Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனவாய் நான் வருவேன் - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
20


மது இன்னும் எவ்வளவு நேரம் குளிச்சுகிட்டு இருப்ப எனக்கு டைம் ஆச்சு என்று கூற ஷர்மாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...பயந்தபடி எதிர்ப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டார்.

ரவி கவனித்து விட்டாரா என்று அறைக்குள் ஆராய...நல்லவேளை ஷர்மா உள்ளே வந்ததை கவனிக்க வில்லை.

படபடக்கும் இதயத்தோடு பக்கத்து அறையில் காத்திருக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் மதுவின் குரல் சற்று குழைந்த படி கேட்டது என்னங்க பிரச்சினை உங்களுக்கு நான் தான் உங்களை அப்பவே வேலைக்கு கிளம்பி போக சொல்லிட்டேனே அப்புறம் ஏன் போகாம கத்திகிட்டு இருக்கீங்க…

நீ எனக்குத் தர வேண்டியதை குடுத்துட்டா நான் ஏன் இப்படி கத்திகிட்டு இருக்க போறேன்…

போதும் போதும் இதையே இன்னும் எத்தனை நாள் சொல்லுவீங்க... இப்ப கொடுக்க வேண்டியதுக்கும் சேர்த்து தான் நேத்து ராத்திரியே வசூல் பண்ணிட்டீங்களே அதனால இப்போ எல்லாம் ஒன்னும் கிடையாது என்று பொய்க் கோபத்தோடு பேசினாள் மதுமதி.

சரி நீ ராத்திரி கொடுத்ததை அசலா வச்சிக்கோ...வட்டியை நான் இப்போ கொடுத்துட்டு போறேன்…

நீங்க எந்த வட்டியும் தர வேணாம்... இப்போ வட்டி கொடுக்கறேனு சொல்லுவீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அசலை கொடுக்கறேனு ஆரம்பிப்பீங்க இந்த விளையாட்டுக்கு நான் வரல…
இதோட ரெண்டாவது தடவை நான் குளிச்சாச்சி... இனி என்னால குளிக்க முடியாது…முதல்ல கிளம்புங்க…


என்ன மது புருஷன் கொடுக்கிறேன்னு சொல்றத கூட வேணாம்னு சொல்லறியே என்று அவளை இழுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.


கொடுத்ததெல்லாம் வேணான்னு சொன்னதால தான் என் வயித்துல உங்க குழந்தை கருவா வளர்ந்து நிக்குது அதனால கொடுத்தவரை போதும் தயவுசெஞ்சு ஆபீஸ் கிளம்புங்க வண்டி வேற சர்வீஸ்ல இருக்குனு சொல்லி இருக்கீங்க இந்த டெல்லி டிராபிக்ல அவதிப்பட்டு சீக்கிரமா ஆபிஸ் போய் சேருங்க இல்லனா உங்கள காணோம்னு தேடிட்டு வீட்டுக்கு வந்துட்டு போறாங்க என்று அவனின் அணைப்பில் இருந்தவாறு கூறினாள்.

இன்னைக்கு ஆபீஸ் கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா மது கார் வேற இல்ல நடந்து மெயின் ரோட்டுக்கு போய் அங்கிருந்து ஆட்டோ புடிச்சி... ஓ மை காட் ப்ளீஸ் மது இன்னைக்கு ஒரு நாள் வீட்டில் இருக்கறனே… என்று மதுவின் மணிவயிற்றை தடவியபடியே கெஞ்சினார்.

ம்ம் ‌..இருக்கலாமே…ரொம்ப நாளா என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு டிமிக்கி கொடுத்துகிட்டே இருக்கீங்க இன்னைக்கு மாட்டினீங்களா...கிளம்புங்க என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்க என்று கூற

உன் கூட கோயிலுக்கு வர்றதுக்கு ஆட்டோல போற கொடுமை எவ்வளவோ பெட்டர் நான் கிளம்புறேன் மது என்று அவளை இழுத்து அணைத்து அவசர இதழ் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

செல்லும் ரவியை வாசல்வரை சென்று வழியனுப்பி விட்டு கேட்டையும் சாத்திவிட்டு முன்னறையின் கதவின் தாழ்ப்பாளை போட்டு விட்டு
உள்ளே வந்த மது தலையில் கட்டியிருந்த துவாலையை கழட்டி முடியை நன்றாக விரித்து விட்டாள்.

பிறகு டிரெஸ்ஸிங் டேபிளில் முன்பு வந்து நின்றவள் அங்கிருந்த கண் மையை எடுத்து கண்களுக்கு திக்காக திட்டிக்கொண்டு நெற்றியில் கலைந்திருந்த குங்குமத்தை சரி செய்து அதை நல்ல பெரியதாக வைத்துக்கொண்டாள்.
பிறகு புடவை கொசுவத்தை அவிழ்த்து மீண்டும் மடிப்பு எடுக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது அவளின் பின்னால் இருந்த மது என்ற ஷர்மாவின் வசீகரக் குரல் அவளின் காதுகளில் கேட்க அவசரமாக புடவையை சொருகியவள் பயந்து திரும்பிப்பார்க்க கதவில் நன்கு சாய்ந்தபடி ஷர்மா அந்தக் காந்தக் கண்களை கொண்டு மதுவை மயக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தார்.

ஹேய் நீ எப்படி உள்ள அதான் கதவை லாக் பண்ணினேனே என்று குழம்பித்தவிக்க…


நோ டென்ஷன் மது கதவு பூட்டி தான் இருக்கு நீ கதவ பூட்டிட்டு தான் உள்ள வந்த ஆனா நான் அதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன் என்று கூற நெஞ்சினில் கைவைத்தவள் அப்படியே சுவற்றுடன் சாய்ந்தாள்.

அப்படினா நானும் ரவியும் பேசிட்டு இருந்தது….என்று பாதியில் நிறுத்த


பேசிட்டு இருந்தது முத்தம் கொடுத்தது எல்லாத்தையுமே பார்த்துட்டுதான் இருந்தேன் மது என்று கூறியபடி அவளின் அருகில் வர


ச்சீ...தள்ளிப்போ தள்ளி விட்டாள்.

ஆனால் அவரோ துளி அளவு கூட நகராமல் பார்வை மட்டும் மதுவின் மணி வயிற்றில் இருந்தது...

புடவையை அவசரமாக சரி செய்தவள் அவரை விட்டு சற்று தள்ளி கொண்டாள்.

வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் இருக்கிறது அதில் வேண்டுமானால் ரவிக்கு அழைக்கலாம் ஆனால் அவர் கண்டிப்பாக இப்பொழுது அலுவலகம் சென்றிருக்க வாய்ப்பில்லை இவனிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று அங்கும் இங்கும் தேட

ஏன் மது என்ன பார்த்து பயப்படுற உனக்கு பேபி ஃபாம் ஆகியிருக்குனு ரவி சொன்னான் உனக்கு உடம்பு முடியலன்னும் சொன்னான் அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ஆனா உன்ன பாத்தா அப்படி தெரியலையே என்றார்.

நான் நல்லாத்தான் இருக்கேன் என்னை பாத்துட்ட இல்ல முதல வெளியே போ என்று படபடப்பாக கூறினாள்

நான் போறேன் மது அதுக்கு முன்னாடி மதுவோட வயித்துல இருக்கற பேபியை பாத்துட்டு போறேனே…

லூசு மாதிரி உளறாத அது எப்படி உன்னால பார்க்க முடியும்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரவி தொட்டுப் பார்த்தான்ல அதே மாதிரி நானும் தொட்டு பாத்துட்டு கிளம்பி போயிட்டறேன்…

பைத்தியமா டா நீ நான் உன் பிரண்டோட வொய்ப் என்கிட்ட போய் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க இந்த விஷயம் மட்டும் ரவிக்கு தெரிஞ்சது... முதல்ல வெளியே போடா என்று அவனை தள்ளி விட்டபடி முன் அறைக்குள் வந்தாள்.

அதுவரை பொறுமையாகவும் சாந்தமாகவும் பேசிக் கொண்டிருந்த ஷர்மாவின் முகம் உக்கிரமாக மாறியது கண்களை உருட்டியபடி நேராக மதுவின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு சுவற்றோடு வைத்து அழுத்தியவர்

இந்த விசயம் ரவிக்குத் தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ரவி செத்துப் போய்டுவான் மது...நான் அவனை கொன்னுடுவேன் என்று கூலாக கூறினார்.

அவரின் கண்களில் இருக்கும் கோபத்திற்கும் பேசும் வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது அவர் மதுவிற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்னும் பயத்தை மதுவிற்கு உடனடியாக கொடுத்தது .

முச்சுவிட திணறிய படி ஷர்மாவிடம் இருந்து தன்னை விடுவிக்க போராட மீண்டும் அவளின் கழுத்தை அழுத்திப் பிடித்தவர் அவள் திமிறாதவாறு அவரின் உடல் பாரத்தையும் அவளின் மீது வைத்தார்.

இப்போ மதுவோட வயித்துல இருக்கிற பாப்பாவை நான் தொட்டுப் பார்க்க கூடாதுன்னா நான் இப்போ சொல்றதை அப்படியே நீ சொல்லணும் …

நான் சொல்றதை நீ சொல்றியா இல்லனா பாப்பாவை மட்டும் தொட்டு பார்த்துட்டு கிளம்பவா என்று மதுவின் முகத்தை பார்த்தபடியே கேட்க

இவன் பைத்தியக்காரன் முதலில் இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் இல்லை என்றால் சேதாரம் தனக்கு தான் என்று நன்கு புரிந்துகொண்ட மது புத்திசாலித்தனமாக சொல்லறேன் என்று தலையசைத்தாள் .

குட் இப்படித்தான் இருக்கணும் என்றவர் மற்றொரு கையால் மதுவின் கன்னத்தை தொட அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவரின் தொடுதலை விரும்பாதவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

கோபத்தில் மதுவின் முகத்தை அவரின் பக்கம் திருப்பி அழுத்திப் பிடித்தவர் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லு மது என்றார்.

முடியாது என்பதுபோல் கண்களை மூடிக்கொண்டு சைடாக மது திரும்ப

மீண்டும் கழுத்திலிருந்த அவரது கைக்கு ஷர்மா அழுத்தம் கொடுக்க இப்பொழுது மூச்சு விட மிகவும் சிரமப்பட்ட மது சரி என்பது போல் தலை அசைத்தாள்.

குட் சொல்லு….உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…

திணறியபடி கூறி முடித்தாள்…


ஸ்மார்ட் கேர்ள்... உன் கலர் இந்த கண்ணு இதெல்லாம் என்ன ரொம்ப கவருது…

ப்ளீஸ் என்ன விட்டுடு நான் என் புருஷனை கூட்டிட்டு ஊருக்கே போயிடறேன் என்னை இப்படி சித்திரவதை படுத்தாத…

நான் சொன்னது இது இல்ல பேபி உன் கலரு இந்த கண்ணு இதெல்லாம் என்ன ரொம்ப கவருது…

அய்யோ கடவுளே என்று கூறியபடியே கூறிமுடித்தாள்.

இப்ப கடைசியா ஷர்மா ஐ லவ் யூ சொல்லு..

முடியாது போடா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ ரவியைத் தவிர இந்த வார்த்தையை யாரை பார்த்தும் நான் சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்க…

அவளின் முகத்தருகே சிரித்தபடி வந்த ஷர்மா திடீரென்று அவளின் மீது இருந்த கைகளை எடுத்தார் இந்த ரெண்டு வார்த்தையே போதும் என் கண்ணை தானே பிளாக் கோப்ரா மாதிரி இருக்குன்னு சொன்ன இப்போ உன் வாயாலேயே இந்த கண்ணு உன்னைக் கவருதுன்னு சொல்ல வச்சுட்டேன் பாத்தியா அதே மாதிரி கூடிய சீக்கிரம் என்னை பார்த்து நீ ஐ லவ் யூ ன்னு சொல்லுவ என்று கூறினார்.


ஷர்மாவிடம் இருந்து தப்பித்த மது அறையின் மற்றொரு மூலையில் சென்று நின்று கொண்டாள் ஷர்மா இப்பொழுது சாவகாசமாக அறையின் நடுவில் இருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தபோது


சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம் நான் ஆசைப்பட்டது கிடைக்கலன்னா கடைசி வரை அது கிடைக்க போராடுவேன் .

அது எந்த நிலைமையில் கிடைச்சாலும் நான் பத்திரமா பார்த்துக்குவேன் ஏன்னா நான் ஆசைப்படும் போது அது நல்லா தான் இருந்தது அந்த மாதிரியான குணம் எனக்கு.

அதனாலதான் இதுவரை நான் ஆசைப்பட்டது கிடைக்காம இருந்ததா சரித்திரமே இல்ல .

அதனால நீயும் எனக்கு கிடைப்ப அதுவும் கூடிய சீக்கிரமே...

ஒருவேளை இப்போ இங்கு நடந்த விஷயத்தை நீ ரவி கிட்ட கூட சொல்லலாம் ரவி உடனே கோபமா நியாயம் கேட்க என் ஆஃபிஸ் வரலாம்

அந்த ஆபீஸ்ல வைச்சே அவனை நான் முடிச்சிடலாம் யாருக்கும் தெரியாம என்னோட ஃபார்ம் ஹவுஸ்ல புதைக்கலாம்.

பாஷை தெரியாத இந்த ஊர்ல மது தனியா இருப்பாள்ல அப்போ உரிமையா வந்து நான் தூக்கிட்டு போய் என் ஃபார்ம் ஹவுஸ்ல ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்து ஆசை தீர காலம்பூரா கூட வெச்சிக்கலாம் என்று அவர் கூற கூற மதுவின் இதயம் துடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டது .

நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்துக் கொண்டு அப்படி ஏதும் பண்ணிடாத நான் என் புருஷன் கிட்ட உன்னை பத்தி வாய் திறக்க மாட்டேன் ...

குட் மது எது சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கற…

மது நீ என்னோட இப்போவே வந்துடேன் ...பூ மாதிரி பாத்துக்கறேன்…இல்லையா கொஞ்ச நாள் கழிச்சி கூட வா...தப்பில்லை அதை விட்டுட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிறதா நெனச்சு ரவி கிட்டயோ இல்ல வேற யார்கிட்டயும் சொல்லிட்டு இங்கிருந்து தப்பிச்சு போகலாம்னு நினைச்சேனு வை
நீ இந்த உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன் புருஷனோட உயிர் என் கையில இருக்கு .



உன் புருஷனை நீ உண்மையா நேசித்தா என்னைக்குமே இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன் ..
என்று பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அவளுக்கு கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் திக்பிரமை பிடித்தது போல் நின்றவள் ஷர்மா சென்றதும் அங்கேயே அமர்ந்து கொண்டு தலையில் அடித்தபடி கதறி அழ ஆரம்பித்தாள்.


அதன்பிறகு எப்போது டெல்லியை விட்டு செல்லலாம் என்று ரவியிடம் கெஞ்சத் தொடங்கினாள். சரியான உணவு இல்லை,உறக்கம் இல்லை...காரணம் கேட்கும் ரவியிடம் ஊருக்கு வாருங்கள் இல்லையென்றால் என்னை மட்டுமாவது அனுப்புங்கள் என்று பாடிய பாட்டையே பாடினாள்.


ஷர்மாவின் மற்றொரு முகத்தை அறியாத ரவி எப்பொழுதுமே ஷர்மா உடனே சுற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும் ஷர்மா அழைக்கிறார் ஷர்மாவுடன் செல்கிறேன் என்று ரவி கூறிக் கொண்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அவர் திரும்பி வரும்வரை நெஞ்சில் நெருப்பை வைத்துக் கட்டியது போல காத்திருப்பாள் மது.

எக்காரணம் கொண்டும் நண்பர்கள் யாரும் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று உறுதியாக கூறியதால் ஷர்மாவால் எளிதாக மதுவின் வீட்டிற்குள் வர முடியவில்லை .

மதுவுக்கு இப்போது மன நோய் போலவே ஆகிவிட்டது அவ்வப்போது வீட்டிற்க்குள் யாரேனும் இருக்கிறார்களா என்று ஆராய்வாள்... இது ரவிக்கு சிலநேரம் பயத்தைக் கொடுத்தாலும் கருவுற்ற பெண்களுக்கு சில நேரம் இது போலெல்லாம் ஆகும் என்று மருத்துவர் கூறியிருந்ததால் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.

எப்படியோ ஒருவழியாக ஏழு மாதம் தொடங்கவும் அவளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று வீட்டுப் பெரியவர்கள் கூற இது தான் சாக்கு என்று நினைத்த மது உடனடியாக தனது பெட்டி படுக்கைகள் அனைத்தையும் கட்டிக்கொண்டு தமிழ்நாடு கிளம்பிவிட்டாள்.

ஷர்மாவிற்கு இது மிகப்பெரிய பேரதிர்ச்சி தான்... அவள் டெல்லியை விட்டு செல்ல மாட்டாள் சீக்கிரமாக அவளின் மனதை மாற்றி தன் வசம் இழுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு முதல் அடி அவள் தமிழ்நாட்டிற்கு கிளம்பிச் சென்றது.

உடனே புத்திசாலித்தனமாக ரவியை அழைத்த ஷர்மா கம்பெனியின் மிக முக்கிய பொறுப்பை சில நாட்கள் மட்டும் பார்த்துக் கொள் என்று அவரின் கையில் திணித்தார்‌. இப்போது ரவியே நினைத்தாலும் கூட இதை விட்டுவிட்டு தமிழ்நாடு செல்ல முடியாது என்பது போல் இருந்தது அந்த கம்பெனியின் நிலவரம் அவ்வளவு குளறுபடிகள்.

மது ஊருக்கு சென்றதுமே மெதுவாக ரவியை ஊருக்கு வரும்படி அழைப்பு விடுப்பாள்‌.

ஆனால் மதுவிற்கு இப்பொழுது நன்றாக தெரியும் ஒரு வேளை ரவியை ஷர்மா ஏதாவது ஒன்று செய்து விட்டால் கூட மதுவிடம் அவனால் நெருங்க முடியாது ஏனென்றால் மதுவை சுற்றி ரவியின் மொத்த குடும்பமும் அரண் போல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது அதனால் முடிந்த அளவு மதுவை தான் டெல்லி வர வைப்பான் ஒழிய ரவியை எதுவும் செய்துவிடமாட்டான் என்று நம்பியதால் ஷர்மா பற்றிய பயத்தை சற்று மறந்திருந்தாள்.


ஒவ்வொரு முறை ரவி எஸ்டிடி செய்து பேசும் பொழுதெல்லாம் மதுவின் பேச்சி எப்பொழுது ஊருக்கு வருகிறீர்கள் என்பதாகத்தான் இருக்கும் இப்படியாக நாட்கள் செல்ல,செல்ல மதுவிற்கு ஒரு நல்ல நாளில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது…


அதை குடும்பத்தார் உடனடியாக ரவிக்கு தெரியபடுத்த அவர் பொறுப்பேற்றிருக்கும் பணியில் இருந்த குளறுபடிகள் காரணமாக உடனே அவரால் ஊருக்கு வர முடியவில்லை அதனால் தனது உயிர் நண்பனாக எண்ணிக்கொண்டிருக்கும் ஷர்மாவிடம் நீ முதலில் சென்று மதுவிடம் கூறு பின்னாலே நான் வருகிறேன் என அனுப்பி வைத்தார் .

ஷர்மாவிற்கு இப்பொழுது மிகப்பெரிய சந்தோஷம் ஆகிவிட்டது மூன்று மாதங்களாக மதுவை காணாமல் தவித்து கொண்டிருந்தவருக்கு இப்பொழுது மதுவை காண்பதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது ஒருவேளை மது தமிழ்நாட்டை விட்டு வரவில்லை என்றால் கூட ரவியை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டால் அவரை காரணம் காட்டி அவ்வப்போது மதுவை சென்று சந்தித்துக் கொள்ளலாம் என்று புதியதொரு திட்டத்தையும் தீட்டினார்.உடனடியாக அடுத்த விமானத்திலேயே தமிழ்நாட்டை நோக்கி பயணித்தார்.

கணவர் தன்னையும் குழந்தையையும் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மது மருத்துவமனையில் தனது மகளை அருகில் படுக்க வைத்தபடி குழந்தையுடன் தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்க…

அப்பொழுதுதான் மது….மதுப்பொண்ணே...என்ற அந்த வசீகர குரல் மதுவின் காதில் கேட்க தூக்கிவாரிப் போட்டது பயந்து உடனடியாக மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க இப்பொழுது அறைக்கு வெளியே இருந்து புற்றிலிருந்து வெளிவரும் பாம்பு தலையை மட்டும் தூக்கியபடி வரும் அல்லவா அதேபோல் அறைக்குள் அவரின் தலையில் மட்டும் அனுப்பி யாரேனும் இருக்கிறார்களா என்று அறையை சுற்றிப் பார்த்தபடி உள்ளே வந்தார்.


பயந்து படுக்கையின் ஒரத்திற்கு சென்றவள்…ஷர்மாவின் பின்னால் ரவி வருகிறானா என்று பார்த்தாள்.


யாரை தேடற உன் புருஷனையா...அவன் வரமாட்டான் என்று கூற…

அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் வரமாட்டான்னா...என்ன அர்த்தம்…

கொன்னுட்டேன்னு அர்த்தம்...என்று வெடிச்சிரிப்பு சிர்க்க

ஏய்...உன்ன என்று கட்டிலை விட்டு இறங்கி அவர் மீது பாய

என்கிட்ட சொல்லாம இங்க ஓடி வந்துட்டல்ல பேபி அதனால எனக்கு உன் மேல பயங்கரமான கோபம் அதான் கோபத்தை அவன்கிட்ட காமிச்சிட்டேன் என்று கூறியபடி கைகளை விரித்து அவளை எதிர்கொள்ள தயாரான ஷர்மாவை பார்த்து பயந்தபடி மகளோடு ஒன்றிளாள்.

ஏன் பேபி என்னைபாத்து பயப்படற..அதும் இந்த மாதிரி நேரத்துல...தப்பு முதல்ல மதுப் பொண்ணை என் கிட்ட காட்டு... என்று உரிமையாக அவளின் கையிலிருந்த நேத்ராவை வாங்கப்போக…

எங்களைத்தொடாத என்று மகளை நெஞ்சோடு அணைத்தபடி சுவற்றோடு ஒட்டினாள் …
பிறகு தயவு செஞ்சி உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன் என் ரவியை என்ன செஞ்ச அவர் பாவம் என்மேல தான கோபம் எதுக்காக அவரை பலி வாங்கற என்றாள்.

ம்ச்...என்ன செய்ய என் மதுமேல கோபத்தைக் காட்ட முடியலையே அதனாலதான் உன் மேல இருக்குற கோபத்தை அவன்கிட்ட காமிச்சு தீர்த்துக்கிட்டேன் என்றார் கூலாக…

பொய் சொல்லாத...நீ என்னை பைத்தியமாக்க முயற்சி பண்ணற...நா பலகீனமானவ இல்ல...உன்னோட சதில நா மாட்ட மாட்டேன் முதல்ல இங்கிருந்து போ...இல்லனா கத்தி எல்லாரையும் வர வச்சிருவேன்..இது உன் ஊரு இல்ல என் ஊரு... உண்மையிலேயே ரவிக்கு ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா இந்த இடத்தை விட்டு உயிரோடு போக மாட்ட என்று அங்கு ஆப்பிள் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை சற்றென்று எடுத்து ஷர்மாவை நோக்கி நீட்டினாள்.

சட்டென்று அவளின் கைகளை அழுத்தி பிடிக்க ஒரு கையில் குழந்தை ஒரு கை அவனிடத்தில்
குழந்தை பிறந்த இரண்டாம் நாள் என்பதால் அவளின் மனம் ஒத்துழைத்ல அளவுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.

கைகள் தோய குழந்தையும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவள் அமரவுமே அவள் கையில் இருந்த கத்தியை வாங்கி டேபிளில் வைத்த சர்மா மிருதுவாக அவளின் கைகளை விட்டு விட்டு இப்ப கூட ஒன்னும் இல்ல நீ என்னோட வந்திடு மது என்றார.

கண்கள் கலங்க இயலாமையுடன் அவரைப் பார்த்த மது என்னை ஏன் இப்படி கொல்லாம கொல்லற பேசாம அந்த கத்தியை வைச்சி என்னையும் என் பொண்ணையும் கொன்னுடு ப்ளீஸ் என்று அழ ஆரம்பித்தாள்.

நோ பேபி நீ அழாத.. நீ அழுதா என் மனசு தாங்காது என்று அவளின் தலையை நீவி விட கையை எடுத்து செல்லவும் வாசலில் மது என்னமா சத்தம் என்று கேட்டபடியே ரவியின் பெரிய அண்ணி உள்ளே வந்தார்

நிம்மதிப் பெருமூச்சுடன் மது கட்டிலில் நன்றாக சாய்ந்தபடி அமர்ந்தாள்.

ரவியின் பெரிய அண்ணி ஷர்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தபடி நீங்க எப்போ வந்தீங்க நாங்க எல்லாரும் கீழே தானே இருந்தோம் எப்போ எங்களுக்கு தெரியாம மேல வந்தீங்க.. என்று கேட்டார்.

ஓ... நீங்கள்லாம் கீழேதான் இருந்தீர்களா நான் உங்களை கவனிக்கவே இல்லையே ரிசப்ஷனுக்கு போய் விசாரிச்சேன் ரூம் நம்பர் சொன்னாங்க நேரே ரூமுக்கு வந்துட்டேன் இங்க மது தனியா இருந்தாங்க பேசிட்டு இருந்தேன் என்று எதுவும் நடக்காதது போல பேசினார் .

உடனே ரவியின் அண்ணி மதுவின் கையிலிருந்த குழந்தையை வாங்கியபடி குழந்தையை ஏன் இப்பிடி போட்டு கசக்கிருக்க பாரு எப்படி உடம்பெல்லாம் சிவந்து போய் கிடைக்குதுன்னு..சரி நல்ல பால் குடுத்துட்டியா என்று கேட்டபடி குழந்தையை அருகில் இருந்த தொட்டிலில் கிடத்தினார்.

பிறகு ஷர்மாவை பார்த்து அதான் மதுவையும் குழந்தையையும் பாத்துட்டீங்கல்ல நாங்க இங்க இருக்கோம் நீங்க கீழே வீட்டு ஆம்பளைங்க இருக்காங்க அவங்களோட போய் பேசுங்க என்று பட்டென்று பேசி அவனை வெளியே அனுப்பினார்.

ஷர்மா வெளியே செல்லவும் என்ன இது கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் குழந்தை பிறந்த வார்டுல வந்து உட்கார்ந்துகிட்டு முதல் இந்தக் ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணனும்
ஏன் ஆம்பளைகள எல்லாம் ரூம்க்குள்ள விடறீங்கனு என்று மதுவை பார்த்தபடியே வாய்க்குள் முணுமுணுத்தார் .

மதுவிற்கு ஏனோ ரவியின் அண்ணியின் அந்த செயல் அச்சமயத்தில் மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்தது இருந்தாலும் ஷர்மா சொன்னதுபோல் ரவியை ஏதாவது செய்திருப்பானோ என்ற பயத்தில் அக்கா என்று அழைத்தாள்.

என்ன மது என்று கேட்டார்.

இல்ல இன்னும் உங்க கொழுந்தனார் ஏன் வரல...அவர்ட பேசுனீங்களா என்று கேட்டாள்.

அய்யோ சொல்ல மறந்துட்டேன் பாத்தியா அதை சொல்லதான் மேல வந்ததே அந்த பாம்பு கண்ணனைப் பார்த்ததும் அப்படியே மறந்துட்டேன்.

இப்பதான் ஹாஸ்பிடல் இருந்து ஃபோன் பண்ணி பேசினோம். ரவி கிளம்பிட்டானாம் ஃப்ளைட் கிடைச்சா எப்படியும் இன்னைக்கு நைட்டு இல்லனா நாளைக்கு வந்திடுவானாம் உன்கிட்ட மொதல்ல இத சொல்ல சொன்னான் சொல்லிட்டேன் சரி குழந்தை தூங்கறா நீயும் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ அவ முடிச்சிட்டா அதுக்கு அப்புறம் உன்னை தூங்க விட மாட்டா நான் வெளிய இருக்கேன் என்று கூறியபடி சென்றார்.

எப்படி இருந்தாலும் இனி கணவனை கண்முன் காணும் வரை மதுமதியால் கண்டிப்பாக கண்ணயர முடியாது கணவன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் .

சுகப் பிரசவம் என்பதால் மறுநாளே அவளை வீட்டிற்கு அனுப்பிவிட அதன்பின் ஷர்மாவால் ரவியின் வீட்டில் இருக்க முடியவில்லை எல்லோர் முன்பும் குழந்தையை தூக்கி மதுப்பொண்ணு என்று கொஞ்சி விட்டு குழந்தையை கொடுத்துவிட்டு அங்கிருந்து டெல்லி திரும்பினார் .

அவர் டெல்லிக்கு செல்லவும் இங்கே ரவி வரவும் சரியாக இருந்தது .

மதுவுக்கு அவரைக் கண்டதுமே சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை . கூட்டுக் குடும்பம் என்பதால் இருவரின் உணர்ச்சியையும் எல்லோர் முன்பும் காட்டமுடியவில்லை தனிமை என்பது மிக அரிதாகவே கிடைத்தது குழந்தையை பார்க்க ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கொண்டே இருந்ததால் இருவராலும் நேரடியாக எதுவுமே பேசிக் கொள்ள முடியவில்லை.



கிடைத்த நேரத்தில் ஷர்மாவை பற்றி கூறலாம் என்று நினைத்தால் எங்கே அவனைத்தேடி டெல்லி சென்று தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று வாயை மூடிக்கொண்டு எதுவும் கூறவில்லை.

ஒரு வாரம் வரை உடன் இருந்தவர் குழந்தைக்கு நேத்ரா என பெயர் சூட்டி விட்டு மீண்டும் டெல்லி சென்று விட்டார் மனமே இல்லாமல் அவரை அனுப்பி வைத்த மது அடுத்த முறை அவர் வரும் நாளுக்காக மனதில் சிறு பயத்துடன் காத்திருந்தாள்.

அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக ரவியை டெல்லி அனுப்பக்கூடாது என்று காத்திருக்க வந்தவர் பிடிவாதமாக மதுவை டெல்லி வரச்சொல்லி சண்டையிட்டார்.

இருவரின் வாக்குவாதங்களும் முற்ற ஆரம்பிக்கவும் வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுலபமான ஒரு முடிவை எடுத்தனர்.

ரவிக்கு வருமானம் கொடுக்ககூடிய தொழில்கள் அனைத்தும் டெல்லியில் இருப்பதால் அவரால் அதை எல்லாம் விட்டு விட்டு இங்கு நிரந்தரமாக தங்க முடியாது.

மதுவிற்கு இந்த ஊரை தவிர வேறு எந்த ஊரும் பிடிக்கவில்லை முக்கியமாக டெல்லியின் சீதோசனம் மதுவிற்கு சுத்தமாக ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் மதுவையும் அங்கு அனுப்ப முடியாது
அதனால் ரவி மாதம் ஒரு முறையோ இல்லை என்றால் இரு வாரத்திற்கு ஒருமுறையோ வந்து பார்த்து விட்டுச் செல்லட்டும் என்று கூறினார்கள்.

பெரியவர்கள் கூறியது ஒருவழியாக சிறியவர்கள் இருவருக்கும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்ததால் சரி என தலையசைத்தனர்.

மதுவை அவரின் வீட்டில் குடும்பத்தினரின் பொறுப்பில் விட்டுவிட்டு டெல்லி பயணித்தார் அங்கே விமானம் ஏறினால் மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் இங்கே வந்துவிடலாம் அதனால் மது இங்கே இருப்பது பெரிய விஷயமாக ரவிக்கு தெரியவில்லை. அவரின் வருமானமும் லட்சக்கணக்கில் இருப்பதால் சில ஆயிரங்கள் கொடுத்து விமான பயணம் மேற்கொள்வதும் அவருக்கு பெரியதொரு இழப்பாகும் தோன்றவில்லை.

ஆனால் மதுவில் மனதில் மட்டும் எப்பொழுதுமே ஒரு சிறு நெருடல் இருக்கும் ஷர்மா தன் மீது இருக்கும் சபலத்தில் தனது கணவரை ஏதேனும் செய்து விடுவானோ என்று அவ்வப்போது ஜாடைமாடையாக ஷர்மா ரவியிடம் எப்படிப் பழகுகிறார் என்று கணவனிடம் மறைமுகமாக விசாரிப்பாள்.

அவரும் ஷர்மாவைப் பற்றி மிக உயர்வாக கூறுவாறே தவிர என்றுமே கீழிறக்கி பேசியதே இல்லை அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு விஷயம் மதுவிற்கு உறுதியாக தெரிந்தது.

ஷர்மா எந்த அளவிற்கு தன்மீது சபலப்பட்டு இருக்கிறானோ அதே அளவிற்கு ரவியின் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான்…அவனால் ரவிக்கு என்றுமே ஆபத்து வரப்போவதில்லை... மற்றவர்களாலும் ரவிக்கு ஆபத்து வர விடமாட்டான்
ரவியை வைத்து தன்னை மிரட்டி அவனின் காரியத்தை சாதிக்க நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு சற்று பயம் தெளிந்தது.

ரவியின் குடும்பம் மதுவை சுற்றி இருக்கும் வரை ரவியை தவிர வேறு யாராலும் தன்னை நெருங்க முடியாது என்பதும் தெளிவாகத் தெரிந்ததால் தைரியமாக உலா வர ஆரம்பித்தாள்.

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
21

ரவியின் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால் மதுவின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு குறையும் இல்லை.

அந்த வீட்டில் வெளியிலிருந்து வரும் நடேசனை தவிர வேறு யாராலும் மதுவை சந்திக்க முடியாது.

வெளி ஆண்களுக்கு அந்த வீட்டிற்குள் இடமே கிடையாது ஏது பேசுவது என்றாலும் கேட்டின் அருகே ஒரு மண்டபம் போல் கட்டியிருப்பார்கள் அங்கேயே வைத்து பேசி அனுப்பி விடுவார்கள் அந்த வீட்டு பெண்கள் யாரையுமே வெளியே பார்க்கவே முடியாது வந்து இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால்கூட பணிப்பெண்கள் தான் கொண்டு வந்து கொடுப்பார்கள் உறவினர்கள் என்றால் நேராக வீட்டுக்கு செல்லலாம்…

அதனால் ஷர்மா எப்பொழுதாவது ரவியை ஏமாற்றிவிட்டு கோவை வந்தால் கூட மதுவை சந்திக்க முடியாது ரவியுடன் ஒட்டிக் கொண்டு வந்தாலும் ஷர்மாவை உறவினர்கள் தங்கும் இடத்தில் வேண்டுமானால் தங்க விடுவார்களே தவிர வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த விஷயம் ஆரம்பத்திலேயே ஷர்மாவிற்கு தெரியும் என்பதால் முடிந்த அளவு ரவியின் வீட்டிற்கு வருவதை தடுத்தார் .

இங்கு ரவியின் தாய் தந்தை இருக்கும் வரை மதுவிற்கு என்ற பிரச்சினையும் இல்லாமல் இருந்தது சிறு அசௌகரியம் ரவி கண்ட நேரத்தில் வருவது குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று சலிப்பை கொடுத்தது .

அவன் நினைத்தால் வாரம் ஒருமுறை இல்லை என்றால் இரு வாரங்களுக்கு ஒருமுறை கூட வருவார் அவன் வரும் நாளில் அனைவருமே தூங்காமல் விழித்திருக்க சில நேரத்தில் இது பற்றி அவ்வப்போது மதுவிடம் வீட்டு பெண்கள் முனுமுனுப்பார்கள்.

மது அவளின் பாதுகாப்பு கருதி இது எதையுமே காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்.

ரவியின் அத்தைக்கு மதுவை சுத்தமாக பிடிக்காது தன் பெண் வாழ வேண்டிய வாழ்க்கையை இந்த மது வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று அவருக்கு சிறு எரிச்சல்.

என்னதான் மூத்த அண்ணனின் பிள்ளைகளுக்கு தனது இரண்டு மகள்களை கட்டிக் கொடுத்தாலும் இரண்டாவது மகளின் வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை காரணம் மருமகன் அப்படிபட்டவன் பொறுப்பில்லாதவன்..சுறுசுறுப்பு எதையும் செய்யமாட்டான்...சோம்பேறி... மூத்த மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது இரண்டாவது மகளை ரவி திருமணம் செய்திருந்தால் இளைய மகள் இப்பொழுது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க மாட்டாள்.

எல்லாம் இருந்தும் கூட தனது மகளுக்கு நிம்மதி இல்லையே என்ற வருத்தம் இருக்கும் அதை அவ்வப்போது மதுவிடம் காண்பிப்பார் .
ஒரு சாலை விபத்தில் ரவியின் தாய் தந்தை இருவருமே இறந்து விட இப்பொழுது மொத்த குடும்பத்திற்கும் மதுவும் நேத்ராவும் அந்நியமாக தெரிந்தார்கள்.

கணவரின் முன்பு குடும்பத்தார் ஒருமாதிரியும் அவர் இல்லாத சமயத்தில் வேறு மாதிரியும் நடத்த தொடங்கினர். தனியாக செல்லலாம் என்று நினைத்த அதே சமயத்தில் தந்தை நடேசன் உடல்நலம் பாதிக்கப்பட அவரை கவனித்துக் கொள்வதற்க்காக தந்தையுடன் சென்று தங்கிக் கொள்வதாக ரவியிடம் கூறினாள்.

ரவிக்கும் அதில் உடன்பாடில்லை.
தந்தையுடன் நீ சென்று தங்கிக் கொண்டால் இந்த ஊர் கணவன் கைவிட்ட பெண் என்று சொல்லும் அதனால் நீ நமது தோப்பு வீட்டில் சென்று தங்கி அங்கே உனது தந்தையை வைத்து பார்த்துக்கொண்டால் வயது முதிர்ந்த மாமனாரை மருமகன் அவனது வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறான் என்ற நற்பெயராவது எனக்கு கிடைக்கும் என்று கூறினார்.

மதுவிற்கு அது சரியென்று பட தனது மகளை அழைத்துக் கொண்டு அங்கே குடி புகுந்தாள். மகளின் கவனிப்பால் நடேசன் விரைவிலேயே எழுந்து அமர்ந்து மகளுக்கு துணையாக வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.

ரவி அடிக்கடி வந்து செல்ல... செல்போன் பரவலாக பயன்பாட்டில் இருந்ததால் அவளுக்கும் ரவி ஒன்க்றை வாங்கித்தந்திருந்தார்.
இது மிகப்பெரிய உதவியாக இருந்தது மதுவிற்கு.

தந்தையும் மகளும் உடனிருக்க எப்பொழுதுமே பணியாட்கள் வந்து செல்ல..கணவன் நாளுக்கு இருமுறை அழைத்துப்பேச மதுவிற்கு வாழ்க்கை நன்றாகவே சென்றது.

ஷர்மா கடந்த ஆறு ஆண்டுகளில் அவ்வப்போது ரவியின் மேல் தேவையில்லாத பணிச்சுமையை சுமத்திவிட்டு இடைப்பட்ட நேரத்தில் மதுவை சந்திக்க வருவார்.ஆனால்
அவரால் மதுவை தனிமையில் சந்திக்கவும்

முடியவில்லை.ஃமொபைலில் அழைக்கலாம் என்றால் அறியாத எண்ணை அவள் அட்டெர்ன் செய்வதே மாட்டாள்.

மதுவிடம் தனியாகப் பேசவும் முடியவில்லை...


அவளைச் சுற்றி முதலில் ரவியின் குடும்பத்தார் இப்பொழுது மதுவின் தந்தை என்ன செய்வது அவளை எப்படி சந்திப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் முருகனை சந்தித்தார்.

முருகன் மது பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அதே பள்ளியில் இரண்டு ஆண்டுகள் முன்பாக படித்தவன் அவன் காலேஜ் முதலாம் ஆண்டு செல்லும் பொழுது மது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அவளின் பின்னாலே அவளுக்கே தெரியாமல் சுற்ற இதை ஒருநாள் கவனித்த நடேசன் அவருக்குத் தெரிந்த ஒரு போலீஸ் நண்பருடன் இதைப் பகிர்ந்து கொண்டார் .


அவர் முருகனை அழைத்து மிரட்ட முருகன் அடங்கவில்லை..சினிமாவின் தாக்காத்தால் பல பஞ்ச் டயலாக்களை அவரிடம் பேச இவனை வெளியே விட்டால் பெண்ணிற்கு பாதுகாப்பில்லை என்று நினைத்தவர்
முருகனின் மீது ஒரு பொய் வழக்கைப் போட்டு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து விட்டார்.

வெளியே வந்த முருகனுக்கு வேலை இல்லை திருமணம் செய்துகொள்ள பெண் கொடுக்கவில்லை அந்த ஆத்திரத்தில் மதுவை பழிவாங்குவதற்காக காத்துக்கொண்டிருந்தான்.

மது மட்டும் திருமணம் செய்து கொண்டு அவள் குடும்பத்தாருடன் சவுகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவளை ஒருதலையாக காதலித்ததை தவிர நான் என்ன செய்தேன் என்ற கோபம் அவனுக்கு நிறையவே இருந்தது

அவன் விடுதலையாகி வெளியே வரும்பொழுது மது ரவியின் வீட்டில் தங்கி இருந்ததால் அவனால் மதுவின் பக்கம் நெருங்க கூட முடியவில்லை .

இப்பொழுது தோப்பு வீடு வந்த பிறகு அவளை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வகையில் அவளை சந்திக்க முயற்சி செய்வான்.

இதை எல்லாவற்றையுமே மதுவின் தந்தை தடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில்தான் முருகன் ஒருமுறை அவள் வீட்டைச் சுற்றியபடி வர மில்லை பார்ப்பதாக சாக்கு வைத்துக்கொண்டு வந்த ஷர்மாவின் கண்ணில் பட்டான் முருகன் .

அவனை பிடித்து மில்லில் வேலை செய்யும் ஆட்களை வைத்து சிறப்பாக கவனிக்க வலி பொறுக்க முடியாமல் எல்லா உண்மையையும் ஷர்மாவிடம் கூறினான்.

இப்பொழுது ஷர்மாவிற்கு முருகன் மீது பயங்கர கோபம் எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னுடைய மதுவை பழிவாங்குவதற்காக சுற்றி சுற்றி வந்திருப்பான் என்றவர் வேலை செய்யும் ஆட்களிடம் இவனைக் கொன்று வீசி விடுங்கள் என்று கூறினார்.

இதை கேட்ட முருகன் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தான் என்னை மன்னிச்சிடுங்க நான் மதுவுக்கு எதிரா எந்த வேலையும் செய்ய மாட்டேன் நான் எங்காவது போய் பிழைத்துக் கொள்கிறேன் என்று கெஞ்ச அப்பொழுதுதான் ஷர்மாவிற்கு ஒரு யோசனை உதித்தது.

உன்னை உயிரோடு விடுகிறேன் அதற்கு பதிலாக எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டார் என்ன என்று கேட்க மதுவின் வீட்டில் உன்னை வேலைக்கு சேர்த்து விடுகிறேன் நீ அங்க போனதும் எனக்காக வேலை செய்வாயா என்று கேட்க எதைப்பற்றியும் யோசிக்காத முருகன் முதலாளி என்று அப்போதே காலில் விழுந்து விட்டான்.

பிறகு அவரின் திட்டப்படி வேலையாட்கள் மூலம் மில்லிற்குள் நுழைந்த முருகன் மதுவின் கண்களில் படும்படி அவளின் முன் சென்றான் அவனைக் கண்டதும் முதலில் அடையாளம் தெரியாமல் நின்ற மதுவிடம் அடையாளப்படுத்திக் கொண்டு அவனைப் பற்றியும் அவனின் சிறை வாழ்க்கையை பற்றியும் கண்ணீர் மல்க கூறினான்.

தன்னால்தான் அவனுடைய வாழ்க்கையே பறி போய்விட்டது என்ற குற்ற உணர்ச்சியில் ஒரு நாள் முழுவதும் அழுதவள் உடனடியாக அவனுக்கு மில்லை நிர்வகிக்கும் வேலையும் போட்டு கொடுத்தாள்.

நடேசன் மகளை அழைத்து புத்தி கூற உங்களோட அவசர புத்தியால் ஒருத்தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறானேபா...அவனுக்கு நானும் வேலை தரலனா எப்படி என்று அவரின் வாயை அடைத்து விட்டாள்


இப்பொழுது நேத்ரா பள்ளி செல்ல தொடங்கிவிட்டார் அவளுக்கு ஆறு வயது... உள்ளே வந்த முருகன் முதல் வேலையாக செய்தது நேத்ரா விடம் நட்பு பாராட்டியது... அவள் குழந்தை என்பதால் பெரியதாக அவனிடம் ஒட்டவில்லை...


அடுத்ததாக கண்கொத்திப் பாம்பாக தன் பின்னாலேயே இரு கண்களையும் வைத்தபடி சுற்றும் நடேசனை யாரும் இல்லாத ஒரு நாளில் தூங்கிகொண்டிருந்த அவரை தலையணையை போட்டு அமுத்தி கொன்றுவிட்டு இறக்கை மரணம் எய்தி விட்டதாக அனைவரையும் நம்பவைத்து மதுவை தனிமைப் படுத்தியது.

வேலை செய்யும் அத்தனை பேர் முன்பும் மதுவிற்கும் அவனுக்கும் ஒரு தவறான உறவு இருப்பது போல் சித்தரித்தது…

இடைக்கிடையே சர்மாவிடம் இவளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் கூறுவது. ரவி இங்கு வந்து சென்ற நாட்களில் அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே கண் கொத்தி பாம்பாக கவனித்து ஷர்மாவிற்கு அறிக்கை சேமிப்பது இப்பொழுது ஷர்மாவால் சுலபமாக மில்லை காரணம் காட்டி எளிதாக வந்து செல்ல முடிகிறது…

மீண்டும் மதுவில் மனதிற்குள் பயபந்து உருளத் தொடங்கியது முருகன் ஒரு பக்கம் ஏதோ ஒரு அசௌகரியமான உணர்வை கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் இங்கு ஷர்மாவின் வரவு ஒரு வித பயத்தை கொடுத்தது.அதுவும் நேத்ராவுடன் அவரின் நெருக்கம் அதிக அளவு பயத்தை விளைவித்தது.

இங்கு வந்தால் வீட்டிலெல்லாம் தங்க மாட்டார் ஹோட்டலில்தான் தங்குவார் இருக்கும் ஒரு நாட்களில் மீறிப் போனால் ஒரு மணி நேரம் மட்டுமே மதுவை சந்திப்பார் அந்த ஒரு மணி நேரம்மே போதும் அவருக்கு . அடுத்த முறை அவர் வரும் வரை அதனின் தாக்கம்
மதுவின் மனதில் இருக்கும் அதுபோல் ஏதாவது ஒன்றை அவரின் பார்வையாலும் செய்கையாலும் ஒன்றை செய்து விட்டு டெல்லி கிளம்பி விடுவார்.

அவர் அழைக்கும்...மது…..மதுப் பொண்ணே…..என்ற வார்த்தையே போதும் மதுவிற்கு அதில் அப்படி ஒடி வசீகரம் இருக்கும்.


ஆனால் ஷர்மா இங்கு வந்த உடனேயே ரவிக்கு ஃகால் செய்து கூறிவிடுவாள்… அதனால் ரவியும் உடனே அழைத்து ஷர்மாவிடம் பேச இங்கே வேலை செய்யும் ஆட்கள் நிறைய பேர் ரவியின் உறவினர்கள் என்பதால் அவர்களும் ஊரிலிருந்து ரவியின் நண்பன் வந்திருக்கிறான் என்று ஷர்மாவை சுற்றியே வருவார்கள் அதனால் அவ்வளவு எளிதாக அவனிடம் மாட்டிக் கொள்வது இல்லை .

ஆனால் நேத்ராவுக்கு எதுவுமே புரிவதில்லை ஷர்மா வந்தாலே அவருடன் சென்று ஒட்டிக்கொள்வாள்.

அவரும் மதுப்போண்ணு என்று அழைத்தபடியே குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பிப்பார்..

சில நாட்களாக ரவியின் குடும்பத்தினர் இவளை விட்டு விலக ஆரம்பித்தனர் வேலை செய்யும் பெண்கள் கூட சுற்றி நின்றபடி ஏதாவது குசுகுசுவென பேசுவது இவளைக் கண்டால் பிரிந்து சென்றுவிடுவார்கள் அவர்களின் பார்வையில் ஒருவித நக்கலும் கேலியும் இருந்தது மதுமதியால் இதை நன்கு உணரமுடிந்தது என்ன என்றுதான் புரியவில்லை...எல்லாம் முருகனின் திருவிளையாடல்.

மது காலையில் நேத்ராவை பள்ளியில் விட்டுவிட்டு மாலை சென்று அழைத்துக்கொள்வாள்.

வாகனத்தின் மீது இருந்து ஆர்வத்தால் ரவி வரும்பொழுதெல்லாம் அவளுக்கு நான்கு சக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொடுத்தார்.

இப்பொழுது சுலபமாக மகளை காரில் சென்று விடுவதும் மாலையில் அழைத்து வருவதுமாக இருந்தாள். ஷர்மா வந்த நாட்களில் வீட்டிற்குச் செல்ல பயந்து காரிலேயே எங்காவது சுற்றிவிட்டு மாலை நேத்ராவை பள்ளியில் இருந்து கூட்டி வருவாள்.


இப்படியாக ஒருநாள் மகளை அழைக்க செல்லும் பொழுது மகள் பள்ளியில் இல்லை. பதறி அடித்தபடி விசாரிக்க உறவினர் என்று ஒருவர் அழைத்துச் சென்று விட்டதாக கூறினார் .

உறவினர் என்று யார் வந்தாலும் மகளை அனுப்பி விடுவதா என்று பயங்கரமாக சண்டையிட்ட மதுமதி
எப்படி இருப்பார் என்று அடையாளம் கேட்டாள்.

நல்ல கலரா கண்ணு பாம்பு மாதிரி இருந்தது என்று கூறவும் நெஞ்சில் கைவைத்தவள் நேராகப் வீட்டுக்கு ஓடிவர மகளை மடியில் வைத்தபடி ஷர்மா மதுப் பொண்ணு அங்கிளுக்கு ஒரு முத்தம் கொடு என்று மடியில் தூக்கி வைத்தபடி கொஞ்சிக் கொண்டிருந்தார்.

நேத்ராவும் உடனே அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க அவர் இப்பொழுது அங்கிள் உனக்கு தரேன் என்று மதுவைப்பார்த்ததும் இரு கன்னத்தில் மாறி மாறி கொடுத்துவிட்டு இப்பொழுது நீ அங்கிளுக்கு இதே போல கொடு என்று கூறவும் அறியா சிறுமி அதேபோல் செய்ய..

ஓடிவந்த மகளை அவரிடம் இருந்து பிடுங்கி தன்னருகே நிறுத்திக் கொண்டவள் முதல் முறையாக அவரை எதிர்க்கத் தொடங்கினாள். இவ்வளவு தான் உனக்கு மரியாதை
இத்தனை நாளா உன்னுடைய வக்கிரத்தை என்கிட்ட காமிச்சுக்கிட்டு இருந்த ஆனா இப்போ என் மக கிட்டயும் காமிக்க தொடங்கிட்டியா வெளியே போடா…

என்ன பேபி மரியாதை இல்லாம பேசுற குழந்தை பயப்படறா பாரு நீங்க வாடி செல்லம் என்று நேத்ராவை அவரின் பக்கம் இழுக்க மதுவின் கோபத்தைப் பார்த்து பயந்து நேத்ரா ஷர்மாவிடம் ஒட்டிக்கொண்டாள்.

நேத்ரா இப்படிவா என்று குழந்தையை கோபமாக கைபிடித்து இழுக்க அவள் சக்ஷஷர்மாவுடன் ஒன்றிய படி வரமாட்டேன் என்று அழத்தொடங்கினாள் .

கோபம் கொண்ட மது கொஞ்சமும் யோசிக்காமல் ஷர்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் பிறகு அவரின் சட்டையை கொத்தாக இழுத்து பிடித்தவள்

எப்போ உன்னோட பார்வை என்னோட பொண்ணு மேலயும் வந்துடுச்சோ இதுக்கு அப்புறம் உன்னை நான் விட்டு வைப்பேனு நினைக்காதே நீ ரவியை கொன்னு போட்டா கூட எனக்கு பரவால்ல எனக்கு என் பொண்ணு முக்கியம் என்று கூறியவள் உடனடியாக அவனை விடுவித்து விட்டு ரவியின் நம்பருக்கு ஃகால் செய்யத் தொடங்கினாள்.

பொறுமையாய் இரு மது என்னன்னு ரவி கிட்ட சொல்ல போற அவன் கேட்பானே அப்போ ஏன் இவ்வளவு நாளா நீ என்கிட்ட சொல்லலனு அதுக்கு என்ன பதில் சொல்லுவ…

ச்சீ வாயை முடு என்றபடி மகளை இழுத்து கைக்குள் வைத்துக்கொண்டவள் ச்சே நேரம் கெட்ட நேரத்தில் இந்த நெட்வொர்க் வேற என்று மீண்டும் ரவிக்கு முயற்சிக்க தொடங்கினார்.

ரவியை கொன்னு போட்டா கூட பரவால்ல னு நீ துணிஞ்சிட்ட ஒருவேளை உன் பொண்ணை நான் தூக்கிட்டு போயிட்டா உன் கண்ணிலேயே காட்டாம அவளை நான் என்னோடவே வச்சுக்கிட்டா என்ன பண்ணுவ .

அப்பவும் செத்துப்போன உன் புருஷனுக்கு போன் பண்ணுவியா மது என்று கூறவுப் மொபைலை அணைத்துவிட்டு குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.


இப்போது கூட என்னால உன் கிட்ட அத்துமீறி முடியும்... ஆனா நான் பண்ண மாட்டேன் இப்போ உனக்கு ஒரே சாய்ஸ் தான் நீயா என்கிட்ட வரணும் இல்லனா உன் பொண்ணை தூக்கிட்டு போயிடுவேன்... ஒரு ஃபோன் கால் போதும் அங்க ரவியை முடிச்சிடு வாங்க என்று கண்கள் மின்ன கூற

எதுவும் பேசாமல் நேத்ராவை இழுத்துச்சென்று அறைக்குள் பூட்டிய மது...


என்னடா சொன்ன திருப்பி சொல்லு... அத்து மீறுவியா... மீறுடா பாக்கலாம் நீ ஆம்பளை தான வாடா...என்று மிரட்டியபடியே அருகில் சென்றவள்... டெல்லியில உன்னை பாத்து பயந்து ஒடுங்கின மது இல்லடா... இவ வேற மது... நானா உன்னை தேடி வரணுமா...
என் வீட்டு நாய் கூட உன் பின்னாடி வராதுடா நான் வருவேனா ... இப்போ நீயா வெளிய போகல செருப்பால அடிச்சு உன்னை விரட்டுவேன் பாக்குறியா என்று அவள் காலில் அணிந்திருந்த காலணியை கழட்ட…


மது கோபத்தில வார்த்தையை விடாதே பின்விளைவுகள் ரொம்ப பயங்கரமா இருக்கும்…

பத்து வருஷமா ஒரு மண்ணும் உன்னால பண்ண முடியல நீ மிரட்டறியா வெளியே போடா…


ப்ளீஸ் மது உன் வாயால என்னை போடா போடா ன்னு சொல்லாதே எனக்கு ரொம்ப கோபம் வருது அப்புறமா நான் என்ன வேணாலும் செய்வேன்…

முடிஞ்சதை செய் வெளிய போடா என்று வெளியே தள்ளி கதவை பூட்டியவள் முதல் வேலையாக நேத்ராவை அவனிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்.

நேத்ரா ஐந்தாம் வகுப்பு முடிக்கவும் யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் சென்று ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்து விட்டு அவளின் பாதுகாப்பை உறுதி செய்தாள்.


நேத்ரா ஊரில் இல்லாததை முருகன் மூலமாக அறிந்து கொண்ட ஷர்மா ஆவேசமாக மதுவின் முன்பு வந்து நின்றார்…

வார விடுமுறை என்பதால் வீட்டு வேலைக்கும் தோட்டத்து வேலைக்கும் யாருமே வரவில்லை சாவகாசமாக வெளியில் ஒரு சேரை போட்டு அமர்ந்தபடி டீ குடித்துக்கொண்டிருந்த மதுவின் முன் நின்ற ஷர்மா

எவ்வளவு தைரியம் உனக்கு மதுப்பொண்ணை எனக்கு தெரியாம ஒளிச்சி வச்சிருக்க ‌.. என்று குற்றம் சாட்டினார்.


அவ உன் மதுப் பொண்ணு இல்லை என்னோட நேத்ரா உன்ன மாதிரி சாக்கடைக எல்லாம் அவளை தொடறதை நான் விரும்பல என்று சாதாரணமாக கூறினாள்.

இது யாரை சாக்கடைனு சொல்லற...அன்னைக்கு ஆம்பளையா ‌..நாய்னு பேசின.. இன்னைக்கு சாக்கடைன்னு சொல்ற... நல்லா கேட்டுக்கோ எந்த பொண்ணை நான் சாக்கடை தொடக்கூடாதுனு ஒளிச்சி வெச்சியோ அதே பெண்ணை இழுத்துட்டுப் போயி என் வேலைக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி நாய்க்கு சோறு போடுற மாதிரி ஒரு ரூமுக்குள் கட்டி போட்டு சோறு போடுவேன் என்று சவால் விட்டார்.


ம்ம்...பாக்கலாம் கிளம்பு…இன்று மட்டும் அவரை உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

பின்னால் வந்த ஷர்மா மது நீ மேலும் மேலும் என்னை ரொம்ப அவமானப்படுத்தற... இதுக்கெல்லாம் நீ ரொம்ப அனுப்பவிப்ப…

இப்போ கூட ஒண்ணும் ஆயிடல நீ என்னோட வந்திடு நான் எல்லாத்தையும் மறந்துட்டு
உன்னை நல்லா பாத்துக்கறேன் நம்ம மதுப்பொண்ணு வளர்ந்ததும் பெரிய இடத்துல கட்டிக்கொடுக்கலாம்…வா நாம இப்பவே போகலாம் என்று அவளின் கைகளை பிடிக்க…

யோசிக்காமல் அவரது கன்னத்தில் பளாரென்று ஒரு அறை வைத்தவள் நீ என்ன எரும மாடா எத்தனை தடவை உனக்கு சொல்றது கொஞ்சம் கூட உரைக்காதா…

உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் மரத்துப் போச்சு உனக்கு கொஞ்சம் கூட சொரணையே வரல…வேற என்னவோ சொன்னியே நம்ம மதுப்பொண்ணா வாய ஒடச்சிடுவேன் அவ எனக்கும் ரவிக்கும் பிறந்த பொண்ணு

எங்க பொண்ணு இன்னொருமுறை உன் பொண்ணுனு சொன்னே நல்லா இருக்காது என்று கூற முதல்முறையாக அவள் பேச்சில் ஆத்திரம் கொண்டவர் மதுவின் பின் முடியை இழுத்து பிடித்தவர்…

அவ என் பொண்ணுதான்... என் மதுப் பொண்ணு தான் என் மதுவுக்கு தான் என்னை பிடிக்கல ஆனால் என் மதுப்பெண்ணுக்கு என்னை பிடிக்கும்...அவளை எப்படியாவது என் வீட்டுக்கு அழைச்சிட்டு போவேன்…

அதுக்கு அப்புறமா மது பொண்ணுக்காக என் மது என்னை தேடி வருவா மதுமதி ரவிச்சந்திரன் என்கிற அவப்பெயரை தூக்கி வீசிட்டு மதுமதி புனித்ஷர்மாவா மாறுவா என்று சவால் விட்டார்.

கடவுளே நீ ஏன் இப்படி இருக்க நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டா சொல்லு நானே ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ஏன் இப்படி என்னைச் சித்திரவதை படுத்துற .

ஒவ்வொரு முறையும் புருஷன் உயிருக்கு ஏதாவது ஆயிடுமோ பொண்ணுக்கு ஏதாவது ஆயிடுமோ இல்ல எனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயந்து பயந்து ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்கேன் பேசாம எனக்கொன்னு போட்டுட்டு போயிடு ஷர்மா நான் நிம்மதியா போய் சேர்ந்திடறேன்.

இப்படி தினம் தினம் என்னை பயமுறுத்தி சாவடிக்காத இந்த நிமிஷம் வரைக்கும் ரவி கிட்ட நான் உன்னை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல அவர் நட்பை மதிக்கிறாரு

அதுல ஒரு பாதி அளவாவது நீ அந்த நட்புக்கு மரியாதை குடு என்னை கொஞ்சம் நல்லவிதமா பாரு ப்ளீஸ்...என்று கண்களில் கண்ணீருடன் கெஞ்சினாள்.

அவளின் கண்ணீரைக் கண்டதும் அவளின் முடியை விட்டவர் சாரி பேபி ...சாரி யூ டோண்ட் க்ரை...என்று மீண்டும் மீண்டும் கூறியவர் வித்தியாசமாக நடக்கத் தொடங்கி னார்.

முதல் முறையாக மதுவிற்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது ஷர்மா ஒரு மனநோயாளி பைத்தியக்காரன் சைக்கோ இனி இவனிடம் இருந்து தனது மகளை, கணவனை, தன்னை... நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் இவனை பேசுவதாலோ அடிப்பதாலோ எதுவுமே நடக்காது என்று புரிந்து கொண்டவள்….அவனின் போக்கின் படியே நடக்கலாம் என தீர்மானித்தாள்.

ஷர்மா இப்போ நீ இங்க இருந்து போ நான் இன்னும் கொஞ்சநாள்ல வரேன் அதுவரை என்னை தொந்தரவு செய்யாதே என்றாள்.

என்ன மது சொல்ற உண்மையாவா இன்னும் கொஞ்ச நாள்ல நீ என்கிட்ட வரப் போறியா…?

ஆமா ஷர்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ ரொம்ப அழகா இருக்க... இந்த கண்ண பார்த்தா உன்ன பிடிக்கலைன்னு யாருமே சொல்ல மாட்டாங்க இவ்வளவு நாளாக நான் தான் உன்னை சரியா புரிஞ்சுக்காம ஏதேதோ கண்டபடி பேசிட்டேன் மதுப் பொண்ணுக்கு மட்டுமில்ல மதுவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் இப்போ இங்கிருந்து போ என்று அனுப்பி வைத்தாள்…

ஆனாலும் மது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வப்போது முருகன் ஷர்மாவிற்கு தெரியப் படுத்திக் கொண்டே இருந்தான்.

மது வருவாள் என்ற நம்பிக்கையில் ஷர்மாவும் டெல்லியிலேயே சிலகாலம் இருந்து விட்டார் ஆனால் அவரால் நேத்ராவை பார்க்காமல் இருக்க முடியவில்லை அவள் எங்கே இருக்கிறாள் என்று முருகன் மூலம் மோப்பம் பிடித்தவர் நேராக சென்று அவளைப் பார்த்து விட்டார்.

அது மட்டுமில்லாமல் ரவி இடமும் கூற ரவி அதை எதார்த்தமாக மதுவிடம் கூற இதை இப்படியே வளர விடக்கூடாது என்ற மது உடனடியாக மகளை பள்ளியில் இருந்து மாற்ற வேண்டும் என நினைத்தாள்.

அந்த சமயத்தில் அபியின் குடும்பத்துடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது அபியின் தாய் தந்தை மூலமாக அவர்களின் உறவினர் ஒருவரின் பள்ளியில் மதுவை சேர்த்து அப்படியே வேறு ஊருக்கு அனுப்பி வைத்தாள் அதை அறிந்ததும் ரவி மீண்டும் அவளிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.

அபியின் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பழக்கத்திற்கு பிறகு மதுவின் மனதில் சற்று தைரியம் பிறந்தது தனக்காக யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அபியின் குடும்பம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

விரைவிலேயே முருகனின் கயமைத்தனத்தை அறிந்துகொண்டவள் வேலை செய்யும் ஆட்களை வைத்து அவனை விரட்டி அடித்தாள் அடுத்த முறை உன்னை கண்டால் கண்டிப்பாக கொன்றுவிடுவேன் என்று மிரட்டி துரத்திவிட முருகன் எங்கே சென்றான் என்றே தெரியவில்லை... ஆனால் எதையும் மறைக்காமல் ரவியிடம் கூறி விடுவாள்.

தைரியம் பெற்றவள் இனி எதுவாக இருந்தாலும் கணவருடன் சேர்ந்து ஷர்மாவை எதிர்கொள்ளலாம் என்று நினைத்துவிட்டு ஜாடையாக ரவியிடம் நானும் உங்களுடன் வருகிறேன் என்று முதல் முறை வாய் திறந்தாள்‌

சந்தோஷமடைந்த ரவி ஷர்மாவிடம் கூற ஷர்மாவும் டெல்லியில் ஆடம்பர வீட்டை கட்டினார் மதுவிற்காக பார்த்து பார்த்து கட்ட இதை அறிந்த மது டெல்லி செல்ல மறுத்துவிட்டாள்.


ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வாருங்கள் உங்களுக்கு நானும் எனது மகனும் வேண்டுமென்றால் நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என்று உறுதியாக கணவரிடம் கூற வேறுவழியின்றி ஒத்துக்கொண்டவர் மகள் பள்ளிப்படிப்பை முடித்த பின் காலேஜ் செல்லும்பொழுது எல்லாரும் சேர்ந்து இருக்கலாம் என்று ஒரு அவசர வாக்குறுதி கொடுத்தார்.

ஷர்மா அந்த நேரத்தில்தான் ரோகினியின் மூலம் திட்டமிட்ட ஆரம்பித்தார் ரவி ரோகிணிவசம் விழுந்துவிட்டால் மது தன்னிடம் வருவதற்கு எந்த இடையூறும் இல்லாது இருக்கும் என்று நினைத்தவர் ரோகினி ட்யூன் செய்ய ரோகினி எவ்வளவோ முயன்றும் ரவியை அவள் வசபடுத்த
முடியவில்லை.

ஷர்மா நேத்ரா படிக்கும் பள்ளியில் ரவிக்கு தெரியாமல் அடிக்கடி சென்று அவளை பார்க்க தொடங்கினார்.

ஏற்கனவே இரண்டு முறை மகளை பள்ளி மாத்தியாச்சு இன்னும் அவனுக்காக பயந்து பள்ளியை மாற்ற முடியாது என்று நினைத்த மது பொறுமை காத்தாள்.

எப்படி இருந்தாலும் தனது மகள் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக இருப்பாள் அவள் பள்ளிப்படிப்பு முடிக்கும் பொழுது தன்னருகில் அழைத்து வந்து நடந்தவற்றை புரியும்படி கூறினால் ஷர்மாவின் பக்கம் திரும்ப மாட்டாள். அவனின் கயமைத்தனம் மகளிடம் செல்லாது என்று உறுதியாக நம்பிய மது நேத்ராவின் பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை காத்திருந்தாள் ஆனால் அங்குதான் மிகப்பெரிய அநியாயம் நடந்தது... தன்னை வந்து பார்க்காத தாய் மிகவும் கெட்டவள் அடிக்கடி வந்து பார்க்கும் ஷர்மா மிகவும் நல்லவர் என்று நம்பிய நேத்ரா ஷர்மா சொன்னது போல அவளுடைய கல்லூரி வாழ்க்கையை டெல்லியில் கழிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டு பள்ளிப்படிப்பு முடியும் கோவை வராமலே டெல்லிக்கு சென்றுவிட்டாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மது மனதளவில் உடைந்துவிட்டாள் இப்போது அவளின் ஒட்டு மொத்த கோபமும் ரவியின் மீது திரும்பியது.

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
22

ரவியை அழைத்து சண்டையிட்டாள் மது...நேத்ராவை என் அனுமதியில்லாமல் எப்படி டெல்லி அழைத்துச் செல்வீர்கள் என்று‌..

நான் கூப்பிடல...ஷர்மா கூப்பிட்டிருக்கான்...உனக்கே தெரியும்ல ஷர்மாவுக்கு அவ மேல அதிக பாசம்... அதான் நான் கண்டுக்கல...பாவம் அவன் ஆசைபட்ட பொண்ணு அவனை கல்யாணம் பண்ணியிருந்தா நம்ம நேத்ரா போல அவனுக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும்... என்றார்.

அய்யோ... நான் என்ன கேக்கறேன்...நீங்க என்ன பேசறீங்க...எனக்கு நேத்ரா இங்க வரனும் அவ்ளோதான்...ஒழுங்கா அவளை கூட்டிட்டு நீங்களும் இங்க வாங்க...உங்க கிட்ட நிறையா பேசனும்...இனி யாருமே அங்க இருக்க வேணாம் கிளம்பிவாங்க என்று கட்டளையிட்டாள்.

விளையாடத மது எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு வர முடியாது... நேத்ரா சேர்ந்திருக்கறது ஒன்னும் சாதாரண காலேஜ் இல்ல...இங்க சீட் வாங்கறதுக்காக உலகம் பூரா காத்திருக்காங்க அதனால நான் வேணா வர்றேன் நேத்ரா படிப்பு முடிச்சி வரட்டும் என்றார்.

எப்படியோ கடைசியாக கணவர் இங்கே வருவதாக ஒத்துக்கொண்டு விட்டார் அவர் வந்து விட்டாலே போதும் ஷர்மாவை பற்றி கூறிவிட்டு மகளை தங்களிடம் வைத்துக்கொள்ளலாம்...பணமும் வேண்டாம்...தனிமையும் வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.


சில மணி நேரத்திலேயே ஷர்மாவிடம் இருந்து மதுவிற்கு அழைப்பு வந்தது அவர் எப்பொழுதுமே மதுவிற்கு அழைத்து ஏதாவது பேசுவார்.

அவரை சமாளிக்கும் பொருட்டு மதுவும் அவருக்குப் பிடித்த மாதிரி பேசி வைப்பாள்.

அப்படி இல்லை என்றால் அவர் நேராக இங்கே கிளம்பி வந்து விடுவார் இங்கே வந்து விட்டால் சமாளிப்பது மிகவும் கடினம் என்று மதுவுக்கு தெரியும் ஒவ்வொரு முறையும் ஷர்மாவை சமாளிப்பது போல் பேசுபவள் இந்த முறை துணிந்து அவரை எதிர்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து விட்டாள்.

மது பேபி ரவி என்கிட்ட என்னென்னமோ உளர்றிட்டு போறான் ரவி உன்னோடவே வந்து தங்கிக்க போறானாம்.

மதுப்பொண்ணு படிப்பு முடிச்சதும் உங்களோட வந்திடுவாளாம்...உண்மையாவா...

என்ன நடக்குது நீ என்னோடுதான வரேன்னு சொல்லிட்டு இருந்த இப்போ என்ன புதுசா ரவியை வர சொல்லிட்டு இருக்க.

அப்படின்னா இத்தனை நாளா என்னை ஏமாத்திட்டு இருக்கியா... நான் ஆசைபட்டது கிடைக்கலனா அந்த பொருள் யாருக்கும் கிடைக்காதது போல செஞ்சிடுவேன் மது…

*****

மது பதில் பேசு…

மனநலம் சரி இல்லாதன் கூட என்னால பேச முடியாது அப்படியே பேசினாலும் உனக்கு என்னால புரிய வைக்க முடியாது... புரிஞ்சிக்கிற சென்ஸ் உன் கிட்ட இல்ல இனிமே நீ எனக்கு கூப்பிடாத கூப்பிட்ட கால் ரெக்கார்ட் பண்ணி ரவிக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டி விட்டு போனை வைத்தாள்.

ஷர்மாவால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை கிட்டத்தட்ட நான்கு வருடம் வரை மது தன்னை ஏமாற்றி இருக்கிறாள் இல்லை அவள் ஏமாற்றவில்லை நான் ஏமாந்து இருக்கிறேன் என்றவர் அவளைத் தேடி ஊருக்குச் சென்றான்

அங்கே அவர் வருவார் என்று எதிர்பார்த்த மது அவனை வீட்டிற்குள் கூட விடாமல் அடித்து விரட்டினாள் அதுமட்டுமின்றி வீட்டைச் சுற்றிலும் வேட்டை நாய்களை காவலுக்குப் போட்டு யாரும் உள்ளே வரதாவாறு பார்த்துக் கொண்டாள்.

ஆனால் ஷர்மா விடவில்லை மாதக் கணக்கில் கோவையில் தங்க ஆரம்பித்தார் தினமும் பல்வேறு வகையில் தொல்லை செய்தார். அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து செல்வது தினமும் நூறு முறையாவது அவளுக்கு வேறு எண்ணில் இருந்து அழைப்பது ஆபாச மெசேஜ்களை அனுப்புவது என தொல்லை தாங்க முடியாத மது கடைசியாக கணவனை ஊருக்கு வரவழைத்தாள்.

கணவரோ ஆசைப்பட்டு கட்டிய டெல்லி சாம்ராஜ்யத்தை விட்டு வர முடியாது என்று கூற சரி அவர் வராவிட்டாலும் பரவாயில்லை ஷர்மாவை பற்றியாவது கூறலாம் என்று பேச்சு ஆரம்பிக்கும் பொழுது அடுத்த மாதம் வந்து உன்னிடம் பொறுமையாக பேசுகிறேன் என்று அவர் சென்றுவிட்டார்.

ஒரு மாத காலமாக வீட்டைச்சுற்றி என்னென்னவோ நடக்க ஆரம்பித்தது இரவு நேரத்தில் யாரோ வீட்டிற்குள் அத்துமீறி வருவது போல தெரிந்தது… எங்கு பார்த்தாலும் விஷ பாம்புகள் ஊர்ந்தது பயத்தில் தூக்கம் மறந்தாள்...

யாரையும் நம்பி வீட்டிற்கு விட பயந்தாள்.
சாப்பிடலாம் என்று உணவு பாத்திரத்தை திறந்தால் அதற்குள் ஒரு கருநாகம் படுத்துக் கொண்டிருந்தது... அப்படியே போட்டுவிட்டு படுக்கையறை வந்தால் அங்கேயும் கருநாகம் சீரிய படி நிற்கிறது எப்படி வீட்டிற்குள் இத்தனை கருநாகம் வந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஷர்மாவின் நியாபகம் வந்தது ஒருவேளை அவனுடைய வேலையாக இருக்குமோ என்று பயந்தவள் உணவு உறக்கம் இன்றி தவிக்க நான்கு நாட்களுக்கு மேல் தொடர்ந்து உணவு உண்ணாமலும் உறக்கம் இல்லாமல் இருந்ததால் அவளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உடலில் தெம்பில்லாமல் படுக்கையில் சாய வேலையாட்கள் ரவியை அழைத்து மதுவின் நிலையை கூறினார்கள்.


உடனடியாக ரவி மிக முக்கிய தொழில்களை மட்டும் அவரிடம் வைத்துக்கொண்டு மீதி எல்லாவற்றிலும் திறமையான நபர்களை வேலைக்கு அமர்த்தினார்.

இப்பொழுது லேப்டாப் உடன் கணினி வசதி இருக்கிறது கோவையிலிருந்து கூட டெல்லியில் நடக்கும் விஷயங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஊருக்கு கிளம்பினார்.

ரவி வருவதை அறிந்த ஷர்மா இங்கு இருக்கும் சொத்துக்களை எல்லாம் பிரிவதற்காக டெல்லியில் இருந்து அவசரமாக வந்து கொண்டிருக்கிறான் என அவர்களின் பெரியப்பாவிற்கு வழக்கறிஞர் பேசுவதுபோல கூற பயந்த அவர்கள் ரவியை அப்படியே அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

ரவியை முதல் நான்கு நாட்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டை விட்டு வெளியே விடாதவாறு பார்த்துக் கொண்டனர். அவர்கள் செய்த அலப்பறையில் ரவி ஊருக்கு வந்ததை கூட மதுவிடம் கூற மறந்து விட்டார்.

ஒரு மழை இரவு வீட்டிற்கு யாரோ வருவது போல் உணர்வு மதுவுக்கு தோன்றியது.

யார் என்று வீடு முழுவதும் தேடினாள். ஒரு நிழல் வீட்டின் அருகே இருக்கும் அருகில் செல்லும் பொழுது அது காணாமல் சென்று விடும்... யாரோ கண்ணாம்பூச்சி விளையாடுவதாக தோன்றியது...

பின்பக்க அறையில் எட்டிப் பார்க்க உள்ளே முருகன் நின்று கொண்டிருந்தான்.

ஏய் நீ எப்படி இந்த வந்த..காவலுக்கு இருக்கறவங்க எங்க...
நாய் சத்தம் கூட கேக்கலையே எப்படி என்று கேட்கும் போது... நாய்களுக்கு சில எலும்புத் துண்டு உன் வீட்ல வேலை செய்றவங்களுக்கு சில கற்றை நோட்டு அவ்வளவு தான் உன்கிட்ட காமிச்ச விசுவாசத்தை விட அதிகமா என்கிட்ட விசுவாசத்தை காண்பிச்சிட்டு எல்லாரும் எங்கேயோ காணாம போயிட்டாங்க என்று கூறியபடி முருகன் அவளை இடிப்பது போல் நேராக வர பயந்து ஒதுங்கிக்கொள்ள முன்வாசல் வழியாக ஷர்மா வந்து கொண்டிருந்தார்.

இருவரையும் மாறி மாறி பார்க்க ஷர்மா சிரித்தபடி முருகன் உன் கிட்ட வேலைக்கு வரும்போதே என் ஆளா தான் வந்தான் இங்கே வேலை பார்க்கும் போதும் அவன் எனக்கு தான் வேலை பார்த்தான்... நீ விரட்டிட்டா அவனுக்கு போக்கிடம் இல்லையா என்ன உடனே நான் கூப்பிட்டு கிட்டேன்..என்று சிரித்தபடி அவரின் முகத்தை மதுவின் முகத்தின் அருகில் கொண்டு வந்தவர்


ஆமா என்னை கருநாகம்னு சொல்லுவ இப்போ நீஜமாவே வீடு புல்லா கருநாகம் இருந்ததாமே எப்படி இருந்தது அந்த எக்ஸ்பீரியன்ஸ் என்று கேட்க


உனக்கு அது எவ்வளவோ பரவால்ல... அதைத் தொந்தரவு பண்ணாத வரைக்கும் அது யாரையும் கடிக்காது….


அப்போ தொந்தரவு பண்ணினா கடிக்கலாமா...நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி இருக்க அப்போ நான் உன்னை கடிக்கவா என்று என்று கண்களில் பளபளப்புடன் கேட்டார்.

அருவருப்புடன் பதில் பேசாமல் அவரை தள்ளி விட்டபடி முன்னறைக்கு செல்ல அவளின் முடியைப் பிடித்து தடுத்து நிறுத்தியவர் பேசிக்கிட்டு இருக்கும்போது இது என்ன பழக்கம் என்றார்.

ச்சீ கைய எடு தொட்டா கைய உடச்சிடுவேன்…

என்ன பண்ணினாலும் அடங்காம அதே திமிரோட எதிர்த்து நிற்கிற பாத்தியா அதுதான் மறுபடியும் மறுபடியும் உன்கிட்ட என்னை விழ வைக்குது... நல்ல கேட்டுக்கோ நீ மட்டும் இப்போ நான் சொல்றபடி கேட்கலனா உன்ன மட்டும் இல்ல உன் ரவியை கொன்னுட்டு உன் மகளை என்னோட வச்சிப்பேன்.

ம்கூம் ரொம்ப கற்பனை பண்ணாத ஷர்மா... நான் செத்தாலும் என் மகளோட நிழலை கூட உன்னால தொட முடியாது…


அவ்வளவு நம்பிக்கையா எப்படி…


ஏன்னா அவ நேத்ரா...என் பொண்ணு... என் ரத்தத்துல இருக்கற அதே திமிரு அவளுக்கும் இருக்கும்...என் வெறுப்பு அவளுக்குள்ளயும் இருக்கும் நீ வேணா முயற்சி பண்ணி பாரு... அவ என் வயிற்றில கருவாக இருக்கும் போதே உன்ன பத்தின வெறுப்பும் சேர்ந்து வளர்ந்தது மறந்திடாத…

ஓஓஓ... நீதான் அப்படி சொல்லற...ஆனா மதுப்பொண்ணு அப்படி கிடையாது அவ என்னை பார்த்தா அங்கிள் அங்கிள்னு உருகுவா... அவளுக்காகவே ஒருத்தனை வளர்த்திட்டு இருக்கேன்... உன்னைப் பற்றிய வெறுப்பை மட்டுமே ஊட்டி ஊட்டி வளர்த்துட்டு இருக்கேன் இப்போ நீயோ உன் மகளோ அவன் கையில கிடைச்சா உடனே முடிச்சிடுவான் அவ்வளவு கோபத்தில இருக்கான் அவன்கிட்ட உன் மகளை சேர்க்க போறேன் என்று கூறினார்.

நீயே இவ்ளோ யோசிக்கும்போது அவளை பெத்த நான் எவ்வளவு யோசித்திருப்பேன்…நீ மட்டும் இல்ல உன்னை பெத்த அப்பனே வந்தாக்கூட என் மககிட்ட யாரும் நெருங்க முடியாது அவளுக்கு சரியான ஒருத்தன நான் ஏற்கனவே அனுப்பி வைத்துவிட்டேன்.

என்ன மது இது புதுக்கதையா…

ம்ம்...அப்படியே வச்சிக்கோ... இப்ப நீ வெளியே போறியா இல்ல என் புருஷனுக்கு வீடியோ கால் பண்ணி உன் லட்சணத்தை எல்லாம் லைவ்வா காட்டவா....


ம்ம் காட்டேன்...ஆனா உன் புருஷன் அதை பாக்க தயாரா இருக்கனுமே...ஆல்ரெடி டெல்லில ஒன்னை ஏற்கனவே செட் பண்ணிட்டான்...நீ சும்மா பேருக்கு பொண்டாட்டியா இந்த வீட்ல கிடக்கற…என்று ரோகினிக்கு உடன் அவர் இருக்கும்படியான சில புகைப்படங்களை மொபைலில் இருந்து காண்பிக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் இதை நான் நம்ப மாட்டேன் என்றாள்‌.

சரி நம்பாத இன்னொரு விஷயம் சொல்றேன் நம்பறியா உன் புருஷன் இந்த கோயம்புத்தூர் வந்து ஒரு வாரம் ஆச்சு நீ வேணா ஃபோன் பண்ணி கேளேன் என்றார்.

ஷர்மாவை நம்பாத படி ரவிக்கு அழைத்தவள் உடனே என்ன வந்து சந்திக்க முடியுமா ரொம்ப அவசரம் உங்கள பாக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது ஆயிடுமோனு எனக்கு பயமா இருக்கு.
உங்க கிட்ட நான் நிறைய விஷயங்கள் பேசினும் தயவு செஞ்சு சீக்கிரம் வாங்க….என்று கூற

அவரும் பெரியப்பா வீட்டில் தான் இருக்கிறேன் என்று கூற வினாடிகள் மனம் உடைந்த் ஒரு வாரமாக கூட வந்து சந்திக்க தோணலையா என்று கேட்டபடி மொபைலை வைத்தாள்.

இப்போ புரியுதா மது என்னைபத்தி... காதல் கணவனோட காதல் பார்வையை வேறு பக்கம் திருப்பி இருக்கேன் மாசத்துல ரெண்டு நாள் பொண்டாட்டிய தேடிவந்து ஹனிமூன் கொண்டாடற உன் புருஷனை அவன் பெரியப்பா வீடு தேடி போக வச்சிருக்கேன்…


இப்பவும் நீ என் பேச்சை கேக்கலனா அடுத்து உன் பொண்ண தான் குறிவைக்கனும் எனக்கு வேற வழி தெரியல நீ உன் பொண்ணை சமீபத்தில் பார்த்தியா மது…

அச்சு அசல் அப்படியே உன்ன மாதிரி உரிச்சி வெச்சுருக்கா அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன்னை பார்க்கறது போலவே இருக்கு இந்த கன்னத்தை எப்பவாவது தொட விட்டிருக்கியா ஆனா அவ கன்னத்தை நான் எத்தனை முறை தொட்டு பாத்திருக்கேன் தெரியுமா என்று மதுவின் கன்னம் வருட ச்சீ...என்று தட்டிவிட்டாள்.

அவளுக்கு இன்னும் உன்ன பத்தி தெரியல ஷர்மா ஒரே ஒருமுறை அவர் இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா போதும் உன்ன பத்தி அத்தனை விஷயங்கள் அவளுக்கு தெரிஞ்சிடும். நான் தெரியப்படுத்திடுவேன்…

நீ செத்தா கூடவா…

இந்த உலகத்தோட அடி பாதாளத்துல என்னை கொன்னு புதைச்சா கூட நான் அவளுக்கு தெரியப்படுத்துவேன் ஷர்மா…

அப்படியா அப்படின்னா எனக்கு தேவை படாத நீ செத்துப் போ உன் ஜாடையில உன்ன மாதிரி இருக்குற மதுப்பொண்ணை நான் என்கூட வச்சிக்கறேன் என்று கூறியபடி அவளின் அருகில் வர

அவரை தள்ளிவிட்டவள் கையில் கிடைத்த ஒரு ஆயுதத்தை எடுத்து இருவரையும் தாக்கிவிட்டு வெளியே ஒடினாள்.

அந்த மல்லிப்பூ தோட்டத்திற்குள் தன் உயிரைக் காத்துக் கொள்ள மது அங்குமிங்கும் ஓட கடைசியில் முருகனிடம் மாற்றிக்கொண்டாள்.

அவளை அடித்து வீழ்த்தியவன் அவளின் கழுத்தின் மீது கால்களை வைத்து அழுத்த ஷர்மா சாவகாசமாக எதிரில் வந்தார்.

துடிக்கும் அவளின் கால்களின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து அழுத்திய ஷர்மா பாத்தியா மது நான் ஆசைப்பட்டு காதலிச்சவளை என்னோட வெச்சுக்கலாம்னு பாத்தா நீ நான் வேணா அதுக்கு பதிலா என் மகளை வெச்சுக்கோனு உயிரை விடப் போற என்றார்.


அந்த நிலையிலும் கூட அவளின் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க மறுத்த மது மிக மெல்லிய புன்னகையை சிந்தினாள் உடனே ஷர்மா முருகா கொஞ்சம் காலை எடு அவ என்னமோ சொல்லனும்னு ஆசைப்படறா சொன்னதுக்கப்புறம் செத்துப் போகட்டும் என்று கூறினார்.

முருகன் அவள் பேசுவதற்காக காலை நகர்த்த…

இப்பவும் சொல்றேன் ஷர்மா என் மகள் என்னைக்கு என் வீட்டுக்குள்ள வர்றாளோ அன்னைக்கு அவளுக்கு எல்லா விஷயமும் புரிய வைப்பேன்... அது மட்டும் இல்ல என்னைக்கு அவ இந்த வீட்டில காலடி எடுத்து வைக்கிறாளோ அன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சாவுமணி அடிச்சாச்சுனு நெனச்சுக்கோ…

என்னை நீ இந்தப் உடம்பை விட்டு மட்டும்தான் அனுப்ப முடியும் என் ஆன்மாவை இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது அது என் மகளோடு நலனுக்காக கடைசிவரை போராடும்... என்று கூறவும்


அப்படின்னா போராடிக்கிட்டே செத்து போடி என்று அவர் பங்கிற்கு துடிக்கும் கால்களை அழுத்திப் பிடிக்க முருகன் அவனின் கால்களை கொண்டு நிலத்தோடு மதுவின் முகத்தை அழுத்த சற்று நேரத்தில் மதுவின் உடல் முற்றிலுமாக அடங்கியது... அவளின் கடைசி உயிர் மூச்சில் நேத்ரா மட்டுமே இருந்தாள் மகளிடம் மானசீகமாக கூறிக் கொண்டாள் உனக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது கண்டிப்பா இந்த அம்மா ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உனக்கு உதவுவேன் இது உன் மேல சத்தியம் நேத்ரா என்று கூறியபடியே உயிரை விட்டாள்.அதன்பிறகுதான் இருவருக்குமே புரிந்தது நடந்த விபரீதத்தை உண்மை…

இறந்த பின் உடலை என்ன செய்வது வாரக் கடைசி என்பதால் வீட்டில் யாரும் இல்லை அதனால் சுலபமா மதுவை கொல்ல முடிந்தது.

இந்த இரவு நேரத்தில் தாங்கள் இங்கே வந்ததும் யாரும் தெரியாது... ஆனால் காலை ரவி இவளை தேடிக்கொண்டு வருவாரே எப்படி சமாளிப்பது என்று யோசித்தனர்.

மதுவின் உடலை ஆராய அவளை இவர்கள் இருவரும் தாக்கியதற்கான அடையாளங்கள் உடல் முழுவதும் இருந்தது பத்தாதற்கு கழுத்தில் கால்களைக் கொண்டு நெரித்த தடம் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. கண்டிப்பாக யார் பார்த்தாலும் சந்தேக மரணம் என்று காவல் நிலையத்தில் புகார் செய்வார்கள் அவர்கள் விசாரிக்கத் தொடங்கி விட்டால் மாட்டிக் கொள்வார்கள்..‌


உடனடியாக ஒரு யோசனை கிடைத்தது அரசு மருத்துவமனைகளில் இறந்த பெண்ணின் உடல் ஏதாவது கிடைக்குமா என்று முருகனை அனுப்பி வைத்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு தற்கொலை செய்துகொண்ட பெண் மதுவின் உருவத்திலேயே கிடைத்தது அதை எடுத்துக்கொண்டு அவர்களின் வீட்டில் வந்து கிடத்திவிட்டு இறந்த மதுவின் உடலை அங்கிருந்த ஒரு புதைகுழியில் வீசினார்கள். எல்லாவற்றையும் விடிவதற்க்குள் முடித்தார்கள்.


பிறகு ஒன்றுமே தெரியாதது போல இருவருமே அங்கிருந்து கிளம்பிச் செல்ல இவர்கள் பணம் கொடுத்து வேலைக்கு வைத்த பணியாளர்கள் அனைவருமே விசுவாசத்தை மிக அழகாக காண்பித்தார்கள் மது தாங்க முடியாத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டார் என்று அனைவருக்கும் தெரியப்படுத்த காவல் நிலையத்திற்கு தெரிந்தால் போலீஸ் கேஸ் போஸ்ட்மார்ட்டம் என அடுத்தடுத்து பல தொல்லைகள் வரும் என பயந்த குடும்பத்தார்கள் யோசிக்காமல் உடனடியாகவே அந்த உடலை தகனம் செய்ய ரவியால் மதுவின் முகத்தை சரியாகக் கூட பார்க்க முடியவில்லை‌.

ஆனால் மறுநாளே ஷர்மாவும் முருகனும் அங்கிருந்த ஒரு கெட்ட விஷயங்களில் மட்டுமே செயல்படும் நம்பூதிரியிடம் சென்று சாகும் ஒரு பெண் தன் மகள் வீட்டிற்கு வந்தாள் தங்களைப் பற்றிய உண்மைகளைப் புரிய வைப்பேன் என்று சவால்விட்டு செத்து இருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார்.

உடனே அவர் இருவரின் ஜாதகத்தையும் கொடுக்க முடியுமா என்று கேட்டார் உடனே ஷர்மா அவரிடம் அவகாசம் வாங்கிக்கொண்டு மதுவின் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஆராய்ந்தார்.
ஷர்மா ரவியின் நண்பன் என்பதால் சாதாரணமாக அந்த வீட்டிற்குள் வருவது செல்வதை யாருமே தவறாக எண்ணவில்லை

மது சொன்னது போல வீட்டைச் சுற்றிலும் ஏகப்பட்ட தடயங்களை விட்டு வைத்திருந்தாள் மொபைல்போன் அவளின் டைரிஸ இப்படி பல உடனே முருகனைக் கூப்பிட்டு அத்தனையையும் அப்புறப்படுத்தினார் தெரிந்தே இத்தனை தடயங்களை வைத்திருந்தாள் தெரியாமல் எத்தனை தடயங்களை வைத்து இருப்பாள் என்ற பயம் அவரின் மனதுக்குள் இருந்தது... அதன்பிறகு ஜாதகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அவரிடம் காண்பிக்க இருவரின் ஜாதகத்தையும் உற்று நோக்கியவர் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது.

இந்த இரண்டு ஜாதகமே ஒரே நட்சத்திரம் மட்டும் ஒரே ராசி கொண்டது. இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சந்திராஷ்டமம் தினத்தில் தான் இருவருமே கருவாக உருவாகி இருக்கிறார்கள் அதனால் இயற்கையிலேயே இருவருக்கும் ஒரு சக்தி உண்டு .
அது இருவருக்குமே நன்றாக ஒத்துப் போகும் இவர்கள் பிரிந்து இருந்ததால் தான் உங்களால் சுலபமாக மதுவை நெருங்க முடிந்திருக்கிறது இல்லையென்றால் எக்காரணம் கொண்டும் நெருங்கி இருக்க முடியாது ஏனென்றால் இவர்களின் சக்தியும் அப்படி இப்பொழுதும் இறந்து போன பெண்ணின் மகள் தாய் வாழ்ந்த வீட்டில் கால்வைக்கும் பொழுது அவளின் ஆன்மா மீண்டும் உயிர் பெறும்... அதனால் தான் மதுமதி உறுதியாக கூறியபடி உயிரை விட்டிருக்கிறாள் என்றார்.

உடனே சர்மா அப்படி என்றால் இந்த விஷயம் மதுவிற்கு தெரியுமா என்று கேட்கும் பொழுது தெரியாம எப்படி இருக்கும் தான் பெத்த பொண்ணோட ஜாதகத்தை ஒரு தாய் இதுவரைக்கும் பார்க்காமலா இருந்திருப்பாள் அவளோட ஜாதகத்தையும் மகளோட ஜாதகத்தையும் எப்பவோ பார்த்திருப்பா அந்த தைரியத்தில்தான் அவளை தன் பக்கம் இழுக்க பார்த்திருக்கிறாள்... ஆனா இது எல்லாமே ஒரு யுகம் தான். எதுக்கும் அந்த ஆன்மா எழாத படி ஒரு பூஜை செய்து அவளை நீங்க புதைச்ச இடத்துல அதை போட்டு மூடிட்டா இறந்த பிரேத ஆன்மாவுக்கு சக்தி வராது என்று கூறினார்.


அவர் கூறியது போல பூஜை செய்து தகட்டை கொண்டு வந்து எப்படி அந்த புதை குழியில் வீசி மூடுவது என்று யோசித்த ஷர்மா எதார்த்தமாக ரவியை அழைத்து கொண்டு மல்லீப்பூ தோட்டத்திற்குள் வர அந்த புதை குழியை பார்த்தவர் என்ன ரவி இவ்ளோ பேர் வேலை செஞ்சுட்டு இருக்கிற இடத்துல இன்னுமா இதை மூடாம இருக்கறீங்க குழந்தைகள் பெண்கள் இருக்காங்க தெரியாம யாராவது விழுந்துட்டா என்ன செய்வது இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த புதைகுழியை மூடாம வைப்பீங்க…ஏற்கனவே மூடனும் சொல்லிட்டு இருந்தியே இப்பவாவது அதைசெய்யலாம்ல என்றார்.

ரவியும் நீயே இதை பாத்துக்க ஷர்மா என்று கூறிவிட்டு செல்ல வண்டி வண்டியாக ஜல்லிகளை எடுத்து வந்து அந்தக் குழியை மூட உள்ளே யாருக்கும் தெரியாமல் அந்த தட்டையும் போட்டு மிக அழகாக மூடிவிட்டார்‌. இப்பொழுது அந்த இடத்திலும் சில மல்லிப்பூச்செடிகள் வைத்து அதுவும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.

இங்கு டெல்லியில் தாய் இறந்த செய்தி கேட்டு நேத்ராவிற்கு துளிகூட அழுகை வரவில்லை இப்படி பாதியிலேயே என்ன விட்டுட்டு போறதுக்காகதான் என்னை உன் கிட்ட இருந்து ரொம்ப தூரம் தள்ளி வைச்சியாம்மா என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
அவளாலும் உடனடியாக மதுவை வந்து பார்க்க முடியவில்லை அவளிடம் தாய்க்கு உடல் நலம் சரி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்தார் என்று பொய்ப் உரைத்தனர் .

கல்லூரியில் நடந்த ஒரு சிறு கலவரத்தால் கல்லூரிக்குள்ளே அவள் இருக்கும்படி ஆயிற்டு அங்கு பிரச்சினைகள் முடிந்து அவள் இங்கு வரும் பொழுது அங்கு யாருமே இல்லை அதனால் தோப்பு வீட்டிற்குச் செல்லாமல் அங்கிருந்த ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி விட்டு மீண்டும் தந்தையுடன் டெல்லி வந்து விட்டாள்.

அனைத்தையும் கேட்டு முடித்த அகோரி அதான் பூஜை செய்து தகட்டை போட்டு குழியை மூடிட்டியே அப்புறம் எதற்காக இவ்வளவு தூரம் தேடி வந்த என்று கேட்டார்.

இப்போ என்ன பிரச்சனைனா அவளோட மக திதி கொடுப்பதற்காக ஊருக்கு போயிருக்கா அவங்க வீட்டுக்கு போய்ட்டா ஆத்மா வெளிய வந்துடுமா என்று கேட்டார்.

ஒருவேளை அந்த நம்பூதிரி சொன்னது போல ரெண்டு பேரோட ஜாதகமும் ஒரே நேர்கோட்டில் உருவாக்கியிருந்தா வாய்ப்பிருக்கு அப்படி இல்லன்னா அதுக்கு வாய்ப்பில்லை... எதுக்கும் மகளை அந்த வீட்டுக்குப் போகாத படி பார்த்துக்கோ…

அவ செத்து கிட்டத்தட்ட நாலு வருஷம் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை சமீபமா தான் ஒரு நிழல் அவங்க வீட்டை சுத்தறதும் மகளோட கனவுல வர்றதுமா இருக்கு இதுக்கு என்ன காரணம் என்று கேட்டார்.

இவ்வளவு நாள் தொந்தரவு இல்லாம இருக்குன்னா அதுக்கு காரணம் நீ செஞ்ச பூஜையும் நீ மூடின அந்த குழியும் தான்.

இப்போ ஏன் தொந்தரவு கொடுக்குதுனா அவ சாகும்போது சொன்னா இல்லையா மகளுக்கு ஒரு பிரச்சனைனா கண்டிப்பா வருவேன்னு நீ அவ மகளை தவறான கண்ணோட்டத்தோட உன்னோட வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கற... மகளுக்கு ஆபத்து வரவும் அவளோட ஆன்மா முழுசா வெளிய வராம கனவுல வந்து அறிவுறுத்தது...மகளை அங்க வர சொல்லுது... ஒரு வேளை மகளின் கால்தடம் பட்ட உடனே அவளின் ஆன்மா அந்த குழிக்குள் இருந்து முழுசா வெளிய வருமோ என்னவோ…


போகும்போது உன்னோட ஒரு அகோரியை அழைச்சிட்டு போய் உன் வீட்டைச் சுற்றி ஒரு பூஜை போட்டுட்டு ஒரு நரபலி குடு...எதுக்கும் இந்த தாயத்தை உன் கைய வச்சுக்கோ எந்த ஆன்மாவையும் உன் பக்கத்தில் நெருங்க முடியாது என்று அவரின் கையில் கொடுக்க ரொம்ப நன்றி அய்யா என்று கூறியபடி அங்கிருந்து எழுந்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சக்கரவர்த்தி ஷர்மா அறியாத வண்ணம் சென்றுவிடலாம் என்று திரும்ப எதன்மீதோ மோதி நின்றான் எது என்று பார்க்க கட்டுமஸ்தான உடலைக் கொண்ட இரு நபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

யோசனையுடன் பார்க்க எல்லாத்தையும் தெளிவா கேட்டியா சக்கரவர்த்தி என் கேட்டபடி ஷர்மா பின்னாலிருந்து வந்து கொண்டிருந்தார் ஷர்மாவை பார்த்ததும் அதிர்ச்சியில் சுற்றிலும் பார்க்க பின்னால் இருந்த ஒருவன் பயங்கர ஆயுதத்தைக் கொண்டு சக்கரவர்த்தியின் பின்மண்டையில் பலமாக தாக்கினான்.

வலி பொறுக்க முடியாத சக்ரவர்த்தி உடனடி மயக்கத்திற்குச் சென்றான் கண் விழிக்கும் போது அவனைச் சுற்றிலும் ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர்.
எதிர்ல் ஷர்மா ஒரு மரத்தின் வேரில் அமர்ந்திருந்தார்.

சக்ரவர்த்தியின் தலை முழுவதும் ரத்தம் ஒழுக கைகளிரண்டையும் இருபக்கமும் பிடித்துக் கொண்டிருக்க முட்டிபோட்டபடி அமர வைக்கப்பட்டு இருந்தான் .

அவனின் முன்பு மொபைல் ஃபோன் சர்மா பேசியதே ரெக்கார்ட் செய்யப்பட்டிருந்த மைக் இரண்டும் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருந்தது சர்மாவின் கையில் சக்கரவர்த்தியின் பிஸ்டல் இருக்க அதை இரு கைகளாலும் மாறிமாறி தட்டிப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்

என்னைப்பற்றி என்ன நினைச்சுகிட்டு இருந்த சக்கரவர்த்தி நீ என்ன ஃபாலோ பண்ணி வர்றது எனக்கு தெரியாதுன்னா

முகத்தில கரியைப் பூசிக்கிட்டு ஒரு அங்கியை மாட்டிகிட்டா நீ இவ்வளவு நேரம் மரத்துக்கு பின்னாடி இருந்து ஒட்டு கேட்டதை நான் கவனிக்கலனு நினைச்சுக்கிட்டியா…

ஆறு மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாகவும் உன்னை ஏன் அலைய வெச்சு கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிற.

இவங்கள எல்லாம் உன் பின்னாடி ஃபாலோ பண்ணி வர வைக்கிறது காகத்தான் எதற்காக இவ்வளவு தூரம் வர வைக்கனும் அங்கேயே உன்னை முடிச்சிருக்கலாம்னு தான நினைக்கற…

அப்படி உன்னை அங்கேயே முடிச்சு இருந்தா நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு தெரியாமலே நீ செத்துப் போயி நீயும் ஒரு ஆன்மா வா வந்து எனக்கு தொல்லை கொடுப்ப எதுக்கு ரிஸ்க் அதான் உன்னை இவ்வளவு தூரம் வர வெச்சு நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு தெரிய வைத்து சாகடிக்கறேன் இப்போ நீ நிம்மதியா செத்துப் போ...என்று சக்ரவர்த்தியை குறி பாத்தார்.

தொடரும்...
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
23

சத்தமாக சிரித்த சக்கரவர்த்தி திடீரென சர்மாவை பார்த்து காரி உமிழ்ந்தான்‌. உன்னை காதலிக்கலனு ஒரு பொண்ண சைக்கோ மாதிரி டார்ச்சர் பண்ணி கொன்னுருக்க...ஒருத்தரோட மனைவி அவளுக்கு ஒரு வயசு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சு கூட உன் ஆசைக்கு இணங்க சொல்லி அவளை மிரட்டி அடிச்சே கொன்னிருக்க…. நீயெல்லாம் ஒருத்தன்னு என் முன்னாடி உக்காந்து பேசிக்கிட்டு இருக்க…

ஒரு கிரிமினல் நீயே இவ்ளோ பிளான் பண்ணி என்னை பின்னாடி வர வெச்சிருக்கற ...ஐபிஎஸ் படிச்ச நான் உன் பின்னாடி வர்றதுக்கு எவ்வளவு ப்ளான் பண்ணிருப்பேன்...
உன் கிட்ட மாட்டி கூட இவ்ளோ தைரியமா இருக்கேனா உனக்கு தெரிய வேணாம்...

ஏதோ ஒரு கூலிகாரனை நீ சுடல நாளைக்கு ஜார்ஜ் எதுக்க போற ஐபிஎஸ் ஆபிஸரை கொல்லபோற..டெல்லி போலிஸ் அவ்வளவு சீக்கிரம் உன்னை சும்மா விடாது...உன் பின்னாடி வர்ற விஷயம் எங்க டிபார்ட்மெண்ட்க்கு நல்லாவே தெரியும்...

நான் செத்தா கூட நேத்ரா உன்கிட்ட இருந்து காப்பாற்ற படுவா...அவ அம்மா ஆசைப்பட்டது போல அவளோட தோப்பு வீட்ல கால வச்சா போதும்...அடுத்த நிமிஷம் நீ காலி...என்று சக்கரவர்த்தி பேச ஷர்மாவிற்கு நிதர்சனம் சற்று புரிந்தது.

இவன் தன் கையால் செத்தால் கண்டிப்பாக நான் மாட்டிக் கொள்வேன் என்றவர் பிஸ்டலை கொண்டு சக்கரவர்த்தியின் தலையில் வேகமாக அடித்தார் அவன் மயங்கிச் சரியவும் சுற்றி இருந்தவர்களிடம் பிஸ்டலை தூக்கி வீசினார்.

இவன நல்லா அடிச்சி அவன் கார்லயே தூக்கிப்போட்டு ஏதாவது பள்ளமா பார்த்து தள்ளி விடுங்க மறக்காம இந்த பிஸ்டலை அவன் இடுப்பில சொருகி விட்டிடுங்க...கார்ல ஏதாவது ஜிபிஎஸ் மாதிரி இருக்கானு பாத்துட்டு நல்லா செக் பண்ணிடுங்க...

யாராவது கண்டுபிடிச்சா இருட்டுல கண்ணு தெரியாம ஆக்சிடெண்ட் ஆனது போல செட் பண்ணி விடுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூறிவிட்டு சென்று விட்டார் அவனது ஆட்கள் ஒரு இருட்டான மறைவிடத்திற்கு சக்கரவர்த்தியை இழுத்தபடி சென்றனர்.

இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மதுவின் ஆன்மா சக்கரவர்த்தியை காப்பாற்றுவதற்காக போராடியது.
எதுவுமே செய்ய முடியவில்லை


அபியின் கனவில் சென்று அறிவுறுத்த முயற்சித்தது அது தோல்வியில் முடிய வழக்கம் போல நேத்ராவின் கனவிற்குள் சென்றது. சக்ரவர்த்தி ஒட்டி செல்லும் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பயணித்தது போல தெரிந்தது…தீடிரென எழுந்து அமர்ந்த நேத்ரா சம்பந்தமே இல்லாமல் அபியின் நண்பன் ஏன் தனது கனவில் வருகிறான் என்று குழம்பினாள்…

பிறகு காலையில் அபியை சந்தித்தாள் கூறிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

மறுநாள் தோப்பு வீட்டிற்குச் செல்வதற்காக நேத்ரா கிளப்பிக் கொண்டிருக்க அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவை உண்டனர்.

வீட்டிலிருந்த அனைவருமே நேத்ராவிடம் ஏதோ கூறுவதற்காக ஜாடை செய்தனர் கவனித்த நேத்ரா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க எதா இருந்தாலும் சொல்லுங்க என்று பெரியம்மாவிடம் கேட்டாள்.

அது ஒன்னும் இல்ல நேத்ரா கடல் மாதிரி இந்த வீடு இருக்கும் போது எதற்காக அந்தத் தோப்பு வீட்ல போய் தங்கனும்னு நினைக்கற…

அது ஒண்ணும் இல்ல பெரியம்மா என்னோட அம்மா கடைசியா நாங்க அந்த வீட்டுல இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க முடியாமல் இறந்து போயிட்டாங்க அதனால இப்போ திதி குடுக்குறதுக்கு முன்னாடி நானும் அப்பாவும் சிலநாள் அங்க தங்கனும்னு ஆசைப்பட்டு இருக்கோம் அவ்வளவுதான் என்றாள்

ஆமா வாழவேண்டிய காலத்துல ஒழுங்கா புருஷன் பிள்ளைகளோட வாழ வழி தெரியல...எத்தனை முறை சொன்னோம் ரவியோட போய் இருக்க சொல்லி ஒருவார்த்தை கேக்கல...என்ன செய்யறது சேர்க்கை சரியில்ல...ரவி தியாகி கடைசிவரை பொண்டாட்டினு அங்கீகாரம் குடுத்து வச்சிகிட்டான் ரவி இடத்தில உங்க பெரியப்பா யாராவது இருந்தாங்கன்னா வெட்டி புதைச்சிடுப்பாங்க என்று கூறியபடி உள்ளே சென்றார்.

புரியாமல் மற்றொரு பெரியம்மாவை பார்த்த நேத்ரா என்ன சொல்லிட்டு போறாங்க என்றாள்.

இத்தனை பேர் இங்க இருக்கும்போது எதற்காக உன்னோட அம்மா தனியா அந்த தோப்பு வீட்டிலிருந்து கஷ்டப்படனும் ஏன் யாருமே இல்லாத அனாதை மாதிரி செத்துக் கிடக்கனும் வேலைக்காரி போய் பார்த்து தான் அவ செத்த விஷயமே எங்களுக்கு தெரியும் இதெல்லாம் ஏன்னு யோசிச்சு பார்த்தியா..

ஏன்னா முருகன்னு ஒருத்தனோட அவளுக்கு தொடர்பு இருந்தது…

பெரியம்மா...மைன்ட் யூவர் வேர்ட்ஸ்…

கத்தாத நேத்ரா அதுதான் உண்மை அவனோடு இருந்த தொடர்பை விட முடியாம தான் உன்னோட அம்மா உன் அப்பா கிட்ட போகல... உன்னையும் ஹாஸ்டலில் சேர்த்து விட்டா

உன் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டானா... எங்க இதுக்காக அவள வேண்டாம்னு சொல்லிட்டா நாங்கல்லாம் ஏதாவது சொல்லுவோம்னு பயந்து கடைசிவரை கண்டுக்கல என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே கையை உதறி எழுந்தவள் அவர்களை முறைத்தபடியே கைகளை கழுவி விட்டு எதுவும் பேசாமல் பேக்கினை தூக்கியபடி நடந்தே தோப்பு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிற்கு வந்த பிறகுதான் சாவி எடுத்து வராததை உணர்ந்த நேத்ரா அங்கு வேலை செய்யும் பெண்களிடம் ஏதாவது சாவி இருக்குமா என்று விசாரிக்க சென்றாள்.

சாவி இல்லை என்று அவர்கள் கூற சரி என்று தலையசைத்துவிட்டு அபியை அழைத்து சாவி வாங்கி வர சொல்லலாம் என்று நினைத்து அவனுக்கு அழைத்தால் சார்ஜ் இல்லாத காரணத்தினால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

எப்படியும் சிறிது நேரத்தில் தன்னைத் தேடிக்கொண்டு யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் மல்லிகை தோட்டத்தில் உலாவினாள் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் குசுகுசுவென பேசிக் கொண்டார்கள்.

கவனித்தும் கவனிக்காதது போல அவள் நகர்ந்து செல்ல... இரு பெண்கள் பேசுவது நன்றாகவே கேட்டது…


யாரு அக்கா இது அந்த மதுமதியோட பெண்ணா அப்படியே அவள மாதிரியே இருக்குல்ல...

ஆமா அவ பொண்ணு தான் ஆளு மட்டும் தான் அவள மாதிரியே இல்ல நடத்தையே அவள மாதிரியானு தெரியல எல்லாம் பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு நீ பேசாம வேலைய பாரு என்று கூற .

நேத்ராவிற்கு பகீரென்றது உடனே பேசிய பெண்களிடம் நேராக சென்று இப்ப நீங்க யாரை பத்தி பேசினீங்க என்ன பேசினீங்க எனக்கு ஒழுங்கா சொல்லுங்க என்றாள்.

இல்லையே நாங்க யாரைப்பத்தியும் பேசல…

இல்ல என் அம்மா பத்தி பேச நீங்க எனக்கு இப்போ நீங்க உண்மையை சொல்லல...நடக்குறதே வேற…

அது வந்து என்று தயங்க…

அருகில் இருந்த பெண்ணோ அக்கா உண்மை சொல்றதுக்கு என்ன தயக்கம் என்ன தலையவா எடுக்க போறாங்க …

நாம மட்டும்தான் பேசறோமா.. ஊரே தான் தான் பேசுது தெரியட்டுமே அவங்க அம்மாவோட ஒழுக்கம் என்னனு என்று பட்டென்று பேசியவர் முருகனுக்கும் மதுவுக்கும் தொடர்பு இருந்ததைப் போல் சித்தரித்து பேசினார். அதனால் தான் அவர்கள் குடும்பமே மதுவை ஒதுக்கி வைத்ததாகவும் ரவி கூட வருவதை நிறுத்திக்கொண்டார் என்றெல்லாம் பல கட்டுக்கதைகளை திரித்து கூறினார்…

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அழுதபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்து நேத்ரா வீட்டு வாசலில் வந்து நின்றபடி கதவை ஓங்கி ஒரு உதை விட்டவள் மது என்று கத்தினாள்...உள்ள தான் ஆன்மாவா இருக்கியா வெளிய வா...எனக்கு பதில் சொல்லு என்று மீண்டும் உதைத்தாள்.

இதையெல்லாம் கேட்கத்தான் இங்க என்னை வர வைச்சியா... அசிங்கபடவா இவ்ளோ தூரம் நான் வந்தேன்...ஒரு ஊரே கேவலமா பேசற அளவுக்கா நீ வாழ்ந்த..நல்ல வேளை நான் உன்னோட இல்ல... இருந்திருந்தா எனக்கும் இது போல கேவலமான ஒரு பேரை சம்பாதிச்சு கொடுத்திருப்ப ... பேப்பர்ல தான் படிச்சிருக்கேன் தன் சந்தோஷத்துக்காக குழந்தைகளை கொல்ற தாய் பத்தி... முதல் முறையாக பார்க்கிறேன் என்ன நீ என்னை கொல்லாமல் ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுட்ட…


உன்னை மாதிரி கேவலமா வாழ்ந்த ஒரு பொம்பளையோட வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க விரும்பல என்னைக்குமே அம்மான்னு சொல்லி உனக்கு நான் திதி கொடுக்க போறதும் இல்ல இனிமே என் கனவுல வராத அப்படி வந்தா என்னை நானே ஏதாவது பண்ணிப்பேன் இது என்மேல சத்தியம் மது.. உண்மையாவே உன்னோட மனசுல என் மேல கொஞ்சமாவது பாசம் இருந்தா
எப்பவும் என் விஷயத்துல தலையிடாதே குட் பை என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினாள்.

மதுவின் ஆன்மா கண்களில் கண்ணீர் சிந்தியபடி அந்த வீட்டிற்குள்ளேயே அலைய ஆரம்பித்தது மகளே தன்னை வர வேண்டாம் என்று கூறிவிட்டாள். மகள் அழைக்காமல் இனி தன்னால் மகளுக்கு உதவவும் முடியாது அவளின் மீது சத்தியம் வாங்கி விட்டு சென்று விட்டாள்.

மகளும் கணவரும் சேர்ந்து தனக்கு திதி கொடுக்காமல் தான் பூமியைவிட்டும் செல்ல முடியாது. தான் இனி கடைசி வரை சாந்தி கிடைக்காமல் ஆன்மாவாக தான் அலைய வேண்டும்... இனி மகளுக்கு ஏற்படும் கஷ்டங்களை அந்த கடவுள் தான் வந்து காக்க வேண்டும் என்று படைத்த கடவுளிடம் வேண்டினாள்.மகளை பத்திரமாக பார்த்துக் கொள் என்று.

மெயின் ரோட்டுக்கு வந்தவள் ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் வந்தவள் கிடைத்த பிளைட்டில் டெல்லி சென்றாள்.

அபி காலை எழுந்ததும் முதல் வேலையாக மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டு ஆன் செய்ய நேத்ரா அழைத்ததாக மிஸ்டுகால் நோட்டிபிகேஷன் காண்பித்தது.

இரவிலிருந்து சக்கரவர்த்தியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லையே என்று யோசித்தவன் முதலில் அவனுக்கு ஃகால் செய்ய சுவிட்ச் ஆப் என வந்தது பிறகு நேத்ராவிற்கு அழைக்க அவள் விமானத்தில் சென்று கொண்டிருந்ததால் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

உடனே கிளம்பி நேராக பெரியப்பாவின் வீட்டிற்குச் செல்ல நேத்ரா சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதாக கூறினார்கள் முதலில் நம்ப மறுத்த அபி அவர்களிடம் சண்டையிட ஆரம்பித்தான். அவர்கள்தான் சொத்துக்கா ஏதோ செய்து விட்டார்கள் என்று சந்தேகப்பட்ட அபி அவர்களின் பேச்சையும் மீறி வீட்டிற்குள் எல்லா பக்கம் சென்று தேடினான் கடைசியாக அங்கிருந்த குழந்தை நேத்ரா அக்கா பேக்கை தூக்கிட்டுப் போயிட்டாங்க என்று சொன்ன பிறகுதான் நம்பினான்.

நேராக தோப்பு வீட்டிற்கு வர அவள் அங்கு இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை வேலை செய்யும் பெண்களிடம் விசாரிக்க அவர்கள் நேத்ரா வந்து சென்றதை உறுதிப்படுத்தினார்கள் .

எங்கு சென்று இருப்பாள் என்று யோசித்தவன் ரவிக்கு அழைத்தான்.
நேத்ராவைப் பற்றி கூற அவரும் பயந்தபடி என்ன செய்வது என்று இவனிடம் திருப்பிக் கேட்டார்.

வேலை செய்யும் பெண்களிடம் மீண்டும் சென்றவன் அவர்களிடம் மிரட்டும் தோணியில் என்ன நடந்தது என்று விசாரிக்க ஒரு பெண்மணி துணிந்து வந்து நேத்ரா தாயைப் பற்றி மட்டும் விசாரித்ததாக கூற மேலும் குழம்பினான்.

சுற்றுவட்டாரங்களில் எல்லாம் நேத்ராவை விசாரித்த படியே அவளைத் தேட ரவியிடம் இருந்து ஃகால் வந்தது நேத்ரா டெல்லி வந்திருப்பதாக.. உடனே அபியும் தாய் தந்தையிடம் கூறி விட்டு டெல்லி பறந்தான்.


நேத்ரா டெல்லி சென்றதும் கேள்வி கேட்ட ரவியிடம் பதில் கூறாமல் அறையில் சென்று அடைந்து கொண்டாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் வேகமாக வந்த அபி ரவியுடன் நேத்ரா எங்கே என்று விசாரிக்க அவர் அறைக்குள் இருப்பதாக கை காட்டினார்.


நேராக அறையின் முன்பு சென்ற அபி
நேத்ரா மொதல்ல வெளியே வா என்று வேகமாக கதவை தட்டினான்…

நேத்ரா உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் வீட்டுக்குள்ள தானே இருக்க மொதல்ல வெளியே வா எதுக்காக இப்படி யார்கிட்டேயும் சொல்லாம கொள்ளாம ஓடிவந்து ரூமுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்க

உங்க அம்மாக்கு திதி கொடுக்க தானே வந்த அதை செய்யாமல் நீ பாட்டுக்கு இங்க வந்து இருந்தா என்ன அர்த்தம்... படிச்ச பொண்ணு தானே கிளம்பறதுன்னா சொல்லிட்டு வரனும்ங்கறது கூடவா தெரியாது என்ன பழக்கம் இது என்று கோபமாக அபி வெளியே இருந்து கத்த உள்ளிருந்து வேகமாக கதவை திறந்தாள் நேத்ரா.

கண்கள் முழுவதும் வீங்கியிருந்தது பயங்கரமாக அழுதிருக்கிறாள் எதற்காக ஏன் என்று தெரியவில்லை.

கையில் ஒரு டிராலி பேக் இருந்தது…
எதுவுமே பேசாமல் கீழே இறங்க

நேத்ரா எங்க கிளம்பிட்ட என்று ரவி அதிர்ச்சி அடைந்த படி கேட்டார்.

திரும்பி அவரை முறைத்துப் பார்த்த நேத்ரா கண்களைத் துடைத்தபடி மீண்டும் வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தாள்.

அவளின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த அபி வேகமாக பின் சென்று அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினான்.

உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கறோம் கொஞ்சமாவது பதில் சொல்லிட்டு போ என்று கூற

அவன் கையிலிருந்து தனது கைகளை தட்டி விட்டவள் எதுக்காக பதில் சொல்லணும் யார் நீ நான் எதுக்காக உனக்கு பதில் சொல்லணும் முதல்ல அதை சொல்லு என்று கூறியவள்

ரவியை திரும்பிப் பார்த்து முறைத்தபடி மது மாதிரி ஒரு பொம்பளைய பொண்டாட்டினு சொல்லிக்க உங்களுக்கு வேணா பெருமையா இருக்கலாம் ஆனா அவள மாதிரி ஒரு கேவலமான பொம்பளையை அம்மான்னு சொல்லிக்க எனக்கு அருவருப்பா இருக்குது...நான் ஷர்மா அங்கிள் வீட்டிக்கு போறேன் அவர் கார் அனுப்பறேனு சொல்லிருக்காரு...இனி இங்க திரும்பி வரமாட்டேன்... தயவுசெஞ்சு சொந்தம்னு சொல்லிக்கிட்டு நீங்க யாரும் என்னை தேடி அங்க வர வேண்டாம் .

முக்கியமான விஷயம் என் கல்யாணத்துல உங்க ரெண்டு பேர் மூஞ்சியையும் பார்த்தேனன்னா அந்த நிமிஷத்திலேயே கல்யாணத்தை நிறுத்திட்டு தற்கொலை பண்ணிப்பேன் என்று மிரட்டி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

ரவி அந்த இடத்திலேயே அப்படியே தலையில் கைவைத்து அமர அவரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது .

மது என்ன ஆயிற்று உன் மகளுக்கு ஏன் என்னென்னமோ பேசிட்டு போறா என்னால தான் அவளைத் தடுத்து நிறுத்த முடியல நீயாவது தடுத்து நிறுத்து என்று மனதிற்குள் மதுவிடம் மன்றாடிக் கொண்டிருந்தார் .

அவள் வெளியே செல்ல பல்லை கடித்துக்கொண்டு வேகமாக சென்ற அபி அவளின் முன்பு வழியை மறித்தபடி நின்றான்…

என்ன பிரச்சினை நேத்ரா முதலில் அதை சொல்லிட்டு வெளியே போ இப்படி நீயா வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இந்த வீட்டை விட்டு வெளியே போவதை என்னால ஏத்துக்க முடியாது.

அப்படியா காரணம் சொல்லனுமா சரி நான் கேட்பதற்கு முதல்ல நீ பதில் சொல்லு அதுக்கு அப்புறமா நீ கேக்கறதுக்கு நான் சொல்றேன்…

என் அம்மாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் சொல்லு …

அம்மாவுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் சொல்லு…


நான் சொல்லறேன் என் அம்மா ஒரு கேவலமான பொம்பள அவளுக்கு என் அப்பா மட்டும் பத்தல...வேலைசெய்யற முருகனும் வேணும்... அதுக்கு தடையா நான் இருப்பேன்னு பயந்து கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்திருக்கா...மது ஒரு பலகீனமான பொம்பளை.. கொஞ்ச நேரம் அவளை பத்தி கேட்டதுக்கே முருகன் கதை ...இன்னும் கேட்டிருந்தா உன் கதையும் வெளிய வந்திருக்கும்...

இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு எதுவுமே தெரியாத மாதிரி வேஷம் போட என்னால முடியாது இந்த மாதிரி ஒரு கேவலமான பொம்பளைக்கு நான் உட்கார்ந்து திதி கொடுக்கனுமா நல்லா இருக்கு கதை
என்று கூறி முடிக்குமுன் அபி தனது முழு பலத்தையும் திரட்டி கொண்டு அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.

அவனின் அறையை தாங்கிக் கொள்ள முடியாதவள் சில அடிகள் சென்று விழுந்தாள்.
விழுந்தவளிடம் வேகமாக சென்றவன் அவளின் கைகளை தூக்கி பிடித்து நிறுத்தியவன் மற்றொரு கன்னத்திலும் ஓங்கி அறைந்தான்.


அப்படி இருந்தும் அவனால் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை மதுவோட பொண்ணுங்கறதால நீ தப்பிச்ச... இல்ல பேசின இந்த வாயை உடைச்சு அத்தனை பல்லையும் உன் கிட்டயே எண்ண கொடுத்திருப்பேன் என்று கூறினான்.

பண்றதெல்லாம் பண்ணிட்டு அடிச்சா நான் பயந்திடுவேனா என் வாயை மூடினா உண்மை இல்லைனு ஆயிடுமா என்று கூற மீண்டும் அடிக்க கை ஓங்கியவன் ச்சே என்று கையைக் கீழே உதறிக்கொண்டான்.

பிறகு உனக்கு மதுவை பத்தி என்ன தெரியும் சொல்லு ...ஒரு பத்து வருஷம் கூட இருந்திருப்பியா... அதுல மூணு நாலு வருஷம் நீ குழந்தையா சுத்திட்டு இருந்திருப்ப விவரம் வந்து ஒரு ஆறுவருஷம் கூட இருந்திருப்ப...அந்த ஆறு வருஷத்துல உன் அம்மாவை பத்தி உனக்கு என்ன தெரிஞ்சிருக்க போகுது சொல்லு….தெரிஞ்சிருந்தா இப்படி சாக்கடைல துப்பறது போல பேச மாட்ட...

மதுவுக்கு எனக்கும் இருக்கிற உறவு என்னன்னு உனக்கு தெரியுமா...

அட்லீஸ்ட் அந்த முருகன் யாருன்னு தெரியுமா...

எல்லாத்தையும் எங்கேயோ இருந்த உன் அப்பாவால புரிஞ்சுக்க முடிஞ்சது... அவரோட பொண்டாட்டியை முழுசா நம்பறாரு... ஆனா மகளா இருந்தும் உன்னால புரிஞ்சிக்க முடியலல்ல ‌..

உன்னோட அப்பா ரவி ஒரு பக்கா ஜென்டில்மேன் அதனாலதான் மது கிட்டே முருகனை பத்தி கடைசிவரை வாய் திறந்து கேட்டதில்ல... ஏன்னா அவரு அவரோட மனைவிய நம்பினாரு அவரோட காதலியை நேசிச்சாரு...அவங்களோட காதலை மதிச்சாரு…

அந்த முருகன் பக்கா பிராடு ஸ்கூல் டேஸ்ல அம்மா பின்னாடி சுத்தறதை பார்த்து உன்னோட தாத்தா போலீஸ் பிரண்டு கிட்ட சொன்னதுல அவன்மேல பொய் கேஸ் போட்டு ஐந்து வருஷம் ஜெயில்ல போட்டாங்க பழி வாங்குவதற்காகவே உன் அம்மாகிட்ட வேலைக்கு சேர்ந்தான் உன் அம்மாவ பத்தி தப்பு தப்பா எல்லார்கிட்டயும் கதை கட்டி விட்டான் ஒரு கட்டத்தில் உன் அப்பாவைத் தவிர குடும்பத்துல இருக்குற அத்தனை பேரும் நம்பினாங்க.. இது மதுவுக்கு தெரிஞ்சதும் அவனை அடிச்சி விரட்டிட்டா…இப்ப வரைக்கும் எங்க இருக்கறான்ங்கற விஷயம் யாருக்குமே தெரியாது
அதுக்கும் ஒரு கதை கட்டி விட்டாங்க...
அவளைப் பத்தி முழுசா தெரிஞ்ச யாருமே தப்பா பேச மாட்டாங்க
ஏன்னா அவ ஒரு தேவதை…

சரி அவன் ஒரு பிராடு அதனால மது அடிச்சு விரட்டிட்டா ஊர்க்காரங்க தப்பா புரிஞ்சிகிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க…

உனக்கு என் அம்மாவுக்கு என்ன சம்பந்தம் எப்போ கேட்டாலும் மழுப்பலா பதில் சொல்ற அவளுக்கு உனக்கு எத்தனை வயசு வித்தியாசம் உரிமையை வா,போனு கூப்பிடற இதுக்கு என்ன அர்த்தம்…

உனக்கு ஒரு வரியில் சொன்னா புரியாது மது முழுசா சொல்றேன் கேட்டுக்கோ…என்றவன் மதுவிற்கும் அபிக்கும் இருக்கும் உறவை பற்றி கூறத் தொடங்கினான்.

தொடரும்....
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
24

அபிமன்யூ அப்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.

முதல் வருடம் முழுவதுமே அவன் கல்லூரி பேருந்தில் சென்று வந்தவனுக்கு இரண்டாம் ஆண்டு அப்படி செல்ல பிடிக்கவில்லை…

அவனின் நண்பர்கள் பல பேர் சொந்தமாக போட்டிபோட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தை வாங்கி அதில் பவனி வர இவனுக்கும் ஆசை வந்தது.

அதனால் அவனின் பெற்றோரிடம் தனக்கும் இருசக்கர வாகனம் வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்தான் .

அவர்கள் இவனிடம் எவ்வளவோ போராடியும் பலன் இல்லை அதனால் இவன் ஆசைபட்டது போலவே மார்கெட்டுக்கு புதிதாக வந்திறங்கிய வாகனத்தை இவனுக்காக புக் செய்தனர்.

அபிமன்யூ அப்பொழுது இவ்வளவு உயரம் கிடையாது பதினெட்டு வயது மட்டுமே முடிந்த இளைஞன்.

ஒல்லியான தேகம் அரும்பு மீசையுடன் பார்க்க சிறு பையன் போலவே இருந்தான்.

பொறியியல் துறையில் கணினி பாடத்தை எடுத்திருந்தான்.

சக்ரவர்த்தியும் அதே காலேஜ் தான் ஆனால் துறை வேறு...ஆனாலும் இருவருமே நல்ல நண்பர்கள்.


வாகனத்தை முதல் தடவையாக ஏதாவது ஒரு கோவிலில் வைத்து பூஜை செய்து விட்டு வரலாம் என்று நினைத்த அபி ஒரு பவுர்ணமி நன்னாளில் அவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திற்கு சென்றிருந்தான்.

எப்பொழுதுமே அங்கு மாதாமாதம் பௌர்ணமி பூஜை மிகவும் விசேஷம் மாலை நேரம் செல்பவர்கள் இரவு முழுவதும் அங்கு தங்கி விட்டு அதிகாலையில் தான் திரும்புவார்கள்.

பலமுறை அபிமன்யு அந்த கோவிலுக்கு அவ்வாறு சென்றிருந்ததால் அவனது வீட்டினர் அங்கு செல்ல அனுமதி தந்தனர்.

மாலையில் நேரமே சென்ற அபி முதலில் வாகனத்திற்கு பூஜை போட்டான்.

பிறகு நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர பூஜையில் மட்டுமே கலந்துகொண்டான்.

பிறகு நண்பர்கள் அனைவருமே அவனிடம் புது வாகனம் எடுத்ததற்காக தங்களுக்கு ட்ரீட் வைக்க வேண்டும் என்று வம்பு செய்ய அவர்களின் தொல்லைக்கு பயந்து சரி என ஒத்துக் கொண்டவன் நேராக வரும் வழியில் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் வண்டியை விட்டான்.

நண்பர்கள் போதும் போதும் என்னும் அளவிற்கு உணவை வாங்கிக் கொடுத்தவன் பிறகு அங்கிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைக்கும் பொழுது ஒரு சாரார் தியேட்டரில் இரவு நேர இரண்டாம் காட்சியை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினர்.

ஒரு சாராரோ தங்களுக்கு பியர் வேண்டுமென்று வம்பு செய்ய இரண்டுமே அபிமன்யுவுக்கு ஒவ்வாமை அவனுக்கு மது அருந்தும் பழக்கமும் கிடையாது கண்ட நேரத்தில் தியேட்டர் சென்று படம் பார்க்கவும் பிடிக்காது அதனால் இருசாராருக்கும் வேண்டிய அளவு பணத்தை கொடுத்துவிட்டு அவன் தனிமையில் வீட்டை நோக்கிப் பயணித்தான்.


அப்பொழுதுதான் பின்னால் வந்த வாகனம் ஹாரன் செய்ய அதிக பயிற்சி இல்லாமல் இருசக்கர வாகனத்தை புதியதாக ஒட்டுவதால் ஏற்படும் சிறு தடுமாற்றம் அவனுக்கும் ஏற்பட்டது.

அதனால் அந்த நேரத்தில் சற்று பயந்த அபிமன்யூ வாகனத்தின் கட்டுப்பாட்டை விட்டான்... மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அங்கிருந்த சிறு பள்ளத்தில் வாகனம் இறங்கியது இறங்கிய வேகத்திலேயே வாகனத்தில் இருந்து ஒரு பக்கமாக
விழுந்த அபியின் தலை அங்கிருந்த கல்லில் சென்று மோத தலையில் பலமாக அடிபட ரத்த வெள்ளத்தில் மயங்கினான்...வாகனம் சற்று தள்ளி விழுந்தது அதனின் தானியங்கி மோட்டாரின் சக்தியால் சிறு அதிர்வுடன் பின் வீல் மெதுவாக சுத்திக்கொண்டிருந்தது.

உடல் எடைக்கும் வாகனத்துக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாத காரணத்தினால் வாகனம் அவனின் பேச்சை கேட்கமறுத்து விட்டது.


அபிமன்யூவின் வீட்டிலோ மகன் மறுநாள் தானே வருவான் என்று அவனை தேடவில்லை.

அபிமன்யூ விழுந்தது சிறு பள்ளம் என்பதாலும் வாகனத்தின் பெருத்த உருவத்தாலும் சாதாரணமா ரோட்டில் போகிறவர்களுக்கு வாகனம் நன்கு தெரியும்...

ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லை ஏதோ ஒரு இளவட்டம் இரவில் நன்கு மது
அருந்திவிட்டு அந்த போதையில் வண்டியோடு விழுந்து கிடக்கிறது போல என நினைத்து கடந்து சென்றனர்.

நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை அப்படியே உயிரை கையில் பிடித்தபடி அபிமன்யூ கிடந்தான்.

அதிகாலை வேளையில் ஒரு திருமணத்திற்கு செல்வதற்க்காக அந்த வழியாக மது கணவரின் காரை அவளே ஓட்டிவந்தாள்.எப்பொழுதுமே அவள் வெளியில் செல்வது என்றாள் டிரைவர் தான் ஓட்டுவார்.

இன்று அதிகாலை என்பதால் ஏன் அவரை தொல்லைசெய்ய வேண்டும் என நினைத்து அவரை அழைக்க வில்லை ‌.


மதுவிற்கு கார் ஒட்டுவது என்றால் அவ்வளவு பிடிக்கும் தனது கணவர் அவரின் பயன்பாட்டிற்காக புதியதாக வாங்கிய ஹோண்டா சிட்டி காரை மது அவ்வப்போது எடுத்துக் கொண்டு அருகில் எங்காவது சென்று வருவாள்.

கணவர் இங்கு வரும் மாதம் இருமுறை மட்டுமே அந்த கார் உபயோகத்தில் இருக்கும் மீதி நாட்கள் அப்படியே தூசி அடைந்து மூலையில் நின்று கொண்டிருக்கும்...அதனால் பேட்டரி போய்விடக்கூடாது என்பதற்காக கணவர் டிரைவரிடம் கூறியிருக்கிறார்…

அடிக்கடி அதை ஸ்டார்ட் செய்து விட்டு சிறிது நேரம் ஓடவிட்டு அணைத்து வையுங்கள் என்று...அவர் அதை செய்வாரோ இல்லையோ மது அதை மறக்காமல் செய்வாள்.மதுவிற்கு வாகனங்களின் மீது அவ்வளவு காதல்...புதியதாக மார்கெட்டிற்கு எந்த வாகனம் வந்தாலும் அதைபற்றி முழுதாக தெரிந்து கொள்ள நினைப்பாள்.

கணவர் சில முறை அவளின் வாகன அறிவைக் கண்டு அவளுக்கு அடிப்படை டிரைவிங் கத்துக்கொடுத்தார்... அதன்பிறகு மது வெளியில் செல்லும் பொழுதெல்லாம் காரை அவளே அதை ஓட்டிக் கொள்வாள். கணவர் அடிக்கடி இதற்காக மதுவை கண்டிக்கவும் செய்வார் நீ முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை அப்படி இருக்கும் பொழுது ரோட்டில் இயக்குவது தவறு அது உனக்கு இல்லை என்றால் எதிரில் வருபவர்களுக்கு ஆபத்தில் முடியும் என்று மது அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள் அவளுக்கு கார் ஓட்டுவது அவ்வளவு பிடிக்கும் அதுமட்டுமின்றி முறையாகப் பயிற்சி எடுக்காவிட்டாலும் கூட கணவர் கற்றுத் தந்ததை வைத்து அவளே வாகனம் ஓட்டுவதில் கைதேர்ந்த இருந்தாள்.

வெண்மை நிறத்தில் அரக்கு நிற பார்டரில் பட்டு புடவை அணிந்திருந்த மது தலை நிறைய பூவும் அந்த புடவைக்கு மேட்ச்சாக வெள்ளைநிற கற்கள் பதித்த நகைகளை அணிந்திருந்தாள்.

முப்பத்திரண்டு வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் கல்லூரிக்குச் செல்லும் பெண்போல் அவ்வளவு இளமையாக இருப்பாள்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரும் பொழுது எதிரில் பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த மார்க்கெட்டிற்கு புதிதாக வந்த அந்த உயர்ரக பைக்கினை கண்டுவிட்டாள் கண்டதுமே அவளுக்குள் ஒரு ஆச்சரியம் எப்படி இவ்வளவு விலை உயர்ந்த பைக்கை யார் பள்ளத்துக்குள் இறக்கி விட்டுச் சென்றது என்று யோசித்தவள் காரை நிறுத்திவிட்டு ரோட்டின் எதிர்புறத்தில் நடந்துசென்று பைக்கின் அருகில் நின்று ஆராய அப்பொழுதுதான் பள்ளத்திற்குள் விழுந்து கிடந்து அபி தென்பட்டான் தலை முழுவதும் உறைந்த ரத்தம்களுடன் அலங்கோலமாய் அவன் கிடப்பதைப் பார்த்தவளுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது உடனடியாக புடவையை இழுத்து சொருகிய மது பள்ளத்திற்குள் குதித்தாள்.

மது குனிந்து அபியை ஆராய உயிர் இருப்பதை அறிந்து கொண்டவள் அவனின் கன்னத்தை தட்டி பார்த்தாள். தம்பி... தம்பி ...கண்ணை திறப்பா...அபியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை .

மீண்டும் பள்ளத்திலிருந்து ஏறி ரோட்டிற்கு வந்தாள்.

யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒருவரையும் காணவில்லை மீண்டும் பள்ளத்திற்க்குள் இறங்கிய மது யோசிக்காமல் சிரமப்பட்டு அவனை தூக்கி ரோட்டின் மீது கிடத்தினாள்.

பிறகு அவளும் பள்ளத்திலிருந்து மேலே ஏறி காரை திருப்பிக்கொண்டு அவனிடத்தில் வந்து நிறுத்தினாள்‌.

இப்பொழுது அவனுக்கு தலையில் உறைந்திருந்த இடத்திலிருந்து மீண்டும் ரத்தக்கசிவு ஆரம்பித்தது... பயந்தவள் கட்டு போடுவதற்காக ஏதாவது துணி இருக்கிறதா என்று காரில் தேட எதுவுமே இல்லை யோசிக்காமல் அவளின் புடவை முந்தியை பற்களால் கடித்து கிழித்தவள் அவனின் தலையோட அழுத்தி கட்டுப்போட்டாள்.பிறகு

சிரமப்பட்டு காரின் முன் இருக்கையில் அவனை தூக்கி அமர வைத்தாள் சீட் பெல்ட்டினை மாட்டிவிட்டவள் அவளும் காரில் ஏறி வெறி கொண்டவள் போல மின்னல் வேகத்தில் மருத்துவமனையை நோக்கி பயணித்தாள்.
அவளது உதடுகள் மட்டும் தானாக உனக்கு ஒன்னுமில்ல...நீ நல்லாயிருக்க என்ற வாசகத்தை ஜெபம் போல ஒப்பித்தது.இடையிடையே அவனது தலையில் கைவைத்த நீவிவிட்டாள்.

அபியின் நினைவலைகளில் மதுவின் செயல்கள் எல்லாமே பதிய தொடங்கியது.யாரோ ஒரு வெண்பட்டு உடுத்திய தேவதை தனது உயிரைக்காக்க போராடுகிறாள்... அவளுக்கு நன்றி தெரிவிக்கவாவது தான் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று அந்தக் கடைசி ஒரு துளி உயிர் இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தது.

ஒருவழியாக மருத்துவமனை வந்து சேரும்பொழுது அபியின் மொத்த ஜீவனும் அடங்கத் தொடங்கியிருந்தது. அவன் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதால் மருத்துவமனை நிர்வாகம் உள்நோயாளியாக ஏற்றுக்கொள்ள மறுத்தது.

மது மருத்துவரிடம் பயங்கரமாகச் சண்டையிட்டாள்...அவனுக்கு சிகிச்சை அளிக்கும் படி...மருத்துவரோ அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் இல்லையென்றால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு எப்ஐஆர் காப்பினை கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் சிகிச்சை அளிப்போம் என பிடிவாதமாக கூற…
மது எவ்வளவு போராடியும் மருத்துவர்களின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை...இயலாமையில் அபியை பார்க்க ஸ்ட்ரெச்சரில் ரத்த வெள்ளமாக விரல்கள் மட்டும் மெதுவாக அசைந்தபடி கிடந்தான்.

மதுவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அபியை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு வந்திருந்தால் கூட யாராவது ஒருவர் வந்து காப்பாற்றி இருப்பார்கள் இப்பொழுது தான் இங்கு அழைத்து வந்து அவனை கொலை செய்கிறோமோ என்று தான் அவளுக்கு தோன்றியது.


மதுவும் மருத்துவருக்கும் நடக்கும் அத்தனை சம்பாஷனைகளையும் அபிக்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவன் இப்பொழுது இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தால் கூட பரவாயில்லை ஆனால் அதற்கு முன் மதுவின் உருவத்தை ஒரு முறையாவது காண வேண்டுமென்று மிக சிரமப்பட்டு கண்களைத் திறக்க போராடிக் கொண்டிருந்தான்.

அவனின் போராட்டத்தை கண்ட மது கொஞ்சம் கூட யோசிக்காமல் மருத்துவமனையில் இருந்து ஒரு கூரான ஆயுதத்தை எடுத்து அவளின் தொண்டையின் பக்கத்தில் வைத்தவள் இப்பொ நீங்க இந்த பையனுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலனா இந்த செகண்டே என்னை நானே குத்திக்குவேன் என்று மிரட்ட அங்கிருந்த அத்தனை பேருமே பயப்பட தொடங்கினர்.

டியூட்டி டாக்டரோ நீங்க செய்யறது ரொம்ப தப்பு நாங்க போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும் என்று கூற

அவளும் பதிலுக்கு நானும் மெடிக்கல் கவுன்சிங்கில் உங்களை கம்ப்ளைன்ட் செய்வேன் உயிருக்கு ஆபத்தாகி வந்த ஒருத்தருக்கு நீங்க சிகிச்சை அளிக்க மறுத்ததா...உங்களோட லைசன்ஸ்ஸை பிடுங்கற வர ஓயமாட்டேன் என்று பதிலுக்கு மிரட்ட


அவளின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து வேறு வழியில்லாமல் அபிக்கு உடனடியாக அட்மிஷன் போட்டார்கள். மருத்துவமனை பாரத்தை நிரப்பும் போது ஏனோ உறவு முறையில் அவனது அக்கா என்று அவள் குறிப்பிட்டாள்.அட்ரஸ் இருந்த இடத்தில் மொட்டையாக கோவை என எழுதினாள்.அவர்களும் அவசரத்தில் கவனிக்காமல் ஃபார்ம்-மை வாங்கி வைத்து விட்டனர்.

அதன்பிறகு சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்திற்காக தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்தவள் மீதி பணத்திற்கு நன்கு விடியும்வரை காத்திருங்கள் அதன் பிறகு உங்களுக்கு பணத்தை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறி அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

அபி உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது சற்று நேரத்திற்கெல்லாம் அபியின் இரத்தம் மிகவும் வெளியேறியிருப்பதால் உடனடியாக இரத்தம் தேவை என்று அவனுடைய இரத்த வகையை குறிப்பிட்டுக் கூற அங்கிருந்து மீண்டும் இரத்த வங்கியை நோக்கி ஓடினாள் மது.

அங்கு அவர்கள் கேட்ட இரத்தவகை ஸ்டாக் இல்லாததால் மீண்டும் மருத்துவமனை வந்து என்ன செய்வது என்று கேட்க யாராவது இரத்த தானம் செய்பவர்கள் இருந்தா பாருங்க என்று அங்கிருந்த பணிப்பெண் சிலருடைய நம்பரை அவளிடம் தந்தனர் .

இரத்த தானம் செய்பவர்களை மது விசாரிக்க உடனடியாக இரத்தம் கொடுக்க யாருமே அருகில் இல்லை...


அப்பொழுதுதான் மதுவுக்கு தீடிரென தோன்றியது அவளுக்கும் அபிக்கும் ஒரே ப்ளட் க்ரூப் தான்…

தன்னால் ரத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்க அவளைப் பரிசோதித்த செவிலியர்கள் தாராளமாகக் கொடுக்கலாம் என்று கூற உடனடியாக மதுவின் ரத்தம் அபியின் உடலுக்குள் ஏற்றப்பட்டது .

அபி பிழைத்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்ததாலோ என்னவோ அவளின் ரத்தம் அபியின் உடலுக்குள் சென்ற சில வினாடிகளிலேயே அவன் உடம்பில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டது.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தேவைப்படும் பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்று இவளிடம் கறாராக கூற வேறு வழியில்லாமல் கையில் அணிந்திருந்த வளையல்களை கழட்டி அருகில் இருந்த ஒரு அடகு கடையில் வைத்து முழு பணத்தையும் கட்டி அங்கேயே காத்திருக்க ஆரம்பித்தாள்.

மருத்துவமனையில் எல்லாருமே மதுவின் உடன்பிறந்த தம்பி என்றுதான் நினைத்தார்கள் அக்கா என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் தனது இரத்தத்தை கொடுத்து அல்லவா அவனை காப்பாற்றி இருக்கிறாள் என்றெல்லாம் அவளைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அதன்பிறகு அங்கு வேலை செய்யும் செவிலிய பெண்கள் கூட மதுவை மிகவும் மரியாதையாக நடத்தத் தொடங்கினார்கள்…

மேடம் உங்க தம்பி இப்போ ஓகேதான் எப்படியும் இன்னைக்கு ஃபுல்லா அவரைப் பாக்குறதுக்கு உங்கள அனுமதிக்க மாட்டாங்க அதனால நீங்க இங்க காத்துகிட்டு இருக்கிறதை விட உங்க வீட்டுக்கு போயி ஃப்ரஸ் ஆயிட்டு உங்களுக்கும் அவருக்கும் தேவைப்படும் பொருட்களை எடுத்துட்டு வாங்க என்று அறிவுறுத்தினர்

தலையசைத்த மது அங்கிருந்தவர்களிடம் அப்பொழுதுதான் கூறினாள் அவர் என்னோட தம்பி கிடையாதுங்க ரோட்டில் அடிபட்டு கிடந்தால பார்க்க மனசு கேக்கல அதான் கூட்டிட்டு வந்து இங்க அட்மிட் பண்ணினேன் இப்போ அவரு யாரு என்னன்னு கண்டு பிடிக்கணும்னுனா என்ன செய்யணும் என்று கேட்ட மதுவை அங்கிருந்த அத்தனை பேரும் பிரமிப்புடன் பார்த்தார்கள்.

யாரோ ஒருவருக்காகவா இந்த அளவு சண்டையிட்டு ரத்தம் கொடுத்து போராடியது இந்தப் பெண் என்று.

பிறகு அங்கிருந்த மருத்துவர்களிடம் சென்று ஒரு செவிலியர் விவரத்தை கேட்டு வந்தார்.

மேடம் இவர் யாரு என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா அவர் அடிப்பட்ட இடத்தோட லிமிட்ல வர்ற போலீஸ் ஸ்டேஷன்ல நீங்க ஒரு கம்ப்ளைன்ட் பண்ணனுமாம்.

அதுக்கப்புறம் இங்க அட்மிட் பண்ணினதால பக்கத்தில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து நாங்க இன்ஃபார்ம் பண்ணுவோம் அவங்க வந்து கேட்கும்போது நீங்கள் சரியான பதில் கொடுக்கனும் அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அவரோட ட்ரீட்மென்ட்க்கு கட்டவேண்டிய பணம் மொத்தத்தையும் டாக்டர் கட்ட சொல்றாரு அப்படி இருந்தா மட்டும்தான் மேற்கொண்டு சிகிச்சை பண்ணுவாங்களாம் இல்லன்னா ஜிஹெச்க்கு மாத்திக்க சொல்லிட்டாரு என்று கூறினார்.

மதுவின் மனமோ வெறும் பணத்திற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த உயிரை ஏன் பாடுபடுத்த வேண்டும் என்று யோசித்தவள் அவளது மொபைல் போனின் நம்பரை செவிலியரிடம் கொடுத்துவிட்டு இன்னும் அரை மணி நேரத்துல உங்களுக்கு தேவைப்படும் மொத்த பணத்தையும் நான் கட்டிடறேன் தயவுசெஞ்சு ட்ரீட்மெண்ட்டை மட்டும் ஸ்டாப் பண்ணிடாதீங்க அந்தப் பையனை காப்பாத்துங்க என்று கூறியவள் வீட்டுக்குச் சென்று குளித்து உடை மாற்றி விட்டு இலகுவான சமையலை செய்து உண்டவள் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து முடித்தாள் பிறகு அவன் யார் என்ன என்று தெரியவேண்டும் அல்லவா அதனால் அடிபட்ட இடத்தின் அருகேயிருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தாள்

காவல் நிலையத்திலேயேயோ அவ்வளவு கேள்விகள் இவள் தான் அவனை அடித்து ஒன்றுமே தெரியாததுபோல் மருத்துவமனையில் சேர்த்து வைத்தது போல் இவளையும் விசாரிக்க தொடங்கியிருந்தனர்.


அங்கு மருத்துவமனையில் அபியை அட்மிட் செய்யும் முன் மருத்துவமனை காட்டிய கெடுபிடிகள் இதை இரண்டையும் யோசித்துப் பார்த்தவளுக்கு இப்பொழுதுதான் முழுதாக புரிந்தது .

ஏன் ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடக்கும் போது மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்று ஏன் தான் அபியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தோம் என்று வருந்தும் அளவிற்கு அவளிடம் அத்தனை கேள்விகள் அத்தனை விசாரணைகள் ஒருவழியாக மாலைக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் மருத்துவமனையே வந்தாள்.
அவனை தேடி யாராவது வந்திருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள.


இங்கு அபியின் வீட்டிலோ பகல் பதினொன்று வரை அவனை அதிகமாக தேடவில்லை... வழக்கமாக இது போல் கோவிலுக்குச் சென்றால் காலையும் அங்கேயே பூஜையை பார்த்து விட்டு சில நாட்கள் மெதுவாகத் தான் வருவான் அப்படி நினைத்துக் கொண்டனர் .

அதன் பிறகு மாலை வரையுமே பிள்ளையை காணோமே என்று வருந்தினார்களேத் தவிர மிகவும் சிரமம் கொண்டு தேடவில்லை மாலை ஆக ஆகத்தான் தாய்க்கு சற்று பயம் வர ஆரம்பித்தது அதன் பிறகு அவனின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஃகால் செய்து விசாரிக்க அனைவருமே ஒரே பதிலைத்தான் கூறினார்கள் அவன் இரவே அவர்களின் வீட்டிற்குச் சென்று விட்டான் என்று…

பயந்த பெற்றோர்கள் அபியை தேடி கோவிலில் இருந்து அவர்கள் வீடு வரை இருக்கும் அனைத்து பாதைகளிலும் தேடத் தொடங்கினர் ஒருவழியாக இரவு நெருங்கும் வேளையில் தான் அவனின் வாகனத்தில் ரோட்டோரத்தில் கண்டுபிடித்தனர் .

இரவு என்பதால் அவனுக்கு அடிபட்டதால் தரையில் கொட்டிய ரத்தம் அவர்களின் பார்வைக்கு படவில்லை

முதலில் அபியின் பெற்றோர்களும் பிள்ளையைப் பணத்திற்காக யாராவது அடித்து தூக்கி சென்று விட்டார்கள் என்றுதான் நினைத்தார்கள் அதன் பிறகுதான் ஒருவேளை விபத்து கூட ஏதாவது நடந்திருக்கலாம் என்று யோசித்து உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்ய ஏற்கனவே மது அபியை பற்றி புகார் செய்திருந்ததால் உடனடியாக அபியை அனுமதிக்கப்பட்டிருக்கும் ஹாஸ்பிட்டலில் விலாசத்தை கொடுத்து துணைக்கு ஒரு காவலரையும்
அனுப்பிவைத்தார் .


அவர்கள் அபியை சேர்த்திருக்கும் மருத்துவமனையை கண்டுபிடித்து வரும்பொழுது இரவு மணி பதினொன்று அதுவரை மது அங்குதான் கால்களை மடித்தபடி ஒரு சேரில் அமர்ந்து உட்கார்ந்திருந்தாள்.

யாராவது அபியை தேடிவந்தாள் அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று காத்திருக்க யாரையும் இது வரை காணவில்லை…. டெல்லியில் இருக்கும் கணவருக்கு கூட அழைத்துக் கூறி விட்டாள் ரவி அவளை நன்கு திட்டி தீர்த்தார் உனக்கு எதற்கு இந்த தேவை இல்லாத வேலை மது உடனே நீ வீட்டுக்கு கிளம்பி போ பணம் போனால் பரவாயில்லை என்று கூற வேறு வழியில்லாமல் மருத்துவமனை ரிசப்ஷனில் சென்று நா இப்போ வீட்டுக்கு போறேன்... ரெண்டு போலீஸ் ஸ்டேஷனிலும் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கேன் எப்படியும் அந்த பையனை தேடி யாராவது வருவாங்க என்று கூறியவள்... ட்ரீட்மெண்ட்க்கு பணம் தேவைப்பட்டா மறக்காம எனக்கு கூப்பிடுங்க நான் கட்டி விடறேன் அதுக்காக ட்ரீட்மென்ட் மட்டும் ஸ்டாப் பண்ணிடாதீங்க என்று மீண்டும் ரிசப்ஷனில் கூறிவிட்டு அவள் வெளியே கிளம்பவும் அபியை காண அவரின் குடும்பத்தினர் உள்ளே ஓடிவந்தனர்.

அபியின் அடையாளங்களைக் கூறி
மருத்துவமனை ரிஷப்ஷனில் விசாரிக்க தொடங்கினர்.

ஆமாம் காலைல ஒருபையனை மதுமதினு ஒரு லேடி அட்மிட் பண்ணினாங்க...என்று அவர்களை அழைத்துச் சென்று அபியை காட்ட அவர்களின் மகன் தான் என்று தெரிந்ததும் அங்கிருந்த அனைத்து மருத்துவமனை பணியாளர்களுக்கும் மாறி மாறி நன்றியை தெரிவித்தனர்.

அங்கிருந்த செவிலிய பெண் உங்க பையனை சரியான நேரத்துக்கு ஒருத்தர் கொண்டு வந்து அட்மிட் பண்ணி அவங்களோட ரத்தத்தையும் கொடுத்து பணத்தையும் கட்டி உயிரை காப்பாற்றி இருக்காங்க அவங்களுக்கு தான் உங்களோட நன்றி சொல்லணும் நாங்க எல்லாம் எங்க கடமையை தான் செஞ்சோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர் காவலரிடம் யாரந்த பெண் என்று கேட்க அவருக்கு தெரியவில்லை...அட்ரஸ்ஸை கேட்க அப்படி கொடுக்க கூடாது என்று தரமறுத்து விட்டார்.

ஒருவேளை மறுநாள் அந்த பெண் தனது மகனை தேடிக்கொண்டு இங்கு வருவந்தாள் அப்பொழுது நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம் என்று எல்லோருமே விட்டு விட்டனர்.

ஆனால் மதுமதி மறுநாள் மருத்துவமனைக்கு ஃபோன் செய்து விசாரிக்க அவனின் குடும்பத்தார் வந்து விட்டனர் என்று தெரிந்ததும் அதன் பிறகு மருத்துவமனைக்கு செல்ல வில்லை ஏற்கனவே இரத்ததானம் கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு கலந்துகொள்ள வீட்டிலேயே ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டாள்.


மருத்துவமனையில் அபி கண்விழிக்க முழுதாக மூன்று நாள் ஆகியிருந்தது கண் விழித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி என்னை காப்பாற்றிய அந்தப்பெண் எங்கே என்று தான்.

குடும்பத்தினருக்கும் அவள் யார் என தெரியவில்லை அதன் பிறகு மருத்துவர்களிடம் விசாரிக்க அவர்களுக்கும் மதுவின் பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவள் எழுதிக் கொடுத்த மருத்துவமனை பாரத்தில் அட்ரஸ் இருக்கும் இடத்தில் வெறும் கோவை என்று மட்டுமே எழுதி இருந்தாள்

இப்பொழுது அவர்களிடம் அவளின் செல்போன் என் மட்டுமே இருக்கிறது அது போதும் அதை வைத்தே கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் நினைத்துக் கொண்டனர் சரியாக அவன் குணமாகி மருத்துவமனையை விட்டு வெளியே வர ஒரு மாதம் ஆகிவிட்டது... ஆனால் அந்த இடைப்பட்ட சமயத்தில் மதுவை யாருமே தேடவில்லை…

ஆனால் அபிக்கு அப்படியல்ல கண்டிப்பாக மதுவை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் .

அவனுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அவள் தனி ஒரு ஆளாக அவனை தூக்கி காரில் உட்கார வைத்தது அவனின் தலையை கோதி விட்டபடி உனக்கு ஒன்னும் ஆகாது நீ நல்லா இருக்கற என்று அவனின் அடி மனதிற்குள் நேர்மறையான சிந்தனைகளை வித்திட்டது அவளின் ஸ்பரிசம் , மருத்துவமனையில் சண்டையிட்டது இப்படி பலவாறாக மதுவின் நியாபகங்கள் இருக்கிறது…

மது அபியின் மருத்துவச் செலவிற்காக கட்டிய தொகைகள் முழுதாக ஓரு லட்சம் வரை இருந்தது…
அதையும் திருப்பி தர வேண்டும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

தாய் தந்தையிடம் அவளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தான் அபி .

யாருமே தன்னை கவனிக்காமல் கடந்து செல்லும்பொழுது அவள் ஒருத்தி மட்டும் தன்னைக் கவனித்து விட்டு அப்படியே விட்டுச் செல்லாமல் மருத்துவமனையில் சேர்த்து அவளின் இரத்தத்தையும் கொடுத்து பணத்தையும் கட்டி இருக்கிறாள் என்றால் அப்படிப்பட்ட பெண் எப்பேர்ப்பட்டவளாக இருந்திருப்பாள்.

என்னதான் அவள் வீட்டில் பணம் கொட்டிக் கிடந்தாலும் அடுத்தவர்களுக்கு செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமே அந்த நல்லமனம் அவளிடம் இருக்கிறது அதற்காகவாவது அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்தவன் ஒவ்வொரு இடமாக மதுவை தேட தொடங்கியிருந்தான் .

எப்படியோ ஒரு வழியாக மூன்று மாதம் கடந்து விட்ட நிலையில் அவள் புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து சில ஆயிரங்களை இழந்து போராடி அவளின் விலாசத்தை பெற்றான்.

அதன்பிறகு அவளைத் தேடிச் செல்ல அங்கேயோ மது பூக்களுக்கு நடுவே பணியாட்களை வேலை வாங்கிக் கொண்டு இருந்தாள்.

முருகன் தான் சந்தேகப் பார்வையோடு மதுவிடம் அபியை அழைத்து வந்தான்.

அதற்கு முன்பே அபியிடம் யார் நீ எதற்காக மதுவை பார்க்க வந்திருக்கிறாய் என பல கேள்விகள்... அபி சிறு பையன் என்பதால் சற்று பயந்த படியே மழுப்பலாக பதில் கூறினான்…

இவ்வளவு கெடுபிடியாக இருக்கும் ஒருவனிடம் மது தனக்கு உதவியதையும் மருத்துவமனையில் பணம் கொடுத்ததையும் கூறினால் எங்கே மதுவிடம் சண்டையிடுவானோ என்று பயந்தான் அபி...அதனால் அதைப்பற்றி வாய் திறக்க வில்லை.

அபியை தோட்டத்தின் நடுவே அழைத்து வந்த முருகன் எல்லோர் முன்பும் உரிமையாக மதுவை பார்த்து மது உன்னை பார்க்க ஒரு பையன் வந்திருக்கான் யாருன்னு பார்த்து சீக்கிரம் அனுப்பிவிடு என்று அதிகாரத் தோரணையுடன் கூறினான்.


அவனின் தோரணையைக் கண்ட அபி முதலில் முருகன்தான் மதுவின் கணவர் நினைத்துக் கொண்டான் அபி மட்டுமல்ல அங்கு புதிதாக வேலை செய்யும் பல பேர் கூட அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் அப்படி ஒரு மாயையை அந்த இடத்தில் முருகன் ஏற்படுத்தியிருந்தான்…

தொடரும்...
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
25

ஆனால் இது எதுவுமே மதுமதிக்கு தெரியாது…
ஏதோ சகோதர பாசத்தில் அதிகப்படியான உரிமையை எடுத்துக்கொள்கிறான் என கண்டு கொள்வதில்லை.

யாருப்பா நீ என்று கேட்டபடி மது அபியின் முன்பு வந்தாள் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை

தயங்கிபடி உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…

அப்படியா சரி வாங்க அப்படி போலாம் என்றவளிடம் சற்றுத்தள்ளி வந்தவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மதுவிற்கு அவ்வளவு சந்தோஷம்.

நீ தானா அந்த பையன் அடையாளமே தெரியல இப்ப எப்படி இருக்க என்று நலம் விசாரித்தவள் இதை சொல்லியிருக்கலாமே என்றாள்.

இல்ல உங்க கணவர் ரொம்ப முரட்டுத்தனமா தெரிஞ்சாரு... சொன்னா உங்களை ஏதும் திட்டுவாறோனு பயந்து சொல்லல எனறவனிடம்

அவன்ஸஎன் கணவர் கிடையாது அவரு டெல்லியில இருக்காரு முருகன் மில் மேனேஜர்…

அப்படியா என்று சந்தேகமாய் முருகனை பார்த்த அபியை பார்த்தவள்

ஏன் நம்ப முடியலையா .

இல்ல அவர் நடத்துகிறது தோரணை எல்லாம் அப்படி தெரியல தப்பா எடுத்துக்காதீங்க அவர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க நான் வரேன்…என்ற அபி முதல் பார்வையிலேயே முருகனை கணித்து இருந்தான்.

மதுவிற்கு முதல்முறையாக முருகனின் மீது சிறு சந்தேகம் எழுந்தது புதிதாக பார்ப்பவர்களுக்கு கணவன் போல் தெரிகிறது என்றால் முருகன் எது போல் நடந்து கொள்கிறான் தள்ளி இருந்து கவனிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் .

அபி மறுநாளே அவனின் குடும்பத்துடன் வந்து இறங்கி விட்டான் அவர்கள் தாய் தந்தை அனைவருமே மதுவிடம் மாறி மாறி நன்றி தெரிவித்தார்கள் அவள் நகையை வைத்து தான் வைத்தியம் பார்த்ததை அறிந்து கொண்டவர்கள் மறுநாளே சென்று அழகான வளைகளை வாங்கிப் பரிசளித்தார்கள்.

அதன்பிறகு மதுவையும் வலுக்கட்டாயமாக அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் ஷர்மாவால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு இது மிகவும் ஆறுதலாக இருந்தது.

அபியிடம் மிகவும் நெருக்கமாக மாறியிருந்தாள். அவனுக்கு மதுவை எப்படி அழைப்பது என்று குழப்பம் இருக்க பெயர் சொல்லி அழை என்று அவள் தான் அவனை வற்புறுத்தினால் அன்றிலிருந்து மது என்று அழைக்கத் தொடங்கினான்.



எப்பொழுதுமே அவர்களிடம் நேத்ராவைப் பற்றி மட்டுமே பேசுவாள். அவளின் சிறு வயதுப் புகைப்படங்களை எல்லாம் காட்டி ஆர்வமாக பேசுபவள் முடிக்கும் போது கண்டிப்பாக கண்கலங்கி விடுவாள் மகளை பிரிந்த ஏக்கம் அதில் நன்றாகவே தெரியும் அபியின் பெற்றோர்கள் நேத்ராவை பற்றி எதுவுமே கேட்டுக்கொள்வது இல்லை மகள் மீது இவ்வளவு பாசத்தை வைத்திருப்பவள் ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறாள் என்றால் ஏதோ பெரிய காரணம் இருக்கும் என்று மட்டும் புரிந்து கொண்டார்கள்.

அவர்கள் மேற்கொண்டு கேட்காததே மதுவிற்கு அவர்களின் மீது பெரும் மதிப்பை கொடுத்தது.

அந்த சமயத்தில்தான் மதுவை பள்ளி மாற்ற வேண்டும் என்று பேச்சுவாக்கில் அபியின் குடும்பத்தாரிடம் கூற…

நேத்ராவின் பாதுகாப்பு பற்றிய பொறுப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்கள் உறவினர் மூலமாக நடத்தி வந்த பள்ளியிலேயே அவளின் பாதுகாப்பையும் உறுதி செய்து பள்ளி மாற்றி விட்டார்கள்.

இந்த சமயத்தில்தான் அபியின் அண்ணனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

திருமணம் நாள் நெருங்கும் வேளையில் பல நாட்களாக குழந்தை இல்லை என மருத்துவம் பார்த்து வந்திருந்த அபியின் சகோதரி கருவுற அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டதால் நாத்தனார் சீர்செய்ய யாரை கேட்பது என்று யோசிக்கும் பொழுது அபி யோசிக்காமல் மதுவை முன்னிறுத்த மதுவும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக போனாள்.

அந்த திருமணத்தில் முருகன் அடித்த அலப்பறையை சற்று உற்று கவனித்த மது ஒரு கண்ணை அவன் மீது வைத்தாள்.

அதன் பிறகு வேலை செய்யும் பெண்களிடமும் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.

அவர்களிடம் நெருங்கிப் பழக ஒரு பெண் விளையாட்டாய் முருகனுக்கும் மதுவிற்கும் இருக்கும் தொடர்பை பற்றி சக பெண்கள் நினைப்பதை கூற உஷாரான மது மறுநாளே முருகனை வேலை செய்யும் ஆட்களை விட்டு அடித்து விரட்டினாள்.

எதையும் கணவரிடம் மறைப்பதில்லை அபியின் குடும்பத்தாரைப் பற்றி அவ்வப்போது கூறுபவள் ஒருவேளை எதிர்காலத்தில் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் எண்ணம் இருந்தால் அபியை மனதில் வைத்துக்கொண்டு தேடுங்கள் என்று கூறுவாள்.

ரவிக்கு அபியை நேரில் பார்த்தது கிடையாது ஆனால் மது சொல்லும் பொழுதே அவனைப்பற்றி நன்கு யூகித்து இருந்தார்.

அபியின் பெற்றோர்களிடமும் ஜாடையாக கூறுவாள் ஒருவேளை அபிக்கு பெண் பார்க்கும் ஐடியா இருந்தால் தன்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு தான் பார்க்க வேண்டும் என்று உரிமையாக கூறுவாள்.

அவர்கள் மதுமதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அவர்களின் செல்ல பையனின் உடம்பில் ஓடுவது அவளின் ரத்தம் எப்படி மறுப்பார்கள் குடும்பமே மதுமதிக்கு நன்றி கடன்பட்டு திருப்பி செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறது உயிரை கேட்டால் கூட ஒட்டு மொத்த குடும்பமும் கொடுக்கும் மகளையா வேண்டாம் என்று கூறுவார்கள்.

அபி குடும்பத்தோடு அடிக்கடி இங்கு வருவதும் இவள் மன அழுத்தம் அதிகமாகும் போது அங்கே போவது வாடிக்கையாகிவிட்டது.கிட்டதட்ட ஐந்தாண்டு கால நட்பு…இப்பொழுது அபிக்கு இருபத்தி நான்கு வயது மதுவிற்குமுப்பத்தியெட்டு வயது கிட்டத்தட்ட பதினான்கு வருட வயது வித்தியாசம் இந்த வித்தியாசத்தில் தூய நட்பு கொண்டவர்கள் இவர்கள் இருவராக மட்டும்தான் இருக்க முடியும்.


அவள் அபிக்கு செய்தது சாதாரண உதவியாக எண்ணினாள். ஆனால் அபியின் குடும்பம் அவளை தெய்வத்திற்கு நிகராக பார்த்தது…. எப்படி இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது மதுவை வந்து சந்தித்து விடுவான். கல்லூரியில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்து கொள்வான் கல்லூரிப்படிப்பை முடித்து மேற்படிப்பை முடித்து ஒரு வழியாக அபிக்கு வேலையும் கிடைத்தது.

மது அவர்களின் வீட்டிற்குச் செல்லும் பொழுதோ இல்லையென்றால் அவர்கள் குடும்பம் இங்கு வரும்போதோ ஒரு முறையாவது தனது கணவரை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என துடித்தாள் ஆனால் ரவியோ வேலை பதட்டத்தில் வருவதால் ஒரு முறை கூட அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

இந்த சமயத்தில்தான் அபி கல்லூரி படிப்பு முடிந்து டெல்லியில் வேலை கிடைத்ததை சந்தோஷமாக மதுவிடம் கூறினான்.

டெல்லி என்றதுமே மிகவும் சந்தோஷப்பட்ட மது அப்பொழுதுதான் முதன் முதலாக நேத்ராவின் பாதுகாப்பை பற்றி வாய் திறந்தாள்.

இங்கு தனக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினை இருப்பதாகவும் அதில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத போது எனது மகளை எப்படி நான் பார்த்துக் கொள்வது அதனால்தான் அவளை வெவ்வெறு பள்ளியில் படிக்க வைத்தேன்.
ஆனா இப்போ அவ டெல்லியில் போய் படிக்கிறேன்னு ஹாஸ்டல்ல சேர்ந்துட்டா எனக்கு அவளை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு ரொம்ப பிடிவாதக்காரி அதனால நீ டெல்லி போற இல்லையா அவளை கொஞ்சம் பார்த்துக்கோ நீ அங்க போற என்கிற ஒரு தைரியம் மட்டும்தான் இப்ப எனக்கு இருக்குது என் நம்பிக்கையை உடைச்சிட மாட்டியே...


அபி நாகரீகம் கருதி அவளிடம் என்ன ஏது என்று துருவித் துருவி விசாரிக்க வில்லை ஆனால் நேத்ராவின் பாதுகாப்பை தான் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்ததான்.

என்னோட உடம்பில ஓடறது உன்னுடைய ரத்தம் இந்த உயிரே நீ போட்ட பிச்சை அப்படி இருக்கும் பொழுது உன்னோட பொண்ணையா நான் விட்டு விடுவேன் நீ தைரியமா இங்க இரு நீ யாருக்கு பயந்து நேத்ராவை வெளியூர் அனுப்பினனு எனக்கு தெரியாது ஆனால் அவ பாதுகாப்புக்கு நான் கேரண்டி என்றான்.

நான் என் கணவரிடமும் உன்னைப் பற்றி சொல்லறேன்,அவருக்கும் உன் உதவி தேவைப்படலாம்...அப்படி தேவைபட்டா அவரையும் கை விட்டுடாத…


மது...இந்த உயிர் உனக்கானது... கடைசி சொட்டு இரத்தம் வரை உனக்காக மட்டுமே சிந்துவேன்..நீ செஞ்ச தன்னலமற்ற உதவிக்கான பிரதிபலன் கண்டிப்பா உன்னை சேரும்.என்னோட நன்றிக்கடனை செலுத்த வேண்டிய நேரம் இது நான் உனக்கு சத்தியம் செஞ்சு தர்றேன்...உன்னோட பொண்ணுக்கோ,இல்ல உன் கணவருக்கோ ஒரு ஆபத்து வருதுன்னா அது என்னைத் தாண்டி தான் வரும்... அவங்களோட உயிருக்கு ஒரு ஆபத்து வருதுன்னா அதுக்கு முன்னாடி நான் என்னோட உயிரை விட்டிருப்பேன் என் பிணத்தை தாண்டி தான் எதிரிகள் அவங்களை நெருங்க முடியும் என்றவன் அவளது உள்ளக்கையில் அவனது கையை வைத்து சத்தியம் செய்தான்.

அவனது கைகளை தனது கைகளுக்குள் மடித்துக்கொண்டு அதன் மீது மென்முத்தம் வைத்தவள் பிறகு கையை முகத்தோடு வைத்தபடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் மது.

இந்த ஒரு நம்பிக்கை போதும் அபி இனி எனக்கு என்ன வந்தாலும் அதை நான் தாங்கிப்பேன்...நீ சொன்ன ஒரு வார்த்தை போதும் நான் இத்தனை வருஷம் வாழ்தற்கான அர்த்தம் எனக்குக் கிடைச்சிருச்சு.

அவளின் அழுகையில் மனம் கரைந்து அபியின் கண்களும் கலங்கியது...அழாதே என்பதுபோல் தலையசைத்தவன் மறுகையால் மதுவின் தலையை வருடிவிட்டு உனக்கு என்ன பிரச்சனைனு சொல்லேன் மது கண்டிப்பா என்னால முடிஞ்சதை சரி பண்றேன் என்னால முடியலனா என்னோட அப்பா கிட்டயாவது சொல்லி சரி பண்றேன் என்று கூறும் போது அவனின் முகத்தை பார்த்து இல்லை என்பதுபோல் தலையசைத்தவள்.



எதுவுமே கேட்காத அபி நான் வாய் திறக்கிற நேரம் கூட என் கணவருக்கும் என் மகளோட உயிருக்கும் ஆபத்தா முடியலாம்.

இது என்னோட விதி இப்படித்தான் வாழனும்னு கடவுள் எழுதி அனுப்பிட்டார் இந்த வாழ்க்கையை நான் இப்படியே வாழ்ந்துட்டு போயிடறேன் எனக்கு அப்புறம் என் மகளுக்காக உன்னை விட்டுட்டு போறேன் அந்த ஒரு சந்தோஷம் போதும் ‌…


அட்லீஸ்ட் யாரால உனக்கு பிரச்சனை அதை மட்டுமாவது எனக்குச் சொல்லேன் அவங்ககிட்ட இருந்தாவது உன்னையும் உன் குடும்பத்தையும் தள்ளி வைப்பேனே…

இங்க எல்லாமே நம்பிக்கை சார்ந்தது அபி எனக்கு தவறா தெரியற விஷயம் இன்னொருத்தருக்கு சரியா தெரியும் நான் கெட்டவனா சித்தரிக்க நினைக்கிற மனுஷன் மத்த எல்லாருக்கும் நல்லவனா தெரிவான்.

இப்ப அது யாருன்னு சொன்னா இத்தனை வருஷம் நம்பி இருக்கிற என் கணவர் குற்ற உணர்ச்சில தற்கொலை பண்ணிபாரு அந்த பாவம் எனக்கு வேணாம்.

இது என்னோடவே போகட்டும் என் மகளை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ அவ உயிருக்கு எந்த ஆபத்தும் வராம பாத்துக்கோ ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிச்சா நீ கல்யாணம் பண்ணிக்கோ அப்படி இல்லன்னா அவளுக்கு பிடிச்ச இடத்துல அவளை சேர்த்துடு…

என்ன மது நாளைக்கே இந்த உலகத்தை விட்டுப் போறது போல இப்படி பேசுற அவளுக்கு எதுவும் ஆகாது அவளை நல்லபடியா கொண்டு வந்து உன் கையில் சேர்த்துவேன் அவளுக்கு நடக்கப்போற எல்லா நல்ல காரியத்தையும் நீதான் முன்னெடுத்து நடத்த போற போதுமா...


நான் மறுபடியும் உனக்கு வாக்கு தரேன் உறுதியா நீ
என்னை நம்பலாம் கடைசி வரைக்கும் உன் குடும்பத்துக்காக மட்டும் தான் என்னோட வாழ்க்கை... உன் மகள் படிச்சு முடிச்சதும் பத்திரமா உன் கையில கொண்டுவந்து சேர்த்த வேண்டியது என்னோட பொறுப்பு நீ தைரியமாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இரு
கூறியபடி அபி டெல்லியில் வந்து வேலைக்குச் சேர்ந்தான் .

இங்கு மதுவிற்கு ஷர்மாவால் ஏற்பட்ட பிரச்சினை சமயத்தில் அபியின் சகோதரிக்கு பிரசவ நேரம் என்பதால் அபியின் ஒட்டுமொத்த குடும்பமும் சகோதரியின் உடனே இருந்து விட்டது அவருக்கு குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மது இறந்துவிட்டார் என்ற செய்தி வர மொத்த குடும்பமும் இடிந்தது இவர்கள் தகவலறிந்த அங்கே செல்வதற்கு முன்பாகவே மதுவின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

அவளது சாவில் ஏதோ மர்மம் இருப்பது தெரியும் என்ன என்று ஆராய்ச்சி செய்ய அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இல்லையே அதனால் சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அபி இங்க வந்து ஒரு வருடத்திலேயே மது இறந்துவிட்டாள் என்ற செய்தி அவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது... உடனடியாக ஊர் செல்ல முடியவில்லை... நேரம் அமைந்த போது ஊர் செல்ல பிடிக்கவில்லை.

மதுவுடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறான் தான். நன்றாகத்தான் பேசுவாள் திடீரென்று தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவளுக்கு என்ன வந்தது என்று பலவாறாக குழம்பித் தவித்தான்.

அதன்பிறகு லட்சங்களில் சம்பளம் வாங்கும் வேலையை தூக்கி வீசி விட்டு ரவியுடன் வந்து சேர்ந்தவன் அவனை அறிமுகப்படுத்திக் கொள்ள ஏற்கனவே மது அபியை பற்றி பல விஷயங்கள் சொல்லி இருந்ததால் அவர் மறுப்பேதும் கூறாமல் தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதன்பிறகு பாதுகாப்பு கருதி அபியை கூப்பிட அதற்க்காகவே காத்திருந்த அபி உடனே ஓடி வந்து ஒட்டிக் கொண்டான். எல்லாவற்றையும் அவளிடம் கூறி முடிக்கும் பொழுது நேத்ராவிடம் எந்த ஒரு சலனமும் இல்லை .

தலைகுனிந்தபடி பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்…அபி அடித்ததில் விளைவாக இரு கன்னங்களும் கை தடம்பதிந்து முகம் வித்தியாசமாக தெரிந்தது... அவளை பார்க்க அபிக்கு மிகவும் பாவமாக இருந்தது... பெற்றவர்கள் கூட இதுவரை கைநீட்டி இருக்க மாட்டார்கள் ஆனால் இவன் பலமுறை கை நீட்டி விட்டான் ஆனால் ரவி அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை அபி ஒரு விஷயம் செய்தால் அதில் கண்டிப்பாக ஒரு நியாயம் இருக்கும் என்று மிக உறுதியாக நம்பியதால் உண்டான பிரதிபலிப்பு அது.


சற்றுதள்ளி ரவி கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தார் மனைவியை தானே கொன்றுவிட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி முதல்முறையாக அவருக்குத் தோன்றியிருந்தது .

அபி மது யாருக்காக பயந்திருப்பா...நேத்ராவுக்கு ஆபத்து வரும்னு ஏற்கனவே எப்படி தெரியும் ரவி அவரின் சந்தேகத்தை கேட்டார்.

எனக்கு என்ன தோணுதுனா உங்க பெரியப்பாவோட குடும்பத்தால ஆபத்து வரலாம்னு பயந்திருக்கலாம் உங்க அத்தைக்கு மதுவை பிடிக்காது அந்த கோபத்தை இங்க தனியாய் இருந்த மது மேல வேற மாதிரி காமிச்சு இருக்கலாம்... எது எப்படியோ சார் உண்மை என்னைக்கும் வெளியே வராமல் போகாது... என்று நேத்ராவைப் பார்த்தவன்.


இப்போ உன் சந்தேகம் தீர்ந்ததா நேத்ரா உன்னோட பெரிய தாத்தாவிற்கு மூணு பிள்ளைங்க உன்னோட தாத்தாக்கு உன் அப்பா மட்டும்தான் அங்க சொத்து மூன்று பிரியும் இங்கே எல்லாம் உங்களுக்கு முழுசா வரும் ஒருவேளை உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆனா லாபம் உன் பெரியப்பா குடும்பத்துக்கு தானே அதனால உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயந்து உன்னை ஹாஸ்டல்ல போட்டிருக்கலாம் உன் அப்பாக்கு எதுவும் ஆகிடகூடாதுனு மது பயந்து வாழ்ந்திருக்கலாம்.

வாழ வேண்டிய விஷயம் வயசுல அவளுக்கு அவளே தனிமைப்படுத்தி கிட்டது உங்க ரெண்டு பேரோட நல்லதுக்காகனு மட்டும் புரிஞ்சுக்கோங்க என்றவன் முருகன் ஒரு பிராடு அவன் விரிச்ச வலையில தெரியாமலே உங்க அம்மா மாட்டிக்கிட்டா... தெரிஞ்சதும் அவளே விரட்டி விட்டுட்டா…

நான் யாரோவா அறிமுகமாகி...எங்க குடுத்துல ஒருந்தியா வந்த மதுவுக்கு எப்பவும் நல்ல நண்பன்... நட்பாய் இருக்கிறதுக்கு வயசு தேவையில்ல நேத்ரா ...முன்பின் தெரியாத எனக்கே ரத்தம் கொடுத்து காப்பாற்றின ஒரு தேவதை...அவ பெத்த பொண்ணு உன் மேல எப்படி பாசமெல்லாம் இருந்திருப்பா...

உன் அம்மா பலகீனமான பொண்ணு கிடையாது எல்லாத்தையும் தனியாக இருந்து எதிர்கொண்ட ஒரு இரும்புப் பெண்மணி தயவுசெஞ்சு அவளை தப்பா நினைச்சுகிட்டு இந்த வீட்டிலிருந்து போகாத..
என்று கூற எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள்

எல்லாம் சரி ஆனால் ஒரு விஷயத்தை இன்னும் நீ வாய் திறந்து சொல்லலையே…

என்னது…

என் அம்மா கேட்டுகிட்ட மாதிரி உனக்கு என் மேல எந்த பீலிங்ஸ் இல்லையா…

என்ன பதில் கூறுவது என்று வினாடி நேரம் யோசித்தவன் இல்லை என்று தலையசைத்தான் .

உடனே முகத்தை கடினமாக்கி கொண்டு குட்…. ஷர்மா அங்கிள் அனுப்பின கார் வந்தாச்சி இப்போ நா என்ன செய்ய இரு ஆண்களையும் பார்த்தாள்.

அதான் இப்ப எல்லாம் குழப்பமும் போயாச்சே இனி எதுக்காக அவர் வீட்டுக்கு ...காரை திருப்பி அனுப்பிடலாம் முறைப்படி கல்யாணம் ஆனதும் போகலாம்…என்ற தந்தையின் பேச்சை முதல்முறையாக கேட்டு தலையசைத்தாள்.


இடையில் குறுக்கிட்ட அபி மன்னிக்கணும் ரவிசார் நேத்ரா போகட்டும் எப்படி இருந்தாலும் அடுத்த வாரம் திருமணம் செஞ்சு அனுப்பி வைக்கதான போறோம் இப்பவே போனா அந்த வீட்டு சம்பிரதாயங்களை கத்துக்க அவளுக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும் டெல்லியில் இது ஒன்னும் புதுசு கிடையாதே என்று கூறினான்.


அது வந்து என்று ரவி தயங்க …

ப்ளீஸ் ரவி சார் புரிஞ்சுக்கோங்க நான் ஒரு விஷயம் சொன்னா அதுல கண்டிப்பா ஏதாவது ஒரு அர்த்தம் இருக்குன்னு நீங்க நம்பறீங்கல்ல என்று கேட்க அவர் மறுக்காது ஒத்துக்கொண்டு சரிப்பா உன் விருப்பம் என்று கூறிவிட்டார்.

என் புருஷன் வீட்டுக்குப் போகணும்னா கூட உன் கிட்ட பர்மிஷன் வாங்கி தான் போகணுமா என்று கோபமாகக் கேட்ட நேத்ராவை பார்த்தவன் சிரித்தபடியே

உன் அம்மாவோட நான் கடைசியாக கொடுத்த வாக்கு உனக்கு பிடித்த இடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது...அதை என்ன செய்யவிடேன் என்று கெஞ்சுவது போல் கேட்டான்.


கூட என்னையும் கூட்டிட்டு போனு சொல்றதுக்கு ஏன் இப்படி சுத்தி வளச்சு பேசற என்றவள் சரி கூடவா என்று அபியை உடன் அழைத்தாள்.

நம்ம கார்லேயே போகலாம் உன்னோட திங்க்ஸ் எல்லாம் அந்த காரில் அனுப்பி வைக்கலாம் என்றான்.

வேணாம்னா கேக்கவா போற எல்லாம் உன் இஷ்டப்படி தான் இந்த வீட்டுல நடக்குது இதையும் கடைசியா நடத்திக்கோ என்று முகத்தை திருப்பியபடி கூறினாள்.

உடனே அவளின் பெட்டி படுக்கைகளை எல்லாம் எடுத்து ஷர்மாவின் காரில் வைத்து அனுப்பி வைத்ததன் பின்னர் நேத்ராவை அழைத்து வருவதாகக் கூறிவிட்டு அவனது காரை இயக்கினான் அருகில் வந்து அமர்ந்தவள் சிறிது நேரம் வரை எதுவுமே பேசவில்லை கார் ஒரு சீரான ஓட்டத்தில் இருக்கும்பொழுது திடீரென அபியை பார்த்தபடி

என் அம்மா அழகா என்று கேட்டாள்

அவன் காரை ஒட்டியபடியே பயங்கரமான அழகு …

அம்மா மாதிரி இருக்கற நான்... என்று கேட்க அவளைத் திரும்பிப் பார்த்தவன் நீயும் அதே மாதிரி அழகுதான்…

அப்போ ஏன் உனக்கு என்னை பிடிக்காம போச்சு.. நா இங்க வந்த ஒரு வருஷத்துல ஒரு நாள் கூட என்னை நீ ஆர்வமாக பாக்கல…என்கிட்ட உன்னை கவர்றது போல எதுமே இல்லையா...நீ என்னை பாக்கனும்னா என்ன செஞ்சிருக்கனும்...சொல்லேன் ப்ளீஸ்...

நேத்ரா...அது….



ப்ளீஸ் குறுக்க பேசாத நான் இன்னும் பேசி முடிக்கல….இன்னைக்கு இந்த விஷயத்தை பேசலனா கடைசிவரைக்கும் பேச முடியாம போயிடும்…

என் அம்மாவுக்கு பட்ட நன்றிக்கடனை தீர்க்க நீ உன் வேலையெல்லாம் விட்டுட்டு எனக்காக இங்க வந்த என்னை பாதுகாக்க நீ பட்ட கஷ்டத்திற்கு நான் எப்படி நன்றிக்கடனை செலுத்தறது…

போன நிமிஷம் வரைக்கும் என்னால உன் மேல இருந்த காதலை உணர முடியல ஆனா இப்போ இந்த நிமிஷம் உன்னை விட்டு நிரந்தரமாக பிரிய போறேன்னு தெரியும் போது இதை சொல்லாமலும் இருக்க முடியல நான் உன்னைக் காதலிக்கறேன் கடைசி வரை உன் கூட வாழனும் ஆசைப்பட்டேன்.


நான் டெல்லி வந்தது தெரிஞ்சுது அடிச்சு பிடிச்சு ஓடி வந்தியே அந்த ஒன்னு போதும்...இந்த அக்கறை பாதுகாப்பை கண்டிப்பா ரோகித்தால காலத்துக்கும் கொடுக்க முடியாது.

என்னை கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்கற உன்னை விட்டுட்டு ரோக்த்தை எப்படி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும் சொல்லு என் காதலை ஏத்துக்கோ அபி என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிடாத என்று முகத்தை மூடிக்கொண்டு கதறி கதறி அழுதாள்.

மனம் நிறைய நேத்ரா இருந்தாலும் உடனடியாக அவனால் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது இப்பொழுது இவள் காதலை ஏற்றுக் கொண்டு விட்டால் இவள் ஷர்மாவின் வீட்டுக்குள் செல்லமாட்டாள்.

நேத்ரா உள்ளே சென்றால் மட்டுமே அவரின் வீட்டுக்குள் இருக்கும் மர்மங்களை இவனால் வெளிக்கொண்டு வர முடியும்.

ஷர்மாவின் பின்தொடர்ந்து சென்ற சக்கரவர்த்தி இன்னும் வீடு வந்து சேராத நிலையில் ஷர்மா அதிகாலையிலேயே வந்து விட்டார் .

அப்படி என்றால் ஷர்மா சக்கரவர்த்தி ஏதோ ஒன்று செய்திருக்கிறார் இப்பொழுது நேத்ராவும் வீட்டுக்குள் செல்லவில்லை என்றால் கண்டிப்பாக இதைக் கண்டு பிடிக்கவே முடியாது என்று நினைத்தவன் எதுவும் பேசாமல்


சாரி நேத்ரா எல்லாமே நான் கடமைக்காக செஞ்சது அது காதல் இல்ல...உன்மேல எனக்கு அதுபோல எந்த ஒரு ஃபீலிங்ஸூம் இல்ல...வீடு வந்திடுச்சி இறங்கிக்கோ நான் சக்ரவர்த்தியை போய் பாக்கனும்.என்றான்.


உடனே நிமிர்ந்து அமர்ந்தவள் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு புரியுது நோ ப்ராப்ளம் இதை இப்போ சொல்லாம போனா காலம்பூரா மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கும்.அபிகிட்ட சொல்லியிருக்கலாமோனு... ஆனா இப்போ சொல்லியாச்சி...அது போதும்..எனக்கு என்றவள்...

உங்க ப்ரண்ட் சக்கரவர்த்தி இப்போ எங்க.. நேத்து கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம சக்கரத்திக்கு ஆக்ஸிடென்ட் ஆகிறது போல கனவு வந்தது என்று கூற

அதிர்ச்சி அடைந்த அபி...தெளிவா சொல்லு நேத்ரா…


ஒரு ஹீல் ஸ்டேஷன்ல இருந்து கார் உருண்டு போற மாதிரி …

சரி நீ இறங்கிக்கோ நா அவசரமா கொஞ்சம் போகணும் என்று கூற

அபி கடைசியாக உன்னை ஒரு ஹக் பண்ணிக்கவா... ப்ளீஸ் வேணாம்னு சொல்லிடாத…

ம்ம்... என்று மெதுவாக தலையசைக்க காருக்குள் அமர்ந்தவாறே எம்பி அவனை கட்டி அணைத்தவள் அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் ஒன்றை வைத்து விட்டு காரை விட்டு இறங்கி விடுவிடுவென ஷர்மாவின் வீட்டுக்குள் சென்றாள்.


முத்தமிட்ட ஈரத்தை விரல்களால் தடவியவனின் கண்களில் நீர் கசிந்தது. வீட்டு புறாவினை தெரிந்தே புலி கூண்டுக்குள் அனுப்புகிறான் அதனின் ஒரு இறக்கைக்கு கூட சேதம் ஏற்படாதவாறு அவளை காக்க வேண்டும் என்ற முனைப்புடன் அபி அங்கிருந்து சக்ரவர்த்தியை தேடி கிளம்பினான்.



மதுவை எதிர்பார்த்து ரோகித்தின் குடும்பத்தாரும் ஷர்மாவும் வாசலிலேயே நின்று கொண்டிருந்தனர் இவள் உள்ளே நுழையவும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்…

பிறகு ஷர்மா நேத்ராவிடம் ஆனாலும் மதுப்பொண்ணு உன் அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேற்றி இருக்கலாம் இப்படி வீட்டுக்குள்ளேயே போகாமல் திரும்பி வந்திருக்க வேண்டாம் என்று வருத்தப்பட்டார்.

முடிஞ்சு போனதைப் பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லையே அங்கிள்…

அதுவும் சரிதான் ஒருவேளை நீ அங்கு இருந்தா இன்னைக்கு இங்க நடக்கிற பூஜைல கலந்துக்க முடியாம போயிருக்கும்….இந்த பூஜைல கலந்துக்னும்னு கடவுள் நினைச்சிருக்கறாரு...

என்ன பூஜை அங்கிள்..

உனக்கும் ரோகித்திற்கும் நல்லபடியா கல்யாணம் நடக்கணும்ல அதுக்கான பூஜை ராத்திரி முழுக்க கண்விழிக்கறது போல இருக்கும் அதனால நீ போய் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ என்றவர் அங்கிருந்த பெண்களிடம் நேத்ராவை... அனுப்பிவைத்தார்.

ரோகித் கொஞ்ச நேரமாக ஷர்மாவை பார்த்தபடி நின்று கொண்டிருக்க என்ன ரோகித் ஏதாவது கேக்கனுமா…

ஆமா அங்கிள் நைட்டு நடக்கப் போற அகோரி பூஜைக்கு நரபலிக்கு குடுக்க என்ன அனிமல் ரெடிபண்ணி வைக்கனும்…

முட்டாள் இந்த ஷர்மாவோட உயிரைக் காப்பதற்காக நடக்கப்போற அகோரி பூஜைக்கு அனிமல்-ஸையா நரபலி கொடுப்ப ரொம்ப நாளா நமக்கு தொல்லை கொடுத்துட்டு இருக்கிற அந்த யூனியன் லீடரை பலி குடுக்கலாம்..

அங்கிள்... ஏதும் பிரச்சனை வந்திடபோகுது…

எல்லாம் எனக்கு தெரியும் ரோகித்….நான் சொல்றதை செய்ய தான் நீ இருக்கிற எதிர்த்துப் பேசறதுக்கு கிடையாது ...அப்புறம் முக்கியமான விஷயம் இந்த பூஜையை எதுக்காக நடக்குதுங்கற விஷயம் நேத்ராவுக்கு தெரியவே கூடாது …

அவளோட அம்மாவோட ஆன்மா எழவே கூடாதுன்னு மகளே முன்நின்று பூஜையை நடத்த போறா என்று அந்த வீடே அதிரும் படி சிரித்தார்.


அகோரிகளின் பூஜை நடக்கும் இடத்திற்கு அபி சென்று முடிக்கும் இரவை நெருங்கியிருந்தது.
சக்கரவர்த்தி காணவில்லை என காவல் துறையினரும் மீட்புப் படையினரும் தேடிக்கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் அபியும் அங்கே சென்று நிலவரங்களை விசாரித்தான் வண்டில ஜிபிஎஸ் டிராக் இருந்ததே என்னாச்சு.

ஜிபிஎஸ் சிக்னல் கரெக்டா விடியகாலை நாலு மணி வரை இருந்தது...அபி அப்புறமா கட் ஆயிடுச்சி..

சரி இங்க பக்கத்துல ஏதாவது பள்ளத்தாக்கு மாதிரி இருக்கா..



ஒரு ரெண்டு கிலோமீட்டர் தாண்டி போனா ஒரு சின்னதா பள்ளம் ஒன்னு இருக்கு அபி மத்தபடி இந்த ரோட்டில் அந்த மாதிரி ஒன்னும் கிடையாது .

எதுக்கும் அங்க போய் ஒரு தடவை செக் பண்ணி பாக்கலாமா ப்ளீஸ்

ஸ்யூர் அபி வாங்க போலாம் என்று மீட்புப் படையினரும் அந்த இடத்தை
நோக்கி விரைந்தனர்.
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
26

ஷர்மாவை விசாரிச்சீங்களா…

நோ யூஸ் அபி… திருஷ்டி கழிக்கற பூஜை விஷயமா அகோரியை பாக்க போனதா சொல்லறாரு... நான் போனதுக்கும் சக்ரவர்த்திக்கும் என்ன சம்மந்தம்னு எங்களையே திருப்பி கேள்வி கேக்கறாரு…

உங்க ஸ்டைல்ல விசாரிக்க வேண்டியது தானே நான் வேணும்னா கம்ப்ளைன்ட் தரேன்..

அதுவும் கஷ்டம் ஆதாரமில்லாமல் அவரை நெருங்கவே முடியாது அடிமட்ட வேலைக்காரன்லிருந்து ஆட்சியில் இருக்கிற அரசியல்வாதி வரைக்கும் சிறப்பாக கவனிக்கறாரு அதனால எல்லாருமே அவருக்கு ஆதரவாக இருக்கறாங்க…

ஆதாரம் இல்லாம அவர் கிட்ட போகவே முடியாது...இன்வெஸ்டிகேஷன் பண்ண கூட வீட்டுக்கு பர்மிஷன் கிடைக்கல சக்கரவர்த்தியை கண்டுபிடிச்சு அவர் என்ன நடந்ததுனு சொன்னா மட்டும்தான் ஷர்மாவை. பற்றிய உண்மைகள் வெளிவரும் இல்லனா ஷர்மா என்னைக்குமே ஒரு புதிராக தான் டெல்லில வாழ்வார் என்று வருத்தமாக காவல் அதிகாரி கூறினார்.

பேசிய படியே அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்திருந்தனர்.
அபி சந்தேகப்பட்டது போல்தான் அந்தப் பள்ளத்தாக்கில் சக்கரவர்த்தியின் கார் தலைகுப்புற ஒரு மரத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்தது ..

சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் படுகாயங்களுடன் சக்கரவர்த்தி மீட்கப்பட்டான் அவசரமாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது .

அதே நேரம் இங்கு ஷர்மாவின் விட்டில் அகோரி பூஜை நடந்து கொண்டிருந்தது.

தப்பிச் செல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரிக்கு உணவைக் கொண்டு வந்த முருகனிடம் எப்பொழுதுமே ஒரே மாதிரியான உணவை தருகிறாயே…
நல்ல காரசாரமான உணவை கொண்டு வாயேன் என்று முகத்தை பாவமாக வைத்தபடி கேட்டாள்.

எப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் முதலாளியாக வரப்போகிறவள் எதற்கு பகைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அவள் கேட்பது போல் உடனடியாக காரமான குழம்புடன் சப்பாத்தியை எடுத்து வந்தான்…சாப்பிடும் வரை ஏன் அவளது வாயை பார்க்க வேண்டும் பிறகு வந்து கைகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று முருகன் வெளியே காத்திருந்தான்.

ஷர்மாவின் தோட்டத்தில் தற்காலிக கூறை அமைத்து சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நடுவில் கோரமுகம் கொண்ட சிலை வைத்திருக்க மிகப்பெரிய யாகம் நடந்தது.

உடல் முழுவதும் கருமைய் பூசி பின்னங்கால் வரை ஜடை வளர்த்தபடியும் முன் தொடைவரை தாடிவளர்த்தபடியும் வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்திருந்த அகோரியை சுற்றிலும் மண்டை ஓடுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க பலவிதமான பொம்மைகளை யாகத்தை சுற்றி படுக்க வைக்கப்பட்டு இருந்தது.

அவ்வப்போது யாகத்தில் எதையோ அள்ளி வீச நெருப்பு தீப்பிழம்பாய் கொழுந்து விட்டு எரிந்தது முன்புறமாக படுக்க வைத்திருந்த பொம்மைகள் அங்கொன்றும் இங்கொன்றும் நகர்ந்தபடி மீண்டும் அதன் இடத்தில் வந்து படுத்தது.

இடத்தை சுற்றிலும் குங்குமம் கொட்டி கிடக்க இடமே படு பயங்கரமாக இருந்தது...பூஜையை பார்க்கும பொழுது முதல்முறையாக ஏதோ சரியில்லாததுபோல் நேத்ராவுக்கு தோன்றியது.


மெதுவாக ரோகித்திடம் என்ன ரோகித் கல்யாணத்துக்கான பூஜைனு சொன்னிங்க ஆனா இது ஏதோ மயான பூஜை மாதிரி இருக்கு என்று தனது சந்தேகத்தை கேட்க

இது திருஷ்டி கழிப்பதற்காக செய்கிற பூஜை இப்படித்தான் இருக்கும் நேத்ரா பேசாம பூஜையை கவனி என்று கூறினான் அதன் பிறகு அவள் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.


பூஜை நள்ளிரவை கடக்க
வெளியே மழை தூற தொடங்கியது.
இனி நடக்கும் பூஜையை பெண்கள் பார்க்க கூடாது என நேத்ரா உள்பட அனைத்து பெண்களையும் உள்ளே அனுப்பினார்கள்.விட்டால் போதும் என அந்த இடத்தைவிட்டு முதல் ஆளாக நேத்ரா தான் ஓடிச் சென்றாள்.

அவளின் அறைக்குச் சென்றவள் மஞ்சள் நிற குர்த்தாவையும் அதற்கு கீழ் இலகுவான ஒரு ட்ராக் பேன்டையும் எடுத்து மாட்டினாள்.

அதுவரை விரித்துவிட்டுருந்த கூந்தலை அள்ளி குதிரைவாலாக போட்டுக் கொண்டாள்.

தூக்கம் வருவது போல் தெரியவில்லை சில நேரம் மாடியில் நின்றபடி தோட்டத்தில் நடக்கும் பூஜையை கவனிக்கலாம் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

மழை இப்பொழுது நன்றாக தூறத் தொடங்கியிருந்தது தோட்டத்தில் மட்டும் சிறு வெளிச்சம் தெரிய சுற்றிலும் நல்ல இருட்டு... விளக்கு வெளிச்சத்தில் அவள் நின்று கொண்டிருந்தாள் கண்டிப்பாக தோட்டத்தில் இருக்கும் ஷர்மாவிற்கு தெரிந்துவிடும் பெண்கள் பார்க்க கூடாது என்ற பூஜையை பார்க்கிறாயா மதுப்பொண்ணு என்று சங்கடப் படுவார் என்று நினைத்தவள் அறையிலிருந்த விளக்கை எல்லாம் அணைத்து விட்டு பால்கனியில் சேர் போட்டபடி தோட்டத்தில் நடக்கும் பூஜையை கவனிக்க ஆரம்பித்தாள்...இப்பொழுது ஷர்மாவின் கையில் ஏதோ கொடுத்து அகோரி அவரை அனுப்பிவைக்க அதை இரு கையாளும் வாங்கியபடி வீட்டை நோக்கி வந்தார்.

பூஜை இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்பதனால் முருகனும் அங்கு செல்லவேண்டும் நரபலிக்கான ஏற்பாடுகளை அவனைத்தான் கவனிக்க சொல்லியிருந்தார் ஷர்மா அதனால் கஸ்தூரியின் கைகளை கட்டிப்போட்டு விட்டு அவன் தோட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளே வர கஸ்தூரி சப்பாத்தி சாப்பிடாமல் அப்படியே இருந்தது.

அங்கிருந்த குழம்பு கிண்ணம் மட்டும் இல்லை எப்படி என்று முருகன் யோசிக்கும் பொழுதே தனது கைகளில் மறைத்து வைத்திருந்த குழம்பை அவன் கண்களை நோக்கி வீசி எறிந்தாள் உடனே கண்கள் எரிய கத்தியபடி முருகன் கீழே விழுந்து துடிக்க அவன் கையில் இருந்த சாவியை பிடுங்கி அவள் காலில் அணிந்திருந்த பூட்டை திறந்து விட்டு கதவையும் மூடி விட்டு வெளியே ஓட ஆரம்பித்தாள்.

ஷர்மா வீட்டுக்குள் வந்த சற்று நேரத்திலே திடீரென எங்கிருந்தோ ஒரு பெண்ணின் குரல் நேத்ராவின் காதில் கேட்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நேத்ரா சற்று நிமிர்ந்து அமர்ந்தாள்.

சுற்றிலும் பார்க்க இப்பொழுது ஒரு பெண் பின் வழியிலிருந்து தோட்டத்தை நோக்கி ஓடுகிறாள் அவளின் உருவம் அச்சு அசல் தன்னைப் போலவே இருக்க கை முடிகள் அனைத்தும் சிலிர்த்து நிற்க அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.

இப்பொழுது அந்த பெண்ணின் பின்னால் இரண்டு வேட்டை நாய்களின் சத்தம் நேத்ராவிற்கு நெஞ்சை அடைப்பதுபோல் இருந்தது இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று சுவற்றை ஒட்டி நின்றபடி கவனிக்க…

இரு நாயின் நிழல் நடுவே முதல் முதலில் கனவில் அவளை தாக்கிய அதே உருவம் நீண்ட ஜெர்கினை மற்றும் தொப்பி அணிந்தபடி வாட்டசாட்டமான ஒரு நிழல் உருவம் கையில் கனமான ஆயுதத்தோடு தோட்டத்தின் வெளிச்சத்தில் தரையில் மிகப்பெரியதாக தோன்ற…

அதிர்ச்சியில் கண்களை முழுதாக விரித்த நேத்ரா பயத்தில் கத்தாமல் இருக்க அவளின் வாயை அவளே பொத்தினாள்...உடல் முழுவதும் வேர்த்து உற்ற அந்த உருவம் இப்பொழுது நேத்ராவின் அறையை பார்க்க அப்படியே தலையை உள்ளிழுத்து கீழே அமர்ந்தாள்.

மருத்துவமனையில் சக்கரவர்த்தியின் காயங்களுக்கு மருந்திட்ட மருத்துவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல தலைகாயம் எந்த அளவு இருக்குனு நாளைக்கு ஒரு ஸ்கேன் பண்ணி பாத்திடலாம் இனி பயப்பட ஒன்னுமில்ல...அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

அபிக்கு சந்தோஷத்தில் கண்கள் நனைந்தது எங்கே தனது நண்பன் தன்னை விட்டுச் சென்று விடுவானோ என்று மிகவும் பயந்து இருந்தான் இப்பொழுது அது போல எதுவும் இல்லை…

கவலையுடன் அவனருகில் அமர்ந்தவன் அவன் விழிப்பதற்க்காக காத்திருந்தான்.

ஷர்மாவின் தோட்டத்தில் ஆங்காங்கே விளக்குகள் எரிய தொடங்கியது...காவலாளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒடினார்கள்…நேத்ரா தலையை சற்று தூக்கி பார்த்தாள்.இப்பொழுது அந்த நிழல் மறைந்து உருவம் நன்றாகவே தெரிந்தது யார் என அறிந்துகொள்ள உற்றுப்பாத்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

ரோஷித் கையில் ஓரு இரும்புராடை வைத்தபடி ஓடினான்…

அவளின் வருங்கால கணவன் கையில் ஆயுதத்துடன் ஒரு பெண்ணை கொலைவெறியுடன் தூரத்துகிறான்...அதுவும் ஏற்கனவே எனது கனவில் வேறு வந்துள்ளது... அப்படியென்றால் இங்கே என்ன நடக்கிறது...அவனை சந்திக்கும் முன்பே எனது கனவில் வந்திருக்கிறான் என்றால் இவன் சரியில்லை என்று மது கனவில் வந்து அறிவுறுத்தினாரா…

இந்த விஷயம் ஷர்மாவுக்கு தெரியுமா...இல்லை அறியாமல் எனக்கு பேசி முடித்தாரா...தெரியவில்லையே... இப்பொழுது அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும்...ரோகித்தை ஷர்மாவால் மட்டுமே அடக்க முடியும் என்று நினைத்தபடி ஷர்மாவின் அறையை நோக்கி ஒடினாள்.

அங்கிள் கதவு திறங்க சீக்கிரம்...ரோகித் ஒரு பொண்ணை தூரத்திட்டு போறான் அவளை காப்பாத்துங்க என்று தட்டியபடி லாக்கரை திருக ஏற்கனவே திறந்து இருந்ததால் கதவு சட்டென்று திறந்துகொண்டது.
ஆச்சிரியத்தில் உள்ளே சென்றாள் அறை இருட்டாக இருக்க ஸ்விட்சை தேடி போட மின்விளக்கிற்கு பதிலாக லேசர் லாம்ப் ஆன் ஆக சுவர்முழுவதும் மதுவின் புகைபடம் வியாபித்தது.

அறையில் சத்தத்தை கேட்டு உடைமாற்றும் அறையிலிருந்து ஷர்மா வெளியேவர அவரை பார்த்து மேலும் அதிர்ச்சி.

வேட்டைக்கு செல்பவரை போல ஆடை அணிந்திருந்தவர் சேற்றில் சுலபமாக நடப்பதற்கு ஏதுவாக கால்முட்டி வரை இருக்கும் லேதர் ஷூவை அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த ஆடைக்கு மேல் ஒரு கனமானதொரு ஜெர்கினும் முகத்தில் தண்ணீர் படாதவாறு இருக்க ஒரு தொப்பியும் அணிந்திருக்க இரு கைகளிலும் க்ளௌவ்ஸ் மற்றும் இடுப்பில் ஒரு பிஸ்டல் இருக்க அவரின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…

அறைக்குள் யாரோ இருப்பதை பார்த்த ஷர்மா கையில் துப்பாக்கியை எடுத்தபடி லேசரை அணைத்து விட்டு விளக்கை போட நேத்ரா இப்பொழுது சுவற்றோடு ஒன்றியபடி திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.


அவளைக்கண்டதும் துப்பாக்கியை அதன் இடத்தில் சொருகிவிட்டு
பேபி நீ எப்படி இங்க என்று அவள் அருகில் வந்தார்.


ஷர்மா அருகில் வரவும் பயந்து இரு அடிகள் தள்ளிநின்றவள்... ஷர்மாவை பார்த்து என்னோட அம்மாவோட போட்டோ எப்படி இங்க... உங்க ரூம்ல எதுக்க வச்சிருக்கீங்க...புடிக்கும் அதனால வச்சேன்னு பொய் சொல்லாதீங்க... பிடிக்கும்னு யாரும் ரூம் ஃபுல்லா வைக்க மாட்டாங்க….


அப்படின்னா நீங்க லவ் பண்ணின பொண்ணு அம்மாவா சொல்லுங்க...

அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணிட்டவங்க அப்டின்னா நீங்களும் அம்மாவை ஒன்சைடா லவ் பண்ணுனீங்களா…இந்த விஷயம் அப்பாக்கு தெரியுமா..?


என் அம்மாவை யாரோ டார்ச்சர் பண்ணி இருக்காங்க அது நீங்களா…? உங்களுக்கு பயந்துதான் அம்மா என்னை ஹாஸ்டல்ல விட்டாங்களா..?

எனக்கு டெல்லியில இருந்த ஆபத்து நீங்கதானே உண்மைய சொல்லுங்க…

ரோகினிக்கு பின்னாடி யாரோ அவளை ஆப்ரேட் பண்றதா அபி சொன்னான் அது நீங்கதான... சொல்லுங்க நீங்க தானே ஏன் செஞ்சீங்க என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள்.

அதிர்ச்சியடைந்த ஷர்மா எதையும் வெளிக்காட்டாதவாறு பேபி நீ ரொம்ப குழப்பத்தில இருக்கற இவ்ளோ சந்தேகம் உனக்கு ஏன் வருது பொறுமையா அங்கிள் சொல்றதை கேளு... உனக்கு எல்லாத்தையுமே புரிய வைக்கறேன் என்று கூறியபடி அவளை அணைக்க வர…

அனிச்சை செயலாக நேத்ரா அவரை ச்சீ...என்று அவரின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

அந்த ச்சீ... அப்படியே மதுவை ஞாபகப்படுத்த அதுவரை ஷர்மாவின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சைக்கோ வெளியே வந்தான்.

யோசிக்காமல் நேத்ராவின் கழுத்தில் கைவைத்து அழுத்தியவர் என்னடி அம்மாவும் பொண்ணும் ரொம்ப தான் ஓவராத்தான் ஆட்டம் போடுறீங்க நான் தோட்டா உங்களுக்கு ச்சீ...யா இப்போ உன்னை என்ன பண்றேன் பாரு என்று வேகமாக இழுத்து அணைக்க உடல் பலம் முழுவதையும் ஒன்றுதிரட்டி அவரை வேகமாக தள்ளிவிட்டவள் வீட்டை விட்டு வெளியே ஓடத் தொடங்கினாள்.

கீழே விழுந்த ஷர்மா கோபத்தில் அவர் முகத்தில் அவருடைய இருகைகளாலும் மாறிமாறி அடித்தபடி வெறி கொண்டவர் போல் ஆஆஆ... கத்தியவர் நேத்ராவை தூரத்திச் செல்ல ஆரம்பித்தார்.


மருத்துவமனையில் சக்கரவர்த்தியிடம் சிறு அசைவு வரவும் பரபரப்புடன் எழுந்த அபி சக்கரவர்த்தியின் கன்னத்தை தட்டியபடி டேய் சக்கி கண்ண திறடா..உன் அபி வந்திருக்கேன் என்று குரல் கம்ம அவனை எழுப்ப
நண்பனின் குரல் அவனின் மூளையில் பதிந்து கடினப்பட்டு மெல்ல விழித்தான்.

சக்கி என்று சந்தோஷத்தில் கட்டிபிடிக்க வலியையும் மீறி அவன் இதழ்கள் புன்னகை புத்தது ‌..

நான் இன்னும் சாகலையா என்று ஆச்சரியமாக கேட்டவனிடம் அபியை மீறிதான் அது உன்கிட்ட வரும்…

தெரியும் அந்த தைரியத்தில தான் ரிஸ்க் எடுத்தேன்...ஆமா நீ ஊர்ல தான இருந்த இங்க எப்படி…

அது ஒரு பெரிய கதை அதை அப்புறம் சொல்றேன் உனக்கு என்ன ஆச்சு ஷர்மாவ ஃபாலோ பண்ணி போன அந்தாளுக்கு கூலா அவன் வீட்ல இருக்கான்

நீ என்னனா மரத்து மேல கார்டிரைவிங் பழகிட்டு இருக்க என்று கேலி செய்தவனிடம்


விளையாடாத டா அந்த ஆளு பக்கா கிரிமினல்... கொஞ்சம் விட்டிருந்தா காக்காவ சுடறது போல சுட்டிருப்பான்...நல்ல வேளை கடைசி நேரத்தில கொஞ்சம் பயமுறுத்தினதும் ஷூட் பண்ற ஆப்சனை தள்ளி வெச்சான் இல்லனா அப்பவே முடிச்சு இருப்பான்... மரத்தில எல்லாம் காரோட்ட வைச்சிருக்க மாட்டான் என்றான் சிரித்தபடி…

சரி இப்ப நீ சொல்லு நீ ஊர்ல தான இருந்த எப்படி இங்க…

எல்லாம் நேத்ரா அடிச்ச கூத்து...யாரோ மதுவ தப்பா பேசினாங்கனு கோவிச்சிட்டு இங்க ஒடி வந்துட்டா...அப்புறம் எனக்கென்ன வேலை...நானும் வந்தாச்சி…

இப்போ நேத்ரா எங்க…?

ஷர்மா வீட்ல விட்டிருக்கேன்…

என்னது...அந்தாளு வீட்டிலேயா...அறிவிருக்காடா உனக்கு நேத்ரா வை அங்க விட்டுருக்கேனு இவ்ளோ கூலா சொல்லற…

ஏன்டா டென்ஷன் ஆகுற... அந்தாள பாலோவ் பண்ணி போன உன்னையும் காணோம்... அந்தாளுக்கு வீட்டுக்குள்ள என்ன நடக்கதுனு எப்படி தெரிஞ்சுகிறது அதனாலதான் நேத்ராவை அனுப்பி வச்சேன் எப்படியும் கல்யாணத்துக்கு முன்னாடி அவளைப் பார்க்கப் போறது மாதிரி அந்த ஆள் வீட்டுக்குள்ளே போயிட்டா அங்கிருக்கிற சீக்ரெட்ஸ் எல்லாம் ஈஸிசா கண்டுபிடிக்கலாம்னு நினைச்சேன்…

நல்லா நினைச்ச போடா...முதல்ல கிளம்பு உடனே அவளை காப்பாத்தனும்...அவன் ஒரு சைக்கோ,கொலைகாரன்... மது அவனை காதலிக்கலங்கற ஒரே காரணத்துக்காக அவங்களை அடிச்சே கொன்னிருக்கான்.

அது மட்டும் இல்ல ரோகினி கேஷவன்னு பெரிய லீஸ்ட்டே இருக்கு.

மதுவோட ஆன்மா என்னைக்குமே வெளிய வரக்கூடாதுன்னு இன்னைக்கு ஒரு அகோரி பூஜை பண்ண போறான்...அதுல நரபலிகூட தர்றான்...யாருக்கு தெரியும் நரபலி கொடுக்க ஆள் இல்லைன்னு நேத்ராவையே குடுத்தாலும் குடுத்திடுவான் சீக்கிரம் வாடா... இந்த நேரத்துக்கு அவளை முழுசா விட்டு வச்சிருக்கறதே பெருசு...என்று தன்மீது இருந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தூக்கி வீசிய சக்ரவர்த்தியுடன் சேர்த்து அபிக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ள வேகமாக வெளியே வந்தான்.

காரை இயக்கிய அபியிடம் எவ்ளோ சீக்கிரம் போகமுடியுமோ அவ்ளோ சீக்கிரமா அங்க போடா... என்ற சக்கரவர்த்தி காருக்குள் இருந்த அபியின் ஆடைகளை எடுத்து அமர்ந்திருந்தபடியே உடுத்த தொடங்கினான். வாகனம் செல்லச்செல்ல ஷர்மா அகோரியிடம் கூறிய அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அபியிடம் கூறி முடிக்கும் பொழுது


அபி நேத்ராவை நினைத்து கலங்கினான்.பாவம் சிறுபெண் இந்த நேரத்திற்கு எல்லாம் சரியாக இருந்தால் பரவாயில்லை ஏதாவது சரியில்லாமல் இருந்தால் எப்படி அவள் சமாளிப்பாள்...என்று வாகனத்தை மேலும் வேகமாக ஓட்டினான்…


ஷர்மாவின் வீட்டில் நேத்ரா எதிர்ப்பட்டவர்களை எல்லாம் தள்ளிவிட்டபடி ஓட
பின்னால் ஷர்மா துரத்தி வர…
ஒளிந்துகொள்ள வழி தெரியாத நேத்ரா கஸ்தூரியை அடைத்து வைத்திருந்த ஒதுக்குப்புறமான அறையின் முன் வந்து நின்றவள் கதவின் தாழ்ப்பாளை விலக்கி உள்ளே செல்ல முருகனை கண்டதும் பயந்து மீண்டும் வெளியே ஓடிவந்தாள்.

முருகனின் கண்களின் காந்தல் சற்று மட்டுப்பட இப்பொழுது அவனும் நேத்ராவை துரத்த ஆரம்பித்தான்.

இருவரின் கைகளுக்குள் சிக்காத வண்ணம் தோட்டத்தை விட்டு வெளியே வந்த நேத்ரா எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டின் பின்புறமா ஓடினாள்.சில மீட்டர்கள் மட்டுமே நல்ல பராமரிப்புடன் இருந்தது..பிறகு இரும்பு கம்பியினால் வேலி அமைத்திருக்க அதில் பெரிய கேட் ஒன்று போடப்பட்டிருந்தது... அதன்பின் அழகாக ஒரு மாங்காய் தோப்பு ஆரம்பித்தது...அதன் நடுவினில் வாகனம் வந்து செல்வதற்கான வழியும் அதில் இருந்தது ... ஆங்காங்கே வெளிச்ச புள்ளிகள் தென் பட நேத்ராவும் தோப்புக்குள் ஓடினாள்.

ஏற்கனவே அந்த இடத்தில் பல காலடி தடங்கள் அதை பார்த்தபடியே பின்தொடர்ந்து ஒடினாள்... இப்பொழுது ரோகித் துரத்தி சொல்லும் அந்தப் பெண்கள் கண்டிப்பாக காப்பாற்றியாக வேண்டும் என்ற முனைபுடன் இவளும் ஷர்மா பின் தொடர்கிறாரா என்று பார்த்த படியே ஒடினாள்.


அதே தோப்பில் மற்றொரு மூலையில் கஸ்தூரி ஓடிக் கொண்டிருக்க அவளை வீட்டு காவலாளிகளுடன் ரோகித் துரத்திக் கொண்டிருந்தான்.

அபியின் வாகனம் ரோட்டில் சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருந்தது சக்கரவர்த்தி பரபரப்புடன் ரவியை அழைத்து உடனடியாக ஷர்மாவின் வீட்டிற்குச் சென்று நேத்ராவிற்கு துணையாக இருங்கள் நாங்கள் வந்த பிறகு மற்றதை பேசிக்கொள்ளலாம் என்று கூற அந்த நள்ளிரவு நேரத்தில் என்ன ஏது என்று கேட்காத ரவி அவரின் வாகனத்தை எடுத்துக் கொண்டு ஷர்மா வீட்டுக்கு வந்தார்.


மழை நன்கு விட்டிருந்தது.
வாசலில் எந்த செக்யூரிட்டியும் இல்லை... கேட் திறந்து வைக்கப்பட்டிருந்தது ‌...வீடு முழுவதும் பகல் போல வெளிச்சம்
வீட்டு தோட்டத்தில் புதிதாக போட்டிருந்த செட் அதில் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் தீ ஜுவாலைகள் எல்லாவற்றையும் குழப்பத்துடன் பார்த்தவர் நேராக வீட்டிற்குள் வர பணியாட்கள் அந்த நேரத்திலும் வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார்கள்.


வீட்டில் என்ன விசேஷம் ஏன் யாரும் உறங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ரவி விசாரிக்க பணியாள் ஒருவர் திருஷ்டி கழிப்பதற்காக பூஜை நடந்தது இப்பொழுதுதான் சற்று முன்பு முடிந்தது அதனால் எங்களுக்கு இன்னும் வேலை முடியவில்லை என்று கூறினார்கள்.


என்ன பூஜை நடந்ததா..?ஷர்மா இதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே என்று நினைத்தவர் சரி ஷர்மாவை பார்க்கலாம் என மேலே செல்ல அவர் இல்லை என்றனர்…

ஒஒ.. நேத்ரா...

தெரியாது என ஒருபோல தலையசைத்தனர்.

இனி இவர்கள் வாய்திறக்க போவதில்லை என உணர்ந்தவர் வெளியில் வந்து நேத்ரா, ஷர்மா இருவருக்கும் மீண்டும் மீண்டும் அழைக்க இருவருமே போனை எடுக்கவில்லை.

பயந்தவர் உடனே அபியின் போனுக்கு கூப்பிட அதைக் கையில் வைத்திருந்த சக்கரவர்த்தி என்ன சார் சொல்லுங்க என்றான்.

இப்போ ஷர்மா வீட்டுக்கு எதுக்காக என்ன வர சொன்னிங்க இங்கே பூஜை நடந்து இருக்கு வீட்ல ஷர்மா நேத்ரா யாருமே இல்ல இப்ப நான் என்ன பண்ணனும்…

சார் நேத்ரா எங்க போனானு கேட்டு நீங்க அங்க போங்க சார் நாங்க பக்கத்துல வந்துட்டோம் நேர்ல பேசிக்கலாம் என்றான்.

மீண்டும் வேலையாட்களை பார்க்க அவர்களிடத்தில் எந்த சலனமும் இல்லை ரவிக்கு தெரியாதா ஷர்மாவின் வீட்டு கட்டுப்பாடுகள் பற்றி எதுவும் பேசாமல் வெளியே வர வாசலைத் தாண்டி தோட்ட பரப்பில் சில காலடித்தடங்கள் வீட்டின் பின்புறமாக செல்வதைக் கண்டவர் காலடித்தடங்களை தொடர்ந்து செல்ல தோப்பில் வாசல் நன்றாகவே திறந்து இருந்தது நேரத்தில் அனைவரும் தோப்புக்குள் என்ன செய்கிறார்கள் என்று யோசித்தவர் அவரின் வாகனத்தை இயக்கியவர் தோப்புக்குள் விட்டார்.


டெல்லி கட்டுப்பாட்டு அறையை காவல்துறை அதிகாரியின் மூலம் தொடர்பு கொண்டவன் ரவியின் மொபைல் போன் சிக்னலை அபியின் மொபைல் போனின் சிக்னல்களை டிராக் செய்யும்படி பணிந்தான் அவர்கள் துல்லியமாக இருவருக்கும் இருக்கும் இடைவெளியை கூறிக்கொண்டே வர கேட்டுக் கொண்டே வந்தவன் அபியிடம் நேத்ரா உடம்புல சிப் பொருத்தினோம்ல அதோட கனெட்டிவ் டிவைஸ் எங்கே என்று கேட்டான்.

கோயம்புத்தூர் போறேன்னு கிளம்பும்போதே அதை எடுத்துவிட சொல்லிட்டா அவளோட பிரைவேசியை பாதிக்கிற மாதிரி இருக்கு... யாரோ என் கூடவே இருந்து பாக்குறது போல இருக்கு பிடிக்கலனு சொனதால

நானும் கோயம்புத்தூர்ல என்னை மீறி யாரும் அவ பக்கத்துல வர முடியாதுங்கற தைரியத்தில் அதை அப்போவே டிஆக்டிவேட் பண்ணிவிட்டேன் …

ஷீட் என்று தலையில் அடித்த சக்கரவர்த்தி என்ன அபி இப்படி எல்லா விஷயத்திலும் சொதப்பி வைச்சிருக்க என்று குறை பட்டான்.

கஸ்தூரி தோப்பின் கடைசிவரை வரை ஓடியவள் தோப்பில் அந்தப்பக்கம் மீண்டும் ஒரு வேலி இருக்க அங்கே பாதைகள் எதுவுமே இல்லை ஒருபக்கம் கம்பிகள் வளைக்கப்பட்டிருக்க அதற்குள் புகுந்தாள்.. இப்போது வெளிச்சம் சற்று குறைந்து ஒற்றையடிப் பாதை மட்டும் கண்ணில் தெரிந்தது பயந்தபடியே திரும்பிப்பார்க்க ரோகித் வேகமாக வந்து கொண்டிருந்தான்… சில அடிகள் தூரத்திலேயே நேத்ராவும் ஓடிவந்து கொண்டிருந்தாள். வேட்டை நாய்களின் சத்தம் காதைப் பிளக்க
மறைந்து கொள்ளவும் இடமில்லாமல் காலடி தடத்தை மட்டுமே பார்த்தபடி ஓடினாள்.

கஸ்தூரி ரோகித்தை பார்த்தவள் இவனிடம் மாட்டக்கூடாது என்று நினைத்தவள் பாதையை விட்டு காட்டுக்குள் இறங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து அவளை யாரோ பயங்கரமாக தலையில் தாக்க வலியில் பின்தலையை பிடித்த படி திரும்பி பார்க்க கையில் ஹாக்கி ஸ்டிக் உடன் ஷர்மா ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தார் அதை வைத்து மீண்டும் முன் மண்டையில் பலமாக தாக்க ரத்தவெள்ளத்தில் அப்படியே மயக்கத்தில் சரிந்தாள்.

அவரின் அருகில் கோபத்தில் நின்று கொண்டிருந்த முருகன் முதலாளி இவளை என்கிட்ட விடுங்க நான் பாத்துக்கறேன் என்றான்.

முருகனை பார்த்து முறைக்க ஷர்மா நாயே நீ பேசாதே எல்லாம் உன்னால தான்... இவளை நீ தப்பிக்க விடாமல் இருந்திருந்தா இது எதுவுமே நடந்திருக்காது .

உயிர் போற மாதிரி கத்தி ரோகித்தை பாதி பூஜையில் இருந்து எழ வச்சு அதை நேத்ரா பாத்து இத்தனை வருஷம் போட்ட அத்தனை ப்ளானையும் ஒரே நிமிஷத்துல கெடுத்துட்ட முதல்ல உன்ன தான் கொல்லனும் என்றவர் துப்பாக்கியை எடுத்து முருகனை நோக்கி குறி பார்த்தார்.

சில வினாடிகள் வெலவெலத்த முருகன் உடனே சுதாரித்து அவனின் தலையைக் கொண்டு ஷர்மாவின் வயிற்றில் வேகமாக இடித்து தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முனைய கீழே வழிந்த ஷர்மா கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட ஆரம்பித்தார் முதல் குண்டு முருகனின் தோல்பட்டையில் பாய அலறியவன் மீண்டும் வேகமெடுக்க இரண்டாம் தோட்டா அவனின் பின் தொடையில் பாய சில அடிகள் ஒத்தைக் காலை இழுத்தபடி ஒடியவன் அங்கேயே மயங்கி சரிந்தான்‌.

எழுந்த ஷர்மா ஆடையில் ஒட்டியிருந்த சேற்றை உதறியவர் ஆத்திரம் அடங்காமல் வெளியே மீண்டும் முருகனின் அருகில் சென்று அவரின் பூட்ஸ் கால்களால் உதைகளை கொடுத்தார்.

பிறகு கஸ்தூரியின் வந்தவர் அவளின் வயிற்றில் இரண்டு மிதிகளைக் கொடுத்தவர் எல்லாரும் ஒரேடியா செத்து ஒழிங்க என்று கூறிவிட்டு அவளின் தலை முடியை பிடித்து இழுக்கவும் அவரின் முன்பு ஒரு நிழல் தெரிந்தது என்ன என்று எட்டிப் பார்க்க அதிர்ச்சியில் நேத்ரா அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீ இவ்வளவு கொடூரமானவனா ஒருத்தனை சுட்டுக் கொன்னுருக்க சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம அந்த பொண்ணை இப்படி அடிக்கிறே உன்னையா இத்தனை நாள் நல்லவேனு நினைச்சேன் அவள விடு என்றபடி கீழே கிடந்த ஹாக்கி ஸ்டிக்கை எடுத்து ஷர்மாவை தாக்க ஆயத்தமானாள்.

அவளைப் பார்த்துச் சிரித்தவர் துப்பாக்கியை ஆராய்ந்தார்தோட்டா இல்லாததை அறிந்ததும் தூக்கி வீசியபடி என்னை அடிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா அது என்ன அம்மாக்கும் பொண்ணுக்கும் ஆ..வுன்னா கைய் ரொம்ப நீளுது என்றவர் குனிந்து கஸ்தூரியின் முடியை பிடித்து இழுத்து செல்ல…

விடுன்னு சொல்றேன்ல்ல என்று ஸ்டிக்கை தூக்கி அவரைத் தாக்குவதற்காக கை ஓங்க பின்னால் இருந்து ஏதோ பறந்து வந்து அவளின் பின் மண்டையில் தாக்கியது நொடி நேரத்தில் மூளை கலங்கி அப்படியே மயங்கிச் சரிய பின்னால் இருபக்கமும் வேட்டை நாய்களுடன் ரோகித் சாவகாசமாக நடந்து வந்துகொண்டிருந்தான் ஷர்மாவும் சிரித்தபடி அவரின் பணியைச் செய்ய ரோகித் வந்து நேத்ராவை ஆராய்ந்தவன் அவளை தூக்கி தோளில் போட்டபடி அவரின் பின்னே செல்ல தொடங்கினான்.

தோப்பின் வழி முடியவும் பாதை வழியாக துப்பாக்கிச் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ரவி வந்து பார்க்க அங்கே முருகன் சுடப்பட்டு கிடந்தான் இருட்டில் அடையாளம் தெரியாவிட்டாலும் உயிர் இருப்பதை அறிந்து கொண்டவர் அவனை மருத்துவமனையில் சேர்க்கும் நோக்கோடு வாகனம் வரை அரும்பாடுபட்டு இழுத்துச் செல்ல ஆரம்பித்தார்.

தொடரும்
 

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
27

ரவி மீண்டும் அபியின் மொபைலுக்கு அழைத்தார் அபி வாகனத்தை ஓட்டுவதால் சக்கரவர்த்தி தான் ஸ்பீக்கரில் போட்டபடி என்ன விஷயம் என்று கேட்டான்.

இங்க துப்பாக்கி சத்தம் கேட்டுது என்னன்னு போய் பார்க்கும் போது ஒருத்தன் அடிபட்டு கிடந்தான் அவனை நான் ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போறேன் நீங்க வர ரொம்ப லேட் ஆகுமா என்று கேட்டார்.

உடனே கோபம் கொண்ட சக்கரவர்த்தி சார் இப்போ நான் வந்தா உங்களை ஏதாவது பண்ணிடுவேன் .

அந்த இடத்தில இப்போ நேத்ராவை தவிர அத்தனை பேருமே அயோக்கிய பயலுக தான் அதனால எவன் செத்துக் கிடந்தாலும் கண்டுக்காம நேத்ராவை தேடி போங்க என்று அவரை விரட்டினான்.

மனமே இல்லாமல் முருகனை காரிலேயே விட்டபடி அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினார் ரவி.


நேத்ரா கண்களைத் திறக்கும் பொழுது இடத்தைச் சுற்றிலும் கட்டுமஸ்தான பல அடியார்கள் நின்று கொண்டிருக்க சற்று தூரத்தில் மயான பூஜை நடந்து கொண்டிருந்தது .

அகோரி ஏதேதோ செய்து கொண்டிருக்க பலிபீடத்தின் அருகில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிருக்க அதன் பக்கத்தில் கஸ்தூரி கால்களை நீட்டியபடி உட்கார வைக்கப்பட்டிருந்தாள்.... தலைமுடி முழுவதும் இரத்தத்தில் உறைந்து ஜடையாக ஒட்டியிருந்தது... முகம் முழுவதும் இரத்த திட்டுக்கள்...நாசி துவாரத்தில் இரத்தம் உறைந்திருக்க கடவாயிலிருந்து இரத்தம் வழிந்தது…

குப்புற படுத்து கிடந்த நேத்ரா கண்விழித்து சுற்றிலும் பார்க்க கஸ்தூரியின் கண்களில் ஒரு மின்னல் வந்து சென்றது..தலை பயங்கரமாக வலிக்க கை தானாக பின் தலையை தொட்டும் பார்த்தது..இரத்தம் உறைந்து தொடும் போதே வலியைக் கொடுத்தது.
கண்ணீர் பெருக்கெடுக்க அம்மா என்று முனங்கினாள்.

அவளின் முனங்களை ரசித்த ஷர்மா ரோகித்திற்கு ஜாடை செய்ய...நேத்ராவிடம் வந்தவன் அவளை திருப்பி தலைமுடியை பிடித்து தூக்கி அமரவைத்தான்.
அமர முடியாமல் மீண்டும் கீழே விழப் போனவளின் முடியை கொத்தாக பிடித்து நிறுத்தியவன் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட

அம்மா என்று அலறியபடி மீண்டும் கீழே விழ

தூரத்தில் ரவியின் குரல் நேத்ரா ...என்று அழைத்தபடியே வந்து கொண்டிருந்தார் அவரின் குரலைக்கேட்டதுமே ... நேத்ரா அப்பா வராதீங்க என்று திருப்பி கத்தினாள்.

எங்கமா இருக்க இதோ அப்பா வந்துட்டேன் என்ற ரவியின் குரல் மீண்டும் கேட்க...அப்பா வேணாம் பா வராதீங்க என்று அழ ஆரம்பித்தாள்.

ஷர்மா ஜாடை செய்ய இரு அடியாட்கள் சென்று அவரையும் தாக்கி சற்று நேரத்தில் மயங்கிய நிலையில் இழுத்து வரப்பட்டு நேத்ரா முன்பு போட்டனர்..


தந்தையைக் அந்த கோலத்தில் கண்டதுமே கோபம் கொண்டவள் நீ என்ன பைத்தியமா உனக்கு என்ன வேணும் இப்படி எல்லாரையும் சித்திரவதை பண்ணிக்கிட்டு இருக்கே என்று ஷர்மாவைப் பார்த்து கேட்டாள்.

எனக்கு உன் நிம்மதி வேணும்...இந்த முகத்துல இதுபோல அழுகை மட்டும் தான் இருக்கனும் சிரிப்பே இருக்க கூடாது...இந்த கண் என்னை மட்டும் தான் பாக்கனும்...காலம் பூரா நான் சொல்லற படி என் பேச்சை மட்டும் தான் நீ கேக்கனும் என்று அவளின் கன்னம் வருட அதை தட்டிவிட்டவள்

நீ நினைக்கிறது காலத்தும் நடக்காது…

ஏன் நடக்காது...என்றவர் ரோகித்தைப் பார்க்க

கஸ்துரியின் முடியை பிடித்து தூக்கியவன் அவளின் காலில் உதைத்து மீண்டும் மண்டியிட வைத்தான்...பிறகு அவளின் வலது கையை எடுத்து திருக... ஆஆஆ….என கத்தியபடி வலியில் துடிக்க ஆரம்பித்தாள்.

அதை பார்த்த நேத்ரா ரோகித்தை பார்த்து நீ மனுஷனா இல்ல மிருகமா கொஞ்சமாவது மனுஷ தனத்தோட நடந்துக்கோ... இப்போ எதுக்காக அந்த பொண்ணை கொடுமைப்படுத்தற…


அங்கிள் உங்க மதுப்பொண்ணு கேக்குறாள்ல எதுக்காக கஸ்தூரியை அடிக்கிறேன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க என்று கூற …

அவ மட்டும் இன்னைக்கு தப்பிக்காம இருந்தா நாங்க ஆசைபட்டது போல உன்னை கொடுமை படுத்திருக்கலாம்...கடைசிவரை என் நண்பன் நணபனாவே இருந்து செத்து போயிருப்பான் இப்போ பாரு என் கண்ணு முன்னாடி அடிபட்டு கிடக்கறான் எல்லாம் இவளால என்று மீண்டும் கஸ்தூரியை தாக்கினார்…கத்தகூட தெம்பின்றி அப்படியே கீழே கிடந்தாள்…
பிறகு ரவியிடம் வந்து அவரை உதைத்து திருப்ப அவரிடம் சிறு அசைவு தெரிந்தது..

தந்தையிடம் அசைவைக் கண்டதும் தவழ்ந்து ரவியிடம் வந்தவள் அவரை தனது மடியினில் ஏந்தியவள் அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு எந்திரிக்க உங்களுக்கு ஒன்னும் ஆகல... நம்மள நம்ம அம்மா காப்பாத்து வாங்கப்பா உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா எந்திரிங்க என் தந்தையை மடியில் வைத்தபடி குலுக்க ஆரம்பித்தாள்.

என்னது உன் அம்மா வந்து காப்பாத்த போறாளா எப்படி ...இதோ அங்க கிடக்கிறானே அவனை இன்னும் கொஞ்ச நேரத்துல பலி கொடுத்ததுமே உன் அம்மாவோட ஆன்மா நிரந்தரமா காணாமல் போய்விடும் அதுக்கப்புறம் எங்கிருந்து வந்து காப்பாத்துவா என்று ஷர்மா நக்கல் செய்ய…

மெதுவாக கண் திறந்து ரவி மது வந்து காப்பாற்றுவாளானு தெரியாது ஆனா கண்டிப்பா அபியும் சக்கரவர்த்தியும் எங்களை காப்பாத்துவாங்க என்று கூற

ஒரு நிமிடம் யோசனையில் நின்ற ஷர்மா அட்டட்டட்டா ஒரு நரபலி தான் கொடுக்கலாம்னு நினைச்சேன் இப்போ மூணு நரபலி கொடுக்கனும்... என்று சிரித்தவர் ரோகித்தை பார்த்து வீட்டை சுத்தி எல்லா கேட்டதையும் லாக் பண்ண சொல்லு வேட்டைநாய் ஃபுல்லா அவுத்து விடுங்க யார் கேட்டை தாண்டி வீட்டுக்குள்ள வந்தாலும் யோசிக்காம சுட்டுத் தள்ளுங்கள் என்று அடியார்களிடம் உத்தரவை பிறப்பிக்க ஒரு சிலரைத் தவிர்த்து மீதி அனைவரும் அங்கிருந்து ஓடினர்.

அதுவரை பொறுமை காத்துக்கொண்டிருந்த நேத்ரா எழுந்து அவரின் சட்டையை கொத்தாக பிடித்தவள் என்ன நீ பண்ற அநியாயத்தையும் யாருமே பார்க்கல நினைச்சுக்கிட்டு தைரியமாகத் இருக்கறீயா... இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொரு சக்திகளும் உன்னோட அநியாயத்தை தான் பாத்துட்டு இருக்கு... எல்லாத்தையும் விட என் அம்மா இதை பாத்துட்டு இருக்காங்க கண்டிப்பா நீ எங்களுக்கு பண்ற அநியாயத்துக்கெல்லாம் நியாயம் கேப்பாங்க‌…

அவ சாவுக்கே இதுவரைக்கும் வந்த நியாயம் கேட்கல இதுல உங்களுக்காக நியாயம் கேட்க வருவாளா... எங்கே வர சொல்லு பார்க்கலாம் என்று நேத்ராவை இழுத்து பலிபீடத்தின் அருகே விட்டவர்

இப்போ உன் அம்மாவோட ஆன்மா வரகூடாதுன்னு இவனை மட்டும் பலி கொடுக்க போறதில்லை உன்னையும் சேர்த்து தான் கொடுக்கப் போறன் நீ செத்த பிறகு ரெண்டு பேருமா வந்து நியாயத்தை கேட்டுட்டு போங்க என்று அங்கிருந்த கட்டையில் வேகமாக நேத்ராவின் தலையை மோதினார். ஆனால் அவளோ பிடிவாதமாக தன்மீது காயம் படாதவாறு அவரிடம் போராடினாள்…


சக்கரவர்த்தியும் அபியும் நேராக கேட்டை உடைத்தபடி ஷர்மாவின் வீட்டிற்க்குள் வர பின்னாலே ஒரு வாகனத்தில் காவல்துறையினரும் வந்தனர்... வீட்டிற்குள் செல்ல வேலை செய்யும் ஆட்கள் அவர்களை அனுமதிக்கவில்லை
காவல்துறையினருக்கும் வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட என்ன செய்வது என்று காத்திருக்க ஆரம்பித்தனர்.

அபி யும் சக்கரவர்த்தியும் சார் நீங்க முறைபடி அனுமதிவாங்கிட்டு பொறுமையா வீட்டுக்குள்ள போக பாருங்க…
நாங்க பின்னாடி தோட்டத்து பக்கம் போறோம் அங்க தான் ரவி போறதா எங்களுக்கு போன் பண்ணி சொன்னார் என்று நக்கலாக கூறியபடி இருவரும் அங்கிருந்து கிளம்ப ரோகித் அவன் படையுடன் எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்தான்.


இங்கு காவல் துறையின் தலைமை அதிகாரிக்கு மிகப்பெரிய பதவியில் இருக்கும் அரசியல்வாதியிடம் இருந்து ஃபோன் வந்தது உடனடியாக ஷர்மா வீட்டை விட்டு கிளம்பவில்லை என்றால் நடப்பது வேறு என்று காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்க கையாலாகாத தனத்துடன் மீண்டும் அவர்கள் வெளியே வந்தனர்.



ரோகித் அபியையும் சக்கரவர்த்தியும் பார்த்ததும் அங்கிருந்த வேட்டை நாய்களை அவிழ்த்து விடச் சொல்ல வேட்டை நாய்கள் இவர்களைப் பார்த்து ஓடி வந்து கொண்டிருந்தது .

இருவரும் வேகமாக அவர்களின் வாகனத்தில் ஏறி தோட்டத்துப் பக்கமாக வாகனத்தை செலுத்த இப்பொழுது ரோகித்தும் அவனது ஆட்களும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

கையில் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற அபி வாகனத்தை ஓட்ட தங்கள் காருக்கு அருகில் வருபவர்களை எல்லாம் காரின் ஜன்னல் வழியாக பிடித்து தள்ளி விட்டபடி சக்கரவர்த்தி போராடிக் கொண்டிருந்தான்.



மயானத்தில் ரவி தள்ளாடியபடி எழுந்து நின்று ஷர்மா அவள விட்டுட்டு தயவுசெஞ்சு சொல்றேன் நீ அவளை எதாவது பண்ணினா நான் உன்னை சும்மா விடமாட்டேன் என்று கூற


என்ன செய்வ என்னடா செய்வ சொல்லு இருபத்தஞ்சு வருஷக்கணக்கை இன்னைக்கு முடிக்கறேன் நீ மட்டும் மதுவை பாக்காம இருந்திருந்தா அவ என்னதான் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருப்பா... இடையில வந்து கெடுத்தது நீ…

மதுவை டார்ச்சர் பண்ணி சாகடிக்காம உன்னை சாகடித்து இருந்தா அவ என்னை தேடி வந்திருப்பா...தப்பு பண்ணிட்டேன் என்று கூறியபடி அருகிலிருந்த ஒரு கட்டையை எடுத்து சரமாரியாக ரவியை அடிக்கத் தொடங்கினார்.

ரவியை அடிக்கவும் நேத்ரா ஓடிச்சென்று தந்தையை காக்கும் முனைப்புடன் ஷர்மாவின் கையில் இருந்த கட்டையை பிடுங்கி அவரைத் தாக்க


அவ்வளவு தைரியம் வந்துருச்சா என் கையில இருக்குறத புடுங்கி அடிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா இந்த கை தானே அடிச்சது என்று அவளின் கைகளை இழுத்து உடைக்க நேத்ரா அம்மா என்று பயங்கரமாக கத்த ஆரம்பித்தாள்.

தோப்பு வீட்டில் அடைந்திருந்த மதுவின் ஆன்மா மகளின் சத்தத்தை கேட்டு சத்தியத்தை மீறி புறப்பட ஆரம்பித்தது.



நேத்ராவின் முடியை கொத்தாக இழுத்துச் சென்று பலி பீடத்தில் படுக்க வைத்தவர் அகோரியிடம் முதல்ல இவளை பலி குடுங்க அப்புறமா அவனை குடுங்க என்றார்… தலையசைத்த அகோரி மீண்டும் பூஜையில் கவனத்தை செலுத்தினார்…



நேத்ரா கண்ணீர் சிந்தியபடி மதுவை அழைத்தாள்….அவளின் கத்தல் மயானத்தையே அதிர வைத்தது...அம்மா ப்ளீஸ் மா எங்களை காப்பாத்து... உன் பொண்ணும் புருஷனும் கஷ்டபடறோம் ப்ளீஸ்மா வா…. தயவு செஞ்சு எங்கள காப்பாற்றுமா…


நா சாகறதைப் பத்தி கவலை படலை ஆனா இவன் கையால சாகுறதை நா விரும்பலமா தயவு செஞ்சு எங்களை காப்பாற்று... அன்னைக்கு உன்னைப்பத்தி தெரியாம உன்ன வர வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன் அது என் தப்பு தான் தயவு செஞ்சு வாம்மா உன் பொண்ணு கூப்பிடுறேன் இத்தனை வருஷமும் எந்த பொண்ணோட வாழ்க்கைக்காக போராடுனியோ அந்தப் பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த வாம்மா... உன்னோட ஆன்மா சாந்தியடைய நானும் அப்பாவும் தான் திதி கொடுக்கனும் இப்படி யாரோ ஒருத்தர் நரபலி கொடுத்து நீ அடங்கி விடக்கூடாது உண்மையிலேயே உன் பொண்ணு மேல பாசம் இருந்தா நீ வந்து எங்களைக் காப்பாத்து என்று கண்ணீர் வீட்டு கதறினாள்.



ஷர்மா நேத்ராவிடம் எப்படி வருவா... எங்கிருந்து உன் அம்மா வருவா அவளைக் என்னைக்கோ மண்ணோட மண்ணா மக்கி போகவச்சாச்சு ஒருவேளை நீ அந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைச்சிருந்தா கூட வருவாளோ என்னவோ நீதான் உன் அம்மாவை நம்பாம அடுத்தவங்க பேச்சை நம்பி உள்ள போகாமலே வந்துட்டியே எங்கிருந்து வருவா...


வருவாங்க என்னோட சத்தம் என் அம்மா காதுல கேட்கும் என்னோட கண்ணீர் என் அம்மா மனசை கரைய வைக்கும் அம்மா... வாம்மா…. என்று மீண்டும் காட்டையே புரட்டிப் போடும் அளவிற்கு கத்தினாள்.

அபிக்கும் சக்கரவர்த்திக்குமே அந்தக் குரல் கேட்க எதிரில் வருபவர்களை எல்லாம் அடித்து வீழ்த்திய படி நேத்ரா வின் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வர தொடங்கினார்.



வெடிச் சிரிப்பு சிரித்த ஷர்மா கத்தினா….வந்திடுவாளா….கதறினா வருவாளா...கத்துடி,கதறுடி என்று அவளின் உடைந்த கையை மீண்டும் இறுக்கிப் பிடித்தபடி அவளது கன்னத்தில் மாறி மாறி அறையத் தொடங்கினார்.


வலி பொறுக்க முடியாத நேத்ரா என்னை கை விட்டுட்டியாம்மா என்னை கைவிட்டுட்டியா என்று இப்பொழுது சத்தமா அழுதாள்.

இல்ல நேத்ரா அம்மா உன்னை கை விடல...இப்போ அனுபவிச்சிட்டு இருக்கிறது தற்காலிக வலிதான் பின்னாளில் நீ ரொம்ப நல்லா வாழப் போற அதுக்கான சோதனை தான்... பொறுத்துக்கோ என்று ரவி கூற நேத்ரா ஷர்மா இருவருமே ரவியை திரும்பி பார்க்க….

பூஜையின் முன்பு அமர்ந்திருந்த அகோரி ஆன்மா இங்க வந்துருச்சு சீக்கிரமா நரபலி கொடுத்தா அப்படியே ஆவியை அடக்கிடலாம் என்று கத்தினார்.

ஷர்மா சற்றும் யோசிக்காமல் நேத்ராவின் அருகே சென்றார். கஸ்தூரியோ இப்பொழுது நேத்ராவை பலி கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும்…

ப்ளீஸ் அவளை விட்டுடுங்க என்னை வேணா குடுங்க என்னால யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது ஆனால் அவ அப்படி கிடையாது தயவுசெய்து அவளை விட்டுடுங்க என்று தவழ்ந்தபடி அவளும் பலிபீடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கஸ்தூரியின் அந்தப் பாசம் நேத்ராவை ஒரு வினாடி நெகிழ வைக்க வேண்டாம் என்பது தலையாட்டினாள்.

ஒன்று நேத்ராவை பலியிடுவார்கள் இல்லை என்றால் கஸ்தூரியை, இல்லை என்றால் யார் என்றே தெரியாத அந்த நபர் அவரோ பயத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்த கூட திராணியற்று மலங்க மலங்க விழித்தபடி கிடக்கிறார்.

இங்கு அபியும் சக்ரவர்த்தியும் அனைவரையும் அடித்து வீழ்த்திய படி படி பலிபீடத்தை நோக்கி வர பின்னால் ரோகித் மட்டும் விரட்டி கொண்டு வந்தான்.

சாமி முடிஞ்சா எல்லாரையும் தடுத்து நிறுத்துங்க பலிகொடுக்க முடியாத மாதிரி தீயசக்திகள் வருது...என்று ஷர்மா கத்த... அந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு மீதி எல்லா இடத்திலும் ஒரு நெருப்பு வட்டத்தை போட்டவர் கொஞ்ச நேரம் மட்டும் தான் நெருப்பு வளையம் சக்தியோடு இருக்கும் என்று அகோரி கூறினார்.

இப்பொழுது அபி சக்கரவர்த்தியால் பலிபீடத்தை நெருங்க முடியவில்லை வேண்டாம் தப்பு பண்ணாத ஷர்மா என்று கத்திக் கொண்டிருக்க

இங்கு நேத்ராவை பலிபீடத்தில் படுக்க வைத்து வெட்டுவதற்காக தயாராக இருந்த மற்றுமொரு அகோரியின் கையில் இருந்த கொடாரியை பிடிங்கிய ஷர்மா தலையை குறி பார்க்க... ஷர்மாவின் கை பின்னோடு இழுக்கப்பட்டது யாரோ அவரின் கையை முழுவதுமாக இழுக்க யாரென்று திரும்பிப் பார்த்தார் ரவி நின்றுகொண்டிருந்தார்.


என் பொண்ண விட சொல்றேன்ல என்று கூறியபடி ஷர்மாவின் கையை பின்னிருந்து இழுத்துக் கொண்டிருந்தார் ரவி.

கோபமடைந்த ஷர்மா ரவியை அறைவதற்காக கையை ஓங்க அந்த கையை பிடித்த ரவி இப்பொழுது ஷர்மாவின் கன்னத்தில் மாறி மாறி அறைய கோடாரி எங்கோ பறந்தது.

உடல் முழுவதும் காயம் தலையில் காயம்... கை வேறு உடைந்துவிட்டது இனி தன்னால் போராட முடியாது என்ற நேத்ரா அங்கேயே பேசாமல் படுத்துக் கொண்டார் விதி என்னவோ அதுபடி நடந்து விட்டுச் செல்லட்டும் என்று…

அதற்குள் அந்த இடத்திற்கு தவழ்ந்து வந்திருந்த கஸ்தூரி நேத்ராவை தனது கை கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தாள்.

தான் படுத்து கொள்கிறேன் நீ இறங்கி கொள் என்று இரு பெண்களின் பாசப்போராட்டம் இப்படி இருக்க

வெளியில் அபியும் சக்கரவர்த்தியும் மீண்டும் அடியாட்களுடன் போராடிக் கொண்டிருந்தார்கள்.

சக்கரவர்த்தி ஏற்கனவே உயர் காவல்துறை அதிகாரிகளிடம் இங்கு நடக்கும் நிலவரத்தை கூறியிருப்பதால் அவர்கள் எப்பொழுதோ வீட்டிற்குள் வந்து விட்டார்கள் முதலில் முருகனை கண்டவர்கள் உடலில் உயிரும் ஒட்டி இருப்பதை அறிந்து கொண்டு அவனை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார்கள் அவனின் வாக்குமூலத்தை பெறுவதற்காக…. உடன் ஒரு காவல்துறை அதிகாரியும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

மயானத்தில் அந்த இடமே சூறைகாற்றால் சூழ்ந்தது...ஷர்மாவை தாக்கும் ரவியை ஆச்சரியமாக அனைவரும் பார்க்க…. ஆக்ரோஷமாக ஷர்மாவின் கழுத்தை பிடித்து பலிபீடத்தில் மூட்டினார்.

உனக்கெப்படி இவ்வளோ பலம்...என்று திணறியபடி ஷர்மா கேட்டார்.

பயங்கரமாக சிரித்த ரவி நல்லா பாரு என்னை தெரியல…என்று காலை அகட்டி இருகைகளை இடுப்புக்கு கொடுத்தபடி நிற்க….

மது….என்று திணறினார்.


ம்மா….என்று கதறியபடி எழுந்து அமர்ந்தாள் நேத்ரா….

அவளுக்கு நன்கு தெரிந்து விட்டது இனி தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று பலிபீடத்தை விட்டு இறங்கியவள் அவளின் ஒரு கையால் கஸ்தூரியை முடிந்த அளவு இழுத்தபடி அங்கிருந்து சற்று தொலைவில் நகர ஆரம்பித்தார்.

அகோரி ஆவியை அடக்கும் பூஜையில் முன்புறமாக இறங்கிக் கொண்டிருந்தார். நெருப்பு வளையத்திற்கு வெளியில் சக்கரவர்த்தியும் அபியும் வேட்டை நாய்களையும் ஷர்மாவின் ஆட்களையும் சமாளித்துக் கொண்டிருக்க ரோகித் பலிபீடத்திற்குள் எப்படி வருவது என யோசித்து மாற்று வழியாக உள்ளே நூழைய முயற்சித்துக் கொண்டிருந்தான்.



நீ….நீ…. எப்படி அதான் நேத்ரா வீட்டுக்குள்ள வரலையே அப்புறம் எப்படி சந்தேகமாக கேட்ட ஷர்மாவை பார்த்த ரவி….


மகளுக்கு ஒரு கஷ்டம்னா தாய் சத்தியத்தை மீறலாம் தப்பு கிடையாது... என் மகள் நான் வாழ்ந்த வீட்டுக்குள்ள தான் வரணும்னு அவசியம் கிடையாது நான் வாழ்ந்த இடத்துக்கு வந்தாலே போதும்….என்னோட ஆன்மாவுக்கு சக்தி கிடைச்சிடும்….இதோ என் கணவருக்குள்ள வந்துட்டேனே…இப்போ நீ என் மக மேல கை வை...கை வைடா என்று ஆக்ரோஷமாக கத்தினாள்

என்ன ஒவ்வொரு பக்தனும் கடவுள் விக்ரகத்தை கட்டிப்பிடிச்சா அவனுடைய குறைகளை சொல்லறான்...தூரத்தில இருந்து நினைச்சாலே கடவுள் வர்றதில்ல... அப்படித்தான் என் மகள் எங்கே இருந்து அவ குறைகள் சொன்னாலும் அப்போலாம் நான் வருவேன் தெய்வம் வேற அம்மா வேற கிடையாது ஒரு குழந்தைக்கு கஷ்டம்னா தெய்வத்துக்கு முன்னாடி தாய் தான் வந்து நிற்பா இதோ இப்போ என் மகளுக்கு நான் வந்துட்டேன்…

நீ மட்டும் இல்ல யார் வந்தாலும் என் மகளை ஒன்னும் செய்ய முடியாது….
என் மகளோட கண்ணீர் பார்த்துக் கூட நான் வரலைன்னா அவளுக்காக நான் வாழ்ந்ததுக்கு அர்த்தம் இல்லாம போயிடும்... நீ எத்தனை பூஜைகள் செய்தாலும் என்னை உன்னால கட்டுப்படுத்த முடியாது.

நீஜமாவே என் ஆன்மா சாந்தியடையனும்னா அது உன்னை பலி கொடுத்தா மட்டும் தான் முடியும் என்று கூறியபடி ஷர்மாவின் கழுத்தை பிடித்து கொண்டு பலிபீடத்தில் வைத்துவர் அங்கிருந்த கோடாரியை தூக்கி கழுத்தில் வைத்து குறிபார்க்க…

பூஜை செய்துகொண்டிருந்த அகோரி ஒரு ஆணியை
எடுத்து அவரின் முன் படுக்க வைத்திருந்த பொம்மையின் மீது இறக்க மதுவின் ஆன்மா ரவியின் உடம்பை விட்டுப் பிரிந்தது... அந்த இடத்தில் இருந்த சூறைக்காற்று நின்றது ரவி மயக்கம் போட்டுக் கீழே விழுந்தார்.

நெருப்பு வளையம் திடீரென காணாமல் போயிற்று... அதை அறிந்ததும் அபியும் சக்கரவர்த்தியும் ஒரே போல அங்கிருந்து ஓடி வந்தனர்.

எதிர் புறமாக இருந்த ரோஹித்தும் ஓடி வந்து கொண்டிருந்தான்.

ரவி மயங்கியதை அறிந்த ஷர்மா ஓடிச்சென்று நேத்ராவை இழுத்து வந்து பலி பீடத்தில் படுக்க வைத்தவர் கோடாலியைத் தேட அது ரவியின் அருகில் கிடந்தது.

அதற்குள்ளாகவே ரோகித் அந்த இடத்தை நெருங்க சீக்கிரமா அதை எடுத்து இவளை வெட்டு என்று கூற நேத்ரா பயங்கரமாக திமிர ஆரம்பித்தாள்.


அதற்கு அபி அவர்களை நெருங்கியிருந்தான். திமிரும் நேத்ராவை தனது இரு கைகளாலும் அழுத்தி பிடித்தபடி ஷர்மா குனிந்து அமர்ந்திருக்க சரியாக ரோகித் நேத்ராவின் கழுத்தை குறிவைத்து கை ஒங்க அருகில் வந்த அபி லாவகமாக நேத்ராவின் காலை பிடித்து இழுக்க அவளை அழுத்திப் பிடித்திருந்த ஷர்மா நேத்ராவை இழுப்பதற்காக மேலும் குனிய கண் இமைக்கும் நேரத்தில் ஷர்மாவின் தலை ரோகித்தால் வெட்டப்பட்டது.

அனைவருமே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க அகோரி அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். அதற்குள்ளாக காவல்துறையினர் முற்றிலுமாக அந்த இடத்தை முற்றுகையிட ரவி இப்பொழுது மயக்கம் தெளிந்து என்ன நடந்தது என்று கிரத்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது மல்லிப்பூ தோட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த மதுவின் பூதஉடலில் இருந்த ஆன்மா மெல்ல அடங்கியது.
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
ஷர்மாவின் தலை துண்டிக்கப்பட்ட அதிர்ச்சியில் கையில் இருந்த கோடாரியை தூக்கி வீசிய ரோகித் நான் இல்லை நான் இல்லை என்று கத்த ஆரம்பித்தான்.

அவனைச் சுற்றி காவல் துறையினர் துப்பாக்கியுடன் நிற்க... ஆண்கள் இருவரும் நேத்ராவின் அருகில் அமர்ந்து அவளின் காயங்களை ஆராய்ந்து கொண்டிருக்க நேத்ரா தயங்கியபடி கஸ்தூரியின் பக்கம் ஒரு விரலை நீட்டினாள்.

அப்பொழுதுதான் ஆண்கள் இருவருமே முழுதாக கஸ்தூரியை பார்த்தார்கள் கால்கள் உடைந்த நிலையில் உடல் முழுவதும் காயத்துடன் அங்கிருந்த ஒரு கட்டையில் தன்னை சாய்த்துக் கொண்டு கண்களை மூடியபடி அலங்கோலமாக கிடக்க அபி எழும்முன் சக்கரவர்த்தி அவளிடம் ஓடினான்.

கஸ்தூரியை ஆராய நன்றாக தெரிந்து விட்டது அவளின் கால்கள் உடைக்கப்பட்டு இருக்கிறது தலையில் பயங்கரமாக காயம் ஏற்பட்டு இருப்பதை அறிந்தவன் உடனடியாக ஹெலிகாப்டரை வரவழைத்து அதில் நேத்ராவையும் கஸ்தூரியும் அனுப்பிவைக்க ஆயத்தமானார்கள்.

இப்படி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தன் மனைவியை தான் காப்பாற்றத் தவறி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து ரவி அங்கிருந்த ஒரு காவலரின் துப்பாக்கியை பிடிங்கி தனக்குத்தானே குறிவைக்க அனைவருமே பதறினர்.

நேத்ரா கதற ஆரம்பித்தாள் அப்பா என்ன விட்டுட்டு போயிடாதீங்க ப்ளீஸ்பா என்னை அனாதை ஆக்கிடாதிங்க என்று.


அபி அவரின் முன்பு கைகளை நீட்டியபடி சார் சொன்னா கேளுங்க இதற்காக தான் மது ரொம்ப பயந்தா... என் பிரச்சனை வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா உடனே தற்கொலை பண்ணிக்குவாரு அதனால இது யாருக்கும் தெரிய வேணாம் என்னோட போகட்டும்னு சொன்னா…
இப்போ நீங்க அதை உண்மையா ஆக்கிடாதீங்க…அவ கடைசிவரை அவளோட பிரச்சினையை உங்ககிட்ட சொல்லாம மறைச்சது இதுக்காக தான்.

தன் நண்பன் மூலமாகவே மனைவிக்கு ஆபத்து வருதுனு தெரிஞ்சா கணவர் எப்படி எடுப்பாரோனு பயந்தா... அவ பயந்த மாதிரி நீங்க தற்கொலை பண்ணிக்கிட்டா இது ஒரு முன்னுதாரணமா ஆயிடும்...எந்த மனைவியுமே கணவர் கிட்ட பிரச்சனையை சொல்ல பயப்படுவாங்க

உங்களுக்கு தண்டனை கொடுக்கறதா நினைச்சுக்கிட்டு நேத்ராவை பலிவாங்கிடாதீங்க...அவளுக்கு நீங்க வேணும் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க முடிவை மாத்திக்கோங்க என்று பலவாறாக அவரிடம் பேச அவரின் மனம் மாறி துப்பாக்கியைக் கீழே போட்டவர் மடிந்து அமர்ந்து மதுவிற்காக கதறிக் கதறி அழ ஆரம்பித்தார் .

மது என்ன மன்னிச்சிடு வெளியே ஒரு பிரச்சனைனா நீ என்கிட்ட சொல்லலாம் ஆனா பிரச்சினையே என் நண்பனின் மூலம் வரும் போது நீ யாரு கிட்ட சொல்லி இருப்ப உன்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கல... நான்தான் உன்னை பாதுகாக்க தவறிட்டேன் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணினதை தவிர நீ வேறு எந்த குற்றமும் செய்யல சிறந்த கணவனாய் இருக்க நான் தான் மறத்துட்டேன்... பணத்தாசையும் ஆடம்பர மோகத்தாலயும் உன்னை பக்கத்துல இருந்து பாதுகாக்க தவறிட்டேன் என்னை மன்னிச்சிடு... இனி வர்ற ஒவ்வொரு நிமிஷமும் நேத்ராவை நான் பக்கத்தில் இருந்து பாதுகாப்பேன் இது உன்மேல சத்தியம் என்று அந்த இடத்திலிருந்து சத்தமாக உரைத்தார்.

அதன் பிறகு காயம் பட்டவர்களை மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க...கஸ்தூரி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தாள்.நேத்ராவிற்கு உள் கழுத்திலும் சற்று காயம்….கை உடைந்திருந்தது... முதலுதவி மட்டும் டெல்லியில் அளித்தவன் ஊருக்கு அழைத்து வந்து அவனது வீட்டில் வைத்து சிகிச்சை பார்த்தான்.

அவனது வீட்டில் இருந்த அனைவருமே அவளை கண்களுக்குள் வைத்து தாங்கினர்.

நேத்ராவுக்கு ஓரளவு சரியானதும் முறைப்படி அவளும் தந்தையும் சேர்ந்தமர்ந்து தாய்க்கு திதி கொடுத்து அவரின் ஆன்மாவை சாந்தி அடைய வைத்தனர் .தந்தை இப்பொழுது மதுவின் நினைவாக தோப்பு வீட்டில் இருக்கிறார்.

ஒரு நாள் காலை உணவருந்தும் வேளையில் அபியின் வீட்டிலிருந்து திடீரென்று நேத்ரா காணாமல் போக எல்லோருமே அவளை எங்கெங்கோ தேட அபிக்கு ஏதோ தோன்ற உணவை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள் சென்று பார்க்க காலை உணவை வேலைக்காரப் பெண்மணி தயாரிப்பு கொண்டிருக்க ரவி அவரது அறையில் நன்கு உறங்கி கொண்டிருந்தார்...

எதற்கும் தோட்டத்தின் நடுவில் சென்று பார்க்கலாம் என்று அங்கே போக அவன் எதிர்பார்த்து போல அவள் அங்கேதான் நின்று கொண்டிருந்தாள்.


வெளிர் நிற பலாசா பேன்ட் சாம்பல் நிற க்ராப் டாப்….தூக்கிவாரிய குதிரைவால்...நெற்றில் ஒரு பேன்டேஜ்...கையை தூக்கிபிடித்தபடி கழுத்தோடு சேர்ந்த பெல்ட்...கழுத்து அசையாமல் இருக்க நெக் ஃபேட்...சகிதமாக காலை சூரியனை மல்லிப்பூ தோட்டத்தின் நடுவே நின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தாள்…

அவளை தேடிவந்த அபிமன்யூ சற்றுநேரம் அவளின் பின் இருந்து வேடிக்கை பார்த்தபடியே என்னாச்சு நேத்ரா உன்னை காணோம்னு எல்லாரும் அங்க தேடிட்டு இருந்தா நீ யாரு கிட்டயும் சொல்லாம இங்க வந்துட்ட... என்று குறைபட்டான்.

சாரி அபி திடீர்னு அம்மா ஞாபகம் வந்துருச்சு அதான் யாருக்கும் சொல்லாம காலையில கிளம்பி வந்துட்டேன் என்று பற்களைக் கடித்தபடி மிக மெதுவாக பேசினாள். அவள் உதட்டில் காயம் சற்று ஆறி இருந்தது உதட்டோரம் முடிவில் இரு தையல்கள் போட்டதற்கான அடையாளம் நன்றாகவே தெரிந்தது.


வேணா போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி உன் அம்மாவை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்து அவங்களை முறைப்படி தகனம் செய்யலாமா…?


வேணாம் அபி வாழும்போதுதான் நிம்மதியே இல்லாமல் பயந்து பயந்து வாழ்ந்தாங்க செத்ததுக்கு அப்புறமாவது நிம்மதியா இந்த இடத்தில் தூங்கட்டுமே அப்போ தான் எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனைனா மறுபடியும் அம்மா கனவுல வருவாங்க... அவங்க உடம்பை தகனம் செஞ்சுட்டா அவங்க வரமாட்டாங்க... அவங்க என் கனவுல வரனும்ங்கறதுக்காகவே நான் இப்போ அதிகமா தூங்கறேன் என்றவள் தனது தாயை புதைத்த இடம் என்று கூறிய இடத்திலிருந்து சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தாள்.

பிறகு நன்கு குனிந்து அந்த மண்ணின் மீது ஒரு முத்தமிட்டவள் அம்மா உன் பொண்ணு இப்போ உன்னோட உன் கூட தான் இருக்கேன் நீ பயப்படாதே நிம்மதியா தூங்கு யாரும் உன்ன டிஸ்டர்ப் பண்ண வர மாட்டாங்க நான் இருக்கேன் உனக்கு துணையா என்று கூறினாள்‌.

அவளின் பின்புறமாக வந்து தூக்கி நிறுத்திய அபி விழி விட்டு தாண்டிய கண்ணீரை வலிக்காதவாறு துடைத்துவிட்டவன்...

அழாத….நேத்ரா… உன் அம்மா என்னைக்கும் உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டா உன்னோடு தான் உன் கூடத்தான் இருப்பா... சரி ப்ரேக் ஃபாஸ்ட் எடுத்துட்டு வந்திருக்கேன் சாப்பிடலாம் என்று கூப்பிட சரி என்பதுபோல் தலையை அசைத்தபடி வீட்டுக்கு வர வாசலில் ஏற்கனவே ஒரு டீபாயின் மீது உணவை தயாராக எடுத்து வைத்திருந்தான். எதிரெதிராக இரு ப்ளாஸ்டிக் நாற்காலி இருக்க ஒன்றில் அமர்ந்தவள் ஒரு தட்டினை இடக்கையால் எடுத்து கடினப்பட்டு வலக்கையால் பிடித்தாள்.பிறகு இடது கையில் ஸ்பூனை பிடித்து இட்லியை வெட்ட

ஓடிவந்த அபி அவள் கைகளில் இருந்த தட்டை பிடுங்கி இட்லியை பிய்த்து அவள் வாய்க்குள் மெதுவாக திணித்தான்.

உதட்டின் காயத்திற்கு எந்தவொரு அசைவையும் கொடுக்காதவாறு உண்டவளுக்கு தன்னையும் மீறி கண்களில் நீர் சுரந்தது ‌

என்ன சின்ன பிள்ளை மாதிரி தினமும் அழுதுகிட்டு...என்று கண்களைத் துடைத்துவிட்டவனிடம்



உன்னை நான் புரிஞ்சுக்கவே இல்ல ஆரம்பத்திலேயே தெரிஞ்சிருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது நான் கோயம்புத்தூர் வந்தேன்ல அப்படியே இங்கயே இருந்திருக்கனும் என்னால எல்லாருக்கும் பிரச்சனை கஸ்தூரி தான் ரொம்ப பாவம்….

இன்னும் எத்தனை நாளைக்கு பழசை நினைத்து கவலைப்பட்டுக் கிட்டே இருக்கப் போற...விட்டுதள்ளு அப்புறம் கஸ்தூரி பாவம் கிடையாது இப்படி ஒரு சம்பவம் நடக்காம இருந்திருந்தா கஸ்தூரியை நாம சந்திக்காமல் இருந்திருந்தா இன்னைக்கு சக்கரவர்த்தி மாதிரி அவளுக்கு ஒரு அழகான வாழ்க்கை துணை கிடைத்திருக்குமா அவளை கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறான் நான் இப்போ உன்னை பாக்குற மாதிரி ஆனா நீதான் இன்னும் என்ன பாக்க மாட்டேங்கற என்று குறைபட்ட அவனிடம்

இப்போவும் உனக்கு என்னை பிடிக்கலையா என்று கேட்டாள்.

மண்டு அதான் சொல்றேனே நீதான் என்னை பாக்க மாட்டேங்கறனு அப்போ கூடவா தெரியல என் மனசு ஃபுல்லா நீதான் இருக்கிறேன்னு…

உனக்காக மட்டும் தான் நேத்ரா அங்க வந்தேன் உனக்காக மட்டும் தான் எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ உனக்கு இட்லி ஊட்டிட்டு இருக்கேன் இதவிட எப்படி என் காதலை உனக்கு புரிய வைக்கிறது ஒருவேளை சினிமாவில் எல்லாம் வர்ற மாதிரி டீப்பா ஒரு லிப் லாக் பண்ணினா நம்புவியோ என்னவோ என்று கூறியபடி அவளை இழுத்து அணைத்தவன் அவளின் இதழோடு இதழ் பதித்தான் அவளும் அவனோடு இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள்.


டெல்லி சிறையில்
முருகனின் காலில் ஏற்பட்ட காயத்தால் இனி அவனால் மற்றவர்களைப் போல் இயல்பாக நடக்க முடியாது தோள்பட்டையிலும் காயம் என்பதால் கைகளாலும் பலமான வேலைகளை செய்ய முடியாது ... அவன் செய்த குற்றங்களை எல்லாம் அவனே ஒத்துக் கொண்டதால் அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது…

அவனால் சக கைதிகளை போல் வேலை எதுவும் செய்ய முடியாததால் சக கைதிகள் அவனை வெறுத்து ஒதுக்க சிறை வார்டன் அவ்வபோது அவனை திட்டித் தீர்க்க தினம் தினம் வேதனையுடன் சிறைச்சாலையில் அவனின் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான்.

ரோகித்தின் மீது பல
வழக்குகள் ..முக்கியமாக நரபலி கொடுத்தது பெண்ணை கடத்தியது .. பெண்ணை மானபங்கப்படுத்தியது... கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் ஒரே தீர்ப்பாக சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது இப்பொழுது தூக்கில் தொங்கும் நாளை எண்ணிக்கொண்டு சிறைச்சாலைக்குள் கண்ணீருடன் காத்திருக்கிறான்…


உண்மையைச் சொல்லப்போனால் அனாதை சிறுவனான ரோகித்தின் வளர்ப்புதான் சரியில்லை ஷர்மா சிறுவயதிலிருந்தே மதுவைப் பற்றிய தப்பான எண்ணங்களை மனதில் ஊற்றி வளர்த்தார்.

அதுமட்டுமின்றி நேத்ராவை பழிவாங்க வேண்டும் என்ற முனைப்புடன் வளர்த்ததால் அவனுக்கு இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. பெண்களின் அருமையும் தெரியவில்லை பெண்களைப் பற்றிய புரிதலும் இல்லை.

பெண்கள் என்றாலே ஏமாற்றுபவர்கள் என்று மட்டுமே அவனது மனதில் வேறுன்றி இருந்ததால் கஸ்தூரி நேத்ரா என இரு பெண்களிடமும் மிகக் கடுமையாக நடந்து கொண்டான். அதனால்தானோ என்னவோ ஷர்மாவின் மரணம் ரோகித்தின் கையால் நடத்தப்பட்டிருக்கிறது.

ரவி தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டவர் இப்பொழுது அமைதியாக அவரது ஊரில் தோப்பு வீட்டில் இருந்து கொண்டே மில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் .

மதுமதியின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி டெல்லியில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்தவர் அதில் வரும் லாபத்தில் ஒரு கணிசமான தொகையை தொழிலாளர்கள் அனைவருக்கும் போகும்படி செய்தவர் மீதி பாதியை கணவரால் கைவிடப்பட்ட வர்கள் அனாதை குழந்தைகள்,முதியோர்கள் என பலருக்கு உபயோகிக்கும் படி செய்து விட்டார்.

சொந்தக் ஊரில் வரும் வருமானத்தையும் பல்வேறு நல்ல காரியங்களுக்கு செலவு செய்தபடி ஒரு அமைதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சக்கரவர்த்தி வேலையில் சேருவதற்கு முன்பு பல்வேறு வீரதீர சாகசங்களில் ஈடுபட்டதால் அவனுக்கு உயரிய விருதான அர்ஜுனா விருது கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ஸ்பெஷல் சிஐடி பிரிவில் அவனுக்கு உயர்ந்த பதவியும் கொடுக்கப்பட்டது.

கஸ்தூரிக்கு மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வர இப்பொழுது சக்கரவர்த்தி தான் அவளை அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறாள் அவனுக்கு ஏனோ கஸ்தூரியை மிகவும் பிடித்துவிட்டது.

தாங்கள் எல்லோருமே நேத்ராவிற்க்கு ஏதாவது ஒரு வகையில் கடமைப்பட்டவர்கள் அதனால் அவளை காக்க துணிந்தார்கள்.

ஆனால் எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் அவ்வளவு சிரமங்களையும் தாங்கிக்கொண்டு கஸ்தூரி கடைசிவரை போராடியது தான் அவளின் பக்கம் அவனின் கவனம் சிதறியதற்கு காரணம்.

கஸ்தூரிக்கு கால் உடைந்து இருந்ததால் ஆறு மாதம் வரை எழுந்து நடமாட முடியாத ஒரு நிலைமை ஆனால் சக்கரவர்த்தி உடனிருந்து பொறுப்பாக கவனித்து கொள்கிறான்.

இப்பொழுது கஸ்தூரி வெறும் கஸ்தூரி அல்ல...திருமதி கஸ்தூரி சக்கரவர்தி…

அவர்களின் வாழ்க்கை டெல்லியில் மிக அழகாகவும் அமைதியாகவும் போய்க்கொண்டிருக்கிறது.

எப்போதடா தனது உடல்நலம் சரியாகும் கணவருடன் ஒரு சாதாரணமான இல்வாழ்க்கை வாழ ஆரப்பிப்போம் என்று கஸ்தூரி முற்றிலும் குணமாகும் நாளுக்காய் காத்திருக்கிறாள்... சக்கரவர்த்தியும் திருமணத்திற்குப் பின்பு தான் கஸ்தூரியை காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறான்…

உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் என்றைக்கு கஸ்தூரி அனுமதிக்கப்பட்டாளோ அன்றிலிருந்து அவளுடன் இருந்தது சக்கரவர்த்தி மட்டும்தான் அவள் கண்விழித்த பத்தாவது நாளில் அவளை திருமணம் செய்து கொண்டான்.


அவனைத் திருமணம் செய்ய கஸ்தூரி மிகவும் தயங்கினாள்.

காரணம் அவள் நேத்ராவுக்கு எதிராக செயல்பட்டதை ஒரு குற்ற உணர்ச்சியுடன் கூற

சக்ரவர்த்தி தான் அவளை சமாதானப்படுத்தினான் நீயும் நானும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பவர்கள் நீ உனது சகோதரி மட்டும் சகோதனுக்காக செய்த செயல்…நான் எனது நண்பனுக்காக செய்தது...நீ செய்த செயல் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் உன்னுடைய பாசம் தூய்மையானது... அதுபோல் ஒரு பாசத்தை எனக்கும் கொடு என்றான்.

பிறருக்காக வாழும் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இன்னும் பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செய்யலாம் என்று அவளுக்கு புரிய வைத்து அவளின் சம்மதத்துடன் கைப்பிடித்தான் அன்று முதல் இன்று வரை அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.

நேத்ரா அபி இப்பொழுது அந்தத் தோப்பு வீட்டில் இருக்கிறார்கள்... அவர்களுக்கு திருமணம் முடிந்து இன்றோடு மூன்று மாதம் நிறைவடைந்து இருக்கிறது…..அபி அவனது செக்யூரிட்டி சிஸ்டத்தை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளான்…. நேத்ராவின் உடல்நிலை முற்றிலுமாக குணமடைந்து விட்டது.

சில நாட்களுக்கு முன்புதான் கணவன் மனைவியாக மனதாலும் உடலாலும் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்…
அபி,சக்கரவர்த்தி இருவரின் வாழ்க்கையும் இப்பொழுது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது அபி அவனுடைய வேலையில் பல முன்னேற்றங்களை கண்டு இருக்க இங்கு சக்கரவர்த்தி அவன் எடுக்கும் ஒவ்வொரு கேஸீலும் வெற்றியை மட்டுமே கண்டு கொண்டிருந்தான்.

இப்படியாக முழுதாக ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க கஸ்தூரி முதலில் ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகியிருந்தாள்….அவர்களது வாழ்க்கை அளவானது...அழகானது…

நேத்ரா அபிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று...மதுமதியென பெயர் சூடி இருந்தனர்... தாத்தாவுடன் மட்டுமே உலா வரும் செல்ல பேத்தி...


சக்கரவர்த்தி தம்பதியினர் அபியையும் நேத்ராவையும் அவ்வப்போது சந்தித்து விட்டுச் செல்வார்கள் இவர்களும் அதேபோல் மாதத்திற்கு ஒருமுறையாவது அவர்களை சென்று சந்தித்து வருவார்கள்... சக்கரவர்த்திக்கு இப்பொழுது அபியின் மீதும் நேத்ராவின் மீதும் நிறைய நன்றிக்கடன் இருந்தது அவனது உயிரை அவளின் கனவுதானே காப்பாற்றியது அவளின் கனவை கொண்டு தானே அபி தேடி வந்தது….

இப்படியாக நாட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்க அபி காலையில் எங்கோ செல்வதற்காக வேகமாக கிளம்பி கொண்டிருந்தவன் நேத்ராவை அழைத்துக் கொண்டிருந்தான்.


நேத்ரா டைம் ஆச்சு டிபன் ரெடியா இல்லையா என நேத்ராவை அழைக்க சமைத்து முடித்தவள் என்னமோ நீங்க மட்டும்தான் வேலை செய்ற மாதிரி நான் வேலை செய்யலையா என்று கூறியபடி டிபன் எடுத்து வைக்க சரி மது எங்கே என்று கேட்டான்.

கழுதை கெட்டா குட்டிச் சுவரு உங்க பொண்ணு கெட்டா மல்லிப்பூ தோட்டம் வேற எங்கே போயிருப்பா என்றாள்.

சரி போய் அவளை அழைச்சிட்டு வா என்று கூறினான்…

ம்ம்...என்று வெளியே வர…


வாசலில் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரவி ஒரு கண்ணை பேப்பரிலும் மறு கண்ணை பேத்தியின் மீதும் வைத்தபடி அமர்ந்து இருந்தார்.

குட்டிப்பெண் மதுவோ அவளின் பாட்டியைப் போலவே இரு ஜடைகள் போட்டு இரு ஜடைகளிலும் பூவை தொங்கவிட்டுக் கொண்டு பட்டுப் பாவாடை அணிந்தபடி தோட்டத்தில் வீசும் காற்றில் பாவாடையை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டு வர அதைக் கண்ட ரவி நேத்ராவிடம் உன் அம்மாவை எப்போ மொத மொதல்ல பார்த்தேனு அடிக்கடி கேட்பல்ல நேத்ரா.

இப்படித்தான் நம்ம மதுக்குட்டி மாதிரி விளையாடிக்கிட்டே வருவா மது பாப்பா வேற யாரும் இல்ல என்னோட மதுதான் என்று கண்கலங்க குழந்தையும் பார்த்து கூறினார்.

தன்னையும் தனது தாயையும் போலவே அச்சில் வார்த்த படி இருந்த குட்டி மது அந்நாளில் மதுவை ஞாபகப்படுத்துவது போல் விளையாடிக்கொண்டிருந்தாள்.

தோட்டத்தில் அவள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த வேலை செய்யும் முதிய பணிப்பெண்கள் அக்கா இது யாரு நம்ம மதுபோலவே விளையாடறா...என்று கேட்க


பின்ன அவ பேத்தியாச்சே அப்படித்தானே விளையாடுவா எத்தனை வருஷம் ஆச்சு இதுமாதிரி கொலுசு சத்தத்தோடு இந்த மல்லிகைத் தோட்டத்துல வேலைப்பார்த்து என்று பெருமூச்சு விட்டபடி அந்த பெண்கள் வேலை செய்ய அவர்களை சினேகமாக பார்த்து புன்னகைத்த மது மீண்டும் பாவாடையை சுற்றியபடி வாய்க்குள் வந்த ஒரு பாட்டை முனுமுனுத்தபடி விளையாடிக்கொண்டிருந்தாள்.

தந்தை சொன்னதைக் கேட்ட நேத்ரா நேராக தாய் புகைப்படத்தில் அருகே வந்தவள் கண்ணீர் விட்டபடி அம்மா நீயும் நானும் எப்படியெல்லாம் இருக்க ஆசைப்பட்டியோ அப்படியெல்லாம் நானும் என் பொண்ணும் இருக்கனும்னு எங்களை ஆசிர்வதிம்மா... எங்களுக்கு எப்பவும் துணையிரு.. என்று கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீர்விட்டு சிந்தினாள்‌.

புகைப்படம் இப்பொழுது சற்று அசைந்தது…. நேத்ராவிற்கு மட்டுமல்ல அவளைச் சுற்றி இருக்கும் யாருக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் கண்டிப்பாக மதுமதி கனவில் வந்து மகளுக்கு உணர்த்துவாள்… மகளுக்கு ஒரு கஷ்டம் என்று வரும்பொழுது தாய் எந்த நிலைமையிலும் எப்படி இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வருவது போல் கண்டிப்பாக மகளுக்கு ஒரு கஷ்டம் என்று வந்தாள் அவளின் தாய் கைவிடமாட்டார்.

இதுவரை கனவாக மட்டுமே வந்து கொண்டிருந்தவள் மகள் வடிவில் இப்பொழுது உயிராகவே வந்துவிட்டாள் அதை ரவி உணர்ந்ததை போல நேத்ராவும் கூடிய விரைவில் உணர்வாள்.


முற்றும்.


இதுவரை என்னுடன் பயனித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள் பல...வாய்ப்பு கொடுத்த சகாப்தம் தள நிர்வாகத்திற்க்கும் எனது நன்றிகள்…

லைக், கமெண்ட்யிட்டி என்னை இக்கதையை முழுதாக எழுத ஊக்கப்படுத்திய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...நீங்க இல்லனா இவ்ளோ சீக்கீரமா இதை என்னால கண்டிப்பா எழுதிருக்க முடியாது….


தினமும் ரெண்டு தடவையாவது ஏதாவது கமெண்ட் வந்து இருக்கானு வந்து பார்ப்பேன்...கமெண்ட் பார்த்து உடனே அடுத்த எம்பியை சந்தோஷமா எழுத ஆரம்பிச்சுடுவேன் அந்த சந்தோஷத்தை கொடுத்த சகோதரிகளுக்கு என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் .

எப்பவுமே இதே போல எல்லா எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்துங்க நீங்க இல்லனா என்ன மாதிரி தத்துகுட்டி எழுத்தாளர்கள் கிடையாது எழுதணும்னு நாங்க ஆசைப்பட்டா கூட எங்களை எழுதத் தூண்டறதும் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கறதும் தன்னலமற்ற நீங்க மட்டும் தான் அதனால என்னைக்குமே இதை கை விடாதீங்க…

இந்த கதை சிறப்பானதா இருந்தா இதுவரை,வாசித்து ஊக்கபடுத்திய...ஊக்கப்படுத்த போகும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் செய்யறேன்.

நன்றி தோழமைகளே.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom