Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 60 :



நாட்கள் வேகமாக பறந்து சென்றன...!இன்னும் ஒரு வாரத்தில் திவ்யாவின் திருமணம்...!தேவதர்ஷனின் குடும்ப வழக்கப்படி...அவர்களது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் அமைந்திருக்கும் அவர்களது பூர்வீக வீட்டில்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.எனவே...ஆதித்யன் மற்றும் கௌதமின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்த கிராமத்திற்கு சென்று விட்டனர்.



அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு...ஆதித்யன் நித்திலாவை விட்டு விலகியே இருந்தான்.முதலில்...அவனுக்கான வேலைகளை அவள் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தவன்...இப்பொழுது...அவள் அந்த வேலைகளை செய்யாமல் விட்டாலும் 'ஏன்...?' என்று காரணம் கேட்கவில்லை.



அதற்காகவெல்லாம்...அவள்..தன் உரிமைகளை விட்டுத் தரவில்லை.ஆம்...!அவளுக்கான கடமைகள் என்று அவன் பட்டியலிட்டதை அவள்...தனக்கான உரிமைகளாக மாற்றியிருந்தாள்.எப்பொழுது அவன் மனம் புரிந்ததோ...அப்பொழுதே...அவன் மீதான அவளது காதல் மனம் விழித்துக் கொண்டு அவன் பக்கம் சாய ஆரம்பித்தது.



காலை காபியுடன் அவனை எழுப்புபவள்...அவனுக்கான உடைகள் மற்றும் அவனுக்குத் தேவையான பிற பொருட்களையும் எடுத்து வைத்து விட்டுத்தான் கீழே செல்வாள்.



அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை சிரத்தை எடுத்து சமைத்து..காதலுடன் அவனுக்குப் பரிமாறுவாள்.அவன்தான் ஏதோ கடமைக்கு சாப்பிடுவது போல் சாப்பிட்டு விட்டு...அலுவலகத்திற்கு ஓடுவான்.அவன் காரில் ஏறி அமர்ந்து காரை கிளப்பி அந்தக் கார் அவள் கண் பார்வையில் இருந்து மறையும் வரை காத்திருந்து விட்டுத்தான் உள்ளே வருவாள்.



மதியம் சாப்பாட்டு கேரியரோடு அலுவலகத்திற்கு செல்பவள்...அங்கும் அவன் முகம் பார்த்து பரிமாறுவாள்.அப்படி ஒருநாள் அவள் பரிமாறும் போது...வழக்கம் போல் கை கழுவி விட்டு வந்து அமர்ந்தவன்...அவள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் சாப்பிட அமர்ந்தான்.



அந்த சண்டை நடந்ததில் இருந்தே...அவன் அவளை சாப்பிட அழைக்க மாட்டான்.அவன் பாட்டிற்கு சாப்பிட்டு விட்டு...எழுந்து சென்று விடுவான்.அவள்தான் அவனது அருகாமையை இழக்க விரும்பாமல் அவனுடனேயே அமர்ந்து சாப்பிடுவாள்.



அன்று...ஏனோ அவனது பாராமுகம் அவளுக்கு கோபத்தைத் தர,'என்னை சாப்பிடுன்னு கூட சொல்ல மாட்டாரா...?',என்று மனதிற்குள் மறுகியவள்...சாப்பிடாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.



அவள் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதைக் கவனித்தவன் கேள்வியாய் அவள் முகம் நோக்கினான்.'உம்'மென்று அமர்ந்திருப்பவனின் முகத்தைப் பார்த்தவன் புருவத்தை உயர்த்த...அதில் அவளுக்கு இன்னும் கோபம் வந்தது.



'வாயைத் திறந்து கேட்டால்...குறைஞ்சா போயிடுவாரு...?',மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.



அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவும்...தனக்கு முன்னால் இருந்த தட்டை தள்ளி வைத்தவன்...மொபைலை எடுத்துப் பார்வையிட ஆரம்பித்தான்.



நேரம் சென்று கொண்டிருந்தது...!இருவரும் சாப்பிடவும் இல்லை...!தங்கள் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவும் இல்லை.எந்தவிதக் கவலையும் இல்லாமல் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.



'வாயைத் திறந்து பேச மாட்டாராம்..!இவரு கண்ணசைவைப் புரிந்து நாம நடந்துக்கணுமாம்...!',மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல வயிறு சத்தமிட ஆரம்பித்தது.



'பாவம்...!அவருக்கும் பசிக்கும்ல்ல...?அப்படி என்னதான் பிடிவாதமோ...!',புலம்பியவளின் மனசாட்சி அவள் முன்னே வந்து..'அவனுடைய பிடிவாதத்தைப் பற்றி உனக்குத் தெரியாதா...?நீ சாப்பிடற வரைக்கும் அவனும் இப்படித்தான் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பான்...!',என்று எடுத்துரைக்க..



"கல்லுளிமங்கா...!",முணுமுணுத்தபடியே தட்டை எடுத்து சாப்பாட்டை பரிமாறியவள் சாப்பிட ஆரம்பித்தாள்.



அவளது முணுமுணுப்பு அவனது காதில் விழுந்து...அவனது உதடுகளில் ஒரு குறுநகையை தோற்றுவித்தது.அவள் சாப்பிடுவதைப் பார்த்தவன்..தனக்கு முன்னால் இருந்த தட்டை நகர்த்தி சாப்பிட எத்தனிக்க...பட்டென்று அந்த தட்டை நகர்த்தி வைத்தவள்...இன்னொரு தட்டை எடுத்து ஹாட் பாக்சில் இருந்த சூடான சாதத்தைப் பரிமாறினாள்.



அவளது அக்கறை அவனது மனதிற்கு இதமளித்தாலும்...அவன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.



என்னதான் அவன்...தன்னிடம் பேசாவிட்டாலும் அவள்..அவனுக்காக இரவுகளில் காத்திருக்கத்தான் செய்தாள்.அவன் வந்த பிறகு..அவனுக்கும் பரிமாறி விட்டு...தானும் உண்டு விட்டுத்தான் படுக்கையறைக்கு வருவாள்.



ஆதித்யன் ஏற்கனவே கூறியிருந்தபடி...இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டுத்தான் உறங்குவர்.முதலில்...அவர்களுக்கான அந்த இரவு நேரங்களில் ஒரு மார்க்கமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து போடுவது ஆதித்யனின் வேலையாக இருக்கும்...!இப்பொழுது அந்த வேலையை நித்திலா கையிலெடுத்துக் கொண்டாள்.



சேனல்களை மாற்றிக் கொண்டே வருபவள்...பலவித மார்க்கமாக ஓடும் பாடல்களையோ...படங்களையோ கண்டால் ஒலியைக் கூட்டி வைத்துவிட்டு வேண்டுமென்றே அவனை நெருங்கி அமர்ந்து கொள்வாள்.அவனா அதற்கெல்லாம் அசருபவன்...?ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் அவளையும்...அந்தப் பாடலையும் பார்த்து வைப்பான் அவன்...!



"ஜடம்...!சரியான ஜடம்...!",எரிச்சலுடன் முணுமுணுத்துவிட்டு படுத்து விடுவாள் அவள்.



அவள் அறியாத விஷயமும் ஒன்று இருந்தது...!அவள் உறங்கிய பிறகு பால்கனிக்கு செல்பவன் கால் ஓயும் வரை நடந்து தீர்ப்பான்...!அவளது அருகாமையில்...அவனது மனது தட்டுத் தடுமாறத்தான் செய்தது.அதிலும்...உடலை ஒட்டிய இரவு உடையுடன்...தன்னருகே அமர்ந்து சீண்டிக் கொண்டிருப்பவளை பார்ப்பவனின் உணர்வுகள் பேயாட்டம் போடத்தான் செய்தன...!அப்பொழுதே...அந்த நிமிடமே அவளை ஆண்டு முடித்து விட வேண்டும் போல் தாபம் எழத்தான் செய்யும்...!ஆனால்...அந்த வேட்கையை...அன்று அவனது தொடுகையில் அவள் சிந்திய கண்ணீர் அணைத்து விடும்.



'நான் தொட்டதை சகிச்சுக்க முடியாம...அழுதவள்தானே இவள்...?',என்ற எண்ணம் தோன்றி அவன் மனதை இறுகச் செய்து விடும்.



அந்த சமயங்களில்...அவன் ஊதித் தள்ளும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவையாக இருக்கும்.இதை எதையும் அறியாமல் நிச்சலனமாய் நித்திரை கொண்டிருப்பாள் நித்திலா.



இதில் ஆதித்யன் அறியாததும் ஒன்று உண்டு...!அயர்ந்து உறங்கும் ஆதித்யனை விழியிமைக்காமல் பார்த்தபடி...கொட்ட கொட்ட விழித்திருக்கும் நித்திலாவை அவன் அறியமாட்டான்...!



"ஆது...!",என்று அவள் பேச வரும் சமயங்களில் எல்லாம்...அவளது முகத்தை ஏறிட்டும் பார்க்காது...விலகிச் செல்பவனின் பாராமுகத்தைத் தாங்க இயலாது...இருளின் போர்வைக்குள் தலையணையை நனைக்கும் அவளது சோகத்தை அந்த முழு நிலவு மட்டுமே அறியும்...!



ஏக்கமாக கண்ணீர் விடும் நித்திலாவின் முகமும்...இறுக்கமான ஆதித்யனின் முகமும்...இருவருக்குள்ளும் நடக்கும் பனிப்போரை படம் பிடித்துக் காட்டினாலும்...பெரியவர்கள் அனைவரும் பொறுமையாக அமைதிகாத்தனர்.



கணவன்...மனைவியின் பிரச்சனைக்குள் தலையிடுவது அநாகரிகம்....!தேவைப்பட்டால் ஒழிய அவர்களது பிரச்சனைக்குள் நுழையக்கூடாது என்ற மனப்பக்குவதில் அவர்கள் அனைவரும் ஒதுங்கியே இருந்தனர்.



இப்படியாக நாட்கள் விரைய...இப்பொழுது அனைவரும் தேவதர்ஷன்...திவ்யா திருமணத்திற்காக கிராமத்தில் குழுமியிருந்தனர்.பெண் வீட்டினருக்காக ஒரு தனி பங்களாவை ஒதுக்கியிருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர்.ஒரு திருமணமே நடத்தலாம் எனும் அளவிற்கு பெரியதாக இருந்த அந்த வீட்டில்...ஆதித்யன் மற்றும் கௌதமின் குடும்பத்தினர் தங்கியிருந்தனர்.



கௌதமின் உறவினர்களுக்காக தனிவீடு கொடுக்கப்பட்டிருந்தது.
எங்கு திரும்பினாலும் பச்சை உடை உடுத்திய வன மங்கைதான் தென்பட்டாள்.கரும்புத் தோட்டமும்...மாந்தோப்பும்...வாழைத் தோட்டமும்...நெல் வயல்களுமாய் மிக அழகாய் விரிந்திருந்தது அந்தக் கிராமம்.



இந்தியாவின் முதுகெலும்பு...ஏன்...?உலகத்தின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்று கூறினாலும் பொருந்தும்.



இருபுறமும் அடர்த்தியாய் மாந்தோப்பு நிறைந்திருக்க...அந்தத் தோப்பின் நடுவே சலசலத்து ஓடும் ஆற்று நீரில் கால் நனைத்தபடி கரையில் அமர்ந்திருந்தாள் நித்திலா.தெள்ளத் தெளிவான நீருக்கடியில் தெரியும் அவளது வெண்மை நிற பாதங்களை ரசித்தபடி அவளருகில் அமர்ந்திருந்தான் ஆதித்யன்.



வீட்டிலேயே அடைந்து கிடப்பது அலுப்பைத் தரவும்..ஆதித்யனை அழைத்துக் கொண்டு ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டாள் நித்திலா.நகர்வலம் வந்து கொண்டிருந்தவர்களின் கண்களில் இந்த ஆறு பட அப்படியே அமர்ந்து விட்டனர்.



சுற்றியிருந்த பசுமையும்...குயில்களின் 'கூக்கூ...' இன்னிசையும்...அடர்ந்திருந்த மரங்களில் இருந்து 'பட பட'வென்று சிறகை அடித்துக் கொண்டு பறந்து சென்ற புறாக்களின் அணிவகுப்பும்...ஒரு ரம்மியமான அமைதியை இருவரின் மனதிற்குள்ளும் புகுத்தியிருந்தது.



ஆதித்யன் கூட...தன் மனதில் இருந்த இறுக்கம் சற்று குறைவதைப் போல் உணர்ந்தான்.அந்த நிலையில்தான் அவள்...அவனை அழைத்தாள்.



"ஆது...!",



"ம்....!",



"நீங்க எனக்கு நீச்சல் கத்துக் கொடுக்கிறேன்னு சொன்னீங்கள்ல...?இப்போ கத்துக் கொடுங்க...!",அவள் கேட்டு வைத்ததில்..அவன்..அவளை வித்தியாசமாய் பார்த்து வைத்தான்.



"அதெல்லாம் கத்துக் கொடுக்க முடியாது...!",தலையை அழுந்தக் கோதி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவனாய் அவன் கூற..



"ஏன்...?",என்று அழகாய் சிணுங்கி...அவனது உணர்ச்சிகளை மீண்டும் கொதிக்கச் செய்தாள் அந்தக் கட்டழகி.



"இந்த வயசிலயெல்லாம் நீச்சல் கத்துக் கொடுக்க முடியாது...!சொன்னால் புரிஞ்சுக்க டி...!",



"ம்ஹீம்....!நீங்க பொய் சொல்றீங்க....!'எந்த வயதினரா இருந்தாலும்...நீச்சல் கற்றுக் கொடுக்கப்படும்..'ன்னு ஒரு கோச்சிங் கிளாஸ் பார்த்தேன்...!இப்போ நீங்க கத்துக் கொடுக்கலைன்னா...நான் அந்த கோச்சிங் கிளாஸ்ல ஜாயின் பண்ணிக்குவேன்....!",



"அடியேய்...!கோச்சிங் கிளாஸ் போய் நீச்சல் கத்துக்கிற வயசாடி உன் வயசு...?",அவன் அலற..



"ஏன்...?என் வயசுக்கென்ன...?நீங்கதான் அரைக்கிழவன் ஆகிட்டீங்க...!",அவனிடம் சண்டை பிடித்தவள்...அவனது வயதைக் கிண்டலடித்து சிரித்து வைத்தாள்.



"நானா டி அரைக்கிழவன்....?",பலவித மார்க்கமாக அவளை மேய்ந்த அவனுடைய கண்கள் அவளிடம் ஏதோ ஒரு அந்தரங்க செய்தியை சொல்லியது.முத்த தேர்விலேயே இன்னும் தேர்ச்சி பெறாமல் முட்டிக் கொண்டிருப்பவள் அவள்...!அவளா அவனது விழிகள் கூறும் ரகசிய சேதியைப் புரிந்து கொள்ளப் போகிறாள்...?



அவனது பார்வை உணர்த்தும் சங்கதியை கவனிக்காமல்,"இப்போ எனக்கு நீச்சல் கத்துக் கொடுக்க முடியுமா...?முடியதா...?",சுட்டு விரலை நீட்டி அவனை மிரட்டினாள் அவள்.



"நீ என்னை அரைக்கிழவன்னு சொன்னதுக்குப் பிறகும்...உனக்கு சொல்லிக் கொடுக்காம இருந்தேன்னா...அது தப்பாகிடாது...?",ஒரு மாதிரிக் குரலில் அவளிடம் விஷமமாய் உரைத்தவன்...அவளைப் பிடித்து தண்ணீருக்குள் தள்ளி விட்டான்.



"அய்யோ...!ஆ...அம்மா...!",அலறியடித்துக் கொண்டு நீருக்குள் விழுந்தவள் ஒருவாறாகத் தன்னை சுதாரித்துக் கொண்டு...தரையில் கால் ஊன்றி நின்றாள்.அதிகம் ஆழமில்லாத பகுதி என்பதால் சுதாரித்துக் கொண்டாள்.



தான் அணிந்திருந்த சட்டையைக் கழட்டி வைத்து விட்டு அவளுடன் நீருக்குள் குதித்தான் அவன்.



குதித்த வேகத்தில் அவள் அணிந்திருந்த துப்பட்டாவை உருவி கரையில் வீசியெறிந்தவனைத் தடுத்தவள்,"ஏன்...?அ..அது இருந்துட்டு போகட்டும்....!",என்று திணறினாள்.



"அதையெல்லாம் போட்டுக்கிட்டு நீச்சல் கத்துக்க முடியாது...!",உரைத்தவன் அவளை அப்படியே அலேக்காகத் தூக்கி...தன் இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி குப்புற படுக்க வைத்தான்.



"ம்...!கையையும் காலையும் நீச்சலடிக்கற மாதிரி மூவ் பண்ணு...!",அவனது உத்தரவைக் கேட்கும் நிலையிலா அவள் இருந்தாள்...?



அவன்...அவளைத் தாங்கிப் பிடித்திருந்த அந்த நிலையில்...அவளது பெண்மையின் மென்மைகள் அவனது வலிய கரங்களால் ஸ்பரிசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.மூச்சு விடவும் மறந்தவளாய் சிலையாய் சமைந்து விட்டாள் அவள்.



"ம்...கமான்...!கை...காலை தண்ணியில நல்லா அடி...!",அவனது குரலில் இவ்வுலகிற்கு வந்தவள்...அவசர அவசரமாக அவனிடமிருந்து திமிறினாள்.



அவளது திமிறலை...தனது வலிய கரங்களின் அழுத்தத்தின் மூலம் மிக எளிதாக அடக்கியவன்..அவளது காதோரம் குனிந்து,"நீதானே டி நீச்சல் கத்துக் கொடுக்க சொன்ன...?இப்படித்தான் நீச்சல் கத்துக் கொடுக்க முடியும்...!",சீறலாய் உரைத்தவன்...மருந்துக்கும் தன் பிடியைத் தளர்த்தவில்லை.



'நீச்சல் கற்றுக் கொடு...' என்று அவள் நச்சரித்த போதெல்லாம்...அவன் பார்த்த பார்வைக்கான அர்த்தத்தை...அவள் இப்பொழுதுதான் புரிந்து கொண்டாள்.



'நானே வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேனே...!',மானசீகமாய் தன் தலையில் கொட்டிக் கொண்டவள்,



"ஹைய்யோ....!தெரியாம சொல்லிட்டேன்...!எனக்கு நீச்சல் கத்துக்க வேண்டாம்...!என்னை விடுங்க....!",முரண்டு பிடித்தாள் அவள்.



"அப்படியெல்லாம் விட முடியாது டி...!சும்மா இருந்தவனை 'நீச்சல் கத்துக் கொடு...!நீச்சல் கத்துக் கொடு...!'ன்னு பிராண்டி விட்டுட்டு இப்போ 'வேண்டாம்...'ன்னு அடம் பிடித்தால்...விட்டுடுவேனா...?ஒழுங்கா நீச்சல் கத்துக்கோ....!",



"ம்ஹீம்...!நான் மாட்டேன்...!",அவள் கையையும் காலையும் உதற..



"வெரிகுட்...!இப்படித்தான்...!நல்ல கையையும் காலையும் அசை....!",அவனது குரலில் தனது திமிறலை நிறுத்திக் கொண்டு அமைதியானாள் அவள்.



"ப்ளீஸ் ஆது...!இறக்கி விடுங்க...!எனக்கு...என்னமோ மாதிரி இருக்கு....!",



அவளது கெஞ்சலை அவன் எங்கே கேட்டான்...?வம்படியாய் அவளுக்கு நீச்சலைக் கற்றுக் கொடுத்து விட்டுத்தான் அவளை இறக்கிவிட்டான் அந்த அராஜகக்காரன்...!



திருமண நாள் மிக அழகாக விடிந்தது...!குங்கும வண்ண பட்டுடுத்தி...தலை குனிந்து...தன் மணாளன் கட்டிய தாலியை வாங்கிக் கொண்டாள் அந்த மங்கை.அம்மி மிதித்து...அருந்ததி பார்த்து...அக்னி சாட்சியாய் வலம் வந்து சதிபதியாயினர் அந்த தம்பதிகள்...!



அனைத்து ஏற்பாடுகளும் அந்தப் பூர்வீக வீட்டிலேயே நடைபெற்றதால்...ஆதித்யனுக்கும் கௌதமுக்கும் வேலைகள் சற்று அதிகமாகவே இருந்தன.அதை வீடு என்று சொல்வதை விட...அரண்மனை என்று கூறுவது பொருந்தும்.அந்த அளவிற்குப் பரந்து விரிந்திருந்தது.பட்டுப்புடவை சரசரக்க...மணப்பெண்ணிற்கு உதவியாய் அவளருகில் இருந்தனர் நித்திலாவும்...சுமித்ராவும்...!



அடுத்தடுத்து சடங்குகள் நடந்தேற...மணமக்கள் இருவரையும் குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தி வந்தனர்.நேரம் விரைந்தோட...இரவும் மலர்ந்தது.



திவ்யாவை எளிமையாக அலங்கரித்து...சில பல கேலிகளுடன் அவளைச் சிவக்கச் செய்து தேவதர்ஷனின் அறையில் விட்டு விட்டு...தங்களது மன்னவர்களைத் தேடி வெளியே வந்தனர் சுமித்ராவும்...நித்திலாவும்.



அவர்களது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல்...ஆதித்யனும் கௌதமும் வெளியே வராண்டாவில்தான் அமர்ந்திருந்தனர்.



"நாம கிளம்பலாமா...?",நித்திலாவிடம் வினவியபடியே எழுந்தான் ஆதித்யன்.



"ஓகே டா மச்சான்....!நாங்க அந்த வீட்டுக்கு கிளம்பறோம்...அண்ட்...நாளைக்கு காலையில நேரமாகவே நான் சென்னைக்கு கிளம்பிடுவேன்...!",ஆதித்யன் கூற..



"நித்தியை விட்டுட்டு போடா....!நாங்க வரும் போது கூட்டிட்டு வர்றோம்....!",என்றவன்...நித்திலாவிடம் திரும்பி,



"நீ இங்கே இரும்மா...!அவன் மட்டும் போகட்டும்....!",என்று வலியுறுத்தினான்.



அவள் வாயைத் திறப்பதற்குள் முந்திக் கொண்ட ஆதித்யன்,"இல்லை டா...!அவள் தனியா இருக்க மாட்டாள்...!அதுதான்...என் அம்மா அப்பாவை இங்கேதானே விட்டுட்டுப் போறேன்...!அப்புறம் என்ன...?அவள் என்கூடவே வரட்டும்...!",அவசர அவசரமாக பதில் ஆதித்யனிடம் இருந்து வந்தது.



நண்பனின் அவசரத்தைப் பார்த்துத் தனக்குள் புன்னகைத்துக் கொண்ட கெளதம்,"சரி...!சரி....!உன்னையும் உன் பொண்டாட்டியையும் நான் பிரிக்கலை...!நாளைக்கு உன்கூடவே கூட்டிட்டு போ...!இன்னும் ரெண்டு நாள்ல நாங்களும் பின்னாடியே வந்திடறோம்...!",சிரித்தபடியே கூறியவனுக்கு....ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்த ஆதித்யன்,



"ஓகே டா...!குட் நைட்...!",என்றபடி நித்திலாவை அழைத்துக் கொண்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை நோக்கி நடந்தான்.



"இருடா...!நாங்களும் அங்கேதான் வர்றோம்....!",என்ற கௌதமின் குரல் அவனை எட்டினால்தானே...?அதற்குள் அவன் பாதிதூரம் சென்றிருந்தான்.முறைத்துக் கொண்டிருந்தாலும்...அடித்துக் கொண்டிருந்தாலும் அவனுக்கு நித்திலா அருகில் வேண்டும்...!



*************************************



கதவை அழுந்த மூடித் தாளிட்டு விட்டுத் திரும்பிய கௌதமின் விழிகள் தனது மனையாளைத்தான் தேடின...!அவனது தேடலுக்கு விடை கொடுப்பது போல்...கண்ணாடி முன் நின்று...தான் அணிந்திருந்த நகைகளை கழட்டிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.



வெண்பட்டில்...வெள்ளை மயிலாய் நின்றிருந்தவளின் அழகு...அவனுக்குள் தீ மூட்ட..அழுத்தமான காலடிகளோடு அவளை நெருங்கினான்.



நகையோடு போராடிக் கொண்டிருந்தவளின் கரங்களை விலக்கி விட்டு விட்டு...அவள் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாய் அகற்றியவன்...அவளது பின்னங்கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.



"மயக்கறே டி...!",காதலாய் பிதற்றியவனின் உதடுகள் அவளது வெற்று முதுகில் முத்தம் பதித்து முன்னேறின.



தனது இடையைத் தழுவியிருந்தவனின் கரங்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டவளின் உணர்வுகள் கூசி சிலிர்த்து...அவளது மேனியில் மெல்லிய அதிர்வலையை ஏற்படுத்தின...!



அவளது இதழ்கள் மட்டும் வழக்கம் போல்,"வே..வேண்டாம்...!",என்று முணுமுணுத்தன.



"சரி...வேண்டாம்...!",வழக்கமான வசனத்தைக் கூறி சமாதானப்படுத்தியபடியே அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான் அந்தக் கள்வன்.



தன் கைகளை பூமாலையாய் அவனது கழுத்தில் கோர்த்தவள்...மயக்கத்துடன் விழி மூடிக் கொண்டாள்.மென்மையாய் அவளைக் கட்டிலில் கிடத்தி....வன்மையாய் அவள்மேல் படர்ந்தவனின் உணர்வுகள் கரையுடைக்கத் தயாராகின.



"வே...வேண்டாம்...!",தன் கழுத்தில் பதியப் போன அவனது முகத்தைத் தடுத்து நிறுத்த அவள் முயல..



"நோ ஹனி...!இதுக்கு மேல 'வேண்டாம்..'ன்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இல்ல...!",தாபத்துடன் உரைத்தவன் அவளது இதழ்களைக் கவ்விக் கொண்டான்.



'முற்றுப் பெறவே பெறாதா...?'என்ற நீண்ட நெடிய இதழ் முத்தம் முடிவுக்கு வந்த போது...இருவருமே மூச்சு வாங்கினர்.அவனது உதடுகள்...அவளது மேனி முழுவதும் தனது அச்சாரத்தைப் பதிக்க ஆரம்பிக்க..



மீள முடியாத சுழலில் சிக்கி அமிழ்ந்து கொண்டிருந்தவள்,"இங்கே வேண்டாம் மாமா...!நம்ம வீட்டில...",மயக்கத்தில் தோய்ந்து வெளிவந்த அவளது வார்த்தைகளை அதற்கு மேல் வெளியே வர முடியாதபடி தனது ஒற்றை விரலை...அவளது இதழ்களின் மேல் வைத்து தடுத்தவன்..



"எனக்கு நீ வேணும் டி...இங்கேயே...இப்பவே....!",என்றான் வேட்கையோடு.



அவனது கண்களில் தெரிந்த காதலையும்...தாபத்தையும் கண்டவள் அதற்கு மேல்...நொடியும் தாமதிக்கவில்லை.வேகத்துடன் அவனை இழுத்து...வஞ்சணையில்லாமல் அவனது கன்னம்..காது...மூக்கு...கண் என அங்கம் எங்கும் முத்தம் பதித்தாள்.



அந்தக் கட்டழகனுக்கு அது போதாதா...?அவள் மீது பரவிப் படர்ந்து மேய்ந்தவன்...மொத்தமாக அந்தக் கட்டழகியை கொள்ளையிட ஆரம்பித்தான்.இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த தாபமும்...மோகமும்..காதலும்..காமமும் அணையை உடைத்துக் கொண்டு சீறிப் பாய்ந்தாலும்...அவை அனைத்தையும் தன் காதலால் கட்டிப்போட்டபடி...மென்மையாய் அவளை ஆக்கிரமித்தான் அந்தக் காதல் நாயகன்...!



தன்னவனுடைய மென்மையான அணுகு முறையில் கரைந்தவளாய்...மிச்சமில்லாமல் தன்னை வாரி வாரி அவனுக்கு கொடுத்தாள் அந்தக் கயல்விழியழகி...!அவனுடைய ஒவ்வொரு தொடுகைக்கும் நடுங்கி...கிறங்கி...கூசி...சிலிர்த்து...உறைந்து நின்ற அந்தப் பெண்மை...அவனது கைகளில் காதலோடு விருந்தாகியது...!



அவனது தேடல் முடிவுக்கு வந்த போது...கிழக்கு வெளுக்கத் துவங்கியிருந்தது...!காதலோடு அவளது நெற்றியில் முத்தம் பதித்து விலகியவன்...அயர்ந்து படுத்திருந்தவளை அள்ளித் தன் மார்பில் போட்டுக் கொண்டான்.



காதலோடு கூடிய கூடலில்...மனம் நிறைந்தவர்களாய் ஒருவரது அருகாமையில் மற்றொருவர் கரைந்தபடி சுகமாய் உறங்கிப் போயினர்.இருவரது முகத்திலும்...காதல் கர்வமாய் ஒட்டிக் கொண்டிருந்தது...!



**********************************

ஆதித்யனின் கையில் அந்தக் கார் நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.அவனருகில் தூங்கி வழிந்தபடி அமர்ந்திருந்தாள் நித்திலா.



"ம்ப்ச்...!இப்படி தூங்கி விழுகாதே டி...!ட்ரைவ் பண்றதுக்கு டிஸ்டர்பா இருக்கு...!",தன்னிடம் பேசாமல் தூங்கி வழிபவளிடம் எரிந்து விழுந்தான் ஆதித்யன்.



"தூங்கிக்கிட்டு இருந்தவளைத் தூக்கி...கார்ல அள்ளிப் போட்டுக்கிட்டு வந்தால்...இப்படித்தான் தூக்கம் வரத்தான் செய்யும்...!",தனது அதிகாலை உறக்கம் பறிக்கப்பட்டதில் அவளும் எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.



"நைட் முழுக்க தூங்காம என்ன பண்ணித் தொலைஞ்ச...?ஏதோ ராத்திரி முழுக்க புருஷன் கூட...கொஞ்சிக் குலாவிட்டு காலையில தூங்கி வழியற மாதிரி சீன் போடறா...!",முதல் வார்த்தையை அவளைப் பார்த்து கத்தியவன்..கடைசி வாக்கியத்தைத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.



அவளை விலக்கி வைப்பது என்னவோ அவன்தான்...!தன் பக்கம் இருந்த தவறை உணர்ந்து கொண்டவள்...அவன் நெருங்கினால் நிச்சயம் விலகிப் போக மாட்டாள்தான்...!காதலோடு இரு கரங்களை விரித்து...அவனை தனக்குள் அடக்கி கொள்வாள்தான்...!இதை அவன் உணர்ந்திருந்தாலும்...அவளை நெருங்க முற்படவில்லை..!அவன் மனதில் ஏற்பட்டிருந்த காயம்...அவனை அவளிடம் நெருங்க விடாமல் கட்டிப்போட்டது.



அந்த தளையை அறுத்து ஏறியத் தெரியாமல்..அவளிடம் காய்ந்தான் அந்தக் காதல் பைத்தியக்காரன்...!



இதை எதையும் அறியாமல்,"நேத்து நைட் திவியை ரெடி பண்ணி அனுப்பிட்டு...நாம தங்கியிருக்கிற வீட்டுக்கு வர்றதுக்கே பதினோரு மணி ஆகிடுச்சல்ல ஆது...!அதுக்கு அப்புறம்...குளிச்சிட்டு தூங்கும் போது 12 ஆகிடுச்சு...!",என்றாள் அவனுக்கு விளக்கும் நோக்கத்துடன்.



அவள் விளக்கம் கொடுத்த லட்சணத்தில்...அவன் இன்னும் கடுப்பானான்.



"ஆமா...!இவளுக்கே இன்னும் ஒழுங்கா முத்தம் கொடுக்கத் தெரியாது...!இந்த லட்சணத்துல இவள்...அவளை ரெடி பண்ணி ரூமுக்கு அனுப்பி வைச்சாளாம்...!",அவன் முணுமுணுக்க...அவள் காதில் அது தெளிவாக விழவில்லை.



"என்ன சொன்னீங்க ஆது...!",அவள் மீண்டும் வினவ...



"ம்...ஒண்ணுமில்ல...!நான் அப்படி உன்னை அவசரப்படுத்திக் காருக்குள்ள அள்ளிப் போட்டுக்கிட்டு வரலைன்னா...நீ இதுதான் சாக்குன்னு அங்கேயே இருந்திருப்ப...!உனக்குத்தான் என்னை விட்டு விலகிப் போறதுன்னா...ரொம்பப் பிடிக்குமே...!",அவன் குரலில் அப்படியொரு குத்தல்...நையாண்டி...!



அந்தக் குரலுக்கு பின்னாடி இருந்த வலியை அவள் கண்டுகொண்டாள்.ஆனால்...அவன் அனுபவித்த வலியை விட ஆயிரம் மடங்கு அதிகமான வலி...ஊசிமுனையாய் மாறி அவளது இதயத்தைக் குத்திக் கிழித்தது.



ஒரு இக்கட்டான நிலைமையில் அவனுடைய காதலை தூக்கியெறியத் துணிந்தவள்தான் அவள்...!ஆனால்...அந்த முடிவிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் வேதனையை அவள் மட்டுமே அறிவாள்...!



"உங்களை விட்டு நான் எங்கே போவேன் ஆது....?உங்களை விட்டுப் பிரியற அடுத்த நொடி...நான் செத்துடுவேன்...!",கண்களில் நிறைந்த காதலுடனும்...கண்ணீருடனும்...வலியுடனும் கூறியவளின் வார்த்தைகளை உண்மையாக்குவது போல் எதிரே லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.



அவளது வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்ச்சியுடன்...அவளது கண்களில் பொங்கித் தெறித்த காதலில் கட்டுண்டவனாய்...அவளது விழிகளோடு தன்னைக் கலந்திருந்தவன்...தனக்கு எதிரே வந்து கொண்டிருந்த லாரியை கவனிக்க மறந்தான்.



அவனது முகத்திலிருந்து தனது பார்வையை அகற்ற முடியாமல்...தன் உள்ளத்தை அவனுக்குப் புரிய வைத்து விடும் நோக்கத்தோடு வாயைத் திறந்தவள்....அப்பொழுதுதான் கவனித்தாள் அந்த லாரியை.



"அய்யோ...!ஆது...!லாரி....!",அவள் அலறிய அடுத்த நொடி...கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய் வந்து கொண்டிருந்த லாரியை கவனித்தவன்...நேராக மோதினால் நித்திலாவிற்கு எதாவது ஆகிவிடும் என்ற எண்ணத்தில்...காரை ஒடித்துத் திரும்பியவன்...தனக்கு பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த பேருந்தை கவனிக்க மறந்தான்.



நித்திலாவை பாதுகாப்பதற்காக காரை ஒடித்து திருப்பி...அவள் இருந்த பக்கத்தை லாரிக்கு மறுபுறம் திருப்பியவனின் பக்கம் மோதுவது போல் வந்த லாரி சடாரென்று நின்றது.ஆனால்...அதற்குள் பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த பேருந்து...நித்திலா இருந்த பக்கம் பலமாக மோதியது.



"நோ....!",என்ற ஆதித்யனின் கத்தலும்..



"ஆது....!",என்ற நித்திலாவின் அலறலும் ஒரே சமயத்தில் எழுந்தன.



ஒரு நொடியில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.ஆதித்யன் இருந்த பக்கம் எந்தவொரு சேதமும்ல்லை.நித்திலா அமர்ந்திருந்த பக்கம் கார் பயங்கரமாய் சிதைந்திருந்தது.



"பே...பி...!",வார்த்தைகளை உச்சரிக்கவே பயந்தவனாய் அவன் உச்சரித்த நொடி...அவன் மடியில் சரிந்தாள் நித்திலா.



தலையில் பலத்த அடி பட்டிருக்க...முகம் முழுவதும் இரத்தம்...!அந்த நிலையிலும் அவள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கண் விழித்திருந்தாள்.



"ஆ..து...!",இரத்தம் தோய்ந்த கைகளால்...அவன் கன்னத்தைப் பற்றி புன்னகைக்க முயன்றாள்.



ஆதித்யனின் உடல் முழுவதும் நடுக்கம்...!பயம்...!வாழ்நாளில் பயம் என்ற உணர்வை அறிந்திராத அந்த ஆண்மகனுக்கு...முதல் முறையாக பயத்தை அறிமுகப்படுத்தினாள் அந்த மங்கை.



"நோ பே..பி....!உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்...!நோ....!",கைகள் நடுங்க தன்னவளை அள்ளிக் கொண்டவனின் முகம் பயத்தில் வெளிறியிருந்தது.



"இல்ல குட்டிம்மா...!உனக்கு எதுவும் ஆகாது...!நான்...நான் இருக்கிறேன்...!உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்....!",பித்துப் பிடித்தவனைப் போல் அவன் கத்திக் கொண்டிருக்கும் போதுதான் அவள்...அந்த வார்த்தைகளை உச்சரித்தாள்.



"உங்க காதலுக்கு நா..ன் பதில் சொல்..லிட்டேன்....!",திக்கித் திணறி வார்த்தைகளை உச்சரித்தவளை அதிர்ந்து போய் பார்த்தான் ஆதித்யன்.



"உங்க காதலை...நம்..ம காதலை தூ..தூக்கியெறிய துணிஞ்ச எ..எனக்கு இதுதான் சரி..யான தண்டனை ஆ..து....!உங்களைத் தனியா போராட விட்டு...உங்களுக்கு நிறைய வ..வலிகளை கொ..கொடுத்திட்டேன்...!",தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்த அந்த வேளையிலும்...அவள் முகம் காதலாய் அவனைப் பார்த்திருந்தது.



"இல்லை டி....!அதெல்லாம் ஒரு வலியே இல்லை...!ப்ளீஸ் டி...!இப்படி...இப்படி பேசாதே...!எனக்கு...எனக்கு பயமாயிருக்கு...!",கண் முன் நின்ற பல எதிரிகளை அசால்ட்டாய் வெட்டி வீழ்த்தி கொடியை நாட்டிய...தொழில் உலகின் சாம்ராஜ்யபதி அந்த சிறு பெண்ணிடம் 'பயமாயிருக்கு...!' என்று கதறினான்.



தன் ஒட்டு மொத்த காதலையும் தன் விழிகளில் தேக்கி...அவனது கண்களுக்குள் பாய்ச்சியவள்,"நீங்க என்கிட்ட ஒரு கேள்வி கேட்டீங்களே....'உன் அம்மா அப்பாவோட கண்ணீருக்காக....இ..இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட மாட்டே..ன்னு என்ன நிச்சயம்...' அப்படின்னு...?அப்படி ஒரு நிலைமை வந்திருந்தால்...நான் செ..செத்திருப்பேன் ஆது...!நீ..ங்க இல்லாம...இன்னொ..ருத்தனோட கைகள்ல நானா....?ம்ஹீம்....!உயிரை வி..விட்டுருப்பேன்...!",உடல் வலியைப் பொருட்படுத்தாது ஒரே மூச்சாக கூறி முடித்தவள்...அடுத்த கணம் மயங்கிச் சரிந்திருந்தாள் அவனது கைகளில்....!



அவளது இதழ்களில் புன்னகை உறைந்திருந்தது...காதலாக...!அவளது விழிகளின் ஓரம்...ஒற்றைக் கண்ணீர் துளி துளிர்த்திருந்தது.



"நோ...!",வெறி பிடித்தவனைப் போல் கத்தியவன்...அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு ஒரு பைத்தியத்தைப் போல் சாலையில் ஓட ஆரம்பித்தான்.





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 61:



தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.கலங்கிச் சிவந்திருந்த அவனுடைய கண்கள்...அந்த அறைக்கதவை விட்டு...இம்மியளவு கூட நகரவில்லை.மருத்துவர்களும்...செவிலியர்களும் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதும்...வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தனர்.



அனைவரது விழிகளிலும் ஒரு பதட்டம்...கவலை குடிகொண்டிருந்தது.இருக்காதா பின்னே...?உள்ளே அடிபட்டுக் கிடப்பது அவர்களது முதலாளியின் மனைவி...!வெளியே இடிந்து போய் அமர்ந்திருப்பதோ...அவர்களது முதலாளி...!ஆம்...!அது ஆதித்யனுடைய மருத்துவமனைதான்...!



சென்னைக்கு அருகில்...அதுவும் அவர்களது மருத்துவமனை இருக்கும் பகுதியில் விபத்து நேர்ந்திருந்ததால் நித்திலாவை உடனடியாக அவர்களது மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்க முடிந்திருந்தது.



பைத்தியம் பிடித்தவனைப் போல்...நித்திலாவை கைகளில் தூக்கிக் கொண்டு சாலையில் ஓடிக் கொண்டிருந்தவனை...அந்த வழியாக வந்த அவர்களது மருத்துவமனையின் டீன் கவனித்து...ஆதித்யனை சமாதானப்படுத்தி...நித்திலாவையும் அள்ளி காரில் போட்டுக் கொண்டு அவர்களது மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் வந்து சேர்ந்திருந்தார்.



அத்தோடு நில்லாமல்...நித்திலாவிற்குத் தேவையான முதலுதவியையும்...மற்ற ஏற்பாடுகளையும் சிறிதும் தாமதமின்றி நடக்குமாறு அவரே பார்த்துக் கொண்டார்.



"மிஸ்டர்.ஆதித்யன்...!உங்க மனைவிக்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணியாகணும்...!தலையில பலமா அடிபட்டதுல...இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு...!உடனே...அதை சரி செய்தாகணும்....!",இடியாய் அவன் தலையில் செய்தியை இறக்கினார் அந்த மருத்துவர்.



அவரது வார்த்தைகளில் உடைந்து போன தன் மனதை...ஒருவாறாகத் தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவன்,"உடனே ஆப்ரேஷன் பண்ணுங்க...!எந்த டாக்டர்ஸ்...ஸ்பெஷலிஸ்ட்டை வேணும்னாலும் வரவழையுங்க....!கமான்...!என் பேபிக்கு எதுவும் ஆகக்கூடாது....!",கடைசி வார்த்தையைக் கூறும் போதே அவன் குரல் கமறியது.



"நிச்சயமா...!வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்....!",உரைத்த மருத்துவர் தனது பரிவாரங்களுடன் நகர்ந்து விட்டார்.



தன் இரு கைகளாலும் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தவனின் மனம் முழுவதும் வேதனை...வேதனை...வேதனை மட்டுமே...!தன்னவளின் இரத்தம் தோய்ந்த முகம் அவன் முன் தோன்றி...அவனை நடுங்கச் செய்தது.



அவனது கைகளிலும்...சட்டையிலும் படிந்திருந்த அவளது இரத்தக் கறைகள் அவனைப் பயமுறுத்தின.அதிலும்...கடைசியாக அவள் பேசிய வார்த்தைகள் அவனை உயிரோடு கொன்று போட்டுக் கொண்டிருந்தன.



'திரும்ப வந்திடு டி...!நீ இல்லாம என்னால வாழ முடியாது...!',கிட்டத்தட்ட மந்திரம் போல் அவனது உதடுகள் இதைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.



அவனது குடும்பத்திற்கு விஷயத்தை கூற வேண்டும் என்ற எண்ணம் கூட அவனது மனதில் உதிக்கவில்லை.அந்த மருத்துவமனை டீன் தான் அவனது குடும்பத்திற்கு விபரத்தைக் கூறி...உடனே புறப்பட்டு வரச் சொல்லியிருந்தார்.



இதற்கிடையில் நித்திலாவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒரு ஃபார்மில் கையெழுத்து இட வேண்டிய நிலைமை வர...உடல் தூக்கிப் போட அந்த ஃபார்மை கையில் வாங்கவே மறுத்தான் ஆதித்யன்.



"ஜஸ்ட் ஃபார்மாலிட்டீஸ் தான்...!வேற எதுவும் இல்லை...!",என்று அவனை சமாதானப்படுத்தி...கையெழுத்து வாங்குவதற்குள் அந்த மருத்துவருக்கு 'போதும்...போதும்' என்றாகி விட்டது.கைகள் நடுங்க...மனம் முழுக்க பயம்...பயம் மட்டுமே நிரம்பியிருக்க...அந்த ஃபார்மில் அவன் கையெழுத்து இட்ட அந்த தருணத்தை...இறந்தாலும் அவனால் மறக்க முடியாது.



அடுத்த சில மணி நேரங்களில்...அவனுடைய குடும்பம் நித்திலாவினுடைய குடும்பம்...கெளதம் சுமித்ரா என அனைவரும் அங்கு பதட்டத்துடனும் அழுகையுடனும் கூடியிருந்தனர்.



"ஆதி...!",அவ்வளவு நேரம் வெறுமையான பார்வையோடு அமர்ந்திருந்தவனின் தோளில்...ஆதரவாக கெளதம் கை வைத்த அடுத்த நொடி அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தான் ஆதித்யன்.



"கெளதம்...!எனக்குப் பயமா இருக்கு டா...!என் குட்டிம்மா எனக்கு வேணும்...!அவளுக்கு ஏதாவதுன்னா...நான் உயிரோட இருக்க மாட்டேன் டா...!",கதறித் துடித்து கண்ணீர் விட்டான் அந்த ஆண்மகன்.



"இல்லை டா...!நித்திக்கு எதுவும் ஆகாது...!நீ அமைதியா இரு...!",தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு நண்பனைத் தேற்றினான் கெளதம்.



"ஒரு ஃபார்ம் கொடுத்து...அதில என்கிட்ட கையெழுத்து வாங்கறாங்க டா...!எதுக்கு அந்த ஃபார்ம்...?எதுக்கு என்கிட்ட கையெழுத்து வாங்கினாங்க....?சொல்லுடா....? ",ஒரு கணம் அவ்வாறு புலம்பியவன்..



அடுத்த கணம்,"அய்யோ...!எவ்வளவு இரத்தம் தெரியுமா டா...?என்..என் குட்டிம்மாவை இ..இந்தக் கையில தூக்கிட்டு....",அதற்கு மேல் பேச முடியாமல் உருத் தெரியாத பந்து ஒன்று வந்து அவன் தொண்டைக்குழியில் சிக்கிக் கொள்ள..



நண்பனின் நிலை உணர்ந்தவனாய்...அவனை இறுக அணைத்துக் கொண்டான் கெளதம்.மனைவிக்காக அவன் படும் பாட்டை கண்ட அவனது குடும்பத்தினர் மெளனமாக கண்ணீர் வடித்தனர்.தங்கள் மகள் மேல் மாப்பிள்ளை வைத்திருக்கும் காதலை நேரில் கண்ட நித்திலாவின் பெற்றவர்களின் கண்களிலும் கண்ணீர்.



ஒருவழியாக...ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு நித்திலாவிற்கு அறுவை சிகிச்சையை முடித்து விட்டு மருத்துவர்கள் குழு வெளியே வந்தது.



"நல்லபடியா ஆப்ரேஷன் முடிந்தது மிஸ்டர்.ஆதித்யன்...!ஆனால்...அவங்க கண் விழித்ததுக்குப் பிறகுதான் மேற்கொண்டு எங்களால எதையுமே சொல்ல முடியும்...!",தலைமை மருத்துவர் கூறி விட்டு சென்று விட...அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் ஆதித்யன்.



அந்த அதிர்ச்சியினூடே,"இதுக்கு என்னடா அர்த்தம்...?",என்று கௌதமின் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.



"டாக்டர்ஸ் என்னடா சொல்லிட்டுப் போறாங்க...?கண் விழித்ததுக்குப் பிறகுதான் சொல்ல முடியும்ன்னா...அதுக்கு என்ன அர்த்தம்...?அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நீதானே சொன்ன....?",ஆக்ரோஷத்துடன் கௌதமின் சட்டையைப் பிடித்து உலுக்கியவனை...சமாதானப்படுத்தி அமர வைப்பதற்குள் படாதபாடு பட்டான் கெளதம்.



கௌதமைத் தவிர வேறு யாராலும் ஆதித்யனின் அருகில் நெருங்க முடியவில்லை.வேறு யார் நெருங்கினாலும்...பைத்தியம் பிடித்தவனைப் போல் கத்த ஆரம்பித்தான்.அவனை விட்டு விலகித் தூரமாகத் தள்ளி நின்றபடி தங்களுக்குள் மறுகிக் கொண்டிருந்தனர் மற்றவர்கள்.



இப்படியாக இரவு நேரமும் வரவும்...கௌதம்தான் ஆதித்யனது குடும்பத்தை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.'இங்கேயே இருக்கிறோம்...!',என்று குலுங்கி அழுத நித்திலாவின் பெற்றவர்களை...மருத்துவமனையில் ஆதித்யனுக்காக இருக்கும் அறையில் தங்க வைத்தான்.வீட்டிற்கு செல்ல மறுத்தபடி...லட்சுமியும் அவர்களுடனேயே அந்த அறையில் தங்கிக் கொண்டார்.



விடிய விடிய...ஒரு பொட்டுத் தூங்காமல்...நித்திலா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யனுக்கு அருகில்...ஆதரவாய் அவனது கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தான் கெளதம்.



அடுத்த நாளும் விடிய...அனைவரும் நித்திலா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன் வந்து குவிந்தனர்.எதையும் கண்டு கொள்ளாது...அப்படியே அமர்ந்திருந்த ஆதித்யனிடம்...கெளதம் மெல்ல வந்து பேச்சுக் கொடுத்தான்.



"ஆதி...!",அவன் அழைக்க..



"..........",அவனிடம் எந்தப் பதிலும் இல்லை.



நண்பனின் தோற்றம் மனதைப் பிசைய,"நேத்து காலையில இருந்து இப்படியே இருக்கிறடா ஆதி...!எழுந்து வா...!முதல்ல ட்ரெஸ்ஸை மாத்திட்டு...ஏதாவது சாப்பிடு...!வா...!",அவனை எழுப்பினான் கெளதம்.



"எனக்கு எதுவும் வேண்டாம்...!",அவனது கையைத் தட்டி விட்டபடி விரக்தியான குரலில் கூறினான் ஆதித்யன்.



"அப்படி சொல்லாதே டா...!பாரு....!ட்ரெஸ் முழுக்க இரத்தக்கறை....!இப்படியே இருந்து உனக்கு ஏதாவது ஆகிடப் போகுது....!குடும்பத்தைப் பாரு...!அழுதுக்கிட்டே இருக்காங்க....!",அவன் கூறிய அடுத்த நொடி விருட்டென்று எழுந்தவன்..



"எனக்கு என்ன ஆனால்தான் என்ன...?என் குட்டிம்மாவைப் பார்த்தியா டா...?இன்னும் கண் விழிக்காமல் படுத்துக் கிடக்கிறாள்...!அவள் இல்லாத வாழ்க்கையை...என்னால வாழ முடியாது டா...!நான் வாழ மாட்டேன்...!என் தொழிலையெல்லாம் நீயே பார்த்துக்கோ....!அப்புறம்...என் அம்மா அப்பாவை...தாத்தா பாட்டியை எல்லோரையும் பார்த்துக்கோ...!",மனநிலை சரியில்லாதவனைப் போல் புலம்பியவன்...பிறகு எதையோ யோசித்தவனாய்..



"தொழில்...!இப்பவே என் பெயரில இருக்கிற பிசினெஸ்ஸை உன் பேருக்கு மாத்திடறேன்....!நான் போனதுக்குப் பிறகு லீகலா...உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது...!",பித்துப் பிடித்தவனைப் போல் பிதற்றியவன்...கௌதமின் சட்டைப்பையில் இருந்த போனை எடுத்து வக்கீலுக்கு அழைக்க முயன்றான்.



ஆதித்யனது வார்த்தைகளில் அனைவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.லட்சுமியோ பெருங் குரலெடுத்து அழவே ஆரம்பித்து விட்டார்.சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட கெளதம்...நண்பனது கையில் இருந்த மொபைலைப் பிடுங்கியபடி...அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.



அவனுடைய எந்தவொரு சமாதானமும்...ஆதித்யனின் மூளையில் ஏறவில்லை.தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவனை அடிக்காத குறையாக கண்டித்தும்...குரலை உயர்த்தி அதட்டியும்தான் வழிக்கு கொண்டு வர முடிந்தது.



காதல்...எப்பேர்பட்ட வீரனையும் கோழையாக்கி விடும்...என்ற வார்த்தைகளை மெய்ப்பிப்பது போல் நடந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.காதல்...அந்த அசகாயசூரனையும் கலங்கடித்து வேடிக்கைப் பார்த்தது.



****************************



"ரியலி ஸாரி டு ஸே....!",தனது மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி தனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆதித்யனையும்...கௌதமையும் பார்த்து பீடிகையுடன் ஆரம்பித்தார் அந்த மருத்துவர்.அவரது அனுபவம்...அவரது வயதில் தெரிந்தது.



"உங்க மனைவியுடைய தலையில ஏற்பட்டிருந்த இரத்தக்கசிவை...ஆப்ரேஷன் மூலமா நாங்க நிறுத்திட்டோம்...!ஆனால்...துரதிருஷ்டவசமா...உங்க மனைவி கோமா ஸ்டேஜிற்கு போயிட்டாங்க...!",அவரது குரலில் உண்மையாலுமே வருத்தத்தின் சாயல் எதிரொலித்தது.



ஆயிரமாயிரம் இடிகள்...லட்சம் கோடி மின்னல்களோடு சேர்ந்து தன் தலையில் இறங்கியதைப் போல் உணர்ந்தான் ஆதித்யன்.அவனது இதயம் துடிக்க மறந்து ஒரு கணம் நின்று...பிறகு துடித்தது.அவனது இதயம் வலியை உணரவில்லை...!துடிப்பை உணரவில்லை...!மாறாக மரித்துப் போன உணர்வு...!அனைத்தும் சில நொடிகள்தான்...!அடுத்த இரண்டு நிமிடத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்தவன்,



"இதிலிருந்து அவள் மீண்டு வருவதற்கான வாய்ப்பு....?",கேள்வியுடன் நிறுத்த..



"கண்டிப்பா வாய்ப்பு இருக்கு...!அதே சமயம்...வாய்ப்பில்லாம போகவும் வாய்ப்பு இருக்கு...!இன்னும் ஒரு மாசம்...இரண்டு மாசம்...ஒரு வருஷம்...பத்து வருஷம்...ஏன் பத்து நாட்கள்ல கூட மீண்டு வரலாம்....!அதே சமயம்...நிரந்தரமா....",அதற்கு மேல் சொல்ல விடாமல் அவரை கையை உயர்த்தி தடுத்தவன்..



"அவள் மீண்டு வருவாள்...!நிச்சயம் மீண்டு வருவாள்...!நான் மீண்டு வர வைப்பேன்...!",தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று...வில்லேற்றிய நாணாய் உடல் விறைக்க கர்ஜித்தவன்...பழைய ஆதித்யனாக மாறியிருந்தான்.



"வெரிகுட் மிஸ்டர்.ஆதித்யன்...!அவங்களை சுற்றி இருக்கறவங்களுடைய நம்பிக்கை...அவங்க மீண்டு வர்றதுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்...!நேர்மறையான எண்ணங்கள் அவங்களை சுற்றியும் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க...!அவங்கக்கிட்ட பேசி அவங்களுக்கு உயிர் வாழணும்ங்கிற ஆசையைத் தூண்டி விடுங்க...!அனைத்தையும் கடவுள் பார்த்துக்குவார்...!",அவனுக்குத் தைரியமளிப்பதைப் போல் பேசினார் அந்த மருத்துவர்.



'என்னுடைய காதல்...அவளை பார்த்துக்கும்...!',மனதிற்குள் கூறியவன் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தான்.



செய்தியைக் கேள்விப்பட்டு நிலைகுலைந்து நின்ற தனது குடும்பத்தையும் ஆதித்யன்தான் தேற்றினான்.



"கல்யாணமாகி முழுசா ஒரு வருஷம் கூட முடியலை...!அதுக்குள்ள என் மகனுடைய வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே...!'அத்தை..அத்தை..'ன்னு என் முந்தானையை பிடிச்சுக்கிட்டே சுத்திக்கிட்டு இருப்பாள்...!அவள் இல்லாம...அந்த வீட்டுக்கு நான் எப்படி போவேன்....?",லட்சுமி ஒரு பக்கம் அழ..



"அய்யோ...!என் பொண்ணை எனக்குத் திருப்பிக் கொடுத்திடு தாயே...!",என்று இன்னொரு பக்கம் கதறிக் கொண்டிருந்தார் மீனாட்சி.



பேசுவதற்கு வார்த்தைகள் வராமல் இடிந்து போய் அமர்ந்திருந்த மற்றவர்களையும் பார்த்தவன்,"ஷ்...!இப்போ எதுக்கு எல்லோரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க...?அவளுக்கு எதுவும் ஆகாது..!நான் ஆக விட மாட்டேன்...!இந்த ஆதித்யனை மீறி அவள் எங்கே போயிடுவா....?",வலி நிறைந்த புன்னகையோடு கூறியவன்..



கண்களில் தேங்கிய கண்ணீரோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் தாத்தாவின் அருகில் வந்தவன்,"நான் அவளைக் காதலிக்க ஆரம்பிச்ச நாட்கள்ல...உங்ககிட்ட ஒண்ணு சொன்னேன்...!ஞாபகம் இருக்கிறதா தாத்தா...?",அவன் வினவவும்...பேரனை பார்த்து 'ஞாபகம் இருக்கு...!',என்பதாய் மெலிதாய் தலையாட்டினார் அந்தப் பெரியவர்.



"யெஸ்...!அதையேதான் இப்பவும் சொல்றேன்...!அவளை...அவளுக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல...!அப்படி இருக்கும் போது...அந்த எமன் கிட்ட அவளை விட்டுக் கொடுத்திடுவேனா...என்ன....?நெவர்...!",அவனது குரலில் அப்படியொரு அழுத்தம்...!அப்படியொரு நம்பிக்கை...!



அவனது முகத்தில் தெரிந்த நம்பிக்கையை பார்த்து...அனைவரும் சற்று மனம் தெளிந்தனர்.அதன் பிறகு...ஆதித்யனைத் தேற்றுவதற்கோ...சமாதானப்படுத்துவதற்கோ யாரும் தேவைப்படவில்லை.மாறாக...இவன் அனைவருக்கும் தைரியம் கூறினான்.



நாட்கள் வேகமாகப் பறந்தன...!மருத்துவமனையை கதியென்று கிடந்தான் ஆதித்யன்.மருத்துவமனையில் இருக்கும் அவனது அறையிலேயே குளித்து விட்டு...அங்கு இருக்கும் கேன்டீனிலேயே உணவையும் முடித்துக் கொள்வான்.குளிப்பது...சாப்பிடுவது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அவன்...நித்திலா அருகில்தான் இருந்தான்.



அலுவலகத்தின் பக்கமும்...வீட்டின் பக்கமும் அவன் எட்டியே பார்க்கவில்லை.அலுவலக வேலைகளை கெளதம் கவனித்துக் கொண்டான்.



"வீட்டுக்கு வந்து ஒருநாள் ரெஸ்ட் எடுத்துட்டு போப்பா...!நித்தியை நாங்க பார்த்துகிறோம்...!",நித்திலாவின் அருகிலேயே தவம் கிடந்த ஆதித்யனைப் பார்த்து கவலைப்பட்டவர்களாய்...லட்சுமியும்..மீனாட்சியும் அவனிடம் விதவிதமாகக் கூறிப் பார்த்து விட்டனர்.ம்ஹீம்...!அவன் அசைந்து கொடுக்கவில்லை.



"அந்த வீட்டிற்கு...நான் என் மனைவியுடன்தான் வருவேன்...!",பிடிவாதமாகக் கூறுபவனை எதிர்த்து அவர்களாலும் மேற்கொண்டு வாயைத் திறக்க முடியவில்லை.



நித்திலாவின் அருகில் அமர்ந்தபடி...அவளது கையைத் தனது கரங்களுக்குள் பாதுகாப்பாய் பொத்தி வைத்துக் கொண்டு...அவளது உள்ளங்கையில் முகம் புதைத்து...விழிகளை மூடி அமர்ந்திருந்தான் ஆதித்யன்.இன்று நேற்றல்ல...!அவள் படுத்த படுக்கையாய் ஆன நாளில் இருந்து...இப்படித்தான் இரவு பகல் பாராமல் அமர்ந்திருப்பான் அவன்.



தூக்கம் வரும் போது...அவளருகில் நாற்காலியில் அமர்ந்தபடியே அவள் படுத்திருக்கும் கட்டிலில் தலை வைத்து உறங்கிவிடுவான்.தூக்கத்திலும்...மனைவியின் இரத்தம் தோய்ந்த முகமே வலம் வரும்.உடனே...சட்டென்று விழித்து விடுவான்.மீண்டும் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு...அவளது முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டும் அமர்ந்திருக்கும் ஆதித்யனின் முகத்தில் வலி...வேதனை...ஆகிய உணர்வுகள் வந்து போகும்...!



இதுவரை...அவன்...அவளிடம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை.ஆனால்...அவனது இதயம் பேசியது...!அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு விழி மூடியிருப்பவனின் இதயம்...அவளிடம் மெளனமாக பேசியது..!அந்த இதயமும்...அவளிடம் பேசிய வார்த்தைகள் 'குட்டிம்மா...!குட்டிம்மா...!' என்பதே...!



அவனுடைய 'குட்டிம்மா...!' என்ற அழைப்பைக் கேட்ட பிறகும்...அவளால் கண் மூடி படுத்திருக்க முடியுமா...?அதுவும்...இதயம் பேசிய மொழியை உணர்ந்த பிறகும்...விழிகளைத் திறக்காமல் இருக்க முடியுமா...?ஆம்...!அவள் விழிகளைத் திறந்தாள்...!முழுதாக மூன்று மாதங்கள் அவனைத் தவிக்க விட்ட பிறகு...!



***************************



வழக்கம் போல் அன்றும்...தன் இதயத்தை மொழியாக வைத்து அவளிடம் பரிபாஷணை நடத்திக் கொண்டிருந்தவன்...அப்பொழுதுதான் கவனித்தான்..அவளது விழிகளின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீர் துளிகளை...!



சுறுசுறுவென்று உடலில் பரபரப்பு தொற்றிக் கொள்ள...அவனது கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன.'யாரையாவது அழை...!' என்று அவனது மூளை கட்டளையிட்டது...!ஆனால்...அவனது உதடுகள்...மூளையின் கட்டளையை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தன...!



பரபரவென்று அவனது கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய...அவனது மனதில் இனம் புரியாத ஒரு ஜில்லிப்பு...!



"குட்டிம்மா...!",அவனது உதடுகள்தான் அசைந்ததே தவிர...வார்த்தைகள் வெளிவரவில்லை...!மாறாக...அவனது கண்களில் இருந்து விழுந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி அவளது நெற்றிப்பொட்டில் பட்டுத் தெறித்து..அவளது கண்ணீரோடு கலந்தது.



தன்னவன்...தனக்காக சிந்தும் கண்ணீரை அவள் உணர்ந்தாளோ...என்னவோ...?அவளது கருவிழிகள் இரண்டும்...அவளது இமைகளுக்குள் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தன.



ஆதித்யனுக்கு வாய்விட்டுக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது.வேக வேகமாகத் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன்...அவளருகே குனிந்து,"குட்டிம்மா...!",என்று அழைத்தான் தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கியபடி.



அடுத்த நொடி...மெல்ல மெல்ல தனது சிப்பி இமைகளைத் திறந்தாள் அவனுடைய குட்டிம்மா...!முதலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை.தன் முன்னால் நின்றிருந்தவனின் உருவம் மங்கலாகத் தெரிய...இமைகளை அழுந்த மூடி மீண்டும் திறந்தாள்.



எதிரே நின்றிருந்தான் அவளவன்...!மெல்ல மெல்ல மூளை வேலை செய்ய ஆரம்பிக்க...அவளது இதயத்தின் அடியாழத்தில் புதைந்திருந்த தன்னவனை அடையாளம் கண்டு கொண்டாள்.



"ஆ..து...!"என்று அழைத்தவளின் குரலில்தான் எத்தனை காதல்...!



மெல்ல அவள் விழி திறந்து...தன்னை அழைக்கும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவளைப் பார்த்திருந்தவன்...அவள்...'ஆது...!' என்றழைத்த அடுத்த நொடி...அவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டான்.



"பேபி...!ஆர் யூ ஆல்ரைட்....?",தனது விழிகளைப் பார்த்து வினவியவனுக்கு..



"ம்ம்...!",என்று தலையாட்டினாள் அவள்.



"தேங்க் காட்...!",அவளது நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து விலகியவன்.."நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்...!",என்றபடி வெளியேறினான்.அவனது முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த காதல் மறைந்து...இறுக்கம் வந்து குடிகொண்டது.



"ஷீ இஸ் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட்...!எந்தப் பிரச்சனையும் இல்ல...!இன்னும் இரண்டு வாரத்துல டிஸ்சார்ஜ் ஆகிடலாம்...!",நித்திலாவைப் பரிசோதித்த மருத்துவர் கூற...அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.லட்சுமியும்...மீனாட்சியும் நித்திலாவைக் கட்டிக் கொண்டு அழுதே விட்டனர்.வெகு நாட்களுக்குப் பிறகு...குடும்பத்தினர் அனைவரின் முகங்களிலும் நிம்மதி கலந்த புன்னகை தோன்றியது.



அடுத்த இரண்டு வாரங்களில்...நித்திலா நார்மல் வார்டுக்கு மாற்றப்பட...அவளுக்குத் தேவையான அனைத்தையும் உடன் இருந்து ஆதித்யனே கவனித்துக் கொண்டான்.நித்திலா ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல்தான் இருந்தாள்.மூன்று மாதங்களாக கோமாவில் இருந்தது அவளுக்குத் தெரியவில்லை.மீனாட்சிதான் அனைத்தையும் கூறி...இரவும் பகலும் அவளை விட்டு நீங்காமல் அடைகாத்த ஆதித்யனைப் பற்றி கூறியிருந்தார்.



தன்னவன் தனக்காக தவித்த தவிப்பு...அவளது ஒரு மனதை உருக்கினாலும்...காதல் கொண்ட இன்னொரு மனது...அவனுடைய காதலை எண்ணி சுகமாய் தொலைந்து போகத்தான் செய்தது...!



நித்திலா படிப்படியாக குணமடைந்து வந்தாள்.இரண்டு வார மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு...அன்று வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்...!மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து லட்சுமி வரவேற்க...தன்னவளுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஆதித்யன்.



மதிய உணவுக்குப் பிறகு...ஓய்வாக படுக்கையில் சாய்ந்திருந்த நித்திலாவிடம் வந்த ஆதித்யன்...அவள் உண்ண வேண்டிய மாத்திரைகளை எடுத்து நீட்டினான்.மாத்திரையை வாயில் போட்டவளின் கையில்...தண்ணீர் டம்ளரை திணித்தான்.அவனது அக்கறையில்...அவளுடைய மனம் நெகிழ்ந்தது.



காதலுடன் அவனை நோக்கியவளின் முகம் ஒருகணம் வேதனையில் கசங்கியது.மூன்று மாதங்களாக மழிக்கப்படாத தாடியுடன்...சரியான உணவும் உறக்கமும் இல்லாததால்...சற்று இளைத்து...கறுத்துப் போய் இருந்தவனின் தோற்றம் அவளுக்கு வருத்தத்தைத் தந்தது.



"ஆது....!",மெதுவாக அவள் அழைக்க..



"ம்....!",மருந்து மாத்திரைகளை அதற்குரிய கப்போர்டில் வைத்தபடி முணுமுணுத்தான் அவன்.



"ஏன் ஆது இப்படி இருக்கறீங்க....?தாடியை ஷேவ் பண்ணாம...சரியா முடி வெட்டிக்காம...நீங்க இப்படி இருக்க வேண்டாம் ஆது...!என்னுடைய ஆது அத்தான்...எப்பவும் கம்பீரமா இருக்கணும்....!",



சரி...!நீ படுத்து தூங்கு....!",உணர்ச்சியில்லாத குரலில் உரைத்தவன் உடனே வெளியேறிவிட்டான்.



ஆனால்...அடுத்த நாளே அவள் கூறியிருந்த படி...தாடியை அழகாக மழித்து..ட்ரிம் செய்து...தலைமுடியை வழக்கம் போல் வெட்டி...பழைய கம்பீரத்துடன் மிளிர்ந்திருந்தான்...!





அகம் தொட வருவான்...!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
அத்தியாயம் 62 :



பூவில் இருந்து இதழ்கள் உதிர்வது போல்...காலம் என்னும் நாட்காட்டியில் இருந்து ஒரு நாள் உதிர்வதும்...மறு நாள் மலர்வதுமாக...ஆறு மாதங்கள் ஓடிவிட்டிருந்தன...!நித்திலா..இப்பொழுது பூரண குணமடைந்திருந்தாள்.பழைய உற்சாகத்தோடு வலம் வர ஆரம்பித்திருந்தாள்.



அவள் வேகமாக குணமடைந்ததற்கு...முக்கியமான காரணம் ஆதித்யன் என்றால் மிகையாகாது.அந்தளவிற்கு அவள் உடன் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான்.அவளுக்கு மாத்திரை தருவது...அவளை சாப்பிட வைப்பது...என ஆரம்பித்து இன்னும் பிற தேவைகளையும் அவனே பார்த்துக் கொண்டான்.



மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில்...அவளை விட்டு விட்டு ஊருக்குச் செல்ல மனம் வராமல்...ஒரு மாதம் மகளுடன் தங்கி விட்டுத்தான் சென்றார் மீனாட்சி.ஆனால்...நித்திலாவைக் கவனிக்கும் வேலையை...ஆதித்யன் அவருக்கு விட்டு வைக்கவில்லை.மாப்பிள்ளையின் மனமறிந்து...அவரும் இங்கிதமாய் ஒதுங்கிக் கொண்டார்.



இதில் என்ன விஷயமென்றால்...அவளுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன்...மறந்தும் அவளிடம் பேசியிருக்கவில்லை.அவள் பேசினால் மட்டுமே..இவன் பதில் கூறுவான்...அதுவும் அளவாக...!



ஒரு மாதம் வரை...வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டவன்...அவள் குணமடைந்த பிறகுதான் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.



எப்பொழுதும் அவன் முகத்தில் ஒரு இறுக்கம் குடி கொண்டிருக்கும்.சில சமயங்களில்...இரவில் இவள் திடீரென்று கண் விழிக்கும் போது...அவளையே இமைக்காத பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான் ஆதித்யன்.



"என்னாச்சு ஆது...?ஏதாவது வேண்டுமா...?",அவள் வினவினால்..



வலி நிறைந்த புரியாத பார்வையை அவளை நோக்கி வீசி விட்டு படுத்து விடுவான்.அந்தப் பார்வைக்கான அர்த்தம் என்ன...?என்பதை அவளால் சத்தியமாய் புரிந்து கொள்ள முடியவில்லை.



நாளாக ஆகத்தான் ஆதித்யனது விலகலை அவள் கவனித்தாள்."ஏன்...?",என்று காரணம் கேட்பவளிடம்...மீண்டும் அதே வலி நிறைந்த புரியாத பார்வையை செலுத்தி விட்டு...அவ்விடத்தை விட்டு அகன்று விடுவான்.



அதையும் மீறி அவள் பேச வந்தால்..."எனக்கு வேலையிருக்கு....!",என்று கூறி மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விடுவான்.வேலையில் ஆழ்ந்து விடுபவனிடம்...அவளால் பேசவும் முடியாது.



அன்று....இரவு உணவை முடித்து விட்டுத் தங்களது அறைக்கு வந்தவள்,'இன்று என்ன ஆனாலும் சரி...!அவரிடம் பேசியே தீர வேண்டும்....!' என்ற உறுதியோடு உறங்காமல் விழித்திருந்தாள்.பால்கனியில் அமர்ந்திருந்தவளிம் காதில்....ஆதித்யனின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.கடிகாரத்தைப் பார்த்தாள்...!அது பன்னிரெண்டு மணி என காட்டியது.



இப்பொழுதெல்லாம்...அவள் அவ்வளவு நேரம் விழித்திருப்பதில்லை.ஆதித்யன் தான் அதட்டி...மிரட்டி "எனக்காக காத்திருக்க வேண்டாம்...!நேரத்தோடு சாப்பிட்டு விட்டு தூங்கு...!",எனக் கட்டளையிட்டிருந்தான்.



அவனது அழுத்தமான அதட்டலை மீற முடியாமல்...அவன் சொன்னபடி நேரத்தோடு உறங்கிவிடுவாள்.



அறைக்குள் நுழைந்த ஆதித்யன்...கட்டிலில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.அவள் அமைதியாகவே அமர்ந்திருக்கவும்...தோளைக் குலுக்கியபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.குளித்து முடித்து விட்டு...இரவு உடையுடன் அவன் வெளிவந்த போதும்...அவனது மனையாள் விழித்துக் கொண்டு கட்டிலில்தான் அமர்ந்திருந்தாள்.



அவளைக் கண்டு கொள்ளாமல்...சோபாவில் சென்று அமர்ந்தவன்...மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டான்.



"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்....!",என்றவளை நிமிர்ந்தும் பார்க்காது மடிக்கணினிக்குள் தலையைப் புதைத்திருந்தவன்..



"எனக்கு வேலையிருக்கு....!",என்று முணுமுணுத்தான்.



"நான் உங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னேன்...!",அழுத்தமாக அவள் கூற..



"நான் உன்கிட்ட வேலை இருக்குதுன்னு சொன்னேன்...!",என்றான் அவன் அதைவிட அழுத்தமாக.



அவனது பேச்சு அவளுக்கு கோபத்தைத் தர...வேகமாக அவனருகில் சென்றவள்..அதைவிட வேகமாக அவன் மடியிலிருந்த மடிக்கணினியைப் பிடுங்கித் தரையில் வீசியெறிந்தாள்.



மடிக்கணினியைத் தூக்கி வீசி விட்டாளே தவிர...அவளுக்கும் உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது.



'போச்சு...!கோபப்பட்டு கத்தப் போறான்...!',பயந்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்க்க...



அவனோ...அசால்ட்டாக அவளை நோக்கியவன்...எதுவுமே நடக்காததைப் போல்...தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தபடி...படுக்கையில் சென்று குப்புற விழுந்தான்.



'இவனுக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிருக்கா...?இவ்வளவு அமைதியா இருக்கிற ஆள் இல்லையே இவன்...?',தன் போக்கில் அவள் யோசித்துக் கொண்டிருக்க...கட்டிலில் குப்புற விழுந்த ஆதித்யனோ...கை கால்களை பரப்பிக் கொண்டு தூங்க எத்தனித்தான்.



"ஹலோ பாஸ்...!எழுந்திரிங்க...!நான் உங்ககிட்ட பேச வேண்டி இருக்கு....!",படுத்திருந்தவனின் அருகில் ஓடியவள்...அவனது தோளைப் பிடித்து உலுக்கியபடி கூற..



அவளது கைகளை விலக்கி விட்டவன்,"ப்ச்...!எனக்கு டயர்டா இருக்கு...!",என்றபடி கண்களை மூடிக் கொண்டான்.



"இப்போ எழுந்திருக்க முடியுமா...?முடியாதா....?",



"............",அவள் கேட்டதற்கு அவனிடம் எந்தப் பதிலும் இல்லை.



சிறிது நேரம் அமைதி நிலவியது.



'எங்கே ஒரு ஆக்சனும் இல்ல....!அமைதியா படுத்து தூங்கிட்டாளா...?',கண்ணை மூடிப் படுத்திருந்தவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே...அவனது முதுகில் பாரமாக ஏதோ அழுத்தியது.



திடுக்கிட்டுப் போய் முகத்தை மட்டும் திருப்பி பார்க்க...அவனது மனையாள் தான் அவனுக்கு இருபுறமும் கால் போட்டபடி...அவனது முதுகில் ஏறி அமர்ந்திருந்தாள்.அமர்ந்திருந்தவள் சும்மாவும் இருக்காமல்...அவனது முடியைத் தன் இரு கைகளாலும் பிடித்து இழுத்து..."என்கிட்ட பேச முடியுமா...?முடியாதா டா....?",என்று அவன் தலைமுடியைப் பிடித்து உலுக்கினாள்.



அவனுக்கு எங்கே அதெல்லாம் உரைத்தது...?தன் முதுகின் மேல் கிட்டத்தட்ட படுத்த நிலையில் இருந்த அந்த மலர் மூட்டையின் எழில்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான் அந்த ஆண்மகன்.



"பதில் சொல்லு டா...?",அவள் கத்திய கத்தலில் நினைவுலகிற்கு வந்தவன்...சடாரென்று திரும்பிப் படுக்க...அவன் திரும்பிய வேகத்தில் 'பொத்'தென்று மெத்தையில் விழுந்தாள் அவள்.



"ஆ...!இப்படித்தான் தள்ளி விடுவியா....?",அவள் முறைக்க..



"ராட்சசி....!இப்படித்தான் மேலே ஏறி உட்காருவியா....?லூசு...லூசு...!",எரிந்து விழுந்தான் அவன்.



அவனும்தான் என்ன செய்வான்...?பாவம்...!இழுத்துப் பிடித்து விரதத்தைக் கடைபிடித்துக் கொண்டிருப்பவனை நோக்கி...இடைவிடாது மலர்கணைகளைத் தொடுத்தால்...அவனுக்கு எரிச்சல் வருமா...?வராதா...?



தான் செய்த செயலின் வீரியம் அப்பொழுதுதான் அவளுக்கு உரைக்க...சட்டென்று அவளது முகம் செங்கொழுந்தாய் மாறிப் போனது.அவளது முகச்சிவப்பை பார்த்தவனின் எரிச்சல் மறைந்து...அந்த இடத்தை வேறு ஒன்று ஆக்ரமித்துக் கொண்டது.



முயன்று தன் வெட்கத்துக்கு அணை போட்டவள்,"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...!",கிளிப்பிள்ளையாய் மீண்டும் ஆரம்பித்தாள்.



அவனது முகம் பட்டென்று இறுக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.அவன் அமைதியாக இருக்கவும்...அவளே ஆரம்பித்தாள்.



"நீங்க முன்னாடி மாதிரி இல்லை ஆது...!என்னை விட்டு விலகிப் போகிற மாதிரி இருக்குது...!",இதைக் கூறி முடிப்பதற்குள்ளேயே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.



அவளை நோக்கி அந்தப் புரியாத பார்வையை வீசியவன்...எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.



"இதோ...!இந்தப் பார்வை....!இந்தப் பார்வைக்கான அர்த்தம் என்ன...?உங்களுடைய இந்தப் பார்வை என்கிட்ட என்ன சொல்ல வருதுன்னு சத்தியமா எனக்குத் தெரியல...!ஆனால்...நீங்க என்னை விட்டு விலகிப் போறீங்கன்னு மட்டும் புரியுது...!ஏன்...?ஏன் ஆது...?ஏன் என்னை விலக்கி வைக்கறீங்க...?",ஆற்றாமையுடன் வினவினாள் அவள்.



அவ்வளவுதான்...!அத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த அவனுடைய பொறுமை காற்றில் பறந்தது.கை முஷ்டி இறுக...உடல் விறைக்க நிமிர்ந்தவன்,"யார் யாரை விலக்கி வைக்கிறது...?நீ என்னை விலக்கி வைக்கிறயா...?இல்லை...நான் உன்னை விலக்கி வைக்கிறேனா...?",அடக்கப்பட்ட கோபத்தில் சீறி வந்தன வார்த்தைகள்.



"நீங்கதான்...!நீங்கதான் என்னை விலக்கி வைக்கறீங்க ஆது...!எனக்குத் தேவையானதை நீங்க பார்த்து பார்த்து செய்தாலும்...அதுல ஏதோ ஒண்ணு குறையுது...!என்கிட்ட முகம் கொடுத்துப் பேசவே மறுக்கறீங்க...!ஏன்...?",



"ஏன்...?இந்த 'ஏன்..?' அப்படிங்கற கேள்விக்கான பதில் நீதான் டி...!இந்த 'ஏன்...?' அப்படிங்கற கேள்வியை நான்தான் உன்னைப் பார்த்து கேட்கணும்...!நீ கேட்க கூடாது...!",சுட்டு விரலை அவளை நோக்கி நீட்டியபடி கிட்டத்தட்ட உறுமினான் அவன்.



"நானா...?",அதற்கு மேல் பேச முடியாமல் குழப்பத்துடன் அவன் முகம் நோக்கினாள் நித்திலா.



"நீதான்...!நீ மட்டும்தான்...!நாம காதலிக்கும் போது...என்னுடைய காதல் வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்ச...!இப்போ...நம்ம கல்யாணத்துக்குப் பிறகு நானே வேண்டாம்ன்னு என்னை விட்டு விலகிப் போக துணிஞ்சிட்ட...!",அவன் கண்கள் இரண்டும் கோவைப்பழமாய் சிவந்திருந்தன.



"போதும் ஆது...!இப்படி அபாண்டமா என்மேல பழி போடாதீங்க...!ஒரு காலத்துல 'நீங்க வேண்டாம்...!உங்க காதல் வேண்டாம்...!'ன்னு விலகிப் போக முடிவெடுத்தவள்தான் நான்...!ஆனால்...நம்ம கல்யாணத்துக்குப் பிறகு ஒரு நொடி கூட உங்களை விட்டுப் பிரியணும்ன்னு நான் நினைச்சுப் பார்க்கலை...!",தன் மேல் அவன் சுமற்றிய குற்றத்தைத் தாங்க முடியாமல் குமுறினாள் அவள்.



அவளது கண்களுக்குள் கூர்மையான பார்வையை செலுத்தியவன்,"என்னை விட்டு பிரிஞ்சு போகணும்ன்னு நீ நினைக்கலையா...?அன்னைக்கு ஆக்சிடெண்ட் அப்போ...நீ என்கிட்ட என்னடி சொன்ன...?'இதுதான் எனக்கான தண்டனை...!உங்க காதலுக்கான பதில் இதுதான்..'ன்னு நீ உளறலை....?என்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா டி...?அப்பவும் சரி..இப்பவும் சரி..நீ என்னைப் பத்தி...என் காதலைப் பத்தி யோசிக்கறதே இல்ல...!



அன்னைக்கு நான் எப்படி இருந்தேன் தெரியுமா டி....?ஒரு பைத்தியக்காரன் மாதிரி உன்னைத் தூக்கிட்டு ரோட்ல ஓடினேன்...!எவ்வளவு இரத்தம் தெரியுமா டி...?இதோ...இந்தக் கை முழுக்க உன்னுடைய இரத்ததைப் பார்த்த போது...நான் செத்துட்டேன்...!கிட்டத்தட்ட நாலு நாளா...நான் பித்துபிடிச்சவன் மாதிரி நீ அனுமதிக்கப்பட்டிருந்த ரூம் கதவையே வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன்....!என் காதுல...நீ கடைசியா பேசின வார்த்தைகள் மட்டும்தான் ஒலிச்சுக்கிட்டு இருந்தது....!அதுக்குப் பிறகும் கூட...நீ கண் விழிக்கலை....!



எப்படி கண் விழிப்ப...?என்னுடைய காதலைப் பத்தி ஒரு நொடி நினைச்சுப் பார்த்து இருந்தேன்னா...கண் விழிச்சிருப்ப....!வாழற ஆசையே இல்லாம...கோமா ஸ்டேஜ்க்கு போனவள்தானே நீ....!



மூணு மாசம் டி...! முழுசா மூணு மாசம்...சரியா சாப்பிடாம...தூங்காம...பைத்தியம் மாதிரி உன் கையையே பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்...!அந்த மூணு மாசங்கள்ல 'குட்டிம்மா...!குட்டிம்மா...!'ங்கிறதை தவிர என் வாய்...வேற வார்த்தைகளைப் பேசவே இல்லை...!ஆனால் நீ...எதைப் பத்தியும் யோசிக்காம என்னை அநாதை மாதிரி தவிக்க விட்டுட்டுப் போக துணிஞ்சிடல்ல....?",அவ்வளவு நாட்களாய் அடக்கி வைத்திருந்த மனக்குமுறல்களை அவளிடம் கொட்டித் தீர்த்தார்.



அந்தக் கொடுமையான நாட்களைப் பற்றிப் பேசியதாலோ...என்னவோ அவன் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.அவனது விழிகளில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்தது.



அதற்கு மேல்...அவள் நொடியும் தாமதிக்கவில்லை.பாய்ந்து சென்று அவன் முகத்தைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.



"இல்லை டா...!நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்....!என் ஆது அத்தானை விட்டு நான் எங்கே போவேன்....?",அவனது மன வேதனையை உணர்ந்தவளாய்...அவனை ஏதிலிருந்தோ காப்பதை போல்...தன் மார்புக்குள் வைத்து புதைத்துக் கொண்டாள்.



அவளிடம் கொட்டித் தீர்த்ததில்...மனம் அமைதியடைய ஒரு குழந்தையைப் போல் அவளது நெஞ்சுக்குழியில் தஞ்சமடைந்தான் அந்த ஆண்மகன்.தன் நெஞ்சுக்குழியில் அவனது கண்ணீரை உணர்ந்தவள்...வேகமாய் அவன் முகம் பற்றி நிமிர்த்தி..



"என்னுடைய ஆது...எதுக்காகவும் அழக் கூடாது....!",காதலாய் அவன் விழி பார்த்து உரைத்தவள்...தன் இதழ்களால் அவன் கண்ணீரைத் துடைத்தாள்.



"என்னை மன்னிச்சிடுங்க ஆது...!உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்...!என்னை மன்னிச்சிடுங்க...!",பிதற்றியபடியே வேகவேகமாக அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.



அவள் கன்னத்தைத் தன் இரு கைகளாலும் தாங்கியவன்,"ம்ஹீம்...!நீ என்னை விட்டுப் போகவும் நான் விடமாட்டேன் பேபி....!நான் ஏற்கனவே சொன்னதுதான்...உன்னை உனக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல பேபி...!",என்றவன் அவளது நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.



அவனது மார்புச் சூட்டில் முகம் புதைத்தபடி அவளும்...அவளது உச்சி வகிட்டில் தாடையைப் பதித்தபடி அவனும்...எவ்வளவு நேரம் அணைத்துக் கிடந்தார்களோ தெரியவில்லை...!முதலில் அவளை விட்டு விலகியது ஆதித்யன்தான்...!



ஒரு வித வேகத்துடன் அவளை விட்டு விலகியவன்,"நீ படுத்து தூங்கு பேபி...!",முகம் பார்க்காமல் உரைத்தபடி...அவளது நெற்றிப்பொட்டில் அழுத்தமாக முத்தம் பதித்து விட்டு விலகிச் சென்றான்.



பால்கனியில் நிலவை வெறித்துக் கொண்டு நின்றிருந்தவனை...இரு மென்மையான கரங்கள் பின்னாலிருந்து அணைத்தன.அந்தக் கரங்களுக்கு உரியவளின் ரோஜா நிற இதழ்கள்...அவனது முதுகில் அழுத்தமாய் ஒரு முத்தத்தையும் வைத்தன...!



அத்தோடு நில்லாமல்,"இன்னும் ஏன்டா தள்ளிப் போகிற....?",என்று தாபத்தோடு முணுமுணுக்கவும் செய்தன.



தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்...அவள் புறம் திரும்பி,"இல்லையே...!இப்போ கூட பாரு...உன் கைகளுக்குள்ளேயேதான் நிற்கிறேன்....!",என்றான் மென்மையாக.



அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவள்,"ம்ஹீம்...!",என்று தலையாட்டினாள்.



"எனக்கு நீ வேணும்....!"சுட்டு விரலை அவனை நோக்கி நீட்டியபடி கிசுகிசுத்தவளின் குரலில்தான் எத்தனை மயக்கம்...!அவளது கருவிழிகள்...அவனை வாரிச் சுருட்டி தனக்குள் அடக்கிக் கொள்ள முயன்றன.



அவளுக்கு எது தேவை என்று அவனுக்கும் தெரியும்...!சொல்லப் போனால்...அந்த உணர்ச்சிகளின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகத்தான்...அவன் பால்கனியையே தஞ்சமடைந்தான்.



அவளது இடையில் கை கொடுத்து...அப்படியே அவளை அள்ளிக் கொண்டவன்...படுக்கையை நோக்கி நடந்தான்.மென்மையாய்...மிக மென்மையாய் அவளை மெத்தையில் கிடத்தியவன்..



"உன்னை மொத்தமா ஆண்டு முடித்து விட வேண்டும்ன்னு எனக்குள்ள கொள்ளை ஆசை இருக்குது டி...!ஆனால்...அது இப்போ வேண்டாம்...!உனக்கு உடம்பு சரியாகட்டும்....!",அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் விலக முயன்றான்.



விலக முயன்றவனின் சட்டைக் காலரை பற்றித் தன் புறம் இழுத்தவள்,"ஏய்ய்...!நாய்க்குட்டி....!என்னுடைய உடம்பு எப்பவோ குணமாகிடுச்சு...!மாத்திரை கூட சாப்பிட வேண்டியதில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு...!தெரியும்தானே....?",கிசுகிசுப்பாக கூறியவள் அவனை மேலும் தன்னை நோக்கி இழுத்தாள்.



அவள் இழுத்த வேகத்தில்...அவள் மேலேயே விழுந்தவன்,"இருந்தாலும்...நாம ஜாக்கிரதையா இருந்துக்கிறது நல்லதுதானே...?",என்று இழுத்தான்.



அவளுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது...!அவள் அறிந்த ஆதித்யன் இவ்வளவு பொறுமையானவன் இல்லை...!சிறு அணைப்பிலேயும்...ஒற்றை முத்தத்திலேயுமே அவனது ஒட்டுமொத்த முரட்டுத்தனத்தையும் காட்டி...அவளை அலைக்கழித்து விடுவான்...!காதலிக்கும் காலங்களிலேயே...'எனக்கு இப்பவே நீ வேணும் பேபி...!ஐ நீட் யூ வெரி பேட்லி....!',வேட்கையோடு அவளது காதோரம் முணுமுணுத்தபடி...அவளை ஆக்ரமிக்க முயல்வான்.அவள்தான் அதையும் இதையும் கூறி...அவனது உணர்ச்சிகளுக்கு அணை போடுவாள்...!அப்பொழுதும் முரண்டு பிடிப்பவனை கொஞ்சி...கெஞ்சி...சில பல முத்தங்களை அவனுக்கு இலவசமாக வழங்கி அவனை சமாதானப்படுத்துவாள்.



அப்படிப்பட்டவன்...இன்று உரிமை கிடைத்த பிறகும்...பொறுமை காக்கிறான் என்றால்...அது தனக்காக...தன்னுடைய உடல் நிலைக்காக...!என்ற அவனுடைய காதல் அவளுக்கு நன்கு புரிந்தது.



சுனாமியாய் அவளுக்குள்ளும் காதல் அலைகள் பொங்கியெழ,"உன்கிட்டேயெல்லாம் பேசிக்கிட்டு இருக்க கூடாது டா....!ஒன்லி ஆக்சன் தான்...!",தன் மேல் கிடந்தவனை மெத்தையில் தள்ளியவள்...அவன் மேல் படர்ந்தாள்.



படர்ந்த வேகத்தில் அவனது இதழ்களை கவ்விக் கொண்டாள் அந்த நாயகி...!அதற்கு மேல் 'என்ன செய்வது...?' என்று தெரியாமல்...வழக்கம் போல் முட்டிமோதிக் கொண்டிருந்தவளைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்...அமைதியாய் அவளது செயலை ரசிக்க ஆரம்பித்தான்.



சிறிது நேரம் தட்டுத் தடுமாறி அலைமோதிக் கொண்டிருந்தவள்...அதற்கு மேல் முடியாமல் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க...



அந்த மாயக்கண்ணனோ...குறும்புப் புன்னகையுடன்,"என்ன பேபி...?முடிச்சிட்டியா...?",என்று கண்ணடிக்க...அவளுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.



"இன்னும் என் பொண்டாட்டிக்கு முத்தம் கூட முழுசா கொடுக்கத் தெரியலை...!அதுக்குள்ள...ஆக்சன்ல இறங்கிட்டாங்க....!",அவன் மேலும் கிண்டலடிக்க..



அவனைப் பார்த்து செல்லமாக முறைத்தவள்,"சொல்லிக் கொடுக்கிற டீச்சர் சரியில்லை...!அதுதான்...!",என்று முணுமுணுத்தாள்.



"என்னது...?டீச்சர் சரியில்லையா....?அப்போ...ஸ்டூடண்டுக்கு புரியற மாதிரி தெளிவா சொல்லிக் கொடுத்திட வேண்டியதுதான்....!",ஒரு மாதிரிக் குரலில் உரைத்தவன்...நொடியும் தாமதிக்காமல் அவளது செவ்விதழ்களை சிறைப்படுத்தினான் தனது முரட்டு உதடுகளால்.



திறமையான ஆசிரியனாக மாறி...தனது முழு வித்தையையும் அவளது இதழ்களில் காட்டிக் கொண்டிருந்தான் அந்தக் காதலன்...!



"போ..தும் ஆது....!போ..தும்....!",சுவாசத்திற்காக ஏங்கித் தவித்து...மூச்சு வாங்க அவள் அலறிய போதுதான்...அவளது இதழ்களை விட்டு விலகினான் அவன்.



"முரடா....!",கசங்கிப் போயிருந்த தன் இதழ்களைத் தொட்டுப் பார்த்து அவள் மூச்சு வாங்க...



அவளது காதோரம் குனிந்தவன்,"இதுக்கே இப்படின்னா....",என்று மேலும் சில ரகசிய பாஷைகளைப் பேச...சுறுசுறுவென்று அவளது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஏதோ பரவ...மருதாணியாய் சிவந்து போனாள் அந்த மங்கை.



அதற்கு மேல் அவன்...தனது உணர்ச்சிகளுக்கு விலங்கிடவில்லை...!கழுத்து சரிவில் புதைந்த அவனுடைய உதடுகள் மேலும் மேலும் முன்னேறி தனது தேடலைத் தொடங்க...தோளில் அழுந்திய அவனது கரங்கள் மேலும் கீழிறங்கி தனது பயணத்தை ஆரம்பித்தன...!



தன் மேல் கிடந்தவளை புரட்டி கீழே தள்ளி...தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தவனின் கரங்கள் அவளது மேனியில் தனது எல்லைகளை கடந்தன...!நாணம் கொண்டு அவள் சிணுங்க சிணுங்க...அவளது மேனியில் தனது தேடலுக்குத் தடையாய் இருந்த தடைகளை களைந்தெறிந்தவன்...வேட்கையோடு முன்னேறினான்.



இருவரது உணர்ச்சிகளும் கரையுடைத்துக் கொண்டு சீறிப் பாய்ந்தது...!ஆழ்கடலின் நடுவே...புயலோடு கூடிய சுழலில் சிக்கியவளாய் மூச்சுத் திணறத் திணற அவனுள் மூழ்கிப் போனாள் நித்திலா.அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் கூசிச் சிலிர்த்து சிவந்தது அந்தப் பெண்மை...!இதுவரை அவள் அறிந்திராத உணர்வுகளை...அவன் உணர்த்திய போது...அவளது மேனி தடதடவென்று நடுங்கியது...!



அவன் அழைத்துச் சென்ற ரகசிய உலகத்திற்கு 'வர மாட்டேன்...!' என்று பயந்து போய் முரண்டு பிடித்தவளை...'நான் இருக்கிறேன்...!பயப்படக் கூடாது....!',அவளது காதோரமாக சரிந்து தைரியமூட்டி...அவளது கரம் பற்றித் தன்னுடன் அழைத்துச் சென்றான் அவன்...!தன்னவன் இருக்கும் தைரியத்தில்...அவனை இறுகப் பற்றிக் கொண்டு...அவர்களுக்கே அவர்களுக்கேயான ரகசிய உலகில் அடியெடுத்து வைத்தாள் நித்திலா.



அப்படி இருந்தும்...ஒரு கட்டத்திற்கு மேல் மருண்டு விழித்தவளை...மென்மையாக அணைத்தும்...அவளது நெற்றிப்பொட்டில் இதழ் பதித்தும்...அவளது பயத்தைப் போக்கி...மெல்ல மெல்ல முன்னேறினான் அந்தக் காதல்காரன்.



அவன் வாரி வாரி வழங்கிய காதலில் சுகமாய் நனைந்தவள்...அவளையும் அறியாமல்...தன் வெட்கத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளிவந்தவளாய் அவனுடன் ஒன்றிப் போனாள்.



அவ்வளவு நாட்களாய் அடக்கி வைத்திருந்த மோகமும்...தாபமும்...காமமும் சீறிக் கொண்டு பாய..வன்மையாய்...மிக மிக வன்மையாய் அவளை ஆக்கிரமித்தான் அந்தக் காதல் தீவிரவாதி...!



அவனது முரட்டுத்தனத்தில்...பூம்பாவையவள் சற்றுத் திணறித்தான் போனாள்.



"மெ..மெதுவா ஆது...!",என்ற அவளது சிணுங்கல்களை எங்கே அவன் கேட்டான்...?காதலோடு காமமும் இணைந்து கொள்ள...முழு மூச்சோடு அவளை வேட்டையாடியவன்...தனது தேடல் முடிந்தே அவளை விட்டு விலகினான்.அவனது தேடல் முடிவுக்கு வந்த போது...இரவும் முடிந்திருந்தது.



அவளது நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து விலகியவன்...அவளை அள்ளித் தன் மேல் போட்டுக் கொண்டான்.



"ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேனா பேபி....?",கசங்கிய பூவாய் படுத்திருந்தவளின் தோற்றமே பறைசாற்றியது அவனுடைய முரட்டுத்தனத்தை.



அவனது வெற்று மார்பில் முகம் வைத்து சுகமாய் படுத்திருந்தவள்,"சரியான முரட்டுப்பையன் டா நீ...!காட்டான்...!",கூறியவளின் முகத்தில் அப்படியொரு நிறைவு...!களைப்பையும் மீறி அவளது முகம் நாணத்தில் மிளிர்ந்திருந்தது.அவளது உதடுகள் அவளையும் அறியாமல்...அவனது திண்மையான மார்பில் அழுத்தி ஒரு முத்தத்தை வைத்தன.



அவளது செய்கையில் கிறங்கிப் போனவன்,"என்னை அரைக்கிழவன்னு சொன்னவள் தானே நீ...?உனக்கு நல்லா வேணும் டி....!இவ்வளவு நாள் பட்டினி போட்டதுக்கான பனிஷ்மெண்ட் இது...!இன்னும் பனிஷ்மெண்ட் முடியல...!",கூறியபடியே அவளைக் கீழே தள்ளி...அவள் மேல் படர முயல..



"போதும் ஆது...!எனக்குத் தூக்கம் வருது அத்தான்...!",என்று சிணுங்கினாள்.



"இனிமேல் தூங்காம இருக்க கத்துக்கோ...!",என்றவனின் விரல்கள் அவளது மேனியில் அலைபாய்ந்தன.



"அத்தான்...!ப்ளீஸ்...!எனக்கு டயர்டா இருக்கு...!உடம்பெல்லாம் வலிக்குது...!",மெலிதாய் கெஞ்சியவளின் கன்னத்தைச் செல்லமாக கடித்து வைத்து விலகியவன்..



"தூங்கு குட்டிம்மா...!",என்றபடி அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான்.



அவனது மார்புக்குள் புதைந்து கொண்டு...அவனது வலிமையான கரங்களுக்குள் வாகாய் அடங்கியவள்...சுகமாய் உறங்கிப் போனாள்.காதல் சங்கமத்தில் நிறைவு பெற்றிருந்தவர்களை நித்திரா தேவி வந்து தழுவிக் கொண்டாள்.



நித்திலா கண்விழிக்கும் போது...அவள் கண்களில் முதலில் விழுந்தது...அயர்ந்து உறங்கும் தன்னவனின் முகம்தான்...!



"வசீகரா...!மயக்கும் ராட்சசா...!",காதலோடு பிதற்றியபடி அவனது முகவடிவை தனது ஆள்காட்டி விரலால் அளந்தவளின் மனதில்...முதல் நாள் இரவு அந்த வசீகரன் செய்த வசீகரங்கள் நினைவுக்கு வந்து...அவளது முகத்தை சிவக்கச் செய்தன.



நாணப் புன்னகையுடன் கட்டிலை விட்டு இறங்கியவள்...கீழே சிதறிக் கிடந்த தனது உடைகளை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.



நாவல் பழ நிறத்திலான புடவை அணிந்து கொண்டு...தலைக்கு குளித்திருந்த கூந்தலில் இருந்து சொட்ட சொட்ட நீர் வடிய...கண்ணாடி முன் நின்றபடி தனது உச்சி வகிட்டில் குங்குமத்தை சூட்டப் போனவளின் கரங்களை ஒரு கரம் பற்றியது.இன்னொரு கரம் அவளது இடையைத் தழுவி தன்னோடு சேர்த்து அணைத்தது.



கண்ணாடியில் தெரிந்த தன்னவனது உருவத்தைப் பார்த்தபடி அவள் அசையாமல் நிற்க...அவளது கரத்தைப் பற்றிய அவனது கரமோ...அவளது கரத்தோடு பிணைந்தபடி...அவளது நெற்றி வகிட்டில் குங்குமத்தை சூட்டியது.அவனது விழிகள் அவளது விழிகளை விட்டு இம்மியளவும் விலகவில்லை.



"மயக்கறே டி...!",தாபத்துடன் முணுமுணுத்த அவனது உதடுகள் அவளது தோள் வளைவைப் பிடித்து கடித்து வைக்க..



கணவனது மோகப் பார்வையை உணர்ந்தவள்,"நான் கீழே போகணும் ஆது...!",என்றபடி அவனை விட்டு விலக முயன்றாள்.



அவன் விட்டால்தானே...?அவளது கரத்தைப் பற்றி சுண்டி இழுத்தவன்...தன் மேல் சரிந்தவளை அணைத்துக் கொண்டு தரையில் சரிந்தான்.அவனது கரங்கள் அவளது இடையில் அழுத்தமாகப் பதிந்த விதமே...மேலே நடக்கப் போவதை அவளுக்கு உணர்த்த..



"நான் குளிச்சிட்டேன் ஆது...!",என்று மெல்ல முணுமுணுத்தாள்.



"ஸோ வாட்....?",என்றவனின் உதடுகள் அவளது மேனியில் ஆழப் புதைய...மீள முடியாத புதை குழிக்குள் அகப்பட்டுக் கொண்டாள் நித்திலா.அவள் மேல் பரவிப் படர்ந்து மேய்ந்தவன்...அவளை முழுவதுமாக கொள்ளையிட்டப் பிறகுதான் விலகினான்.



"டர்ட்டி பையா...!உன்னால நான் இப்போ மறுபடியும் குளிக்கணும்...!",கூடல் முடிந்து சிணுங்கியவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு..



"ஸோ வாட்...?நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்...!",அவள் மறுக்க மறுக்க கேட்காமல்...அவளோடு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் அந்தக் கள்வன்.



ஒருவாறாக இருவரும் குளித்து முடித்துக் கிளம்பி கீழே வரும் போது மணி பன்னிரெண்டு ஆகியிருந்தது.யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் நாணம் தடுக்க...தனது அத்தையோடு ஒட்டிக் கொண்டாள் நித்திலா.



ஆதித்யனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்...நித்திலாவின் கன்னச் சிவப்பும்...'இருவரது வாழ்க்கையும் சீராகி விட்டது...",எனக் கட்டியம் கூற..பெரியவர்களின் மனம் நிறைவடைந்தது.



"போடா...!போய் பூஜை அறையில தீபம் ஏற்றி வைச்சிட்டு...ரெண்டு பேரும் சாப்பிட போங்க...!",வாஞ்சையுடன் மருமகளின் கன்னத்தைப் பற்றியபடி லட்சுமி கூற..



"சரிங்க அத்தை...!",நாணம் மேலிட தலையாட்டிவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தாள் நித்திலா.



தீபம் ஏற்றி விட்டு...கண்மூடி கடவுளை வணங்கியவளின் மனம் முழுக்க ஆதித்யன்...ஆதித்யன்...ஆதித்யன் மட்டுமே நிறைந்திருந்தான்.



'என் ஆதுவை விட்டுப் பிரியாத வரத்தை நீ எனக்கு அருள வேண்டும்...!',என்பதே அவளது வேண்டுதலாக இருந்தது.



**************************
 

Nirmala Krishnan

Saha Writer
Team
Messages
87
Reaction score
13
Points
6
மூன்று வருடங்களுக்குப் பிறகு -

ஆதித்யனின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது.பிரம்மாண்டமான வாசலை அடைத்தபடி வாழை மரங்கள் கட்டியிருக்க...வீட்டின் நிலைப்படிகளை மாவிலைத் தோரணங்கள் அலங்கரித்திருந்தன...!உள்ளே யாகம் நடந்து கொண்டிருக்க...யாகத்துக்கு முன்னால் தம்பதி சமேதராய் அமர்ந்திருந்தனர் ஆதித்யனும்...நித்திலாவும்.

குட்டி குட்டி கை கால்களை உதைத்தபடி...பொக்கை வாய் சிரிப்போடு...தனது பிஞ்சுக் கையால் நித்திலாவின் கழுத்தில் கிடந்த நகையை இறுக்கப் பிடித்தபடி...நித்திலாவின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தான் அவர்களுடைய செல்வப் புதல்வன்.

மூன்று மாதங்களே நிரம்பிய அவர்களுடைய சீமந்த புத்திரனுக்கு...அன்று பெயர் வைக்கும் விழா...!முக்கியமான உறவினர்களை மட்டும் அழைத்து...எளிமையாக அந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்திருந்தான் ஆதித்யன்.

பொதுவாகவே அவளைத் தங்கத் தட்டில் வைத்துப் பார்த்துக் கொள்பவன்...அவள் கருவுற்ற செய்தியை அறிந்த பிறகு கண்ணின் இமை போல அவளைப் பாதுகாத்தான்.மசக்கையில் வாந்தியும்...மயக்கமுமாய் அவள் சோர்வுறும் போதெல்லாம்...ஒரு தாயாய் அவளை மடி தாங்கினான்.கர்ப்பிணி பெண்களுக்கே உரிய மனநிலை மாற்றத்தில்...அவள் எரிந்து விழும் போதெல்லாம்...தந்தையாய் தோள் கொடுத்தான்...!வளைகாப்பு முடிந்து கூட அவளைத் தாய் வீட்டிற்கு அனுப்ப மறுத்து விட்டான்.வழக்கம் போல்...அனைவரும் இவனுடைய பிடிவாதத்திற்கு அடிபணியத்தான் வேண்டியிருந்தது...!ஆக மொத்தம்...அவளுக்குத் தாயுமானவனாய் விளங்கினான் என்றால் மிகையாகாது...!

தாய்மையின் உணர்வுகளின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து...ருசித்து பொக்கிஷமாய் தனக்குள் சேமித்தாள் நித்திலா.பின்னே...மூன்று வருடம் கழித்துக் கிடைத்த முத்தல்லவா அவளுடைய புதல்வன்....!

அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்த அடுத்த நாளே ஆதித்யன் கூறி விட்டான்.

"மூன்று வருஷம் கழித்து நாம குழந்தை பெத்துக்கலாம் பேபி...!அதுவரைக்கும்..எனக்கு நீ...!உனக்கு நான் மட்டும்தான்...!உன்னுடைய முழுமையான காதலும்...பாசமும்..அன்பும் எனக்கு மட்டுமே கிடைக்கணும்....!",முரட்டுத்தனமாக கூறியபடி..அதை விட முரட்டுத்தனமாக அவளை ஆக்ரமித்தவனின் காதலில் தெரிந்தே தொலைந்து போனாள் அந்த மங்கை...!

திகட்டத் திகட்ட அவனுடைய அராஜகக் காதலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையே வண்ணமயமாக மாறியது.அதேபோல்...அவளுடைய மென்மையான காதலில் சுகமாய் நனைந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.

திருமணமான இரண்டாவது வருடத்தில் சுமித்ரா...மகனை ஈன்றெடுக்க...அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்த்து விட்டு வந்த நித்திலா...அன்று இரவே கணவனின் காதோரமாக கிசுகிசுத்தாள்.

"நாமளும் குழந்தை பெத்துக்கலாம் ஆது...!",ஆசையுடன் கேட்டவளின் நெற்றியில் முத்தமிட்டவன்..

"நோ பேபி...!இரண்டு வருஷத்துக்குப் பிறகுதான் குழந்தை...!",என்று பிடிவாதமாக மறுத்து விட்டான்.ஆதித்யனது விருப்பத்தின்படியே மூன்று வருடங்களுக்குப் பிறகு அச்சு அசல் ஆதித்யனை உறித்து வைத்தபடி...ஒரு அதிகாலை வேளையில் 'வீல்...!' என்ற சப்தத்துடன் மண்ணில் வந்து உதித்தான் அவர்களது குட்டி கண்ணன்...!

பிரவச வலியில் மனைவி துடித்ததை விட..அதிகமாகத் துடித்துப் போனது ஆதித்யன்தான்...!வலியில் துடித்த தன்னவளின் கையைப் பற்றியபடி அவள் அருகிலேயே தவிப்புடன் நின்றிருந்த ஆதித்யனைக் கண்டு அந்த மருத்துவர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

ஒவ்வொரு வலிக்கும் பல்லைக் கடித்துக் கொண்டு அலறியவளைக் கண்டு,"அய்யோ...!இவளுக்கு ஏன் இப்படி வலிக்குது...?ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுங்க...!",என்று மருத்துவரிடம் கத்தினான்.

"நீங்க அமைதியா இருக்கறதுன்னா...இங்கே நில்லுங்க மிஸ்டர்...!இல்லைன்னா...வெளியே போங்க...!",அந்த மருத்துவர் அதட்டிய பிறகுதான் அமைதியானான்.

விட்டு விட்டு எடுத்த வலிகளின் முடிவில்...உயிரையே பிடிங்கிப் போடுவதைப் போல்...முதுகிலிருந்து..இடையின் அடி வரை சுறுசுறுவென்று பெரு வலியெடுக்க..."ஆது...!",என்ற அலறலுடன் அவள்...தங்களது குழந்தையை ஈன்றெடுத்த நொடியை...எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவனால் மறக்க முடியாது.

"உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் மிஸ்டர்.ஆதித்யன்...!",இள வண்ண ரோஜா நிறத்தில் பஞ்சுப்பொதியாய் அவன் முன் நீட்டிய குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காது..

மயங்கிச் சரிந்த மனைவியைப் பார்த்தபடியே,"குட்டிம்மா...!டாக்டர்...!என் குட்டிம்மாவை பாருங்க...!",குழந்தையைக் கையில் வாங்காமல் அலறியவனை..

"களைப்பில மயங்கிட்டாங்க....!நத்திங் டூ வொர்ரி...!",என்று அதையும் இதையும் கூறி சமாதானப்படுத்துவதற்குள் அந்த மருத்துவருக்கு போதும்..போதுமென்றாகிவிட்டது.

"குழந்தையோட பெயரை அதனுடைய காதில் சொல்லுங்கோ...!",ஐயர் கூற..

"சரண் ஆதித்யன்...!சரண் ஆதித்யன்...!சரண் ஆதித்யன்...!",ஆதித்யனும் நித்திலாவும் இணைந்து தங்கள் மகனின் காதில் கூறினர்.அந்த சரண் ஆதித்யனுக்கு என்ன புரிந்ததோ...பொக்கை வாயை விரித்து சிரித்து வைத்தது.அந்த ஆதித்யனையே அசர வைக்கும் அசகாயசூரன் இந்த சரண் ஆதித்யன்...!தந்தையை மிஞ்சப் போகும் தனயன் இவன்...!

"லவ் யூ டி...!",தன் மனைவியின் விழிகளை காதலால் கட்டிப் போட்டபடி கூறியவனின் குரலில்தான் எத்தனை காதல்...!அவனுக்கு சற்றும் குறையாத காதலை தன் விழிகளின் மூலம் அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருந்தாள் அவனுடைய குட்டிம்மா.

"ம்க்கும்...!மச்சான்...!நாங்களும் இங்கேதான் இருக்கிறோம்...!",சுமித்ராவைத் தோளோடு அணைத்தபடி...தங்களது ஒரு வயது மகன் ரிஷி நந்தனை தோளில் சுமந்தபடி கூறிய கௌதமை நிமிர்ந்து பார்த்தவன்..

"அதை...என் தங்கச்சி தோள் மேலே இருக்கிற கையை எடுத்துட்டு சொல்லு டா...!",ஆதித்யன் கூற...அங்கு ஒரு சிரிப்பொலி எழுந்தது.

விழா இனிதாக நடந்தேறி முடிய...அன்றைய இரவு...குழந்தைக்கு பசியாற்றி உறங்க வைத்து விட்டு...தானும் கண்ணயர்ந்த நித்திலாவை இரு வலிய கரங்கள் அணைத்து தன்னை நோக்கித் திருப்பின.

"ஆது அத்தான்...!விடுங்க...!குழந்தை இருக்கிறான்...!",தன்னருகில் படுத்திருந்த குழந்தையை அவள் திரும்பிப் பார்க்க...அதுவோ சமர்த்தாய் தொட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

"நாம போடபோற சண்டையில அவன் நசுங்கிட்டானா என்ன பண்றது...?அதுதான்...அவனைத் தொட்டில்ல தூக்கிப் படுக்க வைச்சிட்டேன்...!",குறும்பாய் கண் சிமிட்டியவனின் கரங்கள் அவள் மேனியில் தனது ஆராய்ச்சியைத் தொடர...அவனது இதழ்களோ...அவளது நெஞ்சுக்குழியில் புதைந்து தனக்கானத் தேடலைத் தேட தொடங்கியது...வழக்கம் போல் முரட்டுத்தனமாகவே...!

காதலுடன் அவனது முரட்டுத்தனத்திற்கு வளைந்து கொடுத்தவளின் இதழ்கள் மட்டும்,"ரௌடி...!காதல் ரௌடி....!",என முணுமுணுத்தன.

காதல்...!மிக அழகானது...!மிக மிக அழகானது...!இது அள்ளித் தெளிக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது...!உணரத்தான் முடியும்...!உணர்ந்து பாருங்கள்...!காதல் அற்புதமானது...!அதில் மூச்சுத் திணறத் திணற மூழ்கிப் போவதும் சுகமே...!!


அகம் தொட்டு விட்டான்...!!!

ஹாய் பிரெண்ட்ஸ்...

கதை முடிந்தது...!எப்படி ப்பா இருந்துச்சு....?என்ஜாய் பண்ணுனீங்களா...?சைலண்ட் ரீடர்ஸ்...கண்டிப்பா உங்க கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள் பிரெண்ட்ஸ்...!

இந்த பயணத்துல பல அழகான நட்பூக்கள் எனக்கு அறிமுகமாச்சு...!அந்த நட்பூக்கள் என்றென்றும் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்று விரும்புகின்றேன்...!நீங்க தந்த ஆர்ப்பாட்டமான வரவேற்புகளும்...கருத்துகளும் தான் என்னை எழுதவே தூண்டியது...!ரொம்ப ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்....!

இந்த பயணம் முடிந்தது...!பயணம் மட்டும்தான் முடிந்திருக்கு...பாதை முடியல...!யெஸ் பிரெண்ட்ஸ்...அது இன்னும் நீண்டு கிடக்கு....!நான் உங்களுக்கு ஒரு குட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கறேன்னு சொல்லியிருந்தேன்ல...?அல்மோஸ்ட்..நீங்க ஊகிச்சிட்டீங்க....!யெஸ்..."எவனோ என் அகம் தொட்டு விட்டான்- 2 " வர போகுது....!பட்...வேற தலைப்புல...அவங்களுடைய வாரிசுகள் வருவாங்க...!ஆதித்யன் & கெளதம் வாரிசுகள் அதுல நாயகர்களா வருவாங்க....!

ஆனால்...இப்போதைக்கு அல்ல...!இன்னும் கொஞ்ச நாள் ஆகும்...!அடுத்து வேற ஒரு கதையோடு வர்றேன்...!அதை முடிச்சிட்டுத்தான் "எவனோ என் அகம் தொட்டு விட்டான் - 2..."

"எவனோ என் அகம் தொட்டு விட்டான் 2..." தொடரலாமா...வேண்டாமான்னு நீங்கதான் சொல்லணும்...!அதைப் பற்றி உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ்...!

ஒகே ப்பா...!பை....!நான் எவ்வளவு கதைகள் வேணும்ன்னாலும் எழுதலாம்...ஆனால்...இந்தக் கதையை என்னால மறக்க முடியாது பிரெண்ட்ஸ்...!அந்தளவு அட்டாச் ஆகியிருக்கிறேன்...!

பை பிரெண்ட்ஸ்...!விரைவில் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன்...!அந்த கதைக்கும் உங்கள் ஆதரவு நிச்சயமாய் வேண்டும் பிரெண்ட்ஸ்...!பை...!

உங்கள் அழகான கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்...!
https://www.sahaptham.com/community...am-thottuvittaan-comments/paged/81/#post-5969

அகம் தொட வருவான்...!!!
 
Top Bottom