Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
844
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
1


நள்ளிரவிவு நேரம்…
மழை அதன் ஆட்டத்தை ஆடி முடித்து ஓய்ந்திருந்தாலும் அதன் பாதிப்பாக லேசான தூரல் தூவி கொண்டிருந்தது…

நேத்ரா இருபத்தி மூன்று வயதுப் பெண்...அழகிய உடல்வாகு...ஐந்தேகால் அடிக்கு சற்று அதிகம், ஒல்லியான தேகம்...மாநிறம்...வட்ட முகம்,உருண்டைகண்,ஆரஞ்சிசுளை உதடுகள்,கூரான நாசி,அடர்நீள புருவங்கள்,சப்பி கன்னங்கள்... மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகிய தோற்றம்...இப்பொழுது மழையில் நன்கு நனைந்திருந்தாள்...அவள் அணிந்திருந்த டெனிம் ஜீன்ஸ் லெமல் யெல்லோ குர்தி உடலொடு ஒட்டியிருக்க குளிரை கட்டுபடுத்த வழிதெரியாமல் இரு கைகளையும் வயிற்றோடு கட்டிக்கொண்டிருந்தாள்...நல்ல கற்றையான கருமையான கூந்தல் அதை நன்கு தூக்கி ஊச்சியில் குதிரைவால் போட்டிருந்தாள்...மழையின் நனைந்தும் கூட சிகையலங்காரம் களையவில்லை...ஒருசில முடிகள் மட்டும் அவளின் நெற்றியில் தண்ணீர் சொட்டியபடி விழுந்திருந்தன...அவ்வப்போது அதை விளக்கி விட்டபடி வேகமாக நடக்கிறாள்.

இன்னும் எவ்வளவு தூரம் தெரியவில்லை….நல்ல ரோடுதான்...ஆனால் தெருவிளக்குகள் ஒன்றுமேயில்லை... பௌர்ணமி என்பதால் நிலவொளி மட்டுமே….
இருபக்கமும் அடர்காடுகள்...நாயின் ஊளையிடும் சத்தம் எங்கோ கேட்க பயந்து சுற்றிலும் திருப்பி பார்த்தவள் நடையை இன்னும் வேகப்படுத்தினாள்.

வேகநடையின் இடையே தெரியாமல் ரோட்டில் நடுவில் இருந்த சிறுபள்ளத்தில் காலைவிட கால்தடுக்கி கீழே விழுந்தாள்...கால் மூட்டியில் நல்ல சிராய்ப்பு…உடல் முழுவதிலும் சேறும் அப்பிக்கொள்ள எப்போதடா இந்த பாதை முடிவுக்கு வரும் என்றிருந்தது….

விட்டிருந்த மழை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது...குளிர் காற்றுவேறு...ஏன் எனக்கு இந்த தண்டனை என்று கத்த வேண்டும் போல இருந்தது...பின்னால் யாரோ தூரத்துவது போல் தோண்ற ரோட்டிலிருந்து பயந்து காட்டிற்க்குள் இறங்கிவிட்டாள்…

நல்லவேளை இறங்கிய இடம் ஒரு ஒற்றையடி பாதை...தூரத்தில் சிறுவெளிச்சம் தென்பட தைரியம்பெற்றவள் அந்த வெளிச்சத்தை நோக்கி பயணித்தாள்.

பார்ப்பதற்கு பக்கத்தில் இருப்பது போல் தெரிந்தாலும் இரண்டு கிலோமீட்டராவது நடந்திருப்பாள்.காலில் சிராய்ப்பு வேறு...எரிச்சலுடன் கலந்த வலியை தர வேகமாக நடக்கவும் முடியவில்லை...உடம்பிலிருந்த சேற்றை மழைநீர் மீண்டும் கழுவிவிட்டிருந்தது…

ஒருவழியாக வெளிச்சத்தின் அருகில் வந்துவிட்டாள்...அருகில் செல்லசெல்ல அங்கங்கே நெருப்பு மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது...யோசனையுடன் வரவரவே காடுபிரிந்து அவள் முதலில் நடந்து வந்த ரோடுபோல அழகாக ஒரு ரோடு வந்தது இப்பொழுது ரோட்டின் மீது ஏறி அவ்வழியாக சில மீட்டர்கள் சென்றால் வெளிச்சம் வரும் இடத்திற்கு சென்றுவிடலாம்.

அப்பாடா ஒருவழியாக வந்துவிட்டோம் என்று அந்த ரோட்டில பயணித்து வெளிச்சம் வந்த இடத்தை பார்க்க ஒரு முதிய பெண்மணி ...இவளுக்கு முதுகை காண்பித்த படி தரையில் கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தார்...அவரை சுற்றிலும் ஒரு முன்று நாய்கள் எதையோ சண்டையிட்ட படி உண்டுகொண்டிருந்தது.

அவர் நடுவில் அமர்ந்திருக்க பின்னால் வந்த நேத்ராவிற்கு அவரும் எதையோ உண்டு கொண்டு இருப்பதை போல் தோன்றியது…பின்புறம் இருந்து பார்க்கும் பொழுதே நன்கு தெரிந்தது மூதாட்டியின் வயது எப்படியும் எண்பதாவது இருக்கும் என்று...பீச் கலரில் பின்கொசுவம் வைத்த புடவையும்,வெள்ளைநிற ப்ளவுஸூம் அணிந்திருந்தார்.நல்ல உடம்பு பின்புறம் இருந்து பார்க்கவே சற்று பயமாகதான் இருந்தது...அவர் அமர்ந்திருந்த தோரணையும்,அவரை சுற்றியிருந்த நாய்களுமே அதற்கு சாட்சி….

ஆச்சர்யம் வேறு நேத்ராவுக்கு எப்படி இந்த மழையில் இங்கே மட்டும் ஆங்காங்கே நெருப்பு எரிகிறது….எப்படி இந்த இடத்தில் தரையில் அமர்ந்தபடி இந்த மூதாட்டி அமர்ந்திருக்கிறார்...எப்படியோ இந்த ஆள் அருவம் இல்லாத காட்டில் இந்த மூதாட்டியையாவது பார்த்தோமே….ரோடு எங்கே செல்கிறது இது எந்த இடம் என்றாவது கேட்டுவிட்டு நடக்கத்தொடங்கலாம் என்று அவர் அருகில் சென்றாள்.

சற்றுபயம் தான் நாய்கள் எதாவது செய்து விடுமோ என்று...ஆனால் நாய்களோ மீண்டும் மண்ணை பறித்து எதையோ இழுத்து சண்டையிட்டபடி மும்முரமாக சாப்பிடுகிறது…

பாட்டி….

****

பாட்டி உங்களைத்தான் இது எந்த இடம் நீங்க என்ன செய்யறீங்க...இந்த இடத்துல உக்காந்து...என்று கேட்டபடி அவரின் தோளை தொட…


மெதுவாக திரும்பினார் அவர் திரும்பவும் அவரின் முகத்தை கண்ட நேத்ரா பயத்தில் கத்தியபடி பின்புறமாக விழுந்தாள்…கைகளை பின்புறம் ஊனிய படியே கால்களை நீட்டி அமர்ந்தாள்.

பாட்டியின் முகமோ மிகக் கொடூரமாக இருந்தது அங்கங்கே தீயில் வெந்தது போல் இரு கன்னத்து சதைகளும் கருகி தொங்கிக்கொண்டிருந்து...கண்களோ ஒருபூனையின் கண்களை கொண்டிருந்தது.மூக்கு இருக்கும் இடத்தில் வெறும் துளைகள் மட்டுமே...நெற்றிமுழுவதும் தோல் இல்லாத வெறும் சதை கலந்த ரத்தத்துணுக்குகள்…அவன் கையில் இறந்த ஒரு ஆண் சடலத்தின் முழு கை இருந்தது அதைதான் உண்டு கொண்டிருக்கிறார்...வாயை திறந்து கடிக்கும் பொழுது மனிதனின் வாயை நினைவு படுத்தவேயில்லை…நன்கு வளர்ந்த வேட்டைநாய் அதன் வேட்டையை கடிக்கும் அல்லவா அதுபோல் அந்த கோர முகத்தோடு பாட்டி நரமாமிசத்தை உண்ணுகிறார் எனத்தெரியவுமே அவளின் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது.


நாய்களும் மண்ணைத் தோண்டி அந்த சடலத்தை தான் உண்ணுகிறது. அப்படியானால் இந்த இடம் சுடுகாடா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்… எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு கோலங்கள் எல்லாவற்றிலுமே ஒவ்வொரு சடலம் எரிகிறதா... என்று உற்று நோக்க அப்படிதான் என்று அவளுக்கு உணர்த்தியது அந்த இடம்.

இப்பொழுது பாட்டியும் மீண்டும் திரும்பி அமர்ந்து கொண்டு அவரின் பணியை செவ்வனே செய்ய தொடங்கினார்.

நேத்ரா தனது கைகளை பின்னால் ஊனி அப்படியே பின்னால் நகர்ந்தாள் பாட்டி தன்னை பார்க்கவில்லை என்று தெரிந்ததுமே அங்கிருந்து மெதுவாக எழுந்து ஓடத் தொடங்கினாள் அங்கு எரியூட்டும் சடலங்கள் எல்லாமே அப்படியே எழுந்து அவளை பார்த்து அமர்வது போல் தெரிந்தது….

பயத்தில் மீண்டும் ரோட்டை பிடித்தவள் வந்த வழியாகவே திரும்பி ஓட அந்தப் பாதையை பிடித்தாள் அப்பொழுது சுடுகாட்டிற்கு நேர் இடதுபுறமாக ஒரு குரல் நேத்ரா என்று கதறியது முதலில் கண்டு கொள்ளாமல் வேகமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டாம் முறை அவள் பெயரைச் சொல்லி அழைக்கவும் அப்படியே பிரேக் போட்டது போல் நின்றாள் .


அந்தக் குரல்...தன்னிடம் உதவி கேட்கும் அந்த அபயக்குரல் அவள் தாய் மதுமதியின் குரல்…

நேத்ரா அம்மாவை காப்பாத்துடா... என்று..

அம்மா...எப்படி இந்த இடத்துல...என்று பதறியவள்…

அம்மா என்று கத்தியபடி குரல் வந்த திசையைத் தேடி ஓடினாள்.

இவன் அம்மா அம்மா என்று குரல் வந்த திசையைத் தேடி வேகமாக ஓட எதிர்ப்புறம் தாயிடமிருந்து குரல் கதற ஆரம்பித்து…

நேத்ரா இங்க வராத போயிடு அப்படியே போயிடு என்று…

உடனே இவள் அம்மா நான் வந்துட்டே இருக்கேன் பயப்படாதீங்க உங்க குரல் கேக்குது...உங்க பக்கத்துல வந்துகிட்டு இருக்கேன் என்று வேகமாக ஓட

ஒரு திருப்பத்தில் நிலவொளியில் தாயின் புடவை முந்தி காற்றில் பறப்பதைக் கண்டாள்.

புடவையை மட்டுமே கணக்கில் கொண்டு அதன் பின்னே செல்ல திடீரென தாயின் மொத்த உருவமும் அவள் முன்பு வந்து நின்றது…நாற்பத்தியிரண்டு வயது பெண்மணி...நேர்வகிடெடுத்த அழகான ஒற்றை பின்னல் இடுப்புவரை ஒரே போல கருநாகத்தை தொங்க விட்டதுபோல முடிகற்றைகள்....நேத்ராவின் மூத்த சகோதரி போலவே இருப்பார்.
அப்படியே மதுவின் அச்சு பிரதிநிதி தான் நேத்ரா..இவள் அணிவது ஜீன்ஸ்….அவர் புடவை அதுதான் புதிதாக பார்ப்பவர்களுக்கு வித்யாசப்படுத்தி காட்டும் தோற்றம்...


அழகான பச்சை நிற க்ரேப் சாரி...அவள் வழக்கமாக அணியும் வொர்க்டு ப்ளவுஸ்…கை எப்பொழுதுமே கை முட்டிவரை தான் தைத்து போடுவார்...அது தான் மதுமதிக்கு அழகும் கூட.புடவையை ஒற்றை முந்தியில் உடுத்தியிந்தார்.

வழக்கமாக தாய் அழகாக மடிப்பு எடுத்து பின் குத்தியிருப்பார்...இன்று ஏதோ ஒரு மாற்றம்...புடவையை அப்படி கட்டியிருந்ததால் தெரிந்திருக்கலாம்..


தாயை யாரோ பலமாக தாக்கியிருக்கிறார்கள்...இரு கன்னங்களும் வீங்கி கண்கள் கலங்கி இருந்தார்.

முகமுழுவதும் வலியை தத்தெடுத்திருந்தது...கண்களீர் நீர் குளம் கட்டி மகளை பார்த்த சந்தோஷத்தில் கைகளை நீட்டி அழைத்தது…

தாயைப் பார்த்த சந்தோஷத்தில் முன் செல்ல தீடிரென நெற்றியை சுருக்கினாள் நேத்ரா...தாயின் பின்புறம் ஒரு நிழல் கையில் ஏதோ நீளமான இரும்பு கம்பி போல…
உருவம் கையை தூக்க... அம்மா பின்னாடி யாரோ என்று கத்துவதற்குள் தாயின் வலது பக்கத்திலிருந்து அந்த தாக்குதல் தாய்க்கு நடந்தது…

நேத்ரா என்று கதறியபடி மது கீழே விழ…

ஹேய்...யார் நீ என் அம்மாவ என்ன செய்ற விடு...அவங்கள...என்றபடி தாயின் அருகே ஒடுவதற்க்குள் கீழே விழுந்த தாயின் கூந்தலை கயிருபோல் திருக்கி பிடித்தபடி இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.


வலியில் கத்திய படி மது அவளின் கைகளை கொண்டு ஜடையை பிடித்திழுக்கும் கைகளை விடுவிக்க போராட அந்த உருவம் வேகமாக அவரை சேற்றுக்குள் இழுத்துச் செல்ல ஆரம்பித்தது .

நேத்ரா பாய்ந்து சென்று தாயின் காலை பிடிப்பதற்குள் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு உருட்டுகட்டை பின் தலையில் பலமாக தாக்க வலியில் கண்கள் மங்க யார் என எட்டிப்பார்க்க பத்தடி தூரத்தில் ஒரு உருவம் அவளை நோக்கி வந்தது…தலையை உலுக்கிய படி நன்றாக பார்க்க ஆறடி உயரத்தில் எப்படியும் எண்பது கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட ஒரு ஆஜானுபாகுவான ஆண் உருவம்... முகத்தை நன்கு மூடுவது போல் ஒரு தொப்பி மழைக்கும் குளிருக்கும் சேர்த்து இதமாக ஒரு ஜெர்கின் அணிந்தபடி
அழுத்தமான காலடி தடத்துடன் அவளை நோக்கி வந்தது.


அவனின் இருபக்கமும் நாக்கை அரையடிக்கு தொங்க விட்டபடி வேட்டை நாய்கள் இவளை நோக்கி பாய்ந்து ஓடி வந்தது இப்போது கீழே விழுந்த நேத்ரா இழுத்துச் செல்லும் தாயை காப்பாற்றுவதா இல்லை தன்னைக் காப்பாற்றிக் கொள்வதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே இரு நாய்களும் அவளின் மேல் ஒரே மாதிரியாக பாய்ந்தது …


ஆஆஆஆஆஆ….

ஹக்ஆஆஆ…..என்று மூச்சித் திணறலுடன் எழுந்தமர்ந்தாள் நேத்ரா...ஏசி ரூமிலும் உடல் முழுதும் வேர்த்திருந்தது... பயத்தோடு தனது வலக்கையை கொண்டு பின்பக்கமாக தொட்டுப்பார்க்க அடி ஒன்றுமே படவில்லை அப்படி என்றால் இவ்வளவு நேரம் தான் கண்டது கனவா என்று யோசித்தவள் வெளியே மழை வருகிறதா என்று எட்டி பார்த்தாள் வெளியே பவுர்ணமி நிலவு அழகாக குளுமையை கொடுத்துக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து கண் சிமிட்டுவது போலிருந்தது

மூச்சிவாங்க எழுந்தமர்தவள் தனக்கு ஏன் இது போல ஒரு கனவு...அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இயற்க்கையாக இறந்த அவளின் தாய் வருகிறார்...ஏன்...


ஜன்னல் வழியாக குழப்பத்துடன் வெளியே எட்டிப் பார்க்க அவளின் பங்களாவிற்கு உள்ளே ஒரு காவலாளி வீட்டைச் சுற்றிலும் நாயை கையில் பிடித்தபடியே வலம்வர மற்றொருவர் வாயிலின் முன்பு அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார் .

பகல் போல வெளிச்சம்... வீட்டைச் சுற்றிலும்... பெருமூச்சு ஒன்றை விட்டவள் தண்ணீர் அருந்த ஜக்கினை கையில் எடுக்க அதில் தண்ணீர் இல்லை ….

ஊப்ப்ப...என்று சலித்தவள்

படுக்கைக்கு நேராக தனது தாயின் புகைப்படம் கோணலாக மாற்றப்பட்டிருப்பது போல் தோன்றியது அதை நேராக்கி பார்க்க இப்போது புகைப்படத்தில் இருக்கும் தாய் அவளைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது தாயின் புகைப்படத்தையே சில வினாடிகள் பார்த்தாள்...பிறகு ஜக்கினை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வர புகைப்படமும் மீண்டும் கோணலாக சென்றது... மகள் திறந்து வைத்துவிட்டு சென்று ஜன்னல் கதவு தானாக மூடியது...

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
2

மாடியிலிருந்து கீழே இறங்கி ப்ரிட்ஜை தேடி வந்தாள்...டெல்லி குளிர் அவளை வாட்டி எடுத்தது...ஏனோ இந்த தலைநகரம் அவளுக்கு பிடிப்பதேயில்லை...எங்கு பார்த்தாலுமே பொலியூஷன்... வாய்ப்பு கிடைத்தால் ஓரே நாளில் ஒடிவிடுவாள்.. சுத்தமான காற்றை சுவாசிக்க...ஆனால் இதுவரை கிடைக்கவேயில்லை.


ஆடம்பர வாழ்க்கை... சொகுசு பங்களா... அதிகமான வேலையாட்கள்…வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு...மூன்று பகுதிகளாக பிரித்து காவல் காக்க ஆட்கள்...அவ்வளவு சுலபத்தில் யாரும் வெளியிலிருந்து உள்ளே வரமுடியாது... உள்ளேயிருந்து சுலபமாக வெளியேயும் செல்ல முடியாது…


எல்லா பக்கமும் சிசிடிவியின் கட்டுப்பாட்டில்...வீட்டை தாண்டி வாகனம் சென்றாலே அந்த வாகனத்தை சென்சார் செய்து நம்பரை குறித்துக்கொள்வதுடன் வண்டியின் உரிமையாளரின் ஜாதகத்தை எடுக்கும் அளவிற்கு டெக்னாலஜி வாசலில் பொருத்தப்பட்டுள்ளது...எல்லாமே அப்பாவின் நெருங்கிய நண்பரான ஷர்மாவின் ஏற்பாடு ….

மேற்பார்வை பார்ப்பது அவளின் சொத்த ஊரான கோவையை சேர்ந்தவன்...மெத்த படித்தவன் ஏனோ இங்கு காவலுக்கு இருக்கிறான்...
எல்லாமும் வாசலுக்கே வரும் அளவிற்கு தந்தையின் பணபலம்...

எல்லாம் இருந்தும் ஏனோ ஆறாம் வகுப்பு முதல் ஹாஸ்டல் வாசம்...அதுவும் நிலையாக எங்குமே இருந்தது கிடையாது…

ஆறு முதல் எட்டு வரை ஏர்காட்டில் ஒரு தனியார் கிருஸ்துவ பள்ளி...ஒன்பது முதல் பத்துவரை கொடைக்கானல், பதினொன்று,பனிரெண்டும் சென்னையில் தனியார் பள்ளி…

காலேஜ் என்று வரும் போது பிடிவாதமாக தந்தை அவ்வப்போது வந்து செல்லும் டெல்லியில் சேர்ந்து விட்டாள்...இங்கும் ஹாஸ்டல் வாசம் தான் படிப்பு முடிந்து இப்பொழுது தான் ஓரு வருடங்களாக இந்த வீட்டில் இருக்கிறாள்... கணினியில் மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றவள்…

அடுத்தவர்களின் கணக்கை முடக்குவதில் வல்லவள்...ஆனால் வெளியில் காட்டிக் கொள்வாள் …
நல்ல அறிவாளியும் கூட…. அயல்நாட்டு வேலைக்காக காத்திருக்கிறாள்...இந்த தங்க கூண்டை விட்டு சுதந்திரமாக வெளியில் பறக்க வேண்டும்...மனதிற்கு பிடத்த இடத்தில் இருந்தபடி சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும்…பல நாள் கனவு...

அவள் இரண்டாம் ஆண்டு பயிலும் போது தான் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக செய்தி வந்தது...அப்பொழுது இங்கு நடந்த கலவரத்தில் அவளால் கோவை செல்ல முடியல... தாயின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியவில்லை…


இவள் அங்கு செல்லும் போது எல்லாமே முடித்து வீடே வெறுமையாக இருந்தது...இவளும் அந்த வீட்டில் தான் பிறந்தாள்...பதினொரு வயதுவரை அங்கேதான் தாயுடன் வளர்ந்தாள்... பிறகுதான் மதுவிடம் பல மாற்றங்கள் அவர் தான் பிடிவாதமாக இவளை ஹாஸ்டலில் சேர்த்தது…

பள்ளியை அவ்வப்போது மாற்றியதும் அவள் தான்...ஒரு தடவை கூட நேத்ராவை வந்து பார்த்ததே கிடையாது...நிறையவே ஏங்கியிருக்கிறாள் தாயின் பாசத்துக்காக...அந்த கோபம் என்றுமே உண்டு நேத்ராவுக்கு….


ஒரு மாதத்திற்கு முன்புதான் தாயின் புகைபடத்தையே எடுத்து அறையில் மாட்டியிருக்கிறாள்.
அதிலிருந்தே அவளுக்கு சரியான உறக்கம் இல்லை…
தினமும் ஏதாவது ஒரு டிஸ்டர்ப்...ச்சே இங்க வந்ததுல இருந்து ஒரு நாள் கூட நிம்மதியா தூங்ககூட முடியல...என்று தனக்குள்ளாக முனுமுனுத்த படியே ஃப்ரிட்ஜ் முன்பு வந்து நின்றாள்...
ஜக்கினை வெளியே வைத்து விட்டு ஃப்ரிட்ஜில் இருந்த மறறொரு தண்ணீர் நிறைத்த ஜக்கினை எடுத்த படி மேலே ஏறினாள்... எப்பொழுதும் வேலைக்கார பெண்மனி சரியாக எடுத்து வைத்துச் செல்வார்...இன்று மறந்து விட்டார் போல
நாளை காலை வந்ததும் இனி மறக்காதே என்று அறிவுறுத்த வேண்டும் என நினைத்தபடியே படி ஏறினாள்.

பாதி படி ஏற தனக்கு பின்புறம் ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.

எதுவுமேயில்லை…

ம்ம்..ஊப்ப்...என்று மூச்சை இழுத்து விட்டவள் மீண்டும் ஒரு படி ஏறி சட்டென்று திரும்பி பார்க்க...கரிய நிறத்திலான உருவமொன்று ஃப்ரிட்ஜின் அருகிலிருந்து தந்தையின் அறையை நோக்கி செல்ல கண்களை விரித்து பார்த்தவளுக்கு வித்யாசம் நன்றாகவே தெரிந்தது அந்தரத்தில் நீழல் போல...பூட்டிய அறைக்குள் சாதாரணமாக நுழைந்தது…

வேகமாக தந்தையின் அறையின் முன்பு சென்றவள் கதவை பலமாக தட்ட ஆரம்பித்தாள்…

ப்பா...ப்பா...என்றபடி கதவை தட்டிய படியே லாக்கை திருகினாள்...உள்ளே லாக் ஆகி இருந்தது..

அது என் ரூம் நேத்ரா அங்க என்ன செய்யற...என்று அவளின் பின்புறமிருந்து தந்தையின் குரல் கேட்க அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தாள்.

இரவு உடையில் இருந்தவர் கையில் சிகரெட்டை பிடித்தபடி இவளைத்தான் முறைத்துக் கொண்டிருந்தார்.

தந்தை ரவிச்சந்திரன் வயது ஐம்பது... ஆனால் நாற்பதுக்கும் குறைவாக காட்டும் தோற்றம்...வசிகர முகத்திற்கு சொந்தகாரர்...கம்பீரமான ஆறடி தோற்றம்…உடல்பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவர் பிஸினஸ்சில் கொடிகட்டிப் பறப்பவர்...பிறந்து வளர்ந்ததெல்லாமே கோவை என்றாலும் பல வருடங்களாக தலைநகர் டெல்லியில் வசிப்பவர் தாய் இறக்கவும் இங்கேயே செட்டிலாகி விட்டார்…

ஐ நோ ப்பா... உள்ள யாரோ…போன மாதிரி….
நீங்க வெளியனா அப்போ உள்ள கதவு லாக் ஆகி இருக்கே என்று தந்தையிடம் கூறியபடி லாக்கை திருக கதவு திறந்தது…. அதிர்ச்சியில் ரவியை பார்க்க

கடினமான முகத்துடன் உள்ளே யாரும்மில்ல…நா வெளிய தான் உனக்காக ரெண்டு மணிநேரமா காத்திருக்கேன்...எங்க போய்ட்டு வர்ற…
மாடில இருக்கற உன் ரூமுக்கும் கீழ இருக்குற என் ரூமுக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு குடிச்சிட்டு வர்ற இல்லையா…?

என்ன…?
நான் குடிச்சிருக்கேனா...அதும் எனக்காக காத்திருந்தீங்களா...என்னப்பா பேசறீங்க…நான் என் ரூம்ல இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்ததேன்...
இப்போதான் கீழ தண்ணி புடிக்க வந்தேன்...இதோ கையில ஜக்….
என்று கைகளை பார்க்க தண்ணீர் ஜக் இல்லாமல் இரு கைகளுமே காலியாக இருந்தது…தந்தையை பரிதாபமாக பார்த்தவள் அது... என்று இழுக்க


அதானே தண்ணீர் புடிக்க வந்தா ஜக் எங்க நேத்ரா...உன் ரூம்க்கு ரெண்டு முறை வந்து நீ இருக்கியா இல்லையானு செக் பண்ணிட்டு தான் உனக்காக காத்திருக்கேன்...இது தமிழ்நாடு இல்ல...கண்ட நேரத்துல ரோட்டுல சுத்தினாலும் பாவம் பாத்து வீட்ல கொண்டு விட...இது டெல்லி...இந்த நேரத்தில வர்றது உனக்கு சேப் இல்ல தினமும் உனக்கு என்னால காவல் காக்க முடியாது அண்டர்ஸுட்... குரலில் கடுமை…


அய்யோ அப்பா நா எங்கயும் போய் ஊர் சுத்திட்டு வரல...இவ்ளோ நேரம் ரூம்ல தான் இருந்தேன்...நீங்க எப்போ வந்தீங்கனு எனக்கு சுத்தமா தெரில...அதும் ரூம் லாக்ல இருக்கும் போது எப்படி...என்று தந்தையை சந்தேகமாக பார்த்தவள்….


தனக்குத்தானே என்ன நடந்தது என்று யோசித்த படி பேசிப்பார்த்தாள்...கெட்ட கனவு வந்து முழிச்சேன் தண்ணிக்காக கீழ வந்தேன் என்று தனக்குள்ளாக பேசிய நேத்ராவிற்கு அப்பொழுது தான் நியாபகமும் வந்தது படிக்கட்டிலேயே ஜக்கினை வைத்துவிட்டு வந்தது...சற்று சிரித்தபடி படிக்கட்டை பார்க்க ஜக் அங்கில்லை….குழப்பத்தில் ஓடிச்சென்று ஃபிரிட்ஜை ஓபன் செய்து பார்க்க அவள் சற்று முன் எடுத்த தண்ணீர் ஜக் முழுமையாக நிரப்பப்பட்டு குளுமையாக குளிர்சாதன பெட்டிக்குள் அழகாக அமர்ந்திருந்து...தலைவலிப்பது போல் தோன்ற இருகைகளாலும் தலையை பிடித்துக் கொண்டவள் தந்தையை பார்க்க...

அவள் சென்ற பக்கமெல்லாம் ரவியும் பார்வையை செலுத்தியவர்...நேத்ராவைப் பார்த்து நீ தெளிவாயில்லை மேல போய் படு எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் என்றார்…

இல்லப்பா நா வெளியவும் போகல... டிரிங்க்ஸும் எடுத்துக்கல வேணும்னா என்னோட ப்ரீத் செக் பண்ணுங்க என்று அவரின் அருகில் வர

ஸ்டாப் இட் நேத்ரா...இனஃப்...உன் லிமிட் தாண்டற... வரவர உன் போக்கே சரியில்ல தப்பு பண்ணிட்டு அதை ஒத்துக்கவும் மாட்டேங்கற...எதை குடிச்சா ஸ்மெல் வராதுனு எனக்கும் தெரியும் எனக்கே பாடம் எடுக்கறியா...முதல்ல உன் ரூம் போ….

நோ..ப்பா...நா எங்கயும் போகல அதை ப்ரூஃப் பண்ணாம நா மேல போக மாட்டேன்…


ஓஓஓ அவ்ளோ தைரியமா இங்க வா
என்று வாசலருகே அழைத்தவர் காட்ஸ் என்று கத்தினார்…

இரண்டு பேர் வேகமாக ஒடிவர…
மேம் எப்போ வந்தாங்க என்று கேட்டார்.அதில் கம்பீரமாக இருந்த இளைஞன் ஒருவன் பதில் கூறினான்.

ஜஸ்ட் ஃபியூ மினிட் பிஃபோர் சார்…

வாட்...என்று நேத்ரா முறைத்த படி அவர்களிடம் செல்ல பிடித்து நிறுத்திய ரவி…

எதுல
வந்தாங்க…

வித்தௌவுட் நம்பர் வித் ப்ளாக் ஸ்கார்பியோ...சார்...

எப்போ இங்கிருந்து போனாங்க…


எக்ஸாக்ட்லி டைம்...அட் நைன் ஓ க்ளாக் சார்…பிக்கப் இஸ் சேம் வெகிள்ஸ் சார்….

சரி நீங்க போங்க என்று அனுப்பி வைக்க


கோபத்தில் சத்தமாக பேச ஆரம்பித்தாள் நேத்ரா...அவன் பொய் சொல்றான் டாடி...நா ஒன்பது மணிக்கு தூங்க ஆரம்பிச்சாச்சி…என்றவள்

செல்லும் காவலாளியை பார்த்து உன் கிட்ட ப்ரூஃப் இருக்கா இடியட் என்று கோபமாக கத்தினாள்.

இழுத்து பிடித்த ரவி...ரொம்ப ஸ்மார்ட்டா பிகேவ் பண்ணறதா நினைப்பா நேத்ரா...நீ சிஸ்டம் ஹேக் பண்ணறதுல கில்லாடினு தெரியும் பர்டிகுலர் டைம்ல செக்யூரிட்டி சிஸ்டத்தை ஹேக் பண்ணி அத வொர்க் பண்ண விடாம வெளியே போய்விட்டு வர்ற…


தெரியாதுனு நினைக்கறியா…கார் நம்பர் தெரிஞ்சா யாரோடனு கண்டுபிடிச்சிடுவோம்னு சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணறல…

மெயின் கேட் கேமராவை வேணும்னா நீ ஹேக் பண்ணலாம்
ஆனா மனுஷங்களோட கண்ணை மூட முடியாது…


இன்னைக்கு நீ போகும் போதும் பாத்தாச்சி,உள்ள வரும் போதும் பாத்தாச்சி...இனி உன்கிட்ட பேச எதுமில்ல….காலைல பேசிக்கலாம் போய் தூங்கு…
என்றவர் அவரின் அறைக்குள் செல்ல…
கோபத்துடனே தந்தையை முறைத்தவள் நேராக செக்யூரிட்டியிடம் சென்றாள்…

யாரையுமே மரியாதை இல்லாமல் பேசியதே கிடையாது...ஆனால் இன்று அவளை இரவு நேரத்தில் ஊர் சுற்றுகிறாள்...மது அருந்துகிறாள் என்று சொல்லவும் தாங்க முடியாதவள்...கம்பீரமாக தனது தந்தைக்கு பதில் சொன்ன இளைஞனைப் பார்த்து
டேய்...நான் வெளிய போனதை நீ பாத்த…என்று மரியாதையை காற்றில் பறக்க விட்டாள்…

எஸ் மேம்…


பொய் சொன்னா வாயை உடைச்சிடுவேன்... ப்ரூஃப் காட்டுடா…

சாரி மேம் அந்த சமயத்துல எல்லா சிசிடிவியுமே இன்ஆக்டிவ்ல இருந்தது...என் கண்ணுக்கு இன்னும் மெமரி கார்டு பிக்ஸ் பண்ணல பண்ணும் போது காட்டறேன் மேம்….

யூயூ...ஊர்க்காரன்,படிச்சிருக்கனு, என் அப்பா உன்னை வேலைக்கு வச்சதால விசுவாசத்தை காட்டறதா நினைச்சி என் லைஃப்ல விளையாடறியா இடியட்…
உன் பேர் என்னடா அதுக்கும் அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சொல்லுவியா…

அபிமன்யூ மேம் என்று சொன்னவன் நேரம் பார்த்தான்….

ஒஒ கெளம்பி போடினு இன்டைரக்டா சொல்லறியா…

மீண்டும் நேரம் பார்த்தவன்...சற்று புன்னகையுடனே... நேரடியாவே சொல்றேன் குடிச்ச போதை இறங்கறதுக்கு முன்னாடி பேசாம உள்ள போய் படுத்து தூங்குடி என்று கூற


ஆவேசமடைந்தவள்.. என்னது டியா ஆஃப்டர் ஆல் ஒரு செக்யூரிட்டி உனக்கு அவ்வளவு திமிர் வந்துருச்சா டா.. என்று தன்னை விட ஒர் அடி உயரம் வளர்ந்து நின்ற அந்த இளைஞனின் சட்டையை கொத்தாக பிடிக்க போனவளை

அனாயசமாக தட்டி விட்டவன்... பார் இவ்வளவு தான் உனக்கு மரியாதை என் டியூட்டி டைம் முடிஞ்சதும்…இனி நான் பொறுமையா இருக்க மாட்டேன்...எத்தனை டா போடற அவ்வளவு கொழுப்பு உனக்கு...ஹாஸ்டல்ல சோத்துக்கு பதிலா வெறும் கொழுப்பை போட்டு வளத்தாங்களோ…
முதல்ல ஆஃப்டர் ஆல் செக்யூரிட்டினு சொல்லாத நாங்க இல்லனா உங்கள மாதிரி கொழுத்த பணக்காரங்க நிம்மதியா தூங்க முடியாது...


நாங்க எல்லாம் உன்கிட்ட சம்பளம் வாங்கற வாட்ச் மேன் கிடையாது பிரைவேட் செக்யூரிட்டி காட்ஸ்...அதோட நிர்வாகியான எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை குடுத்து பழகு…
நகரு நா வீட்டுக்கு போகனும் என்று கூறிவிட்டு சென்றான்...கோபத்தோடு அவனை முறைத்தவள்

உன்ன என்ன பண்ணறேன் பாரு என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் நேராக சிசிடிவி கேமாராக்களை நிர்வகிக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.

கேமராவின் கண்களுக்கு சிக்காமல் வாசலுக்கு வந்தவள் யாராவது பார்க்கிறார்களா என நன்றாக பார்த்து விட்டு திருட்டுத்தனமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த சுற்றும் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தவள்
அங்கிருந்த கேமாராக்களில் சற்று முன் அவனிடம் உரையாடிய இடம் எந்த கேமரா எண்ணிற்குள் வருகிறது என்று செக் செய்தாள்‌...பிறகு அவனிடன் உறையாடிய புஃட்டேஜ்ஜை மட்டும் அங்கிருந்த பென்டிரைவில் ஏற்றத் தொடங்கினாள்….அதை தனது பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியவள் மெமரியில் பதிவாகி இருந்ததை யாரும் மீண்டும் பார்க்காதவாறு அழித்தாள்.

பிறகு அவள் சென்றதாக கூறிய நேரத்தில் செயல் பட்ட எல்லா கேமராவையும் ஆராய ஆரம்பித்தாள் ஒன்பது மணியிலிருந்து சொல்லிவைத்தது போல் முன்பக்கம் சில கேமராக்கள்
செயலிழந்திருந்தது.ஆனால் தெருமுனையை கவர் செய்யும் கேமராவை ஆராய இவளின் தோற்றத்தில் அச்சு அசலாக இவளைப் போலவே ஒரு உருவம் நடந்து சென்றது…

கண்களை தேய்த்துக்கொண்டு மீண்டும் பார்க்க அவளின் கழுத்து வளைவில் இருந்து ஒரு இன்ச் மேலாக குனிந்தபடி சாட்சாத் நீயேதான் எவிடென்ஸ் கேட்டியே கிடைத்ததா என்று கேட்க பதறியபடி அந்த சுற்றும் நாற்காலியில் இருந்து அவனைப் பார்த்து திரும்பி அமர்ந்தாள்.

ஆறடிக்கும் மேலான தனது உயரத்தோடு நிமிர்ந்து நின்றவன் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி சரி பென்டிரைவ் குடு என்று கேட்டான்…

எந்த பென்டிவைவ்…

ம்ம்...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிஸ்டம் பாஸ்வேர்ட் ப்ரேக் பண்ணி ஒரு புஃட்டேஜ்ஜை சேவ் பண்ணி வச்சல்ல அந்த பென்டிரைவ்…

உளறாத….நகரு நான் போகனும் என்று நகர்ந்தவளை கைப்பிடித்துக் நிறுத்தியவன் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து காண்பித்தான் பாஸ்வேர்டை பிரேக் செய்யும் பொழுது அவனை அலாட் செய்வதற்க்கன செக்யூரிட்டி நோட்டிபிகேஷன் லைனாக இருந்தது பிறகு அதை ஸ்வைப் செய்தவன் …

மற்றொரு ஐகானை டச் செய்ய சற்று முன்பு சுத்தி பார்த்தபடியே நேத்ரா திருட்டுதனமாக அறைக்குள் வந்ததும் அங்கே அவள் பாஸ்வேர்டை ப்ரேக் செய்தது கடைசியாக புஃட்டேஜ்ஜை பென்டிரைவ்க்கு மாற்றி அவளின் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியது வரை தெள்ளத் தெளிவாக பதிவாகி இருந்தது அதிர்ச்சியில் அவனை பார்க்க அவனும் சீக்ரெட் கேமரா பிரிண்டர்ல பிக்ஸ் பண்ணிருக்கு இன்விசிபிள் சென்சார் வீத் கேமரா...இந்த ரூம்க்குள்ள புதுசா யார் வந்தாலும் என்னோட ஃபோனுக்கு நோடிபிகேஷனோட இந்த வீடியோ வர ஆரம்பிச்சுடும் என்று அவளின் முகத்தை பார்த்து கூற

எதுவுமே பேசாமல் தன் பாக்கெட்டிலிருந்த பென்டிரைவ்வை எடுத்து அவன் கைகளில் கொடுத்தவள்…

முகத்தில் உணர்ச்சி காட்டாதவாறு ஒன்பது மணிக்கு சிஸ்டம் ஹேக் பண்ணினது கேமரா இன்ஆக்டிவ் ஆனதுக்கு நான் காரணம் இல்ல... ரோட்ல போற அந்த பொண்ணு நான் இல்ல ...எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லை என்று அவனைப் பார்த்த பார்வையில் நீயாவது என்னை நம்பு என்பது போல் இருந்தது…

கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டவன்... எனக்கு அது தேவையில்லை... சிஸ்டம் எதனால ஹேக் ஆகுது ஏன் பர்டிகுலர் டைம்ல கேமரா இன்ஆக்டிவாகுது என்பதை எப்படியும் டூ ஆர் த்ரீ டேஸ்ல கண்டு பிடிச்சிடுவோம் அதுக்கப்புறமா அந்த பிரச்சினை உங்க அப்பாவோடது நான் இந்த வீட்டோட செக்யூரிட்டி கார்ட் அவ்வளவுதான்..இது என் வேலையில்லை...
நீங்க கிளம்புங்க என்று அவளுக்கு வழிவிட்டான்…

சொன்னவனை கோபத்தோடு முறைத்தவள்...பேரைப்பாரு அபிமன்யூவாம்...கோட்டான்…
வளர்ந்த புத்தியில்லா கொக்கு...என்று முனுமுனுக்க

தேங்க்ஸ் பார் யூவர் காம்ளிமெண்ட்ஸ் என்று புன்னகைத்தான்….

அபிமன்யூ பெயருக்கேற்றார் போலவே வீரன் அவனை துரோகத்தை தவிர வேறு யாராலும் வீழ்த்த முடியாது…நன்கு உயரம் உயரத்திற்கு ஏற்ற உடல் பருமன்..
பெண்களை மீண்டும் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம்...சில சமயம் ஆண்களே வியந்து பார்க்கும் அழகன்...

ஒருவகையில் நேத்ராவின் ஊர்க்காரன் இருபத்தியெட்டு வயது இளைஞன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ரவியிடம் பணிக்கு சேர்ந்து விட்டான் அதாவது நேத்ரா டெல்லியில் கல்லூரிப்படிப்பை தேர்ந்தெடுக்கும் பொழுது இங்கு வந்துவிட்டான்‌…

நேத்ராவைப்போலவே கணினியில் நன்கு தேர்ச்சி பெற்றவன் எளிதில் சிஸ்டத்தை ஹேக் செய்வதிலும் வல்லவன்... சர்வதேச அளவில் மிகப்பெரிய கணினி நிறுவனத்தில் வேலை கிடைக்க அதற்காக டெல்லி வந்தான் ஆனால் ஏனோ அவனுக்கு அந்த வேலை பிடிக்கவேயில்லை...கை நிறைய சம்பளம் ஆனால் புதுமை என்று எதுவுமேயில்லை...அப்பொழுது தான் கணினி சம்பந்தமான ஒரு மீட்டிங்கில் ரவிச்சந்திரனை சந்திக்க அவருக்கு இவனை பிடித்து என்னுடன் வருகிறாயா என்று கேட்க யோசிக்காமல் வந்து விட்டான்.

ஆரம்பத்தில் ரவிக்கு உதவியாளனாக தான் இருந்தான்... அவரின் பிஸினஸ் உத்தி...அவர் வேலையாட்களை வேலைவாங்கும் வீதம் எல்லாம் பிடித்து அவருடனே வலம் வந்தான்…

அவர் மாதத்தில் எப்படியும் பதினைந்து நாட்கள் இங்கு தங்குவதை வழக்கமாக்கியிருந்தார்…எப்பொழுதுமே அவர் வீட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தது…அதை அவ்வப்போது அபிமன்யூவிடம் கூற அப்பொழுது தோன்றியதுதான் இந்த பிரைவேட் செக்யூரிட்டி கார்ட் ஐடியா…உடனடியாக ரவியிடம் இருந்து விலகி சென்னையில் செக்யூரிட்டி சர்வீஸை ஆரம்பித்தான்...நல்ல வரவேற்பு...


கொழுத்துப் பணக்காரர்களின் வீட்டிற்கு நன்கு படித்து வேலையில்லாமல் ‌திறமையாக இருக்கும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவது இதனால் கணிசமான வருமானமும் அவர்களுக்கு நல்ல உணவும் இருக்க இடமும் கிடைக்கும்... நிர்வகிப்பதும் அதற்கான சிறிய வருமானம் மட்டும் இவனுக்கு கிடைக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் இளைஞர்களுக்கு நேரடியாக சேர்வது போல் செய்து விடுவான்.


அபிமன்யூ வீட்டில் பொருளாதார ரீதியாக ஓரளவு வசதிதான்... அவனுக்கு ஒரு அண்ணன் மற்றும் அக்கா உண்டு...இருவருமே மணமாகி குடும்பத்துடன் உள்ஊரிலே வசிக்கின்றனர்...அதிகம் படிக்காதவர்கள்...இவன்தான் அதிகம் படித்தவன்...மாவட்டத்தில் நம்பர் ஓன் காலேஜில் படித்து கேப்பஸில் செலக்ட் ஆனவன்…உயரிய பதவியில் அமரவேண்டும் என்ற கனவுடன் தான்
டெல்லி வந்ததே...ஏனோ கிடைத்த வேலையை வேண்டாம் என்று புறக்கணித்து விட்டு சொந்தமாக தமிழ்நாடு ப்ரைவேட் செக்யூரிட்டி சர்வீஸை தொடங்கி விட்டான்…


தீடிரென மனைவி மது இறக்க ரவி டெல்லியிலேயே செட்டில் ஆக நினைத்தார்…அபிமன்யூவின் வேலையை அறிந்து அவனிடம் கேட்க….ஏற்கனவே நன்கு பழக்கம்... ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டதற்காக மறுக்க முடியாமல் டெல்லியில் அவர் ஒருவர் வீட்டிற்காக மட்டும் இவனின் தனிப்பட்ட செக்யூரிட்டி ஆட்கள் வேலை செய்கிறார்கள்

ரவிச்சந்திரனுக்கு எல்லோருமே தமிழில் பேச வேண்டும் சொந்த ஊர்காரர்களாக இருக்க வேண்டும் அப்படி என்றால் தான் சற்று விசுவாசமாக இருப்பார்கள் என்பது போல் அவரின் நம்பிக்கை அதனால் இப்பொழுது வீடு மொத்தமும் அபிமன்யு பொறுப்பில், புதுப் புது டெக்னாலஜி களை உள்ளே புகுத்துவது செக்யூரிட்டியை பலப்படுத்துவது சிசிடிவி கேமராக்களை ஆராய்வது எல்லாமே அவனின் பொறுப்பு...ஆனால் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பது ரவிச்சந்திரனின் நெருங்கிய நண்பரான ஷர்மா தான்…

அபிமன்யூவை வாய்க்கு வந்தது போல திட்டிக்கொண்டே கோபத்துடனே மாடிப்படி ஏறி வந்த நேத்ரா அவளின் அறைக்குள் சென்றவள்...இருட்டை பார்த்து எரிச்சலடைந்த படி ஸ்விட்ச் போட்டு அறையை வெளிச்சமாக்கினாள்.

மணிபார்க்க இரண்டை காட்டியது... அப்படியே டேபிளை பார்க்க இவள் கீழே எடுத்துச்சென்ற காலி ஜக் கண்ணில் பட்டது...அதே கண்ணாடி ஜக் முழுவதும் நீர் நிரப்பியபடி... அதிர்ச்சியில் ஜக்கையே சில நெரம் உற்றுப்பார்க்க வீட்டின் உள்ளே திரைச்சீலைகள் எல்லாம் காற்றுக்கு அசைய ஜன்னல் பலமாக அடிக்கும் சத்தம் திரும்பி ஜன்னலை பூட்டுவதற்கு எட்டுவைத்தவள் சீலையாக நின்றாள்.

ஜன்னல் பூட்டிவுள்ளது...கதவும் பூட்டியுள்ளது பின் எப்படி வீட்டிற்குள் இப்படி ஒரு காற்று என்று சீலிங்கில் தொங்கும் பேனை அதிர்ச்சியுடன் நோக்க அது சத்தமில்லாமல் நின்று கொண்டிருந்தது... இப்பொழுது தாயின் புகைப்படம் அங்குமிங்குமாக மெதுவாக அசையத் தொடங்க பார்த்தவளுக்கு நெஞ்சு பகீரென்று ஆனது புகைப்படத்தின் அருகே பயந்தபடி சென்றவள் புகைப்படத்தின் மீது கையை வைத்ததற்காக செல்ல புகைப்படம் அப்படியே நின்றது

திடீரென அனைத்து ஜன்னல்களும் ஒன்று போல் திறக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபேன் சுற்ற பயந்து கட்டிலில் அமர்ந்தவள் போர்வையை எடுத்து அணைத்தபடி அறையை சுற்றிப்பார்க்க…கார்னரில் என்ன அது…?உற்றுப்பார்க்க ஏதோ ஊதுபத்தி புகைபோலவே எப்படி…?

நோஓஓ….

வீட்டின் மூலையில் உட்கார்ந்தபடி இருந்த ஒரு பழுப்பு நிறத்திலான புகைபோன்ற உருவம் அவளை பார்த்து கை நீட்டி வா என்பதுபோல் அழைத்தது பயந்து கத்தியவள் அப்படியே மயக்கம் போட்டு பெட்டில் விழுந்தாள் இப்பொழுது அந்த உருவம் மெதுவாக எழுந்து வந்து அவளின் பக்கத்தில் நின்றது. பயத்தில் வேர்த்து மயக்கத்திலிருந்த நேத்ராவின் முகத்தின் அருகே அதனின் முகத்தை வைத்து உற்று நோக்கியது பிறகு அப்படியே கரைந்து காற்றோடு கலந்தது.

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
3

மயக்கம் தெளிந்து நேத்ரா எப்பொழுது தூங்க ஆரம்பித்தாள் என் அவளுக்கே தெரியாது... நல்ல உறக்கம்…

காலை வெயில் முகத்தில் அடிக்க கழுத்து வரை போர்த்த பட்டிருந்த போர்வை எரிச்சலை தர அதை தூக்கி விசியவள் மெல்ல கண்களை திறந்தாள்…

அவளின் கால் அருகே ஸ்டூலில் அமர்ந்த படி ஷர்மா அன்றைய நாளிதழை வாசித்த வண்ணம் இருந்தார்.ரவியை விட ஒரு வயது சிறியவர்…தொட்டாலே சிவந்து விடும் நிறம்..நல்ல வளர்த்தி..அதற்கேற்றார் போல உடல்வாகு...தவறாமல் உடற்பயிற்சி செய்வதால்... ஆரோக்கியமான உடல்நலம் கோண்டவர்..காந்த கண்களுக்கு சொந்தக் காரர்.அந்த கண்களை ஒருமுறை நேராக பார்த்து விட்டால் மெஸ்மரிஷம் ஆவது நிச்சயம்.



தந்தையின் உயிர் நண்பர்...தந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்...உயிரைக்கூட தருவார்...டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்..அவர் மூலமாகத்தான் தந்தை இங்கு வந்து செட்டில் ஆனது..இந்தளவு பணம் சம்பாதித்ததும்... இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை...கேட்டால் காதல் தோல்வி என்று சிரிப்பார்... எந்த அளவு அதில் உண்மை என்று தெரியாது.

நேத்ராவின் சிறு வயது முதலே அவரை அவளுக்கு நன்கு தெரியும் என்பதால் அவரைக் கண்டதுமே அவளுக்கு ஒரு சந்தோஷம் தொற்றிக்கொள்ளும் நேத்ராவை அவருக்கு மிகவும் பிடிக்கும் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை மதுப்பொண்ணு என்று தான் அழைப்பார்...மதுமதிவின் பெண் என்பதை சுருக்கம் தான் அது...தமிழ் சரியாக வராவிட்டாலும் நன்கு புரிந்து கொள்வார்..
அவரின் உடைந்த தமிழைக்கேட்கவே நேத்ரா அவருடன் வாயாடுவாள்.

அவரை கண்டதும் சந்தோஷத்தோடு எழுந்த நேத்ரா அங்கிள் வாட் எ சர்ப்ரைஸ்... என்ன இவ்வளவு காலையிலேயே என்று எழுந்து அமர


உனக்குதான் காலை எனக்கு இது ஆப்டர்நூன் …மதுப்பொண்ணு…


ஓஓஓ...என்று நாக்கை கடித்தபடி நேரம் பார்க்க பன்னிரெண்டை கடந்திருந்தது…

என்ன இது மதுப்பொண்ணு உன் அப்பா காலையிலேயே ஏதேதோ சொல்லி ஒரே புலம்பல் ஏன் அவனுக்கு இவ்வளவு டென்ஷன் ஏத்துற அதான் காலையிலேயே உன்னை பாக்குறதுக்காக ஓடி வந்தா நீ மதியம் வரை தூங்குற நைட் கொஞ்சம் வெளியே போறதை அவாய்ட் பண்ணலாமே...மதுப் பொண்ணு.

அங்கிள் ப்ளீஸ்...நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க கண்டிப்பா என்னால தாங்க முடியாது... அப்பா தான் அப்படி பேசினா நீங்களும் அதை நம்புறீங்களா…

இல்லடா மதுப்போண்ணு ...நான் நம்புவேனா ...இருந்தாலும் நீ வெளிய போனதா சொன்ன நேரத்துல சிசிடிவி கேமரா இன் ஆக்டிவ் ஆயிருக்கு.. உன்னை மாதிரியே ஒரு பொண்ணு போன புட்டேஜ் காட்டறான் என்ன செய்ய….

ம்ச்...போங்க அங்கிள் யாரும் நம்ப வேணாம்...நா எங்கயும் போகல அது எனக்கு தெரிஞ்சா போதும்…

ஒகே கூல் பேபிமா...சரி இது என்ன நைட் டிரஸ் கூட மாத்தாம தூங்கிருக்க...டிரஸ் எல்லாம் சேறா இருக்கு என்று கேட்க

அதிர்ச்சியில் அவளைத்தான் பார்த்தாள்...ஆம் கனவில் வந்த டெனிம் ஜீன்ஸ் லெமன் யெல்லோ குர்த்தி...அதும் அங்கங்கே சேறு அப்பியபடி... அப்படி என்றால் இரவில் தான் கண்டது கனவில்லையா நிஜமாகவே ஆளில்லாத ரோட்டில் நடந்து சென்றேனா ... சுடுகாட்டிற்கு போனேனா... அப்படி என்றால் தாயின் கூக்குரல்…. தாயாரை தாக்குவது உண்மையா...அப்படி என்றால் தனது தாய் இன்னும் சாகவில்லையா... ?
தன்னை தாக்கியது யார்… அது கனவு என்றால்…

ஸ்கார்பியோவில் சென்றது நானா...எப்படி திரும்பி வந்தேன்...யார் கூட்டிச் சென்றது...எங்கு சென்றேன் எதுவுமே நியாபகம் இல்லையே...... என்று பலவாறாக யோசித்தவள் இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள் பிறகு...

அங்கிள்...என் அம்மாவோட டெத்க்கு போனிங்களா…?என் அம்மாவை புதைச்சாங்களா எரிச்சாங்களை..
என்று ஷர்மாவைப் பார்த்து கேட்க…

என்ன இது பேபி நாலு வருஷம் கழிச்சு இந்த டவுட்…

ப்ளீஸ் சொல்லுங்க காரணமாதான்…

ம்ம்...பொதைச்சோம்... நான் அங்க தான் இருந்தேன் பிஸினஸ் விஷயமா நான் அங்க போயிருந்தப்போ தான் மது இறந்தது….

எப்படி…இறந்தாங்க சாகும் போது என் கணக்கு படி அம்மாக்கு வயசு முப்பத்தி எட்டு தான் அவ்ளோ சின்ன வயசுல என்னாச்சி அவங்களுக்கு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ஷர்மாவை அதிர்ச்சி ஆக்கினாள்…

இது எல்லாமே உன்னோட அப்பாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி நான் உன் அம்மா அப்பா ரெண்டு பேருக்குமே பொதுவான பெஸ்ட் பிரண்ட் மட்டும் தான்
மதுவை பத்தி பர்சனலா எதும் தெரியாது ஆனா கருப்பை சம்மந்தப்பட்ட நோய் அதால அவ இறந்தது ரொம்ப நாள் ட்ரீட்மென்ட் எடுக்காமலே நோய் முத்தியதா பேசிகிட்டாங்க...ஆமா ஏன் இப்போ இந்த கேள்வி…

இல்ல அங்கிள் நைட் ஒரு கனவு என்று கனவைச் சொல்ல ஆரம்பிக்கவும் ரவி வாசலுக்கு வந்து கதவை தட்டினார்.

என்ன ஷர்மா எங்க எல்லாரையும் அங்கு உட்கார வச்சுட்டு இங்கே வந்து நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க அவ கிட்ட விஷயத்தை சொன்னியா சீக்கிரமா கிளம்பி வர சொல்லு என்று கூறியபடி கீழே சென்று விட குழப்பத்துடன் ஷர்மாவை பார்த்து

என்ன விஷயம் அங்கிள் எந்த விவரத்தை என்கிட்ட சொல்லணும்னு அப்பா சொல்லிட்டு போறாங்க...

எல்லாம் நல்ல விஷயம் தான் மதுப் பொண்ணு உன்னை பொண்ணு பாக்கறதுக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க….

என்ன..? பொண்ணு பாக்கவா...
யூ மீன் கல்யாணம்…



யெஸ் மதுப்பொண்ணு... கல்யாணமே தான்...அப்பாவீட்ல இருந்தது போதும் இனி கல்யாணம் பண்ணிட்டு இந்த அங்கிள் வீட்டுக்கு வந்திடு….

புரியலை அங்கிள்...உங்க வீட்டுக்குனா... மாப்பிள்ளை என்று ஷர்மாவை சந்தேகத்துடன் பார்த்தபடி கேட்க


மதுப்பொண்ணுக்கு எப்பவுமே கிண்டல் தான் கல்யாணம் பண்ற வயசா எனக்கு...நாட்டிகேர்ள்...என் தங்கை பையன் என்னோட தான் இருக்கான் அவனுக்கு பொண்ணு பாக்கறாங்க...அப்போ தான் ரவி உனக்கு மாப்பிள்ளை பாக்க சொன்னது நியாபகத்துக்கு வந்தது
அதான் இங்க கூட்டிட்டு வந்திட்டேன்…

உனக்கு அவனைப் பிடிக்குதானு பாரு பிடிச்சதுனா ஓகே அப்படி இல்லன்னா நோ ப்ராப்ளம்...என்று சிரித்தபடியே கூறினார்.


நோ அங்கிள்...நான் யாரையும் பாக்க வரல …. கல்யாணம் அதும் எனக்கு இப்போ என்ன அவசரம் …நான் வேலைக்கு போகனும் சொந்த கால்ல நிக்கனும்...அப்புறம் தான் எல்லாம்...நீங்க அவங்களை கூட்டிட்டு போங்க ப்ளீஸ்…

மதுப் பொண்ணு இப்போ ஏன் இவ்ளோ டென்ஷன்...கூல்..
இப்ப என்ன உனக்கு கல்யாணம் வேண்டாம் அவ்வளவுதானே ஓகே அதுக்காக எதுக்கு இவ்வளவு கோபம்…

முதல்ல போய் குளிச்சுட்டு பிரெஷாயிட்டு கீழே வா

அவங்களுக்கு ஒரு ஹாய் சொல்லு அவ்வளவுதான் அதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட போறேன்...அப்புறமா உன் முடிவை பொறுமையா அவங்ககிட்ட சொல்லபோறேன்...இப்போ நீ கீழ வரலனா ரவிக்கு ரொம்ப அசிங்கமா போயிடும் சொன்னா கேளுடா...என்றவரின் குரலில் இருந்த கெஞ்சல் அவளின் மனதை கரைத்தது…


ஓகே அங்கிள் உங்களுக்காக தான் கீழ வர்றேன்... அவங்களுக்கு ஹாய் சொன்னதும் அவங்களை கூட்டிட்டு போயிடனும் அப்புறம் எங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ண வேண்டிய வேலையும் உங்களோடது தான் என்று கூறியபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.

கீழே செல்ல திரும்பிய ஷர்மா மதுவின் புகைப்படத்தை பார்த்து
மது நீ உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் உன் பொண்ணு பாதை மாறி போயிருக்க மாட்டா... அவ மனசை மாத்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய...நீ இருந்திருந்தா இந்நேரம் அவளை கல்யாண கோலத்துல பார்த்திருக்கலாம் என்று கூறியபடி புகைப்படத்தை தொடப்போக... புகைப்படம் அசைய ஆரம்பித்தது…

ம்ச் இந்த காத்து வேற... என்று ஜன்னலை மூடிவிட்டு திரும்ப மதுவின் புகைப்படம் கீழே விழுந்து உடைந்தது.

அப்பொழுது தான் குளியலறைக்குள் சென்றிருந்த நேத்ரா பட்டென்று கதவை திறந்து என்ன ஆச்சு அங்கிள் என்று பதறியபடி கேட்டாள்.

இல்ல மது போட்டோ கீழ விழுந்து உடஞ்சிடுச்சி...என்றவர் சற்று பதட்டத்துடன் நான் ஒன்னும் பண்ணல போட்டோ அதுவே தான் கீழ் விழுந்திருச்சி பேபி என்று கூற


அதை விடுங்க அங்கிள்..
உங்களுக்கு அடி எதும் படலேயே …

இல்லை என்பது போல் ஷர்மா தலையாட்ட


நானே தூக்கி வீசனும்னு நினைச்சேன் அதுவா கீழ விழுந்து ஒரு வேலையை மிச்சம் பண்ணிடுச்சி...ஒகே அங்கிள் நீங்க கீழே போயி வெயிட் பண்ணுங்க நான் குளிச்சுட்டு ரெடியாயிட்டு வரேன்...தப்பா எடுத்துக்கலனா சர்வன்ட் யாரையாவது அனுப்பி இதை க்ளீன் பண்ண சொல்லிடுங்க என்று கூறியபடி மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்‌.

நேத்ரா கூறிய விஷயத்தில் கோபம் கொண்டவர் மதுவின் புகைப்படத்தை கையிலெடுத்தார்.பிறகு அதில் இருக்கும் கண்ணாடி துண்டுகளை எல்லாம் நீக்கியவர் மதுவின் முகத்தை பார்த்தபடியே உன்னருமை உன் பொண்ணுக்கு தெரியல பாரு மது...தூக்கி வீசனும்னு நினைச்சாலாம்...வர்ற கோவத்துக்கு அவளை அடிச்சிருப்பேன்...உன் பொண்ணுங்கறதால தப்பிச்சா...வா மது நான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்...என்ற படி அவளின் முகத்தை தடவிகொடுக்க அதிலிருந்த கண்ணாடி துணுக்கு ஒன்று ஷர்மாவின் கையை பதம்பார்க்க…

ஆஆஆ...என்று கைகளை உதறியடி புகைப்படத்தை கீழே விட்டார்... இப்பொழுது போட்டோ நன்றாக உடைந்துவிட மதுவின் முகமெங்கும் ஷர்மாவின் ரத்தத் துளிகள்….

ஷீட்...என்று கால்களால் தரையை உதைத்தவர் கீழே சென்றார்...ரத்தம் நிற்கவேயில்லை...

கைகளில் வாஷ்பேஸினில் நன்றாக கழுவியவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து கைகளைக் கட்டிக்கொண்டார்.

பிறகு பாக்கெட்டுக்குள் கைகளை மறைத்துக் கொண்டார் நல்ல காரியம் நடக்கப் போகும் நேரத்தில் இது அபசகுனமாக மற்றவர்களுக்கு தோன்றுமே என்று எண்ணியவர் கை காயத்தை வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

சற்று நேரத்திற்கு எல்லாம் அழகிய மெருன் கலர் சோளியை அணிந்த படி நேத்ரா கீழே இறங்க அனைவருமே அவளுடைய அழகை கண்டு வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

பொதுவாக அனைவருக்கும் வணக்கம் வைத்தவள் ஷர்மாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்…

மாப்பிள்ளையின் குடும்பத்தினர் அனைவருமே டெல்லியை பூர்வீகமாகக் கொண்டதால் அணைவரின் முகத்திலும் வடக்கத்திய சாயல்... மாப்பிள்ளையை சைடாக பார்த்தாள் குறை சொல்வதற்கு எல்லாம் ஒன்றுமில்லை பார்த்தாலே தெரிந்தது நன்கு படித்தவன்... ஷர்மாவின் உறவினர் வேறு…எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று கனவு வைத்திருந்தாளோ அதே போல் இருந்தான் பெயர் கூட சூப்பர் தான் ரோகித் ஷர்மா...

அவளுக்கென்று லட்சியங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பையனை திருமணம் செய்வதில் நேத்ரா விற்கு எந்த பிரச்சினையும் இல்லை .

மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் நேத்ராவை பிடித்திருக்கிறது என்பது போல் ஷர்மாவைப் பார்த்து தலையை ஆட்ட ஷர்மாவும் சரி எதுவா இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் என்று அவர்களுக்கு ஹிந்தியில் பதில் கூறினார்.

ரவி இடையில் புகுந்து ஏன் ஷர்மா அவங்களுக்கு தான் பிடிச்சிருக்கு இல்ல அப்புறம் என்ன பிரச்சனை கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாமே….

வெயிட் பண்ணு ரவி...எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் கழிச்சு பேசிக்கலாம் நீயும் பேபி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ ..என்ற ஷர்மாவை கோபபார்வை பார்த்தவர்


நேத்ரா கிட்ட பேசுறதுக்கு ஒண்ணுமே இல்ல இனியும் அவளோட பேச்சைக் கேட்டு அவ கல்யாணத்தை என்னால தள்ளிவைக்க முடியாது இவளுக்கு தினம் தினம் என்னால காவலும் இருக்க முடியாது அதனால அவளுக்கு ஒழுங்கா நல்ல புத்தி சொல்லி இந்த கல்யாணத்தை பண்ணிக்க சொல்லு... அதுதான் அவளுக்கு நல்லது அவ இந்த வீட்டை விட்டு போனாலே போதும் எனக்கு பாதி பீபி குறையும் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு புரியாத வாறு தமிழில் கூறினார்.

தந்தையின் பேச்சால் மனமுடைந்த நேத்ரா ஷர்மாவை பார்த்து அங்கிள் என்னால யாருக்கும் பீபி ஏற வேணாம் நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கறேனு சொல்லுங்க அதுக்கு முன்னாடி மாப்பிள்ளையோட மட்டும் கொஞ்சம் பேசணும் ஒரு டூ மினிட்ஸ் என்று கூற ஷர்மா மாப்பிள்ளையிடம் ஹிந்தியில் கூற உடனே அவன் எழுந்து நேத்ராவின்பின் சென்றான்.

தனியறையில் மாப்பிள்ளையை பார்த்து உங்களை ரிஜெக்ட் பண்றதுக்கு எனக்கு எந்த காரணமும் இல்லை அதனால தான் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்..

ஆனா எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும் இப்போதைக்கு இந்த கல்யாணத்தை ஓரு வருஷம் தள்ளி வைச்சிகலாம்…ஒருவேளை உங்களுக்கு என்ன விட பெட்டரான பொண்ணு கிடைச்சா தாராளமா நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம் எனக்கு எந்த ஒரு அப்ஜெக்ஷனும் இல்லை

இப்போதைக்கு நான் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் கொஞ்ச நாளாவது வேலைக்கு போகனும்... அது என் கனவு லட்சியம் அதுக்காக தான் இந்த ஒரு வருஷம் காத்திருப்பு. உங்களுக்கு ஓகேன்னா எனக்கு உங்கள கல்யாணம் பண்றதுல எந்த பிரச்சினையும் கிடையாது என்று அவனுக்குப் புரியும் பாசையில் கூறினாள்.

அவள் கூறியவற்றை நன்கு உள்வாங்கியவன் நேத்ரா எனக்கு உன்ன ரொம்ப, ரொம்ப ,ரொம்ப... புடிச்சிருக்கு..

அதும் இப்போ உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் இன்னும் அதிகமாய் உன்னை பிடிச்சிருக்கு இந்த ரோகித் சர்மா கல்யாணம் பண்ணினா கண்டிப்பா அது நேத்ராவை மட்டும் தான்... வேலை நீ வெளிய போய் தான் செய்யணும்னு அவசியம் இல்ல நம்ம கிட்டயே ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு அதுல ஏதாவது ஒன்னு கூட நீ எடுத்து பண்ணலாம் அது உன்னோட சாய்ஸ் தான்...

அப்புறம் கல்யாணத்துக்காக ஒரு வருஷம் இல்ல ரெண்டு வருஷம் வேணாலும் டைம் எடுத்துக்கோ எனக்கு நோ அப்ஜக்ஷன் ஆனா அதுக்கு முன்னாடி சின்னதா ஒரு என்கேஜ்மென்ட் மட்டும் பண்ணிக்கலாம் உனக்கு நான் எனக்கு நீ அப்படிங்கிற ஒரு ஒப்பந்தம் அது மட்டும் போதும் எனக்கு வேற எதுவுமே வேண்டாம் என்று கூற அவன் கூறியது இவளுக்கும் சரி என்று பட ஓகே நான் கேட்டதுக்கு நீங்க ஓகே பண்ணும்போது நீங்க கேட்டதுக்கு நானும் ஓகே பண்ணறேன் என்று கூற உடனை தலையாட்டினாள்…

இந்த டீல் எனக்கு ஒகே ஆனா ரெண்டு வருஷம்லாம் வேணாம் ஜஸ்ட் ஒன்இயர் போதும்...வாங்க வெளிய போய் நம்ம பேரண்ட்ஸ் கிட்ட சொல்லலாம் என்ற படி
சந்தோஷமாக வெளியில் வந்தவர்கள் இருவரின் சம்மதத்தையும் பெரியவர்களிடம் தெரிவிக்க ரவியும் ஷர்மாவும் சந்தோஷத்துடன் கட்டிக்கொண்டனர்.


ரோகித்தின் தாய் தந்தையோ அன்பாக நேத்ராவை கட்டியணைத்தர்கள் உன்னை மருமகளா அடைய நாங்க புண்ணியம் பண்ணிருக்கனும் என்று சந்தோஷத்தோடு அவளிடம் தெரிவித்தவர்கள் ரவியிடம் வந்து
நிச்சயத்திற்கான தேதியை பார்க்கத் தொடங்கினர்…

நேத்திரா விற்கு திருமணம் என்றதும் சந்தோஷமும் இல்லை துக்கமும் இல்லை எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்துகொள்ளதான் போகிறாள்.


அதற்கு இப்பொழுதே கண்ணுக்கு லட்சணமாக இருக்கும் ரோகித்தை திருமணம் செய்து லைஃபில் செட்டில் ஆனால் என்ன…?
தெரியாத நல்லவனுக்கு தெரிந்த போக்கிரி எவ்வளவோ மேல்...


தந்தைக்கு ஏனோ தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை தன் மீது தேவையில்லாத வீண் பழி வேறு இங்கிருந்து சென்று ஷர்மாவின் வீட்டிலாவது சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தவள் நடக்கும் அத்தனை விஷயங்களையும் உணர்ச்சியே இல்லாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தாள்.


தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
4

பேச்சுவார்த்தைகள் திருப்பிகரமாக முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி விட

ஷர்மாவிடம் வந்த நேத்ரா ஒகே அங்கிள் கை வெளிய எடுங்க என்றபடி கையில் முதலுதவி பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்...
பெருசா ஒன்னுமில்ல பேபி ஐ மேனேஜ் இட் என்றவரை பார்த்து…


ம்ம் அதான் இவ்ளோ நேரம் பார்த்தேனே நீங்க மேனேஜ் பண்ணிட்டு இருந்ததை ம்ச்...காமிங்க அங்கிள்...என்று அவரின் கையை பாக்கேட்டில் இருந்து வெளியே எடுத்தவள் அவரின் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டே

நல்லா ஆழமா இறங்கிருக்கு அங்கிள்... என்றபடி அவளின் மடியில் வைத்து காயத்தை ஆராய்ந்தாள்.

ஷர்மாவின் காந்தக் கண்களில் முதல்முறை நீர் பூத்தது…

வலிக்குதா அங்கிள்...சாரி என்னால தானே இப்படி ஆச்சி...ஃபோட்டோவை என் ரூம்ல வச்சதுல இருந்தே சரியில்ல... இன்னைக்கு ரத்தத்தை பாத்திடுச்சி... அதான் எடுத்த இடத்திலேயே வைக்க சொல்லிட்டேன்…ரெண்டு நாளாவே ஆனி சரியில்லை போல போட்டோ ஆடிக்கிட்டே இருந்தது ம்ச்...நான்தான் கவனிக்கல...போட்டோ ஃபுல்லா ரத்தமா இருந்தது...அதை பாக்கும் போதே காயம் பெருசுனு நினைச்சேன் இவ்ளோ பெருசுனு நினைக்கல...எதுக்கும் டாக்டரை ஒரு தடவை பாத்து செப்டிக் இன்ஜெக்ஷன் பண்ணிக்கோங்க அங்கிள்...என்றபடியே கட்டுபோட்டு முடித்தாள்.

அவளின் அன்பில் நெகிழ்ந்தவர் மெதுவாக மற்றொரு கையால் நேத்ராவின் கன்னத்தில் கைவைத்தபடி என்னோட வந்திடறியா மதுப்பொண்ணு இப்போவே...என்றபடி கண்கலங்கினார்.

ம்ம்‌...வரலாமே ஆனா டெய்லி பப்க்கு கூட்டிட்டு போகனும் சுவர் ஏறி குதிக்க முடியல...என்று புன்னைத்தாள்.

விளையாடாத...பேபிமா... இப்படி அன்பா பாத்துக்க என் வீட்ல யாரும் இல்ல சுத்தி இருக்கிற எல்லாருமே பணத்துக்காக மட்டுமே இருக்காங்க….நீ வந்துட்டா மினி பார்-ரையே வீட்டுக்கு கொண்டு வர்றேன் சுவர் ஏறியோ கேமராவை இன்ஆக்டிவோ பண்ணவேணாம்….என்றவரை பார்த்து


ம்ம்...நக்கல்…. அதான் கூடவே வச்சிக்கறது போல உங்க வீட்டு பையனை கல்யாணம் பண்ணி வைக்கப்போறீங்களே அப்பறம் என்ன…


அடுத்த வாரம் நிச்சயம் வச்சிக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம்….உனக்கு ஒகேதான மதுப்பொண்ணு…


ம்ம்...உங்க இஷ்டம் அங்கிள்...என் லைஃப்ல என்னைக்கு முடிவெடுக்கற உரிமை எனக்கு இருந்திருக்கு சொல்லுங்க...ஸ்கூல்ல இருந்து அம்மாவோட கன்ட்ரோல்...காலேஜ் அப்பாவோட கன்ட்ரோல்...இப்போ நீங்க….ம்ச்…

என்ன மதுப்பொண்ணு இப்படி பேசுற கல்யாணம் நீ விருப்பப்பட்ட மாதிரி ஒரு வருஷம் கழிச்சு தான்... இந்த அங்கிள் உன்னை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறதா நினைக்கிறியா இல்லடா பேபிமா… ரவி உன்னை நினைத்து ரொம்ப கவலைப்படறான்... நீ ராத்திரியில அதிகமா வெளியே சுத்தறியோனு... அதுமட்டுமில்ல நீ ஆல்கஹால் அடிட்டோனு பயப்படறான்.

ஹான்….அப்படி பாக்காத பேபிமா நீ அப்படி எல்லாம் இல்ல அது எனக்கு தெரியும்... ஏன் இங்கிருந்து அவனுக்கு சங்கடத்தைக் கொடுக்கனும் ..
அதான் அங்க கூட்டிட்டு போறதுக்ககாக தான் இந்த கல்யாண ஏற்பாடு…


நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட நீ தாராளமா என் வீட்ல வந்து தங்கிக்கலாம் இங்க டெல்லியில் இதெல்லாம் சகஜம் தான்…இல்ல இப்பவே வர்றதுனாலும் கிளம்பி வா அங்கிள் நா இருக்கேன்.. உன் இஷ்டம் போல நீ இருக்கலாம் யாருக்காகவும் பயப்பட வேண்டாம்…

ம்கூம்...இப்போ கூட உங்க அன்புக்காக அங்க வருவேன்...ஆனா இந்த நிமிஷம் வரை நீங்களும் என் அப்பா போல தான் பேசறீங்க...என்னை நம்பல...உங்க வார்த்தையிலேயே அது தெரியுது...உன் இஷ்டம் போல இருக்கலாம்னு நீங்க சொல்லற அந்த வார்த்தை தான் அதுக்கு சாட்சி….

எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் அங்கிள்...நா ஹாஸ்டல்ல தனியா கஷ்டபட்டப்போ என் அம்மா கூட என்னை தேடி வந்தது கிடையாது ஆனா நீங்க என்னை தேடி வருவீங்க அம்மா என்னை மூனு முறை ஸ்கூல் மாத்தினாங்க மூணு ஸ்கூலுக்கும்ம் என்னை தேடி வந்த ஒரே ஒரு உறவு நீங்க மட்டும் தான் அங்கிள் உங்க ஒருத்தருக்காகவாவது என்னை நான் ப்ரூஃப் பண்ணனும்…

இங்க வந்த ஒரு வருஷத்துல அப்பாவோட பர்மிஷன் இல்லாம நான் எங்கேயும் போனதில்லை எந்த பஃப்பையும் தேடினும் இல்லை எந்த டிரிங்க்ஸையும் டேஸ்ட் பார்த்ததில்லை முக்கியமா ராத்திரில கேமராவை இன்ஆக்டிவேட் நா பண்ணல..அது யாருனு முதல்ல தெரிச்சதுக்கு அப்புறம் தான் உங்க வீட்டுக்கு வர்றது...அதுவரைக்கும் கல்யாணமும் இல்ல...எனக்கு நிம்மதியும் இல்ல….


மதுப் பொண்ணு அங்கிள் ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன்...நீ அதை மனசுல வச்சிட்டு அங்கிள் வீட்டுக்கு வரமாட்டேனு சொல்லறது தப்பு... அங்கிள் உன்னை டென் பர்சன்டேஜ் நம்பறேன் இப்பவே செக்யூரிட்டி கிட்ட சொல்லி சிசிடிவி கேமரா எதனால டெய்லி பர்டிக்லர் டைம்ல வொர்க் ஆகாம போகுதுனு பாக்கலாம்...அது தெரிஞ்சாலே உன் அப்பா உன்னை நம்ப ஆரம்பிச்சிவான்.


ம்ம்...கண்டுபுடிக்கறேன் என்று யோசனையாக கூறிய நேத்ரா பட்டென்று சிரித்தபடி அதை விடுங்க அங்கிள் நான் பார்த்துக்கறேன்...என் பிரச்சனை...

சரி நீங்க சொல்லுங்க….என் மேல ஏன் இவ்ளோ பாசம்….என் அம்மா அப்பாக்கு கூட இல்லாத அக்கறை... உங்களுக்கு இருக்கு….ஏன் அங்கிள்….

ஒருவேளை மதுப்பொண்ணு அழகா இருக்கறதாலயா இருக்கும்….

சுமாரா இருக்கற ரவிச்சந்திரன் மதுமதி தம்பதியருக்கு பிறந்த நேத்ராவே அழகுனா…
அகர்வால் கடை குலாப்ஜாமுன் மாதிரி இருக்கற மனிஷ் ஷர்மாக்கு கல்யாணம் ஆகி அவருக்கு ஒரு பொண்ணு இருந்தா எவ்ளோ அழகா இருந்திருப்பா சொல்லுங்க...அதும் உங்களை மாதிரி கண் இருந்திருந்தா சான்சே இல்லை...இப்போ கூட ஒன்னும் கெட்டு போயிடல அங்கிள்... யூ ஆர் லூக்கிங் சோ க்யூட்...வெரி ஹன்சம்...வெரி ஹாட்...இப்போ நீங்க ம்ம்னு சொன்னா கூட இந்த டெல்லில பொண்ணுக க்யூல நிப்பாங்க உங்களுக்கு பொண்ணு பாத்திடலாமா... என்று கேட்க….

அதுவரை சிரித்த படி கேட்டுக் கொண்டிருந்த ஷர்மாவின் முகம் மாறியது... முகமாறுதலை பார்த்த நேத்ரா பயந்தபடி அங்கிள் என்னாச்சு என்றாள்…

ப்ளீஸ் பேபி இனி ஒரு தரம் எனக்கு பொண்ணு பாக்கறத பத்தி பேசாத...அதைபத்தி பேசினாலே எனக்கு அவ நியாபகம் வருது...அவளும் இப்படி தான் என்னை அப்படி புகழுவா...ஆனா வீதி எங்களை பிரிச்சிடுச்சி…

ஐயாம் எக்ஸ்ட்ரீம்லி ...சாரி அங்கிள்...நா அதை யோசிக்கல விளையாட்டா பேசிட்டேன் என்று அவரை சமாதானப்படுத்தினாள்…

சரி பேபி மா நான் வீட்டுக்கு போறேன் என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்தவர் நேராக அவரின் வீட்டிற்குள் சென்றார்.

எதிர்ப்பட்ட வேலை ஆட்களை எல்லாம் தள்ளிவிட்ட படியும் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காலால் எட்டி உதைத்தபடியும் அவரின் தனிப்பட்ட அறைக்குள் சென்றவர் அங்கு வைத்திருந்த முழு மது பாட்டில் ஒன்றை எடுத்து அப்படியே வாயினுள் ஊற்ற தொடங்கினார்…

பிறகு ஹாஆஆஆஆஆ என்று இருகைகளையும் விரித்து மேலே பாத்து கத்தியவர் கோபம் அடங்காமல் கையிலிருந்த மதுபாட்டிலை தூக்கி சுவற்றில் அடித்தார்….


அடித்த வேகத்தில் பாட்டில் சில்லு சில்லாக நொறுங்கியது. பாட்டில் பட்ட இடத்தில் இருந்த ஸ்வீட்ச் தானாக ஆன் செய்ய சுவர் முழுவதும் ஒரு பெண்ணின் புன்னகைத்த உதடுகளும் கண்களும் மட்டும் தெளிவாக தெரிய முகம் மங்கலாகத் தெரிவது போல் ஒரு புகைப்படம் தோன்றியது…

புகைப்படத்தை கண்டவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் புகைபடத்தில் தெரிந்த உதடுகளின் மீது கைகளால் தடவி கொடுத்தபடி உன்னை மறக்க நினைக்கிறேன்...ஆனா முடியலையே... தினம் தினம் புதுசா எனக்கு வலியை மட்டுமே கொடுத்துக்கிட்டு நீ மட்டும் சிரிக்கிற…. என்று கூறியவர் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து புகைப்படத்தை நோக்கி வீசினார்


வெளியே இருந்த வேலைக்காரர்கள் அனைவருமே பயந்தபடி அறைக்கு வெளியே காத்திருந்தார்கள் இது போல் நிகழ்ந்து அடிக்கடி நடக்கும் இது முடித்த பிறகு வீட்டை சுத்தம் செய்வதற்கு என்றே தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்

ஷர்மாவை அடக்கும் ஒரே ஆள் ரோகித் மட்டுமே உடனடியாக ரோகித்திற்கு ஒரு பணியாளர் ஃபோன் செய்து கூற ஓடி வந்தவன் அங்குள்ள நிலைமை அறிந்து

ஷர்மாவிடம் வந்தவன் என்ன ஆச்சு அங்கிள் யார் உங்களுக்கு ஆன்ட்டியை நியாபகப் படுத்தினதுஎன்று கேட்டபடி சமாதான படுத்த முயன்றான்...ஆனால் ஷர்மா ரோகித்தின் கன்னத்தில் ஒரு அறை வைத்தவர் தள்ளிப்போடா முதல்ல இடியட் என்று தள்ளிவிட்டவர் அதன் பிறகு அங்கேயே மடிந்து அமர்ந்து கதறிக் கதறி அழத் தொடங்கினார்.

ரோகித் ஷர்மாவின் நிலையைக் கண்டு துடித்தவன்
அங்கிள் ப்ளீஸ்... கன்ட்ரோல் யூவர் செல்ஃப்... நான் இருக்கேன் உங்களுக்கு...என்று ஆறுதல் கூறினான்…

முடியல ரோஷித் என்னால இவளை மறக்கவே முடியல... தினம் தினம் புதுசா தெரியறா... இந்த போட்டோவோடவே குடும்பம் நடத்திட்டு இருக்கேன் டா அவளுக்கு என்ன என்கிட்ட பிடிக்காம போக வச்சது

அங்கிள் அழகா
இல்லையா …? என்கிட்ட பணம் இல்லையா..? படிப்பில்லையா..? எது அவளை என்கிட்ட இருந்து விலகிபோக வச்சது...

நீ இந்த ஜெனரேஷன் பையன் தான உனக்கு ஒருவேளை பொண்ணுங்களோட சைக்காலஜி தெரிந்து இருக்கலாம்ல்ல சொல்லுடா ஏன்டா அவ என்னை வேண்டாம்னு சொன்னா என்று அவன் என் சட்டையை பிடித்து கதறினார்…

தனது தந்தைக்கு மேலாக கடவுள் ஸ்தானத்தில் வைத்து போதிக்கும் ஒரு மனிதர் தினம் தினம் இப்படி மனதால் காயம்பட்டு கதறுவதை கண்டு பொறுக்க முடியாத ரோகித் சுவற்றில் தெரிந்த புகைப்படத்தையே பார்த்தவன் வாய்க்குள்ள தகாத வார்த்தையால் திட்டினான்.

அவனின் அடி மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி மட்டும் இப்பொழுது அவன் கையில் கிடைத்தால் சிறுக சிறுக துடிக்கத்துடிக்க அந்தப் பெண்மணியை சாகடிப்பான்.

கூடிய சீக்கிரம் இதே போல ஒரு வலி உனக்கும் கிடைக்கும்...அப்போ அங்கிள் அதைப் பார்த்து ரசிப்பார்...நீ துடிப்ப கண்டிப்பா இந்த ரோகித் அதை நிறைவேத்துவான் இது என் அங்கிள் மேல சத்தியம் என்றவன்... புகைப்படத்தை அணைத்துவிட்டு ஷர்மாவை சமாதானம் செய்தவன் மருத்துவரை அழைத்தான்.

ஷர்மாவை நன்கு பரிசோதித்த மருத்துவர் இன்னும் எத்தனை நாளைக்கு ரோகித் அவரை இப்படி வீட்ல வெச்சு சமாளிக்கப் போறீங்க ப்ளீஸ் அவருக்கு இமிடியட்லி ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க அவர் கொஞ்சம் கொஞ்சமா அவரோட சுயம் இழந்துட்டு இருக்காரு இப்படியே போனா எல்லாருக்குமே மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் புரிஞ்சுக்கோங்க …

அவர் மறக்க நினைக்கிற விஷயங்களை யாரும் அவருக்கு ஞாபகப்படுத்த வேணாம்... மனச்சிதைவு நோயோட உச்சகட்டத்தில் இருக்கிறாரு... இப்போ இவர் கூர்முனை கத்திபோல அவர் பக்கத்துல யார் போனாலும் அவங்களை காயப்படுத்தற சாத்தியம் நிறையவே இருக்கு...டூ சம்திங்... ஏதாவது புது இடங்களுக்கு கூட்டிட்டு போங்க அவர் மறக்க நினைக்கிற விஷயங்கள் அவரோட நினைவுக்கு வர முடியாத அளவுக்கு அவரை தள்ளி வைங்க…

இப்போதைக்கு இன்ஜக்ஷன் போட்டிருக்கேன் மெடிசன் வழக்கமா எடுத்துக்கறது தான் ரெகுலரா கொடுங்க மறந்துடாதீங்க என்று கூறியபடி சென்றுவிட…

ரோகித்க்கு நன்றாகவே தெரியும் அவர் ஒரு நினைக்கும் விஷயத்தை மறக்க வேண்டுமென்றால் அது நேத்ராவால் மட்டுமே முடியும்…நேத்ரா அவரின் செல்ல பெண்.. அவரின் கடந்த கால வாழ்க்கையை நேத்ராவிடம் பேசும் பொழுது மட்டுமே மறப்பார்... ஷர்மாவிடம் பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஒன்பது வார்த்தைகள் நேத்ராவை பற்றியதாகவே இருக்கும்

நேத்ரா எந்த அளவிற்கு சீக்கிரமாக இந்த வீட்டிற்க்கு வருகிறாளோ அவ்வளவு சீக்கிரம் தனது அங்கிள் குணமாவது உறுதி... தற்சமயம் நேத்ராவை சுற்றியிருக்கும் பிரச்சனையும் அவனுக்கு தெரியும் முதலில் அதை தெளிவுபடுத்தி விட்டால் நேத்ரா திருமணத்திற்கு தயாராகி விடுவாள்.

அதனால் முதல் வேலையாக அவளைச் சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க வேண்டும் என ரோகித் நினைத்துக்கொண்டான்.


இங்கு நேத்ரா மீண்டும் சிசிடிவி கேமராக்களை ஆராய்யும் கண்ட்ரோல் ரூம் பக்கம் சென்றாள்.
ஆனால் இம்முறை பயந்தபடியே செல்லவில்லை…தைரியமாகவே சென்றாள்…

முந்தைய நாட்களின் பாதுகாப்பிற்காக வீட்டைச்சுற்றி யாரெல்லாம் வந்து சென்றார்கள் என அபிமன்யூ மிகத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்க அவனின் அருகில் சென்று இவளும் ஒரு சேரை இழுத்துப் போட்டவள்

அபிமன்யூவை பார்த்து டேய் என்று அழைத்தாள்.

காதில் விழாதது போல் அவன் மீண்டும் கம்ப்யூட்டரில் கவனம் செலுத்த…

டேய் உன்ன தான்டா கூப்பிடுறேன் காதுல விழலையா...நீ என்ன செவிடா... என்றவள் அவன் அமர்ந்திருந்த சேரை ஒரு உதை விட்டாள்.

கால்களை அழுத்தமாக ஊன்றி சேர் நகராதவாறு பேலன்ஸ் செய்திருந்தவன் திரும்பி சாதாரணமாக அவளைப் பார்த்து அவனின் வளர்ந்த கால்களால் அவள் அமர்ந்திருந்த ரோலிங் சேரை எட்டி உதைக்க

பேலன்ஸ் கிடைக்காமல் சேர் சுவற்றில் மோதி மீண்டும் அவன் அருகில் வந்து நின்றது... அவனின் இந்த செயலில் நன்றாகவே பயந்திருந்த நேத்ரா…

ஹேய் இப்போ ஏன் என்னை இப்படி உதைச்ச என்று உதடுகள் தந்தி அடித்தபடி கேட்டாள்.

அவனும் பொறுமையாக அவளின் முகத்தை பார்த்து நீ எதுக்காக என்னை உதைச்சியோ அதுக்காக தான் நானும் உதைச்சேன் என்று கூற

நான் உனக்கு சம்பளம் கொடுக்கற முதலாளி ஞாபகம் இருக்கா..

ஸ்மால் கரெக்ஷன் சம்பளம் கொடுக்கிறது உன் அப்பா நீ இல்லை …

சரி என் அப்பா தான்...ஆனா நான் தான் இதுக்கெல்லாம் வாரிசு... நீ என்கிட்ட நடந்ததை அப்பா கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா


ம்ம் உன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட சொல்லுவாரு….


என்ன…?சற்று அதிர்ச்சியில் நேத்ரா கேட்டாள்...

ஆமா இந்த ரூம்க்கு அவரே வந்தாலும் அப்படி தான் செய்ய சொல்லியிருக்கறாரு…
எனக்கும் ஷர்மா சாருக்கு மட்டும் தான் இங்க வரவும் இதை கையாளவும் முழு உரிமை ...இதை அக்ரிமென்ட் போட்டு ஷைன் பண்ணி இருக்கோம்... சரி எதுக்கு வந்த சொல்லு என்றபடி அவளின் அலங்காரங்களை சைடு கண்களாலேயே அளந்தபடி பேசினான்…

மறுபடியும் அந்த புட்டேஜ் பாக்கணும் எத்தனை நாள் கேமரா இன்ஆக்டிவேட் ஆச்சு என்ன மாதிரியே இருக்கற அந்த பொண்ணு எத்தனை தடவை போனானு நான் தெரிஞ்சுக்கணும் அதுக்கு தான் வந்தேன் ப்ளீஸ் எனக்காக அதை குடு…. என்று கெஞ்சுவது போல் கேட்டாள்.

தெரிஞ்சு என்ன பண்ண போற யாருக்காக உன்னை ப்ரூஃப் பண்ணனும் நினைக்கற…

பஃப்க்கு போறதோ நைட்ல ஊர் சுத்துறது ஒன்னும் தேசிய குற்றம் கிடையாது…இதல்லாம் பண்ணினா நல்ல பொண்ணு இல்லைன்னு யார் சொன்னது... குடிக்கிற பொண்ணுங்க கெட்வங்கன்னா…. குடிக்கிற ஆம்பளைகளும் கெட்டவங்க தான் அதுக்காகலாம் பீல் பண்ணாத... ஊர் சுத்தறதும் உன்னோடு உரிமை உனக்கு ட்ரிங்க்ஸ் எடுத்துக்கனும்னு தோணுச்சுன்னா டிரிங்க்ஸ் எடுத்துக்கோ‌…ஆனா அளவா...
உன்னைப் பத்தி உனக்கு தெரிஞ்சா போதும்...யார்கிட்டயும் நல்ல பேரு வாங்கனும்னு ட்ரை பண்ணாத...நீ நீயா இரு என்றவனை பேசறது நீயா என்பது போல் பார்த்தவள் பிறகு


யாருக்காகவும் என்னை ப்ரூவ் பண்ணனும்னு நான் அந்த புட்டேஜ்ஜை பாக்க ஆசைப்படல... ரெண்டே காரணம்தான்‌…
ஒன்னு வெளிய போறது நான் என்கிற பட்சத்தில் இது என்னை மீறி நடக்கிற ஒரு விஷயம் நான் கண்டிப்பா ஒரு நல்ல டாக்டரை போய் பார்க்கணும்…

அப்படி இல்ல.. அது நான் இல்ல வேற யாரோவா இருந்தா கண்டிப்பா இந்த வீட்டு செக்யூரிட்டியை இன்னும் கொஞ்சம் ஸ்டென்த் பண்ணணும்... யார் வராங்க யார் போறாங்கன்னு... அதுக்காக தான் என்று சொல்லவுமே புரிகிறது என்பது போல் தலையசைத்தவன்….எதுவும் பேசாமல் வேலையை தொடர்ந்தான்.

தான் கூறியவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் பதில் ஏதும் கூறாமல் அவன் வேலையை தொடரவும் தொண்டையைச் செருமிக்காட்டி அவள் அங்கு இருப்பத்தை தெரியப்படுத்தினாள்.

அவன் அதற்கும் தலையை திருப்ப வில்லை மீண்டும் கோபம் தலைதூக்கியது நேத்ராவிற்கு அவன் அமர்ந்திருந்த ஸ்டூலை உதைப்பதற்காக காலைத் தூக்க என்ன செய்கிறாள் என அவ்வப்போது சைடாக பார்த்துக் கொண்டிருந்தவன் வேகமாக டேபிளில் இருந்த ஒரு இரும்பு ஸ்கேலை எடுத்து அவளின் காலில் அடிப்பதற்காக கையைத் தூக்கி இருந்தான்.

அவன் செய்கையை பார்த்து காலை உள்ளே இழுத்துக் கொண்டவள் என்ன நீ அடிக்க கை ஓங்கற...அடிச்சிடுவியா நீ என்று கோபமாக கேட்டாள் .


நீ சும்மா சும்மா காலை தூக்குற...பிறகு அடிக்கமாட்டேனா.. என்று திருப்பி பதில் கூறியவன் மீண்டும் கவனத்தை அவன் வேலையில் திருப்ப கடும் கோபம் கொண்ட நேத்ரா அவனுக்கும் டேபிளுக்கும் நடுவில் இருந்த சிறு சந்தில் வந்து நின்றுகொண்டாள்.

ம்ச்...என்று சலித்தபடி பேனாவை கீழே போட்டு விட்டு அவளை பார்த்தால் சரியாக அவனின் முகம் அவளின் கழுத்துக்கு கீழே இருந்தது...நூலிலை இடைவேளி தான் இருவரில் யார் அசைந்தாலும் மோதிவிடும் அபாயம்…

மூச்சடைக்க கையை அசைக்கலாம் என்றால் சரியாக அவளின் இடைவளைவை தொட்டு விடும்.சற்றும் யோசிக்காமல் காலை அழுத்தமாக தரையில் வைத்து அவனின் ரோலிங் சேரை பின்புறம் நகர்த்தியவன் எழுத்து கோபத்தோடு அவளின் கைகளை பிடித்து நகர்த்தி விட்டவன்…

முதல்ல நீ இப்போ கிளம்பு...போ.. என்று அவளை வாசல்வரை இழுத்து விட்டான் .

அவளோ அவனின் கைகளைத் தட்டி விட்டபடி புட்டேஜ்ல இருக்கற விஷயம் எந்த அளவு உண்மைனு தெரிஞ்சுக்காம நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறினாள்.

ஹன்ரெஃட் பர்சன்டேஜ் உண்மை அது நீதான் போதுமா...போ போய் முதல்ல நல்ல டாக்டரா பாரு இப்படி வந்து என் வேலையை கெடுக்காத
என்று அவளை விரட்டினான்.

இல்ல நான் நம்ப மாட்டேன்...எனக்கு இங்க வரும்போது வரைக்கும் உன்மேல ஒரு டவுட்டு தான் இருந்தது இப்போ எனக்கு கன்ஃபார்ம் ஆயிடுச்சு நீதான் ஏதோ கேம் ப்ளே பண்ற…

சிஸ்டம் கேமரா எல்லாமே உன் கண்ட்ரோல்ல இருக்கும்போது எப்படி அதை இன்னொருத்தர் வந்து இன்ஆக்டிவேட் பண்ண முடியும் சொல்லு... நீ தான் என்னை அப்பாகிட்ட இருந்து பிரிக்கறதுக்காக ஏதோ ப்ளே பண்ற... இல்லன்னா என்னோட கவனத்தையும் என் அப்பாவோட கவனத்தையும் திசைதிருப்பிட்டு இங்கிருந்து பெருசா எதையோ கொள்ளையடிக்க பிளான் பண்ற நான் இருக்கிற வரைக்கும் நடக்க விடமாட்டேன் என்றபடி அவனை எச்சரிக்கை செய்தாள்.

அம்மா தாயே அப்படியே வச்சிக்க... நான் ஏதாவது பெருசா பண்ணி உன் கிட்ட மாட்டி நீ என்னை ஏதாவது பண்ணறியோ இல்லையோ இதே மாதிரி இன்னும் பத்து நிமிஷம் என் முன்னாடி பேசிட்டு இருந்தேன்னா இப்போ உனக்கு பார்த்து இருக்காங்களே மைதாமாவு மாப்பிள்ளை அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல எதையாவது ஒன்ன தூக்கிட்டு வந்து என்னை சாத்த போறான்... அப்புறம் நானும் காலி என் வேலையும் காலி...என்று கை கூப்பியபடி அவளை வெளியே அனுப்பினான்…

முறைத்தபடியே அங்கிருந்து கிளம்பாமல் இருந்த நேத்ராவை பார்த்தவன் இது வேலைக்காது என்றுணர்ந்து அவன் இடத்தை காலி செய்தான்.

வெளியே வரவுமே ரவி அபியை எதிர் கொண்டு

என்ன் மிஸ்டர் அபிமன்யூ கேமரா இன் ஆக்டிவ் ஏன் ஆகுதுனு கண்டு பிடிச்சிங்களா…?

அந்த கார் பத்தி எதாவது க்ளு கிடைச்சுதா என்று கேட்டார்.

ஆல்மோஸ்ட் கிடைச்ச மாதிரி தான்…சார்

அப்படியா...போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா‌... மிஸ்டர் அபிமன்யூ

அது நீங்கதான் சார் முடிவு பண்ணனும் ஏன்னா என் டவுட் முழுக்க முழுக்க உங்க பொண்ணு மேல தான் அவங்களுக்கு அனேகமாக தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குன்னு நினைக்கிறேன்…அதான் அவங்க வெளியே போறதும் உள்ள வர்றதும் அவங்களுக்கே தெரியல...

ரெகுலரா பர்டிக்குலர் டைம் மட்டும் ப்யூ செகன்ட் கேமராவால வீடியோஸ்ஸை கேப்சர் பண்ண முடியல...அந்த சமயத்துல அவங்க வெளிய போய் இருந்தா கண்டிப்பா மேம் தான் இதை பண்ணிருக்கனும்…

ஒருவேளை கேமரா இன்ஆக்டிவேட் ஆகற டைம் உங்க பொண்ணு வீட்டுல இருந்தா ...தெரிஞ்ச யாரோ ஒருத்தர் வெளியே இருந்து கேமாராவை ஆப்ரேட் பண்றாங்கன்னு அர்த்தம் இது சமீபமாதான் நடந்திருக்கு...யாருனு தெரிஞ்சதும்
கண்டிப்பா நாம போலீஸ் ஸ்டேஷன் போய் தான் ஆகணும் எதுக்கும் நீங்க உங்க பொண்ணு மேல ஒரு கண்ணு வைங்க நான் கேமரா மேல கண்ணை வச்சுக்கறேன்….


எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நேத்ரா கோபமாக அபியிடம் வந்தாள்….
எவ்ளோ தைரியம் உனக்கு என் அப்பாகிட்டேயே என்னை பத்தி போட்டு குடுக்குறியா என்று சண்டைக்கு நின்றாள்..


ரவி குறுக்கிட்டு நேத்ரா முதல்ல நீ உள்ள போ இது என்ன புது பழக்கம் பேசிகிட்டு இருக்கும் போது இடையில் வந்து சண்டை போடறது என்று அவளை மிரட்டி உள்ளே அனுப்பி வைத்தவர் ரவியிடம் மேற்கொண்டு சில விஷயங்களை பொதுவாகப் பேசிவிட்டு நகர்ந்து சென்றார் அபிமன்யு கோபமாக சென்று கொண்டிருந்த நேத்ரா வைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்றைய இரவுக்காக அனைவருமே காத்துக்கொண்டிருந்தனர்.

தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
5

இரவு வரவும் கீழே அபிமன்யு கேமராவில் ஒட்டு மொத்த கனெக்ஷனையும் தன்னுடைய மொபைலுக்கு மாற்றியபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

அதிகப்படியான காவலர்கள் அனைத்து கேட்டிலும் ஆட்கள் சுற்றிலும் நாய்கள் வெளியில் இருந்து யாராவது உள்ளே வந்தால் இன்று கண்டிப்பாக வெளியே செல்வது மிகவும் கடினம் அதேபோல் உள்ளிருந்து நேத்ரா வெளியே சென்றாலும் கண்டிப்பாக இன்று கையும் களவுமாக பிடிபடுவாள்.

ரவி மகள் வீட்டில் இருக்கிறாளா என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்…

ஒன்பது கடந்து பத்து ஆகியது ஆனால் இன்று அது போல் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை ஒன்பது மணியிலிருந்து பரபரப்புடன் காணப்பட்ட அந்த வீடு இப்பொழுது சற்று அமைதியாக தொடங்கியிருந்தது…

மேலே நேத்ராவிற்கு மெதுவாக தூக்கம் வர ஆரம்பித்தது... காலையில் போட்டிருந்த சோளியை இதுவரை மாற்றவேயில்லை... ஏனோ மனதில் ஏதோ நெருடல்... வீட்டுக்கு யார் வந்து செல்வது...ஏன் அந்த பலி தன்மீது விழுகிறது...இந்த நெட்டை கொக்கு அபி புட்டேஜ் காட்டுவதில்லை...நாளை அவன் அனுமதிக்கா விட்டால் வேறு வழியில்லை ...அவனின் தனிப்பட்ட கணக்கை ஹேக் செய்து தகவல்களை திருட வேண்டியது தான் வேறுவழியில்லை...


எப்படியோ இங்கிருந்து ஷர்மா அங்கிள் வீட்டிற்கு செல்ல போகிறேன்... அங்கு நிம்மதியாக இருக்கலாம் இருபத்தி மூன்று வருடங்களாக தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு வரப்போகிறது ..

ம்ம்...ரோஷித்துடன் தனது வாழ்க்கை எப்படி இருக்கும்...இந்த காலத்திலும் தனக்கு அரேஞ்ச்டு மேரேஜ்… கேட்பவர்கள் சிரிப்பார்கள்...ஆனாலும் ரோஷித் அழகன் தான்…எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து விடும் அதன் பிறகு ஷர்மா அங்கிள் வீட்டிற்கே சென்று விடலாம்... அதற்குள் இங்கு தன் மீது போடப்பட்டிருக்கும் பழி அத்தனையும் துடைக்கவேண்டும் இந்த வீட்டிற்கு யாரோ ஒருவர் வெளியே இருந்து உள்ளே வந்து போவதை உறுதி செய்ய வேண்டும் அதுவரை தனக்கு நிம்மதியான தூக்கமிருக்காது…

கண்டிப்பா அபிக்கு தெரியாமல் நடக்காது அவனை ஊற்று கவனிக்க வேண்டும்.அவனிடம் தான் என்னைப்பற்றிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது...என காலையிலிருந்தே யோசித்துக் கொண்டிருந்ததால் எந்த வேலையிலும் நேத்ராவுக்கு கவனமில்லை…

வார்ட்ரோப்பை திறந்தவள் இலகுவான இரவு உடையை எடுத்தாள்... உள்ளே முட்டி வரை நூடுல்ஸ் டேப்புடன் ஒரு கவுனும் மேலே உடலை மறைத்துக் கொள்வதும் மாதிரியான ஒரு நீள அங்கியும் இருந்தது... அவளுக்கு மிகவும் பிடித்து எடுத்தது ஆனால் இதுவரை ஒருமுறை கூட அணிந்ததில்லை கவுனை மட்டும் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றவன் லாங் கோர்ட்டை பெட்டின் மீது போட்டு விட்டு சென்றாள்…

வெளியே வந்து தன்னை சுற்றிப்பார்க்க கவுன் மிக குட்டையாக தோன்றியது...மேலே வெற்றுடல் தெரிய சற்று கவர்ச்சியாகவும் தோண்றியது...ஹாஸ்டலில் இதுபோல் தான் அணிவாள்..இங்கு வீட்டுக்கு வந்ததும் தந்தை முன்பு அணிய சிறு கூச்சம்...இனி ரூமை விட்டு வெளியே செல்ல போவதில்லை என்று இன்று இதை அணிந்திருக்கிறாள்.
மேலே அங்கியை போட்டு இடுப்போறத்தில் கட்டிக்கொள்ள உள்ளே இப்பொழுது கவர்ச்சியான உடை அணிந்ததே தெரியவில்லை.

பிறகு அங்கியை கழட்டி பெட் ஒரத்தில் போட்டவள்
ஏசி ஆன் செய்ய ஏசி காற்றுடன் வேறொரு நறுமணத்தையும் அவளால் தனியாக உணரமுடிந்தது என்ன என்று அவள் யோசிக்கும் முன்பே அவளின் முன்பு ஒரு உருவம் வந்து நிற்க சுயநினைவிழந்து கீழே சரிந்தாள்.

நேத்ராவை அப்படியே தூக்கி அதன் தோள்மீது போட்ட அந்த உருவம் அவள் ஆடை மாற்றுவதற்காக தனியாக இருந்த சிறிய ரூமுக்குள் அவளைக் கொண்டு கிடத்தியது. பிறகு எதுவும் தெரியாதவாறு வெளியே வந்து அந்தக் கதவை வெளிப்புறமாக தாழ் இட்டுவிட்டு அவள் படுக்கை அறையில் நான்கு தலையணைகளை அடுக்கி அதன் மீது ஒரு படுக்கை விரிப்பை விரித்து
விட்டு வீட்டின் அடுத்த அறைக்குள் வந்து யாருக்கோ...டன் என்று வாட்ஸ்அப் மேசேஜ் செய்த அடுத்த வினாடி அந்த வீடு இருளில் மூழ்கி மீண்டது


மீண்டும் வெளிச்சம் வரவும் அனைவரும் பரபரப்பாக எதிர்பார்த்தது போல்தான் சில வினாடிகள் கேமரா செயலிழக்க பட்டிருந்தது.

அபி வேகமாக ரோட்டிற்கு ஓட கருப்பு நிற ஸ்கார்பியோ கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது

பிறகு வீட்டுக்குள் வந்து நேத்ராவின் படுக்கை அறைக்கு சென்று திறந்து பார்க்க அவள் அழகாக படுத்திருப்பது போல் காட்சிதர


கூடவே வந்த
ரவி குழப்பத்துடன் அபிமன்யுவை பார்க்க அபிமன்யூ துணிந்து சென்று அவளின் பெட்ஷிட்டை நகர்த்தி பார்க்க தலையணைகள் மௌனமாக உறங்கிக் கொண்டிருந்தது.

ரவியோ அதிர்ச்சியுடன் அபிமன்யு தான் பார்த்துக் கொண்டிருந்தார்…

சரிவாங்க சார் வெளிய போகலாம் என்ற அபிமன்யூக்கு ரவியை வெளியே அழைத்து வந்தான்.

ரவியோ கோபத்தில் அபிமன்யூவிடம் இந்த பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் பாத்தீங்களா நேத்து தான் படிச்சு படிச்சு சொல்லி இருக்கு இன்னிக்கு கிளம்பி போய் இருக்கா...
வரட்டும் என்று கோபத்தில் பற்களை கடித்தவரைப் பார்த்து


சார் அவங்க வெளியே போறதுனா தாராளமா வெளிய போகலாம்மே எதுக்காக இப்படி ஒரு டிராமா எனக்கு என்னமோ யாரோ நம்மளோட கவனத்தை திசை திருப்பறாங்கனு நினைக்கிறேன் எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருக்கணும்…என்றவன் வாசலுக்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தான்.

இனி நேத்ரா வரும் வரை அனைவருமே காத்திருக்க வேண்டுமா என்று படி ரவியும் வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தார்.

நேத்ராவின் அறையில் காற்றுடன் ஒருவித மயக்க மருந்தை அதிகப்படியாக சுவாசித்து மூளை செயலிழக்க ஆரம்பித்து கொண்டிருக்கும் வேளை திடீரென்று கனவில் அவர் தாய் தோன்றினார்.


தூங்கக்கூடாது நேத்ரா குட்டி எந்திரிங்க... எந்திரிங்க என்று தாய் எழுப்ப…

அவளின் மூளையோ செயல் பட தொடங்கியது... மயக்கமருந்தின் வீரியத்தையும் மீறி விழிக்க முயற்சி செய்தாள் விழி திறக்க முடியவில்லை... உதடுகள் தானாக அம்மா என்று அசைய... மீண்டும் அவளுக்கு கனவு வர தொடங்கியது.

நேற்று போலவே ஒரு வழிப்பாதையில் நடக்கிறாள்...வழி தெரியவில்லை… முடிவில்லாத பயணம்...ஆனால் இது பகல் பொழுது அவளுக்கு பயமில்லை...கால்கள் ஓயும் வரைநடந்தாயிற்று….மனித தலைகளேயே பார்க்க முடியவில்லை... தாகத்தில் தொண்டை வரண்டது.
காற்றில் மல்லிகைப்பூவின் வாசம்….
அந்த

தலைசுற்றுவதுபோல் தோன்ற தலையில் கைவைத்த நேத்ராவிற்கு பூமி காலை விட்டு நழுவுவது போல் தோண்றியது….இதோ கீழே விழப்போகிறாள்...என்று நினைக்கும் பொழுது தாய் மதுவின் குரல் கத்தலாக…

நேத்ரா அம்மா இங்கிருக்கேன் இங்க வா...அம்மா கிட்ட வா நேத்ரா….நேத்ரா என்று கத்த

குரல் வந்த திசையை நோக்கி கஷ்டப்பட்டு விழி திறந்தவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள் செல்லச்செல்ல காற்றில் இருந்த மல்லிகை பூ மணம் இப்பொழுது அதிகமாக வீசத்தொடங்கியது

தூரத்தில் அழகிய ஒரு மல்லிகை பூந்தோட்டம் தெரிய அருகில் சென்றவள்தோட்டத்திற்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் இப்பொழுது தாயின் குரல் கத்தலாக வரவில்லை.

கதறல் போல் கேட்டது அம்மா எங்க இருக்க... என்று குரல் கொடுத்த படியே சத்தம் வந்த திசையை நோக்கிச் செல்ல இப்போது யாரோ யாரையோ துரத்திச் செல்வது போல் சத்தம் கேட்டது.கூடவே சில காலடி தடங்கள்...

கால் தடம் செல்லும் பாதையை பின் தொடர்ந்து செல்ல தூரத்தில் ஒரு பெண் தாக்கப்படும் சத்தமும் சேர்ந்து கேட்டது...அது தாயின் கதறல் என்னை விட்டுடுங்க என்று


அம்மா நான் வந்துட்டேன் என்று கத்தியபடி இவள் அந்த இடத்திற்குச் செல்லும் பொழுது இப்பொழுது கால்தடம் மறைந்து யாரோ யாரையோ இழுத்துச் சென்றது போல் அந்த இடத்தில் தடம் தெரிந்தது

அதை பின்தொடர்ந்து சென்று பார்க்க அங்கே மதுவை சகதி நிறைந்த ஒரு குழியில் அப்பொழுதுதான் யாரோ தூக்கி வீசுகிறார் தாயோ கைகளை நீட்டி போ என்பது போல் ஜாடை செய்தபடியே நேத்ரா இங்கிருந்து போ...போயிடு….நேத்ரா... என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக தாயின் உடல் அந்த சகதியில் மூழ்கத் தொடங்கியது.


அவளோ அம்மா அம்மா என்று கத்தியபடி கைகளை நீட்ட தாயின் உடல் முற்றிலும் சேற்றில் அடங்கியது அம்மா என்று முதல் நாளைப் போலவே இன்றும் அவள் கத்திய படி எந்திரிக்க இப்பொழுது அவள் இருந்த அந்த அறை கதவு திறந்தது.

அரை முழுவதும் ஒரே புகை மண்டலம் சுற்றிப்பார்க்க ரூம் முழுவதும் ஏதோ புரியாத பாஷையில் சத்தங்கள் அறையே சுற்றுவது போல் தோன்ற பயந்து கத்திய நேத்ரா அங்கிருந்து கதறி அழுதபடி கீழே ஓடி வர தொடங்கினாள் .

கீழே மகள் வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரவி நேத்ரா வந்தால் உடனே தனக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறிவிட்டு அப்போதுதான் உறங்கச் சென்றார் .

கத்தியபடியே கீழே நேத்ரா ஓடிவர சத்தம் கேட்ட அபியும் உள்ளே ஓடிவர நேத்ராவும் அபியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டனர். அவள் பயத்தில் நடுங்குவதை உணர்ந்தவன் அவளை நிறுத்தி என்ன என்று விசாரிப்பதற்கு ரவியும் வந்து சேர்ந்தார் .

வந்ததுமே அவரின் முகம் அருவருப்பில் சுளித்தது... அவரின் முக மாறுதலைக் கண்டதும் தான் நேத்ரா தனது கோலத்தை ஆராய்ந்தாள்.கூச்சத்தில் அவளுக்கு மே உடல் நடுங்கத் தொடங்கியது.


அபியும் அப்பொழுதுதான் அவளை முழுமையாகப் பார்த்தான்.. தர்மசங்கடமான நிலமை ஆண்கள் இருவருக்குமே...என்ன செய்வது என்று புரியவில்லை... யோசிக்காமல் அணிந்திருந்த ஜெர்க்கினை கழட்டி நேத்ராவுக்கு அபி கொடுக்க உடனே வாங்கி அணிந்து கொண்டாள்.

ரவியோ அவளை அடிக்க கை ஓங்கி விட்டார் ஏதோ ஊர் சுத்துற ட்ரிங்க்ஸ் பண்ணறேனு பார்த்தா இந்த மாதிரி கோலத்தில் எல்லாம் கண்ட நேரத்திற்கு சுத்திட்டு உள்ள வர்றியா என்று இருந்தது அவரின் பேச்சு…

அதிர்ச்சியில் நேத்ரா தந்தையைப் பார்த்து அப்பா நான் எங்கேயும் போகல நான் இவ்வளவு நேரம் என்று கூற வருவதற்குள்ளாகவே போதும் நிறுத்து இன்னும் ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கோ உன்னை எப்படியாவது ஷர்மா வீட்டுக்கு அனுப்பி விடறேன்…
உனக்காக இனி ஒரு வருஷம் வரை என்னால் காத்திருக்க முடியாது

கல்யாணத்தை பண்ணினதுக்கு அப்புறம் நீ ரோஷித் வீட்டுக்கு எப்படி வேணாலும் டிரஸ் பண்ணு எங்க வேணாலும் சுத்து எவ்வளவு வேணாலும் தண்ணி அடி உன்னை யாரும் அங்க வந்து கேள்வி கேட்கப்போவதில்லை இங்கே இருக்கிற வரைக்கும் தயவுசெஞ்சு எனக்கு பிபி ஏத்தாத என்று கண்டபடி திட்டி விட்டு உள்ளே செல்ல அதிர்ச்சியில் நின்றவள்


யோசிக்காமல் அபியின் சட்டையை கொத்தாக பிடித்தாள் டேய் உண்மைய சொல்லு நீ என் ரூமுக்கு வந்த தானே என்று கேட்க

அவளைத்தேடி சென்றதை நினைத்தபடி ஆம் என்று தலையாட்ட யோசிக்காமல் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

எவ்வளவு தைரியம் உனக்கு பண்றதெல்லாம் பண்ணிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி அப்பா முன்னாடி வேஷம் போடறியா உன்னோட வேஷத்தை என்னோட அப்பா நம்பலாம் நான் என்னைக்குமே நம்ப மாட்டேன் என்றவள் ஜெர்கினை கழட்டி அவன் என் மூஞ்சியில் விசியபடி இன்னொரு முறை என்னோட ரூம் பக்கம் வந்த தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை நாளைக்கு ரோஷித்தும் ஷர்மா அங்கிளும் வரட்டும் உனக்கு ஒரு முடிவு கட்டறேன் என்று கூறியபடி கோபமாக வீட்டிற்குள்ளே சென்றாள் கன்னத்தை தடவியபடி செல்லும் நேத்ராவை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யூ.

நேராக அறைக்குள் வந்தவள் முதல் வேலையாக இரவு உடையை மாற்றினாள் பிறகு அறையை சுற்றிப் பார்த்தவளுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று வந்தது தனக்கு கனவு வரும் நாட்களில் எல்லாம் தான் எங்கோ வெளியில் சென்று வருவதாக தந்தை எண்ணுகிறார்... தனக்கு என்னவோ ஒரு மாறுதல் நடக்கிறது இதற்குமேலும் மருத்துவரை சந்திக்காமல் இருப்பது தவறு...நீஜமாகவே நான் தான் வெளியே சென்று வருகிறேனா... ஒருவேளை எனக்கே தெரியாமல் நான் போதை பழக்கத்திற்கு ஆளாகி விட்டேனா ...அதனால் தான் சம்மந்த மில்லாத கனவுகள் வருகிறதா…என்று யோசித்தபடியே ஜன்னல் திரையை விலக்கிவிட்டு வெளியே அபி என்ன செய்கிறான் என்று ஆராய்ந்தாள்.

அப்பொழுது திடீரென பாய்ந்து வந்த ஒரு கோரமுகம் ஜன்னலின் கம்பிகளை பிடித்து தொங்கியபடி உன்ன நான் இங்கிருந்து போக சொன்னேன்ல போக மாட்டியா என்று கத்த…

பயந்து கத்திய நேத்ரா பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தாள்.

அவளின் சத்தம் கேட்டு மீண்டும் வேலை செய்யும் பணியாட்களும் ரவி மற்றும் அபி அனைவருமே அவள் அறைக்குள் வர இப்பொழுது அவள் அணிந்திருந்த ஆடை முட்டி வரை ஏறி அலங்கோலமாய் மயங்கி கீழே கிடந்தாள்.

முதலில் ஓடிவந்து அபி அவளது ஆடைகளை சரி செய்து உடனடியாக அவளை பெட்டில் தூக்கி கிடத்தினான்…

பின்னால் வந்த ரவி யாரோ வீட்டுப் பெண்ணுக்கு ஏதோ நடப்பதுபோல் உணர்ச்சியே இல்லாமல் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரின் அந்த அணுகுமுறை அபியை சற்று ஆச்சரியப்பட வைத்தது தனது மகள் அவளது அறையில் அலங்கோலமாக மயங்கி சரிந்து இருக்கிறாள் ஆனால் தந்தையோ உணர்ச்சியை காட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்..

நான் செய்ய காரியத்தை அவர் அல்லவா முதலில் செய்திருக்க வேண்டும் இங்கு என்ன நடக்கிறது நேத்ராவை சுற்றி யார் இப்படி வலை பின்னுவது என்று குழப்பத்துடன் அபி ரவியைப் பார்க்க அவரோ அப்பொழுதுதான் உணர்வு பெற்றவராக

இவளுக்கு இதே வேலையா போச்சு குடிச்சிட்டு வந்து கத்த வேண்டியது அப்புறம் போதை தலைக்கேறி கீழ விழவேண்டியது என்று சலித்துக் கொண்டார்.

கவலையுடன் நேத்ராவை பார்த்தவன் உடனடியாக மருத்துவரை அழைத்தான்.

அந்த நேரத்தில் வந்த மருத்துவர் அவள் மயக்கம் தெரிவதற்காக ஒரு இன்ஜக்ஷன்ஐ செலுத்திவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அவளுக்கு மேலே என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை இப்பொழுது அவள் போதையில் உறங்குகிறாளா இல்லை மயக்கத்தில் கிடக்கிறாளா என்று கூட தெரியவில்லை என்று அபி உண்மையைக் கூறினான்.

சரி நாளைக்கு மறக்காம ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க ஒருவேளை போதைக்கு அடிமையாகி இருந்தால் இது ஆரம்ப கட்டமாக இருந்தா கண்டிப்பா சரி செஞ்சிடலாம் ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துகிட்டா என்ன செய்யறோம்னு அவங்களுக்கே தெரியாம போயிடும் அப்போ இது போல தான் மல்டி பர்சனாலிட்டி மாதிரி பிகேவ் பண்ணுவாங்க முதல்ல நேத்ரா எழுந்ததும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க பிரச்சினை என்னன்னு தெரிஞ்சிட்டு அதுக்கேத்த மாதிரி அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கலாம் என்று ரவிக்கு அறிவுறுத்தி விட்டு சென்றார்.

மறுநாள் விடியவுமே ரோஷித், ஷர்மா இருவருமே அவளுக்காக காத்திருந்தனர்.

ரவி நேத்ராவை முறைத்த படி அமர்ந்திருந்தார்.

இவள் கீழே இறங்கி வரவும் பதட்டத்துடன் வந்து ஷர்மா அவளை கவலையுடன் பார்த்து என்ன ஆச்சு மதுப் பொண்ணு உன் அப்பா ஏதேதோ சொல்றான் என்ன நடக்குது இந்த வீட்ல இங்க நிச்சயம் வரைக்கும் கூட நாம காத்திருக்க வேண்டாம் இப்பவே என் வீட்டுக்கு போகலாம் அங்க உன்னை என் கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறேன் என்று கூற…

பதில் கூறாமல் தள்ளி நின்று கைகளை கட்டிக்கொண்டாள்.

அவளின் ஒதுக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத ஷர்மா அவளின் அருகில் வந்து தோளில் கை வைக்க…

ம்ச் என்றபடி சற்று தோள்களை அசைத்து அவரின் கையை நாசூக்காக தட்டிவிட்டாள் இதை கவனித்த ரோஷித் வேகமாக நேத்ராவிடம் வந்து

என்ன நேத்ரா இப்படி பிஹேவ் பண்ணற அங்கிள் பீல் பண்றாங்க பாரு... அங்கிள் உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்காருன்னு தெரிஞ்சும் நீ இது போல நடந்து கொள்வது கொஞ்சம் கூட சரியில்லை என்று தமிழும் ஆங்கிலமும் கலந்த படி பேச

அவளும் தூய ஆங்கிலத்தில் உண்மையிலேயே என் மேல பாசம் வைத்திருந்தா முதல்ல இங்க இருக்கிற அத்தனை சிசிடிவி கேமராவையும் செக் பண்ண சொல்லுங்க

என் மேல தேவையே இல்லாம பழி சுமத்தி இருக்காங்க என்ன ஒரு ட்ரக் அடிட்போல இங்க வேலை செய்யறவங்க கூட இறக்கி பாக்குறாங்க இது எல்லாத்தையும் தாங்கி கிட்டு நான் வீட்ல இருக்கேன் ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் சிசிடிவி கேமரா புட்டேஜை என்னால பாக்க முடியல…

சர்வைலன்ஸ் அத்தாரிட்டி அங்கிள் தான் எனக்காக என்ன ஸ்டெப் எடுத்தாங்க... சில நாளா சொல்லிவைத்தது போல குறிப்பிட்ட நேரத்துல கேமரா இன்ஆக்டிவேட் ஆகுது யார் செய்றாங்க...எதுக்காக செய்றாங்க கண்டுபுடிச்சீங்களா…


எல்லாரும் நம்பறது போல நான் செஞ்சதாவே இருக்கட்டும் அதற்கான ப்ரூஃப் எங்கே சொல்லுங்க…அதை கொடுக்க முடியுமா உங்களால .

ரெண்டே பேரு தான் சிசிடிவி கேமராவோட அத்தாரிட்டி பர்ஷன்... ஒன்னு மிஸ்டர் அபிமன்யு இன்னொன்னு ஷர்மா அங்கிள்...

எத்தனை முறை அங்கிள் அந்த புட்டேஜ் பாத்தாங்க...இங்க சரியில்லனதும் கல்யாணம் பண்ணி அங்க அனுப்பிடுவாங்க...ஆனா ஏன் இதெல்லாம் நடக்குதுனு யாரும் கண்டுக்க மாட்டிங்க இல்லையா...இந்த வீட்ல என்னனமோ நடக்குது... இங்க வந்த ஒரு வருஷத்துல ஒரு நாள் கூட நான் நிம்மதியா தூங்கல..

ஹாஸ்டலில் இருந்து எப்போடா வீட்டுக்கு வருவேன்னு காத்துகிட்டு இருந்தேன் ஆனா இப்போ இந்த வீட்டை விட்டு வெளியே போனா போதும்னு ஏங்க வச்சிட்டீங்க எல்லாரும் சேர்ந்து என்று கண்கலங்கியவள்.ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் யாருக்குமே என் மேல அக்கறையில்லை,பாசமில்லை..என்னை எல்லாரும் சேர்ந்து
ஹாஸ்டலுக்கே அனுப்பி வைக்கப்போறிங்க அது நிச்சயம் என்றவள்


ஷர்மாவை பார்த்து அங்கிள் இவங்க நான் வெளிய போனதா சொல்லற எல்லா நாளோட புட்டேஜ்ஜையும் நான் பாக்கணும் நீங்க சொன்னா மட்டும் தான் அபிமன்யூ எனக்கு அதை காட்டுவாரு…எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என்றாள்.

அவள் கூறியவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ரோகித் நேத்ராவின் அருகில் வந்து
இங்கப்பாரு பேபி உன்னோட அப்பா தமிழ்நாட்டுக்காரர் அதனால அவருக்கு ட்ரிங்க்ஸ் பண்றது பப் போறது கிளாமரா டிரஸ் பண்றதெல்லாம் பெரிய விஷயமா தெரியுது அதனால அவரு உன்னை கண்டிக்கிறாரு.

ஆனா உன்னால அங்கெல்லாம் போகாம இருக்க முடியல...அதனால நீ சின்னதா தப்பு பண்ணிக்கிட்டு... புரியற மாதிரி சொல்லனும்னா ஹாஸ்டல்ல படிக்கிற பசங்க வார்டனை ஏமாத்திட்டு வெளியே போறது மாதிரி நீ உங்க அப்பாவை ஏமாத்திட்டு வெளிய போற இது ஒரு பெரிய விஷயமே கிடையாது.

எங்க வீட்டு பொறுத்த வரைக்கும் நாங்க எல்லாருமே பப் போவோம்... வீட்டிலேயே கூட டிரிங்க்ஸ் பார்ட்டிஸ் எல்லாம் வெச்சுப்போம் அதனால இது எங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை…

நீ அங்க வந்ததுக்கப்புறம் தைரியமா எங்ககிட்ட சொல்லிட்டே கூட போகலாம் அதனால இந்த விஷயத்துக்காக நீ இவ்ளோ பெருசா ரியாக்ட் பண்றது சரி இல்லைன்னு தோணுது அங்கிள் கிட்டயும் இவ்வளவு ஹார்சா பேசறதை நான் விரும்பல என்று அவன் கூற

அவளும் அவனிடம் நானும் அதான் சொல்றேன் பப் போறதோ ட்ரிங்க்ஸ் எடுத்துக்கறதோ என்னோட தனிப்பட்ட விருப்பம் ...அதை செய்யனும்னா நான் தைரியமா சொல்லிட்டு வீட்ல வெச்சே பண்ணுவேனே எதுக்காக ஏமாத்திட்டு நான் வெளியே போய் பண்ணப்போறேன்…

ஆனா என்னை போலவே ஒரு பொண்ணு வெளியே போனதா பாத்திருக்காங்க அது நான் இல்லைனு ப்ரூவ் பண்றதுக்காக தான் நான் உங்ககிட்ட போராடி கிட்டிருக்கேன் ரோஷித்…

உங்களுக்கு புரியலையா என்னோட சைடு வந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க பண்ணாத ஒரு விஷயத்தை நீதான் பண்றேன்னு சொல்லும்போது அது எந்த அளவுக்கு என் மனசை பாதிக்கும்னு உங்களுக்கு தெரியலை…

யாரோ நம்ம வீட்டுக்கு எதிரா சதிபண்ணறாங்க...அதுக்காக என் பெயரை யூஸ் பண்ணிக்கறாங்க...யாருக்குமே ஏன் புரியல...இந்த டென்ஷன்ல எனக்கு ஏதேதோ தோணுது...யாரோ என்னோட இருக்கறது போலவும் இந்த வீட்ல எதோ சுத்தறது போலேல்லாம் தோணுது... ப்ளீஸ் எல்லாரும் என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க என்று கண்கலங்கினாள்…

நேத்ரா நீ தேவையில்லாத கற்பனை பண்ணற...எங்க எல்லாரையும் தப்பா புரிஞ்சுகிட்ட நேத்ரா எல்லாருக்குமே உன் மேல நிறைய அக்கறையும் பாசமும் இருக்கு அதனாலதான் நீ தவறான வழிக்கு போயிடக் கூடாதுன்னு நாங்க போராடிட்டு இருக்கோம் ‌..என்று ரவி முதல் முறையாக வாயைத் திறந்தார்...


ப்பா...தவறான வழினா என்னப்பா...அதை சொல்லுங்க... ஒரு வேளை நான் தான் அதை பண்றேன்னா அதை எனக்கு காமிச்சி ப்ரூஃப் பண்ணுங்க...அதை விட்டுட்டு பழி மட்டும் போடறீங்க ஆதாரத்தை காட்ட மாட்டேங்கறீங்க...நான் உங்க பொண்ணு என்னை நம்புங்க...நா ட்ரக் அடிட் இல்ல...எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் பிரச்சினை தீராது...வீட்டுக்குள்ள வர்றது யாருனு கண்டு புடிங்க...அப்புறமா எனக்கு கல்யாணம் பண்ணுங்க சந்தோஷமா போறேன் இப்படி உறுத்தலோட அனுப்பி வைக்காதீங்க..

என்ன பேபி இதெல்லாம் பெரியவங்களை எதிர்த்து பேசிட்டு இருக்க எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல என்று ரோஷித் நேத்ராவை கண்டிக்க...


ஷர்மா குறுக்கிட்டு ரோஷித் நீ பேசாம இரு பேபிமா அடுத்த வாரம் நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் இந்தப் பிரச்சினை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லாமல் போகப் போகுது இப்போ என்ன மதுப் பொண்ணு நீ புட்டேஜ் பாக்கணும் அவ்ளோ தானே இன்னையிலிருந்து இந்த வீட்டோட செக்யூரிட்டி அத்தாரிட்டி ரெண்டு பேரு இல்ல மூனு பேரு …போதுமா...ஒன்னு நீ ,இன்னொன்னு நான்,அடுத்தது அபிமன்யூ...


இனி நீ எப்போ வேணாலும் அந்த ரூம் போலாம் எப்ப வேணாலும் எதை வேணாலும் செக் பண்ணலாம் ஓகே தான பிரச்சனை முடிஞ்சதா...

பேபிமாவை எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸா விடுங்க என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

ரோஹித் அவளை சம்பிரதாயமாக அணைத்து விடைபெற்றான்.

நேத்ரா இப்பொழுது இரண்டு காரியம் செய்ய வேண்டும் ஒன்று என்றெல்லாம் கேமரா இன்ஆக்டிவேட் செய்யப்பட்டதோ அன்றைய நாளின் மீதி புட்டேஜ்களை ஆராய வேண்டும்…

அன்று பார்த்த புட்டேஜை மீண்டும் பார்க்க வேண்டும் அதில் இருப்பது அவள் தான் என்று உறுதி படுத்தும் பொழுது கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை சந்திக்கப் போகிறாள்.

அது அவள் இல்லை எனும்போது கண்டிப்பாக அந்த புரளி அபியின் வேலைதான்... அதை கண்டுபிடித்து இந்த வீட்டை விட்டு தூரத்த வேண்டும் என்று எண்ணியபடி அபிமன்யூவைத் தேடிச்சென்றாள்.

தொடரும்
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
6

முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் அபி அவனின் வேலையை செய்து கொண்டிருக்க நேத்ரா கண்ட்ரோல் ரூமுக்குள் சென்றாள்.

அவளைக் கண்டு எதுவுமே கேளாமல் அவளுக்கு இடம் விட்டபடி நகர்ந்து அமர இவளோ நக்கலாக

என்ன சார் நைட் வாங்கினது இன்னும் நியாபகம் இருக்கா எதுமே பேசமாட்டேங்கறீங்க என்று சொல்லி வாய்முடும்முன் அவளது கன்னத்தில் பளீர்ரென ஒர் அறை விட்டான் நிலைகுலைந்தவள் கண்களில் கண்ணீருடன் இப்போ ஏன்டா என்னை அடிச்சே என்றாள்.

ம்ம்...சரியா கேக்கல என்றவன் மறுகன்னத்தில் பளீரென ஒர் அறை விட...டேய் என்று அவனை அடிக்க பாய சாதாரணமாக அவளின் இரு கைகளையுமே ஒரு கைகளுக்குள் அடக்கியவன் இப்பொழுது மீண்டும் அவளது கன்னத்தில் அறைய கையை தூக்க பயந்து முகத்தை
குனிந்து குறிக்கிக்கொள்ள


ம்ம் அந்ந பயம் இருக்கட்டும் என்றவன்…
அர்த்தராத்தில அரையும் குறையுமா ட்ரஸ் பண்ணிகிட்டு ஒடி வர்ற...மகளோட கோலத்த பாத்து அப்பன் காரன் கூச்சத்துல தலைகுனியறான்...வேலை செய்யறவன்லாம் வாய பொளந்துகிட்டு பாக்கறான் அய்யோ பாவம்னு ஜெர்கினை கழட்டி தந்தா தூக்கி முஞ்சில வீசுவியா…. அதுக்குத்தான் முதல் அறை...ராத்திரி புல்லா தண்ணி அடிக்க வேண்டியது அப்புறமா எதையாவது பாத்து கத்த வேண்டியது...என்னனு ரூம்க்கு வந்து பாத்தா ஏன்டா ரூம்குள்ள வர்றனு கன்னத்துல அறைவியா….அதுக்கு தான் ரெண்டாவது அறை...இனி ஒருமுறை மரியாதையில்லாமல் டா போட்டா கை ஒங்க மாட்டேன்...ஜாக்கிரதை என்று அவளின் கைகளை விட்டான்.

கண்கள் கலங்க இரு ஷர்மா அங்கிள் கிட்ட சொல்லி உன்னை வேலையை விட்டே தூக்கறேன்…

அய்யோ ப்ளீஸ் மேடம் இந்த வேலை இல்லனா என் குடும்பமே பட்டினி கிடந்து சாகனும்... தயவு செஞ்சு அப்படி மட்டும் பண்ணிடாதீங்க என்று கெஞ்சுவது போல் நடித்தவன் முகத்தை மாற்றிக்கொண்டு போவியா….என்றான்.

ரோகித் கிட்ட சொல்லி உன் கையை காலை உடைக்க சொல்லறேன்…

இங்க பாரு நேத்ரா எனக்கு நிறைய வேலையிருக்கு தேவையில்லாம காமெடி பண்ணாத...கிளம்பு...என்றவனைபபார்த்து

நான் ஏன் போகணும் இனிமே இந்த ரூமுக்குள்ள வர்றதுக்கு எனக்கு எல்லா ஊரிமையும் இருக்கு ஷர்மா அங்கிள் சொல்லலையா உன்கிட்ட இனிமே நான் இங்கே எப்போ வேணும்னாலும் வரலாம் எல்லாத்தையும் பார்க்கலாம் என்றவளை பார்த்து…

ம்ம்...சொன்னாரு...சொன்னாரு... நீ கேட்ட எல்லா புட்டேஜ்ஜூம் இந்த பென்டிரைவ் தான் இருக்கு உன் ரூமுக்கு எடுத்துட்டு போய் நல்லாபாரு…

இல்ல இங்க வச்சி தான் பாப்பேன் உனக்கு கஷ்டமா இருந்தா நீ போ என்னை ஏன் போக சொல்லற…

தாயே...ஆளை விடு இங்கேயே வேணாலும் ஒரு பெட் போட்டு படுத்துக்க ‌... சரக்கு அடி யார் உன்னை கேக்கபோறோ...என்னை வேலை செய்யவிடு...என்று அவளுக்கு முதுகு காட்டியபடி வேலையை தொடர்ந்தான் அபிமன்யூ.

வெவ்வெவ்வ என்று அழகுகாட்டியபடி புட்டேஜ்களை ஆராய்ந்தாள்.

ஒரே ஒரு நாள் அவன் வெளியில் சென்றது போல் இருந்த காட்சி மட்டுமே பதிவாகி இருக்க வேறு எதுவுமே இல்லை ...அவள் உள்ளே வந்ததற்கான எந்த தடயமும் அதில் இல்லை சந்தேகத்துடன் டேய் என்று அவன் தோளில் கை வைத்து அழைத்தாள் திரும்பி அவன் முறைக்க எனக்கு உன்ன அப்படித்தான் கூப்பிட வருது நான் என்ன பண்ண முடியும் என்று அப்பாவியாக சொல்ல சிரித்தவன்…எத்தனை அறை வாங்கினாலும் நீ அடங்க மாட்ட...சரி..சொல்லு எதுக்கு கூப்பிட்ட


இதில முந்தா நாள் நைட்டு நான் போனதோ சொன்ன புட்டேஜ் மட்டும் தான் இருக்கு நான் உள்ள வந்த மாதிரி தடயமே இல்லை….

பின் கேட் பக்கத்துல யாரோ ஏறி குதிச்சி வந்த மாதிரி புட் பிரிண்ட் கிடச்சது...செக் பண்ணதுல அது உன் செருப்பு தடம்னு கன்பார்ம் ஆயிடுச்சி…

நீஜமாவே நான் தான் இதை செய்யறேனு நம்பறியா...ப்ளீஸ் சொல்லேன்... இந்த வீட்டுப் பொண்ணா பாக்காம ஊர்க்கார பொண்ணா நினைச்சு சொல்லேன்...

இங்க பாரு நேத்ரா...இங்க நான் வெறும் செக்யூரிட்டி... மட்டும் தான்...உங்களோட தனிப்பட்ட குடும்ப விஷயத்தில தலையிட முடியாது... இந்த வீட்டு பாதுகாக்கிறது வெளியே இருந்து புதுசா யாராவது வந்தாங்கன்னா அவங்கள முறையான அனுமதியோடு செக் பண்ணிட்டு உள்ள அனுப்பறதும் அவங்க எப்போ திரும்பி போறாங்கனு பாத்து நோட் பண்ணி வைக்கிறது இது மட்டும் தான் என்னோட வேலை.


அதையும் தாண்டி உங்க வீட்டுக்குள்ள நடக்கிற குழப்பத்துல நான் தலையிடவே முடியாது .

எனக்கு உன்னை பார்த்தா ஒருவகையில் பாவமா தான் தெரியுது ..
இதெல்லாம் தெரிஞ்ச பண்றியா இல்ல தெரியாம பண்றியா இல்ல உனக்கே தெரியாம நடக்குதானு புரியல...

நீங்க வந்து சரியா பத்து மாதம் இருபத்தி ரெண்டு நாள் ஆச்சு இந்த பத்து மாதம் இருபத்தி ரெண்டு நாள்ல இந்த கடைசி பத்து நாள் மட்டும் தான் இந்த பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு .

சரியா சொல்லனும்னா ஒரு பத்து நாளா தான் பர்டிகுலர் டைம் சிசிடிவி கேமரா இன்ஆக்டிவேட் ஆகி ஆக்டிவேட் ஆகுது…

அது என்னன்னு கவனிக்கும் போதுதான் அந்த டைம்ல யாரோ வெளிய போயிட்டு உள்ள வர்ற மாதிரி சில தடயங்கள் இந்த வீட்டை சுத்தி கிடைச்சது .

அந்த தடயங்களை ஆராயும்போது அது ஒரு பொண்ணோடதுன்னு தெரிஞ்சது.

இந்த வீட்டுக்குள்ள வேலை செய்றவங்களை தவிர்த்து வேற யாருன்னு பார்த்தா நீ மட்டும்தான் பொண்ணு அதனால உன் மேல எனக்கு ஒரு கண்ணு வைக்க ஆரம்பிச்சோம்

அதை அப்பவே உன் அப்பா கிட்டயும் முறையா தெரியபடுத்தினோம் .

அப்போதான் ரெண்டு நாள் முன்ன அந்த கார்னர்ல இருந்து ஒரு சிசிடிவி கேமரா மட்டும் ஆக்டிவேட் ஆனதுல நீ வெளியே போவதை படம் புடிச்சு எங்களுக்கு காமிச்சது.

அன்னைக்கு மெயின் கேட் வழியா வெளிய போற நீ ஏன் திரும்பி வரும்போது மட்டும் பின்னாடி இருக்கிற காம்பௌன்ட் சுவர் ஏறி குதிக்கறங்கற விஷயம் இன்னும் எனக்கு புரியல

ஆனா முந்தாநாள் சாட்சாத் உன்னை நான் பார்த்தேன் இந்த கேட் வழியா தான் நீ வந்த…

அந்த ஒரு நாளை வச்சு தான் உன் அப்பா பேசறாரு... அதுக்காக நீ தப்பான பொண்ணுனு எல்லாம் முடிவு பண்ண முடியாது ‌

ஆனா எங்க போயிட்டு வந்தனு நீயா வாய் திறந்தா தான் தெரியும் என்று கூறினான்.

நீ சொல்ற எதுமே எனக்கு ஞாபகம் இல்லை உண்மையிலேயே நான் ஒரு ட்ரக் அடிட்தான் போல... அளவுக்கு அதிகமா ட்ரக்ஸ் எடுத்துக்கறதால என்ன பண்றேன்னு எனக்கே தெரியல போல …

ஆனா சமீப காலமா எனக்கு நிறைய கெட்ட கெட்ட கனவா வருது அனேகமா அதுவும் ட்ரக்ஸ் அதிகமாக எடுத்துக்கறதால தான் வருதுனு நினைக்கிறேன்…

நான் ஹாஸ்டல்ல இருக்கும் போதெல்லாம் இந்த பழக்கம் கிடையாது தெரியுமா இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எப்போ பழகினேன்னு தெரியல…

எனிவே ரொம்ப தேங்க்ஸ் இனி நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் நான் ஒரு ட்ரக்அடிட்- ங்கற விஷயம் எனக்கே தெரிஞ்சிருச்சு இனி எதுக்கு நான் உங்களோட ஆர்க்யூவ் பண்ண போறேன் என்று கூறியபடி எழுந்தாள்


அவள் கூறியவற்றை பொறுமையாக கேட்டு உள்வாங்கிய அபிமன்யூ நேத்ரா ஒரு நிமிஷம்.. ஐயாம் ரியலி சாரி உன்னை நான் அடிச்சு இருக்கக்கூடாது…

இல்ல பரவால்ல எனக்கு உண்மையிலேயே நீ அடிச்சது புடிச்சிருக்கு என்னை யாருமே இந்த மாதிரி கண்டிச்சி வளர்த்தினது இல்ல தெரியுமா…? இந்த மாதிரி என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசிலேயே கண்டிச்சி வளர்த்து இருந்தா நான் இன்னைக்கு இப்படி மீள முடியாத அளவுக்கு போதை மருந்துக்கு அடிமையாகி இருக்க மாட்டேன்…

நீ இந்த அளவுக்கு கில்ட் ஃபீல் ஆக வேண்டிய அவசியம் இல்ல நேத்ரா எனக்கு தெரிஞ்சு நீ ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறதா தான் நினைக்கிறேன் அதனால நீ ஒரு நல்ல மருத்துவரை போய் பார்த்தா சீக்கிரமா ரெடி ஆயிடலாம் முக்கியமா அந்த மைதா மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு போறதுக்கு முன்னாடி ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணு... அங்க போய்ட்டா ட்ரீட்மென்ட் கஷ்டமாயிடும் ஏன்னா மைதாமாவோட பேமிலிக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது உன்னோட ஹெல்த் ரொம்ப முக்கியம் இல்லையா…
சரி உனக்கு அவனை பிடிச்சிக்கா…


ம்ம்...பாக்க அழகா இருக்கான்...ஷர்மா அங்கிள் பேமிலி எனக்கு ஏதாவது ஒன்னுனா அவர் பாத்துப்பாரு... என் அப்பாவை விட அம்மாவை விட சின்ன வயசுல இருந்து என்ன ரொம்ப கேரிங்கா பார்த்துக்குவாரு இதை விட வேற என்ன வேணும் சோ ஐ பில் கம்பர்டபிள் …

அப்புறம் ரோகித் ஷர்மானு அழகா அவனுக்கு பேர் இருக்கும்போது நீ இப்படி மைதாமாவுனு கூப்பிடுறது கொஞ்சம் கூட சரியில்ல...ஐ திங் உனக்கு அவனை பாத்து ஜெலஸ்னு நினைக்கறேன்...அவன் உன்னைவிட கலரா ஹாண்ட்சம்மா இருக்கான் இல்ல அதனால...எப்படி பாத்தாலும் அவன் பக்கத்துல நின்னா நீ கொஞ்சம் சுமார்தான் என்று நேரடியாக மட்டம் தட்டினாள்.

கையெடுத்துக் கும்பிட்ட அபிமன்யூ ப்ளீஸ் போங்க மேடம் நல்லபடியா உங்க ஹாண்ட்சமான உட்ஃபியை கல்யாணத்தை பண்ணி குடும்பம் நடத்துற வழியை பாருங்க இப்போ என்னை வேலை பார்க்க விடுங்க... என்று சிரித்தபடியே அவளை வழியனுப்பி வைத்தவன் யோசனையுடன் தனது கல்லூரி நண்பன் ஒருவனுக்கு ஃகால் செய்தான்.

அவனின் பெயர் சக்ரவர்த்தி...இப்பொழுது ஐபிஎஸ் தேர்வெழுதி அதில் தேர்ச்சியும் பெற்று ட்ரைனிங் முடித்துள்ளான்... நேத்ரா வீட்டில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்களை அவனுடன் தான் அபிமன்யூ பகிர்ந்து கொண்டிருக்கிறான்.
போஸ்ட்டிங்காக காத்திருக்கிறான்... தலைநகர் டெல்லி அவனின் முதல் விருப்பம்... காரணம் அவனுடன் படித்த சில மாணவர்கள் இங்கு தான் பணி செய்கிறார்கள் அபி உள்பட…
தலைநகர் இல்லாவிட்டால் அவன் பிறந்த தமிழ் நாட்டில் கிடைக்க வேண்டும் என்பது ஆசை...மத்த மாநிலம் என்றால் கசப்பு அதனால் பொறுமையாக காத்திருக்கிறான்.

சொல்லுடா அபி எனி நீயூஸ்…

எஸ் சக்கி ‌... நேத்து ஏதேர்ச்சையா நேத்ராவோட ரூம்குள்ள போனேன் சில விஷயங்கள் புரிகிற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு கொஞ்சம் என் கூடவே வந்து எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா என்ன இருந்தாலும் உன்னோடது போலீஸ் மூளை…

என்னோடது சாதாரண கம்ப்யூட்டர் மூளை கம்ப்யூட்டரில் ஒரு பிரச்சனைனா கழட்டி பிரிச்சி மேஞ்சிடுவேன் இது கிரைம்ங்கறதால ஒரு கட்டத்துக்கு மேல என் புத்தி வேலை செய்யல..
நீ கொஞ்சம் எனக்கு துணையா வந்தா இங்க நடக்கிற சில விஷயங்கள் கிளாரிஃபை பண்ண வசதியா இருக்கும் எப்போ வர்ற..
என்று கேட்டான்.

இப்போதான் நேத்ராவோட அம்மா பிறந்த ஊரான கோயம்புத்தூரில அவங்களைப் பத்தின இன்வெஸ்டிகேஷன் முழுசா முடிச்சிருக்கேன் .

நிறைய ஷாக்கான விஷயம் எல்லாம் கிடைச்சிருக்கு மாப்பிள்ளை அதெல்லாம் போன்ல கண்டிப்பா சொல்ல முடியாது நேர்ல தான் வந்து சொல்ல முடியும் .

ஆனா சில விஷயங்களை இன்னும் தெரிஞ்சிக்கனும்னா நேத்ராவோட ஒத்துழைப்பு நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் நான் சேகரித்த விஷயங்கள் எல்லாமே ரொம்ப பயங்கரமா இருக்கு.

ஒருவேளை இது எல்லாமே உண்மை அப்படிங்கற பட்சத்தில் நேத்ரா மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் போறா அவ மேல எப்பவுமே ஒரு கண்ணு வச்சுக்கோ அவ நமக்கு ரொம்ப இம்பார்ட்டன் புரியுதா என்றான்.

புரியுதுடா அவ நமக்கு எவ்வளவு முக்கியமானவங்கறது அவளுக்கு இன்னும் புரியலை ஒரு கண்ணை மட்டும் இல்ல இங்க வந்த நாள்ல இருந்து என் ரெண்டு கண்ணுமே அவ மேல தான் இருக்குது நீ அங்க சேகரித்த தகவல்கள் எல்லாம் எடுத்துட்டு சீக்கிரமா என்ன பாரு என்று கூறியபடி ஃபோனை வைத்தவன் நேத்ரா வின் அறையைத் தான் பார்த்தான்.


அபியுடன் பேசிய பிறகு நேத்ரா விற்கும் ஒரு தெளிவு கிடைத்தது தான் ஒரு போதை மருந்துக்கு அடிமையாக பெண் என்பதை அவளே நம்பினாள்…


முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு வந்து நின்றபடி அவளுக்கு அவளே சில கேள்விகளை கேட்டுக் கொண்டாள்.

எப்போ நேத்ரா இந்த மாதிரி போதைப் பொருளுக்கு அடிமை ஆன காலேஜ் ஹாஸ்டல்ல இந்த மாதிரி நீ கிடையாதே…

ஒரு வேளை அப்போவே உனக்கு தெரியாம நீ அடிக்கடி எடுத்துகிட்டியா...அதை விட முடியாம தான் இங்கு வந்தும் அதை கன்டின்யூ பண்றியா என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கண்ணாடியில் அவளின் உருவம் மறைந்தது.

பயத்துடன் கண்ணாடியின் மீது கைகளை வைத்து தட்டி பார்க்க திடீரென அதில் மதுவின் முகம் தோன்றியது.

தீடிரென்று மதுவின் முகம் கோரமாக உருமாற சட்டென்று பயந்து ஓரடி பின் வாங்கினாள் .

அம்மா...என்று நேத்ரா அழைக்க…

மதுவின் முகம் சாந்தப்பட

நீ அம்மா கிட்ட வா நேத்ரா...அம்மா கிட்ட வந்திடுமா... என்று கெஞ்சுவது போல் கேட்டது

உடனே நேத்ரா பயந்து வரமாட்டேன் என்பதுபோல் தலையசைக்க அப்படினா நீ இங்கிருந்து போ‌.. இந்த வீட்ல இருக்காத உடனே எங்காவது போ என்றது


அதற்கும் நேத்ரா முடியாது என்று தலையசைக்க திடீரென கண்ணாடியை விட்டு வெளியே வந்த மதுவின் ஆத்மா
நேத்ராவின் முகத்தில் ஆக்ரோஷமாக தாக்கியது…

அலறிக் கீழே விழ இங்கு அபிக்கு நேத்ராவின் அலறல் சத்தம் கேட்டது உடனே அலாட் ஆனவன் எழுந்து நேத்ராவின் அறையை நோக்கி ஓடினான்.

மேலே நேத்ரா வின் அறையில் ஜன்னல்கள் அனைத்தும் பட்டென்று சாத்தி தாள் போடப்பட்டது கதவுகளும் தாள் போடப்பட்டது நேத்ரா பயந்து வேண்டாம் என்று கூற ஆக்ரோஷமான மதுவின் ஆன்மா ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாத நேத்ரா...இப்போ உன்னை எப்படி இங்கிருந்து வெளியே போக வைக்கனும்ங்கற விஷயம் எனக்குத் தெரியும் என்று சற்றும் யோசிக்காமல்

நேத்ராவின் உடலுக்குள் மதுவின் ஆன்மா புகுந்ததும் ...நேத்ராவின் உடலில் இருந்த வெளியே வந்த நேத்ராவின் ஆன்மா கெஞ்சத் தொடங்கியது ….

அம்மா என்ன ஒன்னு பண்ணிடாதீங்க என்று அதை சட்டை செய்யாத நேத்ரா

குரூரமான பார்வையுடனே எழுந்து ... நேத்ராவின் ஆன்மா முன்பு நின்றபடி நீ என்கிட்ட வர மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல... எவ்வளவு நாளா இங்கிருந்து போகச் சொல்றேன்... போகவும் மாட்ட…

ம்ம்...என்று முறைத்தவள் என்கிட்டயும் வரமாட்ட இங்கிருந்தும் போகமாட்ட உன்னை என் கிட்ட வர வைக்கிறேன் என்று நேத்ராவின் ஆன்மாவை பார்த்துப் பேசியபடியே
கண்ணாடியில் முன்பு இருந்த அவளின் மேக்கப் கிட்களை ஆராய்ச்சி செய்தது.

அதில் நகம் வெட்டுவதற்காக வைத்திருந்த நெயில் கட்டரை எடுத்து அதில் இருந்த நைப்ஃ மட்டும் தனியாக பிரித்தது.

யோசிக்காமல் அவளின் வழக் கையில் மூன்று கோடுகளை வேகமாக போட ரத்தம் பீறிட்டது.

வெளியில் இருந்து நேத்ராவின் ஆன்மா அம்மா என் உடம்பை எதும் பண்ணாதீங்க ப்ளீஸ் என்று முட்டி போட்டு கதறியது.

அபி வெளியே இருந்த கதவை பலமாக தட்ட ஆரம்பித்தான்.

இப்பொழுது நேத்ரா ரத்த வெள்ளத்தில் கீழே விழவும் ஜன்னல் கதவு என அனைத்தும் ஒன்று போல் திறந்துவிட கையில் காயத்துடன் நேத்ரா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

அவளை கோலத்தைப் பார்த்ததும் கொஞ்சமும் தாமதிக்காமல் ஒரு நீண்ட துணி கொண்டு அவளின் கைகளை சுற்றியவன் அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனை சென்றான்.


அங்கு அவளுக்கு முதலூதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவர் அபியையும் ரவியையும் தனிமையில் சந்தித்து

காயம் ஆழமா இல்ல ஜஸ்ட் தோல் மட்டும்தான் கீரியிருக்கு... ஆனா ரொம்ப பயத்திருக்காங்க அதனால தான் மயக்கம் ஆயிட்டாங்கனு நினைக்கிறேன்.

ஆக்சுவலி இது போலீஸ் கேஸ் உங்களுக்காக தான் அட்மிஷன் போட்டிருக்கேன் எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல இன்பார்ம் பண்ணிடுங்க...

அவங்க விசாரிச்சா தான் எதனால சூசைட் அட்டன் பண்ணினாங்கனு உங்களுக்கு தெரியும் மதியம் மாதிரி டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க என்றார்.



அபிமன்யூ குறிக்கிட்டு டாக்டர் இந்த சம்பவம் நடக்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் என்கிட்ட வந்து ரொம்ப நல்லா பேசிட்டு போனா


ஆனா அப்போ ரொம்ப தெளிவா இருந்தா... இந்த மாதிரி எல்லாம் பண்ணுவான்னு கனவுல கூட நினைக்கல, கல்யாணத்தைப் பத்தியெல்லாம் கூட ஜாலியா பேசினா என்று கவலையாக கூறினான்.


மேபி ஒருவேளை அவங்க போதை பொருளுக்கு அடிமை ஆகிட்டோமேனு குற்ற உணர்ச்சியில கூட இதை பண்ணியிருக்கலாம் எதுக்கும் நீங்க சைகாடிஸ்ட் பார்க்கிறது பெஸ்ட் என்று உடனடியாக எழுதியும் கொடுத்தார்.

ரவியோ மிகவும் டென்ஷன் ஆனவர் அபி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா எனக்கு ரொம்ப டெம்பர் ஆகுது சோ நான் உடனே வீட்டுக்கு போறேன் நீ கொஞ்சம் நேத்ரா கூட இருந்து பாத்துக்கோ என்று கூறியபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அபிக்கு மிகவும் ஆச்சரியம் மகள் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் இருக்கிறாள் ஆனால் தந்தையோ எந்த ஒரு கவலையும் இல்லாமல் அவரின் உடல் நலத்தை காப்பதற்காக செல்கிறார் என்று நினைத்தவன் அங்கிருந்து அவளை டிஸ்சார்ஜ் செய்து அருகில் இருந்த ஒரு மனநல மருத்துவரை சந்திக்கவும் அழைத்துச் சென்றான்.


நேத்ரா விற்கு எதுவுமே ஞாபகம் இல்லை எப்படி தனது கையில் காயம் ஆனது என்று கூட தெரியவில்லை மயக்கம் தெளிந்து மலங்க மலங்க விழித்தபடி அபியிடம் தனக்கு என்னாவாயிற்று என்று நச்சரித்தாள்.

ஒண்ணுமில்ல நேத்ரா இது எப்படி ஆச்சுனு உனக்கு தெரியலையா..?

இல்ல எப்படி...ஆனா கை பயங்கறமா வலிக்கிது...என்றாள்.

சரியாயிடும் வா நாம் வேற டாக்டரை பாத்துட்டு வீட்டுக்கு போகலாம்…

அப்பா எங்க…?
ஷர்மா அங்கிளுக்கு ஃபோன் பண்ணறியா ...அவர் வந்தா எனக்கு கொஞ்சம் சௌகரியமா இருக்கும் இல்லனா ரோஷித் கூட ஒகே தான்...நீன்னா கொஞ்சம் அன்கம்பர்டபிளா இருக்கும் ப்ளீஸ் என்றாள்.

ம்ம்... அப்பவே சொல்லிட்டேன் ரெண்டு பேரும் ஏதோ ஒரு மீட்டிங்ல இருக்காங்களாம் உடனே வரேன்னு சொல்லி மெசேஜ் பண்ணி இருக்காங்க நாம அதுக்குள்ள டாக்டர்கிட்ட போயிடலாம்

நாம அங்க போய் சேரும் போது வந்துடுவாங்க லேட் ஆச்சி வா என்று அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.

அவளை முழுமையாகப் பரிசோதித்தவர் அபியிடம் பொண்ணு ரொம்ப நார்மலா இருக்கா அவ ட்ரக்ஸ் எடுக்குற மாதிரி எல்லாம் எந்த அறிகுறியும் தெரியலையே எதை வைத்து அப்படி சொல்லறீங்க…

மருத்துவரின் கேள்வி அபிக்கு ஆச்சரியத்தை அளித்தது..

அதற்குள்ளாக ரோகித்தும், ஷர்மாவும் அங்கே வர டாக்டருக்கும் அபிக்கும் இருக்கும் பேச்சுவார்த்தை அத்தோடு நின்றது .

அதன்பிறகு முழுவதுமாக நேத்ரா அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றாள்.

மருத்துவரும் ஒரு வாரம் அவளை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும் தற்கொலை முயற்சிக்கு மட்டும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூற சரி என்றனர் அவளுக்கு சில டெஸ்ட்களும் எடுக்கப்பட்டது பிறகு வீட்டிற்கு அழைக்கப்பட்டாள்.

வீட்டுக்கு வந்தவுடன் ஷர்மா ரவியிடம் பயங்கரமாக சண்டையிட்டார் பெண் தற்கொலை முயற்சி செய்யும் வரை என்ன செய்து கொண்டிருந்தாய் என்று பிறகு உடனடியாக நேத்ராவை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று பிடிவாதம் பிடிக்க

ரவியும் முற்றிலும் மறுத்து விட்டார். தனது பெண்ணிற்கு திருமணம் செய்தபின் தான் உனது வீட்டிற்கு அனுப்பி வைப்பேன் அதுவரை அங்கே அனுப்பி வைக்க முடியாது அது முறையும் இல்லை


அதுவும் உடல் நலமில்லாத மகளை அங்கே அனுப்பி விட்டு என்னால் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது அவள் உடல்நலம் முற்றிலும் சரியான பிறகு நானே முறைப்படி அனுப்பி வைக்கிறேன் அதுவரை தயவு செய்து யாரும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன்மையாக கேட்டுக்கொள்ள ஷர்மா ரோஷித்தும் அங்கிருந்து சென்றனர்.

ரவிக்கு சில நாட்களாக இங்கு நடக்கும் விஷயங்கள் மனதின் நிம்மதியை கெடுத்தது... இப்பொழுது சுற்றி இருப்பவர்களை விடவும் அபியை அதிகமாகவே நம்ப தொடங்கியிருந்தார்.

மகளுக்கு அபியை தவிர வேறு யாராலும் சிறப்பான பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் மனதார நம்பினார் .அபி அவனின் ஊர்க்காரன் மட்டுமல்ல அவர் கேட்டுக்கொண்டதுமே அவனின் வேலைகளை விட்டுவிட்டு இங்கு வந்து காவல் காக்கிறான் அவன் படித்த படிப்பிற்கு அவன் எங்கேயோ எப்படியோ இருக்க வேண்டியவன்

அவ்வளவு ஏன் சொந்த ஊரில் இருந்தால் கூட அவனுக்கு இருக்கும் நில, புலங்களுக்கு முதலாளியாக அமர்ந்து வேலை வாங்கலாம் அதையெல்லாம் விட்டுவிட்டு தன் ஒருவனுக்காக இங்கு வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

அதுவே அபியின் மீது அவருக்கு ஒரு நன்மதிப்பை கொடுத்தது.

ஏதோ ஒரு வகையில் மகளின் உயிருக்கு ஆபத்து அவளை சுத்தி ஏதோ ஒரு வலை பின்னப்படுகிறது அதை ரவி தற்போது உணர தொடங்கியிருந்தார்.


இங்கு இருந்தால் மட்டுமே அதையெல்லாம் முறியடிக்க முடியும் மகளை இந்த சமயத்தில் வேறு எங்கும் யாரையும் நம்பி அனுப்பி வைக்க அவரின் மனம் இடம் கொடுக்கவில்லை தன்னுடைய பொறுப்பில் அபியின் பாதுகாப்பில் இங்கு இருக்கட்டும் என்று நினைத்தார்.

நேத்ராவின் அறை ரவியின் அறைக்கு அருகில் மாற்றப்பட்டது…

சக்ரவர்த்தி இப்போழுது அபியின் துணைக்கு நேத்ராவின் வீட்டிற்கு வந்து விட்டான்.

உடனடியாகவே அவனுடைய போலீஸ் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான்.

அங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்துமே ஆராய ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிய ஆரம்பித்தது .

நேத்ராவிற்கு எந்த ஒரு போதை பழக்கமும் கிடையாது அவளை யாரோ சதி வலையில் மாட்ட வைக்கிறார்கள் .

அவள் தந்தையை மட்டுமல்ல அவளையே நம்ப வைக்கிறார்கள் அவள் போதை மருந்துக்கு அடிமையாகி விட்டாள் என்று.

இனி இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேத்ராதான் வாய் திறக்க வேண்டும்

அதற்கு முதல் காரியமாக தங்களுக்குத் தெரிந்த ஒரு மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் அப்படி என்றால் மட்டுமே அவளை நாம் இக்கட்டில் இருந்து காப்பாற்ற முடியும் என்று இரு ஆண்களுமே முடிவு எடுத்தனர்

பிறகு யாருக்கும் தெரியாதவாறு சக்கரவர்த்தி அபியின் கையில் ஒரு சிறிய ரக பாக்ஸை திணித்தான் இதை எப்படியாவது நேத்ரா உடம்பில பிக்ஸ் பண்ணிடு இது ஜிபிஎஸ் ட்ராக் நாளைக்கு ஏதாவது ஆபத்து நா கூட இது வச்சி அவளை காப்பாற்ற முடியும் அவ வெளிய போற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஆபத்து என்று கொடுத்தான்.

வாங்கிய அபி வெறொரு மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றான்.

வீட்டில் சக்கரவர்த்தி தடையங்களை தேட முடிச்சு ஒவ்வொன்றாக விடுபட ஆரம்பித்தது.

மருத்துவமனையில் நேத்ரா மருத்துவர்களிடம் வாய்திறக்க அபிக்கு அவளைப் பற்றிய முடிச்சுகள் விடுபட ஆரம்பித்திருந்தது.

தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
7

நேத்ராவின் டெஸ்ட்கள் அனைத்தும் வர எல்லாமே பாஸிட்டிவ் தான்…
அவளுக்கு மது அருந்தும் பழக்கமோ பிற போதை வஸ்துக்கள் உபயோகிக்கும் பழக்கமோ இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.


இதை ரவிக்குத்தான் அபி முதலில் தெரியப்படுத்தினான்.

ரவிக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.
அப்படியானால் எதுற்காக தனது மகள் வேளியே செல்கிறாள்...அதுவும் ரகசியமாக…?
ஏன் மகள் தற்கொலை முயற்சி செய்தாள் அவளுக்கு இங்கு என்ன குறை...என்றெல்லாம் நினைத்து கவலை கொண்டார்.


பிறகு அபிமன்யூவிடம் ரவிச்சந்திரன் மிஸ்டர் அபிமன்யூ எனக்காக நீங்கள் மறுபடியும் ஒரு உதவி பண்ணனும் சில வருஷத்துக்கு முன்னாடி என்னோட வீட்டுக்கு பாதுகாப்பு தேவைனு சொன்னதும் நீங்க உடனே ஒத்துகிட்டு என்னோட வீட்டுக்கு வந்து ஹெல்ப் பண்ணுனீங்க...இப்போ அதே போல என் மகள் பூரண குணமாகி அவ கணவர் வீட்டுக்கு போற வரைக்கும் அவ கூடவே இருந்து கவனிக்கனும் அபி…


கோடிக்கனக்கான சொத்துக்களை உன்னை நம்பி ஒப்படைச்சிட்டு நான் தைரியமா வெளிய போவேன்...இப்போ விலைமதிப்பில்லாத என் மகளை உன்கிட்ட ஒப்படைச்சிட்டு நான் என்வேலையை பாக்க போறேன்... அவளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் அவளை என்கிட்ட ஒப்படைக்க வேண்டியது உன் பொறுப்பு என்றார்.

சிறிதும் தயக்கமில்லாமல் உடனே ஒத்துக்கொண்டான் அபிமன்யூ…

தேங்க்ஸ் சார் ஆனா ஆபீஷியலா ஒரு அப்பாயின்ட் ஆர்டரை மெயில் பண்ணிடுங்க சார் உடனடியா நான் ஜாயின் பண்ணறேன் என்று கூறிவிட்டு மருத்துவரிடம் சென்று நேத்ராவின் ரிப்போட்டை பெற்றுக் கொண்டான்…



அதை பார்க்கும் பொழுது அபிக்கு தன் கண்ணையே நம்ப மறுக்கும் நிகழ்வு இப்பொழுது நேத்ராவுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றால் இவள் ராத்திரி நேரத்தில் எங்கே செல்கிறாள்... தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏதாவது இருக்குமா...இடையில் தற்கொலை முயற்சி வேறு‌..ஏன் என்று மருத்துவரிடம் தனிமையில் கேட்டான்.

அவரோ இப்பொழுது தானே மது அருந்தும் பழக்கமில்லை என்று தெரிந்திருக்கிறது இரண்டு நாள் மருத்துவமனையில் அனுமதித்து அவளை முழுவதுமாக செக் செய்து ட்ரீட்மெண்ட் எடுக்கலாம் அதன்பிறகு ஒவ்வொரு விஷயங்களாக தெளிவு படுத்தலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார் சக்கரவர்த்தியை அழைத்து அபி நடந்தவற்றை கூற
அவன் மீண்டும் கேமரா பதிவுகளை ஆராய ஆரம்பித்தான்.

மருத்துவர் கொடுத்த மருந்தின் விளைவாக நன்கு தூங்கிக் கொண்டிருந்த நேத்ராவிற்கு மீண்டும் கனவு வர ஆரம்பித்தது…

தாய் இப்பொழுது பருவப் பெண்ணாக கையில் ஒரு கூடையை வைத்தபடி பாவாடை தாவணி மற்றும் இரு ஜடைகள் போட்டபடி மல்லிகைப்பூ தோட்டத்தின் வழியாக தனக்குத்தானே காக்கா சுற்றியபடி விளையாடிக் கொண்டுவர எதன் மீதோ மோதுகிறார் அத்தோடு முடிய...

சில நேரத்திலேயே எதைப் பார்த்தோ பயந்து அலறியபடி ஒடுகிறார்...ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் நேத்ராவும் அவர் பின்னே ஒடுகிறாள்.

ஒரு கட்டத்தில் கால் இடறி ஒரு பள்ளத்தில் விழ பிடிக்க சென்ற நேத்ராவும் உள்ளே விழுகிறாள்

தாய் மகள் இருவரும் ஒரு போல அம்மா என்று கத்த உறங்கிக் கொண்டிருந்த நேத்ராவும் கத்தியபடி எழுந்து அமர்ந்தாள் வெளியில் அமர்ந்திருந்த அபி பயந்து ஓடி வர ...நேத்ரா இப்பொழுது மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.அவளின் உடல் சில்லிட தொடங்கியது.

உடனடியாக மருத்துவரை அழைத்த அபி… நேத்ராவின் கால்கள்,மற்றும் உள்ளங்கை,முதுகு என மாறிமாறி தேய்த்து விட ஆரம்பித்தான்…

அவளை பரிசோதித்த மருத்துவர் இதற்கு முன்பு இதுபோல் ஆகி உள்ளதா என்று விசாரித்தார்.
நேற்று இரவு இதே போல் கத்தியபடி ஓடி வந்ததையும் அறையில் மயங்கிக் கிடந்ததையும் அபி நினைவுகூர்ந்தான்.


சில வினாடிகள் யோசித்த மருத்துவர் மனதளவில் எதையோ நினைத்து பயப்படுகிறாள் அவளுக்கு ஒரு பாதுகாப்பின்மை உள்ளது... நாளை முதல் அவளுக்கு உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் அப்பொழுது தான் எதனால் இது போல் ஆகிறது ஏன் தற்கொலை முயற்சி செய்தாள் என்பதை பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம் என்று அபியிடம் கூறிவிட்டு கடந்து சென்றார்.

கவலையாக நேத்ராவின் அருகில் அமர்ந்து தலையை நீவி விட்டவன் அவளின் முகத்தை பார்த்து இந்த அபி இருக்கிறவரைக்கும் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் என்றான்.

சிறிதுநேரத்திலே ரோகித் அங்கு வந்தவன் பிறகு எங்குமே செல்லவில்லை...நேத்ராவுடன் நான் இருக்கிறேன் நீங்க போய்க்கோங்க அபி என்று கூறியவனிடம்

சாரி சார் மிஸ்டர் ரவி நேத்ராவோட பர்சனல் பாடிகார்டா என்னை பிக்ஸ் பண்ணியிருக்கிறாரு என்று மொபைலில் அவர் அனுப்பிய மெயிலை காமிக்க ஆச்சரியம் கொண்ட ரோகித்

என்னை கேட்காம எப்படி உன்னை பர்சனல் பாடிகார்ட்டா அப்பாய்ன்மெண்ட் பண்ணலாம் என்று கோபப்பட

அபி கூலாக சார் ஒருவேளை நேத்ரா இன்னும் அவரோட மகளாய் இருக்கிற உரிமையில பண்ணி இருக்கலாம் உங்க டவுட்டை அவர் கிட்ட கேட்டுக்கோங்க என்று கூறிவிட்டு வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.

ரோகித் விஷயத்தை உடனடியாக ஷர்மாவிடம் கூற ஷர்மாவும் நல்ல விஷயம் தானே ரோகித் இப்போ இருக்கிற சூழ்நிலையில் நேத்ராவுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் அதனால பாதுகாப்பு விஷயத்தில் நாம தலையிட வேண்டாம்‌... நேத்ரா ரவியோட பொண்ணு அதையும் நாம மறந்திட வேண்டாம் என்றும் அறிவுறுத்த ரோஷித் அதன் பிறகு எதுவும் பேசிக் கொள்ளவில்லை ஆனால் அபியை மட்டும் அவ்வப்போது முறைக்கத் தொடங்கினான்.

இரண்டு நாட்கள் நேத்ராவிற்கு உறக்கத்திற்கான மருந்து கொடுத்து தூங்க வைத்தனர்.

இடையிடையே கனவில் தாய் வர.. அப்பொழுதெல்லாம் கத்த தொடங்கினாள்.

முதல் நாள் மட்டும் ஷர்மா,ரோகித் நேத்ராவுடன் இருவரும் இருக்க இரண்டாம் நாள் காலையிலேயே அவர்கள் பணிக்கு கிளம்பினர்.

ஷர்மா தனிப்பட்டமுறையில் அபிமன்யூவிடம் நேத்ராவை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி பணிந்து விட்டு சென்றார்.

ரோகித் ஷர்மாவிடம் எப்படி அங்கிள் அவனோட பாதுகாப்பில் நேத்ராவை விட்டுட்டு வர்றீங்க எனக்கு இவனைப் பார்த்தாலே பிடிக்கலை என்று கூற

ஷர்மாவும் எனக்கும் தான் பிடிக்கல ஆனால் அவன் ரவியோட சர்வன்ட் பேபிமா இன்னும் ரவியோட பொண்ணு என்னதான் பெஸ்ட் பிரண்டா இருந்தாலும் நமக்குன்னு ஒரு எல்லை இருக்கு...அதை தாண்டி உள்ள போககூடாது ரோகித்..

ஆனா அங்கிள் இவன் நேத்ராவை பார்க்கற பார்வையே சரி இல்ல ஏதோ ஒரு வேவ்ஸ் இருக்கு அது எனக்கு நல்லாவே புரியுது…

நீ ரொம்ப பயப்படுற ரோஷித் பேபிமா பூனைனா இவன் நாய்
இவன் பாம்புனா பேபிமா கீரி ... என்னைக்குமே இவங்க ஒத்து போனதாக சரித்திரம் கிடையாது. பேபிமாக்கு அபினா வெறுப்பு...நீ கவனிக்கல நான் பலமுறை கவனிச்சிருக்கேன்


எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க அங்கிள்...உங்க பார்வைக்கு தப்பின ஒரு அன்டர்ஸ்டான்ட் ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கும் அது எனக்கு தெரியுதே….

உனக்கு சொன்னா புரியாது….வெயிட் அ மினிட் என்றவர் அவரின் மொபைல் போனில் பாஸ்வேர்ட் போட்டு சில வீடியோவை காண்பித்தார்.

ஒன்றில் முதல் நாள் கண்ட்ரோல் ரூமில் அபி இடம் திட்டு வாங்கியபடி நேத்ரா வெளியேறியது இரண்டாம் பதிவு நேத்ரா அபியை அறைந்து விட்டு ஜெர்கீனை தூக்கி வீசி விட்டு செல்வது...மூன்றாம் பதிவு நேத்ராவை அபி மாறி மாறி கன்னத்தில் அறைவது.அதன் பிறகு வேவ்வெறு சமயங்களில் இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்வது….


வீடியோவை பார்த்ததும் ரோஹித் கோபத்தில் எவ்வளவு தைரியம் நேத்ராவை அடிச்சிருக்கான் நீங்க வீடியோ பாத்து சாதாரணமா இருக்கீங்க..

இருங்க நான் போய் அவனை என்னனு கேட்டுட்டு வரேன் என்று நகர்ந்தவனை பிடித்து இழுத்தவர்

பேபிமா எப்பவுமே அபிகிட்ட போய் வம்பு வளர்த்துவா அவன் பதிலுக்கு இதுமாதிரி அப்பப்போ கொடுத்துவிடுவான் இது இன்னைக்கு நேத்தா நடக்குது அப்பப்ப நடந்துகிட்டு தான் இருக்கு... ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ராசி அதனால தைரியமா அவனை இங்க விடலாம்...


இந்த வீடியோஸ் எல்லாம் எப்படி அங்கிள் உங்களுக்கு கிடைச்சது…


மறந்துட்டியா ரோகித் அந்த வீட்டோட செக்யூரிட்டி சிஸ்டம்ல நானும் ஒரு அத்தாரிட்டி பர்ஷன் சோ அங்க நடக்கற எல்லாத்தையுமே பாக்கலாம்
ஆனா இந்த வீடியோஸ் எல்லாமே சர்வலைன்ஸ் ரூம்குள்ளேயும்...அதை சுற்றியும் நடந்தது இதை நான் எங்க இருந்தாலும் பாக்கலாம்...என் மொபைல் அபிமன்யூ மொபைல் ரெண்டோடயும் கனெக்ட் ஆகும் என்று கூற

சூப்பர் அங்கிள்... உங்களுக்கு தான் நேத்ரா மேல எவ்வளவு பாசம்...என்று கூற…

அர்த்தத்துடன் சிரித்தார் ஷர்மா .

மறுநாளிலிருந்து நேத்ராவிற்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது முதலில் அவளின் ரிப்போர்ட் களை ஆராய்ச்சி செய்து அவளுக்கு போதை மருந்து பழக்கம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

அதை நேத்ராவிற்கு தெரியபடுத்த அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்...அபியை பார்த்து நான் தான் சொன்னேன்ல எனக்கு அதெல்லாம் கிடையாதுன்னு இப்போ ப்ரூஃப் ஆயிடுச்சி பாத்தியா என்றவள்

அவனை சந்தேகத்துடன் பார்த்து சிசிடிவி கேமராவோட பிரச்சனையும் முடியட்டும் அதுக்கப்புறம் உன்னை உன் ஊருக்கே விரட்டறேனா இல்லையான்னு பாரு என்று மருத்துவமனையிலேயே சண்டையும் இட்டாள்.

அபிக்கும் சந்தோஷம் தான் முதல் டெஸ்ட்டில் பாஸாகி விட்டாளே என்று சிரித்தபடியே முதல்ல குணமாகி வீட்டுக்கு வா அதுக்கு அப்புறமா அதையும் ப்ரூஃப் பண்ணி என்னை ஊருக்கு துரத்து இப்ப டாக்டர் சொல்றபடி கேளு என்று புத்தி கூறினான்.


இருவரின் சண்டையையும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்த மருத்துவர் அவளிடம் வந்த நேத்ரா இப்போ உங்கள ஆழ்மன தூக்கத்திற்கு கூட்டிட்டு போகப்போறேன் நான் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையா நிதானமா பதில் சொல்லுங்க உங்க பக்கத்துல நானும் மிஸ்டர் அபிமன்யூவும் இருக்கறோம் தைரியமா எங்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும் என்று கேட்டுக்கொள்ள அவளும் சரி என்று அவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தாள்.

அவளின் முன்பு ஒரு லாக்கெட்டை ஆடவிட்டவர் அதையே பாக்கும் படி பணிந்தார்...நேத்ராவின் ஒத்துழைப்பால்
அவளை உடனடியாக அரைதூக்கத்திற்கு கொண்டு வந்து அவளின் அடிமனதினை தட்டி எழுப்பினார் மருத்துவர்.

அவளிடம் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தீர்கள் என்ன காரணம் என்று மருத்துவர் விசாரிக்க அவள் நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கவில்லை என்று பிடிவாதமாக கூறினாள்.

அப்படி என்றால் இந்த காயம் எப்படி ஆனது என்று கேட்கும் பொழுது அவளுக்கு சுத்தமாக ஞாபகம் இல்லை.

நன்றாக யோசியுங்கள் இந்த காயம் ஏற்படும் முன்பு ஏதாவது ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்திருக்கும் இது கண்டிப்பாக கையால் கீறப்பட்ட தடம் அதனால் யோசித்து கூறுங்கள் என்று கூற

அபி நேத்ராவின் அருகில் வந்து அவனிடம் பேசிவிட்டு மேலே சென்றது வரை ஞாபகப்படுத்தினான்.

பிறகு நேத்ராவின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது நான் அபிகிட்ட சண்டை போட்டுட்டு பிறகு சமாதானமா பேசி முடிச்சுட்டு மாடிக்குப் போனேன் அப்போ திடீர்னு கண்ணாடியில் என்னோட அம்மா முகம் தெரிஞ்சது …

அம்மா அதாவது மதுமதி சரியா நேத்ரா…

ஆமா டாக்டர்…

என்ன சொன்னாங்க….

அம்மா என்ன அவங்க கிட்ட வர சொன்னாங்க நான் முடியாதுன்னு சொன்னேன் அப்போ இந்த வீட்ல இருந்து நீ போயிட்டுன்னு சொன்னாங்க மாட்டேன்னு சொன்னேன் திடீர்னு வெளியே வந்து என்ன பயங்கரமா அடிச்சாங்க நான் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன் அப்புறம் என்ன ஆச்சினு தெரியல முழிச்சா இங்க இருக்கேன்….


ஒஒஒ அம்மா இதுக்கு முன்னாடி இதே மாதிரி உன் கனவுல வந்து இருக்காங்களா …

ஆமா டாக்டர் இப்போ கொஞ்ச நாளா அடிக்கடி வருவாங்க என்னை இங்கிருந்து போக சொல்லுவாங்க...

அப்படி இல்லன்னா அம்மாவை யாரோ கஷ்டப்படுத்துவது போல தெரியும்…

இல்லனா யாரோ அம்மாவை கொலை பண்ற மாதிரி எல்லாம் கனவு மாறிமாறி வந்துகிட்டே இருக்கும்…

இதை யார் கிட்டயாவது சொன்னீங்களா…

இல்லை டாக்டர் சொல்லலாம்னு ஒவ்வொரு முறையும் அப்பாகிட்ட போவேன் ஆனா அதுக்குள்ள எங்க வீட்டில இருக்கற சிசிடிவி கேமரா பிரச்சினையால் இந்த விஷயம் சொல்ல முடியாமலே போய்விடும்

வேற யார்கிட்டயாவது இதைப்பத்தி பேசி இருக்கீங்களா…

இல்ல டாக்டர் வெளிய சொன்னா இதெல்லாம் நம்புவாங்களான்னு தெரியல அதனால நான் யார்கிட்டயும் சொன்னதில்லை என்று கூற …

ஓகே நீங்க அப்படியே ரிலாக்ஸ் ஆகி சாதாரணமா தூங்கி எந்திரிங்க நாம பிறகு சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அபியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

மிஸ்டர் அபி இந்த பொண்ண பத்தின பர்சனல் டீடைல்ஸ் எல்லாமே உங்களோட நான் ஷேர் பண்ணிக்கலாம்ல…
இல்ல அவங்க அப்பா கிட்ட தான் பேசனுமா என்று கேட்க


டாக்டர் எனக்கும் நேத்ரா விற்கும் இருக்கிற உறவு உங்களுக்கு சொன்னா புரியாது இருந்தாலும் அவசியம் ஏற்பட்டா உங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன்

நேத்ராவோட உடல்நிலையை பற்றி எனக்கு முழுசா தெரிஞ்சாகணும் ப்ளீஸ் நீங்க என் கிட்ட சொன்னாலே போதும் நான் ரவி சாருக்கு கன்வே பண்ணிக்குவேன் என்று கூற

ஓகே மிஸ்டர் அபிமன்யூ நீங்கதான் அவளோட கார்டியனா சைன் பண்ணி இருக்கீங்க அதனால அவளோட ஹெல்த் பத்தி உங்க கிட்ட பேசுறேன் என்று கூறியவர் சில விஷயங்களை கூற ஆரம்பித்தார்.

மிஸ் நேத்ரா தற்கொலைக்கு முயற்சி பண்ணல...ஆனா முயன்ற மாதிரி சித்தரிக்க பட்டிருக்கு...யார்னு அவங்களுக்கே தெரியல...அவங்கள அங்க இருந்து அவங்க அம்மா போக சொல்லறதா சொல்லறாங்க இது எந்த அளவு உண்மைனு தெரியல…


ஒருவேளை சின்ன வயசிலேயே அவங்க அம்மாவை பிரிந்ததால ஏற்பட்ட பாதிப்பா கூட இருக்கலாம் அவங்க அம்மா எப்பவும் அவங்க கூடவே இருக்கிறது போல ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு அடிக்கடி அவங்ககிட்ட கூப்பிடுவது போல இவங்களா நினைக்கலாம் .

எதுவா இருந்தாலும் அடுத்தடுத்து அவங்களுக்கு செய்யப்போற சிகிச்சையில தான் நாம கண்டுபிடிக்க முடியும் எப்படியும் இன்னும் ஒரு வாரம் வரைக்கும் அவங்க மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டி வரும்.

இடையில அங்க வந்தா சிகிச்சை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு...அதுக்கு உங்களோட ஒத்துழைப்பும் எங்களுக்கு வேணும் என்று கூற

ஒரு வாரம் இல்லை பத்து நாள் ஆனா கூட பரவால்ல நேத்ரா இங்கேயே இருக்கட்டும் அவளை பத்தின எல்லா விஷயங்களையும் தெரிந்ததுக்கு அதுக்கப்புறம் தான் இனிமே வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் டாக்டர் என்று கூறினான் அபிமன்யூ.

அப்பொழுது சக்கரவர்த்தியிடம் இருந்து ஃகால் வந்தது…

மருத்துவரின் அனுமதியோடு ஃகாலை அட்டெர்ன் செய்ய
டேய் மச்சி இங்கே ஒரு அன்பிலிவபிள் புட்டேஜ் கிடைச்சிருக்கு கொஞ்சம் நீ வந்து பாருடா...சீக்கிரம் என்றான்.

உடனே பரபரப்பான அபி டாக்டரிடம் நேத்ராவை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க நான் இப்போ வந்துடறேன் என்று கூறியபடி வீட்டை நோக்கிச் சென்றான்.

வாசலிலேயே காத்திருந்த சக்கரவர்த்தி அபியை கண்டதும் மச்சி புட்டேஜ் பாத்தா அப்படியே நீ ஃப்ரீஸ் ஆயிடுவ...என்று கூற

அபியோ சுற்றுமுற்றும் பார்த்தபடி கொஞ்சம் இப்படி வா சக்தி என்று அழைத்துச் சென்றான் .

என்னடா என்று கேட்க

நீ பாத்த விஷயத்தை பென்ட்ரைவ்ல சேவ் பண்ணிட்டு சத்தம் இல்லாம வெளிய வா எதும் பேசாத என்று கூறிவிட்டு ரவியை காணச் சென்றான்.

சக்கரவர்த்தியும் உடனடியாக சென்று அவன் கூறியது போல் செய்தான் பிறகு அவர்களுடைய அறைக்குள் சென்றவர்கள் லேப்டாப்பை ஆன் செய்து புட்டேஜ்களை பார்க்க தொடங்கினர்.

வீடியோ ஒட தொடங்கவுமே சக்கரவர்த்தி அபியிடன் வந்து அபி ஒவ்வொரு வீடியோவையும் நல்லா உன்னிப்பா பாரு கடந்த ஆறு மாசமா இருக்கிற எல்லாத்தையுமே நான் எடுத்து பார்த்தேன் ஒரு விஷயம் ரொம்ப நெருடலாக இருக்கு.

வீட்டை சுற்றியும் ஏதோ ஒரு நிழல் உருவம் அடிக்கடி வந்து போவது எல்லா வீடியோவுலேயும் வந்திருக்குது நீ கொஞ்சம் கவனிச்சு பாரு உனக்கே தெரியும் சில டைம் ஒளி மாதிரி வந்துட்டு போகுது

சில டைம் நிழல் மாதிரி வந்துட்டு போகுது

சில டைம் புகை மாதிரி வந்துட்டு போகுது... முக்கியமா எந்த கேமரா பதிவாக இருந்தாலும் கடைசியா அது நேத்ராவோட ரூம் நோக்கி தான் நகர்ந்து போகுது…

அன்னைக்கு நீ, நேத்ரா ,ரவி சார் மூனு பேரும் பேசிட்டு இருக்கும்போது அங்க ஒரு உருவம் உன் பக்கத்துல நிக்குது பாரு... என்று கூற


அபி கண்களை கூர்மையாக்கி பார்த்தான் நேத்ரா ஓடி வருவரும் போதே ஒரு உருவமும் நீழல் போலவே பின்னால் வந்தது...சாதாரணமாக பார்த்தால் யாருக்குமே தெரியாது...இவன் ஜெகனை கலக்கிக் கொடுக்கும் போது நேத்ராவின் பின்புறம் பிறகு ரவி பக்கத்தில் இப்படி நன்கு ஜூமா செய்து பார்க்க


சக்கரவர்த்தியோ மச்சி தெரியலையா
கொஞ்சம் நல்லா பாருடா என்று கூறினான்.


ம்ம்...நல்லாவே தெரியுது...என்ன இது...ஒன்னுமே புரியலையே...என்றவனிடம்


டேய் மச்சி இங்கிலீஷ் படம் பாத்ததில்ல...பேய்டா...அதுல இப்படி தான காட்டுவாங்க என்றவனை பார்த்து முறைத்த அபி…

உளறாத... எதுக்கும் எதுக்கும் முடி போடற…என்று யோசித்தவன் அப்போ இது ஆன்மானு சொல்ல வர்றியா சக்கி…

ஆமான்டா...நல்ல சக்தினு ஒன்னு இருந்தா கெட்டதும் ஒன்னு இருக்கும்ல...கடவுள் இருக்காருன்னு நம்பினா அப்போ பேயும் இருக்கும் தான…


டேய் கேவலமா இருக்கு உன்னோட லாஜிக் தயவு செஞ்சு ஒரு ஐ பி எஸ் ஆபிஸர் மாதிரி பேசு இப்படி கோடங்கிகாரன் மாதிரி பேசாதே என்று கூறினான்.

இங்க பாரு அபி...யோசிச்சிபாரு... நேத்ரா நைட் ட்ரஸோட ஓடி வந்த கொஞ்ச நேரத்திலேயே மேல போனா கொஞ்ச நேரத்துலேயே கத்தி மயக்கம் போட்டு விழுந்தானு நீ சொன்ன இல்ல அது ஏன் இந்த உருவத்தை பார்த்து இருக்க கூடாது யோசித்து பாரு என்றான்.

அபியும் சற்று யோசிக்க ஆரம்பித்து இருந்தான் நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது இந்த காலத்தில் பேயா வெளியில் சொன்னால் சிரித்து விடுவார்கள்


ஆனால் சற்று நேரத்திற்கு முன்பு நேத்ரா மருத்துவரிடமும் இதைத்தானே கூறினாள் கண்ணாடியில் தனது தாயின் உருவம் வந்தது திடீரென்று வெளியே வந்து தாக்கியது என்று அப்படியானால் இந்த ஆன்மா நேத்ராவின் தாய் மதுமதி உடையதாக …

என்ன இது பூதம் மேல் பூதமாக நேத்ரா விஷயத்தில் வருகிறது மதுமதி இயற்கையான முறையில் இறந்து அவளை எரியூட்டி உள்ளார்கள்... அப்படி இருக்கும் பொழுது எப்படி அவள் ஆன்மாவாக இங்கு சுற்று முடியும் பொதுவாக புதைக்கபடும் உடல்கள் தானே ஆன்மாவாக சுற்றும் என்று சிறுவயதில் ஊர்கிழவிகள் கூறுவதை கேட்டிருக்கிறான்…எப்படி என்று குழம்ப தொடங்கினான்.

பிறகு டேய் சக்கி... நீ மதுமதி யோட ஊருக்குப் போயி அவங்களை பத்தி எல்லாம் விசாரிச்சியா என்று கேட்டான்.

ம்ம் ஆமா ஃபுல் டீட்டெயில் கலெக்ட் பண்ணிட்டேன் பட் கிடைச்சது எதும் திருப்தியா இல்ல…என்ற சக்கியை பார்த்து

என்னன்னு நீ சொல்லு திருப்தியாக இருக்கா இல்லையான்னு நான் சொல்றேன் என்றான் அபி

நேத்ராவோட அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்... ஆனா மதுவை திருமணம் செய்யறதுக்கு முன்னாடியே ரவி டெல்லியில் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி இங்கேயே செட்டில் ஆயிட்டாரு...

ஆனா மது இங்க வந்த கொஞ்ச நாள்ளேயே ஊர் பிடிக்காமல் கோயம்புத்தூருக்கு போய்ட்டாங்க அதுக்கப்புறம் பிஸ்னஸ் டெல்லி மதுனு மூனையுமே ரவி கரெக்டா பேலன்ஸ் பண்ணிட்டு இருந்திருக்கிறார்

கொஞ்ச நாளிலேயே மதுவுக்கு ஊர்ல வேற ஒருத்தரோட தொடர்பு இருந்திருக்கிறது ஆனால் அப்போ நேத்ரா பிறந்ததால ரவி நேத்ரா மேல மட்டும் பாசமா இருந்திருக்கிறார் மதுவை ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுக்கறாரு...இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஒரு கட்டத்துல ரவி ஊருக்கு போறதுக்கு நிறுத்திட்டாரு…
நாளடைவில் மதுவுக்கு ஆண்கள் பழக்கம் அதிகமானதே தவிர குறையல... மது எங்கே பொண்ணு தன்னோட சந்தோஷத்திற்கு தடையாக இருப்பாளோனு நினைச்சு ஹாஸ்டல்ல சேர்த்தாங்க….

ரவிக்கு இது முழுசா தெரியவும் ஊருக்கு போறதை நிறுத்திட்டாரு
ஒருநாள் திடீர்னு மதுவுக்கு ரொம்ப முடியலனு நீயுஸ் வருது வேண்டா வெறுப்பாக ரவி ஊருக்குப் போறாரு...ஆனா மதுவை சந்திக்கல அவரோட பெரியப்பா வீட்ல தங்கறாரு...இங்கே மது கடுமையான வயிற்றுவலி காரணமாக அவங்களோட முப்பத்தி ஒன்பது வயசிலேயே தற்கொலை பண்ணிக்கறாங்க...

ஏற்கனவே ரவி குடும்பம் அங்க பெருசு... அந்தஸ்து பாக்கறவங்க... மருமகள் தவறான உறவு வச்சிருக்கானு பரவலான பேச்சி...அதனால ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்தாமலே இயற்கையான மரணம்னு சொல்லி அவங்க சடலத்தை எரிச்சிட்டாங்க

அப்போ நேத்ரா காலேஜ்ல நடந்து ஒரு பிரச்சனை அவளால வெளியே போகமுடியாம ஹாஸ்டலில் தங்க வேண்டிய நிர்பந்தம்

அதனால அவங்க அம்மாவோட இறப்புக்கு கூட போக முடியல எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு போன நேத்ரா கிட்ட அவங்க அம்மாவை பத்தி ஏன் தப்பா சொல்லனும்னு குடும்பமே உடம்பு சரியில்லாம இறந்ததா சொல்லறாங்க…

நேத்ராக்கு பெருசா அம்மா மேல எந்த ஒரு பிடிப்பும் இல்லாததால அவளை அது பாதிக்கல... மறுபடியும் டெல்லி கிளம்பிட்டா...இப்போ மது இருந்த வீடு பூட்டி கிடக்கு...சாவி ரவியோட பெரியப்பா வீட்ல இருக்கு... எப்படியாவது வீட்டுக்குள்ள போயி ஒரு தடவை செக் பண்ணிட்டு வரலாம்னு முயற்சி செஞ்சேன் ஆனா முடியல என்று கூற

சக்கி கூறியவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அபி உள்ளங்கையை மடித்து வைத்து அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்து விட கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிய தொடங்கியது

அதைப் பார்த்து அதிர்ந்த சக்கரவர்த்தி மச்சி என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே

கடும் கோபத்தில் இருந்த அபி இந்த குத்து உன் மூஞ்சில விழ வேண்டியது நீ என் ப்ரண்ட்-ங்கறதால தப்பிச்சுட்ட


எவ்ளோ அழகா மதுவை பத்தி கேவலமா ஒரு கதை சொல்லிட்டு இருக்க அவ எந்த மாதிரி பொண்ணு தெரியுமா உனக்கு சாகற வயசாடா அவளுக்கு….டேமிட் என்று மீண்டும் சுவற்றில் குத்தினான்.


புரியுதுடா மச்சி ஆனா அங்க வேலை செய்யறவங்க ரொம்ப தெளிவா இந்த கதையை தான் சொல்லிட்டு இருக்காங்க ஏன் அந்த ஊரே இந்த ஒரு கதையை தான் பேசுது

இதில் முக்கியமான ஒரு விஷயம் ஒன்னு இருக்கு மச்சி அதை நான் உன் கிட்ட சொல்லல அது என்னென்னா மதுவும் ரவியும் கடுமையாக சண்டை போட்டுக்கிட்டு பிரிந்து இருந்த காலத்தில்கூட ஷர்மா அடிக்கடி பிசினஸ் விஷயமா கோயம்புத்தூர் போயிட்டு வந்து இருக்காரு .

அது மட்டும் இல்ல அடிக்கடி நேத்ராவை ஹாஸ்டல்ல போய் பாத்ததும் அவர்தான்...

இங்கேயும் இந்த வீட்டு டிசைன் பண்ணினது வீட்டை கட்டிகுடுத்தது எல்லாமே ஷர்மா தான்

நேத்ராவை டெல்லிக்கு ஷிப்ட் பண்ணினது கூட அவர்தான் சுத்தி சுத்தி எப்படி பார்த்தாலும் ஷர்மா கேரக்டர் அளவுக்கு அதிகமாக உள்ளவருது…

நட்புக்காக மட்டும் இதையெல்லாம் அவர் செய்கிற மாதிரி தெரியல வேற ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கறதா என்னோட போலீஸ் மூளை சொல்லுது…


அப்புறமா நேத்ரா படிச்ச மூனு ஸ்கூலில்லேயும் போய் தரோவா செக் பண்ணிட்டேன் அங்க ஒரு முறை கூட மது நேத்ராவை போய் சந்திக்கவே இல்லை... ஷர்மா சந்தித்த பிறகு ரவியை கூப்பிட்டு அடுத்த முறை அந்த ஸ்கூலுக்கு போகும் போது நேத்ரா ஸ்கூல் மாற்றப்பட்டிருக்கா


ரவி மேல அவ்வளவு கோபம் மதுவுக்கு ...பெண்ணை கூட பாக்கவிடாத மாதிரி செஞ்சி வச்சதா ஊரே மதுவை தூற்றுது….


பெத்த பெண்ணை கண்ணுல கூட காட்ட கூடாத அளவிற்கு மதுவுக்கு ரவி மேல அப்படி என்ன கோபம் ரவி போய் பார்க்கறாருனு தெரிந்தாலே நேத்ரா ஸ்கூல் மாற்றப்பட்டிருக்கா..

இந்த வீட்டில நேத்ரா விற்கு நடக்கிற சில விஷயங்கள் புரியாத புதிராய் இருக்கு வீட்டு டிசைன் செஞ்சது ஷர்மா பில்டிங் கட்டி முடிகிற வரைக்கும் கூட இருந்து பார்த்துக் கொண்டதும் ஷர்மா …


ஷர்மா, ரவி ,இந்த வீடு இந்த மூனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு.

நேத்ராவை மட்டுமே கார்னர் பண்ணி அவளை சுத்தி ஒரு மாய வலையை பிண்ணறாங்க…

அது என்னனு நாம சீக்கிரமா கண்டுபிடிக்கனும் அப்படி இல்லன்னா நேத்ரா உயிருக்கே கூட ஆபத்தா முடியலாம் நாம தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் நேத்ரா சுத்தி வலை வேகமா பிண்ணப்படும்.

நேத்ராவுக்கும் ஏதாவது ஒரு கதை கட்டி அவளையும் சாகடிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டானு கேஸை மூடிடுவாங்க…

நான் சொன்ன மாதிரி அவ உடம்புல ஜிபிஎஸ் டிராக் பொருத்திட்டியா அபி என்று கேட்க

இன்னும் டாக்டர்கிட்ட அதை பத்தி பேசல ஆனா நேத்ராவை சுத்தி எவ்வளவு பெரிய மாயக்கோட்டை கட்டினாலும் இந்த அபி இருக்கிறவரைக்கும் நேத்ரா பக்கத்துல யாராலும் போக முடியாது
மதுவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன் என்று கூற

அவர்கள் இருவரின் பக்கமும் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மதுவின் ஆன்மாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.

தொடரும்
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
8
அவர்கள் இருவருக்கும் துணை இருக்கிறேன் என்பது போல ஒரு மிக மெல்லிய தென்றல் காற்றுடன் அவர்களை கடந்து சென்றது.

இப்போ நேத்ரா ஹாஸ்பிடல்ல எப்படி இருக்கறா அபி….என்று கேட்டான் சக்ரவர்த்தி….

ம்ம்...இப்போ ஒகே தான்..ஒரு முறை மட்டும் அவளை தூங்க வச்சி சில விஷயங்களை கேட்டிருக்கு….இனியும் சில நாள் இருக்கணும்னு டாக்டர் சொன்னாரு சக்ரவர்த்தி...ஹான்
அப்புறம் என்கிட்ட நீ எது சொல்றதா இருந்தாலும் அந்த வீட்டு சுற்றியோ இல்லனா கம்ப்யூட்டர் ரூம்கிட்டயோ எதுவும் சொல்ல வேண்டாம் என் போனுக்கு மெசேஜ் பண்ணு..நாம
ரூம்ல வந்து மீட் பண்ணலாம்…

ஏன் அபி அப்போ நீ ஷர்மாவை சந்தேகபடறீயா….?

முழுசா சொல்ல முடியல...ஆனா டவுட் இருக்கு சக்ரவர்த்தி.ஏன்னா அவருக்கு இங்க செக்யூரிட்டி கேமரா பாஸ்வேர்ட் தெரியும்...சோ பிரேக் பண்ண சான்ஸ் இருக்கு…அவரை ரவி நம்பற பட்சத்தில் பலி என் மேல வரும்….ஆனா அதையும் முழுசா நம்ப முடியல….ரவி என்னை நம்பினா அவர் மாட்டுவாரு சோ சான்ஸ் கம்மி...நானும் பண்ணல,ஷர்மாவும் பண்ணலனா வேற யாரா இருக்கும்….என்று யோசித்தவன்

எப்பவுமே கன்ட்ரோல் ரூமோட புட்டேஜை ஷர்மா அவர் மொபைல்ல பாப்பாரு…அதனால தான் எப்போ இங்க நேத்ரா வந்தாலும் அவ கிட்ட கோபமா இருக்கிறது போல காமிச்சிப்பேன்...அதனால தான் இப்போ நேத்ராவுக்கு துணையா என்னை விட்டுவச்சிருக்காரு...என்ற அபி மேலும் தொடர்ந்தான்.


சக்ரவர்த்தி வெளி ஆள் உள்ள வர சான்ஸ் இல்ல….ஏன்னா செக்யூரிட்டி அவ்ளோ டைட்...நைட் டைம்ல காவலுக்கு இருக்கற நாய்கள் எல்லாமே வேட்டை நாய்கள்…
பழகாதவங்க வந்தா உயிரோடவே போக முடியாது...யாரு வெளிய இருந்து வர்றது...என்று யோசித்த அபி ஏன் சக்ரவர்த்தி இதை ஏன் ரவி பண்ணக்கூடாது...என்ற அபியை ஆச்சர்யத்துடன் பார்த்தவன்…

சான்ஸ் இருக்குது ஆனா அதுக்கான மோட்டிவேட் என்ன? சொந்த பொண்ணையே கார்னர் பண்ணற அளவுக்கு என்ன காரணம் இருக்கும்...அபி

அதை நீ தான் கண்டுபிடிக்கனும்..
உனக்கு போலீஸ் லைன்ல யாராவது பழக்கம் இருக்கா..சக்ரவர்த்தி…

நிறையா பேரு இருக்காங்க அபி..ஏற்கனவே சிலபேர் கிட்ட பேசிருக்கேன்.ஹெல்ப் கேட்டதுமே உடனே வருவாங்க..


குட் சக்ரவர்த்தி….அப்போ முதல்ல ஸ்கார்பியோ வண்டியை கண்டுபிடிக்க சொல்லு...ஏதாவது சிக்னல் கேமராவுல மாட்டிருக்கலாம்...
மிஸ்டர்.ரவி... அப்புறம் வீட்ல வேலை செய்ற ஆளுங்க எல்லாரையும் டீப்ஃபா வாட்ச் பண்ணு நேத்ராவை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது போது அவளுக்கு எதிரா யார் சதி செஞ்சானு கண்டுபிடிச்சிருக்கனும்…சரி சக்ரவர்த்தி ...நீ வீட்டை பாத்துக்கோ நான் நேத்ராவை பாக்க போறேன் ...இந்த பென்டிரைவ் என்கிட்ட இருக்கட்டும்…



பென்டிரைவ் எதுக்கு அபி….என்று சற்று ஆச்சர்யமாக கேட்டான் சக்ரவர்த்தி.


அந்த விஷூவல் உண்மையா இல்லனா த்ரீ டி எஃபெக்ட்டானு செக் பண்ணனும் சக்ரவர்த்தி..என்றான் அபிமன்யூ.

ஹேய் அது உண்மைதான் மச்சி...ஏதோ ஆவிபோல தான் இருக்கு எதாவது பேய் ஓட்டறவனை புடிச்சி இந்த ஆவியை விரட்டிவிடலாம்... அப்புறம் நேத்ரா பயந்து ஒடிவர மாட்டா…


இவ்ளோ செக்யூரிட்டியை மீறி சிஸ்டம்மை ஹேக் பண்றாங்க கேமராவை இன்ஆக்டிவேட் பண்றவங்களுக்கு இந்த மாதிரி ஒரு த்ரீ டி எபெக்ட்ல ஒரு உருவத்தை கொண்டு வர்றது பெரிய விஷயமே இல்லை

என்னை கேட்டா அன்னைக்கு நேத்ரா உள்ள வந்தது கூட த்ரீ டி எபெக்ட்டா தான் இருக்கும்னு நினைக்கிறேன் எது எப்படியோ எந்த அளவு உண்மைனு விஷூவலை செக் பண்ணிட்டு தான் அடுத்தது என்னனு பாக்கனும்.ஒகே சக்ரவர்த்தி...நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன்...ஒவ்வொருத்தரையும் தனித்தனியா வாட்ச் பண்ணு யாரையுமே விட்டுடாத என்று அங்கிருந்து அபிமன்யூ கிளம்பினான்.

மருத்துவமனையில் நேத்ரா நன்கு தூங்கி எழுந்தாள் அப்பொழுது மருத்துவர் வந்து அவளை சந்தித்தார்

அவளிடம் இப்பொ உனக்கு கனவு வந்ததா நேத்ரா என்று கேட்டார்.

இல்ல டாக்டர் ரொம்ப நல்லா தூங்கினேன் ரொம்ப தேங்க்ஸ் ரொம்ப நாள் கழிச்சு எனக்கு ஒரு நல்ல தூக்கத்தை கொடுத்திருக்கீங்க என்று மனதார மருத்துவருக்கு நன்றி கூறினாள்.

குட்...என்று நேத்ராவின் உடல்நிலையை பொதுவாக பரிசோதித்தார்.

அப்பொழுது அபியும் வர அவனை பார்த்த மருத்துவர் என்ன ஆச்சு அபி எவ்ரிதிங் இஸ் ஓகே என்று கேட்க…

எஸ் டாக்டர்... ஜஸ்ட் ப்யூவ் மினிட்ஸ் உங்ககிட்ட நான் கொஞ்சம் தனியா பேசனும் என்று அழைத்துக்கொண்டு
வெளியேறினான்.

மருத்துவர் இவனுக்கு நல்ல நண்பரும் கூட அதனால் தான் முதலில் காமித்த மருத்துவரிடம் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாது என்று இவரிடம் நேத்ராவை அழைத்து வந்திருக்கிறான்.

சொல்லுங்க மிஸ்டர் அபி என்ன பிரச்சினை எதுக்காக என்னை தனியா கூட்டிட்டு வந்தீங்க என்று மருத்துவர் கேட்டார் .

அதற்கு அபிமன்யூ சார் நேத்ராக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கு அவளுக்கு ஒரு ஜிபிஎஸ் டிராக் உடம்புல பொருத்தனும் அதுக்கு உங்க ஹெல்ப் வேணும்…


சாரி மிஸ்டர் அபிமன்யூ இது அப்யூஸ் சோ... சம்பந்தப்பட்டவங்க பர்மிஷன் இல்லாம இத நாம பண்ண கூடாது அதுவுமில்லாம இந்த விஷயம் நாளைக்கு வெளியே தெரிஞ்சா எல்லாருக்குமே பெரிய பிரச்சினையாகும் சாரி இதை என்னால பண்ண முடியாது என்னை மன்னிச்சிடுங்க…

டாக்டர் ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல தான் நேத்ராவை அந்த ஹாஸ்பிடல்ல இருந்து உங்க ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணினது

நீங்க டாக்டர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர் அவளை சுக்தி அந்த வீட்ல என்ன எல்லாமோ நடந்துக்கிட்டு இருக்கு என்றவன் அவளின் தற்போதைய நிலையை பற்றி கூறினான்.


இப்போ கூட புதுசா எங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கும் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் ஏதோ ஒரு சக்தி நேத்ரா கூட இருந்து காப்பாத்திகிட்டு இருக்கோனு... புதுசா எங்களுக்கு கேமரால ஒரு நிழல் உருவம் பதிவாகி இருக்கு .


நீஜமாவா அபி நான் அதை பாக்க முடியுமா….

கண்டிப்பா டாக்டர்...இதோ பென்டிரைவ்...இது எந்த அளவு உண்மைனு தெரிஞ்சிக்கனும் அப்புறமா தான் நேத்ராவை அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போகனும் என்று வீடியோவை காண்பிக்க…

மருத்துவரின் முகம் சந்தோஷத்தில் மின்னியது... வாவ் அபி இது நூறு சதவீதம் உண்மைனு சொல்லுவேன் இது த்ரீ டி எபெக்ட் கிடையாது இது ஒரிஜினல்

இந்த மாதிரி விஷயத்தை தான் நான் சமீபமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்

மனநல மருத்துவத்துவமும் பாத்துக்கிட்டே பேய்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் பண்ணறேன்


என்னோட ஆராய்ச்சியல இதுவரைக்கும் இந்த மாதிரி தத்ரூபமான விஷூவலை பார்த்ததே கிடையாது.

எனக்கு இந்த பென்டிரைவ்வை கொடுக்க முடியுமா என்று அவனைப் பார்த்து கேட்டார்.

கண்டிப்பா டாக்டர் அதுக்கு முன்னாடி நேத்ரா கிட்டே இது பத்தி கேட்கனும் எனக்கு தெரிஞ்சு இரண்டு முறை பயந்து கத்தி இருக்கா இந்த மாதிரி எதையாவது பார்த்திருந்தா அது உண்மை என்கிற பட்சத்தில் இந்த ஆவியை எப்படி அங்கிருந்து விரட்டறதுனு யோசிக்கனும் என்று கவலையாக கூறியவனிடம் மருத்துவர்…

தேவை இல்லாம பயப்படுறீங்க மிஸ்டர் அபிமன்யு ஒருவேளை இது நேத்ராவை காப்பாத்த வந்த ஆவியா இருந்தா இத நீங்க விரட்ட வேண்டிய அவசியமே கிடையாது உண்மையை சொல்லப்போனா இதுதான் நேத்ராவுக்கு உண்மையான பாதுகாப்பு.

முதல்ல நேத்ரா கிட்டே இது பத்தி விசாரிக்கலாம் அதுக்கப்புறம் ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம் வாங்க போகலாம் என்று சென்றவர் நேத்ராவின் அருகில் வந்து லேப்டாப்பை ஓபன் செய்தார்.

பிறகு அவர்களுக்கு தெரிந்த நிழல் உருவம் அவளுக்கும் தெரிகிறதா என்று ஜூம் செய்து காமிக்க அதை பார்த்து ஆச்சரியம் அடைந்த நேத்ரா தெரியுது ஆனா எங்க சுத்தினாலும் கடைசியில எல்லா நீழலுமே மேல இருக்கிற என் ரூமுக்கு கீழ தான் முடியுது இல்லையா...என்று அவளின் சந்தேகத்தை கேட்டாள்.

ம்ம் ஆமா நேத்ரா... அது தான் இப்போதைக்கு எங்களோட சந்தேகமே நீ இந்த மாதிரி எதையாவது வீட்டுக்குள்ள பார்த்தியா...அப்படி இல்லனா உன் ரூமுக்குள்ள என்று அபிமன்யூ அவளின் கண்களை பார்த்து கேட்டான்.

அவள் சற்று யோசித்த படி ஆமா கரெக்டா எனக்கும் தெரியல இந்த வாரத்துல ஒரு நாள் என்னோட அம்மாவோட கனவு வந்தது அந்த கனவு முடிஞ்சு நான் பயந்துவிட்டேன் அதுக்கப்புறமா கீழே வரும்போது பிரிட்ஜ் கிட்ட இருந்து அப்பாவோட ரூமுக்குள்ள இதே மாதிரி ஒன்னு போறதை பார்த்தேன்.

நான் பயந்து அப்பா ரூமுக்குள்ள போக ட்ரை பண்ணும் போது தான் ஃபர்ஸ்ட் டைம் எனக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்தது

அதுக்கப்புறம் அடுத்த நாள் நான் ரூம்ல ஏஸி ஆன் பண்ணும் போது ஏதோ ஒரு வித்தியாசமான ஸ்மெல் வந்தது அப்புறமா திடீர்னு மயக்கம் போட்டுட்டேன் அன்னைக்கும் அதே மாதிரி எனக்கு ஒரு கனவு வந்தது…
பயந்து முழிச்சு பார்த்தா நான் என்னோட டிரெஸ்ஸிங் ரூம் குள்ள கிடந்தேன்... எப்படி அங்க போனேன்னு தெரியல...

மறுபடியும் என் நான் ரூமுக்கு வரும்போது அந்த ரூமே வித்தியாசமா இருந்தது அப்போ தான் நான் பயந்து கீழே வரும் போது அபிக்கும் எனக்கும் சண்டை வந்தது.

அதுக்கப்புறம் நான் மாடிக்கு போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு
ஜன்னல் கிட்ட இருந்து வெளியே பாக்கும் போது இதே மாதிரி ஒரு உருவம் ஜன்னல் மேல உக்காந்துகிட்டு உன்னை இந்த வீட்டை விட்டு போக சொன்னேன்ல என் முகத்துக்கு பக்கத்துல வந்து கத்திச்சி நான் பயந்து மயக்கம் போட்டுட்டேன்

அப்புறம் நேத்து உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி கையில காயத்துடன் வந்திருக்கேன் என்று கூற

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் சரி உனக்கு வந்ததா சொன்ன கனவுகளைப் பற்றி கொஞ்சம் எனக்கு சொல்றியா என்று கேட்க முதல் நாள் இரண்டாம் நாள் வந்த கனவுகளை தெள்ளத் தெளிவாக கூறினாள் நேத்ரா…

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் நேத்ரா விடம் அவளின் தாயைப் பற்றி கேட்டார் நேத்ராவிற்கு ஒன்றும் தெரியவில்லை தாயின் பெயர் தாய்வழி பாட்டி,தாத்தா பெயர் மட்டுமே தெரிந்திருந்தது.

தாயின் படிப்போ
ஏன் தாயின் பிறந்த தேதி கூட தெரியவில்லை அவளுக்கு…

சிறுவயதிலிருந்து தந்தையுடனும் ஷர்மாவுடன் தான் இவள் நெருங்கிப் பழகி இருக்கிறாள்.

அது பிடிக்காமல் தான் மதுமதி இவளை ஹாஸ்டலில் சேர்த்ததாகவும் கூறினாள்.

அவள் கூறியவற்றை இரு ஆண்களுமே ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டனர் எப்படி இப்படி ஒரு தாய் இருப்பாள் என்று.

அபிக்கு ஒன்றுமே புரியவில்லை தானறிந்த மது இது போல் பொறாமை குணம் கொண்டவள் கிடையாது ஆனால் நேத்ரா நேர் எதிர்மாறாக மதுவை பற்றி தவறாக கணித்து வைத்திருக்கிறாளே எப்படி இவளுக்கு மதுவை பற்றி நல்லவிதமாக புரியவைப்பது என்ற புதிய கவலை அவனுக்கு வந்திருந்தது.

நேத்ரா கூறியவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் தலையசைத்து மறுத்தபடி தப்பு நேத்ரா ரொம்ப பெரிய தப்பு நீ உன் அம்மாவை பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம இருக்கிறது…

அவங்க பிறந்த ஊரும் உன்னோட பாட்டி தாத்தா பேரு மட்டுமே தெரிஞ்சு வச்சிருக்கறது மிகப் பெரிய தப்பு...அதனால தான் இப்போ மதுவோட ஆன்மா உன்னைத் தேடி வந்திருக்கு…

அவங்கள பத்தி நீ எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா... ஏன் அதற்கான முயற்சி நீ கொஞ்சம் கூட எடுக்கல... நீ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது என்று கடிந்து கொண்டவர் பிறகு அவளின் கனவு பற்றி ஆராய அவளின் முன்பு அமர்ந்தார்.

முதல் கனவு நீ முடிவில்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ளற இல்லையா என்று கேட்க

அவள் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

ரொம்ப சிம்பிள் நீ சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் அந்த மாதிரி தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அதுதான் கனவுல சிம்பாலிக்கா உனக்கு வந்து இருக்கு


அப்படின்னா எதுக்காக டாக்டர் சுடுகாட்டில அந்த பாட்டிமா உக்காந்து நரமாமிசம் சாப்பிடனும் என்று அவளின் முதல் சந்தேகத்தை கேட்டாள்.

நீ அவங்களோட பின்புறம் இருந்து பார்க்கும் போது எப்படி இருந்தாங்கனு சொன்ன நேத்ரா…

நல்லா கம்பீரமா இருந்தாங்க அழகான கொங்கு ஸ்டைல்ல ஒரு புடவைகட்டு அம்சமா தைச்சி போட்ட ஒரு ஜாக்கெட் கால் நீட்டி உட்கார்ந்திருந்தாங்க பின்னாடி இருந்து பார்க்கும்போதே நல்லா தெரிஞ்சது கையில் எதையோ வைத்திருந்த போல... அப்புறமா அவங்கள சுத்தி சில நாய்கள் பக்கத்துல போய் திரும்பி பாத்தா
கோர முகம்...புதைச்சி இருந்த சடலத்தை எடுத்து சாப்பிட்டு கிட்டு இருந்தாங்க…


அதாவது இந்த கனவுக்கான அர்த்தம் என்னன்னா உன்ன சுத்தி இருக்கிறவங்களும் இதே போல அழகான கம்பீரமானவங்க ஆனா அவங்க மனசு புதைச்ச சடலத்தைகூட விட்டுவைக்காத மனம் படைச்சவங்க.

வெளித்தோற்றத்திற்கு பார்க்க ரொம்ப அழகாவும் உள்ளுக்குள்ள வக்கிர எண்ணத்தோடும் இருக்கிறவங்க உன்ன சுத்தி இருக்கறாங்கனு தான் இந்த கனவு உனக்கு சொல்ல வந்திருக்கு... என்ற மருத்துவரை பார்த்து அடுத்த கேள்வியை முன் வைத்தாள்.

அப்படினா திடீர்னு அம்மா ஏன் கத்தனும்...அவங்களை தேடி நான் ஓடும்போது என் முன்னாடி ஏன் வந்தாங்க... அதுக்கப்புறம் அவங்களை யாரோ தாக்கி இழுத்துட்டு போறாங்க காப்பாத்த போகலாம்னு போகும் போது என்னை யாரோ பயங்கரமா தாக்கறாங்க…

யாருனு பார்த்தா தூரத்திலிருந்து ஒரு ஜெர்கின் போட்ட கம்பீரமான ஒரு ஆண் கிட்டத்தட்ட அபிமன்யூ போலவே பக்கத்தில் இரண்டு வேட்டை நாய் வேற அந்த கனவை நினைச்சா இப்ப கூட எனக்கு உடம்பு சிலிர்க்கிறது டாக்டர் எதனால என்று கேட்டாள்.

ம்ம்...இதுக்கான அர்த்தம் எனக்கு புரிஞ்ச வரை உன்னோட அம்மாவோட மரணம் கண்டிப்பா இயற்கையான மரணம் கிடையாதுனு உன் ஆழ் மனசு நம்புவது..

அவங்க சாகற நேரத்துல மனசளவுல உன்னை தேடி இருக்கிறாங்கனு நீ நினைக்கிற..

ஒருவேளை அந்த சமயத்துல நீ அவங்களோட இருந்திருந்தா அவங்க உயிரை காப்பாற்றியிருக்கலாம்னு நீ ஆழமா நம்பற.


ஆனா உனக்கும் அதே போல ஒரு நிலைமை வருமோன்னு பயப்படற.. உன்னோட கனவு உணர்த்துவதும் இதுதான்…இதெல்லாம் உண்மைனா
நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் நேத்ரா அப்புறம் என்னாச்சு சொல்லு என்று மேலும் அவளை பேச தூண்டினார் மருத்துவர்.

இந்த கனவு வந்து முடிஞ்சதும் நான் ரொம்ப பயந்துட்டேன் தண்ணீர் புடிக்க கீழ போனேன் அப்போ அப்பா ரூம்குள்ள நீழல் மாதிரி ஏதோ போறதை பார்த்தேன்

ஒடிப்போய் அப்பா ரூம் போய் தட்டும்போது தான் அப்பா பின்னாடி இருந்து கண்டபடி பேச நான் அப்பாவோட ஆர்க்யூவ் பண்ணினேன்.

கையில இருந்த தண்ணீர் ஜக்கை படியில வெச்சேன் ஆனா அங்க காணோம்... பிரிட்ஜ் உள்ள இருக்கு.

சரின்னு எனக்குத்தான் ஏதோ பிரச்சனைனு மேல போனா அதே மாதிரி ஒரு தண்ணி ஜக் மேல ஃபுல்லா தண்ணியோட இருக்குது...

ஹான் அப்புறம் ஞாபகத்துக்கு வந்திடுச்சி அன்னைக்கும் ரூம்மோட மூலைல அதே மாதிரி ஒரு உருவத்தை பார்த்து பயந்து மயக்கமாகி விழுந்துட்டேன் என்று கூற

நெற்றியில் கைவைத்து யோசித்த மருத்துவர் மிஸ்டர் அபிமன்யூ கன்ஃபார்மா நேத்ரா ரூம்ல ஏதோ ஒரு சக்தி இருக்கு


அது நேத்ராவுக்கு ஏதோ ஒன்னை சொல்ல வருது இவங்க சொல்றத பாத்தா பிரிட்ஜ் கிட்ட இருந்து அவங்க அப்பா ரூமுக்கு நீழலுருவம் போய் இருக்கு அப்படின்னா அங்க நடக்குற எல்லா குழப்புத்துக்கான தீர்வும் அவங்க அப்பாவோட ரூமுக்குள்ள தான் இருக்குது.

நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த ரூமுக்குள்ள போய் செக் பண்ணுங்க அதுதான் நல்லது என்று கூறி முடித்தார்.

உடனே நேத்ரா தனது இரண்டாம் நாள் கனவுக்காண அர்த்தத்தை கேட்பதற்காக மருத்துவரிடம் மீண்டும் கேட்டாள்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் ரூம்குள் ஏதோ ஒரு வாசம் வந்ததுன்னீங்களே அது என்னன்னு உங்களால உணர முடிஞ்சுதா என்று கேட்டார்.

அப்பொழுது அபி குறுக்கிட்டு சார் அதே நாள் நானும் நேத்ராவோட ரூமுக்குள்ள போகும்போது என்னால உணர முடிஞ்சுது .

யாரோ செயற்கையா அந்த ரூம்ல மயக்கம் வருவதற்கான மருந்தை ரூம் ப்ரெஸ்னர்ல கலந்து இருக்காங்க போன கொஞ்ச நேரத்திலேயே என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது அதனால நான் உடனே வெளிய வந்துட்டேன் என்றான்.

அபி சொன்னவற்றை நேத்ராவும் ஆமோதித்தாள்.

ஆமா அந்த வாசம் என்னன்னு நான் உணர்றதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்துட்டேன் அப்போ என் அம்மா தட்டி எழுப்பற மாதிரி தான் அந்த கனவு ஸ்டார்ட் ஆச்சு

அப்புறம் என்னோட அம்மா சின்ன வயசு பொண்ணா அங்கு இருக்கிற ஒரு மல்லிப்பூ தோட்டத்தில விளையாடிட்டு இருக்காங்க...யார் மேலயோ மோதறாங்க… கனவு முடிஞ்சது...கொஞ்ச நேரத்துல யாரோ அவங்களை துரத்தறாங்க... திடீர்னு பார்த்தா அவங்களை யாரோ அடிச்சு ஒரு புதைகுழில போடறாங்க... அப்படியே தத்ரூபமாக வந்தது இதுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் மருத்துவரைப் பார்த்து கேட்டாள்.

அவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அந்த மயக்கத்தில் நீ உன்னோட சுயநினைவை இழக்க ஆரம்பிக்கும் பொழுது உன் ரூம்ல இருக்கற அந்ந சக்தி உண்னை காப்பாத்தி இருக்கு நேத்ரா .

அப்புறம் உன் அம்மாவோட இறப்பு எதனாலனு நீ கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.

அது இயற்கையான மரணமா இல்லனா செயற்கையான மரணமானு.

ஒருவேளை இயற்கையான மரணம் அப்படின்னா நீ இந்த கனவை இக்னோர் பண்ணிடலாம்.

ஒருவேளை செயற்கை என்கிற பட்சத்தில் உன் அம்மா யாரு மேல போய் மோதினாங்களோ அவங்கதான் உன்னோட அம்மாவோட உயிரையும் எடுத்து இருக்கணும்.அது யாருன்னு கண்டுபிடி...

ஊர்ல உன் வீட்டை சுத்தி இல்ல உன் அம்மா அடிக்கடி போற மல்லிப்பூ தோட்டம் எதாவது இருக்கானு முதல்ல தெரிஞ்சுக்கோ…

அப்படி போயிருந்தா அந்த மல்லிப்பூ தோட்டத்துக்கும் உன் அம்மாவோட மரணத்திற்கும் ஏதோ ஒரு பெரிய சம்பந்தம் இருக்கு அது என்னன்னு மகளான நீ கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்…

நீ அதை தெரிஞ்சிக்காததால தான் அந்த ஆன்மா உன்னை சுற்றி,சுற்றி வருது போல...இங்கிருந்து போனு சொல்லுது…

உன் அம்மாவோட ஆன்மா உன்னோட ரூம்குள்ள தான் இருக்குது அப்படிங்கிற பட்சத்துல

அவங்களுக்கு உன்னோட கனவோட அர்த்தத்தை நீ தெரிஞ்சிகிட்டு அவங்களை தேடிப் போகணும்னு தான் உன்னை தற்கொலை நாடகமாட வச்சிருக்காங்க…

அந்த வீட்டை விட்டு வெளிய வந்தா தான் உன்னால தெரிஞ்சிக்க முடியும்னு வெளிய அனுப்பி வச்சிருக்காங்க... என் மூலமா இன்னைக்கு உன்னோட கனவுகளுக்கும் தீர்வு கிடைத்தது உன் தாயை பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கும் நினைக்கிறேன்

உன் அம்மா வாழ்ந்த இடத்துக்கு வர சொல்லுது... ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் ஒரு முறை போய் உன் அம்மா வாழ்ந்த அந்த வீட்டில் ஒரு நாள் தங்கியிரு...கண்டிப்பா மகளோட வாழ முடியலையேங்கற ஏக்கம் இருக்கும்...அதை போக்கு...அந்த வீடு ஃபுல்லா உலா வா...
அப்புறமா அவங்க கிட்ட மானசீகமாக மன்னிப்பு கேளு... கண்டிப்பா மன்னிச்சு உன்னை விட்டு விலகிடுவாங்க...
அவங்களை புதைத்திருந்தா அந்த இடத்துல அவங்களுக்கு ஒரு பூஜையை பண்ணு

அப்படி இல்லன்னா ஏதாவது ஒரு புண்ணிய ஸ்தலம் போய் உன் அம்மாவை நினைச்சு அவங்களுக்கு ஒரு திதி கொடுத்துட்டு வா…


இதெல்லாம் சயின்ஸை மீறின விஷயம் தான் ஆனாலும் சில விஷயங்களை நாம நம்பித்தான் ஆகணும் செஞ்சுதான் ஆகணும் என்று கூறி முடிக்கும் போது சக்கரவர்த்தியிடம் இருந்து அபிக்கு ஃகால் வந்தது.


ஹலோ சொல்லு சக்கரவர்த்தி ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டான்.

உடனே சக்கரவர்த்தியோ சந்தோஷமாக மச்சான் இங்கே என் வேலை முடிஞ்சதுடா யார் செக்யூரிட்டியை பிரேக் பண்ணினது


நேத்ரா மாதிரி யார் வந்துட்டு போனது எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மாதிரி தான்… ஐ ஹேஸ் எல்லாத்துக்கும் நேத்ராவோட அப்பா ரவி தான் காரணம்னு தோணுது என்று கூற அதிர்ச்சியில் நேத்ரா மற்றும் மருத்துவரை மாறி மாறி பார்த்த அபிமன்யூ உடனே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு மூவரின் முன்பும் வைக்க சக்கரவர்த்தி பேச ஆரம்பித்தான்.

டேய் வழக்கம்போல திடீர்னு செக்யூரிட்டி கேமரா எல்லாமே இன் ஆக்டிவேட் ஆச்சு…


என்னனு பாக்கும் போது ரவி ரொம்ப டென்ஷனா என்னையே பாத்தாரு...எனக்கு உடனே டவுட் வர அவரோட பக்கத்துல போய் ஜென்ரலா பேச ஆரம்பிச்சேன்.

ஆனா அவரு என்கிட்ட இருந்து நழுவ பாத்தாரு….நானும் விடாம பேச்சி குடுக்க அவரு டென்ஷன்ல கத்த ஆரம்பிச்சிட்டாரு…

அவரோட சவுண்ட் கேட்டதும் வேலைக்காரங்க எல்லாருமே ஒண்ணு சேர்ந்துட்டாங்க

செக்யூரிட்டி எல்லாருமே என் பின்னாடி வந்துட்டாங்க...

வேலைக்காரங்கல்ல ஒருத்தன் மட்டும் ரொம்ப வித்தியாசமா இருந்தான்... நல்ல ஹைட்...நம்ம ஊர்க்காரன் தான் போல...அவன் மட்டும் ரவிக்கு சப்போர்ட் பண்ணிட்டு என் மேல கை வைக்க வந்தான்…

நா விடல நல்லா நாலு சாத்து போடவும்...வலி தாங்காம மாமா அவன் என்னை அடிக்கறான் பாத்துகிட்டு இருக்கீங்க...இப்போ நீங்க அவனை கேக்கலனா நா அக்கா கிட்ட சொல்ல வேண்டியது வரும்னு சொல்லவும் ரவி அப்படியே ஷாக் ஆயிட்டாரு…


ஒரே நிமிஷத்துல சுதாரிச்ச. ரவி... யார் யாருக்கு டா மாமானு அந்த வளர்ந்தவனை போட்டு அடிக்க ஆரம்பிச்சுட்டாரு ..


அவங்க பிரச்சினை அப்படி ஓரமா போய் கிட்டு இருக்கும்போது வேலைக்காரங்க கிட்ட இவன் யாருன்னு கேட்டதுக்கு யாருக்குமே தெரியல எப்படி அவன் உள்ள வந்தானு செக்யூரிட்டியை கேட்டா அவங்களுக்கும் தெரியல…

யோசிச்சி பார்த்தப்போ தான் புரிஞ்சது... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிசிடிவி கேமரா இன் ஆக்டிவேட் ஆன விஷயம்…


இவன் உள்ள வரனுங்கறதுக்காக தான் சிசிடிவி கேமரா இன் ஆக்டிவேட் ஆயிருக்கு அதுக்கு வீட்டுக்குள்ள இருக்கிற யாரோ ஒருத்தர் ஹெல்ப் பண்ணி இருக்காங்க கண்டிப்பா செக்யூரிட்டீஸ் யாரும் கிடையாது வேலைக்காரர்களுக்கு இதுபற்றியெல்லாம் அறிவு கிடையாது .

அந்த சமயத்துல நேத்ரா அப்பாவோட டென்ஷன்...அவரோட பாடிலாங்வேஜ்... அந்த நெட்டையன் சொன்ன மாமா... அதைக் கேட்டதும் இவரு அடிச்சது... எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா இந்த வீட்ல நடக்கிற பிரச்சினைக்கு ரவி மட்டும்தான் காரணம் நீ வந்து உன் ஸ்டைல்ல விசாரிக்கிறியா இல்லனா நான் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கவா அதை கேட்கத்தான் இப்போ நான் உனக்கு ஃபோன் பண்ணினேன் என்று சக்கரவர்த்தி விரிவாகக் கூறி முடித்தான்.

நேத்ரா அதிர்ச்சியில் அபிமன்யூவை பார்த்து என்ன என்னோட அப்பாவா அவருக்கு இதனால் என்ன ஆதாயம் தேவையில்லாம போதைப்பொருளுக்கு நான் ஆளானதா என்னை நினைக்க வச்சி மறைமுகமாக ஒரு மனநோயாளி ஆக்க முயற்சி பண்ணி இருக்காரு...


அதுமட்டுமில்லாம ரூமுக்குள்ள மயக்க மருந்து கொடுத்து என்னை சுயநினைவை இழக்க வச்சிருக்காங்க…

கண்ட நேரத்தில் வெளியே போய் சுத்திட்டு வர்றேனு அபாண்டமா பழி போட்டு இருக்காங்க…அதை காரணம் காட்டி சீக்கீரமா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாரு…

ஏன்
இதெல்லாம் அப்பா பண்ணினாங்களா எதுக்காக பண்ணினாங்க...ஒருவேளை நான் இங்க இருக்கறது பிடிக்கலனா அதை அவர் வாயால சொல்லி இருக்கலாமே …

நான் இங்க வந்தே இருக்க மாட்டேனே எதுக்காக என்னோட அப்பா எனக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை எனக்கு பண்ணினாரு என்று அபியை பார்த்து கேள்வி கேட்க பதில் சொல்ல தெரியாமல் விழித்தான் அபிமன்யூ.

நேத்ரா கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாத அபிமன்யூ தனக்குத்தானே சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.

அப்படின்னா அந்த வீட்டில் நடந்த எல்லா பிரச்சினைக்கும் காரணம் மிஸ்டர் ரவிச்சந்திரன் இது தெரியாமல் எப்படி நான் அவரோட இவ்ளோ நாள் இருந்தேன்... அவர் மேல தப்பு இருந்ததால்தான் அன்னைக்கு நேத்ரா ரூம்ல மயக்கம் போட்டு விழுந்தப்போ பொறுப்பை என்கிட்ட ஒப்படைத்து விட்டு ஓடிப் போனாரா.

இங்கேயும் ரொம்ப யோக்கியம் மாதிரி பொண்ண பத்திரமா பாத்துக்கோங்கனு வீட்லயே ஒளிஞ்சிகிட்டாரா…

நேத்ராவையும் என்னையும் ஒரே சமயத்தில் இங்க அனுப்பிட்டு அவர் யாருக்காக அங்கு காத்திருந்தாரு... எதற்காக இதெல்லாம் பண்ணாரு அந்த வீட்ல இத்தனை நாளா பாதுகாப்புங்கற பேர்ல நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்.

நான் இந்த வேலைக்கு தகுதி இல்லாதவனா என்று கேட்டுக்கொண்டவன் மீண்டும் நேத்ராவை மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டை நோக்கிப் பயணித்தான்.

தொடரும்...
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
9

அபிமன்யூ வீடு வந்து சேரும் பொழுது சக்கரவர்த்தி கோபமாக வாயிலிலேயே நின்று கொண்டிருந்தான்.


காரை விட்டு இறங்கிய அபியைக் கண்டதும் சக்கரவர்த்தி கோபத்தில் ஏதோ கூற வர எதுவும் பேசாதே என்பது போல் அபிமன்யூ ஜாடை செய்தான்.

கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட சக்கரவர்த்தி அபி...நேத்ராக்கு விஷயம் தெரியுமா…

ம்ம்...நீ பேசும் போது ஸ்பீக்கர்ல போட்டேன் முழுசா கேட்டுட்டா…

ம்ச்...பாவம்ல அவ...

ம்ம்...என்ன செய்யறது….ரவி இப்படினு தெரியலையே... தெரிஞ்சிருந்தா ஆரம்பத்திலேயே நேத்ராவை அவர்கிட்ட இருந்து காப்பாற்றி இருந்திருக்கலாம்…

இப்போ என்ன செய்யறது அபிமன்யூ….நேத்ராவை விட்டு அவங்க அப்பா மேல ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணலாமா…

அது நேத்ரா தான் முடிவு செய்யனும்...முக்கியமா இந்த விஷயத்துல நேத்ரா நம்ம பேச்சை கேக்க மாட்டா... கண்டிப்பா ரவிக்கு பேவரா தான் முடிவெடுப்பா…


அப்படின்னா இப்போ என்ன செய்யலாம்ங்கற அபி…

ம்ம்..நம்மளோட செக்யூரிட்டி சிஸ்டத்தை இங்க இருந்து விளக்கிகலாம்.

அபி அப்போ நேத்ராவோட நிலமை...நீ மிஸஸ் மதுமதிக்கு செஞ்சி குடுத்த சத்தியம் இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போற…

பொறுமையா இரு சக்ரவர்த்தி.. நேத்ரா குழந்தை இல்ல...அவளை காப்பாத்திக்க அவளுக்கு நல்லாவே தெரியும்.இந்த வீட்ல அவ தெரிஞ்சிக்க இன்னும் நிறையா இருக்கு.. அதெல்லாம் தெரியும் போது அவளுக்கு என்ன வேணுமோ அதை சூஸ் பண்ணுவா...
மதுவை பொறுத்த வரை அவங்க பொண்ணை எப்பவுமே பத்திரமா பாத்துப்பாங்க...நாம வெறும் கருவி தான்…

சரிடா மச்சி உன் அடுத்த மூவ் தான் என்ன…

முதல்ல போய் மிஸ்டர் ரவிச்சந்திரனை சந்திக்கிறோம்
அவர் சொல்லற பதில்ல தான் நம்மளோட அடுத்த மூவ்….என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே மருத்துவரிடம் இருந்து ஃகால் வந்தது…

மிஸ்டர் அபிமன்யு இங்க நேத்ரா ரொம்ப மூர்க்கத்தனமான நடந்துக்கிறாங்க அவங்க அப்பா தான் அவளுடைய எல்லா பிரச்சினைக்கும் காரணம் நினைச்சி,நினைச்சி அழறாங்க... கன்ட்ரோல் பண்ணவே முடியல…
தூங்க வைக்கலாம்னு இன்ஜெக்ஷன் பண்ண போனா சிரீஞ்ச் புடிங்கி வீசறாங்க ப்ளீஸ் கொஞ்சம் வாங்க அவங்களை சமாதானப் படுத்துங்க...


ஷிட்... என்று வாய்க்குள்ளாகவே முனுமுனுத்த அபி சக்கரவர்த்தியை பார்த்து டேய் மச்சி இங்க பாத்துக்கோ முடிஞ்சா லோக்கல் போலீஸ்ல இன்பார்ம் பண்ணு நா ஹாஸ்பிடல் வரை போயிட்டு இப்போ வர்றேன்...என்று காரை இயக்கியபடி வேகமாக கிளம்பினான்.

மருத்துவமனையில் நேத்ரா தன்னை வீட்டுக்கு அனுப்பும்படி சண்டையாட்டாள். மருத்துவர் எவ்வளவோ அறிவுறுத்தியும் கூட
யாருக்கும் அடங்கா வண்ணம் அறையிலிருந்த அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள்.

இருவர் அவளை பிடித்துக்கொள்ள கடைசியாக மருத்துவர் அவளை தூங்க வைப்பதற்காக இஞ்செக்சனை போட்டு விட்டார்.

அழுத படியே தூங்கவும் அபி வந்து சேர்ந்தான்.

வாங்க அபிமன்யூ நேத்ராவை எங்களால சமாளிக்கவே முடியல அவ பிரச்சினைக்கு எல்லாம் அவங்க அப்பா தான் காரணம்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா அவ முழுசா உடைஞ்சு போயிட்டா என்று மருத்துவர் கூறினார்.

எஸ் டாக்டர் மத்தவங்க கிட்ட இருந்து பிரச்சினை வந்திருந்தா அவளால அவ அப்பாகிட்ட சொல்ல முடியும் இப்போ அவங்க அப்பாவே பிரச்சனையா இருந்தா அவ யார் கிட்டே போய் சொல்லுவா... இது உண்மையிலேயே நேத்ராவோட கடினமான காலம் தான் இதிலிருந்து அவ சீக்கிரம் வெளியே வரணும்னு தான் இப்போதைக்கு என்னுடைய ஆசை டாக்டர்.

ம்ம்...புரியுது அபி இந்த சின்ன வயசுல நேத்ராவுக்கு தான் எவ்வளவு கஷ்டங்கள் ...விவரம் தெரிஞ்சதுல இருந்து அவங்க அம்மாவோட பாசமே கிடைக்காம போயிருச்சு...இப்போ ஆதரவா இருக்கற அப்பா இப்படினா எப்படி தாங்க முடியும்...


ஓகே டாக்டர் நான் இப்போ நேத்ராவை அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன் அவ ஓகேனா டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க..

அவளோட பிரச்சனை எதனால, எங்கிருந்துனு கண்டுபிடிச்சாச்சு இனிமே அவ நல்லபடியா கல்யாணம் பண்ணி அவளோட புகுந்த வீட்டுக்குப் போயிடலாம் அதுக்கு அப்புறம் அவளோட பாதுகாப்பை பாத்துப்பாங்க…

இனிமே எனக்கு நேத்ராவோட வீட்ல பெருசா வேலை இல்லைன்னு தோணுது அதனால நானும் செக்யூரிட்டி சிஸ்டமை ஃபுல்லா ரிமூவ் பண்ணிட்டு ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஹாஸ்பிடல் ஃபில் எவ்வளவுனு சொன்னீங்கன்னா நான் கட்டிட்டு நேத்ராவை கூட்டிட்டு போயிடுவேன் என்று கூறினான் அபிமன்யூ…

தாராளமா நேத்ராவை நீங்க டிஸ்சார்ஜ் செஞ்சி வீட்டுக்கு கூட்டிட்டு போங்க அதுல எந்த விதமான ஆட்சேபனையும் எனக்கு கிடையாது.

ஆனா நேத்ராவின் பாதுகாப்பு பற்றி நீங்க நினைக்கிற எண்ணம் தவறு.

பாசத்துக்காக ஏங்கி கிட்டு இருக்குற ஒரு பொண்ணு …

எப்பவும் கூடவே வரும்னு எதிர்பார்த்த தன்னோட தந்தையோட பாசம் இப்படி கானல் நீர் ஆகும்னு அவ கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டா.

ஆனால் இன்னிக்கி அது ஒரு கானல் நீர்னு அவளுக்கு தெரிஞ்சதால இன்னும் மனசளவுல உடைந்து போவா... இவ்வளவு நாளும் அவ ஒரு போதை மருந்துக்கு ஆளான பெண் அப்படிங்கிற ஒரு சந்தேகம் தான் உங்களுக்கு எல்லாம் இருந்தது

ஆனா இந்த சம்பவத்திற்கு அப்புறம் அவ நிஜமாகவே ஒரு போதை பொருளுக்கு அடிமை ஆகலாம்

இல்லன்னா வேற மாதிரியான முடிவை கூட எடுக்கலாம் இப்போ அவ மனதளவில ரொம்ப பலவீனமா இருக்கறா…

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அபிமன்யு அது என்னன்னா

நீங்க சொன்னீங்க இல்லையா இனிமேல் நேத்ராவோட பாதுகாப்புக்கு உங்களோட பங்களிப்பு தேவை இருக்காது
னு…

அது மிகப்பெரிய தவறு நேத்ராவோட கனவு படிபாத்தா இப்போ முடிவில்லாத பயணமா போய்க் கொண்டிருந்த வாழ்க்கைல இப்போதான் சுடுகாட்டை அடையாளம் காட்டிருக்கா…
அது சுடுகாடுனு தெரியாமலே இவ்ளோ நாள் அங்க இருந்திருக்கா…. அதாவது அவளோட வீடு...சின்ன வயசுல இருந்து அவ வாழ்க்கைல வெளிச்சமே இல்லாம இருந்து...முதல் முறை சிறு வெளிச்சமா தெரிந்த அவ வீட்டுக்கு போனா...அது வெளிச்சம் இல்லை சடலத்தை எரிச்சதால ஏற்பட்ட வெளிச்சம்னு இப்போ அவளுக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கு…

இனி அடுத்து
வெளித்தோற்றத்தில் மிக அழகாகவும் உள்ளுக்குள்ள நர மாமிசத்தை சாப்பிட கூடிய கொடூரமானவங்களையும் அவ சந்திக்கப் போறா...அதுக்காக அவளை தயார் படுத்துங்க...அவங்களை சந்திச்ச அடுத்த வினாடி அவ உயிருக்கு மிகப் பெரிய ஆபத்து.அது வரை அவ கூட இருங்க...ஏன்னா அவ அம்மாவோட ஆன்மா கனவில அவளுக்கு அதைதான் சொன்னாங்க... என்றார் மருத்துவர்.

என்ன டாக்டர் புதுசா ஏதேதோ சொல்லி பயமுறுத்தறீங்க என்று சற்று பயந்தபடி அபிமன்யூ கேட்டான்.

நான் பயமுறுத்தல அபிமன்யூ நிஜத்தை சொல்றேன் நான் மனநல மருத்துவத்தை தாண்டி இதுபோல அமானுஷ்ய சக்திகளையும் ஆராய்ச்சி செய்யறேன் அந்த முறையில் சொல்கிறேன்.

அப்படின்னா வெளித்தோற்றத்துல அழகாவும் உள்ளுக்குள்ள கோரமுகத்தோடவும் இருக்கறவங்க யாரா இருப்பாங்க புரியலையே டாக்டர்.

நான் இதுக்கு முன்னாடி அவங்க அப்பாவோட நண்பர் ஒருத்தரை சந்தேகப்பட்டேன் ஆனா அவங்களுக்கும் இங்கு நடக்குற பிரச்சினைக்கும் தொடர்பில்லனு தெரிஞ்சாச்சி…
புதுசா வேற யாரு அவளோட வாழ்க்கைகுள்ள வரப்போறா யோசித்தபடி கேட்டான்.

தெரியல அபிமன்யூ ஆனா கண்டிப்பா கூடிய சீக்கிரம் நேத்ரா அவங்களை சந்திப்பா அது உறுதி‌. நீங்க நேத்ரா எழுந்ததும் அழைச்சிட்டு போங்க... அப்புறம் நீங்க எங்கிட்ட கேட்டு கிட்ட மாதிரி நேத்ராவோட பின்கழுத்துல இருக்கற
மேல்தோல்ல நீங்க குடுத்த சிப் பொருத்திட்டேன்…


இனி அவ எங்க போனாலும் உங்களால அவளை பாதுகாக்க முடியும்னு நம்பறேன்…
உங்களுக்கு எப்போ அவ லைஃப் நார்மலாயிடுச்சினு. நினைக்கிறீர்களோ அப்போ நீங்களே கூட அதை எடுத்து விடலாம் ஜஸ்ட் பேஸ்ட் மாதிரிதான் ஒரு கம் போட்டு தான் ஒட்டிருக்கேன்...எடுக்கும் போது அந்த இடத்துல ஏதாவது காயம் ஆனா பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்ல காமிச்சிக்கோங்க என்றவரின் பேச்சில் ... இதற்கு மேல் நேத்ராவின் பாதுகாப்பு உங்களை சேர்ந்தது இனி இங்கு வரவேண்டாம் என்று தோணி இருந்தது…

அவருக்கு நன்றி கூறிய அபி நேத்ரா விழிப்பதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

அதற்குள் மீண்டும் சக்கரவர்த்தியிடம் இருந்து ஃகால் வர ஆரம்பித்தது .

ஃகாலை அட்டென்ர்ன் செய்த அபியிடம் சக்ரவர்த்தி பதட்டமாக டேய் இங்க ஷர்மாவும் ரோகித்தும் பயங்கரமா நம்ம ஆளுக கிட்ட சண்டை போடுறாங்க... சமாளிக்க முடியல ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வா என்று கூறினான்.

கொஞ்ச நேரம் அவங்களை சமாளி நான் வந்துடறேன் என்றவன் நேத்ராவின் அருகில் வந்து ஆராய்ந்தான்…

அவனை அதிகநேரம் காத்திருக்காமல் நேத்ரா கண்விழித்தாள்.

அபியை பார்த்ததுமே மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

அபி….அப்பா...ஏன் அப்படி பண்ணினாங்க... அவருக்கு என்னை பிடிக்கலையா...ஏன் பிடிக்காம போச்சி...என்றவனை கேட்டாள்.

அவளின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத அபிமன்யூ இப்போ என்னோட கிளம்பி வர்றியா நேத்ரம் நீ கேட்ட கேள்வியை உன் அப்பாகிட்ட ரெண்டு பேரும் சேர்ந்து கேட்கலாம் என்று கேட்டான்.

உடனே நேத்ரா இல்ல இனிமே அங்க வரல... நான் எதுக்காக வரணும் நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

உடனே அபிமன்யூ இங்க பாரு நேத்ரா உன்னோட அப்பா கிட்ட இதை கண்டிப்பா நீ கேட்கணும் நான் கேட்டா பதில் வராது ஆனா நீ கேட்டா கண்டிப்பா பதில் வரும்... அவர் வாய் திறந்து சொன்னா மட்டும்தான் ஏன் அதுமாதிரி நடந்துகிட்டார்ங்கற விஷயம் நமக்கு தெரியும் அதனால நீ வந்து கேட்கணும்...கிளம்பு... என்று அவளை அழைத்தான்.

ஒருவேளை அப்பா அதற்கான காரணத்தை சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா…

கண்டிப்பா சொல்லுவாரு நீ அவரோட முகத்தைப் பார்த்து கேட்டா சொல்லாம இருக்க முடியாது…

ம்ம்...ஆனா தெரிஞ்சி என்ன பண்ணபோறேன் அபி... மறுபடியும் ஒரு அழகான காரணத்தை சொல்லி கொஞ்சம் உயிரோட இருக்கற என் மனசை முழுசா கொல்லப் போறாரு... தெரியாம இருக்கிறது நல்லது…
இப்படியே என்னை நல்ல
ஹாஸ்டல்ல சேர்த்து விடு ப்ளீஸ் எனக்கு அதிகமா டெல்லி தெரியாது...


கண்டிப்பா காரணம் தெரிஞ்சதும் உன்னை ஒரு நல்ல இடத்துல சேர்த்து விட்டுட்டு தான் இங்கிருந்து போவேன்...அது ஹாஸ்டலா இல்லை ஷர்மா சார் வீடானு இனிதான் முடிவேடுக்கனும் நீ இப்போ என் கூட வா…


நீ லேட் பண்ற ஒவ்வொரு வினாடியும் அங்க என்னோட ஆளுகளுக்கு பிரச்சினை.

அங்க ஷர்மாவும்.. ரோஹித்தும் செக்யூரிட்டி கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க ப்ளீஸ் எனக்காக இல்லனாலும் என நம்பி இருக்கிற அந்த காவலாளி களுக்காகவாவது என்னோட இப்போ வா ப்ளீஸ்.. என்று பணிந்தான்.

காவலாளிகளுக்கு பிரச்சினை என்று தெரிந்ததும் எதுவும் பேசாமல் அவன் பின்னே கிளம்பினாள் நேத்ரா. மருத்துவமனையில் இருந்த சம்பிரதாயங்கள் அனைத்தையும் நிமிடத்தில் முடித்துக் கொடுத்தவன் அவனது காரில் அவளை அழைத்துக் கொண்டு ரவிச்சந்திரனின் வீட்டை நோக்கி சென்றான்.


அபிமன்யூ நேத்ராவை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது அங்கிருந்த காவலர்கள் அனைவரும் அவர்கள் சாதாரண உடையில் இருந்தனர் அவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருப்புநிற சீருடையில் யாருமே இல்லை.

சக்கரவர்த்தி கடுமையான கோபத்தில் கைகளைக் கட்டியபடி வாயிலின் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். அவனின் பின்புறமாக அபி அந்த வீட்டிற்காக நியமிக்கப்பட்ட காவலாளிகள் எட்டு பேருமே அடுத்து தாங்கள் என்ன செய்வது என்ற கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.

உள்ளே வர வரவே அபிமன்யூவிற்கு வீட்டின் நிலைமை ஓரளவுக்கு புரிய தொடங்கிவிட்டது.


கார்டனில் புதிதாக மூன்று சேர்கள் போட்டிருக்க அதில் ஷர்மா,ரோகித், ரவிச்சந்திரன் மூவருமே அமர்ந்திருந்தனர். ஷர்மாவும் ரோஹித்தும் கடும் கோபத்தை முகத்தில் தாங்கியபடி அமர்ந்திருக்க ரவிச்சந்திரன் நேர்மாறாக ஏதோ ஒரு சங்கடத்தில் அமர்ந்திருப்பது போல் இருந்தார் .

அவர்கள் முன்பு இருந்த ஒரு டீபாயில் மீது ஒரு ஊதா நிற கோப்பு ஒன்றும் அதன் மீது ஒரு பேனாவும் இருந்தது.

அபியை ரவி பணி நியமன படுத்தும்போது அவர்கள் இருவருக்கும் பொதுவாகப் போடப்பட்டிருந்த பரஸ்பர ஒப்பந்தத்தின் நகல் தான் அது.


அபி முற்றிலும் யூகித்து விட்டான். இதை சாக்காக வைத்து தன்னை இந்த வீட்டை விட்டுப் போகச் சொல்ல போகிறார்கள் என்பதை அவன் எதிர்பார்த்ததுதான் அதனால் அவன் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

இப்பொழுது ரவிச்சந்திரனுடன் சில விஷயங்களை மனம் பேசி விட்டு அவனை அங்கிருந்து விலகிச் செல்ல போகிறான் அதற்குள் இவர்கள் ஏன் அவசரப் படுகிறார்கள் என்று மனதிற்குள் நினைத்து சிரித்தும் கொண்டான்.

காரை விட்டு இறங்கிய நேத்ராவை பார்த்ததும் ரோகித்தும், ஷர்மாவும் ஒன்றுபோல் எழுந்து அவளிடம் ஓடிவந்தனர்

ஷர்மா நேத்ராவிடம் நான் இருக்கிறேன் பேபிமா... நீ தைரியமா இருக்கணும் என்று கூற

ரோகித் அவளின் அருகில் வந்து ஆறுதலாக அவளைக் கட்டியணைக்க நேத்ரா நாசூக்காக அவனை விலக்கிவிட்டாள்.
அவளின் விலகலை கண்டவன் கோபப்படாமல் ஆதுரமாக நேத்ராவின் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டான்.

இவை அனைத்தையும் கவனித்தும் கவனிக்காதது போல அபிமன்யூ தனது கூலர்ஸை எடுத்து கண்களின் மாட்டிக் கொண்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றுகொண்டிருந்தான்.

அபிமன்யூவிடம் கோபமாக வந்த ஷர்மா ...ஒருத்தருக்கு எட்டு பேர் இந்த வீட்டைக் காவல் காக்கறீங்க ஆனா வெளியிலிருந்து ஒருத்தன் ஈஸிசா இந்த வீட்டுக்குள்ள வந்துட்டு போயிட்டு இருக்கான் அதுகூட தெரியாம காவல் காத்து கிட்டு இருக்கீங்க இதுக்கு அப்புறமும் உங்களை நாங்க எப்படி நம்பறது…
உங்க அக்ரிமென்ட்டை கேன்சல் செஞ்சுட்டு இப்பவே இங்கிருந்து எல்லாரும் வெளியே கிளம்புங்க உங்களுக்கு சேரவேண்டிய பாக்கித் தொகை ஏதாவது இருந்தா உங்க அக்கவுண்டுக்கு தேடி வரும் என்று கூறினார்.


எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாத அபிமன்யூ ஷர்மாவை பார்த்தபடி இந்த வீட்டுக்கு காவலுக்காக என்ன கூப்பிட்டு வந்தது மிஸ்டர் ரவிச்சந்திரன் அவர் இந்த அக்ரிமென்ட்டை முடிக்கிறதா சொன்னா தாராளமான இப்பவே முடிச்சிட்டு கிளம்பிடுவேன் உங்களுக்கும் என்னோட வேலைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் மிஸ்டர் ஷர்மா தேவையில்லாம உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல தலையிடாதீங்க என்று முகத்தில் அடித்த படி கூறினான்.

கோபம் கொண்ட ரோகித் அபிமன்யூவை அடிப்பதற்காக வேகமாக வர இடைப் புகுந்து ரவிச்சந்திரன் ஷர்மா ப்ளீஸ் ஸ்டாப் இட்

இங்கே நடந்த பிரச்சனைக்கு நான் தான் காரணம் அதனால தயவு செஞ்சு அபிமன்யூவை எதுவும் சொல்லாதீங்க என்று கூறினார்.

உடனே ஷர்மா நான் அபிமன்யூ வந்த நாளிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன் நீ ஓவரா இவனுக்காக சப்போர்ட் பண்ற ரவி இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூற அபிமன்யூ ரவிச்சந்திரனை பார்த்து ரொம்ப தேங்க்ஸ் சார் உங்களோட நம்பிக்கைக்கு இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்குமே நான் பாத்திரமா இருப்பேன் என்று கூறினான்.

நேத்ரா தந்தையை கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

இதை கவனித்த ரவிச்சந்திரன் நேத்ராவிடம் வந்தவர் என்னை மன்னிச்சிடு மா... இங்க நடந்த எதையுமே அப்பா திட்டம் போட்டு செய்யல யாரோ விரிச்ச வலையில நீ வந்து மாட்டிக்கிட்ட என் சுயநலத்துக்காக உன்னை நான் பலிகடா ஆக்கிட்டேன் என்று அவளிடம் மன்னிப்பு கேட்க அவள் கோபமாக முறைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

அவளை சமாதானப் படுத்துவதற்காக ரோகித்தும் ஷர்மாவும் அவளின் பின்னே செல்ல அபிமன்யூ ரவிச்சந்திரனை பார்த்து என்ன சார் நடந்துக்கிட்டு இருக்கு உண்மையிலேயே உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல

வீட்டுக்கு வெளிய திருடனை தேடினா வீட்டுக்குள்ளேயே ஒழிச்சி வைச்ச கதையா ஆயிடுச்சு.

ஆனா எனக்கு தெரியும் உங்ககிட்ட இருக்கு சரியான காரணம் இருக்கும்னு.
அத தெரிஞ்சுக்காம இங்கிருந்து போகமாட்டேன் தெரிஞ்சதுக்கு அப்புறமா இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் என்று கூறியவன் சக்கரவர்த்தியிடம் வந்து பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிட்டு நீ நம்ம ஆளுகளை எல்லாம் கூப்பிட்டு நம்ம ரூமுக்கு போ என்று அவனின் வாகனச் சாவியை எடுத்து கொடுத்தான்.

இடைமறித்த ரவி அபிமன்யூ மது மேல சத்தியம் நீங்க யாரும் இங்கிருந்து போகக்கூடாது என்று கூற அதிர்ச்சி அடைந்தவன் இப்போ என்ன சொன்னிங்க என்று கேட்டான்.

அதற்கு ரவிச்சந்திரன் எனக்கு தெரியும் அபி மது கேட்டுக் கொண்டதால தான் நீ இங்க காவலுக்கு வந்தங்கற விஷயம்.

ஏதோ ஒரு வகையில நீ என் பக்கத்துல இருக்கணும்னு மது ஆசைப்பட்டா அதனால தான் உன்கிட்ட உதவி கேட்டா நீயும் அவளுக்காக உன் வேலையெல்லாம் விட்டுட்டு நீயா எதேச்சையான என்னை சந்தித்தது போல அறிமுகமான…

என்கிட்ட தொழில் கத்துக்கற மாதிரி என் கூட வந்து சேர்ந்து கடைசியில இந்த வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டி தேவைனு என் மூலமாகவே கூப்பிட வச்சிருக்க... இப்போ நீ இங்கிருந்து போயிட்டா நீ பட்ட கஷ்டம் எதுக்குமே பலன் இல்லாமல் போய்டும்…


இவ்வளவு விஷயங்கள் என்ன பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கிற நீங்க ஏன் சார் தேவையில்லாம கடைசி பத்து நாள் இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க என்னோட பாதுகாப்பு மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லாம பண்ணி வச்சிட்டீங்களே சார் .

எந்த வேலை செஞ்சாலும் அதுல ஒரு நிறைவோடு செய்யனும்னு நினைக்கிறவன் நான்... அப்படி பட்ட என்னையே நீங்க குற்ற உணர்ச்சியில் குமுற வச்சிட்டீங்களே என்ன பிரச்சினை என்கிட்ட சொல்லுங்க சார் நான் உங்களுக்கு கண்டிப்பா உதவி செய்யறேன்…

அபி உன்கிட்ட கண்டிப்பா நான் சொல்லித்தான் ஆகணும் ஆனால் அந்த விஷயம் எக்காரணம் கொண்டும் நேத்ராவுக்கு தெரியாதமாதிரி நீ பார்த்துக்கனும் என்று கூற

அது எப்படி சார் முடியும் இதுல பாதிக்கப்பட்டது நேத்ரா தான் அவளுக்கு தெரியாமல் எப்படி என்று சந்தேகத்தை அவரிடமே கேட்டான்.

நான் சொல்லப் போற விஷயத்தை நேத்ரா கேட்டா சுத்தமாவே என்னை வெறுத்திருவா... ஏற்கனவே அவ இப்போ என் மேல பயங்கர கோவத்துல இருப்பா இப்போ நான் சொல்ல போற விஷயம் தெரிஞ்சா முழுக்க முழுக்க என்னை வெறுத்து ஓதிக்கிடுவா...என்றவர் அவரின் நிலையை கூறத்தொடங்கினார்.

மேலே நேத்ராவை சமாதானப்படுத்திய ஷர்மா அவளைக் கீழே அழைத்து வர ரோகித்தும் அவர்களுடன் வந்தான்.

அவர்கள் மூவரும் வரவுமே ரவி ஆரம்பித்த பேச்சினை அப்படியே நிறுத்தினார்.

அபிமன்யூ அவரை பார்த்து சார் இப்போ நீங்க உங்களை ப்ரூவ் பண்ண வேண்டிய கட்டாயத்தில இருக்கீங்க நீங்க எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க அதுதான் எல்லாருக்குமே நல்லது என்று கூற கண்களை அழுத்த மூடி திறந்தவர் நேத்ராவைப் பார்த்து இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் இனி நேத்ராவுக்கும் தெரியறது நல்லதுனு நினைக்கிறேன் .

அவ என்ன முழுசா வெறுத்து ஒதுக்கினாலும் பரவால்ல ஆனா இதை மனசுக்குள்ளேயே வெச்சு நான் கஷ்டப்படறதை விட அவ கிட்ட சொல்லிட்டு அவ தர்ற தண்டனையை ஏத்துக்க தயாரா இருக்கேன் என்று கூறியவர் பொதுவாக அனைவரையும் பார்த்து கொஞ்சம் வேலையாட்களை வெளியே அனுப்பி வைங்க என்று கூற அபிமன்யூ சக்கரவர்த்தியை பார்க்க அவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அனைவருமே ரவியை சுற்றி நிற்க ரவி தலை குனிந்தபடியே பேச ஆரம்பித்தார் ஆபீஸ்ல ரோகினினு
ஒரு பொண்ணு வேலை செய்யறா... நம்ம தமிழ்நாட்டு பொண்ணு..

பொதுவாவே எனக்கு நம்ம ஊரு காரங்க தமிழ் பேசுறவங்கன்னா ரொம்ப பிடிக்கும் அப்படித்தான் ரோகினியையும் எனக்கு பிடிச்சது அவ கிட்ட தட்ட பன்னிரெண்டு வருஷத்துக்கு மேல ஆபிஸ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கா...அவ ஒரு டிவோர்ஸி.. கிட்டத்தட்ட மதுமதியை விட ஐந்து வயசு சின்னவ...

ஆரம்பத்துல சாதாரணமா பாஸ்... ஸ்டாஃப் அந்த ஒரு உறவு முறைதான் எங்களுக்குள்ள இருந்தது... கொஞ்ச நாள் போகப்போக எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு நல்ல நட்பு உருவாச்சு.

எனக்கு அவ எப்பவுமே ஒரு நல்ல தோழியாக தான் தெரிஞ்சா ஆனா அவளுக்கு நான் அப்படி தெரியல போல..


மது என்னை விட்டு நிரந்தரமா போன சமயத்துல நான் ரொம்பவே டிப்ரஷனா இருந்தேன்... மது ஏதோ ஒரு வெளியே சொல்ல முடியாத பிரச்சினையால தற்கொலை பண்ணிக்கிட்டா எல்லாரும் அவ சாவுக்கு ஒரு காரணத்தை கற்பிச்சாலும் கணவனா என்னால அவ மறைவை தாங்கிக்க முடியல…


நான் கடைசியா ஊருக்கு போகும் போது மதுவை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி டெல்லிகே கூட்டிட்டு வந்துடனும்...
அதுக்கப்புறமா டெல்லியில் படிச்சிட்டு இருக்கிற நேத்ராவை வீட்டுக்கே அழைச்சிட்டு வந்திடனும்னு நினைச்சேன்...ஒரே வீட்டு ஆளுக ஆனா இருக்கறது மூனு இடம்...அதை ஒரே இடமா மாத்தனும்னு கனவோட ஊருக்கு போனேன் ஆனா மது எல்லாத்தையும் ஒரே நிமிஷத்துல ஓடச்சிட்டு போயிட்டா…


சொல்லப் போனா அவர் தற்கொலை பண்ணிக்கிறக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே நான் ஊருக்கு போயிட்டேன் என்னோட பெரியப்பா வீட்டில் நடந்த ஒரு சொத்து பிரச்சினையால என்னால அங்கிருந்து மதுவை சந்திக்க முடியலை.



அந்த சமயத்தில் தான் மது தற்கொலை பண்ணிக்கிட்டா என் மனசுக்கு அது மிகப்பெரிய குற்ற உணர்ச்சி இங்கிருந்து நான் நேராக மதுவைப் பாக்க போயிருந்தா கண்டிப்பா நான் மதுவை காப்பாத்தியிருப்பேனு ஒரு எண்ணம் எப்பவுமே என் மனசுல இருக்கும்... அதனால தான் மதுவோட காரியம் முடிஞ்சு கொஞ்ச நாளிலேயே நான் டெல்லி கிளம்பி வந்துட்டேன்…



படிச்சிட்டு இருக்கிற ஒரு வயசு பொண்ணு இருக்கா... அவ படிச்சு முடிச்சதுக்கு அப்புறமா அவளுக்கு ஒரு நல்லவனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் ... எப்படி வயசு பொண்ணை பாதுகாக்கறதுனு எனக்குப் பல கவலைகள்.

அதிகமா ட்ரிங்க்ஸ் எடுத்துக்க ஆரம்பிச்சேன் ஆபீஸ், வீடு,மீட்டிங் எங்கையுமே என்னால இயல்பா இருக்க முடியல எல்லா இடத்திலேயும் அளவுக்கு மீறி ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டதால ஒரு நிதானம் இல்லாமல் இருந்தேன்.

அப்படித்தான் ஒருநாள் மீட்டிங்ல நான் அளவுக்கதிகமாக ட்ரிங்க்ஸ் எடுத்துக்க...நிதானம் இல்லாம அங்கேயே விழுந்துட்டேன்.


அப்போ எனக்கு உதவ வந்த ரோஷினி அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போக என்னோட மதுபோதை எனக்கு எதிரா மாறிடுச்சு. ரோகினி கிட்ட நான் எல்லை மீறிட்டேன்...அவ தடுத்திருந்தா கண்டிப்பா பண்ணிருக்க மாட்டேனே என்னவோ... ஆனா அவ எனக்கு முழுசா ஒத்துழைச்சா அதனால நான் என்னோட கட்டுப்பாட்டை இழுந்துட்டேன் என்று நேத்ராவைப் பார்க்க... நேத்ரா இதற்கு மேல் தான் இதைக் கேட்க தயாரில்லை என்பது போல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றாள்.

ஷர்மா,ரோஷித் மெதுவாக இடத்தை விட்டு நகர்ந்து ஒரிடத்தில் அமர நேத்ரா அபியை கடந்து சென்றாள்.செல்லும் அவளை யாரும் அறியாவண்ணம் கையை பிடித்து தடுத்து செல்லாதே என்பது போல் ஜாடை செய்து அவனின் பின்புறமாக நிற்க வைத்துக் கொணாடான்..

நேத்ராவிற்கு ஏனோ கத்திக் கதறி அழ வேண்டும் போல் தோன்றியது அது தனது தாய்க்கு தந்தை செய்த துரோகமா... இல்லை தனது தாய் சாகும் தருவாயில் ஏதோ ஒரு கடுமையான பிரச்சினையில் இருந்து இருக்கிறாள் என்று தெரிந்ததாலா அவளுக்கே தெரியவில்லை.

ரவி அனைவரையும் சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தலையை குனிந்தபடி பேச ஆரம்பித்தார் .

அதுக்கப்புறமா நான் ரோகிணியை முழுசா தவிர்க்க ஆரம்பிச்சேன் ஆனா அவ என்கிட்ட நிறையவே உரிமை எடுத்துக் ஆரம்பிச்சுட்டா

கிட்டத்தட்ட பத்து வருஷமா என்னை காதலிப்பதாகவும் எனக்கு மனைவி, இருந்ததால தான் அதை என்கிட்ட சொல்லாம மறைச்சதாகவும் என்கிட்ட சொன்னா…

இப்போ தான் மனைவி இறந்துட்டாங்களே என் காதலை ஏத்துக்கறதுல என்ன பிரச்சனைனு என்கிட்ட ரொம்ப உரிமையா சண்டை போட்டா…

ஏற்கனவே காதல், கல்யாணம் இதெல்லாம் மது மூலமா நான் பார்த்தாச்சி...அதும் வீட்ல ஒரு வயசு வந்த பொண்ணு இருக்கும்போது இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் என்னோட சபலம் மறுபடியும் மறுபடியும் ரோகினி தேட வைத்தது.


அவளும் ஆரம்பத்துலேயேநான் எப்பவுமே உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லமாட்டேன் ...நாம இப்படியே கடைசி வரைக்கும் ஒரு திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்து விடலாம்னு சொன்னதால நானும் அதை ஓத்துக்கிட்டு அவளுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்துட்டு ஒரு திருட்டு வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன்.

ஆனா அது ரொம்ப நாள் நீடிக்கல... எதேச்சையா ஒரு நாள் ரோகினியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் இந்த வீட்டோட ஆடம்பரத்தையும் இங்க இருக்கிற வசதிகளையும் பார்த்த ரோகினி இங்கேயே தங்கிக்கவானு என்கிட்ட கேட்டா.

தொடரும்
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom