Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கலியுக கல்கி....!

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
ஹாய் பிரெண்ட்ஸ்......



என்னுடைய கதை.....காதல் என்ற ஒன்றை மட்டும்தான் சுற்றி வரும்.....!இந்தக் கதையும் காதல் கதைதான்.....!ஒரு அழுத்தமான கதைக்கரு.....அழகான காதல் என்னும் மை கொண்டு வரையப்பட்டுருக்கிறது.....!படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்....!அப்படியே லைக் போடவும் மறந்துடாதீங்க.....!!



கலியுக கல்கி....!!



சூரியனின் செங்கிரணங்கள் பூமியைத் தழுவி பொன்மயமாக அடித்துக் கொண்டிருந்தன....!அவ்வளவு நேரம் கவிழ்ந்திருந்த இருளை....தன் ஒளியைப் பாய்ச்சி மெல்ல....மெல்ல விலக்கிக் கொண்டிருந்தான் அந்த செங்கதிரவன்.இருள் விலகி அன்றைய நாள் விடிந்து கொண்டிருக்கும் அதே வேளையில்.....அந்த நெடுஞ்சாலையின் அருகே ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை....தன் பிரகாசத்தை இழந்து மங்கிக் கொண்டிருந்தது.



"விர்....விர்.....சர்.....சர்.....!"



அந்த நெடுஞ்சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வேளையில்....அந்த கருப்பு நிற வெளிநாட்டுக் கார் மட்டும் சாலையோரமாக ஓரங்கட்டி நின்றது.இன்னும் இருள் முழுமையாக விலகாத நிலையில்.....ஓரங்கட்டப்பட்ட அந்தக் காரிலிருந்து ஒரு இளம்பெண் தூக்கி எரியப்பட்டாள்.அவ்வளவுதான்....!அடுத்த நொடி அந்த கார் நிற்காமல் விரைந்து விட்டது.



"ம்மா.....!",என்ற முனகலுடன்.....அவளைத் தழுயிருந்த ஆடைகள் அலங்கோலமாய் கிழிந்து கிடக்க....அவளது உடலில் பதிந்திருந்த நகக் காயங்களும்....பல் தடங்களும்.....சற்று முன்
அவளுக்கு நடந்திருந்த வன் கொடுமையை பறைசாற்ற....அந்த சாலையோரமாய் துடித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.




"ம்மா....!வ...வலிக்குது.....!",தவித்துக் கொண்டிருந்த அந்த பெண்மையை காப்பதற்கு அங்கு யாரும் இல்லை.



ஆதவன் தன் முழுமையான ஆதிக்கத்தை பூமியில் செலுத்திய வேளையில்....அந்த வழியாக சென்ற காரில் இருந்த இரு நல்ல மனங்களின் கண்களில் அலங்கோலமாய் கிடந்த அந்தப் பெண் வந்து விழுந்தாள்.பதறியடித்துக் கொண்டு தங்கள் கையிலிருந்த துணியால் அந்த பெண்ணின் அங்கங்களை மூடி மறைத்தவர்கள்....அவளை காரில்ஏற்றிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.



"ம்மா....!தண்ணி.....!",அரை மயக்க நிலையில் புலம்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் வாயில் சிறிது சிறிதாக நீரை புகட்டியபடி....அவள் தலையை நீவி கொடுத்து ஆறுதல் மொழிகளை பேசிக் கொண்டே வந்தார் அந்த மூத்த பெண்மணி.




"ஒண்ணுமில்லை ம்மா....!அவ்ளோதான்....!",அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் அந்த இளம் பெண்ணின் கண்களில் நீரை வார்த்தது.



'அவ்வளவுதான்....!இனி என்னிடம் ஒன்றுமில்லைதான்.....!',அவள் மனம் பெருந்துயரத்துடன் கதறி ஓலமிட்டது.



அவள் பவித்ரா.....!ராமன்...ஜானகி தம்பதியின் ஒரே செல்லப் செல்வப் புதல்வி....!சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமாகி.....நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலர் கலர் கனவுகளை விழிகளில் தேக்கியபடி.....இன்னும் இரண்டு மாதத்தில் நடக்கவிருக்கும் தனது திருமணத்தை எதிர்நோக்கி..... உற்சாகத்துடன் வளைய வந்து கொண்டிருக்கும் 21 வயது நிரம்பிய இளஞ்சிட்டு....!




எப்பொழுதும் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவள் அன்று கடத்தப்பட்டாள்.சதை தின்னும் பிணந்தின்னிக் கழுகுகளான மூன்று கயவர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு அந்த நெடுஞ்சாலையில் வீசப்பட்டாள்.



தனக்கு உடமையில்லாத வேறொரு ஆணின் சிறு தவறான பார்வையையே ஒரு பெண்மையால் தாங்கிக் கொள்ள முடியாது எனும் போது....அந்த பெண்மையையே கதற கதற நாசம் செய்தால்..... அந்தப் பெண்மையின் நிலை என்னவாக இருக்கும்.....?



"உங்கள் மகள் ரொம்ப மோசமான முறையில கற்பழிக்கப்பட்டிருக்காங்க.....!நாங்க முடிஞ்சளவுக்கு அவங்களோட உயிரை காப்பாத்த போராடிட்டு இருக்கோம்....!கடவுளை வேண்டிக்கோங்க....!",எந்தப் பெற்றவர்களும் கேட்க கூடாத வார்த்தையை அந்த பெற்றவர்களிடம் கூறி விட்டு சென்றார் மருத்துவர்.



"ஐயோ.....கடவுளே....!என் பொண்ணுக்கா இந்த நிலைமை....!உனக்கு கண் இருக்கா....?இல்லையா....?அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத என் மகளுக்கு இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணியிருக்கிறாயே......?",அந்த தாய் கதறி துடித்துக் கொண்டிருந்தார்.



தன் மகளை நினைத்து அழுவதா....?இல்லை....தன் மனைவியை சமாதானப்படுத்துவதா....?என்று தெரியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார் ராமன்.




அந்த பெற்றவர்களைக் கதறி துடிக்க வைத்துவிட்டு.....அந்த மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை விட்டு விட்டு.....ஒருவழியாக.....ஐந்து நாட்கள் கழித்து கண் விழித்தாள் பவித்ரா.அவள் கண்களில் முன்பிருந்த சிரிப்பு இல்லை....குதூகலம் இல்லை.....!மாறாக ஒரு அமைதி.....!நிச்சலனமாக ஒரு பெரு அமைதி குடிகொண்டிருந்தது.....!அந்த பார்வையில் இருந்ததை என்னவென்று சொல்வது....?



விரக்தி.....வெறி.....வெறுமை.....ஆக்ரோஷம்.....அதே சமயம் வெகு அழுத்தமான அமைதி....!



அந்தப் பெண்மையின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை.தான் உயிராய் போற்றி பாதுகாத்துக் கொண்டு வந்த கற்பு பறிபோனதை எண்ணி அவள் விழிகளில் துயரம் தென்படவில்லை.



அவள் அம்மா கூட,"அழுது விடு பவி.....!உன் துக்கத்தை அழுகையில் கரைத்து விடு.....!இப்படி இருக்காதே.....!",என்று கதறி அழுதார்.



அப்பொழுதும் ஒரு வெற்றுப் பார்வையை தன் தாயை நோக்கி வீசினாலே தவிர.....அவள் கண்களில் இருந்து மருந்துக்கும் கண்ணீர் வரவில்லை.



ஆயிற்று.....!இன்றோடு அவள் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டிருந்தது.இந்த பதினைந்து நாட்களில் அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி சொல்லிவிடலாம்....!தனது அன்றாட கடமைகளையும்.....தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டவள்.....முக்கால் வாசி நேரம் அடைந்து கிடந்தது என்னவோ அவளது அறையில்தான்....!




அவள் தாயின் அன்பான வார்த்தைகளுக்கோ.....அவள் தந்தையின் பாசமான பேச்சுகளுக்கோ அவளிடம் இருந்து கிடைத்த பதில் என்னவோ....அமைதிதான்....!



படுக்கையில் படுத்தபடி விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த பவித்ராவின் காதில்.....ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன் தாய் தந்தையரின் பேச்சு வந்து விழுந்தது.



"மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் பண்ணினாங்க ஜானகி.....!பவித்ராவை வந்து பார்க்கறேன்னு சொன்னாங்க.....!நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்....!அவங்களை பார்த்தா.....அவ ஒரு மாதிரி ஃபீல் பண்ணுவான்னு நான் மறுத்துட்டேன்.....!",ராமன் கூற,



தன் கண்களில் பெருகிய நீரை தன் சேலைத் தலைப்பால் துடைத்த ஜானகி,"கல்யாணத்தைப் பத்தி ஏதாவது பேசினாங்களா....?",மெல்லிய குரலில் வினவ,



"அவங்க எதுவும் பேசலை ஜானகி.....!மாப்பிள்ளை வெளிநாடு போயிருக்கிறாராம்.....!அவருக்கு இன்னும் விஷயம் தெரியாதாம்.....!அவரு வரட்டும் பேசிக்கலாம்ன்னு சொன்னாங்க....!",



அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவின் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை தோன்றியது.அவளது விழிகள் அவளது அலைபேசியை வெறித்தன.'கர்ணன் 'என்ற பெயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு மிஸ்ட் காலுக்கு மேல் வந்திருந்தது.



கர்ணன்.....!பவித்ராவிற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை....!நிச்சியமான நாளில் இருந்து இன்று வரை.....அவள் மீது காதலை மட்டுமே பொழிந்து கொண்டிருப்பவன்.அவனது அபரிதமான காதலால்.....அவளை ஒரு மகாராணியாய் உணர வைத்தவன்....!அவனது காதலில் சுகமாய் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தவள் வாழ்வில்.....விதி என்னும் கோர அரக்கன் கொடூரமாய் விளையாடி விட்டான்.




ஒரு முடிவோடு எழுந்து வெளியே வந்த பவித்ரா....தன் தந்தையை பார்த்து,"அப்பா.....!இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிடுங்க.....!இப்பவே போன் பண்ணி சொல்லுங்க....!",என்றாள்.அப்பொழுதும் அவள் அழவில்லை.



"பவி ம்மா....!கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் டா....!இன்னும் ரெண்டு நாள்ல மாப்பிள்ளை பாரின்ல இருந்து வந்திடுவாராம்....!அப்புறம் பேசிக்கலாமே....!",ராமன் மென்மையாக எடுத்துக் கூற,



தீர்க்கமாக அவரைப் பார்த்தவள்,"அப்பா....!நான் உங்க பொண்ணா உயிரோட இந்த வீட்ல இருக்கணும்ன்னு நினைச்சீங்கன்னா.....இந்த கல்யாணத்தை இப்பவே நிறுத்துங்க....!",அழுத்தமாக உரைத்தவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.



மகளின் வார்த்தைகளில் பதைபதைத்துப் போனவர்கள் மகள் சொன்னதை செய்தனர்.முகத்தில் அடித்தது போல் எப்படி சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு....இவர்களது இந்தப் பதில் சற்று நிம்மதியை தந்தது....!என்னதான் இருந்தாலும்....அவர்களும் உணர்ச்சிகள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே....!



பவித்ராவின் வீட்டின் முன் வெகு வேகமாக சீறிக் கொண்டு வந்து நின்றது ஒரு கார்.அதிலிருந்து ஆறடிக்கு சற்று உயரமாய்.....ஆண்மைக்கு இலக்கணமாய்....வெகு கம்பீரமாக இறங்கினான் கர்ணன்.அவன் முகம் கோபத்தில் கடும் பாறையாய் இறுகியிருந்தது.



சீற்றம் கொண்ட வேங்கையாய் உள்ளே நுழைந்தவனைப் பார்த்த ராமனும் ஜானகியும் குழம்பிய முகத்துடன் எழுந்து நின்றனர்.அவர்களது முகத்தில் குழப்பத்தையும் மீறி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.



"வாங்க மாப்.....தம்பி....!",'மாப்பிள்ளை' என்று எப்படி அழைப்பது என்று தயங்கியபடி....'தம்பி' என்று அழைத்து வைத்தார்.




"என்னங்க மாமா....!முறையை மாற்றி கூப்பிடறீங்க.....?நான் தான் உங்க மாப்பிள்ளை....!சொல்லப் போனா....நான் மட்டும்தான் உங்க மாப்பிள்ளை...!",அழுத்தமான அவனது ஒற்றை வார்த்தையில் பெரியவர்களின் முகம் இரண்டும் மலர்ந்து போனது.



"எங்கே உங்க பொண்ணு.....?",அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே....அறையிலிருந்து வெளியே வந்தாள் பவித்ரா.கண்கள் இரண்டும் உள்ளே போய்....கருவளையம் விழுந்து.....வெற்றுப் பார்வையுடன் வந்து நின்றவளைப் பார்த்தவனின் காதல் கொண்ட மனம் கதறி அழுதது.அந்த நிமிடமே....அவளது இந்த நிலைமைக்கு காரணமான பாவிகளை....கொன்று போட்டு விட வேண்டும் என்பது போல் வெறி எழுந்தது.



முயன்று தன்னை அடக்கியவன்....அவளை நெருங்கி,"நம்ம கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொன்னியா....?",அவன் பார்வை அவளை துளைத்தது.



அவனைக் கண்டவுடன் ஓடிச் சென்று அவன் மார்பில் விழச் சொன்ன மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,"ஆமா....!",என்றாள் ஒற்றை வார்த்தையாய்.



"ஏன்....?",



"இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது.....!",



"அதுதான் ஏன்னு கேட்கிறேன்....?",



வெறுமையாக அவனைப் பார்த்தவள்,"காரணம் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா....?",மறைக்க முயன்றாலும் அவள் குரலில் தென்பட்ட வேதனையை அவன் கண்டுகொண்டான்.



"என்னைப் பத்தி நீ என்னன்னு நினைச்சே டி.....?நான் உன்னை காதலிக்கிறேன்.....!உன்னை அப்படின்னா உன் மனசை.....உன் உணர்வுகளை....உன் கனவுகளைக் காதலிக்கிறேன்....!உன் உடம்பை இல்ல....!என்னுடைய காதல் என்ன....?வெறும் சதை தின்னும் மயக்கம்ன்னு நினைச்சியா....?இது காதல் டி....!என் உயிரா....உன் உயிரை மாத்தற காதல் டி.....!",



அவனது காதலில் இளக ஆரம்பித்த மனதை சிறையிட்டுத் தடுத்தவள்,"வேண்டாம்.....!இந்த கல்யாணம் நடக்க கூடாது....!நான் உங்களுக்கு வேண்டாம்....!",என்று கத்தினாள்.



"எனக்கு யாரு வேணும்ன்னு நான்தான் முடிவு பண்ணனும்.....நீ இல்ல....!இன்னும் நாலு நாள்ல நமக்கு கல்யாணம்....!ஒழுங்கா கல்யாணப் பொண்ணா....லட்சணமா இருக்கிற வழியைப் பாரு.....!இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு.....பொட்டு வைக்காம.....பூ வைக்காம இருக்காதே.....!",சற்று அதிரடியாய் இறங்கித்தான் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று அவன் கண்டிப்பை கடைபிடித்தான்.



"இல்ல....இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.....!இந்த கல்யாணம் நடக்காது.....!",அவள் மனது புலம்பித் தவித்தது.'நான் உனக்கு வேண்டாம்....!' என்று காதல் கொண்ட மனம் தன்னவனுக்காக தன் காதலையே இழக்கத் துணிந்தது.



அவள் கண்களில் தெறித்த காதலை அவன் கண்டு கொண்டான்.அவளிடம் மென்மை செல்லுபடியாகாது என்பதை உணர்ந்தவனாய்....உடல் விறைக்க நிமிர்ந்தவன்,"ஒத்துக்கணும்.....!ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.....!இந்த கல்யாணம் மட்டும் நடக்கலை.....நீ என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி இருக்கும்.....!",சிங்கமாய் கர்ஜித்தவன்....அவளது பெற்றோர்களிடம் சென்று,



"இன்னும் நாலு நாள்ல இந்த கல்யாணம் நடந்தாகணும்.....!முக்கியமான சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லுங்க.....!சிம்பிளா கோவில்ல வைச்சுக்கலாம்.....!நான் வர்றேன் மாமா....வர்றேன் அத்தை.....!",என்றபடி வெளியேறப் போனவனை.....நக்கலான பவித்ராவின் குரல் கலைத்தது.



"நாலு பேரை கூட்டி கல்யாணம் பண்ண அவமானமா இருக்கோ....?",அவளது கேலியில் சட்டென்று திரும்பியவன்,



"உலகத்தையே கூட்டி விருந்து போட நான் ரெடி.....!உன் மனசுக்கு அது கஷ்டமா இருக்குமேன்னுதான் அமைதியா இருக்கேன்....!",என்றவன் விடுவிடுவென்று வெளியேறி விட்டான்.



அதன் பிறகு அவள் சம்மதத்தை யாரும் கேட்கவில்லை.பரபரவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தேறின.



முதலில் சற்றுத் தயங்கிய கர்ணனின் தாய் வைதேகியும்.....பிறகு மனமுவந்து பவித்ராவை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டார்.அவருடைய கணவர் லிங்கமும்....மகனது முடிவுக்கு உறுதுணையாய் இருந்தார்.



"தேங்க்ஸ் ம்மா.....!",நெகிழ்ந்து போய் நன்றி கூறிய தன் மகனின் தலை முடியை பாசத்தோடு கோதி விட்டவர்,



"நான் உனக்கு அம்மாவா இந்த முடிவை எடுக்கலை டா.....!ஒரு பொண்ணா....சக மனுஷியாய் உன்னோட இந்த முடிவுக்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்.....!",என்று புன்னகைத்தார்.



மங்கள வாத்தியங்கள் முழங்க.....சுற்றி நின்றிருக்கும் உறவுகள் அட்சதை தூவ....பொன் தாலியை பவித்ராவின் கழுத்தில் கட்டப் போன.....கர்ணனின் கைகள் ஒரு நொடி தாமதித்து....அவள் விழிகளை சந்தித்தது காதலோடு.....!அப்பொழுது அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.'இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் நான் இருப்பேன்.....!' என்ற உறுதி மொழியோடும்.....கண்களில் வழிந்த காதலோடும்.....அவள் தந்த கழுத்தில்....தங்கத் தாலியை அணிவித்தான் கர்ணன்.



அவள் மனதில் இன்னதென்று விளங்காத ஒரு நிம்மதியும்.....பயமும் ஒரு சேர எழுந்தது.'தன்னவனுடைய இத்தனை காதலுக்கும்....தான் தகுதியானவள் அல்ல.....!',என்று அவள் மனம் மறுகியது.காதலில் தகுதி என்பது காதல் தான் என்பதை அந்தப் பேதை அறிந்திருக்கவில்லை.



முதல் இரவு......!திருமணமான அனைத்து தம்பதிகளுமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அற்புதமான இரவு....!காதலோடு இரு மனங்களும் சங்கமிக்கும் ஒரு இரவு.....!அதுநாள் வரை....தங்களது மனங்களை மட்டுமே பரிமாறிக் கொண்டவர்கள்.....அச்சத்தோடும்.....நாணத்தோடும்....சிறு தயக்கங்களோடும்....தங்களது உடல்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு சுப உற்சவம் இந்த முதல் இரவு....!



எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலும்.....ஒரு வித குறுகுறுக்கும் மனத்துடன் அறைக்குள் நுழைந்த கர்ணனை வரவேற்றது என்னவோ....'நங்'கென்று உருண்டு வந்து அவன் காலடியில் விழுந்த பால் சொம்புதான்.....!அதை வீசியெறிந்த அவனது மனையாட்டியோ.....ஆங்காரமாய் கட்டிலருகே நின்றிருந்தாள்.



தனக்குள் புன்னகைத்தபடியே.....அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அவளருகே வந்தவன்,"இதை நீ வெட்கபட்டுக்கிட்டே என் கையில கொடுக்கணும் பவி.....!இப்படி தூக்கி எறியக் கூடாது....!",என்றபடி அதை மேசை மேல் வைக்க,



"ச்சே....!நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானே.....?உனக்குத் தேவை என் உடம்பு தானே....?அதுக்காகத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.....?இந்தா....உன்னுடைய தேவையை தீர்த்துக்கோ.....!",ரௌத்திரமாய் கத்தியபடி....தனது புடவையை உருவி வீசினாள்.



வெகு நிதானமாக அவளை நெருங்கியவன்....அப்படியே அவளை அலேக்காகத் தூக்கி.....மெத்தையில் கிடத்தினான்.'திக் திக்'என்ற மனதுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே சரிந்து படுத்தவன்,"உண்மைதான் பேபி.....!நானும் மத்த ஆம்பிளைங்க மாதிரிதான்....!இந்த முதலிரவை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்தவன்தான்....!உன்னை உணர்ந்துக்கணும்ன்னு எனக்குள்ள கொள்ளை ஆசை இருக்கு.....!நான் ஒண்ணும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே....!ஆனால்....அதுக்கு இன்னும் நேரமும் காலமும் இருக்கு....!உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுலதான் அவசரம் காட்டினேனே தவிர....உன்னை எடுத்துக்கறதுல அவசரம் காட்ட மாட்டேன்....!",மென்மையாய் உரைத்தவன்.....அதை விட மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.



இமைக்க மறந்து தன்னவனைப் பார்த்திருந்தாள் அந்தப் பேதை.அவளை அணைத்தபடியே படுத்தவன் சுகமாய் தூங்கியும் போனான்.வெகு நாட்களுக்குப் பிறகு.....அவனது அருகாமையில் தன்னை மறந்து நிம்மதியாய் உறங்கினாள் பவித்ரா.



......................................................................................................................



தங்கள் அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.இன்றோடு அவர்களுக்கு கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தது.இவ்வளவு நாட்களில் அவன் ஒருநாள் கூட கணவனாய் அவளை நெருங்கவில்லை.ஆனால்.....காதலோடு தனது உரிமையை நிலைநிறுத்தவும் அவன் மறக்கவில்லை.சிறு சிறு அணைப்புகளின் மூலமும்.....நெற்றியில் பதிக்கும் முத்தங்களின் மூலமும் அவனது காதலை உணர்த்திக்கொண்டே தான் இருந்தான்.



ஆனால் என்ன....?நெற்றியில் பதிக்கும் முத்தம் ஒருநாள் கூட ஆசையாய் அவளது இதழ்களை நாடியது இல்லை....!அவன் நெருங்கும் போது பயப்படுவதும்.....விலகும் போது கோபப்படுவதுமாக மாறி மாறி தன் உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்தாள் அவள்.



இந்த மூன்று மாதங்களில்.....அவளுடைய மாமியார் ஒருமுறை கூட அவளிடம் முகம் திருப்பியதில்லை....!'இப்படிப்பட்டவள் தங்கள் வீட்டு மருமகளா....?' என்னும் விதமாக ஒரு சின்ன முகசுணக்கத்தைக் கூட காட்டியதில்லை....!பெற்ற மகளை விட அருமையாகப் பார்த்துக்கொண்டார்.



அவளை ஒரு கணம் கூட தனியாய் இருக்க அனுமதித்ததில்லை.அவள் கண்டதையும் நினைத்து மனதுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் போது,"உன் புருஷனுக்கு இந்த காரக்குழம்புன்னா ரொம்ப பிடிக்கும்.....!வா....!நீயும் செஞ்சு பழகிக்கோ.....!",என்று மிக அழகாக அவளது கவனத்தை திசை திருப்பிவிடுவார்.



அவளது மாமனாரும் சளைத்தவரல்ல.....!நடந்த கொடுமையை எண்ணி அவள் சில சமயங்களில் சோர்ந்து போகும் போது.....அவர் கண்டுகொண்டு,"அம்மா.....பவி.....!எங்க ரூமை கொஞ்சம் சுத்தம் பண்ணித் தருகிறாயா....?உன் அத்தை ரொம்பவும் குப்பையா வைச்சிருக்கிறா....!",ஏதாவது ஒரு வேலையை ஏவி அவளது நினைப்பை மாற்றிவிடுவார்.



இவர்களது கவனிப்பில் அவள் உடலில் இருந்த காயங்களோடு சேர்ந்து.....மனமும் ஆறி வந்தது.ஓரளவிற்கு அந்தக் கொடுமையிலிருந்து வெளிவர பழகிக்கொண்டாள்.அதற்கு அவன் கணவன் உறுதுணையாய் இருந்தான் என்று கூறினால் அது மிகையில்லை....!ஆனால்....என்னதான் குடும்பமே சுற்றியிருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய நிகழ்வு இல்லையே அது....?



ஜன்னலின் அருகே அழகிய சிலையாய் நின்றிருந்த மனைவியை ரசித்தபடியே அவளை நெருங்கியவன்,"என்ன பவி.....பார்த்துட்டு இருக்க.....?",அவளது அழகில் சற்று தடுமாறி வந்தன அவனது வார்த்தைகள்.



என்னதான் இருந்தாலும்.....அவனும் ஆசைகளும்.....உணர்ச்சிகளும் நிறைந்த சராசரி ஆண்மகன்தானே.....!பக்கத்தில் அழகிய மனைவியை வைத்துக்கொண்டு பிரம்மச்சரியம் காப்பது என்பது அவனுக்கு மிகப் பெரிய ஒரு கொடுமையாகத்தான் இருந்தது....!அவளை ஆசை தீர ஆண்டு விட முடியாத தவிப்பில் பொங்கிப் பெருகும் தாபத்தில் வெந்து.....பல இரவுகளை அவன் தூங்காமல்.....பால்கனியில் நடை பயின்று தவித்திருக்கிறான்.



அவள் மீது பொங்கிப் பெருகும் வேட்கையையும்.....காமத்தையும்.....காதல் என்ற ஒன்று கட்டுப்படுத்தியது.



கணவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து அவன் முகத்தைக் கண்டவள்,"அதோ.....அந்த குருவியை போலத்தான் நானும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்......!அந்த ஒருநாள் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா......",என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் குமுறி அழுதாள்.



அவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தத்தையும்.....அன்று அவன் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள் பவித்ரா.அவனும் அழட்டும் என்று தன் தோளை மட்டும் கொடுத்து அமைதியாய் இருந்துவிட்டான்.



வெகுநேரம் அழுது முடித்தவள்.....பிறகு ஒருவாறாக தன்னை சமாளித்துக் கொண்டு அவனை விட்டு விலகினாள்.



"பவி.....!உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.....!இப்படி உட்காரு.....!",அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தியவன் அவளது காலடியில் அமர்ந்து....அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.அவளும் ஒன்றும் பேசாமல் அவனது தலைமுடியை இதமாக கோதி விட ஆரம்பித்தாள்.சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதியே நிலவியது.



ஒருவாறாக தைரியத்தை திரட்டிக் கொண்டு நிமிர்ந்தவனின் முகம் உணர்ச்சிகளைத் தொலைத்து இறுகியிருந்தது.



"பவிம்மா.....!நான் கேட்கறதை நீ தப்பா எடுத்துக்காதே.....?நான் உன்னை ரொம்பவும் லவ் பண்றேன் டா....!உனக்கு எப்பவும் நான் துணையா இருப்பேன்....!இதை நீ எப்பவும் ஞாபகம் வைச்சுக்கணும்.....!சரியா.....?",அவன் குரலில் இருந்த மென்மை அவன் முகத்தில் இல்லை.அவனது கண்கள் கோபத்தில் தீக்கங்குகளாய் ஜொலித்துக் கொண்டிருந்தன.



அவள் விழிகள் கேள்வியோடு அவனை ஏறிட்டன.



"உனக்கு அ....அன்னைக்கு என்ன ந...நடந்துச்சு.....?அவனுக.....அவனுக.....",அதற்கு மேல் கேட்க முடியாமல் அவன் இறுக,



அவளோ.....உடல் விறைக்க நிமிர்ந்தாள்.



"இல்லை டா.....!நான் தப்பான அர்த்தத்துல கேட்கல.....!அந்த நாய்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டாமா.....?அவனுகளை சட்டத்துக்கு முன்னாடி நிற்க வைச்சு கேள்வி கேட்க வேண்டாமா.....?அதுக்காகத்தான் நான் கேட்கிறேன்.....!",அவள் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற நினைப்பில் அவசர அவசரமாகக் கூறினான்.



வெறுமையான சிரிப்பை தனது இதழ்களில் தவழ விட்டவள்,"தண்டனையா.....?சட்டம் அவங்களை கேள்வி கேட்குமா.....?எப்படி கர்ணன்.....?மிஞ்சிப் போனா.....ஒரு பத்து வருஷம் ஜெயில்ல போட்டு கேள்வி கேட்குமா.......?நான் இழந்ததுனுடைய விலை.....பத்து வருஷமா.....?",அவள் குரலில் அப்படி ஒரு நக்கல்.



"இல்லை ம்மா.....!நம்ம கையில அதிகாரம் இல்ல.....!சட்டத்தின் மூலமாதான் நாம அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.....!",தன் மனைவியின் முகத்தில் தெரிந்த வேதனை அந்த காதல் கணவனின் இதயத்தில் இரத்தத்தை வரவழைத்தது.



அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள்,"தண்டனையா.....?எது தண்டனை.....?செஞ்ச தப்பை உணராம.....ஜெயில்ல போய் உட்கார்ந்துக்கிட்டு.....நேரா நேரத்துக்கு சாப்பிட்டுக்கிட்டு.....சொகுசா தூங்கி எழுந்து வர்றதுக்கு பேர் தண்டனையா.....?ஆனால்.....இந்த தண்டனையும் என்னை நாசமாக்கின அந்தப் பாவிகளுக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல......?அந்த மூணு பாவிகளும் அரசியல்ல இருக்கிற பெரும்புள்ளிகளோட வாரிசுகள்.....!நாம வழக்கு போட்டோம்ன்னா அதை நமக்கு எதிராவே திருப்பி விடக் கூடிய அயோக்கியக்காரனுங்க.....!இவ்வளவு ஏன்....?நானா விரும்பித்தான்....அ....அவங்க கூட போனேன்னு சொன்னாலும்.....சொல்லிடுவானுங்க......!",அவள் குரலில் கண்ணீர்த் தடங்கல்.



அவள் கூறுவதும் உண்மைதானே.....!தண்டனை என்ற பெயரில் இவர்கள் தண்டனையையா தருகிறார்கள்.....!



தன்னிடம் கேள்வி கேட்கும் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அந்தக் கணவன்.எதைப் பற்றியும் கவலைப்படாமல்.....அந்த கயவர்களை பிய்த்து எறிந்து விட வேண்டும் என்பது போல் வேகம் தோன்றியது.



"எது தண்டனைன்னு நான் சொல்றேன் கர்ணன்.....!எது தண்டனை தெரியுமா.....?இதுவரை.....என்னைப் பெத்த அம்மாகிட்ட கூட காண்பிக்காம மூடி வைச்சிருந்த என் உடலை.....கூசாம வெறிச்சுப் பார்த்த அந்த கண்களை....தீயில் காட்டி பொசுக்கணும்.....! விவரம் தெரிஞ்ச வயசில இருந்து.....வருங்காலக் கணவனுக்காக மட்டும்தான்னு பொத்தி பொத்தி பாதுகாத்து வைச்சிருந்த என் கற்பை.....கால்ல போட்டு மிதிச்சு நாசமாக்கின.....அந்த பாவிகளை நாசமாக்கணும்......!என் பெண்மையை இழக்க காரணமா இருந்த.....அவனுங்களுடைய உயிர் நிலையை துடிக்க துடிக்க அறுத்து எறியணும்.....!இன்னொருத்தனுடைய தப்பான பார்வை கூட....என் மேல படக் கூடாதுன்னு கவனமா இருந்த என்னை.....அசிங்க அசிங்கமா தொட்ட அந்த கைகளை.....குத்தி குத்தி புண்ணாக்கணும்.....!



இது எல்லாத்துக்கும் மேல....அந்த சண்டாளனுங்க துடிக்கிற துடிப்பை.....சந்தோஷமா நான் பார்த்து ரசிக்கணும்.....!இந்த உலகத்துலேயே மிகக் கொடூரமான முறையில.....அந்தப் பாவிகளை சாகடிக்கணும்.....! அன்னைக்கு.....பாஞ்சாலியுடைய சேலையை பிடித்து இழுத்தான்னு.....ஒரு மிகப் பெரிய பாரத யுத்தத்தையே நடந்தினானே அந்தக் கண்ணன்.....!அவன் கண்ணுக்கு இப்போ சீறழிஞ்சுக்கிட்டு இருக்கிற பெண்களோட கூக்குரல் கேட்கலையா.....?இல்லை.....கேட்டும் அமைதியா இருக்கானான்னு எனக்குத் தெரியலை.....!கடவுள் வருவாரு.....!அவதாரம் எடுப்பாரு....!அப்படிங்கறது எல்லாம் சுத்தப் பொய்.....!நமக்கு நடந்த அநீதிக்கு எதிரா நாமதான் அவதாரம் எடுக்கணும்.....!",



ஒட்டு மொத்த பெண் குலத்திற்கும் ஆதரவாக நீதி கேட்பவள் போல்.....ஆங்காரமாய் நின்றிருந்தாள் பவித்ரா.அவளது முகத்தில்.....அப்படியொரு ரௌத்திரம்......!பெண் குலத்தை காக்க வந்த காளி போல்......அவள் முகத்தில் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.



"பவிம்மா......!",அவன் மெதுவாக அவள் தோளைத் தொட.....அவ்வளவுதான்.....!அடுத்த நொடி.....கதறி அழ ஆரம்பித்தாள்.



"ஏன்....?எனக்கு மட்டும் இப்படி நடக்கணும்......?அப்போ.....நான் எந்தளவுக்கு துடிச்சு போனேன் தெரியுமா கர்ணன்.....?உங்களுக்கு ஞாபகம் இருக்கா.....?நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி....ஒருமுறை....நீங்க என்கிட்ட ஆசையா முத்தம் கேட்டீங்க.....?உங்களுக்கு எல்லா உரிமையும் இருந்தும்.....நான் கொடுக்க மாட்டேன்னு விலகிப் போனேன்.....!எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு.....உரிமையான உங்களையே விலக்கி வைச்சேன்.....!அப்படிப்பட்ட என்னை.....என் உடம்பை.....அவன்....அவன்.....எங்கெங்கே தொட்டான் தெரியுமா கர்ணன்.....?என்னால முடியல.....!அவனுங்க....என்....என்....",



அதற்கு மேல் பேச விடாமல்.....அவளை இழுத்து அணைத்தவன்,"வேண்டாம் ம்மா.....!வேண்டாம்.....!நீ எதுவும் சொல்ல வேண்டாம்.....!எல்லாத்தையும் மறந்திடு கண்ணா.....!",அவளை அணைத்துக் கொண்டு அவன் கதற ஆரம்பித்துவிட்டான்.



"என்னால முடியல.....!எனக்கு எப்படி வலிச்சுது தெரியுமா.....?அதிலேயும் ஒருத்தன்....என்....என்....மா....",அதற்கு மேல் பேச விடாமல்....அவளது இதழ்களை தன் உதடுகளால் மூடியவன்.....அவள் அனுபவித்த வலிகளுக்கு எல்லாம் மருந்தாய்.....தனது உதடுகளால் ஆறுதல் தர ஆரம்பித்தான்.



அவளுக்கும் அந்த மருந்து தேவையாய் இருந்தது போலும்.....!விழிகளை மூடி....அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள்.தான் பட்ட வேதனை அனைத்தும்.....தன்னவனது காதலான இதழொற்றலில்.....மறைந்து மாயமாகியதை உணர்ந்தாள் அவள்.



அவளுக்கு ஆறுதல் அளித்தானோ......?இல்லை.....அவள் இதழ்களில் தனக்கான ஆறுதலை உணர்ந்தானோ......?தெரியவில்லை......!வெகுநேரம்.....அவளது இதழ்களை விட்டு அவன் விலகவில்லை.....!விலகிய போது.....அவன் கண்டது என்னவோ.....?தன்னவளுடைய தெளிவான முகத்தைத்தான்.....!



அவள் கன்னங்களைத் தன் இரு கைகளாலும் ஏந்தியவன்,"வேண்டாம் டி.....!அப்படியொரு சம்பவம் உன் வாழ்க்கையில நடக்கவே இல்லைன்னு நினைச்சுக்கோ.....!அதையும் மீறி.....உனக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தால்.....இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் கொடுத்த முத்தத்தை நினைச்சுக்கோ.....!நான்....நாம்....நம்ம குடும்பம்.....இதுதான் உன்னுடைய நிகழ்கால வாழ்க்கை.....!கடந்த காலத்துல எது நடந்திருந்தாலும் சரி.....!அதை மறந்திடு.....!நான்....நான் மட்டும்தான் உன் நிகழ்காலம்....!புரிஞ்சுதா.....?",மென்மையாய் அவன் கூறக் கூற.....அவள் மெல்ல.....மெல்ல தன் கூட்டிலிருந்து வெளிவர ஆரம்பித்தாள்.



காதல் என்ற ஒன்று அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது....!அந்த ஆண்மகனின் காதல்....அந்தப் பெண்ணவளின் மனதை கரைக்க ஆரம்பித்தது.தனக்கு நடந்த வன்கொடுமையிலிருந்து....காதல் என்னும் ஊன்றுகோலின் துணை கொண்டு....மெல்ல....மெல்ல உயிர்த்தெழ ஆரம்பித்தது அந்தப் பெண்மை.....!



தலையை தன் இருகைகளாலும் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தான் கர்ணன்.அது அவன் G.M ஆக வேலை செய்யும் அலுவலகத்தின் கேன்டீன்.



"என்னாச்சு மச்சான்.....?எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க.....?",கேட்டபடியே அவனுடைய மூன்று நண்பர்களும் வந்தமர்ந்தனர்.



அவர்கள் விஜய்....பிரபு மற்றும் அகில்.நால்வரும் சிறுவயதிலிருந்தே நெருக்கமான நண்பர்கள்.ஒன்றாக கை கோர்த்து விளையாட ஆரம்பித்த நாட்களில் தொடங்கிய அவர்களின் நட்பு.....பள்ளிப்பருவத்தில் இறுகி....பதின்ம வயதில் வலுப்பெற்று.....இன்று முழு ஆண்மகன்களாக உருப்பெற்று நிமிர்ந்து நிற்கும் காலங்களில் உடைக்க முடியாத சக்தியாக பரிணாமம் அடைந்து....நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.



"எனி ப்ராப்ளம் மச்சான்.....?ஏன் முகம் டல்லா இருக்கு.....?",அக்கறையுடன் வினவினான் பிரபு.



மூன்று நண்பர்களையும் நிமிர்ந்து பார்த்தவன் ஒரு பெருமூச்சோடு.....நேற்று தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.சிவந்த கண்களுடன்....கலங்கிய முகத்துடன்....உணர்ச்சிகளைத் தொலைத்தவனாய் கூறி முடித்தான் கர்ணன்.அவன் முடித்தவனுடன் நண்பர்களுக்கு இடையே அழுத்தமான அமைதி நிலவியது.
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
பவித்ராவிற்கு நடந்த அநியாயத்தை அந்த நண்பர்கள் ஏற்கனவே அறிந்துதான் இருந்தனர்.ஆனால்....அவளின் மனதில் இருக்கும் வலியை.....அவள் துடித்த துடிப்பை.....தன் நண்பன் கூறவும்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.



வாழ்க்கையில் முதல்முறையாக ஆண்மகனாக பிறந்ததற்கு வெட்கப்பட்டு கூனிக் குறுகிப் போயினர் அந்த நண்பர்கள்.



"என்னால முடியலை டா.....?அந்த பொறுக்கிகளை இப்பவே கொன்னு போடணும்ங்கிற வெறி வருது.....!என் பவி சொன்ன மாதிரியே அந்த ** களை தண்டிக்கணும்ன்னு என் மனசுக்குள்ள ஒரு தீ கொழுந்து விட்டு எரியுது டா.....!என் பவி எப்படியெல்லாம் துடிச்சிருப்பா.....?அந்த துடிப்பை விட பல லட்சம் கோடி மடங்கு அதிகமான துடிப்பை அந்த பாவிகள் அனுபவிக்கணும்.....!",அவன் தன் கை முஷ்டியை இறுக மூடிய விதத்திலிருந்தும்.....அவன் கழுத்து நரம்புகள் தெறித்து விழும்படி புடைத்த விதத்திலிருந்தும்......அவனுடைய கோபத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.



"நிச்சயமா அனுபவிக்கணும் டா.....!அந்த வலியை நாம அவனுங்களுக்கு கொடுப்போம்....!",பல்லைக் கடித்தபடி அகில் கூற,



ஆமா டா மச்சான்.....!பொண்ணுங்கன்னா அவனுங்களுக்கு இளக்காரமா போச்சா.....?திருப்பி அடிப்போம்.....!எழுந்திருக்க முடியாத அளவுக்குத் திருப்பி அடிப்போம்.....!",ஆண் வேங்கையாய் பிரபு கர்ஜிக்க,



"ஆமா....!நாம அடிக்கற அடியில அவனுங்க மட்டும் இல்ல.....இனி பொண்ணுங்களை நாசமாக்கணும்ன்னு நினைக்கற அத்தனை சண்டாளனுங்களும் பயந்து நடுங்கணும்.....!நாம நாலு பேரும் சேர்ந்து பழிவாங்குவோம்....!",சீற்றம் கொண்ட புலியாய் உறுமினான் விஜய்.



அநியாயத்தை அடியோடு தகர்த்தெறிய அவதரித்த கிருஷ்ண பரமாத்வாவைப் போல் கர்ஜித்துக் கொண்டு நின்றனர் அந்த மூன்று நண்பர்களும்.அதர்மத்தை தட்டிக் கேட்க கண்ணபிரான்தான் அவதாரம் எடுக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறதா.....என்ன....?இல்லை......உணர்ச்சிகள் நிறைந்த சாதாரண மனிதர்களும் அவதாரம் எடுக்கலாம் என்பதை அந்த நண்பர்கள் நிரூபித்துக் கொண்டிருந்தனர்.



சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்த தன் நண்பர்களை ஏறிட்டுப் பார்த்தவன்,"வேண்டாம் டா......!இது என்னுடைய பிரச்சனை.....!தேவையில்லாம இதுல உங்களை இழுக்க நான் விரும்பலை.....!உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு....!வேண்டாம்.....!இதை நானே பார்த்துக்கிறேன்.....!",உறுதியாய் மறுத்தவனை பிடிவாதமாய் முறைத்துப் பார்த்தனர் அந்த நண்பர்கள்.



"இங்கே பாருடா கர்ணா.....!இந்த முடிவை நாங்க உன்னுடைய நண்பனா எடுக்கல....!இந்த சமூகத்துல வாழ்ந்துட்டு இருக்கிற சக மனுஷனா எடுத்திருக்கிறோம்.....!",



"முதன்முதலா ஒரு ஆணா பிறந்ததற்க்கு வெட்கப்படறோம் டா....!ஆண் அப்படிங்கிற திமிர்லதானே பெண்களை அடக்கி ஆளறானுங்க.....!அந்த திமிரையே அடியோட வேரறுக்கணும்.....!",



"ச்சே.....!கேவலம் ஒரு அஞ்சு நிமிஷம் மட்டுமே நீடிக்க கூடிய உடல் பசிக்காக.....பெண்களை நாசப்படுத்தற உரிமையை யார் இவனுங்களுக்கு கொடுத்தது.....?இந்த மாதிரி விஷயங்களைப் பத்தி கேள்விப்படும் போதெல்லாம் செக்ஸ் மேல அப்படியொரு வெறுப்பு வருது டா.....!செக்ஸ் அப்படிங்கற ஒரு உணர்ச்சியே தப்புன்னு ஒரு குற்றவுணர்ச்சி தோணுது.....!",



மூவரும் தங்கள் மனநிலையை வார்த்தைகளால் வடித்து குமுறிக் கொண்டிருந்தனர்.



"இந்த உலகத்துல வாழற ஒரு ஜீவனா....அந்தப் பாவிகளை வேரறுக்கிற வரைக்கும் நாம உறுதியோடு போராடப் போறோம்.....!இது பாதிக்கப்பட்ட பெண்கள் வடிச்ச கண்ணீர் மேல சத்தியம்.....!",விஜய் தன் வலது கையை நீட்ட,



"சத்தியம்.....!",கிட்டத்தட்ட கர்ஜித்தப்படி அகிலும்.....பிரபுவும் தங்கள் வலது கையை விஜயின் கை மீது வைத்து சத்தியம் செய்தனர்.



தன் நண்பர்களின் வேகத்தையும்.....நட்பின் ஆழத்தையும் கண்டு மனமுருகிப் போய் நின்றிருந்தான் கர்ணன்.மூவரும் கர்ணனை கேள்வியாய் நோக்க.....நொடியும் தாமதிக்காது தன் வலது கரத்தை.....தன் நண்பர்களின் கரத்தோடு கோர்த்தான்....."சத்தியம்.....!",என்ற உறுதியோடு.



அதர்மத்தை அழிக்க.....கல்கி அவதாரம் எடுப்பான் என்று வாய்வார்த்தையால் முழங்காமல்.....தானே கல்கியாய் அவதாரம் எடுத்தனர் அந்த கலியுக கல்கிகள்.....!ஆம்....!அநீதியை எதிர்க்க வீறு கொண்டு எழும் ஆன்மாக்கள் அனைவருமே கல்கிகள் தான்.....!அந்த கலியுக கல்கிகளின் வேட்டை அன்றிலிருந்து ஆரம்பமாகியது....!



அந்தக் கல்கிகளின் வேட்டையாடுதலின் முதல் படியாக.....மூன்று குற்றவாளிகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்தனர்.மூவருமே....அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பெரும் புள்ளிகளின் ஏக போக வாரிசுகள்.....!இதுவரை.....அவர்கள் சேகரித்த தகவல்களிலிருந்து.....இதுபோன்று பல பெண்களை அவர்கள் நாசமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.....!ஆனால்.....அது போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்படாமல் இருக்க.....பணம் மற்றும் செல்வாக்கு அரணாய் நின்று அந்தக் கயவர்களைக் காத்து வந்தது.



அவர்களை நெருங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.பவித்ராவின் கற்பழிப்பு சம்பந்தமாக.....அந்தப் பாவிகள் மீது சிறு சந்தேகப்பார்வை கூட விழவில்லை.பவித்ராவின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல்துறை 'குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்....!',என்று பூசி மெழுகிக் கொண்டிருந்தது.



நால்வருமே தாங்கள் எடுத்திருக்கும் அவதாரத்தைப் பற்றித் தங்கள் குடும்பத்தினரிடம் மூச்சு விடவில்லை.அமைதியாக தங்கள் வேட்டையாடுதலை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.



ஒரு மாதம் ஓடியிருந்த நிலையில்.....இவர்களுக்கு ஒரு தகவல் வந்தது.அந்த மூன்று குற்றவாளிகளும் இன்னும் இரண்டு வாரங்களில்.....தங்கள் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஊட்டி செல்வதாக தகவல் வந்தது.....அதுவும் தனியாக....!அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்ததும் இம்மாதிரியான ஒரு சந்தர்பத்திற்குத்தானே.....!அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து.....வெறியோடு காத்திருந்தனர் அந்த சிறுத்தைகள்.



................................................................................................................................



கர்ணன்....பவித்ரா வாழ்க்கை எப்பொழுதும் போல்....தாமரை இலை தண்ணீரைப் போல்.....பட்டும் படாமலும்.....தொட்டும் தொடாமலும்.....சென்று கொண்டிருந்தது.என்ன ஒரு முன்னேற்றம் என்றால்.....முதலில் அவளது நெற்றியில் மட்டும் முத்தமிட்டுச் செல்லும் அவனுடைய உதடுகள்.....இப்பொழுது.....அவளுடைய தேன் சுரக்கும் இதழ்களையும் நாடி செல்ல ஆரம்பித்து இருந்தது.



சில சமயங்களில் சற்று வன்மையாக....அவளது இதழ்களை கையாளுபவன்.....மறந்தும் அதற்கு மேல் முன்னேற மாட்டான்....!தடைகளை தகர்த்தெரிந்து.....எல்லைகளை மிக மிக வன்மையாக கடந்து.....அவளை முழுவதுமாக ஆண்டு முடித்து விட வேண்டும் என்பது போல் வேட்கை எழத்தான் செய்யும்....!



'ஆனால்....அவளைக் காயப்படுத்தி விடுவோமோ.....?',என்ற காதல் கொண்ட மனதின் தயக்கம் அவன் உணர்ச்சிகளுக்கு விலங்கிட்டுவிடும்.



அன்று....ஒரு கல்யாணத்திற்கு சென்றுவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர் கர்ணனும் பவித்ராவும்.நிலா மங்கை வானில் தன் ஊர்வலத்தைத் தொடங்கியிருக்க.....காமனோ தன் மலர்க்கணைகளை லட்சம் லட்சமாய் தொடுத்து.....கர்ணனின் மனதில் ஏவ ஆரம்பித்திருந்தான்....!



அழகிய இளஞ்சிவப்பு வண்ண பட்டுப்புடவையில்....அதற்கு தோதான தங்க நகைகள் அணிந்துகொண்டு.....மல்லிகைப் பூவின் மணம் வீச....அழகுப் பதுமையாய் தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தவனின் விழிகளில் தாபம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.



அதற்குள் வீடு வரவும்.....காரை நிறுத்தியவன்....ஒன்றும் பேசாமல் அமைதியாக வீட்டுசாவியை எடுத்து அவளிடம் நீட்டினான்.கர்ணனின் அம்மாவும் அப்பாவும் வேறொரு கல்யாணத்திற்காக சென்றிருந்தவர்கள் அங்கேயே தங்கிக் கொண்டனர்.



காரை பூட்டி விட்டு.....வீட்டுக் கதவுகளையும் அடைத்துவிட்டு....தங்களது அறைக்குள் நுழைந்தவனின் விழிகளில்.....கண்ணாடி முன் நின்று தன் நகையை கழட்ட முயன்று கொண்டிருந்த அவனது காதல் கண்மணி வந்து விழுந்தாள்.



அவள் நின்றிருந்த கோலம் மனதை மயக்க.....வேக மூச்சுகளுடன் தனது மனையாளை நெருங்கியவன்....அவளது கைகளை விலக்கி விட்டு விட்டு.....மெதுவாக அவளது நகைகளை கழட்டி விட்டான்.



நகைகளை விடுவித்தவனின் கரங்கள்....அவள் தோள் வழியாய் ஊர்ந்து சென்று.....அவள் இடையை வளைத்து சிறை செய்ய.....அவனது உதடுகளோ.....முதுகில் படர்ந்திருந்த அவளது கூந்தலை விலக்கி விட்டுவிட்டு....வெற்று முதுகில் தங்களது ஊர்வலத்தை ஆரம்பித்தன.



கணவனது அருகாமையில் தன்னை மறந்து மூழ்கிக் கொண்டிருந்தாள் பவித்ரா.தன் இதழ்களை அழுந்த கடித்தபடி....தன் உணர்வுகளோடு போராடிக் கொண்டிருந்தாள்.



இடையில் பதிந்திருந்த அவனுடைய கரங்கள் மெல்ல....மெல்ல அவள் மேனியில் தனக்கு மட்டுமே உரிமையான இடங்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்க....அந்தப் பேதையின் நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ......?பற்களுக்கு இடையில் சிக்கியிருந்த அவளுடைய கீழுதடு.....அவளிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது.



அவளது மேனியில் எல்லைகளைக் கடந்து கண்டபடி மேய்ந்து கொண்டிருந்த அவனுடைய விரல்கள்....நேரமாக ஆக....தங்களுடைய வேகத்தையும்....அழுத்தத்தையும் கூட்டிக் கொண்டே சென்றதேயொழிய.....குறைக்கவில்லை....!



வெற்று முதுகில் ஊர்ந்த அவனுடைய உதடுகள்.....அவள் பின்னங்கழுத்தை உரசி உரசி.....அவள் உணர்வுகளில் தீ வைத்ததோடு.....தன்னுடைய உணர்ச்சிகளையும் கொழுந்து விட்டு எரியச் செய்தது.



அவளது தங்க கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த....மிச்ச தங்க நகைகளையும் கழட்டியவன்....அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு.....படுக்கையை நோக்கி நடந்தான்.
ஒரு பூவைப் போல அவளை மெத்தையில் கிடத்தியவன்....மோகம் தலைக்கேற அவசரமாக அவள் மேல் கவிழ்ந்தான்.



இவ்வளவு நாட்கள் அடக்கி வைத்திருந்த வேட்கையும்.....தாபமும் போட்டி போட்டுக் கொண்டு கரையை உடைக்க.....முரட்டுத்தனமாக அவள் இதழ்களை சிறை செய்தான் அந்தக் காதலன்.திருமணமான இத்தனை நாட்களில்....ஒரு நாள் கூட....அவன் இவ்வளவு வேகத்தை அவள் இதழ்களில் காட்டியதில்லை.



உயிரை உருக்கும் அவனுடைய இதழ் முத்தத்தில்.....மூச்சுத்திணறத் திணற கரைந்து போய்க் கொண்டிருந்தாள் அவள்.அவன் பின்னந்தலை முடியை இறுகப் பற்றியபடி.....விழிகளை அழுந்த மூடியிருந்தாள்.



ஒருவழியாக.....வெகு நேரத்திற்குப் பிறகு.....மனமே இல்லாமல் அவளது இதழ்களை விடுவித்தவன்.....அவளது கழுத்தடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.சற்று முன்.....அவனது கரங்கள் மேய்ந்த இடங்களை தற்போது....அவனுடைய உதடுகள் மேய ஆரம்பிக்க.....அவனது கரங்களோ.....தனது முன்னேற்றத்திற்கு பெரும் தடையாய் இருந்த.....அவளது புடவையை புறக்கணிக்க ஆரம்பித்தது.



அவன் தன் சேலையை விலக்க ஆரம்பிக்கவும்.....சட்டென்று மாயவலை அறுந்து சுய நினைவுக்கு வந்தவளின் எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க ஆரம்பித்தது.என்னதான் முயன்றாலும்.....மனம்.... அன்று தனக்கு நடந்த வன்கொடுமைகளை.....கண் முன் பறைசாற்ற.....அவளால் தனது கணவனின் தொடுகையோடு ஒன்ற முடியவில்லை.



திடீரென்று ஒருவித அருவருப்பு உடலை ஆட்கொள்ள....."வே....வேண்டாம்.....!",என்ற அலறலோடு அவனிடமிருந்து முரட்டுத்தனமாக விலக ஆரம்பித்தாள்.



மனைவியின் உடலில் தோன்றிய விறைப்புத்தன்மையை தொடர்ந்து.....அவளுடைய கண்மூடித்தனமான எதிர்ப்புகள்.....அவனைத் தாக்க.....சட்டென்று அவனை விட்டு விலகியவன்,"பவி ம்மா.....!இங்கே பாருடா....!ஒண்ணுமில்ல.....!ரிலாக்ஸ்.....!",அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு ஒரு குழந்தையை சமாதானப்படுத்துவது போல் தன்னவளை சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.



அவனுடைய உணர்வுகள் எப்பொழுதோ அவனை விட்டுப் பறந்து போயிருந்தன.....தற்போது அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது....தாய்மை என்னும் உணர்வுதான்.....!



கணவனது அரவணைப்பில் மெல்ல....மெல்ல தன் நிலைக்கு வந்தவள்,"ஸாரி.....எ...என்னால முடியல.....!",கண்ணீரோடு அவள் மன்னிப்பு கேட்க,



அவள் கன்னங்களைத் தன் இரு கைகளிலும் தாங்கியவன்,"என்ன டா இது.....?நான் ஒண்ணும் ஃபீல் பண்ணவே இல்ல....!நமக்கு இன்னும் காலமும்.....வயசும் நிறையவே இருக்கு.....!நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்......!ஸாரி டா......!",அவன் குரலில் சிறிதளவு குற்றவுணர்ச்சி எட்டிப்பார்த்தது.



இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுக் கொண்டு.....உணர்வுகளை உணராமல்.....உணர்வுகளை வென்று உறங்க ஆரம்பித்தனர்.



காதல்.....காமத்தை தாண்டியது.....!ஒரு சிலர்....காதலும் காமமும் வேறில்லை என்று கூறுகின்றனர்....!உச்சக்கட்ட காதலின்.....உச்சக்கட்ட வெளிப்பாடாகத்தான் காமம் இருக்க வேண்டும்.....!உணர்ச்சிகளின் உச்சக்கட்டமாக காமம் இருக்கக் கூடாது......!



காதல்.....என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டால்.....காமம் என்ற வார்த்தைக்கான அர்த்தமும் பிடிபட்டுவிடும்.....!வெறும் உணர்ச்சிகளின் போராட்டமல்ல காமம்.....!உயிர்க்காதலின் வன்மைப் போராட்டம்தான் காமம்.....!



காதலின் தொடக்கம்....காமமாக இருக்கக் கூடாது......!ஆனால்.....காமத்தின் தொடக்கம் நிச்சயம் காதலில்தான் நிகழ வேண்டும்......!



ஒருவழியாக.....அநியாயக்காரர்களின் அக்கிரமத்தை கருவோடு வேரறுக்க வேண்டிய நாளும் வந்து சேர்ந்தது.'வேலை விஷயமாக வெளியே செல்கிறோம்....' என்று கூறிவிட்டு நண்பர்கள் அனைவரும்....ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு.....அந்தக் குற்றவாளிகளைப் பின்தொடர்ந்தனர்.முன்னேற்பாடாக அந்தக் காரின் உண்மையான நம்பர் பிளேட்டை மாற்றியிருந்தனர்.



ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் அந்தக் கயவர்களின் கார் சென்று கொண்டிருக்க....அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுத்த அந்த பார்த்திபனின் தேரைப் போல்.....கலியுக கல்கிகளின் கார் அவர்களை ஆக்ரோஷத்தோடு பின்தொடர்ந்து கொண்டிருந்தது.



குருஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு ரதசாரதியாய் கண்ணன் இருந்தது போல்.....இங்கு கர்ணன் இருந்தான்.கண் கொத்தி பாம்பாய் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு.....பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் ஒரு வாய்ப்பு வந்தமைந்தது.



இருபுறமும் பெருங்காடு சூழ்ந்திருக்க.....நடுவில் சென்ற சாலையில் விரைந்து கொண்டிருந்த கார் தீடிரென்று நின்றது.இயற்கை உபாதைகளுக்காக இறங்கிய கயவர்களுக்குத் தெரியவில்லை.....அந்த சண்டாளர்களின் இறுதி முடிவும் அங்கேதான் நிகழப் போகிறது என்று....!



காரிலிருந்து இறங்கிய அந்த மூன்று பேரும்.....சரக்கு பாட்டிலை எடுத்துக் கொண்டு காட்டிற்குள் மறைவிடம் தேடிச் செல்ல.....பின்தொடர்ந்து வந்த நண்பர்களும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் அறியாமல் பின்தொடர்ந்தனர்.



என்னதான் சத்தம் வராமல் பின்தொடர்ந்தாலும்......காட்டில் நிலவிய பேரமைதி.....அவர்களை அந்தக் கயவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.



சட்டென்று திரும்பியவர்களின் கண்களில்.....மரங்களின் பின்னால் மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் வந்து விழுந்தது.



"டேய்.....!யாருடா நீங்க.....?ரொம்ப நேரமா எங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்கீங்களா.....?",ஒரு கயவன் சற்றும் அதட்டும் தொனியில் கேட்க,



அதுவரை மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்த நண்பர்கள்.....ஆக்ரோஷத்தோடு வெளிவந்தனர்.



"ஆமாண்டா நாய்களா.....!யாருன்னா கேட்டீங்க......உங்களை வேரறுக்க வந்த எமன்கள் டா.....!",கர்ணன் சிம்மமாய் கர்ஜித்தான்.



அவனுடைய உள்ளத்தில் அடங்காத ஆத்திரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.தன்னவளை வலிக்க வலிக்க நாசமாக்கிய கொடூர காமுகர்கள் அல்லவா.....?வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபத்தில் கனன்று கொண்டிருந்தான்.



"ஹா....ஹா....!பாருங்கடா மச்சான்.....!இவனுங்க நம்மளுடைய எமனாம்......!ஹா....ஹா....",மூவரும் கேலி பண்ணி சிரிக்க ஆரம்பிக்க.....கர்ணன் வந்த ஆத்திரத்தில் தன் எதிரில் நின்றுகொண்டிருந்தவனின் மூக்கில் ஓங்கி குத்த.....அவனுடைய மூக்கு உடைந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.



"டேய்.....!யாருக்கிட்ட வந்து வாலை ஆட்டறீங்க.....?",கத்தியபடியே மீதி இருந்த இருவரும் கர்ணனின் மேல் பாய......அதுவரை வாளாவிருந்த பிரபுவும்....விஜயும்....அகிலும்....கர்ணனின் மேல் பாயவிருந்த இருவரையும் தடுத்து துவைத்தெடுக்க ஆரம்பித்தனர்.



தர்மத்தின் ரௌத்திரத்தின் முன்.....அதர்மம் மண்டியிட்டு அடிபணிந்தது.எரிமலையாய் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த அந்த கலியுக கல்கிகளின் முன்....அந்த சண்டாளர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.



மூக்கு உடைந்து.....உதடு கிழிந்து....தலையில் இரத்தம் வழிய கதறிக் கொண்டிருந்தனர் அந்த சதை தின்னும் அரக்கர்கள்.



"இப்படிதானேடா நீங்க நாசமாக்கின பொண்ணுங்களும் கதறியிருப்பாங்க......?இப்படித்தானேடா அவங்களும் துடிச்சிருப்பாங்க.....?",ஒவ்வொரு அடிக்கும் நியாயம் கேட்டபடி.....அந்தக் கயவர்களை சிதைத்துக் கொண்டிருந்தனர்.



"விடுங்கடா.....!ம....மன்னிச்சிடுங்க.....!",கெஞ்சிக் கொண்டிருந்தவனின் வயிற்றில் ஓங்கி மிதித்த அகில்,



"மன்னிப்பா.....?எங்களுடைய மன்னிப்பைக் கொடுக்கிறோம்.....!வாங்கிக்க.....!",சரமாரியாக அவனைத் தாக்கிக் கொண்டிருந்தவன்.....தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் இருந்த கத்தியை எடுத்து.....அவனது உயிர்நிலையை துடிக்க துடிக்க அறிந்து எறிந்தான்.



"ஆ....அம்மா.....!",அவனுடைய அலறல் அந்தக் கானகம் முழுதும் எதிரொலித்தது.



"அம்மாவா.....?வலியில துடிக்கும் போது.....உன் வாயிலிருந்த வர்ற வார்த்தை அம்மா தான்.....!அப்படிப்பட்ட பெண் தெய்வங்களை அணு அணுவா சிதைக்கறீங்களே டா.....!அப்போ....இந்த அம்மாங்கிற வார்த்தை உங்க காதுல விழலையா.....?",உறுமியபடியே கர்ணன் தான் மடக்கி பிடித்திருந்தவனின் கண்களில் கத்தியால் மாறி மாறி இரக்கமின்றி குத்தினான்.



"அ....அய்ய்ய்யோ.......!வே.....வேண்டாம்.......!",அலறியபடி கீழே விழுந்தான் அவன்.



"என்ன டா வேண்டாம்.....!இந்த கைகள் தானே பல பெண்களை சீரழிச்சது......?அவங்க 'வேண்டாம்....!'ன்னு அலறிய அலறல் உங்க மனசைத் தொடலையா டா.....?",கர்ஜித்தபடியே வாங்கி வந்திருந்த திராவகத்தை எடுத்து அவன் அலற....அலற கைகளில் கொட்டினான் விஜய்.



ஒட்டு மொத்த பெண்களின் சார்பாக....அன்று கர்ஜித்த பவித்ராவின் சபதத்தை.....இன்று....இந்த கலியுக கல்கிகள் நிறைவேற்றி வைத்தனர்.துடிக்க துடிக்க....அந்த மூன்று காமுகர்களையும் வதம் செய்தவர்கள்.....தடம் தெரியாமல் அழித்தனர்.மூவரையும் தீக்கிரையாக்கியவர்கள்.....வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போயினர்.



அங்கு சத்தமில்லாது ஒரு குருஷேத்திரப் போர் நடந்து முடிந்தது.அது மகாபாரத யுத்தம் என்றால்......இது கலியுக மா யுத்தம்......!



அடுத்த நாள்.....தொலைக்காட்சிகளிலும்....செய்தித்தாள்களிலும் தலைப்பு செய்தி இதுதான்....!



"அரசியல் செல்வாக்கு வாய்ந்த பெரும் புள்ளிகளின் வாரிசுகள்....ஊட்டிக்குச் சென்ற வழியில் தீடீரென்னு மாயமாகினர்.....!அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது....!"



வழக்கம் போல் இந்த வழக்கிலும் காவல்துறை சொன்ன பதில்....."குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்....!",என்பதே.கடைசி வரை அவர்கள் தேடிக் கொண்டே இருப்பார்கள்.....!அந்தக் கயவர்களின் பிடி சாம்பல் கூட அவர்களின் கைக்கு கிடைக்கப் போவதில்லை.

.........................................................................................................



அன்று காலை.....சோம்பலுடன் எழுந்தமர்ந்த பவித்ராவின் கைகளில்....இன்னதென்று விளங்காத ஒரு புன்னகையுடன்.....செய்தித்தாளை திணித்தான் அவள் கணவன்.அதைப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் நிலைகுத்தி....அந்த செய்தியையே வெறித்தன.....!அவள் முகத்தில் அப்படியொரு அமைதி.....!அப்படியொரு நிம்மதி.....!



"எங்கே போய் இருப்பானுங்க.....?",அதிர்ச்சி விலகாமல் அவள் முணுமுணுக்க,



"யாருக்குத் தெரியும் பேபி.....!ஒருவேளை....போற வழியில கார் ஆக்சிடெண்ட் ஆகியிருக்கலாம்....!இல்லை.....சரக்கடிச்சுட்டு எங்கேயாவது மட்டையாகி இருக்கலாம்.....!இவ்வளவு ஏன்....?ஒருவேளை.....அந்த நாய்களால பாதிக்கப்பட்ட பெண்களோட உறவுகள்ல யாராவது ஒருத்தர்.....அந்த பெண்ணோட விருப்பப்படி......அவங்க உயிர்நிலையை அறுத்து எறிந்து தண்டனை வழங்கியிருக்கலாம்.....!எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம்......!யாருக்குத் தெரியும்......?",சிறு முறுவலுடன் கூறியவன்.....தோளைக் குலுக்கியபடி.....பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.



அவன் கூறியதைக் கேட்டுப் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் பவித்ரா.அவள் மனம் முழுவதும் அமைதி....அமைதி.....அமைதி மட்டுமே......!ஏனோ 'ஓ'வென்று கத்தி அழ வேண்டும் போல் இருந்தது.இந்த உலகத்தையே வென்றது போலொரு மகிழ்ச்சி.....கர்வம்....!அவள் விழிகள் அவளையும் அறியாமல் கரகரவென்று கண்ணீரைப் பொழிந்தது.அது நிச்சயம் வேதனையின் வெளிப்பாடாக வந்த கண்ணீர் அல்ல.....!அதிகபட்ச மகிழ்ச்சியில் விளைந்த ஆனந்தக்கண்ணீர்.....!



கர்ணன் குளித்து முடித்து விட்டு வெளிவந்த போதும்......அவள் அதே நிலையில்தான் அமர்ந்திருந்தாள்.



"பவி.....!",என்றபடி அவள் தோளை மெதுவாகத் தொட.....அவ்வளவுதான்.....அடுத்த நொடி....அவன் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.கண்கள் விழிநீரை சொரிய......அதற்கு நேர் மாறாக.....அவளது இதழ்கள் புன்னகையைச் சிந்தியது.



அவன் எதுவும் பேசவில்லை.அமைதியாக அவள் தலையை நீவி விட்டபடி நின்றிருந்தான்.



ஒருவாறாக தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள்.....தன் காதல் மொத்தத்தையும் விழிகளில் தேக்கியபடி,"நீ....நீங்களா.....?",என்க,



அவளைப் பார்த்து 'இல்லை....'என்பதாய் தலையசைத்தவன்...."நான் ஒண்ணும் கடவுள் இல்லை பேபி.....!அந்த அராஜகக்காரர்களுக்கான தண்டனையை கடவுள் கொடுத்திருப்பார்....!என்னை சந்தேகப்படாதே......!நான் சாதாரண மனுஷன் தான்......!",மர்மப் புன்னகையுடன் கூறியவன்.....அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட்டான்.



அவன் கூறாவிட்டாலும் அவளுக்குத் தெரிந்தது....இந்த விஷயத்தில் அவனுக்கும் ஏதோ பங்கிருக்கிறது என்று.....!வெகு நாட்களுக்குப் பிறகு.....தன் கூட்டிலிருந்து வெளிவந்தவளாய்.....சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது அந்தப் பெண்மை....!



நாட்கள் உருண்டோட......நாட்கள் மாதங்களாகி அவர்களது முதல் வருட திருமண நாளும் வந்தது.இவ்வளவு நாட்களில்.....அவன்....அவளைக் கணவனாக நெருங்கியிருக்கவில்லை.அடிக்கடி பரிமாறிக்கொள்ளும் இதழ் முத்தம்.....சிறு சிறு சீண்டல்கள்....அவ்வப்போது எட்டிப் பார்க்கும் ஊடல்கள்....தினமும் இரவு தூங்கப் போவதற்கு முன்பு.....நெற்றியில் பதிக்கப்படும் காதல் முத்தம்.....காமம் அல்லாது....வெறும் காதலோடு மட்டுமே கூடிய அணைப்புகள்.....அவர்களது வாழ்க்கையை அழகாக்கிக் கொண்டிருந்தன.....!



அதற்காக.....அவன் விரகத்தில் வெந்து ஏங்கவில்லை என்று கூறிவிட முடியாது.....!புத்தம் புது மனைவி.....அதுவும் காதல் மனைவியை வெறுமனே பார்த்துக் கொண்டே நாட்களை கடத்துவது என்பது அவனுக்கு பெரும் வேதனையாகத்தான் இருந்தது.அதுவும்.....சில சமயங்களில் மனைவி காட்டும் நெருக்கம்....அவனை தடைகளை தாண்டச் சொல்லித் தூண்டும்.....!பொங்கி எழும் காமத்தை......காதல் தன் மலர்க்கரங்களால் தழுவி அமைதியாக்கிவிடும்.....!



இப்பொழுதெல்லாம் பவித்ராவும்.....தன் தயக்கங்களையும்....பயங்களையும் விட்டொழித்துவிட்டு கணவனின் காதலில் கரைய ஆரம்பித்திருந்தாள்.அவள் மனதிற்குள் புதைந்து கிடந்த அவன் மீதான அவளுடைய காதல்.....மெல்ல....மெல்ல வெளி வர ஆரம்பித்திருந்தது.அவன் அதை தட்டி....தட்டி....மேலெழுப்பிக் கொண்டிருந்தான்......!கணவனின் தாபத்தை தீர்க்க வேண்டும் என்ற வேகம் அவளுக்குள் இருந்தாலும்.....பெண்மையின் இயல்பான கூச்சம்.....நாணம் அவளைத் தடுத்தது.



"லூசு......!பொண்டாட்டி மனசை புரிஞ்சுக்க தெரியுதான்னு பாரு.....?சரியான ஜடம்.....!ஒரு பொண்ணு.....அவளாகவே வந்து புருஷனை நெருங்குவாளா......?இவன்தான் முதல் அடி எடுத்து வைக்கணும்......!ஜடம்......!",திருமண நாளன்று காலையிலேயே தன்னைக் கண்டு கொள்ளாமல் கிளம்பிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்துதான் அவ்வாறு மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள் பவித்ரா.



"ஹே பேபி.....!எழுந்திட்டயா.....?குட் மார்னிங்.....!",உற்சாகமாகக் கூறியவனை உறுத்து விழித்தவள்,



'யாருக்கு வேணும் உன் குட் மார்னிங்.....!நீயே வைச்சுக்கோ.....!கல்யாண நாள் அன்னைக்கு காலையில வாழ்த்து சொல்லாம.....குட் மார்னிங் சொல்லுது.....லூசு.....!',வழக்கம் போல் மனதிற்குள் தான் திட்டிக் கொண்டிருந்தாள்.



அவன் கணவனோ.....மனைவி தன்னை திட்டிக் கொண்டிருப்பதை அறியாது....கண்ணாடி முன் நின்றபடி தலை வாரிக் கொண்டிருந்தான்.



"இன்னைக்கு நம்ம கல்யாண நாள்.....!இன்னைக்கு கூட வீட்டில இல்லாம....எங்கே கிளம்பிக்கிட்டு இருக்கீங்க.....?",பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள் பவித்ரா.



பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன்,"ஆபிஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு.....!நான் கண்டிப்பா போயாகணும்.....!கல்யாண நாளா இருந்தா என்ன......?வேணும்ன்னா அம்மா அப்பா கூட கோவிலுக்குப் போய்ட்டு வா....!",என்றவன் தன் பேச்சு முடிந்தது என்பது போல் தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட...



"லூசு.....லூசு.....!பொண்டாட்டியை வெளியில கூட்டிட்டு போகலாம்ன்னு இல்ல....அம்மா அப்பா கூட போக சொல்லுது.....!",புலம்பியபடியே குளித்து முடித்து வெளியே வந்தவளை....பால் பாயசத்தோடு வரவேற்றார்.....அவளது மாமியார்.



மருமகளின் மன மாற்றத்தை அவர்களும் கண்டு கொண்டுதானே இருக்கிறார்கள்......!இருவரின் வாழ்க்கையும் துளிர்க்க போகும் நாள் வெகுதூரமில்லை என்பதை.....அனுபவத்தில் மூத்தவர்கள் அறிந்துதான் வைத்திருந்தனர்.



அவளது பெற்றோர்களும்......திருமண நாள் பரிசாக புது ஆடைகளை எடுத்துக் கொண்டு மகள் வீட்டிற்கு வந்திருந்தனர்.அனைவரும் குடும்பமாக கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தனர்.கர்ணன் மட்டும்தான் இல்லை.



தடுக்க முயன்றாலும்.....முடியாது சரசரவென்று பெருகிய கண்ணீரை தன் புறங்கையால் துடைத்தபடி.....தங்களது அறையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா.



"ஹேப்பி அனிவர்ஸரி மை டியர்.....!",தன் காதோரம் ஒலித்த கிசு கிசுப்பான குரலில் வெடுக்கென்று நிமிர்ந்தவள்.....அங்கு விரிந்த புன்னகையுடன் நின்றிருந்த தன் கணவனைப் பார்த்து,



"ஒண்ணும் வேண்டாம் போடா.....!",என்று மூக்கை உறிஞ்சினாள்.



"வேண்டாமா.....?நான் வேண்டாமா.....?",மயக்கும் புன்னகையை வீசியபடி மாயக்கண்ணனாய் அவன் வினவ,



அவன் புன்னகையில் தடுமாறிய மனதை தடுக்க தோன்றாமல்....அவன் நெஞ்சத்திலேயே சரணடைந்தாள் அவனது பெண்ணரசி.....!



"இதை சொல்றதுக்கு உங்களுக்கு இப்போதான் நேரம் கிடைச்சுதா.....?",அவன் மார்பில் இருந்தபடியே விழியை மட்டும் உயர்த்தி அவள் வினவ,



"ஸாரி டா கண்ணா.....!இதோ....இதுக்குத்தான் லேட்......!",என்றபடியே அவளிடம் ஒரு காகிதத்தை நீட்டினான்.ஸ்விட்சர்லாந்துக்கான ஹனிமூன் பேக்கேஜ் அது.....!



"வாவ்.....!சூப்பர்....!நாம ரெண்டு பேரும் மட்டும் போகப் போறோமா....?",விழி விரித்து அவள் கேட்க,



விரிந்த அவள் விழிகளில் முத்தமிட்டவன்,"பின்னே.....ஹனிமூனுக்கு குடும்பதோடவா போவாங்க....!",செல்லமாக அவள் மூக்கைப் பிடித்து ஆட்ட,



"ம்ம்....",என்றபடி அவன் மார்பில் மேலும் புதைந்து கொண்டாள் அவள்.



அதன்பிறகு.....அவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தேறியது.மகிழ்ச்சியான மனதுடன்.....அவர்களது குடும்பமே விமான நிலையம் வரை வந்து....அவர்களை வழியனுப்பி வைத்தது.



மேகங்களுக்கு இடையில் தாங்களும் ஒரு வெண்பனிக் கூட்டமாய் மிதந்து கொண்டிருக்கும் போது.....அவர்கள் நிறையப் பேசினார்கள்.....!தாங்கள் காதலை உணர்ந்த தருணம்.....இவ்வளவு நாள் பிரிவினால் ஏற்பட்ட ஏக்கம்.....அதனால் மேலும் இறுகிய அவர்களுடைய காதல் என நிறைய பேசினார்கள்.ஸ்விட்சர்லாந்தில் கால் வைக்கும் போது....அவர்கள் மனதால் இணைந்திருந்தனர்.....!அவர்களுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச ஒளிவு மறைவும்.....ஓடிப் போய் ஒளிந்து கொண்டிருந்தது.



நான்கு பக்கமும் பச்சை மலைக்காதலன் தன் ஆட்சியை நிலை நிறுத்தியிருக்க......வெள்ளைப் பனிக்காதலி தன் மலைக்காதலனை....ஆசையோடும்....காதலோடும் கட்டித் தழுவியிருந்தாள்....!தன் கண்களை அகல விரித்து.....உதடுகளை குவித்து.....அனைத்தையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவை.....கண்களில் வழிந்த காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் கர்ணன்.



நேற்று மாலை வந்து இறங்கியவர்கள்.....பயண அலுப்பு தீர நன்றாக உறங்கி விட்டு.....இன்று காலையில்தான் வெளியே சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.



கை கோர்த்துக் கொண்டும்.....தோளோடு அணைத்துக் கொண்டும் இளம் காதலர்களாய்.....பல இடங்களை சுற்றி வந்தவர்கள்.....மாலையில் குளிர் உடலை ஊருடுவவும் அறைக்கு வந்து முடங்கினர்.



அந்த அறை....வரவேற்பு அறை.....படுக்கை அறை....என இரண்டு பகுதிகளைக் கொண்டது.மொபைலை கையில் வைத்துக் கொண்டு கர்ணன் வரவேற்பறையிலேயே அமர்ந்து விட.....அன்று முழுவதும் சுற்றிய அலுப்பு குளித்தால்தான் தீரும் என்ற உணர்வில்.....குளிராக இருந்தாலும் பரவாயில்லை.....என்று பவித்ரா குளியலறைக்குள் நுழைந்தாள்.



அலுப்பு தீர வெந்நீரில் குளித்து முடித்த பிறகுதான் அவளுக்கு உரைத்தது.....மாற்றுடை எடுத்து வரவில்லையென்று.....!



'சரி....!அவர் முன்னாடிதானே உட்கார்ந்திருக்காரு.....!வெளியே ஓடிப் போய் டிரெஸ் எடுத்துட்டு வந்திடலாம்.....!',என்று எண்ணியபடி அங்கிருந்த வெள்ளை நிற பூந்துவாலையைத் தன் உடலில் சுற்றிக் கொண்டு.....அவள் வெளியே வரவும்.....அவன் படுக்கையறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாய் இருந்தது.



இருவரும் 'என்ன செய்வது....?' என்று தெரியாமல் சிலையாய் சமைந்திருந்தனர்.அந்த மெல்லிய பூந்துவாலை அவளது மார்பில் இருந்து.....தொடை வரை மட்டுமே படர்ந்து.....அவளது அழகுகளை மறைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது.



இதுநாள் வரை.....அவன்.....அவளைப் பார்த்திராத ஒரு கோலம்.....!பாதி முதுகு வரை படர்ந்திருந்த கூந்தலில் சொட்டு சொட்டாய்....நீர் திவலைகள் குடியிருக்க.....அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்திருந்ததால்.....அவள் பால் மேனியிலும்....ஆங்காங்கு நீர் முத்துக்கள் தெறித்திருந்தன....!அதிலும் இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.....நெற்றியில் வழிந்த நீர்த்துளி ஒன்று....அவள் கன்னத்தில் உருண்டோடி.....அவளது சங்கு கழுத்தில் பயணித்து.....அதற்கும் கீழே உருண்டோடி மறைய.....இங்கு.....இவனது உணர்ச்சிகள் பேயாட்டம் போட ஆரம்பித்தன.



உடலில் ஹார்மோன்களின் மாற்றம் சரசரவென்று நிகழ.....அவன்.....ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எடுத்து வைக்க ஆரம்பித்தான்....!கண்டபடி தன் மேனியில் ஊர்ந்த கணவனது தாபப் பார்வையில்.....பாவையவள் நடுங்க ஆரம்பித்தாள்.உச்சந்தலையிலிருந்து.....உள்ளங்கால் வரை....குப்பென்று சிவந்து போக.....தன் மார்பில் முடிச்சிட்டிருந்த துவாலையை இறுகப் பற்றியபடி.....சுவரோடு ஒன்றிக் கொண்டாள்.



அவள் விழிகளுக்குள் தன் பார்வையைக் கலந்தபடி.....அவளருகில் நெருக்கமாக.....மிக நெருக்கமாக வந்து நின்றவன்.....செய்த முதல் செயலே.....பற்களுக்கு இடையில் சிக்கியிருந்த அவளது இதழ்களை.....தனது உதடுகளால் விடுவித்ததுதான்.....!



அந்த ஒற்றை முத்தத்திலேயே.....அந்தப் பெண்மை மயங்கி அவன் வசமாகத் தொடங்கியது.மென்மையாக ஆரம்பித்த இதழ் முத்தம்.....போகப் போக.....வன்மையாக.....மிக மிக வன்மையாக மாற ஆரம்பித்தது.



மூச்சுக் காற்றுக்கு ஏங்கித் தவித்து....தன் மார்பில் பூமாலையாய் சரிந்தவளை.....தன் கைகளின் ஏந்திக் கொண்டு படுக்கையை நோக்கி நடந்தான்.



அவளை மெத்தையில் கிடத்தியவன்.....உணர்ச்சிகள் கரையுடைக்க காத்துக் கொண்டிருந்த அந்த நேரத்திலும்.....அவள் காதருகே குனிந்து....."உனக்கு சம்மதமா.....?",என்று கேட்கத் தவறவில்லை.



நாணத்தோடு கூசி சிலிர்த்த பெண்மை,"ம்ஹீம்.....ம்ம்....!",என்று வித்தியாசமாய் தன் சம்மதத்தை வழங்க.....அந்தக் காதலனுக்கு அது போதாதா....?



காதல் கலந்த காமத்தோடு அவளை நோக்கி குனிந்தவனின் உதடுகள்.....அவள் கழுத்து சரிவில் இருந்து தன் பயணத்தை தொடங்க.....அவன் கரங்களோ....தனக்கு தடையாய் இருக்கும் அந்த ஒற்றை ஆடையையும் விலக்க முற்பட்டது.



"ம்ஹீம்.....!வே....வேண்டாம்....!",முனகலாய் ஒலித்தது அவள் குரல்.



அந்தக் கள்வன் எங்கே அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டான்....?தனக்குத் தடையாய் இருந்த அனைத்து தடைகளையும் களைந்து விட்டு.....அவளைக் களவாடத் தொடங்கினான் அந்தக் கள்ளன்....!



அவளது சிணுங்கல்களுக்கும்.....செல்லமான மறுப்புகளுக்கும்.....அவனிடம் பதில் இல்லாமல் போனது.இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த தாபங்களும்.....மோகங்களும்.....கரையை உடைத்துக் கொண்டு பொங்கிப் பெருக.....அவனுடைய வேகத்தில்.....பூம்பாவையவள் அரண்டுதான் போனாள்.



ஆனாலும்.....அவனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து.....அவனுக்கு சற்றும் குறையாத வேகத்தையும்.....காதலையும் காட்டத் தவறவில்லை.அவனுடைய மென்மையில் மெல்ல....மெல்ல தன் வெட்கத்தை தொலைத்து வெளி வந்தவள்.....அவனுடைய வன்மையில்....தன்னுடைய காதலை காமத்தோடு சேர்த்து தன்னவனுக்கு விருந்தாக்கினாள்.



ஒற்றை கூடலில் தீரக் கூடியதா அவர்களுடைய தாபம்.....?மேலும் மேலும்.....ஒருவரையொருவர் நாடினர்.....!களைத்து....கலந்து ஓய்ந்தவர்கள்....விடியலின் அருகாமையில்தான் கண்ணயர்ந்தனர்.



காமத்தின் தொடக்கம்.....உயிர்க் காதலில் நிகழ்ந்தேறியது....!



ஒரு நிறைவான சங்கமம் காதலின் துணை கொண்டு.....காதல் கலந்த காமத்தின் துணை கொண்டு.....மிக அழகாக நடந்தேறியது.....!காதல் எந்த ஒரு மாயங்களையும் செய்யவல்லது என்பதற்கு இந்த ஒரு சாட்சி போதாதா....?



தனக்கு நடந்த வன்கொடுமையில்.....நொறுங்கிப் போய் இருந்தவளை.....கர்ணன்.....தன் காதலின் மூலம் மெல்ல....மெல்ல....உருவாக்கினான்.....!அழகாக்கினான்.....!இனி அவர்களது வாழ்க்கை காதலோடு.....அழகாக பயணிக்கும்....!



'கடவுள் அவதாரம் எடுப்பார்.....!அதர்மத்தை அழிப்பார்....!' என்பது எல்லாம் பழைய கதை....!அநீதிகளுக்கு எதிராக நாம் தான் அவதாரம் எடுக்க வேண்டும்.....!இதோ....இந்த கல்கிகள் அவதாரம் எடுத்தது போல்.....!கலியுக கல்கிகள்.....!



இந்த கலியுக கல்கிகளின் வேட்டை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.....அதர்மம் இருக்கும் வரை....!!
 

Latest posts

New Threads

Top Bottom