9
அபிமன்யூ வீடு வந்து சேரும் பொழுது சக்கரவர்த்தி கோபமாக வாயிலிலேயே நின்று கொண்டிருந்தான்.
காரை விட்டு இறங்கிய அபியைக் கண்டதும் சக்கரவர்த்தி கோபத்தில் ஏதோ கூற வர எதுவும் பேசாதே என்பது போல் அபிமன்யூ ஜாடை செய்தான்.
கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட சக்கரவர்த்தி அபி...நேத்ராக்கு விஷயம் தெரியுமா…
ம்ம்...நீ பேசும் போது ஸ்பீக்கர்ல போட்டேன் முழுசா கேட்டுட்டா…
ம்ச்...பாவம்ல அவ...
ம்ம்...என்ன செய்யறது….ரவி இப்படினு தெரியலையே... தெரிஞ்சிருந்தா ஆரம்பத்திலேயே நேத்ராவை அவர்கிட்ட இருந்து காப்பாற்றி இருந்திருக்கலாம்…
இப்போ என்ன செய்யறது அபிமன்யூ….நேத்ராவை விட்டு அவங்க அப்பா மேல ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணலாமா…
அது நேத்ரா தான் முடிவு செய்யனும்...முக்கியமா இந்த விஷயத்துல நேத்ரா நம்ம பேச்சை கேக்க மாட்டா... கண்டிப்பா ரவிக்கு பேவரா தான் முடிவெடுப்பா…
அப்படின்னா இப்போ என்ன செய்யலாம்ங்கற அபி…
ம்ம்..நம்மளோட செக்யூரிட்டி சிஸ்டத்தை இங்க இருந்து விளக்கிகலாம்.
அபி அப்போ நேத்ராவோட நிலமை...நீ மிஸஸ் மதுமதிக்கு செஞ்சி குடுத்த சத்தியம் இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போற…
பொறுமையா இரு சக்ரவர்த்தி.. நேத்ரா குழந்தை இல்ல...அவளை காப்பாத்திக்க அவளுக்கு நல்லாவே தெரியும்.இந்த வீட்ல அவ தெரிஞ்சிக்க இன்னும் நிறையா இருக்கு.. அதெல்லாம் தெரியும் போது அவளுக்கு என்ன வேணுமோ அதை சூஸ் பண்ணுவா...
மதுவை பொறுத்த வரை அவங்க பொண்ணை எப்பவுமே பத்திரமா பாத்துப்பாங்க...நாம வெறும் கருவி தான்…
சரிடா மச்சி உன் அடுத்த மூவ் தான் என்ன…
முதல்ல போய் மிஸ்டர் ரவிச்சந்திரனை சந்திக்கிறோம்
அவர் சொல்லற பதில்ல தான் நம்மளோட அடுத்த மூவ்….என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே மருத்துவரிடம் இருந்து ஃகால் வந்தது…
மிஸ்டர் அபிமன்யு இங்க நேத்ரா ரொம்ப மூர்க்கத்தனமான நடந்துக்கிறாங்க அவங்க அப்பா தான் அவளுடைய எல்லா பிரச்சினைக்கும் காரணம் நினைச்சி,நினைச்சி அழறாங்க... கன்ட்ரோல் பண்ணவே முடியல…
தூங்க வைக்கலாம்னு இன்ஜெக்ஷன் பண்ண போனா சிரீஞ்ச் புடிங்கி வீசறாங்க ப்ளீஸ் கொஞ்சம் வாங்க அவங்களை சமாதானப் படுத்துங்க...
ஷிட்... என்று வாய்க்குள்ளாகவே முனுமுனுத்த அபி சக்கரவர்த்தியை பார்த்து டேய் மச்சி இங்க பாத்துக்கோ முடிஞ்சா லோக்கல் போலீஸ்ல இன்பார்ம் பண்ணு நா ஹாஸ்பிடல் வரை போயிட்டு இப்போ வர்றேன்...என்று காரை இயக்கியபடி வேகமாக கிளம்பினான்.
மருத்துவமனையில் நேத்ரா தன்னை வீட்டுக்கு அனுப்பும்படி சண்டையாட்டாள். மருத்துவர் எவ்வளவோ அறிவுறுத்தியும் கூட
யாருக்கும் அடங்கா வண்ணம் அறையிலிருந்த அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள்.
இருவர் அவளை பிடித்துக்கொள்ள கடைசியாக மருத்துவர் அவளை தூங்க வைப்பதற்காக இஞ்செக்சனை போட்டு விட்டார்.
அழுத படியே தூங்கவும் அபி வந்து சேர்ந்தான்.
வாங்க அபிமன்யூ நேத்ராவை எங்களால சமாளிக்கவே முடியல அவ பிரச்சினைக்கு எல்லாம் அவங்க அப்பா தான் காரணம்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா அவ முழுசா உடைஞ்சு போயிட்டா என்று மருத்துவர் கூறினார்.
எஸ் டாக்டர் மத்தவங்க கிட்ட இருந்து பிரச்சினை வந்திருந்தா அவளால அவ அப்பாகிட்ட சொல்ல முடியும் இப்போ அவங்க அப்பாவே பிரச்சனையா இருந்தா அவ யார் கிட்டே போய் சொல்லுவா... இது உண்மையிலேயே நேத்ராவோட கடினமான காலம் தான் இதிலிருந்து அவ சீக்கிரம் வெளியே வரணும்னு தான் இப்போதைக்கு என்னுடைய ஆசை டாக்டர்.
ம்ம்...புரியுது அபி இந்த சின்ன வயசுல நேத்ராவுக்கு தான் எவ்வளவு கஷ்டங்கள் ...விவரம் தெரிஞ்சதுல இருந்து அவங்க அம்மாவோட பாசமே கிடைக்காம போயிருச்சு...இப்போ ஆதரவா இருக்கற அப்பா இப்படினா எப்படி தாங்க முடியும்...
ஓகே டாக்டர் நான் இப்போ நேத்ராவை அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன் அவ ஓகேனா டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க..
அவளோட பிரச்சனை எதனால, எங்கிருந்துனு கண்டுபிடிச்சாச்சு இனிமே அவ நல்லபடியா கல்யாணம் பண்ணி அவளோட புகுந்த வீட்டுக்குப் போயிடலாம் அதுக்கு அப்புறம் அவளோட பாதுகாப்பை பாத்துப்பாங்க…
இனிமே எனக்கு நேத்ராவோட வீட்ல பெருசா வேலை இல்லைன்னு தோணுது அதனால நானும் செக்யூரிட்டி சிஸ்டமை ஃபுல்லா ரிமூவ் பண்ணிட்டு ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஹாஸ்பிடல் ஃபில் எவ்வளவுனு சொன்னீங்கன்னா நான் கட்டிட்டு நேத்ராவை கூட்டிட்டு போயிடுவேன் என்று கூறினான் அபிமன்யூ…
தாராளமா நேத்ராவை நீங்க டிஸ்சார்ஜ் செஞ்சி வீட்டுக்கு கூட்டிட்டு போங்க அதுல எந்த விதமான ஆட்சேபனையும் எனக்கு கிடையாது.
ஆனா நேத்ராவின் பாதுகாப்பு பற்றி நீங்க நினைக்கிற எண்ணம் தவறு.
பாசத்துக்காக ஏங்கி கிட்டு இருக்குற ஒரு பொண்ணு …
எப்பவும் கூடவே வரும்னு எதிர்பார்த்த தன்னோட தந்தையோட பாசம் இப்படி கானல் நீர் ஆகும்னு அவ கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டா.
ஆனால் இன்னிக்கி அது ஒரு கானல் நீர்னு அவளுக்கு தெரிஞ்சதால இன்னும் மனசளவுல உடைந்து போவா... இவ்வளவு நாளும் அவ ஒரு போதை மருந்துக்கு ஆளான பெண் அப்படிங்கிற ஒரு சந்தேகம் தான் உங்களுக்கு எல்லாம் இருந்தது
ஆனா இந்த சம்பவத்திற்கு அப்புறம் அவ நிஜமாகவே ஒரு போதை பொருளுக்கு அடிமை ஆகலாம்
இல்லன்னா வேற மாதிரியான முடிவை கூட எடுக்கலாம் இப்போ அவ மனதளவில ரொம்ப பலவீனமா இருக்கறா…
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அபிமன்யு அது என்னன்னா
நீங்க சொன்னீங்க இல்லையா இனிமேல் நேத்ராவோட பாதுகாப்புக்கு உங்களோட பங்களிப்பு தேவை இருக்காது
னு…
அது மிகப்பெரிய தவறு நேத்ராவோட கனவு படிபாத்தா இப்போ முடிவில்லாத பயணமா போய்க் கொண்டிருந்த வாழ்க்கைல இப்போதான் சுடுகாட்டை அடையாளம் காட்டிருக்கா…
அது சுடுகாடுனு தெரியாமலே இவ்ளோ நாள் அங்க இருந்திருக்கா…. அதாவது அவளோட வீடு...சின்ன வயசுல இருந்து அவ வாழ்க்கைல வெளிச்சமே இல்லாம இருந்து...முதல் முறை சிறு வெளிச்சமா தெரிந்த அவ வீட்டுக்கு போனா...அது வெளிச்சம் இல்லை சடலத்தை எரிச்சதால ஏற்பட்ட வெளிச்சம்னு இப்போ அவளுக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கு…
இனி அடுத்து
வெளித்தோற்றத்தில் மிக அழகாகவும் உள்ளுக்குள்ள நர மாமிசத்தை சாப்பிட கூடிய கொடூரமானவங்களையும் அவ சந்திக்கப் போறா...அதுக்காக அவளை தயார் படுத்துங்க...அவங்களை சந்திச்ச அடுத்த வினாடி அவ உயிருக்கு மிகப் பெரிய ஆபத்து.அது வரை அவ கூட இருங்க...ஏன்னா அவ அம்மாவோட ஆன்மா கனவில அவளுக்கு அதைதான் சொன்னாங்க... என்றார் மருத்துவர்.
என்ன டாக்டர் புதுசா ஏதேதோ சொல்லி பயமுறுத்தறீங்க என்று சற்று பயந்தபடி அபிமன்யூ கேட்டான்.
நான் பயமுறுத்தல அபிமன்யூ நிஜத்தை சொல்றேன் நான் மனநல மருத்துவத்தை தாண்டி இதுபோல அமானுஷ்ய சக்திகளையும் ஆராய்ச்சி செய்யறேன் அந்த முறையில் சொல்கிறேன்.
அப்படின்னா வெளித்தோற்றத்துல அழகாவும் உள்ளுக்குள்ள கோரமுகத்தோடவும் இருக்கறவங்க யாரா இருப்பாங்க புரியலையே டாக்டர்.
நான் இதுக்கு முன்னாடி அவங்க அப்பாவோட நண்பர் ஒருத்தரை சந்தேகப்பட்டேன் ஆனா அவங்களுக்கும் இங்கு நடக்குற பிரச்சினைக்கும் தொடர்பில்லனு தெரிஞ்சாச்சி…
புதுசா வேற யாரு அவளோட வாழ்க்கைகுள்ள வரப்போறா யோசித்தபடி கேட்டான்.
தெரியல அபிமன்யூ ஆனா கண்டிப்பா கூடிய சீக்கிரம் நேத்ரா அவங்களை சந்திப்பா அது உறுதி. நீங்க நேத்ரா எழுந்ததும் அழைச்சிட்டு போங்க... அப்புறம் நீங்க எங்கிட்ட கேட்டு கிட்ட மாதிரி நேத்ராவோட பின்கழுத்துல இருக்கற
மேல்தோல்ல நீங்க குடுத்த சிப் பொருத்திட்டேன்…
இனி அவ எங்க போனாலும் உங்களால அவளை பாதுகாக்க முடியும்னு நம்பறேன்…
உங்களுக்கு எப்போ அவ லைஃப் நார்மலாயிடுச்சினு. நினைக்கிறீர்களோ அப்போ நீங்களே கூட அதை எடுத்து விடலாம் ஜஸ்ட் பேஸ்ட் மாதிரிதான் ஒரு கம் போட்டு தான் ஒட்டிருக்கேன்...எடுக்கும் போது அந்த இடத்துல ஏதாவது காயம் ஆனா பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்ல காமிச்சிக்கோங்க என்றவரின் பேச்சில் ... இதற்கு மேல் நேத்ராவின் பாதுகாப்பு உங்களை சேர்ந்தது இனி இங்கு வரவேண்டாம் என்று தோணி இருந்தது…
அவருக்கு நன்றி கூறிய அபி நேத்ரா விழிப்பதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
அதற்குள் மீண்டும் சக்கரவர்த்தியிடம் இருந்து ஃகால் வர ஆரம்பித்தது .
ஃகாலை அட்டென்ர்ன் செய்த அபியிடம் சக்ரவர்த்தி பதட்டமாக டேய் இங்க ஷர்மாவும் ரோகித்தும் பயங்கரமா நம்ம ஆளுக கிட்ட சண்டை போடுறாங்க... சமாளிக்க முடியல ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வா என்று கூறினான்.
கொஞ்ச நேரம் அவங்களை சமாளி நான் வந்துடறேன் என்றவன் நேத்ராவின் அருகில் வந்து ஆராய்ந்தான்…
அவனை அதிகநேரம் காத்திருக்காமல் நேத்ரா கண்விழித்தாள்.
அபியை பார்த்ததுமே மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
அபி….அப்பா...ஏன் அப்படி பண்ணினாங்க... அவருக்கு என்னை பிடிக்கலையா...ஏன் பிடிக்காம போச்சி...என்றவனை கேட்டாள்.
அவளின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத அபிமன்யூ இப்போ என்னோட கிளம்பி வர்றியா நேத்ரம் நீ கேட்ட கேள்வியை உன் அப்பாகிட்ட ரெண்டு பேரும் சேர்ந்து கேட்கலாம் என்று கேட்டான்.
உடனே நேத்ரா இல்ல இனிமே அங்க வரல... நான் எதுக்காக வரணும் நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
உடனே அபிமன்யூ இங்க பாரு நேத்ரா உன்னோட அப்பா கிட்ட இதை கண்டிப்பா நீ கேட்கணும் நான் கேட்டா பதில் வராது ஆனா நீ கேட்டா கண்டிப்பா பதில் வரும்... அவர் வாய் திறந்து சொன்னா மட்டும்தான் ஏன் அதுமாதிரி நடந்துகிட்டார்ங்கற விஷயம் நமக்கு தெரியும் அதனால நீ வந்து கேட்கணும்...கிளம்பு... என்று அவளை அழைத்தான்.
ஒருவேளை அப்பா அதற்கான காரணத்தை சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா…
கண்டிப்பா சொல்லுவாரு நீ அவரோட முகத்தைப் பார்த்து கேட்டா சொல்லாம இருக்க முடியாது…
ம்ம்...ஆனா தெரிஞ்சி என்ன பண்ணபோறேன் அபி... மறுபடியும் ஒரு அழகான காரணத்தை சொல்லி கொஞ்சம் உயிரோட இருக்கற என் மனசை முழுசா கொல்லப் போறாரு... தெரியாம இருக்கிறது நல்லது…
இப்படியே என்னை நல்ல
ஹாஸ்டல்ல சேர்த்து விடு ப்ளீஸ் எனக்கு அதிகமா டெல்லி தெரியாது...
கண்டிப்பா காரணம் தெரிஞ்சதும் உன்னை ஒரு நல்ல இடத்துல சேர்த்து விட்டுட்டு தான் இங்கிருந்து போவேன்...அது ஹாஸ்டலா இல்லை ஷர்மா சார் வீடானு இனிதான் முடிவேடுக்கனும் நீ இப்போ என் கூட வா…
நீ லேட் பண்ற ஒவ்வொரு வினாடியும் அங்க என்னோட ஆளுகளுக்கு பிரச்சினை.
அங்க ஷர்மாவும்.. ரோஹித்தும் செக்யூரிட்டி கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க ப்ளீஸ் எனக்காக இல்லனாலும் என நம்பி இருக்கிற அந்த காவலாளி களுக்காகவாவது என்னோட இப்போ வா ப்ளீஸ்.. என்று பணிந்தான்.
காவலாளிகளுக்கு பிரச்சினை என்று தெரிந்ததும் எதுவும் பேசாமல் அவன் பின்னே கிளம்பினாள் நேத்ரா. மருத்துவமனையில் இருந்த சம்பிரதாயங்கள் அனைத்தையும் நிமிடத்தில் முடித்துக் கொடுத்தவன் அவனது காரில் அவளை அழைத்துக் கொண்டு ரவிச்சந்திரனின் வீட்டை நோக்கி சென்றான்.
அபிமன்யூ நேத்ராவை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது அங்கிருந்த காவலர்கள் அனைவரும் அவர்கள் சாதாரண உடையில் இருந்தனர் அவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருப்புநிற சீருடையில் யாருமே இல்லை.
சக்கரவர்த்தி கடுமையான கோபத்தில் கைகளைக் கட்டியபடி வாயிலின் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். அவனின் பின்புறமாக அபி அந்த வீட்டிற்காக நியமிக்கப்பட்ட காவலாளிகள் எட்டு பேருமே அடுத்து தாங்கள் என்ன செய்வது என்ற கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.
உள்ளே வர வரவே அபிமன்யூவிற்கு வீட்டின் நிலைமை ஓரளவுக்கு புரிய தொடங்கிவிட்டது.
கார்டனில் புதிதாக மூன்று சேர்கள் போட்டிருக்க அதில் ஷர்மா,ரோகித், ரவிச்சந்திரன் மூவருமே அமர்ந்திருந்தனர். ஷர்மாவும் ரோஹித்தும் கடும் கோபத்தை முகத்தில் தாங்கியபடி அமர்ந்திருக்க ரவிச்சந்திரன் நேர்மாறாக ஏதோ ஒரு சங்கடத்தில் அமர்ந்திருப்பது போல் இருந்தார் .
அவர்கள் முன்பு இருந்த ஒரு டீபாயில் மீது ஒரு ஊதா நிற கோப்பு ஒன்றும் அதன் மீது ஒரு பேனாவும் இருந்தது.
அபியை ரவி பணி நியமன படுத்தும்போது அவர்கள் இருவருக்கும் பொதுவாகப் போடப்பட்டிருந்த பரஸ்பர ஒப்பந்தத்தின் நகல் தான் அது.
அபி முற்றிலும் யூகித்து விட்டான். இதை சாக்காக வைத்து தன்னை இந்த வீட்டை விட்டுப் போகச் சொல்ல போகிறார்கள் என்பதை அவன் எதிர்பார்த்ததுதான் அதனால் அவன் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
இப்பொழுது ரவிச்சந்திரனுடன் சில விஷயங்களை மனம் பேசி விட்டு அவனை அங்கிருந்து விலகிச் செல்ல போகிறான் அதற்குள் இவர்கள் ஏன் அவசரப் படுகிறார்கள் என்று மனதிற்குள் நினைத்து சிரித்தும் கொண்டான்.
காரை விட்டு இறங்கிய நேத்ராவை பார்த்ததும் ரோகித்தும், ஷர்மாவும் ஒன்றுபோல் எழுந்து அவளிடம் ஓடிவந்தனர்
ஷர்மா நேத்ராவிடம் நான் இருக்கிறேன் பேபிமா... நீ தைரியமா இருக்கணும் என்று கூற
ரோகித் அவளின் அருகில் வந்து ஆறுதலாக அவளைக் கட்டியணைக்க நேத்ரா நாசூக்காக அவனை விலக்கிவிட்டாள்.
அவளின் விலகலை கண்டவன் கோபப்படாமல் ஆதுரமாக நேத்ராவின் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டான்.
இவை அனைத்தையும் கவனித்தும் கவனிக்காதது போல அபிமன்யூ தனது கூலர்ஸை எடுத்து கண்களின் மாட்டிக் கொண்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றுகொண்டிருந்தான்.
அபிமன்யூவிடம் கோபமாக வந்த ஷர்மா ...ஒருத்தருக்கு எட்டு பேர் இந்த வீட்டைக் காவல் காக்கறீங்க ஆனா வெளியிலிருந்து ஒருத்தன் ஈஸிசா இந்த வீட்டுக்குள்ள வந்துட்டு போயிட்டு இருக்கான் அதுகூட தெரியாம காவல் காத்து கிட்டு இருக்கீங்க இதுக்கு அப்புறமும் உங்களை நாங்க எப்படி நம்பறது…
உங்க அக்ரிமென்ட்டை கேன்சல் செஞ்சுட்டு இப்பவே இங்கிருந்து எல்லாரும் வெளியே கிளம்புங்க உங்களுக்கு சேரவேண்டிய பாக்கித் தொகை ஏதாவது இருந்தா உங்க அக்கவுண்டுக்கு தேடி வரும் என்று கூறினார்.
எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாத அபிமன்யூ ஷர்மாவை பார்த்தபடி இந்த வீட்டுக்கு காவலுக்காக என்ன கூப்பிட்டு வந்தது மிஸ்டர் ரவிச்சந்திரன் அவர் இந்த அக்ரிமென்ட்டை முடிக்கிறதா சொன்னா தாராளமான இப்பவே முடிச்சிட்டு கிளம்பிடுவேன் உங்களுக்கும் என்னோட வேலைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் மிஸ்டர் ஷர்மா தேவையில்லாம உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல தலையிடாதீங்க என்று முகத்தில் அடித்த படி கூறினான்.
கோபம் கொண்ட ரோகித் அபிமன்யூவை அடிப்பதற்காக வேகமாக வர இடைப் புகுந்து ரவிச்சந்திரன் ஷர்மா ப்ளீஸ் ஸ்டாப் இட்
இங்கே நடந்த பிரச்சனைக்கு நான் தான் காரணம் அதனால தயவு செஞ்சு அபிமன்யூவை எதுவும் சொல்லாதீங்க என்று கூறினார்.
உடனே ஷர்மா நான் அபிமன்யூ வந்த நாளிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன் நீ ஓவரா இவனுக்காக சப்போர்ட் பண்ற ரவி இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூற அபிமன்யூ ரவிச்சந்திரனை பார்த்து ரொம்ப தேங்க்ஸ் சார் உங்களோட நம்பிக்கைக்கு இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்குமே நான் பாத்திரமா இருப்பேன் என்று கூறினான்.
நேத்ரா தந்தையை கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
இதை கவனித்த ரவிச்சந்திரன் நேத்ராவிடம் வந்தவர் என்னை மன்னிச்சிடு மா... இங்க நடந்த எதையுமே அப்பா திட்டம் போட்டு செய்யல யாரோ விரிச்ச வலையில நீ வந்து மாட்டிக்கிட்ட என் சுயநலத்துக்காக உன்னை நான் பலிகடா ஆக்கிட்டேன் என்று அவளிடம் மன்னிப்பு கேட்க அவள் கோபமாக முறைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
அவளை சமாதானப் படுத்துவதற்காக ரோகித்தும் ஷர்மாவும் அவளின் பின்னே செல்ல அபிமன்யூ ரவிச்சந்திரனை பார்த்து என்ன சார் நடந்துக்கிட்டு இருக்கு உண்மையிலேயே உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல
வீட்டுக்கு வெளிய திருடனை தேடினா வீட்டுக்குள்ளேயே ஒழிச்சி வைச்ச கதையா ஆயிடுச்சு.
ஆனா எனக்கு தெரியும் உங்ககிட்ட இருக்கு சரியான காரணம் இருக்கும்னு.
அத தெரிஞ்சுக்காம இங்கிருந்து போகமாட்டேன் தெரிஞ்சதுக்கு அப்புறமா இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் என்று கூறியவன் சக்கரவர்த்தியிடம் வந்து பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிட்டு நீ நம்ம ஆளுகளை எல்லாம் கூப்பிட்டு நம்ம ரூமுக்கு போ என்று அவனின் வாகனச் சாவியை எடுத்து கொடுத்தான்.
இடைமறித்த ரவி அபிமன்யூ மது மேல சத்தியம் நீங்க யாரும் இங்கிருந்து போகக்கூடாது என்று கூற அதிர்ச்சி அடைந்தவன் இப்போ என்ன சொன்னிங்க என்று கேட்டான்.
அதற்கு ரவிச்சந்திரன் எனக்கு தெரியும் அபி மது கேட்டுக் கொண்டதால தான் நீ இங்க காவலுக்கு வந்தங்கற விஷயம்.
ஏதோ ஒரு வகையில நீ என் பக்கத்துல இருக்கணும்னு மது ஆசைப்பட்டா அதனால தான் உன்கிட்ட உதவி கேட்டா நீயும் அவளுக்காக உன் வேலையெல்லாம் விட்டுட்டு நீயா எதேச்சையான என்னை சந்தித்தது போல அறிமுகமான…
என்கிட்ட தொழில் கத்துக்கற மாதிரி என் கூட வந்து சேர்ந்து கடைசியில இந்த வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டி தேவைனு என் மூலமாகவே கூப்பிட வச்சிருக்க... இப்போ நீ இங்கிருந்து போயிட்டா நீ பட்ட கஷ்டம் எதுக்குமே பலன் இல்லாமல் போய்டும்…
இவ்வளவு விஷயங்கள் என்ன பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கிற நீங்க ஏன் சார் தேவையில்லாம கடைசி பத்து நாள் இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க என்னோட பாதுகாப்பு மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லாம பண்ணி வச்சிட்டீங்களே சார் .
எந்த வேலை செஞ்சாலும் அதுல ஒரு நிறைவோடு செய்யனும்னு நினைக்கிறவன் நான்... அப்படி பட்ட என்னையே நீங்க குற்ற உணர்ச்சியில் குமுற வச்சிட்டீங்களே என்ன பிரச்சினை என்கிட்ட சொல்லுங்க சார் நான் உங்களுக்கு கண்டிப்பா உதவி செய்யறேன்…
அபி உன்கிட்ட கண்டிப்பா நான் சொல்லித்தான் ஆகணும் ஆனால் அந்த விஷயம் எக்காரணம் கொண்டும் நேத்ராவுக்கு தெரியாதமாதிரி நீ பார்த்துக்கனும் என்று கூற
அது எப்படி சார் முடியும் இதுல பாதிக்கப்பட்டது நேத்ரா தான் அவளுக்கு தெரியாமல் எப்படி என்று சந்தேகத்தை அவரிடமே கேட்டான்.
நான் சொல்லப் போற விஷயத்தை நேத்ரா கேட்டா சுத்தமாவே என்னை வெறுத்திருவா... ஏற்கனவே அவ இப்போ என் மேல பயங்கர கோவத்துல இருப்பா இப்போ நான் சொல்ல போற விஷயம் தெரிஞ்சா முழுக்க முழுக்க என்னை வெறுத்து ஓதிக்கிடுவா...என்றவர் அவரின் நிலையை கூறத்தொடங்கினார்.
மேலே நேத்ராவை சமாதானப்படுத்திய ஷர்மா அவளைக் கீழே அழைத்து வர ரோகித்தும் அவர்களுடன் வந்தான்.
அவர்கள் மூவரும் வரவுமே ரவி ஆரம்பித்த பேச்சினை அப்படியே நிறுத்தினார்.
அபிமன்யூ அவரை பார்த்து சார் இப்போ நீங்க உங்களை ப்ரூவ் பண்ண வேண்டிய கட்டாயத்தில இருக்கீங்க நீங்க எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க அதுதான் எல்லாருக்குமே நல்லது என்று கூற கண்களை அழுத்த மூடி திறந்தவர் நேத்ராவைப் பார்த்து இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் இனி நேத்ராவுக்கும் தெரியறது நல்லதுனு நினைக்கிறேன் .
அவ என்ன முழுசா வெறுத்து ஒதுக்கினாலும் பரவால்ல ஆனா இதை மனசுக்குள்ளேயே வெச்சு நான் கஷ்டப்படறதை விட அவ கிட்ட சொல்லிட்டு அவ தர்ற தண்டனையை ஏத்துக்க தயாரா இருக்கேன் என்று கூறியவர் பொதுவாக அனைவரையும் பார்த்து கொஞ்சம் வேலையாட்களை வெளியே அனுப்பி வைங்க என்று கூற அபிமன்யூ சக்கரவர்த்தியை பார்க்க அவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அனைவருமே ரவியை சுற்றி நிற்க ரவி தலை குனிந்தபடியே பேச ஆரம்பித்தார் ஆபீஸ்ல ரோகினினு
ஒரு பொண்ணு வேலை செய்யறா... நம்ம தமிழ்நாட்டு பொண்ணு..
பொதுவாவே எனக்கு நம்ம ஊரு காரங்க தமிழ் பேசுறவங்கன்னா ரொம்ப பிடிக்கும் அப்படித்தான் ரோகினியையும் எனக்கு பிடிச்சது அவ கிட்ட தட்ட பன்னிரெண்டு வருஷத்துக்கு மேல ஆபிஸ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கா...அவ ஒரு டிவோர்ஸி.. கிட்டத்தட்ட மதுமதியை விட ஐந்து வயசு சின்னவ...
ஆரம்பத்துல சாதாரணமா பாஸ்... ஸ்டாஃப் அந்த ஒரு உறவு முறைதான் எங்களுக்குள்ள இருந்தது... கொஞ்ச நாள் போகப்போக எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு நல்ல நட்பு உருவாச்சு.
எனக்கு அவ எப்பவுமே ஒரு நல்ல தோழியாக தான் தெரிஞ்சா ஆனா அவளுக்கு நான் அப்படி தெரியல போல..
மது என்னை விட்டு நிரந்தரமா போன சமயத்துல நான் ரொம்பவே டிப்ரஷனா இருந்தேன்... மது ஏதோ ஒரு வெளியே சொல்ல முடியாத பிரச்சினையால தற்கொலை பண்ணிக்கிட்டா எல்லாரும் அவ சாவுக்கு ஒரு காரணத்தை கற்பிச்சாலும் கணவனா என்னால அவ மறைவை தாங்கிக்க முடியல…
நான் கடைசியா ஊருக்கு போகும் போது மதுவை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி டெல்லிகே கூட்டிட்டு வந்துடனும்...
அதுக்கப்புறமா டெல்லியில் படிச்சிட்டு இருக்கிற நேத்ராவை வீட்டுக்கே அழைச்சிட்டு வந்திடனும்னு நினைச்சேன்...ஒரே வீட்டு ஆளுக ஆனா இருக்கறது மூனு இடம்...அதை ஒரே இடமா மாத்தனும்னு கனவோட ஊருக்கு போனேன் ஆனா மது எல்லாத்தையும் ஒரே நிமிஷத்துல ஓடச்சிட்டு போயிட்டா…
சொல்லப் போனா அவர் தற்கொலை பண்ணிக்கிறக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே நான் ஊருக்கு போயிட்டேன் என்னோட பெரியப்பா வீட்டில் நடந்த ஒரு சொத்து பிரச்சினையால என்னால அங்கிருந்து மதுவை சந்திக்க முடியலை.
அந்த சமயத்தில் தான் மது தற்கொலை பண்ணிக்கிட்டா என் மனசுக்கு அது மிகப்பெரிய குற்ற உணர்ச்சி இங்கிருந்து நான் நேராக மதுவைப் பாக்க போயிருந்தா கண்டிப்பா நான் மதுவை காப்பாத்தியிருப்பேனு ஒரு எண்ணம் எப்பவுமே என் மனசுல இருக்கும்... அதனால தான் மதுவோட காரியம் முடிஞ்சு கொஞ்ச நாளிலேயே நான் டெல்லி கிளம்பி வந்துட்டேன்…
படிச்சிட்டு இருக்கிற ஒரு வயசு பொண்ணு இருக்கா... அவ படிச்சு முடிச்சதுக்கு அப்புறமா அவளுக்கு ஒரு நல்லவனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் ... எப்படி வயசு பொண்ணை பாதுகாக்கறதுனு எனக்குப் பல கவலைகள்.
அதிகமா ட்ரிங்க்ஸ் எடுத்துக்க ஆரம்பிச்சேன் ஆபீஸ், வீடு,மீட்டிங் எங்கையுமே என்னால இயல்பா இருக்க முடியல எல்லா இடத்திலேயும் அளவுக்கு மீறி ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டதால ஒரு நிதானம் இல்லாமல் இருந்தேன்.
அப்படித்தான் ஒருநாள் மீட்டிங்ல நான் அளவுக்கதிகமாக ட்ரிங்க்ஸ் எடுத்துக்க...நிதானம் இல்லாம அங்கேயே விழுந்துட்டேன்.
அப்போ எனக்கு உதவ வந்த ரோஷினி அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போக என்னோட மதுபோதை எனக்கு எதிரா மாறிடுச்சு. ரோகினி கிட்ட நான் எல்லை மீறிட்டேன்...அவ தடுத்திருந்தா கண்டிப்பா பண்ணிருக்க மாட்டேனே என்னவோ... ஆனா அவ எனக்கு முழுசா ஒத்துழைச்சா அதனால நான் என்னோட கட்டுப்பாட்டை இழுந்துட்டேன் என்று நேத்ராவைப் பார்க்க... நேத்ரா இதற்கு மேல் தான் இதைக் கேட்க தயாரில்லை என்பது போல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றாள்.
ஷர்மா,ரோஷித் மெதுவாக இடத்தை விட்டு நகர்ந்து ஒரிடத்தில் அமர நேத்ரா அபியை கடந்து சென்றாள்.செல்லும் அவளை யாரும் அறியாவண்ணம் கையை பிடித்து தடுத்து செல்லாதே என்பது போல் ஜாடை செய்து அவனின் பின்புறமாக நிற்க வைத்துக் கொணாடான்..
நேத்ராவிற்கு ஏனோ கத்திக் கதறி அழ வேண்டும் போல் தோன்றியது அது தனது தாய்க்கு தந்தை செய்த துரோகமா... இல்லை தனது தாய் சாகும் தருவாயில் ஏதோ ஒரு கடுமையான பிரச்சினையில் இருந்து இருக்கிறாள் என்று தெரிந்ததாலா அவளுக்கே தெரியவில்லை.
ரவி அனைவரையும் சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தலையை குனிந்தபடி பேச ஆரம்பித்தார் .
அதுக்கப்புறமா நான் ரோகிணியை முழுசா தவிர்க்க ஆரம்பிச்சேன் ஆனா அவ என்கிட்ட நிறையவே உரிமை எடுத்துக் ஆரம்பிச்சுட்டா
கிட்டத்தட்ட பத்து வருஷமா என்னை காதலிப்பதாகவும் எனக்கு மனைவி, இருந்ததால தான் அதை என்கிட்ட சொல்லாம மறைச்சதாகவும் என்கிட்ட சொன்னா…
இப்போ தான் மனைவி இறந்துட்டாங்களே என் காதலை ஏத்துக்கறதுல என்ன பிரச்சனைனு என்கிட்ட ரொம்ப உரிமையா சண்டை போட்டா…
ஏற்கனவே காதல், கல்யாணம் இதெல்லாம் மது மூலமா நான் பார்த்தாச்சி...அதும் வீட்ல ஒரு வயசு வந்த பொண்ணு இருக்கும்போது இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் என்னோட சபலம் மறுபடியும் மறுபடியும் ரோகினி தேட வைத்தது.
அவளும் ஆரம்பத்துலேயேநான் எப்பவுமே உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லமாட்டேன் ...நாம இப்படியே கடைசி வரைக்கும் ஒரு திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்து விடலாம்னு சொன்னதால நானும் அதை ஓத்துக்கிட்டு அவளுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்துட்டு ஒரு திருட்டு வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன்.
ஆனா அது ரொம்ப நாள் நீடிக்கல... எதேச்சையா ஒரு நாள் ரோகினியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் இந்த வீட்டோட ஆடம்பரத்தையும் இங்க இருக்கிற வசதிகளையும் பார்த்த ரோகினி இங்கேயே தங்கிக்கவானு என்கிட்ட கேட்டா.
தொடரும்