ணிக் கொள்ள....அவளது விழிகளை தன் காதலால் கட்டிப் போட்டபடி...அவள் கண்களை விட்டு இம்மியளவும் தன் பார்வையை விலக்காமல்....அவளது சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ஆதித்யன்.



நித்திலாவின் விழிகளில் இருந்து இரு நீர் முத்துக்கள் வழிந்து அவள் மாங்கல்யத்தில் பட்டுத் தெறித்தன....!ஆனால்...அது நிச்சயம் வேதனைக் கண்ணீர் அல்ல...!துக்க கண்ணீர் அல்ல...!உயிர்க் காதல் நிறைவேறியதில் விளைந்த வெற்றிக் கண்ணீர்....!



அவள் மனதில் ஒரு நிறைவு தோன்றியது.காதலின் வெற்றி தந்த நிறைவு அது...!அந்த நிறைவை பெற்றுத் தந்தவன் தன்னவன் என்ற எண்ணத்தில்...அவளுடைய இதழ்கள் அவனை நோக்கி ஒரு புன்னகையை சிந்தின...!அவனது கண்கள்...வழக்கம் போல் அவளை நோக்கி ஒரு கண் சிமிட்டலை கொடுத்து...அவளது புன்னகையை சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொண்டன...!



அவளது நெற்றி வகிட்டிலும்...மாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து இல்லற வாழ்வில் அவன் அடியெடுத்து வைக்க....தனது மோதிர விரலால் அவனது நெற்றியில் குங்குமத்தை வைத்து அவனின் சரிபாதியானாள் நித்திலா.



அக்னி தேவனை சாட்சியாகக் கொண்டு...ஹோமத்தை மூன்று முறை வலம் வந்து...எந்த ஜென்மங்களிலும் பிரிக்க முடியாத பந்தமாய் தங்களது உறவை வலிமையாக்கி கொண்டனர் அந்த மணமக்கள்.



'வாழ்வின் எல்லை வரை நாங்கள் இருவரும் ஒன்றாக கரம் கோர்த்து காதலோடு பயணிக்க வேண்டும்...!',தீபாராதனை ஒளியில் கருணை வடிவாய் அருள் பாலித்துக் கொண்டிருந்த பெருமாளையும்...அவரது சகதர்மிணியான மகாதேவியையும் தரிசித்துக் கொண்டிருந்த ஆதித்யன் மற்றும் நித்திலா ஆகிய இருவரின் மனங்களிலும் இந்த வேண்டுதல்தான் இருந்தது.



"வாழ்த்துக்கள் டா மச்சான்...!",



"வாழ்த்துக்கள் நித்தி...!",கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்த ஆதித்யனை கௌதமும்...நித்திலாவை சுமித்ராவும் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.



"அடுத்தது மச்சான்....?",கௌதம் வினவ...அவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை மறைந்து...நித்திலாவின் உடலில் ஒரு இறுக்கம் வந்தது.



ஆதித்யனின் கரத்தோடு பிணைந்திருந்த தனது கையை உருவிக் கொள்ள பார்த்தாள்.ஒரு வித அழுத்தத்துடன் அவளது கையை இறுகப் பற்றியவன்...அவளிடம் திரும்பி,"இனி என் கையை விடணும்ன்னு கனவில கூட நினைக்காதே....!",கூறியவன் குரலில் அப்படியொரு உறுதி.



கௌதமிடம் திரும்பியவன்,"எங்க வீட்டுக்குப் போகலாம் டா...!",என்றபடி நித்திலாவின் கரத்தைப் பற்றிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தான்.கெளதம் வந்து காரை எடுக்க...நால்வரையும் சுமந்து கொண்டு....கார் ஆதித்யனின் வீட்டை நோக்கிப் பறந்தது.



அந்தப் பெரிய மாளிகைக்குள் கார் நுழைந்த உடனேயே....நித்திலாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.பயத்திலும்...பதட்டத்திலும் தன்னையும் அறியாமல் ஆதித்யனிடம் ஒன்றிக் கொண்டாள்.ஆதரவாக அவள் தோளைச் சுற்றிக் கைகளை போட்டு அணைத்தவன்,



"நான் இருக்கேன் பேபி....!",என்று மெல்லிய குரலில் சமாதானப்படுத்தினான்.



ஆதித்யனின் குடும்பம் முழுக்க தோட்டத்தில் குழுமியிருந்தது.இந்த இரண்டு நாட்களும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாக ஆதித்யன்...குடும்பத்தினரிடம் கூறியிருந்தான்.



அவனது கார் போர்ட்டிக்கோவில் நுழையவும்...'ஆதித்யன் வந்துவிட்டான்...!',என்ற மகிழ்ச்சியோடு காரை நோக்கி நகர்ந்தவர்கள் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து நின்று விட்டனர்.



மாலையும் கழுத்துமாய்...கணவனும் மனைவியுமாய் காரிலிருந்து இறங்கி நின்றிருந்தனர் ஆதித்யனும் நித்திலாவும்.கௌதமும் சுமித்ராவும் அவர்களுக்குத் துணையாய்....நண்பர்களாய் அவர்களுக்கு அருகில் நின்றிருந்தனர்.



முதலில் சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தது அவனுடைய தாத்தா சுந்தரம் தான்..!



"ஆதி...!என்னப்பா இது...?எதுக்காக இப்படி யார்கிட்டேயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க....?",



"சந்தர்ப்ப சூழ்நிலை....!கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு தாத்தா...!உங்க எல்லாருடைய மனசிலேயும் ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும்....!உங்களுடைய ஒற்றை வாரிசான என்னுடைய கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தணும்ன்னு ஆசைகள் இருந்திருக்கும்....!அந்தக் கனவுகளை எல்லாம் சிதைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...!",அனைவரையும் பார்த்து நிமிர்வோடு கூறினான் ஆதித்யன்.



யாரும் எதுவும் பேசவில்லை...!அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர்.ஆதித்யனின் தந்தை மாணிக்கம் சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.



"சரி...!நடந்தது நடந்து போச்சு....!எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்...!கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புள்ளைகளை இப்படி வீட்டு வாசலிலேயே நிற்க வைத்துப் பேசறது சரியில்ல....!",மாணிக்கம் கூறவும் கமலா பாட்டியும் அதை ஆதரித்தார்.



"மாணிக்கம் சொல்றதும் சரிதான்....!லட்சுமி...!நீ போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா...!மணமான தம்பதிகளுக்கு ஆரத்தி சுத்தாமா வீட்டுக்குள்ள அழைக்கிறது முறையில்லை....!",மருமகளுக்கு உத்தரவிட்டார் கமலாம்பாள்.



அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த லட்சுமி...மாமியாரின் உத்தரவில் சுய நினைவுக்கு வந்தவராய்...வீட்டுக்குள் சென்றார்.



மணமக்கள் இருவருக்கும் லட்சுமி...ஆரத்தி எடுக்க...கமலாம்பாள் அவர்களை உள்ளே அழைத்தார்.



"வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா....!",



தயக்கத்துடன் அப்படியே நின்று கொண்டிருந்த நித்திலாவின் கரம் பற்றி அழைத்துச் சென்றான் ஆதித்யன்.தன்னவனின் கரம் பற்றிக் கொண்டு...தான் வாழப் போகும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் நித்திலா.



அந்தப் பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில் நித்திலா...லட்சுமி மற்றும் கமலா பாட்டி ஆகிய மூவரும் அமர்ந்திருக்க...அவர்களுக்கு பக்கவாட்டில் இருபுறமும் போடப்பட்டிருந்த ஒற்றை சோபாக்களில் ஆதித்யன்...கெளதம் மற்றும் சுமித்ரா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.அவர்களுக்கு எதிரில் மாணிக்கமும் சுந்தரமும் அமர்ந்திருந்தனர்.



அங்கிருந்த அனைவரது முகங்களிலிலும் அதிர்ச்சியும்...கேள்விகளும் விரவியிருந்தன...ஒரே ஒருவனது முகத்தைத் தவிர...!அது...நம் நாயகன் ஆதித்யனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்....?அவன் மட்டும் கூலாக தனது மொபைலை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.



அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கெளதம்...மெதுவாக ஆதித்யனின் கையை சுரண்டினான்.



"டேய்....!எல்லோரும் ஷாக் ஆகி உட்கார்ந்திருக்காங்க டா...!மொபைலை வைச்சுட்டு அவங்ககிட்ட பேசு....!",கெளதம் அடிக்குரலில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே...லட்சுமி பேச ஆரம்பித்தார்.



"என்ன நடந்துச்சு நித்தி....?",மருமகளையே கூர்மையாகப் பார்த்தபடி வினவினார் லட்சுமி.



"அதுதான் சொன்னேனே ம்மா...!சூழ்நிலை...!அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு...!",நித்திலாவிடம் கேட்ட கேள்விக்கு ஆதித்யன் பதில் சொன்னான்.



மகனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவர்,"நான் உன்கிட்ட கேட்கலை ஆதி...!நான் என் மருமகள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...!இதுல நீ குறுக்கே வராதே...!",கண்டிப்புடன் கூற...தாயின் 'மருமகள்' என்ற விளிப்பிலேயே...அவருக்கு நித்திலாவின் மீது எந்தக் கோபமும் இல்லை என்பது புரிய...அவன் அமைதியடைந்தான்.



"சொல்லும்மா நித்தி....!ஏன் இப்படியொரு முடிவு எடுத்தீங்க....?",லட்சுமி கேட்ட கேள்வியில் அவளது முகம் அவளையும் அறியாமல் நிமிர்ந்து கணவனை நோக்கியது.



அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



"அவரு சொன்னது உண்மைதான் அத்தை....!ஒரு இக்கட்டான நிலைமையில இப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியதா போச்சு...!",கணவனையே பார்த்தபடி இந்த வார்த்தைகளை உதிர்த்தாள்.



அதில் அவனது புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் மேலேறி வளைந்து கீழே இறங்கின.



"இதை நம்பறதுக்கு நான் முட்டாள் இல்லைம்மா...!எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும்...!அதே சமயம்...என் மகனோட பிடிவாதத்தைப் பற்றியும் தெரியும்....!",இதைக் கூறும் போதே அவரது பார்வை ஆதித்யனைத் துளைத்தெடுத்தது.



அவன் மெச்சுதலாய் தாயைப் பார்த்து புருவம் உயர்த்த...லட்சுமியோ மகனைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்தார்.அந்தப் புன்னகைக்குப் பின்னால் 'நான் உனக்கு அம்மா டா...!' என்ற செய்தி ஒளிந்திருந்தது.



நித்திலாதான் பாவம்...திணறிக் கொண்டிருந்தாள்.



"இல்லைங்க அத்தை....!உண்மையாலுமே த...தவிர்க்க முடியாத காரணம்....!",அவள் திக்கித் திணறிக் கொண்டிருக்க..



"நான் உண்மையான காரணத்தைக் கேட்டேன் நித்தி....!உன்னுடைய பெத்தவங்க சம்மதம் இல்லாம...இந்த வீட்டுக்கே வர மறுத்தவள் நீ...!அப்படிப்பட்ட நீ உன்னுடைய பெத்தவங்க சம்மதம் இல்லாம...எங்களுக்குத் தெரிவிக்காம இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கேன்னா...என்னவோ நடந்திருக்கு...!சொல்லு....!என்ன விஷயம்....?",அவருடைய கூர்மையான பார்வையும்...அழுத்தமானக் குரலும் அவளுக்கு ஆதித்யனை ஞாபகப்படுத்தியது.



'ஷப்பா...!அம்மாவுக்கும் மகனுக்கும் ஒரே பார்வை...!எதிர்ல இருக்கறவங்க மனசை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் பார்வை...!',மனதிற்குள் நினைத்தவள்...என்ன சொல்வது...? என்ற பதட்டத்துடன் மாமியாரை நோக்கினாள்.அவள் மறந்தும் வாயைத் திறக்கவில்லை.மாறாக அவள் கண்களில் ஒரு அலைப்புறுதல் தெரிந்தது.



மருமகளின் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலை கண்டுகொண்ட லட்சுமி...ஆதரவாக அவளது கையைப் பற்றியபடி,"என்மேல நீ மரியாதை வைச்சிருந்தேன்னா...நடந்த அத்தனை உண்மைகளையும் நீ இப்போ சொல்லியாகணும் நித்தி...!உன்னைப் பெத்தவங்க மேல நீ எவ்வளவு பாசம் வைச்சு இருக்கேன்னு எனக்குத் தெரியும்....!அவங்களுடைய கனவுகளையும்...நம்பிக்கையையும் சிதைச்சிட்டு...இப்படியொரு முடிவு எடுக்கறதுக்கு என்ன காரணம்....?",அவர் வினவிய அடுத்த நொடி...அவரது தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் நித்திலா.



அவ்வளவு நேரம்...தன்னவனின் அருகாமையிலும்...அவன் கட்டிய மஞ்சள் கயிறு கொடுத்த நிறைவிலும்...மூழ்கியிருந்தவள்...பெற்றவர்கள் என்ற வார்தையைக் கேட்டதும் உடைந்து போனாள்.



அழுது கொண்டிருந்தவளைப் பார்த்த ஆதித்யனின் விழிகள் வேதனையுடன் மூடித் திறந்தன.



'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு அவ்வளவு வலிக்குதா டி....?',அவன் மனம் துயரத்துடன் அவளைப் பார்த்துக் கேள்வி கேட்டது.



மாமியாரின் தோளில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்...தேம்பிக் கொண்டே அனைத்தையும் கூறி முடித்தாள்.தனது வீட்டில் நடந்தது...அதன் பிறகு தான் எடுத்த முடிவு...தனது முடிவை ஆதித்யனிடம் சொன்ன பிறகு...அவன் வலுக்கட்டாயமாகத் தன்னை அந்த வீட்டில் அடைத்து வைத்தது...அதன் பிறகு நடந்தேறிய கல்யாணம் என அனைத்தையும் கூறினாள்.



ஒரு நிமிடம்...நிசப்த அமைதி நிலவியது.யாருக்கும் 'என்ன பேசுவது...?' என்று தெரியவில்லை.நண்பனின் மனநிலை புரிந்தவனாய் கெளதம்...ஆதரவான பார்வையை நண்பனை நோக்கி செலுத்தினான்.



ஆதித்யனின் தந்தையாலும்...தாத்தாவாலும் ஒரு ஆணாய்....ஆதித்யனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.'உன்னுடைய காதல் வேண்டாம்...!' என்று நித்திலா மறுத்தது...அவனுடைய தன்மானத்தை சீண்டிப் பார்த்திருக்கிறது என்பதை அனுபவத்தில் மூத்த அவர்கள் புரிந்து கொண்டனர்.



அவனுடைய காதல் மனதில் நித்திலா ஏற்படுத்திய ரணத்தின் விளைவாய்தான் இத்தனை காரியங்களும் நடந்தேறியிருக்கின்றன என்பது புரிய வர...அவர்கள் அமைதி காத்தனர்.



கமலா பாட்டிக்கு சிறிது கோபம் கூட எட்டிப் பார்த்தது.'என்னுடைய பேரனை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள் பார்...!' என்று அவர் மனதிற்குள் குமைந்தார்.



லட்சுமியாலும்...மகனின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.அத்தோடு மகனின் முரட்டுத்தனமான பிடிவாதத்தைப் பற்றியும் நன்கு அறிந்தவர் அல்லவா...?காதலில் போராட மறுத்து நித்திலா விலகியது...அவனுடைய பிடிவாதத்தை தூண்டி விட்டு...இப்படி அதிரடியான காரியத்தை செய்ய வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.



ஒரு கணம்...'மகன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்....?',என்று அவரது தாயுள்ளம் கலங்கித் துடித்தது.மறு கணமே...நித்திலாவின் மன உணர்வுகளும் புரிய வர...ஆறுதலாக மருமகளின் முதுகைத் தடவிக் கொடுத்தார்.



இவ்வாறு....ஆதித்யன் கூறாமலேயே அவனுடைய உணர்வுகளையும்...அந்த அதிரடிக் கல்யாணத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் அவனுடைய வலிகளையும்...மிக அழகாகப் புரிந்து கொண்டனர் அவனுடைய குடும்பத்தினர்.



ஆனால்...யாருமே ஆதித்யனுக்கு ஆதரவாகவோ...இல்லை...நித்திலாவிற்கு ஆதரவாகவோ பேச முன் வரவில்லை.ஒருவருக்கு பரிந்து கொண்டு பேசுவது மற்றொருவரை காயப்படுத்தும் என அனைவரும் அமைதி காத்தனர்.



நித்திலாவின் அழுகையும் படிப்படியாய் குறைந்து விசும்பலில் வந்து முடிந்தது.



தன் தொண்டையை செருமிக் கொண்டு மாணிக்கம் பேச ஆரம்பித்தார்.



"சரி...!எல்லாரும் இப்படியே உட்கார்ந்திருந்தால்...நடந்தது இல்லைன்னு ஆகிடுமா....?அடுத்து நடக்க வேண்டியதைப் பத்தி யோசிக்க வேண்டாமா....?",மகனது குரலில் அவரை நிமிர்ந்து பார்த்த சுந்தரம்..



"நீ சொல்றதும் சரிதான்...!எல்லோரும் கிளம்புங்க...!நித்திலாவுடைய வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாக்கிட்ட விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைப்போம்....!",அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே..ஆதித்யன் ஏதோ பேச வாயெடுக்க...அவனை கையை உயர்த்தி தடுத்த சுந்தரம்..



"வேண்டாம் பேராண்டி....!நீ எதுவும் சொல்ல வேண்டாம்...!கல்யாணம்தான் உன் விருப்பத்துக்கு நடந்து போச்சு...!இனி அடுத்த நடக்க வேண்டிய காரியத்தை எங்க விருப்பத்துக்கு விடு...!பெரியவங்கன்னு நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்....?நாங்க பார்த்துகிறோம்....!நீ அங்கே வந்து வாயைத் திறக்க கூடாது...!அவங்களை சமாதானப்படுத்தற பொறுப்பு எங்களுடையது....!",சுந்தரம் முடிவாக கூறி விட..



"உங்க இஷ்டம் தாத்தா...!",என்று அமைதியாகி விட்டான் ஆதித்யன்.



"லட்சுமி....!புது மருமகளை கூட்டிட்டுப் போய் பூஜையறையில தீபம் ஏற்ற சொல்லு...!வீட்டுக்கு வந்த பொண்ணு இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு இருந்தால் நல்லாவா இருக்கு....!நான் போய் வேலையாளுங்ககிட்ட காலை டிபனை ரெடி பண்ணச் சொல்றேன்....!எல்லோரும் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்....!ஏம்மா சுமித்ரா....!உன் பிரெண்டுக்கு துணையா நீயும் அவ கூட போ...!",பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு கமலா பாட்டி உத்தரவிட....லட்சுமியும் சுமித்ராவும் மணமக்களை அழைத்துக் கொண்டு பூஜையறைக்கு விரைந்தனர்.



அதன் பிறகு...அனைவரும் காலை உணவை பெயருக்கு கொறித்து விட்டு...காரில் கிளம்பினர்.பெரியவர்கள் அனைவரும் ஒரு காரில் வர...சிறியவர்கள் அனைவரும் மற்றொரு காரில் கிளம்பினர்.



ஆதித்யனும்...நித்திலாவும் இன்னும் திருமண கோலத்தில்தான் இருந்தனர்.



"கல்யாணத்தைத்தான் பார்க்கல...!அட்லீஸ்ட்...மகளுடைய திருமண கோலத்தையாவது அவங்க பார்க்கட்டும்...!;",உடை மாற்ற போன ஆதித்யனைத் தடுத்து லட்சுமி கூறவும்...இருவரும் அதே கோலத்தில் கார் ஏறி விட்டனர்.



ஏழு மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் கோவையை அடைந்தது.



வீட்டை நெருங்க நெருங்க...நித்திலாவின் பதட்டமும்...பயமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.அதுவரை ஆதித்யனை விட்டுத் தள்ளி கார் கதவோரமாக அமர்ந்திருந்தவள்...கார் கோவைக்குள் நுழைந்ததும் உடல் நடுங்க...பூனைக்குட்டி போல் போய் அவனை ஒட்டிக் கொண்டாள்.



மனைவியின் தவிப்பைக் கவனித்தவன்...அவளது தோளைச் சுற்றி கைகளைப் போட்டு தன் மார்போடு அணைத்துக் கொண்டு...அவளது காதோரமாக மெல்லிய குரலில் சமாதானம் கூற ஆரம்பித்தான்.



"நான் இருக்கிறேன்....!";



"........",



"பயப்படக்கூடாது பேபி....!",



"..........",



"என்ன நடந்தாலும் சரி...!உன் அத்தான் பார்த்துக்குவான்....!",அவள் முடி கோதி..அவன் மென்மையாக அவன் கூற கூற...அவள் சற்று தெளிவடைந்தாள்.



'இந்த சூழ்நிலையை ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்...!',தைரியத்தைத் திரட்டிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள் நித்திலா.



.........................................................................................



நித்திலா வீட்டு ஹாலில் அவளுடைய மொத்தக் குடும்பமும் குழுமியிருந்தது.இருபக்கமும் போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில்...ஒரு புறம் ஆதித்யன் குடும்பம் அமர்ந்திருக்க...அவர்களுக்கு எதிர்புறம் கேசவனின் குடும்பம் அமர்ந்திருந்தது.நித்திலாவின் தாய் கோபத்திலும்...அதிர்ச்சியிலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க...தீபிகா அவர் அருகில் அமர்ந்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.



முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காட்டாது இடிந்து போய் அமர்ந்திருந்த கிருஷ்ணனின் காலடியில் அமர்ந்திருந்த நித்திலா...அவரது மடியில் முகம் புதைத்து விம்மிக் கொண்டிருந்தாள்.



வந்ததில் இருந்து யாரும் எதையும் பேசவில்லை.ஆதித்யன்...கேசவனுக்கு அழைத்து நித்திலா வீட்டிற்கு வருமாறு கூறியிருந்ததால்...'என்ன விஷயம்...?' என்று தெரியாமலேயே...அவனும்...ஆதித்யன் கூறியபடி தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து காத்திருந்தான்.



மணக்கோலத்தில் வந்திறங்கிய தங்களது மகளைப் பார்த்ததுமே பெற்றவர்கள் இருவரும் ஆடிப் போய் விட்டனர்.மனதில் ஒரு வித வெறுமை சூழ...இருவரும் கலக்கத்துடன் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து விட்டனர்.கேசவன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு...ஆதித்யன் குடும்பத்தை அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்தான்.



உள்ளே நுழைந்த நித்திலா...தந்தையைக் கண்டதும் ஒரு கேவலோடு ஓடிச் சென்று அவர் காலடியில் விழுந்தாள்.கிருஷ்ணன் மகளை விலக்கவும் இல்லை...அவளை அரவணைக்கவும் இல்லை...!வெறுமையான பார்வையோடு எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.



தன் மனைவி அழுவதை இறுகிய முகத்துடன் வெறித்தபடி...தந்தையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தான் ஆதித்யன்.முதலில் மாணிக்கம்தான் பேச ஆரம்பித்தார்.



"நடந்தது நடந்து போச்சு சம்பந்தி....!ஏதோ நம்ம குழந்தைகள் ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க....!அதுக்காக அவங்க செய்தது சரின்னு நான் சொல்ல வரலை...!அவங்களுடைய காதல் விஷயத்தைப் பெரியவங்க நம்மகிட்ட சொல்லியிருக்கலாம்....!நாம ஒண்ணும் அவங்களுடைய ஆசைக்கு குறுக்கே நிற்க போறதில்லை....!இருந்தும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால இப்படி செய்திட்டாங்க....!அவங்களை மன்னிச்சு ஏத்துக்க கூடாதா....?",தன்மையாய் பேசிய மாணிக்கம் மறந்தும் அவர்களது திருமணம் நடந்த விதத்தைப் பற்றிக் கூறவில்லை.



அவர்களிடம் இருந்து அதை மறைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.தேவைப்பட்டால் கூறிக் கொள்ளலாம் என்று பொறுமை காத்தார்.



மாணிக்கம் பேசியதற்கு கிருஷ்ணனிடமும்...மீனாட்சியிடமும் எந்தப் பதிலும் இல்லாமல் போகவும்...சுந்தரம் தாத்தா வாயைத் திறந்தார்.



"நம்ம குழந்தைகள் தெரியாம செய்யற தப்பை...பெத்தவங்க நாம மன்னிக்கறது இல்லையாப்பா....!இந்த சின்னஞ் சிறிசுக சந்தோஷத்துக்காக நம்ம கோபத்தை நாம கொஞ்சம் விட்டுத் தரலாமே....?",இதமாக எடுத்துக் கூறினார் சுந்தரம்.



சிறிது நேரம் அமைதி நிலவியது.நித்திலாவின் விசும்பல் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.தன்னவளை அள்ளி எடுத்து சமாதானப்படுத்த துடித்த கரங்களை அடக்கத் தோன்றாமல்...பட்டென்று சோபாவில் இருந்து எழுந்தான் ஆதித்யன்.



நித்திலாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்த ஆதித்யனை...மாணிக்கத்தின் கண்டிப்பான பார்வை தடுத்தது.



"அவ அழறா ப்பா...!",அடிக்குரலில் தந்தையிடம் அவன் சீற..



"அழட்டும் விடு...!அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நீ போகாதே....!",அவரது கண்டிப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.



"என்னை ம...மன்னிச்சிடுங்க ப்பா....!உங்க...உங்க நம்பிக்கையை நான் அ..அழிச்சிட்டேன்....!",கேவலுக்கு இடையே வந்து விழுந்தன நித்திலாவின் வார்த்தைகள்.



அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த கிருஷ்ணன்...அப்பொழுது வாயைத் திறந்தார்.



"அழிக்கலை ம்மா...!என் நம்பிக்கையை வலிக்க வலிக்க கொன்னுட்ட....!",அவர் குரலில் நிச்சயமாய் கோபம் இல்லை.மாறாக...உணர்வுகளைத் தொலைத்து இறுகியிருந்தது.



தந்தையின் வார்த்தையில் அவள் மேலும் அழ ஆரம்பித்தாள்.



"இ..இல்லை ப்பா....!உங்க நம்பிக்கையை நான் கொல்லலை....!இல்லை...!நான் கொல்லலை....!",வெறி பிடித்தவள் போல் கதறியவள்...அவரது கையைப் பற்றிக் கொண்டு..



"அப்பா...!'வேறொரு ஆணோட உன்னை நெருக்கமான நிலையில பார்த்தாலும்...உன் பக்கம் ஒரு நியாயம் இருக்கும்...!அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு...!'ன்னு சொன்னீங்கல்ல ப்பா...!இந்த கல்யாணத்திலேயும் என் பக்கம் ஒரு நியாயம் இருக்கும்ன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ப்பா...?",தன் உயிரை விழிகளில் தேக்கி கொண்டு வினவிய தன் மகளைப் பார்த்து 'இல்லை...!' என்பதாய் தலையசைத்தார் கிருஷ்ணன்.



"எப்படிம்மா என் நம்பிக்கையை இழுத்துப் பிடிக்கச் சொல்ற...?அந்த தம்பி கட்டின தாலி...உன் கழுத்துல தொங்கிக்கிட்டு இருக்கு...!அப்படி இருக்கும் போது...என் நம்பிக்கைக்கு எந்த விதத்துல உயிர் கொடுக்கச் சொல்ற....?",அவர் குரலில் அப்படியொரு வேதனை.



தந்தையின் வார்த்தைகள் மனதில் அடித்த போதும்...ஒருவழியாகத் தன்னை தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவள்,"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ப்பா...?உலகத்தில எல்லாமே...எல்லாருடைய விருப்பப்படி நடக்கறது இல்ல...!",மகளின் வெறுமையான குரல் அந்தத் தந்தையை யோசிக்க வைத்தது.



புருவம் சுருங்க...அவர் தன் மகளின் முகத்தையே கூர்மையாய் அளவிட்டபடி இருக்க...கோபமாய் வந்த மீனாட்சி மகளைப் பிடித்து எழுப்பினார்.



"யாருடைய விருப்பத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருக்க...?எங்களுடைய விருப்பதைப் பற்றியா....?இல்ல...உன்னுடைய விருப்பத்தைப் பற்றியா....?",



"எல்லோருடைய விருப்பத்தைப் பற்றியும்தான் சொல்றேன்....!என்னுடைய விருப்பம்...உங்களுடைய விருப்பம்...இதோ...இவங்களுடைய விருப்பம்...!",என ஆதித்யனின் குடும்பத்தை சுட்டிக் காட்டியவள்,"இப்படி...எல்லாருடைய விருப்பத்தைப் பற்றியும்தான் சொல்றேன்....!",தாங்க முடியாமல் வெடித்தாள் அவள்.



அனைத்தையும் முகம் இறுக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.'மீண்டும் தங்களது காதலை அவமானப்படுத்தப் போகிறாள்....!',என்று அவன் மனம் இறுகியது.



மீனாட்சிக்கு இன்னும் அதிகமாகக் கோபம் வந்தது.



"சும்மா உளறாதே....!அந்தத் தம்பி கட்டின தாலியை உன் கழுத்துல வாங்கிட்டு வந்து...எங்க முன்னாடி நின்னுக்கிட்டு இருக்க...!உன் விருப்பம் இல்லாமலேயா உன் கழுத்துல தாலி ஏறியிருக்கும்....?",தாயின் கேள்வியில்..



வேகமாக எதையோ கூற வாயெடுத்தவள்...பட்டென்று அமைதியானாள்.



'இல்லை நித்தி...!இதை நீ சொல்லக் கூடாது....!',அவளது காதல் மனம் அறிவுறுத்தியது.



ஆதித்யனின் கட்டாயத்தினால்தான் இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.என்னதான் அவர்கள் தன்னுடைய பெற்றவர்களாக இருந்தாலும்....அவர்களின் முன் தன்னவனை விட்டுத்தர அவளது காதல் மனம் தயாராய் இல்லை....!தன்னுடைய பிறந்த வீட்டினர் முன்னால்....குற்றவாளியாய் தன் கணவனை சுட்டிக் காட்ட அவளுடைய காதல் நெஞ்சம் இடம் தரவில்லை....!



இது...இது...இதுதான் பெண்களின் மனம்....!எப்பொழுது அவர்களது கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறுகிறதோ...அந்த நிமிடமே அவர்கள் பிறந்த வீட்டில் இருந்து அந்நியமாகிக் கொள்கிறார்கள்....!அந்நியப்படுத்தப் படுகிறார்களோ...இல்லையோ...?அவர்களே மனமுவந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள்....!



இது காலம் காலமாய் பெண்களின் மனதில் ஊறிப் போன உணர்வு...!அதற்கு நித்திலா மட்டும் விதிவிலக்கா...என்ன...?



"சொல்லு டி....?உன் விருப்பம் இல்லாமலேயா இவ்வளவும் நடந்துச்சு....?உன்னால பதில் சொல்ல முடியலைல்ல....?எப்படி சொல்ல முடியும்....?",அவளுடைய தாய் கேட்ட கேள்விக்கு உண்மையாலுமே அவளால் பதில் சொல்ல முடியவில்லை.



பெற்றவர்களின் நம்பிக்கைக்காக...ஆதித்யனின் காதலை தூக்கியெறிய துணிந்தவள்தான் அவள்....!ஆனாலும்...அவளால் அந்த தாய் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை,



ஏனென்றால்...அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொன்னால்...அதன் பிறகு நடந்த நிகழ்வுகளையும் அவள் விளக்க வேண்டி இருக்கும்...!அத்தனை பேரின் முன்னாலும் தன்னவனை நோக்கி கைகாட்ட அவள் விரும்பவில்லை....!எனவே...மௌனம் சாதித்தாள்.



அந்த நொடி....அந்தக் கணம் ஆதித்யனின் காதல் உயிர்தெழுந்தது....!தன்னுடைய காதலுக்கு அவள் நியாயம் செய்யவில்லை என்று மறுகிக் கொண்டிருந்தவனுக்கு...தன்னுடைய அந்த மௌனத்தின் மூலமாக...அவனுடைய காதலுக்கான நியாயத்தை அள்ளி வழங்கினாள் அவனுடைய காதல் தேவதை....!



ஆதித்யனின் பெற்றவர்களிடமும் அவள் நடந்த விஷயத்தைக் கூறினாள் தான்...!ஆனால்...முழுவதுமாகக் கூறவில்லை...!மேம்போக்காக விஷயத்தைக் கூறினாலே தவிர...தங்களுக்குள் நடந்த அந்தரங்க பேச்சுவார்த்தைகளைப் பற்றியோ...அவன் கொடுத்த இரண்டு ஆப்ஷன்களை பற்றியோ...அவள் கூறவில்லை.



அது தங்களுக்கான அந்தரங்கம் என்று அவள் நினைத்தாள்.அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை...!ஆதித்யனின் பெற்றவர்களிடம் கூட அவள் நடந்ததைக் கூறியிருக்க மாட்டாள்தான்...!ஆனால்...அவனது தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுத்தான்...நடந்ததை பட்டும் படாமலும் கூறியிருந்தாள்.



ஆதித்யனும் நித்திலாவின் மன நிலைமையில்தான் இருந்தான்.தங்களுக்கே தங்களுக்கான அந்தரங்ககளை...அந்த நிலையிலும் அவள் வெளியிடாதது...அவனுடைய காதல் மனதில் ஏற்பட்டிருந்த ரணத்தில் மயிலிறகைக் கொண்டு வருடியது...!



அவன் விழிகள் பளிச்சிட தன் மனையாளை நோக்கினான்.அவளும் அப்பொழுது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.



மகள் ஏதோ சொல்ல வாயெடுத்ததையும்...அதன் பிறகு அமைதியாகி விட்டதையும் கிருஷ்ணன் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.அதே சமயம்...மகளும் ஆதித்யனும் பார்த்துக் கொண்ட காதல் பார்வையும் அவரது கவனத்தில் விழுந்தது.



'ஏதோ நடந்து இருக்கு...!அதை மகள் தங்களிடம் மறைக்கிறாள்...!',என்று அவரது அனுபவ அறிவு கூறியது.ஆதித்யனுக்காக அவள் தங்களிடமே ஏதோ விஷயத்தை மறைக்கிறாள் என்றால்...அவள் ஆதித்யன் மேல் வைத்திருக்கும் காதல் எப்படிப்பட்டது என்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.



மகளின் மேல் வைத்த நம்பிக்கை மீண்டு வர...அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.



"போதும் மீனாட்சி....!நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை...!இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம்...!",ஒரு தந்தையாய் மகளின் காதலை ஏற்றுக் கொண்டு அவர் பேசினார்.



"அடுத்தது என்ன...?அவங்க வீட்டு மருமகளை அவங்க கூட்டிட்டு போகட்டும்...!",அந்தத் தாயால் அவ்வளவு எளிதாக நடந்து முடிந்ததை ஜீரணிக்க முடியவில்லை.



"அபத்தமா பேசாதே மீனாட்சி....!என்னதான் இருந்தாலும்...அவள் நம்ம பொண்ணு....!நம்ம வீட்டுப் பொண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்து அனுப்ப வேண்டியது நம்மளுடைய கடமை....!",அவர் கூறவும்...ஓடிச் சென்று தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள் நித்திலா.



"ஸாரி...!ஸாரி ப்பா...!ரொம்ப தே..தேங்க்ஸ்....!",அழுகைக்கு இடையே மன்னிப்பையும்...நன்றியையும் மாறி மாறிக் கூற..



கனிவான புன்னகையுடன் தன் மகளின் தலையை நீவி கொடுத்தவர்,"இப்பவும் அதையேதான் சொல்றேன் ம்மா...!என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....!உன்னுடைய காதல் விஷயத்தை எங்ககிட்ட சொல்லாமல் போனதுக்கும்...இப்படி நடந்த கல்யாணத்துக்கும் நிச்சயமா உன் பக்கம் ஒரு காரணம் இருக்குன்னு நான் நம்பறேன்....!",அமைதியான குரலில் கூறியவரை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் எதையோ கூற துடிதுடித்தது.ஆனால்...இதழ்களை அழுந்தக் கடித்துக் கூற வந்ததை...கூற முடியாமல் தன்னை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தாள்.



"வேண்டாம் டா...!விட்டு விடு....!உன்னால அந்தக் காரணத்தை எங்ககிட்ட சொல்ல முடியலை...!அதை என்னால புரிஞ்சுக்க முடியுது....!",ஆதுரமாகக் கூறியவர்..



"என் மகள் எவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டா....!ஒருத்தருக்கு மனைவியாகவும்....இன்னொரு குடும்பத்து மருமகளாகவும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாள்....!",'தன் மகள் வளர்ந்து விட்டாள்...!' என்ற நினைவில் கண் கலங்க கூறினார் அந்த தந்தை.



பேச்சுகளற்று ஆனந்தக் கண்ணீரோடு அவரை அணைத்துக் கொண்டாள் அந்த மகள்.



மீனாட்சியால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தங்களுடைய செல்ல மகள்...இப்படி தங்களது சம்மதம் இல்லாமல்...திருமணம் செய்து கொண்டதில் அவர் கோபமாக இருந்தார்.



ஆதித்யனின் குடும்பத்தினரின் மனதில்...நித்திலாவைக் குறித்த பெருமை கர்வமாய் வந்தமர்ந்தது...!பெற்றவர்களாயினும்...அவர்களின் முன் தங்களது மகனை விட்டுக் கொடுக்காதது....அவர்களின் மனதில் ஒரு நிறைவைத் தந்தது.



மகளின் இக்கட்டான நிலைமையை அழகாகப் புரிந்து கொண்டு...அவளை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணனை நினைத்து,'தங்கள் வீட்டின் மருமகள் அருமையான குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறாள்...!',என்ற மகிழ்ச்சி அவர்களுக்குள் தோன்றியது.



முரண்டு பிடித்த மீனாட்சியை கேசவனின் அம்மா ராஜாத்தி பேசி பேசி சமாதானப்படுத்தினார்.



"ரொம்ப அருமையான இடம்....!மாப்பிள்ளையும் நல்ல குணம்...!ஆதித்யன் எங்களுடைய மகனைப் போல...!",அது இது என்று கூறி அவர் மனதை ஓரளவிற்கு கரைத்திருந்தார்.



கேசவன்...தீபிகாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை...!ஆதித்யனைப் பற்றி அறிந்தவர்களாததால்...அவர்கள் முழு மனதோடு இந்த திருமணத்தை வரவேற்றனர்.அதிதி குட்டியும் புதிதாக கிடைத்த சித்தப்பாவோடு நன்கு ஒட்டிக் கொண்டது.



அனைவரும் கலந்து பேசி இன்னும் இரண்டு நாட்களில் சென்னையில் வரவேற்பு என்று முடிவெடுத்தனர்.அதுவரை...நித்திலா அவளது பெற்றவர்களின் வீட்டில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.வரவேற்புக்குத் தேவையான துணி நகைகளை எடுத்துக் கொடுத்து விட்டு நாளை ஆதித்யனின் குடும்பம் சென்னை செல்வதாகவும்...நாளை மறுநாள் நித்திலாவை அழைத்துக் கொண்டு அவளது குடும்பம் சென்னை செல்வதாக இருந்தது.



இடைப்பட்ட இரண்டு நாட்களில்....முக்கியமான உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பதாக ஏற்பாடு ஆகியிருந்தது.மணமக்களுக்கான முதலிரவிற்கும்...வரவேற்புக்குப் பிறகு என்று நேரம் குறித்தனர்....!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 56 :



தங்க நிறத்திலான கற்கள் பதிக்கப்பட்ட ஃபேன்சி புடவையில் தங்கத் தாரகையாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அவளுக்கு அருகில் அதே நிறத்திலான ஷெர்வானி அணிந்து ஆணழகனாய் நின்றிருந்தான் ஆதித்யன்.



அவர்களுக்கான வரவேற்பு மேடை அது...!இடையில் இரண்டு நாட்களே இருந்தாலும்...ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தான் ஆதித்யன்.தங்களது திருமணத்தில் நிறைவேற்ற முடியாத அத்தனையையும் வரவேற்பில் நிகழ்த்தியிருந்தான்.



வரவேற்பு நடக்கும் ஹாலே விளையாட்டு மைதானம் போல் பரந்து விரிந்திருந்தது.தேவலோக இந்திரனின் சபை இப்படித்தான் இருக்குமா...?என்று வியக்கும் அளவிற்கு அந்த ஹாலின் அலங்காரங்கள் கண்ணைப் பறித்தன.அந்த அரங்கம் மட்டும்தானா...?இல்லை...அன்றைய விழாவின் நாயகன் மற்றும் நாயகியான ஆதித்யனும் நித்திலாவும் நட்சத்திரங்களாய் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.



தொழில் உலக சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறப்பவன் என்பதால்...முக்கியப் பிரமுகர்கள் அனைவருமே வந்து குழுமியிருந்தனர்.மேடைக்கு வந்து வாழ்த்து கூறி பரிசுப் பொருட்கள் கொடுத்த ஒவ்வொருவரையும் அவன் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.என்னதான் கணவன் மேல் கோபம் இருந்தாலும்...சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்று வைத்தாள் நித்திலா.



"அழகா இருக்கே டி ராட்சசி....!",மேடைக்கு யாரும் வராத இடைப்பட்ட நேரத்தில் நித்திலாவின் காதருகே குனிந்து கிறக்கமாய் முணுமுணுத்தான் ஆதித்யன்.



அவனுடைய ஷெர்வானி தன்னுடைய தோளில் வந்து உரசியதில்....அந்தப் பாவையும் சிலிர்த்துதான் போனாள்.ஆனால்..மனதில் இருந்த கோபம்...அந்த சிலிர்ப்பை விரட்டியடித்து விட...அவள்...அவனைப் பார்த்து முறைத்தாள்.



சொல்லப் போனால்...முறைக்க முயன்றாள் என்று கூறலாம்...!அவனை முறைப்பதற்காக நிமிர்ந்தவளின் பார்வை...எந்த நொடி மயக்கமாக மாறிப் போனது என்று அவளுக்கே தெரியவில்லை.ஆறடிக்கும் அதிகமான உயரத்துடன் ஷெர்வானி அணிந்திருந்தவன்...அவளைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்த போது அவளால் அவனை முறைக்க முடியவில்லை.



அவள் விழிகளில் அவன் மீதான மயக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.



"என்ன பேபி....!உன்னை மயக்கறேனா....?",மிதப்பாய் அவன் புருவங்களை உயர்த்த...அவள் சுதாரித்துக் கொண்டவளாய் அவசர அவசரமாகத் திரும்பிக் கொண்டாள்.



"என்னைக் கொல்றே டி....!",தாபமாய் முணுமுணுத்தவனின் சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்தில் வந்து மோதியது.



சர்வ அலங்காரங்களுடன் தன்னருகே நின்றவளின் மீதிருந்து அவனால் பார்வையைத் திருப்பவே முடியவில்லை.அவள் எளிமையாக இருந்தாலே...அவன் அவளைக் கடித்துத் தின்பதைப் போலத்தான் பார்த்து வைப்பான்.இன்றோ...புடவையில் அதற்குத் தோதான அணிகலன்கள் அணிந்து கொண்டு...சுருள் சுருளான கூந்தல் மயில் தோகையாய் முதுகில் படர்ந்திருக்க...பேரழிகிக்கெல்லாம் பேரழகியாய் நின்றிருந்தவளை அவன் எப்படி பார்த்து வைத்திருப்பான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை....!



கணவனது பார்வையில் இதயம் படபடக்க நின்றிருந்தவளின் பார்வையில்...அவளுடைய தாய் மீனாட்சி வந்து விழுந்தார்.தாயைப் பார்த்ததும் அவளது முகம் வேதனையில் கசங்கியது.



அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்தது.மகளின் வரவேற்பிற்காக அவர் ஒவ்வொன்றயும் பார்த்து பார்த்து செய்தாலும்...மறந்தும் மகளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.ஆம்...!நித்திலா செய்ததை அவர் மறக்கவும் இல்லை...!மன்னிக்கவும் இல்லை...!



கண்ணீர் மல்க தன்னிடம் பேச முயற்சிக்கும் மகளை...எப்படியாவது தவிர்த்து விடுவார்.



"அவள் நம்ம பொண்ணு மீனு...!",என்று பரிந்து கொண்டு வந்த தன் கணவனையும்,"இந்த விஷயத்துல தயவு செய்து என்னை வற்புறுத்தாதீங்க....!",என்று உறுதியாக மறுத்து விட்டார்.



கிருஷ்ணன் தான்,"கொஞ்ச நாள்தான் ம்மா...!எல்லாம் சரியாகிடும்...!நம்ம அம்மாதானே....!",என்று அதையும் இதையும் கூறி மகளை சமாதானப்படுத்தினார்.



தாயைக் கண்டதும் அவருடைய பாராமுகமும் நினைவுக்கு வந்துவிட...நித்திலா கோபத்துடன் ஆதித்யனிடம் வெடித்தாள்.



"எல்லாம் உங்களால தான்...!உங்களாலதான் என் அம்மா என்கிட்ட பேசறது இல்ல....!",



"என்னால மட்டும் இல்ல பேபி....!இந்த நிலைமை உருவாகறதுக்கு நீயும்தான் காரணம்....!சொல்லப் போனால்...நீ மட்டும்தான் காரணம்....!",



"என் விருப்பத்துக்கு கூட மதிப்பு கொடுக்காமல்...என்னைக் கல்யாணம் பண்ணினவருதானே நீங்க....!",ஆற்றாமையில் அவள் வெடிக்க...அவன் முகம் உணர்ச்சிகளைத் தொலைத்து கடினமாகியது.



அதற்குள் மேடைக்கு உறவினர்கள் வர...இருவரும் தங்களது முகத்தை முயன்று சகஜமாக வைத்துக் கொண்டனர்.



மேடையில் நின்றிருந்த ஆதித்யனையும்...நித்திலாவையும் வலி நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.இவ்வளவு நாட்களில்...'நித்திலா தனக்கானவள் அல்ல...!' என்று அவன் தன் மனதை ஓரளவிற்குத் தேற்றியிருந்தான்.



காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக அவன் கடுமையாக உழைக்க ஆரம்பித்திருந்தான்.ஆம்...!ஆதித்யனின் அலுவலகத்திலேயே இருந்தால்...நித்திலாவைப் பார்க்க வேண்டி வரும்...அது தன் காதல் மனதை மேலும் குத்தி காயப்படுத்தும் என்று எண்ணி அவன்... வேலையை ராஜினாமா செய்திருந்தான்.



பாலாவின் மனதில் இருந்த நித்திலாவின் மீதான காதலை...ஆதித்யன் அறிந்துதான் வைத்திருந்தான்.பாலா வந்து தன் ராஜினாமா கடிதத்தை நீட்டும் போது....ஒரு அழுத்தமான பார்வையுடன் அதை அங்கீகரித்தான் ஆதித்யன்.பாலாவின் பார்வையும் இன்னதென்று விளங்காத ஒரு அர்த்தத்துடன் அவனை நோக்கியது.



இருவரின் பார்வைகளிலும்...நித்திலா மீதான காதல் நிறைந்திருந்தது.ஆனால்...இரு ஆண் மகன்களுமே அதை ஒருவரிடம் ஒருவர் காட்டிக் கொள்ளவில்லை.



"வெளியில தனியா தொழில் தொடங்கலாம்ன்னு இருக்கிறேன் சார்...!அதனால இந்த வேலையை ரிசைன் பண்றேன்....!",பாலா கூறிய போது..



"நல்ல முடிவு மிஸ்டர்.பாலா...!ஒரு சில விஷயங்களில் இருந்து நாம விலகும் போதுதான்...வேறொரு விஷயங்கள் கிடைக்க வரும்....!உங்களுக்காக இருக்கிறது உங்களைத் தேடி வரும்...!",மர்ம புன்னகையுடன் கூறினான் ஆதித்யன்.



வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த பாலா...ஆதித்யனின் கண்களில் எதைக் கண்டானோ,"உண்மைதான் சார்...!உங்களுக்காக உங்களைத் தேடி வந்ததை பத்திரமா பார்த்துக்கோங்க....!",இதயம் வலிக்க கூறிவிட்டு வெளியேறி விட்டான்.



அதன்பிறகு...அவன் இன்றுதான் நித்திலாவை சந்திக்கிறான்.இடைப்பட்ட காலங்களில் தனது தொழிலில் கடுமையாக உழைத்து ஓரளவிற்கு கால் ஊன்றியிருந்தான்.



அவன் மிகச் சிறந்த உத்தமன்....!அவனுடைய காதல் மிக அழகானது...!காதலிக்கும் பெண் தன்னைக் காதலிக்கா விட்டால்...அவள் முகத்தில் திராவகத்தை வீசி அடிப்பது...அவளை நாசமாக்குவது போன்ற ஈன செய்லகளுக்கு மத்தியில்...தன்னுடைய காதலுக்காக...தன்னுடைய காதலையே அர்பணிக்கத் துணிந்து...அவளை விட்டு விலகிச் சென்ற பாலாவின் காதல் மிக அற்புதமானது...!தன் மனதில் இருந்த வலியை மறைத்துக் கொண்டு...புன்னகை முகத்துடன் மேடையேறியவன்...மணமக்கள் இருவரையும் வாழ்த்தினான்.



"வாழ்த்துக்கள் நித்தி...!ஹேப்பி மேரீட் லைப் சார்....!",என புன்னகையுடன் ஆதித்யனிடம் கை குலுக்கியவன்...ஒரு நகைப்பெட்டியை எடுத்து நித்திலாவிடம் நீட்டினான்.



"வாவ்...!எனக்காக நகையெல்லாம் வாங்கி இருக்கியா...?",வழக்கம் போல் நட்புடன் புன்னகைத்தபடி அந்த நகை பெட்டியைத் திறந்தாள் நித்திலா.உள்ளே இதய வடிவத்திலான ஜோடி வைர மோதிரங்கள் பளிச்சிட்டன...!



அது...பாலா..நித்திலாவிற்காக வாங்கியதுதான்.தான் காதலைச் சொல்லும் போது அவள் விரலில் அணிவித்து விட்டு...இன்னொரு மோதிரத்தை தன் விரலில் அணிவித்து விட சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் வாங்கியது.



"நித்தி...!ரெண்டு பேரும் இங்கேயே மோதிரம் மாத்திக்கோங்க....!கமான்...!",வரவழைத்த உற்சாகத்துடன் பாலா கூற...நித்திலா சற்று தயங்கினாள்.



ஆனால்...அந்த தயக்கம் ஆதித்யனுக்கு இல்லை போலும்...!



"அழகான கிஃப்ட்...!தேங்க்ஸ் பாலா...!",சிறு புன்னகையுடன் ஒரு மோதிரத்தை எடுத்து நித்திலாவின் விரலில் அணிவிக்க...அவளும் வேறு வழியின்றி...மற்றொரு மோதிரத்தை ஆதித்யனின் விரலில் அணிவித்தாள்.



'முடிந்தது...!என்னுடைய காதலின் கடைசி நினைவாக என்னிடம் இருந்த கடைசிப் பொருளையும்....என் காதலிடமே சேர்த்தாகி விட்டது....!',மன நிறைவுடன் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மேடையை விட்டு இறங்கினான் பாலா.



காதல் யாரையும் வஞ்சிப்பதில்லை....!பாலாவிற்கான காதலை...அந்தக் காதலே ஒருநாள் அவன் கண்ணில் காட்டும்...!அதன் பிறகு...அவன் வாழ்க்கையே ஒரு பூஞ்சோலையாக மாறி விடும்...!அவனுடைய உத்தமமான காதலுக்கு ஏற்ற ஒரு அழகான காதல்...அவனுக்குக் கிடைக்கத்தான் போகிறது....!காதல்...அவனை அப்படியே விடப் போவதில்லை....!



************************************



முதல் இரவு....!அவர்களுக்கே அவர்களுக்கான ஒரு காதல் இரவு....!இதயம் தடதடக்க...இமைகள் படபடக்க ஆதித்யனின் அறைக்குள் நுழைந்தாள் நித்திலா.பூக்களுக்கு மத்தியில் கட்டிலைத் தேட வேண்டியிருந்தது...!அந்த அளவிற்கு சரம் சரமாய் தொங்கிய மல்லிகைப் பூக்களாலும்...சிவப்பு வண்ண ரோஜா மலர்களாலும் கட்டிலை அலங்கரித்து வைத்திருந்தனர் கௌதமும்...சுமித்ராவும்...!



நண்பனுக்கான முதலிரவு அறையை அவனும் சுமித்ராவும் சேர்ந்துதான் அலங்கரித்தனர்.ஆதித்யன் மற்றும் நித்திலாவின் மனநிலையை உணர்ந்திருந்தாலும்...வேண்டுமென்றே ஆதித்யனை உசுப்பேற்றுவதற்காகவே....மலர்களைக் கொட்டி வைத்திருந்தான் கெளதம்.



"அவங்க இருக்கிற மனநிலையில இதெல்லாம் அவசியமா மாமா...?",மறுத்த சுமித்ராவிடமும்,



"யான் பெற்ற இன்பம்...என் நண்பனும் பெற வேண்டாமா ஹனி....?நீ பேசாம...அந்த மல்லிகை பூ சரத்தை தொங்க விடற வேலையைப் பாரு...!",என்று கண்ணடித்து அலங்காரத்தை முடித்திருந்தான்.



கெளதம் நினைத்தது போலவே...அறையின் அலங்காரத்தைப் பார்த்த ஆதித்யன் பல்லைக் கடிக்கத்தான் செய்தான்.



'என் [பொண்டாட்டிக்கு இருக்கிற கோபத்துல...இந்த அலங்காரம் ஒண்ணுதான் குறைச்சல்....!',மலர்களைப் பார்த்தவாறு அவன் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதுதான்....கையில் பால் சொம்போடு உள்ளே நுழைந்தாள் நித்திலா.



இள ரோஜா வண்ண மெல்லிய பட்டுப் புடவையில்...கழுத்தில் அவன் கட்டிய தாலிக் கயிறோடு...ஒரு நகையை மட்டும் அணிந்தபடி...நீண்ட கூந்தலை தளர்வாகப் பின்னி...தலை நிறைய மல்லிகைப் பூவோடு தேவதையாய் இருந்தவளின் அழகு...அவனை பித்தம் கொள்ளச் செய்தது.



கதவுக்கருகிலேயே நின்றிருந்த மனைவியை நோக்கி மெதுவாக முன்னேறினான் ஆதித்யன்.அவன் வருகையை அறிந்து கதவோடு ஒன்றிக் கொண்டாள் அவள்.



அவளருகே நெருங்கி வந்தவன்...அவளை அணைப்பது போல் கையை உயர்த்த...அதில் மேனி நடுங்க விழிகளை மூடிக் கொண்டாள் அவனது மனைவி.சிறு சிரிப்புடன் கையை உயர்த்தி கதவைத் தாளிட்டவன்....அப்படியே அவள் இரு புறமும் கையை ஊன்றியபடி...அவள் முகத்தில் உதட்டைக் குவித்து ஊத...தன் மேல் பட்ட அவனுடைய மூச்சுக் காற்றில் பட்டென்று கண்களைத் திறந்தாள் அந்தப் பாவை....!



கண்களைத் திறந்தவள்...தன்னவனது கண்களில் வழிந்த காதலில் கட்டுண்டவளாய்...அவனையே நோக்க...அவளது பார்வையைக் கண்டு கொண்ட அந்தக் கள்வனோ,'என்ன...?' என்பதாய் வசீகரமாய் தனது புருவங்களை உயர்த்தினான்.



அந்தப் புருவ உயர்த்துதலிலேயே சிக்கி சின்னாபின்னமான மனதை...இறுக்கிப் பிடித்துத் தேற்றியவள்...அவன் கைகளை விலக்கி விட்டுச் சென்று கட்டிலுக்கருகில் இருந்த டீபாயின் மீது 'டொம்'மென்று சொம்பை வைத்தாள்.



"மெதுவா பேபி...!",தன் காதருகே ஒலித்த குரலில் வெடுக்கென்று திரும்பியவள்...தனக்கு வெகு அருகே நின்றிருந்தவனை முறைத்துப் பார்த்தபடி,



"ஸோ....அடுத்தது என்ன...?",என்றாள் அழுத்தமாக.



அவள் குரலில் இருந்த அழுத்தம்...அவன் புருவங்களை முடிச்சிடச் செய்தன.



"புரியலை....!",அவளையே பார்த்தபடி வினவினான் அவன்.



"தி கிரேட் பிஸினெஸ் மேன் ஆதித்யனுக்கு இந்தச் சின்ன விஷயம் புரியாம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு....!",போலியாக வியந்தவள் பிறகு..



"அதுதாங்க....!என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி...இப்போ என்னை வற்புறுத்தி இந்தப் படுக்கையில வீழ்த்தப் போறீங்க....அப்படித்தானே....?",கேலியாக உதட்டை வளைத்து சிரித்தவள்...கட்டிலை சுட்டிக்காட்டினான்.



ஒரு நொடி...புருவம் சுருங்க தீர்க்கமானப் பார்வையை அவள் விழிகளுக்குள் செலுத்தியவன்...பிறகு மெதுவாக நடந்து சென்று கட்டிலில் அமர்ந்தபடி,"பரவாயில்லையே....!தி கிரேட் பிஸினெஸ் மேன் ஆதித்யனுடைய மனைவி மிஸஸ்.நித்திலா ஆதித்யன்...ரொம்ப சரியா அடுத்து நடக்கப் போறதை கண்டுபிடிச்சுட்டாங்களே....!",வியப்பாய் புருவத்தை உயர்த்தினான் அவன்.



அவனுடைய அசட்டையான பேச்சு அவளை கோபப்படுத்தியது.



"ச்சே....!நீங்க இப்படிப்பட்டவர்ன்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல...!கடைசி வரைக்கும்...உங்களுக்கு என் விருப்பம் முக்கியமே இல்லையா...?",ஆத்திரத்துடன் அவள் வினவ,



பொறுமையாய் அவளை ஏறிட்டவன்...மீண்டும் அதே வார்த்தைகளை உச்சரித்தான்.



"உன்னை உனக்காக கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல பேபி...!",என்றவனின் கண்கள் தீக்கங்குகளாய் ஜொலித்தன.



"உங்களுக்கு உங்க சந்தோசம் தான் முக்கியம்...!என் விருப்பத்தை மதிக்கவே மாட்டீங்க...!உங்களுக்குத் தேவை...என் உடம்புதானே....?எடுத்துக்கோங்க....!",கிட்டத்தட்ட கத்தியவள் தனது புடவையை உருவி அவன் முகத்திலேயே விட்டெறிந்தாள்.



அவன் தனது விருப்பத்திற்கு முக்கியத்துவமே கொடுக்க மாட்டான்..என்று அவளே நினைத்துக் கொண்டு...இப்படியெல்லாம் நடந்து கொண்டாள்.அவளைச் சொல்லியும் குற்றமில்லை...!மூன்று நாட்களாய் நடந்த நிகழ்வுகள் அவள் மனதை மிகவும் அலைக்கழித்திருந்தன....!



அவளது தந்தை அவளைப் புரிந்து கொண்டாலும்...அவள் மனதின் ஓரத்தில் ஒரு சிறு கசப்பு இருந்து கொண்டேதான் இருந்தது.'தன்னுடைய ஆது..தனது விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல்...தன்னுடைய கழுத்தில் தாலி கட்டி விட்டான்...!',என்பதுதான் அந்த கசப்பு.அதன் விளைவாகத்தான்...இப்பொழுது புடவையை உருவி எறிந்து விட்டு அவன் முன் நின்றிருந்தாள்.



தன் முகத்தில் அவள் விட்டெறிந்த புடவையை எடுத்து தன் கழுத்தைச் சுற்றிப் போட்டபடி...நிதானமாக எழுந்தவன்...அதை விட நிதானமாக அவளை நோக்கி முன்னேறினான்.



வியர்த்துக் கொட்ட பின்னால் நகர்ந்த நித்திலா...சுவற்றில் சென்று முட்டி நின்றாள்.



அவள் விழிகளை விட்டு இம்மியளவும் தன் பார்வையை அகற்றாமல்...அவளை நோக்கி முன்னேறியவன்...அவளருகில் வந்ததும் அவளை நெருங்காமல் அப்படியே நின்றான்.



ஒரு வேகத்தில் புடவையைக் கழட்டி எறிந்து விட்டாளே தவிர...பயத்தில் தொண்டை வறண்டு உலர்ந்து போனது.எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி அவளைப் பார்த்தாள்...!



பதட்டத்துடன் நின்றிருந்தவளைக் கீழிருந்து மேலாக ஒரு பார்வை பார்த்தவன்,"நான் எடுத்துக் கொடுத்த இந்த ரெடிமேட் பிளவுஸ் உனக்கு வெகு கச்சிதமா பொருந்தியிருக்க பேபி....!",என்றான் மேயும் பார்வையுடன்.



பாவையவளின் முகம்தான் செம்பருத்தி பூவாய் சிவந்து போனது...!



"ச்சீய்....!உங்களுக்கு வெட்கமே இல்லையா...?",கோபமாகக் கேட்க நினைத்தாலும்...அவள் குரல் குழைந்துதான் வந்தது.



"பொண்டாட்டிக்கிட்ட என்னடி வெட்கம்...?அப்புறம்...இந்த பிளவுஸ் மட்டும் இல்ல...நம்ம கல்யாணப் புடவை அண்ட் ரிசப்ஷன் புடவைன்னு எல்லாமே ஐயாவுடைய செலக்சன்தான்....!அத்தனை பிளவுசும் உனக்கே அளவெடுத்து தைச்ச மாதிரி பெர்ஃபெக்டா இருந்துச்சு....!",என்றவனின் பார்வை மேய்ந்த விதத்தில்...அவள் அவசர அவசரமாக அவனது தோளில் இருந்த புடவையை உருவ முயன்றாள்.



"ஊஹீம்...!நான் தர மாட்டேன் பேபி....!வீராப்பா டயலாக் எல்லாம் பேசி இதைக் கழட்டி போட்டது நீதானே...!இப்போ கேட்டால்...நான் கொடுத்திடுவேனா....?",சிறு புன்னகையுடன் கேட்டவன்...அவளை நெருங்க...அவள் தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக வைத்து மறைத்துக் கொண்டாள்.



"பாருடா....!பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு...!பட்...இட்ஸ் டூ லேட் பேபி....!",என்றவன் அவளுக்கு மிக அருகில் நெருங்கியிருந்தான்.



இதயம் எகிறித் துடிக்க...மூச்சுக் காற்று வேகமாக...விழிகளை அழுந்த மூடிக் கொண்டாள் நித்திலா.



மென்மையான புன்னகையுடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்...தன் தோளில் இருந்த புடவையை இரண்டாக மடித்து...அவளது முதுகைச் சுற்றிப் போர்த்தி விட்டான்.



"இன்னும் என் காதலை நீ புரிஞ்சுக்கலை டி...!என்னுடைய காதல் உனக்கானது...!உன் மனசுக்கானது...!உன் உணர்வுகளுக்கானது....!என்னுடையது உடல் தேடும் காதல் இல்லை...!உயிரைத் தேடும் காதல்....!தாம்பத்தியம் அப்படிங்கறது மனசும் மனசும் இணையறது...!ரெண்டு உடல் இணையறது கிடையாது....!",காதலாக உரைத்தவன் அவளை விட்டு விலகி நின்றான்.



"எனக்கு நீ வேணும் பேபி...!உன் மனப்பூர்வமான சம்மதத்தோட நீ வேணும்...!அது வரைக்கும் நான் காத்திருப்பேன்....!",அவனுடைய முரட்டுத்தனமான காதலை மட்டுமே பார்த்து பழகியிருந்தவளுக்கு...அவனுடைய இந்த மென்மையான அணுகுமுறை மெல்லிய சாரலில் நனைந்ததைப் போன்ற சிலிர்ப்பை ஏற்படுத்தியது.



இருந்தும் கோபம் கொண்ட மனம் வெளிவர,"அப்படின்னா...காலம் முழுக்க நீங்க காத்திருக்க வேண்டியதுதான்....!",என்றாள் வெடுக்கென்று.



மர்மமான புன்னகையுடன் அவளை அளவிட்டவன்,"அப்படியெல்லாம் என்னைத் தப்பா எடை போட்டிறாதே பேபி....!என்னுடைய பொறுமையுடைய அளவு உனக்கு நல்லாவே தெரியும்....!அதுவும் உன் விஷயத்துல...என்னை எதுவும் கட்டுப்படுத்த முடியாது....!உன்னைக் காதலிக்கிற காலத்திலேயே நான் சும்மா இருக்க மாட்டேன்....!இதுல...என் பொண்டாட்டியா உரிமையோட என் பெட்ரூம்ல நீ இருக்கும் போது...எவ்வளவு நாள் என்னால பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க முடியும்....?ஸோ...சீக்கிரமா மனசை மாத்திக்க முயற்சி செய்...!இல்லை...நான் மாத்த வைப்பேன்...!",ஒரு மாதிரிக் குரலில் உரைத்தவன்...கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.



கணவனது வார்த்தைகளில் சிலையாய் ஸ்தம்பித்துப் போனவள்...பிறகு ஒருவாறாக தன்னை மீட்டுக் கொண்டு அவனருகில் சென்றவள்,"நான் எங்கே படுக்கறது...?",என்று கேள்வி எழுப்பினாள்.



அவளது கேள்வியில்...கண்களைத் திறந்து அவளை நோக்கியவன்...அவள் நின்ற கோலத்தைக் கண்டு,"நீ இன்னும் இந்த கோலத்துலதான் இருக்கியா பேபி....?இப்படியெல்லாம்...அத்தானுக்கு கண்டபடி மூட் ஏத்தி விடாதே....!அப்புறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை...!",அவள் மேனியில் தன் பார்வையை படரவிட்டபடி அவன் கூற..



அவள் அவசர அவசரமாக..ஒன்றாய் இரண்டாய் புடவையை தன் உடலில் சுற்றிக் கொண்டாள்.மனைவியின் செய்கையை குறும்புப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான் கணவன்.



"இங்கே என்ன பார்வை...?கண்ணை நோண்டிருவேன் நோண்டி....!",முறைத்துக் கொண்டே திட்டியவளைப் பார்த்தவனின் உதடுகளில் எதையோ நினைத்து ரகசியப் புன்னகை ஒன்று வந்தமர்ந்தது.



'எதுக்கு இப்படி ஒரு மார்க்கமா சிரிக்கிறான்...?',யோசனையில் ஆழ்ந்த மனசாட்சியைக் குட்டி அடக்கி விட்டு...வெளியே..



"நான் எங்கே படுக்கறது....?",என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு வைத்தாள்.



"அதுதான்...நாம ரெண்டு பேரும் உருண்டு புரண்டு கட்டிப்பிடிச்சு விளையாடற அளவுக்குப் பெரிசா....கட்டில் கிடைக்குதே...!அதுல வந்து படுக்கறது...!",வெட்கமில்லாமல் அவன் கூறிய விதத்தில்...பெண்ணவள்தான் லஜ்ஜையுற்றாள்.



"உங்க கூட எல்லாம் என்னால படுக்க முடியாது...!",தனது லஜ்ஜையை மறைத்து வெடுக்கென்று பதில் கூற..



இமைக்காத பார்வையை அவளை நோக்கி செலுத்தியவன்,"இப்போ நீயா வந்து படுக்கப் போறியா....?இல்ல...",வார்த்தைகளை முடிக்காமல் அவன் இழுக்க...அவள் சமர்த்துப் பெண்ணாய் அவனுக்கு மறுபுறம் வந்து படுத்துக் கொண்டாள்.



அது எட்டு பேர் தாராளமாக படுத்துத் தூங்கும் அளவிற்கான நீண்ட பரந்து விரிந்த கட்டில்.அதில்...தனக்கும் அவளுக்கும் இடையில் நான்கு நபர்கள் படுக்கும் அளவிற்கு....இடைவெளி விட்டுத் தள்ளிப் படுத்திருந்த மனையாளைப் பார்த்தவனுக்கு கோபம் கோபமாய் வந்து தொலைத்தது.



'ராட்சசி...!இது பர்ஸ்ட் நைட் ரூமுன்னு கொஞ்சமாவது ஒரு நினைப்பு இருக்கா...?புருஷனை 'அம்போ'ன்னு விட்டுட்டு...அவ பாட்டுக்கு படுத்துத் தூங்கறா...!',அவன் பொருமிக் கொண்டிருந்தது போல்...அவள் ஒன்றும் நிம்மதியாய் தூங்கிவிடவில்லை.



'எப்படி நடக்க வேண்டிய முதலிரவு இது...!எவ்வளவு ஆசைகள் எனக்குள்ள இருந்துச்சு..!',வேதனையில் உழன்று கொண்டிருந்தாள் அவள்.



என்னதான் இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே...!உணர்ச்சிகளும் ஆசைகளும் நிறைந்த ஒரு ஜீவன் தானே...!அவளுக்குள்ளும் முதலிரவைப் பற்றிய கனவுகள் இருந்தன....!திருமண வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருந்தன...!



'இவள் எப்படி என் காதலைத் தூக்கி எறியலாம்...?',என்று அவன் கேள்வி கேட்டான்.'இவன் எப்படி எனக்கு விருப்பமில்லை என்று தெரிந்தும் என் கழுத்துல தாலி கட்டலாம்....?',என்பது அவளது வாதமாக இருந்தது.இருவரின் மனஸ்தாபங்களுக்கான அடிப்படைக் காரணமும் காதல்தான்....!அதை இரு உள்ளங்களும் எப்பொழுது உணருமோ....?



எது எப்படியோ...!இருவரும் மற்றவரின் அருகாமையில் சுகமாய் உறங்கிப் போயினர்.இருவரின் மனதிலும் காதல் நிரம்பி வழிந்தது...!அந்த காதல் தந்த நிறைவு நிரம்பியிருந்தது...!



*********************************************

அந்த விசாலமான படுக்கையறையில் அமைந்திருந்த ஜன்னலின் வழியாக...வெளியே தோட்டத்திலிருந்து வந்த பறவைகளின் 'கீச்..கீச்..' ஒலியில்...உற்சாகத்துடன் கண்விழித்தான் ஆதித்யன்.அந்தப் புன்னகைக்கு காரணம் வேறு யாராக இருக்க முடியும்....?அவனின் காதல் கண்மணியைத் தவிர....!



தனக்கு வெகு அருகே தெரிந்த மனைவியின் முகத்தையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.சிறு குழந்தை போல்...கைகளையும் காலையும் குறுக்கிக் கொண்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் காண காணத் தெவிட்டவில்லை அவனுக்கு...!



எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தானோ....?அவளிடம் அசைவை உணர்ந்து...தன் பார்வையை விலக்கி கொண்டு எழுந்தமர்ந்தான்.



"என் செல்ல பேபி...!",அழகாகக் கொஞ்சியவன்...அவளது தூக்கம் கலையாதவாறு..அவள் நெற்றியில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை வைத்து விட்டு குளியலைறைக்குள் புகுந்து கொண்டான்.



காலை கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தவன்...தூங்கும் மனைவியின் அருகில் அமர்ந்தபடி மொபைலை பார்வையிட ஆரம்பித்தான்.மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை எதேச்சையாக மனைவியின் புறம் திரும்ப...பார்த்தவனின் பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றது.



ஒன்றாய் இரண்டாய் அவள் உடலில் சுற்றியிருந்த புடவை வெகு சமர்த்தாய் அதனுடைய வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.பழக்கமில்லாத புடவையைக் கட்டிக் கொண்டு தூங்கியதில்...கணுக்காலுக்கு சற்று மேல்வரை விலகியிருந்த ஆடை...அவளது வாழைத்தண்டு போன்ற வெண்மையான கால்களை கணவனது கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தது...!



அது மட்டுமா...?மேலேயும் இசகு பிசகாக விலகியிருந்த முந்தானை அவளது பெண்மை அழகுகளையும்...வெண்ணெய் போன்று குழைந்த இடையழகையும் வஞ்சணையில்லாமல் அவன் கண்களுக்கு படம் பிடித்துக் காட்டின.



கையிலிருந்த மொபைலைத் தூக்கி எறிந்தவன்...அவளுக்கு மிக நெருக்கமாக வந்து...ஒரு புறமாய் அவளைப் பார்த்தபடி...தனது வலது கையை தலைக்கு கொடுத்து சாய்ந்தபடி...அவளருகே சரிந்து படுத்தான்.



படுக்கையில் கிடந்த ரோஜாப் பூவை கையிலெடுத்தவன்...அதைக் கொண்டு அவளது இடையில் வருட ஆரம்பித்தான்.



தன் இடையில் ஏதோ குறுகுறுக்கவும்...அந்த தூக்கத்திலும் முகத்தைச் சுருக்கி அழகாக சிணுங்கியபடி...அவனை நோக்கி புரண்டு படுத்தவாறு தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள் நித்திலா.



"தூங்குமூஞ்சி குட்டிம்மா...!",செல்லமாக அவளைக் கொஞ்சியவன்...மேலும் ரோஜாப்பூவைக் கொண்டு அவள் இடையில் கோலம் போட..



இடையில் ஏற்பட்ட குறுகுறுப்பிலும்...அவளுடைய நாசி உணர்த்திய அவளுக்கு மிகவும் பிரத்யேகமான வாசனையும்...அவளது விழிகளை விழிக்கச் செய்தது.



வெகு நெருக்கத்தில் தெரிந்த கணவனது காதல் முகத்தை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.தனது கழுத்தடியில் உணர்ந்த அவனின் வெப்ப மூச்சுக்காற்றில் நிதர்சனத்தை உணர்ந்தவளாய்...வெடுக்கென்று அவனைத் தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தாள்.



"என்ன இது....?",முறைப்புடன் அவள் கேட்க..



"ஹி..ஹி...!ரோஜா பூ பேபி...!",அபத்தமாய் அசடு வழிந்து வைத்தான் அவன்.



அவள்..அவனை முறைத்துக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு தட்டப்பட்டது.'ஹப்பாடா...!தப்பித்தோம்....!',என்று அவள் நிம்மதியடைய...நித்திலா அவசர அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கி கதவைத் திறக்கப் போனாள்.



"அடியேய்....!எங்கே டி போற....?நில்லு...!",பதறியபடியே அவன்...அவளுக்கு முன்னால் வந்து வழியை மறிக்க..



"ப்ச்...!விளையாடாதீங்க....!யாரோ கதவைத் தட்டறாங்க பாருங்க...!போய் திறக்க வேண்டாமா....?",கதவைத் திறக்கப் போவதிலேயே குறியாய் இருந்தாள் அவள்.



"ஏய்ய்....!இந்த கோலத்துல போய் கதவைத் திறந்தேன்னு வை...உன் மானத்தோட என் மானமும் சேர்ந்து பறக்கும்....!",அவன் அலறிய பின்தான்...அவள் குனிந்து தன் உடையைப் பார்த்தாள்.



விடிய விடிய முதலிரவு கொண்டாடி முடித்த புது மணப்பெண்ணிற்கான சர்வ லட்சணங்களுடன் இருந்தாள்.தலை கலைந்து...கூந்தலில் சூடியிருந்த மல்லிகை பூ காய்ந்து போய் அவள் தோளில் தொங்க...உடலில் சுற்றியிருந்த புடவை கண்டபடி விலகியிருந்தது.



"அய்யோ...!",பதறியபடி புடவையை சரி செய்தவள்...தன் பெட்டியில் இருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.சிரித்தபடியே சென்று கதவைத் திறந்தான் ஆதித்யன்.அவனுடைய அம்மாதான் இரண்டு காபி கோப்பைகளும்...பிளாஸ்க்கும்...செய்தித்தாளும் அடங்கிய தட்டுடன் நின்றிருந்தார்.



"நீங்க எதுக்கும்மா இதையெல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?வேலைக்கார அம்மாக்கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கலாம்ல....?",செல்லமாக கடிந்து கொண்டபடி தட்டை வாங்கினான்.



"இருக்கட்டும் ப்பா...!சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்பி கீழே வாங்க...!மறு வீட்டுக்கு கிளம்பணும்....!",புன்னகையுடன் உரைத்தபடி சென்று விட்டார்.



கதவைத் தாளிட்டவன்...ஒரு பக்கச் சுவரில் பாதி வரைக்கும் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கு அருகில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து காபியை பருக ஆரம்பித்தான்.உள்ளிருந்து பார்த்தால் வெளியே இருக்கும் தோட்டம் அப்படியே தெரியும்.ஆனால்...வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அந்தக் கண்ணாடி வழியாக எதுவும் தெரியாது.



அவன் காபியை குடித்து விட்டு...செய்தித்தாளை பார்த்து முடிக்கவும்...குளியலறையிலிருந்து நித்திலா வரவும் சரியாய் இருந்தது.வெள்ளை நிற நைட்டி அணிந்திருந்தவள்....தலைக்கு குளித்திருப்பாள் போலும்...!தலையில் ஒரு துண்டை சுற்றிக் கொண்டு...நெற்றியில் முத்து முத்தாய் நீர் திவலைகள் படிந்திருக்க வெளியே வந்தவள்...ஆதித்யனை நெருங்கி"யாரு கதவைத் தட்டினா....?",என கேள்வியெழுப்பினாள்.



"அம்மா தான்...!நம்ம ரெண்டு பேரையும் சீக்கிரமா கிளம்பி கீழே வர சொன்னாங்க...!",முணுமுணுத்தபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.



ஆதித்யன் குளித்து முடித்து விட்டு வந்த போது...நித்திலா வெளிர் மஞ்சள் நிற மெல்லிய சரிகையிட்ட பட்டுப்புடவைக்கு மாறியிருந்தாள்.அதோடு தாலியை எடுத்து வெளியே போட்டபடி....மும்முரமாக அந்த தாலியில் எதையோ செய்து கொண்டிருந்தாள்.



"என்ன பண்ணிக்கிட்டு இருக்க பேபி....?",அவளருகில் நெருங்கியபடி அவன் வினவ..



"ம்...நீ கட்டின தாலியும் உன்னை மாதிரியே அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கு....!",முகத்தை சுருக்கியபடி கூறியவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பாய் வந்தது.



அவள் அப்படித்தான்...!சில சமயங்களில் அவனை மரியாதையாக அழைப்பாள்.ஆனால்...கோபமோ...காதலோ பெருகும் போது இப்படித்தான் ஒருமையில் அழைத்து வைப்பாள்...!



"என் குட்டிம்மாவைக் கோபப்படுத்தி பார்க்கிற அளவுக்கு....நான் கட்டின தாலி அப்படி என்ன அழிச்சாட்டியம் பண்ணுது....?",



"இங்கே பாருங்க....!இந்த செயினோட போய் எப்படி சிக்கிக்குதுன்னு....?",குழந்தை போல் அவன் முன் தாலியைத் தூக்கி காண்பித்தாள் அவள்.



"அவ்வளவுதானே....!உன் அத்தான் இதை சரி பண்ணிடறேன்....!",என்றபடி அந்த சிக்கலை அவிழ்க்க ஆரம்பித்தான்.



சிறிது நேரம் கழித்துத்தான் நித்திலாவிற்கு அவன் நிற்கும் நிலையே உரைத்தது.குளித்து விட்டு வந்தவன்...வெறும் துண்டை மட்டும் தன் இடையில் கட்டியிருந்தான்.



அவனது முறுக்கேறிய புஜங்களிலும்...உருண்டு திரண்டிருந்த தோள்களிலும் அவளது பார்வை படிந்தது...!அவனது வெற்று மார்பில் படிந்திருந்த நீர் திவலைகளைக் கண்டவளின் மனம் ஊசலாட ஆரம்பித்தது.



அதிலும்....அவன் முகம் அவளது நெஞ்சுக்குழிக்கு வெகு அருகே குனிந்திருக்க...அவனது கரங்களோ தாலியைப் பற்றி சிக்கலை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தது.



அவனது முயற்சியில்...அவனுடைய கரங்கள் பட்டும் படாமல் மெலிதாய் அவளது மென்மைகளை வருடிச் செல்ல....அவள்தான் விதிர்த்து விறுவிறுத்துப் போனாள்.ஆனால்...இதை எதையும் அவன் உணரவில்லை...!காரியமே கண்ணாய் அந்த முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்தான்.



அப்பொழுது பார்த்து...அவன் தலையில் சொட்டிய நீர்த்துளி ஒன்று...அவள் கழுத்தில் பட்டுத் தெறிக்க...அவ்வளவுதான்...!அந்தப் பாவையின் இதயம் பந்தயக்குதிரையை விட வேகமாய் தடதடக்க ஆரம்பித்தது...!அவனது தலைமுடி மெல்லிய சாரலாய்...அவள் கழுத்தை வருடிச் செல்ல...அதற்கு மேல் தாள மாட்டாதவளாய் நெளிந்தாள் அவள்.



"ம்ப்ச்....!அசையாதே டி....!",அதட்டியவன் மேலும் குனிந்து தனது வேலையை ஆரம்பிக்க..



"போ..போதும்....!",திக்கித் திணறினாள் அவள்.



அப்பொழுதுதான் அவளது மாற்றத்தை உணர்ந்தவன்...நிமிர்ந்து அவளை நோக்க...அவள் முகமோ செங்கொழுந்தாய் சிவந்து போயிருந்தது.



மெலிதாக விசிலடித்தவன்...அவள் விழிகளுக்குள் ஆழப் பார்வை பார்த்தபடியே அந்த சிக்கலை அவிழ்த்து முடித்தான்.



"முடிஞ்சுது பேபி...!",அவன் கிசுகிசுக்க..



அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நாணம் தடுக்க...ஒரே ஓட்டமாய் வெளியே ஓடிவிட்டாள் அவனது மனையாள்...!அவனது விசில் சத்தம் அவளைத் துரத்தியது...!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 57 :



"கொஞ்சம் தள்ளித்தான் உட்காருங்களேன்....!",தன்னருகே பசை போட்டு ஓட்டியதைப் போல் உரசிக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யனைப் பார்த்து பல்லைக் கடித்தாள் நித்திலா.



"நீ சொன்ன பிறகு...நான் தள்ளி உட்காராம இருப்பேனா பேபி....!",அவள் காதருகில் கிசுகிசுத்தவன் அவளிடம் நெருங்கி ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்தான்.



"அய்யோ...!நான் அந்தப் பக்கம் தள்ளி உட்கார சொன்னேன்....!",அதற்கு மேல் நகர்ந்து அமர முடியாதபடி கார்க்கதவு அவளைத் தடுக்க...முன்னால் காரை ஓட்டிக் கொண்டிருந்த கேசவனுக்கும்...அவனருகில் அமர்ந்திருந்த தீபிகாவிற்கும் எதுவும் கேட்டு விடக் கூடாது என் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.



"எனக்கு இந்த பக்கம்தான் வசதி பேபி....!",என்றபடி மேலும் ஒட்டி உராய்ந்தவனைக் கண்டு அவளால் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது.



ஆதித்யனும்...நித்திலாவும் மறு வீட்டு விருந்திற்காக கோவை வந்து ஒரு நாளாகிறது.வீட்டு மாப்பிள்ளை என்ற முறையில் எந்தவொரு குறையும் வைக்காமல் பார்த்து பார்த்து உபசரித்தார் மீனாட்சி.ஆனால்...மகளிடம் முகம் கொடுத்துக் கூட பேச மறுத்துவிட்டார்.ஆதித்யனிடம் கூட...மருமகன் என்ற முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியவர்....நித்திலாவிடம் அதையும் பேசவில்லை.



கேசவனும்...தீபிகாவும் அதிதி குட்டியுடன் வந்திருந்தனர்.இரண்டு மகள்களும்...இரண்டு மாப்பிளைகளும் சேர்ந்து வீடே கலகலப்பாக இருந்தது.இன்று...அதிதி குட்டியை பெரியவர்களிடம் விட்டு விட்டு...சிறியவர்கள் நால்வரும் கோவை குற்றாலம் கிளம்பி விட்டனர்.



நித்திலா...ஆதித்யனிடம் தள்ளி அமரச் சொல்லி முறைத்துக் கொண்டிருக்கும் போதே...கார் கோவை குற்றாலத்துக்குள் நுழைந்தது.நால்வரும் இறங்கி நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.



இருபுறமும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான காட்டு பாதையில் சிறிது தூரம் நடந்து சென்ற பிறகுதான் அருவியைக் காண முடியும்.அந்தப் பயண தூரத்திற்கும் சுற்றுலாத்துறை சார்பாக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நால்வரும் அதை மறுத்து விட்டு நடந்தே சென்றனர்.



கேசவனும்...தீபிகாவும் கை கோர்த்தபடி முன்னால் சென்று விட....இவர்கள் இருவரும் பின்னால் வந்தனர்.மெலிதாக மழை சாரல் வீசிக் கொண்டிருக்க....அதில் நனைந்தபடி...உடலைத் தழுவும் சில்லென்ற காற்றில் நடப்பது ஏகாந்தமான சூழலைத் தோற்றுவித்தது.அதோடு....மனதுக்குப் பிடித்தவர்களின் அருகாமை வேறு...!இருவரும் அந்த நிமிடங்களை ரசித்தபடி...மௌனமாய் நடந்தனர்.



அருவி என்று சொல்லிவிட முடியாது.சற்று நீண்ட பாறையில் இருந்து 'சோ'வென்று நீர் கொட்டிக் கொண்டிருந்ததே...அருவி போலொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.அருவியிலிருந்து சொட்டி கீழே இறங்கிய நீர்...ஆறைப் போல் ஓடிக் கொண்டிருந்தது.அவ்வளவாக கூட்டம் இல்லை.அங்கொருவர் இங்கொருவராக சிலரே விளையாடிக் கொண்டிருந்தனர்.



அருவியைக் கண்டதும்,"ஒகே ஆதி....!நான் என் பொண்டாட்டியோட உத்தரவு வாங்கிக்கிறேன்....!நீ உன் பொண்டாட்டியோட என்ஜாய் பண்ணு....!",என்றபடி தீபிகாவைத் தள்ளிக் கொண்டு அருவிப் பக்கம் சென்று விட்டான் கேசவன்.



அவனுக்கு அவன் கவலை....!குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் இணைந்து எங்கேயும் வெளியே சென்றிருக்கவில்லை.இன்று...வாய்ப்பு கிடைக்கவும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.



"ஏய்...!தீபிகா....!இருடி...!நானும் வர்றேன்....!",கத்தியபடியே அவர்கள் பின்னால் செல்லப் பார்த்த நித்திலாவைக் கையைப் பிடித்து தடுத்தான் ஆதித்யன்.



"கையை விடுங்க....!அவங்க போறாங்க பாருங்க...!",அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே...அவர்கள் இருவரும் அருவி நீருக்குள் சென்று மறைந்தனர்.



"அடியே என் மக்கு பொண்டாட்டி...!அவங்களே தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணறதுக்காக...நம்மளை கழட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க....!இதுல கரடி மாதிரி நீயும் பின்னாடி போறேன்னு சொல்ற....!",அவன் கூறவும்தான் அவளுக்கு உரைத்தது.



"ஓ....!",அவள் இழுக்க..



"என்ன 'ஓ..'!இது கூட தெரியலை...?உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு....",அதற்கு மேல் எதையோ அவன் வாய்க்குள்ளேயே முணுமுணுக்க..



அவனது முணுமுணுப்பை அவள் கவனித்தாலும்...என்ன முணுமுணுக்கிறான் என்றுதான் காதில் விழவில்லை.



"சரி...சரி...!போதும்...!இதுதான் சாக்குன்னு என்னை மட்டம் தட்டாதீங்க....!",முறைத்துக் கொண்டிருந்தவளின் விழிகளில்...அருவியில் இருந்து வழிந்து ஆறு போல் ஓடிய நீர் விழுந்தது.



"வாவ்....!ஆது....!அந்த இடம் நல்லாயிருக்கல்ல....!அங்கே போய் விளையாடலாமா....?",நொடியில் முறைப்பை மறைந்து சிறு குழந்தையாய் ஆர்பரித்தவளைக் கண்டவனின் மனம் காதலால் கனிந்தது.



"நீ கேட்டு நான் மறுப்பேனா பேபி....?",அவளை அங்கு அழைத்துச் சென்றான்.இருவரும் நீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தனர்.



சிறு குழந்தை போல்...தண்ணீரை கைகளால் அள்ளி...மேல் நோக்கி வீசியபடி விளையாடியவளைக் கண்டவனுக்கு ஆசை ஆசையாய் வந்தது.தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனின் மேல்...குறும்பாய் நீரை வாரியிறைக்க...அதில் தன்னிலைக்கு வந்தவன்,



"ஏய்ய்...!ஃபிராடு....!",சிரித்தபடியே அவள் மேல் திருப்பி நீரை இறைத்தான்.ஒருவர் மேல் ஒருவர் நீரை வாரியிறைத்துக் கொண்டு...இளம் காதலர்களாய் குதூகலித்துக் கொண்டிருந்தனர்.



ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போனவளாய்,"போதும் ஆது....!",என்றபடி விளையாட்டை நிறுத்தினாள்.



"ஏன் பேபி....!இவ்வளவு ஆசையா விளையாடற...?இப்போத்தான் முதல் முறை இங்கே வர்றியா...?",



"ம்ம்...இங்கேதான் இருக்கிறேன்னு பேரு...!ஆனால்...இன்னும் இங்கே வந்ததில்லை...!இந்த மாதிரி அருவி...ஆறுகெல்லாம் அம்மா விட மாட்டாங்க....!",



"ஓ....",



"ஆது...!உங்களுக்கு நீச்சல் தெரியுமா....?",திடீரென்று அவனைப் பார்த்து வினவினாள் அவள்.



"ம்....!தெரியும்....!",



"ஹை....ஜாலி....!அப்போ எனக்கு கத்து கொடுக்கறீங்களா....?",தன் இரு கைகளையும் தண்ணீரில் அடித்தபடி குதூகலித்தவளை...ஒரு மார்க்கமாக பார்த்தவன்..



"கத்து கொடுக்கிறேன் பேபி....!ஆனால்...இங்கே இல்ல...!நம்ம வீட்டு நீச்சல் குளத்துல கத்துக் கொடுக்கிறேன்...!"என்றான்.



"ம்ஹீம்....!இல்லல்ல....!இப்பவே...இங்கேயே கத்துக் கொடுங்க....!",அவள் அடம்பிடித்ததில்...'இவள் புரிந்துதான் பேசறாளா....?',என மனதிற்குள் நினைத்தபடி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.



"புரிஞ்சுக்கடி...!இங்கேயெல்லாம் கத்துக் கொடுக்க முடியாது...!நம்ம சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலை...உனக்கு நீச்சல் கத்துக் கொடுக்கறதுதான்....!ஒகே வா....?",அவன் கூறிய சமாதானத்தில் அவள் அப்போதைக்கு அமைதியானாள்.



"நாமளும் அருவிக்கு போகலாமா....?",ஆர்வத்துடன் வினவியவளை அழைத்துக் கொண்டு அருவிப் பக்கம் சென்றான்.



ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் இருவரும் நனைந்தனர்.நித்திலாவைத் தன் இடையோடு சேர்த்து அணைத்தபடி...தன் கையணைவில் வைத்துக் கொண்டே அருவியில் நனைந்தான் ஆதித்யன்.ஒருவரின் அருகாமை மற்றொருவருக்குள் காதல் தீயை மூட்டி விட்டது...!இருவருக்குள்ளும் பற்றியெரிந்த மோகம் என்னும் நெருப்பை...அந்த குளிர்ந்த அருவியால் கூட அணைக்க முடியவில்லை...!



வேட்கையோடு அவன்...அவளது இடையைப் பற்றியிருந்த தனது கரங்களில் அழுத்தத்தைக் கூட்ட...அதில் சுதாரித்தவளாய் அவனை விட்டு விலகி...அருவி நீரில் இருந்து வெளிவந்தாள் நித்திலா.வெகு நேரம் தாபம் தனியாதவனாய் அந்த அருவி நீரில் நனைந்து விட்டுத்தான் வெளிவந்தான் ஆதித்யன்.



சிறிது நேரத்தில் கேசவனும்...தீபிகாவும் வந்து இவர்களுடன் இணைந்து கொள்ள...நால்வரும் காரை நோக்கி நடந்தனர்.வீசிய மெல்லிய காற்றில் நால்வரது உடைகளும் உலர்ந்து போயிருந்தன.வழியிலிருந்த தோப்பு ஒன்றில் காரை நிறுத்தி...மீனாட்சி கட்டி கொடுத்திருந்த டிபன் வகைகளை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.



அன்று...ஆதித்யனும்..நித்திலாவும் ஊருக்கு கிளம்பும் நாள்.நிறைய பலகாரங்களை தன் கையாலேயே செய்து...பல டப்பாக்களில் அடைத்து...கார் டிக்கியை நிறைத்திருந்தார் மீனாட்சி.அவளுக்குத் தேவையான அனைத்தையும் அவர் பார்த்து பார்த்து செய்தாலும்....நித்திலாவிடம் வாயைத் திறந்து ஒருவார்த்தை பேசவில்லை.



மாமியாரின் கோபத்தையும்...தனது மனைவியின் முக வாட்டத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ஆதித்யன்.நித்திலா குளித்துக் கொண்டிருக்கும் போது...மீனாட்சியைத் தேடி சமையலறைக்குச் சென்றான்.



"அத்தை....!",



அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருந்த மீனாட்சி...மாப்பிள்ளையின் குரலில் அவசர அவசரமாகத் திரும்பிப் பார்த்தார்.



"சொல்லுங்க மாப்பிள்ளை...!குடிக்க ஏதாவது வேணுமா...?",மாமியாராய் உபசரிக்க..



"இல்லைங்க அத்தை...!நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...!",ஆதித்யனின் குரலில் இருந்த உறுதியில்...அவர் யோசனையுடன் அடுப்பை அணைத்து விட்டு அவன் முகம் நோக்கினார்.



"நிலா மேல உங்களுக்கு இருக்கிற கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது...!உங்க ஆதங்கம் நியாயமானதுதான்....!ஆனால்...நான் உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்ல விரும்பறேன்...!நீங்க அவள் மேல வைத்த நம்பிக்கைக்கு அவள் துரோகம் பண்ணலை...!உங்க மகளா...அவள் உங்க நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறாள்...!இதை மட்டும்தான் என்னால சொல்ல முடியும்....!உங்கள் மகளுக்கு நீங்க கொடுக்கிற தண்டனை அதிகம்தான்...!",அவர் முகம் பார்த்து உரைத்தவன்....அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் தங்களது அறைக்குள் புகுந்து கொண்டான்.



மருமகனது பேச்சில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த மீனாட்சியின் தோளில் ஆறுதலாக கை வைத்தார் கிருஷ்ணன்.



"என்னங்க...!",அதற்கு மேல் அவராலும் தன் கணவரிடம் எதையும் பேச முடியவில்லை.



"மாப்பிள்ளை சொன்னதை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் மீனு...!உன்னால ஏன் நம்ம பொண்ணு மேல நம்பிக்கை வைக்க முடியலை...?ஏதோ நடந்திருக்கு டி....!அதை நம்மகிட்ட கூட நம்ம பொண்ணால சொல்ல முடியலை....!",



"என்னங்க சொல்றீங்க....?ஆனால்...ரெண்டு பேரையும் பார்க்கும் போது...இது கட்டாயத்துக்காக நடந்த கல்யாணம் மாதிரி தெரியலையே....?இரண்டு பேரோட கண்களிலேயும் காதல் தெரியுது....!",குழப்பமாக வினவிய மனைவியை ஆதுரத்துடன் நோக்கியவர்,



"இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வைச்சிருக்காங்க மீனு...!அதுல எந்த சந்தேகமும் இல்ல...!அதே சமயம்...நம்ம பொண்ணு நம்மளை மீறி கல்யாணம் பண்ணவும் மாட்டாள்...!அதனாலதான் சொல்றேன்...ஏதோ நடந்திருக்கு...!",என்றார் யோசனையுடன்.



"அதை நம்மகிட்ட சொன்னால்தான் என்ன...?",சற்று ஆற்றாமையோடு வினவினார் மீனாட்சி.



"இல்லை டி...!ஒரு சில விஷயங்களை பெத்தவங்ககிட்ட கூட சொல்ல முடியாது....!நம்ம பொண்ணு...அந்த வீட்டுமருமகளா யோசித்திருக்கிறாள்....!மாப்பிள்ளையுடைய மனைவியா நடந்திருக்கிறாள்....!நம்ம பொண்ணு வளர்ந்திட்டாள் டி....!",ஆனந்தக் கண்ணீருடன் கூறிய கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார் மீனாட்சி.



அவரும் ஒரு வீட்டின் மருமகள் தானே....!பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக குடும்பம் நடத்தியவர்தானே...!தன் மகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டார்.



"வர்றேன் டி...!வர்றேன் மாமா...!",கேசவனிடமும்...தீபிகாவிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் வந்தாள் நித்திலா.



ஆதித்யனையும் நித்திலாவையும் வழியனுப்புவதற்காக அனைவரும் வாசலில் குழுமியிருந்தனர்.



நித்திலாவினால் தன் தந்தையின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.வேலைக்கு என்று இவ்வளவு காலம் வீட்டை விட்டு பிரிந்திருந்தாலும்...இப்பொழுது...திருமணம் முடிந்து பிரிந்து செல்வது என்பது வேதனையைத் தந்தது.



"போய்ட்டு வர்றேன் ப்பா...!",கண்ணீருடன் தன் முன் வந்து நின்ற மகளைக் கண்டவருக்கு அதற்கு மேல் முடியவில்லை.அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் அந்த தந்தை.



"போய்ட்டு வாடா....!",அவரது கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.அவரது உதடுகளோ புன்னகையுடன் மகளை வழியனுப்பியது.



"சரி....!போதும்...!பொண்ணை வழியனுப்பும் போது இப்படித்தான் கண்ணீரோட வழியனுப்புவாங்களா...?",மீனாட்சியின் அதட்டலில் இருவரும் தங்களது கண்களைத் துடைத்துக் கொண்டனர்.



"அம்மா...!",பாசத்திற்கு ஏங்கும் கன்றாய் அவள்...தன் தாயின் முகம் காண...அவ்வளவுதான்...அடுத்த நொடி...தன் கோபத்தையெல்லாம் மறந்தவராய்...தன் இரு கைகளையும் விரித்து மகளை 'வா'வென்று அழைத்திருந்தார்.



ஓடிச் சென்று அவரைக் கட்டிக் கொண்ட நித்திலாவின் உதடுகளில் இருந்து,"ஸாரி ம்மா...!எ..என்னை மன்னிச்சிடுங்க....!",என்ற வார்த்தைகள்தான் தேம்பலுக்கு இடையே வந்து விழுந்தன.



தன் மகளின் முகத்தை நிமிர்த்தி...அவளது விழிநீரை துடைத்து விட்டவர்,"எதுக்கு இந்த மன்னிப்பு....?என் பொண்ணைப் பற்றி எனக்குத் தெரியும்...!முதல்ல அழறதை நிறுத்து...!உன் வாழ்க்கையை நீ தொடங்கப் போகிற போது அழக் கூடாது...!",மென்மையாய் அறிவுறுத்தினார் அவர்.



"அம்மா...!என் மேல உங்களுக்கு கோபம் இல்லையே....?",



"என் பொண்ணு மேல எனக்கு கோபம் வருமா....?நீ சந்தோஷமா இருக்கணும் டா....!மாப்பிள்ளை மனசைப் புரிஞ்சு நடந்துக்கோ....!இனி...அவருடைய குடும்பம் தான் உன்னுடைய குடும்பம்....!",ஒரு தாயாய் அவர் அறிவுரை கூற...தலையை ஆட்டி கேட்டுக் கொண்டாள் நித்திலா.



ஒரு வழியாக...அனைவரிடமும் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டு..ஆதித்யனின் கையைப் பிடித்தபடி காரில் ஏறினாள் நித்திலா.காரை ஓட்டுவதற்கு ட்ரைவரை நியமித்திருந்தான் ஆதித்யன்.ட்ரைவர் காரை எடுக்க...தன் பார்வை வட்டத்திலிருந்து அனைவரும் மறையும் வரை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே வந்தாள் நித்திலா.



அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்டு...ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டான் அவளது கணவன்.அவனது மார்பில் சாய்ந்து வெகு நேரம் தேம்பிக் கொண்டே வந்தவள்...பிறகு அயர்ச்சியில் கண்ணுறங்கி விட்டாள்.



அவளது தூக்கம் கலையாதவாறு அவளைத் தன் மடியில் படுக்க வைத்தவன்...மென்மையாக அவள் முடி கோதி நெற்றியில் இதழ் பதித்தான்...காதலாக...!



*******************************************************



"சந்தியாக் கால மேகங்கள்
பொன்வானில் ஊர்வலம் போகுதே....!
பார்க்கையில் ஏதோ நெஞ்சிலே...
உன் நடையின் சாயலே தோன்றுதே...!",




பாடலை முணுமுணுத்துக் கொண்டே பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த சுமித்ராவின் இடையை...இரு வலிய கரங்கள் அணைத்தன.திரும்பிப் பார்க்காமலேயே அவளுக்குத் தெரிந்தது...அது தன் மணாளன்தான் என்று....!



"என்ன டி பாட்டெல்லாம் பலமா இருக்கு....?",அவளது தோள் வளைவில் முகம் புதைத்து...அவளைப் பார்த்தபடி கெளதம் வினவ...அவனை நோக்கி ஒரு காதல் புன்னகையைச் சிந்தியவள்...மேலும் பாட ஆரம்பித்தாள்.



"தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்...!
மிகப் பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்...!",




காதலோடு அவன் முகம் பார்த்துப் பாடியவளின் காதலில்...அவன் கொள்ளை போனான்.



"கொல்றே டி...!",கிறக்கத்துடன் கூறியபடியே அவளது தோள் வளைவில் முத்தம் பதித்தான்.



"இன்னைக்கு என்ன விஷயம்...?என்னுடைய மாமா சீக்கிரமே ஆபிஸ்ல இருந்து வந்துட்டாங்க...!",கணவனது தீண்டலில் சிலிர்த்தபடியே வினவினாள் சுமித்ரா.



"என்னுடைய பொண்டாட்டிக்கு பிடிச்ச ஒண்ணை கொடுக்கலாம்ன்னு ஓடி வந்துட்டேன்....!",



"அப்படியா....!உங்களுடைய பொண்டாட்டிக்கு அவளுடைய மாமாவைத்தான் ரொம்ப பிடிக்குமாம்...!",கழுவிக் கொண்டிருந்த பாத்திரங்களை மறந்தவளாய்...திரும்பி நின்றபடி அவனது கழுத்தில்...தனது கைகளை மாலையாக்கி...அவனைத் தன்னை நோக்கி இழுத்தாள் அவள்.



"அப்போ...அவளுடைய மாமனையே மொத்தமா கொடுத்துதுட்டா போச்சு...!",அவள் இஷ்டத்திற்கு வளைந்து கொடுத்தபடியே கூறியவனின் கரங்கள்...அவளது இடையில் அழுத்தமாகப் பதிந்து படர்ந்தன.



ஒரு கணம் விழிகளை மூடி...அவன் கரங்கள் ஏற்படுத்தும் குறுகுறுப்பை ரசித்தவள்...பிறகு,"அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கணும் மாமா....!",குறும்பாகக் கூறியபடியே அவன் கைகளைத் தட்டி விட..



"ம்ம்...தெரியும்....!",முணுமுணுத்தவன் தான் மறைத்து வைத்திருந்த ஒரு ஸ்வீட் பாக்ஸை எடுத்து அவள்முன் நீட்டினான்.



"ஹை....ஸ்வீட்....!",ஆசையுடன் அதைப் பிரித்துப் பார்த்தவள் உற்சாகமாகக் கூச்சலிட ஆரம்பித்தாள்.



"வாவ்....!எனக்கு பிடிச்ச ரசமலாய்....!",ஆசையுடன் விழிகளை விரித்தவளின் இமைகளின் மீது முத்தம் இட்டவன்..



"என் ஹனிக்காகத்தான் இந்த ரசமலாய்....!",அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே...அவனது மொபைல் அலற,"ஒரு நிமிஷம் டா....!",மொபைலை காதுக்கு கொடுத்த படி தங்களது அறைக்குள் நுழைந்தான்.



அலைபேசி உரையாடலை முடித்து விட்டு...கெளதம் உடைமாற்றி வரும் போது...சுமித்ரா ஹால் சோபாவில் அமர்ந்து கிண்ணத்தில் இருந்த ரசமலாயை மொக்கிக் கொண்டிருந்தாள்.



"என் ஹனிக்கு ரசமலாய் பிடிச்சிருக்குதா....?",வினவியபடியே அவன்...அவளருகில் வந்து அமர..



"ம்ம்...!சூப்பர் மாமா....!"தன் நாவை சுழற்றியபடியே கூறியவள்,"நீங்க சாப்படறீங்களா....?",என்று வினவ..



அவனோ...அவளையே பார்த்தபடி 'ஆமாம்...!' என்பதாய் தலையசைத்தான்.



"இருங்க...!நான் போய் எடுத்துட்டு வர்றேன்....!",எழ போனவளின் கை பிடித்து மீண்டும் அமர வைத்தவன்..



"எனக்கு அந்த ரசமலாய் வேண்டாம்...!இந்த ரசமலாய் தான் வேணும்....!",அப்பொழுதுதான் முழுதாக ஒரு ரசமலாயை வாயில் போட்டதால்...சர்க்கரைப் பாகில் பளபளத்த அவளது இதழ்களை வெட்கமில்லாமல் மொய்த்தது அவனுடைய பார்வை.



அவனது பார்வையில் அவள்,"வே...வேண்டாம்....!",என்றபடி பின்னால் சாய்ந்தாள் அவள்.



"ம்ஹீம்....!எனக்கு வேணும்...!",அவன்...அவள் மீது சாய..அவள் அப்படியே சோபாவில் சரிந்தாள்.



சோபாவில் சரிந்தவளின் மேல் படர்ந்தவன்,"ஹனி ரசமலாய்....!",கிசுகிசுத்தபடியே அவன்..அவள் இதழ் நோக்கி குனிய...அவள் விழிகளை மூடிக் கொண்டாள்.



அவளது இதழ்களோடு...தன் உதடுகளை இழைத்தவன்...தேன் சிந்தும் அவளது அதரங்களில் இருந்து தேனெடுக்கும் பணியை மும்முரமாய் ஆற்ற...அந்தப் பாவையோ அவனது பின்னந்தலை முடியை இறுகப் பற்றியபடி அவனுக்கு இழைந்து கொடுத்தாள்.



வெகு நேரம் அவளது இதழ்களின் மென்மையில் கரைந்திருந்தவன்...நிமிரும் போது...அவள் வாயில் இருந்த ரசமலாய்...அவனது வாய்க்குள் இடம் பெயர்ந்திருந்தது.



"செம டேஸ்ட்டு டி....!",தன் உதடுகளை நாவால் சுழற்றியபடியே அவன் கூற..



"ச்சீய்...!திருடா....!",முகம் சிவக்க வெட்கப்பட்டாள் அவள்.



"திருடனா...?எனக்கெல்லாம் எந்தப் பொருளையும் திருடி பழக்கம் இல்லைம்மா....!"அவன் குறும்பாய் கண் சிமிட்ட..



"கள்ளா...!இப்போ திருடினதுக்கு பெயர் என்னவாம்...?",செல்லமாய் சிணுங்கினாள் அந்த மங்கை.



"அப்போ...திருடியதை திருப்பிக் கொடுத்திட வேண்டியதுதான்....!",கூறியவன் கிண்ணத்தில் இருந்த ரசமலாயை எடுத்து வாயில் போட்டபடி...மீண்டும் அவள் இதழ்களை நெருங்க..



"ச்சீய்....!வே..வேண்டாம்....!",வார்த்தைகளை முடிப்பதற்குள்ளேயே அவளது இதழ்களைக் கவ்வியிருந்த அந்தக் கள்வன்...அவளிடம் இருந்து திருடியதை அவளிடமே திருப்பி ஒப்படைத்த பிறகுதான் நிமிர்ந்தான்.



"பொறுக்கி....!",அவளது இதழ்கள் அவளையும் அறியாமல் சப்புக் கொட்டியது.



"எப்படி....செம டேஸ்ட்டா இருக்கல்ல....?",கண்ணைச் சிமிட்டியபடி அவன் வினவ..



"ம்ம்....!",நாணத்தில் சிவந்தபடியே அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.அவனிடமிருந்து அட்டகாசமான சிரிப்பு ஒன்று எழுந்தது.



அவளது மார்பின் மீது படுத்துக் கொண்டு...அவனுக்காய் துடிக்கும் அவளது இதயத்துடிப்பை அவதானித்தபடி...விழிகளை மூடியிருந்தான் கெளதம்.தன் நெஞ்சத்தையே மஞ்சமாக்கித் தனது மன்னனுக்கு கொடுத்திருந்தவள்...அவனது தலைமுடியைக் கோதியபடி விழிகளை மூடியிருந்தாள்.



இந்த ஆலிங்கனம்தான் எவ்வளவு அழகானது....!அவளது இதயத்துடிப்பை அவன் செவிமடுக்க...அவனை ஒரு குழந்தையாய் தன் மார்பில் ஏந்தி...தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பெண்ணவளது ஆலிங்கனம் மிகவும் அற்புதமானது....!காதலோடு தாய்மையும் கலந்திருப்பது....!



"மாமா....!",மெல்ல அவள் அழைக்க..



"ம்...!",மயக்கத்துடன் 'உம்' கொட்டினான் அவன்.



"திவி காலேஜ் டூர் போயிருக்கிறது உங்களுக்கு ரொம்பவும் வசதியா போச்சு....!வர வர உங்க குறும்பு அதிகமாகிட்டே போகுது....!",அவளது குரல் செல்ல கண்டிப்புடன் வெளிவந்தது.



"நீதான் மெயின் டிஷ் வேண்டாம்ன்னு சொல்லிட்ட....!அட்லீஸ்ட்...அப்பப்ப சைட் டிஷ்ஷையாவது எனக்கு கொடுக்கணும்ல....?",



"ஆமா....!நான் பாவம் பார்த்து சைட் டிஷ் கொடுத்தேன்னு வையுங்க....!அப்புறம்...நீங்க இலை போட்டு விருந்து சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்க....!",முணுமுணுத்தாள் அவள்.



"என்ன டி முணுமுணுக்கிற....?",



"ஹ....ஒண்ணுமில்ல....!ஆதி அண்ணாக்கிட்ட பேசுனீங்களா...?நித்தியுடைய கோபம் குறைஞ்சுதா....?",



"ஏன்....?நீ உன் பிரெண்டுகிட்ட பேசலையா....?",



"பேசினேன் மாமா....!'எனக்கு விருப்பமில்லைன்னு தெரிந்தும்...அவரு எப்படி இந்தக் கல்யாணத்தை நடத்தலாம்..'ன்னு அவள்...அவளுடைய பிடியில நிற்கிறா....!",



"ஆதி மனசில என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியலை டி....!ஆனால்...நிச்சயமா நித்திலா மேல கோபம் இல்ல....!பார்ப்போம்....!போக போக எல்லாம் சரியாகிடும்...!அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்குவான்....!",சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதி நிலவியது.



பிறகு அவனே ஆரம்பித்தான்.



"ஹனி....!",



"ம்....!",



"எனக்கு மறுபடியும் ஹனி வேணும் போல இருக்கே....!",அவளது முகத்தைப் பார்த்தபடி கூறியவனின் விரல்கள்...அவளது செவ்விதழ்களை வருடியது.



"ம்...இருக்கும்...!இருக்கும்...!முதல்ல நகருங்க....!நான் போய் டின்னர் ரெடி பண்ணனும்...!",முழு பலத்தையும் திரட்டி...தன் மேல் படுத்திருந்தவனைத் தள்ளி விட்டு விட்டு ஓடி விட்டாள்.



"மை ஸ்வீட் ஹனி....!",அவனது இதழ்கள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.







அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 58 :



நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன...!



ஆதித்யனுக்கும்...நித்திலாவிற்கும் திருமணமாகி ஒரு மாதம் முடிந்திருந்தது.இருவர் மனதிற்குள்ளும் கரை காணாத காதல் நிறைந்திருந்தாலும்...இருவருமே அதைக் கொண்டாட முன்வரவில்லை...!நித்திலாவிற்கு அவன் மீது இருந்த கோபம் அப்படியேதான் இருந்தது.ஆனால்...பெற்றவர்களை மிகவும் தேடும் சமயங்களில் எல்லாம்...அவள் சாய்வது என்னவோ...ஆதித்யனின் தோள் மீதுதான்...!



ஆதித்யனுக்கு அவள் மேல் கோபமெல்லாம் இல்லை.அவன்...தன் காதலிலும்...முடிவிலும் உறுதியாகத்தான் இருந்தான்.அவளிடம் கூறியிருந்தபடியே...அவன்...அவளை இந்த ஒரு மாத காலத்தில் கணவனாய் நெருங்கியிருக்கவில்லை.ஆனால்...அவ்வப்பொழுது அவளை சீண்டி வெறுப்பேற்றவும் மறக்கவில்லை.



அவளுடைய அருகாமையிலும்...மனைவியாய் தன் கண் முன்னால் நடமாடும் உரிமையிலும்...தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சற்று திணறித்தான் போனான் அந்த ஆண்மகன்.



சூரியனின் ஒளிக்கதிர்கள் தன் மேல் பட...ஆதித்யனின் முகம் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.இதுவும் நித்திலாவினுடைய வழக்கம்தான்...!ஏ.சி ரூமில் திறக்கப்படாது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை...காலையில் எழுந்ததுமே திறந்து வைத்து விடுவாள்.



"ஜன்னலை மூடு டி...!சன் லைட் என் மேல படுது....!",ஒரு முறை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யனின் மீது சுள்ளென்று வெயில் படவும்...தூக்கம் கலைந்த எரிச்சலில் நித்திலாவிடம் கத்தினான்.



"எந்நேரமும் ஜன்னலை மூடியே வைத்திருக்க கூடாது....!வெளிக்காத்து கொஞ்சமாவது உள்ளே வரணும்....!",அவளும் கத்தினாள்.



"ம்ப்ச்...!நான் ஆபிஸ்க்கு போனதுக்குப் பிறகு திறந்து வைச்சுக்க....!இப்போ பாரு...என் தூக்கம் கெடுது....!க்ளோஸ் பண்ணு டி....!",



"முடியாது....!இது எனக்கும் பெட் ரூம்தானே....?என் விருப்பப்படிதான் திறந்து வைப்பேன்....!",வீம்பாக ஆதித்யனிடம் கூறியவள்...வேண்டுமென்றே அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டாள்.



அவளது உரிமையான பேச்சும்...செய்கையும் அவன் மனதை வருடிச் செல்ல...புன்னகையோடு அவளைப் பார்த்திருந்தான் ஆதித்யன்.



இன்றும் மனைவியின் நினைவு வர...அவன் கண்ணை மூடிக் கொண்டே தனது கைகளால் படுக்கையில் துளாவினான்.அவன் விரும்பியது...கைகளுக்குத் தட்டுப்படாமல் போகவும்...அவன் எரிச்சலுடன் கண்களைத் திறந்தான்.



'ப்ச்...!இவ என்னை என்னதான்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறா...?புருஷன்ங்கிற நினைப்பு கொஞ்சமாவது இருக்கா...?இவளை இப்படியே விட்டால் சரி வராது...!இந்த ஆதித்யன் அவளுடைய புருஷன்ங்கிறதை அழுத்தமா அவள் மனசில பதிய வைக்கிறேன்...!' கோபத்துடன் மனதிற்குள் கறுவியவன்..



"நித்திலா....!",என்று கத்தினான்.



கீழே பூஜையறையில் கமலா பாட்டிக்கு உதவியாக பூக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள்...உடல் தூக்கிப் போட மாடியைப் பார்த்தாள்.ஹால் சோபாவில் அமர்ந்து நாளிதழைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கமும்...சுந்தரம் தாத்தாவும் செய்தித்தாளை மறந்தவர்களாய் மாடியைப் பார்த்தனர்.சமையல் அறையில் சமையல் செய்யும் பெண்மணியிடம் அன்றைய சமையலைப் பற்றி கூறிக் கொண்டிருந்த லட்சுமியும் கூட...இவனது கத்தலில் சமையலறையில் இருந்து வெளிவந்து மாடியை நோக்கினார்.



அதற்குள் அவன் இன்னொரு முறை,"நித்திலா....!",என்று கத்த,



பூஜையறையில் இருந்து வெளிவந்த நித்திலா,"சுமதி....!",என்று வீட்டு வேலை செய்யும் பெண்ணை அழைத்தாள்.



"சொல்லுங்கம்மா....!",அந்தப் பெண் பவ்யமாய் வந்து நின்றாள்.



"அவருக்கு இன்னும் காபி கொடுக்கலையா....?அதுக்குத்தான் இப்படி கத்திக்கிட்டு இருக்கிறாரு...!முதல்ல போய் நியூஸ் பேப்பரையும்...காபியையும் கொடுத்துட்டு வா....!",என்று விட்டு பூஜையறைக்குள் நுழைந்து கொண்டாள்.



அந்தப் பெண் சுமதி...ஆதித்யனுக்கு காபியையும் செய்தித்தாளையும் எடுத்துச் செல்ல...மீண்டும் அனைவரும் தங்கள் அலுவலில் மூழ்கினர்.



மேலே சென்ற சுமதி....சில நிமிடங்களில் தலை தெறிக்க கையில் தட்டோடு கீழே ஓடி வந்தாள்.



அதற்குள் ஆதித்யன் மீண்டும்,"நித்திலா....!",என்று வீடே அதிரும்படி கத்தி வைத்தான்.



"சுமதி...!இன்னுமா நீ அவருக்கு காபி கொடுக்கலை....?",வினவியபடியே பூஜையறையில் இருந்து வெளியே வந்தாள் நித்திலா.



"இல்லைங்கம்மா...!நான் காபி எடுத்துட்டுத்தான் போனேன்...!அவருதான் என்னைத் திட்டிக் கீழே அனுப்பிட்டாரு....!",அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே...ஆதித்யன்,"நித்திலா....!",என்று அவள் பெயரை ஏலம் போட்டான்.



"அவன் உன்னைத்தான் கூப்பிடுவான் போல...!போய் என்னன்னு கேட்டுட்டு வா...!",கமலா பாட்டி கூறவும்...அவள் மாடியேறினாள்.



"எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க...?",கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபடியே நித்திலா வினவ..



அவனோ...கட்டிலில் படுத்துக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.



"உன் மனசில என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கிற...?ஒரு தடவை கூப்பிட்டால் உன்னால வர முடியாதா...?சுமதி கையில காபியை கொடுத்து அனுப்பி விடற...?",எகிறினான் அவன்.



"உங்களுக்குத் தேவை காபிதானே...?அதை யாரு கொண்டு வந்தால்தான் என்ன...?வாங்கி குடிக்க வேண்டியதுதானே....?",காலையில் எழுந்தவுடன் தன் மேல் கோபப்பட்டவனின் மீது அவளுக்கும் கோபம் வந்தது.



"முடியாது டி....!இனிமேல் நீதான் எனக்கு காபி எடுத்துட்டு வந்து என்னை எழுப்பி விடணும்...!",



"இதென்ன புது பழக்கமா இருக்கு....?இவ்வளவு நாள் எப்படி காபி குடுச்சீங்களோ...அப்படியே இனிமேலும் குடிங்க...!",



"புது பழக்கம் தான்...!நீதானே என் பொண்டாட்டி...!வழக்கத்தை மாத்தி பழக்கத்தை பழகிக்க...!",உத்தரவிட்டான் அவன்.



அவள் ஏதோ முணகிக் கொண்டே நின்றாள்.



"போடி...!போய் எனக்கு காபியை எடுத்துட்டு வா...!",அவனுடைய அரட்டலில் அவள் அமைதியாய் வெளியே செல்லத் திரும்பினாள்.



"ஒரு நிமிஷம்....!",என்று அவளை நிறுத்தியவன்..



"உன் கையால எனக்கு காபி கலந்து எடுத்துட்டு வா...!வேலைக்காரங்க யாரும் எனக்காக காபி கலக்க கூடாது....!இப்போன்னு இல்ல...நான் எப்ப காபி கேட்டாலும்...நீ உன் கையால கலந்து தரணும்....!போ....!",அவன் மிரட்டிய மிரட்டலில்..



அவள் 'சரி ' என்பதாய் தலையசைத்து விட்டு வெளியேறினாள்.



அடுத்த பத்து நிமிடத்தில் அவனுக்கான காபியோடும்...செய்தித்தாளோடும் அறைக்குள் பிரசன்னமானாள் நித்திலா.அவன் அப்பொழுதும் படுத்துக் கொண்டுதான் இருந்தான்.



"காபி....!",இவள் அவன் கையில் காபியைத் திணிக்கவும்தான் எழுந்தமர்ந்தான்.



அவனது செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,"ஏன்....?நான் வந்து எழுப்பாம சார் எழுந்துக்க மாட்டாரோ....?',என்று மனதுக்குள் முணுமுணுக்க..



அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி காபியை பருகிக் கொண்டிருந்தவன்,"ஆமாம் டி...!இனிமேல் காலையில என்னை வந்து எழுப்பி...காபி கொடுத்தால்தான் நான் எழுந்திருப்பேன்...!" சட்டமாகக் கூறினான் அவன்.



உதட்டைச் சுளித்தபடி வெளியேறப் போனவளை,"நில்லு டி...!",என்ற ஆதித்யனின் குரல் தடுத்து நிறுத்தியது.



'என்ன...?',என்பதாய் தன்னை ஏறிட்டவளிடம்,"நான் குளிக்கப் போகிறேன்...!எனக்கு டவல்..ட்ரெஸ் எல்லாம் யார் எடுத்து வைப்பா....?",என்று புருவம் உயர்த்த..



"ஏன்...?இவ்வளவு நாள் இதையெல்லாம் நீங்கதானே பார்த்துக்கிட்டீங்க...?",திருப்பி கேள்வி எழுப்பினாள் அவள்.



"அதுதான்...இப்போ நீ வந்துட்டியே...!போடி...!போய் எடுத்து வை....!",அதிகாரமாய் உரைத்தவனைக் கண்டவளின் மனம் முரண்டியது.



"எடுத்து வைக்க முடியாது...போடா....!",திமிராய் உரைத்தவள் திரும்பிக் கதவை நோக்கி நடந்தாள்.



இரண்டே எட்டில் அவளை அடைந்தவன்...சாத்தியிருந்த கதவில் அவளை சாய்த்தபடி,"மனைவிக்கான கடமைகளை நீ செய்யலைன்னா...புருஷனுக்கான உரிமைகளை நான் எடுத்துக்குவேன்....!",அவள் இருபுறமும் கைகளை ஊன்றி சிறை செய்தபடி கூறினான் அவன்.



அவனுடைய அருகாமையில் படபடத்த மனதை அடக்கிக் கொண்டு,"எந்தக் கடமையையும் செய்ய முடியாது...!",என்றாள் வீம்பாக.



ஒன்றும் பேசாமல் அவள் முகத்திலேயே தன் பார்வையை நிலைக்க விட்டான் ஆதித்யன்.ஒரு நிமிடத்திற்கு மேல் அந்தப் பாவையால்....அவனது பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உதட்டைக் கடித்தபடி தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

அவளது அந்த செய்கையில்...அவனது உதடுகளில் ஒரு வெற்றிப்புன்னகை வந்தமர்ந்தது.



"ஸோ...உன்னால பொண்டாட்டிக்கு உண்டான கடமைகளை செய்ய முடியாது....?",அழுத்தமாக அவன் வினவ..



"மு...முடியாது...!",அவனுடைய பார்வையில் அவளது அடிவயிறு ஜில்லிட்டது.



"அப்போ சரி...!",தோளைக் குலுக்கியவன் அப்படியே அவளை அலேக்காகத் தூக்கி கொண்டு படுக்கையை நோக்கி நடந்தான்.



"வி..விடுங்க...!என்ன பண்றீங்க....?",அவனது முதுகில் சரமாரியாய் அடித்தபடி அவள் திமிர..



அவளது திமிறலை எளிதாக அடக்கியவன்...'தொப்'பென்று அவளை மெத்தையில் போட்டான்.அவள் சுதாரித்து எழும் முன்னரே...அவள் மேல் பாய்ந்தவன்...பாய்ந்த வேகத்தில் அவளது துப்பட்டாவை உருவிக் கீழே எறிந்தான்.



"ஹேய்...!என்ன பண்றீங்க...?",பதறியபடி எழ முயன்றவளின் மீது...அழுத்தமாகப் படர்ந்தவன்..



"நீதான் பொண்டாட்டிக்கான கடமைகளை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டியே....?அதுதான்...புருஷனுக்கு உண்டான உரிமைகளை நான் எடுத்துக்கப் போறேன்...!",அமைதியாய் கூறியவன்...அவளது கழுத்து வளைவில் தனது முகத்தைப் புரட்டினான்.



அவனது வார்த்தைகளிலும்...தீண்டலிலும் சில்லென்று உடலுக்குள் ஏதோ மாற்றம் நிகழ,"வே..வேண்டாம்....!",என்று முனகினாள் அவள்.



"அப்போ...பொண்டாட்டிக்கான கடமை....?",அவள் கழுத்தில் இருந்து முகத்தை விலக்காமலேயே அவன் வினவ..



"நான்...நான் செய்யறேன்....!",திக்கித் திணறினாள் அவள்.



"வெரிகுட் பேபி....!",சிறு புன்னகையுடன் உரைத்தவன்..அவளது கழுத்து சரிவில் அழுத்தமான ஒரு முத்தத்தை பதித்து விட்டுத்தான் நிமிர்ந்தான்.



"ட்ரெஸ் எடுத்து வை பேபி...!நான் போய் குளிச்சிட்டு வர்றேன்....!",அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.



"ராட்சசன்...!அழகான ராட்சசன்...!",முணுமுணுத்தபடியே அவனுக்குத் தேவையான உடைகள்..வாட்ச் என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வெளியேறினாள் நித்திலா.



தன் அத்தையுடன் சேர்ந்து காலை உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த நித்திலாவின் காதில் ஆதித்யனின் அழைப்பு வந்து விழுந்தது.



"நித்திலா...!",அவன் கத்திய கத்தலில் கையில் இருந்த சாம்பார் பாத்திரத்தைக் கீழே போடப் போனவள்...தன்னை சுதாரித்துக் கொண்டு டைனிங் டேபிளில் வைத்தாள்.



"நித்தி ம்மா....!என் பேரன் கிளம்பி வர்ற வரைக்கும்...நீ மேலேயே இரும்மா...!அவன் உன்னை விட மாட்டான்....!",கிண்டலுடன் சுந்தரம் தாத்தா கூற...அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.வெட்கம் மேலிட யாரையும் பார்க்காது...மாடி அறைக்கு ஓடி விட்டாள் நித்திலா.



"எதுக்கு இப்படி என் பெயரை ஏலம் போடறீங்க....?கீழே எல்லோரும் என்ன நினைப்பாங்க....?",அவனைத் திட்டியபடியே உள்ளே நுழைந்தவள்...ஆதித்யன் இருந்த கோலத்தைப் பார்த்து விதிர்த்துப் போய் நின்றுவிட்டாள்.



அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்திருந்தவன்....இடையில் கட்டிய துண்டுடன் நின்றிருந்தான்.உருண்டு திரண்ட அவனது வலிமையான புஜங்களும்...பரந்து விரிந்த திண்மையான மார்பும் அவளை ஏதோ செய்ய...அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று கொண்டாள்.



"ஐயோ...!இப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நிற்பீங்க...?",



"என் பொண்டாட்டிக்கிட்ட எனக்கு என்னடி வெட்கம்....?கதவைப் பூட்டிட்டு இங்கே வா....!",உல்லாசமாய் அழைத்தான் அவன்.



வெடுக்கென்று திரும்பியவள்,"எ..எதுக்கு...?",என்று தடுமாறினாள்.



"தலையை யாரு துவட்டி விடுவா....?உங்க அப்பாவா...?",அவன் தன் தந்தையைப் பேச்சில் இழுக்கவும்...கோபத்துடன் வேகமாக அவனருகில் வந்தவள்..



"எங்க அப்பாவை எதுக்கு இப்போ இழுக்கறீங்க....?",கேள்வி கேட்டபடியே அருகில் மெத்தையில் கிடந்த துண்டை எடுத்து அவன் தலையை துவட்ட ஆரம்பித்தாள்.



அவள் உயரத்திற்கு ஏதுவாக குனிந்திருந்தவனின் பார்வை அவள் மேனியில் எங்கெங்கோ பயணித்தது.வெகு அருகில் நின்றிருந்த பெண்ணவளின் மென்மைகள் மெதுவாக அவன் முகத்தில் வந்து மோத...மூச்சு விடவும் மறந்தவனாய் மயங்கித்தான் போனான் அந்த ஆண்மகன்.



எதற்கோ ஆதித்யனின் முகத்தைப் பார்த்தவள்...அந்தக் கள்வனின் திருட்டுப் பார்வையை கண்டு கொன்டாள்.கையில் இருந்த துண்டாலேயே அவனது தோளில் ஒரு அடி போட்டவள்,"கண்ணை நோண்டிருவேன்...நோண்டி....!",என்றபடி அவனை முறைக்க..



அவனோ...சிரித்துக் கொண்டே தன் இரு கைகளையும் தூக்கி 'சரண்டர்' என்பது போல் காண்பித்தவன்,"ஸாரி....!",என்றான் குறும்புப் புன்னகையுடன்.



ட்ரெஸிங் டேபிளுக்கு முன் இருந்த மோடாவில் அவனை அமர வைத்தவள்...கவனமாக அவனுக்குப் பின்னால் வந்து நின்றபடி தலையை துவட்டி விட ஆரம்பித்தாள்.அவளது முன்னேற்பாட்டைக் கண்டு...அவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.



"தலையை துவட்டியாச்சு...!அவ்வளவுதானே....?",என்றபடி விலகியவளை கைப்பிடித்து தடுத்தவன்..



"இருடி....!எனக்கு சட்டை பட்டன் எல்லாம் யார் போட்டு விடுவா....?",கேள்வி கேட்டவன் அவளுக்கு முன்னாலேயே தன் உடைகளை மாற்ற ஆரம்பிக்க..



"ச்சீய்....!",என்ற வெட்கப் புன்னகையுடன் அவள்தான் திரும்பி நின்று கொண்டாள்.



அவளது உடைகளின் தேர்வை மெச்சியபடியே அணிந்து முடித்தவன்...சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு,"பட்டனை போட்டு விடுடி...!",என்று அவளை அழைத்தான்.



அவன் புறம் திரும்பி பட்டனை போட்டுக் கொண்டிருந்தவளின் மனதில்,'விட்டால் முதுகு தேய்ச்சு குளிச்சு விட சொல்லுவான்....!ரௌடி....!',என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்க..



அந்த எண்ணத்தின் நாயகனோ,"அதையும்தான் பண்ணனும்....!இனிமேல் ஞாயிற்றுக்கிழமை எனக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு தான் பேபி....!",கண் சிமிட்டியபடி கூறினான் அவன்.



"அய்ய....!நான் மாட்டேன்....!",வேக வேகமாய் தலையாட்டினாள் அவள்.



"அப்போ...நான் உனக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைச்சிடுவேன்.....!எப்படி வசதி...?",அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்த..



"வே...வேண்டாம்....!நானே குளிக்க வைக்கிறேன்...!",அவசர அவசரமாக கூறினாள் அவள்.



"ம்...வெரிகுட்...!சரி வா...!தலையை வாரி விடு....!",சமர்த்துப் பிள்ளையாய் அவன் கூற..



அவனது அலும்பை ரசித்தபடியே...சீப்பை எடுத்து தலைவாரி விட்டாள்.



"முடிஞ்சுதா....?",



"ம்...!கீழே போகலாம்...!வா...!",அவளை அழைத்துக் கொண்டே கீழே வந்தான் ஆதித்யன்.



இருவரும் ஜோடியாக இறங்கி வந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர்.இருவரின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.அதிலும்...ஆதித்யனுடன் பட்டும் படாமல் பழகிக் கொண்டிருந்த நித்திலாவின் செய்கை...அவர்களுக்கு வருத்தத்தை தோற்றுவித்தது.இப்பொழுது...இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த பெரியவர்களுக்கு...அவர்களது வாழ்க்கை இனி நேராகி விடும் என்ற நிம்மதி தோன்றியது.



டைனிங் டேபிளில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவனுக்கு...காலை உணவை பரிமாறுவதற்காக சுமதி வந்தாள்.கண்ணசைவிலேயே அவளை விலகச் சொன்னவன்,"நித்திலா...!",என்று தன் மனைவியை அழைத்தான்.



சுந்தரம் தாத்தாவோடு பேசிக் கொண்டு...ஹாலிலேயே நின்றிருந்தவள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.



"என்ன...?",



"டிபன் பரிமாறு டி...!",அவன் கூறவும் தட்டை எடுத்து வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்.



"இன்னைக்கு மட்டும் இல்ல...!இனி நீதான் தினமும் எனக்கு டிபன் பரிமாறனும்....!அதுவும் உன் கையால செய்த டிபனை பரிமாறணும்...!",இட்லியைப் பிட்டு சாம்பாரில் தோய்த்து வாயில் போட்டபடி அவன் கூற..



"என்ன விளையாடறீங்களா....?எனக்கு சமைக்கத் தெரியாது...!",சண்டைக்கு வந்தாள் அவள்.



"தெரியலைன்னா கத்துக்கோ....!அதுமட்டுமில்ல...இனி தினமும் மதியம் எனக்காக சமைச்சு ஆபிஸ்க்கு எடுத்துட்டு வர்ற...!இன்னைக்கு மதியத்துல இருந்தே உன் வேலையை ஆரம்பிச்சிடு...!",கட்டளையிட்டவன் சாப்பிடுவதில் மும்முரமானான்.



"என் சமையலை சாப்பிடறதுக்கு...எனக்கு ஒரு அடிமை சிக்கியிருக்கும் போது எனக்கு என்ன வந்துச்சு....?",தோளைக் குலுக்கியபடியே அவனுக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து பரிமாறினாள்.



சாப்பிட்டு கை கழுவியவன்..அவளது துப்பட்டாவிலேயே தன் கைகளைத் துடைத்துக் கொண்டு,"என்னை வந்து வழியனுப்பி வை...!",அவளுக்கு உத்தரவிட்டபடியே ஹாலுக்கு வந்தவன் அங்கு அமர்ந்திருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தான்.



அவன் பின்னாலேயே நாய்க்குட்டி போல் ஓடினாள் நித்திலா.வாசலுக்கு வந்தவன் அருகில் இருந்த முல்லைக் கொடியின் மறைவிற்கு அவளை இழுத்துச் சென்றான்.



"இங்கே எதுக்கு கூட்டிட்டு வர்றீங்க...?",அவன் பிடியிலிருந்து தன் கையை விடுவிக்கப் போராடியவளின் இடையை தன் இரு கைகளாலும் இழுத்து அணைத்து சிறை செய்தவன்..



"இதுக்குத்தான்....!",என்றபடி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.



"இனிமேல் இப்படி முத்தம் கொடுத்துதான் என்னை வழியனுப்பி வைக்கணும்...!இங்கே...இப்போ முத்தம் கொடுத்து அத்தானுக்கு டாட்டா சொல்லு பார்க்கலாம்....!",அவன் தன் கன்னத்தைக் காட்ட..



"அய்ய....என்னால முடியாது....!",முகத்தை சுளித்து மறுத்தாள் அவள்.



"இப்போ மட்டும் நீ முத்தம் கொடுக்கலை...அப்புறம் முத்தம் கொடுக்க வேண்டிய இடத்தை மாத்திடுவேன்....!",அவன் மிரட்டிய மிரட்டலில் அவள்...அவன் முகத்தைத் திருப்பி கன்னத்தில் 'நச்'சென்று முத்தம் வைத்தாள்.



"வெரிகுட்...!ஒகே பேபி...!நான் கிளம்பறேன்...!மதியம் ஆபிஸ்ல மீட் பண்ணலாம்...!",அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டு...காரில் ஏறி விரைந்தான் ஆதித்யன்.



காலையில் எழுந்ததில் இருந்து...ஒன்றன் பின் ஒன்றாக அவன் பண்ணிய அழிச்சாட்டியங்கள் நினைவுக்கு வர...அவளது இதழ்கள்,"ரௌடி...!காதல் ரௌடி....!",என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டன.



அதன் பிறகு...காலை உணவை சாப்பிட்டு விட்டு..மதிய உணவுக்கான சமையலில் இறங்கினாள் நித்திலா.அவளது அத்தை கூட,"நீ எதுக்கும்மா இதையெல்லாம் செய்துக்கிட்டு இருக்க...?என்ன சமைக்கறதுன்னு சொல்லிடு...!அவங்க பார்த்துக்குவாங்க....!",என்று கூற..



"ம்ஹீம்...!உங்க பிள்ளையோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் அத்தை....!என் கையால சமைச்சு எடுத்துட்டு வரணும்ன்னு சொல்லிட்டு போயிருக்கிறாரு...!",போலியாக சலித்தபடி கூறிய மருமகளைப் பார்த்தவர்..



'எப்படியோ...ரெண்டு பேரும் சந்தோஷமாயிருந்தால் சரி...!',மனதிற்குள் புன்னகைத்தபடி அகன்று விட்டார்.



வெளியில் சலித்தாலும் மனதிற்குள் இதை அனைத்தையும் ரகசியமாய் ரசித்தாள் நித்திலா.தன்னவனுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைத்து முடித்தாள்.



அதே போல்...அவனுக்குப் பிடித்த ஆகாய வண்ண சுடிதாரை அணிந்தவள்...அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு...டிபன் கேரியரோடு கிளம்பினாள்.அவளுக்காக அவன் வாங்கிக் கொடுத்த ஆடி கார் வீட்டில்தான் இருந்தது.வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வர ஏதுவாக மேலும் இரண்டு கார்களோடு...ஒரு ட்ரைவரையும் நியமித்திருந்தான் ஆதித்யன்.



அதோடு...ஆதித்யன் நித்திலாவின் திருமண பரிசாக கௌதமும்...சுமித்ராவும் ஒரு வைர நகையோடு...உயர் ரக கார் ஒன்றையும் பரிசளித்திருந்தனர்.தன்னவன் தனக்காக வாங்கிய காரிலேயே ட்ரைவரை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் நித்திலா.



டிபன் கேரியரோடு உள்ளே நுழைந்த தன் மனைவியை உற்சாகமாக வரவேற்றான் ஆதித்யன்.



"கம் பேபி....!ஒரு டென் மினிட்ஸ்....!இந்த வொர்க்கை முடிச்சிட்டு வந்திடறேன்...!",அவளிடம் உரைத்தவன்...தன் மடிக்கணினியில் ஆழ்ந்தான்.



'சரி...' என்பதாய் தலையசைத்து விட்டு...உணவு உண்ணும் அறைக்குச் சென்றவள்...சாப்பிடுவதற்கு வசதியாக அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தாள்.



அவன் தனது வேலைகளில் ஆழ்ந்திருக்கவும்,"நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்...!நீங்க உங்க வேலையை அதுக்குள்ள முடிச்சிடுங்க...!",என்று விட்டு வெளியேறினாள்.



அலுவலகத்தில் இவளைக் கண்டதும் ஒரு பட்டாளமே சூழ்ந்து கொண்டது.அனைவரது நலம் விசாரிப்புகளுக்கும்...வாழ்த்துக்களுக்கும் சிறு புன்னகையோடு பதிலளித்தவள்...சுமித்ராவைத் தள்ளிக் கொண்டு கேன்டீனுக்கு சென்றாள்.



இருவரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகியிருந்ததால்...பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.



"அப்புறம்...மேரேஜ் லைப் எப்படி போகுது....?",சுமித்ரா வினவ..



"அதுக்கென்ன....அது பாட்டுக்கு போகுது...!",அலட்சியமாய் கூறினாள் நித்திலா.



"இன்னும் உங்களுக்குள்ள எதுவும் சரியாகலையா நித்தி....?அப்படி என்னதான் டி கோபம் உனக்கு...?ஆதி அண்ணா மேல இருந்த உன்னுடைய காதல் எங்கே போச்சு...?",



"அந்தக் காதல் இன்னமும் அவர்மேல் அப்படியேதான் இருக்கு...!என் விருப்பம் இல்லைன்னு தெரிந்தும் என் கழுத்துல தாலி கட்டியிருக்கிறாரேன்னு ஒரு சின்ன ஆதங்கம்...கோபம்...அவ்வளவுதான்...!சரி...அதை விடு....!கெளதம் அண்ணா உன்னை எப்படி பார்த்துக்கிறாரு....?",



'கௌதம்' என்ற பெயரைக் கேட்டதுமே அவளது கண்கள் காதலில் மின்னின.



"அவரு கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும் டி...!என்ன...அப்பப்ப அம்மா அப்பா ஞாபகம் வரும்...!செய்ய வேண்டிய சீர் வரிசை...சடங்கு இதையெல்லாம் குறைவில்லாம செய்தாலும்...அவங்க எங்க வீட்டுக்கு வர்றதில்லை....!மாமாவுக்கு பிடிக்காதுன்னு நானும் எங்க அம்மா வீட்டுக்குப் போறதில்லை...!",அவள் கண்களில் வலி தெரிந்தது.



அது காலம் காலமாய் பெண்கள் மட்டுமே சுமக்கும் வலி...!பெண்கள் மீது மட்டுமே சுமத்தப்படும் வலி...!என்னதான் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியிருந்தாலும்...தன்னவனுக்கு கட்டுப்பட்டு நடக்கத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்...!ஆனால்...லட்சம் கோடி பூரிப்பையையும்...நிறைவையும் அந்த சிறை அள்ளி அள்ளித் தரும் என்பதுதான் விந்தையிலும் விந்தை....!



அந்த விந்தையை அறிந்து கொண்டிருந்த நித்திலாவும்,"எல்லாம் சரியாகும் சுமி....!",என்று ஆறுதல் கூற...அந்த விந்தையை அறிந்து வைத்திருந்த சுமித்ராவும் ஒரு புன்னகை புரிந்தாள்.



"ஒகே டி...!நான் கிளம்பறேன்....!அவருக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்...!நான் போகாம சாப்பிட மாட்டாரு....!",என்றபடி நித்திலா எழ..



"ஓ....!அவராம் அவர்...!",அபிநயத்துடன் கிண்டலடித்தாள் சுமித்ரா.



"ம்ப்ச்...!போடி....!",அழகாக வெட்கப்பட்டுக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றாள் நித்திலா.



அவள் அறைக்குள் நுழைந்ததும்,"என்ன பேபி....?உன் பிரெண்ட்கிட்ட கதையளந்து முடிச்சிட்டயா....?",தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தபடி வினவினான் ஆதித்யன்.



"ம்ம்...!சுமியைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சல்ல...!பேச பேச பேச்சே தீரல....!",உற்சாகத்துடன் கூறினாள் நித்திலா.



"நான்தான் உன்னை ஆபிஸ்க்கு வரச் சொல்றேன்...!நீதான் வர மாட்டேங்கிற...!வந்தால் உன் பிரெண்டை தினமும் மீட் பண்ணலாம்...!",நாள் பொழுதும் அவள் தன்னருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் அவன் கூற..



"ஆபிஸ் வராததுக்கான காரணத்தை நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன்....!",உணவு உண்ணும் அறைக்குள் நுழைந்தபடியே கூறினாள் நித்திலா.



"ஆமா...!என்னை கவனிச்சுக்கறதுக்காக ஆபிஸ்க்கு வர மாட்டேன்னு சொன்ன...!இப்போ...நீ என்னைக் கவனிச்சுக்கிட்டு இருக்கிற லட்சணத்தைத்தான் நான் பார்த்துக்கிட்டு இருக்கிறேனே...!",அவளைத் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தபடியே அவன் கூற..



"ஏன்...?இன்னைக்கு உங்களை கவனிக்கலையா...?",தட்டை எடுத்து வைத்து சாப்பாடு பரிமாறியபடியே வினவினாள் அவள்.



"நான் கட்டாயப்படுத்தின பிறகுதானே நீ என்னைக் கவனிச்ச...?",கை கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தான் அவன்.



"சரி...!இனிமேல் உங்களைக் கவனிக்கிறேன்...!போதுமா...?இப்போ சாப்பிடுங்க...!",குழம்பை சாதத்தின் மீது ஊற்றியபடியே கூறினாள்.



"ம்ம்...!நீயும் உட்கார்...!சாப்பிடலாம்...!",அவள் கையைப் பற்றி அமர வைத்தவன்...இன்னொரு தட்டை எடுத்துப் பரிமாறினான்.அவளும் எதிர்பேச்சு பேசாமல் அமைதியாய் அமர்ந்தாள்.



தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிடாமல்...தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவியைப் போல் ஒரு எதிர்பார்ப்போடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன்..



"பார்த்தால் பசி தீருமா பேபி...?ஏன் என் முகத்தையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிற....?",புருவத்தை உயர்த்தியபடி அவன் வினவ..



"அது...நான்தான் சமைச்சேன்...!சாப்பாடு எப்படி இருக்கு...?",அவள் குரலில் அப்படியொரு ஆர்வம் தெரிந்தது.



வேண்டுமென்றே,"ம்...அது....",என்று யோசனையுடன் இழுத்தவன்...அவள் முகத்தில் ஆர்வம் அதிகரிப்பதைக் கண்டு,"என் பேபி மாதிரியே இந்த சாப்பாடும் ரொம்ப நல்லாயிருக்கு....!",என்றான் புன்னகையுடன்.



"உண்மையாலுமா...?",



"சத்தியமா...!வேணும்ன்னா இந்த சமையலை செய்தவங்களுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்கலாமா...?",குறும்புடன் அவன் வினவ..



"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...!",உதட்டைச் சுளித்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் நித்திலா.



"உசுரே போகுது...!உசுரே போகுது...!
உதட்டை நீ கொஞ்சம் சுளிக்கையிலே...!",




அவளது சுளித்த இதழ்களை பார்த்தபடி அவன் பாட...அவள் வழக்கம் போல் இதழ்களைக் கடித்துக் கொண்டு அமைதியானாள்.



"மாமன் ஏங்குறேன்...மடிப்பிச்சை கேட்கிறேன்...!
மனசைத் தாடி என் மணிக்குயிலே...!",




அவன் கண்களில் வழிந்த ஏக்கம்...அவளை என்னவோ செய்தது.இப்பொழுதே அவனை மார்போடு அணைத்து...அவன் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்பது போல் அவள் மனம் ஏங்கியது.



அது முடியாமல் போகவும்,"இப்போ...அமைதியா சாப்பிட போறீங்களா...?இல்லையா...?",என்று அதட்டினாள்.



ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் ஆதித்யன்.இருவருமே அவ்வப்போது இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.ஏக்கமும்...தாபமும் சுமந்த அவனுடைய பார்வைகள்...அவ்வப்போது வந்து நித்திலாவைத் தாக்கின...!



காதலிக்கும் காலங்களிலேயே அவன் சும்மா இருக்க மாட்டான்...!இப்பொழுது...அவன் கையால் தொங்க தொங்க தாலி வாங்கிக் கொண்டு...உரிமையுடன் வளைய வரும் போது...அமைதியாக இருக்க சொன்னால்...பாவம்...அவன் என்ன செய்வான்...?



**********************



நிலா மகள் வானில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தாள்...!படுக்கையின் விரிப்பை மாற்றிக் கொண்டிருந்த சுமித்ராவையே...யோசனையுடன் பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான் கெளதம்.



"அப்படி என்ன..என் மாமாவுக்கு யோசனை....",படுக்கை விரிப்பை சரி செய்தவள்...தலையணைகளுக்கு உரைகளை மாட்டியபடி வினவினாள்.



"ம்....ஒரு யோசனை டி...!",



"அதுதான் என்னன்னு கேட்கிறேன்...?",தலையணைகளை அதனதன் இடத்தில் வைத்தவள்...படுக்கையில் சாய்ந்தபடியே அவனிடம் கேள்வியெழுப்பினாள்.



"தேவ் ஹோட்டல்ஸ் பத்தி கேள்விப் பட்டிருக்கிறயா...?",சோபாவில் இருந்து எழுந்தவன் அவளருகில் வந்து கட்டிலில் சாய்ந்தான்.



"ம்....கேள்விப்பட்டிருக்கிறேன்....!பெரிய ஹோட்டலாச்சே...?சென்னை..காஞ்சிபுரம்...தூத்துக்குடி...கோயம்புத்தூர்ன்னு நிறைய இடங்கள்ல இருக்கு...!",



"ம்...ரைட்....!அந்த அத்தனை ஹோட்டலுக்கும் உரிமையாளரான தேவதர்ஷனுக்கு நம்ம திவியை பொண்ணு கேட்கிறாங்க....!",



"வாட்....?",ஆனந்த அதிர்ச்சியுடன் கூச்சலிட்டாள் சுமித்ரா.



"ஆமாம் டி...!நம்ம திவி படிக்கற காலேஜ்ல நடந்த ஏதோ விழாவுக்கு அந்த தேவதர்ஷன் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாராம்...!திவ்யாவை பார்த்த உடனே அவருக்கு பிடிச்சு போயிருச்சாம்...!உடனே...அவங்க அம்மா அப்பாகிட்ட போய் திவ்யாவை பெண் கேட்க சொல்லியிருக்காரு....!",



"என்னங்க சொல்றீங்க....?",



சுமித்ரா அதிசயப்பட்டதிலும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது.வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்களில் இந்த தேவதர்ஷனும் ஒருவன்...!கிட்டத்தட்ட ஆதித்யன்...கௌதமினுடைய வயதுதான் இருக்கும்.இதுவரை எந்தவொரு தவறான செய்திகளும் அவனைப் பற்றி வந்ததில்லை.



"அவருடைய அப்பா இன்னைக்கு எனக்கு போன் பண்ணியிருந்தாரு...!எங்க பையனுக்கு உங்க வீட்டு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்காம்...!எங்களுக்கும் அவனுடைய சந்தோஷம்தான் முக்கியம்...!உங்களுக்கு சம்மதம்ன்னா...பொண்ணு பார்க்க வரலாமான்னு கேட்டாரு...!",



"அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க...?",ஆர்வத்துடன் குறுக்கே புகுந்து வினவினாள் சுமித்ரா.



"வீட்டில எல்லார்கிட்டேயும் கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்....!",



"வசதியை விட மாப்பிளையோட குணம்...குடும்பம் எல்லாம் முக்கியம்...!அவங்க எப்படி...?",சுமித்ராவின் குரலில் தாயின் அக்கறை தெரிந்தது.



"அதெல்லாம் ரொம்ப நல்ல குடும்பம் டி...!நானும் ஆதித்யனும் வெளியில விசாரிச்சிட்டோம்...!பையனுக்கும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை....!ஆதியும்...நித்தியும் தாராளமா இந்த இடத்தைப் பேசி முடிச்சிடலாம்ன்னு சொல்றாங்க....!",அவன் முகம் அப்பொழுதும் யோசனையைக் காட்டியது.



"அதுதான்...எல்லாமே நல்ல விஷயங்களா கிடைச்சிருக்கே...!அப்புறம் எதுக்கு இன்னமும் யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க....?மாப்பிள்ளையும் நம்ம திவியைக் காதலிக்கறாருன்னு சொல்றீங்க...!நல்ல இடம் வரும் போது கல்யாணம் பண்ணிடறதுதான் சரி...!",குழப்பமில்லாமல் தெளிவான சிந்தனையோடு உரைத்தாள் சுமித்ரா.



"எனக்கும் அப்படித்தான் தோணுது...!சின்னப் பொண்ணா இருந்தாள்...இப்போ அவளுக்கே கல்யாணம் பண்ணற அளவுக்கு வளர்ந்துட்டாள் பாரேன்....!நான் நாளைக்கே அவங்களுக்கு போன் பண்ணி...கூடிய சீக்கிரம் பொண்ணு பார்க்க வர சொல்றேன்....!",என்றவனின் முகம் தங்கையின் மீதான பாசத்தில் கனிந்திருந்தது.



அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது...!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
'எங்கே இன்னும் இவரைக் காணோம்...?',நித்திலா எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.



முகம் மலர வாசலை நோக்கி ஓடினாள் நித்திலா.காரைப் பூட்டி விட்டு இறங்கிய ஆதித்யன்...வாசலிலேயே மனைவி நிற்பதைப் பார்த்து,"நைட் பதினோரு மணி ஆச்சு...!இன்னுமா பேபி நீ தூங்கலை...?",விசாரித்தபடியே அவளருகில் வந்தான்.



"உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்...!போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க...!சாப்பிடலாம்....!",



"எனக்காக காத்திருக்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேன்ல பேபி...!நேரமா சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியதுதானே....?",அவன் குரலில் சிறு கண்டிப்பு இருந்தாலும்...அவனது மனம் மனைவி தனக்காக காத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தது.



"பரவாயில்லை ஆது...!நீங்க போய் குளிச்சிட்டு வாங்க....!சாப்பிடலாம்...!எனக்குப் பசிக்குது...!",முகத்தைச் சுருக்கியபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கூறியவளை ரசித்தவன்..



"ஜஸ்ட் டென் மினிட்ஸ்....!வந்திடறேன்....!",என்றபடி தங்களது அறையை நோக்கி விரைந்தான்.



சிறு புன்னகையுடன் உணவை எடுத்து வைக்கச் சென்றாள் நித்திலா.இது தினப்படி நடக்கும் காரியம் தான்...!தான் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று ஆதித்யன் கூறவில்லை.சொல்லப்போனால்...நேரமாக சாப்பிட்டு விட்டு உறங்கத்தான் சொன்னான்.ஆனால்...அவளுடைய காதல் மனம்தான் அதை ஏற்றுக் கொள்ளாமல்...இரவு அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருக்கச் சொன்னது...!



மனைவி தனக்காக சாப்பிடாமல்...உறங்காமல் காத்திருப்பதை அவனும் விரும்பத்தான் செய்தான்.எனவே...முடிந்தவரை வேலைகளை முடித்து விட்டு விரைவாக வீட்டிற்குத் திரும்பி விடுவான்.



ஆதித்யன்...ஒரு சின்ன குளியலைப் போட்டு விட்டு..உடை மாற்றி கீழே வந்த போது...அனைத்து உணவு வகைகளுள் தயார் நிலையில் டைனிங் டேபிளில் ஆஜாராகியிருந்தன.இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.



அவர்களுக்கான அந்த இரவு நேரத்தை இருவருமே விரும்பி அனுபவிப்பார்கள்...!அலுவலகத்தில் நடந்த விஷயங்களை மெல்லிய குரலில் அவன்...அவளோடு பகிர்ந்து கொள்ள...அன்று நாள் முழுவதும் நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் அவள் ஒப்பிப்பாள்.அந்த இனிமையான நேரம் அவர்களுக்கு மட்டுமேயானது...!



சாப்பிட்டு முடித்த பின்பு...இருவரும் சேர்ந்து பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு...தங்களது அறைக்குள் தஞ்சமடைந்தனர்.



சாப்பிட்டு முடித்த உடனே தூங்கக் கூடாது என்பது ஆதித்யனின் கட்டளை.எனவே...இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பர்.அன்றும் வழக்கம் போல்...அறைக்குள் நுழைந்தவுடன் மெத்தையில் தஞ்சமடைந்தபடி...ஆதித்யன் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க...இரவு உடையை எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குள் புகுந்தாள் நித்திலா.



அவள் உடைமாற்றி விட்டு வெளியே வரும் போது...ஆதித்யன் செய்தியில் மூழ்கியிருந்தான்.அவனருகில் வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள்...அவன் கையில் இருந்த ரிமோட்டைப் பிடுங்கி சேனலை மாற்ற ஆரம்பித்தாள்.



"தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே...!
தூண்டித் தூண்டி தேனை ஊட்டுகிறாயே....!
நீயே காதல் நூலகம்...!
கவிதை நூல்கள் ஆயிரம்...!
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே....!",




அவள் வரிசையாக சேனலை மாற்றிக் கொண்டிருக்க...ஒரு சேனலில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததைப் பார்த்தவளின் கைகள் அப்படியே நின்று விட்டன.அவள் விழிகள் அவளையும் அறியாமல் திரும்பி ஆதித்யனைப் பார்க்க...பற்றியெரிந்த வேட்கையோடு அவள் விழிகளைத் தன் விழிகளால் சிறையிலடைத்தான் அந்தக் காதல் தீவிரவாதி...!



"தொடங்கினால் கூசும் இடங்களால்...
நகங்களை கீறும் படங்களா...?
தேகம் என்பதென்ன....?ஓர் ஆடை கோபுரம்...!
ஆடை வெல்லும் போது...ஓர் காமன் போர் வரும்...!",




பாடல் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க...அந்தப் பாடல் வரிகள் உணர்த்திய தாபத்தை ஆதித்யனின் விழிகளில் கண்டவள்...பட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு சேனலை மாற்ற முயன்றாள்.அதற்குள் அவளிடமிருந்து ரிமோட்டை கைப்பற்றியவன் சேனலை மாற்றாமல்...ஒலியைக் கூட்டினான்.



"குறும்புகள் குறையாது...!
தழும்புகள் தெரியாது...!
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது...!",




அவனது வலிமையான கரங்கள் மெல்ல அவள் புறம் நகர்ந்து...அவளது நுனி விரலில் இருந்து...தோள் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தன...!அவனுடைய மென்மையான தீண்டலில் தேகம் சிலிர்க்க விழிகளை மூடிக் கொண்டாள் நித்திலா.



"இருவரே பார்க்கும் படவிழா...!
திரையிடும் மோகத் திருவிழா...!
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு...!
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு...!",




அவனது தேகம் அவளது தளிர் மேனியின் மீது படர்ந்தது...!அவனுடைய சூடான மூச்சுக்காற்று...அவளுடைய காதோரம் படிந்து...அவளுக்குள் தீ மூட்டியது.கொந்தளிப்பான நடுக்கடலின் சுழலில் சிக்கியவளைப் போல் அவளது தேகம் கூசிச் சிலிர்த்து நடுங்கியது...!பெண்ணவளின் பூ மேனி நடுக்கத்தில்...ஆணவனின் உணர்வுகள் கட்டவிழ்ந்து கொண்டு சூறாவளியாய் அவனை சுழற்றியடித்தன...!



"வேர்வரை சாய்க்காது...முதல் புயல் முடியாது...!
காமன் தேர்விது தேர்விது...வியர்வையில் மூழ்குது...!",




தாள முடியாத வேட்கையோடு அவன்...அவள் முகம் நோக்கி குனிந்த அந்த நொடி...தொலைக்காட்சியில் பாடல் முடிந்து...ஏதோ விளம்பரம் ஒளிபரப்பாக...அது எழுப்பிய சத்தத்தில்...உணர்வுகளின் சுழலுக்குள் சிக்கி அமிழ்ந்து கொண்டிருந்த நித்திலா பட்டென்று கண் விழித்தாள்.



தன் மேல் படர்ந்திருந்தவனை வேகமாக விலக்கித் தள்ளியவள்...அதை விட வேகமாக கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.கசங்கிய நைட்டியும்...கலைந்த தலை முடியும் சற்று முன் நடந்ததை பறை சாற்ற...உதடு கடித்து நின்றிருந்தவளின் தோற்றம் அவனை மயக்கியது.



தலைமுடியை அழுந்தக் கோதி...தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்...ஒரு வித ஏக்கத்தோடு அவளது முகத்தை நோக்கினான்.அவள் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்டு கொண்டவனின் புருவங்கள் முடிச்சிட்டன.ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவன்...வேகமான நடையுடன் பால்கனிக்கு சென்று விட்டான்.



அவன் தன்னை எந்தக் கேள்வியும் கேட்காது...பால்கனியில் தஞ்சமடைந்தது அவள் மனதை வருத்தியது.ஆதித்யனைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்...!அவள் மறுத்தால்...அவன் 'சரி' என்று விட்டு விட மாட்டான்...!



சீண்டி...தீண்டி...கெஞ்சி...கொஞ்சி...பிடிவாதமாய் தான் நினைத்ததை பெற்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்...!அவன் கேட்டதைக் கொடுக்கும் வரை...அவன்..அவளை விட மாட்டான்.



அப்படிப்பட்டவன்...இன்று அமைதியாய் விலகிப் போனது அவள் மனதிற்கு வேதனையைத் தந்தது.



'வேண்டாம்ன்னு நான் மறுத்தால்...அவரு அமைதியா போயிடுவாரா...?வேணும்ன்னு பிடிவாதம் பிடிக்க வேண்டியதுதானே...!',என்ற கோபம் வந்தது.



'வேண்டாம்...!',என்று அவனை விலக்கித் தள்ளியதும் அவள்தான்...!'வேண்டும்...' என்று பிடிவாதித்திருக்க வேண்டியதுதானே என்று கோபம் கொள்வதும் அவள்தான்...!



இந்தக் காதல் இருக்கிறதே...!அது படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல...!முரண்பாடுகளின் மொத்த உருவமே காதல்தான்....!



பால்கனியில் நின்று கொண்டு...நிலவை வெறித்தபடி...சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தவன்...தன் முடிவில் உறுதியாகத்தான் இருந்தான்.இருவரும் மனமுவந்து முழுக் காதலோடுதான் கூட வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்...!



வெறும் உணர்ச்சிகளின் தேடல் அல்ல காமம்...!உயிர்க் காதலின் உச்சக்கட்டத் தேடல்தான் காமம்...!என்ற உறுதி அவனுக்குள் இருந்தது.எனவேதான்...அவள் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்ட உடனேயே வற்புறுத்தாமல் விலகி விட்டான்...!



ஆனால்...எவ்வளவு நாள்தான் அவ்வாறு விலகியிருக்க முடியும்...?காமன்...லட்சம் கோடி மலர்க் காதல் கணைகளை இடைவிடாமல் தொடுத்துக் கொண்டிருக்கும் போதும்...காமன் தேரில் ஏறி ஊர்வலம் நடத்தாமல்...அவனால் விலகியிருக்க முடியுமா என்ன...?





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 59 :



அன்று...திவ்யாவைப் பெண் பார்ப்பதற்காக 'தேவ் குடும்பத்தினர்' வருவதாக இருந்தது.அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.காலையிலேயே ஆதித்யனின் குடும்பம்...கௌதமின் வீட்டில் ஆஜராகியிருந்தது.வீட்டை அலங்கரிப்பதில் ஆதித்யனும்...கௌதமும் ஈடுபட்டிருக்க...சமையல் வேலைகளை வேலைக்காரர்கள் துணையோடு லட்சுமி ஏற்றுக் கொண்டார்.நித்திலாவும்...சுமித்ராவும் திவ்யாவை தயார்படுத்தும் வேலையில் இறங்கியிருந்தனர்.



சுந்தரம் தாத்தாவும்...கமலா பாட்டியும் வழக்கம் போல் தங்களுக்குள் செல்ல சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தனர்.இவர்கள் அனைவரையும் கவனித்தபடி...செய்தித் தாளில் மூழ்கியிருந்தார் மாணிக்கம்.



"நான் படிக்க வேண்டும்...!இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்....!",முரண்டு பிடித்த திவ்யாவை..



"முதலில் மாப்பிள்ளையைப் பார்...!மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்...!",என்று கூறி சமாதானப்படுத்தியிருந்தனர் நித்திலாவும்...சுமித்ராவும்.



இருந்தும் குழம்பிக் கொண்டே தன் அறையிலேயே அடைந்திருந்த திவ்யாவை தனியாக சந்தித்துப் பேசினான் கெளதம்.



"திவி...!உன்னை மீறி எதுவும் நடக்காது டா...!இந்த அண்ணன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்லையா....?",தங்கையின் தலையை பாசத்துடன் கோதியபடி வினவிய கௌதமை நிமிர்ந்து பார்த்த திவ்யா...விழிநீர் பெருக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.



எந்தவொரு பெண்ணிற்குமே முதல் முறை அவளது திருமண விஷயங்களைப் பற்றி பேசும் போது மனம் நிறைய குழப்பம் வரும்...!இன்னதென்று விளங்காத பயம் அடி வயிற்றை ஜில்லிடச் செய்யும்...!ஏனென்று அறியாமலேயே கண்ணீர் சுரக்கும்...!அனைத்துப் பெண்களுமே தங்களது வாழ்நாளில் சந்திக்கும் காலகட்டம்தான் இது...!அந்த நிலையில்தான் திவ்யாவும் இருந்தாள்.



"பயமாயிருக்கு அண்ணா....!",சிறு தேம்பலுடன் கூறியவளின் முதுகை ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தவன்..



"அண்ணன் இருக்கேன் இல்லையா...?பயப்படக்கூடாது டா...!நீ ஜஸ்ட் வந்து மாப்பிள்ளையை மட்டும் பார்த்துட்டுப் போ...!பிடிச்சிருந்தால் மேற்கொண்டு பேசலாம்...!இல்லையா...வேண்டாம்ன்னு மறுத்துடலாம்....!உன் விருப்பத்துக்கு எதிரா...இங்க எதுவுமே நடக்காது...!",அவன் கூறிய உறுதிமொழியில்...அவள் சற்றுத் தெளிந்தாள்.



அமைதியான மனநிலையோடு பெண் பார்க்கும் படலத்திற்கு தயாரானாள்.



வரிசை கட்டிக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக அந்த அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்த இரண்டு கார்களை...கெளதம் வீட்டு பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்த லட்சுமி,"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க...!நீ போய் திவ்யா ரெடியாகிட்டாளான்னு பார்த்துட்டு வா...!",தன்னருகில் நின்றிருந்த மருமகளுக்கு உத்தரவிட்டார்.



"இதோ அத்தை....!",கரும்பச்சை வண்ண பட்டுப்புடவையில் எளிமையான அழகோடு மிளிர்ந்து கொண்டிருந்த நித்திலா...மாமியாரின் உத்தரவுக்குப் பணிந்து...திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள்.



இவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகும் போது...திவ்யாவின் கூந்தலில் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகை பூச்சரத்தை சூட்டிக் கொண்டிருந்தாள் சுமத்ரா.



"அவங்க எல்லாம் வந்துட்டாங்க...!திவி ரெடியா...?",சுமித்ராவிடம் கேட்டபடியே உள்ளே நுழைந்தாள் நித்திலா.



"அதுக்குள்ள வந்துட்டாங்களா....?எ..எனக்குப் பயமாயிருக்கு அண்ணி...!",மிரண்டு விழித்தபடி சுமித்ராவின் கையைப் பற்றிக் கொண்ட திவ்யா...மாம்பழ வண்ணப் பட்டுப் புடவையில் அப்படியொரு அழகாக இருந்தாள்.



"நீ ஏன் இதை பொண்ணு பார்க்கிற பங்க்ஷன்னு நினைக்கிறே திவி....?இப்போ நம்ம வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தால்...நாம 'வாங்க'ன்னு கேட்டுட்டு...காபி கொண்டு போய் கொடுப்போமில்லையா...?அப்படின்னு நினைச்சுக்கோ...!",கனிவான புன்னகையுடன் அதையும் இதையும் கூறி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே..



வெளியே இருந்து,"திவ்யாவை கூட்டிட்டு வாங்க...!",என்ற கமலா பாட்டியின் குரல் கேட்டது.நித்திலாவும்..சுமித்ராவும் திவ்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.



ஆயிரம் மடங்கு வேகமாய் இதயத் துடிப்பு எகிறிக் குதிக்க...மென்னடை நடந்து வெளியே வந்து பதுமையைப் போல் நின்றாள் திவ்யா.



"எல்லோருக்கும் வணக்கம் சொல்லு திவி...!",நித்திலா அவளது காதோரம் கிசுகிசுக்க..



அனைவரையும் நிமிர்ந்து பார்க்காமலேயே...அல்லி மொட்டு போல் கரம் குவித்து 'வணக்கம்...!' சொன்னாள் திவ்யா.



அவள் கையில் காபி ட்ரேயை திணித்த திவ்யா,"எல்லோருக்கும் கொண்டு போய் கொடு...!",மென்குரலில் கூற...அதை வாங்கி கொண்டு கைகள் நடுங்க...கால்கள் பின்ன மாப்பிள்ளை வீட்டினரை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.



"தேங்க் யூ....!",குறும்புடன் கம்பீரமாக ஒலித்த குரலில் படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.அங்கு...வசீகரமானப் புன்னகையை இதழ்களில் தேக்கியபடி...கண்களில் குறும்பு மின்ன அமர்ந்திருந்தவன்...அவளது பார்வையை எதிர் பார்த்தவன் போல்...சட்டென்று சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொண்டான்.



அத்தோடு நிற்காமல்...மின்னல் வேகத்தில் அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி வைக்க...விதிர்த்துப் போனவளாய் சுமித்ராவின் அருகில் சென்று நின்று கொண்டாள் அவள்.



"இங்கே வந்து உட்காரும்மா...!",முகம் முழுக்க புன்னகையுடன் அவளை அழைத்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் தேவதர்ஷனின் தாய்.அவர் முகத்தில் நிறைவு தெரிந்தது.தன் மகன் தேர்ந்தெடுத்த பெண்..மகாலட்சுமியைப் போல் இருப்பதில் வந்த நிறைவு அது....!



நிறைவுடன் அவர் தன் கணவரின் முகம் பார்க்க...அந்தப் பார்வையை புரிந்து கொண்டவராய்,"எங்க குடும்பத்துல எல்லோருக்கும் சம்மதம்....!இதுவரைக்கும் எங்க மகனோட ஆசைக்கு நாங்க குறுக்கே நின்றதில்லை...!உங்க வீட்டுப் பொண்ணை..எங்க மருமகளா எடுத்துக்கறதுக்கு எங்களுக்கு மனப்பூர்வமான சம்மதம்....!உங்க பக்கம்...எப்படி...?",கணீர் குரலில் பேச்சை ஆரம்பித்தார் தேவதர்ஷனின் தந்தை.



திவ்யாவின் பதில் தெரியாமல்...இவர்களுக்கு என்ன மறுமொழி கூறுவது என்ற யோசனையுடன்...கெளதம்...திவ்யாவை நோக்க..அவளோ தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.



"உங்க வீட்டு சம்பந்தம் கிடைக்கறதுக்கு நாங்க கொடுத்து வைச்சிருக்கணும் சார்...!",கெளதம் கூறிக் கொண்டிருக்கும் போதே...சட்டென்று விழியுயர்த்தி அவனைப் பார்த்த திவ்யாவின் விழிகளில் குழப்பம் குடிகொண்டிருந்தது.அவள் விழிகளில் தெரிந்த குழப்பத்தையும்...மிரட்சியையும்...அலைப்புறுதலையும் தேவதர்ஷன் கண்டு கொண்டான்.



ஒரு கணம்...அவனது புருவங்கள் சுருங்கி...முகம் யோசனைக்குத் தாவியது.அடுத்த கணம்...இயல்பு நிலைக்குத் திரும்பியவன்...சற்றும் தாமதிக்காமல்,"நான் திவ்யா கூட தனியா பேசலாமா....?",என்று கேள்வி எழுப்பியிருந்தான் கௌதமை நோக்கி.



'என்ன சொல்வது...?',என்று தெரியாமல் கெளதம் விழித்துக் கொண்டிருக்க...மாணிக்கம்தான் நிலைமையை சமாளித்தார்.



"ஓ...ஷ்யூர்...!ரெண்டு பேரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாங்க...!",என்றவர்...நித்திலாவிடம் திரும்பி,"ரெண்டு பேரையும் பால்கனிக்கு கூட்டிட்டுப் போம்மா...!",என்றார்.



இருவரையும் அழைத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றவள்...இருவருக்கும் தனிமையை அளித்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.விட்டால் தரையில் புதைந்து விடுபவள் போல்...தலையைக் குனிந்தபடி...விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள் திவ்யா.ஒரு காதல் புன்னகையுடன்...அவளது தவிப்பை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தேவதர்ஷன்.



"ஸோ...என்ன குழப்பம் உனக்கு...?",எடுத்தவுடனேயே..தனது மனதில் இருந்த குழப்பத்தைக் கண்டு கொண்டு கேள்வி கேட்டவனை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.



அவளது ஆச்சரியப் பார்வையைக் கண்டும் காணாமல் விட்டவன்,"உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு...!எதுவா இருந்தாலும் தயக்கமில்லாம...என்கிட்ட சொல்லலாம்....!",மெல்லிய குரலில் அவன் வினவ..



"இப்போ...இ..இந்தக் கல்யாணம் வேண்டாம்...!",ஒருவாறாகத் தைரியத்தை திரட்டிக் கொண்டு கூறி முடித்தாள் அவள்.



கல்லூரியின் இறுதியாண்டில் அடியெடுத்து வைத்திருந்தவளுக்கு...அப்போதைக்கு படிப்பு மட்டும்தான் மனதில் இருந்தது.சின்னஞ் சிறிய சிட்டாக சிறகடித்துக் கொண்டிருந்தவளுக்கு...அந்தத் திருமண செய்தி ஒரு பயத்தைக் கொடுத்திருந்தது.அந்தப் பயத்தில்தான் அவ்வாறு கூறினாள்.



"இப்போதைக்குத்தானே இந்தக் கல்யாணம் வேண்டாம்....!இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா...?",அவளது முகத்தில் தெரிந்த மிரட்சியைக் கண்டு கொண்டவனாய் அவன் குறும்புக் குரலில் வினவ..



அவள் இன்னும் அதிகமாக மிரண்டு விழித்தாள்.



அவளது மருண்ட பார்வையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த மனதை முயன்று மீட்டெடுத்தவன்...அவளது முகத்தையே தன் கூர் விழிகளால் ஆராய்ந்தான்.



"ஒருவேளை...யாரையாவது லவ் பண்றியா...?",இதைக் கேட்கும் போதே அவன் இதயம் 'தட்..தட்'என்று பந்தயக் குதிரையாய் ஓடியது.



எப்பொழுது துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் புள்ளி மானாய்...அவளை கல்லூரியில் பார்த்தானோ...அன்றிலிருந்து அவளை ஒரு மகாராணியாய் தன் இதயத்தில் குடியேற்றி கொலு வைத்திருக்கிறான்.தன் காதலை கையில் பிடித்துக் கொண்டு அவன்...அவளது பதிலை எதிர் நோக்கியிருக்க...



அவனை ஏமாற்றாமல்,"இல்லை...!",என்று பட்டென்று பதிலளித்து அவன் காதலை உயிர்த்தெழச் செய்தாள் அந்த நங்கை.



"உஃப்...!",என்று உதட்டைக் குவித்து மூச்சை வெளியிட்டவன்,"அப்புறம் என்ன பிரச்சனை...?ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற...?",இலகுவான குரலில் வினவினான்.



"நான்...நான் படிக்கணும்...!",அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகமே.



"அவ்வளவுதானே...!கல்யாணத்துக்கு பிறகு படி...!நானே உன்னைப் படிக்க வைக்கிறேன்....!",அவன் குரலில் அப்படியொரு மென்மை.



ஏனோ..அவனது குரலும்...தன்னைப் பார்க்கும் போது..அவனது கண்களில் தெறித்து விழும் காதலும்...அவளை..அவன்பால் சாய்ப்பதற்கு போதுமானதாக இருந்தது.அதிலும்...கண்களோடு சேர்ந்து அவனது உதடுகள் சிந்தும் குறும்புப் புன்னகை...அவளது மனதிற்குள் இனம் புரியாத சாரலை அள்ளித் தெளித்தது.



மனதிற்குள் ஏற்பட்ட குறுகுறுப்பு...அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவளைத் தடுக்க...முந்தானையில் நுனியை சுருக்கிடுவதும்...அவிழ்ப்பதுமாக தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.



அவளது அமைதியைக் கவனித்தவன்,"ஒருவேளை...என்னை உனக்குப் பிடிக்கலையோ...?படிக்கணும்ன்னு சொல்றது...இந்தக் கல்யாணத்தை நிறுத்தறதுக்கு ஒரு காரணமோ...?",அவன் கூறிய அடுத்த நொடி...சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.



அத்தோடு,"இல்ல...!அப்படியெல்லாம் இல்ல...!",என்றாள் வேகமாக.



"அப்படித்தான்...!என்னை உனக்கு பிடிக்கலை....!",அவள் கண்களை விட்டு இம்மியளவும் பார்வையை விலக்காமல்...கூர்மையாக அவளையே பார்த்தபடி அழுத்தமாக கூற..



"எனக்குப் பிடிச்சிருக்கு...!",பட்டென்று அவளிடம் இருந்து வந்தன வார்த்தைகள்.



"எதை...?என்னுடைய சட்டையையா...?",அவனது சட்டையை விட்டு மேலே ஏறாத அவளது பார்வையை ரசித்தவனாய்...அவன் உல்லாசமாய் வினவ..அவனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.அவளது விழிகள் உயர்ந்து அவனது பார்வையைக் கவ்விக் கொண்டது.



"உ..உங்களைப் பிடிச்சிருக்கு...!",சுட்டு விரலை அவனை நோக்கி சுட்டிக் காட்டியபடி கூறியவளின் முகம் அந்தி வானமாய் சிவந்திருந்தது.



அவள் கூறிய விதமும்...சிவந்த அவள் முகமும்...அவனது உதடுகளில் ரசனையான புன்னகையை குடியமர்த்தியது.



"அப்போ...கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லிடலாமா...?",மெலிதாக விசிலடித்தபடி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் வினவ..



"ம்ம்...!",நாணமும் காதலும் போட்டி போட 'உம்' கொட்டி விட்டு ஓடி விட்டாள் திவ்யா.



அதன் பிறகு...மளமளவென்று வேலைகள் நடந்தேறின.இன்னும் மூன்று மாதம் கழித்து வரும் மூகூர்த்தத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.



அங்கு...இரு உள்ளங்கள் கல்யாணக் கனவுகளில் மிதக்க ஆரம்பித்தன...!



*****************************
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
நாட்கள் உருண்டோட...வாரங்கள் மாதங்களாயின...!திவ்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது என்ற நிலையில்...அனைவரும் கல்யாண வேலைகளில் தங்களை மூழ்கடித்துக் கொண்டனர்.நித்திலா..சுமித்ரா மற்றும் திவ்யா ஆகிய மூவரும் மணப்பெண்ணிற்குத் தேவையான உடைகள்...நகைகள் மற்றும் பிற சாமான்கள் வாங்குவது என கடைவீதி கடைவீதியாக சுற்றிக் கொண்டிருந்தனர்.



திருமணத்திற்கான மற்ற வேலைகளை ஆதித்யனும்...கௌதமும் கவனித்துக் கொண்டனர்.பெரியவர்கள் என்ற முறையில் மாணிக்கமும்...லட்சுமியும் தான் முன்னின்று ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்தனர்.இப்படியாகத் திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.



தேவதர்ஷன்..திவ்யாவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை...!இருவரும் விழிகள் நிறைய கனவுகளை சுமந்து கொண்டு...அலைபேசியை கதியென்று கிடந்தனர்.



அன்று ஆதித்யனின் பிறந்த நாள்...!முதல் நாளே கடைவீதிக்குச் சென்று ஆதித்யனுக்காக பார்த்து பார்த்து ஒரு கைக்கடிகாரத்தை வாங்கி வந்திருந்தாள் நித்திலா.அதன் விலையே லட்சக்கணக்கில் வந்தது.அவள் வேலை செய்த காலங்களில் சேமித்து வைத்திருந்த பணத்தில் அதை வாங்கியிருந்தாள்.



ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதித்யனின் இமைகளின் மீது சில்லென்று ஏதோ குறுகுறுக்கவும்...முகத்தைச் சுளித்தபடி திரும்பிப் படுத்தான்.இப்பொழுது அந்த குறுகுறுப்பைத் தனது காதோரத்தில் உணர்ந்தவன்...தூக்கம் கலைய..எரிச்சலுடன் கண் விழித்தான்.



எரிச்சலுடன் இமைகளைப் பிரித்தவனின் விழிகளில் அடுத்த கணம்...காதல் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொண்டது.தலைக்குக் குளித்திருந்த ஈரக் கூந்தலை விரித்து விட்டபடி...தன் கூந்தல் நுனியால் அவனது காதோரத்தில் குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள் அவனது செல்ல பேபி...!



இவன் கண் விழித்ததும்...அவனைப் பார்த்து 'களுக்'கென்று சிரித்து வைத்தாள்.



"என்னடி...?காலையிலேயே இப்படி ஒரு தரிசனம் தர்ற...?",மயில் கழுத்து வண்ணத்தில் புடவையணிந்து கொண்டு...தோகை விரித்தாடும் இளம் மயிலாய் கூந்தலை விரிய விட்டிருந்தவளை ரசனையுடன் பார்த்தபடி வினவினான் ஆதித்யன்.



"என் குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!",அவனது காதோரம் குனிந்து மெல்ல முணுமுணுத்தாள் அவள்.கணவனது பிறந்தநாள்...அவளது மனத்தில் இருந்த கோபத்தையும்...உறுத்தலையும் அப்போதைக்கு மறைத்திருந்தது.



"ரொம்பவும் அழகான பிறந்தநாள்...!",மயக்கத்துடன் கூறியவனின் கரங்கள் அவளைத் தன்னை நோக்கி இழுத்தன.



அவனது செயலை எதிர்க்காமல்...படுத்திருந்தவனின் மார்பில் தலை வைத்து வாகாக சாய்ந்து கொண்டவள்...அவனது இடது கையைப் பற்றி தான் வாங்கியிருந்த கைக்கடிகாரத்தை கட்டி விட்டாள்.



"என்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு...அதனோட எஜமானியுடைய பரிசு...!",அவன் விழி பார்த்து உரைத்தவளின் விழிகளோடு தன் பார்வையைக் கலந்தவன்..



"தேங்க்ஸ் டி குட்டிம்மா...!ரொம்ப அழகாயிருக்கு...!",என்றபடி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.



சிறிது நேரம் அமைதியில் கழிய...பிறகு அவனே ஆரம்பித்தான்.



"பேபி...!",



"ம்....!",



"என் பிறந்தநாளுக்கு நான் கேட்கிற பரிசைத் தருவியா...?",அவன் குரல் தாபமாய் வெளிவந்தது.



"எ..என்ன...?",



"உன் முத்தம்...!உன் குட்டிப்பையனுக்காக ஒரே ஒரு முத்தம் இங்கே தருவியா...?",அவன் தன் உதடுகளைத் தொட்டுக் காண்பித்து வினவ..



அவ்வளவு நேரம் இருந்த இணக்க நிலை மாறியவளாய் பட்டென்று எழுந்தாள்.ஏனோ...ஆதித்யன் அவளைக் கணவனாகா நெருங்கும் போதெல்லாம்...அவளுக்கு தன்னுடைய விருப்பம் இல்லாமல்...தன்னுடைய சம்மதத்தை பொருட்படுத்தாது..தன் கழுத்தில் தாலி கட்டிய ஆதித்யனின் பிடிவாதம் தான் ஞாபகத்திற்கு வந்தது.



'என்னுடைய விருப்பத்திற்கு இவரிடம் இருக்கும் பதில்தான் என்ன...?',என்ற கேள்வி மனதில் எழுந்து அவளை இறுகச் செய்து விடும்.



அப்பொழுதும் அதே கேள்வி மனதில் எழ...அவனை விட்டு விலகியவள்,"குளிச்சிட்டு கீழே வாங்க...!",அவன் முகம் பார்க்காமல் உரைத்து விட்டு வெளியேறி விட்டாள்.



சிறு பெருமூச்சை வெளியிட்டபடி குளியலறைக்குள் புகுந்தவன்..குளித்து முடித்து விட்டு...அவள் தயாராய் எடுத்து வைத்திருந்த கோட் சூட்டை அணிந்து கொண்டான்.நிலைக்கண்ணாடியில் தெரிந்த தனது பிம்மத்தைப் பார்த்தபடி கழுத்து டையை சரி செய்து கொண்டிருந்தவனின் கண்களில்...நித்திலா பரிசளித்த கைக்கடிகாரம் வந்து விழுந்தது.



காதல் புன்னகையோடு அதைக் கையிலெடுத்தவன் தன் மணிக்கட்டில் கட்டிக் கொண்டான்.ஏதோ அவளையே முத்தமிடுவது போல்...மிக மென்மையாய் அந்தக் கைக்கடிகாரத்தில் தனது உதடுகளை ஒற்றி எடுத்தவன்...பிறகு தனது செயலை நினைத்து வெட்கியவனாய்...புன்னகையோடு வெளியேறினான்.



தாத்தா...பாட்டியிடமும்...தாய் தந்தையிரடமும் ஆசிர்வாதம் வாங்கியவன்..அனைவரது வாழ்த்துக்களையும் மனநிறைவோடு பெற்றுக் கொண்டான்.வழக்கம் போல் நித்திலா பரிமாற...சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதித்யன்..



"பேபி...!நான் கேட்ட கிஃப்ட் ஞாபகம் இருக்கா...?",அடிக்குரலில் முணுமுணுக்க..



அவளோ,"கேசரி சாப்பிடுங்க...!நானே செய்தது...!",என பேச்சை மாற்றினாள்.



அவள் பேச்சை மாற்றுவதைப் புரிந்து கொண்டவன்...சிறு கடுப்புடன் நிமிர்ந்து பார்க்க..நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில் வெண்ணெய் போன்ற குழைவான அவளது இடுப்பு பிரதேசம் கண்ணில் பட...'நறுக்'கென்று கிள்ளி வைத்து விட்டான்.



"ஆ....!",என்று துள்ளி அலறியவள்..வெகு பாடுபட்டு கையில் இருந்த பாத்திரத்தைக் கீழே போடாமல் சுதாரித்தாள்.



சாப்பிட்டுக் கொண்டிருந்த சுந்தரம் தாத்தாவும்...கமலா பாட்டியும் இவளது அலறலில்,"என்னாச்சு ம்மா...?",என்றபடி நிமிர்ந்து அவளைப் பார்க்க...அவளோ...'என்ன சொல்வது..?',என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.



ஆதித்யனோ...படு சமர்த்தாய் அமர்ந்து நல்ல பிள்ளை போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.



"என்னாச்சுன்னு சொல்லு பேபி...?பெரியவங்க கேட்கிறாங்க அல்ல...?",குறும்புப் புன்னகையுடன் கேள்வி வேறு கேட்டு வைத்தான்.



அவனது முகத்தில் வழிந்த குறும்பில்...அவளுக்குள்ளும் துடுக்குத்தனம் தலைதூக்கியது.



'இருடா...!சொல்லி வைக்கிறேன்...!',பார்வையாலேயே அவனுக்கு சேதி சொல்லியவள்..
"இங்கே பாருங்க பாட்டி...!உங்க பேரன் சும்மா இருக்காமல்...என் இ...",அதற்கு மேல் என்ன சொல்லியிருப்பாளோ..



அதற்குள்,"அய்யய்யோ....!",என்ற ஆதித்யனின் அலறலைக் கேட்டு அனைவரும் அவன் புறம் திரும்பினர்.



"புரை ஏறிக்கிச்சு தாத்தா...!ம்க்கும்...ஏய்ய்....தண்ணி கொடு டி....!",நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியபடி அவர்களை சமாளித்தவன்...திரும்பி நித்திலாவை முறைத்தான்.



"அச்சோ...!பார்த்து சாப்பிடக் கூடாதா அத்தான்....!",அவனைப் பார்த்து கண் சிமிட்டியபடி தண்ணீர் கிளாஸை எடுத்து அவன் கையில் திணித்தாள்.



'ராட்சசி...!இருடி...!உன்னை வைச்சுக்கிறேன்....!',ரகசியமாய் அவன்...அவளை மிரட்ட...அவளோ...உதட்டை நெளித்து வளைத்து சுளித்து பழிப்புக் காட்டினாள்.



ஒரு கணத்திற்கும் அதிகமாகவே அவள் இதழ்களில் நிலைத்த தனது பார்வையை வெகு சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன்...ஒருவாறாக சாப்பிட்டு முடித்து எழுந்தான்.



அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வாசலுக்கு விரைந்தவனின் பின்னாலேயே அவனை வழியனுப்புவதற்காக விரைந்தாள் நித்திலா.வாசலுக்கு வந்தவன் யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு...அவளது கைகளைப் பிடித்து இழுத்தபடி...முல்லைக் கொடியின் மறைவுக்குச் சென்றான்.



"என்னை விடுங்க...!",திமிறியவளின் இடையை தன் இரு கரங்களாலும் அழுத்தப் பற்றி சிறை செய்தவன்..



"என்னடி...?அவ்வளவு தைரியமா....?தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லப் போற....?இப்போ இதையும் போய் சொல்லுடி...பார்க்கலாம்...!",கூறியபடியே அவளது இதழ்களை சிறை செய்யும் நோக்கத்துடன் அவள் முகம் நோக்கி குனிய..



கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிடம் இருந்து திமிறி விலகியவள்...அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி விட்டாள்.



"ராட்சசி...!",வாய்க்குள் முணுமுணுத்தவன் தனக்குள் புன்னகைத்தவாறே அவ்விடத்தை விட்டு அகன்றான்.



அலுவலகத்திற்குச் சென்று ஆதித்யனோடு மதிய உணவை உண்டு விட்டு...வீட்டிற்கு வந்த நித்திலாவிற்கு தூக்கம் கண்களை சுழற்ற...இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கி விட்டாள்.மாலை ஐந்து மணிக்கு ஆதித்யன் வந்துதான் எழுப்பினான்.



"நல்ல தூக்கமா பேபி...?",



"ம்ம்...!",கொட்டாவியை வெளியேற்றியபடியே அவள் 'உம்' கொட்ட..



"சரி...!கிளம்பு....!எங்கேயாவது வெளியே போய்ட்டு வரலாம்....!",அணிந்திருந்த கோட்டை கழட்டியபடியே அவளிடம் கூறினான்.



'வெளியே போகலாம்...!' என்ற வார்த்தையில் விழிகளில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்ச தூக்கமும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து விட..



"ஹைய்....ஜாலி....!எங்கே போகலாம்....?",குதூகலித்தாள் நித்திலா.



"உன் இஷ்டம்....?",



"ஹ்ம்ம்...!அப்போ...ஃபர்ஸ்ட் கோவில்..அப்புறம் பீச்...கடைசியா டின்னரை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திடலாம்....!",அவசர அவசரமாக திட்டம் போட்டவள்...அடுத்த அரை மணி நேரத்தில்...ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் அங்கங்கு தங்க நிறத்திலான மணிக்கற்கள் கோர்க்கப்பட்ட ஷிபான் புடவையில்..செம்பருத்தி பூவாய் தாயாராகியிருந்தாள்.



ஆதித்யனுக்கும் வழக்கமாக அணியும் கோட் சூட்டை விடுத்து...ஜீன்ஸ் பேண்டும் வெள்ளை நிற டீ ஷர்ட்டும் எடுத்து வைத்தவள்...லட்சுமியிடம் சொல்வதற்காக கீழே இறங்கிச் சென்றாள்.



அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் ஏறினர்.



இருவரும் அடிக்கடி வரும்...ஊருக்கு வெளிப்புறத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குச் சென்று மனமார வேண்டி விட்டு கடற்கரைக்குச் சென்றனர்.



அன்று பௌர்ணமி....!நட்சத்திரங்கள் மின்னும் வான வெளியில் பால் சிந்தும் நிலவு மகள்...தனது முழு பரிவாரங்களுடன் பவனி வந்து கொண்டிருந்தாள்.அவளைக் கட்டித் தழுவும் ஆவேசத்துடன்...கடல் அலைகள் ஆக்ரோஷமாய் வானை நோக்கி சீறின...!அப்படி இருந்தும்...நிலவு மகளின் சுண்டு விரலைக் கூட ஸ்பரிசிக்க முடியாத ஏக்கத்தில்...ஆக்ரோஷமாய் பொங்கி வந்த கடலலைகள் கரையில் மோதி உயிர் விட்டன...!



கடற்கரை மணலில் ஆதித்யனுடன் அமர்ந்து இக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.இருவருக்குள்ளும் மௌனம் மட்டுமே குடி கொண்டிருந்தது.மௌனத்தை விட சிறந்த மொழி வேறு எதுவும் உலகத்தில் இருக்க முடியாது...!அதிலும்...காதல் வயப்பட்டவர்களுக்கு மௌனம்தான் விழியாகும்....!



வெகு நேரம் பால் நிலவையும்...கடல் அலைகளையும் ரசித்துக் கொண்டிருந்தவர்கள்...நேரமாவதை உணர்ந்து கிளம்பினர்.உயர்தர நட்சத்திர ஹோட்டலில்...ரூஃப் கார்டனுக்கு மத்தியில் அமர்ந்திருந்தனர் ஆதித்யனும்..நித்திலாவும்.



சுற்றிலும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க...பசுமைப் புல்வெளியாய் தரை விரிந்திருக்க...செயற்கையாய் வடிவமைக்கப்பட்டிருந்த நீரூற்றில் இருந்து அருவி போல் நீர் கொட்டிக் கொண்டிருக்க...மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திற்கு நடுவில் தேவதையாய் அமர்ந்திருந்த நித்திலாவை...விழி எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



அவனது பார்வையில்...கட்டியிருந்த புடைவைக்கு இணையாய் குங்கும நிறம் கொண்ட முகத்தை மறைப்பதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள் அந்த மங்கை.



"அழகா இருக்கே டி ராட்சசி...!",அவளைக் கடித்து தின்பதைப் போல் பார்த்து வைத்தபடி அவன் கூற..



"ஷ்...!இப்படிப் பார்க்காதீங்க...!",இமைகள் படபடத்தபடி முணுமுணுத்தாள் அவள்.



"இப்படி பார்க்கவா....?",கேட்டவனின் பார்வை வெட்கமில்லாமல் அவளது மேனியில் படர்ந்து பரவி ஊர்ந்து மேய....இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டு தலை குனிந்தாள் அவள்.



'கள்ளன்...!எப்படி பார்க்கிறான் பாரு...!',மனதிற்குள் செல்லமாக அவனைத் திட்டிக் கொண்டிருக்கும் போதே....சர்வர் வந்து ஆர்டர் செய்த உணவு வகைகளை மேசையில் பரத்தி விட்டு சென்றான்.



அவனது பார்வையைக் கண்டு கொள்ளாதது போல்...அவள் சாப்பிட ஆரம்பிக்க...அவனோ...அவளை சாப்பிட்டவாறே,"என்னுடைய கிஃப்ட்டை எப்போ தருவ பேபி....?",என்று கேட்டு வைத்தான்.



சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு புரையேற...அவசர அவசரமாகத் தண்ணீரை எடுத்துப் பருகியவள்,"நான்தான் உங்களுக்கு காலையிலேயே கிப்ட் கொடுத்துட்டேனே....?",அவளது பார்வை அவன் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் படிந்தது.



"நான் என்ன கிஃப்ட் கேட்கிறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்....!",பிடிவாதத்துடன் கூறியவனின் பார்வை அழுத்தத்துடன் அவளது இதழ்களில் நிலைத்தது.



"சூடு ஆறிடப் போகுது...!முதல்ல சாப்பிடுங்க...!",அவனது பிடிவாதத்தை கண்டும் காணாமல் விட்டவளாய் அவள் கூற..



அவனோ...கூர்மையான பார்வையை அவளது விழிகளுக்குள் செலுத்தியவனாய்,"ஏன் மறுக்கிறே நித்திலா...!",என்றான் ஒரு வித அழுத்தத்துடன்.



அவனது பார்வையை சந்திக்க முடியாமல் மனதுக்குள் ஏதோ நெருட...உணவை அளைந்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.



"இன்னும் எவ்வளவு நாள்தான் என்னை காத்திருக்க வைப்ப....?",அவன் குரலில் இருந்தது கோபமா...?தாபமா....?என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை.



அவளிடம் கேள்வி கேட்டவன்...அதன் பிறகு ஒன்றும் நடக்காததைப் போல் சாப்பிட ஆரம்பித்தான்.நித்திலாதான் மனதிற்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.



'என் மனசு முழுக்க அவர் மேல காதல் இருந்தும்...என்னால அவரை நெருங்க முடியலையே...?',என்று மருகிக் கொண்டிருந்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது.தன்னுடைய கேள்விக்கு அவனிடமிருந்து பதில் கிடைக்காமல்...தன்னால் அவனுடன் நெருங்க முடியாது...என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.



அவளது மனதில் ஏதோ குழப்பம் இருப்பதைக் கண்டு கொண்டவனாய்...சிரித்து பேசி அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தான்.இருவரும் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும்...மனதிற்குள் அவரவர் யோசனைகளில் மூழ்கியிருந்தனர்.



ஒருவழியாக...இரவு உணவை முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வரும் போது அனைவரும் உறங்கியிருந்தனர்.



ஆதித்யன்...கதவை எல்லாம் அடைத்து விட்டுத் தங்களது அறைக்குள் நுழையும் போது...நித்திலா உடையைக் கூட மாற்றாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.இல்லை...இல்லை...உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தாள்...!



அவளருகில் வந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன்.."என்னுடைய பிறந்தநாள் அன்னைக்கு...நான் ஆசையா கேட்டப் பரிசைக் கூட உன்னால தர முடியலைல்ல...?அந்தளவுக்கு என்னை வெறுத்திட்டியா பேபி....?",அவனது குரலில் அப்படியொரு வலி...!



இமைகளை மூடிப் படுத்திருந்தவளைப் பார்த்து வலியோடு வினவிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டான் ஆதித்யன்.



திகைத்துப் போய் எழுந்தமர்ந்த நித்திலாவின் மனதிலும் வலி..வலி...வலி மட்டுமே...!அவன் குரலில் தெரிந்த வலி நேராக சென்று அவளது காதல் இதயத்தைத் தாக்க...எதையும் யோசிக்காமல் சட்டென்று எழுந்தவள்...அவனை நோக்கி நடந்தாள்.



ஒரு பக்கம் முழுவதுமாய் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியின் வழியாகத் தெரிந்த முழு நிலவை வெறித்தபடி...கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.



அவன் தோளைப் பற்றித் தன் புறம் திருப்பியவள்...அவன் கண்களோடு தன் விழிகளைக் கலந்தவாறு...அவன் உயரத்திற்கு தன் கால்களை எம்பி..அவன் உதடுகளோடு தன் இதழ்களைப் பிணைத்தாள்.



தன் இதயத்தின் மொத்தக் காதலையும்...அந்த முத்தத்தின் வாயிலாக அவனுக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்...!கண்களை மூடி..அவளது முத்தத்தில் தெறித்து விழுந்த காதலில் துளித் துளியாய் நனைந்து கொண்டிருந்தான் அவன்....!அவன் மனதில் இருந்த வலி காணாமல் போயிருந்தது.



அந்தக் கட்டழகி இன்னும் இதழ் யுத்தத்தில் தேர்ச்சி பெறவில்லை போலும்...!தட்டுத் தடுமாறி அவள் விழித்துக் கொண்டிருக்கும் போது...சட்டென்று அவளது செயலைத் தனதாக்கி கொண்டான் அந்தக் கள்வன்.



அவளது சிற்றிடையைத் தன் இரு கைகளாலும் அழுந்தப் பற்றித் தன் உயரத்திற்கு தூக்கியவன்..இதழ் யுத்தத்தின் ரகசியத்தை அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.அவளும்...அவன் கற்றுக் கொடுத்த வித்தையை எல்லாம் சமர்த்துப் பிள்ளையாய் கற்றுக் கொண்டாள்.



மூச்சுக்காற்றுக்காக அவள் ஏங்கித் தவித்த போது கூட...அவளது இதழ்களை விட்டு விலகாமல் தன் உயிர்மூச்சை அவளுக்கு சுவாசமாக்கியவன்...அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கையை நோக்கி நடந்தான்.



இருவரின் விழிகளிலும் அப்பட்டமாய் காதல் மயக்கம் தெரிய...விழித்துக் கொண்டு பேயாட்டம் போட்ட உணர்வுகளை அடக்க விரும்பாமல்...விருப்பத்துடன் தொலைந்து போக ஆரம்பத்தினர்..



அவளது விழிகளைத் தனது காதலால் கட்டிப் போட்டவன்...மிக மென்மையாய் அவளை மெத்தையில் கிடத்தினான்.இவர்கள் போட்டுக் கொண்ட இதழ் யுத்தத்தின் போதே...அவளது புடவை அவளை விட்டு விலகி தரையைத் தஞ்சமடைந்திருந்தது.



பூ மாலையாய் மெத்தையில் படுத்திருந்தவளின் மேல்..காற்றாய் மாறி படர்ந்தவன்...அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.அவனது மீசை முடிகளின் தீண்டல்களிலும்....கரங்களின் சீண்டல்களிலும் கூசிச் சிலிர்த்து செந்நிறம் கொண்டது அந்தப் பெண்மை.



கழுத்து வளைவில் குடியிருந்த அவனுடைய உதடுகள் மெல்ல மெல்ல கீழிறங்கி அவளது நெஞ்சுக்குழியில் அழுத்தமாய் புதைந்து முத்தராத்தை சூட்ட ஆரம்பிக்க...அவனது கரங்களோ...அவளது மேனியில் எல்லைகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தது.



ஆழ்கடலின் நடுவே சுழலில் சிக்கி கொண்ட துரும்பாய்...அவனது தீண்டலில் மூழ்கி கொண்டிருந்தவளின் மனதில் பட்டென்று அந்தக் கேள்வி எழுந்தது.



'என் விருப்பம் இல்லாமல்...இவர் எப்படி என் கழுத்தில் தாலி கட்டலாம்...?என்னுடைய விருப்பத்திற்கு...இவருடைய பதில்தான் என்ன...?',அதுநாள் வரை மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வி...அப்பொழுதும் அவள் கண் முன் தோன்ற...அவனிடமிருந்து விலகப் போராடினாள்.



மலர்த் தோட்டங்களுக்கு நடுவில் சுகமாய் தொலைந்து கொண்டிருந்தவனுக்கு...அவளுடைய விலகல் உரைக்கவில்லை.



"ஷ்....!பேபி...!தடுக்காதே டா...!",காதல் போதையில் பிதற்றியவன் அவளது எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் முன்னேற...ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலும் போராட முடியவில்லை.



எங்கே போராடுவது...?உடலும் மனதும் தன்னவனின் தொடுகையில்...ஆதவனைக் கண்ட அல்லியைப் போல் மலர்ந்து மணம் பரப்பும் போது...பாவையவளாலும் எவ்வளவு நேரம்தான் போராட முடியும்....?



அவனது தீண்டலில் ஒரு மனம் உருகினாலும்...இன்னொரு மனம் விழித்துக் கொண்டு கேள்விகளைத் தொடுக்க...இரண்டு மனங்களுக்கு இடையிலும் நடந்த போராட்டத்தில் சோர்வுற்றவளாய் அவள் தளர...அவள் விழிகளில் இருந்து விழிநீர் வழிந்தது.



அவளது முகத்தோடு முகம் இழைத்திருந்தவனின் உதடுகள் சூடான கண்ணீரை உணர...அடுத்த நொடி..தீச்சுட்டாற் போல் அவனை விட்டு விலகினான்.



அவன் விலகியதைக் கூட உணராமல்...விழிகளை அழுந்த மூடிக் கொண்டு...முகம் கசங்க...கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.அவளது கண்ணீரைப் பார்த்தவனுக்கு கட்டுக் கடங்காமல் கோபமும் வலியும் பெருக...



"என்னுடைய தொடுகை...உன் கண்கள்ல கண்ணீரை வரவழைக்குதா...?அந்தளவுக்கு என்னை அருவெறுக்கிறயா...?",கேட்டவனின் குரலில் வலியும்...கோபமும் கலந்திருந்தது.



அவனுடைய கேள்வியில் விதிர்த்துப் போய் எழுந்து அமர்ந்தவள்...தான் இருக்கும் நிலையை உணர்ந்து அவசர அவசரமாக அங்கிருந்த போர்வையால் தன்னை மூடிக் கொண்டாள்.



"ம்...மறைச்சுக்கோ...!நான் ரோட்ல போகிற யாரோ ஒருத்தன் பாரு...!நான் எல்லாம் பார்க்க கூடாது...!நல்ல மறைச்சுக்க....!",அவன் அதற்கும் எரிந்து விழுந்தான்.



அவள் தலைகுனிந்து மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க..



"எதுக்கு டி இப்போ அழற...?எதைப் பிடிச்சுக்கிட்டு இப்போ...இப்படி தொங்கிக்கிட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியல...!என்னைக் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட...?உன் மனசில என் மீதான காதல் இருக்குதுதானே...?அப்புறம் ஏன்...ஏதோ மூணாம் மனுஷன் தொட்ட மாதிரி முகத்தைச் சுருக்கறே...?",அவனால் அவளது கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதிலும்...காதலாய் தான் தொட்ட தொடுகையை எண்ணி அவள் அழுவது...அவனுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.



"ச்சே...!நான் ஒரு கேனையன்...!உன்கிட்டே போய் காதல் இருக்குதான்னு கேட்டுட்டு இருக்கேன் பாரு...!உனக்குத்தான் என் மேல காதல் இருந்திருந்தால்..அநாதை மாதிரி என் காதலைத் தூக்கியெரிய துணிஞ்சிருக்க மாட்டியே...?'நான் வேண்டாம்...!என் காதல் வேண்டாம்..!'ன்னு என் காதலுக்குத் துரோகம் பண்ணினவள்தானே நீ....!துரோகி....!",சுட்டு விரலை நீட்டி அவன் சுமத்திய குற்றத்தில் அவள் மனம் உடைந்தது.



'நான் இவரைக் காதலிக்கலையா...?நான் துரோகியா...?',அவளது காதல் மனம் கேள்வி கேட்க..அவளுக்கும் கோபம் வந்தது.



"என்ன சொன்னீங்க....?எனக்கு உங்க மேல காதல் இல்லையா....?நான் துரோகியா...?நான் துரோகின்னா...அப்போ நீங்க யாரு...?என் விருப்பம் இல்லாமல்...என் கழுத்துல தாலி கட்டி என் நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணிட்டீங்க....!உங்களுக்கு என் மேல் காதல் இருந்திருந்தால்..என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்திருப்பீங்க...!எனக்கு விருப்பம் இல்லைன்னு தெரிந்தும்...நான் அவ்வளவு கண்ணீர் விட்டும்..என் விருப்பத்துக்கு எதிரா நம்ம கல்யாணத்தை நடத்தியிருக்க மாட்டீங்க....!உங்களுக்குத் தேவை உங்களுடைய ஆசை...உங்களுடைய விருப்பம் மட்டும்தான்...!



என்னுடைய விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காமல்...என்னுடைய நம்பிக்கையை கொன்ன துரோகி நீங்க....!",அவள் கூறி முடித்த அடுத்த நொடி...அவனது கரம் இடியாய் அவளது கன்னத்தில் இறங்கியது.



"என்னடி சொன்ன....?",புலியாய் உறுமியவன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்த்திருந்தான்.



மிளகாயை அரைத்துப் பூசியதைப் போல கன்னத்தில் எரிச்சல் பரவ...கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் நித்திலா.



"நான் துரோகியா...?உன் நம்பிக்கையை நான் கொன்னேனா...?என்னுடைய நம்பிக்கையைத்தான் டி...வலிக்க வலிக்க நீ குழி தோண்டி புதைச்சிட்ட....!'என்னுடைய விருப்பம்...என்னுடைய விருப்பம்...'ன்னு பெரிசா பேசிக்கிட்டு இருக்கிறயே..அந்த உன்னுடைய விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து அன்னைக்கு நான் விலகியிருந்தேன்னா...இந்நேரம் நீ இன்னொருத்தன் கையால தாலி வாங்கிட்டு...அவன்கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருந்திருப்ப...!எங்கே உன் மனசைத் தொட்டுச் சொல்லு...!நீ காலம் முழுக்க கன்னியாவே இருக்கறதுக்கு உன் அம்மா அப்பா சம்மதிப்பாங்களா...?",ஆக்ரோஷமாய் கேள்வி கேட்டவனுக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.



அவனுடைய ரௌத்திரத்தில்...முழங்கால்களை கட்டிக் கொண்டு கட்டிலோடு ஒன்றினாள் அவள்.



"சொல்லு டி...!உன் அப்பா அம்மா உன் மேல வைச்ச நம்பிக்கைக்காக என் காதலை தூக்கியெறிய துணிந்த நீ...அதே அப்பா அம்மாவுடைய கண்ணீருக்காக இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட துணிய மாட்டேங்கிறதுக்கு என்ன நிச்சயம்...?",சாட்டையடியாய் சுழன்றடித்த கேள்வியில் அவளது பெண்மை அடிவாங்கி சிலிர்த்து நிமிர்ந்தது.



"இல்லை...!உங்களைத் தவிர இன்னொருத்தனோட நிழலைக் கூட என்மேல விழ விட மாட்டேன்...!நீங்க இல்லாம...இன்னொருத்தன் கையால நான் தாலி வாங்கியிருக்க மாட்டேன்...!சத்தியமா மாட்டேன்....!",கதறித் துடித்துக் கண்ணீர் விட்டவளை அந்நியப் பார்வை பார்த்து வைத்தவன்..



"அதை நான் எப்படி நம்பறது...?",என்று இரக்கமில்லாமல் கேட்டு வைத்தான்.



துடித்து நிமிர்ந்தவளின் உதடுகள்,"ஆது...!",என்று அதிர்ச்சியாய் முணுமுணுக்க..



அவளது அதிர்ச்சியைக் கண்டும் காணாமல் விட்டவன்,"எதை வைச்சு என்னை நம்ப சொல்ற...?உன்னுடைய பெத்தவங்களுக்காக நம்மளுடைய காதலை தூக்கியெறிந்தவள்தானே நீ...!அப்படிப்பட்ட நீ இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்தவும் தயங்க மாட்ட...!",அக்னியாய் வார்த்தைகளை உமிழ்ந்தான் ஆதித்யன்.



அவனுடைய காதலைத் தூக்கியெறியத் துணிந்த அவளுடைய செயல்...அவனுடைய மனதில் காயத்தை ஏற்படுத்தியிருந்தது...!உள்ளே உறுத்திக் கொண்டிருந்த ரணம் சமயம் பார்த்து வெளிப்பட்டு...அந்த ரணத்திற்கு காரணமானவளைக் கடித்துக் குதறியது..!



அதிர்ச்சியில் விழியகல அவனைப் பார்த்தபடி சிலையாய் சமைந்து விட்டாள் அந்தப் பேதை...!



"காதலுக்காக யாராவது ஒருத்தர் போராடித்தான் ஆகணும் டி...!'நான் போராட மாட்டேன்..'ன்னு ஓடி ஒளிஞ்ச கோழை டி நீ...!நம்மளுடைய காதலை தன்னந் தனியா தவிக்க விட்டுட்டு ஓடத் துணிந்தவள் நீ...!ரெண்டு பேரும் கை கோர்த்து போராட வேண்டிய போராட்டத்தை..ஒத்தையாளா நின்னு நான் போராடினேன்...!அந்தப் போராட்டத்தோட விளைவுதான் இது...!",என்றபடி அவள் கழுத்தில் கிடந்த மாங்காயத்தை எடுத்துக் காட்டினான்.



"அப்போ...எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்ன்னு நீ யோசிச்சுப் பார்த்தியா டி...?உன் விருப்பத்துக்கு எதிரா நான் எடுத்து வைச்ச ஒவ்வொரு அடியையும்...இதயம் வலிக்க வலிக்க எடுத்து வைச்சேன்...!",தன் இதயம் இருந்த பகுதியைத் தொட்டுக் காண்பித்துக் கூறியவன்..



" 'என்னுடைய விருப்பதுக்கு உங்களுடைய பதில்தான் என்ன..?'ன்னு என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறியே...?இப்போ...நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்..பதில் சொல்லு...!என்னுடைய காதலுக்கு உன்னுடைய பதில்தான் என்ன...?",அவளது விழிகளுக்குள் ஆழப் பார்வை பார்த்தபடி கேள்வியெழுப்பியவனுக்கு பதில் கூற அவளிடம் விடை இல்லை.



அவனுடைய ஒவ்வொரு கேள்வியும்...ஒவ்வொரு வார்த்தையும் அவன் அனுபவித்த வலிகளையும்..அவளது தவறையும் சுட்டிக்காட்ட...பெரும் கேவலொன்று அவளது தொண்டைக்குழிக்குள் இருந்து எழுந்தது.



அவளது கண்ணீரைப் பார்த்தவனின் மனம் இரும்பாய் இறுக,"புல்ஷிட்...!",பல்லைக் கடித்தபடி அருகிலிருந்த டீபாயை எட்டி உதைத்தான்.அது பத்தடி உருண்டு சென்று சுவரில் மோதி உடைய...அவனுடைய கோபத்தில் அவள் உடல் நடுங்க மிரண்டு விழித்தாள்.



ஆத்திரத்தோடு அவளை உறுத்து விழித்தவன்..புயலாய் அறையை விட்டு வெளியேறினான்.அவன் வெளியேறிய சில நிமிடங்களிலேயே...அவனுடைய கார் சீறிப் பாய்ந்து கொண்டு பறக்கும் சத்தம் கேட்க,'ஐயோ...!இந்த ராத்திரியில எங்கே போறாரு...?',பதறியபடியே எழுந்து வெளியே ஓடப் போனவளை..அவள் இருக்கும் நிலை தடுக்க..அப்படியே மடிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.



அவனது ஒவ்வொரு வார்த்தைகளும்...அவளது நெற்றிப்பொட்டில் அறைந்தன.



'உண்மைதானே...!அவருடைய காதலுக்கு என்னிடம் இருக்கும் பதில்தான் என்ன...?அவருடைய காதலை தூக்கியெறிய துணிந்தவள்தானே நான்...!எங்களுடைய காதலை அநாதை மாதிரி தவிக்க விட்டவள்தானே நான்...!'அவள் மனம் ஊமையாய் கதறித் துடித்தது.



'அப்பா அம்மாகிட்ட சொல்லி...எங்களுடைய காதலுக்காக நான் போராடி இருக்கணும்...!அவரு சொன்ன மாதிரி...போராட மறுத்த கோழை நான்...!அவரைத் தனியா போராட விட்டு இருக்கிறேனே...?அவருடைய மனசு என்ன பாடுப்பட்டிருக்கும்....?',அவளது காதல் மனம் விழித்துக் கொண்டு அவள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது.



'என்னை மன்னிச்சிடுங்க ஆது...!உங்க காதலுக்கான பதிலை நிச்சயம் நான் தருவேன்...!',மனதிற்குள் சபதமிட்டுக் கொண்டாள் அவள்.



வெகுநேரம் அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள்...நள்ளிரவைத் தாண்டி அவளையும் அறியாமல் உறங்கியிருந்தாள்.விடியலின் தருவாயில் அறைக்குள் நுழைந்த ஆதித்யனின் கண்களில் முதலில் விழுந்தது அவளுடைய காதல் கண்மணிதான்...!



அநாதரவான குழந்தை போல் தரையில் கால்களைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.கட்டிலுக்கு அருகில்...கீழே சுருண்டு கிடந்த புடவை..நேற்று நடந்த இனிமையான தருணத்தையும்...அவளது வெண்மை நிற கன்னத்தில் கன்றிப் போய் சிவந்து கிடந்த அவனுடைய விரல் தடங்கள்...அந்த இனிமைக்குப் பின் நடந்தேறிய கசப்பையும் நினைவுபடுத்த அவன் முகம் வேதனையில் இறுகியது.



கதவைத் தாளிட்டவன்...கீழே படுத்திருந்த தன் கண்மணியை அவளது தூக்கம் கலையாதவாறு மென்மையாக கையில் ஏந்திச் சென்று...மெத்தையில் படுக்க வைத்தான்.அலங்கோலமாய் இருந்த அவளது நிலையை உணர்ந்து...போர்வையை போர்த்தி விட்டவன்...அவளது வீங்கிப் போன கன்னத்தை இதமாக வருடி விட்டான்.



'ஸாரி டி..!;,மெல்ல முணுமுணுத்தவனின் உதடுகள் அவளது கன்னத்தில் மென்மையாய் பதிந்து மீண்டன.



அவளிடம் அசைவை உணர்ந்து விலகியவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.அவன் குளித்துக் கிளம்பி அலுவலகத்திற்குத் தயாரான பின்பும் கூட அவனது மனையாள் கண் மலர்த்தவில்லை.நேற்று இரவு நடந்த மனப் போராட்டமும்...உடல் அலுப்பும் சேர்ந்து கொள்ள ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.



அறையை விட்டு வெளியேறப் போனவனை...அவள் இருந்த நிலை தடுக்க தயங்கியபடியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஏனெனில்...அவள் இருந்த கோலம் அப்படி...!அவனால் புறக்கணிப்பட்ட புடவை...அவளது மேனியை மறைக்கத் தவறி தரையைத் தஞ்சமடைந்திருக்க...பாதி உடைகளுடன் சயனித்திருந்தாள்.



"பேபி...!",அவளருகில் சென்று அவன்...அவளை மென்மையாய் எழுப்ப...புரண்டு படுத்தாளே தவிர எழவில்லை.



"பேபி...!",இம்முறை அவளது தோளைத் தொட்டு எழுப்ப..



கணவனது குரலில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.



கணவனைக் கண்டதும்...நேற்று இரவு நடந்த ஒவ்வொரு விஷயமும் கண் முன் படமாய் விரிய...அவளது விழிகள் அணையுடைக்கத் தயாராயின...!அவளுடைய இதழ்கள் அவனிடம் எதையோ சொல்ல வர...கையை உயர்த்தி அவளை 'சொல்ல வேண்டாம்...!' என தடுத்தவன்..



"ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு படுத்து தூங்கு...!நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன்...!உன்னைக் காணோம்ன்னு திடீர்ன்னு அம்மா மேலே வந்துட்டா என்ன பண்றதுன்னுதான் உன்னை எழுப்பினேன்...!",அவளைப் பார்க்காமல் மளமளவென்று உரைத்தவன்...வேகமாக வெளியேறி விட்டான்.



அவன் சொன்ன பிறகுதான் தனது கோலம் உரைக்க...அவசர அவசரமாக போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டவள்,"ஆது...!ஒரு நிமிஷம்...!",என்று அழைக்க...அவளது அழைப்பு அவனது காதில் விழுவதற்குள் அவன் வெளியேறி இருந்தான்.



வேக வேகமாய் உடைமாற்றி விட்டு நித்திலா கீழே வரும் போது ஆதித்யன் அங்கு இல்லை.



'அவரு எங்கே அத்தை....?",பதைபதைப்புடன் கேட்ட மருமகளின் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களை ஊன்றிக் கவனித்தவர்..



"அவன் ஆபிஸ்க்கு போயிட்டான் ம்மா...!சாப்பிடக் கூட இல்லை...!ஏதோ அவசரம்ன்னு போயிட்டான்...!",என்றவர் மறந்தும் மருமகளை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.



"சாப்பிடலையா...?",அவள் விழிகளில் கண்ணீர் கரை கட்டியது.



இருவருக்கும் ஏதோ சண்டை என்பதை அனுபவத்தில் மூத்த அந்தப் பெரியவர் கண்டு கொண்டார்.இருந்தும்...அவளிடம் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.



"எனக்கு டயர்டா இருக்கு அத்தை...!நான் போய் ரெஸ்ட் எடுக்கட்டுமா...?",மாமியாரிடம் வினவியவள்...அவர் சம்மதமாய் தலையாட்டவும் தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.



காலை உணவை உண்ண மறுத்தவளை...லட்சுமிதான் வற்புறுத்தி உண்ண வைத்தார்.மதிய சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு சென்றவளை வரவேற்றது என்னவோ ஆதித்யன் இல்லாத வெறுமையான அறைதான்...!சோர்வுடன் வீடு திரும்பியவள்...மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.மருமகளின் நிலையை உணர்ந்து அவளை அதட்டி உருட்டி இரவு உணவை உண்ண வைத்து விட்டுத்தான் படுக்கச் சென்றார் லட்சுமி.



அன்று இரவு...ஆதித்யன் வரும் போது நித்திலா ஹால் சோபாவிலேயே உறங்கியிருந்தாள்.அவளை அள்ளிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்திய ஆதித்யன் உறங்க வெகு நேரமாகியிருந்தது.காலை...அவள் கண் விழிப்பதற்குள்ளேயே அவன் கிளம்பியிருந்தான்.இருவருக்குள்ளும் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆரம்பமாகியிருந்தது....!



அகம் தொட வருவான்...!!!
 
Top Bottom