Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு
- 30

மெல்லிய வெளிச்சம் தரணியெங்கும் பரவ அப்பொழுது தான் புலர்ந்து கொண்டிருந்தது காலைப் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் என்ற புல்வெளி மலை மகளைப் போர்த்தியிருக்க வெண்பஞ்சு போல் பனி்மூட்டங்கள் அந்த மலை மகளை தொட்டுத் தழுவதும் சற்று விலகுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. தன் செங்கதிர்களைப் பரப்பி கீழ் வானை சிவக்க வைத்தவனாய் சூரிய நாயகன் மெல்ல மேலெழத் தொடங்க பனிமூட்டங்களோ மலை மகளை விட்டு விலக முடியாமல் அதனுடன் ஒட்டிக் கொள்ள துடித்திருக்க அப்போது அந்த மேகமூட்டங்களுக்கு இடையே வானிலிருந்து இறங்கிய தேவதையாய் வெண்ணிற ஆடை உடுத்தி வெண்மலர்களை மகுடமாய் தலைக்குச் சூடியவளின் கார்கூந்தல் காற்றிலாட மெல்லிய வெண்ணிற கையுறை அணிந்த நுனி விரலால் நதிபோல் நீண்ட தன் ஆடையை தூக்கிப் பிடித்தவாறு அணங்கவளோ அவனை நோக்கி மெல்ல அடிவைத்து வர அவள் அழகில் மயங்கி தங்களின் விளையாட்டை மறந்து அவளையே ரசித்தவாறு அந்த அழகுப் பதுமைக்காக வழி விட்டு விலகி நின்றன அந்த வெண்பஞ்சு மேகங்கள். கருநிற சூட்டில் ஆணழகனாய் கைகள் சிவப்பு ரோஜாக்களை ஏந்தியிருக்க வாய் கொள்ளாச் சிரிப்போடு முகம் முழுக்க சந்தோசம் பரவியிருக்க நாயகன் விழிகளோ அந்த அணங்கின் மேலிருக்க அவனிடம் நெருங்கிய அந்த அழகியின் வதனமோ மகிழ்ச்சியை முழுதாய் தொலைத்து வாடிய மலராயிருந்தது. பெண்ணவளின் களையிழந்த முகத்தினைக் கண்ட அந்த நொடி காளையின் மனமும் மகிழ்ச்சியைத் தொலைத்தது. அவளை நெருங்கி தன் மார்போடு அணைத்து அவள் பிறைநுதலில் தன் இதழ்களை பதித்தவனின் ஸ்பரிஷத்தை தனக்குள் நிறைத்துக் கொண்டாள் பாவை. தன் கைகள் ஏந்தியிருந்த அந்த அழகிய ரோஜாக்களை கொண்ட மலர்கொத்தை அவள் கைகளில் கொடுக்க அதனை வாங்காது பெண்ணவளோ சட்டென்று அவனை விட்டு விலக நாயகனும் புரியாமல் கேள்வியாய் நோக்கினான். அவன் விழிக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவள் லேசாக நீர் திரையிட்ட கண்களுடன் அவ்விடத்திலிருந்து திரும்பி நடக்க அவளை அழைத்துக் கொண்டே அவனும் பெண்ணவளை பின் தொடர்ந்தான் சென்றவளோ அங்கே மணக் கோலத்திலிருந்த பாவையின் வளைகரத்தைப் பற்றியவளாய் தன்னைத் தொடர்ந்தவன் முன் வந்தாள். நாயகனோ தன் தேவதையையும் அவள் கைப்பற்றி வந்த அந்த வளைகரத்தவளையும் கண்டு தடுமாறி நிற்க சட்டென்று நாயகனின் கைகளிலிலிருந்த மலர்கொத்தை பிடுங்கி வளைகரத்தவளுக்குப் பரிசாய் கொடுத்தவள் காளையின் வலிய கரத்தை தன் மென்கரங்களில் ஏந்தி வளைகரத்தாளின் கைகளை தன் மறுகரத்தால் எடுத்தவள் உதட்டில் புன்னகையிருக்க கண்களில் நீர் நிறைந்திருக்க உள்ளம் முழுக்க ரணமாய் வலிக்க இருகரங்களையும் இணைத்தவள் மனதார வாழ்த்திய மறுநொடி அவர்களை விட்டு விலகிச் செல்ல தாங்க முடியாத காளையவனோ தன் கரங்களோடு இணைந்திருந்த வளைகரத்தவளின் கரங்களை உதறிவிட்டு

"என்னை விட்டுப் போகாதே உன்கூட என்னையும் கூட்டிட்டுப் போயிடு நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்கவும் முடியாது போகாதே வேண்டாம்மா என்னை விட்டுப் போகாதே" அவள் பின்னோடே கெஞ்சிக் கொண்டு அவனும் நடக்க ஆனால் பாவையவளோ நடையை நிறுத்தாது வேகமாக நடந்து கொண்டே

"போயிடுங்க உங்க வாழ்க்கை நான் இல்லை உங்களுக்காக உங்களையே நினச்சிட்டிருக்க உங்க வாழ்க்கை அதோ அங்க இருக்கு" கைகளை நீட்டி வளைகரத்தவளைக் காட்டியவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறிது நேரத்தில் காற்றோடு காற்றாக கரைந்து அவளுக்காய் வழிவிட்ட அந்த வெண்பஞ்சு மேகங்களுக்குள்ளே மறைந்தவள் அவனை விட்டு தொலைதூரமாய் சென்றுவிட்டாள். தாங்க முடியாதவன் தன்னை மறந்து

"என்னை விட்டுப் போகாதே திரும்பி வந்துவிடு" எனக் கத்திக் கொண்டே மண்ணில் மண்டியிட்டவன் தன் முகத்தில் அடித்துக் கொண்டு கதறித்துடித்தான்.

"ஆ... ஐயோ டேய் மச்சான் என்னடா ஆச்சு ஏன்டா இப்படிக் கத்திட்டிருக்கே." பக்கத்தில் படுத்திருந்த சங்கர் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.

"நீ இல்லாம நானில்ல என்னை விட்டுப் போகாதே......." ஆதித்யன் தூக்கத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்க அவனை தட்டி எழுப்பினான் அவன் நண்பன்.

"தாரா வந்துடும்மா தாரா....." கத்திக் கொண்டே எழுந்தமர

"தாராவா அவ எங்கடா இங்க வந்தா நாம இப்போ கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கம் மச்சான் அவ வீட்ட இருக்கிறாடா அதுவும் நல்ல தூக்கத்துல இருப்பா ஆனால் நீதான் என் தூக்கத்தை கலச்சுட்ட போடா" சங்கரின் பதிலில் எதுவும் புரியாதவனாய் சுற்றுமுற்றும் தன் தாராவைத் தேட அவன் கண்களில் அவன் மனையாள் சிக்கவில்லை. 'அப்போ உண்மையிலே என் தாரா என்னை விட்டுப் போயிட்டாளா ஐயோ' அவனின் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள் பிரதிபலிக்க அதனைப் பார்த்திருந்த சங்கரோ அவன் தோளை தட்டியவனாய்

"டேய் மச்சி ரிலெக்ஸ்டா ஏதாவது கனவு கண்டாயா?"

"ஆ.... ஆ..." ஆதித்யன் அப்போதும் தடுமாற

"டேய் ஆதி ஏதாவது கனவு கண்டாயா?'' சங்கரும் சற்று உரக்கக் கேட்க தன்னிலை அடைந்தவன்

"ஓ... ஓம் மச்சான் ஒரு கெட்ட கனவு" யோசனையுடனே கூற

"என்னடா என்னாச்சு?"

"என் தாரா என்னை விட்டுப் போற மாதிரி அதுவும் இன்னொருத்தியோட கையில என்கைய சேர்த்து வச்சுட்டு இதுதான் உன் வாழ்க்கை நான் இல்லை என்று சொல்லிட்டு காற்றோட காற்றாய் கரைஞ்சு அந்த மேகத்தோட மறஞ்சு போயிட்டாடா. கெட்ட கனவுடா அதான் மனசுக்கு ஒருமாதிரி இருக்கு."

"டேய் மச்சி கெட்ட கனவேதான்டா"

"ஏன்டா எனக்கு இப்படி ஒரு கனவு வந்துச்சு?

"இதுக்கு என்ன பதில் சொல்லுறதென்றே தெரியல்லடா ஆனால் டைம் பார்த்தியா ஐஞ்சு மணி. விடியக் காலை கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்களேடா"

"டேய் நானே டென்ஸன்ல இருக்கேன் இதுல நீ வேற பொம்பள மாதிரி இந்த மூடத்தனமான கதைகள நம்பிக்கிட்டு இங்கப்பாருடா மச்சான் இது வெறும் கனவு அவ்வளவுதான் அதெல்லாம் பலிக்காது"

"நான் சொன்ன மாதிரி அவ உன்னை விட்டுப் போக முடிவெடுத்துட்டாளோ என்னவோ."

"என்னடா சங்கர் இப்படி சொல்லுற அப்போ என் தாரா என்னை விட்டுப் போயிடுவாள் என்று சொல்லுறாயா? அதனாலதான் எனக்கு இந்த கனவு வந்துச்சுன்னு சொல்லுறாயா?"

"அப்படித்தான் என்று உறுதியா சொல்லல்ல ஆனால் அப்படியும் இருக்கலாம்தானே மச்சான். அதுக்கான வாய்ப்பு அதிகம்டா ஏன்னா விடியக்காலயில வேற கண்டிருக்க அதுமட்டுமில்லடா உன்னோட ஏற்கனவே சொன்னேனில்ல அவ அந்த முடிவை எப்பவோ எடுத்துட்டான்னு அதனாலதான் அப்படிச் சொல்றேன்"

"அவ அந்த முடிவை ஏற்கனவே எடுத்திருந்தாதான் மச்சி ஆனால் என்னோட எக்ஸிடென்ட் அவளோட எண்ணத்தை மாத்திடுச்சு. என்னை விட்டுப் போகனும் என்று நினச்சிருந்தால் அவ்வளவு அக்கறையா பார்த்துக்க வேண்டிய அவசியமும் இல்லையேடா அதுமட்டுமில்ல எத்தனை நேர்ச்சை எத்தனை விரதமென்று கோயில் கோயிலா போகவும் தேவல்லையேடா. என்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டா என்று உனக்கும் தெரியும்தானே அதுக்குப் பிறகு என்னை விட்டுப் போக அவ நினைக்கவே இல்லையே. இது சும்மா ஏதோ கெட்ட கனவு அவ்வளவுதான் அப்படி என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா"

"ஆதி உனக்கே நல்லாத் தெரியும் நயனி உன்னை விரும்புறா நீ் அவளை அவ்வளவு வெறுத்தப்போவும் சிரிச்சுக்கிட்டே உனக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செஞ்சா அதுவும் நீ நல்லாயிருக்கும் போதே, அப்படிப்பட்டவ உனக்கு அவ்வளவு பெரிய எக்ஸிடென்ட் ஆகி நீ கஷ்டப்படுறப்போ உன்னைப் பார்த்துட்டு அவ சும்மா இருந்திருப்பாளா? இல்லை உன்னை விட்டுப் போகனுமென்று நினச்சிருப்பாளா? நீயே சொல்லு அவ உன்னை உண்மையா காதலிக்குறா. நீ எப்படியோ போ என்று அவளால எப்படி விட்டுட்டுப் போக முடியும் அதனாலதான் நீ் பூரணமா குணமானதும் போக நினச்சிருப்பா. அதுக்காகத்தான் அதையெல்லாம் அவ செஞ்சிருக்கா. இப்படி யோசிச்சுப்பாரு உனக்கே உண்மை விளங்கும்."

"இல்லடா அவ அதுக்காக அப்படி செஞ்சிருக்க மாட்டா அவளுக்கு என்னை விட்டுப் போற ஐடியா எல்லாம் இல்லை நான் அவளை கடுமையா ஹேர்ட் பண்ணிருக்கேனில்ல அதனால சும்மா என்னை பயம் காட்டுறதுக்கு அவ விளையாடிருப்பா."

"விளையாடிருப்பாளா? இந்த விசயத்துல என்ன மச்சான் விளையாட்டு நீ என்ன லூசா? நீதான் எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கிறாய் விளையாட்டு வினையானாத்தான் உனக்குத் தெரியும். மொறைக்காத நான் உண்மையத்தான் சொல்லுறன். சரி நீ சொல்லுற மாதிரியே இருக்கட்டும் இப்போ திடீரென்று உனக்கு ஏன் இந்தக் கனவு, மச்சான் நமக்கு வார கனவுக்கெல்லாம் கட்டாயம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் அதுவும் விடியக் காலையில கண்டிருக்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு? மூடத்தனம் அது இதென்று சொல்லுற ஆனாலும் எனக்கு மனசுல ஏதோ தப்பா படுகுதுடா ஒன்றுமில்லாட்டி சந்தோசம்தான் ஆனால் இருந்துட்டா ஒருவேளை நீ கண்ட மாதிரியே நடந்துட்டா என்ன பண்ணுவ?"

"என்னடா பயமுறுத்துற அப்போ இந்த கனவு பலிச்சிடுமா அவ என்னை விட்டுப் போயிடுவாளா? சேச்சே நிச்சயமா என் தாரா என்னை விட்டுப் போக மாட்டாடா. அவளால என்னை விட்டுப் போக முடியாது."

"கடும் நம்பிக்கைதான் உன் தாரா..... போகமாட்டா ஓகே, அதுசரி அவ உன் தாராவாகுறதுக்கு உன் விருப்பத்தை முதல்ல நயனிக்கிட்ட சொல்லிட்டாயாடா?"

"அது வந்து......"

"என்னடா இழுத்துக்கிட்டு இருக்குற விசயத்துக்கு வாடா"

"இல்ல மச்சான், அன்றைக்கு சொல்லப் போனப்போதான் அவ மழையில நனஞ்சு காய்ச்சல் வருத்தமென்று அதுல சொல்ல முடியாம போச்சு அதுக்குப் பிறகு அவ என்னை விட்டு லேசா விலக தொடங்கின மாதிரி இருந்துச்சுடா. எப்படி அவளுக்கு என்னை, என் விருப்பத்தை விளங்கப்படுத்துற என்று குழம்பியே சொல்லாம விட்டுட்டேன். அதுக்குப் பிறகு எனக்கு எக்ஸிடென்ட் ஆனப்போ என்னை கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிட்டா அப்பப்போ என் லவ்வ அவகிட்ட சொல்லத் தோனும் ஆனால் எதுவோ ஒன்று என்னைத் தடுத்துடும் அந்த விபத்துலயிருந்து வெளிய வந்த பிறகு சொன்னா கடமைக்கு சொல்லுறதா நினைச்சுக்குவாளோ என்றுதான்டா இவ்வளவு நாளும் சொல்லாம இருக்கேன்."

"இங்கப்பார்டா சில விசயத்தை அப்பவே சொல்லிடனும் ஆறப் போட்டு நேரம் பார்த்து சொல்ல நினச்சா காலம் கடந்து போயிடும் ஏன் சொல்ல முடியாம கூட போயிடும்டா. இப்ப பாரு இந்தமாதிரி ஒரு கனவும் கண்டிருக்க அதான் கொஞ்சம் பயமாயிருக்குடா இனியும் நேரத்தை கடத்தாம இன்றைக்கே சொல்லிடு அதுவும் வீட்டுக்குப் போன உடனே என்ன ஓகேவா?"

"வீட்டுக்குப் போனதுமா?"

"ஏன் நல்ல நேரம் பார்க்கனுமா? வீட்டுக்குப் போனதும் நேரா உங்க ரூமுக்குப் போற நயனிக்கிட்ட உன்னோட மொத்த காதலையும் கொட்டுற என்ன?"

"இல்லடா அவ என்ன மூட்ல இருக்காளோ?"

"இப்படியே பார்த்துட்டிரு பிறகு கிழவனாயிடுவ அதுக்குப் பிறகு என்னத்தைச் சொல்லிகிட்டு. டேய் ஆதி நீ இன்றைக்கு சொல்லாமவிட்ட நீ கண்டது நடக்கவும் வாய்ப்பிருக்கு. ஏன்னா நயனிப்புள்ள ஏற்கனவே இந்த முடிவ எடுத்தவதானே. அந்த கனவுல வந்த கல்யாணப் பொண்ணு நித்திலாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு மச்சான். உண்மையச் சொல்லு அந்த இன்னொருத்தி நித்திதானே ம்..... உனக்கென்ன..."

"திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று சொல்லப்போறயா?"

"எவ்வளவு சீரியஸா கதச்சிட்டிருக்கும் போது ஜோக்கடிச்சிட்டிருக்க, டேய் மச்சி அத அப்படி சொல்லக்கூடாது நயனதாரா இல்லாட்டி நித்திலா இதுதான் கரெக்டா இருக்கும் ஹ்ம்..... நீ குடுத்து வச்சவன்டா"

"என்னடா லூசு மாதிரி கதைச்சிட்டிருக்க என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா ஆனால் சும்மா இருக்குறவள நீயே போக வச்சிடுவ போல இருக்கே. இங்கப்பாரு இந்த அவ இல்லாட்டி இவ என்ற கேஷெல்லாம் கிடையாது நானுள்ளவரை நயனதாரா மட்டுமே.

"நானுள்ளவரை நயனதாரா யப்பா படத்தோட டைட்டில விட உன்னோட டைட்டில் சூப்பரா இருக்குடா சும்மா பின்னுற மச்சான் பலே பலே" கைகளை தட்டிய சங்கரை முறைத்தவன்,

"நான் ஜோக்கடிக்குறதா சொல்லி இப்போ நீதான் ஜோக்கடிச்சிட்டிருக்க பீ சீரியஸ்டா மச்சான் நீயெல்லாம் என்ன ப்ரண்ட்டு போடா"

"ஓகே ஓகே நோ ஜோக்ஸ் பீ சீரியஸ் இங்கப்பாரு இப்போ நான் ரொம்ப சீரியஸாவே சொல்லுறேன் அன்றைக்கு உன்கிட்ட சொன்னதுதான். நீ விளையாட்டுத் தனமா இருக்குறடா தலைக்கு மேல வெள்ளம் போனதுக்குப் பிறகு சாணென்ன முழமென்ன மூழ்க வேண்டியதுதான். இதுதான் நான் உன் நண்பனா நலன்விரும்பியா உனக்கு வழங்கக்கூடிய ஒரே ஆலோசனை. அதனால நீ வீட்டுக்குப் போனதும் உன் தாராகிட்ட உன்னோட லவ்வ சொல்லுற அவ தரப்பொற இன்பத்தையும் சேர்த்து அள்ளுற ஓகே"

"ஓகே ஓகே ஆனால் எனக்கு இந்த இன்...பத்துல மட்டும்தான் ஒரு டவுட் நீ என்னத்தையோ மறைக்குற அது மட்டும் கன்போர்ம். என் டவுட் கிளியராகி உண்மை மட்டும் வெளிய வரட்டும் அந்த இன்பத்தை நானும் பார்த்துடுறேன் பிறகு உனக்கு துன்பம் ஸ்டார் மச்சி" ஆதித்யன் சீரியசாகச் சொல்ல

"அந்த இன்பத்துக்குப் பிறகு என்னையெல்லாம் நினைக்க மாட்ட ஏன்னா உன்னையே நீ மறந்துடுவ" ஆதித்யன் கண்ட கனவு அப்போதே நடந்தேறிக் கொண்டிருப்பதை அறியாத நண்பர்கள் இருவரும் சற்று நேரம் கேலியும் கிண்டலுமாக கதைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களுடன் தங்கியிருந்த டீலர்ஸின் தேவைகளை கவனிக்கச் சென்றனர்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 31

கொழும்பைத் தாண்டிக் கொண்டிருந்தது தனலட்சுமியின் டொயோட்டா எக்ஸியோ. உறுதியாக ஒரு முடிவெடுத்து விட்ட போதும் தனக்கும் தன்னவனுக்குமான உறவு இன்றுடன் முற்றுப் பெறுவதை நயனதாராவால் அறவே தாங்கமுடியவில்லை. அதை நினைக்க நினைக்க கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த தனலட்சுமியை எண்ணி தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள். ஆனாலும் இரண்டு சொட்டு விழி நீர் கன்னத்தை தாண்டி விழ அவசரமாக துடைத்தவள் தூங்குவது போல் கண்களை இறுக்க மூடி அவருக்கு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ள இருள் பிரியாத வானின் கருமையால் அவளுக்கு அது இலகுவாகவும் இருந்தது. ஆனால் அவள் மறைக்க நினைத்ததை அவளின் செயல்களை வைத்தே அவர் அறிந்து கொண்டார் என்பதை பாவம் நயனதாரா அறியவில்லை. அவளின் வயதையும் கடந்து வந்தவரல்லவா அந்த வயதான பெண்மணி. தனலட்சுமியும் இரண்டு மூன்று நாட்களாகவே அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். எதையோ இழந்தவள் போல் நடமாடிக் கொண்டிருந்த நயனியும் அவள் வாடிய வதனமும் மற்றையவர்கள் அவளை பார்க்கும் போது வலுக்கட்டாயமாக உதட்டில் உறைய வைத்த புன்னகையும் கணவனிடம் லேசான விலகலும் தனலட்சுமியின் பார்வைக்குத் தப்பவில்லை. அது கணவன் மனைவியின் ஊடல் என எதுவும் கேட்காது அமைதியாக இருந்தார். ஆனால் இன்று அதுவும் தன் பேரன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து கோவில் காரியம் என மற்றையவர்களை நம்பவைத்து இதோ தன்னுடன் புறப்பட்டு வருவதைப் பார்த்ததும் இது வெறும் கணவன் மனைவி ஊடல் என தனலட்சுமியால் சாதாரணமாக நினைக்க முடியவில்லை. முந்திய இரவு நயனி ஊருக்குத் தன்னுடன் வரத் தயாரான போதே அதைப் புரிந்து கொண்டார் ஆனாலும் தன் மகள் வீட்டில் வைத்து கேட்க முடியாதவர் ஏதோ ஒன்று பெரியளவில் நடந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார் அப்போதும் அவர் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை சில உறவுகளுக்கு பிரிவுதான் அவர்களின் ஆழ்மனதினை எடுத்துரைக்கும் என்பதனால் அவரும் அமைதியாகவே இருந்தார். அவளுக்கும் ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக எதுவும் கேளாது அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு இதோ புறப்பட்டும் விட்டார் இப்போது தன் முன்னே அழக்கூடாது என கண்ணீரை அடக்கப் பாடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தான் எண்ணியது உண்மைதான் என்பது அவருக்கு உறுதியானது. இதற்கு மேலும் கேட்காமல் இருக்க முடியாது என்று எண்ணியவராய்

"நயனாம்மா நயனா" என அவள் தோள் தொட சட்டென்று கண்களை திறந்த நயனி

"பாட்டிம்மா என்ன என்னாச்சு?"

"ஒன்னுமில்ல நான் உன்கிட்ட ஒன்று கேட்பேன் மறைக்காம சொல்லுவாயா?" ஒரு திடுக்கிடலுடன் கேள்வியாய் அவரை நோக்க

"உண்மையாவே நீ தீ மிதிக்கத்தான் வேண்டிக்கிட்டாயாம்மா? இல்லை....." அவர் முடிக்காமல் நிறுத்த

"......."

"என்னம்மா எதுவும் கதைக்காம இருக்க?" சில கணங்கள் மௌனம் சாதித்தவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு

"என்ன பாட்டிம்மா இப்படி கேட்டுட்டீங்க சாமி விசயத்துல என்ன உண்மை, பொய். சாமி என்றாலே உண்மை மட்டும்தானே. நான் தீ மிதிக்க வேண்டிக்கிட்டது உண்மைதான். ஆனால் ஏன் இந்தக் கேள்வி?" அவளை அர்த்தமாய் பார்த்தவர்

"அதுக்கு காரணமிருக்கு நீ சொல்லுறது உண்மையாக் கூட இருக்கலாம் ஆனால் எனக்கு என்னம்மோ நீ அந்த வீட்டை விட்டு வாரதுக்காக அதை ஒரு காரணமா சொன்னாயோ என்று தோனுது" சரியாக ஊகித்த தனலட்சுமியை அதிர்ச்சியாய் சில கணங்கள் நோக்கியிருந்த நயனி தன்னை சரிப்படுத்திக் கொண்டு

"ஏன்... ஏன் பாட்டி உங்களுக்கு அப்படித் தோனுது?"

"அம்மாடி உனக்கும் என் பேரனுக்கும் இடையில என்னம்மா பிரச்சனை? எதையும் மறைக்காது சொல்லுமா. நானும் இரண்டு மூனு நாளா பார்க்கிறேன் உன் முகமே சரியில்ல மத்தவங்களுக்காக சிரிக்குற, உன் புருஷன கண்டா விலகிப் போற அதுலேயும் உன் உடம்புதான் அவன விட்டு விலகுதே தவிர உன் மனசு அவனைத்தான் சுத்துது. இது எப்படி எனக்குப் புரியுதுன்னு பார்க்குறாயா? ஹ்ம்.. விலகிப் போனாலும் அவனைப் பார்க்குற, அவனோட குரலைக் கேக்குற தூரத்திலதான் நீ நின்றாய் அதுமட்டுமில்ல உன் பார்வை அவனை மட்டுமே சுத்தி வந்துச்சு இதை வச்சுத்தான் சொல்லுறேன். எதையாவது தவறா விளங்கிட்டு அவனை விட்டுப் பிரிய நினைக்குறாயா? என்னதான் பிரச்சனை சொல்லும்மா உண்மையை இந்தப் பாட்டிக்கிட்ட சொல்லும்மா."

"ஐயோ பாட்டிம்மா அப்படி எதுவுமில்லை சத்தியமா நான் அவருக்காகத்தான் வேண்டிக்கிட்டேன். அதான் குணமான உடனே நேர்த்திக்கடனை நிறைவேற்ற நினச்சேன் ஆனால் அவர்கிட்ட ஊருக்கு கூட்டிட்டுப் போங்கோ என்று எப்படிச் சொல்லுறதென்று தெரியாம யோசிச்சுட்டே இருந்தேன் அதைப் பார்த்துத்தான் நீங்க தப்பா நினச்சுட்டீங்க போல. வேற ஒன்றுமில்ல உங்களுக்கே தெரியும் பாட்டி இந்த எக்ஸிடென்ட்டால அவருக்கு இப்போ ஒபீஸ்ல வேலை அதிகமென்று அவரால நிச்சயமா என்னைக் கூட்டிட்டுப் போக முடியாது அதுக்காகத்தான் அதை நிறைவேற்ற இப்போ உங்க கூட வாறன். அதான் அத்தை சொன்னாங்களே என்னை கூட்டிட்டு வாரதுக்கு அவரை அனுப்புறதா அப்படி எங்களுக்குள்ள ஏதாவது இருந்தா அத்தை சொன்னதும் நான் ஓகே சொல்லிருப்பேனா சொல்லுங்கோ அதனால நீங்க நினைக்குற மாதிரி எங்களுக்குள்ள பிரச்சனை ஒன்றுமில்லை பாட்டிம்மா" ஒருவாறு கோர்வையாய் அவர் நம்பும் விதமாக பாதி உண்மையும் மீதி பொய்யுமாக தனலட்சுமியின் கண்களைப் பார்க்காது கூறியவளை கூர்ந்து பார்த்தவர்

"அப்போ ஏனம்மா உன்னோட கண்ணில இந்த கண்ணீர் இதுக்கு என்னம்மா அர்த்தம்?"

"........" அவள் மௌனியாக அவரே தொடர்ந்தார்

"ஓ... முதன்முதலா இப்போதான் ஊருக்கு வாரதால வீட்டுக்காரனில்லாம தனியா வாரதை நினச்சு கவலைப் படுகிறாயாம்மா?" அவரின் பதில் தனக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து அவசரமாக ஆம் என தலையை ஆட்டினாள்.

"ஓம் பாட்டி அதுதான் எங்களுக்குள்ள வேற எந்த பிரச்சனையுமில்லை. கோயிலுக்குப் போகத்தான் வந்தேன்" ஒருவாறு அவரை சமாதானப்படுத்தியதாய் அவள் திருப்தியாக

"அப்படியாம்மா எதுவுமில்ல என்றால் சந்தோசம்தான்" அவர் குரலில் வெளிப்பட்ட ஏதோ ஒன்று அவர் தன் பதிலை நம்பவில்லை என்று நயனிக்கு உணர்த்தியது. ஆனால் அவள் மேலும் வாதாடி நம்பவைக்கத் தயாரில்லை. எப்படியும் இன்னும் சில தினங்களில் தெரியப் போவதுதானே தெரியும் போது தெரியட்டும் தன் வாயால் தெரிய வேண்டாம் என்பதுதான் அவள் எண்ணம் அதனாலே அவள் அமைதியானாள்.
பேரப்பிள்ளைகளுக்கிடையில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து அதை நயனியிடம் கேட்டும் அவள் மறுத்து ஏதேதோ காரணம் கூற அதை நம்புவதாக காட்டிக் கொண்ட போதும் நயனியின் வாடிய முகத்தையும் நீர் நிறைந்த கண்களையும் கண்டு தனலட்சுமியால் நம்ப முடியவில்லை. நிச்சயமாக நயனதாரா ஏதோ தவறான முடிவை எடுத்திருக்கிறாள் என்பது மட்டும் அந்த வயதான பெண்மணிக்குப் புரிந்தது. பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியை அறிந்தால் அதற்கான தீர்வைக் காணலாம் ஆனால் பிரச்சனை என்னவென்றே தெரியாத போது என்னதான் செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க அவரின் சிந்தனையை பேத்தி கலைத்துவிட்டாள்.

"பாட்டிம்மா நான் அம்மா வீட்டுக்கே போகலாம் என்று நினைக்குறேன். அதனால என்னை அங்கேயே இறக்கிவிடுங்கோ" அவளின் வார்த்தையில் அவரின் முகம் தானாக மலர்ந்தது. என்ன செய்வதெனத் தடுமாறிக் கொண்டிருந்தவருக்கு நயனியே சந்தர்ப்பத்தைக் கொடுக்க அந்த வாய்ப்பை தவற விடாது அவரால் முடிந்த ஒன்றை செய்யத் திட்டமிட்டார். அதுதான் நயனியை தன்னுடனே தங்க வைப்பது அத்தோடு எப்படியாவது ஆதியை வரவழைத்து இருவரின் பிரச்சனையும் அறிந்து சேர்த்து வைப்பதுமே தனலட்சுமியின் முழுத் திட்டமாயிருந்தது.

"ஏம்மா நீ நம்ம வீட்டுலேயே தங்கலாமே. உன்னோட வேண்டுதலை முடிச்சுட்டு ஆறுதலா அங்க போகலாமே?"

"இல்லை பாட்டிம்மா நான் அம்மா வீட்டுக்கே போறேனே ப்ளீஸ்."

"நான் ஒன்று சொன்னாக் கேட்பாயாம்மா?''

"சொல்லுங்க பாட்டிம்மா"

"நயனா நீ நம்ம வீட்டுல தங்கிக்கோடாம்மா. ஆதி வந்த பிறகு இரண்டு பேரும் சேர்ந்து போய் அங்க தங்கிக்கோங்க."

"ஏன் பாட்டி இப்படி சொல்லுறீங்க? இல்லை நான் அம்மா வீட்டுக்கே போறேன்."

"சின்னப்புள்ள மாதிரி இது என்ன பிடிவாதம் ம்.... இங்கப்பாரு நயனா கல்யாணத்துக்குப் பிறகு முதல் தடவை ஊருக்கு வாராய் ஆதி இல்லாம தனியா வீட்டுக்கு போறதை நினைச்சு நீ கண்கலங்கினாயேம்மா அதனாலதான் சொல்லுறன் அதுமட்டுமில்ல உன்னோட அப்பாம்மாக்கும் உங்களை சேர்த்துப் பார்த்தாத் தானே சந்தோசமா இருக்கும் யோசிச்சுப்பாரு. உன்னோட நேர்த்திக்கடன் எல்லாத்தையும் முடிச்சு ஆதியும் வந்த பிறகு சந்தோசமா இரண்டு பேரும் உங்க வீட்டுக்குப் போய் எத்தனை நாளென்றாலும் விரும்புறளவு தங்கிக்கோங்க யாரு வேணாமென்றா." பெரியவரும் அவளால் மறுக்க முடியாதவாறு சரியாக கடிவாளமிட்டுவிட மனசே இல்லாமல் ஒருவாறு ஒத்துக் கொண்டாள். தன் கடிதத்தை பார்த்ததும் அவன் ஆசைப்பட்டது போல் கஷ்டப்பட்டு மற்றையவர்களுக்காக தன்னுடன் வாழ வேண்டிய இல்லை இல்லை நடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்வான் அதனால் நிச்சயமாக தன்னை தேடி வரமாட்டான் என்பதை மனதின் ஒரு ஓரத்தில் வலித்தாலும் உறுதியாக நினைத்தவள் இன்னும் இரு தினங்களில் இந்தக் குடும்பத்துடனான பந்தம் முழுமையாய் அறுந்துவிடுமே என்ற எண்ணமும் சேர்த்தே அவளை தனலட்சுமி வீட்டில் தங்க ஒத்துக் கொள்ள வைத்தது. ஆனால் அவளும் ஒரு நிபந்தனையுடனே தங்குவதற்கு சம்மதித்தாள்.

"ஆனால் பாட்டி ஒரு விசயம் நாளையன்று இரவைக்கு தீ மிதிக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கு அதுக்குள்ள அவர் வரமாட்டாரே. கோயில்ல நேர்த்திக் கடனை முடிச்சு தீ மிதிச்சதும் நான் அம்மா வீட்டுக்கே போயிடுவேன் என்னைத் தடுக்கக் கூடாது எனக்கு அதுதான் வசதி விளங்குவீங்க என்று நம்புறேன் ப்ளீஸ் பாட்டிம்மா மறுத்துடாதீங்க கோயிலுக்குப் போறவரை நான் உங்ககூடவே இருக்கேன் பாட்டி பூஜையெல்லாம் முடிஞ்சதும் நான் எங்க வீட்டுக்குப் போயிடுறேனே." அவளும் மன்றாட தனலட்சுமியின் தலை 'சரி' என தானாக ஆடியது. ஆனாலும் அதற்குள் இந்த பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தனாலேயே நயனியின் வார்த்தைக்கு அவர் மாறு கூறவில்லை.

"அப்போ ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாயாம்மா?"

"அத்தைக்கிட்ட சொல்லிட்டு அவங்க சம்மதிச்சதும் நேற்றுக் காலையிலேயே அம்மாகிட்ட விசயத்தை சொல்லி ஏற்பாடுகளை பார்த்துக்க சொல்லிட்டேன். நேற்று இரவு அம்மா கோள் பண்ணியிருந்தாங்க நாளையன்று இரவைக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க. அவங்களே கோயில்ல எல்லா விசயத்துக்கும் ஏற்பாடு பண்ணிடுவாங்க. ஊருக்குப் போனதும் ஒரு தடவை நான் போய் பூசாரி ஐயாவைப் பார்த்துட்டு வந்தா நல்லது."

"ஆஹா... அப்படியாம்மா நல்லதாப் போயிற்று. ஆனாலும் நீ ஏம்மா இவ்வளவு பெரிய நேர்த்திக்கடன வச்ச அதுதான் எனக்கு கவலையா இருக்கு"

"அது வந்து பாட்டி எக்ஸிடனப்போ அவரோட நிலமை மோசமா இருந்தது அதை என்னால தாங்கிக்கவே முடியல்ல அதனால அவர் சீக்கிரம் குணமாகனும் என்றதுக்காக இப்படி ஒரு வேண்டுதல் அந்த கடவுள் அவரை நமக்கு நல்லபடியா திருப்பி தந்திருக்காரு அப்போ நாம நிச்சயமா அதுக்கு நன்றி செலுத்தத்தான் வேண்டுமில்ல"

"அது சரிதான் நயனாம்மா. உன்னை மாதிரி ஒருத்தி என் பேரனுக்கு கிடச்சதுக்காகவும் சேர்த்து அந்தக் கடவுளுக்கு நாங்க நன்றி சொல்லனும்மா. அம்மாடி நீ எந்தவொரு கஷ்டமும் படாம நல்லபடியா இந்த நேர்ச்சைய முடிக்கனும் அதுக்கு நானும் கடவுள்கிட்ட வேண்டிக்குறேன்."

பொதுவாக சிறிது நேரம் பேசிய தனலட்சுமி அதன் பிறகு நயனியை தொந்தரவு செய்யவில்லை. தன் அன்புக்குக்குரிய பேரப்பிள்ளைகளுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த மனக்கசப்பை யாருக்கும் தெரியாது தானே சுமூகமாக தீர்த்து விட நினைத்து தன் மகளிடம் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாதவர் பயணத்தில் வண்டியைஓய்வுக்காக நிறுத்தும் போதெல்லாம் பேத்தி அறியாது பேரனிடம் தொடர்பு கொள்ள அலைபேசியில் அழைத்தவாறே இருக்க அவனுடைய அலைபேசியோ தொடர்பெல்லைக்கு அப்பால் இருந்தது. என்ன செய்வதெனத் தெரியாது கவலையடைந்தவர் அப்போதைக்கு நயனியைத் தன்னுடன் தங்கவைத்ததை எண்ணி ஆறுதலடைந்தார் ஊருக்குச் சென்றதும் உடனே பேரனை வரவழைக்க வேண்டியதைச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தவர் தலையை இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

வளரும்.....

கருத்துக்களுக்கு 👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 32

நயனதாரா சென்று நான்கு மணி நேரத்திற்குப் பிறகு காலை எட்டு மணியளவில் வீட்டிற்கு வந்த ஆதித்யனின் கார்ச் சத்தம் கேட்டு வீட்டின் பின் பக்க தோட்டத்திலிருந்து பார்த்த காயத்ரி செய்து கொண்டிருந்த வேலையை இடையில் விட முடியாததால் மரகதத்திடம் ஆதித்யனுக்கும் சங்கருக்கும் தேநீர் கொடுக்கச் சொல்ல அவரும் தேநீரை எடுத்துக் கொண்டு சங்கருக்கு முதலில் கொடுத்தவர் ஆதித்யன் அறைக்குச் சென்றார்.

"என்ன மரகதம்மா நீங்க கொண்டு வாரீங்க?"

"அம்மா தோட்டத்துல கொஞ்சம் வேலையா இருக்காங்க. அதான் நான் கொண்டு வந்தேன்." அவனுடைய தாராவுக்கு மிகவும் பிடித்த இடம் அந்த தோட்டம்தான் என்பதால் மரகதம் 'அம்மா' என்று நயனியைத்தான் கூறுகிறாள் என தவறாகப் புரிந்தவன்

"சரி மரகதம்மா அவ வேலைய முடிச்சிட்டே வரட்டும்" என்றவாறு தேநீரை அருந்திவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். குளித்து உடைமாற்றியவன் தலை வார சீப்பை எடுக்க கை வைக்க அவன் சீப்பின் கீழே ஒரு காகிதம் படபடத்தது. நீட்டிய கை அப்படியே நிற்க
'உனக்கு எல்லாம் விளையாட்டுத்தான் அவ போன பிறகாவது அதோட சீரியஸ் உனக்கு விளங்குமா?' சங்கரின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. அவசரமாக காகிதத்தை எடுத்துப் பார்க்க அதில் தன்னவளின் கையெழுத்தைக் கண்டவன் அப்படியே அமர்ந்துவிட்டான். ஒருவாறாய் தன்னிலை அடைந்தவன் படபடக்கும் இதயத்துடனே அதை வாசிக்கத் தொடங்கினான்.

அன்புள்ள என்று எழுதி இருந்தவள் அதனை வெட்டிவிட்டு மொட்டையாக ஆதித்யவர்த்தனுக்கு என ஆரம்பித்திருந்தாள்.

"எப்படி ஆரம்பிக்குறதென்றே தெரியல்ல ஆனால் என் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஆதியோட அந்தமா இன்றைக்கு சொல்லனும் என்று முடிவெடுத்திருக்கேன். இன்றைக்கு சொல்லாமல் போனால் இனி என்றைக்குமே சொல்ல முடியாமல் போயிடும். முதல்ல கல்யாணம் வேணாம் என்று சொன்ன நான் உங்களை முதன்முதலா போட்டோவில பார்த்ததும் நீங்க எனக்கானவர், எனக்கு மட்டுமே சொந்தமானவர் என்று மனசு சொல்லிச்சு அதனாலதான் நான் உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். என்னையும் அறியாம உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சேன். ஆனால் உங்க மனசு என்னை ஏத்துக்கிடல்ல அப்போ அதுக்கு காரணம் தெரியாம தவிச்சேன். முதல்ல ஷனாவைக் காதலிக்குறீங்க அவ குணம் தெரிஞ்சுதான் அத்தை உங்க காதல ஏத்துக்கல்ல அதனாலதான் நீங்க அவளை மறக்க தெரியாம என்னை ஏத்துக்கவும் முடியாம தவிக்குறீங்க என்று தப்பா ஒரு காரணத்தை நினைச்சிருந்தேன். ஷனாவோட குணத்தை உங்களுக்கு விளங்கவைக்கனும் அவ எண்ணத்தை தப்பான குணத்தை விளங்கினா நிச்சயமா அவளை மறந்துடுவீங்க என்னை ஏத்துப்பீங்க என்று நம்பினேன். ஏன்னா ஷனா உங்களுக்கு பொருத்தமானவ இல்ல அதோட நம்ம பந்தமும் உடையக்கூடாதுன்னு நினச்சேன் ஆனால் உங்க மனசுல யாரிருக்கிறதால நீங்க என்னை விட்டு விலகினீங்க என்ற உண்மையான காரணம் எனக்கு தெரிஞ்சுடுச்சு. ஏதோ ஒரு காரணத்துனால நான் உங்களை காசுக்குத்தான் கட்டிக்கிட்டேன் என்று என்னை தப்பானவளா நினைக்குறீங்க இப்போ ஓரளவு உங்களுக்கு என்னைத் தெரியும் அதனால என்னை நம்புவீங்க என்று இதைச் சொல்லுறேன். எங்கம்மா மேல சத்தியமா அந்த மாதிரி ஒரு எண்ணத்தோட உங்க வாழ்க்கையில நான் வரல்ல. இந்த விஷயத்துல என்னை நான் நிரூபிப்பேன் என்று சொல்லிருந்தேன் ஆனால் நிரூபிச்சிட்டேனா இல்லையா என்று எனக்குத் தெரியல்ல. என்றைக்குமே சேர முடியாத ரயில் தண்டவாளம் போலத்தான் நம்ம உறவு என்றீங்க அது எவ்வளவு உண்மையென்று இப்போதான் புரிஞ்சுக்குட்டேன். கடைசிவரை சேர முடியாட்டியும் தண்டவாளம் இரண்டும் பக்கத்துல பக்கத்துலதான் இருக்கும் ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. நீங்க என்னை காதலுக்காக காதலிப்பீங்க என்றும் சொன்னேன் ஆனால் உங்க காதல் வேறொரு இடத்திலதான் இப்பவும் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் சொன்னது ஒரு வகையில உண்மைதான் நீங்க காதலுக்காக மட்டும் காதலிச்சதாலதான் இதுவர உங்களால உங்க காதல மறக்க முடியல்ல. அதோட உங்கள மாத்த எனக்கு மூனே மாசம் போதுமென்று சவால் விட்டேன் ஆனால் அதே மூனு மாசத்துல மாற வேண்டியது நானாயிடுச்சு. உங்ககிட்ட விட்ட எல்லா சவால்லயும் நான் முழுசாத் தோத்துட்டேன் வர்த்தன். ஆனால் அதுலயும் ஒரு சந்தோசம் நீங்க ஜெயிச்சுட்டீங்க. உங்க காதலும் ஜெயிச்சிடுச்சு. நித்திக்கா ரொம்ப நல்லவங்க அவங்க மேல எந்தத் தப்புமில்ல அவங்க அம்மாவும் அண்ணாவும் அந்த வாகீசன் மாமாவுந்தான் எல்லாத்துக்கும் காரணம் இது எல்லாத்தையும் விட ஷனா ஒரு முக்கியமான காரணம். நீங்க நித்திக்காவ பார்க்க யூனிவர்ஷிட்டி போனப்போ அவங்களால அவங்க ஆது அவமானப்படக் கூடாது அசிங்கப்படக் கூடாதுன்னு மனச கல்லாக்கிகிட்டுத்தான் நீங்க வெறுக்குற அளவு மோசமா கதைச்சதோட உங்களை காதலிக்கல்ல என்று பொய்யும் சொல்லி அவங்க வாழ்க்கைய விட்டு உங்களை போகச் சொன்னாங்க அதுக்குப் பிறகு உங்களை மறக்க முடியாம நித்திக்கா துடிச்சது இப்பவும் கண்ணுக்குள்ளே இருக்கு இப்பகூட அவங்க அவங்களோட ஆதுவ காதலிச்சுட்டுத்தான் இருக்காங்க கடைசி வர காதலிச்சிட்டுத்தான் இருப்பாங்க. ஏன் உங்க மனசுலயும் நித்திக்கா மட்டும்தான் இன்னமும் இருக்காங்க அதனாலதான் உங்களால என்னை ஏத்துக்க முடியல்ல. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று பார்க்குறீங்களா? ஏன்னா உங்களை உங்களோட ஆழமான காதலை அந்தக் காதலுக்காக அதைக் காப்பாத்துறதுக்காக உங்க நிதுக்காக நீங்க தவிச்சத துடிச்சத ஏன் குழறினதக் கூட நான் கூடவே இருந்து பார்த்தவ அதோட நித்திக்கா அவங்க காதலை அவங்க ஆதுவை காப்பாத்த முடியாம துடிச்சதையும் பார்த்திருக்கேன். நான் யாருன்னு இன்னும் விளங்கல்லையா அச்சு மாமா? நான்தான் உங்க பப்பு. ஒன்று தெரியுமா உங்க போட்டோவ பார்த்தப்போ உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருந்துச்சு உங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் அச்சு மாமாவோட ஞாபகம் வரும் அப்போ எல்லாம் உங்களுக்கிட்ட கேட்கத் தோணும் ஆனால் நம்ம உறவு சரியில்ல என்றதால அதைக் கேட்க நான் விரும்பல்ல. நீங்க என்னோட அச்சு மாமாதான் என்று தெரிஞ்சதும் 'மாமா நான்தான் உங்க பப்புன்னு' உங்க முன்னாடி நிக்கனும் அப்போ உங்க முகத்துல வார சந்தோசத்தை பார்க்கனும் என்று ஆவலா காத்துட்டிருந்தேன் ஆனால் நீங்க அன்றிலிருந்து என்னோட கதைக்கல்ல ஏன் நிமிர்ந்து கூட பார்க்கல்ல என்றைக்குமே உங்க பப்பு உங்க நல்லதத்தான் விரும்புவா. உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்க்கனும் உங்களுக்கிட்ட ஒரு கேள்வி கேட்கனுமென்று எப்பவும் தோனும் அத இப்போ கேட்டுடுறேன் உங்க நிது உங்களை விட்டுப் போனதால அக்காவ விட்டு நீங்களும் போய்ட்டீங்க ஆனால் நான், உங்க பப்பு என்ன மாமா பண்ணா நீங்க உங்க நிதுவோட சேர்த்து இந்தப் பப்புவையும் விட்டுட்டுப் போயிட்டீங்க. எதுக்காக என்னை பார்க்க வரவே இல்லை. அப்போ எல்லாம் நீங்க வருவீங்க சாக்லேட்ஸ் தருவீங்க என்று காத்துட்டே இருப்பேன். ஒரு கட்டத்துல நீங்க வரவேமாட்டீங்க என்று புரிஞ்சுக்கிட்டேன். காலப்போக்குல ஒரு வாட்டியாவது உங்களைப் பார்க்கனும் என்று நினைச்சேன் ஆனால் கடவுள் எனக்கு பெரிய பரிசே கொடுத்துட்டான். என் மாமா கையாலயே தாலி வாங்க வச்சிட்டாரு என் மாமாவுக்கே பொண்டாட்டி என்ற அந்தஸ்த்தையும் கொடுத்துட்டாரு இதவிட வேற என்ன வேணும் ஊருல முதன்முதலா உங்க வீட்டுக்கு போன அன்று என்னையும் அறியாம உங்களை மாமா என்று கூப்பிட்டேன் நீங்க கூட கொஞ்சம் கோபப்பட்டீங்க அப்படி ஏன் கூப்பிட்டேன் என்று பல தடவ யோசிச்சிருக்கேன் விடதான் தெரியல்ல. ஒரு தரமாவது பார்கனும் என்று ஆசைப்பட்ட என் அச்சு மாமா கூட மூனு மாசம் வாழ்ந்திருக்கேன் இது போதும் மாமா என் வாழ்நாளுக்கும் இது மட்டும் போதும். உங்க ரெண்டு பேரோட காதலும் எவ்வளவு ஆழமென்று எனக்கு நல்லாவே தெரியும் அதனால அந்தக் காதல் சாகக்கூடாது. மாமா உங்க நிது உங்களுக்கிட்டேயே திரும்ப வந்துட்டா. அந்த சந்தோசத்தோட உங்க பப்பு உங்கள விட்டு உங்க வாழ்க்கைய விட்டு நிரந்தரமாப் போறேன் நீங்க என்றைக்கும் நல்லா இருக்கனும். ஒரே ஒரு வாட்டி அச்சு மாமா என்று கூப்பிட்டுக்கவா 'அச்சு மாமா' பல நாள் ஆசைப்பட்டு சொல்ல முடியாம போனதை கடைசியா என்னோட வர்த்தனுக்கு சொல்லிட்டு போகனும் என்று ஆசைப்படுறேன்.

'ஐ லவ் யூ ஐ லவ் யூ சோ மச் வரு'

'என்றும் உங்கள் அன்புப் பப்பு' என்று கண்ணீரிலே அந்தக் கடிதம் முடிந்திருக்க படித்து முடித்தவன் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து கண்ணீர் விட்டு அழுதான். சில மணி நேரங்கள் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தவன் உடனே சங்கரைத் தேடிச் சென்றான். அவனின் அழுது சிவந்த கண்களைப் பார்த்து சங்கர் பதற

''மச்சான் நீ சொன்ன மாதிரி நான் விளையாட்டாவே இருந்துட்டேன்டா அந்த விளையாட்டு இப்போ வினையாகிடிச்சு மச்சான் இப்போ அதோட சீரியஸ் புரியுது'' சங்கர் புரியாமல் விழித்தவன் ஒருவாறு விசயத்தை யூகித்தவனாய்

"என்னாச்சுடா?" என்ற சங்கரிடம் எதுவும் பதிலளிக்காத ஆதித்யன் தன் கையிலிருந்த கடிதத்தை கொடுக்க படித்துவிட்டு சங்கரும் அதிர்ந்து நிற்க

"போயிட்டாடா என் தாரா என்னை விட்டு மொத்தமா போயிட்டாடா. இல்லல்ல என் பப்பு. டேய் உனக்கு தாராதான் பப்பு என்று ஏற்கனவே தெரியுமில்ல அதனாலதான் அன்னைக்கு ஒரு மாதிரி சிரிச்ச இல்ல அதோட இன்ப அதிர்ச்சி தங்கு சிலிப்புன்னு ஏதேதோ குழப்பினல்ல ஏன்டா என்கிட்ட சொல்லல்ல நீ எல்லாம் ஒரு ப்ரண்டா?"

"நான் சொல்லத்தான் வந்தேன் ஆனால் நயனி அவதான் சொல்லனும் நீ சந்தோசப்படுறதைப் பார்க்கனுமென்று சொன்னா அதுக்குள்ள என்னன்னமோ நடந்துடுச்சு சொரி மச்சான்"

"சரி விடு மச்சான் அவ ஆசப்பட்ட மாதிரி அவதான் என்கிட்ட முதல்ல சொல்லிருக்கா நானும் சந்தோசப்பட்டேன் ஆனால் பார்க்கத்தான் அவ இல்லை இந்த விஷயம் எதுவும் இப்போதைக்கு அம்மாவுக்கு இல்லை இல்லை யாருக்குமே தெரிய வேணாம் சரி கிளம்பு போகலாம்"

"எங்கடா?"

"ட்ரிங்கோக்கு" அடுத்த நிமிடம் இருவரும் திருகோணமலை நோக்கிப் புறப்பட்டனர்.

*******************************************

கோயிலின் பின்னால் இருந்த ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்திருந்தனர் தாரணியும் நயனியும். பெண்ணவள் விழிகளோ அந்த தெளிந்த நீரையே வெறித்திருந்தது. நயனி தன்னிடம் ஏதாவது பேசுவாள் என சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த தாரணி அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லாது போக தன் தோழியின் தோள்களில் மெல்லத் தன் கையை வைத்ததும் அவள் புறம் திரும்பினாள் நயனி.

"ஏன் நயனி இப்படி இருக்க என்ன நடந்துச்சு சொல்லு? பாட்டிம்மா எனக்கு போன் பண்ணிருந்தாங்க. எல்லாத்தையும் சொன்னாங்க நீ எதையோ இழந்த மாதிரி இருக்க என்ன பிரச்சனை என்று தெரியல்ல என்கிட்டதான் எதுவும் சொல்லுறாளில்ல உன்கிட்டயாவது எதுவும் சொல்லுவாளோ என்னமோ தயவு செஞ்சு என்ன பிரச்சனை என்று கேட்டு சொல்லும்மா என்று சொன்னாங்க. பாட்டி சொல்லுறதை வச்சுப் பார்த்தா என்னமோ நடந்திருக்கு ஏதோவொரு முடிவெடுத்துட்டுத்தான் கொழும்பில இருந்து ஊருக்கு வந்திருக்க அதுவும் கோயில் நேர்ச்சை என்று சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுட்டு வேற வந்திருக்க. என்னாச்சுடி அப்போ ஏற்கனவே முடிவு பண்ணினாப் போல ஆதி சேரை விட்டுட்டு் மொத்தமா வந்துட்டாயா?"

"..........." நயனதாரா மௌனத்தையே பதிலாகத் தர தாரணி பொறுமை இழந்தாள்

"ஏய் நயனி உன்கிட்டத்தான் கதச்சுட்டிருக்கேன் காது கேக்காதவளைப் போல உட்கார்ந்துட்டிருக்க எனக்கு பதில் சொல்லுடி என்ன பண்ணி வச்சியிருக்க ஆனால் ஒன்னுடி என்னம்மோ தப்பா மட்டும் முடிவெடுத்துட்டு வந்திருக்க. அது எனக்கு நூறு வீதம் உறுதி. என்ன நடந்துச்சுன்னு இப்போ சொல்லப் போறாயா இல்லையா? ஏய் முதல்ல என் முகத்தைப் பாரு" தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த நயனியின் வதனத்தினை தன்னை நோக்கித் திருப்பினாள் தாரணி. கண்களில் நீர் வழிய தோழியை ஏறிட்டவள் நடந்த அனைத்தையும் கொட்டிவிட்டு அழுதவளை அணைத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள் தாரணி. அப்போது நயனிக்குப் பின்னால் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார்த்தவள் நின்றவர்களைக் கண்டதும் மகிழ்ந்தவளாய் நயனியை அழைக்கத் தொடங்க அதைத் தடுத்து நயனியின் பக்கத்தில் அமர்ந்தான் அவன். தாரணி மெல்ல எழ அவள் பக்கத்தில் சங்கர் வந்து நின்று கொண்டான் அவனைப் பார்த்து ஆச்சரியத்தில் கண்கள் விரிய நயனியும் எழத் தொடங்க அவளால் எழ முடியவில்லை அவள் கைகள் ஒரு இரும்புக் கரத்தினுள் சிக்குண்டிருந்தது. சிரித்தவாறே தாரணியும் சங்கரும் அவ்விடத்திலிருந்து விலகி சற்றுத் தொலைவில் சென்றனர். அவர்கள் சிரிப்பு எதையோ உணர்த்த சட்டென்று திரும்பி கைக்காரனைப் பார்க்க முகம் முழுக்க சிரிப்பு பரவிக்கிடக்க அவளையே பார்த்திருந்தான் அவளுடைய வர்த்தன். அவளும் இமைக்க மறந்து அவனையே நோக்கியிருந்தாள்.

நாயகனின் பார்வை வீச்சில் பெண்ணவளின் கன்னங்களோ வெட்கத்தில் செம்மை பூக்க சின்னச் சிரிப்புடன் தன்னவளின் நாணச்சிவப்பை ரசித்திருந்தான் காளையவன். இப்படியே இருவரும் இமைக்க மறந்து ஒருவரை ஒருவர் வெகு நேரமாக பார்த்திருக்க கோயிலின் மணியோசை ஓங்கி ஒலித்தது. அதில் ஞாபகம் வந்தவளாய் அவனை விட்டு விலக

"தாரா உன்னோட அச்சு மாமா உன் முன்னாடிதான் நிக்குறேன். இப்போ சொல்லு நான்தான் உங்க பப்புன்னு"

"அதுதான் உங்களுக்குத் தெரியுமே. அதுக்குப் பிறகு இன்னொருதரம் நான் வேற சொல்லனுமா?"

"நான் சந்தோசப்படுறதைப் பார்க்க நினைச்ச இல்லை சொல்லு." அவள் முடியாதென மறுக்க அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த நாணங் கொண்டவளாய்

"அச்சுமாமா நான்தான் உங்க பப்பு." என்று ஒருவாறாய் சொல்லிவிட சந்தோசத்தில் அவன் கண்கள் குளமாக அதை மறைத்து சிரித்தவன்,

"இப்போ சொல்லு ஏன் பப்பு என்ன விட்டு வந்த?" அவன் கேள்விக்கு பதில் கூறாது மௌனியாக

"சொல்லு உன்கிட்டத்தான் கேட்குறேன்?"

"உங்களுக்குத்தானே என்னைப் புடிக்கல்ல நித்திக்காவத்தானே புடிச்சிருக்கு"

"நீ என்ன லூசா? நான் எப்போ அப்படிச் சொன்னேன்."

"நீங்க சொல்லாட்டியும் எனக்குத் தெரியும்"

"பெரிய ஜேம்ஸ்பாண்ட் கண்டுபிடிச்சுட்டா. முதல்ல நான் உன்கிட்ட ஒன்று சொல்லனும் அதுக்குப் பிறகு இந்த மாதிரி லூசுத்தனமா கதைக்க மாட்ட." அவள் கேள்வியாய் நோக்க

"ஐ லவ் யூ தாரா என்ட் ஐ லவ் யூ சோ மச் மை ஸ்வீட் பப்பு" என்றவன் அவள் கைகளில் சாக்லேட்டை கொடுக்க வாங்கியவள் ஆச்சரியம் தாங்காது விழிகளை விரித்தாள்.

"சரி எல்லாத்தையும் சொன்னாத்தான் உனக்கு இப்போ நான் சொன்ன என்னோட லவ் யூ புரியும்" என்றவன் அவனுக்கு காதல் வந்த நொடியை சொல்ல ஆரம்பித்தான்.

வளரும்.....

கருத்துக்களுக்கு💙👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.☁🌕

நிலவு - 33

ஆதித்யன் சொல்ல ஆரம்பிக்க அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நயனதாரா.

"தாரா எனக்கும் உன்னை மாதிரித்தான் உன்னோட போட்டோவ முதன் முதலா பாத்தப்போ என் பப்புவோட ஞாபகம் வந்துச்சு கல்யாணமே வேணாமென்றிருந்த நான் கல்யாணம் பண்ண ஒத்துகிட்டதுக்கு அதுவும் ஒரு காரணம் ஆனாலும் உன்னோட கதைச்சு இந்த கல்யாணத்த நிறுத்த நினச்சேன் காரணம் எனக்கு பொம்பளைங்க மேல அவ்வளவு நம்பிக்கையில்ல முக்கியமா இந்த காதல், கல்யாணத்து மேல துளியும் நம்பிக்கையில்லை. அது எதனால என்று உனக்கும் தெரியும். உன்னோட கதைக்க எவ்வளவோ ட்ரை பண்ணினேன் ஆனால் எங்கம்மா அதுக்கு வழி வைக்கல்ல சரி நம்ம விதி இதுதான் என்று ஏத்துக்க நினச்சேன். கல்யாணத்துக்கு முதல் நாள்தான் உன் போன் நம்பர் எனக்கு கிடச்சது அன்று ஈவினிங் உன் நம்பர்ல இருந்து எனக்கொரு கோள் வந்தது. நானும் ஆன்ஸர் பண்ணேன் பட் நீ பேசல்ல சரி தவறி அழைபட்டிருக்குன்னு கட் பண்ணப் போனப்போ தான் நீயும் உன் ப்ரண்ட்ஸும் என்னைப்பத்தி கதைச்சீங்க நானும் கேட்டுட்டு இருந்தேன் அப்போ நீ காசுதான் முக்கியம் காசு மட்டும் தான் எல்லாமே என்று கதச்சிட்டிருந்த அதுக்கு உன் சில ப்ரண்ட்ஸும் ஒத்து ஊதினாங்க. ஏற்கனவே இந்த காசு சொத்து தகுதியால கடும் அடி வாங்கியிருந்த எனக்கு அது அவமானமா இருந்துச்சு எனக்காக கல்யாணம் பண்ணிக்காம சொத்துக்காக கட்ட நினச்சதை என்னால தாங்க முடியல்ல அதையும் விட என்னோட கோபம் இந்த மாதிரி ஒருத்திய என் பப்புவோட சேர்த்துப் பார்த்துட்டேனே என்றுதான் உன்னை கல்யாணமே பண்ணக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அம்மாகிட்டயும் சொன்னேன். ஆனால் அவங்க நீ ரொம்ப நல்லவ நான்தான் தப்பா விளங்கியிருக்கேன் என்று உன்னைத்தான் நம்பினாங்க அதுலயும் என்னோட பிடிவாதத்துல உன்ன மாதிரி நல்ல பொண்ண இழந்துடுவேனோ என்ற எண்ணத்தில உன்னையும் உன் குடும்பத்தையும் பற்றி எவ்வளவோ எடுத்து சொன்னாங்க நான் அதைக் காதுல வாங்கிகல்ல நீ நடிக்குறதா சொன்னப்போ இந்தக் கல்யாணம் நடந்தே ஆகனுமென்று கடும் பிடிவாதம் பிடிச்சாங்க அப்பவும் நான் முடியாதுன்னு மறுக்க செத்துடுவேன் என்று மிரட்டித்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்க. போதாக்குறைக்கு அப்பாவும் அம்மாவுக்கே சப்போர்ட் பண்ணினாரு அவருக்கும் உன்மேலயும் உன் குடும்பத்து மேலயும் அவ்வளவு நம்பிக்கை." 'அட இவ்வளவு நடந்திருக்கா' என்று விழி விரித்தவள் அன்று நடந்ததைக் கூற அவன் அம்மா அப்பாவின் கணிப்பு மிகச் சரியாயிருந்ததை எண்ணி மகிழ்ந்தவனாக மேலே தொடர்ந்தான்.

"உண்மையிலே கொஞ்சமும் பிடிக்காமத் தான் உன்னைக் கட்டிக்கிட்டேன். ஆனால் அக்கினியை சுத்த உன் கையப் பிடிச்சப்போ முதன்முதலா எனக்குள்ள மின்சாரம் பாஞ்ச மாதிரி ஒரு உணர்வு. அதோட உன் கண்ணப் பார்த்த என்னால அந்தக் காந்தப்பார்வையில இருந்து என் கண்களை திருப்ப முடியல்ல ஆனாலும் என் கோபம் என்னை திருப்பிடிச்சு. அதே மாதிரி கணையாழி எடுத்தப்போவும் சரி உன்னை அணைச்சு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டினப்போவும் சரி முதன்முதலா சாப்பாட்ட உன் கையால ஊட்டிவிட்டப்போவும் சரி அதே உணர்வுதான். எல்லாத்தையும் என் ஆழ் மனம் ரசிச்சுது ஆனால் என்னோட கோபம் அதை மறைச்சிடுச்சு. வரவேற்புல உன் பக்கத்துல நின்னப்போ எல்லோரும் ரொம்ப பொருத்தமான ஜோடின்னு புகழ்ந்தாங்க எதையோ சாதிச்ச மாதிரி ஒரு எண்ணம் எனக்குள்ள வந்துச்சு. அங்கேயும் என் கோபம் வென்றிடிச்சு. அதுக்குப் பிறகு நீ பாடின, என்னை பாடச் சொல்ல முதல்ல முடியாதென்று சொன்ன நான் எல்லோரும் வற்புறுத்தினப்போ இரண்டு வரி பாடிட்டு நிறுத்தத்தான் நினைச்சேன் ஆனால் ஏனோ உன்கூட சேர்ந்து பாடனும் போல உள்ளே ஒரு உந்துதல் பாடி முடிச்சப்போ பாட்டுத்தான் என்றாலும் என்னையும் அறியாம உனக்கு சில வாக்குகளை கொடுத்துட்டோமே என்று என் மேலயே எனக்கு கோபம் வந்துச்சு அதான் உடனே அந்த இடத்தை விட்டுப் போனேன். முதன்முதலா எங்க வீட்டுக்குப் போனப்போ உன் உச்சிவகிட்டுல குங்குமத்தை வக்க சொன்னாங்கல்ல முதல்ல மறுத்தாலும் அம்மா வற்புறுத்திச் சொன்னப்போ நானும் வச்சுவிட்டேன். அப்போ உன் கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு 'என்ன இவ ஒரு குங்குமம் வச்சதுக்கு கண்கலங்குறா ஒருவேளை அம்மா சொன்ன மாதிரி இவ நல்லவதானோ நாமதான் தப்பா விளங்கிட்டோமோ....' என்று நினைச்சேன். ஆனால் என்னோட புத்தி அதை ஏத்துக்க மறுத்துடுச்சு என்னைப் பொறுத்தவர நீ காசுக்காகத்தான் கல்யாணம் பண்ணிகிட்ட அதனால தான் உன்கிட்ட முதலிரவுல அவ்வளவு ரூடா நடந்துக்கிட்டேன். ஆனாலும் நான் போட்ட என்னோட கொன்ரெக்ட்டை உன்ட வசதி போல சில கன்டிசன் போட்டு எனக்கே திருப்பிட்ட அந்த புத்திசாலித் தனம் என்னைக் கவர்ந்தது. அத்தோட வீட்டுல இருங்கவங்க எல்லோர்கிட்டயும் நீ ரொம்ப நல்லாவே நடந்துகிட்ட யார் யாருக்கு என்ன தேவையோ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்ச எல்லாத்துக்கும் மேல நான் உன்னை அவ்வளவு வெறுக்குறேன் என்று தெரிஞ்சும் நீ என்கிட்ட நல்லபடியாவே நடந்துக்கிட்ட முதல்ல நீ நடிக்குறாய் என்று தான் நினைச்சேன் ஆனால் நீ சொன்ன மாதிரி எப்பவும் நீ நீயாத்தான் இருந்த. போகப் போக நீ நல்லவதான் என்று புரிஞ்சுக்கிட்டேன். அப்பவே நீ கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள வந்துட்ட என்று நினைக்குறேன் அதை நான்தான் புரிஞ்சிகல்ல." அவன் பேசப் பேச ஆச்சரியம் தாங்காது விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நயனி.

"அதுக்கு காரணம் உன் மேல தப்பான அபிப்பிராயத்துல இருந்த என்னால உன்னோட நல்ல குணங்களை ஏத்துக்க முடியல்ல. அன்றைக்கு அம்மா உன்கிட்ட நம்ம உறவைப் பத்திக் கேட்டுட்டிருந்தாங்க அப்போ நான் கீழ வந்தேன். நீங்க கதைச்ச எல்லாத்தையும் கேட்டேன். அம்மாவோட கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போற என்றதைக் கேட்கனும் போல இருந்துச்சு அப்போ நீ என்னை விட்டுக் கொடுக்காம கதைச்ச அதோட அம்மாக்கு ஆறுதலும் சொன்ன இதெல்லாத்தையும் கேட்டுட்டுத்தான் நான் மேல போனேன். உன் வாயாலயே என்ன நடந்ததுன்னு கேட்கத்தான் எதுவும் தெரியாத மாதிரி கேட்டேன். நீ அங்க நடந்ததை மட்டும் சொன்ன ஆனால் அம்மாகிட்ட சொன்னதை என்கிட்ட சொல்ல விரும்பல்ல அப்பதான் புரிஞ்சுகிட்டேன் நீ வீண் விளம்பரத்துக்கு ஆசப்படுறவ இல்லை என்று அதுக்குப் பிறகு என்னோட கணிப்பை எல்லாம் தள்ளி வச்சுட்டு புதுசா உன்னைப் பார்க்கத் தொடங்கினேன் உன்னோட நல்ல குணங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாய் விளங்க ஆரம்பிச்சிடுச்சு நானும் மெல்ல மெல்ல உன் பக்கம் சாய ஆரம்பிச்சேன். ஆனாலும் உடனே அதை உன்கிட்ட சொல்ல விரும்பல்ல. முதல்ல நான் உன்னோட இயல்பா பழக விரும்பினேன். உன்னை திரும்பிப் பார்க்காம இருந்த நான் முதல்ல தேவைக்காக கதைக்க ஆரம்பிச்சேன் பிறகு தேவையில்லாமலும் நின்னு கதைக்க ஆரம்பிச்சேன். ஏன் தாரா உனக்கு என்னுல வந்த மாற்றங்கள் தெரியவே இல்லையா?" சிறிது யோசித்தவள் 'இல்லை' எனத் தலையாட்ட

"அப்படி ஒரு நாள்தான் நீ சூப்பர் மார்க்கெட்டுக்கு போனப்போ நானா வந்து உன்னைக் கூட்டிட்டு போறேன் என்று சொன்னேன். ஆனால் அன்றோட நம்ம வாழ்க்கையில எல்லாம் மாறும் என்று எனக்குத் தெரியல்ல. நித்திலாவை பார்த்த அதிர்ச்சிய விட அவ கூட நீ ரொம்ப நெருக்கமா கதைச்சுட்டிருந்தது தான் என்னைக் குடஞ்சிட்டிருந்தது."

"சரி நீங்க அதை என்கிட்ட நேராவே கேட்டிருக்கலாமே அதுக்குப் பிறகு ஏன் என்னை விட்டு விலகினீங்க. உங்க கிட்ட நான் கதைக்க வந்தா ஏசிட்டே இருந்தீங்களே ஏன்?" அவள் அடக்கமாட்டாமல் கேட்க

"என் மேல எனக்கு கோபம் அன்றைக்கு நான் அமைதியா இருந்திருக்கனும் ஆனால் அவளைப் பார்த்த கோபத்துல என்ன செய்றேன் என்று விளங்காம செஞ்சுட்டேன். அந்த இடத்துல உன் நிலமைய யோசிக்காம விட்டுட்டேன் உன் முகத்தை பார்க்க முடியல்ல அதான் நீ என்னை நெருங்கி வந்தப்போ எல்லாம் உன்கிட்ட கடுமையா நடந்துகிட்டேன். அப்படியிருந்தப்போ நீ என்னை விட்டு மெல்ல மெல்ல விழகினது என் கண்ணுக்கு தெரியல்ல நீ என்னை விட்டுப் போக முடிவெடுத்ததை தாரணிகிட்ட சொல்லியிருக்க அவ என்ன பண்ணுறதுன்னு தெரியாம சங்கர்கிட்ட சொல்லி என்னோட கதைக்க சொல்லியிருக்கா அவனும் சொன்னான் தான் ஆனால் நான்தான் என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா என்று கியார்லெஸ்ஸா இருந்துட்டேன்."

"அப்படியில்லங்க நான் உங்க தாராவா இருந்திருந்தா போயிருக்க மாட்டேன் ஆனால் உங்க பப்புவா யோசிச்சப்போ நான் விலகிப் போறது தான் சரி என்று தோணிச்சு"

"ஆனாலும் தாரா உன்கிட்ட அன்றைக்கே என் காதல சொல்ல ஓடி வந்தேன் ஆனா நீ கோயிலுக்குப் போயிட்ட அதுக்குப் பிறகு நடந்தது எல்லாம் உனக்கு தெரியுமே. காய்ச்சல் சரியான பிறகும் நீ என்னை விட்டு தூரப்போன பொறுக்க முடியாம உன்கிட்ட கேட்டப்போ சரியான பதில் சொல்லல்ல. அதுக்கு மேல உன்னை காயப்படுத்தாம மெல்ல என்னை விளங்க வச்சுக்கலாம் என்று நினச்சேன்."

"ஆனால் அந்த காய்ச்சல் அப்போ கடமையா நினச்சுத்தானே என்னை பார்த்துக்கிட்டீங்க அன்புலயோ காதல்லயோ இல்லல்ல."

"காதல் தான் தாரா அது உன்மேல இருந்த அளவு கடந்த காதல்தான். அம்மா உன்கூட படுத்துக்கிறேன் என்று சொன்னப்போ கல்யாணமே வேணாம் என்று சொன்ன நான் இல்ல என் பொண்டாட்டிய நான்தான் பார்த்துக்குவேன் என்று சொல்ல என்னோட ஈகோ தடுத்துச்சு அதனாலதான் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு அம்மாவை நம்பவக்க ஏதேதோ சொல்லிட்டேன் ஆனால் அது உன்னை பாதிச்சதுன்னு நீ என்னைப் பார்த்துட்டப்போ சொன்ன இல்ல அப்போதான் விளங்கிச்சு. அதுக்குப் பிறகு என் மனசுல இருக்குறத சொன்னா கட்டாயம் கடமைக்காகத்தான் காதலைச் சொல்லுறேன் என்று நினச்சுக்குவ அதனால நீயா என் காதலை உணரனும் அதுக்குப் பிறகு நிதானமா சொல்லிக்கலாம் என்று நினைச்சேன் ஆனால் அதுக்குள்ள தப்பா என்னன்னமோ முடிவெடுத்துட்டு என்னை மொத்தமா விட்டுட்டு வந்துட்ட"

"அந்த முடிவெடுக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்"

"அப்போ யார் உன்னை தேவையில்லாம முடிவெடுக்க சொன்னா பெரிய தியாகி மாதிரி வாழ்க்கைய விட்டுக் கொடுக்குறாவாம் அப்படியே ஒன்று போட்டேன் என்றா ஆளப்பாரு"

"அது தியாகமெல்லாம் ஒன்னுமில்ல எனக்கு புடிச்ச என் அச்சு மாமாக்கும் நித்தி அக்காவுக்காகவும் தானே என்று நினைச்சேன் ஆனால் உண்மைய சொல்லட்டா என்னால இந்த கொஞ்ச நேரமே தாங்க முடியல்லப்பா" அவள் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அதில் பப்புவை பார்த்தவன் அவளை இழுத்து அணைத்திருந்தான். அவன் அணைப்பிலிருந்து திமிரி விடுப்பட்டவள்

"எனக்கு ஒரு டவுட்?"

"என்ன டவுட் கேளும்மா எல்லாத்தையும் மொத்தமா கிளியர் பண்ணிடுறேன்."

"உண்மையாவே அப்போ உங்க மனசுல நித்திக்கா இல்லையா?"

"இல்லையே இங்கப்பாரு தாராம்மா நித்திலாவை நான் காதலிச்சது கல்யாணம் பண்ண நினச்சது எல்லாம் உண்மைதான் ஆனால் அது என் வாழ்க்கைய விட்டு கடந்து போன ஒரு விசயம் முடிஞ்சது முடிஞ்சதுதான். அதை நான் எப்பவோ மறந்துட்டேன் கிட்டத்தட்ட ஏழு வருஷமாகுது."

"நித்திக்கா பாவமுங்க உங்களைப் பிரிஞ்சதுல அவங்க தப்பு எதுவுமில்ல தெரியுமா? எல்லாம் அவங்க வீட்டு ஆளுங்களாலதான் நீங்க நித்திக்காவையே கட்டிக்கோங்க அவங்க உங்கள மறக்க முடியாமத்தான் ஆதித்யன் என்று அவங்க மகனுக்கு பெயர் வச்சிருக்காங்க அதுமட்டுமில்லங்க அவங்க மகனை எப்படி கூப்பிடுறாங்க தெரியுமா 'ஆது' ன்னுதான் கூப்பிடுறாங்க அப்போ அவங்க இன்னும் உங்களை மறக்கல்ல தானே. பாவங்க தனியா வேற இருக்காங்க நீங்க அவங்களைத் தான் கட்டிக்கனும் நான் உங்கள விட்டுப்போனா வேறென்ன தடைங்க"

"நீ என்ன லூசா?"

"ஏங்க இப்படி கேக்குறீங்க?"

"அவ வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே என்று எனக்கும் கவலையாத்தான் இருக்கு நம்மால என்ன செய்ய முடியும் இங்கப்பாரு தாரா வானத்துல எத்தனையோ மேகங்கள் நிலவச் சுத்தியிருக்கு அதுல சில மேகங்கள் நிலவோடவே பயணிக்குது ஆனால் பல காரணங்களால அந்த மேகங்களால தொடர்ந்தும் அந்த நிலவோட பயணிக்க முடியாம இடையிலயே கலஞ்சு போயிடுது. அது மாதிரிதான் நம்ம வாழ்க்கையில வாரவங்களும். என்னப் பொறுத்தவர நித்திலா அந்த கலஞ்சு போன மேகம் மாதிரி அதை திரும்ப ஒன்னு சேர்க்க முடியாதும்மா"

"அதெல்லாம் முடியும் சும்மா நிலவு மேகம் வானம் என்று சொல்லிட்டிருக்காதீங்க. நித்திக்கா பாவம் அவங்க இப்படி இருக்கும் போது என்னால உங்க கூட நிம்மதியா வாழ முடியாது."

"ஓய் ரவுடி பேபி இங்க வாம்மா வந்து உன் ப்ரண்ட் என்னன்னமோ சொல்லுறா கொஞ்சம் என்னனுதான் கேளேன்." அவன் அழைத்ததும் ஆச்சரியமாகத் திரும்பிய தாரணியும் சங்கரும் அவர்களிடம் வந்து

"ஓ... நயனி சொல்லிட்டாளா நான்தான் ரவுடி பேபின்னு."

"ஐயோ நான் சொல்லல்லடி"

"கரன் நீங்களா?"

"ஐயோ நானில்ல தாரு. அதுசரி நயனியும் சொல்லல்ல நானுமில்ல டேய் மச்சான் உனக்கெப்படித் தெரியும்?"

"யாருமே சொல்லல்ல இது பப்புன்னா நீதான் ரவுடி பேபி. இது பார்த்தாலே தெரியுமே இதைக் கண்டுபிடிக்க சிஐடி வேற வேணுமாக்கும். ரவுடி பேபி இது உனக்கும்மா" என்றவாறு அவளுக்கும் ஒரு சாக்லேட்டைக் கொடுக்க அவளும் அகமகிழந்தவளாய் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டாள்.

"சரி டவுட் எல்லாம் கிளியர் தானே முதல்ல இந்த லூசு என்னமோ சொல்லுது என்ன என்று கேட்டுட்டு முடிவ சொல்லுங்க விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு விடிஞ்செழும்பி ராமன் சீதைக்கு சித்தப்பா என்ற மாதிரி இல்ல இவ கதைக்குறது இருக்கு என்னால முடியல்ல. இவ்வளவு நேரமும் குழந்தைக்கு சொல்லுற மாதிரி பதமா பக்குவமா சொல்லிட்டிருக்கன் முதல்ல இருந்து ஆரம்பிக்குறா" தாரணி நயனியை முறைக்க சங்கரோ அவளுக்கு எடுத்துக் கூற எதையும் காதிலோ கருத்திலோ வாங்காது நித்திக்கா பாவம் என்றதையே மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தாள். பொறுத்துப் பார்த்த தாரணி முடியாமல் அவள் தலையில் ஒரு குட்டு வைக்க சங்கர் நித்திலாவின் நம்பருக்கு அழைத்திருந்தான் நடந்ததை முழுவதும் கூற நயனியிடம் போனைக் கொடுக்கச் சொன்னாள் நித்திலா

வளரும்.....

Please share your comments here 💙👇💙


 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 34


சங்கர் தன் கைப்பேசியை நயனதாராவிடம் நீட்ட சிறிது தயங்கியவள் பின் அதை வாங்கி காதில் வைத்தது தான் தாமதம் மறுபக்கமிருந்து நித்தலா பொரியத் தொடங்கினாள்.

"நயனி என்ன இது? சங்கர் சொல்லுறதெல்லாம் உண்மையா? ஆ... உன்னைத்தான் கேக்குறன் பதில் சொல்லு?"

"......"

"என்ன நயனி அமைதியா இருக்குற உன்கிட்டதான் கேக்குறேன் இப்போ எனக்கு பதில் சொல்லப்போறாயா? இல்லையா?" நித்திலா அதட்டிக் கேட்க

"அது வந்து அக்கா உண்மைதான்"

"எதுக்காக இந்த மாதிரி ஒரு முடிவு? அதுவும் திடீரென்று"

"இல்லைக்கா ஏதோ ஒரு கெட்ட நேரம் நீங்க பிரிஞ்சுட்டீங்க ஆனால் இப்போ அப்படியில்லையே நீங்க தனியாத்தானே இருக்கீங்க வர்த்தனாலயும் என்னை அவர் பொண்டாட்டியா ஏத்துக்க முடியல்ல அவர் மனசுல இப்பவும் ஆழமா நீங்கதான் அக்கா இருக்கீங்க அதுமட்டுமில்ல உங்களுக்கும் சரி வர்த்தனுக்கும் சரி ஒருத்தரை ஒருத்தர் மறக்க முடியாம கஷ்டப்படுறதுக்கு சேர்ந்து வாழலாமே. என் வர்த்தன் நல்லாயிருக்கனும் அத்தோட என் நித்திக்காவும் சந்தோசமா இருக்கனும் அதுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் சேர்ந்து வாழனும்" நயனதாராவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யன் 'இவளுக்கு இவ்வளவு சொல்லியும் விளங்காம அவ நினைச்சதுலயே இருக்குறாளே' என அவளை கோபமாக முறைக்க சங்கரும் தாரணியும் முதலில் அவள் பேசி முடிக்கட்டும் என அவனை அமைதிப்படுத்தினர். ஆதித்யனின் பார்வையில் சிறிது பயந்தவள் மறுமுனையில் நித்திலா பேசத் தொடங்க காதை அங்கு கொடுத்தாள் ஆனால் அவள் பார்வை முழுக்க ஆதித்யனிலே இருந்தது.

"என்னம்மா நயனி இது சின்னப்புள்ள மாதிரி? நான் சொன்னதை நீ தப்பா விளங்கிட்ட. இங்கப்பாரு நான் மறக்கமாட்டேன் என்று சொன்னது உன்னோட வர்த்தனை இல்ல நான் காதலிச்ச என் ஆதுவோட காதல மட்டும்தான். என்றைக்கு நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சமோ அந்த நிமிஷத்துல இருந்து நான் யாரோ அவர் யாரோ அந்த உறவு உடஞ்சி போச்சு. உடச்சது ஒரு நாளும் ஒட்டாது. அதை இத்தனை வருஷம் கழிச்சு ஒட்டவக்க நினைக்குற அது முதல்ல சரியா ஒட்டுமா?" அவளுக்குப் புரிவது போல் மென்மையாக எடுத்துரைத்தாள் நித்திலா.

"அக்கா நீங்க இப்போ எனக்காக பொய் சொல்லுறீங்க."

"நான் எதுக்காக பொய் சொல்லனும் அதுவும் உனக்காக, இப்பவும் தப்பாத்தான் விளங்குற உன்னோட இடத்துல நீ இல்லாம வேறு யாரிருந்தாலும் நான் இப்படித்தான் கதைச்சிருப்பேன். ஏன் ஆதித்யன் கல்யாணமாகாம தனியா இருந்தாக் கூட நாங்க சேர்ந்திருக்க மாட்டோம். அது முடிஞ்சு போன கதை, முடிஞ்சது முடிஞ்சதுதான் அதை ஒரு நாளும் ஒட்டவக்க முடியாது இப்போ அதைப்பத்தி கதச்சு ஒன்றுமாகப் போறல்லதில்லை விளங்கிட்டா?"

"நித்திக்கா நான் சொல்லுறத தயவு செஞ்சு கேளுங்கோ நீங்க என் வர்த்தனக் கல்யாணம் கட்டிக்கோங்க"

"நீ என்ன லூசா நயனி, ஊருல இல்லாத ஒரு விஷயத்தை சொல்லிட்டிருக்க. புருஷன ஏற்கனவே காதலிச்சவளோட சேர்த்து வக்க நினைக்குற. இங்கப்பாரும்மா நீ என்மேல இருக்குற இரக்கத்துலதான் இதையெல்லாம் சொல்லுறாய் என்று எனக்கு நல்லாவே விளங்குது ஆனால் நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட எனக்கு கல்யாணமாயிடுச்சு ஒரு மகனுமிருக்கான். காதலியா மட்டுமிருந்தாலும் பரவாயில்ல நான் இன்னொருத்தனோட பொண்டாட்டியா வாழ்ந்து புள்ளையும் பெத்துக்கிட்டேன்."

"அதனால என்னக்கா உங்க ஆதித்யனுக்கு என் வர்த்தன் நிச்சயமா நல்ல தகப்பானா இருப்பார்"

"சீச்சீ சும்மா நிறுத்து நயனி கேக்குறதுக்கே அசிங்கமா இருக்கு. வார்த்தைக்கு வார்த்த என் வர்த்தன் என் வர்த்தன் என்று சொல்லுறாயே நீ எனக்கு அவர விட்டுத் தந்துட்டு தியாகிப் பட்டம் வாங்கப் போறாயா? அதுக்குப் பிறகு நீ என்ன செய்யப் போற?" அவளின் இறுதிக் கேள்வியை கவனியாதவள் போன்று

"சொரி சொரி நித்திக்கா இனிமேல் என் வர்த்தனை ஐயோ... ஆதித்யனை அப்படிக் கூப்பிட மாட்டேன் அப்போ அவரை கட்டிக்குறதுல உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லல்ல" அவளின் பேச்சில் மறுபுறம் தலையிலடித்துக் கொண்ட நித்திலா

"இப்போ நீ மட்டும் என் முன்னுக்கு இருந்த அப்படியே உன் கன்னத்துல ஓங்கி ஒரு அறை அறஞ்சிருப்பேன். நானும் உனக்கு விளங்குற மாதிரி இதமா பதமா சொல்லிட்டிருக்கேன் நீ என்னடா என்றால் திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டிருக்க. ம்.... எப்படி நயனி நீ என் வாழ்க்கைய தீர்மானிக்கலாம் இந்த உரிமைய யார் உனக்கு கொடுத்தா? நான் கொடுத்ததா எனக்கு ஞாபகமில்ல இங்கப்பார் இதுக்கு மேல கல்யாணம் கத்தரிக்கா என்று ஏதாவது கதைச்சிட்டு உன் வாழ்க்கையையும் அழிச்சு உன் புருஷனோடதையும் சேர்த்து அழிச்சுக்க அது உன் விருப்பம். என் வாழ்க்கையில தலையிட வந்த உன் நித்திக்காவ வேற மாதிர பார்ப்ப. அடுத்தவ புருஷனுக்கு அழையுறவ என்று நினச்சுட்டயா என்னை. அப்படி உன் புருஷனுக்கு இன்னொருத்திய கட்டித்தான் வக்கனுமென்றால் அந்த ஷனாவ கட்டி வை இப்போ போன வை" கோபமாய் கத்தி விட்டு அழைப்பை பட்டென்று துண்டித்துவிட்டாள் நித்திலா. அதிர்ந்து நின்ற நயனதாராவை பார்த்த ஆதித்யன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் அவனுடன் தாரணியும் சங்கரும் சேர்ந்து கொள்ள மூவரையும் முறைத்தவள்.

"ஏங்க எதுக்கு என்னப் பார்த்து இப்படி சிரிக்குறீங்க மூனு பேரும் இப்ப நிப்பாட்டப் போறயலா இல்லையா?" அப்போதும் அவர்கள் தொடர்ந்து சிரிக்க அவள் கோபம் கொண்டு திரும்பி நடக்கலானாள் சிரிப்பை நிறுத்திய ஆதித்யன் விரைந்து சென்று அவளை தடுக்க

"ஏன் நித்திக்கா இப்படி சொன்னாங்க? அவங்களுக்காகத்தானே நான் சொன்னேன்."

"தாராம்மா என்னால முடியல்லம்மா இங்கப்பாரு நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. அதை மட்டும் ஞாபகம் வச்சிருந்தா உனக்கு இந்த மாதிரி எல்லாம் எண்ணம் வரவே வராது. அந்த விக்‌ஷ் என்கிட்ட கதைக்கும் போதெல்லாம் இந்த கண்ணு மொறச்சு மொறச்சுப் பார்த்துச்சுல்ல அதுதான் நமக்குள்ள உள்ள உறவு"

"ஆ... விக்‌ஷ்ன்னு சொல்லும் போதுதான் ஞாபகம் வருது அவளை நீங்க காதலிக்கவே இல்லல்ல அப்போ அவகூட எதுக்கு ஒட்டி உரசிக்கு சிரிச்சுட்டு இருந்தீங்க?" அவள் கண்களை உருட்ட தன்னவளை ரசித்தவாறே

"அப்பாடா என்னோட சந்திரமுகி திரும்பி வந்துட்டா. ஆ.... இதுதான் ஒரு பொண்டாட்டிக்கு அழகு." ஆதித்யனின் பேச்சில் தாரணியும் சங்கரும் சிரிக்க அவர்களைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தவள் கணவனிடம் திரும்பி

"விளையாடாதீங்க சொல்லுங்க?" அப்போதும் அவன் அவளை கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்க கடுப்பானவள்

"சொல்லுங்க என்று சொல்லுறேனில்ல" சற்று அதட்டலாகக் கேட்க

"ஐயோ என் பொண்டாட்டி உண்மையாவே சந்திரமுகியா மாறிட்டா மச்சி இந்த முட்டக் கண்ணை வச்சு மொறைக்காதடி சரி சரி சொல்லிடுறேன். விக்‌ஷ் கூட நான் சிரிக்க நீ அவளை மொறைக்க அந்தக் காட்சியப் பார்க்க நல்லா இருந்துச்சா அதான்."

"அந்த வீட்டுல தானேடா நானும் இருந்தேன் இதெல்லாம் வேற நடந்துச்சா நான் அதை கவனிக்கவே இல்லையே" சங்கர் ஆச்சரியமாக வினவ

"அதுக்கெல்லாம் உனக்கு எங்கடா டைம். உனக்கு கவனிக்கத்தான் வேற வேலை இருந்துச்சே மச்சி" தாரணியைப் பார்த்தவாறு ஆதித்யன் கூற அதில் தாரணி வெட்கப்பட சங்கரோ அசடு வழிந்தான். இதற்குள் நயனியோ கோபங் கொண்டவளாய்

"அதெல்லாம் பிறகு கதைச்சுக்கோங்க இப்போ என்னோட கேள்விக்கு விளையாடாம ஒழுங்கா பதில் சொல்லுங்க?"

"ஏன் ரவுடி பேபி இவ எப்பயும் இப்படித்தானா?" தாரணி சிரிக்க நயனி அவனை முறைக்க

"சரி முறைக்காத சொல்லுறேன். நம்ம கல்யாணத்துக்கு முன்ன ஆச்சி விக்‌ஷத்தான் எனக்கு கல்யாணம் கட்டி வைக்க நினச்சாங்க அம்மாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்ல ஆனால் ஆச்சிக்காக என்கிட்ட வந்து கேட்டாங்க. என்னால விக்‌ஷை அந்த மாதிரி ஒரு உறவுல பார்க்க முடியல்ல அதனால முடியாதுன்னு அப்பவே ஸ்டிரிக்டா சொல்லிட்டேன் இங்கப்பார் தாரா எனக்கு அக்காளுங்க மாதிரிதான் அந்த விக்‌ஷும் ஒரு தங்கச்சி. அவ்வளவுதான் வேற எந்த எண்ணமுமில்லை அது எப்போதும் இருந்ததுமில்லை இனி இருக்கப் போறதுமில்ல இப்போ எல்லாம் கிளியரா?" அவள் ஆம் எனத் தலையாட்ட பக்கதிலிருந்த புற்செடியில் பூக்களுடன் சேர்த்து ஒரு கந்தை முறித்தவன் அதை பூங்கொத்துப் போலாக்கினான்.

"இந்த பழைய ஜோடிய சாட்சியா வச்சு புது ஜோடியாகப் போறதுக்காக நான் இப்போ உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணப் போறேன்." என்று அவன் சொன்னதும் தாரணியும் சங்கரும் பழைய ஜோடியா எனக் குழம்ப முழங்காலை மடித்து தரையில் பதித்து மற்றைய காலை மடித்து ஆங்கிலேயர் பாணியில் நின்றவன் அவளிடம் அந்த பூங்கொத்தைக் கொடுத்து விட்டு

"ஐ லவ் யூ தாரா வில் யூ கம் டூ லைவ் வித் மீ?" அவள் கண்ணீருடன் ஆம் எனத் தலையாட்ட

"லெட்ஸ் ஸ்டார்ட் அவ லைஃப்? ம்.... நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கலாமா?" என்று காதல் பொங்கக் கேட்டவனிடமிருந்து பூங்கொத்தை வாங்கியவாறு

"ஐ லவ் யூ டூ வர்த்தன்." என்றவள் அவனின் மற்றைய கேள்விக்கு வெட்கத்தைப் பதிலாகக் கொடுத்தாள். எழுந்தவன் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் நட்பூக்கள் இரண்டும் மனநிறைவோடு மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தனர்.

"டேய் மச்சான் நீ யாரப் பழைய ஜோடின்னு சொன்ன?" சங்கர் இழுக்க

"உங்களைத்தான் இங்க வேற யாராவது இருக்காங்களா என்ன?"

"சொரிடா மச்சான் தாருவ உனக்கு நான் இன்னும் இன்ட்ரோ பண்ணல்ல இல்ல சொரிடா."

"நீ ஒன்னும் பண்ணத்தேவயில்ல எனக்கு எல்லாம் தெரியும் முழிக்காத கல்யாணம் முடிஞ்சு கொழும்புக்குப் போற அன்று தாரணியப் பார்த்து கண்ணீர் வடிச்சியே ராசா அன்றே எனக்குத் தெரியும். நீயா சொல்லுவ என்று நினச்சேன் சரி விடு இப்பவாலும் சொல்லத் தோணிச்சே"

"இல்லடா மச்சான் நீ கல்யாண பிஸி பிறகு ஆயிரத்தெட்டுப் பிரச்சனை எல்லாத்துக்கும் மேல இந்த ரவுடி பேபி ஒத்துக்கவே இல்லை அவ ஓகே சொன்னதும் உன் முன்னாடி கூட்டிட்டு வந்து நிற்கலாம் என்று நினச்சேன் ஆனால் அவ எப்போ ஓகே சொன்னா தெரியுமா நீங்க நித்திய பார்த்த அன்று அதுக்குப் பிறகு என்னன்னமோ நடந்துடுச்சு அதான்டா சொல்ல முடியல்ல அதுசரி நியாயமா நீங்கதான் பழைய ஜோடி எங்களுக்கு சீனியர். ஆனால் நீ ஏன் எங்கள சொல்லுற?"

"ஓ அதுவா... சட்டப்படி நாங்கதான் பழசு ஆனால் சம்பிரதாயப்படி நீங்க பழசாகிட்டீங்களே" அவன் பேச்சு விளங்காது மூவரும் முழிக்க

"நியாயமா நாங்க இன்றைக்குத்தானே ப்ரபோஸ் பண்ணிருக்கோம் அதுவும் உங்க முன்னாடி அப்போ நாங்க புதுசு தானே" அவனின் விளக்கத்தில் அனைவரும் சிரித்தனர். நால்வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குச் செல்லத் தயாராக அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய்

"ஏங்க நாளையன்றைக்குக்கு தீ மிதிக்குற பூஜையிருக்கு அதுக்கான ஏற்பாடுகளை செய்யனும் அதோட தீ மிதிக்குறதுக்கு முன்ன என்னன்ன செய்யனும் என்று பூசாரி ஐயாக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கனும் அதுக்குத்தான் பூசாரி ஐயாவைப் பார்த்துட்டு போக நாங்க இங்க வந்தோம் கொஞ்ச நேரம் இவ கூட கதைச்சிட்டு போகும் போது எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுக்கலாம் என்று நினைச்சேன். அதுக்குள்ள நீங்க வந்து என்னன்னமோ நடந்துடுச்சு அந்த விசயம் எனக்கும் மறந்துடுச்சு. வாங்க உள்ள போய் பூசாரி ஐயாவை சந்துச்சுட்டுப் போகலாம்"

"தாரா நீ வீட்ட விட்டு வாரதுக்குத்தானே எல்லாரும் நம்புற மாதிரி நேரத்திக்கடன் தீக்கப் போறேன் தீ மிதிக்கப் போறேன் என்று சொல்லிட்டு வந்த எல்லாந்தான் கிளியராயிடுச்சே இப்போ எதுக்கு பூஜையெல்லாம்?"

"இல்ல வர்த்தன் நான் வீட்ட விட்டு வாரதுக்கு ஒரு காரணமாச் சொன்னேனே தவிர நான் நேர்ந்துக்கிட்டது உண்மைதான் அதனால பூசாரியச் சந்திக்கத்தான் வேணும் கோயிலுக்குள்ள போகலாமே"

"வேணுமென்றா அம்மனை கும்பிட்டு நன்றி சொல்லிட்டு போகலாம் இந்த நேர்ச்சை தீ மிதி அதெல்லாம் வேணாம் என்ன?"

"இல்லங்க நேர்ந்துட்டு கடவுள் அதை நமக்கு சரியாத் தந்த பிறகு அப்படியே அதை நிறைவேத்தாம விடுறது கடும் பாவமுங்க அதுவும் நீங்க குணமாகத்தானே வேண்டிக்கிட்டேன் உங்களை நல்லபடியா குணமாக்கித் தந்ததுமில்லாம முழுசா எனக்கே எனக்கானவரா வேற தந்திருக்கா இந்த அம்மன், அதனால நான் கட்டாயம் இந்த வேண்டுதல நிறைவேத்தனுங்க தயவு செஞ்சு என்னை தடுக்காதீங்க ப்ளீஸ்"

"சரி, அப்படியென்றால் அதுக்காக இந்த கோயிலுக்கு காணிக்கை, இல்லாதவங்களுக்கு தானதருமம் அப்படியில்லாட்டி அன்னதானம் மாதிரி ஏதாவது வேண்டிருக்கலாமே எதுக்குத் தாரா உன்னை வருத்திக்குகிற மாதிரி இப்படிக் கஷ்டமானதை வேண்டிக்கிட்ட?"

"அப்படியில்லைங்க தானதருமம் அன்னதானம் எல்லாம் நம்ம புண்ணியத்துக்காக செய்யுறது ஆனால் நேர்ச்சை நமக்காக நம்ம தேவைய அந்த அம்மன் நிறைவேத்துறதுக்காக வக்கிறது. நம்ம தேவைக்காக நம்மளத்தானே வருத்திக்கனும் அதனாலதான் இப்படியொரு நேர்ச்சை சரிங்க நீங்க விருப்பப்பட்டா அன்னதானம் கொடுத்துடலாம் அத்தோட கோயிலுக்கும் ஏதாவது செஞ்சுடலாம் என்ன ஓகேவா?"

"ஓகே ஓகே எல்லாம் செஞ்சுடலாம். சரி சரி வாங்க உள்ள போகலாம்" கோவிலுக்குள் சென்று கடவுளுக்கு நன்றி சொன்னவர்கள் நாளை மறுநாள் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு மறக்காமல் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்.

வளரும்....

கருத்துக்களுக்கு💙👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.☁🌕

நிலவு - 35

முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வீட்டினுள் நுழைந்த தன் பேரனையும் நயனியையும் கண்ட தனலட்சுமி ஆறுதலடைந்தவராய் வாசலுக்கே சென்று அவர்களை வரவேற்றார்.

"அட வாங்கப்பா உங்களைப் பார்த்த பிறகுதான் நிம்மதியா இருக்கு. உன் ஊட்டுக்காரியக் கூட்டத்தான் அந்த ஓட்டம் ஓடினாயா?" தனலட்சுமியின் கேள்வியில் ஆதித்யன் சிரிக்க

"என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு ஆளப்பாரு நான் இங்க பயந்தே போயிட்டேன்"

"ஏன் பாட்டி?"

"பிறகு பயப்படாம என்ன செய்வாங்க? நீ பாட்டுக்கு வந்த தாரா எங்கன்று கேட்ட கோயிலுக்குப் போயிருக்கா என்று நானும் சொன்னேன் எந்தக் கோயிலுன்னு கேட்ட பதில் சொன்னதுதான் தாமதம் நீ எப்போ வந்த எப்படி வந்த என்று கேட்குறதுக்குல்ல நின்ட எடத்துல உன்னைக் காணல்ல."

"அது வந்து பாட்டி...."

"சும்மா இழுக்காத எனக்கு எல்லாம் தெரியும்." அவர் ஒரு போடு போட மற்றையவர்கள் அதிர்ந்து விழித்தனர். ஆனால் நயனி மட்டும் அமைதி காக்க அவளை பார்த்தவாறே

"உனக்கு மேல உன் பொண்டாட்டி. இந்த நயனா என்னடான்னா வந்ததும் வராததுமா பூசாரியப் பார்க்கனும் இந்த தாரணிப்புள்ள கூடக் கொஞ்சம் கதைக்கனுமென்னு அவளை கூட்டிட்டு கோயிலுக்குப் போயிட்டு வாரேன் என்று போயிட்டா. வந்தவ சாப்பிடக்கூட இல்லை வந்த நீயும் அவ பின்னாடியே ஓடிட்ட அப்போதுல இருந்து இங்கதான் நின்னுட்டிருக்கேன். அதுசரி ஆதி நயனாவக் கூட்டிட்டிட்டுப் போகத்தான் உன்னை அனுப்புறதா காயு சொன்னா ஆனால் நீ எங்கப் பின்னாடியே வந்திருக்க அதுவும் நீ வரப் போற என்று ஒரு வார்த்தை சொல்லல என்னப்பா ஊட்டுக்காரம்மாவ விட்டுட்டு இருக்க முடியல்லையோ?" பேரனை வம்புக்கிழுத்தார் தனலட்சுமி.

"ஓம் பாட்டி கொஞ்சங்கூட அவளை பிரிஞ்சு இருக்க முடியல்ல அதான் அவ பின்னாடியே நானும் வந்துட்டேன்" நயனதாராவைப் பார்த்தவாறே அவன்கூற அதனைப் பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமிக்கோ
'அப்பாடா இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இருந்த பிரச்சனை சரியாயிடுச்சு போல இது போதும் எனக்கு' எண்ணியவர் சிறிது நேரம் பேரன்களுடன் கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்க அதுவரை எதுவும் பேசாது இவர்களின் உரையாடலை சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நயனி

"அது சரி பாட்டி எங்க சாவித்ரி அத்தைய காணல்ல அதோட காவியா சஞ்சுக்கா யாரையும் காணல்ல எங்க எல்லோரும்? நாம வரும் போது இருந்தாங்களே."

"ஓம் பாட்டி நானும் கேக்கனுமென்று நினைச்சேன் நாங்க வந்து இவ்வளவு நேரமாயிடுச்சு அவங்க யாரையும் காணல்லயே எங்க அவங்க?" தாரணியும் கேட்க

"நயனாம்மா நீ வரும் போது எல்லோரும் இங்கதான் இருந்தாங்க நீதான் கால்ல சுடுதண்ணி ஊத்தின மாதிரி வந்த உடனேயே கோயிலுக்கு ஓடிட்டாயே பிறகு உனக்கு எப்படி தெரியுற ம்.... நாளைக்கு சஞ்சுவோட மச்சினருக்கு நிச்சயதார்த்தம் அதனால அவங்க எல்லோரும் சஞ்சனாவோட மாமியார் வீட்டுக்குப் போயிருக்காங்க. வவுனியாக்கு அநேகமா நாளை கழிச்சுத்தான் வருவாங்க."

"ஓ... அப்படியா?"

"சரி சரி இங்க நின்னு கதைச்சதெல்லாம் போதும் உள்ள போய் மிச்சக் கதையக் கதச்சுக்கலாம் இப்போ வாங்க உள்ள போகலாம்" என்று உள் அழைத்தவர் அவர்கள் வந்த பின்பும்

"அட வாம்மா மருமகளே வலதுகாலை வச்சு உள்ள வாம்மா"

"என்ன பாட்டிம்மா அதான் நாங்க வந்துட்டோமே திரும்பவும் வாம்மா மருமகளே என்று கூப்பிடுறீங்க என்னாச்சு பாட்டிம்மா?" நயனதாரா வினவ

"அம்மாடி நயனா நீதான் ஏற்கனவே வந்த மருமகளாயிற்றே நான் கூப்பிட்டது உன்னை இல்ல இனி நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகளை அதான் உன்னோட உயிர்த்தோழி தாரணிய"

"பாட்டிம்மா" நயனதாரா இன்பமாய் அதிர தாரணியோ வெட்கத்துடன் தரை நோக்க சங்கரன் மெலிதாக புன்னகைக்க ஆதித்யனோ நடப்பது எதுவும் விளங்காது குழம்பினான். அவனின் குழப்ப முகத்தைப் பார்த்த தனலட்சுமி

"ஆதி இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புற விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் கண்ணா அதுவும் உனக்கு எக்ஸிடென்ட் ஆனப்பவே"

"என்ன சொல்லுறீங்க பாட்டி அப்பவேவா?"

"ஓமப்பா அப்பவேதான் எனக்கு இதுல முழு சம்மதம் இப்பதானே ஊருக்கு வந்திருக்கேன் இனி தங்கத்துகிட்டேயும் வாசுகிகிட்டேயும் கதைச்சு தாரணிம்மா வீட்டுல கதைக்க வேண்டியதுதான் அதுக்குப் பிறகு இவங்க கல்யாணம்தான்." அவர் கூறியதைக் கேட்ட மூவரும் மகிழ்ச்சியில் துள்ள மகிழ்ந்த போதும் தாரணியின் முகமோ சோகத்தைக் காட்டியது.

"என்ன தாரணி ஒரு மாதிரி ஆகிட்ட?" அவளை முதலில் கவனித்த ஆதித்யன் அவளிடம் வினவ ஒன்றுமில்லை என தலையாட்ட அப்போது

"இல்லைடி தாரு அவர் கேக்குறது சரிதான் உன் முகமே சரியில்லையே என்னாச்சுடி திடீரென்று உம்மன்னாம் மூஞ்சி ஆகிட்ட" அவள் அப்போதும் இல்லை என்று தலையசைக்க

"தாரணிம்மா என்ன யோசிக்குற உன்னோட கல்யாண விசயந்தானே கதைச்சிட்டிருக்கோம் நியாயமா நீ சந்தோசப்படனும் ஆனால் அந்த சந்தோசத்தோட சேர்த்து ஒருவித குழப்பமும் கவலையும் உன் முகத்துல நிறஞ்சிருக்கு என்னதான் பிரச்சனை என்று இந்த பாட்டிக்கிட்ட சொல்லும்மா"

"....." எதுவும் கூறாது அவள் மௌனம் சாதிக்க மீண்டும் நயனியும் தனலட்சுமியும் அவளை வற்புறுத்த சங்கரின் முகம் அமைதியைக் காட்ட அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன் ஒரு முடிவெடுத்தவனாய்

"ஏய் ரவுடி பேபி உங்க வீட்டுல இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்க அதைத்தானே யோசிக்குற அதனாலதானே உன் முகம் இப்படி ஒரு ரியக்ஸன காட்டுது எம் ஐ கரெக்ட்?" அவனின் கேள்வியில் அதிர்ந்து விழித்தாள் தாரணி அவளின் அதிர்ந்த தோற்றமே அதுதான் காரணம் என்பதை மற்றையவர்களுக்கு உணர்த்த தன்னை சுதாகரித்துக் கொண்ட தாரணியும் ஆம் என தலையசைத்தாள்.

"பாட்டிம்மா இதைப்பற்றி ஏற்கனவே நான் கரன்கிட்ட கதைச்சிருக்கேன். ஆனால் உங்களுக்கிட்டயும் சொல்லுறதுதான் முறை. எங்க வீட்டுல இந்த காதல் கல்யாணத்துக்கெல்லாம் ஒத்துகிட மாட்டாங்க. அதுவும் எங்கப்பாம்மா ஒத்துக்கிட்டாலும் என்னோட பெரியம்மாவும் மாமாவும் அதை நடக்க விட மாட்டாங்க. அதான் யோசனையா இருக்கு இதுக்காகத்தான் ஆரம்பத்துல அவரை புடிச்சிருந்தாலும் நான் கரனை விட்டு விலகிப் போனேன் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல என்னாலயும் தாங்க முடியாமத்தான் என் விருப்பத்தை ஒத்துக்கிட்டேன். இப்போ என்ன செய்யுறதுன்னு ஒன்றும் விளங்கல்ல உங்க எல்லோரோட சம்மதமும் கிடச்சி என் கரன் எனக்கு கிடச்சிருவாரென்று சந்தோசப்படுறதா? இல்லை எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னு கவலைப்படுறதா? எனக்கு எதுவும் விளங்கல்ல பாட்டிம்மா"

"இங்கப்பாரும்மா தாரணி நீ இதப்பத்தி எல்லாம் யோசிச்சு குழம்பாத உங்க காதல் விசயம் யாருக்கும் தெரியாம பார்த்துக்கிடலாம் நாங்களே பொண்ணு கேட்டு வந்த மாதிரி இருக்கட்டும் சரியா?" அவரின் வார்த்தையில் ஆறுதலடைந்தவள்

"பாட்டிம்மா ஒரு விசயம் இப்போதைக்கு இந்தக் கல்யாணம் வேண்டாமே ஏன்னா நிச்சயமா எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க அதுக்குக் காரணம் நான் இப்போதான் கொலீஜூல ஃபெஸ்ட் இயர் முடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு வருஷத்துல மொத்தமா முடிஞ்சுடும். அதுக்குப் பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாமே அப்படியில்லாம இப்பவே நீங்க பேச வந்தா அவங்களுக்கு சந்தேகம் வந்துடும் கல்யாணமும் கட்டித் தர மாட்டாங்க. மொத்தமா நான் என்னோட கரனை மறக்க வேண்டியதாயிருக்கும் எங்க பெரியம்மாக்கு இந்த காதல் கல்யாணமெல்லாம் அறவே பிடிக்காது அவங்க நினைக்குறதத்தான் செய்ய நினைப்பாங்க எங்க சந்தோசத்தைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க அவங்க பார்வையில காதல் என்றால் பாவம் என்று நினைக்குறவங்க அதனாலதான் சொல்லுறன் பாட்டி நானும் என் படிப்ப முடிச்சாத்தான் என்னாலயும் அவங்களை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வக்க முடியும். அப்படியில்லாட்டி என் படிப்பு பாழாக என் கரன்தான் காரணம் என்று பழி போட்டுவாங்க அந்த மாதிரி ஒரு களங்கம் என் கரனுக்கு வரக்கூடாது. எங்க காதலையும் கொச்சப்படுத்திடுவாங்க அதுமட்டுமில்ல இந்த விசயம் தெரிஞ்ச உடனே கண்டவனுக்கு என்னைக் கல்யாணமும் கட்டி வச்சுடுவாங்க. கரனில்லாத வாழ்க்கைய என்னால நினச்சுக்கூட பார்க்க முடியாது. அதுக்காகத்தான் யோசிச்சு இப்படியொரு முடிவெடுத்திருக்கேன். இதைப்பற்றி ஏற்கனவே கரன்கிட்ட கதைச்சுட்டேன். என்னோட நிலமைய நீங்களும் விளங்குவீங்க என்று நம்புறேன்" தாரணி பேசி முடிக்க நித்திலாவின் விசயத்திலும் இதுதான் நடந்திருக்கின்றதென நண்பர்கள் இருவரும் புரிந்து கொண்டார்கள்.

"பாட்டி தாரு என்னோட ஏற்கனவே சொல்லிட்டா எப்ப இருந்தாலும் அவதான் என் பொண்டாட்டி அதனால நானும் இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் கட்டிக்க சம்மதிச்சிட்டேன்." சங்கர் உறுதியாகக் கூற

"ஓம் பாட்டிம்மா தாரு வீட்டுல இந்தப் பிரச்சனை இருக்கு தாரு அம்மாப்பா ரொம்ப நல்லவங்க. அவங்க சம்மதிச்சுடுவாங்க ஆனால் இந்த பெரியம்மாவும் மாமாவும் அவங்கள சம்மதிக்க விடமாட்டாங்க." நயனியும் தன் பங்குக்கு தாரணி வீட்டைப் பற்றி எடுத்துரைக்க

"ஓ... இவ்வளவு சிக்கலிருக்கா சரிதாம்மா உன்னோட படிப்பு முடியட்டும் அதுக்குப்பிறகு நாம கல்யாணத்தை வச்சுக்கலாம். இப்போதைக்கு தங்கத்துக்கிட்டயும் வாசுகிட்டயும் விசயத்தை சொல்லிடலாம் அவங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க"

"ஐயோ பாட்டி சொதப்பிடாதீங்க"

"ஏன்டா சங்கரு இப்படி சொல்லுறாய்?"

"அவங்களுக்கு தெரிஞ்சா அடுத்த நிமிசம் தாரணி வீட்டுக்குப் போயிடுவாங்க பொண்ணு கேட்டு அதுக்குப் பிறகு எல்லாம் கொலாப்ஸாகிடும்"

"ஐயோ அப்படியா சொல்லுற?"

"பாட்டிம்மா இப்போதைக்கு நம்ம ஐஞ்சு பேருக்கு மட்டும் தெரிஞ்சிருக்கட்டும் மற்றவங்களுக்கு தெரிய வேணாமே ப்ளீஸ் பாட்டிம்மா" தாரணி கெஞ்சலாகக் கேட்க

"சரிம்மா நான் யாருட்டயும் சொல்லல்ல நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்து எங்களுக்கு கல்யாணம் கட்டி வைங்கோன்னு கேக்குறீங்களோ அன்றைக்கு எல்லாருட்டயும் சொல்லிக்குறேன் என்ன இது ஓகேவா?"

"டபுள் ஓகே பாட்டி" நால்வரும் கோரசாக கத்தினர்.

"சரி சரி பாட்டி வரும் போது பொண்டாட்டிய பார்க்குற ஆசையில சாப்பிடவே இல்லையா இப்போ பயங்கரமா பசிக்குது சாப்பாடு ரெடியா பாட்டி?" ஆதித்யன் தனலட்சுமியிடம் கேட்க

"ஓம் ஆதி கனகாகிட்ட அப்பவே சொல்லிட்டேன் எல்லாம் தயாரா மேசையில எடுத்து வச்சிருப்பா வாங்க சாப்பிடலாம் சங்கர் தாரணிம்மாவையும் கூட்டிட்டு வாப்பா"

"இல்ல பாட்டி நான் வீட்டுக்குப் போறேன் நீங்க மத்தவங்களை சாப்பிட கூட்டிட்டுப் போங்க"

"தாரணிம்மா இங்கப்பாரு நீ சொன்னதை நான் கேட்டனில்ல அப்போ நான் சொல்லுவத நீயும் கேட்கனும் தானே." அவள் தயக்கத்துடன் ஆம் எனத் தலையாட்ட

"அப்போ இன்றைக்கு எங்களோடதான் சாப்பிடுற சங்கரு கூட்டிட்டு வா ஆதி நீயும் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வாப்பா" என்றவாறே தனலட்சுமி சாப்பாட்டறையை நோக்கி நடந்தார். அனைவரும் வந்தமர்ந்ததும்

"தாரணி இது உன்னோட வீடு மாதிரி நினச்சுக்கோ தயக்கமில்லாம நல்லா சாப்பிடு சங்கரு உன் வருங்கால ஊட்டுக்காரிய இப்பவே நல்லா கவனிச்சுக்கடா" என்று கட்டளையிட்டவர் நயனியின் புறம் திரும்பி

"அம்மாடி நயனா உனக்காகத்தான் கோழி, முட்டை என்று அசைவமா சமைக்கச் சொன்னேன் நாளையிலயிருந்து கோயில்ல நேர்ச்ச முடிக்குறவரை மச்சம் மாமிசம் எதுவும் சாப்பிடக் கூடாது தனி சைவ சாப்பாடுதான் சாப்பிடனும் அதுக்காகத்தான் அசைவம் சமைக்கச் சொன்னேன்"

"என்ன சொல்லுறீங்க பாட்டி அப்போ இரண்டு நாளைக்கு என் தாரா மச்சம் மாமிசம் எதுவுமே சாப்பிடக் கூடாதா?"

"கூடாதுப்பா."

"அப்போ எனக்கும் சைவமே செஞ்சுடுங்கோ அதுமட்டுமில்ல இந்த வேண்டுதல்ல என் தாராக்கூட என்னால என்னெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நானும் செய்யப் போறேன் அவளுக்குப் பக்கத்துணையா கடைசி வர இருப்பேன்." உணர்ச்சி பொங்கச் சொன்ன தன் பேரனின் காதல் மனது முழுவதுமாய் பாட்டிக்குப் புரிய

"சரிப்பா அப்படியே செஞ்சுடலாம். ஒரு புருஷன் தன் பொண்டாட்டிக்கிட்ட அதுவும் இந்த மாதிரி நேரத்துல நான் உன் கூடத்தான் இருக்கேன் என்று உணர வைக்குறத விட அந்தப் பொண்டாட்டிக்கு வேற என்ன சந்தோசம் இருக்கப் போகுது சொல்லு. நயனா ஆதிக்கு நீ கிடச்சதுதான் அதிஷ்டம் என்று சொன்னேனில்ல இப்போ சொல்லுறேம்மா நீயும் ரொம்பக் கொடுத்துவச்சவதான் இப்படியொரு புருஷன் கிடச்சிருக்கானே அப்போ நீயும் அதிஷ்டக்காரிதான் நயனாம்மா." தன் கணவனை பெருமை பொங்கப் பார்த்தவாறே கண்கள் கலங்க ஆம் எனத் தலையாட்டினாள் நயனதாரா.

"என்ன நயனி இது சின்னப்புள்ள மாதிரி கண்ணைக் கசக்கிக்கிட்டு பாட்டி சொல்லுற மாதிரி உன்னோட வாழ்க்கையில நான் வந்தத விட என் வாழ்க்கையில நீ வந்தது தான் நான் செஞ்ச புண்ணியம்." ஆதித்யனும் உணர்ந்து கூற

"நயனி யூ ஆர் லக்கிடி" தன் தோழிக்காக உண்மையாக சந்தோசப்பட்டாள் தாரணி ஏற்கனவே கணவனின் வார்த்தையில் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தவள் தன் தோழியும் பாராட்ட சிறகின்றி வானிலே பறந்தாள்.

"தாரணிம்மா நீயும் அதிஷ்டக்காரிதான் ஆனால் கல்யாணமான பிறகு பாரு எந்தளவுக்கு அதிஷ்டக்காரி என்று. சரி சரி சாப்பிடும்மா. நயனா நீயும் நல்லா சாப்பிடும்மா ஆதி உன் ஊட்டுக்காரிய கவனிக்குறது உன்னோட வேல" ஆதிக்கும் கட்டளையை பிறப்பித்தவர் இளசுகளுடன் தனக்கும் ஒருதட்டு வைத்துக் கொண்டு அமர்ந்தார்.

சாப்பிட்டு முடிந்ததும் அனைவரும் சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின் சங்கர் தாரணியை வீட்டில் விட்டுவிட்டு தானும் தன் வீட்டிற்கு செல்வதாய் அனைவரிடமும் விடை பெற தாரணியும் மற்றையவர்களிடம் கூறிக் கொண்டு தன் தோழியை அணைத்து கோயிலில் சந்திப்பதாய் கூறி விடைபெற்றாள். அவர்கள் சென்றதும் ஆதித்யன் நயனியை தன்னுடன் அழைக்க

"ஆதி, நயனா என்னோட தூங்கட்டும் ஏன்னா அவ கோயில்ல நேர்ச்சைய நிறைவேத்துற வரை சுத்த பத்தமா இருக்கனும். அதனால அவ என்கூடவே தூங்கட்டும் நீ போய் உன்னோட ரூம்ல தூங்குப்பா இன்னும் இரண்டு நாள் தானே பொறுத்துக்கோ என்ன?"

"என்ன இரண்டு நாளா?"

"ஓமப்பா, ரெண்டே நாள்தான் அதுசரி நயனா நீ கோயில் நேர்ச்ச முடிஞ்சதும் உங்க அம்மா வீட்டுக்குப் போறதாச் சொன்னயில்ல"

"என்ன? இல்ல இல்ல நாங்க எங்கயும் போகல்ல" ஆதித்யன் கட்டளையாகக் கூற

"உன் வீட்டம்மாதான் சொன்னா தீ மிதிச்ச பிறகு எங்கம்மா வீடுதான் வசதியின்னும் நான் போகனும் தடுக்கக் கூடாதுன்னும் சொன்னா"

"இல்ல பாட்டி அவ எங்கயும் போக மாட்டா என்னோட இங்கதான் இருப்பா"

"என்னம்மா நயனி அமைதியா நிக்குற"

"அது வந்து பாட்டிம்மா அவர்தான் சொல்லுறாரே பிறகு எப்படிப் போறது?" தனலட்சுமியிடமே அவள் கேள்வியைத் தொடுக்க

"அடப்பாவமே நானும் இதத்தானே சொன்னேன் அந்தப் பிடிவாதம் புடிச்ச இப்ப என்னடா என்றால் என் பேரன் ஒரு வார்த்தை சொன்னதும் மறுவார்த்தை கதைக்காம நிக்குற"

"அவர் சொன்ன பிறகு அப்பீல் ஏது பாட்டி?"

"பாட்டி அது சொல்லுறவங்க சொல்லனும்."

"அது என்னம்மோ உண்மைதான்டா நானும் எவ்வளவோ சொன்னேன் கேட்கவே இல்லை ஒரு வழியா ரெண்டுநாள் மட்டும் தங்க சம்மதிச்சா. ஆனால் பாரு நீ சொன்னதும் பொட்டிப் பாம்பா அடங்கிட்டாளே" அவரின் பேச்சில் தம்பதிகள் சிரிக்க

"சரி சரி சிரிச்சது போதும் ஊருல இருந்து வந்தது ஒருத்தருக்கும் ஓய்வில்ல ஆதி போப்பா போய் தூங்கு. நயனா என்கூட வாம்மா" என்றவாறு அவர் அறைக்குச் சென்றார். அவர் தலை மறைந்த அடுத்த நொடி தன் மனைவியை கை வளைவில் கொண்டு வந்தவன்

"என்ன தாரா ரெண்டு நாள் உன்ன விட்டுப் பிரிஞ்சிருக்கனுமா?" சோகமே உருவாகக் கேட்க

"ரெண்டு நாள்தானேங்க. பொறுத்துக்கலாம்"

"என்ன தாரா இப்படி சொல்லிட்ட அப்போ என்ன விட்டு இருக்குறதுல உனக்கு வருத்தமில்லையா?"

"வருத்தந்தாங்க ஆனால் அதைவிட இப்போ உங்களுக்காக வேண்டிக்கிட்ட இந்த வேண்டுதல் முக்கியமில்லையா? அதுமட்டுமில்ல இது நம்ம வாழ்க்கைக்கும் ரொம்ப நல்லதுங்க. இங்கப்பாருங்க, மூனு மாசமிருந்த நமக்கு இந்த ரெண்டு நாள் ஒன்னுமில்லதானே"

"அதுவும் இதுவும் ஒன்றா?"

"இல்லதாங்க ஆனால் வேற வழியில்லல்ல"

"நயனா இன்னும் அங்க என்ன செஞ்சுட்டிருக்க ஆதி நீ இன்னும் உன்னோட ரூமுக்குப் போகல்லையா?" அறையிலிருந்தவாறே தனலட்சுமி குரல் கொடுக்க

"இதோ வந்துட்டேன் பாட்டிம்மா" என்று கூறியவாறே அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சிக்க அவனோ அவளை மேலும் இறுக்கி அணைத்தவன் அவள் நெற்றியில் தன் இதழ்களை மென்மையாகப் பதித்து விட்டு அவளிடமிருந்து தனக்கான முதல் அச்சாரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே அவளை விடுவித்தான். அதில் வெட்கம் கொண்டவளாய் அவனை நோக்க முடியாது புள்ளி மானாய் துள்ளியோடியவளை தன் கண்களிலிருந்து மறையும்வரை இதழில் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன் தனதறை நோக்கிச் சென்றான்.


வளரும்.....

Please share your comments here💙👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்☁🌕

நிலவு - 36

கோவிலெங்கும் வேப்பலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனும் இரத்தச் சிவப்பில் பட்டுட்டுத்தி நகை பூண்டு பார்க்கவே பரவசமாய் இருந்தாள். இந்த அலங்காரங்களை ரசித்த வண்ணம் கோயிலை சுற்றி தன் மனையாளுடன் வந்து கொண்டிருந்த ஆதித்யன் ஒரு புறம் தீ மிதிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் தங்கத்துண்டுகள் ஜொலிப்பது போல் பளபளத்துக் கொண்டிருந்த நெருப்புக் கங்குகளைப் பார்த்தவன் அப்படியே நின்று விட அவன் நின்ற காரணத்தை வினவிய மனைவியிடம்

"தாரா இது கட்டாயம் தேவையா? அங்கப்பாரு அந்த நெருப்புக் கங்குகளை பார்க்கவே பயமாயிருக்கு வேணாம்மா உன்னோட மென்மையான பாதங்களை அது பொசுக்கிடும். இதுல விரதம் வேற இருக்க பூசாரி ஐயாகிட்ட கேக்கலாம் இதுக்குப் பதிலா வேற ஏதாவது செய்யலாமா என்று. மத்தியானம் அன்னதானமும் கொடுத்திருக்கோம் அதோட கோயிலுக்கு காணிக்கையும் கொடுக்கப்போறோம் இந்த வேண்டுதலுக்குப் பதிலா பூசாரி என்ன சொல்லுறாரோ அதையும் சேர்த்து செஞ்சுடலாம் ஆனால் இந்த தீ மிதிக்குறது மட்டும் வேண்டவே வேண்டாம் வா தாரா அவரைப் போய் பார்த்துட்டு வரலாம்" அவள் கைகளைப் பிடித்து இழுக்க அதனைத் தடுத்தவள்

"இங்கப்பாருங்க பக்தியோட செஞ்சா எதுவுமாகாது பயப்படாதீங்க அதுமட்டுமில்லங்க வேண்டிக்கிட்டதை நிறைவேத்தாம விட்டா தெய்வக் குத்தமாயிடும் அது நம்ம குடும்பத்துக்கும் நல்லதில்ல ப்ளீஸ் உங்களுக்கு பாக்குறதுக்கு கஷ்டமாயிருந்தா நீங்க இங்க இருக்க வேணாங்க வீட்டுக்குப் போயிடுங்க."

"ஐயோ இல்லத் தாரா நான் இங்கயே இருக்கேன். உன்னை விட்டுட்டு என்னால எங்கயும் போக முடியாது"

"அப்போ எதுவும் கதைக்காம இருங்க ஏதாவது கதச்சீங்க என்றால் இப்பவே வீட்டுக்கு புறப்படுங்க என்ன?"

"சரிம்மா சரி நான் எதுவும் கதைக்கல்ல இங்கயே இருக்கேன்" என்றவன் அமைதியாக நின்ற போதும் அவன் உள்ளம் உள்ளே பதறிக் கொண்டிருந்தது. செந்நிற நெருப்புக் கங்குகளில் அந்த அம்மனை பக்தியுடன் மனதில் நினைத்தவள் தன்னவனுக்காகத்தானே என்றெண்ணிக் கொண்டு கால்களை வைத்தவளுக்கு வலியேதும் தெரியவில்லை ஆனால் பார்த்துக் கொண்டிருந்தவனோ மனதால் வெந்துதான் போனான். வேண்டுதலை சிறப்பாக முடித்தவள் அதனைத் தொடர்ந்த பூஜையையும் முடித்துவிட்டு கோயிலுக்கான காணிக்கையை அவள் கைகளாலே செலுத்தியவள் கோயிலை விட்டு புறப்பட நினைக்கையில் தீயினால் ஏற்பட்ட காயங்களால் அதற்கு மேல் நிற்க முடியாமல் நடை தடுமாற அதைக் கவனித்த ஆதித்யனோ மறுகணம் தன்னவளை கைகளில் ஏந்தியிருந்தான்.

"ஐயோ என்னங்க இது இறக்கிவிடுங்கோ எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அதுவும் கோயில்ல வச்சு எல்லாரும் பார்க்குற மாதிரி இப்படி தூக்கி இருக்கீங்களே "

"என் தாராவ நான் தூக்கியிருக்கேன் இதுல யாருக்கு என்ன கஷ்டம்?"

"ஐயோ அப்பாம்மா, பாட்டி, அத்தை எல்லோரும் இருக்காங்க இறக்கிவிடுங்கோ எனக்கு வெக்கமா இருக்கு ப்ளீஸ்" அவள் கெஞ்ச அதனை பொருட்படுத்தாதவன்

"ஏன் அத்தை, மாமா, பாட்டி அத்தோட சஞ்சு, காவியா, தாரு, உதய் நான் என் பொண்டாட்டிய தூக்கியிருக்குறதுல உங்கள்ல யாருக்காவது ஏதாவது பிரச்சனையா? டேய் சங்கர் மச்சி உனக்கு?" அவனின் கேள்வியில் நயனி நெளிய அவர்கள் சிரித்தவாறே

"எங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை" என கோரஸ் பாட

"பாரு யாருக்குமே பிரச்சனையில்லையாம்"

"நீங்க கேட்டா இப்படித்தான் பதில் சொல்லுவாங்க. முதல்ல என்னை இறக்கி விடுங்கோ நான் மெல்ல மெல்ல நடந்து வாரேன்"

"உன்னாலதான் கொஞ்சமும் முடியல்ல இல்லை"

"இல்லை என் கைய மட்டும் புடிச்சுக்கோங்க நானே மெதுவா நடந்து வந்துடுறேன்"

"ஏய் அக்கா எங்களுக்கு நோ ப்ரப்ளம் உனக்கு என்ன வந்துச்சு இந்த மூமண்ட்ட என்ஜோய் பண்ணுறத விட்டுட்டு மச்சானை மிரட்டிட்டிருக்க. எனக்கு மட்டும் இப்படியொரு சான்ஸ் கிடச்சா நான் யாரைப்பற்றியும் யோசிக்க மாட்டேன் அந்த மூமண்ட்டை மட்டும் ஜொலியா என்ஜாய் பண்ணுவேன் தெரியுமா? அதுக்குத்தான் வழியக் காணல்ல" சோகமாய் உதயா முகத்தை வைத்துக் கொள்ள

"ஏய் வாயாடி என்ன கதச்சுட்டிருக்க பேசாம இரு" ரஞ்சனி அவளை அதட்ட

"ஏய் உதய் சந்தடி சாக்குல உன்னோட கல்யாணத்துக்கு அடிப்போடுறயா?" தாரணி அவள் தலையை உருட்ட

"தாருக்கா நான் சொல்லுறது தப்பா நீயே சொல்லு. எங்கக்கா ஓவரா பண்ணல்ல?"

"அதுசரி உங்கக்கா ஓவராத்தான் பண்ணுறாங்க"

"அதானே ஏய் நயனி உதயாவப் பார்த்து தெரிஞ்சுக்கோ சின்னப்பிள்ளை மாதிரி சீன் போடாதடி அவளவள் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று பார்த்துட்டிருக்காங்க" காவியாவும் தன் பங்குக்கு அவளை ஓட்ட

"என்னம்மா காவியா நீயுமா?" தாரணி அவளையும் சீண்ட

"சீ வாய மூடுங்கடி."

"எதுக்கு நயனி அவளுங்களுக்கு ஏசுறாய் ஒருவகையில அவங்க சொல்லுறது உண்மை தானே?" சஞ்சுவும் இளையவர்களுக்கு சார்பாகப் பேச

"என்னக்கா நீங்களும் அவங்க கூட சேர்ந்துகிட்டு எல்லோரும் பார்க்குறாங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு அதனாலதான் சொல்லுறேன்"

"அப்படிச் சொல்லு சஞ்சு" ஆதித்யன் சொல்ல

" போதும் போதும் முதல்ல நீங்க இறக்கிவிடுங்கோ"

"நயனிம்மா உன்னால நடக்க முடியல்லல்ல அதனாலதானே ஆதி உன்னை தூக்கியிருக்கான்" சாவித்ரியும் அதையே சொல்ல

"ஐயோ அத்தை நீங்களுமா? இல்லை நான் மெல்ல மெல்ல நடந்து வந்துடுவேன் கொஞ்சம் கையப் புடிச்சுக்கிட்டா ஓகே." நயனி சலித்துக் கொள்ள ஆதித்யனோ அவளின் மறுப்பைக் கவனிக்காது இன்னும் இறுக்கமாக அவளை கையிலேந்தியவன் இளையவர்களின் பேச்சில் சிரிப்பும் ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களிடம் திரும்பி

"நான் தாராவக் கூட்டிட்டு வீட்டுக்குப் போறேன். என் கூட வாரவங்க வாங்க டேய் மச்சி பாட்டியோட கார்ல மத்தவங்க எல்லோரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா" என்றவன் தன்னவளை கையிலேந்தியவாறே காரை நோக்கி விரைந்தான். செல்பவர்களைப் பார்த்த நயனதாராவின் பெற்றோரினதும் தனலட்சுமியினதும் கண்கள் ஆனந்தநீரைப் பொழிய
'என்றும் இந்த இளஞ்ஜோடிகள் இப்படி ஒருவருக்கு ஒருவரா காலம் முழுக்க சந்தோசமா வாழனும்' என்று அந்த அம்மனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டு ஆதித்யனைப் பின் தொடர்ந்தனர்.

உதயா, காவியா, சஞ்சனா ஆகியோர் ஆதித்யனின் வண்டியில் ஏற அவர்களுடன் வந்த தாரணி வண்டியிலேறாது சங்கரையே பார்த்திருக்க மற்றையவர்களை தனலட்சுமியின் வண்டியில் ஏற்றிய சங்கரும் தன்னவளையே நோக்கியிருந்தான். இந்த ஊமை நாடகத்தை பார்த்த ஆதித்யன்

"என்ன தாரு உன் ஆள் கூட போகனும் போல இருக்கா?" காதருகில் கேட்ட அவன் குரலில் திகைத்து ஆதியை நோக்க

"என்ன அப்படிப் பார்க்குற நீ அவனை வச்ச கண்ணு வாங்காம பார்க்குற அதுக்கு மேல அந்த மடையனும் உன்னை விழுங்குற மாதிரி பார்த்துட்டிருந்தா எனக்கு மட்டுமில்ல இங்க சுத்தியிருக்குற எல்லோருக்கும் தெரிஞ்சுடும் உங்க மேட்டர். அதுக்குப் பிறகு பாட்டி என்னத்த மத்தவங்களுக்கு சொல்லுறது நீங்களே காட்டிக் கொடுத்துடுவீங்க. உன் ஆளைப் பாரு ஆனால் மத்தவங்களுக்குத் தெரியாம பாரும்மா" அவன் கூற அவள் அசடு வழிய அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரும் அசடு வழிந்தான்.

"ஏய் தாருக்கா என்ன அங்க வாயப் பார்த்துட்டிருக்க உள்ள வந்து உட்காரு இடம் தாராளமா இருக்கு" உதயா தாரணியை அழைக்க அப்போதும் அவள் தயங்கி நிற்க இதனை கவனித்த தனலட்சுமிக்கு தாரணியின் எண்ணம் புரிந்தது.

"சாவித்ரி நீ ஆதியோட வண்டியில வாம்மா ஏன்னா நயனா இருக்குற நிலையில அவன் வேகமா வீட்டுக்குப் போவான் நீயும் கூடப் போனா உதவியா இருக்குமில்ல."

"அங்க இடமில்லையே அம்மா"

"அம்மாடி தாரணி நீ இங்க வாம்மா சாவித்ரி அந்த வண்டியில போகட்டும்."

"அட கெட்டிக்காரப் பாட்டி உன் பிரச்சனைக்கு சூப்பரா ஒரு தீர்வு சொல்லிட்டா. அப்பப்பா இந்த முகம் இத்தனை நேரமும் ப்யூஸ் போன பள்பு மாதிரி இருந்துச்சே இப்ப பாருடா எப்படி தௌஸன்ட் வால்ட் பல்பு மாதிரி பளிச்சுன்னு இருக்குன்னு." ஆதித்யன் அவளை கேலி செய்ய

"சும்மா இருங்க ஆதி சேர்" தாரணி சிணுங்க

"முதல்ல இந்த சேர் மோர் எல்லாம் விட்டுட்டு ஆதி என்று மட்டும் கூப்பிடு என்ன? இப்போ பாட்டி உன்னைக் கூப்பிட்டுட்டே இருக்காங்க ஸோ அங்க போறீங்களா மேடம்?"

"சரி நான் அங்க போறேன்" என்றவாறே தனலட்சுமியின் வண்டியில் ஏறியவள் தன்னவனையே பார்த்திருக்க அவனும் அவளையே பார்த்திருந்தான் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமி

"தாரணிம்மா இப்படி மாறி மாறி பார்த்துக்குறத முதல்ல விடுங்கோ வாசுவும் ரஞ்சனியும் இருக்காங்கல்ல அவங்களுக்குத் தெரிஞ்சுடப் போவுது." என்று தாரணியின் காதில் முணுமுணுத்தவர் சங்கரையும் கண்ணாடி வழியாக முறைக்க அவனும் பாதையில் கவனம் செலுத்தினான். ஆனாலும் யாருமறியா வண்ணம் அந்த காதல் பறவைகள் அடிக்கடி பார்த்துக் கொண்டன.

வீட்டுக்குச் சென்ற ஆதித்யன் தன்னவளை சோபாவில் அமர்த்தி விட்டு முதலில் தண்ணீர் எடுத்து வந்து அவளைப் பருகச் செய்தவன் கனகாவிடம் சொல்லி தன்னவளுக்காக தேநீர் எடுத்து வரச் செய்து அதனையும் அவளைப் பருகச் செய்தான் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனியும் வாசுதேவனும் உள்ளம் குளிர்ந்து போயினர். ஒருவாறு அவளின் விரதத்தினை முடித்து வைத்தவன் அவளை குளித்து உடை மாற்ற அழைக்க நயனியோ சிறிது தயங்கினாள் அவளின் தயக்கத்திற்கான காரணத்தை யூகித்தவன்.

"அத்தை தாரா குளிக்கனும் அவளுக்கு கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?"

"இது என்ன கேள்வி தம்பி இதோ" என்றவாறு வந்த ரஞ்சனியை பின்தொடரச் சொன்னவன் தன்னவளை கையிலேந்தி அறையில் விட்டு விட்டு மாமியாரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறி வெளியேறினான்.

முதன்முதலில் தீ மிதித்தாலோ என்னவோ நயனதாராவிற்கு கடும் காய்ச்சலடிக்கத் தொடங்கியது.

"மருமகன் நீங்களும் நயனிம்மாவும் நம்ம வீட்டுக்கு வந்து தங்கிக்கோங்களேன். ஏன்னா கால்ல காயம் பட்டிருக்கு அத்தோட பிள்ளைக்கு காய்ச்சல் வேற காயுது. நம்ம வீட்டுல என்றால் ரஞ்சி அவளை நல்லாப் பார்த்துப்பா அதுக்காகத்தான் சொல்லுறேன். தனம்மா நீங்க என்ன சொல்லுறீங்க?"

"இதுல நான் சொல்ல என்ன இருக்கு வாசு நீங்க உங்க மருமகனுகிட்டதான் முடிவைக் கேளுங்கோ"

"இல்லை மாமா அது சரி வராது. நானே என் தாராவ நல்லபடியாப் பார்த்துப்பேன். அவ குணமானதும் நம்ம வீட்டுக்கு வாறோம் அத்தோட எனக்கு இங்க இருந்தாத்தான் ஒபீஸ் வேலை பார்க்க வசதியா இருக்கும்." என்று மாமனாரிடம் கூறியவன் தன்னவளைப் பார்க்க அவள் முகத்தில் தெரிந்த ஏக்கம் அவளின் எண்ணத்தை ஆதித்யனுக்குப் புரிய வைத்தது.

"மாமா நான் ஒன்று சொல்லுவேன் அதுக்கு நீங்க சம்மதிக்கனும்"

"என்ன விசயம் மருமகன்?"

"அது வந்து மாமா அத்தை எங்க கூட இருக்கட்டுமே" நயனியின் முகம் சட்டென மலர மகளின் முகத்தில் தோன்றிய ஒளியைப் பார்த்த வாசுதேவன் மகளுக்குத் துணையாக மனைவியை அவளுடன் தங்க அனுமதித்தார்.

"ரொம்ப நன்றி மாமா நான் நம்ம வீட்டுக்கு வர மறுத்ததை பெரிசு படுத்தாம அத்தை இங்க தங்க சம்மதிச்சுட்டீங்க"

"அது அப்படியில்லப்பா நயனிய இங்க இருக்கவங்க எல்லோரும் நல்லாப் பார்த்துப்பாங்க தான் ஆனால் அவ அம்மாகிட்டத்தான் கொஞ்சம் ஃபிரீயா இருக்குற மாதிரி உணருவா அதுக்காகத்தான் உங்க ரெண்டு பேரையும் அங்க வரச் சொன்னேன். நீங்க அங்க வந்தா என்ன இல்லை ரஞ்சி இங்க இருந்தா என்ன எல்லாம் நயனிம்மாக்காகத் தானே"

"அது சரிதான் வாசு நீங்க உங்க மகளுக்காக யோசிச்சிருக்கீங்க. சரி சரி வாங்க சாப்பிடலாம். அம்மாடி சாவித்ரி எல்லோருக்கும் சாப்பாட்டை எடுத்து வைம்மா"

"அம்மா கனகாக்கா ஏற்கனவே இரவுச் சாப்பாடு எடுத்து வச்சுட்டாங்க உங்களை கூட்டிட்டுப் போகத்தான் நானும் வந்தேன்"

"இல்லை தனம்மா நாங்க புறப்படுறோம். ரஞ்சனியும் இப்போ கூட வரட்டும் அவளுக்கான உடுப்புக்களை எடுத்துட்டு நானே கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போறேன்."

"இல்லை மாமா இப்போதைக்கு தாராவ நான் பார்த்துக்குவேன். அத்தை காலையிலே வரட்டும் தாராவுக்கு மருந்து கொடுத்திருக்குத் தானே அவ நல்லாத் தூங்குவா அத்தைக்கும் காலையில இருந்து ஒரே அலைச்சல் அவங்களும் ராத்திரிக்கு ஓய்வெடுத்துட்டு காலையிலே வரட்டும். அத்தோட நீங்க இங்கேயே சாப்பிட்டுட்டுப் போங்கோ. இதுக்குப் பிறகு போய் சாப்பாடு ஆயத்தப்படுத்துவீங்களா? அதனால இங்கதான் சாப்பிடுறீங்க என்ன?"

"ஐயோ இல்லை தம்பி நாங்க பார்த்துக்குறோம்"

"என்னத்த ரஞ்சனி பார்த்துப்ப இங்க சாப்பிடுறதுல என்ன பிரச்சனை அதோட கனகா உங்களுக்கும் சேர்த்துத்தான் சமைச்சிருக்கா அதை எல்லாம் என்ன செய்யுறது?" தனலட்சுமியுடன் சேர்த்து சாவித்ரியும் வற்புறுத்த

"அம்மா, பாட்டியும் அத்தையும் இவ்வளவு சொல்லுறாங்களே சாப்பிட்டுட்டுப் போங்களேன். ப்ளீஸ்ப்பா எனக்கும் சந்தோசமா இருக்கும் அவரும் சந்தோசப்படுவாரு." நயனி கூற அவர்களும் சம்மதித்தனர்.

"வாங்கோ அண்ணா வாங்க ரஞ்சனி நீங்களும் எல்லோரும் வாங்க" என்று அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சாப்பாட்டறைக்குள் நுழைந்தவர்

"ஏய் சஞ்சு, உதயாக்கும் தாரணிக்கும் அந்தக் கறிய எடுத்து வைம்மா ஆதி நயனிய உட்கார வைப்பா. காவியா சங்கருக்கும் ஆதிக்கும் அதோட நயனிக்கும் சாப்பாட்டை வச்சுக் கொடுத்துட்டு நீயும் உட்காரு." என்று அனைவருக்கும் கட்டளையிட்டவர் வாசுவுக்கும் ரஞ்சனி, தனலட்சுமிக்கும் பரிமாறி விட்டு தனக்கானதையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தார்.

"சங்கரு நீயும் ஆதி கூடத்தான் ஊருக்குப் போறயாப்பா?"

"இல்லை பாட்டி ஆதி வாரதுக்கு கொஞ்சம் சுணங்கும் அதனால நான் இன்னும் நாலு நாள்ல போயிடுவேன்."

"ஏன் சங்கர் ஆதி கல்யாணத்துக்கு வந்த நீ இப்போதானே வாராய் வாசுகி அக்காவுக்கும் உன்னோட இருக்கனும் என்று தோணும் தானேடா வந்த நீ ஆதி கூட போ அது கஷ்டமென்றால் இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டுப் போறதானே" சாவித்ரி எடுத்துச் சொல்ல தாரணியோ தன்னவனைப் பார்த்து அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கண்களாலே மனுப் போட்டாள். இதனை பார்த்துக் கொண்டிருந்த நயனியும்

"அதானே சங்கர் அண்ணா வந்த நீங்க கொஞ்ச நாள் இருந்து எல்லோரோட மனசையும் குளிர்விச்சுட்டு எங்க கூடவே போகலாமே அண்ணா." தாரணியை ஜாடை காட்டியவாறே கூற

"இல்லை நயனி அது சரி வராது நானும் இல்லாம ஆதியுமில்லாம ராகவன் பெரியப்பா ரொம்ப சிரமப்பட்டுடுவார் அதனால நான் ரெண்டு நாள்ல போறேன் நீங்க ஆறுதலா வந்து சேருங்க"

"அதுவும் சரிதான் சம்மந்தி தனியா சமாளிக்குறது கஷ்டம்தான்" வாசுதேவனும் எடுத்துச் சொல்ல

"நாங்களும் என்ன அண்ணா இன்னும் இரண்டு நாள் கூட இருப்போம் அவ்வளவு தானே"

"இல்ல தாராம்மா அவன் முதல்ல போகட்டும் நீ முழுசா குணமானதும் நாம போகலாம். உனக்கு காய்ச்சல் வேற காயுது. அதனால நாம எப்போ போவோம் என்று தெரியாதில்ல அப்பாவால தனியா சமாளிக்க முடியாது சங்கர் போனாத்தான் சரியா இருக்கும்."

"ஓ... அப்படியா?" நயனி யோசனையாக வினவ

"அதனாலதான் சொல்லுறேன் உங்க கூட வர முடியாது. ஆனால் நாலு நாளை ஐஞ்சு நாளாக்கி எல்லோரோட மனசையும் குளிர்விச்சுட்டுத்தான் போவேன். ஓகேயா?" மற்றையவர்களிடம் வாய் கேள்வி கேட்க கண்களோ தன்னவளுக்கான பதிலைக் கொடுத்தது. அதில் தாரணியும் மகிழ்ந்து யாருமறியா வண்ணம் தலையை ஆட்டினாள் ஆனால் இந்த காதல் நாடகத்தை மூன்று ஜோடிக் கண்கள் மட்டும் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டன. சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்து விட்டு தன் குடும்பத்தாரோடு தாரணியையும் அழைத்துக் கொண்டு விடை பெற்றார் வாசுதேவன்.

வளரும்....

கருத்துகளைப் பகிர💙👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்☁🌕

நிலவு
- 37

நயனதாராவை கவனிப்பதற்காகவே ரஞ்சனி அந்த வீட்டிலிருந்த போதும் அவளைக் குளித்து உடைமாற்றி விடுவதைத் தவிர மற்றைய அனைத்து வேலைகளையும் ஆதித்யனே செய்தான். அதனைப் பார்த்து ரஞ்சனியுடன் சேர்த்து தனலட்சுமியும் மனம் நிறைந்தார்.

"அம்மா எங்க இருக்கீங்க அக்கா உங்களுக்கு கோள் பண்ணுறாங்க"

"சாவித்ரி நான் வெளியிலதான் உட்கார்ந்திருக்கேன். இப்போதான் வந்தேன் அந்த போனைக் கொஞ்சம் எடுத்துக் கொடேன்."

"இதோம்மா கொண்டு வாரேன்." என்றவள் தமக்கையின் அழைப்பை ஏற்று அங்குள்ளவர்களின் நலன் விசாரித்து சிறிது நேரம் உரையாடிவிட்டே தாயிடம் கைப்பேசியைக் கொடுத்தாள்.

"ஹலோ காயு எப்படிம்மா இருக்க? வீட்டுல மத்தவங்க எல்லோரும் எப்படி இருக்காங்க?"

"ஹலோ அம்மா, நான் நல்லா இருக்கேன் எல்லோரும் நல்லாத்தான் இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்கம்மா?"

"எனக்கென்ன காயு நான் நல்லா இருக்கேன் என்னைப் பார்த்துக்கத்தான் இங்க நிறையப் பேர் இருக்காங்களே"

"என்னம்மா நானும் எத்தனை கோள் எடுத்துட்டேன் உங்களோட கதைக்கவே முடியல்லையே"

"நானும் உன்னோட கதைக்கத்தான் நினைச்சன் காயு ஆனால் முடியல்ல கொஞ்சம் வேலை அதிகம். சாவித்ரி குடும்பத்தோட வவுனியாக்குப் போயிட்டாம்மா சஞ்சு மச்சினர் நிச்சயத்துக்கு முந்தநாள்தான் வந்தா. அதுவுமில்லாம வீட்டையும் பார்த்துட்டு நயனியோட பூஜைக்கும் ஏற்பாடும் பண்ணிட்டு வாசுவும் ரஞ்சனியும் தான் முழுக்கப் பார்த்துக்கிட்டாங்க. ஆனால் சின்ன சின்ன வேலைங்கள நானும் பார்த்தேனா வயசாயிடுச்சில்ல முடியல்லம்மா"

"உங்களால முடியல்ல என்றால் நீங்க ஏன் செய்யுறீங்க அதான் வாசு அண்ணன் எல்லாத்தையும் பார்த்திருப்பாரே."

"வாசுவும் ரஞ்சனியும்தான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. எனக்கு கொஞ்சம்தான் வேலையிருந்துச்சு சரி அதவிடு அதுக்குப் பிறகு கோயில் பூஜை என்று அதுக்கே நேரம் சரியா இருந்துச்சு. அதனாலதான் உனக்கு கோள் எடுக்க முடியல்ல"

"சரிம்மா ஆதியும் நயனியும் எப்படி இருக்காங்க?"

"உன் மகன் நல்லா இருக்கான் நயனிக்குத்தான் உடம்பு அவ்வளவு நல்லமில்ல."

"ஐயோ என்னம்மா இப்படி சொல்லுறீங்க?"

"முதன்முதலா இப்போதான் அவ தீ மிதிச்சிருக்கா. உடம்பு நொந்திருக்கு அதனாலதான் அவளுக்கு சரியான காய்ச்சல். அதோட பாதத்துலயும் கொஞ்சம் காயமிருக்கு."

"அப்படியாம்மா அப்போ நான் உடனே வெளிக்கிட்டு ஊருக்கு வாரேன்ம்மா எனக்கு என் மருமகளைப் பார்க்கனும்"

"இங்கப்பாரு நீ இங்க வரத்தேவையே இல்லை உன் புள்ள அவளை நல்லாவே பார்த்துக்குறான் தெரியுமா? அப்படியே உள்ளங்கையில வச்சுத் தாங்குறான்."

"என்னம்மா சொல்லுறீங்க? ஆதியா என்னோட ஆதியா என்னால நம்பவே முடியல்ல"

"நம்பித்தான் ஆகனும் என் கண்ணே பட்டுடும் போல இருக்கு காயு. உனக்கொரு விசயம் தெரியுமா நயனாவப் பார்த்துக்குறத்துக்கு எங்க கூடவே இருங்க என்று ரஞ்சனிய நம்ம வீட்டுல தங்க வச்சிருக்கான். ஆனால் பாரு அவங்கள ஒரு வேலையும் செய்ய விடமாட்டேங்குறான். அவன் பொண்டாட்டிக்கு ஒவ்வொன்றையும் அவனே பார்த்துப் பார்த்து பண்ணிட்டிருக்கான் தெரியுமா? அதுமட்டுமில்ல காயு இந்த நயனிப் புள்ள நம்ம வீட்டுல தங்க மாட்டேன் தீ மிதிச்சதும் எங்கம்மா வீட்டுக்குத்தான் போவேன் என்று ஒரே புடிவாதம் புடிச்சா நானும் எம்பட்டோ சொன்னேன். கேக்கவே இல்லையே உன் மகன் ஒரு வார்த்தைதான் சொன்னான் மறுவார்த்தையில்லாம இங்கயே இருக்கா. ஒருத்தருக்கொருத்தர் என்னம்மா விட்டுக் கொடுக்காங்க அவங்க ரெண்டு பேரோட அன்னியோன்னியத்தைப் பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு. ரஞ்சனியும் நல்லாவே மனம் குளிர்ந்துட்டா"

"அம்மா நீங்க சொல்லுறதைக் கேட்கும் போது எனக்கும் அவ்வளவு சந்தோசமா இருக்கு. இப்படியே காலம் முழுசும் அவங்க ரெண்டு்பேரும் சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்மா. அந்தக் கடவுளுக்கிட்டயும் நான் தினமும் இதைத்தான் வேண்டிக்குவேன்."

"நீ ஒன்றும் கவலைப்படாதே அவங்க காலத்துக்கும் நல்லா இருப்பாங்க" தனலட்சுமி ஆருடம் சொல்ல

"எனக்கு நிரம்ப நிம்மதியா இருக்கும்மா"

"அதுமட்டுமில்ல....." என தன் மகன், மருமகளின் நலன் விசாரிக்க தாயிடம் அழைப்பை எடுத்த காயத்ரியிடம் மேலும் அங்கு நடந்த அனைத்தையும் கூற காயத்ரியும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார்.

***

"வாம்மா தாரணி" வரவேற்பறையில் அமர்ந்திருந்த தனலட்சுமி வீட்டினுள் நுழைந்த தாரணியை வரவேற்க

"வணக்கம் பாட்டி நயனி எங்க?"

"அட வா ரவுடி பேபி பப்பு உள்ள இருக்கா நான் கூட்டிட்டு வாரேன்"

"நானும் கேக்கனும் என்று நினைச்சேன் அடிக்கடி பப்புன்னு கூப்பிடுற யாருடா அது பப்பு?"

"அதுவா பாட்டி சேரோட வீட்டம்மாதான் அந்தப் பப்பு" தாரணி விளக்க

"அட இதென்ன பப்பு கப்புன்னு. சின்னப் புள்ளைங்களைக் கூப்பிடுற மாதிரி இருக்கு ஒன்னு நயனின்னு கூப்பிடு இல்ல தாரான்னு கூப்பிடு" கட்டளையாய் வார்த்தைகள் விழ

"உத்தரவு பாட்டி சரி ரவுடி பேபி நீ இங்க வந்து உட்காரு"

"அதென்ன இந்தப் புள்ளைய ரவுடின்னு கூப்பிடுற ஒழுங்கா தாரணின்னு கூப்பிடு" தனலட்சுமி ஆதித்யனை மீண்டும் அதட்ட

"அது எனக்கும் இந்த ரவுடி பேபிக்கும் இருக்குற டீலிங்"

"என்ன டீலிங்கோ நல்லாயில்ல"

"பரவாயில்ல பாட்டி ஆதிண்ணா அப்படியே கூப்பிட்டடும்"

"நீ சும்மாயிருமா இங்கப்பாரு என்னதான் உன் பொண்டாட்டியோட கூட்டாளியா இருந்தாலும் இப்படியா கூப்பிடுவ என்ன இருந்தாலும் நாளைக்கு அவ சங்கருக்கு பொண்டாட்டியா வரப்போறவ" என்று சொன்னதுதான் தாமதம்

"ஐயோ பாட்டிம்மா யாருடைய காதுலயாலும் விழுந்துடப் போறது." தாரணி பதட்டமாக

"ஐயோ பாட்டி மெதுவா உள்ள அத்தை, சித்தி எல்லோரும் இருக்காங்க பார்த்துக் கதைங்கோ"

"ஐயோ மறந்துட்டனப்பா சரி சரி இனி கவனமா இருக்கேன். ஆனால் இனி ரவுடி கிவுடின்னு கூப்பிடாம ஒழுங்கா தாரணின்னு கூப்பிடு என்ன? அவன்தான் அப்படிக்கூப்பிடுறான் என்றால் நீயும் மண்டைய மண்டைய ஆட்டாத சரியா?" ஆதித்யனிடம் கறாராக சொன்னவர் தாரணியையும் விடவில்லை. இருவரும் சரி என தலையாட்டிய பின்னரே அமைதியானார். ஆதித்யன் நயனதாராவை அழைத்து வருவதாகக் கூறி உள்ளே செல்லத் திரும்ப அவளே ரஞ்சனியின் உதவியுடன் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

"ஏய் தாரு உன்னோட குரல் கேட்டுத்தான் வாரேன்டி" என்றவாறே வர

"தாரா நான் வந்திருப்பேனே கூட்டிட்டு வாரதுக்கு அத்தைய ஏன் கரச்சல் படுத்துற அதுக்குள்ள என்ன அவசரம் கால்ல காயம் இன்னும் ஆறல்ல இல்ல"

"ஐயோ நீங்க வந்தா சும்மா சும்மா தூக்குறீங்களே அதுக்காகத்தான் அம்மாவ கூட்டிட்டு வந்தேன்."

"சரி இப்படி வந்து உட்காரு" என்றவாறே தாரணியின் அருகில் அவளை அமர வைக்க ரஞ்சனி மற்றைய வேலைகளை கவனிக்கச் சென்றார். தனலட்சுமி சின்னவர்களுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வருவதாக கூறி எழ அப்போது

"ஹாய் மச்சான்" என்றவாறே சங்கரன் உள்ளே நுழைந்தான்.

"ஓ இதுக்குத்தான் மேடம் கதவையே பார்த்துட்டிருந்தீங்களா?" ஆதி கேட்க தாரணி நாணி தலை குனிய

"ஓவரா வெட்கப்படாத அப்போ நீ என்னைப் பார்க்க வரல்ல அப்படித்தானே" நயனியும் பொய்க் கோபம் காட்ட

"அப்படியில்லடி உன்னையும் பார்க்கத்தான் வந்தேன்"

"ஓ... ஐயாவப் பார்த்துட்டு போனா போகட்டுமென்று உன்னையும் பார்க்கத்தான் வந்திருக்கா" ஆதித்யன் தன் பங்குக்கு கொம்பு சீவி விட

"கண்ணுங்களா தாரணி பாவமப்பா இப்படி அவளை கதைக்காதீங்க. அழுதுடப் போறாள் இது எல்லாம் இந்தப் பயலோட திட்டமாத்தான் இருக்கும்"

"பாட்டி உண்மையிலே நீங்க கிளவர்தான் எப்போதும் கரெக்ட்டா கண்டு பிடிக்குறீங்களே" என்று சங்கர் கூற

"ஓ.... அப்போ நீயும் என்னைப் பார்க்க வரல்ல இங்க தாரணிய பார்க்கத்தான் வந்திருக்க" ஆதியும் முறுக்கிக் கொள்ள

"என்னங்க வாங்க நாம உள்ள போவோம்" என்று நயனியும் கணவனை இழுக்க அவனும் அவளுடன் இணைய அவர்கள் நட்புகளோ காலில் விழுந்துவிட்டனர்.

"டேய் மச்சி எல்லாந் தெரிஞ்ச நீயே இப்படிப் பண்ணலாமா? உன்னையன்றி எனக்கு யாருண்டு உதவி செய்ய"

"ஓவராப் பண்ணாதடா"

"இல்ல மச்சி நான் நாளைக்கு காலையிலே கொழும்புக்குப் போறேன் அதனால உன்கிட்ட சொல்லிட்டு அப்படியே இவளையும் ஒருதடவை பார்த்துட்டு போகலாம் என்று நினைச்சேன்டா அதனாலதான் அவளை இங்க வரச் சொன்னேன். எனக்கு வேற எந்த இடமும் சேபா தெரியல்ல"

"சரி சரி நானும் தாராவும் உன்கிட்ட சும்மா விளையாடினோம் நீ தாரணி கூட எவ்வளவு நேரம் வேணுமோ அவ்வளவு நேரம் கதைச்சுக்க என்ன?"

"என்னப்பா ஆதி நான் தவறுதலா சங்கரோட பொண்டாட்டின்னு சொன்னதுக்கு நீயும் தாரணியும் சேர்ந்து என்னை அடக்கிட்டு இப்போ இவங்க ரெண்டு பேரையும் எவ்வளவு நேரம் வேணுமென்றாலும் கதைக்க சொல்லுற காவியாவும் சஞ்சுவும் கோயிலுக்குப் போயிருக்காங்க ஆனால் மத்த எல்லோரும் வீட்டுல தான் இருக்காங்க. அவங்க யாரு கண்ணுலயாவது பட்டா என்ன செய்யுறது?"

"பாட்டி ஆதியும் நயனியும் எங்க கூடவே இருப்பாங்க அதனால யாருக்கும் எந்த சந்தேகமும் வராது டோண்ட் வொரி"

"என்ன சங்கரு இவங்கள வச்சுட்டா கதைக்கப் போற?"

"ஓம் பாட்டி அதனால என்ன?"

"என்னடா நானும் தாராவும் பார்வையாளர்களா?" ஆதியின் பேச்சில் மற்றையவர்கள் சிரிக்க சங்கர் அசடு வழிந்தான்.

"இல்ல அண்ணா கதைக்குறதென்றால் போன்லயும் கதைச்சுக்கலாம். ஆனால் இப்ப போனா இனி இவர் எப்ப வருவாரென்று தெரியாதில்ல." தாரணி எடுத்துரைக்க

"அதுமட்டுமில்லடா இவ எக்ஸாம் எழுதிட்டு லீவுல இருக்கா இன்னும் பத்து நாள்ல கொலீஜூக்கும் போயிடுவா நான் திரும்பி வந்தாலும் இவளை பார்க்க முடியாதே. அதுக்காகத்தான் ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம் என்று முடிவு பண்ணினேன்டா"

"ஓகே டா மச்சி தாராளமா பார்த்துக்கோ"

"அப்படியென்றால் சரிதான் ஆனால் இங்க எல்லாரும் வந்து போற இடம் நீங்க அந்தப்பக்கம் இருக்குற ஹோலுக்குப் போங்க அங்க யாரும் வரமாட்டாங்க சரி உங்களுக்கு சாப்பிட குடிக்க ஏதாவது அனுப்புறேன்" என்றவாறு அவர் சமயலறைக்கு விரைய இவர்களும் தனலட்சுமி சொன்ன ஹாலுக்குள் நுழைந்தனர்.

*****

நாட்கள் மெதுவாக நகர ஆரம்பித்தது ரஞ்சனியின் அருகாமையிலும் ஆதித்யனின் காதலுடன் கலந்த கவனிப்பிலும் சீக்கிரமே குணமானாள் நயனதாரா.

மகள் குணமானதும் ரஞ்சனியை அழைத்துச் செல்ல வாசுதேவன் தனலட்சுமி இல்லம் வந்திருந்தார். அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்படும் போது தன் மகள் குடும்பத்தினரை விருந்துக்கு அழைத்தனர் வாசு தம்பதியர்.

"தனலட்சுமியம்மா நாளைக்கு நாங்க ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம். நீங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு கட்டாயம் வரணும் அத்தோட ஆதித்தம்பி.... ஒரு வேண்டுகோள் நீங்களும் எங்க மகளும் விருந்தோட சேர்த்து இரண்டு நாளாவது எங்க வீட்டுல தங்கனும். என்ன சொல்லுறீங்க?" ரஞ்சனி கேட்க

"அதுக்கென்ன அத்தை தங்கிட்டாப் போச்சு. நயனிக்கு குணமாயிடுச்சுத்தான் ஆனால் ரொம்ப களைப்பா இருக்கா அதனால இரண்டு நாள் கழிச்சு வாரோமே அத்தோட இன்னொரு விசயம் இரண்டு நாளில்ல நாலு நாள் தங்குவோம் அதுக்கு உங்களுக்கு ஓகேயா?" அவன் பதிலில் எல்லோரும் சிரிக்க

"ரொம்ப சந்தோசம் மருமகன். நாலு நாள் என்ன ஒரு கிழம என்றாலும் எங்களுக்கு ஓகேதான்?"

"தங்க நானும் ரெடிதான் ஆனால் யாரு மாமா தொழிலப் பார்த்துக்கிறது."

"அதுவும் சரிதான்"

"ஏன் ஆதி இன்னும் கொஞ்சம் கூட லீவு எடுத்துக்கிட்டா நயனிய எங்கயாவது ரிப் மாதிரி கூட்டிட்டுப் போகலாமில்ல? சங்கர் தனியா சமாளிச்சுப்பான் தானே" சாவித்ரி வினவ

"சங்கர் பார்த்துப்பான்தான் அதுக்காகத்தானே அவன் ஏற்கனவே போனதே. பிறகு ஒரு விசயம் சித்தி நீங்க சொன்ன மாதிரி அதெல்லாம் ஏற்கனவே ப்ளான் பண்ணியாச்சு. கல்யாணமானதுக்கு நாங்க இன்னும் ஹனிமூன் கூடப் போகல்ல இல்ல. அதனால தாரா வீட்டுல நாலு நாள் தங்குறோம் அத்தோட ஒரு நாள் இங்க அடுத்த நாள் நுவரெலியாவுக்கு ஒரு சின்ன ட்ரிப் அப்படியே கொழும்புக்குப் போறோம் இதுதான் ப்ளான். ஆனால் இதை தாராவுக்கு சப்ரைஸா செய்யனுமென்று சொல்லாம வச்சிருந்தேன் இப்படி சொல்ல வச்சுட்டீங்களே சித்தி. எனிவே என்ன தாரா ப்ளான் ஓகேவா? இல்லை எதாலும் மாற்றனுமா?"

"சூப்பர் அண்ணா" காவியா சொல்ல

"ஏய் முந்திரிக் கொட்ட நான் உன்கிட்டயா கேட்டேன் தாராகிட்ட தானே நீ சொல்லு தாரா உனக்கு இந்தப் ப்ளான் ஓகேவா?" காவியா அசடு வழிய அவள் முகத்தைப் பார்த்து மற்றையவர்கள் சிரிக்க நயனி வெட்கத்துடன் ஆம் என தலையாட்டினாள்.

வளரும்.....


Please share your comments here💙👇💙

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்☁🌕

நிலவு -
38

தன் வேலைகளை ஒருவாறு முடித்து விட்டு தங்களுடைய அறையினுள் நுழைந்த நயனதாரா கதவினை தாளிட்டு விட்டு தன்னவனைத் தேட அறையில் எங்குமே அவன் இல்லை. 'இவர் எங்க போயிட்டாரு' எண்ணியவாறு பெல்கனிக்குச் செல்லத் தொடங்கியவளை பின்னாலிருந்து இரு வலிய கரங்கள் வளைத்துக் கொள்ள திடுக்கிட்டுத் திரும்ப மோகனப் புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான் ஆதித்யவர்த்தன். அதில் நாணங் கொண்டவள் தரை நோக்க தன்னவளை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலுக்குச் சென்று அவளை அமர வைத்து விட்டு அவளருகில் தானும் அமர்ந்து கொண்டவன் பெண்ணவளை தன் மார்போடு அணைக்க அவள் தேகம் சிலிர்த்தது.

"அப்பப்பா இந்த ஒரு நாளுக்காக எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதா போச்சு பாரு உன்னை இப்படி நிம்மதியா ஒரு தரமாலும் அணைக்க முடிஞ்சுதா? ஒருபக்கம் என் மாமியாரென்றால் மறுபக்கம் என் பாட்டியும் சித்தியும் எத்தனை தடைங்க. ஐய்யோ ஐய்யோ" சட்டென்று அவன் அணைப்பிலிருந்து விலகியவள்

"ஏங்க இப்படி சொல்லுறீங்க உங்களுக்கு எங்கம்மா வந்தது புடிக்கல்லையா?" அவள் அழத் தயாராக

"ஏய் பப்பு நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஆனால் உன்னை பப்புன்னு கூப்பிடக் கூடாதுன்னு உத்தரவு"

"யாரு உத்தரவு போட்டா அதுவும் உங்களுக்கு?"

"எல்லாம் நம்ம தனலட்சுமி அம்மையார் தான் வேற யாரு"

"ஏங்க?" அன்று நடந்ததைக் கூற விழுந்து விழுந்து சிரித்தவள்

"பாட்டிம்மா இல்லாத நேரம் பார்த்து மட்டும் அப்படி கூப்பிடுங்க என்ன இல்லாட்டி அவங்க உங்களை லெப்ட் ரைட் வாங்கிடுவாங்க" என்றவள் மீண்டும் சிரிக்க அதனை ரசனையோடு நோக்கியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து மார்போடு அணைத்துக் கொண்டான் அவனிடமிருந்து திமிரி விலகியவாறே

"இப்போ சொல்லுங்க எங்கம்மா வந்தது உங்களுக்குப் பிடிக்கல்லையா?" சண்டைக் கோழியாய் சிலர்த்தவள் உடனே அமைதியாகி

"இல்லையே எங்கம்மாவ இங்க தங்க சொன்னதே நீங்கதானே பிடிக்காட்டி நிச்சயமா தங்க சொல்லியிருக்க மாட்டீங்க."

"அட என் மக்குப் பொண்டாட்டிக்கு உண்மை விளங்கிடுச்சே" என்று கைகளைத்தட்ட

"சும்மா விளையாடாதீங்க. அப்போ ஏன் இப்படிக் கதைக்குறீங்க?"

"உண்மையாவே நான் விளையாட்டுக்குத்தான் கதைச்சேன். நீ உன் குடும்பத்தை அதிலும் உங்கம்மாவ எவ்வளவு மிஸ் பண்ணுறாய் என்று எனக்குத் தெரியும் தாரா. அதனாலதான் அவங்கள நம்ம வீட்டுலே தங்க வச்சேன்"

"எனக்காகவா?" கண்களை விரிக்க

"இதுல என்ன ஆச்சரியம். அதுமட்டுமில்ல உன்னை என் அறையில தங்கவைக்காம அவங்க அறையில அவங்களோட தங்க வச்சதும் உனக்காகத்தான் தரு"

"உண்மையாவா சொல்லுறீங்க. ஆனால் என் மனசுல இருந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"நான் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன் தரு உன் கண்ணே உன்னோட மனச எனக்கு காட்டிக் கொடுத்திடுச்சு"

"ஐ வல் யூ வரு ஐ லவ் யூ சோ மச். நானும் உங்களை என் உயிருக்கும் மேலா நேசிக்குறேன். ஐ லவ் யூ வரு"

"ஐ லவ் யூ டூ தரு இனி என்றைக்குமே நீ என்ன விட்டு பிரியக் கூடாது அப்படி பிரியுறதா இருந்தா அது நம்ம மரணமாத்தான் இருக்கனும்" அவன் உணர்ச்சி வசப்பட

"அதுவும் வேணாங்க மரணம் கூட நம்மள பிரிக்கக் கூடாது ஒரே நொடியில ரெண்டு பேரும் ஒன்னா செத்துப் போயிடனும்." அவளும் உணர்ந்து உறுதியாகக் கூறியவள் அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள அவனும் தன்னவளை தனக்குள் புதைத்துக் கொண்டான். சிறிது நேரம் கண் மூடி அப்படியே அமர்ந்திருந்தவள்

"ஏங்க உண்மையாவே நாளைக்கு எங்க வீட்டுக்குப் போறோமா அதுவும் நாலு நாள் தங்குறோமா?"

"இதுல என்ன சந்தேகம். போறோம் தங்குறோம் அதுக்குப் பிறகு பறக்குறோம்"

"என்ன பறக்குறோமா?"

"ஹனிமூன் போறமில்ல அதச் சொன்னேன் தேன்நிலவு என்றாலே பறக்குறது தானே. அதாவது சந்தோச வானிலே சிறகில்லாம பறக்குறதுமா"

"ஐயோ நீங்களும் உங்க விளக்கமும்"

"இங்கப்பாரு தரு நம்ம ஹனிமூனுக்கு இப்போதைக்கு நுவரெலியாக்குத்தான் போகலாம் கொழும்புக்குப் போன பிறகு ஒபீஸ் வேலையெல்லாம் ஓரளவு ஒழுங்குபடுத்திட்டு அதுக்குப் பிறகு வெளிநாட்டு ட்ரிப் ஒன்று போகலாம் அதுவும் உனக்கு எங்க பிடிக்குதோ அங்க. அதுக்குப் பிறகு நான் எப்பெல்லாம் பிஸ்னஸ் விசயமா வெளிநாடு போறேனோ அப்பல்லாம் அத நாம ஹனிமூன் ட்ரிப் ஆக்கிடலாம் என்ன சொல்லுற" கண்ணடித்துக் கேட்ட கணவனுக்கு வெட்கத்தைப் பதிலாய் தந்தவளின் வதனத்தினை கைகளில் ஏந்தி

"உனக்கு இந்த ப்ளான் ஓகே தானே?"

"நீங்க கூட்டிட்டுப் போனா நான் எங்க வரவும் ரெடி. உங்களை விட்டு நான் பிரியக் கூடாது அவ்வளவுதான்"

"அப்படியா ஓகே மை டார்லிங் இன்னொரு விசயம் நான் மொத்தமா ஒரு மாசம் லீவெடுத்திருக்கேன் அவ்வளவு நாளும் உன் கூடத்தான் இருக்கப் போறேன். அதுவரை சங்கர் தான் ஒபீஸ் பொறுப்பு மொத்தத்தையும் பார்த்துப்பான்." முதலில் சந்தோசப்பட்டவள் பிறகு சிந்தித்தவாறே

"அவருக்கு தனிய கஷ்டமா இருக்காதா?"

"அப்பாவும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவார். அதோட நான் இந்த லீவ நியாயமா கல்யாணம் முடிச்ச உடனே எடுத்திருக்கனும் அப்போ நம்ம உறவு வேற ஆனால் இப்ப அப்படியில்லையே கட்டாயம் எடுக்கத்தான் வேணும். என் தாரா கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ண வேணாமா?" அவன் கேட்க அவள் புன்னகைத்தாள்.

"ஆனாலும் சங்கரண்ணா பாவந்தான்"

"இங்கப்பாரு தாரா அவன் கல்யாணம் பண்ணும் போது நான் மொத்தப் பொறுப்பையும் எடுத்துப்பேன். யாருக்கு எப்பப்போ லீவு தேவைப்படுதோ அப்பப்ப அவரவர் எடுத்துக்குறதுதான். இது அடிக்கடி நடக்குறதுதான் சோ சிம்பிள்" அவர்கள் அணைப்பு நிலை மாறாமலே இருவரும் பேசிக் கொண்டிருக்க திடீரென்று

"ஏங்க எனக்கொரு டவுட்டுங்க."

"என்னம்மா டவுட்?"

"இல்லங்க தாரு, சங்கரோட கல்யாணம் நல்லபடியா நடக்கும்தானே எந்தப் பிரச்சனையும் வராதே"

"தாராம்மா! ரவுடி பேபி உன்னை மாதிரி இல்லை ரொம்பத் தெளிவானவ. அதனால நிச்சயமா அவளுக்கானதை போராடியாலும் பெற்றுக் கொள்ளுவா அதோட நாமளும் அவளுக்கு பக்க பலமா இருக்கும் போது வேறென்ன கவலைய விடு எல்லாம் நல்லபடியா நடக்கும். தாரணிதான் சங்கரோட வைஃப் அதுல மாற்றமில்ல யாரு தடுத்தாலும் இந்தக் கல்யாணம் நிச்சயம் நடக்கும்"

"ரொம்ப சந்தோசமுங்க அதோட இன்னொரு விசயம்" அவள் இழுக்க

"இரு இரு உனக்கென்ன வேற வேலையே இல்லையா டவுட்டுக்குப் பொறந்தவளா நீ?"

"ஏங்க இப்படிக் கேட்குறீங்க ஆகுமா?" அவள் சிணுங்க

"எல்லாம் ஆகும் சொல்லு உன்னோட அடுத்த டவுட்ட?"

"இல்லை நித்திக்கா இப்படியே தனியா இருந்துடுவாங்களா வர்த்தன். ஏன்னா அவங்க வீட்டையும் வெறுத்துகிட்டு யாருமில்லாம புள்ளையையும் வச்சுக்கிட்டு தனியா இருக்காங்களா அதனாலதான் கேட்குறேன். அதோட அவங்க தனியா வாழுறதுக்கான வயசுமில்லையே வெறும் இருபத்தேழு தானே அவங்களும் வாழ வேண்டிய வயசில்லை அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைய அமச்சுக்கிட்டாத்தான் எனக்கும் நிம்மதியா இருக்கும். இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாங்களா அவங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணைய ஏற்படுத்திக்குவாங்களா?"

"ஊருல இருக்குற எல்லாரப்பத்தியும் கவலப்படுற என் பொண்டாட்டி கட்டிக்கிட்ட புருஷனப் பத்தி கண்டுக்கவே மாட்டேங்குறாளே இந்த அவலத்தை எங்க போய்ச் சொல்ல?"

"ஏங்க நான் எவ்வளவு சீரியஸா கதைச்சுட்டிருக்கேன் நீங்க விளையாடிட்டிருக்கீங்க."

"நான் எங்கடி விளையாடினேன் நானும் சீரியஸாத்தான் சொல்லுறேன். உனக்கு உண்மையிலே என்னைப் பார்த்தா பாவமா தெரியல்லையா?"

"உங்களுக்கு என்னங்க பாவம் நித்திக்காதான் ரொம்ப பாவமுங்க" மறுபடியுமா என அவளை நோக்க நயனியோ அவன் பார்வை கூட விளங்காது மேலே பேசிக் கொண்டிருந்தாள்.

"இங்கப்பாருங்க நாம அக்காவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையப் பார்த்து கட்டி வைக்கலாமா?"

"அவக்கிட்ட அவ்வளவு ஏச்சு வாங்கியும் உனக்கு புத்தியே வரல்லல்ல."

"நான் தப்பா எதுவும் சொல்லல்லயே. அவங்க சந்தோசமா வாழ்ந்தா நாமளும் நிம்மதியா இருக்கலாம்."

"அம்மா தாயே உனக்காக இல்லாட்டியும் நிச்சயமா எனக்காக அதை நான் செய்யத்தான் வேணும்"

"ஏன் ஏன் உங்களுக்காக?" அவள் படபடக்க அவளின் பொறாமையைக் கண்டு சிரித்தவனாய்

"தங்கமே இல்லாட்டி நீ என்னை நிம்மதியா இருக்க விட்டுடுவாயா? பேசிப்பேசியே சாகாடிச்சுட மாட்ட அதுக்காகத்தான். என் காதோட பாதுகாப்புக்காகவும்தான். நீ பொறாமைப்படுற மாதிரி எல்லாம் ஒன்னுமில்ல"

"யாரு பொறாமைப்பட்டா யாரு பொறாமைப்பட்டா?"

"வேற யாரு நீதான் இந்த முட்டக் கண்ணு இப்போ ஏன் ஏன் என்று மொறக்கல்ல"

"அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது."

"ஓகே ஓகே என் பொண்டாட்டிக்கு டார்க்கா பொறாமையில்ல கொஞ்சமே கொஞ்சம் லைட்டா பொறாமை என்று ஒத்துக்குறேன்" என்று கூறி சிரிக்க

"ச்சீ போங்க அதெல்லாம் விடுங்க அப்போ நாம மாப்பிள்ளை பார்த்தா அவங்க கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா?"

"ஆ.... நீங்க மாப்பிள்ளை பாருங்க நான் கழுத்த நீட்டத் தயாரா இருக்கேன் என்று மனையில மணக்கோலத்துல உக்காந்திருக்கா உங்க நித்திக்கா பாரு லூசு."

"என்னங்க இப்படிச் சொல்லுறீங்க?"

"அதுக்குத்தான் இருக்கவே இருக்கா நம்ம ரவுடி பேபி"

"விளையாடாம சீரியஸா கொஞ்சம் கதைங்க"

"சரி சீரியஸாவே சொல்லுறேன். தாரணி அன்றைக்கு பாட்டிக்கிட்ட அவங்க காதல் கல்யாணத்துக்கு அவங்க வீட்டுல இருக்குற பிரச்சனையப் பத்தி சொன்னப்போதான் எனக்கும் ஒரு விஷயம் முழுசா விளங்கிச்சு. இதேதான் நித்தி விஷயத்துலயும் நடந்திருக்கு. எங்க விவகாரம் தெரிஞ்சப்போதான் உடனே ஒருத்தனுக்கு அவளை கட்டி வச்சிருக்காங்க. அதனால அவ வாழ்க்கையும் பாழாகிடுச்சு. ஒரு வகையில இதுக்கு நானும் காரணமாயிட்டேன். நிச்சயமா நித்திலாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமஞ்சு அவ நிம்மதியா வாழுறதப் பார்த்தாத்தான் நானும் நிம்மதியா இருப்பேன். அதோட நீயும் நிம்மதியாவ அப்போதான் நம்ம வாழ்க்கையும் எந்த பிரச்சனையுமில்லாம நிம்மதியாயிருக்கும். அடுத்த வேலை எனக்கு அதுதான் நிச்சயமா நித்திக்கு ஏற்ற ஒருத்தரைப் பார்த்து அவளுக்கு கட்டி வைக்கனும் அதை தாரணி மூலமாத்தான் செய்யனும். அதை நான் பார்த்துக்குறேன்"

"ரொம்ப நன்றிங்க இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. நீங்க சொன்னா அதை நிச்சயமா செய்யாம விட மாட்டீங்க. அதனால இனி நான் கவலையில்லாம நிம்மதியா இருப்பேன்." அவள் ஆறுதலடைய

"தாராம்மா இனியாவது உன் வர்த்தனைக் கவனிப்பாயா? இல்ல மத்தவங்களுக்கு பாவம் பார்த்துட்டு கடைசி வர என்னை கண்டுக்காம சுத்தல்லதான் விடப்போறாயாம்மா?" அவன் ஆற்றாமையுடன் கேட்க

"என்னங்க நீங்க இப்படிக் கேக்குறீங்க எனக்கு எல்லோரையும் விட நீங்கதான் முக்கியம் தெரியுமா?" அவள் அப்பாவியாய்க் கூற

"தெரியுது தெரியுது எவ்வளவு முக்கியமென்று. சரி சரி கதச்சது போதும் இனியாவது லைட்ட ஓஃப் பண்ணலாமா?"அவன் ரகசியமாய் அவள் காதில் கிசுகிசுக்க

"தாராளமாய் பண்ணலாமே" அவனைப் போல் கிசுகிசுத்தவளை விழுங்குவது போல் ஆதித்யன் பார்க்க அந்தப் பார்வையைத் தாங்க முடியாது நாணியவள் இமைகளை மூடி தனக்கே உரிமையான அவனுடைய பரந்த மாரின் மீது தன் சிவந்த வதனத்தினை மறைத்துக் கொண்டாள். அவளின் செயலில் சிரித்தவனாய் அவளை மேலும் தனக்குள் புதைத்தவன் கை நீட்டி மின்விளக்கை அணைத்துவிட்டு தன்னவளுடன் கட்டிலில் சரிந்தான்.


💙~முற்றும்~💙


Please share your comments here💙👇💙

 
Status
Not open for further replies.
Top Bottom